Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சதுரன் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
628
Reaction score
801
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
சதுரன் கதையில் இருந்து சில வரிகள்....

சுதந்திர போராட்ட வேட்கை பெரும் தீயாக பரவ ஆரம்பித்த காலகட்டம் அது...

ஆங்கிலேயர் துறைகள் போராட்டகாரர்களை அடக்க இரகசிய வழியை ஆலோசிக்க நகரின் மைய பகுதியில் கூட துவங்கினர்.

ஆட்சியில் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவராக அந்த பாரிய கட்டிடத்தில் சரட்டு வண்டியில் நுழைய துவங்க தன் தலைவனின் கண் பார்வைக்கும் இணங்க தாக்குதல் நடத்த தயாராக இருந்தது அந்த சிறார் படை.....

ஆங்கிலேய துறைகள் உபயோகிக்கும் சரட்டு வண்டியின் கீழே உள்ள சக்கரத்தில் முதுகில் கட்டியுள்ள வெடி மருந்தை பொறுத்த வேண்டும், கரணம் தப்பினால் மரணம் என்பது சர்வ நிச்சயம்....

ஐந்து முதல் பதிமூன்று வயது வரை உள்ள சிறுவர்கள் இந்த சிறார் படையில் உண்டு, கருவில் உதிக்கும் பொழுதே சுதந்திர வேட்கை என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறி இருக்கும், வீட்டிற்கு ஒரு பிள்ளை விதம் தலை பிள்ளை சுதந்திர போரில் பங்கு ஏற்க வேண்டும் என்பது அந்த ஊரின் எழுதப்படாத விதி, மண்ணில் ஜனித்த நாளில் இருந்த சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு சுதந்திர போரில் பங்கு பெற தேவையான பயிற்சி என்பது துவங்கப்படும் மரம் ஏறுதல், துப்பாக்கி சரியாக பயன்படுத்துவது, ஈட்டியை குறி வைத்து எதிரி மீது மறைந்து இருந்து தாக்குதல் நடத்துவது, வெடி மருந்தை சரட்டு வண்டியில் பொருத்தி வெடிக்க வைத்து தப்பிப்பது என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்...

தன் தலைவனின் தாக்கு.... என்ற கட்டளை கேட்ட உடன் தாக்குதல் நடத்த புறப்பட்டது அந்த சிறார் படை, கூட்டத்தோடு கூட்டமாக கலந்து இருந்த சிறுவர்கள் எல்லாம் வண்டியின் திசையை நோக்கி நகர அப்படையை தலைமை ஏற்று நடத்தி கொண்டு இருந்தான் அவன்...

பாரதி....

கண்களில் சுதந்திர வேட்கை ஜொலிக்க, பத்து வயதில் அசத்திய உயரத்தில் எதிரியின் சரட்டு வண்டியை நோக்கி செல்ல ஆரம்பித்தான்....

சிறார்கள் எல்லாம் தன் முதுகில் கட்டி இருக்கும் வெடி மருத்து அடங்கிய குப்பிகளை முதுகில் இருந்து விடுவித்து சரட்டு வண்டியின் அடியில் கட்டி விட்டு கையில் இருக்கும் தீ குச்சியின் மூலம் பற்ற வைத்து அவ்விடத்தில் இருந்து நொடி பொழுதில் தப்பிக்க வேண்டும், செய்ய வேண்டிய செயல் சற்று பிசகினாலும் மரணம் வந்து கண்டிப்பாக மடி ஏந்தும், சில நேரங்களில் வெடி மருந்து சரட்டு வண்டியை வெடிக்க வைப்பது மட்டும் அல்லாமல் அச்சிறாரின் உயிரை பறித்துவிடும்.

பற்ற வை... என அடுத்த கட்டளை பாரதி...உதிர்க்க டம்..... என்ற ஒலியுடன் சரட்டு வண்டிகள் பெரும் சத்தத்துடன் திசைக்கு திசைக்கு ஒன்றாக சிதறியது. சதி ஆலோசனை செய்ய திட்டம் தீட்டிய ஆங்கிலேயரின் உடல் துகள் துகளாக சிதறிகிடக்க பாரதியின் முகத்தில் வெற்றி புன்னகை பூத்தது.
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
சதுரன் சில வரிகள்....

பெண்ணை பெற்றவர்களின் தான் பெற்ற பெண்களை காக்கும் தவிப்பு ஒருபுறம் என்றால், தான் ஆளும் பிராந்தியத்தின் இருக்கும் பருவம் ஏய்த்திய பெண்கள் தான் ஈன்ற பிள்ளைகளுக்கு உயிர் பால் ஊட்டும் அங்கத்திற்கு வரி விதிக்கும் மகாபாதக செயலையும் எந்தவித மன உறுத்தலும் இல்லாமல் செய்து கொண்டு இருந்தான் அவன்.

வால்டரை பொறுத்தவரை பெண்கள் என்பவர்கள்,
போகப் பொருள், தன் இச்சையை.... ஆசையைத் தீர்க்கும்.... தசை பிண்டம் அவ்வளவுதான்.

ஆனால் தன்னால் துன்பப்படும் பெண்களுக்கு வலி, ஆசை, வாழ்க்கை, உண்டு என்பதை அவன் உணர்வதும் இல்லை....,அறிவதும் இல்லை...., அவன் ஆளும் பிராந்தியத்தில் எந்த ஒரு பெண்ணும் தன் மார்பை மார்பு கச்சை கொண்டு மறைத்திட கூடாது, அப்படி அவர்கள் மார்பு கச்சை அணியவேண்டும் என்றால் அதற்கு தனியாக எடைக்கு ஏற்ப வரி கட்டவேண்டும், தான் எதிரில் வரும் பொழுது பெண்கள் எப்பொழுதும் தலை குனிந்து மட்டுமே நடக்கவேண்டும், தன்னை கடக்கும் பெண்களின் அங்கங்களை குத்தீட்டியாய் அவனின் பார்வை துகிலுரிக்கும், தனக்கு கீழ் வேலை செய்யும் எந்த ஒரு ஆண் மகனும் மீசை வைக்க கூடாது, மீறி செய்தால் அங்கு மரணம் மட்டும் மாறாத தண்டனையாக இருக்கும், ஸ்காடீன் இக்கொடுற செயல்களை தடுக்கவோ... தட்டி கேட்டகவோ அங்கு எவருக்கும் தைரியம் இல்லை, அவன் அடிபணியும் ஒரே ஆள் இங்கிலாந்து ராணி மட்டும், அவருக்கும் இங்கு நடக்கும் எந்த கொடூரமும் தெரியவில்லை, வால்டர் தெரியவிடவில்லை என்பது சாலபொருந்தும்.
 

Brindha gajendran

New member
Messages
24
Reaction score
23
Points
3
Yaluu maa Pala anagal nu sollratha vida manitha thanmaiya maratha kama kodurangal nu sollalam avangalkulam penoda valinu illa mathavangaloda valli kuda theriyathuu ..neenga select pana topic enaku rompa pidichiruku ..🙂 Ithu pengalukana samuthaiyam illanu en momy solluvanga ...enku ketkumpotu kovam than varuthu .. Elaroda rathamum sigapu niramthan ..valthukal ..🤝🤝
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
சதுரன் 1

யான் சிந்தும்

குருதியின் துளிகள்

எம் தேசத்தின்

சுதந்திர வேட்கைக்கு

வித்தக்கட்டும்….

யான் இட்ட வித்து

முளைத்தாலும்

சரி….

மண்ணிற்கு உரமானாலும்

சரி….

சுதந்திரம்

என்றேனும் ஓர்

நாள் கிட்டியே தீரும்…..


வேணாம் துரை.... வலிக்குது.... துரை.... என்னை விட்டுவிடுங்கள்... என்ற இளம் குருத்தின் கதறல் கூட அசைக்கவில்லை அவனை, கதறும் அச்சிறு மலரைக் கசக்கி பிழிந்து, நறுமணம் நுகர்ந்தே விலகினான் அவ்வரக்கன், சிறு மலரின் குரல் அந்த பாரிய அரண்மனையின் நான்கு திசைகளில் ஒலித்தாலும், அவனை தட்டி கேட்ட யாரும் முன்வரவில்லை, அவர்களின் உயிர் என்பது அவர்களுக்கு முக்கியம் இல்லையா???

அவன் வால்டர் ஸ்காட், தமிழ்நாடும் கேரளா பிராந்தியமும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருக்க, வால்டர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் மலராத சிறு குருத்தினை கல்லறைக்கு அனுப்புவது அவனின் வாடிக்கை ஆகி போனது.

பெண்ணை பெற்றவர்களின் தான் பெற்ற பெண்களை காக்கும் தவிப்பு ஒருபுறம் என்றால், தான் ஆளும் பிராந்தியத்தில் இருக்கும் பருவம் ஏய்திய பெண்கள் தான் ஈன்ற பிள்ளைகளுக்கு உயிர் பால் ஊட்டும் அங்கத்திற்கு வரி விதிக்கும் மகாபாதக செயலையும் எந்தவித மன உறுத்தலும் இல்லாமல் செய்து கொண்டு இருந்தான் அவன்.

வால்டரை பொறுத்தவரை பெண்கள் என்பவர்கள்,
போகப் பொருள், தன் இச்சையை.... ஆசையைத் தீர்க்கும்.... தசை பிண்டம் அவ்வளவுதான்.

ஆனால் தன்னால் துன்பப்படும் பெண்களுக்கு வலி, ஆசை, வாழ்க்கை, உண்டு என்பதை அவன் உணர்வதும் இல்லை....,அறிவதும் இல்லை...., அவன் ஆளும் பிராந்தியத்தில் எந்த ஒரு பெண்ணும் தன் மார்பை மார்பு கச்சை கொண்டு மறைத்திட கூடாது, அப்படி அவர்கள் மார்பு கச்சை அணியவேண்டும் என்றால் அதற்கு தனியாக எடைக்கு ஏற்ப வரி கட்டவேண்டும், தான் எதிரில் வரும் பொழுது பெண்கள் எப்பொழுதும் தலை குனிந்து மட்டுமே நடக்கவேண்டும், தன்னை கடக்கும் பெண்களின் அங்கங்களை குத்தீட்டியாய் அவனின் பார்வை துகிலுரிக்கும், தனக்கு கீழ் வேலை செய்யும் எந்த ஒரு ஆண் மகனும் மீசை வைக்க கூடாது, மீறி செய்தால் அங்கு மரணம் மட்டும் மாறாத தண்டனையாக இருக்கும், ஸ்காட்டீன் இக்கொடுர செயல்களை தடுக்கவோ... தட்டி கேட்டகவோ அங்கு எவருக்கும் தைரியம் இல்லை, அவன் அடிபணியும் ஒரே ஆள் இங்கிலாந்து ராணி மட்டுமே, அவருக்கும் இங்கு நடக்கும் எந்த கொடூரமும் தெரியவில்லை,
என்பதை விட வால்டர் தெரியவிடவில்லை என்பது சாலபொருந்தும்.


அன்றும் அப்படித்தான் வால்டர் ஸ்காட் தன் அரசாங்க அலுவல்களை கவனிக்க தன் சாரட்டு வண்டியில் கோர்ட்டு வளாகம் நோக்கி சென்றுகொண்டிருந்தான்.

வேகமாக சென்று கொண்டு இருந்த அவனின் சிந்தனையை பெண்களின் பேச்சொலி தடைசெய்தது,

எப்பொழுதும் போல ஸ்காட்டின் கண்கள் பெண்களின் அங்கங்களை எவ்வித லட்சசையும் இன்றி களவாட, அப்பெண்களை மறைமுகமாக கவனிக்க ஆரம்பித்தான். இரு பெண்களும் வீட்டிற்கு தேவையான நீரினை ஆற்றுப்படுகையில் சேகரித்துக் கொண்டிருந்தனர்.

"நமக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை நங்கை...., கீழ் இன மக்களான நாம் மட்டும் துணி கொண்டு உடலை மறைக்கக்கூடாது, துரைமார்களின் மனைவிகள் மட்டும் துணி உடுத்தலாம்...., கடவுளின் படைப்பில் நிறம், உருவம், உயரம், கீழ் இன மக்கள், மேல் இன மக்கள் என்ற பாகுபாடு இல்லாத பொழுது....,நமக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை இவங்களுக்கு யார்... கொடுத்தார்கள்... என நாஞ்சாலி கேட்க....

"என்று நம் பிராந்தியம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமையானதோ அன்றில் இருந்து இது பழக்கம் தான் நாஞ்சாலி...., இதை மாற்ற வேண்டும் என்று நம் மக்கள் தான் நினைக்க வேண்டும்..., நீயோ.... நானோ....நினைத்தால் மாற்றம் என்பது நிகழாது என நங்கை தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க... இரு பெண்களும் ஒருவன் தங்களை கண்காணிப்பதையோ, தங்கள் அங்கங்களை காம இச்சை கொண்டு களவாட நினைப்பதையோ அறியவில்லை.

இருவரும் தங்களுக்குள் பேசியபடி ஆற்றின் கரையை நோக்கி வர, அவர்களின் முன்பு தன் ஆறடி உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான் வால்டர் ஸ்காட்.

இரு பெண்களும் அவன் வரவை கண்டு பயத்தில் பின் அடைய, நங்கையை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.

அய்யோ.... துரை என்னை விட்டுவிடுங்கள்...எனக்கு குழந்தை இருக்கு.... நான் இல்லாமல் அவன் என்னை தேடுவான்.... உயிர் பயத்தில் நங்கை கூச்சலிட்டது எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி போனது.

நெடும் கரங்கள் கொண்டு இரையினை சுற்றி வளைக்கும் ஆக்டோபஸ் போல கண் இமைக்கும் நேரத்தில் நங்கையை தன் இச்சைக்கு பலி இட கடத்தி சென்றான் ஸ்காட்.

தன் முன்பு நடக்கும் கொடூரம் கண்டு நாஞ்சாலி அவ்விடத்தில் உறைந்து இருந்தது சில வினாடிகள் தான், தன் உடல் பலம் அனைத்தையும் திரட்டி சாரட்டு வண்டியினை பிடிக்க பின்னால் ஓட முயல.... அவளால் இயலவில்லை,

துரை.... நங்கை....பாவம் அவளை....ஒன்னும் செய்யாதீர்கள்.... என அவள் கத்தியது எல்லாம் அவனுக்கு கேட்கவே இல்லை.

*****************************

அடுத்த அரை நாழிகைக்குள் தன் கணவனையும், ஊரையும் திரட்டி கொண்டு வந்த நாஞ்சாலிக்கு காண கிடைத்தது என்னவோ நங்கையின் சிதிலமடைந்த உடலே....

ஸ்காட், உடலளவில் அளித்த வலி தாங்காமல்....கண்கள் விட்டத்தை பார்த்தபடி உயிரை துறந்து இருந்தாள் நங்கை, உடல் எங்கும் ஸ்காட்டின் துன்புறுத்தலால் இரத்தம் வழிந்தோடி தரையில் சிறு குளமாக தேங்கி இருந்தது.

புத்தி தெரிந்த நாளில் இருந்து ஒன்றாக உண்டு, உறங்கி, வளர்ந்த தோழியின் மரணம் தாங்காமல், நாஞ்சாலி அதே இடத்தில் அதிர்ச்சியில் மடங்கி அமர்ந்தாள், கண்கள் மட்டும் கண்ணீரை இடைவிடாமல் சொரிந்தது.

நங்கை மட்டும் இந்த கொடூரனின் கண்களில் படாமல் இருந்து இருந்தால்.... கணவன், குழந்தை என அமைதியாக வாழ்க்கையை வாழ்ந்து இருப்பாள், அவளுக்கு.... இந்த கொடூரமான மரணம் நேர்ந்து இருக்காது.... என எண்ணாமல் இருக்க முடியவில்லை நாஞ்சாலியால்.

அவள் இப்படி நினைத்தது எல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான்,

தன் முன்பு ஒரு பெண்ணை உடல் அளவில் வன்கொடுமை செய்து...., ஈவு இரக்கமின்றி கொன்றுவிட்டு..., எந்தவித குற்ற உணர்ச்சியும், உறுத்தலும், இன்றி புகை பிடித்துக் கொண்டே இருப்பவனை காணும்போது ஆத்திரமும் கோபமும் ஒருங்கே உதித்தது அவளுக்கு.

கண்கள் இரண்டும் ஆத்திரத்தில் சிவக்க, மேல் மூச்சு வாங்கியபடி ஸ்காட்டின் மேல் அங்கியின் காலரை எட்டிப்பிடித்து இருந்தாள் நாஞ்சாலி.


"ஏன்டா.... ஏன்....இப்படி செய்தாய்.... அவள் உனக்கு என்ன பாவம் செய்தாள்.... என நங்கையின் உடலை காட்டி கேட்டவளுக்கு, வால்டரின் மீது இருந்த பயம், மரியாதை எல்லாம் காத தூரம் ஓடி போய் இருந்தது. அவ்வளவு கோவம் அவன் மேல்.....

ஸ்காட்டின் மேல் அங்கியை விடாமல் பற்றியபடி" கீழ் இனத்தில் பிறந்தது ஒன்றும் அவள் குற்றம் இல்லையே...., இந்த நேரம் உன் கண்களில் அகப்படாமல் இருந்திருந்தால் குழந்தை.... கணவன்.... என்று அமைதியான, அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருப்பாள்.... உன்னால்.... நீ செய்த... கேவலமான செயலால்....அவள்....இப்பொழுது உயிரோடு இல்லை.....ஐயோ....அவளோட குழந்தை பசியில் பால் குடிக்க அவனோட அம்மாவை தேடுவானே.... அவனுக்கு நான் என்ன பதில் சொல்ல.... உன்னுடைய அம்மா இறந்துவிட்டாள் என்றா... இல்லை...... நீ இனிமேல் அனாதை என்று சொல்லட்டுமா....இல்லை.... உன்னோட அம்மா....இதோடு மீண்டு வரவே முடியாத இடத்திற்கு சென்றுவிட்டாள் என்று சொல்ல வேண்டுமா... சொல்லுடா .....என கோவத்தில் இரைந்து கத்தினாள்.

தன் முன்பு இருக்கும் நாஞ்சாலி கத்தியது, கதறியது எல்லாம் ஸ்காட்டை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை, அவன் மூளையில் உரைக்கவும் இல்லை, என்னுடைய ஆளுகையின் கீழ் இருக்கும் பிராந்தியத்தில்...., நான் வைத்தது மட்டும் தான் சட்டம்...., என்னை எதிர்த்து நிற்கவோ....எதிர் கேள்வி கேட்கவோ....யாருக்கும் உரிமை இல்லை....அதிகாரமும் இல்லை....என் இச்சை தீர்க்க அவளை பயன்படுத்தி கொண்டேன்.... அதனால் போவது ஒரு உயிர் என்றாலும் எனக்கு கவலை இல்லை என அதிகார திமிரில் நினைத்தவன் தன் அங்கியை பிடித்து இருந்த நாஞ்சாலியின் கைகளை வேகமாக இழுத்து கீழே தள்ளினான்.

"லுக்.... என் உடல் இச்சைக்கு அவள் தேவைப்பட்டாள் பயன்படுத்தி கொண்டேன்.... என்னோட வேகம் தாளாமல் இறந்துவிட்டாள்.... சோ....வாட்.... சும்மா....கத்தாமல் பிணத்தை எடுத்து செல்லுங்கள்.... கத்தி கொண்டே இருந்தால் ஈமக்கிரிகை செய்ய கூட உடல் கிடைக்காமல் செய்துவிடுவேன்....இறந்தவளுக்கு எவ்வளவு நஷ்டஈடு தர வேண்டும் என்று சொல்லுங்கள் தருகிறேன்....பாசத்தை காட்டி நடிக்கிற வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம்.....
என்று நெஞ்சில் இரக்கமே இல்லாமல் கத்தினான்.

மறுநிமிடமே... நாஞ்சாலியின் உடலை கண்களால் மேய்ந்தபடி " நாளை.... வேண்டும் என்றால் நீயும் வரலாம்..., உனக்கு என்ன தேவையோ.... அதனை.... தேவைக்கும் அதிகமாகவே....செய்கிறேன்..., என காம இச்சையில் உளறினான்.

ஸ்காட்டின் மறுமொழியையும், தன் மீது அவன் கொண்ட இச்சையையும் கேட்டுக்கும் பொழுது நாஞ்சாலிக்கு தொடக்கூடாத ஏதோ ஒரு பொருளை தீண்டியது போன்று இருந்தது.

என்ன மாதிரியான மனிதன் இவன்.... அஃறிணை கூட தன் இணையின் சம்மதம் இல்லாமல் கலவி கொள்வது இல்லை.... தேவை இல்லாமல் ஒரு உயிரை கொல்வது இல்லை.... ஆனால் இவன்...தன் இச்சைக்கு, ஆசைக்கு ஒரு உயிரை வலுக்கட்டாயமாக துன்புறுத்தி, வதைத்து கொன்றுவிட்டு....கேட்டால் நஷ்டஈடு தருகிறேன் என கூறுபவனை....விலங்குகளுடன் கூட ஒப்பிட்டு செய்ய கூடாது, என நினைத்தாள்.

"ச்சி...என்னை என்ன தரம் கெட்டவள் என்று நினைத்துவிட்டாயா.... நீ.... என்னை...பெண்டாள நினைத்த அடுத்த வினாடி... உன் தலை.... உன் உடலில் தாங்காது... நினைவில் கொள்.... என கண்கள் தீ பிழம்பை கக்க வீர முழக்கமிட்டாள் நாஞ்சாலி.

நாஞ்சலியின் கோவம் ஸ்காட்டை சிறிதும் அசைக்கவில்லை, "அதையும் பார்ப்போம்"....இப்பொழுது .... இந்த நிமிடம்.... இங்கு யாரும் இருக்க கூடாது.... கெட் லாஸ்ட்.... என கட்டளையிட்டவன்.... அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து மது அருந்த ஆரம்பித்துவிட்டான்.

ஒரு நொடி... அவனை உறுத்து விழித்த நாஞ்சாலி.... மறுநொடி மனதில் " உன் இனத்தையோ....உன்னை சேர்ந்த... நெருங்கிய... ஒரு உறவினை நீ மொத்தமாக....இழக்கும் பொழுது.... நான் அனுபவிக்கும் வலியும்....வேதனையும்.... உனக்கு கண்டிப்பாக புரியும்.... அந்த நாள்... உன் இறுதி நாள்..." என நினைத்தவள், தோழியின் உடலிற்கு இறுதி காரியங்களை செய்ய அங்கு இருந்து அகன்றாள்.

வால்டர் ஸ்காட்.... அந்த ஷணம்...
அறிந்து இருக்கவில்லை.... என் அதிகாரம்...., நான் ஆளும் பிராந்தியத்தில்.... நான் வைத்தது தான் சட்டம், யாரும் என்னை அழிக்க முடியாது என எக்காளமிட்டவனின் அழிவிற்குக்கான நேரம் நெருங்கிவிட்டதை....

சதுரன் வருவான்.....
 
Last edited:

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
சதுரன் சில வரிகள்....

என் பெண்மையின் அடையாளமாக இருக்கும் அங்கம் தான் உன்னை வரியிட தூண்டுகிறது என்றால் அந்த அங்கம் எனக்கு தேவையே இல்லை, எவ்வங்கம் உன் இச்சையை தூண்டி என்னை அடிபணிந்து ஆட்கொள்ள சொல்கிறதோ அந்த அங்கம் எனக்கு தேவை இல்லை.... நான் இறந்தாலும் சரி.... என் பிள்ளை ஏன் மார்பில் உயிர் பால் அருந்தாமல் போனாலும் சரி.... என்று ஆவேசத்துடன் கூறியவள் கதிர் அறுக்க பயன்படும் குருவாள் கொண்டு தான் மார்பை அறுத்து எடுத்தவள் ஸ்காட்டின் முகத்தில் எறிந்தாள்.
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
சதுரன் 2

மாதரின்

அமுதுட்டும்

அங்கம் நினக்கு

காமத்தை பிரதிபலித்தால்

தவறு அவள்

மீது அல்ல....

உன் மீது தான்
....

கைகளில் மது கோப்பையை சுமந்தபடி, கண்கள் இரண்டும் விட்டத்தை வெறித்தப்படி, ஒரு வித நிலையில்லாத தளும்பலான மனநிலையில் இருந்தான் வால்டர் ஸ்காட்.

நேற்று நஞ்சாலியை கண்ட ஷணத்தில் இருந்து அவளின் அழகு அவனை உன்மத்தம் கொள்ள செய்தது என்னவோ உண்மை, அவளை ஆட்கொண்டு தன் வேட்கை தீர்க்கும் வெறி நிமிடத்திற்கு...., நிமிடம்.... நொடிக்கு...., நொடி... அவன் உட்கொண்ட மதுவின் உபாயத்தால் உடலில் ஏறிக்கொண்டே இருந்தது, அழகு சிந்தும் அப்பெண் மானை வேட்டையாடி புசிக்க உறுதிக்கொண்ட பிறகே, கண்களில் நித்திரை என்பது ஆட்கொண்டது, நரமாமிசம் புசிக்கும் அவ்வரகனுக்கு, உறக்கம் கண்களை தழுவும் கடைசி நொடியில் கூட "உன்னை அடையாமல் விடமாட்டேன்" என மொழிந்துவிட்டே உறக்கத்தை தழுவினான் அவன்.

வால்டர் ஸ்காட் அக்கணம் உணரவில்லை, பிறர் மனை நோக்கல் எனும் மஹாபாதக செயலை தான் செய்ய போவதை.... அதனால்.... எனது ஆட்சி.... எனது பிராந்தியம்.... நான் வைத்தது தான் சட்டம்.... என அவன் இருமாந்து கட்டி வைத்த கனவு கோட்டையை எல்லாம்.... ஒற்றை நொடியில் தான் துச்சமாக எண்ணும்....போக பொருளாக வேட்டையாட துடிக்கும் ஒரு பெண்ணால் தூள் தூளாக உடைய போவதை...

இராவணன் சீதை என்னும் ஒற்றை பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தீண்ட நினைத்து அழிந்தான்.... துச்சாதனன் திரௌபதியை கௌரவர் சபையில் துகில் களைந்து போரில் மண்ணோடு மண்ணாகி போனான்...மாதரை துச்சமாக என்னும் வால்டர் ஸ்காட்டின் நிலை யாதோ....

***********************

வைகறை கிழக்கில் வெளுக்க துவங்கிய ஷணத்தில் இருந்தே நஞ்சாலிக்கு மனம் அலை பாய ஆரம்பித்தது....

ஏதோ... மனதுக்கு ஒவ்வாத ஒன்று நிகழ போவதை உள்ளுணர்வு உணர்த்தி கொண்டே இருந்தது... மனதில் எழுந்த அலைபுறுத்தல்களை எல்லாம் புறந்தள்ளியவள், அன்றாட வேலைகளில் தன்னை புகுத்திக்கொண்டாள்.

ஆதவன் உச்சிபொழுதை எட்ட விரைந்து கொண்டிருக்க... நாஞ்சாலி குடியிருந்த குடிலில் அருகில் குதிரைகளின் குளம்பொலி சத்தமும் அதனை தொடர்ந்து சிப்பாய்களின் உயர்ந்த பேச்சொலியும் கேட்க துவங்கியது, அதனை தொடர்ந்து குடிலின் கதவுகள் பெரும் ஒலியுடன் "யார் உள்ளே.... கதவை திறங்கள்" அதிகார கட்டளையுடன் தட்டப்பட, குரல் கேட்டு நாஞ்சாலி கைகள் எல்லாம் நடுங்க குடிலின் கதவை நெருங்க, கதவு தட்டும் வேகமும், ஒலியும் இன்னும் அதிகமாகியது.

உள்ளம் எல்லாம் பதற நாஞ்சலி கதவை டாப்... என்ற சத்தத்துடன் திறக்க அவளின் எதிரில் இரு சிப்பாய் வீரர்கள் நின்று இருந்தனர், அவர்களின் வரவு எதற்காக என்பதை அறியும் நோக்குடன் நாஞ்சாலி அவர்களின் முகங்களை கேள்வியுடன் நோக்க அதில் ஒருவன் அவளின் பார்வையை புரிந்து " இந்த மாதத்திற்கு உரிய மூலைவரியை வசூலிக்க வந்துள்ளோம்" என்றான் விறைப்பாக,

அவன் கூறிய மறுமொழி கேட்டு, உடல் விரைத்து, முகம் எல்லாம் கோபத்தில் சிவக்க, "எதற்கு வரி" என்றாள் வார்த்தைகளில் சூடு பறக்க...

"ஏன் எதற்கு வரி என்று உமக்கு தெரியாதா.., துரையின் ஆணைக்கு இணங்க தான் நாங்கள் இங்கு வரி வசூல் செய்ய வந்தோம்..., வரி செலுத்தா பச்சத்தில் நீர் சிறை செல்ல நேரிடும் நினைவில் கொள்ளுங்கள் என்றான் முதலமாவன்.

"என்னை சிறையில் அடைத்தாலும் சரி வரி செலுத்த முடியாது, அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில் தானே உங்கள் துரை ஒன்றும் அறியாத பாமர மக்கள் மீதும், பெண்களின் பால் சுரக்கும் அங்கத்தின் மீதும் வரியிடுகிறான்... நாங்கள் வரி செலுத்த மறுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்... யான் என்று இல்லை பிராந்தியத்தில் உள்ள மக்கள் யாவரும் வரி செலுத்தவில்லை என்றால் என்ன செய்வீர்கள்...எங்களை சிறையில் அடைப்பீர்களா.?.. எத்தனை பேரை உங்கள் சிறை கொள்ளும்? நூறு பேர்...ஆயிரம் பேர்....நாங்கள் அடிமையாக இருக்கும் வரை உங்கள் துரை இந்த பிராந்தியத்தில் அவரது ஆட்சியை செலுத்த முடியும்..., பிராந்தியத்தில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு புரட்சி செய்தால்..... எங்கள் மீது அதிகாரம் செலுத்தும் உங்கள் துரையின் உயிர் கால் காசு பெறாது...., வியாபாரத்திற்கு எங்கள் நாட்டை அண்டி வந்த உங்கள் துரை எங்களை அடிமையாக்கி வரியுடுவதா?.... இல்லை...என கோபத்தில் இரைந்து கேள்விகளை வீசினாள் நாஞ்சாலி, தோழியை இழந்த வலி அவளை அவ்வாறு பேச வைத்தது.

" துரை கேட்ட வரியை செலுத்தவில்லை என்றால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றான் இரண்டமாவன்.

" எதுவாக இருந்தாலும் நான் சந்திக்க தயார்" என்று நிமிர்வுடன் மறுமொழி வந்தது நாஞ்சாலியிடன் இருந்து,


நாஞ்சாலியின் மறுமொழி கேட்டு இரண்டு சிப்பாய்களும் அவளை உறுத்துவிழித்தபடி அங்கு இருந்து அகன்றனர்.

அடுத்த ஒரு நாழிகைக்குள் நாஞ்சாலியின் மறுமொழி குறித்த செய்தி வால்டரின் காதுகளை சென்று அடைந்தது.... தன்னை எட்டிய செய்தி கேட்டு அவன் அவசரமோ.... கோபமோ படவில்லை.... அமைதியாக மானை வேட்டையாடும் புலியின் வேட்கையுடன் நாஞ்சாலியை நேருக்கு நேர் சந்திக்க ஆயத்தமானன்.

தன் வேட்கையை தீர்த்து கொள்ள சிப்பாய்களுடன் நாஞ்சாலி குடிலை அடைந்தான் வால்டர் ஸ்காட், மீண்டும் குடிலில் கதவுகள் பெரும் சத்தத்துடன் தட்டப்பட வெளியில் வந்தாள் நாஞ்சாலி.

வால்டரின் கண்களை அவள் உடலை அடி முதல் நுனி வரை இச்சையுடன் தீண்ட, தன் உடலை குத்திடியாய் குத்தும் வால்டரின் முகத்தை பார்வையால் எரித்தபடி " எத்தனை முறை உரைப்பது ...வரி செலுத்த இயலாது என்று" பதில் வெளிவந்தது நாஞ்சாலியிடன் இருந்து எரிச்சலுடன்,

" சரி வரி செலுத்தவேண்டாம்.... என்று அவளுக்கு மறுமொழி உரைத்தான் வால்டர் ஸ்காட்.

வால்டரின் உரைத்த செய்தியை நம்பாமல் அவனை கேள்வியாக நோக்கியவளின் உடலை லச்சை இன்றி கண்களால் மேய்ந்தபடி " வரிக்கு பதில் என் மஞ்சத்தை நீ அலங்கரிக்க வேண்டும் வருகிறாயா" என்று கேட்க,

நாஞ்சாலியின் கண்கள் தீ கங்குகள் என ஜொலிக்க" ச்ச்சி மனிதனா நீ.?.. என்ன கேள்வி கேட்டாய் மஞ்சத்தை அலங்கரிக்க வருகிறாய் என்றா.?...கண்ட மனிதர்களுடன் உறவு கொள்ள நான் ஒன்றும் பரத்தை அல்ல.... ஒருவனை மணந்து...அம்மனிதனுடன் மட்டும் மஞ்சத்தை பகிரும் இனத்தை சேர்ந்த பெண் நான் என்றாள் கோபத்துடன்.

" ஹா ஹா... என்று பெரும் குரலெடுத்து சிரித்த வால்டர் ஸ்காட், "நான் சொன்னதை செய்ய முடியாது இல்லையா.... பின்பு எதற்கு இந்த வீண் விவாதம், ஒன்று வரியை செலுத்து இல்லையேல் என்னை மகிழ்வி.... என்றான் குரலில் நக்கலை தேக்கி....

" நீர் என்னிடம் கேட்ட அதே செயலை என் கணவர் உம் மனைவியிடம் கேட்டால் உன் நிலைப்பாடு என்ன... என்று தெளிவாக கேள்விகள் வந்தது நாஞ்சாலியிடம் இருந்து,

" ஏய்… அவள் என்ன உன்னை போல கீழ் இனத்தை சேர்த்தவளா, வரி செலுத்த…,மாட மாளிகையில் என்னுடன் ராணி போல வாழ்பவள், அவளுக்கு என் இந்த இழிநிலை நேர போகிறது….என்றான் கோபத்துடன்,

ஓஹோ… உன் மனைவி என்றால் ஒரு சட்டம் நீங்கள் ஆட்சி செய்யும் கீழ் இன மக்கள் என்றால் ஒரு சட்டமா… உன் மனைவியிடம் இருக்கும் அதே அங்கம் தானே எம் இன பெண்களிடம் உள்ளது...அவள் உன் குழந்தைக்கு பசியாற்றுவது போல தானே நாங்களும் செய்கிறோம்….பின்பு இந்த வரி… சட்டம்… எதற்காக….என் இந்த வேறுபாடு…. இறைவனின் படைப்பில் வேறுபாடு இல்லாத பொழுது ….கீழ் இன மக்கள்...மேல் இன மக்கள் என பாகுபாடு செய்ய உமக்கு அதிகாரம் அளித்தது யார்…., என நாஞ்சாலி கேட்க,

"ஒன்று யான் சொல்லும் வரியை செலுத்து… இல்லையேல்… இதே இடத்தில் நீ … அனைவரின் முன்பு நீ உன் ஆடைகளை இழக்க நேரிடும், மானம் முக்கியமா இல்லையா…. முடிவு உன் கையில் என்றான் வால்டர் ஸ்காட்.

நாஞ்சாலி தயங்கியது எல்லாம் ஒரு சில வினாடிகள் மட்டுமே, பின்பு ஒரு உறுதியான முடிவுடன் வால்டர் ஸ்காட்டை கோபத்துடன் எறிட்டவள், விறுவிறுவென்று குடிலில் உள்ளே நுழைந்து அதே வேகத்துடன் வெளியில் வந்தாள்.

பின் வால்டரை கண்களை திட்சனியத்துடன் ஏறிட்டு"என் பெண்மையின் அடையாளமாக இருக்கும் என் அங்கம் தான் உன்னை வரியிட தூண்டுகிறது என்றால்... அந்த அங்கம் எனக்கு தேவையே இல்லை..., எவ்வங்கம் உன் இச்சையை தூண்டி என்னை அடிபணிந்து ஆட்கொள்ள சொல்கிறதோ அந்த அங்கம் எனக்கு முக்கியம் இல்லை.... நான் இறந்தாலும் சரி.... என் பிள்ளை ஏன் மார்பில் உயிர் பால் அருந்தாமல் போனாலும் சரி... என்று ஆவேசத்துடன் கூறியவள் கதிர் அறுக்க பயன்படும் குறுவாள் கொண்டு தான் மார்பை அறுத்து எடுத்தவள், ஸ்காட்டின் முகத்தில் எறிந்தாள் கோபத்துடன்.

" இப்பொழுது எதை கொண்டு என்னிடம் வரி கேட்பாய்.... என இறுதியாய், அறுதியாக ஒலித்தது நாஞ்சாலியின் குரல்.

வால்டர் ஸ்காட் நாஞ்சாலியின் செய்த காரியத்தில் அதிர்ச்சி உறைந்து இருக்க, தன் அங்கத்தை தானே வெட்டி எரிந்தது, பெரும் குருதி போக்கின் காரணமாக அவ்விடத்திலேயே வீர மரணம் எய்தினாள் நாஞ்சாலி.


கண்களால் களவாட கிடைத்த பெண்மை கைக்கு கிடைக்காத , ஆத்திரத்தில், வால்டர் தன் சாரட்டு வண்டியை தன் அரண்மனைக்கு திருப்பினான் கோபத்துடன்,

அதே நேரத்தில் வால்டரின் அறம் பிழன்ற செயலால் அழகான சிறிய குருவி கூடு ஒன்று அனலில் இட்ட சருகாய் கருகி போனது.

நாஞ்சாலி உயிர்விட்ட அதே இடத்தில் அவள் உடல் எரியூட்டபட்ட, அவளின் இழப்பு தாங்காதுஅதே சிதையில் தன் உயிரை மாய்த்து கொண்டான் நாஞ்சாலியின் காதல் கணவன், மரணத்தில் கூட அந்த காதல் பறவைகள் பிரியவில்லை போலும்.

வால்டர் ஸ்காட் அப்பொழுது அறியவில்லை, நாஞ்சாலி அவள் உதிரத்தில் விதைத்து சென்ற சுதந்திரவித்து ஒன்று அவனை வேரோடு கருவருக்க தயாராகி நிற்கும் என்பதை.


சதுரன் வருவான்....
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom