Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஒழுகும் நிலவு வழியும் இரவு - Tamil Novel

Status
Not open for further replies.

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 7

பூமி வருடம் 4000

பல்‌ அண்டம்!
ஒளிர்ந்த இருள்!
இருண்ட மௌனம்!
பரிபூரணப் பயணம்!
விழிமூடி நீ!
கரம்‌கோர்க்க நான்!!!

அனிச்சத்தின் வீட்டில் ஆய்வு நடந்து கொண்டிருந்தது. தீரனின் உடலில் எந்த ஒரு தடயமும் இல்லை‌. கொலை செய்யப்பட்ட தடயமோ, இல்லை அடித்துத் துன்புறுத்திய தடயமோ இல்லை.

ஆய்வறிக்கையின் முடிவுகள் வந்தது‌. அவன் அனிச்சத்தின் வீட்டிற்கு வந்தவுடன், சிவப்பு ஏரி வெடித்துவிட்டது எனவும், நச்சுக் காற்றை சுவாசித்ததால் அவனுடைய உயிர் பிரிந்தது என்றும் கூறினர். ஆனால் அவன் அனிச்சத்தை ஏன் பார்க்க வர வேண்டும் என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. அதுவும் அந்த இடத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அரசு உத்தரவை மீறி ஏன் வர வேண்டும் என்றே தோன்றியது.

அனிச்சம் இப்பொழுது நளனுடன் இருந்தாள்‌. அவளின் மனம் மேலும் மருகித் தவித்தது. நளனுக்கோ சலிப்புத் தட்டியது. இது என்ன அடுத்தடுத்து சோதனைகள் என்று. 'அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல் சில மர்மம், அதற்குள் சில மர்மம் என்று முடிவிலியாய் சென்று கொண்டிருந்தது. பனிமலைத் தீவின் முடியா இரவுகளே முடிவுக்கு வந்துவிடும் போல. ஆனால் அறுதியொன்று எழுத முடியாமல் செல்கிறது இங்கு நிகழும் மர்மங்கள்.

பனிமலைத் தீவில் கிடைத்த எலும்புக்கூட்டின் ஆய்வு முடிவுகளும் வந்தது. அதிலும் ஒரு அதிர்ச்சிகரத் தகவல். அந்தத் தொல்லெச்சத்தின் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தயது என்றும், இறக்கும் தருவாயில் நாற்பது வயது இருந்திருக்கலாம் என்றும் கூற, மீண்டும் அதிர்ச்சி மட்டுமே நிலைத்திருந்தது. அதிர்ச்சி இரண்டாயிரம் வருடங்கள் பழமையிலும், அதன் வயதிலும் அல்ல. நாற்பது வயதில் குழந்தையுடன் இருந்ததுதான் அதிர்ச்சி.

நாற்பது வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலுமா? இது எப்படி சாத்தியம்!!!. இந்த உலகைப் பொறுத்தவரை இருபத்தைந்து வயதிற்குள் பெற்றுவிட வேண்டும். அதன்பிறகு பிள்ளைப்பேறு என்பது கனவில் கூட நிகழாது. அதன் பிறகு அனுமதியும் இல்லை. நாற்பது வயதிலும் உடல் வலுவில் இரண்டு ஆண்களை ஒத்திருந்ததாக வேறு கூறப்பட்டது. பூமியின் வரலாற்றைத் தலைகீழாகத் திருப்பி இயம்ப வந்திருக்கிறாளா அவள்!!. இரண்டு நாட்களாக அந்தத் தொல்படிமம் பேசு பொருளாக மாறியிருந்தது. அதைப் பற்றி விவாதிக்கவே மனிதர்களுக்கு நேரம்‌ சரியாய் இருந்தது.

இதுமட்டுமின்றி அந்தப் பெண் எப்படி இறந்தார் என்ற ஆய்வின் முடிவுகளும் வர, அதுவும் அந்த மனிதர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. உச்சந்தலையில் ஒரு பெரிய ஆணி கொண்டு அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். கிடைத்த எலும்பின் தலைப்பகுதியில் ஒரு ஓட்டை. அதுவும் வட்டமாக. விபத்து போல் தெரியவில்லை. யாரோ ஆணி வைத்து அடித்தது போல் ஒரு நேர்த்தி.

இவை அனைத்தையும் கேட்ட அனிச்சத்திற்கு தலை கிறுகிறுத்தது. மீண்டும் நத்தை ஓட்டிற்குள் சுருண்டாள். பின், கனவில் தோன்றிய பிம்பத்தின் மறுவுருவமாய் அல்லவா இருக்கிறது. விடையறிய மூளையின் முடுக்குகளில்‌ எல்லாம் தேடிவிட்டாள். இடுக்குகளில் கூட எந்தத் தகவலையும் எடுக்க இயலவில்லை. விடையில்லா வினாவிற்கு விடைதேடி களைத்தது மூளை.

"அனி, நீ பழையபடி உள்ளுக்குள்ள சிந்திக்க வேண்டாம். எல்லாத்துக்கும் முடிவு இருக்கும்" என்றான் அவளுக்கு ஆறுதலாக.

"அதெப்படி நளன் என்னால அப்படி இருக்க முடியும்?. எனக்கு வந்த கனவு. இப்போ கிடைச்ச எலும்பு. ரெண்டுக்கும் பல தொடர்பு இருக்கே" என்றாள்‌ கவலையுடன்.

"கண்டுபிடிக்கலாம்.." என்றான்‌ அமைதியாக. அவனும்‌ அதைப் பற்றிய சிந்தனையில்தான் இருந்தான்.

"நளன்..‌ இதெல்லாம் நம்பற மாதிரியும் இல்லை. நம்ப முடியாமையும் இல்லை" என்றாள் யோசனையுடன்.

"ஏதோ ஒரு மர்மம் இருக்கு அனி. அது மட்டும் நல்லா தெரியுது."

"எனக்கு மனசு கிடந்து அடிச்சிக்குது. ஏன்னு சொல்லத்‌ தெரியல."

"எனக்கும் கூட அப்படித்தான் இருக்கு."

என்ன செய்வது என்று‌ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர் இருவரும்.

"இன்னொரு பழுப்பு நிறத்தில் கிடைத்த தொல்படிமம்‌ என்ன ஆச்சு?" அனி.

"ஆராய்ச்சிக்கூடத்தில் கொடுத்தாச்சு" நளன்.

"உயிர் இருக்கா?"

"தெரியல. இருக்க வாய்ப்புகள் இருக்கு."

இரவாகிவிட்டது. அனி வழமைபோல் நிலவுடன் ஐக்கியமாகிவிட்டாள்.

"அனி கிளம்பு... நாம அந்த தீரன் வீட்டிற்கு‌ போகலாம்" என்று அறிவிப்பாய் நளன்‌ கூற, ‌அவனை ஆச்சர்யம் பொங்கப் பார்த்தாள் அனிச்சம்.

"எதுக்கு நளன்? இப்போ அங்க போய் என்ன செய்யப் போறோம்?. ஏற்கனவே அரசோட பார்வையில் இருக்குமே அந்த வீடு."

"அதெல்லாம் இருக்கட்டும். நாம தனியா போய்ப் பார்க்கலாம். அதுவும் இல்லாம அங்க ஒரு துப்பும் கிடைக்கலையாம். அதனால பாதுகாப்பு இருக்க வாய்ப்பு இல்லை."

"இப்போவா? ராத்திரி போய் அங்க என்ன தேடப்போறோம்?"

"எனக்கு என்னமோ அங்க போனா ஏதாச்சும் துப்பு கிடைக்கும்னு தோணுது."

"அரசுக்கே கிடைக்காத துப்பு நமக்கு கிடைக்குமா?" என்றாள் கேள்வியாக.

"எனக்கு பதில் சொல்லத் தெரியல" என்றான் அவன்.

ஆனால் அவன் செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்தான். அவனைக் கண்டு அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. வழக்கமாய் அடம் பிடிப்பதெல்லாம் அவள் குணமாயிற்றே.

தீரனின் வீட்டிற்கு இருவரும் சென்றனர்.
அங்கு அரசின் காவல் இல்லை. எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால் அவன் ஏரியின் நச்சு வாயுவினால் இறந்துவிட்டான் என்று வழக்கு மூடப்பட்டது.

இருவரும் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இருவரும் வீட்டைப் புரட்டிப் போட்டு தேடிவிட்டனர்.

இதில் மிகப்பெரிய இடர் என்னவென்றால், தேடுவதற்கும் இலக்கென்று ஒன்று வேண்டுமல்லவா. அவர்கள் என்ன தேடுகிறோம் என்று தெரியாமலே தேடினர். களைப்பு மட்டுமே மிஞ்சியது.

ஏமாற்றத்துடன், இருவரும் கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்தனர். அனிச்சம் குழப்பம் தாளாமல் அங்கிருந்த சுவர் மீது சாய, அதிலிருந்து ஒரு ஒலி, தண்டுவடத்தில் தைத்தது. பயந்து நளனின் அருகில் வந்து நின்றுவிட்டாள். இருவரின் முகத்திலும் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள். பயத்தில் தொண்டைக்குழி வறண்டுவிட்டது. உடலில் உள்ள நீர்ச்சத்து அனைத்தும், தோலில் உள்ள துளைகள் மூலம் வியர்வையாய் வழிந்துவிட்டது. மின்னல் வெட்டியது போல் ஒரு ஒலி. அதன்பின் பரிபூரண மௌனம். அவளுக்குத் தண்டுவடத்தில் சுருக்கென்று ஏதோ ஒன்று தைத்ததில் வலித்தது. நளன் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த சுவரின் அருகில் சென்றான். நடுக்கத்துடன் அதை மீண்டும் தொட்டுப் பார்க்க அவனுடைய கைகள் நீண்டது. அனிச்சை செயலாய் அனிச்சத்தின் கைகள் அதைத் தடுத்து நிறுத்தியது.

விழிகளில் தைரியம் தேக்கி அவளுக்கும் அதைக் கடத்தினான். அவன் விழிகளில் வந்த காரியம் முடித்தே திரும்ப வேண்டும் என்ற பிடிவாதம் குடி கொண்டிருந்தது.

அவன் கைகள் வைக்க, அந்த இடத்தில் ஒரு அதிர்வும் இல்லை. அதன்பின், சுவரின் ஒவ்வொரு பாகமாகத் தேடினர் இருவரும். எங்கோ ஓரிடத்தில் சிறுமேடு தென்பட அதை அழுத்தினான் நளன். அவ்வளவு எளிதாக அதை அழுத்த முடியவில்லை. சந்தேகமின்றி பார்த்தால் அந்தச் சுவர் ஒரு சுவர், அவ்வளவே. ஆனால் அவர்களுக்கு அங்கு ஏதோ இருப்பதுபோல் தென்பட, விடாமுயற்சியுடன் தேடினர். இறுதியில் வெற்றியும் கண்டனர். ஒரு புள்ளியை அழுத்த, அந்த இடத்திலிருந்து இழுப்பறை போல் ஒன்று வெளியே வந்து, அவர்கள் இருவரையும் கீழே தள்ளியது. அதன்பிறகு‌ சுவர் பக்கவாட்டில் சாய்ந்து சமதளம் ஒன்று உருவாகி, அதில் சில வினோதப் பொருட்கள் கடைப்பரப்பப்பட்டிருந்தது.

இருவரும் விசித்திரம் தாளாமல் அதைப் பார்த்தனர். சிறிது நேரத்தில் அழகாக ஒழுங்குடன் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட, அமைதி நிலவியது அங்கே.

நளன் வேகமாக எழுந்து சென்று அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தான். அதில் கிடைத்த பதிலைக் கண்டு வாய்ப்பிளந்து நின்றான். அனிக்கு ஒன்றும் விளங்கவில்லை‌. அன்னையின் ஓவியம் போல் அங்கும் சில ஓவியங்கள். சில மாற்றங்களுடன். அதில் அவளுடைய‌ விழிகள் நிலைத்து நின்றது.

"நளன்... என்ன நடக்குது இங்க? எனக்கு ஒண்ணும் புரியல" என்றாள் அனிச்சம். அவனுக்கு ஏதோ விளங்கிவிட்டது என்று அவனின் முகபாவனை வைத்தே விளங்கிக்கொண்டாள்.

ஆனால் அவனும் அதை அவளுக்கு விளக்கக் கூடிய நிலையில் இல்லை என்றுதான் கூற வேண்டும். நளன் அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

திடீரென ஏதோ ஒரு மின்னல் வெட்டு அவர்கள் இருவரையும் தாக்கியது. அதன் பின் ஒரு உந்துசக்தி, புயலின் மையத்திற்கு அவர்கள் இருவரையும் இழுக்க, அதன் வேகத்தில் அவர்களும் சுழன்றார்கள். நியூரான்களின் அதீத துள்ளலால் அனிச்சத்தின் எண்ணங்கள் பலவாறு அலைந்தது. ஒளியின் வேகத்தை விட பலமடங்கு வேகத்தில் பயணித்தது. அவளும் நளனும் அதே வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பனிமலை, கரும்பாலைவன நிலப்பகுதி என்று காற்றாய் இருவரும் ஒரு சுற்று சுற்றினர். பின் ஏவுகணை போல் வெகு தூரம் பயணம் செய்தனர். சூரிய குடும்பத்தையும்‌ கடந்த பயணம். அண்டத்தின் எல்லையை அடைந்தாயிற்று.

பூமிக்கும் அவர்களுக்கும் உண்டான மாய உறவு அறுந்து விழுந்தது. கருங்குழிக்குள் காற்றாய் இருவரும் பயணித்தனர். வேகம். வேகம். வேகம். இதுவரை‌ அவர்கள் உணர்ந்திரா வேகம். ஆழ்துளைக்குள் அதிர்வில்லாமல் ஒரு பயணம். எடையிழந்து ஒளியாய் ஒரு பயணம். புத்துணர்வை புத்தியல்பாய் உள்ளே புகட்டி, உருட்டி பிரட்டியது அந்தப் பயணம். மற்றொரு இணைப் பிரபஞ்சத்தின் வாயிலின் அருகே கொண்டு சென்றது. பனுவலுக்கு(நூல்) நூன்முகம் திறவுகோலாய் இருப்பதுபோல் மற்றொரு அண்டத்தின் நுழைவாயிலுக்கு வந்தனர் கடவுச்சொல்லின்றி. நெருக்கி, குறுக்கி, இறுக்கியிருந்த அலைக்கற்றைகள் சற்றே தளர்ந்ததுபோல் இருந்தது. பால்வெளி அண்டத்தில் பல சூரிய குடும்பங்கள் போல‌. மற்றொரு அண்டத்தின் மற்றொரு சூரிய குடும்பத்திற்கு வந்து சேர்ந்தனர்.

குழப்பம் வராமல் இருக்க, நாற்பதாம் நூற்றாண்டு நிகழ்வது பூமியில். இப்பொழுது இவர்கள் வந்திருப்பது பொழில் என்னும் கோளிற்கு. பூமியின் மறு பெயர்கள் - புடவி, புவி, பொழில், அவனி.

அக்கினிப்பழமாய் கொழுந்து விட்டெரியும் சூரியனைக் காற்றாய் கடந்தனர். வேதி வினையால் வெய்யோன் உதிர்த்த வெந்தழலில் வெதும்பி போகவுமில்லை. சூரியனின் சுள்ளென்ற அனற்புயலில் சிக்கிச் சுழன்றதால் உருகவுமில்லை.

அந்த சூரியக் குடும்பத்தின் பிரத்தியேகக் கோள் பொழிலில்(பூமி பொருள்) வந்து கலந்தனர். சுடர்விட்டு தழலொழுகும் சூரியக்கதிர் உட்புக முடியா பச்சை வர்ணம் பூசிய காடுகளுக்குள் விரைவாய் ஒரு பயணம். விஷம் கக்கும் கொடிய உயிரினங்களையும், உயிர் காக்கும் அபூர்வ அமிழ்தங்களையும் ஓருங்கே கண்டு வியப்பின் உச்சியில் புதுவித உணர்வுடன் ஒரு பயணம். ஒருவழியாய்ப் பயணம் முடிவுக்கு வந்தது. கரடுமுரடான பயணம்தான். ஆனால் கிடைப்பதற்கரிய பயணம்.

பின் பிடரிமயிர் பிடித்திழுத்து வந்து மீண்டும் உயிரை உடலுக்குள் புகுத்திய உணர்வு. அதீத வேகத்தில் கீழே தள்ளப்பட்டனர் இருவரும். இலவம் பஞ்சின் மென்மையைக் கொண்டிருந்த புல்வெளியில் வீசப்பட்டனர். திடீரென துடிக்க ஆரம்பித்த இதயம், பிராணவாயுவை உடல்பாகங்களுக்குக் கடத்த முடியாமல் திண்டாடியது. மூச்சுக்காற்று உள்ளே இறங்கி நெஞ்சம் விம்மியது.

பரிசுத்த உயிர்வளி என்பதை அவர்கள் வாழ்நாளில் சுவாசித்தது இல்லை. அதைச் சுவாசிக்க முடியாமல் இருவரும் தவித்தனர். நளன் சற்று நேரத்தில் தன்னைச் சமன்படுத்திக்கொண்டான். அனிச்சம் இன்னும் மூச்சுத் திணரலால் அவதியுற்றாள். அவளுக்கு முதலுதவி செய்தான். அதுவரை அங்கு நிலவிய ஒன்றும் அவன் கண்ணிலும் கருத்திலும் பதியவில்லை.

அனிச்சம் சற்று நேரத்தில் காற்றில் உலாவும் உயிர்வளியை சுவாசிக்க பழகிக் கொண்டாள். மாலை மங்கத் தொடங்கியிருந்தது. சுந்தரமும், வனப்புமாய் இருந்த சுந்தரவனத்திற்குள் இருந்தனர் இருவரும். மாபெரும் விருட்சத்தின் அடியில்.

தன் கனவு உலகம் நினைவானதை நினைத்து நினைத்து பூரித்துப் போனாள் அனிச்சம். நளனின் உணர்வுகளை வார்த்தைகளால் வரிக்க முடியாது. அனிச்சத்தின் மனக்குழப்பத்திற்கு விடையாகவே இந்தப் பயணம் என்று நினைத்திருந்தான். ஒவ்வொரு இடமாய் ஓடியோடிச் சென்றாள். விழிகளை மூடி, உயிர்வளியை உள்ளிழுத்தாள். நுரையீரல் புத்துணர்ச்சியுடன் பெரிதாக விரிந்து சுருங்கியது. உள்ளுக்குள் ஒரு மோனநிலையை உணர்ந்தாள். இயற்கையின் வாசம் பிடித்தாள். மழைத் தூர ஆரம்பித்தது. மண்வாசனை மூக்கைத் துளைத்து மூளைக்குள்‌ சென்று மணியடித்தது. நரம்புகள் புடைத்தெழும்பியது. அவளின் உணர்வுகளைத் துல்லியமாக ரசித்துக் கொண்டிருந்தான் நளன்.

அப்பொழுது சில காலடித்தடங்கள். சருகுகள் மிதிபடும் சப்தம். ஏகாந்த பொழுதினை அனுஅனுவாய் ரசித்த அனிச்சத்தின் நெஞ்சின் ஓரம் தோன்றிய சுருக்கென்ற வலி. துடிதுடித்துப் போனாள் அவள். ஒரு பெண்ணின் வீல் என்ற குரல் அவளை நிலைகுலைய வைத்தது. அருகில் கேட்ட காலடி சப்தங்களால் மனதிற்குள் படபடத்தது.

அந்தகாரம் கொஞ்சம் கொஞ்சமாக கருமையை அரைத்துப் பூசியிருந்தது பகல் என்னும் சித்திரத்தில். தினமும் இருளில் பூக்கும் நட்சத்திரங்களையும், வெள்ளை மதியையும், இருண்மையின் கோரக் கரங்கள் கொஞ்சமும் ஈரமின்றி அள்ளிப் புசித்திருந்தது. இருளின் பேரொளியாய் காரிருள் மட்டுமே கசிந்திட, அவள் மூச்சிசைந்ததோ இல்லை அவளுக்கே தெரியாமல் மூச்சு கசிந்ததோ? நிலவற்ற வானமும், விண்மீன் தின்ற இரவும் அவளுக்குச் சாதகமான சூழ்நிலையாக இருப்பினும், அவளின் அதீத இதயத்துடிப்பு சர்வ நிச்சயமாக அவளுக்குப் பாதகம் விளைவிக்க காத்திருந்தது. எவ்வளவு முற்பட்டும் மூச்சை சீர்படுத்த முடியவில்லை. மூச்சடக்கி பழக்கமும் இல்லை. மூச்சடக்கும் நிலையில் அவளும் இல்லை. குனிந்து தன் பெருத்த வயிற்றைப் பார்த்தாள். நிறைமாத கருவைச் சுமந்து நிற்கிறாள். ஒரு விருட்சத்தின் மறைவில் நின்று கொண்டிருந்தாள். ஆளில்லா சாலையில், மூளிப் பொழுதினில் உயிர்‌ காக்க இறுதிக்கட்ட போராட்டம்.

இருளில் வரிவடிவமாக தெரிந்த அவளைக் கண்ட அனிச்சம் அருகில் செல்ல முயற்சிக்க, நளன் அவள் கைகளைப் பிடித்து இழுத்தான். அங்கு பலர் அவளைத் தேடி வந்தனர். அவர்களின்‌ காலடித் தடங்களால், மீண்டும் படபடப்புத் தோன்றியது அனிச்சத்தின் நெஞ்சில். நல்லெண்ணம் கொண்டே அனிச்சத்தை அருகில் செல்ல அனுமதிக்கவில்லை நளன். ஏதோ பெரும் தவறு நிகழப்போகிறது என்று மட்டும் அவன் உள்ளம் உரைத்துக்கொண்டே இருந்தது.

ஓடி வந்ததில் துவண்ட கால்களும், நடுங்கும் திரேகமும், நிசியின் வனப்பும் அடிவயிற்றில் சுருக்கென்று தைத்த வலியும் தாளாமல் வெடித்து அழக் காத்திருந்தது விழிகள். வலியைக் கட்டுக்குள் கொண்டு வர, அவளது‌ மணிக்கட்டை அழுந்தக் கடித்தாள்.

சிடுக்கி முடிந்த தருணத்திற்குச் சிகரம் வைத்தாற் போல் தடதடவென்று ஒலியெழுப்பிய காலடி ஓசைகளால் அவளின் சப்த நாடியும்‌ அடங்கி ஒடுங்கிப் போயிற்று.

சிறிது நேரத்தில் அவள்‌ உச்சந் தலையில் அருகில் இருந்த ஆண் பெரு ஆணியை வைத்து அடித்தான். மேகமூட்டங்கள் இருளை அப்பி பூசியிருக்க, என்ன நிகழ்ந்தது என்று பரிதவித்த அனிச்சத்தின் எண்ணங்களின் பிம்பமாய்‌ ஒரு மின்னல் கீற்று. அந்தப் பரிபூரண ஒளியில் தெரிந்த இருமுகங்களைக் கண்டு இவர்கள் இருவரின் முகமும் அதிர்ச்சியடைந்தது. மின்னல் ஒளி வெட்டி முடிக்க, அவன் அவளின் தலையில் ஆணியை இறக்கியிருந்தான். பாவை‌ சரிந்து கீழே விழுந்தாள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு. உயிர் துறக்கும்‌ தறுவாயில் மனதின் வலி முகத்தில் அப்பட்டமாய்‌ தெரிந்தது. அவள் உயிர்போகும்‌ வேளையிலும், ஏதோ பிள்ளையைக் காக்கும் ஆபத்பாந்தவன் போல வயிற்றை தடவித் தடவிக்‌ கொடுத்தாள். அடுத்தநொடி அவள் அருகில் துப்பாக்கியால் சுடப்பட்டு சரிந்தான் அவனும். இருவரையும் இழுத்துக் கொண்டு சென்றனர் அவர்களைத் தேடி வந்திருந்த விசித்திர மனிதர்கள். மீண்டும் மின்னல் கீற்று ஒன்று. சமைந்து நின்றிருந்த நளனையும் அனிச்சத்தையும் நினைவுலகுக்கு கொண்டு வந்தது.

அடுத்த அடி அனிச்சம் எடுத்து வைக்காமல் தடுத்திருந்தான் நளன். அதீத களைப்பில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதுவரை புசித்த நிகழ்வுகள் போதுமென்று இரவும் விலகி நின்று ஆதவனுக்கு வழிவிட்டது.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 8
பொழில் 17ஆம் நூற்றாண்டு

அந்தகாரம்!
அடர்ந்த வனம்!
நலுங்கிய இரவு!
நரியின் ஓலம்!
வேக நடை!
இரையும் நிசப்தம்!
இசைந்த மூச்சு!
கரையும் நேரம்!
இறுகிய தசைகள்!
நடுங்கும் திரேகம்!
மரணம் நீ!
துணையாய் நான்!!!

மறுநாள் காலை இருவரும் கண்விழிக்கும் பொழுது ஒரு வீட்டில் இருந்தனர். நளனுக்கு நன்றாக மயக்கம் தெளிந்திருந்தது. ஆனால் அனிச்சம் இன்னும் அரை மயக்கத்தில் இருந்தாள்.

அங்குள்ள மனிதர்கள், இயற்கை, இடம், பழக்கவழக்கம் என்று அனைத்தும் வித்தியாசமாக இருக்க, நளன் பார்வையாளராய் மாறிப்போனான். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அவன் திணற, அவர்களே ஒரு முடிவுக்கு வந்தனர். இவர்கள் இருவரும் வேறு ஊரிலிருந்து ஓடி வந்திருப்பது போல் ஒரு கதையை உருவாக்கி உலவ விட்டனர். நளனும் ஆம் என்று தலையாட்டி வைத்துவிட்டான். அவர்கள் அணிந்திருக்கும் உடையின் விசித்திரம் மேலும் வினா தோற்றுவிக்க, அதற்கும் வாய்க்கு வந்ததை உளறி வைத்தான் நளன்.

இரக்கம் நிறைந்த அந்த மக்களும் அவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும், ராணியின் கையில் தாலி எடுத்துக் கொடுத்துத் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறினர். நளன் சிந்தனையில் அமர்ந்திருக்க, "தம்பி.. கவலை வேண்டாம். ராணியிடம் அடைக்கலம் பெற்றவர்கள் சோடை போனதாகச் சரித்திரம் இல்லை" என்று‌ நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் பகிர, நளனின் அதரம் மலர்ந்தது.

"நீங்கள் இருவரும் அங்கு எப்படி வந்தீர்கள்?" என்றார் அந்தப் பேரிளம்பெண். பெயர் பொன்னழகி.

சற்றே பருத்த உடல். முகம் நிறைய மஞ்சள். வட்டமாய் அரக்குப் பொட்டு. இடைவரைக் கூந்தல். அழகாய்ப் பின்னப்பட்டிருந்த சடை. அதில் மொட்டுக்களைத் தொகுத்த பூச்சரம் குடியேறியிருந்தது. அவள் தோளின் வளைவுகளில் அது வளைந்து நெளிந்து ஆட, அதில் ஒரு அழகு இருந்தது. அனைத்தும் நளனுக்குப் புதிது. ஆனால் பிடித்திருந்தது. அனிச்சம் பைத்தியம் போல் பிதற்றிக் கொண்டிருந்த உலகம் இவ்வளவு அழகா என்று எண்ணியெண்ணி மகிழும் பொழுதே, முந்தய இரவின் எச்சங்கள் நினைவில் வந்து அவனைத் திடுக்கிட வைத்தது. இதை எப்படி மறந்தான்?. அழகு அதிகமாய் இருக்கும் இடத்தில் கொடூரங்கள் நிறைந்திருக்குமோ?

"நேத்து அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்றான் நளன். அனிச்சம் விழிகளைத் திறக்காமல் காத்திருந்தாள். இந்த வினாவிற்கு விடை வேண்டுமே. அவளால் விழிகளைத் திறக்க முடியவில்லை. ஆனால் மூளை விழித்துக் கொண்டது.

"அந்தக் கொடூரம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்" என்று மறுத்தாள் அவள்.

"இல்ல.. பரவாயில்லை.. சொல்லுங்க.. எங்களால காப்பாத்த முடியலைன்னு வருத்தம் எங்களுக்கு" என்றான் உண்மையான வருத்தத்துடன்.

"மங்கை தற்கொலை செய்து கொண்டாள்."

"இல்லம்மா.. அவங்களைத் தலையில ஆணி வச்சு அடிச்சுக் கொன்னாங்க. நாங்க எங்க கண்ணால பார்த்தோம்" என்றான் நளன்.

"அதுவும் தற்கொலைதான்" என்று எழுந்து சென்றார் அவர். நளன் குழம்பிப் போனான்.

அனிச்சம் அநியாயம் நிகழ்ந்துவிட்டதாகவே எண்ணினாள். மனதின் மேல் பெரும் பாறை ஒன்றை ஏற்றி வைத்த உணர்வு. அதெப்படி மனசாட்சி இல்லாமல் ஒருத்தியைக் கொலை செய்ய முடியும்?. அதுவும் நிறைமாதமாய் இருப்பவளை. குழந்தைப்பேறு என்பது எவ்வளவு கடினமான ஒன்று!. அதை நினைத்தேனும் அவளை உயிருடன் விட்டிருக்கலாமே. அவளின் அழகிய‌ கனவு உலகம் இத்தனை கொடூரம் நிறைந்ததா? உயிர்வளி, பச்சை உயிரினம், இன்னும் பெயர் தெரியாத ஆயிரம் செழுமைகள் இல்லாமல் இருந்தாலும், அவர்களுடைய உலகில் இப்படியொரு கொடூரம் நிகழ வாய்ப்பில்லை. ஆனால் எல்லாம் இருந்தும் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?. இதைச் சாதாரணம் என்பதுபோல் கடந்து செல்கிறார்கள். எப்படி முடிகிறது இதெல்லாம்? என்று மருகித் தவித்தாள் அவள்.

"அதெப்படி அது தற்கொலை ஆகும்?" என்று தன் இமாலய சந்தேகத்தை முன்மொழிந்தான் நளன்.

"மங்கையின் மரணம் வெகு சாதாரண மரணம் என்று எண்ணிவிட்டீர்களா? அது வரலாற்று மரணம். இப்படி ஒரு பேறு கிடைக்காதா என்று நாங்கள் ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கும் மரணம். கொடுப்பினை வாய்த்தவள். ராணிக்கு உயிர் கொடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று பொன்னழகி கூற, அதிலிருக்கும் பெருமை மற்றும் இன்னும் பிற உணர்வுகளின் பொருளை பிரித்தறிய முடியவில்லை மற்ற இருவரால். இறப்பு என்பது சாபமல்லவா? அது எப்படிக் கொடுப்பினையாகும்?. நளனின் முகத்தில் குழப்பம் படர்ந்திருக்க, பொன்னழகி மீண்டும் தொடர்ந்தாள்.

"உடல் ஆங்கிலேயனின் வசம் சென்றிருக்க வேண்டும். ஆனால் உடையாள் காளிப் படையினர் அவளின் சடலம் மீட்டுவிட்டனர். அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தி இன்று இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மங்கையின் உடலை மீட்க போரொன்று நிகழ்ந்திருக்கிறது அர்த்த சாமத்தில். ஆசையின் உருக்கொண்ட உயிரைப் படையலாய் அளித்து ராணியின் மனதிற்கு உகந்தவளாகிவிட்டாள் மங்கை. அந்த வீரமங்கை. அவள் பாக்யசாலி" பொன்னழகி.

**************

வெள்ளையனே வெளியேறு!
வெள்ளையனே வெளியேறு! என்ற வீரமுழக்கம் வீதியெங்கும் தடித்து ஒலிக்க, துப்பாக்கிச்சூடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. தோட்டாக்கள் மக்களைத் துளைக்க, மண்ணில் பிசுபிசுப்பு ஏறியது அங்கு சிந்திய உதிரத்தால். உயிர்துறந்த ஒவ்வொருவரும் இன்னல்களின் இரங்கல்களாய் இன்றி, எதிர்காலத்தின் உரங்களாய் மாறிப்போயினர். மக்களின் உதிரம், ரத்தத்திட்டுக்களாய் நாச்சியின் முகத்தில்.

சிதறி ஓடிய மக்கள் தோட்டாவைக் கண்டு அச்சம் கொண்டதால் அல்ல. நாளை சுதந்திரம் கிடைத்த பின்னர், சுந்தரப் பூமியில், சுகந்தக் காற்றைச் சுவாசித்த பின்னர் மாண்டு போக வேண்டும் என்ற வேட்கைக் கொண்டதால். ராணியை அரியணையில் ஏற்றி ஒருமுறை கண்டுகளித்துவிட்டால் போதும். மீளாத் துயரில் இருந்து மீட்சி பெற்றுவிட்டோம் என்று செவி குளிர கேட்டுவிட்டால் போதும். வேறு இனிப்பான செய்திகள் வேண்டுமா என்ன? இந்த உயிர் தன்னிறைவு பெற்று வேறு உலகில் உலாவச் சென்றிடுமே!

தன் மக்களைக்‌‌ குருவி சுடுவதுபோல்‌ சுட்ட வெள்ளையன் மேல் தீராக் கோபம் கொண்டிருந்தாள் வேலுநாச்சியார். என்றேனும் விடியல் வருமா இந்தச் சிவகங்கைச் சீமைக்கு என்று மருகித் தவித்தாள். ஆனாலும் வீரர்களின் வீரத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. உயிரைக் கொடுத்தாவது, அவளின் கட்டளை நிறைவேற்ற எத்தனை வீரர்கள்!, வீரத்தாய்கள்!. குயிலி, உளையாள் என்று பெண்களின் பட்டியலும் அதிகம். சில வருடங்களுக்கு முன்பு தன்னைக் காட்டிக் கொடுக்காமல் தலை வெட்டுண்டு இறந்த உடையாள். தன்னுடைய உயிரைப் பல முறை காப்பாற்றியிருக்கும் குயிலி. அடுத்து இவர்களின் பட்டியலில் இந்தப் பெண் மங்கையும் சேர்ந்துவிட்டாள். ஏன் இப்படிச் செய்தாள் இவள்? என்று மருகித் தவித்திருந்தாள். சிலமணி நேரம் முன்பு சுவைத்த வெற்றிக்கனி கசந்தது இப்பொழுது.

ஆம்!! சிலமணி நேரம் முன்பே அவள் காளையார்மங்களத்தைக் கைப்பற்றியிருந்தாள். கொண்டாடப்படவேண்டிய வெற்றி. சில நாட்கள் முன்பே போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்திருந்தன. பன்னிரெண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் திப்புசுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஹைதர் அலிக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என்று அவன் மகனான திப்புசுல்தான் நிரூபித்திருந்தான். அவள் பதுங்கியிருந்த காலம், அவளுக்கு அனைத்து விதத்திலும் உதவியாய் இருந்தவர் ஹைதர் அலி‌. பணபலம், படைபலம் என்று கொடுத்து உதவியிருந்தார். திப்புசுல்தானை வேற்றாளாய் அவள் எண்ணவில்லை. தமையன் போலவே பாவித்தாள். 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்றுக் குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார். மற்ற படைகளைத் தலைமையேற்று வந்தனர் மருது சகோதரர்கள்.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரிராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரைக் கோச்சடையில் எதிர்த்து நின்றான். மல்லாரிராயன் ஒரு நயவஞ்சகன். தன் இனத்திற்கே மாபெரும் துரோகம் இழைத்தவன்.

ஒரு மணிநேரம்தான் வேலுநாச்சிக்குத் தேவைப்பட்டது. மல்லாரிராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார்கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான்.

உடையாள் காளிப்படைப் பிரிவினர் விவேகத்துடன் செயல்பட்டனர் அந்தப் போரில். குதிரைப்படையும், காலாட்படையும் திமிறிக்கொண்டு ஆங்கிலேயனின் படையை ஊடுருவியது. அதற்கு முழுமுதற் காரணம் உடையாள் காளிப்படை. பெண்கள் வாள் வீசுவதில் வல்லவர்களாக இருந்தாலும், அவர்களை வளரி வீசுவதற்கும், கவண் கல் வீசுவதற்கும் பயிற்சியளித்திருந்தனர். அவர்களின் வளரி மற்றும் கவண் கல் நன்றாகப் பதம் பார்த்தது ஆங்கிலேயர்களின் நெற்றியை. எத்தனை அடி தூரத்தில் இருந்தாலும் சிறிய கல் போதும். எதிரியை நிலைகுலைய வைக்க. மடியில்‌ கூரான கற்கள் பல கட்டிக்கொண்டு போர்க்களம் புகுந்த பெண்கள் படையினர்‌ வரலாற்றில் பேசப்பட வேண்டியவர்கள்தான். கவண் கற்கள் குறி தவறாமல், அவர்களின் தலையில் காயம் ஏற்படுத்த, அந்தச் சிறு இடைவெளியைப் பயன்படுத்திக் குதிரைப்படை ஊடுறுவி, அவர்களுக்குப் பெரும் சேதம் ஏற்படுத்தியது.

அங்கும் தமிழர்படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன.

ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்துக் காத்துக்கொண்டிருந்தது. அதன் பிறகு போரை வழிநடத்துவதில் சற்றே தளர்வு ஏற்பட்டது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலுநாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர், காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தியிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. அதற்கான ஆலோசனை சபைதான் இப்பொழுது கூடியிருந்தது.

அதில் விஜயதசமி அன்று உடையாள்‌ காளிப்படையினர் வேடமிட்டு கோட்டைக்குள் சென்று ஆங்கிலேயர்களை முறியடிக்கத் திட்டம் வகுத்தனர். அது ஒன்றுதான் வழி என்றும் முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் ஆங்கிலேயனை எதிர்க்க, வாளைத் தீட்டினால் போதாதே. புத்தியை அல்லவா தீட்ட வேண்டும். ஆங்கலத் தளபதியின் உதிரத்தைக் கோப்பையில் பரிமாற வேண்டும், வேட்கையில் தவித்திருக்கும் தம் மக்களுக்கு என்று சபதம் பூண்டவர், எப்படி கோட்டைக்குள் நுழைவது, அவர்கள் கோட்டைக்குள் கலவரம் உண்டுசெய்த பின்னர், மருது சகோதரர்கள் எப்படி கோட்டையைச் சுற்றியிருக்கும் துப்பாக்கிகளை எதிர்கொள்வது என்று பெரும் திட்டம் வகுத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது குயிலி அவசரமாக உள்ளே ஓடி வந்தாள். அவளின் வேகம் வேலு நாச்சியைப் பதம்பார்த்துவிட்டது‌.

"குயிலி.. என்னவாயிற்று?"

"துயரச்செய்தி கொண்டு வந்திருக்கிறேன்" என்று குயிலி கூற, நாச்சியார் எழுந்து கொண்டார். அவள் கசங்கிய வதனம் ராணியை‌ அச்சுறுத்தியது.

"காலம் தாழ்த்தாமல் உரைத்திடு" என்றாள் கட்டளையாக.

"மங்கை இறந்துவிட்டாள்" என்று குயிலி கூற, நாச்சியார் எழுந்துவிட்டார்.

அவள்‌முன் மங்கையின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. ஈருயிராய் இன்னும் இருந்தாள் மங்கை. சிவகங்கை சீமையின் முதல் வீரக்கருவை சுமந்திருந்தாள். இந்த உலகைக் காணாத அந்தச் சிறு உயிர்‌ என்ன செய்தது?. அவளின் இந்நிலைக்குக் காரணம் ஆங்கிலேயர்தான் என்று வேலுநாச்சியார் நினைக்கவில்லை. மங்கையின் மரணத்திற்குப் பாதிப் பொறுப்பு அவளே ஏற்க வேண்டும். ஏனெனில் கோட்டையை ஆங்கிலேயனின் வசம் ஒப்புவித்து, மக்களை இந்த இழிநிலைக்கு ஆளாக்கியது அவளல்லவா?

அக்கினிப்பழமென அம்பகங்கள் ரத்தமெனச் சிவந்திருக்க, கருவிழிப்பாவை ஓரிடத்தில் நிலைத்திருந்தது. மங்கை மற்றும் அவள் கணவனின் சடலங்கள் மேல். அவளுக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என்றும், அவளுக்கு வேலுநாச்சியார் என்று பெயரிடுவேன் என்றும் கூறியிருந்தாளே!

செங்காந்தள் மலராய் மனம்‌ கொழுந்துவிட்டு எரிந்தது. மங்கையின் வதனம் நிம்மதியில் திளைத்திருந்தது. தலையில் பெரும் காயம் ஏற்பட்டு இறந்த வலியை அவள் வதனம் அறவே சுமக்கவில்லை. என்னைப் பாதுகாப்பது அப்படி ஒரு நிம்மதியைத் தருகிறதா எம்மக்களுக்கு. அப்படி நான் என்ன செய்தேன். இனி என்ன செய்வேன் என்று நம்புகிறார்கள்.

"குயிலி என்ன நடந்தது?" என்றாள் இறுகிப்போன குரலுடன்.

"விருப்பாச்சியில் பதுங்கியிருக்கும் தாங்கள் மீப்பெரு திட்டம் ஒன்றைத் தீட்டிவிட்டதாகத் தளபதி அப்ரஹாம் பாஞ்சார் அனுமானித்திருக்கிறார். அதன் பொருட்டு மல்லாரிராயனிடம் உளவுபார்க்க ஆள் ஒன்றை அனுப்பினார். அந்த‌ ஈனப்பிறவி‌ அனுப்பிய உளவாளி, தகவலறிய இங்கு உலவிக் கொண்டிருந்தான். அவனை நம்பவைத்துத் தவறான போர்த்திட்டங்களை அளித்துவிட்டாள் மங்கை. அவள் உடையாள் காளிப்படையின் முக்கியத் தலைவி என்பதால் அவனும் நம்பியிருக்கிறான். ஆனால் அவள் கூறியதற்கு நேர்மாறாக நீங்கள் காளையார்மங்களத்தைக் கைப்பற்றிவிட்டீர்கள். மல்லாரிராயனையும்‌ கொன்று விட்டீர்கள். அதன் பொருட்டு மங்கையைக் கொல்லத் திட்டமிட்டிருக்கின்றனர்‌ ஆங்கிலேயர். சூழ்ச்சி செய்து அவளை நம் படையிலிருந்து பிரித்துச் சென்று, ஓட ஓட விரட்டியிருக்கின்றனர். அப்பொழுது அவளுடன் அவள் கணவனும் அருகில் இருந்திருக்கிறான். அதனால் இருவரையும் கொல்லத் துணிந்துவிட்டனர். ஆனால் மங்கை அவர்களின் தோட்டாக்கள் துளைத்து உயிர்துறக்க விரும்பவில்லை...." என்று கூறிய குயிலியின் குரலில் சுருதியிறங்கியிருந்தது.

"அதனால்?" என்றாள் நடுங்கும் குரலுடன்.

"ஆங்கிலேயத் தோட்டாக்களுக்குத் தற்கொலை உத்தமம் என்று கருதி, அது முடியாமல் போக, அருகில் இருந்த ஆணியையும்‌ பெரும் கல்லையும் கணவனின் கையில் எடுத்துக் கொடுத்து, அவளைக் கொன்று விடுமாறு மன்றாடியிருக்கிறாள். அவளுடைய கணவன் அந்தக் காரியம் செய்து முடிக்கவும், அவனைத் தோட்டா துளைக்கவும் சரியாய் இருந்தது. மூன்று உன்னதமான உயிர்கள் சீமையைப் பிரிந்து சென்றது" என்று குயிலி மங்கையின் தியாக அறச்செயலைக் கூறிமுடித்தாள்.

சிறிது நேர அமைதி.

"அப்படி மொழியாதே குயிலி. அவர்கள் எங்கும் செல்லவில்லை. சீமையின் காற்றில் கலந்திருக்கின்றனர். காற்றில் சுதந்திர வேட்கை ஏற்றி நம்மைக் கிளர்ச்சியுடன் வைத்திருக்கின்றனர். மங்கை இப்படி ஒரு காரியம் புரிவாள் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. என்னைச் சுற்றி இருக்கும் வீரமங்கைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை!!" என்று கண்ணீர் உகுத்தாள் வேலுநாச்சி.

மங்கையின் அருகில் சென்றவள், "என்னை ஏன்‌ இப்படி ஏமாற்றினாய் மங்கை. உன் குழந்தையைக் கையில் ஏந்தும் அருகதையற்றுப் போனேனோ?. இத்தனை உயிர்கள் இறந்தும் இன்னும் சுரணையற்றவளாய் இருக்கிறேனே! இதற்குப் பிரதி உபகாரம் என்ன செய்யப் போகிறேனோ" என்று தவித்தவளைத் தடுக்கும் பொருட்டு, "ராணி" என்று பல குரல்கள் ஒலித்தது சபையில்.

அதன்பின் வெறி‌ கொண்டவள்போல் எழுந்தவள், "இன்னும் இரண்டு தினங்கள். அனைத்திற்கும் முடிவு கட்டுகிறேன். விஜயதசமி அன்று கோட்டை உன் ரத்தத்தால் சுத்தம் செய்யப்படும். என் மண்ணில் விளைந்து கிடக்கும் வீரத்தின் மேல் ஆணை!!. எம்மைக் காக்க உயிர் துறந்த இந்தக் குழந்தையின் மீது ஆணை!!" என்று சூளுரைத்தாள்.

"குயிலி... முகத்தில் கீறல் செய்து சகல மரியாதைகளுடன் இவர்களை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய். வீரத்தின் சாயல் குழந்தைக்கும் இருக்க வேண்டும். அன்னையின் வீரத்தால் அந்தக் குழந்தையும் அதற்குத் தகுதி பெற்றுவிட்டது. வரும் விஜயதசமியன்று கோட்டை என்வசம் இல்லை என்றால் வேலுநாச்சியும் இல்லை. அவளும் அழிந்து மண்ணோடு மண்ணாகப் போகட்டும்" என்று சூளுரைத்தவளை யாராலும் தடுக்க இயலவில்லை.

"வரும் விஜயதசமியன்று கோட்டை நிச்சயம் உங்கள் வசம் இருக்கும். உங்களின் இந்தச் சூளுரை பொருளற்றுப்‌ போகட்டும்" என்றாள் குயிலி கணீர் என்ற குரலில்.

பொன்னழகியின் வீட்டில் அனிச்சம் கண்விழித்துவிட்டாள். எழுந்ததிலிருந்து அழுது கொண்டே இருந்தாள்.

அவளைத் தேற்றும்‌ வழியறியாது திகைத்து நின்றான் நளன்.

"எனக்குக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்" என்றாள் மொட்டையாக.

"பொன்னழகி அக்கா கிட்ட சொல்லி ஏற்பாடு செய்றேன்" என்றான் நளன்.

***********

மங்கை என்னோட புனைவுப் பாத்திரம். மற்றபடி வேலுநாச்சியார் பற்றிக் கூறியிருக்கும் தகவல் எல்லாம் வரலாற்றுத் தகவல். கொஞ்சம் வரலாற்றைத்‌ தொட்டு வருவோமே தவிர, மற்றபடி மங்கையின் கதையைத்தான் இந்த நூற்றாண்டில் கூறப்போகிறேன். கவண் கல் பயன்படுத்தி ஆங்கிலேயரை எதிர்த்தனர் தமிழர்கள் என்ற குறிப்பு இருக்கிறது. இதை உடையாள் காளிப்படைப் பிரிவினர் பிரயோகம் செய்வதாக எழுதியது என் புனைவு மட்டுமே.

இணைப் பிரபஞ்சம் - இதை மையமாகக் கொண்டுதான் இந்தக் கதையைப் புனைந்திருக்கிறேன். மூன்று கதைகள் வரும்.

பூமி - நாற்பதாம் நூற்றாண்டு - நளன், அனிச்சம்.

பொழில் - பதினேழாம்‌ நூற்றாண்டு - மங்கை

புடவி - பதினெட்டாம் நூற்றாண்டு - கொடி, செழியன், அமரா(அடுத்து வரும் பதிவுல இந்த அமரா வருவா).

இந்த மூன்று உலகத்தை வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு குணாதிசயங்களோடு, வெவ்வேறு காட்சியமைப்புகளோடு கதைப் பயணிக்கும் இனி. கதை சொல்லலிலும் சிறுது வித்யாசம்‌ இருக்கிறது. ஓர் இணைப் பிரபஞ்சம் வைத்துக் கதை எழுதலாம். ஆனால் இங்கு இரண்டு இணைப் பிரபஞ்சம் எடுத்துக் கதைக் கூறியிருப்பதறக்குக் காரணம் இருக்கிறது. போகப் போகப் புரியம். தொடர்ந்து ஆரதவு அளியுங்கள்.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 9

கொட்டும் மேளம்!
அலங்காரப் பந்தல்!
பரப்பிய புதுமணல்!
பூட்டிய நாண்!
அணிந்த மெட்டி!
பிரிவாய் நான்!
பரிவாய் நீ!!!


செவிப்பறை கிழியுமளவு மத்தளம் கொட்டப்பட்டது. மங்கல நிகழ்வுகளின் பொழுது எதிர்மறை சொற்களோ, ஒருவரின் வயிற்றெரிச்சலோ, வன்மமோ வெளியில் கேட்காதவாறு இருக்கவே இந்த மங்கள வாத்தியங்களின் முழக்கம். அனைத்து ஒலியையும் தின்றுவிட்டு, எதிரொலியுடன் ஒலிக்கும் மத்தளம், எதிர்மறை எண்ணங்களையும் வழித்துத் துடைத்துப் புசித்து ஏப்பம் விட்டுவிடுமாம். அப்படித்தான் இந்தத் திருமணத்திலும் மங்கல வாத்தியங்களின் முழக்கம். மணமகளின் மனதையும் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டதோ? விண்ணதிர, மண்ணதிர முழக்கம் எதிரொலி‌ செய்தது. ஆனால் அவள் பூரண அமைதியுடன் விளங்கினாள். முகம் காண அப்படித்தான் இருந்தது.

பெரும்பந்தல். அதில் பெரிய வாழைமரங்கள். புது வெள்ளை மணல் எடுத்து வந்து பந்தலின் கீழ் பரப்பியிருந்தனர்.
நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தாள் கொடி. பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பலர் மந்திரங்களால் புகழ்ந்து, மலர் மாலையை அணிந்திருந்த மணமகளுக்கும் மணமகனுக்கும் கையில் காப்புக் கயிறு கட்டினர். மணமகனின் திருக்கையால் ஏந்திழையின் கால்களைப் பற்றி அம்மி மிதித்து, வெண்சங்கு கழுத்தினில் திருநாண் பூட்டி, மங்கல மங்கையர் ஆசி பெற்று, மங்கல வீதி வலம் செய்தனர் மணமக்கள் இருவரும்.

கொடிக்குத் திருமணம் முடிந்திருந்தது. அவள் மரப்பாவையாய் வலம் வந்தாள். இறுதிவரை செழியனை எதிர்பார்த்தது மலர்தான். கொடியின் மனம் இரும்பு பெட்டகமாய் மாறிப்போனது. தலைக்கு மேல் வெள்ளம் சென்ற பின்னர் என்ன செய்வது‌?. இனி உயிர் பிழைத்தால் வாழலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் போல. அவள் மனம் என்ன நினைத்திருக்கிறது என்று அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

தாலிக்கட்டு முடிந்து, அடுத்து பல சம்பிரதாயங்களும் செய்து முடித்தனர். மணமகன் சத்யன் என்னும் சத்யவேலன். அவசர மாப்பிள்ளை இவன். அவசரத்திற்கு வைத்த ரசமும் பல சமயங்களில் மணக்கும். இவன் பெயருக்கு ஏற்றாற் போல் சத்யசீலனா இல்லை பெயரைக் கெடுக்க வந்த பாவியா‌ என்று காலம்தான் உரைக்க வேண்டும். முன்னது‌ கொடியின் வாழ்வை சீர்படுத்தும். பின்னது அவளின் வாழ்வைக் குடித்துவிடும். கொடிக்கு வைக்கப்பட்ட விஷப்பரீட்சை. ஆனால் அவளின் பதில் மட்டுமே போதாது வெற்றி பெற.

பல நேரங்களில் இந்தச் சமுதாயம் இப்படித்தான், சிலரைப் பரிட்சித்துப் பார்த்துவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கைக் கவிதையை வெற்றுத் தாளில் செதுக்கி நிமிர்வதற்குள், சில கணங்களில் அது கசக்கி‌ எறியப்படுகிறது மற்றொருவரால். உரிமை என்ற தவறான புரிதலில். உண்மையில் அதற்கு உரிமை யாருக்கும் இல்லை. அடுத்தவரைப் பாதிக்காமல் வாழும் வரைதான் அது உன் வாழ்வு. எப்பொழுது அடுத்தவரின் நாட்குறிப்பில், நீ எழுத நினைக்கிறாயோ, அங்கே வரைமுறைகள் அறுத்தெறியப்படுகிறது என்று பொருள். என் உள்ளம் கவர்ந்தவரின் நாட்குறிப்பில் நான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. உன் நினைவுகளைச் சுமந்து, அது உற்றவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும். அன்போ, அதிகாரமோ..? இரண்டுமே அத்துமீறி நுழைகிறதென்றால் அது தவறுதான்.

தாலிக்கட்டு முடிந்த பிறகு மலர், கொடியின் அருகிலேயே இருந்தாள். இனி செழியன் வந்தும் பயனில்லையே.

அங்கு அலங்கார மாளிகையில், அதற்குச் சற்றும்‌ பொருத்தமில்லாத பாழடைந்த அறையில் இருந்தான் செழியன். அரசியின் அறைதான். அவள் நினைவுகள் பலவும் சுமந்திருந்தது அந்த அறை. ஒவ்வொரு இணுக்கிலும் அவளின் நினைவுகளின் இளைப்பாறல். அவள் அந்த வீட்டில் எப்படி வாழ்ந்திருக்கக் கூடும் என்று விளக்கவல்லது அந்த அறை. அப்படிப் பாசமாய் வளர்த்த தங்கையைக் கொல்ல‌த் தயங்காதவர், கொடியை என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடுமே!. அவனின் இலக்கியக் காதலில் இலக்கணங்கள் பிழையாகி, பொருந்தாக் காதலாய் வலம்‌ வருகிறது. பொருந்தாது போனது தந்தையின் கோட்பாடுகளால். அன்னை கூறுவதிலும் நியாயம் இருக்கிறதே. எத்தனை தினங்கள் அவளைப் பாதுகாக்க முடியும். இங்கு போகிற போக்கில் வாழ்க்கை நடத்த முடியாதே. நான் வாழ இரண்டு திட்டங்கள் வகுத்தால், அதை முறியடிக்க நூறு திட்டங்கள் உருவாக்கப்படுகிறது.

ஒருவேளை கொடியை அவன் மணந்து கொண்டால் என்று நினைக்கும் பொழுதே, நிகழவிருக்கும் அனர்த்தங்கள் அனைத்தும் வரிசைகட்டி வந்து நின்றது. ஆராய்ந்து பார்த்ததில், எஞ்சியிருக்கப்போவது என்று எதுவுமில்லை. அதற்கு இந்தப் பிரிவு எவ்வளவோ மேல் என்றே தோன்றியது. புத்தி ஞானம் பெற, சோதனைகள் கடக்க வேண்டும் போல. காதலால் இணைய முடியாத இருவரும், பிரிதலில் இருந்த புரிதலை உணர்ந்து கொண்டனர் ஒன்றுபோல். ஒத்த மனதின் சிந்தனைகள் ஒன்று போல் இருப்பதில் தவறில்லையே.

தேவர் பிள்ளை வீட்டிற்கு வந்தார். நினைத்ததைச் சாதித்துவிட்ட, மமதை நிறைந்திருந்தது அவரது‌ முகத்தில்.

"கோகிலா.." என்று அழைத்தார்.

வரும் பொழுது குவளையில்‌ நீர் எடுத்துவந்தார்‌ அவர். அதை வாங்கி அருந்தியவர், "செங்கனூர் ராசா வீட்டுக்கு இன்னைக்கு, அந்தி சாயப் பொண்ணு பார்க்கப் போறோம்" என்றார் அறிவிப்பாக.

"அதுக்குள்ளையா? கொஞ்சம் அவசரப்படுறீக. செழியன் மனசும் கொஞ்சம் தயாராகட்டும்" என்று அவர் கூற, சீறும் பார்வையுடன், கைகளை உயர்த்தி நிறுத்து என்றார்.

"உங்கிட்ட எந்த விளக்கமும் கேக்கல. இது தகவல். போய் உன் புள்ளையைத் தயார் செய்" என்றார்.

கோகிலம் குழப்பத்தில் இருந்தார். இதை இப்பொழுது உடனே தன் மகனுக்குச் செய்வது நல்லதா என்று தன் நெஞ்சைக் குடைந்துவிட்டார். கொடியை இழந்த துக்கத்தில், வீட்டிற்கு வரும் பெண்ணை வருத்திவிட்டால் என்ன செய்வது?. தன் கணவனைப்‌ போல் தன் மகன் இல்லைதான். ஆனாலும், ஏமாற்றமும் ஏக்கமும் சுமந்த நெஞ்சம் நியாய அநியாயங்கள் பார்க்காதே. ஒருவேளை இவன் புரிந்து கொண்டாலும், மனைவியாய் வருபவள்‌ புரிந்து நடக்க வேண்டுமே. குழப்பத்தினூடே கால்கள் மேல் மச்சை நோக்கிச் சென்றது. அரசியின் அறை தவிர அந்தத் தளத்தில் இப்பொழுது வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும்தான். அந்தத் தளம் பொதுவாக வீட்டில் உள்ளவர்கள் உபயோகிப்பது கிடையாது.

கோகிலம் மகனைத் தேடிச் சென்றார். அவன் இரண்டு நாட்களாக அரசியின் அறையில் தவமாய்க் கிடக்கின்றான். பொருளையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருந்தான். ஏன் செய்கிறான் என்று அவனுக்கும் தெரியவில்லை. மனதைத் திசைத் திருப்பவும் செய்யக்கூடும்.

கோகிலம் சென்று பார்க்கும் பொழுது அறை முழுக்க, ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. அது மிகவும் விசாலமான அறை. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அறை. மகனின் மனதில் தெளிவு பிறந்துவிட்டது என்று அந்த அறை எடுத்துரைத்தது‌. மனதின் பிம்பமாய்‌ நம் செயல்கள் ஒலிக்கும் என்பது நியதி.

அவன் தெளிவு பெற்றுவிட்டான். இது என்ன பாத யாத்திரையா? முடியவில்லை என்றாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நடந்து செல்ல. வீரவசனங்களும் தத்துவங்களும் நம்‌வாழ்வை‌ காப்பாற்றும் கருவியா என்ன? சில காரியங்கள் சிந்திக்காமல் முடிவு செய்தாலும் கெட்டுப்போகாது. ஆனால் சிந்தனையில்லாமல் எடுக்கும் சில முடிவுகளின் முடிவு நன்மை பயப்பதில்லை. இது அவன் சிந்திக்க வேண்டிய தருணம். அதைச் செய்தும் விட்டான்.

கோகிலம்‌ மூலம் விஷயத்தை அறிந்தவன், எந்த உணர்வுமின்றி அவரைப் பார்த்தான். அவர் எதிர்பார்த்த எதுவும் அவன் விழிகளில் கசியவில்லை. ஆனால் இவை அனைத்தும் ‌அவன் எதிர்பார்த்ததுதான்.

நண்பகல் உணவு முடித்ததும் வண்டிகட்டி கிளம்பிவிட்டனர். தந்தையும் மகனும் பேசிக்கொள்ளவில்லை. செழியன் மனதில் ஒரு விடயத்தை மட்டும் உருட்டிக் கொண்டிருந்தான். இன்னும் சில ஆண்டுகளில், இந்த ஊர் மொத்தமும் மாற வேண்டும். மாற்ற வேண்டும். மூடத்தனங்கள் அனைத்தையும்‌ கொன்று, குழிவெட்டி புதைத்திட வேண்டும் என்று உருப்போட்டான். எப்படிச் செய்யப்போகிறான் என்று தெரியவில்லை. ஆனால் செய்து முடிப்பேன் என்ற உறுதி பிறந்திருந்தது.

பெண்ணின் வீட்டை அடைந்தனர். அரண்மனை கோலாகலமாக இருந்தது. அலங்காரம் சற்று அதிகம்தான். அந்த வீட்டின் ஒற்றை ராஜகுமாரியாம். வீடு முழுக்க வண்ண மலர்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊரே திரண்டிருந்தது அவர்கள் வீட்டின் முன். அதிகார வர்க்கத்தின் வேசித்தனம் இது. பசப்பும் பகட்டும் வெளிப்பூச்சுகள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அழகாகத் தோன்றலாம். ஏங்கவும் வைக்கலாம். ஆனால் அதுவே சிலருக்கு சாபமாகவும் அமையலாம். நம் செழியனைப்‌ போல்.

பெண் பார்க்கும் வைபோகமா இது? இல்லை. தந்தை பொய்யுரைத்திருக்கிறார். திருமணம் முன்னமே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இது மக்களின் முன் கண்துடைப்பு நாடகம்.

அனைவரும் விசாலமான கூடத்தில் அமர்ந்திருந்தனர். பெண்ணை அழைத்து வந்து கூடத்தில் அமர வைத்தார்கள். 'அமரா' என்று விளித்தார்கள். பெயருக்கேற்றாற்போல் அழகிதான் அவள். சில சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டுப் பெரும் செல்வம் கைமாற்றப்பட்டது. திருமண முகூர்த்தம் குறித்தனர். அனைத்தையும் ஒரு மூன்றாம் மனிதனைப்‌போல் பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அனைத்தும் முடித்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டனர் அனைவரும். திருமண வேலைகள் தங்குதடையின்றி நடந்தேறியது

சில நாட்கள் கடந்து சென்றிருக்கும். கொடியைப் பற்றி மலரிடம் விசாரித்தான் செழியன்.

"அண்ணே... நீங்க கடைசிவரை வராம‌ ஏமாத்திட்டீங்க. எதிர்பார்த்துட்டே இருந்தேன்" என்றாள் அவள்.

"கொடி எதிர்பார்த்தாளா?" என்றான் அவன் கேள்வியாக. அந்த வினாவில் ஒரு பதற்றமும் இருந்தது. விடை வேண்டி நிற்கும் நிர்பந்தமும் இருந்தது.

"அவ மனை ஏறி தலை குனிஞ்சு உக்காந்தவதான். நிமிர்ந்து கூடப் பார்க்கல" என்று மலர் கூற, சிறு நிம்மதி பரவியது செழியன் மனதில்.

அது முழுக்க முழுக்கச் சுயநலம் கலந்ததுதான். ஒன்று அவள் எதிர்பார்த்து ஏமார்ந்து போகவில்லை. மற்றொன்று அவள் வாழ்வின் அடுத்த அடிக்கு தயாராகிவிட்டாள் என்ற நிம்மதி.

"எனக்கு அவளை ஒரு தடவை நேர்ல பார்க்கணும். உன்னால கூட்டிட்டு வரமுடியுமா?" என்றான்.

"அது... அவ புருஷன் வீட்ல கேட்டு கூட்டிட்டு வரணும். ஆனா கண்டிப்பா கூட்டிட்டு வரேன். நாளைக்குச் சாயங்காலம் அம்மன் கோவில் வரோம். ஒதுக்குப்புறமா ஏதாவது இடத்தில நீங்க பேச ஏற்பாடு செய்றேன்" என்று கூறிவிட்டு சென்றாள்.

மறுநாள் மலர் கூறியது போல், கொடியை‌ அழைத்து வந்தாள்.

அந்த மாபெரும் விருட்சத்தின் முன் இருவரும் நின்றிருந்தனர். ஆதூரமாக அந்த மரத்தின் அருகில் சென்று, அங்கு திண்ணை போல் அமைக்கப்பட்டிருந்த திட்டில் அமர்ந்தாள்.

அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே பழைய கொடிதான். கழுத்தில் ஏறியிருந்த தாலியும், நெற்றி வகிடில் சூடியிருந்த குங்குமமும் அவளைச் சற்று பெரிய பெண் போல் உருவகப்படுத்தியது. முகமும் விழியும் நிர்மலம் சுமந்திருந்தது. அதில் வினாவும் இல்லை. விடையும் இல்லை. எதிரிலிருப்பவர் கணித்துவிடா வண்ணம் கவனமாய் இருக்கிறாளா என்றும் ஆராய்ச்சி செய்துவிட்டான் செழியன். ஆனால் பதிலறிய முடியவில்லை.

அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது?. எங்கு ஆரம்பிப்பது? என்று விளங்கவில்லை. அமைதியாகவே இருந்தான்.

"சொல்லுங்க. என்ன பேசணும்?" என்றாள் பொறுமையாக. முன்பு‌ அவளிடம் இருந்த பயம், வெட்கம் எல்லாம் இப்பொழுது இல்லை. பேச்சிலும் முதிர்ச்சி இருக்கும் என்று வினாவின் தோரணை கூறியது. அவனுக்கு மனம் ரணமாய் வலித்தது. ஆனால் அவன் மனதை‌ நிலைப்படுத்த பலநாட்கள் பழகியிருக்கிறான். ஆனாலும் அவளைப் பார்த்ததும் தெளிவெல்லாம் மூட்டைக்குள் சென்று முடங்கியது போல் ஒரு பிரமை.

"எப்படி இருக்க கொடி?" என்றான் செழியன் அவனும் முகத்தில் எந்த உணர்வையும் தேக்காமல். உணர்வுகளை அடக்க முயற்சி செய்தான் என்றும் கூறலாம்.

"ம்ம்ம்... பார்த்தா எப்படித் தெரியுது?" என்று அவனின் வினாவிற்கு எதிர்வினாவாக அவள் இருந்தாள்.

"தெரியல. உண்மையாவே கணிக்க முடியல. அதான் கேக்குறேன்" என்றான்‌ அழுத்தமாக.

"நல்லா இருக்கேன்" என்றாள் அவள். குரலில் ஏதும்‌ வித்தியாசம் தோன்றுகிறதா என்று பார்த்தான். ஆனால் கண்டுகொள்ள முடியவில்லை.

"என்னை மன்னிச்சிரு... என்னால எதுவும் செய்ய முடியலைன்னு என்னோட இயலாமையை‌ எடுத்துச் சொல்ல இங்க வரல" என்றான்‌ மெதுவாக.

"இயலாமை உங்ககிட்ட மட்டும் இல்லை. எங்கிட்டயும்‌ இருக்கு. இந்தச் சமூகத்துக்கும் இருக்கு. பழையகதை பேசிப் பலன் எதுவும் இல்லை. அதனால அதெல்லாம் திரும்பிப் பார்த்து வருத்தப்பட அவசியம் இல்லை. அதுவுமில்லாமல் நாம பேசிப் பழகவேயில்லை. பழசை‌ விட்ரலாம். உங்களுக்குக் கல்யாணம்னு கேள்விப்பட்டேன். சந்தோஷமா இருங்க. நான் வரேன்" என்று‌ கிளம்பப் போனவளைத் தடுத்தான் அவன்.

"நீ‌ எப்படி இருக்கன்னு சொல்லவே இல்லையே" என்று விடாப்பிடியாக வினவ, அதில் ஒரு பிடிவாதம்‌ இருந்தது.

"அதுதான் நல்லாயிருக்கேன்னு சொன்னேனே" என்றாள் அவளும்‌ பிடிவாதமாக.

"அது‌ வெறும் வாய் வார்த்தையா இல்லாம இருந்தா நல்லாருக்கும்."

"எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. இது எப்பவும் ஞாபகம் இருக்கட்டும். நல்லா இருக்கியான்னு கேட்டீங்க. அதுக்குப் பதிலும் சொன்னேன். ஆனால் இதுக்கு மேல நீங்க என்னோட அந்தரங்கத்தைத் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்க உங்க வழில போகலாம்" என்று நிதானமாகக் கூறிவிட்டு திரும்பி நடந்தாள்.

அவளின் இந்த பதிலை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. மனம்‌ சற்று கனத்துப் போனது. அவள் எங்கோ நன்றாக இருந்தால் போதும் என்று தோன்றியது. அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

ஏதோ தோன்ற மீண்டும் திரும்பியவன், "கொடி" என்று அழைத்தான்.

அவள் திரும்பிப்பார்க்க, "என்னைக்காவது ஏதாவது உதவி தேவைப்பட்டா தயங்காம எங்கிட்ட கேளு. மலருகிட்ட சொல்லி அனுப்பு. உதவி செய்றதுக்கு உன்னை நானோ, என்னை நீயோ தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்லை" என்று‌ அவன் கூற, அவள் இதழ்கள் மென்னகை‌ பூத்தது.

புழங்காக் காதல் பிரிவின் பரிவில் அறிதுயில் கொண்டுவிட்டது.

அவனின் திருமண நாளும் நெருங்கி வந்தது. திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் செழுமை மட்டுமே. அமரா நவரத்தினங்களால் ஒளிர்ந்தாள். கறிவிருந்து ஊர் முழுக்க மணத்தது. குறைந்தது ஊரில் ஒருவாரம் யாரும் வடித்திருக்கமாட்டர். அவ்வளவு தடபுடல்.

திருமணத்திற்கு முதல்நாள் கோகிலம் செழியனிடம் தனித்து உரையாடினார். பல நாட்களாகப் பேச வேண்டும் என்று நினைத்ததுதான். ஆனால் அவருக்கு மகனிடம் பேசும்‌ தைரியமில்லை.

"செழியா... அம்மா ஒண்ணு சொல்லுவேன் கேப்பியா?" என்றார்.

"நான் நல்லாயிருக்கணும்னு நினைக்கிற ஒரே ஆள் நீ மட்டும்தான் மா. தாராளமா சொல்லு. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்" என்றான்.

"கொடி உனக்குக் கிடைக்கலைங்கிறது பெரிய வருத்தம்தான். ஆனா அதை மனசுல வச்சுக்கிட்டு, அமராவ சங்கடப்படுத்திராதப்பா" கோகிலம்.

அவன் விரக்திச் சிரிப்பை உதிர்த்தபடி, அன்னையைப் பார்த்தான்.

"அம்மா.. நான் இதுக்கு பதில் சொல்லப்போறது‌ இல்லை. உனக்கு எந்த வாக்குறுதியும்‌ கொடுக்கப்போறதும் இல்லை. நான் உன்னோட வளர்ப்பு. அதனால உனக்கே தெரிஞ்சிருக்கணும். உன் மனசைக்‌ கேட்டுக்கோ உன் பையன் எப்படின்னு" என்று அவன் கூற, கோகிலத்தின் மனம் குளிர்ந்துவிட்டது.

இப்போது அவருக்கு முழுநம்பிக்கை பிறந்துவிட்டது. மகன் இனி நன்றாக வாழ்வான் என்று நினைத்தார்.

மறுநாள் கோலாகலமாகத் திருமணம் முடிந்தது. ஊரே திரண்டு வந்திருந்தது அரண்மனைக்கு. கொடியின் குடும்பத்தைத் தவிர. அனைவருக்கும் அழைப்பு இருந்தது. கொடியின் குடும்பமும் அதில் அடக்கம். ஆனால் ஒரு வித்தியாசம். அவர்கள் வராமல் இருக்கவே அவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து ஊரின் முன்னிலையில் அமராவைச் சரிபாதியாக ஏற்றுவிட்டான். இனி மனதிலும் ஏற்க வேண்டும். எப்படியும்
மாற்றம் நிகழும். இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

இரவு அறையில் அவளுக்காகக் காத்திருந்தான் செழியன். அவன் நினைத்ததைப் போல் அவள் இல்லை. அரண்மனையில் வளர்ந்த கூண்டுக்கிளியாக இருப்பாள் என்றுதான் எண்ணியிருந்தான். ஆனால் அவள் நடையில் ஒரு நிமிர்வு இருந்தது.

அறைக்குள் வந்தவள், கணவனிடம் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்கள் எல்லாம் செய்யவில்லை. இதுவரை அவளைப் பற்றி எதுவும் தெரியாதுதான். ஆனால் இந்தச் சில நிமிடங்களில் உணர்ந்து கொண்டான், அவள் மற்ற பெண்களிடம் இருந்து மாறுபட்டவள்‌ என்று. இந்த நிமிர்வை‌ சில தினங்களுக்கு முன் கொடியிடமும் கண்டிருந்தான். பெண்களுக்குப் பேச்சுரிமையே மறுக்கப்பட்டிருக்கும் காலத்தில், பார்வையில் உள்ள நிமிர்வு, அவர்களைச் சற்று தரம் பிரித்துக் காட்டியது செழியனுக்கு.

சிறிது நேர மௌனம். அவளே கலைத்தாள் அறையில் நிலவிய பேரமைதியை.

"யார் அந்தப் பெண்?" என்ற ஒற்றை வினா மூலம்.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 10

பொழில் பதினெட்டாம் நூற்றாண்டு.

பொழிந்த மழை!
மஞ்சள் வெயில்!
தோன்றிய வானவில்!
மண் வாசம்!
அலையாத் தென்றல்!
ஏகாந்தம் நான்!
பொழுது நீ!!!

பொன்னழகியிடம் கூறி, மங்கையைப் பார்க்க அவளை அழைத்துச் சென்றான் நளன். அவளும் ஏன் என்று வினவவில்லை.

காளையார்மங்களத்தில் அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
மங்கை மற்றும் அவளது கணவனுக்கு சகல அலங்காரங்களுடன், ஈமச்சடங்கு நிகழ அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. மங்கையின் தலையில் கீறல் செய்தனர். பின் அவள் கணவன் வேலன் தலையிலும் கீறல் செய்தனர். பிறந்த பிள்ளை இறந்தாலும், அதற்கு நெற்றியில் கீறல் செய்து அடக்கம் செய்வது தமிழர்களின் வழக்கம்.

மங்கையின் வயிற்றிலும் ஒரு கீறல் செய்யப்பட்டது. அனிச்சம் அழுது கொண்டே இருந்தாள். நளன் அங்கு நிகழ்பவைகளை ஆச்சரியம் பொங்கப் பார்த்தான். இது என்ன இவ்வளவு மரியாதை! என்று. அரச குடும்பத்தின் அங்கத்தினர் இறந்தால் எவ்வகை மரியாதைகள் வழங்கப்படுமோ, அவ்வகை மரியாதைகள். படைகள் அனைத்தும் அணிவகுத்து நின்று மலர்மாலை அணிவித்து மரியாதைகள்‌ செய்ய, அது ஒரு விழாவைப் போல் தோற்றமளித்தது. அனிச்சத்தின் மதியில் இவை எதுவும் பதியவில்லை. ஒருமுறை அவளுக்கு அருகில் செல்லும் அனுமதி வழங்கப்பட்டது. அவள் அருகில் சென்று மங்கையின் முகத்தை விழிகளில் நிரப்பிக் கொண்டாள். மங்கையின் வயிற்றைத் தடவிப் பார்த்தாள். வேலனையும் சென்று அருகில் பார்த்தாள்‌. தனக்கு இப்படி ஒரு அநியாயம் நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று லட்சம் முறை எண்ணிவிட்டது மனம். நளன்‌ அவளைக் கூட்டிச் சென்றான். மங்கையின் தலையில் இருந்த ஆணியை எடுத்தனர். பின் அவர்கள் இருவரையும் ஒரு பெருந்தாழியில் இட்டு புதைத்தனர். பொன்னும் பொருளும் கொட்டி பானையை நிரப்பி, பின் மண்ணைப் போட்டு மூடிவிட்டனர். அந்த இடத்தில் ஒரு நடுகல் ஒன்றை நட்டு வைத்தனர்.

ராணி வேலுநாச்சியார் அனிச்சத்தின் கதறலைக் கண்டு அருகில் அழைத்தார். நளன் அவளை அழைத்துச் சென்றான்.

"நேற்று சம்பவ இடத்தில் இவர்கள் இருவரும் இருந்திருக்கின்றனர். அவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்று அழுகிறாள் அந்தப் பெண்" என்று குயிலி கூற, அவளை அருகில் அழைத்து ஆதூரமாக தலைக் கோதினார்.

"கவலை வேண்டாம் பெண்ணே. என்னையும் இந்த மண்ணையும் காக்க, மங்கை உயிர் துறந்திருக்கிறாள். அவளுடைய கனவினை நிச்சயம் நிறைவேற்றுவேன். இப்பொழுதுதான் எனக்கு கடமைகளும் பொறுப்புகளும்‌ கூடுகிறது. மங்கை பேதையல்ல.‌ நாம் அழுது கரைய. வீரமங்கை அவள். அவள் மரணத்தை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டாள். அதற்குத் தக்க மரியாதை நாம் அளிக்க வேண்டும். வீரமுழக்கங்களும் விடுதலை செய்தியும் அவளின் ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்" என்று கம்பீரமாக உரைத்தாள். அவளுக்கும் அழுகை வந்தது. ஆனால்... அழுவது வீரச்செயலும் அல்ல. வீரனுக்கு அளிக்கும் உகந்த மரியாதையும் அல்ல.

அனிச்சத்தை அழைத்துக் கொண்டு நளன்‌ புறப்பட்டான். அவளுடன் தனித்து உரையாட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது அவன் மனதில். அவனுக்கும் அங்கு நிகழ்பவை பிடிபடவில்லைதான். ஆனாலும் இங்கு பின்னிப் பிணைந்திருக்கும் உறவுகளின் உன்னதங்களை ஓரளவு மூளையை‌ ஏற்க வைத்துவிட்டான்.

முந்தய தினம் அவர்கள் இருவரும் நின்றிருந்த மரத்திற்கு அருகில் அழைத்துச்‌ சென்றான் நளன். ஏனோ அந்த இடமும் மரமும் அவனுக்கு நிரம்பவே பிடித்தது. காரணம் பிடிபடவில்லை.

"அனி... நீ இப்படி இருக்குறதால எதுவும் நடக்கப் போறது இல்லை" என்று அவளை மீட்க முற்பட்டான்.

"இனி வேற என்ன நடக்கணும்?. இங்க இருக்கவுங்க எல்லாம் மனிஷங்கதானா? எனக்கு சந்தேகமா இருக்கு" என்று தன் திருப்தியின்மையைக் கொட்டினாள் அனிச்சம்.

"அனி.. இவ்வளவு உணர்ச்சி வசப்படும் அளவுக்கு ஒண்ணும்‌ நடக்கல. இங்க உள்ளவங்களோட வாழ்க்கைமுறை வேறு. நாம உயிர்வளி செயற்கையா சுவாசிச்சு வாழறோம்னு சொன்னாலே இங்க உள்ள யாருக்கும் புரியாது" என்றான் அவளுக்கு புரிய வைத்திடும்‌ நோக்கோடு.

"அதுதான் என்னோட ஆதங்கமே நளன். நம்ம உலகத்தில் எதுவுமே இல்லை. ஆனா வாழ்க்கை நெறிமுறை இருக்கு. இங்க எல்லாமே இருக்கு. ஆனா நெறிமுறைகள் ‌இல்லை" என்று அவள் கூற, அவன் மெல்லிய நகையொன்றை உதிர்த்தான்.

"அனி... நீயா‌ இப்படி சொல்ற. நாம இந்த அண்டத்துக்கு விருந்தாளிகள். அவ்வளவு தான். இங்க வாழும் மனிதர்களைப் பற்றி விமர்சிக்க நமக்கு உரிமையிருக்குன்னு நினைக்கிறியா?"

"இருக்கு. நல்லாவே இருக்கு. கொல்லப்பட்டது என்னோட அம்மாவாச்சே!" என்றாள்‌ அவள்.

"ஒவ்வொரு உலகத்துக்கும் ஒரு நியதி இருக்கு. பிறப்பிலிருந்து நீ பின்பற்றிய ஒரு விஷயம் உனக்கு சரின்னு தோணும். எடுத்துக்காட்டா ஒரு விஷயம் சொல்றேன். நம்ம உலகத்தைப் பொறுத்தவரை ஆண் பெண் பேதம் இல்லை. ஒரு விஷயத்தை தவிர. குழந்தை பெற்றுக் கொள்வது. அது பெண்ணின் உடலமைப்பு அப்படி இருக்குங்கிற ஒரே காரணத்துக்காக நீ அதை ஏத்துக்குறதா நினைக்கிறியா? சின்ன வயசுலேந்து அது உனக்கு பழக்கப்பட்ட ஒரு விஷயம். வேற ஒரு உலகம் போறோம். அங்க ஆண்கள் குழந்தை பெத்துக்க முடியும்ங்கிற தொழில்நுட்பம்‌ இருந்தா உனக்கு என்ன தோணும்?. அது தப்புன்னு தோணாது. அதே மாதிரிதான்" என்று அவன் விளக்க, குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள் அனிச்சம்.

"அனி... மங்கையம்மாவுக்கு நடந்தது பெருங்கொடுமை. ஆனா அவுங்களோட இந்த தியாகத்துக்குப் பின்னாடி ஒரு இனம் வாழப்போகுதுன்னா உன்னால நம்ப முடியுதா?" என்றான் கேள்வியாக.

"இனம் என்ன பெரிய இனம்?. உலகத்தில் ஒரே இனம்தான் இருக்கு. அது மனித இனம்" என்றாள்‌ அவள் சற்றே சீற்றத்துடன்.

"ம்ம்ம்... நம்ம உலகத்தில் மனிதனைத்‌ தவிர வேறு உயிரோ இனமோ‌ இல்லாம இருக்கலாம். ஆனா இங்கேயும் அப்படியா? இங்க மரம்னு ஒரு இனம் இருக்கு. குதிரைன்னு ஒரு இனம் இருக்கு. நாய், பூனை இப்படி ஏகப்பட்ட இனங்கள். அதனால் மனிதனுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கு. நம்ம உலகத்தில் நம்ம வாழ்க்கை எதுக்காக வாழ்றோம். பாதி வாழ்க்கை ‌அடுத்த சந்ததி நம்மைவிட நல்லா வாழணும்னு வாழ்நாள் முழுக்க நாம செலவு செய்றோம். நம்மோட முன்னேற்றப்பாதைகள் முழுக்க முழுக்க அதை‌ நோக்கியே இருக்கும். யாரும் உயர்வு, தாழ்வு கிடையாது. ஆதிபகவன் தான் கடவுள். மக்கள் தொகை என்று சொல்லிக் கொள்ளும் அளவு தொகையே இல்லை. நாம வாழ்நாள் முழுக்க அடுத்த சந்ததிக்கு வாழறோம். இங்க அடுத்த சந்ததி வாழணும்ங்கிறதுக்காக உயிர் கொடுக்குறாங்க. பொன்னி அக்கா பேச்சுலேர்ந்து இதுதான் புரிஞ்சது எனக்கு. கொஞ்சம் மனசை சாந்தப்படுத்திக்கோ. இந்த அண்டத்தில் உன்னோட பிறப்பு நிராகரிக்கப்படணுங்கிறது விதி. அதை எப்படி உன்னால மாத்த முடியும். நம்ம ஆதிபகவனைவிட அந்த ராணிக்கு எவ்வளவு மரியாதை பார்த்தியா? நமக்கு ஆதிபகவனை நினைச்சா பயம் மட்டும்தான் இருக்கும். ஏன்னா அது இயந்திரம். ஆனா இந்த ராணி உயிரும் உணர்வும் உள்ளவங்க. தன்னோட இனத்தைப் பாதுகாக்க போராடுறாங்க. பொன்னி அக்கா, ராணின்னு சொல்லும் போதே, அதில் உள்ள மரியாதையும் அன்பும் வெளிப்படுது. இது ரொம்ப சாதாரணமா கிடைக்காது. மக்களோட மனசை சம்பாதிக்க, ராணி பல சோதனைகள் கடந்து வந்திருக்கணும்" என்று நீண்ட விளக்கவுரை வைத்தான்.

அவனால் முடிந்த அளவு விளக்கிவிட்டான். அவள் முகத்தில் சிறிது ‌தெளிவு பிறந்தது போல் இருந்தது.‌

சிறிது நேரம் அமைதியாகவே இருந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த மரத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள்.

"ஆனாலும் எங்க அம்மாவையும் அப்பாவையும் இப்படி ஒரு நிலையில் பார்த்திருக்க வேண்டாம்" என்றாள். அவளால் ஏற்கமுடியாது என்று விதவிதமான முறையில் விளக்கினாள்.

இது மனித மனம். நம் மனதிற்கு ஒரு விஷயத்தில் ஒப்புமை இல்லையென்றால், விதவிதமாய் பல காரணங்களைக் கடைபரப்பிவிடும். அதற்குப் பின் பல தாத்பரியங்கள் உருவாகிவிடும். நிலையில்லா மனதின் நிலைப்பாடு இதுவே.

"நீ சொன்ன‌ காதல் அவங்ககிட்ட இருக்கு" என்றான் அவன்.

"எந்தக் காதல்?" என்றாள் புரியாமல்.

"பனிமலைத் தீவில் எங்கிட்ட காதல்னா என்னன்னு கேட்டியே. அதுக்குச் சரியான பதில் இங்க கிடைச்சிருக்கு."

"மலையளவு காதல் இருந்தா, எப்படி தலையில் ஆணியடித்துக் கொல்ல முடியும்‌?."

"கொன்னுட்டு அவர் மட்டும் வாழ்ந்துட்டா இருக்கார்."

"இல்லைதான். ஆனாலும் அவர் கையால் கொல்லப்படணும்னு என்ன அவசியம்?."

"உங்க அம்மாவோட கடைசி‌ ஆசை" என்று அவன் கூற, அவனை ஆச்சரியம் பொங்கப் பார்த்தாள் அனிச்சம்.

"சில ஆசைகள் புறக்கணிக்கப்படுவதிலும் காதல் இருக்கு" என்று விதண்டாவாதம் செய்தாள் அவள்.

"அவங்களோட இந்த ஆசையை ஏன் நிறைவேத்தி வைக்கணும்னு உங்க அப்பா நினைச்சார்னு அவருக்கு மட்டும்தான் தெரியும்."

அவளால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. எப்படி? எப்படி? என்று மூளை குடைந்துவிட்டது.

"அதெப்படி.. எனக்கு விளங்காம இருக்க விஷயம் எல்லாம் உனக்கு மட்டும் விளங்குது?" என்று சிறு கேலி இழையோடிட.

"அந்த விஷயம் உன்னைச் சுத்தி நடக்குறதா நீ நினைக்கிற. அப்படிதான் நீ அணுகற.. நான் வட்டத்துக்கு வெளியில் இருந்து இந்த விஷயத்தைப் பார்க்கிறேன். இரண்டுக்கும் வேறு வேறு கோணம் இருக்கு" என்றான் தெளிவாக.

அவனது தெளிவும் உறுதியும் அனிச்சத்தை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ஏனெனில் அவன் அவள் கூறிய கதைகளைக் கட்டுக்கதைகள் என்று தட்டியிருக்கிறானே. இப்பொழுது எங்கிருந்து இவ்வளவு புரிதல் வந்தது.

"அனி..‌ நான் ஒண்ணு சொல்லவா?"

"சொல்லு..."

"உன்னோட கற்பனை உலகம் இது. இங்க வாழ முயற்சி செய். நாம ஏன் இங்க வந்தோம்?. எப்படி வந்தோம்?. இன்னும் எத்தனை நாள் இருக்கப் போறோம்னு தெரியாது. அதனால எந்த ஆராய்ச்சியும் இல்லாம வாழலாமே. நான் சொல்றது கொஞ்சம் சிரமம்தான்.. இல்லைன்னு சொல்லல. ஆனா முயற்சி செய்யலாம். ஏனா இந்த உலக வாழ்க்கையை மதிப்பீடு செய்யவோ, விமர்சிக்கவோ நமக்கு உரிமையில்லை. அதுக்கான தகுதியும் இல்லை. ஏன்னா நாம வேற உகலத்தில் வேறு கோட்பாடுகளோடு பிறந்திருக்கோம். நடக்கறதை ஏத்துக்க முடியலைன்னா கூடப் பரவாயில்லை. புரிஞ்சுக்க முயற்சி செய்யலாம்" என்று அவனின் புரிதலை அவளுக்குக் கடத்த முனைந்தான்

இப்பொழுது ஓரளவு அவளுக்கு புரிந்தது. ஒன்றை மனதில் பதிய வைத்தாள். இந்த அண்டம் அனைத்திற்கும் ஒரு காரணம் வைத்திருக்கும். அந்த உலகில் அவள் பிறப்பதற்கு ஒரு காரணம் இருந்தால், இந்த உலகில் இவள் பிறப்பு நிராகரிக்கப்படவும் ஒரு காரணம் இருக்கிறது. உலகம் பிறக்கவும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அது நம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட விஷயம். பால்வெளியில் பல நட்சத்திரக் கூட்டங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இப்படித்தான் சுழல வேண்டும் என்று யாரேனும் சொல்லிக் கொடுத்தார்களா என்ன? அச்சுப் பிறழாமல், கணம் தப்பாமல் தன் வேலையை கோடானுகோடி வருடங்கள் ஆற்றிவிட்டு மடிந்துவிடுகிறது.

வெட்டவெளியில் படுத்திருந்தான் நளன். அவன் நெஞ்சின் மீது அனிச்சம் படுத்திருந்தாள். இருவரும் பல்வேறு சிந்தனைகளில் உழன்றிருந்தனர்.

அண்டத்தின் நியதி நமக்குள் அடங்காது. அதை உணர்ந்து கொள்ள முயற்சித்தாலும் முடியாது‌. பல வர்ணக் கலவைகளைக் குழைத்து தீட்டிய ஓவியத்துள் தன்னை அகழ்ந்தெடுத்தது இருள். கண்ணாடி வில்லையாய் உப்பிய பெருவயிற்றுடன் இருள். ஆங்காங்கே ஒளிமுடிச்சுகளாய் நட்சத்திர தொகுப்புகள் சுருள் சுருளாய் சுழன்று கொண்டிருந்தது. நட்சத்திரக் கூட்டங்களில் ஒழுகிய ஒளியை விள்ளல்களாக விழுங்கிக்கொண்டிருந்து இருள். அதைச் சுற்றிலும் பேரமைதி இசைந்து கொண்டிருந்தது. பகலும் இல்லை. இரவுமில்லை. பொழுதுகளும் இல்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் தொகுத்திருந்த இருளும், அதில் பகுத்திருந்த சிறு ஒளியும் மட்டுமே. காலம் அறியாமல், தேவை தெரியாமல், வரையறை வகுக்காமல், வரைமுறை இல்லாமல், சில சமயம் சுருளாக, சில சமயம் நீள்வட்டமாக இசைந்து இசைந்து களைத்துப் போனது. களைப்புகள் தீரவும், சலிப்புகள் களையவும், களிப்புகள் பிறக்கவும் பிண்டங்கள் பல பிடித்து வைத்தது பேரண்டம். உருண்டைகளாய் சுழன்ற பிண்டங்களில் உயிரோட்டம் தேடிக் களைத்த அண்டம், ஒற்றைப் பிண்டத்திற்குப் பண்டமாய் உயிரூட்ட பச்சை வர்ணம் தோன்றியது. அட இது சுவாரஸ்யமாக இருக்கிறதே என்று உயிருக்குள் கொஞ்சம் உணர்வமிழ்தம் ஊற்ற, பல படிநிலைகள் தாண்டி அவதரித்தான் மனிதன்.

இந்நிகழ்வை அண்டத்தின் சிறு தொகுப்புகளாய் சுழலும் சுருள் பால்வெளிகளும், நீள்வட்ட பால்வெளிகளும் பெருமூச்சிரைந்து பொறாமை‌ கொண்டனவாம்.

அதை உளவு பார்த்த மனிதனின் கூற்று இது. விசித்திரத்தில் விசித்திரம் இது‌!.

இரவு வழிந்து கொண்டிருந்தது. நிலவு ஒழுகிக் கொண்டிருந்தது. அனிச்சத்தின் கனவு உலகில் அவள் வசிக்கும் முதலாம் இரவு. எப்படி எப்படியோ‌ ஏகாந்தமாய் கழிந்திருக்க வேண்டியது, எப்படியோ கழிந்தது.

நளன் அவளை இருப்பிடம் அழைத்துச் சென்றான். பொன்னழகி இவர்கள் இருவரையும் பார்த்து பதறிவிட்டாள்.

"எங்கு சென்றிருந்தீர்கள் இருவரும்?. உங்களை ஆபத்துகள் சூழ்ந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்" என்று பதறினாள்.

அந்தப் பதற்றம் அவர்களுக்குப் புதிது. அதுவும் ஒரு மூன்றாம் நபரிடமிருந்து.

"எங்களுக்கு என்ன ஆபத்து வரப்போகுது?" நளன்.

"நாளைய பொழுதென்றால் இந்த வினாவை எழுப்பியிருக்க மாட்டேன். பதற்றம் கொண்டிருக்கவும் மாட்டேன். ஆனால் இன்றைய பொழுது ஆங்கிலேயனிடம் அல்லவா இருக்கிறது."

"அது நாளைக்கு எப்படி மாறும்?" அனிச்சம்.

"நிச்சயம் மாறிவிடும். நாளை ராணி கோட்டையைக் கைப்பற்றி விடுவார். எங்களுக்கு விடுதலை‌ கிடைத்துவிடும்" என்றாள் உறுதியுடன்.

அதில் கர்வம் தொனித்தது. வீரம் வழிந்தது. இந்த உணர்வெல்லாம் காணவே விசித்திரமாய் இருந்தது அவர்கள் இருவருக்கும்.

"நீங்கள் இருவரும் ‌ஓய்வெடுங்கள். நான் சிவகங்கை கோட்டைக்குப் புறப்படுகிறேன்" என்றாள் அறிவிப்பாக.

"இப்போ அங்க எதுக்கு?" நளன்.

"நாளை என் ராணியின் வெற்றியைக் கொண்டாட‌ வேண்டாமா? அதற்கு நான் கோட்டைக்குள் இருக்க வேண்டும்" என்றாள் அவள்.

"நாங்களும் உங்க கூட வரோம்" என்று ஒன்று போல் கூறினர் இருவரும்.

"தம்பி, கோட்டைக்குள் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. அந்தக் கொடுங்கோல் ஆங்கிலத் தளபதியின் கட்டளை. அதனால் உன்னை எப்படி அழைத்துச் செல்வேன்?" என்றாள் யோசனையாக.

"அக்கா.. நாங்க ரொம்ப தூரத்தில் இருந்து வரோம். வேறு தீவு. எங்க ஊர்ல இந்த விழாவெல்லாம் பார்த்தது கிடையாது. ஏதாவது செய்யுங்களேன்" என்று நளன்‌ கெஞ்ச, பொன்னி யோசிக்க ஆரம்பித்தாள்.

அவர்களின் கொச்சைத் தமிழ் ஏன் என்று பொன்னியே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டார். வெகு தொலைவில் இருக்கும் தீவிலிருந்து வந்திருப்பதால் கொச்சைத் தமிழ்‌ பேசுகின்றனர் என்று.

நளன் எப்படியாவது உள்ளே சென்று என்ன நிகழ்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தான். அனிச்சமும் அதே எண்ணத்தில்தான் இருந்தாள். அவளின் அன்னை இறந்ததற்குப்பின் இருக்கும் காரணங்களில் உள்ள நியாயம் அவளுக்குப் புரியவில்லை. ஒருவேளை அங்கு சென்றால் ஏதேனும் புலப்படுமோ என்று‌ எண்ணினாள்.

"சரி.. உங்கள் இருவரையும் அழைத்துச் செல்கிறேன்" என்று கூறியவர், இருவருக்கும் அவளைப்‌போல் அலங்காரம் செய்தாள். நளனுக்கும் புடவை ஒன்றை உடுத்தி, சௌரி முடி வைத்து பின்னல் பின்னி, பொட்டிட்டு, பூச்சூடி ஒரு பெண் போலவே அலங்காரம் செய்துவிட்டாள். மிகவும் கூர்ந்து கவனித்தாலொழிய, அடையாளம் காணமுடியாத அளவு ஒப்பனை.

அவர்கள் இருவருக்கும் அது புதிய அனுபவமாக இருந்தது. அனிச்சத்தை‌ இந்த அலங்காரத்தில் காணவே நளனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது.

காளையார்மங்களத்திலிருந்து படைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கி புறப்பட்டது. ஆனால் வெள்ளைத் தளபதி பாஞ்சோர் திமிராய் இருந்தான். காளையார்மங்களம் கைவிட்டு சென்றிருந்தாலும், தனது படையை வேலுநாச்சி‌ அழித்திருந்தாலும், இங்கு அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தான். இந்த சிறுபடை கோட்டைக்குள் எப்படி பிரவேசிக்க முடியும் என்ற திண்ணக்கம். அப்படியே உள் நுழைந்தாலும், தோட்டாக்களுக்குப் பலியாகப் போகின்றனர். அவன்தான் அடிக்கொரு துப்பாக்கி வீரனை நிறுத்தியிருந்தானே. எழுச்சியை உருவாக்கும் நாச்சியாரை வதைக்க, அவளின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலை ஏற்பாடு செய்திருந்தான். காலைச் சுற்றியிருக்கும் நச்சுப்பாம்பாய் இருந்தவனை குயிலி வேல் சொருகிக் கொன்றுவிட்டாள். அடுத்தடுத்து நடந்த முயற்சிகளும் வீண். ஒன்றும் பலிக்கவில்லை. குயிலி பலிக்கவிடவில்லை. அதனால் இதை ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கருதினான். அவனுடைய மாபெரும் தவறு வேலுநாச்சியாரைக் குறைத்து மதிப்பீடு செய்ததுதான்.

குயிலி மற்றும் அவளது படையினர் கோட்டைக்குள் பிரவேசிக்க மாறுவேடங்களில் தயார் நிலையில் இருந்தனர். பழங்கள், பூக்கள் மற்றும் தின்பண்டங்கள் என கூடை கூடையாக இருந்தது. அதில் கவண் கற்களும் மறைத்து வைத்தனர். அவைகளுக்கு இடையில் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருந்தன.

வெள்ளைமதி வெள்ளியை உருக்கி ஊற்றிக் கொண்டிருந்தாள். கோட்டை ஒரே கோலாகலமாக இருந்தது. நேர்த்தியான இடைவெளிவிட்டு ஏற்றிய தீபங்களாலும் தீப்பந்தங்களாலும் பிரகாசித்தது. ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை நிகழ்ந்ததன் அடையாளமாகக் கோவில் மணி ஓசை எழுப்பியது. வேலுநாச்சியார் மாறுவேடத்தில் உள்ளே நுழைந்தாள்.

கோட்டையின் உள்ளே இருந்த ராஜேஸ்வரி அம்மன் கோவில் கோலாகலமாக இருந்தது. கலைஞர்கள் கூத்துக் கட்டியிருந்தனர். ராவண வதை நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தது. ஆயுதங்களின் ஆதாரமாய்த் திகழும் கோட்டை அணங்குகளின் அணிவகுப்பால் உயிர்‌ப்பெற்றது.

நிலாவுடன் போட்டிப்போட்டு ஒளிரும் விளக்குகள், வாசம் வீசும் மலர்கள், ஒலிக்கும் இசைவாத்தியங்கள், பொய்க்கால் குதிரை, கரகம், பரதம் என மிளிர்ந்த கோட்டையைக் கண்ட வேலுநாச்சியாரின் மனதில் வேதனை மண்டிக் கிடந்தது. தன் கணவனின் நினைவுகள் ‌அலையலையாய் வந்துபோனது. ஆங்கிலேயர்களுக்கு எதிராய் எழுச்சி‌ நாடகம் போட, தடை விதிக்கப்பட்டிருந்தது.

பெண்கள் விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு கோட்டைக்குள்‌ வந்தனர். நளன், பொன்னழகி மற்றும் அனிச்சம் மூவரும் கோட்டைக்குள் பிரவேசித்தனர்.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அத்தியாயம் - 11

புடவி

பொன்‌ மாலை!
கொன்றை நிறம்!
தீர்த்தக் கரை!
ஆம்பல் மலர்!
மென் காற்று!
நறும் பொழுது!
படித்துறை நீர்!
கால் நனைக்க நீ!
சிலிர்க்க நான்!!!


அமரா, யார் அந்தப் பெண் என்று வினவ, செழியன் திடுக்கிட்டான்.
அவளிடம் இருந்து இப்படி ஒரு வினாவை அவன் எதிர்பார்க்கவில்லை.

"கொடி" என்றான் ஒற்றை வார்த்தையில். அவளிடம் மறைக்க வேண்டும் என்று அவன் எண்ணவுமில்லை. இனி மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றுதான் தோன்றியது.

எப்படியும் நாளைக்கு அரசல் புரசலாக அவள் காதில் விழப்போகும் சங்கதிதான். அதனால் அவனே விளக்கம் கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டான்.

அவளை அரசியின் அறைக்கு அழைத்துச் சென்றான். அமராவுக்குக் குழப்பம் மட்டுமே மிஞ்சியது. அவன் நிச்சயம் வேறு பெண்ணைக் காதலித்திருக்கிறான் என்று அனுமானிக்க முடிந்த அவளால், அவனுடைய நேரடியான பதிலை ஏற்க முடியவில்லை. கொஞ்சம் திணறித்தான் போனாள். அதை‌ அவனும் நன்றாகவே உணர்ந்து கொண்டான். அவளின் திடுக்கிடல் கண்டே அவன்‌ அரசியின் அறைக்கு அழைத்துச் சென்றது. அவனுடைய கதையை‌ அவள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அரசியை முழுமையாகப் படிக்க வேண்டும். அவனுடைய கதையை மட்டும் கூறினால், நம்பும்படியாக இருக்க வேண்டும். முதலில் அவன்‌ கதை என்று எதைக் கூறுவான். கொடியை இழந்த பொழுது மனதின் ஓரம்‌ வலிக்கத்தான் செய்தது. ஆனால் இப்பொழுது அந்த வலியைவிட, அவளைப்‌ பற்றிய அக்கறையே அதிகம் இருந்தது. அவளின் இந்த‌ அவசர வாழ்விற்கு அவன்தான் காரணம் என்று‌ கருதினான்.

அரசியின் அறையில் இருவரும் நின்றிருந்தனர். இவ்வளவு நேரம் இருந்த தெளிவும் தைரியமும் அமராவிடம் இப்பொழுது இல்லை. அவன் பொய்யாய் மறுத்திருந்தால் கூட, அதில் நிம்மதி விரவியிருக்குமோ? இந்த மனம் வேறு என்னதான் எதிர்பார்க்கிறது?.

"அமரா, இவ்ளோ நேரம்‌ இருந்த தைரியம் இப்போ எங்க?" என்றான் செழியன்.

"தெரியல.." என்றாள் அவள் குழப்பத்தை முகத்தில் தேக்கி.

"நீ உன்னோட வாழ்க்கையை நினைச்சு பயப்படுறியா? நான் உன்னைப் புறக்கணிப்பேன். இல்லை கொடுமைப்படுத்துவேன். இப்படி ஏதாவது பயம் இருக்கா?" என்றான் செழியன்.

"இல்லை. ஆனா உங்களோட இந்த பதிலை ஏத்துக்க முடியலை. கொஞ்சம் வலிக்கிது" என்றாள் நேரிடையாக.

"இன்னைக்கு ஒருநாள் வலிக்கட்டும். எல்லாத்தையும்‌ கேட்டுடு" என்று கூறி, அரசியின்‌ கதையில் ஆரம்பித்து, கொடியின் திருமணம் வரை கூறி முடித்தான்.

அமரா‌வின் மனம் என்ன நினைக்கிறது என்று அவளுக்கே விளங்கவில்லை. கொடிக்காக இரங்கல் தெரிவிக்கும் நிலையில் மட்டுமே இருக்கும்பொழுது வேறு என்ன செய்ய முடியும்?. அதிகார வர்க்கத்தின்‌ அபூர்வ இடர்கள் இவை. அவனின் அணுகலும் பிடித்திருந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்களில் சற்றே வித்தியாசமானவன் இவன். அதிகாரத்தின் மறுவுருவங்கள் அவர்கள் என்ற பிம்பம் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தது.

"கொடியைப் பார்த்தீங்களா? அவங்க கல்யாணம் முடிஞ்சோடனே?" அமரா.

"பார்த்தேன்.."

"எப்படி இருக்காங்க?" என்றாள் ஆர்வமாக.

"தெரியல." அவனின் இந்தப் பதிலில் சற்றே ஏமாற்றம் அடைந்தாள்.

"தெரியலையா? நீங்க கேக்கலையா அவங்களை?"

"கேட்டேன். ஆனா பதில் தெரிஞ்சுக்கிற அளவு எனக்கு உரிமையில்லைன்னு சொல்லிட்டா. அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியல" என்று அவன் கூற, கொடி அவளின் மனதில் உயர்ந்து நின்றாள்.

அவள் நிதர்சனம் புரிந்து கொண்டாள் என்ற நிம்மதியா? தன் கணவனின் மேல் இனி தனக்கு மட்டுமே உரிமை என்ற எண்ணமா என்றெல்லாம் தெரியவில்லை. அமராவின் மனமும் அமைதியடைந்தது.

"நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடிச்சுட்டேன். நீ ஏதாவது சொல்லணுமா?"

"எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்."

"பரிதாபமா?"

"பரிதாபம் இருந்தா இப்போ ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொல்லிருப்பேன். நான் பிடிக்கும்னு சொன்னேன்."

செழியன் பதிலேதும் கூறவில்லை.

"கொடி நல்ல பொண்ணு.." என்றாள் யோசனையுடன்.

"நீ கூட நல்ல பொண்ணுதான்."

"எப்படிச் சொல்றீங்க?.."

"இன்னொரு பெண்ணை, அதுவும் கணவன் விரும்பிய ஒருத்தியை நல்லவன்னு சொல்ல நிச்சயம் நல்ல மனசு வேணும்."

"அதுதான் விரும்பியன்னு கடந்த காலத்தில் சொல்லிட்டீங்களே. கடந்து போனதைப் பிடிச்சுத் தொங்குறதால பெருசா ஒரு சாதகமும் வராது."

"புத்திசாலிதான் நீ."

"உங்க மனசை இவ்வளவு பக்குவப்படுத்தியதுக்கு என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"இது மாறவேண்டிய விஷயம். மாற்றம் கீழேயிருந்து வரப்போறதில்லை‌. மேலிருந்து மாற்றம் வரணும்னா நான் உயிரோட இருக்கணும். எனக்குப் பிறகு வரும் தலைமுறையில் இனக்கொடுமைகள் நடக்கக்கூடாதுன்னா நான் வாழ்ந்தாகணும்."

"தொலைநோக்குப் பார்வை. இது உங்க அப்பாவைப் பழிவாங்க ஒரு வழின்னும் சொல்லலாம். அவர் உயிரோட இருக்கவரைதான் அதிகாரம் செய்ய முடியும். அவர் போன அப்புறம், அவர் செய்யக்கூடாதுன்னு சொன்னதைச் செஞ்சு, அவரைப் பழி வாங்கிடலாம். இது ஒரு உத்தி" என்றாள் அவள்‌ தைரியமாக.

"இது சுயநலம்னு சொல்றியா?"

"பின்னே இதில் பொதுநலம் இருக்கா?"

அவன் பதிலேதும் கூறவில்லை. அவள் ஒரு புரியாத புதிராக இருந்தாள்.

"இது மட்டும்தான் மாத்த வேண்டிய விஷயமா? இந்த விஷயத்தில் நீங்க பாதிக்கப்பட்டதால மாத்த முயற்சி செய்றீங்க. இன்னும் வேற நிறைய விஷயம் இருக்கு. இப்போ உங்களுக்கும் கொடிக்கும் நடந்தது அநியாயம்தான். ஆனா அதுல வாழறதுக்கான வழி இருக்கு. அதை நீங்க ரெண்டு பேரும் தேடிட்டீங்க. அது கூட இல்லாம இன்னும் சில விஷயங்கள் ஊரில் நடக்குது. அதெல்லாம் உங்க கண்ணுல படலையே. அப்போ நீங்க சுயநலமா யோசிக்கறீங்கன்னு சொன்னதுல தப்பில்லைன்னு எனக்குத் தோணுது‌."

அவளின் கூற்றில் உண்மை இருக்குமோ? என்று சிந்திக்கத் தொடங்கினான் செழியன்.

இருவருமே விடியலை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். சிறு புரிதலும் வந்திருந்தது.

அருங்காலை‌ அழகாய்ப் புணர, அமரா புத்தம் புது மலராய் வலம் வந்தாள்.
கோகிலத்தின் மனதில் பயம் இல்லாமல் இல்லை. இரவு முழுக்க அவரும் உறங்கவில்லை. தன் மகனின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்ற பரிதவிப்பு.

அமராவைப் பார்த்ததும் சிறிது நிம்மதி பிறந்தது. அமரா கோகிலத்துடன் நன்றாகவே பழகினாள். அதற்கு அரசியின் கதையும் ஒரு காரணம். பூஜையறை அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொன்னார். அவள் ஏற்றிவிட்டு வெளியே வரும்பொழுது அவர் விழிகள் குளம் கட்டியிருந்தது.

"என் வீட்டைவிட்டு‌ போன மகாலட்சுமி திரும்ப வந்த மாதிரி இருக்குமா. நீ என்னைக்கும் நல்லாயிருக்கணும்" என்றார் உணர்ச்சி மிகுதியில். அவர் விழிகளில் வழிந்த உவர்நீர் அரசியை இழந்த துக்கத்தினாலா இல்லை இனி மகனின் வாழ்வு நன்றாக இருக்கும் என்ற‌ எண்ணம் வந்ததாலா என்று தெரியவில்லை. ஒரு கலவையான உணர்வு அவரை ஆட்கொண்டது.

"அரசியோட ஞாபகம் வந்துருச்சா?" என்றாள் அமரா. மிகச் சாதாரணமாய், கோகிலத்துடன் வெகுநாள் பழகியது போல்.

கோகிலத்தின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. இது எப்படி இவளுக்குத் தெரியும்? என்று.

"அத்தை... ரொம்ப யோசிக்க வேண்டாம். அரசி பத்தி உங்க புள்ளதான் சொன்னாரு" என்றாள் அறிவிப்பாக.

இதைக் கேட்டதும் நம்ப முடியாமல் பார்த்தார் கோகிலம். தன் மகனிடம் அதற்குள் இவ்வளவு மாற்றமா? என்று.

"அரசிய பத்தி மட்டும் இல்ல. கொடியைப் பத்தி. உங்களைப் பத்தி. எல்லாம் எனக்குச் சொல்லிட்டாரு. உங்க புள்ளையோட வாழ்க்கையை நினைச்சு பயமா? அதான் அழறீங்களா?" அமரா.

"இல்ல.. இப்போ சுத்தமா இல்ல.. ஆனா என்னால நம்ப முடியல" என்றார் கோகிலம்.

"ஓ.. இன்னும் நம்பிக்கை வரல... சரி... இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க புள்ளை வந்து அமரான்னு கூப்பிடுவாரு. அப்போ நம்புவீங்களா?" என்றாள் குறும்புடன்.‌

அவள் கூறியது போல் சற்று நேரத்தில் கூடத்திற்கு வந்த செழியன், கைகளைத் தூக்கி நெட்டி முறித்தான். அமராவுடன் உரையாடியதில் மனம் தெளிவு பெற்றிருந்தது. மனக்கிடங்குகளை இறக்கி வைத்ததால் கூட, இந்தத் தெளிவு பிறந்திருக்கலாம்.

தேவர் பிள்ளை தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.
தந்தையை ஏளனமாய்ப் பார்த்துவிட்டு, "அமரா..." என்று அழைத்தான். அவள் தேநீர் எடுத்து வந்தாள்.

"அமரா... நாம இன்னைக்கு வெளில போகணும். தயாரா இரு" என்று சற்று உரக்கக் கூறினான். அவள் சரியென்று கூறிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

"துரை எங்க போறீக?" என்றார் தேவர் பிள்ளை.

"காரியம்‌ செய்ய" என்றான் நக்கலுடன்.

"யாருக்கு?" என்றார் அவரும் நக்கலுடன்.

"உங்களுக்கு...." என்று சிறிது இடைவெளி விட்டவன், "செய்யணும்னு ஆசைதான். நிச்சயம் ஒருநாள் செய்வேன்" என்று சீற்றத்துடன் கூறிவிட்டுச் சென்றான்.

நான் சொன்னது நடந்துவிட்டதா என்று கோகிலத்தைப் பார்த்து சாடையுரைத்தாள் அமரா. அதற்குச் சிரித்த கோகிலம், "அதுக்குள்ள முடிஞ்சுட்டியா?" என்றார் கேலியுடன்.

"இல்ல... இல்ல... ஆனா சீக்கிரம் முடிஞ்சிருவேன். அப்புறம் உங்களுக்குத் தான் கஷ்டம்" என்றாள் அவளும் கேலியுடன்.

"அப்படியெல்லாம் என் புள்ளய விடமாட்டேன்" என்றார் அவரும் கேலியுடன்.

"அப்படியா? எனக்காக நீங்க உங்க புள்ளைகிட்ட பேசுனீங்களாமே? அப்போ அது பொய்யா?" அமரா.

"என் வீட்டோட நிம்மதியை திருப்பிக் கொடுக்க, நான் கும்பிடுற சாமிதான் உன்னை இங்க அனுப்பி வெச்சுருக்கு" என்று திருஷ்டி கழித்தார் அவளுக்கு.

ஏனோ இழந்த அரசியை மீட்டெடுத்தது போல் ஒரு உணர்வு அவருக்கு. அரசியும் கோகிலமும் இப்படித்தான். எப்பொழுதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். பொழுது போவதே தெரியாது. அவள் சென்றபின் தனிமையை எவ்வளவு உணர முடியுமோ அவ்வளவு உணர்ந்தார் கோகிலம்.

கோவிலுக்குக் கிளம்பி சென்றனர் செழியனும் அமராவும். கோவிலில் முதல் மரியாதை செழியனுக்கு அளிக்கப்பட்டது. ஏனோ அதில் அவனால் பெருமை கொள்ள இயலவில்லை.

இந்த மரியாதை அவனுக்காகக் கிடைக்கவில்லை. அவன் ராஜா வீட்டுப் பிள்ளை என்பதற்காகக் கிடைக்கிறது. அவன் ராஜா வீட்டில் பிறந்தது ஒரு எதார்த்தமான விஷயம். இதில் அவனுடைய பங்கு துளியும் இல்லை. பின் இந்த அற்பங்களுக்குப் பெருமைப்பட்டுக் கொள்வது உகந்த காரியமா என்ன? சாமி கும்பிட்டு முடித்ததும் கோவிலின் அருகில் இருந்த அல்லிக் குளத்தின் படித்துறையில் அமர்ந்திருந்தனர்.

நண்பகலின் தாக்கம்‌ கொஞ்சம் குறைந்திருந்தது. பொன்னுருக்கி பொழுதில் பூசியது போல் மஞ்சள் மாலை மலர்ந்திருந்தது.

அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி குளத்தில் மிதந்து கொண்டிருந்தது. மொட்டுக்கள் குவிந்திருந்தது. வெள்ளை நிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லியெனவும் அழைக்கப்படும். ஆம்பல் மலர் என்ற பெயரும்‌ இதற்குண்டு.

இரவு விரியக் காத்திருந்த இதழ்களிலிருந்து நறுமணம் கசிந்து நறும்பொழுதை சித்திரமாகத் தீட்டியிருந்தது.

"என்ன ஆச்சு? ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க மாதிரி தோணுது?" என்று மௌனத்தின் மெல்லிய குரலாய் ஒலித்தாள் அமரா.

"இப்போ கோவிலில் எனக்குக் கொடுத்த மரியாதையை நினைச்சேன். இது எந்தளவு நியாயம்?" என்றான் செழியன்.

"இது சாதாரண விஷயம் தானே. இதில் என்ன இருக்கு?" என்றாள் மீண்டும்.

"இந்த மரியாதை நியாயமா எப்போ கிடைக்கணும். நம்மளோட செயல்களால நமக்குக் கிடைக்கணும். ஆதி காலத்தில் இருந்து நம்ம குடும்பம் ராஜ குடும்பமா இருந்திருக்கலாம். ஆனால் அப்போ ராஜாவா இருந்தவங்களுக்கு உள்ள தகுதி இப்போ உள்ள நமக்கு இருக்கா? எல்லாத்தையும்‌ நீர்த்து போகவிட்டுட்டோம். ஆனா இந்த மரியாதை மட்டும் வேணும். இதற்குப் பின்னணியில்தான் பல அடக்குமுறைகளும் தவறுகளும் நடக்குது" என்றான் வருத்தத்துடன்.

அவன் சிந்தனை செல்லும் திசையைப் பார்த்து சற்று திகைப்புதான் அமராவுக்கு.

"இதையெல்லாம் மாத்தி, நீங்க ராஜாவா இருங்க. ராஜாவா இருக்க, என்னென்ன குணநலன்கள் இருக்கணுமோ, அது அத்தனையும் உங்ககிட்ட இருக்கு. நேத்து நான் சொன்ன விஷயம் கூடத் தப்போன்னு தோணுது" அமரா.

"என்ன தப்பு?" செழியன்.

"நீங்க சுயநலமா யோசிக்கிறீங்கன்னு சொன்னேனே. அது தப்புன்னு தோணுது."

"நீ எப்படி இவ்வளவு தெளிவா இருக்க. உன்னோட சிந்தனைகளும் விரிவடைஞ்சு கிடக்கு. இப்படி ஒருத்தியை நான் பார்த்ததே இல்லை" என்றான் செழியன்.

"அப்போ உங்க கொடி. அவளை விடச் சிறந்தவளா நான்?" என்றாள் அமரா‌. விழிகளில் கொஞ்சம் ஆர்வம்‌ மின்னியது.

"இதுக்கு என்ன பதில் சொல்லணும்னு நினைக்கிற?" செழியன்.

"என்ன பதில் சொன்னா என் மனநிலை எப்படி இருக்கும்னு சொல்லவா?"

"ம்ம்ம்.. சொல்லு"

"ஆமான்னு சொன்னா வானத்துல பறப்பேன். இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன். கொஞ்சம் கோவம் கூட வர வாய்ப்பு இருக்கு" என்று அவள் கூற, மெல்லிய மூரல் ஒன்று‌ தோன்றியது அவன் முகத்தில்.

"நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க" என்று அமரா கூறவும் அவன் இன்னும்‌ அதிகமாகச் சிரித்தான்.

"நீ வித்தியாசமான பொண்ணு."

"இல்ல நான் எதார்த்தமான பொண்ணுதான். ஒருவேளை உங்களுக்கு இப்பவும் கொடியை மட்டுமே பிடிச்சிருந்தா, நான் இப்படி இருக்க மாட்டேன். நான் இப்படி நடந்துக்கிறதால உங்களுக்கு என் மேல உள்ள மதிப்புக் கூடியிருக்கு. அதுவும் ஒரு காரணம். என்னோட வாழ்க்கையை நல்லா வாழ, நான் கையாளும் உத்தி இது. முதன்மை காரணம் முழுக்க முழக்க சுயநலம்தான்" என்றாள் அமரா.

அவன்‌ மலைத்து நின்றான்.

"இன்னும்‌ நீங்க பதில் சொல்லவே இல்லை" என்றாள்.

பேசிப்பேசியே அவனைக் கரைத்துவிட்டாள். இதுவும்‌ ஒரு உத்தியோ என்று அவளிடம்தான் வினவ வேண்டும்.

"நீ வேற. கொடி வேற" என்றான் செழியன்.

"இது பதில் கிடையாது. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. ஆமாவா இல்லையா? இந்த ரெண்டு பதிலைத் தவிர நடுநிலையான பதில் எதையும் நான் ஏத்துக்க மாட்டேன்."

"நான் சொல்றது உண்மை. உங்க ரெண்டு‌ பேரையும் ஒப்பிட முடியாது. கொடிக்குப் பின்யோசனை அதிகம். உனக்கு முன்யோசனை அதிகம்" என்றான் அவன்.

"புரியல.."

"என்னை விரும்புவதால் வரும் பாதகங்களைக் கொடி யோசிச்சு பார்க்கல. ஆனா பிரச்சனை வந்த பிறகு யோசிச்சு சரியான முடிவு எடுத்துட்டா. நீ முன்யோசனைக்காரி. அதுக்கும் விளக்கம் வேணுமா?" என்றான்‌ ஓரப்பார்வையுடன். கொடியைப் பத்தி பேசும் பொழுது அவள் விழிகளைப் பார்த்து உரையாடுவது இல்லை.

"இதுக்கு வேற ஒரு கோணம் இருக்கு. உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதால, இந்த வாழ்க்கை வேணும்னு நான் முன்ன யோசிக்கிறேன். எங்க உங்களோடு வாழ்க்கை சாத்தியப்படாதாங்கிற பயத்தில் கொடிக்கு முன் யோசனையில்லை. அதைப்‌பத்தி யோசிக்க பயந்திருக்கலாம். இல்ல யோசனையைத் தள்ளிப் போட்டிருக்காலம்" என்றாள் அமரா.

"எல்லாத்துக்கும் தனியா ஒரு பதில் வச்சிருக்க. கொடியைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?."

"கொடியைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை இழப்பதை யோசிச்சு பார்க்க முடியாது. அதையேதான் கொடியும் நினைச்சிருப்பா" என்றாள் அமரா பொறுமையாக.

பேச்சினூடே அவளின் நேசத்தை அவனுக்குக் கடத்திக் கொண்டிருந்தாள்‌.

"என்னை ஏன் அவ்வளவு பிடிக்கும் உனக்கு?. நான் அப்படி என்ன சிறப்பான மனிதன்?" என்றான்‌ கேள்வியாக. அப்படி என்னதான் காரணம் என்று தெரிந்து கொள்ள ஆர்வம்‌.

"மனசு, பிடிக்காம போறதுக்குதான் காரணம் தேடும். பிடிக்கிறதுக்கு எப்பவுமே காரணம் தேடாது" என்று அவள் கூற, அவனின் விழிகள் வேறு ஓரிடத்தில் நிலைக்குத்தி இருந்தது.

அமராவும் அவன் விழி சென்ற திசையில் பார்த்தாள்.

அங்கு இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

"அந்த இரண்டு பெண்களில் யாரு கொடி?" என்று அவனின் சிந்தனையைக் கலைத்தாள் அமரா.

அவளை ஆச்சர்யமாகப் பார்க்கவில்லை செழியன். இந்த ஒரு நாளில் அவளைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருந்தான். அதாவது அவனைக் கணிப்பதில் அவள் தோற்பதில்லை என்று.

"ஆமா.. நேத்தே கேக்கணும்னு நினைச்சேன். மறந்துட்டேன். நான் ஒரு பெண்ணை விரும்புறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்றான்.

"இதுக்கெல்லாம் தனியா போய்ப் படிக்கவா முடியும்?. கழுத்துல தாலி கட்டுனீங்களே ஒழிய, உங்க ஈடுபாடு முழுக்க முழுக்க அங்க இல்லை. அதுக்கு வேற ஒண்ணும் பெரிய காரணம் இருக்க முடியாது. கொஞ்சம் நிதானமா யோசிச்சாலே இந்தக் காரணம் விளங்கிடும்" அமரா.

"சரி.. சீக்கிரம் சொல்லுங்க. வலது பக்கம் நடந்து வர்றதுதான் கொடியா?" என்றாள்.

"உனக்கு என்ன மந்திரம் தெரியுமா?" என்றான் அவன்.

"இதுல மந்திரம் என்ன இருக்கு. கொடிக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அங்க உள்ள ரெண்டு பேர்ல அந்தப் பொண்ணு கழுத்தில் தாலி இருக்கு. இத யோசிக்கக் கொஞ்சூண்டு மூளையிருந்தாப் போதும். எனக்கு என்ன மூளையே இல்லைன்னு நினைச்சீங்களா?" என்றுவிட்டு வேகமாகக் கொடியை நோக்கிச் சென்றாள்.

"அமரா!.. எங்க போற?.."என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

"உங்களோட மனைவின்னு அவகிட்ட பெருமைப்பட வேணாம். அதுக்குத்தான். அப்புறம் கொடியைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு கேட்டீங்களே. தெரிஞ்சுக்கப் போறேன்" என்று‌ கையை உருவிக்கொண்டாள்.

இரண்டு எட்டு எடுத்து வைத்துவிட்டு திரும்ப வந்தாள்.

"நான் திரும்பி வர்ற வரைக்கும், நீங்க இங்கதான் இருக்கணும். எங்கள வந்து ஒட்டுக் கேட்கக்கூடாது. பேசிட்டு வந்து நானா ஏதாவது சொல்லணும்னு நினைச்சா சொல்லுவேன். இல்லை என்னைக் கேக்கக் கூடாது" என்று படபடவென்று கொட்டிவிட்டுச் சென்றாள்.

கொடி என்று இவள்‌ அழைத்துக் கொண்டு செல்லும்‌ பொழுதே மலர் கொடிக்கு, அமரா யாரென்று‌ கூறிவிட்டாள்.

ஏனோ அமராவை கொடிக்கு மிகவும் பிடித்தது. அமராவுக்குக் கொடியை செழியனின் வாயிலாக, முன்னமே தெரியுமே. நல்ல பெண் என்ற பிம்பம் வேறு. அமரா கொடியின் அருகில் நின்று கொண்டிருந்தாள். பொருளற்ற அமைதி‌யொன்று நிலவியது அங்கே.
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
பொழில்

சுதந்திர வேட்கை
உதிர்ந்த உயிர்கள்
செந்நிற மண்
மரண ஓலம்
கணை மாரி
அறசீற்றம்
வாளாய் நீ
சுழற்ற நான்!!!

வேலு நாச்சியார் கோட்டைக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது, யாரோ உயிரைப் பிடித்து இழுக்கும் உணர்வு. தானும் தனது கணவரும் வாழ்ந்த சீமை இப்படி வெள்ளையனின் கைப்பாவையாக இருக்கிறதே என்று எண்ணி மருகினாள். தாங்க இயலாத துன்பம்‌ அவளை ஆட்டிப் படைக்க, அவள் மண்ணில் அமர்ந்து, அந்த மண்ணை எடுத்து தன் கண்ணங்களில் பூசிக்கொண்டாள்.

சோர்ந்திருந்த மனம் வீரத்தினை மீட்டெடுத்தது. வேகமாக எழுந்து சென்றாள் வேலு நாச்சியார்.

குயிலி மனதில் ஒரு வியடம் மட்டுமே இருந்தது. ஒரு வடிவம் மட்டுமே இருந்தது. அது வேலு நாச்சியார் அரியணையில் அமர்ந்திருக்கும் பிம்பம் மட்டுமே.

ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலின் அருகில் சென்று அம்மனை‌த் தரிசனம் செய்தாயிற்று. வெகு நாட்கள் கழித்து அம்மனைக் கண்‌ குளிரக் கண்டதில் புத்துயிர் பெற்றது போல் இருந்தது உடையாள் காளி படைப் பிரிவினருக்கு. மற்ற பெண்களும் கோட்டைக்குள் வந்தனர். அனிச்சம், நளன் மற்றும் பொன்னி, கோட்டைக்குள் வந்தனர்.

கோவிலின் வலப்புறம் இருந்த ஆயுதக் கிடங்கிற்குப் பாதுகாப்புகள் அதிகமாய் இருந்தது. அந்தப் பாதுக்காப்பு வளையத்தை எவரும் தகர்க்க முடியாத வகையில் அரணாய் துப்பாக்கி வீரர்கள் நின்றிருந்தனர்.

வேலு நாச்சியாரின் மனதில் திகில் படர்ந்தது. இந்த ஆயுதக் கிடங்கை எங்கனம்‌ அழிக்கப் போகிறோம் என்று. ஏனெனில் அது ஒன்றுதான் அவர்களின் பலம். கோட்டைக்குள் வந்திருக்கும் சொற்பப் படையினரை வைத்து நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்று‌ நினைக்கையில் மனதில் ரயில் வண்டி தடதடத்தது. குயிலி வேலு நாச்சியிரின் எண்ணங்களை மொழி பெயர்த்துவிட்டாள். அவள் அறியாத உணர்வுகள் நாச்சியிடம் இருக்கக் கூடுமா‌ என்ன?

சட்டென்று அவளின் மூலையில் ஒரு எண்ணம் உதித்திட, சாமி வந்தது போல் ஆட ஆரம்பித்தாள். அங்கிருந்த பெண்கள் அனைவரும் அவளைத் தாங்கிப் பிடித்தனர். விபூதியை அவள் நெற்றியில் தடவி அவளிடம்‌ குறி கேட்டனர்.

"ஆடாத ஆட்டம்‌ போட்டவனெல்லாம் இன்று பிணக் கோலம் பூணப் போகிறான். விடிவு காலம் வந்துவிட்டது. வராஹி தேவி வந்து வந்துவிட்டாள் அரக்கனை வதைத்து ரத்தம் குடித்திட" என்று அவள் குதியாட்டம் போட, அங்கிருந்த பெண்கள் குலவையிட ஆரம்பித்தனர்.

பூஜை‌ப் பொருட்கள் அனைத்தையும் தன் மேல் எடுத்து கவிழ்த்துக் கொண்டாள். ஏனோ ஆங்கிலேய வீரர்கள் அனைவரும் விசித்திரமாய்ப் பார்த்திருந்தனர் இந்த ஆட்டத்தை‌. அவர்களுக்கு இதெல்லாம் புதிதாயிற்றே. கொஞ்சம் ‌ஏளனமும் இருந்தது‌ அவர்கள் பார்வையில். அம்மனுக்கு விளக்கேற்ற வைத்திருந்த நெய்யை எடுத்து தன் மேல் கவிழ்த்துக் கொண்டு ஆடினாள் குயிலி. அங்குக் காவல் புரிந்து வீரர்களின் கவனம் முழுக்க ‌முழுக்க குயிலியின் மேல் இருந்தது. வேலு நாச்சியார் இதை அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, போரைத் துவங்கிவிடலாம் என்று எண்ணியிருந்தாள்.

அனிச்சமும் நளனும்‌ நிகழ்பவை அனைத்தையும்‌ மிகவும் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குயிலி ஏதோ திட்டம் தீட்டிவிட்டாள் என்று அறிந்து கொண்ட பெண்கள் பலர், அவளைப் போல் ஆட ஆரம்பித்தனர். குயிலி மெதுவாக அங்கிருந்து நகர்ந்து ஆயுதக் கிடங்கை நோக்கி அடி மேல் அடி வைத்து செல்ல ஆரம்பித்தாள். அருகில் சென்றதும் தீப்பந்தம் எடுத்துக் கொண்டு உள்ளேயும் நுழைந்து விட்டாள். இன்னும் சில அடிகள்தான் இருந்தது... தீப்பந்தம் கொண்டு ஆயுதக் கிடங்கை‌ அழித்து விடலாம் என்று இவள் கனவு காண, இவளைச் சுற்றி வளைத்தனர் ஆங்கிலேய வீரர்கள். அனைவரின் கைகளிலும் துப்பாக்கி. தோட்டாக்கள் இவள் உடலை சல்லடையாகத் துளைக்கத் தயார் நிலையில் இருந்தது. அந்நிலையில் கையில் இருக்கும் தீப்பந்தத்தைத் இலக்கு நோக்கி தூக்கி எரியவும் இயலாது. அவளைச் சுற்றி வளைத்த வீரர்கள் தடுத்துவிடுவர். அடுத்துக் கணக்கில்லாமல் தோட்டாக்கள் அவள் உடலைத் துளைக்கும். இன்னும் சில நொடிகளில் உயிர் துறக்கப் போகிறோம் என்று சிறிதும் அஞ்சவில்லை அவள். மாறாக ராணியின் கனவை நிறைவேற்ற என்ன செய்லாம் என்ற உத்வேகம் குடிகொண்டது மனதினில். எதிரில் இருப்பவர்களுக்கு, அவளின் கனவைப் பொசுக்கச் சில தோட்டாக்கள் போதுமென்றால், இவளுக்குக் கனவை மெய்ப்பிக்கச் சில நொடி போதுமென்று தோன்றியது. அவனுக்கு ஒரு வழி இருக்கிறதென்றால், நமக்கு ஒரு வழி பிறக்காமல் போய்விடுமா என்ன? ஆம். பிறந்துவிட்டது. இருள் சூழ்ந்திருந்த அவள் மூளையில், ஒளியொன்று தோன்றியது. அது அவள் கையில் ஏந்தியிருக்கும் தீப்பந்தத்தை விடப் பிரகாசமாய் இருந்தது. தீப்பந்ததைத் தன் மேல் வைத்துத் தன்னைத் தீக்கிறையாக்கத் திடமாய் முடிவெடுத்தாள். நெய்யும் எண்ணெயும் கொண்டு நனைந்திருந்த உடல், தோட்டாக்கள் துளைக்கும் முன்னரே பற்றிக் கொண்டு எறிந்தது. அனைவரும் சிலயெனச் சமைந்துதான் நின்றனர் ஒரு நிமிடம். ஆயுதக் கிடங்கை நோக்கி ஓடினாள் குயிலி. அவளின் இந்தச் செய்கையைச் சற்றும் எதிர்பார்க்காத வீரர்கள் திகைத்தனர். தடுக்க நின்றிருந்த வீரர்கள் செய்வதறியாமல் விலகி நின்றனர். அவர்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது. உயிருடன் சாதிக்க முடியாத காரியத்தை, உயிர் கொடுத்து சாதித்து முடித்தாள். தீயின் கோர நாக்குகள் அவள் பொன்னுடல் முழுவதும் பரவி உயிர் வலியை ஏற்படுத்தினாலும், அவள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது இறுதி நொடிகளைப் பயனுள்ளதாக மாற்ற, ஆயுதக் கிடங்கில் நுழைந்து அங்கிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் தீக்கிறையாக்கினாள். ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது. நரகாசுரனை அழித்துத் தீபாவளி பண்டிகை கொண்டாடிவிட்டாள் குயிலி. வெடித்ததில் பல வீரர்கள் மாண்டு போக, கோட்டைக்குள் குழப்பம் மேலோங்கிட, உடையாள்‌ காளி படைப் பிரிவினர், மக்களைக் கோட்டையிலிருந்து அப்புறப்படுத்த ஆயத்தங்கள் செய்தனர். இன்னும் சற்று நேரத்தில் உக்கிரமான போர் தொடங்க போகிறது என்று அங்குள்ள மக்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தனர்.

ஆயுதக் கிடங்கு பற்றி எரியும் காட்சியைக் கண்ட நாச்சியாவிற்குப் விழிகளில் பெருமிதம் குடிகொண்டது. குயிலி நினைத்ததைச் சாதித்துவிட்டாள் என்று ஆனந்தத்தில் திளைத்தாள். குயிலி தன்னைப் பலியாக்கியது தெரிந்தால் என்ன நிகழுமோ.

கோட்டைக்கு வெளியிலும் அந்த எதாரொலி ஒலிக்க, ஆங்கிலேய வீரர்கள் திண்டாடினர். அவர்களின் ஒழுங்குநிலை கலைந்தது. கவனம்‌ சிதறியது.

அந்தக் குழப்பங்களைப்‌ பயன்படுத்தி, திப்பு சுல்தானின் படையினர் கோட்டைக் கதவுகளைத் தகர்த்தெறிந்தனர். நாச்சியாரின் படைகள் ஆவேசத்துடன் கோட்டைக்குள்‌ பிரவேசித்தது. அகழியில் பசித்திருக்கும் முதலைகள் போல் இரை தேடி அலைந்தனர். குதிரை‌ வீரர்கள் சூறாவளியாய் உள்நுழைந்து புழுதியைப் படர விட ஆங்கிலேயர்கள் சற்றுத் திணறிப் போயினர். மேலே எழும்பியிருந்த புழுதி திரையொன்றை நெய்திருந்தது. அதில் பார்க்கும் திறன் இழந்து தவித்தனர் ஆங்கிலேய வீரர்கள். அவர்களை மேலும் திணறடிக்க, வளரி பாய்ந்து உயிர்நிலையில் தாக்கியது. புரவியில்‌ வீற்றிருந்த வீரர்களோ அணிவகுத்து சங்கிலித்தொடராய் சென்று வெள்ளையனின் தலை கொய்தனர். தோட்டாக்களில் இருந்து தப்ப குதிரையின் கடிவாளத்தை‌ ஏற்றிப் பிடிக்க, குதிரை முன்னங்கால் இரண்டையும் தூக்கி திமிறி ஒலியெழுப்ப, தோட்டாக்கள் இலக்கை அடையவில்லை.‌ அதற்குள் அவர்களைக் கவண் கற்கள் மாரி போல் தாக்க, நிலைகுலைந்து போயினர் ஆங்கிலேயர்கள். உடையாள்‌‌ காளி பிரிவினர் பாதிக்கும் மேல் மாளிகையின் மேன்‌ மாடத்தில் இருந்தனர். முன்பே முடிவுகட்டியிருந்ததுதான். எப்படி மேல் மாடம் செல்வது என்று தவித்திருக்க, குயிலி வழிவகைச் செய்துவிட்டாள்.

உயிரற்ற சடலங்களின் மேல் சட்டைச் செய்யாமல் குதிரைகள் பாய்ந்தோட எங்கும் குருதி வெள்ளம். மரண ஓலங்கள் எதிரொலி செய்ய, இரவு பொழுது காளி அவதாரம் எடுத்தது போல் இருந்தது. காலாட்படை வீரர்கள் ஒருபுறம் கோட்டைக்குள் வில்லையும் வேலையும் கொண்டு எதிரியின் நெஞ்சினைப் பதம் பார்த்தனர். கோட்டை இப்பொழுது உதிரத்தால் குடமுழுக்கு ஏற்றுக் கொடூரமாய்க் காட்சியளித்தது. கொடுத்தாயிற்று. தாபம் கொண்ட மண்ணிற்கு வெள்ளையனின் கழுத்து திருகி, உதிரம் பிழிந்து அருந்த வழி செய்து முடித்தனர்.

கோட்டையின்‌ நிலை கண்ட நிலவும் சளைத்து களைத்துப் போனதோ? நிலா‌ பெண் ஓடி ஒளிந்து கொண்டாள் மேகத்துக்கு இடையில். அனிச்சமும் அதே நிலையில்தான் இருந்தாள். நளனின் பின்னால் ஒளிந்து கொண்டாள். ராஜா ராஜேஸ்வரி ஆலயத்தில் தூனின் மறைவில் இருந்தனர் இருவரும். கோவில் வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் இருந்தது. மக்கள் அனைவரையும் அழகாக அப்புறப்படுத்தி இருந்தனர்.

வேங்கையெனச் சீறிப் பாய்ந்தாள் வேலு நாச்சியார். அவள் உடல் முழுக்க குறுதியால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. மஞ்சள் பூசிய வதனம் முழுக்க எதிரியின் உதிரம். விழிகளின் சீற்றம் மிண்ணியது.
கொத்துக்கொத்தாய் எதிரிகளைக் கொன்று குவித்தாயிற்று. களையெடுப்பதுதான் அவளுக்குக் கைவந்த கலையாயிற்றே. காளியின் அவதாரம் எடுத்திருந்தாள் அவள். திரும்பிய திக்கெங்கும் தலைகளும் முண்டங்களும் தனித்தனியே கிடந்தது. கோட்டை முழக்க அவள் வெற்றியின் சின்னங்கள். கோட்டை வாயிலிலிருந்து அரியணை வரை அவள் செல்லும் இடங்களில் எல்லாம் தலை உருண்டது. தளபதி பாஞ்சோர் அவளிடம் சரண் புகுந்தான்.

"பஞ்சம் பிழைக்க வந்தவனுக்கு இத்தனை கர்வமா? துப்பாக்கி முனையில் ஆள்பவன் மனிதன்தானா? நாங்கள் ஆண்ட பரம்பரையடா. மாண்ட பரம்பரையாகச் சரித்திரம் எழுத நினைத்திருக்கிறாய். அதை உன் உதிரம் கொண்டே அழித்துவிட்டேன். என் மண்ணின் மைந்தர்கள் இனி அடிமை கோலம் பூண வேண்டாம். மனதினில் பயம்‌ பேணவும் வேண்டாம். துப்பாக்கி முனையில் நாங்கள் மாண்டு போயிருக்கலாம். மாண்டு போனதால் மீளாமல் போய்விடுவோம் என்று எண்ணிய அற்ப பதரே!! மாண்டது உயிர். எங்கள் வீரம் அல்ல. உன்னால் மண்ணில் சிந்திய உதிரத்திட்டுகள் உரமாய் மாறி, என் பிள்ளைகளுக்குச் சுதந்திர வேட்கைப் புகட்டிவிட்டது. இனி சீமைக்குள் வரும் வெள்ளையனின் கதி என்னவென்று உன் வரலாறு மொழியட்டும்.... யாரங்கே. இந்த அற்பனை இழுத்துச் சிறையில் அடையுங்கள். இவனுக்கான தண்டனைகள் கலந்தாசிக்கப்பட வேண்டும். இனி அந்நியன் எவனும் இம்மண்ணில் கால் தடம் பதிக்க அஞ்ச வேண்டும்" என்று கூறிவிட்டு அரியணை‌ நோக்கி சென்றாள்.

கணவனை‌ இழந்து அகதி போல் ஓடிய நினைவுகள் நினைவில் தோன்றி அவளை வாட்டியது. தன் பெண் வெள்ளச்சியைக் காக்க எத்தனைப் போராட்டங்கள். அவள் மலர் கம்பளத்தில் ராணியாய் மிடுக்காய் நடந்து வந்தாள். பாதங்களில் அணிந்திருந்த சதங்கை‌ நூபுர நாதம் எழுப்பியது.

கோட்டை முழுக்க விளக்கு ஏற்றப்பட்டது. சீமை ராணியின் ஆளுகைக்குக் கீழ் வந்துவிட்டதெனப் பறை கொட்டப்பட்டது.

கையில் கணவனின் வாள்... வெள்ளையனின் உதிரத்தால் மிண்ணியது. அவள் செல்லும் திசையில் வாளின் நுனி கோடிட்டுச் சென்றது. அரியணையில் சென்று அமர்ந்தவள், அதன் கைபிடியில் தலை சாய்த்தாள். கணவனின் மடி சாய்ந்த நிம்மதியோ இல்லை‌ அவர் கனவு நினைவான நிம்மதியோ, வதனத்தில் முகாமிட்டிருந்த சீற்றம் தணிந்து பேரமைதிக் குடியேறியது.

படைத் தளபதிகள் அனைவரும் சபையில் இருந்தனர். குயிலியைத் தவிற.

குயிலி எங்கே என்று வினவினாள் வேலு நாச்சியார்.

ஒருவரும் மொழிய முன் வரவில்லை. சபை நிசப்தமாக இருந்தது.

"யாரங்கே... எங்கிருந்தாலும் வரச் சொல்லுங்கள் அவளை... இது சீமை ராணியின் கட்டளை என்று கூறுங்கள்" என்றாள்‌ அதிகாரத் தொணியில். சீமை ராணி என்று கூறும்‌ பொழுது அத்தனை கர்வம். தன் நாட்டை மீட்டெடுத்த மகிழ்ச்சி என்று அத்தனை உணர்வுகளும் கலந்திருந்தது.

அசரவையின் கஞ்சிகங்கள் படபடவென அடித்து ஓய்ந்தது.

"ஏன் அனைவரும் அமைதியாக இருக்கிறீர்கள். குயிலி எங்கே?" என்று வினவியவளின் விழிகளில் மெல்லிய பயம் எட்டிப் பார்த்தது.

குயிலியின் கறுகிப் போன உடல் வேலு நாச்சியாரின் முன் கிடத்தப்பட்டது.

அதைக் கண்ட ராணி பதைபதைத்துவிட்டாள். அது யாரென்று தெரியாதுதான். அடையாளம் தெரியாத அளவு சிதைந்திருந்தது. ஆனால் அவள் கேட்ட வினாவிற்கு விடை இதுவென்றால்.... அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.

"ஆயுதக் கிடங்கை அழிக்க........ அவள்..... இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை" என்று திக்கி திணறினாள். வார்த்தைகள் உதிர்க்க திராணியற்று மறைமுகமாக எடுத்துரைத்தாள் வீரமங்கை ஒருத்தி. உடையாள் காளி படையின் தளபதி அவளல்லவா குயிலி? குயிலியின் இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்பு. அவள் அறிவின் செறிவும், ஆற்றலும்தானே படையை வழிநடத்தி சென்றது‌.

"ஆயுதக் கிடங்கை அழிப்பதற்கு........... அவள்.... என்ன.... செய்தாள்..?" ஏன் இப்படி? எனது குயிலியா இது?" என்று தவித்தாள் வேலு நாச்சியார். விழிகளில் இருந்து உவர்நீர் வடிய ஆரம்பித்தது. அழுவது அவளின் வீரத்திற்கு இழுக்கென்று அறிந்திருந்தாலும், கட்டுப்படுத்த இயலவில்லை. குயிலிக்கு யார் இவள்? இல்லை அவள்தான் யார் இவளுக்கு? ஏன் இப்படி ஒரு முடிவைத் தேடிக் கொண்டாள்.

ஆயுதக் கிடங்கை அழிக்க அவளையே ஆயுதமாக மாற்றி விட்டாள். ஆங்கிலேயர்களைத் திசைத் திருப்ப, பொன் தேகத்தின்‌ மேல் நெய்யூற்றி ஞெழிகோல் கொண்டு தீமூட்டி வெடித்து சிதறிப் போனாள்‌ ஆயுதக்‌ கிடங்குடன்.

இதைக்‌ கேட்டதும் அதிர்ச்சியில் எழுந்து நின்றாள் நாச்சியார். மங்கையின் மறைவைப் பற்றி அவள் கூறியது நினைவில் நிழலாடியது ராணிக்கு.

"வெள்ளையனின் தோட்டாக்கள் ஊடுருவும் சாபம் நிச்சயம் அளிக்கமாட்டேன் என்று தன் கணவனை இப்படி ஒரு செயல் புரிய வைத்திருக்கிறாள் மங்கை. அவள் மிகவும் உயர்ந்து நிற்கிறாள். என் மனதில் நீங்காமல் நின்றுவிட்டாள். அவளைக் கண்டு பொறாமை கொள்கிறது எனது நெஞ்சம்" என்றாள் குயிலி.

"குயிலி... அடி தோழி.. ஏன்‌ இப்படி செய்தாய். என்னை‌ ஆதரவற்று தவிக்கவிட்டு சென்றாயே? மங்கையின் முடிவை நீயும் தேடிக்‌கொண்டாயா? என் நிலையை நினைத்துப் பார்த்தாயா? என்‌ சூளுரை பொய்த்துப் போகாமல் இருக்க, நீ உயிர் அளித்துவிட்டாயே? எனக்கு எளிதாக வெற்றியை அளிக்க, உன் உயிரைப் பணயம்‌ வைத்துவிட்டாயே" என்று தவித்தாள் வேலு நாச்சியார்.

மங்கை, குயிலி என்று பெண் போறாளிகளின் உதிரத்தால் வடித்ததே இந்த ராஜ்ஜியம்‌.

ராணி அழுவதைக் கண்டு அனைவரும் அழுதனர். சுதந்திரம் கிடைத்துவிட்டதே என்று ஆனந்தம் கொள்ள முடியாமல் போயிற்று. ராணியை வருந்த வேண்டாம் என்று கூறவும் ஆட்கள் இல்லை. ஏனெனில் ராணியுடன் அந்தரங்க தோழியாக இருந்தவள் குயிலி மட்டுமே.

அடுத்து குயிலிக்கு ஈமச்சடங்குகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. அவளின் நினைவாகக் கோவில் ஒன்று எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது. சீமை வேலு நாச்சியாரின் கட்டுக்குள் முழுவதுமாக வந்தது. ஆங்கிலேயரின் எச்சங்கள் அழிந்து போனது.

நிகழ்ந்த அனைத்தையும் கண்ட அனிச்சம் மீண்டும் மயங்கி விழுந்தாள். அதுவும் குயிலியின் தியாகம் அவளின் மனதை‌க்‌ கூராய்க் கிழித்துவிட்டது.

போரினைக் கண்ட இருவரும் மடிந்து போயினர் என்று கூறினால் மிகையாகாது. போர் என்ற வார்த்தைக்கு பொருள்‌ அறியாதவர்கள் அனிச்சமும் நளனும். ஒரு மனிதனை இன்னொரு மனதன் ஏன் இப்படித் தாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் உலகத்தில் மனித இனம் அழிந்து கொண்டே வருகிறது. அதைக் காக்க அரும்பாடு படுகின்றனர். குழந்தைப் பிறப்பில் இருந்து எதுவும் இயல்பாய் இல்லை. அனைத்திற்கும் ஒரு சட்டம். ஒரு திட்டம். ஆனால் இங்கு இப்படி மனிதனைக் கொன்று குவிப்பதனால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது.

பொன்னியின் வாயிலாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கங்களையும் கொடுமைகளையும் ஓரளவு அறிந்நு வைத்திருந்தனர். இருந்தாலும் இவ்வளவு கொடூரத்தை நேரில் பார்க்க திராணியில்லை அவர்களிடம் என்றுதான் கூற வேண்டும். உயிரை துச்சமெனக் கருதவும் நெஞ்சுரம் வேண்டுமே. ஆனால் அவர்கள் ஒரு உயிரை காக்க மட்டுமே போராட தெரிந்தவர்கள்.

மங்கை ஏன் இறந்தாள் என்ற வினா நெஞ்சை நாறாய் கிழித்திருக்க, அதற்கு விடை புரியும் முன்னரே குயிலி வந்து சேர்ந்து கொண்டாள்.

அதுவும் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறும் பொழுது, அனிச்சத்தின் இதயமும் வெடித்துச் சிதறியது.

அன்னை கூறிய கனவு உலகம் இவ்வளவு கொடியதா? நீரும் நிலமும் வரமென அவள் தேடித் தவிக்க, உயிரும் உடலும் துச்சமென இவர்கள். ஒரு உயிரின் தொன்மப்படிமம் கிடைத்துவிடாதா என்று நிலம் அகழ்தெடுக்கும் அவர்கள். பல உயிர்களைத் தொல் படிமங்களாக மாற்றும் இவர்கள். என்ன சிந்தித்தாலும் இவர்களின் வேட்கையும் மனநிலையும் அனிச்சத்திற்குப் பிடிபடவில்லை. அதீத அழுத்தத்துடன் ரத்தக் குழாயில் உதிரம் பாய்ந்தோட, மயங்கி சரிந்தாள் அவள். நளன் மயங்கவில்லை. மற்றபடி அவனும் பேச்சிழந்து மூச்சிழந்து நின்று கொண்டிருந்தான்.
பொன்னழகி அனிச்சத்திற்கு முதலுதவி செய்தாள்.

கோட்டையின் நிலையைப் புடம் போட்டு விளக்க ஆதவன் உதித்தான். ஆனால் அந்தோ பரிதாபம். கோட்டை தன் கம்பீரத்தை மீட்டெடுத்திருந்தது. போரின் அறிகுறிகள் அறவே இல்லை. உயிர் துறந்த வீரர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்கிலேய வீரர்களையும் அடக்கம் செய்தனர்.

ஒழுகும் நிலவு!!!
 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
புடவி

அந்தி வேளை
மலை முகடு
விழும் அருவி
நனையும் ஞாயிறு
அலையும் தென்றல்
இசையும் சுனை
தெறிக்கும் சாரல்
சிவந்த வானம்
சிதறிய செம்மை
பொழியும் எழில்
பகலின் நிழல்
காயும் திங்கள்
இமையாமல் இருள்‌
அமிழ்தமாய் நீ
பருக நான்.

கொடியும் அமராவும் மரத்தின் அடியில் ‌அமர்ந்திருந்தனர். நீண்ட நேர அமைதி. பொருளற்ற அமைதி. வரையறுக்கப்படாத அமைதி. அதைக்‌‌ கலைக்கும் எண்ணம் இருவருக்கும் இல்லையா என்ன? மலர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள். செழியனின் திருமணம்‌ பற்றி மலர் கொடிக்கு அனைத்தும் கூறியிருந்தாள்தான். ஆனால் அமராவை‌ பற்றி அவ்வளவாகக் கூறவில்லை. அமராவைப் பற்றி அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லையே. பார்க்க அழகான பெண் என்று மட்டுமே கூறியிருந்தாள். ராஜா வீட்டு பெண்ணாயிற்றே. கொஞ்சம் திமிரும்‌ இருக்கும் என்றுதான் எண்ணியிருந்தாள் கொடி. இப்பொழுது அவளைப் பார்க்க வரும்பொழுது கூட, ஏதோ வம்பிழுக்க வந்தது போல் முதலில் தோன்றியது. ஆனால் அருகில் அவள் முகம் பார்க்கும் பொழுது, அவள் சிந்தனையின் கோளாறு உணர்ந்து கொண்டாள்‌ கொடி. பேச வேண்டும் என்று கூறிவிட்டு, என்ன பேசுவதென்று தெரியாது அமர்ந்திருக்கும் அமராவைப் பார்த்து, அவளுக்கு ஆச்சர்யமே. விஷயம் அறிந்து குத்திக் கிழிக்க வந்திருந்தால் இந்த அமைதி தேவையில்லையே.

வெகு நேரம் சென்ற பின்னும் எதுவும் பேசாமலிருப்பது அப்பொழுது தான் அவளுக்கு உரைத்ததோ என்னவோ, கையில் வைத்திருந்த குங்குமத்தை கொடிக்கு நீட்டினாள். இந்த ஒரு விடயம் போதும். நுனி முதல் அடி வரை அமராவின் குணத்தைப் புடம் போட்டு விளக்கிவிட்டது.

"சமத்துவமா......." என்று கொடி கூறி முடிப்பதற்குள், "பரவாயில்லை அமரான்னே கூப்பிடலாம்" என்றாள் அமரா.

"இது சமத்துவம் இல்ல.. ஒரு சுமங்கலி இன்னொரு சுமங்கலிக்குக் குங்குமம் கொடுத்தா, தீர்க்க சுமங்கலியா வெகு நாட்கள் வாழலாம்ங்கிறது நம்பிக்கை" அமரா.

"நீங்க ரொம்பப் புத்திசாலி. அழகா பேசுறீங்க. தன்மையா‌ நட்ந்துக்குறீங்க. நீங்க நிச்சயம் நல்லாயிருப்பீங்க.... தீர்க்க சுமங்கலியா... நூறு வருஷம்" என்றாள் கொடி.

"ரொம்ப நன்றி. வாழ்க்கையை நல்லா புரிஞ்சிக்கிட்ட உங்ககிட்டேருந்து கிடைக்கிற வாழ்த்து நிச்சயம் என்னை வாழ வைக்கும். நான் இருக்கது இருக்கட்டும் கொடி. நீங்க எப்படி இருக்கீங்க?" அமரா. பெயர் கொண்டு உரிமையுடன் அவளை விளித்ததிலே கொடிக்கு நன்கு விளங்கியது. அவள் எல்லாம் ‌அறிந்து வந்திருக்கிறாள் என்று.

"என்ன பதில் சொன்னா நீங்க நிம்மதியா இருப்பீங்க?" என்றாள் கேள்வியாகக் கொடி.

"நான் எதிர்பார்ப்பது உண்மையான பதில். என்னோட நிம்மதி உங்க பதிலில் இருக்கா என்ன?" என்றாள் சிரித்துக் கொண்டே.

"நல்லா பேசுறீங்க?"

"நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே."

"புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி இருக்கீங்க."

"நல்லா இருக்கீங்களான்னு கேட்டது தப்பா என்ன?"

"ம்ம்ம் நல்லாருக்கேன். நீங்க நல்லாருக்கீங்களா?" என்றாள் சிரித்துக் கொண்டே.

"ம்ம்ம்.. ரொம்பவே. நீங்க வாழணும்னு நினைச்ச வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டு இருக்கேன்" என்று அமரா கூற, கொடி மெலிதாக நகைத்தாள்.

"அமரா... பயமா இருக்கா.. நான் என்னைக்குமே உங்க வாழ்க்கையை வாழ நினைச்சதில்ல. கவலைப்படாதீங்க."

"கவலை எனக்கில்ல. என்னோட புருஷனுக்கு. உங்களை நினைச்சு."

"என்னை‌ நினைச்சு அவர் ஏன் கவலைப் படணும். இனி உங்களை மட்டும் நினைக்கச் சொல்லுங்க. அவங்கவங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ முடியும்."

"விதிக்கப்பட்ட வாழ்க்கைனா விருப்பமில்லாம வாழறதா?"

"விதிக்கப்பட்ட வாழ்க்கையை விருப்பமுள்ளதாவும்‌ மாத்திக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. ஆனா விருப்பங்கள் சொல்ல உரிமை இருக்கா என்ன?"

"அவர் சொன்ன மாதிரி நீங்க வித்யாசமான பொண்ணுதான்."

"நீங்க கூட... யாரும் இப்படிச் செய்ய மாட்டாங்க."

"உங்களுக்குக் கோவம் வரலையா?"

"யாரு மேல?"

"என் புருஷன் மேல."

"அவர்‌ மேல நான் கோவப்பட்டு என்ன ஆகப் போகுது. நம்ம சமூகமே இப்படி ஒரு கட்டமைப்போட வாழும் போது, அவரைக் குத்தம் சொல்றதுல்ல அர்த்தம் இல்லை."

கொடி கூறுவது உண்மைதானே. நூறு வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் பல இடங்களில் தங்களின் வெற்றிக் கொடியை நாட்டி, அங்கிருக்கும் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருந்தனர். அந்த இடத்தில் ‌இருந்த செழுமைகளையும்‌ களவாடி சென்றனர். ஆனால் அதில் போராடி வென்ற சில சாம்ராஜ்ஜியங்கள் இருக்கிறது. போராடி என்று சொல்வதைவிட எளிதாகவே வென்றுவிட்டனர். ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டியடித்தனர். தங்களை மண்ணில் கால் வைத்தவனின் முடிவு எத்தகையது என்று செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்த சாம்ராஜ்ஜியங்கள் நூறாண்டுகளாகக் கொடிக் கட்டி பரந்து விரிந்து கிடக்கிறது. அதன் பிறகு பல சிற்றரசுகளால் அவை பிரிந்து, இன்றளவும் ராஜாவின் ஆளுகைக்குக் கீழ் இருக்கிறது. ஆங்கிலேயர்களை விரிட்டி அடித்த வீரர்களுக்கு, கொஞ்சம் கர்வமும் தலைக்கேறிவிட்டது. அதனால் ஆட்சி முறையில் அடுக்குமுறையும் சேர்ந்துவிட்டது. அவர்கள் புதுப்புது சட்டங்கள் இயற்றி மக்களைக் கட்டுக்குள் வைத்தனர்.‌ அதுவும் பெண்கள் ஆண்களின் அடிமைகளாகவே சித்தரிக்கப்பட்டிருந்தனர். ஒரு ஆணால் கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில் பெண்களுக்கும் சிறிது மதிப்பிருந்தது. ஆனால் தொடர் வெற்றியின் பலனாக, ஆணவம் கொண்டுவிட்டான் ஆண் என்பவன். அது அப்படியே அடுத்தடுத்த தலைமுறைக்கு அலுங்காமல் குலுங்காமல் கடத்தப்பட்டு, அடக்குமுறைகளாக உருமாற்றம் பெற்றுவிட்டது.

"நாம ஆங்கிலேயரிடமே அடிமையாய் இருந்திருக்கலாமோ?" அமரா.

கொடி பதிலேதும் கூறவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள். அதுதான் உண்மை என்று அவளும் நினைத்தாள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

"அடிமைப்பட்டுச் சுதந்திரம் கிடைச்சிருந்தா கொஞ்சம் பொறுப்பு வந்திருக்குமோ. இல்லை ஒரு உயிரின் மேல் மதிப்பாவது வந்திருக்கும். நம் தலைவிதி. வேறொருவன் வந்து வலிக்க வலிக்கப் புரிய வைத்திடும்‌ நிலைமையில் நாம் இருக்கிறோம்" என்றாள்‌ அமரா வருத்தத்துடன்.

"என்ன‌ கொடி? எதுவும் பேசாம இருக்கீங்க?"

"எதுவும் பேசணும்னு தோணல. நான் கிளம்பவா?" என்று கிளம்பத் தயாரானவளை தடுத்தாள் அமரா.

"உங்க தோழியா‌ நான் இருக்கலாமா?"

"வேண்டாம் அமரா"

"ஏன்? என்னால எதுவும் பிரச்சினை வரும்னு நினைக்கிறீங்களா?"

"ஏதோ சில காரணங்களால் நம்ம வாழ்க்கை இப்படி அமைஞ்சிருக்கலாம். ஆனால் இனி அவரவர் வாழ்க்கையைப் பாக்குறதுதான் நல்லது. ராஜா‌வீட்டு மருமக நீங்க. உங்க தகுதிக்கு நீங்க எங்கிட்ட தன்மையா பேசுறதே பெரிய விஷயம். இதுக்கு மேல உங்க வாழ்க்கைலையும் என்னால சிக்கல் வர வேண்டாம். என்னோட வாழ்க்கைலையும் சிக்கல் வேண்டாம்" என்றாள் நிதானமாக.

"பயமா‌ இருக்கா?"

"இல்ல இதுதான் நிதர்சனம். நாம இப்படி இருக்கதுதான் நல்லது. உங்க மனசு சுத்தமா இருக்கு. அதான் இப்படி ‌கேக்குறீங்க. ஆனா சூழ்நிலைகள் அதற்குச் சரிபட்டு வராது. எங்கேயாவது பார்த்தா ஒரு சன்னமான சிரிப்பு. அது போதும். அதுக்கு மேல நமக்குள்ள எதுவும் வேண்டாம்" என்று கூறிவிட்டு கிளம்பி சென்றாள் கொடி.

அவள் அப்படிக் கூறியது அமராவுக்கு ஏமாற்றமே. கொடிக்கும் அப்படிக் கூறியது விருப்பமில்லைதான். ஆனால் அமரா அவளுடன்‌ உரையாடுவதை நிச்சயம் தேவர் பிள்ளை விரும்ப மாட்டாரே. இங்கு வாழ்நாளே எவ்வளவு நாள் என்று உறுதியில்லாத பொழுது இது தேவையில்லாத நட்பு என்று தோன்றியது.

கொடி முதிர்ச்சியுடன் நடந்து கொள்வது போல் அனைவருக்கும் தோன்றியது. செழியன்‌ உட்பட‌ அப்படிதான் நினைத்தனர். மலர் கூட அப்படித்தான் நினைத்திருந்தாள். ஆனால் அமராவுக்கு வேறு தோன்றியது. கொடியின் இந்த முதிரச்சியின் பின் சோகமோ சிக்கலோ இருக்கிறது‌ என்று நினைத்தாள். விரக்தியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு‌ தோழியாக அவளுக்கு ஏதேனும் உதவ‌ முடியுமோ என்றுதான் அவள்‌ வினவியது. ஆனால் அதையும் ஏற்க முடியாத‌ அளவு அப்படி என்னதான் மனதிற்குள் வைத்திருக்கிறாள் கொடி என்று அமராவுக்கு வருத்தமாக இருந்தது.

திரும்பி வரும்பொழுது முகம் முழுக்கச் சிந்தனையுடனே வந்தாள் அமரா. அவளின் முகத்தில் படர்ந்திருந்த சிந்தனை ரேகைகள் செழியனை சென்றடையாமல் இல்லை. செழியனும் அமைதியாகவே அவளுடன் வந்தான்.

"என்ன ஆச்சுன்னு கேக்க மாட்டீங்களா?" அமரா.

"நீதான் கேக்கக்கூடாதுன்னு சொன்ன?"

"அப்படிச் சொன்னா கேக்கமாட்டீங்க? அப்படியே வீட்ருவீங்களா?"

"இப்ப கேக்கணுமா வேண்டாமா?"

"நீங்க ஒன்னும்‌ செய்ய வேண்டாம். சும்மா நடந்து வாங்க."

அவளின்‌ செல்ல கோபம் அவனுடைய ரசனைக்குள் வந்தது. அதன் பலனாக இதழ்க்கடையில் மெல்லிய புன்னகை. அதெப்படி நேற்றுவரை ஒரு பெண்ணைப் பிடித்திருந்தது என்று கூறினான். இன்று இவளைப் பிடித்திருக்கிறது. எப்படி‌ சாத்தியம் என்று தன் மனதிடம் கேட்டுப்பார்த்தான். அதனிடம் ஒப்புக் கொள்ளும் அளவு பதிலேதும் இல்லை.

வாழ்வில் சில விடயங்களைச் சரிகட்டி வாழ நினைப்பதைக் காட்டிலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்வது வாழ வழிவகைச் செய்திடும். அப்படிதான் அமரா செழியனை அப்படியே ஏற்றுக் கொண்டாள். இது மிகவும் கடினமான காரியம். அப்படி மனம் சொல்வதை மூளை ஏற்று நடந்துவிடாது. மூளை சொல்வதை மனம் ஏற்று நடந்துவிடாது. ஆனால் மனதிற்கும் மூளைக்குமான எல்லைகள் வகுத்துவிட்டால், இது சாத்தியப்படும்.

அவளைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தான் செழியன்.

"இப்படி நடந்து வரலாமா?" என்றான் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு.

"வேண்டாம்.. எனக்காக ஒன்னும் இதெல்லாம் செய்ய வேண்டாம்" என்றாள் கைகளை உருவிக்கொண்டு.

"இது உனக்காக இல்லை. எனக்காக. எனக்குப் பிடிக்கணும்னு தோணுது."

"ஏன்‌ அப்படித் தோணுது?"

"பிடிக்கிறதுக்குக் காரணம் தேடாது மனசுன்னு நீதான சொன்ன?"

அவளின் ‌பாதம் அடுத்த அடி எடுத்து‌ வைக்காமல் நிறுத்தம் செய்திருந்தது.

"அமரா... உண்மையா‌ கேக்குறேன்.‌ இன்னைக்குப் பிடிச்ச கையை நான் விட மாட்டேன். என்னோட கனவுகளை நிறைவேத்த எனக்குத் துணையா‌ இருப்பியா?" என்றான் செழியன்.

"நான் இருக்கதா என்னைக்கோ சொல்லிட்டேன்."

"எப்போ?"

"உங்க கையைப்‌ பிடிச்சு அக்னியை வலம் வரும்போது."

"எனக்கு நிம்மதியா இருக்கு. நீ கொடிகிட்ட என்ன போசிருப்பேன்னு என்னால ஒரளவு கணிக்க முடியும்."

"ஓ.. அந்தளவுக்கு‌ என்னைப் பத்தி தெரியுமா?"

"மத்த விஷயத்தில் தெரியுமா தெரியாதான்னு தெரியாது. ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்த அளவு உன்னோட அடுத்த அடி என்னவா இருக்கும்னு என்னால கணிக்க முடியும். கொடியைப் பக்தியும் கொஞ்சம் தெரியும். நீ என்ன சொல்லிருப்ப. அவ என்ன சொல்லிருப்பான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. கொடியைப் பத்தி இனி நீ கவலைப் படாதே. அவ வாழ்க்கையை அவ பாத்துப்பா. அதைத்தான் எங்கிட்டையும் சொன்னா. உன்கிட்டயும்‌ சொல்லிருப்பா" என்றான் அவர்களின் உரையாடலை ஓரளவு கணித்து.

வீட்டிற்கு இருவரும் சென்றனர். தேவர் பிள்ளைக்குச் சற்று ஆச்சரியம் தான். செழியனிடம் இப்படி ஒரு மாற்றத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அவன் அமைதியாகச் சத்தியாகிரகம் செய்யப் போகிறான் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் உண்மையில் அவன்‌ அமைதியாகவே சத்தியாகிரகம் நடத்திக்கொண்டுதான் இருந்தான். அமராவிடம் ஒதுக்கம் காண்பிப்பது நியாயமும் இல்லை. அதனால் விளையப் போவது நன்மையும்‌ இல்லை. மேலும் அவள் அவனுக்கு ஏற்றார் போல் நடந்து‌ கொள்கிறாள்.

அன்றிலிருந்து இருவரின் இல்லறமும் நல்லறமாகவே சென்றது. சில மாதங்கள் சென்றிருந்தது. இருவருக்குள்ளும் இருந்த புரிதல் காதலாக மாறியிருந்தது என்றும்‌ சொல்லலாம். அமராவும் செழியனும் மனம் ஒத்த தம்பதிகளாக இன்னும் சில அடிகளே இருந்தது என்றும்‌ கூறலாம்.

அவர்கள் இருவரும் அடிக்கடி அரசியின் அறைக்குச் செல்வார்கள். கோதையூரில் அரச மாளிகை மிகவும் உயரம் உள்ளது. அதுவும் அரசியின் அறை இருக்கும் தளத்திலிருந்து பார்த்தால், மொத்த ஊரும் விழிகளுக்குப் புலப்படும். பலகணியில் கைக்கோர்த்து ஊரை ரசிப்பதும், கதைகள் பேசுவதும் அவர்கள் இருவரின் வழக்கம். சில சமயம்‌ ஆனந்தமாய்க் கதைகள் பேசி‌ மொழியாடினாலும், விழிகள் அங்கிருந்த பெரும்‌ விருட்சத்தின் பால் சென்றுவிட்டால், ஒப்புமையில்லா அமைதி தோன்றிவிடும் இருவரிடத்திலும்.

அரசி தூக்கிட்டு இறந்ததாகச் சொல்லப்பட்டதால், அந்த மரம் இருவரின் இதயத்தையும் கூரு போட்டுவிடும்.
அவர்கள் அதைக் காணும்‌ பொழுதெல்லாம் ஏதோ விசித்திர உணர்வு தொற்றிக் கொள்வது‌ போலத் தோன்றும்.

"உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்" என்றாள் அமரா.

"சொல்லு அமரா."

"கொடி‌ கர்பமா இருக்கா" என்றாள் அறிவிப்பாக. அவன் அமைதியாக இருந்தான்.

"உனக்கு எப்படித் தெரியும்?"

"வயிறு கொஞ்சம் மேடா இருந்துச்சு. கேட்டேன்" என்றவளின் விழிகளில் மெல்லிய ஏக்கம் படர்ந்திருந்தது.

"கொடி கர்பமா இருக்கது இருக்கட்டும். உனக்கு என்ன தோணுது நம்ம வாழ்க்கையைப் பத்தி? உனக்கு என்னோட குழந்தை வேணுமா?" பதிலேதும் சொல்லாமல் அவள் செல்லப் பார்க்க, அவளைக் கைப்பிடித்துத் தடுத்தான் செழியன்.

"பதில் சொல்லாம விடமாட்டேன்."

"இதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது."

"கோவமா?"

"இது உங்களுக்குத் தோண ரெண்டு மாசமா?"

"ரெண்டாவது நாளே தோணுச்சு. ஆனாலும் ஒரு தயக்கம். முதல் நாளே ஒரு பெண்ணைக் காதலிச்சேன்னு சொல்லி, அடுத்த நாள் உன்னையும் காதலிக்கிறதா சொன்னா அது அபத்தமா தோணுச்சு. இதையெல்லாம் விட நீ என்னைத் தப்பா நினைச்சிருவியோன்னு மனசுல கொஞ்சம் ‌பயம்."

"இப்படியெல்லாம் ஆண்கள் யோசிப்பாங்களா? நான் பார்த்துமில்லை. கேட்டதுமில்லை. பிடிச்சிருந்தா எத்தனை பெண்களுடன் வேணாலும் குடும்பம் நடத்தும் ஆண்கள்தான் எனக்குப் பரிட்சியம்."

"அப்போ நான் அந்த இனம் இல்லைனு வச்சுக்கோ" என்றான் அவளை அருகில் அழைத்து.

"அரசியோட மறுபிறவியோ நீங்க. உங்க அம்மாவோட ஏக்கத்தினால் திரும்பவும் அவுங்க உருவத்தில் வந்து பிறந்திருக்காங்களோ?" அமரா.

அவள் கூற்றைக் கேட்டவன் நகைத்தான்.

"எங்க அம்மாவைக் கேளு. அரசியோட மறுபிறவி நீதான்னு சொல்றாங்க. இழந்த சந்தோஷத்தை‌ மீட்டுக் கொடுத்துட்டியாம்" என்றுரைத்தவன், அவளைச் சிறையெடுத்திருந்தான். அவளின் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தவன் முதல் முத்தம் ஒன்றை வைக்க, அவள் அவன் கைகளுக்கு அடங்கி ஒடுங்கி மடிந்து போகத் தயாராகவே இருந்தாள்.

இமையாமல் ஓர் இரவு, இழைய இருவர் என்று அவர்களின்‌ தனிமை‌ இனிமையாய் அமைந்தது. அவளின் அணுக்கம், இவனின் இணக்கம் என்று அதற்குச் சாட்சியாக, அமரா கருவுற்றிருந்தாள். இப்பொழுது உலகிலே மிகவும் மகிழ்ச்சியான ஒருவர் உண்டென்றால் அது கோகிலம்தான். ஆனால் அதைவிடத் தேவர்பிள்ளை மகிழ்ச்சியாக இருந்தார் என்று கூறினால் மிகையாகாது.

அமரா இந்த விடயம் உரைக்கவும், ஊரையே அமர்க்களப்படுத்திவிட்டார் தேவர் பிள்ளை. பரிவட்டம் கட்ட வாரிசு வந்தாயிற்றே. பிறக்க போவது ஆண்பிள்ளைதான் என்று அவருக்குத் திண்ணம். அமரா வீட்டிருந்து வந்து‌ சீர்‌ வைத்துக் கௌரவித்துச் சென்றனர். ராஜா வீட்டிற்கு வாரிசு வரப்போகிறதென்று, ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்துக் கூறிவிட்டனர். அதற்காக ஒரு விழாவும் ஏற்பாடு செய்தனர். செழியனும்‌ மகிழ்ச்சியாகவே இருந்தான். ஆனா

விழாவில் வாயெல்லாம் பல்லாகத் திரிந்த தேவர் பிள்ளையை வார்த்தைகளால் வலிக்க வலிக்க அடித்தான் செழியன். அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணமாயிற்றே.

அவனிடம்‌ வந்து வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவரிடமும், தனக்குப் பெண் பிள்ளைதான் பிறக்கும் என்றும், அதற்கு அரசி என்று பெயரிடப் போவதாகவும் கூறினான். இதைக்கேட்ட தேவர் பிள்ளை கொதித்தெழுந்தார். கோவத்தை அடக்கிக் கொண்டு காத்திருந்தார், அவனைக் குத்திக்கிழிக்க.

விழா முடிந்ததும் வீட்டினர் மட்டுமே அமர்ந்திருந்தனர். சாப்பிடுவதற்கு அனைத்தும் தயாராய் இருந்தது. தேவர் பிள்ளையின் முகத்தில் எள்ளும்‌ கொள்ளும் வெடிக்க, அதை இன்னும் சில மணிநேரம் ரசித்திட வேண்டும் என்று செழியன் நினைத்தான். அமராவை‌ அமர வைத்து, அவளுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தான்.

"அமரா... நல்லா சாப்பிடு. இப்படி ஒழுங்கா சாப்பிடாம இருந்து, நம்ம அரசியும் ஒல்லியா பிறக்கவா?" என்று‌ அரசியில் ஒரு அழுத்தம் கொடுத்தான். ஒரு தட்டு பறந்து சென்று விழுந்தது. தேவர் பிள்ளை உக்கிர மூர்த்தியாக நின்றிருந்தார்.

பின்‌ ஊரே மறந்த ஒரு பெயரை தன் மகன் உச்சரிப்புச் செய்து நச்சரித்துக் கொண்டிருக்கிறானே. கோகிலத்தை முறைத்தார் அவர். அடுத்த அடி அவருக்கு விழ வேண்டியது.

"இதுக்கு மேல எனக்கு விருப்பமில்லாத விஷயம் நடந்தா, கொலை செய்யவும் நான் தயங்க மாட்டேன்" என்றிர் கண்டனத்துடன்.

"அதுதான் உங்களுக்குக் கைவந்த கலையாயிற்றே. இனி இப்படிப் பல காரியம் நடக்கும். நிம்மதியில்லாம நடைபிணமா நீங்க இருக்கணும். ஒரு கொலைச் செஞ்சுட்டு குற்ற உணர்வுகூட இல்லாம இருக்கீங்க.‌ சுத்தியிருக்கவுங்களும் மறந்துட்டாங்க. அதை இனிமே ஞாபகப் படுத்துறதுதான் என்னோட வேலை" என்று செழியனும் சரிக்கு சரி கத்தினான்.

"அமரா.. சாப்பிட்டு முடிச்சோன, அரசியோட அறைக்குப் போ. அரசியோட ஓவியம் ஒன்னு மேல இருக்கு. அதை எடுத்து வந்து பூஜை‌ அறையில் வை. நாளையிலிருந்து அவளைத்தான் நாம சாமியா கும்பிடணும். அப்பதான் அவளே வந்து நமக்கு மகளா பொறப்பா" என்று‌ கூற எதுவும் செய்ய முடியாமல் எழுந்து சென்றார் தேவர் பிள்ளை.

கோகிலம் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. தனது மகளுக்கு இத்தனை வருடங்கள் கழித்து நியாயம் கிடைக்கப் போகிறது. வினை விதைத்தவன் வினையறுக்க வேண்டும். விதைத்துவிட்டார். இனி அறுவடை காலம். அவர் இட்ட பாவங்களுக்குப் பட்டு நோக வேண்டிய காலம் வந்துவிட்டது.

செழியனும்‌ அமராவும் தனித்திருந்தனர். செழியன் ‌அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டான். அதில் அவளும்‌ உச்சி குளிர்ந்து போயிருந்தாள். பின் உலகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் மனைவி என்பவளை ஒரு பொருளாய் காண்கையில், இவளுக்குக் கிடைத்திருப்பது தேவ வாழ்க்கையல்லவா?

"அமரா.. என்ன யோசனையா‌ இருக்க?"

"ம்ம்ம்..‌யோசனைதான். இந்தத் தருணத்துக்குத் தான் நீங்க காத்திட்டு இருந்தீங்களோன்னு."

"எந்தத் தருணத்துக்கு?"

"உங்க அப்பாவைப் பழி வாங்க?"

"நான் பழி வாங்குறதா தோணுதா உனக்கு?"

பதிலில்லை அவளிடம்.

"இதுக்காகதான் உன்கூட‌ வாழ ஆரம்பிச்சதா நினைக்கிறியா?"

"இல்லை" என்று இடவலமாகத் தலையாட்டினாள்.

"காலம் கடந்தாவது கொஞ்சம் நீதி வேண்டாமா? நீ சொல்லலாம். இன்னும் எத்தனையோ பிரச்சினை இருக்குன்னு. ஆனா என்னோட வீட்ல சமைக்காத நீதியை நான் வெளில பரிமாற முடியுமா?" என்றான் தெளிவாக.

"ம்ம்ம்... உண்மைதான். இனி இந்த‌ மாதிரி மாற்றங்கள் நிறைய நடக்குமா? உங்க ஒருத்தர் மனசுல‌ இருக்க மாற்றம் நல்வினையை விதைக்குமா? அது நம்மளைத்‌ திருப்பி அழிச்சிருமோன்னு பயமா இருக்கு?"

"என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறியா?"

"நிச்சயம் இல்லை. எல்லாரும் ஒரே மாதிரி இருக்கும் போது நீங்க மட்டும் ‌ஏன் இப்படித் தனிச்சு இருக்கீங்கன்னு தெரியலை. என் புருஷன் நல்லது நடக்க விதையா இருக்கது எனக்கு‌ சந்தோஷம் தான். ஆனால் விதையை முளைக்க வழிவிடனுமேங்கிற வருத்தம்தான்."

"அமரா.. ஒரு புரட்சி பல பேர் சேர்ந்து கூட்டமா செஞ்சிருக்கலாம். ஆனால் அதற்கு விதையா ஒருத்தன் தான் இருக்க முடியும். ஒருத்தர் ஒரு தனித்துவமான கருத்தை சொல்லும் போது அவர் கூட்டத்திலிருந்து விலகி நிக்கற மாதிரி இருக்கலாம். ஆனா தனியி இருக்கதா பொருள் கிடையாது. அவனுக்குப் பக்க பலமா அவன் கருத்தரித்த நல்ல கருத்து இருக்கே. அது மனசுல ஆழமா வேரூன்றி இருந்துச்சுன்னா, அதுவே அவனைப் பகடையாய் பயன்படுத்திச் சாதனைகள் புரியும். அதைச் சுமந்தவனுக்கு அது சோதனையைக் கொடுத்தாலும், பின்னாடி ஒரே நாள் நிலைச்சு நிக்கும். எதிரியா இருந்த மொத்த கூட்டத்தையும் தனக்குப் பின்னாடி சேத்துக்கிட்டு. அந்த விதை நானா இருந்துட்டு போறேன்."

கொஞ்சம் கொஞ்சமாக மாலை என்னும் மயங்கிய பொழுதை இருள்‌ அகழ்ந்தெடுக்கத் தொடங்கியது. நட்சத்திரங்களும் ஒற்றை மதியாளும் மேல்‌ வானை வண்ணமயமாக்கிட, புள்ளிணங்கள் கோகிலமாய் ஒலியெழுப்பிட, இருண்மை‌ சூத்திரம் இதமாய்ப் படர்ந்தது. பகலும் இரவும் மாறி மாறி பொழுதினை சுற்றி சுளுக்கெடுக்க, அமராவின் நாட்களும் இனிமையாகவே சென்றது. வளர்பிறையாய் விரிந்த வயிற்றில் மெல்லிய அசைவுகள். அவளின் இதயத் துடிப்பின் அரரீசி ஒலித்தது. தாய்மையின் பேரரவம் உடல் முழுக்க ஒலித்துக் கொண்டே இருந்தது. கொடியை அதன்பிறகு இரண்டு முறை சந்தித்தாள். அவளுக்கும் வயிறு பெறுத்திருந்தது. நிறைமாதம். கொடி கூறியது போல, ஒரு சின்னச் சிரிப்பை மட்டுமே உதிர்த்துச் சென்றாள்.

மலருக்கும் திருமணம் முடிந்திருந்தது. மலருக்குச் சொந்தத்தில் தான் திருமணம். அதே ஊர்தான். அதனால் மலரும்‌ கொடியும் ஒன்றாகவே‌ இருப்பார்கள். பெரும்பாலும் கோவிலில் இருவரையும்‌ சேர்த்தே பார்ப்பாள் அமரா. மலரிடம்‌ அவ்வப்பொழுது அமரா உரையாடுவதுண்டு. கொடியின் விழியில் விரவியிருக்கும் உணர்வை எவ்வளவு முயன்றும் அமராவால் மொழிபெயர்க்க முடியவில்லை.

இது ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூகம். அதில் பெண்கள் ஓரமாய் வாழ்கின்றனர், சில பல அடக்குமுறைகளுடன். அமரா இயல்பில் விதிவிலக்கு. கொடி அனுபவத்தின் விதிவிலக்கு. இப்பொழுது சிந்தனைகளின் அழுத்தமாய் வலம் வருகிறாள் கொடி. வாய்ப்பு கிடைத்தால் தன் சிந்தனைகளையும் நிந்தனைகளையும் வெளிப்படுத்திவிடுவாள் என்று நினைத்தாள் அமரா. பலருக்கு அனுபவங்கள் இருந்தாலும், மூளை சிந்திப்பதில்லை. சிந்தனைகளுக்கும் தடை விதித்துவிட்டனர் போல.

இதுவரையில்லாமல் அமராவும் கொடியும் கொஞ்சம்‌ முற்போக்குச் சிந்தனை உடையவர்களாக இருந்தனர். பல‌தலைமுறையாய்‌ அடிப்பட்டிருந்தாலும், எண்ணங்களில் கூட, உதிக்காத கருத்துக்களுக்கு உரிமைக்காரிகளாக இருந்தனர். ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்று‌ வாழ்வியல் முறைமைகள் படைத்தது நிச்சயம் ஒரு பெண்ணாக இருக்க முடியாது. இந்தக் கருத்தும் ஏதோ ஒருவன் மனதில் விழுந்த விதை. அடக்கி ஆண்டுவிட்ட மனதின் ஆணவ‌ ஒலி. அதை எவ்வளவு வலுவாக அவன் கருத்தரித்திருந்தால், இத்தனை தலைமுறை கடத்தமுடியும். அதுவும் பெண்களே நாம் இப்படித்தான் வாழ வேண்டும் ‌என்று‌ திண்ணமாக‌ எண்ணுமளவு. இவர்களின் எழுச்சிக்குத் துணையாகச் செழியன் இருப்பானா? இந்த எழுச்சியில் வெல்லப் போவது யார்? துவலப்‌ போவது‌ யார்? மூவரும் எதிர்பார்க்கும் சமுதாயம் உருவாகுமா?

நிலவு ஒழுகும்...

 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33

பொழில்

பகலும் வெயிலும்
மங்கலமும் இசையும்
மலரும் மணமும்
நெற்றியும் சுட்டியும்
மணையும் வினையும்
மாலையும் கழுத்தும்
கைகளும் பிணைப்பும்
நாணும் முடியும்(முடிச்சு)
நீயும் நானும்


சில நாட்கள் கடந்திருந்தது. நளனும் அனிச்சமும் அந்தச் சூழலுக்குத் தங்களைப்‌ பழக்கப் படுத்திக்கொண்டனர்.

அதுவும் பொழிலின் உணவு முறைகள் அவர்கள் இருவரையும் அடிமைப்படுத்திவிட்டது. உணவு முறைகள் சமைக்க ஒரு நூலே இருக்கிறதாம். மடை நூல் என்று பொன்னி கூற வாய் பிளந்தனர்.

உணவு சமைப்பது, பந்தி விரிப்பது, அதில் தலைவாழை விரித்து, உப்பில் தொடங்கிப் பாயாசம் வரை ஒரு ஒழுங்குடன் பரிமாறப் படுவதைக் கண்டு விழிவிரித்துப் பார்த்தனர்.

உணவு உண்ண அமர்ந்தால் உண்ணலும்(பசிதீர உட்கொள்ளல்) துய்த்தலும்(சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்) இல்லை அவர்கள் இருவரிடத்திலும். விழுங்கல், மாந்தல்(பெரு வேட்கையுடன் உண்ணுதல்), நுங்கல்(ஒரே வாயில் உறுஞ்சி குடித்தல்), இவைதான் அவர்கள் இருவரின் செயலாக இருக்கும்.

வாழையிலை விரித்து, அதில்நெற்சோறு, வரகுச்சோறு, வெண்ணற்சோறு, நண்டுக் கறி, உடும்புக் கறி, வரால்மீன் குழம்பு, கோழியிறைச்சி வற்றல், பன்றியிறைச்சி, முயல், ஈயல், மாங்கனிச் சாறு, மாதுளங்காய்-மிளகுப்பொடி-கறிவேப்பிலை பொரியல், ஊறுகாய் கூட்டு பொறியல், அவியல், பிரட்டல், மசியல் என்று அனைத்தும் பரிமாறப்பட, நளனும் அனிச்சமும் என்ன உணர்ந்தார்கள் என்றே கூறமுடியாது. காலையில் கண் விழித்ததில் இருந்து அங்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவர்கள் இருவரையும் வியப்புக்குள்ளாக்கியது. காலையில் மூலிகைச் சாரில் நாள் தொடங்கி மீண்டும் ஒரு மூலிகைச்‌ சாரில் நாள் முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம். இவை அனைத்திற்கும் பொருள் கூட அறியாத ஒரு உலகத்தில் பிறந்திருக்கிறோமே என்று வருந்தினர் இருவரும்.

நாவின் வழியே நாகரீகம் தோன்றயது‌ என்பது உண்மைதான் போல. ஆதி மனிதன் முதலில் நாகரீகம் கண்டது, உண்ணும் உணவின் வழிதானே.

அவர்கள் இருவரும் விரும்பி உணவு உட்கொள்வதைப் பார்த்து விதவிதமாய்ச் சமைத்தார் பொன்னழகி.

இருவரும் வயலில் இறங்கி வேலை பார்த்ததனர். விதையிட்டு அது மறுநாள் மண்ணிலிருந்து வெடித்துக் கொண்டு வருவதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். நெற்கதிரை கடவுளாய் பாவித்து, போற்றிய பெருமைகளை விழி கொள்ளா ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஒவ்வொன்றையும் மனதில் குறித்துக் கொண்டனர். அதைக் கற்றுக்‌ கொள்ள வேண்டும் என்ற‌ ஆர்வம் இருரிடமும் மேலோங்கியிருந்தது.

ராணி வேலு நாச்சியார் கோட்டையைப் பிடித்த பின்பு ஊர் முழுக்கக் கொண்டாட்டங்களும் களியாட்டங்களும்தான். புனல் நீராடல் விழாக்கள் கொண்டாடப்பட்டது. உழவு சார்ந்த விளையாட்டான மாடுபிடித்தல், வீர விளையாட்டான மல்யுத்தம், வாட்போர், மட்போர் என்று அனைத்து விதமான விளையாட்டுகளும் நிகழ்ந்தது‌. நளன் மற்றும் அனிச்சம் இருவருக்கும் ஒரு நிமிடம் கூட, பொழுது சலித்துப் போகவில்லை. அவர்களும் களைத்துப் போகவில்லை. அவர்களின் அதீத ஆர்வம்‌ கண்ட பொன்னி கூட வியந்தார். அவர்களின் ஊரில் இது எதுவும் இல்லை என்று கூறி சமாளித்து வைத்தனர்.

கழனியின் வாசமும், அதன் ஸ்பரிசமும் இருவரையும் மயக்கி வைத்திருந்தது. வயலில் இறங்கி விளையாடுவதே இருவருக்கும் வேளை தவறாத வேலை.

ஒருநாள்‌ இருவரும் வரப்பில் இருந்து சாலைக்கு ஓடி வந்தனர். அனிச்சத்தைத் துரத்திக்கொண்டு நளன் ஓடி வந்தான்.

அப்பொழுது அங்கு வந்த ஒருவர், "தம்பி, சற்று நேரம் ஓடாதீர்கள். இந்த எருமை மாட்டிற்கு ஓடுபவர்களைக் கண்டால் பிடிக்காது" என்று எச்சரித்துவிட்டு சென்றார்.

அந்த எருமை மாடு‌ மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்தது. இருவரும் அந்த எருமையைத் திரும்பி பார்த்தனர்.

"நளன், அந்த உருவத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு. ஏன் இது இப்படி இருக்கு. பொன்னி அக்கா வீட்ல வெள்ளை நிறத்தில் அழகா ஒரு உயிரினம் இருக்குமே..." என்று சிந்தனையுடன்‌ கூறினாள்.

"பசு மாடு" என்று நளன்‌ கூற, "உனக்கு எப்படி இதெல்லாம் ஞாபகம் இருக்கு" என்று சலித்துக் கொண்டாள்.

"சரி நீ சொல்லு. பசு மாடுக்கு என்ன வந்துச்சு" என்றான் நளன்.

"அது எவ்ளோ சாதுவா இருக்கு. அதைச் சாமியா கும்பிடுறாங்க" என்றாள்‌ அனிச்சம்.

இங்குச் சாமி, கோவில் என்றெல்லாம் மக்கள் பக்தியுடன் இருப்பது அவர்களுக்கு ஆச்சரியம் தான். அவர்கள் உலகைப் பொறுத்தளவு அண்டம்‌ மட்டுமே கடவுள்.

"அனி...‌ இதுவும் சாதுவான விலங்குதான்" என்றான் அவன்.

"பார்த்தா அப்படித் தெரியல" அனி.

"பொன்னி அக்கா அடிக்கடி சொல்லுவாங்களே. எருமை மாட்டுல மழை பெஞ்ச மாதிரின்னு. அதுக்கு அர்த்தம் என்ன அக்கான்னு கேட்டேன். அது கொட்டுற மழைலையும் இந்த மாடு அசையாம இருக்குமாம்" என்று விளக்கம் அளித்தான்.

"ஓ... அப்போ உன்னை மாதிரியா?" என்றாள் குறும்பு கூத்தாடியக் குரலில்.

"உன்னை... இரு... உனக்கு நான் யாருன்னு காட்றேன்" என்று கூறியவன், அவளின் கையைப் பிடித்து இழுக்க, அவள் அவனிடம் இருந்து தப்பி ஓடினாள். நளன் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.

திடீரென அவர்கள் பின் அந்த எருமையும்‌ ஓடி வர, இருவரும் பயந்துவிட்டனர். அவ்வளவு நேரம் சாதுவாய் இருந்த எருமைக்கடா அசுர வேகத்தில் அவர்களைத் துரத்தி வர, அதனிடம் இருந்து தப்பிக்க, தடகள வீரர்கள் போல் அவர்கள் இருவரும் ஓடினர். கால்கள் இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது‌. மூச்சுவிடவும் நேரமின்றி ஓடினர். இதற்கு மேல் ஓட முடியாது என்று அனிச்சம் கீழே அமரப் பார்க்க, மாடு மிக அருகில் வந்துவிட்டது. நளன் அனிச்சத்தை இழுத்துக் கொண்டு பக்கவாட்டில் சென்று விழுந்தான். ஏதோ சப்தம் கேட்டு ஓடி வந்த சிலர், அந்த மாட்டின் கொம்பைப் பிடித்து அடக்கினர்.

அனிச்சமும் நளனும் மூச்சிறைக்க அந்தச் சம்பவத்துக்குச் சாட்சியாகினர். அவர்கள் இருவரையும் அமர வைத்து, அருந்த தண்ணீர் அளித்தனர். நீரைப் பருகியதும்தான் இருவருக்கும் உயிர் வந்தது.

"இதற்கெல்லாம் அச்சம் கொள்வதா? புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரப்பரம்பரை நாம். பிறந்திருக்கும் குழந்தைக்கு எதைப் பழக்குகிறோமோ இல்லையோ, வீரத்தைப் பழக்கிவிடுவோம். நீங்கள் இப்படி இருப்பது நம் சீமைக்கே இழுக்கல்லவா?" என்று பெருமை பேசினர் சிலர். அவர்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். செய்தி கேட்டு பொன்னியும் அந்த இடத்திற்கு வந்தார்.

இருவரையும் பார்த்து திருஷ்டி கழித்தார்.

"எருமைக்குப் பயப்படக்கூடாது. எதிரில் யார் இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மனோபலம் வேண்டும். அதற்குச் சான்று பல கண்டீர்களே. மரணத்தை எதிர்த்து நின்ற மங்கை, மரணத்தை விருந்து வைத்து அழைத்துக் கொண்ட குயிலி என்று வீரமகள்கள் வலம் வரும் பூமி இது. உங்கள் இருவருக்கும் பயிற்சி அளிக்கச் சொல்கிறேன்" என்று பொன்னி‌ கூற இருவரும் நன்றாக மண்டையை ஆட்டினர்.

"திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டேன். வரும் மங்கல தினத்தன்று அரண்மனையில் ராணியின் தலைமையில் திருமணம் நிகழும். இனி உங்கள் வாழ்விற்குத் தேவையான அனைத்தும் ராணி அளிப்பார். ஆனால் பாதுகாப்பு ராணி அளிக்கமாட்டாள். அதை நீங்கள் வீரம் பயில்வதன் மூலம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு சென்றாள்.
********

நளனும் அனிச்சமும் தனிமையில் அமர்ந்திருந்தனர். அந்த மரத்தின் அடியில். அது அவர்களின் உயிராய்ப் போய்விட்டது. இவர்களுக்கும் அந்த மரத்திற்கும் விளக்கமுடியா தொடர்பு போல.

"நளன், எல்லாருக்கும் முன்னாடி அசிங்கமா போச்சு. நீ என்னைப் பக்கவாட்டில் இழுத்தியே. அதை முதலே செஞ்சிருக்கலாம்" என்று சலித்துக் கொண்டாள்.

"என்ன செய்றது. உன்னால முடியாதுன்னு நீ விழுந்த அப்பறம்தான் எனக்குத் தோணுச்சு. ஆனா நமக்கு உண்மையா வீரம்ங்கிறது இல்லை. அப்பறம் எதுக்கு அது இருக்க மாதிரி காட்டிக்கணும். போலித்தனம் ரொம்ப நாள் நிலைக்காது அனி."

"பனிப்புயல் வரப்போகுதுன்னு துரிதமா செயல்ப்பட்ட‌ நீயா இப்படிச் சொல்ற. இந்த உலகத்துக்கு வந்தோன நீ நிறையவே மாறிட்ட."

"அது அப்படி இல்ல அனி. பனிப்புயல் எனக்குப் பழக்கப்பட்ட ஒரு விஷயம். அதனால மூளைக்குத் தெரியும். அப்படி ஒரு சங்கடமான சூழல் வந்தா எப்படிச் செயல் புரியணும்னு. ஆனா இந்த எருமை மாடு எனக்குப் புதுசாச்சே. அதான் மூளை யோசிக்க நேரம் எடுத்துக்குது" என்று விளக்கினான்.

"நளன், உனக்கு இந்த உலகம் பிடிச்சிருக்கா?"

"சொல்லத் தெரியல அனி."

"பொய்‌ சொல்லாத.. உனக்குப் பிடிச்சிருக்கு" என்றாள் அவள்.

"சரி, எதை வச்சு அப்படிச் சொல்ற?"

"பொன்னி அக்கா நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டாங்க. நீ ஏன் எதுவுமே சொல்லல?"

"என்ன‌ சொல்லணும்?"

"உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்னு சொல்லலாமே."

"உன்னைப்‌ பிடிக்கலைனு நான் எப்பவாச்சும் சொன்னேனா?"

"பேச்சை மாத்தாத."

"நீதான் புரியாம பேசுற. கல்யாணம் வேண்டாம்னு சொல்ல காரணம் என்ன இருக்கு. இந்த உலகம் உன்னோட‌ கற்பனை உலகம். இதுல ஒருநாள் உன்னை வாழ வைக்க முடியாம போய்டுமோன்னு நான் பல தடவை நினைச்சதுண்டு. அப்படி இருக்கப்ப எனக்கு இது ஒரு வாய்ப்பு. அதை எப்படி விடுவேன். இன்னொரு காரணம் கூட இருக்கு... " என்று கூறியவன் தனது பேச்சை நிறுத்தினான்.

"அது என்ன?"

"அதை அப்புறம் சொல்றேன். நீ சொல்லு, உனக்கு இந்த உலகம் புடிக்கலையா? இவ்ளோ கேள்வி கேக்குற?"

"உண்மையைச் சொல்லணும்னா பிடிச்சிருக்கு. ஆனா பயமா இருக்கு. இங்க இருக்கது உயிருக்கு உத்தரவாதம் இல்லையோன்னு தோணுது" என்றாள்‌ அவள்.

அவளின் பயத்திற்கு என்ன காரணம் என்று அவன் நன்றாகவே அறிவான். இங்கு வந்த நொடி அவள் இந்த உலகை அனுஅனுவாய் அனுபவித்தாள். ஆனால் மங்கையின் இறப்பிற்குப் பிறகு அனைத்தும் தலைகீழாகிவிட்டது.

"சரி... உனக்கு‌ இந்தக் கல்யாணம் பிடிக்கலையா?"

பதிலேதும் அவள் கூறவில்லை.

"என்ன அனி. பதிலே சொல்லாம இருக்க" என்று அழுத்திக் கேட்டான் மற்றொரு முறை.

"கல்யாணம் பிடிக்கலைனு இல்லை. இங்க கல்யாணம் செய்றது சரியா வருமான்னு ஒரு எண்ணம்‌. நாம எப்போ திரும்பப் போவோம்" என்று அவள் வினவ, அவன்‌ சிரித்துக் கொண்டான்.

"நல்ல கேள்வி. ஆனால் யாரை நண்ணிக் கேட்பது?" என்றான் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழியில்.

"ம்ம்ம்... நல்லா பேச கத்துக்கிட்ட. சரி.. யாரையும் கேட்க வேண்டாம். உனக்கு என்ன தோணுது சொல்லு."

"ஒருவேளை திரும்பி போகலைனா என்ன செய்வ?" என்று அவன் வினவ, அதைச் சிந்தியாதவள்‌ போல் அதிர்ச்சியுடன் நளனைப் பார்த்தாள்.

"நாம ஏன்‌ இங்க வந்தோம். எப்படி வந்தோம். இதெல்லாம் விடையில்லா வினா. நாம போய் யாருக்கிட்டயாச்சும் சொன்னாக் கூட‌ நம்ப மாட்டாங்க. ஆனா நாம இங்க வந்ததுக்குக் காரணம் மங்கை அம்மாதான்" என்று நளன் கூற, புரியாமல் பார்த்தாள் அவனை.

"எனக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு"

"இரு வேறு பிரபஞ்சம். இரு வேறு காலம். நடந்த விஷயங்களை வச்சு பார்க்கும்‌ போது இவர்கள் காலத்தை‌க் கடந்து நாம வாழ்ந்திருக்க வேண்டும்.‌ நமக்குக் கிடைச்ச எலும்பு கூடு, நம்ம உலகத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்த மங்கை அம்மாவோடதா இருக்கலாம். அதனால இரண்டாயிரம் வருடம், இவர்களைவிட நாம முன்னோக்கி இருக்கோம்னு ஒரு முடிவுக்கு வரலாம்."

"அங்க கிடைத்த எலும்பு கூடு எப்படி அங்க வாழ்ந்த மங்கையா இருக்கும்னு உறுதியா சொல்ற."

"அந்த இடத்திற்குப் போனோன உனக்கு ஏன் அப்படிக் கனவு வரணும்."

"நீ சொல்றபடி பாத்தாலும், எனக்கும் அந்த எலும்பு கூடுக்கும் ஏதோ பந்தம் இருக்கு. அதனால எனக்கு அந்தக் கனவு ‌வந்திருக்கலாம் இல்லையா?"

"ம்ம்ம் அதுவும் உண்மையா இருக்கலாம். ஆனால் உன்னோட எண்ணங்கள் பிரபஞ்சம் தாண்டி பயனிச்சிருக்கு, இந்தக் கருவியால். அதாவது உன் கனவில் நிகழ்ந்த நிகழ்வு உண்மையா நடக்க இருந்த பிரபஞ்சத்துக்கு நம்மை இந்தக் கருவி கடத்திருக்கு" என்று தனது சட்டைப்‌ பையில் இருந்து ஒரு கருவியை எடுத்தான். கைகளுக்கு அடக்கமாய் ஒரு சிறிய கருவி.

"எனக்குப் புரியலை. இது தீரன் வீட்டில் இருந்ததுதானே. நாம இங்க வந்ததுக்குக் காரணம் இந்தக் கருவியா? இல்லை இங்கே நடந்த சம்பவமா?" என்றாள் குழப்பத்துடன்.

"இரண்டும் இருக்கணும். முதன்மை‌ காரணம் மங்கை அம்மாவுக்கு இங்க நடந்த அசம்பாவிதம். இரண்டாவது காரணம் இந்தக் கருவியா இருக்கலாம்."

"அப்போ நீ என்ன சொல்ல வர. இந்த உலகப் இரண்டாயிரம் வருடம் பின்னோக்கி இருக்குன்னா, இன்னும்‌ இரண்டாயிரம் வருடம் கழித்து, இந்த உலகத்துக்கும் நம் கதிதானா?"

"அப்படியும்‌ சொல்ல முடியாது. இது எழுதி வச்சு நடக்குறதில்லையே. இப்போ இங்க எதிர்பாரா விதமா நாம வரல. அந்த மாதிரி எல்லாப் பிரபஞ்சத்திலும் எல்லாம் ஒரே மாதிரி நடக்கணும்னு அவசியம் இல்லை. வேற ஒரு பிரபஞ்சத்தில் ஆங்கிலேயரின் பிடியில் இந்த இடம் இல்லாமல் இருக்கலாம். அங்கு மங்கையம்மா உயிரோட இருந்திருக்கலாம். நீயும் வேறு காலகட்டத்தில் பிறந்து வாழ்ந்திருக்கலாம். இது எல்லாமே அனுமானம்தான். என்ன நடக்கும்னு உறுதியா நம்மளால சொல்ல முடியாது" என்று அவன் பெருங்கதைகள் பல உரைக்க, அவள் மலைத்துப் போனாள்.

"அனி..‌ இங்க இருக்கவரை வேற எதையும் யோசிக்காத. எனக்கு நீயும் நானும் நிம்மதியா இருக்கணும். ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வாழணும்" என்றான் கெஞ்சலும் கொஞ்சலுமாக.

அனிச்சம் அவளை நினைத்தே நொந்து கொண்டாள். அங்கு இப்படி ஒரு உலகம் இருக்கிறது என்று அவனை வாட்டி வதைத்தாள். இங்கு வந்த பிறகு, இது ஏன் இப்படி இருக்கிறது என்று அவனை வதைக்கிறாள். இரண்டிற்கும் அவன் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று சிந்திக்கவில்லை அவள். அதன்பிறகு அவனுக்காகக் கொஞ்சம் வாழ வேண்டும் என்று முடிவு செய்தாள்‌.

*********

"பொன்னி அக்கா.... மங்கை அக்காவைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்" என்றாள் அனி. நளன்‌ விடமாட்டாயா என்று ஒரு பார்வைப் பார்த்து வைத்தான். அவள்‌ அதைக் கண்டு கொள்ளவில்லை.

"மங்கையைப்‌ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஏன்?" பொன்னி.

"அவுங்களைக் காப்பாத்த முடியலைங்கிறது‌ எங்க மனசோட ஏக்கமாயிருச்சு.‌ அதான் அவுங்களைப்‌ பத்தி தெரிஞ்சுக்கணும்னு மனசு துடிக்கிது" என்றாள் இறைஞ்சுதலாக.

"மங்கையைப் பற்றி எனக்கு ஓரளவுதான் தெரியும். அவள் உடையாள் காளி படையின் ஒரு பிரிவிற்குத் தளபதி. வாள் சண்டையிலும்‌ வேல் எரிவதிலும் தேர்ச்சி பெற்றவள். அவளிடம் பெண் என்ற நளினம் நான் பார்த்தவரை இருந்ததில்லை. மதம் கொண்ட களிறாய் வேகம் பேணுபவள். பத்தாண்டுகளுக்கு மேல் கணவனைப் பிரிந்து வாழ்பவள். ஒரு வருடத்திற்கு முன்பே அவள் கணவனைத் தேடி வந்தது. அதுவரை அவள்‌ ராணியிடம் பணியாற்றினாள். இப்பொழுதும் ராணியடம்தான் பணி. குழந்தை பேறு என்பதால் ராணியின்‌ கட்டளையின் பேரில் கணவனுடன் இருந்தாள்" என்று மங்கையைப்‌ பற்றிப் பல அரிய மர்மமான தகவல்களை அளித்தாள்.

"ஏன்.. அப்படி.. எதாவது காரணம் ‌இருக்கா?"

"காரணம் இருக்கலாம். ஆனால் அந்தக் காரணம் அறிந்தவர்கள் மூவர் மட்டுமே. அதில் இருவர் இப்பொழுது இல்லை" என்றாள்‌ பூடகமாக.

"புரியல அக்கா... கொஞ்சம் புரியிற‌ மாதிரி சொல்லுங்க."

"அந்தக் காரணம் தெரிந்தவர்கள் மங்கை, அவளது கணவன் மற்றும் ராணி. இந்த‌ மூவரில் இருவர் உலக வாழ்வை துறந்துவிட்டனர். ஆனால் ராணியிடம் இருந்து அந்தக் காரணத்தை நிச்சயம் தெரிந்து கொள்ள இயலாது" என்று அவள் கூறவும், அனிச்சத்திற்குச் சற்று ஏமாற்றமாய் இருந்தது.‌

மங்கையின் வீட்டிற்கு அழைத்துச்‌ சென்றாள் பொன்னி. உள்ளே சென்றவளின் விழிகளில் பட்டது மங்கை வரைந்திருந்த ஓவியங்கள் தான். விடுதலைப் போராட்டங்களை மிகத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். ராணி வேலு நாச்சியாரின் ஓவியம் ஒன்றும் இருந்தது. அவளின் அன்னை ஓவியம்‌ நன்றாக வரைவாள் என்று அவள் அறிந்த ஒன்றுதானே.

அவளின் உலகில் அவள் அன்னை வரைந்த ஓவியங்களில் ஒரு ஏக்கம் இருக்கும். உயிர்வளி காற்றை இயற்கையாகச் சுவாசிக்க முடியாத ஏக்கம்.

இங்குள்ள ஓவியங்களிலும் அதே ஏக்கம்தான். சுதந்திர காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்று ஏக்கம் படர்ந்திருந்தது அனைத்து ஓவியங்களிலும்.

ஓவியங்களின் வர்ணங்களும் கருவும் வேறு வேறாய் இருந்தாலும், இரண்டிலும் பின்னணியும்‌, அது சுமந்திருந்த உணர்வும் ஒன்றுதான். ஏக்கம் சுமந்த ஓவியங்கள். இரண்டும் நிறைவேறா ஏக்கம். அந்த உலகில் அவரது ஏக்கம் நிறைவேறுமா என்று கூட ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆனால் இங்கு. இரண்டு நாட்கள் அவள் உயிர் துறக்காமல் பொறுத்திருந்தால் சுதந்திர காற்றையேனும் சுவாசித்திருப்பாளே. அப்படி என்ன அவசரமோ. நிதானமின்றிச் சென்றுவிட்டாள்.

பொன்னி இதைக் கூறியே அலுத்துக் கொண்டாள் அவர்கள் இருவரிடமும்.

"சுதந்திரம் வேண்டும் என்று தவமிருந்தவள் அவளே. அவள் பிள்ளைப் பிறக்கும் பொழுது, சிவகங்கை சீமையில் ஆங்கிலேயரின் சுவடுகள் இருக்காது என்று தீர்க்கமாய் நம்பியவள். அவளுக்குப் பெண் பிள்ளைதான் வேண்டும் என்றாள். பிள்ளைக்குப் பெயர் வேலு நாச்சியார் என்று வைக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டாள். அவள் எழுதிய சித்திரங்கள் உயிர் பெற்று வந்தது. ஆனால் அவள் உயிருடன் இல்லாமல் போய்விட்டாள். ஏனோ ராணிக்கு உற்றாருடன் வாழவும் கொடுத்து வைக்கவில்லை. உயிராய் போற்றிய நட்புடன் வாழவும் கொடுத்து வைக்கவில்லை. குயிலி எப்படி ராணியின் அந்தரங்க தோழியாக இருந்தாளோ, மங்கையும் அப்படிதான். ஆனால் ராணிக்காக உயிர் கொடுக்கவும் கொடுப்பினை வேண்டும். அதாவது அவளுக்கு வாய்த்ததே!"

அதன்பிறகு மங்கையின் வீட்டிலிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பினர் இருவரும். மங்கையின் ஓவியங்கள் பார்த்த பிறகு, அனிச்சத்தின் மனதை பல ஞிமிறுகள்(வண்டுகள்) குடைந்துவிட்டது. ராணியிடம் எப்படியாவது பேசி மங்கையைப்‌ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் ‌என்று முடிவு செய்தாள்.

அவர்களின் திருமண நாளும் வந்தது. கோட்டைக்குள் திருமணம்‌ நடத்த மண்டபமும் மாளிகையும் தனியே இருந்தது.

விழாக்கோலம் பூண்டிருந்த கோட்டையைக் கண்டு நளனும் அனிச்சமும் திதைத்திருந்தனர்.

பொன்னியுடன் கோட்டைக்குள்ளே தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இவர்களுடன் சேர்த்து இன்னும் இரு தம்பதியருக்குத் திருமணம்.

"பொன்னி அக்கா, இதென்ன இவ்வளவு‌ ஆடம்பரம்" என்றனர் இருவரும்.

ஏனெனில் அவர்களின் உலகில் கைரேகைத் திருமணம். அது மட்டுமல்லாமல் அவர்களின் மரபணுக்களின் மாதிரி பெற்று அதைப் பரிசோதனைக்கு‌ அனுப்புவர். அடுத்து குழந்தைப் பெற்றுக் கொள்ள. இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் புதிதாய் இருந்தது மற்ற இருவருக்கும்.

"என்ன இப்படி மொழிந்துவிட்டீர்கள். திருமணம் என்பது சுலப காரியமா என்ன? வேற்றுலகத்தில் இருந்தா வந்திருக்கிறீர்கள். திருமணம் ஒரு திருவிழா இங்கு. முதலில் பொருத்தம் பார்க்க வேண்டும். மனம் பொருந்திவிட்டால் மணப்பொருத்தம் பார்க்க மாட்டோம். அடுத்து மங்கலம் நிறைந்த மணநாள் குறிக்க வேண்டும். முரசறைந்து
நகர மக்கட்குத் தகவல் அளிக்க வேண்டும். அது அவர்களுக்கு அழைப்பு விடுப்பது போல். அனைவரும் திருமணத்தில் பங்கு கொண்டு விழாவை சிறப்பித்து, தம்பதியரை‌ வாழ்த்த வேண்டும் என்று முரசறைந்து அழைப்புகள் விடுப்போம். பின் மணநாளின் முதல்நாள்,
மணவினை நிகழும் இடத்தை அலங்காரம் செய்வோம்.
சிறப்பு இறைவழிபாடு மற்றும் இசை நாடகம் என்று ஏற்பாடுகள் செய்வோம். பின் மணமேடை ஒப்பனை, மங்கல் வாத்தியங்கள் என்று மணவினை நிகழும் நாள் மிகச் சிறப்பாக இருக்கும் படி நிரல்கள் வகுப்போம். வாழ்த்த வந்தோருக்கும் சரி, தம்பதியருக்கும் சரி, இந்த நிகழ்வு நினைவினில் நீங்காமல் இடம் பெற்றிட வேண்டும் என்பதே குறிக்கோள்" என்று‌ பொன்னி கூற, நளனும் அனிச்சமும் வியந்து பார்த்தனரா இல்லை‌ அயர்ந்து நின்றனரா என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

செம்முது பெண்டிர்(கற்பு நெறியில் சிறந்த பெண்) கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகைகளில் அடக்கி, காந்தள் இதழ் போல் தம் மெல்லிய கரம் குவித்து, கைகளில் இருந்த மங்கலப் பொருட்களைப் பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுளுக்குத் தூவி வணங்கிட, அவரைத் தொடர்ந்து வந்த கன்னிப்மார்களும் இங்கனம் கைகளில் இருந்த மங்கலப் பொருட்களைத் தூவி ஏழுமுறை வணங்கி, தெய்வங்களுக்கு மடைக் கொடுத்தனர். அவர்களின் கொலுசொலியும் சிரிப்பொலியும் இணைந்து கொண்டு மங்கல வாத்தியம் இசைந்தது அந்நிகழ்விற்கு.

மணவறை நிலத்தை மேடாகப் புனைந்து, வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை(இருக்கை) அதில் வைத்தனர். பொற்காசும், மணியும், முத்தும் வைத்து அலங்கரித்தனர். மங்கலகரமாக விளக்குகள் ஏற்றினர்.

மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். சுதந்திரம் கிடைத்து முதலில் நடக்கும் சுபநிகழ்வு, ஆதலால் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்கக்கூடாது என்பது நாச்சியாரின் கட்டளை. மங்கலச் செயல்களாகக் கோட்டை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிட்டனர். பல வர்ண மலர்களைச் சரமாய்த் தொடுத்து அரண்மனையைப் பூந்திரள் கொண்டு அழகுபடுத்தினர். அகில்புகையூட்டி அரண்மனை முழுக்க நறும்புகை ஈன்றனர்.

பெரிய தாம்பாலத்தில் தக்கோலம் , ஏலக்காய், கிராம்பு(லவங்கம்), சாதிக்காய், கற்பூரம் எனும் ஐவகை மங்கலப் பொருள்களுடன், வெற்றிலையையும் பாக்கையும் வலப்பக்கம் வைத்தனர். சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி தேவர்களை வணங்கினர்.

'தேவீர் நீர்மலையிடத்திருந்தாலும், மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று வேண்டுவது வழமை.

மணப்பெண்ணாய் இருந்த அனிச்சத்தை அழகாக அலங்காரம் செய்தனர். சந்திரப் பிரபை, முத்துவடம், மங்களசரம், மாதுளங்காய் மாலை, மூக்குவளை, புல்லாக்கு, கர்ணபூரம், கைவளை, மணிச்சலங்கை போன்ற ஆபரணங்கள் கொண்டு தலையிலிருந்து கால்வரை அனிச்சம் அலங்கரிக்கப் பட்டிருந்தாள்.

மணிச்சிகை, ஞாழல், காந்தள், கொன்றை, முல்லை, நொச்சி போன்ற மலர்கள் அவள் சிகையை அலங்கரித்திருந்தின.

ஆம்பல், குவளை, வெட்சி, தேமா
உந்தூழ், வகுளம், மௌவள், செருவிளை, கூவிளம் போன்ற நூறு வகையான மலர்கள் கொண்டு மணமேடை அலங்கிரித்திராந்தனர்.

சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கியது. மணவினையின் விடியலில் காப்பு‌ கட்டினர் மணமக்களுக்கு.
காப்பு நூல் கட்டி, மங்கல நீர் கொண்டு வந்து, மந்திரங்கள் ஓதி, மணமகன் அழைப்பு விடுத்து, வேள்வித்தீ வளர்த்து, அம்மி மிதித்து, பாத பூசை செய்து, அருந்ததி பார்த்து, அறம் பின்பற்றுவதாய் வாக்களித்து,மங்கல அணி‌ அனிவித்தான் நளன்.

மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. யாழும், குழலும் இனிமையாய் ஒலித்தது. அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் நாடகங்கள் இயற்றப்பட்டது.

அங்கு நடந்த அனைத்து சடங்குகளையும் சிரத்தையுடன் செய்தனர் நளனும் அனிச்சமும். பட்டாடையில் பூரணப் பொலிவுடன் விளங்கிய அனிச்சம், நளனின் விழிகளுக்கு விருந்து படைத்தாள்.

கம்பராமாயணம் திருமணம் சடங்கை

" மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;
மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்
மாகடலும் போன்றதே"

எனக் குறிப்பிடுகிறது. இன்னும் சில சங்ககால குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது இந்த திருமணச்‌ சடங்குகள்.

நிலவு ஒழுகும்!!!

 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33


சில மாதங்கள் கடந்திருந்தது. கொடிக்கு குழந்தைப் பிறந்திருந்தது.
பிள்ளை பிறந்ததும் கொஞ்சம் வாழ்வின் மேல் பிடிப்பு வந்தது கொடிக்கு. பின் நிச்சயம் அவள் பெற்றெடுத்த மகவு அவளை ஆராதிக்கும். கடந்த ஒரு வருடமாக அவள் வாழும் வாழ்வை நினைத்துப் பார்த்தவளுக்குக் கண் விழிகள் கரித்தது. சத்ய வேலன் சத்தியத்தின் மறுவுருவமாய் இல்லை. அதிகாரத்தின் ஆணவமாய் அவன் இருந்தான் என்றால் மிகையாகாது. உடலாலும் மனதாலும் அவள் பட்ட வேதனைகளை வரிசைப் படுத்தினால், வாழ்க்கை முடிந்துவிடும். நித்தம் நித்தம் அவளைக் குத்திக் கிழிக்க ஒரு புதிய‌வழிமுறைக் கடைப்பிடிக்கப்படும். அவசர திருமணத்தில் இது ஒரு இலவச இணைப்பு.‌ எங்கு ஒரு பெண்ணின் உணர்வுகள் கொல்லப்பட்டு, வேறு திருமணம் செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் இலவச தரவிறக்கமாகக் கொடுமைகளும் வந்துவிடும். பெண்களை அடக்கியாள அது ஒரு காரணமாய்ப் போய்விடும்.

கசந்த அனுபவங்கள் கற்பித்த பாடமே முதிர்ச்சி. முதிர்ச்சி வேண்டுமென்றால் , கால்கள் புண்ணாகும் என்று தெரிந்தாலும் முட்பாதையில் நடைப் பயில வேண்டும். அவளும் நடந்தாள். இப்பொழுது ஒரு இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டாள். இனி பிள்ளையேனும் முல்லில் பூக்களிடுவானே. பாத கமலங்கள் சற்றேனும் இதம் பெறும்.

இன்னும் இரு மாதங்களில் அமராவுக்குக் குழந்தைப்‌ பேறு. அதுவரை இரவும் பொழுதும் நன்றாகவே கழிந்தது.

அந்த ஒரு நாள் வரும்வரை. மங்கலத்தின் மறுவுருவம் அந்த ஊர். மூளிகளற்ற ஊரின் பிண்ணனியில் பெரும் காரணம் ஒன்று இருக்கிறது.

மறுநாள் ஊரே கலங்கி நின்றிருந்தது. இல்லை. இல்லை. ஊரில் உள்ள பெண்கள் கலங்கி நின்றனர். ஏனெனில் ஊர் முழுக்க முரசு கொட்டிய செய்தி அப்படி. ஒரு இளம் வயதுடைய பெண்ணின் கணவன் இறந்துவிட்டான். அந்தச் செய்தி கேட்டதுமே அங்குள்ள பெண்களின் வயிற்றில் கிலி தோன்றியது. உணர்வுகளைக் கொன்றது போல் அதையும் கொன்றுவிட வேண்டும்.

அவனைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று ஈமச்சடங்குகள் நிறைவேற்றி முடித்தனர். அவனுடைய மனைவிக்குப் பொட்டழித்து, வளையல் உடைத்து, முடியை‌ மழித்துக் கைம்பெண் கோலம் பூணும் சடங்கினை செய்து முடித்தனர்.

அந்தப் பெண் அழுதுகொண்டே இருந்தாள். அழுதது தன் கணவன் இறந்ததற்காக இல்லை. இனி தன்னையும் உயிரோடு எரித்துவிடுவார்களே என்ற கவலையால். ஆம் காலம் காலமாகச் சதி என்னும் கொள்கையினைப் பின்பற்றினர் ஊர் மக்கள். கணவனை எரித்த இடத்தில் உயிரோடு பெண்ணை எரித்துவிடுவதே இந்தச் சடங்கு.

அந்தப் பெண்ணிற்குச் சடங்குகள் செய்த முது பெண்டீரும் அழுதனர். மனதிற்குள் ஓலம். வெளியில் விசும்பல் ஒலியின் அரவம் இருக்கக் கூடாது. ஏனெனில் இது மகழ்ச்சியாக நிறைவேற்ற வேண்டிய சடங்காம். கணவன் இருக்கும் இடமே மனைவிக்குச் சுவர்கம். அதனால் அவன் எங்குச் சென்றானோ அங்கு மனைவியை அனுப்பி வைக்கப் போகிறார்கள். இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது. இப்படிக் கூறுவது ஆண் சமூகம்தான்.

கணவனின் மேல் உயிரை வைத்திருக்கும் பெண் கணவனுக்காக உயிரைத் துறக்க வேண்டும். அப்பொழுது தான் அவள் பத்தினி பெண் என்று ஒப்புக் கொள்ளப்பட்டாள். மனதளவில் கூட மனசுனக்கம் இருத்தல் கூடாது. அப்படி இருக்கும் பெண்கள் தெய்வமாய்ப் போற்றப்பட்டனர்.

என்ன‌ அழகான ஆழமான நூதன கொலை இது.‌ ஒரு சட்டதிட்டம் இயற்றி, அதை ஒரு இணக்குழுவினரை ஏற்க வைத்தாயிற்று. அதுவும் தெய்வம் என்று கூறி. நாம் மனிதனாய் இருந்தால் போதாதா? தெய்வமாய் இருக்க அவசியமென்ன என்று சிந்தித்திருந்தால், இவ்வகையான நூதனக் கேடுகள் நிகழ்த்தப்பட்டிருக்காது. மனதியாய் மதிக்கப்படாதவள், தெய்வமாய்ப் போற்றப்படும் முகாந்திரம் என்னவாக இருக்கக் கூடும். லட்சணங்கள் பொருந்திய லட்சுமி தேவியாய் இருக்க, பெண்ணினம் அளித்த கொடை என்ன? குறிப்பட்டு ஒன்றைக் கூறிவிட முடியாது. அடி முதல் அந்தம் வரை புனிதம் பேணுவதற்குப் பின் கொடூரமான காரணங்கள் பல இருக்கிறது.

அமராவும் அங்கிருந்தாள். நடக்கும் நிகழ்வுகளைக் கொதிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் மனம் ஒன்றை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது. சுடுகாட்டிற்குச் சென்ற ஆண்கள் அனைவரும் சிறிது‌ நேரத்தில் திரும்பி வந்து ஒரு கொலைச் செய்யப் போகின்றனர்.

அவளால் அங்கு அமர முடியவில்லை. சிறு வயதில் இருந்து அவளை மிகவும் பாதித்த விடயம் இதுதான். அவள் வீட்டில் அழுது கதறியிருக்கிறாள். ஆனால் மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. இது நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. அந்த ஊர் மங்கலகரமாக இருக்க இதுதான் காரணம். கணவனை இழந்தவள் வாழத் தகுதிகள் அற்றவள். அவளை எரித்துவிட்டால், எஞ்சியிருப்பது மஞ்சள் குங்குமம் சூடிய செம்மையுடைய அழகு பெண்டீர். மங்கலம் என்னும் சொல்லின் பின் மறைந்திருக்கும்‌ அரக்கத்தனம் இது.

எழுந்து வேகமாகச் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் சென்றாள். வேக நடை என்று கூறுவதற்குப் பதில், ஓட்டத்திற்கு முந்தய நிலை என்று கூறலாம். வியர்த்து வழிந்தது. வயிறு பெருத்திருந்தது. அதனால் மூச்சு வாங்கியது. இடையில் ஆதரவற்றுத் தனித்திருந்த விருட்சம் இருந்தது. அந்த இடத்தைக் கடக்கும் பொழுது கொஞ்சம் காற்று அதகமாய் வீசி அவளுக்குச் சுகம் அளித்தது. அரசியின் ஆசிர்வாதம் போல.

ஆண்கள் அனைவரும் சுடுகாட்டில் பிணத்தை எரித்துவிட்டு வீடு திரும்பினர், மற்றொரு நடைப்பிணத்திற்குக் காரியம் செய்ய‌. குறுக்கு வழியில் நடந்து வந்திருந்தாள் அமரா. அந்தக் கூட்டத்தில் வந்த செழியன் இவளைப் பார்த்துத் திடுக்கிட்டான். எதற்காக இப்படி நடந்து வருகிறாள் என்று சிந்தித்தாலும், கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றான், அவளைத் தனித்துச் சந்திக்க.

அவளின் கரம் பிடித்து ஒரு மறைவான இடம்‌ நோக்கி அழைத்துச் சென்றான்.

"அமரா... என்ன இது? நீ இங்க வரக்கூடாது. சுடுகாட்டுக்கு இப்படித் தனியா வரலாமா? அதுவும் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு" என்று அவன் கண்டிக்க, அவள்‌ அழுதாள்.

மனைவியின் அழுகைக்குக் காரணம் புரியாமல் அவன் தவித்தான்.

"அமரா.. என்ன ஆச்சு‌ சொல்லு?" என்று பதிறினான்.

"இங்க பெண்கள் வரக்கூடாதா? அப்பறம் இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிரோட ஒரு பெண்ணை எரிக்க ஏற்பாடுகள் நடக்குதே. ‌அப்போ மட்டும் அவ இங்க வரலாமா? அவளைத் தனியா உயிரோட எரிக்கப் போறீங்களே. இது நியாயமா?" என்று அவள் வினவ, அவன் அதிர்ந்து நின்றான்.

இப்படி ஒரு சடங்கு பின்பற்றப்படுவது அவன் அறிந்ததே. அதில் முன்பெல்லாம் பெரிய கருத்து இல்லை. அமராவுடன் ஆன திருமணத்திற்குப் பிறகு, அவனுடைய நிலைபாடு என்னவென்றால், இது தவறு‌ என்பதே. ஆனால் ஒரே நாளில் அனைத்தும்‌ மாறிவிடுமா என்ன?

"செழியன், இதைத் தடுத்து‌ நிறுத்துங்க முதலில். இது நடக்கவே கூடாது. இங்க நடக்குற கொடுமையான விஷயத்தில் முதல் விஷயம் இதுதான்" என்று அவனை உலுக்க, அவன் சிலையாய் நின்றிருந்தான்.

"நீங்க செத்தா நானும் சாகணுமா?" என்று கத்தினாள் அமரா.

அப்பப்பா என்ன ஒரு வினா. வலிக்காமல் வார்த்தையில் விஷத்தைத்‌ தடவி எய்துவிட்டாள். ஆனால் இந்தச் சொல்லை ஊர் முன் இவள் உதிர்த்திருந்தால், அந்தக் கணமே கொன்றுவிடுவார்களே.

"உங்களை எனக்குப் பிடிக்கும். என் வாழ்க்கையோட விளிம்புவரை உங்களை நினைச்சுக்கிட்டே என்னால வாழமுடியாதா? தன்னுடைய சாவை இப்படி ஒரு பெண்ணும் விரும்புவதில்லை. யாரும் வெளியில் சொல்வதில்லை. ஆனால் மனதிற்குள் அழுது கொண்டிருக்கின்றனர். நீங்க நினைச்ச மாற்றம் வர முதிலல் இந்த விஷயம் நடக்கக் கூடாது. நான் ஒருமுறை சொன்னேனே. நினைவிருக்கா? உங்களுக்கு நடந்த அநியாயத்தில் வாழ வழி இருந்தது. ஆனா இந்த அநியாயத்தில் வாழ வழியே இல்லை. இனியாவது இது நடக்காம இருக்கணும்" என்று மன்றாடினாள் அவனிடம்.

"அமரா.. அழாத.. இதை எப்படியாவது நிறுத்தலாம்" என்று சிறிது சிந்தித்தவன், "அமரா...‌ நீ வீட்டுக்கு போ. உன்னைக்‌ காணும்னு சொல்லி ஒரு நாடகம் நிகழ்த்தி, இன்னைக்குப்‌ பொழுதைக் கழிச்சுடலாம். சூரியன் மறைஞ்சா போதும். இந்தச் சடங்கை‌ நாளைக்குத் தள்ளிப் போடலாம். இன்னைக்கு ராத்திரிக்குள்ள அந்தப் பெண்ணை வேறு ஊரில் வாழ வைக்க ஏற்பாடு செய்யலாம்" என்று செழியன்‌ கூற, அவனை ஏமாற்றத்துடன் பார்த்தாள் அமரா.

"அமரா.. அப்படிப் பார்க்காத. நானும் நீயும் மட்டும் இதை எப்படி மாத்த முடியும். இப்போதைக்கு இது ஒன்னுதான் வழி. சரி‌ நீ போ. நான் பார்த்துக்கிறேன்" என்று அவளைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

அதன் பிறகு ‌செழியன் நினைத்தபடியே, அமராவைக் காணவிவ்லை என்று பெரியதொரு நாடகம் நிகழ்த்தி, அன்றைய பொழுதைக் கடத்திவிட்டான். அமராவைக் காணவில்லை என்று கூறியதும் தேவர் பிள்ளையே அதிர்ந்துவிட்டார். அவரின் குடும்ப வாரிசை சுமந்திருக்கிறாளே. என்ன ஒரு விசித்திரம். பெண்ணால் தழையும் பரம்பரை வேண்டும். ஆனால் அவன் இல்லையேல் அவளும் இருக்கக் கூடாது. அமராவைத் தேடும் பணி சிறப்பாக நடைப்பெற்றது. சுற்றி நடந்த அமளிதுமளியில் அந்தப் பெண்ணை மறந்தனர். செழியன் அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றான். செழியனின் நண்பன் ஒருவனும் உதவினான். வேறு ஊரில் சில நாட்கள் மறைந்து வாழ வேண்டும் அவள். இதுவும் சவாலான ஒன்றே. மிக விரைவில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு அவளை அழைத்துக் கொள்வதாகத் திட்டம்.

அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் செல்லும் பொழுது கொடியின் கணவன் சத்யன் பார்த்துவிட்டான். அவனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். அவனைப் பற்றிய அறிமுகம் இங்குத் தேவையில்லையே. அவன் எப்படிப்பட்டவன் என்று‌ கொடியின் மௌனம் கூறிவிடும்.

அமரா கோகிலத்தின் உதவியுடன் வீடடிலே மறைந்து கொண்டாள். கோகிலம் முதலில் அதிர்ந்தாலும், சரி என்று ஒப்புக் கொண்டார். அவருக்கும் இந்தச் சடங்கு பிடிக்காது. யாருக்குதான் பிடிக்கும். அனைவரும் மனதிற்குள் பூட்டி வைத்தனர். இப்பொழுது எழுச்சி என்று ஒன்று வந்ததும், நடந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. பூனைக்கு‌ யார் மணி கட்டுவது என்ற வினாதான். ஒருவர் கட்டிவிட்டால் அடுத்தவரும் தயங்காமல் கட்டிவிடுவார்கள்.

அமரா வீட்டில் இருப்பாள் என்று யாரும் நினைக்கவில்லை.

செழியன் அவனுடைய நண்பனுடன் அந்தப் பெண்ணை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்தால், சத்யன் அவனுடைய வீட்டில் நின்று கொண்டிருந்தான். அனுப்பி வைத்த பெண் தரையில் துவண்ட கொடியாய் கிடந்தாள்.

அவர்களைக் கண்ட செழியன் திடுக்கிட்டான். செழியனின் நண்பன் அங்குக் கட்டி வைக்கப்பட்டிருந்தான். அந்தப் பெண் அடி வாங்கியதில் உணர்வுகளற்று கிடந்தாள். என்ன நடந்தது என்று அவனால் ஒரளவு கணிக்க முடிந்தது. அவன்தான் திட்டத்தின் மூலம் என்று அறிந்த பின்னர் அமராவைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இவை அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டது. சத்யன் ரகசியமாகவே இந்தக் காரியம் செய்திருந்தான். அதன்பிறகு வீடு முழுக்கத் தேடி அமராவையும் நடுக்கூடத்தில் நிறுத்தியிருந்தனர். கோகிலமும் வாங்கிய அடியில் அமைதியாய் நின்றிருந்தார்.

அமரா செய்வதறியாது நின்றிருந்தாள்.

"செழியா, தேவையில்லாத விஷயத்தில் நீ தலையிடாத. இது ஊரோட நம்பிக்கை. இதை மாத்தினா ஊரோட அமைதி போயிரும்" என்று கத்தினார் தேவர் பிள்ளை.

"அறிவிருக்கா உங்களுக்கு. இப்படி ஒரு சட்டத்தைப் போட்டது உங்களை மாதிரி ஒரு கேடு‌ கெட்டவனாத்தான் இருக்க முடியும். இனி இந்த ஊரில் இந்தப் பலிகள் நடக்கக் கூடாது. நடக்கவும் விடமாட்டேன்" செழியன்.

"உன்னை யாரும் கேக்கல. நீ இருந்தா ஏதாவது பிரச்சினை பண்ணுவ. சத்யா.. இவனையும்‌ கட்டிப்போடு. நாளைக்குச் சடங்கு முடியிற வரைக்கும் இவன் கட்டியே இருக்கட்டும்" என்று அதிகாரம் செய்ய, செழியனைப் பிடத்துக் கட்ட, சத்யன் முயற்சிகள்‌ மேற்கொள்ள, அனைத்தும் தோல்வியையே தழுவின.

இருவருக்கும் சண்டை முற்றியது. தேவர் பிள்ளை அமைதியாக அமர்ந்திருந்தார். அமரா இடைப்புகுந்து தடுக்கச் செல்ல, கோகிலத்தை முறைத்தார். கோகிலம் அமராவை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றார். அவர் நன்றாக அறிவாரே தன் கணவனைப் பற்றி. இந்தக் காரியத்தை நடத்தி‌முடிக்காமல்‌ ஓய‌ மாட்டார் அவர் என்று.

சத்யனும் செழியினும் உருண்டு பிரண்டனர். அங்கிருந்த சாமான்கள் எல்லாம் உடைந்தது. சத்யன் செழியனை அடக்க மட்டுமே முற்பட்டான். ராஜாவின் பிள்ளையாயிற்றே. அது எப்படி அவனைத் தாக்க முடியும். ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நன்கு அறிவான் அவன். ஆனால் செழியனுக்கு அவ்வாறு ஏதும் காரணங்கள் இல்லையே. அவன் பலம் கொண்ட வரை சத்யனைத் தாக்க, சத்யன் அங்கிருந்த சுவரில் முட்டி மோதி கீழே விழுந்தான்.

அவன் மயங்கிவிட்டான் என்று தெரிந்ததும் செழியன் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க தரையிவ் மடிந்து அமர்ந்தான். வியர்வை வழிந்து‌ கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. இடியும்‌ மின்னலும் தாக்க, அந்த இரவே சூன்யமான இரவாய் மாறிப்போனது.

தேவர் பிள்ளை அவனை அடிக்கக் கை ஓங்கி வர, அவரின் கையைப் பிடித்துத் தடுத்தான் செழியன். உக்கிரமாக அவரைப் பார்த்தவன், ஓங்கி ஒரு அடி வைத்தான் கண்ணத்தில். அவனை அதிர்ந்து பார்த்தார் அவர். இதை அவர் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

எதிரிலிருப்பவனுக்குப் பயம்‌ என்ற ஒன்று இருக்கும்வரை தான் அவர் வாழ முடியும் என்ற பெரும் சிந்தனையை மறந்துவிட்டார் போல. செழியன் முடிவுக்கு வந்துவிட்டான். இனி என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று. அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போல. இனி என்ன நடந்தாலும் நினைத்ததைச் சாதித்து விட வேண்டும் என்று.

செழியின் மயங்கியிருக்கும் சத்யனுக்கு முதலுதவி செய்ய அமர்ந்தான். அவனைத் திருப்பித் தன் மடியில் தலை வைக்க, தலை துவண்டு கீழே சரிந்தது.

கூடத்தில் அசாத்திய அமைதி நிலவியது. சத்யன் இறந்துவிட்டான். தேவர் பிள்ளை மற்றும் செழியன்‌‌ இருவருமே அதிர்ந்துவிட்டனர்.

செழியன் உலகை மறந்து நின்று கொண்டிருந்தான். அடுத்து என்ன செய்வது. அவன் ஒருவனைக் கொன்றுவிட்டான் என்ற எண்ணமே அவனைச் செயலிழக்க வைத்திருந்தது.

நொடி பொழுதில் தேவர் பிள்ளையின் மூளையில் திட்டம் ஒன்று உதித்து விட்டது‌ போல. அங்கு மனிதன் என்ற ஒருவன் உணர்விழ்ந்து நின்றதனால், மனிதம் மரித்துப் போனது.

பேரரவம் கேட்டதில் அமராவும், கோகிலமும் வெளியில் வந்து பார்க்க, அதிர்ந்துவிட்டனர். அவனை உள்ளே அழைத்துச்செல் என்று கட்டளையிட்டார் தேவர் பிள்ளை.

அவருக்கும் வேறு உபயம்‌ இல்லையே. நிகழ்ந்ததை ஓரளவு கணித்துவிட்டார். அதனால் மனம் வேதனையில் உழன்றது.

அவர்கள்‌ மூவரையும் ஓர் அறைக்குள் வைத்து வெளியில் தாழ்ப்பாள் போட்டார். செழியனின் நண்பனிடம்‌ சென்றார்.

"செழியனைக் காப்பாத்த ஒரே வழிதான் இருக்கு. செழியன் இந்தப் பெண்ணைக் காப்பாத்த திட்டம் தீட்டினான்னு வெளில தெரிஞ்சா, அவனுக்கு ஆபத்து. நானே பஞ்சாயத்துல அவன் பக்கம் பேச முடியாது. அதனால, இந்தச் சத்யன் இந்தப் பெண்ணை இழுத்துகிட்டு போனதாவும், அவனை நீ பிடிச்சதாவும் சொல்ற நாளைக்கு ஊர் முன்னாடி" என்று அவனை மிரட்டினார்.

அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை. அதனால் அதற்கு ஒப்புக் கொண்டான். அந்தப் பெண்ணிற்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

மறுநாள் விடியலில் தேவர்பிள்ளை அவர் நினைத்ததைச் சாதித்து விட்டார்.
அந்தப் பெண்ணை உயிருடன் எரித்து விட்டனர். இதில் அவள் இப்படி ஒரு முடிவு எடுத்ததால், குடும்பம் மொத்தமும் சேர்ந்து அவளை அடித்தது. அதெப்படி அவள் வீட்டுப் படி தாண்டி செல்லலாம் என்று. அவர்களைப் பொறுத்தவரை பெண் என்பவள் இடுகாட்டிற்குச் செல்ல மட்டுமே படி தாண்ட வேண்டும் போல. ஒரு வேளை படி தாண்டா பத்தினியின் பொருள் இதுவாய் இருக்குமோ.

எப்படியும் இப்படி ஒரு தவறை செய்த சய்தயனுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவது நிச்சயம். ஆனால் அந்தத் தட்டனையை‌ அனுபவிக்கும் முன்னரே அவன் இறந்துவிட்டான். இனி அவன் செய்த தவறை வேறு எவரும் செய்ய முற்படக்கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சத்யனின் முடிவைக் கண்ட அவர்களது பெற்றோர் கதறி அழுதனர். சத்யனை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது.

நிலவு ஒழுகும்...

 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
இருள்‌ பூசிய குழல்
பெருவெடிப்பாய் வகிடு
வெட்டி வைத்த பிறைநிலவு
சுருள் பால்வெளியாய் பின்னல்
நட்சத்திரத் திட்டாய் பொட்டு
கருந்துளை விழிப்பாவைகள்
மேகத் துண்டு கன்னம்
அந்திவானம் குழைத்து அதரம்
வெட்கத்தில் நீ
விகல்பமாய் நான்


அனிச்சத்திற்கும் நளனுக்கும் திருமணம் முடிந்திருந்தது. இருவரும் என்ன நினைக்கிறார்கள் என்றே கணிக்க முடியவில்லை. அடுத்தவர் மனதில் உள்ளதை அல்ல. அவரவர் மனதில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லலாம். மனதின் ஓரம் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. நளன் எதிர்பார்த்த பெண்ணாய் மாறியிருந்தாள் அனிச்சம். இப்பொழுது அவளின் மனதில் அவன் மட்டுமே நிறைந்திருந்தான். மங்கையோ அந்த உலகமோ அவள் மதியில் இல்லை. நினைவின் இடுக்குகளில் கொஞ்சம் மறைத்து வைத்துவிட்டாள் போல.

நளனைப் பற்றிச் சொல்வதற்கில்லை. அவளின் சொக்கும் அழகில் அவன் கட்டுண்டு கிடந்தான். இதுவரை அவளை இப்படிப் பார்த்ததில்லையே. அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டான். மனதில் அவளின் பிம்பத்தைச் சேமித்தும் வைத்தான்.

அவளுக்கும் நளனைப் காண என்னவோ போல் இருந்தது. புதிதாய் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டதோ என்னவோ. அவளின் கைப்படித்து அவன் வேள்வித்தீயை வலம் பொழுது அவனின் ஸ்பரிசம் அவளுக்குள் தீ மூட்டி சென்றது.

அக்கினிப் பழத்தை அரைத்துப் பூசியிருந்தது மாலைப் பொழுது. ராமாயணம் நாடகமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது.

அதில் ராமனும் சீதையும் முதன் முதலில் சந்திக்கும் நிகழ்வு நடந்தேற, நளனும் அனிச்சமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு பார்வையில் இத்தனை காதலா? அண்ணலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள். இந்த ஒரு வரி போதும். கம்பன் எழுத்து வித்துவான் என்று கூறிவிடலாம்.‌ ஆனால் அவன்‌ எழுத்தில் இருக்கும் மாயம் அவரின் நாயகர்களைக் கட்டிப்போட்டது மட்டுமின்றிக் கேட்கும் அனைவரையும்‌ கட்டிப் போடுகிறதே. கம்பன் மாய வித்தகன் என்றும் சொல்லலாம் இந்த வகையில்.

விழியின் வழியே அவர்கள் இருவரும் கடத்திய உணர்வுகள் இவர்களையும் ஆட்கொண்டது. அவளின் மையல் சிரிப்பில் கண்ணங்களில் கிண்ணக்குழி தோன்ற, அதில் விரும்பியே விழுந்தான் அவன். அன்று முழுவதும் அவன் பார்வையில் குடி கொண்டிருந்த மன்மதச் சாயலில், அவள் உடலின் உட்புறச் சுவரில் யாரோ கீதம் பாடியது போன்ற உணர்வு.

ஒருவழியாக அனைத்து சடங்குகளும் முடிவு பெற, ராணியிடம் விடைபெற்றனர்.

வேலு நாச்சியார் தம்பதியர்களுக்குப் பரிசு பொருட்கள் அளித்தார். தங்க காசுகளும், பல உண்ணத மணிகளும் வழங்கப்பட்டது. ஆசி பெறுவதைக் கூட இருவரும் விசித்திரமாய்ப் பார்த்து வைத்தனர்.

அனிச்சத்தைக் கண்டதும், வேலு நாச்சியாருக்கு, மங்கையின் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு சாயல் இருக்கிதோ? இல்லை மங்கைக்கும் இவளுக்கும் சம்மந்தம் இருக்கிறதா? என்று மனதில் எண்ணியவர், "யாரம்மா நீ. பொன்னழகி உன்னைப் பற்றியும் உன் கணவனைப் பற்றியும் உரைத்தாள். ஆனால் ஏதோ ஒன்று முரண்படுகிறது. உனக்கும் மங்கைக்கும் என்ன தொடர்பு" என்று நாச்சியார் வினவ, அனிச்சம் என்ன சொல்வதென்று தெரியாது விழித்தாள்.

"தொடர்பு ஒன்னும் இல்லமா. நாங்க ரொம்பத் தொலைவில் இருந்து வருகிறோம். இங்கு வந்ததும் முதலில் பார்த்தது, மங்கை அம்மாவைத்தான். அதுவும் அந்த நிலையில் காணவும் எங்கள் இருவரால் காப்பாற்ற முடியவில்லை என்ற கழிவிரக்கம். அதனால் அவருடன் ஒரு பிணைப்பு. வேறு ஒன்றும் இல்லை" என்று நளன்‌ கூறினான்.

ராணியின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை அவர்கள் இருவராலும் கணிக்க இயலவில்லை.

"ம்ம்ம்... மங்கையை உனக்கு இவ்வளவு பிடித்திருப்பதால் எனக்கும் உன்னைப் பிடிக்கிறது. உன்னிடம் ஏதோ ஒன்று‌ இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள்" என்று கூறினாள்.

"மங்கை அம்மாவை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?" அனிச்சம்.

"அதில் சந்தேகமென்ன?"

"எனக்கு மங்கை அம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் போல் உள்ளது. உங்களால் சொல்ல முடியுமா" என்றவளை சிந்தனையுடன் பார்த்தாள்.

"ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" நாச்சியார்.

அவள் பதிலேதும் கூறாமல் ராணியைப் பார்த்தாள்.

சிறிது சிந்தனைக்குப் பின் அனிச்சத்திற்குப் பிடித்தமான பதிலை ராணி உரைக்க, நன்றியுரைத்துவிட்டு இருவரும் விடைபெற்றனர்.

இருவரும் பொன்னியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாட்டு வண்டிப் பயணம். மாடுகள் ஓடும் பொழுது, அதன் காலடி சப்தம் கேட்க, அது இனிய இசையைப் பரப்பியது. வண்டிமாடு முன்னே செல்ல, அவர்களின் உலகம் பின்னே பயணிப்பது போல் இருந்தது. மாட்டு வண்டியின் பின்னால் திரும்பி அமர்ந்திருந்தனர். வண்டி செல்லும் எதிர் திசையில். வண்டி அசைந்தாட, அனிச்சத்தின் கால்களில் இருந்த சதங்கை ஒலி எழுப்பியது. அதை ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் நளன்.

செல்லும் வழியெங்கும் வரிவடிவங்களாகத் தெரிந்த வயல்வெளிகளும், வனத்தின் வனப்புகளும் இருவரின் விழிகளுக்கும் விரிந்து படைத்தது. அவர்கள் உலகத்தில் இருந்து முற்றிலுமாக இந்த உலகத்தின் குடிகளாக மாறிவிட்டனர் போல. பொருள் புரியாத பல உணர்வுகள் உள்ளுக்குள் கொட்டிக் கிடந்தாலும், யாரும் விளக்கிடாமல், புரிந்து கொள்ள முடிந்தது.

இரவு அவர்கள் இருவரும் தனித்திருந்தனர். மாளிகையின் அலங்காரம் தோற்றுவிட்டது அந்த அறையின் அலங்காரத்தில். நறும்புகை அறை முழுக்க விரவியிருக்க, அதில் அன்று முகிழ்ந்த மலர்களின் மயக்கும் மணமும் சேர்ந்து ஒருவித இம்சையைக் கெடுத்தது இருவருக்கும்.

மௌனதத்தை உடைப்பது யார் என்று போட்டி போல. இறுதியில் ஆணுக்கே அதில் முதலுரிமை என்று ஆனது.

"அனி, ரொம்ப அழகா இருக்க" என்று அவன் கூற, பதிலேதும் கூறவில்லை. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டதால் எழுந்து சாரளதத்தின் அருகே சென்றாள்.

அவளின் பதற்றம் அவனுக்கு விளங்காமல் இல்லை. புதிதாய் புத்துணர்வு பெற்ற பல உணர்வுகள் இருவரையும் ஆட்கொண்டது. அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவள் சாரளதத்தின் வழியாக ஒழுகிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"மகாராணி, என்னையும் கொஞ்சம் பார்க்கலாம்" என்று அவளின் கைகளைப் பிடித்தான். கைகளில் அவள் அணிந்திருந்த கைவளை கலகலத்து ஒலியெழுப்பியது.

சில்லிட்டிருந்த அவள் கைகளுக்கு, அவன் கரங்களில் இருந்த வெப்பம் மோட்சமளிதத்து.

"அனி, பயமா இருக்கா?" என்றான் நளன்.

பதில் கூறாமல் அவள் கைகளை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள். நளனின் முகத்தில் மெல்லிய சுணக்கம்.

அவளின் இந்த ஒதுக்கம் அவனுக்குப் புதிது. பல நாட்கள் அவன் அருகில் இருந்திருக்கிறாள். தனிமையிலும் இருந்திருக்கின்றனர். ஆனால் இப்படியெல்லாம் ஒருநாளும் அவள் நடந்து கொண்டதில்லை.

அவன் கோவமாய்ச் சென்று அமர்ந்தான். சில நொடிகள் மௌனம் மீண்டும். அவன் அருகில் சென்று அமர்ந்தாள் அனிச்சம்.

அவன் தள்ளி அமர்ந்து கொண்டான். அவனின் செல்லக் கோவம் கண்டு அவள் மென்னகை உதிர்த்தாள். அவன் அருகில் சென்று அமர்ந்து, அவனின் தோள் வளைவில் சாய்ந்து கொண்டாள்.

அவளும் சிந்தனை செய்துவிட்டாள். ஏன் இப்படி உணர்ந்தும் உணரா உணர்வுகள் ஆட்கொள்கிறது என்று. விடையும் கிடைத்தது. என்றும் இல்லாமல் நளனின் ஆவல் மிகுந்த பார்வை, அவனின் சிறு தீண்டல்கள் என்று அவளை இப்படி ஒரு உணர்வுக்கு ஆளாக்கியிருக்கிறது. பல சமயங்களில் அவர்கள் சேர்ந்திருந்திக்கிறார்கள். அவன் நெஞ்சில் சாய்ந்திருக்கிறாள். அவன் கைகளைப் பிடித்து நடந்து சென்றிருக்கிறாள். பனித்தீவில் அவனுடன் தினித்திருக்கிறாள். ஆனால் இவ்வளவு வெட்கமும் வந்ததில்லை. முகமும் சிவந்ததில்லை. நத்தையாய் கூட்டிற்குள் சருங்கியதில்லை. ஆனால் இங்கு வந்த பிறகு புதிதாய் சில உணர்வுகள் ஒட்டிக் கொண்டது. ஒருவேளை இதுதான் அவள் எதிர்பார்த்த காதல் உணர்வோ?

"கோவமா?" என்று அவன் நெஞசினில் சாய்ந்து கொண்டாள் அனிச்சம். ஆனால் சில நொடிகளில் விலகியும் விட்டாள்.

"உனக்கு என்ன பயம் இப்போ?"

"இல்ல.. நீ இப்படி எல்லாம் நடந்ததில்ல. உன்னோட பார்வையிலிருந்து எல்லாமே புதுசா இருக்கு. அதான் கொஞ்சம்...."

"ம்ம்ம்... நீ என்னைப் பார்த்ததே இல்லைனு சொல்லு."

"இல்ல. நீ பொய் சொல்ற. முன்னாடியும் என் கையைப் பிடிச்சிருக்க. ஆனா இப்போ வேற மாதிரி இருக்கு."

"வேற மாதிரின்னா?"

"சொல்லத் தெரியல" எனவும் சில நொடிகள் மௌனம்.

"ம்ம்ம்.. எனக்குள்ளயும் சில மாற்றம் இருக்கு" என்று அவளைச் சற்று இறுக்கிக் கொண்டான் பின்னிருந்து.

"என்ன அது?"

"உன்னோட கற்பனை உலகம் ‌இவ்ளோ அழகா இருக்கேன்னு மட்டும்தான் நேத்துவரை நினைச்சேன். ஆனால் அதில் நான் உணராத உணர்வுகளும் இருக்குங்கிறது இப்போதான் புரியிது. ரொம்பவே புடிச்சிருக்கு."

"அழகா இருக்குல்ல" என்றாள் வானத்தைப் பார்த்து.

அவனும் "ஆம்" என்றான் மையலுடன்.

"அன்னைக்கு நாம பனித்தீவில் பார்த்த இரவு மாதிரி இந்த இரவும் அழகா இருக்கு."

"அதைவிட."

"அப்படியா‌ என்ன? எனக்கு அப்படித் தோணல.‌ அங்க வானம் எனக்குப் பக்கத்தில் இருந்த உணர்வு. நட்சத்திரத்தைப் பிடிக்கிற உணர்வு. இங்க எல்லாமே தூரமா இருக்கு."

"உன்னோட‌ கோணம் வேற. என்னோட கோணம் வேற."

"அப்படி என்ன வேற கோணம் உனக்கு?"

"அன்னைக்கு வானம் ரொம்ப அழகா இருந்துச்சு. இன்னைக்கும் அழகா இருக்கு. நான் சொன்ன கூடுதல் அழகு உன்னால்" என்று அவன் கூற, அவனைக் கேள்வியாய் பார்த்தாள்.

"உன்னைக் கண்ணாடியில் பாத்தியா?" என்றவன்‌ எழுந்து சென்று அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வந்தான்.

அவள் அவளைப் பார்க்க மறுத்துவிட்டாள். திரும்பி அமர்ந்த அவளைத் திருப்பி, "கண்ணாடி வேண்டாம். நானே சொல்றேன்" என்று அவன்‌ கூற, நெஞ்சம் படபடத்து அடங்கியது அவளுக்கு.

"நளன்‌ நெஞ்சுக்குள்ள யாரோ படபடன்னு தட்டுற மாதிரி இருக்கு" என்று அவனைச் சற்றுப் பிடித்துத் தள்ள, "நானும் கேக்கணும்" என்றான் நளன்.

"நளன்‌, எனக்கு ஒரு மணி நேரம் கொடு" என்றாள் கெஞ்சுதலாக.

"எதுக்கு?"

"அதுக்குள்ள நான் என்னைத் தயார் படுத்திக்கிறேன்."

"எதுக்கு?"

"ஐயோ... எல்லாத்துக்கும் விளக்கம் கேப்பியா?"

"நான் ஒரு கேள்வி கேட்டா நீதான் பக்கம் பக்கமா விளக்கம் சொல்லுவியே. இப்போவும் சொல்லு."

"கொஞ்ச நேரம் வேற ஏதாவது பேசலாமா?"

"விளங்கிறும்... இத்தனை வருஷம் பேசததையா இப்போ பேசணும்" என்று சலித்துக் கொள்ள, அவள் சிரித்தாள்.

"அப்பா.. நீ‌ கொஞ்சம் என்னோட நளனா இரு. அப்பதான் என்னால எப்பவும் போல இருக்க முடியும். இன்னைக்குக் காலைலேர்ந்து நீ பார்த்த பார்வை இருக்கே. கொன்னுட்ட."

"பிடிக்கலையா?"

"பிடிச்சிருக்கு. ஆனா போதும். என்னால இதுக்கு மேல தாங்க முடியல."

"எனக்குப் பத்தாது. இன்னும் வேணும்" என்று அவன்‌ கூற அவனை அடித்தாள் அவள்.

"நீ இப்போ கொஞ்சம் பழைய அனியா மாறிட்ட போல"

"நீ‌ இப்படியே இரு கொஞ்ச நேரம். நான் மாறிடுவேன்."

"அப்புறம்?" என்றான் விஷமமாக.

"ம்ம்ம் அப்புறம் போய்த் தூங்கலாம்" என்றாள் அவளும் விஷமமாக.

"உன்னை இவ்ளோ நேரம் சும்மா விட்டதே தப்பு" என்று அவளைப் படித்து இழுக்க, அவன் இழுப்பிற்கு அவளும் வந்தாள்.

"நான் ஒன்னு சொல்லவா? உனக்கு இன்னைக்கு முழுக்க இந்தப் புது உணர்வு இருக்கும். பார்க்கலாமா?" என்று வம்பிழுத்தான் அவளை.

"சரி.. அப்போ நான் கேட்ட ஒரு மணி நேரம் கொடு. பார்க்கலாம்.. நீ சொன்னது நிஜமா இல்லை நான் சொன்னது நிஜமான்னு" என்றாள் அவள்.

சரி என்று தள்ளி அமர்ந்து கொண்டான் அவன். அதுவும் அவளுக்கு ரசிக்கவில்லை.

"பக்கத்தில் இருக்கலாம். உன்னோட கையை வச்சிக்கிட்டு சும்மா இரு. இது போதும்."

"அப்படிலாம் என்னால இருக்கு முடியாது" என்று அவன் கூற, சட்டை செய்யாமல் அவன் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

அவன் பதில் கூறாமல் இருந்தான். அவள் தொடர்ந்து பேசினாள்.

"அங்க பாரு நளன்... அந்த நிலா ஏவ்ளோ அழகா இருக்கு. அதைச் சுத்தி முளைத்திருக்கும் நட்சத்திரம். அந்த நட்சத்திரம் எல்லாம் மிணுக்கிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கர்வம் அதிகமாகவே இருக்குல்ல. அதுக்கு நிலாதான் அழகு, அதன் பொலிவுக்குப் பக்கத்தில் கூடப் போக முடியாதுன்னு தெரியும். ஆனாலும் ஒரு ஆசைல மிணுக்கிக்கிட்டே இருக்கு" என்றாள் அவள்.

சப்தமாக நகைத்தான். "இதெல்லாத்தையும் மிஞ்சுற மாதிரி நான் ஒரு விஷயம் சொல்லவா?"

"ம்ம்ம்.."

"நட்சத்திரம் எல்லாம் சும்மா மிணுக்கிக்கிட்டு இல்லை. அது புறம் பேசுது. யாருடா இது.. நம்ம உலகத்துக்குப் புதுசா அழகி ஒருத்தி வந்திருக்காளேன்னு பொறாமையோட உன்னைப் பார்க்குது. அதான் அதிகமா மிணுக்குற மாதிரி நமக்குத் தெரியிது."

"நீ இப்படியெல்லாம் கூடப் பேசுவியா?"

"ஏன் பேச வராதுன்னு நினைச்சியா?"

"உனக்கு பேசப் பிடிக்காதுன்னு நினைச்சேன். ஏனா நிலாவ பத்தி பேசுறதெல்லாம் கால விரயம்னு சொல்றவனாச்சே. இயற்கையை ரசிக்கிறது உனக்குச் சுத்தமா பிடிக்காதே. உருப்படியா ஏதாச்சும் செய்யணும்னு சொல்லுவ."

"நீ எப்ப பார்த்தாலும் அந்த நிலாவையே பார்த்துட்டு இருந்தா எனக்கு எப்படிப் புடிக்கும்" என்றதும் அவள் வியப்பாக அவனைப் பார்த்தாள்.

"பொய் சொல்லாத. உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்" என்றதும் நகைத்தான் அவன். பின் எத்தனை முறை அவனிடம் திட்டு வாங்கியிருக்கிறாள். இப்பொழுது வந்து நீ அதையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று‌ காரணம் கூறிவிட்டால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன.

"அது அப்படி இல்லை அனி. ஒரு கற்பனை உலகத்திக்குள்ள நீ தொலைஞ்சு போய்ட கூடாதுங்கிற பயம். எதுவுமே இல்லாத உலகத்தில், உன்னோட ஏக்கங்கள் உன்னை வாழவிடாது. அதனால் சில சமயம்‌ உன்னைத் திட்டியிருக்கலாம். ஆனால் இங்கதான் எல்லாம் இருக்கே. அதனால ரசிக்கலாம். தப்பில்லை."

"நீயும் ரசிக்கிற."

"நானும் ரசிக்கிறேன். ஆனால் நீ ரசிக்கிறதை இல்ல" என்றவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

"நான் ரசிக்கிறதை சொல்லவா?" என்றான் அவன்.

"ம்ம்ம்.. சொல்லு."

"இந்தக் குங்குமம் உன்னோட கன்னத்தின் சிவப்பு முன் தோற்றுவிடும். இந்தத் தோடு, நீ செவி மடுக்கும் சொற்களின் முன் தோற்றுவிடும். இந்தக் கழுத்தணி, உள்ளே செல்லும் மூச்சுக் காற்று முன் தோற்றுவிடும். நீ பேசும் மொழியின் முன் தோற்றுவிடும், இந்த வளையல்களின் ஓசை. இது எல்லாத்துக்கும் முன்னாடி நானும் தோற்றுப் போய்தான் நிற்கிறேன்" என்று அவன் அடுக்கிக் கொண்டே செல்ல, அவளின் முகத்தில் வெட்கம் பூவாய்ப் பூத்தது.

அவன் இவ்வளவு ரசனைக்காரனா என்ன? இந்த ஆடையும் ஆபரணங்களும் அவனை ரசிகனாக்கிவிட்டதா?

"நான் சொன்ன நேரம் இன்னும் முடியலையே. திரும்பவும் அதையே பேசுற" என்று அவள் வெட்கத்துடன் சலித்துக் கொள்ள, "சரி வேற பேசலாம்" என்று சிரித்துக் கொண்டான் அவன்.


"அன்னைக்கு என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டியே. அதுக்கு இப்போ பதில் சொல்லவா?"

"என்ன கேள்வி?"

"காதல்னா என்னனு கேட்டியே? அதுக்கு இப்போ பதில் சொல்லவா?"

"ம்ம்ம்.. சொல்லு.." என்றாள் ஆர்வமாக.

"நம்ம உலகத்தைப் பொறுத்தவரை அன்பு ஒரு பண்டமாற்று பொருளா இருக்கலாம். ஆனால் இங்கு அதற்கு பொருளே வேற. இங்க அன்பு பல பரிமாணங்களில் இருக்கு."

"நீ ரொம்ப‌ மாறிட்ட நளன்."

"நீயும் இந்த உலகமும் என்னை மாத்திட்டீங்க."

"சரி..‌நீ சொல்லு.. அப்படி என்ன அன்பிற்கு பல பரிமாணங்கள்."

"தன் கணவனைக் கொன்றவனைப் பழி வாங்கிய வேலு நாச்சியாரிடம் புதுவிதமான வீரம்‌ சுமந்த அன்பு. ஆங்கிலேயரின் கையால் சாவு வரக்கூடாதுன்னு நினைத்த மங்கை சுமந்த தாய் நாட்டின் மீதான அன்பு. வேலு நாச்சியாருக்காக உயிரை அளித்த குயிலியின் நட்பு. நாம யாருன்னே தெரியாம இருந்தாலும், நமக்கு அடைக்கலம் கொடுத்த பொன்னி அக்கா. இப்படி பல விதமான அன்பு இருந்தாலும், அதில் வென்றது மங்கையின் கணவனின் அன்புதான்."

உண்மையில் இது எல்லாம் அவளுக்கும் பிடித்திருந்தது. ஆனால் மங்கையின் கணவன் செய்ததை அவளால் இன்னும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

"எனக்கு என்னமோ அப்படி தோணல. அவர் மேல இன்னும் கோபம் இருக்கு" என்றாள் அவள் வெளிப்படையாக.

"தன் மனைவியின் வார்த்தை நெஞ்சைக்‌ கூராய் கிழித்திருந்தாலும், அவளின் சொல்லுக்கு இணங்கி, அவளை கொன்ற மங்கையின் கணவன் உண்மையில் உயர்ந்தவன் தான். உனக்கும் ஒருநாள் புரியும்."

"நீ‌, பொன்னி அக்கா எல்லாரும் அந்த செய்கைக்கு பின் இருக்கும் அன்பை ஏத்துக்கிட்டீங்க. ஆனால் என்னால எப்பவும் ஏத்துக்க முடியாது."

"அப்புறம் எதுக்கு ராணிக்கிட்ட, மங்கையைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு கேட்ட."

"அது.. அது..."

"உன்‌ மனசின் ஓரமா அவர் மேல ஒரு நல்ல எண்ணம் இருக்கு. ராணி சொல்ற கதையில் அது நியாயப்படுத்தப்படுமோனு நினைக்கிற" என்று சந்தேகமின்றி உரைத்தான் அவன்.

அவள் திடுக்கிட்டு விழித்தாள். அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா என்று அவளே மறுபரிசீலனை செய்து பார்க்க தயங்கிய ஒரு விடயத்தை, அவள் மனதின் எண்ணத்தை, இவன் இப்படி ஐயமின்றி கூறுகிறானே என்று வியந்தாள்.

"ஆனா ஒரு விஷயம். அன்னைக்கு நான் செத்தா நீ என்ன செய்வன்னு கேட்டியே. அதுக்கு இப்போ பதில் சொல்றேன்" என்று அவன் கூறியதும் அவள் ஆர்வம் மின்ன அவனைப் பார்த்தாள்.

"நீ செத்தா நானும் சாகணும்னு தோணுது. உண்மையா செத்துப் போவனான்னு தெரியாது. ஆனா இப்போ என்னால அந்த கேள்விக்கு தயக்கமில்லாம பதில் சொல்ல முடியும்" என்றதும் மீண்டும் திடுக்கிட்டாள். அவனின் திடீர் அன்பு அவளை திடுக்கிட வைத்ததோ? ஆனால் மனதின் மெல்லிய பாகத்தைத் தொட்டுச் சென்றது.

அவளின் திடுக்கிடல் கண்டு, அவன் பேச்சை மாற்றினான்.

"சரி உனக்கு என்ன பிடிச்சது சொல்லு."

"இன்னைக்கு ஒரு நாடகம் நடந்ததே. அதில் சீதா தேவியை எனக்கு ரொம்பவே பிடிசச்து. மனசைவிட்டு இன்னும் அகலாத பாத்திரம் சீதாம்மா" அனிச்சம்.

"ஏன்?"

"ராமன் நினைக்கிறதுக்கு முன்னாடியே அவர் என்ன நினைப்பார்னு கணிக்கனும்னா அது எப்படிப்பட்ட காதலா இருக்கணும்."

"எனக்குச் சீதைப் பிடிக்கல.."

"ஏன்.."

"ராமன் ஊருக்கு நல்லது செஞ்சிருந்தாலும், சீதைக்கு நியாயம் செய்யல. ஆனா மகாபாரதத்தில் வரும் திரௌபதை சபையில் கணவன்மார்களை எதிர்த்துக் கேள்வி கேட்டா. அவளுக்கு நடந்த அநீதிக்கு பழி தீர்த்துட்டா."

"அப்படிப் பார்த்தாலும் அவள் கணவர்களை ஏன் ஏத்துக்கணும். தப்பு செஞ்சது அவுங்கதானே. அவர்களை வேண்டாம்னு சொல்லிருக்கலாமே."

"இதுல அவளோட சாமர்த்தியம் இருக்கு அனி. சபையில் அவமானம் செய்த கௌரவர்களை, பழி தீர்க்க கணவர்களைக் கேடயமாக உபயோகித்தாள். நல்லா யோசிச்சு பாரு. பாண்டவர்களை மூலமாய்க் கொண்டு திரௌபதை அவமதிக்கப்பட்டாள். அவளை அவமதிக்க, கௌரவர்களுக்கு அவளின் கணவர்கள் தேவைப்பட்டனர். அதே கணவர்களைக் கொண்டு அவனைப் பழி தீர்த்துவிட்டாள். துணிவு மிக்கப் பெண்கள் அழகா இருக்காங்க‌. மங்கை, குயிலி, ராணி வேலு நாச்சியார் இப்படி இந்த உலகத்தில் எத்தனை துணிவுள்ள பெண்கள்."

"எதிர்த்துக் கேள்வி கேட்டாதான் உனக்குப் பிடிக்குமா?"

"அதுவும் ஒரு காரணம். இன்னொரு காரணமும் இருக்கு."

"அது என்ன?"

"இவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணி கடைசியில் பிரிஞ்சிருக்கவா? ராமனும் சீதையும் பிரிஞ்சது எனக்குப் பிடிக்கல."

இந்த உலகத்திற்கு வந்து சில நாட்களே ஆனாலும், எவ்வளவு அனுபவங்கள். காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை புதுப்புது அனுபவங்கள்.

"எனக்கு இப்போ என்னென்னமோ தோணுது" அனி

"என்ன தோணுது?"

"நாம ரெண்டு பேரும் இந்த உலகத்தில் தனியா இருக்க மாதிரி தோணுது."

"அப்பறம்" என்று கூறி அவளை மடியில் படுக்க வைத்தான்.

"நளன் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. எழுந்து உக்காந்துக்கவா?"

"அனி, உண்மையைச் சொல்லணும்னா எனக்குப் பொறுமையே இல்லை. உனக்காக ரொம்பவே பொறுமையா இருக்கேன். நீ கேட்ட ஒரு மணி நேரம் முடிஞ்சிருச்சு"

"சரி.. இன்னும் எனக்கு ஒரு மணி நேரம் குடு.. அதுக்குள்ள தயாராகிக்கிறேன்" என்றாள் சிரித்துக் கொண்டே.

"ஷ்ஷ்... இதுக்கு மேல நீ எதுவும் பேசக்கூடாது. ஏற்கனவே உன்னைத் தயார் செய்துதான அனுப்பியிருக்காங்க."

"அதுதான் பிரச்சனையே. அதுனாலதான் நான் இப்படி ஆகிட்டேன்."

"அதுல என்ன பிரச்சனை?

"வரும் போது இந்தப் பாலை கையில் கொடுத்து, நிறையச் சொன்னாங்க. என்னன்மோ சொல்லி, எனக்கு இல்லாம இருந்த உணர்வையெல்லாம் வர வச்சுட்டாங்க" என்றாள் சலித்துக் கொண்டே.

"அப்படி என்ன சொன்னாங்க?"

"அதெல்லாம் சொல்ல முடியாது."

"அனி... எனக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும். உண்மையாவே உன்னை எப்படிக் கையாளணும்னு தெரியல எனக்கு."

"இது என்ன பெரிய கம்பு சூத்திரமா. உனக்கு எப்படித் தோணுதோ அப்படி ஆரம்பிச்சுக்கோ" என்றாள் சிரித்துக் கொண்டே.

"அது சரி. மகாராணியோட ஒப்புதல் கிடைச்சிருச்சு போல" என்று கூறியவனின் மார்பில் அனிச்சம் தஞ்சம் புகுந்திருந்திருந்தாள்.

அவளின் கற்பனை உலகில் அவனும் அவளும் அன்பைப் பரிமாற, இருள் போர்வையாய் மாறியிருந்தது. அவனின் அத்துமீறல்களால் அவளை இம்சைகள் செய்தான்.

இடைவெளி என்பதே‌ இல்லாமல் இருவரும் களைப்பின் மிகுதியில் இருந்தனர். இரவும் களைத்துப் போனது. பகல் மென்மையுடன் தெளிய ஆரம்பித்தது.

விகல்பமின்றி புள்ளினங்கள் கோகிலமாய் ஒலியெழுப்ப, அவளும் அவனுடைய மார்பிலிருந்து எழுந்து கொள்ள முயன்றாள். ஆனால் அவன் விடவில்லை. மீண்டும் இழுத்துக் கொண்டான்.

அவள் ஒரு வினா எழுப்பினாள்.

"நளன், இது தப்பில்லையா?" என்று அவள் வினவ, அவன் திடுக்கிட்டான்.

"என்ன ஆச்சு அனி.. ஏன் குழப்பமாவே இருக்க? இப்போ இங்க என்ன தப்பு நடந்துச்சு?"

"நம்ம உலகத்தோட நிபந்தனைகள் எல்லாம் நினைவிருக்கா?"

"நாம அங்கயே இல்லாதப்போ, அதை‌ இன்னும் ஏன் பிடிச்சு தொங்குற" என்றான் ஆற்றமையுடன்.

"ஒருவேளை எனக்கு குழந்தை உருவானா?" என்று அவள் வினா எழுப்ப, அவன் முகத்தில் சிந்தனையெல்லாம் இல்லை. அவன் முன்னமே சிந்தித்ததுதான்.

"குழந்தை வந்தா தப்பா என்ன? குழந்தையைப் பெத்து வளர்க்கலாம்" என்றான் அவன் சாதாரணம் போல்.

"அதெப்படி, குழந்தைக்கு ஏதாச்சும் ஆபத்து வந்தா?"

"அனி..‌ உன்னோட பயம் அர்த்தம் இல்லாதது. நாம நினைச்சது எதுவுமே நடக்கல. இது எல்லாமே அண்டத்தோட திருவிளையாட்டு. இப்போ இங்க வந்து நம்ம உயிர் வாழும் போது, நம்ம குழந்தைக்கு என்ன பிரச்சினை வரும்னு நினைக்கிற. ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். இங்க உள்ள சாப்பாடு நாம சாப்பிட்டதே இல்லை. ஆனாலும் நாம சாப்பிடும் போது நமக்கு ஒவ்வாமை வரல. அப்போ இது நம்ம மரபணுவில் எங்கோ தகவலா இருக்கு. நம்ம பூர்வ குடிகள் இப்படித்தான் வாழ்ந்திருக்கணும். அதனால ஒன்னும் ஆகல. அதே மாதிரி, நமக்கு என்ன நடந்தாலும் அதை காலத்திடம் விட்டுடு. இதுவரைக்கும் நடந்தது எல்லாமே நண்மையா இருக்கும் போது இனிமேயும் நண்மைதான் நடக்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு" என்று அவன் கைகளை உயர்த்த, அவனுடைய கைகளில் அவளின் கைகள் அடங்கிவிட்டன.

"எதுக்கும் கவலைப் படாத அனி. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்" என்று வாக்களித்தான் அவளுக்கு. எப்படி என்றெல்லாம் அவனுக்கும் தெரியாது. ஆனால் கேடு ஒன்றும் நிகழாது என்று அவன் மனம் அடித்துக் கூறியது.

நிலவு ஒழுகும்!!!













 
Status
Not open for further replies.
Top Bottom