Part 1
கண்ணிமைக்குள் கண்மணியாய், எந்தன் மூளையின் நரம்பாய், ஆட்டிவைக்கும் விதியாய், என்னை சமைக்கும் காதலே...உன்னில் ஆசையாய் மூழ்குகிறேன்,. கரை சேர்ப்பாயா? என் வலக்கரம் பிடித்து என் வழித்துணையாய் வருவாயா...? காதலே! நான் காத்திருக்கிறேன்.....!!
அத்யாயம் 1.
அப்பா இந்த கல்யாணதுல எனக்கு இஷ்டமில்லப்பா விட்டுருங்க என்று தன் அப்பாவிடம் கெஞ்சி கொண்டிருந்தான் அந்த இருபத்தாறு வயது வாலிபன்.... பாரு கண்ணா... வீட்டோட ஆம்பளைங்களுக்குன்னு நிறைய பொறுப்புகள் இருக்கு..அதுல முக்கியமானது வீட்டு பொண்ணுகள வாகா காபந்து பண்ணி உரியவன் கையுல ஒப்படைக்கறது. உங்க அக்காவுக்கு இப்ப தகையுர சம்மந்தம் நம்ம இந்த ஜன்மதுல நினைக்க கூடியது இல்ல...அவங்க வீட்டுல பையனோட தங்கச்சிக்கு உன்னய ரொம்ப பிடிச்சு இருக்காம்...அதனால உங்க அக்காவ மருமகளா எடுத்து உன்ன மாப்பிள்ளையாக்க விரும்பறாங்க அப்பா நா ஒரு பொண்ண விரும்பரேன்பா ....அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு....என்கூட வேல பாக்குறா....ரொம்ப காதலிக்கிறேன்பா ....அக்கா கல்யாணத்த முடிக்க பாருங்கப்பா ...எவ்வளவு லோன் வேணும்னாலும் போடறேன் பா ....பிளீஸ் புரிஞ்சுகோங்க ....கிட்டதட்ட அழும் நிலையில் கெஞ்சிகொண்டிருக்கும் தன் மகனுக்கு வெற்றுப் புன்னகை ஒன்றையே பதிலாய் தந்து நகர்ந்து சென்றார் அந்த மத்திய வர்க தகப்பன்.... நாதன் ஓர் மத்திய அரசு ஓய்வு பெற்ற அதிகாரி.மூன்று குழந்தைகளின் தகப்பன்.முதலில் ஒரு பெண் சுனந்தா அடுத்தவன் நம் நாயகன் சித்தாந்த் இருபத்தாறு வயது மூன்றாவதாய் ஒரு பையன் பதினைந்து வயதில் ...(ரெண்டுக்கு அப்புறம் வேணாம்னுதான் நினைச்சோம் ஆனா ).
இந்த பேச்சுக்கள் நடைபெற்ற பிறகு சித்து மொத்தமாய் மாறிப் போனான்.அமைதியோ தூக்கமோ இன்றி தவித்தது அவன் தினங்கள்..இனியும் விட்டால் மகனின் நிலை மோசமாகும் என்பது புரிய அவனிடம் பேச தயாரானார் நாதன். நம் நாயகன் பற்றி சித்தாந்த் பெயருகேற்றபடி வெகு நிதானம் பொறுமை பேரழகன் இல்லை ..ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கும்.மாநிறம் ஆறடி உயரம்,உடனிருப்போரை சிரிக்க அழைக்கும் உதடுகள்.பொறியியலில் தங்க மெடல் பெற்று தனியார் மென்பொருள் கம்பெனி ஒன்றில் சீனியர் பிரோகராம்மெராக வேலை செய்கிறான்.நூறு சதவிகிதம் குடும்பத்தனம் அவனது செய்கைகளில் தெரியும்.விடுமுறை நாட்களில் அம்மாவிற்கு அடுப்பங்கரையில் உதவுவதில் ஆரம்பித்து அக்காவுடன் கடைகளுக்கு செல்வது வரை எதற்குமே அலுத்துக் கொண்டதில்லை..மொத்தத்தில் இன்றைய பெண்கள் எதிர்பார்க்கும் அத்தனை தகுதிகளும் கொண்ட கனவு நாயகன்.
காத்திருப்பு 2
இருளில் வெறித்துக் கொண்டிருந்த மகனை முடியைக் கோதி..சித்துகண்ணா .மெதுவாய் அழைதுப்பார்த்தார் நாதன் சுயநினைவு பெற்றவனாக சொல்லுப்பா...
கண்களின் நீர் குளம் தகப்பனை ஊமையாக்க நிதானிதவராய் உன்கூட கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும் கண்ணா பேசலாம்பா.தனது நிதானத்தை மீட்கப் போராடியவனாக தன் அப்பா சொல்வதில் கவனம் செலுதினான் சித்து.உன் நிலமை எனக்கு ஓரளவு புரியுது.உன்னோட நிலை என்னனு தெரிஞ்சா மேற்கொண்டு ஆகவேண்டியதை யோசிக்கலாம்...தன் அப்பாவின் சொல்லுக்கு பணிந்தவனாக தன் காதல் பற்றி கூறத் தொடங்கினான் சித்து. யாமினி அவதம்பா நா காதலிக்குற பொண்ணு.காலேஜில என்னோட ஜூனியர்.. நம்மள மாதிரி அவங்களும் மிடில் கிளாஸ்தான் ...நா மூணாவது வருஷம் படிக்கும்போது அவளும் எங்க காலேஜில வந்து சேர்ந்தா...ரொம்ப நல்லமாதிரி.அவங்க குடும்பத்துமேல ரொம்ப அன்பு.நல்ல படிப்பாளி.அனாவசிய செய்கைகள்ள ஈடுபட்டத்தில்ல.நா அப்பவெல்லாம் கோல்ட் மெடல் வாங்குர வெறியில படிச்சிட்டு இருந்தேன்.அதனால அவளவா அவள கண்டுக்கல.. அவளுக்கும் மத்த விஷயங்கள் பத்தின அக்கறை இருந்ததில்ல.ரெண்டு வருஷம் முன்னாலதான் கேம்பஸ் இண்டெர்வீயுல எங்க அலுவலகதுக்கு வந்தா..அப்பவும் நாங்க பெருசா ஒண்ணும் யோசிக்கல போன வருஷம் எங்க டீம் கேரளா போனப்பதான் எங்களோட காதல் புரிஞ்சது.யாமினி ரொம்பவே பிரக்டிகள் பா.அவளோட தம்பி படிச்சு முடிக்க இன்னும் ரெண்டு மூணு வருஷங்கள் ஆகும்..இங்கயும் அக்காவுக்கு கல்யாணம்,தல பிரசவம் எல்லாம் இருக்கு. அதனால மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் செய்துக்கலாம்னு நினைச்சோம்பா... நாங்க ஒருத்தருக்கொத்தர் கல்யாணம் பண்ணிக்க தாமதமாக்கி
னாலும் கணவன் மனைவியாதான் பாவிக்கறோம்.நாதான் அவகிட்ட என் காதலை முதலில் சொன்னேன்.இல்லாட்டி அவ தன்பாட்டுக்கு இருந்திருப்பா.
காதலும் குற்ற உணர்ச்சியும், என்னய துண்டாக்குதுப்பா..கதறும் ஆண்பிள்ளை.
அவனது மென்மையான மனம்.அதிலும் மென்மையான அவனது காதல்.சரி.நீ அவள வீட்டுக்கு கூட்டிட்டு வா... பாக்கலாம் என்று அப்போதைக்கு மகனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நகர்ந்தார் நாதன். சிறு வயதிலிருந்தே படிப்பில் முதலிடம்.கல்லூரிக்கும் உதவித்தொகை மூலம் கட்டணம் செலுத்தி குடும்பபாரத்தை தன்னால் முடிந்த அளவு குறைத்து எத்தனையோ செய்த மகன் ,இதுவரை தனக்காக தேவைக்கு மேல ஆசை சொல்லாத அருமை மைந்தன் முதன்முதலாக தனது காதலை யாசிக்கிறான்.யோசிக்கமுடியாமல் சித்தம் தடுமாறியது நாதனுக்கு.பிரச்சனையா உடனே யோசிக்காம கொஞ்சம் தள்ளிபோடுவோம் என மூளை முடிவெடுக்க சிறிது நேரம் கண்ணயர்ந்தார் ...ஆனால் மறுநாளே யாமினியிடம் தன் அப்பா அவளை காண விரும்புவதாகவும் வரும் ஞாயிறு வரமுடியுமா என்றும் கேட்க என்ன சித்து ஏதாவது பிரச்சனையா.நம்ம விஷயத்த வீட்டுல சொல்லிட்டீங்களா...ஆனா என்னோட நிலமை இப்ப இந்த கல்யாணத்த அனுமதிக்காதே ...அப்பா இறந்து இந்த ரெண்டு வருஷமா என்னோட நிலை உங்களுக்குதெறியும்தானே!...வரிசையாக அடுக்கிக்கொண்டே போனவளுக்கு அவனது மௌனம் அடிவயிற்றில் குளிர் பரப்ப அவனது முகத்தை தன் மனதில் சிறை பிடிக்க முயன்று தோற்றாள் பேதை . ஞாயிறு காலை எழுந்தவுடனே மனதின் பயம் முகத்தில் அப்பட்டமாக தெரிய அவளது அம்மாவிடம் ...அம்மா நா இன்னிக்கி சித்துவோட அப்பாவ பாக்க போயிட்டு வரேன்...வரச்சொன்னாராம்... குரலின் நடுக்கம் பெருமளவு அவளின் ஆழ் மனதை காண்பிக்க யாமி பயப்படாதடா ...இப்பவெல்லாம் பெத்தவங்க அதிகமா காதல எதிர்க்க விரும்பல..தைரியமா போயிட்டு வா..நம்ம நிலய சொல்லு...உன்ன வேணாம்னு சொல்ல காரணம் இல்ல ..நா வரணும்னா சொல்லுடா என தன் ஆதரவை தெரிவித்தாள் . இல்லம்மா..தேவை பட்டா அவர குடும்பதோட வரச்சொல்லுவோம்.. என்று கூறிவிட்டு குழப்பமுடனே விரைந்தாள் நம் நாயகி ... காதலுக்கு எதிர்ப்பு வராததால் மட்டும் திருமணம் நடப்பதில்லை என்பது விதிக்கு மட்டுமே புரிந்த ரகசியம் ......
காத்திருப்பு 3
இங்கு யாமினி எந்த மனநிலையில் இருந்தாளோ அதே மன நிலைதான் சித்தாந்துக்கும்..காதல சொல்றது ஒரு கஷ்டம்னா ...கல்யாணத்துல கொண்டு வரதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவோம் போலயே....மனதினுள் புலம்பியவாறே வாயிலை நொடிக்கு நூறு முறை பார்திருந்தான்.இந்த மௌன நாடகத்தை பார்துக்கொண்டிருந்த நாதனுக்கும் அவர் மனைவிக்கும் இந்த விஷயத்தை கையாள்வதில் எவ்வளவு மனக்க்லேசங்களை சந்திக்க வேண்டிவருமோ எனும் எண்ணம் அவர்களையும் மௌனமாக்கியது....இத்தனை வருடங்களில் நாதன் எதயுமே தன் மனையாளிடம் சொல்லாமல் இருந்தது இல்லை...அவர்களுக்குள் இருந்த பரஸ்பர புரிதல்...காதல் ,நட்பு..இவை தன் மகனுக்கும் வாய்க்க வேண்டுமாய் இருவரின் மனமும் இறைவனிடம் பிரார்தனை செய்தது... மென்மையான மனதில் முளைவிட்ட முதல் காதல் ...காதல் ஜெயித்தது என்று எதை வைத்து சொல்ல முடியும்... இரு மனங்களுடன் இரு தேகமும் இணைவாதிலா...இல்லை ....இரு மனங்களும் ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுத்து தேகத்தினால் விலகினாலும் மனதில் ஒன்றாய் வாழ்வதிலா? யாமினி வந்து விட்டாள்... வாவா யாமி...வலது கால எடுத்து வச்சு வா....அவசரமாய் அவளை எதிர்கொண்டு அழைத்த தன் மகனின் அவசரத்தையும்..ஆர்வதையும்...அவன் தன் பெற்றோர் மீது அவன் கொண்டுள்ள நம்பிக்கையும் கண்டு நாதனும் அவர் மனையாளும் திகைத்தனர்.. .இறைவா...நீ தான்பா துணை நிக்கனும்....அந்த பொண்ணு முகத்தை பாத்து எப்படி என் பையன மறந்துடுன்னு கேக்க முடியும்...ரெண்டுபேரோட முகமுமே அவங்க ஒருத்தர்மேல ஒருத்தர் வச்சிருக்குற நேசத்த காமிக்குதே.......குழப்பத்தை மறைத்தபடியே முறுவலுடன் அவளை வரவேற்றனர்... ஏதோ வருந்தத்தக்கத்தை எதிர்பார்த்தே வந்ததாலோ என்னவோ யாமினி அவர்களை எளிதாகவே கண்டுகொண்டாள். அவளின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க தொடங்கின. பரஸ்பர அறிமுகம் விருப்பு வெறுப்புகள் பற்றிய பேச்சுகளுக்குப்பின்னர் இதைவிட பொருத்தமான பெண் தன் மகனுக்கு கிடைப்பது கஷ்டம் என தெரிந்து கொண்டனர் ...ஆனால் இருபத்தெட்டு வயதில் இன்னும் கல்யாண கனவுகளை மட்டுமே சுமந்துக்கொண்டு வலம் வரும் தான் சொந்த மகளின் ஏக்கம் பொதிந்த முகம் அவர்களை வேறு விதமாய் சிந்திக்க தூண்டியது,, இந்த பொண்ணுக்கு நல்ல படிப்பும் வேலையும் இருக்கு..எப்படியும் இன்னும் மூணு வருசத்துக்கு கல்யாணம் செய்துக்குற நிலையுல இவளில்லை..மூணு வருஷத்துல நம்ம பையன மறந்துட்டு வேற வாழ்க்கைக்கு தயாராகிடுவா ...ஆனா நம்ம பொண்ணுக்கு இன்னும் வயசாக வரன் தகையுறது பிரச்சனை ஆகிடும் .. என்று இருவரும் மனதை தேற்றிக்கொண்டனர் ... காலை உணவருந்தி ...யாமினியயும் தங்கள் குடும்ப உறுப்பினராய் உணரச்செய்து வெகு நிதானமாய் பேச தன்னை தயார் செய்துகொண்டார் நாதன்.தன் பெற்றோருக்கு யாமினியை பிடித்துவிட்டது ...இனி நிச்சயம் தான் யாமினியை கல்யாணம் செய்துகொள்ளலாம் என சந்தோஷ மனநிலையில் சித்துவும் , அடுத்து என்ன என்ற பதட்டதில் யாமினியும் இருந்தனர்.
காத்திருப்பு 4.:
ஆண்களைவிட பெண்களுக்கு உள்ளுணர்வு எளிதில் பேசும் ....சூட்சுமமும் அதிகம்தான்...நடப்பை வைத்தே ஓரளவிர்க்கு ஊகம் யாமிக்கும் இருந்தது...கண்களின் கலக்கத்தை யாரும் கவனிக்காமல் மறைப்பதே பெரும்பாடாக அவளுக்குமே நெருப்பு நிமிடங்கள்....தொண்டையை செறுமியவரே தன்னை தயார் செய்தபடி தன் மனைவியை கண்களாலும் மகனையும் அழைத்தவாறே சோபாவில் அமர்ந்தார் நாதன் . யாமினி உன்ன எனக்கும் என் வொய்ஃப்க்கும் ரொம்பவே பிடிச்சிருக்கு..எங்க மகனோட சாய்ஸ் எப்பவுமே தப்பாகாதுன்னு எங்களுக்கு நம்பிக்கையும் நிறைய இருக்கு.இன்ஃபாக்ட் உன்ன மருமகளா அடயரவங்க யாரா இருந்தாலும் அவங்க பாக்யசாலிதான்..
.(அப்படின்னா??) ஆனா இப்ப நா இருக்குற நிலையுல ஒரு பொண்ணோட தகப்பனாகவும் யோசிக்க வேண்டியதா இருக்குமா... நம்ம சித்து உன்கிட்ட சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்..அவனுக்கு மூத்த அக்கா இருக்கா...ரொம்ப வருஷமா வரன் தேடுறோம்..இதுவரை சரியா எதுவும் அமையல..இப்ப ஒரு சம்மந்தம் வந்திருக்கு..அவங்க பொண்ணெடுத்து பொண்ணு குடுக்க விருப்பப் படுறாங்க ...ரொம்ப பெரிய இடம்மா ..அங்க வாழ்க்க பட்டா எம்மக வாழ்நாள் முழுதும் சந்தோஷமா இருப்பா...ஒனக்கு வயசு,படிப்பு ,நல்ல வேலை,அழகு எல்லாமே இருக்கும்மா ..இன்னிக்கி வலிச்சாலும் நீ சொன்ன மூணு வருஷதுக்குள்ள உன் மன வலி குறைஞ்சுடும்,காலம் எல்லா காயத்தையும் ஆத்திடும்....இத நா உனக்கு மட்டும் சொல்லல.என் புள்ளைக்கும் சேத்துதான் சொல்றேன்...உங்க கல்யாணத்த தடுக்கணும்னு சத்தியமா நினைக்கல ...யென் பொண்ணுக்கு வாழ்க்கய பிச்சையா போடச்சொல்லி பொண்ண பெத்தவானா கெஞ்சுறேன் ..நாதன் பேசி முடிப்பதர்க்குள் பூமி இரண்டாய் பிளப்பது என்னவென்று காதலர்கள் உணர்ந்தனர்....அதுவரை தான் மடியில் கோர்திருந்த விரல்களை பிரித்தெடுத்தபடி ...கண்ணீர் கரையை கடக்க ....பேச ஆரம்பிதாள் பேதை.
காத்திருப்பு 5
மாமா.. அப்படி கூப்பிடலாம்தான.. நா கிளம்பும்போது எங்கம்மா சொன்னாங்க ...எல்லா தகுதிகளும் இருக்குற உன்னை வேணாம்னு சொல்ல காரணம் எதுவுமில்லன்னு ..எங்கம்மாவுக்கு நா உங்க பையன கல்யாணம் செய்துக்கர்துல எந்த மாற்று கருத்துமில்ல..பிடிச்சிருக்குனு சொல்லுற நீங்களே கல்யாணதுக்கு ஒத்துக்காதத்துக்கு காரணம் சொல்றீங்க. காதலனையோ ..காதலையோ விட்டுத்தர சொன்னா முயற்சி பண்ணலாம்... நீங்க கேக்குறது நா உயிரா நேசிக்கற என்னோட புருஷன் இன்னொரு கல்யாணம் செய்துக்க நா விட்டுக் கொடுக்கணும்னு ...இதுக்கு சம்மதம் சொன்னா நா நடை பிணமாதான் வாழணும் ...ஒரெடியா செத்துட என்னோட குடும்ப நிலை விடாது ..உங்க பையனோட நிலையும் இதுதான் ...நீங்க எதுக்கும் மாப்பிள்ளை வீட்டுக் காரங்ககிட்ட பேசி பாக்குறீங்களா ...உயிரை கண்ணில் தேக்கி மன்றாடும் சிறு பெண்ணிடம் ஆறுதல் கூற வெட்கியவராக.. அம்மாடி நா உன்ன என்னோட தங்கச்சி பொண்ணா நினைச்சு கேக்குறேன் தாயி..நீ வேணாம்னு நகர்ந்தாத்தான் என் பொண்ணுக்கு கல்யாணம்... நா இப்ப சொல்றது சத்தியம்..மாப்பிள்ளையோட தங்கச்சி நம்ம சித்துவ எங்கயோ பாத்துட்டு வீட்டுல பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கா..வீட்டுக்கு வந்தாங்க சம்மந்தம் பேச.. அப்ப எனக்கு உங்க விவகாரமெல்லாம், தெரியாது ... நா என்னோட மூத்த பொண்ணு கல்யாணதுக்கு பாக்குறோம்..அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் கழிஞ்சு இவனுக்கு பாப்போம்னு சொன்னேன்.. அதுக்கு அந்த பொண்ணோட அண்ணன் நா உங்க பெரிய பொண்ண கல்யாணம் பண்ணா என்னோட தங்கச்சிய உங்க வீடு மருமகள் ஆக்கிபீங்களான்னு கேட்டான்..நானும் ஜாதகமெல்லாம் பாத்தேன் ..சரின்னுட்டேன்..இதுதான் என்னோட நிலை..நீங்க எடுக்குற முடிவுல என் பொண்ணோட வாழ்ககை என்று சொல்லுவதை சொல்லி முடித்து விட்டார் நாதன். இருவரும் எடுக்கப் போகும் முடிவு மூவர் வாழ்வை நிர்ணயிப்பதாக அமையும்.....
காத்திருப்பு 6 :
வீடு வந்து சேர்ந்தவுடன் தான் மனதில் அடக்கி வைத்த துக்கம் மடை திறந்த வெள்ளம் ஆனது..... அழுகை விசும்பல் ஆகும்வரை பார்த்திருந்த தான் அம்மாவிடம் அங்கு நாதன் கூறிய விஷயங்களை சொல்லி முடித்தாள் யாமினி,, அமைதியாக கேட்ட அவள் அம்மா ..பாரு யாமி..நம்மால் அந்த பொண்ணோட கல்யாணம் நிக்கக் கூடாது.. நீ விலகினாலும் கொஞ்ச வருஷத்துல எல்லாமே அதது போக்குல சரியாயிடும்..உங்கப்பாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கை ,எங்க காதல் இத பத்தி உனக்குத் தெரியாதா.? அவர் போன பிறகும் உங்கள ரெண்டுபேரையும் பாத்துக்க நா உயிரோட இருக்கேனே. உனக்குமே காலபோக்குல மனசு மாறிடும்மா...தன் மனத்திற்க்கு சரி என்று பட்டதை யாமியின் அம்மா கூற.. அம்மா நீ சொல்றதும் நிஜம்தான்.ஆனா..எனக்கொரு வேண்டுகோள். நானா மனசு மாறுர வரை என்ன வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க சொல்லாதீங்கம்மா ..திரும்பவும் அழலானாள். பதிலோ ,ஆறுதலோ கூற முடியவில்லை அவளது அம்மாவால். இரண்டு நாட்கள் விடுப்புக்குப் பின்னர் ஒருவாரு மனசை தேத்திக்கொண்டு யாமினி அலுவலகம் செல்ல..சித்துவின் விடுப்பு நான்கு நாட்கள் நீடித்தது..கானல் நீராய் காதல் அவனது மயக்கத்தை போக்கவில்லை.நான்கு நாட்கள் தாடி அவனது மனோ நிலையை அறிவிக்க தவறவில்லை. அலுவலக நேரத்தில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை..மாலையில்..ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசினார். யாமி என்னால உன்ன விட்டுக்கொடுக்க இயலாது..நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்கலாம்..ட்ரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு வெளியூர் இல்ல வெளிநாட்டுக்கு போயிடலாம்..என உணர்ச்சி வேகத்தில் சித்து பேச ..இல்ல சித்து.. என்னால என் குடும்பத்த விட்டு இந்த மாதிரி முடிவுஎடுக்க முடியாது.. அதோட ..எந்த ஜன்மத்துல பண்ண பாவமோ.. என்னோட புருஷன்னு வரிச்ச ஒன்னோட வாழ முடியாம உன் கல்யாணதுக்கு உன்னை சம்மதிக்க வைக்கவேண்டிய துர்பாக்கியம்.. இதுக்குமேல உங்க அக்கா கல்யாணம் என்னால தடை பட நா காரணமாக இயலாது...இனி உன்னோட ,உங்க அக்கவோட கல்யாணதுல சந்திப்போம்..என்றுவிட்டு அவனை விட்டு சென்றாள் யாமி.. திருமணம் சித்து அவன் அக்கா இருவருக்கும் ஒரே நாளில் நடந்தது.. யாமினியை தான் சொந்த சகோதரி மகளென நினைத்தார் நாதன்....மனதின் எந்த சுருக்கத்தையும் காண்பிக்காமல் வலம் வரும் அவள் முகத்தை பார்க்க துக்கம் பொங்கியது அவருக்கு.. சித்து கண்கள் வேதனை பொழிவதை தாலி ஏறும் நேரத்தில் சரியாக கவனித்தது அவன் மனையாளின் கண்கள். அவன் யாமினியை நோக்கியே கவனிதிருப்பதை வலியுடன் பார்த்தாள் அவன் மனைவி மிருதுளா ... மிருதுளா பெயருகேற்ற மிருதுவான சுபாவம் கொண்ட அழகி..பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் அகம்பாவம் அற்ற இயல்பான பெண்.. சித்து மனதில் யாமி இல்லையென்றால் கண்டிப்பாக இவளின் காதலில் தன்னை ஒப்படைதிருப்பான்...தன்னை தொலைத்திருப்பான் ...இரு பெண்களின் காதல் ..ஒரே ஆணினிடம்...தன் மனையாளின் காதலை புரிந்துகொள்வானா...!!
காத்திருப்பு 7 :
திருமண நாள் இரவிலேயே தன் மனைவியிடம் தன் காதலைப் பற்றி முழுதும் கூறிவிட்டான்.சித்து.எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு மிருதுளா..நா உன்னோட கணவனா முழுமையா மாற முயற்சி பண்றேன் என்ற கணவனிடம் டேக் யுவர் ஓன் டைம் ..நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா நா விலகி இருப்பேன் .. என்னோட உங்கள் மீதான காதல் கல்யாணதுல முடிஞ்சிருக்கு..உங்களோட காதல் முழுமை பெறாம போனதுக்கு என்னோட வருத்தங்கள்... நண்பர்களா இருப்போம்னு சொல்ல நா தயாரா இல்ல ..மனைவி என்கிற அங்கீகாரம் ,உரிமை ரெண்டும் எனக்கு இருக்கு.. உங்களோட கணவன் என்கிற அங்கீகாரத்த எப்ப ஏதுக்கணும்னு நீங்க முடிவு பண்ணுங்க..உங்க உரிமைய எப்ப எடுத்துக்காரிங்களோ அப்போ நமக்கான குடும்ப கடமைகளும் ஆரம்பிக்கும்.. அதுவரைக்கும் படுக்கைய தவிர மத்தபடிக்கு நாம் புருஷன் பொண்டாடித்தான்..என்றபடி தூங்க ஆரம்பித்தாள் அவன் மனைவி..அவள் கண்களில் தன் காதல் தோற்ற வலி மிச்சமாய் .. திருமண விடுப்பு முடிந்து பதினைந்து நாட்கள் கழித்து அலுவலகம் வந்த சித்துவிர்க்கு யாமி ஒரு ப்ராஜக்ட் விஷயமாய் இரண்டு வருடங்களுக்கு அமேரிக்கா சென்றுவிட்ட தகவல்தான் ..ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதென்றாலும் தன்னிடம் சொல்லாமல் சென்றது அவள் மனதை சொல்லியது.. வெறுமை சூழ மனைவியிடம் ஒன்ற முடியாமல் ..சே.. காதலே துன்பம்...திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆன பின்பும் கணவன் மனைவி ஒன்றாமல் இருப்பது நாதன் கண்ணில் படத்தான் செய்தது..அவர்கள் தங்கள் பிரச்சனையை சரி செய்துகொள்ளவில்லை. மனது வருந்தினாலும் வெளியே சொல்லாமல் புழுங்கினார் நாதன். சித்துவிற்கும் நான்கு வருட ப்ராஜக்ட் அமெரிக்க அழைப்புவர தன் மனைவியுடன் கிளம்பிவிட்டான். இனியாவது அவர்கள் இல்லறம் மலருமேனும் நம்பிக்கையுடன் ஏர் போர்டடீல் விடை கொடுத்தனர் நாதன் குடும்பதினர் ...
காத்திருப்பு 8 :
விதி வலியது ...யாமி டெக்ஸாஸ் மாகாணத்தில் தங்கி வேலை செய்துகொண்டிருந்தாள் ..அங்கேயே அவள் வீட்டு அருகில் இன்னொரு அபார்ட்மெண்டு சித்துவின் வீடு..ஞாயிறு அன்று சித்து மனைவியுடன் சூப்பர் மார்க்கெட் வர யாமியும் அங்கு வந்திருந்தாள் ..சித்து அறிமுகம் செய்து வைக்க யாமி மற்றும் சித்துவின் முக மாறுதல்களை குறித்துக் கொண்டாள் மிருதுளா . மிருதுளாவின் கண்கள் கூறும் மன வலி யாமினியால் குறிப்பெடுக்கப்பட்டது.இன்னும் இருவருக்குள்ளும் உறவுநிலை சரியாகவில்லை என புரிந்துகொண்டாள் யாமினி. நாட்கள் செல்ல செல்ல பரஸ்பரம் யாமியும் மிருதுளாவும் தோழமை கொண்டனர். சித்து மூலம் தெரிந்துக்கொண்ட அவன் காதலிமேல் மிருதுளாவிற்கு வெறுப்பிர்க்கு பதிலாக மரியாதை வந்திருந்தது. அதனால் இந்த தோழமை ஏற்பட கடினமாயில்லை. மிருதுளா தங்கள் உறவு பற்றி யாமியிடம் மறைக்கவில்லை. சித்துவும் நடிக்க முயலவில்லை. மிருது ...நா உன்னோட ஹஸ்பண்ட் கிட்ட என்னோட லைஃப் பத்தி பேச போறேன், என்று கண் சிமிட்டி சென்றாள் யாமி. மதியம் சித்துவும் யாமியும் சந்தித்துக்கொண்டனர். சித்து... நா என்னோட லைஃப் பத்தி உன்கிட்ட பேசணும்.... என்கிட்டயா.. என்கிட்ட பேச என்ன இருக்கு... நீயா என்ன விட்டுகுடுக்க முடிவு பண்ண. என்னோட வொய்ஃப்க்கு நல்ல தோழியா இருக்க..இப்ப அவளுக்காக என்கிட்ட பேச வந்திருக்க. இன்னும் என்ன வேணும்..என்னோட மனச பத்தி கவலையா பட்ட நீ..உன்ன காதலிச்சத தவிர வேற என்னடி தப்பு பன்னேன்..கொன்னுட்டியெடி என்னோட மனச. என்று முகத்தை அழுந்த துடைத்து தன் அழுகையை அடக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான் சித்து..(கண்ணீர் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு,அது கோழைத்தனதையோ ,ஆண் பெண் பேதத்தையோ வெளிப்படுதுவது இல்லை).
காத்திருப்பு 9 :
அவன் அழுகை மட்டு படும்வரை பொறுத்திருத்தாள் அவன் காதலி. தண்ணி குடி சித்து... மனச கட்டுபடுத்திக்கோ, நா இன்னும் ஆறு மாசத்துல கிளம்பிடுவேன். அதுக்குள்ள நீ மிருதுலாவோட சந்தோஷமா குடும்பம் நடத்துரத பாக்கணும்னு விரும்புறேன்.. இல்லாட்டி என்னோட காதல நா விட்டு குடுத்ததுக்கு அர்தமில்லாம போயிடும்.. ? போகட்டும் யாமி..நீ முடிவு எடுக்கும்போது என்னபத்தி யோசிச்சயா. ? சித்து பிளீஸ் புரிஞ்சுக்கோ.
நாம காதலுக்கு மிருதுளா பலி ஆக அவசியமில்ல, இன்னொன்னும் சொல்றேன்.
நீ உன் மனைவியோட உருப்படியா குடித்தனம் பண்ணாதான் நானும் குற்ற உணர்ச்சி இல்லாம வேற வாழ்க்கைய அமைச்சுக்க இயலும் .என்னோட கடனேல்லாம் அடஞ்சுடுச்சு. தம்பியும் கடைசி வருஷ படிப்பு கேம்பஸ் செலக்ட் ஆகிடுச்சு. இனி அவரவர் வாழ்க்கைய நாமளும் பாக்கணும்.
பி பிரக்டிகல். என்னைய காதலிசத்துக்கு கொஞ்சமாவது எம்மேல அக்கர இருந்தா உன் பொண்டாட்டிய நல்லபடியா நடத்து. பெத்தவங்க பிள்ளைகளுக்கு கல்யாணம் சீக்கிரம் பண்ண விழையுறதே அவங்களோட உணர்ச்சிகளை மதிச்சுத்தான்.. கல்யாணமாகி ஒண்ணறை வருஷமா அந்த பொண்ணை கன்னியாவே வச்சிருக்க.. அவளோட தேவைகள பூர்த்தி பண்ணுறது உன்னோட கடமை. அது மனசு சம்மந்தபட்டதோ இல்ல உடம்போட தேவையோ. உங்கக்காவோட நிலையும் யோசி. இவ இங்க சந்தோஷமா இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னா உங்க அக்காவ அவங்க வீட்டுல எப்படி நடத்துவாங்கண்ணு யோசி சித்து.. மிருதுளா ரொம்ப நல்லவடா.. இதுவரை உங்க அந்தரங்கத்தை வெளியுல சொல்லல.. அவளோட வலி அவ கண்கள் சொல்லுது டா... யோசி..முடிவெடு..நா கெளம்புறேன்.
சொல்லிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள் யாமி. அன்று இரவே நாதனுக்கும் தன் அம்மாவிற்கும் இதுபற்றி மெயில் அனுப்பியும் விட்டாள். யாமினி சொல்வதுபோல் தன் மனைவி இதுவரை தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய
தில்லை.. நான் யாமினியிடம் என்னை தொலைக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் உன்னிடம் என்னை இழந்திருப்பேன்.
அவன் ஆழ்மனம் முடிவெடுத்து
விட்டது.பெரும்பாலான இந்திய திருமணங்கள் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு மஞ்சள் கயிரால் இறுக்கப்பட்டு, கட்டிலில் ஒருவரிடம் ஒருவரை தொலைத்து கூடலில் களித்து.
ஒருவருக்
கொருவர் விட்டுக்கொடுத்து கடைசியில் வார்தைகளால் வெளிப்படுத்தாமலே காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான். கட்டிலை தவிர அனைத்ததுவிதங்களிலும் ,மிருதுளா என்னிடம் தன் காதலை வெளிப்படுத்திக்கொண்டு உரிமையை விடாமல் என்னையே சுற்றி சுற்றி வரும் அவளை நான் ஏற்க்கத்தான் வேண்டும். இனி என் வாழ்வு அவளுடன்தான்! எதிர்பாரா அவ்விரவு அவர்களின் முதலிரவு.. கணவன் மெல்ல மெல்ல தனக்கே சொந்தமாகிவிடுவான் எனும் நம்பிக்கை அந்த மிருதுவான தாழம்பூ மனதில் பூத்தது. அவள் வயிற்றில் இரட்டை மலர்கள் பூத்தன. ப்ராஜக்ட் இன்னுமொரு ஆறு மாதங்கள் நீண்டதால் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்தாள்.
தொடரும்