Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கார்கால களவு - Comments

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
சூப்பர் பதிவு 💖💖💖
சேனா நிலமைய நினைச்சா சிரிப்பு வருது 😂🤭
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்
🤩🤩🤩
 

ivalvaasagi

New member
Messages
3
Reaction score
3
Points
3
கார்கால களவு 2

நல்இரவு அது. உயர் மலை ஒன்றின் சரிவில் இருந்த அந்த ஒற்றை வீடு தூரத்து வானின் மின்னல் வெளிச்சத்தில் அவ்வப்போது பார்வைக்கு தென்பட்டுக் கொண்டிருந்தது. அழகான சிறிய ஓட்டு வீடு அது.

ஒரு வார அடர் மழையின் காரணமாக அந்த வீட்டின் ஓடுகளில் பாசி பிடித்திருந்தது. சிறு தூரல் பெய்துக் கொண்டே இருந்தது இப்போதும். ஓடுகளில் நிரம்பி தரையில் கொட்டிக் கொண்டிருந்தது மழைத் தண்ணீர்.

அந்த வீட்டின் பின் பக்க அறையின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து தூரலை பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயி தன் பார்வையை திருப்பி தனக்கு முன் அமர்ந்திருந்த இந்திரனை பார்த்தாள். அவளின் பார்வையில் கேலியும் கிண்டலும் இருந்தது. அவளின் தலைக்கு மேல் இருந்த எல்.இ.டி குண்டு பல்பு மென் சாரல் தந்த காற்றால் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.

"நீ என்ன சொல்ற.? உங்க வீட்டுல இருக்கற சிலைக்கு வரலாறு இருக்கா.? இதை நான் நம்பணுமா.?" என்று கேட்டாள் மைத்ரேயி. மைத்ரேயி இருபத்தி நான்கு வயது மங்கை.

இந்த வீட்டில் அவளும் அவளின் தோழி கே.கேவும் கடந்த சில மாதங்களாக குடியிருக்கின்றனர்.

இந்திரன் தன்னிடமிருந்த ஓலைச்சுவடியை எடுத்து தன் முன்னால் இருந்த மேஜை மீது வைத்தான்.

இந்திரன் முப்பது வயதை கடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. தலையில் முன் பக்கத்தில் கொஞ்சமாக சொட்டை இருந்தது.

"இதை படிச்சி பாருங்க.. புரியும்.." என்றான்.

மைத்ரேயி அந்த ஓலைச்சுவடியை எடுத்தாள்.

"பெண் ஒருத்தியை பொன்னாய் மாற்றியது ஆசையால் அல்ல!
நங்கை பெண்ணாளை சிலையாய் மாற்றியது விதியால் அல்ல!
தாரகையை தங்கமாய் மாற்றியது
சதியாலும் அல்ல!
காடு எரியும்! வீடு இடியும்! மக்கள் மாள்வர் அவள் எழுந்தால்!
சிலையென நினைத்து தோற்றுவிடாதீர்!
பெண்ணென நினைத்து காமுற்று விடாதீர்!
அவளை காலமெல்லாம் பூட்டியே வைத்திருங்கள்!
இந்த காலமே முடியும் வரை சிறைப்படுத்தியே வைத்திருங்கள்!"

ஓலைச்சுவடியை படித்த மைத்ரேயி அதை அவனிடமே திருப்பி தந்தாள்.

"இதை படிச்சா புரியுமா.?" என்றாள்.

அவளுக்கு இவனின் கதை கேட்க விருப்பம் இல்லை. இந்த மழையிலும் எப்படி வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை. இந்த நடு இரவிலும் கடந்த ஒரு மணி நேரமாக அறுவை போட்டுக் கொண்டிருக்கிறான்‌.

இந்திரன் அவசரமாக தனது போனை எடுத்து நீட்டினான். "இதுல சில போட்டோஸ் இருக்கு.." என்றான்.

மைத்ரேயி அந்த போனில் இருந்த புகைப்படங்களை பார்த்தாள். அனைத்தும் ஒரு சிலை. தங்க சிலை. ஆளுயர பெண் சிலை. சட்டென்று அதன் மதிப்பை கணக்கிட முடியவில்லை அவளால்.

"இதோட ரேட் என்ன இருக்கும்.?" என்றாள்.

இந்திரன் அவளை குழப்பமாக பார்த்தான். "ரேட் எதுக்கு.? இதை அழிக்கணும்.. அதுக்கு நீங்கதான் வழி சொல்லணும். உங்களுக்குதான் அதை அழிக்கற வழி தெரியும்ன்னு நான் கண்டு பிடிக்கவே இவ்வளவு வருசம் ஆகிடுச்சி.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.. இந்த சில நாளாவே அந்த சிலை மறைமுகமாக என்னை ரொம்ப தொந்தரவு செய்யுது.." என்றான்.

மைத்ரேயி எதை என்னவென்று சொல்வாள்.? 'தங்க சிலையை உருக்காம விட கூடாது.!' என்று மட்டும் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

"வழியை பத்தி தெரியும். ஆனா மறந்துட்டேன்.. அதை நினைவுப் படுத்தி சொல்ல சில நாட்கள் ஆகலாம்.. நீயே இப்பதான் வந்து கேட்டிருக்க.. நினைவு வந்ததும் நானே சொல்றேன்.. உன் போன் நம்பர் கொடு.." என்றாள்.

இந்திரன் அவசரமாக போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி அவளிடம் நீட்டினான். சாரல் காற்றுக்கு காகிதம் படபடவென ஆடியது. சொய்யென்று பெய்துக் கொண்டிருந்த சாரலுக்கும் இந்த சத்தத்திற்கும் சுற்றுப்புற சூழ்நிலையை புதிதாக உணர்ந்தாள் மைத்ரேயி.

"சிலையை எப்படி அழிக்கிறதுன்னு கண்டுபிடிச்சதும் மறக்காம இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க.." என்றவன் எழுந்து நின்றான்.

"கெஸ்ட் ரூம் லெஃப்ட் சைட்.." என்றாள் மைத்ரேயி.

"இல்லைங்க.. நான் கிளம்பியாகணும்.. அந்த சிலையால் இது வரை எங்க பரம்பரையில் யாரும் இரவு நேரத்துல எங்க வீட்டை அனாதையா விட்டு வந்ததே இல்லை. முதல் முறையாக நான்தான் இருட்டு மழைன்னு கூட பார்க்காம கிளம்பி வந்திருக்கேன்.." என்றவன் வீட்டின் முன்பக்க வாசலை நோக்கி நடந்தான்.

'பைத்தியமா இவன்.?' என நினைத்தாள் மைத்ரேயி. அடுத்த இரண்டாம் நிமிடத்தில் அவன் வந்த ஜீப் அங்கிருந்து கிளம்பி செல்லும் சத்தம் மைத்ரேயியின் காதில் வந்து விழுந்தது.

சோம்பலோடு எழுந்து சென்று கதவை சாத்தினாள். மீண்டும் வந்தவள் பின் பக்க கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றாள். வராண்டாவில் இருந்த மர இருக்கையில் அமர்ந்தாள். கொட்டாவி வந்தது. கை கடிகாரத்தை பார்த்தாள். கை கடிகாரத்தை காணவில்லை. எழுந்து சென்று நேரம் பார்க்க சோம்பலாக இருந்தது.

"குத்து மதிப்பா ஒரு மணி இருக்கும்.." என சொன்னவள் இருக்கையில் தலை சாய்ந்தாள். முன்னால் இருந்த ஸ்டூலில் காலை வைத்துக் கொண்டாள்.

"பெட்சீட்டை எடுத்து வந்திருக்கலாம்.." என முனகியவள் பின்பக்க கதவையும் பூட்டாமலேயே உறங்கி போனாள். குளிர்ந்தது. அடித்த மழையில் வீட்டின் ஓரங்களில் கூட காளான்கள் முளைத்துக் கொண்டிருந்தன. காற்று முழு ஈர பதத்தோடு இருந்தது.

நன்றாக விடிந்த பிறகுதான் கண்களை திறந்தாள் மைத்ரேயி. காற்றில் சாம்பாரின் வாசனை வந்தது. முனகியபடி திரும்பி படுத்தாள். அவள் அமர்ந்திருந்த நாற்காலி அவளை திரும்ப விடவில்லை. கைகளை நெட்டி முறித்தபடி எழுந்து நேராக அமர்ந்தாள். முதுகு வலித்தது. அவளின் மீதிருந்த போர்வை தரையில் விழுந்தது. தூறல் இன்னமும் இருந்தது. வராண்டாவில் ஓரங்களில் இருந்த ஈரம் எப்போதுதான் காயும் என்று கவலையோடு யோசித்தாள்.

"காபி.." என்றபடி வந்த கே.கே அவளிடம் கோப்பையை நீட்டினாள்.

மைத்ரேயி எழுந்து நின்றாள். கூரையிலிருந்து வழிந்த தண்ணீரை இரு கைகளாலும் பிடித்து முகத்தில் அடித்துக் கொண்டாள். வாயை கொப்பளித்து விட்டு திரும்பி வந்தாள்.

கே.கே நீட்டிய காப்பி கோப்பையை கையில் வாங்கியவள் "எப்ப வந்த.?" என்றாள். அருகே இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டாள் ‌

"அரை மணி நேரம் ஆச்சி.." என்றாள் கே.கே. உணவு பொருள் அனைத்தும் தீர்ந்து போனதால் அவற்றை வாங்கி வர நேற்று மாலையில் மலையை விட்டு கீழே சென்றாள் கே.கே. அவள் திரும்பி வர இருந்த போது அவளின் கார் திடீரென்று பழுதாகி விட்டது. அருகில் இருந்த கார் மெக்கானிக் அந்த காரை பழுது நீக்கி தருவதற்குள் இருள் சூழ்ந்து விட்டது. அதனால் கீழேயே தங்கி விட்டாள் கே.கே.

"இன்னொரு நாளைக்கு தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தா வீட்டுக்குள்ள தூங்கு மைத்தி.." என்றாள் கே‌.கே காப்பியை பருகியபடியே.

"ஒரு செம மேட்டர் சொல்லட்டா.?" என கேட்ட மைத்ரேயி "ஒரு தங்க சிலை.. அதை மட்டும் வித்தோம்ன்னு வை.. உன் சொத்துல கை வைக்காம இந்த உலகத்தையே சுத்தி வரலாம்.." என்றாள்.

கே.கே அவளை கேலியாக பார்த்தாள். "சிலை கடத்துற தொழில்ல இறங்க போறியா.?" என்றாள்.

"கே.கே.. ஒரு தங்க சிலை.. அது ஆபத்தானதுன்னு சொல்லி ஒருத்தன் வந்தான். அதை அழிக்கிற வழி உங்களுக்குதான் தெரியும், சொல்லுங்கன்னு கேட்டான்.. அந்த தங்க சிலையை அவனோட போன்ல பார்த்தேன்.. ஆளுயரம்.." என்றாள்.

"இந்த காலத்துல இப்படி ஒரு முட்டாளா.?" என கேட்டபடி காலி கோப்பையோடு உள்ளே திரும்பிய கே‌.கே குழப்பத்தோடு தோழியை திரும்பி பார்த்தாள்.

"அவன் ஏன் இங்கே வந்து உன்கிட்ட கேட்டான்.." என்றாள்.

மைத்ரேயி திரும்பி பார்த்து உதடு பிதுக்கினாள்.

"யாருக்கு தெரியும்.. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வீட்டை கண்டுபிடிச்சேன்னு சொன்னான்.. ஆனா எப்படி நான் அவன்கிட்ட சொல்வேன் 'நாங்களும் இரண்டு வாரமா இந்த காட்டுல தொலைஞ்சி போனதாலதான் இந்த வீட்டையே கண்டுபிடிச்சோம்'ன்னு.!" என்றாள்.

கே.கே இடம் வலமாக தலையசைத்தாள். "இந்த வீட்டுல குடியிருந்தவங்களை தேடி வந்திருப்பாங்க போல.. இல்லன்னு சொல்லி அனுப்பி வைக்காம சிலை அது இதுன்னு பேசியிருக்க.." என்று திட்டினாள்.

அவன் இரவு பன்னிரெண்டு மணிக்கு தன்னோடு உரையாடிக் கொண்டிருந்தான் என்று தோழியிடம் சொல்லி தயங்கினாள் மைத்ரேயி. கோபம் வந்தால் அந்த கோப்பையால் கூட அடித்து விடுவாள் கே.கே.

"எனக்கு அந்த சிலை வேணும்.." சிணுங்கலோடு சொல்லியபடி எழுந்த மைத்ரேயி தோழியின் அருகே வந்தாள்.

"வா போலாம்.. நாமும் இந்த வீட்டுக்கு வந்து மூணு மாசம் ஆயிடுச்சி.‌. இந்த காட்டை சலிக்க சுத்தி பார்த்தாச்சி.. அடுத்ததாக ஏதாவது அட்வென்ஜர் வேணும் இல்ல.. இந்த சிலையை கடத்தி விற்பது போல சிறந்த அட்வென்‌ஜர் இருக்காது.." என்றாள்.

கே.கே சமையலறைக்குள் புகுந்தாள். கொதித்துக் கொண்டிருந்த குழம்பில் கொத்தமல்லியை நறுக்கி தூவினாள். அவளை தொடர்ந்து வந்து அவளின் தோளில் முகம் புதைத்தாள் மைத்ரேயி.

"எனக்கு சிலை வேணும்.." என்றாள்.

"மெண்டல்.. அந்த சிலையால ஆபத்துன்னு சொல்லி இங்கே தேடி வந்திருக்கான் அவன். அவன் சொன்னது உண்மையா இருந்தா என்ன செய்றது.? இந்த வீட்டுல குடியிருந்தவனுக்கு அந்த சிலையை பத்தி தெரிஞ்சிருந்தா அதை அழிக்கறதை பத்தியும் தெரிஞ்சிருக்கும்.." என்றாள். அதே நேரத்தில் அந்த வீட்டின் பின் பக்கத்தில் என்னவோ இடிந்து விழுந்தது போல் சத்தம் கேட்டது.

"என்ன ஆச்சி.?" என கேட்டபடி இருவரும் வெளியே ஓடினார்கள். மழை துளிகள் இருவரையும் நனைத்தது. அந்த வீட்டை சுற்றி வந்தார்கள்.

"பார்த்து நட.. வழுக்கி விழுந்துட போற.." எச்சரித்தாள் கே‌.கே‌

"கே.கே இங்கே பாரு.." வீட்டின் இடது பக்கம் இருந்த இடத்தில் குழி உருவாகி இருந்தது. வீட்டை ஒட்டியபடி உருவாகி இருந்தது அந்த பள்ளம்.

"என்ன ஆகியிருக்கும்.? எப்படி திடீர் பள்ளம்.?" குழப்பத்தோடு கேட்டபடி முன்னால் நடந்த மைத்ரேயியை பிடித்து நிறுத்தினாள் கே.கே.

"எனக்கு என்னவோ இந்த வீட்டுல அண்டர் கிரவுண்ட் ரூம் இருக்குமோன்னு தோணுது.. இந்த பள்ளத்தை கவனிச்சி பாரு.. வீட்டுக்கு அடியிலேயும் போகுது. அடிச்ச மழையில ரூமோட சுவர் நனைஞ்சி உடைஞ்சிருக்கணும்.." என்றாள்.

"வாவ்.. அண்டர் கிரவுண்ட் ரூமா.? இத்தனை நாளா கவனிக்காம விட்டுட்டுடோமே.!" என்றவள் மழை ஈரத்தை பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி ஓடினாள். நாலே அடியில் தொப்பென்று விழுந்தாள். கே.கே அருகே வந்து அவளை எழுப்பி நிறுத்தினாள்.

"பார்த்து நடன்னு சொன்னா உனக்கு புரியாதா.?" என திட்டியவள் "அடி பலமா.?" என்றாள்.

மறுப்பாக தலையசைத்து விட்டு வீட்டுக்குள் சென்ற மைத்ரேயி வீட்டின் தரையை ஆராய்ந்தபடி இடது பக்க திசையை நோக்கி நடந்தாள்.

வழி தெரியவில்லை. ஆனால் நடுவில் இருந்த கருப்பு கண்ணாடியால் ஆன மேஜை சந்தேகத்தை தந்தது. அதை தூரமாக இழுத்து வந்தாள்.

தரையில் இரண்டுக்கு இரண்டடியில் மரத்தால் ஆன மூடி இருந்தது. மைத்ரேயி ஆவலோடு திறந்தாள்.

"படி இருக்கு.. வழியும் இருக்கு.." என்றவள் உள்ளே இறங்கினாள்.

"மைத்தி நில்லு.. நீ சட்டுன்னு இறங்குவது பாதுகாப்பு இல்ல.." என்று கே‌.கே எச்சரித்த நேரத்தில் "ஆஆ.." என கத்தியபடி மேல் நோக்கி ஓடி வந்தாள் மைத்ரேயி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
Aaahh nama jansi rani KK 😍 maithi adventure ah vitutu crime pakama poga poralo 😁
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
சூப்பர் சிஸ்...இந்திரன் தேடி வந்தது அந்த எலும்புக்கூடு லேடியையா??அட்வென்ஜர் ஐ விரும்பும் மைத்ரேயி,கே கே...interesting..அந்த சிலை பெண்ணாய் மாறினால் காடு எரியும்..வீடு இடியும்.மனிதர்கள் மாள்வரா,......அந்த சிலையை அழிப்பதற்கான குறிப்பு ம் அந்த ஓலைச்சுவடியில் இருக்கிறது போல...நைஸ் நைஸ்
நன்றிகள் சிஸ் ❤️
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
wow wow wow😃😃😃😃......semma💕 story la erunthale bayagara interesting ga irukkum ...............🤩:love::love::love:

I like kk very much 💕💕......spr epi akka antha silai nala current year la yenna problem varum ..........hero kum antha silaikum yenna connection irukkum:unsure: ....................wow more questions irukku ud kaga waiting akka.......... antha v2ta bayagarama erunthathu more interesting .............:love::love::love::love:
நன்றிகள் சிஸ் ❤️
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
ரொம்ப த்ரிலிங்கா போகுது சிஸ். ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்து என்ன அடுத்து என்ன னு யோசிக்க வைக்குது. சேனா கை பட்டா மட்டும் தான் பெண்ணாக மாறுவாளா இல்லை யார் தொட்டாளும் பெண்ணா மாறுவாளா? பேசுவாளா? சிலையை அழிக்க வகை இருக்கது போல உயிரோடு வச்சிக்கவும் வகை இருக்கும் தானே. சிலையோட வரலாறு எப்ப சொல்வீங்க
நன்றிகள் சிஸ் ❤️
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
சூப்பர் பதிவு 💖💖💖
சேனா நிலமைய நினைச்சா சிரிப்பு வருது 😂🤭
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்
🤩🤩🤩
நன்றிகள் சிஸ் ❤️
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சேனா நீ அழகா இருக்கியாமா :ROFLMAO: :ROFLMAO: அந்த ருத்ராட்சை மாலை சிலுவை செயின் எல்லாமே உன்ன பழிவாங்கிருச்சுடா :LOL::D:Dசூப்பர் சிஸ்.வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி...
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
சேனா semmaya maatikittan😂
ஹீமாவாரி இன்னும் என்னென்ன செய்ய போறாளோ🙄
Kadhai semmaiya pogudhu sisssy
 
Messages
190
Reaction score
175
Points
43
இல்ல நான் அழகா இல்லை சேனா ராக்ஸ். எனக்கும் ஹீமாவரிய ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. பொறுமையே இருக்க மாட்டேங்குது அடுத்து என்ன என்னனு இழுக்குது.
 
Top Bottom