Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL எண்ணங்களே வண்ணங்களாய் - Tamil Novel

Status
Not open for further replies.

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 20


நாற்காலியின் மீது ஏறிக் கொண்டு அலமாரியில் புத்தக்கத்தை வைத்துவிட்டு கீழே இறங்கினாள் சாரு.


"ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புத்தகத்ததை வைக்கிறீங்க? சேர்ல ஏறி புக்க வைக்கிறேனு போய், கீழ விழுந்துட்டீங்கனா என்ன பண்ணுறது? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் வச்சுருப்பேன்ல" என்று சந்துரு கூறியதும், "விழுந்தால் என்னங்க சந்துரு? என்னை தாங்கி பிடிக்கத்தான் நீங்க இருக்கீங்களே! நல்லா தான் அக்கறை காட்டுறீங்க. ஆனால் உங்க மனசுல நினைக்கிறத மட்டும் ஏங்கிட்ட சொல்லாதீங்க.நான் உங்களை விரும்புவது மாதிரி நீங்களும் என் மேல ரொம்ப அன்பு வச்சுருக்கீங்கனு, அன்னைக்கு நான் கையில அடிப்பட்டு மயங்கி உங்க மடியில் படுத்திருக்கும்போது நீங்க துடித்த துடிப்பும், என் முகத்தில் விட்ட கண்ணீரும் எல்லாமே எனக்கு தெரியும்.மயக்கத்துல இருந்தாலும் நீங்க பேசுனது எல்லாமே என் காதுல விழுந்ததுங்க.இவ்வளவு பாசத்தையும் மனசுகுள்ள வச்சுக்கிட்டு வெளியே எதுவுமே காட்டிக்கொள்ளாமல், ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் மாதிரி ஏன் நடிக்கிறீங்க சந்துரு?" என்று சந்துருவின் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டே வழக்கம் போல நேரடியாக பேசாமல் மனதிலே சந்துருவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.


"ஏங்க உங்கக்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்.'ஹலோ!' இங்க தான் இருக்கீங்களா? என்று சந்தரு தனது கையை சாருவின் கண்களின் முன் கொண்டு சென்று கை அசைத்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தாள் சாரு.


"எதாவது தூக்கனும், வைக்கனும்னா என்னை கூப்பிடுங்க" என்று சந்துரு கூறினான்.


"ம்ம்...சரிங்க" என்று சொன்னாள் சாரு.


"அம்மா சாரு! சாரு!" என்று ஜானகி அம்மா சாருவை கீழே இருந்து அழைத்துக் கொண்டிருந்தார்.


மாமியரின் குரல் கேட்டதும் மின்னல் வேகத்தில் கீழே இறங்கி வந்தாள் சாரு.


"என்னங்க அத்தை ஜோசியரை பார்த்துட்டு வந்துட்டீங்களா?" என்று கேட்டாள் சாரு.


"ஆமாம் சாரு.அடுத்த வாரம் புதன்கிழமை காலை பத்து மணிக்கு நல்ல நேரமாக இருக்குதாம். அன்னைக்கே நிச்சயதார்த்தம் வச்சுக்க சொல்லி ஜோசியர் நாள் குறிச்சு கொடுத்திருக்காருமா" என்று கூறினார் ஜானகி அம்மா.


"நான் பானுவோட அப்பா அம்மாக்கிட்டையும் கலந்து பேசிட்டேன்.பானுவோட அண்ணன் வீட்டுக்கு போய்ட்டு அப்படியே டவுனுக்கு போய் நிச்சயதார்த்த புடவையும் மோதிரமும் வாங்கிட்டு வந்திருவோம் சாரு.இன்னைக்கு நல்ல முகூர்த்த நாளாக இருக்கும்மா சாரு" என்றதும், "சரிங்க அத்தை... நானும் பானுக்கு போன் பண்ணி அவளோட மோதிரத்தோட சைஸ் என்னனு கேட்டு சொல்லுறேன் அத்தை" என்றாள் சாரு.


"சரிம்மா...சந்துருவை கொஞ்சம் கூப்பிடும்மா..." என்றார் ஜானகி அம்மா.


அறைக்கு சென்று சந்துருவை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள் சாரு.


"கல்யாண மண்டம் புக் பண்ணிட்டியா சந்துரு?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"மண்டபம், கேட்டரிங், நிச்சயதார்த்த மாலை எல்லாமே புக் பண்ணி அட்வான்ஸ் கொடுத்துட்டேன்ம்மா..." என்று கூறினான் சந்துரு.


"சரிப்பா சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க" என்று கூறினார் ஜானகி அம்மா.


"ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? என்னமோ ஆழமாக யோசிக்கிற மாதிரி தெரியுது..." என்று தனது கணவரிடம் கேட்டார் பங்கஜம்.


"ஆமாம் பங்கஜம்...நம்ம பையன் இப்படி மாறிருவானு ஒரு நாள் கூட நினைத்து பார்த்ததே இல்ல.நம்ம கண்ணு முன்னாடியே பானுவை இப்படி பேசிட்டு போறான்.நமக்கு பிறகு நம்ம பொண்ண இவன் எப்படி பார்ப்பான்? மாப்பிள்ளை நல்ல பையனா அமைந்ததுனால பானுவை குறித்து பயப்பட வேண்டியது இல்லை.இருந்தாலும் வீட்டுக்கு மூத்த பையனா பொறுப்பா இருந்து அவன்தான பானுவோட கல்யாணத்தை முன்னிருந்து நடத்தனும்" என்று தன்னுடைய மனவேதனையை மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார் கனகராஜ்.


"பரத் நம்ம வளர்த்த பையன்ங்க.ஒரு நாள் கண்டிப்பா திருந்தி வருவான். நீங்க தேவையில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்படுவதை விட்டுட்டு பானுவோட நிச்சயதார்த்தத்திற்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க..."என்று கூறினார் பங்கஜம்.


"சரி பங்கஜம்... நிச்சயதார்த்த செலவுக்கு தேவையான பணத்தை பேங்க்ல போய் எடுக்க வேண்டியது இருக்கு.நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன் பங்கஜம்..." என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் கனகராஜ்.


கனகராஜ் கிளம்பியதும் தனது அறைக்கு சென்று சுவற்றில் மாட்டியிருந்த பரத்தின் போட்டோவை கையில் எடுத்துக் கொண்டு, "ஏன் பரத் இப்படி எங்களை தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டப்பா? நான் உன்னை நல்லா தானேடா வளர்த்தேன்.கடைசி காலத்துல நம்ம பிள்ளை நம்மள நல்லா பார்ப்பானு உங்க அப்பாட்ட ஓயாமல் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டனே! எங்க நம்பிக்கையை எல்லாம் சுக்குநூறாக உடைச்சுட்டு போய்ட்டியேடா பரத்" என்று போட்டோவை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்.


அம்மா அழும் குரல் கேட்டு பானுவின் அம்மா அறைக்கு சென்று பார்த்தாள் பானு."அப்பாவிடம் தைரியமாக பேசிட்டு கடைசி நீங்களே இப்படி அழலாமா அம்மா?" என்று கேட்டாள் பானு.


"அந்த மனுஷன் ஏற்கனவே நொந்து போய் இருக்காரு பானு.பத்தாத குறைக்கு நானும் சேர்ந்து அழுதனா மனசு உடைஞ்சு போயிருவாரு பானு என்று கூறிவிட்டு மகளை கட்டிப்பிடித்து அழுதார் பங்கஜம்."


"சரிம்மா அழாதீங்க... நீங்க வேணும்னா பாருங்க.என் நிச்சயதார்த்தத்தையே அண்ணன் தான் முன் நின்று நடத்துவாங்க பாருங்க... "என்று நம்பிக்கையுடன் கூறினாள் பானு.


"அப்படி நடந்த ரொம்ப சந்தோஷமாக இருக்கும் பானு" என்று கூறினார் பங்கஜம்.


சந்துருவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிளம்பி காரில் ஏறி பரத்தை காண்பதற்கு புறப்பட்டு சென்றார்கள்.


"அம்மா! மனோஜ் முகத்துல கல்யாண கலை வந்திருச்சு பார்த்தீங்களமா?" என்று சிரித்துக் கொண்டே ஜானகி அம்மாவிடம் கூறினான் சந்துரு.


எப்போதும் எதிர்ப்பேச்சு பேசும் மனோஜ், வெட்கத்தில் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக சிரித்துக்
கொண்டே காரை ஓட்டினான்.


பார்கவி வீட்டின் வாசலில் கார் வந்து நிற்பதை மாடியிலிருந்து பார்த்த சோமசுந்தரம் கீழே இறங்கி வந்தார். வீட்டிற்கு வந்தவர்களை உள்ளே வரவேற்று ஷோபாவில் உட்கார சொன்னார்.


சோமசுந்தரத்தின் மகன் பாபுவும் வந்து அவர்களை குறித்து விசாரித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தான்.


"ருத்ரா! எல்லாருக்கும் குடிக்க காபி கொண்டு வாமா..." என்று தனது மனைவியிடம் மரியாையாக கூறுவதைக் கண்டு சாரு ஆச்சரியப்பட்டாள்.


"பானு பல முறை அவளது அண்ணி பார்கவியை பற்றி கூறியிருக்கிறாள். ஆனால் பார்க்கவியின் அப்பா, அண்ணன் அண்ணி எல்லாரையும் பார்த்த ரொம்ப சாதுவாக இருக்காங்களே! பார்கவி குணத்துக்கு அப்படியே எதிர்மறையாக இருக்காங்களே!" என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டு அவர்களை பார்த்து சந்தோஷப்பட்டாள் சாரு.


"நீங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருங்க.நான் மச்சானை கூப்பிட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு பரத்தை அழைக்க மாடியில் உள்ள அறைக்கு சென்றான் பாபு.


மாடியிலிருந்து கீழே பரத் இறங்கி வருவதை பார்த்த சோமசுந்தரம், மருமகன் வந்தவுங்கள்ட்ட எப்படி பேசுவாருனு தெரியலையே! என்று பரத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தார்.


கீழே வந்த பரத் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு
மரியாதையுடன் பேசிக் கொண்டிருந்தான்.


ஜானகி அம்மா பேசுவதற்கு முன்பே எந்த குறையும் இல்லாமல் "எங்களால் முடிந்த அளவுக்கு பானுக்கு நகை போட்டு சீரும் சிறப்புமாக நல்ல படியாக கல்யாணத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறோம்மா" என்று பரத் கூறுவதை கேட்டதும் பார்கவி வீட்டில் இருந்தவர்களும் ஜானகி அம்மாவின் குடும்பத்தாரும் பரத் பேசுவதை கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.


சோமசுந்தரம் கண்ணாடியை கழற்றி நன்கு துடைத்து விட்டு மீண்டும் பரத் பேசுவதை உற்றுப்பார்த்தார்.


இது கனவா? நிஜமா? பேசுறது நம்ம மாப்பிள்ளை தானா! என்று வியப்புடன் பரத் பேசுவதை பார்த்துக்
கொண்டிருந்தார்.


மனோஜின் கையை குழுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தான் பரத்.


சந்துருவின் குடும்பத்தினர் அனைவரும் நிச்சயதார்த்தத்திற்கு நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.


அவர்கள் கிளம்பியதும் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான் பரத்.சந்துருவின் கார் கிளம்பியதும் பார்கவியின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.பார்கவியும் அவளது அம்மா சரோஜாவும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள்.வீட்டிற்குள் வந்ததும்


"யாருப்பா காருல வந்துட்டு போறது?" என்று கேட்டதும், "பானுவோட வருங்கால கணவர் மனோஜூ்ம் அவருடைய குடும்பத்தாரும் வந்திருந்தாங்க" என்றார் சோமசுந்தரம்.


பரத் தலையில் கை வைத்திருப்பதை பார்த்த பார்கவி, "நான் வீட்டுல இல்லாத நேரமா பார்த்து என் வீட்டுக்காரரை வீடு தேடி வந்து அவமானப்படுத்திட்டு போக ஆள் அனுப்பி வச்சுருக்காங்களா?"


"ஒரு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரதுகுள்ள இவ்வளவு நடந்திருச்சா.நீங்க எதுக்குங்க தலையில கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்கீங்க.வாங்க உங்க வீட்டுக்கு போய் நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டா தான் அவுங்க அடங்குவாங்க..." என்று பார்கவி கூறியவுடன் பார்கவியின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான் பரத்.


"இதுக்கு மேல ஒரு வார்த்தை எதாவது வாயை திறந்து பேசுனா செவுளு பேந்துரும் பார்த்துக்கோ!" என்று கூறியதும் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் பார்கவி.


பார்கவியின் வீட்டில் நடந்ததையும் பரத் தனக்கு வாழ்த்துக்கள் சொல்லியதையும் சந்தோஷத்துடன் பானுவிற்கு கால் செய்து தகவல் சொன்னான் மனோஜ்.


பானு உடனே அவளுடைய அப்பா அம்மாவிடம் சென்று பரத் மனோஜிடம் பேசியதையும் அங்கு நடந்ததையும் சொன்னவுடன், "நீ சொல்லுறத நம்பவே முடியலமா பானு!" என்று கூறினார் கனகராஜ்.


"பொறுத்திருந்து பார்ப்போம் பானு.அவசரப்பட்டு சந்தோஷப்பட வேண்டாம்.புயலுக்கு முன் அமைதியாக கூட இருக்கலாம்..." என்று கூறினார் பானுவின் அம்மா.


பார்கவி வீட்டிலிருந்து புறப்பட்டு டவுனுக்கு போகும் வழியில் பரத் நடந்து கொண்ட விதம் குறித்து பேசிக்கொண்டு வந்தனர்.என்னம்மா சாரு? பானு அண்ணன் பேசுன விதத்தை பார்த்தால், "நீ சொன்ன மாதிரி அவுங்க குடும்பத்தில பிரச்சனை நடந்தது மாதிரியே தெரியலம்மா" என்று கூறினார் ஜானகி அம்மா.


"அதுதான் அத்தை எனக்கும் ஒன்னும் புரியல."


"சரி எப்படியோம்மா பானு, மனோஜ் நிச்சயதார்த்தம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக நடந்தா போதும்மா சாரு..." என்று கூறினார் ஜானகி அம்மா.


அனைவரும் ஜவுளி கடைக்கு வந்து இறங்கினார்கள்.ஜானகி அம்மாவும் சாருவும் சேலை பார்க்க தொடங்கினார்கள்.


"என்னப்பா புதுமாப்பிள்ளை! பானுக்கு எந்த கலர் பிடிக்கும்?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"அம்மா! அதுவந்து என்று இழுத்ததும்... சும்மா சொல்லுப்பா மனோஜ்" என்றார் ஜானகி அம்மா.


"அவளுக்கு நீல நிறம்தான் பிடிக்கும்" என்று பதில் கூறினான் மனோஜ்.


"சரிப்பா மனோஜ்! நீயே வந்து உன் வருங்கால மனைவிக்கு சேலையை செலக்ட் செய்ப்பா..." என்றதும் மனோஜ் கொஞ்சம் வெட்கப்பட்டு தயங்கினான்.


"சும்மா நடிக்காதடா மனோஜ்! சீக்கிரம் வந்து சேலையை செலக்ட் செய்" என்று சந்துரு கூறியதை பார்த்த சாரு, இவர் இப்படிலாம் ஜாலியாக பேசுவாரா? என்று முதன் முறையாக சந்துரு நக்கலடித்து சிரித்து பேசுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் சாரு.


ஐந்து நிமிஷத்தில் மனதிலே பானுவிற்கு சேலையை கட்டி பார்த்து "இந்த சேலை பானுவிற்கு நல்லா இருக்கும்லம்மா..." என்று ஜானகி அம்மாவிடம் ஒரு சேலையை எடுத்துக் கொண்டு போய் காட்டினான் மனோஜ்.


"வாவ்! சூப்பரா இருக்கு அண்ணா!" என்று கூறினாள் சாரு.


"நாங்க கூட இவ்வளவு பாஸ்ட்டா சூப்பரா செலக்ட் பண்ண மாட்டோம் அண்ணா.பானுக்கு இந்த சேலை ரொம்ப அழகாக இருக்கும்" என்று மனோஜிடம் கூறினாள் சாரு.


எல்லாம் "காதல் செய்யும் மாயம்" சாரு என்று ஜானகி அம்மாவும் சேர்ந்து மனோஜை கேலி செய்து சிரிக்கத் தொடங்கினார்.


"நாங்க பக்கத்துல இருக்கும் நகைக்கடைக்கு போய் மோதிரம் பார்த்துக்கிட்டு இருக்கோம் சந்துரு.நீ சீக்கிரமா பில் பே பண்ணிட்டு வந்திருப்பா" என்று கூறிவிட்டு சாருவையும் மனோஜையும் அழைத்துக் கொண்டு நகைக் கடைக்கு சென்றார் ஜானகி அம்மா.


மோதிரம் செலக்ட் பண்ணி முடித்து பில் போடும் நேரத்திற்கு தான் வந்தான் சந்துரு.


"பில் பே செஞ்சுட்டு வர்ற இவ்வளவு நேரமா சந்துரு? நாங்க மோதிரமே செலக்ட் பண்ணி முடுச்சிட்டோம்."


"இல்லம்மா...அது வந்து என்று இழுக்க தொடங்கியதும், சரி... சரி… நீயும் ஒரு முறை மோதிரத்தைப் பார்த்து நல்லா இருக்கானு சொல்லுப்பா?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"மனோஜ்க்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்ம்மா" என்றான்.மனோஜை பார்த்து புருவத்தை தூக்கிக் கொண்டு ஜாடையிலே மோதிரம் சூப்பர் என்று கூறினான் சந்துரு.


"இங்க வா சந்துரு! நீயும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை கையில வாங்கிக்கோங்க..." என்று கூறினார் ஜானகி அம்மா.


நகைக்கடை முதலாளி சாமியின் முன் மோதிரம் உள்ள டப்பாவை பூ போட்டு வைத்து கும்பிட்டு நிச்சயதார்த்த மோதிரத்தைக் கொடுக்க சந்துருவும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை பெற்று கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.



பரத்தின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? என்ன நடந்திருக்கும்? பானு நினைத்தது போல பரத்தின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடக்குமா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 21


"என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் என்ன மாப்பிள்ளை புதுசா கை ஓங்குறீங்க? இப்போ பார்கவி என்ன சொல்லிட்டானு அவளைத் தேவையில்லாமல் அடிச்சீங்க... பெத்தவுங்க நாங்க இருக்கும் போது எங்க கண் முன்னாடியே எங்க பொண்ண எப்படி நீங்கள் அறையலாம்?" என்று கேட்டார் பரத்தின் மாமியார் சரோஜா.


"ஒரு அறையோட விட்டேனு சந்தோஷப்படுங்க.எல்லாத்துக்கும் மூலக்காரணமே நீங்கதான் அத்தை.மாமா! அத்தையை இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்னு சொல்லுங்க..." என்று கூறினான் பரத்.


"எதுக்கு நான் பேசக்கூடாதுனு சொல்லுறீங்க மாப்ள? என் வீட்டில இருந்துக்கிட்டு சொந்த மாமியாருனு கூட பார்க்காம மரியாதை இல்லாம என்னையவே சத்தம் போட்டு பேசுறீங்க..." என்றதும், வேகமாக மாடிக்கு சென்று கையில் சூட்கேஸை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.


"மாப்ள சூட்கேஸ் எடுத்துக்கிட்டு எங்க போறீங்க?" என்று கேட்டார் சோமசுந்தரம்.


"எங்க வீட்டுக்குத்தான் மாமா.இனி நான் இங்க இருந்தேனா, அது எனக்கு மரியாதை இல்ல மாமா..." என்று கூறினான் பரத்.


"என்னாச்சு மாப்பிள? பார்கவி என்ன தப்பு பண்ணுனானு சொல்லுங்க மாப்ள...எதுனாலும் பேசி தீர்த்துக்குலாம்" என்று சோமசுந்தரம் கூறியதும், "உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? பெத்த பொண்ண நம்ம கண் முன்னாடி அடிச்சுட்டு நிக்கிராரு.ஏன் அடிச்சீங்கனு கேட்காம அதை விட்டுட்டு பார்கவி என்ன தப்பு செஞ்சானு கேட்கிறீங்க?" என்று பார்கவியின் அப்பாவிடம் சீறிக் கொண்டு கோபமாக பேசினார் சரோஜா.


"அம்மா! கொஞ்சம் நேரம் பேசாம அமைதியாக இருங்க..." என்று பாபு கூறினான்.


"மச்சான்! என்ன பிரச்சனைனு நீங்கள் சொன்னாதான எங்களுக்கு தெரியும்..." என்று பரத்திடம் கேட்டான் பாபு.


வேகமாக பார்கவியின் மொபைலை ஆன் செய்து வாய்ஸ் ரெக்காடரை அனைவருக்கும் போட்டுக் காட்டினான் பரத்.பார்கவியும், சரோஜாவும் பரத் குடும்பத்தை பற்றி பேசியது பதிவாகியிருந்தது.பார்கவி கோவிலுக்கு போகும்போது மொபைலை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.அந்த சமயம் பார்த்து, பரத்தின் மகள் சிவானி "அப்பா! நேற்று அம்மா மொபைல்ல ஹோம் ஒர்க் படிச்சு வாய்ஸ் ரெக்கார்டு பண்ணிருந்தேன்.அதை எடுத்து மிஸ் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கனும்.கொஞ்சம் எடுத்து தாங்க..." என்று பரத்திடம் கொடுத்திருக்கிறாள்.


நேற்றைய தேதியிலிருந்த வாய்ஸ் ரெக்கார்டரை போட்டு பார்த்தாள் பார்கவியும் சரோஜாவும் "அவரு இனி அந்த வீட்டுப்பக்கமே போகாத மாதிரி பிரச்சனையை பெருசாக்கிட்டேன் அம்மா.உங்க மாப்ள சரியான மாங்க மடையன்ம்மா.நான் சொல்லுறதுதான் வேத வாக்கா நம்பிக்கிட்டு இருக்காரு..." என்று அவள் பேசியதும் "இதே மாதிரி எப்போதும் உன் புருஷனை கைக்குள்ள போட்டு வச்சுக்கோ பார்கவி.அதுதான் உனக்கு நல்லது" என்று சரோஜா பேசியிருந்ததும் பதிவாகியிருந்தது.


"உங்க பொண்ண எதுக்கு அடிச்சேனு இப்போ புரியுதாங்க.இந்த ஆதாரம் போதுமாங்க..." என்று தனது மாமியாரைப் பார்த்து பரத் கேட்டதும், எதுவும் பேச முடியாமல் தலையை குனிந்து கொண்டார் சரோஜா.


"என்னங்க... அது வந்து என்று பார்கவி பேச ஆரம்பிக்கும் போது", "அம்மா தாயே! இனி நீ எதுவும் பேச வேண்டாம்! நீ சொன்ன மாதிரி நான் மாங்கா மடையன் தான்.உனக்கு என்னடி நான் குறைவச்சேன்? நீ ஆசைப்பட்டது எல்லாம் செஞ்சேன்லடி.நீ ஆசைப்படுறதுனால தான வயசான என் அப்பா அம்மாவை விட்டுட்டு உன் வீட்டில வந்து இருக்க சம்மதிச்சேன். ஆனால் நீ எனக்கு பதிலுக்கு நல்ல கைமாறு பண்ணிட்டம்மா தாயே! இல்லாத பொல்லாத நாடகம் போட்டு என் குடும்பத்தை ஏங்கிட்ட இருந்து அநியாயமா பிரிச்சுட்டியேடி பாவி!" என்று அக்ரோசமாக பேசினான் பரத்.


"சின்ன பிள்ளைய பக்கத்துல வச்சுட்டு பேச்சாடி நீ பேசிருக்க?உன்னோட நான் வாழ்ந்ததெல்லாம் போதும்.அடுத்த வாரம் டைவர்ஸ் நோட்டீஸ் வரும்" என்று கூறிவிட்டு பிள்ளையை தூக்கிக் கொண்டு பார்கவியின் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றான் பரத்.


"மாப்ள! ஒரு நிமிஷம் நான் சொல்லுறத கேளுங்கள்" என்று சோமசுந்தரமும், "மச்சான்! மச்சான்!கொஞ்சம் நில்லுங்க..." என்று பாபுவும் பரத் பின்னாடியே அவனை கூப்பிட்டு கொண்டே வீட்டின் வாசல் வரை சென்றனர்.அவர்கள் கூப்பிடுவதை சிறிது கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆட்டோவில் ஏறி தன்னுடைய வீட்டிற்கு குழந்தையுடன் சென்றான் பரத்.பார்கவி தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள்.


"அழுங்க... இரண்டு பேரும் சேர்ந்து நல்லா சுவத்துல போய் முட்டிக்கிட்டு அழுங்க... ஆரம்பத்துல இருந்தே படிச்சு படிச்சு உங்கிட்ட சொன்னேன். கேட்டியாடி நீ?" என்று சரோஜாவை பார்த்து திட்டினார் சோமசுந்தரம்.


"நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்கனும் நினைச்சு தானங்க.
அவளை இங்க இருக்க வச்சேன்" என்று கூறினார் சரோஜா.


"ஓ அப்படியா! சரி, அப்போ ஒன்னு பண்ணுவோம்.நாளைக்கே பாபுவையும் ருத்ராவையும் ருத்ராவோட வீட்டுக்கு அனுப்பி வச்சிருவோம்.ருத்ரா அவுங்க வீட்டில போய் நம்ம பிள்ளையோட சந்தோஷமாக இருக்கட்டும்" என்றதும், "அது எப்படிங்க? நம்ம பையனை போய் அவுங்க வீட்ல இருக்க சொல்லுறீங்க..." என்று கேட்டார் சரோஜா.


"நமக்காவது இரண்டு பிள்ளைங்க.நம்ம சம்பந்திக்கு ருத்ரா ஒரே பொண்ணு.அது மட்டுமில்லாமல் அவுங்க வீட்டில எல்லாத்துக்கும் வேலைக்கு ஆள் வச்சுருக்ககாங்க. ருத்ரா, நம்ம பார்கவியை விட அதிகமான மேற்ப்படிப்பு படிச்சு வேலைப் பார்த்து கை நிறைய சம்பாதித்த பொண்ணு.அப்படிலாம் சொகுசா பிறந்து வளர்ந்த பொண்ணு, நமக்காக வேலையை விட்டுட்டு குடும்பம்தான் முக்கியம்னு எல்லா வீட்டு வேலையையும் ஆளே இல்லாமல் தனியாக சமாளிச்சு வீட்டையும் பார்த்து நம்மளையும் பார்த்துக்கிறாள்.நீ என்னடானா! உலகத்துல யாருமே பார்க்காத வேலையை அவள் மாமியார் உன் மகளை பார்க்க சொன்ன மாதிரி பெருசா பேசுற.சந்தோஷத்துக்கு அர்த்தம் தெரியாம, நீ கெட்டதும் இல்லாம அவளையும் கெடுத்து பார்கவி வாழ்க்கைய வீணாக்கிட்டு இப்போ அழுது புலம்பிக்கிட்டு இருக்க.


அம்மா பார்கவி! என்னடா அப்பா நம்மள அண்ணியோட கம்பேர் பண்ணி சொல்லுறாருனு தப்பா நினைக்காதம்மா.குடும்பம்னா கூட குறைய இருக்கத்தான் செய்யும் பார்கவி.வீட்டு வேலை செய்றதெல்லாம் போய் பெருசா நினைக்காதம்மா.நம்ம
வீட்டுக்காகத் தான செய்யுறோம்னு முதல்ல சிந்திக்கனும்.குடும்பத்துல எது நடந்தாலும் அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும் பார்கவி.
விட்டுக்கொடுத்து போறவுங்க யாரும் வாழ்க்கையில கெட்டு போனதா சரித்திரமே கிடையாது!மாப்பிள்ளையும் சரி, அவுங்க குடும்பமும் சரி, ரொம்ப நல்ல குணம் கொண்டவுங்க பார்கவி.நீ செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு மாப்பிளக்கிட்டையும், அவுங்க அப்பா அம்மாக்கிட்டையும் போய் மன்னிப்பு கேளு பார்கவி..." என்று கூறினார்.


"கல்யாணம் முடிஞ்ச பிறகு ஒரு பொண்ணு அவளோட புகுந்த வீட்டில இருந்து வாழ்வதுதான் அந்த பொண்ணுக்கும் அவளுடைய பிறந்த வீட்டுக்கும் பெருமை.என் வாழ்க்கை அனுப்பவத்துல நான் தெரிஞ்கிட்டதை வைத்து உனக்கு சொல்லுறேன். உன்மையான சந்தோஷமே பிறருக்காக நாம் வாழ்வது தான்ம்மா பார்கவி" என்று சோமசுந்தரம் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து கொண்டு "நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்ப்பா... எனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையை நானே என் தலையில மண் அள்ளி போட்டுக்கிட்டேன்" என்று கதறி அழுதவளை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தினார் சோமசுந்தரம்.


வீட்டு வாசலில் பரத்தும் குழந்தையும் நின்று கொண்டிருப்பதை பார்த்த பானு, "வீட்டுக்குள்ள வாங்க அண்ணா... ஏன் வாசலையே நிக்கிறீங்க?" என்று கூறி வீட்டுக்குள் பரத்தை அழைத்தாள் பானு.


"ஹேய்! சிவானி செல்லம்..." என்று பானு குழந்தையை அழைத்ததும், "அத்தை..." என்று சந்தோஷமாக கூறிக் கொண்டு துள்ளி குதித்து ஓடி வந்து பானுவை கட்டிக் கொண்டாள் பரத்தின் மகள் சிவானி.


வீட்டிற்குள் வந்த பரத் அவனுடைய அப்பா அம்மா காலில் விழுந்து, "என்னை மன்னிச்சிருங்க..." என்று சொல்லி அழுது மன்னிப்பு கேட்டான்.


பிள்ளை அழுது புலம்பி மன்னிப்பு கேட்டதும், மனமுருகி "எழுந்திருப்பா பரத்...இப்போ எதுக்கு இப்படி அழுகுற? ஆம்பிள பிள்ளை கண் கலங்கலாமா?" என்று மனதிற்குள்ளே மகன் அழுவதைப் பார்த்து கலங்கினாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தைரியமாக பேசி ஆறுதல் கூறினார் கனகராஜ்.


"நீயும் என்ன மன்னிச்சிருமா பானு" சொந்த தங்கச்சினு கூட பார்க்காமல் கண்டபடி உன்னை பேசிட்டேன் என்று பரத் கூறியதும், "ஐயையோ! என்ன அண்ணா... பெரிய பெரிய வாரத்தையெல்லாம் ஏங்கிட்ட போய் நீங்க கேட்டுக்கிட்டு இருக்கீங்க.என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு" என்றதும் தன் தங்கையை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினான்.


"அந்த ராட்சசி பேச்சை கேட்டு உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ம்மா... நான் பெரிய பாவிமா... பெத்த அப்பா அம்மாவையே மரியாதை இல்லாமல் பேசிட்டேன்" என்று தான் செய்த தவறு அனைத்தையும் சொல்லி புலம்பி தீர்த்தான்.


"சரி விடுப்பா... பரத்.நடந்தது நடந்து போச்சு! நீ பழைய பரத்தா திரும்பி வந்ததே எங்களுக்கு போதும்பா..." என்று கூறினார் பங்கஜம்.


"பார்கவி வரலையப்பா பரத்? என்று கேட்டதும் அவளுக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல. அவளை பத்தி இனி ஏங்கிட்ட எதுவும் பேசாதீங்கம்மா..." என்று கூறிவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டான்.


மறுநாள் காலையில் சாருவின் பிறந்தநாள்.சாரு ரொம்ப ஆவலாக மணியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.சாருவின் கல்யாணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.அதனால் சந்துருவின் மேல் உள்ள காதலில் சந்துருவை தவிர வேறு யாரும் தனக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி விடக்கூடாது என்று அவளுடைய மொபைலை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள் சாரு.


சந்துரு லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.சாரு படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது போல சந்துருவையும் சுவரில் உள்ள கடிகாரத்தில் மணியையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.பனிரெண்டு மணியாக இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது.சாரு மணியை பார்த்துக் கொண்டே உறங்கிவிட்டாள்.


சந்துரு மெதுவாக சாருவின் அருகில் வந்து சாருவின் மேனி வலிக்காதவாறு தட்டி எழுப்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் எதுவும் கூறாமல், அவளது கண்களை துணியால் கட்டிக்கொண்டு வீட்டின் மாடிக்கு அழைத்து சென்றான்.மாடிக்கு அழைத்து சென்றதும் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தான்.
வண்ண நிற மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்து அதன் நடுவே பெரிய பிறந்தநாள் கேக் ஒன்றும் இருந்தது.


"மெனி மோர் ஹேபி ரிட்டன்ஸ் ஆப் தி டே சாரு" என்று சந்துரு கூறியதும், சாருவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


சாரு கேக் கட் செய்து சந்துருவிற்கு ஊட்டிவிட்டாள்."தாங்க் யூ சோ மச்ங்க" என்று சாரு கூறியதும் அவளது கையில் உள்ள மீதமுள்ள கேக்கை வாங்கி சாருவிற்கு ஊட்டிவிட்ட பின்னர் "ஐ லவ் யூ சாரு" என்று கூறினான் சந்துரு.


முதன் முறையாக சாருவிடம் தனது காதலை சந்துரு சொன்னதும், சாரு அவனருகில் சென்று கண்களிரண்டையும் சிமிட்டாமல் சந்துருவின் கண்களே பார்த்துக் கொண்டிருந்தாள்.சந்துரு அவளைத் தொட்டு அணைக்க வரும்போது "கொக்கரக்கோ..." என்ற சத்தம் கேட்டது.


என்ன சத்தம்? என்று பார்த்தால் ஜன்னலின் வழியாக 'கொக்கரக்கோ… கொக்கரக்கோ…' என்று சேவல் கூவிக் கொண்டிருந்தது.


சாரு கடிகாரத்தை பார்த்தாள்.காலை ஆறு மணியாகிவிட்டது.சந்துரு நன்றாக குறட்டை விட்டு தூக்கிக் கொண்டிருந்தான்.


"நான் கண்டது எல்லாம் கனவா? அப்போ இவரு நமக்கு நேத்து நைட் விஸ் பண்ணவே இல்லையா?" என்று மனதில் குமுறிக் கொண்டே குளிக்கச் சென்றாள் சாரு.


சாரு வேகமாக குளித்து கிளம்பி, சந்துரு எழுந்திருக்கும் வரை அவனருகிலே அமர்ந்து ஆசை ஆசையாக சந்துருவின் வாயால் முதல் முதலாக பிறந்தநாள் வாழ்த்து கேட்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தாள்.


சந்துரு எழுந்து "குட் மார்னிங்க" என்று கூறிவிட்டு பாத் ரூம் சென்றுவிட்டான். ப்ரெஸ்அப் ஆகிட்டு வந்தவன் சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து எதுவும் கூறாமல் கீழே இறங்கி காபி குடிக்க சென்றுவிட்டான்.


"இன்னைக்கு எனக்கு பிறந்தநாளுங்கிறது இவருக்கு தெரியுமா? தெரியாதா?" என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு மொபைலை ஆன் செய்தாள் சாரு.


ஆன் செய்ததும் பானுவிடமிருந்து போன் வந்தது.சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாள் பானு."சாரு ஒரு குட் நியூஸ்.என் பழைய அண்ணா வீட்டுக்கு வந்துட்டாங்க..." என்றாள் பானு.


"என்ன பானு சொல்லுற? பழைய அண்ணாவா! அது யாரு பானு? உனக்கு ஒரு அண்ணா இருக்காங்கனு தான சொல்லிருக்க..." என்று சாரு கேட்டதும், என் அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி பாசமாக இருந்தாங்களோ அந்த மாதிரி இப்போ வீட்டுக்கு திரும்பி வந்துட்டாங்கனு சொன்னேன்" என்று கூறினாள் பானு.


"அப்படி தெளிவாக சொல்லு பானு" என்றாள் சாரு.


நேற்று நடந்த அனைத்தையும் சாருவிடம் கூறினாள் பானு.
"இன்னைக்கு முடிஞ்சா நீ வீட்டுக்கு வா சாரு!" என்று கூறினாள் பானு.


"சரி... இதெல்லாம் இருக்கட்டும். மாப்பிள சரர் பேர்த் டேக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுத்தாங்க?" என்று கேட்டதும், பதில் ஏதும் சொல்லாமல் "அவரு எனக்கு இன்னும் விஸ் கூட பண்ணல.இதுல எங்கிட்டு சர்ப்ரைஸ் கொடுக்க" என்று மனதிற்குள்ளே நினைத்து வேதனையில் தவித்தவள் "நேரில் வந்து சொல்லுறேன் பானு.என் அம்மா லைன்ல வர்றாங்க..." என்று கூறி போனை கட் செய்துவிட்டாள் சாரு.


சந்துரு சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுவானா? மாட்டானா? பார்கவியை பரத் மன்னித்து ஏற்றுக் கொள்வானா? மாட்டானா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 22


பார்கவியும் அவளது பெற்றோரும் பரத் வீட்டிற்கு காரில் வந்து இறங்கினார்கள்.முதலில் பார்கவியின் பெற்றோர் மட்டும் பரத்தின் வீட்டிற்கு சென்றனர்.வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் வாசித்து கொண்டிருந்த கனகராஜ், பார்கவியின் பெற்றோரை பார்த்ததும், "வணக்கம் சம்பந்தி..."வாங்க...வாங்க..." என்று பார்கவியுடைய பெற்றோரை வீட்டிற்குள் வரவேற்றார் கனகராஜ்.


தூரத்தில் காரின் அருகிலேயே பார்கவி தயங்கி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பரத்தின் அப்பா, "ஏன்ம்மா பார்கவி அங்கேயே நிக்கிற? இங்கே வாமா..." என்று தனது மருமகளை அழைத்தார்.


கனகராஜ் வாசலில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு பங்கஜமும் பரத்தும் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர்.தனது வீட்டை நோக்கி பார்கவி நடந்து வருவதை பார்த்த பரத், "ஏன் அங்கேயே நில்லுடி! இங்க எதுக்குடி வந்த?" என்று கோபமாக கேட்டான்.


"நீ எதுவும் பேசாமல் முதலில் வீட்டுக்குள்ள போ பரத்!"என்று சத்தம் போட்டார் பரத்தின் அப்பா.ஆனால் பரத் வீட்டிற்குள் போகாமல் பார்கவியை சீறிப் பாய்ந்து கவ்வும் சிங்கம் போல அக்ரோசமாக பார்த்தான்.


"அப்பா சொல்லுறாங்கள பரத்.உள்ள வாடா!" என்று பரத்தின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் பங்கஜம்.


"மன்னிக்கனும் சம்பந்தி! பரத் ஏதோ கோபத்துல தெரியாமல் பேசிட்டான். அதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க..." என்று கூறினார் கனகராஜ்.


"மாப்ள கோபப்படுறதுல அர்த்தம் இருக்கு சம்பந்தி.நீங்க போய் எதுக்கு எங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கிறீங்க. முறைப்படி பார்த்தா நாங்கதான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கனும்..." என்று கூறினார் சோமசுந்தரம்.


"ஐயையோ! என்ன சம்பந்தி நீங்க போய் மன்னிப்பு அது இதுனு சொல்லி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க.முதல்ல நீங்க வீட்டுக்குள்ள வாங்க.பிறகு மற்றதைப் பத்தி பேசிக்கலாம்..." என்று கூறி வந்தவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் கனகராஜ்.


வீட்டிற்குள் நுழைந்ததும் பார்கவி வேகமாக மாமனார் மாமியார் காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டாள்.


"எழுந்திரும்மா பார்கவி! என்னம்மா இதெல்லாம்?" என்று பார்கவியின் மாமனார் கேட்டார்.


"நீங்க இரண்டு பேரும் என்னை மன்னிச்சுட்டேனு சொல்லுற வரைக்கும் நான் எழுந்திருக்க மாட்டேன்..." என்று கூறிக் கொண்டே அழுது புலம்பினாள் பார்கவி.


பார்கவியின் மாமியார் அவளைப் பிடித்து தூக்கிவிட்டு "அழாதம்மா பார்கவி... நீயும் எங்க பொண்ணு மாதிரிதாம்மா.எங்களுக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்ல..." என்று கூறிக் பார்கவயின் கண்ணீரைத் துடைத்து விட்டதும், மாமியாரைக் கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுதாள் பார்கவி.


"என்னங்க! என்னை மன்னிச்சுருங்க..." என்று பார்கவி பரத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும், காலை உதறிவிட்டு "ஏன் அப்பா அம்மா வேணும்னா உன்னை மன்னிக்கலாம். அது அவுங்களோட பெருந்தன்மை. ஆனால் நான் இந்த ஜென்மத்துல உன்ன மன்னிக்கவே மாட்டேன். இனிமேல் உன்னோட வாழ நான் தயாராக இல்ல.என் முகத்துலையே நீ முழிக்காத!" என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் பரத்.


பார்கவி கதவை தட்டிக் கொண்டு "என்னங்க! என்னங்க! ப்ளீஸ்ங்க... நான் பண்ணதெல்லாம் மிகப்பெரிய தப்பு தாங்க.என் கன்னத்துல நாலு அறை வேணும்னாலும் அறைஞ்சுகோங்க.ஆனால் என்னோட வாழ மாட்டேன்! பார்க்க மாட்டேனு மட்டும் சொல்லாதீங்க! ப்ளீஸ்ங்க..." என்று சொல்லிக் கொண்டே கதறி அழுதாள் பார்கவி.


"பரத்! பரத்! கதவை திறப்பா பரத்" என்று கனகராஜ் கூப்பிட, "அப்பா! தயவு பண்ணி அவளை அவுங்க வீட்டுக்கு அனுப்பி வைங்கப்பா..." என்று கதவை திறக்காமல் ரூமில் இருந்தவாரே கூறினான் பரத்.


பார்கவி அழுவதை பார்த்துக் கொண்டிருந்த சரோஜா, எல்லாத்துக்கும் நான்தான் மாப்ள காரணம்.நீங்க என்ன தண்டனை கொடுக்கனும்னாலும் எனக்கு கொடுங்க மாப்ள.போலீஸ் ஸ்டேஷன்ல கூட போய் கம்ப்ளைன்ட் கொடுங்க.பார்கவியை மட்டும் தண்டுச்சுடாதீங்க!" என்று கூறினார் சரோஜா.ஆனால் பரத்திடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.


"ஐயோ! சம்பந்திம்மா அழுறத நிறுத்துங்க.சின்னஞ்சிறுசுங்க அவுங்க இன்னைக்கு சண்டை போடுவாங்க நாளைக்கு கூடிக்குவாங்க.அவன் கோபத்துல இருக்குறதால நிதானம் இல்லாமல் பேசுறான்.நீங்கள் எதை நினைத்து கவலைப்படாம பார்கவியை இப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.நாளைக்கு காலையிலே பார்கவியைக் கூப்பிட பரத் கண்டிப்பாக வருவான்..." என்று கூறினார் பங்கஜம்.


"சரிங்க சம்பந்தி…" என்றார் சரோஜா.


"சிவானி எங்க அத்தை?" என்று கேட்டாள் பார்கவி.


"பானு, சிவானியை கூட்டிட்டு கோவில் வரைக்கும் போயிருக்காம்மா.நீ குழந்தைய பத்தி எதுவும் நினைச்சு கவலைப்பட வேண்டாம்மா.அவள் அழாமல் விளையாடிக்கிட்டு தான் இருக்கா.இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ பார்கவி" என்று கூறினார் பங்கஜம்.


"அப்போ நாங்க கிளம்புறோம் சம்பந்தி" என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றனர்.


"என்னம்மா வீடு புஃல்லா பலூனால டெக்ரேட் பண்ணிருக்கீங்க? வீட்ல எதுவும் பங்சன் ப்ளான் பண்ணிருக்கீங்களா?" என்று ஜானகி அம்மாவிடம் கேட்டான் சந்துரு.


"இன்னைக்கு என்ன நாளுங்கிறதே நீ மறந்துட்டியாடா சந்துரு? அப்போ நேத்து நைட் பேர்த் டே கிப்டா நீ எடுத்து வச்சிருந்த சேலைய சாருக்கிட்ட கொடுக்கலையா சந்துரு?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"ஸாரிம்மா... நேத்து நைட் விஸ் பண்ணிட்டு தூங்கனும் நினைச்சுதாம்மா, நான் தூங்கிடாம இருக்க லேப்டாப்ல சாங்ஸ் கேட்டுக்கிட்டு இருந்தேன்.நேத்து கடைக்கு அலைஞ்சுட்டு வந்த அலுப்புல அப்படியே அசந்து தூங்கிட்டேன்ம்மா.
தூங்கி எழுந்தும் நியாபகமே வரலம்மா.இன்னைக்கு சாரு பிறந்தநாளுங்கிறதே சுத்தமா மறந்துட்டேன்..." என்று கூறினான் சந்துரு.


"எல்லா பொண்ணுங்களும் ஆசைப்படுறது மாதிரி சாருவும் ரொம்ப ஆசையோட நம்ம வீட்டுகாரர் தான் பஸ்ட் விஸ் பண்ணணும் ஆவலா இருந்திருப்பாள்.இப்படி பண்ணிட்டியேடா சந்துரு?" என்று சத்தம் போட்டார்.


"இப்போவாது போய் அவளுக்கு விஸ் பண்ணுடா..." என்று ஜானகி அம்மா கூறியதும் தன் அறைக்கு சென்றான் சந்துரு.


கிப்ட் பாக்ஸை எடுத்துக் கொண்டு சாருவின் அருகில் சென்றான். பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தாள் சாரு.போன் பேசி முடித்துவிட்டு திரும்பியதும் சந்துரு கையில் கிப்ட் பாக்ஸோடு நின்று கொண்டிருப்பதை பார்த்தவள் தன்னிலை மறந்தாள்.


"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாரு" என்று சந்துரு கூறிவிட்டு பிறந்தநாள் பரிசைக் கொடுத்தான்.


சந்துரு பிறந்தநாள் வாழ்த்தோடு பிறந்தநாள் பரிசை சேர்த்து தந்ததும் சாருவின் மனவேதனையும் தவிப்பும் மாயமாய் மறைந்து போய்விட்டது.


'தாங்க் யூ சோ மச்ங்க' என்று சந்துருவிடம் கூறினாள் சாரு.


"கிப்ட் ஓபன் பண்ணி பாருங்க..." என்று சந்துரு கூறியதும் மிகவும் ஆவலுடன் கிப்ட் பாக்ஸை ஓபன் செய்து பார்த்தாள் சாரு.


சாருவிற்கு பிடித்த நீல நிறத்தில் கண்ணை கவரும் டிசைனில் பட்டுச்சேலை இருந்ததை பார்த்ததும் சாருவின் மனதில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


"சேலை ரொம்ப அழகா இருக்குங்க..." என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் சாரு கூறியதும், "சரிங்க... சீக்கிரமா கிளம்பி கீழே வாங்க" என்று கூறிவிட்டு சென்றான் சந்துரு.


பார்கவியின் கார் சென்றதும் பானு ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள். "யாருப்பா வந்துட்டு போறாங்க?" என்று தன்னுடைய அப்பாவிடம் கேட்டாள் பானு.


பார்கவி மற்றும் அவளுடைய பெற்றோர்கள் வந்ததையும் அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பானுவிடம் கூறினார் கனகராஜ்.


ரூமிலிருந்து பரத் வெளியே வந்ததும், "படிச்ச பையன் மாதிரியாடா நீ நடந்துக்கிற? வீட்டு வாசல்ல வச்சே பார்கவியை கண்ட படி திட்டுற.அக்கம் பக்கத்துல இருக்குறவுங்க எல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்குறாங்க.அதைக் கூட கவனிக்காம உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்க.வீட்டுக்கு வந்தவுங்கள இப்படியாடா வாசல்ல நிக்க வச்சு பேசுவாங்க? அவளே மனசு திருந்தி வந்து மன்னிப்பு கேக்குறாலடா பரத்.அவள மன்னிச்சு ஏத்துக்கலாம்ல பரத்" என்று பங்கஜம் கூறினார்.


பரத் அவர்கள் பேசுவதை காதில் எதையும் வாங்கி கொள்ளாமல், "எனக்கு ரொம்ப பசிக்குதும்மா சாப்பாடு போடுங்கள்..." என்று கூறினான்.


"நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.நீ என்னடானா..." என்று பங்கஜம் கூறும் போது, "பரத்துக்கு முதல்ல சாப்பாடு வைம்மா..." என்று கனகராஜ் சொல்லியதும் ஏதும் பேசாமல் சாப்பாடு பரிமாறினார் பங்கஜம்.


தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாக எடுத்து தந்த பட்டுச்சேலையை உடுத்திக்கொண்டு, சேலைக்கு எடுப்பாக காதில் வெள்ளை நிற கற்கள் பதித்த சிமிக்கி கம்மல் அணிந்து, கழுத்தில் ஜொலிக்கும் வைர நெக்லஸும், கையில் கிலுகிலுக்கும் வளையல் ஓசையுடன் காலில் மெல்லிய சலங்கை சத்தம் கொண்ட கொலுசும் அணிந்து மனதை கவர்ந்திழுக்கும் மல்லிகை பூச்சூடி தங்க தாரகையாக மாடியிலிருந்து இறங்கி வருபவளை பார்த்த சந்துரு, சாருவின் அழகில் மயங்கி அவனையே அறியாது அவளின் அருகில் நெருங்கிச் சென்றான்.


சந்துருவை பார்த்து புன்னகை பூவை அவன் மீது தூவி விட்டு பூஜை அறைக்குள் சென்றாள் சாரு.அங்கு வந்த ஜானகி அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றாள் சாரு.


"உன் மேல என் கண்ணே பட்டிரும் போலம்மா சாரு.சாட்சாத் அந்த மகாலெஷ்மியையே நேர்ல பார்த்தது போல அவ்வளவு அழகா இருக்கும்மா சாரு.ஒரு நிமிஷம் இரும்மா சாரு" என்று கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று கண்மையை எடுத்து வந்தார் ஜானகி அம்மா.


"யாரு கண்ணும் உன் மேலே பட்டுற கூடாதும்மா சாரு" என்று கூறி தனது மருமகளிற்கு திருஷ்டி பொட்டு வைத்துவிட்டார் ஜானகி அம்மா.


"என்னடா சந்துரு? மசமசனு இங்கேயே நின்னுக்கிட்டு இருக்க.சீக்கிரம் போய் நீ கிளம்பிட்டு மனோஜையும் கிளப்பி கூட்டிட்டு வா.சாருக்கு பேர்த் டே கேக் கட் பண்ணணும்" என்று ஜானகி அம்மா கூறிய பின்னர் தான் சுயநினைவுக்கு வந்தான் சந்துரு.


"சரிங்கம்மா..." என்று கூறியவன் சாருவை பார்த்துக் கொண்டே படிகளில் ஏறிச் சென்றான்.


சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த கண்ணம்மா வேகமாக ஹாலிற்கு வந்து சாருவிற்கு வாழ்த்து தெரிவித்து "வாழ்க வளமுடன்!" என்று கூறினார்.


சந்துருவும் மனோஜூம் கீழே இறங்கி வந்ததும் கேக் கட் செய்ய சாருவை அழைத்தனர்.வீட்டிலுள்ள அனைவரும் 'ஹேப்பி பேர்த் டே டூ யூ' என்று பாட ஆரம்பிக்கும் போது


"லால லால லாலா

நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவுவேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத்தாளில் எழுத வேண்டும்

சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி

வாழ்த்துகிறோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்…"



என்று கோராசுடன் குழந்தைகள் பாடும் சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்டது.சாரு கேக் கட் செய்யாமல் வேகமாக வெளியே சென்று பார்த்தாள்.பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பானுவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பாடிக் கொண்டிருப்பதை பார்த்து உற்சாகம் அடைந்தாள் சாரு.


மாணவர்கள் அனைவரும் வரிசையாக வந்து பூங்கொத்தை கொடுத்து "பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்" என்று சாருவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.


அவர்களை வீட்டிற்குள்ளே அழைத்து சென்று பிறந்தநாள் கேக் கட் செய்தாள் சாரு.முதலில் கேக் எடுத்து அங்கிருந்த குழந்தைகளுக்கு ஊட்டினாள்.அதன் பின்னர் ஜானகி அம்மாவிற்கு கொடுக்க அவரும் திருப்பி ஊட்டிவிட்டார்.


அடுத்ததாக சந்துருவிற்கு ஊட்டுவதற்காக அவனது வாயின் அருகே கேக்கை கொண்டு போனாள் சாரு.ஆனால் சந்துரு அதை வாயில் வாங்கிக் கொள்ளாமல் கையில் பெற்றுக் கொண்டான்.ஜானகி அம்மா வாயைத் திறந்து பேசாமல் கண் ஜாடையிலே சந்துருவை பார்த்து கேக் எடுத்து சாருக்கு ஊட்டு என்று சைகை காமித்தார்.சாருவிற்கு பின்புறம் ஜானகி அம்மா இருந்ததால் அவர் சைகையில் கூறியது சாருவிற்கு தெரியாது.ஆனால் பானு அதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.அதற்கு பிறகு சாருவிற்கு கேக்கை எடுத்து ஊட்டிவிட்டான் சந்துரு.


"பசங்கள கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுப்பனு எதிர்பார்க்கவே இல்ல பானு! தாங்க் யூ சோ மச் பானு..." என்று கூறினாள் சாரு.


குழந்தைகள் திடீரென வந்ததால் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து சாப்பாடை வீட்டிற்கு வரவழைத்தார் ஜானகி அம்மா.அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போது கண்ணம்மா மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தார்.


"அம்மா! நீங்கள் இதெல்லாம் வச்சிட்டு இங்க வந்து உட்காருங்க..." என்று கண்ணம்மாவை உட்கார வைத்து சாப்பாடு பரிமாறினாள் சாரு.


எப்பொழுதும் வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பின் சாப்பிடும் கண்ணம்மா, முதன் முறையாக அனைவருடனும் சேர்ந்து சாப்பிட வைத்த சாருவை நினைத்து மனதில் சந்தோஷப்பட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினார்.


குழந்தைகளும் மற்றவர்களும் சாப்பிடும் கேப்பில் பானுவும் மனோஜூம் தனியாக சென்று பேசிக் கொண்டிருக்கும்போது இடையே ஜானகி அம்மா வந்து பானுவின குடும்பத்தினரைப் பற்றி நலம் விசாரித்தார்.


"சரிங்க சார்... எனக்கு டைமாச்சு! பசங்கள கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு, அப்படியே நான் வீட்டுக்கு கிளம்புறேன்..." என்று மனோஜிடம் கூறிவிட்டு சென்றாள் பானு.


"நானும் பானு வீட்டு வரைக்கும் போய்ட்டு வர்றேன் அத்தை.பானுக்கு நிச்சயதார்த்த ப்ளவுஸ் தைக்க அவளுடைய அளவு ப்ளவுஸ் வாங்கிட்டு வந்திர்றேன் அத்தை..." என்று கூறினாள் சாரு.


"சரிம்மா... பார்த்து கவனமாக போய்ட்டு வாமா..." என்று கூறினார் ஜானகி அம்மா.


சந்துருவிடமும் கூறிவிட்டு பானுவுடன் சேர்ந்து மினி வேனில் கிளம்பிச் சென்றாள் சாரு.


"நீ பசங்கள கொண்டு போய் விட்டு வா பானு! நான் வெளியே வெயிட் பண்ணுறேன்..." என்று கூறினாள் சாரு.


"நீயும் வா சாரு! எல்லா டீச்சர்ஸையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல" என்று பானு கூறினாள்.


"நிச்சயதார்த்த ஒர்க் நிறைய இருக்கு பானு.இப்போ நான் உள்ள வந்தேனா உடனே கிளம்ப முடியாது பானு" என்று கூறியதும், "சரி...சரி...பத்து நிமிஷத்தில் நான் வந்திர்றேன்" என்று கூறிவிட்டு பள்ளியின் உள்ளே சென்றாள் பானு.


பானு குழந்தைகளை விட்டுட்டு பள்ளியில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.பானு வந்ததும் இருவரும் ஸ்கூட்டியில் பேசிக் கொண்டே பானுவின் வீட்டிற்கு சென்றனர்.



பானு வீட்டில் நடந்த அனைத்தையும் சாருவிடம் கூறிக் கொண்டே வந்தாள்.அண்ணா ரொம்ப அடம்பிடிக்கிறாங்க சாரு... அண்ணி பாவம் சாரு! ரொம்ப வந்து அழுது மன்னிப்பு கேட்டாங்கலாம்.ஆனால் அண்ணன் கொஞ்சம் கூட முகம் கொடுத்தே பேசலையாம் சாரு. டைவர்ஸ் பண்ணியே தீருவேனு ஒத்த காலில் நிக்கிறாங்க.அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டாங்க.அண்ணா எதையுமே காதுல வாங்குற மாதிரியே தெரியல!" என்று தன்னுடைய அண்ணனின் வாழ்க்கையை குறித்து கவலையுடன் கூறிக் கொண்டே வந்தாள் பானு.


பானுவின் வீட்டிற்கு வந்ததும் பானுவின் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


சிறிது நேரம் கழித்து "நீ பேசிக்கிட்டு இரும்மா சாரு.எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு போய்ட்டு வர்றேன்..." என்று கூறிவிட்டு சென்றார் கனகராஜ்.


பங்கஜம் அம்மாவும் சாருவிற்கு காபி போட்டு கொடுக்க சமையலறைக்கு சென்றுவிட்டார்.பானுவோ, அளவு ப்ளவுஸ் எடுப்பதற்கு தன்னுடைய ரூமிற்கு சென்றுவிட்டாள்.சிவானி விளையாடிக் கொண்டிருந்தாள். பரத்தும் சாருவும் மட்டும்தான் ஹாலில் இருந்தனர்.


யாருமில்லா நேரம் பார்த்து சாரு பரத்திடம் பேசத் தொடங்கினாள். "அண்ணா! தப்பா எடுத்துக்காட்டி நான் உங்கக்கிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்று சாரு கேட்டதும், "நீயும் என் தங்கச்சி மாதிரிதான்ம்மா.எதுனாலும் தாரளமாக கேளும்மா..." என்று பரத் கூறினான்.


"அண்ணா! உங்க குடும்ப விஷயத்துல தலையிடுறேனு தப்பா நினைக்காதீங்க.பானு வீட்ல நடந்த எல்லாத்தையும் ஏங்கிட்ட சொன்னாள்.முப்பதிரெண்டு வருஷமா உங்களைப் பார்த்து பார்த்து பெத்து வளர்த்து ஆளாக்கிய உங்க அப்பா அம்மாவோட குணமும், அவுங்களோட எல்லா அருமை பெருமை நல்லா தெரிஞ்ச நீங்களே, குடும்பத்தில் ஒரு சின்ன பிரச்சனை வந்ததும் அவுங்கள பத்தி சரியா புருஞ்சுக்காத போது, உங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷத்தும் தான் ஆகுது.அதுக்குள்ள பார்கவி அண்ணிதான் யாரையும் சரியா புருஞ்சுக்கல, எல்லா பிரச்சனைக்கு அவுங்க தான் காரணம்னு நீங்க எப்படினா சொல்லலாம்? நல்லா யோசிச்சு பாருங்க... மத்தவுங்கள குறை சொல்லுறதுக்கு முன்னாடி நம்ம சரியா நடந்துக்கிட்டோமானு யோசிச்சு பார்த்தா, பல குடும்பங்களில் இந்த மாதிரி பிரச்சனையே வராது.


"என்னை பொறுத்தவரை நம்முடைய சிரிப்புக்கும் அழுகைக்கும் நாம் மட்டும் தான் மூலக்காரணம்.நம் எண்ணங்கள் சரியாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையும் சரியாக அமையும்" என்று கூறினாள் சாரு.


"நான் பேசுனதுல ஏதாவது தப்பு இருந்தாலோ, நீங்க சங்கடப்படுவது மாதிரி நான் பேசியிருந்தாலோ என்னை மன்னிச்சிருங்கனா.


"வயசுக்கு மீறி அட்வைஸ் பண்ணுறேனு தப்பா நினைக்க வேண்டாம்னா.எனக்கு உங்கக்கிட்ட சொல்லனும் தோணுச்சுனா" என்று சாரு கூறியதும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் பரத்.


சாரு பேசி முடித்ததும் பானுவும் ப்ளவுஸை எடுத்து வந்து சாருவிடம் கொடுத்தாள்.பங்கஜம் அம்மாவும் காபியும் ஸ்நாக்ஸும் எடுத்து வந்து சாருவிடம் கொடுத்தார்.


காபி குடித்ததும் "சரிம்மா. எனக்கு நேரமாச்சு! நான் கிளம்புறேன்..." என்று கூறினாள் சாரு.


"கொஞ்சம் வெயிட் பண்ணு சாரு.நான் ஐந்து நிமிஷத்தில் கிளம்பி வரேன். உன்னை உங்க வீட்டுல ட்ராப் பண்ணுறேன்" என்று கூறினாள் பானு.


"அதெல்லாம் வேண்டாம் பானு! நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன்..." என்று கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள் சாரு.


சாரு பேசியதைக் கேட்டு பரத்தின் மனதில் மாற்றம் வந்ததா? பார்கவியை மன்னித்து ஏற்று கொள்வானா பரத்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 23


பானுவின் வீட்டிலிருந்து புறப்பட்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் சாரு. வீட்டிற்கு வந்ததும் தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்கு செல்லும் போது, ஜானகி அம்மாவும் கண்ணம்மாவும் சமையலறையில் பேசிக் கொண்டிருந்தது சாருவின் காதில் விழுந்தது.


"இந்த சந்துரு என்னைக்கு தான் மாறப் போறானோ தெரியல கண்ணம்மா? பானுக்கு நிச்சயதார்த்த சேலை எடுக்க ஜவுளிக்கடைக்கு போன அப்போதான், சாருக்கே தெரியாம அவளுடைய பிறந்தநாளுக்கு நீ சர்ப் ரைஸ் கிப்ட் கொடுடா சந்துருனு சொல்லிருந்தேன். சாரு சேலையை செலக்ட் செஞ்சதும், சாருக்கு தெரியாம சேலையை வாங்கச் சொன்னதும் நான்தான் கண்ணம்மா" என்று கூறினார் ஜானகி அம்மா.


"என்னம்மா சொல்லுறீங்க? அப்போ சாரும்மா சேலையை சின்ன ஐயா செலக்ட் பண்ணலையா?" என்று கேட்டார் கண்ணம்மா.


"இல்ல கண்ணம்மா.நான் தான் சாருக்கு தெரியாம செலக்ட் பண்ணுனேன்.புதுசா கல்யாணம் முடிந்ததும் எல்லா பொண்ணுங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு மாதிரிதான சாருக்கும் இருக்கும்.சந்துரு சும்மாவே சாருக்கிட்ட சரியா முகம் கொடுத்து பேச மாட்டீங்கிறான்.இன்னும் அவன் சவிதாவுக்கு நடந்ததையே நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கான் கண்ணம்மா.இன்னொரு பக்கம் சஞ்சுளா.இந்த மாதிரி சூழ்நிலையில அவன் இருக்கும் போது, இவன் எப்படி சாருக்கு பேர்த் டே கிப்ட் வாங்குவான் சொல்லு?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"சாரு பிறந்தநாள் அதுவுமா சங்கடப்படக் கூடாதுனு நினைச்சு, நான்தான் இப்படி ப்ளான் பண்ணுனேன்..." என்று தனது மாமியார் கூறிக் கொண்டிருந்ததை கேட்டதும் சாருவின் கண்கள் இரண்டும் கலங்கிவிட்டது.


தண்ணீர் குடிக்க சென்றவள் தண்ணீர் குடிக்காமலேயே தன்னுடைய ரூமிற்கு செல்லும் போது சந்துரு பூட்டியிருந்த அறைக்கு செல்வதையும் பார்த்தாள்.


நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நாட்குறிப்பு டைரியை எடுத்து எழுதத் தொடங்கினாள் சாரு.


டியர் சந்துரு,

என் பிறந்த நாளைக்காக நீங்க சேலையை கிப்ட்டாக கொடுத்ததை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.பரவாயில்ல நம்மக்கிட்ட நேர்ல முகம் கொடுத்து சரியா பேசாட்டிலும் மனசுல நம்ம மேல எவ்வளவு அன்பு இருந்தா தேடிப்பிடித்து இப்படி சேலைலாம் வாங்கித் தராங்கனு.


ஆனால் என் பிறந்தநாளே அத்தை சொல்லி தான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு.எனக்காக கிப்ட்டும் நீங்க வாங்கலனு தெரிஞ்சதும் என் உள்ளம் அப்படியே நொறுங்கிருச்சு சந்துரு.


உங்க மனசுக்குள்ள அப்படி என்ன ரகசியம் மறைச்சு வச்சுருக்கீங்க?எதுனாலும் நீங்க ஏங்கிட்ட வெளிப்படையாக சொன்னால் தானங்க சந்துரு எனக்கு தெரியும்.


ஆனால் அத்தை சொன்னதை வைத்து பார்த்தால் ஏதோ உங்க மனசுக்குள்ள பெரிய ஆறாத காயம் இருக்குனு மட்டும் புரியுது. கண்டிப்பா அந்த ரகியத்தை என்னனு தெரிஞ்சுக்காமல் விட மாட்டேங்க சந்துரு.

"உங்க மனதில் ஏற்பட்ட காயத்தைப் போக்கும் மருந்தாக நான் இருப்பேன் சந்துரு"


இப்படிக்கு,
உங்கள் இதயத்தோடு இணைய காத்திருக்கும் ஆருயிர் காதலி

சாரு.


சாரு டைரி எழுதி முடித்ததும் சந்துரு அறைக்குள் வந்தான்.சந்துரு ரூமிற்குள் வந்ததும் வேகமாக தன்னுடைய டைரியை மூடினாள் சாரு.


சந்துரு எதுவும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய லேப்டாப்பை ஓபன் செய்து வழக்கம் போல காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டான்.


சந்துருவிடம் எதைப் பற்றியும் கேட்காமல் கீழே இறங்கி சமையலறைக்குச் சென்றுவிட்டாள் சாரு.சமையலை முடித்துவிட்டு கண்ணம்மா கையில் ஏதோ ஒரு போட்டோவை பார்த்து அழுதுக் கொண்டிருந்ததை கவனித்தாள் சாரு.


கண்ணம்மா கண்களிலிருந்து கண்ணீர் சிந்துவதைப் பார்த்த சாரு, "என்ன போட்டோம்மா அது? ஏன்ம்மா அழுறீங்க?" என்று கண்ணம்மாவிடம் கேட்டாள் சாரு.


தன் கையில் வைத்திருந்த பாஸ்போட் சைஸ் போட்டோவை சாருவிடம் காட்டினார் கண்ணம்மா.


"வாவ்! பையன் ரொம்ப கியூட்டா இருக்கான்ம்மா" என்று கூறினாள் சாரு.


சாரு கூறியதும் தேம்பி அழுகத் தொடங்கினார் கண்ணம்மா.
"ஏன்ம்மா இப்படி அழுறீங்க? நான் எதுவும் தப்பா சொல்லலம்மா" என்று கூறினாள் சாரு.


"நீங்க சொன்னதுக்காக நான் அழல சாரும்மா.என் பிள்ளை இப்போ எங்க, எப்படி இருக்கானோ? என்னலாம் கஷ்டப்படுறானோ தெரியலம்மா?" என்றார் கண்ணம்மா.


"என்னம்மா சொல்லூறீங்க? எனக்கு ஒன்றும் புரியலையேம்மா" என்று கூறினாள் சாரு.


"இந்த குழந்தை வேற யாருமில்ல சாரும்மா.என்னுடைய மகன் மதன் சாரும்மா.அவன் பிறந்த இரண்டாவது மாசம் எடுத்த போட்டோ தாம்மா இது" என்று கூறினார் கண்ணம்மா.


"சரிம்மா...அதுக்கு ஏன் அழுறீங்க? உங்க பையன் உங்களோட இல்லையாம்மா?" என்று கேட்டாள் சாரும்மா.


"பச்சக்குழந்தையை பறி கொடுத்துட்டு நிக்கிற பாவிம்மா நான்" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் கண்ணம்மா.


"அம்மா! அம்மா! ப்ளீஸ்ம்மா அழாதீங்க... என்ன நடந்ததுனு தெளிவாக சொல்லுங்கம்மா?" என்று கண்ணம்மாவிடம் கேட்டாள் சாரு.


"முப்பது வருஷத்துக்கு முன்னாடி என் கணவரோட தங்கச்சி கல்யாணத்துக்காக என் வீட்டுக்காரரோடு சேர்ந்து நானும் மதனும் குடும்பத்தோட ட்ரையின்ல சென்னைக்கு போயிக்கிட்டு இருந்தோம்மா" என்று கதையை சொல்ல ஆரம்பித்தார்.


"மதன் அப்போ இரண்டு மாத கைக் குழந்தை சாரும்மா.ட்ரைன்ல போயிக்கிட்டு இருக்கும் போது ஒரு பொம்பள பழம் வித்துட்டு வந்தாங்க. "கொஞ்ச மயக்கமா வருதும்மா.குடிக்க கொஞ்சம் தண்ணீர் இருந்தா தாங்களே" என்று கூறினார்.அலைஞ்சு திரிஞ்சு வித்ததுல டயர்டாகிட்டாங்க போல, பாவம்னு நினைச்சு தண்ணீர் கொடுத்தோம்.அடுத்த ஸ்டேஷன்ல வண்டி நின்னதும், எங்க முகத்துல டக்னு ஸ்ப்ரே அடுச்சுட்டு, என் குழந்தையை தூக்கிட்டு ஓடிட்டாம்மா அந்த படுபாவி!நல்லதுக்கே காலம் இல்லம்மா.எங்களுக்கு பதினைந்து நிமிஷம் கழுச்சு தாமா மயக்கம் தெளிஞ்சது.அதுக்கு பிறகு அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி கம்ப்ளைன்ட் கொடுத்தோம்.ஆனால் அது எதுவுமே கதைக்கு ஆகலம்மா.நாங்க சுத்தி திரிந்து தேடாத இடமில்லம்மா. ஆனாலும் எங்க பையன் எங்களுக்கு கிடைக்கவே இல்லம்மா..." என்று அழுதுக் கொண்டே கூறினார் கண்ணம்மா.


"நீங்கள் எதுவும் கவலைப்படாதீங்கம்மா! உங்க பையன் கண்டிப்பாக ஒரு நாள் உங்கக்கிட்ட வந்து சேருவாங்க" என்று ஆறுதல் வார்த்தை கூறினாள் சாரு.


பரத் தன்னுடைய ரூமில் அமர்ந்து ஜன்னல் வழியாக வானத்தை பார்த்து ஏதோ யோசித்து கொண்டிருந்தான். திடீரென வானத்தில் ஒரு உருவம் தோன்றியது.அந்த உருவம் பரத்தை பார்த்து "என்ன பரத் யோசிக்கிற?" என்று கேட்டது.


"ஹேய்! நீ யாரு? என்னை மாதிரியே இருக்க..." என்று பதற்றத்தோடு அந்த உருவத்திடம் கேட்டான் பரத்.


"பயப்படாதே பரத்! நான் தான் உன் மனசாட்சி..." என்று அந்த உருவம் கூறியது.


"ஐந்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த பரத் எங்கே சென்றுவிட்டான்?" என்று அந்த உருவம் பரத்திடம் கேட்டது.


"சாரு சொன்னதை நன்றாக சிந்தித்து பார் பரத்.அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் நியாயம் இருக்குல.நீ செஞ்சா மட்டும் தப்பு இல்ல.பார்கவி செஞ்ச மட்டும் தப்பு.உன்னை மட்டும் மன்னிக்கலாம்.ஆனால் அவள மட்டும் மன்னிக்கக் கூடாதுல.இது எந்த வகையில நியாயம் பரத்?" என்று கேட்டதும், "இப்போ என்ன தான் நான் பண்ணனும் சொல்லுற..." என்று அந்த உருவத்திடம் திருப்பி கேட்டான் பரத்.


"உன் முரட்டு பிடிவாதத்தை தூக்கி எறிஞ்சுட்டு பார்கவியை கூட்டிட்டு வந்து சந்தோஷமாக வாழுற வழியைப் பாரு" என்று சொல்லிவிட்டு மறைந்து சென்றது.


தன்னிடம் பேசிய உருவத்தை கத்தி கத்தி கூப்பிட்டு பார்த்தான் பரத்.பரத்தின் அறையில் திடீரென பயங்கரமாக சத்தம் கேட்டதும், பங்கஜம் வேகமாக ஓடி வந்து "பரத்! பரத்! கதவைத் திறப்பா..." என்று பரத்துடைய ரூமின் கதவை தட்டிக் கொண்டிருந்தார்.


கதவை தட்டிய மறுகணம் "என்னம்மா? யாருக்கு என்னாச்சு?" என்று கேட்டான் பரத்.


"உனக்கு என்னாச்சுடா பரத்? உன் ரூம்ல தான் நீ யாருகிட்டயோ கத்தி கத்தி பேசுற மாதிரி இருந்தது.யாரோட பேசிக்கிட்டு இருந்த பரத்?" என்று கேட்டதும், மனசாட்சியோடு பேசிக்கிட்டு இருந்தேனு சொன்னா, கண்டிப்பா அம்மா நமக்கு லூசு பிடிச்சு போச்சுனு நினைச்சு பயந்துருவாங்க. வேற ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று மனதிற்குள் நினைத்து சிவானிக்கு அவுங்க ஸ்கூல்ல அடுத்த மாசம் ஒரு நாடகப் போட்டி இருக்கும்மா.அவளுக்கு சொல்லிக் கொடுக்கனும்ல அதான் ப்ராக்ட்டீஸ் பண்ணுறேன் என்றான்.விளையாடிக் கொண்டிருந்த சிவானி பரத் கூறியதைக் கேட்டதும், "மிஸ் அப்படிலாம் எதுவுமே ஏங்கிட்ட சொல்லலையேப்பா..." என்று கூறிவிட்டாள்.


"என்னடா குழந்தை அப்படி சொல்லுறா..." என்று பங்கஜம் கேட்டார்.


"அம்மா! நேத்து நைட் தான் மெயில் அனுப்பி இருந்தாங்க" என்று கூறியதும், "சரி... சரி..." என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றுவிட்டார் பங்கஜம்.


நல்ல வேளை அம்மா மெயிலை காட்டுனு சொல்லல.இல்லாட்டி மாட்டிருப்போம்.அப்பாடா! எப்படியோ சொல்லி சமாளுச்சாச்சு என்று பெருமூச்சு விட்டான் பரத்.


"அப்பா! இப்போவே ட்ராமா ப்ராக்ட்டீஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?" என்று கொஞ்சும் மழலை பேச்சில் பரத்திடம் கேட்டாள் சிவானி.


"சிவானி செல்லம்... அப்பா நைட் உங்களுக்கு சொல்லித் தர்றேன்டா. நீங்க சமத்துக்குட்டியா விளையாண்டு கிட்டு இருப்பீங்களாம்.அப்பா போய் உங்களுக்கு கடையில சாக்லேட் வாங்கிட்டு வந்திர்றேன்..." என்று தனது மகளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.


பார்கவியின் வீடு வரை சென்றவன் வீட்டிற்குள் நுழையாமல் வாசலிலே நின்று கொண்டிருந்தான்.வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த ருத்ரா, "ஏன்னா வாசல்லையே நிக்கிறீங்க? உள்ள வாங்க..." என்று பரத்தை வீட்டிற்குள் அழைத்ததும் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் எழுந்து வந்து "வாங்க மாப்ள..." என்று பரத்தை கூப்பிட்டு ஷோபாவில் உட்கார வைத்தார்.


மாடியிலிருந்து தன்னுடைய மருமகன் வீட்டிற்கு வந்திருப்பதை பார்த்த சரோஜா சந்தோஷப்பட்டு வேகமாக பார்கவியின் அறைக்கு சென்றார்.


"பார்கவி! பார்கவி! மாப்ள வந்திருக்காருடி..." என்று கூறியதும் அழுது கொண்டே பரத்தை காண ஓடிச் சென்றாள்.


"நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்த போது உங்கக்கிட்ட நான் மரியாதைக் குறைவாக நடந்தது கிட்டதுக்கு என்னை நீங்களும் அத்தையும் மன்னிச்சிருங்க..." என்று தன்னுடைய மாமானார் மாமியாரிடம் மன்னிப்பு கேட்டான் பரத்.


"நீயும் என்னை மன்னிச்சுரு பார்கவி..."என்று பரத் சொன்னதும், "ஐயையோ! நீங்க எதுக்குங்க ஏங்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க? எல்லாத் தப்பையும் பண்ணதே நான்தான்.நான் எத்தனை தடவை உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டாலும் நான் செஞ்சதை மன்னிக்கவே முடியாது" என்று தான் செய்த தவறை நினைத்து வருந்தி கூறினாள் பார்கவி.


"என்னதான் இருந்தாலும் கட்டுன மனைவியை கை நீட்டி அடிப்பது ஆண்களுக்கு அழகு இல்ல.எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பேசி சமாளிக்கும் வழியைத் தான்
பார்த்திருக்கனுமே தவிர உன்னை நான் அறைஞ்சிருக்க கூடாது பார்கவி..." என்று பரத் கூறியதும், பரத்தை கட்டிப்பிடித்து 'ஐ ஆம் ரியலி ஸாரி பரத்'."ஐ மிஸ் யூங்க..." என்று கூறினாள் பார்கவி.


"ஸாரி கேட்டா ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி மாத்தி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான் மாப்ள.விடுங்க மாப்பிள...நடந்து முடிந்தது ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்திருவோம். முடிந்ததை எண்ணி கவலைப்படாதீங்க! இனி நடப்பது எல்லாம் நன்மையாக இருக்கும்னு நம்புவோம்" என்று கூறினார் சோமசுந்தரம்.


"சரிங்க மாமா... அப்போ நான் பார்கவியை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு கிளம்புறேன்" என்று பரத் சொன்னதும், "இருந்து சாப்பிட்டு சாயங்காலம் பொறுமையாக கிளம்பலாம் மாப்ள..." என்று சோமசுந்தரம் கூறினார்.


"இல்ல மாமா... சிவானிட்ட சாக்லேட் வாங்கிட்டு வந்திர்றேனு சொல்லிட்டு வந்திருக்கேன் மாமா.அவள் எனக்காக காத்துக்கிட்டிருப்பா..." என்று சொன்னதும், "சரிங்க மாப்ள..." என்று கூறினார் சோமசுந்தரம்.


பார்கவி தன்னுடைய அறைக்கு சென்று அவளுடைய துணிகளையெல்லாம் வேகமாக சூட்கேஸில் எடுத்துக் கொண்டு அப்பா அம்மாவிடம் போய்ட்டு வருகிறேன் என்று கூறினாள் பார்கவி.


"உனக்கு அருமையான குடும்பம் கிடைச்சிருக்கும்மா பார்கவி.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கோ பார்கவி.
எல்லாருக்கும் இப்படி இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது.பார்த்து அனுசரிச்சு புத்தி மதியா புரிஞ்சு நடந்துக்கோம்மா..." என்று தன்னுடைய மகளுக்கு அறிவுரை கூறினார் சோமசுந்தரம்.தன் மகளை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு மருமகனுடன் வழி அனுப்பி வைத்தார் சரோஜா.


சந்துரு மனதில் மறைக்கும் ரகசியத்தை பற்றி அறிய, சந்துரு ரூமில் இல்லாத நேரம் பார்த்து அவனுடைய கப்போர்டில் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று கப்போர்டு முழுவதையும் தேடிப் பார்த்தாள் சாரு.ஆனால் எதுவுமே
கிடைக்கவில்லை.


சந்துரு எப்போது பார்த்தாலும் லேப்டாப்பை தான் ஆன் செய்து பார்த்துக் கொண்டிருப்பது நியாபகம் வந்த சாரு, லேப்டாப்பை ஓபன் செய்து பார்க்கலாம்.கண்டிப்பா ஏதாவது அதுல இருக்கும்.ஆனால் லேப்டாப் பாஸ்வேர்டு தெரியனுமே.சரி முதல்ல லேப்டாப் பேக்க எடுப்போம் என்று சொல்லிக் கொண்டே சந்துருவின் லேப்டாப்பை எடுத்து முதலில் சந்துரு என்று பாஸ்வேர்டு போட்டு பார்த்தாள். ராங்க் பாஸ்வேர்டு என்று வந்தது. எல்லா பசங்களும் தனக்கு ரொம்ப பிடிச்சவுங்க பெயரை தான் பாஸ்வேர்டு செட் பண்ணுவாங்க என்று நினைத்து ஜானகி அம்மாவின் பெயரை டைப் செய்தாள் மீண்டும் ராங்க் பாஸ்வேர்டுனு வந்தது.ஜன்னல் வழியாக சந்துரு வருகிறானா? என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை எட்டி எட்டிப் பார்த்து கொண்டே இருந்தாள் சாரு.வேற யாரு பெயரை பாஸ்வேர்டா செட் பண்ணியிருப்பாரு என்று யோசித்து கொண்டிருந்தாள் சாரு.


தண்ணீர் குடிக்க போகும் போது அத்தை ஏதோ இரண்டு பொண்ணுடைய பெயர் சொன்னாங்களே என்று யோசித்தாள்.
கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிஷம் அமர்ந்து ஆழமாக சிந்தித்து "ஹான்... நியாபகம் வந்திருச்சு!" அவுங்க சொன்ன பெயர் சவிதா அன்ட் சஞ்சுளா.இந்த இரண்டு பெயரில் ஏதாவது ஒன்னுதான் இருக்கனும் என்று லேப்டாப்பை எடுத்து வேகமாக சவிதா என்று பாஸ்வேர்டு டைப் செய்ததும் லேப்டாப் ஓபன் ஆகிவிட்டது.லேப்டாப்பின் டெஸ்க்டாப் ஸ்கிரீனை பார்த்ததும் சாருவிற்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.


லேப்டாப் ஸ்கிரீனையே ரொம்ப நேரமாக உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் போது, மாடி படியில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு வேகமாக லேப்டாப்பை ஆப் செய்து பேக்கில் வைத்துவிட்டு பால்கனிக்குச் சென்றுவிட்டாள் சாரு.


யார் தான் அந்த சவிதாவும், சஞ்சுளாவும்? லேப்டாப் ஸ்கிரீனில் அப்படி எதைப் பார்த்தாள் சாரு? சந்துருவின் மனதில் புதைந்து கிடக்கும் ரகசியம்தான் என்ன? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 24


பார்கவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தான் பரத்.தன்னுடைய மருமகளை பரத் அழைத்து வருவதை பார்த்ததும் பங்கஜம் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.தன் தாயை பார்த்ததும் துள்ளி திரிந்து ஓடி ஒட்டிக் கொள்ளும் கன்றுக்குட்டி போல பார்கவியை பார்த்ததும், "அம்மா..." என்று ஓடிப் போய் பார்கவியைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டாள் சிவானி.தன் குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுத்தாள் பார்கவி.


"என்ன மன்னிச்சிரு பானு! நான் வரம்பு மீறி உன்ன ரொம்ப பேசிட்டேன்.ஒரு குடும்பத்துல உள்ள நாத்தானருக்கு அவளுடைய அம்மா ஸ்தானத்துல இருந்து பார்க்க வேண்டியது அந்த வீட்டோட மூத்த மருமகள் தான்.அப்படி இருக்க வேண்டிய நான் உன் நல்ல மனசை புரிஞ்சுக்காம்ம உனக்கு நிறையா துரோகம் பண்ணிட்டேன் பானு..." என்று கூறினாள் பார்கவி.


"நான் எப்பவும் உங்கள என்னுடைய இரண்டாவது அம்மாவதான் நினைக்கிறேன் அண்ணி..." என்றதும் பானுவையும் கட்டிப்பிடித்து அழுதாள் பார்கவி.


சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டு திண்ணையில் பார்கவியும் பானுவும் நக்கலடித்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த கனகராஜூம் பங்கஜமும் "இன்னைக்கு மாதிரி எப்போதும் இவுங்க இரண்டு பேரும் இப்படி சந்தோஷமாக இருக்கனுங்க..." என்று பங்கஜம் தன் கணவரிடத்தில் கூறினார்.


சாயங்காலமாக பானுவின் ரூமிற்கு சென்றார் பங்கஜம்.
"என்னம்மா... சத்தமா கூப்பிட்டிருந்த நானே வந்திருப்பேன்லம்மா.எதுவும் கடையில வாங்கிட்டு வரனுமாம்மா?" என்று கேட்டாள் பானு.


"சாருட்ட கொஞ்சம் பேசனும்மா பானு.நீ சாருவுக்கு போன் போட்டு கொடு!" என்று பானுவிடம் கேட்டார்.


"எதுக்கும்மா?" என்று கேட்டாள் பானு.


"சீக்கிரமா சாருக்கு முதல்ல போன் போட்டு தான்ம்மா பானு.அதுக்கு பிறகு உனக்கு எல்லா தெளிவாக சொல்லுறேன்" என்று கூறினார் பங்கஜம்.


பானு சாருவிற்கு கால் செய்தாள். சாருவின் போன் ரிங் அடித்தது. ஆனால் சாரு போனை தன்னுடைய அறையில வைத்து விட்டு கீழே சென்றிருந்தாள்.


சந்துரு மட்டும் தான் ரூமில் இருந்தான்.ரிங் அடிப்பது கேட்டும் சாருவின் மொபைலை கையில் எடுக்காமல் யார் அழைப்பது என்று போனின் டிஸ்ப்ளேவை பார்த்தான். பானுவின் நம்பரிலிருந்து அழைப்பு வந்தது.சாருவின் போனை எடுக்கலாமா? வேண்டாமா? என்று அவன் யோசிப்பதற்குள் போன் கால் கட்டாகி விட்டது.


"அம்மா! சாரு போன் காலை அட்டன் செய்யலம்மா" என்று கூறினாள் பானு.


"சரிம்மா பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் போட்டு பாரும்மா பானு" என்று கூறினார் பங்கஜம்.


என்ன நினைத்தானோ தெரியவில்லை சாருவின் போனை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான் சந்துரு.ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அம்மாவிடம் சென்று, "சாரு எங்கம்மா?" என்று சந்துரு கேட்டதும், பேசுறது நம்ம பையன் தானா! என்று ஆச்சரியப்பட்டார் ஜானகி அம்மா.


"என்னடா அதிசயமா இருக்கு! சாருவல தேடி வந்திருக்க..." என்று கேட்டதும், "சாரு போன் அடிச்சுக்கிட்டே இருந்துச்சு.பானு தான் கால் பண்ணிருக்காங்க.நிச்சயதார்த்தம் சம்பந்தமா எதுவும் கேட்க வேண்டியது இருந்தாலும் இருக்கும்ல.அதனால தான் சாருக்கிட்ட போனை கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்" என்று பதில் கூறனான சந்துரு.


"அதான பார்த்தேன்.எங்க நம்ம பிள்ளைக்கு எதுவும் திடீர்னு ஞான உதயம் பிறந்திருச்சோனு!" என்று கூறிக் கொண்டிருக்கும்போதே சாரு சமையலறையிலிருந்து ஹாலிற்கு வந்தாள்.


"இந்தாங்கங்க... உங்க போன்" என்று சாருவிடம் கொடுத்தான்."உங்களுக்கு பானு கால் பண்ணாங்க" என்று சந்துரு சொன்னதும், "தாங்ஸ்ங்க..." என்று சந்துருவிடம் கூறினாள் சாரு.


சந்துருவிடமிருந்து தன்னுடைய போனை வாங்கியவள் வீட்டிற்கு வெளியே உள்ள தோட்டத்திற்கு சென்று பானுவிற்கு போன் பண்ணினாள் சாரு.


"ஒரு நிமிஷம் சாரு! உங்கிட்ட அம்மா ஏதோ பேசனும்மா.லைன்லயே இரு சாரு!" என்று கூறிவிட்டு பானு மற்ற எதுவும் சாருவிடம் பேசாமல் தன்னுடைய அம்மாவிடம் போனை கொடுப்பதற்காக, பானு வேகமாக சமையலறைக்கு சென்று "அம்மா! சாரு லைன்ல இருக்கா பேசுங்க" என்று சொல்லி போனை பங்கஜம் அம்மாவிடம் கொடுத்தாள் பானு.


"ஹலோ சாரு!" என்று பானுவின் அம்மா பேசியதும் "வணக்கம்மா... சொல்லுங்கம்மா..." என்று கூறினாள் சாரு.


"உனக்கு எப்படி நன்றி சொல்வதுனே எனக்கு தெரியலம்மா சாரு..." என்று கூறினார் பங்கஜம்.


"ஏன்ம்மா பெரிய பெரிய வார்த்தையெல்லலாம் பேசி என்னை மூனாவது மனுஷியாக்குறீங்க.நான் அப்படி ஒன்னும்மே உங்களுக்கு பண்ணலையேம்மா" என்று சாரு கூறியதும், "அன்னைக்கு நீ மட்டும் எங்க வீட்டுக்கு வந்து பரத்கிட்ட பேசாம இருந்திருந்தா, இன்னைக்கு பரத்தோட வாழ்க்கையே கேள்வி குறியாகி இருக்கும்மா சாரு.நாங்க எல்லாரும் பார்வியை கூட்டிட்டு வாப்பானு எவ்வளவோ சொல்லிப் பார்த்தோமா.
ஆனால் நாங்க சொன்ன எதையுமே அவன் காதில் வாங்கிக் கொள்ளலமா சாரு.எந்த கடவுள் புண்ணியமோ தெரியலம்மா.நீ வந்து பேசுனதும் அவன் மனசுல ஏதோ பெரிய மாற்றம் வந்திருச்சு சாரு.எங்க யாருக்கிட்டையுமே சொல்லாமல் பார்கவி வீட்டுக்கு போய் எல்லாருக்கிட்டையும் மரியாதை குறைவா நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டதோடு மட்டுமில்லாமல் பார்கவிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டு அவளை திரும்பவும் எங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான்ம்மா சாரு.நான் காபி போட்டுக் கொண்டு வரும்போது நீ பரத்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததை யெல்லாம் நான் கேட்டுக்கிட்டு தான்ம்மா இருந்தேன்.நான் வந்துட்டா, எங்க நீ எதுவும் பேசாம அமைதியாகி விடுவியோனு நினைச்சு தான்ம்மா, நீ பேசி முடிச்ச பிறகு வந்தேன்.என் பிள்ளையோட எதிர்காலத்தையே காப்பாத்தி கொடுத்துட்டம்மா சாரு.உன் நல்ல மனசுக்கு எப்போதும் உனக்கு நல்லதே நடக்கும்மா.உன் எண்ணத்துக்கு ஏத்தாப்பல உன் வாழ்க்கை முழுவதும் நீ நல்லா இருக்கனும்மா" என்று சாருவை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தார் பங்கஜம்.


"என் மேல நீங்க காட்டும் அன்பிற்கு மிக்க நன்றி அம்மா.நான் எதுவும் பெருசா பண்ணலம்மா.எனக்கு தோணுனதை மட்டும் தான் சொன்னேன்.பரத் அண்ணா மாற்றத்திற்கு காரணம் உங்களுடைய வளர்ப்பு தான்ம்மா" என்றாள் சாரு.


"அண்ணி திரும்ப வந்ததுல ரொம்ப சந்தோஷம்மா.இனி நம்ம பானுவோட நிச்சயதார்த்தத்தை நீங்க நினைச்ச மாதிரி 'சாம் சாம்னு' நடத்திடலாம்மா" என்று கூறினாள் சாரு.


"ஆமாம் சாரு" என்றார் பங்கஜம்.


"சரிம்மா சாரு... கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு பங்சன்ல பார்க்கலாம்மா..." என்று கூறிவிட்டு போனை கட் செய்தார் பங்கஜம்.


பானுவின் அம்மாவோடு பேசி முடித்ததும் தோட்டத்தில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டு சந்துருவின் லேப்டாப்பின் ஸ்கிரீனில் இருந்த அந்த வால்பேப்பரையே நினைத்து யோசித்து கொண்டிருந்தாள்.இந்த சவிதாவும் சஞ்சுளாவும் யாரு? நம்மக்கிட்ட அப்படி எந்த உண்மையை மறைக்க நினைக்கிறாங்க? மனோஜ் அண்ணா நிச்சயதார்த்தம் முடிந்ததும் அத்தைட்டயே போய் நேரடியாக கேட்டு பார்ப்போம்.கண்டிப்பா அவுங்களுக்கு தெரியாம இருக்க வாய்ப்பே இல்ல... என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள் சாரு.


பால்கனியில் நின்று கொண்டிருந்த சந்துரு சாருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.என்ன சாரு ஏதோ பெருசா ப்ளான் போடுறாங்க போல.தனியா உட்கார்ந்து அப்படி என்ன தீவிரமாக யோசிக்கிறாங்கனு தெரியலயே! என்று அவளையே கவனித்துக் கொண்டிருந்தான்.


உங்கக்கிட்ட நான் சரியா முகம் கொடுத்து பேசாததுக்கு நிச்சயமா உங்களுக்கு என் மேல மிகப்பெரிய வருத்தம் இருக்கும் சாரு.நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணுறேனு எனக்கு நல்லாவே தெரியும் சாரு.ஆனால் நான் என்ன செய்ய முடியும்.என் சூழ்நிலை அப்படி இருக்கே.உங்கக்கிட்ட எல்லா உண்மையையும் ஒரு நாள் கண்டிப்பா சொல்லியே தீருவேன்.என்னை பத்தி முழுசா தெரிஞ்சதுக்கு பிறகும் நீங்க என்னை மனசார ஏத்துக்குவீங்களானு பார்ப்போம் என்று சாருவை பார்த்துக் கொண்டே கூறினான்.


திடீரென சாரு திரும்பி பால்கனியில் நின்று கொண்டிருக்கும் சந்துருவை பார்த்தாள்.நாம்ம பால்கனியிலிருந்து பேசுவது எதுவும் சாருவின் காதில் கேட்டுருச்சோ! இங்கேயே பாக்குறாங்களே... என்று யோசித்தான்.


ஆமாம்.காற்றே தூது வந்து சாருவிடம் சொல்லியிருக்கும் போல.சந்துரு உன்னிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறான் சாரு என்று. சந்துருவின் மீது இவள் கொண்ட காதல் அவன் எங்கிருந்தாலும் அவளுக்கு காட்டிக் கொடுத்து விடுகிறது.சைகையிலே சந்துருவிடம் "என்னை எதுவும் கூப்பிட்டீங்களாங்க?" என்று கேட்டாள் சாரு.


"ஐயையோ! நம்ம மனசுகுள்ள நினைச்சு பேசுறது எப்படி இவுங்களுக்கு வெளியே கேட்டுச்சு?" என்று திகைத்து போனான்.


"இல்லங்க..." என்று கையை அசைத்து சைகையில் பதில் கூறினான் சந்துரு.


"என்னம்மா சொல்லுறீங்க.அண்ணா அண்ணியோட சேர்ந்து வாழ காரணம் சாருவாம்மா?" என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்டாள் பானு.


"ஆமாம் பானு.இப்படி ஒரு அன்பான பண்பான பொண்ண இதுவரைக்கும் நான் எங்கேயுமே பார்த்ததே இல்லை பானு.நம்மளும் நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிறவுங்க மத்தியில், நம்ம சுத்தியிருக்கவுங்களும் நல்லா இருக்கனும் என்று நினைக்கும் சாருவ மாதிரி நல்ல எண்ணம் கொண்ட பொண்ண இந்த காலத்துல பார்ப்பது ரொம்ப கஷ்டம்மா."


பரத்திடம் சாரு பேசிய அனைத்தையும் பானுவிடம் கூறினார் பங்கஜம்.


"இவ்வளவு பெரிய உதவியை நமக்கு செஞ்சிட்டு கடைசியா சாரு என்ன சொன்னா தெரியுமா பானு?"


"பரத் அண்ணா மாற்றத்திற்கு காரணம் உங்களுடைய வளர்ப்பு தான்ம்மா.நான் ஒன்னுமே பண்ணலனு சொல்லுறா பானு.சின்ன உதவி செஞ்சாலும் சிலர் எங்க போனாலும் சொல்லி காட்டுவாங்க. ஆனால் சாருவுக்கு எவ்வளவு பெருந்தன்மையான மனசுனு பாரும்மா பானு..." என்று தான் போனில் சாருவிடம் பேசிய அனைத்தையும் மகளிடம் சொல்லி முடித்தார் பங்கஜம்.


"சரிம்மா பானு... ரொம்ப நேரமாச்சு! நீ போய் சீக்கிரமா தூங்கும்மா..." என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார் பங்கஜம்.


தன்னுடைய ரூமிற்கு வந்தவள் வேகமாக மொபைலை எடுத்து மனோஜிற்கு கால் பண்ணினாள். போனை அட்டன் செய்ததும் "என்ன மேடம் ரொம்ப பிஸியா? மாமா உனக்காக காத்திருப்பேனு தெரியாதாம்மா?" என்று காதல் மோகத்தில் பானுவிடம் பேசிக் கொண்டிருந்தான் மனோஜ்.


"நீ நினைச்ச மாதிரி அண்ணா அண்ணி ஒன்னு சேர்ந்துட்டாங்க.
அவுங்க முன்னிலையில் தான் நம்ம நிச்சயதார்த்தம் நடக்க போகுது பானு.இப்போ நீ ஹேப்பி தான பானு?" என்று மனோஜ் கேட்டான்.


"எத்தனை அவமானம் பட்டாலும், துன்பங்கள் வந்தாலும் உங்க கரம் பற்றும் அந்த நொடி எல்லாம் மாயமா மறஞ்சிரும் சார்..." என்று கூறினாள் பானு.


நான் ரொம்ப ரொம்ப ஹேப்பி சார். சந்தோஷத்தில் என்ன பேசிகிறோம் என்பதையே மறந்து முதன் முறையாக "ஐ லவ் யூ சோ மச் சார்..." என்று மனோஜிடம் கூறினாள் பானு.


"இந்த வார்த்தைய கேட்க மாமா எத்தனை நாள் காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா பானு.மீ டூ லவ் யூ டி" என்று மனோஜ் கூறியதும் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றவள், "போதும்! போதும்! சார்... மிச்ச மீதி வச்சுருங்க கல்யாணத்து பிறகு எல்லாம் பேசிக்கலாம்" என்று கண்டிப்பாக பேசுவது போல் அவனிடம் நடித்தாள்.


"சரிங்க சார்... நாளைக்கு மண்டபத்துல மீட் பண்ணலாம் சார்..." என்று பானு கூறும் போது, "ஹேய் பானு! ஒரே ஒரு தடவை மட்டும் ஐ லவ் யூ மாமானு சொல்லு பானு" என்று கெஞ்சிக் கேட்டான்.


"போய் தூங்குற வேளையப் பாருங்க சார்.குட் நைட்..."என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்துவிட்டாள் பானு.


கட்டில் ஒன்றாக இருந்தாலும், தினமும் சந்துருவும் சாருவும் தூங்க போகும்போது இருவருக்கிடையே தலையனைகளை கொண்டு ஒரு பெரிய தடுப்பு சுவர் கட்டி விடுவான் சந்துரு.இதுவரை எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்த சாரு, இன்று மட்டும் ஏனோ தன்னுடைய தலையனையை தூக்கிக் கொண்டு கீழே பாய் விரித்து படுத்தாள்.


அதைப் பார்த்ததும் "ஏங்க கீழ படுத்துட்டீங்க? மேல வந்து படுங்க..." என்று சாருவை அழைத்தான் சந்துரு.


"பரவாயில்லங்க நீங்க நல்லா உருண்டு பிரண்டு படுத்துக்கோங்க. நான் கீழேயே படுத்துக்கிறேன்..." என்று கூறியதும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.


சாரு உதடளவில் பேசினாலும் உள்ளத்தால் மிகவும் நொந்து போகிவிட்டாள்.இன்னும் இரண்டே நாளுதாங்க இருக்கு சந்துரு.எப்படி உங்க முகத்த பார்க்காமல் நான் இங்க இருந்து சமாளிக்க போகிறேனு தெரியலங்க சந்துரு என்று அவன் வெளிநாட்டிற்கு திரும்ப செல்ல வேண்டிய நாள் நெருங்கி வந்து விட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாள்.


மனதில் சாருவின் மீது அன்பை வைத்திருக்கும் சந்துரு அவளைக் கண்டதும் விலகி செல்வதற்கான காரணம் என்ன? சாரு, உண்மையை எப்படி கண்டுபிடிக்க போகிறாள்? என்பதை அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 25


அதிகாலை பொழுது விடிந்தது. சந்துருவின் நிச்சயதார்த்ததிற்கு எப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோ அதற்கு ஒரு படி மேலாகவே மனோஜின் நிச்சயதார்த்ததிற்கு மண்டபம் முழுவதும் வண்ண நிற விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.மண்டபத்திற்கு போகும் வழியெல்லாம் விளக்குகள் அனைத்தையும் கண்ணாடி குடுவைக்குள் வைத்து கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.


மண்டபத்தின் வாசலில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைத்து அதில் பல வண்ண மலர்களாலும் செடிகளாலும் ஜோடித்து வைத்திருந்தனர். மலையிலிருந்து நீர்வீழ்ச்சி கொட்டுவது போல தண்ணீர் கொட்டி ஓடும் இடத்தில் படகு ஒன்று இருக்குமாறு வடிவமைத்திருந்தனர். கரையோரத்தில் மான்கள் தண்ணீர் அருந்துவது போலவும் மறுபக்கம் முயல்கள் துள்ளி குதித்து ஓடுவது போலவும் ஒரு பெண் குடத்தில் தண்ணீரை தூக்கிக் கொண்டு நடந்து செல்வது போலவும் வடிவமைத்து வைத்திருந்தனர்.


மண்டபத்தின் நுழைவாயிலில் வாழை மரத்திற்கு பதிலாக ஐந்தடி உயரம் கொண்ட பல மூங்கில் மரங்களைக் கட்டி வைத்திருந்தனர்.அத்துடன் மண்டபத்திற்குள் நுழைந்ததும் ஒரு புத்தர் சிலையும் இருந்தது.புத்தருக்கு முன்பு கண்ணாடி கோப்பைக்குள் ஒரு மெழுவர்த்தி எறிந்து கொண்டிருந்தது.
அது மிகவும் மருத்துவ குணம் கொண்ட நறுமண பொருட்களால் தயாரிக்கப்பட்ட மெழுவர்த்தியாக இருந்தது.மண்டபத்தின் தரை முழுவதும் புற்களால் தளம் அமைத்திருந்தனர்.பார்பதற்தறகே பச்சை பசேல் என்று காட்சியளித்து கண்ணிற்கு குழுமையாகவும் மனதிற்கு அமைதியை தரும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தனர்.


பெண் அழைப்பிற்காக சாருவும் அவளது உறவினர்களும் பானுவை அழைப்பதற்கு அவளது வீட்டிற்கு காரில் புறப்பிட்டுச் சென்றனர்.


"என்ன மேடம் தயாராகிட்டீங்களா? மனோஜ் அண்ணவா பார்க்க போலாமா?" என்று சிரித்ததுக் கொண்டே பானுவிடம் கேட்டாள் சாரு.


பானுவிற்கு வெட்கம் வந்துவிட்டது."நீ செஞ்ச உதவியை நான் எக்காலத்துக்கும் மறக்க மாட்டேன் சாரு.அம்மா ஏங்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னாங்க.ஒரு வார்த்தைல தாங்க்ஸ்னு சொல்லுறதுலாம் நீ செய்த உதவிக்கு ஈடாகாது."


"அம்மா பெரிய மனுஷி! சும்மாவே நீ ஓவரா டயலாக் பேசுவனு எனக்கு தெரியும்.கிழவி மாதிரி பேசாமல் பொண்ணா லக்ஷனமா சீக்கிரம் மேக்கப் முடிச்சிட்டு கிளம்புற வழியைப் பாரு" என்று கூறினாள் சாரு.


"நான் ரெடி தான் சாரு.வா! இப்போவே கிளம்பலாம்..." என்று பானு கூறியதும், "உன் அவசரம் எனக்கு புரியுது பானு..." என்று கூறினாள் சாரு.


மனோஜ், பானுவிற்கு மெஸேஜ் செய்து கொண்டிருந்தான்.அவள் பதில் ஏதும் அனுப்பாததால் போன் பண்ணினான்.
மொபைல் ரிங் அடித்ததும் வேகமாக அட்டன் செய்தாள் பானு.பானு பேசுவதற்குள் அவளிடமிருந்து போனை வாங்கி பானுவின் அண்ணி பார்கவி மனோஜிடம் பேசினாள்.


"ஹலோ! நான் பானுவோட அண்ணி பேசுறேங்க.இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டில இருந்து கிளம்பிடுவோம்.பொண்ண நேர்ல வந்ததும் பாரத்து பேசிக்கோங்க..." என்று கூறியதும், பதில் ஒன்றும் பேச முடியாமல் வெட்கத்தில் போனை வைத்துவிட்டான் மனோஜ்.


மனோஜின் அருகிலிருந்த சந்துரு, "நல்லா பல்ப் வாங்குனுயா?"என்று கூறிக் கொண்டே சிரித்தான்.


"விட்டா மாப்பிள இப்போவே மோதிரம் மாட்டி விடுறதுக்கு பதிலா, பானு கழுத்துல டேரக்ட்டா தாலியை கட்டிருவாரு போல இருக்குடி..." என்று பானுவின் உறவினர்கள் அனைவரும் நக்கலடித்து சிரித்துக் கொண்டிருந்தனர்.


மனோஜூம் சந்துருவும் பேசிக் கொண்டிருக்கும் போது ட்ரம்ஸ் சத்தம் கேட்டது.மாப்பிள்ளையை மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்காக பரத்துடன் சேர்ந்து உறவினர்கள் சிலர் ஜானகி அம்மாவின் வீட்டிற்கு வந்தனர். சம்பிரதாய முறைப்படி சில சடங்குகளை முடித்துவிட்டு மேள தாள வாத்தியங்களுடன் மாப்பிள்ளையை மண்டபத்திற்கு குதிரையில் அழைத்துச் சென்றனர்.


மண்டபத்தின் அலங்காரத்தையும் ஏற்பாடுகளையும் பார்த்த மனோஜ் மெய்சிலிர்த்து போனான்.முக்கியமாக புத்தர் சிலையையும் மூங்கில் மரங்களையும் பார்த்ததும் எல்லாம் சந்துருவின் ஏற்பாடாக இருக்கும் என்பதை உணர்ந்தான். மாப்பிள்ளையை மண்டபத்திற்குள் அழைத்து சென்ற பத்து நிமிடத்தில் காரில் வந்து இறங்கினாள் பானு.


மணமேடையில் பானுவை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான் மனோஜ்.நிச்சயதார்த்த வேலையில் பிஸியாக இருந்ததால் காலையிலிருந்து சந்துருவை பார்க்கவே இல்லை சாரு. மண்டப்பதிற்குள் நுழைந்ததும் சாருவின் கண்களிரண்டும் கடலில் வலை வீசி மீனைத் தேடுவதை போல சந்துருவை தேடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் வலையில் சிக்கவே இல்லை சந்துரு.சிறிது நேரத்தில் சாருவின் மொபைல் ரிங் அடித்தது. வேற யாருமில்லை சந்துரு தான்.சந்துருவை சாரு தேடுவது தெரிந்து விட்டதோ என்னமோ? சந்துருவின் நம்பரை பார்த்ததும் ரிங் அடித்த அடுத்த நொடியே அட்டன் செய்து பேசினாள் சாரு.


"ஹலோ! சொல்லுங்கங்க..." என்றாள்.


"மண்டபத்துக்கு கீழ உள்ள சாப்பாட்டு ஹாலுக்கு சீக்கிரம் வாங்கங்க..." என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டான் சந்துரு.


மேடையிலிருந்த மனோஜ், "சந்துரு எங்கம்மா? ரொம்ப நேரமா ஆளையே காணோம்" என்று ஜானகி அம்மாவிடம் கேட்டான்.


"இங்கதான் எங்கேயாவது இருப்பான் மனோஜ்.இப்போ வந்துருவான்" என்று பதில் கூறினார் ஜானகி அம்மா.


"சந்துரு என்ன? ஏது? என்று எதுவும் கூறாமல் வேகமாக போன் காலை கட் செய்துவிட்டதும் சந்துரு எதற்காக நம்மள கூப்பிடுறாங்க? ஒன்றுமே புரியவில்லையே" என்று சிந்தித்து கொண்டே மண்டபத்தின் சாப்பாட்டு ஹாலுக்கு சென்றாள்.


சாரு வருவதை பார்த்ததும் சந்துரு அவளை நோக்கி வேகமாக சென்றான்.


"என்னங்க... எதுவும் முக்ககியமான விஷயமா?"என்று கேட்டாள் சாரு.


"ஆமாங்க..." என்று சாருவிடம் சொல்ல வந்ததைக் கூறிவிட்டு வேகமாக மனமேடைக்கு சென்றான்.


பரத்தும் பார்கவியும் நிச்சயதார்த்திற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று கவனித்து கொண்டிருந்ததை பார்த்த பானுவின் அப்பா அம்மாவின் நெஞ்சம் அவர்களைக் கண்டு நெகிழ்ந்தது.


ஆசைக் காதலனின் கரம் பற்றிக் கொள்ள நீல வண்ணப்பட்டுத்தி மேடையில் ஏறி மனோஜின் அருகில் வந்து நின்றாள் பானு.பானுவை பார்த்து "தேவதை மாதிரி இருக்க பானு" என்று கூறினான் மனோஜ். பானு வெட்கப்பட்டு சிரித்தாள்.


"நாழிகை ஆகிடுச்சு! பொண்ணும் மாப்பிள்ளையும் மாலையை மாத்திக்கோங்க..." என்று கூறினார் புரோகிதர்.


மனோஜ் பானுவின் கரங்களைப் பிடித்து மோதிரம் போட்டு விட்டான்.அதற்கு பிறகு பானு மனோஜிற்கு நிச்சயதார்த்த மோதிரத்தை போட்டு விட்டாள்.


"அப்பா அம்மாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க..." என்று சொன்னதும் முதலில் மனோஜூம் பானுவும் ஜானகி அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றனர்.


அதற்கு பிறகு பானுவின் அப்பா அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றனர்.பங்கஜம் அம்மாவின் கண்கள் கலங்கியது."நீடுழி வாழ்க! வாழ்க வளமுடன்!" என்று கூறி ஆசிர்வாதம் செய்தார் பங்கஜம்.


பரத் பார்கவியிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்கு காலில் விழப் போகும் முன்பே அவர்கள் "அதெல்லாம் வேண்டாங்க மாப்ள... நாங்களும் வயசுல சின்னவுங்கதான்" என்று கூறினான் பரத்.


அவன் என்னதான் கூறினாலும் மனோஜூம் பானுவும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.நிச்சயதார்த்திற்கு வந்தவர்கள் அனைவரும் மனோஜ் மற்றும் பானுவிற்கு பரிசைக் கொடுத்துவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.


பானுவோடு பணிபுரியும் சக ஆசிரியர்கள் அனைவரும் வந்து வாழ்த்து தெரிவித்து விட்டு, "நீ சொன்ன மாதிரியே காதலிச்ச பையனையே நிச்சயம் பண்ணிட்ட பானு.வாழ்க வளமுடன்!" என்று கூறிவிட்டு சென்றனர்.


"என்னங்க சார்... மண்டபத்தோட அலங்காரம்லா பலமா இருக்கு சார்.உங்களுக்கு பிடித்த மூங்கில் மரத்தோடு புத்தர் சிலையும் புல்லாங்குழல் இசையும் பயங்கரமா இருக்கு" என்று மனோஜிடம் மெதுவாக காதின் அருகில் சென்று கூறிக் கொண்டிருந்தாள் பானு.


"எனக்கே பார்த்ததும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது பானு.எல்லாம் சந்துருவோட ஏற்பாடாகத்தான் இருக்கும்" என்று கூறினான் மனோஜ்.


"அங்க பாருங்க டீச்சர்! சாருவையும் அவளோட மாப்பிள்ளையும் பார்க்க அப்படியே ஹீரோ ஹீரோயின் மாதிரி இருக்காங்கள..." என்று சாருவோடு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களில் ஒருவர் கூறினார்."இரண்டு பேரும் செம ஜோடில" என்று ஜானகி அம்மாவிற்கு பின் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


அதைக்கேட்டதும் ஜானகி அம்மாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.சந்துருவும் சாருவும் ஒன்றாக சேர்ந்து மேடைக்கு சென்று மனோஜிற்கும் பானுவிற்கும் வாழ்த்து தெரிவித்தனர்.


சாருவை பார்த்து கண்ணால் சைகை கொடுத்தான் சந்துரு.அவளும் கண் இமைகளை அசைத்து ஓகே! என்று கூறினாள்.


"நான் வந்தவுங்கள போய் கவனிக்கிறேன் மனோஜ்" என்று கூறிவிட்டு சந்துரு மட்டும் மேடையிலிருந்து கீழே இறங்கி சென்றான்.


மனோஜ்க்கு புல்லாங்குழல் வாசிக்க ரொம்ப பிடிக்கும் என்பதால் புல்லாங்குழலில் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இசைக் கச்சேரி முடிந்த பிறகு போட்டோ சூட் நடந்தது.பானுவும் மனோஜூம் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுப்பதை ரசித்துக் கொண்டிருந்த சாரு, தன் ஆசை நாயகனோடு கடற்கரையில் இருவரும் போட்டோ சூட் எடுப்பது போல கற்பனை செய்து பார்த்தாள்.


நீல நிற கவுன் அணிந்து, காதில் பூ மாடல் உள்ள வைரக் கம்மல் அணிந்து, கழுத்தில் கயிறு போன்ற மெல்லிய செயினும் அதில் இரு இதயங்கள் சேர்ந்து இருப்பது போல டாலரும் அணிந்து கடற்கரையில் சாரு ஓடுவது போலவும் சந்துரு அவளைப் பிடிப்பது போலவும் அந்த காட்சியை போட்டோகிராஃப்பர் போட்டோ எடுப்பது போன்று கற்பனையில் நினைத்து மிதந்து கொண்டிருந்தாள் சாரு.


"ஏங்க! ஏங்க!" என்று ஒரு குரல் கேட்டதும் கற்பனை உலகிலிருந்து நிஜ உலகிற்கு வந்தாள் சாரு.


"போங்கங்க! டைம் ஆச்சு!" என்று சாருவிடம் கூறினான் சந்துரு.
போட்டோகிராஃப்பரிடம் சென்று சந்துரு சொன்ன விஷயத்தை கூறினாள் சாரு.


"சரிங்க மேடம்.நான் பார்த்துக்கிறேன்" என்று பதில் கூறினார் போட்டோகிராஃப்பர்.


மனோஜூம் பானுவும் சாப்பிட்டு முடித்ததும், "மண்டபத்தின் வாசலில் சீனரிஸ் நல்லா இருக்கு சார்.ஒரு பத்து நிமிஷம் வெளியே வந்தீங்கனா அங்க வச்சு கொஞ்சம் போட்டோஸ் எடுத்திடலாம் சார்..." என்று மனோஜிடம் கூறினார் போட்டோகிராஃப்பர்.மனோஜூம் பானுவும் மண்டபத்திற்கு வெளியே வந்ததும், சாரு "குக்கூ... குக்கூ..." என்று சந்துருவிற்கு சைகையில் கூவினாள்.


சாரு சைகை கொடுத்த மறுநொடி மண்டபத்தின் மேலிருந்து கொட்டும் அருவி போல துலீப் மலர்கள் பத்து நிமிடங்கள் விடாமல் மனோஜ் மற்றும் பானுவின் மீது விழுந்து கொண்டிருந்தது.


இந்த ப்ளானுக்காக தான் சாருவை அழைத்திருந்தான் சந்துரு.சந்துரு மாடியிலிருந்து கீழறங்கி வந்ததும்
'தாங்க் யூ சோ மச்டா மச்சான்' என்று கூறினான் மனோஜ்.


நீங்க மட்டும் ஹெல்ப் பண்ணாட்டீ இந்த சர்ப்ரைஸே மனோஜ்க்கு கொடுத்திருக்க முடியாதுங்க.'தாங்க் யூங்க' என்று சாருவிடம் கூறிக் கொண்டிருக்கும் போது சந்துருவிற்கு திடீரென ஒரு போன் கால் வந்தது.அவள் திருப்பி பதில் சொல்வதற்குள் மொபைலில் பேசிக் கொண்டே சென்றுவிட்டான் சந்துரு.


சந்துரு மொபைலில் பேசும் போது "அப்படியா டாக்டர்! இதோ இப்போ வந்திர்றேன்" என்று அவன் பேசியது சாருவின் காதில் விழுந்தது.


"கொஞ்சம் அர்ஜெண்ட் ஒர்க்குங்க. நான் ஒரு ஹாப் அன் ஆர்ல வந்திர்றேன்.அம்மா கேட்டா சொல்லிருங்க" என்று கூறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றான் சந்துரு.


"இந்த நேரத்துல போய் அப்படி என்ன அர்ஜெண்ட் ஒர்க் இவுங்களுக்கு? எத்தனை நாளுக்குத்தான் உண்மை சொல்லாமல் மூடி மறைக்கிறாங்கனு பார்ப்போம்" என்று கூறிவிட்டு மண்டபத்திற்குள் சென்றாள் சாரு.


நிச்சயதார்த்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் விதைப்பந்துடன் புத்தர் சிலையையும் பழங்களையும் வைத்து தாம்பூலப்பை வழங்கினார்கள்.நிச்சயதார்த்திற்கு வந்தவர்கள் அனைவரின் வயிறும், மனமும் நிறைந்தது.


"நிச்சயதார்த்த ஏற்பாடுலாம் அட்டகாசமாக செஞ்சு வந்த எல்லாரையும் ஆச்சிரியப்பட வச்சுட்டீங்க சம்பந்தி அம்மா" என்று ஜானகி அம்மாவிடம் கூறினார் கனகராஜ்.


"எல்லாமே பார்த்து பார்த்து ப்ளான் பண்ணது சந்துரு தாங்க சம்பந்தி" என்று கூறினார் ஜானகி அம்மா.


சொன்னது போல அரைமணி நேரத்தில் திரும்பி வந்தான் சந்துரு. சந்துருவின் முகம் சற்று வாட்டமாக இருந்ததை சாரு கவனித்தாள்.


பானுவும் மனோஜூம் கையைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தனர். "பானு வாம்மா! கிளம்பலாம்..." என்று பார்கவி அழைத்தாள்.


"கண்டிப்பா போகனுமா பானு? இன்னும் கொஞ்சம் நேரம் என் கூட இருந்து பேசிட்டு போகலாம் பானு" என்றான் மனோஜ்.


"சார்... அண்ணி இருக்காங்க கையை விடுங்க.நாளைக்கு பார்க்கலாம்..." என்று கூறிவிட்டு சென்றாள் பானு.


"சரிங்க சம்பந்திம்மா... அப்போ நாங்க கிளம்புறோம்" என்று கூறிவிட்டு பானுவின் குடும்பத்தினர் புறப்பட்டனர்.அவர்கள் புறப்படும் சமயம், பானுவை பார்த்து கண்ணடித்து டாட்டா என்று கூறினான் மனோஜ்.


ஜானகி அம்மா குடும்பத்தினரும் மண்டபத்திலிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


வீட்டிற்கு வந்ததும் சந்துரு வேகமாக தன்னுடைய அறைக்குச் சென்று பைலை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.சாரு வரும் சத்தம் கேட்டதும் பைலை அலமாரியில் வைத்துவிட்டு மேலிருந்து ட்ராலியை கீழே இறக்கினான்.


மண்டபத்திலிருந்து வந்ததும் ட்ரஸ் கூட சேஞ் பண்ணாம இப்போ எதுக்கு ட்ராலியை எடுக்குறாங்க? எதையோ சமாளிக்க ட்ரைப் பண்ணுறாங்க என்று யூகித்தாள்.சாருவின் சந்தேகம் மேலும் அதிகரித்துவிட்டது.


சந்துருவிடம் எதுவும் கேட்காமல் ட்ரஸ் சேஞ் செய்துவிட்டு பங்ஷனில் அலைந்து திரிந்ததில் உடல் அசதியில் படுத்து உறங்கிவிட்டாள் சாரு.


நிச்சயதார்த்தத்தின் போது எங்கே சென்றான் சந்துரு?சாருவிடமிருந்து மறைக்கும் பைலில் இருக்கும் ரகசியம்தான் என்ன? என்று இனி வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 26

மறுநாள் அதிகாலையிலே சாரு எழுந்து கட்டிலில் நல்லா கொறட்டை விட்டு அசந்து படுத்து தூங்கிக் கொண்டிருந்த சந்துருவையே நீண்ட நேரமாக கண்களை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் சாரு. தினமும் காலையில் சந்துரு எழுவதற்கு முன்பு அவனை பார்த்து ரசித்து மகிழ்ச்சியடைவது சாருவின் வழக்கம் தான்.ஆனால் இன்று மட்டும் ஏனோ தெரியவில்லை அவள் அவனை நோக்கும் போது சாருவின் கண்களில் அவளை அறியாமலே கண்ணீர் வழிந்தது.


"நாளைக்கு காலையில் யார் முகத்தை பார்த்து ரசிப்பேன்ங்க சந்துரு? என்னை தனியாக தவிக்க விட்டுட்டு நீங்க மட்டும் அமெரிக்காவுக்கு கிளம்ப போறீங்களா?" என்று தன்னுடைய மனகுமுறலை அவனிடம் நேரில் சொல்ல முடியாமல் அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள் சாரு.


சாரு பேசி முடித்ததும் சந்துரு முழித்துவிட்டான்.சாருவிற்கு பக்குனு ஆகிடுச்சு.சந்துருவின் கண்கள் திறக்கும்போது சாரு வேகமாக எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.சந்துரு எழுந்து ப்ரஸ்அப் ஆகினதும் சாரு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான்.


"அம்மா! பேக்கிங் பண்ண வேண்டிய திங்க்ஸ்லாம் ரெடியாம்மா?" என்று ஜானகி அம்மாவிடம் கேட்டான் சந்துரு.


"இரண்டு நாளைக்கு முன்னாடியே சாரு எல்லாத்தையும் கவர்ல போட்டு பேக் பண்ணிட்டா சந்துரு..."


"ஏம்மா சாரு! நீ சந்துருட்ட சொல்லலையாம்மா?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"நிச்சயதார்த்த ஒர்க் இருந்ததால சொல்ல மறந்துட்டேன் அத்தை..." என்று கூறினாள் சாரு.


"ஓகேம்மா! அப்போ நான் போய் ட்ராலில எல்லாத்தையும் வச்சு பேக் பண்ணுறேன்.ஈவினிங் ஆறு மணிக்கு ட்ரைன்.நைட் டின்னர்க்கு சப்பாத்தி பேக் பண்ண சொல்லிருங்கம்மா..." என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றான் சந்துரு.


சாருவும் அவன் பின்னே சென்றாள்.சந்துருவிற்கு பேக்கிங் தேவையான அனைத்தையும் சந்துருவிடம் எடுத்துக் கொடுத்தாள். சந்துரு வேக வேகமாக ட்ராலியில் அவனுடைய திங்க்ஸையெல்லாம் அடுக்கி வைத்து பேக் பண்ணிக் கொண்டிருந்தான்.அவன் செக் லிஸ்ட்டை கையில் வைத்துக் கொண்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரிப்பார்த்து கொண்டிருந்தான்.அதற்கு பிறகு வெயிட் செக் செய்தான்.எடை துல்லியமாக முப்பது கிலோ இருந்தது.
பேக்கிங் வேலை முடிந்ததும் சந்துரு எதுவும் சொல்லாமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.


சந்துரு சென்றதும் சாருவின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவரும் சந்துருவை வழி அனுப்பி வைப்பதற்காக வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று உபசரித்து பேசிக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.பானுவும் மனோஜூம் போனில் இரண்டு மணி நேரமாக பேசிக் கொண்டிருந்தனர்.


"பேக்கிங்லா ஓவராங்க சார்?" என்று பானு கேட்டதும், "மாமா போன வாரமே ப்ளான் பண்ணி பேக்கிங் ஒர்க் முடுச்சுட்டேன் செல்லம்..." என்று கூறினான் மனோஜ்.


இங்கு சாருவோ சந்துருவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு.இவுங்கள ஆளக் காணோமே என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் வேகமாக நுழைந்தான் சந்துரு. ரூம்மிற்கு வேகமாக சென்று பத்தே நிமிஷத்துல கிளம்பி தயாராகி கீழே இறங்கி வந்த சந்துரு, நேராக ஜானகி அம்மாவின் அறைக்கு சென்றான். பதினைந்து நிமிடங்கள் அம்மாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.


"வேளை வேளைக்கு கரெக்டா சாப்பிடுங்கம்மா.நேரத்துக்கு தூங்குங்க.சாருக்கு நம்ம வீட்டுல இருக்க ஒரு மாதிரி இருந்தா அவளோட வீட்டுக்கு வேணா அனுப்பி வையுங்கம்மா" என்று கூறினான்.


"விசா வர்றதுக்கு எப்படியும் இரண்டு மாசம் ஆகும்னு நினைக்கிறேன்" என்று கூறிக் கொண்டிருந்தான் சந்துரு.


"சரிம்மா டைம் ஆச்சு.நாம்ம ஸ்டேஷனுக்கு கிளம்பலாம்" என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு லக்கேஜ் எடுக்கச் சென்றான்.
குட்டிப் போட்ட பூனைப் போல சாரு சந்துருவையே சுத்தி சுத்தி வலம் வந்துக் கொண்டிருந்தாள்.ஆனால் சந்துரு கிளம்பும் அவசரத்தில் சாருவை கண்டு கொள்ளவே இல்லை.சந்துரு லக்கேஜ் எடுத்துக் கொண்டு ரூமை விட்டு கிளம்பும் நேரத்தில் "ஏங்க..." என்று சாருவை அழைத்ததும், ஆசையோடு அவனருகில் வந்தவளிடம் "அந்த மொபைல் ஜார்ஜரை மட்டும் எடுத்து தர்றீங்களா?" என்று கேட்டான்.


ஜார்ஜரை எடுத்து கொடுத்ததும் வேற ஏதும் பேசாமல் கீழே இறங்கி சென்றான் சந்துரு.மனோஜூம் லக்கேஜை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.இருவரும் ஜானகி அம்மாவிடமும் சாருவின் குடும்பத்தாரிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ட்ராலியை இழுத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டனர்.
சாருவின் கண்கள் கலங்கியது. சந்துருவையும் மனோஜையும் வழி அனுப்பி வைப்பதற்காக, குடும்பத்தில் உள்ள அனைவரும் ரயில்வே ஸ்டேஷன் வரை சென்றனர்.


சந்துரு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தான்.சாருவின் தாத்தா பாட்டி சாரு எல்லோரும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.
சாரு சந்துருவையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த தாத்தா, "பேராண்டி கொஞ்சம் பின்னாடி வந்து உக்காருறீயாப்பா? எனக்கு கொஞ்சம் இடம் பத்தாமா இடுச்சுக்கிட்டு உட்கார்ற மாதிரி இருக்குப்பா..." என்று சந்துருவிடம் கூறினார்.


"சரிங்க தாத்தா" என்று கூறிவிட்டு பின் சீட்டிற்கு வந்து சாருவின் பக்கத்தில் அமர்ந்தான் சந்துரு.திடீரென ஒரு மாடு குறுக்கே சென்றதால் டக்குனு வண்டியை பிரேக் போட்டான் மனோஜ்.
பிரேக் போட்டதும் நடுவில் அமர்ந்திருந்த சாரு சந்துருவின் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள்.


"பார்த்து கவனமா ஓட்டு மனோஜ்!" என்று சந்துரு கூறினான்.


சந்துருவின் கையை பிடித்துக் கொள்ள சாருவிற்கு இது சரியான வாய்ப்பாக அமைந்துவிட்டது.


போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி

இது நிலை இல்லை
வெறும் மழை என்றோ
இது மழை இல்லை
சிறு மழை என்றோ

இந்த நொடிகள் கனவே எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு

போ உறவே…



என்ற பாட்டு வேற எப் எம்மில் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி பாடிக் கொண்டிருந்தது.


அது மேலும் சாருவின் மனதில் வேதனையை அதிகப்படுத்தியது. ரயில்வே ஸ்டேஷன் வரும்வரை சந்துருவின் கையை விடவே இல்லை சாரு.ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் சாருவின் கையை எடுத்துவிட்டு கீழே இறங்கினான் சந்துரு.மனோஜ் காரை விட்டு இறங்கியதும் ஸ்டேஷன் வாசலில் பார்த்தால், பானுவும் அவளது குடும்பத்தினரும் மனோஜை வழி அனுப்பி வைப்பதற்காக வந்திருந்தனர்.பானுவை பார்த்ததும் மனோஜிற்கு சந்தோஷத்தில் கையும் காலும் ஓடவில்லை.காரிலிருந்து லக்கேஜை எடுத்துக் கொண்டு வேகமாக அவளருகில் சென்றான்.


"ஹாய் டார்லிங்! நேத்து நைட் அவ்வளவு கெஞ்சியும் சென்ட் ஆஃப் பண்ண வர்ற மாட்டீங்கனு சிட்ரிக்ட்டா சொல்லிட்டு, இங்க வந்து பார்த்தா எனக்கு முன்னாடியே வந்து நிக்கிறீங்க மேடம்" என்று பானுவிடம் சிரித்துக் கொண்டே கேட்டான் மனோஜ்.


"உங்களுக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் முன்னாடியே இன்பார்ம் பண்ணல சார்..." என்று கூறினாள் பானு.


நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் இன்னும் ஐந்து நிமிடத்தில் மூன்றாவது தளத்திற்கு வந்து சேர்ந்துவிடும் என்று அறிவித்துக் கொண்டிருந்தனர்.சந்துரு தன்னிடம் ஏதாவது வாய் திறந்து பேச மாட்டானா? என்று சாருவின் மனது பரிதவித்துக் கொண்டிருந்தது.


சாருவைப் பார்த்த ஜானகி அம்மா சந்துருவிடம் சென்று "சாருக்கிட்ட போய் ஏதாவது பேசுடா..." என்று கூறினார்.


சந்துரு சாருவினருகில் சென்று பேசத் தொடங்கும் சமயம் பார்த்து 'கூ' என்ற சத்ததுடன் ட்ரைன் வந்துவிட்டது.


ட்ரைன் வருவதைப் பார்த்ததும் சாருவிடம் எதுவும் பேசாமலேயே ட்ரைனில் ஏறி அவனுடைய இடத்தின் நம்பரைத் தேடிப் பார்த்து அமர்ந்துவிட்டான்.


"ஓகே! சி யூ டியர்..."என்று பானுவிடம் கைக் குலுக்கி இனி டேரக்ட்டா கல்யாணத்துல மீட் பண்ணலாம்..." என்று மனோஜ் கூறியதும் பானுவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.


"ஹேய் பானு! இது என்ன சின்னப் பிள்ளை தனமா அழுதுக்கிட்டு இருக்க.ஓகே பானு! டேக் கேர்.ட்ரைன் அஞ்சு நிமிஷத்தில் கிளம்பிரும்" என்று சொல்லிவிட்டு ட்ரைனில் ஏறி அமர்ந்து ஜன்னல் வழியாக பானுவை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.


மற்றொரு ஜன்னலின் வழியாக சாருவை பார்த்தான் சந்துரு.
ஜன்னல் கம்பியைப் பிடித்திருந்த சாருவின் கையின் மீது தன்னுடைய கைகளை வைத்து 'டேக் கேர்ங்க' , 'ஸி யூ ஸூன்' என்று சந்துரு கூறினான். சந்துரு அக்கறையுடன் கூறியதை எண்ணி சந்தோஷப்படுவதா? இல்லை தன்னை விட்டு செல்வதை நினைத்து வருத்ததப்படுவதா? என்று புரியாமல் மனதில் நினைப்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் முக மலர்ச்சியுடன் "சரிங்கங்க... யூ டூ டேக் கேர்" என்று சாரு சொல்லியதும் ட்ரைன் கிளம்பியது.


ட்ரைன் கிளம்பியதும் எல்லோரும் வீட்டிற்கு கிளம்பிச் செல்லும் வழியில், திடீரென்று "ஏய்! ஏய்! நில்லுடி..." என்று கத்திக் கொண்டே ஒரு பொம்பளயை துரத்திக் கொண்டு ஓடினார் கண்ணம்மா.கண்ணம்மா துரத்திக் கொண்டு செல்வதைப் பார்த்ததும், சாரு வேகமாக மற்றொரு வழியாக சென்று அந்த பொம்பளை ஓடும் திசைக்கு எதிர்திசையில் ஓடிச் சென்று அந்த பொம்பளையைப் பிடித்துவிட்டாள் சாரு.மூச்சிழைக்க ஓடி வந்த கண்ணம்மா அந்த பொம்பளையின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார்."என்னுடைய குழந்தை எங்கடி?" என்று அழுதுக் கொண்டே அவளிடம் கேட்டார் கண்ணம்மா.


"என்னம்மா சொல்லுறீங்க? உங்க பையனை தூக்கிட்டு போனது இவுங்களாம்மா? நல்லா பார்த்து சொல்லுங்கம்மா..." என்று கேட்டாள் சாரு.


"நான் எப்படி சாரும்மா இந்த ராட்சசி முகத்தை மறக்க முடியும்? என் பையனை தூக்கிட்டு போன படுபாவி இவதான் சாரும்மா..." என்று கூறினார் கண்ணம்மா.


"நீங்களும் ஒரு பெண்ணா இருந்துக்கிட்டு எப்படிங்க இந்த மாதிரி காரியத்தை செய்ய உங்களுக்கு மனசு வந்தது?" என்று கேட்டாள் சாரு.


பதில் ஏதும் பேசாமல் அழுதுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.


"பண்ணுறதுலாம் பண்ணிட்டு இப்போ அழுது நாடகம் போடுறியாடி? அன்னைக்கு பாவம் பாத்து உனக்கு இரக்கப்பட்டதுக்கு எனக்கு நல்லா நன்றிக்கடன் செஞ்சுட்ட..." என்று கோபத்துடனும் கண்ணீருடனும் கத்தி கத்தி பேசினார் கண்ணம்மா.


"என் குழந்தையை என்னடி பண்ணுன? ஒழுங்கு மரியாதையா இப்போ சொல்லுறியா? இல்ல போலீஸ்க்கு கால் பண்ணட்டும்மா? அவுங்க வந்து முட்டிக்கு முட்டி தட்டுனா தான் நீ வாய துறந்து பதில் சொல்லுவ..." என்று கூறினார் கண்ணம்மா.


இருந்த இடம் தெரியாமல் எல்லோரிடமும் மெதுவாக பேசும் நம்ம கண்ணம்மவா இவ்வுளவு ஆக்ரோசமா பேசுறது என்று ஆச்சரியத்துடன் பார்த்தார் ஜானகி அம்மா.சாருவின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடிவந்தனர்.


அந்தப் பெண் வேகமாக கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்.


"அம்மா! என்ன மன்னிச்சுருங்கம்மா. என் பிள்ளை உயிரைக் காப்பாத்த எனக்கு வேற வழித் தெரியாமதான் அப்படி பண்ணிட்டேன்ம்மா..." என்று கூறினாள்.


"என்னடி அடுத்த ட்ராம போட்டு எங்கள ஏமாத்திட்டு தப்புச்சிரலாம்னு பாக்குறீயா?" என்று கேட்டார் கண்ணம்மா.


"என் பிள்ளை மேல் சத்தியமா நான் பொய் சொல்லலம்மா.என்னை நம்புங்க.நான் உண்மையை சொன்ன பிறகு நானே போலீஸ் ஸ்டேஷன்ல சரன்டர் ஆகிர்றேன்ம்மா..." என்று கூறினாள்.


கண்ணம்மாவும் சாருவும் எதுவும் பேசாமல் அவள் சொல்வதைக் கேட்க தொடங்கினர்.


"தினமும் நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷன்ல தான் கூடையில பழங்களை வச்சு பழ வியாபாரம் பார்த்துக்கிட்டு வந்தோம். நாங்க டெய்லியும் பழம் விக்கிறத பொருத்து தான் எங்க வயித்து பிழைப்பே ஓடும்.எங்களுக்கு ஒரே ஒரு பையன் இருந்தான்.ஒரு நாள் நாங்க வியாபாரம் பார்த்துக்கிட்டு இருந்தபோது ஸ்கூல்ல இருந்து திடீருனு போன் வந்தது.உங்க பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்.
ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம். சீக்கிரமா வாங்கனு சொல்லி கூப்பிட்டாங்க.நாங்க பதறி அடிச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போனோம்.டாக்டர் ஸ்கேன் எடுத்துட்டு வாங்கனு சொன்னாங்க.ஸ்கேன் ரிப்போர்ட்ட பார்த்துட்டு உங்க பையனுக்கு தலையில கட்டி இருக்கு. உடனே ஆப்ரேஷன் செய்யனும்.அஞ்சு லட்சம் வரை செலவாகும்னு டாக்டர் சொல்லிட்டாங்கம்மா.நாங்க ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறதே பெருசு.நாங்க எங்கிட்டு போய் அஞ்சுலட்சம் சேர்க்க முடியும்.தெருஞ்சவுங்க சொந்த காரங்க எல்லாருக்கிட்டையும் கேட்டுப் பார்த்து பணம் பிரட்டுனதுல எங்கனால ஒரு லட்சம் ரூபாய் கூட சேர்க்க முடியல. நான் என் பையனை நினைச்சசு ரயில்வே ஸ்டேஷன்ல அழுது புலம்பிக்கிட்டு இருந்ததைப் பார்த்த ஒரு அம்மா, எங்கிட்ட வந்து விசாரிச்சாங்க.


"நான் சொல்லுறத மட்டும் நீ செஞ்சுட்டனா அஞ்சு லட்ச ரூபாய் நான் உனக்கு தர்றேன்" என்று சொல்லி ஒரு குழந்தையை கடத்தி தரச் சொன்னாங்க.


ஆரம்பத்துல நான் சம்மதிக்கவே இல்லம்மா.நாளாக நாளாக என் பையன் அடிக்கடி மயக்கம் போட்டு விழத் தொடங்கிட்டான்.பிள்ளையை காப்பாத்த வேற வழி தெரியாம நான் சரினு சொல்லி சம்மதிச்சேன்.ஆனால் இன்னைக்கு என் பையன் உயிரோடையே இல்லம்மா.உங்க பிள்ளையை உங்கக்கிட்ட இருந்து பிரிச்ச பாவத்துக்குதான் கடவுள் என் பிள்ளையை ஏங்கிட்ட இருந்து நிரந்தரமா பிரிச்சுட்டாரும்மா..." என்று அழுதாள் அந்தப் பெண்.


"என் பையன யாருக்கிட்ட கொடுத்தீங்க அப்போ?" என்று கேட்டார்.


"நான் குழந்தையை வாங்குனதும் கொஞ்ச நேரத்துல போலீஸ் என்ன துரத்த ஆரம்புச்சுட்டாங்க.பயத்துல நான் போற வழியிலிருந்த குப்பைத் தொட்டில போட்டுட்டு ஓடிட்டேன்ம்மா... என்று அந்தப் பெண் சொன்னதும், "ஐயோ மதன்! நீ எங்கடா இருக்க?" என்று கண்ணம்மா தேம்பி அழுகத் தொடங்கிவிட்டார்.


"அம்மா அழாதீங்கம்மா! கண்டிப்பா உங்க பையனை கண்டுப்பிடிச்சிடலாம்..." என்று ஆறுதல் வார்த்தை கூறினாள் சாரு.


"நீங்க எந்த இடத்துல போட்டீங்கனு இப்போ எனக்கு சொல்ல முடியுமா?" என்று கேட்டாள் சாரு.


"நீங்க எல்லோரும் வீட்டுக்கு போய்க்கிட்டு இருங்க அத்தை.நாங்க சீக்கிரம் வந்திர்றோம்..." என்று கூறினாள் சாரு.


"நான் கூட துணைக்கு வர்றேன்ம்மா..." என்றார் சாருவின் அப்பா.


"நான் பரத்தை சாருக் கூட அனுப்பி வைக்கிறேன்.பரத் ப்ரெண்ட் தான் நம்ம ஏரியா இன்ஸ்பெக்ட்டர்.அதனால ஏதாவது ஒன்னுனா அவன் பார்த்துக்குவான்.நீங்க தைரியாம வீட்டுக்கு போங்க..." என்று கனகராஜ் கூறியதும் அனைவரும் புறப்பட்டு வீட்டுக்கு சென்றனர்.


இவர்கள் நான்கு பேரும் டாக்ஸியை பிடித்து அந்தப் பெண் காட்டும் வழியில் சென்று குப்பைத் தொட்டி இருந்த இடத்தை பார்த்தனர்.


குப்பைத் தொட்டி உடைந்து போய் கிடந்தது.அதைப் பார்த்ததும் குப்பைத் தொட்டியின் பக்கத்திலே மண்டி போட்டு அழுதுக்கொண்டு இருந்தார் கண்ணம்மா.


அந்த பக்கம் சென்று கொண்டிருந்த வயசான தாத்தா ஒருவர் அங்கு வந்து "எதுக்கும்மா அழுறீங்க?" என்று கேட்டார்.


"முப்பது வருஷத்துக்கு முன்னாடி இவுங்க குழந்தையை கடத்திட்டு வந்து இந்த குப்பைத் தொட்டியில போட்டு போயிருக்காங்க சார்" என்று சாரு கூறியதும், "அந்த குழந்தை ஆண் குழந்தையம்மா?" என்று கேட்டார் தாத்தா.


"ஆமாங்க ஐயா.நீங்க என் குழந்தையை பார்த்தீங்களா?" என்று கேட்டார் கண்ணம்மா.


"நான் தான்ம்மா அந்த குழந்தையை கொண்டு போய் பக்கத்துல இருக்கிற ஆசிரம்த்துல சேர்த்தேன்" என்று கூறினார்.


"வாங்க நான் உங்கள அங்க கூட்டிட்டு போறேன்" என்று சொல்லி அவரும் அவர்களுடன் சென்றார்.


ஆசிரமத்திற்குக சென்று விசாரித்து பார்த்ததில், அங்கு பணிபுரிந்த முன்னாள் சிஸ்டர் காலமாகி விட்டதாக தகவல் கூறினார்கள்.


"ஆனால் எல்லாருடைய ரெக்கார்டும் எங்கக்கிட்ட இருக்கு.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.நான் செக் பண்ணி சொல்லுறேனு" கூறினார் அங்கு பணிபுரியும் மற்றொரு சிஸ்டர்.


அரைமணி நேரத்திற்கு பிறகு ஒரு பெரிய நோட்டு புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்த சிஸ்டர், நீங்க சொன்ன நாள், கிழமை வச்சுப்பார்த்தால் அந்த தேதியில் வந்த ஆண் குழந்தையை பாரதிங்கிறவரு கொண்டு வந்து சேர்த்ததா ரெக்கார்டுல இருக்கு சார்" என்று கூறினார்.


"ஆமாம்மா... நான் தான் அந்த பாரதி" என்று கூறினார் அந்த தாத்தா.


சிஸ்டர் ரெக்கார்டை தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில், சாரு வெளியே வந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆயாம்மாவிடம் சென்று விசாரித்து பார்த்தாள்.


"எனக்கு நல்லா அந்த பையனை பற்றி தெரியும்மா" என்று கூறினார் அங்கு வேலைப் பார்க்கும் ஆயம்மா.


"ரொம்ப நல்ல பையன்ம்மா.எனக்கு மாசத்துக்கு ஒரு முறை கால் பண்ணி பேசிருவான்" என்று கூறினார்.


"அவுங்க இப்போ எங்க இருக்காங்கம்மா? அவுங்க போன் நம்பர் தர முடியுமா?" என்று கேட்டாள் சாரு.


"இப்போ அந்த பையன் வளர்ந்து பெரியாளாகி இன்ஞ்னியரா அமெரிக்காவுல வேலை பார்க்குறான்ம்மா" என்று கூறினார்.


தன்னுடைய மொபைலை எடுத்து ஆயாம்மா போன் நம்பரை பார்த்து சொன்னார்.சாரு அவளுடைய மொபைலில் போன் நம்பரை சேவ் செய்தாள்.அது அமெரிக்கா நம்பராக இருந்தது.


"மனோஜ் எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும்மா என்று சொன்னதும், "அந்த பையன் பெயர் என்னதும்மா சொன்னீங்க?" என்று கேட்டாள் சாரு.


அந்த பையன் பேரு மனோஜ் என்று சொன்னதும், நம்ம மனோஜ் அண்ணவா இருந்தாலும் இருக்குமோ என்று யோசித்தவள், "இப்போ உள்ள போட்டோவை காட்டுனா அடையாளம் சொல்லுவீங்களாம்மா?" என்று கேட்டாள்.


"ம்ம்... காட்டுங்ஙகம்மா" என்று கூறினார்.


சாரு வேகமாக மனோஜின் நிச்சயதார்த்த போட்டோவை எடுத்துக் காட்டினாள்.


"இதுதான்ம்மா அந்த பையன்" என்று ஆயாம்மா சொன்னதும், "தாங்க் யூ சோ மச்ம்மா" என்று கூறிவிட்டு கண்ணம்மாவிடம் வேகமாக ஓடிச் சென்றாள் சாரு.


"அம்மா! உங்க பையன் கிடச்சுட்டாங்கம்மா" என்று வேகமாக ஓடி வந்து கண்ணம்மாவை கட்டி அணைத்து கூறினாள் சாரு.


"எங்க இருக்கான் சாரும்மா? வாம்மா இப்போவே அங்க போய் பார்க்கலாம்" என்று கூறினார் கண்ணம்மா.


"இத்தனை நாளா நீங்க உங்க பையன் கூட தான்ம்மா இருந்திருக்கீங்க..." என்று சாரு கூறியதும் கண்ணம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.


"மதன் அண்ணா வேற யாருமில்லம்மா.நம்ம மனோஜ் அண்ணாதான்..." என்று கூறியதும் "என்ன சாரும்மா சொல்லுறீங்க? நீங்க சொல்லுறது உண்மையாம்மா?" என்று கேட்டார் கண்ணம்மா.


"ஆமாம்மா… இங்க வேலை பாக்குற ஆயம்மா தான்ம்மா சொன்னாங்க" என்று கூறினாள்.


"சாரும்மா நீங்க உடனே மனோஜ்க்கு கால் பண்ணுங்கம்மா" என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார் கண்ணம்மா.


"சரிங்கம்மா..." என்று சொல்லிவிட்டு வேகமாக மனோஜிற்கு கால் செய்தாள்.ஆனால் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்தது.


உடனே சந்துருவிற்கு கால் செய்து தகவல் சொல்லலாம் என்று பார்த்தால், நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று சொல்லியது.


தாத்தாவிற்கும், ஆயா அம்மாவிற்கும் நன்றி கூறிவிட்டு ஆசிரமத்திலிருந்து கிளம்பினார்கள்.


"இந்த பொம்பளயை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போய் கம்ப்ளைன்ட் கொடுத்திருவோம் சாரு" என்று பரத் கூறியதும், "வேண்டாம்ப்பா..." என்று கண்ணம்மா கூறினார்.


"எனக்குதான் என் பிள்ளை கிடைச்சுட்டானே.அது போதும்!" என்று கூறினார் கண்ணம்மா.


"சூழ்நிலை எப்படிப்பட்ட மனுஷனையும் மாத்திரும் போல.தெரிஞ்சோ தெரியமலோ தப்பு செஞ்சாலும் அது தப்பு தான்ங்க.என்னதான் நீங்க விளக்கம் கொடுத்தாலும், தப்பு
சரியாகிடாதுங்க.இனி இந்த மாதிரி குறுக்கு வழியில யோசிக்கிறதை நிறுத்திடுங்க!" என்று அந்த பொம்பளையிடம் கூறிவிட்டு மூன்று பேரும் வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர்.


வீட்டிற்குள் நுழைந்ததும் "பெரியம்மா... என் மதன் கிடைச்சுட்டான்" என்று கண்ணம்மா ஓடி வந்து சொன்னதும், ஒரு தாயின் மனவேதனை ஒரு தாய்க்கு தானே புரியும்."கடவுள் நம்மள கைவிடல கண்ணம்மா..." என்று கூறி அவளை கட்டி அணைத்து அழுதார் ஜானகி அம்மா.


"சாரு வீட்டிற்கு வரும் வழியிலே எல்லா விஷயத்தையும் எங்கிட்ட சொல்லிட்டா கண்ணம்மா.காலையில மனோஜ்க்கு கால் பண்ணி பார்ப்போம் கண்ணம்மா.இப்போ போய் நீ ரெஸ்ட் எடு!" என்று கூறினார் ஜானகி அம்மா.


"அப்போ நான் கிளம்புறேன் அத்தை" என்று கூறினான் பரத்.


"இன்னைக்கு நைட் இங்க தங்கிட்டு காலையில கிளம்பி வீட்டுக்கு போலாம்ப்பா பரத்.ரொம்ப லேட் ஆகிருச்சுப்பா..." என்று கூறினார் ஜானகி அம்மா.


"பரவாயில்ல அத்தை.டாக்ஸி வெயிட்டிங்க்ல இருக்கு.நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டுச் சென்றான் பரத்.


"நீயும் போய் ரெஸ்ட் எடும்மா சாரு" என்று கூறியதும், "சரிங்க அத்தை..." என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள் சாரு.


ரூமிற்குள் நுழைந்ததும் சந்துருவின் நினைவுகள் சாருவை வாட்டி வைத்தது.சாரு ட்ரஸ் சேஞ் பண்ணிய பிறகு சந்துரு உட்காரும் இடத்தில் எல்லாம் உட்கார்ந்தும், கட்டிலில் அவன் படுக்கும் இடத்தில் படுத்தும் பார்த்தாள் சாரு.வேகமாக டைரியை எடுத்து தன்னுடைய மனவேதனையை எல்லாம் எழுதி கொட்டித் தீர்த்தாள். டைரி எழுதி முடித்துவிட்டு மேஜையில் வைக்கும்போது சாருவின் கண்ணில் ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் தென்பட்டது. அதை எடுத்துப் பார்த்தாள் சாரு.


ப்ளைட்டில் ஏறும் முன் மனோஜிற்கு உண்மை தெரிந்துவிடுமா? அந்த மெடிக்கல் ரிப்போர்ட் யாருடையது? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 27


"என்ன அண்ணா சொல்லுறீங்க? மனோஜ் சாரோட அம்மா கண்ணம்மா அம்மாவா!" என்று பரத்திடம் கேட்டாள் பானு.


"ஆமாம் பானு.மனோஜ் அனாதை கிடையாதும்மா பானு..." என்று நடந்த அனைத்து சம்பவத்தையும் வீட்டிலுள்ள எல்லோரிடமும் கூறினான் பரத்.


"அவுங்களுக்கு தகவல் சொல்லியாச்சா அண்ணா?" என்று பானு கேட்டாள்.


"நாங்க எல்லாரும் எவ்வளவோ போன் ட்ரைப் பண்ணி பார்த்தோம்மா.ஆனால் மாப்ள போன் ஸ்விட்ச் ஆப்னே வருது.
மாப்ள ப்ரெண்ட்டுக்கும் கால் பண்ணி விஷயத்தை சொல்லிடலாம்னு போன் ட்ரைப் பண்ணி பார்த்தா, அவர் நம்பரும் அவுட் ஆஃப் ஆர்டர்னு வருதும்மா..." என்று கூறினான் பரத்.


"ரொம்ப சந்தோஷமான செய்தி சொல்லிருக்க பரத்.மாப்பிள்ளைக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க..." என்று கூறினார் பங்கஜம்.


தனது மகன் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் கண்ணம்மாவிற்கு தூக்கமே வரவில்லை.நீங்க எங்க இருக்கீங்கங்க? நம்ம பையன் கிடைச்சுட்டான்ங்க... என்று தன்னுடைய கணவரை நினைத்து அழுதுக் கொண்டே தூங்கிவிட்டார் கண்ணம்மா.


மேஜையின் மீது இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை வேகமாக எடுத்துப் பார்த்தாள் சாரு.ரிப்போர்ட்டில் இருந்த பெயரைப் பார்த்து ஷாக் ஆகிவிட்டாள் சாரு.அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டில் சவிதா என்று எழுதியிருந்தது.


சவிதா யாரு? இவரு எதுக்கு இவ்வளவு பெரிய விஷயத்தை நம்மக்கிட்ட இருந்து மூடி மறைக்க காரணம் என்ன? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


ஒரு பக்கம் சவிதாவை பற்றிய சிந்தனையும் மறுப்பக்கம் சந்துருவின் நினைவுகளும் சாருவை தூங்க விடாமல் செய்தது.


எதைப் பற்றியும் யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு தூங்குவோம் என்றென்னி காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க தொடங்கினாள் சாரு.


கண்ணில் மழை
நெஞ்சில் இடி
மின்னல் எழ
அங்கும் இங்கும்
நம் நினைவுகள் வந்தாடுதே....

கண்ணாடி மேல்
கல் வீசினோம்
காலை கீறும் ஓர் துகள் அது
நம் காதல் என்றானதே
என்னானதோ
பொய்யானதோ
பொய்யானதோ
மெய்யானதால்
மெய்யானதால்
மெய்யானதே
காதலை மாய்த்ததோ
தா நீ பழம் தா நீ பழம்
தேநீர் கரை தேநீர் கரை
நம் நாட்களில் சின்னமாய் நீளுதே
இன்னும் நீள நீள காயம் ஆறுமோ

கண்ணில் மழை
நெஞ்சில் இடி
மின்னல் எழ
காலம் நேரம் ஈரம் ஏதும் போதாது
அந்நாளிலே
மீண்டும் அந்த நாட்கள் கேட்க
வாழ்க்கை நண்பன் இல்லை
வழியே ஒளியே வழியே
வலியினும் அந்த மரணம் வரையாதே
ஒளியே ஒளியே
ஒளியின் நிழலாலே
ஒளிகிற இடம் ஏதோ

கண்ணாடி மேல்
கல் வீசினோம்
துண்டானதோ
மெய்யானதே பொய்யானதோ
தூரிகைகள் சாயம்
செய்ய காயம் ஆனதோ
நூலில் ஆடும் பொம்மையாக
காதல் இன்று ஊசல் ஆடுதோ

கண்ணில் மழை
நெஞ்சில் இடி
மின்னல் எழ
அங்கும் இங்கும்
நம் நினைவுகள் வந்தாடுதே ஓடுதே
என் செய்வதோ...


இந்த பாட்டைக் கேட்டதும் சாருவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி தலையனையே நனைந்து விட்டது.


பாடலின் ஒவ்வொரு வரிகளும் சாருவின் ஆழ்மனதிலிருந்த சந்துருவின் மீது அவள் கொண்ட தீராத காதலையும், அவனை விட்டு பிரிந்திருக்க முடியாமல் அவள் படும் பரிதவிப்பையும் யாரிடமும் சொல்லாமல் மனதில் போட்டு குலுங்கும் அவளின் மனவேதனை அனைத்தும் கண்களிலிருந்து கண்ணீராக வந்தது.இரவு ஒரு மணியாகிவிட்டது.ஆனாலும் சாருவிற்கு தூக்கமே வரவில்லை. சிறிது நேரத்தில் எப்படியோ அவளே அவளை சமாதானப்படுத்திக் கொண்டு உறங்கிவிட்டாள்.


ட்ரைனின் ஜன்னல் கம்பிகள் வழியாக தூங்காமல் நிலவையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் சந்துரு.


பௌர்ணமி நிலவைப் பார்த்ததும், சாருவின் பிரகாசமான முகமும், காந்தம் போன்ற அவளது கண்களும் சந்துருவிற்கு நியாபகம் வந்துவிட்டது. சாருவின் முகத்தை நினைத்துக் கொண்டே நிலவை பார்த்துக் கொண்டிருந்தான்.திடீரென அவனுடைய நினைவுகள் உயிர் பெற்றது போன்று சாருவின் முகம் நிலவில் தெரிய தொடங்கியது. கண்களை இமைக்காமல் மெல்லிய புன்முறுவலுடன் நிலவில் தன்னவளின் முகத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தான் சந்துரு.ஜன்னல் கம்பிகளின் வழியே வீசிய தென்றல் காற்று சந்துருவின் முகத்தில் பட்டதும் சாரு அவனைத் தீண்டுவது போல உணர்ந்தான். சாருவின் மடியில் தலை சாய்த்து உறங்குவது போல நினைத்து தலையனையில் தலையை வைத்து சாருவை நினைத்துக் கொண்டே உறங்கிவிட்டான் சந்துரு.


அதிகாலை நான்கு மணிக்கு வந்து சேர வேண்டிய ரயில் தாமதமாக சென்னையை வந்து சேர்ந்தது. சந்துருவும் மனோஜூம் டாக்ஸியைப் பிடித்து வேகமாக விமான நிலையத்திற்கு சென்றனர். டாக்ஸியில் செல்லும்போது சந்துருவின் மொபைல் ரிங் அடித்து கொண்டிருந்தது.சந்துரு போனை கட் செய்துவிட்டு "அண்ணா... கொஞ்சம் வேகமா போங்கனா" என்று டாக்ஸி டிரைவரிடம் கூறினான் சந்துரு.


விமான நிலையம் வந்ததும், சந்துருவும் மனோஜூம் அவசர அவசரமாக விமான நிலையத்திற்குள் ஓடிச் சென்றனர்.லக்கேஜ் செக்கிங் எல்லாம் முடிந்ததும் அவர்களுடைய கேட்டிற்குள் சென்று விமானத்திற்குள் நுழைந்தனர்.அவர்கள் சீட்டில் அமர்ந்து செட்டில் ஆனதும் மொபைலை எடுத்து சாருவிற்கு மெஸேஜ் செய்தான் சந்துரு.மனோஜ் தன்னுடைய மொபைலை எடுத்து ஜார்ஜ் போட்டு சுவிட்ச் ஆன் செய்து பானுவிடம் பேசலாம் என்று மொபைலை எடுக்கும் சமயத்தில் ப்ளைட் கிளம்ப தொடங்கியதால் பேச முடியாமல் போனது.சந்துரு மெஸேஜ் செய்த மறுகணம் சந்துருவிற்து போன் செய்தாள் சாரு.


சந்துரு அட்டன் செய்ததும் "கண்ணம்மா அம்மாதான் மனோஜ் அண்ணவோட அம்மாங்க..." என்று கூறினாள்.ஆனால் சந்துருவிற்கு சிக்னல் சரியாக கிடைக்காததால் கண்ணம்மா என்று சாரு கூறியது மட்டும்தான் கேட்டது.


"என்ன சொல்லுறீங்கங்க? கொஞ்சம் சத்தமா பேசுங்க..." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே போன் கட்டாகிவிட்டது.


"என்னடா சந்துரு என்னாச்சு?" என்று மனோஜ் கேட்டான்.


"சாரு ஏதோ திடீருனு கண்ணம்மானு கண்ணம்மா அம்மாவை பத்தி சொல்லுறாங்க.இந்த நேரத்துல எதுக்கு தேவையில்லாம அவுங்கள பத்தி சொல்லுறானு ஒன்னும் புரியலையேடா மனோஜ்" என்று கூறினான் சந்துரு.


"நம்ம சப்பாத்தி கரெக்ட்டா சாப்பிட்டோமானு கண்ணம்மா அம்மா கேட்டுருப்பாங்க... என்று மனோஜ் கூறியதும், "சம்மந்தமில்லாமல் ஏதாவது சொல்லாதடா மனோஜ்" என்று கூறினான் சந்துரு.


"பானுட்ட பேசிட்டியாடா?" என்று மனோஜிடம் கேட்டான் சந்துரு.


"இல்லடா நேத்து நைட் பேசிட்டு மொபைல் ஜார்ஜ் போடாம தூங்கிட்டேன் சந்துரு.இங்க வந்துதான் பார்த்தேன்.சுவிட்ச் ஆன் பண்ணதும் ப்ளைட ஸ்டார்ட் ஆகிடுச்சு.இனி எங்கிட்டு பேச முடியும்" என்று கூறினான் மனோஜ்.


"உன் முகம் ஏன்டா வாட்டமா இருக்கு? சாருவை நினைச்சு பீல் பண்ணுறியோ?" என்று கேட்டான் மனோஜ்


"அப்படிலாம் ஒன்னும் இல்லாடா. எனக்கு சவிதாவை நினைச்சு தான் கவலையா இருக்கு" என்று கூறினான் சந்துரு.


"ஏங்கிட்டேயே பூசி மொழுகுறியா சந்துரு.நீ சொல்லுறதை கேட்கும்போது சோத்துக்குள்ள முழு பூசணிக்காயை மறைச்சு வச்ச கதை மாதிரி இருக்கு. யாருட்ட பீலா விடுறா" என்று கேட்டான் மனோஜ்.


"எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. தொன தொனனு அறுக்காம கொஞ்சம் நேரம் அமைதியா இருடா மனோஜ்!" என்று கூறிவிட்டு காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு கண்களை மூடினான் சந்துரு.


"நீ சொன்னது எல்லாம் நிஜம் தான்ட்டா மனோஜ்.என் சிந்தனையெல்லாம் சாருவையே தான் சுத்திக்கிட்டே இருக்குடா.உங்கிட்ட என்னால ஓப்பனா என் மனசுல நினைக்கிறதை சொல்ல முடியலடா.என்னனு தெரில என்னால நார்மலா இருக்கவே முடியல மனோஜ்" என்று தன்னுள்ளே பேசிக் கொண்டிருந்தான் சந்துரு.


"என்னம்மா ஆச்சு? சின்ன ஐயாட்ட தகவல் சொல்லிட்டீங்களா சாரும்மா? ஏங்கிட்ட கொஞ்சம் போனை கொடுங்கம்மா.நான் மனோஜ்கிட்ட பேசிட்டு தர்றேன்" என்று தன்னுடைய மகனிடம் பேச வேண்டும் என்ற ஆசையில் சாரு பதில் சொல்வதற்குள் அவளை பேசவிடாமல் படபடவென்று பேசித்தீர்த்தார் கண்ணம்மா.


"அம்மா! இல்லம்மா அதுவந்து..." என்று சாரு இழுத்தாள்.தன் மகனிடம் பேச வேண்டும் என்று ஆசையோடு கேட்கும் கண்ணம்மாவிடம் எப்படி உண்மையை சொல்வது என்று தயங்கினாள் சாரு.


"ஏன் சாரு தயங்குற?" என்று ஜானகி அம்மா கேட்டதும், "அவுங்க போன ட்ரைன் கொஞ்சம் லேட்டாகிடுச்சா அத்தை.அதனால தான் அவுங்கனால நம்மகிட்ட போன் பேச முடியலயாம்.நீ அம்மாகிட்ட தகவல் சொல்லிடு" என்று சந்துரு மெஸேஜ் செய்ததையும், சந்துருவின் மெஸேஜை பார்த்ததும் சாரு உடனே போன் செய்து கண்ணம்மா அம்மாவை பற்றி சொல்லும் சமயம் பார்த்து ப்ளைட் டேக் ஆப் ஆனாதையும் தன்னுடைய மாமியாரிடம் கூறிக் கொண்டிருந்ததை கேட்டதும் கண்ணம்மா மீண்டும் அழத் தொடங்கினார்.


"அழாத கண்ணம்மா! நாளைக்கு காலையில பசங்க ரீச் ஆனதும் பேசிடலாம்.இத்தனை நாளா மதன் எங்க இருக்கானே தெரியாமல் எப்படி புலம்பிக்கிட்டு இருந்த கண்ணம்மா. இப்போ உன் பையன் யாரு? எங்க? எப்படி இருக்கானு? தெருஞ்ச பிறகு எதுக்கு இப்படி அழுகுற கண்ணம்மா?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


ஆக்கப் பொறுத்தவுங்களுக்கு "ஆறப் பொறுக்க முடியாதா கண்ணம்மா. பொறுத்தது பொறுத்துட்ட இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ கண்ணம்மா" என்று ஜானகி அம்மா கூறியதும், "சரிங்கம்மா..." என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றுவிட்டார் கண்ணம்மா.


சாரு வேகமாக ஹேன் பேக்கை மாட்டிக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.


"கொஞ்சம் ஆஸ்பத்திரி வரை போய்ட்டு வந்திர்றேன் அத்தை" என்று சாரு கூறியதும், "உடம்புக்கு எதுவும் சரியில்லயாம்மா" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"எனக்கு ஒன்னுமில்லை அத்தை.நான் நல்லாதான் இருக்கேன் அத்தை.என் ப்ரெண்ட் ஒருத்தி ஆஸ்பத்திரில அட்மிட் ஆகிருக்கா.அவளைத்தான் பார்க்க போறேன் என்று கூறினாள்.


"சரிம்மா பார்த்து பத்திரமா போய்ட்டு வா!" என்று கூறினார் ஜானகி அம்மா.


சாரு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்றதும், தன்னுடைய மாமியாரைப் பார்க்க ஜானகி அம்மாவின் வீட்டிற்கு வந்தாள் பானு.வீட்டிற்கு வந்தவள் வாசலில் இருந்து கொண்டே "சாரு! சாரு!" என்று கூப்பிட்டாள்.வாசலில் சாருவை கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார் ஜானகி அம்மா.


"வாம்மா பானு! ஏன் வீட்டுக்குள்ள வராமல் வாசல்லையே நிக்கிற?" என்று கேட்டார்.


"அது இல்லம்மா.முறைப்படி பார்த்தால் நான் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் இங்கேயே வரனும்.ஆனால் என் அத்தை யாருனு தெரிஞ்சதுக்கு பிறகு அவுங்கள பார்த்து நாலு வார்த்தை பேசிட்டு போகலாம்னு வந்தேன்ம்மா..." என்று கூறினாள் பானு.


"அதெல்லாம் ஒன்னுமில்ல பானு. நீ சும்மா வீட்டுக்குள்ள வாம்மா" என்று பானுவை அழைத்தார் ஜானகி அம்மா.


ஆனால் பானு வருவதற்கு ரொம்ப யோசித்ததால், "சரி பானு கொஞ்சம் இரு.நான் கண்ணம்மாவ போய் கூப்பிட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று கண்ணம்மாவை அழைத்து வந்தார் ஜானகி அம்மா.


கண்ணம்மா வந்ததும் அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, தன்னுடைய மாமியாரைக் கட்டி அணைத்து அழுதாள் பானு. கண்ணம்மாவும் பானுவும் வீட்டிற்கு வெளியே உள்ள தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கண்ணம்மாவை பார்த்ததும் சாருவை பற்றி கேட்பதற்கே மறந்துவிட்டாள் பானு.வீட்டிற்கு திரும்பி கிளம்பும் நேரத்தில்தான் சாருவை பற்றி கேட்டாள்.


"சாரு எங்கம்மா? ரொம்ப நேரமா ஆளையே காணோம்.ரூம்ல இருக்காளா?" என்று ஜானகி அம்மாவிடம் கேட்டாள்.


ப்ரெணட் யாரையோ ஆஸ்பத்திரிக்கு பார்க்க போயிருப்பதாக ஜானகி அம்மா கூறியதும், "சரிங்கம்மா..." என்று கூறினாள்.


"நான் சாருக்கிட்ட போன் பண்ணி பேசிக்கிறேன்ம்மா" என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டவள் வீட்டின் காம்பௌண்டை விட்டு தாண்டியதும், வீதியின் ஓரத்தில் நின்று சாருவிற்கு போன் செய்தாள் பானு.ஆனால் சாரு போனை அட்டன் செய்யாமல் கட் செய்ததும், நம்மள தவிர சாருக்கு யாருமே க்ளோஸ் ப்ரண்ட்ஸ் கிடையாது.சாரு யாரை பாக்குறதுக்கு போயிருக்கானு தெரியலையே! சரி வீட்டுக்கு போய்ட்டு பேசிக்கலாம் என்று ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டாள் பானு.


ஆஸ்பத்திரிக்கு நுழைந்த சாரு, நேராக ரிசப்ஷனிற்கு சென்று சவிதா இருக்கும் வார்டை குறித்து விசாரித்தாள்.


"டாக்டர் பெர்மிஷன் இருந்தாதான் மேடம்! நீங்க அவுங்கள பார்க்க முடியும்" என்று ரிசப்ஷனில் கூறியதும், "நான் டாக்டரை இப்போ பார்க்க முடியுமா?" என்று கேட்டாள் சாரு.


"ஒரு நிமிஷம் மேடம்" என்று கூறினார் ரிசப்ஷனில் பணிப்புரிபவர்.


"இந்தாங்க மேடம்! உங்க டோக்கன் நம்பர்" என்று சாருவிடம் கொடுத்தார்.


தன்னுடைய டோக்கன் நம்பர் வரும்வரை வெயிட்டிங் காலில் காத்துக் கொண்டிருந்தாள் சாரு.


"டோக்கன் நம்பர் இருபது வாங்க" என்றதும் வேகமாக டாக்டரின் அறைக்குள் சென்றாள்.


"குட்மார்னிங் சார்...நான் சந்துரு சாரோட ஒய்ஃப் சாரு.நான் சவிதாவை இப்போ பார்க்கலாமா சார்? ப்ளீஸ் சார் கொஞ்சம் நேரம் மட்டும் பார்க்க அலோ பண்ணுங்க..." என்று கேட்டாள் சாரு.


"சந்துரு சார் வரலையா மேடம்?" என்று கேட்டார் டாக்டர்.


"இல்லங்க சார்...அவுங்க அமெரிக்கா கிளம்பி போய்ட்டாங்க" என்று கூறினாள்.


"ஓகே மேடம்! டென் மினிட்ஸ்தான் டைம் அதுகுள்ள பார்த்துட்டு இறங்கிருங்க... என்று கூறினார் டாக்டர்.


"ஸ்யோர் டாக்டர்... தாங்க் யூ சோ மச்" என்று கூறினாள் சாரு.


"நர்ஸ் இவுங்கள சவிதா பேஷன்ட் இருக்குறா வார்டுக்கு கூட்டிட்டு போங்க" என்று டாக்டர் கூறியதும், சாருவை அழைத்துக் கொண்டு சென்றார் நர்ஸ்.


சாருவை அழைத்து செல்லும் வழியில் நர்ஸிடம் சவிதாவை பற்றிய அனைத்து தகவலையும் கேட்டுக் கொண்டே வந்தாள் சாரு.


"இந்த ஐசியூ வார்டுலதான் சவிதா இருக்காங்க மேடம்.டென் மினிட்ஸ் தான் டைம்.சீக்கிரமா பார்த்துட்டு வெளியே வந்திருங்க மேடம்!" என்று கூறிவிட்டு, சாருவை ஐசியூ வார்டிற்குள் அனுப்பினார்.


வார்டின் உள்ளே நுழைந்த சாரு, சவிதாதைப் பார்த்ததும் சாருவின் கண்களிலிருந்து மலமலவென கண்ணீர்த்துளிகள் சிந்தியது.


சவிதாவைப் பார்த்ததும் சாருவிற்கு கண்ணீர் வருவதற்கு காரணம் என்ன? இனிமேலாவது சவிதாவைப் பற்றிய ரகசியத்தை நேரடியாக சந்துருவிடம் சாரு கேட்பாளா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 28


விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் சாருவோடு சேர்ந்து இருந்த நாட்களை எண்ணி மனதில் எல்லா நினைவுகளையும் அசைபோட்டுக் கொண்டே இருந்தான் சந்துரு. அவனருகில் அமர்ந்திருந்த மனோஜ், தன்னுடைய மொபைலில் உள்ள அவனுடைய நிச்சயதார்த்த போட்டோவைப் பார்த்து ரசித்து பானுவை நினைத்து சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருந்தான்.


அதைக் கவனித்த சந்துரு, "மெதுவா சிரிடா மனோஜ்! நீ சிரிக்கிற சத்தம் கேட்டு பக்கத்துல இருக்குறவுங்க பயந்துற போறாங்க.நானும் ரொம்ப நேரமாக உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.நீ ப்ளைட்ல ஏறி உட்கார்ந்ததுல இருந்து உன் எங்கேஜ்மென்ட் போட்டோவையே வலச்சு வலச்சு பார்த்துக்கிட்டு இருக்க.போட்டோகிராஃப்பர் அப்படி என்ன புதுசா உன் போட்டாவ மட்டும் எடிட் பண்ணிருக்காருனு பார்ப்போம். உன் மொபைல கொஞ்சம் கொடு" என்று சிரித்துக் கொண்டே மனோஜிடம் கேட்டான் சந்துரு.


"ஓவரா நக்கலடிக்காதடா சந்துரு! நீயும்தான் சாருவோட போட்டாவ சூம் பண்ணி சூம் பண்ணி பார்த்துக்கிட்டு இருந்த.நான் எப்படி டீசென்ட்டா எதுவும் கேட்காம கமுக்கமா இருக்கேன் பாத்தீல" என்றான்.


"அடப்பாவி சைலன்டா உட்கார்ந்து ஏதோ போட்டோ பாக்குற நினைச்சா சிங்கிள் கேப்புல நான் என்ன செய்றனு வேற வாட்ச் பண்ணுருக்கியா? பாக்குறதெல்லாம் பார்த்துட்டு இதுல டீசென்ட்டுனு வேற சொல்லிக்கிறயாடா மனோஜ்" என்று கூறினான் சந்துரு.


"ஆமாம்... நானும் எவ்வளவு நேரம் தான் இப்படி சும்மவே உட்கார்ந்துட்டு வரமுடியும்.நீயும் எதாவது வாயை திறந்து பேசுவனு பார்த்தா, ஹெட்செட் மாட்டிக்கிட்டு உனக்கும் இந்த உலகத்துக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி கற்பனை உலகத்துல மிதக்க ஆரம்புச்சுட்ட.சரி சார் அப்படி எதை நினைச்சுக்கிட்டு வர்றானு பார்ப்போம் சும்மா எட்டிப் பார்த்தேன்" என்று கூறினான் மனோஜ்.


"நீ சாருவ ரொம்ப லவ் பண்ணுறனு எனக்கு நல்லவே தெரியும்டா சந்துரு. இன்னும் எதுக்காகடா சாருக்கிட்ட பட்டும் படாத மாதிரி பேசி நடிச்சுக்கிட்டு இருக்க சந்துரு?" என்று கேட்டான் மனோஜ்.


"சவிதா, சஞ்சுளா பத்துன உண்மையை சொன்னதும் சாரு எப்படி ரியாக்ட் பண்ணுறாலோ அதைப் பொறுத்து தான் நான் அவளை விரும்புறதையே சொல்லுவேன்" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்க போகிறது.எல்லோரும் சீட் பெல்ட் அணியுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கை செய்து கொண்டிருந்தார் விமான பணிப் பெண்.


ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்தவள், நேராக தன்னுடைய அறைக்குச் சென்று முகநூல் பக்கத்தை ஓபன் செய்து பார்த்தாள் சாரு.சவிதாவின் முகநூல் பக்கத்தை ஓபன் செய்து பார்த்ததும் தான் புரிந்தது.சவிதா யார் என்று? எப்படி இதை நாம கவனிக்காமல் விட்டோம் என்று நினைத்து மேலும் அவளைப் பற்றிய தகவலை அறை முழுவதும் தேடிப் பார்த்தாள்.


சவிதாக்கு என்ன நடந்துச்சு? அவளுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்ன? எல்லாரும் எதுக்கு சவிதாவை பத்தின உண்மையை ஏங்கிட்ட மறைக்க நினைக்கிறாங்க? அப்போ சஞ்சுளா யாரு? விசா வர்றதுக்குள்ள எல்லா ரகசியத்தையும் கண்டுப்பிடிப்போம் என்று யோசித்துக் கொண்டே கட்டிலில் படுத்து உறங்கிவிட்டாள் சாரு.


மறுநாள் காலையில் எழுந்ததும் சாருவின் மொபைலில் ரிங் அடித்தது.சந்துருவாக இருக்குமோ என்று நினைத்து வேகமாக மொபைலை எடுத்து பார்த்தால் பானுவிடமிருந்து போன் கால் வந்தது.


"குட்மார்னிங் சாரு...நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன்.உனக்கு தெரியுமா?" என்று கேட்டாள்.


"ம்ம்... அத்தை சொன்னாங்க பானு" என்று பதில் கூறினாள் சாரு.


"நீ போன் பண்ணுவனு பார்த்தா பண்ணவே இல்ல.நடந்த எல்லா விஷயத்தையும் அண்ணா சொன்னாங்க சாரு.மனோஜ் சாருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க..." என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள் பானு.


"சரி நேத்து யாரைப் பாக்குறதுக்காக ஆஸ்பத்திரி போயிருந்த சாரு? எனக்கு தெரியாம உனக்கு அப்படி யாருடி ப்ரெண்ட்ஸ் இருக்காங்க?" என்று பானு கேட்டதும், "உங்கிட்ட நான் தனியா பேச வேண்டியது இருக்கு பானு.போன்ல எல்லாத்தையும் சொல்ல முடியாது. நம்ம நேர்ல பார்க்கும்போது எல்லா விவரமும் சொல்லுறேன் என்றாள்."


சாரு! சாரு! என்று ஜானகி அம்மா சாருவை அழைக்கும் குரல் கேட்டதும், "சரி பிறகு பேசலாம்" என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள் சாரு.


வேகமாக கீழே இறங்கி வந்த சாரு "சொல்லுங்க அத்தை..." என்று ஜானகி அம்மாவிடம் கேட்டாள்.


"உனக்கு இங்க தனியா இருக்க ஒரு மாதிரி இருந்துச்சுனா உங்க வீட்டுல கூட போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வாமா..." என்று ஜானகி அம்மா கூறினார்.


"நான் எங்க அத்தை இங்க தனியா இருக்கேன்.நீங்களும் கண்ணம்மா அம்மாவும் என் கூட இருக்கும் போது எனக்கு என்ன கவலை அத்தை" என்று கூறினாள்.


"நான் இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்ச அந்த நிமிஷத்துல இருந்து இதுதான் என் வீடு" என்று சாரு கூறுவதைக் கேட்டதும் ஜானகி அம்மா அசந்து போய்விட்டார்.


"உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க, ஒரு நாள் வேணா நாம்ம தாத்தா வீட்டுக்கு போய் எல்லாரையும் பார்த்துட்டு வரலாம் அத்தை" என்று கூறினாள் சாரு.


சாருவின் பேச்சைக் கண்டு வியந்து பதில் ஏதும் திருப்பி சொல்ல முடியாமல் "சரிம்மா…" என்று மட்டும் கூறினார் ஜானகி அம்மா.


"சரிங்க அத்தை... நான் அம்மாவுக்கு போன் பண்ணி நாளைக்கு கிளம்பி வர்றதா தகவல் சொல்லுறேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.


"இப்படி ஒரு பொண்ண இதுவரைக்கும் நான் பாத்ததே இல்லம்மா.கல்யாணம் முடிஞ்ச புதுசுல வீட்டுக்காரர் கூட இருக்கும் போதே சில பொண்ணுங்க எப்படா பொறந்த வீட்டுக்கு போகலாம், போய் ஜாலியா இருந்துட்டு வரலாம்னு நினைப்பாங்க.நம்ம காலத்துல கல்யாணமாகி முடிஞ்ச மறுநிமிஷமே பிறந்த வீட்டையும், கூட பிறந்தவுங்களையும் மறந்துட்டு புகுந்த வீடு தான் உனக்கு தஞ்சம். 'புல்லானாலும் புருஷன்', 'கல்லானாலும் கணவன்', புகுந்த வீடுதான் இனி உனக்கு எல்லாம் அப்படினு சொல்லிதான் நம்மள வளர்த்தாங்க.நம்ம வாழ்ந்த காலத்துல அம்மா வீட்டுக்கே விஷேசம்னா மட்டும்தான் கூட்டிட்டு போவாங்க. நம்மள தனியாவும் போக விட மாட்டாங்க.அதுவும் ஒரே நாளுல போய்ட்டு அன்னைக்கே திரும்பி வந்திரனும்.பிறந்த வீட்டுலையும் சரி, புகுந்த வீட்டுலையும் சரி நம்ம விருப்பத்தையும் கேட்கவும் மாட்டாங்க.எது பேசுனாலும் திருப்பி பதில் கூட சொல்லவும் விட மாட்டாங்க. காலம் மாறுநாளும் இந்த காலத்துலையும் பொண்ணுங்க கல்யாண முடிச்ச பிறகு எத்தனை பேருக்கு, தான் நினைச்சதை செய்யும் சுதந்திரம் புகுந்த வீட்டுல கிடைக்கும்னு தெரியல.இன்னும் சில வீட்டில பெண்களுக்கு பேச்சு உரிமை கூட கிடைக்கிறது இல்ல.


ஆனால் நீங்க எல்லாம் சுதந்திரம் சாரும்மாவுக்கு கொடுத்தாலும், ஒரு குடும்பப் பொண்ணுணா எப்படி சில வரை முறைகளை கடைப்பிடிச்சு நடக்கனுமோ அந்த மாதிரி இப்போதும் சாரும்மா நடந்துக்கிற விதம் பார்த்து ரொம்ப சந்தோஷமாவும் ஆச்சரியமாவும் இருக்குதும்மா. மாமியார் மருமகனாளே கீரியும் பாம்பு மாதிரிதான் எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க. ஆனால் உங்க ரெண்டு பேரையும் பார்த்தா தாயும் மகளுமா நல்லா ஒற்றுமையா இருக்கீங்கம்மா.உங்கள பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.உங்க ரெண்டு பேரு மேலையும் யாரு கண்ணும் பட்டுறக் கூடாதும்மா..." என்று கூறினார் கண்ணம்மா.


"நம்ம புகுந்த வீட்டுல கஷ்டப்பட்ட எதையும் நம்ம மருமகள் படக்கூடாதுல கண்ணம்மா.நமக்கு இருந்த அதே ஏக்கம் பாசம் எதிர்பார்ப்பு அவுங்களுக்கும் இருக்கும்.அதே போல சூழ்நிலையை புருஞ்சு குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக்கிற நம்ம சாருவை போல மருமகள் எல்லாருக்கும் கிடைச்சா எப்படிப்பட்ட மாமியாரும் மனசு மாறிரு வாங்க கண்ணம்மா.


அந்த ஏழுமலையான் அருளால என் பையனுக்கு நல்ல மனைவி கிடைச்சுட்டா" என்று கூறிக் கொண்டிருந்த சமயத்தில்
ஜானகி அம்மாவின் மொபைல் ரிங் அடித்தது.


"சின்ன ஐயாவாகத்தான் இருக்கும்மா" என்று கூறினார் கண்ணம்மா.


"இருங்கம்மா நான் உங்க மொபைலை எடுத்துட்டு வர்றேன்" என்று சொல்லி வேகமாக ஜானகி அம்மாவின் அறைக்கு சென்று அவருடைய போனை எடுத்து வந்து கொடுத்தார்.
தன்னுடைய மகனிடம் பேசுவதற்காக கண்ணம்மா மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்ததை உணர்ந்த ஜானகி அம்மா போன் கால்லை அட்டன் செய்து, சந்துருவிடம் அவர்கள் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பியதும் அங்கு நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் கூறினார்.


"வாவ் சூப்பர்ம்மா… மனோஜ் குளிக்க போயிருக்கான்ம்மா.அவன் வந்ததும் உங்களுக்கு மறுபடியும் கால் பண்ணுறேன்" என்று கூறிவிட்டு வேகமாக பாத்ரூம் அருகே சென்றான் சந்துரு.


"மனோஜ் சீக்கிரமா குளிச்சுட்டு வாடா! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டு இருக்கு" என்றதும் வேகமாக டவலைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.


"என்னடா நீ! சரியா குளிக்க கூட விடாம அப்படி என்னடா சர்ப்ரைஸ் வச்சுருக்க?" என்று கேட்டான் மனோஜ்.


"உன்னோட அம்மா கிடச்சுட்டாங்கடா..." என்று மனோஜை கட்டிப் பிடித்துக் கொண்டு கத்தினான் சந்துரு.


சந்துரு கூறியதைக் கேட்டதும் தரையில் மண்டியிட்டு ஓ என்று கத்தி கதறி அழுதான்.மனோஜை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தி, கண்ணம்மா அம்மாவிற்கே நேரடியாக கால் பண்ணினான்.சமையலறையில் போனின் ரிங் சத்தம் கேட்டதும் கண்ணம்மா விரைந்து சென்று கால்லை அட்டன் செய்தார்.


"அப்பா மதன்... என்று கூப்பிட்டார்.நான் உன்ன கண்டுப்பிடுச்சுட்டேன்ப்பா..." என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார்.


"அம்மா...." என்று அழுதுக் கொண்டே பேசினான் மனோஜ்.


"நீங்கதான் என் அம்மாவாம்மா? அப்போ நான் அனாதை இல்லையாம்மா?" என்று கேட்டதும், "ஐயோ! ராசா மறுபடி உன் வாயில இருந்து அனாதையானு சொல்லாதப்பா.பாவி நான் உன்னை கவனமா பாத்துக்காம தொலைச்சிட்டேன் ராசா.நான் பத்து மாசம் பெத்து சுமந்த என் பிள்ளை மதன் நீதான்டா கண்ணு...." என்று மனமுருகி பேசினார்.


எத்தனை பேர் எத்தனை முறை ஆறுதல் கூறினாலும் பெற்ற பிள்ளையைத் தொலைத்து தவித்த தாயின் ஆழ் மனதில் பட்ட வேதனையையும் இத்தனை நாட்களாக அவள் பட்டத் துயரத்தையும் அவளைத் தவிர வேற யாருக்கும் தெரியாது.அந்த உணர்வை புரிய வைக்கவும் முடியாது.


"நான் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுடீங்களாம்மா?" என்று மனோஜ் கேட்டதும், "உன்னதான் ராசா நான் ரொம்ப கஷ்டப்பட வச்சுட்டேன்.இனி எந்த காரணத்த கொண்டும் உன்ன நான் எங்கேயும் விடமாட்டேன் கண்ணு..." என்று கூறினார் கண்ணம்மா.


"ஆறு மாசம் மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கோங்கம்மா.நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வேலையை முடுச்சுட்டு இந்தியா வந்துர்றேன்" என்று கூறினான் மனோஜ்.


"சரிப்பா மதன்..." என்று கண்ணம்மா கூறியதும், "அப்பா எங்கம்மா இருக்காங்க?" என்று கேட்டதும் மீண்டும் அழத் தொடங்கிவிட்டார் கண்ணம்மா.


"ஏன்ம்மா அழுறீங்க?" என்று கேட்டான் மனோஜ்.


"நீ தொலைஞ்சு போனதும் உன்னைத் தேடி ஊரு ஊரு அலைஞ்சு திரிஞ்சாரு. ஆனால் நீ எங்களுக்கு கிடைக்கவே இல்ல.மனுஷன் மனசு வெறுத்து போய் காசி இராமேஸ்வரம்னு கோவில் குலம்னு சுத்த போயிட்டாருப்பா என்றார்."


"சரிம்மா... நீங்க அப்பாவ நினைச்சு எதுவும் கவலைப்படாதீங்க! நான் வந்த பிறகு அப்பாவை தேடிக் கண்டுபிடிச்சிடலாம்" என்று கூறினான்.


"நீங்க அங்க கவனமா இருங்கம்மா. உங்களுக்கு எது தேவைனாலும் ஏங்கிட்ட தயங்காமல் கேளுங்க.நான் நாளைக்கு பேசுறேன்" என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டான்.


சாருவின் மொபைலுக்கு ஒரு பீப் சவுண்ட் வந்தது.

"ஹாய்ங்க!" என்று வாட்ஸ்அப்பில் சந்துரு மெஸேஜ் செய்ததும், சாரு பதிலுக்கு "ஹாய்ங்க!" என்று மெஸேஜ் அனுப்பினாள்.சந்துரு உடனே சாருவிற்கு வாட்ஸ்அப்பில் கால் பண்ணினான்.


"ஸாரிங்க... ட்ரைன் லேட்டாகிட்டனால பேச முடியல."


"இதுக்கு எதுக்குங்க ஸாரி கேக்குறீங்க? உங்க சூழ்நிலை அப்படி இருக்கும்போது நீங்க என்ன பண்ண முடியும் என்று பேசிக் கொண்டிருக்கும் போது, "நான் சாருக்கிட்ட ஒரு நிமிஷம் பேசிட்டு தர்றேன்டா" என்று கேட்டான் மனோஜ்.


கை சைகையில் வெயிட் என்று கூறிவிட்டு, "மனோஜ் உங்கக்கிட்ட ஏதோ பேசனுமாங்க" என்று சாருவிடம் கூறிவிட்டு மொபைலை அவனிடம் கொடுத்தான்.


"தாங்க் யூ சோ மச்ம்மா சாரு.எனக்கு அடுத்தடுத்து நிறைய உதவி பண்ணிக்கிட்டே இருக்கம்மா.நான் காலத்துக்கும் உனக்கு நன்றிக்கடன் பட்டுருக்கேன்ம்மா சாரு" என்று கூறினான்.


"பெரிய பெரிய வார்த்தைலாம் சொல்லாதீங்கனா..." என்று கூறினாள்.


மீண்டும் சந்துரு மொபைலை கையில் வாங்கும் நேரம் பார்த்து சாருவின் மொபைலில் லோ பேட்டரி என்று காட்டத் தொடங்கியது.


"சரிங்க நாளைக்கு பேசலாம்.என் மொபைல் ஜார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆப் ஆகப் போகுது" என்று கூறினாள்.


"ஓகே! டேக் கேர்ங்க..." என்று சந்துரு கூறியதும் சாருவின் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.


மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கிய சாரு, தன்னுடைய மாமியாரின் அறைக்கு சென்றாள். ஜானகி அம்மா மகாபாரதம் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். சாருவைப் பார்த்ததும், புத்தகத்தை மூடி வைத்து விட்டு "வாம்மா சாரு..." என்று கூறினார்.


"ஸாரி அத்தை நீங்க படிக்கிறதை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?"
என்று கேட்டாள்.


"அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா சாரு.உனக்கு எதுவும் வேண்ணும்மா சாரு?" என்று கேட்டார்.


"நீங்க தப்பா நினைக்கலைனா உங்கக்கிட்ட நான் ஒன்னு கேட்கலாமா அத்தை..." என்று தயக்கத்துடன் கேட்டாள் சாரு.


"தாரளமா கேளும்மா.உனக்கில்லாத உரிமையா" என்று கூறினார் ஜானகி அம்மா.


"சவிதாவை ஏன் ஆஸ்பத்திரில வச்சுருக்கீங்க? அவளுக்கு என்னாச்சு அத்தை?" என்று சாரு கேட்டதும் தலையில் இடி விழுந்தது போல ஷாக்காகி பதில் ஏதும் பேச முடியாமல், கண்களில் கண்ணீர் துளியுடன் நின்று கொண்டிருந்தார் ஜானகி அம்மா.


"அழாதீங்க அத்தை! உங்களுக்கு ஏங்கிட்ட சொல்ல விருப்பம் இல்லனா எதுவும் சொல்ல வேண்டாம்" என்று கூறினாள்.


"அப்படிலாம் எதுவும் இல்லம்மா சாரு.சந்துருவே உங்கிட்ட சொல்லுற வரை எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிருந்தான்.அதனாலதான் இத்தனை நாள் வரை இந்த ரகசியத்தை மூடி மறச்சுட்டோம்மா. சந்துருவோட தங்கச்சிதான் சவிதா.மூனு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்ஸிடென்ட்ல சவிதா கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாம்மா" என்று அழுதுக் கொண்டே கூறினார்.


"சவிதாவை வீட்டுல வச்சு பார்க்காம ஏன் ஆஸ்பத்திரில வச்சுருக்கீங்க?" என்று கேட்டாள்.


"ஆரம்பத்துல வீட்டுல தான் வச்சிருந்தோம்மா.சந்துருக்கு பொண்ணு பார்க்க போன இடமெல்லாம் சவிதாவைப் பற்றி சொன்னதும் யாரும் சந்துருவை கல்யாணம் செய்ய சம்மதிக்க மாட்டேனு சொல்லிட்டாங்க.நான்தான் கல்யாணம் முடியும் வரை சவிதா பத்துன உண்மையை வெளியே சொல்லக்கூடாதுனு சந்துருக்கிட்ட மிரட்டி சத்தியம் வாங்குனேம்மா. கல்யாணம் முடிஞ்ச பிறகு நடந்ததை எடுத்துச் சொல்லி சவிதாவை மீண்டும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்திடலாம்னு நான் தான்ம்மா சந்துருக்கிட்ட சொன்னேன்."


"என்னை பத்தி உங்களுக்கு நல்லா தெருஞ்சும் ஏங்கிட்ட ஏன் சொல்லல அத்தை?"


"உன்னை பத்தி நல்லா எனக்கு தெரியும்மா சாரு.ஆனால் உங்க வீட்டுல எங்க உண்மை தெருஞ்சா கல்யாணத்துக்கு சம்மதிக்காம போய்டுவாங்களனோ பயந்து தான் சொல்லலம்மா.ஏற்கனவே ஒரு பிள்ளையோட வாழ்க்கையை பறிக் கொடுத்துட்டு நிக்குறேன்.இன்னொரு பிள்ளையாவது நல்லா படியா வாழ வைக்கனும்லம்மா..." என்று அழுதுக் கொண்டே கூறினார் ஜானகி அம்மா.


"சவிதா ஆஸ்பத்திரில இருக்குறது உனக்கு எப்படி தெரியுமா சாரு?" என்று கேட்டார்.


"ஊருக்கு கிளம்புற அவசரத்துல சவிதாவோட மெடிக்கல் ரிப்போர்ட்ட அவுங்க வெளியே வச்சுட்டு போய்ட்டாங்க அத்தை" என்று கூறினாள்.


"சவிதாவுக்கு எப்படி அத்தை ஆக்ஸிடன்ட் நடந்தது?" என்று கேட்டாள்.



சவிதா கோமா ஸ்டேஜ் போகுமளவிற்கு ஆக்ஸிடன்ட் எப்படி நடந்தது? சஞ்சுளாவையும் கண்டுப்பிடித்து விடுவாளா சாரு? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.


- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 29


"நீ என் வாழ்க்கையில வந்த நேரம் என் அம்மா எனக்கு கிடைச்சுட்டாங்க பானு.


"லவ் யூ சோ மச்" என்று பானுவிடம் போனில் உரையாடிக் கொண்டிருந்தான் மனோஜ்.


மனோஜ் தன்னை புகழ்ந்து கூறியதைக் கண்டு மனதளவில் மகிழ்ச்சியடைந்ததை வெளிக்காட்டி கொள்ளாமல், "அப்படிலாம் ஒன்னும் இல்ல சார்... உங்க நல்ல மனச பார்த்தும், நித்தமும் கண்ணீரோடு அத்தை கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை கேட்டும் அந்த கடவுளே மனசு இறங்கி உங்க இரண்டு பேரையும் சேர வச்சுருக்காரு சார்..." என்று கூறினாள் பானு.


"நீ சொல்லுறதுல எனக்கு அவ்வளவா நம்பிக்கை கிடையாது பானு.ஆனால் எப்படியாவது ஒரு நாள் நம்ம பிள்ளைய கண்டுப்பிடுச்சுறனுங்கிற என் அம்மாவோட எண்ணமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் தான் என்னை மீண்டும் அவுங்கக்கிட்ட சேர்த்திருக்குனு தான் நான் சொல்லுவேன்" என்று கூறினான் மனோஜ்.


"எப்படியோ சார் நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்" என்று கூறினாள் பானு.


"சவிதா செமஸ்டர் எக்ஸாம்ஸ் முடிச்சுட்டு சென்னையிலிருந்து கிளம்பி ஊருக்கு பஸ்ல வந்தாம்மா. சவிதாவ டவுனுல இருந்து அழைச்சிட்டு வர்றதுக்காக சந்துரு காரை எடுத்துக்கிட்டு போயிருந்தான். சந்துரு பஸ் ஸ்டாப்புக்கு ரீச்சாகுறதுக்கு முன்னாடியே சவிதா வந்து இறங்கிட்டாள்.எப்பவும் லேட்டா வர்ற பஸ் என்னமோ அன்னைக்கு மட்டும் அரை மணி நேரத்து முன்னாடியே சீக்கிரமா வந்திருச்சு. சந்துரு பஸ் ஸ்டாப்புக்கு போறதுக்குள்ள சவிதா சந்துருக்கு கால் பண்ணிருக்கா."அண்ணா! சீக்கிரம் வாங்கண்ணா.இங்க நாலு பசங்க என்னை வம்பிழுத்துக்கிட்டு இருக்காங்கனு சொல்லிருக்கா.
"அண்ணா... இதோ ஐஞ்சு நிமிஷத்துல வந்திருவேன்ம்மா.நீ எதுவும் பயப்படதாடா!" என்று சொல்லிக்கிட்டே வேகமாக காரை ஓட்டிட்டு பஸ் ஸ்டாப்க்கு போய் சந்துரு இறங்கினதும், சவிதா அந்த பசங்களுக்கு பயந்து அவள் முன்னாடி வர்ற கார் கவனிக்காமல் ஓடி வந்திருக்கா.சந்துரு கண்ணு முன்னாடியே சவிதா அந்த கார்ல மோதி கீழ விழுந்துட்டாம்மா.


"என் பொண்ணோட தலைவிதியை கடவுள் இப்படியாம்மா எழுதுவாரு? பாவி பசங்க அவுங்க கூடலாம் அக்கா தங்கச்சி பிறக்கலையா? அநியாயமா என் பொண்ணுக்கு ஆக்ஸிடன்ட்டாகி கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாளேம்மா.
பத்து மாசம் சுமந்து பெத்த என் மனசு என்னம்மா பாடுபடும்.அந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம போயிருச்சேம்மா" என்று புலம்பி அழுது தீர்த்தார் ஜானகி அம்மா.


எப்பொழுதும் கம்பீரத் தோற்றத்துடனும் முக மலர்ச்சியுடனும் பார்த்த தன்னுடைய அத்தையின் மனதில் உள்ள துயரத்தையும் அவர் அழுவதையும் முதன் முறையாக நேரில் பார்த்த சாருவின் கண்ணிகளிலும் கண்ணீர் முத்து முத்தாக கொட்டியது.


"நீங்க அழாதீங்க அத்தை! சவிதா சீக்கிரமா சரியாகிடுவா அத்தை. கவலைப்படாதீங்க! தைரியமா இருங்க.நீங்க கஷ்டப்பட்டு சுமந்து பெத்த பிள்ளையோட உயிரைக் காப்பாத்தி கொடுத்த கடவுள், கூடிய விரைவில் சவிதாவை குணமாக்கி கொடுப்பாரு.நீங்க நம்பிக்கையோடு இருங்க.உங்க வேண்டுதலுக்கு கண்டிப்பா ஒரு நாள் பலன் கிடைக்கும்" என்று சாரு கூறியதும், ஜானகி அம்மாவிற்கு இனம் புரியாத ஒரு தைரியம் வந்தது.


"இன்னொரு முக்கியமான விஷயம் அத்தை.சவிதாவை பத்தின உண்மை எனக்கு தெருஞ்சதா அவுங்கக்கிட்ட நீங்க சொல்ல வேண்டாம் அத்தை" என்று கூறினாள்.


"நாம்ம நாளைக்கே போய் சவிதாவை ஆஸ்பத்திரில இருந்து கூட்டிட்டு வந்திரலாம் அத்தை..." என்று கூறினாள்.


"சரிம்மா சாரு..." என்று கூறினார் ஜானகி அம்மா.


"எனக்கு சவிதாவோட ரூம் சாவி கொஞ்சம் கொடுப்பீங்களா அத்தை. அவளுடைய ரூமை கொஞ்சம் பார்க்கத்தான் கேட்குறேன்" என்று கூறினாள்.


"கொஞ்சம் இரும்மா!" என்று கூறிவிட்டு அலமாரியில் உள்ள துணிக்கு அடியிலிருந்து சவிதாவுடைய ரூம் சாவியை எடுத்து வந்து சாருவிடம் கொடுத்தார்.


சந்துருவின் நினைவெல்லாம் சாரு நிறைந்திருந்தாள்.சந்துருவினால் எந்தவொரு வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.ஒரு நாளைக்கு ஐம்பது தடவைக்கு மேல் சாருவின் விசாவைக் குறித்து ஸ்டேடஸை செக் பண்ணிக் கொண்டிருந்தான்.விசா குறித்த மெயில் செக் செய்து கொண்டிருந்த போதுதான், முதன் முதலாக சாருவின் போட்டாவை சந்துருவின் அம்மா அனுப்பி வைத்திருந்த மெயில் அவனுடைய கண்ணிற்கு தென்பட்டது.மெயிலை ஓபன் செய்து பார்த்த சந்துரு, "நீ பேரழகிடி சாரு!" என்று போட்டோவை பார்த்தே அவளிடம் நேரில் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தான்.


ஆபிஸ் முடிந்ததும் வேகமாக ரூம்மிற்கு வந்தவன், ஒரு டைரியையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான்.


இதுவரை டைரி எழுதும் பழக்கம் இல்லாத சந்துரு, சாருவை நினைத்து முதன் முறையாக டைரி எழுதினான்.

அன்புள்ள சாருவிற்கு,

என் வாழ்நாளில் இதுவரை நான் டைரி எழுதியதே இல்லை சாரு.ஆனால் இன்று உனக்காக எழுதுகிறேன்.முதன் முதலாக உன் போட்டோவை எனக்கு அனுப்பி வைத்தார்கள்.நான் பார்க்க விரும்பவில்லை.பிறகு வீடியோ கால் செய்தபோதும் உன்னை பார்க்க மறுத்து விட்டேன்.நாம் கோவிலில் சந்திக்க முயற்சித்த போதும் முடியவில்லை.அதற்கு பின்னர் நேரடியாக நிச்சயதார்த்தில் தான் சந்தித்தோம்.


உன்னை பார்த்ததுமே உன் காந்த கண்களால் கவர்ந்திழுக்கப் பட்டவன் நானடி.உன்னை எனக்கு பிடித்திருந்தாலும் என் மனசாட்சி உண்மையை சொல்லாமல் பேசக்கூடாது என்று என்னை தடுத்து அணைப்போட்டு நிறுத்திவிட்டது.


ஆமாம் சாரு... உன்னிடம் இரண்டு பேரைப் பற்றி சொல்ல வேண்டும். அந்த நாளுக்காக தான் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உன்னிடம் நான் சரியாக பேசாவிட்டாலும், இதுவரை என்னிடம் வந்து நீ எதுவுமே கேட்காமல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல பொறுமையாக அனுசரித்து நீ நடந்து கொண்ட விதம் கண்டு வியந்தேன்.


உனக்கும் ஷ்யாமிற்குமிடையே நிகழ்ந்த மனஸ்தாபத்தையும், நீ அவர்களை அனுகிய முறை கண்டு உன்னைக் குறித்து மாலதி சித்தி என்னிடம் பெருமையாக சொன்னபோது உன்னை கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று தோன்றியது.ஆனால் என் உணர்வுகளை அடக்கிக் கொண்டேன்.


உனக்கு காயம் ஏற்பட்ட போதும் உருக்குலைந்து போனேன்.நான் வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்பும் போது உன்னிடம் நான் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை.அதை எண்ணி நீ மிகவும் வருந்தியிருப்பாய் என்று எனக்கு தெரியும்.எனக்கும் உன்னை அங்கு தனியாக விட்டுட்டு கிளம்புவதற்கு மனசே இல்லை.நான் மட்டும் அந்த நேரத்தில் உன்னிடம் பேசியிருந்தால் உணர்ச்சி வசப்பட்டு அழுதாலும் அழுதிருப்பேன் சாரு.


இங்கு காலை எழுந்ததும் காபி கொடுக்க நீ என் அருகில் இல்லை. என்னை விட உனக்கு வலி அதிகமாக தான் இருக்கும் சாரு.நீ காலையில் எழுந்ததும் என் காலைத் தொட்டு கும்பிடுவாய். என்னை கொஞ்ச நேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாய்.நான் இரவு லேப்டாப்பில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் போது கட்டிலில் படுத்துக் கொண்டு புத்தகம் படிப்பது போல என்னைப் பார்த்து சைட் அடித்துக் கொண்டிருப்பாய்.நீ செய்த அனைத்தும் எனக்கு தெரியும்.


ஆனால் உன் முன் எதுவும் எனக்கு தெரியாதது போல நடித்துக் கொண்டிருந்தேனடி என் பிரியசகி. நீ என்னருகில் இல்லாத ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகம் கடந்து செல்வது போல உணர்கிறேன் சாரு.


என்னையே அறியாமல் நான் எப்படி உன் மீது இவ்வளவு காதல் கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை.


' இது தான் காதலா? '


' ஐ லவ் யூ சோ மச் சாரு '


மீதி கதையை உன்னை நேர்ல பார்க்கும் போது சொல்லுறேன். ரொம்ப நாள் பிறகு எழுதுறதால கொஞ்சம கை வலிக்குது சாரு.நீ இந்த டைரியை எப்போ படிப்பனு தெரியாது.அப்படி நீ இந்த டைரி படிக்கும் போது என் தமிழ் கையெழுத்து பார்த்து என்ன இவுங்க எழுத்து இவ்வளவு கேவலமா இருக்குனு நினைக்க வாய்ப்பிருக்கு சாரு.ரியலி ஸாரி சாரு.என்னுடைய தமிழ் கேன்ட் ரைட்டிங் நல்லா இருக்காது. எழுத்துப்பிழை இருந்தால் மன்னிச்சிரு சாரு.


இப்படிக்கு,
உனக்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கும் ஆருயிர் கணவன்


சாவியை வாங்கிக் கொண்டு வேகமாக மாடியில் உள்ள சவிதாவின் அறைக்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்றாள்.சவிதாவின் அறை கொஞ்சம் தூசியும் ஒட்டடையுமாக இருந்தது.கொஞ்ச நேரம் அறை முழுவதையும் சுத்திப் பார்த்து விட்டு கீழே இறங்கி வந்தவள், நேராக சமையலறைக்கு சென்றாள்.


"அம்மா! எனக்கு கொஞ்சம் ரூம் கிளீன் பண்ண டவுள் ஒட்டடைக்குச்சிலாம் வேணும்.எங்க இருக்குனு சொல்லுங்க.நான் போய் எடுத்துக்கிறேன்ம்மா..." என்று கண்ணாம்மாவிடம் கூறினாள்.


"நீங்க எதுக்கு சாரும்மா இந்த வேலையெல்லாம் பாக்குறீங்க.எங்க கிளீன் பண்ணனும்னு சொல்லுங்க? ஒரு பத்து நிமிஷத்துல சமையல் வேலையை முடிச்சுட்டு வந்து
துடைக்கிறேன்ம்மா..." என்று கூறினார்.


"இதுல என்னம்மா இருக்கு? நம்ம வீட்டுக்கு வேலையைத் தான பார்க்க போறேன்" என்று கூறினாள் சாரு.


"சரிம்மா... கொஞ்சம் இருங்க! நான் ஸ்டோர் ரூம்ல போய் எல்லா திங்க்ஸையும் எடுத்துட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு, ஐந்து நிமிடத்தில் சாரு கேட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார்.


"தாங்க் யூம்மா " என்று தன்னுடைய கண்ணம்மாவிடம் கூறிவிட்டு வேகமாக சவிதாவின் அறைக்கு சென்றவள், ஆறுமணி நேரமாக ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.


"கண்ணம்மா! கண்ணம்மா! சாரு ரொம்ப நேரமா ஆளையே காணோம். உங்கிட்ட எதும் சொல்லிட்டு போனாளா?" என்று ஜானகி அம்மா கேட்டார்.


"சவிதாம்மா ரூமை கிளீன் பண்ண போறதா சொன்னாங்கம்மா.
நான் வேணா போய் கூட்டிட்டு வர்றேன்ம்மா" என்று கண்ணம்மா சொல்லிக் கொண்டிருந்த போது வேர்த்து விறுவிறுத்து போய் கீழே இறங்கி நடந்து வந்தாள் சாரு.


"ஏன்ம்மா சாரு எல்லா வேலையும் இப்படி ஒத்தையுல இழுத்துப் போட்டு பார்த்துக்கிட்டு இருக்குற?" என்று ஜானகி அம்மா கேட்டார்.


"நாளைக்கு சவிதாவை கூட்டிட்டு வர்றதுகுள்ள அவளோட ரூம்ம ரெடி பண்ணனும்ல அத்தை.நான் வீட்டுல சும்மாதான இருக்கேன்.கண்ணம்மா அம்மா பாவம் எவ்வளவு வேலையைத் தான் பார்ப்பாங்க.அவுங்கள சிரமப்படுத்த கூடாதுனு தான் நானே கிளீன் பண்ணிட்டேன் அத்தை" என்று கூறினாள்.


"திங்க்ஸலாம் ஏங்கிட்ட கொடும்மா" என்று சாருவிடம் அனைத்து பொட்களையும் வாங்கிட்டு சென்றவர், சமையலறையிலிருந்து ஆப்பிள் சூஸ் போட்டு எடுத்துக் கொண்டு வந்து சாருவிடம் கொடுத்தார் கண்ணம்மா.


அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த சமயம் பார்த்து போட்டோ கிராஃபர் வீட்டிற்கு வந்தார்.


"உள்ள வாங்கப்பா..." என்று போட்டோ கிராஃபரை வீட்டிற்குள் அழைத்தார் ஜானகி அம்மா.


சந்துரு சாருவுடைய கல்யாண போட்டோ ஆல்பம் மற்றும் சீடியோடு சேர்த்து மிகப்பெரிய போட்டோ ப்ரேம் ஒன்றையும் கொண்டு வந்து ஜானகி அம்மாவிடம் கொடுத்து விட்டு சென்றார்.மூன்று பேரும் ஷோபாவில் அமர்ந்து போட்டோ ப்ரேமை ஓபன் செய்து பார்த்தனர்.சந்துரு சாருவிற்கு தாலிக்கட்டும் போது எடுத்த போட்டாவை அழகாக ப்ரேம் பண்ணியிருந்தார்கள்.


"சந்துருவையும் சாருவையும் இந்த போட்டோல பார்க்கும் போது சாட்சாத் ஸ்ரீ ராமரே வந்து சீதா தேவி கழுத்துல தாலிக்கட்டுவது போல இருக்ககுதுல கண்ணம்மா" என்று கூறிக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.


தன்னுடைய மாமியார் தன்னைப் பற்றி புகழ்வதைக் கூட காதில் வாங்காமல் போட்டோவில் உள்ள சந்துருவையே கண் இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.


"இந்த போட்டோவை உங்க பெட்ரூம்ல மாட்ட சொல்லிர்றேன் சாரு..." என்று ஜானகி அம்மா கூறினார்.


தோட்டத்தில் வேலைப் பார்க்கும் மூர்த்தியை அழைத்து, "இந்த போட்டோவ பத்திரமா கொண்டு போய் சின்ன ஐயா ரூம்ல கவனமா கீழே போட்டுறாம மாட்டிரு மூர்த்தி" என்று கூறினார்.


"சரிங்கம்மா..." என்று கூறிவிட்டு போட்டோ ப்ரேமை சந்துருவின் அறைக்கு எடுத்து சென்று சுவற்றில் மாற்றினார்.


சாரு தன்னுடைய அறைக்கு சென்றாள்.நித்தமும் தன்னுடைய கணவரைப் பார்க்காமல் தவித்துக் கொண்டிருந்த சாருவிற்கு, இந்த போட்டோ ப்ரேம் ரூமிலிருப்பது சந்துரு அவளருகிலே இருப்பது போல உணர்ந்தாள்.கட்டிலின் தலையனையை திருப்பி வைத்து படுத்துக் கொண்டு சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவில் உள்ள சந்துருவை பார்த்து ரசித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் தூங்கினாள்.மறுநாள் பொழுது விடிந்ததும் வேகமாக கிளம்பி ஆஸ்பத்திரிக்கு சென்று சவிதாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்து வந்த சவிதாவை இரண்டு ஸ்டாஃப்ஸ் சவிதாவைத் தூக்கிக் கொண்டு அவளுடைய அறைக்குச் சென்றனர். அவர்களுக்கு முன்பாக சென்று சவிதாவின் அறையின் கதவை திறந்து தயாராக வைத்திருந்தாள் சாரு.சவிதாவை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவர்கள் சென்றனர். சவிதாவிற்கு உதவியாக ஒரு ஸ்டாஃப் நர்ஸையும் நியமித்திருந்தனர்.


ஜானகி அம்மாவும், கண்ணம்மாவும் சவிதாவின் அறைக்குச் சென்றனர். அறைக்குள் நுழைந்தவர்கள் ரூமைப் பார்த்து அசந்து போய் விட்டனர். தூசியும் ஒட்டடையுமாக இருந்த அறையை அவ்வளவு அழகாக மாற்றிவிட்டாள் சாரு.சவிதா படுத்திருக்கும் கட்டிலின் எதிரே உள்ள சுவற்றில் அழகான இயற்கை காட்சி ஒன்றை பெயிண்ட் செய்திருந்தாள் சாரு.அந்த காட்சியில் ஒரு மரத்தில் பெண் ஒருத்தி சிரித்துக் கொண்டே ஊஞ்சலாடுவது போலவும், மரத்திலிருந்து மலர்களானது உதிர்ந்து அந்த பெண்ணின் மீதும், மரத்திற்கு கீழே உள்ள புற்கள் மீதும் விழுவது போலவும் இருந்தது.
வானத்திலோ புறாக்கள் கூட்டமாக பறந்து சென்று கொண்டிருந்தன. மரத்தின் கீழே உள்ள புற்கலில் பல வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்து கொண்டும் பறந்து கொண்டும் இருப்பது போன்று வரையப்பட்டிருந்தது.அந்த இயற்கை காட்சியமைப்புகளை பார்க்கும்போது ஓவியமாக தெரியவில்லை.அந்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்ப்பது போல தத்ரூபமாகவும் மனதைக் கவரும் வண்ணம் அழகாகவும் காட்சிகளை வரைந்திருந்தாள் சாரு.


மற்றொரு சுவரில் சவிதாவின் சிறு வயது முதல் கலேஜ் வரை அவள் எடுத்த புகைப்படம் அனைத்தையும் சுவற்றின் குறுக்கே வரிசையாக அடுக்கி வைத்திருந்தாள்.பால்கனியில் செயற்கை புற்கள் கொண்ட தரையை அமைத்திருந்து, ஒரு புத்தர் சிலையை கிழக்கு பக்கம் நோக்கி பார்ப்பது போலவும், அச்சிலையின் முன் ஒரு கண்ணாடி குடுவையில் மெழுகுவர்த்தி எறிந்துக் கொண்டிருப்பது போலவும், சிலைக்கு இரு பக்கமும் மூங்கில் மரச்செடிகளை தொட்டியில் வைத்து அலங்காரம் செய்திருந்தாள்.பால்கனியில் காற்றடித்தால் ஓசை வருவது போன்ற சின்ன சின்ன மணிகளால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு மணிக் கூண்டையும் தொங்க விட்டிருந்தாள். ஜன்னலின் ஓரத்தில் மீன் தொட்டி ஒன்றும் இருந்தது.சவிதாவின் அறையை பார்க்கும் யாருக்கும் அங்கிருந்து கிளம்ப மனசே வராது. அவ்வளவு அழகாக இருந்தது. தன்னுடைய மருமகளை நினைத்து ரொம்ப பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்த ஜானகி அம்மாவிற்கு என்ன சொல்வதென்ற தெரியாமல் சாருவைக் கட்டிப்பிடித்து தன் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்.


நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து சென்று கொண்டிருந்தது.தினமும் காலையில் சவிதாவை வீல் சேரில் உட்கார வைத்துக் கொண்டு தோட்டத்தை சுற்றி காமித்தாள் சாரு.சிறிது நேரம் அவளுக்கு பிடித்த ஏ.ஆர் ரகுமான் பாடலை போனில் போட்டு சவிதாவின் காதில் ஹெட்செட் மாட்டி விட்டு பாட்டை கேட்க செய்தாள்.இரவு கொஞ்ச நேரம் புத்தகத்தை வாசித்துக் கதைகளை சொல்லி சவிதாவோடு கதைத்து கொண்டிருந்தாள்.கலேஜில் சவிதா அரங்கேற்றம் செய்த பரத நாட்டிய வீடியோவை தினமும் டிவியில் போட்டு காமித்தாள்.சவிதாவை ஒரு நாள் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவள் பாதத்தில் கடல் நீரும் கடற்கரையும் மணலும் படுவது போல அவளது பாதத்தை தரையில் எடுத்து வைத்தாள்.ஒரு தாய் தன் குழந்தையை பார்த்துக் கொள்வது போல சவிதாவைப் பார்த்துக் கொண்டாள் சாரு.மற்றொரு நாள் தன்னுடைய கல்யாண ஆல்பத்தை எடுத்து வந்து போட்டோவில் உள்ள அனைத்து உறவுகளையும் சவிதாவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.


"உங்க அண்ணாவை பாரேன் சவிதா..." என்று சாரு கூறும்போது சவிதாவின் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர்த்துளி வந்து சாருவின் கைகளில் விழுந்தது.


"வேகமாக டாக்டருக்கு போன் பண்ணுங்க நர்ஸ்.சீக்கிரமா டாக்டரை வரச் சொல்லுங்க..." என்று நர்ஸிடம் கூறினாள் சாரு.


சவிதாவிற்கு சுயநினைவு வந்து விட்டதா? சாருவுடைய முயற்சிக்கு பலன் கிடைத்து விட்டதா? டாக்டர் வந்து என்ன சொல்ல போகிறார்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom