Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஈர்மத்தின் எச்சங்கள் - Comments

Arjuniya

New member
Vannangal Writer
Messages
4
Reaction score
3
Points
3
Thankachima semma da.. Starting nalla iruku daa yaaru da antha mashroom boys romba bad boys ah irupaanga pola.. Unmaiyave karpanai semma paappaa.. Mithran bayapulla pantrathellema parththa namma athithi and mithran ku nadula yetho track oodirukum pola.. Namma athithi sollurathum unmai tha pa manasuku pidichathai seium pothu award yethuku.. I like athithi.. Sari mudivil vantha villa pasanga yaaru adutha ud ku waiting vegama ud varanum illai endral thollai seithu ud vaanagapadum
 

அர்பிதா

Active member
Vannangal Writer
Messages
38
Reaction score
9
Points
33
Thankachima semma da.. Starting nalla iruku daa yaaru da antha mashroom boys romba bad boys ah irupaanga pola.. Unmaiyave karpanai semma paappaa.. Mithran bayapulla pantrathellema parththa namma athithi and mithran ku nadula yetho track oodirukum pola.. Namma athithi sollurathum unmai tha pa manasuku pidichathai seium pothu award yethuku.. I like athithi.. Sari mudivil vantha villa pasanga yaaru adutha ud ku waiting vegama ud varanum illai endral thollai seithu ud vaanagapadum
Haiyaaa...thank u na...jolly jolly
 

Ranjitha

New member
Messages
11
Reaction score
9
Points
3
அத்தியாயம் 1


ஆதவனின் துயில் சரியாய் கலையாமல்,தன் மெத்தையை பிரிய மனம் இல்லாமல், அந்த இரவு நேர இருளை போக்க, அரைகுறை வெளிச்சத்தை அந்த அடர்ந்த காட்டு பகுதிக்குள் பரவ செய்த விடியற்காலை பொழுது அது

இரவின் இருளில், சுதந்திரமாய் காட்டில் உலா வந்த பறவையும், குயிலும் தத்தம் இருப்பிடம் தேடி திரும்பி கொண்டு இருக்க,

எதற்காகவோ, யாரையோ தீவிரமாய் தன் கண் இரண்டையும் தீட்டி, அந்த இரவிலும் தன் காவல் பணியை செவ்வனே செய்து முடித்த அந்த பருந்துக்கு தெரியும், இத்தோடு தன் காவல் வேலை முடிய போகிறது என்று

இரவின் குளிர் காற்று இன்னும் முழுதாய் விலகாமல், அந்த குளுமையில் தங்களின் இணையை அழைத்தவாறே சில தவளைகள் அந்த பெருத்த நீர்படுகை அருகே இருக்கும் சிறு பாறைகளின் மீதும், அருகே கிடக்கும் புல்வெளியில் மீதும் அமர்ந்த படி, சத்தம் எழுப்பி தங்களின் துணையை அழைத்து கொண்டு இருந்த நேரம் அது

அதில் ஒரு தவளைக்கு மட்டும் இயற்கையின் மேல் எத்துணை ஆச்சர்யம், எளிதில் எட்டி விட முடியாத அளவிற்கு ஓங்கி வளர்ந்த மலையை, அலங்கரிக்கும் விதமாய் பூத்து குலுங்கும் வண்ண மலரையும், காய் கனியையும், அற்புத மூலிகையையும் கொண்ட மரங்கள் வளந்து இருக்க,

அவை அனைத்தையும் அடித்து செல்லும் விதமாய், யார் மேல் கொண்ட கோவத்தையோ, தன் வேகமாய் மாற்றிய படி, மலை மேல் இருந்து நிலத்திற்கு குதித்து கொண்டு இருந்தது அந்த அருவி.

அருவியில் சோகம் தெரியாமல், அது கொண்டு வந்த குளிர் நீரை தங்களின் வாழ்வின் ஆதாரமாய் மாற்றி கொண்ட மீனும், நத்தையையும் பார்க்கும் போது அழுவதா, வியப்பதா என்பதே புரிய வில்லை அந்த சிகப்பு தவளைக்கு

எங்கெங்கோ ஓடிய தன் நினைவுகளை, ஒன்று திரட்டி,

"இனியாவது துணையை அழைப்போம்" என்று அது முடுவெடுத்த அடுத்த நொடி தான் அவ்விடம் அரங்கேறியது, நெஞ்சை உலுக்கி, பயம் கொள்ள வைக்கும் அந்த சம்பவம்

ஒங்கிய மலையின் முனையில், யாருடைய கால் அடி சத்தம் கேட்க,

"இந்த நேரத்தில் யாரடா அது?" எண்ணம் தோன்றிய அந்த தவளை, தன் பார்வையை கூர்மையாக்கி, நிழல் உருவமாய் தெரியும் அவர்களை கவனித்தால் வண்ணம் இருந்தது

அந்த இருளில், ஒரு காலடி சத்தம் மாறி, பல கல்லடிகளின் சத்தம் கேட்க, என்னவோ என எண்ணிய அந்த தவளைக்கு இப்பொது தான் நடக்கவிருப்பது புரியவே செய்தது

ஒரு படையாய் அங்கு குவிந்த அந்த நிழல் உருவங்களை பார்க்கவே வியப்பாய் இருந்தது அந்த தவளைக்கு

உருவத்தில் குறைந்து, நிலத்தில் சுற்றும் பெரு வகை எறும்பு கூட்டம் போல் தான் இருந்தது அவர்களின் தோற்றம்

அந்த அதிசிய மஸ்ரூம் மனிதர்களை வியந்து பார்த்து கொண்டு இருந்த நேரம், அவர்களுக்கு நடுவே வந்தான் அவனின் தலைவன்

அவனும் கூட அவர்களை போல மஸ்ரூம் அளவில் தான் இருந்தான்.. ஆனால் அவன் அணிந்த கிரீடமும், உடையும், வெளிச்சம் புகா அந்த இருள் நேரத்திலும், அவன் தான் தலைவன் என்று தெளிவாய் காட்டியது

கோவமாய் காற்றில் தன் குச்சி கைகளை ஆட்டி எதையோ உத்தரவிட்டவன், நிலத்தில் கிடந்த எதையோ ஒன்றை, வன்ம பார்வை பார்த்தவனின் கண் அசைவிலேயே, அந்த மஸ்ரூம் மனிதர்கள் அனைவரும் தங்களுக்குள் விசித்திர ஓசை ஒன்றை எழுப்பி, மண்ணில் கிடந்த அதை, படு சிரமத்திற்கு பிறகு மேலே தூக்கினர்.

தூரத்தில் இருந்த தவளைக்கு, ஏதோ ஒரு ஆறடி இருக்கும் மர கட்டை போன்ற ஒன்றை அவர்கள் தூக்கி இருக்கிறார்கள் என்று நினைத்தும் கூட முடித்திராத நேரத்தில்

இருளில் மின்னும், வெள்ளை பற்களில் வன்மம் தலைதூக்க, நொடியில் அந்த மரக்கட்டை போன்ற உருவத்தை நெருங்கி, தன் கோரை நகங்களை வைத்து தன்னால் இயன்ற வரை பலம் போட்டு, எதையோ பிரிப்பது போல நிழல்கள் தெரிய, என்னவோ என்று பார்த்து கொண்டு இருந்த தவளைக்கு,

அவ்வழி பாயும் நதியில், சிவப்பு நிறம் கலந்து, ரத்தமே ஆராய் ஓட கண்டதும் தான், அது மரக்கட்டை இல்லை, மனிதனின் உடல் என்பதே புரிந்தது

கொஞ்சமும் இரக்கம் இன்றி, அலறும் அந்த மனிதனின் உடலை, நெஞ்சில் கைவைத்து இரண்டாய் பிரித்து, சிதறி அடிக்கும் ரத்தத்தால் தன்னை அபிஷேகித்தவன், துவங்கினான் தன் தேடுதல் வேட்டையை

தேடலில் முடிவில் ஏமாற்றமே அவனுக்கு பதிலாக, கோவத்தில் அவன் கிழித்து சதையும் பிண்டமுமாய் கிடந்த அந்த உடலை காலால் உதைவனின் சிறு பலத்திற்கே, அந்த நதியில் சென்று விழுந்தது அந்த உடல் பிண்டம்

அது நதியில் விழும் போது தான், அரைகுறை நிலவொளியும், அரைகுறை சூரிய கதிரில் தெரிந்த வெளிச்சத்தில் பார்க்க, அது மரக்கட்டை இல்லை, இறுதி நொடிகளை எண்ணி கொண்டு இருக்கும் ஒரு பெண்ணின் உடல் என்பது புரிந்தது அந்த தவளைக்கு

கிழித்தெறிய பட்ட அந்த உடல் பிண்டத்தின் கோர நிலையை பார்த்த அந்த தவளைக்கு, அது காம வெறியர்களின் ஆட்டம் இல்லை, அந்த மஸ்ரூம் மனிதர்களுக்கு அதை விட எதோ ஒன்ரின் தேடல் உள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.. ஆனால் அது இன்னதென்று தான் அதற்கும் புரியவே இல்லை


*****


சென்னை விமான நிலையம், காலை மணி, ஆறு

இப்போதே, வந்திறங்கிய சிங்கப்பூர் விமானத்தின் பயணிகள் ஒவ்வொருவராய் விமான நிலையம் விட்டு வெளியே வந்து கொண்டு இருந்த நேரம் அது.. அனைவரின் முகத்திலும் மண்ணை மிதித்த உற்சாகமும், தங்கள் குடும்பத்தை சந்திக்க போகும் மகிழ்ச்சியும் தென்பட, குதூகலிப்புடன் வந்து சேர்ந்த விடியலின் பொன்னாரம்பம் அது

"டேய், வருன் ஓடாதே.. இங்க வா.. நம்ப பேக் எல்லாம் எடுத்துட்டு அப்புறம் போகலாம்" இறங்கிய விமானத்தில் வந்த ஒரு குடும்பத்தின் சூட்டி குழந்தையை அதட்டிய வண்ணம் வந்தார் தாய் ஒருத்தி

"பாட்டி பாக்கணும் அம்மா... சீக்கிரம் வாங்க" ஒரு வருடம் கழித்து தன் சொந்தத்தை சந்திக்க போகும் உற்சாகத்தில், அவசர படுத்தி கொண்டு இருந்தான் அந்த சிறுவன்

"இருடா.. இதோ போய்டலாம்.. நீ அப்பா கூட போய் நில்லு... நான் பேக் எல்லாம் எடுத்துட்டு வரேன்" என்றவர், நொடியும் தாமதிக்காமல் தன்னுடைய பைகளை எடுத்து கொண்டு, உறவினர்களை சந்திக்கும் ஆர்வத்தில் வாயிலை நோக்கி நடந்தது அந்த குடும்பம்

மறுபுறம் பல நாள் கழித்து தங்கையின் திருமணம் நடத்த பணத்தையும், பல கனவையும் சுமந்து வரும் ஒரு அண்ணனின் நிமிர் நடையும்,

வறுமையில் வாடும் தன் குடும்பத்தை காக்க, நாடு தாண்டி உழைக்க சென்ற மகனின் உற்சாகமும்,

இளமை பருவத்தில், சுற்றுலா சென்று நாடு திரும்பும் கல்லூரி மாணவர்களின் குதூகலிப்பிற்கு இடையே அவன் ஒருவன் மட்டும்,

தன்னை சுற்றி நடக்கும் எதிலும் எந்த கவனமும் இல்லாமல், கண்ணில் உற்சாகம் இல்லாமல், மனம் கூட கடைமைக்கே என்று நாடு வந்து சேர்ந்து இருந்தான்

தாய்நாடு வந்திறங்கிய நிறைவும் இல்லை, உறவை சந்திக்க போகும் உற்சக்கமும் இல்லை அவனுக்கு.. எப்போதும் போல கைபேசியில் எதையோ தீவிரமாக பார்த்து கொண்டே நடந்து வந்து கொண்டு இருந்தவனுக்கு சுற்றத்தில் நடக்கும் எதுவுமே கவனத்தில் பதியவில்லை

சிங்கப்பூர் சென்ற கடந்த மூன்று ஆண்டுகளுமே, வேலை வேலை என்று இயந்திரமயமாகி கிடக்கும் அவனின் வாழ்க்கையில், இன்றும் கூட அதில் சிக்கிய துகளாய் தன்னையே தொலைத்த படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்

அவனின் அந்த கவனத்தை குலைக்கும் வித்தமாய் அலறிய கைபேசியை, சலிப்புடன் எடுத்தவன்

"சொல்லுங்க அம்மா.. இப்போ தான் பிலைட் லான்ட் ஆச்சு"

"சரி மித்ரன்... உனக்காக நாங்க எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம்.. உன் தாத்தா கூட வண்டி அனுப்பி விட சொல்லி சொல்லிக்கிட்டு இருக்காரு?" என்றார் மீனாட்சி, மூன்று வருடம் பிள்ளையை காண போகும் உற்சாகத்தில்

"என்னமா, நான் என்ன சின்ன குழந்தையா! எதுக்கு இவ்வளவு ஆரவாரம்" என்றவன் பேச்சில் மீண்டும் தென் பட்டது சலிப்பு

"என்னடா, இப்டி பேசுற.. நான் பெத்த ஒத்த புள்ள.. என் கிட்ட இன்னைக்கு வர போறான்.. இது கூட இல்லனா எப்படி?" என்றவர் குரலிலோ சற்றே ஒளிந்து இருந்தது ஏமாற்ற ரேகைகள்

"சரிம்மா.. போதும்.. நான் வீட்டுக்கு வந்த அப்புறம் மத்தத பேசிக்கலாம்.. இப்போ போன் வெக்குறேன்" என்றவனை தடுக்க நினைத்த மீனாட்சி,

"மறக்காம துரை மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்துடுடா.. இன்னைக்கு விருந்து நம்ப வீட்டுல தான் ஏற்பாடு பண்ணி இருக்கோம்.. நீ ஒரு எட்டு அங்க போய்ட்டு வந்துடு" என்றார் கொஞ்சம் கண்டிப்பு குரலில்

"அம்மா.. நான் எப்படி அங்க போறது.. அதுவும்... "

"நான் எதையும் கேக்க விரும்பல.. உனக்காக இல்லனாலும் உன்னோட தங்கச்சிக்காகவாச்சும் நீ போய்ட்டு வா" என்றவர் மறு பேச்சின்றி இணைப்பையும் துண்டித்தார் மீனாட்சி

"எப்போ பாரு மத்தவங்கள காமிச்சே என்னை ஏமாத்திடுறாங்க" வெறுத்து கொண்டவனுக்கு தெரியும், துறை இல்லம் செல்லாமல் தவிர்க்க முடியாது என்று

இருந்தும் கூட அவனின் இந்த தயகத்திற்கு காரணம், அங்கு அவள் இருப்பாள்.. அவளை எப்படி எதிர் கொள்வது என்பது மட்டுமே

"இத்தனை நாள் வெளிநாடுனு சொல்லி, ஊர் திருவிழா, வீட்டு விஷேஷம்ன்னு எதுலயும் கலந்துக்காம தப்பிச்சி, அவளையும் தவிர்த்துட்டோம்.. இனி அது முடியாது போல இருக்கே"

"ஆமாம் இப்போ அவ எப்படி இருப்பா? வளந்து இருப்பாளோ.. என்ன படிச்சி இருப்பா? என்ன பெருசா படிச்சி இருக்க போறா.. அந்த ஊர்ல இருக்க அந்த ஓட்ட காலேஜ்ல ஏதாச்சும் ஒரு டிகிரி வாங்கிகிட்டு, வீட்டு வேலை செஞ்சிகிட்டு இருப்பா" கேள்வியும் பதிலும் என்ன தனக்கு தானே பேசி கொண்டு இறந்தவனின் மனசாட்சி அவனை உறுத்த,

இது வரை எப்படியோ, இனி அது தன் தங்கை வாழ போகும் இல்லம் ஆச்சே, பேச்சு வார்த்தையை வளர்த்து தானே ஆகணும்" என்றவன் வேறு வழி இன்றி, காரை திருப்பினான் துறை இல்லம் நோக்கி


......

"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு"

பூஜை அறையின் பாடும் பாட்டு வீடு மொத்தம் பரவி கிடைக்க, அதை சத்தமாய் பாட விட்டு மனம் உருகி வேண்டி கொண்டு இருக்கும் மீராவின் வேண்டுதல் என்ன என்பதும் அந்த குடும்பம் அறிந்ததே

"கடவுளே எப்படியோ உன் அருளால, என்னோட பய்யனுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு, அதே மாதிரி என் மகளுக்கும் அவ மனம் விரும்புற ஒருத்தன காமிச்சிட்டா என்னோட பிறந்த பலனையே நான் அடைஞ்ச மாதிரி ஆகிடும்.. கை விட்டுடாத கந்தா" மனம் உருகி வேண்டி நிற்கும் தாயவளை, வாஞ்சையாய் பார்த்து நின்று கொண்டு இருந்தான் வினோத்

வேண்டுதல் முடித்து கண் திறந்தவள் எதிரே மன கோலத்தில் நிற்கும் தன் மகனை பார்த்த மாத்திரத்தில், மனம் கொண்ட மகிழ்வு, கண்ணில் நீராய் கரைந்தோட, ஆனந்தத்தில் திளைத்து நின்றார் மீரா

"என்ன மீரா இது.. பிள்ளைக்கு நல்ல காரியம் நடக்குற அப்போ இப்டி கண்ணை கசக்கிக்கிட்டு இருக்க.. கண்ணை துடை.. ஆக வேண்டியதை பாக்க வேணாமா?" என்றார் துரை, மீராவின் தோல் தொட்டு ஆதரவாய் தட்டிய படி

"வினோத்துக்கு கல்யாணம் நடக்க போகுது, ஆனாலும் உங்க ரொமான்ஸ் குறைய மாட்டேங்குதே சித்தப்பா"

"வாய குறை படுவா.. போ போய் உன் தங்கச்சி என்ன பன்றானு பாருங்க ரெண்டு பேரும்.. மகாராணி எழுந்தலா இல்ல இன்னும் உருண்டுகிட்டு இருக்காளான்னு பாருங்க" என்றார் மீரா

"தூங்கட்டும்மா.. பொறுமையா ரெடி ஆகி வரட்டும்.. என்ன அவசரம் இருக்கு.. நீங்க முன்னாடி போய் சடங்கு எல்லாம் பாருங்க.. விருந்து ஆரம்பிக்கும் போது அவ வரட்டும்" என்றான் வினோத்

"இப்டி செல்லத்தை குடுத்தே அவளை கெடுத்து வெச்சி இருக்கீங்க.. அவ இப்போவே என் பேச்சை கேக்குறது இல்லை.. என்னவோ பண்ணுங்க" என்றவர் சலித்து கொள்ள

"ஆமா மீரா, அவளுக்கு இதுவரை எதுவும் தெரியாது தானே.. அங்க போறதால ஏதும் பிரச்சனை வருமா? நீ எல்லாத்தையும் முருகன் வீட்ல சொல்லிட தானே?" என்றார் சுந்தர் கவலை தேயும் குரலில்

"அண்ணன் கிட்ட நா பேசலிங்க, மீனாட்சி அண்ணி கிட்ட தான் பேசுனேன்.. அவளுக்கு இனியும் எதுவும் தெரிய வேணம்னு சொன்னேன்.. அவுங்களும் சரின்னு சொன்னாங்க" என்றவரின் பேச்சை கேட்ட பின் தான் நிம்மதியானது அனைவருக்குமே

"அவளும் கூட சரியா விருந்து நேரத்துக்கு அங்க வரட்டும்மா.. முன்னாடியே வந்தா தேவை இல்லாத பேச்சுக்கள் தான் வரும்.. அப்புறம் அவ கிட்ட உண்மையை சொல்ல வேண்டி இருக்கும்" என்றான் ராகுல் எதையோ யோசித்த வண்ணம்

"ஆன அதை எப்படி செய்யுறது.. நேத்துல இருந்து அவ, வினோத் கூட போக போறேன்னு தானே சொல்லிக்கிட்டு இருக்கா. பின்ன எப்படி!!!" என்றார் முருகன்

"அத பத்தி நீங்க கவலை படாதீங்க.. நான் பாத்துக்குறேன்.. இன்னைக்கு எல்லாம் நல்ல படியா நடக்கணும்" என்றவருக்கு கவலை துளியும் குறைந்த பாடில்லை

ஒரு அளவிற்கு விருந்து செல்ல அணைத்து ஏற்பாடுகளையும் செய்த பின்னர்,

"என்ன இந்த பொண்ணு இன்னும் கிழ வரல.. அதிதி.. ஏய்ய்ய் அதிதி.. எழுந்தியா இல்லையா.. மணி ஆகுது பாரு" குரல் குடுத்த படி அதிதி அறையை அடைந்த மீராவிற்கோ, கோவம் தலைக்கேறியது என்று தான் கூற வேண்டும்

வாசல் முதல் அரை எங்கும் சிதறி கிடந்த காகிதம் துண்டுகள், கண்ட படி சிதறி இருந்த வண்ணங்களின் துளிகள், சுவற்றிலும் கூட தெரிந்த அதனின் சுவடுகள், என்று அறையையே அலங்கோல படுத்தி விட்டு,

அறையின் ஜன்னல் அருகே, பலகையில் பேப்பர் பொருத்தி எதையோ வரைந்து கொண்டு இருந்தாள் அந்த வீட்டின் குலமகள்

"அடியே, நீயெல்லாம் பொண்ணாடி.. ரூமை இப்படியா வெச்சிட்டு இருப்ப.. இது என்னடி இது, சுவரெல்லாம் இப்டி அசிங்கம் பண்ணி வெச்சிட்டு இருக்க" என்றார் கோவம் குறையாமல்

"அம்மா, நான் ஒரு பைண்டிங் ஒண்ணுத்தை வரைய ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்.. பட் என்னால அதை ஒழுங்கா வரைய முடியல.. அதான் இவ்வளவு வேஸ்ட் ஆயிடுச்சி" என்றாள் கவலையுடன்

"ஆமா இவ வரஞ்சி அப்டியே அவார்ட் வாங்க போறா பாரு.. நீ வரையுறேன்னு சொல்லி என் வீட்ட தான்டி நாசம் பண்ணிக்கிட்டு இருக்க" என்றவர் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணியையும் செய்து கொண்டு தான் இருந்தார்

"ஏன் அவார்ட் வாங்குனா தான் வரையணுமா? இல்லாட்டி வரைய கூடாதா!!!" என்றாள் அதிதி, அப்போதும் அடங்காமல்

"அடி வாங்க போற கழுத..அங்க வீடே விருந்துக்கு ரெடி ஆகி நிக்குது.. இவ என்னடானா இன்னும் எதையோ கிறுக்கிட்டு நின்னுகிட்டு இருக்கா"

"அம்மா.. கிறுக்குறேன்ன்னு சொல்லாத.. அது ஒரு ஆர்ட்.. உனக்கு எங்க அதெல்லாம் தெரிய போகுது.. பட்டிக்காடு" என்றாள் முகத்தை சுழித்த படி

"வந்தேன்னு வெய், வாய் மேலயே போடுவேன் பாத்துக்கோ.. திமிரு பிடிச்ச கழுதை " பேசியவர், பேச்சு வாக்கிலே அந்த அறையை கிட்ட தட்ட சுத்தம் செய்து இருந்தார்

"அடியே அடங்காபிடாரி, சீக்கிரம் ரெடி ஆகு.. நீ கோவிலுக்கு வேற போற வேலை இருக்கு"

"என்னாது கோவிலுக்கா..வாய்ப்பே இல்லை.. நான் அண்ணனுங்க கூட தான் வருவேன்.. நீயே கோவிலுக்கு பொய்க்கோமா" என்றாள் அப்போதும் கவனத்தை வரையும் ஓவியத்தில் வைத்த படி

"அது இல்லை அதிதி, உன் அண்ணிக்கு வாங்கி வெச்சி இருக்க புது புதுவையை நாத்தனாரா நீ தான் கோவிலுக்கு கொண்டு போய் பூஜை பண்ணி விருந்து இடத்துக்கு கொண்டு வரணும்.. அதான் முறை" என்றார் பொறுமையாய் விலக்கிய படி

"போம்மா.. நான் அண்ணன் கூட போகலாம்னு எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா? சரி பரவாயில்லை.. எந்த கோவில் போகணும்.. எப்போ போகணும்னு சொல்லுங்க" என்றாள் கிட்ட தட்ட சம்மதித்த படி

"முடிஞ்ச அளவு சீக்கிரமா? கிளம்பு.. நா கீழ தட்டு எல்லாம் ரெடியா வெக்குறேன்" என்றவர் விறுவிறுவென கீழே சென்று விட்டார்

அதட்டி உருட்டி எப்படியோ அதிதியை கோவிலுக்கு அனுப்பி வைத்த பின், நிம்மதி பெருமூச்சு கூட விட நேரமளிக்காமல், கார் ஒன்று வந்து வாசலில் நின்றது, இவர்களை பதற வைத்த வண்ணம்

யாரோ என்று யோசித்த வண்ணம், வாசலை நோக்கி அனைவரும் பார்வையை பதிக்க, வந்து இறங்கினான் மித்ரன்

"வினோ, என்னடா இந்த தம்பி வந்து இருக்கு.. ஏதும் பிரச்னைய என்ன.. எதாவது ஆச்சா?" பதறினார் மீரா

"எனக்கும் எதுவும் தெரியலமா.. நீ மொதல்ல பதறாம இரும்மா.. என்னனு கேப்போம்" அமைதியவனுக்கும் கூட அதே பதற்றம் இருக்க தான் செய்தது

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த சம்பவங்களும், பரிமாற பட்ட வார்த்தைகளும் கண் முன் காற்றாய் படர, விடு பட்ட கோவம் லேசாய் எட்டி பார்க்கவே செய்தது வினோவிற்கு

"வினோ, கண்ட்ரோல்.. இப்போ இவர் உன்னோட மச்சானாக போறாரு.. சோ பழசை எல்லாம் மறக்க முயற்சி பண்ணு" என்றான் ராகுல் வினாவிற்கு மட்டும் கேட்கும் படியாய்

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே வீட்டின் உள் வாசலை அடைந் மித்ரன்,

"வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க?" என்றான் கைகூப்பிய படி

"வா மித்ரா.. நல்லா இருக்கோம்.. என்ன விஷயம்.. திடீர்னு வந்து இருக்க" நேராய் கேட்டார் மீரா

பின்னே, இத்துணை வருடத்தில் ஒரு முறை கூட தன் வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காதவன், அதுவும் சில ஆண்டுகள் முன் நடந்த சலசலபில் எதையும் பேசாமல் மௌனம் காத்து நின்றவன், இன்று திடீரென வீட்டிற்கு வந்தால், தயவளின் உள்ளம் பதற தானே செய்யும்

"இன்னைக்கு தான் ஊருல இருந்து வந்தேன் ஆண்ட்டி.. அதான் போறவழியில உங்களை எல்லாம் பாத்துட்டு, மாப்பிளைக்கு இந்த கிபிட் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் தரை இறங்கிய பின்னர் வாங்கிய அந்த பரிசை காட்டிய படி

அவனின் அமைதியான முகமும், நேர்த்தியான பதிலுமே,

"இவன் வந்ததில் பிரச்னை எதுவும் இல்லை.. நல்லுறவை ஏற்படுத்தி கொள்ளவே வந்து இருக்கிறான்" என்பதை புரிந்ததும் தான் அவனை வீட்டிற்குள் விட்டார் சுந்தர்

அடுத்து அனைவரின் மனதில் தோன்றிய அடுத்த எண்ணம், ஸ்ருதி எங்கே என்பது தான்..

"நல்ல வேலை அவளை கோவிலுக்கு அனுப்பியாச்சு.. என்னைக்குமே இல்லாத மகராசன், இன்னைக்கு வீடு தேடி வருவான்னு யார் கண்டது" தனக்குள் பேசி கொண்டு இருந்த மீராவை,

"தம்பிக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வா மீரா" என்றவரின் பேச்சில் சமையல் நோக்கி ஓடினர் அவர்

வந்தவனிடம் சில பல நலம் விசாரணை அனைத்தும் நடத்தி விட்டு, இன்றைய விருந்தும், அடுத்து நடக்க இருக்கும் திருமணம் பற்றியும் பேச்சுகள் போய்க்கொண்டு இருந்த போதும் கூட,

சத்யாவின் மனம் மொத்தமும் அவளின் மேல் தான் இருந்தது.. கண்கள் அவளை தேடி அலைபாய்ந்திருக்க, கவனமே இல்லாமல் தான் அவ்விடம் பதில் சொல்லி கொண்டு இருந்தான் மித்ரன்

"எங்க அவளை காணோம்.. இன்னும் தூங்குறாலோ..இல்லை வெளிய எங்கயும் போய் இருப்பாளோ.. எப்படி கேக்குறது இவங்க கிட்ட" யோசித்தவனின் மனசாட்சி கோபமுற்று,

"அடேய்.. அவளை பாக்கவே கூடாது.. அவளை பாக்குறதை தவிர்க்கணும்னு தானே இங்க வரவே தயங்குன.... இப்போ என்னடானா.. அவளை தவிர உனக்கு வேற எதுலயுமே கவனம் போகலியே..வந்த வெளியை கவனிடா" மிரட்டவும் செய்தது

அதன் பின் பேச்சு ஏது.. வாங்கிய பரிசை வினோவிற்கு தந்தவன் மனமே இல்லாமல் கிளம்பினான் தன் வீடு நோக்கி

தாய் மண்ணை இவன் மிதித்த நேரம், இதற்காகவே காத்திருந்தது போல், அவனின் காலடிகளை நிலத்தோடு உணர்ந்தவர்களாய், அவனை தேடி அடியெடுத்தனர், பல காலமாய் இந்நாளிற்காகவே காத்திருந்த வஞ்சக காரர்கள்

மறுபுறம், அதிதியோ, இனி நேர இருக்கும் நிகழ்வுகள் புரியாதவளாய், வெகுளியாய் சுற்றி வர, அதற்குள் ஊர் எல்லையில் காலெடுத்து வைத்திருந்தான் அவன், இதுவரை யாரும் காண அழிவை இனி உருவாக்கும் எண்ணத்தோடு




உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் கூறவும்


https://www.sahaptham.com/community/threads/ஈர்மத்தின்-எச்சங்கள்-comments.386/
மிகவும் அருமையாக இருக்கிறது முதல் அத்தியாயம். முடிந்த அளவுக்கு சீக்கிரமா ud கொடுங்க மா.❤
 

அர்பிதா

Active member
Vannangal Writer
Messages
38
Reaction score
9
Points
33
மிகவும் அருமையாக இருக்கிறது முதல் அத்தியாயம். முடிந்த அளவுக்கு சீக்கிரமா ud கொடுங்க மா.❤
Varathuku irandu ud kandipa kudukure sis
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice Starting ma Congratulations💐💐💐💐
ஆமாம் எத்தனை வார்த்தைகள் போட்டிருப்ப

குட்டி யூடி
 

அர்பிதா

Active member
Vannangal Writer
Messages
38
Reaction score
9
Points
33
very nice Starting ma Congratulations💐💐💐💐
ஆமாம் எத்தனை வார்த்தைகள் போட்டிருப்ப

குட்டி யூடி
Wrds count terila ka..na note panala
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
சுவாரஸ்யமாக போகுது.மித்ரன் அதிதியை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டான் சூப்பர்.அதிதி மஷ்ரூம் மனுசங்கள் தேடிவாரங்களா?.மித்ரனை யார் தேடி வாரங்க
 

அர்பிதா

Active member
Vannangal Writer
Messages
38
Reaction score
9
Points
33
சுவாரஸ்யமாக போகுது.மித்ரன் அதிதியை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டான் சூப்பர்.அதிதி மஷ்ரூம் மனுசங்கள் தேடிவாரங்களா?.மித்ரனை யார் தேடி வாரங்க
நன்றி டியர்.. 😍🤩🥰
 
Top Bottom