Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL எண்ணங்களே வண்ணங்களாய் - Tamil Novel

Status
Not open for further replies.

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 30

வீட்டு வாசலில் கார் வந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கண்ணம்மா வேகமாக வாசலுக்கு சென்று பார்த்தார்.


"வாங்க ஐயா! சீக்கிரம்மா வந்து சவிதாம்மாவுக்கு என்னாச்சசு பாருங்க..." என்று கண்ணீருடன் படபடத்து கொண்டு டாக்டரிடம் கூறினார்.


"சரிங்கம்மா... ப்ளீஸ் அழாதீங்க! சவிதா எந்த ரூம்ல இருக்காங்கனு சொல்லுங்க?" என்று கேட்டார் டாக்டர்.


"சவிதாம்மா மாடிலதான் இருக்காங்க ஐயா..." என்று கூறிக் கொண்டே சவிதாவின் அறைக்கு டாக்டரை அழைத்துச் சென்றார் கண்ணம்மா.


"ப்ளீஸ்... எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க..." என்று டாக்டர் கூறியதும் அனைவரும் அறையை விட்டு வெளியே சென்று காத்துக் கொண்டிருந்தனர்.


பதினைந்து நிமிடத்திற்கு பிறகு டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்ததும், "சவிதாவுக்கு என்ன சார் ஆச்சு?" என்று சாருவும், ஜானகி அம்மாவும் பதற்றத்துடனும் பயத்துடனும் கேட்டனர்.


"நீங்க பயப்படுற மாதிரி சவிதாவுக்கு ஒன்றுமில்ல மேடம்.உங்க எல்லாருக்கும் குட் நியூஸ்தான்" என்று கூறினார் டாக்டர்.


"என்ன சார் சொல்லுறீங்க? என் பொண்ணுக்கு சுயநினைவு வந்திருச்சா டாக்டர்..." என்று மிகுந்த ஆவலுடனும் கண்ணீருடனும் கேட்டார் ஜானகி அம்மா.


"முழுசா சுயநினைவு வந்திருச்சுனு சொல்ல முடியாது.ஆனால் சவிதாவோடு உடம்புல நிறைய இம்ப்ரூவ்மென்ட்ஸ் வந்திருக்கு.
ரொம்ப நாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு விஷயம் டீப்பா அவுங்க மனசுல ஆழப்பதிஞ்சு சில உணர்வு நரம்புகளை தூண்டிவிட்டிருக்கு. அதனால் தான் சவிதாவுக்கு திடீருனு கண்ணீரும் மூச்சுத்திணறலும் வந்திருக்கு.இது எல்லாமே சுயநினைவு சீக்கிரமா வருவதற்கான அறிகுறிகள் தான்.மூன்று வருஷமா எந்தவித சுயநினைவுமே இல்லாத இவுங்களுக்கு கடந்த மூன்று வாரத்துல நிறைய இம்ப்ரூவ்மென்ட் வந்திருப்பது பார்த்து எனக்கே ரொம்ப ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருக்கு மேடம்.நீங்க கொடுத்த பயிற்சினால தான் மேடம் சவிதாவோட இந்த இம்ப்ரூவ்மென்ட்க்கு காரணம். சூப்பர் மேடம்.அவுங்களுக்கு தொடர்ந்து விடாமல் பயிற்சி கொடுங்க..." என்று சாருவிடம் கூறினார் டாக்டர்.


"இந்த மாதிரி கேஷஸ் நிறைய பேரை பாத்திருக்கேன்.என்னோட முப்பது வருஷ சர்வீஸ்ல இப்படி சீக்கிரமா இம்ப்ரூமென்ட் வந்த பேஷன்ட் யாரையும் நான் பார்த்ததே இல்ல.சில பேர் கோமாலிருந்து மீண்டு வரமாலும் அப்படியேவும் இருந்திருக்காங்க. இன்னும் ஒரு சில பேருக்கு இருபது வருஷத்துக்கு பிறகுலாம் சுயநினைவு வந்திருக்கு.பட் சவிதா இஸ் டிப்ரெண்ட் கேஷ் என்று கூறினார்.சவிதாவை இனிமேல் தான் நீங்க கவனமாக ஹேன்டில் பண்ணணும். அவுங்களுக்கு சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமா திரும்ப வரும்போது எல்லாரையும் சரியா அடையாளம் தெரியமா அவுங்களுக்கு குழப்பமும், அதனால் கோபம் மன அழுத்தம் எல்லாமே வர்றதுக்கு சான்ஸஸ் இருக்கு.


ஸோ பீ கேர் புஃல்! எதுனாலும் எனக்கு இமிடியேட்டா கால் பண்ணி இன்பார்ம் பண்ணிருங்க..." என்று கூறினார் டாக்டர்.


"ஸ்யோர் சார்... தாங்க் யூ சோ மச் டாக்டர்" என்று சாரு கூறியதும் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார் டாக்டர்.


சவிதாவின் அருகில் சென்று அமர்ந்து அவளது தலையைக் கோரிவிட்டு அழுதுக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.ஜானகி அம்மாவின் கண்ணீர்த்துளி சவிதாவின் கை விரல்களில் பட்டதும், அவளது விரல்களில் ஐந்து நிமிடங்கள் அசைவுகள் ஏற்பட்டது.


"மேடம் ப்ளீஸ் அழாதீங்க! சீக்கிரமா உங்க பொண்ணு குணமாகிடுவாங்க. நீங்க கொஞ்சம் நேரம் சவிதாவ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்!" என்று கூறினார் நர்ஸ்.


நர்ஸ் கூறியதும் தன்னுடைய மாமியாரை அழைத்துக் கொண்டு வெளியே கூட்டிச் சென்று ஆறுதல் வா்த்தைகள் கூறி சமாதானப்படுத்தினாள் சாரு.நாட்கள் கரைப்புருண்டு ஓடியது.ஒரு நாள் மாலைப் பொழுது தோட்டத்தில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.எப்போதும் போன் கால் பண்ணாத சாருவிடமிருந்து, சந்துருவிற்கு அழைப்பு வந்தது.


மொபைலை அட்டன் செய்து "ஹலோ!" என்று சந்துரு கூறியதும், "குட் நீயூஸ்ங்க.கம்மிங் தார்ஸ்டே பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டு விசா ஸ்டாம்பிங்கு கன்சோலேட்டுக்கு வரச் சொல்லி மெயில் பண்ணிருக்காங்கங்க.." என்று சாரு கூறியதும் "வாவ் சூப்பர்ங்க!" என்று சந்தோஷமாக சந்துரு கூறியதைக் கேட்டதும் சாருவிற்கு உற்சாகம் தாங்க முடியவில்லை.


"ஓகேங்க! அடுத்தவாரம் அமெரிக்கா கிளம்ப தயாராகுங்க.நான் இப்போவே ப்ளைட் டிக்கட்ஸ் பார்த்து புக் பண்ணுறேன்.நான் ஒரு அட்ரஸையும் லட்டரையும் அனுப்பி வைக்கிறேன்.
அந்த லட்டர்ல எல்லா டீடைல்ஸ் பிஃல் பண்ணி லட்டரோட சேர்த்து உங்க பாஸ்போர்ட்டையும் சேர்த்து கொரியர் பண்ணிருங்க..." என்றான் சந்துரு.


"சரிங்க..." என்று கூறியவள் வேகமாக ஜானகி அம்மாவிடம் சென்று தகவலைச் சொல்லியதும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.


"சரிம்மா சாரு.நீ ஒரு இரண்டு நாள் மட்டுமாவது உங்க அம்மா வீட்டுல போய் இருந்துட்டு வாம்மா..." என்று கூறினார்.


"அவுங்களுக்கும் உன் கூட இருக்கனும்னு ஆசை இருக்கும்லம்மா. அடுத்த ஆறு மாசத்துக்கு அவுங்கள நீ பார்க்க முடியாதுலம்மா? என்றதும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சரிங்க அத்தை..." என்று பதில் கூறினாள் சாரு.


"சவிதாவை கவனமாக பார்த்துக் கோங்க அத்தை..." என்று கூறிவிட்டு தன்னுடைய பிறந்த வீட்டிற்குக் கிளம்பிச் சென்றாள் சாரு.


வீட்டிற்கு போகும் வழியிலே சந்துரு சொன்ன அட்ரஸிற்கு கொரியர் செய்து விட்டு அவனுக்கு வாட்ஸ்அப் மூலமாக மெஸேஜ் செய்து தகவலை கூறினாள் சாரு.சாரு அவளுடைய வீட்டிற்கு வருவதாக முன்கூட்டியே எந்த தகவலும் சொல்லாமல் மெதுவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள்.தூணில் சாய்ந்து கொண்டு உரலில் வெத்தலைத் தட்டிக் கொண்டிருந்த பாட்டியின் கண்களை மெதுவாக மூடியதும், "சாரும்மா..." என்று பாட்டி கூறினார்.


"எப்படி பாட்டி? நான் தானு கரெக்ட்டா கண்டுப்பிடிச்சீங்க..." என்று கேட்டாள்.


"பஞ்சு போல இருக்கும் என் பேத்தியோட மிருதுவான கை எனக்கு தெரியாதமா!" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சிவகாமி அம்மா வந்தார்.தன் மகளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.வீட்டில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சாருவிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.


"தாத்தா எங்க பாட்டி? ரூம்ல இருக்காங்களா?" என்று கேட்டாள்.


காலையிலேயே ஒருபஞ்சாயத்தை தீர்த்து வைக்க கிளம்பி போயிருட்டாரு சாரு.இப்போ வர்ற நேரம்தான்..." என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாத்தா வீட்டிற்குள் நுழைந்தார்.


தாத்தாவைப் பார்த்ததும் சாருவின் கால்களிரண்டும் தாத்தா இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடிச்சென்றது.


"எப்படிடா இருக்க சாரு?" என்று நலம் விசாரித்தார் தாத்தா.


நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாருவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.தன் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் தனக்கு விசா கிடைத்து விட்டதையும் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறினாள் சாரு.


"அம்மா! நாளைக்கு ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே பங்ஷன் இருக்கும்மா.காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி போகனும்.நீங்க சீக்கிரமா டிபன் ரெடி பண்ணீருங்கம்மா..." என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று டைரியை ஓபன் செய்து எழுதத் தொடங்கினாள்.


மை டியர் ஸ்வீட் ஹார்ட்,

அடுத்தவாரம் உங்கள நேர்ல வந்து பார்க்க போறேனாங்க? எத்தனை நாட்கள் காத்திருப்புங்க சந்துரு.
எனக்கு விசா கிடைத்த மெயிலைப் பார்த்த மறுகணமே உங்களிடம் நேரில் வந்து சேர்ந்தது போல உணர்ந்தேன்.நீங்கள் என்னருகில் இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் தனிமையின் கொடுமை எவ்வளவு கொடியது என்று புரிந்தது.என் தலையனைக்கு மட்டுமே தெரியுங்க சந்துரு.உங்களை பிரிந்து இருந்த நாட்களில் நான் சிந்திய கண்ணீர்த் துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று.முடிந்ததை நினைத்து வருந்துவதில் பயனேதுமில்லை என்பதை நான் நன்கு அறிவேன் சந்துரு.பல சூழ்நிலைகளை கடந்து வரத் தெரிந்த எனக்கு உங்களை மட்டும் பிரிந்திருக்க முடியாமல் நித்தமும் துடியாய் துடித்தேன்.என் சிந்தைக்கு தெரிந்த எதார்த்தம் ஏனோ என் மனம் ஏற்க மறுத்துவிட்டது.


உங்களை சந்திக்க போகும் அந்த நாட்கள் இதோ என்னருகில் வந்துவிட்டது சந்துரு என்று பக்கம் பக்கமாக கதைகளை எழுதி முடித்தாள் சாரு.



முதலில் இருந்த அபார்ட்மென்ட்டை விட்டு புதிதாக வேறொரு அபார்ட்மென்ட்டிற்கு குடியேறினான் சந்துரு.


"என்னடா சந்துரு! இன்னைக்கு உன் முகத்துல அதிகமா காதல் பொலிவு பொழியுது" என்று மனோஜ் கூறினான்.


"இது என்னடா புதுசா இருக்கு? முகப்பொலிவு கேள்விப் பட்டிருக்கேன். அது என்னடா காதல் பொலிவு?" என்று மனோஜிடம் கேட்டான்.


"புதுசா கல்யாணம் முடிஞ்சவுங்க ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்துட்டு மறுபடியும் சேர பேறாங்கனா அந்த நேரத்துல இப்படி தெரியும்னு" மனோஜ் சொன்னதை கேட்டதும், "ஐயா ராசா! மறுபடியும் மொக்கை போட ஆரம்புச்சுட்டுயா? எனக்கு நிறைய வேலை இருக்கு.முதல்ல இங்க இருந்து கிளம்புற வழியைப் பாரு..." என்று கூறினான் சந்துரு.


"நீயா பேசியது என் அன்பே!" என்று மனோஜ் பாட தொடங்கியதும், நீ பானுவை பார்க்க முடியாம காதல் போதை தலைக்கு ஏறி கொஞ்சம் மூளை கலங்கிருச்சுனு நினைக்கிறேன்.வா! நாளைக்கே மென்டல் ஆஸ்பத்திரில ஒரு அப்பாய்ண்மென்ட் போட்டு டாக்டரை பார்த்துட்டு வந்திரலாம்..." என்று சிரித்துக் கொண்டே கூறினான் சந்துரு.


"அப்பா சாமி! ஆளவிடு ராசா!" என்று கூறிவிட்டுச் சென்றான் மனோஜ்.


மறுநாள் காலையில் ஆசிரியர் தினத்திற்காக எடுத்த செட் ஸேரியை உடுத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்றாள் சாரு.


மூன்று மாதங்களுக்கு பிறகு சாருவைப் பார்த்த மற்ற டீச்சர்ஸ் எல்லோரும் அவளை நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் 'ஹேப்பி டீச்சர்ஸ் டே' என்று சாரு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டிருக்கும் சமயத்தில் பானுவும் வந்துவிட்டாள். ஆசிரியர் தின கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் எல்லாம் நடைபெற தொடங்கியது.நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் சாருவும் பானுவும் பள்ளியின் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


"என்ன மேடம்? பேக்கிங்லாம் ஸ்டார்ட் பண்ணியாச்சா? மேடம் வர வர முன்ன மாதிரி எதுவுமே ஏங்கிட்ட சொல்லுறது இல்ல" என்று பானு கூறினாள்.


"அப்படிலாம் ஒன்னுமில்ல பானு.எப்பவும் சவிதாவ பத்தி யோசிச்சுக்கிட்டே இருக்குறதுல வேற யார்க்கிட்டையும் பேசுறதுக்கு நேரமில்ல..." என்று கூறினாள் சாரு.


"யாருடி அந்த சவிதா? அதுக்குள்ள எனக்கு தெரியாம புது ப்ரெண்ட்ஸ்லாம் பிடிச்சுட்டியா?" என்று கேட்டாள் பானு.


"நீ நினைக்கிற மாதிரி சவிதா புது ப்ரெண்ட்லாம் கிடையாது.என் கணவருடைய சொந்த தங்கச்சி.
இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா பானு? சவிதா இஸ் மை ஓல்டு காலேஜ் ஸ்டூடண்ட் பானு."


"என்ன சாரு அடுத்தடுத்து ஷாக் கொடுக்குற மாதிரி நியூஸா சொல்லுற? மனோஜ் சார் கூட ஏங்கிட்ட சவிதாவ பத்தி எதுவுமே இதுவரை சொன்னதில்ல.கூடப் பிறந்த தங்கச்சியை மறச்சு கல்யாணம் பண்ணுற அளவுக்கு அப்படி என்னடி அந்த பொண்ணு பண்ணுனா?" என்று பானு கேட்டதும் சவிதா கோமாவிலிருப்பதையும் அவளுக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினாள் சாரு.


"சவிதா செம டேலண்டான பொண்ணு பானு.சவிதா பரத நாட்டியம் ஆடும்போது பார்த்தா, அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்துல ஆடுற பத்மினி அம்மா மாதிரியே இருக்கும்.பரதம் ஆடும்போது அவளுடைய முகத்துல நவரசமும் தெரியும்.காலேஜ் ஜாயின் பண்ண பஸ்ட் இயர்லேயே படிப்பு, பரதம், ஸ்டேஜ்ல காம்பேரிங்குனு ஸ்டாப்ஸ் ஸ்டூடண்ட் மத்தியில செம நேம் வாங்கிருந்தா.ரொம்ப போல்டான பொண்ணு.அவளுக்கு எப்படி இப்படி நடந்ததுனு நினைச்சு ஆச்சரியமா இருக்கு பானு."


வெள்ளெந்தி மனம் கொண்ட பானு சவிதாவின் கடந்த கால நிகழ்வை கேட்டு கண்ணீர் விட்டாள்.


"எனக்கு உங்கிட்ட இருந்து ஒரு உதவி வேணும் பானு!" என்று கேட்டாள் சாரு.நான் அடுத்த வாரம் அமெரிக்கா போனதும் நீதான் சவிதாவை பத்திரமா பார்த்துக்கனும்.நான் அவரு ஆபிஸ் போனதுக்கு பிறகு வீடியோ கால் போட்டு சவிதாவுக்கு பேசுறேன்" என்று கூறினாள்.


"என்னால முடிஞ்ச வரை எல்லா உதவியும் கண்டிப்பா செய்றேன் சாரு.நீ எதுவும் சவிதாவைப் பத்தி கவலைப்படாமல் பத்திரமா போய்ட்டு வா.அவளை நான் கவனமா பாத்துக்கிறேன்" என்று கூறினாள் பானு.


"தாங்க் யூ சோ மச் பானு" என்று கூறிவிட்டு அவளைக் கட்டிப்பிடித்தாள்.


இரண்டு நாட்கள் கழித்து சாருவை அழைத்து செல்ல ஜானகி அம்மா அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தார். ஜானகி அம்மா வந்ததும், அவரை வீட்டிற்குள் வரவேற்று உபசரித்தார் சிவகாமி அம்மா.


"சவிதா எப்படி சம்பந்தி இருக்கா? என்று கேட்டதும், தயக்கத்துடன் என்னை மன்னிச்சிருங்க சம்பந்தி அம்மா..." என்று கூறினார்.


"ஐயோ! எதுக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க சம்பந்தி அம்மா.சவிதா சீக்கிரம் குணமாகிருவா.சவிதாவைப் பத்தி சாரு சொன்னதும், நாங்க எங்க குலதெய்வத்துக்கு காணிக்கை முடிஞ்சு நேத்திக்கடன் வச்சிருக்கோம் சம்பந்தி.இதுவரை நாங்க வேண்டுனா எல்லாமே அந்த நரசிங்கமூர்த்தி சாஸ்தா முடிச்சு கொடுத்திருக்காரு. கண்டிப்பா நம்ம சவிதாவையும் சுகமாக்கி கொடுப்பாரு.நீங்க எதை நினைச்சும் கவலைப்படாமல் தைரியமா இருங்க..." என்று கூறியதும் கண்கலங்கி கையெடுத்து கும்பிட்டார் ஜானகி அம்மா.


"இப்படி நல்ல மனசு உள்ள உங்கக்கிட்ட போய் உண்மையை மறச்சுட்டேனே!" என்று சொல்லி வருந்தினார் ஜானகி அம்மா.


"உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் இதைத் தான் சம்பந்தி பண்ணிருப்பேன்" என்று சிவகாமி அம்மா கூறினார்.


மாடியிலிருந்து கீழே வந்த சாரு ஜானகி அம்மாவை தன்னுடைய ரூம்மிற்கு அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு சென்றாள்.கட்டிலில் படுத்த ஜானகி அம்மா சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்து திகைத்து வேகமாக எழுந்து போட்டோவின் அருகே சென்று உற்றுப் பார்த்தார்.


சாருவின் அறைக்குள் வந்த பாட்டி, "என்னம்மா ஜானகி அந்த போட்டோவ அப்படி உத்துப்பாக்குற?" என்று கேட்டார்.


"இந்த போட்டோ ப்ரேம் எப்படிம்மா சாருவோட ரூம்ல இருக்கு?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


சாருவின் ஓல்டு ஸ்டூடண்டா சவிதா? பிறகு எதுக்கு சாரு ஸ்கூல்ல டீச்சரா வேலைப்பாக்குறா? சாருவின் அறையிலிருந்த போட்டோவில் இருப்பது யார்? அந்த போட்டோவைப் பார்த்து ஜானகி அம்மா திகைத்தற்கு காரணம் என்ன? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் பல திருப்பங்களோடு காண்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 31


"இந்த போட்டோவில் இருக்குறது யாருனு உங்களுக்கு தெரியலையாம்மா!" என்று ஜானகி அம்மாவிடம் கேட்டார் சாருவின் பாட்டி.


பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்த ஜானகி அம்மாவிடம், "அது வேற யாருமில்ல நம்ம சாருதான்" என்று கூறினார் பாட்டி.


"என்னம்மா சொல்லுறீங்க? இது சாருவாம்மா? ஏங்கிட்ட உண்மையை மறைக்காம சொல்லுங்கம்மா. நிஜமாவே சாரு உங்க வீட்டு பொண்ணாம்மா?" என்று கண்ணீருடன் ஜானகி அம்மா கேட்டதும் கதி கலங்கி திகைத்து நின்றார் பாட்டி.


உண்மையை சொல்லலாமா? வேண்டாமா? என்று தெரியாமல் குழப்பத்துடன் பேசாமல் அமைதியாக இருந்தார் பாட்டி.


"இந்த போட்டோல சாருவை பார்த்தால், அப்படியே அச்சு அசலாக என் அண்ணன் பொண்ணு சஞ்சுளா மாதிரியே இருக்கும்மா.இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி என் வீட்டுக்காரரோடு சேர்ந்து என் அண்ணா அண்ணி அவுங்க பொன்னு சஞ்சுளா எல்லாரும் கொடைக்கானலுக்கு கார்ல போயிருந்தபோது ஒரு ஆக்ஸிடன்ட்ல இறந்துடாங்கம்மா.அந்த ஆக்ஸிடன்ட்ல தான் என்னுடைய மொத்த குடும்பத்தையும் இழந்துட்டு இன்னைக்கு இப்படி தனி மரமா நிக்கிறேன்.ஆனால் சஞ்சுளாவோட டெட் பாடி மட்டும் கிடைக்கலைனு சொல்லிடாங்கம்மா..." என்று அழுதுக் கொண்டே கூறினார்.


"எங்கள மன்னிச்சிருங்கம்மா! நீங்க சொன்ன மாதிரி சாரு இந்த வீட்டு பொண்ணு இல்லம்மா..." என்று டக்குனு உண்மையைப் போட்டு பட்டுனு உடைத்துவிட்டார் பாட்டி.


"என்னம்மா சொல்லுறீங்க? அப்போ சாரு உங்களுடைய சொந்த பேத்தி கிடையாதா?" என்று கேட்டார்.


"கிடையாதும்மா… இத்தனை நாளா மூடி மறைச்ச ரகசியத்தை உங்கக்கிட்ட சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு போலம்மா.நீங்க சொன்ன அதே நாள்ல தான் நாங்க எல்லாரும் குடும்பத்தோட கொடைக்கானலை சுத்தி பார்த்திட்டு ஊருக்கு திரும்பி வந்துகிட்டு இருந்தோம்.நாங்க வர்ற வழியில ஒரு கார் பாறை மீது முட்டி மோதி கிடந்தது.அதில் ஒரு குழந்தை குரல் கேட்டதும் நாங்க வேகமா இறங்கிப் போய் காருல யாரும் இருங்காங்கலானு பார்த்தோம்.அந்த கார்ல ஒரு குழந்தை மட்டும் அழுதுக்கிட்டு இருந்தது.அந்த கார்ல இருந்த மற்ற மூனு பேருக்கும் நாடித்துடிப்பு இருக்கானு கையைப் பிடிச்சு பார்த்தோம்.அந்த குழந்தையோட அம்மாவுக்கு மட்டும் உயிர் இருந்தது.இந்த குழந்தையோட அம்மாவ மட்டும் எப்படியாவது காப்பாத்திரலாம்னு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகுற வழியிலே அந்த குழந்தையின் அம்மாவோட உயிர் பிரிஞ்சிருச்சும்மா. அதோட போலீஸ்ல கொண்டு போய் அந்த குழந்தையை ஒப்படைச்சிருவோம்னு முடிவு செஞ்ச நேரத்துலதான், என் மருமகள் சிவகாமி "இந்த குழந்தைய நாம்மளே வளர்ப்போம் அத்தைனு" சொன்னா.


என் மகன் சுப்ரமணிக்கும் மருமகள் சிவகாமிக்கும் கல்யாண முடிஞ்சு எட்டு வருஷமா குழந்தையே இல்லம்மா. போகாத கோயில் இல்ல... வேண்டாத தெய்வமில்ல... பார்க்காத வைத்தியம் இல்ல... ஆனாலும் அவுங்களுக்கு குழந்தை பாக்கியம் கடைசி வரைக்கும் கிடைக்கவே இல்லை.அந்த நேரத்துலதான் இந்த குழந்தையும் எங்களுக்கு கையில கிடைச்சது.இந்த குழந்தையோட அம்மா அப்பாவும் உயிரோட இல்ல.தேடிப்பிடிச்சு உறவுக்காரங்கிட்ட குழந்தையை கொடுத்தாலும் நல்ல படியா வளர்ப்பாங்கலானு தெரியாது.
குழந்தை இல்லாம இருக்குற சிவகாமிக்கிட்ட இந்த குழந்தை வளர்ந்தா, கண்டிப்பாக சொந்த பிள்ளையை போல நல்ல படியா வளர்ப்பாள்.அவளுக்கும் தனக்கு குழந்தை இல்லங்கிற குறையும் இருக்காது.


அதனால கடவுள் மேல பாரத்த போட்டுட்டு அந்த குழந்தையை தூக்கிட்டு வந்து எங்க வீட்டு வாரிசாக்கிக் கிட்டோம்மா.அந்த குழந்தை வேற யாருமில்ல இந்த போட்டோல இருக்கிற நம்ம சாரு தான்."


தன்னுடைய அறையின் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சாருவிற்கு, தான் இந்த வீட்டு குழந்தை இல்லை என்று தெரிந்ததும் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மள மளவென சிந்தியது.


"சாருவுக்கு இந்த உண்மை எதுவும் தெரியாதும்மா..." என்று கூறினார் பாட்டி.


"தயவு செய்து இந்த உண்மையை எக்காரணத்தைக் கொண்டும் சாருகிட்ட சொல்ல வேண்டாம்மா! அவள் இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து இந்த நாள் வரைக்கும் எந்தவொரு கஷ்டமும் தெரியாத சந்தோஷத்தாம வளர்த்தோம்.இந்த உண்மை அவளுக்கு தெருஞ்சா தாங்க மாட்டம்மா..." என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டார் பாட்டி.


"என்னம்மா! நீங்க போய் ஏங்கிட்ட கையெடுத்து கும்பிட்டு கேக்குறீங்க? என் மருமகள் உயிரோட இருக்கிறானு தெரிஞ்சதே எனக்கு ரொம்ப சந்தோஷம்மா.அவள நான் வளர்த்திருந்தா கூட இப்படி வளர்த்து ஆளாக்கிருப்பேனானு தெரியல? நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். நீங்க கவலைப்படாதீங்க! நான் யாருக்கிட்டேயும் இந்த உண்மையை சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தார் ஜானகி அம்மா."


அவர்கள் பேசி முடித்ததும் ஐந்து நிமிடங்கள் கழித்து கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவளுக்கு உண்மை எதுவுமே தெரியாதது போல தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் சாரு.


சாருவைப் பார்த்ததும் "சஞ்சுளா... என் செல்லமே… நீ பத்திரமா எனக்கு திரும்பி கிடச்சுட்டும்மா… நீ என்னோட சொந்த மருமகடா..." என்று கட்டி அணைத்து தழுவி உரிமை கொண்டாட வேண்டும் என்று ஜானகி அம்மாவிற்கு தோன்றியது.ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உண்மையை வெளியே சொல்ல முடியாமல் அவருடைய உணர்வுகளை அடக்கிக் கொண்டார் ஜானகி அம்மா.


"பாட்டி! நீங்க இங்க தான் இருக்கீங்களா? என்று கேட்டாள்."


"ஆமாம்டா சாரு..." என்றார் பாட்டி.


"சரி வாங்க... சாப்பிட போகலாம்" என்று தன்னுடைய மாமியாரையும் பாட்டியையும் அழைத்துக் கொண்டு கீழே டைனிங் அறைக்குச் சென்றாள்.


சாப்பிட்டு முடித்ததும் ஜானகி அம்மாவும் சாருவும் அங்கிருந்து கிளம்பினார்கள்.வீட்டிற்குள் வந்ததும் சாரு வேகமாக சவிதாவின் அறைக்கு சென்றாள்.


"சவிதா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? உன்னோட மாமா பொண்ணு சஞ்சுளா இன்னும் உயிரோட தான் இருக்கலாம்"
என்று சாரு சொல்லி முடித்த மறுநொடியிலே சவிதாவின் கண்களில் எப்போதும் போல கண்ணீர்த்துளி மட்டும் சிந்தவில்லை, கண் இமைகளும் தொடர்ந்து அசைந்து
கொண்டிருந்தது.கை, கால்களும் நடுங்கத் தொடங்கியது.திடீரென்று சவிதாவின் அறைக்குள் வந்த ஜானகி அம்மா, "சாரு…" என்று அழைத்ததும் தன்னுடைய மாமியாரை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.


"உனக்கு எல்லா உண்மையும் தெரியுமா சாரு?"


"தெரியும் அத்தை... நான் உங்களை சாப்பிடுவதற்காக கூப்பிட வரும்போது நீங்களும் பாட்டியும் பேசிக்கிட்டு இருந்தது என் காதில் விழுந்தது அத்தை."


"ஆனால் நீ ரூம்க்குள்ள வரும்போது எதுவும் தெரியாதது மாதிரி நார்மலா தான பேசிகிட்டு இருந்த?" என்று கேட்டார்.


"ஆமாம் அத்தை… இந்த உண்மை சாருக்கு தெரிந்தா ரொம்ப சங்கடப்படுவானு பாட்டி சொன்னதையும் கவனிச்சேன்.
இத்தனை நாட்களாக எனக்கு எந்த வித குறையுமே இல்லாமல் அந்த வீட்டு பொண்ணாகவே பார்த்து பார்த்து வளர்த்து என்னை ஆளாக்கிய அவுங்களுக்கு மட்டும் எனக்கு எல்லா உண்மையும் தெரியும்னு தெரிஞ்சா ரொம்ப சங்கடப்படுவாங்க அத்தை. எப்போதுமே குருவி கூடு மாதிரி ஒன்னா சந்தோஷமா வாழுற வீட்டுல, எந்த சங்கடமும் என்னால வந்திரக் கூடாதுனுதான் அத்தை நான் எதுவுமே வெளிக்காட்டிக்கல.எனக்கு நான் யாருங்குற உண்மை தெரியுங்குற விஷயம் என்னைக்குமே அவுங்களுக்கு தெரிய வேண்டாம் அத்தை..." என்று கூறினாள்.


"சரிம்மா... நான் இப்போவே சந்துருக்கு மட்டும் கால் பண்ணி நீ தான் சஞ்சுளாங்கிற விஷயத்தை சொல்லுறேன்ம்மா என்றார்."


"அவுங்களுக்கு நான் தான் சஞ்சுளாங்கிற உண்மையை இப்போதைக்கு எதையுமே சொல்ல வேண்டாம் அத்தை.ப்ளீஸ் அத்தை…நேரம் வரும்போது நானே அவுங்கக்கிட்ட தெரியப்படுத்துறேன்" என்று கூறினாள்.


"இல்லம்மா சாரு... நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழனுங்கிறதால தான் சொல்லுறேன்ம்மா.நீ பிறந்ததுமே என் அண்ணங்கிட்ட உன் பொண்ணுதான் என் வீட்டு மருமகள்னு பேசி முடிவு பண்ணிட்டோம்மா.சந்துருவும் விவரம் தெரியாத வயசுல இருந்தே உன் மேல உயிரா இருந்தான்.நீனும் அவன் கூடவே தான் எப்போ பார்த்தாலும் சேர்ந்து விளையாட ஆசைப்படுவம்மா. உனக்கு ஆக்ஸிடன்ட்டாகிடுச்சுனு கேள்விப்பட்டதும் சந்துருனால அந்த உண்மையை ஏத்துக்க முடியாம ரொம்ப கத்தி அழுது ஒரு வாரம் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையா இருந்தான்ம்மா.சவிதா அப்போ ஐந்து மாச கைக் குழந்தைம்மா.எனக்கும் வாழ்க்கையே வெறுத்து போய் செத்துறலாம்னு முடிவு எடுத்தேன். பிறகு சந்துரு என் மடியில வந்து உட்கார்ந்து என் கண்ணீரைத் துடைச்சுவிட்டு, நான் இருக்கேன்ம்மா அழாதீங்க! தங்கச்சியையும் உங்களையும் நான் பத்திரமா பார்த்துக்கிறேனு அந்த சின்ன வயசுலையும் சந்துரு சொன்னதும் தான் பிள்ளைங்களுக்காக உயிர் வாழனும்னு முடிவெடுத்தேன். சவிதானால தான் சந்துரு கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைமைக்கு மீண்டு வந்தான் சாரு.சவிதாவுக்கு அப்பா இல்லாத குறையே தெரியாம நல்லா வளர்த்தான்.இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து ரொம்ப அன்பா இருந்தாங்க.


சந்துரு, சவிதாவுக்கு நல்ல அண்ணனு சொல்லுறத விட பெஸ்ட் ப்ரெண்டுனு சொல்லலாம்.ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ்.சந்துரு மூத்த பையனா பிறந்ததால வீட்டோட எல்லா பொறுப்பையும் சின்ன வயசுல இருந்து அவனே தனியா நின்னு சமாளுச்சான்.அவன் வயசு பசங்கலாம் ஸ்கூல் லீவ் விட்டதும் விளையாட போகும்போது சந்துரு மட்டும் பார்ட் டைம்மா மெடிக்கல் ஷாப் பெட்ரோல் பல்க்னு வேலைப் பார்க்க போயிருவான்.அவன் ஆசைகளை எல்லாம் உதறி தள்ளிட்டு ரொம்ப பொறுப்போடு நடந்துகிட்டான்ம்மா. சந்துரு, அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்க்கையில முன்னேறி இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கான்ம்மா.அவனோட சந்தோஷமே அவன் தங்கச்சி தான். யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல! சவிதாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆனதும் சந்துருக்கு வாழ்க்கை மேல ரொம்ப வெறுப்பு வந்திருச்சு.தன் கண் முன்னாடி கூடப்பிறந்த தங்கச்சி படுத்த படுக்கையா இருக்கிறத பார்த்துட்டு எப்படி அவனால நிம்மதியா இருக்க முடியும்?


அந்த நேரத்துலதான் பிராஜெக்ட் ஒர்க்குக்காக வெளிநாட்டுக்கு போக சொல்லி கம்பெனி ஆஃபர் வந்தது. ஆனால் சந்துரு சவிதாவை விட்டுட்டு அமெரிக்கா போக மாட்டேனு சொல்லிட்டான்.அவன் இங்க இருந்தால் சவிதாவை நினைச்சு நினைச்சு எங்க சந்துருக்கும் எதுவும் ஆகிடுமோனு பயந்து தான், என் மனச கல்லாக்கிட்டு சந்துருவ வெளிநாட்டிக்கு போக எப்படியோ பேசி அவனை சம்மதிக்க வச்சேன்ம்மா. சந்துருக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டா, கொஞ்சம் மாறிருவானு நினைச்சு பொண்ணு பார்த்த போதெல்லாம், "நான் கல்யாணம் செஞ்சுக்கிட்ட என் தங்கச்சிய யாரு பார்ப்பா? நான் மட்டும் நல்லா இருந்தா போதுமா?" சவிதா குணமாகுற வரை நான் கல்யாணம் செஞ்சுக்கவே மாட்டேனு ரொம்ப பிடிவாதம் பிடிச்சான்.அவன் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேனு சொல்லுறதுக்கு இன்னொரு முக்ககியமான காரணம் அவனால சஞ்சுளாவ மறக்கவே முடியல.


சரி, அவன் வழியிலே போய் கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்னு கண்டுக்காம இருந்தேன்.அதுக்கு பிறகு ஒரு நாள் போன்ல பேசும்போது நீ மட்டும் இப்போ கல்யாணம் செஞ்சுகலனு என்ன உயிரோடவே பார்க்க முடியாதுனு சொல்லி மிரட்டிய பிறகுதான் உன்னை கல்யாணம் செய்யவே சம்மதுச்சான்ம்மா..." என்று ஆரம்ப கால கதைகள் அனைத்தையும் சாருவிடம் கூறினார்.


"நீங்க இரண்டு பேரும் ஒரு ரூம்குள்ள இருந்தாலும், இன்னும் இரண்டு பேரும் ஒன்னு சேரலனு சந்துருவோட நடவடிக்கையை வச்சே தெருஞ்சுகிட்டேன் சாரு.உன் நல்லதுக்காக தான் சொல்லுறேன் சாரு.சஞ்சுளாவ மறக்க முடியாம தான் சந்துரு இன்னும் உன்னோடு சேர்ந்து வாழாமல் இருக்கானு நினைக்கிறேன்" என்று கூறினார்.


"நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க அத்தை! எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்" என்று கூறினாள் சாரு.


"சரிம்மா... எப்படியோ அந்த ஏழுமலையான் அருளால நீ மறுபடியும் எங்களுக்கு கிடைச்சுட்டம்மா" என்று கூறினார்.


"என்னுடைய அப்பா அம்மா போட்டோ இருக்கா அத்தை?" என்று கேட்டதும், சவிதாவின் போட்டோ ஆல்பத்திலிருந்த சாருவின் அப்பா அம்மா போட்டோவை எடுத்து சாருவிடம் காட்டினார்.


தன்னுடைய அப்பா அம்மா உயிரோடு இல்லாததை நினைத்து கண்ணீர் விட்டாள் சாரு.சாருவை தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினார் ஜானகி அம்மா.


சாருவின் மொபைல் ரிங் அடித்தது."வெயிட்லாம் கரெக்ட்டா இருக்கானு செக் பண்ணிட்டீங்களா? ஏர்போர்ட்டிற்கு போனதும் அங்குள்ள செக்கிங் ப்ராஸஸ் எல்லாத்தையும் சாருவிற்கு சொல்லிக் கொடுத்தான். முதல் முறையாக இன்டர்நேஷனல் ப்ளைட்ல ட்ராவல் செய்ய போறீங்க. எஞ்சாய்ங்க...ஹேப்பி ஜார்னி...டேக் கேர்..." என்று கூறினான்.


"நாளைக்கு மீட் பண்ணலாங்க…" என்று சந்துரு கூறியதும், நானும் இந்த நாளுக்காக தான் காத்துக் கொண்டு இருக்கேன் என்று மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டாள்.


வீட்டிலிருந்து புறப்பட்டாள் சாரு….அவளை வழி அனுப்பி வைப்பதற்காக ஏர்போர்ட் வரை மொத்த குடும்பமும் வந்திருந்தனர். ஏர்போர்ட் ரீச்சானதும் சந்துருவின் நண்பர் சாருவிடம் வந்து பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு சென்றார்.


விமான நிலையத்தில் எல்லா செக்கிங்கும் முடிந்த பிறகு தன் குடும்பத்தார் அனைவருக்கும் "பாய்... பாய்..." சொல்விட்டு தன்னுடைய ஆசை கணவரைக் காணப்பதற்காக விமானத்தில் ஏறி தன்னுடைய சீட்டில் அமர்ந்தாள் சாரு.


சாருவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான் சந்துரு. சாருவிடமிருந்து மெஸேஜ் வந்தது.


"ஹாய்ங்... ஐ ஆம் இன் ப்ளைட்… சி யூ டுமாரோ" என்று மெஸேஜ் வந்ததை பார்த்ததும் சந்துருவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.


ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் கொஞ்சம் பயத்துடனும் இருந்தான் சந்துரு.கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்.பஸ்ட் டைம் ப்ளைட்ல எப்படி தனியா மேனேஜ் செய்ய போறாளோ? அப்படினு யோசித்து கொண்டு இருந்தான்.இரவெல்லாம் தூங்காமல் பால்கனியில் நடந்து கொண்டு ப்ளைட் ஸ்டேட்டஸையே செக் செய்து கொண்டிருந்தான்.


"டேய் சந்துரு! வந்து தூங்குடா! காலையில சாருவை பிக்கப் பண்ண போகனும்ல" என்று மனோஜ் கூறியதும் சாருவையே நினைத்துக் கொண்டு உறங்கினான்.


சாருதான் தன்னுடைய சஞ்சுளா என்ற உண்மை சந்துருவிற்கு எப்போது தெரிய வரும்? சந்துருவிடம் இன்னும் எதற்காக உண்மையை கூற வேண்டாம் என்று சாரு கூறுகிறாள்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் பல சுவாரஸ்யமான திருப்பங்களோடு மீண்டும் சந்திப்போம்.

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 32


விமானம் தரையிறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே சாருவை அழைத்து வர விமான நிலையத்திற்கு சென்றுவிட்டான் சந்துரு.தன்னுடைய மனைவியை வரவேற்பதற்காக கையில் ரோஜா பூங்கொத்துடன் காத்துக் கொண்டிருந்தான்.மொபைலிலும் விமான நிலையத்தின் அறிக்கை பலகையிலும், சாரு வரும் விமானத்தின் ஸ்டேட்டஸை செக் செய்து கொண்டே இருந்தான். அவனால் ஒரு இடத்தில் அமர முடியவில்லை.அங்கும் இங்கும் 'குட்டி போட்ட பூனைப் போல' சுற்றிக் கொண்டே இருந்தான்.


சந்துரு ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அந்த தருணம் நெருங்கிவிட்டது.விமானம் தரையிறங்கிவிட்டது என்று அறிக்கை செய்ததும், சாருவை முதன் முறையாக நிச்சயதார்த்ததில் பார்த்த போது ஏற்பட்ட அதே படபடப்பும் இதயத் துடிப்பும் சந்துருவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று ஏற்பட்டது.விமானத்திலிருந்து வந்த அனைவரும் லக்கேஜ்ஜை இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.ஆனால் சாருவை மட்டும் காணவில்லை. சந்துருவின் கண்கள் கழுகை போல பயணிகள் வரும் திசையை உற்று நோக்கி கவனித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் நீல நிற ஜீன்ஸ் பேண்டுடன் லைட் பிங் நிறத்தில் டிசர்ட் அணிந்து, கையில் ட்ராலியை இழுத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் சாரு.


கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் எப்படி வரப்போகிறாளோ?என்று நினைத்து பயந்து கொண்டிருந்த சந்துருவிற்கு சாருவைப் பார்த்ததும் படும் ஷாக்காக இருந்தது.மறுப்பக்கம் சாருவைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.


சந்துரு கையில் பூங்கொத்துடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தவள், "மாமா..." என்று சொல்லிக் கொண்டு ஓடிப் போய் சந்துருவைக் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தன்னுடைய அன்பை வெளிக்காட்ட துடித்தவள் மனதில் நினைப்பதை வழக்கம் போல வெளியே காட்டிக் கொள்ளாமல் முகத்தில் புன்னகையுடன் கையை மட்டும் தூக்கி சைகை காட்டினாள்.இத்தனை நாட்களாக புடவையில் சாருவை பார்த்தவன், முதன் முறையாக ஜீன்ஸ் பேண்ட் உடையில் பார்த்ததும் அவளது அழகை கண்டு அசந்து போனான்.
சாரு தன்னை நோக்கி அடி எடுத்து வைத்து கொண்டு வரும் ஒவ்வொரு நிமிடமும் சந்துருவின் இதயத்துடிப்பு வேகமாக துடிக்கத் தொடங்கியது.


சாரு அவனருகில் வந்ததும் "வெல்கம் டூ நியூயார்க்" என்று கூறிப் பூங்கொத்தை அவளிடம் கொடுத்து வரவேற்றான்.


"தாங்க் யூங்க" என்றாள் சாரு.


காரில் சாருவை அழைத்துக் கொண்டு அபார்ட்மெண்டிற்கு சென்றதும், அவளை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றான் மனோஜ்.


"ப்ளைட் ஜார்னிலாம் எப்படி இருந்ததும்மா சாரு?" என்று விசாரித்தான் மனோஜ்.


"ம்... சூப்பரா இருந்தது" என்று கூறினாள்.


"ஓகே சாரு! நீ கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா... நாளைக்கு பார்க்கலாம்" என்று கூறிவிட்டு சென்றான் மனோஜ்.


"ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க!" என்று கூறினான் சந்துரு.


சாருவிற்கு பிடித்த வெண் பொங்கல் ,சாம்பார் வடை சமைத்து வைத்திருந்தான்.சாரு வந்ததிலிருந்து அவளை விழுந்து விழுந்து கவனித்தான் சந்துரு.சந்துருவின் நடவடிக்கையில் கானும் மாற்றம் கண்டு சாருவிற்கு ஒரு பக்கம் மிகுந்த சந்தோஷமாகவும், இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது.சாப்பிட்டு முடித்ததும், சாரு உறங்குவதற்காக பெட்ரூமிற்கு சென்றாள்.சாருவிற்கு அடுத்தடுத்து சந்தோஷத்தில் திளைக்கும் வண்ணம், படுக்கை அறையில் சந்துருவின் கல்யாணத்தில் எடுத்த நினைவுகள் அனைத்தையும் ஒரே போட்டோவாக ப்ரேம் செய்து சுவற்றில் மாட்டியிருந்தான்.இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கட்டிலின் குறுக்கே தலையனை பாலம் கட்டாமல் இருந்தது.மனம் நிறைய மகிழ்ச்சியுடன் ப்ளைட்டில் வந்த அசதியில் படுத்து உறங்கிவிட்டாள்.சாரு உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், சாரு பத்திரமாக வந்து சேர்ந்து விட்ட தகவலை ஜானகி அம்மாவிடமும், சாருவின் தாத்தவிடமும் கூறினான். சாருவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி பழக ஆரம்பித்தான் சந்துரு.


ஒவ்வொரு நாளும் இரவு சாப்பிட்டு முடித்ததும் பால்கனியில் அமர்ந்து, ஆபிஸில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அவன் பார்த்து ரசித்த சம்பவங்களை சாருவுடன் பகிரந்து கொள்ளத் தொடங்கினான்.


சந்துரு ஆபிஸ் சென்றதும், சாரு வீடியோ காலில் சவிதாவிடம் உரையாடிக் கொண்டிருந்தாள்.ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யும்போது சாருவிற்காக சந்துரு எழுதிய டைரி சாருவின் கண்களில் தென்பட்டது. முதல் பக்கத்தை படிக்க தொடங்கினாள்.சந்துரு எழுதிய ஒவ்வொரு வரியை படிக்கும்போது சாருவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது.வேகமாக ஒரு பேனாவை எடுத்து, அந்த டைரியின் இறுதியில் "ஐ லவ் யூ ஸோ மச் மாமா" என்று எழுதினாள்.


ஒரு வாரம் கழித்து சந்துருவின் ஆபிஸிலிருந்து அவனுக்கு பார்டி ஒன்று கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.


"ஹேய் ப்ரீத்தி! நாளைக்கு ஈவினிங் மறக்காம பார்டிக்கு வந்திரு! சந்துருவோட வைஃப் வர்றாங்க..." என்று மனோஜ் கூறினான்.


"கண்டிப்பா வருவேன் மனோஜ்! அந்த கிராமத்து பொண்ண பார்க்க நானும் ரொம்ப ஆவலா இருக்கேன்" என்று பல்லை கடித்துக் கொண்டு எரிச்சலுடன் கூறிவிட்டு சென்றாள் ப்ரீத்தி.



"நீ சும்மாவே இருக்க மாட்டீயா மனோஜ்? இப்போ எதுக்கு தேவையில்லாம சும்மா போறவளை பிடிச்சு உசுப்பேத்திவிடுற?" என்று கேட்டான்.


பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தான் மனோஜ்.மறுநாள் காலையில் ஆபிஸிற்கு கிளம்பும்போது, "ஈவினிங் கிளம்பி ரெடியா இருங்க…" என்று கூறிவிட்டு சென்றான்.


திடீரென லஞ்ச் பிரேக்கில் சாருவிற்கு கால் செய்தான் சந்துரு.


"ஸாரிங்க… ஒரு முக்கியமான ஒர்க் முடிக்க வேண்டியது இருக்கு. ஸோ... என்னால பிக்கப் பண்ண வர முடியாது. ஹேப் பிடிச்சு வந்திருங்க…" என்று கூறினான்.


"ஓகேங்க! நோ வொரிஸ்…" என்று கூறினாள்.


அனைவரும் பார்டிக்கு ரெடியாகி வந்து கொண்டிருந்தனர்.சாருவிற்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு.


"வாவ் ப்ரீத்தி! ரொம்ப க்யூட்டா இருக்கடி... ஆக்சுவலி இந்த பார்டி உனக்கும் சந்துருக்கும் கொடுக்க வேண்டியது.ஆனால் அந்த கிராமத்து பொண்ணுக்கு கொடுக்க வேண்டியதா போச்சு."


"உன் அழகையும் அறிவையும் பார்த்து உன் பின்னாடி சுத்தாத பசங்களே இல்ல! ஆனால் இந்த சந்துரு மடடும் உன் லவ்வை ரிஜெக்ட் பண்ணிட்டு, போயும் போயும் ஒரு கிராமத்து பொண்ண போய் கல்யாணம் முடிச்சிருக்கானே ப்ரீத்தி…" என்று எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ஊற்றிக் கொண்டிருந்தாள் அவளுடைய தோழி ஹேமா.


"வெயிட் பண்ணி பார்ப்போம் ஹேமா... சந்துருவோட பட்டிக்காட்டு வைஃப் எப்படி இருக்கானு?" என்று ஏளனமாக பேசி சிரித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கார் ஆபிஸ் வாசலில் வந்து நின்றது.


'ஸ்கை ப்ளூ கலர் பார்டி வியர்' அணிந்து கொண்டு காரிலிருந்து இறங்கினாள் சாரு.சாரு பார்ப்பதற்கு தேவதை போல இருந்தாள்.சந்துரு கண்ணிமைக்காமல் சாருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.


சந்துருவின் அருகில் வந்தவள், "பார்டி அட்டன் பண்ண போலாமாங்க?" என்று கேட்டாள்.


"ம்ம்.. போலாம்ங்க..." என்று கூறினான்.


சந்துருவின் கையோடு சாரு கைகோர்த்ததும், சாருவைப் பார்த்து புன்கை செய்தான் சந்துரு.


"வாவ்! சந்துரு வைஃப் பார்க்க ஏஞ்சல் மாதிரியே இருக்காங்கல ப்ரீத்தி. என்னம்மா அழகு! அப்பா…. பொண்ணு நாம்மளே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு செம பிகரா இருங்காங்கல…


சந்துரு செலக்ஷன் ஹாசம்!" என்று ஹேமா கூறியதும் அவளைப் பார்த்து முரைத்தாள் ப்ரீத்தி.


இருவரும் கைகோர்த்து நடந்து வருவதை பார்த்ததும் ப்ரீத்திக்கு மேலும் வயிறு கொழுந்துவிட்டு எறியத் தொடங்கியது.


அவ்வளவு நேரம் ப்ரீத்தியை புகழந்து தள்ளிய ஹேமா, சந்துருவிடம் சென்று "கங்கிராஜுலேஷன்ஸ் சந்துரு.'மேடு பாஃர் ஈச் அதர்' உன் வைப் ரொம்ப அழகா இருக்காங்க சந்துரு..." என்று கூறினாள்.


ஆபிஸில் சந்துருவுடன் பணிபுரியும் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


அதற்கு பிறகு சந்துருவை பேச அழைத்தனர்.சந்துரு பேசி முடித்ததும், ப்ரீத்தி எழுந்து சாருவை இரண்டு வார்த்தைகள் பேசுமாரு மைக்கை அவளிடம் கொடுத்தாள்.



"ஹே ப்ரீத்தி! என்னடி பண்ணுற?" என்று கேட்டாள் ஹேமா.


"இப்போ பாரு ஹேமா! சாருவோடு உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரப்போகுது.பாஃரினர் மாதிரி ட்ரெஸ் போட்டு வந்தா மட்டும் போதுமா? பாஃரினர் மாதிரி பேசனும்ல… சந்துரு அன்னைக்கு எல்லாரும் இருக்காங்கனு கூட பார்க்காமல் அத்தனை பேரு முன்னாடியும், நான் கொடுத்த ரோஜாப் பூவை தூக்கி என் முகத்துல எறிந்து அசிங்கப்படுத்தினான்ல.இன்னைக்கு பாரு! அவன் வைஃப் பேச முடியமால் தடுமாறப்போறா, எல்லாரு முன்னாடியும் தலைகுனிஞ்சு நிற்க போறான் பாரு!" என்று பழிவாங்கும் உணர்வோடு கூறினாள் ப்ரீத்தி.


சந்துருவிற்கு மனதிற்குள் சாரு எப்படி பேசப் போகிறாளோ? என்று நினைத்து மனதில் பயப்பட தொடங்கினான். ப்ரீத்தி மைக்கை கையில் கொடுத்ததும், கையில் வாங்கிய சாரு, அமெரிக்கா வாழ் மக்களைப் போல சர்வ சாதாரணமாக அவர்களைப் போலவே உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் அருமையாக பேசினாள்.சாரு பேசி முடித்ததும், அனைவரும் எழுந்து நின்று கரங்களைத் தட்டி கரகோஷம் எழுப்பினார்கள்.அதைப் பார்த்ததும் ப்ரீத்தி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.


சந்துருவுடன் பணிபுரியும் வயதான அமெரிக்க வாழ் பெண் ஒருவர் சந்துருவிடம் வந்து, "யூ ஆர் வெரி லக்கி சந்துரு... காட் ப்ளஸ் யூ போத்" என்று கூறிவிட்டு சென்றார்.


பார்டி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில், "சாரு! யூ ஆர் லுக்கிங் டூ ப்ரிட்டி..." என்று கூறினான்."


தன்னுடைய பெயரை முதன் முறையாக சந்துரு வாயிலிருந்து கூறியதை கேட்டதும் சாருவிற்கு மனதில் உற்சாகம் தாங்க முடியவில்லை.


"தாங்க் யூங்க" என்று கூறினாள் சாரு.


வீட்டிற்குள் வந்ததும் பெட் ரூமிற்கு சென்றவன், "வாவ்..." என்று கூறினான்.சாரு வேகமாக பெட் ரூமிற்கு சென்று பார்த்தாள்.


"இந்த பெயிண்டிங் நீங்களா சாரு பண்ணீங்க?" என்று கேட்டான்.


"ஆமாங்க…"


"வாவ்! சூப்பர்ங்க… ரியலி அமேஸிங்..." என்று கூறினான்.


தன் ஆழ்மனதின் எண்ணங்களை பல வண்ணங்கள் கொண்டு இயற்கை காட்சி ஒன்றை பேப்பரில் வரைந்திருந்தாள்.குறிப்பாக அந்த ஓவியத்தில் ஒரு காதல் ஜோடி கைகோர்த்துக் கொண்டு நடப்பது போலவும் வரைந்திருந்தாள்.சாருவின் அடுத்தடுத்த திறமைகளைக் கண்டு வியந்து போனான் சந்துரு.மறுநாள் இரவு பால்கனியில அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இன்று உண்மையை சொல்லிடலாம்.
இதுக்கு மேல உண்மையை மூடி மறைக்க வேண்டாம்.இன்னைக்கு சாரு நல்ல மூடுல இருக்காங்க.இதை விட்டா வேற சரியான தருணம் நமக்கு கிடைக்காது என்று நினைத்து சாருவிடம் பேசத் தொடங்கினான் சந்துரு.


"சாரு! நான் உங்கக்கிட்ட ஒரு உண்மையை சொல்லனும்" என்றான்.


"ம்ம்... சொல்லுங்கங்க..." என்றாள் சாரு.


"நான் இத்தனை நாட்களாக உங்கக்கிட்ட சகஜமா பழகாமல் இருந்ததிற்கான காரணத்தை சொல்லப் போறேன்" என்று கூறினான்.


"நான் சொல்ல போற விஷயம் கேட்டு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக் கூட இருக்கலாம் என்றான்.கணவன் மனைவி உறவுக்கிடையே எந்தவித ஒளிவும் மறைவும் இருக்கக் கூடாது.
அந்த மாதிரிதான் நம்மளுடைய லைஃப்லையும் பாஃலோ பண்ணனும் விருப்பப்படுறேன்.எனக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க… அவளுடைய பெயர் சவிதா" என்று கூறினான்.


"என்னங்க சொல்லுறீங்க?" என்று அவளுக்கு எதுவும் தெரியாதது போல கேட்டாள்.


"ஆமாங்க...ஒரு ஆகிஸிடன்ட்ல கோமா ஸ்டேஜ் போய்ட்டா…" என்று ஆரம்பத்திலிருந்து அனைத்து சம்பவங்களையும் வரிசையாக கூறினான்.


"அடுத்ததா என் சஞ்சுளா…" என்று கூறும்போதே அவன் கண்கள் கலங்க தொடங்கியது.


"இவுங்க யாருங்க?" என்று மீண்டும் தெரியாதது போல மிகவும் ஆவலுடன் கேட்டாள்.


"என் ஆருயிர் காதலிங்க…"


"நீங்க லவ் பண்ணீங்களா! இப்போ அவுங்க எங்க இருக்காங்க?" என்று கேட்டாள்.


"ம்ம்ங்க… நான் உயிருக்கு உயிரா லவ் பண்ண பொண்ணுங்க சஞ்சு.ஆனால் இன்னைக்கு என் சஞ்சு உயிரோட இல்ல..." என்று சொல்லும்போதே சந்துருவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளி சிந்தியது.


"ஐ ஆம் ரியலி சாரிங்க... ப்ளீஸ்ங்க அழாதீங்க!" என்று கூறினாள் சாரு.


சஞ்சுளாவுடன் இருந்த நினைவுகள் அனைத்தையும் சாருவிடம் கூறினான்.


"இத்தனை நாட்களாக இந்த உண்மையை உங்களிடமிருந்து மறைச்சதிற்காக என்னை மன்னிச்சிருங்க!" என்று சாருவிடம் மன்னிப்புக் கேட்டான்.


"ஐயையோ! எதுக்குங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க. உங்கள் நிலைமையில் நான் இருந்திருந்தாலும் இதைத் தான் செஞ்சிருப்பேன்.உங்களுடைய வலியும் வேதனையும் என்னால உணர முடியுதுங்க. நீங்க எதை நினைச்சு கவலைப்படாதீங்க! சீக்கிரமா சவிதா சரியாகிடுவாங்க" என்று சாரு கூறியதும் சாருவின் கரங்களை பிடித்து "தாங்க் யூ சோ மச் பாஃர் யுவர் அண்டர்சான்டிங்" என்று கூறிக் கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டான்.


சாருவின் விரல்களைத் தொட்டதும் சஞ்சுளாவின் கரங்களை தொட்டது போலவே மீண்டும் உணர்ந்தான்.


சாருவிடம் உண்மையை சொல்லியதும், பல நாட்களாக நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பாரத்தை கொஞ்சம் இறக்கி வைத்தது போல உணரந்தான்.கட்டிலில் படுத்ததும் உறங்கிவிட்டான் சந்துரு.


"உங்க சஞ்சுளா சாகல மாமா... உயிரோடதான் இருக்கா...உங்க பக்கத்துலதான் இருக்கா மாமா... நீங்க சஞ்சுளாவை விரும்புவது போல சாருவையும் விரும்புவீங்களா? என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டு சந்துருவை பார்த்தவாரே உறங்கிவிட்டாள்.


நான்கு மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் மிகவும் டென்ஷனாக வீட்டிற்குள் நுழைந்தான் சந்துரு.சாரு என்னவென்று விசாரித்த போது ப்ராஜெக்ட் இஸ்யூ என்று கூறிவிட்டு "டின்னர் வேண்டாங்க!" என்று கூறிவிட்டு வேக வேகமாக லேப்டாப்பை ஓபன் செய்து வேலை செய்யத் தொடங்கினான்.மணி இரவு ஒன்றாகிவிட்டது.ஆனாலும் சந்துரு உறங்குவதற்கு பெட்ரூமிற்கு வரவில்லை.இரவு மூன்று மணியளவில் சாரு ஹாலிற்கு சென்று பார்த்தாள்.சந்துரு ஷோபாவிலே லேப்டாப்பை ஆப் செய்யாமல் கூட சோர்வில் அசந்து உறங்கிவிட்டான்.


சாரு மெதுவாக லேப்டாப்பையும் பைஃலையும் எடுத்துக் கொண்டு போய் பால்கனியில் அமரந்து சந்துருவின் ப்ராஜெக்ட் வொர்க்கில் வந்த ப்ராப்லமிற்கு சொலியூசன் தேடிக் கொண்டிருந்தாள்.காலை எட்டு மணிக்கு காபி கப்புடன் சென்று சந்துருவை எழுப்பினாள்.


"குட்மானிங்க…" என்று சாரு கூறியதும், "ஐயையோ! டயர்டுல அசந்து தூங்கிட்டனா? இன்னைக்கு கிளைன்ட்ட ப்ராஜெக்ட் சொலியூசன் சொல்லனுமே…" என்று புலம்ப தொடங்கினான்.


லேப்டாப்பை சந்துருவிடம் கொடுத்து "ப்ரோகிராம் இஸ்யூ சால்வ்டு" என்று கூறினாள்.


"என்னங்க சொல்லுறீங்க… நான் தான் தூங்கிட்டேனே! பிறகு எப்படி சால்வ்வாகும்?" என்று கேட்டதும், சாரு ப்ரோகிராம் இஸ்யூவிற்கான ரீசனுடன் சேர்த்து சொல்லீயூஷனையும் கூறினாள்.


"வாவ் சாரு! யூ ஆர் கிரேட்... தாங்க் யூ சோ மச்… " என்று கூறிவிட்டு வேக வேகமாக ஆபிஸிற்கு கிளம்பிச் சென்றான்.


ப்ராஜெக்ட் இஸ்யூவை ப்ரெஷன்டேஷன் செய்து முடித்ததும் ஆபிஸில் உள்ள மேனேஜர், கிளைன்ட்ஸ் அனைவரும் சந்துருவை பாராட்டினார்கள்.சாரு ஸ்கூல் டீச்சர்.அவுங்களுக்கு எப்படி ஐ.டி ப்ராஜெக்ட் இஸ்யூ சால்வ் பண்ண தெருஞ்சது? இதை எப்படி யோசிக்காமல் விட்டோம் என்று யோசித்துக் கொண்டிருந்தவன் வேகமாக மெயில் ஐடியை ஓபன் செய்து ஜானகி அம்மா அனுப்பியிருந்த சாருவின் ப்ரொபைலை செக் செய்து பார்த்ததும் 'ஓ மை ஹாட்…' என்று கூறினான்.


"அப்படி மெயிலில் என்ன இருந்தது தாத்தா? என்று கேட்டான் ரோஹித்."


சாரு ஸ்கூல் டீச்சர் இல்லையா? யார் இந்த ரோஹித்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் பல சுவாரஸ்யமான திருப்பங்களோடு மீண்டும் சந்திப்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.

🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 33


சந்துரு ஆபிஸிற்கு சென்ற அவசரத்தில் தன்னுடைய பர்ஸை மறந்து வீட்டிலேயே விட்டுச் சென்றான். மெயிலைப் பார்த்தவன், வேகமாக காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றான்.


வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சாரு.மேஜையை சுத்தம் செய்யும்போது சந்துருவுடைய பர்ஸின் நுனியில் ஏதோ ஒரு போட்டோ நீட்டிக் கொண்டிருந்ததை பார்த்தாள் சாரு.இந்த போட்டோவை எடுப்பதற்காகத் தானே அன்று மூச்சிழைக்க ஓடி வந்து வேகமாக இந்த போட்டோவை வாங்கிட்டு போனாங்க. அப்படி அந்த போட்டோல யாரு இருக்கானு இன்னைக்கு பார்க்காமல் விடக்கூடாது என்று சொல்லிக் கொண்டே வேகமாக பர்ஸிலிருந்த போட்டோவை எடுத்துப் பார்க்க போகும் சமயத்தில் சந்துரு அறைக்குள் நுழைந்தான்.


சந்துரு உள்ளே நுழைந்தை பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் "உங்க பர்ஸிலிருந்து இந்த போட்டோ கீழே விழுகுற மாதிரி இருந்ததுங்க… அதனால் தான் உங்க பர்ஸை எடுத்தேன்" என்று கூறியனாள் சாரு.


"இட்ஸ் ஓஹேங்க... நோ வொரிஸ்... அது வேற யாரு போட்டோவும் இல்ல.சஞ்சுள போட்டோ தான் என்று பர்ஸிலிருந்து போட்டோவை எடுத்து சாருவிடம் காட்டினான்.எந்த ஒரு விஷயம் ஸ்டார்ட் பண்ணுறதுக்கு முன்னாடி சஞ்சுவோட போட்டோவ பார்த்துட்டு கிளம்புனா, போனா காரியம் நல்ல படியா நடக்கும்.இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்குனுகூட நீங்க நினைத்தாலும் தப்பில்லங்க.இது ஒரு விதமான மூட நம்பிக்கைனு கூட வச்சுக்கலாம். ஆனால் என்னம்மோ தெரியல சாரு என் மைன்டுல அப்படியே ரெஜிஸிட்டராகிடுச்சு" என்று கூறினான்.


"உங்களுக்கு இஷ்டம் இல்லைனா சொல்லிருங்க... சஞ்சுளா போட்டோவ எடுத்து டைரில வச்சிர்றேன் என்று கூறினான்."


"நோங்க… உங்களுக்கு பிடித்தமான எந்த ஒரு விஷயத்தையும் எனக்காக நீங்க மாற்ற வேண்டாங்க... நீங்க ஹேப்பினா…. நானும் ஹேப்பிதான்..." என்று சாரு கூறினாள்.


"தாங்க்ஸ் சாரு…."


"ஏன் சாரு இத்தனை நாட்களா எந்த உண்மையையும் சொல்லாமல் ஏங்கிட்ட இருந்து மறச்சீங்க?"


திடீரென்று வந்து இப்படி சந்துரு கேட்டதும், ஒரு வேளை நாம்ம சவிதாவ வீட்டுக்கு கொண்டு வந்து டீர்ட்மெண்ட் பார்க்குறது தெரிஞ்சு போச்சோ! என்று நினைத்து தயக்கத்துடன் "அது வந்துங்க..." என்று பேசத் தொடங்கினாள்.


"இன்னைக்கு தான் உங்க ப்ரொஃபைல பார்த்தேன்.நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஞ்சினியர்னு இப்போ தான் எனக்கு தெரியுங்க.யங் சைன்டிஸ்ட் அவார்டு, யூஜி பீஜி எல்லா கோர்ஸ்லையும் கோல் மெடல் வாங்கிருக்கீங்க… 'ஓ மை காட்' வாட்ட அ டேலண்டடு பேர்ஸன்ங்க.சாதரணமா ஒரு டிகிரி முடிச்சாலே ஓவரா சில பேரு அலட்டிக்குவாங்க.ஆனால் நீங்க இவ்வளவு படிச்சும் எதையுமே வெளிக்காட்டிக்காம அடக்கம்மா அமைதியா இருக்கீங்க.யூ ஆர் ரியலி கிரேட்ங்க..." என்று சாருவை புகழ்ந்து தள்ளினான்.


"நல்ல வேளை அவசரப்பட்டு உண்மையை சொல்லல..." என்று மனதிலே நினைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டாள் சாரு.


"எனக்கு ஒரு டவுட்ங்க…" என்று கேட்டான் சந்துரு.


"என்னங்க டவுட்ங்க?"


"இவ்வளவு படிச்சிட்டு நீங்க ஏன் கௌர்மன்ட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பாக்குறீங்க?"


"நான் படிச்சு முடிச்சதும், நான் படிச்ச காலேஜிலேயே தான் வேலைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.எனக்கு வரன் பார்க்க தொடங்கியதும், தாத்தா பாட்டி வேலையை விட்டுட்டு கொஞ்ச நாள் எங்க கூட வந்து இருடா சாருனு சொன்னதால வேலையை ரிஸைன் பண்ணிட்டு வந்துட்டேங்க.வீட்டிலேயே சும்மா இருக்க போரடிச்சது.ஈவினிங் கொஞ்ச நாள் வீட்டிலே டியூசன் எடுத்தேன்.ஒரு நாள் பானு வந்து ஸ்கூல்ல டெம்பரரியா வேலை பார்க்க ஆள் தேவையா இருக்குனு சொன்னாள்.சரினு மறுநாளே ஸ்கூலுக்கு போய் வேலையில் சேர்ந்துட்டேங்க" என்று கூறினாள்.


"ஓ… உங்க ப்ரஃபைலுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய ப்ளாஸ் பேக் இருக்காங்க.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமாங்க? நீங்க படித்து வேலை பார்த்த அதே காலேஜ்லதான் சவிதாவும் படிச்சாங்க..." என்று கூறினான்.


"ஓ அப்படியாங்க… என்று தனக்கு ஒன்றும் தெரியாதது போல கூறினாள்.சரிங்க… வாங்க சாப்பிடலாம்..." என்று சந்துருவை சாப்பிட அழைத்தாள்.


சாரு அமெரிக்கா வந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டது.
சந்துருவும் சாருவும் நெருங்கிய நண்பர்களாகினர்.அவர்களது நட்பு காதலாக மலரத் தொடங்கியது.
இரவு ஒரு நாள் வழக்கம் போல பால்கனியில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.


"சந்துரு! நீங்க தப்பா நினைக்க மாட்டீங்கனா நான் ஒரு ஒப்பினியன் சொல்லலாமா…." என்று கொஞ்சம் குரலின் சத்தத்தைக் குறைத்து கொண்டு மிகவும் மெதுவாக கேட்டாள் சாரு.


"ஸ்யோர் சாரு…"


"உனக்கில்லாத உரிமையா சாரு… தாரளமாக சொல்லு..." என்று கூறினான் சந்துரு.


"மனோஜ் அண்ணா கல்யாணத்துக்கு நாம்ம இந்தியா போகும்போதே இங்கிருந்து மொத்தமா வெக்கேட் பண்ணிட்டு கிளம்பிடலாங்க.பாவம் அத்தை மட்டும் ஊருல தனியா இருக்காங்க.முதுமையில் தனிமை ரொம்ப கொடுமைங்க.நாம்ம அவுங்க கூடவே எப்போதும் இருந்தோம்னா அத்தைக்கு தனியா இருக்கிற நினைப்பு இல்லாம எதைப் பத்தியும் யோசிச்சு கவலைப்படாமல் நார்மலா இருப்பாங்க."


"இப்போ அவுங்களுக்கு ஏதாவது அவசரத் தேவையா இருந்தாக் கூட யாரையாவது எதிர்பார்த்து இருக்க வேண்டியதா இருக்கும்.வயசான காலத்துல அவுங்க கூட இல்லாம நாம்ம இங்க இருப்பது எனக்கு சரியா படலங்க.நம்மள பார்த்து வளர்க்க வேண்டிய காலத்துல அவுங்க கடமையை சரியா செஞ்சு நம்மள கரெக்ட்டா ஆளாக்கிட்டாங்க.இப்போ நம்ம கடமையை நாம்மளும் சரியாக செய்யனும்லங்க..." என்று கூறினாள்.


சாருவின் பேச்சைக் கண்டு வியந்து போனான்.சந்துருவிற்கு அவள் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் மேலும் அதிகரித்தது.


"கண்டிப்பா சாரு…"


"எனக்கும் அம்மாவையும் சவிதாவையும் விட்டுட்டு இங்க வந்து இருக்க ஆரம்பத்துல இருந்தே சுத்தமா இஷ்டமில்ல சாரு.அம்மாவோட கட்டயத்துனால தான் வேற வழியில்லாம அமெரிக்க கிளம்ப சம்மதிச்சேன்.நான் நாளைக்கே மேனேஜர்கிட்ட பேசி பார்க்கிறேன் சாரு"என்று கூறினான்.


"தாங்க் யூங்க…" என்றாள் சாரு.


"என்ன மேடம்… மாமாவைப் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கீங்களா? மாமாவை நேர்ல பார்க்க போற சந்தோஷத்துல ஆளு ஒரு சுத்து ஏறுன மாதிரி தெரியுது" என்று மனோஜ் பானுவிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தான்.


"சார்… ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இருங்க... என்று கூறிவிட்டு வேகமாக கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.சார் அப்படிலாம் ஒன்னும் வெயிட் போடல! சும்மா சொல்லாதீங்க…"


"கண்ணாடில பார்த்த எல்லாம் தெருஞ்சுரும்மா மேடம்" என்று நக்கலடித்துக் கொண்டு சிரித்தான்.


"ஐயையோ! கண்ணாடில பார்த்ததை கண்டுப்புடிச்சுட்டாங்களே..." என்று வெட்கத்தில் தலையை குனிந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள் பானு.


மூவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் புறப்பட்டனர்.வீட்டிலுள்ள அனைவரும் சந்துரு, சாரு மற்றும் மனோஜின் வருகைக்காக கையில் ஆரத்தித் தட்டுடன் வாசலில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.மூவரும் காரில் வந்து இறங்கியதும் அவர்களை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றார் கண்ணம்மா.


ஆரத்தி எடுத்ததும் "அம்மா..." என்று கண்ணம்மாவைக் கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டான் மனோஜ்.


"ஹாய் அண்ணி! எப்படி இருக்கீங்க?" என்று ஷ்யாம் சாருவைப் பார்த்து கேட்டான்.


"ம்ம்...குட் ஷ்யாம்" என்று கூறினாள்.


ஷ்யாமின் மனமாற்றத்தைக் கண்டு சந்துருவும் சாருவும் சந்தோஷம் அடைந்தனர்.வீட்டிற்குள் நுழைந்ததும் சவிதாவைப் பற்றி ஜானகி அம்மாவிடம் விசாரித்தான் சந்துரு.


"சரிப்பா... நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..." என்று கூறினார் ஜானகி அம்மா.


அன்று இரவு பனிரெண்டு மணியாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு சந்துருவை மெதுவாக தட்டி எழுப்பினாள் சாரு.அவனுடைய கண்களை தன்னுடைய கைவிரல்களால் ஒத்திக்கொண்டு சந்துருவை மாடிக்கு அழைத்துச் சென்றாள் சாரு.


"ஹேய் சாரு! எங்கே என்னைக் கூட்டிட்டு போற?"என்று கேட்டான்.


"அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க…"


மாடிக்கு சென்றதும் சந்துருவின் கண்களிலிருந்து தன்னுடைய கரங்களை எடுத்து "சர்ப்ரைஸ்…" என்று கூறினாள் சாரு.


மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தான் சந்துரு."மெனி மோர் ஹேப்பி ரிட்டனர்ஸ் ஆப் தி டே அண்ணா…" என்று சவிதா கூறினாள்.தான் காண்பது கனவா? நிஜமா? என்று தெரியாமல் அவனுடைய கண்களிரண்டையும் நன்கு கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான்.


"அண்ணா…" என்று சவிதா மீண்டும் ஒரு முறை அழைத்தாள்.


"சவிதா…. என்று ஓடிப் போய் தன் தங்கையைக் கட்டி அணைத்து கதறி அழுதான்.என் சவிதா மறுபடியும் எனக்கு கிடச்சுட்டா.அம்மா! என் தங்கச்சி ஏங்கிட்ட பேசுறாம்மா..." என்று சந்தோஷத்தில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான்.


நீண்ட நாட்களுக்கு பிறகு சந்துரு, தன்னுடைய மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் கொட்டித் தீர்த்து அழுவதைப் பார்த்து ஜானகி அம்மா சந்துருவை தட்டிக் கொடுத்து அழுது கொண்டே சமாதானப்படுத்தினார். தங்கச்சியைப் பார்த்த சந்தோஷத்தில் சாருவை சுத்தமாக மறந்துவிட்டான் சந்துரு.


"எப்படிம்மா சவிதா க்யூர் ஆனா? " என்று அனைத்தையும் ஜானகி அம்மாவிடம் விசாரித்தான். சவிதாவிற்காக சாரு எடுத்த முயற்சிகள் அனைத்தையும் ஜானகி அம்மா கூறினார்.


"அண்ணா உங்கக்கிட்ட அடிக்கடி ஒரு ப்ரொபஸர் மேடம் பத்தி பெருமையா சொல்லுவேன்ல.அது வேற யாருமில்ல நம்ம சாரு அண்ணி தான்.என்னோட பஸ்ட் செமஸ்டர்ல ஒரு சப்ஜெக்ட் எடுத்தாங்க..." என்று சவிதா சொல்லி முடித்ததும், சாரு இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக சென்று சந்தோஷத்தில் அவளை முதன் முறையாக கட்டி அணைத்து "ஐ லவ் யூ சோ மச் சாரு" என்று கூறினான்.


முதன் முறையாக சந்துரு சாருவைக் கட்டி அணைத்ததும் சாருவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.இந்த தருணத்திற்காக சாரு எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டியதாகிற்று.அந்த உணர்வுகளின் வெளிப்பாடு தான் சாருவின் கண்ணீருக்கு காரணம்.


"ரியலி ஐ ஆம் ஸோ லக்கி… தாங்க் யூ சோ மச் சாரு"


"என் பர்த் டேக்கு நீ கொடுத்த சர்ப்ரைஸ என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது சாரு..." என்று கூறினான்.


"அண்ணா! உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டு இருக்கு.நம்ம சஞ்சுளா இன்னும் உயிரோடதான் இருக்காங்க அண்ணா..." என்று சவிதா கூறினாள்.


சந்துருவிற்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சசியாக இருந்தது.
"என்னம்மா சொல்லுற?"என்று கண்களின் கண்ணீருடன் சவிதாவிடம் கேட்டான்.


"இங்கே தான் இருக்காங்க…" என்றாள் சவிதா.


"இங்கேயே…"


"ஆமாம் அண்ணா… உங்க பக்கத்துல தான் இருக்காங்க."


"என் பக்கத்துல சாரு தானம்மா இருக்கா.கொஞ்சம் புரியும் படியா சொல்லும்மா சவிதா..." என்று பதற்றத்துடனும் ஆவலுடனும் கேட்டான்.


"சாரு தான் நம்ம சஞ்சுளாப்பா..." என்றார் ஜானகி அம்மா.


"என்னம்மா சொல்லுறீங்க?"


ஒரு நாள் சாருவின் வீட்டிற்கு போயிருந்தபோது சாரு ரூம்ல மாட்டியிருந்த போட்டோ ப்ரேமில்ல நம்ம சஞ்சுளாவோட போட்டோ மாட்டியிருந்தது.அதைப் பார்த்ததும் யாருடைய போட்டோனு சாருவின் பாட்டிட்ட கேட்டேன்." அப்போதான் சாருவைப் பற்றி உண்மை அனைத்தையும் பாட்டி
சொன்ன கதைகளையெல்லாம் சந்துருவிடம் கூறினார்.


"இந்த விஷயத்தை ஏங்கிட்ட ஏன்ம்மா இவ்வளவு நாளா சொல்லாம மூடி மறச்சீங்க?"


"சவிதா சரியானதும் நானே உண்மையை சொல்லிக்கிறேன்.
அதுவரை உங்கிட்ட இதைப்பத்தி சொல்லிக்க வேண்டாம்னு சொல்லிருந்தா சந்துரு…"


வீட்டிலுள்ள அனைவரும் இருப்பதை மறந்து சந்தோஷத்தில் கண்களில் கண்ணீருடன் சாருவை இறுக்கிக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தான் சந்துரு.சாருவிற்கு வெட்கம் வந்துவிட்டது.


"எனக்கு சந்தோஷத்துல என்ன சொல்லுறதுனே தெரியல சாரு…. "


"சரி… சரி… உங்க ரெண்டு பேரும் ரொமான்ஸலாம் கேக் கட் பண்ணதுக்கு பிறகு கன்ட்னியூ பண்ணுங்க.கேக் மெல்ட் ஆகிடப்போது.நீ சீக்கிரமா வந்து கேக் கட் பண்ணுடா சந்துரு" என்று மனோஜ் கூறியதும், அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.


அனைவரும் 'ஹேப்பி பேர்த் டே டூ யூ…' என்று பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடும்போது சந்துரு கேக் கட் செய்து ஒரு துண்டு கேக்கை எடுத்து சாருவிற்கு ஊட்டிவிட்டான்.அதற்கு பிறகு அவனுடைய தங்கைக்கும் மற்ற அனைவருக்கும் கேக் ஊட்டினான்.


பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும், அனைவரும் உறங்குவதற்கு சென்றுவிட்டனர்.சந்துரு சாருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.


"என்னங்க… என்னைக்கும் இல்லாம இன்னைக்கு தான் என்னை புதுசா பார்க்குறது மாதிரி அப்படி பாக்குறீங்க…" என்று கேட்டாள் சாரு.


என்னுடைய இந்த பிறந்தநாளை என்றுமே மறக்க முடியாது சாரு.நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.'ஐ லவ் யூ சோ மச் சாரு' என்று கூறினான்.


"நான் உங்கிட்ட உண்மையை சொல்லும்போது கூட நீ எதையுமே ஏன் வெளிக்காட்டிக்கல சாரு?இத்தனை நாட்களாக எந்த உண்மையையும் சொல்ல மறச்ச?"


நீங்க உயிராக நினைக்கும் சவிதாவையும் சஞ்சுளாவையும் ஒன்றாக சேர்த்து உங்க பேர்த் டேக்கு சர்ப்ரைஸ் குடுக்குறதுக்கு தான் இந்த ப்ளான் என்று கூறியதும், அவளைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டான்.


வெட்கத்தில் தலைகுனிந்து நின்றாள் சாரு.சந்துரு தன் கரங்களால் அவளைத் தொட்டதும் சாருவின் இதயத்துடிப்பு வழக்கத்தை விட வேகமாக துடிக்கத் தொடங்கியது. மெதுவாக சந்துருவை நிமிர்ந்து பார்த்தாள் சாரு.


சாருவின் இரு கன்னங்களையும் தன்னிரு கரங்களால் பிடித்து அவளுடைய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு. இருவருடைய விழிகளின் மொழிகளில் காதல் வழியத் தொடங்கியது.இதயம் இடமாறியது. ஈருயிர் ஓருயிராகியது.


மறுவாரம் மனோஜ் மற்றும் பானுவின் கல்யாணம் திருவிழாவைப் போல கோலாகலமாக நடைப்பெற்றது.ஒரு வருடம் கழித்து சந்துருவின் அப்பாவிற்கு திதி கொடுப்பதற்காக அனைவரும் குடும்பத்தோடு இராமேஸ்வரம் சென்றிருந்தனர்.
அப்போது துறவிகளின் கூட்டத்தோடு மனோஜின் அப்பா செல்வதைப் பார்த்தார் கண்ணம்மா.


"என்னங்க...என்னங்க... என்று கண்ணம்மா ஓடியதைப் பார்த்து அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.கண்ணம்மா வேகமாக சென்று மனோஜின் அப்பா சொக்கலிங்கத்திடம் நம்முடைய மகன் கிடைச்சுட்டாங்க..." என்று அழுது கொண்டே விஷயத்தை கூறினார்.


ஆனால் அவருடைய முகத்தில் எந்தவித பெரிய சந்தோஷமும் தெரியவில்லை.


"நான் இவ்வுலக மாயையில் மாட்டிக் கொள்ள விருப்பமில்லாமல் அந்த சிவனே கதியென்று அவரை தஞ்சம் புகுந்துவிட்டேன்."


கண்ணம்மாவைப் பார்த்து "ஆயுஷ்மான் பவ…" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.


"என்னங்க… என்னங்க…" என்று மீண்டும் அழுது கொண்டே அழைத்தார் கண்ணம்மா.


"அம்மா! உங்களைப் பற்றி நினைக்காதவருக்காக நீங்க எதுக்காகஅழுறீங்க…" என்று சாரு சொன்னதும், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமாதானமானார் கண்ணம்மா.


சந்துருவின் அப்பாவிற்கு திதி கொடுத்ததும் அனைவரும் வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர்.


"அதுக்கு பிறகு என்னாச்சு தாத்தா?" என்று மிகவும் ஆவலுடன் கேட்டான் சந்துருவின் பேரன் ரோஹித்.


"பிறகு உன் பாட்டியும் நானும் ஊரு ஊரா சென்று சுத்தி பார்த்தோம். எங்களது அன்பின் அடையாளமாக உன் அப்பா பிறந்தான்..." என்று தன்னுடைய பேரனிடம், அவருடைய வாழ்க்கை சுயசரிதை முழுவதையும் கூறி முடித்தார் சந்துரு.


"உங்களுக்கும் பாட்டிக்கும் செம லவ் தாத்தா.பாட்டி சான்ஸே இல்ல.நான் கல்யாணம் பண்ணா பாட்டி மாதிரி ஒரு பொண்ணை தான் தாத்தா கல்யாணம் செய்வேன்" என்று கூறியதும் சந்துரு சிரித்தார்.


"ஓகே தாத்தா... குட் நைட்… நாளைக்கு காலேஜூக்கு சீக்கிரமா எழுந்து கிளம்பனும் தாத்தா" என்று கூறிவிட்டு படுக்க சென்றான் ரோஹித்.


ஆம்... காலங்கள் கடந்து சென்றுவிட்டது.சந்துருவிற்கு எம்பத்தைந்து வயதாகிவிட்டது.சாரு தன்னுடைய எம்பதாவது வயதில் இயற்கை எய்துவிட்டார்.பொக்கை வாயுடன் கண்ணாடி அணிந்து கொண்டு டைரியை எடுத்துத் தன்னுடைய அருமை மனைவி சாருவின் பிரிவை தாங்க முடியாமல் கை நடுக்கத்துடன் டைரி எழுதத் தொடங்கினார் சந்துரு.


"நீ என்னை தனியாக விட்டு சென்ற ஒவ்வொரு கணமும் ரணமாக இருந்தது சாரு.என்னை பார்த்துக் கொள்ள ஆயிரம் பேர் என்னருகில் இருந்தாலும், என் இதயத்திலுள்ள உன் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாதடி என் பிரியசகி... நீ என்னைவிட்டு பிரிந்து சென்ற மறுகணமே எனது உயிரும் என்னை விட்டு பிரிந்து சென்றது போல உணர்ந்தேன் சாரு.இன்று நான் நடைப்பிணமாக தான் இருக்கிறேன். மீண்டும் பிறந்து உன்னோடு இணைய அந்த மரணத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் என் பிராணசகி... சீக்கிரம் வந்து என்னை அழைத்துக் செல்ல விரைந்து வா சாரு! மீண்டும் உன் காதல் மழையில் நனைய விரும்புகிறேன்..." என்று சாருவை நினைத்து டைரியை எழுதி முடித்தார்.


சந்துரு நாற்காலியில் சாய்ந்து கொண்டே ஜன்னலின் வழியாக நிலவைப் பார்த்து சாருவுடன் வாழ்ந்த நாட்களை நினைக்கும்போது சந்துருவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளி சிந்தியது. சந்துருவிற்காக சாரு தன்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் வண்ணங்களாக்கி எழுதிய டைரியை சந்துரு தன்னுடைய மார்பில் இறுகப் பிடித்து கொண்டே தன்னுடைய கண்களை மூடி உறங்கிவிட்டார்.




முற்றும்.



இத்தனை நாட்களாக எனக்கு அன்பும் ஆதரவும் அளித்து தொடர்ந்து விமர்சனங்கள் தந்து என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி இந்த நாவலை எழுதி முடிக்க உறுதுணையாக இருந்த வாசகர் பெருமக்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.



இது என்னுடைய முதல் நாவல்.இந்த நாவலைக் குறித்த நிறைகள் குறைகள் இருந்தால் கண்டிப்பாக பகிருங்கள்.
உங்களின் கருத்ததுக்கள் தான் என்னுடைய அடுத்த படைப்பிற்கு என்னை மேம்படுத்தி மெருகூட்டிக் கொள்ள உதவியாக இருக்கும்.



நன்றி🙏



வாழ்க வளமுடன்!!!


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.

🙏🙏🙏
 
Last edited:
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom