எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 13
மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஐந்து நிமிடத்திலேயே மீண்டும் மின்சாரம் வந்தது.
திடீரென அறைக்குள் கலகலவென சிரிப்பு சத்தம் கேட்டது.சிரித்தது வேறு யாருமில்லை சந்துரு தான்.
சாரு மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள்.அவளது கைகளை வேகமாக எடுத்தாள்.அவள் கட்டி அணைத்திருந்தது சந்துருவை அல்ல.அங்கிருந்த கட்டிலின் ஒரு மூலையில் இருந்த தூணை தான்.
சந்துருவின் மீது கொண்ட காதல் சாருவின் கண்ணை மட்டும் அல்ல, அவளது தொடு உணர்வையும் மறத்து போக செய்துவிட்டது.
சந்துருவின் தேகத்திற்கும் தேக்கு மரக்கட்டிலிருக்கும் வித்தியாசம் தெரியாமல் இறுக்க கட்டிப்பிடித்திருந்தாள் சாரு.
அதைப்பார்த்த சந்துரு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.
சாரு செய்வதொன்று அறியாது சத்தம் வராது சிரித்தாள்.நல்லா பல்பு வாங்கிட்டியே சாரு! என்று மனதில் நினைத்து கொண்டு வெட்கத்தில் தலை குனிந்து நின்றாள்.
நீங்க கட்டிலில் படுங்க.எனக்கு முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் ஒர்க் இருக்கு.இன்னைக்கு நைட்குள்ள முடிச்சாகனும் என்று சாருவிடம் கூறினான்.
சரிங்க என்று பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள் சாரு.
ஷோபாவில் உட்கார்ந்து லேப்டாப்பை ஆன் செய்து வேலை செய்ய தொடங்கினான் சந்துரு.
சந்துருவை பார்த்தவாரே படுத்திருந்தாள் சாரு.நான் எவ்வளவு ஆசை ஆசையாக உங்களிடம் மனம் விட்டு பேசனும் இருந்தே தெரியுமாங்க.
இன்னைக்குனு பார்த்தா உங்களுக்கு வேலை வரனும்.இதை நாளைக்கு பார்த்துக்க கூடாதாங்க என்று சந்துருவிடம் கேட்க வேண்டும் போல் தோன்றியது சாருவிற்கு.
ஆனால் இவை எதுவும் சந்துருவிடம் கேட்காமல் அவனையும் அவன் வேலை செய்யும் அழகையும் ரசித்து கொண்டிருந்தாள் சாரு.அவனை பார்த்து கொண்டே அசந்து உறங்கிவிட்டாள்.
அதிகாலையில் எழுந்து கண்களை விழித்து பார்த்தால் எதிரே சந்துரு உறங்காமல் வேலை செய்து கொண்டிருந்தான்.
வேகமாக எழுந்து குளித்து விட்டு சமையலறைக்கு சென்றாள்.காபி போட்டு சந்துருவிற்கு கொடுக்கலாம் என்று நினைத்து சமையலறைக்கு வந்தால் எந்தெந்த பொருள் எங்கே இருக்கிறது? என்று தெரியாமல்
தேடிக்கொண்டிருந்தாள்.
பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு கண்ணம்மா எழுந்து சமையலறைக்கு வந்தார்.எதுவும் வேணுமா சின்னம்மா? சொல்லுங்க...நான் எடுத்து தருகிறேன் என்றார் கண்ணம்மா.அம்மா! நீங்க என்னை சாருனே கூப்பிடுங்கள்.
இல்லங்க சின்னம்மா...அம்மா! நான் உங்க பொன்னு மாதிரி தான்.நீங்க தாராளமாக என் பெயர் சொல்லி கூப்பிடலாம் என்றாள் சாரு.அப்போதும் பெயர் சொல்லி கூப்பிட தயக்கப்பட்டு சாரும்மானு கூப்பிட்டார் கண்ணம்மா.
அதன்பிறகு காபி போடுவதற்கு தேவையான பொருட்கள் எங்கே இருக்கிறது? என்று கேட்டாள் சாரு.
நீங்க ரூமிற்கு போங்க சாரும்மா.நான் ஐந்து நிமிஷத்தில் காபி போட்டு உங்க ரூம்மிற்கு எடுத்து வருகிறேன் என்றார் கண்ணம்மா.நீங்க கொஞ்ச நேரம் இப்படி உட்காருங்கம்மா என்று சொல்லி மூன்று கப் காபி போட்டு, ஒரு கப்பை கண்ணம்மாவிடம் கொடுத்து குடிக்க சொன்னாள்.
மற்ற இரண்டு கப்பை தட்டில் வைத்து அவளது அறைக்கு எடுத்து சென்றாள்.
சந்துருவிடம் காபியை கொடுத்தாள்.
சாருவிடம் தங்க்ஸ் என்று கூறினான் சந்துரு.
முதன் முதலாக சந்துருவிற்காக போட்டு வந்த காபிக்கு ஏதேனும் காமெண்ட்ஸ் அவனிடம் இருந்து வருமா? என்று எதிர்ப்பார்த்தாள் சாரு.
ஆனால் சந்துருவின் கவனம் முழுவதும் வேலையில் இருந்தது.சந்துரு காபி குடித்ததும் கப்பை எடுத்து கொண்டு கீழே வந்தாள்.அதற்கு பிறகு பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தாள்.தனது மருமகளை பார்த்த ஜானகி அம்மாவின் மனம் நெகிழ்ந்தது.
சாரு! இன்றைக்கு நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போகனும்.சந்துருவ சீக்கிரம் குளிச்சு ரெடியாக சொல்லும்மா என்றார் ஜானகி அம்மா.
அவுங்க நேத்து இராத்திரி முழுக்க ஆபிஸ் வேலை பார்த்துட்டு இப்போது தான் தூங்குறாங்க அத்தை என்றாள் சாரு.
காலங்காத்தால யாரும்மா வீடு முழுக்க புகை போட்டுக்கிட்டு இருக்கா? என்று கேட்டான் ஷ்யாம்.இது புகையில்லடா ஷ்யாம்.சாம்பிராணி ஊதுபத்தி வாசனை.என்னமோ ஒன்னு என்று சொல்லி விட்டு இருவரும் வீட்டின் நடுப்பத்திக்கு வந்து பார்த்தனர்.
ஜானகி அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை பார்த்த மாலதி, மாமியாருக்கு இப்போவே ஐஸ் வைக்க ஆரம்பிச்சுட்டாளா இந்த சாரு என்று ஷ்யாமிடம் கூறினாள்.
நீங்க இப்படியே வெட்டியா பேசிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.கடைசி நாம்ம அவளை வீட்டை விட்டு விரட்டுவதற்குள்ள அவள் நம்மள விரட்டிடுவா போல என்று மாலதியிடம் கூறினான் ஷ்யாம்.
சந்துருவிடம் ஆசிர்வாதம் வாங்க ரூம்மிற்கு வந்து பார்த்தாள் சாரு.
சந்துருவோ வேலை பார்த்த களைப்பில் ஷோபாவிலே படுத்து உறங்கிவிட்டான்.
அவன் காலை மட்டும் தொட்டு கும்பிட்டாள்.
மொபைலை எடுத்துப்பார்த்தால், பானு பத்து முறை அழைத்திருக்கிறாள்.
பால்கனியில் நின்று பானுவிற்கு போன் செய்தாள் சாரு.முதல் ரிங்கிலே எடுத்தாள் பானு.
என்னம்மா புதுப்பெண்ணே! மேடம் ரொம்ப பிஸியாகிட்டீங்க போல தெரியுது.உனக்கு நேத்து ராத்திரி எத்தனை தடவை கால் பண்ணினேன் தெரியுமா? வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்திட்டேனு சொல்ல தான் உனக்கு கால் பண்ணிருந்தேன் என்று சாருவை பேசவிடாமல் பானுவே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
மேடம் பேசி முடிச்சுட்டீங்களா?
நான் பேசலாமா? என்று கேட்டாள் சாரு.
உன்னை வீட்டிற்கு கூட்டி கொண்டு போய் விட்டது மனோஜ் அண்ணா தானு எனக்கு தெரியும்.
அது எப்படி உனக்கு தெரியும்? நீதான் கீழேயே இறங்கி வரவில்லையே! என்று கேட்டாள் பானு.
நீ காரின் முன் சீட்டில் ஏறாமல் பின் சீட்டில் உட்கார்ந்தது எல்லாத்தையும் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டு தான் இருந்தேன் என்றாள் சாரு.
என் மொபைலையும் சார்ஜ் இல்லாமல் இருந்தது.மனோஜ் அண்ணா உன்னை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்த்திருப்பாங்கனு தெரியும் என்று சாரு சொன்னதும் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள் பானு.
ஹலோ மேடம்! என்ன சத்தமே கேட்கல?லைன்ல தான் இருக்கீங்களா? என்று சாரு கேட்டதும், பானு வெட்கப்படுவதை மறைத்து கொண்டு சாருவை கிண்டலடிக்க தொடங்கினாள் பானு.
மாப்பிள்ளை சார் என்ன பண்ணுறாங்க சாரு? என்று கேட்டாள் பானு.
அவுங்க அசந்து தூங்கிக்கிட்டு இருக்காங்க.ஓ! அவ்வளவு அலுப்பா? என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பானு.
ஏய் பானு! கொஞ்சம் சிரிக்கிறதை நிறுத்து.என்னனு விஷயம் புரியாமல் நீயா எதாவது கற்பனை கட்டாத பானு.
அவுங்களுக்கு ஏதோ முக்கியமான ஆபிஸ் ஒர்க் முடிக்கனுமா.நேத்து இராத்திரி முழுக்க கண் முழுச்சு வேலை பார்த்துட்டு இப்போ தான் தூங்குறாங்க என்றாள் சாரு.
மாப்பிள்ளை சாரோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லாமல் போச்சு.சாந்தி முகூர்த்தம் அதுவுமா யாராவது இப்படி இராத்திரி முழுக்க உட்கார்ந்து வேலை பார்ப்பாங்களா சாரு? என்று பானு கேட்டாள்.
ஆபிஸ்ல ஏதாவது அவசர தேவையாக கூட இருந்திருக்கலாம்.எதுவும் தெரியாமல் பேசாத பானு என்றாள் சாரு.
நீ எப்படியும் உன் கணவரை விட்டு கொடுக்க மாட்டேனு தெரியும்.
எங்கிட்டோ நல்லா இருந்தா சரிதான் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாள் பானு.
மாலதி வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து சந்துருவின் ரூம்மிற்கு செல்லும் படிக்கட்டுகளில் எண்ணெய் ஊற்றி விட்டாள்.
இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு ஷ்யாம் அந்த சாரு படிக்கட்டிலிருந்து இறங்கி வருவாள்.படிக்கட்டில் காலை வச்சதும் வழுக்கி விழுந்து உருண்டு பிரண்டு கை, கால், இடுப்பெலும்புலாம் உடஞ்சு ஒரு மாசத்துக்கு எழுந்திருக்கவே முடியாமல் ஆஸ்பத்தரியில் படுத்த படுக்கையாக கிடக்கப்போறா பாரு என்று ஷ்யாமிடம் கூறினாள் மாலதி.
சூப்பர் அம்மா! என்று சொல்லி மாலதியை கட்டிப்பிடித்தான் ஷ்யாம்.
யாரோ வருவது மாதிரி இருக்கு ஷ்யாம்.சீக்கிரம் வா ஷ்யாம்! அப்பறம் நம்ம மேல சந்தேகம் வந்துவிடும் என்று கூறி அவர்களது அறைக்கு சென்றனர்.
சாருவிடம் பேசி வைத்ததும் மனோஜிற்கு போன் செய்தாள் பானு.
குட்மார்னிங்ங மேடம்.அதிசயமாக இருக்கு! எப்போதும் பேஸ்புக்ல தான சேட்டிங் வருவீங்க.இன்றைக்கு என்னடான காலையிலேயே போன் போடுறீங்க.
நம்ம கல்யாணத்துக்கு என் மாமானார் மாமியார் பச்சைக்கொடி காட்டீடாங்களா? என்று கேட்டான்.
சார்...சார்...என்னை கொஞ்சம் பேச விடுங்க என்றாள் பானு.
ம்ம்...சொல்லுங்க மேடம் என்றான் மனோஜ்.
உங்க ப்ரெண்ட் ஏன் இப்படி இருக்காரு?
யாரு சந்துருவையா சொல்லுற பானு என்று கேட்டான்.
ஆமாம் சார்...
அவனுக்கு என்ன ராஜா மாதிரி தான இருக்கிறான் என்றான் மனோஜ்.
காமெடியா? எனக்கு சிரிப்பே வரலை சார் என்றாள் பானு.
சரி விடு...நீ சொல்ல வந்ததை தெளிவாக சொல்லு பானு என்றான் மனோஜ்.
நேத்து இராத்திரி என்ன நடந்தது தெரியுமா?என்று பானு சொல்லி முடிக்கும் முன்னரே அதெல்லாம் நமக்கு எதுக்கு பானு? புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் என்று அவன் பேச தொடங்கியதும்.....
சார்...சார்....ரொம்ப ஓவரா யோசிக்காதீங்க...நான் சொல்ல வந்ததே வேற விஷயம் என்றாள் பானு.உங்க ஆருயிர் தோழன் நேத்து இராத்திரி முழுக்க உட்கார்ந்து ஆபிஸ் வேலை பார்த்திருக்கிறார் என்றாள் பானு.
என்ன சொல்லுற பானு? நிஜமாகவே?என்று கேட்டான் மனோஜ்.
சரி நான் பார்த்துக்கிறேன்.நீ ஸ்கூலுக்கு கிளம்பு என்று கூறிவிட்டு நேராக சந்துருவின் அறைக்கு சென்றான்.
சாரு! சாரு! என்று சாருவை அழைத்தார் ஜானகி அம்மா.
இதோ வருகிறேன் அத்தை என்று கூறிக்கொண்டு கீழே இறங்க தொடங்கினாள் சாரு.
சாரு வழுக்கி விழுந்து விட்டாளா?சாருவிற்கு என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏