Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
595
Reaction score
734
Points
93




 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
595
Reaction score
734
Points
93
அத்தியாயம் – 8

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்த அழகிய மாளிகைக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு அணிகலனாக மாறி இருந்தது. சுற்றுச்சுவர் கேட்டை ஒட்டி நின்ற இரண்டு சஃபாரி மனிதர்கள் முதல் ஸ்க்ரீனிங்கை முடிப்பார்கள். அடுத்து தோட்டத்தை தாண்டி வீட்டுக்குள் நுழைய இரண்டாவது ஸ்க்ரீனிங் நடக்கும். எல்லாம் சமீபத்தில், நரேன் தாக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட ஏற்பாடு தான்.



அவன் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொண்ட போது முதல் முயற்சி நடந்தது. அதில் அவன் தப்பியது அதிஷ்டத்தின் உபயம். இரண்டாவது முறை அவனுடைய கம்பெனியிலேயே நடந்தது. அப்போது அவனை காத்தது செக்யூரிட்டி ஹெட் நஸீம். இப்போது அந்த வீட்டில் அபிமன்யுவின் அறையில், அவனுக்கு எதிரில் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் நரேனின் எதிரிகள் அல்லது எதிரிகளாக இருக்கக் கூடும் என்று சந்தேக பட்டியலில் உள்ளவர்களின் விபரம் அடங்கிய கோப்பு இருந்தது.



கணிக்க முடியாத முகபாவத்துடன் தன்னை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் அந்த முரட்டு மனிதனை குழப்பத்துடன் பார்த்தான் நஸீம்.



"வேற ஏதாவது வேணுமா சார்?" - பார்வையில் கூர்மை… குரலில் பணிவு.



அபிமன்யுவின் புருவம் மேலேறியது. இதழ்கள் ஏளன சிரிப்பில் வளைந்தன. நசீமின் முகம் இறுகியது.



"பிசினஸ் போட்டிக்காக கொலை செய்றதுன்னு இறங்கினா இங்க ஒருத்தனும் பிசினஸ் பண்ண முடியாது இல்ல நஸீம்?" - அவனுடைய நக்கல் குரல் நஸீமின் விசாரணையை மொக்கை என்றது.



நசீமின் தாடை இறுகும் விதத்திலேயே அவன் பற்களை நறநறப்பது தெரிந்தது. அதை சுவாரஸ்யமாக பார்த்த அபிமன்யு, "எவ்வளவு நாளா இந்த வேலையில் இருக்கீங்க?" என்றான்.



"பன்னிரெண்டு வருஷம் டிஃபன்ஸ்ல இருந்திருக்கேன். நாலு வருஷமா இங்கே இருக்கேன்" என்றான்.



‘டிஃபன்ஸ்’ என்கிற வார்த்தையை கேட்டதும் அபிமன்யுவின் முகம் நக்கல் ஏளனத்தை எல்லாம் துறந்து தீவிரமாக மாறியது. இவன், தன் தாயின் கண்டுபிடிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தான். பிறகு எப்படி இவன் அடிப்படை விஷயத்தைக் கூட கோட்டைவிட்டான்! சந்தேகம் எழ அதை அவனிடமே கேட்டான்.



"பார்ல தள்ளியம் யூஸ் பண்ணி இருக்காங்க. இது சாதாரண மனுஷங்க செய்ய கூடிய விஷயமா?" என்றான்.



உண்மைதான், தள்ளியத்திற்கு நிறம்… மனம்… சுவை என்று எந்த குணமும் கிடையாது. உணவில் கலந்தால் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கச்சிதமாக ஆளை முடித்துக்கட்டும். நச்சுயியல் சோதனையிலும் பிடிபடாது. அதன் ஆபத்தை உணர்ந்துதான் அரசாங்கம் அந்த இரசாயனத்தை பொதுமக்கள் புழக்கத்திலிருந்து தடை செய்தது.



ஆனால் அதே இரசாயனம் மிக ரகசியமாக நிழல் உலகத்தில் பல முக்கிய நிகழ்வுகளை சாத்தியப்படுத்தி இருந்தது. அது நஸீமுக்கும் தெரியும். ஆனாலும் அதை அவன் கணக்கில் எடுக்கவில்லை.



‘புழக்கத்தில் இல்லாத பொருட்களை பிளாக் மார்க்கெட்டில் வாங்க முடியாதா என்ன!’ - அப்படித்தான் அவன் யோசித்தான்.



"என்னோட இன்ஃபர்மேஷன் வெரி கிளியர். நா யாரையும் மிஸ் பண்ணல சார்! இந்த லிஸ்ட்ல இருக்க யாரோ ஒருத்தர் தான் இதை பண்ணி இருக்கணும்" என்றான் உறுதியாக.



"நோ… சம்திங் மிஸ்ஸிங். நாம இன்னும் டீப் டைவ் பண்ணனும்" என்றான் அபிமன்யு.



அஸீம் சற்று யோசித்தான். பிறகு ஆமோதிப்பாக தலையசைத்தான்.



"கிளம்புங்க" - ஒற்றை வார்த்தையில் அவனை விடுவித்த அபிமன்யு, அவன் கிளம்பியதும் எழுந்து பேஸ்மேட் சென்றான்.



பேஸ்மெண்ட் என்றால் மகல்பாட்னா மாளிகையில் உள்ளது போல் டார்ச்சர் ரூம் அல்ல. இது நரேன் ரசனைக்கு ஏற்றார் போல் அழகாகவும் அடிப்படை வசதிகளோடும் அமைக்கப்பட்டிருந்த பேஸ்மெண்ட். அங்கே குட்டியாக ஒரு பார் கூட இருந்தது. அதற்காகத்தான் கீழே வந்தான் அபிமன்யு.
*****​


"மாம், நீங்க நம்பவே மாட்டீங்க. அபி நிறைய மாறி இருக்கான். இங்க வந்த பிறகு ஒருதரம் கூட ட்ரக் யூஸ் பண்ணல. ஐ ஆம் டாம் ஸூர்" - அன்று இரவு மகனை பற்றி விசாரித்த பிரமிளாவிடம் அடித்து சொன்னான் நரேன்.



"இம்பாஸிபிள். ஹி வாஸ் அடிக்டட்... வருஷ கணக்கா எடுத்திருக்கான். உடனே எல்லாம் விட முடியாது. நீ கவனிச்சிருக்க மாட்ட நரேன்" - நம்ப மறுத்தார் அவர்.



"நோ வே... அபியை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். ஒரு துளி எடுத்தாலும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் போயிடுவான். இங்க வந்து பத்து நாளுக்கு மேல ஆயிடிச்சு. இதுவரை ஒரு தரம் கூட அப்படி எதுவும் ஆகல"



"ஓகே, அவன் இப்போ மெடிகேஷன்ல இருக்கான். அதனால கூட கண்ட்ரோல்ல இருக்கலாம். ஏதாவது பிரச்சனை வந்தா சூழ்நிலை மோசமாகும். அப்போ ரொம்ப அக்ரஸிவா ஆயிடுவான். நீ அலட்சியமா இருக்காத" என்றார்.



நரேன் மனம் அதை ஏற்க மறுத்தது. "நோ மாம், ஐ திங்க் அந்த டாக்டர் கெஸ் பண்ணினது கரெக்ட். அபி வேலையில ரொம்ப இன்வாவ் ஆகி இருக்கான். அதுதான் அவனை சேஞ்ச் பண்ணி இருக்கு. ட்ரக்ஸ், அவனோட பழைய லைஃப்.. இதெல்லாம் யோசிக்க அவனுக்கு இப்போ டைம் இல்ல "



"நீ சொல்றது உண்மையா இருந்தா நல்லது தான்" என்றவர் தொடர்ந்து "அங்க கிளைமேட் எல்லாம் எப்படி இருக்கு?" என்றார்.



அதற்கு நரேன் பதில் சொல்வதற்குள் படிக்கட்டில் யாரோ இறங்கும் ஓசை கேட்டது.



"கால் யு லேட்டர் மாம்" என்று கூறி அலைபேசியை அணைத்து பேக்கெட்டில் போட்டபடி திரும்பினான் நரேன்.



"ஹேய், நீ என்ன இங்க!" - அண்ணனை பார்த்ததும் ஆச்சரியப்பட்டான் நரேன்.



அபிமன்யுவின் புருவம் உயர்ந்தது. "ஏன்? வர கூடாதா?" - தம்பியை ஓரக்கண்ணால் பார்த்தபடி கிளாசில் ரிங்க்ஸை ஊற்றினான்.



நரேன் தோளை குலுக்கினான். "ஏன் வர கூடாது?"



"எடுத்துக்கோ" - தம்பியிடம் கிளாஸை நீட்டினான். அவன் வேண்டாம் என்று மறுத்தான்.



"ஏன்? குடிக்கிறது இல்லையா நீ?"



"இப்போ இல்ல"



"எப்போலேருந்து, அந்த பார்ல நடந்த சம்பவத்துக்கு பிறகா?" - விசாரித்தான்.



நரேன் முகத்தில் மிக மெலிதாய் ஒரு மாற்றம். மற்ற யார் கண்களுக்கும் அது தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. ஆனால் அப்போது அவன் எதிரில் அமர்ந்திருப்பவன் அபிமன்யு. ஸ்கேனர் கண்கள்... போட்டோகிராஃபிக் மெமரிக்கு சொந்தக்காரன். விட்டுவிடுவானா என்ன!



நரேன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தான். "அன்னைக்கு என் கூட இருந்த மூணு பேர் செத்துட்டாங்க அபி... அது ஒரு மோசமான நாள்" என்றான்.



"அன்னைக்கும் நீ ட்ரிங்க் பண்ணலையா?" என்றான் அபிமன்யு.



இல்லை என்று தலையசைத்தான் நரேன். "அந்தமான் வந்ததிலிருந்தே நான் ட்ரிங்க் பண்றது இல்ல"



"இன்டரெஸ்டிங்! பின்ன ஏன் பாருக்கு போன?"



"அது ஒரு பிசினஸ் மீட்... அடிக்கடி போவேன். ட்ரிங்ஸ் ஆர்டர் பண்ணுவேன். ஆனா குடிக்கறது இல்ல"



அதன் பிறகு அந்த மீட்டிங்கில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள். என்னென்ன நடந்தது என்று அனைத்தையும் ஒன்று விடாமல் பேசினார்கள்.



"உன்ன எப்படி விட்டானுங்க? நீதானே இந்த கேஸ்ல முதல் சஸ்பெக்ட்" என்றான் அபிமன்யு.



"உண்மைதான். ரெண்டு மாசம் ஆச்சு, என்கிட்ட எந்த தப்பும் இல்லைன்னு ப்ரூவ் ஆக" என்று சிரித்தான் நரேன்.


அதன் பிறகு சற்று நேரம் பிரதர்ஸ் டாக் சென்று கொண்டிருந்தது. அப்போது நரேன் கேட்டான், "ஹேய், தட் கேர்ள் ஃப்ரம் கீப்-லாக்... மிருதுளா… எப்படி அந்த பொண்ணு?" என்றான் ஒருவித சிரிப்பும் கண்களில் குறுகுறுப்புமாக.


பக்கென்றிருந்தது அபிமன்யுவுக்கு. அவனுடைய சுவாரஸ்ம் நிறைந்த கண்களும், சிரிப்பும் நெஞ்சுக்குள் நெருப்பை கொட்டியது போல் இருக்க, கையில் இருந்த கிளாஸை ஒரே கல்பில் காலி செய்துவிட்டு, "எப்படின்னா?" என்றான் கடுகடுப்பாக.


'அடுத்து ஒரு வார்த்தை தவறாக வரட்டும்!' - முறைத்தவன் எதிரில் இருப்பவன் தம்பி என்பதை கூட மறந்து விட்டான்.


"ஷி இஸ்..."


"ஷர்ட்-அப்" - அவன் தொடங்குவதற்குள் இவன் முடித்து வைத்தான் அந்த பேச்சை.


மிருதுளாவை பற்றி அவன் நினைப்பதை... பேசுவதை... அவனால் சகிக்க முடியவில்லை. அதுவும் இரவில்... பாரில்... குடித்துக் கொண்டிருக்கும் போது... உள்ளே புகைந்தது.


அண்ணனின் கோபத்தை கண்டு நரேனின் புருவம் சுருங்கியது. "அபி!!!" என்றான் குறும்பு பார்வையோடு.


'இடியட்... எதுக்கு இப்படி பார்க்கறான்!' - இப்போது அவனுக்குள் ஏனோ ஒரு பதட்டம் வர, " ஏய்… அறிவு இல்ல உனக்கு?" என்று குரலை உயர்த்தினான்.


"என்னவோ தப்பா இருக்கே! நீ ஏன் அந்த பொண்ணு நம்ம கேம்பஸ்ல தான் ஒர்க் பண்ணனும்னு ஸ்ட்ரிக்ட்டா இருக்க? எக்ஸ்ட்ரா கேமராஸ் வேற! வாட்ஸ் கோயிங் ஆன் ப்ரோ?"


"ஆர் யு கிரேஸி நரேன்? எனக்கு யார் மேலையும் எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல புரியுதா? நௌ கெட் அவுட்" - அடித்து துரத்தாத குறையாக விரட்டினான்.


"ஓகே... ஓகே... கூல்... உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லனா எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் " என்று கூறியபடி அவன் எழ, 'வாட் த ஹெல்' - அபிமன்யுவுக்கு நெஞ்சை அடைத்தது.


"வாட் யு மீன் யு ஆர் ஹாப்பி?" என்று உறுமி கொண்டு எழுந்தான்.


நரேன் அலட்சியமாக தோளை குலுக்கினான். "நம் குடும்பத்திற்கு ஒரு பிரமிளா போதும். சிரிக்க கூட தெரியாத இன்னொரு பெண் நமக்கு வேண்டாம்' என்றான் அலட்சியமாக.


அபிமன்யுவின் முகம் அஷ்ட கோணலாக மாறியது. அதை பார்த்து சத்தமாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான் நரேன்.


நரேன் அங்கிருந்து கிளம்பி வெகு நேரம் ஆகிவிட்டது. இன்னமும் கூட அபிமன்யு சமாதானம் ஆகவில்லை.


'இவன் எதற்கு என் மிருதுவை பற்றி நினைக்கிறன்! மிருதுளா என்று உரிமையாக சொல்கிறான்! ஒருவேளை மனதிற்குள் ஆர்வம் இருக்கிறதோ! மறைக்கிறானோ!’ - உள்ளே கொதித்தது.


‘இல்லை… சிரித்தானே! நக்கல் பார்வை பார்த்தானே! ஒருவேளை நம் முகத்தில் தான் ஏதேனும் எழுதி ஒட்டி இருக்கிறதா!' - அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்து கண்ணாடியில் முகத்தை பார்த்தான். ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.


‘இல்லை.. அவன் மிருதுவை அலட்சியமாக நினைக்கிறான்! அதனால் தான் மிஸ்.மிருதுளா என்று மரியாதையாக குறிப்பிடமல் மிருதுளா என்று மொட்டையாக சொன்னான்! சிரிக்க தெரியாதவள் என்று கூட சொன்னானே! முட்டாள்... உனக்கென்னடா தெரியும் என் தேவதையை பற்றி!' - மீண்டும் வெளியே வந்து இன்னும் இரண்டு பெக் எடுத்துக் கொண்டான். பிறகு மொபைலை எடுத்து அவளுடைய வீடியோ ஒவ்வொன்றாக ஓட விட்டான். ஜூம் செய்து அவள் முகத்தை பார்த்தான். கண்களை பார்த்தான். இதழ்களை பார்த்தான். பார்த்துக் கொண்டே அப்படியே அங்கேயே உறங்கிப் போனான்.
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
595
Reaction score
734
Points
93
அத்தியாயம் – 9

மித்ரா கொடுத்துவிட்டு சென்ற ஃபைலை வாங்கிப் பிரித்துப் பார்த்த மிருதுளா, எரிச்சலுடன் அதை டேபிளில் தூக்கி வீசினாள். பிறகு கோபத்துடன் கேமிராவை திரும்பிப் பார்த்தாள். அந்த பக்கத்திலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் முரட்டு இதழ்களில் சின்ன புன்னகை. கண்களில் சுவாரஸ்யம்.

'அதெப்படி! கரெக்ட்டா இந்த கேமிராவை பார்க்கறா!' என்று ஆச்சரியப்பட்டான். பிறகு, 'தப்ப தப்புன்னு சொன்னா எவ்வளவு கோபம் வருது உனக்கு! ம்ம்ம்! வரட்டும் வரட்டும்.. இன்னும் எவ்வளவு கோபம் வருதுன்னு பார்த்துடலாம்' என்று தனக்குள் சொன்னபடி அவளை பார்வையால் விழுங்கினான்.

கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி சிரமப்பட்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த மிருதுளா, தூக்கி எறிந்த ஃபைலை மீண்டும் கையில் எடுத்தாள்.

பத்து நாட்களாக இந்த ஒரே ஃபைலில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இவள் என்ன கவனமாக திட்டமிட்டு ஒர்க் பிளானை கோட் செய்து அனுப்பினாலும் அதில் குற்றம் குறை கண்டு பிடித்து மீண்டும் மீண்டும் அந்த ஃபைல் அவள் கைக்கே வந்தது.

ஒவ்வொரு நாளும் இதைவிட சிறப்பாக செய்ய இதில் ஒன்றும் இல்லை என்று எண்ணித்தான் அவள் மித்ராவிடம் ஃபைலை கொடுப்பாள். ஆனால் மறுநாள் வந்து பார்த்தல் குறைந்தது பத்து கரெக்ஷன்ஸ் இருக்கும். அதை சரி செய்து கொடுத்தால் மீண்டும் அதில் ஒரு பத்து கரெக்ஷன். இப்படியே பத்து நாட்கள் ஓடிவிட்டது.

வேலை திட்டம் மெருகேறி இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவளை ஒரு செல்லா காசு போல், எதற்கும் உபயோகம் இல்லாதவள் போல், அவள் என்ன செய்தாலும் தவறு கண்டு பிடித்தால் எப்படி! அது மட்டும் இல்லாமல் ஒரே வேலையை எத்தனை நாள் தான் திரும்ப திரும்ப செய்வது! நினைக்க நினைக்க பிரஷர் கூடியது அவளுக்கு. நரேன் இப்படியெல்லாம் செய்வான் என்று அவளுக்கு தோன்றவில்லை. அப்படியென்றால் அந்த கேமிராவுக்கு பின்னால் இருந்து அவளை நோட்டமிடுவது யார்! - மீண்டும் ஒரு முறை கேமிராவை திரும்பிப் பார்த்தாள்.

அந்த அழகிய கண்களில் பயம், சிரிப்பு, குறும்பு, காதல் என்று அத்தனை உணர்வுகளையும் அவன் பார்த்து ரசித்திருக்கிறான். இன்று அதே கண்கள் ஒளியிழந்து வெறுமையாய் தன்னை நோக்குவதை காணும் போது மனதை பிழிந்தது அவனுக்கு. அங்கே அவர்களுக்கு குறுக்கே ஒரே சுவர் தான். அதை உடைத்து நொறுக்கி தள்ளிவிட்டு அவளிடம் பாய்ந்து சென்று, அவளை இறுக்கி கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

'ஓ காட்… மேன்! ஐ மிஸ் ஹர் சோ மச்!!' - உள்ளே ஒருவன் புலம்பினான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை நரம்புகளிலும் தசைகளிலும் அவளுக்கான ஏக்கம் ஊடுருவி அவனை புரட்டிப்போட்டது.

அவள் இல்லாமல் எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பான்! எத்தனை இரவுகள் தூங்க முடியாமல் தவித்திருப்பான்! தனிமையை தாங்க முடியாமல் எத்தனை முறை ஓவர் டோஸ் ஆகும் அளவுக்கு போதை ஏற்றி கொண்டிருப்பான்! இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இதோ... ஒரே கூரையின் கீழ்... அவன் கண்களுக்கு எதிரில்... அவனுடைய தேவதை... அவனுடைய மிருதுளா! வேறு என்ன வேண்டும்? முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

திரையில் தெரியும் அவள் முகத்தை தொட்டு வருடினான். நெஞ்சுக்குள் சில்லென்று ஒரு உணர்வு... .அவளையே தொடுவது போல்... அவள் கன்னத்தை வருடுவது போல்... 'மிருது!!!' - அவன் உதடுகள் முணுமுணுத்தது.

அந்த பக்கம் மிருதுளா தலையை ஒருபக்கம் சாய்த்து நெற்றியை நீவினாள். உடனே இவன் பார்வை கூர்மையானது. அவள் புருவ சுருக்கத்தையும், முக வாட்டத்தையும் கண்டதும், சட்டென்று இண்டர்காமை எடுத்தான்.

சற்று நேரத்தில் மிருதுளா அமர்ந்திருக்கும் அறைக்குள் வெள்ளை சீருடை அணிந்த ஒருவன் கையில் ட்ரேயுடன் நுழைந்தான். அதில் அவளுக்கு விருப்பமான பிளேவர் டீயும், ஸ்நாக்ஸும் இருந்தது.

"தேங்க்ஸ்" என்று அவனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு டீயை எடுத்து ஒரு மிரடு அருந்தியவள் சட்டென்று நிறுத்தினாள். பிறகு கப்பை முகத்துக்கு அருகில் கொண்டு வந்து வாசம் பிடித்தாள். அவளுக்கு விருப்பமான பிளேவர்... தன்னை மறந்து கண்களை மூடி ரசித்தாள். மனதிற்குள் இதமான ஒரு உணர்வு!

'எத்தனை நாட்களாகிவிட்டது! இப்போது! இங்கே! எப்படி!' - மனதிற்குள் கேள்விகள் எழ மீண்டும் அவள் பார்வை கேமராவின் பக்கம் திரும்பியது.

அவள் கண்களில் தெரிந்த கேள்வி... சந்தேகம்... ஆர்வம்... அனைத்தையும் பார்த்த அபிமன்யுவின் முகத்தில் புன்னகை தோன்றியது. தன்னுடைய இருப்பை அவள் உணர்கிறாளோ என்று தோன்ற உள்ளம் துள்ளியது அவனுக்கு.

அன்று மாலை வேலையை முடித்து பைலை மித்ராவிடம் ஒப்படைத்த போது, "இதுக்கு மேல என்னால இந்த பைல்ல வேலை செய்ய முடியாது. இவ்வளவு தான் என்னோட கெப்பாசிட்டி. சாட்டிஸ்பாக்ஷன் இல்லனா, மிஸ்டர் நரேன்கிட்ட வேற யாரையாவது ஹயர் பண்ணிக்க சொல்லுங்க" என்று கூறிவிட்டு சென்றாள் மிருதுளா. உண்மையில் அவள் மெண்டலி சோர்வாகிவிட்டாள்.
**********​

பினு தாமஸ் - அபிமன்யுவின் பிரைவேட் இன்வஸ்டிகேட்டர். அவன் சம்பளம் வாங்கியது என்னவோ அரசாங்கத்திடம் தான். ஆனால் வேலை பார்த்தது அபிமன்யுவிற்கு. ஆம், அவன் அண்டர்கவரில் ஏழு ஆண்டுகள் தாக்குப்பிடித்ததில் பினு தாமஸுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. நெருக்கடியான நேரங்களில், சரியான தகவலை சேகரித்து, ரகசியமாக அவனிடம் கொண்டு சேர்த்து பல முக்கியமான காரியங்களை கச்சிதமாக நடத்தி முடிக்க உதவியிருக்கிறான். மிகவும் நம்பிக்கையானவன்... விசுவாசமானவன்… நண்பன்… அதனால் தான் அவனை அந்தமானுக்கு வரவழைத்திருந்தான் அபிமன்யு.

"நீ கேட்ட எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு" - மிருதுளாவின் கடந்த ஐந்து ஆண்டு கால வாழ்க்கையை அலசி ஆராய்ந்து டாகுமெண்ட் செய்து அபிமன்யுவின் அலுவலகத்திற்கே வந்து அவனுடைய டேபிளில் வைத்தான்.

"ரெண்டு வாரம் கொஞ்சம் ஜாஸ்தி இல்ல இந்த வேலைக்கு?" - அவன் கொடுத்த கோப்பை தன் பக்கம் இழுத்த அபிமன்யுவின் பார்வை பினு தாமஸின் முகத்தை படிக்க முயன்றது.

அவனிடம் எந்த சலனமும் இல்லை. கைகளை பின்னால் கட்டிக் கொண்டு இறுக்கமாக நின்றான்.

"பினு, டூ ஐ ஹேவ் டு ஒர்ரி அபௌட் சம்திங்?" - இனம்புரியாத பதட்டம் அவனை ஆட்கொண்டது.

ஒரு நொடி யோசித்தவன், "இல்ல... எனக்கு அப்படி ஒன்னும் தோணல. ஆனா நீ ஒரு தரம் இந்த பேப்பர்ஸ ரீட் பண்ணிட்டு முடிவு பண்ணு” என்றான்.

அவனுடைய அந்த ஒரு நொடி தயக்கம் அபிமன்யுவின் நெஞ்சுக்குள் சுருக்கென்று குத்த, பார்வை அந்த கோப்பில் விழுந்தது.

அந்த ரிப்போர்ட்டை அவன் தனியாக படிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு, “வேற ஏதாவது வேணுன்னா கூப்பிடு. ஐ ஆம் அட் யுவர் சர்வீஸ்" என்று கூறி விடைபெற்றான் பினு.

அதன் பிறகு வெகுநேரம் அபிமன்யுவிடம் அசைவில்லை. அவனால் அந்த ஃபைலை பிரித்து படிக்க முடியவில்லை. பதட்டம்… தயக்கம்… எடுத்து ட்ராயருக்குள் வைத்து பூட்டிவிட்டான்.

நீண்ட நெடு ஐந்து ஆண்டு காலம்! ஆள் மட்டும் அல்ல... அவள் குணத்திலும் மாற்றங்கள் தெரிகிறது. வாழ்க்கையில் கூட வேறு யாரையும் அனுமதித்திருப்பாளோ! - நினைத்த மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் நடுங்கியது அவனுக்கு.

சட்டென்று அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்து பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான். உள் நெஞ்சு வறண்டு நுரையீரல் சுருங்கி மூச்சு முட்ட, பேராவலுடன் ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளியேற்றினான். கைகள் தானாக பேண்ட் மற்றும் சட்டை பேக்கெட்டை சிகரெட்டுக்காக துழாவின. எதுவும் கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும்? அவன் தான் தன்னை அடிமைப்படுத்தும் எதையும் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதில்லையே! அவனுடைய முக்கியமான அடிக்ஷனே அவள் தான்! அவள் இருக்கும் இடத்தில் மற்றவைகளுக்கு என்ன வேலை!

ஆனால் இன்றைய மனநிலை அவனை தடுமாற செய்துவிட்டது. அதை டைவர்ட் செய்ய டோபோமின் ஸ்டுமிலேஷன் வேண்டும். அதற்கு நிகோடின் தேவைப்பட்டது. கிடைக்கவில்லை என்றதும் உள்ளே ஓர் மிருகம் உறும துவங்கியது. அவன் அதை அடக்க போராடிக் கொண்டிருந்த போது, அவனுடைய அறையில் அரவம் கேட்டது. திரும்பி பார்த்தான். நரேன்!!!
***********​

அன்று மித்ரா அலுவலகத்திற்குள் நுழையும் போதே ஜாலி மூட் ஜூலியட்டாகத்தான் நுழைந்தாள். காரணம் ரோமியோ பால்கனியில் நின்று கொண்டிருந்தான். அவளுக்கு முதுகு காட்டித்தான் நின்றான். முகத்தை பார்க்க முடியவில்லை... ஆனாலும் மனதிற்குள் ஜில் ஜில்... காரணம் அன்று அவனும் அவளும் மேச்சிங்... மேட்சிங்... ப்ளூ அண்ட் ப்ளூ...! ஹே ஹேய்!! மனம் துள்ள, 'ஐலசா ஐலசா… ஐஸ் கட்டி கொட்டிச்சா' என்று ரேண்டமாக ஒரு பாடலை முணுமுணுத்தபடி சந்தோஷ குவியலாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

"குட் மார்னிங் அசீம் சார்" - லாபியில் எதிர்ப்பட்ட செக்யூரிட்டி ஹெட்டுக்கு தன்னுடைய கன்டேஜியஸ் சிரிப்பை கடத்திவிட்டு, லிப்ட் கதவு திறப்பதை கண்டு குடுகுடுவென்று ஓடினாள். அது மூடிக்கொள்வதற்குள் இவள் நுழைந்துகொள்ள வேண்டுமே! ஐந்து நிமிடம் தாமதமாக போனால் ஒன்றும் தலை முழுகிவிடாது. ஆனால் ரோமியோவை பார்க்கும் ஆர்வம்!

லிஃப்ட் மேல் தளத்திற்கு வந்ததும் முதல் ஆளாக வெளியேறி, தன்னுடைய கேபினுக்குள் நுழைந்து கைப்பையை அதன் இடத்தில் தூக்கி கடாசிவிட்டு, நேராக ரெஸ்ட்ரூம் சென்று கண்ணாடியில் தன் ஆடை அணிமனைகளை சரிபார்த்துக் கொண்டு வெளியே வந்து, அந்த பறந்து விரிந்த காரிடாரில் நின்றாள். வலது பக்கம் சென்றால் நரேனுடைய அறை... இடது பக்கம் சென்றால் அபிமன்யுவின் அறை... நேராக சென்றால் மிருதுளா வேலை செய்யும் கான்பிரன்ஸ் அறை.

அவளுக்கு மிருதுளாவும் வேண்டாம்... நரேனும் வேண்டாம்... ஓடிச் சென்று ரோமியோவுக்கு சேம்-பின்ச் சொல்ல வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அது முடியாது... அட்லீஸ்ட் ஒரு குட் மார்னிங்? சொல்லலாம்.. ஆனால் அடுத்து அவன் கேட்க போகும் கேள்வி என்ன என்று அவளுக்கு தெரியும். மிருதுளா செய்து கொண்டிருக்கும் வேலையை பற்றி ஸ்டேட்டஸ் கேட்பான். முதல் நாள் சிடுசிடுக்கும் முகத்தோடு அவள் கொடுத்துவிட்டு சென்ற கோப்பு நினைவிற்கு வந்தது.

'ம்ஹும்... இவனுக்கு ரிப்போர்ட் செய்வதற்கு முன் அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும்' - இந்த பக்கமும் அந்த பக்கமும் கையை ஆட்டி தனக்குள் பேசிக்கொண்டு, நரேனின் அறை பக்கம் நடையை கட்டினாள்.
*********​

மித்ராவை பார்த்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அபிமன்யுவின் அஸிஸ்டண்ட்டாக அவளை அனுப்பிய பிறகு ஓரிரு முறை காரிடலில் பார்த்ததோடு சரி. அவளால் அபிமன்யுவிடம் தாக்குப் பிடிக்க முடியாது என்று இவன் எண்ணி இருக்க அவளோ அவனிடம் வேலை செய்யும் விதத்தை அறிந்து கொண்டு நேக்காக காலம் தள்ளியது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘அபியையே மேனேஜ் பண்ணிட்டா!’ என்று நரேன் மித்ராவை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செகரட்டரியிடம் வந்து அவள் பேசிக் கொண்டிருப்பதை கேமிராவில் பார்த்தான் அவன்.

'அட!' - என்று ஆச்சரியப்பட்டான். அதற்குள் செகரட்டரி இண்டர்காமில் அழைத்து மித்ரா அவனை பார்க்க வந்திருப்பதை சொன்னான். அவளை உள்ளே அனுப்பும்படி நரேன் சொல்ல, மித்ரா அவன் எதிரில் வந்து நின்றாள்.

அவளை அமர சொல்லி என்ன விஷயம் என்று கேட்டான். அவ்வளவு நேரமும் மனதிற்குள் அவளை பற்றி யோசித்து எதையும் குரலிலோ முகத்திலோ சிறிதும் காட்டிக்கொள்ளாமல் வெகு பிரஃபஷனலாக நடந்துகொண்டான்.

"அபிமன்யு சார் கீப்லாக் செக்யூரிட்டி சர்வீசஸ் எம்பலாயி மிஸ்.மிருதுளாகிட்ட நிறைய ரீ-ஒர்க் டிமாண்ட் பண்றாங்க. ஆனா மிருதுளா கோபப்படறாங்க. இதுக்கு மேல அவங்க ஒர்க் திருப்தியா இல்லைன்னா வேற யாரையாவது ஹயர் பண்ணிக்க சொல்றாங்க" என்றாள்.

நரேனின் புருவம் சுருங்கியது. "என்ன பிரச்சனை?" என்றான் யோசனையுடன்.

"எனக்கு சரியா தெரியல. ஆனா ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகல" என்றாள்.

'ஐ ஆம் நாட் சர்ப்ரைஸ்ட்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், "சரி, நான் அபிகிட்ட பேசறேன்" என்றான்.

"தேங்க் யூ" என்று எழுந்தாள் மித்ரா.

அவளிடம் இன்னும் பேச்சை வளர்க்க வேண்டும் போல் தோன்ற, "அபி ஆபீஸ் வந்தாச்சா?" என்றான்.

சட்டென்று அவள் தலைக்கு மேல் பல்ப் எரிந்தது... முகம் பிரகாசமானது... கண்கள் ஒளிர்ந்தது... "எஸ் எஸ்... வந்தாச்சு..." என்றாள் உற்சாகமாக.

'என்ன ஒரு ஆனந்தம்!' - மனம் கூம்பியது. அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் எழுந்து அவளோடு சேர்ந்து நடந்தான்.

"எவ்வளவு நாள் ஆகுது இங்க ஜாயின் பண்ணி?" - இயல்பாக கேட்டான்.

"அல்மோஸ்ட் ஆறு மாதம்..." - புருவம் ஏறி இறங்கியது... பற்கள் பளீரிட்டன. குரலில் பெருமை.

எதையும் மறைக்க தெரியாத திறந்த புத்தகம் அவள்! நரேன் அவளை ரசித்தான். "குட்" என்று பாராட்டினான். " வேலை எப்படி போகுது?" என்று விசாரித்தான்.

அவள் சற்று யோசித்தாள். 'ஹெச்-ஆர் அசிஸ்டென்ட்டா ஜாயின் பண்ணின என்னை பர்சனல் அசிஸ்டெண்ட்டா மாத்திட்டு வேலை பிடிச்சிருக்கான்னு வேற கேட்பியாடா பம்பரக்கட்ட மண்டையா?' - மனதிற்குள் நினைத்ததை வெளியே சொல்லாமல், "அமேஸிங்..." என்றாள் மலர்ந்த முகத்தோடு.

'ஓஹோ! அபிக்கிட்ட வேலை செய்றது அமேஸிங்கா! கொஞ்சம் வெயிட் பண்ணு.. அவனுக்கு நல்லா கீ கொடுத்து உன்ன செம்மையா கவனிக்க வைக்கிறேன்' என்று எண்ணிக் கொண்டு அவன் அபிமன்யுவின் அறைக்குள் நுழைய, 'பை-பை' என்று அவன் முதுகுக்கு டாடா காட்டிவிட்டு அவள் தன்னுடைய கேபினுக்குள் நுழைந்தாள்.

 
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom