Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இதயம் கேட்கும் காதல்

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
10. இதயம் கேட்கும் காதல்

சித்தீக் தன்னை மணமுடித்து கொள்ள சம்மதமா என்று கேட்டதும் அவள் முழு சம்மதம் என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்கு சென்றவளை யோசனையாய் பார்த்தான்.

பிறகு , அவள் இடத்திற்கு சென்றவன் , " உள்ள வரலாமா? ஷெஹனாஸ் " என்று கேட்டவனிடம்

" வாங்க ஸார் " - ஷெஹனாஸ்

" உனக்கு முழு சம்மதமா ! நா...நான் எதுக்கு கேட்கிறேனா? ராஹிலாவுக்கு ஒரு நல்ல அம்மா வேணும் . ஆனா நீ சின்ன பொண்ணு..." என்று கூறியவனிடம்

"அம்மாவா இருக்கிறதுக்கு மனசு போதும் ஸார். என்னால ராஹிலாக்கு ஒரு நல்ல அன்பான அம்மாவா இருக்க முடியும் நீங்க அனுமதிச்சிங்க என்றால், உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன் ஸார். உங்களுக்கு பிடிக்கலைன்னா இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க..... அதுல எனக்கு எந்த objection இல்லை ஸார்..." என்று தன் வலிகளை மறைத்தவளாய் பேசியவளை,

"இப்பவே இப்படி சின்ன விஷயத்திற்கு கோபத்தோடு பேசுகிறாள் என்றால் நாளை.... இவள் நம்ம ராஹிலாவுக்கு நல்ல அம்மா வா இருப்பாளா !..." என்று அவளை தன் மனதில் தவறாக நினைத்த வண்ணம் தன் இடத்தில் வந்து அமர்ந்தான், சித்தீக்.

ஒருவேளை அவள் தன் புறமாக நின்று பேசி இருந்தால், அவளின் முகத்தின் உணர்வுகளை புரிந்து இருப்பானோ ?

" ஒரு அம்மாவாக இருப்பதற்கு கூட தனக்கு தகுதி இல்லையா ? " என்று மனதிற்குள்ளே குமுறினாள் ஷெஹனாஸ்.

அவனை பார்த்து பேசி இருந்தால், அவன் ஏன் அப்படி கேட்டான் என்பது புரிந்திருக்குமோ என்னமோ அவளுக்கு!

" இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமா??? ஆனா எல்லாருக்குமே பிடிச்சு இருக்கே அவளை !!!... எனக்கு ராஹிலாவை நாளைக்கு அவள் கொடுமை பண்ணா? வேற வழியே இல்லை. யா அல்லாஹ்?!" என்று அவன் மனதில் ஏதேதோ நினைக்க

" நாம வேணா இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமா ? ஆனா..." என்று தன் மனதில் வலிகள் அவள் கண்ணீர் வழியாக வர அடக்க முடியாமல் அழுது விட்டாள்.

பிறகு, நாற்காலியில் சாய்ந்த வண்ணம் கண்கள் முடிக்கொண்டு இருந்தாள். எத்தனை மணிநேரம் அப்படி இருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.

அவள் எத்தனை சோர்வில் இருந்தாலும் பாங்கின் ஓசை மட்டும் எப்படியாவது கேட்டு விடும் அவள் காதுகளில். அப்போது அதான் கேட்க, தன்னிலை வந்தவள் தாமதிக்காமல் தொழ சென்றுவிட்டாள்.

வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவள் , வழியில் இனிப்பு கடையை பார்த்ததும் ரக்ஷனா விரும்பி சாப்பிடும் பால்கோவா நினைவிற்கு வர அதை வாங்க கடைக்கு சென்றாள்.

அதை வாங்கியவளின் கண்களில் அவளுக்கு பிடித்த சாக்கோ சாக்கி தென்பட ,"அக்கா சாக்கோ சாக்கி ஒரு இருபது கொடுங்க " என்றவுடன் அவள் ஏற இறங்க பார்த்து விட்டு அதை கொடுத்தாள்.

ஆனால் ஷெஹனாஸ் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வாங்கி கொண்டவள் , " முதல இதை மறைச்சு வைக்கனும் இல்லன்னா தடியன் திருடி தின்னுடுவான் "என்று கூறி கொண்டே தன் பையில் வைத்து கொண்டு வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் ஏறினாள்.

வீட்டிற்கு வந்தவள், நேராக ரக்ஷனா அறைக்கு சென்றவள் " அண்ணி இந்தாங்க " என்று இனிப்பை நீட்ட

" என்னது இது? " என்று ரக்ஷனா கேட்க

" திறந்து பாருங்க ! " அதை வாங்கி பார்த்தவள்

"ஹை ஸ்வீட் எனக்கு பிடிச்ச பால்கோவா " என்று கண்கள் விரிய சந்தோஷ பட்டாள் ரக்ஷனா.

"உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தெரியும் அதான் வாங்கிட்டு வந்தேன்..சாப்பிடுங்க உங்களுக்கு தான் " என்று விட்டு தன்னறைக்கு சென்றாள்.

இளைப்பாற்றி கொண்டிருந்தவள் தான் வாங்கிய சாக்கோ சாக்கியை சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

" ஆஹா ஆஹா என்ன ருசியா !! ஸ்ப்பாபா செமயா இருக்கு!!! சாக்கோ சாக்கினா சாக்கோ சாக்கி தான்யா என்ன ஒரு சுவை " என்று அதை ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு மீதியை மறைத்து வைத்து விட்டாள்.

ரஸாஹ் அவள் அறைக்குள் நுழைந்தவாறு , " ஷெஹனாஸ் என்ன பண்ணிட்டு இருக்க? " என்று கேட்க

"சும்மா தான் இருக்கேன் ரஸாஹ் " - ஷெஹனாஸ்.

" உனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம் தானே டா?.." என்று கேட்க

" உண்மையா இந்த கல்யாணத்தில எனக்கு சம்மதம் தான் ரஸாஹ். ராஹிலாவுக்கு அம்மாவாக இருக்க போறேன் நினைச்சாலே சந்தோஷமா இருக்கு ..." - ஷெஹனாஸ்

" ம்ம்ம் சரி" - ரஸாஹ்

" அண்ணா எனக்கு ஊட்டி விடுறியா? நீ ஊட்டி விட்டு ரொம்ப நாள் ஆகுது ப்ளீஸ்..." என்று அவள் கேட்டவுடன் அவளை சிறுவயது குழந்தையை பார்ப்பது போல் இருந்தது.

" ம்ம்ம் இரு வரேன் " என்று அவன் சென்று ஒரு தட்டில் சாப்பாட்டை எடுத்து வந்தான்.

புன்னகையுடன் அவன், தங்கைக்கு ஊட்டி கொண்டு இருந்தான். அவளும் தன் அண்ணனுக்கு ஊட்டி விட்டாள்.

அவள் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு , தங்கள் சிறு வயதின் நினைவுகள் அவனை எட்டி பார்த்தது.

ஷெஹனாஸ், சிறு வயதில் சாப்பிட அடம்பிடிப்பாள். ரஸாஹ் ஊட்டி விட்டால், அமைதியாக சாப்பிட்டு கொள்வாள். அவளை சமாளிக்க தெரிந்த ஒரே ஜீவன் ரஸாஹ் தான்.

காலை மற்றும் இரவு நேரத்தில் ரஸாஹ் ஊட்டி விடுவான். மதியம் கஷ்டப்பட்டு எப்படியாவது சாப்பிட்டு விடுவாள். அவள் சாப்பிட ரொம்ப அடம் பிடித்தால், அவள் ஆசிரியர் ரஸாஹ்யை வரவழைத்து சாப்பிட வைப்பார்கள்.

அதேபோல் ரஸாஹ் மடியில் தான் தூங்குவாள் ஷெஹனாஸ். கல்லூரி படிக்கும் வரை இது தொடர்ந்தது.

பிறகு அவளே அதெல்லாம் குறைத்து கொண்டாள். எப்பொழுதாவது மட்டும் தன் அண்ணன் மடியில் துயில் கொள்வாள்.

மற்றவர்கள் பார்வையில் அவள் அழகில்லாமல் இருக்கலாம். ஆனால் , ரஸாஹ் அவன் தங்கை என்றுமே அழகு தான் மனதால்.

அதெல்லாம் நினைத்தவன் கண்கள் கலங்க தன் தங்கைக்கு தெரியாமல் துடைத்து கொணடான் .

பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்கினார்கள்.

ராஹிலாவை தொட்டிலில் தூங்க வைத்தவன், தன் அறையின் அந்த சிறிய பால்கனியில் தன் கைகளை நெஞ்சோடு கட்டி கொண்டு தன் வேலையை செவ்வெனே செய்யும் சந்திரனை பார்த்து கொண்டு இருந்தவன் மனதில் பல குழப்பங்கள் ஓடி கொண்டிருந்தன.

அவன் மனதில் , " ராஹிலாவை நல்லா பார்த்துப்பாளா? என் ராஹிலாவை கொடுமை பண்ணா ? இப்பவே இவளுக்கு இவ்ளோ கோபம் வருதே!..." என்று தன் மனதில் பல குழப்பங்களோடு நிலவை பார்த்து கொண்டு இருந்தவனின் மனதில் , தன் கடந்த கால வாழ்க்கை கண்முன் செல்ல வலிகளோடு கண்களை துடைத்து கொண்டு தூங்க சென்றான்.

அவனின் வலிகளை மறக்கடிக்க போறவள் ஷெஹனாஸ் தான் என்பதை அவன் அறியான்.

காலையில், ஷெஹனாஸ் குளித்து விட்டு இளம் பச்சை நிறத்தில் சிறு சிறு பூக்களை கொண்ட பட்டு சேலையில் அழகாய் இருந்தாள் ஷெஹனாஸ்.

அவள் மனதில் பல எண்ணங்கள், " இந்த கல்யாணம் நமக்கு சரி வருமா?... ராஹிலாவுக்கு என்னால ஒரு அன்பான அம்மாவாக இருக்க முடியும். ஆனால் சித்தீக்கு ஒரு நல்ல மனைவியாக இருக்க முடியுமா? .. நான் அவருக்கு தகுதியானவள் தானா?... இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமா?..." என்றெல்லாம் அவள் மனம் குழப்பி விட,

அவள் கண்முன் தன் அப்பா மற்றும் அண்ணன் முகம் வந்து செல்ல , " என்னா ஆனாலும் சரி இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்... நமக்காக இதுவரைக்கும் அப்பாவும் அண்ணனும் கஷ்டப்பட்டது போதும்... பிடித்தாலும் பிடிக்கலை என்றாலும் இது தான் என் வாழ்க்கை. இனி ராஹிலாவுக்காக என் வாழ்க்கை அவளுக்கு ஒரு நல்ல அம்மாவாக ஒரு அன்பான தோழியாக இருப்பேன்..."
என்று மனதில் தீர்க்கமாக முடிவெடுத்தாள் ஷெஹனாஸ்.

ரக்ஷனா அவள் யோசித்து கொண்டு இருப்பதை பார்த்தவள், " ஷெஹனாஸ் என்ன ஆச்சு? " என்று கேட்க அவள் மடியில் படுத்து கொண்டாள்.

அவள் மனதின் படபடப்பை புரிந்து கொண்ட ரக்ஷனா, அமைதியாய் அவள் தலையை வருடி விட்டாள்.

சிறிது நேரத்தில் லியாக்கத், ஆரிஃபா சித்தீக் ராஹிலா பாஸ்கர் பிருந்தா வந்தார்கள்.

அவர்களை உள்ளே அழைத்து வரவேற்று உபசரித்தார்கள். ஷெஹனாஸை அழைத்து வந்து உட்கார வைத்தார்கள்.

ஷெஹனாஸை பார்த்த ராஹிலா அவளிடம் செல்ல முயன்றாள். அதை பார்த்த ஷெஹனாஸ் ராஹிலாவை பார்த்து கைநீட்ட அவள் தன் அப்பாவிடம் இருந்து தாவி ஷெஹனாஸ்யிடம் சென்றாள். அனைவருக்குமே ஆச்சரியம்.

சித்தீக்கால் இதை நம்ப முடியவில்லை. அவ்வளவாக யாரிடமும் செல்ல மாட்டாள். ஆனால், இன்று... .

ஆரிஃபா, " ஏன்மா குர்ஆன் ஓதுவியா ? " என்று கேட்க

" ஓதுவேன் மா " என்றாள் ஷெஹனாஸ்.

" சரி மா எனக்கு ஓதி காட்டுறியா? " என்று லியாக்கத் கேட்க

" ம்ம்ம் ஓதுறேன் " என்றவுடன் ரக்ஷனா அவளுக்கு குர்ஆன் எடுத்து வந்து கொடுக்க உழுவுடன் இருந்ததால் குர்ஆனை வாங்கி ஓத ஆரம்பித்தாள், ஷெஹனாஸ்.

அவள் குர்ஆனை ஓதுவது அவ்வளவு அழகாக இருந்தது. ராஹிலா அவள் ஓதுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.

அவர்களுக்கு பிடித்திருக்கு என்றும் திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்றும் பேச தொடங்கினர்.

ராஹிலா, ஷெஹனாஸை விட்டு யாரிடமும் செல்ல வில்லை. ஷெஹனாஸூம் அவளுடன் சிரித்த படி விளையாடி கொண்டிருந்தாள்.

ஷெஹனாஸ் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்த ரஸாஹ் மனம் சற்று நிம்மதி அடைந்தது.

பிறகு அனைவரும் கலந்து பேசி அடுத்த மாதம் முதல் தேதியில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்பது ஷெஹனாஸ் கட்டளை என்பதால் எளிமையாகவே நடத்த முடிவு செய்தனர்.

பிருந்தா ஷெஹனாஸ் ரக்ஷனா மூவரும் தோழிகளாக மாறிவிட்டனர் என்றே சொல்லலாம்.

அனைவரும் கிளம்ப , ராஹிலாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் ஷெஹனாஸ். பதிலுக்கு ராஹிலாவும் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

" போய்ட்டு வரடா ! பத்திரமா இரு சரியா! " என்று அவள் கன்னத்தை தடவி முத்தமிட்டு ஆரிஃபா சொல்லிவிட்டு சென்றார்.

திருமண வேலைகளும் தொடங்கி விட்டனர்.

சித்தீக் நேரில் ஷெஹனாஸ் ராஹிலாவிடம் பழகியதை பார்த்தும் நிம்மதி அடைந்தாலும், அவன் மனதில் இருந்த குழப்பங்கள் குறையவே இல்லை.

எல்லாம் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று அல்லாஹ்விடம் பொறுப்பை கொடுத்து விட்டு தூங்கினான் சித்தீக்.

" பாஸ்கர் எனக்கு ஷெஹனாஸை ரொம்ப பிடித்திருக்கு! ரொம்ப நல்ல பொண்ணு..." என்று பாஸ்கரின் தோளில் சாய்ந்து கொண்டு கூறினாள் பிருந்தா.

" ம்ம்ம் ஆமா நல்ல பொண்ணு. ராஹிலாக்கு தான் ஷெஹனாஸை ரொம்ப பிடித்திருக்கு . யார்கிட்டயும் போக மாட்டாள் அவ்வளவு எளிதாக.." - பாஸ்கர்.

" நீ வேணா பாரேன் ! சித்தீக் அண்ணா ஷெஹனாஸ் ஷெஹனாஸ் என்று அவள் பின்னாடி சுற்ற தான் போறாரு.." என்று பிருந்தா சொல்ல

" அப்படியா செல்லம் சொல்ற? " என்று கேட்க

"ம்ம்ம் அப்படி தான் " என்று அவள் சொல்ல

" ம்ம்ம் சரி செல்லம் " - பாஸ்கர்.

அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்கு சென்றாள் ஷெஹனாஸ். அவள் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

நாட்கள் மெதுவாக நகர தொடங்கியது. அவ்வப்போது ஆரிஃபாவிற்கு அலைமேசி மூலம் நலம் விசாரித்து கொள்வாள் . அப்படியே ராஹிலாவிடமும் பேசுவாள்.

ஆரிஃபா லியாக்கத் இருவருக்குமே சந்தோஷம் தான். இவர்கள் இருவரின் வாழ்வும் நன்றாக அமைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மறவாமல் துஆ கேட்டனர் பெற்றோர்கள்.

பத்திரிகை அடித்து வீட்டிற்கு வந்துவிட அதை தங்கள் உறவினர்களுக்கு கொடுத்து விட்டனர்.

ஷெஹனாஸ் தன் நண்பர்களிடம் கொடுக்க அவர்களின் சந்தோஷத்திற்கு எல்லை இல்லை.

" ராகுல் ஷெரின் எப்ப மலேசியாவில் இருந்து வருவாள்?"

" வர சனிக்கிழமை வரேன் சொல்லி இருக்காள் "என்று அரவிந்த் சொல்ல

" எருமை அவளை பார்த்து மூனு வருசம் ஆகுது..." என்று பரத் கவலை பட

" ஏன்டா அவள் கிட்ட மொக்க வாங்காம இருக்க முடியலை தானே " என்று ஷெஹனாஸ் கலாய்க்க அவன் ஈஈஈ என்று இழித்தான்.

" டேய் போதும் வழியுது துடைச்சுகோ " என்று அரவிந்த் சொல்ல அனைவரும் ஒன்றாக சிரித்தனர்.

" டேய் எருமை மாடுகளா! மறக்காமல் கல்யாணத்திற்கு வந்திடுங்க " என்று கூற

" ம்ம்ம் சரிங்க மேடம் வந்துடுறோம்" என்றனர்.

அவள் சென்று விட " டேய் ஷெஹனாஸ் முகத்தில இப்ப தான் கொஞ்சம் சிரிப்பே பார்க்க முடியுது ..." - பரத்

" ஆமாடா ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இனிமேலாவது இவள் வாழ்க்கை சந்தோஷமா இருக்கட்டும் " - அரவிந்த்

" சரி டா ஒரு வாரத்திற்கு முன்னவே போய் எல்லா வேலையும் நாம தான் செய்யனும் " - ராகுல்

" அது நம்ம கடமை " என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறினார்கள்.

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஷெரின், ராகுல், அரவிந்த், பரத் அனைவரும் ஷெஹனாஸ் வீட்டிற்கு வந்து விட்டனர்.

பரத் அரவிந்த் ராகுல் மூவரும் ரஸாஹ் உடன் சேர்ந்து கல்யாண வேலையில் உதவி புரிந்தனர்.

இவர்களுடன் பாஸ்கரும் சேர்ந்து கொண்டான். அலுவலகத்தில் இந்த விஷயம் தெரிய , ஷெஹனாஸ் தெரியமல் ஷெஹனாஸை பற்றி தவறாக பேச தொடங்கினார்கள்.

தொடரும்

staytune💕💕💕

வணக்கம் நண்பர்களே...

எல்லாரும் என்னையே மன்னிச்சிடுங்க ப்பா யூடி ரொம்ம்ம்ம்ப லேட்டா போட்டதுக்கு. இனி யூடி சீக்கிரமா போடுறேன். இந்த கதையை எடிட் பண்ணனும் நினைச்சேன் கை வலியால முடியலை . ஸாரி கொஞ்சம் அட்சட் கரோ😊.

நன்றி​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
😍 11 😍

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்க, அனைவரும் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

இரவு , ஷெஹனாஸ் மனதில் ஏதோ சொல்ல முடியாத உணர்வு. ஒருவித பயம் , பதட்டம் அவளை தொற்றி கொண்டது.

" யா அல்லாஹ் ! நான் ராஹிலாக்கு ஒரு நல்ல அன்பான அம்மாவாக இருக்கனும். நான் சித்தீக் கிட்ட இருந்து எதையும் எதிர்ப்பார்க்க கூடாது. நான் ராஹிலாக்கு அம்மாவாக மட்டும் தான் அந்த வீட்டுக்கு போறேன். நான் எதையும் எதிர்ப்பார்க்க கூடாது அல்லாஹ் !. அதுக்கு நீதான் என் கூட இருந்து உதவனும் " என்று மனதில் நினைத்த வண்ணம் இருந்தாள் ஷெஹனாஸ்.

ரஸாஹ், ஷெஹனாஸுக்கு இரவு சாப்பாடை எடுத்து வந்தான்.

"ஷெஹனாஸ், வா வந்து சாப்பிடும் "என்று அவளுக்கு ஊட்டி விட அவள் அமைதியாக சாப்பிட்டாள். சாப்பிட்டவுடன் , " அண்ணா உன்கிட்ட பேசனும் இங்க உட்காரு " என்று கூற

" ம்ம்ம் சொல்லு டா " என்று அவள் தலையை வருட

" அண்ணா அன்னிக்கு நீ எதுக்கு அண்ணியை திட்டுன தெரியலை ! ஆனா அன்னிக்கு அண்ணி எப்படி அழுதாங்க தெரியுமா? அண்ணி குழந்தை மாதிரி .. அவங்களை நல்லா பார்த்துக்கோ, நீ கோபப்பட மாட்டேன் தெரியும் அண்ணி தப்பு பண்ண மாட்டாங்க தெரியும்; ஆனாலும் சொல்றேன் அண்ணி எதாவது தப்பு பண்ணா அவங்களுக்கு பொறுமையாக எடுத்து சொல்லு , அண்ணி புரிந்து கொள்வாங்க. யாருக்காகவும் அண்ணியை விட்டு கொடுக்காத, அண்ணி மாதிரி ஒரு நல்ல பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாக கிடைத்தது நாம செய்த நன்மை.... இப்ப அவங்க மாசமா இருக்காங்க அவங்க என்ன கேட்டாலும் மறுக்காமல் வாங்கி கொடு சரியா.. அவங்களை அன்பா பார்த்துக்கோ.. குழந்தை பிறக்கும் நேரத்தில் அவங்க பக்கத்திலே இரு சரியா.. அவங்களை அடிக்கடி வெளியே அழைச்சிட்டு போ. நிறைய புத்தகம் வாங்கி கொடு . அண்ணியை நல்லா பார்த்துக்கோ ரஸாஹ்.. " என்று ஷெஹனாஸ் சொல்லி முடிக்க

" சரிங்க மேடம் , நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சியா பிறக்க வேண்டியது மாறி இப்படி வந்திடிங்க"என்று சொல்ல அவள் புன்னகை மட்டுமே பதிலாய் தந்தாள்.

ரக்ஷனா ஷெஹனாஸ் இருவருக்குமிடையே இருந்த நேசத்தை பார்த்து ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் படுவான் ரஸாஹ்.

ஷெஹனாஸ் ரக்ஷனா ஒருவரை ஒருவர் பார்த்தாலும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். அதை பார்த்த ரஸாஹ் புரிந்து கொண்டான். அவனும் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை.

" ஏய் ஷெரின் ஏன் நீ உன் கணவரை அழைச்சிட்டு வரலை? " என்று ஷெஹனாஸ் கேட்க

" அவருக்கு வேலை இருக்கு டி நாளைக்கு மார்னிங் இந்தியா வந்திடுவாறு..." என்று ஷெரின் சொல்ல

" ம்ம்ம் சரிடி.." என்றாள்.

"நீ சித்தீக்கை விரும்புறியா? " என்று ஷெரின் கேட்க அதிர்ச்சியுடன் ஷெரினை பார்த்தாள் ஷெஹனாஸ்.

" ஏய் லூசாடி நீ அவரை நான் என்னிக்குமே அந்த மாதிரி நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது? நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க ஒரே காரணம் ராஹிலா தான் அவள் மட்டும் தான் ஷெரின். அது ஒரு உணர்வு சொல்ல முடியலை..." என்று மனதில் உள்ளதை சொன்னவளை பார்த்து கேட்டாள்,

" சரி ஷெஹனாஸ் ஒருவேளை அவர் உன்னை அவரோட மனைவியா ஏத்துக்கிட்டாரு அப்ப அவரோட கடந்த கால வாழ்க்கை பற்றி உனக்கு கவலை இல்லையா?.." என்று ஷெரின் கேட்க அதற்கு புன்னகைத்தவாறே

" அதை பற்றி எனக்கு கவலை இல்லை ஷெரின் "என்று கூறியவளை

" நீ நல்லா இருந்தா போதும் நான் கர்த்தர் கிட்ட உனக்காக பிராத்திக்கிறேன்..." என்று ஷெரின் கூற

"ம்ம்ம் சரி டி நான் தொழுதுட்டு வரேன்.." என்று தொழ சென்றாள் ஷெஹனாஸ்.

சித்தீக் தன் மகளோடு விளையாடி கொண்டிருந்தான். பாஸ்கர், பிருந்தா , சம்யூக்தா வினய் மனோகர் புனிதா லோகேஷ் அனைவரும் வந்து விட்டனர்.

புனிதா, ஆரிஃபா இருவரும் கல்லூரி தோழிகள் .

" எப்படியோ ஆரிஃபா சித்தீக் நல்ல வாழ்க்கை அமைய போகுது அதுவே போதும்" என்று புனிதா கூற

" ம்ம்ம் ஆமாம் புனிதா "

" அத்தை நீங்கள் வேணா பாருங்களேன்! சித்தீக் அண்ணா ஷெஹனாஸ் ஷெஹனாஸ் அவள் பின்னாடி சுத்த தான் போறாரு இன்னும் கொஞ்ச நாளில்" என்று பிருந்தா சொல்ல அனைவரும் சந்தோஷமாய் சிரித்தனர்.

" கலகல இருந்தவன் இப்ப எதுவும் பேசாம தனிமையிலே இருக்கான்" என்று சம்யூக்தா கவலை பட

" இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே சரியாகிடும் " என்று லோகேஷ் சொல்ல

" இன்ஷா அல்லாஹ் " என்று லியாக்கத் கூற , " சரி எல்லாரும் வாங்க சாப்பிடலாம் " என்று ஆரிஃபா அழைத்தவுடன் சாப்பிட அமர்ந்தனர் அனைவரும்.

திருமண நாளன்று...

ரக்ஷனா ஷெஹனாஸிற்கு உதவி செய்து கொண்டிருந்தாள். இருவரும் பிரிவின் வலியை உணர பேசாமல் அமைதியாகவே இருந்தனர். பேசினால், எங்கே அழுது விடுவோமோ என்ற பயத்தில் இருவருமே அமைதியாகவே இருந்தனர். சொல்லப்போனால் ரஸாஹ் கூட அப்படி இருந்தான்.

இத்தனை வருடங்கள் தன்னுடன் பிறந்தவள் வேறு ஒரு வீட்டிற்கு பிரிந்து செல்ல போகிறாள் என்பது அவன் மனதில் வலியை ஏற்படுத்த அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தான் ரஸாஹ்.

மண்டபத்தில் அனைவரின் முன்னிலையிலும் நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திட்டான் சித்தீக்.

" இந்த கையெழுத்து இனி ராஹிலா எனக்கும் பொண்ணு தான் . அவளை என் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன் . உங்களுக்கும் ஒரு நல்ல மனைவியா இருப்பேன்...." என்று மனதில் உறுதி செய்து கொண்டு நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திட்டாள் ஷெஹனாஸ்.

சிறிது நேரத்தில் சித்தீக் ஷெஹனாஸ் இருவரையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட, ஷெஹனாஸ் தன் அண்ணன் அண்ணியை அணைத்து கொண்டு அழ தொடங்கினாள்.

அவர்கள் மூவரின் அழுகையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. எப்போதும் அண்ணா அண்ணி என்று அவர்களுடனே இருப்பவள். இப்போது பிரிந்து செல்கையில் மனம் வலித்தது மூவருக்கும்.

" அண்ணா அண்ணியை பார்த்துக்கோ... குட்டி பாப்பாவையும் நல்லா பார்த்துக்கோ.. நா..நான் போய்ட்டு வரேன்.." என்றவள் தன் அண்ணனின் நெஞ்சில் சாய்ந்து அழ தொடங்கினாள்.

" சித்தீக்கையும் ராஹிலாவையும் நீதான் நல்லா பார்த்துக்கனும்.. சரியா... " என்று ரஸாஹ் சொல்ல

" ம்ம்ம் சரி " என்று கூறி

"அண்ணி பத்திரமா இருங்கள். மாடிபடி ஏறும்போது இறங்கும்போது கவனமா இருங்கள் . பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்க. நிறைய குர்ஆன் ஓதுங்க.. மிஸ் யூ அண்ணி..." என்று அவளை அணைத்து கொண்டாள்.

அவர்கள் இருவரின் அன்பை கண்டு அங்கிருந்த அனைவருமே வியந்தனர்.

" ஏம்மா இப்ப எதுக்கு அழுகை? நாம என்ன எட்டா தூரத்திலையா இருக்கோம் இதோ இருக்க மஞ்சக்குப்பத்தில இருக்கோம் நினைச்சா வந்து பார்த்துக்கலாம் இதுக்கு போய் அழுவலாமா? ஏன் ரக்ஷனா உனக்கு எப்பலாம் ஷெஹனாஸ் பார்க்க தோனுதோ அப்ப எங்க வீட்டுக்கு வந்து பாரு! உனக்கு எப்ப உன் அண்ணியை பார்க்கனும் தோனுதோ அப்ப நீபோய் பாரு.." என்று ஆரிஃபா சமாதானம் செய்ய ஒரு வழியாக புரிந்து கொண்டாள்.

தன் அப்பாவிடம் சென்றவள், " அப்பா நான் போய்ட்டு வரேன்... " என்று கண்ணீரோடு சொல்ல அருகில் நின்ற சித்தீக் கரங்களை தன் மகள் ஷெஹனாஸ் கரங்களில் வைத்து " இனி இவங்க ரெண்டு பேரும் உன் பொறுப்பு டா ரெண்டு பேரையும் நல்லா பார்த்துக்கனும் .. ராஹிலாவை உன் மகளா நினைத்து நீ வளர்க்கனும் " என்று தன் மகளுக்கு அறிவுரை கூறினார் உஸ்மான்.

" சித்தீக் அவள் நிறைய கஷ்டப்பட்டு விட்டாள். அவள் எதாவது தப்பு பண்ணா பொறுமையா சொலுங்க கேட்டுப்பா.. என் பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க மாப்பிள்ளை. அவள் பட்ட கஷ்டம் போதும்.." என்று சொல்ல சித்தீக்கு புரியவில்லை என்றாலும்

" கண்டிப்பா மாமா நான் நல்லா பார்த்துக்கிறேன் "என்று கூறிவிட்டு இருவரும் காரில் ஏறி சித்தீக் வீட்டிற்கு சென்றனர்.

லியாக்கத்தின் அம்மா ராபியாவிற்கு சித்தீக் முதல் மனைவி தமீஸை அவ்வளவாக பிடிக்காது. அதனால் அவர் தன் சிறிய மகன் ஷிக்கந்தர் வீட்டில் வசித்தார்.

ஆனால் ஷெஹனாஸிடம் ஏதோ பாசம் உணர்ந்தவர், அங்கேயே இருக்க முடிவு செய்தார்.

இது ஏனோ ஷிக்கந்தர் பிள்ளைகளான ஜஸ்ரா மற்றும் நிஸாவிற்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் ஷெஹனாஸ் மேல் கோபம் வந்தது. அதற்கு முன்பே ஷெஹனாஸை பிடிக்கவில்லை இருவருக்குமே...

அதற்கே சித்தீக்கை மனதில் , " பொண்ணை பிடிச்சி இருக்கான் பாரு நல்லா போந்தாக்கோழியா " என்று திட்டி கொண்டிருந்தனர் இருவரும்.

இப்போது சொல்லவா வேண்டும் ? தங்கள் பாட்டியை தங்களிடம் இருந்து பிரித்து விட்டாள் என்று நினைத்து கொண்டு மனதில் வன்மத்தை கக்கினர் இருவரும்.

இது எங்கே கொண்டு போய் முடியும் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே விடிந்தது.

ஷிக்கந்தர் மனைவி தஸ்லிமா, " ஏன் அக்கா ஷெஹனாஸை உங்களுக்கு எப்படி பிடிச்சது ? அவள் என்ன அவ்வளவு அழகாவா இருக்காள்? " என்று கேட்க,

" அவள் அழகில்லாமல் இருக்கலாம் ஆனால் அழகான மனசு அவள் கிட்ட அதிகமாவே இருக்கு " என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டார் ஆரிஃபா.

தஸ்லிமா அதற்கு மேல் பேசாமல் அமைதியாக சென்று விட்டார்.

பாட்டி ராபியா, ஷெஹனாஸ் மற்றும் ராஹிலாவுடன் பேசி கொண்டிருந்தார்.

" ஏன் ஷெஹனாஸ் உன்கிட்ட இந்த வாட்ஸ் ஆப் இல்லை? " என்று கேட்க

" பாட்டி நீங்க வாட்ஸ் ஆப்லா யூஸ் பண்றிங்க ?..."

" வாட்ஸ் ஆப் என்ன வாட்ஸ் ஆப் இன்ஸ்டா பேஸ்புக் ஹைக் ட்விட்டர் கூட யூஸ் பண்ற..உனக்கு ஒன்னு தெரியுமா ? B.sc chemistry la golden medal " என்று சொல்ல

" அட பாட்டி எனக்கு chemistry பிடிக்காது . ஆனா உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு" என்று பாட்டிக்கு முத்தம் கொடுத்தாள் ஷெஹனாஸ். பாட்டியும் அவளை அணைத்து முத்தமிட்டார்.

இருவரும் சேர்ந்து ராஹிலாவுடன் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்த ஜஸ்ரா நிஸா இருவருக்கும் கோபம் தலை கேறியது.

இவளை எதாவது செய்ய வேணடும் என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தனர்.

தொரும்💕💕

staytuned💕💕

 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ 12 ❤️

லியாக்கத் அம்மா ராபியா அப்போதே இளம் அறிவியல் வேதியியல் gold medal வாங்கியவர். அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வயது 71. அப்பா வாசிம் , தொழிற்கல்வி பயின்றவர். இவரும் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வயது 75. ஆனாலும் இளமை போல் தோற்றம் அவருக்கு.

சித்தீக் அப்பாவிற்கு தம்பி மட்டுமே. தம்பி பெயர் ஷிக்கந்தர். இவரின் மனைவி தஸ்லிமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவன் ஜஸ்ரா இளையவள் நிஸா.

இருவரும் சித்தீக் பின் பிறந்தவர்களே. ஜஸ்ரா நிஸா இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இவர்களின் கணவன்மார்கள், அண்ணன் தம்பிகள். இருவரின் பெற்றோர்களும் சிறு வயதிலே இறந்து விட எத்தீமி கானாவில் ( இஸ்லாமிய ஆதரவற்றோர் தங்குமிடம்) வளர்ந்தவர்கள்.

இருவரின் நல்ல குணத்தையும் மார்க்க பற்றையும் பிடித்து போய் தன் மகள்களை அவர்களுக்கே மணமுடித்து வைத்தார், ஷிக்கந்தர்.

இருவரும் குவைத்தில் வேலை செய்து வருவதால், ஜஸ்ராவும் நிஸாவும் தங்கள் அம்மா வீட்டிலே தங்கி விட்டனர். திருமணம் ஆகி ஒரு வருடம் முடிய போகிறது.

இருவரும் சித்தீக்கை விட சிறியவர்களே! இருவரும் சித்தீக்கின் செல்ல தங்கைகள். அவர்களுக்கு தமீஸை பிடித்த மாதிரி ஷெஹனாஸை பிடிக்கவில்லை.

ஷெஹனாஸ், பாட்டியின் அறையில் ராஹிலாவை உறங்க வைத்து கொண்டிருந்தாள். இஷா தொழுகைக்கு நேரமானதால் விரைவாக உழு செய்துவிட்டு இஷா தொழுதாள்.

இஷா தொழுகை முடித்துவிட்டு வந்தவன் அறையில் அமர்ந்தவனின் மனம், தானும் தமீஸும் திருமணமாய் முதல் முறை இந்த அறையில் அடி எடுத்து வைத்த நாள் நினைவுக்கு வந்தது.

அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க, அதிலிருந்து மீண்டவன் கண்களை துடைத்து கொண்டு கதவை திறந்தான்.

" அண்ணா வா சாப்பிடலாம் " என்று ஜஸ்ரா அழைக்க

"சரிமா வரேன் போ " என்று அவளை அனுப்பினான் சித்தீக்.

பிறகு, அவன் வர ஷெஹனாஸும் வந்தாள்.

" உட்காருமா சாப்பிடலாம் " என்று ஆரிஃபா சொல்ல

" அத்தை நீங்க உட்காருங்க நான் பரிமாறுகிறேன் " என்றாள்.

" நீ புது பொண்ணு இப்ப வேண்டாம் " என்று தஸ்லிமா சொல்ல

" ஏன் புது பொண்ணுன்னா வேலை செய்ய கூடாதா? இது என் வீடு நான் செய்வேன் " என்று தன் அத்தையை வலுக்கட்டாயமாக உட்கார வைத்து பரிமாறினாள், ஷெஹனாஸ்.

எல்லாருக்கும் பரிமாறியவள், சித்தீக் பரிமாறும் போது மட்டும் அவள் தானாக நடுங்க ஆரம்பித்தது.

" ஆஹா ஷெஹனாஸ் இது என்ன நமக்கு வந்த சோதனை? கையெல்லாம் ஏன் நடுங்குது ! 😢😢 Control yourself Shehanaz " என்று அவள் மனம் தைரியம் சொல்ல

" அதெல்லாம் எனக்கு தெரியும் மூடிட்டு உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போ .. "என்றவளை பார்த்து சிரித்தது மனம்.

"ஏன்னாச்சு மா கையெல்லாம் நடுங்குது ? " என்று பாட்டி ராபியா கேட்க

"அ...அது.. " என்று திருதிருவென முழித்தாள் ஷெஹனாஸ்.

"சரி மா நீ அவனுக்கு பரிமாறு " என்று வாசிம் கூற

"சரி " என்று தலையசைத்து விட்டு அவள் பரிமாறினாள்.

சித்தீக்கோ , "இவள் எதற்கு இப்படி பயப்படுறாள்? நாம என்ன சிங்கமா ? .." என்று தனக்குள் நினைத்த படி சாப்பிட்டான்.

அனைவரும் சாப்பிட்டு எழ , " ஏய் நீ உட்கார்ந்து சாப்பிடும்" என்று லியாக்கத் அதட்ட, சாப்பிட போனவள் தன் அண்ணனை சாப்பிட அழைக்கனும் என்று நினைத்தவளின் மனம் இருக்கும் இடத்தை உணர அமைதியாக அமர்ந்து சாப்பிட்டாள்.

அவள் உணவை வாயில் வைக்க , " ஏய் எதுக்கு டி என்னோட பங்கை எடுத்த? " என்று ரஸாஹ் கத்த

" டேய் எதுக்கு இப்ப கத்துற ? உன் பங்கை நான் எதுக்கு எடுக்க போற? " என்று சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள், ஷெஹனாஸ்.

" பிசாசு உன்னை என்ன பண்றேன் பாரு " என்று கூறிவிட்டு அவளிடம் இருந்த உணவை பிடுங்கி அவன் சாப்பிட்டான்.

"டேய் எருமை அது என்னோடது ஒழுங்கா கொடுத்துடு " என்று ஷெஹனாஸ் சொல்ல

" முடியாது போடி " என்று அவன் கூற அவனை அடிக்க வந்தவளை ஏமாற்றி விட்டு ஓட ஆரம்பித்தான் ரஸாஹ்.

" ஷெஹனாஸ் ஷெஹனாஸ் " என்ற ஆரிஃபா குரலில் நிகழ்காலத்திற்கு வந்தாள் , ஷெஹனாஸ்.

"என்னம்மா சாப்பிடாம யோசனை. " என்று ஆரிஃபா கேட்க

" ஒன்னுமில்லை அத்தை " என்று விட்டு யாரும் அறியா வண்ணம் கண்ணை துடைத்து விட்டு சாப்பிட்டு முடித்தாள்.

ஆரிஃபா வற்புறுத்தி கூறியதால், வேறு வழியின்றி ஜஸ்ரா நிஸா இருவரும் சேர்ந்து ஷெஹனாஸை கிளம்பினர்.

அவர்கள் இருவரும் தலைசிவி விடுறேன் என்ற பெயரில் அவளுக்கு வலிக்குமாறு சிவி விட அவள் வலியில் துடித்தாள். அதை பார்த்து இருவரும் சிரித்தனர்.

அவளுக்கு மேக்கப் செய்றேன் என்ற பெயரில் அலங்கோலமாக செய்தார்கள்.

ஷெஹனாஸ் கண்ணாடியில் பார்க்கையில் அவள் தன் முகத்தை பார்த்து பயந்து விட்டாள். அந்தளவுக்கு கேவலமாக செய்தனர்.

அவர்களை பார்த்து முறைத்து விட்டு முகத்தை கழுவி விட்டு தானே தயாராகி கொண்டாள்.

அவள் மனமும் புத்தியும் அவர்களை கண்டித்து விடு என அறிவுரை கூற இவள் வேண்டாம் தேவை இல்லாமல் விரிசல் விழும் என்று அமைதியாக இருந்து விட்டாள்.

பிறகு ஆரிஃபா வர, "மாஷா அல்லாஹ் அழகா இருக்கே டா " என்று கூறி நெற்றி முறித்தார்.

இதுவரை தன் தாய் பேச்சுக்கு கூட தன்னை இப்படி சொல்லியதில்லை ஆனால் தன் மாமியார் சொல்லியது அவளுக்கு ஆயிரம் கிரீடம் சம்பாதித்தை போன்ற உணர்வு. கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டாள்.

"ராஹிலா எங்கே ?அத்தை " என்று கேட்டவளிடம்

" சித்தீக் பாட்டியோட இருக்காள் " என்றார்.

" சரி வா " என்று சித்தீக் அறையில் அவளை விட அமைதியாக உள்ளே சென்றாள்.

அவள் வந்தை அறிந்து கொண்ட சித்தீக் அவளை பார்த்தான். அவளுக்கு என்னவோ தெரியவில்லை கைகால் எல்லாம் நடுங்க தொடங்கியது.

அவன் , " இவளுக்கு என்னாச்சு என்னை ஏதோ புதுசா பார்க்கிற மாதிரி பார்த்து பயப்படுறாள். ஆபிஸில் இப்படி இருக்க மாட்டாள் " என்று நினைத்து கொண்டு இருந்தான்.

" என்ன நமக்கு இப்படி குளிருது ? " என்று அவள் அறையை சுற்றி முற்றி பார்த்த போது தான் அவள் கைகால்கள் நடுங்கிய காரணம் விளங்கியது.

" இவள் என்ன எங்கேயோ ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்காள் ? " என்று அவள் பார்வை சென்ற திசையை நோக்கி அவன் பார்க்க

" என்ன இவள் ஏசியை பார்த்து இப்படி முறைக்கிறா ? என்னாச்சு "என்று குழம்பி கொண்டு இருந்தான்.

" அல்லாஹ் எனக்கு ஏசியே ஒத்துக்காது. ஆபிஸ்ல கூட ஏசி இருந்தாலும் அதை போட மாட்ட இங்க எப்படி இருப்பது ? " என்று நினைத்து கொண்டிருந்தவளுக்கு அதிகமாக குளிர தொடங்கியது.

அப்போது தான் அவனுக்கு புரிந்தது அவளுக்கு குளிருகிறது என்று. பிறகு ஏசியை ஆப் செய்தான்.

பிறகு தான் அவள் இயல்பு நிலைக்கு வந்தாள்.

" சாரி எனக்கு ஏசில இருந்து பழக்கம் இல்லை.. "

" பரவாயில்லை அப்பறம் நீ இந்த வீட்டில மட்டுமில்ல ஆபிஸ்ல கூட நீ என் மனைவி என்ற உரிமை உனக்கு இருக்கு... என் மனசு மாறதுக்கு கொஞ்ச நாள் ஆகும். ஏன்னா..." என்று அவன் கூற

" எனக்கு உங்க கடந்த காலத்தை பற்றி எந்த கவலையும் இல்லை அதேநேரம் அதை பற்றி தெரிஞ்சிக்க விருப்பமும் இல்லை. நான் ராஹிலாக்கு ஒரு நல்ல அம்மாவா மட்டும் இல்லாம ஒரு நல்ல தோழியாவும் இருப்பேன்.. " என்று விட்டு அவள் தூங்கினாள்.

" நான் இப்ப என்ன சொன்னேன் இப்படி பேசிட்டு போறாள் , அல்லாஹ் இவளை " என்று மனதில் நினைத்து கொண்டு அவனும் உறங்க சென்றான்.

புது இடம் என்பதால் அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவள் அமைதியாக எழுந்தவள் சித்தீக்கை பார்த்தாள். அவன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அவளுக்கும் உறக்கம் வர உறங்கி போனாள்.

ரஸாஹ் இரவு எதுவும் சாப்பிடாமல் இருக்க ,ரக்ஷனா உணவை எடுத்து வந்து அவனை சாப்பிட வைத்து கொண்டு இருந்தாள்.

தன்னவளை அணைத்து கொண்டு அழுதான்.

"ம்ச் ரஸீ அழாதடா இங்க பாரு ஷெஹனாஸ் எங்கே போய்ட்டா இங்க தான் இருக்காள் " என்று அவனை சமாதானம் செய்ய அவன் அழுகை நின்றது.

" ஏய் பொம்மை நீ சாப்பிட்டியா ? " என்று கேட்க

" சாப்பிட்டேன் " என்று கூறிவளை பார்த்து மென்மாய் ஒரு புன்னகை சிந்தினான் ரஸாஹ்.

"ஏய் பொம்மை என்ன அப்படி பார்க்கிற? " என்று கேட்டவனின் கன்னத்தை பிடித்து கிள்ளியவள் , " சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கடா என் செல்லம் " என்று முத்தமிட

" ஹே பொம்மை விடுடி வலிக்குது " என்றவனை பார்த்து செல்லமாக முறைத்தவள் அவன் மடியில் படுத்தவள், சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்.

இரண்டு நாட்களில் வலீமா விருந்து நடக்க சித்தீக் ஷெஹனாஸ் ராஹிலா மூவரும் ஷெஹனாஸ் வீட்டிற்கு சென்றனர்.

சித்தீக் எல்லாரிடமும் அன்பாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டான். ஆயிஷாவிடம் தப்பி தவறி கூட பேசவில்லை ஷெஹனாஸ். ஆயிஷா கூட அப்படி தான் இருந்தார்.

ராஹிலா ரக்ஷனா ஷெஹனாஸ் விளையாடி கொண்டிருக்க, அதை பார்த்து கொண்டே சித்தீக் ரஸாஹ் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

சித்தீக் தன் குடும்பத்தினருடன் அன்பாக பழகியதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள் , ஷெஹனாஸ்.

"ம்மா " என்று ராஹிலா அழைக்க

" என்ன குட்டிமா? " என்று ஷெஹனாஸ் கேட்க அவள் தன் கைகளால் அங்கே என்று வெளியே கைக்காட்ட

" வெளியே போகனுமா? " என்று கூறி கொண்டே அவளை தூக்கி கொண்டு வெளியே வந்தாள்.

அவள் வானத்தில் தெரிந்த நிலவை காட்டி அவளுக்கு கதை சொல்லி கொண்டு இருந்தாள்.

அதை கேட்டு கொண்டே உறங்கி போனாள் ராஹிலா. அவள் தூங்கி விட்டாள் என்பதை பார்த்த ஷெஹனாஸ், மெதுவாக கட்டிலில் தூங்க வைத்தாள்.

பிறகு சித்தீக் உள்ளே வர , கதவை மூடிவிட்டு உறங்கினர்.

ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தான் சித்தீக். அதுவரை பாஸ்கர் தான் பார்த்து கொண்டான் அனைத்தையும்.

ராஹிலா உஸ்மானிடம் சென்றாலும் ஆயிஷாவிடம் செல்ல மாட்டேன் என்று விட்டாள்.

ஷெஹனாஸ் மனதில் நல்லது என நினைத்து கொண்டாள்.

மூன்று நாட்கள் அங்கே இருந்து விட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள் மூவரும். அவர்களை சிரித்த முகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

இரவு..

" ஷெஹனாஸ் நாளையில் இருந்து வேலைக்கு கிளம்பனும் " என்று அவளுக்கு நினைவு படுத்த

" ம்ம்ம் சரிங்க " என்றுவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டாள்.

நாளை முதல் தான் சந்திக்க இருக்கும் பிரச்சினைகளை அறியாமல் உறங்கி கொண்டிருந்தாள் ஷெஹனாஸ்.

தொடரும் ❤️❤️
staytune 💕💕
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️13❤️

"ஷெஹனாஸ் நாளைக்கு வேலைக்கு கிளம்பனும் " என்று சித்தீக் நினைவுபடுத்த

" ம்ம்ம் சரி " என்று விட்டு ஷெஹனாஸ் தூங்க சென்றாள்.

"இவனுக்கு மட்டும் எப்படி தான் படுத்த உடனே தூக்கம் வருதோ ?? " என்று நன்றாக தூங்கி கொண்டிருந்த சித்தீகை பார்த்து கேட்டாள். பிறகு எப்படியோ உறங்கிவிட்டாள்.

நாளை முதல் தான் சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளை அறியாமல் உறங்கி கொண்டிருந்தாள்.

காலையில் தஹஜ்ஜுத் தொழ இருவரும் ஒன்றாகவே எழுந்தனர். சித்தீக், " நான் தொழுது வரேன் " என்றுவிட்டு சென்றான்.

அவன் சென்ற பின் , " நான் தொழுது வரேன் வவ்வ " என்று அவன் சொல்வதை அப்படியே செய்து விட்டு தொழ உழு செய்ய சென்றாள்.

வண்டி சாவியை எடுக்க உள்ளே வந்தவன் , அவள் தன்னை போலவே செய்ததை பார்த்தவன் ராட்சஷி என்று தனக்குள் சொன்னவன் சிரித்துவிட்டு பள்ளிவாசலுக்கு கிளம்பினான்.

அவள் தொழுது முடித்தவள், சமையலறைக்கு சென்றவள் , அனைவருக்கும் தேநீரை போட்டு பிளாஸ்கில் ஊற்றி ஓரமாக வைத்துவிட்டு, காலை உணவு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தாள்.

பிறகு சாப்பாத்தி மாவு பிசைந்து விட்டு ஃபஜர் தொழ சென்றாள் . தொழுது முடித்தவள், வேகமாக சமையல் வேலையை தொடங்கினாள்.

காலை சாப்பிடுவதற்கு சாப்பாத்தியும் குர்மாவும் செய்தாள். மதியத்திற்கு வெண்டைக்காய் குழம்பும் உருளை கிழங்கும் செய்து முடித்தாள்.

தான் குடிக்க தேநீரை எடுத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்தவாறு தொலைக்காட்சியில் பாடலை ஒட விட்ட படி தேநீரை அருந்தி கொண்டிருந்தாள்.

ஏனோ அவள் மனம் என்றும் இல்லாமல் இன்று அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது.

ஸோபாவில் சாய்ந்தவாறு பாடலை கேட்டு கொண்டு இருந்தாள். பாடலின் ஓசை ஜஸ்ரா நிஸா காதில் விழ , " யாருடி இது காலையிலே பாட்டு போட்டு இருக்கிறது" என்று நிஸாவிடம் கேட்டு கொண்டே வெளியே வந்தார்கள் இருவரும்.

"இந்த வீணா போனவளுக்கு பாட்டு தான் ஒரு கேடோ? " என்று கூறிய படி தொலைக்காட்சியை ஆப் செய்தாள், நிஸா.

" ஏய் போய் ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா!! " என்று ஜஸ்ரா கூறிவிட்டு ஸோபாவில் கால்மேல் கால் போட்டவாறு அமர்ந்தார்கள் இருவரும்.

"ஷெஹனாஸ் இவளுங்களை இப்பவே கண்டித்து வை " என்று அவள் மனமும் புத்தியும் எடுத்துரைத்தும் அவள் முடியாது என்று அவர்கள் சொன்னதை அமைதியாக செய்தாள்.

சிறிது நேரத்தில் அனைவரும் அங்கு வந்தனர். அவர்கள் வருதை பார்த்த ஷெஹனாஸ் அனைவருக்கம் தேநீரை எடுத்து வந்து கொடுத்தாள்.

"அத்தை காலையில் சாப்பிட சாப்பாத்தி குருமா செய்து விட்டேன் மதியானம் வெண்டைக்காய் குழம்பும் உருளை பொறியலும் செஞ்சிட்ட வீட்டை எல்லாம் பெருக்கியாச்சி இன்னும் பாத்திரம் மட்டும் கழுவுறது இருக்கு " என்று சொல்ல

"ஏன் அது யாரு உன் அப்பாவா வந்து கழுவுவாறு? " என்று நிஸா கேட்க

" ம்ம்ம் எங்கப்பா இல்ல உங்கப்பா தான் கழுவுவாறு "என்று ஷெஹனாஸ் பதில் சொல்லி விட்டு சிறிது நேரமும் நிற்காமல் ராஹிலாவை ராபியாவிடம் இருந்து வாங்கி கொண்டு தன் அறைக்கு சென்றாள்.

அவள் சொன்னது யாருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் அவள் தரப்பில் இருந்த நியாயத்தை உணர்ந்த மற்றவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். ஆனால் ஜஸ்ராவுக்கும் நிஸாவுக்கும் கோபம் தலைக்கேறியது.

"ஏன் பாட்டி இதெல்லாம் கேட்க மாட்டிங்கலா? " என்று நிஸா கேட்க,

"நீ பேசினது சரியா? " என்று பாட்டி பதிலுக்கு கேட்க இருவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

"அதுக்கு அவ அப்படி பேசலாமா ? " என்று ஜஸ்ரா கோபப்பட , " நீ அவள் அப்பாவை இழுத்தது மட்டும் நியாயமா? "என்று ஆரிஃபா கடுகடுக்க இருவரும் அமைதியாக தங்கள் வேலையை செய்தனர்.

"குட்டிமா நல்லா தூங்குனிங்களா ? " என்று தன் மகளிடம் கேட்க அவள் , " ம்ம்ம் " என்று சிரித்தாள்.

" இப்ப நம்ம குளிக்கலாமா ? "என்று ராஹிலாவிடம் பேசியவாறு தண்ணீர் குழந்தையின் உடம்பு தாங்குமா என்று பார்த்துவிட்டு ராஹிலாவை குளிக்க தூக்கி சென்றாள்.

அவளுடன் பேசி கொண்டே குளிக்க வைத்தாள் ஷெஹனாஸ். அவளுக்கு அழகான உடை அணிந்து கொண்டே , " குட்டிமா உன் அப்பா சரியான உரங்குட்டான், எங்கேயாவது சிரிக்கிறாரா? " என்று அவள் ராஹிலாவிடம் பேசுவதை உள்ளே வந்த சித்தீக் கேட்டவன் மனதில் , " ராட்சஷி நான் உரங்குட்டானா ? நீ தான்டி " என்று மனதில் சொல்லி கொண்டான். (Mindvoice)

ஆனால் , அதை அறியாமல் இன்னும் பேசி கொண்டிருந்தாள் ஷெஹனாஸ். அவன் அமைதியாகவே இருந்தான்.

"என்ன உன் அப்பாவை திட்டுனதும் உனக்கு கோபம் வருதா? வரட்டும் வரட்டும் , உன் அப்பா சிரிச்சா எவ்வளவு அழகா இருப்பாரு தெரியுமா ? அந்த மனிஷன் சிரிக்கவே மாட்றாரு சரியான
இஞ்சி தின்ன குரங்கு" - ஷெஹனாஸ்

"மீ இஞ்சி தின்ன குரங்கு. பிசாசு நீதான்டி "- சித்தீக் mindvoice

"மனிஷனா பொறந்தா எல்லாருக்கும் வலிகள் இருக்க தான் செய்யும் அதுக்கு சிரிப்பை மறந்திடுறதா? சிரிச்சாலும் சிரிப்பை ஏதோ கடனுக்கு வாங்கிட்டு வந்த மாதிரிலே உன் அப்பா சிரிக்கிறாரு.. அதை விடு உன்னை தூக்கி விளையாடுறாரா அந்த மனிஷன் " - ஷெஹனாஸ்

"எது நான் விளையாடுறது இல்லையா ? எங்கடி அவளை தூக்க விட்ட என்னை? எந்நேரமும் நீதான் அவளை வச்சி விளையாடிட்டு இருக்க. அந்த குட்டியும் உன்கூட சேர்ந்திட்டு என்னைய கண்டுக்கிறது இல்லை. ராட்சஷி எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு நாள் இருக்கு உனக்கு " - சீத்தீக்.

" குட்டிமா பாட்டி கிட்ட சமத்தா இருக்கனும் எந்த தொல்லையும் கொடுக்க கூடாது.. சரியா என் செல்லம் " என்று ராஹிலாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் ஷெஹனாஸ்.

சித்தீக் தான் வந்துவிட்டேன் என்ற அடையாளத்தை ம்ம்ம் என்று கனைத்து விட்டு ராஹிலாவை தூக்கி கொண்டு வெளியே இருக்கும் முற்றத்திற்கு சென்று விளையாடி கொண்டிருந்தான்.

அவள் பாட்டியிடம் சென்று பேசி கொண்டிருந்தாள். மணி எட்டை தொட வேலைக்கு கிளம்ப ஆய்தம் ஆனாள்.

அதற்குள் அவன் குளித்து விட்டு தலை சீவி கொண்டு இருந்தான். அதை பார்த்தவள் , " நாலு முடியை வச்சிட்டு என்னமா சீன் போடுறான் ம்ஹூம் " என்று விட்டு அவனிற்கு முன் கண்ணாடி முன்னாடி நின்று தலை சீவ தொடங்கினாள்.

"ஏய் பிசாசு தலை தானே சீவிட்டு இருக்கேன், உனக்கு அறிவில்லை " - சித்தீக்

"நாலு முடியை எவ்வளவு நேரமா சீவுவிங்க ? " என்று கேட்டு விட்டு தலைசீவ தொடங்கினாள்.

"அதுக்கு இப்படி தான் பண்ணுவியா ? "

"ஆமா "

" ராட்சஷி உன்னை .." என்று மனதிற்குள் நினைத்தவன் சிரித்து கொண்டான்.

பிறகு இருவரும் கிளம்பி வர அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவை உண்டனர்.

"அம்மாடி ஷெஹனாஸ் குருமா செமயா இருக்குமா ! மாஷா அல்லாஹ்... " என்று பாட்டி சொல்ல

" என் மருமகள் சமையலா இன்னிக்கி , அதான் என்னடா இன்னிக்கி சாப்பாடு ரொம்ப ருசியா இருக்கேனு பார்த்தேன், அம்மா உன் அத்தை சமையலை சாப்பிட முடியாது " என்று லியாக்கத் நக்கலடிக்க ஆரிஃபா அவரை முறைத்தார்.

" ஏம்மா என்ன பண்ணாலும் உ...உன் அத்..அத்தை மாதிரி சமைக்க உனக்கு வரலை " என்று மொத்தமாக ஆரிஃபா பக்கம் சாய்ந்து விட்டார் லியாக்கத்.

" மாமா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை " என்று ஷெஹனாஸ் கேட்க அவர் சும்மா என்று விட்டு சாப்பிட தொடங்கினார்.

அனைவரும் சிரித்து கொண்டே சாப்பிட்டனர். பிறகு இருவரும் வேலைக்கு சென்றனர்.

சித்தீக் ஷெஹனாஸ் வருவதற்காக காத்திருந்தான். அவள் புர்காவை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.

"ஷெஹனாஸ் வண்டியில ஏறு" என்று சொல்ல அவள் திருதிருவென விழித்தாள்.

"என்னது வண்டிலயா? "என்று அவள் மனதில் நினைத்து கொண்டு உதட்டை பிதுக்கி கொண்டிருக்க,

"ஹே என்ன முழிக்கிற ஏற சொன்னா? "என்று சித்தீக் கேட்க

"ஹான் அ..அது நா...நான் ஆட்டோவில் வந்துறேன், நீ..நீங்க போங்க " என்று சொன்னவளிடம்,

" ஏன் மேடம் எங்ககூட வர மாட்டிங்கலோ " என்று சித்தீக் கேட்க

"அ..அது எனக்கு வண்டியில உட்கார தெரியாது " என்று சொன்னவளை பார்த்து சிரித்தவன்

" நம்பிட்ட வந்து ஏறு " என்று முறைத்தான்.

அவன் முறைத்ததில் பயந்தவள் அமைதியாக வண்டியில் அமர்ந்து கொண்டாள்.

அவள் பயப்படுறாள் என்பதை உணர்ந்தவன் சற்று பொறுமையாகவே வண்டியை செலுத்தினான்.

அவள் தன் கண்ணை உருட்டி உருட்டி அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பார்த்த படி வந்தாள்.

அவர்கள் வருவதை பார்த்த பாஸ்கரின் கண்களில் நெடுநாள் கழித்து சித்தீக்கின் சற்று பிரகாசமான முகம் தெரிய அவன் மனம் சற்று மகிழ்ந்தது.

அனைவரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு இருவரும் அவரவர் இடத்தில் அமர்ந்து கெண்டனர்.

அவள் உள்ளே சென்றவுடன், சிறிது நேரத்தில் இளங்கோ சில கோப்பைகளுடன் உள்ளே வந்தான்.

"ஷெஹனாஸ் இதை சரிபார்த்துட்டு சார் எடுத்துட்டு வர சொன்னார்" என்று இளங்கோ சொல்ல

"ம்ம்ம் ஓகே சார் "

" உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும் " என்று தயங்க

" சொல்லுங்க சார்"

"உங்களை இந்த ஆபிஸ்ல ரொம்ப தப்பா பேசுறாங்க " என்றவுடன்

" சார் இதை பற்றி எனக்கு கவலை இல்லை, காரணம் இதுலாம் என்னோட தினசரி வாழ்க்கையில நான் அனுபவிக்கிறது ஒன்னு தான், இந்த உலகத்தில அழகு மட்டும் தான் வாழ்க்கை நினைக்கிறாங்க அவங்களுக்காக என்னோட வாழ்க்கையை வாழ முடியாம இருக்க முடியாது; என்னை பற்றி மற்றவர்கள் என்ன பேசினாலும் கவலையில்லை ..இதை பெருசாக்காம அப்படியே விட்டு விடுங்கள் " என்று அவள் கூற அவனும் சரி என்று வெளியே சென்றான்.

அவள் அந்த கோப்புகளை பொறுமையாக ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருந்தாள். அதில் இருந்த அத்தனை தவறுகளையும் மூன்று மணி நேரத்தில் சரி செய்தாள், ஒன்றை மட்டும் சிறிது நேரம் கழித்து பார்க்கலாம் என்று விட்டு அதை அப்படியே வைத்தாள்.

சரிபார்த்த கோப்பைகளை மட்டும் எடுத்து கொண்டு சித்தீக் அறைக்கு சென்றாள்.

"சார் நீங்க கொடுத்த அஞ்சு கோப்பைகளை சரிபார்த்துட்டேன். ஒன்னு மட்டும் இருக்கு அதை நான் கொஞ்ச நேரத்தில் எடுத்துட்டு வரேன் " என்றாள்.

அவள் ஸோபாவில் போனை வைத்து விட்டு அவர்களிடம் கோப்புகளை கொடுத்தவள் அதை அங்கேயே வைத்து விட்டு தன்னிடத்திற்கு சென்று விட்டாள்.

சிறிது நேரம் கழித்து அலைபேசி சிணுங்க சித்தீக்கும் பாஸ்கரும் தன்னுடையதில்லை என்று அறையை பார்க்க ஸோபாவில் இருந்து சத்தம் வந்ததும் சித்தீக் அந்த போனை எடுத்தவன் " இது ஷெஹனாஸ் போன் " என்றான்.

"சரி எடுத்து பேசு " என்று பாஸ்கர் கூற அவனும் எடுத்து காதில் வைத்தான்.

அவன் அந்த போனை அவளிடம் கொடுக்க அவள் அறைக்கு வந்தான் சித்தீக்.

தன்னறைக்கு வந்தவள், அந்த கோப்பை எடுத்து பார்த்தவள் " அல்லாஹீ அக்பர் எவ்வளவு தப்பு " என்று தனக்குள் சொல்லியவள் மேசை மீது இருந்த பொருட்களை நகர்த்தி விட்டு அதில் ஏறி அமர்ந்து கொண்டு அதை பார்த்து கொண்டிருந்தாள்.

"அவன் உள்ளே வரலாமா? " என்று கேட்க " ம்ம்ம் " என்று மட்டுமே விடை வந்தது.

தன் வேலையில் மூழ்கி இருந்ததால் யாருடைய குரல் என்பதை அவள் உணரவில்லை.

அவள் அமர்ந்திருந்ததை பார்த்தவன் , " ராட்சஷி உட்காரும் இடத்தை பாரு ? " என்று மனதில் நினைத்து கொண்டு

" ஷெஹனாஸ் உன் அலைபேசியை அங்கேயே வச்சிட்டு வந்துட்ட "என்று கூற

" ம்ம்ம் சரி அங்கேயே வச்சிட்டு போ " என்று தன் வேலையிலிருந்து சற்றும் முகத்தை திரும்பாமல் கூறியவளை என்ன என்பது போல் பார்த்தான்.

" ஹே உன் போன் " என்று சொல்ல

" அதான் அங்க வச்சிட்டு போன்னு சொன்னேல அப்பறம் என்ன வச்சிட்டு போ வேலை தானே செய்து கொண்டு இருக்கிறேன் . வச்சிட்டு போ " என்று கடுகடுத்தாள்.

" ராட்சஷி " என்று மனதில் நினைத்தவன் அதை அங்கேயே வைத்து விட்டு அமைதியாக இடத்தை காலி செய்தான்.

சிறிது நேரம் கழித்து அவள் தொழுது விட்டு சாப்பிட தொடங்கினாள்.

"மச்சி இன்னிக்கு யாரு சமையல் பண்ணா? " என்று பாஸ்கர் கேட்க

" ஏன்டா ? " என்று சித்தீக் அவனை பார்க்க

" இல்லை சும்மா தான் கேட்டேன் "

"ஷெஹனாஸ் தான் சமையல் "

"ஓஹோ நல்லா இருக்கு " என்று அவனின் மொத்த சாப்பாட்டையும் பாஸ்கர் எடுத்து கொண்டு அவன் சாப்பாட்டை இவனுக்கு தள்ளி விட்டான்.

அவனும் அமைதியாக சாப்பிட்டு எழுந்தான்.

அந்த ஒரு கோப்பை முடிக்க அவளுக்கு இரண்டு மணிநேரம் தேவைப்பட்டது. "அல்ஹம்துலில்லாஹ் இதை எப்படியோ முடிச்சிட்டேன்.. இதை போய் கொடுத்துட்டு வந்திடலாம் "என்று அவன் அறைக்கு சென்று அதை கொடுத்துட்டு வந்தாள்.

பிறகு ஆரிஃபா போன் செய்து சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தாள். ராஹிலாவிடமும் பேசி கொண்டு இருந்தாள்.

" டேய் சித்தீக் என்னடா எதையோ தீவிரமா யோசிக்கிற மாதிரி தெரியுது? " என்று பாஸ்கர் கேட்க

" ம்ம்ம் ஆமாடா ஷெஹனாஸ் எல்லார்கிட்டயும் இருந்து எதையோ மறைக்கிறாள்..." என்று சித்தீக் சொல்ல ,

" என்னடா சொல்ற ? "

"ம்ம்ம் ஆமாடா அதை அப்பறம் கண்டுபிடிக்கலாம் இப்ப வீட்டுக்கு கிளம்பனும் நேரமாகிடுச்சு..." என்று விட்டு இருவரும் கிளம்பினர்.

சித்தீக் ஷெஹனாஸ் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்.

காலையில் ஷெஹனாஸ் பேசியது ஜஸ்ரா நிஸா இருவரின் மனதிலும் பெரிய எரிமலையாய் கொந்தளித்து கொண்டிருந்தது.

"ஏய் நிஸா ஷெஹனாஸ் வர நேரம் இந்த எண்ணெய் அங்க ஊற்றுவோம் அவள் வழுக்கி கீழே விழுவா இடுப்பு உடையும்லே " என்று சித்தீக் அறையின் முன்பு எண்ணெயை ஊற்றினாள் ஜஸ்ரா சிரிப்புடன்.

சித்தீக் ஷெஹனாஸ் இருவரும் உள்ளே வந்தனர். சித்தீக் அறையின் முன்பு ஊற்ற பட்ட எண்ணெயில் தெரியாமல் காலை வைத்து வழுக்கி விழுந்தாள் ஷெஹனாஸ்.

ஆனால் அவள் விழாமல் தாங்கி பிடித்தது சித்தீக்கின் கைகள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து, " ஸாரி கால் வழுக்கிடிச்சு..." என்று கூற " பரவாயில்லை.." என்று தரையை பார்த்தவன் , " யார் இது இங்க எண்ணெய்யை ஊற்றியது? " என்று நினைத்து தன் அம்மாவை அழைத்தவன் நடந்ததை கூற யாருக்கும் எப்படி என்று தெரியவில்லை.

பிறகு அதை சுத்தம் செய்துவிட்டு தங்கள் வேலையை பார்த்தனர்.

"என்னடி ஜஸ்ரா இது? அந்த வீணா போனவள் வழுக்கி கீழே விழுவா பார்த்தா இப்படி நடத்திடுச்சு " என்று நிஸா சொல்ல

"சரி விடு பார்த்துக்கலாம் " என்று விட்டு அவள் அறைக்கு சென்றாள்.
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️14❤️

ஜஸ்ரா மற்றும் நிஸாவின் திட்டம் வீணாகி விட செம கடுப்பில் இருந்தார்கள் இருவரும்.

தான் கீழே விழும்போது சித்தீக் விழாமல் தன்னை காப்பாற்றியது நினைத்து மகிழ்ந்தாள், ஷெஹனாஸ்.

அவன் தோட்டத்தில் ராஹிலாவுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு உள்ளே வந்தான்.

அவன் வந்ததும் அவனருகில் சென்றவள் அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தாள்.

அவள் தன்னருகில் வந்ததை அறிந்தவன், அமைதியாக இருந்தான் அவளே தன்னை அழைக்கட்டும் என்று. பிறகு அமைதியாக அவளை பார்க்காதது போல் கட்டிலில் அமர்ந்தான், சித்தீக்.

"நெட்ட கொக்கு அவன் பக்கத்தில தானே நிக்கிற என்னன்னு கேட்டா என்னவாம் .. பனைமரம்..." என்று அவனை மனதில் திட்டி கொண்டாள்.

"ராட்சஷி என்கிட்ட மேடம் பேச நினைப்பாங்களா! ஆனா என்னை எப்படி அழைக்கிறது தெரியாதாம் மேடத்துக்கு ! ஏய் சண்டக்கோழி நீயா என்னை கூப்பிடுற வரைக்கும் நானா பேச மாட்டேன் ! " என்று மனதில் சித்தீக் நினைத்து சிரித்து கொண்டான்.

அவள் முகம் போகும் அத்தனை கோணங்களையும் பார்த்து மனதினில் சிரித்து கொண்டு இருந்தான் சித்தீக்.

அவள் மனம் மாறி ராஹிலாவை தூக்கி கொண்டு தங்கள் அறையில் இருந்த சிறு முற்றத்தில் நின்று விளையாடி கொண்டிருந்தாள்.

"இவளை வச்சிட்டு நான் என்ன பண்ண போறேனே தெரியலை. தனக்கு இது தான் வேணும் வாயை திறந்து கேட்க மாட்டறாளே அல்லாஹ்" என்று வருந்தி கொண்டான்.

"குட்டிமா உன் அப்பாவை பார்த்தால் எனக்கு என்ன ஆகுது தெரியலை அப்படியே ஆப் ஆகிடுறேன்... பனைமரம் ..." என்று ஷெஹனாஸ் உதட்டை பிதுங்கி கொண்டு தன் மகளிடம் பேசி கொண்டிருந்தாள்.

நாட்கள் மெதுவாக அதன் போக்கில் நகர தொடங்கியது. இவள் அலுவலகத்தில் வேலை செய்வது அங்கு இருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை . காரணம், அவளின் உழைப்பு.

Program மற்றும் codings தவறாக இருந்தால் அதை யார் செய்தாரோ அவர்களை அழைத்து கொஞ்சம் கண்டித்து உடனே அதை சரி செய்து தர சொல்வாள்.

அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அவளை எதாவது செய்ய வேண்டும் என்று அவர்களில் பாதி பேர் நினைத்து கொண்டு இருந்தனர்.

ஷெஹனாஸ், அவ்வப்போது சித்தீக்கை சீண்டி கொண்டிருப்பாள். அவனும் அதை கண்டுகொள்ளாமல் தன்னுள் சிரித்தபடி அமைதியாக இருந்துவிடுவான்.

அன்று....

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பாஸ்கர் மிகவும் மகிழ்ச்சியாக அறையினுள் நுழைந்தான்.

" டேய் மச்சி ஒரு நல்ல செய்தி டா " என்று உற்சாகமாக கூற

" என்ன செய்தி டா? " அவனும் அதே உற்சாகத்தோடு கேட்க

"நம்ம கம்பெனி நஷ்டத்தில தானே போய்ட்டு இருந்தது. " என்று பாஸ்கர் கேட்க

" ம்ம்ம் ஆமாம் "

" இப்ப லாபம் எவ்வளவு வந்திருக்கும் சொல் பார்க்கலாம்" என்று கேள்வியாய் கேட்க

" என்ன ஒரு அஞ்சு லட்சம் வந்திருக்குமா? " என்று கேட்க

" இல்ல டா இருபது லட்சம் லாபம் வந்திருக்கு அது போக 20% இன்னும் அதிகமாக வந்திருக்கு நமக்கு " என்று சொல்ல சித்தீக் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று விட்டான்.

"அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப சந்தோஷமா இருக்கு..." என்று அவன் சந்தோஷமாக சொல்ல

" எனக்கும் தான் மச்சி.."

" சரி டா employee எல்லாருக்கும் சம்பளத்தை அவங்க வங்கி கணக்கில் போட்டுறு , சரியா " என்று சித்தீக் சொல்ல

"டேய் மச்சி அதெல்லாம் போட்டாச்சு , ஆனா இவ்வளவு லாபம் வந்ததுக்கு நாம காரணம் இல்லை உன் மனைவி ஷெஹனாஸ் தான் , முதல்ல அவங்களுக்கு தான் நாம நன்றி சொல்லனும் " என்று பாஸ்கர் சொல்ல

சித்தீக் , " ராட்சஷி சிக்கிட்டா நமக்கிட்ட " என்று தன் மனதில் நினைத்து கொண்டு குறும்பு சிரிப்பு ஒன்றை சிந்தினான்.

அதை பார்த்த பாஸ்கர் , "டேய் எருமை என்னடா தனியா சிரிக்கிற ? " என்று கேட்க

"அது ஒன்னுமில்லை " என்றுவிட்டு இளங்கோவை அழைத்து ஷெஹனாஸை அழைத்து வர சொன்னான்.

சிறிது நேரத்தில் உள்ளே அவள் உள்ளே வர , சித்தீக் அவளிடம் கைகுலுக்க கையை நீட்டான்.

"என்ன இந்த பனைமரம் நமக்கு கையெல்லாம் கொடுக்குது??..." என்று மனதில் நினைக்க

"கை கொடுக்கிறாளா பாரு? ராட்சஷி நான் என்ன அந்நிய ஆணா? அவள் கணவன் தானே ! சரியான சண்டக்கோழி முழிக்குது பாரு திருவிழாவில காண போன குழந்தை மாதிரி.. " என்று அவன் மனதில் நினைக்க அவள் அமைதியாக வேறு வழியின்றி கையை நீட்டாள்.

அவன் கை குலுக்கி கொண்டே , " ரொம்ப நன்றி ஷெஹனாஸ், உன்னால தான் இந்த கம்பெனிக்கு இவ்வளவு லாபம் கிடைச்சிருக்கு " என்று சித்தீக் சொல்ல

"அதுக்கு நான் காரணம் இல்லை அல்லாஹ் தான் காரணம் "என்று கூறினாள்.

சித்தீக் அவள் கையை விடாமல் சீண்ட தொடங்கினான்.

"என்ன இந்த நெட்ட கொக்கு நம்மல சீண்டுது ? " என்று அவள் அவனை பார்க்க குறும்பாய் நகைத்தான் சித்தீக்.

இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த பாஸ்கர் , " தலையெழுத்து டா அடேய் இங்க ஒருத்தன் இருக்கேன் " என்று தலையில் கைவைத்தான்.

பிறகு இருவரும் தன்னிலை வர ஷெஹனாஸ் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து தன்னிடத்திற்கு சென்றாள்.

அவள் சென்றதை பார்த்த சித்தீக் தனக்குள் புன்னகைத்தவாறு தன் வேலையை தொடர்ந்தான்.

இரு உள்ளங்களிலும் அழகாய் பூக்க தொடங்கியது.... அதை எப்போது உணர்வார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

தன்னறைக்கு வந்தவளின் மனம் படபடவென அடிக்க தொடங்கியது. தன் நெஞ்சில்கைவைத்து பொறுமையாக மூச்சை இழுத்து விட்டு இயல்பு நிலைக்கு வந்தாள்.

இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அன்றிரவு ராஹிலா தூங்கிய பின் , " ஷெஹனாஸ் இங்க வா " என்று சித்தீக் அழைக்க , அவள் அமைதியாக அவன் முன் வந்து நின்றாள்.

"இப்படி உட்காரு ஷெஹனாஸ் " என்று தன்னருகில் கை காட்ட அவளும் அப்படியே செய்தாள்.

" ஏன் ஷெஹனாஸ் இப்படி இருக்க? "என்று கேட்டு கொண்டு அவளை பார்க்க அவள் அதிர்ச்சியாக நிமிர்ந்து "எப்படி இருக்கிறேன் ? " என்று என்று அழுத்தமாக கேட்டாள்.

"ம்ம்ம் உனக்கு தேவையானதை கூட வாயை திறந்து கேட்க மாட்டற? " - சித்தீக்

" அதான் எனக்கு தேவையானது எல்லாமே இங்க இருக்க பட்சத்தில நான் என்ன கேட்க போறேன் ? " என்று கூற

"ஏய் உனக்கு என்று எந்த விருப்பமும் இல்லையா? " என்று கேட்க அவள் லேசாக புன்னகை விட்டு , " இல்லை, எனக்கு என்ன விருப்பம் இருக்க போது! ஆசை பட்டா மட்டும் கிடைக்கவா போது? இல்லல்ல அப்பறம் என்ன? இப்ப எதுக்கு இதை கேட்கிறிங்க ? உங்களுக்கு வேற வேலை இல்லையா ? எனக்கு தூக்கம் வருது " என்று கடுப்பாக பேசிவிட்டு உறங்கிவிட்டாள்.

தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்த படி அமைதியாக உறங்கினாள் ஷெஹனாஸ்.

"சரியான சண்டக்கோழி ! இவளை வச்சிட்டு நான் என்ன பண்ண போறேன் தெரியலையே அல்லாஹ்..." என்று குமுறினான்.

இல்லை என்று அவள் சொல்லிய போது உதிர்த்த அந்த சிரிப்பில் அவளின் சொல்லொணா வலியை அவனால உணர முடிந்தது.

அவளே அதை சொல்லட்டும் என்று அவன் அமைதியாக விட்டுவிட்டான்.

அமைதியாக உறங்கி கொண்டிருந்தவளை பார்த்தவன், அவளருகில் சென்றவன், " ஏன்டி என்கிட்ட இப்படி சண்ட போடுற? மற்ற எல்லார்கிட்டயும் நல்லா பேசுறேன் ஆனா ஏன்டி என்கிட்ட மட்டும் இப்படி நடந்துக்கிற? " என்று அவளை ஏக்கத்தோடு பார்த்தான்.

ஆனால் அவனுக்கு புரியவில்லை அவனிடம் மட்டுமே தன்னுடைய முழு குணத்தையும் அவள் வெளிப்படுத்துகிறாள் என்று.

அவனும் அமைதியாகவே உறங்கி விட்டான்.

அன்று....ஞாயிறு என்பதால் வீட்டில் அனைவரும் இருந்தனர். ஷெஹனாஸிற்கு கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

ஆனால் சித்தீக்கிடம் எப்படி கேட்பது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள். அவனை பார்த்தாள் , அவன் ராஹிலாவுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.

" கடற்கரைக்கு எல்லாம் வேண்டாம் பனைமரம் இப்ப தான் குட்டிமா கூட விளையாடுறான். வாரத்தில ஆறு நாட்களும் அவன் வேலை வேலை அலைந்து கொண்டு தானே இருக்கான்.. இன்னிக்கு ஒரு நாள் தான் அதையும் கெடுக்க வேண்டாம் " என்று மனதில் நினலத்து கொண்டு இருந்தாள்.

அவளை பார்த்தவன் , "இந்த சண்டக்கோழி என்ன நினைக்கிது தெரியலையே! " என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தான்.

அப்போது ஆரிஃபா உள்ளே ஷெஹனாஸ் சித்தீக் என்று அழைத்து கொண்டே வந்தார்.

"என்னம்மா ? " என்று புன்னகைத்துவாறு கேட்டான் சித்தீக்.

நீண்ட நாட்கள் கழித்து தன் மகனின் புன்சிரிப்பை கண்டு மகிழ்ந்தார் ஆரிஃபா.
"அது வந்து நாம இன்னிக்கு கடற்கரைக்கு போகலாம் " என்று சொல்ல சித்தீக் ஷெஹனாஸை பார்க்க அவள் முகம் போகலாம் என்று சொல்ல மாட்டானா? என்பதை போல் பார்த்தை வைத்து புரிந்து கொண்டவன் , " சரிம்மா போகலாம் கொஞ்சம் இருங்கள் கிளம்பிட்டு வரோம் " என்று சொன்னவுடன் ஷெஹனாஸ் முகம் அழகாய் மலர்ந்தது.

"மனசுல இவ்வளவு ஆசையை வச்சிட்டு எதுக்காக யாருக்காக டி மறைக்கிற" என்று ஷெஹனாஸை மனதில் திட்டி கொண்டு தானும் கிளம்பினான்.

பாட்டி ஆரிஃபா மற்றும் லியாக்கத் ராஹிலாவை அழைத்து கொண்டு காரில் கிளம்ப ஷெஹனாஸூம் சித்தீக்கும் வண்டியில் வந்தனர்.

ஷெஹனாஸ் தன் கண்களை உருட்டி உருட்டி வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளை கண்ணாடி வழியாக பார்த்தவன், " சண்டக்கோழி கண்ணை பாரு எப்படி உருட்டுது " என்று தன் மனதினில் சிரித்து கொண்டான்.

சிறிது நேரத்தில் கடற்கரைக்கு வந்தவர்கள் ஒன்றாக கடற்கரையை நோக்கி நகர்ந்தனர்.



இது தான் எங்க ஊரு கடற்கரை😍😍😘😘😘😘 செமயா இருக்கும்❤️❤️

இவர்களுக்கு முன்பே மற்றவர்கள் கடற்கரைக்கு வந்ததால் அவர்கள் கடலில் காலை நனைத்து விட்டு வந்து அமர்ந்தனர்.

இவர்கள் வந்தவுடன் , " நீங்க ரெண்டு பேரும் போய் கடலில் காலை நனைத்து கொண்டு வாங்க" என்று பாட்டி சொல்ல இருவரும் சென்றனர்.

அவன், " நான் வரலை நீ மட்டும் போய் கால் நனைத்து கொண்டு வா " என்று சித்தீக் சொல்ல

"ங்க என்ன கடலில் நனைய மாட்டிங்கலா!! அய்யே நீ எல்லாம் வாழ்வதே தப்பு !!..." என்றவள் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு கடல் அலைகளுக்கு அருகே சென்றாள்.

அவளின் முதல் தீண்டல் மனதில் என்னவோ செய்தது. அவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்.

கடல் அலை அவன் காலில் தீண்டும் போது தான் உணர்ந்தான். அவள் சந்தோஷமாக துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்தாள்.

"இந்த கடல் அலை எவ்வளவு அழகா இருக்குல்ல " என்று சித்தீக்கை பார்த்து கேட்டவள்

"ம்ம்ம் ஆமாம் ரொம்ப " என்று அவளை பார்த்தவனாக அவனும் கூறினான் சிரித்து கொண்டே..

" இந்த கடலும் நம்ம வாழ்க்கையும் ஒன்று தான் " என்று சொன்னவளை என்ன என்பது போல் பார்க்க

" எப்படி தானே கேட்கிறிங்க? " என்று கேட்டவளிடம் "ஆமாம் " என்று தலையை ஆட்டினான்.

" இந்த கடல் தான் நம்ம வாழ்க்கை அதுல இப்ப வர ஒரு அலை துன்பம் என்றால் அதுக்கு அடுத்து வர அலை அதை போக்க கூடிய இன்பம்... அது நம்ம வாழ்க்கையில மாறி மாறி வந்துட்டு தான் இருக்கும்... அதை நாம கடந்து போய்ட்டே இருக்கனும்... வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை இங்க வந்திருக்க எல்லாருக்கும் ஏதோவொரு வலியில இருப்பாங்க .. ஆனா அவங்க எல்லாரும் அதை மறைச்சிட்டு தன்னோட குடும்பத்தேட எவ்வளவு அழகா சந்தோஷமா இந்த நாளை கழிக்கிறாங்க... வலிகள் இல்லாத மனதிர்களே கிடையாது ... வலிகளையும் சோதனைகளையும் கொண்டு தான் அல்லாஹ் இந்த உலகத்தில இருக்க மனிதர்களை படைத்தான்... வலிகள் இல்லாத மனிதர்கள் இங்க யாருமில்லை... அங்க பாருங்க நம்ம பொண்ணை எவ்வளவு அழகா சிரிச்சிட்டு இருக்கானு... அவளுக்காண்டியும் ஆச்சி கொஞ்சம் சிரிங்க.... சந்தோஷமா இருங்க.. " என்று அவள் அவனை பார்த்து கொண்டே சொல்ல இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு இருந்தனர்.

ஒரு பெரிய அலை அவர்களை நனைய வைக்க தன்னிலை திரும்பினார்கள், இருவரும் . ஷெஹனாஸ் சித்தீக் மேல் தண்ணீரை ஊற்றி சீண்ட தொடங்கினாள். அவனும் அவளுடன் சேர்ந்து விளையாடி கெண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த குழந்தைகள் ஷெஹனாஸை தெரியாமல் தள்ளி விட அவள் சுழன்று சித்தீக்கின் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.

அவன் ஒரு நிமிடம் செய்வது அறியாது திகைத்தவன் அவளை பார்க்க சிறு குழந்தை போல் தன் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருப்பவளை ரசித்து கொண்டு இருந்தான். பிறகு அவனை பார்க்க இருவரின் கண்களும் மோதி கொண்டன.

இன்னுமொரு அலைவந்து அவர்களை தன்னிலை அடைய வேகமாக அவ்விடத்தை காலி செய்தனர் இருவரும்.

இரு உள்ளத்திலும் பூத்தது செடியாக முளைக்க தொடங்கி விட்டது.

அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர். ஷெஹனாஸ் முழுவதுமாக நனைந்ததால் குளிர தொடங்கியது. அவளால் சரியாக உட்கார முடியாமல் தவித்தாள். அதை பார்த்தவன் , " சண்டக்கோழி வாயை தொறந்து சொல்றாளா பாரு " என்று மனதில் திட்டியவன் வண்டியை மிகவும் மெதுவாக ஓட்டிரான்.

வீட்டிற்கு வந்தவுடன் உடையை மாற்றி கொண்டாள். இரவு உணவை சாப்பிட்டு விட்டு அனைவரும் உறங்க சென்றனர்.

இன்று சித்தீக்குடன் கழித்த நேரங்களை மனதில் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள் ஷெஹனாஸ். சித்தீக் மனதிலும் அதே மகிழ்ச்சியுடன் உறங்கினான்.

ஆனால் ஷெஹனாஸின் இந்த மகிழ்ச்சி நீண்டிக்குமா ? பார்ப்போம்?
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
இன்று சித்தீக் உடன் கழித்த நேரங்களை நினைத்து கொண்டே நிம்மதியாய் உறங்கினாள் , ஷெஹனாஸ்.

ஆனால் அதை பார்த்து பொறுக்க முடியாத விதி , " ரொம்ப சந்தோஷப்படாத ஷெஹனாஸ், உனக்கு மிக பெரிய பிரச்சனை காத்திட்டு இருக்கு.. நிம்மதியாவா தூங்குற..." என்று வஞ்சித்து கொண்டு இருந்தது.

சித்தீக் மனம் பல நாள் கழித்து இன்று மகிழ்ச்சியாய் இருந்தது. அவன் ஷெஹனாஸை பார்க்க அவள் உறங்கி கொண்டிருந்தாள். அவளை கண் இமைக்காமல் ரசித்து கொண்டு இருந்தான். லேசாக புன்னகைத்தபடி "வாலு ராட்சஷி சண்டக்கோழி" என்று மனதில் கூறிவிட்டு அமைதியாக உறங்கி போனான்.

அடுத்த நாள் இருவரும் வேலைக்கு சென்றனர். சித்தீக்யின் மலர்ந்த முகத்தை பார்த்த பாஸ்கர்யின் மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

"டேய் சித்தீக் என்னடா இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்க?" என்று பாஸ்கர் அவன் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு கேட்டான்.

அவன் மெல்லியதாக புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

"ஹே உன் முகத்தில இப்படி சிரிப்பை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா? " என்று பாஸ்கர் ஆனந்தமாய் சொல்ல நேற்று நடந்ததை சொன்னான்.

மேலும் சித்தீக்யே பேசினான் , "இறந்து போனவளை பற்றி நான் ஏன் கவலை படனும். அவள் ஒன்றும் என்னை உண்மையா நேசிக்கலையே!!!... போதும் இனி மேல் எனக்காகவும் ராஹிலாவுக்காக வந்து இருப்பவளுக்காகவும் வாழலாம் முடிவு பண்ணிட்டேன் பாஸ்கர் ஆனால் அதுக்கு கொஞ்சம் நேரம் வேணும்!!! " என்று மெல்லிதாய் புன்னகைத்தவாறு சொன்னான்.

பாஸ்கர் , புரிந்து கொண்டான் சித்தீக் ஷெஹனாஸை நேசிக்க தொடங்கி விட்டான் என்று . அவனே அதை உணரட்டும் என்று அமைதியாக இருந்து விட்டான்.

இப்போதே உணர வைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன செய்ய முடியும் எல்லாம் அவன் செயல்.

"ரொம்ப சந்தோஷம் மச்சி... " என்று அணைத்து கொண்டான் பாஸ்கர் சித்தீக்கை.

ஷெஹனாஸ் தன் வேலைகளை முடித்துவிட்டு அமைதியாக இருந்தாள். தன் கையில் அலைபேசி இருந்தாலும் அவள் உபயோகித்து நெடுநாட்கள் ஆகிவிட்டது. அதனால் தன் அலைபேசியை எடுத்தவள் இணையதள வசதியை ஏற்படுத்தியவள் வாட்ஸ்அப் சென்றவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி இருந்தது.

நேற்று ஷெஹனாஸ் மற்றும் சித்தீக் கடற்கரையில், சித்தீக் நெஞ்சில் ஷெஹனாஸ் சாய்ந்திருப்பது போலவும் இருவரும் விளையாடி கொண்டிருப்பதை போலவும் அவள் பள்ளி தோழிகள் புகைப்படம் எடுத்து அவர்களது பள்ளி வாட்ஸ்அப் குரூப் அனுப்பி இருந்தனர்.

அந்த புகைப்படத்திற்கு கீழ் " ஏய் இங்க பாருங்க இதுக்கே கல்யாணம் ஆயிடுச்சு ஆனா நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல... தலையெழுத்து🤦🤦 " என்று ஒருத்தி அனுப்ப

இன்னொருத்தி , " ஹே இங்க பாருங்கடி ரோடு ரோலருக்கே கல்யாணம் ஆயிடுச்சு அதுவும் அந்த பையனுக்கு டேஸ்டே பாருங்கடி... "

"பையன் எவ்வளவு அழகாக இருக்கான் இவன் எப்படி டி இந்த அசிங்கமானவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான் 🤦🤦 " -தோழி 3

"அவனுக்கு கொடுத்து வச்சத்து அவ்வளவு தான். ." -தோழி 4

" பாவம் அவன் அழகு எங்கே ? இது எங்கே ? ச்சி இதுக்கெல்லாம் வெட்கமாவே இருக்காத... " இப்படி அவர்கள் பலவாறு ஷெஹனாஸை கேவலமாக பேசி கொண்டிருந்த குறுஞ்செய்திகளை படித்தவளுக்கு கண்களில் ஆறாய் வழிந்தது கண்ணீர்.

அப்போது உள்ளே வந்த இளங்கோ , "ஷெஹனாஸ் சார் நாளைக்கு நவீன் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய பையல்ஸ் ரெடி பண்ணிடிங்கனா எடுத்துட்டு வர சொன்னாரு!!... " என்று இளங்கோ சொல்ல

"நீங்க போங்க நான் எடுத்துட்டு வரேன் " என்று கூறினாள்.

" ஷெஹனாஸ் அழுதீங்களா? " என்று இளங்கோ கேட்க

" இல்லை சார் கண்ணுல தூசி விழுந்திருச்சு!! " என்று சமாளித்து விட்டு தன் கண்களை துடைத்து கொண்டாள்.

அவன் கேட்டதை எடுத்து கொண்டு உள்ளே சென்றாள். உள்ளே சென்றவள், " சார் நீங்க கேட்ட பையல்ஸ் " என்று நீட்ட சித்தீக் வாங்கி கொண்டான்.

ஷெஹனாஸ் இன்னிக்கி நமக்கு நவீன் கம்பெனி உடன் இன்னிக்கி மீட்டிங் இருக்கு " என்று சித்தீக் சொல்ல அவள் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

"ஹலோ ஷெஹனாஸ் உங்கிட்ட பேசிட்டு இருக்கேன் " என்று சித்தீக் சொல்ல

" ஸ...ஸாரி ஏதோ சரி சொல்லுங்க " என்று தழுதழுத்த குரலில் சொல்ல

"இன்னிக்கி நவீன் கம்பெனி உடன் மீட்டிங் இருக்கு " என்று சொல்ல

" நாளைக்கு தானே சார் சொன்னாங்க " என்று ஷெஹனாஸ் கேட்டிட

" இல்ல ஷெஹனாஸ் நாளைக்கு அவங்களுக்கு முக்கியமான வேலை இருக்காம் அதனால இன்னிக்கே வைத்துக்கொள்ளலாம் சொன்னாங்க " என்று பாஸ்கர் சொல்ல

"ம்ம்ம் சரி " என்றாள்.

"ஹே அழுதியா? " என்று சித்தீக் கேட்க

"இ..இல்ல ! " என்றவுடன் "அப்புறம் ஏன் கண்ணு கலங்கி இருக்கு ? " என்று சித்தீக் கேட்க , அவள் மனம் அவனிடம் தஞ்சம் புகுந்து அழுதிட மாட்டோமா என்று ஏங்க அதை தன்னுள் புதைத்தவளாய் " அ...அது க..கண்ணுல தூசி விழுந்துடிச்சு "என்றுவிட்டு வேகமாக இடத்தை காலி செய்தாள்.

" பொய் சொல்றாள் மச்சா ! இப்படி தான் டா தன்னோட தேவையை கூட வாயை திறந்து கேட்க மாட்டறாள்! இவளை நினைச்சாலே பயமா இருக்கு என்ன பண்ண போறேன் தெரியலை இவளை வச்சிட்டு ! சின்ன குழந்தை மாதிரி பண்றாள் " என்று வேதனையை வெளியில் குமுறினான் சித்தீக்.

"இல்ல மச்சி தங்கச்சி மனசுல சொல்ல முடியாத வலி இருக்கு அது நல்லாவே புரியுது !! " என்று பாஸ்கர் சொல்ல

" நிறைய விஷயத்தை மறைக்கிறாள் டா ! சரி இப்ப அது இருக்கட்டும் மீட்டிங்கு ரெடி பண்ணு " என்று எரிச்சல் பட்டவனாக தொழ பள்ளிவாசலை நோக்கி சென்றான் சித்தீக்.

இருவரும் லுஹர் (மதிய நேரம்) தொழுகையை முடித்து விட்டனர். பாஸ்கர் சித்தீக் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

" தங்கச்சி நல்லா சமைக்கிறாங்க ! " என்று புகழாரம் சூட்டினான் பாஸ்கர். அவனும் புன்னகை விட்டபடி சாப்பிட்டான்.

ஷெஹனாஸ் சாப்பிட பிடிக்காமல் அதை அப்படியே மூடி வைத்து விட்டு மீட்டிங்கு தேவையானவற்றை தயாரித்து கொண்டு இருந்தாள்.

இரண்டு மணி போல் அவர்கள் வர மீட்டிங்கை தொடங்கினார்கள். மூன்று மணிநேரத்தில் மீட்டிங் முடிந்து, அந்த project கையில் வந்து சேர்ந்தது ஷெஹனாஸ்யின் பேச்சு திறமையால்.

சிறிது நேரத்தில் அனைவரும் சென்று விட , " தேங்க்ஸ் ஷெஹனாஸ்.." என்று பாஸ்கர் சொல்ல , " அண்ணா இது என் கடமை " என்று புன்னகை சிந்திவிட்டு தன் இடத்திற்கு சென்றாள்.

அவளை ஒரு நிமிடம் பார்த்தவன் , " ம்ஹூம் " என்று பெருமூச்சு விட்ட படி தன்னிடத்திற்கு சென்றான் சித்தீக்.

வீட்டிற்கு வந்த பாஸ்கர் தன் மனைவி பிருந்தாவை அழைத்து கொண்டு வெளியில் சென்றான். பூங்காவிற்கு வந்தார்கள் இருவரும்.

" பிருந்தா நான் இன்னிக்கி சந்தோஷமா இருக்கேன்டி " என்று பாஸ்கர் சொல்ல

" நானும் தான் சரி முதல்ல நீ சொல்ல.." என்றவுடன்

"ம்ம்ம் மூனு வருஷத்துக்கு அப்புறம் சித்தீக் முகத்தில அப்படி ஒரு சிரிப்பு! தமீஸ்யை கட்டிய நாள் முதல் அவன் சந்தோஷமே பறிபோச்சு... இப்ப தான் அவன் முகத்தில ஒரு தெளிவு ! ஒரு நிம்மதி !!! அவன அப்படி பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு.." என்று அவள் தோளில் சாய்ந்து கொண்டான் தன் கண்ணீரை துடைத்தவனாக.

"உண்மையாவா பாஸ் சொல்ற! " என்று நம்ப முடியாதவளாய் கேட்க

"ம்ம்ம் ஆமாம்" என்று நடந்ததை சொல்லி அவளை அணைத்து கொண்டான்.

"சரி அம்மு நீ ஏதோ சந்தோஷமான விஷயம் சொல்லனும் சொன்னியே!! " என்று கேட்க

"அ..அது நான் ஒன்னு கேட்பேன் செய்வியா? " என்று தயங்கி கேட்க

"ஹே லூசு நீ சொல்லி முடியாது சொல்லி இருப்பனா?"

"நீ PG படிக்கிறா கேட்பேல.."

" ம்ம்ம் ஆமா "

" எ.. எனக்கு PG படிக்கனும் ஆசையா இருக்கு "

" ஹே லூசு இதுக்கு எதுக்குடா இப்படி தயங்குற? நான் படிக்க போறேன் எனக்கு கல்லூரியில் சேர்த்து விடு சொன்னா சேர்த்து விடப்போற! இதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்!! " என்று அவன் சொல்ல

"ஹே நிஜமாவ டா சொல்ற? " என்று நம்ப முடியாதவளாய் கேட்க!!

"நிஜமா அம்மு.. நீ தான்டி என் உலகம் " என்று அவளை இழுத்து தன்னோடு அணைத்து கொண்டு மெல்லிதாய் முத்தமிட்டான் அவள் நெற்றியில்.

"வர academicயில் உன்னை சேர்த்து விடுறேன் சரியா " என்று அவற் கூற அவனை சற்று இறுக்கமாக அணைத்து கொண்டான்.

"ஹே இதையா நீ சந்தோஷமான விஷயம் சொன்ன? " என்று அவளை பார்க்க

" அ..அது இன்னிக்கி நம்ம பக்கத்து வீட்டில மேரி அக்கா நம்ம வீட்டுக்கு வந்தாங்க அவங்க அத்தை கிட்ட அவங்க மாசமா இருக்கிறதை சொன்னாங்கலா அந்த சந்தோஷம் எனக்கு ஒட்டிகிச்சு " என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள்

" பாஸ்கர் நமக்கு எப்ப இந்த மாதிரி குழந்தை பிறக்கும் " என்று குழந்தை போல் கேட்டவளின் மனதில் இருந்த ஏக்கத்தை உணர்ந்தவனாய் அவள் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தமிட்டு கூடிய சீக்கிரம் என்றான் தன் கண்களில் எழுந்த கண்ணீரை தன்னவளுக்கு தெரியாமல் துடைத்தவனாய்.

"இறைவா! இவளின் ஆசையை நிறைவேற்றிடு " என்று மனதில் இறைவனிடம் வேண்டினான் பாஸ்கர்.

வீட்டிற்கு வந்த சித்தீக் அவளை விட்டுவிட்டு வெளியே சென்று விட்டான் சிறு வேலையாக.

ஷெஹனாஸ் உள்ளே சென்றவள் தன் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு. ராஹிலாவை ராபியாவிடம் கொடுத்து விட்டு வந்தவள் , அந்த குறுஞ்செய்திகள் எல்லாம் அவள் கண்முன் வர கையில் இருந்த அலைபேசியை கோபத்தில் உடைத்து விட்டு கட்டிலில் படுத்து அழுதவாறே உறங்கி விட்டாள்.

ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்தவன் சாப்பிட்டு கொண்டு இருந்தான் , " ஏன் அப்பு ! நீயும் ஷெஹனாஸ்வும் ஒன்னா சாப்பிடுவிங்களா இல்லை தனிதனியா சாப்பிடுவிங்களா? " என்று ஆரிஃபா கேட்க

"ஏன் மா கேட்கிறிங்க! தனி தனியா தான் சாப்பிடுவோம்"

"இல்ல ப்பா அவள் மதியானம் சாப்பிடமா அப்படியே கொண்டு வந்திருக்கா! இப்பவும் அவள் சாப்பிடலை! தூங்கிட்டாள் எப்பவும் மதியானம் ஓழுங்கா சாப்பிடுறதில்லை டா ! இப்படியே இருந்தா அவள் உடம்பு என்னத்துக்கு ஆகுறது! கொஞ்சம் நீதான் அப்பு அவளை பார்த்துக்கனும் " என்று ஆரிஃபா மெதுவாக சொல்ல அவன் சரியென தலையசைத்து விட்டு அமைதியாக உள்ளே சென்றான்.

அவள் அருகில் வந்தவன் அப்போது தான் கவனித்தான் அவள் அலைபேசி உடைந்து கிடைப்பது. அவள் படுத்த முறையும் சரியில்லாமல் இருக்க அவளை சரியாக படுக்க வைத்தவன் அவள் உறங்கி கொண்டிருந்த இடத்திலும் அவள் கன்னங்களிலும் இருந்த கண்ணீர் தடயம் உணர்த்தியது அவள் அழுததை.

அப்போது தான் அவனுக்கு புரிந்தது. அலைபேசி தானாக உடையவில்லை! அவளே! உடைத்து உள்ளாள் என்று! .

அவளின் தலையை வருடியவன் "ஹே உனக்கு என்ன தான்டி பிரச்சினை உன்னை இப்படி பார்க்கிறதுக்கே கஷ்டமா இருக்குடி😢😢 ... உனக்கு நான் இருக்கேன். " என்று அவள் நெற்றியில் மென்மாய் தன் முதல் முத்திரையை பதித்தான் ,சித்தீக்.

அவளின் வலியை சித்தீக் அறிவானா? அவள் என்ன மறைக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பானா? பார்ப்போம்!!

தொடரும்

ஹாய் ப்ரெண்ட்ஸ்...

இங்க கதைப் போட்டே பல மாதங்கள் ஆகுது. என்னோட போன்ல browser சரியா வேலை செய்யலை. அதான் வர முடியலை. இப்ப பரவாயில்ல ஓரளவுக்கு வேலை செயுது. இனி பதிவுகளை தினமும் தரேன்...

நன்றி
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
உறங்கி கொண்டிருந்தவளின் அருகே அமர்ந்தன், அவளை ஒரு நிமிடம் பார்த்து கொண்டு இருந்தான்.

" ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அவங்களை கூப்பிட்டா மனசுல இருக்கிறதை சொல்லுவாங்க கேள்விபட்டிருக்கேன் அப்படி பண்ணி பார்ப்போம் அப்பவாவது அவள் மனசுல இருக்கிறதை சொல்றாளா என்று ? " என்று எண்ணியவன் மெதுவாக அவள் காதருகில் சென்றவன், " ஷெஹனாஸ் " என்று மெலிதாக அழைத்தான்.

அக்குரல் யாருடையது என்றெல்லாம் பேதையவள் அறியவில்லை. அவள் உணர்ந்தது எல்லாம் அக்குரலில் இருந்த அன்பு கலந்த காதலை மட்டுமே. அவள் கண்களில் இருந்து மழையாய் தண்ணீர் வழிந்தது.

எந்தவொரு அசைவும் இல்லாததை உணர்ந்தவன் அவளை தன் பக்கம் திருப்பினான் அவளை எழுப்பாமல். பேதையவளின் கண்களில் நின்றாது ஓடிக்கொண்டிருந்த கண்ணீரை கண்டு திகைத்தான்.

எதுவும் பேசாமல் அவள் அருகில் உறங்கியவன், அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான். தாய் மடிக்கு ஏங்கிய குழந்தை போல் அவனுள் புதைந்து கொண்டாள் நங்கையவள்.

அவளின் நிலையை பார்த்தவனின் கண்களில் தன்னை அறியாமல் வழிந்தது கண்ணீர்.

எப்போதும் துறுதறு என்று எதையாவது செய்யும் குணம் ; தன்னை சீண்டி கொண்டே இருப்பது இவ்வளவு அழகானவளின் மனதில் சொல்ல முடியாத இக்கண்ணீருக்கு காரணம் என்ன? ஒருவேளை அ...அது அவளை யாராது லவ் பண்ணி ஏமாற்றி இருப்பாங்களோ! இவள் யாருக்கும் அசறாத ஆள் ஆச்சே! " என்று மனதில் பேசி கொண்டே தன்மேல் குழந்தை போல் உறங்கும் நங்கையை பார்த்தவன், " கவலைப்படாதே டா நான் இருக்கேன் உனக்காக நான் இருக்கேன்.. " என்று அவள் உச்சி முகர்ந்தபடி உறங்கி போனான்.

காலையில் விழித்த ஷெஹனாஸ் அவன் அணைப்பில் இருந்ததை கண்டு அதிர்ச்சியானாள். "நான் எப்படி இவன் மேலே தூங்குன? " என்று நேற்று இரவு நடந்ததை யோசித்தவளுக்கு தான் அழுது தூங்கிவிட்டது வரை மட்டுமே அவள் நினைவிற்கு வந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் அவளுக்கு நினைவில்லை.

அவனின் அந்த அணைப்பு அவள் உள்ளுக்குள் ஏதோ செய்தது. தன்னவனின் முதல் ஸ்பரிசம் அது. அதை அனுபவிக்காமல் மங்கையவள் அவனிடம் இருந்து விலகி சென்றாள்.

பிறகு தன் வேளைகளை முடித்த வர அவன் எழுந்திருந்தான். அவன் தொழுகைக்கு நேரமானதால், பிறகு கேட்டு கொள்ளலாம் என்று தொழுகைக்கு சென்றான் சித்தீக்.

அவள் வீட்டு வேலைகள் முடித்து குளித்துவிட்டு வரவும் சித்தீக் வரவும் சரியாக இருந்தது. அவன் குளிக்க சென்று விட்டான். அதற்குள் அவள் அவனுக்கு தேநீரை எடுத்து வந்தாள். அதை மேசை மீது வைத்து விட்டு ராஹிலாவுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

அவன் குளித்து விட்டு வந்ததை பார்த்த ஷெஹனாஸ் அவனுக்கு தேநீரை எடுத்து கொடுத்தாள். அவன் அதை வாங்கி அமைதியாக குடித்து முடித்தான்.

"ஷெஹனாஸ் உன்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்" என்று சித்தீக் அவள் அருகில் வந்து நின்றான்.

" ஒருவேளை நேற்று ஏன் அழுதோம் கேட்க போறானோ? " என்று மனதில் நினைத்து கொண்டு, " எ..என்ன பேசனும்? " என்று எங்கேயோ பார்த்தபடி கேட்டாள்.

" எதுக்கு நேற்று அழுத ? " என்று கேட்க

"..."

"இப்ப எதுக்கு அமைதியா இருக்க? பதிலை சொல்லு "

"..."

"அமைதியா இருந்தா மட்டும் எல்லாமே சரியாகிடுமா ? "

"இப்ப என்ன தான் வேண்டும் உங்களுக்கு ? "

"ம்ம்ம் நீ ஏன் அழுதேன் தெரியனும் ? "

" எதுக்கோ அழுதேன் விடுங்களேன்! எதுக்கு அழுதா என்ன? அழுகனும் தோனுச்சு அழுதேன்!! "

"எனக்கு இப்ப எதுக்கு அழுதேன் தெரிந்தாகனும்! "

"விட்டுவிடுங்கள் அதான் இப்ப சிரிக்கிறேன் அப்பறம் என்ன? "என்று சொல்லியவளை

"சரி உன் அலைபேசி எப்படி உடைந்தது? " என்று கோபத்தில் சற்று கடுமையை காட்டினான்.

"அ..அது அது கை தவறி கீழே விழுந்து விட்டது..." என்றவுடன்

"அறைஞ்சிடுவ பார்த்துக்கோ!! எப்ப பார்த்தாலும் பொய் சொல்லிட்டு " என்று அவன் அடிப்பதற்கு கையை ஓங்கினான் அனல் தெறிக்கும் பார்வையோடு.

அவனின் மிரட்டலில் மிரண்டவளின் கண்களில் கண்ணீரை கண்டவன் "ம்ச் "என்று கையை கீழே இறக்கினான்.

அப்பாவின் கோபத்தையும் அம்மாவின் கண்ணீரையும் பார்த்த ராஹிலா அழ தொடங்கி விட்டாள்.

"குட்டிமா ஒன்னுமில்லை டா " என்று அவளை சமாதானம் செய்ய வெளியில் அழைத்து சென்றாள் , ஷெஹனாஸ்.

" உனக்கு நான் இருக்கேன் ! உன் பிரச்சினை என்ன என்று நான் கண்டுபிடிக்கிறேன்! அதை தீர்த்து வைப்பது என் பொறுப்பு.." என்று அவன் நினைத்தவன் மனதில் பல யோசனைகள் மனதில் ஓடி கொண்டிருந்தன.

"ஷெஹனாஸ் ஒழுங்கா சாப்பிடனும் சரியா! மீதி வைக்காமல் சாப்பிடனும் புரியுதா? " என்று அக்கறையாய் சொல்ல "சரிங்க அத்தை " என்று நல்ல பிள்ளையாய் கேட்டு கொண்டாள்.

இருவரும் சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்பினர்.

"ஏன் அத்தை இந்த பிள்ளை இப்படி இருக்கு இட்லி ரெண்டுக்கு மேலே சாப்பிட மாட்டிறாள். தோசை ஒன்னுக்கு மேலே தொடுறது இல்லை. சாப்பாத்தி பரவாயில்லை. சாப்பாடு சுத்தம் இறங்க மாட்டிது அவளுக்கு இப்படி சாப்பிட்டா எப்படி ? " என்று வருந்தி கொண்டு இருந்தார் ஆரிஃபா.

"விடு நம்ம ராஹிலா பெரியவள் ஆனதும் அவள் சாப்பிட வைப்பாள் அவள் அம்மாவை அப்படி தானே என் கண்ணு.." என்று ராபியா ராஹிலாவை பார்க்க அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.

ராஹிலா இப்போதெல்லாம் அம்மா அம்மா என்று ஷெஹனாஸ் பின்னாடி தான் அதிகமாக இருந்தாள். வீட்டிற்கு வந்தவுடன் அம்மா என்று சந்தோஷமாய் அழைத்து கொண்டு வேகமாக தவழ்ந்து ஷெஹனாஸ்யிடம் செல்வாள்.

அவளும் ராஹிலாவை தூக்கி ஒரு சுற்று சுற்றி முத்த மழை பொழிவாள். அதை பல நேரம் தன் அலைபேசியில் படமாக எடுத்து வைத்துள்ளார் லியாக்கத்.

"ஏன் ஆரிஃபா நேத்து ஷெஹனாஸ்யை திட்டுனியா மா ? " என்று வாசிம் கேட்க

"இல்லை மாமா நான் எதுக்கு அவளை திட்ட போறேன்! " என்று பொறுமையாக பதில் அளித்தார்.

"இல்லை சித்தீக் எதாவது திட்டி இருப்பானோ! .." என்று வாசிம் சந்தேகமாய் சொல்ல

"ஏன் அப்பா கேட்கிறிங்க?.." என்று லியாக்கத் கேட்க

"இல்லை பா அவள் நேற்றில் இருந்து அவள் முகமே சரியில்லை!! " என்று வாசிம் நாளிதழை படித்து கொண்டே கேட்டார்.

"ஆமா நானும் அதை கவனிச்சேன்!! " என்று ஆரிஃபா சொல்ல

"அந்த பிள்ளை எவ்வளவு வலி இருந்தாலும் தனக்குள்ள வச்சிக்கிறவ அதை வெளியே காட்டிக்க மாட்றாள்.. இதை வந்த புதுசுலே நான் கவனிச்சிட்டேன்..." என்று ராபியா சொல்ல

"விடுங்கள் அல்லாஹ் பார்த்துப்பான் " என்று லியாக்கத் சொல்ல அனைவரும் அமைதியாய் அவர்கள் வேலையை செய்தனர்.

அலுவலகத்திற்கு வந்தவர்கள் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர். ஆனால் சித்தீக் மட்டும் வேலை செய்யாமல் எதையோ யோசித்து கொண்டு இருந்தான்.

அவன் மனம் முழுக்க ஷெஹனாஸ் பற்றி தான் நினைத்து கொண்டிருந்தது. அவளுக்கு என்ன பிரச்சனை? அவள் ஏன் அழுதாள் ? எதற்காக அழுதாள் ? அப்படி என்ன வலி ? அதுவும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு! அவள் எதுக்கு அதை மாமாகிட்ட இருந்து மறைக்கனும்? அவள் பெயரில் போட்ட பணத்தை என்ன செய்தாள்? ஒரு வேளை யாராது மிரட்டுறாங்களா? ஒன்னுமே புரியலையே! என்று அவன் மனம் பலவாறாக யோசித்து கொண்டிருந்தது. இதில் ஆழ்ந்து இருந்தவன் பாஸ்கரின் அழைப்பு சத்தம் காதில் விழவில்லை.

"எருமை மாடு அப்படி என்ன யோசிக்கிறான் தெரியலையே!! " என்று அவன் தலையில் கொட்டினான் பாஸ்கர்.

வலியில் நினைவுக்கு வந்தவன் , " டேய் கேன நாயே எதுக்குடா கொட்டுன? " என்று கேட்க

"பின்ன என்ன ஒரு மனிஷன் எவ்வளவு நேரம் தான் கூப்பிடுவான்! "

"இல்ல மச்சி சாரி டா காதில கேட்கலை" என்று அவன் சொல்ல

"பரவாயில்லை அப்படி என்ன தீவிரமாக யோசித்து கொண்டிருக்க?." என்று பாஸ்கர் கேட்க அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.

"பாவம் டா தங்கச்சி.. அவங்க நண்பர்களை விசாரித்தால் எல்லாமே தெரிந்து விடும் "என்று பாஸ்கர் சொல்ல

"நல்ல ஐடியா அவங்க நம்பர்.." என்று சித்தீக் கேட்க

"வாங்கலாம் நீ கவலை படாத தங்கச்சி நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்! கடவுள் பார்த்துப்பான் விடு " என்று பாஸ்கர் ஆறுதல் சொல்ல சற்று தெளிந்தான் சித்தீக்.

"டேய் மச்சி அவள் சரியா சாப்பிட மாட்றாள் ! அதனால அவளை சாப்பிட வைக்கனும் நீ சாப்பிடு நான் அங்க போறேன் " என்று சொல்லி விட்டு பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தான்.

அவனின் இந்த மாற்றம் பெரும் நிம்மதியை தந்தது பாஸ்கர். "டேய் மச்சி நீ நேசிக்க தொடங்கிட்ட அதை நீயே உணரனும் தான் அமைதியா இருக்கேன் " என்று மனதில் நினைத்த படி சாப்பிட தொடங்கினான்.

அவன் ஷெஹனாஸ் அறைக்குள் செல்ல அவள் , " எ..என்ன வேணும் ? " என்று கேட்டாள்.

"சாப்பிட்டியா ? " என்று கேட்க

"ம்ம்ம் இல்லை " என்று சொல்லிட , "சரி எடு நாம சேர்ந்து சாப்பிடலாம் " என்றவுடன் அவள் விழிக்க தொடங்கிவிட்டாள். பிறகு அமைதியாக சாப்பாட்டை திறந்தாள்.

"ம்ம்ம் சாப்பிடு " என்றான். அவள் என்று மதியம் சாப்பிட்டு இருக்கிறாள் இன்று சாப்பிட .

அவள் அமைதியாக இருக்க அவனே எடுத்து ஊட்டி விட தொடங்கினான். அவளுக்கு ஒன்னுமே புரியவில்லை.

"ஹே வாங்கு "என்று சொல்ல பொறுமையாக வாயை திறந்து வாங்கி கொண்டாள்.

நான்கு வாய் சாப்பிட்டவுடன் "போதும் எனக்கு இதுக்கு மேல வேணாம் ப்ளீஸ்" என்று அவள் கெஞ்சினாள்.

அவளின் கெஞ்சலை உள்ளுக்குள் ரசித்தவன், " ம்ம்ம் ஒழுங்கா சாப்பிடும் " என்று குரலில் கடுமையை காட்டினான்.

அவளுக்கு கண்களில் கண்ணீர். தன் அண்ணன் அப்பவை தவிர்த்து இது போல் யாரும் தன் மேல் இவ்வளவு அக்கறை எடுத்து கொண்டதில்லை.

"ஏய் லூசு அவன் கிட்ட உன் கஷ்டத்தை சொல்லிடு . அவருகிட்ட மனசு விட்டு எல்லாமே அழுது முடிச்சிடு.." என்று அவள் மனம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் , "நான் ராஹிலாவுக்கு அம்மாவா மட்டும் தானே அவரை மணம் முடித்தேன் அவர் கிட்டயிருந்து நான் இதை எல்லாம் எதிரி பார்க்கிறது தப்பு " என்று கூறி விட்டாள்.

"நீயெல்லாம் திருந்தவே மாட்டேன் எப்படியோ போ! " என்று புத்தி சொல்ல

"நீ சொல்லறதும் சரிதான் " என்று மனம் புத்திக்கு ஆதரவு கொடுத்தது.

அப்போதும் அவள் மாறவில்லை. அவளுக்கு ஏனோ ரஸாஹ் நினைவு வந்துவிட்டது.

"எ....எனக்கு அண்ணா நியாபகம் வந்திடுச்சு , நான் போய் அவனை பார்த்துட்டு வீட்டுக்கு வந்திடுற "என்று அவள் சொல்ல

"சரி வா நானே உன்னை அழைச்சிட்டு போறேன்!" என்றவனிடம்

"வேண்டாம் நானே போய்ட்டு வந்துடுறேன் " என்று சொல்ல

"பணம் வேணுமா " என்று கேட்க

"அதெல்லாம் இருக்கு " என்று விட்டு சென்றாள்.

அங்கு வந்தால், தன் அம்மா அவனை எதாவது சொல்லி சண்டை இழுத்து விடுவாளோ என்று பயந்தே வேண்டாம் என்று மறுத்தாள் ஷெஹனாஸ். அவனை அழைத்து சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ன செய்ய எல்லாம் விதி !

வீட்டிற்கு போகும் வழியில் தன் அண்ணிக்கு பிடித்தவை வாங்கி கொண்டு சென்றாள்.

வீட்டிற்கு வந்தவுடன், " அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அண்ணி " என்று அழைக்க ஷெஹனாஸ் பார்த்த சந்தோஷத்தில் ரக்ஷனா என்ன செய்வதென்று அவளுக்கு புரியவில்லை.

"வ அலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்) ஹே ஷெஹனாஸ் வா உள்ள வா " என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றாள்.

"ஷெஹனாஸ் மா நல்லா இருக்கியா? மாப்பிள்ளை பேத்தி வீட்டில் இருக்கவங்க எல்லாம் எப்படி இருக்காங்க ? " என்று உஸ்மான் கேட்க

"அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்காங்க! என்னை எல்லாரும் நல்லா பார்த்துக்கிறாங்க அப்பா " என்று சொன்னவுடன் உஸ்மான் மனம் நிம்மதி அடைந்தது.

"ஹான் அண்ணி இந்தாங்க உங்களுக்கு பிடிச்சது "என்று நீட்டிட அவள் ஆசையாய் அதை பிரித்து எடுத்து சாப்பிட வாயில் வைக்க அதை தட்டி விடவும் சரியாக இருந்தது.

"அத்தை எதுக்கு இப்ப தள்ளி விட்டிங்க? " என்று ரக்ஷனா கோபப்பட

"ஹே அதுல அவள் எதையாவது கலந்து கொண்டு வந்திருந்தா ? என்ன பண்ண? அதுமட்டுமின்றி அவள் கேவலமான அழகு என் பேர குழந்தைக்கு ஒட்டிக்கிச்சினா? இவளா அம்மாவா இருக்க கூட தகுதி இல்லாதவள் "என்று சொல்ல ஷெஹனாஸ் கண்கள் கலங்கி விட்டன.

அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காதவள் வேகமாக இடத்தை காலி செய்து விட்டாள்.

"ஹே உனக்கு எல்லாம் அறிவே இல்லையா? எதுக்கு இப்படி பேசுற? நாம பெத்த புள்ளைய இப்படி பேசுறியே உனக்கு அசிங்கமாக தெரியலை ! " என்று உஸ்மான் கோபப்பட

"ஆமா நான் சொன்னதில்லை என்ன தப்பு இருக்கு ! " என்று ஆயிஷா சொல்ல

"மாமா இவங்க கிட்ட பேசி என்ன ஆக போது விடுங்கள்" என்று சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்றாள் ரக்ஷனா.

மணி நான்கை போல் வீட்டிற்கு வந்தாள்.

"என்னமா சீக்கிரமா வந்திருக்க?.." என்று வாசிம் கேட்க

"அண்ணியை பார்க்க போன அதான் அப்படியே வீட்டிற்கு வந்திட்ட " என்றாள்.

தன் அம்மாவின் குரலை கேட்ட ராஹிலா உள்ள இருந்து உற்சாகமாகவும் வேகமாகவும் தவழ்ந்து வந்தாள்.

அவளை சந்தோஷமாய் தூக்கியவள் அறைக்கு சென்று கொண்டாள்.

"ஏன் குட்டிமா நான் அம்மாவா இருக்க கூட தகுதி இல்லையா! நான் அவ்வளவு கேவலமா இருக்கேனா? உனக்கு என்னை பிடிக்கலாயா ? " என்று கேட்டவள் தான் ராஹிலா அடித்து விட்டாள்.

"எதுக்குடா அம்மாவை அடிச்ச நான் அப்படி பேசினது பிடிக்கலையா " என்று கேட்க அம்மாவின் கண்களை துடைத்தவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்தாள். அவளை தன்னோடு அணைத்து கொண்டு அப்படியே உறங்கினாள்.

சிறிது நேரத்தில் சித்தீக் வர ராஹிலாவை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு உறங்கி கொண்டிருப்பவளை பார்த்தவன் தனக்குள் சிரித்தான்.

ராஹிலா முழித்து கொண்டிருப்பது அவளின் அம்மா என்ற அழைப்பில் உணர்ந்தவன் அவளை தூக்க செல்ல ஷெஹனாஸ்யின் வாடிய முகத்தை கண்டவன் ஏதோ பிரச்சனை நடந்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.

அவன் எதுவும் சொல்லாமல் அறையில் சிறிது நேரம் ராஹிலாவை விளையாட வைத்து கொண்டிருந்தான்.

அவனின் மனதில் , "இவள் ஏன் இப்படி இருக்கிறாள் ? " என்று நொந்து கொண்டான்.

💕தொடரும்💕
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
♥️ 17. இதயம் கேட்கும் காதல் ♥️

ரஸாஹ்யிடம் நடந்ததை அலைபேசியில் சொன்னாள் ரக்ஷனா. ஆயிஷா மேல் ரஸாஹ்யின் கோபம் அதிகமானது.

வீட்டிற்கு வந்ததும், "அம்மா " என்று கத்தியடி உள்ளே நுழைந்தான் ரஸாஹ்.

"டேய் எதுக்கு டா இப்ப கத்துற? " என்று ஆயிஷா கேட்டு கொண்டே சமையலறையில் இருந்து வெளியே வந்தார்.

"எதுக்கு ஷெஹனாஸ்யை அசிங்கப்படுத்துன? ஏன் மா இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிற? அவளும் நீ பெத்த பொண்ணு தானே! அவளை ஏன்மா இப்படி அசிங்கமாக பேசுற! " என்று கேட்டவனிடம்.

"டேய் நான் ஒன்னும் பண்ணலை! அந்த அசிங்கபிடிச்சிவ எதுக்கு இங்க வரனும்? அதான் அவளை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோமில!..." என்று பேச இதுவரை கை நீட்டாத உஸ்மான் தன் மனைவியை அறைந்தார்.

"அந்த வீணா போனவளுக்காக என்னையே கை நீட்டுறிங்களா! " என்று உஸ்மானை கோபமாக பார்த்தார்.

"ஏய் எதுக்கு டி அழகு அழகு அது பின்னாடியே போற? அழகால எதையும் சாதிக்க முடியாது புரிந்துகோ ! " என்று உஸ்மான் சொல்ல

"அழகு இருந்தா தான் எல்லாமே! அழகு மட்டும் தான் முக்கியம்" என்று ஆயிஷா சொல்ல

"அப்பா போதும் ! இனி நானும் ரக்ஷனாவும் தனி குடித்தனம் போய்டுறோம் " என்று ரஸாஹ் சொல்ல பெற்றவர்கள் அதிர்ந்தனர்.

"டேய் என்னடா இப்படி சொல்ற? " என்று உஸ்மான் கேட்க

"இல்லப்பா இது தான் என் முடிவு ! மேலேயே நாங்க சமைத்து சாப்பிட்டு கொள்கிறோம்! " என்று ரஸாஹ் சொல்ல

"டேய் அந்த புள்ள மாசமா இருக்கு டா ! " என்று உஸ்மான் கவலையாக சொல்ல

"நாங்க பார்த்து கொள்றோம் ப்பா ! " என்று விட்டு தங்கள் தனியாக சமைத்து சாப்பிட அனைத்தையும் வரும் வழியில் வாங்கி வந்தான் ரஸாஹ்.

ரக்ஷனாவும் அவன் முடிவை அமைதியாக ஏற்று கொண்டாள். ஆயிஷாவிற்கு இன்னும் ஷெஹனாஸ் மேல் கோபம் தான் அதிகம் ஆனது.

உஸ்மான் அவர்களின் முடிவை தடுக்கவில்லை.

ரஸாஹ் உள்ளே வந்தவுடன் , "ரக்ஷனா நான் எடுத்த முடிவில உனக்கு எந்தவொரு ஆட்சேபனை இல்லை தானே! "என்று கேட்க

"ம்ஹூம் இல்லை " என்று பின்னால் அணைத்து கொண்டாள் ரக்ஷனா. அவளின் கரத்தில் மெலிதாய் இதழ் பதித்தான் ரஸாஹ்.

"கவலை படாதடா ஷெஹனாஸ் பிரச்சினை சீக்கிரம் சரியாகும் " என்று ஆறுதல் சொல்ல அவள் மடியில் தலை சாய்ந்து கொண்டான்.

" இவளுக்கு என்ன நடந்திருக்கும்! ஏதோ நடந்திருக்கு மட்டும் புரியுது ! ஆனா என்ன நடந்திருக்கு தெரியமாட்டேன்து! கண்டு பிடிப்போம்! "என்று மனதில் முடிவெடுத்து கொண்டு உறங்க சென்றான்.

"அம்மாடி ஷெஹனாஸ் நாங்க என் தங்கச்சியோட நாத்தனார் பொண்ணு நிக்காஹ்க்கு கள்ளக்குறிச்சி போரோம்! ஊருக்கு போய்ட்டு வரதுக்கு நாலு நாள் ஆகும்..." என்று ஆரிஃபா சொல்ல

"ஆமாலே சொன்னிங்கள! போகனுமா? நான் வேணா கூட வரவா? .." என்று சிணுங்கினாள்.

"அதெல்லாம் வேண்டாம் டா .. நாங்க போய்ட்டு வந்துறோம்! "என்று லியாக்கத் சொல்ல

"சரி ஒழுங்கா சாப்பிடனும்! நேரத்தில படுத்துடனும் சரியா " என்று செல்லமாக அதட்டினாள் ஷெஹனாஸ்.

"ம்ம்ம் சரிடி பெரிய மனிசி.." என்று ராபியா சொல்ல

"அது என் செல்ல பாட்டி.." என்று கன்னத்தில் முத்தமிட்டள்.

"அதெல்லாம் நாங்க சாப்பிடுறது இருக்கட்டும் நீ ஒழுங்கா சாப்பிடனும். நாங்க இல்லை சொல்லி சாப்பிடாம இருந்த அப்பறம் நான் பேச மாட்டேன் " என்று அவள் காதை திருகிய படி அதட்டினார் ஆரிஃபா.

"ஆஆஆஆஆஆ அத்தை கா..கா..காது அத்தை.. பாட்டி காதை விட சொல்லுங்க பாட்டி மீ பாவம்... அத்தை வேணும்னா சொல்லுங்க காதை தனியா எடுத்து தர வச்சிக்கோங்க ..." என்று சிரித்து கொண்டே நெளிய

"வாய் வாய் " என்று ஆரிஃபா சொல்ல

"வாய் இல்ல அத்தை காது . காதை தானே பிடிச்சிட்டு இருக்கிங்க! " என்று பாவமாக முகத்தை தொங்க போட்டாள் ஷெஹனாஸ்.

அவர்களின் செல்ல சண்டையை மற்றவர்கள் ரசித்தபடி சிரித்து கொண்டு இருந்தனர்.

"சரி சரி போதும் வாங்க கிளம்பிவோம் நேரம் ஆகுது! " என்று வாசிம் அதட்ட

அனைவரும் விடைபெற்று நகர்ந்தனர். வீடே வெறித்து இருந்தது.

"ஷெஹனாஸ் நேரம் ஆயிடுச்சு கிளம்பலாமா! " என்று சித்தீக் கேட்க

"இல்லை நான் வரலை " என்றவுடன்

"ஏன் என்னாச்சு உடம்பு சரியில்லையா என்ன? " என்று அக்கறையாய் கேட்டவனை கண் கலங்கிய படி பார்த்தாள்.

அவளின் கலங்கிய கண்களை கண்டவன் , " ஹே என்னாச்சு ஏன் கண் கலங்கி இருக்கு ? " என்று பதற

"ஒன்னுமில்லை வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு ! அத்தை இருந்தா எல்லாமே பார்த்துக்குவாங்க " என்று சொல்ல

"ம்ம்ம் சரி மதியம் ஒழுங்கா சாப்பிடும்..." என்று கூறியவன் சாப்பிட அமர்ந்தான்.

இருவரும் ஒன்றாக சாப்பிட்டனர். அவன் வேலைக்கு சென்று விட்டான். இவள் ராஹிலாவுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு அவளை கவனித்த படியே மற்ற வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

"ஏய் நிஸா இது தான் சரியான சந்தர்ப்பம், இவளை வீட்டை விட்டு அனுப்புறதுக்கு.." என்று ஜஸ்ரா சொல்ல

"ஆமா ஜஸ்ரா. முதல்ல இந்த வீணா போனவளை வீட்டை விட்டு துறத்தனும். " என்று நிஸாவும் ஆமோதித்தாள். ஏனோ விதியும் இவர்களுக்கு சாதகமாகவே இருந்தது.

அவர்கள் மனதில் ஒரு யோசனை தோன்ற அதை கச்சிதமாக செய்து முடித்தனர் இருவரும்.

இவள் ராஹிலாவுடன் பேசி கொண்டே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். பிறகு தோட்டத்தில் சிறிது நேரம் ராஹிலாவுடன் வேடிக்கை காட்டி விளையாடி கொண்டிருந்தாள்.

ராஹிலா அம்மாவுடன் மிகவும் ஆனந்தமாய் இருந்தாள்.

"குட்டிமா நீ எப்ப நடப்ப? அம்மாக்கு அதை பார்க்கனும் எவ்வளவு ஆசையா இருக்கு தெரியுமா? " என்று அவளிடம் பேச அழகாய் புன்னகைத்து கொண்டு இருந்தாள் ராஹிலா.

அவளின் புன்னகையில் தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தாள்.

"குட்டிமா உன் அப்பாவை பார்த்தால் மட்டும் நான் என்ன ஆகுறனே தெரியலை! உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது! அவர்கிட்ட மட்டும் தான் செல்லம் என் முழு குணத்தையும் காட்டுறேன் ! உன் அப்பா என் வாழ்க்கையில வந்த நொடியில இருந்து சந்தோஷம் மட்டும் தான் பார்க்கிறேன்! அதுவும் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து அதிகமாக! உரிமை இருக்கிற இடத்தில தான் நம்மலோட மொத்த குணத்தையும் காட்டுவோம்! அதுமாதிரி தான் . நான் என்ன சொல்றதுன்னு தெரியலை குட்டிமா! ஆனா உன் அப்பா தான் எனக்கு எல்லாமே! .." என்று தன் கண்ணை துடைத்து கொண்டு ராஹிலாவை நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

தன் அம்மாவின் மகிழ்ச்சி அவளுக்கும் ஒட்டி கொள்ள சத்தமாய் சிரித்தாள் ராஹிலா.

லுஹர் தொழுகை தொழுது கொண்டிருந்த ஷெஹனாஸ் முன் அமர்ந்து தானும் அதை போலவே செய்து கொண்டிருந்தது அந்த பிஞ்சு.

தொழுகையை முடித்தவள் , "குட்டிமா உன் சேட்டையை ஆரம்பிச்சிட்ட பார்த்தியா ? அம்மா தொழுதுட்டு தானே இருக்கேன்! " என்று அவள் செல்லமாய் கோபித்து கொள்ள அவள் நக்கலாய் சிரித்து கொண்டிருந்தாள்.

"நீ சிரிக்கிறது பார்த்தா ரொம்ப தப்பா இருக்கே!" என்று அவளை தூக்க

"உச்சா போய்ட்டு தான் சிரிக்கிறியா நீ! உன்னை பிடி " என்று அவள் சொல்ல அழகாய் தவழ்ந்து தப்பித்தாள் ராஹிலா.

"இதோ அம்மா வரேன் பாரு " என்று அவளும் அவள் பின்னாடி மெதுவாக நகர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அவளை தூக்கி கொண்டாள். ராஹிலா சப்தமாக சிரித்து கொண்டே இருந்தாள் . அவளிடம் பேசி கொண்டே அவள் உடையை மாற்றி விட்டு ,அவ்விடத்தை சுத்தம் செய்தாள். குழந்தைக்கு மட்டும் சாப்பிட வைத்துவிட்டு , ஜஸ்ரா நிஸா இருவருக்கும் பரிமாறியவள், தான் சாப்பிடவே மறந்து போனாள் பாவை.

மதியத்திற்கு மேல் உறங்கி விட்டாள் ராஹிலா. அவளுடன் தானும் சேர்ந்து உறங்கினாள் ஷெஹனாஸ்.

சினிமா பார்த்துட்டு அந்த படங்களில் வருவது போலவே தன் திட்டத்தை நடத்த முயன்றார்கள்.

ஷெஹனாஸ், தூங்கி எழுந்ததும் தேநீர் அருந்த நேராக சமயலறைக்கு வருவாள் என அறிந்த இருவரும் சமையலறையில் தேநீர் செய்து கொண்டிருந்தனர்.

"ஹே நிஸா இதுலை நாம இந்த விஷத்தை கலந்துட்டோம் கண்டிப்பாக அவள் இறந்திடுவா! " என்று ஜஸ்ரா சொல்வதை ஷெஹனாஸ் கேட்டு அதிர்ந்தாள்.

அவர்கள் இருவரும் அதை அவளுக்கு தர அவள் வாங்க மறுத்து விட்டாள்.

"ஏன் வாங்க மாட்டேன்?.." என்று நிஸா முறைக்க

"அதில நீங்க விஷம் கலந்திருக்கிங்க! அதை நான் என் கண்ணால பார்த்தேன்! " என்று ஷெஹனாஸ் சொல்லவும் அவளின் கன்னத்தில் அடி இடி போல் விழவும் சரியாக இருந்தது.

இருவரும் தங்கள் எண்ணம் நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருந்தனர்.

"ஏய் தங்கச்சி உனக்கு விஷம் வைத்தாளா? " என்று சித்தீக் கேட்க

"ஆமா அதை என் கண்ணால நான் பார்த்தேன் ! "என்று ஷெஹனாஸ் சொல்ல

"அவ்வளவு தானே! இரு நானே அதை குடிக்கிறேன் " என்று அதை வாங்கி அவன் குடித்தான். அவனுக்கு ஒன்னுமே ஆகவில்லை.

"அண்ணா பார்த்தியா எப்படி அவங்க எங்க மேல பழி போடுறாங்க. நாங்க என்ன பாவம் உனக்கு செய்தோம் " என்று நிஸா கேட்க அவள் செய்வதறியாமல் திகைத்தாள்.

அவர்கள் கலந்தது விஷமல்ல தேனை. " அண்ணா நாங்க தேனை தான் கலந்தோம் ! அதுக்கு எவ்வளவு பெரிய பழியை போடுறாங்க பார்த்தியா ? " என்று ஜஸ்ரா அழுவதை போல் நடிக்க மேலும் அதிர்ந்தாள் ஷெஹனாஸ்.

"இல்லை நா..நான் " என்று அவள் சொல்ல

"போதும் வெளியே போ! இந்த வீட்டை விட்டு வெளியே போ! இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை! கிளம்பு " என்று அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான் சித்தீக்.

அவள் எவ்வளவு கெஞ்சியும் அவன் சமாதானம் ஆகவில்லை. ராஹிலாவின் அழுகை சத்தம் கேட்டதும் தாயவளின் மனம் பதற குழந்தையை தூக்க ஓடினாள்.

"ஏய் எங்க போற ? " என்று சித்தீக் கேட்க

"குழந்தை அழுவுறா! " என்று திக்கி சொல்ல

"அவள் ஒன்னும் நீ பெத்த குழந்தையில்லை. நீ யாரு அவளை தூக்க " என்று சித்தீக் கேட்க செய்வதறியாது திகைத்து நின்றாள் அதிர்ச்சியில்.

"இந்த வீட்டில காலடி வைத்த அவ்வளவு தான் " என்று விட்டு உள்ளே சென்றான்.

அவள் அமைதியாக யோசித்தவள் , "எனக்கு என் புர்கா வேணும் ! "என்று சொல்லிவிட்டு தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு கடற்கரைக்கு சென்றாள். அங்கு சென்றவளின் மனம் ராஹிலாவை சந்தித்தது முதல் அனைத்தும் நினைவுக்கு வர அழுது கொண்டிருந்தாள்.

அவளின் மனம் பாரமாக இருந்தது. யாரை அதிகமாக நம்பினாளோ அவனே தன்னை ஏமாற்றி விட்டானே ! என்று தன் நிலையை நினைத்து வருந்தினான்.

அப்போது அவளிடம் மூன்று நபர்கள் வம்பு இழைக்க வந்தனர். அவள் சற்றும் அசராமல் அவர்களை அடித்தவள் , " ஏன்டா உனக்கெல்லாம் பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காராமா போய்ட்டாங்கலா? " என்று காலால் அவர்களை மிதித்து அடித்தாள்.

"எந்திரிங்க டா எந்திரி" என்று அவள் மிரட்ட எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து நின்றனர்.

"என்ன வேலை பண்றிங்க? " என்று கேட்க

"ஏன் வேலை இல்லை சொன்னால் போட்டு தர போறியா?" என்று ஒருத்தவன் கேட்க

"ஏய் சொல்றியா இல்லை போலீஸ் கிட்ட அழைச்சிட்டு போவா? " என்று அவள் மிரட்ட

"இல்லை " என்றான் இன்னொருத்தவன்.

"குடும்பம் இருக்கா? " என்றவுடன்

"இருக்கு " மூன்றாவது ஒருத்தன்

"கல்யாணம் ஆகிடுச்சா? " என்று கேட்க

"இல்லை" என்று ஒன்றாக தலையசைத்தனர்.

"கூட பொறந்தவங்க எத்தனை பேர் ? "

"எல்லாருக்கும் ஒரு தங்கச்சி இருக்கு ! "என்று சொல்ல

"வெக்கமா இல்லை இப்படி இருந்திங்கனா உங்க தங்கை வாழ்க்கை என்னவாறது? " என்று கோபத்தோடு அவர்களை பார்க்க

"எவன் வேலை தரான் எங்களுக்கு ? "

"அதுக்கு இப்படி தான் பண்ணுவியா! அறிவில்லை உனக்கு ! உன் தங்கச்சியை இந்த மாதிரி பண்ணா சும்மா இருப்பியா? " என்று கேட்க அவர்கள் அமைதியாக இருந்தனர்.

"சரி நான் உங்களுக்கு வேலை வாங்கி தரேன் ஒழுங்கா இருப்பிங்களா? " என்று அவள் கேட்க அவர்களுக்கு வார்த்தை எழவில்லை .

"என்ன ஒழுங்கா இருப்பிங்களே! " என்று அழுத்தமாக கேட்க

"கண்டிப்பா இருப்போம்! " என்றனர் மூவரும்.

"நீங்க படிச்ச படிப்புக்கு வேலை இல்லை ஆனா நல்ல வேலை இருக்கு "என்று சொல்ல

"என்ன வேலை இருந்தாலும் செய்றோம் ! " என்று கூறினான் ஒருத்தன்.

"ஒரு வேலை கணக்காளர் இன்னொரு வேலை சமைக்கிறது அப்பறம் இன்னொரு வேலை சந்தையில் இருந்து காய்கறி மற்ற எல்லாவற்றையும் வாங்கி போடுறது " என்று சொல்ல

"அட எனக்கு நல்லா சமைக்க தெரியும் " என்று சூர்யா சொல்ல

"எனக்கு கணக்கு நல்லாவே வரும் " என்று நித்திலேஷ் சொன்னான்.

"எனக்கு அந்த வேலை ஒகே " என்று ராஜ் சொல்ல

"சரி வாங்க அங்க அழைச்சிட்டு போறேன் " என்று மூவரும் ஒரு ஆசிரமம் முன் வந்து இறங்கினர்.

அது ஒரு குழந்தைகள் நல காப்பகம் . அது ஷெஹனாஸ் மற்றும் அவள் நண்பர்கள் கடந்த இரு ஆண்டுகளாக சேர்ந்து நடத்தும் ஒரு சிறிய காப்பகம் தான் அது.

அந்த காப்பகம் இவர்களுடையது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று . யாருடைய வீட்டிற்கும் அது தெரியாது.

அவர்களை பற்றி அரவிந்த்யிடம் சொல்லி வேலைக்கு சேர்த்து விட்டாள். அங்கிருந்த குழந்தைகளோடு விளையாடிவள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினாள்.

💕 தொடரும் 💕
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
♥️ 17. இதயம் கேட்கும் காதல் ♥️



"அண்ணா ஸாரி எங்களால் தானே அண்ணி வீட்டை விட்டு போனாங்க ! " என்று அழுவதை போல் இருவரும் கேட்க

"அவள் அப்படி பண்ணதுக்கு நீங்க என்னடா பண்ணுவிங்க போங்க போய் நிம்மதியா இருங்கள் " என்று அவன் பொறுமையாக சொன்னான். அவர்களும் பாவமாய் நடித்து கொண்டே அமைதியாக சென்றனர்.

"ஹே நாம நினைச்சது நல்ல படியா முடிந்தது..." என்று ஒருவரை பார்த்து ஒருவர் சந்தோஷப்பட்டு கொண்டனர்.

ஷெஹனாஸ் தவறு செய்தாள் என்பதை சித்தீக்யால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதுவும் தன் அன்பு தங்கைகளின் மீது இப்படி ஒரு பொய் சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்றெல்லாம் அவன் மனம் நினைத்து கொண்டு இருந்தது.

ஜஸ்ரா , நிஸா இருவரும் சித்தீக்யின் செல்ல தங்கைகள். தன் தங்கைக்கு பிறகு தான் எல்லாமே அவனுக்கு! தன் தங்கை இருவரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கை! அதுவே காரணமாகி விட்டது அவன் அதை ஆராயாமல் முடிவு செய்ய!.

ஷெஹனாஸ் தவறு செய்ய வில்லை என்று தெரிய வந்தால் அவன் நிலை என்னவாகுமா! இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்!

எவ்வளவு முறை சமாதானம் செய்தும் ராஹிலாவின் அழுகையை நின்ற பாடியில்லை. அந்த பிஞ்சு மனம் தாயின் அன்பிற்கு ஏங்க தொடங்கியது.

அவளை பலவாறு சமன் படுத்தி உறங்க வைத்தான், சித்தீக்.

வீட்டில் யாரும் இல்லை என்ற தைரியத்திலே அவளை வெளியில் விரட்டினார்கள். இதுவே பெரியவர்கள் இருந்து இருந்தால் வெளியே சென்றிருப்பது ஷெஹனாஸ் அல்ல இவர்கள் தான்.

ஆரிஃபாவுக்கு முதலில் இருந்தே சந்தேகம் தான் இவர்கள் இருவரின் மேலும்! இவ்விஷயம் தெரிந்தால், பேயாட்டம் ஆடி விடுவார்.

பாட்டி அவ்வளவு தான் வாசிம் சொல்லவே வேண்டாம் இதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் ஷெஹனாஸ்யை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டோம் என்ற சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டிருந்தனர்.

இவர்களின் கணவன் அஹ்மத் மற்றும் மஸ்தான் இருவருக்கும் தெரிந்தால், பின்னி பெடல் எடுத்து விடுவார்கள். தன் கணவனை பற்றி கூட அவர்கள் பயப்பட வில்லை. அதுசரி மனசாட்சிக்கும் இறைவனுக்குமே பயப்படாதவர்கள் மற்றவர்களுக்கா பயப்பட போகிறார்கள். இன்னும் இரண்டு நாட்களில் தங்கள் ஊரிலே வந்து நிரந்தரமாக தங்க முடிவெடுத்திருப்பதை இவர்கள் இருவரும் அறியவில்லை .

அநியாயமாக ஒருவர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அல்லாஹ்விடம் துஆ கேட்டால் அல்லாஹ் அதை ஒருபோதும் மறுக்க மாட்டானே! அப்பேர்ப்பட்ட தண்டனையையும் அவர்கள் நினைத்து பார்க்க வில்லை என்றால் அவர்களின் மனதில் எவ்வளவு வன்மம் குடி கொண்டு இருக்கிறது?

அநியாயம் செய்யப்பட்டவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் தன்னை மன்னிக்க மாட்டான் என்பதை எப்படி மறந்தார்கள் , இத்தனைக்கும் படித்த பெண்கள். என்ன செய்ய எல்லாம் விதி!

இரவு மூவரும் சாப்பிட்டு விட்டு அமைதியாக அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.

சித்தீக் , ஷெஹனாஸ் பற்றி சிறிதும் கவலையின்றி தன் வேலையில் மூழ்கி இருந்தான். ராஹிலா அமைதியாக தூங்கி கொண்டு இருந்தாள்.

"பொம்மை வா சாப்பிடலாம் ! " என்று ரஸாஹ் அழைக்க

"எனக்கு வேண்டாம் ரஸு பசிக்கலை" என்று சொல்ல

"உள்ள இருக்கும் குழந்தைக்கு பசிக்கும் டா கொஞ்சமாச்சும் சாப்பிடு! " என்று அவளுக்கு ஊட்டியும் விட்டான், ரஸாஹ்.

சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலே வாந்தியும் எடுத்து விட்டாள். "ஹே அம்மு பார்த்து " என்று அவளை கவனமாக பார்த்து கொண்டான்.

"இதுக்கு தான் சொன்ன வேணாம்னு" என்று அவள் சிணுங்க

"உன்னை எந்த வேலையும் செய்ய கூடாது சொன்னா எல்லாம் செய்துவிட்டு பேசுறியா நீ! தூங்கு" என்று தன் மடியில் அவளை சாய்த்து கொண்டு அவளுக்கு இதமாக தலையை கோதி விட்டான்.

காலை எப்போதும் போல் எழுந்தவன், ராஹிலாவை ஜஸ்ரா நிஸாவிடம் கொடுத்து விட்டு பள்ளிவாசலுக்கு சென்றான் .

ராஹிலா கண் முழித்ததும் தன் தாயின் முகத்தை காணாது அழுது கொண்டு இருந்தாள். ஜஸ்ரா நிஸா இருவருக்கும் கோபம் ஏறியது. ஆனாலும் அமைதியாக பொறுத்து கொண்டனர்.

சித்தீக் சிறிது நேரம் ராஹிலாவுடன் விளையாடி கொண்டிருந்தான். ஆனால் அவளோ அம்மா என்று அழுது கொண்டிருந்தாள்.

"உனக்கு இனி அப்பா மட்டும் தான்! " என்று சொல்லி விட்டு அவன் வேலைக்கு கிளம்பி விட்டான்.

அவன் அலுவலகத்திற்கு வந்து தன் வேலையை அமைதியாக செய்து கொண்டிருந்தான்.

"என்னடா இன்னிக்கும் தங்கச்சி வரலை போல ! " என்று பாஸ்கர் கேட்க

"ம்ம்ம்" என்று மட்டும் சொல்லிவிட்டு தன் வேலையை செய்தான் சித்தீக்.

"என்னடா எதையோ மறைக்கிற மாதிரி தெரியுது? " என்று சந்தேகமாக கேட்க சித்தீக் அவனிடம் மறைக்க மனமின்றி அனைத்தையும் சொல்ல இதுவரை அடிக்காத பாஸ்கர், பளார் என்று அறைந்தான் அவற் கன்னத்தில்.

"அடேய் நீயெல்லாம் மனிஷனா டா நீ! அந்த புள்ளைய போய் எப்படி டா இப்படி நினைக்க தோனுச்சு! உன் தங்கச்சிங்க தான் அப்படி பண்ணியிருப்பாங்க! " என்று அவன் சட்டையை பிடித்து திட்ட

"டேய் என் தங்கச்சிங்க ஒன்னும் பொய் சொல்றவங்க கிடையாது " என்று சித்தீக் மறுக்க

"அதேமாதிரி என் தங்கச்சியும் பொய் சொல்றவள் கிடையாது ! " என்று பாஸ்கர் ஷெஹனாஸ் ஆதரவாக பேசினான்.

தற்செயலாக உள்ளே வந்த இளங்கோ இதையெல்லாம் கேட்டு அதிர்ந்தான்.

"சார் உங்க கிட்ட ஒன்னு சொல்லவா ?" என்று இளங்கோ மெதுவாக கேட்க

"ம்ம்ம் சொல்லுங்க இளங்கோ !. " என்றான் சித்தீக்.

"சார் ஷெஹனாஸ் மனைவியா கிடைச்சது நீங்க எப்பவோ செய்த புண்ணியம்! அவங்களை மாதிரி பெண்ணை நீங்க எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க! நானும் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறேன் ஆனா ஷெஹனாஸ் மாதிரி தைரியம் தன்னம்பிக்கை துணிச்சல் பக்குவம் எதையுமே நல்லதா நினைக்கிற மனம் பாசிட்டிவ் எண்ணம் பார்த்ததில்லை! உங்களுக்கு ஒன்னு தெரியுமா நம்ம ஆபிஸ்யில் வேலையில இருக்கும் அத்தனை பேரும் அவங்களை அசிங்கமா பேசாத நாளே இல்லை! அவங்க அழகா இல்லை என்ற ஒரே காரணம். அவங்கிட்ட நான் அதை சொன்னப்ப என் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் ஸார். இந்த உலகம் பேசிட்டு தான் இருக்கும் அதை நாம கண்டுக்க கூடாது. இதை பெருசு பண்ணாம அப்படியே விட்டுவிடுங்கள் சொல்லிட்டாங்க! ஆனா ஒன்னு சார் எல்லா பெண்களும் அறிவா இருக்க மாட்டாங்க அப்படி அறிவா இருக்க பெண்கள் மனசு அழகா இருக்கிறதில்லை! அறிவும் மன அழகும் நிறைந்து இருக்கிறது ஷெஹனாஸ் மட்டும் தான் ஸார்! ஷெஹனாஸ் பற்றி தெரியாதா இன்னும் சில விஷயங்கள் இருக்கு ஸார்! அது வாயால சொல்ல முடியாது நேரா அழைச்சிட்டு போறேன் என் கூட வாங்க! " என்று அவன் அழைத்தான்.

இதெல்லாம் கேட்ட சித்தீக் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

பாஸ்கர், "சரி வாங்க போவோம் " என்று சித்தீக்யையும் அழைத்து சென்றான்.

மூவரும் ஒரு ஹோட்டல் முன்பு நின்றனர். இங்க எதற்கு வந்திருக்கிறோம் என்பதை போல் இருவரும் இளங்கோவை பார்க்க , " இங்க ஏன் வந்திருக்கோம் தானே யோசிக்கிறிங்க? " என்று கேட்க ஆமாம் என்பதை போல் இருவரும் தலையசைத்தனர்.

"இந்த ஹோட்டலுக்கு அடிக்கல் போட்டது உங்க மனைவி ஷெஹனாஸ் தான் சார் !" என்றவுடன் அதிர்ந்தனர் இருவரும்.

"என்ன ஸார் அதிர்ச்சியா இருக்கா ! " என்று கேட்க

"ஆமாம் இளங்கோ "என்றான் பாஸ்கர்.

"நானும் அவங்களை முதல் தடவை பார்த்தப்ப இப்படி தான் அதிர்ச்சி ஆனேன்! அவங்களை பற்றி இந்த ஹோட்டல் உரிமையாளர் சொல்லும் போது உங்களுக்கு புரியும் " என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றான், இளங்கோ.

"ஸார் வணக்கம் நான் இளங்கோ இவர் ஷெஹனாஸ் கணவன் " என்று சொன்னவன் தான் அந்த உரிமையாளர் வரதன் முகமெல்லாம் ஆயிரம் விளக்குகள் போல் எரியத் தொடங்கியது.

"என்ன தம்பி நீங்க ஒரு போன் பண்ணி இருந்தா நானே உங்களை வந்து பார்த்திருப்பேன்! பாப்பா எப்படி இருக்காள்? " என்று கேட்டு கொண்டே , " எப்பா சிவா மூனு தேநீர் எடுத்துட்டு வா " என்று சொன்னார் அவனும் அவய் சொன்னதை எடுத்து வர சென்றான்.

சித்தீக் மட்டும் பாஸ்கர் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. "சார் உங்களுக்கு எப்படி ஷெஹனாஸ்யை தெரியும்? " என்று வெளிப்படையாக கேட்டு விட்டான் பாஸ்கர்.

"அது ஒரு மூனு வருஷத்துக்கு முன்ன நானும் என் மனைவியும் உறவுகள் கைவிட்டாங்க ! அப்ப நாங்க என்ன பண்றதுன்னு தெரியாமல் நடு வீதியில் நின்னுட்டு இருந்தோம் ! எங்க போறதுன்னு தெரியாம ! அந்த புள்ளை அதோட சிநேகிதியை பார்க்க வந்துச்சு அங்க நடந்ததை பார்த்திருக்கு போல அப்ப தான் அந்த புள்ளை எங்ககிட்ட வந்து எனக்கு தெரிந்த இடத்தில வீடு இருக்கு அதுல தங்கி கொள்றிங்களா கேட்டுச்சு , நாங்க கொஞ்சம் பயந்தோம் அப்பறம் அந்த புள்ளை நல்ல மனசோட கேட்டதை புரிந்துகிட்டு சரின்னு ஒத்துகிட்டோம் ! அந்த புள்ளை எங்களை அழைச்சிட்டு அவளோட இன்னொரு சிநேகிதன் வீட்டுக்கு போச்சு! அந்த பையன் கிட்ட எங்களை பற்றி சொல்ல அவங்களும் வீட்டை முன்பணம் வாங்காமலே வீட்டை வாடகைக்கு விட்டாங்க ! அப்பறம் நாங்க அந்த புள்ளைக்கு நன்றி சொல்ல என்ன அக்கா நன்றி எல்லாம் சொல்லிட்டு மனிதனுக்கு மனிதன் இதை கூட பண்ணலன்னா என்ன அர்த்தம் சொலுங்க! ஹான் அப்புறம் நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க கேட்டாள் நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன். என் மனைவி இந்திரா தான் எங்களுக்கு சமைக்கிற வேலையை தவிர்த்து ஒன்னுமே தெரியாது சொன்னாள். அவள் யோசிக்காம ராகுல் கிட்ட சொல்லி தள்ளு வண்டியை ரெடி பண்ணி எங்களுக்கு காசுக்கும் வழி பண்ணுச்சு அந்த புள்ளை! அன்னிக்கு தள்ளு வண்டியில ஆரம்பிச்சது இப்ப இவ்வளவு பெரிய ஹோட்டலா வந்து நிக்குது! அதுக்கு மொத காரணம் அந்த புள்ளை தான்! இந்த கடை திறக்க நாங்க அழைச்சோம் ஆனா அவள் சூழ்நிலை வர முடியலை சொன்னதும் எங்களுக்கு கஷ்டமா இருந்துச்சு அப்ப தான் ராகுல் வந்து எங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னா அவள் செய்ற எந்தவொரு நற்காரியமும் மற்றவர்களுக்கு தெரிய கூடாது நினைப்பா அவள் வீட்டிலையும் சூழ்நிலை சரியில்லை தப்பா எடுத்துக்காதிங்க சொன்னான், நாங்களும் புரிந்து கொண்டோம் ! அந்த புள்ளை முஸ்லிம் என்றதால அவளை மாதிரியே ஒரு முஸ்லீம் தான் எங்க கடையை திறக்க வைக்கனும் தோனிச்சு அதான் இங்க பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசலில் இருக்கும் ஹஜ்ரத் அழைச்சு எங்க கடையை திறந்தோம். ஏன்னா அந்த இடத்தில் எந்தவொரு மத வேறுபாடு பார்க்காம உதவுன அந்த புள்ளையோட மனசு யாருக்கும் வராது அதனால தான் நான் ஹஜ்ரத் வர வச்சி எங்க கடையை திறந்தேன் ! இதுல எனக்கு எந்த தப்பும் தெரியலை. அந்த புள்ளை மாசத்துக்கு இரண்டு தடவை எங்க வீட்டுக்கு வந்து பேசிட்டு போய்டும். அந்த புள்ளை கல்யாணத்திற்கு வர முடியாம போய்டுச்சு ! சொன்னாங்க அந்த புள்ளையை ரெண்டாவது தாரமா போகுதுன்னு! அந்த புள்ளை என்ன முடிவெடுத்தாலும் சரியாக தான் இருக்கும் தெரியும் அதான்! மாப்பிள்ளை இங்க பார்த்துட்டேனே அப்பறம் என்ன?. தினந்தினம் அந்த புள்ளைக்கு மறக்காமல் அந்த கடவுள் கிட்ட வேண்டிப்போம் , அன்னிக்கு அந்த புள்ளை உதவி செய்யலனா இன்னிக்கு நாங்க இல்லை " என்று கண்ணீர் மல்க கூறி முடித்தார்.

அந்த ஒரு சம்பவம் அவர்கள் மனதை நெகிழ வைத்தது. யாராலும் இதை பண்ண முடியாதை ஒரு செயல் !

அவர்கள் பேசி விட்டு கிளம்பும் போது தாங்கள் குடித்த தேநீருக்காக பணத்தை நீட்ட வாங்க மறுத்து விட்டார் வரதன். பிறகு மூவரும் விடைபெற்று வந்தனர்.

"இந்த விஷயம் உங்க கல்யாணத்துக்கு முன்ன ஒரு வாரம் தான் எனக்கு தெரிய வந்துது ! அப்ப இந்த ஹோட்டல் உங்களோட பத்திரிகை பார்த்து அவர்கிட்ட விசாரிச்சதுல தெரிஞ்சுது.. இவரை மாதிரி இன்னும் பல பேர் வாழ்ந்துட்டு இருக்காங்க சார் ஷெஹனாஸ் ஒருத்தவங்கலால் " என்று கூறவும் சித்தீக் அலைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.

❤️ தொடரும் ❤️
 
Top Bottom