10. ஆண்டவன் சித்தம்
கொஞ்சம் கொஞ்சமாக மாணிக்கவல்லியிடமிருந்து முன் அத்தியாயத்தில் கூறிய விவரங்களையெல்லாம் மகாராஜா உலகநாதத்தேவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து சும்மா இருந்த பிறகு இளவரசியை ஏறிட்டுப் பார்த்து "உன் தந்தை என்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கிறார் என் பேரில்...
9. வெறி முற்றியது
அன்று பிற்பகலில் அஸ்தமிக்க இன்னும் ஒரு ஜாமம் இருந்த போது சோலைமலை இளவரசி தன்னுடைய படுக்கையறை மஞ்சத்தில் விரித்திருந்த பட்டு மெத்தையில் படுத்து அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தாள். சூரியன் எப்போது மலைவாயில் விழுந்து தொலையும் எப்போது சந்திரன் குன்றின் மேலே உதயமாகும்...
8. கண்ணீர் கலந்தது
சென்ற அத்தியாயத்தின் இறுதியில் 'குமாரலிங்கம் மாறனேந்தல் இளவரசனாக மாறினான் என்று குறிப்பிட்டிருந்தோம். உண்மையில் மாறனேந்தல் மகாராஜாவாக மாறினான்' என்று சொல்லியிருக்க வேண்டும். அன்றைய தினம் பகலில் மாறனேந்தல் கோட்டையில் நடந்த துக்ககரமான சம்பவங்களின் காரணமாக இளவரசன் உலகநாதத் தேவனை...
7. மணியக்காரர் மகள்
குமாரலிங்கம் கண்ணை மூடிக்கொண்ட பிறகு அவனுடைய செவிகள் மிகவும் கூர்மையாயின. குயில்கள் 'குக்கூ' என்று கூவும் சத்தமும் அணில்கள் 'கிச் கிச்' என்று இசைக்கும் சத்தமும் வேறு பலவகைப் பறவைகள் 'கிளக்' 'கிளக்' என்றும் 'கிளிங்' 'கிளிங்' என்றும் 'கிறீச்' 'கிறீச்' என்றும் கத்தும் சத்தமும்...
6. 'மாலை வருகிறேன்'
நீண்ட நேரம் வரையில் மாறனேந்தல் இளவரசன் பிரக்ஞையேயில்லாமல் தூங்கினான். நேரமாக ஆகத் தூக்கத்தில் கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. சில சமயம் இன்பக் கனவுகள் கண்டபோது தூங்குகின்ற முகத்தில் புன்னகை மலர்ந்தது. வேறு சில சமயம் பயங்கரமான கனவுகள் தோன்றி அவன் சுந்தர முகத்தை விகாரப்படுத்தின...
5. அந்தப்புர அடைக்கலம்
மாறனேந்தல் இளவரசன் அப்போது தான்அடைந்திருந்த நெருக்கடியான நிலைமையை நன்கு உணர்ந்தான். தன்னைத் துரத்திக் கொண்டு வந்த எதிரிகளிடம் அவ்வளவு எளிதாக அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் அந்தக் குறுகிய பாதையில் அவர்களை எதிர்த்து நின்று ஒருவனுக்கொருவனாகப் போரிட்டு தேசத் துரோகிகளில்...
4. வன்மம் வளர்ந்தது
சோலைமலை சமஸ்தானத்துக்கு ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்த சமயம் சோலைமலை மகாராஜாவுக்கும் அந்தச் சமஸ்தானத்தை அடுத்திருந்த மாறனேந்தல் மகாராஜாவுக்கும் கொஞ்சம் மனத்தாங்கள் ஏற்பட்டிருந்தது. எல்லைத் தகராறு காரணமாக ஏற்பட்ட மனத் தாங்கல்தான். மேற்படி தகராறில் இரண்டு மூன்று தடவை சோலைமலை...
3. சேவல் கூவிற்று
குமாரலிங்கம் சோலைமலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தபோது மலைமேலே ஒளிர்ந்து அவனை அவ்விடத்துக்கு கவர்ந்து இழுத்த முருகன் கோயிலின் அமரதீபம் பார்வைக்கு மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக கீழ்த்திசையில் உதித்து மேலே சிறிது தூரம் பிரயாணம் செய்து வந்திருந்த விடிவெள்ளியானது...
2. சின்னஞ்சிறு நட்சத்திரம்
'சரித்திரப் புகழ் பெற்ற வருஷம்' என்று பண்டித ஜவஹர்லால் நேரு முதலிய மாபெருந் தலைவர்களால் கொண்டாடப் பெற்ற 1942-ஆம் வருஷத்து ஆகஸ்டு மாதத்தில் மேற்கூறிய சம்பவம் நடந்தது. சில காலமாகவே இந்திய மக்களின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த கோபாக்கினிமலை மேற்படி 1942 ஆகஸ்டில்...
1. நள்ளிரவு ரயில்வண்டி
கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடைஇடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தன. கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.