திலிப் சென்ற பிறகு அசையாமல் நின்ற காஞ்சனாவைப் பார்த்துக் கேட்டான் “கௌன்சிலர் வரலாமா? ”
பதில் சொல்லாமல் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தபோது “நீ திருந்தாத ஜென்மம்டி.” என்று மனதில் திட்டிக்கொண்டே வெங்கட் தனது செல்பேசியில் அழைப்பு விடுத்தான்.
அடுத்த பத்து நிமிடத்தில் கௌன்சிலர் வந்து சேர்ந்தார்...
வெங்கட் காலிங் பெல் அழுத்த கதவு திறந்தது.
வேலைக்காரனிடம் தான் வந்திருப்பதை அவனது எஜமானரிடம் கூறச் சொன்னான் வெங்கட். மூன்று நிமிடங்கள் வாசலில் இருந்த பூந்தொட்டிகளைக் கவனித்துக்கொண்டிருந்த போது கதவு மறுமடியும் திறக்கப்பட்டது.
கௌன்சிலர் வெங்கட்டிடம் ஏன் என்ன விஷயம் என்று எதுமே கேட்காமல்...
ராஜன் குவார்டஸ்
ராஜன் தங்கியிருந்த போலீஸ் குவார்டஸுக்கு வெங்கட் போனான். தூசி படிந்த அந்த அபார்ட்மன்டில் எண்ணி மூன்று போலீஸ் குடும்பங்கள் தான் இருந்தது.
இ.பி வயர் அங்கும் இங்குமாய் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் தலைக்கு சற்றுமேல் தொங்கிக் கொண்டிருந்த வயரை தனது பால்பாயின்ட் பென் கொண்டு...
ஸ்ரீயின் கடிதத்தைப் பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அந்தப் பகல் முழுதும் அவனும் துரையும் தேடி அலையாத இடம் என்று எதுவுமே இல்லை.
தண்ணீர் பாட்டிலும் கையுமாகத் திரிந்தான்.
மாலை ஏழு மணிக்கு ராஜன் கோபியிடம் உடனே தன் வீட்டிற்கு வரச்சொல்லி கைபேசியில் அழைத்தான். ராஜனின் பதட்டத்தை அறிந்தவன் உடனே...
கடிதம்
மறுநாள் காலை பதினோரு மணிக்கு விழிப்புத்தட்டி எழுந்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தனது செல்பேசிக்கடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த லெட்டரை எடுத்தான். இமைகள் வலுவில்லாமல் மூடிய போதும் அதனை வேகமாக வாசித்தான். கடிதம் ஓம் என்று ஆரம்பித்தது..
ஓம்
ராஜன் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு...
அடுத்து நகர்ந்த இரண்டு நாட்களிலும் ராஜன் ஸ்ரீயைத் தொடவில்லை. அமைதியாக அவள் சென்னைக்கு செல்வதைப் பற்றிக் கேட்டபோது அவனே டிக்கெட் எடுத்துத் தருவதாக மட்டும் சொன்னான்.
பொதுவான விஷயங்கள் பேசுவான். ஆனால் அவள் அறைக்குள் செல்ல மாட்டான்.
ராஜன் அன்றிரவு வந்ததும் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபோதும்...
இன்ஸ்பெக்டராக ராஜன்
இன்ஸ்பெக்டராக ராஜன் மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் திருப்பரங்குன்றத்தில் பணியைத் தொடங்கிய முதல் நாள் அவனுக்கு மறக்க முடியாத நாள்.
உள்ளே நுழைந்ததும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள் விபரங்களைத் தெரிந்து கொண்டவன் கிரைம் பிரான்ச் இன்ஸ்பக்டராக பதவி வகிக்கும்...
ராஜன் இதமாகப் பேசியபோதும் அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள்.
அவளிடம் சற்று முன் தோன்றிய கேலிப்பேச்சு கூட மறந்தே போனது. முகம் கடுமையானது. சிரிப்பும் காணாமல் போனது.
பறவைகளைவிட்டு தள்ளி நின்று தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
பிரச்சனை பெரிசு என்பதை உணர்ந்த ராஜன் அவளிடம் சற்று...
“ஸ்ரீ எங்கயிருக்க? ” என்று ராஜன் உரத்த குரலில் கூப்பிடவும் ஸ்ரீ “நான் மேலே மொட்டை மாடியில் இருக்கேன். ” என்று பால்கனி வழியாகக் கத்தினாள்.
அவள் பதிலைக் கேட்ட ராஜன் வேகமாக அவள் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.
அவன் கண்களில் சந்தோஷம். முகத்தில் கோபம் என்னும் சொல்லே அந்த முகத்திற்குத் தெரியாது...
விஷமப்புன்னகையில் ஈர்க்கப்பட்டவள் நகர நினைத்தபோது.. அவன் வலுவாகவே அவள் கைகளைப் பற்றினான்.
அவள் முகத்தை மறைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தபோது..“ ஸ்ரீ.. ” என்றான் ராஜன்
ஸ்ரீ பதில் தரவில்லை.
“ஸ்ரீ நீ தனுவுக்கு கால் பண்றேன் என்று சொல்லலாமா? ”
ஸ்ரீ பதில் தரவில்லை.
“ஸ்ரீ என்னைப் பாரு! ”
அவள்...
மூன்றாவது நாள் காலையில் ராஜன் வீட்டு காலிங் பெல் விடாது அழுத்தப்பட்டது.
ராஜன் குளியலறையிலிருந்து “பதில் சொல்லு நான் இப்ப வந்திடுவேன். ” என்று கத்தினான்.
கோபத்தில் கூட ஸ்ரீ என்று அவன் கூப்பிடவில்லை. அவளும் அப்போது தான் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.
என்னிடமா சொல்கிறான்...
ராஜன் சமைக்கச் சொல்லி கேட்டுக்கொண்ட இரண்டு நாட்கள் வந்தது.
வீட்டில் அவள் அன்றுதான் சமையல் செய்தாள்.
ஆனால் சமைக்கும் போதே கடுகு துவரம்பருப்பு என்று எதைத் தொட்டாலும் பவித்ராவின் ஞாபகம் வந்தது.
காலையில் மீண்டும் தனுவிடம் பேசிய பிறகு ஸ்ரீயின் மனம் துன்பத்தில் மூழ்கியது.
இன்று ஒரு நாள் சமைக்க...
பகல் ஒரு மணி
அதே பகல் ஒரு மணிக்கு ராஜனும் “என்னால் முடியலைடா. ” என்று கோபியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
“என்ன முடியலை? நாலு நாளா என் வீட்டுக்கு வா வா என்று கூப்பிடுறேன். ஒரே பதில் சொல்லிக்கிட்டே இருக்க. இன்னைக்கு நைட் நீ கண்டிப்பா வரணும். வருவீல்ல? ”
“சாரி டா. என்னால் முடியாதுன்னா...
நன்றாக அவன் கைகளில் மாட்டியிருந்த கைக்கடிகாரத்தை முன்னும் பின்னும் அசைத்தவன் குனிந்த தலை நிமிராமல் அவள் கண்களைப் பார்க்காமல் அவளிடம் “சாயங்காலம் சீக்கிரம் வந்திடுவேன் ஸ்ரீ. நீ ஸ்நேகா வீட்டில் இரு. நான் வரட்டுமா?” என்றான். இருட்டில் உறவாட முடிந்தது. பேச முடிந்தது. ஆனால் வெளிச்சத்தில் எல்லாமே...
விடியல் வரை நேரம் இருந்தது. ஆனால் எதற்குமே அவர்களுக்கு நேரம் போதவில்லை.
ஏதேனும் பேசுவதற்கு காரணம் கற்பிக்க என்று எதற்குமே என்றால் எதற்குமே நேரம் போதவில்லை..
விடிந்து சில மணி நேரத்தில் ஸ்ரீ எழப்போனபோது ராஜன் அவளிடம் கேட்டான் “ஸ்ரீ என்னை பாரு. ” அவள் பார்க்கவேயில்லை. ஆனால் பதில் மட்டும் தந்தாள்...
ஸ்ரீ பேசிக்கொண்டே போகப்போக ராஜனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சிரித்து சிரித்து அவன் சந்தோஷப்பட்டான்.
ஆனால் ராஜனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரிப்பது மட்டுமே போதும் என்றும் தோன்றவில்லை. வேறேதோ ஒன்று செய்யத்தோன்றியது அவனுக்கு. அது என்னவென்றுதான் தெரியவில்லை. தனது கன்னங்களை தேய்த்துக்...
மறுநாள்
மறுநாள் வீடு வந்ததும் படம் பார்த்தியா என்று மறக்காமல் கேட்கவும் செய்தான். ஸ்ரீ இல்லை என்றதும் ஏன் என்ற விசாரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் உடனே உடை மாற்றிவிட்டு வந்தவன் தனது டி.வி.டி சேமிப்பில் இருந்த நல்ல ஆங்கிலப் படம் ஒன்றை எடுத்து ஓடவிட்டான்.
ஸ்ரீ மட்டும் தான் படத்தைப் பார்த்தாள்...
தனது சன்னல்களை கொசுவுக்கு பயந்து மூடிய ஸ்ரீ ராஜன் உள்ளே நுழைந்ததும் அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.
உள்ளே வா என்று அவளும் கூப்பிடவில்லை. வரவா? என்று அவனும் கேட்கவில்லை.
ஆனால் இந்த அனுமதியும் கேள்வியும் கேட்கப்படாமலே அங்கே நிகழ்வுகள் நடந்தன.
அவள் கட்டிலின் எதிர்புறம் இருந்த...
“சும்மா சொன்னேன் ஸ்ரீ. மசூத் நாளை வந்திடுவான்.” என்று கூறும் போதே அவன் பேச்சை அவனது கைபேசி நிறுத்தியது. “மசூத்தான் கூப்பிடுறான்” என்றவாரே ராஜன் அலைபேசியை இயக்கினான். “ம்! ” சொல்லு மசூத்.
“ராஜன் சார். நான் ஸ்ரீயிடம் கொஞ்சம் பேசணும். குடுக்கிறீங்களா?”
“ம்.. பேசு. ” என்றவன் ஸ்ரீயிடம் கைபேசியை...
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ராஜன் ஞாயிறுகளை எப்போதுமே உற்சாகமாக செலவழிப்பான்.
டியுட்டி அரை நாளோ இல்லை முழுநாளோ வேலைக்கு ஏற்றாற்போல் இருக்கும். அவன் அன்று மிகவும் தாமதமாக எழுந்தான். என்றுமே ஞாயிறு அன்று கூட காலையில் ஆறுமணிக்கு முன்பாகவே எழுபவன் அன்று காலை ஒன்பது மணிக்கு எழுந்தான். “ராஜன் இன்னைக்கு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.