Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed தீயாய் சுடும் என் நிலவு!

dharshini chimba

Saha Writer
Messages
307
Reaction score
228
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 45

"என்ன தீரன் உங்க மனைவி என்ன சொல்றாங்க? " என்றார் மென்மையாய் சிரித்து.

"ரொம்ப சோதிக்கிறா சார் " என்று சோகமாய் சிரித்தான்.

"இன்னும் ஃபைவ் ஹார்ஸ் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது நடக்குதா பார்போம்" என்று பேசிக்கொண்டே மிருவை சோதித்தார்.

"இவங்க பல்ஸ் எல்லாம் நார்மலா இருக்கு. இப்போ அபாய்ய கட்டத்தை தாண்டிருச்சுன்னு தான் சொல்லணும். ஆனாலும் அவங்க மூளை முழுமையா செயல் பட மறுக்குது. நமக்கு இருக்கிறது இந்த நாலு மணி நேரம் தான். பேசுங்க என்ன வேணாலும் பேசுங்க. அவங்க மூளை வேலை செய்யற மாதிரி உங்க சந்தோஷமான பழைய நினைவுகளை பத்தி பேசுங்க. இதுக்கு கடவுள் விட்ட வழி தான்" என்று வெளியேறினார்.

சிறு நம்பிக்கையுடன் பேஸ் தொடங்கினான். எவ்வளவு முடியுமோ அவ்வளவும் பேசினான். அவளின் மூடிய விழிகளைல் இருந்து கண்ணீர் மட்டுமே வந்துகொண்டிருக்க அதுவும் நின்றுவிட்டது.

ஸ்ரீஷா, அமுதன் இருவரும் தங்கள் பங்கிற்கு பேசினர்.

இருந்தும் எந்த பயனும் இல்லாமல் போக, நேரமும் கடந்து கொண்டியிருந்தது.

என்ன செய்வது என்று மூவரும் பதட்டமடைய தீரனின் முகம் சட்டென்று பிரகாசம் அடைந்தது.

"என்ன தீரன்?" என்று அமுதன் கேட்க.

"அவளோட உயிரே நம்மாகிட்ட இருக்கும் போது நம்ம ஏன் இதை யோசிக்கலை" என்று மெல்ல சிரித்தான்.

இவனுக்கு என்ன ஆயிற்று என்று இருவரும் அவனை வினோதமாய் பார்த்தனர்.

"என்னன்னு சொல்லுங்க மாமா? நேரம் வேற போய்டே இருக்கு" என்று ஆர்வத்தை தாளாமல் ஸ்ரீஷா.

"சொல்றேன். நீங்க இப்போ நான் சொல்றதை செய்ங்க" என்று தன் எண்ணத்தை கூற இருவரும் சந்தோஷமாக வெளியேறினர்.

மிருதியின் அருகிலேயே அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் தீரன்.

"ஆனாலும் நீ ரொம்ப அழுத்தகிக்காரி தான். உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன் இருந்தும் என்னை ஏற்க மாட்டேன்னு என்னடி பிடிவாதம் உனக்கு. இன்னும் எத்தனை வருஷம் தான் இப்படி என்னை தவிக்க விட போற?" என்று ஆவலுடன் சண்டையிடு கொண்டிருந்தான்.

அரைமணி நேரம் கடந்ததும் ஸ்ரீஷா உள்ளே நுழைந்தாள்.

"எங்க?" என்று தீரன் கேட்க, ஸ்ரீஷாவின் பின்னாடி வந்தான் அமுதன்.

"அப்பா" என்று அமுதனிடம் இருந்து தீரனிடம் தாவினாள் மிதிஷா.

"செல்லக்குட்டி! வாங்க வாங்க" என்று செல்லம் கொஞ்சியவன் மிருதியை காட்ட.

"பேபி" என்று அமுதன் அழைக்க.

"யெஸ் டார்லி!" என்று அவன் முன் நின்றாள் திஷா.

"செல்லம் அம்மாகிட்ட பேச ரெடியா? நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல?" என்று திஷாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து புன்னகைத்தபடி கேட்டான் அமுதன்.

"விடு டார்லி. அம்மாக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும். நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க. கண்டிப்பா என்கிட்ட பேசுவாங்க" என்று மழலையாய் சிரித்தது.

பெரியவர்கள் மனதில் இருக்கும் எந்த சங்கடங்களும் தெரியாமல் இலங்கன்று பயமரியாது என்பது போல் பேச மற்றவர்கள் சிரித்தனர்.

தன் அன்னையின் அருகில் சென்று அவளின் முகத்தை தொட பார்த்தது, முடியாமல் போக, "பேபி" என்றது மெதுவாய்.

"யெஸ் டார்லி" என்றான் அழகாய் சிரித்து அவள் செய்ததை பார்த்து.

"என்னை கொஞ்சம் தூக்கி அம்மா கிட்ட காட்டு," என்றதும் "சரி" என்று மிருதியின் முகம் அருகே தூக்கினான்.

அன்னையின் முகத்தருகே சென்று இரண்டு கன்னங்களிலும் மாற்றி மாற்றி முத்தம் தந்து பின் திரும்பி தீரனை பார்த்தது குழந்தை.

"அப்ப" என்றதும் "என்னடா?" என்று அருகில் வந்தான் தீரன்.

"நான் அம்மாவை எழுப்பிடுவேன் உங்க யாருக்கும் அம்மாவை எப்படி எழுப்பனும்னு தெரியலை இப்போ பாருங்க" என்று சிரித்தது.

"ஆமாடா. அம்மாக்கு நாங்க கூப்பிட்டா கேட்கவே இல்லை. எழவே மாட்றாங்க" என்றான் தீரன் கரகரத்த குரலில்.

"ஹய்யோ டாடி! அம்மா வேணும்னு நான் தான் அழணும். நான் தான் பேபி கேர்ள். சரி அழாதிங்க நான் அம்மாவை எழுப்பிடறேன்." என்று தீரனின் கண்ணீரை துடைக்கவும் எல்லோருக்கும் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

மிருதியின் நிலை எதுவும் புரியாமல் விளையாடும் குழந்தையிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தனர்

"மிருதியின் காதருகே சென்று "மம்மி" என்றது.

தன் அன்னையிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே முகம் சுருங்கி, "பேபி, அம்மா எப்பவும் தூங்கும்போது மம்மின்னு கூப்பிட்டா கோவமா அம்மான்னு கூப்பிடுன்னு திட்டுவாங்கள்ள? அப்புறம் ஏன் பேபி அம்மா இப்போ அமைதியா இருக்காங்க?" என்றாள்.

"இப்போ நீ சத்தமா இன்னொரு முறை கூப்பிடுடா அம்மாக்கு கேக்கலை போல" என்றான் அமுதன்

"ஆமா நான் மெதுவா கூப்பிட்டேன்ல? சரி இப்போ பாரு எப்படி கூப்பிடறேன்னு" என்று மீண்டும் மிருதியின் காதருகே "மம்மி, மம்மி" என்றாள் வேகமாக.

மின்னலாய் ஒருநொடி மிருதியின் விரல்கள் லேசாய் அசைந்து நின்றது.

அனைவரும் விழிகள் விரிய பார்த்தனர் தீரனை தவிர.

"நான் சொன்னேன்ல" என்று தான் அன்னையின் மூடிய விழிகளில் இருந்து வழியும் கண்ணீரை காண்பித்து.

அதை பார்த்த நர்ஸ் வேகமாய் சென்று மருத்துவரை கூட்டி வந்தாள்.

"நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. இன்னும் பேசுங்க கண்ணு மட்டும் முழிச்சிட்டாங்க. இனி பயப்பட தேவையில்லை" என்று வெளியேறினார்.

"நான் ஒரு ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்" என்றதும் அனைவரும் வெளியேறினர்.

மெதுவாய் அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவன் மனதின் எண்ணங்களை முழுவதுமாய் கூறி முடித்து கண்ணீருடன் எழுந்து வெளியே வந்தான். அதனால் தானோ அவன் பின்னே அசைந்த அவளின் விரல்களை காணாமல் விட்டுவிட்டான்.

நேராக அமுதனிடம் வந்தவன், "அமுதன் இனி சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டார்ல... நீங்களும் ஸ்ரீஷாவும் இங்க இருந்து பார்த்துக்கோங்க. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு" என்று வேகமாய் வெளியேறினான்

"என்னடா இவன்?" என்று இருவரும் ஓன்றும் புரியாமல் பார்த்தனர்.

மீண்டும் திஷா தான் பிஞ்சு இதழ்களை வைத்து பேசும் அழகை கேட்டதனாலே பிழைத்து வரவேண்டுமென்று முடிவோடு போராடி மீண்டு வந்தாள் மிருதி.

அவளின் விழி திறந்து பார்க்க, "அம்மா! அம்மா!" என்று குதித்தது குழந்தை. அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க, மருத்துவரும் பரிசோதித்துவிட்டு, "இனி பயமில்லை இருந்தாலும் கேர்புல்லா பார்த்துக்கணும்" என்று சென்றுவிட்டார்.

அமுதன் மிருதி கண்விழித்ததை கூற தீரனுக்கு முயற்சிக்க அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

மறுநாளில் இருந்து மிருதியின் வேலைகளையும் அவன் வேலைகளையும் ஒன்றாய் அவனே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான்.

அமுதனும் ஸ்ரீஷாவும் எவ்வளவு வற்புறுத்தியும் மிருதியாய் காண மறுத்துவிட்டான்.

நேரம் கிடைக்கும் பொழுதும் மருத்துவமனை செல்பவன் மிருதியின் அறை வாசலிலே அமர்ந்து கொள்வான்.

அறை கதவின் கண்ணாடி வழியே அவளை கண்ணீரோடு கண்டு உள்ளே செல்லாமல் வீடு திரும்பி விடுவான்.

அவளை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்று பரபரக்கும் கரங்களையும் எங்கும் உள்ளத்தையும் வெகு சிரமப்பட்டு அடக்கி கொள்வான்.

அடுத்த பத்து நாளில் மிருதி ஓரளவு தேரியிருந்ததால் நாளை டிஸ்சார்ஜ் என்று மருத்துவர் கூறி சென்றதும் மிருதிக்கு ஒரே ஆனந்தம்.

******
 

dharshini chimba

Saha Writer
Messages
307
Reaction score
228
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 46
'அவரை எப்பவோ மன்னிச்சாலும் என் உயிரே போக போகுது இதுல அவரிடம் மீண்டும் தன் அன்பை முழுதும் கொட்டி வாழ ஆரம்பித்தபின், என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் மாமா ... நான் இல்லாமல் போனால் எப்படி தாங்குவார்?' என்றே மனதை கல்லாக்கி கொண்டு தீரனை இத்தனை நாள் தள்ளி வைத்திருந்தாள் மிருதி.

ஆனால், இன்றோ.. அவன் தன்னிடமே எதுவும் கூறாமல் தன் உடல் நிலையை சீராக்கிவிட்டு, இன்று அவள் காணவேண்டும் என்று துடிக்கும் நேரத்தில் கண்முன் வராமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறான் என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியும் அவனை காண வேண்டும் என்று மேலும் ஏங்கி தவித்திருந்தாள்.

அவனும் இவளுக்கு சளைத்தவன் அல்ல என்று வெளிப்படையான அன்பை மறைத்து உருகி கொண்டிருந்தானென்பதை பேதையவள் அறிய வாய்ப்பில்லையே...

"தீரன். நாளைக்கு திய டிஸ்சார்ஜ் செய்யலாம்னு சொல்லிட்டாங்க" என்றான் அமுதன் அலைபேசியில்.

மனம் பூரித்து போனாலும் வெளிக்காட்டி கொள்ளாமல், "ஒஹ்! அப்படியா தீரன்? ரொம்ப நல்லது. பார்த்து பத்திரமா டிஸ்சார்ஜ் செஞ்சு அவங்க வீட்டுல விட்டுடுங்க." என்றான் தீரன்.

"எ..ன்.ன சொல்றிங்க தீரன்?" என்றான் காதுகளில் சரியாக விழவில்லையோ என்று.

"அவங்க வீட்ல சேப்பா கூட்டிட்டு வந்து விட்ருங்க அமுதன். எனக்கு நிறைய வேலையிருக்கு நான் வைக்கவா?" என்று வைத்துவிட்டான்.

ஸ்ரீஷாவிடம் இதை கூறியவன், "மிரு கண்ணு முழிச்சதுலர்ந்து இவன் ஆளே சரியில்ல. ஒன்னும் புரியலை." என்றான் கவலையாக அமுதன்.

"எல்லாம் சரியாகிடும்பா. மாமா அக்கா மேல அளவுகதிகமா லவ் வச்சிருக்காங்க. விடு.. ஏதோ கோபம். நிச்சயம் சீக்கிரம் சரி ஆகிடும்" என்று சமாதானம் கூறினாள் ஸ்ரீஷா.

இத்தனை நாள் தான், வரவில்லை இனியாவது வருவான். வந்து டிஸ்சார்ஜ் செய்து தன்னையும் கூட்டி செல்வான் என்ற மங்கையின் கனவில் மண்ணள்ளி போட்டான் மன்னனவன்.

"அமு எங்க அவர் வரலையா?" என்றாள் சற்று ஏக்கமாக.

அவளின் நிலை புரிந்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறேனே என்று மிகவும் நொந்து போனான் அமுதன்.

"இல்ல தி. வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிருக்கார். ரொம்ப முக்கியமான வேலையாம். சீக்கிரம் வந்துறேன்னு சொல்லிருக்கார்." என்றான் அமுதன்.

"அம்மா!" என்று வாசலில் குரல் கேட்டவுடன் தொலைந்து போன இன்பத்தில் பாதி மீண்டு வந்தது போல் இருந்தது மிருதிக்கு.

"திஷா செல்லம்!" என்றாள் அன்பாய்.

"அம்மா!" என்று மிருதியின் அருகில் ஓடியது குழந்தை.

"பேபி! பார்த்து அம்மாவை ஸ்டரைன் பண்ண வைக்காத" என்றான் அமுதன்.

திரும்பி அவனை பார்த்து முறைத்த குழந்தையை, 'என்ன இப்படி பார்க்கிறா? ஏதாவது ஏடாகூடமா திட்டிருவாளோ? என்னடா இது அமுதா இந்த மாதிரி சில்வண்டுகிட்ட எல்லா பயப்படுவேன்னு என் கனவுல கூட நினைச்சது இல்லையே? அய்யோ இப்போ குட்டிபிசாசு என்ன சொல்லபோறான்னு தெரியலையே.. குருகுறு ன்னு வேற பார்க்கிறாளே?' என்று யோசிக்க, "சரி டார்லி" என்றதோடு நிறுத்தி கொண்டது குழந்தை.

"சரி தீ. நீ பாப்பாகூட பேசிட்டு இரு. நான் போய் ஹாஸ்ப்பிட்டல் பில் எவ்வளவு கட்டணும்னு பார்த்து பே பண்ணிட்டு வரேன்" என்று வெளியே சென்றான் அமுதன்.

"திஷா செல்லம். நீ மட்டுமா வந்த உன்கூட யாரு வந்தா?" என்று விழிகளை வாசலில் நிறுத்தினாள்.

ஒருவேளை தீரன் தான் குழந்தையை கூட்டி வந்திருப்பானோ என்ற ஒரு நப்பாசையில்.

"ஸ்ரீம்மா கூட வந்தேன் மா." என்றது குழந்தை.

"ஒஹ். சாப்பிட்டியா டா." என்றாள் மிருதி.

"சாப்பிட்டேன்" என்றாள் திஷா.

"சரி ஸ்ரீ எங்கடா?" என்றதும் திரும்பி பார்த்த குழந்தை, "போன் பேசுறாங்க" என்றாள்.

குழந்தையின் கரத்தில் இருக்கும் சிறு பையை பார்த்து, "என்னடா அது கைல ஏதோ வச்சிருக்க?" என்று கேட்கவும்.

"இது அப்பா உங்ககிட்ட கொடுக்க சொன்னார்" என்று அந்த கவரை மிருதியிடம் நீட்டியது.

'தீரன் கொடுத்துவிட்டானா? என்ன அது? எதுக்கு குழந்தையிடம் கொடுத்துருக்கார்?' திக் திக் என்று ஆயிரம் எண்ணங்கள் ஓட உள்ளம் படபடக்க கரத்தில் வாங்கினாள்.

பார்க்கலாமா... வேண்டாமா.. என்ற சிறிய போராட்டத்திற்கு பின், மெதுவாய் திறந்தாள்.

அதில், மிருதி தீரன் பேரில் எழுதி வைத்த கடை பத்திரம் இருந்தது கூடவே இன்னொரு பத்திரமும் இருந்தது.

மீண்டும் மிருதியின் பெயரிலேயே எழுதியிருந்தான். இப்பொழுது தீரன் இருக்கும் எதிர்வீட்டையும் மிருதியின் பெயரில் பதிந்திருந்தான்.

அவள் இவர்கள் எல்லோரையும் தவிக்கவிட்டு இந்நேரம் எந்த நாட்டிலிருக்க ஆசைப்பட்டாளோ? அந்த நாட்டிற்கு இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து செல்ல, பிளைட் டிக்கெட் இருந்தது.

இவற்றை பார்த்தவுடன், மிருதியின் இதயம் தாறுமாறாக ஓடத்தொடங்கியது.

எதுக்கு பிளைட் டிக்கெட் கொடுத்திருக்கான்.

அதில் இருந்த கடிதத்தையும் நடுங்கும் கரத்தோடு பிரித்து வழியும் கண்ணீரை துடைக்காமலே படிக்க தொடங்கினாள்.

என் அன்பிற்குரியவளே! என்று கூற ஆசை தான் இருந்தும் என் செய்வேன்?? என் அன்பில் இன்னும் உனக்கு சந்தேகம் இருப்பது உறுதி எனும்பொழுது எவ்வாறு கூறுவது..? அதனால் என் உயிருக்கு உரியவளே, உறுதியாக இவ்வாறு கூற என்னால் முடியும் ஆம் என் உயிர் என்றும் உனக்கு மட்டுமே சொந்தம்.

நான் கடந்த காலத்தில் செய்தது மன்னிக்க முடியாத மிகப்பெரும் தவறுதான். இருந்தும் உன் மன்னிப்பையும் அன்பையும் வேண்டி உன்னருகிலே தவமாய் இருந்தேன். என் அன்பே உன்னை கொல்லுவதாய் நினைத்து, என்று எங்கள் அனைவரையும் விட்டுவிட்டு தனியாய் சென்று வாழ நினைத்தாயோ அன்றே முடிவெடுத்து விட்டேன். இனி, உன் முன் வரக்கூடாது என்று. என் உயிராய் நினைக்கின்ற உன் உயிரை காப்பாற்றும் வரை இங்கிருக்க நினைத்திருந்தேன். கடவுளின் அருளால் நீ நலமாக பிழைத்துவிட்டாய்... என் பேரில் இருந்த சொதுக்கள் அணைத்தையும் உன் மீது எழுதியுள்ளேன். இனி உன்னை தொந்தரவு செய்யமாட்டேன். உன் விழிகள் தீண்டா இடதிற்கு செல்கிறேன். உயிரிருக்கும் வரை உன் நினைவே போதும் எனக்கு.

இப்படிக்கு

உன்னுடன் வாழமுடியா துர்பாக்யசாலி.

படிக்க படிக்க விழிகளில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

'நாம இனி வாழலாம்னு நினைக்கும் போது விட்டுட்டு போறாரா? வாழ ராசியில்லாதவ போல நான்.' என்று ஆழ தொடங்க அவளருகில் இருந்த கைபேசி ஒலித்தது.

எட்டி எடுத்தவள் தீரன் எண்கள் ஒளிர முகம் பிராகாசிக்க அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ!"

" " எதுவும் பேசாமல் கண்ணீர் வழிந்தது.

"நீ பேசமாட்டேன்னு தெரியும். இருந்தாலும் உன் குரலை கேட்கணும்னு பண்ணேன். இட்ஸ் ஒகே. நான் கிளம்புறேன். நீயும் திசாவும் பத்திரமா இருங்க. எங்க இருந்தாலும் என் மனசு உங்களை சுத்தி தான் இருக்கும். வரேன். .. இல்ல போறேன்" என்றான் தீரன்.

"மா... மா.. " உணர்ச்சிகளை தேக்கியிருந்த அவளின் குரலில் அவனும் நொறுங்கிவிட டான் போனான்.

"மாமா" மிருதி மீண்டும் அழைக்க, அவனோ தன்னை கட்டுபடுத்த முடியாமல் துண்டித்திருந்தான்.

"என்ன செய்யலாம்?? இனி அவரை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. என்ன ஆனாலும் அவர போக விடமாட்டேன்" என்றவள், "அமுதா" என்று உரக்க அழைத்தாள்.

"என்ன தி?" என்று பதறிக்கொண்டு வெளியில் இருந்து ஓடி வந்தான் அமுதன்.

எதுவும் பேசாமல் தீரன் எழுதிய கடிதத்தை நீட்டினாள்.

வாங்கி படித்த அமுதனும் ஸ்ரீஷாவும் அதிர்ந்து போனார்கள்.

"நீ என்ன செய்வியோ தெரியாது. அவர் எங்கயுமே போக கூடாது. என் வாழ்க்கை இனி அவர் கூட தான். " என்றாள் மிருதி திட்டவட்டமாக.

"உண்மையாவா?" என்றான் மகிழ்ச்சியாய் அமுதன்.

'ஆம்' என்று புன்னகைத்தபடி தலையசைத்தாள் மிருதி.

"நீயே சொல்லிட்ட அப்புறம் மறுப்பேது? இனி அவன் எப்படி போறான்னு பார்க்கலாம்?" என்றவன் என்ன செய்வது என்று யோசித்தாள்.

"அமுதா" என்றாள் யோசனை வந்தது போல்.

"என்ன தி?" என்றாள் அமுதன்.

"அத்தை அவர்கூட தானே இருக்காங்க?" என்றாள்.

"ஆமா. அவன்கூட தான் இருக்காங்க" என்றான் அமுதன்.

"அவங்க நம்பர் இருக்கா?" என்றாள்.

"இருக்கே. எதுக்கு அவங்க நம்பர்? என்ன பண்ண போற?" என்றான் கேள்வியாய்.

"அத்தைக்கிட்ட நான் பேசணும். போன் பண்ணி கொடு" என்றாள் மிருதி.

"சரி." என்று தீரனின் அம்மாவிற்கு போன் செய்து கொடுத்தான்.

"ஹலோ!" எதிர் முனையில் அவள் அத்தையின் குரல்.

"அத்தை நான் மிருதி பேசுறேன். நான் பேசுறதா காட்டிக்காதீங்க. அவர் அங்க தான இருக்கார்?" என்றாள்.

"ஆமா" என்றார் ஒற்றை வரியில் எதிரில் வேலை செய்துக்கொண்டிருக்கும் தீரனை பார்த்தபடி.

"அத்தை நான் உங்கமகன் கூட சந்தோஷமா வாழணும்னு நீங்க நினைக்கிறீங்கல்ல?" என்றாள் மிருதி.

"ஆமா" என்றார் ஏக்கமாய்.

"அப்போ சரி அத்தை. நாங்க இனி குடும்பமா வாழ்றது உங்ககிட்ட தான் இருக்கு" என்றாள் மிருதி.

**********
 

dharshini chimba

Saha Writer
Messages
307
Reaction score
228
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 47

"என்ன?" என்றார் அதிர்ச்சியாய்.

"என்னம்மா?" என்றான் தீரன் அவரின் அதிர்ச்சியான குரலை கேட்டு.

அவனின் கேள்வியில் திடுகிட்டவர், "ஒண்ணுமில்லைப்பா. ஊருலர்ந்து ... நீ பாரு" என்று மீண்டும், "ஹலோ" என்றார்.

"ஆமா! நாங்க சேர்ந்து வாழறது நீங்க செய்ய போற வேலைல தான் இருக்கு" என்றாள் மிருதி.

"ஹூம்" என்று மட்டும் கூறினார் மகனை பார்த்தபடி.

"சரிங்க அத்தை. இப்போ நான் சொல்றதை மட்டும் அப்படியே செஞ்சுடுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க இருப்பேன்." என்று தன் திட்டத்தை கூறி முடித்தாள் மிருதி.

"சரி" என்றார் அமைதியாய்.

'நீயா இது?' என்பது போல் பார்த்தனர் எதிரில் இருந்த அமுதனும் ஸ்ரீஷாவும்.

"என்ன அப்படி பார்க்கிறீங்க? இவ்ளோ நாள் வேணாம்னு ஒதுங்கி போனேன். இப்போ அவர் மட்டும் தான் வேணும். அதுக்காக எந்த லெவலுக்கு வெனாலும் போவேன். என்னை அப்படியெல்லாம் பார்க்கக்கூடாது. இந்த மிருதியை சீரியசா தான பார்த்துருக்கீங்க. இப்போ என்னோட வாலுதனத்தை பார்க்க வேணாம். வாங்க உடனே வீட்டுக்கு போவோம்.. இல்ல என் புருஷன் பறந்துருவார். " என்று சிரித்தாள்.

அவளின் புன்னகை முகத்தில் இருவரும் குளிர்ந்து போயினர்.

"ஆமாமா வா போவோம்" என்று அனைவரும் தீரனின் வீட்டிற்கு விரைந்தனர்.

**********

தன் பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்தாயிட்றா என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு குளிக்க சென்றான் தீரன்.

சென்று விட்டானா என்று உறுதி செய்து கொண்ட அவனின் அன்னை மெல்ல பூஜையறையில் சாமி படத்தின் முன் நின்று, "என் பிள்ளைங்க நாலாருக்கனும். அதுக்கு நான் இதை பண்ணி தான் ஆகணும்." என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கே இருந்த தீரன் டிக்கெட்டை எடுத்து தான் பைக்குள் மறைத்து வைத்து கொண்டார். எதுவும் நடக்காதது போல் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.

குளித்து தயாரான தீரன் பூஜையறையில் விழிமூடி வணங்கியதும் விசா, பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாவற்றையும் எடுத்து சரி பார்த்து டிக்கெட் இல்லாமல் இருப்பதை பார்த்து பதட்டமானான்.

"இங்க தான வச்சேன். எங்க போச்சு?" என்று மீண்டும் தேடினான்.

"அம்மா இங்க டிக்கெட் இருந்தது பார்த்திங்களா?" என்றான் தேடியபடி.

"ஏன்டா எனக்கு அதெல்லாம் என்னடா தெரியும்? அங்க தான் எங்கையவாது வச்சிருப்ப பாரு" என்றார்.

'அய்யோ எங்க வச்சேன்? ஃப்ளைட்டுக்கு வேற இன்னும் ரெண்டு மணி நேரம் தான இருக்கு?" என்று புலம்பியபடி தேடி கொண்டிருந்தான்.

வீட்டினுள் நுழைந்த மிருதி அத்தையை பார்த்து தீரன் எங்கே என்று சைகையில் கேட்க, அவனறையை காட்டினார்.

மிக மெதுவாக சத்தம் வராமல் உள்ளே சென்றவள் கதவை தாழிட சத்தம் கேட்டு திரும்பிய தீரன் அவளை கண்டு திகைத்து நின்றான்.

"நீ இங்க என்ன பண்ற?" என்றான் கடுமையான குரலில்.

"என்ன மாமா இப்படி கேட்டுட்டிங்க? என் புருஷன் வீட்டுக்கு வரத்துக்கு யார் பேச்சை கேட்கணும் ?" என்று அவன் முன்னே சென்று நின்றாள்.

ஒரு நொடி பின்னால் நகர்ந்தவன் மிருதியை முழுவதுமாய் விழிகளால் அளந்தபின், "இப்போ எதுக்கு வந்தன்னு கேட்டேன்?" என்றான் முறைத்து.

"என்னத்தான் திரும்ப திரும்ப அதையே கேட்குறிங்க? எப்போ வந்தாலும் இங்க தானே வரணும்?" என்று அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள்.

இடையில் கரம் வைத்து ஓரு முறை அவளை முடிந்த மட்டும் முறைதவன் ஓங்கி ஒரு அரை அறைந்தான். அதிர்ச்சியாகாமல் சிரித்தபடி மேலும் அவனை நெருங்கினாள்.

"என்ன நடந்தாலும் இனி உங்கக்கூட தான் இருக்க போறேன். அப்பப்போ ஒரு அரை அறைஞ்சுகோ மாமா" என்று இன்னொரு கன்னத்தை காட்டினாள்.

அவளின் நெருக்கத்திலும் மனமாற்றத்திலும் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் கண்களை இறுக்கி மூடி திறந்தவன்.

"எனக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாகுது. டிக்கெட் வேற எங்க வெச்சென்னு தெரியலை. சும்மா விளையாடாம போய் வீட்ல ரெஸ்ட் எடு." என்று அவள் முகம் பார்க்காமல் மீண்டும் தேட தொடங்கினான்.

"சரி மாமா" என்று அங்கே இருந்த மெத்தையில் படுத்து கொண்டவள், "மாமா! ஏதோ டிக்கெட் காணாம்னு சொன்னீங்களே இதுவா பாருங்க." என்று அத்தை தன்னிடம் சற்று முன் கொடுத்ததை எடுத்து காட்டினாள்.

"ஏய்! அது எப்படி உன்கிட்ட கிடைச்சுது. நேரமாகுது விளையாடாம கொடு பிளைட்டுக்கு நேரமாகுது." என்றான் கடுப்பாய்.

"வேணுமா இந்தாங்க" என்று டிக்கெட்டை கிழித்து அவனிடம் கொடுக்க, அதிர்ச்சியில் அவளையும் தன் கரத்தினில் அவள் திணித்த கிழிந்த காகிதங்களையும் மாற்றி மாற்றி பார்த்தான்.

"ஏன் இப்படி பண்ண?" என்று மிகவும் கோபமாய் முறைக்க, அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவன் அவளுக்கு கொடுத்திருந்த டிக்கெட்டுகளையும் மீண்டும் கிழித்து அவனிடம் திணித்து, "இதையும் சேர்த்து வச்சுக்கோங்க".

'யோவ் மாமா! உனக்கு இதெல்லாம் செட் ஆகாது. இரு வரேன்' என்று நினைத்து கொண்டவள், அவன் முகம் போன போக்கை பார்த்து வந்த சிரிப்பை கஷ்ட்டபட்டு அடக்கி கொண்டு, "என்ன எனக்கு பிச்சை போட்றீங்களா? உங்ககிட்ட நான் கேட்டேனா நான் சாக போறேன் என்னை காப்பாத்துங்கன்னு...? இதுல டிக்கெட்டெல்லாம் எனக்கு போட்டு தரிங்க... எனக்கு ஆப்ரேஷன் பண்ண பணம் தரவும் எனக்கு டிக்கெட் போட்டு தரவும் நீங்க யாரு? என் உயிர் மேல உங்களுக்கு என்ன அக்கறை? இப்போ என்ன உங்களுக்கு நீங்க வெளிநாடு போக முடிவு பண்ணிட்டிங்க அவ்ளோ தான? போங்க? இருங்க ஒரு நிமிஷம்" என்று தன் போனில் யாருக்கோ போன் செய்தாள்.

"ஹான் மனீஷா! எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.. நீ ஏர்லைன்ஸ்ல தான வர்க் பன்ற?" என்று கேட்டாள் அவனை பார்க்காமல்.

"ஹ்ம்ம.. எனக்கு ஒரு பிளைட் டிக்கெட் வேணும் அர்ஜண்ட்." என்றாள்.

"ஓஹ் .. அப்படியா? சரி அப்போ நாளைக்கு... கிடைக்கும்ல?" என்றாள்.

என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவளின் அலைபேசியை பிடுங்கி அணைத்தான்.

அவனை முறைத்தவள் "இப்போ எதுக்கு போன் கட் பண்ணிங்க..?? நாளைக்கு காலைல உங்களுக்கு டிக்கெட் வரும்.. நான் உங்க வீட்டுக்கு வந்துருக்க கூடாது மன்னிச்சுக்கோங்க.. இனி இங்க இருக்க மாட்டேன் நாங்க போய்ட்றோம். நீங்க ஆப்ரேஷனுக்கு செலவு பண்ண பணத்தை கூடிய சீக்கிரம் அமுதன்கிட்ட கொடுத்துட்றேன். நான் வரேன்." என்று அறையின் கதவை நோக்கி நடந்தாள்.

இரண்டடி வைத்தபின் தீரனின் இரும்பு கரம் தன்னை இறுக்கி பிடித்திருப்பதை கண்டவள் உள்ளுக்குள் சிரித்தாள்.

'அப்படி வாடி வழிக்கு' என்று திரும்பி பார்த்தாள்.

"என்ன சொன்ன பிச்சை போட்றீங்களாவா? நீ சாக போறேன்ன்னு நான் ஏன் உன்னை காப்பாத்துனேன்னா.? உனக்கு ஆப்ரேஷன் பண்ண பணம் தரவும் டிக்கெட் போட்டு தரவும் நான் யாருன்னா கேட்ட? உன் உயிர் மேல எனக்கு என்ன அக்கறைன்னா? உனக்கு எவ்ளோ திமிர் இருந்திருந்தா என்னை இப்படி கேட்டிருப்ப? நான் இங்க வந்த அன்னைக்கே ஒண்ணு பன்னிருக்கனும் செய்யாம விட்டது என் தப்பு." என்று அவளை விடுவிக்காமலே தன் பாக்கெட்டில் இருந்த அவளின் தாலியை எடுத்து மிருதி திமிர திமிர அவள் கழுத்தில் கட்டினான்.

"இப்போ எனக்கு எல்லா உரிமையும் இருக்குடி பொண்டாட்டி... நீ கேட்ட எல்லா கேள்விக்குமே உனக்கும் பதில் தெரியும். இருந்தாலும் நீ என்கிட்ட கேட்டதாலே நானே பதில் சொல்றேன்." என்று அவளின் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

"அத்தான்" என்றாள் கண்கள் பனிக்க.

எதுவும் பேசாமல் அவளை இறுக்கி அணைத்து இத்தனை நாள் பிரிந்திருந்த கசப்புகளை துடைக்க எண்ணினான்.

"எனக்கு தெரியும் நீங்க ஏன் கோபமா இருக்கிங்கன்னு.. நான் போனது தப்பு. என் நிலமை அப்டி அதான் எதுவும் சொல்லலை சாரி." என்று நிறுத்தினாள் கண்ணீரோடு.

"சரி விடுடா. உனக்கு உடம்பு சரி இல்ல. முதல்ல அமைதியா இரு. ரெஸ்ட் எடு" என்று மெத்தையில் அவளை படுக்க வைத்து போர்த்தி விட்டான்.

"இல்ல நான் உங்ககிட்ட பேசணும்" என்று தொடர்ந்தாள்.
 
Last edited:

dharshini chimba

Saha Writer
Messages
307
Reaction score
228
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 48

"சாரி. இனி உங்களை விட்டு எங்கயுமே போக மாட்டேன். நீங்க நான் நம்ம பொண்ணு சேர்ந்து ஒரே குடும்பமாய் வாழனும்னு எவ்ளோ நாள் ஏங்கிருக்கேன். அதுக்கு இப்போ தான் நேரம் வந்துருக்க போல...

ஆனால் அப்படி இனி நாம சேரவே முடியாதுன்னு வெறுத்து போய் வாழ்க்கை மேல ஒரு பயம் வந்துருச்சு.. இங்கயே இருந்தா நான் பட்ற கஷ்டத்தை பார்த்து நீங்களும் பாப்பாவும் ரொம்ப கஷ்டப்படுவீங்கன்னு தான் உங்க கண்ணுலயே படாம எங்கயாவது போன பிறகு என் உயிர் போனா பரவால்லன்னு தான் உங்க யாருக்கும் சொல்லாம போக நினைச்சேன்... ஆனாலும் உங்க அன்பால் என்னை காப்பாத்திட்டிங்க. என்னை மன்னிச்சிடுங்க அத்தான்.

எனக்கு தான் இப்போ உடம்பு சரியாகிடுச்சே. இனி என்னால உங்களை விட்டு இருக்க முடியாது.. பிளீஸ் மாமா... நான் உங்களை என் உயிருக்கும் மேலா விரும்புறேன்... உன்னை விட்டா வேற யாரு என்னை புரிஞ்சுக்க முடியும்?" என்றாள் விலகாமல் கண்ணீரோடு.

எரிமலையாய் கொதித்து கொண்டிருந்த உள்ளத்தை குளிர்வித்தது அவளின் வார்த்தைகள். இதற்கு தானே அவனும் காத்திருந்தான். இதோ அந்த நாளும் வந்துவிட்டது. அவனின் மிருதியும் அவனிடம் வந்துவிட்டாள். வேறென்ன வேண்டும் இனி வாழ்க்கையில். இறுக அணைத்து மிருதியின் நெற்றியில் இதழ் பதித்தான்.

"உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்டி. இனியும் என்னை விட்டு எங்கயும் போகணும்னு கனவிலே கூட நினைக்காத." என்றான் எச்சரிக்கையாய் புன்னகைத்து.

"ஹக்கும்... எங்கயும் போக மாட்டேன்" என்றாள் மிருதி.

"உள்ள வரலாமா?" என்று குரல் கேட்க இருவரும் சட்டென்று விலகி நின்றனர்.

இருவரையும் பார்த்து புன்னகைத்து கொண்டே வந்தனர் அமுதன், ஸ்ரீ, தீரனின் அம்மா, மற்றும் திஷா.

"தீரன் என் தி யே சொல்லிட்டா... இனி நீங்க அவ இல்லாம எங்கயுமே போக கூடாதாம்..." என்று சிரித்தான்.

"என் பொண்டாட்டியை விட்டிட்டு நான் எங்க போக போறேன்." என்றான் மிருதியின் தோளில் கரம் போட்டுக்கொண்டே.

"என்னங்க எல்லோரும் பார்க்கிறாங்க கை எடுங்க." என்று முகம் சிவக்க வெட்கத்துடன் கிசுகிசுத்தாள்.

"அமுதன் என் பொண்டாட்டி மேல நான் கை போட்டா உங்களுக்கு கஷ்டமா இருக்கா?" என்றான் சீரியஸாக.

"சே.. சே.. எங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்க போகுது. உங்க பொண்டாட்டி உங்க கை." என்றான் குறும்பாக.

"டேய் வர வர உனக்கு வாய் ரொம்ப ஓவராய்ட்டு... சரி கல்யாணத்துக்கு இன்னும் 20 நாள் தான் இருக்கு ஞாபகம் இருக்கா ரெண்டு பேருக்கும்." என்றாள் தன் இடையில் கரம் வைத்து முறைத்தபடி.

"எல்லாம் இருக்குங்க மேடம்..." என்றான் வாய்மேல் விரல் வைத்து பவ்யமாக.

"உன்னை..." என்று துரத்தி கொண்டு போனாள் மிருதி.

"தி... செல்லம் இப்போ எதுக்கு இவ்ளோ கோவம்... மீ பாவம் தானே?" என்று ஓடிக் கொண்டிருந்தான்.

"யாரு நீ பாவமா? அதை நான் நம்பனுமா." என்று முறைத்தாள்.

"என்ன தீ இப்படி சொல்லிட்ட... நான் உன் நண்பன் மா" என்றான் பாவமாக நின்று.

"மாட்டினியா? " என்று அமுதனின் காதை பிடித்து திருகினாள்.

"ஆஅ... வலிக்குது தி.. தெரியாம சொல்லிட்டேன். நீ என் செல்லம்... பட்டு... சமத்து... காதை விடும்மா..." என்றான் கெஞ்சலாக.

அருகில் நின்று ஸ்ரீ சிரித்துக் கொண்டிருக்க.

"அடிப்பாவி... நான் இங்கே வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா சிரிக்கிற?? உங்க அக்கா என்னை அடிக்கிறாளே என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு... நான் உன் வருங்கால புருஷன் மா." என்றான் அமுதன் பாவமாக.

"அதான் நீங்களே சொல்லிட்டீங்களே வருங்காலம்னு என் அக்கா தான் இப்போ என் கூட இருக்க நிஜம்" என்றாள் குறும்பாக.

"அடிப்பாவி... நீயும் இவக்கூட சேர்ந்து கெட்டு போய்ட்டடி... அக்காவும் தங்கச்சியும் ரொம்ப ஓவரா தான் போறீங்க..." என்னும் பொழுதே அவன் வாயில் செல்லமாக ரெண்டு அடி போட்டாள் மிருதி.

"தீரன் என்னங்க உங்க பொண்டாட்டி என்னை இப்படி அடிக்கிறா நீங்க பார்த்துட்டே இருக்கீங்க..? நான் உங்களுக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன்." என்றான் அமுதன் அப்பாவியாக.

"நா வரல பா உங்க ஆட்டத்துக்கு" என்றான் தீரன் மெல்ல சிரித்து.

"அம்மா! என் பேபி பாவம் விடுங்க" என்று அன்னையின் முன் வந்து நின்றாள் மிதிஷா.

"ஒஹ் பாவமா? அப்போ ஒன்னு செய்யலாம்... நீ எனக்கு பத்து கிஸ் கொடு நான் இவனை விட்டுடறேன்." என்றாள் தீவிரமாய்.

"ஓகே" என்று கீழே குனிய சொல்லி தன் பிஞ்சு இதழ்களால் எண்ணிலடங்கா முத்தங்களை வாரி இறைத்து கொண்டிருந்தது. அதில் தாயின் மனமும் குளிர்ந்துவிட மிருதியின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

"ஹப்பா.. என் தி முகத்துல உண்மையான சிரிப்பை இன்னைக்கு தான் பார்க்கிறேன். இதுக்கு தான் நாங்க காத்திட்டு இருந்தோம். இப்போ போலவே எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும்." என்று வாழ்த்தினான் அமுதன்.

"ஓகே.. அக்கா இன்னைலர்ந்து இங்க மாமாகூட தான் தங்க போறாங்க. சோ அவங்க திங்ஸ் லாம் இங்க ஷிப்ட் பண்ணனும் அமுதா" என்றாள் ஸ்ரீயம் மன நிறைவுடன்.

"ஏய் அதுக்குள்ள என்ன அவசரம்? உன் கல்யாண வேலைல்லாம் இருக்குல்ல..?" என்றாள் மிருதி.

"அக்கா நீங்க என்ன பத்து ஊர் தாண்டியா இருக்கீங்க? பக்கத்து வீட்ல தானே இருக்கீங்க? அப்புறம் என்ன? லக்கேஜ் லாம் நானே கொணடு வந்து வைக்கிறேன்." என்றாள் ஸ்ரீ.

"சரி உங்கப்பா அம்மா எப்போ வராங்க? இன்விடேஷன் கொடுக்க ஸ்டார்ட் பண்ணணும்ல?" என்றாள் மிருதி.

"அவங்க கல்யாணத்துக்கு முந்தின நாள் வந்தாக்கூட ஆச்சர்ய பட்றதுக்கில்லை. அவங்களுக்கு பணம் தான் கா பெருசு.. அப்படி ஓடி ஓடி பணத்தை சம்பாரிச்சி என்ன பண்ண போறாங்கன்னு தெரியலை. அவங்களுக்கு ஒரே பொண்ணு நான். என் கல்யாணத்தை எப்படி நடத்துனம். ஆனா என் தலையெழுத்து அவங்க போன் பண்ணி யாரோ மூணாவது மனுஷனக்கு விஷ் பண்ற மாதிரி விஷ் பண்றாங்க.. அக்கவுண்ட்ல பணத்தை போடறோம். நீ எல்லா ஏற்பாடயும் முடிச்சுரு. நாங்க சீக்கிரமா வர ட்ரை பன்றோம்ன்னு சொல்லிருக்காங்க. என் கல்யாணத்துக்கு நானே எல்லா ஏற்பாடும் செய்யணுமாம். வேடிக்கையா இருக்குல்ல... விடுங்கக்கா. நீங்களும் அமுதனும் இல்லைன்னா நான் என்னாகிருப்பேன்னெ தெரியாது." என்று கண் கலங்கினாள்.

மிருதி அமுதனுக்கு கண் ஜாடை காட்ட புரிந்து கொண்டவன் ஸ்ரீயின் தோளை தன்னோடு ஆதரவாய் சேர்த்துக் கொண்டான்.

"ஸ்ரீ மா. நீ எதுக்கு கவலை பட்ற.. உனக்கு பிடிக்கலைன்னா அவங்க பணம்கூட வேண்டாம்.. நானும் மாமாவும் இருக்கோம். அமுதன் இருக்கான். நாங்க பார்த்துக்குறோம்." என்று ஸ்ரீயின் தலையை வருடியவள்.

"இருந்தாலும் அவங்க வரட்டும் என்ன தான் இருந்தாலும் உனக்கு உயிர் கொடுத்தவங்க இல்லையா?" என்று சிரித்தாள். ஸ்ரீயும் எதுவும் பேசாது மிருதியை அணைத்து கொண்டு விசும்பியவள் தலையாட்டினாள்.

"சரிக்கா நீங்க எல்லோரும் பேசிட்டு இருங்க நான் எல்லோரும் சாப்பிட ஏதாவது சமைச்சுடறேன்." என்றாள் ஸ்ரீ.

"அதெல்லாம் வேண்டாம் ஸ்ரீ மா. நான் சமைச்சுட்டேன். இங்கயே சாப்பிடுங்க எல்லோரும்" என்று வந்தார் தீரனின் அம்மா.

"சரிம்மா" என்று அனைவரும் உணவருந்தி ஓய்வெடுக்க சென்றனர்.

"பேபி நான் இன்னைக்கு உன்கூட தான் இருக்க போறேன். நீ எனக்கு நியூ கேம் விளையாட சொல்லி தரேன்னு சொல்லிருக்க." என்றாள் திஷா.

"ஆமாம்மா டார்லிங். விளையாடலாம்." என்றான் அமுதனும் உடனே.

"நீங்க ரெண்டு பேரும் திருந்தவே மாட்டிங்களா? திருட்டு பசங்களா? எனக்கு தெரியாம ஐஸ்க்ரீம் சாப்பிட பிளான் போட்றிங்க தானே?" என்றாள் மிருதி விழிகளை உருட்டி.

"ஹீ ஹீ ஹீ " என்றனர் இருவரும், இவர்களை கண்ட அனைவரும் சிரிக்க, "சரி போய் தொலையுது... ஆனா ஒரே ஒரு ஐஸ்க்ரீம் தான்" என்றாள் கண்டிப்பாய்.

"ஓகே ஒகே" என்றாள் திஷா.

"அமுதா" மிருதி அன்பாய் அழைக்க, "என்ன தி?" என்றான் அமுதன்.

"இங்க ஓகே சொல்லிட்டு அங்க போய் நிறைய சாப்பிட்டு உன் டார்லிங்கு பீவர் வந்தா.." என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

அமுதனும் மிதிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு, "வந்தா" என்றனர்.

"உன் கல்யாண நாள் அன்னைக்கு வரைக்கும் ஸ்ரீ குட்டி உன் போன எடுக்க மாட்டா" என்றாள் லேசாக சிரித்து.

ஒரே நேரத்தில், "அய்யய்யோ தி ஒண்ணே ஒண்ணு மட்டும் தான் வாங்கி தருவேன்." என்றான் அமுதன்.

"ஐ இது ஜாலியா இருக்கு" ஸ்ரீ.

"இதெல்லாம் பெரிய விஷயமா வா பேபி நாம போலாம்." என்றாள் திஷா.

மூவரின் பதிலில் தீரன் கலகலவென சிரித்தான்.

'ஜாலியா... இருடி உன்னை பார்த்துக்குறேன்' என்று ஸ்ரீயை பார்த்து முறைத்தான் அமுதன்.

"ஆத்தா உங்கம்மா பண்ற பிளானை நீ எஸ்சிக்கியுட் பண்ண வச்சுராத வா போவோம். எல்லாம் என் நேரம்." என்று புலம்பியபடி திஷாவை அழைத்து சென்றான் அமுதன்.

"பாவம் மிரு" என்றான் தீரன்.

"யாரு அதுங்களா பாவம்... போங்கத்தான்... கொஞ்சம் விட்டா உங்களையும் விலை பேசி வித்துட்டு வந்துருங்க ரெண்டும்." என்றாள் மிருதி.

"சரி வா நீ ரெஸ்ட் எடுக்கணும்." என்று அழைத்து சென்றான் மிருதியை.

தீரனின் அறையில் மெத்தையில் அமர்ந்திருந்தவளை லேசாக முறைத்தான் தீரன்.

"என்னத்தான்" என்றாள் மிருதி.

"ஹ்ம்ம் என் மச்சினுச்சியே பரவால்ல என் கஷ்ட்டத்தை புரிஞ்சு உன் லக்கேஜ்ஜை இங்க எடுத்துட்டு வரேன்னு சொன்னா... ஆனா நீ இருக்கியே.. உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா... இப்போ என்ன அவசரம்னு கேட்ப...?" என்று தன் சட்டையை கழற்றியபடி வந்தான் தீரன்.

மேல் சட்டை அணியா வெற்று மார்புடன் தன்னை நெருங்கும் கணவனை கண்டவள் சற்று அதிரத்தான் செய்தாள்.

"அத்...தா..ன்.." என்றாள் திக்கலாய்.

"இவ்ளோ நாள் பிரிஞ்சிருந்தது போதும் மிரு. இனி எப்பவும் உன்கூடவே தான் நான் இருப்பேன்." என்று தன்னோடு அவளை சாய்த்துக் கொண்டான்.

இத்தனை நாட்கள் கழித்து அவனின் நெருக்கம் திக்குமுக்காட செய்ய அதை கண்டவன் உள்ளுக்குள் சிரித்து அவள் நெற்றியுடன் தன் நெற்றியை லேசாக முட்டினான்.

"இந்த அத்தானை உன் உயிருக்கும் மேலா பிடிக்கும்.. ஆனா நான் பக்கத்துல வந்தா மட்டும் இப்படி தந்தியடிக்குற ஏண்டி...?" என்றவன். இனியும் அவளை தவிக்க விடக்கூடாதென்று, "மிரு குட்டி உனக்கு இன்னும் ஹெல்த் சரியாக நாள் எடுக்கும். இனி வாழ்க்கை பூரா நீயே வேணாம்னாலும் நான் உன்கூடத்தான் இருக்கப் போறேன். சோ இப்போ எதை பத்தியும் யோசிக்காம கண்ணை மூடி தூங்கு." என்று மிருதியின் நெற்றியில் இதழ் பதித்தான்.

இதோ இவர்களின் வாழ்க்கை இனி இவர்களின் எண்ணப்படி சிறக்க வாழ்த்துவோம்.

நன்றி.

-தர்ஷினிசிம்பா.
 

Latest Episodes

New Threads

Top Bottom