Uma Balaji
New member
- Messages
- 1
- Reaction score
- 1
- Points
- 1
ஸ்ரீலதா
"வண்ணங்கள் ஷார்ட் ஸ்டோரி கான்டஸ்ட்"
*************************
"உன் கண்ணில் நீர் வழிந்தால்
இது ஒரு அழகான க்யூட் லவ் ப்ரொபோஸ்சல்
கதாநாயகன்**ஸ்ரீனிவாசன்
கதாநாயகி** ஆருத்ரா
மாலை 6 மணி
உன்கிட்ட எத்தன வாட்டி சொல்லி இருக்கேன், என் பின்னாடி வராதே என்று ஏன் திரும்பத் திரும்ப என் பின்னாடி வந்துகிட்டு இருக்கே... என கோபமாய் தன் எதிரே இருந்த அவனை பார்த்து ருத்ரா கத்த
உன்னை காதலிச்சிட்டு அப்படியே விட்டுட்டு போக முடியாதே ஆரா.
" ருத்ரா , தன் நெற்றியில் விழுந்த முடியை பின்னுக்குத் தள்ளியபடி அவனை கோபமாய் முறைக்க .
மாசுமருவற்ற அழகான முகம் அவளுக்கு. அழகான பெரிய கண்கள் உயரம் கொஞ்சம் அதிகம்தான்..... அவள் எதிரே நின்ற அந்த இளைஞனும் உயரமாக தான் இருந்தான் நெடுநெடு என்று பார்க்க நம்ப ரித்திக் ரோஷன் போல்.
"இதோ பாருங்க மிஸ்டர்..?
சொல்லுங்க "ஆரா, என உரிமையோடு அவன் அவளை அழைக்க ??
"டோன்ட் கால் மீ ஆரா ? கால் மீ ஆருத்ரா...... என சினத்தோடு இவள் சொல்ல.
என் ஸ்வீட் ஏஞ்சலை நான் எப்படி ஆருத்ரானு கூப்பிடுவேன்.... நீ எப்பவுமே என்னுடைய ஆரா தான்.
இந்த லைட் பேபி பிங்க் சுடிதாரில் நீ எப்படி இருக்க தெரியுமா.....??
என் சாலையோரம் ஒரு தேவதை..... அவள் பக்கத்தில் காதல் கொண்டு நான் !!!கவிதை கொட்டுது அருவி மாதிரி.
மிஸ்டர்.....
"ஐ அம் ஸ்ரீனிவாசன் சுருக்கமாக ஸ்ரீ கூப்பிடலாம் .
இந்தப் பனி படர்ந்த மார்கழி மாசத்தில் இவ்வளவு கோபம் வேண்டாமே.
"என்ன தான் ப்ராப்ளம் மிஸ்டர் உங்களுக்கு....?
நான் எங்க போனாலும் ஒரு மாசமா....? என் பின்னாடியே வந்துகிட்டு இருக்கீங்க.
ரொம்ப சினிமா பார்ப்பீங்களோ? ரோடு சைடு ரோமியோவா...? நின்னு நிதானமா உங்க புலம்பலை எல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை......?
ஏன் "ஆரா, இப்படி மிளகா பட்டாசு மாதிரி கோவிச்சுக்கறீங்க??? இந்த சுட்டும் சுடர்விழி..... அநியாயத்துக்கு என்னுள் விழுந்து....
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே......
இளையராஜா பாட்டு இப்படி சாரல் மழை...
பக்கத்தில் என் ஏஞ்சல்...
"ஆருத்ரா , தன் அழகிய கண்களால் அவனை கோபத்தோடு முறைக்க....? அப்போ என்கிட்ட செருப்படி வாங்காம போக மாட்டீங்க...??
ஏன் இவ்வளவு கோபம்....?
ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு டயர்டா போயிட்டு இருக்கறவகிட்ட... காதல் கத்திரிக்காய்னு டயலாக் பேசிட்டு இருக்கீங்க.....??
என் மனசுல இருக்கற தை உங்க கிட்ட சொல்லனும் ஆரா அதான் பாருங்க என் பைக்கை கூட விட்டுட்டு உங்களோட நடந்து வரேன்.
இந்தப் பயணம் ரொம்ப சுகமா இருக்கு.
அவன் ப்ளூ கலர் செக்குடு் ஃபுல் ஹாண்ட் ஷேட், வித் பிளாக் ஜீன்ஸ் பேண்ட்...
என பார்க்க ராயல் ஆகத்தான் இருந்தான்.
கொஞ்சம் என்ன பத்தி சின்னதா ஒரு இன்ட்ரோ கொடுத்திடுறேங்க....!!"
"பேரு ஸ்ரீனிவாசன் சாப்ட்வேர் இன்ஜினியர் மாசம் முப்பதாயிரம் சம்பளம். ஒரு அம்மா, ஒரு தங்கச்சி ஸ்மால் ஃபேமிலி... அப்புறம் நீங்க.....!!
என்ன விளையாடுறீங்களா...?
காதல் படம் நிறைய பார்ப்பீர்களோ ?? படம் பார்த்து பார்த்து ரொம்ப கெட்டுப் போய் இருக்கீங்க.....? சினிமால தான் காதல் எல்லாம் இருக்கும் நிஜத்தில் ஒரு புடலங்காயும் இருக்காது.
ஏங்க தப்பு தப்பா பேசுறீங்க.... அந்த பீல் உள்ளுக்குள் இருந்து வரணும்.
ஸ்ரீ !!!
நீங்க என் பேரை சுருக்கி செல்லமாக கூப்பிடும் போது ரொம்ப அழகா இருக்கு அப்படியே வானத்தில் பறக்குற மாதிரி.
ஸ்ரீனிவாசன் ஓல்ட் வர்ஷன் சோ கூப்பிட முடியாது.... நீங்களா தேவையில்லாத கற்பனை எல்லாம் பண்ணிக்காதீங்க....?
ஓகே.... என்ன பத்தி என்ன தெரியும் உங்களுக்கு ?? ஒரு மாசமா பின்னாடியே வறீங்க இப்ப ஒரு வாரமா தான் என்கிட்ட பேசுறீங்க.. இதுக்குள்ள என்ன பத்தி என்ன புரிஞ்சுகிட்டீங்க..... அதுக்குள்ள காதலுனு வந்து நிக்கறீங்க....??
" காதல் பூ " பூக்க ஒரு நொடி போதுங்க??
எப்ப என் மனசுக்குள்ள நீங்க வந்தீங்கன்னு தெரியல ஆனா முழுசா வந்துட்டீங்க.....??
நல்லா பேசுறீங்க ஆனா இதுக்கெல்லாம் மயங்குறவ நான் கிடையாது .
ஓஓ !!ஹோ !!!! வேற ஏதாவது ப்ராப்ளம் வரும்னு யோசிக்கறீங்களா.....?
நான் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன் தான்... பட் நான் அப்படி கிடையாது.
ஆரா அவனை ஏற இறங்க பார்த்தாள்.
கொஞ்சம் முற்போக்குவாதி.
எனக்கு மனுஷனும் மனசுதான் முக்கியம்.
இருக்கும் வரைக்கும் மனுஷன் இறந்திட்டா பிணம்...... "இடைப்பட்ட என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதா வாழனும்...!!!
ஸ்கூல், காலேஜில்
எல்லாம் பேச்சுப்போட்டி கவிதை போட்டி அது இதுனு நிறைய கப்பு வாங்கி இருக்கீங்க போல... ...?? நல்லா அடிச்சி விடறீங்க.
நீங்க வேற நான் ரொம்ப கூச்ச சுபாவம்
உள்ளவங்க உங்ககிட்ட என்னமோ தைரியமா வந்து பேசிகிட்டு இருக்கேன். எனக்கே ஆச்சரியம் தான்...!! என் இதயத்தில் உங்க பேரு எழுதிட்டேன்.
"உனக்கு உண்மையிலேயே கிறுக்கு தான் புடிச்சிருக்கு....?
ஆமாம் "ஆரா பித்துபுடிச்சிருக்கு"
இதோ பாரு ஸ்ரீ..... ஒரு விஷயத்தை ரொம்ப ஆசைப்பட்டு அது கிடைக்காம போச்சுன்னா ரொம்ப கஷ்டம்......
எங்கோ ஒரு மூலையில் என் மேல உங்களுக்கு கொஞ்சம் அக்கறை இருக்கு. என்ன பத்தி யோசிச்சு பேசுறீங்களே...? அதை சொன்னேன்.
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேனு தாடி வளர்த்து அலைய போறீங்க ? அதை சொன்னேன்.
அவன் வெட்கப்பட்டுக்கொண்டு நெளிய.
ஆரா , அவனை வினோதமாக பார்த்தாள்.
"அதுக்குள்ள உங்க ஏரியா வந்துடுச்சா ?? இனிமே நாளைக்கு தான் பார்க்கணும். டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துடுச்சு...போன் நம்பர், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஐடி எதுவும் கொடுக்க மாட்டறீங்க ..?? இந்த திமிரும் அழகும் ரொம்ப கொல்லுது என்னை என ஏக்கத்தோட அவளை பார்த்தபடி அவன் நிற்க.
ஆருத்ரா வீட்டுக்கு வந்ததும்.
அவளுடைய அம்மா பங்கஜம் இன்னிக்கு வேலை அதிகமா..அரா..? எப்பவும் போலத்தான்
.....ம் மா என்று, இரவு உடைக்கு மாறி வெளியே வந்தாள்.
எத்தனை முறை சொல்லி இருக்கேன். நான் வரத்துக்கு லேட் ஆனா நீங்க நேரத்தோடு சாப்பிடுங்க....னு "கேக்கவே மாட்டேங்கறீங்க...?
உன் கூட சாப்பிட்டா தாண்டா ஒரு வாயாவது உள்ள போகுது..... நெஞ்சுக்குள் ஒரு வலி அவளுக்குள் மறைத் தவளாய் , ஆரா தட்டில் தன் தாய்க்கு ஊட்டி விட்டபடியே தானும் உண்டால். தன் அம்மா போட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து அவர்கள் போட்ட பின்பு கட்டிலில் வந்து விழுந்தாள். எப்போதும் போல்தன் தாயை அணைத்தபடி படுத்துக் கொண்டாள். தூக்கம் மட்டும்.... தூரப் போனது.
இன்றா நேற்றா வருஷங்கள் ஆச்சு... தன் பக்கத்தில் தன்தாய்... தனக்கு தெரியக்கூடாது என சேர்த்து வைத்திருக்கின்ற கண்ணீரை பார்க்கும்போது அவர்கள் முன் அழக்கூடாது என்று வைராக்கியமாய் இருந்தாலும்..... காயம்பட்ட இதயத்தின் வலி வேதனை....????
தன்
மகளின் தலையை கோதியவாறு பங்கஜம் தூக்கம் வராமல் படுத்திருக்க..... அந்த வீட்டில் துக்கம் மட்டுமே வாசம் செய்து கொண்டிருந்தது.
மறுநாள் காலை ஆபிசுக்கு கிளம்பியடியே "அரா..... தன்அம்மாவிடம்.... டேபிள் மேல் மாத்திரை எடுத்து வச்சிருக்கேன் வேலா வேலைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க.....?? வீட்டு வாடகைக்கும் , கரண்ட் பில்லுக்கும் பணம் வச்சிருக்கேன்.. சுதா வந்தா கொடுத்திடுங்க அவ கட்டிடு வா.
சரி நான்அப்போ கிளம்பட்டுமா....??
உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ஆரா ஒரு பையன் உன் பின்னாடியே சுத்தறானாமே ஒரு மாசமா நிரஞ்சனா சொன்னா.
இவளுக்கு எதுக்கு
இந்த வேண்டாத வேலை.
ஒரு பொண்ணு .... னு இருந்தா நாலு பொறுக்கி பசங்க பின்னாடி சுத்த தான் செய்வாங்க.... அதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டா ஒன்னும் வேலைக்கு ஆகாது.
அதுக்கில்லேடா... அவன் உன்னை விரும்பரதா...??
அவள் தன் அம்மாவின் அருகில் வந்து அவர்கள் தோளைத் தொட்டு இதோ பாருங்கம்மா..
"எந்த ராஜகுமாரனும் குதிரை மேல வரப்போவதில்லை...!!?? உங்க பொண்ணுக்கு அப்படி ஒரு மாப்பிள்ளை வருவானு கனவு காணாதீங்க ? அப்படியே வந்தாலும்.......
ரொக்கமாகவும் சொத்தாகவும் நிறைய வரதட்சனை கேட்பான் ..? பிகாஸ் ஆஃப் மை கண்டிஷன்....??
இங்கே கொட்டி கிடக்குதா சொல்லுங்க...?
என் அழகி என தன் அம்மாவின் மூக்கை பிடித்து...... அவர்களை தாஜா செய்து விட்டு ஆபீஸ் கிளம்பினாள்.
ஆபீஸ் வந்தபிறகும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.. காரணம் அந்த ஸ்ரீ.....?? தேவையில்லாமல் அம்மாவின் மனசில் ஒரு ஆசையை விதைத்து இருக்கிறான். இந்த நிரஞ்சனாவுக்கு அறிவே இல்லை இதை போய் அம்மாவிடமா சொல்லுவாள்.
மாலை வருவான் அல்லவா
இனி தன் பக்கமே தலை வைத்துப் படுக்காத அளவுக்கு தெறிச்சிஓட வைக்கிறேன்....?? வழக்கமான வேலை தான் ஆனால் இன்று ஒரு சோர்வு அவளுக்குள்.
மாலை
வழக்கம்போல் தன் பஸ் ஸ்டாப் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி ஆரா நடக்க நுனி மூக்கு வேர்த்து இருக்கும் போல... சற்று நேரத்திலெல்லாம் அந்த ஸ்ரீ , தன் முன் ஆஜரானான் .
வாடா வா.....
இனி
நீ என் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டே.... அவள் ஒரு புன்னகையை முகத்தில் ஏந்தி அவனைபார்க்க......
ஸ்ரீ, அதிசயமாக ஆராவை பார்த்தான். "எனக்காகவா வெயிட் பண்றீங்க ???? அவன் சந்தோஷமாய் கேட்க ?
ஆரா.... ஹோ ! அதுவா "ஸ்ரீ , பாதி உண்மை பாதி பொய்.. என்றவலாய் அவனை நோக்க அவன் தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி .. அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவாரே நடந்தான். அவள் அவன் புறம் ஒரு கார்டை நீட்ட....." லவ் லெட்டரோ என வாங்கியவன்..
"வாட் இஸ் திஸ் ஆரா?
நீ முதல்ல இந்த அட்ரசுக்கு போ என்ன பத்தி நல்லா விசாரிக்கோ இப்போ கிறுக்குத் தனமா காதல் டயலாக் பேசிகிட்டு இருக்கே
அங்க போயிட்டு வந்தது க்கு அப்புறம் என்னை நீ திரும்பி கூட பாக்க மாட்டே ...
இந்தா புடிங்க என அவள் கொடுத்ததை அவளிடம் நீட்டினான்.....
திரிசங்கு மாறி அந்தரத்தில் பறக்கறீ ங்க....?? இப்போ என்ன சார் உங்களுக்கு பிரச்சினை.....??
நான் உங்கள விரும்புறேன் அதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க.... நான் நீங்ககொடுத்த அட்ரஸ்க்கு போக வேண்டிய அவசியமில்லை..... "ஐ நோ எவரிதிங்...??
லாஸ்ட் மந்த்..... கௌரி மஹால்..... எனக்குத் தெரியும் போதுமா என அவன் முடித்தான்.
அதுவரை... அவளுள் ஒட்டி கொண்டிருந்த புன்னகை.. இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. ஆராவின் முகம் இருகியது.... அன்று நடந்த காட்சி ஒவ்வொன்றாய் அவள் மனக்கண் முன் வர ஆரம்பித்தது
சிவப்பு நிற பட்டுப்புடவையில் ஆருத்ரா அழகாய் ஜொலித்தாள்..... நீண்ட கூந்தலை அழகாய் பின்னி பூச்சூடி இருந்தாள்.மீன் போன்ற கண்களுக்கு மை தீ ட்டியிருந்தாள். மொத்தத்தில்
கல்யாண அலங்காரத்தில் மணப்பெண்ணாய் அழகாய் ஜொலித்தாள் ஆருத்ரா.
பங்கஜம் தன் மகளின் அருகில் வந்து தன் மகளை உச்சி முகர்ந்தாள்.
மணக்கோலத்தில் தன் பெண்ணை கண்ட பங்கஜத்துக்கு கண்ணோரம் நீர் கசிந்தது.ஆருத்ரா தன் அம்மாவின் மனநிலை உணர்ந்து அவர்களை மெல்ல அன்போடு கட்டிக்கொண்டு அவர்கள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவள் கூட இருந்த தோழி நிரஞ்சனா
என்னடி " ஆரா, இன்னைக்கு முதல் இரவில் உன் அத்தானுக்கு கொடுக்கவேண்டிய முத்தத்தை உன் அம்மாவுக்கு கொடுத்திட்ட என கிண்டல் செய்ய.. தன் தோழியை முறைத்த வாரே..... இப்போ முத்தம் அம்மாவுக்கு கொடுத்தா..... உங்க மாப்பிள்ளை கோச்சி பாரோ...?? என கேலியாய் சொல்ல...
நேரமாச்சு பொண்ண கூட்டிட்டு வாங்க என ஐயர் கூப்பிட அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு மேடைக்கு வந்தாள் ஆருத்ரா.
ஆறடி உயரத்தோடு மாப்பிள்ளைக்குறிய மிடுக்கோடு மணமேடையில் அமர்ந்திருந்தான் அகிலேஷ் . அவன் பக்கத்தில் கண்ணைக்கவரும் எழில்ஓவியமாய்,
ஆருத்ரா. சபையை வணங்கிவிட்டு அமர்ந்தாள்.
அகிலேஷ், ருத்ராவை விழுங்கி விடுவது போல் பார்த்தான்.
ருத்ராவோ முகமெல்லாம் வெட்கத்தோடு புதுப்பெண்ணாய் அவன் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாள்.
இன்னும் சிறிது நேரத்தில் அவன் கையால் தாலி வாங்கிக் கொள்ளப் போகும் கனவுகளோடு.
ஐயர் மந்திரம்
சொல்லி கொண்டிருந்தார்.
இன்னும் சில மணி துளிகளில் அந்த தாலி அவள் கழுத்தில் மின்ன போகிறது.
மங்கள சுப ஓசை கேட்க வேண்டிய அந்த நேரத்தில்.
அமங்களமாய்
"ஏய் அகிலேஷ் மேடையை விட்டு எழுந்து வாடா?
என்று ஒரு சிம்மக்குரல். அது வேறு யாருமல்ல அகிலேஷுன் அப்பா மூர்த்தி உடையது.
வந்திருந்த உறவுக்கார்கள் எல்லாம்..... என்ன நடக்கிறது என்று புரியாமல் விழிக்க.
பங்கஜம் அவர் அருகில் வந்து.... "என்ன சம்பந்தி என்ன ஆச்சு ஏன் திடீர்னு கல்யாணத்தை நிறுத்த சொல்றீங்க....??? . என பதட்டமாய் கேட்க.
உங்களுக்கு எதுவுமே தெரியாது அடேங்கப்பா என்ன உலக மகா நடிப்பு.
ஏன்மா.... நான் சொன்ன எல்லாத்தையும் ஒழுங்கா பண்ணிண ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுட்டியே .... என்னன்னு பாக்கறியா ? உன் பொண்ண தான் சொன்னேன்.
மூர்த்தியின் மனைவி அகிலேஷின் அம்மா ஒண்ணும் புரியாமல் மேடையிலிருந்து இறங்கி வந்து..... தன் கணவரிடம் என்ன ஏது என்று விசாரிக்க ? அவர்கள் காதில் ஏதோ அவர் சொல்ல....
அதைக்கேட்டு
அந்த பொம்பளை ஏதோ சாமி தனக்குள் வந்ததுபோல் ஆடத் தொடங்கினாள் ."சீ மானங்கெட்ட குடும்பம் கொஞ்ச நேரம் தாமதமாய் இது தெரிந்திருந்தாலும்
இந்த விடியா மூஞ்சியை என் பையன் தலையில் நானே கட்டி வச்சி இருப்பேனே...?
தன் அப்பா சொன்ன ஒரே காரணத்திற்காக என்ன ஏது என்று கேட்காமல் மணமேடையை விட்டு எழுந்த அகிலேஷை கோபத்தோடு முறைத்துப் பார்த்தாள்.... ஆரா.
என்ன ஆச்சா..... என்று கேட்ட பங்கஜத்தினை.
" நீ எல்லாம் ஒரு பொம்பள ?? ஒரு கெட்டுப்போன பொண்ணை என் பையன் தலையில கட்டி வைக்கணும் நினைச்சியா ?? மூச்சுக்கு முன்னூறு தடவை சம்பந்தி சம்பந்தி்னு தேனொழுக பேசினதெல்லாம் இதுக்குத்தானா......????
இப்பதான் எங்க உறவுக்காரர் உங்க விஷயத்தை புட்டு புட்டு வைத்தார்..... "திருச்சியை விட்டுட்டு எதுக்கு சென்னைக்கு ஓடி வந்தீங்க.....?? . இப்படி வாட்டசாட்டமா ஒரு பையனை வளைச்சி போடவா ?? பங்கஜம் கண்ணீர் விட்டபடி அவர்கள் முன்னே நிற்க.
அதைப் பொறுக்க முடியாதவளாய் மேடையை விட்டு எழுந்து ருத்ரா அவர்கள் முன் வந்து கோபத்துடன் நின்றாள்.
"என்னடி பெரிய பத்தினி ஆட்டம் இங்கே வந்து நின்னு முறைக்கிற...... உன்சங்கதி எல்லாம் தெரிஞ்சிடுச்சி எங்களுக்கு...... "உனக்கு கல்யாணக் கனவெல்லாம் வரவே கூடாது.....????
பங்கஜம் தன் தலையில் அடித்துக்கொண்டு அழ.......
திருமணத்திற்கு வந்திருந்த பெரிய மனிதர்களில் சிலர்
"என்னமா இப்படி திடுதிப்புன்னு கல்யாணத்தை நிறுத்தினா என்ன அர்த்தம் .....? பொண்ணு வீட்ல முன்னப்பின்ன நீங்க கேட்டதை செய்யாம இருக்கலாம் அதுக்காக இப்படியா கல்யாணத்தை நிறுத்துவீங்க.......????
" வாயா நாட்டாமை....
நியாயத்தை நீயே வந்து கேளு.....??
ஆத்தாலும் பொண்ணும் திருச்சியை விட்டு ஓடி வந்து இருக்காளுங்க...... இதோ நிற்கிறாளே இந்த அழகி.... இரண்டு வருஷத்துக்கு முன்னாடி..... இவளை யாரோ ஒரு ரவுடி பையன் தூக்கிட்டு போயி... சிதைத்துக் கொண்டு வந்து போட்டு இருக்கான். போலீஸ் கோர்ட்னு கேசாகி..... "இவள் கிட்ட குத்தமா அவன்கிட்ட குத்தமானு நமக்கென்ன தெரியும்.....?? எல்லோரும் தன்னை ஒரு புழுவைப் போல அசிங்கமாக பார்க்க.....? தன் உதட்டை அழுந்த கடித்தபடி காட்சிப்பொருளாக
நின்றாள் ருத்ரா.
கூட்டத்தில் இருந்த ஒரு நல்ல மனிதர் நீயே சொல்லற எவனோ ஒரு காலிப் பையன் தூக்கிட்டு போனானு ஏதோ நடக்கக் கூடாதது
நடந்து போச்சு அதை விட்டுத் தள்ளுமா பேசாம உன் பையனுக்கு இவளை கட்டிக்கோ......
வாயா வடுகப்பட்டி...... அவ்வளவு இரக்ககுணம் உள்ளவனா இருந்தா நீ உன் பையனுக்கு இவளை கட்டி வை.
தன்னை ஓரு வேடிக்கை பொருளாக்கி இவர்கள் பேச......."கூட்டத்தைப் பார்த்து நிறுத்துங்கள் என கோபமாக கத்தினாள்.?
ஏன்மா நீயும் ஒரு பெண் தானே....... விஷயம் தெரிஞ்ச உடனே நீ என்ன பண்ணி இருக்கணும்.... காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை நிறுத்திட்டு போயிட்டே இருந்திருக்கணும்..... அதை விட்டுட்டு கூட்டத்தைக் கூட்டி வைத்து என்னை அசிங்கப்படுத்தறி யோ...?
வாடி விடியா மூஞ்சி.....?? கமுக்கமா நடத்ததை மறைச்சி என் பையனை கட்டிக்க நினைச்சவ தாண்டி நீ..... ஏதோ நான் கும்பிட்ட சாமி எனக்கு உன் கள்ளத் தனத்தை காட்டிக்கொடுத்திடுச்சு.
"நிறுத்துங்க நீங்க எல்லாம் ஒரு பெரிய மனுஷியா.?? நான் என்னமோ தப்பு பண்ண மாதிரி என்னை நிக்க வச்சு கேள்வி கேட்க நீங்க யாரு...?? பண்றதெல்லாம் செஞ்சுட்டு.... அரசியல் பலத்தாலும் பண பலத்தாலும்...... எதுவுமே நடக்கலைனு கோர்ட்டில் நிரூபித்த அவன்தான் வெட்கப்படனும் ..... நான்
ஏன் வெட்கப்படனும் உங்க முன்னாடி நின்னு பேச.!!!
உங்ககிட்ட மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது என் உடம்பில் பட்டக் கறை அதை அன்னைக்கே நான் தூக்கி தூர போட்டுட்டேன்.
என்னை தூக்கிட்டு போய் கெடுத்தவன் கூட என்னை இருட்டுல வச்சித்தான் தொட்டான்.... பத்திரிகைக்காரங்க இந்த மீடியா எல்லாம் என்னை தினம் தினம் வெளிச்சத்தில் தொட்டு கூறு போட்டுட்டாங்க....???
நான் நீங்க சொன்ன மாதிரி பயந்து எல்லாம் ஓடி வரல..... எங்க அம்மாவின் கண்ணீரை துடைக்க தான் ஓடி வந்தேன்.
அவர்களுக்காகத்தான் நான் இந்த கல்யாணத்தை ஒத்துக்கிட்டேன் மத்தபடி
இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை . நீங்களே நினைச்சாலும் இந்த கல்யாணம் இனி நடக்காது.
என்னடா இன்னும் பத்து நிமிஷத்தில் தனக்கு மனைவியாக போறாளே அவளை இப்படி எல்லாரும நிற்க வைத்து கேள்வி கேட்கிறாங்களேனு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜடம் மாதிரி நிற்கிறானே உன் புள்ள... அவனக் கட்டிக்கிட்டு....... அவனுக்கு மனைவியாக வாழறதைவிட எங்க அம்மாவுக்கு மகளாகவே வாழ்ந்துட்டு போறேன்.
தன் அம்மாவை அந்த இடத்திலிருந்து கூட்டிக் கொண்டு வேகமாக புயலென கடந்தால் ருத்ரா.
கல்யாணம் நின்று மூன்று மாதம் ஆகிவிட்டது
அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் வந்து இருக்கீங்களா....?? எனஆக்ரோஷமாய் கத்தினாள் ருத்ரா
ஆமாம்... என்பதுபோல் ஸ்ரீ தலையாட்ட
"அப்போ என்ன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு......??? ஆராவுக்கு அங்கே நிற்கவே பிடிக்கவில்லை... அவள் கிளம்ப போக.... அவள் எதிரே வந்து நின்றான் ஸ்ரீ..
லுக் ஆரா.. நான் சொல்றதை ஒரு 15 மினிட்ஸ் கேட்டுட்டு போயிடுங்க..
என்ன சொல்லப்போறீங்க நான் எதையும் கேட்கக் கூடிய மனநிலையில் இல்லை இப்போ....
உங்க நிலைமை புரியுது..
எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சி இருக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்.... இதுக்கு உங்க பதில் என்ன.....??
ஃபர்ஸ்ட் டைம் நான் உங்களை அந்த கல்யாண மண்டபத்தில் தான் பார்த்தேன்..
அன்னைக்கு கல்யாண மண்டபத்திலேயே நான் அப்படி சொல்லி இருப்பேன்..... அப்படி சொல்லி இருந்தா நீங்க என்னை ஏத்துக்கிட்டு இருப்பீர்களானு எனக்கு தெரியாது....?
என் மனசை உங்களுக்கு புரிய வைக்கணும் தான் நான் ஆசைப்படறேன்.
என்னுள் எந்த "கல்யாண கனவும், காதல் கனவும் இல்ல என் பின்னாடி சுத்துறத நிறுத்திட்டு உங்க வேலை என்னவோ அதை பாருங்க....??
"ஆரா, நீங்க அந்த வட்டத்துக்குள்ளேயே இருக்கீங்க ?? அந்த வட்டத்தை விட்டு முதலில் வெளியே வாங்க......??
போதும் என அவள் எரிச்சலாக அவனிடம் எறிந்துவிழ.....
என்ன மாதிரி
ஒரு பொண்ணு கிடைச்சா இஷ்டத்துக்கு அட்வைஸ்
பண்ணுவீங்கலே ??? அப்படித்தானே ???
ஏன் எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சி க்கறீங்க.....??
என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சிகிட்டு காதலிக்கிறேன் வந்து சொல்லிட்டு நிற்கறீ ங்களே... இதிலிருந்தே தெரியல நீங்க யாருன்னு......???
எனக்கு உங்க பழைய ஹிஸ்டரி தேவையில்லை.......??
எனக்கு உங்க கைய புடிச்சு கிட்டு ரொம்ப தூரம் போகணும்னு ஆசையா இருக்கு.
கடற்கரை மணலில் நீங்களும் நானும் ஒரு காதல் கவிதை எழுதனும் ஆசையா இருக்கு..
உங்க மடியில் சாய்ந்து கொண்டுஉலகத்தையே விலை பேசணும்னு ஆசையா இருக்கு...
உங்க தோளில் சாய்ந்து கொண்டு உனக்காக நான் இருக்கேன்னு சொல்லணும்னு ஆசையா இருக்கு..
நீ கோபப்படும் போது உன் கோபத்தை குளிர்விக்கும் தென்றலா நான் இருக்கணும்னு ஆசையாயிருக்கு
மொத்தத்தில் உனக்காக எல்லாமுமாய் நான் இருக்கணும்னு ஆசையா இருக்கு....
பேசிட்டியா இன்னும் ஏதாவது பேச இருக்கா......??
என் மௌனத்தை நீ வாசிக்கணும் ஆரா.!!!
என் வார்த்தையில் உள்ள காதலை நீ சுவாசிக்கனும்....!!!!"
காதலாம் காதல் புடலங்காய்... என்னை சிதைச்சிட்டு போனானே அவனும் உன்ன மாதிரி ஒரு ஆம்பள தான்.....
மிருகத்தைப் பத்தியே நினைக்கறீங்களே .. உங்க உடம்ப தான் அவன் தீண்டினான் . நான் உங்க மனச தொட்டு பாக்கணும்னு ஆசைப்படுறேன்...... அன்னைக்கு மண்டபத்தில் அந்த மாப்பிள்ளையோட அம்மா உங்கள அவ்வளவு அசிங்கப்படுத்தும் போது உனக்காக நான் இருக்கேன்னு சொல்லனும் போல தோணுச்சு....!!
ஏன்னு தெரியல அப்போ...
உன் கண்கள் கலங்கி... நீ செய்யாத ஒருதப்புக்கு ஒரு குற்றவாளியா நின்ன காட்சி என் மனம் கண்ணுக்குள்ளேயே இருக்கு.....
டிரஸ்ல அழிக்கமுடியாத கறைபட்டா அதை வேணாம் தூக்கி போடறதில்லை அது மாதிரி தான் அந்த பேட் இன்சிடென்ட் தூக்கிப் போட்டுட்டு நாம புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.
" புரட்சியா பேசறதா மனசுல நினைப்போ....?? நாளைக்கு உங்க அம்மா பின்னாடி இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாத கோழை மாதிரி போய் ஒளிஞ்சிபீங்க ?????
நான் எங்க அம்மாவுக்காக தான் இன்னும் ஓடிகிட்டு இருக்கேன்.....
எல்லா பொண்ணுங்க மாதிரி எனக்கும் கல்யாணம் பண்ணி பாக்கணும்கறது அவங்க கனவு.... கெட்டுப்போன பொண்ணை
எவன் கட்டுவான்????
இன்னும்
உனக்கு எந்த ஆண்களையும் நம்ப தோணல இல்ல.....?? "பிகாஸ் ஆஃப் யூ
ஆஃப்க்டெட் ."நீ என்னை ஒரு பிரண்டா ஏத்துக்கோ.....? எங்க அம்மா பின்னாடி போயி நான் ஓளிஞ்சிக்க வேண்டிய அவசியமில்லை.... என் தங்கை உட்பட எல்லாருக்கும் இது தெரியும்.. நீ தான் என் மனைவினு அல்ரெடி நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன்.
இந்தப் பொண்ணு பாக்குற விஷயத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு அஞ்சு நிமிஷ சந்திப்பில் அவளைப் பற்றி என்ன தெரிஞ்சிக்க முடியும்.....? இங்க நிறைய மாத்தணும்...... லக்கு இருந்தா சிலருக்கு நல்லபடியா வாழ்க்கை அமையுது இல்லனா.... அவங்க வாழ்க்கை நரகம்தான்.
பிரெண்ட்லியாவே மூ பண்ணுவோம்... ஓரு த்தரை ஒருத்தர்
புரிஞ்சிக்க பார்ப்போம்.
எனக்கு உன் பாஸ்ட் தேவை இல்லை உன்னோட வாழ போற வாழ்க்கை நீ என்னோடு பயணிக்க போற அந்த பயணத்தில்.... நானும் உன் தோள் சாய்ந்து உன் மடி சாய்ந்து...... ஒரு அழகான கவிதை படைக்கனும்.
இது என் வாழ்க்கை இதில் எனக்கு எனக்கே பிடிச்சவங்க மட்டும் தான் என் கூட பயணிக்கனும்....
என்னடா இப்படி எல்லாம பேசுறானேனு நான் மயங்கி உன் மடியில் விழுந்து விடுவேனு நினைப்பா...??? உனக்கு.
ஏன் ஆரா புரிஞ்சுக்கவே.. மாட்டேங்கற...... என அவளுக்கு மிக அருகில் போய் நின்றான்.
உன்னைப்பற்றி ரகசியம் தெரிஞ்சிடும்னு இனி நீ எந்த ஊருக்கும் பயந்து பயந்து போகத் தேவையில்லை...? ??
உனக்கு நான் இருக்கேன்....
எந்தத் தப்பும் செய்யாத உனக்கு இந்த சமூகம் கொடுக்கிற தண்டனை போதும்
ஓரு ஈனப்பிறவி உன்னை சிதைச்சிட்டா அதுக்காக எல்லா ஆண்களும் கெட்டவங்க கிடையாது. நீ சிலுவை சுமந்த வரைக்கும் போதும்.
நான் உன்னை மறந்துட்டு எல்லாம் போக மாட்டேன் ஏன்னா நான் உன்னை என் இதயத்தில் வச்சிருக்கேன் ...."யூ ஆர் மை கேர்ள்......!!! என் மனசு சொல்லிடுச்சு நீ "ஸ்ரீ உடைய ஆரா "!!
இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கையே வரல.... நான் கொஞ்சம் நல்லவங்க என ஸ்நே கத்தோடு அவன் பார்க்க
இந்த பதில் கேட்டு ஆராவின் உதட்டில் லேசாக ஒரு புன்னகை.
இப்போ
நீங்க சிரிச்சீங்க......
இல்ல உனக்கு பைத்தியமானு யோசிச்சிட்டு இருக்கேன்.
உங்களை வேணாம்னு சொல்லிட்டு போனா அவன் புத்திசாலி உங்களை வேணும்னு பிடிவாதம் பண்ண நான் பைத்தியக்காரனா???
அப்படி என்ன என் மேல் காதல் ......??
காதல் எல்லாம் ஒரே நாள்ல வராதுங்க.... உங்க மேல எனக்கு ஒரு ஆழமான பீல்..... !!!
எல்லாரும் உங்களை சுத்தி நிற்கவெச்சு கேவலப்படுத்தும் போது... தைரியமா அவங்க முன்னாடி பேசனீங்க பாருங்க...... அந்த நேர்மை பிடிச்சிருந்தது..
நான் ஒன்னும் பெரிய பணக்காரன் எல்லாம் இல்லைங்க.... சாதாரண மிடில் கிளாஸ்..... மாதக் கடைசி வந்தா திண்டாட்டம் தான்..... ஆனாலும் இந்த லைஃப் ஒரு குட்டி சொர்க்கம் தங்கச்சி கூட சண்டை போட்டுக்கிட்டு.... அம்மா கூட வம்பு பண்ணிக்கிட்டு...... அப்பாவை ஹீரோ மாதிரி நினைச்சுக்கிட்டு.... வாழற சாதாரண ஒரு மிடில் கிளாஸ் பையன் நான்.
உங்களுக்காக வானத்தை வளைப்பேன் நட்சத்திரத்தை பூக்கள் ஆக்கிக்கொண்டு வருவேன்னு.... கலர் கலரா ரீல் சுத்த மாட்டேன். டெல்லியில இருக்கிற தாஜ்மஹாலுக்கு போகணும்னா கூட... பட்ஜெட் போட்டு தான் வாழனும்....
இதைக்கேட்டு ஆரா சிரித்தே விட்டாள்.....
பாத்தீங்களா உங்களுக்கு கூட சிரிப்பு வருது......., " வீக்லி ஒன்ஸ் மெரினா பீச் கூட்டிட்டு போறேங்க....? அந்த மணற்பரப்பில் உங்க கையோடு கைகோர்த்து உங்க தோல் சாஞ்சுகிட்டு
நாம நமக்கான கவிதையை
அங்கே எழுதுவோங்க..
நம்மள மாதிரி மிடில்கிளாஸ்க்கு மெரினா பீச் தான் ஒரு ட்ரீம் வேர்ல்டு....
ஒற்றை ஐஸ்கிரீம் வாங்கி.. அமிர்தம் மாதிரி சாப்பிடணும்......
அதென்ன அமிர்தம்.... ஆரா புருவம் உயர்த்த...
அது உங்க எச்சில் பட்ட அமிர்தம்...
கண்களால் அவள் கோபம் காட்ட....
முறைக்காதீங்க, இதெல்லாம் என்னோட சின்ன சின்ன ஆசைகள்.
சண்டே அவர் ஸ்பெஷல் டே.. மூச்சு முட்ட காதல் செய்யனும். அன்று..... கணப் பொழுதேனும் என்னை பிரியாதே!! கனவில் வந்து ஏனும் புது காதல் கவிதை எழுது.
நமக்கே என்று ஒரு குழந்தை வந்தாலும் நீங்க என்ன ஒரு குழந்தை மாதிரி பாத்துக்கணும்.......
கோபம் வந்தாக்கூட எங்கிட்ட நீங்க சண்டை போடணும் மவுனமாய் இருக்கக்கூடாது..... நட்பு நாளும் காதல் நாளும் மௌனம் கொடுமை... அது இதயத்துக்குள் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும்.....
நீங்க முதல எனக்கு ஒரு நல்ல பிரண்டா இருக்கணும்.... நான் உங்ககிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணனும்.... ஒற்றை ரூபாய்க்குக் கூட நீங்க என்கிட்ட கணக்கு கேட்கணும்..... நீங்க என் இதயத்திலிருந்து என்னை ஆட்சி செய்யணும்.... உங்களுக்குனு சில கனவுகள் இருக்கும் பெரிய இலக்கு இருக்கும்.. நீங்க எங்கெல்லாம் போகனும்னு ஆசைப்படுறீங்களோ ?? அங்கெல்லாம் உங்க கையைப் பிடிச்சுக்கிட்டு நான் கூட்டிட்டு போகணும்.... அதே மாதிரி என் கனவுகளுக்கும் என் லட்சியத்துக்கும் நீங்க உறுதுணையா இருக்கணும்... மொத்தத்தில் நீங்க என்னை ஆளனும் நான் உங்களை ஆளனும்.... முடிவில் காதல் நம்மை ஆளனும்.....
பர்த்டே கல்யாண நாளுனுனா சின்னச்சின்ன சர்ப்ரைஸ் கிப்ட் பண்ணுவேன்.... அது விலைமதிக்க முடியாததானு எனக்கு தெரியாது...... ஆனா நான் விலை கொடுத்து வாங்கக் கூடியதாக இருக்கும்.... அதில் என் அன்பை மொத்தமாகக் கொட்டி இருப்பேன்.....
உன்னைத் தவிர்த்து என்னை கடந்து போகும் பெண்களெல்லாம்.... சகோதரினு பொய் சொல்ல மாட்டேன்.... அழகாயிருந்தா ரசிப்பேன்.... ஒரு குழந்தையின் மனநிலையோடு. மொத்தத்தில் நான் ஒரு திறந்த புத்தகமாய் இருப்பேன் நீங்கள் என்னை வாசிக்கணும்!!!
ஸ்ரீ, ஐ லைக் யுவர் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்....
அப்படியே என்னையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமே??
அவனோ முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு அவளை பார்க்க....
ரொம்ப நாள்
ஆச்சி இப்படி மனம்விட்டு சிரிச்சி...
பாத்தீங்களா நான்
ஒரு பத்து நிமிஷத்துல உங்க... டென்ஷன் எல்லாம் போக்கிட்டேன்......
அந்த பார்க்குல போய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசலாமா......??
என்னடா இன்னும் எதுக்கும் அடி போடலையேன்னு பார்த்தேன்.....??
நான் ஒரு பச்ச மண்ணு உங்கள ஒன்னும் பண்ண மாட்டேன்.....
சரி வாங்க போலாம்..
உண்மையாவா ஆரா.
என் கூட வர சம்மதிச்சி ட்டீங்களா ?? அவன் உயரம் தாண்டி அவன் மனசு விரிய கண்டாள் அவள்.
இரவு 8 மணி என்பதால் பூங்காவில் ஆங்காங்கே கூட்டம் இருந்தது.
அவர்கள் ஒரு மரத்தடியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள்.
அப்புறம் ஒரு விஷயம் நான் உங்களை ரெண்டு மாசமா ஃப்பாலோ பண்றேன்.....ஓரு மாசம் உங்களுக்கு தெரிஞ்சு ஒருமாசம் உங்களுக்கு தெரியாம உங்களை வாட்ச் பண்ணிக்கிட்டு வரேன்.... அப்படி முறைக்காதீங்க.
ஓரு பொண்ண பாத்த உடனே வெள்ளைத்தோலா இருக்கா ? அழகா இருக்கா ? கை நிறைய சம்பாதிக்கிறானு .? இதெல்லாம் பார்த்து வரது காதல் கிடையாது....ங்க. நம்ம மனசும் அவங்க மனசும் ஒத்துப்போகனும்
ஒத்த எண்ணம், ஒத்த சிந்தனை., ஒத்த கருத்து... ஒத்த தொழில்... இப்படி பட்ட ரெண்டு பேர் வாழ்க்கையில் ஒன்றுசேர்ந்தா அவங்க வாழ்க்கை வானவில் மாதிரி (கலர்ஃபுல்லா)
வண்ணமயமாய் இருக்கும்
பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு இந்த பொண்ணு பாக்குற கல்ச்சர் எல்லாம் எனக்கு ஒத்துவராது.
உங்க வேவ்லெங்த்தும் என்னுடைய வேவ் லெங்த்தும்
மேட்சாகுதானு பார்த்தேன்.....
95% ஓத்துப் போகுதுங்க.......
இலட்சக்கணக்கில்லும் கோடிக்கணக்கில்லும் செலவு பண்ணி கல்யாணம் பண்ற,
பாசமுள்ள அப்பா அம்மாக்கள்...
அவங்க பொண்ணையும் பிள்ளையையும் ஓரு ரெண்டு மணி நேரம் பேச விட்டாங்கனு வச்சிக்கோங்க..... "மோஸ்ட் ஆப் த மேரேஜ் நடக்காது...?? பிகாஸ் அந்தப் பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஓத்தே போயிருக்காது...... இதெல்லாம் விட்டிடறா ங்க... ஆடம்பரமா கல்யாணம் பண்றாங்க.. அப்படி கல்யாணம் பண்ண அந்தப் பையனுடைய வாழ்க்கையோ பொண்ணோட வாழ்க்கையோ எப்படிங்க நல்லா இருக்கும். அதான் விவாகரத்தில் போய் நிற்குது.....
ஆரா தன் அழகிய மைதீட்டிய கண்களால் அவனை நோக்கியபடியே அப்ப என்ன பத்தி என்ன தெரிஞ்சி வச்சிருக்கீங்க????
எனக்கு தெரிஞ்சத சொல்றேன் கேளுங்க...?
உங்களுக்கு உங்க அம்மா தான் உலகம்.
எல்லார்கிட்டேயும் எளிமையாய் இனிமையாய் பழகுவீங்க.
நீங்க கோவிலுக்கு போக மாட்டீங்க ஆனா கோவிலில் பிச்சை எடுக்கறவங்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சாப்பாடு வாங்கி கொடுக்க தவறமாட்டீங்க ...
"உங்களுக்கு மியூசிக்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் கர்நாடிக் மியூசிக்னா கேட்கவே வேணாம்..... அதுவும் புல்லாங்குழல் ஊதும் கண்ணன்.. யு வர் ஃபேவரிட்.....
லைட் பேபி பிங்க் கலருன உங்களுக்கு அப்படி பிடிக்கும். மோஸ்ட் ஆஃ த
டிரஸ்சஸ் அந்த காம்பினேஷன்ல தான் இருக்கும்.....
மழையை ரசித்தபடி புத்தகம் வாசிக்கறது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
பிரெட் ஆம்லெட் எவ்வளவு பிடிக்குமோ ?? அதே அளவுக்கு பழைய சோறும் பச்சை மிளகாயும் ரொம்ப பிடிக்கும்..
சின்ன சின்ன விஷயத்துக்கு கூட நிறைய கோபம் வரும். நான் கொஞ்சம் பொறுமைசாலி
அஜஸ்ட் பண்ணிகறேன் .
உங்களுக்கு தப்புன்னா தப்புதான்...... யாரு என்னன்னு பார்க்கவே மாட்டீங்க லெப்ட் அண்ட் ரைட் வாங்கிடுவீங்க......?? அந்தப் பையனுடைய
தப்பை நீங்க சுட்டிக்காட்டனதினால் தான் அந்த பேட் இன்சிடென்ட் கூட நடந்தது.
மழையில் நனைய பிடிக்கும், இயற்கையை ரசிக்க பிடிக்கும்.. மொத்தத்தில் நீங்க நீங்களா இருக்க பிடிக்கும்.
ஒரு குட்டிக் கவிதை!! சொல்லலாமா என்று கேட்டுவிட்டு அவள் முன் மண்டியிட்டு!!!
உன் உயிர் தீண்டினாலும்.... உன் விரல் தீண்டினாலும் உன் அனுமதியின்றி உன் மெய் தீண்டேன்.
வேலையில் இருந்து நான் சோர்வுற்று வந்தாலும் என்னைக் கட்டிக் கொள்...
உயிரோடு ஒட்டிக்கொள்.... நெற்றியில் ஒற்றை முத்தம் வை !! உன் மடி கொடு... !! உன் மார்பில் என்னை இட்டுக் கொள்......!! நான் சாகாமல் இருக்க என்னை உன் அன்பால் கட்டிக் கொள்..!! பெண்ணே இன்னொருவனை உன் சிந்தையாலும் தீண்டாத என் கண்ணகி பெண்ணே்.. !! "நீயே என் உயிர் கண்ணம்மா......!! காதல் சிறை வைத்தேன் உன்னை என் இதயத்தில் ஆட்சி செய் பெண்ணே...!! அன்பில் கட்டிக்கொள்... உன் உயிரணுவில் ஒட்டிக்கொள் !!
"காதல் காதல் காதல் செய் பெண்ணே.... நம் ஆயுள் கூடும் காதல் காதல் காதல் செய் பெண்ணே!!!!
தினம் தோறும் உன் இதழால் முத்தச் சண்டை இடு.... உன் மடி கொடு உன் கழுத்தை கட்டிக்கொண்டு...உன் முகமெங்கும் காதல் கவிதையை என் இதழால் எழுதுவேன்... உன் இதழால் நீ பதில் கடிதம் எழுத வேண்டும்..!!! உயிர் உருகும் சத்தம் நித்தம் கேட்கும் அதுவே நம் காதலின் தேசிய கீதம்.!!! நாம் எழுதுவோம் புதிய காவியம்.....
ஏன் நிறுத்திட்டீங்க ஸ்ரீ என அவனை கிண்டல் பண்ணியபடி........
ஏன் மானே, தேனே பொன்மானே எல்லாம் விட்டுப்போச்சா ....???
கலாய்க்கறீங்க பார்த்தீங்களா?
எனிவே கவிதை நல்ல இருக்கு.
இன்னும்நிறைய நிறைய இருக்குங்க இப்போதைக்கு என்னால் இவ்வளவுதான் சொல்ல முடியும்.... மனசுக்குள் நீ இருப்பதால் கவிதை என்னை ஆட்சி செய்யும்...அதை எல்லாம் ஒரு அழகிய காதல் பொழுதில் சொல்லுவேன்....
" காதல்னா என்னங்க ஒரு அபரிமிதமான அன்பு.....
நீங்க ஓகே சொன்னா கூட உடனே நம்ப கல்யாணம் இல்லைங்க...???? உங்களை நான் இன்னும் இன்னும் நிறைய நிறைய தெரிஞ்சுக்கணும்....... " ஐ மீன் உங்க மௌனத்தை கூட நான் வாசிக்கணுங்க...!!! மனசு பூரா அதீத காதலோட அப்ப கட்டனுங்க தாலியை உங்க கழுத்தில் எனக்கு.......!!!!
அது ஒரு வருஷமா னாலும், ரெண்டு வருஷமானாலும் நான் வெயிட் பணறேங்க... பிடிச்சு பொண்ணுக்காக எவ்வளவு நாள் வேணா நான் காத்திருக்க தயாராக இருக்கேன்.
ஆரா சிலாகித்துப் போனால் அவன் அன்பில்!!!
"இப்போ ஏங்க நீங்க
அழறீங்க...? என பதட்டமாய் ஸ்ரீ கேட்க ??
ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.... நான் மனசு விட்டு அழனும். இது ரொம்ப நாளா அடைக்கப்பட்ட கண்ணீர்....
ஸ்ரீ, அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சிறிது நேரம் அமைதியாக இருக்க..
உங்களை எனக்கு பிடிச்சிருக்கா ?? பிடிக்கலையா ?? னு தெரியல பட் நீங்க என் லைஃப்ல இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.... எந்த முகமூடியும் போட்டுக்காம... நான் நானாய் இருப்பேன் தோணுது...... காதல் கத்திரிக்காய்னு பொய்யா பேசாம உண்மையைப் பேசுற உங்களோட நான் ரொம்ப சந்தோஷமா வாழ வேணு தோணுது....
அப்புறம் ஏங்க அழறீ ங்க....?? ? இவ்வளவு விஷயத்தை எனக்காக பார்த்து பார்த்து பண்ணி இருக்கீங்க.... நாளைக்கு என் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராதுன்னு இந்த நிமிஷத்தில் நான் உணர றேன்.......
எனக்குள் இருந்த எல்லா கனவும் அந்த இருட்டுக்குள்ளே உடைஞ்சு போச்சு. ஒருத்தன் என்ன சிதைச்சிட்டு
உன்னாலயும் இந்த சட்டத்தாலேயும் என்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு வஞ்சமா சிரிச்சுக்கிட்டே போயிட்டான்.
சொந்தக்காரங்க உறவு எல்லாம் என்னை காரித் துப்பி.... கேவலமா பார்த்து.... நான் சாக கூட முடிவு பண்ணிட்டேன் . எங்க அம்மாவை நிராயுதபாணியா இந்த உலகத்திலே விட்டுட்டுப் போக முடியாம தான் மனச தேத்திக்கிட்டு... நடைப்பிணமாக வாழ்ந்துகிட்டு இருக்கேன் அவங்களுக்குனு யாரும் கிடையாது என்ன விட்டா.
அவங்களுடைய ஒரே ஆசை என் கல்யாணம் தான்...... அது நடக்காதுனு எனக்குத் தெரியும் ஆனா அம்மாவுக்கு எப்படியாவது என் கழுத்தில் தாலி ஏறிடா தானு ஒரு சின்ன நம்பிக்கை.
"இப் யூ டோன்ட் மைன்ட் நீங்க என் வீட்டுக்கு வர முடியுமா....??
ஸ்ரீ !!!! ஆராவை ஆச்சரியமாய் பார்க்க...!!
நீங்க என்னுடைய காதலன், வருங்கால கணவன் என்றெல்லாம் என்னால் அறிமுகப்படுத்த முடியாது... யூ ஆர் மை பெஸ்ட் பிரண்ட்னு எங்க அம்மாகிட்ட அறிமுகப்படுத்த முடியும்.
எல்லா காதலும் எங்கே தொடங்குதுனு எனக்கு தெரியாது...... ஆனா அது ஒரு அழகான ஆழமான நட்பிலிருந்து தான் தொடங்குது.முதல் அடி எடுத்து வைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.
இவ்வளவு நாளா நீ எங்க இருந்த ? ஸ்ரீ, !!!!
"யூ ஸ்டோல் மை ஹார்ட்.... நவ் ஐ ஃபீல் த ஹேப்பினஸ்....!!!. என ஆரா முக மலர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் சொல்ல..
அதைக்கேட்ட ஸ்ரீ... இமயமலையின் பனி போல் இதயம் உருக கண்டான்.
காத்திருந்த காதல் கைகூடினால் அதை வார்த்தையால் சொல்லிட முடியுமா !!!
இனி
" ஸ்ரீ ஆரா "வின் வாழ்க்கை இரு இதயங்களின் சரிகமபதநிச......!!!
காதலே காதலே தனிப்பெரும் துணையே!! கூடவா கூடவா போதும் போதும்!!காதலே காதலே வாழ்வின் நீளம் நீ!!!!
( "மிக சரியான மனிதர்கள் உங்கள் வாழ்க்கையை அழகாக்குவார்கள்... "அந்த அற்புதம் நிகழும்!!! அவனையோ / அவளையோ உங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தால் தவறவிடாதீர்கள் )
( "ய ரைட் பர்சன் மேக் யுவர் லைப் வெரி பியூட்டிப்புல்..
" த மேஜிக் குட் ஹேப்பெண்ட் "!!!! "இப் யூ சீ தட் டைப் ஆப் பர்சன் இன் யுவர் லைஃப் டோன்ட் மிஸ் ஹிம் /ஹெர் )
"காதலாகிய கனியிருக்க காமம் ஆகிய காயை நுகர்வது ஏன் ????
"கனியிருப்பக் காய் கவர்ந் தற்று "
வணக்கம் தோழமைகளே நான் உங்கள் ஸ்ரீலதா...
கதையைப் படிச்சுட்டு மறக்காம உங்க கமெண்ட்சை பதிவிடுங்கள்.

***********