Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக் திக் நிமிடங்கள்

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம் : 10
கதிர் அவன் இறந்துட்டான் என்று மாறன் கூற
ஓ காட் ! மாறா ! இவன வச்சு பொழிழன பிடிச்சுடுவோம்னு அவனை காப்பாற்ற இவன் செத்துட்டான் என்று கதிர் சொல்ல மாறன் இடையில் பேசினான்.
கதிர் ! திரும்பவும் ஆரம்பிச்ச இடத்திற்கே வந்துட்டோம் என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க அவர்கள் செல்லில் குறுஞ்செய்தி வந்திருந்தது.
இந்த விலாசத்திற்கு வரவும் . என்னைப் பார்க்கலாம் என்று அதில் சொல்லப்பட்டிருக்க , அதைப் பார்த்த கதிரவன் மாறனிடம்
‘’மாறா !இப்ப அந்த விலாசத்திற்குப் போய் நாம் பார்த்தா என்ன ?”என்று கதிரவன் கூற
கதிர் ! இந்த விலாசம் அவனுடையது தானா !இல்லை நம்மை லாக் பண்ண இப்படி பண்றானா? –மாறா
தெரியல மாறா ! அவனா நமக்கு க்ளு கொடுக்காம நாம அவன ரீச் பண்ண முடியாது.
எல்லாம் பக்காவா பிளான் பண்ணி தான் செய்றான் ஆனா அவன் எதிர்பார்க்காத ஒன்று அவன் நண்பன் நம்மகிட்ட மாட்டிக்கிட்டது தான். அவன் இறந்து போனது வேற அவனுக்கு கோபத்தை இந்நேரம் தூண்டிவிட்டு இருக்கும். கண்டிப்பா நம்மளை பார்க்க வருவான். கோபத்தில் அவன் நம்மகிட்ட மாட்ட சான்ஸ் இருக்கு .
ஆனா நாம இப்ப ரொம்ப கவனமா அடுத்த அடி எடுத்து வைக்கணும் . அவன் நம்மளை தாக்கக் கூட பிளான் பண்ணி இருக்கலாம் . அவனை பிடிக்க இது தான் கரெக்ட் டைம் மாறா என்று கதிர் கூற
மாறனும் அதற்கு சம்மதமாக தலையசைத்தான்.
கதிரும் , மாறனும் அவன் அனுப்பியிருந்த இடம் நோக்கி கிளம்பினர்.
*****************
ரதன் அடுத்த கட்டத்தை அடைந்ததைப் பார்த்த பொழிழன் ஒரு முடிவோடு அந்த ரூமிற்குள் சென்று கதவை அடைத்தான். கதவை அடைத்தவன் அங்கு தமிழ் பித்தனின் புகைப்படம் முன் சென்று நின்றான் .
அய்யா ! நான் தோற்றுப் போயிருவேனா ! இல்லை ! நான் தோற்றுப் போனா இவ்ளோ நாள் நாம பட்ட கஷ்டம் இல்லாம போயிடும் அதனால நான் அவனை ஜெயிக்கவிட மாட்டேன் என்று கூறியவன் ஒரு முடிவோடு தன் நண்பனை அழைத்தான்.
டேய் ! அவன் 3 கட்டத்தை தாண்டிட்டான். இனி அவன் தாண்டக்கூடாது வேகமாக எதாவது செய் ! என்று பொழிழன் கூற
அங்கு என்ன சொல்லப்பட்டதோ !பொழிழன் அதற்கு
தெரியும்டா ! அவன் செத்ததுக்கும் சேர்த்து அவங்கள ஒரு வழி பண்ணாம நான் விட மாட்டேன்டா என்று கோபத்தில் கத்திவிட்டு போனை வைத்த பொழிழன் .மாறன், கதிரவன் வரவிற்காக காத்து இருந்தான்.
*************
கதவு திறந்து ரதன் உள்ளே செல்ல ஒலி பேசியது
உன் அடுத்த கட்டம் இதோ உன் முன் மானிடா என்று அந்த ஒலி சொல்லிவிட்டு மறைய அவன் முன் பல சுவர்கள் தோன்றியது.
பெரியது , சிறியதுமாக சுவர்கள் அவன் முன் இடைவெளிவிட்டு அணிவகுத்து நின்றது. ரதன் நடந்து சென்று ஒரு சுவரின் மேல் நிற்க சுவர் நகரத் தொடங்கியது.
ஒரு சுவரின் முனையில் அவன் நிற்க அது வேகமாக கிழே செல்ல ஆரம்பித்தது. அது கிழே செல்ல அருகில் மற்றோரு சுவர் மேல் நோக்கி வந்து கொண்டிருந்தது. இப்படி சுவர்கள் கீழே செல்வதும் , மேல் நோக்கி வருவதுமாக இருக்க ரதன் ஒவ்வொன்றையும் தாவி குதித்துத் தாண்டியபடியே முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்.
இப்படி தாண்டிக் கொண்டு வந்தவன் ஒரு இடத்தில் மலைத்து நின்றான். அவன் நின்ற இடத்தின் இருபக்கமும் கூர்மையான கத்திகளை தாங்கியபடி ஒரு சுவர் வந்துக் கொண்டிருக்க ரதன் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தபடியே பின்னோக்கிச் செல்ல அவன் சுவரில் மோதவும் சுவர் இட்ந்து கீழ் நோக்கி விழுந்தான் ரதன் . இறுதி நொடியில் மேல் நோக்கி பல படிகள் வந்து கொண்டிருக்க அதை பிடித்து ஏறினான்.
படிகளில் ஏறியபடியே அவன் பார்க்க தூரத்தில் திறந்தது கதவு. அதன் அருகில் செல்ல இடையில் எதுவும் இன்றி இருக்க என்ன செய்வதென்று புரியாமல் ரதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே படிகள் மேல் நோக்கியும், கீழ்நோக்கியும் , வலப்பக்கமும், இடப்பக்கமும் சென்று கொண்டிருக்க அந்த படிகளை ஒவ்வொன்றையும் தாண்டி வந்து கொண்டிருந்த ரதன் ஒரு படியில் கால் வைக்க அது வழுக்கி பிடிமாணம் எதுவும் இன்றி கீழே விழந்தவன் அடுத்த படியை பிடித்து ஏறியபடியே அருகில் இருந்த சுவரில் குதித்தான். அவன் கதவு நோக்கி ஓட அவன் பின்னால் அனைத்தும் கீழே சென்றது. வேகமாக ஓடியவன் கதவினை நெருங்க முற்பட நிமிடம் 1 ஆக இருந்தது. வேகமாக தாவி கதவினில் புகுந்தான் ரதன்.
அந்த கட்டத்தை ரதன் கடந்து வந்ததும் வேக மூச்சுகள் எடுத்து தன்னை சமன் செய்ய அவன் முன் தோன்றினான் கோமாளி மனிதன்.
அவன் முன் தோன்றியது நெருப்பு அதைக் கொண்டு தன் உடம்பை எரித்துக் கொண்டான் கோமாளி மனிதன்.
அதை பார்த்த ரதன் கண்களை மூடிக் கொள்ள அவன் முன் தோன்றியது அடுத்த கட்டத்தை கடக்கப் போகும் கதவு.
*************
மாறனும், கதிரும் அந்த வீட்டின் உள்ளே நுழைய, அவர்கள் நின்று இருந்த இடம் புகையாக மாறியது வேகமாக தன் கர்சிப் கொண்டு தன் முகங்களை அவர்கள் மூட அவர்கள் முன் தோன்றினான் பொழிலன்.
என்ன சார் ! என்னை பார்க்க ஆசைப்பட்டிங்களே ! பார்த்தாச்சா! இனி என்ன தொந்தரவு பண்ணாதீங்க! எனக்கு நிறைய வேலை இருக்கு என்று கூறியபடியே கதவினை மூடிச் சென்றான் பொழிழன்.
பொழிழன் சென்றதும் அந்த இடத்தில்
புகை அதிகமாகி அவர்களின் மூக்கில் ஏற ஆரம்பிக்க
மாறா ! குயிக் ! விஷ வாயு போல இருக்கு
Don’t breathe! எப்படியாவது சீக்கிரம் வெளியே போகனும் – என்று கதிர் கூற மாறன் கதவினை திறக்க முயன்றுக் கொண்டிருக்க வெளியில் இருந்து கதவு திறக்கப்பட்டது.
கதவு திறந்ததும் இருமி தன்னை நிலைபடுத்த முயன்றனர் மாறனும் , கதிரும் . அவர்களை நோக்கி ஓடி வந்தான் ஒருவன்
சார் ! நீங்க சொன்ன மாதிரி அவனை பிடிச்சுட்டோம் சார்!
உங்களுக்காக முதலுதவி ரெடியா இருக்கு சார் என்று அவன் கூற
நாங்க நல்லாத்தான் இருக்கோம் அவன் எங்கே ? என்று மாறன் கேட்க
அங்க சார் ! பின்பக்கமா குதிச்சு தப்பிக்கப் பார்த்தான் சார் ! ஆனா நீங்க சொன்ன மாதிரி ரெடியா இருந்த நாளால அவனை பிடிச்சுட்டோம் சார் ! என்று அவன் கூற
பொழிலனை நோக்கி விரைந்தனர் மாறனும் , கதிரும்..
********
மானிடா ! உன் இறுதி கட்டம் உன் முன் ! என்று ஒலி சொல்லிவ்ட்டு மறைந்தது.
ரதன் கதவை திறந்து உள்ளே செல்ல அந்த இடம் ரொம்ப அமைதியாக இருந்தது . ரதன் சுற்றும் முற்றும் பார்த்தபடி அடி எடுத்து வைக்க சிறு எறும்பு ஒன்று அவன்முன் ஊர்ந்து சென்றது . அதை அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த எறும்பு ஒன்றில் சிக்கிக் கொண்டது. அது ஏன் என்று புரியாமல் ரதன் குழம்பி போய் அருகில் சென்று பார்க்க அங்கு பசை போன்ற அமைப்பு இருந்தது. அதில் சிக்கிக் கொண்ட அந்த எறும்பு சற்று நேரத்தில் செத்துப் போனது . யோசனையோடு ரதன் பார்த்துக் கொண்டிருக்க மேலிருந்து குழாய் போன்று அமைப்பு தோன்றியது. அதில் இருந்து திரவம் வடிந்தது. அது தரையில் விழ அந்த இடமே எரிந்து போனது. இதை பார்த்த ரதன் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒலி பேசியது உன் நிமிடம் ஆரம்பமாகிவிட்டது மானிடா என்று அது கூறி மறைய என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நின்றான் ரதன்.
***************
நிமிடம் வேறு கரைந்து கொண்டிருக்க தன் முன் இருக்கும் தடைகளை எப்படி தாண்டுவது என்று புரியாமல் நின்ற ரதன் ஒரு முடிவோடு தன் அடியை எடுத்து வைக்கத் தயாரானான். மேலே அசிட், கீழே பசை, பாதைகள் வேறு அங்கும் இங்குமாக தெரிந்தது.
துணிந்து ரதன் தன் முதல் அடியை எடுத்து வைக்க, இடப்பக்கத்தில் இருந்து வாள் போன்ற அமைப்பு அவனை நோக்கி வந்தது. அவன் சற்று குனிந்து அதில் இருந்து தப்பித்த ரதன் மேல் திரவம் வழிய ஆரம்பிக்க அதில் இருந்து விலக அவன் ஒரு அடி எடுத்து வைக்க பசை அவன் கால்களை பிடித்துக் கொண்டது.கால்களை அதில் இருந்து விடுவிக்க போராடியவனை நோக்கி வாள் வர சட்டென்று நகர்ந்த ரதன் பசையில் நன்றாக சிக்கிக் கொண்டான். பசை போன்ற அமைப்பு அவனைப் பிடித்துக் கொள்ள சற்று நேரத்தில் அதில் உள்ளே இழுக்கப்பட்டான் ரதன்.உள்ளே இழுக்கப்பட்டவன் முன் தோன்றியது வேறு ஒரு அறை .அவன் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் முன் தோன்றினான் கோமாளி மனிதன்.
மானிடா ! உன் லைஃப் டைம் முடிந்துவிட்டது. உன் நிமிடம் பாதி குறைந்துவிட்டது. இப்போது உன்னில் இருக்கும் 30 நிமிடத்திற்குள் அதோ தெரியுது பார் கதவு அதை நீ அடைய வேண்டும் . உன் நிமிடம் ஆரம்பமாகிவிட்டது கடந்து வா மானிடா என்று கூறிவிட்டு அவன் மறைய ரதன் ஒரு அடி எடுத்து வைக்க அந்த இடமே அதிர ஆரம்பித்தது. சுவரில் கண்ணாடிகள் தோன்ற அனைத்து கண்ணாடிகளிலும் கதவு தோன்றியது. எது கதவு ? எது அதனுடைய பிம்பம் என்று புரியாமல் குழம்பி நின்றான் ரதன்.
திக் திக் தொடரும்

நிமிடம்: 11
பொழிலன் முன் நின்று இருந்தனர் மாறனும், கதிரும்.
அவனை அடிக்க மாறன் விரைய அவனை தடுத்தான் கதிரவன்.
மாறன் கோபமாக திரும்பினான் கதிரிடம் .
விடு ! கதிர் ! இவன அடிச்சா தான் என் ஆத்திரம் குறையும் .- மாறன்
மாறா ! கொஞ்சம் பொறுமையா இரு! என்று கூறிய கதிரவன் பொழிலன் அருகில் சென்றான்.
பொழில் ! நான் உன்கிட்ட அடிச்சு விசாரிக்கனும் .ஆனா உன் எண்ணம் ,ஆதங்கம் சரிதான். ஆனால் நீ செஞ்ச விதம் சரியில்லை. உன்னால் எத்தனை பேர் செத்துப் போயிருக்காங்க அவங்களுக்கு நீ என்ன பதில் சொல்லப் போற – கதிர்
என்ன சார் ! இப்படி அன்பா பேசி என்கிட்ட கேம்மை நிப்பாட்ட வழி தேடுறீங்களா ? அது உங்களால முடியாது என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாறன் அவனை அடிக்கச் சென்றான்
மாறா! ரிலாக்ஸ் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் வேகமாக உள்ளே வந்தான்.
சார் ! ஒருவன் அந்த கேம்மில் 4 கட்டம் தாண்டிட்டான் சார் !கடைசி கட்டத்தில் இருக்கான் சார்
என்று அவன் கூற
அதை கேட்ட மாறனும் , கதிரும்
குட் ! கேசவா ! அவன் அந்த கேம்மை முடிக்கிறத நான் பார்க்கனும் . அதோடு அவன் யார்னு விசாரிங்க .
He should be rewarded டிவி , நியூஸ்ல எல்லாம் அவன் வரணும் என்று கூறிய கதிர் பொழிலனிடம் திரும்பினான்.
வல்லவனுக்கு வல்லவன் இந்த பூமியில் இருப்பான் பொழில். உன் வீழ்ச்சி ஆரம்பம்! – கதிர்
வெல் ! அந்த கேம்மை ஒருவன் முடிக்கப் போறான் அடுத்து நீ என்ன செய்யப் போற பொழில் ! – கதிர்
அந்த கேம் முடியட்டும் அடுத்து உன்னை ? என்று பல்லை கடித்தபடியே பேசிய மாறன் கதிரிடம் திரும்பி வா கதிர் போகலாம் அந்த கேம் முடியட்டும் அப்புறம் இருக்கு இவனுக்கு என்று கூறியபடியே அறையைவிட்டு வெளியேறினர் இருவரும்.
இவர்கள் சென்றதும் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான் பொழிலன். என்னை உங்களால ஒன்னும் பண்ண முடியாது .
அந்த கேம் முடிஞ்சா பொழிலனும் இருக்கமாட்டான் என்று வெறுபிடித்தவன் போல் பேசினான் பொழிழன்.
________________________________________________________________________________
இங்கு ரதனின் முன் கண்ணாடி சுற்றிக் கொண்டிருக்க கண்ணாடியில் ஒளி பட்டு ரதனுக்கு கண்கள் கூசியது. பாதைகள் வேறு அதிர ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்த ரதன் கதவினை தேடினான். கண்கள் கூச அதை பார்க்க முயன்ற ரதன் ஏதோ தோன்ற திரும்பிப் பார்க்க அங்கு உளி போன்ற அமைப்பு இருந்தது . வேகமாக அதை வைத்து ஒரு கண்ணாடியை உடைக்க எதிரில் தெரிந்தது கதவு. வேகமாக அங்கு சென்று அதன் அருகில் செல்ல அங்கு எதுவும் இல்லை. குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே சற்று தள்ளி கதவு தெரிந்தது. அதன் அருகில் செல்ல அங்கு எதுவும் இல்லை . இப்படி ஏமாற்றம் அடைந்த ரதன் இறுதியில் ஒரு கதவு திறக்க அருகில் இருந்த உடைந்த கண்ணாடியில் அதன் பிம்பம் தெரிய அந்த கதவிற்கு நேரெதிரே இருந்த இடம் நோக்கிச் சென்றான்.
அங்கு அவன் கை வைக்க கதவு திறந்தது.
கதவு திறந்ததும் வெளியில் வந்த ரதன் முன் கோமாளி மனிதன் தோன்றினான்.
நீ ஜெயிச்சுட்ட மானிடா ! என்று கூறியபடியே அவன் தன் தலையை பிடிக்க சற்று நேரத்தில் அவன் வெடித்துச் சிதறினான்.
அவன் வெடித்துச் சிதறியதும் ரதன் ஏதோ கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான். அவன் நிமிரிந்து பார்க்க மொத்த குடும்பமும் அவனைச் சுற்றி நின்று இருந்தது.
ரதன் புரியாமல் பார்க்க
அய்யா ! ராசா ! எவ்வளவு பெரிய வேலை செஞ்சு இருக்க உன்னை பத்தி தெரியாமா பேசிட்டேன் ராசா ! – அப்பத்தா
டேய் ! எல்லாரும் காப்பாற்றி இருக்கடா ! ரொம்ப பெருமையா இருக்குடா – ராமனாதன்
அத்தான் ! you rock !ஐ லைக் யூ – மஞ்சு
இப்படி ஒவ்வொருவரும் வாழ்த்துச் சொல்ல அவன் கண்கள் அம்பரியைத் தேடியது.
அவன் தேடிக் கொண்டே வர
மாறனும் , கதிரவன் ரதனைத் தேடி அவன் வீட்டிற்கே வந்தனர்.
நீங்க ! ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க மிஸ்டர் ரதன்.
நீங்க பல பேர் காப்பாற்றியிருக்கீங்க . அதனால் உங்களுக்கு அரசாங்கம் சார்பா ஒரு சின்ன பரிசு என்று காசோலையை அவர்கள் அவனிடம் நீட்ட
ரதன் அதை வாங்க மறுத்தான்.
இல்லை சார் ! இந்த பாராட்டே போதும் . வேறு ஒன்றும் வேண்டாம். இனி உழைச்சு என் காசுல முன்னேறனும்னு நினைக்கிறேன் .
நன்றி சார் ! என்று கூறியவன் வீரபாண்டியனிடம் சென்றான்
மாமா ! அம்பரி எங்கே ? – ரதன்
ஏன் தம்பி ? அவள எதுக்கு கேட்குறீங்க ? – வீரபாண்டி
ஹ்ம்ம் என் பொண்டாட்டிய நான் கேட்காம வேறு யார் கேட்பாங்க ? – ரதன் சொல்லிச் செல்ல
மொத்தக் குடும்பமும் அவன் சொல்லிச் சென்ற விசயத்தில் திகைத்து நின்றது.
மஞ்சு பொறாமையில் நின்றாள்.
அம்பரியை தேடிச் சென்ற ரதன் அவள் ஒரு ரூமில் அழுது கொண்டிருக்க அவள் அருகில் சென்றான்.
அவள் தோள்களை இவன் தொட வேகமாக திரும்பிய அம்பரி
அத்தான் என்று கத்தியபடியே அவனை அணைத்துக் கொண்டாள்.
ஏன் அத்தான் இப்படி செஞ்சிங்க ? உங்களுக்கு எதாவது ஆகியிருந்தா என்ன ஆகிருக்கும் என்று கூறியபடியே அவள் அழுக
அதான் வந்துட்டேன்ல ! அழுகாதடி ?- ரதன்
நீங்க பேசாதீங்க ! என்னை நினைச்சுப் பார்க்காம நீங்க இப்படி உங்க வாழ்க்கையை பணயம் வைக்கலாமா ? – அம்பரி
சரிடி இனி பேசல ? கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கிட்ட வாழ்க்கை என்ற கேம்ம விளையாடிப் பார்க்கலாம்னு நினைக்கிறேன் . நீ என்ன சொல்ற என்று ரதன் கண்சிமிட்டியபடியே கூற
நிஜமாவா சொல்றீங்க அத்தான் – அம்பரி திகைத்தபடியே கூற
ஆமாம்டி ! செயல நிருபிச்சாதான் நம்புவியா என்று கூறி அவன் தன் செயலால் நிரூபிக்க அம்பரியின் முகம் சிவந்தது
சார் ! அவன் தப்பிச்சுட்டான் ! என்று கேசவன் வந்து கூற
இருவரும் வேகமாக பொழிலன் கட்டப்பட்டிருந்த இடம் நோக்கி விரைந்தனர்.
அங்கு அவன் சன்னல் வழியாக தப்பித்து சென்று இருக்க
மாறனும், கதிரும் தன் தலையில் அடித்துக் கொண்டனர்.
அப்போது அவர்கள் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
அதில் ஒரு விடியோ இருந்தது. அதை அவர்கள் திறந்து பார்க்க அதில் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது.
பொழிழன் ஒரு வீட்டின் உள்ளே செல்வதும் சற்று நேரத்தில் அந்த வீடு தீ பிடித்து எரிவதுமாக காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதன் கீழ் ஒரு செய்தி இருந்தது.
பொழிலன் தோற்க மாட்டான். தோற்றால் பொழிலன் உயிரோடு இருக்க மாட்டான் என்று அதில் எழுதி இருந்தது.
அதைப் பார்த்தவர்கள் அந்த இடம் நோக்கி விரைய அங்கு ஒரு உருவம் எரிந்த நிலையில் இருந்தது. அதைப் பார்த்த மாறன் கதிரிடம்
இப்படி தற்கொலை பண்ணிக்கிட்டானே கதிர் – மாறன்
எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு மாறா ! அவன் அவ்வளவு கோழை இல்லை – கதிர்
ஓ! அப்ப இந்த பிணம் – மாறா
தெரியல மாறா ! ஆனா இது கூட அவன் எதாவது பண்ணி இருக்கலாம் . ஆனா ! நமக்கு அவன் உயிரோடு இருக்குறதுக்கு சாட்சி எதுவும் இல்லாம அதனால இப்ப நாம கேஸை மூடி தான் ஆகனும் . என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க
__________________________________________________________________________________
8*8 அமைப்புடைய ரூமில் அமர்ந்து எதையோ நோண்டிக் கொண்டிருந்தான் பொழிலன்.
பொழிழனுக்கு எப்பவும் சாவு கிடையாது ! எங்கோ ஒரு மூலையில் இருந்து அவன் இந்த நாட்டு மக்களையும் , நாட்டின் உடைமையையும் காப்பாற்றிவதும், அதை செய்ய தவறினவங்களுக்கு தண்டனை கொடுத்துகிட்டும் இருப்பான் . என்று தனக்குள் கூறியபடியே ஆங்காரமாக சிரித்தான் பொழிழன்.
திக் திக் நிமிடங்கள் நிறைவு பெற்றது.
 
Top Bottom