Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
அத்தியாயம் - 18
செழியனுக்கு அவர்களை பார்த்ததும் முதலில் மனதிற்குள் பலவிதமான குழப்பங்கள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. "யார் இவர்கள், இவர்களைப் பார்த்ததும் ஏன் நான் இன்றி தவிக்கின்றேன். ஏதோ ஒன்றை தேடி தவிக்கிறதே என் மனம்' என அவன் மனதிற்குள்ளேயே புலம்பித் தவித்து பிரசவ அறை வாசலில் நிற்கும் கணவனாய் ஆதினியின் வருகைக்காய் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே காத்திருந்தான்.
தங்களை மறந்து காதலின் மோன நிலையில் இருந்த உதயனும், ஆதினியும், தனசேகரனின் கைபேசி அழைப்பில் நடப்பிற்கு வந்திருக்க, ஆதினி வெட்கத்துடன் மெல்ல உதயனை விட்டு விலகினாள்.
"ஏய் என்னாச்சு, ப்ளீஸ் டீ" என்றவாறே அவள் கைப் பற்றி இழுத்தவனிடம்
"ரொம்ப நேரமாச்சு போகலாம்" என தலைகவிழ்ந்தவாறே பதிலளித்தவளை மேலும் சோதிக்க விரும்பாமல்
"ம் சரி வா போவோம்" என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு கீழே வர இருந்த புதியவர்களுடன் தனசேகரன் சிரித்து பேசிக் கொண்டிருக்க, செழியனோ ஆதினியைக் கண்டவுடன்
"ஆதூ.." என்றபடியே அவள் கைபற்ற, அவனது குழப்பமான முகத்தை கண்டவள் என்ன ஏதென்று தெரியவில்லை என்றாலும் அவளது கை அழுத்தத்திலேயே யாருமறியாமல் அவனைச் சமாதனப்படுத்தினாள்.
"என்ன மேன் வந்து ரொம்ப நேரம் ஆச்சு, இன்னும் காப்பி கூட சாப்பிடலேன்னு உன் மேல கம்ப்ளைன்ட் வருது.." என்று உதயனை கேட்ட தனசேகரனிடம்
"அதெல்லாம் இல்லை அங்கிள் ஆதினியை அழைச்சுட்டு போகலாம்னு நினைச்சேன் அவகிட்ட சொல்ல வந்தா அவ பாட்டுக்கு யார்கிட்டயும் இன்பார்ம் செய்யாம எஸ்டேட் என்டுக்கே போயிட்டா, அதான் டென்ஷன் ஆகிட்டேன்.." என்றவாறு வந்திருந்த புதியவர்களை கேள்வியோடு நோக்கியவாறு தனசேகரன் அருகில் அமர்ந்தான்.
"மீட் மிஸ்டர் சுப்ரமணியம் இவங்க அவர் மனைவி அன்னலட்சுமி சொந்த ஊர் காரைக்குடி. காரைக்குடியில் பெரிய நகைக்கடை இவர்களோடு தான் ஆன்ட்டியோட சொந்தம். அப்புறம் என்னோட காலேஜ் மேட்" என்று தனசேகரன் அவர்களை அறிமுகப்படுத்த
"ஹாய் அங்கிள் ஐ ஆம் உதயநந்தன் ஐபிஎஸ்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள
"இவங்க டாக்டர் ஆதினி" என்று ஆதினியை அறிமுகப்படுத்தினார் தனசேகரன்.
"வணக்கம் அங்கிள், வணக்கம்மா" என்றவளை பார்த்து சினேகமாய் புன்னகைத்த அந்த பெண்மணியின் பார்வை ஆதினியின் கையிலிருந்த ப்ரேலெட்டில் பதிய
"ஸ்ருதி..ஸ்ருதி" என்றவாறே தன் கணவரிடம் ஆதினையை நோக்கி கையை நீட்டியவாறே அவர் மயங்கி சரிய வினாடியில் அவ்விடம் பதற்றமாய் மாறியது.
அதிர்ச்சியில் எழுந்து நின்றவர் அப்படியே சரிந்திருக்க மற்றவர்கள் சுதாரிக்கும் முன் அவர் கீழே விழுந்தார்.
பதட்டத்துடன் சுப்பிரமணியம் அன்னம்.. அன்னம் என்று அவரை தூக்க முயல, அதற்குள் உதயனும் ஆதினியும் அருகே வர "அங்கிள் ரிலாக்ஸ் இருங்க.." என்றபடியே ஆதினி அவரை பரிசோதித்தவள்,
"நந்து பிடிங்க இவங்களை சோபால படுக்க வைக்கலாம்.." என்றபடியே ஆளுக்கு ஒருபுறமாக பிடித்து அவரை அருகிலிருந்த நீள்இருக்கையில் கிடத்தினர்.
"அங்கிள் இவங்களோட ரிப்போர்ட்ஸ் எதுவும் இருக்கா ப்ளீஸ் நான் பார்க்கணும் சுகர் பிரஷர் ஏதும் இருக்கா.." என ஒரு மருத்துவராக சுப்பிரமணியத்தை நோக்கி கேள்வி எழுப்ப
பதில் வந்ததோ செழியனிடமிருந்து "அவங்களுக்கு பிரஷர் இருக்கு அதுவும் பத்து வருஷமா அதற்கு மாத்திரை சாப்பிடுறாங்க.." என அவரைப் பார்த்தவாறே பதிலளிக்க திகைத்து அவனை நோக்கிய ஆதினி,
'என்ன சொல்கிறான் இவன்" என யோசிக்க அதே பதிலை சுப்ரமணியம் கூறியதும் மேலும் ஆச்சரியப்பட்டு அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மருத்துவராய் அவருக்கு தேவையான முதலுதவி செய்துவிட்டு நிமிர்ந்தவளின் கரத்தினை இறுகப் பற்றி இருந்தார் சுப்பிரமணியம்.
அதை கண்ட தனசேகரன் "சுப்பிரமணி என்னாச்சு.." என்று கேள்வி எழுப்ப அவரோ ஆதினியின் கையிலுள்ள பிரேஸ்லெட்டை பிடித்து
"இது உன் கைக்கு எப்படி வந்தது.." என்று எழுப்பிய கேள்வியில் உதயனின் போலீஸ் மூளை விழித்துக் கொண்டது.
தனசேகரன் இன்னும் சுப்பிரமணியன் கேள்வியால் குழப்பமாகி
"சுப்பு என்னடா விஷயம் ஏன் இப்படி கேக்குற.." என்று வினவ
அவரோ ஆதினியின் கையை விடாமல்
"சொல்லு இது உனக்கு எப்படி கெடச்சது எங்க என் பொண்ணு இந்த வைரத்துக்காக அவள கொன்னுடீங்களா.. பாவிங்களா என்கிட்ட கேட்டா எத்தனை லட்சம் வேணாலும் கொடுத்திருப்பேனே.. என் பொண்ணை என்ன செஞ்சீங்க.." என கதறி அழ சூழ்நிலை கடினமானதை உணர்ந்த உதயன்
"அங்கிள் ப்ளீஸ் அமைதியாக இருங்க.. உட்காருங்க என்ன நந்ததுன்னு நாம விசாரிக்கலாம்.." என அவரை சமாதானப்படுத்த முயன்றான்.
"ஒரு வருஷமா என் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னே தெரியாம தவிச்சிட்டு இருக்கேன். இதோ இங்கே கிடக்கிறாளே அவள பெத்தவ.. இந்த ஒரு வருசமா அவளோட அழுகையை கண்ணுல பார்க்கமுடியல தம்பி. பத்து வருஷமா குழந்தை இல்லாம அவ பிறந்தாப்பா.. ஒரு நாள் கூட அவளை விட்டு இருக்க மாட்டா. ஒரே பெண்பிள்ளை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து மகாராணி போல வளர்த்தோம்பா.. எங்க போனா என்ன ஆனா எதுவுமே தெரியாம கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி பைத்தியக்காரனா திரிகிறோமே.."
"என் பொண்ணு வெளிநாடு டூர் போனபோது நான் சொல்ல சொல்ல கேட்காமல் வாங்கிட்டு வந்ததது இந்த ப்ரேஸ்லெட். இப்போ இது இந்த பொண்ணு கையில எப்படி.." என்று அவர் மூச்சிரைக்க
உதயனுக்கு லேசாய் புரிபடத் தொடங்கியது. அவரிடம் மேலும் விசாரிக்க நினைத்தான்.
அதே நேரம் ஆதினி செழியனை நோக்க அவனோ அப்பெண்மணியின் அருகில் முழங்காலிட்டு அவரது கைகளை இறுகப் பற்றியபடி எங்கோ வெறித்து இருந்தான்.
மூச்சே நின்று விடும் போல இருந்தது ஆதினிக்கு. என்ன நடக்கிறது இவனைப் பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை இதில் இன்னொரு பெண்ணா அவளுடைய தான் இந்த பிரேஸ்லெடா.. இது இவனிடம் எப்படி.." என்று எண்ணியபடியே மெல்ல நகர்ந்து செழியனின் தோல் தொட எரியும் எரிமலை குழம்பாய் அவன் மேனி தகிக்க.. நெருப்பில் கைவைத்தவளாய் அதிர்ச்சியில்
"செழியா.." என அலறி பின்வாங்கி உதயன் மேல் மோதி சரிய அங்கே தன் முழு உயரத்திற்குமாய் ஆக்ரோஷத்துடன் எழுந்து நின்றான் செழியன்.
அவன் கண்களும் தேகமும் கோபத்தில் ஜுவாலையாய் மின்ன, கைகளும் தோள்களும் முறுக்கேறி அவனது கருத்த உடலில் வைரங்களாய் பளபளத்தது வியர்வை துளிகளா அல்லது அவனுள் எரியும் தீ ஜுவாலையின் ஒளிகளா என எண்ணும் அளவிற்கு உடலெல்லாம் மின்ன, மதுரை வீரனே நேரில் வந்தது போல் தெரிந்தான் ஆதினியின் கண்களுக்கு.
தன் மேல் சரிந்தவளை "ஆதினி என்ன" என்று அவளை தாங்கி பிடிக்க
"செழியனை தெரியுமா..? செழியனை தெரியுமா உனக்கு..? எங்க அவன் ? அவன் இங்கே இருந்தா என் பொண்ணு இங்கே இருக்கணுமே.. இருக்கானா.."என ஆதினியின் தோள்பற்றி சுப்பிரமணியம் உழுக்கி எடுக்க தனசேகரன் அவரை தடுத்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது
செழியன் தன்னை உணர்ந்து இருக்க வேண்டும் அதுவே அவனின் இந்த புதிய பரிமாணத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தவள் அவனிடம் பேச
முடியாமல் கலங்கினாள்.
மெல்ல அவளை எழுப்பி சமாதானப்படுத்திய உதயன் அவளிக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் "ஆதினி காம் டவுன் டோன்ட் ரியாக்ட்" என்று அவளை அமைதிப்படுத்த
"நந்து.. செழியன்.." என அவள் கண் கலங்குவதை உதயனால் பார்க்க முடியவில்லை. சுற்றம் மறந்து அவள் தோள் பற்றி "எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் இனிமேல் அவனுக்குக்கு ஒன்னும் ஆகப்போகிறது இல்லடி. உண்மை தெரியும் நேரம் வந்துடுச்சு. நான் அவரை விசாரிக்கிறேன். நீ செழியனை பாரு ஆனால் வெளியே
காட்டிக்காதே" என்று அவளை அமைதிப்படுத்தியவன், நேரே சுப்பிரமணியத்திடம் வர அவரோ தனசேகர் என்னிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
"செழியனை தெரிஞ்சிருந்தா நிச்சயம் ஸ்ருதியை தெரிஞ்சிருக்கும் டா தனா.. அந்த பொண்ணை விசாரிடா.. என் பொண்ணும் செழியனும் எங்கேன்னு கேளுடா" என கதறிக் கொண்டிருந்தார்.
அவர்கள் அருகே சென்ற உதயன் "அங்கிள் ஆதினி என் பாதுகாப்பில் இந்த வீட்ல இருக்குற பொண்ணு. அவள் உயிரை காப்பாற்ற தான் இங்கே பாதுகாப்பா தங்க வெச்சிருக்கோம். நாங்களும் செழியனை பற்றிய தகவல் தெரியுமான்னு தான் தேடிட்டு இருக்கோம். நீங்க சொல்ல போற தகவல் தான் எங்களுக்கு பல உண்மைகள் தெரிய வரும். ப்ளீஸ் வரீங்களா நாம கொஞ்சம் வெளியே தோட்டத்து பக்கம் போய் பேசலாம்.." என அவரை மெதுவாய் அழைத்துக்கொண்டு வெளியேற தனசெகரன் தன் மனைவிடம் அன்னத்தை பாரத்துக்கொள்ள செய்துவிட்டு அவரும் உதயனோடு இணைந்து கொண்டார்.
செழியனோ இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். ஆதினிக்கு அவனை நெருங்கவே அச்சம் பிறந்தது. ஆனாலும் என்ன நடந்தாலும் சரி என துணிந்தவளாய் செழியனின் தகித்த கரத்தினை பற்றினாள். உருகிக் கொண்டிருக்கும் இரும்பு குழம்பில் கை வைத்தது போல் இருந்தது அவன் கரம். அவளது கைகள் தீப்பட்டார் போல் எரிய, ஆனாலும் விடாப்பிடியாய் அவளது பிடியை தளர்த்தாமல் அவனை இழுத்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்குச் சென்று கதவை அடைத்தாள். அதுவரை தன் பிடியை தளர்த்தவில்லை அவள்.
கதவை தாழிட்டு திரும்பியவளை "ஆது.." என கதறியவாரே ஆக்ரோஷமாய் அணைத்து கதறி அழுதுவனை கண்டு பதறிப்போனாள். தகிக்கும் நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்தாள். ஆனாலும் செழியனின் கண்ணீருக்கு முன் அவளது துன்பம் கரைந்து காணாமல் போனது.
மெல்ல மெல்ல செழியனின் தகிப்பு தணிந்து அவனை சுற்றி சில்லென்ற இதமான குளிர் பரவத்தொடங்கியது. குழந்தையாய் தன் தோளில் சாய்ந்து அழுவது அவள் இறந்து போன ஒருவன் என்றெல்லாம் தோன்றவில்லை ஆதினிக்கு. அழும் குழந்தையை தேற்றும் தாயாய் மாறி போனாள் அவள்.
"செழியா.." என்றவாறு அவன் முதுகை தடவி சமாதானம் செய்தவள் செழியன் மேலிருந்த தகிப்பு குறைந்து சில்லென்ற இதமான குளிர் பரவுவதை உணர்ந்தவள் "டேய் கருவாயா.. கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்திட்டியே.." என சூழ்நிலையை சகஜமாக முயன்றவளின் சமாதானத்தில் தன்னிலை திரும்பினான் செழியன்.
அவளை விட்டு விலகியவன் "என்னை பெத்தவங்க யாருன்னு எனக்கு தெரியாது ஆது... நான் உன்னை என் அம்மாவா பார்க்கிறேன்.. எனக்கு கிடைச்ச தோழி நீ.. என்னோட அஜாக்கிரதையால ஏற்கனவே ஓர் உயிரை தொலைச்சிட்டேன்.. நிச்சயமா உன்னை தொலைச்சிட மாட்டேன். ஒர் அணுகூட என்னை மீறி உன்னை நெருங்காது. உன்னை தொடனும்னு எவன் நினைச்சாலும் அவன் உயிரோடு இருக்கமாட்டான்.." என்று அவன் கண்களில் மீண்டும் நெருப்புக் கனல்.
"செழியா என்னடா சொல்ற, ஏற்கனவே ஒரு உயிரா, அப்போ அவங்க சொன்ன.." என வார்த்தை வராமல் ஆதினி நிறுத்த
"ம்.. ஸ்ருதி " என்று அந்த பெயரை உச்சரிக்கும் போதே அவனுள் எழுந்த பெரும் துயரத்தைக் கண்டவள் நெஞ்சம் கலங்கிப் போனது.
ஸ்ருதி யார்...?
செழியன் யார்...?
தேடல் தொடரும்...
 
Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
தேடிப்பார்க்கிறேன் காற்றினிலே

அத்தியாயம்_ 19

கோவை மாவட்டம் மருதமலை ஆண்டவனே தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர் சுப்பிரமணியம் அன்னம் தம்பதியினர் இருள் கவியத் தொடங்கியிருந்த மாலை வேளையில் கார் பயணித்துக் கொண்டிருந்தது.

அன்னத்தின் கையில் பதினோரு மாத பெண் குழந்தை பயணத்திலும் கோவிலில் கூட்ட நெரிசலில் ஏற்கனவே வீறிட்டு அழுது கொண்டிருந்தது. அழுது கொண்டிருந்த குழந்தை ஜீரணமாகாமல் குடித்த பாலை எல்லாம் காரிலேயே வாந்தி எடுக்க பதறிப்போய் வாகனத்தை ஓரமாய் நிறுத்தச் சொன்னார் அன்னம்.

ஆம் குழந்தையின் சிறு சிறு அசைவு கூட பயந்துதான் போயிருந்தார் அன்னம். காலத்தின் கொடுமையோ அல்லது காலனின் கொடுமையோ பச்சை பிள்ளைகளாய் நான்கு சிசுக்களை பறிகொடுத்தவர் அன்னம். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு பின் தவமிருந்து பெற்றெடுத்த பெண் குழந்தையை பொக்கிஷமாய் கண்ணுக்குள் வைத்து பாதுகாத்தார்.

டிரைவரிடம் சொல்லி காரை ஓரமாய் நிறுத்திய சுப்ரமணியம்.
வீறிட்டு அழுது கொண்டிருந்தது குழந்தையை தன் கைகளில் வாங்கிக் கொண்டு காரை திறந்து வெளியே இறங்கி தண்ணீரை எடுத்து குழந்தையை சுத்தப்படுத்திவிட்டு காற்றோட்டமாக தோளில் இட்டு கட்டிக்கொடுத்து சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.

குழந்தையை தோளில் போட்டு மார்பையும், நெஞ்சையும் நீவி கொடுத்து சமாதானப்படுத்த.. கைகளை பிசைந்தவாறு கண்ணில் நீர் வடிய அன்னம் நின்றுகொண்டிருந்ததைக் கண்டவர்,

"என்ன அன்னம் குழந்தை அஜீரணத்தால் வாந்தி எடுத்திருக்கிறா.. இதுக்கெல்லாம் பதறி போவாங்களா ஒன்னும் இல்ல நம்ம புள்ளைக்கு, பயப்படாம இரு. அந்த முருகன் நம்மள கைவிடமாட்டான். நாலு பிள்ளைகளோடு ஆயுசையும் இவளுக்கு கொடுத்து நல்லபடியாக வாழ வைப்பான்.."என்று தன் மனைவியையும் சேர்த்து சமாதானப்படுத்தினார்.

இயற்கையின் காற்றிலும், தந்தையும் அணைப்பிலும் சமாதானமாகிய குழந்தை மெல்ல அழுகையை நிறுத்தி விசும்பியவாறே உறங்கிப் போனது.

குழந்தையின் அழுகை நின்றதும் கிளம்ப நினைத்தவர்களை எங்கோ தொலைவில் மற்றொரு குழந்தையின் அழுகுரல் கேட்க பதறிப் போயினர் இருவரும். ஏனெனில் ஆளரவமற்ற கிடக்கும் சாலையில் மனித நடமாட்டம் இல்லாமல் இருக்கும் இப்பகுதியில் எப்படி குழந்தையின் அழுகுரல் கேட்க முடியும் ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவர்கள் குரல் வந்த திசையை நோக்கி ஓடினர். சாலையிலிருந்து சற்று தொலைவில் மூன்று வயதே உடைய ஆண் குழந்தையொன்று வீரிட்டு அழுதபடி நின்று கொண்டிருந்து. சற்றே தள்ளி ஒரு ஆண் மயங்கிய நிலையில் கிடக்க வீறிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையை ஓடிச்சென்று வாரி எடுத்து அணைத்து கொண்டார் அன்னம்.

டிரைவரின் உதவியோடு மயங்கிகிடந்தவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய போது தான் தெரிந்தது சுப்ரமணியத்திற்கு விழுந்து கிடப்பது தன் தூரத்து சொந்தமான முருகானந்தம் என்பது.

"அன்னம் இது யாருன்னு தெரியுதா நம்ம முருகானந்தம் ..." என்று சுப்ரமணியம் பதட்டத்தோடு கூற

"யாரு... நம்ம சுப்பு அத்தாச்சி மகனா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போனாரே அவருங்களா... அச்சோ... அவரா இது என்னங்க இப்படி கெடக்குறாரு.." என்றவரின் அருகே வந்தவர் முகத்தை சுழித்தவாரே..

"என்னங்க சாராய வாடை அடிக்குது.. குடிச்சிருப்பாரு போலங்க ..." என்றவாறே அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானபடுத்தியவாரே
"ஏங்க கொழந்த பசில அழுது போல நான் போய் அவனுக்கு பசியாத்துறேன்.. நீங்க புள்ளய கொண்டாந்து கார்ல் படுக்க வெச்சிட்டு அப்புறம் வந்து இவுக பாப்பீகளாம்.." என்ற மனைவியின் வார்த்தைக்கு தலையாட்டிவிட்டு தங்களின் காருக்கு வந்து குழந்தையை பின் இருக்கையில் கிடத்த

"சரி டா தங்கம் அழதாட ... எஞ்சாமில்ல... அம்மா பால் தருவேனாம் சமத்துகுட்டி குடிச்சிப்பியாம்.." என்று இயல்பாய் அச்சிறுவனை கொஞ்சிய அன்னத்தை பார்த்து நெகிழ்ந்து போனார் சுப்ரமணியம். பிள்ளைகளை இழந்தவர் ஆயிற்றே அதனால் அச்சிறுவனை கண்டதும் அன்னிச்சையாய் அவரின் தாயுள்ளம் கசிந்தது.

அன்னம் சிறுவனின் பசியாற்ற ...முருகானந்தத்தின் முகத்தில் நீர் தெளித்து எழுப்ப முயன்று கொண்டிருந்த டிரைவரிடம் சென்றார் சுப்ரமணியம்.

இருவரும் சேர்ந்து அவரின் முகத்தில் தண்ணிரை தெளிக்க, மெல்ல ஒருவழியாய் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து பார்க்க மங்கலாய் தெரிந்த உருவம் கண்களுக்கு புலப்படவில்லை. தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தவருக்கு எதிரில் நிற்பவர் யாரென்று அடையாளம் தெரிந்து கண்களில் நீர் அவரை அறியாமல் குளம் கட்டியது.

"சுப்பு.." என்று தழுதழுத்தவரே தள்ளாடியபடி எழுந்தவரை தாங்கிக்கொண்டார் சுப்ரமணியம்.

"மொதல்ல வா நீ.... உனக்கேன்டா இந்த நிலைமை.... பச்சபுள்ளைய இப்படி ரோட்டுல அழவிட்டுட்டு கெடக்குறவன்..." என்று கடிந்து கொண்டவர் அவர் மறுத்தும் கேளாமல் அவர்களை அழைத்துக்கொண்டு ஊர் கிளம்பினார்.

பயணத்தின் இடையில் அவருடைய வாழ்க்கையை பற்றி கேட்ட சுப்பிரமணியத்துக்கு

"என்னோட முட்டாள்தனத்தினாலும், சந்தேக புத்தியாலும் என்னுடைய பொக்கிஷத்தை தொலைச்சிட்டேன் சுப்பு. இதுக்குமேல என்னை எதுவும் கேட்காதே.." என்ற முகத்தில் வித்துக் கொண்டு கதறியவரை சுப்பிரமணியத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

"ஏதோ நடந்திருக்கிறது அது என்னவென்று அவரா சொல்லும் மட்டும் நீங்க எதுவும் கேட்காதீங்க" என்று மெல்லிய குரலில் கணவரிடம் உரைத்த அன்னம்.

"குட்டி பையன் பெயர் என்ன அண்ணா" என்று பேச்சை திசை திருப்பினார்.

"இளஞ்செழியன் ம்மா.." என்றவர் இதற்கு மேலும் எந்த தகவலும் தன்னைப்பற்றி கொடுக்கவில்லை.

"ஓ இளஞ்செழியனா இவங்க பேரு.... செழியனா நீங்க.." என்றவாரே அச்சிறுவனை அணைத்துக்கொண்டார் அன்னம்.

தன் தாய் மற்றும் தம்பி என் குடும்பத்தாரோடு கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருந்தவர் சுப்பிரமணியன் முருகானந்தம் என்னதான் உறவு என்றாலும் செழியனை சுப்ரமணியமும் அன்னமும் தன் மகனாக ஏற்றுக்கொண்டது சுப்ரமணியத்தின் தம்பி சண்முகத்திற்கும் அவரின் மனைவி காயத்ரிக்கும் ஏனோ பிடிக்காமல் போனது.

சண்முகம் காயத்ரி தம்பதிகளுக்கு பனிரெண்டு வயதில் அசோக்குமார் என்ற மகனும், பத்து வயதில் கிஷோர்குமார் என்ற மகனும் இருந்தனர். என்னதான் செழியனை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த வீட்டின் மூத்த உறுப்பினரான சுப்பிரமணியத்தின் தாயார் ஆனந்தவல்லி நாச்சியாரின் பேச்சை ஒருவருமே மீறமுடியாது.

ஆனந்தவல்லி நாச்சியாரின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன்தான் முருகானந்தம். செல்வாக்காய் வாழ்ந்திருந்த குடும்பம் முருகானந்தத்தின் செய்கையால் சிதைந்து போயிருந்ததால் வருத்தத்தில் இருந்தவர், முருகானந்தத்தையும் அவர் குழந்தையையும் அரவணைத்துக் கொண்டார்.

முருகானந்தம் ஏற்கனவே உறவுக்கு உறவு, நட்புக்கு நட்பு என சிறுவயது முதல் வளர்ந்த சுப்ரமணியம், இப்பொழுது வீடு, தொழில் என அனைத்திலும் முருகானந்தத்தை தன்னோடு வைத்துக் கொண்டார்.

அன்னமோ தன் நான்கு பிள்ளைகளையும் ஒருங்கே கண்டது போல் செழியனை மகனாய் ஏற்றுக்கொண்டார். தாயை பிரிந்த செழியனும் தாய் பாசம் காட்டிய அன்னத்தோடு அம்மாவென ஒட்டிக்கொண்டான். தன் மகளை செழியனின் கைகளில் கொடுத்தவர்

"நான் உன்னைய பார்த்துப்பேனாம் நீ பாப்பாவை பார்த்துப்பியாம்.." என சொன்ன அவர் வார்த்தைகள் அந்த பிஞ்சின் நெஞ்சில் பசுமையாய் பதிந்து போனது.

செழியனுக்கு உறவில் மாமன் மகள் என்றாலும் அவளை சகோதரியாய், சிநேதியாய், தாயாய் தாங்கினான் செழியன் அவளின் ஆனந்த நாச்சியார் என்ற பெயரை தன் போக்கில் அவன் வாய்க்கு வந்த பெயராய் ஸ்ருதி என அவன் அழைக்க ஆரம்பிக்க அவளும் அப்பெயரோடே வளர ஆரம்பித்தாள்.

இரண்டு வயது இளையவள் என்றாலும் அவளை விட்டு போக மாட்டேன் என பள்ளி செல்ல அடம்பிடித்தவனையும் ஸ்ருதியையும் பிரிக்க இயலாமல் ஒரே நேரத்தில் இருவரையும் பள்ளியில் சேர்த்தார் சுப்பிரமணியம். இருவரும் ஒரே வகுப்பில் படிக்க ஆரம்பித்து கல்லூரி காலம் வரை இரட்டையர் ஆகவே வலம் வந்தனர்.

காலம் வேகமாய் உருண்டோடியது முருகானந்தம் அவ்வப்போது பல ஊர்கள் சென்று களைப்புடன் திரும்பி வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். என்னாயிற்று என்று கேட்போருக்கு பதில் ஓர் வெற்று பார்வையாய் உயிரற்று இருக்கும். ஊர் விடியலை அந்த உடலுமே உயிரற்று போனது. செழியனின் தாயாரைப் பற்றிய உண்மையும் அவரோடு சேர்ந்து புதைந்து போயிற்று.

அன்னத்தின் அன்பினால் தன் தாயைப் பற்றிய ஏக்கமும், சுப்பிரமணியத்தின் அரவணைப்பில் தந்தையின் பாசத்தையும் கண்டவன் முருகானந்தத்தின் இழப்போ தன் தாயைப் பற்றிய எண்ணங்களுமோ பெரிதாய் பாதிக்கவில்லை செழியனை. ஸ்ருதியின் நட்பும், அன்பும், பாசமும் அவனை கவசமாய் தாங்கியது.

செழியன் அன்பானவன் என்றால் ஸ்ருதி அவன்மீது பேரன்பானவள். அவனைப் பற்றி யாரும் எதுவும் சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு அசையக் கூட முடியாது உண்டு இல்லை என பார்த்து விடுவாள்.

ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வளர்ந்ததால் குழந்தைகளிடையே எந்த பாகுபாடும் இன்றியே வளர்த்தனர் பெரியவர்கள் மூவரும். இறைவனான சண்முகத்திற்கும், அவரது மனைவி காயத்ரிக்கும் எப்பொழுதுமே சிறு முகச் சுழிப்பு இருந்ததை அனைவரும் அறிந்ததே இருந்தனர்.

வளரும்போதே வீட்டில் செழியனை எப்போதும் மிரட்டுவதும், விரட்டுவதுமாய் இருக்கும் அண்ணன்களிடம் கூட செழியனை விட்டுக்கொடுக்க மாட்டாள் ஸ்ருதி.
தன்னை விட பத்து பன்னிரெண்டு வயது மூத்தவர்கள் என்றாலும் வீம்பாய் மல்லுக்கு நிற்பாள் செழியனுக்காக.. அதுவும் கூட ஆனந்தவல்லி நாச்சியாரின் கண்டிப்பினால் வளர வளர அவர்களும் செழியனோடு சுமுகமாகவே வளர ஆரம்பித்தனர்.

இருவரும்ஒரே விருப்பமாய் கல்லூரியின் ஆர்கிடெக்சர் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தனர். மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்று படிப்பேன் என ஸ்ருதி ஒற்றைக்காலில் நின்று அதையும் சாதித்துக் கொண்டாள்.

மேல் படிப்பிற்காக இருவரும் லண்டன் சென்று தங்களது படிப்பை தொடர்ந்தனர்.

அங்கேதான் அவர்களின் விதி விசித்திரமாய் விளையாட ஆரம்பித்தது. சிறுவயது முதலே அரியவகை கலைப் பொருட்கள், பழமையான கலைநயமிக்க பொருட்கள் என்றால் சுருதிக்கு ரொம்பவே விருப்பம் கலைப் பொருட்களின் கண்காட்சி, வேலை பாடுமிக்க நகைகளின் கண்காட்சி என எங்கே நடந்தாலும் அங்கே ஸ்ருதி தவறாமல் ஆஜராகி விடுவாள்.

அப்படி அவள் செல்லும் இடங்களில் அவளுக்கு பிடித்து வாங்கி குவித்த கலைநயமிக்க பொக்கிஷங்கள் ஏராளம் சுப்பிரமணியத்தின் வீடு முழுக்க அழகிய அரண்மனையாய் ஸ்ருதி தான் வாங்கிய பொருட்களை கொண்டு அலங்கரித்தருப்பாள்.

நகைகளின் கண்காட்சி என்றால் நுண்ணிய வேலைப்பாடு மிக்க வித்தியாசமான நகைகளை விரும்பி வாங்கி அணிந்து அழகு பார்ப்பாள் ஒற்றை பெண் என்பதாலும் நல்ல செல்வ செழிப்பு மிக்க குடும்பம் என்பதாலும் அவளின் இந்த போக்கிற்கு எப்பொழுதும் யாரும் தடை சொன்னதே இல்லை.

ஸ்ருதி அந்த பிளாக்டைமண்ட் ப்ரெஸ்லெட்டை வாங்கியதும் கூட அப்படித்தான். விடுமுறையின் போது வீடு வந்து ஸ்ருதியை இந்த கருப்பு வைரம் போடவே கூடாது என கண்டித்த தந்தையின் சொல்லுக்கும், தாயின் அன்புக்கும் கட்டுப்பட்டு கழற்றி தன் உடமைகளோடு வைத்தவள் மீண்டும் வெளிநாடு செல்ல விமானமேறியதுமே தன் கைகளில் அணிந்துக் கொண்டாள்.

ஆனால் அதுவே அவளுக்கு எமனாய் மாறிப் போகும் என யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

தேடல் தொடரும்...
 
Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே
அத்தியாயம் -20
நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்பதை காலம் நமக்கு ஒவ்வொரு முறையும் உணர்த்தியபடியே இருக்கின்றன. அப்படித்தான் உணர்த்திர்த்தியது ஆதினிக்கும், செழியனுக்கும்.
ஆதினியின் கண்கள் கலங்கி சிவந்திருந்தன. அதற்கு மேல் பேசமுடியாமல் செழியன் நிறுத்த அவனது கைகளை ஆறுதலாய் பற்ற அவளின் கைகளில் அணிந்திருந்த ப்ரேஸ்லேட் அவனது சருமத்தில் உரச அவளது கைகளைப் பற்றியவன் அக்கைகளை உயர்த்தி அந்த ப்ரேஸ்லெட்டை அதில் பார்வையை நிலைக்கவிட்டவன்
"இதை அவங்க கேட்டப்பவே குடுத்திருக்கலாமே ஸ்ருதி.. உன் பிடிவாதத்தினால இப்போ உன்னை இழந்து நிக்கறேனே.. அம்மா நாம ரெண்டு பேரும் இல்லாம என்ன கஷ்டப்படுறாங்க பாத்தியா.." என்று வினவியவனைப் பார்த்து கலங்கி நின்ற ஆதினியின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர்த்துளி அந்த கருப்பு வைரக்கல்லில் பட்டுத் தெறித்தது.
அதே நேரம் கதவு தட்டப்பட கண்களைத் துடைத்துக் கொண்ட ஆதினி செழியனின் கைகளை அழுத்தி ஆறுதல்படுத்தி எச்சரித்துவிட்டு சென்று கதவினைத் திறந்தாள்.
உதயன் தான் வந்தது. "அந்த அம்மா கண்விழிச்சிட்டாங்க நீ வந்து கொஞ்சம் பாக்கறியா சீரியஸ்ன்னா ஆஸ்பிடல் கொண்டு போய்டலாம்.." என்றவன் "ஸ்ருதியை பற்றி ஏதாவது தெரிஞ்சதா செழியன் சொன்னானா.." எனக் கேள்வி எழுப்ப
"இன்னும் முழுசா தெரியல நந்து.. இப்போ செழியனோட அம்மாவை பார்ப்போம். பிறகு பேசிக்கலாம்.." என்றவள் "செழியா நீயும் வா.." என்றபடியே அவள் கிழே செல்ல அவளை தொடர்ந்தனர் இருவரும்.
அன்னம் அங்கே அரற்றியபடி படுத்திருக்க அருகே வந்து அவரைச் சோதித்த ஆதினி. சுப்பரமணியத்திடமும், தனசேகரனிடமும் "அங்கிள் அவங்க கொஞ்சம் ஸ்டெரஸ்ஸா இருக்காங்க அதனால் பீபி அதிகமா இருக்கு. பக்கத்துல நல்ல ஹாஸ்பிடல் இருந்தா அங்கே அட்மிட் பண்ணலாம் அங்கிள் அதான் நல்லது." என்று கூற
நம்ம ஃபேமிலி டாக்டர்க்கு இன்பார்ம் பண்ணிருக்கேன்ம்மா இப்போ வந்துடுவார்‌. பக்கத்து எஸ்டேட் அவரோடு தான் அவர் வந்து பார்க்கட்டும் தேவைன்னா செஞ்சிக்கலாம் என்றவரிடம்
"சரிங்க அங்கிள்." என்றபடியே அவள் பார்வை அன்னத்தின் அருகே அமர்ந்து அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு அவரது தலையை ஆதரவாய் தடவிக்கொடுத்த செழியன் தட்டுபட்டான்.
அவன் அவரின் தலையைக் கோத கோத அவரின் கரங்களும் அவன் கரங்களை இறுகப் பற்றியது. "செழியா.. செழியா.." என் அவர் அரற்ற
நான் உன் பக்கத்துல தான்ம்மா இருக்கேன் தூங்கும்மா அமைதியா... என்று கண்ணீர் குரலில் கூற
"ஸ்ருதி... பாப்பா.."என் மீண்டும் அவர் அரற்ற
"நான் இருக்கேன்லம்மா நீ தூங்கும்மா அவளை நான் பாத்துக்குறேன்.." என்று உடைந்தே போனான். ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டு அன்னத்தின் கைகளையும் கால்களையும் பிடித்து விட அவரது அரற்றல் சற்றே குறைந்து சில நிமிடங்களில் அமைதியாய் உறங்களானார்.
அவர் உறங்கிய பத்து நிமிடங்களில் தனசேகர் கூறிய மருத்துவர் பத்மநாபனும் வந்துவிட அவர் அன்னத்தின் உடல் நிலையை பரிசோதித்தார். ஆதினி அவருக்கு தேவையான உதவிகளை செய்தபடி அவரின் கேள்விகளுக்கு பதிலளித்தபடி அவரின் பழைய மருத்துவ அறிக்கைகளை எடுத்துக் காட்டி கொண்டிருக்க
உதயன் அப்பொழுதான் கவனித்தான் செண்பாம்மாவை காணோமே ரொம்ப நேரமா என்பதை உணர்ந்தவன் அவரை தேடி சமையலறைச் செல்ல.. அங்கும் அவர் இல்லாதிருக்கவே அங்கிருந்த பணியாளை விசாரிக்க
"உங்களுக்குதான்ய்யா வெளியே டீ எடுத்துட்டு வந்தாங்க.." என்று கூறியதை கேட்டவன் குழப்பமுற்றான். டீயா நாங்க வெளியே போய் பேச ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேல ஆகிருக்குமே வரலயே எங்கே போயிருப்பாங்க என்று நினைத்தபடியே வெளியே வந்தவன் கீழே எல்லா அறைகளிலும் தேடிப் பார்க்க அவர் எங்கும் இல்லை. மீண்டும் அனைவரும் இருக்கும் வரவேற்பறைக்கு வந்து ஆதினி அருகே நின்றான்.
தனசேகர் இப்போ அவங்க இரத்தக்கொதிப்பு ஸ்டேபிள் ஆக ஆரம்பிச்சிருக்கு... இப்போதைக்கு ஆஸ்பிடல்ல சேர்க்க தேவை இல்லை. நான் சில மெடிசன்ஸ் தர்றேன். அதான் மிஸ். ஆதினி இருக்காங்களே அவங்களே பாரத்துக்குவாங்க. ஏதும் எமெர்ஜென்சின்னா கால் பண்ணுங்க. என்னென்ன மெடிசின் குடுக்கனும்னு ஆதினிக்கிட்ட இன்ஸ்டெரக்சன் குடுத்துட்டு போறேன். யூ டோண்ட் வொர்ரி. அவங்க ஸ்டெரஸ் இல்லாம நல்லா தூங்கி எழுந்தா சரியாய்டும். பட் மறுபடியும் மறுபடியும் அவங்களோட பீபி ஹை ஆனா டேஞ்சர் தான் சோ பாத்துக்கோங்க என்றவாரே ஆதினியிடம் தேவையான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் செண்பாம்மாவைத் தாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றவாரே 'நாம வரும் வரை செண்பாம்மா வரலயே எங்கே போனாங்க என்று அவன் போலீஸ் மூளை துரிதமாய் வேலை செய்தது'.
அங்கிருந்த சிமெண்ட் திண்டில் காப்பி கோப்பைகள் அடங்கிய தட்டு இருக்க அவனது மூளை இன்னும் வேகமாய் செயல்பட இடுப்பில் இருந்த துப்பாக்கியை தொட்டுப் பாத்துக் கொண்டவன் சுற்றிலும் அவரை தேடலானான். அங்கிருந்து சற்றுத் தள்ளி இருந்த செண்பகப்பூ மரத்தினடியில் துவண்டு அமர்ந்திருந்தவரை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவன் அவரை நெருங்கினான்.
அவன் அருகே வந்ததை கூட அறியாது அவரின் கண்கள் எங்கோ வெறித்திருக்க உதயன் அவரை தொட்டு உலுக்கி செண்பாம்மா என்னாச்சு ஏன் இங்கே வந்து இப்படி உக்காந்திருக்கீங்க என்னாச்சு..." என்றவனை நிமிர்ந்து நோக்கியவர்
"ஆதினி எங்க.. " என கேட்க
அவ உள்ளதான் இருக்கா நீங்க எழுந்து வாங்க என அவன் கைகொடுக்க தாங்கலாய் அவன் கையைப் பற்றியவனின் அவரது கரங்கள் நடுங்கவனை அவனால் உணரமுடிந்தது.
இங்கே நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்து பயந்துவிட்டார் போல பாவம் ஏற்கனவே ஆதினிக்கு நேரந்த பிரச்சினையில் கலங்கி நின்றவர் இப்பொழுது இங்கு நடப்பதை பார்த்து அதிர்ந்துவிட்டாரென நினைத்தவன் என்னாச்சும்மா ஏன் இப்படி உக்காந்துட்டீங்க.. உடம்புக்கு என்ன செய்து என கேட்டவாறே கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு சென்றவனை ஆதினி எதிர் கொண்டாள்.
"என்னாச்சு.. கைய புடிச்சு கூட்டிட்டு வர்றீங்க.. ஜிங்லி என அவரின் கைபற்றியவளிடம்
ஒன்னுமில்ல இங்க நடந்ததை பார்த்து ஷாக் ஆகிட்டாங்கன்னு நினைக்கிறேன். என்றவனை நிமிர்ந்து நோக்கியவள் செண்பாம்மாவை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைய அங்கே அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த அன்னத்தைக் கண்டவர் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் பெருக ஒன்றும் புரியவில்லை ஆதினிக்கும், உதயனுக்கும்.
ஜிங்லி என்னாச்சு ஏன் அழற ... அவங்களுக்கு ஒன்னுமில்ல ஊசி போட்ருக்கு தூங்குறாங்க அவ்வளவு தான் என்ற ஆதினியிடம் மேல நம்ம ரூம்ல என்னோட பை எடுத்துட்டுவா ஆது என குரல் நடுங்கக் கூற
ஒன்றும் புரியாமல் விழித்து நின்றவளிடம் போய் எடுத்துவா என் கண்களாலே உதயன் சைகை செய்ய, ஆதினி மாடிக்கு விரைந்தாள்.
அங்கிருந்த மற்றொரு இருக்கையில் செண்பாம்மாவை அமரவைத்து உதயனின் உள்ளுணர்வு எதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்த்தியது.
என்ன விசயமாயிருக்கும் என்பதை யூகிக்கமுடியவில்லை உதயனால். சில நிமிடங்களில் ஆதினி பையோடு வர அதற்குள் உதயன் அனைவருக்கும் குடிக்க பழச்சாறு கொண்டுவரச் செய்திருந்தான். பழச்சாற்றை வாங்கவும் மறுத்த செண்பாம்மாவை மெல்ல கெஞ்சி அச்சாறை பருகச் செய்திருந்தான்.
ஆதினியின் கைகளில் இருந்த பையை வாங்கி அதில் இருந்த அவரது புடவைகளை எடுத்துவிட்டு தேட மடித்து சுருட்டி வைக்கபட்டிருந்த பழைய பட்டுப் புடவையை கையில் எடுத்தவர் அதை விரிக்க அதில் சில நகைகளோடு இருந்த பொருட்களை கண்டு ஆதினிக்கே அதிர்ச்சி தான். இத்தனை ஆண்டாகளாய் ஆதினிகூட கண்டிதில்லை இவற்றை எல்லாம்.
அதில் இருந்த இரண்டு புகைப்படங்களை எடுத்தவர் நடுங்கும் கால்களை திடப்படுத்திக் கொண்டு சுப்ரமணியத்திடம் வந்தவர் இந்த படத்தில் இருக்கிறவங்க.... என அதற்கு மேல் வார்த்தை வராமல் நிறுத்த
அதை தன் கையில் வாங்கிப் கூர்ந்து பார்த்த சுப்ரமணியத்தின் விழிகள் கூர்மையானது.
"இது.. இது.. என தடுமாறியவர் இதெப்படி உங்ககைல இதுதான் செழயனோட அப்பா முருகானந்தமும் செழியனும்.." என்று கூற
"ஈஸ்வரா .." என மடிந்து விழப்போனவரை தாங்கிப்பிடித்தான் உதயன்.
செண்பாமமாவின் குரல் எழவில்லை கண்கள் மட்டும் கதறியது கண்ணீர் மாலை மாலையாய் கொட்டியது. மெல்ல அன்னத்தின் பக்கம் செழியன் அங்கே இருப்பதை உணர்ந்தவராக "செழியன் என்னோட புள்ள.." திராணியற்ற தனது வறண்ட குரலில் கூற
அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து நிற்க, செழியனோ அவரின் வார்த்தைகளை நம்பமுடியாமல் திகைத்தான். ஆனால் யார் கண்களுக்கு புலப்படாத அவனை ஆரம்பம் முதலே செண்ம்பாம்மா உணர்ந்தாரே.. இப்பொழுதும் அவனை யார் கண்களுக்கும் தெரியாது. ஆனால் செண்ம்பாம்மா அவன் இருப்பிடத்தை உணர்ந்து அன்னத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததைக் கண்டு அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
அய்யோ.. அப்படியானால் இவர்தான் என்னை பெற்றவரா.. தன்னை பெற்றவளைக் கண்டும் அவரோட மகிழ்ந்திருக்க முடியா தன் நிலையை வெறுத்தான் செழியன். ஏற்கனவே ஒருதாய் உணர்வற்று கிடக்கிறார். இப்பொழுது தான் பெற்ற மகனும் உயிரோடு இல்லை, தன் கணவனும் உயிரோடு இல்லை என்பதை அறியும் இத்தாயின் நிலை என்னாவாகும் சிந்திக்கவே இயலவில்லை செழியனால்.
அதிர்விலிருந்து மீண்ட சுப்ரமணியம் "என்னம்மா சொல்ற நீதான் செண்பகவல்லியா..?" என்று கேட்க
ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டியவள் இது அவங்களை விட்டு பிரியறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி எடுத்த போட்டோ என தன் கையில் இருந்த மற்றொரு புகைப்படத்தை சுப்பிரமணியத்திடம் நீட்டினார். அதில் இளம்வயதில் செண்பாம்மா தன் கணவர் மற்றும் மகனோடு எடுத்துக் கொண்ட புகைப்படம். சிறிய மகிழ்ச்சியான குடும்பம். ஆனால் அதில் செண்பகவல்லியிடம் இருந்த மகிழ்ச்சி முருகானந்தத்திடம் இல்லையென்றே தோன்றியது.
ஆண்டவா இதென்ன சோதனை இத்தனை வருடங்கள் கழித்து இந்த பெண் தன் கணவனையும், குழந்தையையும் இந்த நிலையிலா அறியவேண்டும். கணவன் உயிரோடு இல்லை. மகனின் நிலை என்னவென்றே தெரியாத நிலை. இப்படி ஒரு நிலை எந்த பெண்ணிற்கும் நேரக்கூடாது என இந்த சூழ்நிலையிலும் அவரின் இளகிய மனம் எண்ணி வருந்தியது.
நடக்கும் சூழ்நிலையால் அதிர்ச்சியில் இருக்கிறார் என நினைத்த உதயனுக்கு அவர்தான் செழியனை பெற்ற தாய் என்பதை அறிந்ததும் அவரின் மனநிலையை அவனால் அறிய முடிந்தது.
ஆதினியோ செழியன் செண்பாம்மாவின் மகனா..? இத்தனை வருடங்களாக தன்னை தாயாய் தாங்கியவரின் மகனா செழியன். அவனை காப்பாற்ற அவர் கையில் ஒப்படைக்க முடியாத பாவியாகிப் போனேனே என மருகி நின்றாள்.
தனசேகரனும், அவர் மனைவியும் எதுவும் புரியாத குழப்ப நிலையில் இருக்க
செழியன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அன்னத்தை விட்டு தடுமாறி நின்று தன்னையே நோக்கிக் கொண்டிருக்கும் செண்பாம்மாவிடம் வந்தான்.
ஆதினி இமைக்காமல் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க "ம்மா.. " என்று செழியன் அழைத்ததும்
அய்யோ எங்கண்ணே ... இப்படி பாக்கவா நான் உன்னை விட்டுட்டு போனேன் இந்த பாவி .. இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா எத்தனை பேரோடு சேர்த்து வெச்சு பேசிருந்தாலும் உன்னை கண்ணுக்குள்ள பொத்தி வெச்சி பார்த்திருந்திருப்பேனே... அய்யோ கடவுளே உனக்கு கண்ணே இல்லையா ... எம்புள்ளய ஆவியா பாத்த பாவியா நிக்கிறேனே ... என தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதவரைக் கண்டு ஆதினியைத் தவிர அத்தனை பேரும் உறைந்து நின்றனர்.

தேடல் தொடரும்....
 
Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
தேடிப்பார்க்கிறேன் காற்றினிலே

அத்தியாயம்_ 19

கோவை மாவட்டம் மருதமலை ஆண்டவனே தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர் சுப்பிரமணியம் அன்னம் தம்பதியினர் இருள் கவியத் தொடங்கியிருந்த மாலை வேளையில் கார் பயணித்துக் கொண்டிருந்தது.

அன்னத்தின் கையில் பதினோரு மாத பெண் குழந்தை பயணத்திலும் கோவிலில் கூட்ட நெரிசலில் ஏற்கனவே வீறிட்டு அழுது கொண்டிருந்தது. அழுது கொண்டிருந்த குழந்தை ஜீரணமாகாமல் குடித்த பாலை எல்லாம் காரிலேயே வாந்தி எடுக்க பதறிப்போய் வாகனத்தை ஓரமாய் நிறுத்தச் சொன்னார் அன்னம்.

ஆம் குழந்தையின் சிறு சிறு அசைவு கூட பயந்துதான் போயிருந்தார் அன்னம். காலத்தின் கொடுமையோ அல்லது காலனின் கொடுமையோ பச்சை பிள்ளைகளாய் நான்கு சிசுக்களை பறிகொடுத்தவர் அன்னம். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு பின் தவமிருந்து பெற்றெடுத்த பெண் குழந்தையை பொக்கிஷமாய் கண்ணுக்குள் வைத்து பாதுகாத்தார்.

டிரைவரிடம் சொல்லி காரை ஓரமாய் நிறுத்திய சுப்ரமணியம்.
வீறிட்டு அழுது கொண்டிருந்தது குழந்தையை தன் கைகளில் வாங்கிக் கொண்டு காரை திறந்து வெளியே இறங்கி தண்ணீரை எடுத்து குழந்தையை சுத்தப்படுத்திவிட்டு காற்றோட்டமாக தோளில் இட்டு தட்டிக்கொடுத்து சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.

குழந்தையை தோளில் போட்டு மார்பையும், நெஞ்சையும் நீவி கொடுத்து சமாதானப்படுத்த.. கைகளை பிசைந்தவாறு கண்ணில் நீர் வடிய அன்னம் நின்றுகொண்டிருந்ததைக் கண்டவர்,

"என்ன அன்னம் குழந்தை அஜீரணத்தால் வாந்தி எடுத்திருக்கா.. இதுக்கெல்லாம் பதறி போவாங்களா ஒன்னும் இல்ல நம்ம புள்ளைக்கு, பயப்படாம இரு. அந்த முருகன் நம்மள கைவிடமாட்டான். நாலு பிள்ளைகளோடு ஆயுசையும் இவளுக்கு கொடுத்து நல்லபடியாக வாழ வைப்பான்.."என்று தன் மனைவியையும் சேர்த்து சமாதானப்படுத்தினார்.

இயற்கையின் காற்றிலும், தந்தையும் அணைப்பிலும் சமாதானமாகிய குழந்தை மெல்ல அழுகையை நிறுத்தி விசும்பியவாறே உறங்கிப் போனது.

குழந்தையின் அழுகை நின்றதும் கிளம்ப நினைத்தவர்களை எங்கோ தொலைவில் மற்றொரு குழந்தையின் அழுகுரல் கேட்க பதறிப் போயினர் இருவரும். ஏனெனில் ஆளரவமற்று கிடக்கும் சாலையில் மனித நடமாட்டம் இல்லாமல் இருக்கும் இப்பகுதியில் எப்படி குழந்தையின் அழுகுரல் கேட்க முடியும் ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவர்கள் குரல் வந்த திசையை நோக்கி ஓடினர். சாலையிலிருந்து சற்று தொலைவில் மூன்று வயதே உடைய ஆண் குழந்தையொன்று வீரிட்டு அழுதபடி நின்று கொண்டிருந்து. சற்றே தள்ளி ஒரு ஆண் மயங்கிய நிலையில் கிடக்க வீறிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையை ஓடிச்சென்று வாரி எடுத்து அணைத்து கொண்டார் அன்னம்.

டிரைவரின் உதவியோடு மயங்கிகிடந்தவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய போது தான் தெரிந்தது சுப்ரமணியத்திற்கு விழுந்து கிடப்பது தன் தூரத்து சொந்தமான முருகானந்தம் என்பது.

"அன்னம் இது யாருன்னு தெரியுதா நம்ம முருகானந்தம் ..." என்று சுப்ரமணியம் பதட்டத்தோடு கூற

"யாரு... நம்ம சுப்பு அத்தாச்சி மகனா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போனாரே அவருங்களா... அச்சோ... அவரா இது என்னங்க இப்படி கெடக்குறாரு.." என்றவரின் அருகே வந்தவர் முகத்தை சுழித்தவாரே..

"என்னங்க சாராய வாடை அடிக்குது.. குடிச்சிருப்பாரு போலங்க ..." என்றவாறே அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானபடுத்தியவாரே
"ஏங்க கொழந்த பசில அழுது போல நான் போய் அவனுக்கு பசியாத்துறேன்.. நீங்க புள்ளய கொண்டாந்து கார்ல் படுக்க வெச்சிட்டு அப்புறம் வந்து இவுக பாப்பீகளாம்.." என்ற மனைவியின் வார்த்தைக்கு தலையாட்டிவிட்டு தங்களின் காருக்கு வந்து குழந்தையை பின் இருக்கையில் கிடத்த

"சரி டா தங்கம் அழதாட ... எஞ்சாமில்ல... அம்மா பால் தருவேனாம் சமத்துகுட்டி குடிச்சிப்பியாம்.." என்று இயல்பாய் அச்சிறுவனை கொஞ்சிய அன்னத்தை பார்த்து நெகிழ்ந்து போனார் சுப்ரமணியம். பிள்ளைகளை இழந்தவர் ஆயிற்றே அதனால் அச்சிறுவனை கண்டதும் அன்னிச்சையாய் அவரின் தாயுள்ளம் கசிந்தது.

அன்னம் சிறுவனின் பசியாற்ற ...முருகானந்தத்தின் முகத்தில் நீர் தெளித்து எழுப்ப முயன்று கொண்டிருந்த டிரைவரிடம் சென்றார் சுப்ரமணியம்.

இருவரும் சேர்ந்து அவரின் முகத்தில் தண்ணிரை தெளிக்க, மெல்ல ஒருவழியாய் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து பார்க்க மங்கலாய் தெரிந்த உருவம் கண்களுக்கு புலப்படவில்லை. தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தவருக்கு எதிரில் நிற்பவர் யாரென்று அடையாளம் தெரிந்து கண்களில் நீர் அவரை அறியாமல் குளம் கட்டியது.

"சுப்பு.." என்று தழுதழுத்தவரே தள்ளாடியபடி எழுந்தவரை தாங்கிக்கொண்டார் சுப்ரமணியம்.

"மொதல்ல வா நீ.... உனக்கேன்டா இந்த நிலைமை.... பச்சபுள்ளைய இப்படி ரோட்டுல அழவிட்டுட்டு கெடக்குறவன்..." என்று கடிந்து கொண்டவர் அவர் மறுத்தும் கேளாமல் அவர்களை அழைத்துக்கொண்டு ஊர் கிளம்பினார்.

பயணத்தின் இடையில் அவருடைய வாழ்க்கையை பற்றி கேட்ட சுப்பிரமணியத்துக்கு

"என்னோட முட்டாள்தனத்தினாலும், சந்தேக புத்தியாலும் என்னுடைய பொக்கிஷத்தை தொலைச்சிட்டேன் சுப்பு. இதுக்குமேல என்னை எதுவும் கேட்காதே.." என்ற முகத்தில் அறைந்து கொண்டு கதறியவரை சுப்பிரமணியத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

"ஏதோ நடந்திருக்கிறது அது என்னவென்று அவரா சொல்லும் மட்டும் நீங்க எதுவும் கேட்காதீங்க" என்று மெல்லிய குரலில் கணவரிடம் உரைத்த அன்னம்.

"குட்டி பையன் பெயர் என்ன அண்ணா" என்று பேச்சை திசை திருப்பினார்.

"இளஞ்செழியன் ம்மா.." என்றவர் இதற்கு மேலும் எந்த தகவலும் தன்னைப்பற்றி கொடுக்கவில்லை.

"ஓ இளஞ்செழியனா இவங்க பேரு.... செழியனா நீங்க.." என்றவாரே அச்சிறுவனை அணைத்துக்கொண்டார் அன்னம்.

தன் தாய் மற்றும் தம்பி என் குடும்பத்தாரோடு கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருந்தவர் சுப்பிரமணியன் முருகானந்தம் என்னதான் உறவு என்றாலும் செழியனை சுப்ரமணியமும் அன்னமும் தன் மகனாக ஏற்றுக்கொண்டது சுப்ரமணியத்தின் தம்பி சண்முகத்திற்கும் அவரின் மனைவி காயத்ரிக்கும் ஏனோ பிடிக்காமல் போனது.

சண்முகம் காயத்ரி தம்பதிகளுக்கு பனிரெண்டு வயதில் அசோக்குமார் என்ற மகனும், பத்து வயதில் கிஷோர்குமார் என்ற மகனும் இருந்தனர். என்னதான் செழியனை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த வீட்டின் மூத்த உறுப்பினரான சுப்பிரமணியத்தின் தாயார் ஆனந்தவல்லி நாச்சியாரின் பேச்சை ஒருவருமே மீறமுடியாது.

ஆனந்தவல்லி நாச்சியாரின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன்தான் முருகானந்தம். செல்வாக்காய் வாழ்ந்திருந்த குடும்பம் முருகானந்தத்தின் செய்கையால் சிதைந்து போயிருந்ததால் வருத்தத்தில் இருந்தவர், முருகானந்தத்தையும் அவர் குழந்தையையும் அரவணைத்துக் கொண்டார்.

முருகானந்தம் ஏற்கனவே உறவுக்கு உறவு, நட்புக்கு நட்பு என சிறுவயது முதல் வளர்ந்த சுப்ரமணியம், இப்பொழுது வீடு, தொழில் என அனைத்திலும் முருகானந்தத்தை தன்னோடு வைத்துக் கொண்டார்.

அன்னமோ தன் நான்கு பிள்ளைகளையும் ஒருங்கே கண்டது போல் செழியனை மகனாய் ஏற்றுக்கொண்டார். தாயை பிரிந்த செழியனும் தாய் பாசம் காட்டிய அன்னத்தோடு அம்மாவென ஒட்டிக்கொண்டான். தன் மகளை செழியனின் கைகளில் கொடுத்தவர்

"நான் உன்னைய பார்த்துப்பேனாம் நீ பாப்பாவை பார்த்துப்பியாம்.." என சொன்ன அவர் வார்த்தைகள் அந்த பிஞ்சின் நெஞ்சில் பசுமையாய் பதிந்து போனது.

செழியனுக்கு உறவில் மாமன் மகள் என்றாலும் அவளை சகோதரியாய், சிநேகிதியாய், தாயாய் தாங்கினான் செழியன். அவளின் ஆனந்த நாச்சியார் என்ற பெயரை தன் போக்கில் அவன் வாய்க்கு வந்த பெயராய் ஸ்ருதி என அவன் அழைக்க ஆரம்பிக்க அவளும் அப்பெயரோடே வளர ஆரம்பித்தாள்.

இரண்டு வயது இளையவள் என்றாலும் அவளை விட்டு போக மாட்டேன் என பள்ளி செல்ல அடம்பிடித்தவனையும் ஸ்ருதியையும் பிரிக்க இயலாமல் ஒரே நேரத்தில் இருவரையும் பள்ளியில் சேர்த்தார் சுப்பிரமணியம். இருவரும் ஒரே வகுப்பில் படிக்க ஆரம்பித்து கல்லூரி காலம் வரை இரட்டையர் ஆகவே வலம் வந்தனர்.

காலம் வேகமாய் உருண்டோடியது முருகானந்தம் அவ்வப்போது பல ஊர்கள் சென்று களைப்புடன் திரும்பி வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். என்னாயிற்று என்று கேட்போருக்கு பதில் ஓர் வெற்று பார்வையாய் உயிரற்று இருக்கும். ஒரு நாள் விடியலில் அந்த உடலுமே உயிரற்று போனது. செழியனின் தாயாரைப் பற்றிய உண்மையும் அவரோடு சேர்ந்து புதைந்து போயிற்று.

அன்னத்தின் அன்பினால் தன் தாயைப் பற்றிய ஏக்கமும், சுப்பிரமணியத்தின் அரவணைப்பில் தந்தையின் பாசத்தையும் கண்டவன் முருகானந்தத்தின் இழப்போ தன் தாயைப் பற்றிய எண்ணங்களுமோ பெரிதாய் பாதிக்கவில்லை செழியனை. ஸ்ருதியின் நட்பும், அன்பும், பாசமும் அவனை கவசமாய் தாங்கியது.

செழியன் அன்பானவன் என்றால் ஸ்ருதி அவன்மீது பேரன்பானவள். அவனைப் பற்றி யாரும் எதுவும் சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு அசையக் கூட முடியாது உண்டு இல்லை என பார்த்து விடுவாள்.

ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வளர்ந்ததால் குழந்தைகளிடையே எந்த பாகுபாடும் இன்றியே வளர்த்தனர் பெரியவர்கள் மூவரும். இளைவரான சண்முகத்திற்கும், அவரது மனைவி காயத்ரிக்கும் எப்பொழுதுமே சிறு முகச் சுழிப்பு இருந்ததை அனைவரும் அறிந்ததே இருந்தனர்.

வளரும்போதே வீட்டில் செழியனை எப்போதும் மிரட்டுவதும், விரட்டுவதுமாய் இருக்கும் அண்ணன்களிடம் கூட செழியனை விட்டுக்கொடுக்க மாட்டாள் ஸ்ருதி.
தன்னை விட பத்து பன்னிரெண்டு வயது மூத்தவர்கள் என்றாலும் வீம்பாய் மல்லுக்கு நிற்பாள் செழியனுக்காக.. அதுவும் கூட ஆனந்தவல்லி நாச்சியாரின் கண்டிப்பினால் வளர வளர அவர்களும் செழியனோடு சுமுகமாகவே வளர ஆரம்பித்தனர்.

இருவரும்ஒரே விருப்பமாய் கல்லூரியின் ஆர்கிடெக்சர் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தனர். மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்று படிப்பேன் என ஸ்ருதி ஒற்றைக்காலில் நின்று அதையும் சாதித்துக் கொண்டாள்.

மேல் படிப்பிற்காக இருவரும் லண்டன் சென்று தங்களது படிப்பை தொடர்ந்தனர்.

அங்கேதான் அவர்களின் விதி விசித்திரமாய் விளையாட ஆரம்பித்தது. சிறுவயது முதலே அரியவகை கலைப் பொருட்கள், பழமையான கலைநயமிக்க பொருட்கள் என்றால் சுருதிக்கு ரொம்பவே விருப்பம் கலைப் பொருட்களின் கண்காட்சி, வேலை பாடுமிக்க நகைகளின் கண்காட்சி என எங்கே நடந்தாலும் அங்கே ஸ்ருதி தவறாமல் ஆஜராகி விடுவாள்.

அப்படி அவள் செல்லும் இடங்களில் அவளுக்கு பிடித்து வாங்கி குவித்த கலைநயமிக்க பொக்கிஷங்கள் ஏராளம் சுப்பிரமணியத்தின் வீடு முழுக்க அழகிய அரண்மனையாய் ஸ்ருதி தான் வாங்கிய பொருட்களை கொண்டு அலங்கரித்திருப்பாள்.

நகைகளின் கண்காட்சி என்றால் நுண்ணிய வேலைப்பாடு மிக்க வித்தியாசமான நகைகளை விரும்பி வாங்கி அணிந்து அழகு பார்ப்பாள் ஒற்றை பெண் என்பதாலும் நல்ல செல்வ செழிப்பு மிக்க குடும்பம் என்பதாலும் அவளின் இந்த போக்கிற்கு எப்பொழுதும் யாரும் தடை சொன்னதே இல்லை.

ஸ்ருதி அந்த பிளாக்டைமண்ட் ப்ரெஸ்லெட்டை வாங்கியதும் கூட அப்படித்தான். விடுமுறையின் போது வீடு வந்து ஸ்ருதியை இந்த கருப்பு வைரம் போடவே கூடாது என கண்டித்த தந்தையின் சொல்லுக்கும், தாயின் அன்புக்கும் கட்டுப்பட்டு கழற்றி தன் உடமைகளோடு வைத்தவள் மீண்டும் வெளிநாடு செல்ல விமானமேறியதுமே தன் கைகளில் அணிந்துக் கொண்டாள்.

ஆனால் அதுவே அவளுக்கு எமனாய் மாறிப் போகும் என யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

தேடல் தொடரும்.....
 
Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
அத்தியாயம் - 18

செழியனுக்கு அவர்களை பார்த்ததும் முதலில் மனதிற்குள் பலவிதமான குழப்பங்கள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. "யார் இவர்கள், இவர்களைப் பார்த்ததும் ஏன் நான் இன்றி தவிக்கின்றேன். ஏதோ ஒன்றை தேடி தவிக்கிறதே என் மனம்' என அவன் மனதிற்குள்ளேயே புலம்பித் தவித்து பிரசவ அறை வாசலில் நிற்கும் கணவனாய் ஆதினியின் வருகைக்காய் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே காத்திருந்தான்.

தங்களை மறந்து காதலின் மோன நிலையில் இருந்த உதயனும், ஆதினியும், தனசேகரனின் கைபேசி அழைப்பில் நடப்பிற்கு வந்திருக்க, ஆதினி வெட்கத்துடன் மெல்ல உதயனை விட்டு விலகினாள்.

"ஏய் என்னாச்சு, ப்ளீஸ் டீ" என்றவாறே அவள் கைப் பற்றி இழுத்தவனிடம்

"ரொம்ப நேரமாச்சு போகலாம்" என தலைகவிழ்ந்தவாறே பதிலளித்தவளை மேலும் சோதிக்க விரும்பாமல்

"ம் சரி வா போவோம்" என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு கீழே வர இருந்த புதியவர்களுடன் தனசேகரன் சிரித்து பேசிக் கொண்டிருக்க, செழியனோ ஆதினியைக் கண்டவுடன்
"ஆதூ.." என்றபடியே அவள் கைபற்ற, அவனது குழப்பமான முகத்தை கண்டவள் என்ன ஏதென்று தெரியவில்லை என்றாலும் அவளது கை அழுத்தத்திலேயே யாருமறியாமல் அவனைச் சமாதனப்படுத்தினாள்.

"என்ன மேன் வந்து ரொம்ப நேரம் ஆச்சு, இன்னும் காப்பி கூட சாப்பிடலேன்னு உன் மேல கம்ப்ளைன்ட் வருது.." என்று உதயனை கேட்ட தனசேகரனிடம்

"அதெல்லாம் இல்லை அங்கிள் ஆதினியை அழைச்சுட்டு போகலாம்னு நினைச்சேன் அவகிட்ட சொல்ல வந்தா அவ பாட்டுக்கு யார்கிட்டயும் இன்பார்ம் செய்யாம எஸ்டேட் என்டுக்கே போயிட்டா, அதான் டென்ஷன் ஆகிட்டேன்.." என்றவாறு வந்திருந்த புதியவர்களை கேள்வியோடு நோக்கியவாறு தனசேகரன் அருகில் அமர்ந்தான்.

"மீட் மிஸ்டர் சுப்ரமணியம் இவங்க அவர் மனைவி அன்னலட்சுமி சொந்த ஊர் காரைக்குடி. காரைக்குடியில் பெரிய நகைக்கடை இவர்களோடு தான் ஆன்ட்டியோட சொந்தம். அப்புறம் என்னோட காலேஜ் மேட்" என்று தனசேகரன் அவர்களை அறிமுகப்படுத்த

"ஹாய் அங்கிள் ஐ ஆம் உதயநந்தன் ஐபிஎஸ்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள

"இவங்க டாக்டர் ஆதினி" என்று ஆதினியை அறிமுகப்படுத்தினார் தனசேகரன்.

"வணக்கம் அங்கிள், வணக்கம்மா" என்றவளை பார்த்து சினேகமாய் புன்னகைத்த அந்த பெண்மணியின் பார்வை ஆதினியின் கையிலிருந்த ப்ரேலெட்டில் பதிய

"ஸ்ருதி..ஸ்ருதி" என்றவாறே தன் கணவரிடம் ஆதினையை நோக்கி கையை நீட்டியவாறே அவர் மயங்கி சரிய வினாடியில் அவ்விடம் பதற்றமாய் மாறியது.

அதிர்ச்சியில் எழுந்து நின்றவர் அப்படியே சரிந்திருக்க மற்றவர்கள் சுதாரிக்கும் முன் அவர் கீழே விழுந்தார்.

பதட்டத்துடன் சுப்பிரமணியம் அன்னம்.. அன்னம் என்று அவரை தூக்க முயல, அதற்குள் உதயனும் ஆதினியும் அருகே வர "அங்கிள் ரிலாக்ஸ் இருங்க.." என்றபடியே ஆதினி அவரை பரிசோதித்தவள்,

"நந்து பிடிங்க இவங்களை சோபால படுக்க வைக்கலாம்.." என்றபடியே ஆளுக்கு ஒருபுறமாக பிடித்து அவரை அருகிலிருந்த நீள்இருக்கையில் கிடத்தினர்.

"அங்கிள் இவங்களோட ரிப்போர்ட்ஸ் எதுவும் இருக்கா ப்ளீஸ் நான் பார்க்கணும் சுகர் பிரஷர் ஏதும் இருக்கா.." என ஒரு மருத்துவராக சுப்பிரமணியத்தை நோக்கி கேள்வி எழுப்ப

பதில் வந்ததோ செழியனிடமிருந்து "அவங்களுக்கு பிரஷர் இருக்கு அதுவும் பத்து வருஷமா அதற்கு மாத்திரை சாப்பிடுறாங்க.." என அவரைப் பார்த்தவாறே பதிலளிக்க திகைத்து அவனை நோக்கிய ஆதினி,

'என்ன சொல்கிறான் இவன்" என யோசிக்க அதே பதிலை சுப்ரமணியம் கூறியதும் மேலும் ஆச்சரியப்பட்டு அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மருத்துவராய் அவருக்கு தேவையான முதலுதவி செய்துவிட்டு நிமிர்ந்தவளின் கரத்தினை இறுகப் பற்றி இருந்தார் சுப்பிரமணியம்.

அதை கண்ட தனசேகரன் "சுப்பிரமணி என்னாச்சு.." என்று கேள்வி எழுப்ப அவரோ ஆதினியின் கையிலுள்ள பிரேஸ்லெட்டை பிடித்து

"இது உன் கைக்கு எப்படி வந்தது.." என்று எழுப்பிய கேள்வியில் உதயனின் போலீஸ் மூளை விழித்துக் கொண்டது.
தனசேகரன் இன்னும் சுப்பிரமணியன் கேள்வியால் குழப்பமாகி

"சுப்பு என்னடா விஷயம் ஏன் இப்படி கேக்குற.." என்று வினவ
அவரோ ஆதினியின் கையை விடாமல்

"சொல்லு இது உனக்கு எப்படி கெடச்சது எங்க என் பொண்ணு இந்த வைரத்துக்காக அவள கொன்னுடீங்களா.. பாவிங்களா என்கிட்ட கேட்டா எத்தனை லட்சம் வேணாலும் கொடுத்திருப்பேனே.. என் பொண்ணை என்ன செஞ்சீங்க.." என கதறி அழ சூழ்நிலை கடினமானதை உணர்ந்த உதயன்

"அங்கிள் ப்ளீஸ் அமைதியாக இருங்க.. உட்காருங்க என்ன நந்ததுன்னு நாம விசாரிக்கலாம்.." என அவரை சமாதானப்படுத்த முயன்றான்.

"ஒரு வருஷமா என் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னே தெரியாம தவிச்சிட்டு இருக்கேன். இதோ இங்கே கிடக்கிறாளே அவள பெத்தவ.. இந்த ஒரு வருசமா அவளோட அழுகையை கண்ணுல பார்க்கமுடியல தம்பி. பத்து வருஷமா குழந்தை இல்லாம அவ பிறந்தாப்பா.. ஒரு நாள் கூட அவளை விட்டு இருக்க மாட்டா. ஒரே பெண்பிள்ளை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து மகாராணி போல வளர்த்தோம்பா.. எங்க போனா என்ன ஆனா எதுவுமே தெரியாம கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி பைத்தியக்காரனா திரிகிறோமே.."

"என் பொண்ணு வெளிநாடு டூர் போனபோது நான் சொல்ல சொல்ல கேட்காமல் வாங்கிட்டு வந்ததது இந்த ப்ரேஸ்லெட். இப்போ இது இந்த பொண்ணு கையில எப்படி.." என்று அவர் மூச்சிரைக்க

உதயனுக்கு லேசாய் புரிபடத் தொடங்கியது. அவரிடம் மேலும் விசாரிக்க நினைத்தான்.

அதே நேரம் ஆதினி செழியனை நோக்க அவனோ அப்பெண்மணியின் அருகில் முழங்காலிட்டு அவரது கைகளை இறுகப் பற்றியபடி எங்கோ வெறித்து இருந்தான்.

மூச்சே நின்று விடும் போல இருந்தது ஆதினிக்கு. என்ன நடக்கிறது இவனைப் பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை இதில் இன்னொரு பெண்ணா அவளுடைய தான் இந்த பிரேஸ்லெடா.. இது இவனிடம் எப்படி.." என்று எண்ணியபடியே மெல்ல நகர்ந்து செழியனின் தோல் தொட எரியும் எரிமலை குழம்பாய் அவன் மேனி தகிக்க.. நெருப்பில் கைவைத்தவளாய் அதிர்ச்சியில்

"செழியா.." என அலறி பின்வாங்கி உதயன் மேல் மோதி சரிய அங்கே தன் முழு உயரத்திற்குமாய் ஆக்ரோஷத்துடன் எழுந்து நின்றான் செழியன்.

அவன் கண்களும் தேகமும் கோபத்தில் ஜுவாலையாய் மின்ன, கைகளும் தோள்களும் முறுக்கேறி அவனது கருத்த உடலில் வைரங்களாய் பளபளத்தது வியர்வை துளிகளா அல்லது அவனுள் எரியும் தீ ஜுவாலையின் ஒளிகளா என எண்ணும் அளவிற்கு உடலெல்லாம் மின்ன, மதுரை வீரனே நேரில் வந்தது போல் தெரிந்தான் ஆதினியின் கண்களுக்கு.

தன் மேல் சரிந்தவளை "ஆதினி என்ன" என்று அவளை தாங்கி பிடிக்க

"செழியனை தெரியுமா..? செழியனை தெரியுமா உனக்கு..? எங்க அவன் ? அவன் இங்கே இருந்தா என் பொண்ணு இங்கே இருக்கணுமே.. இருக்கானா.."என ஆதினியின் தோள்பற்றி சுப்பிரமணியம் உழுக்கி எடுக்க தனசேகரன் அவரை தடுத்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது

செழியன் தன்னை உணர்ந்து இருக்க வேண்டும் அதுவே அவனின் இந்த புதிய பரிமாணத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தவள் அவனிடம் பேச
முடியாமல் கலங்கினாள்.

மெல்ல அவளை எழுப்பி சமாதானப்படுத்திய உதயன் அவளிக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் "ஆதினி காம் டவுன் டோன்ட் ரியாக்ட்" என்று அவளை அமைதிப்படுத்த

"நந்து.. செழியன்.." என அவள் கண் கலங்குவதை உதயனால் பார்க்க முடியவில்லை. சுற்றம் மறந்து அவள் தோள் பற்றி "எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் இனிமேல் அவனுக்குக்கு ஒன்னும் ஆகப்போகிறது இல்லடி. உண்மை தெரியும் நேரம் வந்துடுச்சு. நான் அவரை விசாரிக்கிறேன். நீ செழியனை பாரு ஆனால் வெளியே
காட்டிக்காதே" என்று அவளை அமைதிப்படுத்தியவன், நேரே சுப்பிரமணியத்திடம் வர அவரோ தனசேகர் என்னிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

"செழியனை தெரிஞ்சிருந்தா நிச்சயம் ஸ்ருதியை தெரிஞ்சிருக்கும் டா தனா.. அந்த பொண்ணை விசாரிடா.. என் பொண்ணும் செழியனும் எங்கேன்னு கேளுடா" என கதறிக் கொண்டிருந்தார்.

அவர்கள் அருகே சென்ற உதயன் "அங்கிள் ஆதினி என் பாதுகாப்பில் இந்த வீட்ல இருக்குற பொண்ணு. அவள் உயிரை காப்பாற்ற தான் இங்கே பாதுகாப்பா தங்க வெச்சிருக்கோம். நாங்களும் செழியனை பற்றிய தகவல் தெரியுமான்னு தான் தேடிட்டு இருக்கோம். நீங்க சொல்ல போற தகவல் தான் எங்களுக்கு பல உண்மைகள் தெரிய வரும். ப்ளீஸ் வரீங்களா நாம கொஞ்சம் வெளியே தோட்டத்து பக்கம் போய் பேசலாம்.." என அவரை மெதுவாய் அழைத்துக்கொண்டு வெளியேற தனசெகரன் தன் மனைவிடம் அன்னத்தை பாரத்துக்கொள்ள செய்துவிட்டு அவரும் உதயனோடு இணைந்து கொண்டார்.

செழியனோ இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். ஆதினிக்கு அவனை நெருங்கவே அச்சம் பிறந்தது. ஆனாலும் என்ன நடந்தாலும் சரி என துணிந்தவளாய் செழியனின் தகித்த கரத்தினை பற்றினாள். உருகிக் கொண்டிருக்கும் இரும்பு குழம்பில் கை வைத்தது போல் இருந்தது அவன் கரம். அவளது கைகள் தீப்பட்டார் போல் எரிய, ஆனாலும் விடாப்பிடியாய் அவளது பிடியை தளர்த்தாமல் அவனை இழுத்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்குச் சென்று கதவை அடைத்தாள். அதுவரை தன் பிடியை தளர்த்தவில்லை அவள்.

கதவை தாழிட்டு திரும்பியவளை "ஆது.." என கதறியவாரே ஆக்ரோஷமாய் அணைத்து கதறி அழுதுவனை கண்டு பதறிப்போனாள். தகிக்கும் நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்தாள். ஆனாலும் செழியனின் கண்ணீருக்கு முன் அவளது துன்பம் கரைந்து காணாமல் போனது.

மெல்ல மெல்ல செழியனின் தகிப்பு தணிந்து அவனை சுற்றி சில்லென்ற இதமான குளிர் பரவத்தொடங்கியது. குழந்தையாய் தன் தோளில் சாய்ந்து அழுவது அவள் இறந்து போன ஒருவன் என்றெல்லாம் தோன்றவில்லை ஆதினிக்கு. அழும் குழந்தையை தேற்றும் தாயாய் மாறி போனாள் அவள்.

"செழியா.." என்றவாறு அவன் முதுகை தடவி சமாதானம் செய்தவள் செழியன் மேலிருந்த தகிப்பு குறைந்து சில்லென்ற இதமான குளிர் பரவுவதை உணர்ந்தவள் "டேய் கருவாயா.. கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்திட்டியே.." என சூழ்நிலையை சகஜமாக முயன்றவளின் சமாதானத்தில் தன்னிலை திரும்பினான் செழியன்.

அவளை விட்டு விலகியவன் "என்னை பெத்தவங்க யாருன்னு எனக்கு தெரியாது ஆது... நான் உன்னை என் அம்மாவா பார்க்கிறேன்.. எனக்கு கிடைச்ச தோழி நீ.. என்னோட அஜாக்கிரதையால ஏற்கனவே ஓர் உயிரை தொலைச்சிட்டேன்.. நிச்சயமா உன்னை தொலைச்சிட மாட்டேன். ஒர் அணுகூட என்னை மீறி உன்னை நெருங்காது. உன்னை தொடனும்னு எவன் நினைச்சாலும் அவன் உயிரோடு இருக்கமாட்டான்.." என்று அவன் கண்களில் மீண்டும் நெருப்புக் கனல்.

"செழியா என்னடா சொல்ற, ஏற்கனவே ஒரு உயிரா, அப்போ அவங்க சொன்ன.." என வார்த்தை வராமல் ஆதினி நிறுத்த

"ம்.. ஸ்ருதி " என்று அந்த பெயரை உச்சரிக்கும் போதே அவனுள் எழுந்த பெரும் துயரத்தைக் கண்டவள் நெஞ்சம் கலங்கிப் போனது.

ஸ்ருதி யார்...?
செழியன் யார்...?
 
Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18

தேடிப்பார்க்கிறேன் காற்றினிலே

அத்தியாயம்_ 19

கோவை மாவட்டம் மருதமலை ஆண்டவனே தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர் சுப்பிரமணியம் அன்னம் தம்பதியினர் இருள் கவியத் தொடங்கியிருந்த மாலை வேளையில் கார் பயணித்துக் கொண்டிருந்தது.

அன்னத்தின் கையில் பதினோரு மாத பெண் குழந்தை பயணத்திலும் கோவிலில் கூட்ட நெரிசலில் ஏற்கனவே வீறிட்டு அழுது கொண்டிருந்தது. அழுது கொண்டிருந்த குழந்தை ஜீரணமாகாமல் குடித்த பாலை எல்லாம் காரிலேயே வாந்தி எடுக்க பதறிப்போய் வாகனத்தை ஓரமாய் நிறுத்தச் சொன்னார் அன்னம்.

ஆம் குழந்தையின் சிறு சிறு அசைவு கூட பயந்துதான் போயிருந்தார் அன்னம். காலத்தின் கொடுமையோ அல்லது காலனின் கொடுமையோ பச்சை பிள்ளைகளாய் நான்கு சிசுக்களை பறிகொடுத்தவர் அன்னம். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு பின் தவமிருந்து பெற்றெடுத்த பெண் குழந்தையை பொக்கிஷமாய் கண்ணுக்குள் வைத்து பாதுகாத்தார்.

டிரைவரிடம் சொல்லி காரை ஓரமாய் நிறுத்திய சுப்ரமணியம்.
வீறிட்டு அழுது கொண்டிருந்தது குழந்தையை தன் கைகளில் வாங்கிக் கொண்டு காரை திறந்து வெளியே இறங்கி தண்ணீரை எடுத்து குழந்தையை சுத்தப்படுத்திவிட்டு காற்றோட்டமாக தோளில் இட்டு தட்டிக்கொடுத்து சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.

குழந்தையை தோளில் போட்டு மார்பையும், நெஞ்சையும் நீவி கொடுத்து சமாதானப்படுத்த.. கைகளை பிசைந்தவாறு கண்ணில் நீர் வடிய அன்னம் நின்றுகொண்டிருந்ததைக் கண்டவர்,

"என்ன அன்னம் குழந்தை அஜீரணத்தால் வாந்தி எடுத்திருக்கா.. இதுக்கெல்லாம் பதறி போவாங்களா ஒன்னும் இல்ல நம்ம புள்ளைக்கு, பயப்படாம இரு. அந்த முருகன் நம்மள கைவிடமாட்டான். நாலு பிள்ளைகளோடு ஆயுசையும் இவளுக்கு கொடுத்து நல்லபடியாக வாழ வைப்பான்.."என்று தன் மனைவியையும் சேர்த்து சமாதானப்படுத்தினார்.

இயற்கையின் காற்றிலும், தந்தையும் அணைப்பிலும் சமாதானமாகிய குழந்தை மெல்ல அழுகையை நிறுத்தி விசும்பியவாறே உறங்கிப் போனது.

குழந்தையின் அழுகை நின்றதும் கிளம்ப நினைத்தவர்களை எங்கோ தொலைவில் மற்றொரு குழந்தையின் அழுகுரல் கேட்க பதறிப் போயினர் இருவரும். ஏனெனில் ஆளரவமற்று கிடக்கும் சாலையில் மனித நடமாட்டம் இல்லாமல் இருக்கும் இப்பகுதியில் எப்படி குழந்தையின் அழுகுரல் கேட்க முடியும் ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவர்கள் குரல் வந்த திசையை நோக்கி ஓடினர். சாலையிலிருந்து சற்று தொலைவில் மூன்று வயதே உடைய ஆண் குழந்தையொன்று வீரிட்டு அழுதபடி நின்று கொண்டிருந்து. சற்றே தள்ளி ஒரு ஆண் மயங்கிய நிலையில் கிடக்க வீறிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையை ஓடிச்சென்று வாரி எடுத்து அணைத்து கொண்டார் அன்னம்.

டிரைவரின் உதவியோடு மயங்கிகிடந்தவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய போது தான் தெரிந்தது சுப்ரமணியத்திற்கு விழுந்து கிடப்பது தன் தூரத்து சொந்தமான முருகானந்தம் என்பது.

"அன்னம் இது யாருன்னு தெரியுதா நம்ம முருகானந்தம் ..." என்று சுப்ரமணியம் பதட்டத்தோடு கூற

"யாரு... நம்ம சுப்பு அத்தாச்சி மகனா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போனாரே அவருங்களா... அச்சோ... அவரா இது என்னங்க இப்படி கெடக்குறாரு.." என்றவரின் அருகே வந்தவர் முகத்தை சுழித்தவாரே..

"என்னங்க சாராய வாடை அடிக்குது.. குடிச்சிருப்பாரு போலங்க ..." என்றவாறே அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானபடுத்தியவாரே
"ஏங்க கொழந்த பசில அழுது போல நான் போய் அவனுக்கு பசியாத்துறேன்.. நீங்க புள்ளய கொண்டாந்து கார்ல் படுக்க வெச்சிட்டு அப்புறம் வந்து இவுக பாப்பீகளாம்.." என்ற மனைவியின் வார்த்தைக்கு தலையாட்டிவிட்டு தங்களின் காருக்கு வந்து குழந்தையை பின் இருக்கையில் கிடத்த

"சரி டா தங்கம் அழதாட ... எஞ்சாமில்ல... அம்மா பால் தருவேனாம் சமத்துகுட்டி குடிச்சிப்பியாம்.." என்று இயல்பாய் அச்சிறுவனை கொஞ்சிய அன்னத்தை பார்த்து நெகிழ்ந்து போனார் சுப்ரமணியம். பிள்ளைகளை இழந்தவர் ஆயிற்றே அதனால் அச்சிறுவனை கண்டதும் அன்னிச்சையாய் அவரின் தாயுள்ளம் கசிந்தது.

அன்னம் சிறுவனின் பசியாற்ற ...முருகானந்தத்தின் முகத்தில் நீர் தெளித்து எழுப்ப முயன்று கொண்டிருந்த டிரைவரிடம் சென்றார் சுப்ரமணியம்.

இருவரும் சேர்ந்து அவரின் முகத்தில் தண்ணிரை தெளிக்க, மெல்ல ஒருவழியாய் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து பார்க்க மங்கலாய் தெரிந்த உருவம் கண்களுக்கு புலப்படவில்லை. தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தவருக்கு எதிரில் நிற்பவர் யாரென்று அடையாளம் தெரிந்து கண்களில் நீர் அவரை அறியாமல் குளம் கட்டியது.

"சுப்பு.." என்று தழுதழுத்தவரே தள்ளாடியபடி எழுந்தவரை தாங்கிக்கொண்டார் சுப்ரமணியம்.

"மொதல்ல வா நீ.... உனக்கேன்டா இந்த நிலைமை.... பச்சபுள்ளைய இப்படி ரோட்டுல அழவிட்டுட்டு கெடக்குறவன்..." என்று கடிந்து கொண்டவர் அவர் மறுத்தும் கேளாமல் அவர்களை அழைத்துக்கொண்டு ஊர் கிளம்பினார்.

பயணத்தின் இடையில் அவருடைய வாழ்க்கையை பற்றி கேட்ட சுப்பிரமணியத்துக்கு

"என்னோட முட்டாள்தனத்தினாலும், சந்தேக புத்தியாலும் என்னுடைய பொக்கிஷத்தை தொலைச்சிட்டேன் சுப்பு. இதுக்குமேல என்னை எதுவும் கேட்காதே.." என்ற முகத்தில் அறைந்து கொண்டு கதறியவரை சுப்பிரமணியத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

"ஏதோ நடந்திருக்கிறது அது என்னவென்று அவரா சொல்லும் மட்டும் நீங்க எதுவும் கேட்காதீங்க" என்று மெல்லிய குரலில் கணவரிடம் உரைத்த அன்னம்.

"குட்டி பையன் பெயர் என்ன அண்ணா" என்று பேச்சை திசை திருப்பினார்.

"இளஞ்செழியன் ம்மா.." என்றவர் இதற்கு மேலும் எந்த தகவலும் தன்னைப்பற்றி கொடுக்கவில்லை.

"ஓ இளஞ்செழியனா இவங்க பேரு.... செழியனா நீங்க.." என்றவாரே அச்சிறுவனை அணைத்துக்கொண்டார் அன்னம்.

தன் தாய் மற்றும் தம்பி என் குடும்பத்தாரோடு கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருந்தவர் சுப்பிரமணியன் முருகானந்தம் என்னதான் உறவு என்றாலும் செழியனை சுப்ரமணியமும் அன்னமும் தன் மகனாக ஏற்றுக்கொண்டது சுப்ரமணியத்தின் தம்பி சண்முகத்திற்கும் அவரின் மனைவி காயத்ரிக்கும் ஏனோ பிடிக்காமல் போனது.

சண்முகம் காயத்ரி தம்பதிகளுக்கு பனிரெண்டு வயதில் அசோக்குமார் என்ற மகனும், பத்து வயதில் கிஷோர்குமார் என்ற மகனும் இருந்தனர். என்னதான் செழியனை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த வீட்டின் மூத்த உறுப்பினரான சுப்பிரமணியத்தின் தாயார் ஆனந்தவல்லி நாச்சியாரின் பேச்சை ஒருவருமே மீறமுடியாது.

ஆனந்தவல்லி நாச்சியாரின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன்தான் முருகானந்தம். செல்வாக்காய் வாழ்ந்திருந்த குடும்பம் முருகானந்தத்தின் செய்கையால் சிதைந்து போயிருந்ததால் வருத்தத்தில் இருந்தவர், முருகானந்தத்தையும் அவர் குழந்தையையும் அரவணைத்துக் கொண்டார்.

முருகானந்தம் ஏற்கனவே உறவுக்கு உறவு, நட்புக்கு நட்பு என சிறுவயது முதல் வளர்ந்த சுப்ரமணியம், இப்பொழுது வீடு, தொழில் என அனைத்திலும் முருகானந்தத்தை தன்னோடு வைத்துக் கொண்டார்.

அன்னமோ தன் நான்கு பிள்ளைகளையும் ஒருங்கே கண்டது போல் செழியனை மகனாய் ஏற்றுக்கொண்டார். தாயை பிரிந்த செழியனும் தாய் பாசம் காட்டிய அன்னத்தோடு அம்மாவென ஒட்டிக்கொண்டான். தன் மகளை செழியனின் கைகளில் கொடுத்தவர்

"நான் உன்னைய பார்த்துப்பேனாம் நீ பாப்பாவை பார்த்துப்பியாம்.." என சொன்ன அவர் வார்த்தைகள் அந்த பிஞ்சின் நெஞ்சில் பசுமையாய் பதிந்து போனது.

செழியனுக்கு உறவில் மாமன் மகள் என்றாலும் அவளை சகோதரியாய், சிநேகிதியாய், தாயாய் தாங்கினான் செழியன். அவளின் ஆனந்த நாச்சியார் என்ற பெயரை தன் போக்கில் அவன் வாய்க்கு வந்த பெயராய் ஸ்ருதி என அவன் அழைக்க ஆரம்பிக்க அவளும் அப்பெயரோடே வளர ஆரம்பித்தாள்.

இரண்டு வயது இளையவள் என்றாலும் அவளை விட்டு போக மாட்டேன் என பள்ளி செல்ல அடம்பிடித்தவனையும் ஸ்ருதியையும் பிரிக்க இயலாமல் ஒரே நேரத்தில் இருவரையும் பள்ளியில் சேர்த்தார் சுப்பிரமணியம். இருவரும் ஒரே வகுப்பில் படிக்க ஆரம்பித்து கல்லூரி காலம் வரை இரட்டையர் ஆகவே வலம் வந்தனர்.

காலம் வேகமாய் உருண்டோடியது முருகானந்தம் அவ்வப்போது பல ஊர்கள் சென்று களைப்புடன் திரும்பி வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். என்னாயிற்று என்று கேட்போருக்கு பதில் ஓர் வெற்று பார்வையாய் உயிரற்று இருக்கும். ஒரு நாள் விடியலில் அந்த உடலுமே உயிரற்று போனது. செழியனின் தாயாரைப் பற்றிய உண்மையும் அவரோடு சேர்ந்து புதைந்து போயிற்று.

அன்னத்தின் அன்பினால் தன் தாயைப் பற்றிய ஏக்கமும், சுப்பிரமணியத்தின் அரவணைப்பில் தந்தையின் பாசத்தையும் கண்டவன் முருகானந்தத்தின் இழப்போ தன் தாயைப் பற்றிய எண்ணங்களுமோ பெரிதாய் பாதிக்கவில்லை செழியனை. ஸ்ருதியின் நட்பும், அன்பும், பாசமும் அவனை கவசமாய் தாங்கியது.

செழியன் அன்பானவன் என்றால் ஸ்ருதி அவன்மீது பேரன்பானவள். அவனைப் பற்றி யாரும் எதுவும் சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு அசையக் கூட முடியாது உண்டு இல்லை என பார்த்து விடுவாள்.

ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வளர்ந்ததால் குழந்தைகளிடையே எந்த பாகுபாடும் இன்றியே வளர்த்தனர் பெரியவர்கள் மூவரும். இளைவரான சண்முகத்திற்கும், அவரது மனைவி காயத்ரிக்கும் எப்பொழுதுமே சிறு முகச் சுழிப்பு இருந்ததை அனைவரும் அறிந்ததே இருந்தனர்.

வளரும்போதே வீட்டில் செழியனை எப்போதும் மிரட்டுவதும், விரட்டுவதுமாய் இருக்கும் அண்ணன்களிடம் கூட செழியனை விட்டுக்கொடுக்க மாட்டாள் ஸ்ருதி.
தன்னை விட பத்து பன்னிரெண்டு வயது மூத்தவர்கள் என்றாலும் வீம்பாய் மல்லுக்கு நிற்பாள் செழியனுக்காக.. அதுவும் கூட ஆனந்தவல்லி நாச்சியாரின் கண்டிப்பினால் வளர வளர அவர்களும் செழியனோடு சுமுகமாகவே வளர ஆரம்பித்தனர்.

இருவரும்ஒரே விருப்பமாய் கல்லூரியின் ஆர்கிடெக்சர் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தனர். மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்று படிப்பேன் என ஸ்ருதி ஒற்றைக்காலில் நின்று அதையும் சாதித்துக் கொண்டாள்.

மேல் படிப்பிற்காக இருவரும் லண்டன் சென்று தங்களது படிப்பை தொடர்ந்தனர்.

அங்கேதான் அவர்களின் விதி விசித்திரமாய் விளையாட ஆரம்பித்தது. சிறுவயது முதலே அரியவகை கலைப் பொருட்கள், பழமையான கலைநயமிக்க பொருட்கள் என்றால் சுருதிக்கு ரொம்பவே விருப்பம் கலைப் பொருட்களின் கண்காட்சி, வேலை பாடுமிக்க நகைகளின் கண்காட்சி என எங்கே நடந்தாலும் அங்கே ஸ்ருதி தவறாமல் ஆஜராகி விடுவாள்.

அப்படி அவள் செல்லும் இடங்களில் அவளுக்கு பிடித்து வாங்கி குவித்த கலைநயமிக்க பொக்கிஷங்கள் ஏராளம் சுப்பிரமணியத்தின் வீடு முழுக்க அழகிய அரண்மனையாய் ஸ்ருதி தான் வாங்கிய பொருட்களை கொண்டு அலங்கரித்திருப்பாள்.

நகைகளின் கண்காட்சி என்றால் நுண்ணிய வேலைப்பாடு மிக்க வித்தியாசமான நகைகளை விரும்பி வாங்கி அணிந்து அழகு பார்ப்பாள் ஒற்றை பெண் என்பதாலும் நல்ல செல்வ செழிப்பு மிக்க குடும்பம் என்பதாலும் அவளின் இந்த போக்கிற்கு எப்பொழுதும் யாரும் தடை சொன்னதே இல்லை.

ஸ்ருதி அந்த பிளாக்டைமண்ட் ப்ரெஸ்லெட்டை வாங்கியதும் கூட அப்படித்தான். விடுமுறையின் போது வீடு வந்து ஸ்ருதியை இந்த கருப்பு வைரம் போடவே கூடாது என கண்டித்த தந்தையின் சொல்லுக்கும், தாயின் அன்புக்கும் கட்டுப்பட்டு கழற்றி தன் உடமைகளோடு வைத்தவள் மீண்டும் வெளிநாடு செல்ல விமானமேறியதுமே தன் கைகளில் அணிந்துக் கொண்டாள்.

ஆனால் அதுவே அவளுக்கு எமனாய் மாறிப் போகும் என யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

தேடல் தொடரும்.....
 
Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18

தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே

அத்தியாயம் -20

நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்பதை காலம் நமக்கு ஒவ்வொரு முறையும் உணர்த்தியபடியே இருக்கின்றன. அப்படித்தான் உணர்த்திர்த்தியது ஆதினிக்கும், செழியனுக்கும்.

ஆதினியின் கண்கள் கலங்கி சிவந்திருந்தன. அதற்கு மேல் பேசமுடியாமல் செழியன் நிறுத்த அவனது கைகளை ஆறுதலாய் பற்ற அவளின் கைகளில் அணிந்திருந்த ப்ரேஸ்லேட் அவனது சருமத்தில் உரச அவளது கைகளைப் பற்றியவன் அக்கைகளை உயர்த்தி அந்த ப்ரேஸ்லெட்டை அதில் பார்வையை நிலைக்கவிட்டவன்

"இதை அவங்க கேட்டப்பவே குடுத்திருக்கலாமே ஸ்ருதி.. உன் பிடிவாதத்தினால இப்போ உன்னை இழந்து நிக்கறேனே.. அம்மா நாம ரெண்டு பேரும் இல்லாம என்ன கஷ்டப்படுறாங்க பாத்தியா.." என்று வினவியவனைப் பார்த்து கலங்கி நின்ற ஆதினியின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர்த்துளி அந்த கருப்பு வைரக்கல்லில் பட்டுத் தெறித்தது.

அதே நேரம் கதவு தட்டப்பட கண்களைத் துடைத்துக் கொண்ட ஆதினி செழியனின் கைகளை அழுத்தி ஆறுதல்படுத்தி எச்சரித்துவிட்டு சென்று கதவினைத் திறந்தாள்.

உதயன் தான் வந்தது. "அந்த அம்மா கண்விழிச்சிட்டாங்க நீ வந்து கொஞ்சம் பாக்கறியா சீரியஸ்ன்னா ஆஸ்பிடல் கொண்டு போய்டலாம்.." என்றவன் "ஸ்ருதியை பற்றி ஏதாவது தெரிஞ்சதா செழியன் சொன்னானா.." எனக் கேள்வி எழுப்ப

"இன்னும் முழுசா தெரியல நந்து.. இப்போ செழியனோட அம்மாவை பார்ப்போம். பிறகு பேசிக்கலாம்.." என்றவள் "செழியா நீயும் வா.." என்றபடியே அவள் கிழே செல்ல அவளை தொடர்ந்தனர் இருவரும்.

அன்னம் அங்கே அரற்றியபடி படுத்திருக்க அருகே வந்து அவரைச் சோதித்த ஆதினி. சுப்பரமணியத்திடமும், தனசேகரனிடமும் "அங்கிள் அவங்க கொஞ்சம் ஸ்டெரஸ்ஸா இருக்காங்க அதனால் பீபி அதிகமா இருக்கு. பக்கத்துல நல்ல ஹாஸ்பிடல் இருந்தா அங்கே அட்மிட் பண்ணலாம் அங்கிள் அதான் நல்லது." என்று கூற

நம்ம ஃபேமிலி டாக்டர்க்கு இன்பார்ம் பண்ணிருக்கேன்ம்மா இப்போ வந்துடுவார்‌. பக்கத்து எஸ்டேட் அவரோடு தான் அவர் வந்து பார்க்கட்டும் தேவைன்னா செஞ்சிக்கலாம் என்றவரிடம்

"சரிங்க அங்கிள்." என்றபடியே அவள் பார்வை அன்னத்தின் அருகே அமர்ந்து அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு அவரது தலையை ஆதரவாய் தடவிக்கொடுத்த செழியன் தட்டுபட்டான்.

அவன் அவரின் தலையைக் கோத கோத அவரின் கரங்களும் அவன் கரங்களை இறுகப் பற்றியது. "செழியா.. செழியா.." என் அவர் அரற்ற

நான் உன் பக்கத்துல தான்ம்மா இருக்கேன் தூங்கும்மா அமைதியா... என்று கண்ணீர் குரலில் கூற

"ஸ்ருதி... பாப்பா.."என் மீண்டும் அவர் அரற்ற

"நான் இருக்கேன்லம்மா நீ தூங்கும்மா அவளை நான் பாத்துக்குறேன்.." என்று உடைந்தே போனான். ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டு அன்னத்தின் கைகளையும் கால்களையும் பிடித்து விட அவரது அரற்றல் சற்றே குறைந்து சில நிமிடங்களில் அமைதியாய் உறங்களானார்.

அவர் உறங்கிய பத்து நிமிடங்களில் தனசேகர் கூறிய மருத்துவர் பத்மநாபனும் வந்துவிட அவர் அன்னத்தின் உடல் நிலையை பரிசோதித்தார். ஆதினி அவருக்கு தேவையான உதவிகளை செய்தபடி அவரின் கேள்விகளுக்கு பதிலளித்தபடி அவரின் பழைய மருத்துவ அறிக்கைகளை எடுத்துக் காட்டி கொண்டிருக்க

உதயன் அப்பொழுதான் கவனித்தான் செண்பாம்மாவை காணோமே ரொம்ப நேரமா என்பதை உணர்ந்தவன் அவரை தேடி சமையலறைச் செல்ல.. அங்கும் அவர் இல்லாதிருக்கவே அங்கிருந்த பணியாளை விசாரிக்க

"உங்களுக்குதான்ய்யா வெளியே டீ எடுத்துட்டு வந்தாங்க.." என்று கூறியதை கேட்டவன் குழப்பமுற்றான். டீயா நாங்க வெளியே போய் பேச ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேல ஆகிருக்குமே வரலயே எங்கே போயிருப்பாங்க என்று நினைத்தபடியே வெளியே வந்தவன் கீழே எல்லா அறைகளிலும் தேடிப் பார்க்க அவர் எங்கும் இல்லை. மீண்டும் அனைவரும் இருக்கும் வரவேற்பறைக்கு வந்து ஆதினி அருகே நின்றான்.

தனசேகர் இப்போ அவங்க இரத்தக்கொதிப்பு ஸ்டேபிள் ஆக ஆரம்பிச்சிருக்கு... இப்போதைக்கு ஆஸ்பிடல்ல சேர்க்க தேவை இல்லை. நான் சில மெடிசன்ஸ் தர்றேன். அதான் மிஸ். ஆதினி இருக்காங்களே அவங்களே பாரத்துக்குவாங்க. ஏதும் எமெர்ஜென்சின்னா கால் பண்ணுங்க. என்னென்ன மெடிசின் குடுக்கனும்னு ஆதினிக்கிட்ட இன்ஸ்டெரக்சன் குடுத்துட்டு போறேன். யூ டோண்ட் வொர்ரி. அவங்க ஸ்டெரஸ் இல்லாம நல்லா தூங்கி எழுந்தா சரியாய்டும். பட் மறுபடியும் மறுபடியும் அவங்களோட பீபி ஹை ஆனா டேஞ்சர் தான் சோ பாத்துக்கோங்க என்றவாரே ஆதினியிடம் தேவையான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

அவர் கிளம்பியதும் செண்பாம்மாவைத் தாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றவாரே 'நாம வரும் வரை செண்பாம்மா வரலயே எங்கே போனாங்க என்று அவன் போலீஸ் மூளை துரிதமாய் வேலை செய்தது'.

அங்கிருந்த சிமெண்ட் திண்டில் காப்பி கோப்பைகள் அடங்கிய தட்டு இருக்க அவனது மூளை இன்னும் வேகமாய் செயல்பட இடுப்பில் இருந்த துப்பாக்கியை தொட்டுப் பாத்துக் கொண்டவன் சுற்றிலும் அவரை தேடலானான். அங்கிருந்து சற்றுத் தள்ளி இருந்த செண்பகப்பூ மரத்தினடியில் துவண்டு அமர்ந்திருந்தவரை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவன் அவரை நெருங்கினான்.

அவன் அருகே வந்ததை கூட அறியாது அவரின் கண்கள் எங்கோ வெறித்திருக்க உதயன் அவரை தொட்டு உலுக்கி செண்பாம்மா என்னாச்சு ஏன் இங்கே வந்து இப்படி உக்காந்திருக்கீங்க என்னாச்சு..." என்றவனை நிமிர்ந்து நோக்கியவர்

"ஆதினி எங்க.. " என கேட்க

அவ உள்ளதான் இருக்கா நீங்க எழுந்து வாங்க என அவன் கைகொடுக்க தாங்கலாய் அவன் கையைப் பற்றியவனின் அவரது கரங்கள் நடுங்கவனை அவனால் உணரமுடிந்தது.

இங்கே நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்து பயந்துவிட்டார் போல பாவம் ஏற்கனவே ஆதினிக்கு நேரந்த பிரச்சினையில் கலங்கி நின்றவர் இப்பொழுது இங்கு நடப்பதை பார்த்து அதிர்ந்துவிட்டாரென நினைத்தவன் என்னாச்சும்மா ஏன் இப்படி உக்காந்துட்டீங்க.. உடம்புக்கு என்ன செய்து என கேட்டவாறே கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு சென்றவனை ஆதினி எதிர் கொண்டாள்.

"என்னாச்சு.. கைய புடிச்சு கூட்டிட்டு வர்றீங்க.. ஜிங்லி என அவரின் கைபற்றியவளிடம்

ஒன்னுமில்ல இங்க நடந்ததை பார்த்து ஷாக் ஆகிட்டாங்கன்னு நினைக்கிறேன். என்றவனை நிமிர்ந்து நோக்கியவள் செண்பாம்மாவை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைய அங்கே அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த அன்னத்தைக் கண்டவர் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் பெருக ஒன்றும் புரியவில்லை ஆதினிக்கும், உதயனுக்கும்.

ஜிங்லி என்னாச்சு ஏன் அழற ... அவங்களுக்கு ஒன்னுமில்ல ஊசி போட்ருக்கு தூங்குறாங்க அவ்வளவு தான் என்ற ஆதினியிடம் மேல நம்ம ரூம்ல என்னோட பை எடுத்துட்டுவா ஆது என குரல் நடுங்கக் கூற

ஒன்றும் புரியாமல் விழித்து நின்றவளிடம் போய் எடுத்துவா என் கண்களாலே உதயன் சைகை செய்ய, ஆதினி மாடிக்கு விரைந்தாள்.

அங்கிருந்த மற்றொரு இருக்கையில் செண்பாம்மாவை அமரவைத்து உதயனின் உள்ளுணர்வு எதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்த்தியது.

என்ன விசயமாயிருக்கும் என்பதை யூகிக்கமுடியவில்லை உதயனால். சில நிமிடங்களில் ஆதினி பையோடு வர அதற்குள் உதயன் அனைவருக்கும் குடிக்க பழச்சாறு கொண்டுவரச் செய்திருந்தான். பழச்சாற்றை வாங்கவும் மறுத்த செண்பாம்மாவை மெல்ல கெஞ்சி அச்சாறை பருகச் செய்திருந்தான்.

ஆதினியின் கைகளில் இருந்த பையை வாங்கி அதில் இருந்த அவரது புடவைகளை எடுத்துவிட்டு தேட மடித்து சுருட்டி வைக்கபட்டிருந்த பழைய பட்டுப் புடவையை கையில் எடுத்தவர் அதை விரிக்க அதில் சில நகைகளோடு இருந்த பொருட்களை கண்டு ஆதினிக்கே அதிர்ச்சி தான். இத்தனை ஆண்டாகளாய் ஆதினிகூட கண்டிதில்லை இவற்றை எல்லாம்.

அதில் இருந்த இரண்டு புகைப்படங்களை எடுத்தவர் நடுங்கும் கால்களை திடப்படுத்திக் கொண்டு சுப்ரமணியத்திடம் வந்தவர் இந்த படத்தில் இருக்கிறவங்க.... என அதற்கு மேல் வார்த்தை வராமல் நிறுத்த

அதை தன் கையில் வாங்கிப் கூர்ந்து பார்த்த சுப்ரமணியத்தின் விழிகள் கூர்மையானது.

"இது.. இது.. என தடுமாறியவர் இதெப்படி உங்ககைல இதுதான் செழயனோட அப்பா முருகானந்தமும் செழியனும்.." என்று கூற

"ஈஸ்வரா .." என மடிந்து விழப்போனவரை தாங்கிப்பிடித்தான் உதயன்.

செண்பாமமாவின் குரல் எழவில்லை கண்கள் மட்டும் கதறியது கண்ணீர் மாலை மாலையாய் கொட்டியது. மெல்ல அன்னத்தின் பக்கம் செழியன் அங்கே இருப்பதை உணர்ந்தவராக "செழியன் என்னோட புள்ள.." திராணியற்ற தனது வறண்ட குரலில் கூற

அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து நிற்க, செழியனோ அவரின் வார்த்தைகளை நம்பமுடியாமல் திகைத்தான். ஆனால் யார் கண்களுக்கு புலப்படாத அவனை ஆரம்பம் முதலே செண்ம்பாம்மா உணர்ந்தாரே.. இப்பொழுதும் அவனை யார் கண்களுக்கும் தெரியாது. ஆனால் செண்ம்பாம்மா அவன் இருப்பிடத்தை உணர்ந்து அன்னத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததைக் கண்டு அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

அய்யோ.. அப்படியானால் இவர்தான் என்னை பெற்றவரா.. தன்னை பெற்றவளைக் கண்டும் அவரோட மகிழ்ந்திருக்க முடியா தன் நிலையை வெறுத்தான் செழியன். ஏற்கனவே ஒருதாய் உணர்வற்று கிடக்கிறார். இப்பொழுது தான் பெற்ற மகனும் உயிரோடு இல்லை, தன் கணவனும் உயிரோடு இல்லை என்பதை அறியும் இத்தாயின் நிலை என்னாவாகும் சிந்திக்கவே இயலவில்லை செழியனால்.

அதிர்விலிருந்து மீண்ட சுப்ரமணியம் "என்னம்மா சொல்ற நீதான் செண்பகவல்லியா..?" என்று கேட்க

ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டியவள் இது அவங்களை விட்டு பிரியறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி எடுத்த போட்டோ என தன் கையில் இருந்த மற்றொரு புகைப்படத்தை சுப்பிரமணியத்திடம் நீட்டினார். அதில் இளம்வயதில் செண்பாம்மா தன் கணவர் மற்றும் மகனோடு எடுத்துக் கொண்ட புகைப்படம். சிறிய மகிழ்ச்சியான குடும்பம். ஆனால் அதில் செண்பகவல்லியிடம் இருந்த மகிழ்ச்சி முருகானந்தத்திடம் இல்லையென்றே தோன்றியது.

ஆண்டவா இதென்ன சோதனை இத்தனை வருடங்கள் கழித்து இந்த பெண் தன் கணவனையும், குழந்தையையும் இந்த நிலையிலா அறியவேண்டும். கணவன் உயிரோடு இல்லை. மகனின் நிலை என்னவென்றே தெரியாத நிலை. இப்படி ஒரு நிலை எந்த பெண்ணிற்கும் நேரக்கூடாது என இந்த சூழ்நிலையிலும் அவரின் இளகிய மனம் எண்ணி வருந்தியது.

நடக்கும் சூழ்நிலையால் அதிர்ச்சியில் இருக்கிறார் என நினைத்த உதயனுக்கு அவர்தான் செழியனை பெற்ற தாய் என்பதை அறிந்ததும் அவரின் மனநிலையை அவனால் அறிய முடிந்தது.

ஆதினியோ செழியன் செண்பாம்மாவின் மகனா..? இத்தனை வருடங்களாக தன்னை தாயாய் தாங்கியவரின் மகனா செழியன். அவனை காப்பாற்ற அவர் கையில் ஒப்படைக்க முடியாத பாவியாகிப் போனேனே என மருகி நின்றாள்.

தனசேகரனும், அவர் மனைவியும் எதுவும் புரியாத குழப்ப நிலையில் இருக்க

செழியன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அன்னத்தை விட்டு தடுமாறி நின்று தன்னையே நோக்கிக் கொண்டிருக்கும் செண்பாம்மாவிடம் வந்தான்.

ஆதினி இமைக்காமல் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க "ம்மா.. " என்று செழியன் அழைத்ததும் அவனது உருவத்தை காணா விடினும், அவனது குரலை அவர் கேட்காவிடினும் உணர்வால் அவன் அழைப்பதை அத்தாய் உணர்ந்து கொண்டாள்.

"அய்யோ எங்கண்ணே ... இப்படி பாக்கவா நான் உன்னை விட்டுட்டு போனேன் இந்த பாவி .. இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா எத்தனை பேரோடு சேர்த்து வெச்சு பேசிருந்தாலும் உன்னை கண்ணுக்குள்ள பொத்தி வெச்சி பார்த்திருந்திருப்பேனே... அய்யோ கடவுளே உனக்கு கண்ணே இல்லையா ... எம்புள்ளய ஆவியா பாத்த பாவியா நிக்கிறேனே ..." என தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதவரைக் கண்டு ஆதினியைத் தவிர அத்தனை பேரும் உறைந்து நின்றனர்.

தேடல் தொடரும்.....
 
Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18

தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

அத்தியாயம்- 21

நிகழ்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் இடையேயான போராட்டங்கள் மிகக் கொடியது. அப்படியான தருணம்தான் செண்பாம்மாவிற்கும். இறந்த காலத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களால் தன் கணவனையும், மகனையும் விட்டு பிரிந்ததை எண்ணி அழுவதா..? அல்லது நிகழ்காலத்தில் அந்தக் கணவனும், மகனும் உயிரோடு இந்த உலகத்தில் இல்லை என்று நினைத்து அழுவதா..? கலங்கி நின்றார் செண்பாம்மா என்று ஆதினியால் அழைக்கப்படும் செண்பகவல்லி அம்மா.

ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு போராட்டம் மிகுந்ததென்பது செண்பாம்மாவின் வாழ்க்கையே உதாரணம். ஆந்திராவை பூரவீககமாக கொண்ட செல்வாக்கு மிக்க குடும்பத்தின் ஒற்றை பெண் வாரிசு செண்பகவல்லி. விமரிசையாகக் அவரின் திருமணம் நடந்தது. விதிவசத்தால் திருமணமான சில நாட்களிலேயே கணவன் அற்ப ஆயுளில் இறக்க , கணவனை இழந்து தவித்த செண்பாகவல்லியை அதோடு அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் அவரது குடும்பத் தொழிலிலான தங்கநகைத் தொழிலில் அவரை இணைத்துக் கொண்டது அவரது பிறந்தகம். ஆண் வாரிசற்ற ஒற்றை பெண்ணை அவரது தந்தை தன் பிள்ளையாய் தொழில் கற்றுக் கொடுத்து அவரின் நிலையை மாற்ற எண்ணினார். செண்பகவல்லி கல்லூரி வரை படித்திருந்தாலும் இயல்பிலேயே இருந்த குடும்பத் தொழில் திறமை அவரிடத்தில் இருந்தது. இருபத்து இரண்டு வயதிலேயே விதவையான செண்பகவல்லி அத்தோடு தன்னை முடிக்கி கொள்ளாமல் தன் குடும்பத் தொழிலில் தன் கவனத்தை செலுத்தினார். நான்கைந்து வருடத்தில் தன் தகப்பனை மிஞ்சும் அளவிற்கு தொழிலில் திறமையாய் இருந்தார் செண்பகவல்லி.

அப்படி தொழில் நிமித்தமான சந்திப்பிலேயே முருகானந்தம் செண்பகவல்லியை சந்தித்து. முப்பத்தைந்து வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருந்த முருகானந்தம் செண்பகவல்லியை பார்த்ததும் அவரது அழகில் மயங்கிப் போனார் என்பதே உண்மை. அடிக்கடி அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. முருகானந்தம் அச்சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.

அவரின் கண்ணியமான அணுகுமுறையிலும் அன்பிலும் செண்பகவல்லி தன் மனதைப் பறிகொடுத்தார். தன் நிலையை முருகானந்தத்திடம் தெரிவிக்க அதுவரை உண்மை தெரியாத அவருக்கு செண்பகவல்லி ஓர் கைம்பெண் என்னும் விசயம் அதிர்ச்சியாய் இருந்தது. ஆனால் அவரை மறக்கவும், இழக்கவும் அவரது மனம் ஒப்பவில்லை. ஆனால் ஓர் கைம்பெண்ணை தன் மகனிற்கு மணம் முடிக்க அவரது பெற்றோர் விரும்பாததால் ஆந்திராவிலேயே தன் பெற்றோருக்கு தெரியாமல் செண்பகவல்லியை மணந்துகொண்டார் முருகானந்தம்.

தன் பெண்ணிற்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்தால் போதுமென்றிருந்த செண்பகவல்லியின் தகப்பனாரும் முருகானந்ததின் சொல்லுக்கு கட்டுப்பட்டு திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்துவிட்டால் தன் பெற்றோர் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று முருகானந்தம் போட்ட கணக்கு தவறாய் போனது. அவரை ஏற்றுக் கொள்ளாததோடு மட்டுமின்றி தொழிலையும் அவரிடமிருந்து பறித்துக் கொண்டு அவரை துரத்தியது அவர் குடும்பம். பிறந்த வீட்டிற்கே செல்லலாமென்ற செண்பகவல்லியின் சொல்லை ஏற்க அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தங்களை யாருக்கும் தெரியாத கோவையில் அவர்களின் குடும்ப வாழ்க்கை ஆரம்பமானது. வீடு மற்றும் இதர செலவிற்காய் செண்பகவல்லியின் நகைகளில் சிலதை விற்று அவர்களின் வாழ்க்கையை சந்தோசமாக ஆரம்பித்தனர்.

சொந்தமாக தொழில் நடத்தி வந்த முருகானந்தம் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். ஆரம்பத்தில் முருகானந்தத்திற்கு பெரிதாய் தெரியவில்லை நாளடைவில் அடுத்தவர் முன் தான் கைகட்டி நின்று வேலை செய்வதை கேவலமாய் நினைக்க ஆரம்பித்தார். மீதமிருந்த தன்னுடைய நகைகளை விற்று ஏதாவதொரு சொந்த தொழில் தொடங்கலாமென்ற அவரின் மனைவியின் சொல்லும் அவருக்கு உவப்பாய் இல்லை. அது அவரின் தன்மானத்திற்கு இழுக்காய் எண்ணினார்.

அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு சாட்சியாய் பிறந்த மகனுக்கு இளஞ்செஎழியன் எனப் பெயரிட்டு கொண்டாடினார் செண்பகவல்லி. பிரசவத்திற்கு கூட தன் மனைவியை அவர் பிறந்தகம் அனுப்பவில்லை. குழந்தையை பார்க்க வந்த செண்பகவல்லியின் பெற்றோர் பிள்ளை பெற்ற பெண் தங்களோடு இருக்கட்டுமென வற்புறுத்தி அழைத்து செல்ல முருகானந்தம் மனமில்லாமல் அனுப்பி வைத்தார்.

செல்வ செழிப்போடு வாழ்ந்து பழக்கப்பட்டவர் முருகானந்தம். அடுத்தவரிடம் கைகட்டி வேலை செய்வது அவரை பொறுத்தவரை அது அவருக்கு நேர்ந்த அவமானமாக கருதினார். தன் பெற்றோரை விட்டு பிரிந்து இருக்காவிட்டால் இந்த நிலை தனக்கு நேர்ந்திருக்காது என மனதுக்குள் எண்ணத் தொடங்கினார். தன் பெற்றோரை பிரிவதற்கு காரணம் செண்பகவல்லியே என்ற எண்ணம் அவர் மனதிற்குள் முளைக்க ஆரம்பித்தது.

செண்பகவல்லி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதே அவரின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம். அந்தக் காரணம் அவரின் அடிமனதில் ஆழமாக வேரூன்றியது.
ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவர் இப்பொழுது தனிமையும் சேர்ந்துகொள்ள விரக்தியின் எல்லைக்கே தள்ளப்பட்டார் முருகானந்தம். செய்யும் வேலையில் அவரது கவனம் குறைய ஆரம்பித்தது. அதனால் வேலை செய்யும் இடத்திலும் பிரச்சினை ஏற்பட வேலையை உதறிவிட்டு வெளியேறினார் அவர்.

அளவுக்கதிமான செல்வ செழிப்பில் நினைத்ததெல்லாம் கிடைத்து பழக்கப்பட்ட ஒரு மனிதன் திடீரென கீழ் நிலைக்கு தள்ளப்பட்டால் அவனால் சூழ்நிலைக்கு ஏதுவாய் தன்னை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. அதுதான் முருகானந்தம் வாழ்விலும் நடந்தது.

வேலையை விட்டு அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை கையில் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது இதற்கிடையே ஏற்கனவே எப்போதாவது ஒருமுறை என மது அருந்திக் கொண்டிருந்த முருகானந்தம் இப்பொழுது தினமும் அதை வாடிக்கையாக்கி கொண்டார்.

குழந்தையோடு செண்பகவள்ளி பிறந்தகம் சென்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் முருகானந்ததிற்கு தனிமை வாட்டியது. மனைவியை அழைத்து வர செண்பகவல்லி பிறந்த வீடு சென்றார். செண்பகவல்லியின் வாழ்க்கையில் அங்கு தான் புயல் வீச ஆரம்பித்தது.

நல்ல செழிப்போடு வளர்த்த தன் மகள் கஷ்டப்படுவது பொறுக்காது செண்பகவல்லியின் தந்தை தன் மகளை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாய் கோபத்தில் வார்த்தைகளை விட, முருகானந்தம் அன்றோடு பிறந்த வீட்டு உறவை முறித்துக்கொண்டு வந்தால் ஆச்சென்று தன் மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

ஏற்கனவே மன அழுத்தங்களுடன் இருந்த முருகானந்தம் இப்பொழுது நடந்த நிகழ்வுகள் தனக்கு பெரும் அவமானமாய் கருத அது அவர்களின் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசலை ஏற்படுத்தியது. தன் மனைவியை குத்திக் காட்ட ஆரம்பித்தார் முருகானந்தம். நாளொரு வேலையும், பொழுது சென்றால் குடியுமாய் ஆண்டுகள் நகர்ந்தது.

ஒரு பெண் தன் வாழ்வில் இரண்டாம் திருமணத்தை ஏற்பதென்பது அவ்வளவு சுலபமல்ல. அவளுல் ஆயிரம் போராட்டங்கள் இருக்கும். முந்தைய வாழ்க்கையின் நினைவுகளும், ரணங்களும் வடுக்களாய் இருக்கும். அதையும் மீறித்தான் இன்னொரு வாழ்க்கைக்கு தயாராகிறாள்.

ஆயிரம் யோசனைக்கு பின்னரே செண்பகவல்லியும் திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் அவரின் முதல் திருமணத்தைப் பற்றியும் அவரின் நிலையைப் பார்த்து பரிதாபபட்டு வாழ்க்கை கொடுத்தது போலெல்லாம் தன் கணவர் பேசுவதை தாங்க முடியாமல் போனது அவருக்கு. அதைக்கூட பொறுத்துக்கொண்டவர் நாளாக நாளாக நாக்கில் நரம்பில்லாமல் அவருடைய நடத்தையை கேவலமாய் பேசியதை தாளமுடியவில்லை அவரால்.

ஓர்நாள் இரவில் "இத்தனை நாளா நீங்க பேசினதெல்லாம் பொறுத்துப் போனேங்க.. எல்லாம் ஒரு நாள் சரியாகும்ங்கற நம்பிக்கை இருந்துச்சு.. ஆனா இப்போ சுத்தமா அந்த நம்பிக்கை போய்டுச்சுங்க.." என்ற செண்பகவல்லியிடம்

"ஏன் என்னைவிட பெட்டரா எவனாச்சும் கெடச்சுட்டானா என்ன..?" என்ற கணவனின் கேள்வி நெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டியது போலிருந்தது.

என்ன தான் கணவன் என அவர் இத்தனை நாட்களாய் பொறுத்துப் போனாலும் தன் நடத்தையையே தவறாய் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

"ச்சீ.. என்ன ஒரு கேவலமான புத்தி.. உங்க மனசாட்சியைக் கேட்டு சொல்லுங்க நான் அவ்வளவு மோசமானவளா.." என்று ஆற்றாமையில் வினவ

"ஏன் தொழில் விசயமா வந்த என்னையே மயக்குனவதானே நீ .. இப்போ என்னவோ உத்தமி வேசம் போடுற ஒரு கல்யாணம் போதாதுன்னு ரெண்டாவதா என்னை கட்டுனவதான மூனாவதா இன்னொருத்தனை தேடமாட்டேன்னு என்ன நிச்சயம் .." என்று அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் செண்பகவல்லியின் இதயத்தில் கூர் ஈட்டிக் கொண்டு குத்திக் கிழித்தது.

கண்ணீர் கூட வரவில்லை அவர் கண்களில், செயல் இழந்து நின்றார். அடிப்பட்ட மானாய் துவண்டு போனார். எவ்வளவு தான் நேசம் கொண்ட கணவனாக இருந்தாலும் இப்படி ஒரு வார்த்தை வந்தபின்பு அவரோடான வாழ்வு தேவையா என்ற கேள்விக்குறி எழுந்தது அவரது மனதில். ஒரு முடிவெடுத்தராய் மூன்று வயது செழியனை எடுத்துக் கொண்டு கிளம்பியவரை கணவனது குரல் தடுத்தது.

மிதமிஞ்சிய போதையில் இருந்த முருகானந்தம் "எங்க கெளம்புற உங்கப்பன் வீட்டுக்கா.. என்னை மட்டும் எங்குடும்பதுலேர்ந்து
பிரிச்சிட்டு நீ மட்டும் உன் குடும்பத்தோடு போய் சந்தோசமா இருப்பியா.. உண்மையிலேயே எனக்கு தான் இந்த புள்ளைய பெத்தயா... இல்ல வேற எவனுக்குமா.." என்ற கேள்வி முடியும் முன்னே பளாரென தன் கணவனை அறைந்திருந்தார் செண்பகவல்லி.

ஆண் அகங்காரம் தலைக்கேற "ஆம்பளைய கை நீட்டி அடிக்கிற அளவுக்கு உனக்கு திமிராடீ..." என்று உச்ச கோபத்தில் அவரை அடித்து துவைத்த முருகானந்தம்

"சத்தியமா இவனை எனக்குத்தான் பெத்தங்கறது உண்மையா இருந்தா எம்புள்ளைய என்கிட்ட விட்டுட்டு கண்காணாத போய்டு.. இல்ல கண்டவனுக்குதான் பெத்தேன்னா உம்புள்ளைய தூக்கிட்டு போய்டு ஆனா இனி ஜென்மத்துக்கும் என் மூஞ்சில முழிக்காத.." என்ற அவரது வார்த்தைகள் அக்கினிகுழம்பாய் செண்பகவல்லியின் காதுகளில் இறங்கியது. வேரறுந்த மரமாய் விழுந்தார்.

விழுந்த இடத்தில் எவ்வளவு நேரம் கிடந்தாரோ.. மூளையும் கால்களும் மரத்துக்கிடக்க செழியனின் அழுகை அவரை உசிப்பியது. மெல்ல எழுந்து இருந்த பாலை சுடவைத்து அவன் பசியாற்றியவர் அவன் நெற்றியில் முத்தமிட்டு முருகானந்ததின் அருகில் கிடத்திவிட்டு, கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தையும் கழற்றி அவரின் அருகில் வைத்தவர் இரண்டு சேலைகளை எடுத்து பையில் போட்டுக்கொண்டு கிளம்பினார். அவரின் மனம் ஒன்றை மட்டும் விடாமல் கூறிக்கொண்டே இருந்தது. நான் அப்பழுக்கற்றவள் அவரது குழந்தையை அவரிடமே விட்டுவிட்டேன். அவருக்கு கிடைக்காத சுகம் எனக்கும் தேவையில்லை. என்னை பெற்றவர்களுக்கும், மற்றவருக்கும் பாரமாய் இனி இருக்கபோவதில்லை என்று உருபோட்டவாரே நடந்துகொண்டே இருந்தார். எத்தனை நாளாய் நடந்தாறென்பது கூட தெரியாது.

கடைசியாய் அவர் நின்ற போது அவருக்கு எதுவும் நினைவுகள் இல்லை. மனநிலை பாதிக்கபட்டது போல் பிதற்றி நின்றவரை ஆதினியின் அழுகுரல் அவளருகில் வரவழைத்தது. ஏக்கத்தோடு நின்றவரை பார்த்த ஆதினியின் பெற்றோர் அவரை விசாரிக்க எதுவுமே விளங்காத மனநிலையில் தங்களோடு அழைத்துச் சென்றனர். எத்தனை கேட்டும் அவர் எதுவுமே கூறாது ஆதினி ஒன்றே ஒற்றைப் பிடிமானமாய் செயல்பட ஆதினியின் பெற்றோரும் அவராய் மனம் விட்டு கூறட்டும் என்று விட்டுவிட்டனர்.

இத்தனை ஆண்டுகளாய் அடக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணீர் ஆறாய் பெருகியது செண்பாம்மாவிற்கு. முருகானந்தம் கூறிய வார்த்தைகளுக்கான அர்த்தம் இப்போது விளங்கியது சுப்பிரமணியத்திற்கு.

"என்னோட சுயநலத்தாலயும், அவசரபுத்தியாலயும் என்னோட பொக்கிஷத்தை தொலைச்சிட்டேன் சுப்பு.." என்ற முருகானந்ததின் வார்த்தைகள் சுப்ரமணியத்தின் காதுகளில் ஒலித்தது.

தேடல் தொடரும்.....
 
Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

அத்தியாயம்-22

வாழ்க்கை ஓர் அழகிய மலர் போன்றது. சில மலர்கள் மலர்ந்து மணம் வீசி பூத்துக் குலுங்கும். சில மலர்கள் மொட்டிலேயே கருகி வாடி உதிர்ந்து விடும். சில பூஜைக்கு செல்லும், சில மலர்கள் மங்கயரை அலங்கரிக்கும், சில பூக்களுக்கு மணமே இல்லையென்றாலும் பார்ப்போரின் கண்ணையும், கருத்தையும் கவரும். அழகாய் தோன்றும் மலர்கள் சில ஆபத்தையும் தோற்றுவிக்கும். வாழ்க்கையும் அப்படிதான், மனிதர்களை பொறுத்தே அவரவர் வாழ்க்கை தீர்மானமாகிறது. அவர்களது வாழ்க்கை மட்டுமல்ல அவர்களோடு இணைந்த இணையின் வாழ்க்கையையும் சேர்ந்தே தீர்மானமாகிறது.

செண்பாம்மாவின் வாழ்க்கையும் அவ்வாறே.. செழியனை அள்ளி அணைத்து கொஞ்சிய கைகள் மார்பில் அடித்துக்கொண்டு அழுவதைக் கூட தடுக்க முடியாது நிற்கும் நிலை செழியனுக்கு.

ஆதினி செண்பாம்மாவை சமாதானப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள். மெல்ல அவர் அருகே வந்தவன் அவரின் முன் மண்டியிட்டு அவரது கைகளைப் பற்ற, விருட்டென நிமிர்ந்தார் செண்பாம்மா. அவருடைய கண்கள் காற்றில் தேடியது தன் ரத்தத்தில் உதித்த தன் மகவின் உருவத்தை தேடியது. தன் மகன் தன் கைபற்றி இருப்பதை உணர்ந்தவரால் அவனின் உருவத்தைக் காண இயலவில்லை.

"அம்மா.. என்னை பிரிஞ்சு இத்தனை வருசமா எப்படி தவிச்சிருப்ப, ஆனா அதை எதையுமே உணராம நான் பாட்டுக்கு சுயநலமா இருந்திருக்கேனேம்மா.." அவரது கைகளில் தன் முகத்தினை வைத்துக் கொண்டு கதறினான் செழியன்.

"பப்ளூ.. எம்புள்ள.. செழியன் என்புள்ளடா.." என உணர்ச்சி மிகுதியால் குரல்கள் நடுங்க கூறிய செண்பாம்மாவை ஆதினியும், செழியனும் ஒருசேர அணைத்துக் கொண்டனர்.

உதயனுக்கு உடனடியாய் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் பல இருந்தது. அதற்கு முன் சுப்ரமணியத்திடம் சில தகவல்களைச் சேகரித்தவன் தன் கைபேசியில் தேவாவை அழைத்து அவற்றைக் கூறி அவனுக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு , மீண்டும் சுப்ரமணியத்திடம் வந்தான்.

"சார்.. ஸ்ருதியும் செழியனும் மறுபடி எப்போ இந்தியா வந்தாங்க. அவங்க அங்க போன பிறகு என்ன நடந்தது தெரியுமா.." என தன் வேலையைத் துவக்கினான்.

மீண்டும் தன் மகளின் நினைவுகளில் மூழ்கினார் சுப்பிரமணியம்.

கோபத்தோடு கத்திக் கொண்டிருந்தான் செழியன் ஸ்ருதியிடம், "சொன்னா கேக்கவே கூடாதுங்கற முடிவுல இருக்கியா நீ..? அன்னைக்கே அப்பா சொன்னாரு இதை கைல போட வேண்டாம்னு கேட்டியா.. இப்போ பாரு இதோட ரெண்டாவது முறையா இதனால் உனக்கு ஆபத்து வந்திருக்கு.."

யாரென்று‌ தெரியாத மர்ம நபர்களால் இரண்டுமுறை தனக்கு நேரவிருந்த ஆபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருந்தாள் ஸ்ருதி. வெளிநாட்டில் பணத்திற்காகவும், நகைக்காகவும் நடக்கும் கொள்ளைகளும், கொலைகளும் மிகச் சாதாரணம். அதனால் அதை அவள் பெரிதாக எண்ணிக் கொள்ளவில்லை. வழக்கமான அவளது குரும்புத்தனத்தை அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.

"ஏய் என்னடா நினைச்சிட்டு இருக்க .. பெரிய இவனா நீயீ" என்றவளை பார்த்து

"நீ என்னடீ நினைச்சிட்டு இருக்க .. நீ பெரிய இவளா.." என்றான் செழியன்.

"த்தோ பாரு எனக்கு கோவம் வருது பார்த்துக்கோ..."‌என முறைத்தவளை

"உன் கோவம் என்னை என்ன செய்யும் போடீ..." என்று மேலும் சீண்டினான் செழியன்

தரையில் வேகமாய் கால்களை உதைத்தபடி அவன் அருகே வந்தவள் கொத்தாய் அவன் தலைமுடியை பற்றியவள்

"சொல்லிட்டே இருக்கேன் கேக்கமாட்டேங்குற... கேக்குறீயா கேக்குறீயா..." என் அவனை தலையை அரிசி இல்லாத உரலை ஆட்டுவதை போல ஆட்டி எடுக்க

"அடியே விட்றீ வலிக்குது .. எரும மாடே..."

"யார்ரா எரும .. நானா .. நீதான் கோத்தீகுட்டி .."

"என்னாது கோந்து குட்டியா என்ன புதுசு புதுசா கெட்டவார்த்தை பேசுற இரு இரு அப்பாகிட்ட சொல்லல எம்பேரு செழியன் இல்ல" என்றவாறே அவள் கைகளில் இருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ள முயல.. உடும்பு பிடியாய் அவன் தலைமுடியை கொத்தாய் பற்றியிருந்தவள் "ஒழுங்கா எனக்கு எலந்தவடை வாங்கி குடு இல்ல என்கிட்ட பேசாத போ..." என்று கோபித்துக்கொண்டு அவனை விடுவித்து திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவ்வளவு நேரம் அவர்களது சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவனது நண்பர்கள் ஒரு சேர

"த்தூ.. என காறிதுப்பியபடி ஒரு எலந்தவடைக்காடா இவ்வளவு பெரிய பஞ்சாயத்து வந்து சேர்ந்தீங்கபாரு காரைக்குடிலேர்ந்து எங்க உசுர வாங்குறதுக்கு.." என்று கூறிய தன் வகுப்பு தோழனான மற்றொரு தமிழ் மாணவனைப் பார்த்து அசடு வழிந்தபடி அவளை தேடினான்.

"போ... அதான் போய்டாளே... நீயும் பின்னாடியே போ ராசா ‌‌.. லண்டன்ல வந்து எலந்தவடை கேக்கற அவ ஒரு லூசு அவளுக்கு வால் பிடிச்சிட்டே திரியுற நீ ஒரு லூசு.. உங்களை எல்லாம் ஃப்ரெண்ட்ஸா வெச்சிருக்க நான் ஒரு லூசு.. " என்று அவன் அலுத்துக் கொண்டான்.

"சாரீடா அம்மூ கோவமா போறா நான் பார்த்துட்டு வர்றேன்.." என்றவாறே விரைந்தான் அவள் பின்னே,

"ஏ நில்லுடா அம்மூ.. இங்க எவ்வளவு பெரிய பிரச்சினை நடக்குது உனக்கு எலந்தவடதான் முக்கியமா.."

"ஆமா.. எனக்கு அதுதான் முக்கியம்.."

"அம்மூ இங்க பாரு உன் உசிருக்கே ஆபத்து வந்திடுச்சேன்னு நான் கலங்கி போய் இருக்கேன். இந்த நேரத்துல நீ இப்படி விளையாண்டுட்டு இருக்க"

"இங்க அது ரொம்ப சாதாரணமா நடக்குற விசயந்தானே அதுக்கு ஏன் இவ்வளோ அட்டகாசம் பண்ற நீ" அலுத்துக் கொண்ட ஸ்ருதியிடம்

"நீ இப்படில்லாம் சொன்னா கேட்க மாட்ட நான் அப்பாக்கு போன் போடுறேன் படிச்சவரை போதும் இந்தியா கிளம்புவோம்.." என்றவனை சமாதானப்படுத்த முயன்றாள் ஸ்ருதி.

"என் தங்கமில்ல.. இன்னும் படிப்பு முடிய நாலைஞ்சு மாசம் தானே இருக்கு அதுவரைக்கும் நான் ஜாக்கிரதையா இருந்துக்கறேன் டா.." என்று கெஞ்சயவளிடம்

"அப்போ அந்த ப்ரேஸ்லெட்டை கழட்டிக் கொடு அப்போதான் படிப்பு முடியும் வரை நீ இங்க இருக்கலாம் இல்ல அடுத்த ப்ளைட்ல இந்தியா போகலாம்.." என்றவனை அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் அவன் கேட்டபடி ப்ரேஸ்லெட்டை கழட்டிக் கொடுத்தவள் அதற்கு பின்னும் அவன் கடைக்கு சென்றிருந்த சமயம் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அவனிடம் இருந்து மறைத்து விட்டாள்.

அதன் பின் அங்கிருந்த சில நாட்களை சர்வ ஜாக்கிரதையாக செழியனோடு கழித்தவள் படிப்பு முடிந்த அடுத்த நாளே செழியனோடு தன் தாய் நாட்டிற்கு பயணமானாள்.

தன் வீட்டிற்கு வந்ததும் தான் ஸ்ருதிக்கு இயல்பாய் மூச்சுவிட முடிந்தது.
வந்து பதினைந்து நாட்களாய் தாயையே சுற்றி சுற்றி வந்தனர் இருவரும். குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு சென்று நேர்த்திகடன் செலுத்திவிட்டு வந்த பின் சில நாட்களிலேயே வீடு போரடிக்க

"ஜாலியா எங்கேயாச்சும் ஊட்டி கொடைக்கானல்னு போய்ட்டு வாங்கடா, இனி எப்பவும் வேலை தொழில்ன்னு தானே இருக்கப் போறீங்க.." என்று கூறிய தன் அண்ணன்களின் யோசனைப்படி செழியனோட தங்களது காரிலிலேயே கிளம்பினாள் ஸ்ருதி. அவ்வப்போது இப்படி செல்வது சகஜமாகையால் சந்தோசமாக அனுப்பிவைத்தனர் சுப்பிரமணியம் தம்பதியர். ஆனால் தாங்கள் அவர்களை இனி பார்க்கவே போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தால் எப்படியேனும் தடுத்திருப்பார்கள். விதி வலியது என்பதைக் காட்டியது.

"அன்றுதான் கடைசியாக தாங்கள் அவர்கள் இருவரையும் பார்த்தது.." என்று கண்ணீரை துடைத்துக் கொண்டார் சுப்ரமணியம்.

இதற்கு மேல் செழியன் ஒருவனால் மட்டுமே என்ன நேர்ந்ததென கூற முடியும் என்று உணர்ந்தவன் ஆதினியின் உதவியை நாடினான் உதயன்.

"செழினைக் கூட்டிட்டு வா.. சில விசயங்கள் தெரியனும்.." என ஆதினியை வெளியே அழைத்து வந்தவன் விபரத்தைக் கூற, செழியனை நோக்கினாள் ஆதினி.

"முதல்ல இதை உன் கைலேர்ந்து கழட்டு ஆது.." என்றவன் கடைசிவரை அவதான் என் பேச்சைக் கேட்கவேல்ல நீயாவது கேளுடா..." என்று மன்றாடிய அவனது கண்கள் நிம்மதியாய் நன்றியோடு உதயனை நோக்கியது. ஆதினியின் கரங்களில் இருந்த ப்ரெஸ்லெட்டை கழற்றிக் கொண்டிருந்தான் அவன். அதைக் கழறியவன் அதை ஆராய்ந்தபடியே தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு

"நீங்க ரெண்டு பேரும் ஏற்காடு கிளம்பிய பின்னாடி என்ன நடந்ததுன்னு சொல்லு செழியா.." என்றவன்

"ஆது... செழியன் சொல்றதை ஒரு வார்த்தைக் கூட மிஸ்ஸாகாம என்கிட்ட சொல்லனும் சரியா.." என்று அவளிடம் எச்சரித்தான்.

ஒரு பெருமூச்செடுத்த செழியன் அவர்களிடம் கூற ஆரம்பித்தான்.

ஊரைவிட்டு கிளம்பிய சிறிது தூரத்திலேயே அவள் தன் கைப்பையில் இருந்து ப்ரேஸ்லெட் எடுத்து அணிவதைத் கண்டவன் அவளை முறைக்க

"டேய்.. சும்மா முறைக்காத இது லண்டன் இல்ல நம்ம ஊருதான்.."என அவன் வாயை அடைத்தாள். அதுவே அவள் உயிர் பிரிய காரணமாகப் போவதை அவள் அறிந்திருக்கவில்லை.

ஏற்கனவே ஊட்டி, கொடைக்கானல் நிறைய முறை சென்றிருந்ததால் இம்முறை கொல்லிமலை, ஏற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களை தேர்ந்தெடுத்திருந்தாள் ஸ்ருதி. முதலில் ஏற்காடு செல்வதென முடிவு செய்தனர் இருவரும் ஏனெனில் அங்கே தங்களோடு கல்லூரியில் படித்த நண்பர்கள் இருந்ததால் அவர்களோடு ஏற்காட்டை சுற்றிவிட்டு பிறகு அவர்களையும் அழைத்துக் கொண்டு கொல்லிமலை செல்வதென முடிவெடுத்தனர்.

ஏற்காட்டில் தங்கள் நண்பர்கள் அவர்களது இல்லாத்திலேயே தங்க எவ்வளவு வற்புறித்தியும் இருவரும் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கிக் கொண்டனர். காலை முதல் இருள் கவியும் வரை ஊர் சுற்றி ஏற்காட்டின் இயற்கையை ரசித்தவர்கள், இரவில் தங்கள் அறையில் முடங்கினர்.

மூன்றாம் நாள் தன் நண்பனின் வற்புறத்தலுக்கினங்கி அவர்களது வீட்டில் உணவை முடித்துக் கொண்டு அவர்கள் கிளம்ப காலையில் அவர்களோடு மற்ற நண்பர்கள் இணைந்து கொள்வதாய் முடிவாகி இருவர் மட்டும் அங்கிருந்து கிளம்பினர். வழியெல்லாம் ஏற்காட்டின் இயற்கை அழகு கண்ணை நிறைத்தது. வழியில் கிள்ளியூர் அருவிக்கு செல்லும் சாலை பிரிந்தது. அங்கு போகலாமென ஸ்ருதி கூற கார் அருவிக்கு செல்லும் சாலையில் பயணித்தது. அவர்களை தொடர்ந்து ஆபத்தும் வந்து கொண்டிருந்தது .

கிள்ளீயூர் அருவியில் நீர்வரத்து அதிகம் உள்ள நேரங்களில் கூட்டமிருக்கும். ஆனால் இப்பொழுது மெலிதான நீர்வரத்து மட்டுமே இருக்க மக்கள் கூட்டமிருக்கவில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் மட்டுமே அந்நீரில் விளையாடிக் கொண்டிருக்க சில்லிட்ட நீரில் நனைந்து விளையாட ஆரம்பித்தனர் இருவரும். மெலிதான நீர்வரத்தென்றாலும் பரலாய் சிலுசிலுவென விழுந்த நீரில் நனைந்து கொண்டிருந்தவளின் உடலில் ஒர் கரம் அத்துமீற அதிர்ந்து போனாள் ஸ்ருதி. சட்டென மறுபுறமிருந்த செழியனின் கரத்தை இறுகபற்றியவள் சட்டென நீரை விட்டு அவனையும் இழுத்துக்கொண்டு வெளியேற செழியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

நீரில் இருந்து வெளியேறியவளைத் தொடர்ந்தது அவர்களின் கழுகுப் பார்வை. அவளின் பார்வை சென்ற திசையை நோக்கிய செழியனுக்கு அவர்களின் இரைத்தேடும் சிறுத்தையின் பார்வை புரிபட

"என்னாச்சு அம்மூ.." என்று அவளை நோக்கி கேள்வி எழுப்பினான் செழியன்.

"இல்ல நாம கிளிம்பலாம்" என்றவாறே அவன் கைகளைவிடாமல் பற்றியவாரே இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள் ஸ்ருதி.

அருவிக்கு சற்று தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தியிருந்தபடியால் அருவிக்கரையின் பாறை மீது வைத்திருந்த தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு எட்டி நடக்க ஆரம்பித்தாள் ஸ்ருதி.

"என்னாச்சு அம்மூ அவனுங்க ஏதாவது பண்ணானுங்களா சொல்லு அவனுங்க மூஞ்சப் உடைச்சிடுறேன்.." என்று கோபபட்ட செழியனை அடக்கினாள் அவள்.

"நாம கிளம்பலாம் ஒன்னும் செய்யவேண்டாம் வா.." என இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

மாலை நெருங்கிக் கொண்டிருக்க ஆட்கள் நடமாட்டம் இரூத்கிறதா என்று கூட கவனிக்காது நீருக்குள் இருந்ததற்கு தன்னையே திட்டிக் கொண்டான் செழியன். அருவியில் இவளைக் கண்டவன் பின்னால் வர நல்லவேளையாக மேலும் நாலைந்து பேர் கரையில் கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நடந்தனர். சிரித்துக் கொண்டே பின்னால் வந்தவன் இப்பொழுது அவர்களை நெருங்கி இருந்தான்.

"என்ன பாப்பா தொட்டா கோவிச்சுக்குற... நான் வேணா தொடல நீயாவே உன் கைல இருக்கறதைக் கழட்டிக் கொடுத்துடு நான் பாட்டுக்கு போறேன்.." என்றவனின் குரலுக்கு அருகே ஆட்கள் வந்து கொண்டிருக்கும் தைரியத்தில்

"என்னடா அடி வாங்காம போகமாட்ட போல சத்தம் போட்ட இருக்கற எல்லோரும் சேர்ந்து அடி பினனிடுவாங்க ஒழுங்கு மரியாதையா போய்டு.." என அவள் குரல் எச்சரித்தது‌.

அப்பொழுது செழியனின் கரங்கள் ஸ்ருதியின் கரத்தினை வழுவாகப் பற்றியது. ஸ்ருதி பேசிய கணத்தில் அவர்களை நோக்கி மிரட்டியவனின் பார்வை சமிக்ஞை கொடுத்ததை செழியன் கண்டுவிடவே

"அம்மூ அவங்க எல்லாரும் ஒரே குரூப்டா ஓடிவா டா சீக்கிரம்.." என கத்திக்கொண்டே அவளையும் இழுத்துக் கொண்டு தங்களது வாகனத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான். ஓடியவாறே திரும்பி பார்த்தவன் அதிர்ந்து போனான். அவர்களை துரத்தியது ஒருவர் இருவரல்ல ஏழு பேர்.

ஏழு பேரிடம் மோதி சண்டையிட்டு தங்கள் உயிர் பிழைப்பது புத்திசாலித்தனமாய் படவில்லை செழியனுக்கு. ஓடிக் கொண்டிருந்தாலும் அவனது மூளை விரைவாய் சிந்தித்துது‌. ஸ்ருதியின் பாதுகாப்பு இப்போது முக்கியம் என கருதியவன்

"அந்த ப்ரேஸ்லெட்டை கழட்டி வீசு அம்மூ அதுக்கு தான் நம்மை துரத்துறாங்க அது வேண்டாம் அம்மூ கழட்டி வீசுடா.." என கத்தினாள் அவள்.

"வண்டி பக்கத்துல வந்துட்டோம் டா சீக்கிரம் வண்டிய எடு நாம பக்கத்துல ஏதாவது ஸ்டேசன் போய்டலாம்.." என்றவாறே காரை வேகமாய் நெருங்க

முன்னிருந்து வேகமாய் வீசப்பட்ட பெரிய இரும்பு கழி ஸ்ருதியின் நெற்றியை பலமாய் பதம் பார்த்தது.

"ஹக்..." என்ற சத்தத்தோடும் முன்னே விழுந்தவளைத் தூக்க முற்படும் முன் அடுத்து செழியனின் தலையைப் பதம் பார்த்தது அந்த இரும்புக்கழி.

தேடல் தொடரும்....
 
Top Bottom