Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் - Tamil Novel

Status
Not open for further replies.

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 17

அன்று…

" ப்ளீஸ் அனு… நீ வீட்டுக்கு கிளம்பு." என்று அவளை வீட்டுக்கு அனுப்பிய விஸ்வரூபன், ராதிகாவை முதலில் ஹோட்டலுக்கு தான் அழைத்துச் சென்றான்.

இருவரும் உணவருந்தி விட்டு ஷாப்பிங் சென்றனர்.

அவளுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டு சுடிதார், சேரி என அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக் குவித்தான்.

" விஷ்வா… போதும்…" என்று தடுத்தாள் ராதிகா.

" ஹேய் ராதா… இந்த ரெட் கலர் சேரி ரொம்ப அழகா இருக்கு." என்றான் விஸ்வரூபன்‌.

" எனக்கு இந்த ரெட், மெரூன் கலரெல்லாம் பிடிக்காது. கல்யாணத்துக்கு கூட ரெட் கலர் வாங்கக் கூடாது என்று எங்கம்மாக் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்." என்று முகத்தை சுழித்தப்படிக் கூறினாள்‌.

" ஓஹோ… அப்போ நம்ம கல்யாணத்துக்கு எந்த கலர்ல வாங்கட்டும்." என்று வினவ.

" எனக்கு பேபி பிங்க் கலர்ல தான் வேண்டும்." என்றாள் ராதிகா.

" ஓ… அப்ப சரி. " என்றவன், பட்டுப் புடவை செக்ஷனுக்கு திரும்பினான்‌‌.

" ஐயோ! விஷ்வா… இப்போ வேண்டாம். கல்யாணத்தப்ப வாங்கி கொடுங்க…" என்று அவனைத் தடுக்க…

"ப்ச்… என்ன ராதாமா… " என்று வருத்தப்பட்டாலும், அவளது உணர்வுக்கு மதிப்பளித்தான்.

அங்கிருந்து கிளம்பியவர்கள் அடுத்துச் சென்றதோ, மெரீனா பீச்சிற்கு தான்.
ஒரு முறை, அனன்யா சொல்லியிருந்தாள், 'ராதிகா இதுவரை பீச்சிற்கு சென்றதே இல்லை. இங்கே பிலிப்பைன்ஸ் வந்து தான், சென்றிருக்கிறோம்.' என்று, அதை நினைவில் வைத்திருந்தவன், நேராக அங்கு அழைத்துச் சென்றிருந்தான்.

இவ்வளவு நேரம், விஸ்வரூபன் தன் மேல் கோபத்தில் இருக்கிறானோ என்று தனக்குள் தவித்துக் கொண்டிருந்தவள், ஓயாமல் கரைத் தொட்டு செல்லும் அலையைப் பார்த்ததும் குழந்தையென குதூகலித்தாள்.

அவளது ஆர்ப்பாட்டத்தை கைக்கட்டிக் கொண்டு ரசித்தான்.

ஒரு பெரிய அலை வந்து அவளை இழுத்து செல்ல முயல, வேகமாக அவளை இழுத்து அணைத்தான் விஸ்வரூபன். இருவரும் சமாளிக்க முடியாமல் தடுமாறி தண்ணீரில் விழுந்து எழுந்தனர்.

பயத்தில் ராதிகா நடுங்க… " ஹேய் ராதா மா… பயப்படாதே." என்றவன் இன்னும் அவனது அணைப்பில் அழுத்தத்தைக் கொடுக்க…

அப்போது தான், தான் இருக்கும் நிலையை உணர்ந்த ராதிகா வேகமாக விலகினாள்.

" ஹோய்… ராதா நமக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது." என்று அவள் கை விரல்களில் உள்ள மோதிரத்தை வருடிக்கொண்டே புன்னகையுடன் விஸ்வரூபன் கூற…

அவள் முகமும் புன்னகைத்தது.

" அதுமட்டுமல்லாமல் இப்ப நீயும், நானும் வேற கிடையாது. இப்ப நீ என்னோட பாதி பொண்டாட்டி தெரியுமா?" என்று புருவத்தை உயர்த்தி வினவ…

அவள் முகம் சிவக்க, "ஆமாம்… இப்ப அதுக்கென்ன?" என்று மென்குரலில் வினவ.

" எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு." என்றான் விஸ்வரூபன்.

" அதெல்லாம் கல்யாணம் முடியவும் தான்." என்று முணுமுணுத்தாள் ராதிகா.

அவளை இழுத்துக் கொண்டு மணலில் அமர்ந்தவன், அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே, " ராதா மா… அப்போ இங்கேயே இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா? நான் எது வாங்கிக் கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லுற, எது செய்தாலும் தடுக்குற." என்று கண் சிமிட்ட…

" விளையாடதீங்க விஷ்வா… நான் மேற்படிப்பு படிக்கணும். அப்புறம் தான் கல்யாணம்." என்று முகச் சிவப்புடன் கூற.

" அதுக்கு தான் சொல்லுறேன். நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா. நம்ம காலேஜ்லேயே மேற்படிப்பு படிக்கலாம்ல. இப்பவே நீ ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லு. இந்த நிலா சாட்சியா உன் கழுத்துல தாலி கட்டுறேன்." என்று விஸ்வரூபன் கூற…

இப்பொழுது ராதிகாவிற்கு சினத்தால் முகம் சிவந்தது.

" விஷ்வா… எதுல விளையாடுறதுனு விவஸ்தையே இல்லையா? கல்யாணம்னா விளையாட்டா போயிடுச்சா? நம்ம ரெண்டு வீட்டு ஆளுங்களோட சம்மதத்தோடும், மனப்பூர்வமான ஒப்புதலோடும் நம்ம கல்யாணம் நடக்கணும்‌.எனக்கு நம்ம கல்யாணத்தப் பத்தி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்குத் தெரியுமா?" என்று படபடத்தாள் ராதிகா.

" ம்… சரி இன்னும் உனக்கு பஸ்ஸுக்கு டைம் இருக்கு. அதுவரைக்கும் சொல்லேன் உன்னுடைய எதிர்ப்பார்ப்புகளை." என்றவன் அந்த மணலில் சரிந்தான்.

"நம்ம முன்னோர்கள் கல்யாணத்துல வச்சிருக்குற ஒவ்வொரு சடங்குக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு. என் கல்யாணம் பிரமாண்டமா நடக்கணும்னு ஆசை கிடையாது. ஆனால் எந்த சடங்கையும் மிஸ் பண்ணாம செய்யணும். " என்று ராதிகா கூற…

" சரிங்க பாட்டி… அந்த சடங்குக்கான அர்த்தத்தையும் சொல்லுங்களேன்." என்று அவளைப் பார்த்து கிண்டலாகக் கூற…

அவளோ ஒன்றும் கூறாமல், அவனைப் பார்த்து முறைக்க…

" ஹேய் ராதா… சீரியஸ்ஸா தான் கேட்குறேன் சொல்லு." என்று விஸ்வரூபன் வினவ.

" சரி… நீங்க ரொம்ப கெஞ்சிக் கேட்குறதால சொல்றேன். பந்தகால் நடுவதுல இருந்து எல்லாமே செய்யணும். இது பஞ்ச பூதங்களோட ஆசியை பெறுவதாகும். பந்தக்கால் நட்டுட்டா வெளியே எங்கேயும் போகக்கூடாது. ஃப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் எல்லோரும் வீட்டுக்கு வருவாங்க. நம்ம கூட இருந்து கேலி செய்வாங்க. செம ஜாலியா பொழுது போகும்.


அப்புறம் கல்யாணத்தன்னைக்கு, காப்பு கட்டுறதுல தொடங்கி, தாரை வார்க்குற சடங்கு வரை எல்லாமே இருக்கணும்.


தாரை வாக்குறதுனா எங்கப்பா, அம்மா "என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என உங்களுக்குக் கொடுக்குறது.

இது ஒரு உறுதிமொழி மாதிரி தான்…
உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் ( மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்று உங்க பெற்றார் ஏற்றுக் கொள்வது தான்…

அப்புறம் தாலி கட்டுவது,

ஒன்பது இழையாள் பிணையப்பட்ட மஞ்சள் கயிற்றில் பொற்தாலி இருக்க, வந்து இருக்கும் உறவினர்கள் அனைவரிடமும், ஆசி வாங்கி, வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெறணும். மங்கள வாத்தியம் முழங்க, அர்ச்சகர் மந்திரம் சொல்ல, உங்க கையால மூன்று முடிச்சு வாங்கிக்கணும். அப்புறம் அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்துற சடங்கு." என்று ராதிகா சொல்ல வர…

" ஹே… வெயிட்… கல்யாணத்தோட முடியலையா உன்னோட ஆசை. கால்ல விழுறவரைக்கும் உண்டா." என்று இடையிட்டான் விஸ்வரூபன்.

" அம்மி மிதித்திக்கிறதுனா உடனே கால்ல விழறதுன்னு சொல்லிடுவீங்களே…

அம்மி மிக உறுதியுடனும்,ஒரே இடத்தில் அசையாமல் இருக்குதோ, அதே மாதிரி, திருமணமான பெண்கள் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும். ஜஸ்ட் அதுக்காகத்தான் மெட்டி போடுறீங்க.

அருந்ததி பார்ப்பது என்னத் தெரியுமா? ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரோட மனைவி.

வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம்.
ஆனால் நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரியும்.அதேபோல் மணமக்கள் இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். அதற்காகத் தான் அருந்ததியை பார்க்க சொல்கிறார்கள். அவ்வளவு தான் விஷ்வா என்னோட ஆசைகள்…" என்று கண்களில் கனவு மின்னக் கூறினாள்.

" அவ்வளவுதானா உன் ஆசைகள்… இல்ல அதுக்கப்புறமும்… " என்று அவன் இழுக்க…

" என்னது… " என்று அவள் அதிர்ந்தாள்.

" ரொம்ப கற்பனை பண்ணாதே ராதா. எங்க ஹனிமூன் போகலாம்னு கேட்க வந்தேன்." என்று சிரித்துக் கொண்டேக் கூற…

" அப்படியெல்லாம் ஒன்றும் யோசிக்கலை." என்று அவனை முறைத்துக் கொண்டே கூறினாள் ராதிகா.

" நீ இல்லை என்று சொல்றதிலிருந்தே தெரியுது, உனக்குனு சில எதிர்பார்ப்புகள் இருக்கு என்று… பரவாயில்லை சொல்லு ராதா."

" லேட்டாயிடுச்சு வாங்க போகலாம்." என்று ராதிகா கிளம்புவதிலே குறியாயிருந்தாள்.

" அதெல்லாம் டைம் இருக்கு. நம்ம சாப்பிட்டு கிளம்பிப் போனா சரியா இருக்கும். இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இந்த இடத்தை விட்டு கிளம்ப மாட்டேன்‌." என்று அவளைப் பார்த்துக் கொண்டே கூறினான்.

" ஹனிமூனுக்கு போகணும்னு கற்பனை பண்ணலை. பட் நான் ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்ச இடம் கேரளா."

" ரைட்டு… சரி அங்க போக வேண்டாம்." என்று அடுத்த நொடியே விஸ்வரூபன் கூற…

ராதிகா அவனைப் பார்த்து முறைக்க…

" ஹே ராதா… நாம போறது ஹனிமூனுக்கு, நீ வேற பிடிச்ச இடம், அங்கப் போகணும், இங்கே போகணும் என்று சொன்னீனா என்னப் பண்றது. என்பாடு தான் திண்டாட்டம்." என்று கண்ணடித்துக் கூற… ராதிகாவின் முகம் செவ்வானமாக சிவந்தது.

இன்று…

கண்களிலிருந்து கண்ணீர் வராமல் இறுகிப் போய் நின்று இருந்த ராதிகாவை பார்த்தவர்கள், கல்யாண டென்ஷனில் இருக்கிறாளோ என்று
நினைத்திருப்பார்கள்.

ஆனால் உண்மை அதுவல்லவே. அவளுக்கு அருகில் நின்றிருந்த அவனுக்கா தெரியாது, அவளது உணர்வுகள் அத்தனையும் அத்துபடியாயிற்றே.

அவளது மனம் படும் பாட்டைப் பார்த்து அவனும் இறுகிப் போய் இருந்தான்.

"கடவுளே துணை…" என்று அந்த முருகப்பெருமானை பார்த்துக் கொண்டிருந்தவன், மனதிற்குள் தீவிரமாக வேண்டிக் கொண்டு தான், அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டிருந்தான்.

கோவிலில் நடத்த வேண்டும் என்பதற்கும் ஒரு காரணம் இருந்தது அது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

கோவிலில் சாமி தரிசனம் முடித்தவர்கள், வெளியே வந்து சரவணபவனில் காலை உணவை முடித்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினர்...

சுந்தரியும், சண்முகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே முழிக்க…

கிருஷ்ணன் தான், " என்னாச்சு சம்பந்தி. ஏன் நின்னுட்டே இருக்கீங்க. வாங்க வீட்டுக்குப் போகலாம்." என…

" அது… தஞ்சாவூருக்கு மறுவீட்டுக்கு பொண்ணையும், மாப்பிள்ளையும் இன்னைக்கே அழைச்சிட்டு போறது தான் எங்கள்ல வழக்கம்." என்று தயங்கித் தயங்கி சண்முகம் கூற…

கிருஷ்ணன், விஸ்வரூபனைப் பார்க்க, " இன்னைக்கு எனக்கு ஹாஸ்பிடல்ல ஒரு முக்கியமான ஆஃப்ரேஷன் இருக்கு. ஃப்ரை டே வர்றோம்." என்றான்.

" அப்போ நாங்க கிளம்புறோம் சம்பந்தி. என் பொண்ணு ரொம்ப அமைதி. அவளுக்கு வேண்டும் என்பதைக் கூட வாய்விட்டு கேட்க மாட்டா… பார்த்துக்கோங்க…"

" ஓஹோ… அப்படியா… நாங்க பார்த்துக்குறோம். நீங்க கவலையே படாதீங்க." என்ற கிருஷ்ணன், ராதிகாவைப் பார்த்து புருவத்தை உயர்த்தி வினவ.

' ஐயோ! சாரோட பார்வையே சரியில்லையே.' என்று உள்ளுக்குள் பயந்தவள், வெளியேவோ முயன்று சிரித்தாள்.

அவளது பாவனையில், கிருஷ்ணன் வாய்விட்டு நகைக்க, விஸ்வரூபனோ, வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டான். ராதிகா செய்யும் சேட்டையைப் பற்றி காலேஜில் கிருஷ்ணன் தெரிந்துக் கொண்டார். விஸ்வரூபனுக்கோ ஏற்கனவே தெரியுமே! அதான் சண்முகம் கூறவும் இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

" ஏங்க … சம்பந்தி… வீட்டுக்கு வராம போறேன்னு சொல்றாங்க, நீங்க சிரிச்சுகிட்டே இருக்கீங்க." என்று கிருஷ்ணனை கடிந்த ரஞ்சிதம்,

" வீட்டுக்கு வராம போய்டுவீங்களா? இனிமே அது உங்க பொண்ணோட வீடு. வீட்ல வந்து பொண்ணு மாப்பிள்ளையை விட்டுட்டு,விருந்து சாப்பிட்டு தான் கிளம்பணும். ஆற, அமர இருந்துட்டு நாளைக்குக் கூட போகலாம்." என்று சுந்தரியிடம் கூற…

" இல்ல…" என்று தயங்கிய படியே விக்ரமையும், ஸ்வேதாவையும் பார்த்தார்.

" அவங்களையும் தான் வீட்டுக்கு கூப்பிடுறேன். என்ற ரஞ்சிதம், எல்லோரையும் வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இப்படி வற்புறுத்தி அழைத்துச் செல்பவர், வீட்டிற்குச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே, இப்போது இருக்கும் மனநிலைக்கு மாறாக கோபத்துடன் இருக்கப் போவதையும், கிளம்புகிறோம் என்று கூறியவர்களையும் ஒன்றும் கூறாமல் தலையசைத்து அனுப்பி வைக்கப் போகிறார் என்பதையும் அப்போது அவர் அறியவில்லை.

ஒரு காரில் பொண்ணு, மாப்பிளையுடன் பொண்ணு வீட்டு ஆட்களை வர சொன்னவர், மற்றொரு காரில் அவர்கள் மூவரும் சென்றனர்.

ரஞ்சிதமும், கௌரியும் பொண்ணு, மாப்பிள்ளையை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து, சாமியறையில் விளக்கேற்ற சொல்லி விட்டு, பால் பழம் கொடுத்தனர்.

கிருஷ்ணனும், சண்முகமும் பேசிக் கொண்டிருக்க… அவர்களுக்கு விக்ரம், ஸ்வேதாவுடன் மெல்லிய குரலில் ராதிகா பேசிக் கொண்டிருந்தாள்.

விஸ்வரூபன் மாடிக்கு சென்றிருந்தான்.

"வாங்க சம்பந்தி வீட்டைச் சுற்றி பார்க்கலாம்." என்று அழைத்த ரஞ்சிதம் சுந்தரிக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தாள். பூஜையறையில் மாலைப் போட்டிருந்த அனன்யாவின் போட்டாவைப் பார்த்த சுந்தரி, " இது…" என்று தடுமாறியப்படியே வினவ.

" இவ தான் என் பையனோட முதல் மனைவி. பிரசவத்துல இறந்துட்டா…" என்று நா தழுதழுக்கக் கூறினார் ரஞ்சிதம்.

" அப்போ அனு மா… " என்ற சுந்தரி மீதியைக் கூறாமல் கண் கலங்கிக் தவிர்த்தார்.

அவரது தடுமாற்றத்தை கவனியாமல் ஹாலுக்கு அழைத்து வந்தார்.


சுந்தரியின் கண்களோ, குழந்தையை ஆர்வமாக பார்வையிட்டது.

குழந்தை அவந்திகாவோ, தட்டுத்தடுமாறி ராதிகாவிடம் வர…

ஆசையாக தூக்கினாள் ராதிகா.

அப்போது தான் பட்டு வேஷ்டியை மாற்றி விட்டு கேஷுவல் ட்ரெஸ்ஸில் கீழே வந்த விஸ்வரூபன், வேகமாக குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

அதிர்ந்து அவனைப் பார்த்தாள் ராதிகா.
" யாரும் என் பொண்ணுக்கு ஆயா வேலைப் பார்க்க வேண்டாம். அதற்காக ஏற்கனவே இரண்டு வேலையாட்கள் இருக்கிறார்கள்." என்று கடுமையான குரலில் கூறியவன், சுந்தரியிடம் திரும்பி," அனு… பெத்த அம்மாவாட்டம் தானே உங்களையும் நினைச்சா. அவக் குழந்தையை போய் தொந்தரவா நினைக்கிறீங்களே." என்றுக் கூறியவன் குழந்தையைஅழைத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்.


அவன் கூறியதை கேட்டு கௌரியும், ரஞ்சிதமமும் அதிர்ந்து நிற்க… சுந்தரியோ, தேவையில்லாமல் அன்று வார்த்தை விட்டதை எண்ணி குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.

அனு இந்த உலகத்திலே இல்லை என்ற செய்தியே அவளது செவிக்கு இப்போது தான் எட்டியது.

அவளுக்கு என்ன நடந்ததோ அது எதுவும் சுந்தரிக்கு தெரியாது. ஒரு வருடமா அவளிடம் இருந்து எந்த தகவலும் வராமல், சுந்தரி தவித்து தான் போனாள். ராதிகாவிடம் கேட்க, அவளோ எனக்கு அவளுக்கும் பிரச்சனை மா. எனக்கு ஃபோன் போட மாட்டா. உங்க கிட்ட பேசுன இந்த ஒரு வருஷம் கூட என் கிட்ட பேசலை என்று கூறியிருந்தாள்.

இப்போது தெரிய வரவும், அதிர்ச்சியில் இருந்த சுந்தரி, " சம்பந்தி…" என ஏதோ கூற வர…

கைநீட்டி தடுத்த ரஞ்சிதம், "எதுவும் நீங்க சொல்ல வேண்டாம்."என்று விட்டு, அவளது அறைக்கு சென்று விட்டார்.
என்ன தான் இருந்தாலும், தன் மகனை பேசியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

விக்கித்து போய் நின்றனர். ராதிகாவின் குடும்பத்தினர்.

கிருஷ்ணன் தான் சமாதானம் செய்தார். நீங்க எதுவும் சங்கடப்படாதீங்க. அவளோட கோபமெல்லாம் கொஞ்சம் நேரம் தான். நீங்க வாங்க சாப்பிட." என்று அழைத்தவர்,கௌரியிடம் அவர்களுக்கு பரிமாறுக் கூற…

அவரும் எல்லோரையும் உணவருந்த அழைக்க…

சுந்தரி, " அனு மா… எனக்கு எதுவும் தெரியாது. என் அனுவோட குழந்தையை என்னைக்குமே தொந்தரவா நினைக்கவே மாட்டேன். ராதிகாவுக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும், என் மொத பேத்தி அம்முக்குட்டி தான்." என்று கௌரியிடம் கூறியவர், பேருக்கு உணவருந்தி விட்டு கிளம்பி விட்டார்.

ரஞ்சிதமும் இருந்து நாளைக்கு செல்லலாம் என்று சொல்லாமல் தலையசைத்து அனுப்பி வைத்தார்.

அவர்கள் ஊருக்கு கிளம்புவதாக கிருஷ்ணன் கூறியும், கீழே இறங்கி வராமல் இருந்தான் விஸ்வரூபன்.

எல்லோரும் அவன் கோபத்தில் இருப்பதாக நினைத்திருக்க… அவனோ, தன்னோடு வாழ வந்த பாவத்திற்கு ராதிகா படும் துன்பத்தை எண்ணித் தனக்குள்ளே தன் தவித்துக் கொண்டிருந்தான்.

அவளது முகத்தை பார்க்கும் திராணியற்று மாடியிலே நடைபயின்றுக் கொண்டிருக்க…

அங்கு பெற்றோர், கூடப் பிறக்காத அண்ணன் குடும்பம் எல்லோரும் கிளம்ப, அவர்களை வழியனுப்ப வாசல் வரை சென்ற ராதிகாவிற்கு, ஆறுதல் கூறக் கூட யாருமில்லாமல் தனிமையில் நின்றுக் கொண்டிருந்தாள்.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 18

அன்று...

விஸ்வரூபனும், ராதிகாவும் தங்களை மறந்து காதல் அலையில் கால் நனைக்க,

இங்கு அனன்யாவோ, கண்ணீர் மழையில் நனைந்தாள்.

காரில் செல்லும் போதே எவ்வளவோ கட்டுபடுத்தியும் கண்ணீர் மட்டும் நிற்காமல் பொழிந்தது.

இது ஒரு விதமான பொஸஸுவ்னஸாக இருக்கலாம். தோழி மேல் வைத்த அதீத பாசம்‌‌. அவளை விட்டு விலகணும் என்று நினைக்கும் போது இதயத்தில் ஒரு வலி உண்டானது.

பின்னே கிட்டத்தட்ட ஐந்தரை வருடமா குடும்பத்தை விட்டு பிரிந்து , அன்னிய மண்ணில் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருந்தது, அவர்களை இந்த அளவிற்கு நெருங்கிய உறவாக மாற்றியிருந்தது.

இதில் தங்களது நட்புக்கு இடையே நுழைந்தத தன்னுடைய பிரியமான மாமாவாக இருந்தாலும், அவளுக்கு வேதனையாகத் தான் இருந்தது.

தங்களது வீடு இருக்கும் பகுதியில் கார் நுழையவும், வேகமாக ஹேண்ட் பேகிலிருந்து, டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடைத்தாள்.

பிறகு லைட்டாக மேக்கப் செய்து கொண்டாள்.

வீட்டிற்குச் செல்லும் போது, தன்னை உற்சாகமாக காட்டிக் கொள்வதற்காக இவ்வளவு முஸ்தீபுகளை செய்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஆனால் அவளது பாட்டியின் அன்புக்கு முன்பு அவளது முயற்சிகள் தோற்றுப் போயின…

அவளைக் கூர்ந்து பார்த்த ருக்குமணி," என்னாச்சு அனு… எக்ஸாம் ஒழுங்கா பண்ணலையா? " என்று வினவ.

" நல்லா பண்ணிருக்கேன் பாட்டி."

இப்போதுதான் ஹாஸ்பிடலில் இருந்து வந்திருந்தார் கௌரி. இனி அவருக்கு ஈவினிங் தான் அப்பாயின்மென்ட்.

அவரும் ஆராய்ச்சியாக அனன்யாவை பார்த்தபடியே, " சரி வா அனு. சாப்பிடலாம்… " என்று அழைத்தார்.

ருக்குமணி நேரத்திற்கு உணவு அருந்திவிடுவார். இல்லையென்றால் மகனும், பேரனும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.

இன்றும் மதிய உணவை முடித்தவர், ஓய்வெடுக்க செல்லாமல், எக்ஸாம் எழுத சென்ற பேத்திக்காக காத்திருந்தார்.

அவள் வந்ததும், அவளது வாடிய முகத்தைப் பார்த்தவர், அவளின் அருகிலேயே இருந்து உணவு உண்ண வைத்து கவனித்துக் கொண்டிருந்தார்.

தன்னை இருவர் ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டு இருப்பதை அறியாதவள், தனக்குள்ளே மனதைக் குழப்பிக் கொண்டிருந்தவள், உணவை உண்ணாமல் கைகளால் அளந்துக் கொண்டிருந்தாள்.

" ரஞ்சிதம்… அம்மு ஒழுங்கா சாப்பிட மாட்டேங்குறா… ஏன் இன்னைக்கு அவளுக்கு பிடிச்சது எதுவும் செய்யலையா?" என்று தன் மருமகளை அழைத்து வினவினார்.

" அத்தை… அவ சொன்ன மெனு தான் இன்னைக்கு செய்ய சொன்னேன்." என்றவர் அனுவைப் பார்க்க…

" ஆமாம் நீ தானே இன்னைக்கு உன் ஃப்ரெண்டை வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன். அதைச் செய்யுங்க, இதைச் செய்யுங்க என்று அலப்பறை செய்தீயே. ஏன் அவ வரலையா?" என்றார் ருக்குமணி.

" அது… அவளுக்கு திடீர்னு ஒரு வேலை வந்துடுச்சு. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வீட்டுக்கு வரேன்னு சொன்னா." என்று மெல்லிய குரலில் கூறினாள் அனன்யா.

ருக்குமணி ஒரே நொடியில் கண்டுக் கொண்டார். " ஓ… அந்த மகாராணி வரலைன்னா விட்டுத் தள்ளு. நம்ம ஸ்டேட்டஸ்க்கு உன்னோட ஃப்ரண்ட்ஷிப் வெச்சுக்கவே அவளுக்கு தகுதித் கிடையாது. இதுல நீ கூப்பிட, கூப்பிட…
ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குப்போக்கு தான் சொல்லிட்டு இருக்கா. சரியான திமிரு பிடிச்ச பொண்ணா இருப்பா போல. இதுக்கு போய் நீ கவலைப்படுவீயா?

இல்லை நம்ம குடும்பமே கால்ல விழுந்து, ஆரத்தி எடுத்து வீட்டுக்கு கூப்பிட்டா தான் வருவாளா. சரி உன்னோட ஃப்ரெண்டாச்சே நினைச்சா… எவ்வளவு கொழுப்பு… இனி அவளா இந்த வீட்டுக்கு வந்தாலும், என் முகத்துல அவ முழிக்கக் கூடாது." என்றுக் கூற…

"பாட்டி… அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அவ என் ஃப்ரெண்ட்." என்று வேகமாகக் கூறிய அனுவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

" சரி… சரி… அழாத… உன் ஃப்ரெண்டை நான் ஓன்னும் சொல்லலை." என்று தனது பேத்தியை கொஞ்சி, அவளை சாப்பிட வைத்தார்.

ருக்குமணி சொன்ன மாதிரியே, ஆரத்தி எடுத்து தான் ராதிகா இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கப் போவதை அப்போது அவர் அறியவில்லை. அது மட்டுமல்லாமல் ராதிகாவை, ருக்குமணி பார்க்கவே போவதில்லை.

கொஞ்சம் சாப்பிட்ட அனு, "போதும் பாட்டி. இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது." என்று விட்டு எழுந்து அவளது அறைக்குச் செல்ல…

ருக்குமணியும் பேத்தியை நினைத்து புலம்பிக் கொண்டே தனது அறைக்குச் சென்றார்.

கௌரி தான், தனது அண்ணியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

" அண்ணி… இந்த அம்மாவ என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அனுவுக்கு செல்லங் கொடுத்தே கெடுக்கிறார். யாருன்னே தெரியாத பொண்ணை இப்படி பேசுறார்."

" விடு கௌரி… இன்னைக்கு நேத்தா அவர் இப்படி இருக்கிறார். எப்பவுமே அப்படி தான். அவருக்கு அனுவா, ரூபனான்னு கேள்வி வந்தாலே, அனுவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. ஹும் நாளைக்கு ரூபனுக்கு கல்யாணம் பண்ணி வரப் போறவளை ஏதாவது சொல்லி கஷ்டப்படுத்திட்டா என்ன செய்யறதுன்னு தான் என் கவலையே." என.

" அண்ணி…" என்ற கௌரி விக்கித்து நின்றாள்.

" ஹேய் கௌரி… நான் ஏதேதோ லூசு மாதிரி உளறுறேன். நீ எதையும் மைண்ட்ல ஏத்திக்காத. ரூபன் அவனோட மனைவியை அப்படி ஒன்றும் விட்டுக் கொடுத்திட மாட்டான். " என்று அவளை சமாதானம் செய்தவர், அவரது வேலையைக் கவனிக்க சென்றார்.

வராத மருமகளோட கௌரவத்தை நினைத்து வருத்தப்பட்டவரே பின்னாளில் தனது மருமகளை வருத்தப்படுத்தப் போவதையும், யார் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பான் என்று நம்பினாரோ, அவனே அவரது நம்பிக்கையை உடைக்க போவதையும் அப்போது அறியவில்லை அந்த அப்பாவி குடும்பத் தலைவி.

ராதிகாவுடன், சந்தோஷமாக டைம் ஸ்பென்ட் பண்ணி வந்தவனது முகமெல்லாம் ஜொலிக்க, ரகசியமாக சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் விஸ்வரூபன்.

இன்றைய நாள் அவனுக்கு பொக்கிஷமான நாள். அந்தளவுக்கு ராதிகாவின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி, அவளது எதிர்கால கனவுகளையெல்லாம் கேட்டு, என்ஜாய் செய்து இருந்தான்.

அவளை தஞ்சாவூருக்கு பஸ் ஏற்றிவிட்டு வீட்டிற்குள் வந்தவன், தனக்கு உணவு வேண்டாம் என்று ரஞ்சிதத்திடம் கூறிவிட்டு மாடிக்கு ஏற முயன்றான்.

" தம்பி… அனுவை சாப்பிட வர சொல்லு. மதியமும் ஒழுங்கா சாப்பிடலை. இப்பவும் வேண்டாம்னு சொல்லிட்டா. என்ன தான் அவளுக்கு பிரச்சனைன்னு சொல்ல மாட்டேங்குறா?"

" ஓ… பாட்டி சாப்பிட்டாங்களா மா?" என்றுக் கேட்டான்.

" அது… இன்னும் இல்லை பா." என்று மெதுவாகக் கூறினார்.

" மா… அவங்க சாப்பிடலைன்னா எனக்கு உடனே ஃபோன் பண்ண வேண்டியது தானே…"

" உனக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. "

" சாரி மா… என்னோட ஃப்ரெண்டோட வெளியே போயிருந்தேன். ரியல்லி சாரி மா." என்றவன் ரஞ்சிதத்தின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டான்.

" பரவால்ல விடு பா. நீ முக்கியமான கேஸ்ல இருப்பீயோ என்று நினைச்சேன். நீ போய் அவங்க ரெண்டு பேரையும் பாரு. "

" ம்… சரி மா…" என்றவன் அனுவின் அறைக்குள் நுழைய.

அவளோ தூங்குவது போல கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தாள்.

" அனு… டோன்ட் ஆக்ட் லைக் ஸ்லீப்பிங். நீ முழிச்சிட்டு இருக்க என்று எனக்கு நல்லா தெரியுது. எழுந்திரு…" என்று விஸ்வரூபன் அதட்ட…

" தூக்கமா வருது மாமா… உங்களுக்கு என்ன பிரச்சினை" என்றாள் அனு.

" நீ எதுக்கு இப்போ சாப்பிடாமல் இருக்க? உன்னால பாட்டியும் சாப்பிடாமல் இருக்காங்க."

" வாட்? பாட்டி சாப்பிடலையா? நான் தான் எனக்கு பசிக்கலை, சாப்பாடு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க பாட்டி என்று சொன்னேனே." என்றவள் வேகமாக பாட்டியின் அறைக்குச் சென்றாள்.


" ஏன் பாட்டி இப்படி சாப்பிடாம இருக்கீங்க. உடம்பு என்னத்துக்காகும். நான் தான் மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரியா இருக்குன்னு சொன்னேனே. சரி வாங்க பாட்டி. வந்து சாப்பிடுங்க." என்றுக் கூற.

" நீ மதியம் சாப்பிட்ட லட்சணம் தான் தெரியுமே. அதுவுமில்லாமல் நைட்டு உன்னோட சாப்பிடாமல், நான் என்னைக்கு தனியா சாப்பிட்டுருக்கேன்." என்ற ருக்குமணியின் பதிலில், குற்றவுணர்ச்சியில் தவித்தாள் அனன்யா.

" ஸாரி பாட்டி." என்றவளின் கண்கள் கலங்க.

" சரி டா … இதுக்கு எதுக்கு நீ கண் கலங்குற? எல்லாம் உன்னோட ஃப்ரெண்டு அந்த தஞ்சாவூர்காரியால வந்தது. அவ வீட்டுக்கு வரலைன்னு தானே நீ அழுதுட்டு வந்த. இன்னைக்கு சொல்றது தான் அனு. அவப் பேச்சே இந்த வீட்ல வரக்கூடாது." என்று ருக்குமணிக் கூற.

தனது பாட்டியை ஒரு பார்வை பார்த்தவன், அனன்யாவை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தான்.

அவனது பார்வை அவளை ஊடுருவ, அப்பொழுதுதான் தான் செய்த தவறை உணர்ந்தாள் அனன்யா. பாட்டிக்கு தான் எந்த அளவு முக்கியம்… என் முகத்தில் சின்ன வாட்டம் இருந்தாலும், அவர் எவ்வளவு வருத்தப்படுவார்‌ என்னை யாராவது அழ வைத்தால் அவங்களை லேசில் விட்டு விட மாட்டார்.
அப்படியிருக்க… மதியம் ராதிகாவை பற்றிப் பேசிய விஷயத்தை மறந்து இருப்பார் என்று நினைத்தது எவ்வளவு பெரிய மூடத்தனம்.' என்று நொந்துக் கொண்டிருந்தாள்.

அவளது யோசனையைத் தடை செய்வது போல, " சீக்கிரமா சாப்பிடுங்க ." என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறி விட்டு விடுவிடுவென வெளியே சென்று விட்டான் விஸ்வரூபன்.

அவனது கோபத்தைப் பார்த்தே தனது தவறும் புரிந்தது. ' இனிமேல் அவர்களுக்கு இடையூறாக நான் இருக்க மாட்டேன்.' என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள், பாட்டியுடன் உணவருந்த சென்றாள்.

" நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவன் எதற்கு?"

இனிமேல் தான் அவர்கள் இருவருக்கும் இடையில் நன்றாக நுழைய போகிறாள் அனன்யா.

இன்று...

தன் குடும்பத்தை வழியனுப்பி விட்டு உள்ளே வந்த ராதிகா தனியாக நின்று கொண்டிருந்தாள் . அவளது பார்வையோ, வாசல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தது.

திடீரென்று அவளது தோளில் ஒரு கை விழ…

திரும்பிப் பார்த்தாள் ராதிகா.
" அம்மா… " என்று அழைக்க.

" ராது‌… நான் என்னைக்கும், உனக்கு அம்மா தான். உனக்கு என்ன பிரச்சினைனாலும் சொல்லு. நான் பார்த்துக்கிறேன். இப்ப உள்ள வா." என்ற கௌரி, அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.

" உன் லக்கேஜ்லாம் மாடில இருக்கு. இது என்னோட சேரி தான். இதைக் கட்டிக்கோ. " என்று கவர் கூட பிரிக்காத காட்டன் சாரியை எடுத்துக் கொடுத்தார்.

" மா… " என்று தயங்கிய ராதிகாவை,

" எதுவும் சொல்லாத… நீ போய் முதல்ல ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு, ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா." என்று ரெஸ்ட் ரூம் பக்கம் அனுப்பினார்.

ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த ராதிகாவை அந்த அறையிலே கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ள சொன்னவர், ரஞ்சிதத்தை தேடிக் கொண்டு வெளியே சென்றார்.

ரஞ்சிதமோ கிச்சனில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்‌.

அங்கே சென்றவர், வேலை செய்துக் கொண்டிருந்த வேலையாட்களை ஒரு பார்வை பார்க்க…

அவர்களோ ஒரு பார்வையாலே வெளியேறினர்.

" ஏன் அண்ணி? இப்படி பண்ணீங்க? ரூபன் தான் புரியாமல் கோபத்தில் பேசுனா, நீங்களும் இப்படி இருக்கலாமா… கடைசியா அம்மா, உங்க மருமகளை விட்டுக் கொடுத்துடுவாங்களோ என்று நினைச்சு பயந்துட்டு, இப்போ அவங்க
இல்லாத குறைக்கு நீங்களே இப்படி பண்ணிட்டீங்க. அம்மா மாதிரி நீங்களும் ஒரு சராசரி மாமியார் என்று நிரூபிச்சிட்டீங்க.

இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த முதல் நாளே அவள வருத்தப்பட வச்சிட்டீங்க. வீட்ல அவ மட்டும் தனியே நிற்குறதப் பார்த்தா எப்படி இருந்தது‌ தெரியுமா? நம்ம அனு அவ வாழ்க்கையை தொலைச்சிட்டு, ஹாஸ்பிடல்ல நின்னு கதறுனாளே அது தான் ஞாபகத்துக்கு வந்தது." என்ற கௌரி கண் கலங்கக் கூற.

" எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா கௌரி. என் பையனை குறையா நினைக்கிறாங்களே. அவன் பட்ட கஷ்டம் நமக்கு தானே தெரியும்." என்ற ரஞ்சித்தின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

" சரி அழாதீங்க அண்ணி. நடந்து முடிஞ்சதைப் பத்தி எதுவும் பேச வேண்டாம். ராதிகா அம்மா சொன்னதுக்கு அவ என்ன பண்ணுவா? அவங்களுக்கும் நம்ம அனுவோட குழந்தை என்று தெரியாதுன்னு வருத்தப்பட்டாங்க. இனிமேல் ராதிகாக் கிட்ட கோபத்தை காண்பீக்காதீங்க." என்றாள் கௌரி.

" நீ சொல்றது சரிதான் கௌரி. வாழ வந்த மகாலட்சுமியை கஷ்டப்படுத்திட்டேன். சரி வா. இப்பவே போய் நான் மன்னிப்பு கேட்குறேன்." என்றாள் ரஞ்சிதம்.


"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அண்ணி. அவ தூங்கறா. ரூபனுக்கும், ராதிகாவிற்கும் இடையில் என்ன பிரச்சினை என்று தெரியலை. நாம தலையிடாமல் இருந்தாலே சரியாயிடும்." என்றாள் கௌரி.

"அதுவும் சரி தான். என்ற ரஞ்சிதம் தனது தவறை உணர்ந்து, மருமகளிடம் அனுசரணையாக நடத்துக் கொண்டாள்‌.

இரவு எந்த வித பார்மாலிட்டிஸும் செய்யாமல் அவனது அறைக்கு அனுப்பி வைத்தார்.

உள்ளுக்குள் லப் டப், லப் டப் என்று இதயம் முரசடிக்க பயத்துடனே உள்ளே நுழைந்தாள்.

நல்லவேளை விஸ்வரூபன் அங்கில்லை.

பெருமூச்சு விட்டுக் கொண்டே அந்த அறையை சுற்றிப் பார்த்தாள்.

பிரம்மாண்டமான மாளிகைக்கு ஏற்ற மாதிரி, பெரிய அறை தான்.

ஒரு பெரிய கட்டில் நடுநாயகமாக இருக்க… ஒரு புற சுவரில் இருகதவுகள் இருந்தது.

'டிரஸ் மாத்த வேண்டும் லக்கேஜ் எல்லாம் இங்கு தான் இருக்கிறது என்று கௌரி மா சொன்னாங்களே. எங்கே இருக்கும்?' என்று யோசித்துக் கொண்டே ஒரு கதவை திறந்துப் பார்த்தால் அது குழந்தைக்கான அறை. பிங்க் நிறத்தில் மெத்தை விரிப்பு, கார்ட்டன் எல்லாம் இருக்க. சுற்றிலும் உள்ள சுவர், கஃபோர்ட் எல்லாம் மிக்கி மவுஸ் வரைந்து, அந்த அறையே அழகாக இருந்தது‌.

அடுத்த கதவை திறக்க, அதுவோ டிரெஸ்ஸிங் ரூமுடன் கூடிய ரெஸ்ட் ரூம்.

உள்ளே சென்றவள் அங்கிருந்த அவளது லக்கேஜிலிருந்து, நைட் ட்ரெஸை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்று வந்தாள்.

வெளியே வந்தவளோ, விஸ்வரூபனுக்காக காத்திருந்தாள்.

அவனிடம் எப்படி பேசுவது. என்ன பேசுவது ஒன்றும் புரியாமல் டென்ஷனோடு இருக்க…

சற்று நேரம் கழித்து குழந்தையுடன் வந்தான் விஸ்வரூபன்.

அவன் வந்ததும் கட்டிலில் உட்கார்ந்து இருந்தவள் எழுந்திருக்க, அவனோ அவளை ஒரு பொருட்டாக நினைக்காமல் குழந்தையின் அறையில் நுழைந்து வேகமாக கதவை சாற்றினான்.

இப்போது மூடிய கதவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

' நான் என்ன தவறு செய்தேன். உண்மையில கோபப்பட வேண்டியவள் நான் தான். காதலித்து விட்டு, வேறொருத்தி கழுத்தில் தாலிக் கட்டியதற்கு சட்டையைப் பிடித்து கேள்விக் கேட்க சகல உரிமை உள்ளவள், ஆனால் யாரைக் கேட்பது? உயிர்த்தோழியையா? இல்லை உயிரானவனையா? இரண்டும் அவளால் முடியாததால் தானே ஒதுங்கிப் போனேன்.' என்று மனதிற்குள் குமுறியவள், இரவு முழுவதும் உறங்காமல் இருந்தாள்.

கதவை வேகமாக சாற்றியவனோ, குழந்தை லேசாக சிணுங்கவும் குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டே அந்த மூடிய கதவை வெறித்துப் பார்த்தான்.

அந்த கதவுக்கு பின்னால் இருக்கும் பெண்ணவளின் மனதை புரிந்து தான் இருந்தான். அவள் கோபப்பட்டு தன்னை விட்டு விலக வேண்டும் என்று எண்ணினான்.
மனசாட்சியோ, ' அப்போ ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?' என்றுக் கேட்க. அவனுக்கு மண்டை வெடிப்பது போல் இருந்தது. இரவு முழுவதும் உறங்காமல் அவனும் விழித்தே கிடந்தான்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து கீழே வந்திருந்தாள் ராதிகா.

காஃபியுடன் மாமியாரும், மருமகளும் காலைப்பொழுதை ஆரம்பித்தனர்.

இவள் வந்த சற்று நேரத்திலே விஸ்வரூபனும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே வந்தான்.

" மா… நான் வாக்கிங் போயிட்டு வரேன். அம்மு அவ ரூம்ல இருக்கா." என்று குரல் கொடுத்து விட்டு சென்றான்.

" சரி பா." என்றவர் குழந்தைக்கு கொடுப்பதற்காக பால் கலக்க…

அதற்குள் அழும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆயா மா வந்தார்.

குழந்தையை தூக்க மனம் பரபரத்தாலும் அவன் சொன்னதைக் கேட்டு, இருந்தாள்.

அவளது பார்வையோ குழந்தையை நோக்கியே இருந்தது.

ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவளது பார்வையை கண்டுக் கொண்டார்.

'குழந்தையையும், ராதிகாவையும் சீக்கிரமே சேர்க்க வேண்டும். ' என்று எண்ணியவர், அதற்கான வழியையும் கண்டுக் கொண்டார்.

இன்றே விஸ்வரூபனிடம் பேச வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கு அவன் இடம் கொடுக்காமல் சீக்கிரமாகவே ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்று விட்டான்.

இப்படியே இரண்டு மூன்று நாட்கள் சென்றது.

ஒருநாள் காலை உணவை உண்டு கொண்டிருக்கும்போது வித்தியாசமான டேஸ்ட் ஆக இருக்க, ரசித்து சாப்பிட்டான்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்து ரஞ்சிதம்," ராதிகா தான் செய்தா பா …" என்றுக் கூற…

வாயருகே எடுத்துட்டு போன உணவை கீழே போட்டவன் ரஞ்சிதத்தைப் பார்த்து முறைத்தான். அவன் கீழே போட்டதைப் பார்த்து ராதிகாவின் கண்கள் கண்ணீரை விட வா என்பது போல் இருக்க…

அவனோ, " ச்சே… உங்க மருமக என்ன நினைச்சுட்டு இருக்கா… இப்படி வீட்டிலேயே வேலைப் பார்த்துட்டு ஜாலியா இருக்கலாம் என்று பார்க்குறாளா? பணத்தோட அருமை தெரிஞ்சா தானே. இல்லைன்னா இப்படி காலேஜுக்கு போகாமல் இருப்பாளா?" என்று வார்த்தைகளை கொட்ட…

ராதிகாவோ மனம் துடிக்க, அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.


தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 19

அன்று…

" சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம்." என்பது அனன்யாவுக்கு நன்கு புரிந்தது.

ராதிகாவையும், ரூபனையும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிப் போக…

அவர்கள் இருவரும் ஃபோன் மூலமாக காதலை வளர்த்தனர்.

ரிசல்ட் வரும் வரை காத்திருந்த அனன்யா, ரிசல்ட் வந்த பிறகு அவர்களது ஹாஸ்பிடலிலே கொஞ்ச நாள் ஃப்ராக்டிஸ் சென்றாள்.

பிறகு மேற்படிப்புக்கு எக்ஸாம் எழுதி காலேஜில் சேர்ந்து விட்டாள். அது வரைக்கும் தனது முகத்தில் சிறு வருத்தத்தைத் கூட வரவிடாமல், தன்னை உற்சாகமாகக் காட்டிக் கொண்டாள்.

புதுசு புதுசாக எதையாவது கற்றுக் கொள்கிறேன் என்று வீட்டை ரெண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.

ருக்குமணியும் பேத்தியின் குறும்புத்தனத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ருக்குமணி அனன்யாவை மேற்படிப்பு படிக்க தங்களது காலேஜ்ல சேரட்டும் என்றுக் கூற...

விஸ்வரூபனோ, " பாட்டி… அதெல்லாம் சரி வராது. இங்கே இருந்தா அவளுக்கு அனுபவம் கிடைக்காது." என்றுக் கூறியவன் வேறொரு சிறந்த காலேஜில் சேர்த்துவிட்டான்.

இதற்கும் ருக்குமணி முணுமுணுக்க… அவன் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் இருந்தான்.

விஸ்வரூபன், ராதிகாவிடம் ஃபோனில் பேசும் போது, " அனன்யாவை காலேஜ்ல சேர்த்துட்டோம் ராதா." என.

" ஓ… அவ சொல்லவே இல்லையே."

" நீயாச்சு… உன் ஃப்ரெண்டாச்சு உங்களுக்கு இடையில் நான் வரலை. என்னை ஆளை விடு. எதுவா இருந்தாலும் நீ அவக் கிட்டயே கேளு." என்ற விஸ்வரூபன் வைத்துவிட.

உடனே அனன்யாவிற்கு அழைத்து விட்டாள் ராதிகா.

" அனு… எப்படி இருக்க டி. ஆளையே காணும். ஒரு ஃபோன் கால் கூட இல்லை." என.

" ம்… நான் நல்லா இருக்கேன் மேடம்‌ நீங்க தான் பிசியா இருக்கீங்க." என்று அனு கலாய்க்க.

" அது…" என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

" மேடம் வேலையிலே பிஸியா இருக்கீங்க. கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கனவில் மிதக்க தான் டைம் இருக்கிறது. நான் டெய்லி அம்மா கிட்ட பேசிட்டு தான் இருக்கேன். அதுக்கூட உனக்குத் தெரியலை.காதலர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தான் என்று பொறுமையா இருந்தா என்னையே கிண்டல் பண்ணுறீயா? " என்று அனுக் கூற.

" சாரி டி அனு. அதை விடு. காலேஜ் நீ என்னோட தான் சேருவே என்று நினைச்சேன். ஆனால் நீ பீ.ஜி ஜாயின் பண்ணப் போறீயா?" என…

"நீ தான் இரண்டு வருஷமாவது வொர்க் பண்ணிட்டு தான், பீ.ஜி பண்ணணும் என்று சொன்ன… அதுவுமில்லாமல், நீ எப்படியும் கார்டியாலஜி தான் படிக்கப் போற? நான் டி ஜி ஓ படிக்கப் போறேன். அதான் நான் இப்பவே சேர்ந்துட்டேன்.

எப்படியும் நீ எங்க வீட்டுக்கு தான வரப் போறே. அப்ப உன்னை விடாமல், உன் கூடவே சுத்துறேன். போதுமா? " என்ற அனு சிரிக்க சிரிக்க கேலி செய்து போனை வைத்தாள்.

ராதிகாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல். ஆனால் அது என்ன என்று யோசிக்கவில்லை.அப்படியே விட்டுவிட்டாள்.

காலங்கள் வேகமாக ஓட ராதிகாவிற்கு ஹாஸ்பிடலுக்கு செல்வதில் பொழுது போனது. மிச்ச சொச்ச நேரத்தை விஸ்வரூபன் விழுங்கினான்.

அனுவும் காலேஜுக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்.

அங்கு சென்று தான் ஆகாஷின் அறிமுகம் கிடைத்தது. ஆனால் உடனே கிடைக்கவில்லை.

முதல் நாள் காலேஜில் அனன்யா நுழைய… மனமோ, ஒரு வெறுமையை சுமந்திருந்தது. ' இப்போ மட்டும் ராது என் கூட இந்த காலேஜிற்கு வந்திருந்தா, எவ்வளவு ரகளை பண்ணிருப்போம். முதல் நாளே இவ்வளவு இரிட்டேட்டிங்கா இருக்கு. எப்படி நான் படிச்சு, மகப்பேறு மருத்துவரா ஆகப் போறேனோ.' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தவள், எதிரே வந்த நெடியவனின் மேல் மோதி நின்றாள்.

" ஹேய் பார்த்து…" என்றவனை நிமிர்ந்துக் கூடப் பார்க்காமல், " சாரி…" என்று ஒரு தலையசைப்புடன் நகர்த்துச் சென்றாள்.

பூக்குவியல் போல தன் மேல் மோதிச் சென்றவளை, ஆர்வமாக பார்த்தான் ஆகாஷ்.

இதுவரை அவன் பார்த்த பெண்கள், அவனது கவனத்தை கவரவே முயல்வார்கள்.

அவளோ, கல்லோ, மண்ணோ என்பது போல் ஆகாஷை பார்த்து விட்டு,அமைதியாக சென்று விட..

அவளது அமைதியே, ஆகாஷின் கவனத்தை ஈர்த்தது.

அன்றிலிருந்து, அவளைப் பார்ப்பதே ஆகாஷின் முக்கிய வேலை.

அங்கு படிக்க வந்திருந்தவர்கள், தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆராவாரமாக இருக்க. இவளோ, ஆர்ப்பாட்டமே இல்லாமல் கவனத்தை படிப்பில் வைத்தாள்.

அவள் கூடத் தான் ஆகாஷ் படிக்கிறான் என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

' தன்னைப் போல அன்புக்கு ஏங்குகிற ஜீவன்.' என்று நினைத்த ஆகாஷுன் மனதில் பார்த்த உடனே பதிந்தாள்.

அவனுக்கோ எப்படியாவது அவளிடம் பேசி முதலில் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.

அதற்கான வாய்ப்பு உடனே கிடைக்கவில்லை. ஒரு மாதம் சென்ற பின்னே தான் கிடைத்தது.

ஒரு நாள் கிளாஸ் முடிந்து ஃப்ரீ டைம் கிடைத்ததும், வழக்கம் போல லைப்ரரிக்கு சென்றிருந்தாள்.

எப்படியும் அனன்யா லைப்ரரிக்கு தான் வருவாள். 'இன்றாவது தன்னைக் கண்டு கொள்கிறாளா? பார்ப்போம்…' என்று நினைத்த ஆகாஷ், அவளுக்கு முன்பே வந்திருந்தான். பேருக்கு ஒரு புக்கை கையில் எடுத்து வைத்துக் கொள்ள‌...

லைப்ரரியில் நுழைந்த அனன்யாவோ ஒரு மெடிக்கல் சம்பந்தமான புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தாள்.

அதுவோ ஆகாஷின் கைகளில் இருந்தது.

அதை ஒரு கணம் பார்த்த அனு,' கேட்போமா? வேண்டாமா?' என்று தனக்குள் யோசிக்க…

ஆகாஷ் கண்டுக் கொண்டான். அவளுக்குத் தேவையான புத்தகம் தன் கையில் இருக்கிறது.

கடவுளுக்கு நன்றியை மனதிற்குள் கூறிக் கொண்டு, இந்த சான்ஸை மிஸ் பண்ண வேண்டாம் என்று எண்ணியவன், அவளருகே சென்று, " ஹலோ அனன்யா… உங்களுக்கு இந்த புக் வேண்டுமா ?" என்று வினவ…

"ஆமாம்…" என்றுக் கூறியவள்,

அவன் புத்தகத்தை நீட்டவும், "இல்லை வேண்டாம்." என்றாள்.

" பரவால்ல நீங்க படிச்சுட்டு தாங்க. நான் அப்புறமா படிக்கிறேன்." என்று வற்புறுத்தி அவளிடம் கொடுத்துவிட்டு சென்றான்.

இப்படி ஆரம்பித்தது தான் அவர்களுக்கிடையேயான பழக்கம்.

ஒரு நாள் இருவரும் படிப்பை பற்றி சுவாரசியமாக பேசும்போது, அனு அவனை வாயே திறக்க விடாமல் கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய வால்தனம் மீண்டும் ஆரம்பமாகிருந்தது.

" அனு... உன்னப் பார்த்தா அமைதியான பொண்ணுன்னு நெனச்சேன். ஆனால் சரியான அராத்தா இருக்க." என்று அவளைப் பார்த்து புன்சிரிப்புடன் கூற‌.

" ஹலோ ஆக்ஸ்…. நான் சொன்னேனா நான் அமைதியான பொண்ணுன்னு. ஆனால் உங்களுக்கு எல்லாம் அமைதியான பொண்ணா இருந்தா தானே பிடிக்கும். எங்களை போல வஞ்சமில்லா நெஞ்சமுள்ள வஞ்சியரை யாருக்கு பிடிக்கும்?" என்று குறும்பாக அவனைப் பார்த்துக் கூறினாள் அனு.


" யார் சொன்னா? உன்னை பிடிக்காது என்று. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என் உயிர் மூச்சு இருக்கும் வரை உன்னோட வாழ ஆசை.

அப்புறம் ஆக்ஸ் என்று மட்டும் கூப்பிடாதே. எருமை என்று வேண்டும்னாலும் கூப்பிடு. உனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு." என்ற ஆகாஷ் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தப்படியே தனது காதலை சொன்னான்.

அதிர்ச்சியில் வாயைப் பிளந்த அனன்யா,என்ன பதில் சொல்வது என்றுத் தெரியாமல், அங்கிருந்து ஓடி விட்டாள்.

அவளுக்கு யாரிடமாவது ஷேர் செய்து, ஒப்பினியன் கேட்க வேண்டும் என்று தோன்ற… விஸ்வரூபனிடம் சென்று பேசலாம் என்று எண்ணி, அவனது அறைக்குச் செல்ல‌… அவனோ, ராதிகாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான்.

இவளைப் பார்த்ததும் என்னவென்று சைகையால் விசாரித்தான்.

" பேசணும் மாமா." என்று மெதுவாக வாயசைத்தாள்.

"ஐந்து நிமிடம்…" என்று கண்களால் கெஞ்சியவன், எத்தனை ஐந்து நிமிடங்கள் கழித்தும் ஃபோனை வைத்தபாடில்லை.

தனது மாமா, காதலியிடம் பேசும் அழகை ரசித்துப் பார்த்தவள், மனதிற்குள்ளோ,' நாமும் ஆகாஷுக்கு ஓகே சொன்னா என்ன?' என்று நினைத்தாள்.

விஸ்வரூபனிடமும், ராதிகாவிடமும் கலந்து பேசி, பிறகு ஆகாஷிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவள், விஸ்வரூபன் இப்போதைக்கு வருவதாக இல்லை எனவும் தன்னிச்சையாக முடிவெடுத்து, தன் காதலை ஆகாஷிடம் உடனடியாகத் தெரிவித்தாள்.

ஆகாஷ் வீட்டில் நிலையில்லாமல் தவித்ததுக் கொண்டிருக்க, அப்போது தான் உள்ளே நுழைந்த ஆதி, " டேய் அண்ணா? என்ன இவ்வளவு சோகமா இருக்க?"

" நான் ஒன்னும் சோகமா இல்லை. ஆமாம் நீ எங்க போயிட்டு வர்ற?"

" நம்ம ஹாஸ்பிடலுக்குத் தான் போயிட்டு வர்றேன். நீ சாப்டியா ஆகாஷ்?"

" எனக்கு பசிக்கல. நீ சாப்பிடு." என்றவன் தனது அறைக்கு செல்ல…

தன்னிடம் ஒழுங்கா பேசாமல் செல்லும் அண்ணனையே குழப்பத்துடன் பார்த்தான்.

அறைக்குள் சென்ற ஆகாஷ், அமைதியிழந்து தவிக்க. அவனது ஃபோன் அடித்தது.

யார் என்றுப் பார்க்க ‌… அழைத்ததோ அனன்யா.

அவனுக்கு நம்பமுடியாமல் இருந்தது.

ஆகாஷ் இன்று தனது காதலை அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பேசிக் கொண்டிருக்கும் போது தானாக வந்து விட்டது. அவள் பதில் கூறாமல் சென்றதில் தான் வீட்டிற்கு வந்தவன், வருத்தத்தோடு சுற்றிக் கொண்டிருக்க…

இப்பொழுது அவள் ஃபோன் செய்யவும் அவனுக்கு கொஞ்சம் படபடப்பைக் கொடுத்தது.

ஃபோனை ஆன் செய்தவன் ஒன்றும் பேசாமல் இருக்க…
" ஹலோ… ஹலோ… ஆக்ஸ் இருக்கீயா?" என்று அனன்யா படபட பட்டாசாகப் பொறிய.

" ம்… என்ன அனு?"

" அது வந்து…. நீ சொன்னதுக்கு எனக்கு ஓகே." என சொல்ல…

அவனுக்கோ ஒரே மகிழ்ச்சி. அதை மறைத்துக் கொண்டு, " ஆமாம் நான் என்ன சொன்னேன்?" என.

அனுவோ, பல்லைக் கடித்துக்கொண்டு," ம் அது தான். உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு , வாழ்நாள் முழுக்க இம்சை பண்ணலாம்னு முடிவு எடுத்துவிட்டேன்." என்றுக் கூற‌…

" அதுக்கு தானே காத்திட்டுருக்கேன்."

" ஓகே … லவ் அக்ஸப்ட் பண்ணியாச்சு. நெக்ஸ்ட்…" என்று ஏதோ அனு கூற வர…

" ஹேய் வெயிட்… விட்டா நாளைக்கே கல்யாணத்தை பண்ணிக்கிட்டு, குழந்தையும் பெத்துப்ப போல.கொஞ்சம் பொறு."

" ப்ச் ஆக்ஸ். உங்க வீட்ல யார், யார் இருக்காங்க சொல்லு என்று தான் கேட்க வந்தேன். ஸார் தான் ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க." என்று கலாய்க்க...

" ஓ… அவ்வளவு தானா. நான் என்னவோ நினைச்சேன். என்னை ஏமாத்திட்ட… சரி விடு. அப்புறம் எங்க வீட்ல, எங்க அப்பா, அம்மா இரண்டு பேருமே டாக்டர்ஸ். தம்பியும் டாக்டருக்கு படிச்சுட்டு இருக்கான். அவன் தான் எனக்கு எல்லாமே. உனக்கு ஒரு நாள் அறிமுகப்படுத்துறேன்." என்றவன் பிறகு ஸ்வீட் நத்திங்ஸாக பேசிவிட்டே வைத்தான்.

நாட்கள் வேகமாக செல்ல… ஒரு நாள் ஆகாஷ், " அனு… நாளைக்கு நான் காலேஜுக்கு லீவ். என் தம்பியோட பிறந்தநாள். அன்னைக்கு முழுவதும் அவனோட தான் இருப்பேன்.

நீ நாளைக்கு ஈவினிங் எங்க வீட்டுக்கு வர்றீயா? தம்பியோட பர்த்டே பார்ட்டி இருக்கு.

எங்க ஃபேமிலியையும் இன்ட்ரொடியூஸ் பண்ணுறேன்." என

" ம் சரி… அப்புறம் உங்க தம்பிக்கு என்ன சர்ப்ரைஸ் பண்ணப் போற."

" சர்ப்ரைஸா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை." என்று ஆகாஷ் கூற…

"இப்படியுமா ஒரு அண்ணன் இருப்பாங்க. " என்று திட்டிய அனு, " ஓகே… நாளைக்கு நானும் காலேஜுக்கு லீவ் போட்டுறேன். அட்ரெஸ்ஸ ஷேர் பண்ணு. காலையிலே வர்றேன். உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்கள்ல…"

" அதெல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது. மகாராணியின் வரவுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்." என்ற ஆகாஷ் புன்னகைக்க…

அவளும் புன்னகைத்தாள்.

மறுநாள் கோலாகலமாக ஆதியின் பிறந்த நாளை கொண்டாடினார். ஆதிக்கும் அவளை ரொம்ப பிடித்து விட்டது.

இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தான் ஆகாஷ்.

ஆனால் இன்று தான் இருவருக்கும் ஒருவரை, ஒருவர் அறிமுகம் செய்து இருந்தான் ஆதவன்.

" அனு… இவன் தான் என்னுடைய தம்பி, ஃப்ரெண்ட், வெல்விஷர் எல்லாமே இவன்தான்."என்று ஆதியைக் கட்டிப்பிடித்துக் கொண்டுக் கூற…

அனுவோ, " எனக்குத் தான் தெரியுமே ஆக்ஸ்." என்றாள்.

" ஆதி… இவ தான் என்னோட சரிபாதி. உன்னோட அண்ணி." என.

" என்னது அண்ணியா? பார்க்க பேபியாட்டாம் இருக்காங்க. நான் பேபினு தான் கூப்பிடப் போறேன்." என்ற ஆதி அதே மாதிரி தான் கூப்பிட்டான்.

மூவரும் காலையிலிருந்து உற்சாகமாக இருந்தனர்.

மாலை பார்ட்டியில் தன் பெற்றோரிடமும், அனன்யாவை காதலி என அறிமுகம் செய்ய…

அவர்களும் பெரியதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

உற்சாகமாக இருந்த காதல் ஜோடிகளோடு, ஆதவனும் சேர்ந்துக் கொள்ள, மூவரும் அடிக்கடி வெளியே சென்றனர்.

இப்படியே மகிழ்ச்சியாக சென்ற அவளது வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது.



இன்று…

" டேய் ரூபா… " என்ற குரல், தன் பின்னால் இருந்து ஒலிக்க…

திரும்பி பார்த்தால், கிருஷ்ணன் முறைத்துக் கொண்டு நின்றார்‌.

அவரைப் பார்த்ததும் அமைதியாக, விஸ்வரூபன் இருக்க…

அவரோ, " என்ன நினைச்சுட்டு இருக்க ரூபன்? நான் தான் அவளை ஒன்வீக் லீவ் போட சொன்னேன். இங்க ரெண்டு டாக்டர் வீட்டில் இருக்கோம்‌. அங்க நடத்துற லெசன்ஸ நாங்க உனக்கு கவர் பண்ணிடுறோம் என்று சொல்லியிருந்தேன். என்ன ஏதுன்னு தெரியாமல் நீ இப்படி பேசுறது தப்பு. முதல்ல மன்னிப்பு கேள்." என.

தன் தந்தைக் கூறியதைக் கேட்டவன், தனது தவறை உணர்ந்து, ராதிகாவைப் பார்த்து, " சாரி…" என்றவன் பாதி சாப்பாட்டில் எழுந்து செல்ல முயல…

இப்பொழுது ரஞ்சிதம், " தம்பி சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக் கூடாது. அது நேஷனல் வேஸ்ட்." என்றுக் கண்டிப்புடன் கூற…

தலையசைத்தவன் ஒன்றும் கூறாமல் உண்ண ஆரம்பித்தான்.

"எதுக்காக அண்ணா லீவு போட சொன்னாங்க என்று கேட்கலையா ரூபா?" கௌரி எடுத்துக் கொடுத்தாள்‌‌.

விஸ்வரூபன் தன் தந்தையை பார்க்க…

" நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போறதுக்காகத் தான் லீவ் போட சொன்னேன். எங்கேயும் போகலைன்னா… நம்ம சர்க்குள்ல பெரிய இஸ்யூஸ் ஆகிடும். அதுவும் நம்ம ஸ்டேட்டஸ்காக எல்லாரும் எதிர்பார்ப்பாங்க… சோ டூ ஆர் த்ரி டேஸ் எங்கேயாவது போயிட்டு வந்துடுங்க." என்றுக் கூறியவர் சாப்பிட அமர…

" ஆனா பாப்பா என்னை விட்டிட்டு இருக்க மாட்டா." என்றான் விஸ்வரூபன்.

" பாப்பாவையும் கூட்டிட்டு போ… நோ ப்ராப்ளம்." என்ற கிருஷ்ணன் தன் சாப்பிட்டில் கவனத்தை செலுத்த…

இப்பொழுது கௌரியும், இரஞ்சிதமும் தலையிட்டர்கள். " பாப்பாவை எப்படி இவங்களால பார்த்துக்க முடியும்." என்று வினவ.

" பின்னே நர்ஸ், கேர்டேக்கர் எல்லோரையுமா ஹனிமூனுக்கு அவங்கக் கூட அனுப்ப முடியும். எல்லாம் அவங்க பாத்துப்பாங்க‌. ஒரு குழந்தையைக் கூடப் பார்க்க முடியாதா?" என்று எல்லோரது வாயையும் அடைத்து விட்டார்.

' கேர்டேக்கரை எங்கக் கூட அழைத்துச் செல்கிறோம்.' என்று அடுத்து அதைத் தான் கேட்கலாம் என்று நினைத்திருந்தான் விஸ்வரூபன்.

அதற்கும் கிருஷ்ணன் ஆப்பு வைக்க… குழப்பத்துடனே அங்கிருந்து கிளம்பினான்.

" மாமா… விஷ்வா பேசிய முறை தப்பா இருந்தாலும், நான் படிக்கலைன்ற ஆதங்கத்துல அப்படிப் பேசிட்டார். நீங்க அதைப் பெரிசு பண்ணாதீங்க‌." என்றாள் ராதிகா. மனதிற்குள்ளோ, ' நான் உன் மேல வெறுப்பா இருக்கணும்னு தான் இப்படிலாம் செய்யுற‌… ஆனா என்னைக்காவது என் கிட்ட மாட்டாமலா போவ… அன்னைக்கு வச்சு செய்யுறேன்.' என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

" அதை விடு மா. டூருக்கு எங்கே போறது என்று பேசி முடிவெடுங்க."

" மாமா… அவசியம் போகணுமா. எனக்கு பயமா இருக்கு." என்றாள் ராதிகா.

" மருமகளே… நீ யாருன்னு எனக்குத் தெரியும். நீ படித்த ஸ்கூல்ல நான் தான் ஹெட்மாஸ்டர்… இல்லை, இல்லை… நீ படிக்குற காலேஜில நான் தான் டீன். அதை மறந்துட்டீயா… உன்னைப் பற்றி நல்லா தெரியும். " என்ற கிருஷ்ணன், காலேஜில் அவரைப் பார்த்து கண்ணடித்ததை நினைத்துப் பார்த்தவர் சிரிக்க…

ராதிகாவாலும் சிரிப்பை அடக்க முடியாமல், அசடு வழிய சிரித்து வைத்தாள். கௌரியும், ரஞ்சிதமும் வாஞ்சையாக அவளைப் பார்த்து சிரித்தனர். டெய்லி காலேஜில் நடக்கும் கலாட்டாக்களை தான் கிருஷ்ணன் வந்து கூறிவிடுவாரே…

இதையெல்லாம் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த விஸ்வரூபன், ராதிகாவை வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய ஹாஸ்பிடல் பேக்கை வைத்து விட்டு சென்றிருக்க. அதை எடுப்பதற்காக உள்ளே வந்தவன் ராதிகா பேசிய எல்லாவற்றையும் கேட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

நாட்கள் விரைந்தோட இவர்கள் கேரளாவிற்கு செல்லும் நாளும் வந்தது.

கோபப்படாமல் அமைதியாக இருப்போம் என்று ராதிகா நினைத்தாலும் அவளால் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.

அவளை ஓரக்கண்ணால் பார்த்த விஸ்வரூபனோ, ' எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்கா? அவ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தை தான் நடத்தலை. அட்லிஸ்ட் அவ போகணும்னு நினைச்ச கேரளாவுக்கு அழைச்சிட்டு வந்தா, எதுக்கு முகத்தை தூக்கி வைச்சிட்டு இருக்கா?' என தனக்குள் கேட்டுக்கொண்டான்.

ஒரு வழியாக கேரளா வந்திறங்கினர்.

ட்ராவல் முழுவதும் குழந்தை தூங்கிக்கொண்டே வந்ததால் விஸ்வரூபனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அவர்கள் தங்குவதெற்கென ஏற்பாடு செய்திருந்த ரிவர்ஸ் ரெஸார்டு வந்து சேரும் போது,இரவாகி இருந்தது.

இருவருக்கான உணவை விஸ்வரூபன் ஆர்டர் செய்ய…

ஒன்றும் கூறாமல் இருவரும் உணவருந்தினர்.

பிளைட்டில் நன்றாக உறங்கி இருந்த குழந்தை விளையாட … அவனுக்கு உடம்பு அசதியாக இருந்தாலும்
குழந்தைக்காக, அவள் பின்னே ஓடிக் கொண்டிருந்தான்.

ராதிகாவோ, அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய வேலைகளை பார்த்து விட்டு வந்து படுத்தாள்.

குழந்தையோ, விஸ்வரூபனை நன்றாக வச்சு செய்து விட்டு, உறக்கம் வரவும் அழ ஆரம்பித்தது.

குழந்தை எதற்காக அழுகிறாள் என்பதை புரிந்துக் கொண்ட விஸ்வரூபனோ என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க…

குழந்தையோ அவனது ஃபோனை எடுத்துக் கொடுத்து, " பா… மா…" என்று மழலையில் கூறி விட்டு, அழ…

ராதிகாவை பார்த்தவாறே, ஃபோனை எடுத்து ஆன் செய்தான்.

" யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே" என்று இவளது குரலில் பாடல் ஒலிக்க…

குழந்தையோ சமர்த்தாக படுத்துக் கொண்டது.

ராதிகவோ, 'அடப்பாவி.' என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே பார்க்க…

அவனோ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, லைட்டை ஆஃப் செய்து விட்டு உறங்க முயன்றான்.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 20

அனுவோ உற்சாகத்தில் சுற்றினாள்.

வழக்கம் போல காலேஜ் முடிந்ததும் ஆகாஷுடன் வெளியே போய்விட்டு, ஆதியையும் பார்த்து விட்டு லேட்டாக தான் வீட்டுக்கு வருவாள்.

அவளுக்காக காத்திருந்த ருக்குமணியோ, " அனு… சாப்பிட வா." என்றுக் கூப்பிட…

" ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க பாட்டி." என்று அவரை அமர வைத்து, சாப்பாடு எடுத்து வைத்து விட்டு, உற்சாகமாக பாடிக் கொண்டே தனது அறைக்குச் சென்று விட்டாள்.

ருக்குமணியோ, தன் பேத்தியை ஆராய்ச்சியாகப் பார்க்க… அவரது பார்வையை கூட கண்டுக் கொள்ளவில்லை அனன்யா.

அவள் தான் காதல் என்னும் மாயலோகத்தில் அல்லவா சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

மறுநாள் குடும்பத்தோடு எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, விஸ்வரூனைப் பார்த்து, " டேய் ரூபா… யாரும் அனுவைப் பத்தி கவலைப்படுவதே இல்லை. அவ வீட்ல ஒழுங்காவே சாப்பிடுவதில்லை. எப்பப் பாரு ஃப்ரெண்ட்ஸோட படிக்கிறேன். சாப்டுட்டேன் என்று சொல்றா." என…

எல்லோரும் அவளைப் பார்க்க… அவளோ, திருதிருவென முழித்தாள்.

கிருஷ்ணனும், ரஞ்சிதமும் ' முன்னை விட அழகாக தானே தெரியுறா!' என்று யோசிக்க.

கௌரியோ, ' இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை.' என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

' அனு… என் கிட்ட எதையோ மறைக்கிறாளோ?' என்று யோசித்தப்படியே அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான் விஸ்வரூபன்.

அனுவின் முகத்தில் தெரியும் அதிகப்படியான தேஜஸ்ஸை பார்த்தவன், ' ஏதோ சரியில்லலையே…' என்று எண்ணியவன், " யார் அந்த ஃப்ரெண்ட்ஸ். சண்டே வீட்டுக்கு கூட்டிட்டு வா." என்றான்.

" ம்… சரி மாமா." என்றவளின் முகமோ மலர்ந்தது. ' எப்படியோ முதலில் ஆகாஷை அழைத்து வந்து நண்பன் என்று அறிமுகப்படுத்த வேண்டும். அவன் எல்லோரிடமும் நன்கு பழகிய பின்பு, தங்கள் காதலை சொல்லி பர்மிஷன் வாங்க வேண்டும்.' என்று எண்ணினாள்.

அது மட்டுமா,' எப்படியும் பாட்டி தனக்குத்தான் சப்போர்ட்டாக இருப்பார்கள்.' என்று நினைத்தவள் பாட்டுப் பாடிக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.

விஸ்வரூபனோ தலையசைத்து, ' ஏதோ சரியில்லை.' என்று எண்ணிக்கொண்டே ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான்.

எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

உற்சாகமாக காலேஜுக்கு கிளம்பி வந்த அனன்யாவோ, எப்படா ஃப்ரீ டைம் கிடைக்கும் என்று காத்திருந்து, ஆகாஷை அழைத்துக் கொண்டு கேண்டீனுக்குச் சென்றாள்.

" என்ன அனு? ரொம்ப பசிக்குதா? இவ்வளவு வேகமா இழுத்துட்டு வர்ற? என்ன வேணும் சொல்லு. நான் வாங்கிட்டு வரேன்." என்ற ஆகாஷை கொலைவெறியோடு பார்த்தாள் அனன்யா.

' என்ன தப்பா கேட்டோம். இப்படி பாசமா பார்க்குறா?' என்று யோசனையாகப் பார்க்க…

" ஐயோ! ஐயோ! உன் அறிவை மியூசியத்துல தான் வைக்கணும் ஆக்ஸ். உன் கிட்ட முக்கியமான விஷயத்தை சொல்லணும்னு ஆசையா கூப்பிட்டு வந்தா… சாப்டுறதுலே இரு… " என…

' அடிப்பாவி… வாரத்துல பாதிநாள் பசிக்குதுன்னு சொல்லி கேண்டீன்ல மொக்குவீயே… அதனால் தானே கேட்டேன்.' என்று மனதிற்குள் புலம்பியவாறே, " என்ன அனு டார்லிங்.
உங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா. அதான் உன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுதா?" என்று கேட்டான் ஆகாஷ்.

" ஆசையப் பாரு. அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் இன்னும் உன்னை லவ் பண்ற விஷயத்தை சொல்லலை. டெய்லி ஃப்ரெண்ட்ஸோட வெளில போறன்னு சொல்றியே அவங்களை வீட்டுக்கு வர சொல்லு என்று எங்க மாமா சொல்லியிருக்கார். அதான் சண்டே ஃப்ரீயா இருந்தா வர்றீயா."

" வித் ப்ளஷர் டார்லிங். வருங்கால மாமியார் வீட்டுக்கு வர்றதுக்கு கசக்குமா என்ன?" என்று கிண்டலாக சிரித்தபடியே ஆகாஷ் கூற…

" ஆக்ஸ்… இப்போதைக்கு உன்னை என் ஃப்ரெண்ட் என்று தான் சொல்லுவேன். எங்க பாட்டிக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ, அவங்களுக்கு ப்ளூ கலர் பிடிக்கும். அந்த கலர்ல டிரஸ் பண்ணிட்டு வர்றீயா. " என்று இன்னமும் ஏதோ கூற வர…

" ஹேய் அனு… ஸ்டாப்… ஸ்டாப்… இது என்ன நாடகமா? இப்படி இரு,அப்படி இரு, என்று நடிச்சு ஸ்கோர் பண்றதுக்கு? இது வாழ்க்கை… நான் எப்படியோ அப்படியே தான் இருப்பேன். இன்னைக்கு நான் வந்து உங்க மாமாவுக்கு பிடிச்ச மாதிரி, உங்க பாட்டிக்கு பிடிச்ச மாதிரி ஆக்ட் பண்ணிட்டு, நம்ம வாழும் போது, என்னோட நிஜமான கேரக்டரைப் பார்த்து அவங்க என்னன்னு நினைப்பாங்க சொல்லு. சோ… நான் நானாக தான் இருப்பேன். " என…

" ஓகே ஆக்ஸ் அதுவும் சரிதான்." என்று அவனை பார்த்து சிரித்தாள் அனன்யா.

" சரி வா… நெக்ஸ்ட் கிளாஸ் ஆரம்பிக்க போறாங்க." என்று அவளை அழைக்க…

" சும்மா ஒரு பேச்சுக்கு எதுவும் வேண்டாம் என்று சொன்னால், ஒன்னும் வாங்கித் தரமாட்டியா ஆக்ஸ்." என்று பாவமாக அனன்யா வினவ.

" ம்… டைமாயிடுச்சு. ஈவினிங் வாங்கித் தரேன்." என்று இழுத்துச் செல்ல.

" படிப்ஸ் கண்ணாயிரம் …" என்று திட்டிக் கொண்டே அவனோடு சென்றாள்.

அந்த ஞாயிறு அழகாக விடிந்தது.

ஆகாஷ், அனன்யா வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பி தயாராகி வர…

ஆதி, " என்னை கழற்றி விட்டுட்டு எங்க போகப் போறடா." என்று வினவ.

" ம்… உன் பேபி என்னை வீட்டுக்கு வரச் சொல்லிருக்கா."என்று புன்னகைத்தான் ஆகாஷ்.

" என்னது? உன்னை மட்டும் வரச் சொல்லிருக்காளா…" என்றவன் உடனே அனன்யாவிற்கு அழைத்தான்.

" ஹாய் ஆதி…" என…

" பேபி உன் கிட்ட சண்டை போடத்தான் நான் ஃபோன் பண்ணேன். ஆகாஷை மட்டும் உன் வீட்டுக்கு அழைச்சிருக்க… அவன் மட்டும் உனக்கு முக்கியமா போய்ட்டானா? நான் யாரோ தானா?" என.

" ஹேய் ஆதி செல்லம். நீ என் பெஸ்டி இல்லையா… உன்னைக் கூப்பிட்டாத் தான் வருவீயா. அது உன் வீடு மாதிரி." என்று சமாதானப்படுத்த…

" அடிப்பாவி… அப்போ நான் யாருடி?" என்று அதுவரை அவர்கள் இருவரும் பேசியதை ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த ஆகாஷ் வினவ.

" அடேய் ஆதி… இப்படி பத்தவச்சிட்டியே. நான் இந்த ஆட்டத்துக்கே வரலை. ஒழுங்கா லஞ்ச்க்கு இரண்டு பேரும் வந்து சேருங்க. இப்போ நான் வச்சிடுறேன்." என்று ஃபோனை அவசர அவசரமாக கட் செய்தாள் அனன்யா.

அவள் ஃபோனை வைத்ததும், இங்கு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

" டேய் ஆதி… பாவம் டா என் டார்லிங். அவளைப் பாடாய்படுத்துற. சரி சீக்கிரம் போய் கிளம்பு." என்று அவனை அனுப்பி வைத்தான்.

அனன்யாவும், ஆகாஷும் ஆதியிடம் சொல்ல மறந்து விட்டனர். இது ஒரு நட்பு ரீதியான அழைப்பு என்பதை…

ஆகாஷும், ஆதவனும் பழம், ஸ்வீட் வாங்கிக் கொண்டு, அனன்யாவின் வீட்டிற்கு வந்தனர்.

அதையெல்லாம் பாட்டியிடம் கொடுத்து விட்டு ஆசிர்வாதம் வாங்கினான் ஆகாஷ். அவனைப் பார்த்து ஆதவனும் ஆசிர்வாதம் வாங்கினான்.

பாட்டிக்கு இருவரையும் மிகவும் பிடித்துவிட்டது. ஆகாஷ் எப்பொழுதும் போல அழுத்தமாக இருந்தான்.

ஆதியோ கலகலவென பேசிக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் உணவருந்த அழைத்தார் ருக்குமணி.

ரஞ்சிதமும், கௌரியும் பரிமாற… அனைவரும் உணவருந்தினர்.

விஸ்வரூபன் தான் ஆகாஷ் இறுக்கமாக இருப்பதைப் பார்த்து மருத்துவ சம்பந்தமான பேச்சை ஆரம்பித்தான்.

ஆகாஷும் அதற்குப் பிறகு இலகுவாக பேச ஆரம்பித்தான். பேச்சு ஒரு பக்கம் போய்க் கொண்டே இருக்க. உணவு ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தது. உணவுக் கூட ஒரு வழியாக முடிந்தது. ஆனால் பேச்சு முடியவே இல்லை. ஹாலில் மீண்டும் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

அவர்கள் மருத்துவ சம்பந்தமான பேச்சு ஆதிக்கு போரடிக்க, அனன்யாவிடம் பேச ஆரம்பித்தான். "பேபி… நீ இந்த சாரியில் ரொம்ப அழகா இருக்க. " என.

அவளோ, " ம்… " என்று விட்டு ஆகாஷை பார்த்தாள்.

அவனோ, விஸ்வரூபன், கிருஷ்ணனிடம் பேசியவாறே, கண்களாலே பாராட்டையும் தெரிவித்திருந்தான். அதில் முகம் சிவக்க திரும்பிக் கொண்டாள்.

அவளது பார்வை, ஆகாஷை அவள் பக்கமே காந்தமென இழுக்க, கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

ருக்குமணியோ, " என்ன அனுவை பேபி என்று கூப்பிடுற?" என்று குழப்பமாக வினவ.

" ஏன் பாட்டி? அண்ணி என்று தான் சொல்லணுமா… பார்க்க பேபி மாதிரி இருக்கறதால தான் இந்த பெயர்."என்று அவன் வாயை விட.

லேசாக தலையை தட்டி கொண்டாள் அனன்யா.

எல்லோரும் அவளையே அதிர்ந்துப் பார்க்க… என்ன சொல்வது என்று தெரியாமல் விரல் நகத்தை கடித்துக்கொண்டு இருந்தாள்.

ஆகாஷ் அந்த தர்மசங்கடமான சூழ்நிலையில், " சாரி… நானும், அனுவும் காதலிக்கிறோம். எங்க வீட்ல, அனுவைப் பார்த்த உடனே ஓகே சொல்லிட்டாங்க. என்னைப் பற்றி அனு சொல்லுவா. நீங்க வீட்ல கலந்துப் பேசிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் வருகிறேன்." என்றுக் கூறி விட்டு, அனன்யாவைப் பார்த்தான்.

அவளோ படபடப்புடனே இருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்து, வருகிறேன் என்பது போல் தலையசைத்தான்.

அவனது புன்னகையில் அவளும் தெளிந்தாள்.

இன்று…

ஃபோனில் ராதிகா பாடிய பாடல் முடிந்தவுடன், மீண்டும் குழந்தை சிணுங்கிக்கொண்டே போட சொல்ல...

அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, "மேய்க்கிறது எருமை… இதுல என்ன பெருமை வேண்டி இருக்கு." என்று கூறிக்கொண்டே குழந்தையை தூக்கினாள்.

அவன் எதையோ கூற வர…

கையால் நிறுத்துமாறுக் கூறியவள், " அவந்திகா… என் அனுவோட குழந்தை. நான் தூக்குவதற்கு யாரோட அனுமதியும் தேவையில்லை." என.

" அம்மு… அனுவோட குழந்தை மட்டும் இல்லை. என்னோட குழந்தையும் தான்." என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கூறினான்.

அவளோ அவனது பார்வையை அலட்சியம் செய்து, " எனக்கு உங்களையும் தெரியும், அனுவையும் தெரியும்." என்றுக் கூறிவிட்டு,

ஃபோனை எடுத்து கூகிளில் தாலாட்டு பாடல் செலக்ட் செய்து பாடினாள்.

குழந்தை சமத்தாக தூங்கியது.
குழந்தையை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தவள், குழந்தையை அணைத்தவாறு உறங்கினாள்.

விஸ்வரூபன் தான் நீண்ட நேரம் தூக்கம் வராமல், நடைப்பயின்றுக் கொண்டிருந்தவன், அவள் நன்கு உறங்கிய பிறகு, குழந்தைக்கு மறுப்பக்கம் வந்து படுத்துக் கொண்டான்.

குழந்தை உறக்கத்திலே ராதிகாவின் கழுத்தை கட்டிப் பிடிக்க, அவளும் குழந்தை மேல் கையைப் போட்டுக் கொண்டு உறங்கினாள்.

அவர்கள் இருவரும் உறங்கும் அழகை ரசித்துக்கொண்டே உறங்கினான் விஸ்வரூபன்.

மறுநாள் அங்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கூறிய இடங்களை சுற்றி பார்த்தனர்.

கேரளாவில் இயற்கை அழகுக்கா பஞ்சம். அது அங்குக் கொட்டிக்கிடக்க…

அந்த அழகில் லயித்துப் போனாள் ராதிகா. குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, அவளும் குழந்தையாக ஆட்டம் போட்டாள். விஸ்வரூபனோடு பெரிதாகப் பேச முயற்சிக்கவில்லை‌. அவனாக ஏதாவது பேச வந்தாலும், ஒரிரு வார்த்தைகளிலே முடித்துக் கொண்டாள்.

ஒவ்வொரு இடத்திலும் குழந்தையும், அவளுமாக செல்ஃபியும் எடுத்துக் கொண்டிருக்க… வெறுத்துப் போனான் விஸ்வரூபன்.

நல்லவேளையாக அவனுக்கு ஒரு ஃபோன்கால் வர்ற… அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

ராதிகாவின் முகத்தில், அந்த ரிங்டோனை கேட்டதும் ஒரு புன்சிரிப்பு ஒட்டிக் கொண்டது.

அது ஏதோ ஒரு கம்பெனி கால். அதை ஆன் செய்த விஸ்வரூபன் எரிச்சலுடன் வைத்து விட்டு அவர்களிடம் வந்தான்.

திடீரென்று ஏதோ தோன்ற, "அப்பா மூன்று பேரும் இருக்கப் போல போட்டோஸ் எடுத்துட்டு வர சொல்லி இருக்காங்க. எப்ஃபி, இன்ஸ்டாகிராம்ல போடணுமாம்." என்று வாய்க்கு வந்ததைக் கூற…

ராதிகா தனக்குள் சிரித்துக் கொண்டாள். கிருஷ்ணன் சாரை பற்றி அவளுக்காத் தெரியாது.

' அவராவது ஹனிமூனுக்கு வந்திருக்கும் போது இவரைத் தொந்தரவு செய்வதாவது.' என்று எண்ணியவள் அமைதியாக போட்டோ எடுத்துக்கொண்டாள்.

குழந்தையோ," மா… மா…" என்றபடி அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு விடவே இல்லை.

ஹனிமூனுக்கு வந்திருந்த நான்கு நாட்களும் வேகமாக விரைந்தோட, அவர்கள் வீடு திரும்பினர்.

அங்கே வீட்டில் உள்ளவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தையும், ராதிகாவும் பழகுவதை பார்த்து…

ராதிகாவும் கேரளாவில் தாங்கள் சுற்றிப் பார்த்த இடத்தைப் பற்றி சொல்லியவள், எல்லா ஃபோட்டோக்களையும் காட்டி பேசிக் கொண்டிருந்தாள்.

" சரி கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு மா." என ரஞ்சிதம் அவளை அறைக்கு அனுப்பி வைக்க…

" ம்மா…" என கௌரியின் கைகளில் இருந்த குழந்தை கூப்பிட்டது.

இரண்டு படி ஏறியவள், இறங்கி வந்து, " அம்முக் குட்டி என்ன அம்மாக் கிட்ட வர்றீங்களா?" என்றபடியே கைகளை நீட்ட…

" இருக்கட்டும் டா. நீ ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா." என்று கௌரிக் கூற…

" பரவாயில்லை மா… அப்புறம் அவ அழ ஆரம்பிச்சிடுவா. அவங்க அப்பா அங்கே தானே இருக்காங்க பார்த்துக்க சொல்றேன்." என்றவள் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றாள்.

மாடிக்குச் சென்றவள் சுந்தரிக்கு அழைத்துப் பேச…

குழந்தையும் கூட மழலையில் பேசிக்கொண்டு இருந்தது.

" பாப்பா பக்கத்துல இருக்காளா. எங்க வீடியோ கால் போடேன்.
நான் பார்க்கிறேன்." என்று சுந்தரிக் கூற…

விஸ்வரூபன் எங்கே இருக்கிறான் என்று பார்த்தாள். அவன் அந்த அறையில் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை குழந்தையோட அறையில் இருக்கிறான் போல என்று எண்ணியவள், சுந்தரிக்கு வீடியோ கால் செய்தாள்.

சுந்தரியோ, "அம்முகுட்டி… பாட்டிய பாருங்க." என்று பேச.

தன் கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மையை வைத்துக் கொண்டே நிமிர்ந்துப் பார்த்த அவந்திகா, " பாட்டி…" என்று இழுத்துக் கூற .

சுந்தரிக்கும், ராதிகாவிற்கும் சந்தோஷம்." ஹேய் செல்லக்குட்டி… பாட்டி சொல்றீங்களா." என ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சண்முகம் தான், " எப்ப மா… மறு வீட்டிற்கு வர்றீங்க." என.

" பா… இப்போ தான் இரண்டு வாரமா காலேஜுக்கு லீவ் போட்டுருக்கேன். மறுபடியும் எக்ஸ்டென் பண்ண முடியாது. செமஸ்டர் லீவ் அப்ப வரோம் பா." என்று பதில் கூறிய மகளின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பார்த்து அவர்களும் சரி என்று தலையசைத்தார்.

இதையெல்லாம் பால்கனியில் நின்று ஃபோன் பேசி முடித்து விட்டு வந்த விஸ்வரூபன் ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஃபோனை வைத்து விட்டு திரும்பிய ராதிகா, அவனது பார்வையைப் பார்த்து திகைத்தாள்.

'இவனை புரிந்துக்கொள்ளவே முடியலை.' என்று எண்ணிக் கொண்டே ப்ரெஷ்ஷப் ஆகிவிட்டு வந்தவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

எப்போதும் போல் உறங்கலாம் என்றுப் பார்க்க, அங்கோ விஸ்வரூபன் குழந்தையுடன் இருந்தான்.

என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க… குழந்தை " மா…" என்று அழைக்க…

அவளும் படுத்துக் கொண்டாள்.

நாளையிலிருந்து கல்லூரிக்குப் போக வேண்டும். அவளுக்கோ தயக்கமாகவே இருந்தது. யார் அந்த வீடியோவை எடுத்தது என்று அவளுக்கு தெரியவில்லை அது வேறு குழப்பமாக இருக்க… உறக்கம் வருவேனா என்று இருந்தது.

மறுநாள் காலையில் எழுந்ததவள், அந்த குழப்பத்துடனேயே கல்லூரிக்கு கிளம்பினாள்.

அவளது முகத்தைப் பார்த்த விஸ்வரூபன், " அடுத்தவங்க என்ன சொல்வாங்க என்று நினைத்துக் கொண்டே இருந்தால், நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. சோ எதையும் கேர் பண்ணாமல் இருக்க பழகு‌." என்றுக் கூற…

" அதை நீங்க சொல்றீங்களா? எதை எதையோ நினைச்சுட்டு தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னீங்க." என்று பதில் கூறிய ராதிகா வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

' நான் படும்பாடு உனக்கென்ன புரியும்.' என்று புலம்பியவன், அவள் பின்னே சென்றான்.

சாப்பிட்டு முடித்ததும், " நானே காலேஜ்ல ட்ராப் பண்றேன்." என.

" இல்லை … நான் பஸ்ஸிலே போறேன்." என்று மறுத்துக் கூறினாள் ராதிகா.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஹாஸ்பிடல் போகும் போது நானே ட்ராப் பண்றேன்." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்று கல்லூரியில் விட்டான்.

கல்லூரியில் உள்ளவர்கள் எல்லோரும் அவளிடம் சினேகமாக பேசிவிட்டு, பின்னாடி கிண்டலடித்தனர்.

அவளுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பாரேன் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதையெல்லாம் அலட்சியம் செய்த ராதிகா ஆதவனிடம், " ஹாய் ஆதி." என.

அவனோ ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

" ஆதி… என் மேல கோவமா? ஏன் எதுவும் பேசமாட்டேங்குற?" என கண்கள் கலங்க வினவ.

" நான் யார் உன் மேல கோபப்பட? நான் யாரோ தானே. இல்லைன்னா கல்யாணத்துக்கு கூப்பிட்டுருக்க மாட்டியா? " என.

" ஹேய் ஆதி. உனக்கு தெரியாததா? விஷ்வா மேரேஜ்ஜை சிம்பிளா செய்தால் போதும் என்று சொல்லிட்டார். அப்புறம் நான் என்ன பண்ண முடியும் சொல்லு. நீ கவலைப்படாதே. உன்னை மட்டும் ஸ்பெஷலா எங்க வீட்டுக்கு இன்வைட் பண்றேன். நீ வா…" என்றுக் கூற…

" ஷ்யூர்?" என்று கேள்வியாக வினவினான் ஆதவன்.

" யா" என்றாள் ராதிகா. அடுத்து வரும் பூகம்பத்தை அறியாமல்…


தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம்- 21

ஆகாஷும், ஆதவனும் சென்ற பிறகு அங்கு அமைதி ஆட்சி செய்தது‌.

கிருஷ்ணன், " ஏன் அனு மா… அவங்க வீட்டுக்கு எல்லாம் போயிருக்க? ஆனா எங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல." என்றுக் கேட்க…

"அப்படி இல்ல மாமா… அவங்க வீட்ல ஒரு பார்ட்டி. அதுக்காகத் தான் போனேன். அன்எக்ஸ்பெட்டாட தான் ஆகாஷ் அறிமுகப்படுத்தினான்." என்று மெல்லிய குரலில் கூறினாள்.

" ஓ‌.. காட். இதுவே தப்பு இல்லையா அனு மா. உன் கிட்ட சொல்லாமல், எப்படி அந்த பையனே முடிவெடுக்கலாம்?" என்று கிருஷ்ணன் வழக்கத்திற்கு மாறாக துளைத்து, துளைத்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார்.

விஸ்வரூபனோ, தன் தந்தை பேசுவதால் கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான்.

" சாரி மாமா… அவன் பண்ணது தப்பு தான். நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்." என்று பாவமாக கிருஷ்ணனைப் பார்த்தாள்.

கிருஷ்ணன் பரிதவித்தாரோ, இல்லையோ… ருக்குமணிக்கு பேத்தியைப் பார்த்து தாளவில்லை. அவர்கள் பேச்சிற்கு இடையே புகுந்தார்.

" அதனால என்ன கிருஷ்ணா? பார்க்க பசங்க நல்ல பசங்களா தானே தெரியுறாங்க. இரண்டு பேரும் டாக்டருக்கு படிச்சிருக்காங்க. நல்ல வசதியாகத் தான் இருப்பாங்க. இல்லைன்னா என்ன? நம்ம அனுவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டு, நம்ம ஹாஸ்பிடலில் பார்த்துக்க சொல்லுவோம். இது ஒரு விஷயமா? " என்று பேத்திக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டு வந்தார்.

இதற்காகவே அனன்யா விஷயத்தில் கிருஷ்ணன் தலையிடமாட்டார். விஸ்வரூபனையே பார்த்துக்கொள்ள சொல்லுவார். இன்று தாள முடியாமல் கேட்க, வழக்கம் போல தனது தாயின் குறுக்கீட்டை விரும்பவில்லை.

ஒரு முறை கண்களை மூடித் திறந்தவர், விஸ்வரூபனைப் பார்க்க…

அவனோ, தான் பார்த்துக் கொள்வதாக, கண்களாலே தந்தையிடம் தெரிவித்தவன், பாட்டியிடம் திரும்பி, " பாட்டி… நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கத் தெரியுமா? யாரு என்ன? குடும்பம் இருக்கா? அவங்க எப்படிப் பட்டவங்க? என்று எதுவும் தெரியாமல் நீங்க ஏதாவது சொல்லாதீங்க. எல்லா விஷயத்திலும் கண் மூடிட்டு சப்போர்ட் பண்ற மாதிரி இதிலையும் செய்யாதீங்க." என்று கண்டிப்புடன் கூற.

" டேய் ரூபா… அதுக்கு தான் முதல்ல அவங்களை வீட்டுக்கு வரச் சொல்லுவோம். வர்றவங்க கிட்ட நீ விசாரி. பெரியவங்க சொன்னா ஏதாவது காரணம் இருக்கும். எல்லாத்துக்கும் அச்சானியமா தடை சொல்லாம… உங்க அப்பனை ஒரு நல்ல நாள் பார்க்க சொல்லு." என.

" பாட்டி… என் செல்லப் பாட்டி." என்று அவர் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவள்,

விஸ்வரூபனிடம், " மாம்ஸ் பாட்டியே ஓகே சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன சீக்கிரமா ஒரு நல்ல நாளைப் பார்த்து, அவங்களை வர சொல்லுங்க. நீங்க என்ன வேணுமோ விசாரிச்சுக்கோங்க‌. ஆனா ஆகாஷைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்றுக் கூறியவள் உற்சாகத்துடன் அவளது அறைக்குச் சென்றாள்.

பாட்டியோ அவளையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

" பாட்டி... அவங்க குடும்பத்தைப் பத்தி விசாரிக்கிறதுக்கு முன்னாடி, நீங்க வீட்டுக்கு வரச் சொல்றது எனக்கென்னவோ தப்பா படுது. என்னவோ போங்க… " என்று விட்டு அனுவின் அறைக்குச் சென்றான்.

கிருஷ்ணன் இறுக்கமாக இருக்க… கௌரி," அண்ணா… " என கலக்கமான குரலில் அழைத்தாள்.

தன் முகத்தை இயல்பாகக்கிக் கொண்டு, " நீ கவலைப்படாதே கௌரி. ரூபன் பார்த்துப்பான்." என்றுக் கூறி விட்டு அவரும் அங்கிருந்து அகன்றார்.

" நீ கவலைப்படாதே கௌரி. பார்க்கும் போதே நல்ல பசங்களாத் தான் தெரியுறாங்க. ரூபன் அப்படி ஒன்னும் அனுவை விட்டுட மாட்டான்." என்று சமாதானம் செய்தார்.

அனுவின் ரூமிற்கு சென்ற விஸ்வரூபனோ, கதவில் சாய்ந்து, கையைக் கட்டிக்கொண்டு அனுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளோ, ஆகாஷிடம் பேசிக் கொண்டிருந்தாள். " ஆக்ஸ்… எங்க பாட்டி ஓகே சொல்லிட்டாங்க. என்னைக்கு அங்கிள்‍, ஆன்ட்டிக்கு ஃப்ரீ என்று சொல்லு… அன்னைக்கு எங்க வீட்ல மீட் பண்ற மாதிரி பார்த்துக்கலாம்." என்று சொல்ல.

ஆகாஷோ, " ஆதி தான் அப்செட்டா இருக்கான். அவனால உனக்கு எதுவும் ப்ராப்ளம் வந்துடுச்சோ என்று புலம்பிட்டே இருக்கான்." என.

" அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ முதல்ல ஃபோனை ஆதிக்கிட்ட குடு." என்றாள் அனன்யா.

" ஹேய் ஆதி… நீ எனக்கு நல்லது தான் செய்துருக்க. நானே வீட்ல சொல்லணும்னா, என்னைக்கு சொல்லிருப்பேனோ. தேங்க் யூ சோ மச்…" என்றுக் கூறிக் கொண்டே திரும்ப, அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஸ்வரூபனை பார்த்து விட்டாள்.

" சரி… ஆதி… அப்புறம் பேசுறேன். பை." என்று வைத்தவள், மெல்ல விஸ்வரூபன் அருகே சென்றாள்.

" மாம்ஸ்…" என்றாள்.

" மேடம் பெரிய மனுஷி ஆகிட்டீங்க. எங்களுடைய அனுமதியெல்லாம் தேவையில்லை." என.

" ஏன் மாமா… நான் காதலிக்க கூடாதா? ஆக்ஸ் என் கிட்ட லவ் சொன்னப்ப கூட,
உங்க கிட்ட கேட்டுட்டு தான் ஓகே சொல்லணும் என்று வந்தேன். பட் நீங்க தான் பிஸி‌. எனக்காக ஐந்து நிமிடம் ஒதுக்கக் கூட முடியலை." என்றாள் அனன்யா.

விஸ்வரூபனுக்கோ குற்ற உணர்ச்சியாக இருந்தது.

'நாம அவளிடம் பேசியிருந்தா, அனு இவ்வளவு பிடிவாதமாக இருந்திருக்க மாட்டாள்.' என்று நினைத்தவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

" அனு… வர்ற சண்டே அவங்களை வீட்டுக்கு வர சொல்லு. நான் அவங்களை பார்த்துட்டு தான், எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுவோம். கொஞ்சம் பொறுமையா இரு."

" அதெல்லாம் நீங்க ஓகே பண்ணிடுவீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா. அப்புறம் ராதுக் கிட்ட இப்போ எதுவும் சொல்லாதீங்க. ஆகாஷோட வீட்ல இருந்து வந்துட்டு போகட்டும். நான் தான் அவக் கிட்ட சொல்லுவேன்." என்றுக் கூறி அனு புன்னகைக்க…

" ம் சரி அனு…" என்றவனோ மனதிற்குள், ' நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்.' என்று வேண்டிக் கொண்டான். ஆனால் நடந்ததோ வேறு. யாருடைய சப்போர்ட் இருக்கு என்று அனு உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்காளோ, அவங்களே ஆகாஷின் பெற்றோரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லப் போவதை அறியவில்லை.

இதை எதையும் அறியாத பேதைப் பெண் அனன்யா, மறுநாள் உற்சாகமாக கல்லூரிக்கு கிளம்பினாள்.

பாட்டியிடம் மட்டும்," ஈவினிங் லேட்டாகத் தான் வருவேன் ருக்கு." என்று விட்டு ஓடி விட்டாள்.

" வாடி எப்படியும் இங்க தானே வந்தாகணும். என்னையே பேர் சொல்லிக் கூப்பிடுறீயா." என்று கத்திக் கொண்டிருந்தார்.

" எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்." என்றபடியே உணவருந்த அமர்ந்தாள் கௌரி.

" பாவம் டி குழந்தை. எதுவும் சொல்லாத. நல்லபடியா, அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சுட்டா, இந்த உசுரு நிம்மதியா போய் சேரும்." என்று கண்கள் கலங்க.

" அனு… நல்லபடியா இருப்பா. எதுக்கு இப்போ கண் கலங்குறீங்க. மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்ற அன்னைக்கு என்ன செய்யணும்? டின்னருக்கு தான் வருவாங்க என்று அனு சொன்னா? டிஃபன் வீட்ல செஞ்சுடலாம். ஸ்வீட் வீட்ல செய்யலாமா? இல்லை கடையில் வாங்கலாமா அத்தை." என்று ரஞ்சிதம்,அவரது மனதை பேத்தியின் விஷேஷத்தில் திசை திருப்பினார்.

அவர் நினைத்தது போலவே ருக்குமணி அன்னைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கலானார்.

" ரஞ்சிதம்… என்னதான் கடையில வாங்கி செய்தாலும், வீட்டில் செய்வது போல் இருக்காது. அதனால் வீட்டிலே செஞ்சிடலாம். மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும் என்று அனுக்கிட்ட கேட்டு, அதையே மெனுவா செஞ்சுடுவோம். அப்புறம் வீட்டை கிளீன் பண்ண சொல்லணும்." என்று இருவரும் திட்டம் போட்டுக் கொண்டிருக்க…

கௌரியோ, 'மாமியாரையும், மருமகளையும் திருத்தவே முடியாது.' என்று நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.

இவர்கள் இங்கு இப்படி ப்ளான் போட அனுவோ, காலேஜுக்குச் சென்றவள் எப்போது தான் காலேஜ் க்ளாஸ் ஹவர் முடியும் என்று காத்திருந்தாள்.

வகுப்புகள் முடியவும், அவனை இழுத்துக் கொண்டு அருகிலுள்ள பார்க்கிற்க்குச் சென்றாள்.

" அனு… என்னாச்சு… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? காலையிலிருந்து நானும் கேட்டுட்டு இருக்கேன். அப்புறமா சொல்றேன் என்று இப்படி மனுஷனைப் படுத்துற." என்று ஆகாஷ் கேட்க.

அவன் தோளில் சாய்ந்து, " எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆக்ஸ். நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். சண்டே ஈவினிங் ஃப்ரீ தானே. அங்கிள், ஆன்டி, ஆதியை அழைச்சிட்டு வந்துடு."

" நீ எனக்கு ஃபோன் பண்ணி உங்க பாட்டி சம்மதம் சொல்லிட்டாங்கன்னு சொன்னதும் தான் பயம் கொறஞ்சது.
ஒருவேளை உங்க மாமாவுக்கு கட்டி வைத்து விடுவார்களா என்று ஒரே டென்ஷன்." என.

" சேச்சே… எங்க ரெண்டு பேருக்குமே அந்த மாதிரி தாட்ஸ் கிடையாது. அதுவுமில்லாமல் எங்க மாமா சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்காங்க. என்னோட ஃப்ரெண்ட ராதிகாவைத் தான் மாம்ஸ் லவ் பண்ணிட்டு இருக்காங்க. ராதிகாவை தெரியும்ல…" என.
" ம் நல்லா தெரியும். தினமும் இரண்டு, மூணு தடவையாவது அவங்களைப் பத்தி பேசாமல் இருக்க மாட்டியே." என்று சொல்லி சிரிக்க…

அவளும் சிரித்தாள்.

" எங்க வீட்டுக்கு நீங்க வரும்போது, நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி கலர்ல டிரஸ் பண்ணுவோமா… மேட்சிங், மேட்சிங் எல்லாரும் நிச்சயதார்த்தம் கல்யாணத்துல தான் போடுவாங்க. நாம கொஞ்சம் டிஃப்ரெண்டா இருப்போம். " என்று தனது கலர் கலரான கனவுகளைக் கூறினாள்.

அவளது கல்யாணத்தில் நடக்காது என்பதால் முன்கூட்டியே தெரிந்தது போல் செய்தாளோ!

நாட்கள் வேகமாக செல்ல, அந்த ஞாயிறு மாலையும் வந்தது.

வீட்டிலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர்.

கௌரியும் அன்று ஓய்வு என்பதால், ரஞ்சிதத்துக்கு கிச்சனில் உதவி செய்து கொண்டிருந்தாள்.

வேலையாட்கள் ஒரு பக்கம் உதவ, உணவு எல்லாம் தயாராக இருந்தது.

இவர்கள் காத்திருக்கும் போதே, இன்னோவா க்ரிஸ்டா கார் போர்டிகோவில் வந்து நின்றது.

ஆகாஷும், ஆதவனும் முதலில் வீட்டிற்குள் நுழைய… அனுவோ வெட்கத்தில் சிவந்தாள்.

இருவரும் நீல கலரில் உடை அணிந்திருந்தனர்.

அவர்கள் பின்னே வந்த இருவரையும் பார்த்து, கௌரி அழுவதைப் போல இருக்க… கிருஷ்ணனும், ரஞ்சிதமும் திகைத்து நின்றனர். விஸ்வரூபன் ஒரு எமர்ஜென்சி என்று வெளியே சென்று இருந்தான்.

பாட்டிதான் முதலில் சுதாரித்து, " எங்கே வர்றீங்க? என் வீட்டுக்கு வர்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?" என்று ஆங்காரமாக வினவ.

ஆகாஷுன் பெற்றோருக்கு அப்போது தான் அவரையே நியாபகத்திற்கு வந்தது. ஆகாஷும், ஆதவனும் பேச்சிழந்துப் போய், தர்மசங்கடத்துடன் இருக்கும் தாய், தந்தையை பார்த்து யோசனையில் ஆழ்ந்தனர்.


இன்று…

"ஷ்யூர் ஆதி. கண்டிப்பா உன்னை என் வீட்டுக்கு இன்வைட் பண்றேன்." என்றாள் ராதிகா.

" சரி ராது… ஆனால் மறந்துடாத… புது பொண்ணு வேற… அந்த பிஸில என்ன டீல்ல விட்டுடப் போற."

" அப்படியெல்லாம் ஒன்றும் நான் மறக்க மாட்டேன். இல்லன்னா இன்னைக்கு ஈவினிங்கே என்னோட வா. எங்க வீட்டுக்கு போகலாம்.என்று முடித்துவிட்டாள்.

" ஹேய் ராது… வீட்ல பர்மிஷன் கேட்க வேண்டாமா? நீ பாட்டுக்கும் கூப்பிடுறே. நான் சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன். இன்னொரு நாள் பார்க்கலாம் ." என்று ஆதவன் அங்கு செல்வதை தவிர்க்க பார்க்க…

" அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அது என்னோட வீடும் கூட. என்னோட நீ வா." என்று அவள் விடாப்பிடியாக காலேஜ் முடியவும் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

அவள் சென்ற நேரம், ஆதவனுக்கு நல்ல நேரமோ என்னவோ…

வீட்டில் ரஞ்சிதம் மட்டுமே இருந்தாள்.
ஆதவன் உள்ளே நுழைய தயக்கத்துடன் இருக்க… அவனை கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றாள் ராதிகா.

உள்ளே ரஞ்சிதம் மட்டும் குழந்தையுடன் இருக்க…

" அத்தை… என்னோட ஃப்ரெண்ட் ஆதி." என்று அவனை அறிமுகம் செய்ய.

ரஞ்சித்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே, தலையாட்டி விட்டு, " இதோ பேசிட்டு இருங்க வரேன்." என்றவர் நுழைத்துக் கொண்டார்.

குழந்தையோ, ராதிகாவைப் பார்த்ததும், அவளிடம் தாவி சென்று இருந்தது.

ஆதவன், குழந்தையிடம் சென்று விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். குழந்தையோ, சிரித்துக்கொண்டே, அவனிடம் தாவியது.

ஆசையாக வாங்கியவன், அழுத்தமாக குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, விளையாடிக் கொண்டிருந்தான்.

அதை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

அதற்குள் ரஞ்சிதம், இருவருக்கும் காஃபி, ஸ்னாக்ஸை வேலையாட்கள் மூலம் குடுத்து விட்டிருந்தார்.

முதலில் விருந்தோம்பல் கடமையை செய்தவர், அடுத்து கிருஷ்ணனுக்கு அழைத்திருந்தார். " என்ன செய்வது?" என்று கேட்பதற்காக …

ஆனால் அவரோ எடுக்கவில்லை, என்றதும் அவரது பதட்டம் அதிகமானது.

ஆனால் அவரைக் காப்பது போல் அந்த நேரம் விஸ்வரூபன் வந்தான்.

அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. அவனது வீட்டு ஹாலில் உட்கார்ந்து காஃபிக் குடித்துக் கொண்டே, அவந்திக்குட்டியை கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்து, உடம்பெல்லாம் தீப்பிடித்தாற்போல இருந்தது.

" மா… " என்று வேகமாக கத்த…

பதறியடித்துக் கொண்டு வந்தார் ரஞ்சிதம்.

" முதல்ல குழந்தையை வாங்கிட்டு போங்க." என்று கர்ஜிக்க…

ரஞ்சிதமும் நடுக்கத்துடன் குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வரேன் என்று மாடிக்குச் சென்றிருந்த ராதிகா, விஸ்வரூபனது குரலில் வேகமாக இறங்கி வந்தாள்.

" என்னாச்சு…" என்று பதறிய அவளை அலட்சியம் செய்து விட்டு, ஆதவனைப் பார்த்து, " கெட் லாஸ்ட்." என்றான்.

" விஷ்வா ஸ்டாப் தி நான்ஸென்ஸ். ஹீ இஸ் மை கெஸ்ட்." என்றாள் ராதிகா.

ஆதவனோ, குழந்தையை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அதான் பலமுறை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லியிருந்தும், திரும்ப அந்த வீட்டிற்கு வந்திருந்தான்.

இப்போதோ மனதிற்குள் ஒரு சின்ன நிம்மதி. ராதிகா அவனுக்கு ஆதரவாக பேசியதைக் கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

கோபத்தை கட்டுப்படுத்த அமைதியாக கண்மூடி நின்று கொண்டிருந்தான் விஸ்வரூபன். ஆனால் ராதிகா விடாமல், கேள்விக் கேட்க.

" அந்த ஆதவன் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது அவ்வளவு தான்." என்றவன் வேகமாக வெளியே சென்று விட்டான்.

' எனக்கு இந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லையா.' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். யாரிடமும் பேச பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று விட்டாள்‌.

இரவு உணவிற்கு வந்தப் போது, எல்லோருடைய முகமும் ஒரு மாதிரியாக இருந்தது. அதைப் பார்த்த ராதிகாவிற்கு குழப்பம்.

'ஆதி அப்படி என்ன செய்தான்? அவனுக்கும், இந்த குடும்பத்திற்கும் என்ன பிரச்சினை? ஒன்றும் புரியலையே! ' என்று நினைத்துக் கொண்டே உணவருந்தினாள்.

கிருஷ்ணன், " ராதிகா சாப்பிட்டதும் கார்டனுக்கு வா. உன்னிடம் கொஞ்ச பேசணும்." என்றார்.

"சரி." என்று தலையாட்டியவள், அவர் பின்னே சென்றாள்.

" ஆதவனோடு பேச்சு வச்சுக்காத ராதிகா. நம்மக் குடும்பத்தோட, அவன் எந்தவித தொடர்பு வச்சுக்கிறதை நான் விரும்பலை." என…

" ஏன் அங்கிள்? ஆதி மேல கோபமா இருக்கீங்க. ஒரு வேளை, அந்த வீடியோ அவன் போட்டதா நினைக்கிறீங்களா? இல்லையே… ஃபர்ஸ்ட் வந்த வீடியோல ஆதியை, விஷ்வா அடிக்கிற மாதிரி தானே இருந்தது. அப்போ ஏற்கனவே இரண்டு பேருக்குள்ள பகையா? அப்போ ஆதி என்னை யூஸ் பண்ணிக்கிட்டானா? அந்த வீடியோஸை அவன் தான் போட்டானா… ஐயோ! தலையே வெடிச்சுடும் போல இருக்கே." என்று புலம்ப.

" காம் டவுன் ராதிகா. ஆதவன் அந்த வீடியோவை எல்லாம் போடலை. அது என் மேல் உள்ள கோபத்துல, ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணுற ட்ரைனிங் டாக்டர் பண்ண வேலை.

அங்கே வேலைப் பார்க்குற நர்ஸை, லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணான். அதுக்காக வார்ன் பண்ணேன்.

அந்த கோபத்துல என் பையனோட கேரக்டரை டேமேஜ் பண்ண நினைத்தான்.

ரூபன் வார்ன் பண்ணி விட்டுட்டான். இனிமேல் அவனால எந்த தொந்தரவும் வராது. ஆதவன் விஷயம், ரூபன் தான் சொல்லணும். சரி மா, நீ போய் படு." என்றார்.

உள்ளே வந்தவளுக்கோ உறக்கம் தான் வருவேனா என்றிருந்தது.

தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 22
அன்று...

" வாட் ஆகாஷ்? இவங்க படிச்சவங்க தானே. மேனர்ஸ் தெரியாதா? டாக்டர் ஃபேமிலி என்று தானே சொன்ன... ஓ காட் என்னைக்கோ நடந்த விஷயத்தை இன்னும் நினைச்சுட்டு இருக்காங்க.

உங்க அத்தை மேஜர். அவரும் மேஜர். ரெண்டு பேரும் ஆசைப்பட்டு இருக்காங்க. நம்ம என்ன பண்ண முடியும். டீசண்டா ஒதுங்கி தானே இருக்க முடியும். அதை விட்டுட்டு எங்க கிட்ட வந்து கோவப்பட்டா, என்ன செய்ய முடியும்." என்று ஆகாஷின் அம்மா கூற…

" ஷட் அப்… முதல்ல இந்த இடத்துல இருந்து எல்லாரும் கிளம்ப போறீங்களா? இல்லையா?" என்று கிருஷ்ணன் கத்த…

" வாங்க போகலாம்…" என்று மரம் போல நின்றுக் கொண்டிருந்த ஆகாஷையும், ஆதவனையும்அழைத்துக் கொண்டு கிளம்பினர். இருவரது பார்வையும், முகமெல்லாம் வெளுத்து போய் கண்ணிலிருந்து நீர் வழிய, நின்றுக் கொண்டிருந்த அனன்யாவையோ பார்த்தனர்.

காரில் போகும்போது ஆகாஷின் அப்பாவும், அம்மாவும், " உனக்கு இருக்கிற தகுதிக்கு, இதை விட பணக்கார வீட்டிலிருந்து சம்பந்தம் வரும். நீ பொறுமையா இரு." என்று பேசிக்கொண்டே இருக்க.

" இரண்டு பேரும் முதல்ல வாயை மூடுங்க… மேனர்ஸ், டிஸன்ஸி, ஸ்டேட்டஸ் , சொசைட்டி என்று இப்படி தான் உங்களுக்குப் பேசத் தெரியுமே ஒழிய… குடும்பத்தில் உள்ளவர்களோட மனசு, அவங்களுக்குனு ஒரு இதயம் இருக்கும். அதற்குள்ள ஒரு உணர்வு இருக்கும் என்று எதுவுமே தெரியாது.

அன்னைக்கும் அப்படித்தான் அத்தையை புரிஞ்சுக்காம உங்களோட பியாரிட்டிய பணத்தை தேடுறதுல காண்பிச்சீங்க.

அவங்கக் கிட்ட கொஞ்சம் அக்கறையா இருந்திருந்தால், அவங்க ஏன் கல்யாணம் ஆன ஒருத்தர் கிட்ட தேடப் போறாங்க. தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு, உங்களை நியாப்படுத்திக்கிட்டீங்க.

இன்னைக்கும் அண்ணனைப் பத்தி நினைக்காமல், பணத்தை பத்தியே பேசிட்டு இருக்கீங்க. நீங்க வழக்கம்போல டீசன்ட்டா ஒதுங்கியிருங்க. ஆகாஷோட வாழ்க்கை,
அவன் விருப்பம். அவன் பார்த்துப்பான்." என்று ஆதவன் பேச…

தோள்களைக் குலுக்கிக் கொண்டு, அவர்களது பெற்றோர் அமைதியாகி விட்டனர். அவ்வளவுதான் அவர்களுடைய அன்பு. பிள்ளையை படிக்க வைக்க வேண்டியது அவர்களுடைய கடமை. பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்க, மனிதனின் மன உணர்வுகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ள முயலவில்லை.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்துக்கொண்டு கண்களை மூடி இருந்தான் ஆகாஷ். கண்ணுக்குள் கண்ணீருடன் இருக்கும் அனுவே வந்து போனாள்.

அங்கோ ருக்குமணி திட்டிக் கொண்டிருந்தாள், " கொஞ்சம் கூட பயமில்லாமல், எப்படி தான் நம்ம வீட்டுக்கு வராங்கன்னு தெரியலை. என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்தது போதாதுன்னு, இப்ப அவங்க மகன் மூலம் என் பேத்தி வாழ்க்கையும் கெடுக்கப் பார்க்குறாங்க.

அன்னைக்கு அந்த ஆளு என் பொண்ணோட வாழ முடியாதுன்னு, அவங்க வீட்டு பொண்ணை விரும்புறேன்னு சொன்னப்ப, நானும், என் புருஷனும் அவங்க வீட்டு முன்னாடி போய் எவ்வளவு கெஞ்சுனோம். கல்யாணம் ஆனவன் அவனை விட சொல்லுங்க உங்க தங்கச்சியை என்று…

அதெல்லாம் அவங்களோட தனிப்பட்ட விஷயம். இதில் என்னால ஒண்ணும் பண்ண முடியாது என்று நிர்தாட்சணயமா மறுத்துட்டாங்களே. கொஞ்சம் அந்த பொண்ண கண்டித்து வைச்சிருந்தா, அவரை நம்ம வழிக்கு கொண்டு வந்து இருக்கலாம். இப்படி என் பேத்தி அஞ்சு வயசுல இருந்து அப்பாவோட அன்பு தெரியாமல் கஷ்டப்பட்டு இருக்க மாட்டா." என்று புலம்ப…

" என்ன பாட்டி சொல்றீங்க." என அனன்யா அழுதுக் கொண்டே வினவ‌.

" எல்லாம் உன் அப்பன் பண்ண வேலையைப் பத்தி தான் சொல்லிட்டு இருக்கேன்… என் பொண்ணோட ஏழு வருஷம் வாழ்ந்துட்டு, ஒரு நாள் டைவர்ஸ் வேணும்னு நிக்கிறான். என்னன்னு விசாரிச்சா, இப்போ வந்தாங்களே அவங்க தங்கச்சி தான் காரணம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கலை. அப்படிப்பட்ட குடும்பத்துல உன்னை கட்டிக் கொடுக்க மாட்டேன். அதை முதல்ல நல்லா புரிஞ்சுக்கோ."

அவர் கூற,கூற சிலையென சமைந்தாள்.

"என்ன ஒன்னும் சொல்லாமல் இருக்க? அவனோட பேசுவதை நிறுத்திக்க. இல்லைன்னா காலேஜை விட்டு நிறுத்திடுறோம். சீக்கிரமா உனக்கு நான் நல்ல மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி வைக்கிறேன். அப்புறமா படிக்கிறதுன்னா படி."

" பாட்டி படிப்பெல்லாம் நிறுத்தினா சரி வராது பாட்டி." என்று இடையிட்டான் விஸ்வரூபன்.

ஆகாஷின் கார் வெளியேறியதுமே, விஸ்வரூபன் வீட்டிற்குள் நுழைந்தவன், ருக்குமணி பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

படிப்பை நிறுத்துவேன் என்றதும் வாயைத் திறக்க…

ருக்குமணியோ, " நீ முதல்ல சும்மா இரு டா… எல்லாம் உன்னால வந்தது தான். நீ தான் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்ச… இங்கேயே இருந்திருந்தா, அவ ஒழுங்கா, எப்பவும் போல என்கிட்ட எந்த விஷயத்தையும் மறைக்காமல் இருந்திருப்பா. வெளிநாட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து தான் ஆளே மாறிட்ட.

அதுக்கு அப்புறமாவது மேற்படிப்பை நம்ம காலேஜ்ல சேர்த்தியா… எங்கேயோ போய் சேர்த்த… அதனால தான அவங்க கூட சுத்திட்டு இருக்கா." என்று திட்ட…

அதிர்ந்தான் விஸ்வரூபன்.

கிருஷ்ணனும், ரஞ்சிதமும் அமைதியாக இருந்தனர். வாயைத் திறந்தால் பிரச்சினை பெரிதாகும் என்று தெரிந்ததால்…

கௌரியோ, " நான் என்ன பாவம் செஞ்சேன்? என் வாழ்க்கைத் தான் இப்படி இருக்கின்னுப் பார்த்தால், என் பொண்ணு வாழ்க்கையும் கேள்விக்குறியாகிடுச்சு." என்று அழுதுக் கொண்டே கூறினாள்.

" பாட்டி… அனு புரிஞ்சுப்பா. நாம்ம மாப்பிள்ளை பார்ப்போம். அதுவரைக்கும் அவ காலேஜ் போகட்டும்." என்றவன் அனுவை ஆழ்ந்துப் பார்த்தான்…

அவளோ, ' இப்போதைக்கு காலேஜுக்கு அனுப்பினால் போதும்.' என்றிருக்க.

விஸ்வரூபன் கூறியதற்கு, " சரி." என தலையாட்டினாள்.

அடுத்த நாள் காலேஜுக்கு சென்றவள், ஆகாஷை அழைத்துக் கொண்டு கேண்டீன் சென்றாள்.

" அனு… நடந்த எதுவுமே எனக்குத் தெரியாது. யாரோ செஞ்ச தப்புக்கு, நம்ம ரெண்டு பேரையும் சிலுவை சுமக்க சொல்லுறாங்களே." என.

" அதை விடு ஆக்ஸ். எங்க பாட்டியும், மாமாவும் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க‌. என்ன பண்றதுன்னு சொல்லு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு." என்றாள் அனன்யா.

" பயப்படாதே அனு. நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன். என்னோட சைட்ல எந்த பிரச்சினையும் கிடையாது. நீ இப்ப கூட வா. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் உனக்காகத் தான் யோசிக்கிறேன்." என.

" ம்… நான் பாட்டிக் கிட்ட பேசி பார்க்குறேன். ஆனா இப்போ பேசுனா‍, என்ன காலேஜுக்கு அனுப்ப மாட்டாங்க. உன்ன பார்க்காமல் என்னால இருக்க முடியாது." என்று அனு கண்ணீர் விட.

" சரி அனு. அழாத. முதல்ல பொண்ணு பார்க்க வர்றவங்கக் கிட்ட பேசி பார்ப்போம். நாம ரெண்டு பேரும் லவ் பண்றதை சொல்லிடலாம். புரிஞ்சுப்பாங்க. இப்படியே வரன் தட்டிப் போயிட்டே இருந்தா, அப்புறம் உங்க பாட்டிக்கு பயம் வந்திடும். அப்போ நீ மறுபடியும் என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று ஸ்ட்ராங்கா நில்லு. அவங்க இறங்கித் தான் வரணும். எத்தனை நாளைக்கு அவங்க வைராக்கியமுனுப் பார்ப்போம்." என்று அப்போதைக்கு அந்த பிரச்சினையை தள்ளிப்போட்டனர்.

ருக்குமணியும், விஸ்வரூபனும் தேடித் தேடி வரன் பார்த்தனர். டாக்டர் மாப்பிள்ளைத் தான் வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதோடு குணத்தையும் பார்த்து, பொறுமையாகத் தான் தேடினர்.

அதுமட்டுமில்லாமல் அனன்யாவை நம்பினர். அவளும் ஆகாஷ் குடும்பத்து மேல் வெறுப்பாக இருப்பாள் என்று நினைத்தனர்.

அவளோ, ஆகாஷ் மூலம் அவளுக்கு வந்திருந்த இரண்டு மூன்று வரனை, அவர்களே வேண்டாம் என்று சொல்லுமாறு செய்திருந்தாள்.

முதல் இரண்டு வரன் வேண்டாம் என்று சொல்லும் போது பெரியதாக எதுவும் யோசிக்கவில்லை. மூன்றாவது வரனும் தட்டிப் போகவும், இதற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணிய விஸ்வரூபன், இந்த முறை நேரே சென்று அந்த மாப்பிள்ளையைப் பார்த்தான்.

முதலில், அது, இதுன்னு சமாளித்தார் அந்த டாக்டர் மாப்பிள்ளை.

விஸ்வரூபனின் விடாப்பிடியில், " சார் உங்க வீட்டுப் பொண்ணு லவ் பண்ணுதாமே. அந்த பொண்ணோட லவ்வரும், அவங்க தம்பியும் நேரடியா வந்து சொல்லிட்டாங்க. பேசாம அவங்களுக்கே கல்யாணம் பண்ணி வைங்க சார். அவங்களும் டாக்டராமே… இந்த காலத்தில், படிச்சிருந்தும் இப்படி இருக்கிறீங்க." என்று அவனுக்கு அட்வைஸ் செய்து விட்டுப் போனான்.

விஸ்வரூபனோ, அவர்கள் இருவர் மீதும் கொலை வெறியில் இருந்தான்.

அனு இன்னும் அவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது புரிந்தது. அதனால் இந்த முறை பாட்டியிடம் சொல்லி ரகசியமாக மாப்பிள்ளை பார்த்து எல்லாம் முடிவாகட்டும் அப்புறமாக அனுவிடம் சொல்லிக்கொள்ளலாம் என்றான்.

இப்படியே ஐந்தாறு மாதம் கடந்திருக்க, அனன்யாவோ நம்ம திட்டம் வொர்க் அவுட் ஆகிடுச்சு என்று சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

அடுத்த வருட ஆதியின் பிறந்தநாள் வந்தது.

அன்று காலையில் கிளம்பும் போதே, " ஈவினிங் சீக்கிரமா வா." என்றாள் கௌரி.

" ஏன் மா?"

" கோவிலுக்கு போகணும்." என்று வாய்க்கு வந்ததைக் கூறினாள் கௌரி.

" சரி மா." என்று வெளியே சென்றவளுக்குத் திடீரென்று தான் ஞாபகம் வந்தது. இன்று ஆதிக்கு பிறந்தநாள். ஈவினிங் பார்ட்டிக்கு வரச் சொல்லியிருந்தான்.

தான் வர லேட்டாகும் என்று சொல்வதற்காக திரும்பி வந்தவள், ரஞ்சிதமும், கௌரியும் அன்று மாலை நடக்கப் போகும் நிச்சயதார்த்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க…

அவளுக்கு முகமெல்லாம் வியர்த்து, இதயம் வெடிப்பது போல் ஆனது.
வந்த தடமே தெரியாமல் வெளியே சென்று விட்டாள்.

இன்று…

காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள் ராதிகா.

குளித்து முடித்து விட்டு கண்ணாடி முன் நின்று பார்க்க… முகமோ வீங்கி போய் இருந்தது. இரவெல்லாம் தூங்காமல் அழுததன் பலன்…

கீழே உணவருந்த வந்தவளை, ஒரு நிமிடம் கிருஷ்ணனும், விஸ்வரூபனும் ஆராய்ச்சியாக பார்த்தனர்.

விஸ்வரூபன் அவளைப் பார்த்து விட்டு, அலட்சியமாக திரும்பி விட…
கிருஷ்ணனோ, ' பாவம் ராதிகா.' என மனதிற்குள் எண்ணினார்.

அவளை சமாதானம் படுத்துவதற்காக, " ராதிகா… இந்த வீக்கெண்ட் தஞ்சாவூருக்கு இரண்டு பேரும் போயிட்டு வந்துடுங்க." என.

கிருஷ்ணனை நிமிர்ந்துப் பார்த்தான் விஸ்வரூபன். கிருஷ்ணனோ, 'நீ கண்டிப்பாக போய்த்தான் ஆகணும்.' என்பதுப் போல் பார்த்தார்.

அவரது பார்வையில், விஸ்வரூபன் அமைதியாகி மீண்டும் உணவில் கவனத்தை செலுத்தினான்.

" ஓகே அங்கிள்." என்ற ராதிகா, மகிழ்ச்சியாக காலேஜுக்கு கிளம்பினாள்.

காலேஜுலோ ராதிகாவிற்காக காத்திருந்தான் ஆதவன். ராதிகாவோ, அருகில் அமர்ந்திருந்தவனை ஒரு பொருட்டாக நினையாமல், அவனுடன் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்…

வகுப்புகள் நடந்ததால் ஆதவனும், பொறுமையாக காத்திருந்தான்.

லஞ்ச் பிரேக்கில், " ஏன் ராது… உன் ஹஸ்பெண்ட் என்னை வீட்டை விட்டு அனுப்புனதை நினைச்சு பீல் பண்றியா?" என.

ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்து முறைத்தாள் ராதிகா.

" என்னாச்சு ராதிகா?"

" உனக்கும், விஷ்வாக்கும் என்ன பிரச்சனை? ஏற்கனவே உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துவராது தானே? சொல்லு… என்கிட்ட நீ எதுவும் சொல்லலை. உன்னை என்னோட ஃப்ரெண்டா தான் நினைச்சேன். நீ அப்படி எதுவும் நினைக்கலை. என்னை வச்சு ஏதோ கேம் ப்ளே பண்ணியிருக்க… ரைட்… " என்றாள் ராதிகா.

" ராது… " என்று ஆதவன் இழுக்க.

" எதுவும் இல்லை என்று சொல்லாத‌‌… எந்த சால்ஜாப்பு வேண்டாம். உனக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு. அவன் ஒருத்தன் என்ன போட்டு படுத்துறது போதாதுன்னு… நீ வேற… என்ன நடந்ததுன்னு இரண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க… எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.‌.." என்று கண்கள் கலங்க ராதிகாக் கூற.

" நானே உன் கிட்ட சொல்லணும் தான் இருந்தேன் ராது. என்ன சொல்றதுன்னு தெரியலை. எனக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள உறவுன்னு சொல்லனும்னா, அங்க இருக்கிற பேபி தான். ஆனால் உரிமை கொண்டாடுற நிலையில் நாங்க இல்லை. அதுக்கு எங்க பெற்றோரோட தான்தோன்றித்தனம் தான் காரணம். அவங்களைப் பொறுத்தவரை அது தனிமனித சுதந்திரம். அதுல பாதிக்கப்பட்டதோ, நானும், என் அண்ணனும் தான்." என்றவன் ஐந்து நிமிடம் அமைதிக்காத்தான்.

அந்த ஐந்து நிமிடம், அவனது உடன்பிறப்பும், உயிர் நண்பனுமாகிய ஆகாஷைப் பற்றி நினைத்தான்.

பிறகு பெருமூச்சு விட்டுக் கொண்டே, அவர்களது வாழ்க்கையில் வந்த, இனிய புயலான தென்றலையும், அதற்கு பிறகு அவர்களது வாழ்க்கையில் சுழற்றி அடித்த சூறாவளியையும் ராதிகாவிடம் பகிர்ந்துக் கொண்டான்.

இப்போது ராதிகாவிடம் அந்த அமைதி வந்து ஒட்டிக் கொண்டது. கண்களில் இருந்து கண்ணீர் வழிய…

" அழாதே ராது… அதான் உன் கிட்ட சொல்லாமல் தள்ளிக்கிட்டே போனேன். உன்னை பார்த்ததுமே பேபி தான் ஞாபகம் வந்தது. பட் அப்போ நீ யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேபி என்கிட்ட பேசுனா பத்து வார்த்தைல, இரண்டு வார்த்தை ராது… ராது… என்பதாகத் தான் இருக்கும். அந்த ராது நீதான் என்று அதுக்கப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் உன்னை வச்சு ப்ளே பண்ணனும் நினைக்கலை. உன் மூலமாவது குட்டி பேபியை பார்க்கணும் நினைச்சேன். தேங்க் காட்… குட்டிமாவைத் தூக்கிக் கொஞ்சிட்டேன்." என்றவன் அமைதியாக அவளைப் பார்க்க…

" சாரி ஆதி… நான் உன்னை தப்பா நினைச்சுட்டேன். நீ கவலைப்படாதே… சீக்கிரமே பாப்பாவோட உன்னை சேர்த்து வைக்கிறேன்." என்றாள் ராதிகா.

" அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் இல்லை. எப்பவாவது உங்க வீட்டுக்கு வந்து போக அனுமதி தந்தாளே போதும். ஆனால் எப்பப் பார்த்தாலும், வீட்டை விட்டு வெளியே போங்க என்று உங்க வீட்டு ஆளுங்க சொல்லிட்டே இருக்காங்க ." என்று பெருமூச்சு விட்டபடியே கூறினான் ஆதி.

" அதெல்லாம் பார்த்துக்கலாம். இந்த வீக்கென்டே பாப்பாவை பார்க்க வைக்கிறேன்." என்றவள் மனதிற்குள்ளோ, ' என் வீடு என்று என் கிட்டேயே சொன்னல்ல விஷ்வா டியர். இரு உன்னை கதறடிக்கிறேன்.' என்று மனதிற்குள் நினைத்தாள் ராதிகா.


தொடரும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 23

அன்று…

முகமெல்லாம் களையிழந்து, இரத்தப்பசையின்றி ஆகாஷின் வீட்டிற்கு அருகில் இருந்த பார்க்கிற்குள் நுழைந்தாள் அனன்யா.

ஏற்கனவே ஆகாஷிற்கு ஃபோனில் அழைத்து இங்கே வரச் சொல்லியிருக்க…

அவளது குரலை வைத்தே, ஏதோ சரியில்லை என்றுணர்ந்த ஆகாஷ், உடனே கிளம்பி வந்திருந்தான்.

அவளைப் பார்த்ததும்,அவளது அருகில் வந்தவன், " என்ன அனு... ஏதும் பிரச்சனையா?" என்று வினவ.

அது பொது இடம் என்பதை மறந்து, கரகரவென அழுதாள் அனன்யா.

" அனு என்னமா ஆச்சு. கன்ட்ரோல் யுவர் செல்ஃப். எல்லோரும் பார்க்குறாங்க." என்றுக் கூற.

அவளோ, அழுகையை நிறுத்தியபாடு இல்லை.

பிரச்சனை சற்று பெரியது தான் என்பதை புரிந்து கொண்ட ஆகாஷ் அவளை அணைத்துக் கொண்டான்.

அவளது அழுகை குறையவும்," இப்போ சொல்லு அனு." என்று அவளது முகத்தைத் துடைத்துக் கொண்டே வினவினான் ஆகாஷ்.

" ஆக்ஸ்… இன்னைக்கு ஈவினிங் எனக்கு நிச்சயதார்த்தம். என் கிட்ட சொல்லாமலே வீட்ல ஏற்பாடு பண்ணியிருக்காங்க. என் மேல ஏதோ சந்தேகம் வந்துடுச்சு போல. என்னால வீட்ல உள்ளவங்களையும் ஹர்ட் பண்ணவும் முடியாது, உன்னையும் விட முடியாது. அதனால நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்." என்று அழுதப்படியே கூறினாள் அனன்யா.

" அனு இப்பவே எப்படி கல்யாணம் பண்ண முடியும். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னாலும் அதுக்குன்னு சில பார்மலிடீஸ் இருக்கு. ஒன் மன்த்துக்கு முன்னாடியே பதிவு பண்ணனும்." என.

" எனக்கு அதெல்லாம் தெரியாது. இப்பவே நம்ம கல்யாணம் நடக்கணும். இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்." என்று அவனை அணைத்தப்படியே கதற.

" ஷ்… அனு அப்படியெல்லாம் சொல்லாத… உன்னோட திகட்ட திகட்ட வாழனும். உனக்கென்ன இன்னைக்கே நம்ம கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே நான் ஏற்பாடு பண்றேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல வொர்க் பண்ணுறான். நான் அவன் கிட்ட ஹெல்ப் கேட்குறேன்." என்றவன் அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தவன், அவளது தலையை ஆறுதலாக வருடிக் கொண்டே ஃபோன் செய்தான்.

" ராகவ் எனக்கு ஒரு ஹெல்ப்…" என்றவன், எல்லாவற்றையும் கூற…

" நீங்க ரெண்டு பேரும் வாங்க. நான் பார்த்துக்கிறேன் ஆகாஷ். ரெண்டு பேரோட ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பர்த்சர்டிஃபிகேட் ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க. முதல்ல இன்னைக்கு மேரேஜ் பண்ணிக்கலாம். மேரேஜ் சர்டிஃபிகேட் ஒன் மன்த்துக்கு அப்புறம் வாங்கிக்கலாம்."

" சரிடா... ரொம்ப தேங்க்ஸ்."

" நமக்குள்ள என்ன டா தேங்க்ஸ் எல்லாம்… வரும் போது, தாலி, மாலை எல்லாம் வாங்கிட்டு வந்துடு." என்றான்.

" சரிடா." என்றவன் அனுவிடம் திரும்பி, " அனு சில டாக்குமெண்ட் தேவைப்படுது. வீட்ல போய் எடுத்துட்டு கிளம்பலாம். உன்னோடத ஃபோன்ல இருந்து எடுத்துக்கலாம். அதுவுமில்லாமல் இன்னைக்கு ஆதி பிறந்தநாள். நீ சொன்ன சர்ப்ரைஸெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். அவனுக்கு விஷ் பண்ணிட்டு கிளம்பிடலாம்." என்றான்.

அனுவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றவன், ஆதவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து விட்டு, காலேஜில் முக்கியமான வகுப்பிருப்பதாகக் கூறி விட்டு கிளம்பினர்.

அடுத்த அரைமணி நேரத்தில் ரிஜிஸ்டர் ஆஃபிஸீல் இருந்தார்கள்.

இருவருக்கும் பெற்றோர், உறவினர் எல்லோரும் இருந்தும், யாரும் இல்லாதது போல் திருமணத்திற்கு தயாரானர்கள்.

காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் இருவரை சாட்சி கையெழுத்துக்காக அழைத்திருந்தான்‌.


இவர்களது முறைக்காக காத்திருந்த போது, அனுவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டிருக்க…

" அனு… இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல வீட்டுக்கு வேணாம் போகலாமா?" என.

" வேண்டாம்…" என்று தலை அசைத்தாள்.

பிறகென்ன ஆகாஷ், அவனது தம்பியைக் கூட அழைக்காமல் அவளை திருமணம் செய்து தனது சரிபாதியாக்கிக் கொண்டான்.

அவர்கள் இருவரையும் வாழ்த்திய தோழர்கள், அங்கேயே விடைப்பெற.

" டேய்… சாப்பிட்டு போகலாம் வாங்கடா." என்றான் ஆகாஷ்.

" யூ கேரி ஆன் மச்சான். இன்னொரு நாள் பார்க்கலாம்." என்றவர்கள், மெல்லிய குரலில் அவனை கேலி செய்து விட்டே அந்த இடத்தை விட்டு கிளம்பினர்.

இதையெல்லாம் கவனிக்கவில்லை அனன்யா. இப்போது அவளது மனதில் ஒரு குற்றவுணர்வு ஓடிக் கொண்டிருந்தது. ' நான் சுயநலமா நடந்துக்கிட்டேனா? அம்மாவைப் பற்றி யோசிச்சு இருக்கணுமா? அம்மா என்ன நினைப்பாங்க? பாட்டி என்ன நினைப்பாங்க?' என்று யோசனை மனதிற்குள் ஓடிக் கொணாடே இருந்தது.

நண்பர்கள் கிளம்பவும், அனன்யாவைப் பார்த்த ஆகாஷ், பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

" வா அனு…" என.

" எங்க?" என பதறினாள் அனன்யா.

" நீ ரொம்ப ரெஸ்ட்லஸ்ஸா இருக்க. எங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறமா என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் டா." என்று அவளது கையை ஆதரவாக பற்றினான்.

" ம்." என்று தலையசைத்தாள்.

" சரி ஏறு." என்றவன் பைக்கை ஓட்ட…
அவனது முதுகில் சாய்ந்துக் கொண்டாள் அனன்யா.

வேகமாக வண்டியை ஓட்டியவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் கெஸ்ட்ஹவுஸில் நிறுத்தினான்.

முதலாளியைப் பார்த்ததும், சல்யூட் அடித்தவன் மணக்கோலத்தில் வந்தவர்களை யோசனையுடன் பார்க்க…

"ரெண்டு பேருக்கும் லஞ்ச் வாங்கிட்டு வாங்க." என்று பணம் கொடுத்து அனுப்பியவன், அவளது மனதை திசைத் திருப்ப கேலியில் இறங்கினான்.

" ஹேய் அனு… முதல்ல நம்ம வீட்டுக்கு வர்ற, வலது காலை எடுத்து வச்சு வா. இல்லைன்னா சொல்லு, நான் தூக்கிட்டு வரேன். எது உனக்கு வசதி?." என.

" ப்ச்… சும்மா இரு ஆக்ஸ். வீட்ல யாருமில்லையா?" என்று முகம் சிவக்க, படபடப்புடன் கேட்டாள்.

"வாட்ச்மேனோட வைஃப் டெய்லி வீட்டை சுத்தம் செய்துட்டு போய்டுவாங்க. பக்கத்துல தான் வீடு. சரி வா உள்ளே போகலாம்." என்று அழைத்துச் சென்றான்.

இருவரும் வலதுக்காலை எடுத்து வைத்து நுழைந்தனர்.

அடுத்து என்ன செய்வது என்று இருவருக்கும் புரியவில்லை. அனன்யா தன்னுடைய வீட்டை நினைத்து கவலையிலிருக்க.

ஆகாஷிற்கோ, அவளுடனான தனிமை, முதன் முறையாக அவனுக்கு பயத்தைக் கொடுத்தது. இங்கு அவளை அழைத்து வந்திருக்கக் கூடாது என்று எண்ணினான்.

தற்காலிகமாக இவனைக் காப்பத்துவதற்காக வாட்ச்மேன் வந்தார்.

" டேபிளில் வச்சிட்டு போங்க." என்றவன், அவர் சென்றதும் அனன்யாவிடம் திரும்பி, " வா அனு… சாப்பிடலாம்." என.

" எனக்கு வேண்டாம்… " என்றவளின் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் பெருக…

" சும்மா அழக் கூடாது. என்னை கல்யாணம் பண்ணது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா?" என்றான் ஆகாஷ்.

' ஏன் இப்படி?' என்பது போல பாவமாக அவனைப் பார்த்தாள் அனன்யா.

" இன்னைக்கு நீ அழவே கூடாது. புரியுதா அனு? வாழ்நாள் முழுவதும் நாம சந்தோஷமாக இருப்பதற்கு அச்சாரம் போட்ட நாள். அதுக்காகத்தான் சொல்றேன். இப்போ வா." என்று அவளைக் கைப்பிடியாக அழைத்துச் சென்றவன், டைனிங் டேபிளில் இருந்த உணவை தட்டில் வைத்து ஊட்டி விட்டான்.

அவன் ஊட்ட, ஊட்ட… அவளுக்கு அவளது பாட்டியின் ஞாபகம் வந்தது. கூடவே கண்களில் கண்ணீரும் பெருகியது.

" ப்ச்." என்றவன் இடது கையால் தலையை கோதியவாறே, ' எப்படி இவளது அழுகையை நிறுத்துவது.' என்று தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தான்.

'இதுக்கு மேல் இவள் சாப்பிடுவது கடினம்.' என்று எண்ணியவன், அனுவை அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவளோ செறுமியபடியே இருக்க...

" ப்ச்… அழாதடா… " என்றவன் அவளை இறுக்கி அணைக்க…

அவனைக் கட்டிக் கொண்டவள், கதறி அழுதுத் தீர்த்தாள்.

அவளது அழுகையை நிறுத்த வழித் தெரியாமல் அவளது முகம் முழுவதும் தனது முத்திரையைப் பதித்தான்.

ஒரு நிமிடம் அதிர்ந்த அனன்யா, திகைத்து விலக முயன்றான்.

அவன் விட்டால் தானே… ஆறுதலுக்காக ஆரம்பித்தது, அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது.

அவனது கரங்கள் மெல்ல, மெல்ல எல்லை மீற… அவளது மறுப்புக்களும் மெல்ல, மெல்ல மறைந்தது.

அடுத்து நகர்ந்த மணித்துளிகள் முழுவதும், இருவரும் வேறு உலகிற்குச் சென்றனர்.

முதலில் நிதானத்திற்கு வந்த ஆகாஷ், தான் செய்த செயலை நினைத்து, தன் தலையில் தட்டிக் கொண்டான்.

அனன்யாவோ எதுவாக இருந்தாலும், ஆகாஷ் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள்.

அவளைப் பார்த்த ஆகாஷ், " அனு… நான் வேணும்னே எதுவும் செய்யலை. நீ என்னை நம்புற தானே. நான் இப்பவே உன்னோட உங்க வீட்டுக்கு வரேன். எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்." என்று வினவ.

அவளோ முகம் முழுவதும் பூரிப்புடன், " உன்னை நம்பாமல் யாரை நம்பப் போறேன். ஐ லவ் யூ ஆக்ஸ்." என்று அவனை அணைக்க.

மெல்ல அணைத்து விட்டு விலகியவன், " சரி அனு… நீ ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா." என்று விட்டு வெளியே சென்றான்.

அனன்யாவோ ஆகாஷ் மேல் உள்ள நம்பிக்கையில் நடந்த இனியத் தவறை எண்ணி, தனக்குள் புன்னகைத்துக் கொண்டே இருந்தாள்.

ஆகாஷோ, ' தன்னை நம்பி வந்தவளை, எல்லோரிடமும் சொல்லி முறையாக வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கணுமோ.' என்று எண்ணி குற்றவுணர்ச்சியில் தவித்தான்.

இயல்புக்கு மாறாக படபடப்புடன் ஆகாஷ் இருக்க… திரும்பி பைக்கில் செல்லும் போது ரோட்டில் கவனத்தை வைக்காமல் ஓட்ட…

திடீரென்று வேகமாக ஒரு பைக் கண்முன்னால் கன்னாபின்னாவென்று வேகமாக வர, ரோட்டில் கவனமில்லாத ஆகாஷ் அனிச்சை செயலாக வண்டியை ஒடிக்க…

எதிரே வந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டனர்.

அனன்யா உருண்டு ரோட்டோரமாக விழுந்து மயங்க…

ஆதியோ ஒரு கல்லில் தலைமோதி அந்த இடத்திலே உயிரை விட்டிருந்தான். அவனது விழியோ அனன்யாவை பார்த்தவாறே உயிரை விட்டிருந்தது.

இன்று…

வெள்ளிக்கிழமைப் பொழுது அழகாக விடிந்தது. கல்லூரியில் காலை வகுப்பு மட்டுமே…

மதிய உணவு முடிந்ததும் தஞ்சாவூருக்கு கிளம்புவதாக பிளான்.

அவந்திகாவையும் அழைத்துச் செல்ல, கௌரியிடமும், ரஞ்சிதத்திடமும் பர்மிஷன் வாங்கியிருந்தாள்.

அவந்திகாவின் துணிகளை உற்சாகமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அதில் மண் அள்ளிப் போடுவது போல் வீட்டிற்கு வந்த விஸ்வரூபன், " எதுக்கு பாப்பா ட்ரெஸ்ஸெல்லாம் எடுத்து வைக்கிறீங்க. பாப்பா இங்கேயே இருக்கட்டும்." என்றுக் கூற…

ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தவள், ரஞ்சிதத்தைப் பார்க்க…

அவர் சப்போர்டுக்கு வந்தார்.

" தம்பி… குழந்தை ராதிகாவை விட்டுட்டு இருக்க மாட்டேங்குறா. அவ காலேஜ் போயிட்டு வர வரைக்கும் வச்சு சமாளிக்க முடியலை. இதுல இரண்டு நாள்னா சமாளிக்க முடியாது பா. கூட்டிட்டு போங்க. " என்று முடித்து விட்டார்.

மாலைப் பொழுதில் கிளம்பியவர்கள் இரவு உணவிற்கு சென்று விட்டனர்.

சுந்தரியின் கவனிப்பில் விஸ்வரூபன் விழி பிதுங்கி நின்றான்.

" போதும்ங்க… " என்று தடுக்கப் பார்க்க…

" இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க மாப்பிள்ளை." என்று வற்புறுத்தி வைத்தார்.

தனது அருகிலமர்ந்து, பாப்பாவிற்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த ராதிகாவிடம் திரும்பி, "போதும்னு சொல்லு உங்க அம்மாக்கிட்ட. நைட் இவ்வளவுலாம் நான் சாப்பிட மாட்டேன்." என்றான்.

ராதிகா அடிப்பட்ட பார்வை அவனைப் பார்க்க…

அவனோ, தான் செய்த தவறு உரைக்க…

" சாரி… அத்தைக் கிட்ட போதும்னு சொல்லு…" என.

ராதிகாவின் முகம் பூவாக மலர்ந்தது." வேண்டாம்னு சொன்னா அம்மா மனசு வருத்தப்படும். நீங்க வாங்கிக்கோங்க. வேண்டாம்னா நான் சாப்பிடுறேன்." என.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், " வேண்டாம். ஐ கேன் மேனேஜ் மைசெல்ஃப்." என்றான்.

" ஓகே." என்று தோளைக் குலுக்கியவள் குழந்தையிடம் கவனத்தை செலுத்தினாள். ‌

ஒரு வழியாக உணவருந்தி விட்டு அவர்களுக்கான அறைக்குச் சென்று ஓய்வெடுத்தனர்.

காலையில் சீக்கிரமாக எழுந்திருந்த ராதிகா குழந்தையுடன் கீழே வந்தாள்.

இவளைப் பார்ப்பதற்காகவே, விக்ரம், ஸ்வேதா, விகர்தனா எல்லோரும் வந்திருந்தனர்.

ராதிகாவிற்கு திருமணமாகவுமே, மாடியை வெகேட் செய்து விட்டு, பக்கத்தில் ஒரு வீடு காலியாக… அங்கே ஷிப்ட் ஆனார்கள்.

" ஏய் ஸ்வீட்டி…" என்று கத்தியப்படியே விகர்தனாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

விகர்தனாவும், " ஸ்வீட்டி…" என்று ராதிகாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ள…

அவந்திகாவும், ராதிகாவை விடாமல் கட்டிக் கொண்டாள்.

" இங்கே பாரேன். இரண்டு குட்டிஸும் போட்டிப் போட்டுக் கொண்டு, என் மகளைப் படுத்துறதை‌…" என்ற சுந்தரி, அவந்திகாவை தூக்கி விளையாட்டுக் காட்டினாள்.

ஸ்வேதா, விக்ரம், ராதிகா மூவரும் கலகலவென பேசிக் கொண்டிருந்தார்கள்.

பேச்சு, பேச்சாக இருந்தாலும், ஒரு பார்வை வாசலிலே வைத்திருந்தாள்.

சற்று நேரத்திலே அவள் எதிர்பார்த்த ஆளும் வந்திருந்தான்.

" ஹேய் ஆதி… ஏன் இவ்வளவு லேட்." என்று ராதிகா வினவ.

அவளைப் பார்த்து புன்னகைத்தான் ஆதவன்.

" வாப்பா ஆதவா. வந்து உட்கார் " என்று சுந்தரி அழைக்க…

அங்கிருந்த விக்ரம், ' யார்?' என்பது போல யோசனையாகப் பார்த்தான்.

ஸ்வேதா தான், " ராதிகாவோட ஃப்ரெண்ட். போனமுறை அவந்திகாவோட பிறந்தநாளுக்கு கோவில்ல அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தோம்ல. அப்போ ராதிகாவோட வந்திருந்தாங்க.." என்றாள்.

" ஓ…" என்றவன் தன்னையும் அறிமுகப் படுத்திக் கொண்டான்.

விக்ரம் அப்போது ஊரில் இல்லை. அதான் அவனுக்கு ஆதவனை தெரியவில்லை.

சுந்தரியிடம் இருந்த குழந்தையிடம் கையை நீட்ட…

அவனிடம் தாவிய அவந்திகாவோ, அதற்குப்பிறகு அவனை விட்டு நகரவே இல்லை.

ராதிகா எல்லோருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.


சற்று நேரம் கழித்து கீழே இறங்கி வந்த விஸ்வரூபன், அங்கு ஸ்வாதீனமாக அமர்ந்து இருந்த ஆதவனைப் பார்த்து முகம் இறுக நின்றான்.

சுந்தரி, ஆதவன் மடியிலிருந்த குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டு இருக்க… அவனால் குழந்தையை தூக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை.

" ராதிகா." என்று அழுத்தமாக அழைக்க…

அவன் அருகில் வந்தாள் ராதிகா.

" கம் டூ அவர் ரூம்." என்றவன் அங்கிருந்த யாரிடமும் எதுவும் பேசாமல் மாடிக்குச் சென்றான்.

மாடிக்கு வந்தவனோ கோபத்தை அடக்க முடியாமல், டென்ஷனோடு இருக்க…

கூலாக வந்தாள் ராதிகா.

" என்ன வேணும் விஷ்வா? காஃபிய இங்கே கொண்டு வரட்டுமா?" என்று எதுவும் தெரியாதது போல வினவ.

" நான் இப்போ எதுக்கு கூப்பிட்டேன் என்று உனக்குத் தெரியாதா? " என்று அவளைப் பார்த்து வினவினான் விஸ்வரூபன்.

" ம்ஹூம்." என்று தோளைக் குலுக்க…

" என்ன டென்ஷனாக்காத ராதா. அவனை வீட்டுக்கு வரக் கூடாது என்று தான சொல்லியிருந்தேன்." என…

" ஒரு ஸ்மால் சேஞ்சேஸ். உங்க வீட்டுக்கு வரக்கூடாது என்று தானே சொன்னீங்க. அதான் என் ஃப்ரெண்டை அதுக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு வரச் சொல்லலையே." என்று அழுத்திச் சொல்ல.

" அப்போ எனக்கு இங்கே எந்த உரிமையும் இல்லை என்று சொல்றீயா."

" நான் அப்படி சொல்லலையே. நீங்க தான் என் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னீங்க. எனக்குத் தான் எந்த உரிமையும் இல்லை. ஐ நோ. பட் ஏத்துக்கத் தான் கஷ்டமா இருக்கு." என்றாள்.

வேகமாக அவளருகில் வந்தவன், " நான் ஏன் சொன்னேன்னு உனக்குத் தெரியும். ரைட்?"

" என் கிட்ட ஏதாவது ஷேர் பண்ணியிருக்கீங்களா? அப்புறம் எப்படி எனக்குத் தெரியும். நான் அந்த வீட்ல இருக்கிற வேண்டாத விருந்தாளி. உங்க ரூம்ல இருக்குற சோஃபா, கட்டில் ட்ரெஸிங்டேபிளோட சேர்ந்து நானும் ஒரு ஜடம் . அவ்வளவு தானே… வேற ஏதாவது ரியாக்ட் பண்ணியிருக்கீங்களா?" என்று பொறும.

" தேவையில்லாதது பேசாத ராதிகா."

"ஏன் பேசுனா என்ன பண்ணுவீங்க? நான் அப்படித் தான் பேசுவேன்." என்று மீண்டும் ஏதோ கூற வர…

அவளது இதழை மூடியிருந்தான், தன் இதழ் கொண்டு…

அடுத்து நடந்தவை எல்லாம் அவனை மீறி நடக்க…

இனிய மயக்கம் தெளிந்து, நிதானத்திற்கு வந்தவன் தன்னையே நொந்துக் கொண்டு, தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.

குளித்து விட்டு வெளியே வந்த ராதிகாவோ அவனைப் பார்த்து முறைத்தாள்.

அவளை நிமிர்ந்துப் பார்த்த விஸ்வரூபனோ, குற்றவுணர்வுடன் தலை குனிந்துக் கொண்டான்.

தொடரும்.....
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 24

அன்று…

தனக்குள்ளே சிரித்து வெட்கப்பட்டு கொண்டு வந்த அனன்யா, முதலில் கவனிக்கவில்லை. வண்டி தடுமாறுவதை...

ஆகாஷ் வண்டி ஓட்டுவதில் கவனத்தை வைக்கவில்லை என்பதை உணர்ந்ததவள், அவனது தோளைத் தொட்டு சமாதானம் செய்ய முயல… திடீரென்று எதன் மீதோ மோதி தூக்கி வீசப்பட்டாள்.

அவள் மயங்கி கண் மூடும் முன்னே, பார்த்தது என்னவோ, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆகாஷை தான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு தான் கண் விழித்தாள் அனன்யா.

அவளது கண் பார்த்த விஷயத்தை, மூளை ஏற்க மறுக்க, பெரிதாக எந்த அடியும் படாத அவள் கண் விழிக்க தாமதம் ஆனது.

விளைவு, ஆகாஷின் உடலைக் கூட அவளால் பார்க்க முடியவில்லை.

அனன்யா கண் விழித்ததும் நர்ஸ் விஸ்வரூபனை அழைக்க… விரைந்து ஓடி வந்தான்.

" அந்துருண்டை…" என்ற அழைப்பில், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், " மாமா" என்றவள் கதறி அழுதுத் கொண்டே எழுந்திருக்க முயற்சி செய்தாள்.

" கொஞ்சம் பொறு டா. ட்ரிப்ஸ் ஏறுது." என்றுக் கூறியவன், அவளை சமாதனப்படுத்த முயல…

" ஆகாஷுக்கு ஒன்னும் இல்லை தான மாமா. நான் அவனைப் பார்க்கணும். " என்றுக் கதற…

" ஷ்… காம் டவுன். இது ஹாஸ்பிடல்." என்றான் விஸ்வரூபன்.

அப்போது தான், அவள் தான் எங்கே இருக்கிறோம் என்பதையே கவனித்தாள்.
இவ்வளவு நேரம் விஸ்வரூபன் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கிறது என்று சொன்னதைக் கூட உள்வாங்கிக் கொள்ளவில்லை.

" அப்போ ஆக்ஸிடென்ட் ஆனது உண்மை தானா… ஆகாஷ் இரத்த வெள்ளத்தில் கிடந்ததும் உண்மை தானா… " என்று புலம்பியவள், தன் கழுத்தை வருடிப் பார்த்துக் கொண்டாள்.

மஞ்சள் கயிறு தென்பட… " ஆகாஷ் உயிரோட தான இருக்கான். எங்க அவனைக் காணும். நீங்க உள்ள விடலையா…" என்று அவளே எதாவது கூறுவதும், புலம்புவதுமாக இருக்க…

அவளை சமாளிக்க முடியாமல், நர்ஸிடம் உறங்குவதற்கான இன்ஜெக்ஷனை ரெடி பண்ண சொன்னவன், அதைப் போட்டும் விட்டான்.

அவள் மெல்ல புலம்பிக் கொண்டே உறங்கவும், கண் கலங்க அங்கிருந்த நாற்காலியில் ஓய்ந்துப் போய் அமர்ந்தான்.

இரண்டே நாட்களில் வீட்டோட நிம்மதியே பறந்திருந்தது.

வீட்டில் நிச்சயத்தார்த்ததிற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, இவளை காணவில்லை என்று டென்ஷனோடு இருக்க…

ஆதவனிடமிருந்து தான் அழைப்பு வந்திருந்தது.

அவர்களது ஹாஸ்பிடலில் அனன்யாவை சேர்த்திருப்பதாக கூறியவன், வேறு எதுவும் சொல்லவில்லை. அவனது குரலும் சரியில்லாமலிருக்க, என்னவோ ஏதோ என்று பயந்தவன் வீட்டில் கூற…

எல்லோருமே கிளம்பினர்… விஸ்வரூபன் தான், " பாட்டி… அத்தை… நீங்க எல்லோரும் இங்கேயே இருங்க. அம்மா பாத்துக்கோங்க. நானும், அப்பாவும் போயிட்டு வர்றோம். அங்க எல்லாம் இவங்க வேண்டாம். அவங்க ஹாஸ்பிடல்ல தான் சேர்த்து இருக்காங்களாம்." என.

" சரி." என தலையாட்டினர்.

அங்கே சென்ற விஸ்வரூபன் ரிஷப்ஷனில் விசாரித்தான்…

ஆஸ்பத்திரியில் எல்லோருமே படபடவென டென்ஷெனோடு அங்கும், இங்கும் குழப்பத்தோடு போய் கொண்டிருந்தனர்.

இவன் விசாரிப்பதற்கு கூட யாரும் ஒழுங்காக பதில் சொல்லாமல் இருந்தனர்.

" வாட்ஸ் கோயிங் ஆன். " என்று கத்தினான். அதற்குப் பிறகு தான் தெரியும் ஆகாஷோட தான் வெளியே சென்றிருக்கிறாள். அவன் இறந்து விட்டான் என்று…

அதற்குப் பிறகு நேரத்தை வீணாக்காமல் இவர்களது ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸை வரவழைத்து, அனுவை அழைத்துக்கொண்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

அனு, ஆகாஷுடன் இன்னும் கான்டாக் வைத்திருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இன்னும் இதை விட பெரிய அதிர்ச்சியை ஹாஸ்பிடல் சென்று தெரிந்துக் கொண்டான்.

விஸ்வரூபன் வீட்டிற்கு ஃபோன் செய்து, அனுவிற்கு லேசான மயக்கம் தான் என்றும், தங்களது ஹாஸ்பிட்டலில் ஒரு செக்கப் செய்து விடலாம் என்று அங்கு செல்வதாகக் கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்டதும், வீட்டிலிருந்த அனைவரும் ஹாஸ்பிடலுக்கு விரைந்து வந்திருந்தனர்.

ருக்குமணி மெல்ல அனன்யாவின் தலையை கோதி அவளை வருடினார்.

கௌரியோ, தான் ஒரு டாக்டர் என்பதை மறந்து விஸ்வரூபனிடம், " ரூபா… இன்னும் அனு ஏன் கண் முழிக்கலை." என பதட்டத்துடன் வினவினார்.

" அத்தை… அனுவுக்கு ஒன்னுமில்லை… அதிர்ச்சியில் சின்ன மயக்கம் தான். கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டேன். நீங்க வேணும்னாலும் செக் பண்ணுங்க." என.

அவனிடமிருந்து ஸ்டெதெஸ்கோப்பை எடுத்து கழுத்தில் வைத்து செக் பண்ண… ஏதோ கழுத்தில் இடறியது. என்னவென்று எடுத்துப் பார்த்த கௌரி, கையிலிருந்த தாலியைப் பார்த்து அதிர்ந்தாள்.

லேசாக தள்ளாட… அருகில் இருந்த ரஞ்சிதம் பிடித்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் அந்த இடமே களேபரமாக இருந்தது.

விஷ்வரூபனுக்கு மண்டை காய்ந்தாலும், அவன் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாறு இருந்தது.

பாட்டியை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பியவன், கௌரியை ஒரு ரூமில் அட்மிஷன் செய்ய, ரஞ்சிதம் பார்த்துக் கொண்டார்.

கௌரிக்கு சீக்கிரமே குணமாகிட வீட்டிற்குச் சென்று விட்டார்.

அனன்யாவை இவனது கவனிப்பில் வைத்திருந்தான்.

அப்போது தான், வெளியே சென்ற போது, அனன்யா கண் விழித்ததும் அல்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தாள்.

மயக்கம் தெளிந்த பிறகும், நடந்த எதையும் ஏற்கும் பக்குவமில்லாமல் இருந்தாள் அனன்யா.

இதெல்லாம் கனவாகவே இருக்கக் கூடாதா என்று ஏங்க ஆரம்பித்தாள்‌.

வீட்டிற்கு அழைத்துச் சென்றான் விஸ்வரூபன்.

ருக்குமணியும், கௌரியும் நிதர்சனத்தை உணர்த்த ஆரம்பித்தனர்.

அனன்யா இருக்கும் இடத்தில், இருவரும் நிற்பதில்லை.

முதலில் இதெல்லாம் அவளது கவனத்தை ஈர்க்கவில்லை. ரஞ்சிதம் வந்து, " அனு… அந்த தாலியை கழற்றிடு மா." என்று பரிவாகக் கூற…

" மாட்டேன்… நான் கழற்ற மாட்டேன்… என் ஆகாஷ் இங்க தான் இருக்கார். நீங்க தான் பார்க்க விடாமாட்டேங்குறீங்க." என்று தாலியைப் பற்றிக் கொண்டு கத்த ஆரம்பித்தாள் அனன்யா.

அனன்யாவின் சத்தத்தில் வேகமாக வந்த விஸ்வரூபன், " என்னாச்சு மா?" என்று வினவ.

" அதுப்பா… உங்க பாட்டி அனுக் கழுத்தில இருக்கிறதை கழற்றி போட சொன்னாங்க." என்று சங்கடமான குரலில் கூறினார்.

ஒரு நிமிடம் இறுகக் கண் மூடித் திறந்தவன் அங்கு கத்திக் கொண்டிருந்த அனன்யாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

"தம்பி… " என்ற ரஞ்சிதத்தின் குரலை அலட்சியம் செய்தவன்,

அனுவிடம், " இங்க உனக்காக ஒரு குடும்பம் பரிதவிச்சிட்டு இருக்கே அது உன் கண்ணுக்கு தெரியலையா? உன்னை உயிரா வளர்த்த பாட்டி, அம்மா உன் கிட்ட பேசாமல் இருக்கிறது கூட உனக்குத் தெரியலை. நடுவில வந்தவன் உனக்கு முக்கியமா போய்ட்டானா." என்று கத்த…

அப்போ தான் அவர்கள் இருவரும் பேசாததையே உணர்ந்தவள், அழுதுக் கரைந்தாள்.

" இங்கே பாரு அனு… முதல்ல அழறதை நிறுத்து. நாளையிலிருந்து காலேஜுக்கு போற… புரியுதா?" என்ற விஸ்வரூபன் கண்களாலே ரஞ்சிதத்தை பார்த்துக்க சொல்லி விட்டு சென்றான்.

அவள் அருகே அமர்ந்த ரஞ்சிதம், " இங்கே பாருடா அனு. அந்த பையன் இப்போ உயிரோட இல்லை. இந்த மஞ்சள் கயிறை போட்டுருந்தா மட்டும் அவன் உயிரோடு வரப்போவதில்லை. இதை கழற்றி ஏதாவது கோயில்ல போட்டுட்டா பாட்டியின் கோபம் கொஞ்சம் குறையலாம்." என்று அது, இது என பேசி அவள் கழுத்திலிருந்து கழற்றினார்.

அடுத்து அவள் அழுத அழுகையை காண சகிக்காமல் வெளியே சென்றவரோ, வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்.

பிறந்ததிலிருந்தே எதற்கும் கண் கலங்க விடாமல், பார்த்து பார்த்து வளர்த்த குழந்தையின் கதறலைத் தாங்கும் சக்தியில்லாமல் வெளியே வந்து விட்டார்.

மறுநாள் காலேஜுக்கு கிளம்புமாறு கரெக்டா வந்து எழுப்ப…

" மாமா… ப்ளீஸ்… நான் அந்த காலேஜிக்கு போகலை. என்னால… என்னால " என்று தடுமாறியபடியே அவனைப் பார்க்க…

அந்த பரிதாப தோற்றத்தை பார்க்க சகிக்காமல் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

அந்த வழியாக சென்ற ருக்குமணியின் கண்களில் அந்தக் காட்சிப்பட்டு அவரது மனதில் வேறு ஒரு யோசனையை தோற்றுவித்தது.

" அனு … சரிடா… சீக்கிரமே நம்ம காலேஜ்ல சேர்க்க ஏற்பாடு பண்ணுறேன். நீ பழசையே நினைச்சுட்டு இருக்காத… சரியா…" என்று வினவ.

" ம்…" என்று தலை ஆட்டினாள்

ஒன்றிரண்டு முறை ருக்குமணியிடமும், கௌரியிடமும் பேச முயன்றாள்.

அவர்கள் பேசாமல் இருக்க… அதற்கு பிறகு தனக்குள்ளேயே ஒடுங்கிப் போனாள்.

அவளது அறை தான் அவளது உலகமாக மாறியது.

ரஞ்சிதத்தின் வற்புறுத்தலில் பேருக்கு சாப்பிட்டு விட்டு அவளது அறைக்குச் சென்று விடுவாள்.

நாட்கள் விரைந்தோட, ஒரு நாள் வீட்டிற்கு வந்த விஸ்வரூபன், பார்த்தது என்னவோ, ஒரு இட்லியை எடுத்து விழுங்கிக் கொண்டிருந்த அனன்யாவை தான்.

ஆளே அரையாளாகத் தெரிந்தாள். காற்று அடித்தால் ஒடிந்து விழுவதுப் போல் இருந்தாள்.

சாப்பிட்டேன் என்று பேர் பண்ணியவள் எழுந்து செல்ல…

அவளது கைப் பிடித்து அமர வைத்த விஸ்வரூபன், " இப்படி ஒரு இட்லி சாப்பிட்டா உடம்பு என்னத்துக்காகும்?" என்று கடிந்தவன், அவளுக்கு ஊட்டி விட்டான்.

பாதியிலே, " போதும் மாமா." என்று தடுத்தாள் அனன்யா.

" ஷ்… சும்மா இரு. " என்றவன் மீண்டும் ஊட்ட…

அவளோ கைகளைப் பொத்திக் கொண்டு ஓடி வாஷ்பேஷனில் வாமிட் செய்தாள்.

ஹாலில் உட்கார்ந்து இருந்த ருக்குமணி அதிர்ச்சியுடன் பேத்தியை பார்த்தாள்.

விஸ்வரூபனுக்கும் ஏதோ புரிவதுப் போல் இருந்தது.

கௌரியைப் பார்த்து," அத்தை… அவளுக்கு என்னன்னு பாருங்க…" என.

தனது கோபத்தை மறந்து, 'கடவுளே நான் நினைக்கிறது மட்டும் இருக்கக் கூடாது.' என்று கடவுளுக்கு ஒரு அவசர வேண்டுதலை வைத்து விட்டு, பல்ஸ் செக் செய்தாள் கௌரி.

கடவுள் அவளது வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை.

கண்களில் இருந்து கண்ணீர் வழிய... என்னவென்று பார்த்த விஸ்வரூபனிடம், "ஆமாம்." என்று கூறினாள்.

ரஞ்சிதமும், ருக்குமணியும் என்னவென்று விசாரிக்க…

கௌரியோ, ஒன்றும் சொல்லத் தோணாமல், மகளது எதிர்காலத்தை நினைத்து குழம்பிப் போயிருந்தார்.

ருக்குமணியோ, இயல்புக்கு மாறாக படபடப்பாக இருந்தார். " என்னன்னு யாராவது சொல்லுங்க. என் பேத்திக்கு ஒன்னும் இல்லை தான… அவ என் பேத்தியா தான இருக்கா." என்று வினவ.

அப்போது தான் அனன்யாவுக்கு அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது புரிந்து அதிர்ந்தவள், ' அப்படியும் இருக்குமோ…' என்று எண்ணி தனது வயிற்றை தடவினாள்.

எல்லோரும் குழந்தையாக இருக்கக்கூடாது என்று நினைக்க… அவளோ,' குழந்தையாக இருக்கக்கூடாதா?' என்று ஏங்கினாள்.

கடவுள் அவளுக்கு அந்த ஒரு சிறு ஆறுதலையாவது தர எண்ணினார் போல…

" பாட்டி… ஷீ இஸ் ப்ரெக்னன்ட்." என்ற நிதர்சனத்தை போட்டுடைத்தான். விஸ்வரூபன்.

" ஐயோ!" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார் ருக்குமணி.

அப்போது தான் உள்ளே நுழைந்தார் கிருஷ்ணன்.

ஒன்றுக்கு மூன்றாக டாக்டர்கள் இருந்தும் அந்த நேரத்தில் அவர்களுக்கு பதட்டம் தான் தோன்றியது.

நல்ல நேரமாக, கிருஷ்ணனின் கார் ட்ரைவர் சாவியை வைக்க உள்ளே வர, அவரை காரெடுக்க சொல்லி அவர்களின் ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்.

ஐசியுவில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சிவியர் ஹார்ட் அட்டாக். அவரது வயதுக்கு காப்பாற்றுவது கடினம் என்று புரிந்த விஸ்வரூபனின் கண்களில் கண்ணீர்த்துளி.

இரவு முழுவதும் யாரும் உறங்காமல், ஐசியு வாசலிலே காத்திருக்க…

விடியற்காலையில் கண் விழித்தார் ருக்குமணி.

எல்லோரும் அவரை சூழ்ந்துக் கொண்டனர்.

எல்லோரையும் பார்த்து, " எனக்கு ஒன்னுமில்லை பயப்படாதீங்க." என்றவர், விஸ்வரூபனையும், அனன்யாவையும் அருகே அழைத்தார்.

விஸ்வரூபனிடம், " அனுவை நீ தான் பார்த்துக்கனும் பா… நீ இப்பவே என் கண் முன்னாலயே , அவ கழுத்துல மூனு முடிச்சு போடு."என்றுக் கூற.

விஸ்வரூபனோ, " பாட்டி…" என்று ஏதோ கூற வர…

" நீ எதுவும் சொல்ல வேண்டாம். என் பேத்தி இந்த நிலைமையில் இருக்கிறதுக்கு நீ தான் காரணம். என் கூடவே வச்சிருந்தா இப்படி ஆகியிருக்காதே. " என்று புலம்ப…

" பாட்டி… மாமாவ எதுவும் சொல்லாதீங்க." என்று அனு அழ.

அவளிடம் எதுவும் சொல்லாமல், " விஸ்வரூபா… இந்த பாட்டியோட
கடைசி ஆசை. என் பேத்தியை நீதான் கட்டிக்கணும். " என.

விஸ்வரூபன் வாயடைத்து நின்றான்.

அனன்யா தான்," பாட்டி… மாமாவை என்னால அப்படியெல்லாம் நினைக்க முடியாது. அதுவுமில்லாமல் மாமா லவ் பண்றாங்க." என்று கத்த…

" டேய் விஸ்வரூபா… என் பேத்தியை தவிர வேற யாரை கல்யாணம் பண்ணாலும், என் ஆத்மா சாந்தி அடையாது. நான் செத்தாலும் பார்த்துட்டே இருப்பேன். என் வீட்ல, என் பேத்தியை கண்ணீர் விட வைத்து விட்டு, நீங்க எல்லாம் சந்தோஷமா கும்மாளம் போடுவீங்களா? எங்கிருந்தோ வந்தவங்க இங்கே சந்தோஷமா இருப்பாங்க. இந்த வீட்ல பொறந்த என் பொண்ணும், பேத்தியும் கண்ணீர் விடணுமா? " என்று ஆங்கரமாக அந்த அணையப் போகும் ஆத்மா கூற…

மொத்தம் குடும்பமும் அதிர்ந்தது‌.

' தன்னால் ராதிகாவின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது.' என்று எண்ணிய விஸ்வரூபன், " அப்படியெல்லாம் பேசாதீங்க பாட்டி. நான் அனன்யாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று இறுகிய குரலில் கூறினான்.



இன்று…

குற்றவுணர்வுடன் தலைக்குனிந்த விஸ்வரூபன் அருகில் சென்ற ராதிகா, கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனோ நிமிர்ந்தபாடில்லை என்றவுடன்," ‌ஹலோ… இப்போ என்ன நடந்திடுச்சுன்னு சார் சீன் போட்டுட்டு இருக்கீங்க." என்றாள் ராதிகா.

" ஹேய் ராதா… ரியல்லி சாரி. உண்மையிலே உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் நினைக்கலை. காட்… உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் விலகி விலகிப் போனேன். கடைசியா எங்க பாட்டி நினைச்சது மாதிரியே நடந்துடுச்சு. " என்று அவளது கையைப் பற்றி, பித்துப் பிடித்தாற் போலக் கூறினான்…

"விஷ்வா… காம் டவுன். என்னை நல்லா பாருங்க. நான் எங்கேயாவது ஹர்ட் ஆன மாதிரி தெரியுறேனா. உங்களால என்னை கஷ்டப்படுத்த தான் முடியுமா? யார் என்ன சொன்னால் என்ன?"

" ராதா… நான் நம்ம வாழ்க்கைய எப்படியெல்லாம் ஆரம்பிக்கணும்னு கனவு கண்டேன் தெரியுமா? இப்படி செல்ஃப் கண்ட்ரோல் இல்லாமல் இருப்பேன் நினைக்கலை." என்று பெருமூச்சு விட்டான்.

" விஷ்வா… கஷ்டப்பட்டு தான், நான் உங்களை அக்ஸப்ட் பண்ணேன் நினைக்கிறீங்களா? என்னோட காதலை உணரவில்லையா?" என்று தன் சிவந்த முகத்தை, மறைத்துக் கொண்டே வினவினாள்.

அவளை ஆசையாகப் பார்த்தவன், இழுத்து அணைத்துக் கொண்டான்.

" சரி விடுங்க விஷ்வா… பாட்டி என்ன சொன்னாங்க. அனுவோட காதலை ஏன் அக்ஸப்ட் பண்ணிக்கல" என்று வினவ.

அவளை தன் அணைப்பிலிருந்து விடுவித்தவன், " பாட்டி விஷயம் நான் சொல்றேன். அனுவைப் பத்தி உன் ஃப்ரெண்ட் சொல்லலையா." என்று கூர்ந்துப் பார்க்க.

" அவனோட அண்ணனைப் பத்தி சொல்ல வேண்டியதைப் பற்றி சொன்னான். ஆனால் அனுவைப் பத்தி நீங்க தான் சொல்லணும்." என்றாள் ராதிகா.

பெருமூச்சு விட்டுக் கொண்ட விஸ்வரூபன் நடந்த அனைத்தையும் கூறினான்.

அனு காதலில் விழுந்ததிலிருந்து, அவளது காதலுக்கு வந்த தடை முதற்கொண்டு, பாட்டியின் சாபம் வரைக்கும் கூற…

தன் தோழியை நினைத்து கண்கலங்கி நின்றாள் ராதிகா.

தொடரும்…
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
அத்தியாயம் - 25

அன்று…

" நான் அனன்யாவை கல்யாணம் செய்துக்கிறேன்." என்ற விஸ்வரூபனின் வார்த்தைகளை கேட்டதும், ருக்குமணியின் முகமலர… ரஞ்சிதமோ முகம் மாற வெளியே சென்றார்.

அவருக்கு பின்னே வந்த கிருஷ்ணனோ ஆறுதலாக கையைப் பிடிக்க.

" ஏங்க… நான் எவ்வளவோ இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்காக பொறுத்துப் போய் தானே இருக்கேன். ஆனால் அத்தை, என்னை இந்த வீட்ல ஒருத்தியா நினைக்கலை. ரூபனை அவங்க பேரனா நினைக்கலை. அவங்களுக்கு, அவங்க பேத்தி தான் முக்கியம். நாங்க எங்கிருந்தோ வந்தவங்க தானே." என்று கதறி அழ…

" ரஞ்சிதம்… அம்மா வயசானவங்க… ஏதோ புரியாம பேசுறாங்க விடு…" என்று கிருஷ்ணன் சமாதானம் செய்ய முயல…

"சும்மா ஏதாவது என்னை சமாளிக்கறதுக்காக சொல்லாதீங்க. அவங்க வயசானவங்கன்னா இருந்துட்டு போகட்டும். அதுக்காக என் பையனோட ஆசையில் குறுக்க நிப்பாங்களா."

" அனு நம்ம வளர்த்த பொண்ணு இல்லையா… இப்படி எல்லாம் பேசாத ரஞ்சிதம்."

" நம்ம பையன் யாரையும் விரும்பலைன்னா, நானே முன்ன நின்னு கல்யாணம் செய்து வைப்பேனே. என் பையன் அவ்வளவு ஈஸியா அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்தாமல் இருக்க மாட்டானே. இப்போ அந்த பொண்ணை மறக்கணும்னா, அவனால முடியுமா? என் பையன் வாழ்க்கை அவ்வளவு தானா?" என்று புலம்பிக் கொண்டே நிமிர்ந்தாள் ரஞ்சிதம்.

அங்கோ அனன்யா, அனைத்தையும் கேட்டு விட்டேன் என்பது போல முகம் வெளுக்க நின்றாள்.

ஏற்கனவே ஆகாஷ் இல்லாமல் வாழவே விருப்பமில்லாமல் இருந்தவள், குழந்தை உண்டானதும் தான் கடவுள், அவளது வாழ்க்கையில் கருணை காட்டியதாக நினைத்தாள்.

ஏனென்றால், அவளது ஆகாஷின் ஜீவனல்லவா, அவளது வயிற்றில் உதித்திருக்கிறது.

ஆனால் அதை எண்ணி சந்தோஷம் கூட பட முடியாமல், அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்தேறிட, அலையில் மிதக்கும் துரும்பாக மிதந்தாள்.

நேற்று இரவு நடந்த களேபரத்தில் கூட, தனக்கு ஆறுதலளிக்க தான் குழந்தை உண்டாகிருக்கிறது என்று உள்ளுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆனால் அதுவும் இப்பொழுது நொறுங்கி போய் விட்டது. தனது மாமாவின் காதலுக்கு தானே முட்டுக்கட்டையாக இருக்க போவதை எண்ணிக் குழம்பியவள், வெளியே வர ‌…

தனது அத்தை பேசிய அனைத்தையும் கேட்டு உள்ளுக்குள் மரித்தாள். தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும். இருந்தால் எல்லோருக்கும் தொல்லை தான் என்று எண்ணத் தொடங்கினாள்.

குழந்தைக்காக கூட உயிர் வாழ வேண்டும் என்று எண்ணவில்லை அனன்யா.

அனன்யா வெளியே சென்ற பிறகு, அவளைத் தேடி வந்தான் விஸ்வரூபன்.

அவனிடம், " மாமா… இந்த கல்யாணம் வேண்டாம்." என்று அனன்யா உறுதியாகக் கூற.

"நான் பாட்டியிடம் வாக்குக் கொடுத்து விட்டேன். இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். " என்றவன்,

கிருஷ்ணனிடம், " பாட்டி இப்பவே, இங்கேயே திருமணம் செய்யணும் என்று சொல்றாங்க. ஏற்பாடு பண்ணுங்க பா." என்றவன் அவனது ஓய்வு அறைக்குச் சென்று விட்டான்.

" ரூபா…" என்ற ரஞ்சிதத்தின் குரல் அவனது செவியை எட்டவில்லை. அதற்கு பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மிகப் பெரிய சுகம் ஹாஸ்பிட்டலின் சேர்மனின் திருமணம், ஹாஸ்பிடலில் எளிமையாக நடந்தது.

தன் பேத்தியின் திருமணம் நடந்த சந்தோஷத்தில், மீண்டும் ஹார்ட் அட்டாக் வர, ருக்குமணியின் உயிர் மகிழ்ச்சியோடு பிரிந்தது.

******************

தினமும் எவ்வளவு வேலை இருந்தாலும், ஒரிரு நிமிடங்களாவது ஃபோன் செய்து பேசும் விஸ்வரூபன் பேசாமல் இருக்க, ராதிகாவிற்கு ஏனோ மனம் பதட்டமாகவே இருந்தது.

இரவு முழுவதும் அவனுக்கு அழைத்துக் கொண்டு இருக்க… ஹாஸ்பிட்டலில் இருந்ததால் சைலன்டில் போட்டிருந்தான்.

காலையில் முதல் வேலையாக அனன்யாவிற்கு, அழைத்தாள் ராதிகா.
அவளோ பாட்டி இறந்த அதிர்ச்சியிலும், திடீர் திருமணத்திலும் பிரம்மை பிடித்தாற் போல் இருந்தாள்.

அருகில் இருந்த நர்ஸ் தான் ஃபோனை எடுத்து, அனன்யாவின் பாட்டி இறந்த தகவலைக் கூற…

ஒரு நிமிடம் அனுவையும், விஷ்வாவையும் நினைத்து கவலைக்கொண்டவள், பிறகு சுந்தரியிடம் சென்று, " மா… அனுவோட பாட்டி இறந்துட்டாங்க. நான் போகணும் மா." என ராதிகா கூற.

" இன்னைக்கு விக்ரம் கடைக்கு வர மாட்டான். ஃப்ரெண்டோட ரிஷப்ஷனுக்கு போகணும்னு சொன்னான். உங்க அப்பா வர்றது சந்தேகம்." என சுந்தரி கூறினார்…

' கடைசியா விஷ்வாவோட பாட்டிய பார்க்கக் கூட முடியாதா… எத்தனையோ முறை, அனுவும், விஷ்வாவும் கூப்பிட்டாங்களே… போயிருக்கலாமோ…' என தனக்குள் யோசித்து முகம் வாடி நின்றாள்.

வெளியே சென்றிருந்த சண்முகமும் உள்ளே வர வாடி நின்ற ராதிகாவை தான் பார்த்தார்." ஏன் டா ராது… என்னமோ போல இருக்க. என்ன பிரச்சினை?"என்று வினவ.

சுந்தரி தான் நடந்ததைக் கூற…

சண்முகமோ, " நான் வர முடியாது மா. ஆனால் விக்ரம் சென்னைக்கு தான் போறான். அவனோட போய் உன் ஃப்ரெண்ட் வீட்ல இறங்கிக்கோ. விக்ரம் பங்ஷன் முடிந்து, திரும்ப வரும்போது உன்னைக் கூப்பிட்டுப்பான்." என்று அவளது வருத்தத்தைப் போக்க உடனடியாக தீர்வு கண்டுபிடித்தார்.

விக்கிரமோடு கிளம்பியவள், விஸ்வரூபனது வீடு இருக்கும் ஏரியாவில் இறங்கிக் கொண்டாள்…

" ஃபோன் பண்ணுறேன் ராதிகா. டேக் கேர்." என்று விட்டு விக்ரம் அவனது வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.

ராதிகா அந்த வீட்டிற்குள் கூட நுழையவில்லை. வெளியே தான் எல்லோரும் இருக்க. ருக்குமணியை தூக்குவதற்கு ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது.

அனுவைப் பார்த்தவள் மெல்ல அவளருகில் சென்று, " அனு…" என ஆறுதலாக அழைக்க.

இதுவரை எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், ராதிகாவைப் பார்த்ததும் அழுகை கட்டுக்கடங்காமல் பெருகியது.

அனுவோ, தான் அவளது வாழ்க்கையை தட்டிப் பறித்ததை நினைத்து அழுது கரைய… ராதாகாவோ, பாட்டியை நினைத்து அழுவதாக எண்ணி, ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். " அனு..‌. பாட்டி நம்மக் கூடத்தான் இருப்பாங்க. அழாதே." என்றாள்.

அனு அழுவதைப் பார்த்த பெரியவர், " தம்பி விஸ்வரூபா… உன் பொண்டாட்டிய பாரு. அழுதுக்கிட்டே இருக்கா. அவளை சமாதனப்படுத்து." என்று தனது கட்டைக் குரலில் கூறினார்.

அவரது குரல் செவியில் நுழைய, அதிர்ச்சியாக தன் தோழியைப் பார்த்தாள் ராதிகா.

அனன்யாவோ தலைக்குனிந்து நிற்க… விஸ்வரூபனும் அவ்விடத்திற்கு வந்தான்.

தர்மசங்கடமான சூழ்நிலை நிலவ…

அனன்யாவும், விஸ்வரூபனும் ," ராது…" என்றழைக்க…

அவளோ, அனன்யாவின் கழுத்தில் மஞ்சள் மாறாமல் இருந்த தாலிக்கயிறைப் பார்த்ததுக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.

அவளது கண்களில் வழிந்த கண்ணீர் பாதையை மறைக்க, தடுமாறிக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

விக்ரம் வரும் வரைக்கும், அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அவளது காதல், அவளுடைய வீட்டில் யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது .

விஸ்வரூபனோ மனதிற்குள், ' ராதிகாவிற்கு எல்லாம் தெரிந்தது நல்லதுதான். அப்பவாவது அவளுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளட்டும் என்று நினைத்தான்.

நாட்களும் வேகமாக மறைய… அனன்யா ஏனோ தானோவென்று இருந்தாள். குழந்தை அதுபாட்டுக்கு வளர்ந்தது.

ஒழுங்காக மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளாமல் அவளது உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டு இருந்தாள்.

வேண்டுமென்று செய்யவில்லை, ஆனால் அலட்சியமாக இருந்தாள்.


திடீரென்று ஒரு நாள் கிருஷ்ணனுக்காக காத்திருந்தவள் அவர் வந்ததும், " மாமா… என்னோட ஃப்ரெண்ட்க்கு நம்ம காலேஜ்ல ஒரு சீட் அலார்ட் பண்ணுறீங்களா?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

" அனு மா… நம்ம காலேஜுன்னு சொல்லிட்டு, அப்புறம் என்னமா தயக்கம். அது உன்னோட காலேஜ். யாரை வேணும்னாலும் சேர்க்கலாம், எத்தனை பேரு வேணும்னாலும் சேர்க்கலாம் சரியா…" என்றவர் அவளது தலையை வருட.

கலங்கிய கண்களை சமாளித்துக்கொண்டு, " சரி." என்பது போல் தலையை ஆட்டினாள்.

" மாமா… ஆனால் என் பேரை சொல்லாமல், நம்ம சேலவர் டாக் மூலமாக , ஃப்ரீ கோட்டால ஏற்பாடு பண்ணுங்க." என்று மெல்லிய குரலில் கூற…

தனது மருமகளை கூர்ந்துப் பார்த்தார் கிருஷ்ணன்.

அவரது பார்வையில், தடுமாறிய அனன்யா, " மாமா… சிபாரிசில் சேர அவளுக்கு விருப்பம் இல்லை. அதான்…" என்று ஏதேதோ கூறி சமாளித்தாள்.

" சரி டா." என்ற கிருஷ்ணனுக்கு, உள்ளுக்குள் சந்தேகமாக தான் இருந்தது. ' என்னைக்காக இருந்தாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது.' என்று எண்ணிக் கொண்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.

"தேங்க் காட்." என்று கடவுளுக்கு நன்றி கூறினாள் அனன்யா. ஆம் அவள் எப்படியாவது ராதிகாவை, இங்கே வர வைத்து, அவளையும், விஸ்வரூபனையும் சேர்த்து வைத்து விட்டு, தான் அவர்களது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்று எண்ணினாள்.

அவர்களது வாழ்க்கை விட்டு தான் விலக வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் இறைவனோ, இவ்வளவு நாள் அவள் பட்ட துன்பங்களே போதுமென அவரிடம் அழைத்துக் கொண்டார்.

தனது மாமாவின் சம்மதம் கிடைத்தவுடன்,' ராதிகாவை ஒரு முறை தஞ்சாவூர் சென்று பார்த்தால் என்ன?' என்று தோன்றி விட.

"தஞ்சாவூர் கோவிலுக்கு போகணும்னு ஆசையா இருக்கு அத்தை..." என்று ரஞ்சிதத்திடம் கூறினாள்.

" அப்படியா தங்கம். இரு ரூபனை கூட்டிட்டு போக சொல்றேன். அப்படியே பக்கத்துல உள்ள கோயிலுக்களுக்கும் போயிட்டு வாங்க." என்றவர் உற்சாகமாக திட்டம் தீட்டினார்.

எப்படியாவது தன் மகனும், மருமகளும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்தார். அவரது கோபமெல்லாம் சில நாள் தான் இருந்தது. அதுவும் அவரது மாமியார் மேல் மட்டுமே. அவரும் இறந்து விட… இறந்தவர் மேல் கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது என்று விட்டுவிட்டார்.

விஸ்வரூபன் வீட்டிற்கு வந்ததும் ரஞ்சிதம், "தம்பி... அனு தஞ்சாவூர் கோவில் பார்க்கணும்னு ஆசைப்படுறா… போயிட்டு வாங்க." என்றார்.

அங்கு ஹாலில் டிவியில் கண் வைத்துக் கொண்டு, காதை இவர்கள் பேச்சில் வைத்துக் காத்திருந்தாள் அனன்யா.

அவளை ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்தவன் தன் தாயிடம், " சரி மா." என்று விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான்.

' ராதிகாவை பார்க்கவே கூடாது.' என்று கடவுளுக்கு அவசர வேண்டுதல் வைத்து விட்டு, ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

ஆனால் அவளை சந்தித்ததும் அல்லாமல், அவளது தவிப்பைக் கண்கொண்டு பார்த்து விட்டும் தான் வந்தான்.

ராதிகா மட்டும் தவிக்கவில்லை. அனன்யாவும் தான் தவித்துப் போனாள்.

ராதிகாவின் பாராமுகம் கண்டு தவித்தவள், ஹிஸ்ட்ரியா பேஷண்ட் போல கத்த… அவளை சமாளித்து சென்னைக்கு கூட்டி வருவதற்குள் விஸ்வரூபனுக்கு போதும் போதுமென்று ஆனது.

சென்னை வந்ததும் முதல் வேலையாக கௌரியிடம், " அத்தை… அனு எப்படி இருக்கா? அவ ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு. ரொம்ப டென்ஷனாகுறா. அவளது பிகேவியர், சம்திங் டிஃபரெண்ட்." என்று சொல்ல…

கௌரி ஒரு டாக்டர். அதனால் அனன்யாவுடைய உடல்நிலையும்,, மனநிலையும் நன்கு புரிந்தது. அதைப் பற்றி பெரிதாக கூறாமல், " பி.பி கொஞ்சம் அதிகமாக இருக்கு. டேப்ளேட் கொடுத்துருக்கேன்." என்று மட்டும் கூறினாள்.

" ஓ…" என்ற விஸ்வரூபன் அமைதியாக சென்று விட்டான்.

அனு அனிமீக்காக இருக்கிறாள், பிரசவத்தின் போது ஓவர் ப்ளீடிங் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதை சொல்லவில்லை. எல்லோரையும் ஏன் பயமுறுத்த வேண்டும், தான் கவனமாக பார்த்துக்கலாம் என்று நினைத்திருந்தவள், அனுவிடம் மட்டும், " பி.பி ரைஸ்ஸாகக் கூடாது. டேப்ளெட்டெல்லாம் ஒழுங்கா எடுத்துக்கோ. பெயின் லைட்டா வரும் போதே சொல்லு." என்றெல்லாம் கூற…

அதை காற்றில் பறக்கவிட்டாள் அனன்யா.

கௌரியின் பதற்றத்தை உணர்ந்துக் கொண்டாள். அவளுக்கு வாழும் எண்ணம் துளிக் கூட இல்லை.

கிருஷ்ணனிடம் சென்று, " மாமா… எனக்கு பிரசவத்துல ஏதாவது ஆனால், ராதிகாவை மாமாவுக்கு கட்டி வைச்சிடுங்க." என.

" அனு… இப்படி எல்லாம் பேசாதே. உனக்கு ஒன்னும் ஆகாது. ஆமாம் யார் அந்த ராதிகா?" என்று கிருஷ்ணன் வினவ.

" ராதிகா தான் மாமா லவ் பண்ற பொண்ணு. அவளைத் தான் நம்ம காலேஜ்ல சேர்க்க கேட்டேன்." என்று அழுகையை அடக்கிக் கொண்டு கூற.

" ஓ… நீ எதையும் நினைச்சு குழம்பாத. அந்த பொண்ணு ருபனோட பாஸ்ட். நீ தான் அவன் லைஃப் புரியுதா?" என்ற கிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார்.

அனன்யாவோ, 'எப்படியோ மாமாவுக்கு விஷயம் தெரிந்தால் போதும்.' என்று நினைத்தவள், நிம்மதியைடைந்தாள்.

கௌரி பயந்தது போலவும், அனன்யா எதிர்ப்பார்த்து போலவுமே, ஹைபர் டென்ஷன் அண்ட் ஓவர் ப்ளீடிங்… குழந்தையை பெற்றுக் கொடுத்தது விட்டு, வாழ்க்கையில் போராடியவள், உயிருக்குப் போராடாமல் இறைவனடி சென்று விட்டாள்.


இன்று…

தன் தோழியை நினைத்து கண் கலங்கி நின்ற ராதிகாவை பார்த்த விஸ்வரூபன், " உன்ன கஷ்டபடுத்தக் கூடாதுன்னு தான் நான் நினைத்தேன். ஆனாலும் பெரிய கோவிலில் கலங்கிய உன் முகத்தைப் பார்த்ததும், என் உயிரே போய்டுச்சு.

என்னுடைய உணர்வுகளை கூட வெளிக்காட்ட முடியவில்லை.

நான் வருத்தப்பட்டால், என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே என்று அம்மா வருத்தப்படுவார்கள். ஏற்கனவே பாட்டி மேல கோபத்துல இருந்தாங்க.

அனுவோ, ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் தவிச்சிக்கிட்டு இருந்தா, அத்தையோ தான் மட்டுமில்லாமல், தன் மகளும் இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்காளே என்று கலங்கித் தவிச்சிட்டு இருந்தாங்க.

இப்படி இருக்க, என் உணர்வுகளை வெளிக்காட்டினால் யாரும் தாங்க மாட்டாங்க.

அதான் என்னுடைய உணர்வுகளையெல்லாம் எனக்குள்ளே புதைத்துக் கொண்டேன்.

உயிரிலே தளும்பும் உன் நினைவுகளை வெளிக்காட்டாமல், எனக்குள்ளே அடக்கிக் கொண்டேன். அந்த ஒரு வருடமும் எனக்கு நரகம் தான்.

என்னுடைய அறையில் மட்டுமே, நான் நானாக இருந்தேன். எனக்குத் துணை உன்னுடைய குரல் மட்டுமே. அதுவே எனக்கு பழகிப் போனது. அனுவும் வாழ விருப்பம் இல்லாமல் இந்த உலகத்தை விட்டுப் போய்ட்டா. குழந்தை மட்டுமே என் உலகமாக மாறிப்போனது.

தனக்கு பெண் குழந்தை தான் என்று அவளுக்கு தெரிந்ததால், அம்மா, அப்பாவிடம், "அவந்திகா." என்று தான் வைக்கணும் என்று சொல்லியிருந்தா… அதான் அவந்திகான்னு பெயர் வச்சோம். கூப்பிடுவது அம்முக்குட்டி.

அம்முக்குட்டி நான் வீட்டுக்கு வந்துட்டா, என்னை விட்டு நகரவே மாட்டா… அவளுக்கும் உன் பாட்டுனா ரொம்ப பிடிக்கும்." என்றவன் அன்றைய நாளுக்கு சென்று விட்டு வந்தான்.

" பழசெல்லாம் இப்போ எதற்கு விஷ்வா? நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். " என்று ஆறுதலாக கூற.

" ஆனாலும் ராதா. நான் உன்னோட காதலுக்கு தகுதியானவன் இல்லை. நான் கொஞ்சம் செல்ஃபிஷ் தான் இல்லையா? இல்லைன்னா பாட்டி பேச்சைக் கேட்டுட்டு உன்னை விட்டுக்கொடுத்து இருப்பேனா…" என்று குற்றவுணர்வுடன் வினவ .

அவனுக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கினாள் ராதிகா.
" என்னை சும்மா ஒன்னும் விட்டுக் கொடுக்கவில்லை. என்னுடைய நலனுக்காக மட்டும் தான் நீங்க விட்டுக் கொடுத்தீங்க. நான் கஷ்டப்படக்கூடாது. உங்க பாட்டியோட சாபம் பலிச்சுடக் கூடாது, என்று உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டீங்க. உங்க காதலை அடைய நான் கொடுத்து வச்சுருக்கணும். எனக்கு உங்களையும் நல்லாத் தெரியும். அனுவையும் நல்லாத் தெரியும். ஏதோ தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தான் உங்கள் திருமணம் நடந்திருக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. என்னைப் பார்த்தால், உங்க இருவருக்கும் தர்மசங்கடமா இருக்கும் என்று தான் விலகிப் போனேன்." என்றாள்.

இப்போது விஸ்வரூபனின் முகத்தில், தனது காதலைப் புரிந்துக் கொண்ட மனைவியை எண்ணி பெருமிதம் வழிந்தது.

" சரி வாங்க கீழே போகலாம். எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க."என்ற ராதிகா வேகமாக இரண்டு எட்டுத் தான் எடுத்து வைத்திருப்பாள்.

பிறகு வேகமாக திரும்பி வந்தவள், அவள் பின்னே வந்த விஸ்வரூபனின் மேல் மோதி நின்றாள்.

" ஹே… ராதா பார்த்து… " என்றான் விஸ்வரூபன்.

" விஷ்வா.. ஆதிக் கிட்ட நீங்க ஏன் சண்டை போடுறீங்க. அவன் என்ன தப்பு பண்ணான். " என்று ராதிகா மிரட்ட.

அவனோ ஒன்றும் கூறாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

" விஷ்வா நான் சொல்றதை கேட்பீங்களா…" என்று தன்மையாக வினவினாள் ராதிகா.

"முதல்ல என்ன விஷயம். அதை சொல்லு." என்று அவளை இறுக்கமாக பார்க்க…

" அது வந்து நம்ம… இல்லை உங்க வீட்டுக்கு வர்றதுக்கு பர்மிஷன் தரணும்." என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் ராதிகா.

அவளைப் பார்த்து முறைத்த விஸ்வரூபன், " உதை வேணுமா? அது நம்ம வீடு." என்று முதலில் திருத்தியவன் பிறகு, " ஆதி விஷயம் வேறு. அது நான் மட்டுமா முடிவெடுக்க முடியாது. வீட்டுக்கு வர்றதுக்கு அத்தைக் கிட்ட தான் கேட்கணும். ஆனால் நான் சண்டை போட மாட்டேன் என்று வேணும்னா உறுதி தரேன்."என்று விட.

"கௌரி மா கிட்ட நான் சொல்றேன் அவங்க புரிஞ்சுப்பாங்க. யாரோ செஞ்ச தப்புக்கு ஆதவனை ஏன் தண்டிக்கனும். " என்றாள் ராதிகா.

" நீ சொல்றதும் சரி தான். கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருந்திருந்தா, நம்ம அனுவும் நம்மக் கூடவே இருந்திருப்பா" என்று விஸ்வரூபன் கண்கலங்க.

" சரி விடுங்க விஷ்வா. முடிஞ்ச விஷயத்தைப் பற்றி பேச வேண்டாம். ஆனால் குழந்தையை பற்றி எப்படி ஆதிக்கு தெரியும்."

" அது கல்யாணம் முடிஞ்சு கெஸ்ட் ஹவுஸ்க்கு தான் அவங்க போனாங்க. மே பி வாட்ச்மென் சொல்லியிருக்கலாம். ஆக்ஸிடென்ட் ஆனதையே வாட்ச்மேன் ஃபோன் பண்ணி தான் அவங்களுக்கு தெரியவந்தது. அதுக்கப்புறம் எனக்கு தெரியவந்தது.

அனுவைப் பார்க்க, பலமுறை வீட்டுக்கு வந்திருந்தான். நாங்க தான் அனுமதிக்கவில்லை. ஒருமுறை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லும்போது அவள் மாசமாக இருப்பதை பார்த்து விட்டான். அதற்குப் பிறகு அனு எப்போ வெளியே போனாலும் வந்திருவான். அனு அந்தளவுக்கு எதையும் கவனிக்க மாட்டாள். அவளுக்கு பிறகு, குழந்தையை வெளியே அழைத்து வரும் போது எப்படியாவது பார்த்து விடுவான்." என்றவன் அமைதியாக.

" சரி விஷ்வா… நீங்க ஆதிக்கிட்ட கோபப்பட மாட்டீங்கள்ல" என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள…

" அது… நீ நடந்துக்கிறதில் தான் இருக்கு."

" என்ன சொல்ற விஷ்வா?"

" அதுவா… எனக்கு இப்போ ஒரு கிஃப்ட் வேண்டும். அது தந்துட்டினா நீ சொல்றபடியெல்லாம் நான் கேட்குறேன்." என்று கள்ளச்சிரிப்புடன் வினவ.

'பார்வையே சரியில்லையே.' என்று நினைத்துக்கொண்டே, " என்ன கிஃப்ட்." என்று வினவினாள்.

" இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடு." என்றான் விஸ்வரூபன்.

" ஹாங்." என்று அதிர்ந்தவள்," ஊகூம்." என்று முகம் சிவக்க கூறினாள்.

அந்த பிடிவாதக்காரனோ, தான் நினைத்ததை சாதித்து தான் விட்டான்.

முகம் முழுக்க, பூரிப்புடன் கீழே இறங்கி வந்த இருவரையும் பார்த்தே அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.

" வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்." என்று சண்முகம் அழைக்க.

" எனக்குப் பசிக்கலை. லஞ்சே சாப்பிட்டுக்கிறேன்." என்றான் விஸ்வரூபன்.

" அது வந்து மாப்பிள்ளை… மதிய சாப்பாடு ரெடியாயிடுச்சு." என்று தயங்கிக் கொண்டே கூறினார்.

அப்போது தான் மணியைப் பார்த்தான். அசடு வழிய ராதிகாவைப் பார்க்க… அவளோ முகம் சிவக்க தலைக்குனிந்து இருந்தாள்.

" ராது மா. மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்து உட்கார்." என்று சுந்தரி கூற.

ஒரு வழியாக அனைவரும் உணவருந்த சென்றனர். " அப்போ… நான் கிளம்புறேன்." என்றான் ஆதவன்.

" ராதா… உன் ஃப்ரெண்ட் ஓவரா பண்றான். வந்து ஒழுங்கா சாப்பிட சொல்லு." என்றான் விஸ்வரூபன்.

அவன் அப்படி சொன்னதிலே மகிழ்ந்த ஆதவன், ராதிகாவின் மறுபக்கத்தில் அமர்ந்தான்.

ஒருபக்கம் உயிரானவனிருக்க மறுபக்கம் உற்ற தோழனிருக்க நிறைவுடன் உணவருந்தினாள் ராதிகா.

சுந்தரியும், சண்முகமும் தன் மகளின் முகத்தில் தெரிந்த நிறைவிலே நெகிழ்ந்துப் போயினர்.

இவர்களது மகிழ்ச்சி குன்றாமலிருக்க தஞ்சை பெருவுடையார் அருள் புரிவார்.

முற்றும்...
 

Viswadevi

Member
Vannangal Writer
Messages
73
Reaction score
68
Points
18
எபிலாக்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவந்திகாவின் பிறந்தநாள்… அனைவரும் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர்.

சுந்தரி, சண்முகமும் பரபரப்பாக இருந்தனர்.

இறந்து போன மகளின் நினைவாக ஆரம்பித்த அன்னதானத்தோடு, இப்போது பேத்தியின் பிறந்தநாளுக்காக அபிஷேகமும் ஏற்பாடு செய்தனர். ஆம் அவர்களுடைய முதல் பேத்தி அவந்திகா தான். இன்னொரு பேத்தியும் இருக்கிறாள்.
ராதிகாவின் குழந்தை.

அனன்யா என்று பெயர் வைத்தனர். மீண்டும் அந்த வீட்டிலே வந்து பிறந்து விட்டாள் அந்த வீட்டு இளவரசி.

போன வருடம் தான் அனன்யா பிறந்திருந்தாள். அதனால் கோவிலுக்கு ஆதவனும், அவந்திகாக்குட்டியும் மட்டுமே வந்தனர்.


இந்த வருடம் மொத்த குடும்பமும் வந்து அபிஷேகம் ஆராதனை பார்த்தனர்.

பிறகு பெரியவர்கள் அன்னதானம் வழங்க சென்று விட …

குழந்தைகள் ஓடி விளையாடினர்.

ஒரு வயது குழந்தையான அனன்யா, " அக்கா… அக்கா…" என்று அவந்திகாவின் பின்னேயே தத்தக்கா, பித்தக்காவென ஓடியது.

" பாப்பா… " ஓடக் கூடாது. கீழே விழுந்தால் வலிக்கும் என அந்த பெரிய மனுஷி அவந்திகா, தன் மழலைக் குரலில் கூறிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரையும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன்.

இப்போது ஆதவனும் அவர்கள் வீட்டில் ஒருவனாக மாறிவிட்டான்.

அவனுடைய அப்பா, அம்மா உருவாக்கிய ஹாஸ்பிடலைப் பார்த்துக் கொண்டாலும், இவர்களது சுகம் ஆஸ்பத்திரியிலும் வந்து கேஸ்களை கவனிப்பான்.

அவனுடைய பெற்றோர்கள் வழக்கம் போல, "உன் இஷ்டம்." என்று ஒதுங்கிக் கொண்டனர். அவர்கள் மாறவே இல்லை அதை அவன் எதிர்பார்க்கவும் இல்லை.

அவனுக்கு தேவையான அன்பு இப்பொழுது திகட்ட, திகட்ட கிடைக்கும் போது அவனுக்கு வேறு என்ன தான் வேண்டும்.

அவன் எதிர்ப்பார்த்த தாயன்பு, கௌரியிடம் கிடைக்கிறது. கௌரிக்கும், அவனுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அவர்களுக்கிடையே உள்ள பாசத்தை எல்லோரும் வியந்து தான் பார்க்கின்றனர்.

இரண்டு வருடத்திற்கு முன்பு ஆதவனுக்காக ராதிகா கௌரியிடம் பேசுவதாக, விஸ்வரூபனிடம் சொல்லியிருந்தாள். ஆனால் அவள் பேசுவதற்கு முன்பே ஆதவனே சென்று பேசியிருந்தான்.

இவர்கள் தஞ்சாவூருக்கு மறுவீட்டுக்கு போய் விட்டு வந்த அடுத்த நாள் அவர்கள் ஹாஸ்பிடலில் சென்று சந்தித்தான்.

' ஆதவனைப் பார்த்த கௌரி முகம் வெளுக்க நின்றாள்.

" அத்தை… இப்படி உங்களை கூப்பிடலாமா என்றுக் கூடத் தெரியலை. ஆனால் என் பேபிமாவோட அம்மா என்ற உரிமையில் கூப்பிடுறேன்.

அப்புறம் உங்களை கஷ்டப்படுத்துறதுக்காக நான் வரலை.

எங்க வீட்டு ஆளுங்க பண்ணது தப்பு தான். ஆனால் நாங்க எந்த தப்பும் செய்யலை. எங்க ஆகாஷ் ரொம்ப நல்லவன். அனு யாருன்னு தெரியாமலே தான் விரும்ப ஆரம்பிச்சான்.

அவங்க ரெண்டு பேரும், கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். அவசரப்பட்டு கடவுள் கிட்ட போயிட்டாங்க.

எனக்கு இருந்த உண்மையான உறவு அவன் தான். அவனும் என்னை விட்டு போகவும், ரொம்பவே மனதளவுல நொறுங்கி போயிட்டேன்.

ஏனோ தானோ என்று வாழ்க்கை போயிட்டு இருக்கும் போது தான், மாசமா இருக்குற பேபிமாவைப் பார்த்தேன்.

என் அண்ணன் குழந்தை தான் எனக்கு நன்றாக புரிந்தது.

அவங்க ரெண்டு பேரையும் என்னை நம்பி எங்க அண்ணன் விட்டுட்டு போயிருக்கான். அவங்களை நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சேன்.

பேபிமாவும் என்னை ஏமாத்திட்டா.

எனக்குன்னு மீதி இருக்குற ஒரே உறவு குட்டிப் பாப்பா தான். பழசை மனசுல வைச்சுக்கிட்டு, குட்டிப்பாப்பாவை பார்க்க மறுத்துடாதீங்க. எனக்குன்னு வேற யாரும் இல்லை. நான் வேணும்னா அவங்க செஞ்சதற்காக மன்னிப்பு கேட்குறேன்." என்று கண் கலங்க.

' யாரோ செய்த தவறுக்கு இவன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். இவனுக்கு உள்ள பக்குவம் எனக்கு ஏன் வராமல் போனது.' என்று தனக்குள் எண்ணியவள், " நீ ஏன் பா மன்னிப்பு கேட்குற… எனக்கு என் பிரச்சினை மட்டுமே பெரிசா தெரிஞ்சது. என் பொண்ணைப் பத்தி நினைக்கலை. " என்றவரும் அழ.

ஆதி தான் அவரை சமாதானம் செய்தான்.'

அதற்குப் பிறகு இருவருடைய நெருக்கத்தைப் பார்த்து வாயில் விரல் வைக்காத குறை தான்.

இதோ இன்றுக் கூட ஆதவனுக்கு ஏத்த பொண்ணு கிடைக்கவில்லை என்று கவலையில் கடவுளை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார் கௌரி.


விளையாடிக் கொண்டிருந்த அனன்யா திடீரென்று அழ…

" பேபி மாக்கு என்னாச்சு ஏன் அழறீங்க." என்றான் ஆதவன்.

" அம்ம்மா…. " என.

" அம்மாக் கிட்ட போகணுமா… சரி அழாதே பேபி மா. வாங்க அம்மாக் கிட்ட போகலாம்." என்ற ஆதவன் இரு குழந்தையையும் இரண்டு பக்கம் தூக்கிக் கொண்டு நடந்தான்.

அவந்திகா வழக்கம் போல அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் செய்வதைப் பார்த்து, " நானு … " என்று அழுதுக் கொண்டிருந்த அனன்யாவும் முத்தமிட…

சிரித்துக் கொண்டே எல்லோரும் இருக்குமிடம் வந்தான்.

" எங்க இவங்க அம்மா? அழ ஆரம்பிச்சுட்டா." என்றான் ஆதவன்.

" உன் கூட இல்லையா? அவங்க ரெண்டு பேரும்…" என்று வினவினார் ரஞ்சிதம்.

" இல்லை மா."

" எங்க அண்ணனைக் கூட்டிட்டு போய், ஃபோட்டோ எடுக்க சொல்லிப்படுத்தி எடுக்கப் போறா. இந்தக் கோவிலுக்கு வந்தா, கோபுரம் பிண்ணனியில் அழகாத் தெரியணும். நானும் அழகாத் தெரியணும் என்று அவ செய்யுற அலப்பறை தாங்க முடியாது." என்று ஸ்வேதா சொல்லி சிரிக்க.

" ஆமாம். அப்படித்தான் பண்ணுவா." என்று ஒத்து ஊதினார் சுந்தரி.

" என் பொண்ணை வம்பிழுக்கலைண்ணா உனக்குக் தூக்கமே வராதே."என்று சப்போர்டுக்கு வந்தார் சண்முகம்.

" அதான… இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலை." என்றான் விக்ரம்.

இவர்கள் பேசுவதையெல்லாம் புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

"நான் ஒன்னும் சும்மா சொல்லை. வேணும்னா போய் பார்ப்போமா." என்றாள் ஸ்வேதா.

" பாப்பா இல்லாமல், நீ சரி இல்லை. அவ இருந்திருந்தா, அவளோட ஸ்வீட்டியை கிண்டல் பண்றதுக்கு உன்னை வைக்க மாட்டா."

" நல்லவேளை, அவ அவங்க ரெண்டு பாட்டிக்கிட்டேயும் இருந்துட்டு வரேன் என்று போயிருக்கா. இல்லைன்னா என்பாடு அவ்வளவு தான்." என்றாள் ஸ்வேதா.

விக்ரம் ஸ்வேதா வீட்டில் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள, விகர்தணா அவர்கள் பாட்டி வீட்டிற்குச் சென்றிருக்கிறாள்.

" சரி நேரமாயிடுச்சு… வாங்க நாம அப்படித் தானே போகணும். அவங்க ரெண்டு பேரும் என்ன தான் செய்யுறாங்கன்னு பார்த்துடுவோம்." என்றார் ரஞ்சிதம்.

" சரி… " என தலையாட்டிய மொத்த குடும்பமும், வெளியே வந்து பார்த்தால் ஸ்வேதா சொன்னது போல் ஃபோட்டோ தான் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ராதிகாவைப் பார்த்து சுந்தரி தான் கடிந்துக் கொண்டார். " ராது மா… கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா… புள்ளைங்களையும் விட்டுட்டு, வேலையும் பார்க்காமல் இருக்கீயே." என.

விஸ்வரூபன் சிரிப்புடன், "விடுங்கத்தை… இங்கே வந்ததான் அவ ஃப்ரீயா இருப்பா. அங்கே அவ பிசியான கார்டியாலஜிஸ்ட். " என.

" அதுவும் சரிதான்." என தலையாட்டினார் சுந்தரி.

தன் அம்மா திட்டியதையெல்லாம் காதிலே வாங்காமல், " இங்கே பாருங்க. நாங்க ரெண்டு பேரும் கோவில் பிண்ணனியில தெரியுற மாதிரி ஃபோட்டோ எடுத்திருக்கோம் நல்லா இருக்கா?" என்று சின்னப்பிள்ளை போல வினவ.

எல்லோரும் அவளைப் பார்த்து சிரித்தனர்…

" எதுக்கு சிரிக்கிறீங்க?" என்றாள் ராதிகா

" அதை விடு‌ மா. அவங்களுக்கு வேலை இல்லை. சும்மா உன்னை கேலி செய்யுறாங்க. நீ என்னைக்கும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும். இந்த கோவில் எப்படி காலத்தால் அழியாமல் கம்பீரமாக இருக்குதோ, அதே மாதிரி நீயும், என் பையனும் மகிழ்ச்சி குன்றாமல், சந்தோஷமாக வாழணும். எங்க எல்லோருடைய ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு." என்று ரஞ்சிதம் வாழ்ந்த.

எல்லோரும் அமோதித்தனர்.

சுந்தரியும், சண்முகமும் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

ராதிகாவோ, வெட்கத்துடன் விஸ்வரூபனைப் பார்க்க… அவனோ எல்லையில்லா காதலுடன் பார்த்தான்.

அவர்கள் இருவரும் என்றும் மகிழ்வுடன் இருக்க, வாழ்த்தி விடைப்பெறுவோம்.

************************
 
Status
Not open for further replies.
Top Bottom