விழியின் மொழி 10
வேந்தன் வேல் விழியினை கண்டவுடன் காதல் கொண்டான், அவளை எந்த காரணம் கொண்டும் இழக்க கூடாது என நினைத்தவன், அவளை பற்றிய விவரங்களை அறிய முற்பட்டான்,
கல்லூரியில் இருத்து வாட்ச்மேனிடம் சென்றவன், " கண்ணன், அண்ணா இப்போ போகுதே அந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா அண்ணா" என்று கேட்டான்.
"எது தம்பி அந்த பொண்ண எனக்கு தெரியாது தம்பி என பதில் அளித்தார், அவன் விடாமல் "அண்ணா இங்க பாருங்க என அவரிடம் 500 தாளை காட்ட அவர் வாய் எல்லாம் பல்லாக, கொஞ்சம் பொருங்க" தம்பி என்று கூறி ஒரு அறையின் உள்ளே சென்றவர், கையில் தாளுடன் வந்து அவளின் முழு ஜாதகத்தையும் அவனிடம் கொடுத்தார்.
அவர் அளித்த தாளினை கண்டவனின் மனம் குதி ஆட்டம் போட்டது, பின்பு அவளின் பெயரினை அறியும் பொருட்டு தாளினை படிக்க ஆரம்பித்தான்.
" என்னோட டார்லிங் பேரு வேல்விழி யா, உன்னோட அப்பா அம்மா நல்ல பேரு தான் வச்சு இருக்காங்க டார்லிங், நாட் பாட், உன்னோட கண்ணை பார்த்து தான் பேரு வச்சி இருப்பாங்க போல, ப்பபா, என்ன கண்ணு டி அது சும்மா 1000 வாட்ஸ் கர்ரெண்ட் மாதிரி இழுக்குது, என்ன ஒரு இரண்டு நிமிஷம் பார்த்த இருப்பேனா, அப்படியே சும்மா உள்ளுக்குள என்னமோ பணிட்ட டி , வேல்விழி அகில் வேந்தன், முழு பேரு நல்ல தான் இருக்கு, மாமா கிட்ட சீக்கிரம் வந்துடு, டார்லிங் "மாமா வைட்டிங் பார் யூ"... என தனக்குள் பேசி கொண்டான்.
அந்த தாளில் இருந்த முகவரியை கொண்டு மறுநாள் காலை வேந்தன் வேல்விழியின் வீட்டை கண்டு அறிந்து அவள் வீட்டின் முன்பு தனது தேவதையின் தரிசனத்திற்கு காத்து கொண்டு இருந்தான்.
அவள் வெளியில் வருவதற்கு முன்பு நேற்று போலவே ஒற்றை ரோஜா, மற்றும் தான் காதலின் விழ காரணமாக இருந்த அவளின் கண்களை வரைந்தவன், அவளிற்கு தனது பெயர் தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக தனது பெயரின் ஒரு பாதியை மட்டும் அதாவது அகில் என்பதை மட்டும் அவன் வரைந்த ஓவியத்தின் கீழே எழுதி வைத்தான்.

அவள் இருசக்கர வாகனத்தில் அவன் வரைந்த ஓவியத்தை வைத்தவன் அவளின் வரவை எதிர் நோக்கி மறைவாக காத்து கொண்டு இருத்தான்.
கல்லூரி செல்ல வீட்டை விட்டி வெளியில் வந்த வேல்விழி, வண்டியின் மீது ஏதோ காகிதம் இருக்க, அவள் வண்டியில் வேந்தன் வைத்த காகித்தை பிரித்து பார்த்தாள். சுற்றும் முற்றும் கண்களை சுழல விட்டவள் கண்களில்
வேந்தன் தென்படவில்லை, தன்னை சுற்றி யாரும் இல்லை என்பதை அறிந்தவள்,

அந்த வரைபடத்தை பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது, அதனை தொட்டு தடவியவியவளின் கண்கள் அகில் என்ற பெயரில் நிலைத்தது, "வேல்விழி அகில்", "பேரு பொருத்தம் கூட நல்ல தான் இருக்கு வேல்விழி, பட் அவன் ஆளு எப்படி இருப்பான் தெரியாது, ஊர் தெரியாது, character எப்டின்னு தெரியாது, அவன் நல்லவனா, இல்லை கெட்டவானனு, அவனை பத்தி ஒன்னுமே தெரியாம, எப்படி அவனை லவ் பண்ணறது சோ இந்த ஐடியா வ இபப்டியே ட்ராப் பண்ணிட்டு வேலைய பாரு" என தனக்கு தானே பேசிக் கொண்டு வண்டியில் காலேஜ் நோக்கி கிளம்பினாள்.
மறைந்து இருந்த இதனை கண்ட வேந்தன் அவள் கண்களில் தன் மீது தெரிந்த காதலில் உன்மத்தம் ஆகிப்போனான், அவள் கண்களில் உள்ள கரு விழிகள் என்னும் கடலில் முழுகி முத்து எடுத்து கொண்டு இருந்தான், அவளின் அகில், அவன் தேவதையின் தரிசனம் பெற்றவனின் மனம் இறகை இல்லாமல் காற்றில் பறந்தது.
வேல்விழி கல்லூரி சென்று விட வேந்தன் எதையோ இழந்தது போல சுற்றி கொண்டு இருந்தான், இப்படியே இருந்தால் சரி வராது என நினைத்தவன் அவளின் எதிர் வீட்டில் உள்ள நபர்களிடம் விசாரித்து அதற்கு, அடுத்த நாளே அவளின் எதிர் வீட்டில் குடிபுகுந்தான்.......
இப்படியே இரண்டு நாள்கள் சென்று விட அவள் நெருங்கும் வழி தெரியாது அலைந்தனவனின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது, " என்ன சொன்ன பேபி என்ன லவ் பண்ட்ரா ஐடியாவா ட்ராப் பண்ட்ரிய, இட் வில் நெவேர் ஹப்பேன் பேபி, என்கிட்ட இருத்து உன்னை யாராலும் பிரிக்க முடியாது, உன்கிட்ட கேட்டா தானே நீ என்னை லவ் பண்ணலைனு தான் சொல்லுவா, உங்க அப்பா அம்மா சொன்ன நான் தானே உனக்கு மாப்பிள்ளை, என்கிட்ட நீ வந்து தானே ஆகணும், இப்பவே உங்க அம்மா அப்பா கிட்ட பேசுறேன்" என நினைத்தான்.
காலை கதிரவன் தனது பொன் நிற கதிர்களை பூமியில் பரப்ப கண்விழித்தவனின் கண்களில் பட்டால் வேல்விழி, அவளை தனது மெய் மறந்து பார்த்தவனின் கண்கள் அவளை விட்டு அகல வில்லை.

உன் இரு விழிகள்
கொண்டு
என்னை
தீண்டதே
பெண்ணே.....
உன் கருவிழிகள்
என்னும் நதியில்
மூழ்கி முத்து
எடுத்தவன்...
கரை சேரும்
வழி தெரியாமலே
தத்தளிக்கிறேனடி....
கரை சேரும்
வழி சொல்வாயா
இல்லை.....
என் காதலை
மறுத்து
என்னை
நீங்கி
செல்வாயா....
மறுநாள் வேந்தன் வேள்விழியின் பெற்றோரிடம் சென்றவன், தன்னை பற்றிய முழு விவரம் தெரிவித்து வேல்விழியினை பெண் கேட்டான்.
அதற்கு வேல்விழி பெற்றோரின் பதில் என்ன பதில் வரும் பதிவில்?......
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்