என் ஸ்வாஸம் 1
சென்னை.. 2050
இரண்டு நாட்களாய் சரியான உறக்கம் இல்லாத விபு, இன்று அலுவலகம் செல்லாமல் தூங்குவதற்க்கு முடிவெடுத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை... ரோபோக்களை பற்றிய தொழில்நுட்ப விஷயங்களில் முக்கிய பங்களிப்பு கொடுக்கும் அலுவலகம் அவர்களது....
உயர்தர தொழில் நுட்ப கல்லூரியில் தனது தொழில்நுட்ப கல்வியில் உயர்கல்வியில் முடித்துவிட்டு அமெரிக்க மண்ணில் ஐந்து ஜெர்மனியில் மூன்று என எட்டு வருடங்கள் கழித்து ஆசிய தொழில் நுட்ப பிரிவின் உயர் பதவியை எட்டி பிடித்திருக்கும் விபு ...
சென்னையின் கடற்கரை ஓரமாய் உள்ள வீட்டில் வசிக்கும், தனிமையை ரசிக்கும், . எத்தனை வருடங்கள் கழித்து தாய் மண்ணில் மிதித்தாலும்... தாய் மடியில் அமர்வதாய் உணரும் முப்பத்து மூன்று வயது ஆண் மகன். அடுத்தவரை தனது அபார அறிவினால்.. அறிவியல் திறமையால்... தன் காலடியில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்ட தன்னிகரில்லா டெக்னாகிராட்.... அவனை புரிந்தவர்களால் அவனை டெக்னோ ஜெய்ன்ட் என்று அழைக்காமல் நிச்சயம் இருக்க முடியாது.... !
சில சமயங்களில் அவனே மனிதனா இல்லை ரோபோவா என எதிரில் உள்ளோரை வியப்பில் ஆழ்த்தும் மனித ரோபோ...
சுவாசம் 2
டாக்டர். வுட் கேரவன்.. ரோபோடிக் நிறுவன உரிமையாளர்... எண்ணிலடங்கா அறிவாளிகள் ரோபோவை போலவே பணிபுரியும், ஏன், ரோபோக்களும் மனித உருவில் பணியாற்றும் நவீன யுகத்தின் தொழில்நுட்ப ராஜ்யத்தின் பெயரிடப்பட்ட சாம்ராட்.. விபு பணியில் சேர்ந்ததும் இவரிடம் தான்.... உயர்வுகளை எட்டி பிடிப்பதும் இவரது பலத்தால்தான்....
சாரா கேரவன் டாக்டர் வுட் கேரவனின் மகள்... நிறுவனத்தின் தலைமை நிர்வாகி... கேரவனிடம் கேட்டால்.. தனது சிறந்த படைப்பு சாரா தான் என்பார்.. அழகோவியம்... கிரேக்க சிற்பம்.. அந்நிறுவன தலைமை பொறுப்பிற்கான திறமைகள் மொத்தமும் ஒருங்கே அமைய பெற்ற ஆறடி அரசி.
நித்தமும் விபு தனது வேலை தொடர்பான விஷயங்களை சமர்ப்பித்தல் இவளிடமே !!
உலகின் முதன்மை நிலையில் உள்ள இந்நிறுவனத்திற்கு ஆசிய அளவில் ரோபோடிக் என்ஜினீர்களை திறமையாளர்களை. ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி அளித்து ஆசிய நாடுகளில் தொழிற் கூடங்களை நிறுவுதல் இப்போதைய சவால்... விபு சென்னையில் தலைமை பொறுப்பில் பணி ஆற்றுகிறான்..
தனக்கு அளிக்க பட்ட பொறுப்பை மிகுந்த காதலும் கடமையும் சேர்த்து செய்தாலும் மனதில் ஓரத்தில் கரையானாய் அவள் அவனை அரித்துக் கொண்டு. ! யார் அந்த அவள்?
இன்று
வெள்ளிக்கிழமை சாரா தன் தந்தையின் அந்தரங்க தொழில்நுட்ப கூடம் செல்லும் நாள்.. மூன்று நாட்கள் அவளை தொடர்பு கொள்ள இயலாது... கேரவன் நேரடியாக தொடர்பில் வருவார்... மர்மங்கள் நிறைந்த ரோபோடிக் நிறுவனம்.
சுவாசம் 3
ஜெர்மனி... 2046
காலை.. 9மணி... கண்கள் திறக்கப்படமாட்டாமல் திணறிய விபு விற்கு அவளது வரவு நிச்சயம் பிடிக்கவுமில்லை பிடிக்காமலும் இல்லை.. இரண்டிற்கும் நடுவிலான அவஸ்தை.
அவள் நெற்றியில் கை வைத்து பார்த்து வாட் விபு .. ஆர் யூ கிரேஸி? ப்ளீஸ் டேக் மெடிசின் அண்ட் ட்ரை டு மேனேஜ் யுவர் ஹெல்த் டூ... ஐ வில் இன்போர்ம் டு யுவர் ஹெட் அபௌட் யுவர் ப்ரெசென்ட் கண்டிஷன். யு ஆர் அன் ரோபோடிக் என்ஜினீயர்.. பட் நாட் ரோபோ.. மைண்ட் இட்... என்று இதோபதேசமும்... திட்டும்... உணவும் மருந்தும் கொடுத்து சென்றாள்... அவள் அவனுடன் ஜெர்மனி அலுவகத்தில் வேலை பார்ப்பவள்.. யாருக்கு தொழில்நுட்ப சம்மந்தமான உதவி அல்லது அறிவுரை தேவை என்றாலும் நிர்வாகம் அவளை அழைக்கும்... திறமையின் மொத்த உருவம்..
அவள் இங்கே வந்தது கனவென்றே தோன்றும்.. இப்பேற்பட்ட அழகிய அறிவாளியை பிரமன் நிச்சயம் படைப்பது கேள்வியே.. மூன்று நாட்கள் விடுப்பின் பின் அலுவலகம் விரைந்து.. வழக்கமான தன் வேலைகள் செய்ய மூளை கட்டளை இட்டாலும் ஏனோ கதிரையில் அமர முடியாமல் மனதில் ஒரு பரபரப்பு.. எதையோ செய்ய மனது மாநாடு நடத்த என்னவென்று புரியாமல் மனம் அவளை தேடியது.
மதியம் அவளே அவன் கேபின் வந்து அவனை உடல் நலம் விசாரித்து சென்ற பின்தான் வேலை செய்ய மனம் தலை ஆட்டியது.
சுவாசம் 4.
இன்று
பெங்களூருவில் உள்ள தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் ரோபோடிக் சம்மந்தமான சிறப்பு வகுப்பு ஒன்று.. அதற்கு சிறப்பு அழைப்பு விபுவிற்கு.. இது போன்ற ஆசிய அளவிலான வகுப்புகள் நடத்த இப்பொழுதெல்லாம் விபுவிற்கு அழைப்புகள் வருகிறது... தன் வேலையில் ஒரு பகுதியாக இவ்வாறான வகுப்புகளுக்கு செல்வதுடன் தொழில்நுட்ப மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இவன் நிறுவனம் நடத்துகிறது..
அங்கு.. உடன் பயின்ற தோழி.. நிமாவை ஒரு ஆசிரியையாக சந்திப்போம் என கனவும் கண்டதில்லை.. ஒன்றாக அமர்ந்து படித்ததில் ஆரம்பித்து உணவும் உணர்வுகளும் பகிர்ந்து.. கடைசியில் திருமணம் செய்து கொள்ள கேட்டபொழுதில் ஏனோ நிமா மறுத்துவிட்டாள்... இத்துணை வருடங்களில் அவள் ஞாபகங்கள் விபுவை படுத்தியதில்லை.. ஒரு வேளை இது காதல் அல்ல என அவளுக்கு அப்பொழுதே புரிந்திருக்கும்..
இன்று பி. எச் டி முடித்து, திருமணமும் முடித்து பெங்களூரு மாநகரில் வாழும் உயிர் தோழி...
ஏனோ நிமாவிடம் என்னவளை பற்றி பேச என் இதயம் விரும்புகிறது.. நிமா கேட்பாளா.. தெரியவில்லை. ஆனால் காதலுக்கும் காமத்திற்குமான வேறுபாடு அவளுக்கு தெரியும்.. இல்லையேல் என்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் சொல்லியிருப்பாள்.
விபுவின் நினைவடுக்குகள் மீண்டும் அவளை நோக்கி...
சுவாசம் 5
ஜெர்மனி...
அவளை கண்டு இரு வருடங்கள் கடந்த பின்னர்.. தன் மனம் அவளிடம் சரணடைந்துவிட்டது என தெளிவாக தெரிந்து.. தன் காதலை அவளிடம் தெரிவித்தான் விபு..
ஹே. லுக் அம் இன் லவ்.. வித் யு.. ஐ வாண்ட் டு பி வித் யூ .. ஐ மீண் ஐ வான்ன மார்ரி யு... ஐ லவ் யு.. ஆழ் மனதில் இருந்து வெளிப்பட்ட காதல்... அவள் மறுப்பாள், இல்லை ஒப்புக்கொள்ளுவாள் என்று நினைத்திருக்க அவள் கண்கள் நீண்ட முழுதுணர்ந்த வலியை காட்டின..
ஓ, மை காட்.. டூ யூ வாண்ட் டு மார்ரி மீ.. ஐ நீட் சம் டைம்... ப்ளீஸ்... என்றவாறே சென்ற அவளை இரு தினங்களாய் அலுவலகத்தில் காண இயலவில்லை... மூன்றாவது நாள் வந்த தகவல் அவளை அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகம் அழைத்து கொண்டது.. பதவி உயர்வுடன்..
மனம் வெறுத்த நாட்கள் அவை.. காதலை மறுத்தும் சொல்லவில்லையே.. என் நினைவு அலைகளில் நீந்தும் அவள். பின்பு அவளை கண்டது இந்தியா வந்த பின்னர்தான்... அன்று.. இந்தியாவில் வேலை ஆரம்பமான அன்று... இரவின் நிசப்தம்.. அதையும் கிழிக்கும் விபுவின் மன இரைச்சல்.
சுவாசம் 6
இரவு நேரம் இந்தியாவில்... அமெரிக்க நேரத்தில் சாராவிடம் இன்றைய நிகழ்வுகளை தெரிவிக்க ஸ்கேய்ப்பில் தொடர்பு கொள்ள.. அங்கு அவள்.. சாரா கேரோவன்...
விபுவிற்கு எட்டாத உச்சத்தில்... ஆனால்.. கண்கள் காட்டும் அதே வலி... விபுவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை... புரிந்த பிறகோ.. அவன் நிலை அவலம் தான்... ஏதோ ஒருவகையில் அவளை தினமும் பார்ப்பது.. சுகமாக இருக்கவே.. தனது பணியினை ஸ்வாரஸ்யம்கூடி செய்யலானான்.
ஆனால் தனது இந்தியா திரும்பும் பயணத்தில் சாராவின் பங்கு.. அவனுக்கு புரிந்தது.. ஏன் என்றுதான் புரியவில்லை.
இந்த வார விதிமுறையில் நிமாவை சந்திக்க வேண்டி அவளுக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு காத்திருந்தான்.
அவன் நினைவலைகள் அவனை கல்லூரி நாட்களுக்கு இழுத்து சென்றது.
கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது விபுவின் பெற்றோர் ஒரு கார் விபத்தில் மறைய ஒற்றை பிள்ளையாய் வளர்ந்து நின்ற விபு முற்றும் உடைந்தான்...
உடன் பயிலும் நிமா... அன்று அவள் செய்தவை... நிமா அவளது அம்மா பிரேசிலை சேர்ந்தவர்.. அப்பா இந்தியர்.. அவளது செயல்களில் இருவேறு தேசங்களின் ஒருங்கிணைப்பை புரிந்து கொள்ளலாம்.
சுவாசம் 7
பெற்றோரை இழந்து தவித்த வேளையில்.. விபுவின் வீட்டிலேயே வந்து தங்கிவிட்டாள்.. முதலில் இரக்கம் அடிப்படையில் ஆரம்பித்து.. எப்படி லிவ் இன் வரை சென்றது என்பது புதிர்... விரக்தியின் விளிம்பில் அவளது அருகாமை மருந்து தான்...
மேல்படிப்பு முடியும் வரை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலே இருவரும் ஒன்றாய் வாழ்ந்து.. திருமண பந்தத்தை விபு வேண்டிய பொழுது மறுத்தவளும் அவளே... இது காதல் இல்ல விபு. உன்னை சரிபண்ணி ஒரு நிலையில் நிறுத்த நா குடுத்த தெரபி... பிகாஸ் யு ஆர் மை வெரி கிளோஸ் பிரண்ட்... அண்ட் ஐ டோன்ட் அல்லோவ் யு டு டெஸ்டரொய் யுவர் லைப்.. என்றுவிட்டு சென்றுவிட்டாள்.. அதன்பிறகு விபு அமெரிக்கா வர விதி அவனை பகடையாய் உருட்ட தொடங்கியது...
இன்று மீண்டும் மனம் நிமாவை தேடுகிறது..
நிமா சனிக்கிழமை அன்று சந்திக்க ஒப்புக்கொண்டு
விட்டாள்.
இனிய நினைவுகளுடன்.... இதோ பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்த நிமாவிற்கும். அவனுடைய வெகு கால தோழி நிமாவிற்கும் எத்தனை வேறுபாடுகள்... இன்று அவள் கண்கள் அவளது அறிவை பறை அறிவிக்கிறது. நிச்சயம் எனது குழப்பங்களுக்கு இவளிடம் விடை உண்டு.
.சுவாசம் 8
விபு தன் மனதின் ஆழத்தை வெளி படுத்தும்பொழுது மர்ம முடிச்சுகள் இறுக்கமாய் இருப்பதை போன்ற உருவம் நிமாவிற்குள்... விபு... என்னால முழுசா உன் நிலைய புரிஞ்சுக்க இயலல... எனக்கு கொஞ்சம் டைம் கொடு ப்ளீஸ்.. நா கொஞ்சம் யோசிக்கணும்... ஐ வில் கால் யு. என்றுவிட்டு கிளம்பிவிட்டாள். ஏனோ அவனை வீட்டுக்கு கூப்பிட மனமில்லை... விபுவிற்கு அதை பற்றிய கவனம் இல்லை... அவனது முழு கவனமும் சாரா கேரவனை சுற்றி மட்டுமே..
சாராவும் விபுவை பற்றிய சிந்தனைகளே... அவளை பொறுத்தவரை விபுவை விட தேர்ந்த வல்லுநன் இத்துறையில் இல்லை... (மனிதர்களுள் )
ரோபோ காலமாக இருந்தாலும் சாராவுக்கு மனிதர்கள்மீது நம்பிக்கை அதிகம்...
இன்னொரு புறம்.. விபுவின் குழப்பங்கள் நிமாவையும் ஆக்கிரமித்தன.. ஏற்கனவே மனிதன் என நினைத்து ரோபோவை கைப்பிடித்த நிமா. இந்த திருமணத்தின் அர்த்தம் புரியாமல் தவிக்கையில் விபு பற்றிய குழப்பமும் அவளை இந்த யுகத்தின் மீதான நம்பிக்கையை ஆட்டம் காண செய்ந்திருந்தது.
ரோபோக்கள் மனிதகுலத்தோடு ஒன்றாக மனித உருவத்தில் இழைவது அவளுக்கு அறவே பிடித்தமில்லை... ரோபோ மனிதன் தன் உணர்வுகளோடு விளையாடியதாய் அவளுக்குள் பெரிய ஏக்கம்.. நிச்சயம் நம் திருமணம் சரியல்ல என உரைத்தவன் தான் ரோபோ என்பதை மறந்தும் கூறினானில்லை.. இதற்கு பிறகு நிமா தன் நட்பு வட்டத்தை சுருக்கி கொண்டாள்..
விபுவை மணந்து கொண்டிருக்கவேண்டும் என அவள் மூளை அவளை சாடியது.... ரோபோவானாலும் காதல்கொண்டு அவனை மணந்தவள் அவனை விலக இயலாமல் தவித்தாள்.
ஸ்வாஸம் 9
இன்று சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாளில் இருந்த அறிவியல் முன்னேற்றதிர்க்கும் இப்பொழுதுள்ள நிலைக்குமான ஒப்பீடு ..பற்றிய வகுப்பு ..கண்கள் மடிக்கணினியை பார்திருந்தாலும் மனது சிறுவயதில் தன் தந்தை தன் சிறு பிராய கதைகளை சொல்வது மூளையில் செலுத்தி கொண்டு இருந்தது. இந்தியரான அவருக்கு மேற்கத்திய நாடுகளின் அறிவியல் வளர்ச்சி பெரும் வியப்பு. அப்பொழுதெல்லாம் இந்தியா வளரும் நாடாக இருந்ததெனவும் வறுமை,மக்கள்
தொகை போன்ற பிரச்சனைகளை சந்தித்திருந்தாகவும்,குளிர்சாதனபெட்டி,துணி துவைக்கும் இயந்திரம்,எல்இடி சாதனங்கள் போன்றவை உச்ச வியப்பிர்க்கு உகந்தவையாக இருந்ததையும் குறிப்பிட்ட அவர் இந்தியர்கள் கல்விக்காக மேற்கு நாடுகளுக்கு பிரயாண பட்ட விஷயங்களியும் கூறுவார். இந்திய விமான படையில் பணியாற்றிய அவருக்கு பிரேசில் நாட்டு மங்கை அவரது இந்திய மனையாளாய் வாய்தது அவருக்கே வியப்பு. தன் காதல் கணவருக்காக முழு இந்திய பெண்ணாய் தன்னை மாற்றிக்கொண்டார் நிமாவின் அம்மா.
ஆனால் எல்லை கோடுகள் இல்லா முழு உலகமான இன்று அறிவியல் வளர்ச்சி அசுரதனம்தான்.
மக்கள் தொகை ஐம்பது ஆண்டுகளில் பாதியாய் குறைந்தாலும் இயந்திரங்களும் இயந்திர மனிதர்களும் மீதி பாதியை நிரப்புகிறார்கள். மக்களின் மன உணர்வுகள் மங்கி விட்ட நிலையில் இயந்திர மனிதர்களுடன் இயந்திராமாய் எதர்க்காக என்றே தெரியாமல் உழைக்கும் மாக்கலாய் மக்கள். ஒரு இயந்திரனை காதலித்து உணர்வுகளை மறுத்து இயந்திரமாய் தன் மகள் மாறிபோவாள் என என் தந்தை நிச்சயம் நினைதிருக்க மாட்டார். என் வாழ்க்கை மட்டுமல்ல,நிறைய மனித வாழ்க்கை இயந்திரங்களால் திசை மாறிதான் போகிறது. தனிமை,சுயம் போன்ற விஷயங்களில் பெற்றோரின் தலையீடை விரும்பாத இன்றைய இளைய சமுதாயம் திக்கு தெரியாமல் தடுமாறி நிற்பதும்,இன்றைய ஏமாற்றங்களுக்கு காரணம் ..என அவள் மனம் வாதாடி கொண்டது. மாலை வந்தவுடன் பெற்றோரிடம் வீடியோ கால் பேச வேண்டும் என முடிவு செய்து கல்லூரி வளாகத்தில் நிமா .
ஸ்வாஸம் 10.
வேலையின் அறிக்கையுடன் அமெரிக்க தலைமை அலுவலகம் வர உத்திரவு பிறப்பிதிருந்தது விபுவிர்க்கு. சில மாதங்களாக மனதில் ஓடிக்கோண்டிருக்கும் சாராவினை காண்பதுடன் இம்முறை மன ஓட்டங்களை பற்றியும் பேசிவிடுவாடென்ற தீர்மானமும் ஒரு காரணமாக இருக்க ஒருவித பதட்டத்தட்டுடன் அலுவலகம் நுழைந்தான் . அங்கு ரஷ்யாவிர்க்கான அதி நவீன ரோபோ ..மனித இனத்திற்கே சவால் விடும்படிக்கு மனிதர்களும் இயந்திரங்களும் இணைந்து உருவாக்கும் பணியில் இருக்க உலகம் இம்முறை வேறுவிதமான சவாலை எதிர்நோக்கப்போகிறது. இது மனித சமுதாயத்தை அடிமை படுத்தக்கூடியதென நினைத்தவாறே ,சாராவின் அறைக்குள் நுழைந்தான் விபூ...
சாரா இவனது மன ஓட்டங்களை தனது ஸ்கேன் செய்யும் விழிகளை வைத்து படித்தவாறே தனது கதிரையில் அமர்ந்தாள். திட்ட அறிக்கைகளை பற்றிய விவாதங்களுக்குப் பிறகு மிஸ் சாரா.. ஐ வாண்ண டாக் வித் யு ..இட்ஸ் பியூர் பெர்சனல் ..என்று தயங்கினான் ..இட்ஸ் ஓகே விபூ ..வீ வில் ..பட் நாட் டுடே ...யு கம் டூ மிஸ்டர் .கேரோவன்’ஸ் லேப் ஆன் சன்டே .. ஹோப் எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட் .என்று விடை கொடுத்தாள் சாரா .
.பல கேள்விகளுக்கு விடை ..அவளிடம் மட்டுமே !!
வழக்க மாறாக கேரோவன் ஞாயிறு அன்று தனது லேபில். கேபினில் அவரை பார்த்தவுடன் தானாகவே விபுவின் ரத்த ஓட்டம் அதிகரித்தது ..தனது விடைகளை அறிவானா ?பொறுத்திருந்து முடிச்சுகளை அவிழ்ப்போம் ...
ஸ்வாஸம் 11:
ஆக்ச்சுவலி மிஸ்டர்.கேரோவன் . வீ ..ஐ மீன் மீ அண்ட் யுவர் டாடர் டிசைடட் டூ மீட் டுடே அண்ட் ஷீ ஆஸ்க்ட் டூ கம் ஹியர் ...என கூற ..யாயா.. ஷீ இஸ் இன்ஸைட் தி லேப். யு கேன் கோ தேர் ...என்றுவிட்டு தனது வேலையில் ஈடுபட ஆரம்பித்தார் கேரோவன் ...
தனக்கு ஏற்படபோகும் உச்சகட்ட அதிர்ச்சிகளை அறியாதவனாக விபு உள்ளே செல்ல ..மௌனபுன்னகை கேரோவனின் உதடுகளில் தவழ்ந்தது..
சுற்றும்முற்றும் பார்வையிட்டவாறே லேபினில் நுழைந்த விபுவின் கண்களில் முதலில் பட்டது ஓர் ரோபோ..தன்னை தானே அப்டேட் செத்துக்கொண்டிருப்பதுதான்.!!. அவன் கண்கள் சாராவை தேடின. ஒரு மனித நடமாட்டமும் தென்படாதவனாக அங்குள்ள கதிரையில் அமர்ந்து சாராவிர்க்காக காத்திருக்கலானான்.
சிறிது நேரத்தில் சாராவின் குரல் கேட்டது ..ஆனால் அவளைக் காண இயலவில்லை மீண்டும் பலமணிநேர காத்திருப்பு..அதன் நடுவே சிறு தூக்கம். சாரா அவனை எழுப்பிக்கொண்டிருந்தாள். அதுவும் அவனது தாய் மொழியில் ..விபு எழுந்திரு ...எவ்வளவு நேரமா எழுபுறது ? என்று அவனருகில் நின்று கொண்டு வார்தையாட மீண்டும் உறைந்தான் விபு.
தான் கனவு காண்பதாகவே உணர்ந்தான் ...மீண்டும் சாராவின் குரல் தமிழில் ,,இது கனவல்ல என புரிந்தவனாக உனக்கு தமிழ் தெரியுமா? என்றான் ஆச்சர்யமாக. இதில் அவளுக்கு ஸ்வாரஸ்யம் இல்லை போலும் ..எஸ்எஸ் .என்று முடிதுக்கொண்டாள்.
ஸ்வாஸம் 12
ஏதோ பேசணும்னு சொன்னீயே ,,பேசலாமா ?என்று நேரடியாக விடயதிற்க்கு வந்தாள். ஆம் ,பேசணும்....நம்ம இப்போ பண்ணிக்கிட்டு இருக்குற அதிநவீன ரோபோவிர்க்கான தயாரிப்பு மனுஷ இனத்தையே ஒண்ணுமில்லாம பண்ணிடும் ..அத முதல்ல நிறுத்தணும் !என்று மனதின் ஆசையை தூர நிறுத்தி மனித குலத்திர்க்காய் வாதாடினான் .
பட் நீ பேச வந்தது இத பத்தி இல்லன்னு நினைக்கிறேன்...சாரா .தனது கம்பீர குரலில்.
பொது நலத்திர்க்காய் எழும்பிய குரல் தனக்காக பேசும்போது உள் சென்றது... யெஸ் சாரா ..நா ஜெர்மனியில் உன்கிட்ட ப்ரபோஸ் பண்னினேன் ..இது வரை பதில் இல்ல ,,என்னால உன்ன மறக்க முடியல ..அதான் ..தீர்மானமா பேசணும்னு தோணிச்சு ...
இல்ல விபு ..கல்யாணம் எனக்கு சரி வராது.. என் மேக் வேறே..
ஏன் நீ பொண்ணுதானே ? உன் தகுதிக்கு நா சரி பட மாட்டேனா? என் முதல் காதல் ,தேடல் நீ மட்டும்தான் ...
நோ விபூ ,
நா பொண்ணு இல்ல ..ரோபோ ..உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதோட உன் நிஜக் காதல் மனுஷியான நிமா ..அவளோட வாழ்ந்து அவள கல்யாணம் செஞ்சுக்கவும் கேட்டிருக்க ...ஸோ ஐ அம் நோட் யுவர் ஃபர்ஸ்ட் லவ்..அண்ட் அம் நாட் அ ஹியூமன் ஆர் உமன்..இப் யு வான்ட் ஃபர்தர் கிளாரிட்டி ..கேரோவன் வெயிட்டிங் இஸ் ஃபோர் யு ..
ஒன் மோர் ..நீ வரும்போது அப்டேட் ஆகிட்டிருந்த ரோபோ நாதான் ..வீக் எண்ட்ஸ் நா லேப் வரது இதுக்காகத்தான் ..என்று அனாயாசமாய் குண்டெறிந்து தன் பணி முடிந்ததென சென்றுவிட்டாள் ..உணர்வுகள் அற்ற அவள் ரோபோதான் என புரிந்தவனாக கேரோவனை சந்திக்க சென்றான் .
ஸ்வாஸம் 13
கேரோவன் இவனுக்காய் அதிர்ச்சிகளின் மொத்த உருவமாய் தெரிந்தார். இனி..
கேரோவனிடமும் அதி நவீன ரோபோமனிதனின் தயாரிப்பு நிறுத்ததை பற்றி பேசினான். மேலும் தன் சாராவுடனான காதல் பற்றியும். மிக ஆழ்ந்த குரலில்..
.நிமா கல்யாணம் செஞ்சுகிட்டு இருக்கறது நம்ம கம்பெனியில் ஜெர்மனியில் நீ தயாரிச்ச மனித எந்திரத்தைன்னு உனக்கு தெரியுமா விபு...முதல் கத்தியாய் ஆழ இறங்கியது விபு நெஞ்சில்..
அடுத்து ..சாரா இயந்திர மனுஷின்னு வெளிஉலகத்துக்கு தெரிய கூடாது.
மூணாவது கண்டிஷன் நீ எனக்கடுத்து தலைமை பொறுப்பை ஏற்கனும் ..இந்த மூணு
கண்டிஷனுக்கும் ஒப்புக் கொண்டீனா நவீன எந்திர மனிதனோட தயாரிப்பை நிறுத்தலாம். அதற்கான உத்திரவு உன்னோட முதல் கைஎழுத்தா இருக்கலாம்.
சரி ..இயந்திர மனித தயாரிப்பை தற்க்காலிகமாய் நிறுத்துங்க. என் தலைமை ..நா யோசிக்க நேரம் வேணும்..ஒன் மன்த் டைம் குடுங்க..இந்த பொறுப்பு அசாதாரணமானது .
சரி.நா இந்த பொறுப்புக்கு சரின்னு உங்களுக்கு ஏன் தோணுது...நம்பிக்கைக்கான முதல் கேள்வி...மெச்சியபடியே பேச ஆரம்பித்தார் கேரோவான்.
நீ தொழில்நுட்ப படிப்பை முடிக்கும்பொழுதே உன்னைபற்றிய தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட இளமை திரும்ப பார்த்த உருவம் நீதானு தோனியதால சாராவை உன்னை பத்தின தகவல் சேகரிப்புக்காக ஜெர்மனி அனுப்பினேன். அவள்மீதான உன் காதல் எதிர்பாராதது..நிமா உன் மனசுல புதைஞ்சு இருக்கறது உன்னை ஃபிசிகல் செக்கப்செய்யும்பொழுது...மைண்ட் ரீடிங் ப்ரொசீஜர் ஃபாலோ பண்ணி தெரிஞ்சுகிட்டோம் ...அதனால நீ செஞ்ச ரோபோவை நிமா கல்யாணம் செய்துக்கும்படி காய்களை நகத்தினோம்.
இப்போ நிமாவை மீட்டு சரியான வாழ்க்கை வாழச் செய்ய உனக்கு வேற ஆப்ஷன் இல்ல...
மனித இனம் ரோபோக்களுக்கு அடிமைகள் ஆகணுமான்னு நீதான் முடிவு செய்யனும் . நீ கேட்ட ஒன் மந்த் உனக்கு சாங்க்ஷன் பண்றேன். யு மே லீவ் நௌ ...
ஸ்வாஸம் 14..
நிமாவிர்க்கு தான் செய்தது மாபெரும் பாதகம். அவள் உணர்வுகளை கொன்று விட்டேன். அவள் மறுத்திருந்தாலும் திருமணம் செய்து கொண்டிருந்தால் பல நிகழ்வுகளை தவிர்திருக்கலாம். இப்பொழுது.. பரவாயில்லை. அவளை நிற்பந்திதாவது திருமணம் செய்து கொள்ள உறுதி பூண்டான்.ஏற்கனவே விபூவை நினைதிருந்தவளான நிமா விபுவும் ஒரு மனித எந்திரதிடம் காதல் கொண்டதென்னி வருந்தியவளாக திருமணத்திற்க்கு ஒப்பினாள்.
இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கான ஈர்ப்பு தெரியுமாதலால் அது நிச்சயம் காதல் வடிவம் பெறும் என இருவருமே நம்பினர்.
ஒரு வழியாக நிமாவின் பாதை சரியாக அவளின் துணைக் கொண்டே கேரோவின் திட்டங்களை முறியடிக்க எண்ணினான்.
அதன்படி தலைமை பொறுப்பேற்று நவீன மனித எந்திரத்தின் திட்டத்தை முறியடித்தான். நிமாவின் துணையுடன் சாரா வார இறுதியில் வருவதர்க்குள் அப்டேட் செய்துக்கொள்ளும் ப்ரோக்ராம்களை மாற்றி தன்னை தானே டிஸ்மாண்ட்ட்டால் செய்துக்கொள்ளும்படி மாற்றி அமைத்தான். தலைமை அவனிடம்..நினைத்ததை முடித்தல் எளிது. அடுத்து செய்ய வேண்டிய முக்கிய பணி..மனித வடிவில் உள்ள இயந்திரங்களை ரோபோ வடிவில் மாற்றி அமைத்தல். ரோபோக்களின் ஆளுமையை குறைத்தல்.மனித குல மேம்பாட்டிற்க்கு வழி என புரிந்ததால் உலகெங்கிலும் காணப்படும் ரோபோ நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த பெரும்பான்மை நிறுவனங்கள் மிகுந்த யோசனையுடன் ஒப்புகொண்டன.
ஒருவழியாக ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னே செல்ல முடியாவிட்டாலும் ரோபோவின் பங்குகள் குறைக்கப்பட்டது. மனித உணர்வுகளுடனும் விளையாடி,மனித இனத்தயே ஆளும் ரோபோ இனம் இனி தன் பணியை மட்டும் செய்யும் என நம்புவோம்!!
இன்று இது கற்பனை கதையாக இருக்கலாம்..ஆனால் மனித உணர்வுகளை விட்டு நம் வீட்டு குழந்தைகள் முதல் ஏதோ ஒரு வகையில் இயந்திரங்களை நம்பி இயந்திரமாய்த்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். துணி துவைக்கும் இயந்திரம் இல்லை எனில் ,துணி துவைக்க தெரியாது.தாலாட்டு பாடவும் யு ட்யூப் வேண்டும். குழந்தைகளை அமைதி படுத்த ஸ்மார்ட் போன் வேண்டும். மனிதர்களுடன் உறவு வளர்க்க நெட்வொர்க் கொனெக்ஷன் ,ஸ்கைப் வேண்டும்... பக்கத்து வீட்டு மனிதர்களுடன் பேசவும்,வாழ்த்து தெரிவிக்கவும்,ஃபேஸ் புக்,வாட்ஸ் ஆப் வேண்டும்.எதுவுமே இயற்க்கையாய் தேவை இல்லை என்ற முடிவிர்க்கு மனித இனம் வந்தால்...இயந்திர மனிதனைத்தான் மணக்க வேண்டும்..காதலோ,அன்போ நிச்சயம் இருக்காது.
இந்த கதை நிச்சயம் எதிர்மறை கருத்துக்களை கொண்டதல்ல. என் ஆழ்மன பயம். எனக்கும் சேர்த்தே இக்கருத்துக்கள் ...
நன்றிகள் பல.....
சுகீ