Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Anitha Sundar

Active member
Messages
116
Reaction score
64
Points
28
அத்தியாயம் - 8.1

சென்னைக்கு வந்த விதுபாரதி வீட்டிற்குக் கூடச் செல்லாமல், நேராய் மருத்துவமனைக்குச் சென்று தனது தம்பியைக் காண வந்தார். அங்கே உள்ளே நுழைந்ததும், ஒருவன் தனது தம்பியை தூக்கி நிறுத்தி, அவனுக்கு உதவி செய்து கொண்டிருப்பதைக் கண்டதும்,

"ஹலோ! உள்ளே வரலாமா...?" என்றதும், இரு ஆண்களும் திரும்பினர்.

சேனாவோ, 'யார் இவர்?’ என்று பார்த்தான்.

சிவராஜ் “அக்கா…!” என்று உற்சாகத்தோடு அழைத்தான்.

வந்தவர், கட்டுடன் இருந்தவனின் கைகால்களைப் பார்த்து, "என்னடா, சின்ன அடின்னு சொன்ன? கை கால் எல்லாம் இத்தனை கட்டுப் போட்டிருக்கு. இவ்வளவு பலமா காயம் பட்டிருக்கு.” என்று கண்ணீர் விடவும்,

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் நல்லா இருக்கேன்.”

இருவருக்கும் தனிமை தர விரும்பிய சேனா, "ஓகே சார், நான் கிளம்பறேன்!" என்றதும்,

அவனின் நினைவு வந்த சிவராஜ், “சேனா சார்...! ப்ளீஸ், ஒரு நிமிஷம் இருங்க! அக்கா, இவர் தான் என்னை கூட்டிட்டு வந்து இங்க அட்மிட் பண்ணியவர். இப்ப வரைக்கும், இவர்தான் என்னைப் பார்த்துக்கிறார். நம்ம பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார். நம்ம தியாழினி படிக்கும் கல்லூரியில் வேலை பார்க்கிறார். அவளின் வகுப்பு ஆசிரியரும் கூட."

விது பாரதி தன் கை இரண்டையும் எடுத்துக் கும்பிட்டு, "மிக்க நன்றிங்க!"

'குடும்பத்தில் அனைவருக்கும் நன்றிக்குப் பஞ்சம் இல்லை போல்.' என்று நினைத்தவன்,

"ஓகே நீங்க பாருங்க! நான் கிளம்புறேன்."

சிவராஜ் மீண்டும் "சேனா சார், ஒருநிமிடம்!" என்றதும் திரும்பினான்.

"தொந்தரவுக்கு மன்னிக்கணும்! எனக்காக நீங்கள் இன்னொரு உதவியும் செய்யனும்!"

அவனோ திரும்பி என்ன என்பது போல் பார்க்க, "என் அக்காவை, எங்கள் வீட்டில் விடமுடியுமா...?"

"இதில் எனக்கு என்ன தொந்தரவு இருக்கு? நான் என்ன உங்க அக்காவிற்கென்று ஒரு முறை வந்தா கூட்டிட்டு போகப் போறேன்? போகும் வழியில் தானே இறக்கி விடப் போறேன்! எனக்கும் அவங்க அக்கா மாதிரி தான்! நான் வெளியில் வெயிட் பண்றேன். நீங்க பேசிவிட்டு வாருங்கள், சிஸ்டர்!" என்று சொல்லிவிட்டு, அவன் முன்னே சென்று விட்டான்.

"யாருடா இந்தப் பையன்?" என்றதும், நடந்த அனைத்தையும் சொல்லவும், விதுபாரதியின் முகம் சுருங்கியது. ‘ஒரு பக்கத்து வீட்டுக்காரனால் தான் தங்களின் வாழ்க்கையே சின்னாப்பின்னம் ஆனது.' என்று நினைத்தவரின் முகம் கன்றவும், அதைப் புரிந்துகொண்ட சிவராஜ்,

"அக்கா பயப்படாதீங்க! அவரின் வீட்டில் அம்மாவும் அவரும் மட்டும் தான்! அவர்களால் நமக்கு எந்த தொந்தரவும் வராது. காரணம், அவர்களும் நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் தான்."

"பார்க்க நல்ல பையன் போல தான் தோணுகின்றான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உனக்கு உதவி செய்திருக்கிறான். ஆனாலும் மனிதர்களை நம்பவே மனம் பயப்படுதுடா...!"

"அக்கா...! பயந்து பயந்து தான், இத்தனை நாள் யாரோடும் பழகாமலும் பேசாமலும் நம்ம வாழ்க்கையே போயிடுச்சு. இவர் நல்லவர் தான் அக்கா! கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். பயப்படாதே...!" என்றதும் தலையாட்டிவிட்டு வெளியே வந்தாள்.

இங்கே, தன் மகள் வரப்போகிறாள் என்ற சுமித்திரை நொடிக்கொருமுறை வாயிலை எட்டி எட்டிப் பார்க்கவும், அவரின் அருகே வந்த தியாழினி, "பாட்டி கண்வலியும் கழுத்துவலியும் ஓருசேர வந்துடப் போகுது."

"ஏண்டி இப்படிச் சொல்ற?"

"காலையிலிருந்து கழுத்தையும் கண்ணையும் வாசல் பக்கமே வச்சிட்டு இருக்கீங்க? அமெரிக்காவில் இருந்து வந்தவங்களுக்கு வீட்டுக்கு வரத் தெரியாதா...? ஏதோ குழந்தையைத் தேடுவது போல், இப்படித் தேடுறீங்க...?"

"என் மகள் எனக்கு குழந்தை தாண்டி!" என்று சொல்லிவிட்டு, வாசல் பக்கமே பார்த்துக் கொண்டு இருந்தார்.

யாழினி தனது சித்தியிடம், “உங்க அம்மா உங்களுக்கும் மாமாவுக்கு ஓர வஞ்சகம் பண்றார். எங்கம்மாவின் மேல் மட்டும் தான், இவ்வளவு பாசமாக இருக்காங்க பாருங்க?”

வினோதினி சிரித்துக்கொண்டே, "அக்கா, ரெண்டு வருஷம் கழித்து, இப்பதான் வீட்டுக்கு வர்றாங்க. என் அம்மா காலையிலிருந்துதான் வெயிட் பண்றாங்க. நான் நைட்ல இருந்து தூங்காமல் அக்காவைப் பார்ப்பதற்காக காத்துகிட்டு இருக்கேன்." சொல்லியவர், ஆரத்தி கலந்து கொண்டு வந்து மேசையில் வைத்தார்.

தியா “அப்பப்பா, எவ்வளவு பாசம்? தாங்க முடியலடா சாமி!”

ஸ்ரீதர் சேனா காரை ஓட்டிக் கொண்டே வரும் போது, இரண்டு மூன்று முறை விது பாரதியை உற்று உற்றுப் பார்த்தான்.

விது அவனிடம், "ஏன் தம்பி, இப்படி பார்க்கிறீங்க? என்னிடம் ஏதாவது கேட்கணுமா...?"

“உங்களைப் பார்த்தால், எனக்கு புதிதாக பார்க்கிறது போல இல்லை. ஏற்கனவே பார்த்துப் பழகிய முகம் போல இருக்கு.”

அவனின் கேள்வியில் அவருக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டது. “இல்ல தம்பி. நீங்க என்னைப் பார்த்து இருக்க வாய்ப்பே இல்லை. நான் வெளிநாட்டில் தானே கடந்த 16 வருடமாக வேலை பார்க்கிறேன். ரெண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை தான் வருவேன்...!”

“ஹோ!” என்றான். ஆனால் சேனாவின் மனம் நம்ப மறுத்தது. 'இவரை இதற்கு முன்னாடி எங்கோ பார்த்திருக்கிறோமே என்று!'

'விதுபாரதியின் மனமெல்லாம் படபடவென்று அடித்தது. ஒரு வேளை தன்னை பார்த்திருப்பானோ இதற்கு முன்னாடி என்று!'

“வீடு வந்திருச்சு மேடம்.” என்ற அவன் குரல் கேட்டு நினைவுக்குத் திரும்பியவர்,

"கூட்டிட்டு வந்ததுக்கும், என் தம்பியைப் பார்ப்பதற்கும் நன்றி தம்பி!" தலையாட்டினான்.

வீடு வந்ததும், வாயிற்கதவைத் திறந்ததும், அங்கே புன்னகையோடு நின்றிருந்தவர்களைக் கண்டதும், அவளின் மனதில் இருந்த சங்கடம் எல்லாம் காணாமல் போனது. தியா ஓடி வந்து தன் அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு, கண்ணம் மூக்கு நெற்றி எல்லாம் முத்தம் வைத்து, தன் அன்பை வெளிக்காட்டினாள்.

அடுத்து தங்கை அம்மா என்று பாசமழை பொழிந்து விட்டு, ஆரத்தி எடுத்து அவரை அழைத்துச்சென்றனர்.

காருக்குள் இருந்த பொருட்களை எல்லாம், சேனா எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தான்.

தியா அவனின் அருகில் வந்து குனிந்து, "குட் மார்னிங் சார்!" என்றாள்.

அவனும் நிமிர்ந்து பாராமல் குனிந்து கொண்டே "மார்னிங்" என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல, பெண்ணவளின் முகம் வாடிவிட்டது.

மீண்டும் அவனின் அருகே வந்தவள் "என்ன ஆச்சு சார்? ஏன் கோபமாய் இருக்கீங்க...?"

"நான் உன்னிடம் கோபப்படுவதற்கு என்ன இருக்கு? என்று அவன் கேட்க...

அவன் பதில் தன்னை சமாதானப்படுத்த வில்லை. தன் மனம் எதையோ ஒன்றை அவனிடம் எதிர்பார்த்தது. அது சிரிப்பா...? அன்பான பார்வையா...? நகைச்சுவையான பேச்சா...? விடைதான் தெரியவில்லை.!

காருக்குள் ஏறி அமர்ந்தவன், "தியா, நீ ஐஸ்வர்யாவை வரச் சொல்லி காலேஜுக்குப் போய் விடு." என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

ஏனோ, மனம் வாடிப் போன பூ போல ஆகிவிட்டது. 'தன் அம்மா வந்த சந்தோசம் கூட, அவன் பேசாமல் போனதில் கரைந்து போனது.’

வீட்டிற்குள் பெட்டிகளை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, கல்லூரிக்குக் கிளம்பி வந்த தியா, அங்கே குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வந்து, உணவு மேஜையில் அமர்ந்த தன் அம்மாவைப் பார்த்து, “அம்மா” என்றதும் விது நிமிர்ந்தாள்.

“அம்மா, என் பக்கத்தில் நீங்க இருந்தால், யாருமே உன்னை அம்மான்னு சொல்ல மாட்டாங்க. எல்லாரும் அக்கான்னுதான் சொல்வாங்க...!”

சிரித்தவர், “தியா குட்டி, இன்னைக்கு லீவ் போடுறயா?”

சுமித்திரை “அவள் எதுக்கு வெட்டியா லீவ் போட்டுகிட்டு. நீ ஊருக்கு கிளம்புறப்போ போடட்டும்."

“சரிம்மா. தியாகுட்டி இங்கே வா!
.
பெண்ணவள் பக்கத்தில் வரவும், விது தன் தட்டில் இட்லி வைத்து, அதைப் பிய்த்து எடுத்து ஊட்ட ஆரம்பித்தார்.

சுமித்திரை அருகில் வந்து, “என் மகளை சாப்பிட விடுடி. நீ என்ன குழந்தையா? உன் கையில் எடுத்து சாப்பிடத் தெரியாதா...?”

பாட்டி உனக்குப் பொறாமை...! நீ வேணும்னா இட்லி எடுத்து உன் மகளுக்கு ஊட்டு.”

விது கண்விழித்து, “என் பொண்ணா இப்படி எல்லாம் பேசுறது...!”

“உன் பொண்ணே தான். ஊரில் இருக்கிற அத்தனை வாயும் இவளுக்குத் தான் இருக்கு.”

அவளோ தன் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு, தன் பாட்டியைப் பார்த்து, "ஆமாம் ஆமாம்! ஊரில் இருக்கிற அத்தனை வாயும் எனக்குத்தான். ஆனால், பாட்டியைவிட கொஞ்சம் கம்மிதான்.!"

குழந்தை குமரியாய் மாறி, பெற்றவரை சந்தோசப் படுத்தியது.

அந்த நேரம் பக்கத்து வீட்டில் சேனாவின் கார் கிளம்பும் சத்தம் கேட்டதும், சுமித்ரை, "உங்க சார் கிளம்பிட்டாரு! நீ எப்படி காலேஜுக்குப் போவ?"

"என் ஃப்ரண்டு ஐஸ்வர்யா வர்றா, பாட்டி!"

விதுபாரதி தன் மகளிடம், “தியாகுட்டி, நீ தினமும் அவனோடு தான் காலேஜுக்குப் போறியா...?”

“அம்மா இந்த வாரம் தான்மா! அதிலும் அவர் காலேஜிற்கு போகும் வழியில் முன்னமே நிறுத்தி விடுவார். யாரும் என்னை தப்பாப் பேசக் கூடாதுன்னு. நான் வரும் போது ஐஸ்வர்யா கூடத்தான் வருவேன். இன்னைக்கும் அவளுடன் தான்மா போறேன்.”

அதற்குள் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், "அவள் வந்துட்டாம்மா! நான் கிளம்புறேன்!" என்று சொல்லி வெளியே சென்றுவிட்டாள்.

“வீட்டுக்குள் பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி விட்டதால், நமக்கு நடந்த பிரச்சனை எல்லாம் நினைவில் இருக்காம்மா...?”

“இருக்குடா…!” என்ற சுமித்ரையிடம்,

“அப்புறம் எப்படி ஒரு வயது பெண்ணை ஒரு வயது வந்த ஆளுடன் அனுப்புறீங்க...?”

"என் வயது அனுபவத்தில் தான் விது! யார் நல்லவர் யார் கெட்டவர் என்று இப்போ என்னால் கணித்து விடத் தெரியும்!"

எழுந்து வந்தவர் தன் அம்மாவை கட்டிக் கொண்டு அவர் தோளில் சாயவும், தன் மகளின் முதுகை வருடிய சுமித்திரை,"நீ இன்னும் பழசை மறக்கலையாடா!"

"அதெல்லாம் மறக்கணும்னு தான், நானும் முயற்சி பண்றேன். ஆனால் முடியலம்மா!"

சுமித்திரை தன் மகளை உள்ளே படுக்கை அறைக்கு அழைத்து வந்து, அவர் கட்டிலில் அமர்ந்து, “விது வா!” என்றதும் வந்தவள், மடியில் படுத்தாள்.

34 வயது பெண்மணி, மூன்று வயதுக் குழந்தையாய் தெரிவது தாய்க்கு மட்டுமே...! அவர் தலையைத் தடவிக் கொடுக்க, வெகு நாள் கழித்து அப்படியே உறங்கிப் போனாள். உறங்கும் தன் மகளையே கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
........

இங்கே ஐஸ்வர்யாவுடன் கல்லூரிக்குச் சென்ற தியாழினியை மறைத்த ஆத்விக், "நான் உன்னிடம் தனியா பேசணும்...!"

"சீனியர் நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும். எனக்கு உங்களிடத்தில் பேசுறதுக்கு ஒன்றுமே இல்லை!" என்று சொல்லிவிட்டு அவள் கிளம்ப,

அவளின் கையைப் பிடித்து இழுத்தவன், "எனக்கு உன்கிட்ட பேசணும். பேசியே ஆகணும்!"

"சீனியர் மரியாதையா கையை விடுங்க. இப்படி கட்டாயப் படுத்தினால், நான் மேனேஜ்மென்ட்டிடம் புகார் பண்ண வேண்டி வரும்."

"நீ யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ...! பட் ஐ லவ் யூ!"

அவனின் கையிலிருந்த தன் கையைப் உருவிவிட்டு, "அடுத்த முறை காதல் கீதல்னு வந்து பேசினால் கன்னம் பழுத்திடும் ஜாக்கிரதை!" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

செல்லும் அவளின் முன்னே நின்று, "எனக்கு ஒரு பொருள் கிடைக்காவிட்டால், அது யாருக்கும் கிடைக்க விடாதவன் நான்."

“அதையும் பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு அவள் முன்னே செல்ல,

அவனின் பேச்சில் பயந்த ஐஸ்வர்யா, “எனக்கு என்னவோ பயமா இருக்குடி! இப்படிப் பட்டவர்களைப் பகைத்தால், கொலை அல்லது ஆசிடுன்னு எதையாவது கொண்டுவந்து மூஞ்சியில் ஊற்றி விட்டால்...? பேசாமல் போய் உன் வீட்டில் சொல்லிவிடு!”

“அவ்வளவுதான், என் படிப்புக்கு முழுக்குப் போட்டு, வீட்டில் உட்கார வைத்து விடுவார்கள். இவன் ஒரு பயந்தாங்கோலிடி. என் மாமாவை வண்டியில் இடிச்சிட்டு, பயந்து போய் ரெண்டு நாள் லீவு போட்டு வீட்டில் உட்கார்ந்தவன்டி. இவனுக்கெல்லாம் பயந்தால் படிக்க முடியுமா...? வர்றதைப் பார்த்துக்கலாம்...!” என்று அழைத்துச் சென்றாள்.

ஆத்விக் தியாழினியிடம் ப்ரபோஸ் செய்வதை மகிமாவும் மதுராவும் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். அந்த நேரம் அவ்வழியே சென்ற பாண்டித்துரை ஆத்விக் என்றதும், திரும்பியவன்

“ஹாய் அங்கிள்!”

இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து, "இவனை நம்ம டாடிக்குத் தெரியுமா...?" என்று அருகே வந்தனர்.

அவரோ “ஹாய் ஆத்வி! டாடி நலமா?”

“அவருக்கென்ன சூப்பர்?”

“அன்னிக்கு என்ன, ஒரு ஆக்ஸிடெண்ட் பண்ணிட்ட? காரை பார்த்து கவனத்துடன் ஓட்டி வர வேண்டாமா...? கொஞ்சம் மிஸ்சாகி இருந்தாலும், உன் பெயர், அப்பா பெயர் ஊரெல்லாம் வந்திடும். ஒரு வேளை உனக்கு ஏதும் ஆகியிருந்தால் என்ன பண்றது? நினைச்சுப் பாரு!”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, “ஹாய் டாடி!” என்று வந்த தன் மகள்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தவர், “இவன் ஆத்விக். என் பிரண்டு இளவரசனின் பையன்.”

அவன் இருவரையும் பார்த்து “ஹாய்!” என்றதும், மதுரா, “ஹேய்! நீங்க இளவரசன் மாமாவின் பையனா...?”

“ஆமாம்.!”

பெண்ணவள் இதழ் விரித்து “செம ஹேப்பி” என்று கைநீட்டி “ஐம் மதுரா!” அவனும் கைகுலுக்கினான்.

“நான் மகிமா” என்று கை கொடுக்க, மூவர் கூட்டணி அங்கே அரங்கேறியது.

அந்த நேரம் காலேஜ் பெல் அடிக்கவும் பாண்டித் துரை “சரி சரி வகுப்பிற்கு நேரம் ஆச்சு. நீங்க போங்க.” என்றதும், மூவரும் கிளம்பி அவரவர் வகுப்பிற்குச் சென்றனர்.

அன்று வகுப்பிற்கு வந்த சேனா பாடத்தை நடத்தியவன், ஒருமுறை கூட தியாவின் புறம் திரும்ப வில்லை.

'அவர் ஏன் தன்னைப் பார்க்கவேயில்லை’ என்ற கேள்வி, பெண்ணவளின் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.

பாடம் முடித்துவிட்டு அனைவரையும் நோட்ஸ் எழுதச் சொல்லியவன், வகுப்பை சுற்றி சுற்றி வந்தான். அனைவரும் பொறுப்பாய் எழுத, பாடத்தை கவனிக்காதவளோ என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருக்கும் போது, அவளின் அருகே வந்தவன், அவளின் நோட் புக்கையே பார்த்தவன், திட்டாமல் அப்படியே நகர்ந்து விட்டான்.

அவன் வகுப்பு முடிந்து போன பின், ஐஸ்வர்யா தியாவிடம், "சார், நம்ம மேல கோவமா இருப்பாரோ...! இன்னைக்கு ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை!"

சேனாவின் மனமும் அதுதான் கேட்டது, ‘ஏன் அவளை தவிர்க்கிறாய் என்று...? அவள் தன்னிடம் மார்க்கிற்காகப் பேசமாட்டேன் என்று சொன்னதால் வந்த கோபமா...? ஒரு ஆசிரியர் மாணவியிடம் சினேகம் வளர்ப்பது தவறு என்று தோன்றியதால் தவிர்க்கிறேனா...? இல்லை, அவளை நெருங்கினால் மனம் அவளிடம் விழுந்து விடுமோ என்ற பயத்தால் தவிர்க்கிறேனா?’ ஏதோ ஒன்று தடுத்தது.

மதியம் ஐஸ்வர்யாவும் தியாவும் சாப்பிட வந்தனர். ஐஸ்வர்யா சாப்பிட, தியாவோ டிபன் பாக்ஸை திறக்காமலே “பசிக்கலடி.”

“ஏன்?”

“தலை வலிக்குது!” என்று சொல்லிவிட்டு, தோழி சாப்பிடும் வரை காத்திருந்தாள். அவள் சாப்பிட்டதும் இருவரும் தங்களின் வகுப்பிற்கு வந்து கொண்டிருக்கும் போது,

ஐஸ்வர்யா, "உனக்கு தலை வலிக்குதுன்னு சொன்னடி. கேண்டீன் போய், ஒரு காஃபி சாப்பிட்டு வரலாமா...?"

"வேணாம் டி? மூடு இல்லை!"

அந்த நேரம் எதிரே வந்த ஹெச்.ஓ.டி. அருணா மேடத்தைப் பார்த்து, இருவரும் “குட் ஆப்டர் நூன்" என்றதும், அவரும் தலையை அசைத்தவர், “ஹாய் டியர்ஸ்! இருவரில் யாராவது ஒருவர் போய், ஸ்ரீதர் சேனாவை ஆடிட்டோரியத்திற்கு வரச் சொல்லுங்க…?”

தியாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல மலர்ந்து. “ஐஸு, நீ வகுப்பிற்குப் போ...! நான் போய் சொல்லிட்டு வர்றேன்.” என்றதும்.

ஐஸ்வர்யா தலையை ஆட்டிவிட்டு நக்கலாய், "நீ நடத்துடி! இப்ப தான் உனக்கு ஏன் சாப்பாடு இறங்கல என்பதற்கான விஷயம் புரியுது...!"

"போடி லூசு!" என்று சொன்னவளின் கால்கள் சேனாவை தேடிச் சென்றது.

ஸ்டாஃப் ரூமில் அங்கே யாருமில்லை. அவன் மட்டும் தனது இருக்கையில் கால் மேல் கால் போட்டு, அமர்ந்து கண்களை மூடிச் சாய்ந்திருந்தான்.

அவனை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டே நின்றவள், பின் "சார்...!" என்றதும் நிமிர்ந்தான்.

விழித்தவன் "இங்க என்ன பண்ற?" எடுத்ததும் கடுமையான வார்த்தைகள்.

"சார்! உங்களுக்கு என் மேல என்ன கோபம்? ஏன் மூஞ்சியை உம்முன்னு வச்சிருக்கிங்க...?"

"நீ இங்க படிக்க வந்து இருக்கியா...? இல்லை, என் மூஞ்சியைப் பார்க்க வந்திருக்கியா...?"

அவனின் வார்த்தையில் விழிநீர் வெளியே எட்டிப் பார்க்க, “உங்களை அருணா மேடம் ஆடிட்டோரியத்திற்கு வரச் சொன்னாங்க” என்று சொல்லி விட்டு திரும்பும் போது, அங்கே மார்பின் குறுக்கே கைகளை கட்டி மகிமா நின்று இருந்தாள்.

கலங்கிய கண்களுடன் தியாவும், மிகவும் கோபத்துடன் சேனாவும் இருப்பதைக் கண்டவளுக்கு, அப்படியே குளுகுளுன்னு இருந்தது.

மகிமாவின் மனமோ 'இவள் இங்கே என்ன பண்றா?' பின் கோபமாய் "யாரும் இல்லாதப்போ ஸ்டாஃப் ரூமில் உனக்கு என்ன வேலை...?"

“அருணா மேடம் சாரை வரச் சொன்னாங்க.” என்றதும்,

"ஹோ...! அப்ப ஏன், ஏன் உன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு?"

“கண்ணில் தூசி விழுந்திடுச்சு, மேம்.” என்று சொல்லிவிட்டு அவள் நிற்க,

இதில் எதோ சரியில்லை என்பதை உணர்ந்த மகிமா, "பொய் சொல்றயா...? படிக்கிற வயதில் கவனம் படிப்பில் இருக்கட்டும். அடிக்கடி ஸ்டாஃப் ரூம் பக்கம் வரக் கூடாது!” என்று மிரட்டினாள். அதில் கடுப்பான சேனா இருக்கையை விட்டு எழுந்தவன், அவளை முறைத்து விட்டு அவளைக் கடந்து சென்றான்.

அங்கே யாரும் இல்லை என்றதும், தியாவின் மனம் சேனாவின் பக்கம் விழுந்திடக் கூடாது என்று நினைத்த மகிமா, தன்னைக் கடந்தவனின் கையைப் பிடித்து, "சேனா ஐ லவ் யூ...!"

ஏனோ ஒரு கோபம் அவனுக்குள் சுழன்று கொண்டிருந்தது. அதையும் தாண்டி அவள் அத்து மீறவும், ருத்ரனாய் மாறினான்.

"ஒரு ஸ்டூடண்ட் முன்னாடி எவ்வளவு கேவலமா நடந்துக்கிற? இடியட்!” என்று திட்டிக் கொண்டே, அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.

“இதுவே முதலும் கடைசியுமா இருக்கனும். ஜாக்கிரதை!” என்று சொன்னவன், திரும்பி அங்கே நிற்கும் தியாவை முறைக்க, பயந்தவள் ஓடியே விட்டாள்.

தன் கன்னத்தில் கை வைத்துத் தடவிய மகிமா, “சேனா, இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.”

“யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ. நான் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, அவன் சென்று விட்டான்.

மகிமாவின் மனதிலோ அறைந்த சேனாவை விட, தியாவின் மேல்தான் கோபம் வந்தது.

வகுப்பிற்குள் பேயறைந்தது போல் வந்து அமர்ந்த தியாவைப் பார்த்த ஐஸ்வர்யா, “என்னடி சேனா சாரைப் பார்க்கப் போயிட்டு, கன்னத்தில் கை வைத்துவிட்டு வந்து உட்கார்ற? ஏதாவது சம்திங் சம்திங்கா...?”

“சம்திங்தான். ஆனால் எனக்கு இல்லை. ஈவினிங் வீட்டுக்கு போறப்ப சொல்றேன்.”

“ஐயோ, அதுவரைக்கும் எனக்கு மண்டைக்குள் என்னவா இருக்கும்னு நினைத்து யோசிச்சுக்கிட்டே இருப்பேன்டி. வேற வேலையே ஓடாது.”

“அமைதியாய் இருடி! வீட்டுக்கு போறப்ப சொல்றேன்.” என்றதும் அமைதியாகிவிட்டாள்.

கதை கொஞ்சம் பெரிதாக இருந்ததால் இதன் கீழேயே இன்னொரு அத்தியாயம்
பதித்திருக்கிறேன் .

semma
 
Anitha Sundar

Active member
Messages
116
Reaction score
64
Points
28
அத்தியாயம் 8.2

இருவரும் ஈவினிங் கல்லூரி முடிந்து வீட்டுக்குப் போகும் போது, இடைவழியில் நின்ற ஐஸ்வர்யா, “ஹேய் தியா, இப்போ சொல்லு. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.”

அவள் நடந்ததைச் சொல்லவும், வண்டியை விட்டு இறங்கிய ஐஸ்வர்யா, டண்டனக்கா டண்டனக்கா என்று நடு ரோட்டில் ஆட ஆரம்பித்தாள். அவளின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

"லூசு நடுரோட்டில் என்னடி பண்ணிட்டு இருக்க...?” அவளின் கையை பிடித்து இழுத்து, “ஹேய்! எல்லோரும் பார்க்கிறாங்கடி!"

“பார்த்தால் பார்த்திட்டுப் போகட்டும். அன்னைக்கு அந்தம்மா என் மூஞ்சில சாக்பீஸ் விட்டு எரிஞ்சுச்சே...! எனக்கு எவ்ளோ கஷ்டமாய் இருந்துச்சு தெரியுமா...?"

“நான் ஒரு நிமிஷம் ஆடிட்டு தான் வருவேன்.” என்று அவள் மீண்டும் ஆட, இடுப்பில் கைவைத்து தியாழினி அவளை முறைக்கும் போது, தங்களின் பக்கத்தில் கார் ஒன்று வந்து நிற்கவும் இருவரும் திரும்ப,

“நடுரோட்டில் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற சேனாவின் கடுமையான குரலைக் கேட்டதும், இருவரின் முகமும் விரிந்தது.

“சார்...! அது வந்து... சும்மா...” என்று தியா இழுக்க,

அவனோ முறைத்து, “ஐஸ்வர்யா, நீ வீட்டுக்குக் கிளம்பு. தியா நீ வண்டியில் ஏறு!”

“பை டி” என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்ததும், வாகனத்தை ஓட்டியவன்,

“மதியம் ஸ்டாஃப் ரூமில் நடந்ததை ஐஸ்வர்யாவிடம் சொன்னியா...?”

அவள் மௌனமாய் தலை குனியவும், “அதற்குத்தான் நடு ரோட்டில் நின்று ரெண்டு பேரும் ஆடிட்டு இருக்கீங்களா...? இந்த மாதிரி இன்னொருத்தவங்க வருத்தத்தைப் பார்த்து சிரிக்கிறது தப்பில்லையா...? அது எப்படி நீ, இன்னொருத்தவங்க கிட்ட போய், அதை ஷேர் பண்ணலாம்...? உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கல!” கோபமாய் பற்களின் இடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

அவனின் கோபம் கண்டு நிமிர்ந்து முகம் பார்க்க, முகமோ சிவந்து உக்கிரமாய் இருந்தது. மெல்ல மெல்ல “சாரி சார்.”

அவனிடம் பதில் இல்லை.

வீடு வந்ததும் அவன் பேசாமல் இறக்கிவிட்டுச் செல்ல, அவளால் அதை தாங்கிக் கொள்ளவே முடிய வில்லை. வீட்டிற்குள் நுழையும் போது, அம்மாவும் சித்தியும் இல்லை. பாட்டி மட்டுமே...!

உள்ளே நுழையும் போதே, “அம்மா, ஏதோ புதுத்துணி வாங்கிட்டு வந்திருக்கிறாளாம். குளித்து முடித்து அதைக் கட்டி தயாராய் இருக்கச் சொன்னாள். சாய்ந்தரம் கோவிலுக்கு போலாமுன்னு சொன்னாள்.”

குளித்து முடித்து மேஜையின் மேல் பார்க்க, ஹாஃப் சேரி. ஏனோ சேனா கடுமையாகப் பேசியதால், மனதில் எந்த சந்தோஷமும் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், தன் அம்மாவிற்கு என்று உடுத்திக் கொண்டு கிளம்பினாள்.

ஈரக் கூந்தலை துவட்டி விட்டு, பின் தளர்வாய் ஜடையைப் பின்னி, விழிகளுக்கு மை இட்டு, நெற்றியில் செந்தூரம் இட்டு வெளியே வந்த தன் பேத்தியைப் பார்த்ததும்,

“அழகிடி நீ...! இரவில் சுத்திப் போடணும்டி! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.” என்று சொல்லியவர் ஃப்ரிட்ஜில் இருக்கும் மல்லிகைப் பூவை எடுத்து வந்து, தலையில் வைத்து விட்டார்.

பூஜை அறையில் போய் திருநீறு எடுத்து வந்து, பேத்தியின் நெற்றியில் வைத்த சுமித்திரை, “என்னடி காலேஜில் எதுவும் பிரச்சனையா...?”

மனம் சோர்வானதை முகம் காட்டிக் கொடுக்கவும், “தலை வலிக்குது, பாட்டி” என்று பொய் உரைத்தாள்.

“அப்புறம் ஏண்டி தலைக்குக் குளிச்ச? துவட்டுனயா...?”

“எல்லாம் ஆச்சு, பாட்டி.”

வீட்டில் பஜ்ஜி சுடும் வாசம் மூக்கைத் துளைக்க, தன் அம்மா வந்தால் தான், சித்திக்கு சமையலறையிலிருந்து விடுமுறை. முட்டிவலி கால்வலி என்று எதையாச்சும் சொல்லும் பாட்டி, இன்று துள்ளி விளையாடும் குழந்தையாய் மாறி, முறுக்கு, அதிரசம் ஸ்பெஷலாய் சமைத்து குவித்துக் கொண்டிருந்தார். ஊறுகாய் வத்தல் குழம்பு, மசால் பொடிகள், இட்லிபொடி என அம்மாவிற்கு கொடுத்து விடுவதற்காக, ஒருபுறம் தயாராகிக் கொண்டு இருந்தது.

பாட்டியின் அருகே சென்றவள், “நாங்க எல்லாம் மனுசர்களாய்த் தெரியலையா...? என் அம்மா மட்டும்தான் ஸ்பெசலா...?”

"நான் உனக்கு என்னடி குறை வச்சேன்?"

"எனக்கு எப்பவாச்சும் இப்படி செஞ்சு கொடுத்து இருக்கீங்களா...?"

“நீ வாய் திறந்து வேணும்னு ஏதாவது கேட்டால், உன் மாமா ஓடிப்போய் வாங்கிக் கொடுத்திடுவான். உன் சித்திக்காரி விதவிதமாய் சமைத்துக் கொடுக்கிறாள். ஆனால், என் மகளுக்கு தலை வலித்தால் கூட அவளாகவே எழுந்து போய், தானே காஃபி போட்டுத்தான் குடிக்க முடியும். தனியாய் கிடந்து கஷ்டப்படுறாள். நமக்காகவே உழைக்கிறாள். பாவம். நீ படித்து வேலையில் சேர்ந்த பிறகு தான், உன் அம்மா வீட்டில் ஓய்வெடுக்க முடியும்.”

“அம்மா எதற்கு பாட்டி தனியாய் போய் கஷ்டப் படனும். நம்ம கூடவே நம்ம வீட்டில் இருக்கலாமே...!”

சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவராய், “குட்டிமா இங்க வா வா!” என்று சொல்லி,

ஒரு பாக்சில் பஜ்ஜி வைத்து, பெரிய டம்ளரில் மசாலாப் பால் ஊற்றி, “இதைப் போயி உங்க சாரின் வீட்டில் கொடுத்திட்டு வா!”

மாட்டேன் என்று சொன்னால், பாட்டி ஆயிரம் காரணம் கேட்கும் என்பதால், தலையாட்டிக் கொண்டே அதை வாங்கியவள், அவரின் வீட்டிற்குச் சென்று காலிங் பெல் அடித்தாள்.

வீட்டின் காலிங் பெல் அடித்துவிட்டு சிறிது நேரம் நின்றவள், திறக்காததால், மீண்டும் காலிங் பெல் அழுத்தினாள்.

அந்த நேரம் குளியலறையில் இருந்த சேனா, ‘அம்மா வருவாங்கன்னு கதவை திறந்து விட்டுத் தானே வந்தோம். அப்புறம் ஏன் காலிங் பெல் அடிக்கிறாங்க’ என்று அரை குறையாய் குளித்துவிட்டு, டவளை கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

‘ஒரு வேளை காலிங் பெல் ரிப்பேர் ஆகி இருக்குமோ?’ என்று நினைத்தவள், தன் கையிலிருக்கும் பஜ்ஜி மற்றும் பால் டம்ளரை கீழே வைத்துவிட்டு, கதவை ஒட்டி நின்று கை வைத்துத் தள்ள,

அந்தப் பக்கம் சேனா வேகமாய் கதவை உள்புறமாய் திறக்க, திறந்த வேகத்தில் பெண்ணவள் அவனோடு மோத, விழுந்து விடுவாளோ என்று அவளின் இடைபற்றி நிறுத்த முயலும் போதே, நிலை தடுமாறி அப்படியே இருவரும் கீழே விழுந்தனர்.

விழுந்த வேகத்தில், பெண்ணவளின் இதழ் ஆடவனின் இதழோடு ஒட்டி உறவாடியது. இருவரின் இதழ்களும் சந்திக்கும் வேளையில், பார்வைகளும் சந்தித்து மீண்டது.

எதையும் தயங்காமல் எதிர்கொள்ளும் ஆடவனும், பெண்ணவளின் இதழ் முத்தத்தில் தடுமாறித்தான் போனான்.

அறியாமல் நடந்த முத்தப் போரில், தெரியாமலே இரு இதயம் இடமாறியது.

பெண்ணவளின் மைவிழியில் அதிர்ச்சியின் தாக்கம். இருவரின் உடல்களுக்குள்ளும் புதுவித மாயசக்தி தங்களைக் கட்டிப்போட்டது போல், மூளை எதையும் யோசிக்காமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. இருவருக்குமே இதயம் எகிறி விழுந்து விடும் அளவிற்குத் துடித்தது.

ஒரு நிமிடத்திற்குப் பின் தான், தான் அவன் மேல் இருக்கிறோம் என்ற உணர்வு வர, எழுந்து கொள்ள முயன்றாள். அவள் எழுவதற்கு உதவி செய்து, தானும் எழுந்தான்.

"எதுக்கு வந்த...?" என்ற கேள்வியில், முன்னே இருந்த கோபம் இல்லை. அதில் கொஞ்சம் ஆசுவாச மானவள், அவன் பார்வையை சந்திக்க முடியாமலும், வெற்று மேனியில் நிற்பவனைப் பார்க்க முடியாமலும், “பாட்டி” என்றதும் தான், வெளியே பாக்ஸ் மற்றும் டம்ளரை வைத்து விட்டது ஞாபகம் வந்தது.

“ஒரு நிமிஷம்” என்றவள், வெளியே போனபோது ஆழ்ந்த மூச்சை விட்டவன், போகும் அவளையே பார்த்தான். சுடிதாரில் சிறுமியாகத் தெரிந்தவள், தாவணியில் பெண்ணாய் மாறியிருந்தாள். அவளின் விழிகளில் விழுந்து விடக் கூடாது என்று தானே தள்ளி நிற்கிறோம். ஆனால் சூழ்நிலை தன் மனதிற்கு எதிராய் செயல்படுகிறதே என்று நினைக்கும் போது தான், டவளுடன் நிற்பது நினைவில் வரவும், “கடவுளே!” என்று தலையில் அடித்து, மேலே போய் சட்டையை அணிந்தான். தியா கையில் பாலும், பஜ்ஜியும் அவனிடம் கொண்டு வந்து கொடுக்கும் போது, அவன் சட்டையைப் போட்டிருந்தான்.

வாங்கியவன் “தியா”

“ஹ்ம்”

“இனிமேல் என்னைத் தேடி, ஸ்டாஃப் ரூம் அல்லது வீட்டிற்கு வர வேண்டாம்!”

ஏனோ முகமும் வாடி, கண்ணும் கலங்கியது.

“நீ சின்னப் பொண்ணு. இப்ப நடந்தது ஒரு ஆக்சிடென்ட். தேவையில்லாததை எல்லாம் மனசுக்குள் கற்பனை பண்ணினால், அப்புறம் மூளையில் படிப்பு ஏறாது. என்னைப் பற்றிய நினைவுகள் மட்டும்தான் இருக்கும். எப்படா நேரம் கிடைக்கும்? எப்போது சந்திக்கலாம்? அட்லீஸ்ட் தினமும் ஒரு ஹாய், குட்மார்னிங், சாப்ட்டீங்களா என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து, கண்டிப்பாக பேசனுமென்று தோன்றும்.”

“நான் ஒன்னும் அப்படி எல்லாம் நினைக்கல. பாட்டி சொன்னதால் தான் வந்தேன்.”

“நான் ரெண்டு நாளாய் உன் கண்களையும் உன்னையும் தான் பார்க்கிறேன். உன் கண்ணு என்னையே தேடுது. நான் சொல்றது உண்மையா...? பொய்யா...?”

“சார், உண்மை தான். எனக்கு உங்களைப் பார்க்கணும்னு தோணுச்சு. நீங்க திட்டினால் கஷ்டமாய் இருக்கு. நீங்க என்னைப் பார்க்காவிட்டால் மனம் பாரமாயிருக்கு. உங்க நினைவாகவே இருக்கு. என்னால வேற எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியல. எங்கம்மா வந்த சந்தோசத்தைக் கூட அனுபவிக்க முடியல. இது என்ன உணர்வுன்னு எனக்குச் சொல்லத் தெரியல.”

“தியாழினி, நான் உனக்கு ஆசிரியர். மாதா பிதா குரு தெய்வம். அதில் குருவுக்குப் பின்னாடி தான் கடவுளையே வைத்திருக்கிறார்கள். ஒரு குரு சிஷ்யை உறவு என்பது தெய்வீகமானது. இதனை எந்த விதத்திலும் தவறாக உபயோகப் படுத்தக் கூடாது. ஆசிரியர் மீது மாணவிக்கு ஏதாவது ஒரு விதத்தில் ஈர்ப்பு ஏற்பட்டால், அதை சரிப்படுத்தி உன்னை நெறிப் படுத்துவது என் கடமை.

மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியரே காதலித்தால், அது தவறுமா! நான் சொல்றது உனக்குப் புரியுதா...?”

“சார், நம்ம கல்லூரியில் நீங்க மட்டும் ஆசிரியர் கிடையாது. இதுக்கு முன்னாடியும் என் ஸ்கூல்ல பல டீச்சர்ஸ் இருக்காங்க. ஆனால், இந்த உணர்வு உங்க மேல் மட்டும்தான் வருது.”

“எல்லாப் பெண்களும் வீட்டில் இருக்கும் ஆட்களுக்கு அடுத்தபடியாக, அதீத உரிமையோடு பழகுவது ஆசிரியரிடம் மட்டுமே. அன்பாய், அக்கறையாய் நடந்து கொள்ள வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை.அப்படி நடப்பதால், நான் உனக்கு மனதில் பதிந்திருப்பேன்.

என் அம்மாவுக்கும் உன் குடும்பத்தோடு பழகுவது அவ்வளவு பிடிச்சிருக்கு. எங்களுக்கு சொந்தங்களே கிடையாது.

அந்த உறவை நான் கெடுக்க விரும்ப வில்லை. தயவு செய்து நீ எனக்கு தொல்லையாய் எந்தக் காலத்திலும் இருந்து விடாதே...! ஏற்கனவே ஒருத்தி காதல் என்ற பெயரில் டார்ச்சர் பண்றா. அதனால் காலேஜுக்குப் போறதே பிடிக்காமல் போச்சு. நீயும் இப்படி பண்ணினால், எனக்கு வீடும் பிடிக்காமல் போயிடும். அப்புறம், என் அம்மாவை கூட்டிட்டு நான் எங்கேயாவது போக வேண்டியதுதான்...!”

ஏனோ தன் மனதில் பெரிய கல் வைத்து அழுத்தும் வலி. தன்மானத்தை எடைபோடும் வார்த்தை.

“நான் அந்த மாதிரி பொண்ணு எல்லாம் கிடையாது, சார். ஒருத்தவங்க ‘சீ’ ன்னு சொல்லிட்டால் அவங்க பின்னாடி சுத்துற ரகம் நான் கிடையாது. இனிமேல் இந்தப் பக்கமே வரமாட்டேன். என்னால யாரும் வீடு எல்லாம் காலி பண்ண வேண்டாம். நான் ஏதாவது ஒரு விதத்தில் தொந்தரவு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்.” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

சுடும்...!

arumai
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
.
5.வெப்பமாய் நீ! தட்பமாய் நான்!

அத்தியாயம் - 5

இங்கே மும்பையில் ரிஷிகேஷ், “மேடம்…!’ என்றதும் திரும்பிய மிதுனா,

“என்ன ரிஷி?”

“கர்நாடகாவில் இருந்து, உங்க டேட் கேட்டு கால் பண்ணி இருக்காங்க மேடம்! புது படத்தில் நடிக்கும் அனைவருமே புதுமுகம். இன்னும் பெயர் வைக்கல…”

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் பெயர் கேட்டு ஒக்கே என்றதும், “எப்போ சூட்டிங்?”

“நீங்க எப்போ ப்ரீ என்று சொன்னால் அந்த தேதியில் சூட்டிங் வச்சுக்களாம்னு சொன்னாங்க.”

“நான் எப்போ ப்ரி? வரும் வாரம் மட்டும் தான் ப்ரி. அடுத்து வரும் நாட்களெல்லாம் பிஸிதான்.”

ஏனோ கண்களை மூடி அமர்ந்தவளின் மனமெல்லாம், ‘அடுத்த வாரம் கர்நாடகாவில் சூட்டிங். பக்கத்தில் தானே நம்ம ஊர். சென்னைக்கு ஒரு எட்டு போய் வரலாமா...? வேண்டாமா…?’ என்ற சிந்தனையிலே நேரம் கழிந்தது.

அவளின் முகத்தை வைத்து, அவள் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை அறிந்த ரிஷி, “மேடம், ஓகேவா? நாட் ஓகேவா?”

அப்போதுதான், அவன் அங்கே நிற்பது நினைவிற்கு வந்து “போலாம்.” என்றாள்.

…….

இங்கே சென்னையில் விடிந்ததும் எழுந்து குளித்த தியாழினி, “பாட்டி இன்னைக்கு நான் காலேஜ் போகலை. மாமாவைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போறேன்.”

வினோதினி, “நான் ஹாஸ்பிட்டல் போறேன். நீ காலேஜ் போ! நீயும் வந்து அங்கே சும்மா தானே இருக்கப் போற. அதற்கு நீ காலேஜுக்கே போ…!”

இரவெல்லாம் மருத்துவமனையில் சிவராஜுக்கு துணையாக இருந்த சேனா, அதிகாலையில் வினோதினி வரவும் விட்டுவிட்டு, அவர் இரவில் அணிந்த ஆடைகளை வாங்கி வந்து பாட்டியிடம் கொடுக்க,

“தியாமா, தம்பிக்கு காஃபி எடுத்துட்டுவாம்மா!” சொல்லி விட்டு அவனிடம்,

“தம்பி, நீங்க எங்களுக்கு எம்புட்டு பெரிய உதவி செய்றீங்க தெரியுமா? அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பாட்டி. வீட்டிற்குப் போய் குளித்து, கல்லூரிக்குக் கிளம்பனும்.”

அந்த நேரம் தியாழினி ஒரு டம்ளரில் காஃபி கொண்டு வந்து நீட்டவும், அதை வாங்கியவன், “நம்பிக் குடிக்கலாமா...?”

அவள் முறைக்க, பாட்டி, “அது கொஞ்சம் கஷ்டம் தான் தம்பி. இருந்தாலும் மருந்து மாதிரி நினைச்சு குடித்து விடுங்கள்.”

“பாட்டி உங்களை…” என்ற போது சேனா காஃபியை ஒரு மிடறு அருந்திவிட்டு அவளைப் பார்த்தான்.

அவன் முகத்தைக் கண்டவர், “தம்பி நல்லா இல்லைன்னா சொல்லிடு. பாட்டி உனக்கு நல்ல காஃபி போட்டுத் தர்றேன். மனசு கஷ்டப்படும்னு நினைத்து குடிக்க வேண்டாம்.”

“நோ பாட்டி. காஃபி சூப்பர். வாவ்...!” என்றவன், அவளிடம் “நீதான் போட்டியா...?”

“சார்... இதெல்லாம் ஓவர்.”

“ஹேய் சும்மா ஃபன். ரியலி சூப்பர்.”

பாட்டி சிரித்துக் கொண்டே, “தியாழினி, நல்லா சமைப்பா, தம்பி.”

“பரவாயில்லையே! எல்லா விஷயமும் கத்து வச்சிருக்க.”

பின், “சரிங்க பாட்டி, நேரமாச்சு.” என்று அவன் வெளியேரவும்,

கிளம்பிய தியாழினி “ஆமாம் பாட்டி, நான் எப்படி காலேஜ் போறது?”

“ஆமாம். உன்னைத் தனியா எப்படி அனுப்புறது?”

யோசனையில் அமர்ந்தபடி, தன் மகனுக்கு அழைத்து, “உனக்குத் தெரிந்த ஆட்டோ இருந்தால் சொல்லுடா!”

“அம்மா, யாரென்று தெரியாதவரோடு எப்படி வயதுப் பெண்ணை அனுப்புவது? கொஞ்சம் பொறுங்கள்!” என்று அவன் தனது செல்போன் மூலம் ஸ்ரீதர் சேனாவிற்கு அழைத்து, “சார், தொந்தரவுக்கு மன்னித்துவிடுங்கள்!”

“என்னன்னு சொல்லாமலே தொந்தரவுன்னு சொன்னால் எப்படி? என்னன்னு சொல்லுங்க!”

“எனக்கு, ஒரு உதவி செய்ய முடியுமா...?”

“சொல்லுங்கள். கண்டிப்பாக... என்னால் முடிந்தால் செய்வேன்.”

“தியாவை, நாங்கள் யாரை நம்பியும் இதுநாள் வரை வெளியே எங்கும் அனுப்பியதில்லை. அவளைக் கொஞ்ச நாள் உங்களுடன் காலேஜுக்கு அழைத்து போக முடியுமா...?”

“நான் வீட்டிற்கு வந்ததற்கு பின், மாற்று ஏற்பாடு ஏதாவது பண்ணிக்கிறேன்.”

சேனா தயங்கி தயங்கி, “சார்! நான் தியாழினியை தினமும் என்னுடன் காலேஜ் கூட்டிப் போனால் பிள்ளைங்க கிண்டல் பண்ண மாட்டாங்களா...?”

“யாரோ கிண்டல் பண்ணுவாங்கன்னு பயந்தால், யாரையோ நம்பி அனுப்பி, நாளைக்கு என் பொண்ணுக்கு ஏதாவது ஆகிவிட்டால், என்ன பண்றது தம்பி?”

தேவகி, “யாரு கண்ணா ஃபோனில்?”

“சிவராஜ் சார்மா!”

“என்னவாம்?”

“அந்தப் பொண்ணை காலேஜில் விடச் சொல்றார்.”

“தாராளமாய் கூட்டிட்டு போ...!”

தன் அம்மா சொன்னதும் தலையாட்டியவன், “கூட்டிட்டு போறேன், சார்.” என்று சொல்லி, அவன் அழைப்பைத் துண்டித்தான்.

தேவகி, “இந்த ஊர்ல யாரையும் நமக்குத் தெரியாது. இப்போ, உறவென்று சொல்லிக்க பக்கத்தில் ஒரு வீடு இருக்குன்னு நினைச்சு, சந்தோஷமா இருக்கு.”

கிளம்பிய தியாழினியை அழைத்துக் கொண்டு வந்த சுமித்திரை பாட்டி, காலிங்பெல் அடிக்க திறந்த தேவகியைப் பார்த்ததும் புரிந்து கொண்டு, “வாங்கம்மா!” என்று வரவேற்றார்.

தேவகியைப் பார்த்ததும் ஏனோ அவருக்குப் பிடிக்க, “உங்க பையன் இவ்வளவு நல்ல குணத்தோடு இருப்பதற்கு காரணம், உங்க வளர்ப்புதான். யார் என்றே தெரியாத எங்களுக்கு உதவி செய்கிறான் என்றால், அந்த குணம் எல்லாம் பிறப்பிலே வந்திருந்தால் மட்டும் தான் சாத்தியம்!”

“பாட்டி, நீங்க நேத்துல இருந்து என்னைப் புகழ்ந்திட்டே இருக்கீங்க. எனக்கு அதுல காய்ச்சலே வந்துடும்.”

“அதெல்லாம், உனக்கு ஒண்னும் வராது. நீ நல்லா இருப்ப.”

பாட்டியின் பேச்சில் சிரித்த தியாழினி , “ஆமாம் சார், காய்ச்சல் என் பாட்டியின் கூடப் பிறந்த தங்கச்சி. பாட்டி வா என்று சொன்னால் வரும். வராதே என்றால் வராது.” வீட்டில் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

சேனா, “சரி லேட்டாயிடுச்சு. ஈவினிங் வந்து பேசுறேன்.” என்றவன், தியாவிடம் “போலாமா?” என்றதும், விழிகளாலே சரி என்றாள்.

அவளின் விழிகளைப் பார்த்ததும் தான் பரத நாட்டியம் நினைவு வர, பாட்டியின் அருகில் சென்றவன், “உங்களுக்கு பரதநாட்டியம் என்றால் பிடிக்காதா...?”

சுமித்திரையின் கண்கள் கலங்கி, “அது எப்படி தம்பி எனக்கு பிடிக்காமல் போகும்? நானே ஒரு பரதநாட்டியக் கலைஞர் தான்.”

தேவகி கண்கள் விரிந்து, “நானும் தான்மா.”

தியாவிற்கு இந்த செய்தி புதிது என்பதால், தனது பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ, உங்களுக்கு தியா அரங்கேற்றம் செய்வதில் விருப்பம் இல்லையா...?”

“நான் எந்தளவுக்கு பரதத்தை நேசித்தேனோ, அந்தளவுக்கு இப்ப வெறுக்கவும் செய்கிறேன், தம்பி. என் மகளின் அரங்கேற்றத்தில் தான், அவளின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிப் போனது.

அவள் ஒட்டு மொத்த வாழ்க்கையும் தொலைந்து, இன்று அனாதை மாதிரி அமெரிக்காவில் வேலை பார்க்கிறாள்.”

ஏனோ அதற்குப் பின் பேச விருப்பம் இல்லாமல், “ஓகே பாட்டி, கிளம்புறோம்.” என்று பெண்ணவளை அழைத்து வந்தான்.

காருக்குள் ஏறியதும் ஆட்டோ மேட்டிக்காக ஆடவனின் கைகள் மியூசிக் சிஸ்டத்தில் கை வைக்க, பாடல் ஒலிபரப்பானது.

“நீ என்பதே நான் தாண்டி

நான் என்பதே நாம் தாணடி...

ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி

பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்

சேர்த்து வைக்க காத்திருந்தோம்.”

அவன் பாடலை நிறுத்தவும், “ஏன் சார் பாட்டை நிறுத்திட்டீங்க...? போடுங்க! இந்த மாதிரி பாட்டு கேட்டால் தான் உண்டு.”

“இதுவரைக்கும் நீ பாட்டே கேட்டதில்லையா...?”

அழகிய தன் சிறு இதழை பிதுக்கி, “இல்லை!” என்றதும்,

சட்டென்று காரை நிறுத்தி விட்டான்.

பயந்தவள், “ஏன் சார்? என்ன ஆச்சு?” என்று கண்களை விரித்துக் கேட்கவும்,

இந்த ஒரு வாரம், இவளுடன் எப்படி கடக்கப் போகிறோம் என்பது போல் ஆனது. அவளின் செய்கை எல்லாம் சித்திரம் போல் தன் மனத்திற்குள் பதியத் தொடங்கியதை அவன் உணர்ந்தான்.

“ஒன்றுமில்லை!” என்றவன், வாகனத்தை ஓட்டி, கல்லூரியை அடைவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னமே இறக்கிவிட்டு, “நீ முன்னே நடந்து போ! நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன்.” என்றதும்,

“ஏன் சார்?”

“நீயும் நானும் சேர்ந்து போனால், சேர்த்து வைத்து கிண்டல் பண்ணுவாங்க. நம்ம ஏன் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்? அப்புறம், அது உனக்கு மனசு கஷ்டமாய் இருக்கும். நீ முன்னால் போ!” என்றதும் அவளும் தலையாட்டிவிட்டு முன்னே சென்று விட்டாள்.

அவள் கல்லூரிக்குள் நுழையும் வரை அவளையே பார்த்தவன், அவள் போனதற்குப் பின், தனது வாகனத்தை எடுத்து உள்ளே வந்தான்.

அன்றும் சசி வராததால் சோர்ந்து போனவன், “யாருக்காவது பரத நாட்டியமும் தெரிந்தால், ஸ்டாஃப் ரூமில் வந்து என்னைப் பாருங்கள். இன்று ஒரு நாள் தான் இருக்கிறது. நாளை கல்ச்சுரல் ப்ரோகிராம் ஸ்டார்ட்.”

அந்த நேரம் அங்கே வந்த ஹெச்.ஓ.டி, “என்ன சேனா? ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் நாளைக்கு நடக்கும் கல்ச்சுரல் ப்ரோக்ராம் தயாராகிட்டாங்களா...?”

“இன்னும் கிளாசிக்கல் டான்ஸ் மட்டும் தயாராக வில்லை. மத்த எல்லாம் ஓகே சார்.”

“நாளைக்கு நமது கல்லூரி நிர்வாகத்தின் தலைவரும் அவரின் நண்பரும், சினிமா நடிகருமான புகழேந்தியும், நம்ம கல்லூரியைப் பார்க்க வருகிறார்கள். அவர்கள் ஒரு அரைமணி நேரம் தான் இருப்பார்கள். அதனால், முதலில் ஆடும் மூன்று நடனம் சிறப்பாக அமைவது போல் பார்த்துக்கோங்க.

உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டால் நான் கேள்வி கேட்கக்கூடாது. அதற்கும், நீங்கள் ஏதாவது ஏற்பாடு செய்து இருப்பீர்கள். ஓகே! நாளை பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட,

சேனா மேஜையில் இரு கைகளை வைத்து சாய்ந்து, எதோ யோசனையாய் நின்றிருந்தான்.

முதலாமாண்டு மாணவிகளில் யாருக்கும் பரதம் தெரியாது. விருப்பமுள்ளவர்கள் ஒரு இரவில் கற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனோ, அவன் முகம் சோர்ந்து போகவும், தியாழினிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அவன் அருகே வந்தவள், “உங்கள் செல்போனில், மாமாவுக்கு ஒரு முறை கால் பண்ணித் தர்றீங்களா?”

உடல்நிலை பற்றி கேட்கத்தான் என்பதால், அவன் செல்போன் தரவும், அவள் தனியாக வந்து அதில் தனது மாமாவின் எண்களை அழுத்தி காதில் வைக்க, “பரதநாட்டியம் ஆடுவதாய் பெயர் கொடுத்த பெண், இப்போ வரை வரலை. கலை நிகழ்ச்சிகள் சேனா சாரின் பொறுப்பில் இருப்பதால், பரதம் ஆடுவதற்கு ஆளில்லாமல் சோர்ந்து போய் விட்டார், மாமா. நான் வேண்டுமென்றால் கலந்து கொள்ளவா..? இந்த ஒரு முறை மட்டும் தான், பிறகு பண்ண மாட்டேன்.”

பெற்றவரிடம் மறைத்துச் செய்யும், எந்தச் செயலும் அது வினையாய் முடியும் என்பதால், அவர் அம்மாவிடம் ஒரு தரம் கேட்கவும், இந்த ஒரு முறை மட்டும் தான், அதுவும் சேனா தம்பிக்காக என்று பாட்டியின் சம்மதம் கிடைத்ததும், 2 நிமிடம் கழித்து அவரே அழைத்து,

“குட்டிமா! பாட்டி சரின்னு சொல்லிட்டாங்க!” என்றதும் பெண்ணவளுக்கு அத்தனை சந்தோஷம்.

சேனாவிடம் வந்தவள், “சார், நானே நாளைக்கு நடனம் ஆடுறேன்.”

அவன் அவளைப் பார்த்து, “எனக்காக, நீ இதைத் தான் வீட்டில் பேசினியா...?”

தலையாட்டி, பின் சோகமாய் முகத்தை வைத்து, “ஆனால், எனக்கு சினிமா பாடல் எதுவும் தெரியாது.”

அதுவரை தலையில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் பட்டென்று விலகவும், “நான் உனக்கு சொல்லித் தர்றேன்.” என்றான்.

போனவன், தனது செல்போனில் நடனம் ஆடுவதற்கான பாடலைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டு, “இந்தப் பாட்டைக் கேளு. இதுதான் நீ ஆடும் பாடல்.”

நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று
சரணம் எய்தினேன்... ஆஆ...

முதல் முதலில் ஒரு சினிமா பாடலைப் பார்த்தவள், அதில் மெய் மறக்க, “இந்த வரிகள் எல்லாம் நான் ஏற்கனவே கேட்டு இருக்கிறேன். இது பாரதியாரின் பாடல் தானே?” என்றதும்,

ஐஸ்வர்யா “ஆமாம்.” என்றாள்.

நாளை ப்ரோக்ராம் என்பதால், அனைவரையும் ஆடிட்டோரியத்திற்கு அழைத்துச் சென்று, “மேடையில் நாளை செய்வதை இன்றே என் முன் ஒத்திகை செய்து காட்டுங்கள்” என்றதும்,

அனைவரும் தங்களின் திறமைகளைக் காட்ட, அனைத்தும் சரியாகப்பட சற்று ஆசுவாச மூச்சு விட்டு, “சரி அனைவரும் கிளம்புங்கள். நாளை அனைவரும் சீக்கிரம் வந்திடுங்க. யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்.” என்று சொல்லி அனுப்பினான்.

பின், “தியாழினி, நீயும் ஐஸ்வர்யாவும் மட்டும் இருங்கள்.”

மதுரா தியாழினியிடம், “அது என்ன எல்லோரும் போன பின், நீங்க ரெண்டுபேர் மட்டும் ஸ்பெஷல்?”

அவள் புதிது என்பதால், தியா நடந்தவற்றை விளக்கமாய்ச் சொல்ல, ஐஸ்வர்யா அவளின் திமிரான பேச்சில் கடுப்பாகி, “சார்!” என்று அழைக்க, அவன் வந்தான்.

“என்ன ஐஸ்வர்யா?”

“சார், மதுரா நக்கலாய் பேசுறாங்க. நீங்க ரெண்டுபேர் மட்டும், சாருக்கு அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறாள்.”

‘அக்காவைப் போல் தான் இவளும்.’ அவளை முறைத்து விட்டு,

“ஆமா, அவங்க ரெண்டு பேரும் எனக்கு ஸ்பெஷல் தான். அதனால் உனக்கு என்ன பிரச்சனை? உனக்கும் இஷ்டம் இருந்தால், இவர்களுடன் உட்காரு!” என்று சொல்லிவிட்டு மேலே ஏறினான்.

அவளின் மூக்கு உடைபட்டதில் ஐஸ்வர்யாவுக்கு சொல்ல முடியாத ஆனந்தம். மதுரா, அவளை முறைத்து விட்டு, “உன்னை ஒரு நாள் வச்சிக்கிறேன்.”

ஐஸ்வர்யா வேகமாக அவளின் அருகே சென்று, “ஏன் இப்ப கூட வெச்சுக்கோ...! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.”

“எனக்குன்னு ஒரு டைம் வரும். அன்னைக்கு உன்னை எப்படி கதற வைக்கிறேன் பார்?” என்று சொன்னவள் தள்ளிப் போய் அமர்ந்துகொண்டாள்.

மேடையில் பாடலுக்கு சேனா ஒரு முறை ஆடிக் காட்டவும், தியாழினி மட்டுமல்ல, ஐஸ்வர்யாவும் மதுராவும் கூட அவனை மெய்மறந்து விழி விரிந்துப் பார்த்தனர்.

மதுரா தனது செல்ஃபோனை எடுத்து, “அக்கா! நீ உடனே கிளம்பி ஆடிட்டோரியத்திற்கு வா!” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

சேனா, தியாவின் பார்வையில் கொஞ்சம் கூச்சம் ஆகி, பின் தன்னை சமன்படுத்தி, “தியா! இப்படிப் பார்த்தால் நாளைக்கு எப்படி டான்ஸ் ஆடுவ? கமான். க்விக்!” என்றான்.

ஒவ்வொரு ஜதியாய் சொல்லிக் கொடுக்க, அவள் கற்றுக் கொள்ளும் போது, மணி ஐந்து ஆகி விட்டது. நேரம் ஆனாலும் கிளம்பாத மதுராவைக் கண்டவன்,

“ஐஸ்வர்யா! இங்கே வா!” என்றதும்,

“சார், நீங்க அழகா பரதம் ஆடுறீங்க. நான் உங்க விசிறியாகிட்டேன்.” என்றதும் சிரித்தவன்,

“நன்றி!” என்று சொல்லிவிட்டு,

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?”

“என்ன ஹெல்ப் சார்?”

“திவ்யாவின் மாமாவிற்கு ஆக்சிடென்ட் ஆனதால், இப்போ அவள் வீட்டுக்குப் போகணும். அவளை கொண்டு வந்து, வீட்டில் விட்டு விட முடியுமா?”

அவள் தலை ஆட்டவும், “ஓகே தியாழினி! மீதியை வீட்டில் சொல்லித் தர்றேன். இன்று பாட்டியிடம் சொல்லி விட்டு, நீ நம்ம வீட்டிற்கு வந்திடு. நைட் பிராக்டிஸ் வைத்துக் கொள்ளலாம்.” என்று அவளிடம் சொல்லவும், தலையாட்டிவிட்டு அவளும் கிளம்பினாள்.

அந்த நேரம் அங்கு வந்த மகிமா மதுராவிடம், “நீ ஏண்டி இங்க இருக்க?”

“உன் உயிரை யாரும் திருடிட்டுப் போயிடக் கூடாதுன்னு காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று மேடையைக் காட்டவும்,

“இவளுங்க ரெண்டு பேர் மட்டும் இங்க என்ன செய்றாங்கடி!”

“பயப்படாதே அக்கா! வெறும் டான்ஸ் பிராக்டிஸ் மட்டும் தான்! அதுவும் நாளையோடு முடிந்திடும்.” என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர்களை கடந்து மூவரும் சென்றனர்.

“பாருடி இந்த ஆளுக்குக் கொழுப்பை. நான் நிற்கிறேன். ஒரு வார்த்தை கூட பேசாமல் போகிறார்.”

“அவர் போனால் என்ன? நீ போய் பேசு!”

“சேனா சார், கொஞ்சம் நில்லுங்கள்!” என்றதும்,

நின்றவன், என்ன என்பது போல் பார்த்தான்.

“உங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத ரிஸ்க். வேறு யாரையாவது இன்சார்ஜாய்ப் போட்டால், அவங்க இதெல்லாம் பார்த்துக் கொள்ள மாட்டார்களா...?

என் அப்பாவின் கல்லூரியில், அவரின் வருங்கால மருமகன், இந்த மாதிரி சாதாரண வேலைகள் எல்லாம் பார்த்தால், அவருக்குத் தானே சங்கடம்!”

“அதை, நீங்கள் உங்கள் அப்பாவின் வருங்கால மருமகனிடம் போய்ச் சொல்லுங்கள். அப்புறம், இந்த காலேஜில் உங்க அப்பா மட்டும் இன்சார்ஜ் இல்லை. இன்னும் இருவர் இருக்கிறார்கள். இந்த மாதிரி தேவையில்லாத பேச்செல்லாம் பேசாதீங்க, மகிமா. வந்த வேலையை மட்டும் பார்த்துட்டுப் போங்க!” என்று சொல்லி விட்டு, அவன் சென்று விட்டான்.

அவன் பேச்சில் முகம் சோர்ந்து போய் நின்ற தனது அக்காவின் அருகில் வந்து, “விடு விடு. உன் கழுத்தில் தாலி கட்டிய அடுத்த நாளிலிருந்து, ஒரு ரெண்டு வருடமாவது அவரை நல்லா டார்ச்சர் பண்ணு. எந்த அளவுக்கு உன்னை அவாய்ட் பண்றாரோ, அந்த அளவுக்கு உன் காலில் விழுந்து கெஞ்சனும்.”

“முதலில் சிக்கட்டும்டி! அதுக்கப்புறம் கல்யாணம் முடிஞ்ச நாளில் இருந்து என்னைப் படுத்துற பாட்டிற்கெல்லாம் கொஞ்சமாச்சும் பழி தீர்ப்பேன்.”

“அது என்ன கொஞ்சம்?” என்றதும்,

“ஹா ஹா, என்னவோ அதிகமாய் காதலிக்கிறேன்டி. ஆனால், கொஞ்சம் மட்டும் கஷ்டப்படுத்தினால் போதும்.”

“ஆனால், சும்மா சொல்லக் கூடாது. செமயா ஆடுறார். உன் ஆளாய் மட்டும் இல்லாமல் இருந்தால், இந்நேரம் நான் ப்ரப்போஸ் பண்ணியிருப்பேன்.”

அதில் சிரித்தவள், தன் தங்கையின் முதுகில் ரெண்டு போடு போட்டு இழுத்துச் சென்றாள்.

………..

தீயாழினி தனது பாட்டியிடம் சொல்லிவிட்டு சேனாவின் வீட்டிற்கு வரவும், தேவகி அவளை வரவேற்று உபசரிக்க, புன்னகையாய் ஏற்றுக் கொண்டதும், சேனா மேலே இருந்து கீழே வந்தான்.

இருவரும் அந்தப் பாடலுக்கு ஆடும் போது, தேவகி மெய்மறந்து பார்த்தார். அந்தக் கண்ணனும் ராதையும் ஆடுவது போல தோன்றியது. இருவரும் அருகருகே நின்று ஆடும் போது, தனது செல்போனை எடுத்து படம் பிடித்தார்.

இரவு 9 மணி ஆனதும், “சரி கிளம்பு! நாளைக்கு காலையில் சீக்கிரம் வா! நான் இப்போ ஹாஸ்பிட்டல் போறேன்.”

“சார், எனக்கு பயங்கரமா கால் வலிக்குது. உங்களுக்கு வலிக்கலையா...?”

ஸ்ப்ரே எடுத்து வந்து அவளிடம் கொடுத்து, “வலிக்கும் இடத்தில் அடித்துக்கோ. கொஞ்சம் சரியாகிடும். எனக்கும் வலிக்குது. ஆனால் நமக்கு கடமை ஒன்று இருக்கே...!”

“என்ன கடமை?”

“ஒரு வாரம், நான் உன் மாமாவை பார்த்துக்கிறேன் என்ற பொறுப்பை எடுத்துவிட்டேன். அதை முடிக்கும் வரை, நமக்கு வலி பிரச்சனை என்ன இருந்தாலும், பொறுப்பிலிருந்து விலகக் கூடாது.” என்று அவன் கிளம்ப, அந்த ஒரு நொடி இமைக்க மறந்து அவனையே பார்த்தாள்.

தனது வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு நடந்து வந்தவனின் முதுகை துளைக்கும் பார்வை பார்ப்பதை உணர்ந்தவன், திரும்பிப் பார்த்தான்.

அந்த நேரம் இருவரின் விழிகளும் ஒரு நேர் கோட்டில் சந்தித்தது.

பெண்ணவள் உடலெல்லாம் ஒரு மின்வெட்டு தாக்கியது போல ஒரு தாக்கம் ஏற்பட்டு, உடலில் ஒரு சிலிர்ப்பு தென்பட்டு, பின் பார்வையைத் தாழ்த்தினாள். அவளின் சிலிர்ப்பைக் கண்டு கொண்டவன், அதற்கு மேல் அங்கு நின்று அவளை இம்சிக்க விரும்பாமல், வாகனத்தில் ஏறிச் சென்று விட்டான்.

இருவரின் மூளை, ஒரு நொடி செயலிழந்துபோனது நிஜம். மனமென்னும் மேகத்திற்குள் சட்டென்று ஒரு மின்னல் ஒளிர்ந்தது. ஒரே ஒரு நொடிப் பார்வையில், சட்டென்று ஒரு தடுமாற்றம்.

வண்டி ஓட்டியவன், ஓரிடத்தில் நிறுத்தி விட்டான். மூச்சு முட்டுவது போல் தோன்ற, காரின் கதவைத் திறந்து வெளியே வந்து, சற்று நேரம் வெளிக்காற்றை முகத்தில் வாங்கி, தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

‘இந்த மாதிரி உணர்வுக்கு எல்லாம் இடம் கொடுக்காதே’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் தன்னை சமன் படுத்தி வாகனத்தை எடுத்தான்.

வீட்டிற்கு வந்த தியாழினி, தன் வீட்டிலிருக்கும் தூணில் ஒரு நிமிடம் சாய்ந்து நின்றாள்.

பள்ளியில், வரும் வழியில் பல ஆண்களைப் பார்த்து இருக்கும்போது தோன்றாத ஒரு சிலிர்ப்பு, ஏன் இவரிடம் வந்தது? நேற்று அவரின் அருகில் அமர்ந்து வந்தபோது கூட வராத ஒன்று, இந்த நிமிடம் தனக்குள் எதையோ சொல்லவும்,

‘இது வேண்டாம். நம் வீட்டிற்கு பிடிக்காது. முதன் முதல் அந்நியர் ஒருவரை வீட்டுக்குள் அனுமதித்து இருப்பது அவரின் மேல் கொண்ட நம்பிக்கையால் தான். நாம் அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.’ என்று நினைத்தவள், விட்டுக்குள் சென்று பெரிய டம்ளரில் தண்ணீரைக் குடித்துவிட்டு வந்து படுத்தாள்.

சுடும் ...

இந்தலிங்கில் Comments podunga.

Adaddada ennada idhu...ponnamma kannama nu dhool la pogudhu...wowowowo😍😍😍😍😍ees la alaga irku. Sena dance aadiyadhum sema shock avanga amma thaan baratham tgeriyumnunsonnaga maganukum theriyumnu ippathan theriyudhu.akka thangai renduthukku vayiru eriyattum loosunga enna jenmam....vizha ku vara sirappu virundhinar yaraunu enaku oru guessing irku ees ka sonna thittuvinga 😜😜😜😜adhunala na sollala....oru vagaila diya oda family package kandupidichuten paarpom.sena ku ippave moochu muttudhu ivlo kashta padran.innum poga poga ennanavo..aama susi ku ennathan aachu aalaye kaanom...super ud ka ..nxt padika poren luv u..💞 byeeee
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
அத்தியாயம் - 6

அதிகாலையில் எழுந்து குளித்து சேனாவின் வீட்டிற்கு வந்த போது, அவன் இன்னும் வந்திருக்க வில்லை. அங்கு இருந்த மியூசிக் சிஸ்டத்தில் தேவகி பாடலைப் போட, பெண்ணவள் ஆடிக் கொண்டு இருந்தாள். ஏனோ, அவள் ஆடும் போது சில இடங்களில் கைகளை அசைப்பதில் தவறு என்று பட, தேவகி,

தனது சேலை முந்தானையை மடித்து இடுப்பில் சொருகியவர், ஒவ்வொரு வரிக்கும் முகபாவனைகளை எப்படி காண்பிப்பது என்று சொல்லிக் கொடுக்க, இருவரும் சேர்ந்து ஆடினர்.

அந்த நேரம் வந்த ஸ்ரீதர்சேனா, இருவரும் ஆடுவதை பார்த்து, தனது செல்போனில் அவர்களை அறியாமல் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

எதேச்சையாக திரும்பிய தியாழினி, அவனைக் கண்டதும் கரண்ட் ஷாக் அடித்த மாதிரி அப்படியே நிற்க, நளினமாய் ஆடிக் கொண்டிருந்தவள் சட்டென்று மந்திர சக்திக்கு உட்பட்டது போல் நிற்பதைக் கண்டவர் திரும்பிப் பார்க்க, அங்கே தன் மகன் சேனா.

தேவகி அவளிடம், “நம்ம சேனாதானே. நேற்றெல்லாம் நீ அவனுடன் சேர்ந்து ஆடத்தானே செய்தாய். இப்ப என்னாசு? ஏன் இப்படி நிற்கிற?” என்று கேட்ட போது தான், நேற்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசத்தை இருவரும் உணர்ந்தனர்.

அவனும் எதுவும் நடவாதது போல, “ஹாய்! குட் மார்னிங் தியாழினி. பிராக்டிஸ் எல்லாம் முடிஞ்சதா?”

தலையாட்டியவள், “நான் வீட்டில் போய் கிளம்பி வருகிறேன்.” என்று சென்று விட்டாள்.

“என்ன ஆச்சு இந்தப் பொண்ணுக்கு, இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தா?” என்று சொல்லிவிட்டு அவர் சமையலறைக்குள் நுழைய,

ஆடவன் ‘தான் சிறு பெண்ணின் மனதில் நஞ்சை விதைக்கக் கூடாது. இதை சரி செய்யணும்.’ என்று நினைத்துக் கொண்டே குளியலறை புகுந்தான்.

தனது அம்மாவிடம் பரத நாட்டியத்திற்கு தேவையான ஆடை எல்லாம் அவளுக்கு கொடுங்க என்றதும், கிளம்பி வந்தவளிடம் தேவகி கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

வாகனத்துக்குள் ஏறியதும் காரை ஓட்டிக்கொண்டே சேனா அவள் புறம் திரும்பி, “என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா?”

“ஏதும் இல்லையே? ஏன் கேட்கிறீங்க?”

“காலையில் ஆடிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் சட்டென்று நின்னுட்டியே...! அதான் கேட்டேன்.” என்று, எதுவும் இல்லாதது போல் அவன் கேட்க,

‘ஹோ...! அப்போ நமக்குத்தான் எதுவோ தோன்றி இருக்கும் போல. அவருக்கு எதுவும் இல்லை’ என்றதும், முகத்தை மாற்றிக் கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் இல்லை.” என்று தட்டுத் தடுமாறி பொய் சொன்னாள்.

காலையில் 10 மணிக்கு ப்ரோகிராம் என்றதும், அனைவரும் மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தனர். பரதநாட்டியத்திற்கு என்று ஒரு ஆசிரியரை நியமிக்க, அவர் தியாழினியைத் தயார் செய்தார்.

அங்கு வந்த சேனா, கிளம்பி நின்ற தியாழினியைப் பார்த்ததும், ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டான். ஏற்கனவே கதை பேசும் கண்கள் கொண்டவள். இன்று மை எல்லாம் இட்டபோது, அந்தக் கண்களுக்குள் தான் சிறை படுவதைப் போல் உணர்ந்தான்.

வந்தவன் அவளிடம், “நீ தான் முதல் நடனம். ஆடிட்டோரியத்தில் நிறைய பேர் இருப்பாங்க. நல்லபடியா ஆடி முடிக்கனும்.” என்று அவன் சொல்லவும், தலையை தலையை ஆட்டியவள், அவன் பின்னால் வந்தாள்.

ஆடிட்டோரியத்திற்கு வந்தவள், அங்கே ஒரு பெண் வந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும் போது, எதேச்சையாக திரைச்சீலை காற்றில் ஆடும் போது திரும்பிப் பார்த்தவளுக்கு, அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் நெஞ்சுவலி வராத குறை தான்.

இதுநாள் வரை 100 பேரைப் பார்த்தவள், அங்கே 3000 பேருக்குமேல் ஒரு சேரக் கூடி இருப்பதைக் கண்டு, ‘இந்தக் கல்லூரியில் இத்தனை பேர் படிக்கிறார்களா?’ என பயந்து போனவள்,

சேனாவிடம் வந்து “சார், எனக்கு பயமா இருக்கு. என்னால் ஆட முடியாது.” என்றவளின் கை கால் எல்லாம் நடுக்கம். முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.

விட்டால் மயங்கி விடுவாள் என்பதை உணர்ந்தவன், அவளின் அருகில் நெருங்கி நின்று கைகளைப் பிடித்தான்.

முதல் நடனம் அவளோடது. முதல் மேடையும் அவளுக்கு இது. கண்டிப்பாக பயம் இருக்கும் என்பதை உணர்ந்தவன், “நான் இருக்கிறேன். பயப்படாதே...!”

“நீங்க இங்கே இருப்பீங்க. நான் தானே அங்க போய் ஆடணும். தனியாய்ப் போய் ஆடுவதற்கு எனக்கு பயமாய் இருக்கு. நான் ஆட மாட்டேன்.” என்று கண் கலங்கவும்,

“அழாதே தியா! அழுதால் கண்ணில் இருக்கும் மை எல்லாம் அழிந்து, பார்க்க அசிங்கமாக இருக்கும்.” என்று தனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் கர்ச்சீப்பை எடுத்து துடைத்து விட்டான்.

அந்த நேரம் கல்லூரியின் தலைவர்கள் அனைவரும் வந்து விட்டார்கள். சிறப்பு விருந்தினர்களும் வந்து விட்டார்கள் என்று சொன்னதும், இதற்கு மேல் விட்டால் இவள் அழுது அடம் பிடித்து வரமாட்டாள் என்பதால் அந்த அறையிலேயே ஆடையை மாற்றிக்கொண்டு வந்தவன்,

“நானும் உன்னோடு வருகிறேன்.” என்றான்.

அதுவரை நடுங்கிய விரல்கள் நின்றது. பெண்ணவள் முகத்தில் தெளிவு. இதோ முதல் நடனமாய் பரத நாட்டியம் என்றதும்,

ஸ்ரீதர்சேனா வந்து நின்றதும், கரகோசம் அரங்கமே அதிரச் செய்தது. அவன் அங்கே போய் நின்றதும், தியாவை வா என்றதும், பெண்ணவள் வந்து நின்றாள்.

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.

தகதிமிதோம் தரிகிட தரிகிட

தரிகிட தரிகிட தோம்

தத்தத்தரிகிட தரிகிட தரிகிட

தரிகிட தோம் தத்தத்.

இருவரும் தங்கள் கால்களை ஒருசேர அசைத்து, விரல்களை ஒருசேர ஆட்டும் போதும், ஜதிக்கு ஏற்றவாறு கால்களை தட்டும் போதும், இருவரைத் தவிர அரங்கமே வாய் பிளந்து கைகளைத் தட்டி உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள்.

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

ஆஆஆஆ......ஆஆஆஆஆ...

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ( 2 )

பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா

பின்னையே நித்ய கன்னியே

மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ

மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ

கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம்

எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்..

ஆடி முடித்ததும், பள்ளியின் தலைவர்களில் ஒருவரான வாமனன் மற்றும் சிறப்பு விருந்தினராக சினிமாவின் கதாநாயகன் புகழேந்தியும், இருவரும் ஒருசேர மேடைக்கு வந்து இருவரையும் கைகுலுக்கி வாழ்த்தினர்.

வாமனன், “வேலை வேலை என்று சோர்ந்து போயிருந்த என் மூளைக்கும், கண்களுக்கும் உங்கள் நடனம் விருந்தாகி குளிர் வித்தது. இரண்டு பேரும் ஆடும் போது ராதையும் கிருஷ்ணனும் ஆடுவது போல் இருந்தது.”

அப்படிச் சொல்லும் போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

புகழேந்தி மைக்கை வாங்கி, “பரதத்தில் ஆண்மையும், உக்கிரமும், வரமும் கொண்டு அங்கங்களை அசைத்து, பாட்டின் பொருளுக்கேற்றபடி ஆடுவது தாண்டவமாகும். பிரத்யங்கம் உபாங்கம் அனைத்தையும் நளினமாக ரசபாவனையுடன் அபிநயித்து ஆடுவது லாஸ்ய நடனமாகும்.

பரதத்தில் தாண்டவமென்பது ஆண்மை, லாஸ்யம் என்பது பெண்மை. இரண்டும் சேர்வது, சிவனும் பார்வதியும் சேர்ந்து சிவபார்வதி நடனமான அர்த்தநாரீஸ்வர நடனம். அது போல் இருந்தது உங்கள் நடனம். அப்படியே அந்த பார்வதியும் சிவனும் என் கண்முன்னே வந்து ஆடுவது போல் இருந்தது.”

இருவரும் நன்றியைத் தெரிவித்து விட்டு, வெளியே வந்தனர்.

ஏனோ இந்த வார்த்தையைக் கேட்க முடியாத மகிமா, எழுந்து வெளியே வந்துவிட்டாள். பெண்ணவளின் கண்கள் கலங்கியது. தன் அக்கா எழுந்து செல்வதை பார்த்த மதுராவும் எழுந்து வந்தாள். வெளியே வந்து தனியாய் அழுபவளின் முதுகில் கை வைத்து தட்டிக் கொடுத்து,

“அழாதேக்கா. யாரோ ரெண்டு பேர் எதையோ சொல்லும்போது அதற்கெல்லாம் நீ கலங்கலாமா?”

“அவர் மனசில் இப்போ எந்த எண்ணமும் இல்லைடி. இவர்கள் இந்த மாதிரி எதையாவது பேசி, மனதில் எதையாவது விதைத்து விட்டால் என் நிலைமை என்னாவது?”

“அதற்குத்தான் நான் இருக்கேனே, அவளை அவரிடம் நெருங்க விட மாட்டேன், பயப்படாதே...!” என்று தைரியம் சொல்லி அழைத்து வந்தாள்.

இருவரும் வெளியே வரும் போது, அங்கே இருந்த போட்டோகிராஃபர், “உங்க ரெண்டு பேரையும் கலை நயத்தோடு புகைப்படம் எடுத்து, அலுவலக அறையில் மாட்டனும் என்று சொல்லியிருக்காங்க.” என்று சொல்ல.

அவனும் தலையாட்ட, பயந்து நின்றவளைப் பார்த்து, “இது வருடா வருடம் இங்கு நடப்பது தான்.”

சேனா நிற்க, அவனின் சரிபாதியாய் தியாழினி நிற்க, அர்த்தநாரீஸ்வரர் போல் இருவரும் நிற்கவும், கேமராமேன், “தியா அவரைப் பாருங்கள். சார் நீங்களும்.” என்றதும்,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, கேமராவின் கண்கள் பதிவாக்கிக் கொண்டது போல், இருவரின் மனமும் விழி வழியே கூடுவிட்டு கூடு பாய்ந்தது.

……..

இங்கே கர்நாடகத்தில் தனது பாடலுக்கு ஆடி முடிந்த மிதுனா, “நாளை இரவு பிளைட் டிக்கெட் புக் பண்ணி விடு, ரிஷி.” என்று தனது மேனேஜருக்கு உத்தரவிட்டு, ஹோட்டலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளிடம்,

“மேடம், நம்ம அடுத்த ப்ரோக்ராம்.”

“ஸ்ரீமூகாம்பிகை கோவிலுக்கு” என்றதும்,

ரிஷி அவள் வருவதற்குள் ஒரு கார் புக் பண்ணி விட்டு காத்திருக்கும் போது,

படத்தின் தயாரிப்பாளர் ஷைலேந்திர கெளடா செக்புக் கொடுத்து விட்டு, “என்ன ரிஷி, மிதுனாவின் அடுத்த ப்ரோக்ராம் கோவிலா?”

அவனோ, 'உங்களுக்கு எப்படி?’ என்பது போல் பார்த்தான்.

தயாரிப்பாளரோ, “நான் பார்த்து வளர்ந்த பொண்ணு மிதுனா! எப்போதும் கோயில் குளம், இப்படித்தான் சுத்திக்கிட்டு இருக்கும். அதனால தான் கேட்டேன்.”

ரிஷி புன்னகையாய் “மேடம், உங்க பேரைச் சொன்னதும் கால்சீட் கொடுப்பதன் ரகசியம் இதுதானா...!”

“ஐம்பது வயதில் அவளை பல முறை என்னுடன் சேர்த்து கிசுகிசு வரும். ஆனால், எங்கள் இருவருக்கு உள்ளும் நல்ல புரிதல் மட்டுமே...!”

“உங்கள் இருவருக்கும் உள்ள நட்பின் ரகசியம், நானும் அறிந்து கொள்ளலாமா...?”

“அதுவா, அவள் பெரிய நடிகையும், நடன மங்கையுமாக இருந்த போது ஒரு பெரிய விபத்து நடந்தது. விபத்தா...? கொலை செய்ய முயற்சி செய்தார்களா... என்று தெரியாது. அது அவளுக்கு மட்டும் தான் தெரியும். கேட்டாலும் வாய் திறக்கமாட்டாள். அந்த வழியாக வந்த போது, நான் இவளை மருத்துவ மனையில் சேர்த்து, ஒரு சின்ன உதவி தான் செஞ்சேன்.

அதற்கப்புறம், நான் அவளை மறந்தே போய் விட்டேன். சினிமாவில் நான் தயாரிக்கும் படம் அத்தனையும் வெற்றி. அதில் பல நண்பர்கள் அட்டையைப் போல் ஒட்டியே இருந்தார்கள். நான் தான் அவர்களின் உலகம் என்றும் சொல்வார்கள். திடீரென்று என் தயாரிப்பில் வெளிவந்த படமெல்லாம் தோல்வி.

ஒரு கட்டத்தில், என் படமெல்லாம் தோல்வியாகி நான் கடனாளியாய் நின்றேன். வீட்டை விற்கும் நிலையில் இருக்கும் போது, சைலேந்திரா கெளடா முடிந்து விட்டார் என்று பத்திரிக்கையில் எழுதி விட்டார்கள்.

என் அத்தியாயம் அன்றோடு முடிந்தது என்று, நானே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அப்போதுதான் மிதுனா விடம் இருந்து ஒரு போன் கால். ஒரு இயக்குனருக்கு ஒரு படம் எடுக்கனும். அதுக்கு ஒரு தயாரிப்பாளர் வேண்டும்.

நானோ நக்கலாய் சிரித்து, என் நிலைமை உனக்குத் தெரியாதா...? என்று கேட்க,

சிங்கம் எப்போதும் தலை நிமிர்ந்து தான் இருக்கணும். நீங்க தான் அந்தப்படத்தை தயாரிக்கனும் என்று பட்ஜெட் போட்ட மொத்த பணத்தையும் வட்டி இல்லாமலும், எந்தப் பேப்பரில் கையெழுத்து வாங்காமலும் கொடுத்து உதவியவள். அத்தோடு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொடுத்தாள். அந்த படம் பயங்கரமான வெற்றி பெற்றது.

என் வாழ்க்கையையே எனக்குத் திருப்பிக் கொடுத்தவள். சொல்லப் போனால் சாமின்னு கூடச் சொல்லலாம்.

படம் வெற்றி பெற்ற பின், நானும் என் மனைவியும் போய் அவளை சந்தித்து பணம் கொடுத்தோம். அப்போது தான் மிதுனாவிடம் என் மனைவி கேட்டா, என் கணவரைச் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் கைவிட்ட போது, நீ மட்டும் எதுக்கு அவருக்கு ஹெல்ப் பண்ணின? என்று

எப்பவோ சாக வேண்டியவள். இந்த நிமிடம் உயிரோட இருக்குறது உங்க கணவரால் தான். இறந்து போக வேண்டிய என்னைக் காப்பாற்றியதால் தானே, நான் இன்று இவ்வளவு பணம் வைத்திருக்கிறேன். அதுதான் மிதுனா! என் மனைவிக்கு அவள் சாமி.

அன்றிலிருந்து இன்றுவரை, என் படத்தில் எல்லாம் ஒரு பாடல் அவளுக்காய் வைத்திருப்பேன். படத்தில் தொடர்ந்து ஆடுவதால், ஊர் உலகம் தவறாய்ச் சொல்லும். ஆனால், சினிமா நடிகை என்பதையும் தாண்டி, அவளுக்குள் ஒரு மனம் இருக்கும். அந்த மனம் அனைவரையும் நேசிக்கும். அனைவருக்கும் உதவி செய்யும்.

ஒருமுறை நீ அவளுக்கு சின்ன உதவி செய்தால், அவள் சாகும் வரை உனக்கு உதவி செய்துகொண்டே இருப்பாள். அதுதான் அவள். அதேபோல்தான் துரோகமும். அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவாள். எப்படி எப்படியோ வாழ வேண்டியவள். அயோக்கியனின் மேல் அன்பு வைத்து, வாழ்க்கையை தொலைத்து விட்டாள்.” என்று புலம்பிவிட்டு, அவர் சென்றுவிட்டார்.

ரிஷியும் சிரித்துக் கொண்டான். காரணம், ‘தனக்கும் அவள் சாமி தானே!’ நண்பர்கள் அனைவருமே இவளுக்குப் போய் மேனேஜராக இருக்கயே என்று கிண்டல் செய்தாலும், ஏனோ அவன் மனம் அதை அப்படி ஒரு நாளும் நினைத்ததில்லை.

‘மும்பை வீதியில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தெருவில் மயங்கி விழுந்த போது, அவ்வழியே வந்தவள் சாப்பாடு கொடுத்து, தன் வீட்டில் இடமும் கொடுத்து, இன்று தனக்கு குடும்பம் குட்டி என்று வாழ வைப்பவள். ஊராரின் பார்வையில் அவள் யாரோ? தனக்கு அவள் கடவுள்தான்!’ என்று நினைத்தவன், அவளுக்காகக் காத்து நின்றான்.

மிதுனா சற்று நேரத்தில் ஒரு சுடிதாரில் கிளம்பி வந்தாள். சிறிது நேரத்திற்கு முன் அணிந்த ஆடைக்கும், இப்போது இருக்கும் ஆடைக்கும் அவ்வளவு வித்தியாசம். கோவிலுக்கு வந்ததும், தனது துப்பட்டாவால் மப்ளர் போல் கழுத்தோடு சுற்றி, கண்கள் மட்டும் தெரியும்படி வந்தாள்.

ஸ்ரீமூகாம்பிகை கோவிலுக்குள் பெண்ணவள் தன் கால் வைக்கும் போது, அப்படியே தனது தாய் வீட்டிற்குள் நுழைந்தது போல், மனம் உருகி நின்றாள்.

ரிஷியோ, கோவிலை ஆச்சர்யமாகப் பார்த்தான். ‘நாம் இருப்பது கர்நாடகாவில். ஆனால், கோவில் அப்படியே கேரள கோவில்களின் அமைப்புகளையும், பாணியையும் ஒத்திருக்கின்றதே’ என்று.

ரிஷி, “விளக்கு வாங்கிட்டு வா!” என்று சொல்லிவிட்டு, மிதுனா முன்னே செல்ல.

ஆண்கள், கோவிலின் உள்ளே கருவறை அருகில் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடை பிடிக்கப்பட்டு வருவதால், தன் சட்டையைக் கழட்டி விட்டு வந்தான்.

எல்லா கோவில்களைப் போல, முதலில் கண்ணில் தென்பட்ட கொடிக் கம்பத்தை வேண்டிவிட்டு, அதனை ஒட்டியே அம்பாளின் கர்ப்பக்கிரகம். மனதார வேண்டினாள். கையெடுத்து கும்பிடும் போது, அவள் விழிகளில் இருந்து நீர் கீழே விழுவதைப் பார்த்தவன், ‘யாருமில்லா பெண்ணவளுக்கு அப்படி என்ன வேதனை? வேண்டுதல் இவ்வளவு பலமாய் இருக்கே...? யாருக்காய் வேண்டுகிறார்?” என்று பார்த்தான்.

அடுத்து, ஒரே கல்லினால் ஆன அழகிய விளக்குத் தூணின் அருகே சென்றாள். அதில் பல விளக்குகள் எரிய, பெண்ணவளும் ரிஷி வாங்கி வந்த விளக்கை தன் கையால் ஏற்றிவிட்டு, கருவறையின் எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில், அம்மனின் சிம்ம வாகனம் இருக்கவும், அதை மனதார வேண்டிவிட்டு, கருவறையின் இருபுறமும் இருக்கும் தியான மண்டபத்தின் ஒருபுறம் ரிஷியும், மறுபுறம் மிதுனாவும் ஏறினார்கள். ஏற்கனவே பல பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்ய, பெண்ணவளும் அமர்ந்தாள். ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் அமர்ந்தவளின் மனதில், ஏதோ ஒரு சாந்தம் நிலவவும் பின் எழுந்தாள்.

பின் முன் வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப் பிரகாரம் சுற்றி, சரஸ்வதி மண்டபத்திற்கு வந்தாள்.

மண்டபத்தில் ஓவியர் ரவி வர்மாவின் சித்திரங்களைப் பார்த்துக் கொண்டே வந்தாள். ரிஷி அருகில் வந்து, “மேடம், கிளம்பலாமா...? மணி ஏழு ஆச்சு.”

“ஏழு மணியா... சூப்பர்...! சரியான நேரத்திற்குத் தான் வந்திருக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருக்கலாம், ரிஷி. இங்கு டான்ஸ் ப்ரோக்ராம் நடக்கும். அதைப் பார்த்து விட்டுப் போகலாம். இந்த மண்டபத்தில் ஏதோ ஒரு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் யாராவது, தங்களது கலா நிகழ்ச்சியை தினமும் இரவு ஏழு மணி அளவில் நடத்துவாங்க.”

சொன்னது போல் சரியான நேரத்தில், அங்கே ஆண் பெண் சேர்ந்து பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருக்க, பெண்ணவள் மெய்மறந்து கவனித்துக் கொண்டிருந்தாள். 'ஊரில் உள்ளோர் அனைவரும் இவளின் நடனத்திற்குக் காத்திருக்க, இவளோ பரதநாட்டியத்தை மெய் மறந்து ரசிக்கிறாளே’ என்று பார்த்தான்.

வெளியே வந்ததும், மிகவும் புன்னகையோடு வந்தவளை கண்ட ரிஷி, “மேடத்திற்கு பரதம் ரொம்பப் பிடிக்குமோ...!”

“பரதம், என் உயிர் ரிஷி. இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தாள் கூட, நானும் போய் ஆடிவிட்டு வந்திருப்பேன். அந்த அளவுக்குப் பிடிக்கும்.”

'பரதம் ஆடும் கால்கள் தான், இன்று குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறதா?’ என்று நினைத்தவன் அந்தக் கேள்வியைக் கேட்காமல், மனதுக்குள் போட்டு பூட்டிக் கொண்டான்.

வெளியே வந்ததும் “ரிஷி, நான் இன்னொரு முறை கோயிலை வலம் வந்து விடுகிறேன். நீ போய் காரில் வெயிட் பண்ணு.”

பெண்ணவள் சுற்றிக் கொண்டிருக்கும் போது தான், வந்த நேரத்தை விட, இப்போது கூட்டம் வெகுவாய் குறைந்து இருக்கவும், முகத்தை மறைக்கும் தனது துப்பட்டாவைக் கழட்டி விட்டு நடந்து வந்து கொண்டிருக்கும் போது தான், அந்தக் காட்சி அவள் கண்ணில் பட்டது.

ஒரு பெண் அம்பாளின் முன் நின்று, “எனக்கு ஏன் வாரிசு கொடுக்கவில்லை. நான் அப்படி என்ன துரோகம் உனக்குச் செய்தேன்?” என்று கேட்டு வேண்டிக் கொண்டிருந்தாள்.

தனக்குப் பரிட்சயப்பட்ட குரல் போல் இருக்கவும், பெண்ணவள் மெல்ல அருகே சென்று பார்க்க, ‘இவளா...?’

“எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீயெல்லாம் கடவுளிடம் வேண்டுகிறாய்?” என்றதும் நிமிர்ந்து பார்த்தவள் எழுந்து,

“ஏய்! யார் நீ?”

“என்னைத் தெரியலையா! நான்தான் வித்யா பாரதி! இன்னும் தெரியலையா...?”

பெண்ணவள் அப்படியே நின்றுவிட்டாள்.

“என்ன வானதி மேடம், அப்படியே சிலை போல நிக்கிறீங்க...! என்னடா, சாகடித்தவள் எப்படி டா நம்ம கண்ணு முன்னாடி உயிரோட வந்து சிலை போல் நின்றிருக்கிறாள் என்றா?”

“ஏய் பொய் சொல்லாதே...! காசு பணம் வாங்க என்னை மிரட்டுறயா...?”

“ஹா...ஹா...! நல்ல ஜோக். பணமா...? எவ்வளவு வேண்டும் மேடம்? நான் தர்றேன் உங்களுக்கு?

ரெண்டு பேரை சாகடிக்க அன்று திட்டம் போட்டிங்க. உங்க ஆசைப் படி, என் வயிற்றில் உண்டான் குழந்தை செத்திடுச்சு. நான் எப்படியோ பொழைச்சுட்டேன். என் குழந்தையைக் கொன்னுட்டு, இப்ப வந்து கடவுளிடம் நான் என்ன தப்பு பண்ணேன். வாரிசே கொடுக்கலைன்னு கேட்கிறீங்க?

அன்னிக்கு, என்னை என்ன சொல்லி அடித்து வெளியே துரத்துனீங்க? ஞாபகம் இருக்கா...?”

“என்ன சொன்னேன்?” என்று திமிராய் கேட்க

“நான் ரெண்டாம் தாரமா ...?"

“என் புருஷனைத் தான் மேடம், நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? அந்த ஆளு எனக்கு தான் முதலில் தாலி கட்டினான்.”

வானதி அப்படியே சிலை போல் நிற்கவும்,

“மேடம், ஷாக்கா இருக்கா? நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், போய் உங்க அருமை புருஷனிடம் கேளுங்கள். அப்புறம் கடைசியா நான் உங்களை தேடி வந்தப்போ, என் வயிற்றில் மூன்று மாசக் குழந்தை.

அது தெரிந்ததும், அன்பாய் வீட்டுக்கு கூட்டிட்டு போயி, ஆசையாய் சோற்றைப் போட்டு பாசத்தோடு அந்த சோற்றில் விசம் கலந்து, நான் உன் அக்கான்னு சொல்லி உரிமையாய் உங்களின் வாகனத்தில் அன்போடு ஏற்றிய பின், அந்த வண்டியில் பிரேக் வயரைப் பிடுங்கிவிட்டு, அதை முகத்தில் காட்டாமல், ஆசையாய் வழியனுப்பி டாட்டா காட்டியவர் தானே, நீங்கள்!

ஞாபகம் இருக்கா மேடம்...?

கடவுள்னு ஒருத்தர் இருந்தா, செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கும்!” என்று சொல்லிவிட்டு, பெண்ணவள் வெளியே வந்து விட்டாள்.

வானதி அப்படியே கண்ணீர் மல்க, கோபுரத் தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

தன் மகள் வெகுநேரம் ஆகியும் வராததால், அவளைத் தேடி வந்த ஸ்ரீனிவாசன், அங்கு தூணில் சாய்ந்து அழுது கொண்டிருப்பவளின் அருகே வந்து,

“என்னாச்சுடா?”

“செஞ்ச பாவம் துரத்துதுப்பா!” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.

“வானதி, என்ன சொல்ற?” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கேட்க,

“வித்யா பாரதி தான் என் கணவரின் முதல் மனைவி. ஆனால், நீங்க என்கிட்ட பொய் சொல்லிட்டீங்க. மாசமாய் இருந்த பொண்ணு வயிற்றில் குழந்தை இருந்திருக்கு. நீங்க விஷம் வச்சிட்டீங்க. பற்றாக் குறைக்கு, அவ காரை ஆக்சிடெண்ட் பண்ணி, அவ செத்துப் போயிட்டான்னு சொல்லி, என்னை நம்ப வச்சிட்டீங்க.

அவ என் வாழ்க்கையை பறிக்கலப்பா! நீங்கதான் அவ வாழ்க்கையைப் பறிச்சிட்டீங்க. அந்தப் பாவம் தான், என்னைத் துரத்துகிறது.” என்று சொல்லிவிட்டு முன்னே சென்று விட்டாள்.

சீனிவாசன் தன் நரைத்த மீசையை தடவிக் கொண்டே, “வித்யா பாரதி! நான் உன்னை விடமாட்டேன். என் மகளின் சந்தோஷத்தைத் தவிர, இந்த உலகத்தில் எனக்கு வேறு இல்லை. விரைவில் காத்திரு. மேலோகம் செல்ல…!” என்று மீசையை நீவிக் கொண்டார்.

சுடும்...

வாசித்து விட்டு கீழே உள்ள லிங்கில் கமெண்ட்ஸ் போடுங்கள்

Super super arumai a story pogudhu sagi..interesting...one of my favourite song♥️♥️rendu per dance um paartha feel andha song a padichadhum....photographer edutha photo superuuu..midhuna nalla ponnu avala aemathirukanga pola vanadhi appa..ipa andha kilavi pota kanakku vanadhiku therinja avalavadhu support pannuva..enna saga pogudho andha ponnuku edhum aagama seinga ka.ava moonu maatha baby oda accident aanuchuni sonnadhu andha baby diya pola...barathi kovil poitu mei marandhu ellame seithadhu happy ovvoru scene um arumai tiyanam pannadhu ava manasukku nimmadhiya koduthuruku...ellame super ka..sema..nice ud
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Super ees ka.frst puriyala.apram marupadiyum padichen ...vidhu baradhi vidhya barathi aengura midhuna avangathan heroine..ennamo periya sikkal irku..mithuna cine field ku ponadhunalathano vidhu life veena pochunnu solranga..rendu perum twins oo...17yrs ku apram paarthukjm sisters..sema la epdithaan ungaluku idhulam thonudho...arpudham..kudumbame naatiya kudumbam pola..arumaiya kondu poringa.andha loosu onnu sena pinnadiye suthume love love nuttu adhu per ennavola adhai enna senja thevalama varudhu ..oru chocolate kaaga andha ponnungala indha paadu paduthudhu cyco va ava..neraiya mudichugal irkupola very Intersting waiitng for more episodes ees ka...nice ud
அத்தியாயம் - 7

இங்கு மருத்துவமனையில் படுத்திருந்த சிவராஜின் செல்ஃபோன் விடாது ஒலிக்க, எடுத்து காதில் வைக்கவும், தனது அக்கா விதுபாரதி.

“என்னாச்சுடா? ரெண்டு நாளாய் உனக்குக் கூப்பிடுறேன். நீ ஃபோன் எடுக்கவே இல்லை.”

“அக்கா, நான் பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டேன். சின்ன ஆக்சிடன்ட். நீ சொன்னால் பயந்திடுவ. அதான் உனக்குப் பேசலை. இப்ப நான் நல்லா இருக்கேன்.”

‘விபத்தா...?’ தன் தம்பிக்கு என்றதும் பயந்தவர், சிறிது நேரம் திட்டிவிட்டு, இன்னும் ரெண்டு நாளில் நான் இந்தியா வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு, அழைப்பைத் துண்டித்தார்.

மீண்டும் தன் அக்காவிற்கு அழைத்து, “நீ ஏன் அவ்வளவு தூரம் வரணும்? நான் நல்லா இருக்கேன்.”

“நீ என்ன சமாதானப் படுத்தினாலும், உன்னை பார்க்காமல், என்னால் இங்கு ஒரு வேலையிலும் ஈடுபட முடியாது. நான் வந்து பார்த்துட்டு வர்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

……..

மிதுனா மும்பை வந்ததும் ரிஷிகேஷ், “மேடம் நம்ம டேட் கொடுத்த படத்தின் இயக்குனருக்கு உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கு.”

“ஹோ! அப்போ இந்தவாரம் முழுதும் ஃப்ரி தானா?”

“அது நம்ம வீரேந்தர்ஜீ எடுக்கும் புதுப்படத்தில், கேரளாவில் காட்டுக்குள் வில்லனோடு ஒரு நடனம் கேட்டாங்களே…”

“ஓகே! அப்ப புக் பண்ணிடு.”

“மேடம்…” என்று இழுக்க...

“என்ன ஆச்சு ரிஷி? ஏதும் ப்ராப்ளமா?”

“பாடலுக்கான சூட்டிங் கேரளாவிலும், கொஞ்சம் தமிழ் நாட்டிலும் நடக்குமாம்.”

“தமிழ்நாடா…!” என்று யோசித்தவள்,

“ஓகே! பரவாயில்லை. கால்சீட் கொடுத்து விடு.” என்று சொல்லி விட்டு,

“எப்போ கிளம்பனும்?”

“நாளைக்கு மாலை ஃப்ளைட்டில், மேடம்?”

…………………

இங்கே சென்னையில், கல்லூரிக்குத் தயாராகி வந்த தியாழினியின் முகம் எல்லாம் பளிச்சென்று இருந்தது.

அவளின் முகத்தில் இருந்த பூரிப்பைக் கண்ட சேனா,

“என்ன மேடம், ரொம்ப குஷியா இருக்கீங்க...?”

“நாளைக்கு என் அம்மா வர்றாங்க.”

“வாவ் சூப்பர்.”

“அம்மா பார்த்து ரெண்டு வருஷமாச்சு. நாளைக்கு தான் பார்க்கப் போறேன். அதான் ஹேப்பி.”

அன்றும் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி இறக்கி விடவும், நடந்து சென்றவள் போகும் வழியில் ஐஸ்வர்யாவைப் பார்த்ததும், அவளுடன் ஏறிக் கொண்டாள்.

இரண்டு பேரும் போகும் போது இடைவெளியில் கைநீட்டி மறித்து நின்ற ஆத்விக்கைக் கண்ட தியாழினி, கோபத்துடன் இறங்கி நின்றாள்.

அவனோ தனது செல்போனை அவள் முன் நீட்டி, நடனமாடிய புகைப்படத்தைக் காட்டி, “யாரைக் கேட்டு நீ டான்ஸ் ஆடுன?”

அவன் கேள்வியில் புரியாதவளாய், “யாரைக் கேட்கணும்?”

“என்னைக் கேட்கணும்!”

“நீங்க யாரு? நான் ஏன் உங்களைக் கேட்கணும்?” என்றதும்,

அவனோ கோபமாய், “தியா...! ஸ்கூலில் எல்லாம் நான் சொல்றது தானே நீ கேட்ப…”

“நான் எப்பவுமே, என் வீட்டில் சொல்றதை மட்டும் தான் கேட்பேன். பள்ளியில், என்னிடம் மோசமாய் வம்பிழுக்கும் பசங்களை, என் பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக்கிட்டதால், உங்களின் மேல எனக்கு ஒரு மரியாதை உண்டு. அவ்வளவுதான்! உங்களுக்கும் எனக்கும் இருக்கும் ரிலேஷன்.”

“தியா, நான் உன்னை லவ் பண்றேன்.”

“இந்த உலகத்தில், ஒரு பையனுக்கு ஒரு பொண்ணு கிட்ட லவ்வ தவிர்த்து பேசுறதுக்கு, வேற ஒண்ணுமே இல்லையா...? ஏற்கனவே, நீங்க என் மாமாவை அடித்து ஆக்சிடெண்ட் பண்ணியதால் கோபம் இருந்தது. இப்போ…”

“அதற்குத்தான், என் டாடி பணத்தை மொத்தமாய் செட்டில் பண்ணிட்டாரே...!”

“அப்போ, எங்க மாமா ஒரு மாசம் அனுபவிக்கும் வலியை நீங்க வாங்கிப்பீங்களா...? விபத்தை நடத்தி விட்டு, ஒரு சாரி கூட கேட்காமல், பணம் கொடுத்தேன் என்று அசால்ட்டாய் சொல்றீங்க...?

இப்போ, உங்களைப் பார்க்கும் போது, வெறுப்பே வந்து விட்டது. இனிமேல் சீனியர் என்று சொல்லிக் கொண்டு என்னிடம் பேச வேண்டாம்.” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

இரண்டு பேரும் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர் சேனா, தன் முன்னே பட்டாசு போல் பொறிந்து செல்லும் பெண்ணான தியாழினியைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றான்.

மிகவும் கோபமாய் வந்த தியாழினியை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அவளுடன் வந்த ஐஸ்வர்யா, ‘இவளை எப்படி சமாதானப்படுத்துவது’ என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.

அந்த நேரம், சேனா யாரோ ஒரு பெண்ணிடம் பேசவும், இருவரும் அப்படியே நின்று விட்டனர்.

சேனா தன் வகுப்பின் முன் நின்று கொண்டு இருக்கும் போது, இரண்டாம் வருடம் படிக்கும் மாணவி தனக்கு பிறந்தநாளென்று வந்து, அவன் முன் விலை உயர்ந்த சாக்லேட்டை நீட்டினாள்.

“எனக்கு எதுக்கு இவ்ளோ பெருசு? சின்னது கொடும்மா” என்றதும்,

அவளும் “சார், நீங்க எனக்கு ஸ்பெஷல். கூடப் பிறக்காத அண்ணன் மாதிரி. இது உங்களுக்காக” என்று சொல்லிக் கொடுக்க, ஆடவன் வாழ்த்தவும், நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அந்த சாக்லேட்டைப் பார்த்ததும், ஐஸ்வர்யாவின் நாக்கில் எச்சில் ஊறியது.

“தியாகுட்டி, என் செல்லமே...! நீ போய் சார்கிட்ட அந்த சாக்லேட்டைக் கேளு, உடனே தந்திடுவார்.”

அவள் முறைக்கவும், ஐஸ்வர்யா, அப்போதுதான் கவனித்தாள். சேனாவும் தியாவும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருப்பதை. வேகமாய், “சேனா சார்” என்றதும் திரும்பியவன்,

இருவரையும் பார்த்து “என்ன?”

குட் மார்னிங்.

“ஹ்ம். குட்மார்னிங் ஐஸ்வர்யா!”

“சார், தியா உங்ககிட்ட ஏதோ கேட்கணுமாம்.” என்றதும்,

“என்னது நானா?” தலையை மறுத்து ஆட்டியவள் அவளை ஒரு இடி இடித்து விட்டு, “சார், நான் எதுவும் கேட்கலை.”

அவனோ சுவாரஸ்யமாய், “ஏன் தியாவுக்கு வாய் இல்லையா...?”

“அது இருக்கு ஒன்ற முழத்திற்கு…” என்று ஐஸ்வர்யா கையை நீட்டிச் சொல்லவும், சேனா சத்தமாய்ச் சிரித்தான்.

அவன் சிரிக்கும் போது, பெண்ணவள் அப்படியே நின்றாள். அவன் சிரிப்பு அவளை அவன் பக்கம் ஈர்க்க, அவள் விழிகள் நகர மறுத்து, அவனைப் பருக ஆரம்பித்தது.

அலை அலையாய் கேசம், அடிக்கும் காற்றில் அலைபாய, ஆடவன் இடக்கையால் அதை சரிசெய்யும் போது, தன் மனமோ அவன் புறம் சாயத் தொடங்கியதை உணர்ந்தாள். அப்போது தான், அவனை உற்றுப் பார்த்தாள்.

இடது கையில் கருப்பு வார் அணிந்த கைக்கடிகாரம். அகண்ட பெரிய கண்கள். அடர்ந்த புருவங்கள், அழகான நெற்றி, அதில் திருநீறு, கூர் மூக்கு, அடர்ந்த மீசை. அழுத்தமான உதடு. அப்பப்பா..! ஆளை மயக்கும் சிரிப்பு. வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட். கொஞ்சம் கொஞ்சமாய் அவனை தலை முதல் கால்வரைப் பார்த்தாள்.

அவளின் பார்வை ஆடவனை அசைக்க, சற்று நேரம் நின்றாலும் மனம் தடுமாறி விடும் என்று பயந்தவன், அவள் முன் விரல் நீட்டி சொடக்குப் போடும் போதுதான், தன் நிலைக்கு வந்தாள்.

அவனோ புருவம் உயர்த்தி, “தியா மேடம், என்னாச்சு?” என்றதும்,

பெண்ணவளின் முகமெல்லாம் குப்பென வியர்த்துவிட்டது. மனதில் மறைத்தாலும், தன் கண் பார்க்காததைப் பார்ப்பது போல் பார்த்து காட்டிகொடுத்து விட்டதே... தன்னைத்தானே திட்டிக்கொண்டு, “நோ சார்!”

ஐஸ்வர்யா “ஹேய்! இதுக்கு முன்னாடி நீ சாரைப் பார்த்ததே இல்லையா...? இப்படிப் பார்க்கிற?”

“ஐயோ! இவ வேற நேரங்கெட்ட நேரத்தில் மானத்தை வாங்குகிறாளே!” என்று அவளின் காலில் மிதிக்க,

“ஆ ஆ, ஏண்டி மிதிச்ச?”

“ஒண்னுமில்லை. வாடி போலாம்!”

இருவரும் திரும்பவும்,

சேனா, “எதுக்கு என்னை கூப்பிட்டீங்க...?”

ஐஸ்வர்யா, “சாரி சார். இவளால் நான் வந்த விஷயத்தையே மறந்து விட்டேனே! நீங்க ரெண்டு பேரும் ஒரே நிறத்தில் ஆடை உடுத்தி இருக்கிறீர்கள். சேம் சேம் ஸ்வீட். அதுக்கு நீங்க ஸ்வீட் கொடுக்கனும்.”

“அதை சம்பந்தப்பட்டவள் தானே கேட்கணும். நீ கேட்கிற?”

‘ஐயோ ஐஸ், ஒத்த சாக்லேட்டுக்கு எவ்வளவு பொய் எல்லாம் சொல்ல வேண்டியது இருக்கு.’ என்று நினைத்தவள், “சார், அவள் தான் என்னை கேட்கச் சொன்னாள்?”

பெண்ணவளோ “நான் இல்லை சார்.” என்று விழியால் மறுக்க, சேனா தன் கையிலிருக்கும் சாக்லெட்டை எடுத்து தியாவின் முன்னால் நீட்டினான்.

தியா தயங்க, “வாங்குடி!” என்று ஐஸ்வர்யா இரண்டு இடி இடிக்கவும், பெண்ணவள் தயங்கி தயங்கி, கையை நீட்டி வாங்கிவிட்டு, “தேங்க்ஸ் சார்!” என்று சொல்லி இருவரும் நகர்ந்தனர்.

இங்கு நடக்கும் கூத்தை பின்னாலிருந்து பார்த்த மகிமாவிற்கு, ஏதோ போலாகி விட்டது.

திரும்பிய சேனா, அங்கே கனல் பார்வை பார்க்கும் மகிமாவைப் பார்த்து, எதுவும் நடக்காதது போல உள்ளே செல்ல,

அவளோ அவனை இடைமறித்து, “இங்க என்ன நடக்குது? ஒரு ஸ்டாப் ஸ்டுடென்ட் கிட்ட இப்படித்தான் பிகேவ் பண்ணுவாங்களா...?”

“அதையே தான் மேடம், நானும் உங்களிடம் கேட்கிறேன்? ஒரு ஸ்டாப் எப்படி பிஹேவ் பண்ணனுமென்று உங்களுக்குத் தெரியாதா...?” என்று சொல்லி விட்டு அவன் சென்று விட்டான்!

தியாழினி மற்றும் ஐஸ்வர்யாவின் மேல் கொலை வெறி வந்தது. ‘தனது முதல் வகுப்பு இன்று அவர்களுக்குத் தானே. வச்சுக்கிறேன்.’ என்று தனது புக்ஸை எடுத்துக்கொண்டு வேகவேகமாய் வந்தாள்.

உள்ளே வந்ததும் அனைவரும், “குட் மார்னிங் மேடம்.” என்றதும், குட்மார்னிங் என்று சொல்லும்போது அவளின் கோபமான முகம் அனைவரையும் பய முறுத்தியது.

மதுராவோ ‘என்னாச்சு அக்காவுக்கு?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஐஸ்வர்யா தியாவின் காதில், “மேடம், ரொம்ப சூடா இருக்காங்கடி. சிக்குறவங்களை அப்பளம் மாதிரி பொரித்தெடுக்கப் போறாங்க!” என்றாள்!

வழக்கம் போல வருகைப் பதிவை எடுத்துவிட்டு வகுப்பு எடுக்கும் போது, அடிக்கொரு முறை ஐஸ்வர்யா மற்றும் தியாழினியை கவனித்துக் கொண்டே வந்தாள்.

மகிமா போர்டில் எதையோ எழுதிக் கொண்டு இருக்கும் போது, ஐஸ்வரியா,

“நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு ரொம்ப அழகா வந்திருக்குமோ...?”

“ஏண்டி அப்படி கேட்கிற...?”

“இல்லை, இந்தம்மா வந்தப்போ இருந்து நம்ம ரெண்டு பேரையுமே மாற்றி மாற்றிப் பார்க்குது! அதான்...!”

அதைக் கவனித்த மகிமா, தன் கையிலிருக்கும் சாக்பீஸில் துண்டை ஐஸ்வர்யாவின் முகத்தில் விட்டு எரிந்து, “ஸ்டுபிட், உனக்கு கிளாஸ் கவனிக்க விருப்பம் இல்லைனா, நீ எல்லாம் எதுக்கு காலேஜுக்கு வர்ற? ரெண்டு பேரும் கோ அவுட்?”

ஏனோ அந்தச் செயலில், ஐஸ்வர்யாவிற்கு மனமெல்லாம் ஒரு மாதிரி ஆனது. அத்தனை பேர் முன்னாடி, முகத்தில் சாக்பீஸ் போட்டுத் திட்டவும், கண்கலங்கியவள் எழுந்து நிற்கும் போது, அருகே வந்த மகிமா, அப்போதுதான் கவனித்தாள் ஐஸ்வர்யாவின் மேஜை மீது இருந்த சாக்லேட்.

அது தனக்கானது. தன்னிடமிருந்து பறித்துக் கொண்டது போல், வேகமாய் அதை எடுக்கப் போனாள்.

தியா பட்டென்று அதை எடுத்து கையில் வைக்க, மகிமா அவளிடம், “இந்த சாக்லேட், உங்களுக்கு அவ்ளோ முக்கியமானதோ...? கொடுத்தவங்க அதை விட முக்கியமானவங்களோ?” என்று நக்கலாய் கேட்டு முறைத்துப் பார்த்தாள். பின் வெடுக்கென்று தியாழினியின் கையிலிருந்து அதைப் பிடுங்கினாள்.

ஏனோ அதுவரை திட்டியது கூட மனதில் இல்லை. அதை பிடுங்கும் போது தியாவிற்கு மனதில் ஒரு வலி உண்டானது. முதல் முறையாக அவன் கொடுத்த இனிப்பு அது.

அவளின் முகம் சுருங்குவதை ரசித்த மகிமா, “ரெண்டு பேரும் வெளியே போங்க!” என்று சொல்லவும், அவர்கள் முன்னே நடக்க பின்னால் வந்தவள், தன் கையில் இருக்கும் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு போய், வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள்.

மீண்டும் வந்த மகிமா இருவரையும் பார்த்து, “இங்கே பாருங்க! காலேஜுக்குப் வந்தோமா...! படிச்சோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு, புரபசர் கிட்ட போயி சேம் பின்ச் அடிச்சு விளையாடக் கூடாது!” என்று திட்டிவிட்டு உள்ளே சென்றபின் தான், இருவருக்கும் இந்த மேடம் எதற்காக கோபப்படுகிறார்கள் என்று புரிந்தது.

தியாழினி கோபமாய் ஐஸ்வர்யாவை முறைத்து, “தேவையாடி நமக்கு? எதுக்கு இந்த சாக்லேட் வாங்கணும்...?”

அவளோ “அந்த மேடத்துக்கு பொறாமைடி! சார் கிட்ட நம்ம பேசுறது...! நீ மட்டும் சாரின் பக்கத்து வீட்டுப் பொண்ணு. அப்பப்ப பேசிப்பீங்க. ஒண்ணாய்த் தான் கார்ல வருவீங்க என்ற விஷயம் மட்டும் இந்த அம்மாவுக்கு தெரிஞ்சுச்சு, உன்னை பஸ்பமாக்கிடும்.”

தியாழினி பாவமாய், “ஆத்தி, நமக்கு எதுக்கு வம்பு? இனிமேல் சேனா சாரிடம் பேச வேண்டாம்டி. மார்க் குறைச்சுட்டா...?”

“ஏய் லூசு! இன்டர்னல்ல தான், இவங்க குறைக்க முடியும். செமெஸ்டர்ல இவங்க ஒண்ணும் பண்ண முடியாது.”

“ப்ராக்டிக்கலில் கை வச்சுட்டா என்ன பண்றது...?” என்று கேட்கும் போது, தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்கவும், திரும்பிப் பார்க்க அங்கே சேனா...!

அது மகிமாவின் வகுப்பு, அதில் நாம் தலையிட முடியாது என்பதால் அவன் சென்று விட்டான். அந்த வகுப்பு முடிந்து மகிமா வெளியே கிளம்பியதும், ஐஸ்வர்யா சோகமாய் உள்ளே சென்றாள். தியாழினி அக்கம் பக்கம் நோட்டம் விட்டுவிட்டு, யாரும் இல்லை என்றபின் வேகமாய் போய் குப்பைத் தொட்டிக்குள் கை விட்டு எட்டி அந்த சாக்லேட்டை எடுக்கும் போது,

“குப்பைத் தொட்டியில் என்ன பண்ற?” என்ற சேனாவின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், சட்டென்று தன் கையிலிருக்கும் சாக்லெட்டை மறைத்து, தன் பின்னால் வைத்துக் கொண்டாள்.

“என்னத்தை மறைக்கிற, தியா.” என்ற போது கூட, அவள் வாய் திறவாமல் இருக்க, அவன் எட்டிப் பார்க்க, அங்கு அவள் கைகளில் தான் கொடுத்த சாக்லேட்.

ஒரு நிமிடம், அவன் மனதிற்குள் சாரல் அடித்தது. பின், “இதற்காகத்தான் நீங்க ரெண்டு பேரும் வெளியே நின்று இருந்தீங்களா?”

அவளோ மௌனம் காக்கவும், தன் கூட நின்றவளைக் காணோமே என்று வெளியே வந்த ஐஸ்வர்யா, அங்கு சேனா சார் நிற்கவும் வேகமாய் வந்தாள்.

வந்தவள் அவளிடம், “இனிமேல் நம்ம சேனா சாரிடம் பேசக்கூடாது. பேசினால் அந்த மேடம் மார்க் குறைச்சிடுவாங்கன்னு சொன்ன. இப்ப நீ மட்டும் பேசற. இது போங்கு!” என்றாள்.

தியா, “உன்னை வச்சுக்கிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாதுடி. லூசாடி நீ...! கொஞ்சம் அமைதியா இரு.”

அவன் தியாவை முறைத்து, “இனி நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட பேச மாட்டீங்க. ஆல்ரைட். ஓகே. அவங்க உங்க கிட்ட அப்படி நடந்ததற்கு, நான் மன்னிப்பு கேட்கிறேன்.”

“சார், நீங்க எதுக்கு?” என்ற தியாவைப் பார்த்து,

“என்னால் தானே, நீங்க ரெண்டு பேரும் ஒன்னவர் வெளியே நின்னீங்க. அதுக்கு தான்.” என்று சொல்லி விட்டு அவன் சென்றுவிட்டான்.

அவன் கோபமாய் போவதாய் பெண்ணவள் உணர்ந்தாள். அவன் கோபம் தன்னைத் தாக்க, ஐஸ்வர்யா வேகமாய் அவளின் கையில் இருக்கும் சாக்லேட்டை பிடுங்கி, கவரைப் பிய்த்து சாக்லேட்டைப் பாதியைப் பிய்த்து சாப்பிட்டு விட்டு, மீதியை அவள் வாயில் வைத்துவிட, அவன் கொடுத்ததால் துப்பவும் மனமில்லாமல் விழுங்கவும் மனமில்லாமல் சுவைத்தாள். அவள் கவரை குப்பையில் போடப் போக, அவள் கையிலிருந்து பிடுங்கி, அதைப் பத்திரப்படுத்தி தனது புத்தகத்தில் வைத்தாள்.

இருவரும் உள்ளே சென்று அவர்கள் இருப்பிடத்தில் அமரும் போதுதான், தியாவின் இதழின் ஓரத்திலிருந்த சாக்லேட்டைப் பார்த்தான்.

‘ஏன் இப்படி பார்க்கிறார்?’ என்று நினைத்தவள், பாடத்தில் கவனம் செலுத்தினாள்.

வகுப்பு முடிந்து போகும் போது, “சாக்லேட் வாயின் ஓரமாக ஒட்டி இருக்கு. துடைச்சுக்கோ!” என்று சொல்லி விட்டுப் போனான்.

அதில், ஒரு கோபம் மறைந்து இருந்ததை பெண்ணவள் உணர்ந்தாள்.

மாலையில் வழக்கம் போல ஐஸ்வர்யாவை வீட்டில் விடச் சொல்லி, வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

………………..

விது பாரதி, அமெரிக்காவிலிருந்து மும்பை வந்து விட்டாள். மும்பை விமான நிலையம் மிகவும் பரபரப்பாய் இருந்தது. தன் தாய்மொழி தவிர, பல மொழிகள் அங்கே காதில் விழுந்தது. ஏனோ, அந்தத் தாய் மொழியை காதில் கேட்க, மனம் எல்லாம் பரபரத்தது. தான் வந்த நேரத்திற்கு, மாலை 5 மணியளவில், மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்குத்தான் பிளைட் இருந்தது என்பதால், டிக்கெட் வாங்கியவர் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குப் போய்க் கொள்ளலாமென்று நினைத்தவர், விமானதிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

…………

அந்த நேரம், மிதுனா மும்பை விமான நிலையத்திற்குள் வந்து ரிஷியிடம், “அனைத்தும் செக் பண்ணியாச்சா?” என்று கேட்டதும்,

“ஆச்சு மேடம்.”

“ஓகே.”

“மேடம், ஃப்ளைட் வர ஒரு டென் மினிட்ஸ் ஆகும்.” என்றதும், தலையாட்டி விட்டு தனது செல்ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

சரியாய் 10 நிமிடம் கழித்து, தங்களுக்கான ஃப்ளைட் வரவும் உள்ளே சென்று, மிதுனா ரிஷியுடன் தனக்கான இருக்கையில் அமரும் போது, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சத்தம் கேட்டு நிமிர்ந்தபோது,

விமான பணிப்பெண் “மேடம், ஒரு லேடிக்கு அவங்க பக்கத்தில் ஜென்ஸ் இருப்பதால், வேற சீட் மாறனுமென்று சொல்றாங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், இங்கே மாற்றிக் கொள்ளலாமா...?”

அவள் ரிஷியைப் பார்க்க, அவன் “தாரளமாய்” என்றான்.

மிதுனா தலையாட்டி விட்டு, ஜன்னல் பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.

பணிப்பெண் “மேடம் நீங்க அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.” என்றதும், நன்றியை தெரிவித்து விட்டு, அவள் கைகாட்டிய இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

விது பாரதி தனது இருக்கையில் அமர்ந்து பெல்ட் எல்லாம் மாட்டிவிட்டு, பின் ஜன்னல் பக்கம் திரும்பி இருந்தவளிடம் நன்றி சொல்வதற்காக, “எக்ஸ்கியூஸ் மீ, ரொம்ப தேங்க்ஸ்.” என்ற போது திரும்பினாள்.

இருவரின் கண்களும் ஒரு சேரக் கலங்கியது. 17 வருடம் கழித்துப் பார்க்கும் உடன்பிறப்புகள். இருவருக்கும் பேச்சு வரவில்லை. அழுகை தான் வந்தது.

“மிதுனா” என்ற வித்யா பாரதி,

தனது தங்கையைப் பார்த்து “நல்லா இருக்கியா...?”

கண் கலங்கியவள், "நம்ம 17 வருஷத்துக்கு முன்னாடி, என்ன சத்தியம் பண்ணினோம்?"

வழியும் கண்ணீரை அடக்கிக் கொண்டு, "இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று!"

“அப்படி சொல்லித்தானே விட்டுட்டு போன அக்கா. அப்புறம் ஏன் இப்ப பேசுற? அதேபோல் இரு.” என்று சொல்லியவள், தலையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

தான் சொன்ன வார்த்தைதான். அன்று தனக்கு வலிக்காத வார்த்தை. இன்று அவள் வாயில், அதேமாதிரி திருப்பிக் கேட்கும் போது, மனம் அப்படி வலித்தது.

“நான் அப்படி சொன்னா, நீ என்னை விட்டுட்டு போயிடுவியாடி...?”

“உங்களை மாதிரி தனியாய் இருந்தால் எதையும் யோசிக்க வேண்டாம், அக்கா.

குடும்பம்னு வரும் போது எல்லாம் யோசிக்கணும் இல்லையா...? என் பொண்ணுக்கு 17 வயசு. அவள் படிச்சு முடிச்சதும், அவளுக்கு நாளைக்கு கல்யாணம் எல்லாம் பண்ணனும்...?”

“பொண்ணா...?”

“நீ தான் அந்தக் கொடுமைக்கார புருஷன் வேணாமுன்னு சொல்லிட்டயே...!”

முகம் சுருங்கியவர், “புருஷன் வேண்டாமுன்னு சொன்னேன். வயிற்றில் வளரும் குழந்தையை வேண்டாமுன்னு சொல்ல முடியல.”

“போதும் அக்கா. வேற எதுவும் பேசவேண்டாம்.”

“சரி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு. அப்புறம் பேச மாட்டேன். அம்மா, விசித்ரா, வினோ, சிவா எல்லாம் எப்படி இருக்காங்க...? வினோ குட்டிக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்புறம் நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ. அன்று நீ போனதும், அம்மா ரொம்ப அழுதாங்க. நீ செத்துப் போயிட்டதா சொல்லச் சொன்ன. நானும் சொல்லிட்டேன். ஆனாலும் அம்மாவிற்கு நீ உயிரோடு இருக்கிறது தெரியும். உன்னால நம் வீட்டில் யாரும் டீவியே பார்ப்பதில்லை.”

“அக்கா, நம்ம வாழ்க்கை தான் சீரழிஞ்சு போச்சு. என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும். நீ எடுத்த தொழிலால், என் வாழ்க்கை நாசமாய் போச்சு. இன்னொருத்தி சொல்லாமல் கூட, எங்கேயோ ஓடி போய் விட்டாள். அதுவும் உன்னால் தான். தங்கச்சி வாழ்க்கையும் கிட்டத்தட்ட மோசம்தான். கடைசியில் எங்களுக்காக என் தம்பி கல்யாணமே பண்ணவில்லை. எங்களின் ஒட்டு மொத்த சந்தோஷமும் என் பொண்ணு நல்லா வாழ்வதில் தான் இருக்கு. தயவு செய்து சொந்தம் கொண்டாடிக் கொண்டு எங்களைத் தேடி சென்னைக்கு வராதே! ப்ளீஸ்...! அது நீ எங்களுக்கு செய்யும் பெரும் உதவி.” என்று சொல்லி விட்டு, வேறு பக்கம் சாய்ந்து கொண்டாள்.

‘வித்யா அக்கா! வித்யா அக்கா! என்று ஆயிரம் முறை சொல்பவள், உறங்கும் போதும் கூட, தன் பக்கத்தில் படுத்துத் தான் உறங்குவேன் என்று அடம் பிடிப்பவள். எனக்கு ஒரு சின்ன அடிபட்டாலும், கண் கலங்கி நிற்பவள். இன்று, நீ வேண்டாம் இன்று ஒரு நொடிப் பொழுதில் சொல்லி விட்டாளே...!’

தன்னையும் மீறி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வாழ்க்கையில் தன் தலையெழுத்தை எழுதும்போது மட்டும், கடவுள் மிகவும் கோபமாய் இருந்திருப்பார் போலும்...!

சுடும்...!

கீழே இருக்கும் லிங்கில் உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள் .

.
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Adengappa ennaaa adi..apdi podu apdi podu.magi idhulam unaku thevaiya.sena paatuku avarum velaiyum avarum a irkaru...neeye poi vaangi kattikittu irka..unaku innamum parpala midhi kodukanum...vidhu baradhi palasa marakalana ennamo periya sambavam nadandhu irku pola.paavam ennanu reveal pannunga sagi paarpom.sena ku aen vidhubarathi ya engayo paartha feel..orunvelai vidhya va cinema la paartha mathri irkumo..rendu perum twin sister num conform a solla mudila aenna 34 vayasu vidhuku 35 vayasu vidhyakunnu sonninga...muga jaadai apdi irko..apram aen vidhu bayapadranga..pala vinaakal irku vidai ini varum ud la varumnu edhir paarkiren..super ud sagi
அத்தியாயம் - 8.1

சென்னைக்கு வந்த விதுபாரதி வீட்டிற்குக் கூடச் செல்லாமல், நேராய் மருத்துவமனைக்குச் சென்று தனது தம்பியைக் காண வந்தார். அங்கே உள்ளே நுழைந்ததும், ஒருவன் தனது தம்பியை தூக்கி நிறுத்தி, அவனுக்கு உதவி செய்து கொண்டிருப்பதைக் கண்டதும்,

"ஹலோ! உள்ளே வரலாமா...?" என்றதும், இரு ஆண்களும் திரும்பினர்.

சேனாவோ, 'யார் இவர்?’ என்று பார்த்தான்.

சிவராஜ் “அக்கா…!” என்று உற்சாகத்தோடு அழைத்தான்.

வந்தவர், கட்டுடன் இருந்தவனின் கைகால்களைப் பார்த்து, "என்னடா, சின்ன அடின்னு சொன்ன? கை கால் எல்லாம் இத்தனை கட்டுப் போட்டிருக்கு. இவ்வளவு பலமா காயம் பட்டிருக்கு.” என்று கண்ணீர் விடவும்,

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் நல்லா இருக்கேன்.”

இருவருக்கும் தனிமை தர விரும்பிய சேனா, "ஓகே சார், நான் கிளம்பறேன்!" என்றதும்,

அவனின் நினைவு வந்த சிவராஜ், “சேனா சார்...! ப்ளீஸ், ஒரு நிமிஷம் இருங்க! அக்கா, இவர் தான் என்னை கூட்டிட்டு வந்து இங்க அட்மிட் பண்ணியவர். இப்ப வரைக்கும், இவர்தான் என்னைப் பார்த்துக்கிறார். நம்ம பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார். நம்ம தியாழினி படிக்கும் கல்லூரியில் வேலை பார்க்கிறார். அவளின் வகுப்பு ஆசிரியரும் கூட."

விது பாரதி தன் கை இரண்டையும் எடுத்துக் கும்பிட்டு, "மிக்க நன்றிங்க!"

'குடும்பத்தில் அனைவருக்கும் நன்றிக்குப் பஞ்சம் இல்லை போல்.' என்று நினைத்தவன்,

"ஓகே நீங்க பாருங்க! நான் கிளம்புறேன்."

சிவராஜ் மீண்டும் "சேனா சார், ஒருநிமிடம்!" என்றதும் திரும்பினான்.

"தொந்தரவுக்கு மன்னிக்கணும்! எனக்காக நீங்கள் இன்னொரு உதவியும் செய்யனும்!"

அவனோ திரும்பி என்ன என்பது போல் பார்க்க, "என் அக்காவை, எங்கள் வீட்டில் விடமுடியுமா...?"

"இதில் எனக்கு என்ன தொந்தரவு இருக்கு? நான் என்ன உங்க அக்காவிற்கென்று ஒரு முறை வந்தா கூட்டிட்டு போகப் போறேன்? போகும் வழியில் தானே இறக்கி விடப் போறேன்! எனக்கும் அவங்க அக்கா மாதிரி தான்! நான் வெளியில் வெயிட் பண்றேன். நீங்க பேசிவிட்டு வாருங்கள், சிஸ்டர்!" என்று சொல்லிவிட்டு, அவன் முன்னே சென்று விட்டான்.

"யாருடா இந்தப் பையன்?" என்றதும், நடந்த அனைத்தையும் சொல்லவும், விதுபாரதியின் முகம் சுருங்கியது. ‘ஒரு பக்கத்து வீட்டுக்காரனால் தான் தங்களின் வாழ்க்கையே சின்னாப்பின்னம் ஆனது.' என்று நினைத்தவரின் முகம் கன்றவும், அதைப் புரிந்துகொண்ட சிவராஜ்,

"அக்கா பயப்படாதீங்க! அவரின் வீட்டில் அம்மாவும் அவரும் மட்டும் தான்! அவர்களால் நமக்கு எந்த தொந்தரவும் வராது. காரணம், அவர்களும் நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் தான்."

"பார்க்க நல்ல பையன் போல தான் தோணுகின்றான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உனக்கு உதவி செய்திருக்கிறான். ஆனாலும் மனிதர்களை நம்பவே மனம் பயப்படுதுடா...!"

"அக்கா...! பயந்து பயந்து தான், இத்தனை நாள் யாரோடும் பழகாமலும் பேசாமலும் நம்ம வாழ்க்கையே போயிடுச்சு. இவர் நல்லவர் தான் அக்கா! கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். பயப்படாதே...!" என்றதும் தலையாட்டிவிட்டு வெளியே வந்தாள்.

இங்கே, தன் மகள் வரப்போகிறாள் என்ற சுமித்திரை நொடிக்கொருமுறை வாயிலை எட்டி எட்டிப் பார்க்கவும், அவரின் அருகே வந்த தியாழினி, "பாட்டி கண்வலியும் கழுத்துவலியும் ஓருசேர வந்துடப் போகுது."

"ஏண்டி இப்படிச் சொல்ற?"

"காலையிலிருந்து கழுத்தையும் கண்ணையும் வாசல் பக்கமே வச்சிட்டு இருக்கீங்க? அமெரிக்காவில் இருந்து வந்தவங்களுக்கு வீட்டுக்கு வரத் தெரியாதா...? ஏதோ குழந்தையைத் தேடுவது போல், இப்படித் தேடுறீங்க...?"

"என் மகள் எனக்கு குழந்தை தாண்டி!" என்று சொல்லிவிட்டு, வாசல் பக்கமே பார்த்துக் கொண்டு இருந்தார்.

யாழினி தனது சித்தியிடம், “உங்க அம்மா உங்களுக்கும் மாமாவுக்கு ஓர வஞ்சகம் பண்றார். எங்கம்மாவின் மேல் மட்டும் தான், இவ்வளவு பாசமாக இருக்காங்க பாருங்க?”

வினோதினி சிரித்துக்கொண்டே, "அக்கா, ரெண்டு வருஷம் கழித்து, இப்பதான் வீட்டுக்கு வர்றாங்க. என் அம்மா காலையிலிருந்துதான் வெயிட் பண்றாங்க. நான் நைட்ல இருந்து தூங்காமல் அக்காவைப் பார்ப்பதற்காக காத்துகிட்டு இருக்கேன்." சொல்லியவர், ஆரத்தி கலந்து கொண்டு வந்து மேசையில் வைத்தார்.

தியா “அப்பப்பா, எவ்வளவு பாசம்? தாங்க முடியலடா சாமி!”

ஸ்ரீதர் சேனா காரை ஓட்டிக் கொண்டே வரும் போது, இரண்டு மூன்று முறை விது பாரதியை உற்று உற்றுப் பார்த்தான்.

விது அவனிடம், "ஏன் தம்பி, இப்படி பார்க்கிறீங்க? என்னிடம் ஏதாவது கேட்கணுமா...?"

“உங்களைப் பார்த்தால், எனக்கு புதிதாக பார்க்கிறது போல இல்லை. ஏற்கனவே பார்த்துப் பழகிய முகம் போல இருக்கு.”

அவனின் கேள்வியில் அவருக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டது. “இல்ல தம்பி. நீங்க என்னைப் பார்த்து இருக்க வாய்ப்பே இல்லை. நான் வெளிநாட்டில் தானே கடந்த 16 வருடமாக வேலை பார்க்கிறேன். ரெண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை தான் வருவேன்...!”

“ஹோ!” என்றான். ஆனால் சேனாவின் மனம் நம்ப மறுத்தது. 'இவரை இதற்கு முன்னாடி எங்கோ பார்த்திருக்கிறோமே என்று!'

'விதுபாரதியின் மனமெல்லாம் படபடவென்று அடித்தது. ஒரு வேளை தன்னை பார்த்திருப்பானோ இதற்கு முன்னாடி என்று!'

“வீடு வந்திருச்சு மேடம்.” என்ற அவன் குரல் கேட்டு நினைவுக்குத் திரும்பியவர்,

"கூட்டிட்டு வந்ததுக்கும், என் தம்பியைப் பார்ப்பதற்கும் நன்றி தம்பி!" தலையாட்டினான்.

வீடு வந்ததும், வாயிற்கதவைத் திறந்ததும், அங்கே புன்னகையோடு நின்றிருந்தவர்களைக் கண்டதும், அவளின் மனதில் இருந்த சங்கடம் எல்லாம் காணாமல் போனது. தியா ஓடி வந்து தன் அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு, கண்ணம் மூக்கு நெற்றி எல்லாம் முத்தம் வைத்து, தன் அன்பை வெளிக்காட்டினாள்.

அடுத்து தங்கை அம்மா என்று பாசமழை பொழிந்து விட்டு, ஆரத்தி எடுத்து அவரை அழைத்துச்சென்றனர்.

காருக்குள் இருந்த பொருட்களை எல்லாம், சேனா எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தான்.

தியா அவனின் அருகில் வந்து குனிந்து, "குட் மார்னிங் சார்!" என்றாள்.

அவனும் நிமிர்ந்து பாராமல் குனிந்து கொண்டே "மார்னிங்" என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல, பெண்ணவளின் முகம் வாடிவிட்டது.

மீண்டும் அவனின் அருகே வந்தவள் "என்ன ஆச்சு சார்? ஏன் கோபமாய் இருக்கீங்க...?"

"நான் உன்னிடம் கோபப்படுவதற்கு என்ன இருக்கு? என்று அவன் கேட்க...

அவன் பதில் தன்னை சமாதானப்படுத்த வில்லை. தன் மனம் எதையோ ஒன்றை அவனிடம் எதிர்பார்த்தது. அது சிரிப்பா...? அன்பான பார்வையா...? நகைச்சுவையான பேச்சா...? விடைதான் தெரியவில்லை.!

காருக்குள் ஏறி அமர்ந்தவன், "தியா, நீ ஐஸ்வர்யாவை வரச் சொல்லி காலேஜுக்குப் போய் விடு." என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

ஏனோ, மனம் வாடிப் போன பூ போல ஆகிவிட்டது. 'தன் அம்மா வந்த சந்தோசம் கூட, அவன் பேசாமல் போனதில் கரைந்து போனது.’

வீட்டிற்குள் பெட்டிகளை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, கல்லூரிக்குக் கிளம்பி வந்த தியா, அங்கே குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வந்து, உணவு மேஜையில் அமர்ந்த தன் அம்மாவைப் பார்த்து, “அம்மா” என்றதும் விது நிமிர்ந்தாள்.

“அம்மா, என் பக்கத்தில் நீங்க இருந்தால், யாருமே உன்னை அம்மான்னு சொல்ல மாட்டாங்க. எல்லாரும் அக்கான்னுதான் சொல்வாங்க...!”

சிரித்தவர், “தியா குட்டி, இன்னைக்கு லீவ் போடுறயா?”

சுமித்திரை “அவள் எதுக்கு வெட்டியா லீவ் போட்டுகிட்டு. நீ ஊருக்கு கிளம்புறப்போ போடட்டும்."

“சரிம்மா. தியாகுட்டி இங்கே வா!
.
பெண்ணவள் பக்கத்தில் வரவும், விது தன் தட்டில் இட்லி வைத்து, அதைப் பிய்த்து எடுத்து ஊட்ட ஆரம்பித்தார்.

சுமித்திரை அருகில் வந்து, “என் மகளை சாப்பிட விடுடி. நீ என்ன குழந்தையா? உன் கையில் எடுத்து சாப்பிடத் தெரியாதா...?”

பாட்டி உனக்குப் பொறாமை...! நீ வேணும்னா இட்லி எடுத்து உன் மகளுக்கு ஊட்டு.”

விது கண்விழித்து, “என் பொண்ணா இப்படி எல்லாம் பேசுறது...!”

“உன் பொண்ணே தான். ஊரில் இருக்கிற அத்தனை வாயும் இவளுக்குத் தான் இருக்கு.”

அவளோ தன் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு, தன் பாட்டியைப் பார்த்து, "ஆமாம் ஆமாம்! ஊரில் இருக்கிற அத்தனை வாயும் எனக்குத்தான். ஆனால், பாட்டியைவிட கொஞ்சம் கம்மிதான்.!"

குழந்தை குமரியாய் மாறி, பெற்றவரை சந்தோசப் படுத்தியது.

அந்த நேரம் பக்கத்து வீட்டில் சேனாவின் கார் கிளம்பும் சத்தம் கேட்டதும், சுமித்ரை, "உங்க சார் கிளம்பிட்டாரு! நீ எப்படி காலேஜுக்குப் போவ?"

"என் ஃப்ரண்டு ஐஸ்வர்யா வர்றா, பாட்டி!"

விதுபாரதி தன் மகளிடம், “தியாகுட்டி, நீ தினமும் அவனோடு தான் காலேஜுக்குப் போறியா...?”

“அம்மா இந்த வாரம் தான்மா! அதிலும் அவர் காலேஜிற்கு போகும் வழியில் முன்னமே நிறுத்தி விடுவார். யாரும் என்னை தப்பாப் பேசக் கூடாதுன்னு. நான் வரும் போது ஐஸ்வர்யா கூடத்தான் வருவேன். இன்னைக்கும் அவளுடன் தான்மா போறேன்.”

அதற்குள் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், "அவள் வந்துட்டாம்மா! நான் கிளம்புறேன்!" என்று சொல்லி வெளியே சென்றுவிட்டாள்.

“வீட்டுக்குள் பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி விட்டதால், நமக்கு நடந்த பிரச்சனை எல்லாம் நினைவில் இருக்காம்மா...?”

“இருக்குடா…!” என்ற சுமித்ரையிடம்,

“அப்புறம் எப்படி ஒரு வயது பெண்ணை ஒரு வயது வந்த ஆளுடன் அனுப்புறீங்க...?”

"என் வயது அனுபவத்தில் தான் விது! யார் நல்லவர் யார் கெட்டவர் என்று இப்போ என்னால் கணித்து விடத் தெரியும்!"

எழுந்து வந்தவர் தன் அம்மாவை கட்டிக் கொண்டு அவர் தோளில் சாயவும், தன் மகளின் முதுகை வருடிய சுமித்திரை,"நீ இன்னும் பழசை மறக்கலையாடா!"

"அதெல்லாம் மறக்கணும்னு தான், நானும் முயற்சி பண்றேன். ஆனால் முடியலம்மா!"

சுமித்திரை தன் மகளை உள்ளே படுக்கை அறைக்கு அழைத்து வந்து, அவர் கட்டிலில் அமர்ந்து, “விது வா!” என்றதும் வந்தவள், மடியில் படுத்தாள்.

34 வயது பெண்மணி, மூன்று வயதுக் குழந்தையாய் தெரிவது தாய்க்கு மட்டுமே...! அவர் தலையைத் தடவிக் கொடுக்க, வெகு நாள் கழித்து அப்படியே உறங்கிப் போனாள். உறங்கும் தன் மகளையே கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
........

இங்கே ஐஸ்வர்யாவுடன் கல்லூரிக்குச் சென்ற தியாழினியை மறைத்த ஆத்விக், "நான் உன்னிடம் தனியா பேசணும்...!"

"சீனியர் நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும். எனக்கு உங்களிடத்தில் பேசுறதுக்கு ஒன்றுமே இல்லை!" என்று சொல்லிவிட்டு அவள் கிளம்ப,

அவளின் கையைப் பிடித்து இழுத்தவன், "எனக்கு உன்கிட்ட பேசணும். பேசியே ஆகணும்!"

"சீனியர் மரியாதையா கையை விடுங்க. இப்படி கட்டாயப் படுத்தினால், நான் மேனேஜ்மென்ட்டிடம் புகார் பண்ண வேண்டி வரும்."

"நீ யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ...! பட் ஐ லவ் யூ!"

அவனின் கையிலிருந்த தன் கையைப் உருவிவிட்டு, "அடுத்த முறை காதல் கீதல்னு வந்து பேசினால் கன்னம் பழுத்திடும் ஜாக்கிரதை!" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

செல்லும் அவளின் முன்னே நின்று, "எனக்கு ஒரு பொருள் கிடைக்காவிட்டால், அது யாருக்கும் கிடைக்க விடாதவன் நான்."

“அதையும் பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு அவள் முன்னே செல்ல,

அவனின் பேச்சில் பயந்த ஐஸ்வர்யா, “எனக்கு என்னவோ பயமா இருக்குடி! இப்படிப் பட்டவர்களைப் பகைத்தால், கொலை அல்லது ஆசிடுன்னு எதையாவது கொண்டுவந்து மூஞ்சியில் ஊற்றி விட்டால்...? பேசாமல் போய் உன் வீட்டில் சொல்லிவிடு!”

“அவ்வளவுதான், என் படிப்புக்கு முழுக்குப் போட்டு, வீட்டில் உட்கார வைத்து விடுவார்கள். இவன் ஒரு பயந்தாங்கோலிடி. என் மாமாவை வண்டியில் இடிச்சிட்டு, பயந்து போய் ரெண்டு நாள் லீவு போட்டு வீட்டில் உட்கார்ந்தவன்டி. இவனுக்கெல்லாம் பயந்தால் படிக்க முடியுமா...? வர்றதைப் பார்த்துக்கலாம்...!” என்று அழைத்துச் சென்றாள்.

ஆத்விக் தியாழினியிடம் ப்ரபோஸ் செய்வதை மகிமாவும் மதுராவும் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். அந்த நேரம் அவ்வழியே சென்ற பாண்டித்துரை ஆத்விக் என்றதும், திரும்பியவன்

“ஹாய் அங்கிள்!”

இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து, "இவனை நம்ம டாடிக்குத் தெரியுமா...?" என்று அருகே வந்தனர்.

அவரோ “ஹாய் ஆத்வி! டாடி நலமா?”

“அவருக்கென்ன சூப்பர்?”

“அன்னிக்கு என்ன, ஒரு ஆக்ஸிடெண்ட் பண்ணிட்ட? காரை பார்த்து கவனத்துடன் ஓட்டி வர வேண்டாமா...? கொஞ்சம் மிஸ்சாகி இருந்தாலும், உன் பெயர், அப்பா பெயர் ஊரெல்லாம் வந்திடும். ஒரு வேளை உனக்கு ஏதும் ஆகியிருந்தால் என்ன பண்றது? நினைச்சுப் பாரு!”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, “ஹாய் டாடி!” என்று வந்த தன் மகள்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தவர், “இவன் ஆத்விக். என் பிரண்டு இளவரசனின் பையன்.”

அவன் இருவரையும் பார்த்து “ஹாய்!” என்றதும், மதுரா, “ஹேய்! நீங்க இளவரசன் மாமாவின் பையனா...?”

“ஆமாம்.!”

பெண்ணவள் இதழ் விரித்து “செம ஹேப்பி” என்று கைநீட்டி “ஐம் மதுரா!” அவனும் கைகுலுக்கினான்.

“நான் மகிமா” என்று கை கொடுக்க, மூவர் கூட்டணி அங்கே அரங்கேறியது.

அந்த நேரம் காலேஜ் பெல் அடிக்கவும் பாண்டித் துரை “சரி சரி வகுப்பிற்கு நேரம் ஆச்சு. நீங்க போங்க.” என்றதும், மூவரும் கிளம்பி அவரவர் வகுப்பிற்குச் சென்றனர்.

அன்று வகுப்பிற்கு வந்த சேனா பாடத்தை நடத்தியவன், ஒருமுறை கூட தியாவின் புறம் திரும்ப வில்லை.

'அவர் ஏன் தன்னைப் பார்க்கவேயில்லை’ என்ற கேள்வி, பெண்ணவளின் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.

பாடம் முடித்துவிட்டு அனைவரையும் நோட்ஸ் எழுதச் சொல்லியவன், வகுப்பை சுற்றி சுற்றி வந்தான். அனைவரும் பொறுப்பாய் எழுத, பாடத்தை கவனிக்காதவளோ என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருக்கும் போது, அவளின் அருகே வந்தவன், அவளின் நோட் புக்கையே பார்த்தவன், திட்டாமல் அப்படியே நகர்ந்து விட்டான்.

அவன் வகுப்பு முடிந்து போன பின், ஐஸ்வர்யா தியாவிடம், "சார், நம்ம மேல கோவமா இருப்பாரோ...! இன்னைக்கு ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை!"

சேனாவின் மனமும் அதுதான் கேட்டது, ‘ஏன் அவளை தவிர்க்கிறாய் என்று...? அவள் தன்னிடம் மார்க்கிற்காகப் பேசமாட்டேன் என்று சொன்னதால் வந்த கோபமா...? ஒரு ஆசிரியர் மாணவியிடம் சினேகம் வளர்ப்பது தவறு என்று தோன்றியதால் தவிர்க்கிறேனா...? இல்லை, அவளை நெருங்கினால் மனம் அவளிடம் விழுந்து விடுமோ என்ற பயத்தால் தவிர்க்கிறேனா?’ ஏதோ ஒன்று தடுத்தது.

மதியம் ஐஸ்வர்யாவும் தியாவும் சாப்பிட வந்தனர். ஐஸ்வர்யா சாப்பிட, தியாவோ டிபன் பாக்ஸை திறக்காமலே “பசிக்கலடி.”

“ஏன்?”

“தலை வலிக்குது!” என்று சொல்லிவிட்டு, தோழி சாப்பிடும் வரை காத்திருந்தாள். அவள் சாப்பிட்டதும் இருவரும் தங்களின் வகுப்பிற்கு வந்து கொண்டிருக்கும் போது,

ஐஸ்வர்யா, "உனக்கு தலை வலிக்குதுன்னு சொன்னடி. கேண்டீன் போய், ஒரு காஃபி சாப்பிட்டு வரலாமா...?"

"வேணாம் டி? மூடு இல்லை!"

அந்த நேரம் எதிரே வந்த ஹெச்.ஓ.டி. அருணா மேடத்தைப் பார்த்து, இருவரும் “குட் ஆப்டர் நூன்" என்றதும், அவரும் தலையை அசைத்தவர், “ஹாய் டியர்ஸ்! இருவரில் யாராவது ஒருவர் போய், ஸ்ரீதர் சேனாவை ஆடிட்டோரியத்திற்கு வரச் சொல்லுங்க…?”

தியாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல மலர்ந்து. “ஐஸு, நீ வகுப்பிற்குப் போ...! நான் போய் சொல்லிட்டு வர்றேன்.” என்றதும்.

ஐஸ்வர்யா தலையை ஆட்டிவிட்டு நக்கலாய், "நீ நடத்துடி! இப்ப தான் உனக்கு ஏன் சாப்பாடு இறங்கல என்பதற்கான விஷயம் புரியுது...!"

"போடி லூசு!" என்று சொன்னவளின் கால்கள் சேனாவை தேடிச் சென்றது.

ஸ்டாஃப் ரூமில் அங்கே யாருமில்லை. அவன் மட்டும் தனது இருக்கையில் கால் மேல் கால் போட்டு, அமர்ந்து கண்களை மூடிச் சாய்ந்திருந்தான்.

அவனை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டே நின்றவள், பின் "சார்...!" என்றதும் நிமிர்ந்தான்.

விழித்தவன் "இங்க என்ன பண்ற?" எடுத்ததும் கடுமையான வார்த்தைகள்.

"சார்! உங்களுக்கு என் மேல என்ன கோபம்? ஏன் மூஞ்சியை உம்முன்னு வச்சிருக்கிங்க...?"

"நீ இங்க படிக்க வந்து இருக்கியா...? இல்லை, என் மூஞ்சியைப் பார்க்க வந்திருக்கியா...?"

அவனின் வார்த்தையில் விழிநீர் வெளியே எட்டிப் பார்க்க, “உங்களை அருணா மேடம் ஆடிட்டோரியத்திற்கு வரச் சொன்னாங்க” என்று சொல்லி விட்டு திரும்பும் போது, அங்கே மார்பின் குறுக்கே கைகளை கட்டி மகிமா நின்று இருந்தாள்.

கலங்கிய கண்களுடன் தியாவும், மிகவும் கோபத்துடன் சேனாவும் இருப்பதைக் கண்டவளுக்கு, அப்படியே குளுகுளுன்னு இருந்தது.

மகிமாவின் மனமோ 'இவள் இங்கே என்ன பண்றா?' பின் கோபமாய் "யாரும் இல்லாதப்போ ஸ்டாஃப் ரூமில் உனக்கு என்ன வேலை...?"

“அருணா மேடம் சாரை வரச் சொன்னாங்க.” என்றதும்,

"ஹோ...! அப்ப ஏன், ஏன் உன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு?"

“கண்ணில் தூசி விழுந்திடுச்சு, மேம்.” என்று சொல்லிவிட்டு அவள் நிற்க,

இதில் எதோ சரியில்லை என்பதை உணர்ந்த மகிமா, "பொய் சொல்றயா...? படிக்கிற வயதில் கவனம் படிப்பில் இருக்கட்டும். அடிக்கடி ஸ்டாஃப் ரூம் பக்கம் வரக் கூடாது!” என்று மிரட்டினாள். அதில் கடுப்பான சேனா இருக்கையை விட்டு எழுந்தவன், அவளை முறைத்து விட்டு அவளைக் கடந்து சென்றான்.

அங்கே யாரும் இல்லை என்றதும், தியாவின் மனம் சேனாவின் பக்கம் விழுந்திடக் கூடாது என்று நினைத்த மகிமா, தன்னைக் கடந்தவனின் கையைப் பிடித்து, "சேனா ஐ லவ் யூ...!"

ஏனோ ஒரு கோபம் அவனுக்குள் சுழன்று கொண்டிருந்தது. அதையும் தாண்டி அவள் அத்து மீறவும், ருத்ரனாய் மாறினான்.

"ஒரு ஸ்டூடண்ட் முன்னாடி எவ்வளவு கேவலமா நடந்துக்கிற? இடியட்!” என்று திட்டிக் கொண்டே, அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.

“இதுவே முதலும் கடைசியுமா இருக்கனும். ஜாக்கிரதை!” என்று சொன்னவன், திரும்பி அங்கே நிற்கும் தியாவை முறைக்க, பயந்தவள் ஓடியே விட்டாள்.

தன் கன்னத்தில் கை வைத்துத் தடவிய மகிமா, “சேனா, இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.”

“யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ. நான் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, அவன் சென்று விட்டான்.

மகிமாவின் மனதிலோ அறைந்த சேனாவை விட, தியாவின் மேல்தான் கோபம் வந்தது.

வகுப்பிற்குள் பேயறைந்தது போல் வந்து அமர்ந்த தியாவைப் பார்த்த ஐஸ்வர்யா, “என்னடி சேனா சாரைப் பார்க்கப் போயிட்டு, கன்னத்தில் கை வைத்துவிட்டு வந்து உட்கார்ற? ஏதாவது சம்திங் சம்திங்கா...?”

“சம்திங்தான். ஆனால் எனக்கு இல்லை. ஈவினிங் வீட்டுக்கு போறப்ப சொல்றேன்.”

“ஐயோ, அதுவரைக்கும் எனக்கு மண்டைக்குள் என்னவா இருக்கும்னு நினைத்து யோசிச்சுக்கிட்டே இருப்பேன்டி. வேற வேலையே ஓடாது.”

“அமைதியாய் இருடி! வீட்டுக்கு போறப்ப சொல்றேன்.” என்றதும் அமைதியாகிவிட்டாள்.

கதை கொஞ்சம் பெரிதாக இருந்ததால் இதன் கீழேயே இன்னொரு அத்தியாயம்
பதித்திருக்கிறேன் .

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Adaddada ennada idhu...ponnamma kannama nu dhool la pogudhu...wowowowo😍😍😍😍😍ees la alaga irku. Sena dance aadiyadhum sema shock avanga amma thaan baratham tgeriyumnunsonnaga maganukum theriyumnu ippathan theriyudhu.akka thangai renduthukku vayiru eriyattum loosunga enna jenmam....vizha ku vara sirappu virundhinar yaraunu enaku oru guessing irku ees ka sonna thittuvinga 😜😜😜😜adhunala na sollala....oru vagaila diya oda family package kandupidichuten paarpom.sena ku ippave moochu muttudhu ivlo kashta padran.innum poga poga ennanavo..aama susi ku ennathan aachu aalaye kaanom...super ud ka ..nxt padika poren luv u..💞 byeeee
மிக்க மிக்க நன்றி உங்களின் நீண்ட விமர்சனத்திற்கு உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் .சுசி இல்லை சசி.

சசி விரைவில் வருவார்கள் அன்புக்கு விமர்சனத்திற்கும் நன்றி
 
Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Adengappa ennaaa adi..apdi podu apdi podu.magi idhulam unaku thevaiya.sena paatuku avarum velaiyum avarum a irkaru...neeye poi vaangi kattikittu irka..unaku innamum parpala midhi kodukanum...vidhu baradhi palasa marakalana ennamo periya sambavam nadandhu irku pola.paavam ennanu reveal pannunga sagi paarpom.sena ku aen vidhubarathi ya engayo paartha feel..orunvelai vidhya va cinema la paartha mathri irkumo..rendu perum twin sister num conform a solla mudila aenna 34 vayasu vidhuku 35 vayasu vidhyakunnu sonninga...muga jaadai apdi irko..apram aen vidhu bayapadranga..pala vinaakal irku vidai ini varum ud la varumnu edhir paarkiren..super ud sagi
கண்டிப்பாக எத்தனை அடி கொடுத்தாலும் அவள் கொண்ட காதலால் அவள் தேடித்தேடி தான் வருவாள் .அதுவும் ஒரு வகை காதல் தான் .உங்களின் கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விடைகொடுக்க முயல்கின்றேன் .அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி
 
Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Super ees ka.frst puriyala.apram marupadiyum padichen ...vidhu baradhi vidhya barathi aengura midhuna avangathan heroine..ennamo periya sikkal irku..mithuna cine field ku ponadhunalathano vidhu life veena pochunnu solranga..rendu perum twins oo...17yrs ku apram paarthukjm sisters..sema la epdithaan ungaluku idhulam thonudho...arpudham..kudumbame naatiya kudumbam pola..arumaiya kondu poringa.andha loosu onnu sena pinnadiye suthume love love nuttu adhu per ennavola adhai enna senja thevalama varudhu ..oru chocolate kaaga andha ponnungala indha paadu paduthudhu cyco va ava..neraiya mudichugal irkupola very Intersting waiitng for more episodes ees ka...nice ud
ரெண்டு பேரும் சகோதரிகள் ஆனால் ட்வின்ஸ் கிடையாது இருவரும் ஒரு வருட இடைவெளியில் பிறந்தவர்கள் .

நாட்டிய குடும்பம்தான் சினிமாவில் நுழைந்த பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் இன்னும் ஒரு இரண்டு எபிசோடு அவர்கள் சந்தித்த பிரச்சினைகளை எல்லாம் சொல்லி விடுவேண்.

அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி
 
Top Bottom