- Messages
- 264
- Reaction score
- 406
- Points
- 63
எண்ணங்களே வண்ணங்களாய்...
பலகார கூடைகள் எல்லாம் சரியாக இருக்குதானு சரி பார்த்துட்டாயாமா சிவகாமி? என்று சாருவின் அம்மாவிடம் கேட்டார் தாத்தா.
எல்லாம் சரியாக இருக்குது மாமா என்றார் சிவகாமி.இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.நீங்க போய் பசங்க எல்லாரையும் கிளம்பி ரெடியாக சொல்லுங்க என்று கூறினார் சாருவின் பாட்டி.
உங்க மாமாவுக்கு எப்போது பார்த்தாலும் இதே வேலையாவே போச்சும்மா.சும்மா ஒரு இடத்தில இருக்கவே மாட்டாரு சிவகாமி.குட்டி போட்ட பூனை மாதிரி இங்கேயே சுத்தி சுத்தி வந்திக்கிட்டே இருக்காரு என்று சிவகாமி அம்மாவிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் சாருவின் பாட்டி.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட மதி, தாத்தாவுக்கு உங்க மேல எவ்வளவு லவ் இருந்தால் இப்படி நீங்க போகிற இடமெல்லாம் உங்களையே சுத்தி சுத்தி வருவாரு தாத்தா.இது கூடத்தெரியாமல் தாத்தாவை இப்படி கிண்டலடித்து பேசுறீங்களே பாட்டி என்றாள் மதி.
வயசுக்கு ஏத்த மாதிரியாடி பேசுற மதி? என்று கேட்டார் பாட்டி.
பாட்டி! இன்னும் இரண்டு வருஷத்துல எனக்கும் கல்யாண வயசு வந்துரும் என்றாள் மதி.
அதுவும் சரிதான்...உன் மகள் என்னமா வாய் பேசுறானு பாரு சிவகாமி.இவுங்கள சொல்லி குத்தமில்ல.இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் பருவம் வருவதற்கு முன்னாடியே சினிமா, போன், அது என்னது? பாஸ்புக்காமா? என்று சிவகாமியிடம் கேட்கும் போது, அது பாஸ்புக் இல்ல பாட்டி! பேஸ்புக் என்றாள் மதி.சரி என்னமோ ஒரு புக்கு... இதையெல்லாம் பார்த்து பசங்க எல்லாரும் முளையிலே விளஞ்சுறாங்க.
அந்த காலத்துல நாம எல்லாரும் இதை பார்த்தம்மா படிச்சு வளர்ந்தோம்.
இப்போ பார்த்தா முளைச்சு மூன்று வயது கூட ஆகாத நண்டு சுண்டுனு பல்லு இல்லாத குழந்தையிலிருந்து பல்லு போன தாத்தா வரைக்கும் கையில அந்த போனை வச்சிக்கிட்டு தான் சுத்துராங்க.இனி வரும் தலைமுறைக்காவது நம்ம கலச்சாரம் பழக்க வழக்கம் சொல்லி பண்போடு வளர்க்கனும் என்று கூறினார் பாட்டி.
தேவையுள்ளது பார்க்கும் போது தேவையில்லாதது எல்லாம் சேர்ந்து விளம்பரம் வருவதால் பிள்ளைங்க எல்லாத்தையும் பார்க்குதுங்க என்று கூறினார் பாட்டி.இந்த போனு வந்தாலும் வந்துச்சு நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரமும் பழக்க வழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மறைய தொடங்கிருச்சு.வட நாட்டு கலச்சாரமும், வெளிநாட்டு பழக்கம் வழக்கமும் தான் மேலோங்கி இருக்குது.
கிராமத்துல ஏதோ நம்மள மாதிரி பழக்கம் வழக்கம் மாறாமல், நம் பாரம்பரியத்தை தாய் போல நேசித்து கடைப்பிடிக்கும் சில பேர் இருப்பதால் தான் இன்னும் நம் தமிழ் மொழியும், தமிழ் மண்ணும், தமிழ் கலாச்சாரமும் அழியாமல் இருக்குது என்று கூறினார் பாட்டி.
பாட்டி! நம்ம எல்லோருக்கும் நெருப்பு சுடும்னு தெரியும்.அதுக்காக சமைக்காமல் இருக்கோமா? அது மாதிரி தான் சினிமா, போன், வாட்ஸ் ஆப், பேஸ்புக்.இந்த உலகத்தில் உள்ள அனைத்து கண்டுப்பிடிப்பிலும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும்.
நீங்கள் எதை குறித்தும் பயப்படாமல் இருங்கள்.நாங்க நல்லது மட்டும் எடுத்து கொண்டு சரியான வழியில் தான் செல்கிறோம்.
குழந்தையை பெற்று வளர்க்கும் பெற்றோர்கள் சரியாக இருந்தால் பிள்ளைங்க தவறான வழிக்கு செல்லவே முடியாது.பெற்றோர்கள் தான் குழந்தைகளின் முதல் ஆசான்.
நாங்க எல்லாரும் நீங்க வளர்த்த பேத்தியாச்சே! எப்படி தவறான வழியில் போவோம் சொல்லுங்க பாட்டி? என்று கேட்டாள் மதி.உடனே மதியை கட்டி அணைத்து முத்தமிட்டார் பாட்டி.
சந்துருவின் அம்மாவிற்கு போன் செய்து நலம் விசாரித்து விட்டு, இன்னும் பத்து நிமிஷத்தில் எல்லாரும் வீட்டிலிருந்து கிளம்பிடுவோம் என்ற தகவலை ஜானகி அம்மாவிடம் சொன்னார் தாத்தா.
சந்துருவின் ரூமிலிருந்து சாரு கீழே இறங்கி செல்லும் போது சாரு! சாரு! ஒரு நிமிஷம் இங்கே வாமா! என்று சாருவை அழைத்தான் மனோஜ்.கீழே படிகளில் இறங்கி கொண்டிருந்தவள் மேலே ஏறி வந்தாள்.
சொல்லுங்க அண்ணா....எதுவும் வேண்டுமா? காபி போட்டு கொண்டு வரவா? என்று கேட்டாள் சாரு.
அதெல்லாம் எதுவும் வேண்டாம்மா...
சந்துருட்ட கொஞ்சம் பேசனும்.சந்துரு ரூம்ல இருக்கானாமா சாரு? என்று கேட்டான்.
அவுங்க ரூம்ல தான் இருக்காங்க அண்ணா... என்று கூறினாள்.
அவனை கொஞ்சம் வெளியே கூப்பிடும்மா என்றான் மனோஜ்.
எப்போதும் போல சும்மா உள்ள போய் பேசுங்க அண்ணா.நான் சும்மா பேருக்கு மட்டும் அண்ணாணு கூப்பிடல.
என் உடன் பிறந்த சகோதரனாக நினைத்து தான் கூப்பிடுகிறேன் என்று மனோஜிடம் கூறினாள் சாரு.சொந்த தங்கச்சி ரூம்க்குள்ள போக யாராவது அனுமதி கேட்பாங்களா? உள்ள போங்கனா என்று கூறினாள் சாரு.
மனோஜின் கண்கள் கலங்கியதை பார்த்த சாரு, ஏன் அண்ணா கண் கலங்குது? என்று கேட்டாள்.
எந்த உறவுகளுமே இல்லாத என் மேல் இவ்வளவு உரிமையாக நீ இருப்பதை நினைத்து ஆனந்த கண்ணீர் வந்து விட்டதும்மா என்றான் மனோஜ்.
மனோஜ் வளர்ந்தது எல்லாம் அன்பு கருணை இல்லம் என்ற ஒரு ஆனாதை ஆசிரமத்தில் தான்.அவனது தாய், மனோஜ் பிறந்ததும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு சென்று விட்டாளாம்.அந்த வழியே சென்ற ஒருவர் குப்பை தொட்டியில் அழுது கொண்டிருந்த குழந்தையை எடுத்து அருகில் இருந்த ஆசிரமத்தில் சேர்க்கும் போது சிஸ்டரிடம் நடந்ததை கூறியிருக்கிறார்.
காலேஜ் படிக்கும் போதிலிருந்து தான் சந்துருவும் மனோஜூம் நெருங்கிய நண்பர்களானார்கள்.
மனோஜின் வாழ்க்கையை பற்றி ஜானகி அம்மாவிடம் சந்துரு சொன்னதும், இனி மனோஜ் நம்ம கூடவே இருக்கட்டும் சந்துரு.அவனை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திரு என்று கூறியிருக்கிறார் ஜானகி அம்மா.
அதன் பின் இருவரும் படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட்டாகி வேலையில் ஒன்றாக சேர்ந்தனர்.இருவருக்கும் ஒன்றாகவே வெளிநாட்டில் சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு நாள் பானு சாருவிற்கு போன் செய்து மனோஜை பற்றிய அனைத்து தகவலையும் சாருவிடம் கூறியிருக்கிறாள் பானு.
பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல், ஒரு குழந்தை தனியாக இந்த சமுதாயத்தில் போராடி வளர்ந்து நல்ல மனிதனாகி தன் சொந்த காலில் நிற்பது என்பத அவ்வளவு எளிதான காரியமல்ல பானு.
பெற்றோர்கள் இருக்கும் பலருக்கு அவர்களின் அருமையும் அன்பும் புரிவதில்லை.பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை கல்யாணத்திற்கு பிறகு ஆனாதையாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்.நமக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட சமுதாயத்தில் மனோஜ் அண்ணா போன்ற நல்ல குணம் படைத்தவரை காண்பது மிகவும் அரிது பானு.
நல்லவர்களை தான் இறைவன் ரொம்ப சோதிக்கிறான் பானு என்று கூறினாள் சாரு.
காதலிப்பவர்களை கண்டால் பத்தடி தூரம் விலகி செல்லும் பானு, மனோஜ் மீது காதல் கொண்டதற்கு காரணமும் இது தான்.
நாங்கள் எல்லாரும் உங்களுக்காக இருக்கும் போது அப்படியெல்லாம் இனி நீங்க எதுவும் யோசிக்க கூடாது அண்ணா! என்றாள் சாரு.
சாருவும் மனோஜும் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் சந்துருவின் காதில் விழுந்தது கேட்டு எதுவும் தெரியாதது போல ரூமிலிருந்து வெளியே வந்தான் சந்துரு.
சந்துரு வந்ததும் சரிங்க அண்ணா... நீங்க இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்கள்.அத்தை என்னை கூப்பிட்டாங்க அண்ணா.நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு மீண்டும் படிகளில் இறங்க தொடங்கினாள் சாரு.
சந்துருவும் மனோஜூம் ரூமிற்குள் சென்றனர்.ஏன்டா சந்துரு! நீயெல்லாம் திருந்தவே மாட்டியா? முதலிரவு அதுவுமா உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை? என்று கேட்டான் மனோஜ்.
என் ப்ராஜெக்ட் டீமில் எனக்கு பதிலாக வேலை பார்த்து கொண்டு இருக்கும் விக்டரோட மனைவிக்கு திடீரென லேபர் பெயின் வந்திடுச்சு.அந்த ப்ராஜெக்ட் ஒர்க்கை நேத்தே முடிச்சாகனும்.அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றதால் அந்த வேலையை பார்த்துக்கிட்டு இருந்தேன் என்றான் சந்துரு.
ஓ அப்படியா! விக்டரோட மனைவி இப்போ எப்படி இருக்காங்களாம்? என்று மனோஜ் கேட்டான்.
ம்ம...நல்லா இருக்காங்களாம்.நார்மல் டெலிவரி தான்.பெண் குழந்தை பிறந்திருக்குனு விக்டர் மெயில் பண்ணிருக்காரு என்றான் சந்துரு.
சாரு விழுந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனதும், உங்களை டவுனுக்கு அழைச்சிட்டு போய் தலைப்பாக்கட்டி பிரியாணி வாங்கி கொடுத்து சாரு விழுந்ததை நினைத்து ஜாலியாக சாப்பிட்டு கொண்டாடுவோம் அம்மா என்று கூறினான் ஷ்யாம்.
நீ சொன்னதும் இப்போவே எனக்கு நாக்கு ஊறுது ஷ்யாம்.
கல்யாணத்துக்கு பந்தக்கால் நட்டதுல இருந்து அசைவே சாப்பாடே சாப்பிடாமல் வயிறு காஞ்சு போயிக்கிடக்கு.
நீ சீக்கிரம் கிளம்பி தயாராகு ஷ்யாம்.நான் கொஞ்ச நேரத்துல ரெடியாகிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.மாலதியும், ஷ்யாமும் பிரியாணி சாப்பிட கிளம்பி தயாராகி காத்துக்கொண்டிருந்தனர்.
ஷ்யாம் பிரியாணி சாப்பிட்டதும் அப்டியே ஒரு ஜிகர்தண்டாவும் வாங்கி கொடுத்திருப்பா என்றார் மாலதி.
சரிம்மா... உங்களுக்கு என்னலாம் வேணுமோ எல்லாம் வாங்கி தருகிறேன்.முதலில் சாரு படியில் இறங்கி வருகிறாளானு பாருங்க என்றான் ஷ்யாம்.
அறையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தார் மாலதி.மீண்டும் அவரது அறைக்குள் வந்து கதவை டக்குனு மூடிக்கொண்டார்.
என்னம்மா? என்னாச்சு? என்று மிகவும் ஆவலுடன் கேட்டான் ஷ்யாம்.
சாரு படியில் இறங்கி வர ஆரம்பித்து விட்டாள் ஷ்யாம் என்று சந்தோஷத்துடன் கூறினார்.இன்னும் ஐந்து நிமிஷத்தில எண்ணெய் ஊத்துன இடத்துக்கு வந்து கால் வழுக்கி விழுந்து அம்மானு கத்துவா பாரு என்றார் மாலதி.
சாரு ரொம்ப நல்ல பொன்னு சந்துரு.
அவள் மனம் கோணாமல் பார்த்து நடந்துக்கோடா.உன் கடந்த காலம் எல்லாத்தையும் அவளிடம் மறைக்காமல் சொல்லிரு.இனி வாழ்க்கை முழுவதும் உனக்கு துணையாக இருக்கப் போறது அவள் மட்டும் தான்.புருஷன் பொண்டாட்டிக்கு இடையே எந்தவித ஒளிவும் மறைவும் இருக்கக்கூடாது சந்துரு.அப்போது தான் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும்.
கண்டிப்பாக உன் நிலைமையை சாரு புரிந்து கொள்ளுவாள் சந்துரு.எதை பத்தியும் யோசிக்காமல் நடந்ததை சொல்லிரு என்றான் மனோஜ்.
மெதுவாக சொல்லிக்கலாம் மனோஜ்.நீ சொல்லுவது எல்லாம் எனக்கு புரியாமல் இல்ல.அவளிடம் நல்லா பழகி அவளை பத்தி நல்லா தெருஞ்சதுக்கு பிறகு சொல்லிக்கலாம்னு இருக்கேன் மனோஜ்.
நான் திடீரென்று இப்போ போய் கடந்த காலத்துல நடந்த எல்லாத்தையும் சொன்னா,அதை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு இருக்கானு தெரியல.நான் தேவையில்லாமல் ஏதாவது சொல்ல போய் பிறகு அது ஏடா கூடமாக எதுவும் ஆகி விடக்கூடாதுல மனோஜ் என்றான் சந்துரு.
சஞ்சுளா பத்தி சொல்லாவிட்டாலும், இப்போதைக்கு சவிதா பத்தியாவது சொல்ல முயற்சி செய் சந்துரு என்றான் மனோஜ்.
ம்ம்...சொல்ல முயற்சி செய்கிறேன் என்றான் சந்துரு.
சாருவோட குணமே தனிடா சந்துரு.
காலப்போக்கில் உனக்கே அவளைப் பற்றி தெரிய வரும்.அப்போது நீயே என்னை தேடி வந்து சாருவை பற்றி புகழ்ந்து தள்ளுவ பாரு என்றான் மனோஜ்.
ம்ம்...அதையும் பார்க்கலாம்... என்றான் சந்துரு.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா! என்று கத்தும் சத்தம் கேட்டது. சந்துருவும் மனோஜும் பதறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்து பார்த்தனர்.
சாரு விழுந்து விட்டாளா? ஷ்யாம் மற்றும் மாலதி இருவரும் நினைத்தது போல அவர்களின் எண்ணம் நிறைவேறி விட்டதா? யார் அந்த சஞ்சுளாவும், சவிதாவும்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
அத்தியாயம் 14

Last edited: