Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Tamil Novel

Status
Not open for further replies.

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -23

அவனது செயல் புரிந்தவர்களாய் மற்றவர்களும் அவனைப் பின்பற்றி ஓட விமான நிலையமே ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாகி பின்பு தன்னியல்பு பெற்றது.

உதய் காருக்குள் ஏறி அமர்ந்து காரை இயக்குவதற்கு முன்பாகவே அந்தப் பத்து பேரோடு நிகிலும் சேர்ந்து உள்ளே ஏறிக் கொண்டான்.. அனைவரும் தங்களது உடமைகளோடு ஏறிக் கொண்டதும், “காரை எடு மச்சான் போலாம்” என்று கோரசாகச் சொல்ல.

‘இதுக்கு மேல தப்பிக்க முடியாது. இவனை மட்டும் கெளம்பி வாடான்னு சொன்னா அங்கிருந்த இவனுங்களையும் இழுத்துக்கிட்டு வந்துருக்கானே? அடுத்து என்னாகுமோ தெரியலையே?’ என்று யோசித்தவாறே உதய் வாகனத்தை இயக்கினான்.

அவனது நெருங்கிய நண்பர் வட்டாரமும் இதுநாள்வரை இணைபிரியா தொழிற்முறை நட்பு கூட்டமாகிய இந்தப் பதினோரு பேரும் தான் தற்போது அவனை வாட்டி வதைக்க ஆரம்பித்திருந்தனர். அதிலும் நொடிக்கொருதரம் அவனை வம்பிழுத்துக் கொண்டு பேசியவர்கள், அவனை அநியாயத்திற்குக் கிண்டல் செய்தனர். அவர்கள் பேசுவதைக் கேட்ட உதய் யாருமறியாமல் முன்புற கண்ணாடி வழியாகப் பின்னால் அமர்ந்திருந்த நிகிலைப் பார்த்து கண்களாலேயே அவனை எரிக்க.‌ இதுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தம் இல்லை என்று சைகையால் நிகில் சொல்ல. அதைக் கேட்டு இன்னும் அதிகமாக அவனை முறைத்த உதய் பெருமுச்சொன்றை வெளியிட்டவனாய், “என்னங்கடா நேரா வீட்டுக்கு போயிடலாமா?” என்று கேட்டிட.

“நோ.. நோ.. நோ.. நோ.. நோ.. நோ.. எல்லாரும் முதல்ல ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம். அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போலாம்” என்று அனைவரும் கோரஸாகச் சொன்னார்கள். அனைவரையும் குழப்பத்துடன் திரும்பிப்பார்த்த உதய், “எதுக்கு இப்ப எல்லாரும் ஹாஸ்பிடல் போகனுங்குறீங்க?” என்று கேட்டான்.

அனைவரும் இழுவையாக, “இல்ல வீட்டுக்குப் போனா பாக்குற மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க.‌ இதே ஹாஸ்பிடல்னா கலர் கலரா யாராவது இருப்பாங்க இல்லையா? அதான் கண்ணுக்கு குளிர்ச்சியா அவங்களைப் பார்த்து ரசிச்சுட்டு, கொஞ்ச நேரம் அங்கையே இருந்துட்டு அதுக்கப்புறம் வீட்டுக்கு போகலாமேன்னு!” என்று அனைவரும் கோரசாகச் சொல்ல.

எப்போதும் போல் அவர்களது செயலில் நொந்த உதய்யால்,
‘கடவுளே எதுக்குத்தான் தேவையில்லாம இவனுங்களை என்கூடக் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்குறியோ தெரியல? ஆனாலும் நீ எல்லாம் நல்லா வருவ’ என்று புலம்புவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. வாயை மூடிக் கொண்டு காரை மருத்துவமனை நோக்கி செலுத்தினான்.‌ செல்லும் போது யாழினி எந்த வளைவில் திரும்பினாளோ இப்போது அதே இடத்தில் அவனது கார் பயணத்திட. அவனையும் அறியாமல் அவனது விழிகள் அப்பகுதியைத் தழுவி மீண்டன. அவளது ஸ்கூட்டி மட்டும் அங்கு நிற்பதைக் கண்டவன், ‘என்ன ஸ்கூட்டி மட்டும் நிக்கிது, அவளைக் காணோம்’ என்று யோசித்தவாறே தான் காரை முன்னோக்கி இயக்கினான். மருத்துவமனை வந்த பிறகும் கூட அவனுக்கு அந்தச் சிந்தனை மனதை விட்டு அகலவில்லை.

மருத்துவமனை வந்ததும் அனைவரையும் காரை விட்டு இறங்க சொன்னவன்,
“நீங்கல்லாம் முன்னாடி போங்கடா நான் இதோ வர்றேன்” என்று சொல்லி விட்டு மருத்துவமனை எங்கும் விழிகளால் அவளைத் தேடியவாறு தான் மெதுவாகப் பின்னே நடந்து வந்தான். அப்போது தான் பதட்டத்துடன் ஓடி வந்து சௌமி அவன் கண்ணில் பட, கடைசியாகச் சென்ற நிகிலை மட்டும் பிடித்து இழுத்துக் கொண்டு சௌமி இருந்த இடத்தை நெருங்கியவன் அவளருகில் நெருங்கி நின்று,
“என்னாச்சு மிஸ் சௌமி. நீங்க எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க?” என்று கேட்டான்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் உதயிடம் கண்ணீர் மல்க, “என்னாச்சுனு தெரியல சார்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாழி கொஞ்சம் பதட்டமா வெளிய போனா? எங்க போறேன்னு கேட்டதுக்கு முக்கியமான வேலைன்னு சொன்னா. போயி ரொம்ப நேரம் ஆகுதேன்னு போன் பண்ணுனா போன் சுவிட்ச் ஆப்னு வருது சார். என்ன ஆச்சுன்னு தெரியலை சார், இதுவரைக்கும் அவ என்கிட்ட எதையும் மறச்சது கிடையாது. ஆனா இப்ப அவ எதையோ மறச்ச மாதிரி தான் தெரியுது, ரொம்பப் பயமா இருக்கு சார்” என்று அழுகைக் குரலில் சொன்னாள்.

“சரி.. சரி..அழாதீங்க.நாம தேடி பாக்கலாம். அவங்க எங்கையும் போயிருக்கமாட்டாங்க சரியா. நானும் கூட, வரும் போது நோட் பண்ணுனேன் அவங்களோட ஸ்கூட்டி மட்டும், நம்ம ஹாஸ்பிடல்ல இருந்து ரெண்டு தெரு தள்ளி ஒரு சின்னச் சந்துல நின்னுச்சு. எனக்குமே அது கொஞ்சம் வித்தியாசமா தான் தெரிஞ்சுச்சு. நாம தேடிப் பார்க்கலாம் நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று ஆறுதலுரைத்தான்.

“இப்ப என்ன பண்றதுன்னே தெரியல சார். அவங்க அண்ணா நேத்து தான் சார் லண்டன் போனாங்க. அவங்க அப்பாவும் எங்க போயிருக்காருன்னு தெரியல, வெளியூர் போனதா சொன்னா. அவங்க அம்மா மட்டும் தான் வீட்ல இருக்காங்க சார். இவளுக்கு ஏதாவது ஒன்னுனா மொத்த குடும்பமும் துடிச்சுப் போயிடும் சார். கடகடன்னு வாயாடி தனமா பேசுனாலும் அவ ரொம்பப் பயந்தவ சார். ப்ளீஸ் ஹெல் பண்ணுங்க சார்” என்று சொல்லி கெஞ்சினாள்.

இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிகில், ‘ஒரு பிரண்டுக்காக இந்த அளவுக்குத் துடிக்கிறாங்க? அந்தளவுக்கு குளோஸ் பிராண்டோ?’ என்று மனதில் நினைத்தபடி நின்றிருந்தான்.

“மச்சி என்னடா ஏதோ தப்பா இருக்க மாதிரி இருக்கு நம்ம தேடி பார்க்கலாமா?” என்ற தன் நண்பனின் வார்த்தைக்குச் சரி என்று தலை அசைத்தான் நிகில்.

அடுத்த நிமிடம் எதையோ யோசித்த உதய் நிகிலிடம்,
“டேய் நிகில் நீ போய் நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரையும், நம்ம வீட்டு அட்ரஸ் கொடுத்து அங்க போகச்சொல்லு. நாம மட்டும் போய் தேடலாம்” என்றிட.

“இல்ல உதய் அது வந்து..” என்று சொல்ல என்ற நிகிலை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த உதய், “நான் சொன்னதச் செய்” என்று முறைப்புடன் சொன்னான்.

இது நாள் வரை தான் பார்த்த உதயிக்கும் இப்போது இங்கு நின்றிருக்கும் உதயிக்கும் அதிகளவு வித்தியாசத்தை உணர்ந்தான் நிகில்.‌ அதிலும் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டி அங்கு நிற்கிறது என்பதைக் கவனித்தேன் என்று உதய் சொன்னதைக் கேட்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ நெருடல் ஏற்பட்டது. அது மகிழ்வையும் ஒரே நேரத்தில் பயத்தையும் விதைத்து நிகிலின் மனதை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது..

நிகிலும் அவன் சொன்னதைச் செய்யச் சென்றான்.
தன் நண்பர்கள் இருந்த இடத்திற்கு வந்த நிகில்,“டேய் எல்லாரும் உதயோட வீட்டுக்கு கெளம்புங்கடா. எங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, நாங்க முடிச்சுட்டு வந்துடுறோம்” என்று சொல்லி முகவரியைக் கொடுத்தவன் அனைவரையும் வீட்டிற்குப் போகச் சொன்னான்.

அதற்கு அவர்களும்,
“டேய் இப்ப தானே வந்தோம். இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போறோம்டா.” என்று சொல்லிவிட்டு உதய்யின் அறையிலேயே அமர்ந்து விட்டனர்.

சரியென்று விட்டு வேகமாகக் கீழே இறங்கி வந்த நிகில் ஏற்கனவே காரில் தயாராக அமர்ந்திருந்த உதய்யின் அருகில் ஏறி அமர்ந்தான். ஏற்கனவே பின்புறம் ஏறி அமர்ந்து இருந்தாள் சௌமி.

கார் அங்கிருந்து நகர்ந்த நிமிடத்தில் இருந்து நிகிலின் பார்வை சௌமியிடம் தான் இருந்தது. அவளோ தலைகுனிந்து அமர்ந்தவாறு அழுது கொண்டே வந்தாள். உதயின் வாகனம் நேராகச் சென்று நின்றது யாழியின் ஸ்கூட்டி இருந்த இடத்தில் தான். காரை நிறுத்திவிட்டு சௌமிக்கு முன்னால் கீழே இறங்கிய உதய்,
வேக வேகமாக அவள் ஸ்கூட்டி இருந்த இடத்தை நோக்கி ஓடினான்.‌ ஸ்கூட்டி நன்றாகத் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, ஆதலால் அவளே தான் வண்டியை நிறுத்தி இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அடுத்து அங்கு இருந்த பகுதிகளில் தேட ஆரம்பித்தான்.‌ சிறிது தொலைவில் சிந்தியிருந்த ஆயிலின் தடத்தை வைத்து மற்றொரு வாகனமும் இங்கே நின்று இருக்கிறது என்பதை உணர்ந்தவன் அடுத்த நிமிடம் அந்தச் சந்து முழுவதும் தேட ஆரம்பித்தான். சாக்கடைகளும், கழிவு நீர் தேக்கங்களும், குப்பைகளும் நிறைந்திருந்த அந்த அசிங்கமான பகுதிகளில் எல்லாம் பித்துப் பிடித்தவன் போல வேக வேகமாக ஓடித் தேடினான்.

அதுவும் அவனது உடைகள், காஸ்ட்லியான காலணிகள் பாழாவதைக் கூடப் பொருட்படுத்தாமல் யாழினியைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். அனைத்தையும் இறங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்த நிகிலுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அந்தப் பெண் பெருமளவில் தன் நண்பனின் மனதை பாதித்து இருக்கிறாள் என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது. அதன்பிறகு சௌமியும், நிகிலும் ஆளுக்கொரு பக்கம் தேடி அலைந்த போதும் யாழியைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

அப்போதுதான், “சிசிடிவி கேமரா ஆப்போசிட்ல இருக்கு, அங்க போய் விசாரிக்கலாம் எதாவது தகவல் கிடைக்கும்” என்று நிகில் சொன்னதும் மூவரும் அங்கே சென்றனர்.‌ போக்குவரத்துக் காவலரிடம் தான் யார் என்பதைப் பற்றிச் சொல்லி உதய் உதவி கேட்க அவரும் உதவி செய்ய முன் வந்தார்.

சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் அந்தச் சந்தின் உள்ளே முதலில் யாழினியின் வாகனம் உள்ளே செல்வதும், சிறிது நேரத்தில் அதிலிருந்து ஒரு உயர்ந்த ரக வாகனம் வெளியே வருவதையும் பார்த்தனர். பின்பு அதில் தான் யாழி சென்றிருக்க வேண்டும் இல்லையேல், கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று யூகித்த அவர்களும் அந்த வாகனம் சென்ற திசையில் செல்ல முடிவெடுத்தனர். அந்த வாகனம் எந்தத் திசையில் சென்றது என்பதைக் கண்டறிந்தவர்கள், ஏர்போர்ட் செல்லும் திசையில் அந்த வாகனம் செல்வதை உணர்ந்தவர்களாய் போக்குவரத்து காவலருக்கு நன்றி தெரிவித்து விட்டுத் தங்கள் வண்டியை எடுத்துக்கொண்டு தாங்களும் அந்த வழியே கிளம்பினார்கள்.

அதே போல் மீதமிருக்கும் சிசிடிவி கேமராக்களையும் காண்பதற்காகச் சிறிது தூரம் சென்றதும் அங்கே இருக்கும் காவலரை கேட்டுத்தெரிந்து கொண்டு பயணித்தவர்கள் ஒருவழியாக நகரின் எல்லையை அடைந்து இருந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு பிரிந்து சென்ற நான்கு பாதையில் எந்தப் பாதையில் வண்டி சென்றது என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் அங்கு எந்தச் சிசிடிவி கேமராவும் இல்லை.‌ என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் திகைத்துப் போய் நின்று இருந்தனர்.

சௌமியோ அழுது கொண்டே இருக்க, உதய்யோ அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் பித்துப் பிடித்த நிலையில் அமர்ந்து இருந்தான். மீண்டும் மீண்டும் அவளுடனான உரையாடல்கள், சண்டைகள், தீண்டல்கள் என அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்கு அவனையும் அறியாமல் அவன் மனம் பதறித் துடிதுடித்தது. அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஏங்கித் தவித்தது.

அதற்கு மேலும் தாங்கள் இங்கே நின்று நேரத்தை விரயமாக்குவது நல்லதல்ல என்பதை உணர்ந்தவன் தன் நண்பனின் புறம் திரும்பி,
“இது உனக்குப் புது இடம் தான் இல்லன்னு சொல்லல ஆனாலும் உன் உதவி எனக்குக் கண்டிப்பா வேணும் நிகில். அவ எங்க போனான்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்” என்று அழுத்தமான குரலில் சொன்னான்.

தன் நண்பனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்பிய நிகில்,“ஏன்டா அந்தப் பொண்ணு உனக்கு யாரோ ஒரு பொண்ணு தானே? ஜஸ்ட் உங்க ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ற பொண்ணு தானே, அப்படி இருக்கும் போது அந்தப் பொண்ணு மேல உனக்கு என்னடா இவ்வளவு அக்கறை? நீ ஏன் இப்படித் துடிக்கிற?” என்று கேட்டுவிட்டு நண்பனின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.

அதே கேள்வியையே தன் மனதிடம் கேட்டான் உதய். தன் மனம் அளித்த பதிலில் ஒரு நிமிடம் அதிர்ந்தவன் மறு நிமிடமே தன் உணர்வுகளைச் சமன் செய்து முகபாவனைகளை மாற்றியவனாய், “அதைக் கேட்டு இப்ப என்ன பண்ண போற நிகில். இப்ப அதுவா முக்கியம், மொதல்ல அவளைப் போய் தேடலாம்டா. எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு” என்று சொல்லி பேச்சை மாற்ற நினைத்தான்.

“நாங்களும் தேடத் தான் போறோம். இங்கையே இருக்கப் போறது கிடையாது. ஆனா எனக்குப் பதில் தெரிஞ்சாகணும். நீ இந்த அளவுக்குத் துடிச்சு நான் பார்த்ததே கிடையாது உதய். ஏன் நம்ப படிக்கும்போது ஜஸ்ட் உன்னோட காலுல ஏற்பட்ட காயத்துக்கே நீ அதிகமாக ரியாக்ட் பண்ணுனது கிடையாது. எங்க யாருக்காகவும் இந்தத் துடி துடிச்சது கிடையாது. அப்படி இருக்கும் போது யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்காக நீ இப்படித் துடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு? இதை நீ போலீஸ்ல இன்ஃபார்ம் பண்ணி இருந்தா அவங்களே இதைப் பார்த்துருப்பாங்க, அந்தப் பொண்ணைத் தேடியிருப்பாங்க. ஆனா அதை விட்டுட்டு நீயே இறங்கி தேடுறது புதுசா இருக்குடா. அதுலையும் நீ பதற்றத்தோடு பித்துப் பிடிச்சவன் மாதிரி தேடுறதை பார்த்தா எனக்கே ஒரு மாதிரி இருக்குடா. இப்படிப்பட்ட உதய்யை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே கிடையாது, உண்மைய சொல்லு ‌உதய் உன் மனசுல என்ன தான் இருக்கு?” என்று அழுத்தமாக அதே நேரம் நிதானமாக நிகில் கேட்க.

ஒரு நிமிடம் அவன் முகத்தைப் பார்க்க தயங்கியவனாய் குனிந்து கொண்ட உதய், பிறகு அவனுக்கு முதுகு காட்டி நின்று தன் தலைக் கேசத்தை அழுந்த கோதிக் கொண்டான். பின்பு பெருமூச்சோடு, “தெரியல டா நான் எப்படி இப்படி மாறுனேன்னு எனக்கே தெரியலடா. நான் ஏன் அவளை மட்டும் வம்பிழுத்தேன்னு எனக்கு இவ்ளோ நாளா தெரியலடா. அவளைப் பார்த்தா மட்டும் ஏன் எனக்குள்ள ஏதோ ஊடுருவி போன மாதிரி என்னை மறந்த நிலையில அவளை ஏன் நெருங்குனேன்னு தெரியலடா. ஆனா இப்ப அதெல்லாம் ஏன்னு புரிஞ்சுடுச்சு. இப்ப தான்டா ரியலைஸ் பண்ணுனேன் நிகில். எனக்கு அவளைப் பிடிச்சிருக்குடா. அவளை ரொம்பப் புடிச்சிருக்குடா மச்சி. ஐ திங்க் யாழியை நான் விரும்புறேன்னு நினைக்கிறேன். ப்ளீஸ்டா இதுக்கு மேல என்னால எதையும் யோசிக்க முடியல, அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதுன்னு மனசு கெடந்து துடிக்குதுடா. எனக்கு ஹெல் பண்ணுடா மச்சி ப்ளீஸ்” என்றான் முதல் முறையாகத் தன் நண்பனிடம் யாசகத்தைப் பெறுவது போல்.

தன் நண்பன் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறான் என்பதை நிகிலாலும் உணர முடிந்தது. “சாரி மச்சி, உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு இதை நான் கேட்கலடா. உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். சரிடா நானும் என் தங்கச்சியைத் தேடுறேன். ஆனா எனக்கு இந்த ஊரைப்பத்தி எதுவும் தெரியாதேடா நான் தனியா போய் எப்படித் தேட முடியும்.”

“நீ சொல்றதும் சரிதான். நீ தனியா போய்த் தேடவும் முடியாது. இப்ப என்ன பண்றது?” என்று சிந்தித்தவன் அழுது கொண்டிருந்த சௌமியின் புறம் திரும்பி, “கண்டிப்பா உங்க தோழி கெடச்சுடுவாங்க நீங்க கவலைப்படாதீங்க மிஸ். சௌமி. நாங்க பேசுனதை நீங்க கேட்ருப்பீங்க. அதனால கண்டிப்பா உங்க தோழியும், என் வருங்கால மனைவியுமான யாழினியை தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது என் பொறுப்பு. எப்படியாவது அவங்களைக் கண்டுபிடிச்சுடலாம் சரியா! என்னோட பிரண்டு கூட நீங்க போங்க, அவனுக்கு வழி சொல்லுங்க, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒருபக்கம் தேடுங்க, நான் ஒரு பக்கம் தேடுறேன்.‌ போலீஸூக்கு இன்பாஃர்ம் பண்ணிடுறேன் அவங்க ஒரு பக்கம் தேடட்டும்.

அது மட்டுமில்ல டேடிக்கு கூப்டு வண்டி அனுப்ப சொல்றேன் அதுல போய் நீங்க தேடுங்க. நான் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு கிளம்புறேன். ப்ளீஸ் நீங்க அழாதீங்க கண்டிப்பா உங்க பிரண்டைக் கண்டு பிடிச்சுடலாம் என்னை நம்புங்க சரியா!” என்று சொன்னவன் அடுத்த நிமிடம் தந்தைக்கு அழைத்து விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னவன் தந்தையின் கேள்விக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய், “நான் ஏன் அவளைத் தேடுறேன்னு உங்களுக்குச் சந்தேகம் வரும்.‌ ஏன்னா இதுநாள் வரைக்கும் நடந்ததெல்லாம் சரியில்ல. ஆனா இனிமே எல்லாம் சரியா தான் நடக்கும் டேட், தப்பா நடக்க வாய்ப்பே இல்லை. எனக்கு அவளைப் புடிச்சிருக்கு. ஐ லவ் ஹெர். யாழினி தான்ப்பா உங்களோட வருங்கால மருமக” என்று சொன்னவன் தாங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லி,“ஒரு காரை இந்த இடத்துக்கு அனுப்பிடுங்க டேட்” என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டு நிகிலிடம்,
“பார்த்துக்க நிகில் எதுவா இருந்தாலும் எனக்குக் கூப்பிடு சரியா!” என்று சொன்ன உதய் அடுத்த நிமிடம் காரை சாலையில் பறக்க விட்டு இருந்தான்.

செல்லும் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தான் நிகில். சிறிது நேரம் கழித்து மெதுவாகச் சௌமியின் புறம் திரும்பியவன், “ஹாய் என்னோட பேரு நிகில் யாதவ். உங்க பேரு என்ன?” என்று கேட்க.

அவளோ அழுகையை நிறுத்திவிட்டு அவனை முறைத்தவாறு, “இங்க என்ன அறிமுகப்படலமா நடந்துக்கிட்டு இருக்கு, ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கிறதுக்கு. நானே என்னோட பிரண்டை காணோம்னு தவிச்சுக்கிட்டு இருக்கேன். இப்ப இது ரொம்ப முக்கியமா?” என்றாள் சற்று கோபத்தோடு.

“அதென்னவோ உண்மைதான். இப்ப இந்த அறிமுகப்படலம் தேவையில்லை தான். ஆனா கார் வர்றதுக்கு இன்னும் கொஞ்ச நேரமாகும். அதுவரைக்கும் பேசிட்டு இருக்கலாம்னு தான் அது மாதிரி சொன்னேங்க. அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க” என்று சொன்னவாறு அவன் பின்வாங்கினான்.

அவளோ அவன் பாவனையில் மெலிதாகப் பூத்த புன்னகையுடன், “என்னோட பேரு சௌமியா. எனக்கு யாழியை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவளுக்காகத் தான் மெடிகல் பீல்டு எடுத்துப் படிச்சேன். அவளுக்கு எதாவது ஒன்னுன்னா என்னால தாங்கிக்க முடியாது. ஆமா கேட்கணும்னு நெனச்சேன்! என்னங்க உங்க பிரண்டு லவ்வு, மனைவி அது இதுன்னு பேசுறாரு” என்றவள் கேட்க.

“அவன் சொல்றது உண்மைதாங்க. இதுவரைக்கும் உதய் இந்த மாதிரி நடந்து நான் பார்த்ததே கிடையாது. இப்படி அவன் பேசி நான் பார்த்ததில்லை. எந்தப் பொண்ணுக்காகவும் அவன் இப்படியெல்லாம் பண்ணி நான் பார்த்ததே இல்லை.‌ நாங்க படிக்கும் போது கூட எத்தனையோ பொண்ணுங்க அவன் பின்னாடி சுத்தி இருக்காங்க. ஆனா ஒருநாள் கூட அவன் அங்க முகத்தைத் திரும்பி பார்த்தது கிடையாது. ஆனா இப்ப ஒரு பொண்ணுக்காக நடு வீதியில இறங்கி சாக்கடையைக் கூடப் பொருட்படுத்தாம தேடுறான்னா அதுலையே புரியலையா அவனோட மனசு என்னன்னு?”

“அது எப்படிங்க ஒரு பொண்ணைப் பார்த்த ஒரே வாரத்துல இந்த அளவுக்கு உங்க பிரண்டால மாற முடியும். அது மட்டுமில்லாம ஏற்கனவே ஹாஸ்பிடல்ல அவரையும், என்னோட பிரண்டையும் சேர்த்து வச்சுத் தப்பா பேசறாங்க. அதனால கூட அவர் யாழியைப் பழி வாங்குறதுக்காக இந்த மாதிரி சொல்றாரோ?”

“அவனைப் பாத்தா உங்களுக்கு அப்படியா தெரியுது? அவன் துடிக்கிற துடிப்பை பார்த்து என்னால அவன் காதலை உணர முடியுது, உங்களால உணர முடியலையா? என் பிரண்டை பத்தி தப்பா பேசுனா பொண்ணுன்னு கூடப் பார்க்க மாட்டான் அடிச்சு பல்லை எல்லாம் கழட்டிடுவேன் ஞாபகம் வச்சுக்கோ” என்று தன் நண்பனை இவ்வாறு சொல்லி விட்டாளே என்ற கோபத்தில் சற்று கடுமையாகவே பேசி விட்டு அங்கிருந்து நகர்ந்து நின்று கொண்டான் நிகில்.

அவன் முகத்தையே பார்த்திருந்த சௌமிக்கு அவன் சொன்ன வார்த்தைகளால் கோபம் வர, அவனைப் போலவே திரும்பி நின்று கொண்டாள். அதே நேரம் சுமேந்திரன் அனுப்பி வைத்த காரும் வந்து சேர டிரைவரை வேண்டாம் என்று சொல்லி ஆட்டோவில் போகச் சொல்லிவிட்டு, இவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

உதயோ அவர்களுக்கு முன்னே கிளம்பியவன் வழிநெடுகிலும் யாழியை விழிகளால் தேடியவாறே காரை செலுத்தினான். முதலில் ஊருக்குள் செல்லும் பாதையில் செல்லாமல் ஊரைவிட்டு வெளியே செல்லும் பாதையில் காரை செலுத்தினான்.‌
சிறிது தூரத்திலேயே, சாலையோரம் ஏதோ வாகனம் நின்றிருந்ததற்கான தடயமாக இரண்டு வாட்டர் பாட்டில்கள் கிடந்ததைப் பார்த்தான். தன் காரையும் அங்கேயே நிறுத்திவிட்டு ஏதேனும் தடயம் கிடைக்குமா? என்று ஆராய்ந்தான். ஏதோ ஒரு வாகனம் அந்த இடத்தில் நின்று விட்டு பின்பு கிளம்பி சென்றதற்கான தடயம் இருந்தது. வண்டியின் டயர்களின் தடயம் தான் அது. ஏதோ ஒரு நம்பிக்கையில் ஏதோ ஒரு உந்துதலில் அந்தப் பாதையிலேயே வாகனத்தைச் செலுத்தினான். இன்னும் சிறிது தூரம் சென்றதும் தார்சாலையின் இடதுபுறம் காட்டுவழிப் பாதை ஒன்று பிரிந்து செல்வதைக் கண்டான் உதய். டயரின் தடயமும் அந்தப் பக்கம் செல்வதைக் கண்டு விட்டு ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் தானும் அந்தப் பக்கம் வண்டியை செலுத்தினான்.

கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் அந்தக் காட்டுவழிப் பாதையில் சற்று சிரமத்துடன் காரை செலுத்தியவன் ஒரு பள்ளத்தில் தெரியாமல் காரை விட்டு விட, அந்தப் பள்ளத்தில் டயர் மாட்டிக் கொண்டதால் அதன் பிறகு அவனால் தன் வாகனத்தை இயக்க முடியவில்லை. எரிச்சலோடு காரிலிருந்து இறங்கியவன், தன் அலைபேசி, பாதுகாப்பிற்காகத் தன்னிடம் எப்போதும் வைத்திருக்கும் லைசன்ஸ்டு கன், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டி என அனைத்தையும் எடுத்து ஒரு பையில் அடைத்துக் கொண்டவன், அதை தோளில் மாட்டியவாறு அந்தப் பாதையிலேயே ஓட ஆரம்பித்தான். முன்னேறிச் செல்ல செல்ல தனக்குப் பரிச்சயமான ஏதோ ஒன்று அருகில் இருப்பது போன்றதொரு உணர்வு அவனுள் எழுந்தது‌..

கால்கள் ஓய்ந்து போகும் அளவிற்கு ஓடினான், ஓடினான் ஓடிக்கொண்டே இருந்தான்.
இடை இடையே இருந்த முட்கள் அவன் கால்களைப் பதம் பார்த்ததை அவன் பொருட்படுத்தவில்லை. அங்கிருந்த மரக்கிளைகளில் மாட்டி அவனது உடைகள் கிழிந்து தொங்கியதையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவன் சிந்தையில் இருந்ததெல்லாம் தன்னவள் இங்குதான் எங்கோ இருக்கிறாள் என்ற உணர்வு மட்டுமே! யாழியின் எண்ணம் மட்டுமே அவனது உள்ளத்தில் நிறைந்து இருந்தது. அந்த உணர்வை அவன் உணர்ந்ததிலிருந்து அவனது வேகம் இரட்டிப்பானது.

ஓடி ஓடிக் களைத்தவன் ஓட முடியாமல் ஓரிடத்தில் நின்றான். மூச்சு வாங்க திணறியவனாய் அங்கிருந்து பாறை ஒன்றின் மீது அமர்ந்தான். விழிகளை நாலாபுறமும் சூழல விட்டவனது கண்கள் எதைக் கண்டதோ? உடனே மகிழ்ச்சியும் ஆனந்தமும் கூத்தாடிட, திடீரென்று அவன் கண்கள் ஒளிப்பெற்றது போல் மிளிர்ந்தது. தன் களைப்பையும் மீறி எழுந்தவன் தன்னிடமிருந்த பொருட்களை ஒரு முறை ஆராய்ந்து பார்த்து விட்டு வேக வேகமாகப் புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தை நோக்கி பாயுந்தோடினான்..

உடலெங்கும் பரவிடும்
மின்சாரப் பாய்ச்சலாய்
உன் கோபமடி..
அதில் தெரிந்தே விழுந்து
கரைந்து கரியாகிட
தோன்றுதடி
உன் மீது நான் கொண்ட
காதல் பித்தால்..!

இயல்பிற்கு மாறாய்
மருகுதடி என்னுள்ளம்..
அதிலும் உன் நினைவை
சுமந்து கொண்டு
மறுகுவதையே விரும்பி
ஏற்குதடி உனை சுமக்கும்
உள்ளம்..!

- அற்புதமது பிறக்கும்..




 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -24.1

தன் விழிகள் கண்ட
காட்சியில் ஒரு நிமிடம் உச்சகட்ட அதிர்வில் அதிர்ந்து நின்றிருந்த உதய் அடுத்த நிமிடம் தன் உடமைகளைச் சரி பார்த்து விட்டு அந்தத் திசையில் ஓட ஆரம்பித்தான். அவனது விழிகள் கண்ட காட்சியில் தென்பட்ட வாகனம் அவனுக்குச் சற்று‌ அதிர்வைத் தான் கொடுத்திருந்தது. ஆடம்பரமான, சொகுசான வசதிகள் நிறைந்த கார் ஒன்று அடர்ந்த வனத்திற்குள் நிற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படியென்றால் கண்டிப்பாக அது யாழினியைக் கடத்தியவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிய மறுகணம் தன்னை மீறிய மகிழ்ச்சியில் ஓட ஆரம்பித்தான். தன்னவள் கிடைக்கப் போகிறாளென்ற நினைப்பில் தன்னைச்சுற்றி பார்வையால் அளக்கத் தவறிய உதய் அந்தக் கார் நின்றிருந்த வீட்டையும், அந்தக் காரையும் மட்டுமே பார்த்தவாறே முன்னேறினான். மரங்களின் இடையே புகுந்து ஓடியவன் மரக்கிளை ஒன்று தட்டி விட்டதால் கீழே விழ, அவனது தலை அங்கிருந்த மரத்தில் மோதி காயமாகி, காயத்தில் இருந்து இரத்தம் கசிந்தது. கை கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தட்டுத்தடுமாறி எழுந்தவன் அங்கிருந்து நகர முற்பட்ட வேளையில், “யார்டா நீ?” என்ற குரல் கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான் உதய்.

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனோ உதய்யின் அருகில் நெருங்கி தன் கையிலிருந்த ஆயுதத்தை உதய்யின் முதுகில் வைத்தவன்,
“யார்டா நீ? இங்க என்ன பண்ற?” என்று கேட்ட மறுகணம் தன் முதுகு புறமாக இருந்த பையைத் தொட முயன்றான் உதய். ஆனால் அதற்குள் இன்னும் இருவர் உதய்யை இழுத்துப் பிடித்துக் கொண்டு அந்தக் கார் நின்றிருந்த காட்டு பங்களாவுக்குள் நுழைந்தனர். பாதி வீட்டை கார் மறைத்து நின்றிருந்ததால் சாதாரண வீடு என்று எண்ணி இருந்தான் உதய். ஆனால் உள்ளே சென்றதுக்குப் பிறகு தான் அது நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு வீடாகவும், வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண மர வீடு போலவும் காட்சி அமைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்ததை உணர்ந்தான்.

விரிந்த விழிகளால் அவ்வீட்டை அளந்தவாறு அவர்களுடன் நடந்தவன் அப்போதுதான் யாழினியின் நினைவு வந்தவனாக நாலாபுறமும் விழிகளைச் சுழல விட்டான். அவனது கண்களுக்கு எதுவும் தட்டுப்படவில்லை. அதற்குள் உதய்யின் பின்னால் நடந்து வந்த ஒருவன், “யாரைடா தேடுற?” என்றவாறு உதய்யின் பின்னந் தலையில் ஒரு தட்டு தட்ட . பொங்கி வந்த கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட்ட உதய், அது முடியாததால் ஏதோ பேசுவதற்கு வாய் திறந்த வேளையில் அவனது கண்கள் கண்டு விட்டது அவனவளை..

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சேரில் அமர வைக்கப்பட்டிருந்த அவளின் தலை தொங்கி இருந்தது. அவனது முகம் உதய்யிக்கு தெரியவில்லை தான். ஆனால் அவளது உருவத்தையும், உடையின் நிறத்தையும் வைத்து கண்டிப்பாக அது அவள் தான் என்பதை யூகித்தவனது மனம் இப்போதே அங்குச் செல்ல விரும்பி முரண்டு பிடித்தது.‌ ஆனால் இவர்கள் பிடியில் இருந்து தப்பிப்பது அத்தனை சுலபம் அல்ல என்பதையும் நொடி நேரத்திற்குள் உணர்ந்திருந்தான் உதய் அதனால் தான் அமைதி காத்தான்.

அதேநேரம் அங்குத் தலைவன் போன்று இருந்தவனிடம் உதய்யை அழைத்துச் சென்றவர்கள்,
“தலைவா நாங்க வெளியே காவலுக்கு இருக்கும் போது இவனைப் பார்த்தோம். யாரையோ தேடிக்கிட்டு வந்த மாதிரி இருந்துச்சு அதான் தூக்கிட்டு வந்துட்டோம்”என்றிட.

அவ்வளவு நேரம் அலைப்பேசியில் தலையைப் புதைத்திருந்த அவன் நிமிர்ந்து உதய்யை ஒரு பார்வை பார்த்து விட்டு, “என்ன இவளைத் தேடி வந்தியா?” என்று யாழினியை கைகாட்டி கேட்டான்.

உதயிடம் இருந்த ஆமாமென்ற பதில் வருவதற்குப் பதிலாக, “இல்லை சார். நான் சும்மா இந்த வழியா வரும் போது என்னோட வண்டி பஞ்சர் ஆகிடுச்சு. அதான் வழி தேடி இந்தப் பக்கம் வந்தேன். எதுக்குத் தேவையில்லாம என்னை இழுத்துட்டு இருந்தீங்க, என்னைப் போக விடுங்க சார் எனக்கு வேலை இருக்குது” என்றான் அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு..

ஒரு நிமிடம் அவர்கள் அவர் சொன்னதை நம்பி அவனை விடுவிக்கத் தயாராக இருந்த வேளையில் அவன் குரலைக் கேட்டு தலையைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்த யாழினி சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் முதலில் குழப்பமும், அதைத்தொடர்ந்து ஏதோ ஒரு நம்பிக்கையும் துளிர்விட்டது. எதேச்சையாக அதைக் கண்ட அந்தத் தலைவன் போன்றவன், “என்னடா நீ என்னமோ வழிமாறி வந்துட்டேங்குற. இந்தப் பொண்ணோ உன்னைப் பாத்ததும் ஹேப்பியா முகத்தை மாத்துறா? என்ன நடக்குது இங்க? மரியாதையா உண்மையைச் சொல்லு, இங்களைத் தேடிக்கிட்டுத் தான் நீ வந்தியா?” என்று கேட்டவாறே உதய்யை அடிக்கக் கையை ஓங்கினான்.

ஆனால் அதற்குள் யாழினியோ தன் உதட்டில் இருக்கும் காயத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் உளறி இருந்தாள். “எதுவா இருந்தால் எங்கக்கிட்ட கேளுங்க, எதுக்குத் தேவையில்லாம அவரை அடிக்கப் போறீங்க?” என்றாள் தன்னையும் மீறி..

அதில் உதய்யை அடிப்பதை விட்டுவிட்டு அவளை நெருங்கியவன் அவள் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து, “இவ்வளவு நேரம் அந்த மேப் எங்க இருக்குனு கேட்டு டார்ச்சர் பண்ணியும் வாயைத் தொறக்காம இருந்தவ இப்ப என்ன இவனுக்காகப் பரிஞ்சு பேசிக்கிட்டு வர்ற?” என்று கேட்டவாறு மீண்டும் அவளை அடிக்கச் சென்ற போது, “டேய் இன்னும் ஒரு அடி அவ மேல பட்டுச்சுன்னாலும் நீங்க யாரும் உயிரோட இருக்க மாட்டீங்க ஞாபகம் வச்சுக்குங்க" என்று கர்ஜித்தான் உதய்.

இப்போது தான் அவள் மீதான நேசத்தை உணர்ந்து இருக்கிறான் என்ற போதும், தன் கண்முன்னே தான் நேசிப்பவளை அடித்தால் எந்தக் காதலன் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பான். உதயும் அதற்கேற்றார் போல் தன் கோபத்தை வார்த்தைகளால் வெளியிட்டு விட்டான்.

அதைக் கூர்ந்து கவனித்த அந்தத் தலைவன் போன்றவனும்,
“இதோ பாருங்கடா, சாரை அடிக்கப் போனா மேடம் பதறுறாங்க. மேடத்தை அடிச்சா சார் கோபப்படுறாரு. என்ன ரெண்டு பேத்துக்கு நடுவுலையும் காதல் நதி பெருக்கெடுத்து ஓடுதோ?” என நக்கலாகச் சொன்னவன், யாழினியின் புறம் திரும்பி,
“என்னடி.. உன்னோட லவ்வர் உன்னைத்தேடி தான் வந்து இருக்கான் போல. உனக்காக உயிரையும் குடுப்பானோ?” என்றான் கிண்டல் தொனியில்.

அதைக்கேட்ட யாழினி வாய் திறந்து பேசும் முன்பு தன் வாயைத் திறந்திருந்தான் உதய்.
“நாங்க லவ்வர்ஸ் எல்லாம் கிடையாதுடா. அவ என்னோட வருங்காலப் பொண்டாட்டி. என் பொண்டாட்டியை எந்த நாதாரி நாயோ கடத்திட்டு வந்துட்டான். அதான் அவளைக் கூட்டிட்டு போலாம்னு வந்தேன் போதுமா!” என்று உறுதியாக உரைத்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள் யாழினி. அதே நேரம் உதய்யும் அவள் முகத்தையே பார்த்திருந்தான். தன் கண்களை மூடித் திறந்து அவளைச் சமன் செய்வது போல் சைகை செய்தவன், “அவன் அடிச்சது வலிக்குதாடா?" என்று இதழ் அசைவில் கேட்டான்.

அவளும் அவனது அந்தக் கேள்வியில் கண்கள் கலங்க 'ஆமாம்..' என்பது போல் தலையை அசைத்தாள். அதைப் பார்த்து உதய்யின் உள்ளம் உருகியது. ஓடிச்சென்று அவளை அணைத்து ஆறுதலுரைக்க வேண்டுமென்ற உணர்வு அவனைப் பிடித்து அலைக்கழிக்க, தன்னைப் பிடித்திருந்தவர்களின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான்.

“எதுக்குடா அவங்களைக் கடத்திட்டு வந்துருக்கீங்க? பணக்காரங்க… வசதியானவங்களா இருந்தாக்கூட, அவங்களால உங்களுக்கு ஏதாவது வருமானம் வரும்.‌ ஆனா அவங்களோ எதுவுமே இல்லாத மிடில் கிளாஸ் ஃபேமிலி, அப்படி இருக்கும் போது அவங்களை எதுக்குடா கடத்துனீங்க?” என்றான் கடுப்போடு..

“அவங்களை ஏன் இவனுங்க கடத்துனாங்கங்குற கேள்விக்குப் பதிலை நான் சொல்றேன்” என்றவாறு உள்ளே நுழைந்த சகாதேவன், தன் ஆட்களிடம்,
“யாருடா இவன்? ஓவரா வாய்ப் பேசுறான்” என்று கேட்க.

“அது ஒன்னும் இல்ல தலைவரே! இந்தப் புரபஸரோட பொண்ணு இருக்கா இல்ல, இவன் அவளைக் கட்டிக்கப் போறவனாம். இந்தப் பொண்ண நாம கடத்திக்கிட்டு வந்ததை எப்படியோ மோப்ப நாய் மாதிரி மோப்பம் புடிச்சு இங்க வரைக்கும் வந்து இருக்கான்” என்று நக்கலாகச் சொன்னான் அந்தக் கடத்தல் கும்பலுக்குத் தலைவன் போலிருந்த சேகர்..

அதைக் கேட்டு புன்னகைத்த சகாதேவன், “ஒஒ அந்த அளவுக்குத் திறமைசாலியா அவன்? சரி அவனோட திறமை எந்தளவுக்கு இருக்குன்னு நானும் தெரிஞ்சுக்கணும். டேய் இங்க வா” என்று சொன்னவாறு அவர்களின் பிடியிலிருந்து உதய்யை விடுவித்துத் தோளோடு சேர்த்தணைத்து தன்னுடன் இழுத்துக்கொண்டு முன்னே நடந்தவர், அடிவாங்கி மயங்கிய நிலையில் அமர்ந்திருந்த அன்புச்செல்வனின் அருகில் கொண்டு சென்று அவனை நிறுத்தினார்.

உதய்யோ தன் முன்னே இருந்தவரை குழப்பத்துடன் பார்த்தான்.“இவர் யாருன்னு தெரியுதா?” என்றார் சகாதேவன்.

உதய்யோ தெரியாது என்பது போல் தலையசைத்தான். மந்தகாசமாய் மீண்டுமொரு புன்னகை தோன்றியது சகாதேவனின் இதழ்களில்..

“நீ இவரோட மகவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு இவனுங்கக்கிட்ட சொன்ன. அப்படி இருக்கும்போது மாமனாரை தெரியாம இருக்குமா?” என்று சொல்ல.

அப்போது தான் தன் எதிரில் இருப்பது தன் நேசத்திற்கு உரியவளின் தந்தை என்பதை உணர்ந்த உதய், “சரி இவர் நான் கட்டிக்கப்போற பொண்ணோட அப்பா. நீங்க கடத்திக்கிட்டு வந்துருக்கப் பொண்ணு தான் நான் கட்டிக்கப்போற பொண்ணுங்குறது உண்மை தான் சார் நான் பொய் சொல்லலை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் சார். எதுக்காக இவங்களை இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? இவங்களால உங்களுக்கு என்ன லாபம்? நீங்க நெனைக்கிற அளவுக்கு அவங்க ஒன்னும் அவ்வளவு வசதியானவங்க இல்லையே?”

“நீ சொல்றதும் சரிதான் அந்தளவுக்கு இவங்க வசதியானவங்க கிடையாது தான்.ஆனா விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை அடைவதற்கு எனக்கு இருந்த ஒரே வழியை இவங்க அடைச்சுட்டாங்க. அப்படி இருக்கும் போது இவங்களைக் கடத்திட்டு வர்றது தானே முறை?” என்று சொன்னார் சகாதேவன்.

இன்னும் குழப்பம் நீங்காத பாவனையோடு அவரைப் பார்த்திருந்த உதய், “எதா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க. எதுக்காக அவங்களைக் கடத்துனீங்க? இவங்களால உங்களுக்கு என்ன காரியம் ஆகணும், அதை நான் செஞ்சு கொடுக்குறேன். தயவு செஞ்சு அவங்களை விட்டுடுங்க” என்றான் சற்று இறங்கிப் போன குரலில்.

அதற்குள் யாழினியோ, “நீங்க நினைக்கிற மாதிரி இவங்க பணத்துக்காக எங்களைக் கடத்தலை. என்னமோ மேப்பாம் அதைப்பத்தி கேட்டு தான் எங்களைக் கொடுமைப்படுத்துறாங்க” என்றாள் தன்னிதழில் வழியும் ரத்தத்தைக் கூடப் பொருட்படுத்தாமல்...

“அவ்வளவு தானே! விடுங்க அந்த மேப்பை நான் கேட்டு வாங்கித் தர்றேன். அவங்களைக் கடத்தாம அன்பா கேட்ருந்தா அவங்களே அதைத் தந்துருப்பாங்க. அதை விட்டுட்டு எதுக்கு இவ்வளவு ஹார்சா நடந்துக்குறீங்க? இவ்வளவு கொடுமை படுத்தி விசாரிச்சா அவங்க எப்படி உண்மைய சொல்லுவாங்க. அவங்களும் மனுஷங்க தானே உங்களை அடிச்சா எப்படி வலிக்குதோ? அதேபோல அவங்களை அடிச்சாலும், காயப்படுத்துனாலும் அவங்களுக்கும் வலிகும் தானே?” என்றான் தன்னவளின் குடும்பத்திற்குப் பரிந்து பேசியவாறு..

அவன் சொன்னதைக் கேட்டுத் தாடையில் கைவைத்து யோசிப்பது போல் நின்றிருந்த சகாதேவன். “உனக்குப் பத்து நிமிஷம் டைம் தர்றேன். அவங்க ரெண்டு பேருக்கிட்ட இருந்தும் பதிலை வாங்கிடு பாக்கலாம். அப்படி உன்னால அவங்கக்கிட்ட இருந்து பதிலை வாங்க முடியலன்னா, உனக்கு என்ன தண்டனை தரலாங்குறதை நான் யோசித்துச் சொல்றேன் சரியா. போ போய் முயற்சி பண்ணு” என்று சொல்லி விட்டு தள்ளி சென்று அமர்ந்து விட.

அன்புச்செல்வன் முகத்தில் தண்ணீரைரை ஊற்றி மயக்கத்தைத் தெளிய வைத்து விட்டு மற்ற அடியாட்களும் அவர்களை விட்டு தள்ளி நின்று கொண்டனர். நாற்காலி ஒன்றை அவரின் முன்பாக இழுத்துப் போட்டு அமர்ந்த உதய்,
“சார் என்னைக் கொஞ்சம் பாருங்க” என்றான்.

அப்போதுதான் மயக்கம் தெளிந்து கண் விழித்த அன்புச்செல்வன் தன் முன்னே புதிதாக அமர்ந்திருப்பவனைக் குழப்பமான பாவனையோடு பார்த்து வைத்தவர்,
“நீங்க யாரு தம்பி? நீங்களும் அந்த மேப்பைக் கேட்டு அடிக்கப் போறீங்களா?” என்றார் தட்டு தடுமாறி உள்ளே போனக்குரலில்‌.

“அய்யோ அப்படியெல்லாம் எதுவும் இல்ல அங்கிள்.. நான் யாரு என்னங்குறதை அப்புறம் சொல்றேன் அங்கிள். அவங்க ஏதோ மேப் பத்தி கேட்குறாங்களே அதைக் குடுத்துருங்களே, பாருங்க உங்க பொண்ணையும் கடத்திட்டு வந்து கட்டி போட்டு எப்படி அடிச்சுருக்காங்கன்னு”என்றான்.
அப்போது தான் தன் மகளை நிமிர்ந்து பார்த்தவர், அதிர்ந்து தான் போனார்.‌ அதிகமாக மகளிடம் ஒட்டுதல் இல்லை என்றபோதும் பிள்ளைகளை அடிக்காமல், கண்டித்து வளர்த்திருந்தவருக்கு மகளின் கன்ட்ரி போயிருந்த கன்னமும், உதட்டில் இருந்து வழிந்த ரத்தமுமே அவள் அனுபவித்த கொடுமையைச் சொல்லிவிட, அவரது கண்ணில் கண்ணீர் அரும்பியது.

அதே கண்ணீரோடு உதய்யை நிமிர்ந்து பார்த்தவர், “அவங்க கேட்கிற மேப் எங்கிட்ட தான் தம்பி இருந்துச்சு. ஆனா வர்ற வழியில அது எங்கையோ மிஸ் ஆயிடுச்சு. இப்ப நான் என்ன பண்ணட்டும். அது மிஸ் ஆயிடுச்சு எங்கிட்ட இல்லன்னு சொன்னாலும் நம்ப மாட்டேங்கிறாங்க” என்றார் நா தழுதழுக்க.

“சரி அங்கிள் அந்த மேப் தொலைஞ்சது தொலைஞ்சதாவே இருக்கட்டும். ஆனா நீங்க அந்த மேப்பை முழுசா பார்த்திருப்பீங்க தானே! அது எப்படி வரையப்பட்டு இருக்கும்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா! உங்களால முடிஞ்சா அதே மாதிரி வரைஞ்சு அவங்களுக்கு நீங்க கொடுத்திருக்கலாமே!” என்று தனக்குத் தோன்றிய யோசனையைச் சொன்னான்.

“வரையறதைப் பத்தி ஒன்னும் பிரச்சனை இல்ல தம்பி. ஆனா நான் வரைந்து கொடுத்ததுக்கு அப்புறம் அவங்க என்னைக் கொன்னுட்டா என்ன பண்றது” என்றார் அவர்.

“எதுவும் செய்ய மாட்டாங்க அங்கிள். அவரைப் பார்க்க நல்லவர் மாதிரி தான் தெரியுது” என்று சொல்லிவிட்டு சகாதேவனின் புறம் திரும்பிய உதய், “ஒரு பேப்பரும், ஒரு பென்சிலும் வேணும்” என்றதும் ஏற்கனவே தயாராக வைத்திருந்தது போல் காரிலிருந்து அதைக் கொண்டு வந்து கொடுத்தான் சேகர்.

அதை வாங்கிய உதய் அன்புச்செல்வனின் கை கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டு டேபிள் ஒன்றை இழுத்துக் கொண்டுவந்து அவர் முன்னால் போட்டவன்,“நல்லா யோசிச்சு பாத்து பொறுமையா வரைங்க அங்கிள். நம்ப மூன்று பேரோட உயிரும் உங்க கைலதான் இருக்கு” என்று சொன்னவன் தன் தோளில் இருந்த பையில் கை வைக்க அடுத்த நிமிடம் அது சேகரின் கையில் சேகரமாகி இருந்தது. இப்போது தன் நண்பனுக்குத் தகவல் அனுப்ப முடியாதே என்றெண்ணிய உதய் குழப்பத்துடன் அன்புச்செல்வனைப் பார்த்தவாறு நின்றிருந்தான்..

சகாதேவனின் அருகில் நின்றிருந்த சேகரோ, “அவன் அந்த மேப்பை வரைஞ்சு முடிஞ்சதும் என்ன பண்ணலாம் தலைவரே! இவங்களை விட்டுடலாமா?” என்றதும். உஷ்ணமான பார்வை ஒன்றை அவன் மீது செலுத்தியவர்,
“அவனுங்களை விட்டா நாம மாட்டிக்குவோம்டா. மூணு பேரையுமே விட்டுடாதீங்க போட்டுத் தள்ளிடுங்க” என்று சொன்னவாறு நல்லவன் போல் முகத்தை மாற்றிக்கொண்டு அமர்ந்திருந்தார், நஞ்சு கொண்ட பாம்பை ஒத்த குணங்கொண்ட சகாதேவன்.

யோசித்துப் பார்த்து! யோசித்துப் பார்த்து அச்சு அசலாக அதே போன்று, சிறிதும் பிசிறில்லாத அளவிற்குத் துள்ளியமாக, அந்த மேப்பின் அசலை வரைந்திருந்தார் அன்புச்செல்வன். அதிலும் மேப்பில் ஆங்காங்கே என்னென்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது முதற்கொண்டு அனைத்தையும் அவர் வரைந்து முடித்திருந்தார். அருகில் நின்று அதை விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தான் உதய். ஒரு நிமிடம் கூடக் கண்களைச் சிமிட்டாமல் அந்த மேப்பின் வடிவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருவழியாக அனைத்தையும் வரைந்து முடித்த அன்புச்செல்வன் பின்புறம் எதையோ திருப்பிக் குறித்து முடித்து, இறுதியாக எதையோ அதில் கிறுக்கியவர் அதை உதையின் கையில் கொடுத்தார்.

“இதை அவங்கக்கிட்ட குடித்துட்டு வா தம்பி நாம மூணு பேரும் இங்கிருந்து போகலாம்” என்று சொல்ல.
“சரிங்க அங்கிள்”, என்று சொன்ன உதய் இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் சேகரின் கையிலிருந்த துப்பாக்கியில் இருந்து வெளிவந்த துப்பாக்கி குண்டு அன்புச்செல்வனின் நெஞ்சுப்பகுதியில் பாய்ந்திருந்தது. அதைச் சற்றும் உதய்யோ, யாழினியோ எதிர்பார்க்கவில்லை.
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -24.2

“அய்யோ அப்பா..” என்ற அலறலோடு யாழினியும், “அங்கிள்..” என்ற அலறலோடு உதய்யும் கதறிட. சகாதேவனோ சத்தமாகச் சிரித்தவாறு,
“என்னங்கடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? மேப் எப்படி இருக்கும்னு வரைஞ்சு குடுத்துட்டா நான் உங்களை உயிரோட விட்ருவணா? அந்தளவுக்கு என்னை நல்லவன்னு நெனச்சுட்டீங்களா, என்ன? அரசியல்வாதிடா நான்,‌ அப்புறம் எப்படிச் சொன்ன சொல்லை காப்பாத்துவேன்” என்று சொன்னவாறு சேகருக்குக் கண் ஜாடை காட்ட அடுத்த நிமிடம் உதய்யை நோக்கி திரும்பியது, சேகரன் கையில் இருந்த துப்பாக்கியின் முனை.

தன்னவளின் தந்தையைத் தான் காக்க முடியவில்லை. ஆனால் தன் நேசத்திற்கு உரியவளையாவது காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்த ஓடிய உதய் அவர்கள் குடிப்பதற்காக வைத்திருந்த நீர் அடங்கிய பாட்டிலைத் திறந்து அதற்குள் அந்தப் பேப்பரை திணித்திருந்தான்.

சேகரும் அவனது ஆட்களும் ஓடிவந்து உதய்யை தடுப்பதற்குள்ளாகவே உதய் இதைச் செய்திருந்தான். புதிதாக அன்புச்செல்வனால் வரையப்பட்ட வரைபடமானது தண்ணீரில் நனைந்து அழிந்துபோனது. இதை அங்கிருந்த எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சகாதேவனோ உச்சக்கட்ட அதிர்ச்சியோடும், கோபத்தோடும் கண்கள் சிவக்க வேகமாக ஓடிச்சென்று உதய்யை அடிக்க முயல, அதற்குள் தட்டுத்தடுமாறி தன்னைப் பிடித்திருந்த நாலு பேர் முகத்திலும் விரல் முஷ்டியை மடக்கி குத்தி விட்டு, தன் காலை வைத்து அவர்களது காலை வாரிவிட்டு கீழே விழச்செய்த உதய் தன்னை நோக்கி வந்த சகாதேவனின் கன்னத்தில் அறைந்து அவரது தலையைப் பிடித்து அங்கு இருந்த சுவற்றில் முட்ட செய்துவிட்டு யாழினியை நோக்கி ஓடினான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவள் கை கட்டை மட்டும் அவிழ்த்தவன் தன்னை அடிக்க வந்தவர்களின் வயிற்றில் ஓங்கிக் குத்தி‍, அவர்களைக் கீழே உருளச்செய்தவாறு அவளது கால் கட்டுகளையும் அவிழ்த்து விட்டவன், அவளது அனுமதியின்றியே அவளது கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

இத்தனை நிகழ்வும் நடந்த பிறகும் அவனுக்கு அடி என்பது படாமல் இல்லை. ஆங்காங்கே அவன் மீது அடி விழுந்து காயம் ஏற்ப்பட்டாலும் அவனது குறிக்கோள் தன்னவளை இங்கிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டுமே! தங்களை அவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்த அடுத்தக் கணத்தில் இருந்து அவனது ஓடும் வேகம் அதிகரித்தது.

அவனது பொருட்கள் அடங்கிய பேக்கை டேபிளின் மீது சேகர் வைத்திருக்க, அவளை இழுத்துக் கொண்டு வரும்போது கவனமாக அதையும் ஒரு கையால் எடுத்துக் கொண்டு தான் ஓடி வந்தான். ஆதலால் அதில் இருந்து செல்போனை எடுத்தவாறு ஓடியவன் ஓரிடத்தில் நின்று பின்னால் திரும்பிப் பார்த்தான். தொலைவில் அவனைத் துரத்திக்கொண்டு அவர்கள் வருவது தெரிந்ததும், வேகமாக அந்தப் பேக்கை அவள் கையில் கொடுத்தவன் தன் நண்பனுக்கு அழைப்பு விடுத்தவாறே மீண்டும் தன் ஓட்டத்தை ஆரம்பித்தான்.

நிகில் அழைப்பை ஏற்றதும்,
“மச்சி நான் அவளைப் பார்த்துட்டேன்டா. யாழினி எங்க இருக்கான்னு கண்டு பிடிச்சுட்டேன். ஊரைவிட்டு வெளிய போற தார்ரோட்டுல வந்தீங்கன்னா கிட்டத்தட்ட ஒரு பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துல ஒரு மண்ரோடு பிரியும் டா, அந்த இடத்துல வெயிட் பண்ணுங்கடா. சீக்கிரம் வா மச்சி அவளை அங்கிருந்து காப்பாத்தி கூட்டிக்கிட்டு ஓடி வந்துட்டு இருக்கேன். எங்களைத் துரத்திக்கிட்டு வேற வர்றாங்க. எங்களோட உயிருக்கு ஆபத்து இருக்குது மச்சி சீக்கிரமா வா" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து அலைபேசியைப் பேக்குக்குள் போட்டவன், மீண்டும் பையை வாங்கித் தோளில் மாட்டிக் கொண்டு இன்னும் வேகமாக அவளை இழுத்துக்கொண்டு ஓடினான்.

இருவரும் மூச்சிரைக்க ஓடி வந்து உதய்யின் கார் நின்றிருந்த இடத்தில் நின்று சற்றே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். யாழினியோ விழிகளில் வழியும் கண்ணீரோடு, “நீங்க எப்படி இங்க வந்தீங்க? எதுக்காக வந்தீங்க?" என்று கேட்டாள்.

“உனக்கு இப்ப பதில் சொல்ல நேரம் இல்லைமா‌. வீட்டுக்குப் போனதும் பதில் சொல்றேன், இப்ப எதுவும் கேட்காத, அதே மாதிரி அழுகாத, உன்னை இப்படிப் பாக்க முடியல, நெஞ்சை போட்டு என்னமோ பண்ணுது” என்று சொன்னவன் சட்டென்று அவள் விழிநீரை தன் கரம் கொண்டு துடைத்தான்.

கிட்டத்தட்ட தங்களைத் துரத்திக் கொண்டு வந்தவர்களின் காலடிச் சத்தம் காதில் கேட்டதும், மீண்டும் அவளை இழுத்துக்கொண்டு ஓடியவன் மீண்டும் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து எதை எதையோ பேசினான். அவன் சொல்வதையெல்லாம் கேட்ட யாழினிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அவளையறியாமலேயே அவளது கரங்கள் உதய்யின் கரங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டன. ஒரு வழியாக இருவரும் மண் சாலையில் இருந்து தார்ச்சாலையான மெயின் ரோட்டிற்கு வந்து இருந்தனர்.

சரியாக உதய், யாழினி இருவரும் ரோட்டில் வந்து நிற்பதற்கும் கிட்டத்தட்ட அவன் பின்னால் துரத்தி வந்த சேகர் மற்றும் சேகரின் ஆட்களும் அவர்களை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது. இன்னும் நிகில் வரவில்லையே என்று நினைத்த உதய் இதற்கு மேலும் இங்கு நிற்பது நல்லதல்ல என்று நினைத்துக் கொண்டு வந்த வழியே, மெயின் ரோட்டில் ஓட ஆரம்பித்தான். தொலைவில் வாகனம் ஒன்று வருவதைக் கண்டவனுக்கு ஏதோ ஒரு நிம்மதி பிறந்தது.

ஒருவேளை அது நிகிலாக இருக்குமோ? என்றவன் எண்ணி முடிப்பதற்குள்ளாகவே நிகில் ஓட்டிக்கொண்டு வந்த வாகனம் யூ டர்ன் எடுத்து அவர்களருகே உரசிக் கொண்டு நின்றது. அடுத்த நிமிடம் கார் கதவைத் திறந்து விட்டாள் சௌமி. உதய், யாழினி இருவரும் வேகமாகப் பின்பக்கம் ஏறிக் கொண்டனர். அவர்கள் ஏறிய மறுகணம் புயல் வேகத்தில் காரை அங்கிருந்து கிளம்பி இருந்தான் நிகில்.

அவர்களைத் துரத்திக் கொண்டு பின்னே ஓடி வந்தவர்கள் அதன் பின்னும் சிறிது தூரம் அவர்களைத் துரத்தினார்கள். பின்பு அவர்களால் ஓட முடியாத காரணத்தினாலோ அல்லது இவர்கள் அவர்களை விட்டு வெகுதூரம் வந்ததாலோ என்னவோ அப்படியே நின்று விட்டார்கள். ஆனால் சேகரின் முகத்தில் மட்டும் அவர்கள் தப்பிவிட்டனர் என்ற கோபத்தோடு, தன் கண்ணத்தில் காயத்தை ஏற்படுத்தி விட்டு சென்றவனைப் பழிவாங்கியே தீர வேண்டும் என்ற துவேஷம் ரணமாய் இருந்ததை யார் கவனித்தார்களோ, இல்லையோ யாழினி கவனித்திருந்தாள்.

அவளது முகம் ஏற்கனவே தந்தையின் மரணத்தைக் கண்டதில் இருந்து அழுது அழுது சிவந்து இருந்தது. இப்போது சேகரால் மீண்டும் ஒரு இழப்புத் தன் குடும்பத்தில் ஏற்பட்டுவிடுமோ? என்று எண்ணி பயந்தவள் தன் அருகில் அமர்ந்திருந்த உதய்யின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். அவ்வளவு நேரம் பதற்றத்தில் அமர்ந்திருந்த உதய்யோ அவளது செயலில் அவள் புறம் திரும்பிப் பார்த்தான். அவளது பயமும், கலக்கமும் அவனுக்குப் புரிந்ததோ, என்னவோ? சற்று சரிந்து அமர்ந்து அவளின் தோள்பட்டையில் தன் கரங்களைப் போட்டு அவளைத் தன்னுடன் அணைத்தவாறே அமர்ந்து கொண்டான்.‌ இதை மிரர் வியூவில் பார்த்த நிகிலும், யாழினியின் அருகில் அமர்ந்து இருந்த சௌமியும் பார்த்து விட்டு அதிர்ந்து போயினர்.

கிட்டத்தட்ட வெகு தூரம் வந்த பிறகே தங்களை யாரும் பின்தொடர்ந்து வரவில்லை என்பதை உணர்ந்த நிகில் மெதுவாகக் காரை இயக்கியவனாய் உதய்யிடம் கேள்வி எழுப்பினான். “சொல்லு மச்சி நீ எப்படி அந்த இடத்துக்குப் போன? அங்க என்ன தான் ஆச்சு?” என்று கேட்க.

உதய்யோ அங்கு நடந்து அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னவன், “எவ்வளவு முயற்சி பண்ணியும் இவங்க அப்பாவ என்னால காப்பாத்த முடியலடா” என்றான் வருத்தமான குரலில்.

அதைக்கேட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் யாழினி. அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு அவள் கரங்களுடன் தன் கரங்களைக் கோர்த்துக் கொண்ட சௌமி, “கவலைப்படாத யாழி சீக்கிரமே எல்லாம் மாறும். நடந்ததை எல்லாம் உன்னால மறக்க முடியாதுங்குறது எனக்கும் தெரியும் தான். அப்பாவோட இழப்பு மிகப்பெரிய இழப்புதான் அதுக்காக அழுதுக்கிட்டே இருந்தா எல்லாம் சரியாகிடுமாடி. அங்க பாரு லைட்டா உன்னோட கழுத்துல இருக்கக் காயத்துல இருந்து ரத்தம் வருது”என்று சௌமி சொன்ன மறு நிமிடம் வேகமாக அவளது தலையை நிமிர்த்தித் தன்னை விட்டு தள்ளி அமர வைத்தான் உதய்.. தன் பையிலிருந்த மருத்துவ உபகரணப் பெட்டியை எடுத்து அவசரமாக அவளுக்கு மருந்து வைத்து விட ஆரம்பித்தான். அதிலும் அதிகளவு பதட்டத்தோடு,
“கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம்டா. முதல்லையே வலிக்குதுன்னு சொல்லிருந்தா அங்கையே காயத்துக்கு மருந்து வெச்சு கண்டு போட்ருக்கலாம்ல. பாரு எவ்வளவு பிளட் வந்துருக்குன்னு, ரொம்ப வலிக்குதாடா?” என்று தன்னை மறந்த நிலையில் கேட்டவாறே அவன் சிகிச்சை செய்தான்.


பதற்றத்தோடு யாழினிக்கு மருந்திட்டவனையே விழியகலாது மூவரும் பார்த்திருந்தனர். அவளுக்குக் காயமாகிருக்கு, அதில் ரத்தம் வருகிறதென்று சௌமி சொன்னதும் காரை ஓரம்கட்டி நிறுத்தி இருந்தான் நிகில். அதன் பிறகே உதய்யின் பதற்றம் கலந்த தவிப்பைக் கண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே அவன் முகத்தைப் பார்த்திருந்தான்.

உதய் மருந்து வைத்ததும், அவன் கரங்களைப் பற்றிக்கொண்ட யாழினி,“ப்ளீஸ் ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்க நீங்க அங்க சொன்னீங்க இல்லையா? கல்யாணம் பண்ணிக்கப் போறேன், அது இதுன்னு அதெல்லாம் பொய் தானே. என்னை அங்க இருந்து காப்பாத்துறதுக்காகத் தானே அப்படிச் சொன்னீங்க? ஆமா நீங்க எதுக்கு என்ன தேடி வரணும்? அந்த இடத்துக்கு நீங்க எதுக்கு வந்தீங்க? ஒரு வேளை உங்களுக்கும் ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்றது?” என்று கேட்டாள் தன்னையும் மீறிய படபடப்புடன்..


அதற்கு உதய் பதில் சொல்வதற்கு முன்னால் சௌமி பதில் சொல்லியிருந்தாள்.
“சார் பொய் சொல்லல யாழி. அவர் சொன்னது உண்மைதான். உன்னைக் காணோம்னு நான் சொன்னதும் அவர் துடிச்ச துடிப்பை நீ பார்த்துருக்கணும், அப்படியே அதிர்ச்சியில உறைஞ்சுடுவ. சாக்கடைன்னு கூடப் பாக்காம உனக்காகச் சந்து பொந்தெல்லாம் தேடி அலைஞ்சாருடி. அவரு எவ்வளவு பெரிய ஆளு, எவ்வளவு பெரிய பணக்காரர், ஆனா உனக்காக எல்லாத்தையும் மறந்துட்டாரு. அவர் வீதிவீதியா வைத்தியம் மாதிரி உன்னைத் தேடி அலைஞ்சாருடி. இதுக்கு முன்னாடி அவருக்கு உன் மேல என்ன மாதிரியான எண்ணம் இருந்துச்சுன்னு தெரியாது. ஆனா நீ காணாம போன அந்த நிமிஷத்துல இருந்து அவருக்கு உம்மேல இருந்த நேசம் அவரையும் அறியாம வெளிய வந்துச்சுடி. அதை நாங்க ரெண்டு பேரும் கண்கூடா பார்த்தோம். தயவு செஞ்சு அவரோட காதலை பொய்யின்னு மட்டும் சொல்லிடாத அவரால அதைத் தாங்கிக்க முடியாது. அதே மாதிரி நீ நெனக்கிற மாதிரி எல்லாப் பசங்களும்" என்று ஏதோ சொல்ல வந்த சௌமியை மேலே பேச விடாமல் கைநீட்டி தடுத்து நிறுத்திய யாழினி,
“இதுக்கு மேல எதுவும் சொல்லாத சௌமி, இப்ப நான் வேற எதைப் பத்தியும் யோசிக்கிற நிலைமையில இல்லை. எங்க அப்பாவோட உயிர் என் கண்ணு முன்னாடி போயிருக்கு, அந்த அதிர்ச்சியில இருந்தே நான் வெளியே வரலை. இதுக்கு மேல நாங்க என்ன ஆவோம்னு கூட என்னால யோசிக்க முடியல. கடுகடுன்னு இருந்தாலும், ஸ்டிரிக்டா இருந்தாலும் எங்க அப்பா, எங்களுக்கு அப்பா தான்டி. இனிமே அவர் இல்லாம நாங்க எப்படி இருப்போம்.எங்க அம்மாவுக்கு இது தெரிஞ்சா தாங்கிக்கமாட்டாங்களே?” என்று சொன்னவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவள் அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சட்டென்று அவளது தோளில் கை வைத்து ஆறுதல் கூற முயன்றான் உதய். உடனே பட்டென்று அவனது கையைத் தட்டி விட்டு தள்ளி அமர்ந்த யாழினி எதுவும் பேசாமல் சௌமியின் மடியில் படுத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவளது செயலில் அதிர்ச்சியில் உறைந்த உதய் சிறிது நேரத்தில் தன்னைச் சமன் செய்தவனாய் அவளுக்கு இப்போது தேவை தாய் மடி போன்ற ஆறுதல் தான் என்பதை உணர்ந்து அமைதி காத்தான். ஆனால் அவள் வெகு நேரமாக அழுவதை உணர்ந்து சைகையால் சௌமியிடம், ‘அவளை எழுப்பி விடுங்க. அவனுங்க அடிச்சதால ஏற்கனவே வீக்கா இருக்கா' என்று சொன்னதும், மெதுவாக அவளை எழுப்பி அமர வைத்த சௌமி, “ப்ளீஸ்டி அழாதடி. அழுதா எல்லாம் சரியா போயிடுமா? ப்ளீஸ்டி அழாத" என்று சொல்லி சமாதானப்படுத்த முயன்றாள்..


சௌமி எவ்வளவு சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகாமல் அழுது கொண்டே இருந்தாள் யாழினி. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் சட்டென்று சௌமியின் மடியில் படுத்திருந்த அவளை இழுத்து தன்னுடன் சேர்த்து இறுக அணைத்திருந்தான் உதய்.
அவன் செயலில் அழுவதை நிறுத்திவிட்டு அதிர்வுடன் அவனிடமிருந்து விலக முயன்றாள் யாழினி. ஆனால் அவனோ பிடியை தளர்த்தாமல் இன்னும் இறுக்கியவன் அவள் செவியோரம், “ப்ளீஸ்டி அழாத. நீ அழுகுறதை பாக்குற சக்தி சத்தியமா எனக்குக் கிடையாது.‌ நீ சொல்லலாம் என்னை மீட் பண்ணி ஒன் வீக் தானே ஆகுது. அதுக்குள்ள எப்படி இது போல எல்லாம் தோணுதுன்னு. ஆனா எனக்கு என்னமோ நீ ஏற்கனவே என்னோட பழகின மாதிரியும், நமக்குள்ள ஏதோ அழுத்தமான பூர்வ ஜென்ம பந்தம் இருக்க மாதிரியும் தோணுது. ப்ளீஸ் நீ அழாதடி. நீ அழுகுறதைப் பார்த்தா எனக்கு என்னமோ மாதிரி இருக்குது.‌ இதுக்கு மேல உங்களுக்கு யாரும் இல்லைங்குற வார்த்தை உன்னோட வாயில இருந்து வரக்கூடாது. என்னோட உயிர் போற வரைக்கும் நான் உன்கூட மட்டும் தான் இருப்பேன், ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டு விலகி இருக்க மாட்டேன் இதை நீ நல்லா புரிஞ்சுக்க. முடியாது உன்னை விட்டுப் போயிடுவேன், நீ எனக்கு வேணாம், இதெல்லாம் சரி வராது, அப்படி இப்படின்னு ஏதாவது சொன்ன இதுக்கு மேல நான் மனுஷனா இருக்க மாட்டேன் ஞாபகம் வச்சுக்க. நீ எனக்கானவ, எனக்கு மட்டுமே சொந்தமானவ புரியுதா! ஆமா இப்ப நீ அழுவுவியா என்ன?” என்று அவள் முகத்தை நிமிர்த்தி ஆவலுடன் உதய் கேட்க. அவளது முகத்திலோ அதிர்ச்சி... அதிர்ச்சி... அதிர்ச்சி... அதிர்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது.

அவளது அதிர்ந்த முகத்தையே பார்த்திருந்தவன், அவளது இரு கன்னங்களையும் தன் கையிலேந்தி பதமாக அவள் நெற்றியில் இதழ் பதித்து, கன்னத்திலும் இதழ் பதித்தவன், ”இதுக்கு மேல நீ அழுதீன்னா யார் இருக்காங்கன்னு பாக்க மாட்டேன் இப்படித்தான் அதிர்ச்சி வைத்தியம் கிடைக்கும் பரவாயில்லையா செல்லம்" என்று சொல்லி அவளது இதயத்துடிப்பை அதிகரித்தவன் அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தவாறு தள்ளி அமர்ந்து கொண்டான்.

நிகிலோ இவ்வளவு நேரம் இங்க நடந்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “ஆனாலும் ரொம்பவே மாறிட்டடா உதய்.." என்று சொன்னவாறு யாழினியின் அருகில் அமர்ந்திருந்த சௌமியைப் பார்த்தான். அவளோ பித்துப் பிடித்தவள் போல் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தாள்.

அதைக் கண்டு தனக்குள் புன்னகைத்துக்கொண்ட நிகில்,
“கொஞ்சம் நிகழ்வன உலகத்துக்கு வாங்க மிஸ். சௌமியா. கனவுலையே இருந்தா எப்படி?” என்று சொல்லி அவளது நினைவைக் கலைத்து விட்டு விட்டு வண்டியை எடுத்தான்.

சிறிது தூர பயணத்திற்கு பிறகு சரியாக யாழினியின் வீட்டின் முன்பு சென்று காரை நிறுத்தினான் நிகில். 'என்னோட வீடு எங்க இருக்குதுன்னு இவங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது' என்று கேட்க நினைத்த யாழினி உதய்யின் அணைப்பில் இருப்பதை உணர்ந்து வாயை மூடிக் கொண்டாள்.‌ ஏனெனில் தான் எதாவது கேட்க போய் அதற்கும் இவன் ஏதாவது ஏடாகூடமா சொல்வான் என்றே அமைதியாக இருந்து கொண்டாள்.

ஆனால் அவளுக்கு எங்கே தெரியப்போகிறது ஏற்கனவே அவளுக்கு என்னென்ன பிடிக்கும், என்னென்ன பிடிக்காது என்பதில் இருந்து அனைத்தையும் நிகில் கேட்டு தெரிந்து வைத்திருக்கிறான் என்று. தன் நண்பனின் காதலுக்குத் தன்னாலான சிறு உதவியாக இருக்கட்டும் என்று சௌமியிடம் கேட்டு அனைத்து தகவல்களையும் திரட்டி இருந்தான். கூகுள் மேப்பின் உதவியோடு யாழினியின் வீட்டைக் கண்டு பிடித்து ஒரு வழியாக அவர்களை இங்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தான் நிகில்.

யாழினியின் வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய நிகில் பின்புறமிருந்த கார் கதவை திறந்து விட யாழினியை அணைத்தவாறே கீழே இறங்கிய உதய் வேகமாக வீட்டுக்குள் செல்ல முயன்ற சௌமியைத் தடுத்து நிறுத்தி, “நீங்க இங்கையே இருங்க சௌமி . நான் அவங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும், உள்ளே போய்ப் பேசிட்டு வரேன்‘ என்று சொன்னவன் யாழினியை சௌமியிடம் ஒப்படைத்து விட்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

உதய் அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்த கதவைத் திறந்தார் அருளரசி. ஆனால் அவரைத் தொடர்ந்து அவரின் பின்புறம் சென்ற உதய்யின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது என்றால், உதய்யைக் கண்ட அருளரசி கிட்டத்தட்ட மயங்கி விழாத குறையாக அதிர்ந்து நின்றிருந்தார்.

அநாதரவாய் நிற்பவளை
அரவணைத்து ஆறுதலுரைத்தவனையே
உந்தன் உள்ளமது குற்றவாளியென்ற முத்திரைக் குத்தி கூண்டில் ஏற்றி
குறை கூறவதேனடி..

மறந்திருந்த நினைவுகளும். மறைக்கப்பட்ட உண்மைகளும் வெளி வரும் வேளை..
நெருங்குகையிலாவது
உந்தன் கல்மனம் மாறுமோ? எந்தன் கள்ளமில்லா
காதலை ஏற்குமோ?


- அற்புதமது பிறக்கும்..



 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -25.1

உதய்யோ அருளரசிக்குப் பின்னால் நின்ற தன் தந்தையைக் கண்டு அதிர்ந்தான் என்றால், அருளரசியோ உதய்யைக் கண்டு மயக்கம் போட்டு விழாத குறையாக நின்றிருந்தார். தட்டுத்தடுமாறி “தம்பி நீங்க எங்க இங்க?” என்று கேட்டார் அருளரசி.

“அதை நான் கேக்கலாம்னு நெனச்சேன்ம்மா இப்ப உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா.? மறுபடியும் நெஞ்சுவலி இருக்குதா?” என்று மருத்துவனென்ற முறையில் அக்கறையாகக் கேட்டான்.

அப்போதுதான், இவர்தான் தன்னவளின் தாய் என்பதை அறிய நினைத்தவனாய், “நீங்கதான் யாழினியோட அம்மாவா?” என்று தட்டுத்தடுமாறி கேட்டான்.

அவரும் அவனது தடுமாற்றம் எதற்க்கென்று புரியாமல் குழம்பியவாறும், தன் மகளை எப்படித் தெரியும் என்று நினைத்தவாறும், “ஆமா தம்பி நான் தான் யாழினியோட அம்மா. இப்ப நெஞ்சு வலி கொஞ்சம் பரவால்ல தம்பி. காலையில இருந்து லைட்டா வலிச்சுக்கிட்டே இருந்துச்சு ஆனா நான் அதைப் பெருசா எடுக்காம வெளிய கிளம்பிட்டேன். மார்க்கெட் போயிட்டு வரும் போது மயக்கம் போட்டு விழுந்துட்டேன் போல. இவரு தான் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு” என்று உதய்யின் தந்தையைக் கை காட்டினார்.

இதற்குள்ளாகவே மற்ற மூவரும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். தாயின் தலையில் இருந்த கட்டை கண்டு யாழினி பதறினாள் என்றால், மகளின் தலையிலும்,‌ முகத்திலும், உடலிலும் இருந்த காயங்களைக் கண்டு தாயும் பதறிவிட்டார்.

“அம்மா என்னாச்சும்மா?” என்று கேட்டவாறு பதற்றத்துடன் ஓடிச்சென்று தன் தாயை அணைத்துக் கொண்டாள் யாழினி. அதே கேள்வியை மகளிடமும் கேட்டார் அருளரசி.
“உனக்கு என்ன ஆச்சுமா எப்படி இந்தக் காயம் ஆச்சு?” என்று கேட்க. அதற்குப் பதில் சொல்லாமல் தாயை அணைத்துக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் யாழினி.

தன் மகள் பதில் சொல்லாமல் இப்படிக் கதறி அழுவதைக் கண்டு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிய அருளரசி, “என்னாச்சும்மா எதுக்கு அழுகுற?” என்று கேட்டார்.

அப்போதும் யாழினி அழுகையை நிறுத்திய பாடில்லை. அழுது கொண்டே தான் இருந்தாள். நிலைமையைச் சீராக்க நினைத்த சௌமி யாழினியின் அருகில் வந்து அவளை அருளரசியிடம் இருந்து பிரித்தாள்.

பின்பு அவளை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள் யாழினியைச் சோபாவில் அமர வைத்து விட்டு அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அருளரசியோ மகளின் கதறலைக் கண்டு ரொம்பவே பயந்து இருந்தார்.

சௌமியிடம் திரும்பியவர், “சௌமி இவளுக்கு என்னம்மா ஆச்சு? எதுக்கு இப்படி அழுகுறா? ஏதாவது ஆக்சிடென்ட் ஆயிடுச்சா, அதனால பயந்துட்டாளா?” என்று கேட்க இப்போது சௌமிக்குமே அழுகை முட்டிக் கொண்டு வருவது போல் இருந்தது.

‘உங்கள் கணவர் இறந்து விட்டார்’ என்று எப்படி அவளால் சொல்ல முடியும். பரிதவிப்போடு அவள் உதய்யைத் திரும்பிப் பார்க்க, ‘நான் சொல்லிக்கிறேன் நீங்க எதையும் சொல்லாதீங்க' என்று சைகையால் சொன்னவன்,
“அம்மா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா?” என்றான் உதய்.

அப்போதுதான் தன் வாயைத் திறந்தார் சுமேந்திரன்.
“உதய் நீ இங்க என்ன பண்ணற ?” என்று கேட்டார் உதய்யின் தந்தை. தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தவன், “சொல்றேன் டேட் கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று சொல்லி விட்டு அருளரசியின் அருகில் சென்று அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு வீட்டின் உள்ளே வந்தான்.‌ மெதுவாக அவரை யாழினியின் அருகில் அமரவைத்தவன்,
“அம்மா நான் சொல்றதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியாது. ஆனா உண்மையை உங்களுக்குச் சொல்லியே ஆகணும், அதனால தான் சொல்றேன் மனசை தேத்திக்கோங்க. உங்க பொண்ணையும், உங்க வீட்டுக்காரரையும் ஒரு கடத்தல் கும்பல் கடத்தி வச்சிருந்தாங்க. எப்படியோ நாங்க தேடி கண்டு பிடிச்சிட்டோம். ஆனா எங்களால உங்க பொண்ண மட்டும் தான்மா காப்பாத்த முடிஞ்சுது, உங்க வீட்டுக்காரரை காப்பாத்த முடியலம்மா” என்று திக்கித் திணறி சொல்லி முடித்தான்.

அதைக் கேட்டு அருளரசியின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. கூடவே அவர் நெஞ்சின் ஓரம் வலி ஏற்பட ‘அம்மா..’ என்ற முனகலோடு அந்தச் சோபாவின் இருக்கையிலேயே சுருண்டு விழ, அதைக் கண்டு வேகமாக ஓடிவந்தார் உதய்யின் தந்தை சுமேந்திரன்.

“என்ன விஷயம்னு நீ முதல்லையே என்கிட்ட சொல்லி இருக்கலாம்லடா. அவங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல.‌ பர்தரா அவங்களைச் செக் பண்ணுனா தான் என்ன பிராப்ளம்னு தெரியும். அதைத்தான் நான் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன், முழுசா புருஞ்சுக்காம இப்படி அவசரப்பட்டு உண்மையைப் போட்டு உடைச்சுட்டியே? அவங்களால அதைத் தாங்கிக்க முடியாது உதய்” என்று மகனை கடிந்து கொண்டவர் அவசர அவசரமாக அருளரசியைத் தன் கையில் ஏந்தியவாறு, “சீக்கிரம் வண்டிய எடு உதய். இவங்கக்கிட்ட அசைவே இல்லை” என்று சொன்னவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

உதய்யோ அனைவரையும் முந்திக் கொண்டு வெளியே ஓடிய காரை இயக்கினான். பின்னே அருளரசியைத் தூக்கிக் கொண்டு வந்த சுமேந்திரன் அவரைக் காரில் படுக்க வைத்து விட்டு தானும் ஏறியதும் காரை வேகமாகக் கிளப்பினான் உதய்.

மற்ற மூவரும் சுமேந்திரனின் காரில் ஏறிட, அங்கிருந்து நேராக இவர்களது மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான் நிகில். அவர்கள் இந்தப்பக்கம் கிளம்பிய மறுநிமிடம் சகாதேவனின் ஆட்கள் அந்த வீட்டுக்குள் புகுந்தனர்.‌எல்லா இடங்களிலும் தேடியும் அந்த மேப் கிடைக்காததால் வீட்டை அடித்து நொறுக்கியதோடு மட்டுமின்றிக் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து வீட்டையே கொழுத்தி விட்டு சென்றனர்.

தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகக் காரை இயக்கிய உதய், அதே வேகத்தோடு காரை தங்களது மருத்துவமனை வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினான்.‌ மறுபுறக் கதவைத் திறந்து கொண்டு சுமேந்திரன் இறங்கி அருளரசியைத் தூக்க வருவதற்கு முன்பாகவே அருளரசியைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.

ஓடும்போதே, “டாக்டர், நர்ஸ் யாரு இருக்கீங்க. சீக்கிரம் எமர்ஜென்சி வார்டை அரேஞ்ச் பண்ணுங்க” என்று கத்திக் கொண்டே செல்ல. அவனது பதற்றமான குரலில் நொடியில் அந்த மருத்துவமனையே பரபரப்பானது.

அவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றவன் துரிதமாக அவரைப் பரிசோதிக்க ஆரம்பித்தான். கூடவே சுமேந்திரனும் சேர்ந்து கொள்ள அவசர அவசரமாக அருளரசிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களது துரித நடவடிக்கையால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது‌. ஆனால் முழுவதும் அவரைப் பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லி மகனை வெளியே அனுப்பினார் சுமேந்திரன்.

திறமை வாய்ந்த இதய நிபுணர்கள் அருளரசியைப் பரிசோதித்து விட்டு அவரது இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதால் தான் அடிக்கடி இப்படி மயக்கம் வருகிறதென்றும் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தால் அதைச் சரி செய்துவிடலாம் என்று சொல்ல. அவரது உடல்நிலையைக் கருதி மறுநாள் அறுவை சிகிச்சை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அவரை மயக்கத்திலேயே வைத்திருந்தனர். ஏனெனில் கண்களைத் திறந்தால் மீண்டும் அவர் தன் கணவரின் இறப்புச் செய்தியை நினைத்துக் கலங்குவர் என்பதால் மயக்கத்திலேயே வைத்திருக்க முடிவு செய்தனர்.

அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள் யாழினி. அவளை அந்நிலையில் காண முடியாமல் தவித்த உதய் மருத்துவமனை என்றும் பாராமல் அவளை இழுத்து தன்னுடன் அணைத்தவாறு, “அழுகாதன்னு சொன்னா கேட்கமாட்டியா? நீ அழுதா என்னால தாங்க முடியலடி.” என்றான் தன் பின்னே தனது தந்தை வந்து நிற்பதை உணராமல்.

அவன் இவ்வாறு அவள் படும் வேதனையைத் தாங்க முடியாமல் சொல்ல. அவளோ அவனை விட்டு விலகி நின்று, “இது எல்லாமே உங்களால தான். நீங்க மட்டும் எங்களைக் காப்பாத்த வராம இருந்திருந்தா எங்க அப்பா இறந்துருக்க மாட்டாரு” என்றாள் அழுதவாறே.

அதைக் கேட்டு கோபமடைந்த நிகில், “நாங்க உங்களைத் தேடி வரலன்னாலும் உங்க அப்பாவையும், உன்னையும் கொன்னுருப்பாங்க. ஏன்னா அவங்களுக்குத் தேவையானது அந்த வரைபடம் தானே தவிர உங்களோட உயிர் கிடையாது. அதைப் புருஞ்சுக்காம காப்பாத்த வந்தவனையே இப்படிக் குறை சொல்ற? உங்க உயிரைக் காப்பாத்த அவனுடைய உயிரை பணயம் வெச்சு வந்துருக்கான். அப்படி இருக்கும் போது அவனையே குற்றம் சொல்றியே இதெல்லாம் எந்த விதத்துல ஞாயம். உனக்காக அவன் அப்ப துடிச்ச துடிப்பையும், இப்ப துடிக்கிற துடிப்பையும் பார்த்ததுக்கு அப்புறமும் நீ இப்படிச் சொல்றியே? உன் மனசு என்ன கல்லா? நீயெல்லாம் என்ன மாதிரி பொண்ணோ? ச்சை சரியான பைத்தியக்காரியா இருக்க” என்று கோபத்தில் வரைமுரையின்றிப் பேசிவிட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு சௌமி பொங்கி எழுந்து விட்டாள். “ஹலோ மிஸ்டர் என் பிரண்டோட நிலைமையில இருந்து யோசிச்சு பாருங்க. அவ கண்ணு முன்னாடி அவங்கப்பா இறந்துட்டாரு. அப்ப அவளோட மனசு என்ன பாடு படும்.‌ தேவையில்லாம அவளை இப்படிப் பேசுனீங்க, அப்புறம் உங்களுக்கு மரியாதை இருக்காது ஞாபகம் வச்சுக்கோங்க” என்று அவளும் தன் பங்குக்கு எகிற, ஆளாளுக்கு ஏதேதோ பேச உதய் மட்டும் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், திடீரென்று அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அதைப் பார்த்த அனைவரும் கப்சிப்பென்று வாயை மூடி கொண்டனர். சுமேந்திரனோ இதழ்க்கடையோரம் கசியவிட்ட புன்னகையோடு, ‘தன்னோட பையன் இனி எல்லாத்தையும் பார்த்துக்குவான்’ என்ற நம்பிக்கையோடு நிகிலின் அருகில் வந்தவர், “யாழினியோட அப்பாவோட பாடியைக் கொண்டுவர ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா? நிகில்” என்று கேட்க.

“ம்ம்‌. ஏற்பாடு பண்ணியாச்சு அங்கிள்.‌ உதய் அங்கிருந்து தப்பிச்சு வந்தான்ல அப்ப இவங்களை மத்தவங்க துரத்திக்கிட்டு வரும்போது, போலீஸ்கு கால் பண்ணி அந்த இடத்துக்குப் போகச் சொல்லியிருக்கான். அங்க யார் இருந்தாலும் கூட்டிட்டு வர சொல்லியிருக்கான்.‌ கூடவே அவரோட உடலையும் கொண்டு வர சொல்லிட்டானாம். நேரா இங்க தான் கொண்டு வரச் சொல்லியிருக்கானாம், வெயிட் பண்ணி பார்க்கலாம் அங்கிள்” என்று சொன்ன போதே உதய் அனுப்பிய காவலர்கள் அன்புச்செல்வனின் உடலை கொண்டு வந்தனர். அவரது முகம் சுமேந்திரனுக்கு நன்றாக நினைவிருந்தது. அவரது உடலை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்து அனைத்தையும் செய்ய ஆரம்பித்தார் சுமேந்திரன்.

தன் தோழியை இப்படிப் பேசி விட்டானே என்ற கோபத்தில் நிகிலிடம் பேசாமல் முகத்தைத் திருப்பினாள் சௌமி. அவனும் கோவத்தில் இருந்ததால் அவளிடம் எதுவும் பேசவில்லை. நிகிலுக்கு, அப்போது தான் யாழினிக்கு அண்ணன் ஒருத்தன் இருப்பது நினைவு வர வேகமாகச் சௌமியை நெருங்கியவன், “யாழினிக்கு ஒரு அண்ணன் இருக்காருல்ல. அவரோட போன் நம்பர் குடு, அவருக்கு அவங்கப்பா டெத்தை பத்தி இன்பாஃர்ம் பண்ணி வர வைக்கணும்” என்றான்.

உடனடியாக அதை மறுத்த சௌமி, “இல்ல வேணாம். அவருக்கு எதையும் சொல்ல வேணாம்” என்று அவசரமாகச் சொன்னாள்.

“அப்பாவுக்கு அவர் தானே எல்லாச் சடங்கும் செய்யணும்?”

“ஆமா அவர் தான் செய்யணும். ஆனா அவர் இப்பதான் லண்டன் போயிருக்காரு. அங்க போயி ஒருவாரம் கூட ஆகல அப்படி இருக்கும் போது அவரைத் திரும்பி வர சொல்றது நல்லா இருக்காது. நீங்க வேணா யாழினிக்கிட்ட கேளுங்க, அவ வர சொன்னா வேணா நாம அவரை வர சொல்லலாம்...”

“நீங்க சொல்றதை வச்சு பாக்கும் போது கண்டிப்பா அவரால மறுபடியும் சீக்கிரம் திரும்பி வர முடியாதுன்னு தான் நினைக்கிறேன். நான் எதுக்கும் உதய்கிட்ட பேசுறேன். ஆமா எங்கூட நீங்களும் வர்றீங்களா இல்ல நான் மட்டும் உதய் கிட்ட போய்ப் பேசவா?”

”நான்மட்டும் இங்க நின்னு என்ன பண்ண போறேன். வாங்க நானும் வரேன்” என்று சொல்லிவிட்டு அவனுடன் இணைந்து நடந்தாள். செல்லும் போது இருவரது கைவிரல்களும் அவர்களை அறியாமல் உரசிக்கொள்ள வெடுக்கென்று தன் கைகளை இழுத்துக் கொண்டாள் சௌமி. அதிலேயே அவளது கோபத்தை உணர்ந்தவன், “கோவமா இருக்கியா?” என்று கேட்டான் அவளைச் சமாதானப்படுத்தும் வழியறியாமல்..

“நான் கோவமா இருந்தா உங்களுக்கு என்ன? கோவமா இல்லன்னா உங்களுக்கு என்ன?”

“ப்ச்ச்.. உன்னோட ஃப்ரண்ட் அப்படிப் பேசவுந்தான் நான் கோவத்துல கண்டபடி திட்டிட்டேன். நீயும் தானே பார்த்துக்கிட்டு இருக்க, உன் தோழிக்காக உதய் துடிக்கிறதை. அப்படியிருக்கும் போது என் பிரென்ட்டை குறை சொன்னா எனக்குக் கோவம் வராதா? அவளுக்காக உதய் எந்த அளவுக்குத் துடிக்கிறான்னு நீயே நல்லா பாரு. இப்படிப்பட்ட உதய்யை நாங்க பார்த்ததே கிடையாது. எவ்வளவு அழகான பொண்ணுங்களை எல்லாம் நாங்க யுஎஸ்ல பார்த்துருக்கோம்‌ அப்ப எல்லாம் உதய் இதுமாதிரி நடந்துக்கிட்டதுக் கிடையாது. ஜஸ்ட் ஒன் வீக்ல உன்னோட தோழி மேல இப்படி பைத்தியமாவே மாறிடுவான்னு நான் யோசிச்சுப் பார்த்தது கூட கிடையாது.”

“எனக்கும் நீங்க சொல்றது புரியாம இல்ல. ஆனா என் தோழியைப் பத்தி நீங்க தப்பா சொன்னா எனக்குக் கோவம் வராதா?”

“நான் இனிமே உன் தோழியை எதுவும் சொல்லல போதுமா. இன்னும் மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிட்டு வராத நல்லாவே இல்ல, என்னமோ மாதிரி இருக்கு”

“இருந்துட்டு போகுது போங்க” என்று முறுக்கிக் கொண்டாள் அவள். அதைக் கண்டு நிகிலின் இதழில் மையலாகப் புன்னகை ஒன்று வந்தமர்ந்தது.

இங்க உதய்யோ யாழினி திமிர திமிர அவளைத் தன் அறைக்குள் தூக்கிக் கொண்டு வந்தவன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டவாறே அவளைக் கதவின் மீது சாய்த்து நிற்க வைத்தான். அவள் விழிகளோடு தன் காந்த விழிகளைக் கலக்க விட்டவன்,
“எங்க என் கண்ணைப் பார்த்து சொல்லு? நான் தான் உன்னோட இந்த நிலைமைக்குக் காரணம்னு" என்று கேட்டான்.

அவளோ அவன் முகத்தைப் பார்க்காமல் அவன் பிடியிலிருந்து விலகிட முயன்றாள். அவனோ அவளைப் பிடித்திருந்த பிடியை இறுக்கியவன், “நீ எவ்வளவு முயற்சி பண்ணுனாலும் என்கிட்ட இருந்து உன்னால தப்பிக்கவும் முடியாது, என்னோட பிடியில இருந்து உன்னால நகரவும் முடியாது‌‌. உண்மைய சொல்லுமா எதுக்காக எங்கிட்ட இப்படிப் பேசுன?”

“நான் என்ன பேசுறேன்,எப்படி நடந்துக்குறேன்னு எனக்கே தெரியல. இப்ப எங்க அப்பா உயிரோட இல்லைங்குறதை என்னால தாங்கிக்க முடியல. நீங்க ஏன் அங்க வந்தீங்க, வராம இருந்திருந்தா என்னையும் அவனுங்க கொன்னுருப்பானுங்க நானும், இந்த வேதனையை அனுபவிக்காம செத்துருப்பன்ல. இப்ப என்னால எதையும் யோசிக்கக் கூட முடியல."

“யார் மேலையோ இருக்க கோவத்தை எங்கக் காட்டுறதுன்னு தெரியாம என் மேல காட்டுனியாமா?”

“ஆமா யார் மேலையோ இருக்குற கோவத்தை உங்க மேல காட்டுனேன் போதுமா. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க" என்று சொன்னவாறு தலைகுனிந்து கண்ணீர் விட்டாள். உதய்யோ அவளருகே இன்னும் நெருங்கி நின்று அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தித் தன்னைப் பார்க்க வைத்தவன், “உரிமை இருக்கவங்கக்கிட்டத் தான் கோபத்தைக் காட்ட முடியுமாம். அது உனக்குத் தெரியுமா செல்லம்” என்றான் சிறு கீற்று புன்னகையுடன்.

அவளோ அதிர்வுடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க. அவனோ அவளது காதோரம் அசைந்தாடும் முடிக்கற்றைகளை அவள் செவியோரம் ஒதுக்கி விட்டவனாய், “எப்ப நீ இங்க வந்தியோ!” என்று தன் இதயம் இருக்கும் பகுதியை சுட்டிக்காட்டிவன் மேலும் தொடர்ந்தான்.

“அந்த நிமிஷத்துல இருந்து நீ எனக்கானவ. நான் உனக்கானவன். கூடவே அப்ப இருந்து உன் குடும்பம் என்னோட குடும்பமா மாறிடுச்சு. இதுக்கு மேல என்ன பண்ணனும், ஏது பண்ணனுங்கிறதை நான் பார்த்துகிறேன். நீ மட்டும் என்னை விட்டு போயிடாதமா. நீ போயிட்டா நான் என்னாவேன்னு எனக்கே தெரியாது.” என்று உருக்கமாகச் சொன்னவன் அவள் என்னவென்று உணர முன்பே அதரங்கள் நான்கையும் இடைவெளி இன்றி இணைத்திருந்தான்.
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -25.2

முதலில் இதமாக ஆரம்பித்து, முடிவில் சற்று வன்மையாக முடித்தவன், தன் செயலில் சிலையென அதிர்ந்து நின்றவளை ரசனையாகப் பார்த்தான். பின்பு அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு, “இதுக்கு மேல எவனா இருந்தாலும் என்னை மீறிதான் உன்னை நெருங்க முடியும். நம்ம பேமிலியை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவனுக்கு முதல்ல நான் முடிவு கட்டுறேன்” என்று சொல்லி முடித்த போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் அவனையே பார்த்தவாறே நின்றிருந்த யாழினியைத் தூக்கி சென்று ஒரு இருக்கையில் அமர வைத்து விட்டு கதவை திறந்தான். வெளியே நின்றிருந்த சௌமி, நிகில் இருவரும் உள்ளே வந்தனர்.

நிகில் சௌமியிடம் சொன்னதையே உதய்யிடம் சொல்ல.‌ சௌமி சொன்னது போல் வேண்டாம் என்று மறுத்தாள் யாழினி.‌
“அண்ணா இப்பதான் லண்டன் போயிருக்கான். அவனோட ரொம்ப நாள் ஆசை இலண்டன் போறது. அதனால் அவனைத் திரும்பி வர சொல்ல வேணாம்‘ என்றாள்.

“வேற என்னதான் பண்றது? உங்க அப்பாவுக்கு எல்லா காரியத்தையும் அவர் தானே செய்யணும்.‌ இறந்தவங்களோட இறுதி காரியத்தை ஒன்னு
மகன் செய்யணும், இல்லேன்னா மருமகன் மகன் ஸ்தானத்துல இருந்து செய்யனும். உங்களுக்கு வேற இன்னும் மேரேஜ் ஆகல இப்ப என்ன தான் பண்றது?” என்று நிகில் கேட்டிட.

“நான் உயிரோடதான் இருக்கேன். நானே எல்லாச் சடங்கையும் செய்யிறேன்” என்று வீம்பாகச் சொன்னவளைக் காதலுடன் பார்த்த உதய்,
“சரி நீயே செய் ஒன்னும் பிரச்சனை இல்ல.‌ நீ ரெஸ்ட் எடு மத்ததை நாங்க பார்த்துக்குறோம்” என்று சொன்னவன் நிகிலுக்குக் கண் ஜாடை காட்டி விட்டு அங்கிருந்து நகரத்தோழிகள் இருவரும் தங்களது வேதனைகளைப் பகிர்ந்து கொண்டு கண்ணீரில் கரைந்தனர்..

அருளரசி ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல மருந்து செலுத்தப்பட்டிருந்தது தான். ஆனால் நர்ஸ் ஒருத்தி இரவு வேளையில் அவருக்கு ஊசி செலுத்த மறந்திருக்க, இரவு 9 மணி போல் அவருக்கு விழிப்பு வந்தது. அருளரசி கண்விழித்து எழுந்து அமர்ந்ததோடு, கணவனின் இழப்பை எண்ணி அழுதவாறு தற்கொலை செய்யவும் முயன்றார். சரியாக அதே நேரம் இரவு நேர ரவுண்ட்ஸ் வந்த உதய் அதைப் பார்த்துவிட்டு பதற்றத்துடன் உள்ளே நுழைந்தான்.‌ அவருக்கு முதலுதவி செய்தவாறு தன் தந்தை மற்றும் நிகில் இருவருக்கும் தகவல் தெரிவித்தான்.

ஏனோ அருளரசி மற்றும் யாழினியை தனியே விட்டு விட்டு செல்ல மனமில்லாமல் வீட்டுக்கு தகவல் தெரிவித்து விட்டு உதய், சுமேந்திரன் இருவரும் மருத்துவமனையிலேயே இருந்து விட்டார்கள்.‌ சௌமியும் வீட்டிற்குத் தகவல் சொல்லி விட்டு இங்கேயே இருந்து கொண்டாள். சௌமி, யாழினி இருவரும் உதய்யின் அறையில் தங்கிக் கொண்டனர். அதிலும் உதய்யின் அந்த அறையிலேயே படுக்கையறை போன்ற ஒரு பகுதி இருக்க அங்கேயே இருவரும், உதய்யின் வழிகாட்டுதலால் நிகில் பாலில் கலந்து கொடுத்த தூக்க மாத்திரையின் விளைவால் தூங்கிக் கொண்டிருந்தனர்.

உதய்யோ உள்ளே நுழைந்தவுடன் அவரைப் பார்த்து அதிர்ந்தவன் நொடியில் செவிலிப் பெண்ணை அழைத்தவன் பரபரவென்று அவருக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தான். ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க அதை எடுத்து விட்டு கீழே இறங்கி அங்கிருந்த உபகரணங்கள் கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றிருந்தார் அருளரசி.

நொடியில் அதை உணர்ந்த உதய் உள்ளே நுழைந்து அவரைக் காப்பாற்றி விட்டான்.
அவருக்குச் சிகிச்சை அளித்து விட்டு தன் தந்தைக்கும், நிகிலுக்கும் தகவல் அளித்தவன் அப்படியே நிகிலிடம் யாழினி மற்றும் சௌமியை அழைத்து வரச் சொல்லி இருந்தான்..

அடுத்த நிமிடம் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். ஏதோ ஒன்றை பேசுவதற்காகவே அருளரசிக்கு மயக்க மருந்து கொடுக்காமல் வைத்திருந்தான் உதய். அனைவரும் வந்ததும் தந்தையை நிமிர்ந்து பார்த்தவன், “இன்னும் ஒன்ஹவர்ல இவங்களுக்கு ஆபரேஷன் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க டேட். இவங்க மறுபடியும் இது மாதிரி ஏதாவது பண்ணுனா ரொம்பக் கிரிட்டிக்கல் ஆகிடும். எனக்கு இவங்க ரொம்ப முக்கியம். ஏன்னா என்னோட பொண்டாட்டிக்கு இவங்க மட்டும் தான் உறவுன்னு சொல்லிக்க இருக்காங்க, சோ இவங்களைக் காப்பாத்த வேண்டியது நம்மளோட கடமை டேட்” என்றான்..

அவன் ‘பொண்டாட்டி’ என்றதும் சட்டென்று விழிகளைத் திறந்து மகிழ்வுடன் அவனைப் பார்த்தார் அருளரசி.‌ அதைக் கண்டதும் உதய் எடுத்திருந்த முடிவானது இன்னும் உறுதியானது.

யாழினியோ அதைக் கேட்டு கோபத்துடன்,
‘யாருக்கு யார் பொண்டாட்டி’ என்று கேட்கத்தான் நினைத்தாள். ஆனால் தாயின் முகத்தில் இருந்த பொழிவு அவளது வாயைக் கட்டிப் போட்டது..

அருளரசியை நெருங்கிய உதய் “நான் உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன். அதுக்கு நீங்க சம்மதிப்பீங்களா?” என்று கேட்டான்.

அருளரசி திக்கி திணறி வாய்திறந்து, “எனக்குச் சம்மதம் தான் தம்பி ஆனா... ஆனா.. என் வீட்டுக்காரருக்கு எதுவும் செய்யாம” என்று அவர் ஏதோ சொல்ல வர அதற்குள் குறுக்கிட்டுப் பதிலுரைத்தான் உதய்.

“நீங்க கவலைப்படாதீங்க அத்தை. கண்டிப்பா மருமகனா இல்லாம மகன் ஸ்தானத்துல இருந்து மாமாவுக்கு எல்லாத்தையும் செய்ய வேண்டியது என் பொறுப்பு. ஏன்னா இப்ப ஃபோன் பண்ணுனாலும் உங்க பையன் வந்து சேர ரெண்டு நாளாவது ஆகும்.‌ கண்டிப்பா அதுவரைக்கும் பொறுத்திருக்க முடியாது.‌ கூடவே என்னை மன்னிச்சிடுங்க இந்தச் சடங்குகள்ல உங்கள நான் ஈடுபடுத்த போறதே கிடையாது.‌ எல்லாத்தையும் நானே செய்யப்போறேன்” என்றவன் நிகிலின் புறம் திரும்பி,
“நிகில் என்னோட ரூம்ல ஒரு லாக்கர் இருக்கும் அதுல ஒரு பெட்டி இருக்கு அதை போய் எடுத்துட்டு வா” என்றான்..
பின்பு தன் தந்தையிடம், “போன் பண்ணி அம்மாவை வர சொல்லுங்க டாடி” என்று சொல்லி விட்டு அனைவரும் என்ன விதமான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் தான் நினைத்ததைச் செய்தே தீர வேண்டும் என்ற மனநிலையில் இருந்தான் உதய்.‌ குழப்பத்துடனே மனைவிக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரச் சொன்னார் சுமேந்திரன்.‌

அடுத்த அரை மணி நேரத்தில் சொர்ணலதா மருத்துவமனை வந்து சேர்ந்தார்.‌ அதே நேரம் நிகில் தன் கையில் கொண்டு வந்து கொடுத்த பெட்டியைத் திறந்து அதிலிருந்து மஞ்சள் சரடில் கோர்க்கப்பட்டு இருந்த பொன் தாலியை வெளியில் எடுத்தான் உதய்.‌ அதை அனைவரும் அதிர்வுடன் பார்த்துக் கொண்டிருக்க உதய்யோ நிறுத்தி நிதானமாக,
“என்ன எல்லாரும் அப்படிப் பார்க்குறீங்க? இதை எப்ப வாங்குனேன்னு தானே யோசிக்கிறீங்க?” என்று கேட்டவாறே யாழினியின் அருகில் சென்று நின்றவன் அவளை அளவில்லாக் காதலோடு பார்த்து வைத்தான் ‌.

“இவளை மொத தடவ பார்த்த போது ரசிக்கத் தோணுச்சு டேட்.‌ அப்புறம் எங்களுக்குள்ள பிரச்சனை ரெண்டு பேரும் முறைச்சுக்கிட்டே திரிஞ்சோம். அதுக்கப்புறம் எனக்கு என்னாச்சுன்னே தெரியல டேட். இவ ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வீட்ல இருந்தா பாத்தீங்களா அந்த நிமிஷம் அந்த நிமிஷம் இவளுக்கும், எனக்கு ஏதோ ஒரு பாண்டிங் இருக்குன்னு தோணுச்சு டேட்‌. முதல் தடவையா ஒரு பொண்ணுக்கிட்ட சாரி கேட்க நினைச்சேன். அவக்கிட்ட சாரி கேட்டுட்டு ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்னு முடிவு செஞ்சு கிஃப்ட் வாங்க நகைக்கடைக்குப் போனேன். ஆனா அங்க என்னையே அறியாம இந்தத் தாலியை வாங்கிட்டு வந்துட்டேன் டேட்.

எதுக்காக இதை வாங்குனேன்னு எனக்கே தெரியல. அதே மாதிரி இதை என்ன பண்றதுன்னும் தெரியல அதான் இங்க கொண்டு வந்து வச்சுருந்தேன். இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு அப்ப புரியல. ஆனா இதெல்லாம் நடக்கணும்னு விதி இருக்கும் போல டேட் அதனால தான் இப்படி என்னையறியாம தாலி வாங்கிட்டு வந்திருக்கேன் போல. நடக்குறது எல்லாமே ஆண்டவனோட கைலதான் இருக்கு போல டேட். நான் இதுக்கு முன்னாடி கடவுளை அதிகமா வணங்குனதும் கிடையாது, நம்புனதும் கிடையாது. ஆனா இப்ப நம்புறேன். இந்த மாதிரி ஒரு தேவதை எனக்குக் கிடைக்கணுங்குறதுக்காகத் தான் நான் இந்தியா வந்தனோ என்னவோ! இவ்வளவு கஷ்டத்தையும் தாண்டி இவ எங்கிட்ட சேரணுங்குறது தான் விதி போல” என்றான் பெருமூச்சொன்றை வெளியிட்டவாறு ‌.

பின்பு அருளரசியின் முகம் பார்த்தவன்,“இப்பவே கட்டிடவா அத்தை ” என்று கேட்க.
அவரும் என்ன நினைத்தாரோ சரி என்று தலையசைத்தார். பின்பு தன் தந்தை மற்றும் தாயின் முகம் பார்த்தான்.‌ அவர்களும் சம்மதமாய்த் தலையசைக்க.

ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் யாழினியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன்,
“என்ன யாழிமா கட்டட்டுமா?” என்று கேட்டான்.
அதைக்கேட்டு நிகில்,சௌமி இருவரும் அதிர்ந்தார்கள்.‌ கண்டிப்பா கட்டாதன்னு தான் சொல்லப் போறா என்று அவர்கள் இருவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அருளரசின் முகத்தைப் பார்த்த யாழினி சரி என்று தலையசைத்திட, அவள் முகத்தைப் பார்த்தவாறே மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் மனையாளாக்கினான் உதய்.

கை தட்டும் ஓசை கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க அவர்கள் மருத்துவமனையில் பணிபுரிவர்கள் அனைவரும் அங்கு நின்று கைத்தட்டி கொண்டிருந்தார்கள்.‌ இவர்களுக்கு யார் சொன்னது என்று அனைவரும் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் போது தலைமை நர்ஸ் ஒருத்தி முன்னே வந்து, “ நான்தான் டாக்டர் எல்லாரையும் கூட்டிட்டு வந்தேன்.‌ சொந்தக்காரங்க முன்னாடி தான் உங்களுக்கு மேரேஜ் ஆகல.‌ ஜஸ்ட் எங்க முன்னாடியாவது ஆகட்டுமேன்னு நான் தான் எல்லாரையும் போய்க் கூட்டிட்டு வந்தேன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நானும் தான் இங்க இருந்தேன் அதனால சில விடயங்களை நானும் தெரிஞ்சுக்கிட்டேன்.. சாரி டாக்டர்” என்று சொல்ல, யாரும் அவரை எதுவும் சொல்லவில்லை. மாறாகத் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி அனைவரையும் அனுப்பி வைத்தான் உதய்.

தாலி கட்டிய கையோடு, நர்ஸ் ஒருத்தி ஹாலில் இருந்த சாமி சிலை முன்பு இருந்து கொண்டு வந்து கொடுத்த குங்குமத்தை யாழினியின் நெற்றியிலும், தாலியிலும் வைத்தவன் அவள் விரல் பிடித்து அழைத்துக் கொண்டு அருளரசியின் அருகில் சென்றான்.‌ அவரது பாதம் தொட்டு இருவரும் வணங்கினார்கள்.

அடுத்து சுமேந்திரன், ஸ்வர்ணலதாவிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். பின் மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு அருளரசியிடம் வந்தவன்,
“இப்ப சொல்லுங்க அத்தை உங்களுக்கு ஹேப்பியா? இப்பவாவது ஆபரேஷனுக்கு ஒத்துக்குவீங்களா?” என்று கேட்டான்.

அனைவரும் குழப்பத்துடன் அவனைப் பார்க்க. அவனோ நிறுத்தி நிதானமாக அருளரசியின் முகத்தைப் பார்த்து,‌“நீங்க ஆபரேஷனுக்குச் சம்மதிக்காததுக்குக் காரணம் உங்க பொண்ணு தான்னு எனக்குத் தெரியும்.நாம ஆபரேஷனுக்குச் சம்மதிச்சா நம்ம பொண்ணை யாரு பாத்துக்குவாங்க. நாமளும் இல்லைன்னா நம்ம பொண்ணு எப்படிக் கரை சேருவாங்குறது தான் உங்களோட பயம். தன்னோட கணவரும் இல்லாத நிலையில நமக்கு ஏதாவது ஆயிருச்சுன்னா நம்ம புள்ளைங்களோட நிலமை என்னாகுங்குற உங்களோட பயத்தைத் தான் உங்க கண்ணுல நான் பார்த்தேன் அத்தை. அதான் உங்களுக்கு நம்பிக்கை வரணுங்குறதுக்காக நான் விரும்புற உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சந்தர்ப்ப சூழ்நிலையால கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் விரும்பி, ஆசைப்பட்டு, கட்டுனா உங்க பொண்ணைத் தான் கட்டணும்னு முடிவு செஞ்சு கல்யாணம் பண்ணியிருக்கேன். கடைசி வரைக்கும் அவளைக் கண் கலங்காம பார்த்துக்குவேன்னு உங்களுக்கு வாக்கு தர்றேன் அத்தை” என்று அவன் சொல்லி முடிக்க அருளரசியின் விழிகளில் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரது விழிகளிலும் கண்ணீர் கசிந்திருந்தது. அந்த நிமிடத்தில் இருந்து யாழினியின் மனதில் ஒரு உயரிய இடத்தைப் பிடித்திருந்தான் உதய்..

அடுத்தச் சிறிது நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்திருப்பது ஏனோ அருளரசிக்கு என்னவோ போல் இருந்தது. அதனால்,
“இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்மகளோட இருந்துக்குறேன். காலைல எதா இருந்தாலும் வச்சுக்கலாம் மாப்ளை” என்றிட. தாய் – மகள் உறவுக்கிடையில் நுழைய வேண்டாம் என்று நினைத்து சரி என்று தலையசைத்து விட்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தான் உதய். சற்று முன்பு நடந்த நிகழ்வு மீண்டும் அவன் மனதில் ஓடியது. திடீரென்று எடுத்த முடிவாயினும் தான் நேசித்தவள் இப்போது தன் மனைவி என்ற உணர்வே அவனை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த நினைவோடே கண்ணயர்ந்து விட்டான்.

ஆழ்ந்து உறங்கிய தன் நண்பனை பார்த்தவாறே அவனருகில் இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்து விட்டான் நிகில்.

சௌமியோ என்ன செய்வது என்று தெரியாமல் தானும் தன் தோழியுடன் சென்று அமர்ந்துகொண்டாள். விடிய விடிய தாய் மகள் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். மகளுக்கு, புகுந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும், கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், புகுந்த வீட்டில் எதை எதைக் கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொன்னவர், அதே நேரத்தில் அவளின் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தார்.‌ தாயின் வருடலில் அவளையும் அறியாமல் அந்தக் கட்டிலில் சாய்ந்தவாறே உறங்கி விட்டாள் யாழினி.

வருண தேவனின் துணையோடு காலைப் பொழுது புலர்ந்தது.‌ மெல்லிய மழையில் அனைவருக்கும் லேசாகக் குளிர் எடுக்க ஆரம்பித்தது.‌ சூரியதேவன் வருணனுக்கு வழி விட்டுத் தன்னை மேகத்தினுள் மறைத்துக் கொள்ள, இன்னும் செங்கதிரோனின் மஞ்சள் கதிர்கள் தரையில் படாத நிலையில் சற்று மங்கலாகத்தான் காணும் இடமெங்கும் காட்சியளித்தது.‌

நேரம் அதிகாலை 6.30..
விழிப்பு தட்டிட, எழுந்தமர்ந்த உதய் தன் அறைக்குள் சென்று குளித்து முடித்து ஏற்கனவே அங்குத் தான் வைத்திருந்த உடைகளில் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.‌ முதலில் தன் காதல் மனைவியைத் தான் பார்க்க வேண்டுமென்று அவன் மனம் சொல்லியது.‌
வேகமாக அருளரசி இருந்த அறைக்குள் வந்தவன் குழந்தையெனத் தூங்கும் தன் மனையாளை விழிகொண்டு ரசித்தான். அருகில் இருக்கும் படுக்கையில் படுத்திருந்த சௌமி ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்தவன் தன்னவளின் அருகில் நெருங்கி அவள் நெற்றியில் இதமாக முத்தமிட்டு விட்டு அவளைக் கைகளால் தூக்கினான்.

ஆனால் அவளது கரங்கள், அவளது தாயின் கரங்களோடு பிணைந்திருப்பதைக் கண்டு புன்னகைத்தவன், ”சின்னக் குழந்தைன்னு நினைப்பு. இன்னமும் அம்மா கையைப் பிடிச்சுக்கிட்டு தூங்குறா!” என்று சொல்லிக் கொண்டு மெதுவாக அவள் கரங்களை அருளரசியின் கரத்திலிருந்து பிரிக்க முயன்றான்.

ஆனால் அவனால் பிரிக்க முடியவில்லை. பின் ஏதோ தோன்ற சட்டென்று திரும்பி அருளரசியின் உடலுடன் இணைக்கப்பட்டிருந்த இயந்திரங்களைப் பார்த்தவன் அதிர்ந்து விட்டான். வேகமாக மீண்டும் அவளை அந்த இருக்கையிலேயே அமர வைத்தவன் வேகமாக அருளரசியைப் பரிசோதிக்க ஆரம்பித்தான். அவனது பரிசோதனையில் அவனுக்குக் கிடைத்த செய்தி அவர் உயிர் பிரிந்து கிட்டத்தட்ட 2 மணி நேரமாகி விட்டது என்பதுதான்..

அதிர்ச்சியுடன், “அத்தை..”, என்று அலறிட, அவன் அலறிய சத்தத்தில் யாழினி, சௌமி இருவரும் கண்விழித்து விட்டார்கள். அப்போது தான் வீட்டிற்குச் சென்று அன்புச்செல்வனின் இறுதி காரியத்திற்கானவற்றைச் செய்து விட்டு மருத்துவமனையின் உள்ளே நுழைந்தனர் சுமேந்திரன் ஸ்வர்ணலதா இருவரும்.

அவர்களும் உதய்யின் சத்தத்தைக் கேட்டு வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தனர். அங்கே தன் மகனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும், மருமகளின் முகத்தில் இருந்த கலக்கமும் எதையோ உணர்த்த, “என்னாச்சு உதய்” என்று கேட்டவாறு அவனின் அருகில் சென்றார் சுமேந்திரன்.

தன்னருகே வந்த தன் தந்தையைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டவன், “அத்தை..‌அத்தை.. அத்தையும் இறந்துட்டாங்கப்பா” என்றான் கலங்கிப்போன குரலில்.
யாழினியின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தான் வந்தது.‌

அவளிடம் அசைவில்லை. தன் தாயையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். ஓடிச்சென்று தன் மருமகளை அணைத்து ஆறுதல் படுத்தினார் சுவர்ணலதா.

தந்தை இன்றித் தவித்திருப்பவளை
தாங்க வேண்டிய
தாயவளும் தனித்து
விட்டு சென்றதேனோ?

தாலி பூட்டி
தாரமாக்கியவனின்
அணைப்பும்
பெரிதாகப்படவில்லை
அன்பும்
அதிசயமாகப்படவில்லை.
ஆனால் அவனது
செயலே அதிர்ச்சியைக்
கொடுத்து அபலை இவளின் ஆறாத ரணத்திற்கு
மாமருந்தாகிறதே..!

-அற்புதமது பிறக்கும்....

https://www.sahaptham.com/community/threads/ஆர்கலி-ஈன்ற-அற்புதமே-comments.389/
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -26

தந்தையின் உயிர் தன் கண் முன்னே பிரிந்தது போல் தாயின் உயிரும் பிரிந்ததை யாழினியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்களில் இருந்து உருண்டு திரண்டு கன்னத்தில் வழிந்துக் கொண்டிருந்த கண்ணீர் நிற்காமல் கழுத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. அவளை அணைத்திருந்த சொர்ணலதா, “அழாதம்மா..” என்று ஆறுதல் கூற யாழினியோ அழுது கொண்டே இருந்தாள்.

தன் தோள் சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டு இருக்கும் உதய்யை சமாதானப்படுத்த வழியறியாது திகைத்து நின்றிருந்தார் சுமேந்திரன். இப்போது தான் திடீரென்று ஏற்பட்ட தன் சம்மந்தியின் இறுதி சடங்கிற்கான அனைத்தையும் செய்து முடித்து விட்டு வந்திருக்கிறார். ஆனால் அதற்குள் சம்மந்தியம்மாவும் தவறியதை சத்தியமாக அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதன் பிறகு அங்கு கனத்த அமைதி நிலவியது. அதே நேரம் சௌமியின் தாய் தந்தையர் அந்த அறைக்குள் நுழைந்தனர். அப்போது தான் சுய நினைவு பெற்ற உதய் தந்தையிடமிருந்து பிரிந்து நின்று தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவனாய்,“அப்பா இதுக்கு மேல இப்படியே நின்னா சரி வராது” என்றவன் தன்னவளின் அருகில் சென்று நின்றான். தன் தாயின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவளை இழுத்து தன் அருகில் நிறுத்தியவன்,
“உன்னோட சொந்தக்காரங்க எல்லாம் யார் யாருன்னு சொல்லும்மா எல்லாருக்கும் தகவல் சொல்லி அனுப்பனும்” என்றான்.

அவளோ பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருக்க, பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட உதய் சற்று ஆறுதலான குரலில்,
“இப்ப நிலைமை சரியில்லைமா உங்க அம்மாவுக்கு பரவால்ல, ஆனா அப்பாவோட உடம்பு கண்டிப்பா தாங்காதுமா ஆல்ரெடி போஸ்ட்மார்ட்டம் பண்ணியாச்சு புரிஞ்சுக்கம்மா”என்று சொல்ல,

சூழ்நிலையைப் புரிந்து கொண்டவள்,“எங்க வீட்டுல அப்பா ரூம்ல ஒரு டைரி இருக்கும் அதுல தான் எல்லாரோட போன் நம்பரும் எழுதி வச்சுருப்பாரு" என்றாள் அழுகையுடன்.

நிகிலின் புறம் திரும்பிய உதய்,
“மச்சி நீ சௌமியைக் கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு போயி, யாழினி சொன்ன டைரியை எடுத்து எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ணிடு. மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

கூடவே சௌமியிடம், “யாழினியோட அண்ணனுக்கு இன்ஃபார்ம் பண்ணனும் போன் நம்பர் கொடுங்க” என்று கேட்டு வாங்கி தீபனுக்கு அழைத்தான்.‌ அவனுக்கு அழைத்தால் இந்த எண் உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தான் உதய் ஆனால் அப்போதும் அதே பதில் தான் வந்தது.

அதன் பிறகு நேரத்தை வீணாக்காமல் அன்புச்செல்வன் அருளரசி இருவரது உடல்களை தகனம் செய்வதற்கான பணிகளைச் செய்ய ஆரம்பித்தான். முதலில் அவர்களது உடல்களை தன் வீட்டுக்குக் கொண்டு வந்தான்.
அலைபேசியின் வாயிலாக தன் வீட்டிற்கு வரும் படி தெரிவித்து இருந்ததால் யாழினியின் சொந்த பந்தங்கள் அனைவரும் உதய்யின் வீட்டுக்கே வந்திருந்தனர். கழுத்தில் மஞ்சள் தாலியுடன் நின்ற யாழினியைக் கண்டவர்கள் என்னவென்று விசாரிக்க ஆரம்பிக்க அனைவரையும் தன் ஒற்றை சொல்லில் அடக்கியிருந்தான் உதய். “இங்க பாருங்க தேவையில்லாம இதைப்பத்தி யாரும் எதுவும் கேட்க வேண்டாம். அவளோட பேரண்ட்ஸூக்கு திடீர்னு பயர் ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. அவங்க அப்பா ஏற்கனவே என்னை மாப்பிள்ளையா செலக்ட் பண்ணி வச்சுருந்தாரு. கடைசியா தன் மகளோட கல்யாணத்தைப் பாக்கணும்னு சொன்னதால எங்க மேரேஜ் அவசர அவசரமா நடந்துச்சு. அவளை வேற எதுவும் கேட்காதீங்க, ஏற்கனவே அவ ரொம்ப உடைஞ்சு போயிருக்கா நீங்க தேவையில்லாததை கேட்டு அவளை ரொம்ப கஷ்டப்படுத்தாதிங்க” என்று சொன்னதற்குப் பிறகு யாரும் எதுவும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட அந்த நாள் முழுவதும் அவர்கள் இருவரது உடல்களையும் கண்ணாடிப் பேழையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள் , தீபனின் வருகைக்காக. ஆனால் அவன் தான் கடைசி வரை வரவில்லை. அவனுக்கு அழைத்தால் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. அதன் பிறகு நேரத்தைக் கடத்துவது சரி வராது என்பதால் தானே அவர்களுக்கு கொல்லி வைத்தான் உதய்.

காரியங்கள் அனைத்தும் முடிந்து அதற்குப் பிறகு சொந்த பந்தங்கள் அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். எங்கே தீபனை காணோம் என்று கேட்டவர்களுக்கு வேலை விஷயமாக லண்டன் சென்று விட்டதால் வர முடியாத சூழ்நிலை என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.‌

இதோ அருளரசி, அன்புச்செல்வன் இறந்து இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது.‌ இந்த மூன்று நாட்களும் உதய்யின் அறையை விட்டு யாழினி நகரவில்லை.‌ ஏன் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல், உணவினை கூட சரி வர உண்ணாமல் படுத்துக் கிடந்தாள்.‌ இப்படியே இவளை விட்டால் சரி வராது என்று நினைத்தவாறே அவள் இருந்த அறைக்குள் நுழைந்தவன் கதவை தாழிட்டு விட்டு அவளை நெருங்கினான்.‌ அழுது அழுது ஓய்ந்து போனவளாய் சுவரில் மாட்டப்பட்டிருந்த தாய் தந்தையரின் புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.


அவளது அந்த நிலை உதய்யின் மனதை பிசைந்தது. ஓடிச்சென்று அவளை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்,
“ எதுக்குமா இப்படி இருக்க? உன்னை இப்படி என்னால பாக்க முடியலை ப்ளீஸ் இந்த மாதிரி இருக்காத. நார்மலாக முயற்சி பண்ணு” என்றான். அவளோ ஆறுதலை யாரிடம் தேடுவது என்று தெரியாமல் அவனுள்ளேயே தேட ஆரம்பித்தாள். அவன் மார்பில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதவள், “இனிமே அவங்க இல்லாம நான் எப்படி இருப்பேன் உதய்” என்றாள் முதல் முறையாய் அவன் பெயரை அழைத்து..

அதைக்கூட உணராதவனாய்,
“நான் இருக்கேன்மா. நாங்க உன்னை பத்திரமா பார்த்துக்க மாட்டோமா? உனக்கு எல்லாமா நான் இருப்பேன். என்னோட பேரண்ட்ஸ் இருக்காங்க. நீ இப்படி சொன்னா நாங்க என்ன பண்றது சொல்லு பார்க்கலாம்” என்றான்.

“ஆனா என்னால அவங்களை மறக்க முடியலையே?”

“அவங்களை மறக்க சொல்லலடா இது இயற்கையான ஒன்னுன்னு நினைச்சு அதைக் கடந்து வர சொல்றேன். நீ இப்ப டாக்டர். அப்படி இருக்கும் போது இது மாதிரி எவ்வளவோ பார்க்க வேண்டி வரும் ஒவ்வொன்னுக்கும் நீ இப்படி சோர்ந்து போய் உட்கார்ந்தா என்ன ஆகறது சொல்லு பார்க்கலாம். உன்னை என்னால இப்படி பார்க்க முடியல. உன்னை விட்டு என்னால ஹாஸ்பிடல் போகவும் முடியல. ப்ளீஸ் கொஞ்சமாவது நார்மலாக முயற்சி பண்ணுமா. எங்கூட வா நாம ஹாஸ்பிடல் போகலாம்”

“என்னால உங்கக்கூட வர முடியும்னு தோணல. யாரைப் பார்த்தாலும் அப்பா அம்மா பத்தி கேட்டுடுவாங்களோன்னு பயமா இருக்கு உதய். நான் வரல நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன். நான் இங்க அத்தைக் கூடவே இருந்துக்குறேன்”

“சரி நீ எங்கயோ இருந்துக்கோ, ஆனா நீ இல்லாம சௌமி வேலைக்கு வராதே? அதுக்கு என்ன பண்ண சொல்ற. உனக்காக மெடிக்கல் ஃபீல்ட் எடுத்து படிச்ச பொண்ணோட படிப்பும் உன்னால பாதியிலையே நிக்கணுமா? படிச்சு முடிச்சா தானே அந்த பொண்ணுக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்கும். இன்னும் சொல்லப்போனா அவங்க அப்பா கடன் வாங்கி தான் அவளைப் படிக்க வக்கிறாரு, புருஞ்சுக்கம்மா” என்றான் குழந்தைக்குச் சொல்வது போல் கெஞ்சலாய் கொஞ்சலாய்.

சௌமியின் பெயரை சொன்னதும் சற்றே அவள் மனம் அதை பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. உண்மைதானே தனக்காக அவளும் அங்கு செல்லாமல் இருப்பாள். அப்படி இருக்கும் போது அவள் படிப்பு கெடும். படித்து முடித்து சர்டிபிகேட் வாங்கினால் மட்டும் தானே வேலை செய்ய முடியும். அதன் பிறகு அவளது குடும்பம் வேறு இருக்கிறது என்று நினைத்தவள், “சரி நான் குளிச்சிட்டு வர்றேன் நீங்க போங்க உதய்..” என்றாள்.

“இல்லம்மா உங்க வீடு முக்கால்வாசி எரிஞ்சு போச்சுல்ல அதுக்கு கண்டிப்பா அந்த எம்எல்ஏ தான் காரணமா இருப்பான்‌. அங்கிருந்து உன்னோட திங்ஸ் பாதியைத் தான் கொண்டு வந்துருக்கேன். அதுல இருந்து தான் உங்க அப்பாவோட போட்டோஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து, நம்ம ரூம்ல மாட்டியிருக்கேன். மோஸ்ட்லி இதெல்லாம் உன் ரூம்ல இருந்ததால நல்ல வேளையா எரிஞ்சு போகல. அந்த வீட்டை ஆல்டர்நேட் பண்ண சொல்லியிருக்கேன். இப்போதைக்கு இருக்குற டிரஸ்ஸ வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கடா. நீ எங்கேயும் வெளியே வர மாட்டங்குற, அதனால தான் நான் எங்கேயும் உன்னைக் கூப்பிடல.‌ வேணும்னா ஈவினிங் போய் உனக்கு தேவையான டிரஸ், திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாமா?” என்று கேட்க அவனது அக்கறையில் சற்று மனது இதமானது போல உணர்ந்த யாழினி, “சரி போலாம் நீங்க போங்க உதய்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தவள் குளித்து முடித்து இலகுவான சேலை ஒன்றை அணிந்து கொண்டு கீழிறங்கி வந்தாள்.

அதே நேரம் உணவை பரிமாறிக் கொண்டிருந்தார் சொர்ணலதா. உணவு மேஜையில் சுமேந்திரன், உதய், சௌமி, நிகில் என அனைவரும் அமர்ந்திருந்தனர். அப்போது தான் மாடியிலிருந்து உதய்யின் மற்ற நண்பர்கள் கீழே இறங்கி வந்தார்கள்.

அவர்களோ மூன்று நாட்களாக ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு அதிகாலையில் தான் வந்திருந்தார்கள். நிகில் தான் அவர்களை என்னென்னவோ சொல்லி அனுப்பி வைத்திருந்தான். கீழே வந்தவர்கள் புதிதாக இருந்த சௌமி மற்றும் யாழினியை வித்தியாசமாகப் பார்க்க வேகமாக எழுந்து சென்று தன்னவளின் அருகில் நின்ற உதய், “டேய் மச்சீஸ் இவ என்னோட மனைவி அகர யாழினி, அவங்க இவளோட தோழி சௌமியா” என்று நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.

அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை நெருங்கினர்.‌ “என்னடா சொல்ற? சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டியா?” என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் உதய்கு போதும் போதும் என்றாகி விட்டது. பின்பு நிலைமையை ஓரளவுக்கு விளக்கி சொல்ல உதய்யின் மீது இது நாள் வரை இருந்த பாசமும் அன்பும் பெருகியது. கூடவே அவனது இந்த செயலால் அவன் மீது மரியாதையும் உருவாகி இருந்தது.

அதன் பிறகு அனைவரும் ஒன்றாக உணவு உண்டனர். சொல்லி வைத்தது போல் அனைவரும் மருத்துவமனைக்கு கிளம்பி வந்தார்கள். அங்க ட்ரெயினியாக இருந்து விட்டு தற்போது உதய்யின் மனைவியாக வருவதற்கு யாழினிக்கு சற்று தயக்கமாக கூட இருந்தது.‌ இருந்தும் நடந்ததை மாற்ற முடியாது அல்லவா! எனவே சோர்ந்து போன முகத்துடன் காரில் இருந்து கீழே இறங்கியவள் முன்னே செல்ல முடியாமல் தயங்கி நிற்க, அவளது தயக்கத்தை உணர்ந்தவன் போல் அவள் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்ட உதய்,“உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க சரியா! பயப்படாதே வா” என்று சொல்லி அழைத்துச் சென்றான்.

எப்போதும் போல் அனைவரும் அவர்கள் இருவருக்குமே காலை வணக்கம் வைத்திட, இயல்பாக இருக்க முடியாமல் தவித்தாள் யாழினி. பின்பு எப்போதும் போல் தங்களது அறைக்கு செல்ல முயன்றவளைத் தடுத்து நிறுத்திய உதய், “அங்க வேணாம். உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் என்னோட ரூம்ல வச்சுடு ஓகே வா!” என்றான்.

அவளோ சௌமிமைப் பாவமாக பார்த்தாள். அதைக் கண்டு புன்னகைத்த சௌமி, “ஒன்னும் பிரச்சனை இல்ல நான் வேணும்னா நிகில் சாரோட ரூம்ல என்னோடதை வச்சிடுறேன் ஓகேவா” என்றாள்.

அதைக் கேட்டு புருவம் சுருக்கிய யாழினி, “இவர் என் ஹஸ்பன்ட் அதனால அங்க கொண்டு என்னோட திங்க்ஸை வைக்க சொல்றாரு. நீ ஏன் நிகில் சாரோட ரூம்ல வைக்கணும்” என்று திருப்பி கேள்வி கேட்க,

பதில் சொல்ல முடியாமல் ஒரு நிமிடம் ஓர விழியால் நிகிலைப் பார்த்தவள், “இதென்னடி வம்பா இருக்கு, ஸ்டாப்ஸ் ரூமுக்கு போனாலும் திட்டுவ. அதான் அப்படி சொன்னேன். இதெல்லாம் ஒரு குத்தமாடி. வேணும்னா நானும் உங்க ரூம்லையே என்னோடதை வச்சுக்கவா?” என்றாள் கிண்டலாக.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ கொண்டு போயி உன் திங்ஸை அங்கையே வச்சுக்க” என்று சொல்லிவிட்டு தன் கணவனுடன் முன்னே நடந்தாள் யாழினி. பழைய யாழினி வந்து விட்டு சென்றதை விழிகள் கலங்க பார்த்திருந்தாள் சௌமி.
அவள் தோளில் தட்டிய நிகில், “நீயும் போ” என்று சொல்லி அனுப்பி வைத்தான் நிகில்.

ஆனால் யாழினி கேட்டதற்கு பதிலாக சௌமி, ‘நிகில் என்னோட வருங்கால வீட்டுக்காரர் அதான் அவர் ரூமை யூஸ் பண்ணிக்கிறேன்' என்று சொல்வாளோ? என்று எதிர்பார்த்து ஏமாந்தது நிகிலின் உள்ளம்.. முதன்முதலில் சௌமியைப் பார்த்த நிமிடத்தில் இருந்து அவனுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு தன்னைப் போல் அவளும் நட்பிற்கு தரும் மரியாதையைக் கண்டு அவள் பால் மனதை சாய வைத்து இருந்தது.‌ அவன் மனதில் மட்டும் இப்படிப்பட்ட எண்ணம் இருந்தால் போதுமா! அவள் மனதிலும் இது போல் ஒரு எண்ணம் இருக்க வேண்டாமா? என்பதாலேயே அவளைத் தள்ளி நின்று ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டான்.

மேலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அன்றைய நாள் பொழுதும் சரி, அதன் பிறகு வந்த நாட்களில் சரி அமைதியாவே நகர்ந்தன. அனைவரும் மருத்துவமனைக்கு வருவதும் பின் வீட்டுக்கு செல்வதுமாகவே நாட்கள் கழிந்தன.‌ நிகிலைத் தவிர மற்ற நண்பர்கள் அனைவரும் ஒரு வாரத்தில் மீண்டும் யு.எஸ் கிளம்பி விட்டார்கள். உதய், யாழினி வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. நண்பர்கள் இருவர் தங்களது அறையை எவ்வாறு பகிர்ந்து கொள்வார்களோ? அந்த மன நிலையில் தான் இவர்களும் இருந்தார்கள். உதய்யின் மனம் முழுவதும் நேசம் இருந்தாலும் தன்னவள் மனதிலும் தன் மீது நேசம் வர வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தான். அவனது தாய் தந்தையருடன் சகஜமாக உரையாட ஆரம்பித்திருந்தாள் யாழினி.


அவளும் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்ததற்கு பிறகு உண்மையை, நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு அண்ணனின் அருகாமையை எதிர்பார்த்தாள். அவனைத் தொடர்பு கொள்ள முயல, இப்போதும் இந்த எண் உபயோகத்தில் இல்லை என்றே தகவல் வந்தது. அன்றிரவு கலக்கத்துடன் இதை யாழினி உதய்யிடம் சொல்ல, சரி விடும்மா நான் பார்த்துக்குறேன் என்று சொல்லி விட்டு அதற்கான வேலைகளைக் கவனித்தான்.‌ முதலில் இங்கே தீபன் வேலை செய்த அலுவலகத்தை கேட்டு தெரிந்து கொண்டவன் அங்கே சென்று விசாரித்தான்.‌ அவர்களோ அங்கே தீபன் வேலையில் சேர்ந்த இரு தினங்களுக்குப் பின்பு வேலைக்கே வரவில்லை என்ற தகவலை திருப்பி தந்தனர். அதை அப்படியே யாழினியிடம் உதய் சொல்ல, அதிர்ந்தாள் யாழினி.

‘என்ன ஆச்சுன்னு தெரியலை?’ என்று பதை பதைப்புடன் அவள் புலம்பிக்கொண்டே இருக்க,
“வேணும்னா நாமளே போய் பார்த்துட்டு வரலாமா?” என்றான் உதய்.

“இல்ல இல்ல நாம போக வேணாம். வேற யாரையாவது அனுப்பி பார்த்துட்டு வர சொல்லுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சலாய் கேட்க,

“சரிமா பார்த்துட்டு வர சொல்றேன். நீ அழுகாத ப்ளீஸ் நீ ஃபீல் பண்ணாதமா”, என்று சொன்ன உதய் தனக்கு தெரிந்த டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் தொடர்புகொண்டு தீபனின் போட்டோ, அவன் பணி புரியும் அலுவலகம் அது இருக்கும் இடம் என அனைத்து தகவல்களும் ஒப்படைத்து அவனைப் பற்றிய விவரங்களை சேகரித்து வருமாறு லண்டன் அனுப்பி வைத்தான்.

இலண்டன்.......

அரக்க பரக்க சமையலறையில் சமைத்துக் கொண்டு இருந்தான் தீபன். இந்த அறையிலேயே அடைந்து கிடப்பது கிட்டத்தட்ட அவனுக்கு பைத்தியம் பிடிக்கும் போல் இருந்தது. நாகரீக வளர்ச்சி என்று நாம் செய்து வைத்திருக்கும் ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிய இக்கட்டான நிலையில் நம்மளை நிறுத்தி விடுகிறது என்று கடந்த 10 நாட்களாக தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறான். யாரோ செய்த தவறால் இப்போது தன் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று ஒவ்வொரு நாளும் பரிதவித்துக் கொண்டிருக்கிறான். ‘என்ன ஆனாலும் சரி முதல்ல லீவு கேட்டு ஊருக்கு வரட்டு போயிட்டு வரணும்’ என்று நினைத்துக் கொண்டு சமைத்து முடித்தவன் சாப்பிட்டு முடித்து, உடை மாற்றிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேற நினைத்த போது அவன் முன்னால் வந்து நின்றான் தமிழ்நேயன்.

அவனைக் கண்டு இதமாக புன்னகைத்த தீபன்,
“பரவாயில்லையே காலையிலே என்னை பார்க்க வந்திருக்கீங்க? இன்னைக்கு என்ன ஸ்பெஷல் தமிழ்” என்று கேட்டான்.

கடந்த 10 நாட்களாக இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இழையோடி இருந்தது. அன்று விமல் அறிமுகம் செய்து வைத்ததற்கு பிறகு இரண்டு நாட்களிலேயே விமலுக்கு பணிமாற்றம் கிடைத்து விட அவன் வேறு ஊருக்கு சென்று விட்டான். அதன் பிறகு தினமும் அலுவலகம் சென்று விட்டு வீட்டில் வந்து ஓய்வெடுக்காமல் அந்த பகுதியை சுற்றி பார்க்க ஆரம்பித்தான் தீபன்.

அப்போதெல்லாம் தமிழை பார்க்கும் படியாக வரும் வேளையில் இருவரும் நட்பு ரீதியாக பேசிப் பழகிக் கொள்வார்கள். அதே போல் தமிழுக்கும் கவிக்கும் இடையே இருந்த காதல் ஆழமாக இருந்தது. இருவரும் பார்க்கும் போது மட்டும் விழிகளால் காதலை பரிமாறிக் கொள்பவர்கள் இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி தனிமையை உண்டாக்கிக் கொண்டு பேசுவதில்லை.
முன்பை விட இப்போது கவி தன் தாயிடமிருந்து அன்புவை சற்று கவனமாகவே பார்த்துக் கொண்டாள். அன்றைக்குப் பிறகு இப்போதெல்லாம் அவர் அன்புவை அடிப்பது கிடையாது. அவ்வப்போது ஏச்சுப்பேச்சுக்கள் கிடைத்தாலும் அதைக் கடந்து வர பழகியிருந்தாள் அன்பு. அதற்கு காரணம் கவியின் அன்பும் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் அவன் கொடுக்கும் ஊக்கமும் ஹெல்தியான உணவும் தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் வெகு அதீத காய்ச்சலால் துவண்டு போன தீபன்,‌“வீட்டுலையே சமைச்சுக்குறேன் எனக்கு சமைக்க கத்து தரியா தமிழ்?” என்று கேட்க,

அவன் வராததால் ஒரு கஸ்டமர் குறையும், தனக்கு வருமானம் வராது என்று தெரிந்திருந்தும், “கட்டாயம் சொல்லித் தர்றேன்” என்று சொன்ன தமிழ் அவனது பிளாட்டிற்கு வந்து கூடவே இருந்து அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்து முதல் முறை சமைத்துக் கொடுத்தும், மறு முறை சமையலுக்கு உதவியும், நான்காவது முறை அவன் சமைத்ததை உண்டு பாராட்டியதால் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாகி இருந்தார்கள்.

விமல் இங்கிருந்து சென்றதும் தனிமையை உணர்ந்த தீபன் நைல் நதியை பார்க்கலாம் என்று நதியோரம் நின்று அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவனை தள்ளி விட கீழே விழாமல் இருப்பதற்காக எவ்வளவோ முயன்றும் அது முடியாததால் தண்ணீருக்குள் விழுந்திருந்தான் தீபன். அதில் அவனது அலைபேசி நதியின் ஆழத்தில் மண்ணில் சென்று சொருகிக் கொண்டது. அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அது அவன் கைகளுக்கு கிட்டவில்லை. இப்படி தான் தமிழிடம் சொல்லி வைத்திருக்கிறான் தீபன். அது மட்டுமின்றி கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேலாக அவன் தண்ணீருக்குள் இருந்தும் அவனுக்கு மூச்சடைக்கவும் இல்லை, நீந்துவதற்கு சிரமமாகவும் இல்லை.‌ அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ஜென்ம ஜென்மமாய் நீரில் பிறந்து வளர்ந்து, நீரில் வாழ்வதற்கான தகவமைப்புகளைப் பெற்றிருந்தவனின் மறுஜென்மம் இவன். அப்படியிருக்கும் போது அவனுள்ளும் அத்தகைய தகவமைப்புகளின் மிச்ச சொச்சம் இல்லாமலா இருக்கும்.

அனைவரது அலைபேசி எண்களையும் அலைபேசியில் பதிவு செய்து வைத்திருப்பது தான் இப்போதைய மக்களின் மனநிலை. எங்கே எவரிடமாவது நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் அலைபேசி எண்ணை கேட்டுப்பாருங்கள். அவர்களிடமிருந்து தெரியாது என்ற பதில் தான் வரும். இல்லை என்றால் அவசரத்திற்கு அவர்கள் அலைபேசியை எடுத்து அதில் பதிவு செய்து வைத்திருக்கும் எண்களைத்தான் தேடுவார்கள். அன்றைய காலத்தில் அலைபேசி எண்களை மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தவர்கள் தற்போதெல்லாம் அவற்றை அலைபேசியில் பதிவு செய்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். தற்போதெல்லாம் ஒரு எண்ணைக் நினைவில் வைக்க முடியவில்லை என்கிறோம். நாகரீகம் என்ற பெயரில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி நன்மைக்கல்ல, தீமைக்கு என்பதை நாமும் புரிந்து கொள்வதில்லை பிறரையும் புரிந்து கொள்ள விடுவதில்லை.

தமிழின் உதவியுடன் புதிய அலை பேசி, புதிய சிம் வாங்கி விட்டான் தீபன். ஆனால் நெருங்கியவர்களின் அலைபேசி எண் தான் அவனிடம் இல்லையே. யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினரிடம் பேச முடியாமல் கடந்த பத்து தினங்களாகத் தவிக்கிறான். கூடவே குழம்பிய மனநிலையில் அலுவலகத்தில் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தான். இப்போது தான் இங்கே வந்து வேலையில் சேர்ந்த காரணத்தினால் விடுப்பு தர அவர்கள் மறுத்து விட நிலைமையின் தீவிரத்தை விளக்காமல் ஏதேதோ பொய் சொல்லி, தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி விடுப்பு கேட்டிருக்கிறான். இன்று சென்றால் தெரியும் விடுமுறை கிடைக்குமா? இல்லையா என்று...

‘கண்டிப்பாக லீவு கிடைச்சதும் ஊருக்கு ஒரு எட்டு போயி அப்பா அம்மா தங்கச்சியைப் பாத்துட்டு வந்துருவோம். என்னமோ அவங்க நினைப்பாவே இருக்கு’ என்று நினைத்தவாறே அலுவலகம் வந்து சேர்ந்தான். அவனுக்கு முன்பாக அலுவலகத்தில் அமர்ந்து இருந்தனர் உதய் அனுப்பி வைத்தவர்கள்.

அவர்கள் இருவரும் தன்னை காண வந்து இருப்பதைக் கண்டு குழம்பியவன், “யார் நீங்க?” என்று கேட்டான் ரிசப்ஷன் பெண் தன்னிடம் அவர்கள் உங்களைக் காண வந்திருக்கிறார்கள் என்ற தகவலை தெரிவித்ததால்.

அவர்களோ, “நீங்கதான் மிஸ்டர் விபாகரத் தீபனா?” என்று உறுதி செய்வதற்காக கேட்க‌,

“ஆமா நான்தான் தீபன். நீங்க யாரு,‌ நீங்க எதுக்கு என்னைப் பாக்க வந்துருக்கீங்க?”

“சார் நாங்க சென்னையில இருந்து வந்திருக்கோம் சார். நாங்க ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி உங்களைக் காணோம்னு தேட சொல்லிருக்காங்க, அதான் உங்களைத் தேடி வந்திருக்கோம்”

“நான் காணாம போகலை சார். என் மொபைல் மிஸ் ஆயிடுச்சு சார். அதுல தான் நம்பர் எல்லாம் இருந்துச்சு அதான் வீட்டுக்கு காண்டாக்ட் பண்ண முடியல. யாரு என்னைத் தேட சொன்னது எங்க அப்பாவா?” என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்த இருவரும், “நீங்க நல்லா இருக்கீங்கள்ள சார் அதுவே போதும். நீங்க எங்க கூடவே வாங்க சென்னைக்கு போகலாம், அங்க போய் மத்ததை பேசிக்கலாம்” என்றனர்.‌

“சார் நீங்க வேற, நானே கிட்டத்தட்ட பத்து நாளுக்கு அப்புறம் இப்ப தான் ஆபீஸ் வர்றேன்.‌ வீட்டில கொஞ்சம் வேலை இருந்துச்சு, கூடவே வைரல் ஃபீவர் இருந்துச்சு அதான் வீட்ல இருந்து வேலை பார்த்தேன். லீவுக்கு அப்ளே பண்ணி இருக்கேன் இன்னைக்கு கண்டிப்பா லீவு கிடைச்சுடும். அதுக்கப்புறம் நானே ஊருக்கு வரேன் சார் நீங்க முன்னாடி போங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தவன் தன் மேலதிகாரியை சென்று சந்திக்க, அவர்களும் பெரிய மனது பண்ணி இரண்டே இரண்டு நாட்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தனர்.

அப்பாடா என்று பெரு மூச்சு விட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தவன் தமிழுக்கு அழைத்து தான் ஊருக்கு செல்வதை சொன்னான். பின்பு வேலையை கவனிக்க ஆரம்பித்தான். ஈவ்னிங் வேலை முடிந்ததும் அங்கிருந்து கிளம்பி தன் பிளாட்டுக்கு வந்தவன் அவசர அவசரமாக தன் உடைகள் அனைத்தையும் பேக் செய்து கொண்டிருக்கும் போது கதவு தட்டப்பட்டது.

‘யாரது இந்த நேரத்துல?’ என்ற யோசனையோடு கதவை திறந்தவன் அங்கே தமிழ் நின்றிருப்பதைக் கண்டு,
“என்னாச்சு தமிழ்?” என்று குழப்பத்துடன் கேட்டான். மறுகணம் தமிழோ, “எனக்கு நீ ஒரு உதவி செய்யணும் தீபா” என்றான்.

“நாம தான் பிரண்ட்ஸ் ஆகிட்டோமே. அப்புறம் எதுக்கு உதவி அது இதுன்னு கேட்கிற தமிழ்.‌ எதுவா இருந்தாலும் உரிமையா கேளு மச்சி” என்றிட.

“என்னோட தங்கச்சியை உன்னோட ஊருக்கு கூட்டிட்டு போறியா? நீ தான சொன்ன லீவு கெடச்சுருச்சு நான் ஊருக்கு போறேன்னு.‌ அதான் கேட்குறேன் அவளையும் கூட்டிட்டு போறியா? கொஞ்ச நாள் அவ உங்க வீட்ல இருக்கட்டும். அப்புறம் நானே அங்க வந்து அவளைக் கூட்டிட்டு வந்துடுறேன்” என்று கேட்டான்.

“தங்கச்சியா உனக்கு தான் தங்கச்சியே இல்லையே? நீ ஒரே பையன் தானே தமிழ் அப்படி இருக்கும் போது” என்று அவன் முழுதாக கேட்டு முடிக்கும் முன்பே தமிழ் விலகி நிற்க, அவன் பின்னால் முகம் வீங்கிய நிலையில் உடைகள் கிழிந்த நிலையில் நின்று இருந்தாள் அன்பு.

அவளைக் கண்ட மறு நிமிடம் உலகம் அனைத்தும் உறைந்தது போலும், தன் இயக்கத்தை நிறுத்தியது போலவும் தன்னிலை மறந்து உறைந்து நின்றிருந்தான் தீபன். ஏதேதோ நினைவுகள் அவன் எண்ண அலைகளிலிருந்து பிம்பங்களை தெளிவில்லாமல் காட்டி விட்டுச் செல்ல அவனுக்கு தலை வலிப்பது போல் இருந்தது. அதே நேரம் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்த அன்புவும் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் அவன் விழிகளை சந்தித்த மறுகணம் அவளுக்கும் அதே காட்சிகளே பிம்பமாக தெரிந்தது, உலகம் தன் இயக்கத்தை நிறுத்தியது போலவும் தோன்றியது. கூடவே அவள் கால்கள் அவளை அறியாமல் அவ்விடம் இருந்து நகர்ந்து சென்று அவன் அருகில் நின்றது. அடுத்த கணம் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் ஆழமாகப் புதைத்துக் கொள்வது போல் இறுக்கி அணைத்துக் கொண்டனர்.

https://www.sahaptham.com/community/threads/ஆர்கலி-ஈன்ற-அற்புதமே-comments.389/
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -27


அதை தமிழ் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, அவ்வேளையில் தீபனின் அணைப்பிலிருந்த அன்பு மயங்கி கீழே சரிந்தாள். அடுத்த கணம் பதற்றத்தோடு அவளை கரங்களில் ஏந்தியவன்,
“என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு?” என்ற கேள்வியை தமிழிடம் எழுப்பியவன் வேக வேகமாக அவளைத் தூக்கிச்சென்று சோபாவில் படுக்க வைத்து அவளுக்கு என்னானது என்று பரிசோதிக்க ஆரம்பித்தான்.

கிட்டத்தட்ட மயக்க நிலையில் இருந்தாள் அன்பு. அவசர அவசரமாக அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழ வைக்க முயற்சி செய்தான் தீபன். அவனது பதற்றத்தையும், அவன் செய்யும் செயலையும் எட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்த தமிழுக்கு ஒன்று மட்டும் புரிந்தது இருவருக்குள்ளும் ஏற்கனவே ஏதோ சம்மந்தம் இருக்கிறதென்று.‌ சிறிது நேரத்தில் கண் விழித்து எழுந்து அமர்ந்த அன்பு தன் எதிரே தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருப்பவனை கண்டு பதற்றத்துடன் தலை குனிந்தாள். அவளருகில் உரிமையாக அமர்ந்து அவள் முகத்தை நிமிர்த்திய தீபன், “மறுபடியும் தற்கொலைக்கு முயற்சி பண்ணுனியா?”என்றான்.
இல்லை என்று தலையை அசைத்து விட்டு பின்பு ஆமாம் என்று தலையசைக்க, அதிர்ந்தது தீபன் மட்டுமல்ல தமிழும் தான்.

“மறுபடியும் தற்கொலைக்கு முயற்சி பண்ணுனியான்னா? அப்ப ஏற்கனவே முயற்சி பண்ணி இருக்காளா?” என்று தமிழ் அதிர்ச்சியோடு கேட்க. பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட தீபன்,“ஆமா நான் இங்க வந்த மூன்றாவது நாள்.‌ அதாவது விமல் இங்கிருந்து கிளம்புனதுக்கு அப்புறம் நான் நைல் நதிக்கு போயிருந்தேன். அப்போ ஒரு பொண்ணு உள்ள குதிச்சிட்டா, யாருன்னு எனக்கு தெரியாது ஆனா காப்பாத்தணும்னு எனக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு. அதனால நானும் உள்ள குதிச்சுட்டேன். அவ வேணும்னே ஆழமாயிருக்க பக்கம் குதிச்சுருக்கா அதனால தான் எனக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு. அங்க தான் என்னோட போன் மிஸ்ஸாயிடுச்சு.‌ எப்படியோ அவளைத் தேடி மேலே தூக்கிட்டு வந்துட்டேன். சொல்லப்போனா அந்த பொண்ண எங்கேயோ பார்த்த மாதிரி ஃபீல் ஆச்சு, ஆனா யாருன்னு தான் தெரியல, உன் தங்கச்சின்னும் தெரியாது. அப்பவே புத்திமதி சொல்லி தான் அனுப்பி வச்சேன். ஆனா மறுபடியும் ஏன் இப்படி பண்ணுனான்னு தான் தெரியல. அப்படி என்ன தாண்டா பிரச்சினை இந்த பொண்ணுக்கு. அவளை நீ தங்கச்சின்னு சொல்ற அப்ப உனக்கு தெரியாம இருக்குமா? சொல்லேன்டா அப்படி என்ன தான் பிரச்சினை?” கோபத்துடன் கேட்டான் தீபன்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட தமிழ் அன்புவின் மறுபுறம் சென்று அமர்ந்தான். “ஏன்மா இப்படி இருக்க, உனக்கு என்ன கஷ்டம் வந்திருந்தாலும் எங்கிட்ட சொல்லியிருக்கலாமே, நான் எதாவது செஞ்சுருப்பேனே?” என்று ஆதங்கத்துடன் கேட்க.

“நான் என்ன பண்ணட்டும் அண்ணா? என் தலையெழுத்து இப்படி இருக்கு. ஒன்னு நான் செத்து போகணும், இல்லன்னா கவி அக்காவோட அம்மா வர வச்ச 50 வயசு மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கணும். அவரை கல்யாணம் பண்றதுக்கு நான் செத்துப் போறதே பரவால்லன்னு முடிவு பண்ணிட்டேன். அவருக்கு இது நாலாவது கல்யாணமாம்‌ எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” என்று அழுகையோடு சொன்னவளை அதிர்ந்து போய் பார்த்தனர் தமிழும், தீபனும்.

“என்னடா கொடுமையா இருக்குது.. பெத்தவங்க இது மாதிரி செய்வார்களா?” என்று கேட்ட தீபனுக்கு அன்புவின் முந்தைய வாழ்க்கையைப் பற்றிய அனைத்தையும் சொன்ன தமிழ், “ப்ளீஸ்டா எப்படியாவது இவளை உங்கூட கூட்டிட்டு போயிடுடா”

“அவங்களைக் கூட்டிட்டு போறதைப் பத்தி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லடா. ஆனா அவங்க வரணுமே?” என்று தீபன் சொல்லி முடிக்கும் முன்பே,
“உங்க கூட நான் எங்க வேணா வருவேன்”என்றாள் அன்பு.‌
ஏன்? என்ற கேள்வியோடு ஆண்கள் இருவரும் அவளைப் பார்க்க,

“ஏன்னா.. அது.. அப்படித்தான்” என்று சொன்னவள் தலையைக் குனிந்து அமர்ந்து கொண்டாள். அவளது வெட்கத்தின் தயவால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தமிழ் புரிந்து கொண்டான்.

அதனால் அவன் உள்ளம் மகிழ்ந்தாலும் மறுபுறம் தங்கையைப் பிரியும் வேதனையும் அவன் முகத்தில் பிரதிபலித்தது. அதை உணர்ந்த அன்பு, “கவலைப்படாதீங்க அண்ணா நான் எங்க போனாலும் நல்லா இருப்பேன். என் உயிரை ரெண்டு தடவை காப்பாத்தியிருக்காரு, இவர் கூட போனா கண்டிப்பா நான் நல்லா இருப்பேன்னா” என்று சொன்னவள், கவனமாக கவிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளும் படி சொல்லச் சொன்னவள் அன்று இரவே தீபனோடு சென்னை புறப்பட்டாள்.

அவள் வீட்டிலிருந்து கிளம்பும் போது அவளது பாஸ்போர்ட் முதற்கொண்டு அனைத்தையும் எடுத்துக் கொடுத்து கண்ணீர் மல்க விடை கொடுத்தாள் கவி. அதே போல் தான் தமிழும் விழிகளில் வழியும் கண்ணீருடன் தங்கையை தீபனுடன் அனுப்பி வைத்தான்.

“10 நாட்களே பழகிய ஒருத்தன் கூட எந்த நம்பிக்கையில தமிழ், உன்னோட உடன் பிறவா தங்கச்சியை அனுப்பி வைக்கிற?” என்று தீபன் கேட்டான்.‌ அவனைப் பார்த்து சிரித்த தமிழ், “பார்த்த ஒரு நிமிஷத்துவையே ஒருத்தர் எப்படிப்பட்டவர்னு என்னால கணிக்க முடியும் தீபா. நீ நல்லவன்டா” என்றான் பெருமையாக.
அதற்குமேல் தங்கையின் மனதில் இருப்பதை மறைமுகமாக அறிந்து கொண்ட தமையன் தங்கையின் நல் வாழ்விற்காக அவளைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து நின்று வழியனுப்பி வைத்தான்.

இதோ வெகு நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்து சேர்ந்தனர் தீபன், அன்பு இருவரும்.‌ அடுத்து தன் வீட்டிற்கு செல்வதற்காக கார் ஒன்றை பிடித்து தன் வீட்டு முன்பாக வந்து இறங்கினான் தீபன். வீடு வேலையாகிக்கொண்டிருந்தது. குழப்பத்துடன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்திருக்க, அப்போது தான் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்த தகவலே அவனுக்கு தெரிந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ‘அப்பா, அம்மா, தங்கச்சி மூனு பேரும் எங்க போனாங்கன்னு தெரியலையே’ என்ற குழப்பத்தோடு நின்றிருந்தவன், ‘சரி பாப்பா ஒர்க் பண்ற ஹாஸ்பிடலுக்கு போய் பார்க்கலாம்’ என்று நினைத்து அன்புவை இழுத்துக்கொண்டு யாழினி பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.
மருத்துவமனை ரிசப்ஷனில் அவள் எங்கிருக்கிறாள் என்று கேடடு தெரிந்துகொண்டு அன்புவையும் இழுத்துக் கொண்டே சென்றான்.

உதய் தன் அறையில் அமர்ந்து முக்கியமான கோப்பு ஒன்றை அவன் பார்த்துக் கொண்டிருக்க அவன் அறியாமல் அவனை ரசித்துக்கொண்டிருந்தாள் யாழினி. ஆம் ரசித்துக் கொண்டு தான் இருந்தாள்..
காதலை தெரிவித்த பிறகும் அதன் பிறகும் அது பற்றி பேசாத அவனின் கண்ணியமும், தாலி கட்டிய மனைவியாக இருந்தாலும் தள்ளி நின்று தன் தேவைகளை பூர்த்தி செய்யும் அவன் குணமும் அவளை வெகுவாக ஈர்த்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தாய் தந்தையின் நினைவில் தான் கலங்கும் போதெல்லாம் ஒரு தாயாய் அரவணைத்து ஒரு சேயாய் தன்னைப் பார்த்துக் கொள்ளும் அந்த குணம் அவன் பால் அவள் மனதை ஈர்த்து இப்போது அவனை ரசிக்கவும் வைத்திருந்தது..

விழியகலாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், ஏதோ ஒரு குறுகுறுப்பில் அவன் தன்னை நிமிர்ந்து பார்த்ததையும் கவனிக்கவில்லை. குறுஞ்சிரிப்போடு தன் இருக்கையிலிருந்து எழுந்த உதய் அவள் அருகில் நெருங்கி நின்றதையும் கவனிக்கவில்லை. அவள் தன்னை ரசித்ததை எண்ணி மனதிற்குள் சிலாகித்தவன் சத்தமில்லாமல் எழுந்து அவள் பின்னே வந்து நின்றான். அவள் அப்போதும் கனவுலகில் இருப்பவள் போல் காலியாக இருந்த அவன் அமர்ந்திருந்த இருக்கையையே பார்த்திருக்க, சத்தமில்லாமல் அவள் பின்புறம் வந்து நின்றவன் அவள் தோள்பட்டை வளைவில் தன் தாடையை பதித்து, “என்ன மேடம் நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன். வச்ச கண்ணு வாங்காம என்னை பார்க்குறீங்க?” என்றான் அதீத காதல் மயக்கத்தில் குழைந்த குரலில்.

அவன் குரலில் தன்னிலைக்கு வந்தவள் அவன் சொன்னதில் நாணமுற தலை குனிந்து கொண்டவளாய்,
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல போங்க” என்று சிணுங்கியவளாய் இருக்கையிலிருந்து எழ முயன்ற வேளையில் தான் கதவைத் தட்டி விட்டு தீபன் அன்பு இருவரும் உள்ளே நுழைந்தார்கள். கதவு தட்டும் சட்டத்தில் சடாரென்று இருவரும் விலகி நின்றார்கள். நர்சை எதிர்பார்த்திருந்த இருவரும் தீபனைக் கண்டு இன்பமாக அதிர்ந்தனர். போட்டோவில் பார்த்திருந்ததால் உதய்கு தீபனை அடையாளம் தெரிந்திருந்தது.

அண்ணனைக் கண்டதும் ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டவள்,
“எங்கடா அண்ணா போன? உன்னைக் காணோம்னு எவ்வளவு பதறுனேன் தெரியுமா? ஆறுதலா இருக்க வேண்டிய நேரத்துல நீயும் இப்படி அம்போன்னு விட்டுட்டு போயிட்டியேடா?”என்றாள் விசும்பலுடன்.

‘தன் தங்கை எதுக்கு அழுகிறாள்’, என்று தெரியாமல் குழம்பியவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் முகத்தை பதற்றத்துடன் பார்த்தவன், “என்னடி சொல்ற நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியலம்மா. என்ன ஆச்சு? வீடு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு? அப்பா அம்மா எங்க?” என்று கேட்க.

இன்னும் யாழினியிடமிருந்து கதறல் ஒலி அதிகரித்தது. அதை தாங்க முடியாமல் அவள் அருகே வந்த உதய் அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், “ஒன்னும் இல்லம்மா ப்ளீஸ் அழாதடா. எனக்கு கஷ்டமா இருக்குமா எல்லாமே சரியாகிடும் அழாதமா” என்று ஆறுதல் கூறினான்.

தன் தங்கையை எவனோ ஒருவன் தன் முன்னே அணைத்திருப்பதைக் கண்டு கோபம் கொண்ட தீபன், “டேய் விடுடா என் தங்கச்சியை. யாருடா நீ , யாரை கேட்டு அவளைக ஹக் பண்ணுன?” என்று கோபப்பட,

வேகமாக தன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தவள், “அண்ணா அவர் என்னோட ஹஸ்பண்ட்ணா” என்றாள் அவசர அவசரமாக.
அதை கேட்டு உதயின் உதடுகள் புன்னகைத்தன.

“என்னது உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? எப்படி? எப்போ? ஏன் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை. அப்பா அம்மா எங்க‍, ஏன் அவங்களும் எங்கிட்ட சொல்லலை. அந்தளவுக்கு நான் வேண்டாதவனா போயிட்டேனா?” என்று மூச்சு விடாமல் கேள்வி கேட்டவனுக்கு ஏதோ தவறாக நடந்திருக்குமோ? என்று தோன்ற படபடப்பு அதிகமாகியது.

தன்னவளை அழைத்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்த உதய், தீபனையும் அதே போல் அமர வைத்து தண்ணீர் கொடுத்தான்‌‌. அதிர்வுடன் நின்றிருந்த அன்புவிடம், “ஒரு நிமிஷம் இங்க உட்காருங்க” என்று சொல்லி விட்டு தீபனிடம், “இங்க பாரு மச்சான் எங்களுக்கு கல்யாணமாகி 12 நாளுக்கு மேல ஆகுது. எப்படி ஆச்சு? ஏன் ஆச்சுன்னு தெளிவா நான் சொல்றேன்” என்ற உதய் நடந்த அனைத்தையும் சொல்ல அதிர்ச்சியில் உறைந்தான் தீபன்.

அவனது கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது. அவன் அழுவதை தற்போது தாங்கிக் கொள்ள முடியாமல் துடித்தது அன்பு தான். வேகமாக அவன் அருகில் சென்று அவன் கரங்களை ஆறுதலாக பற்றிக்கொண்டவள், “ப்ளீஸ் அழாதீங்க ஆம்பளைங்க கூடாது .நீங்களே இப்படி இடிஞ்சு போனா உங்க தங்கச்சிய யாரு ஆறுதல் படுத்துவா?” என்றிட,

கண்ணீரோடு அவளை நிமிர்ந்து பார்த்தவன்,“கடைசியா எங்க அப்பா, அம்மா முகத்தை கூட பார்க்கறதுக்கு எனக்கு குடுத்து வைக்கல. லண்டன் போகணும்னு ஆசைப்பட்டு ஏதேதோ காரணம் சொல்லி போனேன். அதனால கடைசியா அவங்களைப் பாக்க கூட முடியாம போச்சே” என்று சொல்லி அவள் இடையோடு கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

யாழினி, உதய் இருவரும் அவர்கள் இருந்த கோலத்தைப் பார்த்து விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் தீபனை சரி கட்டி சமாளித்து, தன் மாமனார் மாமியாருக்காக தாங்கள் வாங்கிய இடத்தில் கட்டியிருந்த சமாதிக்கு அழைத்துச் சென்றான் உதய். அவர்கள் இருவரது சமாதி முன்பும் அமர்ந்து அழுது கண்ணீர் வடித்த தீபன் சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னிலை மீண்டும் எழுந்து நின்றான்.


'நடந்ததை மாற்ற முடியாது. ஆனால் இதற்குப் பிறகு நடப்பதையாவது நல்லதா மாற்றலாமே' என்று எண்ணியவன் முதல் வேலையாக லண்டன் வேலையை ரிசைன் செய்வதாக மெயில் அனுப்பி விட்டு இங்கே இருக்கும் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்தான். அதை உதய்யிடம் சொல்ல, உதய்யும் அதற்கு சம்மதம் தெரிவித்தான்.

பின்பு உதய் தயக்கத்தோடு, “மச்சான் நீங்க வேணும்னா நம்ம வீட்டுக்கு வந்துடுறீங்களா? அங்க தனியா இருக்க வேணாமே” என்றிட,

வேண்டாம் என்று தலையசைத்த தீபன், “அம்மா அப்பா வாழ்ந்த வீட்டுலையே இருந்துக்குறேன் மச்சான்” என்றான்.

“ம்ம். ஆனா அந்த பொண்ணு யாருன்னு இப்ப வரைக்கும் நீங்க சொல்லவே இல்லையே மச்சான்" என்று உதய் தயக்கத்தோடு கேட்க, தங்கையும் தன்னை கேள்வியோடு பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த தீபன், “சொல்றேன்..” என்றவன் அங்கு நடந்த‌ அனைத்தையும் சொன்னான்.

அன்புவின் அருகில் சென்ற யாழினி,‌ “இதுக்கு மேல நீங்க எங்கையும் போக வேணாம் எங்களோடவே இருந்துடுறீங்களா?” என்று கேட்க, அவளோ தயக்கத்துடன் திரும்பி தீபனை பார்த்தாள். அவனுக்கு என்ன தோன்றியதோ,‌ “நம்மளை விட்டுட்டு அவ எங்கையும் போகமாட்டா. கொஞ்ச நாள் உங்களோட இருக்கட்டும் அதுக்கப்புறம் மத்ததை பேசிக்கலாம்” என்று எதையோ மென்று விழுங்குவது போல் சொன்னவன் அன்புவை அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். முக்கால் வாசி வேலை முடிவடைந்திருந்தது.

வீட்டிற்கு பெயிண்ட் மட்டும் அடிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க, முதலில் தன் தந்தை, தாயின் அறைக்கு சென்று அமர்ந்து சிறிது நேரம் கண்ணீர் வடித்தான். பின்பு தன் அறைக்கு வந்தவன் உதய்யிடம் சொன்னது போல் இலண்டன் வேலையை ரிசைன் செய்கிறேன் என்று மெயில் செய்து விட்டு விமலுக்கு அழைத்து, இங்கு நடந்ததை எல்லாம் சொன்னவன் அடுத்து தமிழுக்கும் அழைத்து அனைத்தையும் சொன்னான்.


மேலும் ஒரு வாரம் கடந்திருக்க அன்புச்செல்வன், அருளரசி இருவருக்கும் 16வது நாள் காரியம் செய்யப்பட்டது. அதில் மகனென்ற முறையில் கலந்து கொண்டு அனைத்து சடங்குகளையும் செய்த தீபனுக்கு தாய் தந்தையரின் நினைவில் மறு நாள் காய்ச்சலே வந்துவிட்டது.‌ அவனை உடனிருந்து பார்த்துக் கொண்டது அன்பு தான்.


பின்பு அவரவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப‌ ஒரு வாரம் ஆனது. ஆனால் எப்போதும் வாடிய முகத்துடன் இருக்கும் தீபனை கண்டு தாங்க முடியாத சுமேந்திரன் அவனும் தன் மகன் தான் என்று நினைத்து அனைவரையும் இரவு உணவிற்காக வெளியே அழைத்து சென்றவர் மெதுவாக பேச்சைத் துவங்கினார்.

“எல்லாரும் இப்படி இருக்கீங்க? எல்லாவற்றுக்கும் கடந்து வர பழகிக்கங்க. ஒரு சேஞ்சுக்காக டூர் மாதிரி எங்காவது போயிட்டு வரிங்களா?” என்றார்.

“இல்ல வேணா டேட். நான் இல்லாம எப்படி சமாளிப்பீங்க நெறைய வொர்க்ஸ், ஆப்ரேஷன்ஸ் இருக்கே” என்று சொன்னான் உதய்.

“அதெல்லாம் நான் சமாளிச்சுக்கறேன் நீங்க போயிட்டு வாங்க” என்றார். “இல்லப்பா அது வந்து” என்று ஏதோ சொல்ல வந்த தன் மகனை தடுத்து நிறுத்தியவர், “இன்னும் ரெண்டு நாளுல நீங்க கிளம்புறீங்க அதுக்குண்டான வேலையெல்லாம் பாருங்க”, என்று சொல்ல ஒரு மனதாக அனைவரும் சம்மதித்தனர்.

ஆனால் தீபனோ தான் வரவில்லை என்று சொல்ல அவன் வரவில்லை என்றால் தானும் வரவில்லை என்று அன்புவும் சொன்னாள். அதைக் கண்டு புன்னகைத்தவர், ‘எவ்வளவு ஒற்றுமையா இருக்காங்க டூர் போயிட்டு வரட்டும் இவங்களுக்கு மேரேஜ் பண்றதைப் பத்தி பேசணும்’ என்று நினைத்து கொண்டவர்,
“தீபனும் கண்டிப்பா அவங்க கூட போவான். நீ மட்டும் தனியா இருந்து என்ன பண்ண போற போயிட்டு வந்தா நல்லா இருக்கும்ல. சௌமியும் உங்க கூட வருவா, நான் இதைப் பத்தி அவங்க வீட்ல பேசுறேன்” என்று சொல்லவும் ஒரு மனதாக அனைவரும் சம்மதித்தனர். சொன்னது போல் சௌமியாவின் வீட்டில் பேசி சம்மதிக்க வைத்தார்.‌ இன்னும் இரு தினங்களில் கிளம்புவதால் அதற்குண்டான பேக்கிங் மற்றும் வேலையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைவரும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு மறு நாள் விடியலில் கிளம்ப முடிவு செய்தார்கள்.

அன்றைய இரவில் தங்கள் இருவருக்கும் தேவையான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் யாழினி.‌ கட்டிலில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் உதய். பின்பு மெல்ல பேச்சுக் கொடுத்தான்.

“கல்யாணம் முடிஞ்சு நாம என்னமோ ஹனிமூன் போற மாதிரி அப்பா ஒவ்வொன்னையும் பண்றாருமா”
என்றான்.

சட்டென்று அவன் புறம் திரும்பி புன்னகைத்தபடியே, “அப்டீன்னு கூட வச்சுக்கலாம்” என்று சொல்லி விட்டு துணி மடிப்பதில் கவனமாக, அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு துள்ளிக் குதித்து ஓடி வந்த உதய் அவளை பின்னிருந்து அணைத்தவாரே, “இப்ப நீ என்ன சொன்ன?” என்றான்.

“நான் எதுவும் சொல்லலையே?” என்று அவள் குறுஞ்சிரிப்புடன் சொன்னாள். ஆனால் அவனோ தான் கேட்ட செய்தி உண்மை தானா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மீண்டும் மீண்டும் அவளிடம் அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்க, அவளும் அதே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.‌

ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான உதய் அவள் கையிலிருந்த உடையை பிடுங்கி எறிந்தான். அவனை முறைத்தவாறு,
“இதெல்லாம் அநியாயங்க” என்றவளாய் சோபாவிற்கு கீழே கிடந்த அந்த உடையை எடுக்க அந்த மேப்பும் அதற்குள் இருந்தது. அதை அப்படியே வாங்கி சூட்கேசுக்குள் திணித்த உதய் அவளை வாரி அணைத்தவாறு கட்டிலில் விழுந்தான். அதன் பிறகு இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை ஆனால் இருவரும் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு சென்றிருந்தனர். அவன் அருகே இருக்கும் போது மட்டும் தன் கவலைகள் யாவும் மறந்து போவது போல் உணர்ந்தாள் யாழினி.

ஆறு பேரும் மறு நாள் விடியலில் உதய்காக அவன் தந்தை வாங்கிக் கொடுத்த ஐ லேண்டுக்கு கிளம்பினார்கள்.
முதலில் காரில் ஏறி கடற்கரை பகுதிக்கு வந்தவர்கள் அங்கிருந்து வாடகைக்குப் கப்பல் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். முதல் கடல் பயணம் என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி இருந்தாலும் ஒரு வித பயமும் இருந்தது. அந்தப் பயணம் தங்கள் வாழ்வை புரட்டிப் போட போகின்ற பயணம் என்பதை அங்கிருந்த எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை..


இவர்களது பயணம் கடற்கரையில் இருந்து நகர ஆரம்பித்த அடுத்த கணம் இங்கே ஆழ் கடல் ராஜ்ஜியத்தில் அதற்கு உண்டான பாதிப்புகள் தெரிய ஆரம்பித்தது.
மிருகதரனின் தேகம் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டு இருப்பது போல் மிகவும் உருக்குலைந்து போயிருந்தது அதற்கு காரணம் என்ன என்பதை அவர் மட்டுமே அறிவார். ஒரே இனமாக இருந்தாலும் தன் முன்னோர்களின் வம்சாவளியில் தற்போது பிறப்பு எடுத்திருக்கும் சங்கெழிலி முன்ஜென்மத்தில் செய்த செயலிற்கான பாதிப்புகள் நிகழ காத்திருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தாலும் அதை தடுக்க வழி அறியாது தடுமாறி நின்றார்.

அதே நேரம் கிட்டத்தட்ட தன் இனத்தை சேர்ந்த நால்வரின் உடலில் தன் ஆத்மாவை புகுத்தி உடன் பிறந்த அண்ணனை கொல்ல முயன்றிருந்தாள் சங்கெழிலி. ஏனெனில் அன்று யாழினியின் உயிரை சரியான நேரத்திற்கு காப்பாற்றியதற்கு தன் தங்கையின் உயிரைத் தானே எடுக்க தீர்மானித்தான் யாமீரன். அதற்காக அவளது மரண ரகசியத்தை அறிய முயன்றான்..


பூமியின் அடி ஆழத்தில் கருமை மட்டுமே வியாபித்திருக்கும் இருள் சூழ்ந்த பகுதியில் சீற்றத்துடன் இப்பவோ, அப்பவோ என்று வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை ஒன்றின் அருகில் ஆழக்குழி தோண்டி கடினமான ஓட்டினைக் கொண்ட முத்துச்சிற்பி ஒன்றில் வசிக்கும் சிறு அரிய வகை ஜந்து ஒன்றின் உடலுக்குள் தன் உயிரை மறைத்து மறைத்து வைத்திருக்கிறாள். அதை அவளையன்றி, இறையருளை அன்றி வேறு எவராலும் அறிந்து கொள்ள இயலாத ஒன்று. ஏன் மிருகதரனினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேளை எதிர் வரும் ஆபத்துக்களை தடுக்க நினைத்தால், அதைக் கண்டு பிடித்து அந்த உயிரினத்தைக் கொன்று விட்டால், இங்கே எளிதாக சங்கெழிலியைக் கொன்றிட முடியும் என்பதை மிருகதரனின் வாயிலாக உணர்ந்தவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.


அந்த ரகசியத்தை அறிந்து புறப்பட்டவனை பாதி வழியிலேயே ஒருவர் மாற்றி ஒருவராக நால்வர் தன்னை கொல்ல வருவதை உணர்ந்து எப்படியோ மூவரிடம் தப்பியவன் நான்காம் ஆளிடம் மாட்டிக்கொண்டான். அவர்கள் கையால் தன் வால் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கிறான்.

அவனே அறியாத ஒன்று இதை செய்தது தன் தங்கை தான் என்பதைத்தான். ஏனெனில் தங்கை தன்னை பின் தொடர கூடாது என்பதற்காக மிருகதரனிடம் அனுமதி பெற்று அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த இடத்திற்கு சென்று அவர்கள் வணங்கும் இறையருளை வணங்கினான். பின்பு அவர்களது இனம் தோன்றியதில் இருந்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அரிய வகை உயிரினத்திடம் நிலைமையைக் கூறி அதன் உமிழ் நீரைக் கடனாக வாங்கிக் கொண்டு வந்திருந்தான். ஏனெனில் அதன் உமிழ்நீர் சற்று மந்திர சக்தியைக் கொண்டது.‌ அது எத்தகைய சக்தியையும் சில தினங்களுக்கு மதிப்பிழக்கச் செய்ய இயலும் என்பதால் அதை வாங்கிக் கொண்டு வந்தவன் எப்படியோ தங்கையிடம் பேசுவது போல் அவளருகே சென்று அவளது தேகமெங்கும் உமிழ்நீரை பூசி விட்டான். அடுத்த கணம் அவளை ஏதோ ஒன்று கட்டிப்போட்டது போலிருந்தது. அவளால் எங்கையும் நகர முடியவில்லை.

அதனால் தான் சங்கிலியால் தன் தமயனை பின் தொடர முடியவில்லை. அதனால் தான் தன் ஆயுட்காலம் குறையும் என்பது தெரிந்தே தன் உடலிலிருந்து ஆத்மாவை வெளியேற்றியவள், தேர்ந்தெடுத்த நால்வரின் உடலில் புகுத்தி தன் அண்ணனை தாக்கி மாய்க்க முயன்றாள்.
அவளது துர்திஷ்டமோ என்னவோ யாமீரன் உயிர் பிழைத்து விட்டான். வால் துண்டிக்கப்பட்டதால் அவனால் அங்கிருந்து எழுந்து நீந்தி செல்ல முடியாததால் தீவிர சிகிச்சையில் உள்ளான்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில்தான் அவனைத் தேடி வந்தான் துங்கீசன்.
“நீ என்னிடம் ஏதேனும் உரையாட வேண்டுமா துங்கீசா? என்னைத் தேடி வந்திருக்கிறாயே?” என்று யாமீரன் வினவிட,

“உன்னிடம் சற்று உரையாட வேண்டும் யாமீரனே! ஆதலால் தான் வந்தேன். உம் தங்கையைப் பற்றிய தகவல்கள் சிலவற்றை சேகரித்து வருமாறு அரசர் அனுப்பி வைத்தார்" என்றவாறு இருவரும் தங்களுக்குள் எதையோ பேசி ஆராய்ந்து கொண்டிருக்கும் போது அங்கே வந்தாள் அகவழகி. அவளைக் கண்டதும் அகமும் முகமும் மலர,
“வாருங்கள் இளவரசி என்ன என்னைக் காண இங்கேயே வந்திருக்கிறீர்கள்? நான் இங்கிருக்கிறேனென்று தங்களுக்கு யார் கூறியது?” என்று கூறினான் துங்கீசன்.

அவனைப் பார்த்து முறைத்தவளோ, “நான் ஒன்றும் தங்களைக் காண வரவில்லை. நான் யாமீரன் அவர்களை காண வந்தேன்” என்றவள் இதழ் சுழிப்புடன் பதிலுரைத்தாள்.

“அப்படியா! தாங்கள் என்னைக் காண வரவில்லையா, என்ன!”

“நான் தங்களைக் காண வரவில்லையென்று கூறி விட்டேனே பிறகேன் அதையே மீண்டும் கேட்கிறீர்கள். நான் தங்களைக் காண வரவில்லை போதுமா!” என்றுரைத்தவள் யாமீரனிடம்,
“யாமீரரே! எனக்கு தங்களிடமிருந்து ஒரு தகவல் வேண்டும்” என்றிட‌,

“என்ன தகவல் தேவை இளவரசி”

“எனக்கு சற்று அவசியமானத் தேவைகள் உள்ளன. நான் மேற்பரப்பிற்கு செல்ல வேண்டும் தாங்கள் துணையாக வருவீர்களாவென்று கேட்டு விட்டு செல்லலாமென வந்தேன்” என்று கூறியவளின் விழிகள் துங்கீசனையே பார்த்திருந்தது.

அதைக் கண்ட யாமீரனுக்கு நன்றாக புரிந்து விட்டது. இருவருள்ளும் நிகழும் காதல் பரிமாற்றத்தைப் பற்றி. அதனால்,
“மன்னித்திடுங்கள் இளவரசி. எனக்கு உடல் நிலை சரியில்லை. ஆதலால், என் நண்பர் துங்கீசன் வேண்டுமானால் துணைக்கு வருவார்” என்றுரைத்தவன் துங்கீசனிடம், “நீ செல்வாய் தானே துங்கீசா?” என்று வினவியதும் அவனும் சரியென்று தலை அசைத்தான்.

அவர்கள் இருவரும் அதே தீவிற்கு வந்திருந்தார்கள்.
“ஏன் என்னை இங்கு அழைத்து வந்தீர்கள்?” என்று வினவினான் அவன்.

“நான் ஒன்றும் தங்களை அழைத்து வரவில்லை. எனக்கு இங்கே வர வேண்டிய அவசியம் இருந்தது. ஆதலால் உதவிக்கு யாமீரரை அழைத்து வரலாமென்று எண்ணியிருந்தேன். நான் அவரிடம் உதவி கேட்டேன், அவர் தங்களை அழைத்துச் செல்லச் சொன்னார் அவ்வளவு தானே தவிர இதில் நான் வேண்டுமென்றே தங்களை ஒன்றும் அழைத்து வரவில்லை” என்று குறு நகையை மறைத்துக்கொண்டு கூறினாள்.

“நீங்கள் கூறியதை அப்படியே நான் நம்பிவிட்டேனென்றே வைத்துக்கொள்ளுங்கள். இங்கே தங்களுக்கு என்ன வேலை இருந்து விடப் போகிறது? அதுவும் தங்களது தோழிகள் இல்லாத நிலையில்?”

“தோழிகள், நம் இனத்தோர் அனைவரையும் வைத்துக்கொண்டா மனம் கவர்ந்தவனுடன் கொஞ்சி மகிழ முடியும். இதைக்கூட புரிந்து கொள்ள முடியாத தாங்கள் எப்படித்தான் ஒரு பெண்ணை நேசித்தீர்களோ? இப்படிப்பட்ட தாங்கள் எப்படி என்னை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட போகிறீர்களோ?” என்று அவள் கூறிய அடுத்த கணம் அவள் உரைத்த வார்த்தைகளில் இருந்த உண்மை அவனை மகிழ்ச்சியடைய செய்வதற்கு பதிலாக சொல்ல முடியாத ஒரு உணர்வு பேரலைக்குள் சிக்க வைத்திருந்தது. அதே உணர்வுகளை முகத்தில் சுமந்தவாறு அவளையே பார்த்திருந்தவன், அவள் ஓடவும் தானும் அவள் பின்னே ஓடினான்.
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -28


அதன் பிறகு இருவரும் மனம் விட்டு உரையாடி பொழுதை இன்பமாக கழித்தவர்கள், கரம் கோர்த்த நிலையில் நீந்தியவாறு ஆழ் கடலுக்குள் வந்து சேர்ந்தனர்.

இதோ உதய், யாழினி, நிகில், சௌமி, தீபன், அன்பு மலர் அனைவரும் கிளம்பிய கப்பலானது பரந்து விரிந்திருக்கும் கடலில் பயணிக்கத் தொடங்கி இருந்தது. அனைவருக்கும் சற்று பயம் இருந்தாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிறைந்திருக்கும் நீரை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் ஆங்காங்கே சலனமில்லாமல் இருக்கும் கடல் நீரில் தன் கதிர்களை பாய்ச்சி மினுமினுப்பை தோற்றுவித்திடும் சூரியனின் கதிர்களையும், அவற்றின் விளைவாக ஏற்படும் மாற்றங்களையும் கண்களால் கண்டு களித்தவர்கள் அதை புகைப்படக் கருவியினுள்ளும் அடைத்துக் கொண்டனர்.


அதிகாலையில் கிளம்பியவர்கள், மதிய வேளையில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தங்களது அறைக்குள் சென்று அடைந்தனர். உதய், யாழினி இருவருக்கும் ஒரு அறையும் மற்ற நால்வருக்கும் தனித்தனி அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

கூடவே கீழ்தளத்தில் வெயில் படாத இடத்தில் அனைவரும் அமர்ந்து பேசுவதற்கான இடமும் ஒதுக்கப்பட்டிருக்க அங்கே இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. அறையில் அடைந்து கிடக்கப் பிடிக்காமல் சிறிது நேரத்திலேயே குளித்து முடித்து உணவருந்தி விட்டு அங்கு வந்து அமர்ந்தாள் அன்பு.‌ அவள் வந்த சிறிது நேரத்தில் தீபனும் வந்து அமர்ந்தான்.‌ இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு தீபனே பேச்சை தொடங்கி வைத்தான்.
“அன்னைக்கு எதுக்காக நதியில குதிச்சு தற்கொலைக்கு முயற்சி பண்ணுனனு நான் தெரிஞ்சுக்கலாமா? என் வீட்டுக்கு பக்கத்து வீட்ல தான் நீ இருந்தன்னு தமிழ் போன்ல சொன்னான். அதை வச்சு பார்க்கும் போது அந்த வீட்டிலிருந்த ஒரு பொண்ணுக்கு ஒரு பெரியவங்க முதுகுல சூடு வச்சதை நான் இலண்டன் வந்தப்ப பார்த்தேன்.‌என்னோட கெஸ் கரெக்ட்டா இருந்தா அது நீயா தான் இருக்கணும். சொல்லு எதுக்காக தற்கொலை பண்ணிக்க போனொ? அவங்க கொடுமை படுத்துனதுக்காகவா இல்ல வேற ஏதாவது காரணத்துக்காகவா?”

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தவள் சிறிது நேரம் கழித்து மெதுவாக,‌ “கொடுமை படுத்துனாங்கன்னு சொல்ல முடியாது. ஏதோ ஒரு விதத்துல கவியக்காவோட அம்மாவுக்கு என்னைப் பிடிக்கல.‌ அதை அவங்க கோவமா எம்மேல காட்டுறாங்க. அதை நான் பொறுத்துப் போறதுக்கு காரணம்,‌ ரத்த சொந்தமா இல்லைன்னாலும் இப்போதைக்கு சொந்தம்னு சொல்லிக்கிறதுக்கு அவங்க மட்டும் தான் இருக்காங்க வேற யாரும் இல்ல. அதனால தானே தவிர வேற எந்த காரணமும் கிடையாது. ஆனா கவியக்காவோட அம்மாவோட சொந்தக்காரர் ஒருத்தர் பத்திரிக்கை வைக்க வந்தாரு. அவங்க வந்த நேரம் வீட்ல வேற யாரும் இல்லை.‌ அவரு எங்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணுனாரு, நான் அவரை தலையில் அடிச்சுட்டு ஓடி ஒளிஞ்சுக்கிட்டேன். ஆனா கவியக்காவோட அம்மா வந்ததும் தான் எனக்கே தெரியும், அந்த பெரியவருக்குத் தான் என்னை கல்யாணம் பண்ணி குடுக்க போறாங்கன்னு. அதை என்னால தாங்கிக்க முடியல, அவரோட பார்வையே சரியில்லை ரொம்ப மோசமானவனு தோணுச்சு. இதுக்கு மேல யாருக்கும் பாரமா இருக்க வேண்டாம்னு தான் தற்கொலை செஞ்சுக்க போனேன். ஆனா நீங்க காப்பாத்திட்டிங்க” என்றாள்.

அதை கேட்டு தீபனுக்கு ரத்தம் கொதித்தது. என்னைக்கா இருந்தாலும் அந்த பொம்பளையை நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்கணும்னு மனதில் நினைத்தவனாய்,
“உங்களுக்கு அங்க இருக்க பிடிக்கலன்னா தமிழ் கிட்ட சொல்லியிருந்தா அவன் கூட்டிட்டு போயிருப்பானே! அதை விட்டுட்டு எதுக்கு சாக போனீங்க?” என்று கோபம் கலந்த குரலில் கேட்டான்.

“எங்க அம்மா, அப்பாவே என்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் சுத்தமா எனக்கு வாழவே பிடிக்கல அதனால தான் இந்த முடிவெடுத்தேன். ஆனா நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகத்துல வாழ்ந்து கஷ்டத்தை அனுபவிக்கணும்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான் போல அதான் உங்க மூலமா என்னைக் காப்பாத்த வச்சுட்டான்” என்று சொன்னவள் சத்தமின்றி குலுங்கி அழுதாள். அவள் அழுவதைப் பார்த்து இவனுக்குத் தான் ஏன்டா இந்த கேள்விய கேட்டோம் என்றானது.


பின் அழுதழுது சோர்வடைந்த அன்பு தன்னறைக்கு சென்று விட தீபன் தான் வெகு நேரம் எதையோ யோசித்தவாறு அமர்ந்திருந்தான். நேரம் அப்படியே கடந்தது. அந்தி சாயும் வேளையில் தான் அனைவரும் வெளியே வந்தார்கள். பகலவன் அவன் தன் பணியை முடித்துக்கொண்டு ஓங்கி வளர்ந்த மலை மலை முகடுகளில் தஞ்சம் அடைந்து விட வெண்ணிலவு பெண்ணவளோ! நட்சத்திர தோழிகளின் படை சூழ வானில் உலா வர ஆரம்பித்தாள்.

இரவின் ஏகாந்த வேளையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அன்பு சமைத்த உணவை உண்டனர். பொதுவாகவே நன்றாக சமைக்கத் தெரிந்தது அன்பு தான் என்பதால் அவளே சமைத்திருந்தாள். பேசி சிரித்தவாறு உணவினை உண்டு முடித்தவர்கள் கப்பலை இயக்குபவருக்கும் கொடுத்து விட்டு அவரவர் தங்களது அறையில் தஞ்சம் புகுந்தனர்.

அனைத்து விதமான வசதிகளும் கொண்ட சொகுசு கப்பலானது அசைந்தாடியவாறு ஆர்ப்பரித்திடாமல் அடங்கி அமைதியாக இருக்கும் கடலின் மீது ஒய்யாரமாக பயணித்துக் கொண்டிருந்தது. அப்படியே சென்று இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் நள்ளிரவு வேளை மணி பனிரெண்டான அடுத்த கணம் மூன்று தினங்களாக தன் தமையனது கைங்கரியத்தால் மந்திர சிறைக்குள் மாட்டிக் கொண்டு வேறெங்கும் நகர முடியாமல் இருந்த சங்கெழிலியை சுற்றியிருந்த மந்திரக் கட்டு அவிழ்ந்திட அவள் விடுதலைப் பெற்றாள்.

அடுத்த கணமே அவளது சிந்தையில், அவள் யாரை அடைய வேண்டும் என்று ஜென்ம ஜென்மமாய் நினைத்தாளோ அவன் கடலலையின் மீது இருப்பது தெரிய வர அடுத்த கணம் அங்கே கிளம்பி இருந்தாள். கடலில் நீந்த ஆரம்பித்தவள் ஏதோ தோன்ற சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் திரும்பி மிருகதரன் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவரை விழி கொட்டாது பார்த்தவள், “எந்தன் சுயநலத்திற்காக பெற்ற தந்தையையே கொன்ற என்னால் சிறிய தந்தையான தங்களை கொன்றிட எவ்வளவு நேரம் ஆகும். இது தெரியாமல் எனக்கெதிராக காய் நகர்த்தி கொண்டிருக்கிறீர்கள் சிறிய தந்தையே? அன்று துங்கீசன், அகவழகியை உங்களிடம் அழைத்து வரும் போது நானும் அவர்களுடன் வந்தேன். அதைத் தாங்களும் சரி‍, அவர்களும் சரி அறிந்திருக்கவில்லை. அப்போதே நான் அனைத்தையும் அறிந்து கொண்டேன். இருந்தும் நான் அமைதி காத்ததற்கு காரணம் இப்போது அமைந்த இந்த தருணம் தான். என்னவன், எனக்கானவன் என்னிடம் தேடி புறப்பட்டு வரும் வேளையில் தான் என் பலம் அதிகரித்திட வேண்டும் . அப்பொழுது தான் அவனை என்னால் அடைந்திட முடியும், அதே நேரம் எனக்கு எதிரானவர்களை அழித்திடவும் முடியும் ” என்று கூறியவள் நொடியும் தாமதிக்காமல் அவரது செங்கோலை எடுத்து அவரது நெஞ்சுப் பகுதியில் ஆழமாக குத்தினாள். பிறகு அவரது வயிற்றுப் பகுதியில் சொருகினாள்.‌ இறுதியாக அவரது தொண்டைக்குழிக்குள் செங்கோலை குத்தி வெளியே எடுத்த அடுத்த கணம் செங்கோலில் வைரம் போல் உருண்டையாய் ஒன்று தோன்றியது. கண்ணாடிக் கல்லை ஒத்திருந்த அதைக் கண்டு அவளது இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

“தங்களிடமிருந்த மொத்த சக்திகளையும் எடுத்துவிட்டேன் சிறிய தந்தையே! ஆழ்ந்த துயில் கொள்ளுங்கள் உங்களது துணைக்கு மகளையும், மருமகனையும், கூடவே இந்த வம்சத்தையேwaaz அனுப்பி வைக்கிறேன். கண் மூடி துயில் கொள்ளுங்கள்” என்றுரைத்து விட்டு அந்த கண்ணாடி கல் போன்று இருந்ததை தன் தொண்டையில் வைத்து அழுத்த அது சத்தம் இல்லாமல் அவள் தொண்டைக்குழிக்குள் சென்று சேகரமாகியது.

அவள் தேகத்தினுள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ ஏற்கனவே அவளுக்கு இருந்த வால் பகுதி இன்னும் சற்று பெரிதாக மாறியது. கூடவே அவள் கரங்கள் இரண்டும் மாறி அவள் தேகத்தோடு ஒன்றியது‌. அவள் முகம் மீனைப்போல் விகாரமாக மாறியது.‌ கூடவே அவள் முதுகுப்பகுதியில் செதில் செதிலாக முட்கள் தோன்றி அதனிடையே பறப்பதற்கு பயன்படும் இறக்கைகள் போன்று இரு புறமும் பெரிதாக வளர்ந்தன. கூடவே அவள் விழிகள் இரண்டும் பெரிதாகி பழுப்பு நிறத்தில் மாறின. அவள் இதழ்களும் உருமாறிட, அவ்விடத்தில் நேர்த்தியின்றி முன்னும் பின்னும் முரணாக அமைந்த சற்று பெரிய பற்கள் உருவாகியிருந்தன.‌

பார்ப்பதற்கு சுறா மீனின் வடிவத்தை ஒத்திருந்தாள். ஆனால் மீன் பாதியும், பறவை பாதியுமாக இருப்பது போல் சற்று வித்தியாசமான தோற்றத்தோடு உருமாறி இருந்தாள்.‌ தன் தோற்றம் மாறுபடுகிறது, தன்னுள் ஏதோ மாற்றம் நிகழ்கிறது என்பதை உணர்ந்தவள் எதையோ சாதித்த திருப்தியில் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

தன் சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தன் மகள் அகவழகியுள் செலுத்தியிருந்தார் மிருகதரன். ஆனால் அவளோ,‌“உங்கள் சக்தி உங்களிடம் தான் இருக்க வேண்டும் தந்தையே!” என்று கூறி தன்னிடம் இருந்த சக்திகள் அனைத்தையும் அவர் உடலில் சேர்ப்பித்ததன் விளைவு அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.‌ அதாவது அளவுக்கு அதிகமான சக்தியை உள்வாங்கியதால் அவரது தேகம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.


இத்தனை தினங்கள் யாமீரனின் செயலால் மந்திர கட்டுக்குள் இருந்த சங்கெழிலியால் அதை கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது கட்டில் இருந்து வெளியே வந்த மறு கணம் அவளால் அதை உணர முடிந்தது. அதனால் தான் அவரை எந்த இடத்தில் கொன்றால் எப்படி அவரிடம் இருந்து அதை பெற முடியும் என்பதை தெரிந்து கொண்டு, அவரை கொன்று அவரிடமிருந்து பெற்றவற்றை தனக்குள் செலுத்தி புதியதொரு தோற்றத்துடன் தீபனைக் காண ஆவல் மேலோங்க கிளம்பி விட்டாள்.

நடு இரவு ..

மெல்ல மெல்ல அசைந்து சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். அவரவர் அவரவர் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.‌ கணவனின் மார்பில் தலை வைத்து தன்னை மறந்து உறங்கி கொண்டு இருந்தாள் யாழினி. அதே நேரம் அவளருகே சலனமின்றி படுத்திருந்தான் உதய். திடீரென்று அவனுக்குள் ஏதேதோ மாற்றங்கள் அவன் சிந்தையில் ஏதேதோ காட்சிகள் பிம்பங்களாக விரிந்தன.

திடமான பொருட்களை கூட ஒரே அலையில் இழுத்து செல்லும் ஆழ்கடலின் பேரமைதியை விட அத்தனை அமைதியாக இருந்தது அந்த இடம். திரும்பும் திசையெங்கும் மனித தலைகளே நிறைந்திருக்க, அந்த காட்டின் மத்தியில் ஒரு பெரும் மக்கள் கூட்டமே கூடியிருந்தது.

சற்றும் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நின்றிருந்த அந்த மக்கள் அனைவரும், தங்களுக்கு முன்னே வெட்ட வெளியாக இருந்த இடத்தை மட்டுமே வெறித்துக் கொண்டு நின்றிருந்தனர். அவர்களது விழிகள் பார்த்த இடத்தில் பத்து பேர் ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் நின்றிருக்க அவர்களின் மத்தியில் சுய நினைவற்ற நிலையில் கிடந்தாள் அவள்.. உடலெங்கும் சிறிதும், பெரிதுமாய் காயங்களே நிறைந்திருக்க‍‍, அவளது தலைமுடி சற்று வித்தியாசமான நிறத்தில் நீளமாக இருக்க, அதே நேரம் அது அவளது உடலை சுற்றி வளைத்திருந்தது. கூடவே அவளது உடலெங்கும் வித்யாசமான முறையில் செதில் செதிலாகவும் இருந்தது. அவளது உடலின் நிறம் நீல நிறத்தை ஒத்திருக்க, அதன் மீது அங்காங்கே பச்சை நிறத்தில் வைரங்களைப் பதித்து வைத்தது போல் மினுமினுப்பான செதில்கள் அத்தனை அழகாக அவள் உடலை கவ்வியிருந்தன..
அவளைச் சுற்றிய அரணாய் நின்றிந்த பத்து பேரும் அவளைப் பார்த்து முதலில் மிரண்டாலும், அவளிடம் அசைவில்லை என்றதும் நீண்ட குத்தீட்டிக் கொண்டு அவளுடலை குத்தி குப்புறக்கிடந்தவளை திருப்பி போட்டு அவளை ஆராய்ந்தனர். அவளது முகம் அச்சு அசலாக மனித முகத்தைப் போலவே இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றனர்.

அவள் முகம் மனித முகம் போல் இருந்தாலும், அவளது காதுமடல்கள் செதில் போலவும், விழிகள் மீனைப் போன்றும் இருக்க, அது அவளை சற்று விகாரமாக காட்டியது. மேலும் அவளது தலையில் மணி மகுடமாய் ஒரு கிரீடமொன்று முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது..
அவளது கழுத்தில் நவமணி மாலைகள் தடம்புரண்டிட, அதற்கு கீழேயான மெல்லிய பாகங்கள் யாவும் மெல்லிய அதே நேரம் புதிய வகை தோலினால் மூடப்பட்டிருந்தன. மேலும் வயிற்றுப் பகுதிக்குக் கீழே அவளுடல் இரண்டாகப் பிளந்து ஒரு பகுதி செதில் போலவும், மறு பகுதி கால்கள் போன்றும் நீண்டிருக்க இறுதியில், இரு பிளவுகளும் தட்டையாக நீண்டு பின் ஒன்றிணைந்திருந்தன.

இது என்ன விசித்திரமான பிராணி என்றெண்ணத்துடன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கையில் கூர்மையான ஆயுதத்தை ஏந்தியவாறு வேகமாக அவர்கள் இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தான் ஒருவன்‌. அவன் முகமெங்கும் கோபத்தில் செக்கச்செவேலென சிவந்திருக்க, உருண்டு திரண்டு புடைத்து திமிறிக்கொண்டு நின்றிருந்த புஜங்களின் ஆளுமையும்,‌ அவன் ஓடி வந்த வேகமுமே சொல்லாமல் சொன்னது எதிர் வரும் எவரையும் அவன் நொடியில் வெட்டி சாய்த்து விடுவானென்று. அவன் வேகத்திற்கும், கோபத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல், அவனருகே மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்ணொருத்தி தன்னால் முடிந்த மட்டும் எட்டி நடை போட்டவாறு வேக வேகமாக மற்றவர்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தும் நோக்கோடு நடுப்பகுதியில் வட்ட வடிவில் நின்ற அந்த 10 பேரும் அவர்களிருவரையும் சுற்றி வளைத்திட, அவர்கள் அனைவரையும் ஒரே திமிரலில் உதறிக் கீழே தள்ளியவன், நொடியில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு மயக்க நிலையில் கிடந்த அந்த விசித்திர பெண்ணைப் நெருங்கி அவள் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்தான்..

அக்காட்சிகளைக் கண்ட அடுத்த கணம் விருட்டென்று எழுந்து அமர்ந்தான் உதய். அவன் எழுந்ததும் யாழினியும் பதறித் துடித்து எழுந்து அமர, “ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல நீ தூங்குமா” என்று அவளைத் தட்டிக்கொடுத்து உறங்க வைத்தவனுக்கு உறக்கம் தான் எட்டாக்கனியாக சென்றிருந்தது. காரணம் அவன் கண்ட காட்சிகள் தான். சலனமின்றி கிடைத்த அந்த விசித்திர உருவம் யாழினியின் முகத்தைப் போலிருந்தது. அதே நேரம் அவளது கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைக்கும் இளைஞனின் முகம் இவனைப் போல் இருந்தது.‌ அதாவது தன்னவளைத் தானே கொள்வது போல் இருந்தது அக்காட்சி. கூடவே அவன் அருகில் அழுதவாறு நின்றிருந்தது அன்புமலர் தான்.‌ ஏன் தனக்கு இவ்வாறு தோன்றியது என்று தெரியாமல் அவன் குழப்பத்துடன் அமர்ந்திருக்க அதே நேரம் கப்பல் தள்ளாட ஆரம்பித்தது...


இதில் அனைவரும் பதறி வெளியே எழுந்து ஓடிவந்து பார்த்தவர்களின் முன்பு ராட்சச உருவமாய் நின்றிருந்தாள் சங்கெழிலி.
அல்லது அந்த உருவத்தை கண்டு பெண்கள் அனைவரும் அஞ்சி தத்தமது இணைகளின் பின்னே தஞ்சமடைந்திட, ஆண்களுக்குமே அதைக் கண்டு கலக்கம் ஏற்பட்டது. ஆனால் அவளது விழிகளோ தீபனை மட்டுமே கண்டு கொண்டிருந்தது. தீபன் பின்னால் நின்றிருந்த அன்புவை ஒருகணம் அனலென முறைத்து விட்டு தீபனை நோக்கி நீட்டினாள் தன் இறக்கைகளை. இறக்கையிலிருந்து பிரிந்து வந்த இறகு ஒன்று தீபனை தீண்டிய மறுகணம் அவன் மூர்ச்சையாகிக் கீழே சரிய அவனை தாங்கிய அன்புமலர்,
“ஐயோ என்ன ஆச்சு உங்களுக்கு? எந்திரிங்க” என்றவாறு கதறத் தொடங்கினாள்..

அவன் மூர்ச்சையாகியதும், அவன் உடலிலிருந்து பிரிந்து ஆகாயத்தில் மிதந்தது தீபனின் ஆத்மா. அதை அங்கிருந்த அனைவராலும் காண முடிந்தது. அக்காட்சியைக் கண்டு திக்பிரமை பிடித்தது போல் அனைவரும் நின்றிருக்க, அன்புமலரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனது ஆத்மா அங்கிருந்து நகர முயல,
“அண்ணா..” என்று அதற்குள் அழைத்திருந்தாள் யாழினி. தங்கையின் குரல் கேட்டு அவளைத் திரும்பி பார்த்தது தீபனது ஆத்மா. ஆனால் அதுவால் மீண்டும் உடலை சென்று சேர முடியவில்லை. சலனமற்றுக் கிடந்த உடலைத் தீண்டும் போது தீப்பற்றி எரிவது போல் வலித்தது அவனது ஆத்மாவுக்கு.

என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புடன் காற்றில் மிதந்தது தீபனின் ஆத்மா. அதைக் கண்டு கொக்கரித்து சிரித்த சங்கெழிலி, “என்னை மீறி இங்கு எதுவும் நடந்திடாது.‌ ஜென்மங்கள் கடந்து காத்திருக்கும் என் நேசத்தை விட எந்த விதத்தில் உங்களது நேசம் உயர்ந்ததென்று இருவரும் ஒன்றிணைய முயன்றீர்கள்.
என் தேகமதில் உயிர் நிலைத்திருக்கும் வரை இனிமேல் தங்களால் இணையவும் முடியாது இவ்வுலகில் உயிர் கொண்டு வாழவும் முடியாது..” என்று ஆங்காரத்தோடு கர்ஜித்தவள் அடுத்த நிமிடம் தன் உருவத்தை மாற்றி சாதாரணமாக மாறியவள் கப்பலின் முனையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள்.‌ அதில் பாதங்களை அழுத்தமாக பதித்து கரங்களை நீட்டி தீபனின் உடலை தாங்கியவாறு அழுது கொண்டிருந்த அன்புவின் முடிக்கற்றைகளை கொத்தாகப் பற்றி எழுப்பி நிற்க வைத்தாள்.
“ஏன்டி உன்னைய கொல்வதற்கு எத்தனை முறை தான் முயற்சி செய்வது. பதில் கூறுடி, எத்தனை முறை தான் உன்னைக் கொல்வதற்கு நான் முயற்சி செய்வது. என் முயற்சிகள் யாவும் தோல்வியைத்தான் சந்தித்தன. உங்கள் இருவரையும் ஒன்றாக காணும் நேரம் என் உள்ளம் எப்படி பதை பதைத்தது. எத்தனை வெறி கொண்டதென்று எனக்குத்தானே தெரியும்.
அதென்ன அந்த ஜென்மத்தில் சேராது உயிரைத் துறந்தவர்கள் இந்த ஜென்மத்தில் மட்டும் ஒன்று சேர்வது? அப்போதும் சேராமல் மடிந்து போனீர்கள் தானே, அதே போல் இப்பொழுதும் சேராமலேயே மடிந்து போக வேண்டியது தானே!

நான் நேசித்தவருடன் வாழ்வதற்கு கொடுப்பினை இல்லையென்றால், அவரும் தான் நேசித்த பெண்ணுடன் வாழக்கூடாது. நான் இருக்கும் வரை வாழவும் விடவும் மாட்டேன்.
பார்த்தாயா! உன் விழிகளுக்கு முன்பாகவே அவர் உயிரைத் தேகத்தில் இருந்து பிரித்தெடுத்து விட்டேன். முடிந்தால் மீண்டும் அதை உடலில் சேர்த்து அவருடன் வாழ்ந்து கொள்ளடி” என்று எகத்தாளமாக கூறினாள்.

அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் குழம்பியவாறு நின்றிருக்க, அதே நேரம் உதய்யின் செவியினுள் ஒலித்தது அசரீரியின் குரல்.
“மிகிரா! இது வேடிக்கை பார்க்கும் தருணம் அன்று. மாண்டு போன உந்தன் வம்சத்தை காப்பாயோ இல்லையோ? ஆனால் கடந்து போன ஜென்மத்தில் உன் தங்கையாய் பிறந்தவளின் வாழ்வை காக்க வேணும் நீ இப்பொழுது கடந்த கால ஜென்ம நினைவுகள் பெற்றாக வேண்டியது கட்டாயமாகும். உனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது, அந்த அநீதிக்கு கண்டிப்பாக பழி வாங்க வேண்டுமெனில் உன் கடந்த கால ஜென்மங்கள் நினைவுக்கு வந்தே தீர வேண்டும். அதற்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், உந்தன் ஆடைகளுக்குள் இருக்கும் தாளை கரங்களால் தொட்ட மறுகணம் உன் நினைவுகள் உனக்கு வந்து சேரும். அதன் பின்னர் நடப்பவை அனைத்தும் இறைவன் சித்தம்” என்றதோடு அக்குரல் மறைந்திருந்தது. இதை யார் சொன்னது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த உதய் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்து தன்னறைக்குள் நுழைந்து உடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்களது பெட்டியை எடுத்து அனைத்து உடைகளையும் உதறிய போது கீழே விழுந்தது அந்த மேப்.

அதை குழப்பத்துடன் கையில் எடுத்துப் எடுத்துப் பார்த்தான். அடுத்த கணம் அதனுள்ளேயே செல்வது போல உணர்ந்தான். அந்த மேப்பின் மத்தியில் அவர்கள் சென்று சேர வேண்டிய இடமென்று குறிப்பிடப்பட்டிருந்த இடத்தை அவனது விரல்கள் தொட்ட மறுகணம் கிறுகிறுவென்று அவனுக்கு தலையை சுற்றிக் கொண்டு வர பின்னந்தலையில் யாரோ பலமாக தாக்கியது போல் உணர்ந்தவன் அவ்விடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தான்.

சிறிது நேரத்தில் தன் மீது ஏதோ மோதுவது போல் இருக்க விழிகளை திறந்தவன் அதிர்ந்து தான் போனான். ஏனெனில் அவன் மீது வந்து மோதியது கடல் நீர் தான். விருட்டென்று எழுந்து நின்றவனுக்கு கடந்த கால நினைவுகள் அனைத்தும் காட்சிகளாய் கண் முன் விரிய தான் யார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.

“என்னை ஏமாற்றி என்னுயிரை பறித்தவர்களை விட மாட்டேன். விடவே மாட்டேன்” என்றுரைத்தவனாய் வேக வேகமாக வெளியே ஓடி வர அங்கே தீபனின் ஆத்மாவானது மெல்ல மெல்ல சங்கெழிலியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அவனது ஆத்மா அவளது இறகுகளைத் தீண்டினால் அவ்வளவு தான் அனைத்தும் முடிந்தது. அதன் பிறகு அவன் ஆத்மாவை மீட்க முடியாது, இங்கே இருப்பவர்களையும் காக்க முடியாது என்று தனக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சக்திகளின் மூலம் உணர்ந்தவன் அப்போது தான் அனைவரையும் திரும்பி பார்த்தான்.

தங்கைக்காகத் தான் பட்ட துயரங்களும், நேசித்தவனுக்காக அவள் பட்ட துயரங்களும், காத்திருப்புகளும், கண்ணீர் தடயங்களும் அவனது கண் முன் நிழலாட பல வருடங்களுக்கு பிறகு தன் தங்கையான அன்புமலராய் பிறந்திருக்கும் அந்தரியைப் பார்க்கிறான், உதய்யாய் பிறப்பெடுத்த மிகிரன்.

ஓடிச்சென்று தங்கையிடமிருந்து தீபனின் தேகத்தைப் பிரித்தெடுத்து தன் கரங்களில் ஏந்தியவன் ஓரமாக நின்றிருந்த யாழினியாகிய முளரிப்பாவையையும் பிடித்திழுத்து அவள் கரங்களைத் தீபனின் கரங்களோடு பிணைத்த பிறகு தீபனின் தேகத்தைக் கடலுக்குள் தள்ளியிருந்தான்.. பிறகு தன் கை விரல்களின் மூலம் முத்திரைகளை அபிநயங்கள் பிடித்து காற்றில் அந்தரத்தில் மிதந்து சட்டென்று காற்றில் மிதந்த தீபனின் ஆத்மாவை தன் கரத்தால் பிடித்தான்.

பிடித்தவன் சங்கெழிலி தன்னை நோக்கி பாய்ந்து வருவதற்கு முன்பாகவே அந்த ஆத்மாவை பிடித்து தீபனின் உடலுக்குள் செலுத்தி தன் கால் கட்டைவிரலால் தீபனின் நெற்றிப் பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்திட அதில் ஏற்பட்ட துளை வழியாக தீபனின் ஆத்மா உடலுக்குள் சென்றது. சரியாக தீபனின் ஆத்மா உடலுக்குள் நுழைந்த அடுத்த கணம் அவர்கள் நீரில் மூழ்கி இருந்தார்கள்...

சிக்கலை அதிர்வுடன் கண்டறிந்த சங்கெழிலி ஆங்காரமாக ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகளை ஒன்று திரட்டி நீர் சூழலை உருவாக்கியவள் காற்றோடு பறந்து வந்து அந்த கப்பலையே புரட்டி போட்டாள்..

நீருக்குள் விழுந்த தீபன்(அதிசாந்திரன்)
யாழினி (முளரிப்பாவை) இருவரும் சட்டென்று தங்கள் முன் ஜென்ம நினைவுகளைப் பெற்றனர்.‌ அதற்கு காரணம் உதய் தான். அவன் தனக்கு கிடைக்கப்பெற்ற முன் ஜென்ம சக்திகளை பிரத்யேகமான முறையில் பயன்படுத்தியிருந்தான். தன்னுடலில் உள்ள சக்கரங்களை திவ்ய சக்திகள் மூலமாக தூண்டி தன்னிடமிருந்த சக்திகளை, ஒரு வித அழுத்தத்தின் மூலம் அவர்கள் உடலுக்குள் செலுத்தி இருந்தான். அதனால் தான் அவர்கள் இருவரும் ஜென்ம நினைவுகள் வரப்பெற்றதோடு நொடியில் தங்கள் ஜென்ம உருவங்களையும் பெற்றார்கள்..

இருவரும் கடல் கன்னியர்களாக மாறிப் போயினர். காலத்தோடு மறைந்து போன ஜென்ம நினைவுகள் திரும்பி வந்ததன் விளைவு விருட்டென்று நீரில் பாய்ந்து மூழ்கி எழுந்து மேல் நோக்கி தாவிக் குதித்தனர். அதை விழிகளால் கண்ட உதய்கு அனைத்தும் சரியாகி விடும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது.

தன் தங்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்தவளை பழி வாங்க வேண்டும் என்ற நினைவும் அவனுள் வர, ஓரமாக நின்று நடப்பவற்றை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த தன் தங்கையை இழுத்து தன் முன்னே நிறுத்தியவன் கால் பெரு விரல்கள் இரண்டையும் ஒன்றாக பிணைத்து பெருக்கல் குறி போல் வைத்தவன் அதன் மீது தங்கையை நிற்க வைத்தான். அவளோ தடுமாற்றத்துடன் நிற்க முயல, “என் மீது நன்றாக நின்று கொள் அந்தரி உனக்கு ஒன்றும் ஏற்படாது. என்னை நம்புகிறாய் அல்லவா!” என்று அன்பாய் மொழிந்திட்டான்.

அன்புவோ( அந்தரி) பேந்த விழித்தாள். தானுரைக்கும் வார்த்தைகள் அவளுக்கு புரியவில்லை என்பதை அவளது மருண்ட விழிகளே காட்டிக்கொடுக்க மெல்லிய நகைப்பொலியைக் கொடுத்தவன், “உனக்கும் ஜென்ம நினைவுகள் சிறிது நாழிகையில் வந்து விடும்‌ பொருத்துக்கொள் அந்தரி, அதன் பிறகு என்னை வேற்றாளாய் காண மாட்டாய்!” என்று கூறியவன் அவள் இடையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டு மேல்நோக்கி வளைந்த நிலையில் நீரில் குதித்தான்...

மூச்சு திணறுவது போல் உணர்ந்த அந்தரி அவனிடமிருந்து விலக முயல, சட்டென்று அவள் கரங்களை பற்றி இறுக்கமாக கோர்த்து பிடித்தவாரே நீந்தத் துவங்கி இருந்தான் உதய்( மிகிரன்). சிறிது தூரம் தான் நீந்தியிருப்பார்கள் திடீரென்று அவர்கள் இருவரிடையேயும் வெள்ளொளி ஒன்று சீறிப்பாய்ந்து. பின்பு அந்த வெள்ளொளி மங்கலாய் ஒரு சுற்று வளையத்தை அவர்களைச் சுற்றி உருவாக்கியது. அவ்வளையம் பந்து போல் இருக்க, இவர்கள் இருவரும் அதனுள் வியாபித்திருக்க, அது கடலை விட்டு வெளியேறி அந்தரத்தில் மிதந்தது..

இவற்றைக் கண்ட சங்கெழிலியோ இதற்கு மேலும் தான் தாமதித்தால் நிலைமையை சமாளிக்க முடியாது என்றுணர்ந்தவள் தன் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்ட ஆரம்பித்தாள்.
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -29
(இறுதி அத்தியாயம்)



ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை இயற்கை உணர்ந்து கொண்டதாலோ? என்னவோ? வானம் கருமை நிறத்தை பூசிக்கொண்டு தன் ஆதங்கத்தை மழைத்தூரல் வழியாக கொட்டி தீர்க்க காற்றும் கூட அதற்கு துணை சேர்ந்து பெரும் புயலாய் உருவெடுத்திருந்தது.. தன் பங்குக்கு தன் இருப்பை காட்டி விட்டு செல்வதற்காக நிலமும் நில நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்க, உலகத்தின் பெரும்பாலான பகுதிகள் சற்றே ஆட்டம் கண்டன. மரங்கள் வேரோடு சாய்ந்து மண்ணுக்குள்ளேயே புதைந்து போக, பாலம் பாலமாக வெடித்த பூமியானது காண்பதற்கு கோரமாக காட்சி அளித்தது. கூடவே எரிமலைகளும் தங்களை ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தி லாவா குழம்புகளை வெடித்து சிதற செய்திருக்க, அதைக் கண்டு அலறும் பறவைகள் மற்றும் விலங்கினங்களின் சப்தம் செவி மடல்களை செவிடாக்கியது. இக்காட்சிகள் யாவும் காண்போரையும் கேட்போரையும் கதி கலங்கிட வைத்தது. அந்த அளவிற்கு ஒரு கோர தாண்டவத்தை இயற்கை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. கூடவே கடலலைகளும் தன் ஆக்ரோஷத்தை காட்டுவதற்காக தயாராக தான் இருந்தது..
அலைகள் ஒவ்வொன்றும் சீற்றத்துடன் மேலெழுந்து வெகு தூரம் காற்றில் பயணித்து, பின்பு மெல்ல கீழிறங்கி தண்ணீரை பொங்கிய நுரையுடன் கரை சேர்த்துக் கொண்டிருந்தது. கூடவே கடல் அலைகள் காற்றுடன் கை கோர்த்து நீரின் மேல் மட்டத்தில் பெரும் சூறாவளிகளையும், சூழல்களையும் உருவாக்கிட, உலகமே அழிந்து விடுமோ? என்று அனைவரும் எண்ணும் அளவிற்கு ஒவ்வொரு நிகழ்வும் நடந்தேறியது..

பூமி அடுக்குகளுக்கு கீழே ஒன்றன் பின் ஒன்றாக கடலுக்குள் அமிழ்ந்து போயிருந்த எரிமலைகள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறின. அவற்றிலிருந்து வரும் நெருப்பு குழம்புகள் நீர் பரப்பின் மீது படுக்கைகளாக மாறிப்போயின. நீரானது அதிகளவு வெப்பத்தை உள்வாங்கியதால் கொதி நிலை அதிகரித்து அதிலிருந்த சிறு சிறு உயிரினங்கள் மடியத் துவங்கின...


நீரின் அடியில் தோன்றிய இத்தகைய மாற்றத்தால் மேற்பரப்பில் நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது.‌ நிலப்பரப்பில் நடுக்கம் ஏற்பட்டதால் மண் சரிவு, பனி மலைகள் உருகுதல், கடும் பாறைகளைக் கொண்ட மலைகளில் வெடிப்பும், நிலத்தின் மீது இருக்கும் எரிமலைகளும் வெடித்து எரிமலைக் குழம்புகளை சுற்றிலும் பரவச் செய்திட. செடிகளும், கொடிகளும் பறவை இனங்களும், விலங்கினங்களும், மனித இனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு தீக்கிரையாகிக் கொண்டிருந்தன..

தன் இறக்கைகளைக் கொண்டு மேலே எழும்பி பறந்தவள் வாயிலிருந்து கொதிக்கும் நிலையில் இருக்கும் ஒரு வகைத் திரவத்தை வெளியிட அது நீரில் பட்டு பட்டு நீரை இன்னும் உஷ்ணமாக்கி கொண்டிருந்தது..

அவளது ஆக்ரோஷம் அவளது செய்கையில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவளது கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவளது இறக்கையின் அளவு பெரிதாகியது.‌ அவள் தேகத்தின் நிறமும், வடிவமும் மாற்றம் பெற்றது.


அதே நேரம் இங்கே ஆழ்கடலுக்குள் இருந்த அனைவருக்கும் இங்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதென்று தெரிந்ததோ, என்னவோ! அனைவரும் ஆளுக்கொரு திசையாக பயணிக்க ஆரம்பித்தனர். தந்தையின் இறப்பைக் கேள்வியுற்று அகவழகியின் உள்ளம் துடிக்க ஆரம்பித்தது. அதே நேரம் உதய்யின் சொல் படி அவர்களை வந்து சந்தித்திருந்தான் தீபன்.‌ வந்தவன் அவளையும் அழைத்துக் கொண்டு யாமீரனைச் சந்திக்கச் சென்றான்.

அவனது சிற்பிப்படுக்கையில் படுத்திருந்தான் யாமீரன். அவனது தேகத்தின் பெரும்பகுதி சிதைய துவங்கியிருந்தது. அதுவே அவனது முடிவைத் தெள்ளத்தெளிவாக பறைசாற்றியது. அவனை நெருங்கி தீபன், “உன் தங்கையின் உயிர் எங்கு ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ரகசியம் எங்கு மறைந்துள்ளது? விரைந்து கூறு, எங்களுக்கு கால அவகாசம் இல்லை” என்று கூற.


“நீங்கள் யார்? அதைப்பற்றி வினவுவதற்கு?” என்று எதிர் வினாவை முன் வைத்தான். ஏனெனில் யாமீரனின் இறுதி காலம் நெருங்குவதால் அவனது நினைவுகள் மழுங்கத் துவங்கி விட்டதால் இவர்களை அவனால் அடையாளம் காண முடியவில்லை.

“நாங்கள் யாரென்று உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவள் உலகையே அழிக்க காத்துக் கொண்டிருக்கிறாள். விரைந்து கூறு” என்று துரிதப்படுத்தினான் தீபன்.

“அது எங்கிருக்கிறதென்று எனக்கு தெரியாது. ஆனால்” என்றவன் ஏதோ கூற வருவதற்கு முன் குறுக்கிட்டாள் அகவழகி.

“எனக்கு தெரியும். தந்தையின் படுக்கையில் ஓர் குறிப்பு செய்தி இருந்தது. அதை வைத்து பார்க்கையில் அவ்விடம் எனக்கு பரிச்சயமானது போல் தான் தோன்றுகிறது வாருங்கள் செல்லலாம்” என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள். துங்கீசனும் அவளது பாதுகாப்பிற்காக அவர்களுடன் சென்றான்..

பாதி தொலைவிலேயே எதையோ உணர்ந்த தீபன்,
துங்கீசன், அகவழகி இருவருடன் யாழினியை அனுப்பி வைத்தவன் அங்கே தனியாக உதய்யால் அவளை சமாளிக்க முடியாது என்பதால் திரும்பி அவர்கள் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தான். இங்கே அவளை சமாளிக்க சற்றே திணறிக் கொண்டிருந்தான் உதய்.‌ ஏனெனில் அவன் நிலத்தில் இருக்கும் போது அவன் சக்திகள் பல மடங்கு அதிகமாய் இருக்கும்.‌ அது மட்டுமன்றி நிலத்தில் மட்டுமே அவனால் அவன் சக்திகளை உபயோகிக்க முடியும். நீருக்குள் அவன் சக்திகள் சற்று குறைவாகவே வேலை செய்யும். அப்படி இருக்கும் போது அதிக அளவு சக்தியோடு உலகை அழிக்கும் ஆத்திரத்துடன் நிற்பவளின் முன் இவனது சக்திகள் எவ்வாறு வேலை செய்யும். அவளைத் தாக்க முயன்றவன் சிறு சிறு காயங்களோடு மீண்டும் நீரினுள் சென்று விழுந்தான்...

சரியாக உதயைத் தாக்கி அவன் உயிரை சங்கெழிலி எடுக்க போன சமயத்தில் வந்து சேர்ந்தான் தீபன். தீபனைக் கண்டதும் ஓரடி பின்னே நகர்ந்தாள் சங்கெழிலி..

அவனைக் கண்டதும் அவளது கோபம் தணிந்து அவன் மீதான நேசம் வெளி வர அவனிடம் உரையாட ஆரம்பித்தாள். “என்னுடன் வந்து விடுங்கள் மிகிரரே! தங்களுக்காக ஜென்ம ஜென்மமாய் காத்திருக்கிறேன் வந்து விடுங்கள் இவர்கள் அனைவரையும் விட்டு விட்டு என்னுடன் வந்து விடுங்கள். நாம் இருவரும் எங்கேனும் சென்று விடலாம், இவர்களை நான் எதுவும் செய்யாமல் விட்டு விடுகிறேன். நீங்கள் மட்டும் எனக்கு போதும், சொல்லுங்கள் என்னுடன் வருகிறீர்களா?” என்று அவள் காதல் வசனங்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்க, அவனது விழிகளோ, தமையனின் பின்னே தொற்றிக்கொண்டு நீரில் தொப்பலாய் நனைந்து கலங்கிய விழிகளோடு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அன்புவைத் தொட்டு மீண்டது.

அதைக் கண்ட சங்கெழிலி அடுத்த நிமிடம் அன்புவைக் கொல்லப் பாய்ந்தாள். தான் நேசிப்பவனின் பார்வை தன்னைக் காணாமல் வேறொருவரை கண்டால் மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கூட கோபம் வரும். அதே போல் தான் சங்கெழிலிக்கும் கோபம் வந்தது. அதை உணர்ந்த தீபன் நொடியில் அவர்களை நெருங்கி தன்னவளைப் பிடித்திழுத்து தனக்குப் பின்னே நிற்க வைத்தவன் தன் வாளால் அவளை ஓங்கி ஓரடி அடிக்க அவள் தொலைதூரமாய் சென்று விழுந்தாள்.
அவள் விழுந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்து அவர்களைத் தாக்க பாய்ந்து வந்தாள்.

அதற்குள் அங்கே அவளது உயிர்க்கூடு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அடைந்திருந்தார்கள் யாழினி, துங்கீசன், அகவழகி மூவரும். சரியாக அந்த இடத்தை வந்து அடைந்தவர்கள் அதன் பிறகு எங்கு செல்வது, எந்த பக்கம் தேடுவது என்று தெரியாமல் நின்றிருந்தனர். யாழினியோ எதையோ உணர்ந்தவள் போல் பரபரவென்று நிலப்பகுதியை தோண்ட ஆரம்பித்தாள். அப்போது அருகில் இருந்த எரிமலை ஒன்று வெடித்து சிதற காத்திருந்தது. வேகவேகமாக நிலத்தைத் தோண்டியவள் அடியாழத்தில் இருந்த சிற்பி பெட்டகத்தை தொட முயன்ற போது அவளது கரங்கள் சட்டென்று தீப்பற்றி எரிந்தன. நொடியில் அதை மண்ணுக்குள் புதைத்து அணைத்தவள்,
மானசீகமாக தமையனிடம் இதற்கு வழிமுறையை கேட்க, அவளது வினாவிற்கு பதில் உரைத்தது உதய் தான். அவனது வார்த்தைகள் இவளது சிந்தையில் பதிந்தன. ‘இதை தீண்ட வேண்டும் என்றால், அந்நபர் அவளுக்கு உடன்பிறந்தோனாக, ரத்த பந்தமாக இருக்க வேண்டும்’ என்றிட, அதை அப்படியே மற்றவர்களிடம் கூறினாள் யாழினி. “இதோ நான் சென்று அழைத்து வருகிறேன்” என்ற துங்கீசன் விரைவாக சென்று யாமீரனை முதுகில் சுமந்து கொண்டு வந்தான்..

யாமீரன் தன் கரம் கொண்டு சிற்பியை வெளியே எடுத்தான். அதன் பிறகு நொடியும் தாமதிக்காமல் யாமீரனையும் அழைத்துக் கொண்டு மற்றவர்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

அங்கே சங்கெழிலியோ ஆக்ரோஷத்துடன் அலைகளின் மேல் நின்று கொண்டிருந்தாள். இப்போது அவள் உருவம் இன்னும் விகாரமாக மாறி இருந்தது. அவளைச் சுற்றி நெருப்பு ஒளி வட்டம் ஒன்றும் தோன்றியிருந்தது. அதன் தாக்கம் அனைவரையும் கொலை செய்யும் அளவிற்கு அகோரமாகவும், அச்சுறுத்தும் அளவிற்கு விகாரமாகவும் இருந்தது...

அவர்கள் வந்து சேரும் போது தீபன் அவளை சமாளிக்க தடுமாறிக் கொண்டிருந்தான். அந்த சிற்பியை தன் தமையனின் கரங்களில் கொடுத்தவள்,
“இதனுள் தான் அவளது உயிர் கூடு இருக்கிறது தமையனே” என்றுரைத்தாள். அடுத்த கணம் எதைப்பற்றியும் யோசிக்காமல் உதயுடன் கரம் கோர்த்த தீபன் தங்கள் இருவரது சக்திகளையும் ஒன்றிணைத்து சிற்பியின் மீது அழுத்தம் கொடுக்க அது திறந்து கொண்டது. அதிலிருந்த சிறு உயிரினத்தை எடுத்து அதன் தலையைக் கொய்து உடல் பாகத்தை துண்டு துண்டாக பிய்த்து எறிந்தவர்கள் ஒரே நேரத்தில் சங்கெழிலியின் தலைப்பகுதியை நோக்கி தாக்குதல் விடுத்தனர்.

அதிலும் அகவழகியோ தன் தந்தையின் செங்கோலை கொண்டு வந்திருக்க, அதை தீபனின் கரத்தில் கொடுத்தாள். அவளது தலையில் ஏற்பட்ட திடீர் தாக்குதலால் தலையை பிடித்துக்கொண்டு நீரில் விழுந்திருந்தாள் சங்கெழிலி. இடது கரத்தால் உதய்யின் கரங்களைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட தீபன் வலது கரத்தால் செங்கோலை பிடித்து வானை நோக்கி உயர்த்தியவன் தன் வாலால் அதை இரு முறை தட்டி விட்டு எதையோ உச்சரித்து முடித்து அடுத்த கணம் நீரில் பாய்ந்து இருந்தான், உதய்யையும் இழுத்துக்கொண்டு.

கடலின் ஆழத்தில் மண்ணில் விழுந்து கிடந்த சங்கெழிலியின் அடி வயிற்றுப் பகுதியில் ஆழமாக அதே நேரம் வேகமாக அந்த செங்கோலை இறக்கினான் தீபன். இறங்கிய வேகத்தில் மீண்டும் அதை வெளியே எடுத்து அவளது இதயப் பகுதியிலும் ஆழமாகக் குத்தியவன் மீண்டும் அதை வெளியே எடுத்து, அவளது சுவாசப்பை மற்றும் விழிகளிலும் நான்கு முறை செங்கோலால் சொருகி வெளியே இழுத்தான். பின்பு கடைசியாக அவளது தொண்டைக்குழிக்குள் ஓங்கி அழுத்தமாக குத்தி மண்ணோடு மண்ணாக அவளை அழுத்திட,‌ அவளது தொண்டையில் இருந்து மாணிக்கத்தை போன்றிருந்த இரு கற்கள் வெளியேறி காற்றோடு கரைந்து போயின. சிறிது நேரத்தில் அவள் உடலில் இருந்து கருப்பு நிறத் திரவமும் சிவப்பு நிற வாயுவும் வெளியேற சிறிது நேரத்திலேயே அவள் உடல் மறைந்து மண்ணோடு மண்ணாக அழிந்து போனது..

அடுத்த கணம் அவர்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றி சூறாவளி ஒன்று உருவாகி சுழல ஆரம்பிக்க அடுத்த நிமிடம் அவர்கள் அங்கிருந்து தொலை தூரம் தூக்கி எறியப்பட்டனர். அவர்கள் தூக்கி எறியப்பட்டதன் விளைவாக அனைவரும் மயக்கத்திற்கு சென்றிருக்க, வெகு நேரத்திற்குப் பிறகே கண் விழித்த அனைவரும் அந்த ஒரு தீவின் கரையோரம் கிடைந்தார்கள்..

கடைசியாக எந்த இடத்தில் உயிர் நீத்தார்களோ அதே இடத்தில், அதே நிலையில் கைகோர்த்தவாறு தீபன் அன்பு இருவரும் கிடந்தனர்.‌ எந்த இடத்தில் உயிர் நீத்தாளோ அதே இடத்தில் தான் யாழினியும் கிடந்தாள்..

அதே போல் உதய்யும் எந்த இடத்தில் யாரால் கொல்லப்பட்டானோ அதே பகுதியில் பரண் மீது கிடந்தான்.‌ விழிகளைத் திறந்தவர்கள் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்ததற்குப் பிறகே எப்படி தங்களுக்கு மரணம் நிகழ்ந்தது என்பதும் நினைவுக்கு வந்தது.

பரணில் இருந்து கீழே இறங்கி வந்தவன் அங்கு குழுமியிருந்த மக்களை வெற்றுப் பார்வை பார்த்து,‌“போன ஜென்மத்தில் இங்கு பிறந்த என்னைக் காரணமின்றியே கடல் நீரில் நீங்கள் தூக்கிப்போட்டு வேறொரு வம்சத்திற்கு என்னைத் தாரை வார்த்ததோடு மட்டுமின்றி! என்னால் தான் உங்களைக் காப்பாற்ற முடியும் என்பதால் நான் இங்கு வர வேண்டுமென்று அசரீரி வேறு அனுப்பி வைத்திருக்கிறீர்கள்.‌ கூடவே கடல் உயிரிகளை மயக்கி அவர்களை ஒற்றன் வேலை பார்க்க அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அப்படியும் நான் வராததால் வலுக்கட்டாயமாக என்னை இங்கு கொண்டு வந்ததோடு மட்டுமின்றி கொன்று விட்டீர்கள். அதனால் தான் மறு பிறவி எடுத்து பிறந்த சில கணங்களிலேயே உங்களை உருத்தெரியாமல் அழித்திட எண்ணியிருக்கிறேன். அதற்காக மீண்டும் என்னை நீரில் தூக்கி வீசியிருக்கிறீர்கள்.‌ நீங்கள் செய்த துரோகத்தை என்னால் எப்போதும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது, இப்பொழுது உயிர்த்திருப்பவர்களாவது எவருக்கும் நம்பிக்கை துரோகம் இழைக்காமல் வாழ பழகிக்கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு அங்கிருந்து நகர முயன்ற வேளையில் அவன் முன்னே வந்து நின்றனர்
தில்லையப்பன் காத்தாயி இருவரும்.

அவர்களை அவன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க ஒரு பெரியவர் அவன் முன்னால் வந்து நின்று,“இவர்கள் தான் உன்னைப் பெற்றெடுத்தோர். இப்போது நீ வசிப்பது உன்னைக் கண்டெடுத்து வளர்த்தவர்களிடம் தான். நானுரைத்தவை மெய்யா, பொய்யா என்பதை நீயே இந்நேரம் அறிந்திருப்பாய்” என்று அவன் சக்திகளை குறிப்பிட்டு அவர் சொல்ல.,

அதைப் புரிந்து கொண்ட உதய்,
“எனக்கு இது நாள் வரை உதவியது தாங்கள் தான் என்பது புரிந்து விட்டது. எனக்கு ஒரு சிலர் உதவிய காரணத்தால் உங்கள் குலத்தையே அடியோடு அழிக்காமல் வைத்திருக்கிறேன் அதை மறவாதீர்கள்” என்று கூறி விட்டு தன் தாய் தந்தையோடு அங்கிருந்து வெளியேறி கடற்கரை பகுதிக்கு வந்தவன் அங்கிருந்த மற்றவர்களையும் ஓடிச் சென்று நலம் விசாரித்தான்.

தன் தங்கை அன்புவை இழுத்து பெற்றோர்களின் முன்பு நிறுத்த அவளுக்கு தன் பெற்றோர்களை அடையாளம் தெரிந்தது. ஓடிச் சென்று அவர்களை அணைத்துக் கொண்டாள். அதன் பின்பு அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்து விட்டு எங்கோ சென்றான் உதய்.

‘எங்கே செல்கிறாய்?’ என்று தீபன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அவன் சென்று நின்றது பாதாள லோகத்திற்கு செல்வதற்கான பாதையின் ஆரம்பத்தில் தான். எப்படி செல்ல வேண்டும் என்று நினைவிருந்ததால் அதன்படி உள்ளே நுழைந்தவனுக்கு பாறைகளின் இடுக்கில் வரையப்பட்டிருந்த வரை படங்களும், ஓவியங்களும் அவனது வளர்ச்சியை பறை சாற்றுவது போலவே இருந்தது.‌இதை வரைந்தது யாரென்று அவனால் உணர முடியவில்லை. உள்ளே செல்ல செல்ல உள்ள எவரும் வசிப்பதற்கான தடயங்கள் இல்லை என்ற போதும் அனைத்தும் வரலாற்றுச் சுவடுகளாய் போற்றப்பட வேண்டிய அளவிற்கு படிமங்களாக அப்படியே இருந்தன. அவன் விட்டுச் சென்ற போது எப்படி இருந்ததோ இப்போதும் அப்படியே தான் அனைத்தும் இருந்தன, எந்த மாற்றமும் இல்லை. எலும்புக்கூடுகள் கூட அவன் கையில் அவன் கண்களில் சிக்கவில்லை அனைத்தும் மண்ணோடு புதைந்து போயிருக்கும் என்ற எண்ணத்தோடு, தான் வாழ்ந்த பகுதியை இறுதியாக பார்த்து விட்டு பிறகு மீண்டும் மேலேறி வந்தான். ஏனோ அந்த நினைவுகள் பசுமையாய் நெஞ்சில் இருந்தன.

சங்கெழிலி முதலில் அவர்களைத் தாக்கிய போது நிகில், சௌமி இருவரும் கடல் அலைகளோடு அடித்துச் செல்லப்பட்டு கரை சேர்ந்திருந்தவர்களை அந்த காட்டுவாசிகள் தான் காப்பாற்றி தங்களிடம் வைத்திருந்தார்கள். தில்லையப்பன், காத்தாயியை அழைத்து வரும் போது அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

தன் தங்கையின் காத்திருப்புக்கு பலனாய் கிடைத்த தீபனின் கரங்கள் இரண்டைப் பற்றிக்கொண்டு அவனைக் கண் கலங்க பார்த்தவன்,
“இந்த ஆர்கலி ஈன்ற அற்புதம் தாங்களும், தங்களது தங்கையும். உங்கள் இருவரால் நாங்கள் துன்பங்களை அனுபவித்த போதும் ஒரு போதும் உங்களது நேசம் எங்களை அழிந்து போக விடவில்லை. மீண்டும் உயிர்ப்பித்து மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. கடலில் கிடைக்கும் அத்தனை அம்சங்களும், அற்புதங்களும் தொலைவில் வைத்துக் காண்போருக்கு சாதாரணமாக இருந்தாலும், அதன் மதிப்பை உணர்ந்தவர்களுக்கு தான் அது எப்பேர்ப்பட்டது பொக்கிஷம் என்பது புரியும்” என்று கூறி அணைத்துக்கொண்டான். அதன் பிறகு தங்களது சக்திகளைக் கொண்டு கப்பலை எங்கிருந்தோ கொண்டு வந்தவர்கள் துங்கீசன் மற்றும் அகவழகி வற்புறுத்தலால் நிகில் சௌமி இருவரையும் உறங்க வைத்து விட்டு நள்ளிரவில் ஆழ் கடல் ராஜ்ஜிய பகுதிக்கு சென்றனர். அவர்கள் இருவருக்கும் மணமுடித்து வைத்து அப்பகுதியை விட்டு நீங்கி செல்லாமல் இருந்தவர்களின் முன்பு துங்கீசனை அரசனாய் முடிசூட்டி, செங்கோலை அவன் கரத்தில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்..
ஆனால் பாதியில் கிடைத்த இந்த சக்திகள் மறைந்து போவதுதான் அனைவருக்கும் நல்லது என்பதை உணர்ந்தவர்கள் அது காலப்போக்கில் மறைந்துவிடும் என்ற அசரீரியின் வாக்குக்கு ஏற்ப சுற்றுலாவை உதய்யின் ஐ லேண்டில் கொண்டாடி விட்டு மீண்டும் தங்கள் ஊர் வந்து சேர்ந்தார்கள்.. இங்கேயே நிகில் சௌமியிடம் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை வெளிப்படுத்த அவளும் பெரும் தயக்கத்திற்கு பிறகு சரியென ஏற்றுக்கொண்டாள்.


வீட்டிற்கு வந்தவர்கள் அன்புவின் தாய் தந்தையர் என காத்தாயி, தில்லையப்பனை அறிமுகப்படுத்தி வைத்தனர். மறந்தும் கூட உதய் தன் வளர்ப்பு தாய் தந்தையிடம் அது பற்றி கேள்வி எழுப்பவுமில்லை, தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவும் இல்லை. பின்பு அடுத்த முகூர்த்தத்திலேயே அன்பு, தீபன் மற்றும் நிகில் சௌமி நான்கு பேருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்தனர்..
தீபனுக்கு திருமண பரிசாக அவனது தந்தையைக் கொன்ற சகாதேவன் மற்றும் அவனது அடியாட்களின் சாம்பலைக் காட்டினான் உதய். சத்தமில்லாமல் காரியத்தை முடித்திருந்தான்..

பின்பு மேலும் இரு மாதங்கள் கடந்து சென்ற இந்த நிலையில் ஒரு நாள் தமிழிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு திருமணமென்று.‌ அன்புவின் திருமணத்திற்கு தமிழ் வந்திருந்தான் தான். பின்பு அனைவரும் குடும்பத்துடன் சென்று அவர்களது திருமண விழாவை சிறப்பித்து விட்டு வந்தனர். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ தான் பிறந்த மண்ணையும் தன் பாதாள லோகத்தையும் சென்று பார்த்து விட்டு வருவான் உதய்..
அதே போல் தீபனும் யாழினியும் தங்கள் ஆழ்கடல் ராஜ்யத்தை சென்று பார்த்து விட்டு அங்கு இருப்பவர்களுடன் ஓரிரு தினங்களை மகிழ்வுடன் கழித்து விட்டு தங்கள் உண்மை உருவத்தை கொண்டு இரு நாட்கள் அங்கு வாழ்ந்து விட்டு வருவார்கள். எப்போது ஜென்ம நினைவுகளும், திவ்ய சக்திகளும் அவர்கள் சிந்தையில் இருந்து மறைந்து போகிறதோ? அப்பொழுது அவர்கள் நால்வரும் தங்களது இயல்பு வாழ்க்கையை மட்டும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் நாமும் இவர்களிடமிருந்து விடை பெறுவோம்....

ஆர்கலியென்ற பெயர் கொண்ட ஆழ்கடலும் அற்புதம் தான்...
அதில் கிடைக்கும் பொக்கிஷங்களும் அற்புதம் தான்..

நீல வண்ணத்தில் குழைத்தெடுத்த சிலை
வடிவாய் அவளிருக்க..!!
அவள் விரல் தீண்டும் நுனிப்புல்லாய் நானிருக்க..!
தேக தாகத்தின் அமிர்தமாய் அவள் தகிக்க..!
அதைக் கனவில் கூட காண இயலா விழிகளிரண்டும்
ஏமாற்றத்தில் திளைத்திருக்க..!
அவ்வழகிய அற்புத்தைக்
காண வரம் கிடைக்குமோ?
இதோ ஆர்கலி ஈன்ற அற்புதத்தின் தயவால் தரிசனமதும் கிட்டியதே..!
பொக்கிஷமதும் கரம் சேர்ந்ததே..!


நன்றி ..!


படித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே.. 🥰🥰🥰🥰

- ரம்யா சந்திரன்..
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom