Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
334
Reaction score
615
Points
93
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 18


வாழ்க்கையில் சில நிகழ்வுகளை நாம் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.நம் மனம் விரும்புகிறதோ! இல்லையோ! சூழ்நிலை கைதியாக சில நேரங்களில் நாம் மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.


திகழொளியும் அப்படி ஒரு நிலையில் தான் இருந்தாள்.மணியரசி பால் சொம்பை கையில் கொடுத்து மிகன் அறைக்குப் போகச் சொன்னதும், அவளுள் சிறு பயம் தொற்றிக் கொண்டது.


அவளொன்றும் இந்த நிகழ்வைப் பற்றி அறியாத சிறு குழந்தை இல்லை தான்.ஆனாலும், மனதின் குழப்பமும், மிகனின் கோவமும் அவன் அறைக்குச் செல்ல அவளுள் பெரும் தயக்கத்தை உண்டாக்கியது.



மணியரசி முன்பு எதையும் காட்டிக் கொள்ள முடியாமல் தயக்கத்துடனேயே தங்கள் அறைக்குச் சென்றாள்.இனி அவள் இருப்பிடமும் அது தானே..!



மெல்ல அடிமேல் அடி வைத்து சென்றவளின் மனதிற்குள் காலையில் அவன் பேசிய வார்த்தைகள் நினைவு வந்து தீயாக காந்தியது.



இப்போது இன்னும் சுட்டெரிக்கும் ஆதவனாய் காத்திருப்பான் என்று மனம் கூப்பாடு போட்டாலும், வேறு வழி அறியாது அவனை எதிர்கொள்ளும் மனநிலையுடன் அவனின் அறையை நோக்கிச் சென்றாள்.



நாகரீகம் கருதி திறந்திருந்த அறைக் கதவை மெல்லமாக தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.



மிகனோ, சாளரத்தின் அருகில் நின்று இறுகிய முகத்துடன் ஆகாயத்தை அளந்து கொண்டிருந்தான்.



மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கணவனின் அருகில் சென்றாள்.


மனைவியின் வரவை அறிந்தாலும் கண்டு கொள்ளாமல் தன் நிலையிலேயே நின்றிருந்தான்.



கணவனின் செயல் வலியைக் கொடுத்தாலும், அதை பொருட்படுத்தாமல் " மணியம்மா பால் கொடுத்து விட்டாங்க .. இந்தாங்க .."என்று பால் சொம்பை அவன் புறம் நீட்டினாள்.



"எனக்கு வேண்டாம்.." என்று மிகன் அவள் புறம் திரும்பாமலேயே பதில் சொன்னான்.



அவளோ, என்ன சொல்வது என்று புரியாமல் அப்படியே நின்றிருந்தாள். சில நொடி கழித்து அருகில் இருந்த மேஜை மீது பால் சொம்பை வைத்தவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நேரத்தைக் கடத்தினாள்.



மிகனோ, அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் கற்சிலையாக சாளரத்தின் அருகிலேயே நின்றிருந்தான்.



சில நிமிடங்கள் அந்த அறையில் மின் விசிறியின் சத்தம் மட்டுமே கேட்டது.



கணவனை எப்படி அணுகுவது என்று அறியாமல் நெருப்பின் மீது நிற்பது போல் நின்றிருந்தாள். ஒருவாறு மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன் மெளனத்தைக் கை விட்டு , " மிகன் நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றாள்.



"எனக்கு இப்போது பேசும் மனநிலை இல்லை.." என்று இறுகி போய் பதில் உரைத்தான்.



"ப்ளீஸ் மிகன் நம் வாழ்க்கை பற்றி பேசியே ஆகனும்.."என்றவளிடம்..



கண்கள் சிவக்க திரும்பி அவளை தீர்க்கமாக பார்த்தபடி "என்னடீ பேசனும்? பேச என்ன இருக்கிறது! எத்தனை அழகாக நமக்குள் இருந்திருக்க வேண்டிய இரவு. ஆனால், அத்தனையும் உன்னால் வீணாய் போனது.."



"மிகன் எல்லா செயலுக்கும் இன்னொரு பக்கம் நியாயம் இருக்கும். அதை அறியாமலும் ,தெரிந்து கொள்ளாமலும் நீங்களே என் மீது தவறு என்று முடிவு செய்துவிட்டால் எப்படி..?"



"எல்லா குற்றவாளிகளும் தான் குற்றம் செய்ய வில்லை என்று தான் சொல்லுவார்கள்.."


"குற்றம் செய்யவில்லை என்றால் செய்யவில்லைன்னு தானே சொல்ல முடியும். ஒரே ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளுங்க மிகன்.எனக்கொரு வாய்ப்பு கொடுங்களே.."


"வாய்ப்பு கொடுத்தால் நடந்தது எல்லாம் சரியாகிடுமா..?இல்லை உன்னால் ஒவ்வொரு நொடியும் சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் புழுவா துடித்துட்டு இருக்கேனே அது தான் சரியாகிடுமா?"என்று அடங்காத கோவத்துடன் கத்தினான்.



அவளோ"மிகன் !" என்று கலங்கிய குரலில் அழைத்தாள்.



அவனின் அழைப்பை கண்டு கொள்ளாமல் " நான் என்று உன்னை நேசிக்க தொடங்கினேனோ ! நீ என் மனசுக்குள் என்று வந்தாயோ! அன்றிலிருந்து நான் உன்னுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டுமென்று கோட்டை கட்டி வைத்திருந்தேனோ ! அதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தது நீ தான் டீ.." என்றவன் அவள் புறம் வேகமாக வந்து அவளின் தோள்களைப் பற்றி அழுத்தினான்.


அவளோ, கண்களில் உயிரே இல்லாமல் அவனை வெறித்துப் பார்த்தாள்.


அவளின் பார்வையயை தாங்கியபடியே "மாசு மருவற்ற இந்த முகம் பெளர்ணமியைப் போல் என் வாழ்வில் ஒளி வீசும் என்று நினைத்தேன். ஆனால், என் வாழ்வை இருளாக்கிவிட்டதே .."என்று வார்த்தைகளில் அமிலத்தைக் கொட்டினான்.



அவளோ, கண்களில் நீர் கோர்க்க மெளனமாக நின்றாள்.



மனைவியின் மனதைக் காயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்று உணராமல் மேலும் மேலும் வார்த்தைகளை விஷமாக கக்கினான்.



"என்னை நினைத்தால் எனக்கே அருவருப்பாக இருக்கிறது. உன் குணமும், புத்தியும் தெரிந்தே உன்னை விலக முடியாமல், உன்னையே கல்யாணம் பண்ணி இருக்கேனே நான் எவ்வளவு பெரிய முட்டாள்.." என்றவன் அவளின் முகவாயைப் பற்றி , உன்னைக் கல்யாணம் செய்ததது உன் கூட வாழ இல்லை.. நீ வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக வாழக்கூடாது என்று தான். வாழ் நாள் முழுவதும் ஏன் டா இவனுக்கு துரோகம் செய்தோம்ன்னு நீ நினைத்து நினைத்து கதறனும். உன்னை காதலித்த பாவத்திற்கு நானும் உன்னை அருகில் வைத்துக் கொண்டே சாவனும்.." என்று வார்த்தைகளில் அனலை அள்ளி வீசயவன் அவளை விட்டு சென்று படுக்கையில் படுத்தான்.


கணவனின் சுடு சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வேரறுந்த கொடியாக அப்படியே தொய்ந்து அமர்ந்தவள், முகத்தை முழங்காலில் மறைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் அழுதாள்.


தேற்றுவாரற்று அழுது கரைந்தவள் மனமும் உடலும் சோர்ந்து போய் அப்படியே தரையில் சுருண்டு படுத்தவள் தன்னை அறியாமல் உறங்கிப் போனாள்.


மிகனோ, பலதையும் யோசித்தபடியே உறங்கிப் போனான். நடு இரவில் விழிப்பு வர விழித்தவன் அருகில் மனைவியைக் காணாமல் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவன், அறையை கண்களாலேயே வலம் வந்தான்.


மனைவி சிறுகுழந்தை போல் தரையில் படுத்திருப்பதைக் கண்டவனுக்கு மனதிற்குள் ஏதோ செய்தது.மெதுவாக எழுந்து சென்று அவள் அருகில் சத்தம் இல்லாமல் அமர்ந்து, அவளின் முகத்தை சில நிமிடங்கள் தன்னை அறியாமலேயே பார்த்துக் கொண்டு இருந்தான்.


குழந்தை போல் உறங்கி கொண்டிருந்தவளைப் பூப் போல் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தான்.அவனும் மனைவி அருகில் சென்று படுத்தபடியே அவளின் முழு நிலவாக மின்னிய முகத்தைப் பார்த்துக் கொண்டே நெடுநேரம் விழித்திருந்தவன் விடியற்காலையில் தான் கண் அயர்ந்தான்.


பகலவனின் வருகையும்,பறவைகளின் இன்னிசையும் திகழொளியின் உறக்கத்தை மெல்ல கலைத்தது.


உறக்க கலக்கத்திலேயே கண் விழித்தவளுக்கு படுக்கையின் மென்மை குழப்பியது. அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை.



தரையில் தானே படுத்து இருந்தோம்! எப்படி கட்டில் மேல் வந்தோம் என்று யோசித்தவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.



பலத்த யோசனையுடன் அருகில் கணவனின் முகத்தைக் கண்டதும் அவளின் முகம் ரோசா மொட்டாக விரிந்தது.



ஒருக் கழித்துப் படுத்து இருந்தவனின் முகத்தில் தெரிந்த மென்மையும்,அவனைப் போலவே சிலிர்த்துக் கொண்டிருந்த சிகை முடியும் அவள் கவனத்தை ஈர்த்தது.


இரவு அவன் பேசியது எல்லாம் மண்டைக்குள் ஓடினாலும், அவன் மீது அவளுக்குள் இருந்த நேசம் அவளை மீறி கணவனை ரசித்துக்க வைத்தது.


முகத்தில் மலர்ச்சியுடன் தயங்கி, தயங்கி கணவனின் தலையை பட்டும் படாமல் தடவினாள்.


மனதிற்குள் கணவனின் செயல்களைப் பற்றி யோசித்தாலும்,அவளின் விரல்கள் தன் வேலையை செவ்வனே செய்தது.கண்களும் அவன் முகத்திலேயே நிலைத்து இருந்தது.


சில நிமிடங்களில் அவனிடம் அசைவு தெரிந்ததும், சட்டென்று மிகினின் தலையிலிருந்து விரல்களை எடுத்தவள், படுக்கையில் இருந்து, எழுந்து சென்று குளியலறையில் தஞ்சம் புகுந்தாள்.


மிகன் எழுதுவதற்கு முன் குளித்து முடித்து அழகான மாம்பழக் கலரில் இளஞ்சிவப்பு கரை வந்த சில்க் காட்டன் புடவையும் .அதற்கு பொருத்தமாக சிவப்பு ரவிக்கையும் அணிந்து ,ஈரத்தலையில் காதோரம் இருபக்க முடி எடுத்து நடுவில் கிளிப் மாட்டினாள்.



முகத்திற்கு லேசான ஒப்பனை உடன் தலைவகிடுக்கு குங்கமமும் வைத்துக் கொண்டு தன் அலங்காரத்தை முடித்துக் கொண்டாள்.



அதுவே அவளை பேராழகியாக காட்டியது.மிகனின் உறக்கம் கலையாமல் அவர்களின் அறைக் கதவை சாத்தி விட்டு மணியரசியை தேடிச் சென்றாள்.



மணியரசியோ திகழொளியைக் கண்டதும் முகத்தில் புன்னகையுடன் "வாம்மா திகழி குளித்து விட்டாயா ? காஃபி கலந்து தரவா ..?என்று கேட்டபடி நெருக்கமா தொடுத்து இருந்த மல்லிகை பூவைக் அவளிடம் கொடுத்து தலையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்.


திகழொளியும் மறுக்காமல் வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள்.


மணியரசியோ ,மணக்க மணக்க இரண்டு கோப்பையில் காபி கலந்து அவள் கையில் கொடுத்து, " திகழி மிகனுக்கு கொடுத்துட்டு நீயும் குடிம்மா.." என்றார்.


"அம்மா இன்னும் அவர் விழிக்கவில்லை.." என்றவளிடம்..


"பரவாயில்லை எழுப்பி விடும் மா..இன்னைக்கு குலதெய்வ கோவிலுக்கு போகனும்.சீக்கிரம் மிகனை குளித்து விட்டு கிளம்பி வரச் சொல்லுமா.." என்று அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார்.



தயங்கிய படியே தங்கள் அறைக்குச் சென்றவளை மிகனின் கோவமான முகம் தான் வரவேற்றது.



இவளைப் பார்த்தவுடன் "எங்க டீ போனே, உன் தம்பி ஏழு வாட்டி போன் பண்ணிட்டான்.மனுசனை நிம்மதியா அக்காளும் தம்பியும் தூங்க கூட விட மாட்டீங்களா..? ஏன் ஒரு நாள் கூட உன் தம்பிக்கு உன் கூட பேசாம இருக்க முடியாதா? விடிந்தும் விடியாதற்குள்ளே நூறு போன்.."என்று கடுப்பாக கத்தியவனிடம் பதிலே பேசாமல் காஃபியை நீட்டினாள்.



காப்பியை வாங்காமல் அவளையே முறைத்தவனை "சீக்கிரம் பல் தேய்த்துட்டு வந்து காஃபியை குடிங்க! சூடு ஆறிடப் போகுது.." என்றாள் அதிகாரமாக.


"என்ன அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது.." என்று நக்கலாக கேட்டவனிடம்..


"ம்.. இனி அப்படித் தான்.."


"ஓ! எது கொடுத்த தைரியம்.."


"ம்ம்..இது கொடுத்த தைரியம்.." என்று தன் கழுத்தில் மஞ்சள் மனம் மாறாமல் புத்தம் புது பொலிவுடன் தொங்கிய தாலிக் கயிற்றைக் எடுத்துக் காட்டீனாள்.



அவனே அதை வெறித்துப் பார்த்தபடி அவள் அருகில் வந்து, அதை தன் கையில் ஏந்திக் கொண்டே அவளின் கண்களைப் பார்த்தபடி "இது எனக்கும் முழு அதிகாரத்தையும், உரிமையும் கொடுத்து இருக்கு.." என்றான் விழிகள் பளபளக்க..


கணவனின் பதிலில் மனம் பதை பதைக்க அசையாமல் நின்றாள் திகழொளி.


தொடரும்

அடுத்த யூடி சனிக்கிழமை
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom