Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL அன்பே!அன்பே!கொல்லாதே! - Tamil Novel

Status
Not open for further replies.

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
அன்பே!அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 29

பாவினி தன்னை புரியாமல் பார்த்த கணவனிடம் ,"நான் இங்கு இத்தனை நாள் தங்கியதற்கும்,சாப்பிட்டதற்கும், நீங்கள் எனக்காக செலவு செய்த.. எல்லாத்துக்கும், இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்க..எனக்கு ஓசியில் எதையும் பெற்றுக் கொள்ள விருப்பமில்லை.." என்றவுடன்..



குறள்நெறியனோ, சொல்ல முடியாத ஆத்திரத்துடன்,கை நரம்புகள் புடைக்க .."என்னடி திமிரா?நானும் போனாப் போக்டடும்ன்னு, பொறுமையா போனா ரொம்ப ஓவரா போறே.."


"ஆமாம் ,எனக்கு திமிர் தான்.. நீங்க சொன்ன திமிர் இல்லை..இந்த திமிருக்குப் பேர் தன்மானம்! சுயகெளரவம் அதற்கு நீங்க என்ன பேர் வச்சுட்டாலும் கவலையில்லை.."


"ஏய் ,என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறே.."


"நீங்க தான் என் பொறுமையை சோதிச்சீங்க.. அன்னைக்கு என்னவெல்லாம் பேசுனீங்க..? பணத்துக்காக உங்களை ஏற்றுக் கொண்டேன்னு தானே சொன்னீங்க..யாருக்கு வேண்டும் உங்க பணம்..என் அப்பாவிற்க்காகத் தான் நான் உங்களை ஏற்றுக் கொண்டதே.."என்றவள், ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் மன ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள்..


"என்னை சொன்னதுமில்லாமல், என் அப்பாவையும், பணத்துக்காக மாறிட்டாருன்னு சொன்னீங்களே? அப்போ, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அவரிடம் நான் எத்தனை மன்றாடி அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ள வைத்தேன் தெரியுமா?" என்றவளுக்கு, பேச்சு வராமல் தொண்டை அடைத்து கண்களில் நீர் கோர்த்து..


குறள்நெறியனோ,அவளின் நிலையைக் கண்டு , "வினு.." என்று கூறியபடி ,அவள் அருகே செல்லப் போனவனை கை நீட்டி தடுத்தாள்..


ஒரு நிமிடம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு.. "நீங்க, பேசின அன்னைக்கே வீட்டை விட்டு போய்டலாம்ன்னு தான் நினைத்தேன். ஆனால், நீங்க எனக்கு செலவு செய்த பணத்தை கொடுக்காமல் போக வேண்டாம்ன்னு தான் இத்தனை நாள் வெயிட் செய்தேன்.." ஒன்று மட்டும் தெரிஞ்சுக்கோங்க.."என்றவள் தன்னையே திகைத்து பார்த்துக் கொண்டிருந்தவனிடம்..


"உங்கள் மீது பாசம் காட்டியது ,உங்க பணத்துக்காக இல்லை .நாவேந்தி அத்தையின் மகன் என்ற‌ காரணமும், என்னையும் அறியாமல், உங்கள் மீது,எனக்கு ஏற்பட்ட நேசமும் தான்.." என்றவள் நாக்கை கடித்துப் பேச்சை நிறுத்தினாள்..


அவனோ, அவளின் நேசம் என்ற வார்த்தையைக் கேட்டு வியந்து பார்த்தான்..

அவளோ, அவனின் வியந்த பார்வையை சட்டைச் செய்யாமல், "அந்த நேசம் உங்கள் மீது வரக் காரணம்.. நீங்க நினைப்பது போல் உங்க பணமில்லை..உங்களின் நிலை.." என்றவளை புரியாமல் பார்த்தவனிடம்..


‌‌"தாய், தந்தையின் அன்பு இல்லாமல் வளர்வது, எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும்..என்றவளிடம்..

" ஓ..! பரிதாபத்தில் வந்த நேசமா?"என்றான் கோபமாக..

"தெரியலை.. ஆனால், அதுவும் ஒரு காரணம்.."

"உன் பரிதாபம் எனக்கு தேவையில்லை.."

"அது பரிதாபம் தானா ? என்று எனக்கே‌ தெரியலை.. உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சில விஷயங்கள் எனக்கு தெரிந்ததால் ஏற்பட்ட பாசம்.. நான்‌ கூட பரிதாபம்ன்னு தான் நினைச்சேன்..ஆனால், அது பரிதாபத்தால் வந்ததில்லை.. என்பதை இன்று, நீங்க லிஃப்ட்டில் சிக்கிய போது தான் அதை நான் உணர்ந்தேன்.. உங்களைத் திரும்ப, நல்ல படியாக பார்க்கும் வரை ..என் உயிரே ! என்கிட்ட இல்லை.. அதையும் நீங்க பணத்துக்காகத் தான் நடிச்சேன்னு சொன்னாலும், சொல்லிக்கோங்க..உண்மை என்னவென்று என் மனசாட்சிக்குத் தெரியும்! அது போதும்.." என்றவளுக்கு அவளின் கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் வந்தது..


குறள்நெறியனோ, அவள் சொன்னதையெல்லாம் கேட்டு ஸ்தம்பித்து நின்றான்..


பாவினி கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொண்டு,"நான் போறேன் இனி நான் இங்கு இருந்தால்? அது என் தன்மானத்திற்கே இழுக்கு.. நீங்க தான் என்னைக் கட்டாயக் கல்யாணம் செய்தீங்க.. இது தான்! என் வாழ்க்கைன்னு.. நானே, பல விதங்களிலும் என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு தான் இங்கே இருந்தேன்.."

"ஓ..! அப்போ, இப்ப போகப் போறே! அப்படித் தானே.."

"ஆமாம்.."

"அப்ப, நீ ! என் மீது கொண்ட நேசம் .. நான் சொல்வது போல் பொய் .."

இல்லை ,அது உண்மை !"

"அப்போ, எதுக்கு டி ? என்ன விட்டுட்டு போறேங்கிறே..நான் அன்று பேசியதற்குத் தான், ஒரு மாதமாக எங்கூட பேசாமல் மெளன விரதம் இருந்தீயே..இன்னும் கோபம் தீரலையா?


" ஆமாம் ..நீங்க அப்படி சொன்ன பிறகு என்ன பேச..எப்படி பேச ..அது தான் பேசாமல் இருந்தேன்..நான் உங்க மீது வைத்த அன்பு உண்மை தான்..அந்த ,நேசத்தை விட எனக்கு என் தன்மானம் பெரிசு..என்றவள், தொடர்ந்து..



அன்னைக்குச் ,சொன்னது போல்.. இன்னொரு நாள் !நீங்க ,பணத்துக்காக வந்தவன்னு என்னைச் சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்.."


"ஏய்,சும்மா அதையே சொல்லாதே..என் நிலையிலிருந்து நீ ,பார்த்தால் தான்..நான் சொன்னதுக்கான காரணம் புரியும். பாட்டி,தாத்தாவைத் தவிர என்னிடம் அன்பு காட்டியவர்கள் யாருமே இல்லை.. ஏன்? என்னைப் பெத்த புண்ணியவதியே, தன் சந்தோஷத்திற்காக, என்னை வேண்டாம்ன்னு தூக்கிப் போட்டுட்டு போனவர் தானே!அப்படி இருக்க..என்னை பார்த்த போதெல்லாம் வெறுத்த.. உன் அன்பு‌ மெய்யென்று எப்படி நான் நினைப்பேன்.."என்றவன் தொடர்ந்து..

"சரியாக அந்த நேரத்தில் !உங்க அப்பா, பணத்தை வாங்கிக் கொண்டது எனக்கு குழப்பமாக இருந்தது.. நீயும் திடீரென்று என் மீது அக்கறை எடுக்கவும் எனக்கு அப்படித் தோன்றியது.." என்றவனிடம்..

"என் அப்பாவை எத்தனை வருடம் கூட இருந்து பார்த்திருக்கீங்க.. அப்பக் கூடவா, அவரை பற்றி புரிந்து கொள்ளவில்லை.." என்றவளிடம்..

"அது தான் டி எனக்கும் குழப்பம்.. எதையுமே என்னால் நல்லபடியாக யோசிக்க முடியலை.. சின்னதிலிருந்து நான் பட்ட வலிகளும்,அவமானங்களும் அப்படி.." என்றவனிடம் பதிலே பேசாமல் நின்றாள்..


அவனோ,நான் அன்று பேசியது தவறு தான்.. "இனி அந்த மாதிரி நடந்து கொள்ள மாட்டேன் போதுமா..இனி பணம் கொடுக்கிறேன்..போறேன்னு சொல்லக் கூடாது.."


"இல்லை குறள். நமக்குள் ஒத்துவராது.. இருவரும் இரு வேறு துருவங்கள்! நாம் பிரிவது தான் சரி...மீயூச்சுவல் அன்டர்ஸ்டேண்டிங்கில் பிரிந்து விடலாம்.." என்று அவள் சொன்னவுடன்..


"வினு.." என்றவன், பல்லைக் கடித்துக் கொண்டு, "கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்றேன் ..மறுபடியும் கிழிந்து போன ரெக்கார்ட் மாதிரி அதையே சொல்லிட்டு இருக்கே?" என்றபடி ,கையை ஓங்கியவனைப் பார்ததவள்.. அசையாமல் அப்படியே நின்றாள்..


அவனோ,அவளின் நிமிர்வை பார்த்து கையை கீழே போட்டவன், முதன் முதலாக கணவனாக அவளை இழுத்து தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்..


பாவினியோ, விலகத் தோன்றாமல் அப்படியே நின்றாள்..


அவனோ,"வினு இந்த நிமிர்வ்வு தான் டி எனக்கு உன்கிட்ட பிடித்ததே.. இது தான் உன்னை எப்படியாவது கல்யாணம் செய்யனும்ன்னு ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது.. என்னை பிடிக்காத போதே.. உன்னை என்னிடம் வைத்துக் கொண்டவன் நான்! இப்போ, உனக்கு என்னை பிடிக்குமென்று தெரிந்த பின் விடுவேனா?" என்றவனிடம்..


"என் அப்பாவை பிடிக்காதவருக்கு, அவர் பெண் மட்டும் வேண்டுமா? "


"அது வேறு.. இது வேறு.. உன்னோடு தான் வாழப்போறேன்..உங்கப்ப‌ கூட இல்லை.."என்றவனிடம்..


"நீங்க என்ன சொன்னாலும் நான் போகத் தான் போறேன்..விடுங்க.." என்று அவன் பிடியிலிருந்து நழுவ முயன்றவளை, நகர முடியாமல் இன்னும் தன்னுள் புதைத்துக் கொண்டான்..


அவளோ, "ப்ளீஸ் விடுங்க..!" என்று கெஞ்சினாள்..


"முடியாது.."


"குறள் !உங்களுக்கும், எனக்கும்‌ எப்போதும்‌ ஒத்து வராது விடுங்க.."


"வராட்டி பராவால்லை.. இப்படியே வாழலாம்.."


"எனக்குத் தான் உங்க மீது நேசம் இருக்கு ..உங்களுக்கு இல்லை.நீங்க என்னை கல்யாணம் செய்ததே! என் அப்பாவை பழிவாங்கத் தானே.." என்றவளை அதிர்ந்து பார்த்தான்..


அவளோ,"எனக்கு எப்படித் தெரியும்ன்னு நினைக்கிறீங்களா? நான் அது கூட தெரிந்து கொள்ள முடியாத முட்டாள் இல்லை.. நீங்க கல்யாணம் செய்த அன்னைக்கே எனக்கு லேசாக டவுட் வந்துச்சு.. நீங்க அப்பாகிட்ட நடந்து கொண்ட முறையே அதை உறுதிப்படுத்தியது.."


"ஆமாம் , ஆனால்,அது மட்டும் இல்லை ..உன்னையும் எனக்கு பிடித்தது.."

"இதை நான் நம்பனுமா..?அப்படி பிடித்திருந்தால்.. என் அப்பாவை எதிரியாக பார்க்க மாட்டீங்க.."

"நம்பாட்டி போடி.. மறுபடியும் சொல்றேன்..அது வேறு, இது வேறு.! "

"எப்படி வேறு ..வேறாக முடியும்.. நமக்கு ஒருத்தரை பிடித்தால் அவர்களை சார்ந்தவர்களையும் கண்டிப்பாகப் பிடிக்கும்."

"உன் தத்துவமெல்லாம் எனக்கு ஒத்து வராது.எனக்கு உன்னை பிடிக்கும்..காலம் முழுவதும் உன்னோடு வாழனும் ,இப்படி சண்டை போடனும்ன்னு.. மனசு நிறைய ஆசை இருக்கு.. "

"இது உண்மையாக இருந்தால், நன்றாகத் தான் இருக்கும்.."

"உண்மை தான்டின்னு சொல்றேன்..இன்னும் நம்பலைன்னா? நான் என்ன தான் செய்ய முடியும்.."

"ம்..!உங்க அம்மாவை எப்போ நீங்க மதித்து பேசறீங்களோ? அப்போ, நான் உண்மைன்னு நம்பறேன்..அதன் பிறகு தான் நாம் சேர்ந்து வாழ முடியும்.."என்றவளை சட்டென்று விட்டவன்.

"ஓ..!அங்க சுத்தி.. இங்க சுத்தி.. இதுக்காக தான் இத்தனை டிராமாவா..?" என்றான் கசப்பாக..


"குறள் ! எனக்கு டிராமா போட வேண்டிய அவசியமில்லை.."

"ஏன் உங்கப்பாவுக்கு திடிரென்று ஞானயோதம் வந்துடுச்சா..? தாயையும் பிள்ளையையும் பிரித்த பாவத்துக்கு இப்ப சேர்த்து வைக்க உன்ன வச்சு காய் நகர்த்துறாரா..?"


"குறள் அப்பா மீது அபாண்டமாக பழி போட்டீங்க.. எனக்கு கெட்ட கோபம் வரும்.."

"பழி இல்லை ..இது உண்மை தான் ! நான் அனுபவிச்சிருக்கேன்.. எல்லாத்துக்கும் உங்க அப்பா தான் காரணம்.. கம்பெனியில் அவர் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தாலும்,என் சொந்த வாழ்க்கை அவரால் தான் கெட்டது.."

"குறள்! நீங்க, ஏதோ தப்பாக புரிஞ்சிருக்கீங்க ?"


"நான் எல்லாம் சரியாத் தான் புரிஞ்சிருக்கேன்..இங்க பாரு..நம்ம வாழ்க்கையில தேவை இல்லாம எல்லோரையும் நடுவில் இழுக்காதே.."


"நான் யாரையும் நடுவில் இழுக்கலை..நம்ம இணைவதற்கு காரணமானவர்களை நினைச்சுப் பாருங்கன்னு சொன்னேன்.. ஒரே, ஒரு முறை சரியான வழியில் யோசிச்சுப் பாருங்களே.."


"வினு, நான் சரியான வழியில் தான் சிந்திக்கிறேன்.."

"முடிவாக என்ன தான் சொல்றீங்க.."

"நம்ம வாழ்க்கையில யாரையும் நுழைக்காதே.நான் யாருடனும் சேரும் எண்ணமில்லை..தேவைப்பட்ட போது கிடைக்காத அன்பு! இப்ப வேண்டாம்.."


"சரி அப்போ நான் போறேன்.. இனி உங்க கூடப் பேசி பிரயோசனம் இல்லை.."

"ஓ..!அப்போ முடிவே பணணிட்டே..அப்புறம் எதுக்கு டி நேசம் ! அது.. இதுன்னு, என் மனசுல ஆசையை வளர்த்தே. எல்லாம் என்னைச் சொல்லனும்..போடி போ என் கண் முன்னே இனி நிற்காதே .."என்றவனிடம்..பதிலே பேசாமல் வெளியில் செல்ல
திரும்பியவளிடம்..


"ஒரு நிமிடம் என்றவன்,இதை எடுத்துட்டு போ! என்‌பொண்டாட்டிக்கு, சோறு போட.. அவகிட்டயே, பணம் வாங்கிற அளவு.. நான் கேவலமான ஆள் இல்லை.."என்றவன், அவளின் அருகில் வந்து, அவளை இழுத்து இறுக அணைத்தான்..


"இருவருக்குமே அந்த அணைப்பு தேவையாக இருந்தது.. மனசு கேட்காமல்"வினு ஒரு முறை நமக்காக யோசியே.." என்றவனிடம்..

"நல்லா யோசித்து தான் இந்த முடிவு எடுத்திருக்கேன்..ஒன்றே ஒன்று மட்டும் சொல்றேன்.. நாவேந்தி அத்தை நல்லவங்க.."


"போதும் நிறுத்து டி..இனி ஒரு முறை அந்தப் பேரை என்னிடம் சொன்னே ..? நல்லவங்களாம் நல்லவங்க.."

"நீங்க கோபப்படபட்டாலும் அது தான் உண்மை...அது கூடிய விரைவில் உங்களுக்கு தெரியும்.."என்று பாவினி சொன்னதும் ..

" எனக்கு தெரிந்தவரை போதும்...நீ,போ !உனக்கு பட்டால் தான் புத்தி வரும்.."என்றவன்‌, "என் ஞாபகமாக இதை வச்சுக்கோ .."என்ற படியே அவளின் மாம்பழக் கன்னத்தில் தன் முதல் அச்சாரத்தை இட்டான்..


அவளோ, அவனின் செயலில் ஸ்த்ம்பித்து நின்றாள்..


அவனோ, "வா நானே உன்னை விட்டுட்டு வரேன்.." என்றவனிடம்..

"வேண்டாம் நானே போய்க்கிறேன்..டிரைவரை மட்டும் அனுப்புங்க.."என்றவள் அவனிடமிருந்து விலகி வேகமாக வெளியில் சென்றாள்..


நாயகியின் பிரிவு நாயகனை வீழ்த்துமா?இல்லை நாயகனை வீழ்த்துமா? காலத்தின் கையில்...


அன்பு கொல்லும்..
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், அன்பே!அன்பே! கொல்லாதே! மீதமிருந்த இறுதி அத்தியாயம் போட்டாச்சு (29,30,31,32,33) 5யூடி போட்டாச்சு படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்.. இதுவரை இந்த கதையோடும்,என்னோடும் பொறுமையாக காத்திருந்து பயணித்த வாசக தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து உங்கள் ஆதர்வை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
அன்பே!அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 30

பாவினி டிரைவருடன் நாவேந்தி வீட்டுக்குத் தான் சென்றாள்.. பெற்றவர் வீட்டுக்கு போகவில்லை..அவளைப் பொறுத்தவரை நாவேந்தியை எப்படியாவது குறள்நெறியனுடன் சேர்க்கனும்..அதற்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தாள்.


வீடு வந்ததும் ,டிரைவரை அனுப்பி விட்டு ஒரு பெரு மூச்சுடன் கதவைத் தட்டினாள்..


குறள்நெறியன் வீடு போல், நாவேந்தி வீடு பெரிய வீடு இல்லை.. கொஞ்சம் அப்பர் மிடில் கிளாஸ் வீடு தான்..ஆனால் அந்த வீடு அவளுக்கு என்னமோ தெய்வம் குடி இருப்பது போல் தோன்றியது..


படம் வரைந்து கொண்டிருந்த நேயவாணன், கதவு தட்டும் சத்தம் கேட்டு, இந்த நேரத்தில் யார்? என்ற யோசனையுடன் கதவைத் திறந்தார்..

அங்கே ,பாவினியைப் பார்த்து திகைத்துப் போய் அசையாமல் நின்றார்.. அதற்குள் நாவேந்தியும்,கவினும் சத்தம் கேட்டு வந்தவர்களும் பவினியைப் பார்த்து திகைத்தனர்..


பாவினியோ,அவர்களின் திகைப்பை பொருட்படுத்தாமல். "வீட்டுக்கு வந்தவளை வான்னு கூப்பிட்டாமல் ..இப்படி வாசலிலேயே, வழியை மறைத்து நிற்பது நியாமா? என்று கேட்டபடியே அவர்களைத் நகரச் சொல்லி உள்ளே சென்றாள்..


நாவேந்தியோ, பேய் அறைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு ,,"பவி இந்த நேரத்தில் யாருடன் இங்கு வந்தாய்..நீ வந்தது குறளுக்கு தெரியுமா?" என்று கேட்டவரிடம்..


"அத்தே, எதற்கு இத்தனை பதட்டம்.. நான் இங்கு வந்தது குறளுக்கு தெரியாது.. நான் அப்பா வீட்டிற்கு போறேன்னு நினைச்சு இருப்பார்.. எனக்கும்,குறளுக்கும் சண்டை அது தான் வீட்டை விட்டு வந்துட்டேன்.."


"பவி என்ன சொல்றே.. நான் நீ ரொம்ப புத்திசாலின்னு நினைத்தேன்.."

"இப்ப மட்டும் என்ன ? நா புத்திசாலி தான் அத்தை.. அதில் எந்த டவுட்டும் வேண்டாம்.."

"பாவினி, என்ன பிரச்சினை ?புரியும் படி சொல்லும்மா?"என்ற நேயவாணனிடம்..

"அங்கிள் ,இவங்க பையனோட சண்டை .. அது தான் ,பையனைப்‌ பெற்றவரிடம் நியாயம் கேட்க இங்கு வந்தேன்.."

"என்ன பிரச்சினைன்னு முதலில் சொல்லுங்க அண்ணி.." என்று கவினும் கேட்க..

பாவினியோ, "அத்தே நான் கொஞ்ச நாள் இங்க தான் இருக்கப் போறேன்..ஏன்?எதற்குன்னு கேட்காதீங்க.."என்றவள் சோஃபாவில் சென்று அமர்ந்தாள்..


நாவேந்திக்கு, என்ன செய்வதென்றே தெரியாமல் அவள் அருகில் வந்து அமர்ந்தவர், "பவி என்ன பிரச்சினை இருந்தாலும் ,நீ வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.அங்கிருந்தே சரி செய்யனும்.."


"நானும்‌அதைத் தானே செய்கிறேன்..இதுவும் எனக்கு புகுந்த வீடு தானே.." என்றவளிடம், என்ன சொல்வதென்றே தெரியாமல் நாவேந்தி விழித்தார்.


"நேயவானும்,கவினும் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.நாவேந்தியோ, நேயவாணனைப் கேள்வியாகப் பார்த்தார்.


அவரோ , "பவி நீ ! இங்கு தான் வந்திருக்கேன்னு, குறளுக்கு தெரிந்தால்.. பெரிய பிரச்சினை வரும் மா.. உங்களுக்குள் இன்னும்‌ விரிசல் அதிகமாகும்.."


"அங்கிள், நீங்க சொல்வது எனக்கும் புரியுது..ஆனால், வேற வழியே இல்லை.. இப்போதைக்கு என்னால் எதையும் சொல்ல முடியலை..ப்ளீஸ் கொஞ்சம் என்னை புரிஞ்சுக்கோங்க.. "என்றவள்..


நாவேந்தியிடம் , "அத்தே பசிக்குது ஏதாவது சாப்பிடக் கொடுங்களே.." என்றவளிடம்..

"பவிம்மா ,இதோ இரண்டே நிமிடம் பொறு டா.. நான் தோசை ஊத்தி எடுத்து வரேன்.." என்று கிச்சனுக்குள் சென்றார்..


பாவினியோ, இன்னும் சற்றுநேரத்தில் நடக்கும் கலவரத்தை அறியாமல் டிவியில் ஆழ்ந்தாள்..


குறள்நெறியனோ ,பாவினி சென்றவுடன் அறையில் இருக்க‌ முடியாமல் பால்கனி சென்று அமர்ந்தான்.. மனம் முழுவதும் பாவினியே ‌நிரம்பி வழிந்தாள்..


அவளை, முதன்முதலில் பார்த்ததிலிருந்து.. ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.. அவளின் நிமிர்வும்,துணிவும்‌ தான் அவளை அவன் பால் ஈர்த்தது.


அவள், தூயவன் பெண்‌ !என்று தெரிந்ததுமே, அவனுக்கு அவள்‌ மீது இன்னும் ஈடுபாடு ஏற்பட்டது.. ‌

தூயவன் அவளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன்.. என்று சொல்லிய பிறகு, மணந்தால்,அவளைத் தான் மணந்து கொள்ள வேண்டுமென்ற‌ வெறி கிளம்பியது..

அதே போல், பல தில்லுமுல்லு செய்து தான் அவளை கட்டாயத் திருமணம் புரிந்தான்..

அதுவரை அவள் மீது அவனுக்கு பெரிதாக நேசமெல்லாம் இல்லை!.


ஆனால், அவளுடன் ஒரே அறையில் வாழத் தொடங்கியதும்.. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன்னை அறியாமல் நேசிக்கத் தொடங்கினான். அதை ஒத்துக் கொள்ள அவனின் ஈகோ இடம்‌கொடுக்கவில்லை..


அவள் உறங்கிய பிறகு எத்தனையோ நாட்கள் அவளை பார்த்தபடியே விழித்து கிடந்திருக்கிறான்!



பாவினியை நெருங்க வேண்டுமென்று, அவன் உள்ளம் துடிக்கும்‌ போதெல்லாம்.. கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி இருக்கிறான்..


அவள் துடுக்குத் தனமாக பேசும் போது, அவனுக்கு அளவு கடந்த கோபம் வரும்..
ஆனாலும், அவள் பேச்சை ரசிப்பான்..

தன்னிடம் எப்போதும் மல்லுக்கு நிற்பவளின்,திடீரென்ற.. அக்கறையும்,அவளின் அன்பும், அவனைக் குழப்பியது.. அதனால் தான், தேவை இல்லாத வார்த்தைகளை அன்று விட்டான்.


அதற்கு ,அவனின் மனைவி ஒரு மாதம் மெளனவிரதம் இருந்து அவனைக் கொல்லாமல் கொன்றாள்.. பேசாட்டியும் அவள் அந்த அறையில் இருப்பதே பெரும் நிம்மதியைக் அவனுக்கு கொடுத்தது.


இன்று, லிஃப்டில் சிக்கி.. தப்பி வெளியே வந்த போது ..அவள்,அவனைப் பார்த்து பதறி துடித்தது.. இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு..அப்போது, நன்கு புரிந்தது அவள் தன்மீது வைத்திருந்த நேசம்..


ஆனால் ,அதற்கெல்லாம் முத்தாப்பு வைத்தது போல் , இன்று,பாவினி தன்னை நேசிப்பதாக சொன்ன போது அளவில்லாமல் மகிழ்ந்தான்..


ஆனால், அதை கெடுப்பதைப் போல் ..அவள் சொன்ன ‌டிமாண்ட் அவனை அளவுகடந்த கோபத்திற்கு ஆளாக்கியது.. எங்கே ,தன்னை மீறி அவளிடம் கடுமையாக நடந்து விடுவோமோ? என்று நினைத்து தான் அவள் போவதற்கு அனுமதித்தான்..


அப்போதும் ,மனதிற்குள்‌ இரண்டு நாட்கள் கழித்து, அவளை இங்கே அழைத்து வந்து விடவேண்டுமென்று தான் நினைத்திருந்தான்..



இப்போது! அவளில்லாமல் அறைக்குள் செல்லவே பிடிகாகமல் தவிப்புடன் அமர்ந்திருந்தவனின் அலைபேசி அழைத்து..


அழைத்தது டிரைவர் ,என்று தெரிந்தவுடன்‌, அழைப்பை ஏற்றவனிடம்..அந்தப்பக்கம் சொல்லிய செய்தி கண்முன் தெரியாத கோபத்தை கொடுத்தது..


உடனே, தானே காரை எடுத்துக் கொண்டு தன் தாயின் வீட்டுக்கு முதல் முதலாக சென்றான்..

அவன்,அழைப்பு மணியை அழுத்திய வேகத்தில் ,அத்தனை பேரும்‌ அடித்து பிடித்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர்.

குறள்நெறியனோ, வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் பாவினியை மட்டும் பொசுக்கி விடுபவன் போல் பார்த்தான்..


அவளோ, அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் குனிந்து கொண்டாள்..


அவனைக் கண்டதும், நேயவாணன் ,"உள்ளே வாப்பா.." என்றவரிடம்..


நான், இங்கே விருந்தாட வரலை.. என்‌மனைவியை அழைத்துப் போக வந்தேன்‌..," என்றவன் ,பாவினியைப் பார்த்து , "கிளம்பு போலாம்.." என்றான் ,சற்றே அழுத்தமாக..


அவளோ, நான் வரலை நீங்க போங்க.."என்றாள்.


"பாவினி, என் பொறுமையை சோதிக்காதே வா.. "என்றான், பற்களை கடித்தபடி...

நாவேந்தி, கவின் ,நேயவாணன்.. இவர்கள் மூவருமே ,வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தனர்..


குறள் நெறியன்,பாவினியின்‌ அருகில் வந்து, "வா .."என்று‌ அவளின் கைகளைப் பிடித்து இழுத்தான்..


அவளோ, அவனின் கைகளை உதறிவிட்டு, உள்ளே போகத் திரும்பியவளை.. தடுத்து நிறுத்தியவன் ,அவளிடம் இனிப் பேசி பயனில்லை.. என்று நினைத்தவன், அவளை அப்படியே தூக்கி தோள்களில் போட்டான்.. அவள் ,துள்ளத் ..துள்ள, தூக்கி சென்று காரில் ஏற்றினான்..


அவனின் செயல்களை பார்த்து உறைந்து போனவர்கள், அவனை தடுக்கும் வழியறியாது விழித்தனர்.!


நேயவாணனோ, நாவேந்தியிடம் இதை நான்‌ ஏற்கனவே எதிர்பாத்தது தான்..நீ டென்ஷன் ஆகாதே..அவன் இப்படி நடக்கலைன்னாத் தான் அதிசியம் .. என்றவர் ,அதற்கு மேல் எதுவும் பேசவில்லை..


நாவேந்தி, "நேயா நான் வேண்டுமானால், கவினைக் கூட்டிட்டுப் போய்.. அங்கே, ஓர் எட்டு பார்த்துட்டு வரட்டுமா? "என்று கேட்டவரிடம்..


"வேந்தி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. அங்க, பெரியவங்க இருக்காங்..க அவுங்க, பார்த்துப்பாங்க..நீ போனாலும் தேவையில்லாத டென்ஷன் தான் உனக்கு.." என்றார்..

நாவேந்திக்கு அதற்கு மேல் வற்புறுத்தி கேட்டகவும் தயக்கமா இருந்துச்சு.. அதனால், கடவுள் மீது பாரத்தை போட்டார்..

குறள்நெறியனோ, மின்னல் வேகத்தில் காரை வீட்டுக்கு ஓட்டினான். வீடு வந்ததும், அவளை, அதே வம்படியாக தூக்கி வந்து தங்கள் அறையில் போட்டான்.!


நல்ல வேளை பெரியவர்கள் இருவருக்குமே இவர்களின் சண்டை தெரியாது..அவர்கள் மாத்திரையை போட்டுக் கொண்டு நேரமே தூங்கி விடுவார்கள்..அதனால் இவர்களின் இந்த அட்டகாசம் தெரியாது..


பாவினியோ, குறள் நெறியனைப் பார்த்து அளவு கடந்த கோபத்துடன், "உங்களுக்கு என்ன‌ பைத்தியமா? இப்படி லூசூ மாதிரி நடந்துக்குறீங்க.."என்று கேட்டவளிடம்..


"ஆமாண்டி .. உன் மேல் பைத்தியமா இருக்கேன்..இனி, உன்னை எங்கேயும் விடுவதாக இல்லை..உனக்கு பிடிச்சாலும்,பிடிகாகாட்டியும் உன் வாழ்க்கை எங்கூடத் தான்.. அதனால், என்கூட சேர்ந்து வாழ்ற வழியைப் பாரு.. வீட்டை விட்டு போகனும்ன்னு நினைச்சே.. போறதுக்கு கால் இருக்காது.." என்று சாமி ஆடியவன், தொடர்ந்து .. எங்கிட்ட நீ என்ன டி சொல்லிட்டுப் போனே..? இப்போ என்ன செய்திருக்கே..?"

"என்ன செய்தேன்..?"என்றாள் கூலாக..

"உங்க அப்பா வீட்டுக்குத் தானே போறேன்னே..?"

"ஆமாம், எங்க அம்மா வீட்டுக்கு போவதற்கு பதில், உங்கம்மா வீட்டுக்கு போலாம்னு நினைச்சேன்.."

"பாவினி..", என்று பல்லைக் கடித்தவனிடம்..

"கூல் பேபி கூல்.." என்றாள்..


அவனோ,"உன்னிடம் பேசி ப்ரயோசனம் இல்லை.. நீ ஒரு‌ முடிவோடு தான் இருக்கே..தூங்கு !"என்றவன், அவள் அருகில் வந்து அவளை அணைத்தவாறே படுத்துக் கொண்டான்..


அவனோ, படுத்தவுடன் தூங்கிவிட்டான் ..

பாவினியோ,தன் இடை மீது கிடந்த அவனின் விரல்களை பிடித்த படி படுத்திருந்தாள்..அவன் பேசிய பேச்சுக்களை அசை போட்டவளுக்கு ,கோபத்திற்கு பதில் மிகிழ்ச்சியே மனம் முழுவதும் நிரம்பியது..அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்ற எண்ணமே, அவள் மனதிற்கு இதமாக இருந்தது..அந்த நினைவுகளுடனேயே உறங்கினாள்.!


அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாமே, பாவினி ,உடனேயே‌ குறள்நெறியன் சுற்றிக் கொண்டிருந்தான்.. நாவேந்தி வீட்டிற்கு மறுபடியும் போய் விடுவாளோ? என்று நினைத்து,அவளை எங்கேயும் தனியாக போகவிடவில்லை..


பாவினிக்கு,அவனை என்ன செய்வதென்றே தெரியலை..தன் குடும்பத்தை பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது.. அவனிடம் எப்படி சொல்வது ? என்று தெரியாமல் குழம்பினாள்..



வேறு வழியில்லாமல், குறள்நெறியனிடமே தன் ஆசையை‌ சொல்லவும்.. "சரி வா..! நானே உன் வீட்டில் விடுகிறேன்‌." என்று முதல் முதலாக திருமணத்திற்கு பிறகு.. மாமனார் வீட்டிற்கு மனைவியை அழைத்துக்கொண்டு சென்றான்.


வளர்பிறை இன்முகத்துடன் வரவேற்றார்..தூயவனும்‌ மரியாதையுடன் குறள்நெறியனை வரவேற்று பேசினார்..


பாவினியோ ,நவிலைப் பார்த்த சந்தோஷத்தில் கணவனையே மறந்தாள்.. தம்பியுடன் ,ரொம்ப நாள் கழித்து மனம்‌விட்டு பேசி சிரித்தாள்.

குறள்நெறியனோ, "கம்பெனி வரை போய் வருகிறேன்.." என்று சொல்லி,அவளை அங்கேயே விட்டுச் சென்றான்.

குறள்நெறியன், சென்ற பின்.? பழைய பாவினியாக தாய்,தந்தையுடன் மகிழ்ச்சியுடன் ஆசை தீரப் பேசித் தீர்த்தாள்..
வளர்பிறையோ, தயக்கத்துடன் "பவிம்மா,நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக இருக்கீங்களா?" என்றவரிடம்..
"சந்தோஷமாகத் தான் இருக்கேன் அவர் என்னை நல்லா பார்த்துக்கிறார்.." என்று கூறியதை வளர்பிறையுடன் ,தூயவனும் கேட்டுக் கொண்டார்..

நாவேந்தி வீட்டிற்கு பாவினி சென்ற போது, குறள் அவளை தூக்கிக்கொண்டு போனது வரை அவருக்கு தெரியும்..

மகள் மீது உண்மையான அக்கறையுடன், குறள் இருப்பது, அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது..


வளர்பிறையோ ,பாவினிக்கு பிடித்ததை செய்து கொடுத்தாள்..

பாவினியோ, நாவேந்தியையும் ,எழிலியையும் குறள் இல்லாத தைரியத்தில் வீட்டிற்குஅழைத்தாள்..


அவர்கள் வந்த பின்னர்‌, பொழுது மகிச்சியாக ரக்கை கட்டிப்‌ பறந்தது.. சரியாக, குறள் வரும் நேரம் பார்த்து எதிர்பாராத விதமாக செல்வச்சீரன்‌ தூயவன் வீட்டுக்கு வந்திருந்தான்..



எல்லாருமே ,அவனிடம் இயல்பாக பேசினார்கள்.. அவனோ, பாவினியிடம் "எப்படி இருக்கீங்க? என்று அன்பாக கேட்டான்..


"நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..? " என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே..
பாவினியை, அழைத்துப் போக.. குறள்நெறியன் வந்திருந்தான்..


செல்வச்சீரனைப் பார்த்ததும் .!அவனால், கோபத்தை கட்டுப்படுத்த முடியலை..

பாவினிக்கோ, வயிற்றில் புளியை கரைத்தது.. குறள் நெறியன்,செல்வச்சீரனை பார்த்ததும்,அங்கே,ஒரு நிமிடம் கூட நிற்காமல், யார் சொல்லியும் கேட்காமல், பாவினியை அழைத்துக் கொண்டு, வீடு வந்தான்.


செல்வச்சீரனுக்கோ, குறள்நெறியனைப் பார்த்ததும்.. பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்து அவனை வாட்டியது..


தூயவன், தான் அவனுக்கு ஆறுதலாகவும் ,பக்கபலமாகவும் இருந்தார்..
குறள்நெறியன் வீட்டுக்கு வந்ததும் பாவினியை பிடியோ பிடி.., என்று பிடித்துக் கொண்டான்..

"அவனை வரச் சொல்லி சந்திக்கத் தான் ,அங்கே போனாயா?என்று அவன் கேட்டதும் ,துடித்துப் போய்விட்டாள்.!

"என்னை அவ்வளவு கேவலமாக நினைச்சிருக்கீங்களா"? என்று கேட்டவளுக்கு பதிலே சொல்லவில்லை


அவர் ,அப்பாவைவைப் பார்க்க எதார்த்தமாக அப்போது தான் வந்தார்..:என்னைப் பார்த்ததும் நலம் விசாரித்தார்.!" என்று சொன்னவள் .!

மனதிற்குள், "நல்ல வேளை! நாவேந்தி அத்தே ,வேலை இருக்குன்னு போய்ட்டார்.." என்று நினைத்தாள்..


குறளோ, பதிலே பேசாமல் முகத்தை தூக்கிக் கொண்டு இருந்தான்.

பாவினிக்கு அவனின் மனநிலை நன்றாக புரிந்தது. ஆனால் அவனுக்கு தன்னை புரிய வைக்கத் தான் தெரியலை..?

மன்னவனின் மனதிற்கு மங்கையிவள்
மருந்தாவளா?இல்லை காயம் தருவாளா? காலத்தின் கையில்.

அன்பு கொல்லும்..

 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 31

பாவினியோ, எப்படித் தான் குறள்நெறியனின் சந்தேகத்தை தீர்ப்பது, என்று குழம்பித் தவித்தாள்..


அவனோ, உடையை கூட மாற்றாமல் பால்கனியில் சென்று நின்றான்..பாவினியோ அமைதியாக அறைக்குள்ளேயே இருந்தாள்.

அவளுக்கு அவனின் மனம் புரிந்தது..அவனை எப்படியாவது சமாதானப் படுத்தனும் என்று நினைத்தவள், பால்கனிக்குச் சென்று அவனின் தோள்களில் சாய்ந்த படி, "குறள் என் மனதில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.."என்றாள்..


அவனோ, பதிலே பேசாமல் இருக்கவும், கோபத்துடன்.. "நான் இப்ப உங்களை நம்ப வைக்க என்ன தான் செய்யனும்.."என்றாள்‌ கோபமாக..

அவனோ, அதற்கும் பதில் பேசாமல் இறுகிப் போய் நின்றிருந்தான்..

பாவினிக்கு, அவன் பதில் பேசாமல் இருப்பது மனதிற்குள் வலித்தது.. பேசாமல் அறையில் வந்து படுத்துக் கொண்டாள்..


சிறிது நேரம் கழித்து, அவள்‌ அருகே வந்து படுத்தான் குறள்நெறியன்.. அவளோ அவன் புறம் நெருங்கி அவன் மார்பில் தலை வைத்து படுத்தாள்..கோபமாக இருந்தவனுக்கு அவளின் செயல் ஆறுதல் தர..அவளை இறுக அணைத்துக் கொண்டு படுத்தான்..


பாவினியும்‌,அவனை விட்டு விலகாமல் பேசாமல் படுத்திருந்தாள்..


குறள்நெறியனோ ,அவளின் தலையை வருடியபடியே.. "வினு .."என்றான்.

அவளோ, "ம்..!"என்றவளிடம்..


"என் மீது கோபமா?.."


"இல்லை ஏன்?"

"நான் உங்க வீட்டில் நடந்து கொண்டதற்கும் ,இத்தனை நேரம் பேசாமல் இருந்ததற்கும், கோப்படுவாய்ன்னு நினைச்சேன்.."


"கோபம் வந்தது. ஆனால், நீங்க என் மீது வைத்த அன்பு தானே இதற்கெல்லாம் காரணம்ன்னு புரிஞ்சுட்டேன்.."

"ம்..!"என்றவன்,"வினு , நம்ம வாழ்க்கையை நாம் தொடங்கலாமா.."


"இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டுமே.."

"ஏன்?"

"சொல்லத் தெரியலை .. ஆனால், நீங்க கோப்படலைன்னா.." சொல்றேன்..

"அப்போ, நான் கோபப்படற மாதிரியான விசயம் தானா ?"

"ம்..!எனக்கு ,நம்ம ரெண்டு பேரும் நாவேந்தி அத்தே கிட்ட ஆசிர்வாதம் வாங்கிய பின் நம் வாழ்க்கையை தொடங்கனும்ன்னு ஆசை.."

"வினு .."என்று பல்லைக் கடித்தவன்.. அவளை தன்னிடமிருந்த விலக்கி விட்டு திரும்பி படுத்துக் கொண்டான்..


பாவினியோ ,"கோபம் வந்துடுச்சா?" எப்படித் தான் அத்தையைப் பற்றிய உண்மையை இவனிடம் சொல்வது..என்று குழம்பினாள்..

அந்த உண்மை தெரிந்தால் தானே, குறள் அத்தையுடன் சேர முடியுமென்று.. யோசித்தபடியே உறங்கிப் போனாள்..


அடுத்து வந்த நாட்களில், குறள் அவளிடம் அதிகம் பேசவே இல்லை.. அவளோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மறுபடியும் அவனுடன் கம்பெனிக்கு சென்றாள்..


அவனின் அறையிலேயே இருந்து தான், வேலையும் பார்த்தாள்.. ஆனால் ,அவன் ஒதுங்கியே இருந்தான்..அவனின் கோபம் அவளுக்கு வலித்தது..


என்ன தான் செய்து இவனை சரிப்படுத்துவது? என்று எண்ணிக் கொண்டே இருந்தாள்..


அன்று, ஏதோ சில பொருட்கள் வாங்கனும் மென்று ,அவளையும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்க்கு கூட்டிச் சென்றனர்..


அங்கே ,எதிர் பாராமல் செல்வச்சீரனையும் நவிலையும் சந்தித்தனர்..

செல்வச்சீரனுக்கு, குறள் மீது அளவு கடந்த கோபம் இருந்தாலும்,தூயவனுக்காக அமைதி காத்தான்..


நவிலோ, பாவினியைப் பார்த்ததும் ஓடிச் சென்று நலம் விசாரித்தான்..


குறள்நெறியனோ, இறுகிய முகத்துடன் தள்ளிப் போய் நின்று கொண்டான்..


பாவினி, நவிலிடம் "மாமா கூட பேசு.." என்றவளிடம்.. "என்னால் பேச முடியாது.. எனக்கு மாமான்னா? அது செல்வச்சீரன் தான் ஞாபகம் வருது.."என்றவனிடம்..


நவில், "குறள் தான் உனக்கு மாமா ! ஞாபகம் வைத்துக்கோ.. ! இனி, ஒரு முறை இப்படி ஏதாவது சொன்னே.. நான் பேச மாட்டேன்.. அவரிடம் ,பேசலைன்னா? இனி, எங்கிட்டயும் பேச வேண்டாம்.." என்று தம்பியிடம் சொன்னவள்,குறள் நெறியனிடம் சென்று நின்று கொண்டாள்..


இவர்கள் பேசியதை செல்வச்சீரனும் கேட்டான்..மனதிற்குள் வலிக்க வெற்று புன்னகையுடன் ,உண்மையைத் தானே சொல்கிறாள்.. என்ன தான் நவில் என்னிடம் பாசாமாக பழகினாலும்..நான் அவனுடைய மாமா ஆக முடியாதே ?என்று நினைத்துக் கொண்டான்..


பாவினியோ, தனக்கு தேவையான சில பொருட்களை, வாங்கிக் கொண்டு.. குறள்நெறியனுடனேயே சுற்றிக் கொண்டிருந்தாள்..


நவிலோ, பாவினி சொன்னதைக் கேட்டு வருந்தியவன்,அக்காவுக்காக குறள்நெறியனிடம் "மாமா.." வென்று அழைத்து பேசினான்..


பாவினியோ, தம்பிக்கு கண்ணாலேயே நன்றி சொல்லிச் சென்றாள்..

வீடு வந்ததும் ,வழக்கம் போல் அவர்கள்அறையில் , மெளனம் குடிகொண்டது..


இரவு உணவு முடித்த பின், குறள் நெறியன் தன் மடிக்கணினியில் புகுந்து கொண்டான்..


பாவினியோ ,அவனிடம் பேசவேண்டும் என்று நினைத்து இருந்தாள்.. அவன் மடிக்கணியை தூக்கி வைத்திருப்பதைப் பார்த்தவளுக்கு அடங்காத கோபம் வந்தது..

அவனிடம் சென்று ,உரிமையாக அவனின் தோள்மீது சாய்ந்தபடியே,"குறள் வர..வர, இந்த லேப்டாப்பை பார்த்தால், அடித்து நொறுக்க வேண்டும் போல் இருக்கு.."

"ஏன்..?"

"முழுநேரமும் ,இது தானே உங்க கூட இருக்கு..அது தான் கொஞ்சம் பொறாமையா இருக்கு.."என்றவளை பார்த்து சிரித்தவன், "நீயும் தான் , என் கூட முழு நேரம் இருக்கே.."

"இருந்து என்ன யூஸ்..இது மேல் இருக்கும் பாசம் கூட ,உங்களுக்கு என் மீது இல்லை.."

"அப்படியா?நீ பார்த்தே.."

"ஆமாம் பார்த்தேன்.. கடையில் அந்த செல்வச்சீரன் வந்தா..
உங்களுக்கு என்ன? அதுக்கு என் மீது கோபப்பட்டால் நான் என்ன செய்ய..?"


"உன் மீது நான் எங்கே கோபப்பட்டேன்..?"


"அன்னைக்கும், அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்ததிலிருந்தே, நீங்க எங்கிட்ட சரியா பேசரதில்லை..ஏதோ அதிசயமாக இன்னைக்குத் தான் வெளியில் கூட்டிட்டுப் போனீங்க..அங்கே நந்தி மாதிரி அவன் வந்துட்டான்.."

"அப்படி எல்லாம் இல்லை..ஏதோ டென்ஷன் விடு.. நீ தூங்கலையா? "என்று பேச்சை மாற்றினான்..

பாவினியோ, எனக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..ரொம்ப நாளாக டிரை பண்றேன் ..அது தான்.."

"வினு நீ மிஸஸ் நேயவாணனைப் பற்றி மட்டும், பேசாமல் வேறு எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசு.."


"குறள், எனக்கு அதை பற்றித் தான் பேசனும்.."


"வினு என் மூடைக் கெடுக்காமல் ,எழுந்து போ !"என்று மூஞ்சியில் அடித்தது போல் சொன்னான்..


பாவினியும், அவன் அப்படிச் சொன்னதும், சட்டென்று எழுந்து வந்து ,படுத்துக் கொண்டாள்..


குறளுக்கு அவள் கோபமாக போனதும், வேலையே செய்யவே முடியலை..


மனதிற்குள், 'என்னை படுத்துறேயேடி.. அதைப் பற்றி பேசாதேன்னா கேட்பதே இல்லை.. 'என்று தனக்குள்‌ பேசியவன்‌, மடிக்கணினியை மூடி வைத்து விட்டு வந்து, அவள்‌அருகில் படுத்தான்..


அவளோ ,அசையாமல் படுத்திருந்தாள்..அவளை தன் புறம் வழுகட்டாயமாக திருப்பி, தன் நெஞ்சில் சாய்த்தவன்..


"வினு பார்த்தீயா? அவுங்களைப் பற்றி பேசினாலே நமக்குள் சண்டை தான் வருது.. உனக்கு ஏன்‌ அது புரிய மாட்டேங்குது.. ?அது முடிந்து போன சேப்டர். அதை ஏன் திரும்பவும்‌ புரட்டனும்.. நம் வாழ்க்கையை பற்றி யோசித்தால் கூடப் ,ப்ரோயோஜனம் இருக்கு.." என்றவன், அவளின் முகத்தை நிமிர்த்தி அவள்‌ நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்..


அவள் ,அமைதியாகவே இருக்க.. அதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அவளின் முகம் முழுவதும் இதழ் ஊர்வலம் நடத்தியவன்,அவளை தன்னவளாக்கி கொள்ள முயன்றான்..

பாவினியோ, எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருக்கவே ,அவனுக்கு சந்தேகம் வந்தது..


"வினு கோபமா..?" என்றவனிடம், 'இல்லை' என்று தலையை ஆட்டியவள், முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள்..


அதுவே, அவனுக்கு அவளின் சம்மதத்தை சொல்லாமல் சொல்லியது. மை டியர் பாட்டழகி.." என்றவன், அவளுள் புதைத்தான்..


இருவரின் ஹார்மோன்களும் ,தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்த காரணத்தால் .. அங்கே,அழகான இல்லறம் மலர்ந்தது..


அவனோ,தனக்கே.. தனக்கென்று சொந்தமான அந்த அழகான பாமாலையை, மீண்டும்..மீண்டும் சூடி ரசித்தான்..


இவர்களின் இனிமையான கூடலைக் கண்டு நிலவும் வெட்கப்பட்டு மேகத்திற்குள் தஞ்சம் புகுந்தது..



அடுத்து வந்த நாட்களில் இருவரும் ஒருவராய் வாழ்ந்தனர்..பாவினி மட்டும் முகத்தில் யோசனை ரேகை உடனேயே வலம் வந்தாள்..


எப்படியாவது கணவனிடம் உண்மையைச் சொல்லி இருவரையும் சேர்த்து வைக்கனும்..


அப்பா மீது, எந்த தவறும் இல்லை என்று அவனுக்கு புரிய வைக்கனுமென்ற, சிந்தனையே இருபத்தி நான்கு மணி நேரமும் அவளை ஆட்கொண்டது..


குறள்நெறியனோ, அவளை பாசமழையில் நனைய வைத்தான்.. வீட்டில் இருக்கும் போது அவனது கை வளைவுகள் தான் அவளின் இருப்பிடமானது..


ஆசையும்,நேசமும் மிகும் போதெல்லாம் அவள், அவனுக்கு பாட்டழகி ஆகி விடுவாள்..

அவளோ, ஒரு முறை.. "ஏன் அப்படி கூப்படறீங்க .."என்று கேட்ட பொழுது, அவன் சொன்ன விளக்கம் அவளை வாய் அடைக்கச் செய்தது..

"வினு உன் பெயரின் அர்த்தம்.. பாட்டைப் போல் இனிமையானவள்ன்னு தானே, அதனால், தான் நீ எனக்கு சாங் ப்யூட்டி.." என்றான்..


அவளோ "ஓ..!என்றதுடன் வேறு எதுவும் சொல்லவில்லை..

நாட்கள் வசந்த காலமாக சென்று கொண்டிருந்தது. ஆனந்ததத்தை, மட்டுமே திகட்ட திகட்ட அனுபவித்தனர்.


ஆனால், வாழ்க்கை ஒரே மாதிரியாக இருப்பதில்லையே..? இரவும் பகலும் போல.. இன்பமும் துன்பமும் மாறி மாறி தானே வரும்..

பாவினிக்கு அன்று காலை எழும் போதே ஏனோ மனசுக்குள் ஒரு மாதிரியாக பிசைந்தது..


மதியம் வரை அதே உணர்வு இருக்க.. கணவனிடமும் அதைச் சொன்னால்..
குறளோ, "நீ எதையும் போட்டுக் குழப்பிக்காதே.. ஒன்னும்இருக்காது .." என்று தைரியம் சொன்னான்..


ஆனால், மாலை வீட்டுக்கு போன சில மணிநேரத்திலேயே பாவினி பயந்தது போல் அதிர்ச்சி தகவல் வந்தது..

குறளுக்குமே ,ஏனோ? அன்று மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது..ஏற்கனவே பயந்து கொண்டு இருப்பவளிடம், தானும் சொல்லி ,மேலும் பயப்படுத்த வேண்டாமென்று சொல்லாமல் விட்டான்..

தாத்தாவிடம் சிறிது நேரம், தொழிலைப் பற்றி பேசினால் ..மனசு மாறும்.. என்று செங்கோடனிடம் தொழில் விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான்..


மெய்யம்மையும், பேரன் அருகில் அன்று அதிசயமாக வந்து அமர்ந்து ,அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.. பேரன், இப்படி ஓய்வாக அமர்ந்து பேசி.. பல மாசம் இருக்கும்.. என்று நினைத்தார்..


அப்போது, குறளின் அலைபேசிக்கு, கவினிடமிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.. குறளோ, அதை கட் செய்து கொண்டே இருந்தான்..


ஒரு கட்டத்தில் செங்கோடனே, "எடுத்துப் பேசுப்பா.. ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கப் போகுது.. "என்றவரிடம் , "அப்புறம் பேசிக் கொள்கிறேன்.." என்றான்..


அடுத்த சில நிமிடங்களில், பாவினி "குறள்..குறள் .."என்று பதட்டமாக கத்தியபடியே படிகளில் அவசரமாக இறங்கினாள்..


குறளோ, "என்ன வினு.." என்று பதறியபடியே அவளிடம் ஓடியவனை, அணைத்துக் கொண்டு ஓவென அழுதாள்..

குறளுக்கும், பெரியவர்களுக்குமே பதற்றம் தொற்றிக்கொண்டது.. "என்னம்மா ..என்னாச்சு..?" என்று எல்லோருமே துடித்தார்கள்..


குறளோ ,தன்னை அணைத்துக் கொண்டிருந்தவளை பிரித்து, "வினு என்னன்னு சொல்லு.. அப்பத்தானே தெரியும்!" என்று குலுக்கியவனிடம்..

"நாவேந்தி அத்தைக்கு நெஞ்சு வலியாம்.. சுயநினைவு, இல்லாமல் தான் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்காங்களாம்.. எனக்கு பயமா இருக்கு.. உங்களுக்கு கவின் போன் செய்தானா? நீங்க ஏன் எடுக்கலை..?வாங்க ஹாஸ்பிட்டல் போலாம்.." என்று அவள் பேசிக் கொண்டேஇருக்க..


தான் ஆடாவிட்டாலும் ,தன் சதை ஆடுமே..என்ற பழமொழி உண்மை போல்..குறளோ, மூச்சு விடக் கூட முடியாமல் ஐஸ்ஸாக உறைந்து நின்றான்..


பெரியவர்களோ, அதற்கு மேல் கற்சிலையாக நின்றனர்.. "பாவினி தான் அனைவரையும் விரட்டி ,ஹாஸ்பிட்டல் கூட்டி வந்ததாள்.."

மங்கையவள் நினைத்தது போல்.. தாயையும்,சேய்யையும் சேர்த்து வைப்பாளா? காலத்தின் கையில்..

அன்பு கொல்லும்..



 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 32

மருத்துவமனையில், கவலை தோய்ந்த முகத்துடன் நேயவாணனும்,கவினும் நின்றிருந்தார்கள்..


பாவினி, நேயவாணனிடம் ஓடிப் போய்.. "அங்கிள் அத்தை எங்கே?" என்று கேட்டவளிடம் அவசர சிகிச்சைப் பிரிவை கை காட்டினார் ..அவரால் பேசக் கூட முடியலை..


கவினும், கண்கலங்க நின்றிருந்தான்..அவனிடம் சென்று ,"என்ன நடந்தது.." என்று கேட்டவளிடம்..


"காலையிலிருந்தே வலி இருந்திருக்கும் போல .. ஆனால் ,எங்களிடம் எதுவும் சொல்லவில்லை.. மாலை ,நாங்க வரும் போது சோர்ந்திருந்தார்..என்னம்மா டல்லா இருக்கீங்கன்னு கேட்ட போது.. ஏனோ? உடம்பு ஒரு மாதிரியாக இருக்கு.." என்றார்..

"சரி வாங்க டாக்டர் கிட்ட போலம்ன்னு சொன்னோம்.. சரின்னு எழுந்தவர், அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கிட்டார்.. உடனே காரில் தூக்கிப் போட்டு இங்கே வருவதற்குள் அன்கான்ஸியஸ்க்கு போய்ட்டார்.. டாக்டர் கிரிட்டிக்கல்ன்னு சொல்றார்..எனக்கு பயமா இருக்கு அண்ணி.." என்று கலங்கியவனின், கைகளைப் பிடித்து.. "அம்மா சரியாகிடுவாங்க, நீங்க கவலைப் படாதீங்க.." என்று ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தூயவனும் குடும்பத்தோடு ஓடிவந்தார்..


நேயவாணனிடம், நேராக சென்று விசாரித்தவர்.. தலையில் கை வைத்தபடி ஓய்ந்து போய் அமர்ந்து கொண்டார்..


செங்கோடனும் ,மெய்யம்மையும் சூழ்நிலையுடன் ஒட்ட முடியாமல் தவிப்புடன் நின்றார்கள்..

குறள்நெறியனோ, சுயநினைவே இல்லாதது போல் உறைந்து நின்றான்..

சரியாக அந்த நேரம்.. அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த மருத்துவரிடம் அனைவரும் ஓடினார்கள்..



அவரோ, "ஏஞ்சியோ செய்திருக்கோம் .. மெயின் ப்ளாக்கில் இரண்டு இடத்தில் அடைப்பு இருக்கு..எப்பவாவது வலிக்குதுன்னு சொல்லி இருக்காங்களா?" என்றவரிடம் ,நேயவாணனும்,கவினும்
"இன்று தான் சொன்னார்கள்.." என்றனர்..


"ஓ..! ஆனால், இதற்கு முன்பும் வலி வந்திருக்கும், அவர் கொஞ்சம் கவனிக்காமல் விட்டுட்டாங்க.. அது தான் இந்த அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு.."என்றார்.

தூயவன் , டாரக்ர் இப்போ கான்ஷியஸ் இருக்கா?ஆஃப் ரேஷன் செய்ய முடியாதா? என்றவரிடம்..


" கான்ஷியஸ் இருக்கு..இப்போ ஏஞ்சியோ செய்ததால் அரை மயக்கத்தில் இருக்காங்க..ஆஃப் ரேஷன் தான் இதற்கு ஒரே வழி..

அதற்கு, அவர்கள் உடம்பு தாங்கனும்.. இன்னும் சில டெஸ்ட்கள் எல்லாம் எடுத்த பிறகு முடிவு செய்துக்கலாம்.."


"டாக்டர், இப்போ அவங்களை பார்க்க முடியுமா?"என்று கேட்ட நேயவாணனிடம் யாராவது, இரண்டு பேர் மட்டும் போய் பார்த்து வாங்க .."என்று கூறிச் சென்றார்..

பாவினியோ, ஓய்ந்து போய்.. காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்தாள்.. அவள் மனம்‌ அவருக்கு நல்லாக வேண்டுமென்ற தவிப்பிலேயே இருந்தது..

சரியாக அந்த நேரம், மெய்ம்மை அவளிடம் சென்று அமர்ந்து , "சரியாகிடும் பவிம்மா.." என்று சொன்னவுடன் ,அவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை ஆத்திரம் வந்ததோ? தெரியவில்லை..


மெய்யம்மையிடம்.."எது பாட்டி சரியாகும்.. இருபத்தி‌ ஆறு வருடங்களுக்கு மேல், தாயையும், மகனையும் பிரித்து வைத்திருக்கிறீர்களே !அது சரியாகுமா?இல்லை, அத்தை மறுகல்யாணமே செய்யாமல்..தவ வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்களே அது சரியாகுமா? பெற்ற பிள்ளையைக் கூட , உங்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டு, மகனிடம் இழிப்பேச்சு வாங்கினாரே அது சரியாகுமா.."?என்று அவள் கேட்க..கேட்க, தூயவனும், வளர்பிறையும் "பாவினி.." என்று கத்தினார்கள்..

ஆனால், அவளோ, எதையும் காதில் வாங்காமல் பேசிக் கொண்டே இருந்தாள்.. உங்க சுயநலத்திற்காக, அவுங்க வாழ்க்கையையே அழிசுட்டீங்களே பாட்டி.. அத்தையோட ஒரே ஆசை! குறள் அவரை அம்மாவென்று அழைக்கனும், என்பது தானே.. ஆனால், அது நடக்கவே இல்லையே.." என்று கதறியவள், அப்படியே மயங்கிச் சரிந்தாள்..


கவின் தான் ,அவள் மயங்குவதைப் பார்த்து ஓடி வந்து தாங்கிப் பிடித்தான்.. குறள்நெறியனோ, தன் தாய்க்கு ,திருமணம் ஆகலைன்னு சொன்னதைக் கேட்டு சிலையாக நின்றான்.
எவ்வளவு பெரிய உண்மையை இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறேனே என்று தவித்தான்!!

பாவினி,மயங்கியதும்.. "பாவினி.." என்று அனைவரின் அழைப்பு சத்தத்தில், நிகழ்வுக்கு வந்த குறள்நெறியன்.. மனைவியிடம் ஓடியவன், "வினு.." என்று கத்தியபடி கவினிடமிருந்து அவளை தூக்கி தன் மேல் சாய்த்துக் கொண்டு, அவள் முகத்தை தட்டினான்.. அதற்குள் நவில், ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து தெளித்தான்.. வளர்பிறையோ, மகளின் கன்னத்தை தட்டி "பவிம்மா.." என்று அழைத்த படியே இருந்தார்..


தூயவன், ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர.. ஸ்டெச்சரில் அவளை படுக்க வைத்து, அறைக்குள் கொண்டு சென்று பரிசோதித்தனர்..


அனைவரும் கைகளைப் பிசைந்த படி அறை வாயிலில் நின்றிருந்தனர்.. குறள் முகத்தில் ஈயாடவில்லை..அவன்‌ எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவான்..


அவனை அவனாக உணரவைத்த, அவனின் மறுபாதி.. மயங்கி விழுந்ததில் அவன் உயிரற்ற உடலாக நின்றான்..

அவனுக்காகவே , கடவுள் அவளை அனுப்பி இருப்பார் போல,ஒரு சொட்டு நீருக்கு ஏங்கியவனுக்கு அமிர்தமாக கிடைத்தவள்..

அவன் மனதிற்குள் ,தவித்த தவிப்பு அளவில்லாமல் போனது..

தூயவன்,தன் கெளரவத்தை மறந்து, அவன் படும்பாடு பொறுக்க முடியாமல், அவனிடம் சென்று அவன் கைகளைப் பற்றி.."குறள் தைரியமா இருங்க.. யாருக்கும் எதுவும் ஆகாது .."என்றவரிடம்..

"மாமா வினு ஏன் மயங்கினாள்.. ?இதுக்கு முன்னாடி அவளுக்கு இப்படி நடந்தது இல்லையே.. எனக்கு பயமா இருக்கே .."என்று திமிருக்கு இலக்கணமா இருந்தவன், இன்று தன்‌ பெண்ணுக்காக பயப்படுவதைக் கணடவருக்கு.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவருமே, பயந்து தான் இருந்தார்.. ஆனால், குறள் நெறியன் அளவு இல்லை..


"பவிக்கு ஒன்றும் இருக்காது டென்ஷனில் மயங்கி இருப்பாள்‌ .."என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே.. டாக்டர் அவர்களை அழைத்தார்..

பயத்துடன் உள்ளே போனவர்களிடம்.. "பயப்படும்மளவு ஒன்றுமில்லை. அவர்கள் கன்சீவாக இருக்காங்க.. கருவுக்கு நாற்பத்தைந்து நாள் ஆகியிருக்கு..டென்ஷன் ஆகாம பார்த்துக்கோங்க..நான் சில வைட்டமின் மாத்திரைகள் எழுதித் தரேன். அதை ரெகுலராக சாப்பிடச் சொல்லுங்க.. நெக்ஸ்ட் மன்த் செக்கப்புக்கு வாங்க.." என்று கூறி அனுப்பி வைத்தார்..


டாக்டர் சொன்ன நற்செய்தி அவர்களின் வயிற்றில் பாலை வார்த்தது.. எல்லோர் முகத்திலும் லேசாக மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.. குறள்நெறியனோ, மனைவியை முதல் ஆளாக சென்று பார்த்தவன் ..அவளை அப்படியே தன் மார்போடு அணைத்துக் கொண்டவன் "தேங்க்ஸ் மை சாங் பியூட்டி.." என்றான்..


"கொஞ்ச நேரத்தில் என்னை பதறவைத்துட்டியே டி .. "என்றவனின், கண்களில் கண்ணீரைக் கண்டவளுக்கு, அது தனக்கான கண்ணீர் என்ற கர்வம் தலை தூக்கியது.. மகிழ்ச்சியில் சிரித்தாள்..

"இப்போ சிரி.. உன்னை.." என்றவன்,பேச்சுக்கும்,செயலுக்கும் சம்மந்தமில்லாமல்.. அவள்‌ கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தான்..
அவளோ, மறு கன்னத்தையும்‌ காட்ட.. கர்வத்துடன்! அவள்‌‌ கேட்டதை கொடுத்தான்..


"குறள் அத்தைக்கு சீக்கிரம் சரியாகிடும்..நம் குழந்தை வந்த நேரம்‌ எல்லாமே சரியாகிடும் பாருங்க ..என்றவள், "வயித்துப் பிள்ளைத்தாய்ச்சி! கேட்டதை நிறைவேற்றனும்ன்னு சொல்வாங்க, செய்வீங்களா?"என்றவளிடம்‌.. அவள் என்ன கேட்பால் என்று தெரிந்தே "சரி.." என்று வாக்கு கொடுத்தான்..


அதன்பின்னர், வளர்பிறையிடம் அவளை பார்த்துக்கச் சொல்லிவிட்டு, தூயவனிடம் சென்று.. "மாமா தயவு செய்து என்ன நடந்ததுன்னு சொல்லுங்க..பாவினி சொன்னதிலிருந்து எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் இருக்கு.." என்றவனிடம்..

தூயவன் மெல்லச் சொல்ல ஆரம்பித்தார்..
"உங்க அம்மாவுக்கு, அப்பா ,அம்மா இல்லை..தாய்‌மாமா வீட்டில் தான் வளர்ந்தாள். நேயவாணன் நாவேந்தியின் மாமா பையன் தான்..அவங்க, மாமா அத்தை.. உங்க அம்மாவை ,அவுங்க பெண்ணாட்ட நல்லா பார்ததுக்குவாங்க.. நல்லா படிக்கவும் வச்சாங்க.."என்றவர் ஒரு‌பெருமூச்சுடன் தொடர்ந்தார்..

"நானும், உன் அப்பாவும் ..பள்ளியிலிருந்தே நல்ல நண்பர்கள்.. உன் அம்மா கல்லூரியில் தான் எங்களுக்கு அறிமுகம்.. உன்‌ அப்பா ,அம்மா ,நான் மூன்று பேரும் கல்லூரியில் தான் நல்ல நண்பர்கள் ஆனோம்.. நண்பர்களாக இருந்த உன் அம்மா, அப்பாவின் பழக்கம் காதலாக மாறியது.. உன் அம்மா வீட்டில் இவர்கள் காதுலுக்கு பெரிசா எதிர்ப்பு இல்லை..ஆனால், உங்க அப்பா வீட்டில்.. உங்க அப்பாவின் பாட்டி ரொம்ப எதிர்த்தாங்க.. உன் தாத்தாவுக்கு, உங்கப்பா.. ஒரே மகன்! என்பதால் மகன் விருப்பத்தை மதித்து திருமணம் செய்து வைத்தார்.."

"நன்றாக போய்க் கொண்டிருந்த, அவர்கள் வாழ்க்கையில்.. பூகம்பம் வந்தது போல் உன்ககு ஒரு வயது முடிந்திருந்த பொழுது.. கானகனுக்கு ,ஏற்பட்ட விபத்து அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டது.."

"உன்னை, உன் பாட்டியிடம் விட்டு விட்டு ,ஒரு கல்யாணத்திற்கு போய் விட்டு வரும் போது, எதிரில் வந்த லாரி பிரேக் பிடிக்காமல் இவர்கள் வந்த காரில் மோதியது..அதில் தூக்கி காரோடு வீசப்பட்டார்கள் இருவரும்.. நாவேந்திக்கு கால்களில் தான் அடி..ஆனால், கானகனுக்கு தலையில் பலத்த அடி..அங்கேயே அவன்‌ காதுகளிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்து விட்டது.. கானகனுக்கு அரை மயக்கத்திலேயே காதிலிருந்து ரத்தம் வருவதை பார்த்தவுடன், தான் பிழைக்க மாட்டோம் ..என்பதை அறிந்து கொண்டவன், முட்டாள் தனமாக, உன் அம்மாவைப் பற்றி தெரிந்து இருந்தும்.. தன் கடைசி ஆசையாக வலியோடு அரைமயக்கத்திலிருந்த உங்கம்மாவிடம்.! எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா.. நீ வேறு கல்யாணம் செய்துக்கனும்..அப்புறம் நம் குழந்தையை என்‌ அம்மா ,அப்பாவிடமே கொடுத்து விடனும்‌.. நானும்‌ ,இல்லாமல் அவர்கள் பாவம் .."என்று உன் அம்மாவிடம் ஏதேதோ சொல்லி கட்டாயபபடுத்தி சத்தியம் வாங்கிக் கொண்டான்.."

"உங்க அம்மாவோ ?உங்க அப்பா பிழைத்து விடுவார்.. என்று நம்பிக்கையுடன் அவர் சொன்னதுக்கு அழுது கொண்டே சம்மதித்துள்ளார்.. உங்கப்பா இருக்க மாட்டார் என்று கனவிலும் நினைக்கவில்லை.."



"உங்க அப்பாவுக்கு உறுதியாக தான் இருக்க மாட்டோம் என்று தெரிந்ததால் தான்..அப்படி சத்தியம் வாங்கி இருக்கிறார்.."


அந்த நேரத்தில் கூடத், தன்னைப் பற்றி சிந்திக்காமல்.. தன்
மனைவியின் வாழ்க்கை அழியாக் கூடாது.. தாய்,தந்தை வாழ்வதற்கு ஒரு பிடிப்பாக தன் குழ்ந்தை இருக்கட்டும் ..என்று எண்ணி முடிவெடுத்து இருக்கிறார்.."


"விபத்து நடந்து சில மணி நேரம் கழித்து தான் மருத்துவ மனையில் சேர்த்திருக்காங்க.. அங்கு சென்ற அரை மணி நேரத்திலேயே‌‌ உன்‌ அப்பா இறந்துட்டார்.. உங்க அம்மாவுக்கு ,காலில் அடிப்பட்டதால்.. ஆப்ரேஷன் மூலம் உடைந்த எலும்பை சரி செய்து, பத்து நாட்கள் கழித்து தான் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர்.."

"உன் அம்மா, உங்க அப்பாவின் இழப்பில் இருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆனது.. ஆனால், அதற்குள் உங்க அப்பாவின் பாட்டி! சரியாக திட்டம் போட்டு ,உங்க அம்மாவை வீட்டை விட்டு துர்ததியதோடு ..உன்னையும் உங்கம்மா கண்களில் காட்டாமல் ,மறைத்து வைத்துட்டார்.உங்க தாத்தாவும்,பாட்டியும் அவரை மீறவும் முடியாமல் அவர் சொன்னபடியே நடந்தனர்.."


"உங்க அம்மா உன்னைப் பார்க்க வந்தாலே? அந்தம்மா வேலையாட்களை விட்டு உங்க அம்மாவை துரத்தி விடும்.. உங்க பாட்டி தாத்தாவும் எதுவுமே பேச மாட்டாங்க..மகனை இழந்தவர்களுக்கு, நீ வடிகால் ஆகிட்டே.. ஆனால், உன் அம்மாவின் நிலை தான் மிகவும் பரிதாபத்திற்குரியது.."


"அந்த நேரத்தில் தான் நேயவாணனின் மனைவி பிரசவத்தில் இறந்து விட்டார்.. கை குழந்தையுடன் நேயவாணன் தவப்பதைப் பார்த்து.. உங்க அம்மா கவினை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.. நேயவாணனை வேறு திருமணம் செய்யச் சொல்லி, எத்தனையோ வற்புறுத்தியும் அவரும் கேட்கலை..உங்க அம்மாவோ! நேயவாணன் வீட்டில் கவினை பார்த்துக் கொண்டு அங்கேயே இருந்து கொண்டார்..
ஆனால், இவர்களின் தூய நட்பை உங்க தாத்தாவின் அம்மா, நேயவாணனும்,உங்கம்மாவும் திருமணம் செய்துட்டாங்கன்னு ஊரே பரப்பி விட்டுட்டார்..
உங்க அம்மாவவோ, அந்த அவதூறு செய்தியை தாங்க முடியாமல் தற்கொலை வரை சென்று விட்டார்.உங்க அம்மாவின் நிலையை காணமுடியாமல், நான் தான் உங்க அப்பாவோட பாட்டிகிட்ட உன்னை தரச் சொல்லி பயங்கரமா சண்டை போட்டேன்.. அதனால், நான் தான் எல்லாத்துக்கும் காரணம் ..என்று என் மீதும் பழியை போட்டார்.."


"நான் உன்னைக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போடலாம்.. என்று எல்லா ஏற்பாடும், செய்யும் போது.. உன் தாத்தாவும், பாட்டியும் உங்க அம்மாவிடம் கெஞ்சி வழக்கு போடுவதை தடுத்ததோடு,உன்னையையும் நிரந்தரமாக உங்க அம்மாட்ட இருந்து பிரிச்சுட்டாங்க.."


"நாவேந்தியோ, தவறே செய்யாமல் அவதூறு பெயருடன் ஜடமாக இன்னைக்கு வரை வாழ்றா.."

"உன் அப்பா இருக்கும் போதே, உங்க அம்மாவை சட்டப்படி கம்பெனியின் டைரக்டர் ஆக்கியதால், நாவேந்தியை கம்பெனியிலிருந்து வெளியில் அனுப்ப முடியலை..நானும் உங்க அப்பா இருக்கும் போதே வேலைக்குச் சேர்ந்தால், என்னை ஏனோ வெளியில் அனுப்பவில்லை..;நானும் உங்க அம்மாவுக்கா.. அங்கேயே தொடர்ந்து வேலை பார்த்தேன்.. உன் தாத்தா, பாட்டி ஏனோ ?என்னிடம் உன் அப்பா இறந்த பிறகு நல்ல படியாகவே நடந்து கொண்டார்கள்.."

"உங்க அம்மா, மட்டும் கம்பெனியில் டைரக்டராக இல்லை என்றால்.. நான் எப்போதே வெளியில் வந்திருப்பேன்..
உங்கம்மா.. உன்னைத் தான் வளர்த்த முடியலை..கவினையாவது வளர்த்துகிறேன் என்று அங்கேயே இருந்து கொண்டாள்.."


"உன் அப்பாவின் பாட்டி இறந்த பின், உன்னை பார்க்க வந்தா ..நீ அவளை பார்க்க மாட்டாய்..அவள் வாழ்வதே உனக்காகத் தான்..நீ நினைப்பது போல் அவள் வேறு கல்யாணமும் செய்யவில்லை..நேயவாணனும்,அவளும் ஒரு வீட்டில் வாழ்ந்தாலும்இருவரும் அவர்,அவர் துணைகளை நினைத்தே தவ வாழ்வு வாழ்கிறார்கள்.." என்று அவர் தன் தாயைப் பற்றி கூறியதைக் கேட்டு உடைந்து போய் தொப்பேன்று நாற்காலியில் அமர்ந்தான்..

"நீ ,உங்க அம்மாவை ..மிஸஸ் நேயவாணன்னு என்று சொல்லும் போதெல்லாம் ,அவளும் நானும் ஏன்‌? நேயவாணன் கூட துடித்து போய்விடுவோம்..
உங்க அம்மாவுக்கு பாதுகாப்பாக இருக்கும்ன்னு தான் நேயவாணனுடன் நடக்காத திருமணத்தை நடந்தாக‌ பரவிய புரளியை நாங்க கண்டு கொள்ளாமல் விட்டுட்டோம்.. இன்னொன்று, ஒரு முறை தவறான செய்தி பரவி விட்டால் நாம் என்ன சொன்னாலும் அது மாறாது.."என்றார்..


தாயைப் பற்றிய உண்மையை அறிந்தவன், இனி தாயை ஏற்றுக் கொள்வானா?இல்லையா? காலத்தின் கையில்..

அன்பு கொல்லும்..
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 33

குறள்நெறியன் தன் தாயைப் பற்றி அறிந்த பின் முழுதும் உடைந்து போய்விட்டான்..

எப்படி பட்ட பெற்றவர்கள் தனக்கு அமைந்தும், தன்னால் அவர்களுடன் வாழ முடியலையே?என்ற துக்கம் அவனை வாட்டியது..


தன் தாத்தா, பாட்டியிடம் சென்று ,"ஏன்‌? என்னிடம்‌உண்மையை மறைச்சீங்க.." என்று சண்டை போட்டான்..

"சின்ன வயதில் ,வேலைக்கார்களிடம் அம்மா எங்கேன்னு கேட்டா ..உங்கம்மா உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு, அவுங்க சந்தோஷத்திற்கு வேறு கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு ,சொல்லி சிரிச்சாங்க.. அப்போ, எனக்கு எப்படி இருக்கும்‌தெரியுமா?அதை உண்மை என்று நம்பியே, வளர்ந்தேன்.!எங்கே ?ஃப்ரெண்ட்ஸ் வைத்துக் கொண்டால், என் அம்மாவை பற்றி கேட்டால்.. என்ன சொல்லன்னும் நினைத்தே! யாருடனும் பழக மாட்டேன்..எளிதாக கிடைக்க வேண்டிய என் தாய் அன்பை.. இப்படி ,உங்க சுயநலத்திற்காக என்னை அனாதையாக்கிட்டீங்களே.." என்று கேள்வி கேட்டவனிடம் பதில் சொல்ல முடியாமல் பெரியவர்கள் அழுத படி தலை குனிந்தனர்.


அவர்கள் செய்த ஒரே தப்பு !அவனின் தாயைப் பற்றிய உண்மையை ,சொல்லாமல் மறைத்து..எங்கே பேரனுக்கு சொன்னால்.. தங்களை விட்டு போய்விடுவானோ? என்று நினைத்தே! அதை மறைந்தனர்! கானகனின் பாட்டி ,வேலைக்கார்களிடம் சொன்ன பொய்யையே! அவர் இறந்த பின்பும் தொடர்ந்தனர்..நடந்த உண்மையை கடைசி வரை சொல்லாமல் விட்டனர்..

குறள்நெறியனோ ,தூயவனின் கைகளைப் பற்றி.." இத்தனை நாள் நான் உங்களைத் தவறாக நினைத்தது மட்டுமின்றி ,எதிரியாகவே நினைத்தேன்.!நீங்க தான், என்னிடமிருந்து என் அம்மாவை பிரித்து ..நேயவாணன் மாமாவுக்கு திருமணம் புரிந்து வைத்தீர்கள்.. என்று தவறாக நினைத்திருந்தேன்..அதனால், நீங்க உயிராக நினைக்கும் உங்க மகளை உங்களிடமிருந்து பிரித்து, உங்களை பழிவாங்க ..உங்களை தவிக்க விட வேண்டுமென்று நினைத்தேன்.. ஆனால், நீங்க எங்க அம்மாவுக்கு, எப்படி ஒரு நல்ல நண்பனாக இருந்து இருக்கீங்க.. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.." என்றவனை தாவி அணைத்துக் கொண்டவர்.. "நீ உண்மையை புரிந்து கொண்டதே போதும் ப்பா..உன் அம்மா தான், உன் அழைப்பிற்காக தவம் இருக்கிறாள்.. அவளை இனியாவது நல்ல படியாக பார்த்துக் கொள்ளப்பா.." என்றவரிடம்..
"கண்டிப்பாக பார்த்துக்கிறேன் மாமா.." என்றான்.


அத்தோடு, அமைதியாக நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த.. நேயவாணனிடம் சென்று ,"அங்கிள்‌ நீங்களும் என்னை மன்னிக்கனும் !உண்மை தெரியாமல் நான் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டேன்.."என்றவன், கையெடுத்து கும்பிட்டான்.. அவரோ, பதறி துடித்து, குறள்‌ என்னப்ப இது!‌ நீ அறியாமல் செய்தது தானே விடு.. நடந்தது போகட்டும்.. இனி ,நடப்பது நல்லதாகட்டும்.. உன் அம்மா நல்லபடியா பிழைத்து வந்தால் அது போதும்ப்பா.."என்றவரிடம்.. "உங்க தொழிலை அழிக்க நான் என்னென்னவோ செய்தேன்..ஆனால், நீங்கள் என் அம்மாவுக்கு காவலாக இத்தனை நாள் இருந்திருக்கீங்க.." என்றவன் ,அவரை அணைத்துக் கொண்டு' "நான் செய்த தப்பை எல்லாம் மன்னித்து விடுங்கள்.." என்றான்‌, மனதார.!அவரோ "நீயும்,கவினும் எனக்கு வேறு ..வேறு இல்லை..நடந்ததை மற.." என்றார் பெருந்தன்மையாக..


கவினோ, நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்..அவனால், நம்பவே முடியவில்லை.. கர்வத்தின் உச்சத்தில் எப்போதும் இருக்கும் குறளா இது? என்று இருந்தது..



குறள்நெறியனோ, தன்னையே பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்த கவினிடம் வந்தவன், "உண்மை தெரியாமல் உன்னையும் பல தடவை கஷ்டப்படுத்திட்டேன்.. சாரி.."என்றவனிடம், "அச்சோ என்னிடம் எதற்கு சாரியெல்லாம் கேட்கிறீங்க.. நடந்ததை விடுங்க..நடப்பது நல்லதாகட்டும்.. நமக்கு, நம் அம்மா நல்லபடியா திரும்பி வரனும்..என்னோட ஒரே ஆசை நீங்க அவுங்களை அம்மான்னு கூப்பிடனும்..அப்போ, அவுங்க முகத்தில் தெரியிற மகிழ்ச்சியை நான் கண் குளிர கண்டு ரசிக்கனும்.."என்றவனிடம்..


"கண்டிப்பாக வெகு சீக்கிரம் அது நடக்கும்..எனக்கு நம்பிக்கை வந்துருச்சு.." என்ற குறள் நெறியனை வியப்பாக பார்த்தான்..


சரியாக அந்தநேரம், நாவேந்தியை யாராவது இருவர் பார்க்கலாம் என்று செவிலியர் வந்து சொல்லவும், "குறள்நெறியன் நான் போகட்டுமா?"என்று கேட்டதும் அனைவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் எட்டி பார்த்தது..


"என் கூட பாவினியை கூட்டிட்டு போறேன்.." என்றவன், மனைவியை அழைத்துக் கொண்டு தாயை பார்க்கச் சென்றான்..


உயிர்காக்கும் ஒயர்களும் ,டியூப்களும் சூழ கண்மூடி படுத்திருந்தவர் அருகில் சென்று, நின்ற குறள்.. முதல் முறையாக "அம்மா.. என்று தாயை அழைத்தான்..

இருமுறை அழைத்த பின், மெதுவாக கண் திறந்து பார்த்த நாவேந்தி! குறள்நெறியனின் முகத்தைக் கண்டு "குறள் வந்துட்டிய்ப்பா.." என்று நா தழுதழுக்க கேட்டார்..



"வந்துட்டேன்ம்மா.." என்றவுடன், "என்ன சொன்னே ?இன்னோரு முறை சொல்லுப்பா.." என்றவரிடம்..

"அம்மா.." என்றவன், அவரின் அருகில் குனிந்து அவரின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தவன், சீக்கிரம் நீங்க குணமாகி வரனும்..அப்பத்தானே உங்க பேரப்பிள்ளைகளை வளர்க்க முடியும்.." என்றவனை, ஆச்சரியமாக பார்த்தவரிம், தன் பின்னே நின்று நடப்பதை வியந்து பார்த்துக் கொண்டிருந்த பாவினியை இழுத்து நிறுத்தினான்..

அவளோ, தன்னை ஆவலாக பார்த்த மாமியாரிடம் தலையை‌ மட்டும் ஆட்டினாள்..
நாவேந்தி, இருவரையும் அருகில் அழைத்து.. கன்னம் தடவி, "நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கனும்.." என்று வாழ்த்தினார்..

அதன்பிறகு அவரின் உடல்நிலைக்கு பின்னடைவு ஏற்படவில்லை. .. குறள்நெறியினின் ஏற்பாட்டினால், தலைசிறந்த இதய நிபுணர்களை வைத்து ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது..


நாவேந்தி மிக விரைவாக குணமாகி வந்தார்.. பத்து நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்தார்..குறள்நெறியன் ,விடாப்பிடியாக நாவேந்தியை தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்தான்..அத்தோடு அந்த துறையில் சிறந்த செவிலியரை நாவேந்தியை கவனிக்க ஏற்பாடு செய்தான்..


தினமும் கவின், நேயவாணன், தூயவன், வளர்பிறை எல்லோரும் வந்து நாவேந்தியை பார்த்துச் சென்றனர்..


குறள்நெறியன், தன் தாத்தா பாட்டியுடன் மட்டும் முகம் கொடுத்து பேசாமல் இருந்தான்..அதைக் கவனித்த பாவினி ‌குறள்நெறியனை அவர்களிடம் இயல்பாக பேச வைத்தாள்.. அவர்கள் பக்கம், அவர்கள் செய்தது நியாயமே! என்று‌ சொல்லி அவனை சமாதானப்படுத்தினாள்..


கவினோ, குறள்நெறியனை‌ பார்த்து, "எப்படிண்ணா இப்படி மாறிட்டீங்க..சிங்கம் மாதிரி இருந்த நீங்க.. இப்போ மான்‌ மாதிரி ஆயிட்டீங்க.." என்றவனிடம்..


"எல்லாம் உன் அண்ணியால் தான்.. நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்பத் தெரியும்!" என்றவனிடம்..


"எனக்கு யாருண்ணா கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க.. உங்கள‌ மாதிரி நானும் அதிரடி கல்யாணம் தான் பண்ணனும்‌ போல.."


"பொண்ணு யாருன்னு சொல்லு தூக்கிடலாம் .."

"நிஜமாவா அண்ணா..!"

"ஆமாம், நிஜம் தான் டா.."

"அண்ணா, அண்ணியோட ப்ரெண்ட், எழிலியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.." என்றவுடன்..

"அடப்பாவி, இது எத்தனை நாளா நடக்குது..?எனக்கே தெரியலையே .."என்று கத்திய பாவினியின் வாயை கை வைத்து மூடிய குற்ளநெறியன், "ஏய் சத்தம்‌ போடதே டீ.. அம்மா தூங்கறாங்க.." என்றவனிடம்..

"சரி..சரி சத்தம் போடலை கையை எடுங்க.. ரெண்டு பேரும் எப்படி அமுக்கமாக இருக்காங்க.? வெச்சுக்கிறேன் அவளை.."என்ற பாவினியிடம்..

"அண்ணி ப்ளீஸ் நீங்க தான் எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கனும்..அம்மாட்டே அப்பாகிட்ட எல்லாம் நீங்களே சொல்லி சம்மதம் வாங்குங்க.."

"என்னது நான் சொல்லனுமா? உங்க அண்ணனே‌ சொல்லச் சொல்லுங்க.? அவர் தான் இதுக்கு சரி.." என்றவளிடம்..


பழைய அண்ணன்னா? ஓகே.. இப்பத் தான் உங்களால் சுத்தமா மாறிட்டாரே .."


"என்ன மாறிட்டார்..அத்தை கூட பேசறதை வைத்து சொல்லாதீங்க.. எனக்குத் தெரியும் இந்த வில்லனை பற்றி.."

"ஏய், நான் வில்லன்னா..?"

"அப்புறம் இல்லையா..?"

"அது தான் டி ,கொஞ்சம் இறங்கி வந்தா போதுமே .."

"யாரு உங்கள் இறங்கி வரச் சொன்னா ..?அது தான் உங்க அம்மா வந்தாச்சே.. இனி எனக்கென்ன இங்க வேலை..நான் கொஞ்ச நாள் எங்க அப்பா வீட்டில் போய் இருந்துட்டு வரேன்.."

"என்னது.."

"ஆமாம், டெலிவரிக்கு அங்கு தானே போகனும்.."

"அதெல்லாம் வேண்டாம், நான்‌அத்தையை இங்கே வரச் சொல்லிக்கிறேன் ..:ப்ளீஸ் நீ போகாதே .."என்று கெஞ்சிய குறள்நெறியனை பரிதாபமாக பார்த்த கவின்..

"அண்ணா, எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு.. கொஞ்சம் கெத்த மெயின்டன் பண்ணுனா?"

"அட போடா.? பொண்டாட்டி கிட்ட என்ன கெத்து.?" என்றவனை உண்மையாளுமே வியந்து பார்த்தவன் ,அண்ணி கூடச் சேர்ந்து நல்லா மாறிட்டீங்க.."

"ஆமாம் ,பூவோடு சேர்ந்து.. நாரும் மணப்பதைப் போல்..நானும் மாறிட்டேன்.."

"நீங்க நார் இல்லை .?எப்போதும் வாசம் மாறா சந்தனம்.." என்று பாவினியும்,கவினும் ஒரு சேரச் சொன்னார்கள்..

பாவினியோ,அன்றைய இரவின் தனிமையில் ,"குறள் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கனும் .."என்றவளிடம்..

"என்ன வினு.."

"அத்தை ரெண்டாவது கல்யாணம் பண்ணலைன்னு, தெரிஞ்ச பிறகு தான்.. அவுங்களை ஏற்றுக் கொண்டீர்களா?"

"அப்படி எல்லாம் இல்லையே.."

"அப்போ ரெண்டாம் கல்யாணம்‌ பண்ணி இருந்தாலும், ஏத்துருப்பீங்களா?"

"வினு அம்மா ரெண்டாவது கல்யாணம் பண்ணீட்டாங்களா? இல்லையா ?என்பது என் பிரச்சினை இல்லை..என்னை விட்டுட்டு போய்ட்டாங்க என்பது தான் என் ஆதங்கம்.. கவின், அவுங்க பையன் என்றே நினைச்சுட்டு இருந்ததால், அவனுக்கு மட்டும் ,அம்மா பாசம் கிடைக்குதே.. என்ற ஆதங்கம்‌ தான் ..அவர்கள், எல்லோர் மேலையும் எனக்கு ஜவெறுப்பை கொடுத்தது.."

ஓ..! அப்படியா?என்றவளிடம்..

"உன் சந்தேகம் தீர்ந்ததா? ஆனால் அம்மாவும் நேயவாணன் மாமாவும் ரொம்ப பாவம்.. எத்தனை துக்கத்தை மனதில் சுமந்து கொண்டு வாழந்திருப்பார்கள்.. இருவரும் வேறு துணை தேடி இருக்கலாம்..இணையை பிரிவு கொடுமை..என்னால் எல்லாம் உன்னை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது.. அதனால் ,டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு போகலாமன்னு, கனவு காணதீங்க அப்புறம் பழைய குறளை பார்க்க வேண்டி வரும் .." என்றவனை, வியந்து பார்த்தவளிடம்.. "நான் முழு வில்லன் இல்லை..கொஞ்சம் ஹுரோவும் தான்.. வேண்டுமானால் ,என் ஹீரோயிசத்தைக் காட்டவா ?"என்றவன், அவளுள் கரைந்து காணாமல் போனான்..

இடையில் ஒரு முறை பாவினியும்,குறள் நெறியனும்,செல்வச்சீரனை கடையில் பார்த்தனர்..அப்போது பாவினியின் ஏறிய வயிற்றைப் பார்த்து, "எத்தனை மாதம்..உடம்பு பரவாயில்லையா..?எங்கே செக்கப் போறீங்க.." என்று செல்வச்சீரன் கேட்டதற்கு பாவினி பதில் சொன்னால்.. என்று ,குறள் இரண்டு நாள் முகத்தை தூக்கிட்டு, அவளிடம் சரியாக பேசாமல் இருந்தான்..

அவனை சமாதானம் செய்வதற்குள், போதும் போதுமென்று.. ஆகிவிட்டது அவளுக்கு..


"ஏன்,அவன் மீது இவ்வளவு கோபம்.." என்று ஒரு நாள் இரவின் தனிமையில் கேட்ட பொழுது.. "ஏனோ, தெரியலை.. அவனைப் பார்த்தாலே உன்னை எங்கிட்டயிருந்து பிரிக்கிற வில்லன் மாதிரியே இருக்கான்..உன்னைக் கல்யாணம் பண்ண மணமேடை வரை வந்தவனாச்சே ! அது தான்.."என்று, அவன் சொல்லியதை கேட்ட பாவினிக்கு, அழுவதா..சிரிப்பதா?என்றே தெரியவில்லை..

ஆனால் ,அதிலிருந்து ஒன்று மட்டும் தெரிந்தது..என்று அவளை முதன் முதலாக பார்த்தானோ ?அன்றே அவளை நேசித்திருக்கான்.." என்று நன்றாக புரிந்தது.

தன்மீது, அவன் வைத்திருக்கும் நேசத்தை கண்டு மகிழ்ந்தவள், அவன் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தாள்..

"குறள் எங்க அப்பாவால் கூட ,உங்ககிட்ட இருந்து என்னை பிரிக்க முடியலை.. அந்த செல்வச்சீரன் எல்லாம் எந்த மூலை.." என்று சிரித்தவளை ஆசையாக அணைத்துக் கொண்டான்..

பாவினிக்கு ஒன்பது மாதம் ஆனதும், நல்ல நாள் பார்த்து .பெரிய மண்டபம் பிடித்து, ரொம்ப கிரேண்டா
! வளைகாப்பு நடத்தினார்கள்..

நாவேந்தியும், வளர்பிறையுமும், முகத்தில் ஆனந்தம் தாண்டவம் ஆட ..வலம் வந்தார்கள்..

வளைகாப்பு முடிந்த ஓரே
வாரத்தில், பாவினிக்கு பிரசவ வலி வந்தது.. அவளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு ,
குறள்நெறியனும்,தூயவனும் பட்ட பாட்டை தான் மற்றவர்களால் பார்க்க முடியலை.. அவள் வலியில் துடித்ததை விட இவர்கள் துடித்தது தான் அதிகம்..


எல்லோரையும் ஒரு வழி செய்து விட்டு, குறள்நெறியனின் தவப் புதல்வன்! தன் சத்தத்தால், அந்த மருத்துவமனையையே ஆட்டிப்படைத்தான்..


குழந்தையை கண்டு குடும்பமே ஆனந்தப் பட்டது..நவிலும், கவினும் கூட குழந்தையை எடுக்க போட்டி போட்டார்கள்..

நவிலுக்கு,கேம்பஸ்சில் கிடைத்ததை விட.. நல்ல கம்பெனியில், குறள் வேலை வாங்கி கொடுத்திருந்தான்..

தூயவனும்,நேயவாணனும் கன்ஸ்டெக்ஷன் கம்பெனியை பார்த்துக் கொண்டார்கள்..
கவின்,
குறளுக்கு உதவியாக கம்பெனியை பார்த்துக் கொண்டான்..

பெரியவர்களின் சம்மதத்தோடு கவினுக்கும்,எழிலிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது..பாவினிக்குத் தான், அதில் மிகுந்த மகிழ்ச்சி..தன் தோழி வாழ்நாள் முழுவதும் தனக்கு உறவாக இருக்கப் போறாளே! என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்..


செங்கோடனும், மெய்யம்மையும், நாவேந்தியிடம் மனதார மன்னிப்பு கேட்டவர்கள் ,இத்தனை நாள் மருமகளை தாங்காததை சேர்த்து இப்போது தாங்கினார்கள்..


செலவச்சீரன் ஒரு கைம்பெண்ணை மணந்து கொண்டான்.. அதன் பிறகு தான் குறள் அவனிடம் இயல்பாக இருந்தான்..

தூயவனுக்கு, செல்வச்சீரன் மீது மேலும்.!மேலும் மதிப்பு கூடியது..

வளர்பிறைக்கு பேரனை கொஞ்சவே நேரம்‌சரியாக இருந்தது..


குறள்நெறியனின் மனதில், தன் தாயிடம் மன்னிப்பு கேட்காத துக்கம் !அரித்துக் கொண்டே இருந்தது..அதை போக்கும் விதமாக தாயிடம் தனிமையில் பேசும் வாய்ப்பு கிட்டவும், தன் மனத்தாங்கலை சொல்லி விட்டான்..

சோஃபாவில் அமர்ந்திருந்த தாயின் காலடியில் அமர்ந்தவன்,அவரின் மடி சாய்ந்து "அம்மா நான் உங்களை எப்படி எல்லாம் பேசி இருக்கேன்..தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்..அது எல்லாம் உங்களைப் பற்றி தெரியாமல் பேசியது.."என்றவனின் தலையை மென்மையாக விரல்களால் வருடியவர். "எல்லாம் பாவினி சொன்னால், நீ வருந்தாதே! அது போதாத காலம்..இனி எல்லாம் சரி ஆகிடும்..உன்னை வளர்க்க முடியலை..ஆனால் உன் பையனை வளர்த்து என் ஆசையை தீர்த்துக் கொள்வேன்..என்றவரிடம், பாவினி,ஒரு தட்டில் தோசையும்,சாம்பாரையும் ஊற்றி.. எடுத்து வந்து..நாவேந்தியிடம் நீட்டினாள்..


கேள்வியாக பார்த்தவரிடம் ,"நான் என் பையனை பார்த்துக்கிறேன்..நீங்க உங்க‌ வளர்ந்த பையனுக்கு கொஞ்சம் ஊட்டி விடுங்க.." என்றவள், தட்டை அவர் கையில் திணித்து விட்டு வெளியே சென்றாள்.


நாவேந்தியோ, ஆசையாக தன் வளர்ந்த மகனுக்கு ஊட்டி விட்டார்..அதை ஒளிந்திருந்து பார்த்த பாவினிக்,கு கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்த்தது..

தொலைந்த ஆனந்தமெல்லாம் கொஞ்சம்.. கொஞ்சமாக மீண்டு வந்தது..

நாட்கள் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது.. ஒரு மாலை வேளையில் நவில், தன் தமக்கையிடம்.."அக்கா மாமா உண்மையாலுமே பெஸ்ட் தான் இல்லையாக்கா. ."என்றவனிடம், அது உனக்கு இப்ப தான் தெரியுதா? "அவர் பலாப்பழம் போல.. மேலோட்டமாக பார்த்தால், முள்ளு மட்டும் தான் தெரியும்.. உரித்து பார்த்தால் தான்.. இனிப்பான பலாச்சுளையைப் போல் அவரின் நல்ல மனம் தெரியும்.." என்றாள்..

அலுவலகத்திலிருந்து அப்போது தான், வந்த குறள்நெறியனின் காதுகளில்.. அக்கா, தம்பியின் பேச்சு விழுந்தது. மனைவி தன்னைப் பற்றி, தன் தம்பியிடம் சொன்னதை கேட்டு, அளவு கடந்த ஆனந்தத்தில் மிதந்தான்..


நவில் சென்ற பின், அறைக்குள் வந்தவன்.. உள்ளே, குழந்தையின் துணியை மடித்துக் கொண்டிருந்த மனைவியை பின்னிருந்து அணைத்தவன்,அவளின் தோளில் தன் தாடையைப் பதித்து ,"ஐ லவ் யூ சோ மச் சாங் பியூட்டி.." என்றான்..

அவளோ, "என்ன சாருக்கு.. இத்தனை நாள் கழித்து இப்பத் தான் ப்ரப்போஸ் பண்ணத் தோனுதா ..?"என்றவளிடம்.

"ஆமாம்.. ஆமாம்.." என்ற‌வன், அவளின் மாம்பழக் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.. "என் வாழ்க்கையில் வசந்தமா வந்த தேனிசை நீ தான்.. கரடுமுரடாக இருந்த என்னை சிலையாக வடித்த சிற்பி டி நீ என்றவனிடம்..


"என்ன சார் ஒரே கவிதையா கொட்டுது.."

"உன்னைப் பார்த்தா.. கவிதை மட்டுமில்லை பாட்டும் கொட்டும்..பாடட்டுமா.." என்றவன்,
அன்பே!அன்பே ! கொல்லாதே! என்று பாடியவனின் காதலில், கட்டுண்டு போனால் அந்த பாட்டழகி!

இனி அவர்களின் வாழ்க்கையில் வசந்தமும்,ஆனந்தமும் மட்டுமே கால தேவன் பொழிவான்..

சுபம்...


ஹாய் பிரெண்ட்ஸ்,
அன்பே!அன்பே!கொல்லாதே! கதையின் இறுதி அத்தியாயங்கள் போட்டு விட்டேன்..(29,30,31,32,33) 5யூடி.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்.. கதையின் ஆரம்பத்தில் இருந்து..இறுதி வரை.!நான் யூடி லேட்டா போட்டாலும் பொறுத்திருந்து படித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..உங்களுடன் என் பயணம் என்றென்றும் தொடவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. தொடர்ந்து உங்கள் ஆதர்வை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்.. சைலண்ட் ரீடர்ஸ்சும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி..
என்னுடன் இத்தனை நாள் பயணித்த வாசக தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
அன்புடன்
இனிதா மோகன்..




















 
Status
Not open for further replies.
Top Bottom