Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Poovitha Karthik

New member
Messages
3
Reaction score
3
Points
3

காதல் கணம் 24​



அவர்கள் நால்வரில் ஒருவன் தனது கைப்பேசியின் பட்டன்களை இயக்கி காதில் வைத்தான். "அண்ணே, நீங்க சொன்ன மாதிரி இங்க தானே அந்தப்பொண்ணு இருக்கு.. சிவாத்தம்பி இங்க தானே தூக்கிட்டு வந்திருக்கு.. சரிங்கண்ணே, நம்ம கிரானைட் குடவுனுக்கே தூக்கிட்டு வந்திருறோம்ண்ணே.." என்றான்.

வித்யா அவன் பேச்சைக்கேட்டதும் பயந்து திரும்பி தான் வந்த பக்கமே ஓட ஆரம்பித்தாள். மொட்டையன் ஒருவன் வேகமாக அவளை நெருங்கிப் பிடிக்க முயன்றதில் சேலை முந்தானை அவன் கையில் சிக்கி, அப்படியே முழுப்புடவையும் அவனால் உருவப்பட்டு தரையில் சகதியில் உருண்டாள்.

நால்வரும் காமப்பார்வையால் அவளுடலை மாமிசமாக்கி புழுவாய் ஊர்ந்தார்கள். அரக்கர்கள் போல் குனிந்து நிமிர்ந்து சிரித்தார்கள்.

அவள் அச்சத்தில், "சிவனேஸா! சிவனேஸா!" என்று உச்சஸ்தாயில் கத்தினாள்.

அவள் வாழ்க்கையும் மகாபாரத சீரியலாக இருந்திருந்தால் இந்நேரம் கூக்குரலுக்கு கிருஷ்ணர் எண்டராகி காப்பாற்றியிருப்பார். என்ன செய்வது! அடுத்த சீன் என்னவென்று தெரியாத லைவ் டெலிகாஸ்ட் தானே வாழ்க்கை!

அவன் வருவது போல் தெரியவில்லை எனவும், கைக்கு அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அவர்களை தாக்க முயன்றாள் வித்யா. முதலடி வலுவாக விழுந்துவிட்டதில் புடவையை உருவிய மொட்டைத்தலையன் "பிடிங்கடா அவளை!" என்று அங்கேயே தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.

மற்றவர்கள் ஒன்றுகூடி அவள் கையிலிருந்த கட்டையை பறிக்க முயற்சி செய்யவும், அதை அவர்கள் மீதே தூக்கிப்போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் மீண்டும் ஓடத்துவங்கினாள் வித்யா.

மொட்டையனைத் தவிர்த்து மற்ற மூவரும் தொடர்ந்து அவளைத் துரத்தினார்கள்.

டிஸ்கவரி சானலில் ஒரு புலியோ, சிங்கமோ துரத்தும்போது உயிர் பயத்தில் புள்ளிமான் எப்படி மருண்டு ஓடுமோ அப்படித்தான் கரடுமுரடான அந்தப்பாதையில், நிலவின் ஒளியில், நெஞ்சம் தடதடக்க, நீர்த்தேக்கங்களையெல்லாம் குதித்து தாவிக்கடந்து, உயிரைக்கையில் பிடித்து ஓடினாள் வித்யா.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் சிவனேஸ்வரனைக் கண்டதும் எவரெஸ்ட் சிகரத்தை நெருங்கியவள் போல் கூடுதல் ஆற்றலைப் பெற்று வேகமாக ஓடிவந்து அவன் நெஞ்சில் மோதி நின்றாள்.

அவனைக் கட்டிப்பிடித்து தனது பயத்தையும் பதட்டத்தையும் குறைத்துக் கொண்டிருந்தவள், திடீரென சுதாரிப்படைந்தவள் போல் அவனைவிட்டு விலகி நின்றாள்.

பின்பு, திரும்பிப் பார்த்து பயத்தில் அவனுக்குப் பின்னால் வந்து ஒளிந்துகொண்டாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்தத் தன் செய்கையைக் குறித்து. யாரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று ஓடினாளோ இப்போது அவனிடமே அடைக்கலம் கேட்கும் நிலைமை.

சிவனேஸ்வரன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து பிஸ்டலை வெளியே எடுத்தான். துரத்தி வந்த தடியர்கள் மூவரும், "தம்பி, மாமா தான் இந்தப்பொண்ணை தூக்கிட்டு வர சொன்னாரு.. நீங்க விலகிக்கோங்க.." என்றதும், பிஸ்டலை மேலே வானத்தை நோக்கி இரண்டுமுறை சுட்டான்.

டப் டப் என்ற சத்தத்தோடு பிஸ்டலின் வாயிலிருந்து புகை வந்தது நிலவொளியில் புலப்பட்டது. வித்யா பீதியில் அவன் முதுகு வழியாக அவன் வயிற்றைக் கட்டிக்கொண்டாள்.

அவர்கள் தங்கள் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், "டேய்! விஜியண்ணேக்கிட்ட நேர்ல பேசிட்டு வந்து பார்த்துக்குவோம்டா.. நம்ம ஆளுங்களோட வந்து தூக்கிட்டு போகும்போது இவர் என்னப் செய்றார்ன்னு பார்க்கலாம்.." என்று பின்வாங்கினார்கள்.

அவர்கள் கிளம்பியதும் அவன் அவள் கையைப் பிடித்து குடிசைக்கு இழுத்து வந்தான்.

உள்ளே நுழைந்ததும் வலப்புறங்கையால் சுளீர் என அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். அவள் பதிலுக்கு அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.

அவனுக்கு மிகவும் பரிச்சயமான பெண் ஷ்ரதா என்பதால் அனைவரும் அவளைப்போலவே இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டான் போலும் சிவனேஸ்வரன். ஆனால், வித்யா நான் ராணி மங்கம்மாவின் பேத்தியாக்கும் என்று அறைந்து சொல்லாமல் சொன்னாள்.

அவன் மீண்டும் ஒரு அறைவிட்டு, "இடியட்" என்றான்.

அவள் தானும் பதிலுக்கு ஒரு அறைவிட்டு, "நீதான் இடியட்" என்றாள்.

அவன் மூன்றாவதாக ஒரு அறைவிட்டு முன்னெச்சரிக்கையுடன் அவள் கைகளிரண்டையும் பின்புறமாக சேர்த்துப் பிடித்துக்கொண்டான். அதில் இருவரின் தேகமும் உரசிக்கொண்டது. சண்டைபோடுவதில் மும்முரமாக இருந்த இருவருக்குள்ளுமே இந்த தேக உரசல் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.

"ஹேய்! உன்கிட்ட என்ன சொன்னேன்?" என்று அதட்டினான் சிவனேஸ்வரன்.

அவள் திமிறி அவன் கைகளைத் தட்டிவிட்டு, "உன்னால தான் எல்லாம்.. இப்போ அந்த விஜயாதித்தன் ஆட்கள் வந்து என்னை கடத்திட்டுப்போகப்போறாங்க.. நீ நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கப்போற.. அவனுங்க என்னை அங்க கொண்டுபோய் என்னவெல்லாம் செய்வானுங்களோ தெரியாது.." என்று புலம்பினாள். கண்களில் லேசாக நீர் படலமிட்டிருந்தது.

அவன் அப்போது அந்த நூறு வாட்ஸ் மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் தான் கவனித்தான் அவள் உடையை. அவள் ஜாக்கெட்டை தைத்த டெய்லர் அதற்கு முன்பு கிணறு வெட்டிக்கொண்டிருந்தவராய் இருந்திருக்க வேண்டும், முன்புற கழுத்தை விசாலமாகவும் ஆழமாகவும் கத்தரித்திருந்தார்.

தான் கவர்ச்சி கன்னியாய் ஒருவனுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பிரக்ஞையேயின்றி அழுது கொண்டிருந்தாள் வித்யா. அவளுக்கு எப்போது எந்தக்கணம் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பே மேலோங்கி இருந்ததால் ஆடைகவனம் இல்லை. "வாங்க! என்னை எங்க வீட்டுல கொண்டுபோய் விடுங்க.." என்றாள். அவன் அசையாமல் நின்றான்.

திடீரென தன் கால் மீது ஏதோ ஏறியது போல் இருக்கவும் சட்டென்று அவனை நெருங்கி சட்டையைப் பிடித்துக்கொண்டாள். "ஏதோ பூச்சி" என்று கீழேயேப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் அனல்மூச்சுக்கூட தாபத்தை உணர்த்தவில்லை.

ஒருநிலைக்கு மேல் முடியாமல் சிவனேஸ்வரன் அவள் இடையில் கையிட்டு தன்னோடு இறுக்கிக்கொண்டான்.

அவள் விதிர்த்துப்போய், "ஹேய்! விடு என்னை.." என்று அவன் கரத்தை விலக்கப்போராடினாள்.

அவளை நகர்த்திக்கொண்டே வந்து கயிற்றுக் கட்டிலில் தள்ளியவன், தானும் அவள் மேலேயே சரிந்தான். அவள் மேல் சென்ட், சகதி, வியர்வை என்று கலந்துக்கட்டி நாற்றம் அடித்தது. ஆனால், காமமூர்க்கனுக்கு மூளையும் மூக்கும் ஒருசேர வேலைசெய்யாதது போல நடந்துக்கொண்டான்.

தன்னை தன் உடலால் பலவந்தமாக அழுத்தி அடக்கியவனை, தன் கைவிரல் நகங்களால் முகத்தில் பிறாண்டி வைத்தாள் வித்யா. வலியோடு அவள் கைகளை இரண்டையும் தலைக்கு இருபுறமும் பிடித்து வைத்துக் கொண்டவன், தனது குறிக்கோளில் கவனமானான்.

எவ்வளவு போராடியும் சிவனேஸ்வரனின் வலிமையே ஜெயிப்பது போன்றதான நிலையில், தனது திமிறல்களை எல்லாம் கைவிட்ட வித்யா கேவலாய் கெஞ்சத் தொடங்கினாள். "இவ்ளோ நேரம் உன்னை நல்லவன்னு நினைச்சேன்.. ஆனா நீ.. நோவ்!ப்ளீஸ்!"

"உனக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை துரத்திட்டு வந்த நாய்களுக்கும் எந்த வித்தியாசமுமே இல்லைன்னு நிரூபிச்சிட்ட.. உன் யோக்கியதை தெரிஞ்சி தான் அந்த ஷ்ரதா தப்பிச்சிட்டாப் போல.." என்றவள் சொன்னதும், சுதந்திரமாய் அவள் கழுத்தில் ஊர்ந்து கொண்டிருந்தவன் கொதிக்கும் பாலில் வாய்வைத்தவன் போல அவளை விட்டு எழுந்து விலகி உட்கார்ந்தான்.

தனது வார்த்தைகள் அவனை காயப்படுத்திவிட்டதை கிரகித்த வித்யா, கைகளை உடலின் குறுக்காகப்போட்டுக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

அவன் திரும்பி உட்கார்ந்தபடியே தன் சட்டையின் பட்டன்களைக் கழற்றி அவளிடம் நீட்டினான். தந்த சட்டையை மறுக்காமல் வாங்கி அணிந்துகொண்டாள் வித்யா.

திடீரென அவன் "இல்ல" எனவும், பயத்துடனே சன்னமாக "ம்ம்?" என்றாள்.

"இல்ல, என் ஷ்ரதாவுக்கு என்னைப் பிடிக்காம இல்ல.." என்றான் அவன்.

"அப்புறம் ஏன் நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கலை?"

கேள்விக்கான விடைதேடி சிவனேஸ்வரனின் நினைவுப்பயணம் தொடங்கியது.


********************


"ஐ லவ் யூ"

திக்குமுக்காடிப்போனான் சிவனேஸ்வரன்.

யாரைப்பார்த்து கத்திக்கொண்டிருக்கிறான் இந்த வீசி என்ற கேள்விக்கு இப்போது இடமேயில்லை.

ஏனெனில், வெளியே நின்ற ஷ்ரதாவின் பிங்க் நிற ஸ்கூட்டியைப் பார்த்து தானே தன் வண்டியையே நிறுத்தியிருந்தான் அவன்.

'துரோகி! பச்சைத்துரோகி! எவ்வளவு முறை ஷ்ரதா மீதான என் காதலை இவனிடம் சொல்லி இருப்பேன்?.. இன்னும் நான் என் உள்ளக்கிடக்கை அவளிடம் சொல்லக்கூட இல்லையே.. அதற்குள் பாவி முந்திக்கொண்டானே.. நான் ஒரு மடையன்! அப்பா அட்டைப்பூச்சி லேசுபட்டதல்ல; ஒட்டிக்கொண்டால் ரத்தத்தை உறிஞ்சாமல் விடாது சிவா என்று பலமுறை அறிவுறுத்தியும், என் தோளில் இடம் கொடுத்தேனே.. ம்ம், எனக்கு இது தேவை தான்!.. எவ்வளவு பெரிய ஒழுக்கசீலன் என்று ஷ்ரதாவை இவனிடம் அனுப்பினேன்.. இவன் அக்கா, அண்ணனை வளைத்துப்போட்டாள், இவன் தங்கையை வளைத்துப்போட பார்க்கிறான்.. தூப்! மானங்கெட்ட குடும்பம்..'

"அதான் ஐலவ்யூ சொல்லிட்டேனே.. ப்ளீஸ் கையை கட் பண்ணிடாத.. அந்த ரம்பத்தை கீழேப்போடு.." என்றான் வீசி.

'அவளை மயக்கி தன்னை காதலிக்கும்படி செய்துவிட்டு, இப்போது அவள் தான் என்னவோ தன்மீது பைத்தியமாகிக்கிடப்பது போல நடிக்கிறானே! மோசக்காரன்!.. நட்பிற்கே பெரிய இலக்கணம் என்று இவனை நினைத்தேன்.. இவன் இலக்கணமல்ல; மாபெரும் பிழை.. கூடயிருந்தே கழுத்தறுத்த துஷ்டன்.. அன்னைக்கு இதனால தான் எனக்கு ஆறுதல் சொல்லக்கூட முடியலையா இவனுக்கு!.. ம்ம், குற்றவுணர்வு குத்தியிருக்கும்.. உன் சந்தோசம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது வீசி" என்று கருவியபடியே சென்றுவிட்டான்.

ஷ்ரதா ரம்பத்தை கீழேப்போட்டுவிட்டு அழுதாள்.

'ப்ச்' என்று சலித்தபடியே அருகில் வந்தவன், "அதான் ஐலவ்யூன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் அழற?.." என்று அதட்டினான்.

"நீங்க சும்மா தான் சொன்னீங்க, எனக்குத்தெரியும்" என்றாள் அழுகையினூடே.

எல்லாம் சரியாகத் தெரிந்துகொண்டே குழந்தை போல நடப்பவளை என்ன செய்வது? அவனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்தால் தலையில் ஏறி உட்கார்ந்துகொள்வாளோ என தனது சுபாவத்தை விட்டுக்கொடுக்காமலே சொன்னான், "சும்மா எல்லாம் சொல்லலை" என்று.

உண்மையில் இவ்வாக்கியத்தை முதலில் தான் தன் மனதில் பதியவைக்க முயன்று கொண்டிருந்தான் வீசி. நிச்சயம் அவனுக்கு அவள் மீது காதல் எல்லாம் இல்லை என்று தெரியும். அந்தக்கருமம் வராமலிருப்பதுவும் இப்போது தலையாய பிரச்சினையில்லை.

ஆனால், இந்த 'ஐலவ்யூ' ஏதோ கட்டாயத்தில் வந்த உளறலாக இருந்தாலும் அவனுக்கு சிறிதுகாலம் காதல் பண்ணிப்பார்த்தால் தான் என்னவென்று தோன்றியது. காதல் செய்த அனைவருமேவா கல்யாணம் செய்து கொள்கிறார்கள்? அந்த நம்பிக்கை தான் துணிவை தந்தது அவனுக்கு.

"அப்போ உண்மையாத்தான் சொன்னீங்களா?"

"ம்ம்ம்" என்றுவிட்டு கல்லாப்பக்கம் சென்று உட்கார்ந்தான்.

அவள் லஜ்ஜையோடு தயங்கியபடியே அவனருகில் வந்தாள். அவன் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். காதலை சொல்லிவிட்ட பின் அடுத்தகட்டம் என்ன என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது அவனிடம்.

வந்தவள் அங்கிருந்த ஒரு தாளில் தனது போன் நம்பரை எழுதி அவனருகில் நகர்த்தி வைத்தாள்.

அவன் பார்த்து தனது நோக்கியா போனில் பதிவுசெய்து கொண்டான். மனம் 'நெக்ஸ்ட்? நெக்ஸ்ட்?' என்றது.

அவள் "உங்க நம்பர்?" என்றாள் கீழே குனிந்துகொண்டே.

அவன் வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே நுழையவும் கத்தரித்தாற்போல, "போன் பண்ணி சொல்றேன்" என்றான்.

அவள் ஏமாற்றமாக, "ம்ம்" என்று தொங்கிய முகத்துடன் வெளியே சென்றாள்.

உள்ளே நுழைந்த வாலிபன் கதைசொல்லி கீராவின் சிறுகதை தொகுப்பை வாங்கிக்கொண்டுபோனான்.

வீசி அவள் ஸ்கூட்டியை கிளப்பி சென்றுவிட்டாளா என்று இருக்கையிலிருந்து எழுந்து எட்டிப்பார்த்தபோது, மீண்டும் உள்ளே வந்து, "உண்மையாத்தான் சொன்னீங்களா?" என்று அவனை திடுக்கிடச் செய்தாள் ஷ்ரதா. அவன் பொத்தென்று நாற்காலியில் விழுந்தவன், ஆமாமென்று கத்தவும் அரண்டு ஓடிவிட்டாள்.

சிறிதுநேரம் யோசிப்பு பாவனையுடனே முகத்தை வைத்திருந்தவன், பிறகு தன்னாலயே சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

ஷ்ரதாவின் குழந்தைத்தனமான செய்கைகள், அவளது காதல் நிச்சயம் தன்னை பாதிக்காது என்ற எண்ணத்தை அவனுக்குள் வலுப்படுத்திவிட்டது.

LFRTwRgEAdxyOZ_YEJp8KSRvMpgpS6U3j2cepPnZdrLj17d28C7n2Ayrzv2BWcZVFBbUW2Pog9ONz1X8TT7VGA-DH54-2ncEUEBfbyH8pT0cjZh7f54pH8E5mKggs90Ywl6DGH3I


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

வாங்க! இந்த வண்டில ஏறிப்போய் இந்த வீசி என்னதான் நினைக்கிறான்னு ஒரு எட்டு கேட்டுட்டு வந்திடலாம்.

கருத்துத்திரி,
🚃🚃🚃🚃🚃🚃
Nice..Waiting for next episode
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Super pa aravaram illamal pugai illamal varum rail poochi thanga mangai pt usha thangai😂😂😂😂😂
Vithava adangamatrale vijayathithan alunga kitta mattittala😲
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Siva avala kadathi vanthu rape panna try pandra serious scene. Ana yen enakku sirippa varuthu athuvum rendu perum mari mari adichikittu😂😂😂😂😂
Antha kamamurkanukku mookum velai seiyala😂😂😂kinaru vettina tailor 😂😂😂😂
 
Messages
49
Reaction score
50
Points
18
செம டியர் இப்போ தான் படிச்சு முடித்தேன் சூப்பர் வைட்டிங் next ud
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
😍😍😍
Nice update. சிவா எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிக்கிறானே. லூசு.. இவன் உண்மையாவே ஷ்ரதாவ love பண்ணானா.. நான் கூட இவன் நல்லவன்னு நெனச்சேன்.. 😠😠😠
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Wow akka😍antha msg convo😂😂🤣🤣 paaavm shratha ivana yen ipdi love panra🤔🤔 vc ku unmaya pidichuruka illa panitha papom ngra mentality ah🤔🤔 shratha he is not gud pair fir u.. ipove nee escape agirukalam.. vc otukekrathu thapu😏😏 1st wrong thought on vc🙄akka thiruparanguntram spr ah erunthuchu😍😍unmaya apdi white fish varuma akka🤔🤔 pathacha vijayathithan sharatha ah🙄🙄
 
Top Bottom