சதுரன் 1
யான் சிந்தும்
குருதியின் துளிகள்
எம் தேசத்தின்
சுதந்திர வேட்கைக்கு
வித்தக்கட்டும்….
யான் இட்ட வித்து
முளைத்தாலும்
சரி….
மண்ணிற்கு உரமானாலும்
சரி….
சுதந்திரம்
என்றேனும் ஓர்
நாள் கிட்டியே தீரும்…..
வேணாம் துரை.... வலிக்குது.... துரை.... என்னை விட்டுவிடுங்கள்... என்ற இளம் குருத்தின் கதறல் கூட அசைக்கவில்லை அவனை, கதறும் அச்சிறு மலரைக் கசக்கி பிழிந்து, நறுமணம் நுகர்ந்தே விலகினான் அவ்வரக்கன், சிறு மலரின் குரல் அந்த பாரிய அரண்மனையின் நான்கு திசைகளில் ஒலித்தாலும், அவனை தட்டி கேட்ட யாரும் முன்வரவில்லை, அவர்களின் உயிர் என்பது அவர்களுக்கு முக்கியம் இல்லையா???
அவன் வால்டர் ஸ்காட், தமிழ்நாடும் கேரளா பிராந்தியமும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருக்க, வால்டர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் மலராத சிறு குருத்தினை கல்லறைக்கு அனுப்புவது அவனின் வாடிக்கை ஆகி போனது.
பெண்ணை பெற்றவர்களின் தான் பெற்ற பெண்களை காக்கும் தவிப்பு ஒருபுறம் என்றால், தான் ஆளும் பிராந்தியத்தில் இருக்கும் பருவம் ஏய்திய பெண்கள் தான் ஈன்ற பிள்ளைகளுக்கு உயிர் பால் ஊட்டும் அங்கத்திற்கு வரி விதிக்கும் மகாபாதக செயலையும் எந்தவித மன உறுத்தலும் இல்லாமல் செய்து கொண்டு இருந்தான் அவன்.
வால்டரை பொறுத்தவரை பெண்கள் என்பவர்கள்,
போகப் பொருள், தன் இச்சையை.... ஆசையைத் தீர்க்கும்.... தசை பிண்டம் அவ்வளவுதான்.
ஆனால் தன்னால் துன்பப்படும் பெண்களுக்கு வலி, ஆசை, வாழ்க்கை, உண்டு என்பதை அவன் உணர்வதும் இல்லை....,அறிவதும் இல்லை...., அவன் ஆளும் பிராந்தியத்தில் எந்த ஒரு பெண்ணும் தன் மார்பை மார்பு கச்சை கொண்டு மறைத்திட கூடாது, அப்படி அவர்கள் மார்பு கச்சை அணியவேண்டும் என்றால் அதற்கு தனியாக எடைக்கு ஏற்ப வரி கட்டவேண்டும், தான் எதிரில் வரும் பொழுது பெண்கள் எப்பொழுதும் தலை குனிந்து மட்டுமே நடக்கவேண்டும், தன்னை கடக்கும் பெண்களின் அங்கங்களை குத்தீட்டியாய் அவனின் பார்வை துகிலுரிக்கும், தனக்கு கீழ் வேலை செய்யும் எந்த ஒரு ஆண் மகனும் மீசை வைக்க கூடாது, மீறி செய்தால் அங்கு மரணம் மட்டும் மாறாத தண்டனையாக இருக்கும், ஸ்காட்டீன் இக்கொடுர செயல்களை தடுக்கவோ... தட்டி கேட்டகவோ அங்கு எவருக்கும் தைரியம் இல்லை, அவன் அடிபணியும் ஒரே ஆள் இங்கிலாந்து ராணி மட்டுமே, அவருக்கும் இங்கு நடக்கும் எந்த கொடூரமும் தெரியவில்லை,
என்பதை விட வால்டர் தெரியவிடவில்லை என்பது சாலபொருந்தும்.
அன்றும் அப்படித்தான் வால்டர் ஸ்காட் தன் அரசாங்க அலுவல்களை கவனிக்க தன் சாரட்டு வண்டியில் கோர்ட்டு வளாகம் நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
வேகமாக சென்று கொண்டு இருந்த அவனின் சிந்தனையை பெண்களின் பேச்சொலி தடைசெய்தது,
எப்பொழுதும் போல ஸ்காட்டின் கண்கள் பெண்களின் அங்கங்களை எவ்வித லட்சசையும் இன்றி களவாட, அப்பெண்களை மறைமுகமாக கவனிக்க ஆரம்பித்தான். இரு பெண்களும் வீட்டிற்கு தேவையான நீரினை ஆற்றுப்படுகையில் சேகரித்துக் கொண்டிருந்தனர்.
"நமக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை நங்கை...., கீழ் இன மக்களான நாம் மட்டும் துணி கொண்டு உடலை மறைக்கக்கூடாது, துரைமார்களின் மனைவிகள் மட்டும் துணி உடுத்தலாம்...., கடவுளின் படைப்பில் நிறம், உருவம், உயரம், கீழ் இன மக்கள், மேல் இன மக்கள் என்ற பாகுபாடு இல்லாத பொழுது....,நமக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை இவங்களுக்கு யார்... கொடுத்தார்கள்... என நாஞ்சாலி கேட்க....
"என்று நம் பிராந்தியம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமையானதோ அன்றில் இருந்து இது பழக்கம் தான் நாஞ்சாலி...., இதை மாற்ற வேண்டும் என்று நம் மக்கள் தான் நினைக்க வேண்டும்..., நீயோ.... நானோ....நினைத்தால் மாற்றம் என்பது நிகழாது என நங்கை தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க... இரு பெண்களும் ஒருவன் தங்களை கண்காணிப்பதையோ, தங்கள் அங்கங்களை காம இச்சை கொண்டு களவாட நினைப்பதையோ அறியவில்லை.
இருவரும் தங்களுக்குள் பேசியபடி ஆற்றின் கரையை நோக்கி வர, அவர்களின் முன்பு தன் ஆறடி உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான் வால்டர் ஸ்காட்.
இரு பெண்களும் அவன் வரவை கண்டு பயத்தில் பின் அடைய, நங்கையை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.
அய்யோ.... துரை என்னை விட்டுவிடுங்கள்...எனக்கு குழந்தை இருக்கு.... நான் இல்லாமல் அவன் என்னை தேடுவான்.... உயிர் பயத்தில் நங்கை கூச்சலிட்டது எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி போனது.
நெடும் கரங்கள் கொண்டு இரையினை சுற்றி வளைக்கும் ஆக்டோபஸ் போல கண் இமைக்கும் நேரத்தில் நங்கையை தன் இச்சைக்கு பலி இட கடத்தி சென்றான் ஸ்காட்.
தன் முன்பு நடக்கும் கொடூரம் கண்டு நாஞ்சாலி அவ்விடத்தில் உறைந்து இருந்தது சில வினாடிகள் தான், தன் உடல் பலம் அனைத்தையும் திரட்டி சாரட்டு வண்டியினை பிடிக்க பின்னால் ஓட முயல.... அவளால் இயலவில்லை,
துரை.... நங்கை....பாவம் அவளை....ஒன்னும் செய்யாதீர்கள்.... என அவள் கத்தியது எல்லாம் அவனுக்கு கேட்கவே இல்லை.
*****************************
அடுத்த அரை நாழிகைக்குள் தன் கணவனையும், ஊரையும் திரட்டி கொண்டு வந்த நாஞ்சாலிக்கு காண கிடைத்தது என்னவோ நங்கையின் சிதிலமடைந்த உடலே....
ஸ்காட், உடலளவில் அளித்த வலி தாங்காமல்....கண்கள் விட்டத்தை பார்த்தபடி உயிரை துறந்து இருந்தாள் நங்கை, உடல் எங்கும் ஸ்காட்டின் துன்புறுத்தலால் இரத்தம் வழிந்தோடி தரையில் சிறு குளமாக தேங்கி இருந்தது.
புத்தி தெரிந்த நாளில் இருந்து ஒன்றாக உண்டு, உறங்கி, வளர்ந்த தோழியின் மரணம் தாங்காமல், நாஞ்சாலி அதே இடத்தில் அதிர்ச்சியில் மடங்கி அமர்ந்தாள், கண்கள் மட்டும் கண்ணீரை இடைவிடாமல் சொரிந்தது.
நங்கை மட்டும் இந்த கொடூரனின் கண்களில் படாமல் இருந்து இருந்தால்.... கணவன், குழந்தை என அமைதியாக வாழ்க்கையை வாழ்ந்து இருப்பாள், அவளுக்கு.... இந்த கொடூரமான மரணம் நேர்ந்து இருக்காது.... என எண்ணாமல் இருக்க முடியவில்லை நாஞ்சாலியால்.
அவள் இப்படி நினைத்தது எல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான்,
தன் முன்பு ஒரு பெண்ணை உடல் அளவில் வன்கொடுமை செய்து...., ஈவு இரக்கமின்றி கொன்றுவிட்டு..., எந்தவித குற்ற உணர்ச்சியும், உறுத்தலும், இன்றி புகை பிடித்துக் கொண்டே இருப்பவனை காணும்போது ஆத்திரமும் கோபமும் ஒருங்கே உதித்தது அவளுக்கு.
கண்கள் இரண்டும் ஆத்திரத்தில் சிவக்க, மேல் மூச்சு வாங்கியபடி ஸ்காட்டின் மேல் அங்கியின் காலரை எட்டிப்பிடித்து இருந்தாள் நாஞ்சாலி.
"ஏன்டா.... ஏன்....இப்படி செய்தாய்.... அவள் உனக்கு என்ன பாவம் செய்தாள்.... என நங்கையின் உடலை காட்டி கேட்டவளுக்கு, வால்டரின் மீது இருந்த பயம், மரியாதை எல்லாம் காத தூரம் ஓடி போய் இருந்தது. அவ்வளவு கோவம் அவன் மேல்.....
ஸ்காட்டின் மேல் அங்கியை விடாமல் பற்றியபடி" கீழ் இனத்தில் பிறந்தது ஒன்றும் அவள் குற்றம் இல்லையே...., இந்த நேரம் உன் கண்களில் அகப்படாமல் இருந்திருந்தால் குழந்தை.... கணவன்.... என்று அமைதியான, அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருப்பாள்.... உன்னால்.... நீ செய்த... கேவலமான செயலால்....அவள்....இப்பொழுது உயிரோடு இல்லை.....ஐயோ....அவளோட குழந்தை பசியில் பால் குடிக்க அவனோட அம்மாவை தேடுவானே.... அவனுக்கு நான் என்ன பதில் சொல்ல.... உன்னுடைய அம்மா இறந்துவிட்டாள் என்றா... இல்லை...... நீ இனிமேல் அனாதை என்று சொல்லட்டுமா....இல்லை.... உன்னோட அம்மா....இதோடு மீண்டு வரவே முடியாத இடத்திற்கு சென்றுவிட்டாள் என்று சொல்ல வேண்டுமா... சொல்லுடா .....என கோவத்தில் இரைந்து கத்தினாள்.
தன் முன்பு இருக்கும் நாஞ்சாலி கத்தியது, கதறியது எல்லாம் ஸ்காட்டை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை, அவன் மூளையில் உரைக்கவும் இல்லை, என்னுடைய ஆளுகையின் கீழ் இருக்கும் பிராந்தியத்தில்...., நான் வைத்தது மட்டும் தான் சட்டம்...., என்னை எதிர்த்து நிற்கவோ....எதிர் கேள்வி கேட்கவோ....யாருக்கும் உரிமை இல்லை....அதிகாரமும் இல்லை....என் இச்சை தீர்க்க அவளை பயன்படுத்தி கொண்டேன்.... அதனால் போவது ஒரு உயிர் என்றாலும் எனக்கு கவலை இல்லை என அதிகார திமிரில் நினைத்தவன் தன் அங்கியை பிடித்து இருந்த நாஞ்சாலியின் கைகளை வேகமாக இழுத்து கீழே தள்ளினான்.
"லுக்.... என் உடல் இச்சைக்கு அவள் தேவைப்பட்டாள் பயன்படுத்தி கொண்டேன்.... என்னோட வேகம் தாளாமல் இறந்துவிட்டாள்.... சோ....வாட்.... சும்மா....கத்தாமல் பிணத்தை எடுத்து செல்லுங்கள்.... கத்தி கொண்டே இருந்தால் ஈமக்கிரிகை செய்ய கூட உடல் கிடைக்காமல் செய்துவிடுவேன்....இறந்தவளுக்கு எவ்வளவு நஷ்டஈடு தர வேண்டும் என்று சொல்லுங்கள் தருகிறேன்....பாசத்தை காட்டி நடிக்கிற வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம்.....
என்று நெஞ்சில் இரக்கமே இல்லாமல் கத்தினான்.
மறுநிமிடமே... நாஞ்சாலியின் உடலை கண்களால் மேய்ந்தபடி " நாளை.... வேண்டும் என்றால் நீயும் வரலாம்..., உனக்கு என்ன தேவையோ.... அதனை.... தேவைக்கும் அதிகமாகவே....செய்கிறேன்..., என காம இச்சையில் உளறினான்.
ஸ்காட்டின் மறுமொழியையும், தன் மீது அவன் கொண்ட இச்சையையும் கேட்டுக்கும் பொழுது நாஞ்சாலிக்கு தொடக்கூடாத ஏதோ ஒரு பொருளை தீண்டியது போன்று இருந்தது.
என்ன மாதிரியான மனிதன் இவன்.... அஃறிணை கூட தன் இணையின் சம்மதம் இல்லாமல் கலவி கொள்வது இல்லை.... தேவை இல்லாமல் ஒரு உயிரை கொல்வது இல்லை.... ஆனால் இவன்...தன் இச்சைக்கு, ஆசைக்கு ஒரு உயிரை வலுக்கட்டாயமாக துன்புறுத்தி, வதைத்து கொன்றுவிட்டு....கேட்டால் நஷ்டஈடு தருகிறேன் என கூறுபவனை....விலங்குகளுடன் கூட ஒப்பிட்டு செய்ய கூடாது, என நினைத்தாள்.
"ச்சி...என்னை என்ன தரம் கெட்டவள் என்று நினைத்துவிட்டாயா.... நீ.... என்னை...பெண்டாள நினைத்த அடுத்த வினாடி... உன் தலை.... உன் உடலில் தாங்காது... நினைவில் கொள்.... என கண்கள் தீ பிழம்பை கக்க வீர முழக்கமிட்டாள் நாஞ்சாலி.
நாஞ்சலியின் கோவம் ஸ்காட்டை சிறிதும் அசைக்கவில்லை, "அதையும் பார்ப்போம்"....இப்பொழுது .... இந்த நிமிடம்.... இங்கு யாரும் இருக்க கூடாது.... கெட் லாஸ்ட்.... என கட்டளையிட்டவன்.... அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து மது அருந்த ஆரம்பித்துவிட்டான்.
ஒரு நொடி... அவனை உறுத்து விழித்த நாஞ்சாலி.... மறுநொடி மனதில் " உன் இனத்தையோ....உன்னை சேர்ந்த... நெருங்கிய... ஒரு உறவினை நீ மொத்தமாக....இழக்கும் பொழுது.... நான் அனுபவிக்கும் வலியும்....வேதனையும்.... உனக்கு கண்டிப்பாக புரியும்.... அந்த நாள்... உன் இறுதி நாள்..." என நினைத்தவள், தோழியின் உடலிற்கு இறுதி காரியங்களை செய்ய அங்கு இருந்து அகன்றாள்.
வால்டர் ஸ்காட்.... அந்த ஷணம்...
அறிந்து இருக்கவில்லை.... என் அதிகாரம்...., நான் ஆளும் பிராந்தியத்தில்.... நான் வைத்தது தான் சட்டம், யாரும் என்னை அழிக்க முடியாது என எக்காளமிட்டவனின் அழிவிற்குக்கான நேரம் நெருங்கிவிட்டதை....
சதுரன் வருவான்.....