அத்தியாயம் -1
யாரு டாடி அவ?வீடு தேடி போன நம்ம ஆளு இரண்டு பேரை இப்படி அவமானப்படுத்தி அனுப்பி இருக்கா?"-எரிச்சலோடு தன் தந்தை ராகவனிடம் வினவினாள் தாரிகா.
"மாயா!"
"மாயா???"
இந்தியன் எக்கனாமியே பார்த்து நடுநடுங்குற ஒரு இன்டஸ்ட்டியலிஸ்ட்!"
"அவ எவளா வேணும்னாலும் இருக்கட்டும்!அதுக்காக நம்ம ஆளுங்கலயே அவமான படுத்துவாளா?நீங்க எதுக்கு அவன்கள அங்க அனுப்புனீங்க?
இன்னும் பத்து நாள் ஒரு டென்டர் இருக்கு ஞாபகமிருக்கா!"
ஆமா.
"அதே தான்!ஆனா,மாயா பில்டர்ஸ் அதுக்கு கொட்டேஷன் அனுப்பி இருக்காங்க!"
ஸோ வாட்?
மாயா கொட்டேசன் அனுப்பி இருந்தா அந்த டென்டர் கண்டிப்பா நமக்கு கிடைக்காது...
"என்ன உளர்றீங்க?"
"தமிழ்நாட்டுல மாயாவை எதிர்க்கிற தைரியம் எவனுக்கும் இல்லை!எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை!தான் ஜெயிக்க எத்தனை பேரை வேணும்னாலும் அழிக்க தயங்க மாட்டா அந்த மாயா!அதுக்காக தான்..."
"விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்ச அனுப்புனீங்ளா?"
"நமக்கு வேற வழி இல்ல!"
"டாடி என்ன நீங்க?சரியான பயந்தாங்குளியா இருக்கீங்க?அவ ஒரு பொண்ணு!"
"யாருக்கும் அடங்காத பொண்ணு தாரிகா!அவ முன்னாடி எதிர்த்து பேசுற தைரியம் கூட யாருக்கும் வந்தது இல்லை..!"
"டாட்..!"பற்களை கடித்தாள்...
"தாரிகா!பிசினஸ் விஷயமா அவளை யாராலும் எதுவும் பண்ண முடியாது!தயவுசெய்து கோபப்பட்டு காரியத்தை கெடுத்துடாதே !உன்னை நான் கெஞ்சி கேட்டுக்கிறேன்!"இந்த டென்டர் நமக்கு ரொம்ப முக்கியம்
தாரிகாவின் முகம் முழுதும் அவ்வளவு எரிச்சல்!!
"நாம நேரா அவ ஆபிஸ் தான் போகணும்!"
"வாட்?பைத்தியமா நீங்க?அந்த திமிர் பிடித்தவளை தேடி நாம போகணுமா??"
"வேற வழியில்லை தாரிகா!என்னால முடிந்த அளவுக்கு இந்த டென்டர் நமக்கு கிடைக்க நான் பாக்குறேன்.மாயா மட்டும் இதுலேருந்து விலகிட்டா அந்த டென்டர் கண்டிப்பா நமக்கு கிடைக்கும்...
"மாயா...மாயா...மாயா..ச்சே!"
தாரிகா புரிஞ்சிக்கோ?எவ்வளவோ சமாளித்து ஒண்ணும் செய்ய முடியல.. அதனால தான் இந்த முடிவு எடுத்தேன்.இந்த நிலையில நமக்கு உதவ மாயாவால மட்டும் தான் முடியும்!!"
அவ போடுற பிச்சைல கிடைக்கிற டென்டர் நமக்கு வேண்டாம்..?
தாரிகா?உனக்கு வேனுனா இந்த டென்டர் முக்கியம் இல்லாம இருக்கலாம்..ஆனா எனக்கு ரொம்ப முக்கியம்..இந்த டென்டர் கிடைக்கலனா எத்தன குடும்பம் நடு ரோட்டுக்கு வரும் தெரியுமா?உன்னோட பிடிவாதத்துக்கு நான் அவங்கல பலியாக விட மாட்டேன்.உனக்கு விருப்பம் இருந்தா என் கூட வா..இல்லனா நான் மாப்பிள்ளைய கூட்டிடட்டு போறேன்..
வெடுக்கென நிமிர்ந்தவள்... அவனையா?
தாரிகா..அதட்டினார்..
ஆயிரம் தான் இருந்தாலும் அவரு உன்னோட புருஷன்..அவருக்கு குடுக்க வேண்டிய மரியாதையை நீ குடுத்து தான் ஆகனும்..இந்த சொத்துல அவருக்கும் பாதி பங்கு இருக்கு..அவருக்கும் முடிவு எடுக்குற எல்லா உரிமையும் இருக்கு...அத மொதல்ல புரிஞ்சிக்கோ..?
ஒகே டாட்..ஆனா அந்த படிக்காத பட்டிகாட்டான கூட்டிட்டு போய் என்ன பண்ண போறீங்க..?நக்கலாய் வினவினாள்
அந்த கவல உனக்கு வேண்டாம்..நீ புருஷனா அவருக்கு குடுக்காத மரியாதைய நான் ஒரு மாமனாரா அவருக்கு குடுக்குறேன்..இதுல உனக்கு என்ன பிரட்சணை..!!
"என்னமோ பண்ணி தொலைங்க..!ஆனா அந்த மாயா மட்டும் கிடைச்சா!எனக்கு இருக்கிற கோபத்துக்கு அங்கேயே அவளை சுட்டு கொன்னுடுவேன்!!"-கோபமாக உரைத்தாள் தாரிகா...
சுடு என்று தமக்கு எதிரில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனிடம் தனது துப்பாக்கியை தூக்கி போட்டாள்..
ஏய் நான் யாரு தெரியுமா!எங்க அப்பா யாரு தெரியுமா?
உங்க அப்பா யாருனு உனக்கு தெரியாதா!இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும் எனும்போதே அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தார் அமைச்சர் பாண்டியன்...அவரது முகம் வேர்வையில் நனைந்திருந்தது..
இதோ இவர்தான் உங்க அப்பா?இப்போ எடுத்து சுட்டுக்கோ.என்றாள் அதிகாரமாய்...
அதுவரை தைரியத்துடன் இருந்த அவன் அவனது தந்தையே பயந்து கைகட்டி நிற்பதை பார்த்து அரண்டு போனான்.
மேடம் மன்னிச்சிடுங்க நான் எந்த தப்பும் பண்ணல....
இன்ட்ரஸ்டிங்!"-என்று அவள் சொடுக்கிட,அந்த அறையில் இருந்த தொலைக்காட்சி உயிர் பெற்றது.
அதில்,
"மாயான்னா என்ன பெரிய இவளா?ஏதோ பாக்க கொஞ்சம் அழகாக இருக்காலேனு அவளை இடித்தேன்!அதுக்காக அத்தனை பேர் முன்னாடி ஒரு ஆம்பளைன்னு கூட பார்க்காம இடிச்சதுக்கு அடிச்சிட்டா!"அவளுக்கு நான்தான்டா எமன்!என் கையால அவளை துடிக்க துடிக்க சாகடிக்கணும்!கேவலம் ஒரு பொண்ணு அவ!
"அவளால என்ன ஒன்னும் பண்ண முடியாது ? ஆனா நான் நினைத்தால் அவளை என்ன வேணும்னாலும் செய்ய முடியும்!என்ன வேணும்னாலும்!ஒரு பொண்ணுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது எனக்கென்னடா?"-குடி போதையில் உளறினான் அவன்.
"மேடம்! என் பையன் எதோ தெரியாம ஒலறிட்டான். அவன..மன்னிச்சிடுங்க மேடம்!"
மாயா அவனையே பார்த்து கொண்டிருக்க..சட்டென்று
"மாயாம்மா என் புள்ளைய மன்னிச்சிடும்மா "என்று அவளது காலில் விழுந்தார் பாண்டியன்....
அவள் எதையும் கவனிக்காது
"கன்னை எடுத்து சுடு!" என்றாள்.
அவனுக்கு வியர்த்து கொட்டியது..
"மேடம் ஸாரி மேடம்!"
"கன்னை எடு!"-அவள் பொறுமை இழந்துப் போனாள்.
"மேடம்?"-சட்டென அவன் சுதாரிப்பதற்குள் துப்பாக்கியை எடுத்தவள்,அவனது தோள்பட்டையில் இருமுறை சுட்டாள்.
"ஆ...!"என்று அலறியப்படி விழுந்தான் அவ்வாலிபன்.
அங்கு நின்று கொண்டிருந்த அஜானு பாகுவான ஒருவனிடம் துப்பாக்கியை அவள் நீட்ட,அதனை வாங்கிக் கொண்டான்.
"டிஸ்போஸ்!"-அவள் உத்தரவிட,அவ்வாலிபனை வந்து தூக்கினர் இருவர்.
"மாயான்னா பயம் இருக்கணும்!மறுபடியும் அந்த பயம் குறைந்தா,அடுத்ததா அந்த புல்லட் உன் இதயத்துக்கு பாயும்!"-என்றவள்,அவனை காலால் தள்ளிவிட்டு எழுந்து நடந்தாள்.எவருக்கும் ஆட்படாத அதிகாரமாய்!!
"பெத்த புள்ளைக்கு உடம்பு சரியில்ல..வீட்லயே இருந்து குழந்தைய கவனிக்காம அப்படி என்னதான் பெரிய வேலையோ? என்று புலம்பி கொண்டே ஜுர உடம்புடன் ,சோர்ந்து போய் சோபாவில் சுருண்டு கிடந்த தன் மகன் ஆதியை தொட்டு பார்த்தான் சகிதீபன்.
ஜுரம் குறைந்திருந்தது...
ஆனாலும் பள்ளிக்கு போக முடியுமா உடனே?
யோசிக்கும் போதே அம்மா எப்போ வருவாங்க டாடி என்றது அந்த பிஞ்சு?
என்ன கூறுவான்.. பிள்ளைக்கு உடம்புக்கு முடியல ஆஸ்பிடல் கூட்டிட்டு போகனும் நீயும் கொஞ்சம் வாயேன் என்றதற்கு ,அது இருந்தா என்ன செத்தா என்ன காலையில் கூறிவிட்டு சென்ற தன் மனைவியை நினைத்தவன்,அதை மறைத்து அம்மாக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்காம்.. நைட் வந்து உன்ன பாக்குறுங்களாம்..உன்ன சமத்தா தூங்க சொன்னாங்க...
அம்மா என்ன பாக்க வந்தாங்களா?
இல்லடா அம்மா போன் பண்ணி கேட்டாங்க..
அம்மா எங்கூட பேசவே இல்லையே?
அவனை தூக்கி மடியில் வைத்து கொண்டவன் அம்மா பேசும் போது நீங்க தூங்குனீங்க..அதான் அம்மா உங்க கிட்ட பேசல..நீங்க இப்போ சமத்தா தூங்குனா டாடி நாளைக்கு உங்களுக்கு சாக்லேட் வாங்கி தருவேன்..
சாக்லேட் வேண்டாம் டாடி..அம்மா கிட்ட இருந்து எனக்கு ஒரு முத்தம் வாங்கி தரீங்களா.?ஏக்கமாய் கேட்டது...
அவன் சற்றும் தன் மகன் இப்படி கேட்பான் என எதிர் பார்க்கவில்லை..என்ன கூறுவான் சகிதீபன்..அவனை நெஞ்சோடு அணைத்து அவனது கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்து சரிடா நீங்க தூங்குங்க ,நாளைக்கு அம்மா கிட்ட ஒரு முத்தம் வாங்கிகலாம் என்று கூற தகப்பனின் நெஞ்சு சூட்டின் கதகதப்பில் உறங்கி போனான்..
குழந்தையை அவனது அறையில் படுக்க வைத்து விட்டு வரும்போது அவனது மொபைல் சிணுங்கியது.எடுத்து பார்த்தவன் அம்மா நல்லா இருக்கீங்களா..
அவன் அம்மா எதிர் முனையில் ஏதோ கூற...
இல்லம்மா அவுங்க யாரும் வர மாட்டாங்க.நான் மட்டும் வரேன்..தங்கச்சி எல்லாம் கேட்டதா சொல்லுங்க என்று கூறிவிட்டு வைத்தவன் வீட்டில் பணிபுரியும் பெண்ணை அழைத்து "அக்கா குழந்தைய கொஞ்சம் பாத்துகங்க...நான் போய் ஐயாவ கூட்டிட்டு வந்துடுறேன்"....
சரி தம்பி நீங்க போய்டு வாங்க....
சரிக்கா என்றவன் கார் சாவியை எடுத்து கொண்டு விடு விடுவென வெளியேறினான்...
"இப்படிபட்ட தங்கமான புள்ளைக்கு போய் இப்படி ஒரு பொண்ண கட்டி வச்சிட்டாங்களே" என்று நொந்தபடி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் அப்பெண்மனி..
சகிதீபன்
இவன்தான் இந்த கதையின் கதாநாயகன்.வாழ்க்கையில் தோற்று போன வித்தியாசமான கதாநாயகன்.மனைவி ,பிள்ளைகளுக்காக தோல்வியையே வெற்றியாக நினைப்பவன்.எதிரிகளை அடித்து நொறுக்கவில்லை.வில்லன்களை ஒற்றை ஆளாக பந்தாடவில்லை.சூழ்நிலைக் கைதியாக தோற்று போகும் ஒருவனை ரத்தமும் சதையுமாக கண்ணீர் வடித்து துடிக்கும் ஒருவனை கதாநாயகனாக்கியது விதியின் செயலோ?
எப்படியாவது எல்லா பிரட்சனைகளையும் முடித்து மகிழ்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தாலும்,எதையும் வெளிகாட்டி கொள்ளாமல் கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் சாதாரண மனிதன்.
அந்த பிரமாண்டமான அறையை சுற்றி இருபதுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்க நடுவில் நின்று உரையாடி கொண்டிருந்தாள் மாயா..
அவள் கூறுவதை அமைதியுடன் கேட்டு கொண்டிருந்தனர்.அங்கு அமர்ந்திருந்த அனைவரும் மிகப் பெருந் தொழிலதிபர்கள்..
அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவளுடைய பி ஏ தீபா..
சட்டென மாயா திரும்ப அவள் பார்த்த பார்வையில் தீபாவின் உடல் சில்லிட்டு போனது..
மே.மே...ம் உங்கள பாக்க தாரிகா பில்டர்ஸ் சேர்மன் ராக.வன் சார் வந்திருக்கார் என்று திக்கி திணறி கூற...
உள்ளே அனுப்பு என்றவள் அடுத்த இரண்டு நிமிடத்தில் உள்ளே வந்த ராகவனை அமர சொன்னவள் விட்ட பணியை தொடர ஆரம்பித்தாள்..
நடுங்க வைக்கும் சிம்மமாய் பேசி கொண்டிருந்தாள் மாயா.ராகவனின் விழிகள் அவள் மேல் ஆழமாக பதிந்தன.ஆணவத்தின் மறுபிறப்பு என்று அனைவரும் கூறுவதில் தவறு இருப்பதாய் தோன்றவில்லை அவருக்கு!!
அப்போது வெளியே காரில் அமர்ந்திருந்த சகீதீபன் காரின் சீட்டில் இருந்த கண்ணாடியை பார்த்து ஐயா கண்ணாடிய மறந்துட்டு போய்டாங்க போலயே,அவருக்கு கண்ணாடி போடலனா தலய வலிக்குமே என நினைத்தவன் அதனை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தான்..
செக்யூரிட்டி அவனை உள்ளே விட மறுக்க அவனிடம் சண்டை போட்டு உள்ளே வந்தவன் ராகவ் இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே போய் ஐயா நீங்க கண்ணாடிய மறந்துட்டீங்க என்று அவரிடம் கொடுத்தான்.ராகவ் உட்பட அங்கு அமர்ந்திருந்த அனைவரும் அவனயே பார்த்தனர்...அந்த அறையில் ஊசி விழுந்தால் கூட சப்தம் கேக்காது போல் அவ்வளவு அமைதியாக இருந்தது.
அப்போது செக்யூரிட்டி வந்து சாரி மேடம் சொல்ல சொல்ல கேக்காம வந்துட்டார் என்றவன் யோவ் வாய்யா வெளில என்று அவனது சட்டையை பிடித்து இழுக்க..
டேய் கருங்குரங்கு.....
குரல் வந்த திசையில் திரும்பிய சகிதீபன் அங்கு நின்றவளை பார்த்து ஏ.....ய் மைதாமாவு என்று கத்த....
அங்கு கூடி இருந்த அனைவரும் அவனை திகைப்புடன் பார்த்தனர்..