அனுஷ்கா இவளை எனக்கு ரொம்ப பிடிச்சது... அப்பா அண்ட் அக்காவின் எத்தனை கொடுமைகள் இருந்தும் எல்லாத்தையும் எப்படி எதிர்கொள்ளனுமோ அப்படி எதிர் கொள்ளுறா...
அமர், முத்து அவங்க பாகுபலி அனுஷ்கா பத்தி பேச, அந்த வழியாக ஊருக்கு முதன்முறையாக வந்த இந்த அனுஷ்கா கேட்டு அமரை அடிக்க, உண்மை தெரிஞ்சு அசடு வழிய, ஆனாலும் கோபப் பட வேண்டிய அமர் அவளை பார்த்து என்னவோ ஆகி பார்க்கும் இடம் எல்லாம் சீண்டி விளையாட ஆரம்பிச்சுடுறான்...
அவளுக்கு அவள் அக்காவே
எதிரி தான், பொறுக்கி மாமா, பணம் மட்டுமே எண்ணம் கொண்ட அக்கா, கொஞ்சம் கூட தங்கை என்ற எண்ணம் இல்லாது அவள் செய்வது எல்லாம் செம்ம கடுப்பு வருது... அக்கா வீடு பிடிக்காது வீடு தேடி வரும் போது அவள் செய்யும் செயலால் அவள் மதிப்பு அமர் குடும்பத்தினரிடம் உயருது... மகனின் பார்வையும் அவளை சுத்த குடும்பமே அவளை கொண்டாட தான் செய்யுது... அக்கா கணவன் ஒருபுறம் அவளுக்கு தொல்லை!
ஒருகட்டத்தில் அம்மா தங்கையுடன் வசிக்க ஆரம்பிக்க இரு வீட்டு பெரியோர் சம்மதம் இருந்தும் நம்ம அனுஷ்கா காதல் இருந்தும், அவனை கல்யாணம் செய்ய சம்மதம் இல்லை, காரணம் அவள் தங்கை சுபி!!! தங்கைக்காக பிடித்த அமருடனான திருமணத்தை மறுத்தும், பிடிக்காத தந்தையிடம் கையேந்தியும் கூட அவர் மனம் இறங்காது, நடந்த ஒரே நல்ல விசயம் அவள் அம்மா அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்தது தான்!!!
அனுவின் தோழி, சௌமியா அவளின் காதல் அமரின் சித்தப்பா குரு மேல, அவரின் மறுப்பில் அது ஒருபக்கம் தொங்கிகிட்டு இருக்கு!
என்ன சுபிக்கு? ஏன் அவள் கல்யாணத்தை வேண்டாம் சொல்லுறா? சுபியின் பிரச்சனை சரியாகுமா? சௌமியா காதல் என்ன ஆகும்? எல்லாம் கதையில்....
ராமன் சூப்பர் கேரக்டர்.. தம்பி, தங்கை மகன், சொந்த மகன் எல்லாரையும் திட்டுவதே அவரின் பொழுது போக்கு
விவசாயம் அவரி உயிர்
எவ்வளவு பாசம் இருந்தாலும் மனுஷன் வார்த்தையில் சொல்லுறது இல்ல.. வேலை சொல்வதில் மனுஷர் கில்லாடி
இவர்கிட்ட மொக்க வாங்குறதே மற்ற மூவர் கூட்டணிக்கு வேலை
ஆனால் அனுவை எதுவுமே சொல்ல மாட்டார்...
முத்துவுக்கு தான் ஒரு ஜோடி கூட இல்லாமல் பண்ணிட்டீங்க.. பாவம் அவன் பொலம்பிகிட்டே இருக்கான்... நல்ல நண்பன் குரு அண்ட் அமருக்கு.. இவனுக்கு ராதிகா தான் ஜோடியா
அனுஷ்கா விசயத்தை ஊரெல்லாம் சொல்வது
ஈஸ்வரி பாட்டி அண்ட் சௌந்தர்யா செம்ம மருமகள் மாமியார் காம்போ
ரெண்டு பேரும் பேசுறது எல்லாம் சூப்பர்..
சித்ரா அவர் கடைசியிலாவது அவருக்கு புரிஞ்சு ராதா ராகவ் ஒதுக்கி வச்சாரே சந்தோஷம்.. சுபி மேல அனு கொண்ட பாசம்
குரு, அமர், முத்து உறவை தாண்டிய பாசமும், நட்பும் சூப்பர்ப்
நல்ல ஃபேமிலி கதை... நல்லா இருந்தது... எல்லாருமே பாஸிட்டிவ் எண்ணங்கள் கொண்ட மக்கள்... பாசமா பேசுற ஆட்கள் தான் சுத்தி சுத்தி அனுவுக்கு
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே