Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL எண்ணங்களே வண்ணங்களாய் - Tamil Novel

Status
Not open for further replies.

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 10


"முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம் பார்த்து மாப்பிள்ளை சார் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்ட்டாரு.
இங்கே என்ன நடக்குது சாரு? திடீரென்று போலீஸ் வேற வந்திருக்காங்க.நீ என்னடானா எதுவும் பேசாமல் அமைதியாக
உட்கார்ந்திருக்க? போதாத குறைக்கு உன் மாமா பையன் வேற நேரம் காலம் தெரியாமல் இப்படி பிடிவாதம் பிடிக்கிறான்..." என்று சாருவின் காதருகே சென்று சொல்லிக் கொண்டிருந்தாள் பானு.


சாரு எந்தவொரு பதிலும் சொல்லாமல் மௌனமாக சங்கரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


"நாங்கள் எல்லோரும் அடுத்து என்ன நடக்க போகுதோனு தெரியாமல் பீதியில் இருக்கோம்.பயப்பட வேண்டிய நீ கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் கூலா எப்படி இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கிற சாரு?" என்று கேட்டாள் பானு.


"அடுத்து என்ன நடக்க போகுதுனு கூடவா இன்னுமா உனக்கு தெரியல... நீ பதறாமல் அமைதியாக இருந்து அடுத்து நடக்க போவதை மட்டும் பொறுத்திருந்து பார்! நீ போனை கையில் வைத்துக் கொண்டு தயாராகயிரு.நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குதா ?" என்று பானுவிடம் கேட்டாள் சாரு.


"அதைப் பத்திலாம் நீ எதுவும் கவலைப்படாதே! கல்யாணம் முடிந்ததும், உன் கைக்கு கரெக்ட்டா போன் வந்து சேர்ந்துவிடும்" என்றாள் பானு.


"வாங்க சார்...வாங்க...உங்களை தான் இவ்வளவு நேரமாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டு இருந்தேன். முகூர்த்த நேரத்திற்கு சரியாக வந்துடீங்க சார்... இங்கே வந்து உட்காருங்க..." என்று வந்த காவல்துறை அதிகாரியை வரவேற்றார் சாருவின் தாத்தா.


"என்னங்க ஐயா! நீங்கள் போய் என்னை சார்னு கூப்பிடுறீங்க.
சும்மா என் பெயரைச் சொல்லியே கூப்பிடுங்க.அன்றைக்கு நீங்கள் மட்டும் எனக்காக ஒரு வார்த்தை பேசாமல் இருந்திருந்தால், இன்னைக்கு இந்த பதவியே எனக்கு கிடைத்திருக்காது ஐயா" என்றார் வந்த காவல்துறை அதிகாரி.


"ஒவ்வொரு பதவிக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கனும் சார்..." என்று தாத்தா அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே மணமேடையிலிருந்து கீழே இறங்கி வந்தான் சந்துரு.


"எதுவும் முக்கியமான தகவலாக இருந்திருந்தா ஒரு வார்த்தை போன் செய்து சொல்லிருக்கலாமே சார்?" என்று வந்த காவல்துறை அதிகாரியிடம் கூறினான்.


"அந்த விபத்து குறித்த தகவல் எதுவும் கிடைத்ததா சார்?"என்று கேட்டான் சந்துரு.


"தம்பி! நான் உங்களுடைய கல்யாணத்திற்கு தான் விருந்தினராக வந்திருக்கிறேன்.முகூர்த்த நேரம் நெருங்கிருச்சு, நீங்க மணமேடைக்கு போங்க.அதைப் பற்றி பிறகு பேசிக்கலாம்..." என்று கூறினார் காவல்துறை அதிகாரி.


"முகூர்த்ததிற்கு நாளிகை ஆகிடுத்து!மாப்பிள்ளை சீக்கிரம் மணமேடைக்கு வாங்கோ..."என்று சந்துருவை அழைத்தார் புரோகிதர்.


சந்துருவை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு சென்றார் தாத்தா.


"டேய்! அமுல் பேபி எழுந்திருடா! பார்க்க கால் படி உலக்கு உயரம் இருந்துகிட்டு என்னமா வாய் பேசுறான் பாருங்க..." என்றான் மனோஜ்.


மனோஜை பார்த்து முகம் சுளித்தான் சங்கர்.


"எழுந்திருடா கண்ணா! மாப்பிள்ளை உட்காரட்டும்" என்றார் தாத்தா.


"எழுந்திருக்க மாட்டேன்!" என்று பிடிவாதம் செய்தவனின் கையை பிடித்து இழுத்து தூக்கிக் கொண்டு சென்றார் சங்கரின் அப்பா பசுபதி.
ஐந்து வயதாகும் சங்கர் செய்யும் குறும்புத்தனம் கண்டு அனைவரும் சிரித்தனர்.


சாருவின் அருகில் வந்து அமர்ந்த சந்துரு, சாருவின் முகத்தை பார்த்தான்.சாரு எந்தவொரு பதற்றமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.சந்துருவின் கையில் திருமாங்கல்யத்தை கொடுத்தார் புரோகிதர்.


"கெட்டி மேளம்... கெட்டி மேளம்..." என்று கூறிவிட்டு 'மாங்கல்யம் தந்துனானே...' மந்திரத்தை புரோகிதர் சொல்ல அனைவரும் அட்சதை அரிசியை மணமக்களின் மேலே தூவ, சாருவின் கழுத்தில் இறைவனை சாட்சியாக கொண்டு முதல் முடிச்சையும், முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சையும், பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக மூன்றாவது முடிச்சையும் போட்டு சாருவின் நெற்றியில் திலகமிட்டு அவளைத் தன் மனைவியாக்கி கொண்டான் சந்துரு.


சந்துருவின் அப்பா இல்லாமல் இத்தனை நாட்கள் தன் மகனின் கல்யாணத்தை முடிக்க பாடுபட்ட ஜானகி அம்மாவின் போராட்டமும் மனக்கவலையும் இன்றோடு தீர்ந்தது.
தனது மகனின் கல்யாணத்தை நல்ல படியாக முடிந்ததை கண்டு சந்துருவின் அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.மறுபக்கம் சாருவின் வீட்டார் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் அவர்கள் மேல் அட்சதை அரிசியை தூவி வாழ்த்தினர்.


மனோஜ் மட்டும் அட்சதை அரிசியை மணமக்களின் மேல் தூவாமல், பானுவின் மேல் போட்டு கொண்டிருந்தான்.பானுவிடம் கை சைகையிலே "இப்போதே உன் கழுத்தில் தாலிக்கட்டட்டுமா? நான் ரெடி...நீங்க ரெடியா?" என்று கேட்டான்.


"நான் என் அப்பாவை கூப்பிடட்டுமா? என்று கண் ஜாடையிலே மனோஜிடம் சிரித்துக் கொண்டே பதிலளித்தாள் பானு.


மனோஜ் சிரித்துக் கொண்டே அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு சந்துருவின் பக்கம் திரும்பிக் கொண்டான்.



சந்துரு, சாருவின் கையை பிடித்து அக்னியை சாட்சியாக வைத்து ஏழு முறை வலம் வந்தான்.அவளது கையைத் தொட்ட அந்த நிமிடம் சந்துருவினால் தாக்கு பிடிக்க முடியவில்லை.அவனுடைய கண்கள் கலங்க ஆரம்பித்தது.சாருவின் கை விரல்கள் தீண்டியதும் சஞ்சுளாவின் நினைவுகள் அனைத்தையும் மீண்டும் அவன் கண் முன்னே வந்து சென்றது.


"சந்துரு! ஏன் உன் கண்ணுலாம் இப்படி சிவந்து போய் இருக்குது?" என்று அவனது சித்தி கேட்டார்.


"அதிகாலையில் வேகமாக எழுந்ததால் இருக்கும் சித்தி..."என்று கூறி சமாளித்து விட்டான்.வேகமாக சந்துருவின் கண்களை பார்த்தாள் சாரு.சந்துருவின் கண்களை வைத்தே அவன் ஆழ் மனதில் ஏதோ நினைத்து கலங்குகிறான் என்பதை தெரிந்து கொண்டாள் சாரு.ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. பெற்றோர்களிடத்தில் ஆசிர்வாதம் வாங்குமாறு புரோகிதர் கூறினார்.


சந்துருவின் அம்மா முதலில் ஆசிர்வாதம் செய்ய மறுத்தார்.தான் சுமங்கலியாக இல்லாததால் சாருவின் பெற்றோரிடத்தில் முதலில் ஆசிர்வாதம் வாங்குமாறு சொன்னார்.
ஜானகி அம்மாவின் அருகில் சென்ற சாரு, "உங்களது மகனை நல்ல படியாக பெற்று வளர்த்து ஆளாக்கி தினமும் கடவுளிடம் உங்களுக்காக வேண்டாமல் உங்கள் பிள்ளைகள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்யும் உங்களின் ஆசிர்வாதம் தான் எங்களை பல்லாண்டு காலம் நன்றாக வாழ வைக்கும்.வேறு எதைப் பற்றியும் யோசித்து மனதை குழப்பாமல், எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அத்தை..." என்று சாரு கூறியதை கேட்டதும் ஜானகி அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.சாரு பேசும் விதம் கண்டு ஆச்சரியப்பட்டு போனான் சந்துரு.


"பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்று தனது மகனையும் மருமகளாய் வந்த மகளையும் வாழ்த்தி, சாருவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.


அதற்கு பின்னர் சாருவின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.சாருவின் குணம் கண்டு உள்ளம் பூரித்து போனார்கள் சாருவின் குடும்பத்தினர்.
அதையடுத்து மற்ற திருமண சடங்குகளும் நடைபெற தொடங்கியது.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டியை மிருதுவான பாதமலர்கள் கொண்ட சாருவின் விரல்களை பிடித்து போட்டுவிட்டான் சந்துரு.


ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி அதனுள் மோதிரத்தை போட்டு வைத்திருந்தனர்.யார் முதலில் எடுப்பது என்று பார்க்கலாம்? என்று சந்துருவையும் சாருவையும் பார்த்து சுற்றியிருந்த அனைவரும் உற்சாகப்படுத்தி கரகோஷம் எழுப்பினார்கள்.


"சாரு விடாதடி... எப்படியாவது அந்த மோதிரத்தை எடுத்துவிடு!" என்றாள் பானு.


"அதையும் பார்த்திடலாம்..." என்று சந்துருவிற்கு ஆதரவாக பதில் கூறினான் மனோஜ்.


"டேய் சந்துரு! ஒழுங்கா மோதிரத்தை எடுத்து மானத்தை காப்பாற்றி விடுடா மச்சான்..." என்றான்.


வேண்டா வெறுப்பாக பானையினுள் கையை விட்டான் சந்துரு.ஆனால் சாருவோ மிகவும் ஆர்வத்துடன் தனது கையை விட்டாள்.பத்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது.
இப்போதைக்குள் இரண்டு பேரும் பானையிலிருந்து கையை எடுப்பது போல தெரியவே இல்லை.
ஆரவாரமாக கத்திக் கொண்டிருந்த அனைவரும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமைதியாக அவர்களையும் பானையையும் மாத்தி மாத்தி பார்த்துக் கொண்டிருந்தனர்.


"சீக்கிரமாக மோதிரத்தை எடு சாரு..." என்று கத்திக் கொண்டே இருந்தாள் பானு.


அவள் சொல்லி முடித்த மறுகணமே பானையிலிருந்து கையை எடுத்தாள் சாரு.சந்தோஷம் தாங்க முடியாமல் சாருவை கட்டிப்பிடித்து அவளது கையை திறந்து பார்த்த பானுவின் குரல் ஓசை சட்டென்று குன்றியது.


எதிர்ப்புறத்திலிருந்து மனோஜின் குரல் ஓங்கி ஒலித்தது.சந்துருவின் கையில்தான் மோதிரம் இருந்தது.


பானையினுள் என்ன நிகழ்ந்தது? என்று சந்துரு, சாருவிற்கு மட்டும் தான் தெரியும்.


பானையினுள் வேகமாக தேடுவது போல நடித்து கொண்டிருந்தான் சந்துரு.ஆனால் பானையினுள்ளே பார்த்தால் சுவற்றில் பல்லி ஒட்டிக் கொண்டிருப்பது போல அவனது கை சாருவின் கையை தொடாதவாறு பானையின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது.சாருவும் பொறுத்து பொறுத்து பார்த்தாள்.பிறகு மோதிரத்தை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு மறுகணம் தனது கையை பானையிலிருந்து வெளியே எடுத்துவிட்டாள்.


தன் கணவன்தான் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றெண்ணி வெற்றியை சந்துருவிற்காக விட்டு கொடுத்துவிட்டாள் சாரு.திருமண பந்தத்தில் ஒன்றிணையும் மணமக்கள் இருவருக்கும் இருக்க வேண்டிய பண்புகளில் மிகவும் முக்கியான ஒன்று, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து அன்புடன் புரிந்து கொண்டு நடப்பது தான்.அதைத்தான் சாருவும் செய்தாள்.


வெளியே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால், சந்துரு வென்றுவிட்டதாக தெரியலாம்.
உண்மையிலேயே அந்த போட்டியில் வென்றது சாரு தான்.போட்டி முடிந்த பின்னர் அனைவரும் சாப்பிட சென்றனர்.


அசோகா, பொங்கல், போண்டா, மனோகர பருப்பு தேங்காய், ரவா கிச்சடி, கீரை வடை, பூந்தி, தயிர்வடை, பிஸிபேளாபாத், மிக்ஸ்டு சேவை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட், பீன்ஸ் பருப்பு உசிலி, கோஸ் பட்டாணி பொரியல், வெண்டைக்காய் மோர்க்குழம்பு,
வெஜிடபிள் புலாவ், காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை, கதம்ப சாம்பார், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சேனை வறுவல், அவியல், ரசம், அப்பளம், பால் பாயசம், பழப்பச்சடி, ஃப்ரூட் தயிர்சாதம், முந்திரி கேக் என்று பல வகையான செட்டிநாட்டு சமையல் வகைகள் பந்தியில் பரிமாறப்பட்டது.


அதோடு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தாம்பூல பையுடன் சேர்த்து மரக்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரின் வயிறும் மனதும் சந்தோஷத்தில் நிறைந்து மணமக்களை மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.பக்கத்திலிருந்த உறவினர்கள் சந்துரு சாருவிற்கும், சாரு சந்துருவிற்கும் மாறி மாறி உணவை ஊடிவிடுமாறு கூறினார்கள்.
முதலில் இருவரும் தயங்கினார்கள்.
பின்னர் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.


காவல்துறை அதிகாரி வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்களுக்கு திருமண பரிசை அளித்தார்.அங்கு வந்த கணக்குப்பிள்ளை தனது மகனை சந்துருவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.


"அன்றைக்கு எனது மகனை போலீஸ் ட்ரைனிங்கு அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்தேன்.பிள்ளைகளின் விருப்பத்திற்கு வேலி போட்டு உனது விருப்பத்தை அவர்கள் மீது திணிக்க நினைக்காதே" என்று ஐயா தான் எனக்கு பாடம் புகட்டினார் தம்பி! என்று சந்துருவிடம் பழைய கதையை எல்லாம் கூறிக் கொண்டிருந்தார் கணக்குப்பிள்ளை.


சந்துருவிற்கு காவல்துறை அதிகாரி வந்ததிற்கான விவரம் அப்போது தான் தெரிய வந்தது.


"அந்த வண்டியை கண்டுபிடித்து விட்டீர்களா சார்?" என்று கேட்டான் சந்துரு.


"பிடித்தாச்சு தம்பி! லாக்கப்ல தான் அந்த பசங்க இருக்காங்க.
நாளைக்கு கோர்ட்ல ஆஜர் செய்ய போகிறோம்" என்றார்.


"சரிங்க சார்...ரொம்ப நன்றி" என்று கூறினான் சந்துரு.


"இது என்னுடைய கடமை தம்பி!" என்றார் அந்த காவல்துறை அதிகாரி.எனக்கு நேரமாகிடுச்சு தம்பி.நான் ஐயாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.


மண்டபத்திலிருந்து மணமக்களை சந்துருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.வீட்டிற்கு வந்த மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.வலது காலை எடுத்து வைத்து தன் புகுந்த வீட்டிற்குள் நுழைந்தாள் சாரு.பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டதும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்.சந்துரு, சாருவிடம் எதுவும் சொல்லாமல் அவளை ஹாலிலேயே விட்டுவிட்டு அவனது அறைக்கு சென்றுவிட்டான்.


தனது அறைக்குள் நுழைந்தவன், "அம்மா..." என்று திடீரென அலறி கத்தினான்.சந்துருவின் அலறல் சத்தம் கேட்ட சாரு, வேகமாக பதறி அடித்துக் கொண்டு சந்துருவின் சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினாள்.


ஜானகி அம்மாவும் மனோஜூம் சந்துருவின் அறைக்கு விரைந்து சென்று "சந்துரு! சந்துரு! என்னாச்சுடா?" என்று அறையின் கதவை வேகமாக தட்டினார்கள்.


சந்துருவிற்கு என்ன நிகழ்ந்தது? சந்துருவின் அலறலுக்கு காரணம் என்ன? அறைக்குள் அப்படி என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 11


முதன் முறையாக தன் புகுந்த வீட்டிற்கு வந்திருக்கும் சாருவிற்கு எங்கே? எந்தெந்த அறை இருக்கிறது? என்பது தெரியாமல் சத்தம் வரும் திசையை வைத்து சந்துருவின் அறையை கண்டறிந்தாள்.பதற்றத்துடன் அனைவரும் கதவை வேகமாக தட்டினார்கள்.எப்போதும் தைரியமாக இருக்கும் சாருவின் மனதில் சிறிது பதற்றம் ஏற்படத் தொடங்கியது.
மணக்கோலத்தில் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்த சாருவின் முகம் ஐந்து நிமிடத்தில் வாடிய மல்லிகை போல சோர்ந்து போய்விட்டது.
சந்துருவின் சத்தத்திற்கு காரணம் புரியாமலும் மனதில் சந்துருவை சீக்கிரம் பார்க்க வேண்டும் என்ற தவிப்புடனும் கண்களிரண்டும் கலங்கியபடி கதவை தட்டிக் கொண்டிருந்தாள் சாரு.


சில நிமிடங்களுக்கு பிறகு சட்டென்று கதவை திறந்தவன் "என்னாச்சுமா? ஏன் எல்லாரும் என் ரூம் முன்னாடி வந்து நிற்கிறீங்க? நான் ஒரு நிமிஷம் லேட்டா வந்து கதவை திறந்திருந்தால், நீங்க எல்லோரும் சேர்ந்து அடித்த அடியில் கதவு கையோட வந்திருக்கும் போல" என்று கூறினான் சந்துரு.


"நல்ல கதையா போச்சுப்பா.நீதான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீடே இரண்டாகுற மாதிரி அம்மானு கத்துன சந்துரு!" என்றார் ஜானகி அம்மா.


"நீ என்னடானா உனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இப்படி பேசுறப்பா சந்துரு "


"அவ்வளவு சத்தமாகவா கத்துனே?" என்று சந்துரு கேட்டதும், மனோஜ் அவனை முரைத்துப் பார்த்தான்.


"கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி எப்படிடா
இப்படியெல்லாம் பேச கத்துக்கிட்ட? நானும் உன் கூடத் தான் ரொம்ப வருஷாக இருக்குறேன்.எனக்கு இப்படி எல்லாம் பேசவே தெரியமாட்டீங்கிதே!" என்று கூறினான் மனோஜ்.


சந்தருவை பார்த்ததும் சாருவின் மனதில் அவனைக் குறித்த பயமும் பதற்றமும் பஞ்சாய் பரந்து சென்றது.
ஒளியிளந்த அவளது முகம் மீண்டும் பிரகாசமாக பௌர்ணமி நிலவு போன்று ஜொலிக்க தொடங்கியது.


"ரூம்ல அப்படி எதை பார்த்து பயந்து இப்படி தலையே தெறித்த மாதிரி கத்துன சந்துரு? என்ன எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.
வாயைத் திறந்து பதில் சொல்லு சந்துரு!" என்றார் ஜானகி அம்மா.


சாரு எதுவும் பேசாமல் அமைதியாக சந்துருவின் ரூமையே எட்டிப் பார்த்து கொண்டிருந்தாள்.சாருவின் கண்களுக்கு ஒரு உருவத்தின் நிழல் மட்டும் தெரிந்தது.சாருவின் கவனம் எல்லாம் சந்துருவின் அறையை நோக்கி தான் இருந்தது.கதவின் பின்புறம் இருக்கும் அந்த உருவத்தை பார்க்க சாரு ரொம்ப முயற்சி செய்தாள்.அவளது கால்கள் சந்துருவின் அறையை நோக்கி வேகமாக எட்டு எடுத்து வைக்க தொடங்கிய சமயம் பார்த்து, அந்த உருவம் முன்னோக்கி வந்தது.


"நான் பார்த்து பயந்ததிற்கு காரணம் இதுதான்" என்றான் சந்துரு.


கதவின் பின்புறம் பேய் போன்ற முகமூடி அணிந்த உருவம் ஒன்று அனைவரின் முன் வந்து நின்றது.அந்த முகமூடி உருவத்தைப் பார்த்த எல்லோரும் பயந்து கத்த தொடங்கினார்கள்.சாரு மட்டும் கத்தாமல் அந்த முகமூடிக்கு பின்னால் மறைந்திருக்கும் அந்த முகத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாள்.


"யாரும் பயப்படாதீங்க!" என்று கூறிவிட்டு சந்துரு அந்த முகமூடியை வேகமாக கழற்றி வீசினான்.
முகமூடிக்கு பின்னால் மறைந்திருந்த அந்த முகத்தைப் பார்த்ததும் சாருவை தவிர அனைவரும் சிரித்தனர்.முகமூடி போட்டிருந்தது வேறு யாருமில்லை சந்துருவின் சித்தி மகன் ஷ்யாம்.மேல் படிப்பு படிப்பதற்காக கனடா சென்றிருந்தான்.மூன்று வருடங்களுக்கு பிறகு இன்றுதான் இந்தியாவிற்கு திரும்பி வந்திருக்கின்றான்.


"என்னப்பா ஷ்யாம்! உன் அண்ணன் கல்யாண நாள் அதுவுமா சந்தோஷமான சர்ப்ரைஸ் எதாவது கொடுப்பனு பார்த்தா, இப்படி அவனையும் பயமுறுத்தி எங்களையும் பதற வச்சுட்டியேப்பா!" என்றான் மனோஜ்.


"சும்மா விளையாண்டு பார்த்தேன் மனோஜ் அண்ணா.ஆனால் அண்ணா இப்படி பயந்து போவாங்கனு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றான் ஷ்யாம்.


"சரி இதெல்லாம் பிறகு பேசிக்கலாம்.
முதலில் என் அண்ணியை கண்ணுல காட்டுங்க..." என்றான் ஷ்யாம்.


"இதோ இவுங்க தான் உன் அண்ணி சாரு..." என்று தன் பின்னாடி நின்று கொண்டிருந்த சாருவை முன்னாடி அழைத்து ஷ்யாமிற்கு அறிமுகம் செய்து வைத்தார் ஜானகி அம்மா.


சாருவை பார்த்த ஷ்யாமிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.எதுவும் பேசாமல் வாயடைத்து நின்றான்.


"என்ன ஷ்யாம்... அண்ணியை பார்த்ததும் எதுவும் பேசாமல் அமைதியாகிட்ட ஷ்யாம்" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"அண்ணி மேல் உள்ள மரியாதையாக இருக்கும்மா..." என்றான் மனோஜ்.


உடனே "ஹாய்..." என்று மட்டும் சொன்னான் ஷ்யாம்.


சாருவும் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் "வணக்கம்..." என்று கூறினாள்.


சந்துருவிற்கு மட்டும் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்தான்.


"எனக்கு ப்லைட்ல வந்தது கொஞ்சம் உடம்பு அலுப்பாக இருக்கு பெரியம்மா" என்றான்.


"சரி ஷ்யாம்... நீ கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடு!" என்றார் ஜானகி அம்மா.


"சரிங்க பெரியம்மா..." என்று கூறியவன் சாருவைப் பார்த்து கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றான்.


ஷ்யாம் கீழே இறங்கியதும் வேகமாக அவனது அறைக்கு சென்று முகத்தை கழுவினான்.மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நினைத்து பார்த்தான்.


ஷ்யாம் அவனின் அம்மாவைத் தேடி சமையலறைக்கு சென்றான்.ஷ்யாமை பார்த்ததும் சந்தோஷத்தில் மகனை கட்டி அணைத்தார்."என்னப்பா ஷ்யாம் இப்படி உடம்பு மெலிஞ்சு போயிட்ட?" என்று கேட்டார் ஷ்யாமின் அம்மா மாலதி.


அம்மாவின் கேள்விக்கு பதில் கூறாமல், "அம்மா! இவுங்க தான் அண்ணாவுக்கு பார்த்த பொண்ணாமா? எனக்கு ஏன் நீங்க இவுங்க போட்டோவை அனுப்பி வைக்கல? " என்று கேட்டான்.


"சந்துரு, எல்லா பொண்ணையும் தட்டி கழித்த மாதிரி இந்த பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிருவானு எதிர்ப்பார்த்தேன் ஷ்யாம்.இந்த கல்யாணம் நடக்காதுனு நினைச்சு தான் உனக்கு போட்டோ அனுப்பி வைக்கல ஷ்யாம்" என்றார் மாலதி.


"என்னம்மா சொல்லுறீங்க? கொஞ்சம் புரிகிற மாதிரி தெளிவாக சொல்லுங்க..." என்றான் ஷ்யாம்.


"உனக்கு எல்லாத்தையும் புளி போட்டு விளக்கனும்.ப்லைட்ல ஒழுங்காக தூங்கிருக்க மாட்ட.கொஞ்சம் நேரம் போய் தூங்குடா ஷ்யாம்.பிறகு எல்லா கதையையும் பொறுமையாக பேசலாம்..." என்றார் மாலதி.


"நீங்க முதலில் சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிங்கம்மா..." என்றான் ஷ்யாம்.


"வழக்கம் போல பொண்ணு பிடிக்கல.
கல்யாணம் வேண்டாம் அப்படினு சொல்லிருவான் தான் நினைச்சேன்.
ஆனால் உங்க பெரியம்மா எப்படியோ சந்துருகிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டாங்க.சந்துருவிற்கு வீடியோ கால் போட்டு, பொண்ண பார்க்க சொல்லி கொடுத்தப்ப கூட அவன் சாருவின் முகத்தை பார்க்கவே இல்ல.இந்த சந்துரு பையன் நேற்று வரை சாருவை பார்க்கலடா ஷ்யாம்.
முதல் முறையாக சாருவை, நிச்சயதார்த்தம் நடக்கும்போது தான்டா நேரிலே பார்த்தான்."


"நாங்க பொண்ணு போய் பார்த்துட்டு வந்ததிலிருந்து, சந்துரு இன்னைக்கு வரை சாருகிட்ட எதுவும் பேசினது மாதிரி கொஞ்சம் கூட தெரியவில்ல" என்றார் மாலதி.


"என்னம்மா சொல்லுறீங்க...நிஜமாவே இன்னும் அவுங்க ரெண்டு பேரும் பேசிக்க கூட இல்லையா?" என்று கேட்டான் ஷயாம்.


"ஆமாம்டா ஷ்யாம்" என்றார் மாலதி.


"அதுதான் கல்யாணம் முடிஞ்சுருச்சுல.
இனி எப்படினாலும் இரண்டு பேரும் பேசித்தான் ஆகனும்.பிடிக்கிதோ? பிடிக்கலையோ? கடவுள் போட்ட முடிச்ச யாராலும் மாற்ற முடியாது.எல்லாம் விதிப்படி நடக்கும்" என்றார் மாலதி.


"நீ எதுக்கு இவ்வளவு ஆர்வமாக சாருவை பற்றி கேட்குற? என்றார் மாலதி.உனக்கு சின்ன பிள்ளையிலிருந்தே சந்துருவை சுத்தமாக பிடிக்காதுனு தெரியும்.நீ எதுக்கு இதெல்லாம் தேவையில்லாமல் கேட்டுக்கிட்டு இருக்க?" என்று ஷ்யாமிடம் கேட்கும் போதே, "மாலதி! மாலதி!" என்று ஜானகி அம்மா ஷ்யாமின் அம்மாவை அழைத்தார்.


"சரிடா ஷ்யாம்... நீ போய் முதலில் தூங்குற வழியை பாரு.பிறகு மத்தத எல்லாம் பேசிக்கலாம்..." என்று கூறிவிட்டு சென்றார் மாலதி.


"நீ உங்க ரூம்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுமா சாரு..." என்று கூறிவிட்டு சென்றார் சாருவின் மாமியார்.


சந்துருவின் அறையின் வாசலில் தனியாக நின்று கொண்டிருந்தாள் சாரு.சந்துருவோ, சாருவைப் பற்றி யோசிக்காமல் மனோஜிடம் பேசிக் கொண்டிருந்தான்.


சாருவை கவனித்து கொண்டிருந்த மனோஜ், "டேய் சந்துரு! சாருவை போய் கூட்டிட்டு வாடா!வெளியே அவுங்க மட்டும் தனியாக நிற்கிறாங்க பாரு..." என்றான்.


"சாருவை பார்த்து என்னங்க... உள்ள வாங்க..." என்று சாருவை அவனது அறைக்குள் அழைத்தான் சந்துரு.


"நீயும் உள்ள வாடா மனோஜ்..."என்றான் சந்துரு.


புதுமணதம்பியதருக்கு இடஞ்சலாக இருக்க கூடாது என்று எண்ணி "எனக்கு கீழே கொஞ்சம் வேலை இருக்கு.போய்ட்டு வந்திர்றேன் சந்துரு" என்று நாசுக்காக பேசி அங்கிருந்து கழன்று சென்றுவிட்டான் மனோஜ்.


அறையின் உள்ளே தயக்கத்துடன் வந்தாள் சாரு.சந்துரு நின்று கொண்டிருந்ததால் சாருவும் உட்காராமல் நின்று கொண்டிருந்தாள்.


"ஏன் நிற்கிறீங்க? உட்காருங்க..." என்றான் சந்துரு.


"உங்களுக்கு குடிக்க தண்ணீர், ஜீஸ் எதுவும் வேண்டுமா?" என்று கேட்டான்.


"இல்லங்க...அது வந்து நீங்க நிற்கும் போது நான் உட்கார்ந்த நல்லா இருக்காதுங்க... "என்று தனது இனிமையான குரலில் பதில் கூறினாள் சாரு.


"நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்.நீங்க தாராளமாக எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம்..." என்று சாருவின் கண்களை பார்க்கமலே பேசிக் கொண்டிருந்தான் சந்துரு.


சாருவிற்கு புது இடம் என்பதால் அவளுக்கு மனதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.அதோடு மட்டுமில்லாமல் சந்துருவிடம் பேசி பழகியதும் இல்லை.அவன் மனம் நோகாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருந்தாள்.
சாருவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சந்துருவிற்கு போன் கால் வந்தது.


சாருனு என் பெயரை சொல்லி கூப்பிடாமல், என்ன வாங்க போங்கனு ஏங்க சொல்லுறீங்க சந்துரு? நான் இனி உங்களுக்கு சொந்தமானவள். உங்களின் சரி பாதி அல்லவா நான்! என்றெல்லாம் சந்துருவிடம் கேட்க வேண்டும் என்று சாருவிற்கு தோன்றியது.ஆனால் எதுவும் கேட்காமல் சந்துருவையே பார்த்து கொண்டிருந்தாள்.


சந்துரு போன் பேசி முடித்து திரும்பியதும், சாரு சட்டென்று தனது பார்வையை வேறு பக்கம் பார்ப்பது போல மாற்றிவிட்டாள்.


"சரிங்க நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..." என்று கூறிவிட்டு கீழே சென்றுவிட்டான் சந்துரு.


சந்துருவின் அறை முழுவதையும் சுற்றிப் பார்த்து கொண்டிருந்தாள் சாரு.சந்துருவின் அறை முழுவதும் அழகான ஓவியங்களும், ஒரு அலமாரி நிறைய புத்தகங்களும், மற்றொரு அலமாரி நிறைய பாட்டு சீடிக்களும் இருந்தன.வீட்டு பால்கனியில் ஒரு பெரிய ஊஞ்சலுடன் கண்ணுக்கு குளிர்ச்சியாக மனதிற்கு நிம்மதி தரும் விதமாக பல வகையான பூச்செடிகளும் இருந்தது.


சந்துரு வாங்கிய விருதுகள் மற்றும் போட்டோ எல்லாவற்றையும் வரிசையாக பார்த்து சந்துருவை நினைத்து ரசித்து தனியாக சிரித்து கொண்டிருந்தாள்.அங்கிருந்த ஜன்னலின் ஓரத்தில் கலர் கலரான மீன்கள் நிறைந்த ஒரு மீன் தொட்டியும் இருந்தது.அதன் பிறகு அறையிலிருந்த மற்றொரு ஜன்னல் வழியாக வீட்டின் முற்றத்தை பார்த்தாள் சாரு.


ஷ்யாம் வீட்டின் முற்றத்திலிருந்து சாருவையே பார்த்து கொண்டிருந்தான்.அங்கு நின்று பார்த்து கொண்டிருந்தவன் கண் இமைக்கும் நேரத்தில் திடீரென்று காணாமல் போய்விட்டான்.டக்குனு ஒரு கை வந்து சாருவை கட்டிப்பிடித்ததும் பயந்து திகைத்து போனாள் சாரு.


யார் இந்த ஷ்யாம்? ஷ்யாமிற்கும் சாருவிற்கும் என்ன சம்பந்தம்? சாருவை கட்டிப்பிடித்தது யார்? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 12


மேலிருந்து கீழே வந்த சந்துரு நேராக ஜானகி அம்மாவின் அறைக்கு சென்று படுத்துவிட்டான்.சமையலறையில் இருந்து சந்துரு தனது அறைக்கு செல்வதை பார்த்த ஜானகி அம்மா, வேகமாக அவரது அறைக்கு விரைந்து சென்றார்.


"சந்துரு! என்ன ஆச்சுப்பா? இங்க வந்து படுத்திருக்க?" என்று கேட்டார் சந்துருவின் அம்மா.


"என் ரூம்ல சாரு இருக்காம்மா"


"அதனால் என்னப்பா சந்துரு? அவள் இப்போ உன்னுடைய பொண்டாட்டி சந்துரு.சாருவை வேற யாரோ மூனாவது மனுஷங்க மாதிரி உன் ரூம்ல தனியாக இருக்க வச்சுட்டு, நீ மட்டும் இங்க வந்திருக்க..." என்று கேட்டார் ஜானகி அம்மா.


"இரண்டு நாளா சரியா தூங்காமல் ஒரே அசதியாக இருக்கும்மா.
சாருவுக்கும் நம்ம வீடு புதுசு.நான் அங்க இருந்தா அவளும் சகஜமாக இருக்க மாட்டா.அதனால தான் அவள் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு இங்க வந்துட்டேன்."


"ஒரு பக்கம் நீ சொல்லும் காரணம் எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தா சரியாதான் இருக்கு.இருந்தாலும் மறுபக்கம் இது ரொம்ப தவறு சந்துரு.இந்த காலத்துல பிறந்த பசங்க யாராவது இப்படி செய்வாங்களா சந்துரு? எப்படா கல்யாணம் முடியும்.
தனியா பேசி பழக வாய்ப்பு கிடைக்கும்னு இருப்பாங்க.அந்த காலத்துல நானும் உன் அப்பாவும் கூட கல்யாணம் முடிந்த மறு நொடியிலிருந்து ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சு இருந்ததே இல்ல.இடம் புதுசாக இருந்தாலும் தாலி கட்டின புருஷன் பக்கத்துல இருந்தால் எப்படி பட்ட சூழ்நிலையையும் ஒரு பெண் சமாளித்து விடுவாள் சந்துரு.நீ ரெஸ்ட் எடுத்தாலும் சரி...எடுக்காட்டிலும் சரி... உன் ரூம்ல சாரு கூடத்தான் நீ இருக்கனும்.முதலில் உன் ரூம்க்கு கிளம்பு சந்துரு..." என்றார் ஜானகி அம்மா.


அம்மாவின் பேச்சை மீற முடியாமல் தனது அறைக்கு சென்றான் சந்துரு.


"இப்படியாடி வந்து பயமுறுத்துவ பானு" என்று கேட்டாள் சாரு.



"நீ மாப்பிள்ளை சார்னு நினைச்சுட்டியா சாரு..." என்று சொல்லி சாருவைக் கிண்டலடித்து சிரிக்க தொடங்கினாள் பானு.


பானுவிடம் கேட்ட கேள்வியை மறந்து விட்டு பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்தில் திரும்பி கொண்டாள் சாரு.


"அம்மாடி புதுப்பொண்ணே! வெட்கம் மொத்தத்தையும் கொட்டிடாம மிச்ச மீதி கொஞ்சம் வச்சிருமா..." என்றாள் பானு.


"சரி... சரி... முதல்ல இதைப் பிடி என்று கூறி சாருவின் கையில் ஒரு மொபைலை கொடுத்தாள் பானு.நேரம் கிடைக்கும்போது எல்லாம் சரியா போட்டோ எடுத்திருக்கேனானு பார்த்துட்டு போன் பண்ணு சாரு.எனக்கு நேரமாச்சு சாரு.நான் வீட்டுக்கு கிளம்புறேன்..." என்று கூறிவிட்டு சென்றாள் பானு.


"டேய் ஷ்யாம்! வெளியே நின்னு அங்க அப்படி என்னத்தடா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க? இங்க சீக்கிரம் வா!" என்று அழைத்தார் ஷ்யாமின் அம்மா மாலதி.


"இங்க நடக்குறத பார்த்தியாடா ஷ்யாம்.இந்த சந்துரு அவன் ரூம்ல இருக்காம உன் பெரியம்மா ரூம்ல வந்து இருக்குறான் பாரேன்.
அன்னைக்கு நீ சந்துருவ பத்தி சொல்லும்போது நான் நம்பல.ஆனால் இப்போது நடக்கிறதெல்லாம் வச்சு பார்த்தா நீ சொன்னதில் சந்தேகமே இல்லடா..." என்று ஷ்யாமிடம் பேசிக்கொண்டிருந்தார் மாலதி.


"புதுசா கல்யாணம் முடிச்ச யாராவது கல்யாணம் முடிந்த முதல் நாளே பொண்டாட்டியை விட்டுட்டு, வேற ரூம்ல வந்து இப்படி தூங்கு வாங்களாடா?" என்று ஷ்யாமிடம் சொல்லி கொண்டிருந்தார் மாலதி.


"சரிம்மா...பொறுத்திருந்து என்னதான் நடக்குதுனு பார்ப்போம்..." இதுவும் ஒரு வகையில் நமக்கு வசதியாக போச்சு என்று மனதில் நினைத்து கொண்டான் ஷ்யாம்.


"என்னம்மா பானு! சீக்கிரமா கிளம்பிட்ட? இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து சாப்பிட்டு போகாலமே பானு" என்று கூறினார் ஜானகி அம்மா.


"வானம் வேற இருட்டிக்கிட்டு மழை வருவது மாதிரி இருக்கு பானு.நீ தனியாக போக வேண்டாம்மா! மனோஜை கூடத் துணைக்கு அனுப்பி வைக்கிறேன்.மனோஜ்! காருல பானுவை அழைச்சுக்கிட்டு போய் அவுங்க வீட்டில பத்திரமாக விட்டுட்டு வந்துருப்பா..." என்று ஜானகி அம்மா சொன்னதும், மனோஜ்க்கு மனதில் உற்சாகம் தாங்க முடியவில்லை.


"அதெல்லாம் வேண்டாம் அம்மா! நான் தனியாவே போயிடுவேன்..." என்றாள் பானு.


"பொழுது வேற சாஞ்சிருச்சு.இனி உன்னை தனியாக அனுப்புவது சரியாக இருக்காது பானு.நான் சொல்வதை கேளுமா..." என்று ஜானகி அம்மா கூறியதும் அவரின் பேச்சை மீறாமல் "சரிங்கம்மா..." என்று கூறினாள் பானு.


"கண்ணம்மா! கண்ணம்மா! என் ரூம்ல நீல நிறத்தில் ஒரு பை இருக்கும் அதை எடுத்து கொண்டு வா..." என்றார்.


"சரிங்கம்மா..." என்று கூறிய கண்ணம்மா அந்த பையை எடுத்து வந்து ஜானகி அம்மாவிடம் கொடுத்தார்.அந்த பையை வாங்கி பானுவிடம் கொடுத்தார் ஜானகி அம்மா.


"எதுக்கும்மா இதெல்லாம்" என்றாள் பானு.


கல்யாண பலகாரம் பழங்கள் தான் பானு."அடிக்கடி வீட்டுக்கு வாமா பானு..." என்று கூறினார் ஜானகி அம்மா.அனைவரிடமும் கூறிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றாள்.


பானுவிற்காக காரின் முன் பக்க கதவை திறந்து வைத்து கிளம்புவதற்கு தயாராக இருந்தான் மனோஜ்.


"வேகமாக வந்த பானு காரின் முன் பக்கம் ஏறாமல், பின் இருக்கையில் உள்ள கதவை திறந்து அமர்ந்தாள்.
முன் சீட்டில் வந்து உட்காரு பானு" என்றான் மனோஜ்.


"பரவாயில்லை இருக்கட்டும் சார்..." என்றாள்.


காரினுள் உள்ள கண்ணாடியை பின் இருக்கையில் உள்ள பானுவின் முகம் தெரியுமாரு அட்ஜஸ் செய்து வைத்தான்.


திடீரென்று காற்று வேகமாக அடிக்க தொடங்கியதும் ஜன்னலின் கதவுகள் டப... டப... டப... வென்று அடிக்க தொடங்கியது.


சந்துருவின் அறையிலிருந்த அனைத்து ஜன்னல் கதவுகளையும் சாரு மூடிக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, சந்துரு அறைக்குள் நுழைந்தான்.


திடீரென்று இடி இடித்த சத்தத்தில் சாரு பயந்து சந்துருவை இறுகக் கட்டிப்பிடித்து கொண்டதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை…



என்று பானுவை நினைத்து பாட்டு பாடிக் கொண்டே காரை
ஓட்டிக் கொண்டிருந்தான் மனோஜ்.


"சார்...பாட்டு பாடினது போதும். ரோட்ட பார்த்து கவனமாக ஓட்டுங்க சார்...சார் ரொம்ப குஷியா இருக்கீங்க போல தெரியுது" என்றாள் பானு.


"ஆமாம் பானு... முதன் முறையாக என் மாமானார் மாமியாரை பார்க்க போகிறேன்.சந்தோஷம் இருக்காதா என்ன?" என்று பதில் சொன்னான் மனோஜ்.


"அதுவும் சரிதான்... என்று இழுத்து கொண்டு சிரிக்கத் தொடங்கினாள் பானு."


"நீ வந்ததிலிருந்து உன் முகமே சரியில்லையே ஷ்யாம்! எதுவும் பிரச்சனையாடா? அம்மாக்கிட்ட எதையும் மூடி மறைக்காம உண்மையை சொல்லுப்பா..." என்று ஷ்யாமிடம் கேட்டார் மாலதி.


"அம்மா! மூன்று வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு என் கன்னத்துல அறஞ்சானு சொன்னேன்ல.நியாபகம் இருக்காம்மா?" என்று மாலதியிடம் கேட்டான்.


"முடிஞ்சு போன கதையை பத்தி இப்போது எதுக்குடா மறுபடியும் நியாபகம் படுத்துற?" என்று கேட்டார் மாலாதி.


"அந்த பொண்ணு வேற யாருமில்லை.
இந்த வீட்டிற்கு வந்திருக்கும் புது மருமகள் சாருதான் அம்மா..." என்றான் ஷ்யாம்.


"என்னடா சொல்லுற? சாருதானா? நல்லா நியாபகம் இருக்காடா? வேற யாரையாவது பார்த்துட்டு மாத்தி எதுவும் சொல்லாதாடா!" என்றார் மாலதி.


"அம்மா! நான் அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டதுக்கு காரணமாக இருந்த அந்த முகத்தை அவ்வளவு சீக்கிரமா எப்படி மறப்பேன்.
என் கன்னத்துல அறைந்தது இந்த சந்துருவோட பொண்டாட்டி சாருதான்..." என்றான் ஷ்யாம்.


"எவ்வளவு திமிரு பிடித்தவளாக இருந்திருந்தா, ஆம்பள பையனு கூட பார்க்காம எல்லாரு முன்னாடி உன்னை கை நீட்டி அடிச்சிருப்பா.
இத்தனை நாள் யாருனு தெரியாமல் தேடிக்கிட்டு இருந்தோம்.என் பையன் மேலே கை வச்சுட்டாள, இனி எப்படி இந்த குடும்பத்துல நிம்மதியாக வாழ போறானு பார்க்குறேன்."


"சாருவை நிம்மதியாக வாழ விடக்கூடாது அம்மா.வீட்டில் உள்ள எல்லாரு முன்னாடியும் அவமானப்படுத்தி வீட்டை விட்டே அடித்து துரத்திவிடனும்மா.
அப்போதுதான் என் மனசு திருப்தி அடையும்" என்றான் ஷ்யாம்.


கார் பானுவின் வீட்டு வாசலில் வந்து நின்றது.பானுவின் அப்பா ஒரு குடையை கையில் பிடித்துக் கொண்டு காரை நோக்கி வேகமாக நடந்து வந்தார்.


காரில் பானு வந்திருப்பதை பார்த்ததும் "டிரைவர் தம்பி!கொஞ்சம் இருங்கள்...பானுவை விட்டுட்டு வந்து உங்களை அழைச்சிட்டு போறேன்..." என்றதும் பானு சிரித்தாள்.


அவரது குடையில் பானுவை அழைத்து சென்று வீட்டினுள் விட்டார்.அதற்கு பிறகு மனோஜையும் அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததும் பானுவின் அம்மா மனோஜை வீட்டிற்குள் வரவேற்று உபசரித்தார்.


"ரொம்ப நன்றி டிரைவர் தம்பி! என்று மனோஜை பார்த்து மீண்டும் சொல்லும்போது, அப்பா! அவுங்க டிரைவர் இல்லப்பா.மாப்பிள்ளையோட நெருங்கிய நண்பர்.அவரது பெயர் மனோஜ் என்றாள் பானு.நான் அவரை டிரைவர் தம்பினு கூப்பிடும்போதே சொல்ல மாட்டியாம்மா பானு... மன்னிக்கனும் தம்பி! தெரியாமல் சொல்லிட்டேன்" என்றார் பானுவின் அப்பா.


"இதுக்கு எதுக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் கேட்கிறீங்க அங்கிள்.நானும் பார்க்க டிரைவர் மாதிரி இருப்பதால், நீங்கள் அப்படி சொன்னதில் எனக்கு எந்த வருத்தமும் இல்ல..." என்று மனோஜ் கூறியதும், அவனுடைய நகைச்சுவையான பேச்சை கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர்.


பானுவின் அப்பா மனோஜுடன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் சுட சுட டீயும், சூடான மெது வடையையும் கொண்டு வந்து மனோஜிடம் கொடுத்தார் பானுவின் அம்மா.
சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புறப்பிட்டான் மனோஜ்.


மனோஜ் கிளம்பி சென்றதும் பானுவின் அப்பா, மனோஜ் தம்பி நல்லா ஜாலியாகவும் மரியாதையாகவும் பேசிகிறார்ல என்று பானுவின் அம்மாவிடம் கூறி கொண்டிருப்பதைக் கேட்ட பானுவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.


சாருவை அடித்து துரத்தும் அளவுக்கு சாருவின் மேல் அப்படி என்ன குரோதம் ஷ்யாமிற்கு? என்று இனி வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 13


மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஐந்து நிமிடத்திலேயே மீண்டும் மின்சாரம் வந்தது.திடீரென அறைக்குள் கலகலவென சிரிப்பு சத்தமும் கேட்டது.சிரித்தது வேறு யாருமில்லை சந்துருதான்.சாரு மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள்.அவளது கைகளை சந்துருவின் மேலிருந்து வேகமாக எடுத்தாள்.அவள் கட்டி அணைத்திருந்தது சந்துருவை அல்ல.அங்கிருந்த கட்டிலின் ஒரு மூலையில் இருந்த தூணைத்தான்.
சந்துருவின் மீது கொண்ட காதல் சாருவின் கண்ணை மட்டும் அல்ல, அவளது தொடும் உணர்வையும் மறத்து போக செய்துவிட்டது போல.சந்துருவின் தேகத்திற்கும் தேக்கு மரக்கட்டிலிருக்கும் வித்தியாசம் தெரியாமல் கட்டிலை இறுக்க கட்டிப் பிடித்திருந்தாள் சாரு.


அதைப் பார்த்த சந்துரு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.சாரு செய்வதொன்று அறியாது சத்தம் வராது சிரித்தாள்.நல்லா பல்பு வாங்கிட்டியே சாரு... என்று மனதில் நினைத்து கொண்டு வெட்கத்தில் தலை குனிந்து நின்றாள்.


"நீங்க கட்டில்ல படுங்க...எனக்கு முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் ஒர்க் இருக்கு.இன்னைக்கு நைட்குள்ள முடிச்சாகனும்" என்று சாருவிடம் கூறினான்.


"சரிங்க..." என்று பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள் சாரு.ஷோபாவில் உட்கார்ந்து லேப்டாப்பை ஆன் செய்து வேலை செய்ய தொடங்கினான் சந்துரு.
சந்துருவை பார்த்தவாரே படுத்திருந்தாள் சாரு.


"நான் எவ்வளவு ஆசை ஆசையாக உங்களிடம் மனம் விட்டு பேசனும் இருந்தே தெரியுமாங்க.இன்னைக்குனு பார்த்தாங்க உங்களுக்கு வேலை வரனும்.இதை நாளைக்கு பார்த்துக்க கூடாதாங்க..." என்று சந்துருவிடம் கேட்க வேண்டும் போல் தோன்றியது சாருவிற்கு.ஆனால் இவை எதுவும் சந்துருவிடம் கேட்காமல் அவனையும் அவன் வேலை செய்யும் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தாள் சாரு.அவனைப் பார்த்து கொண்டே அசந்து உறங்கிவிட்டாள். அதிகாலையில் எழுந்து கண்களை விழித்து பார்த்தால் எதிரே சந்துரு உறங்காமல் வேலை செய்து கொண்டிருந்தான்.வேகமாக எழுந்து குளித்து விட்டு சமையலறைக்கு சென்றாள்.காபி போட்டு சந்துருவிற்கு கொடுக்கலாம் என்று நினைத்து சமையலறைக்கு வந்தால் எந்தெந்த பொருள் எங்கே இருக்கிறது? என்று தெரியாமல் தேடிக் கொண்டிருந்தாள்.
பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு கண்ணம்மா எழுந்து சமையலறைக்கு வந்தார்.


"எதுவும் வேணுமா சின்னம்மா? சொல்லுங்க...நான் எடுத்து தர்றேன்ம்மா..."என்றார் கண்ணம்மா.


"அம்மா! நீங்க என்னை சாருனே கூப்பிடுங்க"


"இல்லங்க சின்னம்மா..."


"அம்மா! நானும் உங்க பொன்னு மாதிரிதான்.நீங்க தாராளமாக என் பெயர் சொல்லி கூப்பிடலாம்..." என்றாள் சாரு.

அப்போதும் பெயர் சொல்லி கூப்பிட தயக்கப்பட்டு சாரும்மானு கூப்பிட்டார் கண்ணம்மா.அதன் பிறகு காபி போடுவதற்கு தேவையான பொருட்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டாள் சாரு.


"நீங்க ரூமிற்கு போங்க சாரும்மா.நான் ஐந்து நிமிஷத்தில் காபி போட்டு உங்க ரூம்மிற்கு எடுத்து வர்றேன்..." என்றார் கண்ணம்மா.


"நீங்க கொஞ்ச நேரம் இப்படி உட்காருங்கம்மா..." என்று சொல்லி மூன்று கப் காபி போட்டு, ஒரு கப் காபியை கண்ணம்மாவிடம் கொடுத்து குடிக்கச் சொன்னாள்.மற்ற இரண்டு கப் காபியைத் தட்டில் வைத்து அவளது அறைக்கு எடுத்து சென்றாள்.
சந்துருவிடம் காபியைக் கொடுத்தாள்.


சாரு காபியைக் கொடுத்ததும் "தாங்ஸ்ங்க..." என்று கூறினான் சந்துரு.


முதன் முதலாக சந்துருவிற்காக போட்டு வந்த காபிக்கு ஏதேனும் கமெண்ட்ஸ் அவனிடம் இருந்து வருமா என்று எதிர்ப்பார்த்தாள் சாரு.ஆனால் சந்துருவின் கவனம் முழுவதும் வேலையில் இருந்தது.சந்துரு காபி குடித்ததும் கப்பை எடுத்து கொண்டு கீழே வந்தாள்.அதற்குப்பிறகு பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தாள்.தனது மருமகளை பார்த்த ஜானகி அம்மாவின் மனம் நெகிழ்ந்தது.


"சாரு! இன்னைக்கு நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போகனும்.சந்துருவ சீக்கிரம் குளிச்சு ரெடியாக சொல்லும்மா..." என்றார் ஜானகி அம்மா.


"அவுங்க நேத்து இராத்திரி முழுக்க ஆபிஸ் வேலை பார்த்துட்டு இப்போது தான் தூங்குறாங்க அத்தை..." என்றாள் சாரு.


"காலங்காத்தால யாரும்மா வீடு முழுக்க புகை போட்டுக்கிட்டு இருக்கா..." என்று எரிச்சலுடன் கேட்டான் ஷ்யாம்.


"இது புகையில்லடா ஷ்யாம்.
சாம்பிராணி ஊதுபத்தி வாசனை."


"என்னமோ ஒன்னு" என்று எரிச்சலுடன் அவனுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டே இருவரும் வீட்டின் நடுப்பத்திக்கு வந்து பார்த்தனர்.


ஜானகி அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை பார்த்த மாலதி, "மாமியாருக்கு இப்போவே ஐஸ் வைக்க ஆரம்பிச்சுட்டாளா இந்த சாரு..." என்று ஷ்யாமிடம் கூறினாள்.


"நீங்க இப்படியே வெட்டியா பேசிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.கடைசி நாம அவளை வீட்டை விட்டு விரட்டுவதற்குள்ள அவள் நம்மள விரட்டிடுவா போல..." என்று மாலதியிடம் கூறினான் ஷ்யாம்.


சந்துருவிடம் ஆசிர்வாதம் வாங்க ரூம்மிற்கு வந்து பார்த்தாள் சாரு.
சந்துருவோ வேலை பார்த்த களைப்பில் ஷோபாவிலே படுத்து உறங்கிவிட்டான்.அவன் காலை மட்டும் தொட்டு கும்பிட்டாள்.மொபைலை எடுத்துப் பார்த்தால், பானு பத்து முறை அழைத்திருக்கிறாள்.பால்கனியில் நின்று பானுவிற்கு போன் செய்தாள் சாரு.முதல் ரிங்கிலே போனை எடுத்தாள் பானு.


"என்னம்மா புதுப்பொண்ணே! மேடம் ரொம்ப பிஸியாகிட்டீங்க போல தெரியுது.உனக்கு நேத்து இராத்திரி எத்தனை தடவை கால் பண்ணினேன் தெரியுமா? வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்திட்டேனு சொல்லதான் உனக்கு கால் பண்ணிருந்தேன்" என்று சாருவை பேசவிடாமல் பானுவே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.


"மேடம் பேசி முடிச்சுட்டீங்களா? நான் பேசலாமா?" என்று கேட்டாள் சாரு.


"உன்னை வீட்டிற்கு கூட்டி கொண்டு போய் விட்டது மனோஜ் அண்ணா தானு எனக்கு தெரியும்."


"அது எப்படி உனக்கு தெரியும்? நீதான் கீழேயே இறங்கி வரவில்லையே!" என்று கேட்டாள் பானு.


"நீ காரின் முன் சீட்டில் ஏறாமல் பின் சீட்டில் உட்கார்ந்தது எல்லாத்தையும் மாடியிலிருந்து பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்" என்றாள் சாரு.


"என் மொபைலையும் சார்ஜ் இல்லாமல் இருந்தது.மனோஜ் அண்ணா உன்னை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்த்திருப்பாங்கனு எனக்கு தெரியும்" என்று சாரு சொன்னதும் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள் பானு.


"ஹலோ மேடம்! என்ன சத்தமே கேட்கல.லைன்ல தான் இருக்கீங்களா..." என்று சாரு கேட்டதும், பானு வெட்கப்படுவதை மறைத்து கொண்டு சாருவை கிண்டலடிக்கத் தொடங்கினாள் பானு.


"மாப்பிள்ளை சார் என்ன பண்ணுறாங்க சாரு?" என்று கேட்டாள் பானு.


"அவுங்க அசந்து தூங்கிக்கிட்டு இருக்காங்க."


"ஓ! அவ்வளவு அலுப்பா..."என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் பானு.


"ஏய் பானு! கொஞ்சம் சிரிக்கிறதை நிறுத்து.என்னனு விஷயம் புரியாமல் நீயா எதாவது கற்பனை கட்டாத பானு.அவுங்களுக்கு ஏதோ முக்கியமான ஆபிஸ் ஒர்க் முடிக்கனுமா.நேத்து இராத்திரி முழுக்க கண் முழுச்சு வேலை பார்த்துட்டு இப்போதான் தூங்குறாங்க..." என்றாள் சாரு.


"மாப்பிள்ளை சாரோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லாமல் போச்சு.சாந்தி முகூர்த்தம் அதுவுமா யாராவது இப்படி இராத்திரி முழுக்க உட்கார்ந்து வேலை பார்ப்பாங்களா சாரு?" என்று பானு கேட்டாள்.


"ஆபிஸ்ல ஏதாவது அவசர தேவையாக கூட இருந்திருக்கலாம்.எதுவும் முழுசா தெரியாமல் பேசாத பானு" என்றாள் சாரு.


"நீ எப்படியும் உன் கணவரை விட்டு கொடுக்க மாட்டேனு தெரியும்.
எங்கிட்டோ நல்லா இருந்தா சரிதான்..." என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள் பானு.


மாலதி வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து சந்துருவின் ரூம்மிற்கு செல்லும் படிக்கட்டுகளில் எண்ணெய் ஊற்றிவிட்டாள்.


"இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு ஷ்யாம் அந்த சாரு படிக்கட்டிலிருந்து இறங்கி வருவாள்.படிக்கட்டில் காலை வச்சதும் வழுக்கி விழுந்து உருண்டு பிரண்டு கை, கால், இடுப்பெலும்புலாம் உடஞ்சு ஒரு மாசத்துக்கு எழுந்திருக்கவே முடியாம ஆஸ்பத்தரியில் படுத்த படுக்கையாக கிடக்கப்போறா பாரு..." என்று ஷ்யாமிடம் கூறினாள் மாலதி.


"சூப்பர் அம்மா!" இப்போதான் உருப்படியா ஒரு வேலைப் பண்ணிருக்கீங்க..." என்று சொல்லி மாலதியை கட்டிப் பிடித்தான் ஷ்யாம்.


"யாரோ வருவது மாதிரி இருக்கு ஷ்யாம்.சீக்கிரம் வா ஷ்யாம்... அப்பறம் நம்ம மேல சந்தேகம் வந்திரும்..." என்று கூறி அவர்களது அறைக்கு இருவரும் ஓடிச் சென்றனர்.


சாருவிடம் போன் பேசி வைத்ததும் மனோஜிற்கு போன் செய்தாள் பானு.


"குட்மார்னிங் மேடம்.அதிசயமாக இருக்கு... எப்போதும் பேஸ்புக்ல தான சேட்டிங் வருவீங்க.இன்னைக்கு என்னடான காலையிலேயே போன் போடுறீங்க.நம்ம கல்யாணத்துக்கு என் மாமானார் மாமியார் பச்சைக் கொடி காட்டீட்டாங்களா?" என்று கேட்டான்.


"சார்...சார்...என்னை கொஞ்சம் பேச விடுங்க" என்றாள் பானு.


"ம்ம்...சொல்லுங்க மேடம்..." என்றான் மனோஜ்.


"உங்க ப்ரெண்ட் ஏன் இப்படி இருக்காரு?"


"யாரு? சந்துருவையா சொல்லுற பானு"என்று கேட்டான்.


"ஆமாம் சார்..."


"அவனுக்கு என்ன ராஜா மாதிரி தான இருக்குறான்"என்றான் மனோஜ்.


"காமெடியா? எனக்கு சிரிப்பே வரலை சார்..."என்றாள் பானு.


"சரி விடு...நீ சொல்ல வந்ததை தெளிவாக சொல்லு பானு..." என்றான் மனோஜ்.


"நேத்து இராத்திரி என்ன நடந்தது தெரியுமா?" என்று பானு சொல்லி முடிக்கும் முன்னரே "அதெல்லாம் நமக்கு எதுக்கு பானு? புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் என்று அவன் பேச தொடங்கியதும்....."


"சார்...சார்....ரொம்ப ஓவரா யோசிக்காதீங்க...நான் சொல்ல வந்ததே வேற விஷயம்" என்றாள் பானு.


"உங்க ஆருயிர் தோழன் நேத்து இராத்திரி முழுக்க உட்கார்ந்து ஆபிஸ் வேலை பார்த்துக்கிட்டு இருந்திருக்காரு" என்றாள் பானு.


"என்ன சொல்லுற பானு? நிஜமாகவா?" என்று கேட்டான் மனோஜ்.


"ஆமாம் சார்..."


"சரி நான் பார்த்துக்கிறேன்.நீ ஸ்கூலுக்கு கிளம்பு" என்று கூறிவிட்டு நேராக சந்துருவின் அறைக்குச் சென்றான்.


"சாரு... சாரு..."என்று சாருவை அழைத்தார் ஜானகி அம்மா.


"இதோ வர்றேன் அத்தை..." என்று கூறிக் கொண்டு கீழே இறங்க தொடங்கினாள் சாரு.


சாரு வழுக்கி விழுந்து விட்டாளா?சாருவிற்கு என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 14


"பலகார கூடைகள் எல்லாம் சரியாக இருக்குதானு சரி பார்த்துட்டாயாமா சிவகாமி?" என்று சாருவின் அம்மாவிடம் கேட்டார் தாத்தா.


"எல்லாம் சரியாக இருக்குது மாமா..." என்றார் சிவகாமி.


"இதெல்லாம் நாங்க பார்த்துகுறோம்.
நீங்க போய் பசங்க எல்லாரையும் கிளம்பி ரெடியாக சொல்லுங்க..." என்று கூறினார் சாருவின் பாட்டி.


"உங்க மாமாவுக்கு எப்போது பார்த்தாலும் இதே வேலையாவே போச்சும்மா.சும்மா ஒரு இடத்தில இருக்கவே மாட்டாரு சிவகாமி.
'குட்டிப் போட்ட பூனை மாதிரி இங்கேயே சுத்தி சுத்தி வந்திக்கிட்டே இருக்காரு' என்று சிவகாமி அம்மாவிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் சாருவின் பாட்டி.


இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட மதி, "தாத்தாவுக்கு உங்க மேல எவ்வளவு லவ் இருந்தா இப்படி நீங்க போகிற இடமெல்லாம் உங்களையே சுத்தி சுத்தி வருவாரு பாட்டி.இது கூடத் தெரியாமல் தாத்தாவை இப்படி கிண்டலடித்து பேசுறீங்களே பாட்டி..." என்றாள் மதி.


"வயசுக்கு ஏத்த மாதிரியாடி பேசுற மதி..." என்று கேட்டார் பாட்டி.


"பாட்டி! இன்னும் இரண்டு வருஷத்துல எனக்கும் கல்யாண வயசு வந்துரும்" என்றாள் மதி.


"அதுவும் சரிதான்.உன் மகள் என்னமா வாய் பேசுறானு பாரு சிவகாமி.
இவுங்களச் சொல்லி குத்தமில்ல.இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் பருவம் வருவதற்கு முன்னாடியே சினிமா, போன், அது என்னது? பாஸ்புக்காம்மா..." என்று சிவகாமியிடம் கேட்கும் போது, "அது பாஸ்புக் இல்ல பாட்டி... பேஸ்புக்" என்றாள் மதி.


"சரி என்னமோ ஒரு புக்கு... இதையெல்லாம் பார்த்து பசங்க எல்லாரும் முளையிலே விளஞ்சுறாங்க.அந்த காலத்துல நாம எல்லாரும் இதைப் பார்த்தம்மா படிச்சு வளர்ந்தோம்.இப்போ பார்த்தா முளைச்சு மூன்று வயசுகூட ஆகாத நண்டு சுண்டுனு பல்லு இல்லாத குழந்தையிலிருந்து பல்லு போன தாத்தா வரைக்கும் கையில அந்த போனை வச்சிக்கிட்டு தான் சுத்துராங்க.இனி வரும் தலைமுறைக்காவது நம்ம கலச்சாரம் பழக்க வழக்கம் சொல்லி பண்போடு வளர்க்கனும்" என்று கூறினார் பாட்டி.


"தேவையுள்ளது பார்க்கும் போது தேவையில்லாதது எல்லாம் சேர்ந்து விளம்பரம் வருவதால் பிள்ளைங்க எல்லாத்தையும் பார்க்குதுங்க..." என்று கூறினார் பாட்டி.


"இந்த போனு வந்தாலும் வந்துச்சு நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரமும் பழக்க வழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மறைய தொடங்கிருச்சு.வட நாட்டு கலச்சாரமும், வெளிநாட்டு பழக்கம் வழக்கமும் தான் மேலோங்கி இருக்குது.கிராமத்துல ஏதோ நம்மள மாதிரி பழக்கம் வழக்கம் மாறாமல், நம் பாரம்பரியத்தை தாய் போல நேசித்து கடைப்பிடிக்கும் சில பேர் இருப்பதால தான் இன்னும் நம் தமிழ் மொழியும், தமிழ் மண்ணும், தமிழ் கலாச்சாரமும் அழியாமல் இருக்குது" என்று கூறினார் பாட்டி.


"பாட்டி! நம்ம எல்லோருக்கும் நெருப்பு சுடும்னு தெரியும்.அதுக்காக சமைக்காமல் இருக்கோமா? அது மாதிரிதான் சினிமா, போன், வாட்ஸ் ஆப், பேஸ்புக்.இந்த உலகத்தில் உள்ள அனைத்து கண்டுப்பிடிப்பிலும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும்.நீங்க எதை குறித்தும் பயப்படாம இருங்க.
நாங்க நல்லது மட்டும் எடுத்து கொண்டு சரியான வழியில்தான் செல்கிறோம்.குழந்தையை பெற்று வளர்க்கும் பெற்றோர்கள் சரியாக இருந்தால் பிள்ளைங்க தவறான வழிக்கு செல்லவே முடியாது.
பெற்றோர்கள் தான் குழந்தைகளின் முதல் ஆசான்.நாங்க எல்லாரும் நீங்க வளர்த்த பேத்தியாச்சே! எப்படி தவறான வழியில் போவோம் சொல்லுங்க பாட்டி..." என்று கேட்டாள் மதி.உடனே மதியைக் கட்டி அணைத்து முத்தமிட்டார் பாட்டி.


சந்துருவின் அம்மாவிற்கு போன் செய்து நலம் விசாரித்து விட்டு, இன்னும் பத்து நிமிஷத்தில் எல்லாரும் வீட்டிலிருந்து கிளம்பிடுவோம் என்ற தகவலை ஜானகி அம்மாவிடம் சொன்னார் தாத்தா.


சந்துருவின் ரூமிலிருந்து சாரு கீழே இறங்கி செல்லும்போது "சாரு! சாரு! ஒரு நிமிஷம் இங்கே வாமா..." என்று சாருவை அழைத்தான் மனோஜ்.
கீழே படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவள் மேலே ஏறி வந்தாள்.


"சொல்லுங்க அண்ணா....எதுவும் வேண்டுமா? காபி போட்டு கொண்டு வரவா?" என்று கேட்டாள் சாரு.


"அதெல்லாம் எதுவும் வேண்டாம்மா...
சந்துருட்ட கொஞ்சம் பேசனும்.சந்துரு ரூம்ல இருக்கானாமா சாரு?" என்று கேட்டான்.


"அவுங்க ரூம்ல தான் இருக்காங்க அண்ணா..." என்று கூறினாள்.


"அவனை கொஞ்சம் வெளியே கூப்பிடும்மா" என்றான் மனோஜ்.


"எப்போதும் போல சும்மா உள்ள போய் பேசுங்க அண்ணா.நான் சும்மா பேருக்கு மட்டும் அண்ணாணு கூப்பிடல.என் உடன் பிறந்த சகோதரனாக நினைச்சுதான் கூப்பிடுறேன்" என்று மனோஜிடம் கூறினாள் சாரு.


"சொந்த தங்கச்சி ரூம்க்குள்ள போக யாராவது அனுமதி கேட்பாங்களா...
சும்மா உள்ள போங்கண்ணா..."என்று கூறினாள் சாரு.


மனோஜின் கண்கள் கலங்கியதை பார்த்த சாரு, "ஏன் அண்ணா கண் கலங்குது?" என்று கேட்டாள்.


"எந்த உறவுகளுமே இல்லாத என் மேல் இவ்வளவு உரிமையாக நீ இருப்பதை நினைத்து ஆனந்த கண்ணீர் வந்திடுச்சும்மா..." என்றான் மனோஜ்.


மனோஜ் வளர்ந்தது எல்லாம் அன்பு கருணை இல்லம் என்ற ஒரு அனாதை ஆசிரமத்தில் தான்.அவனது தாய், மனோஜ் பிறந்ததும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு சென்று விட்டாளாம்.அந்த வழியே சென்ற ஒருவர் குப்பை தொட்டியில் அழுது கொண்டிருந்த குழந்தையை எடுத்து அருகில் இருந்த ஆசிரமத்தில் சேர்க்கும் போது சிஸ்டரிடம் நடந்ததை கூறியிருக்கிறார்.காலேஜ் படிக்கும் போதிலிருந்துதான் சந்துருவும் மனோஜூம் நெருங்கிய நண்பர்களானார்கள்.


மனோஜின் வாழ்க்கையைப் பற்றி ஜானகி அம்மாவிடம் சந்துரு சொன்னதும், இனி மனோஜ் நம்ம கூடவே இருக்கட்டும் சந்துரு.
அவனை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திரு என்று கூறியிருக்கிறார் ஜானகி அம்மா.அதன் பின் இருவரும் படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட்டாகி வேலையில் ஒன்றாக சேர்ந்தனர்.
இருவருக்கும் ஒன்றாகவே வெளிநாட்டில் சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.


ஒரு நாள் பானு சாருவிற்கு போன் செய்து மனோஜை பற்றிய அனைத்து தகவலையும் சாருவிடம் கூறியிருக்கிறாள் பானு.


"பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல், ஒரு குழந்தை தனியாக இந்த சமுதாயத்தில் போராடி வளர்ந்து நல்ல மனிதனாகி தன் சொந்த காலில் நிற்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல பானு.பெற்றோர்கள் இருக்கும் பலருக்கு அவர்களின் அருமையும் அன்பும் புரிவதில்லை.
பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை கல்யாணத்திற்கு பிறகு அனாதையாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்.
நமக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.இப்படிப்பட்ட சமுதாயத்தில் மனோஜ் அண்ணா போன்ற நல்ல குணம் படைத்தவரை காண்பது மிகவும் அரிது பானு.
நல்லவர்களைத்தான் இறைவன் ரொம்ப சோதிக்கிறான் பானு" என்று கூறினாள் சாரு.


காதலிப்பவர்களை கண்டால் பத்தடி தூரம் விலகி செல்லும் பானு, மனோஜ் மீது காதல் கொண்டதற்கு காரணமும் இதுதான்.


"நாங்கள் எல்லாரும் உங்களுக்காக இருக்கும்போது அப்படியெல்லாம் இனி நீங்க எதுவும் யோசிக்க கூடாது அண்ணா!" என்றாள் சாரு.


சாருவும் மனோஜும் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் சந்துருவின் காதில் விழுந்தது.ஆனால் அவனுக்கு எதுவும் தெரியாதது போல ரூமிலிருந்து வெளியே வந்தான் சந்துரு.


சந்துரு வந்ததும், "சரிங்க அண்ணா... நீங்க இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க.அத்தை என்னை கூப்பிட்டாங்க.நான் போய் பார்த்துவிட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு மீண்டும் படிகளில் இறங்க தொடங்கினாள் சாரு.சந்துருவும் மனோஜூம் ரூமிற்குள் சென்றனர்.


"ஏன்டா சந்துரு! நீயெல்லாம் திருந்தவே மாட்டியா? முதலிரவு அதுவுமா உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை?" என்று கேட்டான் மனோஜ்.


"என் ப்ராஜெக்ட் டீமில் எனக்கு பதிலாக வேலை பார்த்து கொண்டு இருக்கும் விக்டரோட மனைவிக்கு திடீரென லேபர் பெயின் வந்திடுச்சு.அந்த ப்ராஜெக்ட் ஒர்க்கை நேத்தே முடிச்சாகனும்.அவர் ஆஸ்பத்திரிக்கு போனதால அந்த வேலையை பார்த்துக்கிட்டு இருந்தேன்" என்றான் சந்துரு.


"ஓ அப்படியா! விக்டரோட மனைவி இப்போ எப்படி இருக்காங்களாம்..." என்று கேட்டான் மனோஜ்.


"ம்ம...நல்லா இருக்காங்களாம்.நார்மல் டெலிவரி தான்.பெண் குழந்தை பிறந்திருக்குனு விக்டர் மெயில் பண்ணிருக்காரு" என்றான் சந்துரு.


"சாரு விழுந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனதும், உங்களை டவுனுக்கு அழைச்சிட்டு போய் தலைப்பாக்கட்டி பிரியாணி வாங்கி கொடுக்குறேன்ம்மா.சாரு விழுந்ததை நம்ம ஜாலியாக சாப்பிட்டு கொண்டாடுவோம்மா..." என்று கூறினான் ஷ்யாம்.


"நீ சொன்னதும் இப்போவே எனக்கு நாக்கு ஊறுது ஷ்யாம்.
கல்யாணத்துக்கு பந்தக்கால் நட்டதுல இருந்து அசைவே சாப்பாடே சாப்பிடாமல் வயிறு காஞ்சு போயிக்கிடக்கு.நீ சீக்கிரம் கிளம்பி தயாராகு ஷ்யாம்.நான் கொஞ்ச நேரத்துல ரெடியாகிட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு சென்றார்.


மாலதியும், ஷ்யாமும் பிரியாணி சாப்பிட கிளம்பி தயாராகி காத்துக் கொண்டிருந்தனர்.


"ஷ்யாம் பிரியாணி சாப்பிட்டதும் அப்படியே ஒரு ஜிகர்தண்டாவும் வாங்கி கொடுத்திருப்பா..." என்றார் மாலதி.


"சரிம்மா... உங்களுக்கு என்னலாம் வேணுமோ எல்லாம் வாங்கி தர்றேன்.
முதல்ல அந்த சாரு படியில் இறங்கி வருகிறாளானு போய் பாருங்க..." என்றான் ஷ்யாம்.


அறையிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தார் மாலதி.மீண்டும் அவரது அறைக்குள் வந்து கதவை டக்குனு மூடிக் கொண்டார்.


"என்னம்மா? என்னாச்சு?"என்று மிகவும் ஆவலுடன் கேட்டான் ஷ்யாம்.


"சாரு படியில் இறங்கி வர ஆரம்பிச்சுட்டா ஷ்யாம் என்று
சந்தோஷத்துடன் கூறினார்.இன்னும் ஐந்து நிமிஷத்தில எண்ணெய் ஊத்துன இடத்துக்கு வந்து கால் வழுக்கி விழுந்து அம்மானு கத்துவா பாரு..." என்றார் மாலதி.


"சாரு ரொம்ப நல்ல பொன்னு சந்துரு.அவள் மனம் கோணாமல் பார்த்து நடந்துக்கோடா.உன் கடந்த காலம் எல்லாத்தையும் அவளிடம் மறைக்காமல் சொல்லிரு.இனி வாழ்க்கை முழுவதும் உனக்கு துணையாக இருக்கப் போறது அவள் மட்டும்தான்.புருஷன் பொண்டாட்டிக்கு இடையே எந்த வித ஒளிவும் மறைவும் இருக்கக் கூடாது சந்துரு.அப்போது தான் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும்.கண்டிப்பாக உன் நிலைமையை சாரு புரிந்து கொள்ளுவாள் சந்துரு.எதைப் பத்தியும் யோசிக்காமல் நடந்ததை சொல்லிரு..." என்றான் மனோஜ்.


"மெதுவாக சொல்லிக்கலாம் மனோஜ்.நீ சொல்லுவது எல்லாம் எனக்கு புரியாமல் இல்ல.அவளிடம் நல்லா பழகி அவளைப் பத்தி நல்லா தெருஞ்சதுக்கு பிறகு சொல்லிக்கலாம்னு இருக்கேன்" மனோஜ்.


"நான் திடீரென்று இப்போ போய் கடந்த காலத்துல நடந்த எல்லாத்தையும் சொன்னா அதை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு இருக்கானு தெரியல.நான் தேவையில்லாமல் ஏதாவது சொல்ல போய் பிறகு அது ஏடா கூடமாக எதுவும் ஆகிடக் கூடாதுல மனோஜ்" என்றான் சந்துரு.


"சஞ்சுளா பத்தி சொல்லாவிட்டாலும், இப்போதைக்கு சவிதா பத்தியாவது சொல்ல முயற்சி செய் சந்துரு" என்றான் மனோஜ்.


"ம்ம்...சொல்ல முயற்சி செய்கிறேன்" என்றான் சந்துரு.


"சாருவோட குணமே தனிடா சந்துரு.காலப்போக்கில் உனக்கே அவளைப் பற்றி தெரிய வரும்.
அப்போது நீயே என்னை தேடி வந்து சாருவை பற்றி புகழ்ந்து தள்ளுவ பாரு" என்றான் மனோஜ்.


"ம்ம்...அதையும் பார்க்கலாம்..." என்றான் சந்துரு.


இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது "அம்மா..." என்று கத்தும் சத்தம் கேட்டது.சந்துருவும் மனோஜும் பதறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்து பார்த்தனர்.


சாரு விழுந்து விட்டாளா? ஷ்யாம் மற்றும் மாலதி இருவரும் நினைத்தது போல அவர்களின் எண்ணம் நிறைவேறி விட்டதா? யார் அந்த சஞ்சுளாவும், சவிதாவும்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 15


பானு பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வேலைக்கு சென்றாள்.


"ஹாய் பானு! புதுப்பொண்ணு எப்படி இருக்காங்க?" என்று சாருவை பற்றி மற்ற ஆசிரியர்கள் நலம் விசாரித்தனர்.


"அவளுக்கு என்ன? சூப்பரா இருக்கா டீச்சர்..." என்று பதில் கூறினாள் பானு.


"நாங்க கேள்வி பட்டதுலாம் உண்மையா பானு?உனக்கும் சாருவின் வீட்டுகாரரோட ப்ரெண்ட்டுக்கும் அடுத்த மாசம் கல்யாணம் நடக்க போகுதுனு சொல்லிகிறாங்க.கல்யாணம் முடிந்த கையோட அமெரிக்காவுக்கு நீ போகிடுவனு சொல்லுறாங்க பானு" என்று அவளிடம் கேட்டனர்.


"ஆமாம் டீச்சர்.அடுத்த மாசம் இல்ல.அடுத்த வாரமே கல்யாணம்..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள் பானு.


"அப்படியா பானு! எங்கக்கிட்டஒரு வார்த்தை சொல்லனும் கூட உனக்கு தோனல பார்த்தியா?"என்று கேட்டனர்.


"காமெடி பண்ணாதீங்க டீச்சர். இப்போதைக்கு கல்யாணம் பத்தி எந்த முடிவும் எடுக்கல.யாரோ என்னை பத்தி நல்லா கதைக்கட்டி உங்கக்கிட்ட தப்பான தகவலை சொல்லிருக்காங்க.
நீங்க எல்லாரும் அதையும் நம்பிட்டு வந்து கேட்குறீங்க" என்றாள் பானு.


"இன்னும் கூட ஒரு வாரம் சேர்த்து லீவ் போட்டிருந்தா கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போய்ட்டேனு சொல்லிருப்பீங்க போலயே!" என்று சொல்லிட்டு வயிறு வலிக்க சிரிக்க தொடங்கினாள் பானு.


"ஈரை பேணாக்கி பேணை பெருமாளாக்குறதுல நம்ம மக்களை அடிச்சுக்கவே முடியாது டீச்சர்..." என்றாள் பானு.


"நீங்க சொன்னதில் ஒரு விஷயம் மட்டும் உண்மைதான் டீச்சர்.
எனக்கு கல்யாணம் நடந்தால் அது மனோஜ் சார் கூட மட்டும்தான்.ஆனால் கல்யாணம் இப்போதைக்கு இல்லை.
எங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்கிய பிறகு கல்யாண தேதி உறுதியானதும், உங்களுக்கும் என்னை பற்றி உங்களுக்கு தகவல் சொன்னவங்களுக்கும் கண்டிப்பாக பத்திரிக்கை வைப்பேன் டீச்சர்..." என்றாள் பானு.


அம்மா என்று கத்தும் சத்தம் கேட்டதும், சாரு வேகமாக கீழே இறங்கி வந்து மாலதியின் அறைக்கு சென்றாள்.
சந்துருவும் மனோஜூம் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தனர்.


"ஐயோ அம்மா! காலு ரொம்ப வலிக்குதே! தாங்க முடியலையே!" என்று கத்தினார் மாலதி.


"ஆஸ்பத்திரி போகும் வரை கொஞ்சம் பொறுத்துக்கோங்கம்மா..." என்று கூறினான் ஷ்யாம்.


"சந்துரு! நீயும் ஷ்யாமும் சேர்ந்து சித்தியை தூக்குங்கப்பா.மனோஜ் நீ போய் காரை ஸ்டார்ட் செய்!" என்றார் ஜானகி அம்மா.


"அத்தை ஒரு நிமிஷம் பொறுங்க.நான் என்னனு பார்க்கிறேன்..." என்றாள் சாரு.


மாலதியின் காலை தன் மடி மீது வைத்து தொட்டு பார்த்தவள், "ஒரு பத்து நிமிஷம் பொறுமையாக இருங்க அத்தை.மருந்து ரெடி பண்ணி எடுத்துட்டு வரேன்"என்று கூறிவிட்டு சமையலறைக்கு வேகமாக சென்றாள்.


"அம்மா! நீங்க நம்ம வீட்டு முருங்கை மரத்தில் இருக்கும் முருங்கை பட்டை கொஞ்சம் எடுத்துட்டு வாங்கம்மா..." என்று கண்ணம்மாவிடம் கூறினாள்.


"இந்தாங்க சாரும்மா.." என்று முருங்கை பட்டையை கொடுத்தார் கண்ணம்மா.


"அம்மா! பெருங்காய டப்பா, கடுகு, சுக்கு டப்பாலாம் எங்க இருக்குனு சொல்லுங்கம்மா?" என்று கண்ணம்மாவிடம் கேட்டாள் சாரு.


"நானே எடுத்து தர்றேன் சாரும்மா" என்று சொன்னார்.எல்லா டப்பாவையும் எடுத்து சாருவிடம் கொடுத்தார்.


முருங்கை பட்டையோடு பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கை சேர்த்து நன்கு அரைத்தாள்.அவை அனைத்தையும் சூடு செய்து மாலதி அம்மா இருக்கும் அறைக்கு எடுத்து சென்றாள்.


"இது என்னது சாரு?"என்று ஜானகி அம்மா தன் மருமகளிடம் கேட்டார்.


"இந்த மருந்தை சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டால் சுளுக்கு சரியாகிவிடும் அத்தை.என் பாட்டி எனக்கு சொல்லி கொடுத்த கைப்பக்குவம் இது.எங்க வீட்டில் யாருக்கு சுளுக்கு பிடித்தாலும் இப்படி தான் செய்வோம்" என்றாள் சாரு.


"சரிம்மா...நீ மாலதிக்கு சீக்கிரமாக போட்டு விடு!" என்று கூறினார் ஜானகி அம்மா.


"எந்த காலத்துல இருக்கீங்க பெரியம்மா.இதெல்லாம் சரிபட்டு வராது.உடனே ஆஸ்பத்திரிக்கு போய் எலும்பு எதுவும் உடைஞ்சிருக்கானு ஸ்கேன் எடுத்து பார்க்கனும்" என்று சாருவின் மீது இருந்த கோபத்தை தன் பெரியம்மாவிடம் காட்டினான் ஷ்யாம்.


"கொஞ்சம் பொறுமையாக இருப்பா ஷ்யாம்! சாரு பற்று போடட்டும்" என்றார் ஜானகி அம்மா.


சூடு ஆறியதும் இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டாள் சாரு.


"நீங்க கவலைப்படாதீங்க அத்தை! இன்னும் அரை மணி நேரத்தில் சரியாகி பழைய படி நடக்க ஆரம்பிச்சுருவீங்க..." என்று மாலதியிடம் கூறினாள் சாரு.


ஆனால் ஷ்யாம் யார் சொல்வதையும் காதில் வாங்கி கொள்ளாமல் பற்று போட்டதும் அவனது அம்மாவை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பி சென்றுவிட்டான்.


"இளம் வயசு பசங்களுக்கு அந்த காலத்து கைப்பக்குவமும் அதோட அருமையெல்லாம் தெரியாதும்மா சாரு.சாதாரண தும்மலுக்கு கூட ஆஸ்பத்திரிக்கு ஓடிருவாங்க..."என்றார் ஜானகி அம்மா.


ஷ்யாமின் கார் வீட்டு வாசலை விட்டு கிளம்பியதும் சந்துரு வீட்டின் வாசலில் மூன்று கார் வந்து நின்றது.தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, தம்பி, தங்கச்சி என்று சாருவின் வீட்டிலிருந்து அனைவரும் கல்யாண பலகாரக் கூடையை கொடுக்க வந்திருந்தனர்.


மாலதியும், ஷ்யாமும் ஆஸ்பத்திரிக்கு வேகமாக சென்று டாக்டரை பார்த்தனர்."எப்படி இது நடந்தது?" என்று ஷ்யாமிடம் விசாரித்தார் டாக்டர்.பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறினார் மாலதி.காலில் போட்டிருக்கும் பற்றை பார்த்துவிட்டு "இதைப் போட்டது யார்?" என்று கேட்டார்.


"நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் டாக்டர்.சொல்ல சொல்ல கேட்காம பற்று போட்டுடாங்க..." என்று கூறினான் ஷ்யாம்.


"நோ...நோ...அவுங்க சரியான கை வைத்தியம்தான் செஞ்சிருக்காங்க. எப்படியாப்பட்ட சூளுக்கும் சரி, தசைப்பிடிப்பும் சரி முருங்கை பட்டை பற்று போட்டால் சரியாகிவிடும்..." என்று டாக்டர் சொன்னதும் அமைதியாகி விட்டான் ஷ்யாம்.


"நீங்க பயப்படுவது மாதிரி ஒன்றுமே இல்ல.சாதாரண தசைப்பிடிப்பு தான்.இந்த முருங்கை பற்றுக்கே வலி குறைந்து சரியாகிவிடும்.அதையும் மீறி வலி குறையாமல் இருந்தால் மட்டும் இந்த மாத்திரையை போடுங்க..." என்று மருந்து சீட்டை ஷ்யாமிடம் கொடுத்தார் டாக்டர்.


மருந்து கடையில் மாத்திரை வாங்கியதும் காரில் ஏறினார்கள்.


"ஏன்ம்மா கவனமாக இருக்க மாட்டீங்களா? "என்று மாலதியை சத்தம் போட்டான்.


"அந்த சாரு விழுவானு பார்த்தா, கடைசியாக பாத்ரூம் போன நீங்க கீழ வழுக்கி விழுந்து கிடக்குறீங்க."


"இல்லடா ஷ்யாம்! எண்ணெய் ஊத்திட்டு வந்த அவசரத்துல கை கழுவ பாத்ரூம் போன போது எண்ணெய் பாக்கெட்டை பாத்ரூம்லையே வச்சுட்டு வந்துட்டேன். பாக்கெட் கீழே விழுந்து எண்ணெய் கொட்டி கிடப்பது தெரியாம அதுல கால் வச்சு வழுக்கி விழுந்துட்டேன் ஷ்யாம்..." என்று கூறினார் மாலதி.


" தன் வினை தன்னை சுடும்னு ... பெரியவுங்க சொன்னது சரியா போச்சுல ஷ்யாம்" என்றதும் மாலதியை திட்டித் தீர்த்தான்.


"சரி டவுனுக்கு வந்தது வந்துட்டோம். அப்படியே பிரியாணி வாங்கி சாப்பிட்டு போயிரலாம்டா..." என்றதும் ஷ்யாம் அவனது அம்மாவை முரைத்து பார்த்தான்.


"இந்த ரணகளத்திலும் உங்களுக்கு குதுகலமாக இருக்குதுல.உங்களை திருத்தவே முடியாதும்மா..." என்று கூறிவிட்டு பிரியாணி கடைக்கு அழைத்துச் சென்றான்.


பிரியாணி சாப்பிட்டதும் வீட்டிற்கு சென்றனர்.வீட்டிற்குள் நுழைந்ததும் சாரு வேகமாக மாலதியிடம் சென்று "இப்போது கால் வலி எப்படி இருக்குது அத்தை?"என்று கேட்டாள்.அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார் மாலதி.


வீட்டை விட்டு கிளம்பும் போது தாங்கி தாங்கி நடந்தவர் ஆஸ்பத்திரிலிருந்து வரும்போது நன்றாக நடந்து வந்தார்.
மாலதி அம்மாவிடம் சாரு கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஜானகி அம்மாவும் வந்து நலம் விசாரித்தார்.


"டாக்டர் என்ன சொன்னாங்க மாலதி?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"எக்ஸ்ரே எடுத்து பார்த்ததுல தசைப்பிடிப்பு மாதிரிதான் இருக்கு. முருங்கை பற்றுக்கே சரியாகிவிடும் சொல்லிட்டாங்க அக்கா" என்றார் மாலதி.


"இதைத் தான் நாங்களும் சொன்னோம்.அவசரபட வேண்டாம்! கொஞ்சம பொறுமையாக இருங்கனு. சரி உன் பாத்ரூம்க்கு எப்படி எண்ணெய் வந்தது மாலதி?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"அது வந்துக்கா..."என்று மாலதி இழுத்ததும் "நான்தான் பெரியம்மா தலைக்கு எண்ணெய் வச்சு குளிக்கனும்னு அங்க வச்சிருந்தேனு" சொல்லி சமாளித்து விட்டான் ஷ்யாம்.


இன்னைக்கு காலையில் தான் வீடு முழுவதும் கண்ணம்மா துடைச்சு விட்டாள்.


"பெரியம்மா மன்னிச்சருங்க... மாலதி அம்மா ரூம் மட்டும் துடைக்கலம்மா. அவுங்க ரூமை இரண்டு தடவை தட்டி பார்த்தேன்.அவுங்க திறக்காதனலா பிறகு துடைச்சுக்கலாம்னு வந்துட்டேன் அம்மா..." என்றார் கண்ணம்மா.


"சரி போனது போகட்டும்.பெருசா எதுவும் அடி படாமல் இருந்ததே அதுவே போதும்.நல்ல வேளை கடவுள் சாரு ரூபத்துல வந்து மாலதிக்கு மருந்து போட்டு சரியாக்கி விட்டுடாரு.அந்த ஏழுமலையானுக்கு தான் நன்றி சொல்லனும்.நீ கொஞ்ச நேரம் ரூம்ல போய் ரெஸ்ட் எடு மாலதி.நான் சாரு வீட்டிலிருந்து வந்தவுங்களை போய் கவனிக்கிறேன்..."என்று கூறிவிட்டு சென்றார் ஜானகி அம்மா.


"பார்த்து கவனமாக இருங்க அத்தை" என்று சாருவும் கூறிவிட்டு கிளம்பினாள்.


மாலதியும், ஷ்யாமும் அவர்களது அறைக்கு சென்றனர்."இப்போ தான் புரிஞ்சிருச்சு ஷ்யாம்.சாரு விழாததுக்கு காரணம் இந்த கண்ணம்மா வீடு துடைச்சதுனாலனு" என்று கூறினார் மாலதி.


"கண்ணம்மா எப்போ வந்து ரூமை தட்டுனா எனக்கு சத்தமே கேட்கலையே?"என்றார் மாலதி.


"நீங்கதான் எண்ணங்களே வண்ணங்களாய்... சீரியலை காதுல ஹெட்செட் மாட்டிக்கிட்டு பார்த்துகிட்டு இருந்தீங்களா அப்போவா இருக்கும்."


"நான் தான் சீரியல் பார்த்தேன்.நீ என்னடா செஞ்சுக்கிட்டு இருந்த?" என்று கேட்டார்.


"நான் குளிக்க போயிருந்தேன்" என்றான் ஷ்யாம்.


"சாரு ஆஸ்பத்திரில அட்மிட் ஆகிருவானு பார்த்தால், கடைசி உங்களை ஆஸ்பத்திரித்கு கூட்டிட்டு போறது மாதிரி ஆகிடுச்சே.இந்த பெரியம்மா வேற அவுங்க மருமகளை கடவுள் ரூபத்துல வந்து காப்பாத்திட்டானு புகழ்ந்து தலையில் வச்சு கொண்டாடுறாங்க..."என்றான் ஷ்யாம்.


"சாரு மட்டும் முருங்கை பற்று போடாமல் இருந்திருந்தால் எனக்கு சுளுக்கு சரியாகிருக்காதுல ஷ்யாம்" என்றதும் "சும்மாவே செம கடுப்புல இருக்கேன்.என் வாயை கிளறி நல்லா வாங்கி கட்டிக்காதீங்க!"என்று கோபத்துடன் பேசினான் ஷ்யாம்.


"சாருவைப் பழி தீர்க்க முடியாமல் போனதை நினைத்து அவனது கை விரல்களின் நகத்தை வேகமாக கடித்தான்."


"பொண்ண நல்ல பண்போடும் பாசத்தோடும் வளர்த்திருக்கீங்க" என்று சாருவின் தாத்தாவிடம் ஜானகி அம்மா சொன்னார்.


"இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு மருமகளாக கிடைப்பதற்கு நாங்க கொடுத்து வச்சுருக்கனும்" என்றதும் சாருவின் குடும்பத்தினர் அனைவரின் மனசும் சந்தோஷம் அடைந்தது.


சாருவின் மாமா பையன் சங்கர், பந்தை எறிந்து விளையாடி கொண்டிருந்தான்.பந்து பறந்து அங்கிருந்த ஒரு ரூமின் ஜன்னல் வழியாக அறைக்குள் விழுந்தது. அறையின் கதவு பூட்டு போட்டு பூட்டி இருந்தது.சங்கர் சாருவிடம் வேகமாக ஓடி வந்து பந்தை எடுத்து தருமாறு அடம்பிடித்து அழத் தொடங்கினான். அறையின் பூட்டு சாவியை எடுத்து தருமாறு கண்ணம்மாவிடம் கேட்டாள் சாரு.


"சாரும்மா அந்த ரூம்க்கு போக வேண்டாம்மா..." என்றார் கண்ணம்மா.


"அந்த ரூம் சாவி சின்ன ஐயாட்டதான்ம்மா இருக்கும்" என்று கூறினார்.


காலையில் சந்துரு அந்த ரூம்மிற்குள் சென்றதும் கதவை டக்குனு மூடிக் கொண்டதையும் பார்த்தாள் சாரு.


"அந்த ரூம்ல அப்படி என்ன இருக்குதும்மா?"என்று கேட்டு கொண்டிருக்கும் போதே சந்துரு பந்தை எடுத்து வந்து சங்கரின் கையில் கொடுத்துவிட்டு சென்றான்.


கண்ணம்மாவையும் ஜானகி அம்மா அழைத்தார்.அதனால் சாரு கேட்டதிற்கு பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டார் கண்ணம்மா.


யாருடைய அறை அது? அந்த அறைக்கு சந்துரு மட்டும் சென்று வர காரணம் என்ன? அறைக்குள் அப்படி என்ன இருக்கிறது? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 16


"இங்கே வாடா சாரு..."என்று பாட்டி அழைத்தார்.


சிவகாமி அம்மாவும், பாட்டியும் சாருவை அழைத்துக் கொண்டு வீட்டின் முற்றத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர்.


"உனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லடா சாரு.நீ படிச்ச பொண்ணு.உனக்கே எல்லாம் தெரியும்.இருந்தாலும் நாங்க சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை.
கல்யாணம் முடிந்த புதுசுல ஒன்னும் தெரியாது.இனிமேல் தான் வாழ்க்கையில் எல்லா நல்லதும் கெட்டதும் வரும்டா.இதுதான் இனி உன் குடும்பம்.உன் வீட்டில இருக்குறவங்க மனசு கோணாமல் புரிஞ்சு நடந்துக்கோடா சாரு.
குடும்பத்தில் பிரச்சனை வரும் போகும்.வந்த பிரச்சனையை நெருப்பை ஊதி ஊதி பெருசா பத்த வைக்காம உடனே தண்ணிய ஊற்றி அனைச்சு விடுவது போல கையாளனும்.உனக்கும் சந்துருக்கும் இடையில் சின்ன மனக்கசப்போ, சங்கடமோ, எது வந்தாலும் சரி.உங்க ரூம்ல இருக்கும் அந்த நாலு சுவத்துக்குள்ளவே முடிச்சுகனும்.
எக்காரணத்த கொண்டும் மூன்றாவது மனுஷனிடம் சொல்லி விடக்கூடாது.
இனி வாழ்க்கை முழுவதும் உனக்கு எப்போவும் துணையாக இருக்க போறது என் பேராண்டி சந்துரு மட்டும் தான்.எது நடந்தாலும் பொறுமையாக அனுசரித்து நடந்துக்கோடா சாரு.ஒரு பொண்ணு நினைச்சா குடும்பத்தை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.
இதுக்கு மேல சொல்வதற்கு ஒன்றுமில்லடா சாரு.இரண்டு பேரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்க..." என்று சாருவிற்கு அறிவுரைக் கூறினார் பாட்டி.


எதிர்ப்பேச்சு எதுவும் பேசாமல் "சரிங்க பாட்டி..." என்று பதில் கூறினாள் சாரு.


அனைவரும் விருந்து சாப்பாடு சாப்பிட்டு முடித்து வீட்டிற்கு புறப்பட தயாராகி இருந்தனர்.


"அடுத்த வாரத்தில் ஒரு நாள் சந்துருவையும் சாருவையும் வீட்டிற்கு அனுப்பி வையுங்க சம்பந்தி அம்மா..." என்றார் தாத்தா.


ஜானகி அம்மா பதில் சொல்வதற்குள் "மன்னிக்கனும் தாத்தா...அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நான் அமெரிக்காவுக்கு கிளம்புறேன்" என்று கூறினான் சந்துரு.


"சாருவுக்கு விசா அப்ளை செய்ய வேண்டிய வேலை வேற கொஞ்சம் இருக்கு.நான் கிளம்புறதுக்குள்ள நிறைய வேலைகளை முடிக்க வேண்டியது இருக்கு தாத்தா" என்று சந்துரு கூறியதை கேட்ட சாருவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.


"அப்படியாப்பா சந்துரு! சரி உங்களுக்கு அதற்கு இடையில நேரம் கிடைச்சதுனா கண்டிப்பா வீட்டுக்கு வாங்க..." என்று கூறினார் தாத்தா.


அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் "சரிங்க சம்பந்தி அம்மா எங்களுக்கு நேரமாச்சு.நீங்கள் எல்லாரும் குடும்பத்தோட கண்டிப்பாக நம்ம வீட்டுக்கு ஒரு நாள் வாங்க..." என்றார் தாத்தா.


"அப்போ நாங்க கிளம்புறோம் சம்பந்தி அம்மா" என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றனர்.


அவர்கள் அனைவரும் கிளம்பிச் சென்றதும், "உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கடா சந்துரு?" என்று கேட்டார்.


"கல்யாணத்துக்கு வந்து இன்னும் ஒரு மாசம் கூட முழுசா முடியல.அதுக்குள்ள என்னடானா அடுத்த வாரம் கிளம்பனும்னு சொல்லுற.இதைப் பற்றி ஒரு வார்த்தை எங்கிட்ட கூட சொல்லவே இல்ல..." என்று சந்துருவிடம் கேட்டார் ஜானகி அம்மா.


"நான் எவ்வளவோ என் மேனேஜர்கிட்ட பேசிப் பார்த்தேன்ம்மா.இது புது ப்ராஜெக்ட்னால எக்ஸ்ட்ரா லீவ் கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க... அதுக்கு பிறகு நான் என்னம்மா செய்ய முடியும்?" என்றான் சந்துரு.


"அமெரிக்காவில் இருந்து புறப்படுவதற்கு முன்னாடியே எக்ஸ்ட்ரா லீவ் கொடுக்க மாட்டீங்கிறாங்கனு எனக்கு தகவல் சொல்லிருந்தேனா ப்ராஜெக்ட் போதும்னு சொல்லி கையோட முடிச்சிட்டு வந்திருனு சொல்லிருப்பேன்.நீ போகும்போதே சாருவையும் சேர்த்து கையோட அழைச்சிட்டு போவனு பார்த்தா, அவளை விட்டு போகலாம்னு முடிவுல இருக்க போல..." என்று கோபமாக சந்துருவை பேசினார் ஜானகி அம்மா.


"அம்மா! நீங்க சொல்வது மாதிரி நினைச்ச உடனே ப்ராஜெக்ட்லாம் அவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டு வர முடியாதுமா.என் சூழ்நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க அம்மா..." என்று கூறினான் சந்துரு.


மனதில் சந்துருவை விட்டு பிரிந்து இருக்க போகும் கவலையிருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், "அவுங்க முதல்ல கிளம்பட்டும் அத்தை.நீங்க எதுவும் வருத்தப்பட வேண்டாம்.நான் உங்களோடு கொஞ்ச நாள் இருக்கனும் ஆசைப்படுகிறேன் அத்தை..." என்று சாரு கூறியதை கேட்டு பிரமித்து போய் அவளைப் பார்த்தார் ஜானகி அம்மா.


சாரு பேசிக் கொண்டிருக்கும் போதே பதில் எதுவும் பேசாமல் அவனது அறைக்கு சென்றுவிட்டான் சந்துரு.
தனது அத்தையிடம் பேசிவிட்டு சந்துருவின் பின்னே தொடர்ந்து நடந்து சென்றாள் சாரு.


சாரு அறைக்குள் சென்றதும், "அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்ப போவதை ஏங்கிட்ட சொல்லனும் சுத்தமாக உங்களுக்கு தோனலையாங்க சந்துரு? நான் உங்களை விட்டுட்டு எப்படி இருப்பேன் சந்துரு? நீங்க என்னருகில் இல்லாத ஒவ்வொரு நிமிடமும் எனக்கு ரண வேதனையாகதான் இருக்கும் சந்துரு.தயவு செய்து உங்கக் கூடவே என்னை அழைத்து செல்லுங்கள் சந்துரு..." என்று அவனிடம் கேட்க வேண்டியதை நேரடியாக கேட்காமல், அவள் மனதிலே அவனிடம் கேட்பது போல நினைத்து கொண்டிருந்தாள் சாரு.


சந்துருவின் மீது அவள் கொண்ட ஆயிரம் ஆசைகளையும், காதல் கனவுகளையும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் தன் மனதிற்குள்ளே பூட்டி வைத்திருந்தாள் சாரு.


"நாளைக்கு நைட் எட்டு மணிக்கு சென்னைக்கு ட்ரைன்..." என்றான் சந்துரு.


"மறுநாள் காலையில் பத்து மணிக்கு விசா அப்ளிக்கேஷன் சப்மிட் செய்ய அபாய்ண்மெண்ட் கொடுத்திருக்காங்க.கன்சொலேட்டில் கொடுக்க வேண்டிய எல்லா டாக்யூமென்ட்டும் இந்த ஃபைலில் எடுத்து வச்சுருக்கேன் பிடிங்க..." என்று சாருவிடம் கொடுத்தான் சந்துரு.


சாரு சந்துருவுடன் முதன் முறையாக இருவரும் சேர்ந்து தனியாக பயணம் செய்ய போவதை நினைத்து மனதில் சந்தோஷத்தில் றெக்க கட்டி பறக்க தொடங்கினாள்.அவள் நினைத்து கொண்டிருந்த அடுத்த நிமிஷத்திலே சந்துரு கூறியதை கேட்டு அவளது ஆசை நிராசையாக மாறிவிட்டது.


"சென்னைக்கு உங்களுக்கு துணைக்கு மனோஜ் வருவான்.நாளைக்கு எனக்கு இன்னொரு முக்கியமான ஒர்க் இருக்கு" என்று கூறினான் சந்துரு.


"உங்களுக்கு மனோஜ் கூட செல்வதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்குதா? இல்லாட்டி சொல்லுங்க... நான் அம்மாவை வரச் சொல்லுறேன்" என்றான்.


"அதெல்லாம் மனோஜ் அண்ணாக்கூட போவதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லங்க..." என்று பதில் கூறினாள் சாரு.


சமையலறைக்கு வந்த ஜானகி அம்மாவிடம், "பெரியம்மா! இன்னைக்கு மதியம் நம்ம தோட்டத்தில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போது சாரும்மாவோட பாட்டியும் அவுங்க அம்மாவும் பேசிக் கொண்டு இருந்தது என் காதில் விழுந்ததும்மா.எல்லா பொண்ணு வீட்லையும் புதுசா கல்யாண முடிச்சு பொண்ண பார்க்கும் வரும்போது, உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா? மாமியார் எப்படி? நேரத்துக்கு சாப்பிடுறியா? அப்படி இப்படினு மாப்பிள்ளை வீட்டை பத்தி துப்பு விசாரிப்பாங்க.ஆனால் நம்ம சாரும்மா குடும்பத்துல அப்படியே எதிர்மறையாக பேசிக்கிட்டு இருந்தாங்கம்மா..."


இதுதான் இனி உன் குடும்பம் என்று பாட்டி ஆரம்பித்தில் சொல்ல தொடங்கிய அறிவுரையிலிருந்து கடைசி சொல்லி முடித்த அனைத்தையும் ஜானகி அம்மாவிடம் கூறினார் கண்ணம்மா.


"சாரும்மா குடும்பத்தில சாரும்மா மட்டும்தான் ரொம்ப நல்ல மனசு கொண்டவுங்கனு பார்த்தால், அவுங்க குடும்பத்தில் உள்ள எல்லாருடைய எண்ணங்களும் ஒரே மாதிரி தான் இருக்குதும்மா..." என்றார் கண்ணம்மா.


"ஆமாம் கண்ணம்மா... சாருவோட குடும்பத்தில் உள்ள எல்லாரும் ரொம்ப நல்லவங்க..." என்றார் ஜானகி அம்மா.


கண்ணம்மாவும், ஜானகி அம்மாவும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டு கொண்டிருந்தார் மாலதி.
தோட்டத்தில் உள்ள மரத்திற்கு அடியில் அமர்ந்து ஷ்யாம் மொபைலில் தீவிரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.பால்கனியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த சாரு, திடீரென்று "ஷ்யாம்... ஷ்யாம்..". என்று தொண்டை பிளக்கும் அளவுக்கு அவன் பெயரைச் சொல்லி கத்தி கத்தி கூப்பிட்டாள்.
விளையாட்டு ஆர்வத்தில் அவனது காதில் ஹெட்செட் வேற மாட்டியிருந்ததால் சாரு அவனை அழைத்தது ஷ்யாமிற்கு சுத்தமாக கேட்கவில்லை.மின்னல் வேகத்தில் கீழே ஓடி வந்து ஷ்யாமின் கையை சட்டென்று பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டதில் ஷ்யாம் ஒரு பக்கம் விழுந்தான்.மறுபக்கம் சாரு உருண்டு கீழே விழுந்து கிடந்தாள்.சாருவின் குரல் கேட்டு அனைவரும் வெளியே வந்து பார்த்தனர்.


ஷ்யாமை பிடித்து இழுத்து கீழே சாரு தள்ளி விட்டதும், ஷ்யாமிற்கு கோபம் வந்து சாருவை அடிக்க கை ஓங்கிய போது அவன் அமர்ந்திருந்த இடத்தில் உள்ள மரத்தின் மிகப்பெரிய கொப்பு ஒன்று முறிந்து விழுந்தது.அதைப் பார்த்ததும் சாருவை அறைய மேலே ஓங்கிய ஷ்யாமின் கை கீழே இறங்கியது.


வேகமாக ஓடி வந்த மாலதி, "ஷ்யாம் உனக்கு ஒன்னும் எதுவும் அடிபடலையேப்பா ?" என்று கேட்டுவிட்டு ஷ்யாமை கட்டிப் பிடித்து அழுதார் மாலதி.


"அம்மா! அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகல.தேவையில்லாமல் அழாதீங்க!" என்று தனது அம்மாவை சமாதானம் செய்து கொண்டிருந்தான் ஷ்யாம்.


"அங்கு வந்த ஜானகி அம்மா அவர்களை வீட்டிற்குள் முதல்ல வாங்க..." என்று ஷ்யாமின் அறைக்கு அழைத்து சென்றார்.


"உங்களுக்கு கீழே விழுந்ததில் எதுவும் அடிபட்டதாங்க?" என்று சாருவிடம் கேட்டான் சந்துரு.


"எனக்கு எந்த அடியும் இல்லங்க..." என்றாள் சாரு.


"சாரு! இது என்ன? உன் கையில் இரத்தம் வருது..." என்று மனோஜ் கேட்டதும், வேகமாக சாருவின் கையை பிடித்து பார்த்தான் சந்துரு.


சாரு கீழே விழுந்ததில் அவள் அணிந்திருந்த பீங்கான் வளையல்கள் உடைந்து, சாருவின் கையில் குத்தி இரத்தம் கொட்டத் தொடங்கியது.
சந்துரு வேகமாக அவன் அணிந்திருந்த சட்டையை கிழித்து சாருவின் கையை துணியால் சுத்தி கட்டினான்.


"மனோஜ்! சீக்கிரம் போய் பர்ஸ்ட் எய்டு பாக்ஸ் எடுத்துட்டு வாடா..." என்று கூறினான்.


"ரொம்ப வலிக்கிதாங்க?" என்று சாருவிடம் கேட்டான் சந்துரு.


சந்துரு தனது கையைத் தொட்டு அக்கறையுடன் கவனிப்பதை பார்த்த சாருவிற்கு கையில் பீங்கான் குத்தி கிளித்த வலியெல்லாம் தெரியவே இல்லை.


"நாம்ம உடனே ஆஸ்பத்திரிக்கு புறப்படலாம் சந்துரு.பீங்கான் கைக்குள்ள குத்தி செப்டிக் ஆனாலும் ஆகிருக்கும்டா..." என்று கூறினான் மனோஜ்.


"அண்ணா! ஆஸ்பத்திரிக்குலாம் போக வேண்டிய அவசியம் இல்லை.மஞ்சள் பத்து போட்டா சரியாகிவிடும்..." என்று சாரு கூறியதும், "கொஞ்சம் நேரம் அமைதியாக இருங்கங்க" என்று சாருவைப் பார்த்து சந்துரு கூறியதும் பேசாமல் மௌனமாக இருந்தாள் சாரு.


காரை எடுத்து கொண்டு வந்தான் மனோஜ்.மூவரும் காரில் ஏறி ஆஸ்பத்திரிக்கு கிளம்பி சென்றனர்.
காரில் ஏறிய ஐந்து நிமிஷத்தில் சாரு மயக்கம் அடைந்து விட்டாள்.சாரு மயங்கிதும் துடித்துடித்து போனான் சந்துரு.சாருவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான் சந்துரு.
சாருவின் மயக்கம் தெளிவது போல தெரியவில்லை.


"கொஞ்சம் வேகமாக காரை ஓட்டு மனோஜ்" என்றான்.


சாருவின் கையில் இரத்தம் வேற நிற்காமல் வருவதை பார்த்த சந்துருவின் கண்களிலிருந்து கண்ணீர் துளி சிந்தி சாருவின் கையில் விழுந்தது.சாருவின் கையை பிடித்துக் கொண்டு தனது மடியில் சாருவை படுக்க வைத்திருந்தான் சந்துரு.ஆஸ்பத்திரி வந்ததும் சாருவை கையில் தூக்கிக் கொண்டு சென்றான்.டாக்டர் நடந்ததை விசாரித்த பின் சாருவை உடனே ஐசியூ வார்டுக்கு அழைத்து கொண்டு வருமாறு நர்ஸிடம் கூறிவிட்டு சென்றார்.


"நீ கொஞ்சம் பதற்ற படாமல் இருடா சந்துரு...சாருக்கு ஒன்னும் இருக்காதுடா..." என்று சந்துருவிற்கு ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தான் மனோஜ்.


ஆனால் சந்துருவின் முழு மனசும் சாருவிடம்தான் இருந்தது.உடல் மட்டும்தான் வெளியே இருந்தது.
சந்துருவின் உயிரும் மனசும் சாருவை பற்றி நினைத்து கொண்டிருந்ததால் மனோஜ் கூறிய எதுவும் சந்துருவின் காதில் விழவே இல்லை.


ஜானகி அம்மா மனோஜிற்கு போன் செய்தார்."எல்லாரும் எங்கே இருக்கீங்க மனோஜ்? உங்க மூன்று பேரையும் வீடு முழுக்க தேடி பார்த்துட்டேன்.எங்கேயுமே ஆளக் காணோம்..." என்று மனோஜிடம் கேட்டார்.


இவர்கள் மூவரை தவிர அனைவரும் ஷ்யாமின் அறையில் இருந்ததால் சாருவிற்கு நிகழ்ந்தது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது.ஆஸ்பத்திரிக்கு கிளம்பிய அவசரத்தில் வீட்டில் தகவலை சொல்ல மறந்துவிட்டனர்.


மனோஜ் நடந்ததை கூறியதும் ஜானகி அம்மா, "என்னப்பா சொல்லுற மனோஜ்? டாக்டர் என்ன சொல்லுறாங்க? சாரு இப்போ எப்படி இருக்கா?" என்று பதற்றத்துடன் அழுது கொண்டே கேட்டார் ஜானகி அம்மா.


"டாக்டர் ஐசியூவிலிருந்து வெளியே வந்ததும் பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்லுறேன்ம்மா..." என்றான் மனோஜ்.


ஜானகி அம்மா சாருவின் நிலைமையைப் பற்றி சொல்லியதும் மாலதியின் கண்கள் கலங்கியது."என் பிள்ளையோட உயிரைக் காப்பாத்த போன சாருக்கு போய் இப்படி ஆகிடுச்சே அக்கா..." என்று சொல்லி விட்டு அழத் தொடங்கினார் மாலதி.


ஜானகி அம்மா எதுவும் பேசாமல் பூஜை அறையில் நின்று கொண்டு "உனக்கு நான் அப்படி என்ன குறை வைச்சேன்? ஏன் தொடர்ந்து என் மேல் அன்பு செலுத்தும் எல்லாரையும் நிம்மதியாகவே வாழ விட மாட்டியா?" என்று கடவுளை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டு அழத் தொடங்கிவிட்டார்.


மாலதி தனது அறைக்குள் சென்றார்."ஷ்யாம் என்ன நடந்ததுனு ஒழுங்கா சொல்லுடா?" என்று கேட்டார்


"நான் மரத்துக்கடியில் உட்கார்ந்து மொபைலில் ஒரு கேம்
விளையாடிக்கிட்டு இருந்தேன்.
சாருதான் வந்து பிடிச்சு இழுத்து கீழே தள்ளிவிட்டாள்..." என்றான்.


"பல்லை உடைச்சுருவேன்! ஒழுங்கு மரியாதையாக அண்ணிணு சொல்லு.நான் ஒன்னும் இப்போ நடந்ததை கேட்கல.மூன்று வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்ததுனு கேட்டேன்? மறைக்காமல் உண்மையை சொல்லு" என்றதும் ஷ்யாம் தனது அம்மாவை ஆச்சரியமாக பார்த்தான்.


"என்னம்மா புதுசா அவுங்களுக்கு வக்காளத்து வாங்கி பேசுறீங்க? உங்களுக்கு திடீரென புத்தி எதுவும் பேதலிச்சு போச்சாம்மா?" என்று கேட்டான் ஷ்யாம்.


"ஆமாம் டா... இத்தனை நாள் புத்தி பேதலிச்சுதான் போயிருந்துச்சு.
இன்னைக்கு தான் தெளிஞ்சிருக்கு" என்று பதில் கூறினார் மாலதி.


காலையில கண்ணம்மா, அக்காக்கிட்ட சாருவைப் பத்தி சொன்னதையும், நான் கீழ விழுந்தபோது எனக்கு சாரு உதவியதையும், இன்னைக்கு உன்னை காப்பத்தியதையும் மொத்தமாக சேர்த்து வச்சு யோசித்து பார்த்தா சாரு திமிரு பிடித்த பொண்ணு மாதிரி எனக்கு தெரியல.வீட்டில் எல்லாரிடமும் அன்பாகவும் அக்கறையாகவும் எது நடந்தாலும் பொறுமையாக கையாளும் பொண்ணு அந்த சாரு.அப்படிப்பட்ட பொண்ணே உன்னை கண்ணத்துல அறைஞ்சுருக்கானா, அப்போ நீதான் ஏதோ தப்பு பண்ணிருக்கனு எனக்கு உன் மேல சந்தேகமாக இருக்கு..." என்றார் மாலதி.


"எதையும் மறைக்காமல் உன்மையை சொல்லுடா?" என்று மாலதி கேட்டதும் ஷ்யாமிற்கு தூக்கி வாரிப்போட்டது.


"ஐயையோ! அம்மாட்ட வசமாக மாட்டிக்கிட்டோமே..." என்று மனதில் நினைத்து பயந்து நடுங்கினான்.


"என்ன பேந்த பேந்த முழிக்கிற? கேட்டதுக்கு பதில் சொல்லு ஷ்யாம்..." என்று கோபமாக கேட்டார் மாலதி.


இப்போதாவது ஷ்யாம் உண்மையை சொல்லி விட்டானா? சாருவின் உயிருக்கு ஏதும் ஆபத்தா? இதற்கு பிறகாவது அனைத்து ரகசியங்களையும் சந்துரு சாருவிடம் சொல்விடுவானா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 17


"நீங்கள் எதுவும் கவலைப்படாதீங்க பெரியம்மா! நம்ம சாரும்மாவுக்கு ஒன்னும் ஆகாது" என்று ஜானகி அம்மாவிற்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி கொண்டிருந்தார் கண்ணம்மா.


ஐசியூ வார்டில் இருந்து வெளியே வந்தார் டாக்டர்.


"சாரு இப்போ எப்படி இருக்கிறாள் டாக்டர்..." என்று கேட்டான் சந்துரு.


"நீங்க பயப்படும் அளவுக்கு பெருசா ஒன்னும் இல்ல.நல்ல வேளை பீங்கான் எதுவும் கையில செப்டிக் ஆகல.
செப்டிக் ஆகிருந்தா ரொம்ப கஷ்டமாகிருக்கும்..."என்றார் டாக்டர்.


"கொஞ்சம் ப்ளட் லாஸ் ஆனதாலதான் மயங்கிட்டாங்க.இப்போ ட்ரிப் ஓடிக்கிட்டு இருக்கு.அவுங்க மயக்கம் தெளிஞ்சு நார்மலாகிட்டாங்க.ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவுங்களை வீட்டுக்கு அழைத்து செல்லலாம்"


"தங் யூ சோ மச் டாக்டர்" என்று கூறினான் சந்துரு.


"ஓகே! டேக் கேர்..." என்று கூறிவிட்டு சென்றார் டாக்டர்.


ஐசியூ வார்டின் உள்ளே சென்று சாருவைப் பார்த்தான் சந்துரு.வாயை திறந்து எதுவும் பேசாமல் இருவரும் கண்ணோடு கண் பார்த்து விழிகளின் மொழிகளில் உரையாடிக் கொண்டிருந்தனர்.சிறிது நேரத்தில் மனோஜ் உள்ளே வந்தான்.


"வலி இப்போ எப்படி இருக்குமா சாரு?" என்று கேட்டார்.


"ம்ம்... பரவாயில்ல அண்ணா" என்று பதில் கூறினாள்.


"நீ சாரு கூட இரு சந்துரு.நான் போய் டிஸ்ஜார்ஜ் பார்மாலிட்டிஸ்லாம் முடிச்சுட்டு வந்திர்றேன்..." என்று கூறிவிட்டு சென்றான் மனோஜ்.


"என்ன ஊருக்குள்ள உன்னப்பற்றி சொல்வதெல்லாம் உண்மையா? அந்த மனோஜ் பயனை நீ காதலிக்கிறதா எல்லாரும் பேசிகிறாங்க..." என்று கோபாமாக கேட்டான் பானுவின் அண்ணன் பரத்.


"இதையெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா?" என்று அவனுடைய அப்பா, அம்மாவை பார்த்து கேட்டான்.
பத்து நாள் ஊர்ல இல்லாட்டி உன் இஷ்டத்துக்கு ஊர் சுத்த ஆரம்பிச்சுட்ட போல.இதுக்குதான் அப்போவே சொன்னேன்.பொம்பள புள்ளைய ரொம்ப படிக்க வைக்காதீங்கனு..." என்று கோபமாக பேசினான் பரத்.


"இப்போ என்ன நடந்துருச்சுனு? வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறடா பரத்..." என்று கேட்டார் பானுவின் அம்மா.


"அவளை படிக்க வச்சதுனால இப்போ என்ன குறைஞ்சு போயிட்டோம்? அவள் சம்பாதிக்கிற காசுலதான மாசம் மாசம் வீட்டு செலவு எல்லாம் பாக்குறோம்..." என்று கூறினார் பானுவின் அம்மா.


"இதுக்குதான் முதல்லயே சொன்னேன்.நீங்க மட்டும் போய் உங்க அப்பா அம்மாவை பார்த்துட்டு வாங்கனு.இந்த பேச்சுலாம் உங்களுக்கு தேவையா? இத்தனை நாள் நீங்க சம்பாதிச்சு குடும்பத்தை பார்த்ததெல்லாம் உங்க அப்பா, அம்மாவுக்கு பெருசா தெரியல.
உங்களுக்கு பிந்தி பிறந்தவள் சம்பாதிக்கிறதுதான் அவுங்களுக்கு பெருசா தெரியுது..." என்று பிரச்சனையை எண்ணெய் ஊற்றி கொளுந்து விட்ட எறிய வைத்தாள் பரத்தின் மனைவி பார்கவி.


பரத் திருமணமான ஒரு மாதத்திலே அவனுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று, அவனது பொண்டாட்டியின் குடும்பத்தோடு வீட்டோடு மருமகனாகி விட்டான்.
திருமணத்துக்கு முன்புவரை தாய் தந்தையை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேசாதவன், மனைவி வந்ததும் அவளது பேச்சை கேட்டுக் கொண்டு பெற்றோரை மரியாதை குறைவாக பேசத் தொடங்கிவிட்டான்.பார்கவியின் நோக்கமெல்லாம் தனது குடும்பத்தோடு தான் கணவன் இருக்க வேண்டும்.எக்காரணத்தைக் கொண்டும் பரத்தை அவனுடைய குடும்பத்தோடு சேர விடக்கூடாது. அதனால் பானுவின் குடும்பத்தில் உள்ள யாரையும் பரத்துடன் தனியாக சந்தித்து பேச அனுமதிக்க மாட்டாள்.


"எதுக்குமா பார்கவி நான் சொல்லாததை எல்லாம் சொல்லி பிரச்சனையை பெருசு பண்ணுற?" என்று பார்கவியிடம் கேட்டார் பானுவின் அம்மா.


"பார்த்தீங்களாங்க...உங்க கண்ணு முன்னாடியே உங்க அம்மா என்னை எப்படியெல்லாம் பேசுறாங்க பாருங்க..." என்று கூறினாள் பார்கவி.


"உங்க பொண்ணு செய்யும் தப்ப தட்டிக் கேட்க வந்தா... என் பொண்டாட்டியை குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க..." என்று அவனுடைய அம்மாவைத் திட்ட ஆரம்பித்துவிட்டான் பரத்.


"நாளைக்கு நாங்கதான் உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுக்கனும்.இப்படி ஊர் பேரு தெரியாத பையனோட சுத்துவது தெரிஞ்சா எவன் இவளை கல்யாணம் பண்ணுவான்?" என்று கேட்டான் பரத்.


"எங்க பொண்ண நாங்கதான பெத்தோம்.நாங்களே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்துகிறோம்..." என்று கூறினார் பானுவின் அப்பா.


"ஓ! அந்த அளவுக்கு போயிட்டீங்களா...
நாளைக்கு காசு பணம் உதவினு கேட்டு ஏங்கிட்ட வருவீங்கல... அப்போது பார்த்துக்கிறேன்..." என்று கூறினான் பரத்.


"உங்களுக்கும் உங்க பேச்சுக்கும் மரியாதை இல்லாத இடத்தில் எதுக்குங்க இன்னுமும் நிக்கிறீங்க... இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் இனி அவள் யாரோடையும் ஊர் சுத்துனா நமக்கென்ன? யாரையும் கூட்டிட்டு ஓடி போனாள் நமக்கென்ன வந்துச்சு?" என்று நிதானமில்லாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசினாள் பார்கவி.


"அவள் கல்யாணம் முடிச்சு போனதும் எப்படியும் இவுங்க நம்மள தேடித்தானே வந்தாகனும்.அப்போது இவுங்கள பார்த்துக்கலாம்.நீங்க வாங்கங்க...நம்ம வீட்டுக்கு போகலாம்..." என்று கூறிவிட்டு பரத்தின் கையை பிடித்துக் கொண்டு இழுத்துச் சென்றாள் பார்கவி.


"உன் அண்ணன் பேசுன எதையும் நினைச்சு வருத்தப்படாதடா பானு!" என்று கூறினார் பானுவின் அப்பா.


"இப்போது பேசிட்டு போறது நம்ம அண்ணன் பரத் கிடையாதுப்பா.
பார்கவி அண்ணியின் கணவர் பரத்.
அண்ணனுக்கு ஒரு நாள் எல்லா உண்மையும் தெரிய வரும்.அப்போது மனம் திருந்தி வந்து உங்களிடம் மன்னிப்பு கேட்பாங்க... நீங்கள் இரண்டு பேரும் நடந்ததை நினைச்சு கவலைப்படாமல் வந்து சாப்பிடுங்க..." என்றாள் பானு.


மூவரும் ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
வீட்டு வாசலில் கார் வரும் சத்தம் கேட்ட ஜானகி அம்மா விரைந்து வந்து "ஒரு நிமிஷம் அங்கேயே நில்லுமா சாரு..." என்று கூறினார்.


திருஷ்டி தட்டை எடுத்து வந்த கண்ணம்மா சாருவிற்கு திருஷ்டி சுத்தினதும், "இப்போ வாமா சாரு..." என்று அவளை வீட்டிற்குள் அழைத்து சென்றார் ஜானகி அம்மா.


சாரு வந்த சத்தம் கேட்டு, "நீ இப்போதைக்குள்ள உன் வாயைத் திறக்குற மாதிரி தெரியல.நான் கேட்க வேண்டிய ஆளிடம் போய் கேட்டுக்கிறேன்..." என்று ஷ்யாமிடம் கூறிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த மாலதி சாருவிடம் நலம் விசாரித்தார்.


"யாரு கண்ணு பட்டுச்சோ! வீட்டிக்கு வந்த ஒரு வாரத்தில் சாருக்கு இப்படி நடந்திருச்சு.நான் கும்பிட்ட சாமி என்னை கைவிடல..." என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.


"அதெல்லாம் எனக்கும் ஒன்னும் இல்ல அத்தை.நீங்க தேவையில்லாமல் எதை நினைச்சும் கவலைப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க..." என்று கூறினாள் சாரு.


"சரிம்மா சாரு.உன் ரூம்ல போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடும்மா சாரு...அடுத்த வாரம் குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வந்திரலாம்..." என்று கூறினார் ஜானகி அம்மா.


சந்துரு சாருவை அழைத்துக் கொண்டு அவர்களது அறைக்கு சென்றான்.


மறுநாள் சாரு மட்டும் தனியாக இருக்கும் சமயம் பார்த்து சாருவிடம் உண்மையை தெரிந்து கொள்ள அவளது அறைக்கு சென்றார் மாலதி.அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த மாலதியை பார்த்த சாரு "உள்ள வாங்க அத்தை..."என்று கூப்பிட்டாள்.


"உங்கிட்ட கொஞ்சம் பேசனும் சாரு.இப்போ ப்ரீயா இருக்கியாம்மா?" என்று கேட்டார் மாலதி.


"அதெல்லாம் ப்ரீதான் அத்தை.நீங்க பேசனும்னு ஒரு வார்த்தை கூப்பிட்டிருந்தா நானே கீழே இறங்கி வந்துருப்பேனே அத்தை..." என்றாள் சாரு.


"என்னை முதல்ல மன்னிச்சிருமா சாரு!" என்று சொன்னதும், "ஐயையோ! ஏங்கிட்ட போய் எதுக்கு அத்தை பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க..." என்று கேட்டாள் சாரு.


"எனக்கு உன்னிடமிருந்து ஒரு உண்மை தெரிஞ்சாகனும்மா சாரு"


அவர் எதைப் பற்றி கேட்க வருகிறார் என்பதை யூகித்துவிட்டாள் சாரு.ஆனால் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள் சாரு.


"என் பையன் என்ன தப்பு செஞ்சான் சாரு? நீ காரணமில்லாமல் கை ஓங்குற ஆளு கிடையாது.சொல்லும்மா சாரு..." என்று கேட்டார் மாலதி.


"நடந்து முடிந்தது எதுக்கு அத்தை இப்போ பேசிக்கிட்டு? அதை விடுங்க அத்தை..." என்றாள் சாரு.


"ஷ்யாம் நீ அடிச்சுட்டனு மட்டும்தான் சொன்னானே தவிர வேற எதுவும் சொல்லலமா..." என்றார் மாலதி.


"அவனை அறையும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது சாரு?" என்று கேட்டார் மாலதி.


"மூன்று வருஷத்துக்கு முன்னாடி எங்க ஸ்கூல்ல இருந்து நானும் என்னோடு வேலை பார்க்கும் இரண்டு டீச்சரும் சென்னைக்கு ஒரு அவார்டு பங்ஷனுக்கு போயிருந்தோம்.அவார்டு வாங்கிட்டு ட்ரைன்ல ஊருக்கு திரும்பி வரும்போது ஒரு திருநங்கை ட்ரைன்ல இருந்த எல்லாரிடமும் யாசகம் பெற்று அனைவரையும் ஆசிர்வாதம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.நாங்க இருந்த சீட்டின் எதிர் சீட்டில்தான் ஷ்யாமும் அவனது நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து பாட்டு பாடிக்கொண்டு கத்திக்கிட்டே வந்தாங்க.பக்கத்து பெட்டியில் உட்கார்ந்து இருந்துவங்க வந்து எவ்வளவு சொல்லிபி பார்த்தும் சத்தம் போடுவதை நிறுத்தவே இல்லை.அந்த திருநங்கை பக்கத்து பெட்டியிலிருந்து நாங்க உட்கார்ந்த பெட்டிக்கு வந்தாங்க."


"அவுங்க ஷ்யாமிடம் வந்து காசு கேட்ட போது, "எங்க கூட ஒரு நாள் இருக்க உனக்கு எவ்வளவு வேண்டும் சொல்லு?" என்று அவரிடம் தரக் குறைவாக பேசியதைப் பார்த்ததும் எனக்கு கோபம் வந்திடுச்சு.ஷ்யாம் கண்ணத்துல பலார்னு ஓங்கி ஒரு அறை கொடுத்தேன்.ஷ்யாமை அறைந்ததும் அவன் கூட இருந்த ப்ரெணட்ஸூம் அமைதியாகிட்டாங்க.


உங்கனால உதவி செய்ய முடிந்தால் செய்யுங்கள்.கொடுக்க முடியலைனா பேசமாயிருங்கள்.தேவையில்லாமல் பேசி அவுங்க மனசை காயப்படுத்தாதீங்க..." என்று நடந்த சம்பவங்களைக் கூறினாள் சாரு.


எப்போது பார்த்தாலும் வேடிக்கை மட்டும் பாருங்க.தப்பு செய்யுறவுங்களை தட்டிக் கேட்க யாரும் முன் வராதீங்க.நம்மளும் நம்ம குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும்.நமக்கு எதுக்கு தேவையில்லாத வம்புனு ஒதுங்காதீங்க.நாளைக்கு இந்த மாதிரி வேற ஏதாவது பிரச்சனை உங்க வீட்டு பெண்களுக்கு வரும்போது இப்படித்தான் எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துட்டு இருப்பீங்களா சார்?" என்று சுற்றி வேடிக்கை பார்த்தவர்களை பார்த்துக் கேட்டாள் சாரு.


"என்ன விட்டா ஓவரா பேசிக்கிட்டே போற..." என்று ஷ்யாமின் நண்பன் குரல் உயர்த்தி பேசியதும், அருகில் இருந்த ஒருவர் "என்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் பண்ணட்டுமா?" என்று கேட்டதும் அமைதியாக அமர்ந்துவிட்டான்.


ஷ்யாம் தரக்குறைவாக பேசியதை கேட்ட அந்த திருநங்கை அழுதுக் கொண்டிருந்தார்.


"நீங்க அழாதீங்க அக்கா..." என்று அந்த திருநங்கையிடம் பேசி அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறினாள் சாரு.


"எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான உணர்வுதான அத்தை கடவுள் படைச்சுருக்கான்.அந்த திருநங்கை அப்படி பிறந்ததுக்கு அவுங்க என்ன செய்ய முடியும்? ஏற்கனவே பெத்தவுங்க ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்ந்து சங்கடப்பட்டு வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவுங்கள பார்த்து ஷ்யாம் பேசியது நியாயமா அத்தை? நீங்களே சொல்லுங்க..."என்று கேட்டாள் சாரு.


"நீ ஒரு அறையோட விட்டுருக்க கூடாது சாரு... நல்ல இரண்டு கண்ணமும் பழுக்கும் அளவுக்கு அறைஞ்சு அவுங்க காலுல விழுந்து மன்னிப்பு கேட்க வச்சுருக்கனும்.பத்து வருஷம் பிள்ளை இல்லாம இருந்து கோவில் கோவிலாக போயி கடவுளிடம் வேண்டி தவமிருந்து பெற்ற பிள்ளைம்மா ஷ்யாம்.ஒரே பிள்ளைனு அடிச்சு கண்டுச்சு வளர்க்காமல் ஓவராக செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன்.


யாரோ ஒரு பொண்ணு என்ன அடிச்சுட்டானு ஷ்யாம் வந்து என்னிடம் சொன்னதும், எதுக்கு அடிச்சாங்கனு கேட்காமல் அவனோடு சேர்ந்து நானும் அவன் செய்யும் எல்லாம் தப்புக்கு உறுதுணையாக இருந்துட்டேன்.


என் பிள்ளை உயிரை காப்பாத்துன உன்னை போய் பழிவாங்கனும்னு தப்பா நினைச்சுட்டேனே சாரு... என்னை மன்னிச்சிடும்மா சாரு..." என்று மனம் வருந்தி அழுது புலம்பி மன்னிப்பு கேட்டார் மாலதி.


"ஐயோ அத்தை! அதெல்லாம் மன்னிப்புக் கேட்டு என்னை மூன்றாவது மனுஷியாக மாத்திடாதீங்க... நான் உங்க மகள் மாதிரி அத்தை" என்றதும் சாருவை கட்டிப் பிடித்து தேம்பி அழத் தொடங்கினார் மாலதி.


"உன் நல்ல எண்ணத்துக்கு நீ எப்போதும் நல்லா இருக்கனும்மா சாரு..." என்று சாருவின் தலையை தொட்டு ஆசிர்வாதம் செய்தார்.


"இந்த ஷ்யாமை போய் இன்னைக்கு உண்டுல்லனு ஆக்குறேன் பாருமா என்றார்.அவனை நம்ம வீட்டுல உள்ள எல்லாரு முன்னாடியும் வந்து உங்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுறேன் சாரு..." என்றார் மாலதி.


"இங்கே தான் நீங்க மறுபடியும் தப்பு செய்றீங்க அத்தை...நீங்க இப்போ போய் ஷ்யாமை அடிச்சு எல்லாரு முன்னாடியும் எங்கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னா, மேலும் மேலும் என் மேல் ஷ்யாமுக்கு கோபமும் பழிவாங்கும் எண்ணமும்தான் அதிகரிக்குமே தவிர அவன் செஞ்சது தப்புனு உணர மாட்டான்.பிள்ளைங்கள நினைச்சவுடனே தூக்கி வச்சு கொண்டாடுறதும், கோபம் வந்த உடனே எடுத்தெரிஞ்சு பேசுறதும் அடிக்கிறதும் மிகப்பெரிய தவறு அத்தை.சரியோ! தவறோ! பசங்க எது செஞ்சாலும் நம்மக்கிட்ட வந்து எதையும் மறைக்காமல் உண்மையை தைரியமாக சொல்லும் விதமாக நம்ம வளர்க்கனும்."


"சரி எது? தவறு எது? யார்க்கிட்ட எப்படி நடந்துகனும் சொல்லி தர வேண்டியது நம்மளுடைய கடமை அத்தை.நீங்க ஷ்யாம் கிட்ட அவன் புரியும் விதமாக பேசிப்பாருங்க.கண்டிப்பாக ஷ்யாமோட எண்ணங்களும் செயல்களும் மாறும்" என்று கூறினாள் சாரு.


"சரிம்மா சாரு! எனக்கு அருமையாக விளக்கம் தந்து என் சித்தம் தெளியவச்சுட்டமா.நான் வந்து ரொம்ப நேரமாச்சு.பிறகு பார்க்கலாம் சாரு..." என்று கூறிவிட்டு கீழே இறங்கிச் சென்றார் மாலதி.


மாடிக்கு வந்த சந்துரு நேராக அவனுடைய அறைக்கு வராமல் பூட்டியிருந்த அறைக்கு செல்வதை ஜன்னலின் வழியாக பார்த்தாள் சாரு.


ஷ்யாமின் எண்ணங்கள் சாருவின் எண்ணங்களை போல வண்ணங்களாக மாறுமா? பூட்டியிருக்கும் அறையில் மறைந்திருக்கும் ரகசியம்தான் என்ன? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 18

"போன காரியம் என்னடி ஆச்சு பார்கவி?" என்று கேட்டார் பார்கவியின் அம்மா.


"இனி அந்த பக்கமே போகாத அளவுக்கு பிரச்சனையை பெருசாக்கியாச்சும்மா..." என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த பார்கவியின் அப்பா, "நீயெல்லாம் பெத்த தாயாடி? நீ செய்றதுலாம் சரியில்ல சரோஜா.
பொண்ண சந்தோஷமா அவள் குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி சொல்வதை விட்டுட்டு இப்படி சண்டையை மூட்டிவிட்டு குருவிக்கூடு மாதிரி ஒன்னா சேர்ந்து வாழ்ந்த குடும்பத்தை அம்மாவும் பொண்ணும் சேர்ந்து திட்டம் போட்டு இப்படி கலச்சுவிட்டுடீங்களே! அவள் செஞ்சுட்டு வந்த காரியத்துக்கு கண்டிக்காமல் நீயும் சேர்ந்து உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்க.
இவள் பண்ணுற வேலையெல்லாம் மாப்பிள்ளைக்கு தெரிய வந்துச்சுனா எப்படி இவளை ஏத்துக்குவாரு? அவள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படனும் நினைக்கிறியா?"


"அப்போ நம்ம பொண்ணு அவுங்க எல்லாருக்கும் சோறாக்கி போட்டுக்கிட்டு பண்ட பாத்திரம் தேச்சுக்கிட்டு கஷ்டப்பட சொல்லுறீங்களா? அதுக்குத்தான் இவளைப் பெத்து வச்சுருக்கனா? என் பொண்ணு அந்த வீட்டுல கஷ்டப்பட கூடாதுனுதான் நம்ம வீட்டோட இருக்க வச்சுருக்கேன்.வேகமாக வந்துட்டாரு.
கருத்து சொல்ல.போங்க! போய் உங்க வேலையை பாருங்க..." என்று கூறினார் சரோஜா.


"உன்னெல்லாம் இந்த ஜென்மத்தில திருத்த முடியாது!" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் பார்கவியின் அப்பா சோமசுந்தரம்.


சோமசுந்தரம் ரொம்ப சாதுவான மனிதர்.யாரிடமும் அதிகமாக பேசமாட்டார்.ரிடைர்டு மெரைன் இன்ஜினியர்.இவருக்கு எதிர்மறையான குணம் கொண்டவர் சரோஜா.வாயைத் திறந்தால் மூடவே மாட்டார்.


"அம்மா ருத்ரா...அந்த கம்பு பையை எடுத்துக்குடுமா... கொஞ்சம் மளிகை கடை வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன்..."என்று தனது மருமகளிடம் கூறிவிட்டு சென்றார்.


சந்துரு ரூமிற்கு வந்ததும் சாரு அவனிடம் பேச வாயைத் திறந்தாள்.


"என்னங்க..." என்று சாரு ஆரம்பிக்கும் முன் சந்துரு பேசத் தொடங்கினான்.


"நீங்க எதுவும் சொல்ல வந்தீங்களா?" என்று கேட்டான் சந்துரு.


"இல்லங்க... நீங்கள் முதல்ல சொல்ல வந்ததை சொல்லுங்க..." என்று கூறினாள் சாரு.


"நாளைக்கு விசா அபாய்ன்மென்ட் கேன்சல் பண்ணலாம்னு இருக்கேன்.
உங்களுக்கு உடம்பு சரியில்லாததோட போக முடியாதுல..." என்று கூறினான்.


"எனக்கு அதெல்லாம் ஒன்றுமில்லங்க.
நான் இப்போ நார்மல் ஆகிட்டேன்..."
அபாய்ன்மென்ட் டிலே ஆச்சுனா, விசா ப்ராஸஸிங்கும் டிலே ஆகும் என்பதை மனதில் நினைத்தவள், "அதெல்லாம் அபாய்ன்மென்ட் கேன்சல் பண்ண வேண்டாங்க" என்று கூறிய விதத்தை வைத்தே அவளது மனதின் எண்ணத்தை கணித்துவிட்டான் சந்துரு.


"ஓகேங்க! அப்போ ட்ரஸ்லாம் பேக் பண்ணி ரெடியா இருங்க.நான் போய் மனோஜையும் கிளம்ப சொல்லுறேன்" என்று கூறிவிட்டு சென்றான்.


"மனோஜ் பேக்கிங் ஓவராடா?" என்று கேட்டான்.


"ஏன்டா நீயே சாருவை கூட்டிட்டு போகலாம்ல... புதுசா கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் ஹனிமூன் ப்ளான் பண்ணுவாங்க.நீ பக்கத்துல இருக்க கோவிலுக்கு கூட இன்னும் சாருவை அழைச்சிட்டு போகல..." என்று சொன்னான்.


"சரி சரி... க்ளாஸ் எடுக்க ஆரம்பிக்காம சீக்கிரம் கிளம்புற வழியைப் பாரு" என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி ஜானகி அம்மாவின் அறைக்கு சென்றான் சந்துரு.


"அம்மா! நாளைக்கு காலையில எட்டு மணிக்கு கிளம்பி ரெடியா இருங்க.
ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்துட்டு வந்துருவோம்" என்றான்.


"இப்போவாது சாருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருப்பா சந்துரு" என்றார் ஜானகி அம்மா.


"இப்போ சொன்னா அவள் என்னை எப்படி நினைப்பானு தெரியலம்மா? நான் மெதுவாக சொல்லிக்கிறேன்" என்றான் சந்துரு.


"மனோஜூக்கும் சாருவுக்கும் நைட் டின்னர்க்கு சப்பாத்தி ரெடி பண்ணி பேக் பண்ண சொல்லிருங்கம்மா..." என்று கூறிவிட்டு அவனது அறைக்கு சென்றான் சந்துரு.


பால்கனியில் நின்று பானுவிடம் போன் பேசிக் கொண்டிருந்தாள் சாரு.


"ஒரு வாரமா போன், மெஸேஜ் எதுவும் காணோம்.மேடம் ரொம்ப பிஸியா?" என்று கேட்டதும் பானு அழத் தொடங்கிவிட்டாள்.


"ஏய் பானு! என்னாச்சு? எதுக்கு இப்படி அழுகுற?" என்று கேட்டாள் சாரு.


"போன ஞாயித்துக்கிழமை அண்ணாவும் அண்ணியும் வீட்டு வந்திருந்தாங்க.வழக்கம் போல வந்து சண்டை போட்டுட்டு போய்ட்டாங்க."


"காலம் மாறும் போது எல்லாம் மாறும் பானு.இதுக்கு ஏன் நீ அழுகுற?" என்று கேட்டாள் சாரு.


"அவுங்க என்ன பேசுனத்துக்கு அழல சாரு.மனோஜ் சார்ற போய் ஊரு பேரு தெரியாத அனாதைனு சொல்லிட்டாங்க.அதுதான் என்னால தாங்க முடியல..." என்றாள் பானு.


"சரி விடு...நீ அழாதே பானு!இன்னைக்கு சாயங்காலம் நானும் மனோஜ் அண்ணாவும் சென்னைக்கு எனக்கு விசா அப்ளை பண்ண கிளம்புறோம்.நான் சென்னைக்கு போய்ட்டு வந்த பிறகு இதைப்பற்றி பேசுறேன்" என்றாள் சாரு.


"உன் கூட மாப்பிள்ளை சார் வரலையா சாரு?" என்று கேட்டாள் பானு.


"அவுங்களுக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டியது இருக்குதாம்" என்று சாரு சொல்லியதும், "உன்னை கூட்டிட்டு போறத விட அப்படி என்னடி அவருக்கு முக்கியமான வேலை?" என்று கேட்டாள்.


"உனக்கு தெரியுது.அவருக்கு தெரியலையே!" என்று நினைத்தவள் பானுவிடம் எதையும் வெளிப்படையாக கூறாமல் சந்தருவை பானுவிடம் விட்டுக் கொடுக்காமல் பேசி சமாளித்தாள் சாரு.


"சரி பத்திரமாக போய்ட்டு வாங்க..." என்று கூறிய மறுகணம் மனோஜிற்கு போன் செய்தாள் பானு.


"இன்னைக்கு ஈவினிங் சென்னைக்கு போறீங்களா? ஏங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல சார்..." என்று கேட்டாள் பானு.


"உங்க மொபைல்ல எத்தனை மிஸ்டு கால் வந்திருக்குனு செக் பண்ணீங்களா மேடம்?" என்று கேட்டான் மனோஜ்.


"ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இருங்க சார்..." என்று சொல்லி விட்டு கால் லிஸ்ட்டை எடுத்து பார்த்தாள்.
நாற்பத்திரண்டு மிஸ்டு கால் மனோஜிடமிருந்து வந்திருப்பதை பார்த்த பானு "மன்னிச்சிடுங்க சார்..." என்று மனோஜிடம் கேட்டாள்.


"போனும் அட்டன் பண்ணல.
பேஸ்புக்லையும் ஆன்லைன் வரல.
நீங்க பேஸ்புக்க ஓபன் பண்ணி கொஞ்சம் மெஸேஜ் பாக்ஸ் செக் பண்ணி பாருங்க..." என்றான்.


"சாருட்ட சொல்லி உனக்கு போன் பேச சொல்லலாம் பார்த்தால் அவளுக்கும் உடம்பு சரியில்லை."


"என்ன சார் சொல்லுறீங்க? சாருக்கு என்ன ஆச்சு? இப்போ தான் சாருக்கிட்ட போன் பேசுனே.அவளுக்கு உடம்பு சரியில்லாததை பத்தி எதுவுமே ஏங்கிட்ட சொல்லல."


"அது பெரிய கதை பானு.நான் ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டு கால் பண்ணி எல்லாம் டீடைலா சொல்லுறேன்.இன்னைக்கு மட்டும் நீ போன் பண்ணாமல் இருந்திருந்தா சாருட்ட சொல்லிதான் கால் பண்ண சொல்லலாம்னு இருந்தேன்.சரி... நீ ஏன் போனே அட்டண் பண்ணல?" என்று கேட்டான் மனோஜ்.


"நீங்க இப்போ கிளம்புங்க சார். ட்ரைன்ல ஏறி உட்கார்ந்து செட்டில் ஆனதும் கால் பண்ணுங்க.என்ன நடந்ததுனு பொறுமையாக சொல்லுறேன்" என்று கூறி போனை வைத்துவிட்டாள் பானு.


மனோஜூம் சாருவும் கிளம்பி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தனர்.


சாரு பூஜை அறைக்கு சென்று மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கியதும், "பார்த்து கவனமாக போய்ட்டு வாங்கம்மா..." என்று கூறினார் ஜானகி அம்மா.


வெளியூருக்கு போகும் முன்பு வீட்டின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது சாருவின் குடும்ப வழக்கம்.
வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறிவிட்டு இரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டனர்.மூன்று பேரும் ட்ரைன் வருவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காத்துக் கொண்டிருந்தனர்.


"மனோஜ் ஒரு நிமிஷம் இருடா இதோ வந்திர்றேன்..." என்று கூறிவிட்டு சென்றவன் வாட்டர் பாட்டில், வாழைப்பழம் அதோடு சேர்த்து சில புத்தகங்களையும் வாங்கி வந்து சாருவிடம் கொடுத்தான் சந்துரு.


சந்துருவிற்கு ஜானகி அம்மாவிடமிருந்து போன் கால் வந்தது.


"சாருவோட போன் இங்க வீட்டில இருக்குதுப்பா சந்துரு" என்றார்.


"வீட்டுக்கு போய் உங்க போனை எடுத்துட்டு வந்திர்றேன்..." ட்ரைன் வந்தா நீங்க ஏறுங்க.மனோஜ்கிட்ட சொல்லிருங்க..." என்று கூறிவிட்டு வேகமாக ஓடினான் சந்துரு.


மனோஜ் பானுவிடம் போன் பேசிக் கொண்டிருந்தான்.சந்துரு சென்ற ஐந்து நிமிடத்தில் ட்ரைன் வந்துவிட்டது.


"சாப்பிடும் போது தாத்தா கால் பண்ணாங்க அண்ணா.பேசிட்டு அப்படியே மறந்து டைனிங் டேபிள்லையே வச்சுட்டு வந்துட்டேன் அண்ணா.அவுங்க என் மொபைல் எடுக்க வீட்டுக்கு போயிருக்காங்க அண்ணா.நீங்க போன் பேசிக்கிட்டு இருந்தனால உங்கக்கிட்ட சொல்ல சொன்னாங்க..." என்று கொஞ்சம் பதற்றதுடன் சொன்னாள் சாரு.


"சரிம்மா...நீ பதற்றப்படாத! அவன் சீக்கிரமா வந்துருவான்.நீ வந்து ட்ரைன்ல ஏறுமா..." என்று சாருவை அழைத்தான் மனோஜ்.சாருவும் மனோஜூம் ட்ரைனில் ஏறி அவர்களது இருக்கையை கண்டறிந்து அமர்ந்தனர்.


"நீ சரியான மடச்சி சாரு.இப்படி மறந்து வச்சுட்டு வந்துட்டியே! பாவம் அவுங்களுக்க தேவையில்லாத அலைச்சல்..." என்று மனதில் அவளையே திட்டிக் கொண்டாள் சாரு.


"ட்ரைன் கிளம்ப ஐந்து நிமிஷம் தான் இருக்கு.இன்னும் அவுங்கள காணோமே?" என்று சாருவின் கண்கள் சந்துரு வரும் வழியையும் கையில் அணிந்திருந்த கைக் கடிகாரத்தின் முள் நகர்வதையும் மாத்தி மாத்தி பார்த்து கொண்டிருந்தாள்.ஒவ்வொரு நொடியும் கடிகார முள் நகர நகர அவளது இதயத்துடிப்பு வேகமாக துடிக்கத் தொடங்கியது.இன்னும் இரண்டு நிமிடத்தில் இரயில் புறப்பட இருக்கிறது என்று அனோன்ஸ் செய்ய தொடங்கிவிட்டனர்.சந்துருவை பார்க்காமல் சென்றுவிடுமோ என்று பதற்றமும் பரிதவிப்பும் சாருவிறகு அதிகரிக்கத் தொடங்கியது.


சாருவின் கலங்கிய கண்கள் பாதையை விழித்து பார்த்தபோது தூரத்தில் வேகமாக மூச்சு இழைக்க ஓடி சந்துரு வருவதை பார்த்ததும் சாருவின் முகம் மலர்ந்தது.ஆனால் ட்ரைன் மெதுவாக நகரத் தொடங்கியது.சந்துரு இவர்களது பெட்டியை தேடி ஓடி வருவதை பார்த்த சாரு இரயிலின் ஜன்னல் கம்பி வழியாக கை அசைத்து இருக்கும் இடத்தை சைகை கொடுத்து காட்டினாள்.ஜன்னலின் வழியாக மொபலை சாருவிடம் கொடுத்துவிட்டு "பார்த்து கவனமாக போய்ட்டு வாங்க..." என்று கூறினான் சந்துரு.


அவளிடம் மொபைலை கொடுத்த மறு நிமிஷத்திலே வண்டி வேகமாக நகர்ந்து செல்லத் தொடங்கியது. சந்துருவின் முகம் மறையும் வரை ஜன்னல் கம்பி வழியாக அவனையே உற்று நோக்கி பார்த்து கொண்டிருந்தாள் சாரு.சாருவின் கண்கள் கலங்கி மனம் வேதனையில் துடித்தது."என்னுடைய கவனக் குறைவால் அவுங்கள இவ்வளவு சங்கடப்படுத்திட்டோமே..." என்று தான் செய்த தவறை நினைத்து சாருவிற்கு மனம் உருத்தியது.


மெஸேஜ் செய்து ஒரு ஸாரி கேட்டிருவோம் என்று மொபைலை ஆன் செய்தாள்.முதல் முறையாக தனது கணவருக்கு மெஸேஜ் டைப் செய்து அனுப்பினாள்.


"ஹாய்ங்க... ஐ ஆம் ரியலி ஸாரிங்க..." என்று சந்துருவிற்கு மெஸேஜ் செய்தாள் சாரு.


உடனே சந்துருவிடமிருந்து பதில் வந்ததை பார்த்து வேதனையில் தவித்த சாருவின் உள்ளம் சந்தோஷம் அடைந்தது.


"நோ ஒரிஸ்...டேக் கேர்...குட் நைட்" மெஸேஜூடன் ஒரு ஸ்மைலி ஸ்டிக்கரும் சேர்த்து அனுப்பி இருந்தான் சந்துரு.


மறுநாள் காலையில் சந்துருவும் ஜானகி அம்மாவும் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றனர்.


இரயில் பயணத்தின் போது சாருவும் மனோஜூம் பானுவை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.


"அண்ணா! பானு உங்ககிகிட்ட அவுங்க வீட்டில நடந்தது எல்லாம் சொல்லிருப்பானு நினைக்கிறேன்" என்று கூறினாள் சாரு.


"ஆமாம் சாரு.பானு நடந்த எல்லாம் பிரச்சனையையும் சொன்னாள்.அவள் சொன்னதும் மனசுக்கு ரொம்ப சங்கடமாக போச்சு" என்று பதில் கூறினான் மனோஜ்.


"நீங்க அதெல்லாம் நினைச்சு தேவையில்லாம வருத்தப்படாதீங்க அண்ணா!"


"அப்படி இல்லம்மா சாரு.சும்மா இருந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்த்ததே நான்தான்.பாவம் இன்னைக்கு அவள் தேவையில்லாமல் எல்லாருடைய ஏளனமான பேச்சுக்கு ஆளாகிட்டாள்..." என்று கூறினான் மனோஜ்.


"அண்ணா! இது மாதிரி பேசுறது ஒன்றும் புதுசு இல்லையே! காதல் செய்வது ஒன்றும் தவறில்லை அண்ணா.ஆனால் பெத்தவுங்க சம்மதம் இல்லமால் ஓடி போய் கல்யாணம் பண்ணுறது தான் தப்பு.பெத்தவுங்க மனசு நோகடிச்சு நம்ம நல்லா வாழ்ந்திட முடியாதுல அண்ணா.பார்த்து பார்த்து வளர்த்து பிடிச்சதெல்லாம் வாங்கி கொடுத்து ஆளாக்கி சீராட்டி பல ஆசையோடும் கனவோடும் வளர்த்த அப்பா அம்மாக்கிட்ட தனக்கு பிடிச்ச பையனை பத்தி சொல்லும் தைரியம் பலருக்கு இல்லாமல் போயிடுச்சு.அதுதான் இன்னைக்கு நிறைய காதல் ஜோடிகள் கல்யாணம் முடித்தவுடனே ஒன்னு டைவர்ஸ், இல்லாட்டி தற்கொலைனு முடிவு எடுக்குறதுக்கு காரணம்.தன் பிள்ளை சரியான வாழ்க்கை துனையை தேர்ந்தெடுக்காமல் வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையையும் தொலைச்சு, தற்கொலை செய்து கொண்டாங்கனு செய்தி கேட்ட பிள்ளையை பத்து மாசம் சுமந்து பெத்த தாயின் வயிறும் மனசும் என்னம்மா பாடுபடும். காதலிக்கிறவங்க கொஞ்சம் பெத்தவுங்கல பத்தியும் யோசிக்கனும்.


ஒரு குடும்பத்தில அம்மா அல்லது அப்பா இரண்டு பேருல யாராவது ஒருத்தராவது பிள்ளைங்க கிட்ட ஜோவியலா ஓபனா பேசுற டைப் இருப்பாங்க.அவுங்கக்கிட்ட தைரியமாக சொன்னால் இந்த மாதிரி பிரச்சனை எந்தவொரு குடும்பத்துலையும் வராமல் இருக்கும்" என்று சாரு சொன்னதும், "நீ சொல்லுவது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மைம்மா சாரு..." என்று கூறினான் மனோஜ்.


"அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்த எனக்கு பெத்தவுங்க பாசம் சப்போர்ட் இல்லாம இந்த உலகத்துல வளருவது எவ்வளவு கஷ்டம்னு நல்லவே தெரியும்மா.


நான் பானுவை விரும்புவது ஜானகி அம்மாவுக்கும் சந்துருக்கும் ஏற்கனவே தெரியும் சாரு.உங்க கல்யாணம் குடும்ப சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்சதும் ஒரு நாள் பானு வீட்டுக்கு குடும்பத்தோட சென்று பானு அப்பா அம்மாகிட்ட உங்க கல்யாணத்தை பத்தி பேசுவோம்னு ஜானகி அம்மா ஏங்கிட்ட சொல்லிருந்தாங்கமா சாரு.அதுக்குள்ள பானு வீட்டுல பிரச்சனை வந்திடுச்சு" என்றான் மனோஜ்.


"சூப்பர் அண்ணா! எனக்கு உங்க குணத்தை பத்தி நல்லாவே தெரியும்.பானுவோட அப்பா, அம்மா சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்ய ஒத்துக்க மாட்டீங்கனு.நாம்ம சென்னை போய்ட்டு வந்த மறுநாளே பானு வீட்டுக்கு போகலாம் அண்ணா..." என்று கூறினாள் சாரு.


"சரிம்மா... அம்மாக்கிட்ட கலந்து பேசிட்டு முடிவு எடுப்போம்" என்று கூறினான் மனோஜ்.


இருவரும் மறுநாள் அதிகாலையில் சென்னை வந்து இறங்கினர். அமெரிக்க தூதரத்திற்கு சென்று விசா அப்ளிகேஷன் சப்மிட் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர்.


வீட்டிற்கு வந்ததும் சந்துரு தூதரகத்தில் நடந்ததை பற்றி சாருவிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.


"என்னங்க உங்களிடம் இரண்டு நிமிஷம் பேசலாமா?" என்று சந்துருவிடம் முதல் முறையாக வாயை திறந்து கேட்டாள் சாரு.


"ம்ம்..கேளுங்க..." என்றான் சந்துரு.


"இந்த விஷயத்தை ஏன் எங்கிட்ட சொல்லாமல் மறைச்சீங்க?" என்று சாரு கூறியதை கேட்ட சந்துருவிற்கு தூக்கி வாரிப்போட்டது.


"நேத்து ஆஸ்பத்திரிக்கு போன விஷயம் சாருக்கு தெரிஞ்சு போச்சோ!" என்று பதில் கூற முடியாமல் பதற்றத்தில் முகம் வேர்த்து விறுவிறுத்து போனான்.


சாருவிற்கு தெரியாமல் சந்துருவும் ஜானகி அம்மாவும் எதற்கு ஆஸ்பத்திரி சென்றார்கள்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 19


"என்ன மாலதி பேக்லாம் தூக்கிட்டு எங்க கிளம்பிட்டீங்க..." என்று கேட்டார் ஜானகி அம்மா.


"ஊருக்கு கிளம்புறோம் அக்கா.இங்கே வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. ஷ்யாம் அப்பா உடல்நிலை பத்தி உங்களுக்கு நல்லவே தெரியும்ல அக்கா.அவர் சுகர் பேஷன்ட் வேற.நான் இல்லாம சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுவாங்க அக்கா.பத்து நாளைக்கு மேல் ஹோட்டலதான் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு. நாங்க ஊருக்கு போய்ட்டு வர்றோம் அக்கா..." என்று கூறினார் மாலதி.


"அடுத்தவாரம் வரை இருந்து சந்துருவை வழியனுப்பி வச்சுட்டு போவனு நினைச்சேன் மாலதி.நீ சொல்வதும் சரிதான் மாலதி.தம்பியும் நீயில்லாமல் ரொம்ப கஷ்டப்படுவாங்க.அடிக்கடி வரப்போக இருங்க மாலதி..." என்று கூறினார் ஜானகி அம்மா.


"சரிங்க அக்கா...சாருவை கூட்டிட்டு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வாங்க அக்கா..." என்றார் மாலதி.


"கண்டிப்பா ஒரு நாள் அழைச்சிட்டு வர்றேன் மாலதி.கொஞ்சம் இரு! சாருவை கூப்பிடுறேன்" என்றார் ஜானகி அம்மா.


"இருக்கட்டும் அக்கா...சாரு சென்னைக்கு போய்ட்டு வந்த களைப்பில் இருப்பாக்கா.சாரு ரெஸ்ட் எடுக்கட்டும்.நீங்க சந்துருட்டையும் சாருட்டையும் சொல்லிருங்க அக்கா..." என்று கூறிவிட்டு மாலதியும் ஷ்யாமும் அங்கிருந்து கிளம்பினார்கள்.


பதில் பேசாமல் அமைதியாக இருந்த சந்துருவிடம், "மனோஜ் அண்ணா பானுவை காதலிக்கிற விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரியும்னு ஏங்கிட்ட சொல்லாமல் மறைச்சுட்டீங்களே..." என்று கூறினாள் சாரு.


"நல்ல வேளை அவசரப்பட்டு உண்மையை சொல்லல.இல்லைனா தவளை தன் வாயலே கெடுங்கிற மாதிரி தான் நமக்கும் நடந்திருக்கும்" என்று மனதில் நினைத்து கொண்டு பெருமூச்சு விட்டான் சந்துரு.


"என்னங்க... என்னங்க..." என்று சாரு சந்துருவை மூன்றாவது முறை அழைத்த போதுதான் சுயநினைவுக்கு வந்தான்.


"இல்லங்க...மனோஜ் விஷயத்தை பத்தி உங்கக்கிட்ட பேசுலாம்னு நானும் அம்மாவும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்த போதுதான் திடீரென்று உங்க சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தோம்.அதுக்கு பிறகு தான் என்ன நடந்துச்சுனு உங்களுக்கு தெரியும்ல..." என்றான் சந்துரு.


"ஓ அப்படியாங்க! ஸாரிங்க..." என்றாள் சாரு.


"இதுக்கு எதுக்குங்க ஸாரி?" என்று கேட்டான் சந்துரு.


"இதுக்கு மட்டுமில்லங்க... உங்களை அன்னைக்கு மொபைலை எடுக்க அலையவிட்டதுக்கும் சேர்த்துதான்" என்று மெல்லிய குரலில் தயக்கத்துடன் கூறினாள் சாரு.


"மறதி எல்லாருக்கும் வருவது இயல்பு தாங்க.முடிஞ்சு போனதை விட்டு தள்ளுங்க.இனி கவனமாக இருங்க..." என்று கூறினான் சந்துரு.


"மனோஜ் அண்ணாவும் பானுவும் காதலிக்கிறது அவுங்க வீட்டுக்கு தெரிஞ்சு கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சுங்க.அத்தைக்கிட்ட பேசி சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கனுங்க..." என்று சந்துருவிடம் கூறினாள் சாரு.


"ஐயையோ! என்ன சொல்லுறீங்க?" என்று கேட்டான்.


"ஆமாங்க..." என்று நடந்த கதையெல்லாம் அவனிடம் கூறினாள் சாரு.


"சரி வாங்க... அம்மாக்கிட்ட போய் இதை பத்தி சொல்லலாம்..." என்று சாருவிடம் கூறினான்.


மனோஜின் அறைக்கு சென்று அவனையும் அழைத்து கொண்டு மாடியிலிருந்து மூன்று பேரும் கீழே இறங்கி வந்தனர்.


ஷோபாவில் அமர்ந்திருந்த ஜானகி அம்மா "என்னடா சந்துரு? மூன்று பேரும் ஒரே நேரத்தில் ஒன்னாக இறங்கி வர்றீங்கனா ஏதோ காரணத்தோட தான் வந்திருப்பீங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


பானுவின் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் தனது மாமியாரிடம் கூறினாள் சாரு.


"பிரச்சனை இவ்வளவு தூரத்துக்கு வந்துருச்சாமா சாரு! சரிம்மா... நாம்ம எல்லாரும் நாளைக்கு பானு வீட்டுக்கு போய் அவுங்க அப்பா அம்மாக்கிட்ட பேசலாம்..." என்று கூறியதும் மனோஜின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது.


தனது அறைக்கு வேகமாக சென்றவன் பானுவிற்கு போன் செய்து "நாளைக்கு கிளம்பி தயாராகயிரு பானு.மாமா உன்னை பொன்னு கேட்க வர்றேன்" என்றதும் பானுவிற்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், அண்ணாவை மீறி அப்பா கல்யாணத்து சம்மதிப்பாரா? என்ற பயமும் இருந்தது.


சந்துரு வெளியே கிளம்பும் அவசரத்தில் கையில் மொபைலை பார்த்து கொண்டே பர்ஸை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தான். அவனுடைய பர்ஸிலிருந்து ஒரு போட்டோ கட்டிலின் கீழே விழுந்ததை அவன் கவனிக்கவில்லை.


கீழே டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டு மாமியருடன் பேசிக் கொண்டிருந்தாள் சாரு.சந்துரு எங்கேயோ வேகமாக கிளம்பி செல்வதை பார்த்த ஜானகி அம்மா, "டேய் சந்துரு! கொஞ்சம் சாப்பிட்டு போடா சந்துரு..." என்று கூறினார்.


"அர்ஜெண்டா ஒரு ஒர்க் முடிக்க வேண்டியது இருக்கும்மா.போய்ட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றான் சந்துரு.


சந்துரு சென்றதும் தனது அறைக்கு சென்ற சாரு கட்டிலில் படுத்து கொண்டே புத்தகம் படிக்க தொடங்கினாள்.கையில் குறிப்பு எழுதுவதற்காக வைத்திருந்த பேனா தவறி கட்டிலின் அடியில் விழுந்தது.


காரில் ஏறியவுடன் பர்ஸை திறந்து பார்த்ததும் போட்டோ இல்லாததை கண்ட சந்துரு வேகமாக தனது அறைக்கு ஓடிச் சென்றான்.


கட்டிலின் கீழே குனிந்து பேனாவை எடுக்க போகும் போது பேனாவின் அருகில் ஒரு போட்டோ இருப்பதை பார்த்தாள் சாரு.எட்டிப்பிடித்து பேனாவையும் போட்டாவையும் எடுக்க முயற்சிக்கும் சமயம் பார்த்து சந்துரு அறைக்குள் வந்துவிட்டான்.


கட்டிலின் மறுபுறம் சந்துருவின் கால் தெரிவதைப் பார்த்த சாரு போட்டோவையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு வேகமாக எழுந்தாள்.அறைக்கு வந்த சந்துரு தீவிரமாக எதையோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்த சாரு, "எதையும் மறந்து வச்சுட்டு போய்ட்டீங்களா?" என்று சந்துருவிடம் கேட்டாள்.


"ஆமாங்க..." என்று சொல்லும்போது சாருவின் கையிலிருந்த போட்டோவை பார்த்தான்.


"சரி... நீங்கள் கட்டுலுக்கு கீழே என்ன செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?" என்று நேரடியாக போட்டாவை கேட்காமல் மறைமுகமாக கேட்டான்.


"என் பேனா கீழே விழுந்திருச்சுனு எடுக்கப்போனேங்க.அதோடு சேர்த்து இந்த போட்டாவும் கீழ விழுந்து கிடந்தது" என்றாள்.


"எங்க அந்த போட்டாவை கொஞ்சம் கொடுங்கள்" என்று சந்துரு கேட்டதும் சாரு கொடுத்துவிட்டாள்.


போட்டோ கீழே கவிழ்ந்து விழுந்திருந்ததால் அது யாருடைய புகைப்படம் என்பதை பார்க்காமலே சந்துருவிடம் கொடுத்துவிட்டாள்.


சந்துரு எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் அலமாரியில் ஏதோ ஒரு பைலை எடுத்துவிட்டு தான் தேடிய பொருள் கிடைத்துவிட்டது என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.


"எப்படியோ ஒரு வழியாக சமாளுச்சு போட்டோவை வாங்கிட்டோம்.நல்ல வேளை ஒரு நிமிஷம் லேட்டா போயிருந்தாலும் போட்டோவை பாத்திருப்பாங்க..." என்று மனதில் சொல்லிக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான்.


பொய் சொன்னாலும் பொருந்துர மாதிரி சொல்லனும்.எல்லா விஷயத்துலையும் பெர்பெக்ட்டா இருக்கும் இவர் எப்படி முக்கியமான பைலை வச்சிட்டு போயிருப்பாரு?
இவர் வந்த வேகத்தை பார்த்தா பைல எடுக்க வந்தது மாதிரியே தெரியலையே! என்று சந்துருவின் மேல் சிறிது சந்தேகம் வரத் தொடங்கியது.


மறுநாள் காலையில் ஜானகி அம்மா, மனோஜ், சந்துரு, சாரு எல்லோரும் பானுவின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.


வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு பானுவின் அப்பா கனகராஜ் வீட்டின் வெளியே வந்து பார்த்தார்.


சாரு சந்துருவுடன் வந்திருப்பதை பார்த்து "வாமா சாரு..." என்று அவளையும் வந்த அனைவரையும் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார்.


"பங்கஜம் சீக்கிரம் வாமா! யாரு வந்திருக்காங்கனு பாரு..." என்று தனது மனைவியை அழைத்தார் கனகராஜ்.


அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து வரவேற்றார் பங்கஜம்."நீங்க எல்லாரும் கொஞ்சம் பேசிக்கிட்டு இருங்க நான் போய் ஐந்து நிமிஷத்தில காபி போட்டு எடுத்துட்டு வந்திர்றேன்..."என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்று விட்டார்.


"பானு! அம்மா பானு!" என்று தனது மகளை அழைத்தார் கனகராஜ்.


ஒன்றும் தெரியாதது போல வந்து நின்றாள் பானு.பானுவின் அம்மா அனைவருக்கும் காபி கொடுத்த பின்னர் பானுவின் அப்பா அம்மாவை பார்த்து, "உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேச வந்திருக்கிறோம்" என்று கூறினார் ஜானகி அம்மா.


"ம்ம்...சொல்லுங்கம்மா..." என்றார் கனகராஜ்.


"மனோஜூம் பானுவும் விரும்பும் விஷயம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.பானுவை மனோஜ்க்கு கல்யாணம் செய்து தர உங்களுக்கு சம்மதா?" என்று பானுவின் அப்பா அம்மாவிடம் கேட்டார் ஜானகி அம்மா.


பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததை பார்த்த மனோஜ், "இந்த அனாதை பையனை நம்பி எப்படி பொன்னு கொடுக்குறதுனு யோசிக்கிறீங்களாங்க?" என்று கேட்டதும், "ஐயையோ தம்பி! ஏன் இப்படியெல்லாம் பேசிறீங்க..." என்று கேட்டார் கனகராஜ்.


"மனோஜ் ஒன்னும் அனாதை கிடையாது சார்.நான் வயித்துல சுமந்து பெறாத பிள்ளை அவன். சந்துருவும் மனோஜூம் எனக்கு ஒன்று தான்.அதை பத்திய கவலை உங்களுக்கு வேண்டாங்க..." என்று கூறினார் ஜானகி அம்மா.


"இந்த மாதிரி பண்பாடும் மரியாதையும் தெரிந்த அன்பான குணம் கொண்ட பையன் மருமகனாக வருவதற்கு நாங்க தாங்க கொடுத்து வச்சுருக்கனும்.என் பொண்ண பத்தி எனக்கு நல்லா தெரியும்.அவளுக்கும் எங்க குடும்பத்ததிற்கும் ஏற்ற மாதிரி பையனை தான் தேர்ந்தெடுப்பானு."


"அப்புறம் எதுக்குங்க யோசிக்கிறீங்க. சீக்கிரமாக நல்ல நாளை பார்த்து தாம்பூலத்தட்டை மாத்தி கல்யாண தேதியை உறுதி பண்ணிருவோம்" என்று கூறினார் ஜானகி அம்மா.


"என் பையனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லங்க. எங்களுக்குள்ள சரியாக பேச்சு வார்த்தையும் கிடையாது" என்று கூறினார் கனகராஜ்.


"அதைப் ற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்.நாங்க பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கிறோம்.கண்டிப்பாக கல்யாணத்துக்கு மச்சான் வருவாங்க மாமா" என்று மனோஜ் உரிமையுடன் கூறியதை பார்த்து பானுவின் அப்பா அம்மா சந்தோஷம் அடைந்தார்கள்.


"சரிங்க... அப்போ நாங்க கிளம்புறோம்" என்றதும் "கொஞ்ச நேரம் இருங்க... எல்லாரும் சாப்பிட்டு போகலாம் ..."
என்று கூறினார் பங்கஜம்.


"இல்லங்க நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஒரு நாள் நாங்க எல்லாரும் வந்து கண்டிப்பாக கறி விருந்தே சாப்பிடுகிறோம்" என்றார் ஜானகி அம்மா.


"அடுத்த வாரம் மனோஜூம் சந்துருவும் அமெரிக்கா கிளம்பிருவாங்க. அதுக்குள்ள நிச்சயதார்த்தம் முடிச்சாகனும்.இன்னைக்கே போய் ஜோசியரை பார்த்து நாள் குறிச்சுட்டு வந்திருவோம்" என்று பானுவின் அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், பானுவுடன் கண் ஜாடையில் பேசிக் கொண்டிருந்தான் மனோஜ்.



சாரு மெதுவாக எழுந்து பானுவின் அருகே சென்றாள்."மேடம் இப்போ ஹேப்பி தானே?" என்று கேட்டாள்.


"தாங்க் யூ சாரு..." என்று அவளை கட்டிப்பிடித்து அழுதாள்.


"ஏய் பானு! எதுக்கெடுத்தாலும் திறந்த பைப் மாதிரி அழுகுறதே உன் வேலையா போச்சு.பெண்களின் கண்ணீருக்கு மதிப்பு அதிகம்.அதை தேவையில்லாமல் கொட்டி தீர்த்து விடாதே பானு!" என்றாள் சாரு.


"அப்படியில்ல சாரு.அண்ணாவை மீறி கல்யாணத்துக்கு அப்பா, சம்பதிப்பாங்கனு நான் எதிர்ப்பார்க்கவே இல்ல..." என்றாள் பானு.


"சரி... சரி... மேடம் மத்ததை பத்திலாம் யோசிக்காம நிச்சயதார்த்தத்திற்கு தயாராகும் வழியை பாருங்க.சரி, நாங்க கிளம்புறோம்..." என்றாள் சாரு.


அனைவரும் பானுவின் அப்பா அம்மாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவர்களது வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.


"உங்களுக்கு விஷயம் தெரியுமாங்க?"என்று பார்கவி பரத்திடம் கேட்டாள்.


"சொல்ல வந்ததை ஒழுங்க புரியுற மாதிரி சொல்லு" என்றான் பரத்.


"அந்த அனாதை பையனுக்கும் உங்க தங்கச்சிக்கும் அடுத்தவாரம் நிச்சயதார்த்தமாம்..." என்று பார்கவி கூறியதை கேட்டதும், "நிஜமாகவா சொல்லுறடி?" என்று கேட்டான்.


"எனக்கு வேற வேலையில்ல பாருங்க.உங்க குடும்பத்தை பத்தி இல்லாத பொல்லாத சொல்லி உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிறதுதான் என் வேலை மாதிரி பேசுறீங்க."


"அம்மா தாயே! தெரியாமல் சொல்லிட்டேன்.மன்னிச்சிரும்மா!" என்றான் பரத்.


"சரி..சரி.. இதையெல்லாம் விடுங்க. அடுத்து என்ன செய்ய போறீங்க?" என்று கேட்டாள் பார்கவி.


"நான் என்ன செய்ய முடியும்?" என்று பரத் கூறியதும் வீட்டுக்கு மூத்த பிள்ளை ஒருத்தரு நீங்க இருக்குறதையே மறந்துட்டு அவுங்க இஷ்டத்து ஆடுறாங்க.


"அப்போ உங்களுக்கு அந்த குடும்பத்துல மரியாதை அவ்வளவு தானா?" என்று இல்லாத பொல்லாததை சொல்லி பரத்தின் மனதில் பானுவின் அப்பா அம்மா மீது மேலும் கோபம் வரும் அளவுக்கு அவனைத் தூண்டிவிட்டாள் பார்கவி.


வீட்டிற்கு வந்ததும் மனோஜ் ஜானகி அம்மாவின் காலில் விழுந்து கதறி அழுதான்."ஏய் மனோஜ்! என்னடா இது? எழுந்திரு முதல்ல என்று அவனை கைப்பிடித்து தூக்கி, கட்டி அணைத்து தட்டிக் கொடுத்தார்."


"எதற்கு இப்போது தேவையில்லாமல் சின்னப்பிள்ளை மாதிரி அழுகுற மனோஜ்?" என்று கேட்டார்.


"யாருமே இல்லாத எனக்கு ஆதரவு கொடுத்ததும் மட்டும் இல்லாமல், உங்க பையனு நீங்கள் என்ன சொன்னதும் என்னால கண்ணீரை அடக்க முடியலமா..." என்று கூறிவிட்டு அழத் தொடங்கினான்.


"மறுபடி மறுபடி நீ அனாதை சொல்லுறத நிறுத்து மனோஜ்! நாங்களெல்லாம் உயிரோட இருக்கும் போது நீ எப்படி உன்னை அனாதைனு சொல்லலாம்?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"சரிங்கம்மா... இனி சொல்ல மாட்டேன்!" என்று பதில் கூறினான் மனோஜ்.


"எல்லாரும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.நாளைக்கு பானுவோட அண்ணன் வீடு வரைக்கு போய்ட்டு வந்துருவோம்" என்று கூறினார் ஜானகி அம்மா.


சந்துரு தலைத்தெறிக்க ஓடி வந்து போட்டோவை தேடுவதற்கான காரணம் என்ன? அந்த புகைப்படத்தை சாருவிடமிருந்து மறைப்பதற்கு காரணம்தான் என்ன? பரத்தை பார்க்க போகும் இவர்களுக்கு பார்கவி வீட்டில் என்ன நடக்க போகிறது? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom