Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சுட்டி பையன் சின்னு

AmmuStories

New member
Messages
1
Reaction score
0
Points
1
ஒரு நாள், 1 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி சுற்றுலாவிற்கு உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மிருகக் காட்சிசாலையில் பல விலங்குகள் இருந்தன. குரங்குகள், மான், புலி, சிங்கம், நீர்யானை, வாத்து, முதலை, முயல்கள், கரடிகள்,..

எல்லா குழந்தைகளும் அங்கிருந்த விலங்குகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அங்கும் இங்கும் ஓடி விளையாடிய மானை முதலில் பார்க்கச் சென்றனர். அப்போது அங்கே தண்ணீர் குளத்துக்கு அருகே புலி சோம்பேறியாக படுத்திருப்பதை பார்த்தனர். குழந்தைகள் எல்லோரும் புலியைப் பார்த்து அமைதியாக இருந்தனர். அப்போது திடீரென்று எங்கிருந்து சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. திடுக்கென்று பயந்துப் போனார்கள் குழந்தைகள். அனைவரும் தங்கள் ஆசிரியர்களின் அருகே ஓடி வந்தார்கள்.

ஆசிரியர்களும் அவர்களுக்குப் தைரியம் சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தினர். அதன் பிறகு நீர்யானை தண்ணீரில் கிடப்பதையும், வாத்துகள் குவாக் குவாக் என்று கத்துவதையும், முயல்களையும் அவற்றின் துவாரம் தோண்டி வீடு கட்டுவதையும், முதலைகள் சன் பாத் எடுப்பதையும் பார்த்து வியந்தார்கள்.

நடுவில் மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டனர். குறும்புக்கார குழந்தைகள் சிலர், சிலவற்றைச் சாப்பிட்டார்கள், சிலவற்றைக் கொட்டினார்கள். அப்போது சின்னு அமைதியாக எதையோ தன் சட்டைப் பையில் மறைத்துக் கொண்டான். அது வேறொன்றும் இல்லை... "குட் டே பிஸ்கட்கள்..."

சாப்பிட்ட பிறகு அவர்கள் குரங்குகளைப் பார்வையிட்ட சென்றார்கள். அங்கே குரங்குகள் மரங்களில் விளையாடி, அங்கும் இங்கும் குதித்து, மரங்களில் உள்ள பழங்களை பறித்துத் தின்று கொண்டிருந்தன.

சின்னு குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுக்க நினைத்தான். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் குரங்குக் கூண்டுக்குள் காய் நீட்டி பிஸ்கெட்டைப் பிடித்தான். சில குரங்குகள் அமைதியாக பிஸ்கட்களை வாங்கி சாப்பிட்டன, ஆனால் அதில் ஒரு குறும்புகார குரங்கும் இருந்தது. அது தவ்வி தவ்வி சின்னுவிடம் வந்து அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டது.

சின்னு பயந்துபோய் அலறினான். ஆசிரியர்கள் அவனிடம் ஓடி வந்தார்கள். அவர்களை பார்த்ததும் குரங்கு அவனை விட்டுவிட்டு ஓடிவிட்டது. விலங்குகளுக்கு எதையும் கொடுக்க வேண்டாம் என்று ஆசிரியர்கள் முன்பே கூறியிருந்தனர். ஆனால் சின்னு அவற்றைக் கேட்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த தவறை மீண்டும் செய்யவே மாட்டேன் என்று உறுதியெடுத்துக் கொண்டான்.

–முற்றும்–

நீதி: பெற்றோர்கள்.. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொல்வதை குழந்தைகள் கேட்க வேண்டும்.​
 
Last edited:
Top Bottom