அத்தியாயம் - 4
பூமி வருடம் 4000
அந்தகாரம்!
மஞ்சள் விளக்கு!
நலுங்கிய இரவு!
நாயின் ஓலம்!
வேக நடை!
இரையும் நிசப்தம்!
கரையும் நேரம்!
மருகிய தனிமை!
இறுகிய தசைகள்!
நடுங்கும் திரேகம்!
அச்சம் நீ!
தவிர்க்க நான்!!!
நளனும் அனிச்சமும் தங்களின் ஏகாந்தப் பொழுதினை, எழிலோவியமான பனிமலையைக் கண்டு களிப்பதில்...
நன்றி மணிமாலா... உங்க எல்லா கேள்விக்கும் பதில் வருது... இந்த எபி போஸ்ட் பன்னும் போது உங்களை நினைச்சேன். அற்றைத் திங்களில் கொஞ்சம் போரிங்கா போன மாதிரி போகுதோன்னு...🥰🥰🥰🥰🥰🥰
அத்தியாயம் - 2
வெண் பாலை!
உறையும் பனி!
உலர்ந்த திரேகம்!
நடுங்கும் விரல்கள்!
விதிர்த்த நான்!
சூடாய் நீ!!!
அனைவரும் இந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்லுமாறு அரசாங்கம் கட்டளை இடுகிறது. ஏனெனில் இங்கு இருக்கும் சிவப்பு ஏரியில் சேகரிக்கப்பட்ட நச்சு வாயுக்கள் அனைத்தும் வெடித்துச் சிதறும்...
அத்தியாயம் - 1
பூமி வருடம் - 4000
ஒழுகும் நிலவு!
வழியும் இரவு!
இமைக்கும் விண்மீன்!
அலையும் காற்று!
மருகும் தனிமை!
மிரளும் நான்!
பால்நிலவு ஒழுகிக் கொண்டிருந்தது. அதற்கு நேரெதிராக இரவு வழிந்து கொண்டிருந்தது. மைத் தொட்டு இருள் வரைந்த தூரிகை, திருஷ்டி கழிக்க, நிலாப் பொட்டொட்டி அழகு பார்த்ததாம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.