Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL தித்திப்பாய் ஓர் சாரல் - Tamil Novel

Status
Not open for further replies.

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
பகுதி - 5



சரோஜாவின் வரவுக்காக குடும்பமே காத்திருக்க, அவர்களின் காத்திருப்பை பொய்யாக்காமல் சிறிது நேரத்திலே கார் ஒன்று வந்து நிற்க, தாத்தா பாட்டியை தவிர மற்ற அனைவரும் வாயிலுக்கு விரைந்தனர்..

"பாருடி நமக்காக எப்படி வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க" என்று பெருமையாக தன் மகளிடம் கூறியவாறு இறங்கிய சரோஜா அவர்களிடம் செல்ல, ருத்ராவோ அவர்களை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி அன்னையை பின் தொடர்ந்தாள்..

"வாங்க வாங்க.. வாமா.." என்று அன்புடன் ராசாத்தி அழைக்க, ஏனோ அவரின் அன்பு வார்த்தை கூட ருத்ராவுக்கு வேப்பங்காயாக கசந்தது.. சாதாரணமாக அனைவரிடமும் சரோஜா பேசியவாறு உள்ளே வந்தாள்..

இவர்களை கண்டதும் பார்வையை அவர்களின் மேல் படர விட்ட பாட்டி, உடலை இறுக்கமாக ஒட்டியபடி ருத்ரா அணிந்திருந்த உடையை கண்டதும், "ஏன்டி இப்டி தான் உடுப்பு போடுவீயா?? பொட்டப்புள்ளனா லட்சணமா தாவணி கட்டறதை வுட்டுப்புட்டு?? மேல ஒரு உடுப்பை போட்டா குறைஞ்சா போய்ருவே??" என்றார் சிடுசிடுப்புடன்..

நந்தினி தான், "பாட்டி இப்பதானே அவங்க வந்துருக்காங்க.. எதுக்கு இப்டி பேசிட்டு??" என்று சமாதானபடுத்த, அவரோ "என்னவோ போ.. இப்ப நாங்க சொல்றதை யாரு கேட்கறே??" என்றவாறு சென்று விட, சங்கடமாக, "அவுக அப்டிதான் நீங்க உக்காருங்க.. நந்தினி குடிக்க கொண்டு வந்து குடுடா.." என்று சிவநேசன் நிலைமையை சகஜபடுத்தினார்..

"இன்னும் அம்மா அப்படியே தான் இருக்காங்களா??" - சரோஜா

"அவுக குணமே இதுதானு தெரியுமே?? எப்படி மாறுவாங்க.." - சிவநேசன்

"ம்ம்ம்ம் ரொம்ப வருசமாகிருச்சுல.." என்றவாறு சரோஜா வீட்டினை அளவெடுத்தவர் "பரவால்லயே செமையா மாத்தி வெச்சுருக்காங்க.." என்று தனக்கு தானே உள்ளுக்குள் கூறி கொண்டார்..

தாத்தாவும் கமலமும் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து அவர்களை பார்த்தவாறு இருந்தனரே தவிர அவர்களிடம் எதுவும் பேச நினைக்கவில்லை..

தியாகுவை கண்டதும், "இது பெரியவனா??" என்று சரோஜா கேட்க, "ம்ம்ம்ம் ஆமா சரோ இவன் தியாகு.. பொறவு இது அவனோட மனைவி நந்தினி.. ரெண்டு பசங்க இருக்காங்க.. நிலவன் நெல்லு மூட்டையை டவுனுக்கு கொண்டு போயிருக்கான்.. சின்னவன் வெற்றி வயலுக்கு போய்ருக்கான்.. அவுக ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க.." என்று விளக்கமளிக்க, அவரும் கேட்டு கொண்டு தலையசைத்து வைத்தார்..

அப்போது தான் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தன் தந்தையை கண்டு, "அப்பா" என்று கண்ணீருடன் அவரிடம் சென்று, "எப்டிபா இருக்கீங்க?? என்னைய அப்படியே மறந்தரலாம்னு நினைச்சு விட்டுட்டீங்களா??" என்று தழுதழுக்க கேட்டவருக்கு, பதிலுரைக்க விரும்பாமல் தாத்தா அமர்ந்திருக்க,

"என்கூட பேச வேணாம்பா ஆனா உங்க பேத்தி.. அவ என்ன தப்பு பண்ணுனா??" என்றவாறு ருத்ராவை அவரிடம் அழைத்து வந்து கேட்க, ருத்ராவை கண்டதும், "எப்டி இருக்க தாயி??" என்று பொதுவாக நலம் விசாரிக்க, அவளும் "ம்ம்ம் நல்லாருக்கேன்" என்றாள் பட்டும் படாமலும்..

"என்னமா பண்றே?? படிச்சு முடிச்சுட்டியா??" - சிவநேசன்

"அவரோட கம்பெனியை இவதான் எடுத்து நடத்திட்டு இருக்கா அண்ணா.." - சரோஜா

"சின்ன வயசுலயே இவ்ளோ பெரிய பொறுப்பை கைல எடுத்துருக்கறதை நினைச்சு எமக்கும் பெருமையா தான் இருக்குமா.." என்று பாசத்துடன் தான் கூறினார் சிவநேசன்.. ஆனால் சரோஜாவுக்கோ இதில் பெருமிதம் தாங்க முடியவில்லை.. தனக்கு கீழ்தான் மற்றவர்கள் இருக்க வேண்டும் என்ற குணத்தை கொண்டவர்.. இதனால் தான் என்னவோ ராசாத்திக்கு இவரை கண்டாலே உவப்பாகி விடும்..

"ஆமா அண்ணே அவரு போனதுக்கு அப்பறம் என்ன பண்ணுவேனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்.. அப்பவே என் பொண்ணு அவளோட பொறுப்பை உணர்ந்து கம்பெனியை கைல எடுத்துட்டு இப்ப வரைக்கும் நல்லபடியா கொண்டு போய்ட்டு இருக்கா.. ஆமா உன் பையனுக என்ன படிச்சுருக்காங்க.." - சரோஜா

"தியாகுவும் நிலவனும் பத்தாவது தான்.. சின்னவன் மட்டும் தான் டிகிரி முடிச்சுருக்கான்.." - சிவநேசன்

"அப்ப நம்ம வீட்டுல என் பொண்ணு மட்டும் தான் பெரிய படிப்பு படிச்சுருக்கா.." என்று பெருமிதமாக சரோஜா கூறிட, தன் கணவனை முறைத்த ராசாத்தி, ஏதோ பேச வாயெடுக்கும் முன்பு இசையும் வெற்றியும் வந்தனர்..

வந்ததுமே "வாங்க அத்தை.. வாங்க அக்கா.. எப்படி இருக்கீங்க??" என்று புன்சிரிப்புடன் அவரிடம் கேட்க, அவள் யாரென்று தெரியாமல் சரோஜா முழித்திருக்க, ருத்ராவோ அவளை மேலும் கீழும் பார்த்தாலொழிய தவிர பதிலேதும் கூறவில்லை..

ராசாத்தியோ பெருமையாக, "என் அண்ணன் மருதுவோட ஒரே பொண்ணு யாழிசை இவதான்.. பெரிய படிப்பெல்லாம் படிச்சுப்புட்டு நம்ம ஊருல இருக்கற ஆஸ்பத்திரில டாக்டரா இருக்கா.. பெரிய மருமவளும் கண்ணாலம் முடிஞ்சு வர்றப்ப வாத்தியாரா பள்ளி கூடத்துக்கு போய்ட்டுதான் இருந்தா.. குழந்தை பொறந்ததுக்கு பொறவு தான் வூட்டுல இருக்கா.." என்றார் சிலுப்பி கொண்டு..

வெற்றியோ "அப்படியே என் மூணாவது மருமவளும் டிகிரி முடிச்சுருக்கானு பெருமையா சொல்லிருமா.." என்று கூறி கொண்டான் மனதினுள்ளே..

இதை சரோஜா உண்மையாகவே எதிர்பார்க்கவில்லை.. இசையை கண்டதும் அவளின் சாடையிலே கமலத்தின் பொண்ணு என்று ஊகித்தவர், பட்டிகாடு போன்று தாவணியில் வந்ததை பார்த்து படிப்பு ஏறாமல் வயலில் வேலை செய்கிறாள் போல என்று நினைத்திருந்தவரின் நினைப்பை பொய்யாக்கியதே ராசாத்தியின் வார்த்தைகள்..

இசையின் பெற்றோர் இருவருமே படிக்காதவர்கள் தான்.. அப்படி இருக்கும்போது அவர்களின் பிள்ளை மருத்துவர் என்பதை இவரால் நம்ப முடியாததற்கு சாட்சியாக அவரின் முகத்தில் குழப்ப ரேகைகள் பரவி கிடந்தது..

"என்னடா இந்த நேரத்துக்கு வந்துருக்கே??" என்று தாத்தா கேட்டிட, "தாத்தா நம்ம மங்கைக்கு திடீருனு பிரசவ வலி வந்துருச்சு அவங்க வீட்டுக்காரரும் வீட்டுல இல்லனு போன் வந்துச்சு.. அதான் நானும் அங்கம்மாவும் அங்கயே போய்ட்டோம்.. எந்த பிரச்சனையும் இல்லாம மங்கைக்கு மகாலட்சுமி பிறந்துருக்கா.." என்ற இசையின் கருமணிகளில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது..

"உமக்கு தெரியாதுல சரோஜா.. இந்த ஊருல ஆருக்கு பிரசவம்னாலும் என்ற மருமவ இசைகிட்ட தான் வருவாக.. இந்த சின்ன வயசுலயே எம்புட்டு பொறுப்பா தாயையும் சேயையும் காப்பாத்தி குடுத்துப்புட்டு இருக்கா தெரியுமா??" என்று ஏளன நகையுடன் கூறிய ராசாத்தியை சிறுமுறைப்புடன் பார்த்த சரோஜா முகத்தை திருப்பி கொண்டார்..

முதலிலேயே தன் அன்னை சூட்கேஸ் பொம்மை போன்று நிற்க வைத்து பெருமை பேசியதில் கடுப்பில் இருந்த ருத்ராவுக்கு, ராசாத்தியின் ஏளன பேச்சில் ஏகத்துக்கும் ரத்த அழுத்தம் உயர்ந்து விட, பல்லை கடித்தவாறு, "இங்க என் ரூம் எதுனு சொன்னா நல்லது" என்று கேட்டாள் பட்டென்று..

நந்தினி அவளை அழைத்து செல்ல, "நான் கிளம்பறேன் தாத்தா.." என்று இசை கிளம்ப, "இப்பதானேடா வந்தே கொஞ்ச நேரம் இருந்துப்புட்டு போறது??" என்று தாத்தா கூறியதும், "அம்மா தான் காலைல இருந்து சகுந்தலா அத்தை வர்றதுக்கு இருக்க சொல்லிக்கிட்டே இருந்தாங்க.. இந்த பக்கம் வந்தேனு அப்படியே வீட்டுக்கு வந்தேன்..." என்றவள் வெற்றியுடன் கிளம்பியும் விட்டாள்..

பேச்டை மாற்றும் விதமாக சரோஜா, "ஆமா நிலவன் எப்ப வருவான்??" என்று கேட்க, "எப்டியும் பொழுது சாஞ்ச பொறவுதான் வருவானு நெனைக்கறேன்.. நீயி போய் சாப்புட்டு படுத்து தூங்கு அசதியா இருக்கும்.." என்று விட்டு சிவநேசனும் தன் வேலைகளை கவனிக்க சென்றார்..

அனைவரும் சென்ற பிறகு, "எப்படி இருக்க கமலம்" என்று போனால் போகுதென்று கேட்பதை போல் சரோஜா கேட்டிட, அவரின் வார்த்தையிலே புரிந்து கொண்ட கமலமும் "எமக்கு என்ன நல்லாதான் இருக்கேன்" என்றார் தோளை குலுக்கியவாறு..

தோட்டத்தில் நின்று கவினையும் அகிராவையும் மாறி மாறி தூக்கி போட்டு விளையாடி கொண்டிருந்த இசை, அப்போது தான் வீட்டிற்கு வந்த நிலவனை கண்டதும், "டேய் உன் சித்தப்பாவை இங்க கூப்பிடுடா.." என்று கவினின் காதில் கிசுகிசுத்தாள்..

"சித்தப்பு உன்னைய சித்தி கூப்பிடுது.." என்று கவினும் கத்த, திரும்பிய நிலவன், "என்னடி??" என்று நேரடியாக இசையிடமே கேட்டான்..

"இங்க வந்தா தான் சொல்லுவோம் சித்தப்பு.." என்றவாறு கவின் பலிப்பு காட்ட, "இதுக ஒன்னு.. இரு வாரேன்.." என்று அங்கிருந்த தென்னமட்டையை தூக்கி ஓரத்தில் போட்டு விட்டு அவர்களிடம் வந்தான்..

சட்டை பட்டனை கலற்றியவாறு நிலவன், "இப்பவாவது என்னனு சொல்லு.." என்றிட, "கவினு நீ பாப்புவை கூட்டிட்டு போய் அந்த பூவை பறிச்சுட்டு வா" என்று அவர்களை அனுப்பி விட்ட இசை, "மாமா நித்தி எங்க இருக்கானு விசாரிச்சீங்களா??" என்று கேட்டவளின் முகத்தில் அத்தனை தவிப்பு..

இவளின் கேள்வியில் ஒரு நொடி திடுக்கிட்ட நிலவன், தன்னை சமன்படுத்தி கொண்டு, "தெரிலடி விசாரிக்க சொல்லிருக்கேன்.. இன்னும் எதுவும் சொல்லல.." என்றான் அவளின் முகத்தை பாராமலே..

இதில் இசையின் முகம் சோர்ந்து விட, "அவ அப்படி எல்லாம் பண்ற ஆளு இல்ல மாமா.. கடைசியா பேசறப்ப கூட அவன்தான் ரொம்ப டார்ச்சல் பண்றானு அவ்ளோ அழுதா.. இப்படி அழுதவ எப்படி அவன் கூடயே போய்ருக்க முடியும்.. இதுல எனக்கு ஏதோ தப்பு படுது மாமா.." என்று மனம் தாங்காது புலம்ப தொடங்கினாள்..

"ப்ச் இசை மொதல்ல நித்தியை கண்டு புடிப்போம் பொறவு என்ன நடந்துச்சுனு அவகிட்டயே கேட்டுக்கலாம்.. இப்டி நீ அழுதீனா நானு தான் ஒன்னைய அடிச்சுப்புட்டேனு இங்கன எல்லாரும் என்கிட்ட வரிஞ்சுகிட்டு சண்டைக்கு வருவாக.." என்ற நிலவனின் கேலியை உண்மையாக்குவது போன்றே, இசை அழுததை தூரத்தில் இருந்து பார்த்த கவின் ஓடி வந்து, "ஏன் சித்தப்பு என் சித்தியை அடிச்சே?? அதான் அழுகறாங்க பாரு.." என்று இவன் உதட்டை பிதுக்க, "சுத்தம்" என்று நிலவன் கையை விரித்தான்..

இதில் பொங்கிய சிரிப்பை கட்டுபடுத்திய இசை, "கவினு சித்தப்பு என்னைய அடிக்கலடா.. காத்துக்கு தூசி கண்ணுல விழுந்துருச்சு அதான்.." என்று அவனின் கன்னத்தை பிடித்து ஆட்டியபடி சிரிக்க, "அப்ப என்னைய தூக்கு தூக்கு" என்று கவின் அடம்பிடித்தான்..

"வாடா நல்லவனே" என்று நிலவனே அவனை தூக்கி போட்டு பிடிக்க, அகிராவும் அவன் காலை கட்டி கொண்டதும் அவளையும் தூக்கி விளையாட்டு காட்டியவனிடம், "சித்தப்பு சித்தியையும் சித்தியையும்" என்று கவின் குதிக்க, இசையோ அதிர்ந்து விழித்தாள்..

"ஒங்க சித்தியை எல்லாம் தூக்க எம்மால முடியாதுடா வேணும்னா நீயே தூக்கி இடுப்புல வெச்சு கொஞ்சுப்புட்டு இரு.." - நிலவன்

"ம்ம்ம்க்கும் கவினு என்னைய யாரும் தூக்கனும்னு அவசியமில்ல.." - இசை

"இப்ப யாரு தூக்கறேனு சொன்னானு கேளுடா கவினு.." - நிலவன்

"சித்தப்பு பொய் சொல்லாத.. சித்தி ஒன்னும் அவ்ளோ குண்டா இல்ல.." என்று கவின் கூறியதை கேட்டதும் வாய்விட்டு சிரித்து இசையை கைகளில் அள்ளி கொண்ட நிலவன் "ஆமாடா உன் சித்திக்கு உடம்பே இல்ல.. உன்ற அப்பத்தாகிட்ட சொல்லி உன் சித்திக்கு சோறுபோட சொல்லு.." என்றவனை பொய்யாக அடித்தவள் இறங்கி நின்றாள்..

இவ்வளவு நேரம் இதை மாடியில் நின்று பார்த்திருந்த ருத்ராவின் மனதில் நிலவனின் பிம்பமும் பேச்சும் ஆழப் பதிந்து விட, இசையின் இடத்தில் தான் இருக்க மாட்டோமா?? என்று சிறுபொறாமையும் அவளுள் எழுந்தது..

முகம் கொள்ளா புன்னகையுடன் தலையை இடவலமாக அசைத்து, ஏதோ நினைத்தவாறு வந்த நிலவனின் எதிரே வந்த ருத்ரா, அவனை நகர விடாமல் கைகளை கட்டியவாறு நின்றாள்..

அவள் யாரென்று தெரியாமல் நிலவனின் புருவ முடிச்சுகள் மேலேறி குழப்பத்துடன் அவளை நோக்க, ஆடவனின் கூர்விழிகளுள் தன் விழிகளை கலக்க விட்டு, எதையும் யோசிக்காமல் "ஐ லவ் யூ" என்ற பேதையவளின் குரலில் நிறைந்திருந்தது என்னவோ திமிர் மட்டுமே...




தித்திக்கும்..



கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..

Thread 'தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments'
https://www.sahaptham.com/community/threads/தித்திப்பாய்-ஓர்-சாரல்-comments.594/
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
பகுதி - 6




பெண்ணவளின் கூர்விழிகளுள் கொக்கிட்டு நின்ற திமிரை கண்டு கொண்ட ஆடவனின் விழிகளில் ஏளன நகை குடியேற மீசையை முறுக்கி விட்டவாறு, "அன்பா பேசுனா அவுகளுக்காக என்ற உயிரை கூட குடுப்பேன்.. இந்த அதிகாரம் பண்ற வேலை எல்லாம் வேற ஆராவதுகிட்ட வெச்சுக்கோ.. இதே திமிரோட வேற எவனாவது நின்னுருந்தா அவன் இன்னேரம் தென்ன மரத்துல தலைகீழா தொங்கிருப்பான்.. போமா அங்குட்டு.." என்றவனின் கேலியை விட தன்னை உதாசீன படுத்தியதே அவளின் தன்மானத்தை சீண்டியது போன்றிருந்தது..

அறைக்கு சென்றும் "இது சரோஜா அத்தை பொண்ணோ?? எப்பா எம்புட்டு திமிரு?? அப்பனுக்கு தப்பாம பொறந்துருக்கு போல.. அது எல்லாம் நமக்கு எதுக்கு??" என்று அந்த நினைப்பை தூக்கி எறிந்தவன் இசையிடம் எப்படி விசயத்தை சொல்வது என்று யோசிக்க தொடங்கினான்..

ருத்ராவோ கோப பெருமூச்சுகளை வெளியிட்டவாறு, "இந்த ருத்ரா நினைச்சதை முடிக்காம விட்டதா சரித்திரமே இல்ல.. உன்னைய பார்த்ததும் ஏனோ என் மனசு தடுமாறுனது உண்மைதான்.. எத்தனை பேரு என் பின்னாடி சுத்திருக்காங்க.. ஆனா நானே வந்து பிடிச்சுருக்குனு சொல்லியும் நீ வேணானு விலகி போனா பாரு அப்பவே முடிவு பண்ணிட்டேன் எனக்கு நீ மட்டும் தான்.. உன் வாயாலயே சொல்ல வெப்பேன் ருத்ரா தான் எனக்கு வேணும்னு.." என்று ஏதேதோ நினைத்தவாறு நடந்திருந்தவளின் மனதிலும் நிலவனை நினைத்து மெல்லிய சாரல் துளிகள்..

நேரங்கள் கடந்ததையும் அறியாமல் கட்டலில் படுத்தவாறு விட்டத்தை நிலவன் வெறித்திருக்க, "மாமா சாப்பிட வராம என்னத்த அப்படி யோசிச்சுட்டு இருக்கே??" என்ற இசையின் குரலில் நிகழ் காலத்திற்கு வந்தவன் பதிலேதும் கூறாமல் அவளுடன் சென்றான்..

இவர்களுக்கு முன்னே அனைவரும் உணவருந்தி கொண்டிருக்க, சரோஜாவை கண்டதும் மரியாதைக்காக மெல்லிய சிரிப்பை உதிர்த்தவன் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று அவர்புறம் திரும்பவே இல்லை..

"பாருடா இவன் கண்ணு எப்பவும் இசை மேல தான் இருக்கும் போல.. பார்த்துக்கறேன்.." என்று மெல்லிய இதழ் வளைவுடன் நிலவனை நோக்கிய ருத்ரா, அவனை ஆராய்ந்தவாறே இருந்தாள்..

அவள் பார்ப்பது தன்னை சிறிதும் பாதிக்கவில்லை என்பதை போன்று சாதாரணமாக அமர்ந்து உணவருந்தி முடித்த நிலவன் எழுந்து சென்றான்..

அனைவரும் உண்டு முடித்து விட்டு உறங்க சென்றிட, "இசை என்ற கூட நாளைக்கு ஒரு பக்கம் வரனும்.. எங்கனு மட்டும் கேட்காத.. நீயே வந்து பாத்துக்கோ.." என்றவன் நின்றிருந்தால் கேள்வி கேட்பாள் என்றுணர்ந்து இசை சுதாரிக்கும் முன்பே அகன்று விட்டான்..

"மாமா எங்கதான் போறோம்.." என்று கிளம்பும் முன் இருந்து கேட்டு கேட்டு இசை ஓய்ந்திருக்க, எப்போதும் போல் மௌனத்தையே பதிலாக குடுத்த நிலவன், அவளின் கையை பிடித்து கொண்டு ஒரு வீட்டினுள் சென்றான்..

என்ன நடக்க போகுதோ?? என்று சேகரும் பதட்டத்துடன் இசையை காண, "நீங்களும் இங்க என்ன பண்றீங்க??" என்று குழப்ப ரேகைகள் முகத்தில் படர கேட்டவளை அங்கிருந்த அறைக்கு இழுத்து சென்றான் நிலவன்..

புரியாமல் அவர்களின் பின்னே சென்றவள் அங்கு அமர்ந்திருந்த பெண்ணை கண்டதும் ஒரு நிமிடம் செல்களெல்லாம் உறைந்தது போன்ற பிரம்மையில் நின்றிருந்தவளின் விழிநீர் ஆறாய் வழிந்தோட, "நித்தி" என்று ஓடி சென்று அவளை இசை அணைத்து கொள்ள, இதில் திடுக்கிட்டு கருமணிகளை பெரிதாக விரித்த நித்யா அவளை ஒரே தள்ளாய் தள்ளி விட்டு பயத்தில் உடலை குறுக்கி கொண்டு அமர்ந்தாள்..

கீழே விழாமல் இசையை தாங்கிய நிலவனிடம், "அவளுக்கு என்ன ஆச்சு மாமா.. ஏன் இப்டி இருக்கா??" என்று அடுக்கடுக்காக கேள்வியை எழுப்ப, பெருமூச்சுடன் "வெளில போய் பேசலாம்" என்றவனை தொடர்ந்து மற்ற இருவரும் சென்றனர்..

வெளியில் சென்றதும் நிலவன் அமைதியாகவே அமர்ந்திருக்க, "என்னனு சொல்லு மாமா எனக்கு தலையே வெடிக்கற மாதிரி இருக்கு.. அவளை எப்ப நீங்க இங்க கூட்டிட்டு வந்தீங்க.." என்று வினாவை எழுப்பி பதிலுக்காக அவனின் முகத்தையே இசை பார்த்திருக்க, "ஒரு மாசம் ஆச்சுடி" என்றான் வெற்று குரலில்..

"ஆமாமா நித்யா எங்க இருக்கானு நீ விசாரிக்க சொன்ன ரெண்டு நாளுலே கண்டு பிடிச்சுட்டோம்.." - சேகர்

"இதைய ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க.." - இசை

"அவ சரியானதும் சொல்லலாம்னு இருந்தோம் ஆனா கடைசில நீதான் அவளை சரி பண்ணனுங்கற நிலைமை வந்துருச்சுமா.." - சேகர்

"அவளுக்கு என்னதான் அண்ணா ஆச்சு.. முழுசா சொல்லி தொலைங்க.. என்ன பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு.." - இசை

"ஊரு ஆளுக நினைக்கற மாதிரி நித்யா விருப்பப்பட்டு அவன் கூட போகல.. அவன்தான் இவளை கடத்திட்டு போயிருக்கான்.. கடத்துனது கூட இவ மேல இருக்கற காதல்னால இல்ல.. அவனை வேணாம்னு சொன்ன ஒரே காரணத்துக்காக நித்யாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டான் அந்த பாவிபய.." - சேகர்

"நித்யா விருப்பப்பட்டு போய்ருக்க மாட்டானு எனக்கு தெரியும் அண்ணா.. அவளுக்கு என்ன ஆச்சுனு தான் கேட்டேன்.." - இசை

"அன்னைக்கு அவன் நித்யாவை கடத்திட்டு போய்.." என்று சேகரினால் வார்த்தை வராமல் தடுமாற, "கடவுளே தப்பா எதுவும் நடந்திருக்க கூடாது.." என்று உள்ளுக்குள் பதறியவாறு கையை இறுக்கி மூடி அமர்ந்திருந்த இசையின் வேண்டுதலை கடவுள் நிராகரித்ததை போல், "அவன் மட்டுமில்லாம அவனோட ப்ரெண்ட்ஸும் சேர்ந்து.." என்று மீண்டும் அதற்கு மேல் கூற முடியாமல் அவனின் குரலில் கரகரத்து அடங்கியது..

தடுமாறியவனின் வார்த்தையிலே என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்த இசைக்கு அதை ஏற்று கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது.. அவளின் மனது உடைந்ததுக்கு சாட்சியாக அவளின் கருமணிகளிலும் நீர் கோர்த்து கன்னத்து மேன்னையை நனைத்து வழிந்தோடியது..

வேகமாக எழுந்து ஓடியவள் சுவற்றோடு ஒட்டி கிடந்த நித்யாவை அணைத்து கொண்டு கதற, இசையின் கண்ணீரை கண்டதும் தன்னிடம் இருந்து அவளை விலக்கி விட்ட நித்யா வலியில் முகத்தை சுழித்தாள்..

"நித்தி நான் உன் இசைடி.. என்னையும் உனக்கு தெரியலயா??" என்று அவளின் தோள் பட்டையை பிடித்து உலுக்கிய இசையின் கையை தட்டி விட்டவள் அவள் பிடித்த இடத்தினை தேய்த்தவாறு "எனக்கு வலிக்குது நீ போ.." என்று உதட்டை பிதுக்கி அழுக தொடங்கினாள்..

அப்போது தான் நித்யாவின் கைகளில் சூடு போட்டதற்கான அடையாளங்கள் தென்பட, "அய்யோ நித்தி" என்று இசை தலையில் அடித்து கொண்டு அழுக, அவளின் அழுகையை தாங்க முடியாமல் "இசை" என்று நிலவன் அழைத்ததும் "மாமா அவளை பாரு.. இசை இசை என்கூடயே சுத்திட்டு இருந்தவ.. இப்போ அவளுக்கு நா யாருனு கூட தெரில" என்றவளுக்கு அழுகையை கட்டுபடுத்துவது தான் பெரிய பாடாக போனது..

திடீரென்று, "ஏன் மாமா என்கிட்ட அப்பவே நீ சொல்லாம விட்டே.. இவ என்ன பண்றா எது பண்றானு நான் தவிச்ச தவிப்பை நீயும் தானே பார்த்துட்டு இருந்தே?? என்கிட்ட முதல்லயே சொல்லிருந்தா அவளை நானே சரிகட்டி மாத்திருப்பேனே.. அவ கைலயே இத்தனை காயம்னா உடம்புல எத்தனை இருக்கும்.. அதுக்காகவாவது என்கிட்ட சொல்லிருக்கலாமே மாமா ஏன் மறைச்சே??" என்று அவனின் சட்டையை பற்றி அழுகையுடனே கேட்டவள் இறுதியில் அவன் மேலயே சரிந்து தேம்ப தொடங்கினாள்..

"நானு சொல்லாம இருந்தது தப்புதான்டி.. ஒன்னால இதைய தாங்க முடியாதுனு தான் அவளை சரி பண்ணிட்டு பொறவு சொல்லிக்கலாம்னு அமைதியா இருந்தேன்.. வெளில இருந்து வேற டாக்டர் வந்து பாத்துக்கிட்டு தான் இருக்காக.."

"அந்த பயத்துல இருந்து அவ வெளில வந்துப்புட்டா சரியாகிரும்னு சொன்னாக.. நாங்க ஏதாவது பேச்சு குடுத்தாலே பயத்துல கைல கெடைக்கறதை தூக்கி எறிஞ்சு கத்த ஆரம்பிக்கறா.. வேற வழியில்லாம தான் ஒன்னைய கூப்பிட வேண்டியதா போய்ருச்சு.." என்று ஆறுதலாக கூறிய தன் மாமனின் பதிலில் இசையின் அழுகையும் மட்டுபட்டது..

கண்ணை துடைத்து கொண்டு, "மாமா நித்தி சரியாகற வரைக்கும் இங்க இருக்கறது யாருக்கும் தெரிய வேணாம்.. அவளை அந்த பயத்துல இருந்து வெளி கொண்டு வந்து இவ கையாலயே அந்த பரதேசிக்கு தண்டனை வாங்கி குடுக்கற வரைக்கும் ஓய மாட்டேன்.." என்று உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிந்த நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்து பொறுமையை கடைபிடித்தாள்..

"அண்ணா நான் சில மருந்து எழுதி தர்றேன் அதை வாங்கிட்டு அப்படியே வர்றப்ப அகிலாவையும் கூட்டிட்டு வாங்க.." - இசை

"இப்பதானே ஆருக்கும் தெரிய வேணாம்னு சொன்னே??" - நிலவன்

"அது வேற இது வேற.. அகிலா வந்தா தான் எனக்கும் கொஞ்சம் தைரியமா இருக்கும்.." - இசை

"ஏ நாங்க ஒன்னைய கடிச்சா சாப்புட போறோம் தகரியத்துக்கு அந்த பூசணியை கூட்டிப்புட்டு வர சொல்றே??" - நிலவன்

"அடேய் நீ ஏன்டா லூசு மாதிரி பேசிப்புட்டு இருக்கே?? நீ எழுதி குடுமா.. நா போய் வாங்கிட்டு வந்தறேன்.." என்று நிலவனை அடக்கியவாறு கூறிய சேகர் இசை எழுதி குடுத்த பேப்பரையும் வாங்கி கொண்டு புறப்பட்டான்..

"ப்ச் இப்ப எதுக்கு அகிலாவை வர கூட்டிட்டு வர சொன்னே?? அவ பயந்துக்க போறா.." - நிலவன்

"என்னால நித்தியை அப்படி பார்க்க முடில மாமா அவ இருந்தா ஏதாவது பேசிட்டே இருப்பானு தான்.." - இசை

"விடுடி நடக்கறது நடந்துதானே ஆகும்.. இனி நடக்க போறதை மட்டும் யோசிப்போம்.." - நிலவன்

"முதல்ல நித்தி சரியாகனும் மாமா அதுக்கு அப்பறம் தான் அவங்க அம்மாவை பத்தி சொல்லி அதுல இருந்து வெளில கொண்டு வரனும்.." - இசை

"இது எல்லாம் சரிதான்டி.. நம்ம ஊருக்காரன் எவனாவது பாத்துப்புட்டா அம்புட்டுதான்.. நித்தியை பத்தி பேசி பேசியே அவுளை உயிரோடு கொன்னுப்புடுவாக.." - நிலவன்

"இவ்ளோ நாள் யாருக்கும் தெரியாம எப்படி இங்க இருந்தாளோ அப்படியே இருக்கட்டும் மாமா.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா??" - இசை

"என்னடி??" - நிலவன்

"நித்திக்கு சேகர் அண்ணா மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கும்.. நான் கேட்டதுக்கு அவன்தான் என்னைய பார்ப்பான் அதுனால நானும் பார்க்கறேனு சாதாரணமா சொல்லுவா.. இந்த பிரச்சனை முடிஞ்சதும் சேகர் அண்ணாவோட அம்மாகிட்ட இதை பத்தி பேசலாம்னு தான் இருந்தேன்.. அதுக்குள்ள என்ன என்னவோ நடந்துருச்சு.." - இசை

"ம்ம்ம்ம் என்கிட்ட கூட சொல்லாம சம்பந்தம் பேசற அளவுக்கு அம்மிணி பெரிய மனுசியாகிட்டிங்களோ??" - நிலவன்

"இது உங்களுக்கு தெரியும்னு எனக்கு நல்லாவே தெரியும் சும்மா நடிக்காத மாமா.." - இசை

இதில் நிலவன் முத்து பற்கள் தெரிய முறுவலித்தவன், "நானும் ஒன்னு ரெண்டு தடவ பாத்துருக்கேன்.. அந்த புள்ள போறப்ப வர்றப்ப அல்லாம் இவனோட கண்ணு அந்த புள்ள மேல தான் இருக்கறதை.. எதுக்கு அது எல்லாம் கேட்டுக்கிட்டுனு வுட்டுப்புட்டேன்.." என்றதும், இசையோ "நடக்கறது நடக்கட்டும் மாமா.. ஆனா எப்பவும் நித்திக்கு நான் துணையா நிற்பேன்.." என்றாள் உறுதியுடன்..

இருவரும் ஒவ்வொரு மனநிலையில் அமர்ந்திருக்க, அதற்குள் சேகர் அகிலாவை அழைத்து வந்திருந்தான்..

"அக்கா எதுக்கு உடனே வர சொன்னீங்க நான் கூட என்னமோ ஏதோனு நினைச்சு பயந்துட்டேன்.." - அகிலா

"யாருக்கும் எதுவும் இல்லடா.. நீ வா.." - இசை

"அப்பறம் எதுக்கு இங்க தனியா இருக்கீங்க" - அகிலா

"சொல்றேன்.. நீ வெற்றிகிட்ட நான் வர சொன்னேனு அவன்கிட்ட சொன்னீயா??" - இசை

திருதிருவென விழித்த அகிலா, "அவன்கிட்ட நான் எதுக்கு க்கா பேச போறேன்.. அவனை நேருல பார்த்தா கூட அவன்கிட்ட நான் பேச மாட்டேனு உங்களுக்கு தெரியுமல்ல.." என்று சமாளிக்க "நம்பிட்டேன் நம்பிட்டேன்" என்றாள் இசையும்..

நித்யாவை கண்டதும், "அக்கா இவங்கதான் ஓடி போய்ட்டாங்கனு அவங்க அம்மா தூக்கு போட்டுகிட்டு இறந்துட்டாங்களே.. இவங்க என்ன இங்க இருக்காங்க.." என்று அதிர்ச்சியில் வாயை பிளக்க, அகிலாவிடம் நடந்ததை கூறியவாறு தூங்கி கொண்டிருந்த நித்தியின் காயத்தில் மெதுவாக மருந்திட தொடங்கினாள்..

வலியில் முகத்தை சுழித்தவளுக்கு மயக்க ஊசியை செலுத்திய இசை உடம்பில் இருந்த அனைத்து காயத்திற்கும் மருந்திட்டு முடித்ததும் பொத்தென்று அமர்ந்து விட்டவளின் கண்ணீர் தரையை தொட்டது..

"அவன் இவளை உண்மையா காதலிச்சுருந்தா இந்தளவுக்கு இவளை சிதைக்க மனம் வந்துருக்குமா?? அவன் காதலிச்சா இவளும் அவனை காதலிக்கனும்னு இல்லயே.. எப்படிதான் அத்தனை வலியை தாங்கிருப்பாளோ??" என்று இசை சொன்னதும் அதை நினைத்து பார்த்த அகிலாவுக்கே சற்று பயமாக தான் இருந்தது..

அதற்குள் நிலவன் ராசாத்திக்கு அழைத்து உணவை கேகரிடம் குடுத்து விட சொல்ல, அவர் கேட்ட கேள்விக்கு ஏதேதோ பொய் சொல்லி சமாளித்தவன் பெருமூச்சுடன் அமர்ந்தான்..

"இவன் என்ன பண்றான் எது பண்றானு ஒன்னுமே தெரிய மாட்டிங்குது.. இவனை ஏதாவது சொல்லிப்புட்டா அம்புட்டு பேரும் எம்மைய தான் வையறாக.. என்னத்த சொல்றது.." என்று புலம்பியவாறு ராசாத்தி சமையல் செய்ய தொடங்க, "அத்தை" என்ற ருத்ராவின் அழைப்பில் திரும்பி என்னவென்று பார்த்தார்..

"என்ன தாயி ஏதாவது வேணுமா??" - ராசாத்தி

"இல்ல அத்தை நிலவன் மாமாவை காலைல இருந்து காணோம் எப்ப வீட்டுக்கு வருவாங்க.." - ருத்ரா

"இவ எதுக்கு எம் மவனை கேட்கறா சரியில்லயே" என்று நினைத்து, "தெரில தாயி அவன் எப்ப வருவானு போவானு ஆருக்கும் தெரியாது" என்றார் அவளை சந்தேகமாக பார்த்தவாறு..

"இசையையும் காணோம் அவ எப்ப வருவா??" - ருத்ரா

"இசை புள்ளயை எங்கையோ கூட்டிப்புட்டு போறேனு சொல்லிப்புட்டு இருந்தான் எங்கைனு தெரில தாயி.." - ராசாத்தி

"அப்ப இசையும் நிலவன் மாமா கூட தான் இருப்பாளா??" - ருத்ரா

"அவன் தானே இசையை கூட்டிப்புட்டு போனான் அவன் கூட இல்லாம வேற ஆரு கூட இருப்பா??" - ராசாத்தி

ராசாத்தியை தேடி வந்த நந்தினி, "அத்தை நிலவனும் இசையும் நைட் தான் வருவாங்கனு உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க.." என்றிட, கோவத்தில் ருத்ராவோ, "ஷட் இப்படிதான் ஊரு சுத்திட்டு இருப்பாளா?? இது எல்லாம் என்னனு கேட்க மாட்டிங்களா?? இனி அந்த இசை நிலவன் கூட போறதை பார்த்தேன் அவ்ளோதான்.. எனக்கு வர்ற கோவத்துக்கு.." என்று கையை குறுக்கி மடக்கியவள் அங்கிருந்த பாத்திரங்களை தள்ளி விட்டு விறுவிறுவென சென்றாள்..

அவளின் கோவத்தில் மாமியாரும் மருமகளும் தான் விக்கித்து நின்றிருக்க, அறைக்கு சென்ற ருத்ராவுக்கோ தன் பொருளை இசை உரிமை கொண்டாடுவதை ஏற்று கொள்ள இயலாமல் "விட மாட்டேன் விடவே மாட்டேன்.." என்று நினைத்தவளின் இதழோ சற்று வளைந்து ஏளன நகையை தத்தெடுத்தது..


தித்திக்கும்..


Thread 'தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments' https://www.sahaptham.com/community/threads/தித்திப்பாய்-ஓர்-சாரல்-comments.594/
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
பகுதி - 7



ருத்ராவின் கோவத்தில் விக்கித்து நின்றிருந்த நந்தினி, "அத்தை இவ எதுக்கு இப்படி கத்திட்டு போறா?? இசை நிலவன் கூட போனா இவளுக்கு என்னவாமா?? இது சரியில்ல சொல்லிட்டேன்.." என்று பல்லை கடிக்க, " இவளால என்னத்த பண்ண முடியும்.. வுடுடா.." என்றார் சாதாரணமாக..

"ருத்ரா பொறுமை பொறுமை.. இப்படி கோவப்பட்டுட்டு இருந்தா வெறுப்பு தான் வருமே தவிர காதல் வராது.. பொறுமையா என்ன பண்றதுனு யோசி.." என்று தன்னை தானே ஆறுதல் படுத்தி கொண்டு அமர்ந்தவளின் அலைப்பேசி அழைக்க, அதன்பின் அதிலே மூழ்கி விட்டாள்..

சாப்பாட்டு பாத்திரங்களை ஒதுக்கி வைத்து கொண்டிருந்த ராசாத்தியை கண்டதும், "ஹாய் அத்தை" என்று சந்தோசமாக அவரிடம் ஓடிவந்த அகிலாவை பார்த்து, "வாடி என் மருமவளே என்ன இந்த பக்கம்" என்று கேட்க, "ம்ம்ம்க்கும் வந்தா வாங்கனு தான் கூப்படனும் அதைய விட்டுட்டு எதுக்குனு வந்தேனு எல்லாம் கேட்க கூடாது.." என்றவள் முகவாயை இடித்தவாறு சாப்பிட அமர்ந்து விட்டாள்..

"எங்கமா மத்தவங்களைய காணோம்.." - நிலவன்

"எல்லாரும் சாப்புட்டு அப்பவே தூங்க போய்ட்டாங்கடா.." - ராசாத்தி

"அத்தை நீங்க முதல்ல சாப்பிட்டிங்களா??" - இசை

"இப்பதான் தாயி சாப்புட்டு எல்லாத்தையும் எடுத்து வெக்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ளார நீங்களே வந்துப்புட்டிங்க.." - ராசாத்தி

ஒருவாறாக மூவரும் பேசியவாறு சாப்பிட்டு விட்டு நகர, நித்தியை கண்டதில் இருந்து இசை சரியில்லை என்றுணர்ந்து இருந்த நிலவன் "இசை" என்றழைக்க, "அக்கா நீங்க மாமாகிட்ட பேசிட்டு வாங்க நான் அறைக்கு போறேன்.." என்று அகிலா இருவருக்கும் தனிமையை பரிசளித்து விட்டு அகன்று விட்டாள்..

"நித்தியை நினைச்சு ஒன் ஒடம்பை வருத்திக்காதடி.. எம்மால அதைய பாக்க முடியாது.. நீ நல்லா இருந்தா தான் நித்தியை வெரசா குணப்படுத்த முடியும்.." - நிலவன்

"இது எனக்கும் புரியுது தான் மாமா.. எங்கையாவது ஒரு பக்கம் அவ சந்தோசமா இருப்பானு நினைச்சு மனசை தேத்திக்கிட்டு இருந்தேன்.. அவளை அப்படி பார்த்ததுல இருந்து என்னால முடில.." - இசை

"ப்ச் லூசு அழுவாதடி அழுதா நடந்தது எல்லாம் இல்லனு ஆகிருமா? அவுளுக்கு எதுவும் இல்லனு மொதல்ல ஒன் மனசுல பதிய வெய்யு.. பொறவு தான் ஒன்னால அவளை சரி பண்ண முடியும்.." என்றவனுக்கு பதிலேதும் கூறாமல் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்..

"எப்பவும் ஒன் கூடவே நான் இருப்பேன்டி என்ன நடந்தாலும்.." என்று அவளை தட்டி குடுக்க, தன் மாமனின் சிபாரிச்சத்தில் அவளின் மனது லேசானது போன்ற ஓர் உணர்வு..

"இனி எதையும் நினைக்க மாட்டேன் மாமா.. கண்டிப்பா நித்தியை சரி பண்ணிரலாம் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.." என்று இசை தெளிவுடன் பேசியதை கேட்ட பின்புதான் நிலவன் அகன்றதே..

அறைக்கு சென்றதும் குளித்து விட்டு தலையை துவட்டியவாறு வெளியில் வந்த நிலவன், லேசாக சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த ருத்ராவை இந்த நேரத்தில் எதிர் பார்க்காமல், "இங்கன என்ன பண்றே??" என்று கேட்டான் கோவத்தில்..

ருத்ராவோ அவனின் கோவத்தில் சற்றும் பயப்படாமல் அங்கிருந்த சேரில் அமர்ந்து, "மொதல்ல நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு.." என்றாள் சாவகாசமாக..

"இப்ப நீயும் இசையும் எங்க போய்ட்டு வர்றீங்க.." - ருத்ரா

"அது ஒன்கிட்ட சொல்லனும்னு எமக்கு அவசியமில்ல.." - நிலவன்

'ஓஓ அப்பறம் சாரு யாருகிட்ட சொல்லுவீங்களாமா??" - ருத்ரா

"இங்கன பாரு இப்டி எம்மைய கேள்வி கேட்கற வேலை எல்லாம் வெச்சுக்கிட்டே பொண்ணுனு பாக்க மாட்டேன் செவுள்லயே ரெண்டு அப்பு அப்பிருவேன்.." - நிலவன்

"நான் அப்படி தான் கேள்வி கேட்பேன்.. என்ன அடிப்பீயா?? சரி அடி.." என்று அவளின் கன்னத்தை காட்ட, "அட ச்சீ மொதல்ல வெளில போ.." என்றான் கடுப்புடன்..

"என்ன நிலவன் நானே அடிக்க சொல்லியும் இப்படி பின் வாங்கறீங்க.. தாராளமா ரெண்டு அடி தானே அடிச்சுக்கங்க.. அது கூட என் மேல இருக்கற உரிமைல தானே சொல்றீங்க.." - ருத்ரா

பல்லை நறநறவென கடித்த நிலவனுக்கு கோவம் கட்டுங்கடங்காமல் எழ, "இங்கன பாரு ஒன்னைய அடிக்க எமக்கு ஒரு நிமிசம் கூட ஆகாது.. ஆனா என் அம்மா பொண்ணுகளை கை நீட்டி அடிக்கற அளவுக்கெல்லாம் எம்மைய வளர்த்தல.. கடைசியா சொல்றேன் என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.. மொதல்ல வெளில போ.." என்றான் பொறுமையை கடைபிடித்தபடி..

ஆனால் ருத்ராவோ அவனின் நெஞ்சில் துடிக்கும் இதயத்தின் மேல் கை வைத்து, "இந்த துடிப்பு எனக்கானதுனு தான் ஒருநாள் நீயே என்கிட்ட சொல்லுவ.. எனக்கு சொந்தமானதை எப்பவும் அடுத்தவங்களுக்கு விட்டு குடுத்து பழக்கமில்ல.. பொருளையே விட்டு குடுக்க யோசிக்கறவ உன்னைய விட்டு குடுப்பேனு நினைக்கறீயா?? நெவர் நெவர்.. உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேனு எல்லாத்து முன்னாடியும் நீயே சொல்லுவே.. கண்டிப்பா நான் சொல்ல வெப்பேன்.." என்றவள் கண்சிமிட்டி விட்டு சென்றாள்..

ஏதோ யோசனை வந்தவளாக மீண்டும் அவனிடம் வந்த ருத்ரா, "இதுக்கு முன்னாடி எப்படி இருந்தீயோ அதைய பத்தி எனக்கு கவலை இல்ல.. இனி நான் இருக்க வேண்டிய இடத்துல அந்த இசையை வெச்சிருந்தே.. பாதிப்பு அவளுக்கு இல்ல உனக்கே உனக்கு மட்டும் தான்.." என்றாள் திமிருடன்..

அவள் சென்றும் திக்பிரம்மையில் உறைந்திருந்த நிலவன் பொத்தென்று அப்படியே அமர்ந்து தலையை பிடித்து கொள்ள, அவனுக்கு என்ன செய்வதே என்று புரியவில்லை..

இனி தன் வாழ்வே திசை திரும்ப போகிறது என்பதை அறியாமல் சுழலும் மின்விசிறியை பார்த்தவாறு படுத்திருந்த இசையின் எண்ணங்கள் முழுவதும் நிறைந்திருந்தது நித்தியே..

நித்யாவிற்கு ஒரு வயதான போது அவளின் தந்தை இறந்து விட, அதன்பின் குடும்ப பொறுப்பு அவளின் அன்னை கற்பகத்தின் தலையில் விழுந்ததால் பாதிநேரம் வீட்டு வேலைக்கு செல்ல துவங்கினார்..

சிறு பெண்ணான நித்தியை தனியாக விடாமல் அவருடனே அழைத்து வரும்போது தான் இசைக்கு நித்தி பழக்கம்.. சிறு வயதிலே பாகுபாடின்றி அனைவரிடம் பழகிய இசையிடம் நித்தியும் வெகு விரைவிலே ஒட்டி கொண்டாள்..

அனைவரிடமும் பழகினாலும் எப்போதும் நித்தியே இசைக்கு நெருங்கிய தோழி.. வெவ்வேறு பள்ளியில் இருவரும் படித்தாலும் அவர்களின் நட்பு நன்றாக வளர்ந்ததே தவிர குறையவில்லை..

நித்தி கல்லூரி படிக்கும் காலத்தில் அவளின் சீனியர் ரஞ்சித் பலமுறை இவளிடம் காதலை கூறியும் இவள்தான் அவனை ஏற்று கொள்ளவில்லை.. அதற்கு முக்கிய காரணம் நித்திக்கு சேகரின் மேல் இருந்த ஒருவித ஈர்ப்பு தான்...

இது இசைக்கும் நன்றாகவே தெரியும்.. ரஞ்சித் தான் விடாமல் அவளை தொந்தரவு செய்வதாக அன்றும் இசையிடம் நித்தி புலம்ப தொடங்க, "லூசே இப்படி புலம்பி ஒன்னுமாக போறது இல்ல.. நீ ம்ம்ம்னு ஒரு வார்த்தை சொல்லு நிலவன் மாமா கிட்ட சொல்லி அவனை தூக்கிரலாம்.." என நக்கலடித்த இசையை முறைத்த நித்தி, "அப்படி ஏதாவது பண்ணி என் தலையை உருள வெச்சராதீங்க தெய்வமே.." என்றாள் போலியான பயத்துடன்..

அன்றும் அதே போல் நித்தியின் பின்னே வந்த ரஞ்சித் காதலை ஏற்று கொள்ள சொல்லி மன்றாட, "அய்யோ நான் ஏற்கெனவே ஒருத்தரை காதலிக்கறேன் போதுமா?? இதுக்கு மேல என் பின்னாடி வந்தா கண்டிப்பா போலீஸ்ல புகார் குடுத்துருவேன்.." என்று கடுப்பாக கத்தியே விட்டாள்..

இவ செஞ்சாலும் செய்வா.. எதுக்கு வம்புனு அன்று சென்றவன் தான் அதன்பிறகு நித்தியின் கண்ணில் ரஞ்சித் அகப்படவே இல்லை.. இவளும் அப்படி ஒருவன் இருந்தான் என்பதையே மறந்து விட்டு படிப்புக்கேற்ற வேலையை தேடி கொண்டு, வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை, என்றாவது ஒருநாள் இசையுடன் வெளியில் சென்று வருவதுமாக நாட்களை நிம்மதியாக கழித்து கொண்டிருந்தாள்..

இவளின் நிம்மதி இன்றோடு கலைய போகின்றது என்பதை அறியாமல் பெண்ணவள் வேலைக்கு கிளம்பி செல்ல, இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவளின் முன் வந்து நின்றான் ரஞ்சித்..

அவனை கண்டதும் திகைப்பை உள்வாங்கி கொள்ளவே நித்திக்கு சிறிது நேரம் பிடிப்பட்டது.. "என்ன நித்தி மேடம் நான் இல்லாம ரொம்ப சந்தோசமா இருந்தீங்க போல.. ஆனா நீ இல்லாம எனக்கு தான் சந்தோசமே இல்ல தெரியுமா??" என்று முகத்தை சுருக்கினான்..

"ப்ச் ரஞ்சித் நான் தான் அன்னைக்கே சொல்லிட்டனே.. நான் வேற ஒருத்தரை காதலிக்கறேனு.." - நித்தி

"அதைய சொல்லிதான் என்னைய நானே மாத்திக்க முயற்சி பண்ணுனேன்.. ஆனா என்னவோ உன் மேல வெச்ச காதலு மட்டும் குறையவே இல்ல.." - ரஞ்சித்

"அதுக்காக நானும் என்னைய மாத்திக்கனுமோ?? உன்னைய மாதிரி தான் எனக்கும்.. என்னால அவரை மறக்க முடியாது.." - நித்தி

"எனக்கு என்னடி குறைச்சல்.. காலேஜ்ல என் பின்னாடி எத்தனை பொண்ணுக சுத்துனாங்கனு நீயும் பார்த்த தானே.. அவங்களைய பிடிக்காம உன்னைய மட்டும் எனக்கு பிடிச்சது என்னோட தப்பா??" - ரஞ்சித்

"அய்யோ ரஞ்சித்.. என் பின்னாடி வர்ற உன்னைய பிடிக்காம அவரை பிடிச்சதும் என் தப்பு இல்லயே.. இதைய புரிஞ்சுக்காம ஏன் இப்படி பண்றே??" - நித்தி

"அப்படி என்னத்தடி அவன் கிட்ட கண்டு மயங்குனே?? என்கிட்ட அழகு இல்லையா?? வசதி இல்லையா?? எல்லாத்துலயும் நான் பெஸ்ட்டா தானே இருக்கான்.. கடைசியா சொல்றேன் உன்னைய விட்டுட்டு என்னால இருக்க முடியாது.. நீ மறுபடியும் மறுத்தேனா கண்டிப்பா நான் செத்துருவேன்.." என்று பொது இடம் என்பதையும் மறந்து கத்தி விட்டு சென்றவனுக்கு தன்னிலையை எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றாள் பெண்ணவள்..

அதன்பிறகு நித்தியின் பின்னே வருவதே ரஞ்சித்திற்கு தலையாய கடமையாகி விட, காதலை ஏற்று கொள்ள கூறி அவளை உயிரோடு சாகடித்தவாறு இருந்தான்.. அந்த மடையனுக்கு காதல் என்றால் எதுவென்று புரியவில்லை போலும்..

போலீஸுக்கு போவேன் என்றும் மிரட்டியதாயிற்று.. நிலவனை அழைத்து வருவேன் என்றும் கூறியதாயிற்று.. அவனிடம் என்ன சொன்னாலும் செத்து விடுவேன் செத்து விடுவேன் என்றே அவளின் நாடியை சரியாக குறி பார்த்து அமைதியாக்கி கொண்டிருந்தான்..

அன்றிரவும் இசையிடம் இதை சொல்லி புலம்ப, "அவன் செத்தா சாவட்டும் விடுடி.. அவனுக்கு எல்லாம் இரக்கம் பார்த்தா நம்ம வாழ முடியாது.." என்றாள் ஏகப்போக கடுப்புடன்..

"இல்லடி அவன் என்மேல வெச்சிருக்கற காதல்னால தான் இப்படி பண்றான்.. என்னால ஒரு உயிரு போறதை ஏத்துக்க முடியாதுடி.." - நித்தி

"அப்ப சேகர் அண்ணாவை மறந்துட்டு அவனை ஏத்துக்கோ.. அப்பதான் அவன் உன்னைய மிரட்டறதையே விடுவான்.." - இசை

"என்னடி இப்படி சொல்றே??" - நித்தி

"அப்பறம் எப்படி சொல்றது?? உன்னோட வீக்னெஸ் எதுனு தெரிஞ்சு அங்க குறி பார்த்து அடிச்சுட்டு இருக்கான்.. அவனுக்கு போய் பாவம் பார்த்துட்டு இருக்கே??" - இசை

"அவன் நடிக்கற மாதிரி எனக்கு தெரில இசை.. அவனை பார்த்தா எனக்கு பாவமா தான் இருக்கு.. என்ன பண்றதுனே தெரில.." - நித்தி

"இங்க பாரு நித்தி.. இரக்கம் காட்ட வேண்டியவங்க கிட்ட மட்டும் தான் இரக்கத்தை காட்டனும் அதை விட்டுட்டு எல்லாத்துக்கும் காட்டிட்டு இருந்தா இந்த நிலைமை தான் வரும்.." - இசை

"எனக்கு இது புரியது.. அவன் என்னால தான் இப்படியானதை ஏத்துக்க முடில.. அதுவும் அம்மாவை விட்டுட்டு வர சொல்றான்.. என்னைய மிரட்டறது கூட பரவால்லடி நேரா வீட்டுக்கே வந்துருவானோனு பயமா இருக்கு.." என்று விட்டு நித்தி தேம்பினாள்..

"ப்ச் லூசு இதைய நிலவன் மாமா கிட்ட சொல்லி என்ன பண்ணலாம்னு பார்க்கறேன்.. லூசு மாதிரி அவன் சாகறேனு சொன்னா நீ பாட்டுக்கு எங்கையாவது போய்ராத.." - இசை

"ம்ம்ம்ம்.." - நித்தி

"என்ன ம்ம்ம்ம் சாகறேனு மிரட்டுனா சரி செத்து தொலைனு விட்டுருடி.. நீ பாட்டுக்கு அவன் கூப்பிடறானு எங்கையும் போய்ராத.. இந்த மாதிரி இருக்கறவங்களைய தான் நம்ப முடியாது.." - இசை

"ம்ம்ம்ம்" - நித்தி

"உன்னைய நம்பறேன் நித்தி.. என்கிட்ட சொல்லாம எங்கையும் போக மாட்டேனு.. என்னோட நம்பிக்கையை மட்டுமில்லாம அம்மாவோட நம்பிக்கையையும் சேர்த்து உடைச்சராத.. எதுனாலும் எனக்கு கூப்பிடுடி.. நான் உடனே வர்றேன்.." என்று சொன்னதையே திருப்பி திருப்பி நூறு முறைக்கு மேல் கூறி விட்டு தான் இசை போனை வைத்ததே..

காலையில் நிலவனிடம் பேசி இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நித்திராதேவியிடம் சரணடைய, காலையில் அவள் விழித்ததும் கேட்ட முதல் செய்தியே நித்தி யாருடனே ஓடி போய் விட்டாள் என்பதே!!

"அடி பாதகத்தி அத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னனேடி அவன் கூப்பிட்டா போகாதேனு நான் சொல்றப்ப எல்லாம் சரி சரினு சொல்லிட்டு இப்படியே பண்ணிட்டியே.." என்று புலம்பிய இசைக்கு இதை யாரிடம் கூறுவதே என்று புரியவில்லை..

பேசாமல் இதை நிலவனிடம் கூறி நித்தியின் தாயிடம் பொறுமையாக புரிய வைத்து விட்டு நித்தியை கண்டு பிடித்து விடலாம் என்று நம்பிக்கையுடன் நிலவனை தேடி சென்று நடந்ததை கூற, "இதைய மொதல்லயே சொல்லிருந்தா அந்த பரதேசிக்கு பாடை கட்டிருப்பேன்டி என்னடி ரெண்டு பேரும் பண்ணி வெச்சிருக்கீக.. "என்று அவன் திட்டியதையும் தலையை குனிந்து வாங்கி கொண்டாள் இசை..

இவளை திட்டி பயனில்லை என்று இருவரும் நித்தியின் வீட்டிற்கு கிளம்ப, அங்கு அவளின் தாய் கற்பகம் அவமானத்தை தாங்க முடியாமல் அரளிவிதையை அரைத்து குடித்து எப்போதே உயிரை விட்டிருந்தார்..

"அய்யோ அம்மா அவசர பட்டுட்டீங்களே!!" என்று இசையால் கண்ணீர் விட தான் முயன்றது.. இதிலிருந்து வெளியில் வரவே இசைக்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட, தன்னிலைக்கு வந்ததும் அவள் கூறிய வார்த்தையே "மாமா நித்தியை எப்படியாவது கண்டுபிடிங்க அவ அப்படி பண்ணிருக்க மாட்டா.." என்பது தான்..

அதன்பின் தான் நிலவன் துரிதமாக செயல்பட்டு நித்தியை கண்டுபிடித்து அங்கு அழைத்து வந்ததே.. "அன்னைக்கு மட்டும் நான் சொல்றதை கேட்டுருந்தா இந்த நிலைமைக்கு வந்துருப்பீயாடி??" என்று இசையின் மனது ஊமையாக அழுதது..

இவளின் கண்ணீருக்கு காரணமான நித்தியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சேகரை பார்த்தவாறு, "அன்னைக்கு மட்டும் இசை சொன்னதை காது குடுத்து கேட்டுருந்தனா இன்னேரம் உங்க கிட்ட காதலை சொல்லி உங்களுக்கு மனைவியா மாறிருப்பேன்.. அது எனக்குதான் குடுத்து வெக்கல போல.." என்று நினைத்த நித்திக்கு அழுகையை விட விரக்தியே மேலோங்கியது..



தித்திக்கும்..


Thread 'தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments' https://www.sahaptham.com/community/threads/தித்திப்பாய்-ஓர்-சாரல்-comments.594/
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
பகுதி - 8




சேகரை வெறித்திருந்த நித்தியின் மனது கல்லாக மாறி போய் இருக்க, "ஏன் ஏன் என்னைய காப்பாத்துனீங்க??" என்று நினைத்தவாறு கண்ணீர் விட்டவளுக்கு அன்று நடந்தது மனக்கண்ணில் தோன்றியது..

இசை பேசி விட்டு போனை வைத்ததும் அந்த நினைவிலே உழன்று கொண்டிருந்த நித்திக்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வர, தன் அன்னையின் உறக்கம் கலைந்து விடாது என்றெண்ணி மெதுவாக வெளியில் வந்து போனை எடுத்தாள்..

இவள் பேசும் முன்னே, "ஹலோ நீங்க நித்யா தானே.. நான் ரஞ்சித்தோட ப்ரெண்டு மகேஷ் பேசறேன்.. அவன் வீட்டுல உங்களைய அவன் காதலிக்கற விசயம் தெரிஞ்சு ரொம்ப பிரிச்சனை ஆகிருச்சு.. நீங்களும் அவனோட காதலை புரிஞ்சுக்கல வீட்டுலயும் யாரும் புரிஞ்சுக்கலனு விசத்தை குடிச்சுட்டான்.."

"அய்யோ இப்ப எப்படி இருக்காங்க.." - நித்தி

"ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துருக்கோம் ஆனா அவன் நீங்க வராம டிரீட்மெண்ட் எடுக்க மாட்டேனு அடம் பண்றான்.. நீங்க கொஞ்சம் வர முடியுமா??" - மகேஷ்

"இந்த நேரத்துலயா?? நீங்க போனை ரஞ்சித் கிட்ட குடுங்க நான் பேசறேன்.." - நித்தி

"இல்லங்க நீங்க நேருல வந்தா தான் அவனை சமாளிக்க முடியும்.. ப்ளீஸ் வாங்களேன்.. ஒரு உயிர் உங்க கைல தான் இருக்கு.." - மகேஷ்

"நீங்க அவங்க கிட்ட போனை குடுங்க முதல்ல.. நான் சொன்னா அவங்க கேட்பாங்க.. காலைல கண்டிப்பா அங்க வர்றேன்.." - நித்தி

"அய்யோ புரிஞ்சுக்கங்க நித்யா.. அவனுக்கு ஏடாகூடாம ஏதாவது ஆகிட்டா என்ன பண்றது?? ப்ளீஸ் வாங்களேன்.. அவன் இன்னும் உங்க பேரை தான் சொல்லி புலம்பிட்டு இருக்கான்.." - மகேஷ்

"இல்லங்க இந்த நேரத்துல எப்படி வர்றது?? என் அம்மா விட மாட்டாங்க.." - நித்தி

"அப்ப உங்கனால ஒரு உயிர் போனா பரவால்ல தானே.. உங்களைய காதலிச்சதை தவிர அவன் என்ன தப்பு பண்ணுனான்.. அவன் செத்தா அதுக்கு காரணம் நீங்கதான் நீங்க மட்டும் தான்.. அந்த குற்றவுணர்ச்சி உங்களைய சும்மா விடாது.." என்று படபடவென பொரிந்த மகேஷின் பேச்சில் நித்தியின் கண்கள் கலங்கி விட, "வர்றேன்.." என்றாள் உணர்ச்சியற்ற குரலில்..

"நீங்க ஊரு எல்லையை தாண்டி வாங்க.. அங்க நிற்கறேன்.." என்றவனை மறுத்து பேச மனது முயன்ற போதும் முடியாமல் போய் விட, "ம்ம்ம்" என்றவள் போனை அணைத்து விட்டாள்..

தன் அன்னையை மீறி செல்வதற்கு அவளின் மனதும் மறுக்க, "அவங்க பாவம் என்னால தான் இப்படி ஆகிருக்காங்க.. அவங்களுக்கு ஏதாவது ஆன அந்த பாவம் என்னைய சும்மா விடாது.. போய் பார்த்துட்டு கிளம்பிரலாம்.." என்று தனக்கு தானே சமாதானம் கூறியவாறு அகன்றவளுக்கு இசையின் நினைவு வராமல் போனது தான் விதியின் செயலோ??

சுற்றி சுற்றி பார்த்தவாறு சிறுபயத்துடன் ஊரின் எல்லையை கடந்து விட, நித்தியிடம் கூறியவாறே அங்கு மகேஷ் இவளுக்காக காத்திருந்தான்..

இவளை கண்டதும், "நீங்க வர மாட்டிங்களோனு நினைச்சேன்.. பட் உண்மையாவே வந்துட்டீங்க.." என்று ஒரு வித மோன பார்வையை அவள் மீது அவன் செலுத்த, பயத்தில் பெண்ணவளின் மேனி நடுநடுங்க தொடங்கி விட்டது..

"சீக்கிரம் ஏறுங்க.. இன்னும் அரைமணி நேரத்துல அவனுக்கு சிகிச்சை ஆரம்பிக்கலனா அவனை காப்பாத்த முடியாதுனு டாக்டர் சொன்னாங்க.." என்றதும் இதுவரை இருந்த தயக்கம் மறைந்து அவனுக்கு எதுவுமாக கூடாது என்ற எண்ணமே மேலோங்க, வேகமாக வண்டியில் ஏறி அமர்ந்தாள்..

அவனோ இதழுக்கடியில் நக்கல் பதிந்த சிரிப்பை படர விட்டவாறு வண்டியை எடுத்தவன் மருத்துவமனைக்கு செல்லாமல் ஒரு வீட்டின் முன்னே நிறுத்த, அவனை சந்தேகமாக பார்த்த நித்தி, "ஹாஸ்பிட்டலுக்கு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்தீங்க" என்று கேட்க, "அவன் இங்கதான் இருக்கான்.." என்றவன் அவள் பேசும் முன்னே அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு வீட்டினுள் சென்றான்..

இதில் நித்திக்கு ஏதோ தவறாக பட, "விடுங்க நான் போகனும்" என்று அவள் துள்ளியதையும் பொருட்படுத்தாமல் வீட்டினுள் தள்ளி, கதவை சாத்தியவன், "மச்சான் நீ சொன்ன மாதிரியே இந்த காலத்துல இவ்ளோ அப்பாவியா இருக்காங்கடா.." என்று ரஞ்சித்திடம் கூற, திரும்பி பார்த்த நித்தியோ அதிர்ச்சியில் உறைந்தே போனாள்..

பாட்டிலுடன் அமர்ந்திருந்தவனை கண்டு வெலவெத்து போன நித்திக்கு அப்போது தான் இசை படித்து படித்து கூறியது நியாபகத்திற்கு வர, தன் மடதனத்தை எண்ணி நொந்தவள், பின்பு தைரியத்துடன் "எதுக்கு இப்படி என்னைய டார்சல் பண்றே??" என்றாள் கண்ணீருடன்..

"பாருடா மேடத்துக்கு தைரியம் வந்துருச்சு.." - ரஞ்சித்

"ப்ளீஸ் ரஞ்சித் என்னைய விட்டுரு.. நான் உனக்கு என்னதான் பாவம் பண்ணி தொலைஞ்சேன்.." - நித்தி

"விடறதுக்கா இத்தனை பொய்யை சொல்லி உன்னைய கூட்டிட்டு வந்தோம்.." - ரஞ்சித்

"இப்படி பண்றதுக்கு உனக்கே வெக்கமா இல்லையா?? இதுதான் உன் காதலோட லட்சணமா??" - நித்தி

"ஹஹஹ உன்னைய காதலிச்சேன் தான் இல்லனு சொல்லல.. அந்த காதலு எப்பவோ செத்து போய்ருச்சு.." - ரஞ்சித்

"அதுக்கு நான் என்ன பண்றது?? அதுதான் நானு வேற ஒருத்தரை காதலிக்கறேனு சொல்லிட்டனே.." - நித்தி

இதை கேட்டதும் ஆவேசமாக எழுந்து வந்து நித்தியின் தலை முடியை கொத்தாக பற்றியவன், "இது இது இதுதான்டி என்னைய மிருகமா மாத்துச்சு.. அப்படி என்னடி அவன்கிட்ட இருக்குனு மயங்குனே.. உன் பின்னாடி விடாம சுத்துனேன் உன்மேல உயிரையே வெச்சிருந்தேன்.. என்னைய ஒவ்வொரு தடவையும் நீ வேணாம்னு சொல்றப்ப இங்க வலிக்கும்டி.."

"இது கூட பரவால்ல காலேஜ்ல இருந்தவனுக கூட சேர்த்து என் பின்னாடி சுத்துன பொண்ணுக கூட உன்னால ஒரு லோகிளாஸ் பொண்ணை கூட கரெக்ட் பண்ண முடிலனு கேலி பேசுனதை கேட்டு எத்தனை அவமானமா போய்ருச்சு தெரியுமே.. அதுக்கே உன்னைய அடைஞ்சே தீரனும்னு விடாம துரத்துனேன்.. ஆனா என்னவோ நீதான் உலக மகாராணி போல மறுபடியும் மறுபடியும் என் கோவத்தை ஏத்தி விட்டுட்டு இருந்தே.."

"கொஞ்ச நாள் அமைதியா இருந்ததை நினைச்சு நான் திருந்திட்டேனு நினைச்சீயா?? நோ நெவர் அதுக்கு வாய்ப்பே இல்ல.. அன்னைக்கு நான் பட்ட அவமானத்தை விட இனி தினமும் நீ செத்து செத்து தான் பிழைக்கனும்.. உன்னைய கரெக்ட் பண்ண முடிலனு என்னைய கேலி பேசுனவங்களுக்கே உன்னைய விருந்தாக்க போறேன்.. அப்பதான் என்னோட வெறியே அடங்கும்.." என்று மிருகமாக மாறி கத்தியதை கேட்டதும் அதிர்ச்சியில் சிலையாக மாறி தான் போனாள்..

தன்னை சமாளித்து கொண்டு, "வேணாம் ரஞ்சித்.. நீ பண்றது தப்பு.. அவங்க பேசுனதுக்கு நான் என்ன பண்ண முடியும்.." என்று கெஞ்ச, "அவங்க அப்படி பேசுனதுக்கே காரணமே நீதான்டி.." என்றான் ஆத்திரத்துடன்..

"நான் போகனும் விடு.." என்று அவனை தள்ளி கொண்டு எழுந்தவளை மகேஷ் பிடிக்க, அவனை தள்ளி விட்டு வெளியில் ஓடி முயன்றவளை இழுத்தவன் சப்பென்று அறைந்ததில் கீழே விழுந்தாள்..

"என்ன பேபி நீ எவ்ளோ டிரை பண்ணுனாலும் வெளில போக முடியாது.. உனக்கு அவ்ளோ பலமும் இல்ல.." என்று நக்கலாக சிரித்தவனை கொன்று விடும் வெறியில் முறைத்த நித்தி, "நான் போகனும்" என்றாள் அழுத்தமாக..

"மச்சான் பாருடா இவளுக்கு எவ்ளோ பலம் வந்துருச்சுனு.. பயமா இருக்குல்ல.." என்று போலியாக பயப்படுவதை போல் ரஞ்சித் பயப்பட, "ஆமாடா நாளைக்கு நம்ம பசங்க வந்தா அடங்கிருவா.." என்று கூறினான் மகேஷும்..

அமைதியாக அமர்ந்திருந்தவள் திடீரென்று எழுந்து இருவரையும் தள்ளி விட்டு கதவை திறக்க முயல, கோவத்தில் வேகமாக அவளிடம் வந்த ரஞ்சித் அவளின் முடியை பிடித்து இழுத்து, "என்னடி எனக்கே தண்ணீ காட்டலாம்னு நினைக்கறீயா??" என்று கத்தியவன் அவளை அலோக்காக தூக்கி கொண்டு அறைக்கு சென்றான்..

"ப்ளீஸ் ரஞ்சித்.. என்னைய விட்டுரு.." என்று கை எடுத்து கும்பிட்டவளின் அழுகையை பொருட்டாக மதிக்காமல் "இப்படிதானேடி நானும் எத்தனை தடவை கெஞ்சிருப்பேன்.." என்றவன் அவள் மீது பாய்ந்தான்..

தன்னவனிடம் மட்டுமே குடுக்க வேண்டிய மேனியை அடுத்தவன் சூரையாடுவதை பொறுக்காமல் அவனிடம் இருந்து மீண்டும் மீண்டும் தப்பிக்க முயல, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரஞ்சித்தோ அவளின் கன்னத்தில் மாறி மாறி அடித்ததில் மயங்கி சரிந்தாள்..

அதன்பின் நடந்ததை சொல்லவா வேண்டும்.. இருவரும் சேர்ந்து அவரை நாராய் கிழித்திருக்க, மயக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல கண் விழித்தவளுக்கு உடம்பை அசைக்க கூட முடியவில்லை..

அவளை நினைத்து அவளுக்கே கழிவிரக்கம் தோன்ற, "இசை நீ சொன்னதை கேட்காம விட்டுட்டேன்டி.. நான் ஒரு முட்டாள்டி.. இப்ப இப்ப..." என்று வாய்விட்டு கதற கூட தெம்பில்லாமல் மனதினுள் தான் கதற முடிந்தது நித்தியால்..

யாரோ வரும் அரவம் கேட்டதும் கண் மூடி கொள்ள, "இன்னும் மயக்கத்துல தான் இருக்கா போல.. இப்படியே கிடக்கட்டும்.. நாளைக்கு பசங்க வந்ததும் அவங்க கிட்ட விட்டுட்டு நம்ம கிளம்பிரலாம்.." என்று ரஞ்சித்தின் குரல் தான் கேட்டது..

அவனின் வார்த்தையை கேட்டதும் நித்திக்கு அத்தனை ஆத்திரம் பொத்து கொண்டு வர, இப்போதே எழுந்து அவனை கொன்று விட மாட்டோமா?? என்ற வெறியில் எந்திரிக்க முயன்றவளுக்கு அவளின் மேனி ஒத்துழைக்க மறுத்தது..

"வீட்டை பூட்டிட்டு கிளம்புவோம்டா.. இங்க இருந்து என்ன பண்றது.. அதான் நம்ம வேலை முடிஞ்சுருச்சே.." என்ற மகேஷ் கூறியதும், ரஞ்சித்தும், "நானும் இதைய சொல்லலாம்னு தான் இருந்தேன்.. அம்மா வேற போன் பண்ணிட்டே இருந்தாங்க.." என்றவன் நித்தியின் கன்னத்தை தட்டி பார்க்க, அவளோ கண் முழிக்க விரும்பாமல் அப்படியே இருந்தாள்..

"இன்னும் மயக்கத்துல தான் இருக்கா.. பாவம் எந்திரிச்சா இவ என்ன கத்து கத்துனாலும் ஒன்னு பண்ண முடியாது.. இதுக்கே இப்படினா நாளைக்கு இவளை வீடியோ எடுத்து நெட்ல போடலாம்னு இருக்கேன்.. என்னைய வேணாம்னு சொன்னதுக்கு இன்னும் அனுபவிக்கனும்.. இதை எல்லாம் அவ காதலிக்கற உத்தமன் அவளை கேவலமா பார்க்கனும்.. இனி அவ வாழ்க்கைல ஒரு நிமிசம் கூட நிம்மதியா இருக்க கூடாது.." என்று கொடுரமாக ரஞ்சித் சொல்ல, இவனெல்லாம் உண்மையாவே மனுச பிறவி தானே?? என்ற எண்ணமே நித்திக்கு எழுந்தது..

ஆண்களின் காதலை போல் தானே பெண்களுக்கும்.. அவர்கள் காதலை கூறியதும் பெண்களும் ஏற்று கொள்ள வேண்டுமா என்ன?? ஏன் அவர்களுக்கும் விருப்பு வெறுப்பு இருக்க கூடாதா?? முதல்ல ஆசிட்டை தான் வீசிட்டு இருந்தாங்க.. இப்ப என்னடானா இந்த நிலைமைக்கு வந்துட்டாங்க.. உண்மையா காதலிச்சு இருந்தா இப்படி பண்ண மனசு வந்துருக்குமா?? பெண்ணா பிறந்தது தான் எங்களின் தவறோ?

அவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு கிளம்பும் வரை அமைதியாக இருந்தவள், இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விடனும் என்ற நினைவில் மெதுவாக எழுந்தமர்ந்தாள்..

இவளின் நல்ல காலம் அருகில் தண்ணீர் இருக்க, அதை எடுத்து முழுவதும் அருந்திய பின்பு தான் சிறிது தெம்பே வந்தது.. அறைகுறை ஆடையுடன் இருந்த தன் உடலை காண அவளுக்கே அருவெருப்பாக இருக்க, கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தோடியது..

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடனே எழுந்தவள், சன்னல் ஒவ்வொன்றையும் திறக்க முயன்றவளுக்கு பலன் என்னவோ பூஜ்யம் தான்..

திடீரென்று பின்பக்கம் கதவு இருக்குமோ என்று வேகமாக எழுந்து ஓடியவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.. இவளின் நல்ல நேரம் கதவை பூட்டாமல் மறந்து சென்றிருக்க, வேகமாக அங்கிருந்து ஓடினாள்..

விடிய தொடங்கியிருந்த நேரத்தில் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி வந்த நித்தியின் மேல் வேகமாக வந்த கார் ஒன்று இடித்து விட்டு நிற்காமல் சென்று விட, இதில் தூக்கி வீசப்பட்ட நித்தியை இரவு நேர வேலை முடிந்து வீட்டிற்கு சென்றிருந்த ஆண் ஒருவர் தான் மருத்துவமனையில் அனுமதித்து அவளின் உயிரை காப்பாற்றியதே..

பின்பு அவள் கண் விழிக்கும் போது இவர்களிடம் இருப்பதை கண்டு எப்படி இங்கு வந்தாள் என்றே புரியாமல் இன்றுவரை கேட்கும் தைரியமின்றி அனைத்தையும் மறந்ததை போல் நடித்து கொண்டிருக்கிறாள்..

ஒவ்வொரு நேரம் உயிரை மாய்த்து கொள்ளலாமா?? என்ற எண்ணமும் தோன்றிய நேரத்தில் தான் அவளின் அன்னையின் நினைவு வந்ததும், தானும் சென்று விட்டால் தன் அன்னைக்கு யாரும் துணையில்லை என்று நினைத்து அமைதியாக இருக்கும் பேதையவளுக்கு தெரியவில்லை அவள் அன்னை எப்போதே இந்த உலகத்தை விட்டு சென்று விட்டாரென்று!!

இதை அறிந்தால் இவளின் நிலைமை????



தித்திக்கும்..



Thread 'தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments' https://www.sahaptham.com/community/threads/தித்திப்பாய்-ஓர்-சாரல்-comments.594/
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
பகுதி - 9



சட்டையை அணிந்தவாறு அறையை விட்டு வெளியே வந்த வெற்றி, இசை அறையில் இருந்து வந்த அகிலாவை கண்டு இது பிரம்மையோ என்று கண்ணை கசக்கி மீண்டும் உற்று நோக்க, சின்ன சிரிப்புடன் அவனை இடித்து விட்டு அகிலா மாடியேறிட, "ஐ நம்ம ஆளு வந்துருக்கா.." என்ற குஷியில் மிதந்தவன் யாராவது வருகிறார்களா என்று பார்த்து விட்டு பூனை போல் மெதுவாக மாடியேறினான்..

இவன் வருவான் என்று அகிலாவும் அறிந்ததே.. மெதுவாக பின்னால் வந்த வெற்றியை கண்டு கொண்ட அகிலா சட்டென்று திரும்பி புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவ, அவளை இழுத்து சுவற்றோடு சாய்த்தவன், "மாமனை பார்க்க முடிலனு நீயே இங்க வந்துட்டியாடி செல்லம்.." என்று கேட்க, "அந்த ஆசை வேற இருக்கா.." என்று அவனை தள்ளி விட்டு துணியை காய போட தொடங்கினாள்..

"ஏன் இருக்க கூடாதா??" - வெற்றி

"உனக்கு இருந்தா அதுக்கு நான் என்ன பண்றது??" - அகிலா

"என்னடி பொசுக்குனு இப்படி சொல்லிட்டே??" - வெற்றி

"என்னைய பேச வெக்காத.. நான் நைட்டே வந்துட்டேன்.. என்னைய விட உனக்கு தூக்கம் தான் முக்கியம்னு தூங்கிட்டு இருந்தவன் தானே நீயி??" - அகிலா

"நீ வருவேனு நானு என்ன கனவா கண்டேன்.. நீ வர்றது தெரிஞ்சுருந்தா புடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி முன்னாலயே இருந்துருப்பேன்.." - வெற்றி

"உன்னைய தான் எதிர்பார்த்து தான் இங்க வந்தேன் ஆனா நீ என்னைய பார்க்கல தானே?? போ போ என் கூட பேசாத.." - அகிலா

"அச்சோ செல்லம்.. இங்க ஒரு பேய் வந்துருக்குடி.. அதுனால வெளிலயே வர முடில.. அது வராததுக்கு முன்னாடி எல்லாம் நடுசாமத்துல தானா நானு தூங்க போவேன்.." - வெற்றி

"பேயா?? அது யாரு?? பொய் சொல்லி ஏமாத்த பார்க்கறீயா??" - அகிலா

"ச்சீ ச்சீ சத்தியமா சொல்றேன்டி அது பேய் தான்.." - வெற்றி

"நீ யாரை சொல்லிட்டு இருக்கே??" - அகிலா

"அடியேய் சகுந்தலா அத்தை வந்துருக்கறது தெரியுமா?? தெரியாதா??" - வெற்றி

"அது தெரியும்.. அடப்பாவி அவங்களைய பேய்னு சொல்லிட்டு இருக்கே??" - அகிலா

"இல்ல இல்ல அவங்க பொண்ணுனு ஒன்னு வந்துருக்கே அதைய சொல்றேன்.." - வெற்றி

"என்னடா உன் அத்தை புள்ளைய இப்படி சொல்லிட்டே??" - அகிலா

"அது அப்படிதான் பண்ணுது.." என்றவன் ராசாத்தியிடம் ருத்ரா பேசியதை அப்படியே கூற, "ஆத்தாடி நிலவன் மாமா கூட இசை அக்கா போன இவளுக்கு என்னவாமா??" என்றாள் வாயை பிளந்தபடி..

"அதான் எங்களுக்கும் தெரில.. இதைய நந்தினி அண்ணி தான் எனக்கே சொன்னாங்க.. வீட்டுல தெரிஞ்சா பிரச்சனை வந்துரும்னு யாருகிட்டயும் சொல்லல.. அந்த கடுப்புல தான் நேத்து நேரமே அறைக்கு போய்ட்டேன்.." என்றவன் நெற்றியை தேய்த்து கொள்ள, "சரி சரி போனா போகுதுனு மன்னிச்சு விட்டறேன்.." என்று கூறினாள் அகிலா..

"அடிங்ககக" என்று வெற்றி அவளை பிடிக்க வர, "அய்யோ நிலவன் மாமா.." என்று பதறியவாறு அகிலா கத்த, "அய்யய்யோ" என்று துள்ளி குதித்த வெற்றி தண்ணீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து கொண்டான்..

இதில் வாய் விட்டு சிரித்த அகிலா "என்னைய அடிக்க வந்தா இப்படி தான் பண்ணுவேன்.." என்று நாக்கை துருத்தி அவனுக்கு பலிப்பு காட்டியவள் துள்ளலுடன் ஓடி விட, "கொஞ்ச நேரத்துல பயப்படுத்தி விட்டுட்டாளே!!" என்று எகிறி துடித்திருந்த துடிப்பை சீராக்கி கொண்டு எதுவும் நடவாதது போல் கீழே வந்தான்.

தன் அன்னையுடன் இருந்த அகிலாவை அப்போது தான் பார்ப்பவன் போன்று "அம்மா இந்த வெள்ளை பூசணி எப்ப வந்துச்சு" என்று வினவ, அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்த நந்தினி "கொழுந்தனாரே உண்மையாவே தெரியாம தான் கேட்கறீங்களா??" என்று கேட்டாள் கேள்வி குறியோடு..

"என் அம்மா நம்புனாலும் இந்த அண்ணி நம்பாது போல.."என்று மனதினுள் நொந்தவன், "எனக்கு எதுவும் தெரியவே வேணாம் அண்ணி.." என்றான் பெரிய கும்பிடு போட்டு..

இசை எழுந்ததுமே சேகரிடம் போன் செய்து நித்தியை பற்றி விசாரித்து விட்டே குளிக்க செல்ல, சிறிது நேரத்தில் கிளம்பி வெளியில் வந்தாள்.. இசையை கண்டதும் அவளை அழைத்த ருத்ரா அழுத்த நடையுடன் அவளிடம் வந்தவள், "இனி நீ நிலவன் கூட எங்கையும் போக கூடாது.." என்றாள் நேரடியாகவே..

"ஏன் போக கூடாது.. நான் எப்பவும் நிலவன் மாமா கூட தான் போவேன்.." - இசை

"ஏன் உனக்கு காலு இல்லையா?? எப்ப பார்த்தாலும் நிலவன் கூட தான் சுத்திட்டு இருப்பீயா??" - ருத்ரா

"அது என் இஷ்டம்.. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை" - இசை

"வேணாம் என் கோவத்தை கிளராதே.. இனி நிலவன் கூட நீ போக கூடாது.." - ருத்ரா

"இதைய மாமாகிட்ட போய் சொல்லுங்க என்னைய கூட்டிட்டு போக வேணாம்னு.. அதுக்கு மாமா சரினு சொல்லட்டும் அவங்க பக்கமே தலை வெச்சு படுக்க மாட்டேன்.." - இசை

"என்ன அவன் அப்படி சொல்ல மாட்டானு தைரியத்துல பேசறீயா??" - ருத்ரா

"அப்படியும் வெச்சுக்கங்க அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நான் எப்பவும் போல என் மாமா கூட தான் போவேன்.. உங்களுக்காக என் இயல்பை மாத்திக்க முடியாது.." - இசை

செல்லும் இசையை பல்லை கடித்தவாறு வெறித்திருந்த ருத்ரா, "எனக்கு சொந்தமானதை கண்டிப்பா விட்டு குடுக்க மாட்டேன்டி.. பார்க்கலாம் நீயா?? இல்ல நானானு.." என்று கேலியுடன் இதழை சிறிது வளைத்தாள்..

எப்போதும் போன்று நிலவனுடன் செல்லும் இசை, நித்தியை பார்ப்பதும் மருத்துவமனைக்கும் செல்வதுமாகவே நாட்களை கழிக்க, தன்னருகில் ருத்ரா வந்தாலே சண்டை வேணாம் என்று மௌனமாக விலகி விடுவாள்..

நித்தியின் உடலில் காயம் ஆறி இருந்தாலும் சேகரை காணும் போதெல்லாம் நித்தியின் மனது ரணமாகி கொண்டிருந்தது.. நித்திக்கு உடலளவில் எதுவுமில்லை என்பதை இசையும் நன்கறிவாள்.. நித்தியின் பைத்தியகார வேசம் எத்தனை நாட்களுக்கு என்று பார்க்கவே அதை வெளியில் காட்டி கொள்ளாமல் வருவதும் போவதுமாக இருக்கிறாள்..

"எனக்கு ஒரு சந்தேகம்.. அதைய கேட்கட்டுமா??" - இசை

"என்னடி?" - நிலவன்

"கேளு இசைமா.." - சேகர்

"அவங்க கிட்ட இருந்து நித்தி தப்பிச்சு வர்றப்பவே அவளை காப்பாத்திட்டீங்க தானே.." - இசை

"இது உனக்கு.." - சேகர்

"அது எனக்கும் தெரியும் அண்ணே.." என்று இசை கூறிட, அங்கு பெருத்த அமைதி நிலவியது..

அன்று நித்தியை வேகமாக வந்த கார் ஒன்று இடித்து விட்டு சென்றதும் அவ்வழியில் வந்த ஆடவன் கை காட்டி நிறுத்தியது சேகரை தான்.. அது நித்தி என்றே தெரியாமல் அவளை மருத்துவமனையில் சேர்த்தவன், தன்னுடன் வந்தவரோ, "தம்பி என் வீட்டுல என் மனைவியும் மவளும் தனியா இருப்பாக நான் போகட்டுமா??" என்று தயக்கத்துடன் வினவ, அவரின் மனநிலையை புரிந்து கொண்டு அவரை அப்போதே அனுப்பி வைத்து விட்டான்..

அந்த பெண் கண் விழித்ததும் அவளின் பெற்றோரை பற்றி விசாரித்து அவர்களுக்கு தகவல் கூறி விட்டு பின்பு கிளம்பலாம் என்று சேகர் அமர்ந்து விட்டான்..

காலையில் அன்னையிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று பேசியவனின் முகத்தில் அனைத்து உணர்ச்சிகளும் துடைத்தெறிந்து இருக்க, உயிரற்ற ஜடமாய் வந்து அமர்ந்தான்..

"அப்பறம் எதுக்கு நித்தி என்னைய பார்த்துட்டு இருந்தே? என்கிட்டயாவது உன் காதலை சொல்லிருந்தா நானாவது உன் அம்மாகிட்ட பேசி கல்யாணம் பண்ணி வெச்சிருப்பேனல்ல?? இப்ப உன் அம்மா இறந்துட்டாங்களே.. இது தெரிஞ்சு நீ தாங்குவீயா??" என்று தன் போக்கிற்கு யோசனையில் ஆழ்ந்து இருந்த சேகரை மருத்துவரின் குரல் கலைத்தது..

"அந்த பொண்ணுக்கு தலைல ரொம்ப அடிபட்டிருக்கு அதுனால கண்ணு முழிக்க நேரமாகும்.. அவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா??" என்று மருத்துவர் வினவ, "இல்ல டாக்டர் வேகமாக வந்த காரு அந்த பொண்ணை இடிச்சுட்டு போய்ருச்சு.. காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன் அவ்ளோதான்.." என்றதும், "இதைய முதல்லயே சொல்ல என்ன? இது போலீஸ் கேஸ்.. அவங்களுக்கு முதல்ல இன்பார்ம் பண்ணுங்க.." என்றார் சற்று கோவத்துடன்..

அந்த பெண்ணை பார்க்க ஏனோ சேகரின் மனது உந்த, மெதுவாக கண்ணாடி வழியே எட்டி உள்ளே பார்த்தவனுக்கு மயக்கமே வருவது போல் இருந்தது.. தலையில் கட்டுடன் நித்தியின் முகம் இவனுக்கு தெளிவாக தெரிந்தது..

இது நிஜமா? என்று தன்னை தானே கேட்டு கொண்ட சேகர் ஒன்றும் புரியாமல் நிலவனுக்கே அழைத்து இதையை கூற, நித்தியின் அம்மா இறந்த செய்தியை கேட்டு வருத்தத்தில் இருந்தவனுக்கு இது புதுசெய்தியாக இருந்தது..

"நான் வர்றேன்டா அங்கனயே இரு.." என்று இசையிடம் வேறு ஏதோ ஒரு பொய்யை கூறி விட்டு சேகர் கூறிய மருத்துவமனைக்கு விரைந்தான்..

நித்தியை கண்ட நிலவனுக்கும் மண்டை காய, மருத்துவரிடம் அவளை பற்றி விசாரித்ததில் மேலும் அதிர்ச்சியாக இருந்தது.. அடிபட்டதில் தலையில் மட்டுமே காயமாகிருக்க, அவளை பலவந்தபடுத்தி கற்பழித்து இருப்பதாகவும், உடலில் நக கீறல்களுடன் சூடு வைத்த காயமும் இருப்பதாக கூறியவர், காவல் துறைக்கு அழைக்க சொன்னார்..

"வேணாம் டாக்டர் இதுனால அந்த பொண்ணோட வாழ்க்கைக்கு ஏதும் பிரச்சனை வந்துப்புடும்.. அவுக என்ற தங்கச்சி தான்.. நான் இதைய பாத்துக்கறேன்.." என்று நிலவன் கூற, அப்போதும் அவர் இதனால் மருத்துவமனையின் பெயர் கெட்டு விடும் என்று மறுத்ததும் சேகரோ ஒருபடி மேல் சென்று அவரின் காலிலே விழுந்து விட்டான்..

"அந்த பொண்ணோட அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க டாக்டர்.. அதைய தெரிஞ்சாளே அவ தாங்க மாட்டா.. இது வெளில தெரிஞ்சா அவ இப்ப இருக்கற நிலைமைல மத்தவங்க பேசற பேச்சை கெட்டு உயிரோடு செத்துருவா டாக்டர்.. கொஞ்சம் மனசு வெய்யுங்க.." என்று மன்றாடியவனின் வார்த்தைகள் அவரை சிறிது அசைத்து பார்த்தது போலும் "ஆனா இது வெளில தெரிஞ்சு ஏதாவது பிரச்சனை வந்தா அதுக்கு முழு பொறுப்பையும் நீங்க தான் ஏத்துக்கனும்" என்றார் கூடுதல் கண்டிசனுடன்.

அதன்பின் நித்தி சரியானதும் யாருக்கும் தெரியாமல் அங்கு அழைத்து வந்து முழு நேரமும் அவளோடு இருப்பது சேகரே.. அவனின் அக்கறை பரிதாபத்தில் அல்ல.. நித்திக்கும் தன்மேல் விருப்பம் இருப்பதை சேகரும் நன்கு அறிவான்.. முதலிலே அவளிடம் தன் காதலை கூறியிருந்து அவளை அரவணைத்து இருந்தால் என்ன பிரச்சனை என்று தன்னிடமாவது கூறியிருந்து இருப்பாள் மறுபடியும் அதே தப்பை செய்ய இவன் ஒன்றும் முட்டாள் இல்லையே..

இசையுடன் சேர்ந்து நித்தியை காணும் போதெல்லாம் அவளின் மீது தோன்றிய சிறு ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாற, இரண்டு வருடங்களாக அவனின் உயிர் மூச்சாக அல்லவா அவனுள் வாழ்கிறாள்!

இப்போது அவளின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறியும் முன்னரே அவளின் முடிவு என்னவாக இருந்தாலும் இவனின் வாழ்வு அவள் மட்டுமே என்ற தீர்க்கமான முடிவுடன் இருக்கிறான் இவன்.. இது அவனின் சுயநலம் என்றாலும் அதை பற்றி அவனுக்கு சிறிதும் கவலையில்ல.. ஏனெனில் சுயநலம் இல்லாத காதல் உண்டோ??

"முடிஞ்சதை பத்தி பேச வேணாமே இசைமா.. இப்ப இருக்கற கவலையே அவங்க அம்மா இறந்ததை எப்படி நித்தி கிட்ட சொல்றதுனு தான்.." - சேகர்

"இப்பவே என்னடா அவசரம்.. மொதல்ல அவுக சரியாகட்டும் பொறவு பாக்கலாம்.." - நிலவன்

"பேசாம நீயே மெதுவாக இதையை சொல்லி பாரு இசைமா.. அவ என்ன பண்றானு பார்ப்போம்.." - சேகர்

"வேணாம் அண்ணா.. அவளுக்கு தெரியறப்பவே இது தெரியட்டும்.. நம்ம எதுவும் சொல்ல வேணாம்.." - இசை

"ஏன்மா.." - சேகர்

"அது அப்படிதான்.. நம்ம எதுவும் சொல்ல வேணாம் அவ்வளவு தான்.." - இசை

நித்தி உறங்குவதாக நினைத்து இவர்கள் முன்னால் அமர்ந்து பேசி கொண்டிருக்க, நித்தி தான் உறக்கத்தை தொலைத்து பலநாட்கள் ஆகி விட்டதே!! தன் அன்னை உயிரோடு இல்லை என்பதை கேட்டதும் அவளுக்கு உலகமே இரண்டாக சுழல்வது போன்று இருந்தது..

அதை ஜீரணித்து கொள்ளவே பல நிமிடங்கள் பிடிக்க, தன் ஒருத்திக்காக கவலைகளை வெளியில் காட்டி கொள்ளாமல் ஓடி ஓடி உழைத்திருந்த தன் அன்னை தன்னால் தான் இறந்தார் என்பதை எப்படி அவளால் ஏற்று கொள்ள முடியும்..

இந்த நிலைமை வர கூடாது என்பதற்காக தான் எத்தனை முறை படித்து படித்து சொன்னாள் இசை.. அவளின் வார்த்தையை சிறிது செவி மடுத்திருந்தாள் தன் அன்னையை தக்க வைத்து கொண்டிருப்பாளோ??

"அய்யோ அம்மா எனக்கு மன்னிப்பே இல்ல.. ஏன்மா இப்படி பண்ணுனீங்க உங்களுக்கும் என்மேல நம்பிக்கை இல்லாம போய்ருச்சா? நான் முட்டாள் ஆகிட்டேன்மா.. உங்களைய விட்டுட்டு நான் போவேனு எப்படிமா நினைச்சீங்க? அப்படி போனா அந்த பாவம் என்னைய சும்மா விடுமா?"

"எனக்காக தான் நீங்க கஷ்டப்பட்டீங்க கடைசில என்னாலயே நீங்க செத்துட்டிங்களேமா? நீங்களே போனதுக்கு அப்பறம் எனக்கு இங்க என்ன வேலை.. நானும் உங்க கிட்டயே வர்றேன்.." என்று வழிந்த கண்ணீரை தன் கரங்கள் கொண்டு துடைத்தெறிந்தவள் அறையை சுற்றி நோட்டமிட்டாள்..

சேரில் அவளின் துப்பட்டா தொங்கி கொண்டிருக்க, அதையை எடுத்தவள் வெளியில் அமர்ந்திருந்த இசையிடம் மனதிலே மன்னிப்பு கோரியவள், சேகரை பார்க்கும் திரணியற்று கட்டலில் ஏறினாள் தன்னை மீறி வழியும் விழி நீருடன்..

இப்போதும் பேதையவள் அவளின் அன்னையை பற்றி நினைத்தாலொழிய தன்னை அரணாக பாதுகாத்து நிற்கும் ஆடவனின் நேசத்தை புரியாமல் போனது ஏனோ??




தித்திக்கும்..


Thread 'தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments' https://www.sahaptham.com/community/threads/தித்திப்பாய்-ஓர்-சாரல்-comments.594/
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
பகுதி - 10



தாயின் இறப்பை மட்டும் நினைத்தவள் சேகரின் எதிர்பார்ப்பற்ற காதலை மறந்து தவறான முடிவை கையில் எடுத்த நேரம், கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் இசை..

இதை பார்த்து பதறியது சில நொடிகள் தான் "ஹே பைத்தியமே!" என்று கத்தியபடி அவளை கீழே இழுக்க, "விடுடி நான் சாகனும் நான் பாவி எனக்கு மன்னிப்பே கிடையாது.." என்று தலையில் அடித்து கொண்ட நித்தி மறுபடியும் கட்டலில் ஏற முயல, முடிந்த வரைக்கும் அவளை அமைதிபடுத்த முயன்ற இசை இதற்கு மேல் முடியாது என்றெண்ணி சப்பென்று அறைந்தே விட்டாள்..

"எப்ப பார்த்தாலும் சுயநலமாவே யோசிச்சுட்டு இருக்கடி.. அன்னைக்கு அவன் சாக கூடாதுனு மட்டும் நினைச்சு அதுக்கு பின்னாடி வர போற பிரச்சனையை மறந்து தொலைஞ்சே.. இப்பவும் அதே மாதிரி உன் மேல அத்தனை காதலோட இருக்கற சேகர் அண்ணனை கொஞ்சம் கூட நினைச்சு பார்க்காம நீ பாட்டுக்கு சாக போறே? அவருக்கு முதல்ல விசத்தை குடுத்துட்டு அப்பறம் நீ செத்து தொலை.." என்று உச்சக்கட்ட கோவத்தில் கத்தினாள்..

இதில் தலையில் அடித்து கொண்டு அழுத நித்தி, "என்னால தானே என் அம்மா செத்துட்டாங்க.. எனக்காக இத்தனை வருசம் ஓடி ஓடி உழைச்சவங்களைய நானே கொன்னுட்டேன் நானே கொன்னுட்டேன்.. அந்த பாவம் என்னைய சும்மா விடாதுடி.." என்று கதறியவளை தன்னோடு அணைத்து கொண்ட இசைக்கு நன்றாக விளங்கியது இப்போது தாங்கள் பேசியதை இவளும் கேட்டு விட்டாளென்று!!

"ஏன் நித்தி இப்ப உன் அம்மா செத்ததை மட்டும் கேட்டீயே உனக்காக சேகர் அண்ணா இப்ப வரைக்கும் துடிச்சுட்டு இருக்கறதை கேட்டும் அவங்களைய நினைச்சு பார்க்கலயா?" என்று ஆதுரமாக இசை வினவ, நித்தியும் தேம்பியவாறு, "அவங்க காதலுக்கு நான் தகுதியே இல்லாதவடி.. அன்னைக்கு நீ சொன்னதை கொஞ்சமாவது யோசிச்சு பார்த்துருந்தா இப்படி எல்லாம் நடந்துருக்குமா? அவனுக என்னைய சிதைச்சதை விட என்னால இத்தனை பேரு கஷ்டப்படறதை தான் என்னால தாங்கவே முடில.. நான் எங்கையாவது போறதுக்கு பதிலா இந்த உலகத்தை விட்டே போய்ட்டா தான் நல்லதுடி.." என்றாள் விரக்தியுடன்..

அவளை நிமிர்த்தி கண்ணை துடைத்து விட்ட இசை, "உன் வலி எனக்கும் புரியுது நித்தி.. பிரச்சனைக்கு சாவு தான் தீர்வுனா இங்க பல பேரு எப்பவோ உயிரை விட்டுருக்கனும்.. சாவு தான் நம்மளைய தேடி வரனுமே தவிர நம்ம சாவை தேடி போக கூடாது.. உன்னைய ஏமாத்துன அவனுகளே இருக்கறப்ப நீ ஏன்டி சாகனும்.. அவனுக முன்னாடி வாழ்ந்து காட்டனுமே தவிர ஓடி ஒளிய கூடாது.."

"இது சொல்றதுக்கு வேணா ஈசியா இருக்கும் இசை.. என்னைய நானே தேத்திக்கிட்டு வாழனும்னு நினைச்சா கூட மத்தவங்க விடுவாங்கனு நினைக்கறீயா?" - நித்தி

"நீ ஏன் நித்தி அடுத்தவங்க பேசறதை காது குடுத்து கேட்கறே? அவங்கனால வாய் இருக்குனு பேச மட்டும் தான் முடியும்.. நமக்கு ஒன்னுனா உதவிக்கு கூட பேசற யாரும் வர மாட்டாங்க.." - இசை

"இப்படி பேசறது வேணா பேசலாம் இசை.. நிஜ வாழ்க்கைல இப்படி எல்லாம் வாழ முடியாது.. இனி நான் யாருக்காக வாழனும்.. இனி நான் கெட்டு போனவனு எவன் வேணா என் வீடு தேடி வந்து என்னைய விபச்சாரி ஆக்கலாம்.. அந்த பயத்தோட தினமும் செத்து செத்து பிழைக்க சொல்றீயா?" - நித்தி

"உனக்கு பூலான்தேவியை தெரியுமா? அவங்க பதினொரு வயசா இருக்கறப்பவே அவங்க கணவனாலயே கற்பழிக்க பட்டவங்க.. அந்த நரகத்துல இருந்து தப்பிச்சு வந்து பெத்தவங்க வீட்டுல சந்தோசமா இருந்தாங்க.. அதுவும் கொஞ்ச நாளு தான்.. பெத்தவங்க முன்னாடியே அவங்களோட கற்பு சூரையாட பட்டிருக்கு அப்பவும் அவங்க தற்கொலை பண்ணிக்கனும்னு நினைக்கல.."

"அதுல இருந்து தப்பிச்சு தான் போகனும்னு நினைச்சு தப்பிச்சுருங்க.. அப்பவும் அவங்களைய விடாம கொள்ளை கூடத்துல இவங்களுக்கும் சம்பந்தம் இருக்குனு போலீஸ் பிடிச்சுருக்கு.. அவங்களை பாதுகாக்க வேண்டிய போலீசே அவங்க கற்பை சூரையாடிருக்காங்க.. இது எல்லாம் நடக்கறப்ப அவங்களுக்கு வெறும் பதினைந்து வயசு தான்.."

"அப்பவும் அவங்க சோர்ந்து போகாம தன் கற்பை சூரையாடுனங்களை தேடி பிடிச்சு கொன்னுருக்காங்க.. 2019ல தன் போட்டோ இணைய தளத்துல வந்ததும் தற்கொலை பண்ணிக்கிட்ட வினுப்பிரியா எங்கே? தன்னை கற்பழிச்சவங்களை தேடி கொன்னா பூலான் தேவி எங்கே? பாதிக்கப்பட்ட பெண்கள் இப்படி ஒடுங்க ஒடுங்க தான் இந்த சம்பவம் அதிகரிக்குதுனு புரியலயாடி?"

"தன் கற்பை காப்பாத்திக்க ஒவ்வொரு பொண்ணும் பூலான் தேவியா மாறுறதுல தப்பே இல்ல.. தயவு செஞ்சு அந்த தற்கொலை எண்ணத்தை தூக்கி எறிஞ்சுட்டு உன்னைய இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன என்ன பண்றதுனு யோசி.. இது உனக்கு நடந்த சம்பவத்துக்கு மட்டுமில்ல இனி அவனால பாதிக்கபட போற மத்த பொண்ணுகளுக்கும் செய்யற கைமாறா இருக்கட்டும்.."

"இனி முடிவு உன் கைல தான்.. வாழ்றதுனா அதைய கெட்ட கனவா மறந்துட்டு எந்திரிச்சு வா.. இல்ல இப்பவும் சாகனும்னா நினைச்சா நான் தடுக்க மாட்டேன்.. போய் சாகு.." என்று தீர்க்கமாக கூறிய இசை கதவருகில் நின்றிருந்த நிலவனையும் சேகரையும் கண்களால் வர சொல்லிவிட்டு வெளியில் வந்தமர்ந்தாள்..

யோசனையுடன் "நித்திக்கு எதுவுமில்லயாடி" என்று நிலவன் வினவ, "அவளுக்கு வெளி உலகத்தை பார்க்க பயம்னு தான் இந்த பைத்தியகார நடிப்பு.. நானும் இது எவ்ளோ நாளைக்குனு இப்படி நடிக்கறானு பார்க்கதான் அமைதியா இருந்தேன்.." என்றவள் சேகரிடம் திரும்பி "அண்ணா இன்னும் நித்தியை லவ் பண்றீங்களா?" என்று கேட்டாள் கேள்வி குறியுடன்..

விரக்தியுடன் சிரித்த சேகரோ "இப்ப மட்டுமில்லடா எப்பவும் அவ மட்டும் தான் என் மனசுல இருப்பா.. இது ஏன் அவளுக்கு புரிய மாட்டிங்குது.. அவளோட மனசை தான்மா நான் கேட்கறேன் உடம்பை இல்ல.. இது புரிஞ்சுருந்தா அவ தற்கொலை வரைக்கும் நினைச்சுருப்பாளா?"

ஒரு முடிவுடன் எழுந்து வந்த நித்தியின் கால்கள் சேகர் பேசியதை கேட்டதும் அப்படியே நின்று விட, கண்களோ குளமாக மாறியது.. மேலும் அவனே, "அவ இப்படி ஆனதுக்கு நானும் ஒரு காரணம்னு எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்குடா.. நானாவது அவகிட்ட முதல்லயே பேசிருந்தா அவளுக்கு என்ன பிரச்சனைனு என்கிட்டயாவது சொல்லிருப்பாளே?" என்று கலங்கியவாறு சேகர் கூறியதும் நித்தியின் கண்ணீர் நிற்காமல் வழிந்தது..

கதவினருகில் நித்தி நின்றிருப்பதை கண்ட நிலவன், "தப்பான முடிவுக்கு போக மாட்டேனு நம்பறேன் நித்திமா.. எப்பவும் நா உன்ற அண்ணன் தான்டா.. உமக்கு துணையா இருப்பேன்டா.." என்று நித்தியை பார்த்தவாறு கூறிட, அவளோ வழியும் விழி நீருடன் நின்றிருந்தாலொழிய பதிலேதும் பேசவில்லை..

நித்தியை அழுத்தமாக பார்த்த இசை அவளின் கையை பிடித்து கொண்டு அவ்வீட்டில் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைய போக, "அடியேய் அங்கன வேணாம்டி" என்று கத்திய நிலவனின் வார்த்தைகள் காற்றில் கலந்தது..

அறைக்குள் நுழைந்ததுமே அதிர்ச்சியில் கையை வாயில் வைத்தவாறு சுவரோடு நித்தி ஒன்றி விட, ரத்த வெள்ளத்துடன் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தான் மகேஷ்.. இது எப்படி? என்று கண்ணீருடன் கண்கள் அதிர்வில் பெரிதாக விரிய, "நீ எப்ப சேகர் அண்ணா கைல கிடைச்சீயோ அதுல இருந்து இவன் இங்கதான் தொங்கிட்டு இருக்கான்.." என்றாள் அடிகுரலில்..

இதனை கேட்டதும் திடுக்கிடலுடன் உறுத்து விழித்த நித்தியின் கருமணிகள் நீரில் தத்தளிக்க, "அந்த ரஞ்சித்தையும் தூக்கலாம்னு தான் இருந்தாங்க ஆனா அதுக்கான நேரம் அமையல.. அவங்க அப்பா ஆளும்கட்சில இருக்கறனால அவ்ளோ சீக்கிரத்துல அவனை தூக்க முடியாது.. அப்படி தூக்குனாலும் அவன் பண்ணுன தப்பை நம்ம மேலயே திருப்பி விடறதுக்கு அவங்களுக்கு ஒரு நிமிசம் கூட ஆகாது.. அதுனால தான் அமைதியா இருக்காங்க" என்ற இசையை மெச்சுதலுடன் மொய்த்த நிலவனின் விழிகளில் எப்படிடி? என்ற கேள்வியுடன் கர்வமும் கலந்திருந்தது..

உண்மையில் நிலவனும் சேகரும் இதனால் தான் அமைதியாக இருக்கிறார்கள்.. நித்தி மருத்துவமனையில் இருந்த சமயத்தில் நித்தியை காண மகேஷுடன் அவளை காப்பாத்தியவரும் வந்தார்..

வந்ததுமே "தம்பி அந்த பொண்ணு இந்த தம்பியோட மனைவியாமா? ரெண்டு நாளா காணோம்னு தேடிட்டு இருக்காங்க?" என்று கூறிட, அப்போது தான் மருத்துவர் கூறிய மருந்தினை வாங்கி விட்டு வந்த நிலவனும் அவர் சொன்னதை கேட்டு நெற்றியை சுருக்கி மகேஷை காண, "ஆமா சார் அவங்க என் மனைவி தான்.. சின்ன சண்டைனு கோசிச்சுட்டு வீட்டை விட்டு வெளில வந்துட்டா.. என் பொண்ணு இவளை தேடி அழுகறா.. என் மனைவியை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி சார்.." என்றான் மகேஷும்..

"அவுக கணவன் நீங்களா? நல்ல வேலை வந்துப்புட்டிக? நாங்க இன்னும் எம்புட்டு நாளு தான் இங்கன இருக்கறதுனு வருத்தப்பட்டோம்.." என்று பின்னால் இருந்து மகேஷின் தோளில் நிலவன் கையை போட, திடீரென்று பின்னால் குரல் கேட்டதும் பயந்தவனோ பின்பு தான் ஆசுவாசமடைந்தான்..

காப்பாத்தியவரிடம், "நீங்க போங்க ஐயா.. நாங்க வாங்க வேண்டிய கணக்கை வாங்கிப்புட்டு கெளம்பிரோம்.." என்று நிலவன் அவரை அனுப்பி வைத்து விட்டு மகேஷிடம் பார்வையை திருப்பினான்..

"உங்க மனைவிக்கு எதுவுமில்ல தம்பி.. என்ற கூட கொஞ்சம் வாங்க.." என்று மகேஷை அழைத்து கொண்டு நிலவன் செல்ல, சேகரும் நர்ஸிடம் நித்தியை பார்த்து கொள்ள கூறி விட்டு அவர்களின் பின்பு ஓடினான்..

மகேஷும் இவர்களினால் தன்னை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் சாதாரணமாக அவர்களுடன் செல்ல, மருத்துவ மனையை விட்டு வெளியில் சென்றதும், "எவ்ளோ ஆச்சுனு சொல்லுங்க ப்ரோ.. நான் என் மனைவியை பார்க்க போகனும்.." என்று காரை திறந்து செக்புக்கை எடுக்கும் சமயத்தில் பின்னால் இருந்து அவனை ஒரு உதை விட்ட நிலவன், அவனை காருக்குள் தள்ளி காரை எடுத்தான்..

ஆள்நடமாட்டம் இல்லாத அந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தியவன் மகேஷை தரதரவென இழுத்து கொண்டு வீட்டினுள் நுழைந்தவன் கதவை அறைந்து சாத்திய நிலவனின் முகம் கோவத்தில் ஜிகுஜிகுவென்று இருந்தது..

"ஹே யாருடா நீ?" என்று எகிறியவாறு வந்த மகேஷின் முகத்தில் ஒரு குத்து விட்ட நிலவன், "உன் மனைவினு சொல்லிட்டு திரியறீயே அந்த பொண்ணோட அண்ணன்டா என் வெண்ணை.." என்று அவனின் கையை வளைத்து பிடித்து, "ஒரு பொண்ணோட விருப்பமில்லாம அவளை தொடறதே தப்பு.. பொண்ணை ஏமாத்தறதும் இல்லாம ஊரையே ஏமாத்திப்புட்டு இருக்கீயா?" என்று நரம்புகள் புடைக்க வினவிய நிலவன் வளைத்து பிடித்திருந்த மகேஷின் கையை உடைத்தே விட்டான்..

உயிர் போகும் வலியில் கையை பிடித்து கொண்டு கீழே விழுந்த மகேஷ் அப்போதும் அடங்காமல், "உன்னைய சும்ம்மா விட மாட்டேன்டா.. நான் யாருனு தெரியாம என் மேல கை வெச்சுட்டியல்ல?" என்று திக்கி திணறி சொல்ல, "நீ யாரா இருந்தா எமக்கு என்னடா? மொதல்ல மனுசனா இருக்க பழகு.." என்று அவனை போட்டு மிதித்திருந்த நேரத்தில் கொஞ்சம் தள்ளி கிடந்த அவனின் அலைப்பேசி சிணுங்க தொடங்கியது..

திரையில் ரஞ்சித்தின் புகைப்படம் வர, அவனை யாரென்று நிலவனுக்கு தெரியாததால் மகேஷின் கழுத்தில் காலை வைத்து அமுத்தியவாறு போனை காதில் வைக்க, "டேய் அவளை எப்படியாவது கண்டுபிடிச்சுட்டு தான் என் முன்னாடி வரனும் இல்ல உன்னைய கொல்லவும் தயங்க மாட்டேன்.. ஒவ்வொரு தடவையும் அவ என்னைய ஏமாத்தறாடா.. விட மாட்டேன்.."

"அந்த வீடியோ உன்கிட்ட தானே இருக்கு அதையை நெட்ல போட்டனும் அப்பவும் என் வெறி அடங்காது.. வந்தா நீ அவ கூட தான் வரனும் இல்ல அப்படியே எங்கையாவது தொலைஞ்சுரு.." என்று கடுப்புடன் கத்தியவன் போனை அணைத்தும் விட்டான்..

"பாருடா உன்ற தோஸ்துக்கு நண்பனை விட பொண்ணு தான் முக்கியம்னு சொல்றான்.. நீ நித்தியை கூட்டிட்டு வரலனா அவன் உம்மைய கொன்னுருவானாமா? உயிர் காப்பான் தோழனு தான் கேள்வி பட்டுருக்கேன்.. இவன் என்னடானா உயிரை எடுப்பேனு சொல்றான்.. இவனுக்காகவா இம்புட்டு தூரம் நீ கஷ்டப்படறே?" என்று கேள்வியுடன் வினவிய நிலவனின் கண்கள் மகேஷின் போனில் இருந்த ஒவ்வொரு வீடியோவையும் பார்த்திருந்தது..

கடைசியில் இருந்த வீடியோவை ஆன் செய்ததும் பட்டென்று அணைத்து விட்ட நிலவனுக்கு ஆத்திரம் கட்டுங்கடங்காமல் எழ, அதே சினத்தில் மகேஷை தூக்கிய நிலவன் பந்தை போன்று சுவற்றில் வீசி எறிந்தும் அவனின் கோவம் அடங்காத அலையாக ஆர்பரித்து கொண்டிருந்தது..



தித்திக்கும்..

Thread 'தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments' https://www.sahaptham.com/community/threads/தித்திப்பாய்-ஓர்-சாரல்-comments.594/
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
பகுதி - 11




கண்கள் சிவக்க கீழே கிடந்த மகேஷை நாலு மிதி மிதித்த நிலவன், "த்தூ நாதாரி உன்ற அம்மாவும் பொண்ணு தானேடா.. அவுக கிட்ட இருக்கறது தானே மத்த பொண்ணுக கிட்டயும் இருக்கு.." என்று ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்து துவைத்தவன் அதன்பின் தலைகீழாக கட்டி தொங்க விட்டு விட்டான்..

மகேஷால் கத்த கூட முடியாத நிலைமை.. உடலளவில் சோர்ந்து போனதால் அப்படியே மயங்கியும் விட்டான்.. இது சேகருக்கு தெரிந்ததும் அவன் பங்கிற்கு துவைத்து எடுக்க, முற்றிலும் சுயநினைவை இழந்திருந்தான் மகேஷ்..

வேதனையின் வெண்மை துளிகள் கன்னத்தை நனைத்தவாறு சேகரை வெறித்த நித்திக்கு தொலைந்த போன பொருள் கையில் கிடைத்த உணர்வு.. இருந்தும் அதைய சந்தோசமாக ஏற்று கொள்ள முடியாத தன் நிலைமையை எண்ணி விரக்தி அடைந்த நித்தி "இனியும் நான் இருக்கனுமா இசை.." என்று கேட்டாள் உணர்ச்சி துடைத்தெறியபட்ட குரலில்..

"நித்தி" என்று நிலவன் பல்லை கடிக்க, அவனை அமைதிபடுத்திய இசை,"ஏன் நித்தி அடுத்தவங்க பேசறதை நினைச்சு பயப்படறீயா? அவங்க பேசறதை கேட்டுட்டு வாழ முடியுமானு யோசிக்கறீயா?" என்று அவளின் மனதில் இருப்பதை சரியாக கணித்து கேட்டாள்..

குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் சிந்தியவளின் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி, "உனக்கு ஒரு பிரச்சனை வந்தப்ப அடுத்தவங்க யாரும் உன் துணைக்கு வரலடா.. இப்படி பேச மட்டும் தான் வருவாங்க.. இப்ப உன்னைய தப்பா பேசறவங்களே காலத்தோட போக்குல உன்னைய தலைல தூக்கி வெச்சு கொண்டாடலாம்.. ஏன்னா எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்.."

"உன் அம்மா சாவுக்கும், உன்னோட இந்த நிலைமைக்கும் நியாயம் வேணும்னு தோணுனா அதைய மட்டும் உன் மனசுல நிறுத்தி வெய்யு.. தானா தைரியம் வரும்.. எப்பவும் உன் பக்கத்துல நாங்க இருப்போம்.. மத்தவங்க என்ன பேசறாங்கனு பார்த்தரலாம்.." என்று ஆறாய் வழிந்த அவளின் கண்ணீரை அழுத்த துடைத்து விட்ட இசையை கேவலுடன் அணைத்து கொண்டாள் நித்தியும்..

"மாமா இன்னும் ரெண்டு நாளைக்கு நித்தி இங்கயே இருக்கட்டும்.. மத்ததை அப்பறம் யோசிச்சுக்கலாம்.." என்று இசை நிலவனிடம் கூறிட, அவனும் சம்மதமாக தலையசைத்து சேகரை கண்காட்ட, தான் பார்த்து கொள்வதாக இசையும் கண்ணசைவிலே கூறினாள்..

நித்தியின் தோளை ஆறுதலாக தட்டியவாறு இசையோ, "நல்லா யோசி நித்தி.. உன்மேல தப்பு இல்லனா தலை நிமிர்ந்து நடக்கறதுல தப்பே இல்ல.. தப்பு செய்யாம கூனி குறுகி போறது தான் பெரிய தப்பு.. அந்த பயத்துல இருந்து வெளில வந்து என்னால வாழ முடியும்னு நம்பிக்கையோட தான் என்னைய மறுபடியும் பார்ப்பேனு நான் நம்பறேன்.. என் நம்பிக்கையை மறுபடியும் பொய்யாக்கிராத.." என்றாள் மென்மையாக..

செல்லும் வழியில் நிலவன் தான், "ஏன்டி உமக்கு எப்டி அவனை அடைச்சு வெச்சுருந்தது தெரியும்?" என்ற வினாவை எழுப்ப, மெல்லிய சிரிப்பை உதிர்த்த இசை, "அந்த வீடு என்ன மைசூர் மாளிகையா மாமா கண்டுபிடிக்க முடியாம போறதுக்கு?" என்று கேட்க, படக்கென்று வண்டியை நிறுத்திய நிலவன், "நா ஏதாவது கேட்டுப்புட்டா இப்டி தான் எடக்குமடக்கா பதில் சொல்றது.." என்றான் அவளின் காதை திருகியபடி..

வலியில் முகத்தை சுழித்த இசை "அய்யோ விடு மாமா வலிக்குது.." என்றவாறு அவனை விட்டு விலகி நின்று, "என்னைய விட்டுட்டு நீங்களும் சேகர் அண்ணாவும் டவுனுக்கு கிளம்புனீங்கல்ல அப்பதான் சும்மா அந்த அறையை திறந்து பார்க்கலாம்னு பார்த்தேன்.. அதோட அங்கிருந்த போனையும் தூக்கிட்டேன்.." என்றவள் கண்ணை சுருக்கி புன்னகைத்தாள் குறும்புடன்!!

காலை குறுக்கி அதில் தலையை புதைத்திருந்த நித்தியிடம் வந்த சேகர், "நித்தி" என்றழைக்க, அதில் நிமிர்ந்த பெண்ணவளும் என்னவென்று அவனை பார்த்தாள்..

"இப்படியே இருந்தா நடந்தது எல்லாம் இல்லனு ஆகிருமா? அழுது அழுது உன்னைய நீ வருத்திக்கறதுக்கு பேசாம அவனுகளை கொன்னுட்டு ஜெயிலுக்கு போறது தப்பில்ல.. என் நித்தி இவ்ளோ கோழையா இருக்க மாட்டாளே??.."

"இசையோட நம்பிக்கையை மறுபடியும் அழிச்சராதடா.. உன்னைய காணோம்னு அவ துடிச்சது எல்லாம் கொஞ்ச நஞ்சமில்ல.. உனக்காக எப்பவும் உன் பக்கம் இருக்கற இசைக்காக இதைய பண்ண மாட்டியா நித்தி?"

"இசைக்காக இல்லனாலும் எனக்காக நீ வாழ்ந்து தான் ஆகனும்.. சாகனும்னு முடிவு தான் உனக்கு இப்பவும் சரினு தோணுனா சொல்லு ரெண்டு பேரும் சேர்ந்தே சாகலாம்.. உன்னைய விட்டுட்டு நான் மட்டும் இருப்பேனு நினைச்சீயா? என்னால முடியாது நித்திமா.."

"என்னைய இப்பவே கல்யாணம் பண்ணிக்கனு சொல்ற அளவுக்கு கல்நெஞ்சக்காரன் இல்லமா நானு.. வேலைக்கு போ.. தைரியமா எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நில்லு.. உனக்காக உன் பின்னாடி உன் துணைக்கு கண்டிப்பா நான் இருப்பேன்டா இது என் அம்மா மேல சத்தியம்.." என்று உறுதியளித்தவனை கண்கள் இமைக்க நித்தி பார்த்திருக்க, எப்போதும் போல் ஒற்றை சிரிப்புடன் எழுந்து சென்றான் சேகர்..

தாத்தாவிடம் நடந்ததை இசை கூறி முடிக்க, "தாத்தா நித்திக்கு இனி நம்மதான் துணையா இருக்கனும்.. கண்டிப்பா சேகர் நித்தியை ஏத்துப்பான் தாத்தா.." என்று நித்திக்கு ஆதரவாக நிலவனும் பேச, "அந்த புள்ள எம்புட்டு கஷ்டத்தை அனுபவிச்சுருக்கு.. கடவுளுக்கு கண்ணே இல்ல போல.." என்று பெரியவரால் பெருமூச்சு விடதான் முடிந்தது..

அனைவரும் நித்தியை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில், "ஏன்ப்பா தேவையில்லாம இந்த பிரச்சனைல நம்ம தலையிடனும்.." என்று சரோஜா கேட்டது தான் தாமதம் படக்கென்று அனைவரின் பார்வையும் தீப்பொறியுடன் அவரை மொய்த்தது..

அதனை கண்டு கொள்ளாமல் மீண்டும் அவரே, "அந்த பொண்ணை எவனோ கற்பழிச்சதுக்கு நம்ம ஏன் அவளை பாதுகாக்கனும்.. அந்த பொண்ணோட அம்மாவே தனக்கு பாராம அவ மாறிருவாளோனு தானே தூக்கு போட்டுக்கிட்டாங்க.." என்றார் அசட்டையாக..

சினத்துடன், "என்ன சித்தி பேசறீங்க.. இப்ப நான் அவளை பாதுகாத்துட்டு இருங்கனு யாரையாவது வற்புறுத்துனனா? நடந்ததை தான் எல்லாத்துகிட்டயும் சொன்னேன்.. அவளுக்கு செய்ய வேண்டியதை நானும் நிலவன் மாமாவும் செஞ்சுக்குவோம்.. உங்க வேலை என்னவோ அதைய மட்டும் பாருங்க.." என்று பட்டென்று முகத்தில் அடித்தாற்போல் இசை கூறி விட்டாள்..

"இசை" என்று கண்டிப்புடன் வந்த கமலத்தின் வார்த்தையை அசட்டை செய்தவள், "தாத்தா நித்தி விசயத்துல நான் இப்படிதான்.. ஒரு பொண்ணா இருந்துட்டு பாதிக்கப்பட்ட இன்னொரு பொண்ணுக்கு தோள் குடுக்கலனா உங்க வளர்ப்பு பொய்யாகிரும் தாத்தா.." என்று தாத்தாவின் கையை இறுக்க பற்றி அதில் தலையை சாய்த்த இசைக்கு நித்தியின் எதிர்காலத்தை பற்றிய கவலைகள் தான் அதிகரித்தது..

ஆதுரமாக அவளின் தலையை தடவிய தாத்தாவும், "நீ ஏன் கண்ணு அழுவனும்.. ஒன்னோட நல்ல குணத்துக்கு இன்னும் நல்லா இருப்பே.. அடுத்தவங்க பேச்சை காதுல வாங்காத.. எப்பவும் உமக்கு துணையா நாங்க இருப்போம்டா.." என்றார் ஆறுதலாக..

"இசை கண்ணு இதைய நினைச்சு அழுதா எப்படிடா? எப்பவும் எது வந்தாலும் தகரியமா நிற்கனும்டா.." என்று ராசாத்தியும் அவளுக்கு தோள் குடுக்க, கண்ணீருடன் எழுந்த இசையும் அவரை அணைத்து கொண்டாள்..

"இங்கன பாருங்க என் பேத்தி எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும்.. ஆராவது குறுக்கமறுக்க மறுத்து பேசிப்புட்டு இருந்தீக அம்புட்டுதான்.." என்று தாத்தா அந்த பேச்சிற்கு முடிவாக முற்றுபுள்ளி வைத்தார்..

சிவநேசனும், "அந்த புள்ளயும் எமக்கு மவ மாதிரி தான் இசை.. இனி அவ நம்ம பொறுப்பு.." என்றிட, "ம்ம்ம்க்கும் இங்க என் பேச்சை யாரு மதிக்கறா?.. நல்லது சொன்னா கூட தப்பாதான் தெரியுது.. என்னத்த சொல்றது.." என்று சரோஜா முகவாயை இடித்தார்..

வெத்தலையை குத்தியவாறு பாட்டியோ, "அடியேய் சிறுக்கி அவ என்ற வளர்ப்புடி.. உம்மைய யாரு நல்லது சொல்லலனு அழுதா? போடி அங்குட்டு.. போய் உன்ற மவளுக்கு மொதல்ல புத்திமதி சொல்லு.." என்றார் வெடுக்கென..

தியாகு தான் சரோஜாவை மேலிருந்து கீழ்வரை பார்த்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தான் "இவரையே இங்க யாரும் மதிக்க மாட்டாங்க.. இதுல இவரோட பேச்சை யாரு மதிப்பாங்க.." என்ற அதிமுக்கியமான சந்தேகத்தில்!!

நித்தியின் விசயம் ஊர் முழுவதும் தீயாய் பரவி விட, தனக்கு அனைத்தும் தெரிந்ததை போல் நித்தியின் வீட்டின் அருகே இருந்த பெண்கள் மற்றவர்களிடம் நாள்முழுக்க கட்டுகதையை கூறி கொண்டிருந்தனர்..

ஊருக்குள் இப்ப என்ன நிலைமை என்று பார்த்து வர வெற்றியையும் இனியனையும் நிலவன் அனுப்பி விட, அவர்களும் எதுவும் தெரியாதது போல் சென்றனர்..

வேப்பங்குச்சியை வாயில் கடித்தவாறு இனியனுடன் பேசியவாறு வந்த வெற்றியை கண்டதும் தனக்கும் பேச ஆள் கிடைத்தது என்றெண்ணி முந்தானையை இடுப்பில் சொருகி வெடுக்கு வெடுக்கென இடுப்பை ஆட்டி கொண்டு வந்தது பல்லு போன கிழவி ஒன்னு..

"ஏன்யா வெற்றி.." என்று இவனை அழைக்க, அவனும் "ஹாய் ஸ்வீட்டி என்ன இந்த பக்கம்.. உன்னைய பார்க்க சாயந்தரம் வரலாம்னு இருந்தேன்.." என்று தோள் சுருங்கி போயிருந்த கன்னத்தை கிள்ளியவாறு கூறினான்..

அதிர்ந்த இனியன், "எதே ஸ்வீட்டியா? அடேய் பல்லு போன கிழவியை கூட விட மாட்டியா? பார்த்துடா இந்த கிழவியோட புருசன் ஆவியா வந்து உன்னைய புடிச்சர போகுது.." என்று வெற்றியின் காதை கடித்தான்..

ஆனால் வெற்றியோ அதனை கண்டு கொள்ளாமல் கிழவியின் தோள் மீது கையை போட்டு, "என்ன ஸ்வீட்டி காரணம் இல்லாம என்னைய தேடி வர மாட்டியே?" என்று கேட்க, கிழவியும் ஆர்வமாக, "இங்கன ஊருக்குள்ள நடக்கறது உன்ற கண்ணுக்கு தெரியலயா ராசா.." என்று கேட்டது பீடிகையுடன்..

வெற்றியும் இனியனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, "எனக்கு எதுவும் தெரியலே ஸ்வீட்டி அப்படி என்ன விசயம்.." என்று மும்மரமாக கேட்பதை போல் வெற்றியும் கேட்க, இதுதான் தனக்கும் வேண்டும் என்பதை போல் கிழவியும், "ஓடி போன அந்த நித்யா புள்ளயை பத்தி தான்யா.." என்றிட,

"அப்படியா? அப்படி என்ன விசயம்?" என்று ஆச்சரியமாக கேட்பதை போல் வெற்றி கேட்டதும், "அந்த கூறுகெட்டவ ரெண்டு பசங்களை தூக்கிட்டு ஓடிட்டாளாமா?" என்றது அந்த கிழவி இடுப்பை ஆட்டி கொண்டு..

அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்து கொண்ட இனியன் "அப்படினு உங்களுக்கு யாரு சொன்னா?" என்று கேட்க, கிழவியோ பதில் கூறாமல் அப்படியே நின்றிருக்க, இதழுக்குள் சிரிப்பை அடக்கிய வெற்றி, "மச்சான் நீ எவ்வளவு கத்தி கேட்டாலும் அந்த கிழவிக்கு நீ கேட்டது கேட்காது.." என்றிட,

புரியாமல் தலையை சொறிந்த இனியன், "ஏன்டா" என்று கேட்க, "அதுக்கு ஒரு காது அவுட்டு மச்சான்.. இந்த பக்கம் பேசுனா தான் கேட்கும்.." என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்..

ஏகத்துக்கும் கடுப்பான இனியன் கிழவியின் காதை பிடித்து, "இந்த இத்து போன காதை வெச்சுக்கிட்டு நீங்களே ஒரு கதையை கட்டி விட்டுட்டு இருக்கீங்களா? இனி இந்த மாதிரி பேசறதை கேட்டேன் தூக்கி கிணத்துல போட்டுருவேன்.." என்று மற்றொரு காதினுள் கத்தினான்..

வெடுக்கென அவனின் கையை தட்டி விட்ட கிழவி, "அடேய் பொசகட்ட பயலே நான் என்ன குமரியாடா? எம்மைய தூக்கிட்டு போறேனு சொல்றதுக்கு.. இந்த கட்டை என்ற வூட்டுக்காரருக்கு மட்டும்தான்.." என்று படபடவென பொரிந்து தள்ளிய கிழவியை பே வென்று பார்த்தான் இனியன்..

வெற்றியினால் தான் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்க, இனியனின் அனல் பார்வை தன்னை பொசுக்குவதை உணர்ந்து, "விடு விடு ஸ்வீட்டி மச்சானுக்கு பொண்ணு கிடைக்கலனு இந்த வயசுலயும் அழகா இருக்கற உனக்கு தூண்டில் போட்டுருப்பாரு.. நா அப்பறம் வந்து உன்கிட்ட இந்த கதையை கேட்கறேன்.. என்று கிழவியை சமாதானபடுத்தி அனுப்பி விட்டான்..

"எனக்கு பொண்ணு கிடைக்கலனு நீ பார்த்தீயாடா?" - இனியன்

"நான் அப்படி சொன்னதுல தான் அந்த கிழவி வெக்கப்பட்டு அமைதியா கிளம்புச்சு மச்சான்.." - வெற்றி

"கட்டுகதை கட்டுவாங்கனு தெரியும் அதுக்குனு இந்த அளவுக்கா மாப்ளை.." - இனியன்

"அட மச்சான்.. பக்கத்து வீட்டு கிழவிக நித்தியை ரெண்டு பசங்க தூக்கிட்டு போய்ட்டாங்கனு பேசிருப்பாங்க இந்த கிழவியோட காதுக்கு இவ ரெண்டு பசங்களை தூக்கிட்டு போய்ட்டானு கேட்டுருக்கும்.. அதான் இப்படி சொல்லிட்டு திரியுது.." - வெற்றி

"அது சரி.. என்னடா நீ பேசறது மட்டும் அந்த கிழவிக்கு நல்லாவே புரியது.." என்று தன் சந்தேகத்தை இனியன் வினவ, கெத்தாக சட்டை காலரை தூக்கி விட்ட வெற்றி "ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லி மச்சான்.." என்றிட, "அய்யோ அய்யோ என் தலைவரோட டையலாக்கை கேவலப்படுத்தறானே!" என்று இனியன் தலையில் அடித்து கொண்டான்..

வீட்டிற்கு வந்ததும் "ஒன்னும் சொல்றதுக்கு இல்ல மாப்ளை.." என்று நிலவனிடம் கூற, வெற்றியும் "ஆமா அண்ணா நித்யா தான் மனசை தளர விடாம வெச்சுக்கனும் வேற வழியும் இல்ல.." என்றான் கவலையுடன்..



தித்திக்கும்..

Thread 'தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments' https://www.sahaptham.com/community/threads/தித்திப்பாய்-ஓர்-சாரல்-comments.594/
 
Last edited:
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom