Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL அன்பே!அன்பே!கொல்லாதே! - Tamil Novel

Status
Not open for further replies.

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 19

பாவினிக்கோ,அவனின் வரவேற்ப்பு எரிச்சலையே கொடுத்தது.. இருந்தாலும் தன் பிடித்தம் இன்மையைக் காட்டாமல் அமைதியாக உள்ளே வந்தாள்..


இவனிடம் இனி பேசும் பொழுது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று மனதிற்குள் நினைத்தாள்..


அவனோ, அவளின் யோசனையான முகத்தைக் கண்டு, "என்ன‌ வினு.. என்னைப் பற்றித் தீவிர யோசனை போல.."என்றவனிடம்..


"உங்களைப் பற்றி யோசிக்க எனக்கென்ன இருக்கு.. பாட்டி இந்தப் பாலைக் கொடுக்கச் சொன்னாங்க .. "என்றபடி , கையிலிருந்த பால் சொம்பை அவன் புறம் நீட்டினாள்..


அவனோ, பாலை வாங்காமல், "ஆமாம் நீ இந்தத் தமிழ் சினிமாவெல்லாம் பார்த்ததில்லையா?"

"ஏன்..?"

" அதிலே ஃபர்ஸ்ட் நைட்னா ! புருஷன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவாங்களே! அது தான் கேட்டேன்.."

"ம்..! எனக்குக் காலில் விழுந்தெல்லாம் பழக்கமில்லை... போன போகட்டும்ன்னு ,பாலைக் கொண்டு வந்து கொடுத்தால், ரொம்பப் பேசறீங்க. அதுக்கு வேற ஆளைப் பாருங்க.. "என்றவள் பாலை அருகிலிருந்த டேபிள் மீது வைத்தாள்..


அவனோ, " என்னது ! வேறு ஆளைப் பார்ப்பதா? அதுக்குத் தானா? உன்னைத் திட்டம் போட்டுக் கல்யாணம் பண்ணுனேன்?" என்றவன்,முகத்தில் நக்கல் தாண்டவம்மாட அவள் அருகில் சென்று நின்றான்..

அவளோ, கண்களில் அச்சத்துடன் விலகி, பின்னே நகர்ந்தாள்..

குறள்நெறியனோ,அவளின் செய்கையைக் கண்டு, சத்தமாகச் சிரித்தபடியே, "என்ன வினு ? நீ தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்..நீயானால் பக்கத்துல வந்தாலே பயப்படுறே .."

"எனக்கு ஒன்னும் பயமில்லை..துஷ்டனைக் கண்டால் தூரவிலகுன்னு சொல்வாங்க..அது தான்.."என்று துடுக்குடன் சொன்னவளிடம்..

"ஓ.. ! அப்போ நான் துஷ்டனா?"

"இதில் சந்தேகம் வேறா?"

"ஹோய்..ஆனாலும், உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி தான்.. புருஷனையே துஷ்டன்னு சொல்றே..?உன்னைச் சொல்லிக் குற்றம்மில்லை தூயவனின் வளர்ப்பு.."


"இங்க பாருங்க..என்ன பத்தி என்ன வேனா பேசுங்க.. ஆனால், எங்கப்பாவைப் பத்தி ஏதாவது பேசுனீங்க.. நான் சும்மா இருக்க மாட்டேன்.. " என்று ஒற்றை விரலை அவன் முன் நீட்டினாள்..


அவனோ, "ஏய்‌.. என்ன ? என்‌‌ முன் கை நீட்டுமளவு துணிச்சலா?.." என்றவன், சட்டென்று அவளை இழுத்துப் பின்புறமாக வளைத்துப் பிடித்தான்..


அவளோ, அவனிடமிருந்து விலகப் போராடினாள்..

குறள்நெறியனோ, அவளின் முயற்சியைத் தடுத்தபடியே, அவள் கன்னங்களில் தன் மூச்சுக் காற்று படும்படி நெருங்கி அணைத்தவன்,அவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டே, "வினு பேபி.. எங்கிட்ட பேசும் போது பார்த்துப் பேசனும்.. இல்லைன்னா இந்த மாதிரி அடிக்கடி அவஸ்தை படனும்..புரியுதா? " என்றவனிடம்..

"இங்க பாருங்க.. என்னை வினு ,கினுன்னு கூப்பிட்டீங்க.. எனக்குக் கெட்ட கோபம் வரும்..பாவினின்னு கூப்பிடுங்க.." என்றவள், தன்னை அணைத்திருந்த அவனின் கைகளைப் பிரிக்க முயன்றாள்..

அவனோ, அவளின் செய்கையைத் தடுத்த படியே, "நீ சொல்ற படியெல்லாம் கூப்பிட முடியாது.. எனக்கு‌ பிடிச்ச மாதிரி தான் கூப்பிடுவேன் .. "என்றவனிடம்..


"முதலில் என்னை விடுங்க.. என் விருப்பமில்லாமல் என்னைத் தொட்டால் எனக்குப் பிடிக்காது.."


" ம்..! ஆனால், எனக்குப் பிடிக்குதே .." என்று அவளின் தோள் வளைவுகளில் தன் முகத்தைப் பதித்தான்.

அவளோ, அவனின் நெருக்கத்தில் உடல் கூச.. "ப்ளீஸ் எனக்கு இது பிடிக்கலை என்னை விடுங்க.. "என்று கெஞ்சினாள்..

அவனோ, மனதிற்குள் என்ன நினைத்தானோ? அதற்கு மேல் அவளைப் படுத்தாமல், தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தான்..


பாவினிக்கு, அதன் பிறகு தான் சீரான மூச்சே வந்தது.. அவளின் முகமாறுதல்களைக் கவனித்தவன், மந்தகாசமான புன்னகையுடன், "வினு இன்னைக்கு வேனா போன போகுதுன்னு விட்டுட்டேன்.. ஆனால், இதே போல் எல்லா நேரமும் இருப்பேன்னு நினைக்காதே..உன்னை விரும்பி கல்யாணம் செய்தேனான்னு எனக்குத் தெரியாது? ஆனால், அதற்காக வாழ்க்கை முழுவதும் இப்படியே விலகி இருப்பேன்னு நினைக்காதே..நமக்கான வாழ்க்கையை ஆரம்பிக்கக் கொஞ்ச நாள் இடைவெளி இருவருக்குமே தேவைப்படுகிறது.. "என்றவன் பேச்சை நிறுத்தி அவளை ஆழப் பார்த்தான்..


பாவினிக்கோ, அவன் சொல்ல வருவது புரிந்தது. இப்போது எதையும் அவனிடம் மறுத்துப் பேசி ,வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாமென்று நினைத்து அமைதியாக நின்றாள்.


குறள்நெறியனோ, "என்ன பேச்சைக் காணோம்.உனக்கு இந்த இடைவெளி பிடிக்கவில்லையென்றால்? எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. இன்றே நம் வாழ்க்கையைத் தொடங்கலாம் .."என்று முகத்தில் குறும்பு மின்ன கூறியவனை முறைத்தாள்..அவனோ, அவளின் முறைப்பைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தான்..


பாவினிக்கு, அவனின் சிரிப்பு ஆத்திரத்தை தர, "எனக்கு வாழ்க்கை முழுவதுமே இந்த இடைவெளியிருந்தால் கூட மகிழ்ச்சி தான்.. நிம்மதியாக இருப்பேன்.. "


" ம்..! அப்படியா? அப்படியெல்லாம் உன்னை மகிழ்ச்சி படுத்த என்னால் முடியாதே வினு.. நான் என்ன செய்ய..?" என்று பொய்யாக வருத்தப்பட்டவனைப் பார்த்தவளுக்கு ஆத்திரம் தான் வந்தது..


அவனோ, அவளின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல், "அந்த வாட்ரூப்பில் உனக்குத் தேவையான ஆடைகள் இருக்கும் போய் மாற்றிக்கோ.." என்றான்..


பாவினியோ, தப்பித்தால் போதுமென்று அவன் காட்டிய இடம் நோக்கிச் சென்றாள்..வாட்ரூப்பைத் திறந்து பார்த்தவள்,வியப்பில் விழி விரிய சில நிமிடங்கள் அசையாமல் நின்றாள் !
அவளுக்குத் தேவையான அத்தனை பொருட்களும் அதிலிருந்தது.. ஆனால், இயல்பாக அதை எடுத்து உபயோகிக்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது.


குறள்நெறியனோ, விழி விரிய நின்றிருந்தவளின் அருகில் வந்தான்.. திறந்திருந்த வாட்ரூப்பின் கதவில் கைகளைக் கட்டியபடியே சாய்ந்து நின்று, சில நொடிகள் அவளையே விழி எடுக்காமல் பார்த்தவன்,
சிலையாக நின்றவளின் முன் கைகளைச் சொடக்கிட்டான்..


பாவினியோ,அவனின் செய்கையில் .. அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்..
"என்ன இப்படித் திகைத்துப் போய்ப் பார்க்கிறே..உன் தம்பியிடம் காரணம் இல்லாமல் நான் எதுவும் வேண்டாமென்று சொல்லவில்லை.."என்றவனிடம் பதிலே சொல்லாமல் மெளனமாக நின்றாள்..


குறள்நெறியனோ, "பாவினி உனக்குப் பிடிக்குதோ..? பிடிக்கலையோ..?இனி எது உனக்குத் தேவையானாலும், நான் தான் அதைச் செய்வேன்..என்னிடம் மட்டும் தான் உனக்குத் தேவையானதை நீ கேட்கனும்..வேறு யாரிடமும் கேட்பதில் எனக்கு விருப்பம் இல்லை..அது உன் அப்பாவாக இருந்தாலும் சரி .. "என்றான் அதிகாரமாக..

அவளோ, "நான் ஒன்று கேட்கலாமா?"

" ம்..!என்ன அதிசயமா பர்மிஷன் எல்லாம் கேட்கிறே.."

"உங்களுக்கும் என் அப்பாவிற்கும் என்ன பிரச்சினை..?"


"பிரச்சினையா? அப்படியெல்லாம் எதுவும் இல்லையே..நீயே எதையாவது நினைத்து குழப்பிக்காதே.."


"இல்லே, நீங்க பொய் சொல்றீங்க..அப்புறம் எதுக்கு என் கல்யாணத்தை நிறுத்துனீங்க.."


"ம்..! உன்ன நான் தான் கல்யாணம் செய்யனும்ன்னு நினைச்சேன். அது தான் நிறுத்தினேன்.."


"அது தான் ஏன்..?"


"ஏன்னா.. நான் என்ன சொல்ல..?"


" நேரடியா பதில் சொல்லுங்க..ஏன் என்னைத் திருமணம் செய்ய நினைச்சீங்க..நான் உங்களை அடிக்கக் கை ஓங்கியதற்காகவா?"

"இல்லை.."

"அப்புறம்..?"

"ஏனோ தெரியலை.."

"இது என்ன பதில்.."

"பாவினி சில கேள்விகளுக்குப் பதிலே இல்லை.."

"புரியலை.."

"புரியாதவரை நல்லது..நீ போய் டிரஸ் மாத்திட்டு வா.."

" உங்களை என்னால் புரிஞ்சுக்கவே முடியலை.. எனக்கு நீங்க நடந்துக்கிறதைப் பார்த்தால் குழப்பமாகவே இருக்கு.."

"எதுக்குக் குழப்பம்.. நீ ! நீயாக இரு..!"

"ப்ளீஸ், எனக்கு நீங்க ஏன்? என் கல்யாணத்தை நிறுத்துனீங்கன்னு தெரிஞ்சுக்கனும்.. அப்புறம், நாவேந்தி ஆண்டி தான், உங்க அம்மான்னு இப்ப தான் தெரியும் .."என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..


"பாவினி, இது தான் உனக்குக் கடைசி.. இனி தேவை இல்லாததைப் என்னிடம் பேசினே ! நான் மனுசனா இருக்க மாட்டேன்.." என்று கண்கள் சிவக்கச் சொன்னவனைக் கண்டவளுக்கு மனதிற்குள் நடுக்கம் பிறந்தது.


அவனோ, "நான் இயல்பா உங்கிட்ட பேசறேன்னு எங்கிட்ட நெருங்க நினைக்காதே.. அது உனக்கு நல்லதில்லை.. உன் நிலை தெரிந்து நடந்து கொள்.." என்று கூறியவன்‌, சட்டென்று அறையை விட்டு பால்கனிக்கு சென்று விட்டான்..

பாவினியோ, அவனின் வார்த்தைகளைக் கேட்டுத் துடித்துப் போய்விட்டாள்.. அவள் வீட்டில் தேவதையாக வளர்ந்தவள், மனம் நோகும் வார்த்தைகள் கேட்டறியாதவள், அவனின் சுடுச் சொலைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தினாள்..


மனதிற்குள்,' நான் அப்படி என்ன இவனிடம் கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்டு விட்டேன்.. இவனிடம் நெருங்க வேண்டுமென்று நான் கனவில் கூட நினைத்தில்லையே..? இவன் மட்டும் என்னிடம் உரிமை எடுத்துப் பேசலாம்.. ஆனால், நான் சும்மா கூடப் பேசக் கூடாதா..? இவன் காசில் வாங்கிய எதுவும் எனக்குத் தேவையில்லை..' என்று நினைத்தவள்,வாட்ரூப்பை மூடினாள்..பின் அப்படியே சுவரில் சாய்ந்து முழங்காலில் முகத்தைப் பதித்து அமர்ந்து கொண்டாள்..


கண்களில் நீர் அருவியாக வழிந்தது..தாய்,தந்தையின் அன்பான வார்த்தைகளுக்கு மனம் ஏங்கித் தவித்தது.. எத்தனை நேரம் அப்படி இருந்தாலோ? அவளே அறியவில்லை..


குறள்நெறியனோ,பால்கனியில் நின்று வானை வெறித்துக் கொண்டிருந்தான்..அவன் மனதிற்குள் புயல் அடித்துக் கொண்டிருந்தது..பழைய நினைவுகளை மனம் வலிக்க..வலிக்க, அசைபோட்டுக் கொண்டே நின்றிருந்தான்..


எத்தனை நேரம் அப்படி நின்றானோ? லேசாக மழை தூர ஆரம்பித்ததும், தன் நினைவுகளிலிருந்து, வெளியே வந்தான்.சிறிது நேரம் மழையில் நின்றவனுக்கு,மனதின் வெப்பம் மட்டும் ஆறாவே இல்லை..வலிகளை எப்போதும் போல் தன்னுள் புதைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.


அறையில் பாவினி இருந்த நிலையோ! அவனைத் திகைக்க வைத்தது.. ‌முகத்தை முழங்காலில் புதைத்த படியே உறங்கி இருந்தாள்.


குறள்நெறியனோ, அவள் அருகில் சென்று "பாவினி.." என்று அழைத்துப் பார்த்தான்..

அவளோ, உட்கார்ந்த படியே தூங்கியிருந்தாள்..என்ன செய்வதென்று யோசித்தவன், மெல்ல அவளைத் தூக்கினான்.


அவளோ, அவனின் தொடுகையில் விழித்துக் கொண்டாள்.. சட்டென்று அவனிடமிருந்து விலகியவள்,கோபத்துடன், "இதுவே கடைசியாக இருக்கட்டும்..இனி என்னைத் தொட்டால் நடப்பதே வேறு.." என்றாள் .


அவனோ," ஏய் உட்கார்ந்துட்டே தூங்கறியேன்னு தூக்கினேன்.. உன்னைத் தொடனும்ன்னு எனக்கொன்னும் ஆசையில்லை.. இடியட் .." என்றவன் படுக்கையில் சென்று விழுந்தான்..


அவளோ, அவனை முறைத்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு, தூக்கம் கண்ணைச் சுழற்றவும்.. வெறும் தரையிலேயே, கையைத் தலையணையாக வைத்து ,தன்னைக் குறுக்கிக் கொண்டு படுத்து உறங்கினாள்..


குறள்நெறியனோ , தூங்காமல் கண்ணை மட்டும் மூடி படுத்திருந்தவன்,பாவினியிடம் சத்தமில்லாமல் போகவும் விழித்துப் பார்த்தான்..


அவள் படுத்திருந்த நிலை அவனையும் அசைத்துப் பார்த்தது.. தன் கோபத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு,அவள் அருகில் வந்து, அவளின் தூக்கம் கலையாமல் மெல்ல தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தான்..


அவள் உடை மாற்றாமலே இருப்பதைக் கண்டவனுக்கு, அவளின் வீம்பும்,கோபமும் புரிந்தது.. எத்தனை நாள் இதே புடவையுடன் இருப்பாளென்று பார்ப்போம்.. ஆனால், இதுவும், தான் வாங்கியது என்பது அவளுக்கு மறந்து விட்டது போல்.. என்று எண்ணிக் கொண்டே, படுக்கையின் மறுபுறம் சென்று அவளின் முகத்தைப் பார்த்தவாறு படுத்தவன்,தன்னை மறந்து நித்திரையை அணைத்துக் கொண்டான்..


தூயவன், இரவு வேகு நேரம் சென்றே வீடு திரும்பினார்..மண்டபத்தைக் காலி செய்வது ,மற்ற அனைத்து வேலைகளையும்,நவிலையும்,கவினையும் வைத்து போனிலேயே முடித்துக் கொண்டார்.


தூயவன், போலிஷ் ஸ்டேஷன் சென்றதுமே ,கவினை ‌மண்டபத்து வேலையைப் பார்க்க அனுப்பி விட்டடார்.. நேயவாணனும் ,அவரும் செல்வச்சீரனுக்குத் துணையாக இருந்தார்கள்..


செல்வச்சீரனோ, தன் மேல் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தான்..பல மணி நேரம் விசாரணை நடந்தது. இறுதியில் அவன் மீது சுமத்திய குற்றத்திற்கும்,அவனுக்கும் சம்மந்தமே இல்லை.. என்று உறுதியானது.. "தவறான இன்பர்மேஷனில் உங்களை விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.." என்று கூறி , சிறு மன்னிப்புடன் செல்வச்சீரனை அனுப்பி வைத்தனர்..


செல்வச்சீரனோ, விரக்தியின் உச்சத்தில் இருந்தான்.. அவனுக்குத் தெரிந்துவிட்டது! இது யாரோட வேலையென்று.. தூயவனைப் பார்த்துமே, "பாவினி திருமணம் நல்லபடியாக முடிந்ததா?"என்று கேட்டு அவரைத் திகைக்க வைத்தான்..


தூயவனோ என்ன‌ சொல்வதென்றே தெரியாமல் மனம் கலங்கி நின்றார்..

நேயவாணனோ,செல்வச்சீரனிடம், " உங்களுக்கு எப்படித் தெரியும் .."என்று கேட்டவுடன்..

" அதற்காகத்தானே எனக்கு இந்த விசாரணையே.. இத்தனை வருடம் இந்தத் துறையில் இருக்கிறேன்‌.. அது கூடத் தெரியாமல் இருப்பேனா? எல்லாம் மிஸ்டர் குறள் நெறியனின் ஏற்பாடு.. என் மனதிற்குள் அவரைப் பார்த்த பொழுதே லேசான சந்தேகம் இருந்தது.. ஆனால், கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டேன்.. "என்றவனை,தூயவனும்,நேயவாணனும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்..


நேயவாணனோ ..' ம்ஹூம்..! அவன் இந்தளவு இறங்கவில்லையென்றால் தான் ஆச்சரியம்..பேசாமல் அவன் பாவினியை பெண் கேட்க்கும் பொழுதே கொடுத்திருக்கலாம்..' என்று மனதிற்குள் நினைத்தார்..நாவேந்தி மூலம் அவருக்குக் குறள் பெண் கேட்ட விசயம் தெரியும்..


தூயவனோ, செல்வச்சீரன் கைகளைப் பிடித்து, "என்னை மன்னித்து விடுப்பா.. என்னால் தான் உங்களுக்கு இவ்வளவு சிரமம்.. எங்களின் விருப்பமே இல்லாமல் பாவினியின் திருமணம் குறளுடன் நடந்து முடிந்துவிட்டது .. "என்று வருந்தியவரிடம்..


" நீங்க என்ன செய்வீங்க விடுங்க.."என்றவனிடம்..செல்வச்சீரனின் அம்மாவோ.. " அவர் தானே காரணம்..செய்வதெல்லாம் செய்துட்டு இப்போ வருந்தறீங்களா..என் மகன் எப்படிப் பட்ட நேர்மையான அதிகாரின்னு மதுரையிலே வந்து கேட்டுப் பாருங்க..அப்படிப்பட்டவனைத் தலை குனிய வச்சுட்டீங்களே.." என்று கடிந்து கொண்டவரிடம்..

"ம்மா..! நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? நடந்ததற்கு அவர் என்ன செய்வார்.."என்றவன்,தூயவன் புறம் திரும்பி" மாமா.."என்றவன், பேச்சை நிறுத்திவிட்டு, "நான் அப்படிக் கூப்பிடலாமா?"என்று கேட்டான்.

தூயவனோ, "தாரளமா கூப்பிடுங்க.. உங்களை மருமகனா அடைய.. நான் தான் கொடுத்து வைக்கலை.." என்று கலங்கினார்.

செல்வச்சீரனோ, ஒரு நிமிடம் கண்களில் வலியுடன் நின்றவன், அடுத்த நொடி தன்னைத் திடப்படுத்திக் கொண்டு.. "யாருக்கு யாருன்னு? விதி விதிச்சிருக்கோ.. அதை நம்மால் மாற்ற முடியாது.. நடப்பது நல்லதுக்கேன்னு நினைச்சுக்க வேண்டியது தான்.. நீங்க கிளம்புங்க..நானும் கிளம்புறேன்.."என்றான்.

தூயவனோ, "இந்த நேரத்தில் எங்கே போறீங்க..வாங்க நம்ம வீட்டில் இருந்துட்டு நாளை போகலாம்.." என்றவரிடம்..

" மாமா நானும் மனிதன் தானே.. மாப்பிள்ளையா வந்திருக்க வேண்டிய வீட்டிற்கு! இப்போது, யாரோ போல் வர எனக்குத் தைரியம் இல்லை.. ப்ளீஸ் நீங்க போங்க.. நான் பார்த்துக்கிறேன்.." என்றவனைத் தாவி அணைத்துக் கொண்ட தூயவன்.. "நீங்க யாரோ இல்லை.. எனக்கு இன்னோரு மகனைப் போல.. அது உங்க வீடு ! நீங்க எப்ப வேண்டுமானாலும் உரிமையா வரலாம்.. பழகிய இந்தக் கொஞ்ச நாளிலேயே என் மனசிலே உங்களுக்குன்னு ஒரு தனி இடத்தைப் பெற்றுட்டீங்க.." என்று‌ கலங்கியபடியே கூறியவர் மனப்பாரத்துடன் வீடு வந்தார்..


நடந்ததை மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டவரை, வளர்பிறை தான் சமாதானப்படுத்தினார்.. அத்துடன் பாவினியைப் பார்க்கச் சென்ற நவிலிடம், குறள்நெறியன் சொன்னதையும் பக்குவமாகக் கணவரிடம் சொன்னார்..


தூயவனோ,மனைவி கூறியதைக் கேட்டதும்.. குறள் நெறியன் சொன்னதை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என்று நினைத்தார்.. தான் வாங்கிய பொருள்‌ ஆகாது..ஆனால், என் மகள் மட்டும் வேண்டுமா? எப்படியோ, பாவினியை கஷ்டப்படுத்தாமலிருந்தால் போதுமென்று நினைத்தார்..


மாமனின் ஆட்டம் தொடங்குமோ?இல்லை மருமகனின் ஆட்டம் தொடங்குமோ ? காலத்தின் கையில்..

அன்பு கொல்லும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 20

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பாவினியின் செவிகளில், பறவைகளின் ரீங்காரம் இன்னிசையாக அவளின் உறக்கத்தை கலைத்தது..


தூக்க கலக்கத்திலேயே, கைகளை தலைக்கு மேல் நீட்டிச் சோம்பல் முறித்தபடி கண்களைத் திறந்தவளுக்கு, படுக்கையின் மென்மையும், அறையின் தோற்றமும் குழப்பத்தைத் தந்தது..


இது ! நம் அறையில்லையே ?என்று நினைத்து திருதிருவென விழித்தவளுக்கு, எதிரில் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, மடிக்கணினையை நோண்டிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் எல்லாமே நினைவு வந்தது.


உடனே அவளின் மனம் ஊசி பட்டு உடைந்த பலூனைப் போல் சுருங்கியது. மனமோ, பாராங்கல்லைத் தூக்கி தலையில் வைத்தது போல் கனத்துப் போனது.


படுக்கையில் படுத்தபடியே மனதிற்குள்,கீழே படுத்திருந்த நாம்.. எப்படி ? மேலே வந்தோமென்று நினைத்தவளுக்கு, ஒன்றும் புரியவில்லை. குறள்நெறியனை வெறித்துப் பார்த்தபடியே எழுந்து அமர்ந்தாள்.


குறள்நெறியனோ, உள்ளுணர்வின் உந்துதலில் மடிகணினியிலிருந்து தலையை நிமிர்த்தி படுக்கையைப் பார்த்தான்.


அங்கு தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைக் கண்டவனுக்கு, இதோழரத்தில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.. அவளின் விழிகளில் தன் விழிகளை கலந்த படியே , "குட்மார்னிங் வினு.." என்றான்.


அவளோ,பதிலே பேசாமல் அமர்ந்திருந்தாள்..


குறள்நெறியனோ ,அவளின் மெளனத்தைக் கலைக்கும் பொருட்டு, "வினு நேற்று ஏன் ? புடவை மாற்றாமல் அப்படியே தூங்கிட்டே.." என்றவனிடம்..


அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாமல், "நான் எப்படி மேலே வந்தேன்..கீழே தானே படுத்திருந்தேன்.." என்றவளிடம்..

"நான் கேட்டதற்கு முதல்ல நீ பதில் சொல்லு ! ஏன் புடவை மாற்றவில்லை..?"


"ம்..! நீங்க வாங்கியது எதுவும் எனக்கு வேண்டாம்.."


" ஓ..!அப்படியா?அப்போ நீ இப்போ உடுத்தி இருப்பதும் நான் வாங்கியது தானே?அதை மட்டும் கட்டியிருக்கே? .."என்று நக்கலாக கேட்டபடி புருவம் உயர்த்தியவனிடம்.. என்ன சொல்வதென்று தெரியாமல் , முகம் சிவக்க ! தன் அருகிலிருந்த தலையணையை தூக்கி அவன்‌மீது கோபத்துடன் எறிந்தாள்.


அவனோ, லாவகமாக அதை பிடித்துக் கொண்டவன், " வினு பேச்சு ..பேச்சா இருக்கனும் ! இது என்ன பழக்கம்?" என்று கோப்படாமல் சிரித்தவனைக் கண்டதும்.. கோபத்தில் தன்னை மறந்து தலையணையை வீசியதை நினைத்து பயந்திருந்தவளுக்கு நிம்மதியே வந்தது.


அவனோ,மேலும் அவளை சீண்ட நினைத்து, "நான் எடுத்துக் கொடுத்த இந்தப் புடவை உனக்கு அவ்வளவு பிடித்தமென்றால்.. நீ வேறு டிரஸ்ஸே மாத்த வேண்டாம்.. இதிலேயே இரு ! ஆனால், என்ன ? நம்ம தெரு பக்கம் தான் யாரும் வரவே மாட்டாங்க .." என்று முகத்தில் எதையும் காட்டாமல் சொன்னவனைப் கண்டு பாவினி விழித்தாள்.


குறள்நெறியனோ, அவளின் புரியயாதப் பார்வையைக் கண்டு,இதழோரம் துடிக்க , "புரியவில்லையா..?இப்படி குளிக்காமல் ஒரே புடவையிலேயே நீ இருந்தால்.. உன் வேர்வை வாசனையை நான் வேண்டுமானால் பொறுத்துக் கொள்வேன். எல்லாரும் எப்படி பொறுப்பாங்க ..அப்புறம் யாரும்‌ இந்தப்பக்கமே வரவே மாட்டங்க .."என்று கண்சிமிட்டி சிரித்தவனைப் பார்த்தவளுக்கு, எரிச்சலில் அவனின் கழுத்தை நெறிக்கும் எண்ணமே தலை தூக்கியது.


சரியாக அப்போது அவர்களின் அறையை யாரோ தட்டவும்,பாவினி அவசரமாக படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைக்குள் சென்றாள்..


குறள்நெறியனோ ,அவள் வேகமாக செல்வதைப் பார்த்து முகத்தில் மறையாத மென்புன்னகையுடனேயே சென்று தங்கள் அறைக் கதவை திறந்தான்..


அங்கே மெய்யம்மையோ , கைகளில் பால் கோப்பைகளுடன் நின்றிருந்தார்..


பாட்டியைக் கண்டதும் குறள்நெறியன் வியப்புடன்‌ .. " பாட்டி நீங்க எதற்கு இதையெல்லாம் எடுத்து வறீங்க.. வேறு யாரிடமாவது கொடுத்தனுப்பிருக்கலாமே ? " என்றபடியே, அவரின் கையிலிருந்த பால் கோப்பைகளை வாங்கினான்.


அவரோ, பேரனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கண்டு நிம்மதியுடன், குறள்நெறியனின் கையில் பாலைக் கொடுத்த விட்டு , அறைக்குள் பாவினியை தேடினார்..


குறள்நெறியனோ அதை புரிந்து கொண்டு,
" வினு குளிக்கிறா.."என்றவனிடம்..


"ஓ.!அப்படியா? அவள் வந்ததும் அவுங்க அம்மாவுக்கு போன் பண்ணச் சொல்லுப்பா ! அவுங்க நைட் கால் செய்தாங்க.. நான் தான் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாமென்று நினைத்து , பாவினியை காலையில் போன் செய்யச் சொல்றேன்னு சொன்னேன்.. அது தான் பாவினிகிட்ட சொல்லிட்டு, அப்படியே பாலையும் கொடுத்து போகலாம்ன்னு வந்தேன்.." என்றவரிடம்..


" ஓகே பாட்டி .. அவள் வந்ததும் நான் பேசச் சொல்றேன் .." என்றவனிடம், மெய்யம்மை தலையை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றார்..


மெய்யம்மை சென்றதும், பாலை ஃடேபிள் மீது வைத்து விட்டு, மீண்டும் தன் மடிக்கணினியில் புதைந்தான்..


பாவினியோ, குளியலறைக்குள் நின்று கொண்டு குளிக்கலாமா?வேண்டாமா? என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.. அவன் சொன்ன மாதிரி நேற்றிலிருந்து ஒரே புடவையிலிருப்பது அவளுக்கும் அதிக கசகசப்பை கொடுத்தது..


அவன் வாங்கி கொடுத்ததை உடுத்த வேண்டாம் என்று நினைத்திருந்தவள்,தன் வீராப்பை முட்டை கட்டி வைத்துவிட்டு, குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.


சோஃபாவில் அமர்ந்திருந்த கணவனைக் கண்டு கொள்ளாமல்,தனக்கான உடைகளை வைத்திருந்த அலமாரியை நோக்கிச் சென்றாள்..


குறள்நெறியனோ, மாடிக்கணினை நோண்டிக் கொண்டிருந்தாலும் பாவினியின்,செயல்களையும் கவனித்தாவாறே அமர்ந்திருந்தான்..


ஒற்றை ஆளாக வளர்ந்தவன், அவ்வளவு எளிதாக யாருடனுமே நெருங்கிப் பழக மாட்டான்.. நண்பர்கள் என்று யாருமே கிடையாது..எங்கே நெருங்கி பழகினால் தன்னைப் பற்றி கேட்பார்களோ ?என்ற அச்சத்திலேயே தன்னிடம் யாரையும் நெருங்கவும் விடமாட்டான்..


அப்படிப் பட்டவன் ! இன்று தன் அறையில் பாவினியிருப்பது, எந்த விதத்திலும் தொல்லையாக உணராமல், ரசிக்கவே செய்தான்.. அவளின் செயல்களெல்லாம் அவனை மிகவும் கவரந்தது.


பாவினியோ, அலமாரியைத் திறந்து,அதில் இருப்பதிலேயே மிகச் சாதாரணமாக தெரிந்த சுடிதாரை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள்..


குளித்து முடித்து சுடிதார் அணிந்தவளுக்கு மனதிற்குள் ஆச்சரியம் ! அவளுக்கே அளவெடுத்து தைத்தது போல் அத்தனை அழகாக பொருந்திருந்தியது..


பீங்க் நிறத்தில், ஆங்காங்கே ஆரஞ்சு வண்ணும் கலந்திருந்த அந்த சுடிதாரும் ! மிகவும் அழகாகவே இருந்தது..


குளியலறையிலிருந்து வெளியில் வந்தவள்,நேராக டிரஸ்சிங் டேபிள் முன் சென்று நின்று தலையை சீவினாள்..


குறள்நெறியனோ, தன் மடிக்கணியை மூடி வைத்து விட்டு, மெய்ம்மை கொடுத்துச் சென்ற பால் கோப்பையை எடுத்து குடித்தபடியே, அவள் அருகில் சென்று நின்றான். அவனையும் அறியாமல் அவளின் அழகை கண்களால் பருகினான்..


பாவினியோ, கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தவளின் மனதிற்குள், இவன்‌ ஏன் நம்மை இப்படி பார்க்கிறான்? என்று எண்ணினாள்..


அப்போது தான் அவளும் குறள் நெறியனைக் கவனித்தாள்.. அவனும், குளித்து ரெடியாகி அலுவலகம் செல்லத் தயாராகி நிற்பதை ..


அவனோ,பாவினி கண்ணாடி வழியாக தன்னையே பார்ப்பதைக் கண்டு, அவனும், அவளைப் போலவே கண்ணாடி வழியாகவே தன் ஒற்றைப் புருவத்தை கேள்வியாக உயர்த்தி, அவளைப் பார்த்து என்னவென்று ஜாடையாக கேட்டவனிடம்.. ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள்..


அவனோ, அவளை தலை முதல் கால் வரை பார்ததவன், "வினு ஏன் புடவை கட்டலை.. எந்த புடவையும் பிடிக்கவில்லையா..?" என்று சந்தேகமாக கேட்டவனிடம்.. பதிலே சொல்லாமல் பாவினி தன் வேலையிலேயே கவனமாக இருந்தாள்..


குறள்நெறியனுக்கோ, அவளின் உதாசீனம் எரிச்சலை கொடுத்தது.. கையிலிருந்த காலிக் கோப்பையை டிரஸ்சிங் டேபிள் மீது வைத்து விட்டு,அவளின் கைகளைப் பிடித்து தன் புறம் இழுத்து நிறுத்தியவன், " நான் கேட்டால் பதில் சொல்லனும்! இன்னொரு முறை இப்படி நடந்து கொண்டாய்.. அப்புறம், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.. "என்று கோபமாக வார்த்தைகளை கடித்து துப்பினான்..


அப்போதும், பதிலே பேசாமல் நின்றவளை பார்த்தவனுக்கு மேலும் சினம் அதிகரித்தது.. "பாவினி.." என்று அவன் கத்தவும், சரியாக அப்போது அவனின் அலை பேசி அழைத்தது.


கோபத்துடனேயே, தன் சட்டை ஃபாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தவனின் புருவங்கள் ! கேள்வியாக ஒரு நொடி உயர்ந்தது.


தூயவன் தான் அழைத்திருந்தார்..அதனாலேயே நெற்றியைச் சுருக்கி ,யோசனையுடனேயே , அழைப்பை உயிர்பித்தவன்.. "சொல்லுங்க.." என்றான்..


அவரோ, அந்தப் பக்கம் ,எடுத்த எடுப்பில்.. "நான் பவியுடன் பேசனும் ! ஃபோனை பவியிடம் கொடுங்கள்.." என்று அதிகாரமாக கூறியவரிடம்..


" என்ன விசயம்.. ?" என்று வேண்டுமென்றே கேட்டு அவரின் பி.பியை அதிகரித்தான்..


அவரோ, தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, "என் பெண்ணிடம் பேச காரணம் சொல்ல வேண்டுமா? "என்றவரிடம்..


"உங்கள் பெண்ணுடன் பேச காரணம் சொல்ல வேண்டாம்.. ஆனால் , என் மனைவியுடன் பேசச் காரணம் சொல்ல வேண்டுமே .." என்றவனின் திமிர் பேச்சில் அவரின் வார்த்தைகளும் தடித்தது..


" குறள் என் பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க ..அது நல்லதில்லை .."என்று கடிந்து கொண்டவரிடம்..


"ஓ..! " என்று இவன் ராகம் இழுக்கும் போதே..அதுவரை யாருடன் பேசுகிறான் என்று பார்த்துக் கொண்டிருந்த பாவினி.. அவனின் பதிலில் தன் தந்தையுடன் தான் பேசுகிறானென்று புரிந்து கொண்டவள் ,சட்டென்று ஃபோனை அவனிடமிருந்து பிடுங்கி "அப்பா.." என்று ஆசையாக அழைத்தாள்..


மகளின் 'அப்பா 'வென்ற அழைப்பே தூயவனின் கோபத்தை தணித்து, மனதைக் குளிர செய்யப் போதுமானதாக இருந்தது.


அவரோ,குரல் தழுதழுக்க, "பவிம்மா எப்படி டா இருக்கே..?" என்று கேட்டவரிடம்..


"நான் நல்லாயிருக்கேன்ப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க.. ? அம்மா,நவில் எல்லோரும் எப்படி இருக்காங்க .. உங்க எல்லோரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன் .."என்றவளுக்கு கண்களில் நீர் கோர்த்தது..


"நாங்க நல்லாருக்கோம் .. நீ.. சந்தோஷமா இருக்கீயா டா.. அங்கே உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே ? .."


" எந்த பிரச்சனையும் இல்லப்பா.. நான் நல்லா இருக்கேன்.."


"ம்..! உனக்காக அப்பா எப்பவும் இருப்பேன் டா.. நீ தைரியமா இருக்கனும் . எதுவாக இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லு டா.. என்றவர், தொடர்ந்து.. இருடா அம்மா உங்கிட்ட பேசனும்ங்கிறா.. அம்மாட்டே கொடுக்கிறேன்.."என்றார்..


ம்..!என்றவளின் காதுகளில் "பவி.." என்ற தாயின் அழைப்பு தேனாக இனித்தது..


" அம்மா.."என்று மகிழ்ச்சியாக அழைத்தவளிடம்.. "பவி நல்லா இருக்கீயா?எழுந்ததும் குளிச்சியா? நீ புத்திசாலிப் பொண்ணு.. உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டாம்.. பார்த்து நடந்துக்கோடா.. "என்று அறிவுருத்திய தாயிடம் , "ம்..!" மட்டும் கொட்டினாள்..


வளர்பிறையோ, "பவிம்மா எல்லாருக்கும் நினைத்தபடி வாழ்க்கை அமைந்துவிடாது.. அமைந்த வாழ்க்கையை பிடித்தபடி மாற்றிக் கொள்வது நம் கையில் தான் இருக்கு.. பார்த்து அனுசரித்து நடந்துக்கோடா.. எல்லாரும் நல்லவங்ளும் இல்லை ! கெட்டவங்களும் இல்லை ! உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. உடம்பை பார்த்துக்கோ.! நேரில் பார்க்கும் போது உங்கிட்ட நிறைய பேசனும்டா.. " என்றவரிடம்.. அவளோ, ம்..! என்பதைத் தவிர வேறு எதுவுமே பேசலை..


எதிரிலிருப்பவனோ, கண்களையும்,செவிகளையும் கூர்மையாக்கிக் கொண்டு, அவளையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..


அதற்குள் தாயிடமிருந்து போனைப் பறித்த நவில் ! "அக்கா நல்லா இருக்கீயா.. ?அவர் உன்னை ஏதாவது திட்டினாரா? வேறு டிரஸ் மாத்துனீயா?.." என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டான்..


பாவினியோ, தம்பியின் கேள்விக்கு பதிலளித்தவாறே சென்று, சோஃபாவில் காலை மடக்கி அமர்ந்தாள்.. தன்னை மறந்து ! தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தவளுக்கு,தன் எதிரில் இருப்பவனை ,தான் பொறாமைத் தீயில் பொசுக்கி கொண்டு இருக்கோமென்று தெரியவில்லை..


குறள்நெறியனுக்கோ, பாவினி அவளின் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக பேசுவது மனதில் சிறு சுணக்கத்தைக் கொடுத்தது.


தன்னிடம் மட்டும் கோபமுகத்தையே காட்டுபவள், அவர்களுடன் மட்டும் மகிழ்ச்சியாக பேசுகிறாளே? என்று நினைத்தான்.


தான் அவளைச் சந்திக்கும் பொழுதெல்லாம், அவளின் மனதில் வெறுப்பை வளர்த்து வைத்திருக்கிறோமென்று உணராமல் ..இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று மனதிற்குள் உறுதி கொண்டான்.


மங்கையவளின் பாசத்தை உணர்வானோ? இல்லை பழி தீர்க்க முனைவானோ? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..அன்பே!அன்பே! கொல்லாதே!‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அத்தியாயம் பதிவதில் தாமதமானதற்கு மன்னிக்கவும்.. எதிர்பாராத விதமாக கையில் சிறு காயம் ஏற்பட்டு விட்டது.. அதனால் என்னால் எழுத முடியலை..இப்போது கொஞ்சம் பரவாயில்லை..இனி யூடி ரெகுலராக வரும்.. தொடர்ந்து படித்து உங்கள் ஆதர்வை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் மறவாமல் பதிவிடுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்..

 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 21

குறள்நெறியன், பாவினி பேசி முடியும் வரை அவன் இயல்புக்கு மாறாக பொறுமையாக காத்திருந்தான்.. மனதிற்குள் பொறாமையாக இருந்தாலும், பாவினி அவள் குடும்பத்தாருடன் ஆனந்தமாக இருப்பதை கண்களில் ஏக்கத்துடனேயே பார்த்தான்..


அவனுக்கும், இப்படி ஒரு இனிமையான குடும்பம் இருந்திருக்க வேண்டுமே! ஆனால், எல்லாம் கனவாக போய்விட்டதே ! யார் செய்த பாவமோ?இல்லை விதியின் விளையாட்டோ? இன்று அவன் தனிமரமாக நிற்கிறான்..


ஏன்? அவனுக்கு மட்டும் அதற்கு கொடுப்பினையில்லாமல் போனதோ? தாய்யிருந்தும், அனாதையாக நிற்கிறோமே ? என்று மனதிற்குள் ஒரு நிமிடம் கலங்கியவன், அடுத்த நொடி தன்னை வலி தரும் நினைவுகளிலிருந்து மீட்டுக் கொண்டான்..


பாவினியோ, தன் குடும்பத்தாருடன் பேசி முடித்தபின் இயல்பாக அவன் புறம் திரும்பினாள்.. அவனின் பார்வையில் தெரிந்த மாற்றம் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.


குறள்நெறியனோ,அவள் அருகில் சென்று அமர்ந்தவன்,"மேடம் ஒரு வழியா பேசி முடிச்சாச்சா? இனியாவது என் ஃபோனை தருவாயா? ஆனாலும் உனக்கு ரொம்பத் தான் துணிச்சல் ! பேசப்..பேச, என் கையிலிருந்து ஃபோனை பிடுங்கிறே.. அப்பவே வந்த ஆத்திரத்திற்கு பல்லைத் தட்டியிருக்கனும்.. போனா..போகட்டும்ன்னு, விட்டுட்டேன்.. இன்னோரு தரம் இப்படி நடந்திட்டீனா? நான் இதே மாதிரி அமைதியாக இருப்பேன்னு மட்டும் நினைச்சுக்காதே.." என்றவன், அவள் கையிலிருந்த தன் அலைபேசியை வெடுக்கென்று பிடிங்கிக் கொண்டு, அறையிலிருந்து வெளியில் சென்றான்.


பாவினிக்கோ, அப்போது தான் அவள் செய்த தவறு தெரிந்தது.. அவனின் கோபமும் புரிந்தது.. ஏன்? நாம் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டோம்? என்ற சுய அலசலில் ஈடுபட்டவளுக்கு , மனதிற்குள் ஒரு நொடி இனம் புரியாத பயம் வந்து சென்றது.. ஏதோ இத்தோடு விட்டானே !என்று எண்ணியவள்.. இனிப் பார்த்து நடந்து கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.


குறள்நெறியனோ, மெய்யம்மையின் வற்புறுத்தலில் காலை உணவை உண்டேன் என்று பேர் செய்துவிட்டு தன் அலுவலகத்திற்குச் சென்றான்.


பாவினியும் மெய்யமையின் வற்புறுத்தலில் உணவை உண்டு முடித்தாள்..மெய்யம்மை, பாவினியிடம் மிகவும் அன்பாகவே நடந்து கொண்டார்.


அவளின் தயக்கத்தைப் போக்கும் பொருட்டு அவளைப் பேச வைக்க கேள்வியால் அவளைத் துளைத்து எடுத்தார்.


பாவினியும் , அந்த வீட்டில் தனக்கு துணையாக மெய்யம்மையை மனதார ஏற்றுக் கொண்டவள்,மடை திறந்த வெள்ளமாக அவரிடம் இயல்பாக பேசினாள்.

பாவினிக்கும் மெய்யமையை மிகவும் பிடித்து விட, அவருடனே சுற்றிக் கொண்டிருந்தவளிடம் நிலன் ஒரு ஃபார்சலைக் கொண்டு வந்து கொடுத்தான்.


பாவினியோ, யோசனையாக அவனைப் பார்த்தவள், அவன் கொடுத்த ஃபார்சலை வாங்காமல் மெய்யம்மையைப் பார்த்தாள்.. அவரோ, கண்களாலேயே அதை வாங்கிக்கச் சொல்லி ஜாடை செய்தார்.


நிலனோ, தன்னை யாரென்று தெரியாததால் அவள் வாங்க மறுக்கிறாளோ? என்றெண்ணி ,"மேடம் நான் சாரோட பி.ஏ. என் பேர் நிலன் ! சார் தான் இதை உங்களிடம் கொடுத்து வரச் சொன்னார் .."என்றவுடன், பாவினி தயக்கத்துடனேயே அதை வாங்கிக் கொண்டாள்.


நிலனோ, ஃபார்சலை கொடுத்தவுடன் தன் வேலை முடிந்ததென்று திரும்பிச் சென்று விட்டான்.


பாவினியோ, ஃபார்சலை கையில் வைத்துக் கொண்டே, பிரிக்கலாமா?வேண்டாமா?என்ற யோசனையில் அமர்ந்திருந்தாள்.


அவளின் மனமோ! பிரிக்க வேண்டாமென்று சொல்லியது. ஆனால், பிரித்துப் பார்க்கலைன்னா அந்த ராட்சசன் அதற்கும் ஏதாவது சொல்வானே ..என்ற எண்ணமும் அவளைக் குழப்பியது.


மெய்யம்மையோ, அவள் ஃபார்சலைப் பிரிக்காமல் இருப்பதைக் கண்டு, "பவி அது என்னென்னு பிரிச்சுப் பாரும்மா.." என்று கூறியவர் , தான் கூட இருப்பதால் பாவினி தயங்குகிறாளோ? என்று எண்ணி, நாசூக்காக அவளுக்குத் தனிமை கொடுத்து விலகிச் சென்றார்.


சின்னஞ்சிறுசுகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று எண்ணினார்.


பாவினிக்கு தயக்கமாக இருந்தாலும் ,மெய்யம்மை சொன்னதை மறுக்கத் தோன்றாமல் அதைப் பிரித்தாள்.


ஃபார்சலின் உள்ளே அழகான மிகவும் விலையுயர்ந்த புது மாடல் ஆன்ராய்டு போன் ஒன்று இருந்தது. அதை அவள் எடுத்துப் பார்க்கும் போதே அதில் குறள்நெறியனிடமிருந்து அழைப்பு வந்தது.


குறள்நெறியன், நிலன் பார்சலை கொண்டு சென்ற நேரத்தை கணக்கில் கொண்டு, பாவினி பார்சலைப் பிரித்திருப்பாள் என்று ஊகித்துத் தான் கால் செய்தான்..


பாவினி தயக்கத்துடன் அழைப்பை ஏற்கவா?வேண்டாமா?என்ற யோசனையில் ஃபோனைப் பார்த்தபடியே சில நொடிகள் இருந்தவள்,ஒரு நெடிய பெருமூச்சுடன் அழைப்பை உயிர்பித்து,காதில் வைத்து " ஹாலோ.." என்றாள்.


அந்தப்பக்கம், அவளின் குரலைக் கேட்டதும்,குறள்நெறியன், " ஹாய் மை டியர் வினு.. போன் பிடிச்சிருக்கா..?"என்றவனிடம், வாயே திறக்காமல் இருந்தாள்.


அவனோ தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு, "வினு நான் கேட்டால் பதில் சொல்லனும்ன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது.வாயத் தொறந்து பேசுடி .."என்று பல்லைக் கடித்தான்..


பாவினியோ,பேசலாமா?வேண்டாமா?என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தினாள்.. அதற்குள், அவன் பலமுறை "ஹலோ..வினு என்று கத்தவும்,"பிடிச்சிருக்கு.." என்று பட்டும், படாமலும் குரலை தாழ்த்திச் சொன்னாள்.


குறள்நெறியனோ,அவள் தயங்கியபடியே பிடித்திருக்கிறது என்று சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன், "ஒரு வார்த்தைச் சொல்ல ஒரு மணி நேரம் எடுத்துக்குவீயா..? பதில் சொல்ல அவ்வளவு தயக்கமா?இல்லை இவன் கேட்டால் சொல்லனுமா ?என்ற எண்ணமா? "என்றான் கோபத்துடன்..


பாவினிக்கோ, அவனின் வார்த்தைகள் கோபத்தை தூண்டினாலும் ,அவனை மேலும் கோபப்படுத்த வேண்டாம் என்ற நினைப்பில், "அப்படியெல்லாம் இல்லை.."என்றவளிடம்..


"என்னமோ செய் ! உன்னிடம் பேசுவதே வேஸ்ட்.." என்று கடிந்து கொண்டவன் அழைப்பை துண்டித்தான்..


பாவினியோ, சில நொடிகள் ஃபோனை வெறித்துப் பார்த்தபடியே நின்றாள்..அவனின் பேச்சும் உதாசீனமும் அவளுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது..


உள்ளே சென்றிருந்த மெய்யம்மை, அவளுக்கு குடிக்க பழரசத்தை எடுத்து வந்து வற்புறுத்தி அவளை குடிக்க வைத்தார்.


பாவினியின் , கையிலிருந்த ஃபோனை வாங்கிப் பார்த்தவர்,"ரொம்ப நல்லா இருக்கு மா ..குறள் செலக்சன் எப்போதுமே நன்றாக தான் இருக்கும்.." என்றவரிடம் பாவினி, எதுவும் சொல்லாமல் சிரித்து மட்டும் வைத்தாள்.


பேரனின் பெருமைகளை பேசிக் கொண்டிருந்த மெய்யமையிடம், கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பதாக கூறி விட்டு ,
வலித்த மனதுடன் தங்கள் அறைக்குச் சென்றாள்.


ஃபோனை படுக்கையில் வீசி விட்டு, பேசாமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தவளுக்கு ,தன் குடும்பத்தாரின் நினைவுகள் அவளை வழிய தத்தெடுத்துக் கொண்டது..

தாயின் பாசத்திற்கும்,தந்தையின் அரவணைப்புக்கும்,தம்பியின் நேசத்திற்கும் மனம் அலைபாய்ந்தது..


தன் அன்பான குடும்பத்தை பிரிந்து ஒரு நாள் தான் ஆகியிருக்கு, என்று அவளால் நம்பவே முடியவில்லை..ஏதோ வருடக்கணக்காக அவர்களைப் பிரிந்திருப்பது போல் தோன்றியது.


படுக்கையில் கிடந்த ஃபோனைப் பார்த்தவளின் மனதில் அவன் எத்தனை விலையுயர்ந்த ஃபோனை வாங்கிக் கொடுத்தாலும் ,என் அப்பாவின் விலைமதிக்க முடியாத பாசத்தின் முன் இது ஒன்றுமில்லை என்ற எண்ணமே மேலோங்கியது..


படுக்கையில் படுத்தவள், அருகில் கிடந்த போனைப் பார்த்து,பெரிய ஃபோன் என்று அதை கையில் எடுத்துப் பார்த்தாள். அதில் அப்படி என்னதான் இருக்கிறதென்று ஃபோனை ஆராய்ந்தவள்,அதில் சில நம்பர்களை மட்டுமே அவன் பதிந்திருப்பது கடுப்பைக் கொடுத்தது.


சிறிது நேரம் ஃபோனையே பார்த்திருந்தவளுக்கு , ஏனோ மனம் முழுவதும் வெறுமையே வந்து ஒட்டிக் கொண்டது..


எல்லாம் அவனின் விருப்பப்படியே நடக்கனும்! தன் விருப்பத்திற்கு மதிப்பே கொடுப்பதில்லை.. காலம் முழுவதும் இவனுடன் எப்படி வாழ முடியும்.? என்ற தவிப்பில் அவள் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது..


அழுதே பழக்கப்படாதவளுக்கு, அவளின் வாழ்க்கையில் அதிரடியாக அவன் நுழைந்ததிலிருந்து அழுகை மட்டுமே தீர்வாகிப் போனது..


சிறிது நேரம் கண்ணீர் சிந்தியவள் ,தன்னை மறந்து உறங்கி விட்டாள்..


குறள்நெறியனுக்கோ , மூச்சு விடக் கூட நேரமில்லாமல் அலுவலக வேலை அவனைச் சுனாமியாக உள் இழுத்துக் கொண்டது..


தூயவனோ, ஒரு வாரமாகவே அலுவலகம் வரவே இல்லை.. திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்தார்..அவர் இல்லாதது அவனுக்கு மேலும் வேலைப் பளுவை இரு மடங்காக அதிகரித்தது.



அவரை நினைத்தவனுக்கு மனதிற்குள் எரிச்சல் முட்டிக் கொண்டு வந்தது. கல்யாணம் தான் முடிந்து விட்டதே !இன்னும் வீட்டிலிருந்து என்ன செய்கிறார் ?என்ற கோபம் அவனை ஆட்கொண்டது.


சரியாக அந்தநேரம்..அறைக் கதவை தட்டி, அனுமதி பெற்றுக் கொண்டு ,தூயவன் உள்ளே வந்தார்.


குறள்நெறியனுக்கோ, அவரைப் பார்த்ததும்.. ஒரு நொடி கண்கள் மின்னியது. மனதிற்குள் 'அப்பாடா வந்துட்டார்.. இனி அவர் எல்லாம் பாரத்துக்குவார்..' என்று மகிழ்ந்தவனின் சந்தோஷத்தைக் கெடுப்பதைப் போல் தூயவன் ,அவன் அருகில் வந்து, மேஜை மீது ஒரு கவரை வைத்தார்.


குறள்நெறியனோ, புரியாமல் அவரைக் கேள்வியாக பார்த்தான்..

ஆனால் அவரோ,பதிலே சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தார்.


குறள்நெறியனுக்கோ, அவர் நின்ற தோரனையே எரிச்சலை பன்மடங்காக்கியது.. தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, அவரை உட்காராச் சொன்னான்.


தூயவனோ, அவன் உட்காரச் சொன்னதை ஏற்காமல், அசையாமல் சிலையாக நின்றார்.


அவரின் செயல் , குறள்நெறியனுக்கு அளவுகடந்த கோபத்தைக் கொடுத்தாலும்,மாமனாராச்சே ! என்று நினைத்து அடக்கிக் கொண்டு, அவர் மேஜை மீது வைத்திருந்த கவரை எடுத்து பிரித்துப் பார்த்தான்.


தூயவனோ ,அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டே நின்றார்.

குறள்நெறியனுக்கோ ,அதைப் பிரித்து பார்த்தும் சினம் தலைக்கு ஏறியது.

மேஜை மீது அதை எறிந்தவன்,அவரைப் பார்த்து , "என்ன இது?" என்றான் பற்களை கடித்தபடியே.


அவரோ, "பார்த்தால் தெரியலையா?"என்றார்.


"நல்லாத் தெரியுது! அது தான் கேட்டேன்.. இப்போது இதற்கு என்ன அவசியம் வந்தது.."


"அவசியம் வந்ததால் தான் இந்த முடிவு.. இனி என்னால் இங்கே வேலை செய்ய முடியாது.அது தான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன்.."


"அது தான் என்ன அவசியம் வந்ததுன்னு கேட்கிறேன்.."


"என்னால் மருமகனின் கீழ் வேலை செய்ய முடியாது.."


"அது தான் ஏன் என்று கேட்கிறேன்?"


"உறவுகளுக்குள் வேலை பார்ப்பது சரிப்படாது.."


"ஏன் சரிப்படாது..அது வேறு ..இது வேறு.. எதற்காக உறவு முறையை வேலையில் கொண்டு வந்து குழப்பிக்கிறீங்க.."


"நான் எதையும் குழப்பிக்கலே .. சரியாகத் தான் முடிவு எடுத்திருக்கேன்.."


"எனக்கு சுத்தமா புரியலை.."


"என்னால் இங்கு வேலை செய்வது என்பது இனி இயலாது..என் மரியாதையை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்..பெண்ணைக் கொடுத்த வீட்டில் வேலை செய்ய முடியாது..எனக்குன்னு சுயமரியாதை வேண்டும் அதை எதற்காகாவும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.."


"இஃது என்ன லாஜிக் ! பெண்ணைக் கொடுத்தால் வேலை செய்ய மாட்டேன் என்பது சுத்த பட்டிக்காட்டுத் தனமாக இருக்கு. உங்க சுயமரியாதை கெடும் அளவு இங்கே எதுவும் நடக்காது. அதனால், நீங்க எப்போதும் போல் உங்க வேலையை செய்யுங்க.." என்றவன், அவரின் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்தான்..


தூயவனோ, அவன் செய்கையை பெரிதாக நினைக்காமல்.." நீங்க என்ன சொன்னாலும் ,என் மனதிற்கு ஒப்பாத வேலையை என்னால் செய்ய முடியாது.. நான் வேலையை விடுகிறேன்.." என்றவரிடம்.


"உங்களுக்கு நல்லபடியாக சொன்னால் புரியாதா? பேசாமல் போய் உங்க வேலையைப் பாருங்க.." என்று அடங்கா கோபத்துடன் கத்தியவனிடம்.


"இதோ இதைத் தான் சொன்னேன் .. உங்கள் இஷ்டத்திற்கு என்னை ஆட்டி வைக்க நினைக்கிறீங்க பாரு .. இதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை..வருகிறேன் .."என்று கோபமாக கூறிவிட்டு, கதவுவரை சென்றவர்.


சட்டென்று மீண்டும் அவன் அருகில் வந்து நின்று , தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த கடிதத்தை எடுத்து அவன் முன் வைத்தார்.


அவனோ, எதுவும் பேசாமல் அவரையே பார்த்தான்.


அவரோ , என் பிஎஃப் பணமும்,கிராஜுவிட்டி பணமும் எனக்கு வேண்டாம்.. அந்தப் பணத்தை உங்க அக்கோண்டிற்கு மாற்றுவதற்கான என் ஒப்புதல் கடிதம் இது.. என் பெண்ணிற்கு சீதனமாக நீங்களே அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.." என்று செருக்குடன் சொல்லியவர்,வேகமாக அங்கிருந்து சென்றார்..


குறள்நெறியனோ, பதிலே பேசாமல் ,அவர் போவதையே கண்களில் அனல் பறக்க பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கட்டுப்படுத்த முடியாத ஆத்திரமும்,வெறுப்பும் பொங்கியது..


' என்ன திமிர்! உடம்பு பூராவும் கொழுப்பு! என்னை யாரென்று நினைத்திருக்கிறார்.. இவர் இல்லைன்னா, இந்த கம்பெனியை என்னால் நடத்த முடியாதா? மாமனாராச்சேன்னு கொஞ்சம் இறங்கி வந்தால் என்ன பேச்சு பேசறார்.. சீதனம் கொடுக்கிறாராம், சீதனம் !என்னை என்ன கையாலாகதவன்னு நினைச்சுட்டாறா?நான் யாருன்னு கூடிய சீக்கிரம் காட்டுறேன்..அப்பனுக்கும்,பொண்ணுக்கும் திமிருக்கு மட்டும் பஞ்சாமே இல்லை..' என்று மனதிற்குள் கருவியவன், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தான்..


தூயவனோ ,இத்தனை நாள் அவனிடம் பட்ட அவமானங்களுக்கு, நல்ல பதிலடி கொடுத்து விட்ட திருப்த்தியில் வீட்டிற்குச் சென்றார்..


மாமனார் மருமகனை வெல்வாரோ? இல்லை மருமகன் மாமனாரை வெல்வானோ? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..


ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
முதலில் ‌‌‌‌‌‌‌‌‌ரொம்ப லேட்டா யூடி போட்டதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்..என் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை அது தான் ரொம்ப தாமதமானது..இனி லேட் ஆகாது..இன்று இரண்டு அத்தியாயம் போட்டு இருக்கிறேன் (21&22)படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல்பகிர்ந்து கொள்ளுங்கள் ..நாளை அடுத்த யூடி உடன் சந்திக்கிறேன்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93

அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 22

குறள்நெறியனுக்கோ,தூயவன் சென்று வெகு நேரமாகியும், கோபம் அடங்கவே இல்லை..மனதை ஒரு நிலைப்படுத்தி வேலையும் செய்ய முடியவில்லை..

ஆத்திரம் மட்டுமே மனம் முழுவதும் நிரம்பி வழிந்தது. பொறுக்க முடியாமல் நிலனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு வந்தான்.

வழக்கம் போல் காரை அதிரடியாக நிறுத்திவிட்டு தங்கள் அறைக்குச் சென்றான்..

சூரியனின் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாக வந்தவனின் பார்வையில்,மலரின் மென்மையை முகத்தில் பூசிக் கொண்டு படுத்திருந்த மனைவியைக் கண்டதும் பால் நிலவைப் போல் குளிர்ந்து போனான்..


பாவினியைக் கண்டதும் தன் கோபமும், ஆத்திரமும்,மெழுகாய் உருகிக் கரைவதை, ஓர் ஆச்சிரியத்துடன் கண்டவன், தன்னை நினைத்தே வியந்து போனான்..


மெல்ல மனைவியின் அருகில் சென்று , சில நிமிடங்கள் அவள் உறங்குவதைப் பார்த்துக் கொண்டு நின்றான்..


அவளின் முகத்தில் அழுததிற்கான கண்ணீர் ரேகைகளைக் கண்டான். தன்னை மறந்து அதை துடைக்க அவளின் முகத்தருகில் கையையை நீட்டியவன், அவளிடம் சிறு அசைவு தெரியவும், சட்டென்று கையை பின்னோக்கி இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.



தன் கையிலிருந்த கோப்புகளை அலமாரியில் வைத்து விட்டு,உடை மாற்றி வந்தான்.


அப்போதும் விழிக்காத மனைவியைக் கண்டு யோசனையுடனே தன் மடிக்கணினியில் புதைந்தான்.


சிறிது நேரத்தில் அவளிடம் அரவரம் கேட்க நிமிரந்தவன்,அவள் முகம் கழுவி விட்டு வருவதைப் பார்த்து,"மேடம் இப்பவாவது எழுந்தீங்களே! சரியான கும்பகரணி போல.. நான் வந்தது கூடத் தெரியாமல் இப்படி தூங்கிறே.." என்று கேலி பேசிவனை முறைத்தபடி பதிலே பேசாமல் படுக்கையில் சென்று அமர்ந்தாள்.


அவனோ, அவளின் மெளனத்தை ஏற்க முடியாமல்,"அப்பாவும், மகளுக்கும் சரியான திமிர் டி .."என்றவனிடம்..


"இப்ப எதற்கு தேவையில்லாமல் என் அப்பாவை இழுக்குறீங்க..என்னைப் பற்றி என்ன வேணாலும் பேசுங்கோ, ஆனால் என் அப்பாவைப் பற்றி ஏதாவது சொன்னீங்க எனக்கு கெட்ட கோபம் வரும்.."


"ஓ..! அப்படியா ?உன் அப்பா செய்யறதுக்கு வேறு ஒருத்தனாக இருந்தால், நடப்பதே வேறு..நான் என்பதால் பொறுமையாக போறேன்.."


"அப்படி, அப்பா என்ன செய்தார்..?"


"ம்..! இனி ஆஃபிஸ்சுக்கு வரமாட்டாறாம்..ரிஸைன் லெட்டர் கொடுத்திட்டு போறார்.."

"ஓ..!ஏனாம்?"

"ம்..! மாப்பிள்ளையிடம் வேலை பார்த்தால் அவருக்கு கவுரவக் குறைச்சலாம்.."

"அவர் சொல்வது கரெக்ட் தான்.."

"என்ன டி கரெக்ட்..அதுமட்டுமா?
கம்பெனியிலிருந்து வரும் எந்த பணமும் அவருக்கு வேண்டாமாம்..அதை உனக்கு சீதனமாக நானே வைத்துக் கொள்வதாம்..என்னை என்ன கையாலாகதவன்னு நினைச்சுட்டுடாறா?" என்று கோபத்தில் கத்தியவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்..


அவனோ, அவள் பதில் சொல்லாமல் இருப்பதைப் பார்த்து.. "இப்ப சொல்லு டி அவர் செய்வது கரெக்ட்டா..?"

"அவர் எது செய்தாலும் எதாவது காரணம் இருக்கும்.." என்றவளிடம்..


"மண்ணாங்கட்டி ..என்ன டி காரணம்..சீதனமாம் சீதனம்..யாருக்கு வேண்டும் அவரின் சீதனம்! உன்னை என்ன என்கிட்ட விற்கிறாரா? என்று எரிந்து விழுந்தவன்,வேறு எதுவும் பேசாமல் தன் வேலையில் மூழ்கினான்..


பாவினிக்கோ, அவன் சொன்னதிலிருந்த உண்மைச் சுட்டது.. அப்பா ஏன்? அப்படிச் சொன்னாருன்னு கேட்க வேண்டுமென்று நினைத்தாள்.அது மட்டுமின்றி வேலையை விட்டுட்டா?வருமானத்திற்கு என்ன செய்வார்.நவில் வேறு இன்னும் படிப்பை முடிக்கலையே..?என்ற யோசனையுடன் பால்கனியில் சென்று நின்றாள்..


எத்தனை நேரம் அப்படி நின்றாளோ? அவளே அறியவில்லை.. குறள்நெறியன் உணவு உண்ண அழைத்த பின்பு தான் அறைக்குள் வந்தாள்..


உணவு உண்ணும் போதும் தாத்தாவும்,பேரனுமே தொழில் விசயங்களை பேசியபடியே உணவு உண்டனர்.. பாவினி வெறும் பார்வையாளராகவே அமர்ந்து உணவைக் கொறித்துக் கொண்டிருந்தாள்..


குறள்நெறியன் உண்டு முடித்ததும், தங்கள் அறைக்குச் சென்று விட்டான்.. பாவினி மட்டும் சிறிது நேரம் மெய்யம்மையிடம் பேசிக் கொண்டிருந்தாள்..


அவர்களின் பேச்சில் இயல்பாக செங்கோடனும் கலந்து கொண்டவர்,பாவினியிடம் மிகவும் தன்மையாக பேசினார்..அவருக்கு அவளைப் பிடிப்பதற்கு தூயவனின் பெண்! என்ற ஒரு காரணமே போதுமானதாக இருந்தது.


அதுமட்டுமின்றி தன் மகனின் மரணத்தால், அவருக்குள் ஏற்பட்ட குற்றவுணர்வுமே ஒரு காரணமாக இருந்தது.


தன் மகனின் காதல் திருமணத்தை தான் மனதார ஏற்று வாழ்த்தியிருந்தால், மகன் உயிரோடு நன்றாக வாழ்ந்திருப்பானா?என்ற எண்ணம் கடந்த சில வருடங்களாக அவரைப் பாடாய் படுத்துகிறது..


பேரனாவது அவனுக்கு பிடித்த வாழ்க்கையை நீண்ட ஆயுளோடு, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்ற எண்ணம் அவரின் மனதை ஆட்கொண்டதால் பாவினியை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்..


அதுவும் கடந்த இரண்டு நாட்களாக பாவினியின் செயல்கள் அவரை மிகவும் கவர்ந்தது..தந்தையின் சொல்லுக்கு மறுபேச்சு பேசாதது..பெரியவர்களிடம் காட்டும் மரியாதை எல்லாமே அவரை அவள் புறம் எளிதாக சாய்த்தது.


ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல் அவளின் நடத்தையும்,குணமும் அவருக்கு அவள் மீது அன்பை ஏற்படுத்தியது.


பெரியவர்களிடம் பேசி விட்டு தங்கள் அறைக்கு வந்தவளை, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த குறள் நெறியனின் சீரான மூச்சுக் காற்று தான் வரவேற்றது.


படுக்கையின் மறுபுறம் சென்று சத்தம் எழுப்பாமல் படுத்தவளுக்கு,அன்றைய இரவும் ! பல கேள்விகளுக்கு பதில் தெரியாத குழப்பத்துடனேயே உறங்க வைத்தது.


குறள்நெறியனோ, வழக்கம் போல கண் விழித்தவன், நல்ல உறக்கத்திலிருந்த பாவினியைப் பார்த்தாவாறே, படுக்கையிலிருந்து எழுந்து காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு ,வீட்டிலிருந்த தன் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று உடற்பயிற்சி உபகரணங்களுடன் தன் பயிற்சியை மேற்கொண்டான்..


பாவினியோ, அவன் உடற்பயிற்சியை முடித்து வரும் வரையும் விழிக்கவே இல்லை.


குறள்நெறியனோ, அவள் உறங்குவதைக் கண்டு ,உண்மையாளுமே கும்பகர்ணனின் லேடிவர்ஷன் போல என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடியே கண்விழித்தவளின் பார்வையில், முறுக்கேறிய உடலில் வேர்வை குளியலுடன் நின்றவனின் பிம்பம் தான் அவளின் கருவிழிகளை நிரப்பியது..


கணவனை அந்த நிலையில் பார்ப்போம் என்று எண்ணிப் பார்க்காதவள்,திடுக்கலுடன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்..


குறள்நெறியனோ, அவளையே கவனித்துக் கொண்டிருந்தால்,அவளின் பார்வையில் தெரிந்த அதிர்ச்சி அவளை சீண்டும் எண்ணத்தை கொடுத்தது..


"என்ன வினு நான் ஹீரோ மாதிரி அழகா இருக்கேனா?"என்றவனிடம் பதிலே சொல்லாமல் குளியலறை நோக்கிச் சென்றவளை ,தடுத்து தன் புறம் இழுத்து நிறுத்தியவன்,"நான் கேட்டா பதில் சொல்லனும்.." என்று வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தான்.


அவளோ, அவன் பிடியை தளர்த்தியபடியே,"எனக்கு பிடிக்காத கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.."என்று அவனிடமிருந்து நகரப் போனவளை மீண்டும் தடுத்தவன்,"இங்கு எல்லாமே என் பிடித்தம் தான்..உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்,என் விருப்பப் படி நடப்பது தான் உனக்கு நல்லது.." என்றவனிடம்..


"நான் ஒன்றும் உங்க அடிமையில்லை.. உங்க இஷ்டத்திற்கு என்னை ஆட்டிப் படைக்க.."


"ஏய் என்ன டி அப்பாவும்,பொண்ணும் எப்ப பாரு ஒரே டயலாக்கேவே சொல்றீங்க.எனக்கு கேட்டு..கேட்டு போரடிச்சுப் போச்சு..வேறே ஏதாவது மாத்திச் சொல்லுங்க.."

"முதலில் கையை விடுங்க .. காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா?"என்றவளிடம்..

" என்னைப் பார்த்த உனக்கு எப்படி இருக்கு..கொழுப்பா?"

"ஆமாம் நீங்க இத்தனை வருசம் வாங்கிப் போட்டு வளர்த்த கொழுப்பு.."

"சொன்னாலும்,சொல்லாட்டியும் உனக்கு ரொம்பத் தான் வாய்க் கொழுப்பு.."என்றவனிடம்..

"ஆமாம் ,வாய்க்கொழுப்பு தான் விடுங்க.." என்றவளிடம்..

"விடமுடியாது ..நான் கேட்டதற்கு பதில் சொல்லு விடறேன்.."

"இப்ப என்ன நான் பதில் சொல்லனும்! அப்படித் தானே! சரி சொல்றேன்..ஹீரோ மாதிரி தெரியலை..வில்லன் மாதிரி தான் தெரிறீங்க போதுமா ? விடுங்க.."

ஓ..!அப்படியா? ஆமாண்டி ,உனக்கும் உன் அப்பாவுக்கும் நான் தான் டி வில்லன்.." என்று கோபமாக கூறியவன்' அவள் கைகளை சட்டென்று விட்டவன், அங்கிருந்து பால்கனிக்குச் சென்றான்.

பாவினியோ ,விட்டால் போதுமென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

பால்கனியில் நின்றிருந்தவனின் மனதிற்குள், அவளின் உதாசீனத்தால் ஏற்பட்ட கோபத்தின் வெப்பத்தை.. பால்கனியில் வீசிய தென்றல் காற்றால் கூட தணிக்க முடியலை..


அதன் பிறகு ஆஃபிஸ் கிளம்பிச் செல்லும் வரை அவளிடம் எதுவுமே பேசவில்லை..காலை சிற்றுண்டியையும் மறுத்து விட்டு, அலுவலகத்திற்கு சென்று விட்டான்..


பாவினியோ, குறள்நெறியன் சென்ற பின் அவனின் கோபத்தைப் பற்றியே மனதிற்குள் அசைப்போட்டுக் கொண்டிருந்தாள்..


'துரைக்கு வில்லன்னு சொன்னதும் கோபம் பொத்துட்டு வந்துருச்சா ..? செய்யற வேலைக்கு வேறு எப்படி சொல்ல முடியும்.. தேவையில்லாமல் வாய்யைக் கொடுத்து வாங்கிக் கட்டிகிறான் ..'என்று கருவிக் கொண்டிருந்தவளின் விழிகளில் நாள்காட்டி பட்டது..


அன்றைய தேதியைப் பார்த்ததும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.. 'அச்சோ இன்னைக்கு அப்பாவுக்கு ஃபர்த்டேவாச்சு மறந்தே போய்ட்டோமே..முதல் விஷ் எப்பவுமே நான் தானே பண்ணுவேன்.. எல்லாம் இந்த ராட்சசனால் வந்தது..' என்று பழியை கணவன் மீது போட்டவள் ,அலைபேசியை எடுத்து தன் தந்தைக்கு அழைத்தாள்..


தூயவனோ ,புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும்,யோசனையுடனேயே அதை ஏற்றார்..


"அப்பா.." என்ற மகளின் அழைப்பில் உச்சி குளிர்ந்து போனார்.. எப்போதும் முதல் வாழ்த்து மகளிடமிருந்தே கிடைக்கப் பெற்றவர்,மகளின் அழைப்புக்காக காத்துக் கிடந்தவருக்கு, மகள் அழைத்ததும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் தத்தளித்தார்..


பாவினியோ அந்தப்பக்கம் பதில் இல்லை எனவும் , "அப்பா..அப்பா.."வென்று பலமுறை அழைத்து விட்டாள்.


தூயவனோ,மகளின் தொடர் அழைப்பில் நிகழ்வுக்கு திரும்பியவர், "பவிம்மா எப்படி‌டா இருக்கே.." என்றவுடன்.

"நான் நல்லா இருக்கேன்ப்பா.."என்றவள், தன் வாழ்த்தை தெரிவித்தாள்.

தூயவனும், மகிழ்வுடன் மகளின் வாழ்த்தை ஏற்று நன்றி சொன்னவர்.. சில நிமிடங்கள் பாவினியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, கணவரிடமிருந்து ஃபோனை வாங்கிய வளர்பிறை மகளிடம் ஆசையாக பேசினார்.

"பவிம்மா எப்போதும் போல் அப்பாவுக்கு சிவன் கோவிலில் இன்னைக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கேன்..உனக்கு வரமுடிந்தால் அங்கு வாடா..நான் நேத்தே அப்பாகிட்ட உன்னையும்,மாப்பிள்ளையும் அழைக்கச் சொல்லிக் கேட்டேன்.. அவர் தான் அதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்..அவருக்கு இன்னும் மாப்பிள்ளை மேல் கோபம் தீரவில்லை போல..நீ முடிந்தால் வாடா.." என்றவரிடம்.

"கண்டிப்பா வரேன் மா.. கொஞ்சம் ஃபோனை நவில்கிட்ட கொடுங்க.." என்ற மகளிடம், "இதோ தரேன் மா.." என்றவர்..கோவிலுக்கு தயாராகிட்டிருந்த மகனிடம் அலைபேசியைக் கொடுத்துச் சென்றார்..

நவிலோ ,போனில் தமக்கை என்றதும் சந்தோஷமாக வாங்கி நலம் விசாரித்தான்.

பாவினியோ,"நவில் நான் அன்னைக்கு உங்கிட்ட அப்பாவுக்கு கிஃப்ட் வாங்கி வரச் சொன்னேனே, அப்பாவுக்கு தெரியாமல்,அதை மறக்காமல் கோவிலுக்கு எடுத்து வந்துரு..நான் நேராக கோவிலுக்கு வந்துறேன்.."

"ஓகே கா..நானே உனக்கு கால் பண்ணனும்ன்னு நினைச்சுட்டிருந்தேன்..அப்பா காலையிலிருந்து உன் ஃபோன்காலுக்காக வெயிட்டிங் கா.." என்றவனிடம்.. சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.


கோவிலுக்கு எப்படி போவது என்று சில நொடிகள் யோசனை செய்தவள், கால்டாக்ஸியில் போகலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.


மனதின் ஓரத்தில் குறள்நெறியனுக்கு தெரிந்தால் என்ன சொல்வானோ? என்ற சிந்தனை தோன்றியது. ஆனால், தெரிந்தால் தானே? தெரிந்தால் பார்த்துக்கலாம் என்று தைரியத்துடன் அழகாக பட்டுப்புடவையில் தயாராகினாள்..


மெய்யம்மையிடம் , "பாட்டி அப்பாவின் பிறந்தநாளுக்கு ,கோவிலில் பூஜை ஏற்பாடு செய்திருக்காங்க..நான் போய்ட்டு சீக்கிரம் வந்துடறேன் .."என்ற பாவினியிடம்..


சரிம்மா, நான் டிரைவரிடம் கூட்டிட்டுப் போகச் சொல்றேன் !நீ பார்த்துப் போய்ட்டு வாம்மா.." என்று அக்கறையாக கூறியவரிடம்..


"வேண்டாம் பாட்டி நான் கால் டாக்ஸி புக் பண்ணிட்டேன் .. அதிலேயே போய்கிறேன்.ஃடேக்ஸி வந்துருச்சு.. நான் போய்ட்டு சீக்கிரம் வந்துடறேன்.." என்றவள், மெய்யம்மைக்கு பதில் சொல்ல வாய்ப்பே கொடுக்காமல் ஓடினாள்..


"பாவிம்மா.." என்று மெய்யம்மை அழைத்தது காற்றோடு கலந்து காணாமல் போனது.. அவரோ,மனதிற்குள் 'கால் டேக்ஸ்சியில் போவது பேரனுக்கு தெரிந்தால் வானத்துக்கும்,பூமிக்கும் குதிப்பானே? இந்த பெண்ணுக்கு இன்னும் அவனைப் பற்றி சரியா தெரியலையே..' என்று கலங்கினார்..


பாவினி கேட் அருகே சென்றதும், வாட்ச்மேன் ஓடிவந்து , "மேடம் வெளியில் போகனும்மா? டிரைவரை வரச் சொல்லட்டுமா ? "என்று பணிவாக கேட்டவரிடம், " வேண்டாம் ,நான் பார்த்துக்கிறேன்.." என்றாள் .

வாட்ச்மேன் கேட்டை திறந்து விட்டதும்,கேட்டுக்கு வெளியில் காத்திருந்த கால்டாக்ஸியில் ஏறி அமர்ந்தவள்,போக வேண்டிய இடத்திற்கு வழி சொன்னாள்..

பாவினி வீட்டை விட்டு நகர்ந்ததும், வாட்ச்மேன் தான் செய்ய வேண்டிய காரியத்தை சரியாக செய்தார்.

பாவினியோ, தான் செய்யும் காரியத்தால், கொண்டவனின் கோபத்திற்கு ஆளாகப் போவதை அறியாமல், தன் குடும்பத்தை பார்க்கும் ஆவலில் பயணித்தாள்..

மங்கையவள்,மன்னவனின் கோபத்திற்கு பழியாவளோ? இல்லை மன்னவனை குளிர்விப்பாளோ? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் (21&22) இரண்டு யூடிகளையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..நாளை அடுத்த யூடி உடன் சந்திக்கிறேன்..
நன்றி‌
அன்புடன்
இனிதா மோகன்


 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே !

அத்தியாயம் 23

பாவினி, சரியாக பூஜை நேரத்திற்கு வளர்பிறை சொன்ன சிவன் கோவிலுக்கு வந்து விட்டாள்..

தூயவனுக்கு எப்போதும் இந்த மாதிரி பூஜைகளில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கையில்லை.. ஆனாலும், குடும்பத்தாரை சங்கடப்படுத்த வேண்டாமென்றே, எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கலந்து கொள்வார்..


அன்றும், பூஜையில் கலந்து கொள்வதற்காக, என்றுமில்லா மகிழ்ச்சியுடனேயே கோவிலுக்கு வந்திருந்தார். அதற்கு காரணம் மகளை அன்று பார்ப்போம்! என்ற எண்ணமே அவருக்கு வழக்கத்தை விட அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது..


வளர்பிறையும்,நவிலும் பூஜைக்கான வேலையில் தங்களைப் புகுத்திக் கொண்டார்கள்..


நாவேந்தியும்,கவினும் கூட அன்று கோவிலுக்கு வந்திருந்தார்கள்..நாவேந்தி நட்பு என்ற முறையில் எப்போதும் வாழ்த்து மட்டுமே சொல்லுவார்..ஆனால், வளர்பிறை சம்மந்தி என்ற உறவு முறையில் அன்று, பூஜைக்கு வற்புறுத்தி அழைக்கவும், மறுக்கத் தோன்றாமல் கலந்து கொண்டார்..


ஆனாலும், மனதிற்குள் தன் மகனை அழைக்கவில்லை யென்று கேள்விப்பட்டதிலிருந்து, அந்த வேதனை அவரை வாட்டியது..


சாமிக்கு அலங்காரம் செய்து கொண்டிருப்பதால் ,பூஜை தொடங்க இன்னும் சிறிது நேரமாகும், என்று பூசாரி சொன்னதால், தூயவன், மகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து கோவிலின் நுழைவாயிலை பார்த்தபடியே காத்திருந்தார்..அவரை அதிக நேரம் காக்க வைக்காமல் பாவினி வந்து சேர்ந்தாள்.


தந்தையை கண்டதும்,பல ஜென்மங்கள் பார்க்காமல் பிரிந்திருந்தது போல், ஓடோடி வந்து அணைத்துக் கொண்டாள்..


பாவினியைக் கண்டதும் குடும்பமே அவளை சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்து..நவிலோ,அவள் சொன்ன பரிசை எடுத்து வந்து யாரும் கவனிக்காத பொழுது அவள் கையில் கொடுத்தான்..


நவேந்தியோ,பாவினி வந்ததும் குறளும் வருவானோ?என்று கோவில் வாசலையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றார்..


பாவினி நவில் கொடுத்த பரிசை தந்தையிடம் கொடுத்து வாழ்த்து சொன்னாள்..


தூயவனும் மகளின் பரிசை, நன்றி சொல்லி ஆசையாக பெற்றுக் கொண்டவர்,அப்போதே அதைப் பிரித்துப் பார்த்தவருக்கு வியப்பும்,மகிழ்ச்சியும் பொங்கியது..


பாவினிக்கு,தந்தையின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியே சொல்லாமல் சொல்லியது.. அவள் தந்த பரிசு அவருக்கு எவ்வளவு பிடித்திருக்கிறதென்று.


வளர்பிறையோ ,கணவனின் ஆனந்தத்தைக் கண்டு, மகள் அப்படி என்ன தான் கொடுத்தாள், என்று பார்த்தவருக்கு கணவனின் சந்தோஷத்திற்கான காரணம் புரிந்தது..


கணவனுக்கு மிகவும் பிடித்த தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் புத்தகங்களைத் தான் பரிசாக கொடுத்திருந்தாள்..


நாவேந்தியோ, மகனைக் காணாமல் மருமகளிடம் வந்தவர்,"பவிம்மா நல்லா இருக்கீயடா .."என்று அன்பொழுக கேட்டார்..


பாவினியோ ,அப்போது தான் அவரை பார்த்தாள்..உடனே அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு.."நான் நல்லாயிருக்கேன் ஆண்டி..நீங்க எப்படி இருக்கீங்க.." என்றவளிடம்..


"இனிமேல் நான் ஆண்டி இல்லை.. உன் அத்தை..அதனால் அத்தைன்னு கூப்பிடுடா..என்றவர் தொடர்ந்து, "நான் நல்லா இருக்கேன் பவி .. குறள் வரலையா ..?"என்றவரிடம்..


"இல்லே அத்தே அவர் ஆபிஸ் போய்ட்டார்..நீங்க மட்டும் தான் வந்தீங்களா?" என்று கேட்டவளிடம்..


"கவினும் வந்திருக்கான்..அவன் அங்கே ஃபோன் பேசிட்டு இருக்கான் பாரு.." என்று கோவிலில் ஓர் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தவனை சுட்டிக் காட்டினார்.


ம்..! என்று மட்டும் இதழ்களில் புன்னகை தவழ சொன்னவள்,வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் போசாமல் நின்றாள்.


நாவேந்தியோ ,இவர்கள் பேச்சை கவனித்த படி நின்ற தூயவனிடம்.. "அப்படி என்ன தான் என் மருமகள் வாங்கி கொடுத்திருக்கா?கொடு ! நான் பார்க்கிறேன் .." என்று கேலியாக கேட்டுக் கொண்டே கை நீட்டியவரிடம் ..

தன் கையிலிருந்த புத்தகங்களை கொடுத்தார்..

நாவேந்தியோ, "வாவ் எல்லாமே உனக்கு பிடித்த புத்தகங்களாகவே இருக்கு.உன் பொண்ணு உன்னை நல்லா புரிந்து வச்சிருக்கா! நீ ரொம்ப லக்கி.." என்றவரிடம்.

தூயவனோ,பதிலே சொல்லாமல் மென்மையாக புன்னகைத்தார்..


தந்தையை பார்த்தபடியே பாவினியும், "அத்தே அப்பாவுக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் எப்போதும் பிடிக்கும் .."என்றாள்..

"ம்..! எனக்கு அது உன்னை பார்க்கும் போதெல்லாம் நன்றாக புரிந்தது. அப்பாவும்,பொண்ணும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி இருக்கீங்க.." என்று நாவேந்தி கூறியதைக் கேட்ட வளர்பிறை.. "அது உங்களுக்கு இப்பத் தான் தெரிகிறதா ? என்று சலித்துக் கொண்டே சொல்லவும் அங்கே ஒரு சிரிப்பலை பீறீட்டது.


சரியாக அந்த நேரம், கோவிலுக்குள் நுழைந்த குறள்நெறியனின் கண்களில் அது தப்பாமல் விழுந்தது.. அதைக் கண்டவனின் பி.பி. வழக்கத்திற்கு மாறாக எகிறி துடித்தது.. தன்னைத் தவிர எல்லோரும் ஒன்று கூடி, எப்போதும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற எண்ணமே.. அவன் மனதிற்குள் கோபத்தை மூட்டியது..


பாவினியோ,குறள்நெறியன் வருவதை அறியாமல், தன் தந்தையின் தோள்களில் சாய்ந்த படி "அப்பா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும்.." என்றாள்..


தூயவனோ, "என்னம்மா சொல்லு.." என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. "வினு.." என்று சத்தமாக பற்களை கடித்தபடி குறள்நெறியன் அழைத்தான்.


அவனின் சத்தத்தில் அனைவரும் தூக்கிவாரிப் போடத் திரும்பினார்கள்..


பாவினி வீட்டிலிருந்து கிளம்பிய அடுத்த நொடியே, வாட்ச்மேன் குறள்நெறியனை அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்லியிருந்தான்..


உடனே பாவினியின் அலைபேசிக்கு குறள்நெறியன் பலமுறை அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை.. அடுத்து, தன் பாட்டிக்கு அழைத்துக் கேட்டான். அவரோ, அவுங்க அப்பா பிறந்தநாளுக்கு, கோவில்லே ஏதோ பூஜைன்னு தான் சொன்னாப்பா.. எந்த கோவில்ன்னு எங்கிட்ட சொல்லலையே.." என்றவரிடம், அவனால் தன் கோபத்தைக் காட்ட முடியவில்லை..


என்ன செய்வதென்று சில வினாடிகள் யோசித்தான்.. மீண்டும் வாட்ச்மேனுக்கே அழைத்து எந்த கால்டேக்ஸி என்று கேட்டான்..


வாட்ச்மேனோ,கால்டெக்ஸி நம்பர் உட்பட முழு விவரத்தையும் கொடுத்தார்.அடுத்த நொடியே கால்டேக்ஸி ஆபிஸ்க்கு போன் செய்து ,அவனுக்கு தேவையான விவரத்தை பெற்றுக் கொண்டவன்,நேராக கோவிலுக்கு கிளம்பி வந்தான்..


பாவினியோ ,கண்களில் பயத்துடன் கணவனைப் பார்த்தாள்..இவனுக்கு நாம் இங்கு வந்தது எப்படி தெரியும்..?எதற்கு இப்போ இங்கு வந்திருக்கிறான்? என்று அவள் மனம் ! அவளையே, கேள்விகளால் துளைத்தெடுத்தது..


குறள்நெறியனோ, வேறு யாரையும்‌ ஏறெடுத்தும் பார்க்காமல் , "வினு கிளம்பு வேலை இருக்கு.." என்றான் அதிகாரமாக..


பாவினி என்ன சொல்வதென்று தெரியாமல், விழித்துக் கொண்டிருக்கும் போதே.. வளர்பிறை இடையில் புகுந்து.. "வாங்க மாப்பிள்ளே, மாமாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள்! அது தான் கோவிலில் சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.. பூஜையில் நீங்களும் கலந்துக்கோங்க.." என்று தன்மையாக கூறியவரிடம்..


"அழையா விருந்தாளியாக என்னால் எங்கேயும் கலந்து கொள்ளமுடியாது.. நான் வினுவை அழைத்துப் போகவே வந்தேன்.." என்றவனின் கோபம் தூயவன் உட்பட‌ அனைவருக்கும் நன்றாக புரிந்தது.


வளர்பிறையோ ,என்ன சொல்வதென்று தெரியாமல் கணவனைப் பார்த்து கண்களாலேயே 'நான் கூப்பிடச் சொன்னேனே நீங்க கேட்டீங்களா ?'என்று இறைஞ்சினார்..


தூயவனோ, தன் கெளரவதத்திலிருந்து கொஞ்சம் இறங்கி வந்து அவனிடம் , " இருந்து பூஜையை முடிச்சுட்டே போகலாமே.." என்றார்..


குறள்நெறியனோ, அவர் சொன்னதை காதில் வாங்காமல் ,பாவினியைப் பார்த்து .. "வினு இப்போ வரப்போறையா இல்லையா..?" என்று பற்களை கடித்தான்..


நாவேந்தியோ, அதுவரை அமைதியாக நின்றவர் ,மகனை சமாதனப்படுத்தும் நோக்கத்துடன், "குறள் இத்தனை பேர் சொல்றாங்களே !அதற்காகவாது இருக்கலாமே.." என்றவுடன்..


அடங்கா கோபத்துடன், "உங்க வேலை என்னவோ அதைப் பாருங்க .."என்றான்..


நாவேந்தியை அவமானப்படுத்தியதைக் கண்டவுடன், தூயவன் தன் பொறுமையை காற்றில் பறக்கவிட்டவர்.. "குறள் நீங்க செய்வதும்,பேசுவதும் கொஞ்சமும் சரியில்லை.."என்றார் கோபத்துடன்..


"ஓ..!அப்படியா,ரொம்ப நல்லது..உங்க அட்வைஸை கேட்க இங்கு யாரும் வரவில்லை..என்‌மனைவியை அழைத்துப் போகத்தான் வந்தேன்.."


"உங்களுக்கு மனைவியாகும் முன்னே, அவள் எனக்கு மகள் என்பதை மறந்து விடாதீங்க.."


"நான் மறக்கலையே..அது தான் நீங்களே சொல்லிட்டீங்களே..எனக்கு மனைவி ஆவதற்கு முன்பு தான் உங்களுக்கு மகளென்று..இப்போது அவள் பாவினி குறள்நெறியன் ..ஃசோ நீங்க உங்க எல்லையிலேயே நின்னுட்டீங்கன்னா? எல்லாருக்கும் ரொம்ப நல்லது.."என்றான் திமிராக..


தூயவனோ, கோபத்தில் கைகள் நடுங்க தன்நிலை மறந்து, "உங்களுக்கு என் பெண்ணை கல்யாணம் தான் பண்ணிக் கொடுத்து இருக்கேன்..ஒரே அடியாக தலைமுழுகலை.." என்றவுடன்..


வளர்பிறையும்,நாவேந்தியும் ஒரு சேர "கோவில்ல இருந்துட்டு இது என்ன பேச்சு.." என்று தூயவனைக் கடிந்து கொண்டார்கள்..


தூயவனோ, நாவேந்தியைப் பார்த்து, "உன் மகன் தான் என்னை பேச வைக்கிறார்.. இப்போது புரிஞ்சுச்சா ? நீ பெண் கேட்ட போது நான் ஏன் தரமறுத்தேன்னு.." என்றவரிடம்..


நாவேந்தியோ,'இப்போது இந்தப் பேச்சு வேண்டுமா?'என்று நண்பனிடம் கண்களாலேயே இறைஞ்சினார்..


குறள்நெறியனுக்கு,அவரின் பேச்சு அவனின் சினத்தை பலமடங்காக்கியது.


நவிலோ, அதுவரை பெரியவர்கள் பேசட்டும் என்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருநதவன்,குறள்நெறியனிடம் "சார் ப்ளீஸ், அக்கா பூஜை முடியும்வரை இருக்கட்டுமே.." என்று கொஞ்சலாக கேட்டான்..


குறள்நெறியனோ, அவன் சொன்னதை சட்டையே செய்யாமல்.. "வினு இப்போ வரையா ?இல்லையா? "என்றவன், அவள் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போனான்.


அதைக் கண்டு அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றனர்.


தூயவனோ, எல்லையில்லா கோபத்துடன் வேகமாக சென்று அவனின் வழியை மறைத்து நின்றார். அதே கோபத்துடன் குறள் நெறியனின் சட்டையை எட்டிப்பிடித்தவர், "உனக்கு என்ன திமிருந்தால் என் முன்னேயே என் பெண்ணை இப்படி இழுத்துப் போவாய்.." என்று கண்களில் அனல் பறக்க கேட்டார்..


பாவினி உட்பட அனைவருமே தூயவனின் செயலில் உறைந்து தான் போனார்கள்..


குறள்நெறியனோ, அவர் செயலில் திகைத்தாளும்,வழக்கமான தன் செருக்குடன் ,அவரின் கைகளை தன் சட்டையிலிருந்து எடுத்துவன், அவரின் காதருகே குனிந்து ,அவருக்கும் மட்டும் கேட்கும் படி.." மகளின் மீது வைத்திருக்கும் பாசம் உங்க கண்ணை மறைக்குது போல..மாமனாரேன்னு பார்க்கிறேன் இல்லைன்னா? என் மீது வச்சு இந்த கையை இல்லாமல் செய்திருப்பேன்..இதற்கே இவ்வளவு கோபபட்டால் எப்படி‌ மிஸ்டர் தூயவன்.. இனிமேல் தானே என் ஆட்டமே இருக்கு.! எந்த மகளை உயிராக நினைத்திருந்தீங்களோ! அவளை உங்களிடமிருந்து பிரிப்பேன்..நான் அனுபவித்த வலியில் கொஞ்சமாவது நீங்க அனுபவிக்க வேண்டாமா?"என்றவனிடம்..


கண்கள் சிவக்க, "ரொம்ப கனவு காணதே.. என் மகளை என்னிடமிருந்து பிரிக்கும் சக்தி எந்த கொம்பனுக்கும் இல்லை.." என்று கர்வமாக சொன்னவரிடம்.


"அதையும் பார்ப்போம்.." என்றான் வீராப்பாக..


அப்போது போன் பேசிக் கொண்டிருந்த கவினின்‌ பார்வையில் இவர்களின் வாக்குவாதம் படவும் ,போனைக் கட்செய்துட்டு, ஓடோடி வந்து தன் தாயிடம் என்ன பிரச்சினையென்று விசாரித்தான்..


நாவேந்தியோ, சுருக்கமாக நடந்ததை சொல்லவும், "ஓ..!"என்று கவலையாக கேட்டவன்..நேராக தன் அண்ணனிடம் சென்று..


"அண்ணா, ப்ளீஸ் அண்ணி கொஞ்ச நேரம் இருந்து பூஜையை முடித்து விட்டு போவதில் உங்களுக்கு என்ன சிரமம்.." என்று ஆதங்கத்துடன் கேட்டவனை தீப்பார்வை பார்த்த குறள்நெறியன்.. தன் ஆள்காட்டி விரலை எடுத்து தன் இதழ்கள் மீது வைத்து 'பேசாமல் போ' என்று ஜாடையாக சொன்னான்..


நாவேந்தியோ, அவன் கவின்னையும் அவமானப்படுத்தியதை பொறுக்க முடியாமல் ,மகனிடம் கோபமாக வந்தவர்..


"இது என்ன பழக்கம்! யார் பேச்சையும் கேட்காத திமிர்தனம் .."என்றவுடன்.


"ஆமாம், நீங்க சின்ன வயதிலிருந்து ஊட்டி வளர்த்த திமிர் தான் .."என்று நக்கலாக சொல்லி அவர் வாய்யையும் அடைத்தான்..


பாவினியோ, இனியும் தான் அமைதியாக இருந்தால், இவன் எல்லை கடந்து போவன் என்று நினைத்தவள்,


தன் தந்தையைப் பார்த்து, "அப்பா காலையிலேயே அவர் ஒரு பங்ஷனுக்கு போகனும்ன்னு சொன்னார்.. நான் தான் அதற்குள் இங்கு பூஜையையும் அட்டன் செய்துட்டு போய்டலாம்ன்னு வந்தேன்.. பூஜை வேறு லேட்டாகும் போல.. உங்களை பார்த்தே எனக்கு ரொம்ப சந்தோஷம்..நான் அவர் கூட பங்ஷனுக்கு போறேன்..நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க..நான் இல்லாட்டி என்ன? நீங்க எல்லாம் பூஜையை நல்லபடியாக முடிங்க .. நாம் இன்னொரு நாள் இதோ போல் சேர்ந்து கலந்துக்கலாம்.." என்றவள், குறள்நெறியன் அருகில் வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டு "போலாமா?"என்றாள்..


குறள்நெறியனோ, பதிலே பேசாமல் அவளை வியப்பாக பார்த்தான் ..

அங்கிருந்த அனைவருக்குமே, பாவினி பிரச்சினையை சமாளிக்க தான், பொய் சொல்கிறாள் என்று நன்றாக புரிந்தது..


தூயவனோ, மகளின் நிலையை எண்ணி மனதிற்குள் கலங்கியவர் அதன் பிறகு எதுவுமே பேசலை..


குறள்நெறியனோ, யாரிடமும் ஒரு வார்த்தையும் சொல்லாமல் வீம்புடன் சென்றான் ..


அவன் சென்றதும் பாவினி தன் தந்தையிடம் ஓடி வந்தவள்,அவரின் கைகளை மென்மையாக பற்றிக் கொண்டு, "அப்பா நீங்க இன்னைக்கு எதை நினைத்தும் கவலைப்படக் கூடாது. நான் பார்த்துக்கிறேன்..ஒன்ஸ் அகைன் ஹேப்பி பர்த்டேப்பா.." என்றவள் எல்லோரிடமும் தலையை மட்டும் ஆட்டி கண்ளாலேயே விடை பெற்றுச் சென்றாள்..


தந்தையின் பாசத்திற்கும், கணவனின் பழிவெறிக்கும் இடையில் மங்கையவளின் நிலை? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் அடுத்த இரண்டு அத்தியாயங்கள் (23,24) போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்.. விரைவில் அடுத்த அத்தியாத்துடன் வருகிறேன்..
நன்றி
இனிதா மோகன்


 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 24

குறள்நெறியனோ , கோபத்துடனேயே தன் காரின் மேல் சாய்ந்தபடி, பாவினிக்காக காத்திருந்தான்.


அமைதியாக, அவன் அருகில் வந்து நின்ற பாவினியிடம் எதுவும் பேசவில்லை.. அவள் புறம், கார்க் கதவை மட்டும் திறந்து விட்டான். அவள் ஏறும் வரைப் பொறுத்து, அதன் பின் ஏறிக் காரை ஸ்டார்ட் செய்தான்..


பாவினியோ, தன் கோபததையெல்லாம் அடக்கிக் கொண்டு, அவன் பக்கம் திரும்பாமல் வெளிப்புறமே பார்த்து வந்தாள்..


குறள்நெறியனோ ,சிறிது தூரம் செல்லும் வரை பேசாமல் காரை ஓட்டியவன், அதிக ஆள் நடமாட்டமில்லாத இடம் பார்த்து ,ஒதுக்குபுறமாக காரை நிறுத்தினான்..


பாவினியோ , எதுக்கு காரை நிறுத்துறான்? என்று புரியாமல் அவனைத் திரும்பி பார்த்தாள்..


அவனோ, அவளின் பார்வையை உள்வாங்கிய படியே .. " வினு இப்பத்தான் நீ நல்ல பொண்டாட்டி ! இப்படித் தான் எனக்கு பிடித்த மாதிரி நடந்துக்கனும் .. குட் கேர்ள் ! " என்றவனிடம்.



"உங்களுக்காக ஒன்றும் நான் வரவில்லை..என் அப்பாவுக்காகத் தான் வந்தேன்..நல்ல நாளில் உங்களால் அவர் மூடு கெட வேண்டாமே? என்று நினைத்தேன்.. அதுமட்டுமில்லை, இன்னும் சில நிமிடங்கள் அங்கே இருந்திருந்தால்? அப்பா கண்டிப்பாக உங்க பல்லை தட்டியிருப்பார்.." என்று கோபமாக சொன்னாள்..


அவனோ, அவளின் பதிலைக் கேட்டு சத்தமாக சிரித்தான்..


பாவினியோ, அவன் சிரிப்பதை மனதிற்குள் கிலியுடன் பார்த்தாள்..


குறள்நெறியனோ, அவளின் பயத்தை பார்த்தபடியே.. "உங்க அப்பா என் மீது கைவைக்கும் வரை, என் கை என்ன பூபறிக்குமா?..இன்று என் சட்டையை பிடித்ததற்கே? அவரை உண்டு, இல்லைன்னு செய்திருப்பேன்.. மாமனாராச்சேன்னு பல்லைக் கடித்துட்டு பேசாமல் வந்தேன்.."என்றவன், "ஆனால், உனக்கு ரொம்பத் தான் திமிர் டி.." என்றவனைப் புரியாமல் பார்த்துவளிடம்..


" என்னிடம் சொல்லாமல் வெளியில் போவது இதுவே உனக்கு கடைசியாக இருக்கட்டும்..இனியொரு முறை இப்படிச் செய்தீனா? நான் வேறு மாதிரி நடக்க வேண்டும்.." என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான்..


அவளோ, "உங்களைக் கல்யாணம் பண்ணியதற்காக, நான் உங்களுக்கு அடிமை இல்லை.. நான் வெளியில் போவதற்கு கூட சுதந்திரமில்லையா?இது என்ன அராஜகம்? கோயில்லையும் , வேண்டுமென்றே.. நான், அங்கே இருக்க கூடாதுன்னு தானே, இப்படி வம்படியா கூட்டிட்டு வந்தீங்க.."


"ஆமாம், அப்படித் தான் வச்சுக்கோ.. என்று விட்டேத்தியாக பதில் சொன்னான்.."


பாவினியோ," அது தான் ஏன்னு கேட்கிறேன்.."


"உனக்கு சொன்னாப் புரியாது.."


"முதலில் சொல்லுங்க புரியுதா?புரியலை யான்னு அப்புறம் பார்க்கலாம்.."


"ம்..! நீ அவரைப் பிரிந்து எவ்வளவு கஷ்டபடறேன்னு அவருக்கு தெரியனும்.. அது மட்டுமில்லை, பிரிவின் துயரம் அவருக்கும் புரியனும்.."


"எதற்கு அவருக்கு புரியனும்..அவர் பிரிவில் கலங்கினால் உங்களுக்கு என்ன கிடைக்குது.."


"ஏன் அவருக்கு புரியனுமா?அவரால் தான் நான் இன்று இப்படி ஒரு நிலையில் இருக்கேன்.."


"எனக்கு சுத்தமா தலையும் புரியலை..வாலும் புரியலை.."


"புரியலையா? உனக்கு எப்படி டி புரியும்.." என்றவன், அவளின் கன்னத்தை அழுந்த பற்றிய தன் புறம் இழுத்தவன்,தன் விழிகளை அவள் விழிகளில் கலந்த படியே, "நீ போதும் ..போதும்கிறயளவு ,அம்மா, அப்பா பாசத்தை அனுபவிச்சுருக்கே.. ஆனால், நான் ? அதற்கெல்லாம் காரணம் உன் அப்பா தான்.."என்றவன், கோபத்துடன் பற்றியிருந்த அவள் கன்னத்திலிருந்து கையை எடுத்தவன்,காரை எடுத்தான்.



பாவினியோ, அவன் அழுந்த பற்றியதில் கன்னத்தில் ஏற்பட்ட வலியை விரல் கொண்டு நீவியபடியே ,அவனை யோசனையுடன் பார்த்தாள்..



அவனின் கோபம் கார் ஓட்டுவதில் தெறிந்தது. கார் அவன் கைகளில் பறந்தது. பாவினி, உயிரை கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்..அளவு கடந்த வேகத்தில் வீடு வந்து சேர்ந்தான்..


வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் வியப்பாக பார்த்த மெய்யம்மையிடம், பதில் எதுவும் சொல்லாமல், இருவரும் தங்கள் அறைக்கு வந்து விட்டார்கள்.


குறள்நெறியனோ, அறைக்குள் வந்ததும்.. பாவினியை நிறுத்தி, " வினு இனிமேல் எனக்கு பிடிக்காத காரியத்தை செய்ய மாட்டேன்னு நினைக்கிறேன்.. அப்புறம் இன்னொரு விசயம்..இனி எங்கே போனாலும் கால்டாக்ஸியில் போகும் வேலை வைத்துக் கொள்ளாதே..வீட்டில் எப்போதும் காருடன் ஒரு டிரைவர் இருப்பார்.. அவருடன் போய்க் கொள்.." என்றான்..


அவளோ ,பதிலே பேசாமல் இருக்கவும் அவனுக்கு எரிச்சல் வந்தது..


"என்னடி நான் சொல்வது புரிஞ்சுச்சா? இல்லையா? வாயைத் தொறந்து பேசு.." என்றவனிடம்..


"என்ன பேசறது? எல்லாம் உங்க இஷ்டத்திற்குத் தான் நடக்கனும்ன்னு சொல்லும் போது நான் என்ன பேச.. ?எல்லாம் என் தலை எழுத்து ! கல்யாணமாகிட்ட பெண்கள் பிறந்த வீட்டையே மறந்துறனும் அப்படித் தானே.."


"அப்படி யாரு‌டி சொன்னா.. நீ தூயவன்‌ பெண்ணாக பிறந்தது தான் தவறு.."


" அவர் பெண்ணாக நான் பிறந்தது ! நான் செய்த புண்ணியம்!"

"அப்போ அனுபவி.."

"என் அப்பாவுக்காக நான் எதையும் தாங்கிக் கொள்வேன்.." என்றவளை தன் புறம் வேகமாக இழுத்து நிறுத்தியவன், "அதையும் பார்ப்போம்.. நீ இப்படிச் சொல்லச் சொல்லத் தான்.. எனக்கு உங்கப்பா மீது அளவு கடந்த கோபம் வருது.." என்றான்..


அவளோ, "ஏன் உங்களுக்கு இத்தனை வக்கிரம்? நான் சந்தோஷமா இருந்தால் உங்களுக்கு பிடிக்காதா?"


"உன் அப்பா சந்தோஷமா இருந்தால் பிடிக்கலை.. ஆத்திரமா வருது.. அவர் மட்டும் குடும்பத்துடன் இருக்கனும்.ஆனால், நான்‌ தனிமரமா நிற்கனுமா?"என்றவனிடம்..


"கொஞ்சம் புரியும் படி சொல்லுங்களே.."


"இப்போ எனக்கு நேரமில்லை..ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு .. நான் போய்ட்டு வரேன்.." என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல் ,கிளம்பி அறையை விட்டு வெளியில் சென்றான்..


பாவினியோ, அவன் சென்ற பின் சிறிது நேரம் சிலையாக நின்றவள், பின் தன் அலைபேசியை கைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்தாள்..


அது ,சைலண்ட் மோடில் இருந்ததை அப்போது தான் கவனித்தாள்..


அதுமட்டுமின்றி குறள்நெறியனிடமிருந்து ஏகப்பட்ட தவறிய அழைப்புகள் இருந்தது..


நாம் அழைப்பை எடுக்காததால் தான் கோவிலுக்கு வந்தானா? என்று யோசித்தாள்.


'இவனுக்கும், அப்பாவுக்கும் அப்படி என்ன தான் பிரச்சினை..அப்பாவால் இவன் வாழ்க்கைக்கு என்னாச்சு..ஏன் நாவேந்தி அத்தையை எப்போதும் இவன் மதிக்காமல் நடக்கிறான்? 'என்று அவளுள் பல கேள்விகள் தோன்றியது.


இதற்கெல்லாம் பதில் ,தன் தந்தையிடம் தான் இருக்குமென்று அவளுக்கு புரிந்தது. ஆனால், எப்படி தெரிந்து கொள்வது? என்று சிந்தித்தாள்..


மதியம் வரை அதே யோசனையுடன் இருந்தவள், பின் தன் தாய்க்கு அழைத்து "பூஜை முடிந்ததா?" என்று கேட்டாள்..


வளர்பிறையோ, அவள் சென்ற பின் கோவிலில் நடந்ததை சுருக்கமாக சொன்னவர், அவளின் நலத்தையும் மறவாமல் விசாரித்துக் கொண்டார்..


பாவினியோ, "அப்பா எப்படி இருக்கிறார்.?" என்று கேட்டவள், தந்தையிடம் அலைபேசியை கொடுக்கச் சொல்லிப் பேசிய பின்பு தான் நிம்மதியானாள்.


மெய்யம்மையோ, இவள் அறையிலேயே அடைந்து கிடப்பதைக் கண்டு , பேரனால் ஏதாவது பிரச்சினையா? என்று மனதிற்குள் பயந்தவர்,பாவினியிடம் வந்து "பூஜை நல்லபடியாக முடிஞ்சுச்சா? "என்று கேட்டார்..

பாவினியோ, எதையும் காட்டிக் கொள்ளாமல், "நல்லபடியா முடிஞ்சுச்சுப் பாட்டி.." என்றவளிடம்..

"அப்பாடா, எனக்கு இப்ப தான் நிம்மதியாக இருக்கு. குறள் ,என்னிடம் எந்த கோவிலுக்கு போய் இருக்கான்னு ,கோபமாக கேட்ட போது நான் கொஞ்சம் பயந்தே போய்ட்டேன்.." என்றவர், அவளுக்கு உணவை வரவழைத்து உண்ணச் சொல்லியவர்,அவள் ஓய்வெடுப்பதற்காக தனிமை கொடுத்து விலகிச் சென்றார்..



பாவினியோ,மெய்யம்மை சென்ற பின்,குறள்நெறியனிடம், எப்படியாவது பிரச்சினையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று, வழக்கத்திற்கு மாறாக அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள்..


ஆனால் ,அவனோ, அன்று இரவு நெடுநேரம் கழித்துத் தான் வீட்டுக்கு வந்தான்.. அன்று மட்டுமின்றி அதன் பிறகு வந்த நாட்களிலும், அவன் காலை நேரமாக அலுவலகம் சென்றால் ..இரவு தாமாதமாக வருவதையே வழக்கமாக்கிக் கொண்டான்..


பாவினிக்கு அவனிடம் பேசுவதற்கான சூழலே அமையவில்லை..


எப்போதும், சுறுசுறுப்பாக இருப்பவனின் முகத்தில் இப்போது சோர்வின் ரேகைகள் அதிகமாக தெரிந்தது.. வீட்டில் இருக்கும் நேரம் மிகக் குறைவானது..


பாவினியோ, தன்‌ மனச்சுமையையெல்லாம் தன் தோழி எழிலியிடம் அலைபேசியில் கொட்டித் தீர்த்தாள்.


நாவேந்திக்கும், குறள்நெறியனுக்கும் என்ன பிரச்சினை ? இதில், தன் தந்தை மீது அவன் ஏன் கோபப்படுகிறான்? என்று யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வதன்று, அதே சிந்தனையுடனேயே இருபத்தி நான்கு மணி நேரமும் சுற்றிக் கொண்டிருந்தாள்..


அன்றும் அதே யோசனையில் இருக்கும் போது நிலனிடமிருந்து அழைப்பு வந்தது..


பாவினயோ, இவன் எதற்கு நம்மை அழைக்கிறான் ..? ஒரு வேளை குறளுக்கு ஏதாவதுபிரச்சினையா? என்று தன்னையும் அறியாமல் கணவனுக்காக துடித்தவள், அவசரமாக அழைப்பை ஏற்றாள்..


அந்த பக்கம் நிலனோ, அவளிடம் நலம் விசாரித்து விட்டு.. அழைத்த காரணத்தை மெதுவாக சொன்னான்.. "மேடம் உங்ககிட்ட‌‌ ஒன்னு சொல்லனும்.. உங்களுக்கு தெரியுமான்னு தெரியலை.. சாருக்கு இப்போ ரொம்ப அதிக வேலை.. அதுவும், உங்க அப்பா வேலையிலிருந்து போனாதிலிருந்து சாருக்கு வேலைப் பளு பலமடங்காகிருச்சு.. சரியாக சாப்பிடுவதுமில்லை..ரொம்ப கோபம் வேறு வருகிறது.. இதெல்லாம் அவர் ஹெல்த்க்கு நல்லதில்லை ..நீங்க தான் கொஞ்சம் அவரை பார்த்துக்கணும்..நான் அதிகப்பிரசங்கித்தனமாக பேசறேன்னு நினைச்சாலும் பரவாயில்லை..அவர் நல்லா இருந்தா தான், பல பேர் வாழ்க்கை நல்லா இருக்கும் ..ப்ளீஸ் நீங்க தான் ஏதாவது செய்து சாரை பழையபடி மாத்தனும்.. "என்று கூறியவன் அவள் பதிலைக் கூடக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்தான்..


நிலன், அதிகப்பிரசங்கித்தனமாக குறள் நெறியனைப் பற்றி சொன்னாலும், தன் முதாலாளி மேல் கொண்ட உண்மையான அக்கறை அதில் நன்றாகவே தெரிந்தது..


பாவினிக்கோ, என்ன செய்வதென்றே தெரியவில்லை..?தன்னால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியும் அவளை குடைந்தது..


அன்று மாலை தோட்டத்தில் சிறிது நேரம் நடந்து வரலாம் ..என்று சென்றவளின் செவிகளில், செங்கோடனும்,மெய்யம்மையும் குறள்நெறியனைப் பற்றி மிகவும் கவலையாக பேசிக் கொண்டு இருந்தது வேறு, அவள் காதில் விழுந்து அவளை மேலும் கலவரமாக்கியது..


இன்று, எப்படியாவது கணவனுடன் பேசியே தீரவேண்டுமென்று , இரவு குறள்நெறியன் வரும்வரை, உறங்காமல் விழித்தே இருந்தாள்.


அவன் வந்ததும் திருமணம் ஆனாதிலிருந்து கேட்காத வார்த்தையை மனைவியாக! அவன் உடை மாற்றி வரும் வரை காத்திருந்து, "சாப்டீங்களா.." என்று கேட்டாள்..


அவளின் கேள்வில் குறள்நெறியன் ஒரு நிமிடம் திகைத்தவன்! பின் ஆச்சரியமாக அவளை பார்த்தபடியே‌, "என்ன‌ இன்னைக்கு மேடம் அதுசியமாக என் மீது அக்கறை எல்லாம் படறீங்க போல.." என்றவனிடம்..


"ரொம்ப வேலையா? இப்போதெல்லாம் ரொம்ப சீக்கிரமா போய்ட்டு... லேட்டாத் தான் வரீங்க.. அது தான் கேட்டேன்.."


"என்ன‌ செய்வது! என்னை இப்படி ஓட வைத்து, எல்லாப் புண்ணியத்தையும் உன் அப்பா தானே கட்டிக்கிறார்.. "என்றவனிடம் என்னச் சொல்வதென்று தெரியாமல், உதட்டை கடித்தபடி அமைதியாக இருந்தாள்..


அவனோ, "செம டையேடா இருக்கு.." என்றபடி படுத்தவன் ,அடுத்த சில நிமிடங்களிலேயே உறங்கியும் விட்டான்..


பாவினிக்குத் தான் உறக்கம் வரவில்லை..அசதியில் அடித்து போட்டது போல் தூங்கும்அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின், மனதிற்குள் 'என்ன செய்து இவன் வேலை பளுவை குறைப்பது.." என்ற‌ யோசனையே ஓடியது..


தன் வாழ்க்கை இப்படி விடை தெரியாத விடுகதையாகு மென்று அவள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.. இனி இவனுடன் தான் நம் வாழ்க்கை என்றாகிப் போன பின் ,சிலதை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். என்று நினைத்தாள்.


சில கேள்விகளுக்கு ,தன் தாயுக்கு பதில் கட்டாயம் தெரிஞ்சிருக்கும் ..அம்மாவை இவனுக்கு தெரியாமல் எப்படியாவது சந்தித்து கேட்கனும், என்று யோசித்த படியே படுத்திருந்தவள், அப்படியே உறங்கிப் போனாள்..


நாளைய விடியல் அவளுக்கு என்ன வைத்து கத்திருக்கோ? யார் அறிவார்..


மணவாளனின் மனக்காயத்தை அறிவாளா? இல்லை காயங்களுக்கு தானே மருந்தாவளா? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
அடுத்த இரண்டு அத்தியாயங்கள் (23,24) போட்டு இருக்கேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்.. விரைவில் அடுத்த அத்தியாத்துடன் வருகிறேன்..
நன்றி
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 25

பாவினி, என்றுமில்லாமல் அன்று குறள்நெறியனுக்கு முன்பே எழுந்தவள்,ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவனை சில நொடிகள் பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள்..

அவனிடம் அசைவு தெரியவும், அவசரமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்..

அவனும் எழுந்து அலுவலகம் செல்லத் தயாராகும் வரை பொறுமையாக இருந்தாள்..

அவன், கண்ணாடி முன்பு நின்று ,தலை வாரிக் கொண்டு இருக்கும் போது, அவன் அருகே சென்று நின்றவள் தயங்கிய படியே, " "வந்து..வந்து உங்ககிட்ட ஒன்னு கேட்கனும் கோபப்பட மாட்டிங்க தானே?"என்றவளிடம்..

"அது நீ சொல்லும் விசயத்தைப் பொறுத்து .."என்றவனிடம்..

" என் கல்லூரித் தோழி ஒருத்தியை சந்திக்கனும்,அது தான் வெளியில் போகலாம்னு இருக்கேன்.." என்றவளை சந்தேகமாக பார்த்தவன் ..

"ஏன் வெளியில் போகனும் ?நம் வீட்டிற்கே வரச் சொல்லி பார்க்கலாமே.."

"இல்லை நானும் வீட்டிற்குள்ளேயே இருக்கேன்.ரொம்ப போர் அடிக்குது..அது தான், வெளியில் போன மாதிரியும் இருக்கும்..அவளையும் பார்தத மாதிரி இருக்குமேன்னு கேட்டேன்.." என்றவளிடம்..


"ஓ..!சரி அன்னைக்கு போல் ஃகால்டேக்ஸியில் போகதே..டிரைவரோடு போ .."என்றவன், தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான்.


பாவினியோ ,"டிபன் சாப்பிடலையா? சாப்பிட்டு போங்களே.." என்று தன்னையும் அறியாமல் கூறியவள், சட்டென்று உதட்டைக் கடித்துக் கொண்டாள்..


அவனோ, அவள் அக்கறையாக சொன்னதில் ஒரு வினாடி வியந்து பார்த்தவன்,"டிபன் சாப்பிட நேரமில்லை . முக்கியமான கிளையண்ட்யுடன் மீட்டிங் இருக்கு..அவருடனேயே சாப்பிட்டுக்கிறேன்..நீ எத்தனை மணிக்கு போறே? எனக்கு மெஸேஜ் மட்டும் பண்ணு! பார்த்து போய்ட்டு வா.." என்று கூறிவிட்டு கதவு வரை சென்றவன், திரும்பி வந்து தன் ஃபர்சிலிருந்த டெபிட் ஃகார்டை எடுத்து, அவள் கையில் திணித்து விட்டு, "தேவைப்பட்டால் யூஸ் பண்ணிக்கோ .."என்றவன், அவள் பதில் சொல்லும் முன்னே சென்று விட்டான்..



பாவினியோ ,கையிலிருந்த டெபிட் ஃகார்டை பார்த்தபடியே சில நொடிகள் சிலையாக நின்றாள்..எப்படி அதற்கு ரியேக்ட் செய்வதேன்றே அவளுக்கு தெரியவில்லை ..அது தனக்கு தேவைப்படாதென்று உறுதியாக நம்பியவள் ,அதை தன் ஃபர்சில் பத்திரப்படுத்திக் கொண்டாள்..


மனதிற்குள் 'ஹப்பா எப்படியோ பர்மிஷன் வாங்கியாச்சு.இனி அம்மாவுக்கு அழைத்துச் சொல்ல வேண்டும் ..'என்று எண்ணியவள் , தன் தாயை அலைபேசியில் அழைத்தாள்..


மகளின் குரலைக் கேட்டவுடன், வளர்பிறையும் மகிழ்ச்சியுடன் பேசினார்.. தந்தை பற்றி விசாரித்தவளுக்கு, தாயின் பதில் !சிறு அதிர்ச்சியையும்,வியப்பையும் கொடுத்தது..


மனதின் ஓரத்தில் குறள்நெறியனுக்கு தெரிந்தால், 'தைய, தக்கன்னு குதிப்பானே !' என்ற பயமும் மனதில் பசையாக ஒட்டிக் கொண்டது..


பாவினி பயம்படுமளவு தான் விசயம் பெரிதாக இருந்தது.. தூயவன் வேலையை விட்டது நாவேந்திக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது..


தூயவன், நாம் என்ன சொன்னாலும், மறுபடியும் அங்கே வேலைக்கு போகமாட்டார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்..


அதுவுமில்லாமல் அவருக்குமே அவரை குறள்நெறியனிடம் மறுபடியும் வேலைக்கு அனுப்புவதில் விருப்பமில்லை..அதனால், நேயவாணனிடம் சொல்லி.. அவரின், கன்ஸ்டெக்ஷன் கம்பெனியில் தூயவன் சேர்வதற்கு ஏற்பாடு செய்தார்..


நேயவாணனே, நேரில் வந்து தூயவனை அழைக்கவும் ..தூயவனால் மறுப்பு கூற முடியாமல், அவர்களின் கம்பெனிக்குச் செல்ல தொடங்கினார்.. அவருக்கு ஃபீல்டு வொர்க் கொடுக்காமல், அக்கோண்ட்ஸ் பொறுப்பை கொடுத்து அலுவலகத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொண்டார்..


இந்த விசயத்தை வளர்பிறை மூலம் கேள்விப்பட்ட பாவினி, குறள்நெறியனுக்குத் தெரிந்தால் நிச்சயம் பிரச்சினை வருமென்று தான் பயந்தாள்.. இருந்தாலும், தாயிடம் அதைக் காட்டிக்கொள்ளாமல்,"அம்மா நான் உங்களை உடனே பார்க்க வேண்டும்.. எங்கு சந்திக்கலாம்.." என்று கேட்டாள்..


வளர்பிறையோ, "இது என்ன கேள்வி? வீட்டுக்கு வாம்மா.." என்றவுடன்..

"வீட்டிற்கு வேண்டாம்.. வெளியில் எங்காவது சந்திக்கலாம்.." என்று மகளிடம்..


வளர்பிறை யோசனையுடனேயே மறுப்புச் சொல்லாமல் ,மகளை கோவிலுக்கு வரச் சொன்னார்..


பாவினி,குறள்நெறியனிடம் சொன்ன பொய்யையே ..மெய்யமையிடமும், சொல்லிவிட்டு தாயை சந்திக்கச் சென்றாள்..


வளர்பிறை வரச்சொல்லியிருந்த, கோவிலுக்கு பக்கத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் ,டிரைவரை கொண்டு விடச் சொல்லி, பாவினி இறங்கி கொண்டாள்..


டிரைவரிடம், "நான் திரும்பி வரும் வரை இங்கேயே இருங்கள்.. "என்று கூறிவிட்டு, ஷாப்பிங் மாலின் அருகிலிருந்த கோவிலுக்கு வந்தாள்..


கோவிலில் அதிக கூட்டமில்லை..அது ஒரு அம்மன் கோவில் ..மனதிற்கு இதம் தரும் வகையில் மிகவும் அமைதியாக இருந்தது..


டிரைவரிடம் கோவில் அருகேயே, காரை நிறுத்தச் சொல்லியிருக்கலாம்.. ஆனால், அவர் குறள்நெறியனிடம் போட்டுக் கொடுத்து விட்டால்? தேவையில்லாத பிரச்சினை என்று எண்ணித் தான் ஷாப்பிங் மாலில் விடச் சொன்னாள்.. அதுவும், அந்த ஷாப்பிங் மாலில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்..அதனால், தேடினாலும் இவளை கண்டுபிடிப்பது கஷ்டம் என்று நினைத்தே அங்கே இறங்கினாள்..


பாவினி,சிலமணித் துளிகள் தாயுக்காக காத்திருந்தாள்.. அந்த நேரத்தில் குறள்நெறியனுக்கு ,தான் வெளியில் வந்ததை மெஸேஜ் மூலம் தெரிவித்தாள்.


வளர்பிறையும் அதிக நேரம், மகளைக் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தார்..

பாவினியைப் பார்த்ததும், "பவிம்மா நீ வந்து ரொம்ப நேரமாச்சா டா..?சரியான டிராஃபிக் ..அது தான் லேட்டாகிடுச்சுமா.." என்றவரிடம்..


"பரவாயில்லைம்மா, நானும் இப்பத் தான் வந்தேன்.. நீங்க எதில் வந்தீங்க?" என்று கேட்டபடியே ஓர் ஓரமாக இருவரும் அமர்ந்தனர்.


வளர்பிறையோ,"ஆட்டோவில் தான் வந்தேன் ..ஏம்மா?" என்றார்.


"ம்..! இப்படி வேர்த்து, விறுவிறுத்து வந்திருக்கீங்களே ?அது தான் கேட்டேன் .."


"ஓ..! வெயில் ஓவராச்சே, அது தான் ..எதுக்கும்மா என்னைப் பார்க்கனும்ன்னு சொன்னே ..நீ வந்தது மாப்பிளைக்குத் தெரியுமா?‌"


"இல்லமா..தெரியாது! காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்யைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்.."


"எதுக்குமா பொய் சொல்றே ?இது என்னப் புது பழக்கம் ? இப்படி திருட்டுத்தனமாக பார்க்க வேண்டிய அவசியமென்ன? அவருக்கு தெரிந்தால், உன்ககுத் தானே தேவை இல்லாத பிரச்சினை.."


"ம்மா வேறு வழியில்லை..உங்களை பார்க்கிறேன்னு சொன்னா ..?அவர் விட மாட்டார்.."


"ஏன் தான் அவர் இப்படி எங்களை வெறுக்கிறாரோ தெரியலை..?"


"அதைப் பற்றி பேசத்தான் உங்களை வரச்சொன்னேன்.."


"என்ன பேசனும்.?"


"அம்மா நாவேந்தி ஆண்டிற்கும் ,குறளுக்கும் என்ன பிரச்சினை..இதில் அப்பா என்ன செய்தார்.." என்று கேட்ட மகளை ஒரு நிமிடம் திகைப்பாக பார்த்தார்..


வளர்பிறை ,மகள் கேட்டதற்கு பதில் சொல்லாமா?வேண்டாமா? என்று யோசித்தவர்.. அடுத்த நொடி, அவளுக்கு தெரிவது அவசியமென்று நினைத்தார்..


ஒரு நெடிய பெருமூச்சுடன் ,பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை மகளிடம் சொல்ல ஆரம்பித்தார்..


கணவன் மூலம் அறிந்ததையும்,தான் நேரில் பார்த்து அறிந்ததையும் கண்கலங்க சொன்னார்..


பாவினியோ, அனைத்தையும் கேட்டவள்,மீள முடியாத அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனாள்..


நாவேந்தியின் நிலையை நினைத்தவளுக்கு, கண்ணீரை அடக்கவே முடியலை..என்ன மாதிரியான பெண்!..இப்படியும் இருக்க முடியுமா? என்று எண்ணியவளுக்கு ,நாவேந்தியின் மீது அளவு கடந்த மரியாதையும், அன்பும் மனதில் ஊற்றாக பெருகியது..


அதே நேரத்தில் குறள்நெறியனை பற்றி நினைத்தவளுக்கும், நெஞ்சின் ஓரம் ஈரம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.. அவனும் பாவம் ! என்று முதன்முதலாக கணவனைப் பற்றி நல்லவிதமாக நினைத்தாள்..


அவனுக்கு நடந்த உண்மை தெரியாமல், எல்லாரிடமும் கோபப்படுகிறான் என்று புரிந்து கொண்டாள்..


அவன் தன்னிடம்,முந்தைய நாள், அவனின் வேதைனையை சொல்லியதில் இருந்த உண்மை !அவளுக்கு மனதில் வலியை உண்டாக்கியது..


ஆனால், இதில் இவன் ஏன் அப்பாவின் மீது கோபப்படுகிறான்?ஒரு வேளை, இதற்கெல்லாம் அப்பா தான் காரணமென்று தவறாக புரிந்து கொண்டானா?என்று சரியாக யோசித்தாள்..


வளர்பிறையோ, தான் சொன்னதைக் கேட்டு கண்களில் நீர் வடிய அமர்ந்திருந்த மகளைக் கண்டு ஒரு நொடி கலங்கித் தான் போனார்..


" பவிம்மா நீ வருத்தப்படாதேடா ..எல்லாம் அவரவர் தலைவிதி படிதான் நடக்கும்! நாம் என்ன செய்ய முடியும்.." என்றவரிடம்..


"விதியை மதியால் வெல்ல முடியும்.. நடந்ததை மாற்ற முடியாது..ஆனால், இனி நடக்கப் போவதை ..நல்லதாக மாற்ற முடியும்.. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.." என்றவள் தன் திட்டத்தை தாயிடம் சொன்னாள்..


வளர்பிறையும் மகள் சொன்னதை கேட்டு இது நடக்குமா? என்று சந்தேகமாக கேட்டவரிடம்..


"நடக்கும் ! என்னால் முடியும் !எனக்கு நாவேந்தி ஆண்டி முகத்தில் சிரிப்பையும்,சந்தோஷத்தையும் பார்க்க வேண்டும்..அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. "
என்றவளின் ,கண்களில் தெரிந்த நம்பிக்கை! வளர்பிறையையும் தொற்றிக் கொண்டது.!


"பவிம்மா ,எனக்கு மாப்பிள்ளையை நினைத்தால் , கொஞ்சம் பயமா இருக்கு.." என்றவரிடம்..


"அதை நான் பார்த்துக் கொள்கிறேன்..நான் தூயவன் பொண்ணும்மா.. எதற்கும் அஞ்ச மாட்டேன்.." என்றவளின் தைரியத்தைக் கண்டு ,வளர்பிறையும் பெருமிதம் அடைந்தார்..


இருவரும் எழுந்து ,அங்கருந்த அம்மன்னிடம் சென்று, மனதார தாங்கள் நினைத்தது நடக்க வேண்டுமென்று மனம் உருக வேண்டிக் கொண்டார்கள்..


வளர்பிறை ,கிளம்பும் போது, மகளிடம்.. "மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வாம்மா .."என்றார்..


"அம்மா ,அப்பாவை எங்க வீட்டுக்கு வந்து குறளை அழைக்கச் சொல்லுங்கள்.. அதன் பிறகு கண்டிப்பா வருகிறோம் .."என்று மகள் சொன்ன பிறகு தான் வளர்பிறைக்கு தங்களின் தவறே புரிந்தது..


வளர்பிறை மனதிற்குள்,முதலில் கணவரிடம் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டவர் ,மகளிடம் ப்ரியா விடைபெற்றுச்‌ சென்றார்..


பாவினியும் ,வந்த மாதிரியே திரும்பிச் சென்று, நல்ல பிள்ளையாக‌ வீட்டிற்கு வந்தாள்..


வீட்டிற்கு போனதும் தங்கள் அறையிலேயே தஞ்சம் புகுந்தாள்..ஏனோ, செங்கோடனையும்,மெய்யம்மையையும் பார்க்க பிடிக்கவில்லை..அவர்களிடம் இயல்பாக பேசும் மனநிலையும் அப்போது அவளுக்குயில்லை..அதனாலேயே, "தலைவலிக்குது தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் ..நான் தூங்கப் போறேன்.." என்று வேலைக்காரம்மாவிடம் சொல்லி அனுப்பினாள்..


ஆனால் ,அறையில் தூங்காமல் வளர்பிறை சொன்னதையெல்லாம் அசைபோட்ட படியே நடந்தாள்..


நாவேந்தியிடம் பேச வேண்டுமென்ற எண்ணம் அவளுக்குள் தலைதூக்கியதும்,தாய் கொடுத்த நாவேந்தியின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தாள்..


அந்தப்பக்கம் அழைப்பு போய்க் கொண்டே இருந்தது..


ஒருவேளை தூங்குவாரோ ?என்றெண்ணி
அழைப்பை துண்டிக்க போன நேரம், நாவேந்தி அழைப்பை ஏற்றார்..


அவரின் , "ஹலோ.." என்ற குரலைக் கேட்டதும், ஒரு நொடி அசையாமல் நின்றவள்.. மீண்டும் அவர் ஹலோ என்றதும்,"அத்தே.." என்றாள்..


அவரோ, குரலில் மகிழ்ச்சி தழும்ப "பவிம்மா எப்படிடா இருக்கே.." என்றார்..


"நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?


"அச்சோ, அப்படியெல்லாம் இல்லை..ஏன் இப்படி ஒரு சந்தேகம்.."


"சும்மா தான் கேட்டேன் வீட்லையா இருக்கீங்க..?"


"இல்லடா இன்னைக்கு ஆஃபிஸ்சில் ஃபோர்ட் மீட்டிங்.. அதனால் ஆபிஸ்சில் தான் இருக்கேன் ஏம்மா..?"

"ஓ..!அப்போ அந்த நெட்டைக் கொக்கும் அங்கே தானே இருப்பாரு‌..
"
"அது யாரும்மா நெட்டை கொக்கு.."

"ம்..!‌உங்க ஆஸ்த்தான புத்திரன் தான்..",என்றதும் .


அவரோ,"ஆ..! "என்று ஒரு நொடி அதிர்ந்தவர்.. "போக்கிரி‌ என்னிடமே என் மகனை நெட்டை கொக்குங்கிறே.."


"ம்..!‌உங்க பையனை பற்றி உங்களிடம் தானே சொல்லனும்.."

"ஓ..!உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்.."


"உங்க நண்பரின் மகள் அல்லவா..அதனால், தைரியத்திற்கு பஞ்சமிருக்காது.."


"அது என்னமோ உண்மை தான் .."என்று சிரித்தவரிடம்..


"அத்தே, நீங்க சிரிக்கும் போது கேட்க எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?நீங்க எப்போதும் இப்படியே சிரிச்சுகிட்டே இருக்கனும்.."


"ஆஹா,இன்னைக்கு என் மருமகளுக்கு என்னமோ ஆகிடுச்சே.. ஓவரா ஐஸ் வைக்கிறாங்களே..எனக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கப் போகுது.."

"ஐஸ் எல்லாம் ஒன்றுமில்லை..உண்மையைத் தான் சொன்னேன்.." என்றவளிடம்..

"அச்சோ, பவிம்மாவுக்கு கோபம் வந்துடுச்சா?"

"கோபமெல்லாம் இல்லை..அதுவும், என் நாவேந்தி அத்தை மீது எனக்கு கோபம் வருமா?" என்றவளிடம்..


"அட,இன்னைக்கு பவிம்மா.என் மீது ஒரே அன்பு மழையா பொழிறாங்களே !அதற்கு, என்ன காரணமோ..?"


"காரணம் பெருசா ஒன்னுமில்லை..இந்த மருமகள் மாமியாரை சந்திக்கனும்.. அப்புறம் மருமகள் கொடுமையை மாமியாருக்கு காட்டனும்.."


ஆ..! என்று அதிர்ந்து சிரித்தவர், "என்ன ஓர் ஆசை..மருமகளின் ஆசையை நிறைவேற்றுலைன்னா! நான்‌ என்ன மாமியார்..எப்போ பார்க்கலாம்ன்னு‌ சொல்லுங்க மருமகளே!"


"ம்..! அது உங்க நெட்டை கொக்கின் கையில் தான் இருக்கு..சார் பர்மிஷன் கொடுத்தா உடனே பார்க்கலாம்.. "

"ஓ..! பர்மிஷன் கிடைக்குமா..?"

"அது கொஞ்சம் டவுட் தான்.. இருந்தாலும்,அதை நான் பார்த்துக்கிறேன்..நீங்க கொடுமையை அனுபவிக்க ரெடியா இருங்க மாமியாரே.." என்றவளுக்கு சிரிப்பை அடங்கவே முடியலை.


நாவேந்திக்கோ, சொல்லத் தேவையே இல்லை..ரொம்ப வருடங்கள் கழித்து நெஞ்சம் குளிர, கண்களில் நீர் வருமளவு மனதார சிரித்தார்..


சரியாக அந்த நேரம், அவரின் அறைவாசலை கடந்த குறள் நெறியனின் காதுகளில் அது நாரசாரமாக ஒலித்தது..


மங்கையவளின் எண்ணம் ஈடேறுமா?இல்லை மன்னவனின் எண்ணம் ஈடேறுமா? காலத்தின் கையில்..



அன்பு கொல்லும்..
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
இன்று ஒரு அத்தியாயம் (25) போட்டு இருக்கேன்.. விரைவில் அடுத்த அத்தியாத்துடன் வருகிறேன்.. உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 26

குறள்நெறியன் ஃபோர்ட் மீட்டிங்கை முடித்த பின்னர், கிளைண்ட்டை சந்திப்பதற்காக.. அவசர, அவசரமாக செல்லும் போது தான், நாவேந்தியின்‌ சிரிப்பு சத்தம் ! அவன் காதில் விழுந்து எரிச்சலைக் கொடுத்தது..


தன்னைத் தவிர, உலகத்தில் உள்ள அத்தனை பேரும் நிம்மதியாக இருப்பது போல் ஓர்‌ எண்ணம் அவனை வாட்டியது..


ஏற்கனவே, பல பிரச்சினைகளில் உழன்று கொண்டிருந்தவனின் நிம்மதியைக் கெடுப்பது போல், நேயவாணன் கன்ஸ்டெக்ஷன் கம்பெனியில் தூயவன் ,சேர்ந்திருக்கும் செய்தி அவனுக்கு கொதிப்பைத் தந்தது..


தூயவன், வேண்டுமென்றே இவனைப் பழிவாங்குவது போல் அவன் மனதுக்கு தோன்றியது.. அவர் இல்லாமல், இவன் அதிக வேலை செய்யும் போது தான்.. அவரின் உழைப்பையே இவன் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்தது..


தூயவனை நினைத்து அவனுக்கு மலைப்பாக இருந்தது.. மனுசன் சக்கரமாய் சுழன்று இருக்கிறார்.. என்ற உண்மை உரைத்தது.


பத்து பேரின் வேலையை அவர் ஒருத்தரே பார்த்துள்ளது வியப்பை தந்தது..
இதையெல்லாம், இத்தனை நாள் ! தான் அறிந்து கொள்ளாததை நினைத்து, அவனுக்கு தன்‌ மீதே கோபம் வந்தது.. தன்னையும் அறியாமல் அவர் மீது ,அவனுக்கு ஒரு மாரியாதை ஏற்பட்டிருந்தது..


அவரின் ராஜினாமா ,கம்பெனிக்கு மட்டுமில்லாமல், அவனுக்கே பெரிய இழப்பை தந்தது..அப்படி பட்ட சூழலில், அவன் எதிரியாக நினைப்பவர்களிடம் அவர் வேலைக்கு சென்றது, அவர் மீது அவனுக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டு பண்ணியது.



ஆனால், அதை யார் மீதும் காட்ட முடியாத நிலையில் அவன் இருந்தான்..
தன்‌ மனக்குமறலுக்கெல்லாம், வடிகாலாக வேலை ஒன்றே அவனுக்கு உதவியது..
அதனால், தன் முழு கவனத்தையும், நேரத்தையும் அதற்கே செலவழித்தான்..


கணவனின் மனநிலையை அறியாமல் பாவினியோ,நாவேந்தியுடன் பேசிய பிறகு, உற்சாகமாக இருந்தாள்.. அவளின் மனம் கூட லேசானது போல் இருந்தது..


அதே மனநிலையில், தான் வீட்டுக்கு வந்துவிட்டதை குறுஞ்செய்தியாக கணவனுக்கு தெரிவித்தாள்..


சில நொடிகளில் அவனிடமிருந்து, "ஓகே..டிரைவர் சொன்னார்.. "என்று குறுஞ்செய்தி அவனிடமிருந்து பதில் வந்தது.. அதை பார்த்தவுடன், பாவினி மனதிற்குள் 'எல்லாம் சரியா தெரிஞ்சுக்கிறான்..' என்று நினைத்தாள்..

இரவு குறள் நெறியன் வரும் வரை ,இதமான மனநிலையுடனேயே,வலம் வந்தாள்..

குறள்நெறியனோ, அன்று வழக்கத்தை விட தாமதமாகத் வந்தான்..அவன் முகமே சொல்லாமல் சொல்லியது! அவன் நல்ல மனநிலையில் இல்லையென்று..


பாவினியோ, அவனிடம் பேசலாமா?வேண்டாமா?என்று யோசித்தாள்..


குறள்நெறியனோ, அசதியில் வந்தவுடன் உறங்கிவிடுபவன்.. அன்று பால்கனியில் சென்று நின்று, வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.


பாவினியோ ,சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தாள்..அவன் அறைக்குள் வரும் அறிகுறி தெரியாததால்..உடனே அவளும் பால்கனிக்கு சென்றாள்..


குறள்நெறியன், நின்ற தோரணையே அவனின் மனதை உணர்த்தியது. 'சார் ஏதோ மூடவுட் போல்..அது தான் ,நாம் இன்று வெளியில் போய்ட்டு வந்ததைப் பற்றிக் கூட எதுவுமே கேட்கலையோ?' என்று நினைத்தாள்..

மெதுவாக அவன் அருகில் சென்று நின்றவள்.."தூக்கம் வரலையா..?இந்த நேரத்தில் இங்கே வந்து நிற்கறீங்க.." என்றவளிடம்..

"இல்லை.." என்றான், ஒற்றை வார்த்தையாக..


பாவினிக்கு மேலும், எப்படி பேச்சை வளர்ப்பதென்று புரியாமல், சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள்..


அவனோ, பிடித்து வைத்த சிலையாக ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தான்..


அவளே ,மீண்டும் ,"உடம்பு சரியில்லையா?‌ஒரு மாதிரி இருக்கீங்க .."என்றவளிடம்..


"உடம்புக்கு என்ன நல்லாத் தான் இருக்கேன்.."


"அப்புறம் ஏதாவது பிரச்சினையா?"


"பாவினி, ப்ளீஸ் நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்..என்னைத் தொந்தரவு செய்யாமல் போய்த் தூங்கு.." என்று முகத்தில் அடித்தது போல் சொன்னான்..


எங்கே ?அவளிடம் பேசினால் தூயவன் மீதிருக்கும் கோபத்தை ! தன்னையும் மறந்து ,அவளிடம் காட்டிவிடுவோமோ? என்று நினைத்து தான் அவளைப் போகச் சொன்னான்.


பாவினிக்கோ ,அவன் அப்படி சொன்னதும் கண்களில் நீர் கோர்த்தது.. அதை அவனிடம் காட்டாமல் , "சாரி.." என்றவள் ,அறைக்குள் வந்து படுக்கையில் கண்களை இறுக மூடி படுத்துக் கொண்டாள்..


மனதிற்குள், 'இவனை எப்படிச் செய்வது சரிசெய்வது..எதையும் சொல்லவும் மாட்டிங்கிறான்..அந்த நிலன் வேறு என்னைப் பார்த்துக்கச் சொல்றான்.. இந்த கல்லுளிமங்கனை என்ன தான் செய்ய?' என்று யோசித்தபடியே படுத்திருந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்..


பாவினி, காலையில் கண்விழித்த போது.. குறள்நெறியன் அலுவலகத்திற்கு செல்ல கிளம்பி இருந்தான்.. அவனைப் பார்த்ததும் "குட் மார்னிங் .."என்று இன்முகமாக சொன்னாள்..


அவனோ, பேருக்கு "குட்மார்னிங்.." என்றவன் ,வேறு எதுவும் பேசலை..தன் வேலையிலேயே கவனமாக இருந்தான்..


பாவினிக்கு அவன் இரவு எப்போது படுத்தான்? எப்போது விழித்தான்? என்று ஒன்றும் தெரியவில்லை..கும்பகர்ணி போல் தூங்கியிருந்தாள்..


அவன் கிளம்புவதற்கு முன், குளியலறைக்குள் சென்று..அவசர..அவசரமாக, குளித்து தயாராகி வந்தாள்..


அவனோ, தன் மடிக்கணினியில் எதையோ? நோண்டிக் கொண்டிருந்தான். இது தான் சரியான சமயம் என்றெண்ணி, பாவினி அவன் அருகில் சென்று அமர்ந்தாள்..


அவனோ, அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

பாவினியோ ,அவன் பேசாட்டி போறான்.. நாமே பேசலாம்.. என்று நினைத்தவள்,"ஏங்க நா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றவளிடம்..

ஆர்வமே இல்லாமல்,"என்ன சொல்லு.."என்றான்..

" எனக்கு வீட்டிலேயே இருக்க போராடிக்குது..நானும் உங்களோடு ஆபிஸ் வரட்டுமா..?"

" நீ வந்து அங்கு என்ன செய்யப் போறே?" என்றான் தலையை மடிக்கணினியிலிருந்து நிமிர்த்தாமலேயே..

"ம்..! நான் எம்.காம் தெரியும் தானே..நான் அக்கோண்ட்ஸ் ஏதாவது பார்க்கிறேனே.."

"அக்கோண்ட்ஸ் பார்க்க வேறு ஆள் இருக்காங்க.. நீ வீட்டிலேயே ஜாலியா ரெஸ்ட் எடு.."


"இப்படியே வீட்டுக்குள்ளேயே இருந்தேனா?எனக்கு பைத்தியம் புடுச்சிடும்.. எல்லா வேலைக்கும் ஆள் இருக்கு..நான் இப்படியே சும்மாவே திண்ணுட்டு ..திண்ணுட்டு, தூங்கினா? குண்டு பூசணிக்காய் ஆயிடுவேன் .. இப்பவே வெயிட் போட்ட மாதிரி தான் இருக்கேன்.."
என்றவளை தலையை நிமிர்த்தி, அவளை தலை முதல் பாதம் வரை பார்த்தவன், "அப்படியெல்லாம் ஒன்னும்மில்லையே..அப்படியே தான் இருக்கே.." என்றான்..


பாவினிக்க, அவன் தன்னை அடி முதல் பாதம் வரை பார்த்ததும், அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது..


அவனின் பார்வையில், எந்த மாறுபாடும்‌ இல்லையென்றாலும்,அவளுக்கு ஏனோ கூச்சமாக இருந்தது..அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க அவள் பெரும்பாடு பட்டாள்..


நல்லவேளை அவன் எதையும் கவனிக்கவில்லை..அவன் தன் வேலையிலேயே கவனமாக இருந்தான்..


பாவினியோ,அவனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் , "ப்ளீஸ் நானும் வரட்டுமா? எனக்கு நிஜமாகவே போர் அடிக்குது.." என்றவளிடம்..


"எதுக்கு உனக்கு போர் அடிக்குது. பேச்சுத் துணைக்குத் தான் பாட்டி இருக்காங்களே? அவங்க கூட பேசிட்டு இரு.."


"ம்..! உங்க பாட்டிகிட்ட எத்தனை நேரம் தான் பேசுவது..அதுவும் அவர் ஒரு மூலைன்னா..நான் ஒரு மூலை ! எப்படி ஒத்துப் போகும்.." என்று நீட்டி முழக்கியவளை, பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் தன்னை மறந்து சிரித்தான்..


பாவினியோ, அவன்‌ சிரிப்பதை வாயைத் திறந்து கொண்டு பார்த்தாள்..இதுவரை அவன் சிரித்தே பார்த்திடாதவள், கண் இமைக்கவும் மறந்து
ரசித்தாள்..


மனதிற்குள், 'இவன் சிரித்தால் !எத்தனை கம்பீரமாக, அழகாக இருக்கிறான் ..'என்று‌ வியந்துப் பார்த்தாள்..


குறள்நெறியனோ, பாவினி தன்னையே இமைக்காமல் பார்ப்பதைக் கண்டு,அவள் விழிகளின் முன் சொடுக்கிட்டவன், என்ன வென்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்..


அவளோ, முகம் சிவக்க 'ஒன்றுமில்லை' என்று தலையை ஆட்டியவள்..
மனதிற்குள் ,'அச்சோ லூசு மாதிரி பார்த்து வச்சிருக்கோம், அவன் என்ன‌ நினைப்பான்?'என்று தன்னையே நொந்து கொண்டாள்..

அவனோ அவளின் முகச்சிவப்பை ரசித்தவன், "சரி சீக்கிரம் கிளம்பு! இன்றிலிருந்து நீயும் ஆபிஸ் வா !"என்றான்..


பாவினியோ, "தேங்க்யூ ..தேங்க்யூ.."என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பறித்தவளிடம் , "தேங்க்ஸ் எல்லாம் இப்படிச் சொல்லக் கூடாதே.." என்று வில்லங்கமாக சொன்னவனைப், பார்க்க முடியாமல்.. அவளுக்கு தேவையானதை எடுக்க ஓடினாள்..


குறள்நெறியனுக்கும் அவளின் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது..முந்தைய நாள் தூயவன் ! நேயவாணனிடம் வேலைக்கு போகிறார் என்று தெரிந்ததிலிருந்தே, மூடு ஆஃப்லேயே இருந்தான்..


ஆனால், இப்போது பாவினியுடன் இயல்பாக பேசியவுடன் கொஞ்சம் ரிலேக்சாக உணர்ந்தான்..


மனதிற்குள், 'அப்பா டென்ஷன் செய்தால்,மகள் கூல் பண்ணுகிறாள்‌..' என்று மனைவியைப் பற்றி நினைத்துக் ‌கொண்டான்..


குறள்நெறியனுடன், பாவினியும் அலுவலகம் செல்வது தெரிந்ததும் செங்கோடனும்,மெய்யம்மையும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்..ஏதோ பேரனுக்கு கொஞ்சம் சுமை குறைந்தது போல் உணர்ந்தார்கள்..

பாவினியும் ஆனந்தமாகவே அவனுடன்‌ சென்றாள்..அலுவலகத்தின் உள்ளே செல்லும் போது மனதிற்குள், 'தான் நினைத்தபடி எல்லாம் நடக்கனும் கடவுளே..'என்று வேண்டிக் கொண்டாள்..


பாவினிக்கு, அன்று தான் முதல் நாள் என்பதால் , ஊழியர்களை மட்டும் நிலன் அறிமுகம் செய்து வைத்தான். பாவினிக்கு பெரிதாக வேறு எந்த வேலையும் கொடுக்கவில்லை..


குறள்நெறியனோ, அன்று‌முழுவதும் மீட்டிங்கிலேயே‌ இருந்தான்.. பாவினி தான், நேரத்தை நெட்டித் தள்ளினாள்.. பொழுது போகாமல் நிலனிடம், "தன் தந்தையின்‌ அறை எது‌ ?"என்று கேட்டாள்..


அவனோ, அந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.. அறையை பார்த்தவுடனேயே, அப்பா சென்ற பின், அந்த அறையை யாருமே உபயோகிக்கவில்லை என்று தெரிந்தது..


அவள் மனதிற்கு ,கொஞ்ச நேரம் அங்கிருந்தால் நல்லா இருக்குமென்று தோன்றியதும், "நான்ன் கொஞ்ச நேரம் இந்த அறையில் இருக்கேன்.." என்று நிலனைப் போகச் சொல்லிவிட்டு‌, அறைக்குள் சென்று தன் தந்தையின்‌ நாற்காலியில் அமர்ந்தாள்.


அந்த நாற்காலி ! தன் தந்தையே, அருகில் இருப்பதைப் போல்.. ஓர்‌ உணர்வை அவளுக்கு கொடுத்தது..


கண்களை மூடி நன்றாக சீட்டில் தலையை சாய்த்தவள், 'அப்பா நான் நினைத்த விசயத்தை சாதிக்க உங்க ஆசிர்வாதம் தேவை..நீங்க எனக்கு பக்கபலமாக இருக்கனும்..' என்று மனதிற்குள் தந்தையிடம் ஆத்மார்த்தமாக பேசிக் கொண்டாள்..


குறள்நெறியனோ, தன் வேலை முடிந்ததும், மனைவியைத் தேடினான்.. நிலனோ, அவனிடம்,பாவினி தூயவன் அறையில் இருப்பதை சொன்னவுடன்..


ஓ..!"என்றவன் ,அவளைத் தேடிச் சென்றான்..


குறள்நெறியன் வந்ததைக் கூட அறியாமல்.. பாவினி நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்தாள்..


அவனோ, அவளின் எதிரில் அமர்ந்தவன், "என்ன மேடம்க்கு அப்பா நினைப்பா..?" என்றவுடன் ,தூக்கிவாரிப் போட கண்களைத் திறந்து பார்த்தாள்..


எதிரிலிருந்த, கணவனைக் கண்டு திருதிருவென்று விழித்தாள்..


அவனோ, அவள் விழிப்பதைப் பார்த்து இதழோரம் துடிக்க.. " காலையில் என்னிடம் அத்தனை டயலாக் பேசியவள், முதல் நாளே இப்படி தூங்கறீயே?என்றவனிடம்..


" நான் தூங்கவெல்லாம் இல்லை.. சும்மா தான் கண்ணை மூடியிருந்தேன்.."


"ஓ..!அப்படியா.. சரி சொல்லு! இன்னைக்கு என்ன வேலை செய்தாய் .."என்று அவன் முதலாளியாக கேள்வி கேட்டான்..


அவளோ, அன்றைக்கு நடந்ததை அவனிடம் ஒப்புவித்தாள்.. அவன் வேண்டுமென்றே, அவளைச் சீண்டக் கேள்வி கேட்டால்.. ?அவளோ, அதை உண்மையென்று நம்பி ,பதில் சொன்னது! அவனுக்கு இதமாக இருந்தது..


"ஓகே..ஓகே, நாளையிலிருந்து இப்படி தூங்கக் கூடாது.. முதலாளியம்மாவே தூங்கினால் ?அப்புறம் வேலையாட்கள் எப்படி வேலை செய்வார்களாம்.." என்றவனிடம்.. "நான் நிஜமாவே தூங்கலை.." என்றாள் கோபமாக..

"சரி..சரி நான் நம்புறேன்.. வா போகலாம்!" என்றவனிடம்..

"எங்கே? நான் இனிமேல் இந்த அறையிலேயே, இருந்து வேலை செய்யட்டுமா ?"என்று கெஞ்சலாக
கேட்டவளிடம்..


"நீ ,இங்கே வந்து உட்கார்ந்து கொண்டால்.. நான் எப்படிம்மா? உன்னைப் பார்க்காமல் இருப்பேன்.. அதனால், உனக்கு என் அறையில் தான் வேலை .. "என்றவன், அவளை பதில் சொல்ல விடாமல், அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்..


நாயகனின் எண்ணம் ஈடேறுமா? இல்லை நாயகியின் எண்ணம் ஈடேறுமா? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
அடுத்த மூன்று அத்தியாயங்கள் (26,27,28)போட்டு உள்ளேன் மீதி நாளை போடுகிறேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 27

குறள்நெறியனுடன், பாவினி அலுவலகம் சென்று அன்றோடு பத்து நாட்கள் முடிந்திருந்தது..

இந்த பத்து நாட்களுமே இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்கள் இணைந்தே இருந்தனர்..


அதுமட்டுமின்றி ,இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்ள.. நல்ல வாய்ப்பாக அஃது அமைந்தது..


பாவினிக்கு குறள் நெறியன் மீது
நல்லெண்ணமும்,அன்பும் இயல்பாக தோன்றியது..


அவனின் கடின உழைப்பு,புத்திக் கூர்மை.சமயோசித்த புத்தி , இதெல்லாம் அவன் மீது அவளுக்கு பிரமிப்பைக் கொடுத்தது.


குறள்நெறியனுக்கோ பாவினியின் திறமையும்.. எந்த வேலைக் கொடுத்தாலும் , திறம் பட ஆத்மார்த்தமாக செய்வதும்,சிக்கலான பிரச்சினைகளை எளிதாக கையாலும் விதம்.. என.. எல்லாமே அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது..


புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? அவள், தூயவனின் பெண் என்று ஒவ்வொரு செயலிலும் நிரூபித்தாள்..


குறள்நெறியனுக்கு பாவினியால் வேலைப் பளு பாதியாக குறைந்தது.. இந்த பத்து நாளில் அவளிடம் அவனுக்கு எரிச்சலை உண்டுபண்ணிய ஒரே விசயம்! நாவேந்தி அலுவலகம் வந்தால்,பாவினி அவருடனே ஒட்டிக் கொண்டு சுற்றுவது தான்..


அதிசயமாக அன்றும் நாவேந்தி அலுவலகம் வந்திருந்தார்.. பாவினியோ, அன்று போல் அவருடன் இருக்க முடியாமல்..


குறள்நெறியன், சமார்த்தியமாக தன்னுடனே அவள் இருக்கும் படியான வேலைகளை அவளுக்கு கொடுத்து,பாவினி எங்கேயும் நகராமல் பார்த்துக் கொண்டான்..


அப்படியிருந்தும், மாலை கிளம்பும் போது பாவினி, நாவேந்தியைக் கண்டு மகிழ்ச்சியுடன் ,ஆசையாக பேசுவதைக் காணப் பொறுக்காமல், பாவினியின் கைகளைப் பற்றி, "வா போகலாம்.." என்றவன்,நாவேந்தியிடம்.. "ஆடு பகை குட்டி உறவா? உங்கள் எல்லை எது எனத் தெரிந்து, நடந்து கொள்ளுங்கள்.. உங்க சூழ்ச்சி இவளுக்கு வேண்டுமானால் ,தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், எனக்கு தெரியும்! பார்த்து நடந்துக்கோங்க .."என்று வார்த்தைகளில் அமிலத்தை வாரி இறைத்தவன், கோபமாக பாவினியை இழுத்துக் கொண்டு கார் பார்க்கிங் வந்தான்..


குறள்நெறியனின் வார்த்தைகளின் சூட்டில், உயிருடன் நெருப்பில் வெந்து கொண்டிருந்த நாவேந்தியை, திரும்பித்..திரும்பி, பார்த்தபடியே கணவனின் இழுப்பிற்கு பாவினி சென்றாள்..


நாவேந்தியின் மனம் வெம்பி துடித்தது.. தன் மகன் தன்னை என்றாவது ,புரிந்து கொள்ளவே மாட்டானா?என்ற‌ கேள்வி அவரை வாள் கொண்டு அறுத்தது..


பாவனியோ, வீடு வரும் வரை மெளன விரதத்தை மேற்கொண்டால்.. மனதிற்குள், 'இப்படி அவரைப் பற்றி அறியாமல் நடந்து கொள்கிறானே.. இவனை என்ன செய்ய.?' என்று அலுத்துக் கொண்டாள்..


குறள்நெறியனோ , வீட்டிற்குள் செல்லும் வரை கோபத்தை அடக்கி வைத்திருந்தவன்,தங்கள் அறைக்குச் சென்றதும்.. "பாவினி இதுவே உனக்கு கடைசியாக இருக்கட்டும்..இனியொரு முறை அவர்களுடன் நீ நெருங்கிப் பழகுவதைப் நான் பார்த்தால் ?அப்புறம் நடப்பதே வேறு நினைவிருக்கட்டும் .."என்று கத்தித் தீர்த்தான்..


பாவினியோ, வார்த்தைக்கு வார்த்தை அவனுடன் மல்லுக்கு நிற்பவள்.. அன்று அவன்‌ மீது அளவு கடந்த கோபத்தால், பதிலே பேசாமல் அமைதியாக இருந்தாள்..


அடுத்து வந்த நாட்களில் இருவரிடமும் பேச்சுக்கள் குறைந்தது..அவசியத்திற்கு மட்டுமே பேசினார்கள்..


பாவினியோ, குறள்நெறியனுக்கு தெரியாமல் சில வேலைகளை செய்தாள்..அதில் ஒன்று தன் தந்தையை தனியாக சந்தித்து.. கம்பெனியிலிருந்து அவருக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினாள்..


"அப்பா ப்ளீஸ் .. அது, உங்களுடைய இத்தனை வருட உழைப்புக்கான ஊதியம்! அதை வேண்டாமென்று சொல்லாதீங்க.." என்னறவளிடம்..


"நான் உனக்கு திருமணத்திற்கு எதுவுமே செய்யலையேடா.. அதனால், உனக்கு கொடுத்ததாக அது இருக்கட்டுமே..?"


"அப்பா.. நீங்க அதை எனக்கு கொடுத்தால் , வரதட்சணை கொடுத்த மாதிரி இருக்கும்..அது என் தன்மானத்திற்கு இழுக்குப்பா.."


"பாவினி..!"


"நீங்க, கோவப்பட்டாலும் உண்மை அது தான்.. இது எனக்கு மட்டும் சேர வேண்டிய பணமில்லை.. உங்கள் உழைப்பு ! அம்மா,நவில் எல்லோருக்குமே சேர வேண்டிய பணம்.. இந்தப் பணத்தை நீங்க எனக்கு கொடுத்தா?நான் குற்றயுணர்வில் தினம்..தினம் ,தவிப்பேன்..அதனால் ,ப்ளீஸ் நீங்க உங்க முடிவை மாத்திகோங்க.. நீங்க வேலையை விட்டது ,உங்களின் தனிப்பட்ட பிரச்சினை ...அதில் நான் தலையிட மாட்டேன்.. ஆனால், இந்தப் பணத்தை நீங்க வாங்கி கொண்டால் தான் ,எனக்கு நிம்மதி.." என்று பேசிப்...பேசியே ,தந்தையை சம்மதிக்க வைத்தாள்..


அவருடைய பி.எப் பணத்தையும்,கிராஜுவிட்டி பணத்தை, தூயவன் அக்கோண்டிற்கே மாற்றுவதற்கான ஒப்புதல் கடிதத்தையும், அவரிடம் மன்றாடி பெற்றுக் கொண்டாள்..


அதுமட்டுமின்றி.. வளர்பிறை கோவிலில், நாவேந்தி,குறள்நெறியனைப் பற்றி தன்னிடம் சொன்னதைத் .. தந்தையிடமும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டாள்..


குறள்நெறியனின் நிலையையும் அவருக்கு உணர்த்தியவள், "குறள்நெறியனிடம், கோபத்தை வளர்த்துக்காதீங்கப்பா .."என்றாள்..


அவள் சொன்னதைக் கேட்டு ,தன்னை வியப்பாக பார்த்த தந்தையிடம்.. "அப்பா இருபக்கமும், நியாயம் என்று ஒன்று இருக்கும்.. அதில் குறளின் பக்க நியாயமும் எனக்கு சரியேன்றே தோன்றுகிறது.. நீங்க உங்க தோழியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறீங்க.. அதனால், குறள் பக்கம் உள்ள நியாயம் உங்க கண்ணுக்கு தெரியவில்லை.. "என்றவளிடம்..


"என் பொண்ணு ரொம்ப வளர்ந்துட்டா.. பெரியமனுசியாக எனக்கே அறிவுரை சொல்றாளே.." என்று சிரித்தவரிடம்..


"போங்கப்பா.. "என்று‌செல்லம் கொஞ்சியவள் தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டாள்..


அத்தோடு, இருவரையும் சேர்த்து வைக்க.. தான் எடுக்கப் போகும் முயற்சியைப் பற்றியும் தந்தையிடம் சொல்லி , அவரின் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டாள்..


பாவினிக்கு, அவளே அறியாமல் மனதிற்குள் குறள் நெறியனின் மீது ஒரு பச்சாதாபம் உருவாகியிருந்தது.. அது அவன் புறம் உள்ள நியாங்களையே, தூக்கி நிறுத்த முயற்சித்தது..


அடுத்த நாளே! தூயவனின் ஒப்புதல் கடிதத்தை கணவனிடம் ஒப்டைத்தாள்..
அதைக் கண்டவனுக்கு வியப்பாக இருந்தது..
இருந்தாலும், யோசனையுடன் அதை பெற்றுக் கொண்டவன், வேறு எதுவும் அவளிடம் பேசவில்லை..


தூயவனோ, மகளுக்காக தன் வீம்பு,பிடிவாதம்,கெளவரம்‌ என எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தார்..


அந்த வார இறுதியில் குறள்நெறியன் வீட்டிறகு,வளர்பிறையுடன் சென்றார்.. அதுவும் குறள்நெறியன் ‌வீட்டில் இருக்கும் நேரத்தைக் கணக்கிட்டு சென்றவர்,முதல் முதலாக குறள்நெறியனை மாப்பிள்ளையாக மதித்து தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்..



குறளநெறியனும், வீடு தேடி வந்தவரிடம் எந்த வெறுப்பையும் காட்டாமல், இன்முகமாக வரேவேற்று உபசரித்தான்.


தூயவன் விருந்துக்கு அழைத்ததற்கு நன்றி சொல்லியவன் ,"தனக்கு நேரம் இருக்கும் போது கட்டாயம் வருகிறேன்.." என்றான்..


தூயவனும், வளர்பிறையும்..செங்கோடன்,
மெய்யம்மையிடமும் சிறிது நேரமிருந்து பேசிச் சென்றார்..


பாவினியோ, தன் தந்தை அவருக்கு பிடிக்காவிட்டாலும் தனக்காக பார்த்து..பார்த்து, ஒவ்வொனறையும் செய்வது அவளுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.


பாவினி, வீட்டிற்கு வந்த தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தது, அவனுக்கு கடுப்பைக் கொடுத்தது..


பாவினி ரொம்ப நாள் கழித்து, மனநிறைவுடன் அன்றிரவு உறங்கினாள்.. ஆனால், அவள்‌ கணவனோ ஒரு நிமிடம் கூடத் தூங்காமல் யோசனையிலேயே இருந்தான்.


பாவினியோ, வழக்கம் போல எழுந்து காலை கடமைகளை முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினாள்..


குறள்நெறியனோ ,அவளிடம் "வினு எனக்கு ஒரு அர்ஜெண்ட் வேலை இருக்கு..அதனால் ஆபிஸ் வரத் தாமதமாகும்..நீ டிரைவருடன் ஆபிஸ் போய்க்கோ .."என்றவன் ,தான் கிளம்புவதில் முனைப்பாக இருந்தான்..


பாவினியோ, இத்தனை நாள் அவனுடன் இருந்ததில் ,இந்த மாதிரி வெளியில் போக அவசரமாக கிளம்பினால்.. அவன் வீட்டில் சாப்பிட மாட்டான் என்பதை தெரிந்து வைத்திருந்தாள்..


"வெளியில் சாப்பிட்டுக்கிறேன் .."என்பவன், வேலைப்பளுவின் காரணமாக பல நாட்கள் சாப்பிடுவதே இல்லை .."என்று நிலன் மூலம் கேள்விப்பட்டிருந்தாள்..


அதனால், இன்று கட்டாயம் சாப்பிட வைத்தே அனுப்ப வேண்டுமென்று நினைத்து, அவனுக்காக ஒரு தட்டில் இட்டிலியையும்,சட்டினியையும் எடுத்து வந்தாள்..


ஷோஃபாவில் அமர்ந்து,அவசர..அவசரமாக மடிக்கணினியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தவனின் அருகில் சென்று அமர்ந்தவள்,"குறள் அப்படியே 'ஆ' காமிங்க நான் இட்லியை தருகிறேன்.. நீங்க வேலையைப் பார்த்தபடியே சாப்பிட்டுக்கலாம்.." என்று ஒரு துண்டு இட்லியை பிய்த்து சட்னியில் குழப்பி அவன் வாயருகே கொண்டு சென்றவளை, விழிகள் தெறித்து விடும்மளவு வியப்பாக பார்த்தான்.!


பாவினியோ, அவன் வியந்து பார்ப்பதைக் கண்டு "ம்ம்..! ஆ..காட்டுங்க.." என்று சொல்லியபடி இட்லியை நீட்டிக் கொண்டிருந்தாள்..


குறள்நெறியனோ,"என்ன வினு.. புதுசா என் மீது அக்கறை.. ஓ..!நல்ல பணக்காரன்.. பார்க்கவும் அழகா இருக்கான்.. என்று காம்பர்மைஸ் செய்துட்டியா..? உன் கனவிலும் கிடைக்காத வாழக்கை..அது தான் இப்பவெல்லாம் எனக்காக பார்த்து .. பார்த்து செய்யறீயா?உன் அப்பாவும் நிறைய‌‌ மாறிட்டாரே.. பணம்‌ எல்லோரையும் எளிதாக மாற்றுகிறது..கெளவுரவமாக முதலில் பணம்‌வேண்டா மென்றவர்.. அப்புறம் வாங்கிட்டார்.. வீட்டுக்கு வந்து விருந்துக்கு வேறு அழைக்கிறார்..அப்பாவும் பொண்ணும்‌ ஒரே மாதிரி இருக்கீங்க.."என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு பாவினி துடித்துப் போய்விட்டாள்..

குறள்நெறியனுக்கு ஊட்டுவதற்காக, கையில் வைத்திருந்த இட்டிலியை.. அப்படியே தட்டில் போட்டவள், ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் அறையை விட்டு வெளியில் சென்றாள்..


பாவினியின் மனம் ஊமையாக அழுதது.. அவனின் விரீயமான வார்த்தைகள் ,அவளை வாள் கொண்டு அறுத்தது. தான் ஒன்று நினைத்து செய்தால் ?அவனொன்று நினைத்துக் கொண்டானே ..'என்ற சிந்தனையுடனேயே தோட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்..


குறள்நெறியனுக்கோ,பாவினி பதிலே பேசாமல் போனது அவன் மனதை உறுத்தியது.. தான் ரொம்ப அதிகமா பேசிவிட்டோமோ ?என்ற எண்ணம் தோன்றியது.. ஆனாலும்,அவனின் சந்தேகம் நிறைந்த மனதிற்கு அவளின் அனுசரணையும்,அன்பும் புரியவே இல்லை..


மனதிற்குள் 'உண்மையைச் சொன்னால் ரோஷம் பொத்துட்டு வருதா? எத்தனை நேரம் இப்படி இருக்கிறாள்ன்னு பார்க்கலாம்..' என்று மனைவியைப் பற்றி அறியாமல் நினைத்தான்.


பாவினியோ,அவன் , அலுவலகம் செல்லும் வரை வீட்டிற்குள் போகவே இல்லை.பல யோசனைகளுயுடன் தோட்டத்திலேயே அமர்ந்திருந்தாள்..


இவுனுக்காக பார்த்து..பார்த்து செய்தால்,தன்னையும்,தன் தந்தையையும் பணத்திற்காக மாறிவிட்டோமென்று எவ்வளுவு கேவலமாக நினைத்து விட்டான்..!யாருக்கு வேண்டும்‌ இவன் பணம்!
அன்புக்கும் ,பாசத்திற்கும் வித்தியாசம் தெரியாதவன் என்று நினைத்தாள்..



அவள் அன்று, கம்பெனிக்கும் போகவில்லை..அவன் சென்று வெகு நேரம் கழித்து தங்கள் அறைக்குள் சென்று அடைந்தவள்,அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை..


மெய்யம்மை எவ்வளவோ, வற்புறுத்தியும் பாவினி கேட்கவே இல்லை..


பெரியவர்கள் இருவருக்கும், கணவன்,மனைவி இருவருக்குள்ளும்.. ஏதோ, ஊடல் என்பது நன்றாக புரிந்தது.. இரண்டு நாள் போனால் எல்லாம் சரியாகிடுமென்று நினைத்தனர்..
ஆனால்,மனசு கேட்காமல் தவித்தனர்..


மெய்யம்மைக்கோ, பாவினியின் முகத்தில் தெரிந்த அதீத அமைதி வயிற்றில் புளியைக் கரைத்தது. பொறுக்க முடியாமல் பேரனுக்கு அழைத்து, "என்னாச்சுப்பா பாவினி ஏன்‌ ஒரு மாதிரியாக இருக்கா.?இருவருக்கும் ஏதாவது சண்டையா?" என்று தவிப்புடன் கேட்டவரிடம்..


"அதெல்லாம் ஒன்றுமில்லை.. நான் பார்த்துக்கிறேன் .நீங்க ஃப்ரீயா இருங்க.." என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்..


அவனுக்குமே, பாவினியை புரிந்து கொள்ள முடியவில்லை.. ஆஃபிஸ்கும் வரலை..உண்மையைத் தானே கேட்டேன்.. என்று அவளைப் பற்றியே சிந்தித்தவனுக்கு வேலையே ஓடவில்லை..


அவனும்,நிலைகொள்ளாமல் தவித்த மனதை அடக்க முடியாமல் வீட்டிற்கு கிளம்பி வந்தான்..


கவலைபடிந்த முகத்துடன் ..அவனை எதிர் கொண்ட பெரியவர்களிடம், எதுவும் பேசாமல் தங்கள் அறைக்குச் சென்றான்..


அங்கே பாவினியோ,வெறும் தரையில் கைகளை தலையணையாக்கி சுருண்டு படுத்து தூங்கி கொண்டிருந்தாள்..அவள் முகமோ நெருப்பில் கருகிய பயிராக வாடிக் கிடந்தது..


குறள்நெறியனோ, அவளையே பார்த்தபடி சோஃபாவில் அமர்ந்து ..அவள் விழிப்பதற்காக காத்துக் கிடந்தான்..


அவனின் மனையாளோ! கணவன் தனக்காக வந்திருப்பதை அறியாமல் மெதுவாக கண் விழித்தாள்..


எதிரில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவனைக் கண்டு, வாரிச் சுருட்டி எழுந்து சென்று ,முகம் கழுவி வந்தவள்.. கணவனிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் பால்கனியில் தஞ்சம் புகுந்தாள்..


குறள்நெறியனோ,முதல் முறையாக அவளிடம் பேசத் தயங்கினான்..அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினான்..


மங்கையவளின் கோபம் மணாளனை பொசுக்குமா?இல்லை தன்னையே
பொசுக்குமா..? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..









 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 28

நாட்கள் வேகமாக நகர்ந்து..இன்றோடு பாவினி குறள்நெறியனிடம் பேசி ..சரியாக ஒரு மாதம் ஆகியிருந்தது. தான் உண்டு ,தன் வேலையுண்டு என்றிருந்தாள்..



,பாவினியை என்று குறள் நெறியன், "பணத்துகக்காக மாறிட்டீயா..?" என்று கேட்டானோ? அதிலிருந்து அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை..


எத்தனையோ முறை? அவன் அவளுடன் பேச முயற்சித்தான்..ஆனால், அவனின் முயற்சிகள் எல்லாமே வீணாகத் தான் போனது.. அவனுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அவளின் போக்கிலேயே விட்டு விட்டான்.


சொற்சண்டை இட்டால், பதில் பேசலாம், ஆனால், அவளோ, மெளனத்தை தத்தெடுத்தவளிடம் என்ன செய்ய முடியுமென்று? அவனும் அமைதியாகிப் போனான்..


பாவினியோ, அவுனுடன் கம்பெனிக்கு போவதை முற்றிலும் தவிர்த்தாள்.. தினமும் பணம் கொடுத்து ,ஆட்டோவில் தான் கம்பெனிக்கு போய் வந்தாள்..


அலுவலக வேலையிலும் ,குறள்நெறியனிடம் பேசுவதை தவிர்த்து,தன் சந்தேகங்களை நிலனை வைத்தே தீர்த்துக் கொண்டாள்..


அவளின் ஆசைப்படி, தந்தையின் அறையில் அமர்ந்து தான்.. வேலை செய்தாள்..நாவேந்தி வரும் நாள் மட்டும் முகத்தில் லேசான புன்னகையுடன், அவர் உடனேயே அன்றைய முழுப் பொழுதையும் கழிப்பாள்..



மனம் சோர்ந்து போகும் பொழுதெல்லாம் தன் குடும்பத்தாருடன் பேசுவாள்..எழிலி தான் அவளுக்கு மிகப் பெரிய வடிகாலாக இருந்தாள்..


பாவினி வீட்டில் இருக்கும் நேரத்தில், தோட்டத்திலேயே முக்கால் வாசி நேரம் இருப்பாள்.குறள்நெறியன் அறைக்குள் வந்தால்,இவள் பால்கனியை தன் இருப்பிடமாக்கிக் கொள்வாள்..


இரவில் தரையில் தான் படுத்து உறங்கினாள்..


நாவேந்தியைப் பற்றி என்று தெரிந்ததோ? அன்றிலிருந்து, பெரியவரிகளிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டவள்,இந்த ஒரு மதமாக முற்றிலும் தவிர்த்தாள்..


அவர்கள், பாவினியின் மாற்றத்தை தாங்க முடியாமல் பேரனிடம் புலம்புவார்கள்..


அவனோ ,"எல்லாம் சரியாகும் பொறுங்கள்.." என்று அவர்களுக்குச் சொல்வது போல், தனக்கும் சேர்த்துச் சொல்லிக் கொண்டான்..மனைவியின் மெளனமும்,விலகவும் அவனுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது..


பாவினி ,அன்று, மலர்ந்த முகத்துடன் கம்பெனிக்குப் போனாள்.. நாவேந்தி கம்பெனிக்கு வருவாள் என்ற மகிழ்ச்சியே அதற்கு காரணம்..


தனது தினசரி வேலைகளை முடித்து விட்டு, நாவேந்தியைப் பார்க்கப் போகலாமென்று, நினைத்து பாவினி தன்‌ வேலையை முனைப்பாக செய்து கொண்டிருந்த போது, நிலன் அவசரமாக அவளைத் தேடி வந்து ,"மேம் சார் லிஃப்டில் சிக்கிக் கொண்டார்.. எதிர்பாராதவிதமாக லிஃப்ட்டில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்று விட்டது .."என்று பதட்டமாக சொன்னவுடன்..


"ஐய்யோ! அவருக்கு ஒன்னுமில்லை தானே..அவர் எப்படி இருக்கிறார்.." என்று உயிரைக் கையில் பிடித்த படி பதட்டமாக கேட்டாள்..


நிலனோ, "சார் இப்பவரை நன்றாக தான் இருக்கிறார்.. லிஃப்ட் ஆப்பரேட்டர்கள் என்ன பிரிச்சனைன்னு பார்த்துட்டு இருக்காங்க.. லிஃப்டட்ககுள் சாருக்கு தேவையான முதல் உதவிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.. "என்று நிலன் சொன்னதைக் கேட்டவளுக்கு பயத்தில் உடம்பு நடுங்கியது..


மனதிற்குள், 'கடவுளே ப்ளீஸ் ! குறள், நல்ல படியாக, வெளியில் வந்திடனும்.." என்று வேண்டிக் கொண்டவள்,நிலனுடன் லிஃப்ட் இருக்கும் பகுதிக்கு ஓடினாள்..


அங்கே, இவளுக்கு முன்னே விசயத்தை கேள்விப்பட்டு வந்திருந்த நாவேந்தியோ! அழுது கரைந்து கொண்டிருந்தார்..


பாவினியோ, மாமியாரின் அருகே சென்றவள் ,தன் துக்கத்தையும்,பயத்தையும் விழுங்கிக் கொண்டு அவரைத் தேற்றினாள்..


லிஃப்ட் ஆப்ரேட்டர்கள் இரண்டு மணி நேரம் போராடி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த லிஃப்ட்டில்! உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, வேலை செய்து சரி செய்தனர்.

அதற்கு முன் லிஃப்ட்க்குள் அவனுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தேவையான அனைத்து முதல் உதவிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்..



அதுமட்டுமின்றி கம்பெனி டாக்டரும், அவசர உதவிக்காக அழைக்கப்பட்டிருந்தார்..அவரும் தயார் நிலையிலேயே இருந்தார்..


ஒரு வழியாக பல போராட்டத்திற்கு பின் குறள்நெறியன் நல்லபடியாக லிஃப்ட்லிருந்து மீட்கப் பட்டான்..


தன் முதலாளிக்காக, பிராத்தனையுடன் காத்துக் கொண்டிருந்த ஊழியர்கள்! அதன் பின் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்..

பாவினியோ ,கணவனைக் கண்டதும் தன்னை மறந்து,தன் கோபத்தை மறந்து அவனிடம் ஓடியவள்.. "குறள் உங்களுக்கு எதுவுமில்லையே?" என்று அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தலை முதல் பாதம் வரை பதற்றத்துடன் பார்த்தாள்..


குறள்நெறியனுக்கோ, அவள் பேசியதும்,தனக்காக பதறியதும் மனதிற்கு இதமாக இருந்தது..அதுவும், அவன் லிஃப்ட்க்குள்ளே இரண்டு மணி நேரமாக போராடிய வலிக்கு.. மனைவியின் அக்கறை மருந்தாக இருந்தது..


ஒரு மாதமாக பேசாதவள், எல்லாவற்றையும் மறந்து பேசியது ,அவனுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்கியது..

அதுவரை, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்த நாவேந்தியும், மகனின் அருகில் வந்து, அவனின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு ,"குறள் உனக்கு ஒன்னுமில்லையே.. "என்று பதறியவர்,அவனின் முகம்,தோள்,கை என்று ஒவ்வொன்றாக கைகள் நடுங்க கண்களில் கண்ணீர் வழிய தடவிப் பார்த்தார் ..


குழந்தையில் தொட்டு மகிழ்ந்த மகனின் பரிசத்தை.. பல வருடங்கள் கழித்து இன்று தான் மீண்டும் தொட்டு உணர வாய்ப்புக் கிட்டியது.. ஆனால் ,அந்த மகிழ்ச்சிக்கு கூட அற்ப ஆயுசு போல..


குற்ளநெறியன், சட்டென்று அவரின் கைகளை தட்டவிட்டபடி.. "போதும் ரொம்ப ஓவரா நடிக்காதீங்க! நான் உயிரோடு தான்‌ இருக்கேன்.. ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகியிருந்தால்? கூட நல்லது தான்..நீங்க‌ சநதோஷப்பட்டிருக்கலாம்.."என்று அந்த நிலையிலும் வார்த்தைகளை நெருப்பாய் கக்கியவனை விழிகளில் வலியுடன் பார்த்தார்..


ஆனால் ,அவன் அத்துடன் திருப்திப்படாமல்,
" ஹப்பா! என்ன நடிப்பு? பாசம் இருப்பது போல்..உங்களின் நடிப்பை! நம்புமளவு நான் முட்டாளில்லை.. உங்க சந்தோஷம் தான் பெரிசுன்னு , நினைச்சு போனவருக்கு இன்னைக்கு என்ன‌? புதுசா பாசம் பொத்துட்டு வருது.." என்று வார்த்தைகளில் அனலை பொழிந்தான்..

நாவேந்தியோ, துடித்துப் போய்விட்டார்..ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.. பாவினி தான், "போதும் குறள்.. நீங்க வாங்க முதலில் டாக்டர் கிட்ட செக் பண்ணணுமென்று.." இழுத்துப் போனாள்..


நாவேந்தியோ, மனம் வெறுத்துப் போனார்..மகன் சொன்ன வார்த்தைகள் அவரை உயிரோடு கொன்றது.நெஞ்சில் சுருக்கென்று வலித்தது..


ஏற்கனவே, தயாராக இருந்த மருத்துவர்,குறள் நெறியனை முழுதாக பரிசோதித்தார்.. அவருக்கு அவனின் உடல்நிலை திருப்த்தியை கொடுத்தது.. "எந்த பிரச்சினையும் இல்லை.. எல்லாமே நார்மலாக இருக்கு .." என்று கூறிய பின்பு தான் , பரபரப்பு கொஞ்சம் அடங்கியது.. ஊழியர்கள்,அனைவரும் அவரவர் வேலைகளில் தங்களைப் புகுத்திக் கொண்டார்கள்..


குறள்நெறியனோ, லிஃப்டின் பொறுப்பாளரை அழைத்து ,வறுத்தெடுத்து விட்டான்..


"உங்க வேலையே.. லிஃப்ட்டை பராமரிப்பது தானே! அப்படி இருக்க..இன்று ஏன்? கோளாறு வந்தது.. அப்போ உங்க வேலையை நீங்க ஒழுங்கா செய்யலை..?அப்படித் தானே! இனி உங்களைப்போல் ஆட்கள் எனக்கு தேவையில்லை..உங்களை டிஸ்மிஸ் செய்கிறேன். நீங்க போகலாம்.." என்று பாரபட்சம் பார்க்காமல் பேசினான்..


லிஃப்ட் பொறுப்பாளாரோ.. "சார் இனிமேல் இந்த மாதிரி பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்கிறேன்.. இந்த ஒரு முறை மட்டும் என்னை மன்னித்து விடுங்கள்.." என்றவனிடம், கருணையே காட்டவில்லை..


பாவினிக்குமே, அவரைப் பார்த்தால் பாவமாகத் தான் இருந்தது.. ஆனால், இன்று குறள்நெறியன் சிக்கிய போது, அவள் தவித்த தவிப்பு அவள் மட்டுமே அறிவாள்..
இதே போல் வேறு யாராவது மாட்டியிருந்தால்? என்ன ஆகியிருக்கும் மென்று நினைத்தாள் ..


கணவன் ,இயல்பாகி வேலையை தொடங்கும் வரை அவனுடன் இருந்தவள்,அதன் பிறகு நாவேந்தியை தேடிக் கொண்டுச் சென்றாள்..


ஆனால், அவரோ வீட்டிற்குச் சென்றிருந்தார்.. அலைபேசியில் அவரை அழைத்துப் பார்த்தாள்..ஆனால் அழைப்பு போய்க் கொண்டே இருந்ததே தவிர, அழைப்பை ஏற்கவில்லை..


பாவினிக்கோ ,'என்னாச்சு'? என்று ஒரே குழப்பமாகவே இருந்தது..அவரை உடனே பார்க்கவேண்டும் போல் தோன்றியது..

சில நொடிகள் யோசித்தவள், நிலனை அழைத்து தான் வீட்டுக்கு போவதாக சொல்லி விட்டு சென்றாள்..

குறள்நெறியனோ, பாவினி,தன்னிடம் சொல்லாமல் போனதை எண்ணி?கோபப்பட்டான்..


பாவினியோ ,நேராக வீட்டிற்குச் செல்லாமல்.. நாவேந்தியின் வீட்டிற்குச் சென்றாள்..
அழைப்பு மணியை ,அழுத்தி விட்டு காத்திருந்தாள்.. சில நொடிகளில் ஒரு பெண்மணி வந்து கதவை திறந்தார்.அவரிடம் தயங்கியபடியே நாவேந்தியைப் பற்றி கேட்டாள்..


அவரோ, "அம்மா தலைவலிக்குன்னு படுத்திருந்தாங்க.." என்றதும்," நான் பார்க்கனும்ன்னு.." என்று சொல்லியவள் நாவேந்தியின் அறையைக் கேட்டு தெரிந்து கொண்டு அறைக்குப் போனாள்..


நாவேந்தி படுத்திருந்த நிலையே அவளை வாட்டியது.. மெல்ல அவர் அருகில் சென்று அவளின் தலையை வருடினாள்..


நாவேந்தியோ, சட்டென்று விழித்தவர், பாவினியைப் பார்த்ததும் , "பவிம்மா ..நீ எப்படா இங்கே வந்தே ."என்று தன் துக்கத்தையெல்லாம் மறைத்துக் கொண்டு, வியப்புடன் கேட்டார்..


பாவினியோ, "எங்கிட்ட சொல்லாமலேயே வந்துட்டீங்க.. அது தான் நான் வால்பிடித்துக் கொண்டு வந்துட்டேன்.. நீங்களே வீட்டுக்கு வரச் சொல்லுவீங்கன்னு பார்த்தேன்..ஆனால், உங்களிடமிருந்து அழைப்பே வரலை.. அது தான், நானே வந்துட்டேன் .."என்றாள்..


நாவேந்தியோ, நீ வந்தது குறளுக்கு தெரியுமா ? என்று கேட்டார்..

"தெரியாது அத்தே.."


"ஏம்மா ,சொல்லாமல் வந்தே அவனுக்கு தெரிந்தால் பிரச்சினையாகும்.."

"ஆனால், ஆகட்டும் நான் பார்த்துக்கிறேன்.நானும் எத்தனை நாள் தான் மருமகள் கொடுமையை காட்டாமல் இருப்பது.. அது தான் உங்களை கொடுமை பண்ண கிளம்பி வந்துட்டேன்.." என்று முகத்தை தீவிரமாக வைத்துக கொண்டு சொன்னவளிடம்..


"ஓகே' நான் ரெடி !" என்றவர் , எழுந்து அமர்ந்தாள்.. அடுத்த இரண்டு மணி நேரமும் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது..
ஆனால், இருவருமே காலையில் நடந்ததை பற்றி தவறிக் கூட பேசிக் கொள்ளவில்லை..
அவள் வரும் முன், மகன் பேசியதை நினைத்து தான் வருத்திக் கொண்டு படுத்திருந்தார்.. ஆனால் மருமகள் வந்த உடன் அதை எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருந்தார்

அன்று கவினும், சீக்கிரம் வந்துவிட ..அங்கே சிரிப்புக்கு பஞ்சமில்லாம் போனது..

கவினோ, "அண்ணி..அண்ணி.." என்று இவள்‌பின்னேயே சுற்றினான்.. இருவரும் சேர்ந்து, குறளை கேலி செய்ய.. நாவேந்தியோ, இருவரையும்‌ கண்டித்தபடியே பொழுதை போக்கினார்கள்..



இங்கே இவர்கள் ஓர் உலகத்தில் வலம் வர.. அங்கே, ஒருவன் ! பாவினியைக் காணாமல் "எங்கே போனாள்.. என்ற கேள்வியுடன் இவளுக்காக காத்துக்கிடந்தான்..


பாவினி,மாலை வரை நாவேந்தியுடனேயே இருந்து விட்டு, கிளம்பினாள்..திரும்பி வரும் பொழுது ,ஏற்கனவே நவிலிடம் வாங்கி வைத்திருந்த.. தன்னுடைய டேபிட் கார்ட் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்..


குறளோ, அவள் மீது செம கோபத்தில் இருந்தான்..இவளைக் காணாமல் அலைபேசியில் பலமுறை அழைத்தும், அழைப்பையும் எடுக்கவில்லை.குறுஞ்செய்தி அனுப்பியதற்கும் பதிலும் இல்லை..காலையில் நல்லாத் தானே பேசினாள்.. தீடிரென்று மறுபடியும் என்ன வந்தது ?என்று பல கேள்விகள் அவனைக் குடைந்து கொண்டிருந்தது.


பாவினியோ, கணவனின் கோபத்தை அறியாமல் ,சாவுகாசமாக தங்கள் அறைக்கு வந்தாள்..


குறள்நெறியனோ ,தொலைக்காட்சியை ஓடவிட்டு,அதை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தான்..


அறைக்குள் பாவினி வந்ததும் அவளுடன் பேசத் துடித்த மனதையும்,தன் கோபத்தையும் அடக்கிக் கொண்டு கல்லாக அம்ர்ந்திருந்தான்..


பாவனிக்கோ, அந்த நேரத்தில் அவனை அங்கு பார்த்ததும், யோசனையுடனேயே சென்று, அலுப்பு தீர குளித்து உடை மாற்றி வந்தாள்..சில நிமிடங்கள் பால்கனிக்குச் சென்று நின்று ,குறள்நெறியனிடம் அன்று பேசவேண்டு மென்று, நினைத்ததை ஒத்திகைப் பார்த்து விட்டு, அறைக்குள் வந்தாள்..



குறள்நெறியனோ, அவளின் செய்கைகளை எல்லாம் பார்த்த படியே உட்கார்ந்திருந்தான்.. தான் இருக்கும் மனநிலையில் அவளுடன் பேசினால்? கண்டிப்பாக சண்டை வரும் என்ற எண்ணத்தில் தான் உட்கார்ந்து இருந்தான்..


ஆனால் ,அவனின் மனைவியோ? சண்டைபிடிக்கும் எண்ணத்தில் தான் இருந்தாள்.. அதை தொடங்கும் முடிவுடன் அவன் அருகில் சென்று,தான் கொஞ்சம் முன்னர் ..ஏடிஎம்மிலிருந்து, எடுத்து வந்த பணத்தை அவன் முன் வைத்தாள்.


அவனோ, ஒன்றும் புரியாமல் அ
வளை கேள்வியாக பார்த்தான்..


மங்கையும்,மாதவனும் விளையாடிக் கொண்டிருக்கும்.. நானா?நீயா? போட்டியில் யார் வெல்வார்களோ ? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
நாளை மீதி இருக்கும் இறுதி அத்தியாயம் போடுகிறேன் . படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி
இனிதா மோகன்

 
Status
Not open for further replies.
Top Bottom