Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

Status
Not open for further replies.

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
20
குழந்தையின் கையில் இருந்த நீடிலை அவனுக்கு வலிக்காதவாறு உருவி எடுத்த விஜி வெளியே வந்த ரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் மீது பஞ்சினை வைத்து மிதமாக ஒரு சிறிய கட்டினை போட்டுவிட்டாள்.
அவனை அழாத வாறு பார்த்தும் கொண்டார்…

ஆனால் ஆதி அவ்வப்போது தாயை நினைத்து கதற ஆரம்பித்தான்…

குழந்தை தாய்க்காக ஏங்குவதை ரிஷியிடம் கூறினால் ரிஷியின் மனம் மாறிவிடும் என்று நினைத்த பெண்கள் ரிஷியிடம் மறைந்தனர்.
முடிந்த அளவு குழந்தையை மேனகாவே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.

அவரின் பிள்ளைகளைக் கூட இந்த அளவிற்கு பார்த்தது கிடையாது ஆனால் ஆதியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்...குழந்தை எக்காரணத்தைக் கொண்டும் தாயை தேடக் கூடாது என்று…..

அவர் வழக்கமாக செல்லும் எல்லா இடங்களுக்கும் செல்வதை தவிர்த்தார் வீட்டிலேயே இருக்கிறார்.


ரிஷியும் முக்கியமான வேலைகளுக்கு மட்டும் அலுவலகம் செல்வது மீதி நேரங்கள் குழந்தையுடன் அமர்ந்தபடியே வேலைகளை வீட்டிலிருந்து பார்க்கத் தொடங்கினான்.

இப்பொழுது ரிஷிக்கு உதவியாக ராகவ்வும் இருக்க பிரச்சினை எதுவும் இல்லாமலே ஆதி மெல்லமெல்ல தாயை மறக்கத் தொடங்கியிருந்தான்.

பிள்ளையே மறக்க முடியாத பவித்ரா உணவை மறந்து உறக்கம் இல்லாமல் மெல்ல மெல்ல உருக்குலைய ஆரம்பித்தாள்.

நாராயணன் உடல் நலம் நன்கு தேறி டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு வந்தவுடன் மேனகா அவரை விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறார் இருவருக்குமே அரசு வேலை என்பதினால் பெரியதாக பணப்பற்றாக்குறை வரவில்லை…

ஆனால் மனதில் மகள் வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது ஏன் அவள் இன்னும் புகுந்த வீட்டிற்குச் செல்வதை பற்றி யோசிக்கவில்லை கைக்குழந்தை வேறு இருக்கிறான் அவனை விட்டுவிட்டு இவள் எப்படி இங்கே இருக்கிறாள்.

குழந்தை எப்படி இவளைப் பிரிந்து இருக்கிறது... அங்கிருந்தும் இவளுக்கு யாரும் போன் செய்து பேசியது போல் தெரியவில்லை... இவளும் யாரையும் அழைப்பது போல் தெரியவில்லை என்ன நடக்கிறது அவளது வாழ்வில் என்று பலவிதமான மனக்குறை அவருக்கு வந்தது .

மெதுவாக மகளிடம் விசாரிக்க உண்மையை மறையாது கூறிவிட்டாள். தந்தையைப் பார்க்க வந்த அன்று வீடு செல்ல நேரமானதால் தனக்கு ஏற்பட்ட உடல் உபாதைக்கு மருந்து எடுத்துக் கொண்டதற்காக வீட்டில் பிரச்சனை வர வாக்குவாதம் முற்றி ரிஷி அவளை வீட்டைவிட்டு அனுப்பி விட்ட விஷயத்தை முழுவதும் கூறியவள் மருத்துவமனையில் அப்பாவிற்காக செலவு செய்த எல்லாப் பணத்தையும் கொடுத்து பின்புதான் தனது குழந்தையை பற்றி அவர்களிடம் பேசி வாங்க வேண்டும் என்று கூறினாள்.

அந்த நேரத்துல உன்னை அனுப்பும் பொழுது உங்க வீட்டில இருந்த யாருமே உனக்காக பேசலையா பவித்ரா…

ம்ம்... இல்லம்மா எல்லாருமே வேஷதாரிகள் ரிஷிக்காக மட்டுமே என் கிட்ட பேசி பழகி இருக்காங்க அதனால ரிஷி என்னை வெளியே அனுப்புறேன்னு சொன்னதும் சந்தோஷமா அனுப்பி வெச்சுட்டாங்க எனக்கும் இனிமே அந்த வீட்டுக்கு போறத பத்தி சுத்தமா எந்த ஐடியாவுமில்ல ஆனா என் பையன் இருக்கான்... அவனை மட்டும் எப்படியாவது அங்கிருந்து வாங்கனுமா…

எதையும் அவசரப்பட்டு முடிவு எடுத்தடாத பவித்ரா இது உன்னோட வாழ்க்கை பிடித்தாலும் பிடிக்கலனாலும் அனுசரிச்சு போனா மட்டும் தான் குடும்ப வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் அதனால பொறுமையா இரு முதல்ல அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றவர்

மருத்துவமனை காப்பியினை கொண்டு இன்சுரன்ஸ் ஆபீஸில் அப்ளை செய்து விட்டார் ஆனால் பணம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை அது வரை காத்திருக்க முடியாது என்று நினைத்த பவித்ரா தாயிடம் தயங்கித் தயங்கி அவரின் நகைகளை கேட்டாள்…


ஏன் எதற்கு என்று கேட்காமல் அவர் அணிந்துகொள்ள சில நகைகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதி நகைகளை மகளிடம் கொடுத்தவர்...
உனது திருமணத்திற்காக எடுத்து வைத்த சில நகைகளும் இங்கு இருக்கிறது… தேவைப்பட்டா எடுத்துக்கோ என்றும் சொன்னார்.


தேங்க்ஸ்மா என்று தாயிடம் நன்றி கூறிவிட்டு தம்பியை அழைத்துக்கொண்டு ஒரு தனியார் விற்பனை நிலையத்திற்கு சென்று நகையின் மதிப்பீட்டை அறிந்து கொண்டவள் அங்கேயே நகையை விற்றாள்…

தந்தைக்கு கடைசியாக வந்த சம்மரி பில்லோடு ஒப்பிட்டு பார்த்து... அதிலிருந்து பத்து சதவிகித பணம் அதிகமாக எடுத்துச்சென்று ரிஷியின் வங்கிக் கணக்கில் போட்டு விட்டாள்.

இங்கே பணம் போட்ட உடனேயே ரிஷிக்கு மெசேஜ் செல்ல முதலில் அவனுக்கு புரியவில்லை உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு அழைத்து என்ன என்று விசாரிக்க பணத்தைப் போட்டவரின் பெயர் பவித்ரா என்று இருக்கிறது என்று கூறவும் புரிந்து விட்டது…

அன்று பவித்ரா அவனுடைய கார்டிலிருந்த பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சரியாக பத்து சதவீதம் அதிகமாக இருப்பதை அறிந்தவனுக்கு குபீரென்று சிரிப்பு வந்தது.

மனைவி தன்னிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி போட்டு திருப்பிக் கொடுத்திருக்கிறாளா அப்படி என்றால் அவள் தனக்கு ஏற்படுத்திவிட்டுப் போன மன காயங்களுக்கும் நானும் வட்டி போட்டு கொடுக்க வேண்டுமா பவித்ரா …?என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அவனுடைய அலைபேசிக்கு வெங்கட்டின் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.

ஆதி பிறக்கும் ஒரு நாளுக்கு முன்பு வரை வெங்கட் உடன் அடிக்கடி எதையாவது பேசி இருக்கிறான் ஆதி பிறந்த அன்று ஏற்பட்ட சில கசப்பான நிகழ்விற்கு பிறகு தான் வெங்கட் ரிஷியுடன் பேசுவதை குறைத்து கொண்டான்.

ஆனால் ரிஷியோ அப்படியெல்லாம் இல்லை எப்பொழுதும் போல ஏதாவது ஒரு பார்வேர்ட் மெசேஜாவது அவனுக்கு திருப்பி விடுவான் ஆனால் வெங்கட்டிடம் இருந்துதான் எந்த ஒரு எதிர்வினையும் வந்தது கிடையாது.

ஆனால் இன்று அவனிடத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறது புதிதாக ஏதோ ஒரு வில்லங்கத்தை பவித்ரா இழுத்து வைக்கிறாள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

அந்த வீட்டிலேயே வெங்கட்டிடம் மட்டும்தான் இன்னும் ரிஷி முறைத்துக் கொள்ளவில்லை இனி பவித்ராவால் அதுவும் நடக்கப்போகிறது என்று புரியவும் ரிஷிக்கு வேதனையில் முகம் சுருங்கியது…

கண்டிப்பாக குழந்தை பற்றிய பேச்சைத்தான் பேசப் போகிறான் இவனிடம் எப்படி முகத்தில் அடித்தது போல் மகனைக் கொடுக்க மாட்டேன் என்று கூறுவது என்று யோசிக்க தொடங்கியிருந்தான்.

அதற்குள்ளாக முழுவதுமாக அழைப்பு முடிந்து கால் கட் ஆனது மீண்டும் வெங்கட்டிடம் இருந்து அழைப்பு வந்தது இதற்குமேல் எடுக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று யோசித்தவன் காலை அட்டென்ட் செய்ய


இப்பொழுது வெங்கட்டுக்கு புதுவிதமான குழப்பம் இவனை எப்படி அழைப்பது முதலில் மாமா என்று முறை வைத்து அழைத்தது போல அழைக்கவா... இல்லை மரியாதையாக வேறு வார்த்தை போட்டு அழைப்பதா என்று குழம்பியவன்

அது வந்து…. நான் வெங்கட் பேசுறன்...ம்ம்... உங்கள கொஞ்ச நான் சந்தித்து பேசனும்…

வெங்கட்னா...எந்த வெங்கட்…?
எனக்கு பர்சனலா ஒரு வெங்கட்டை தெரியும் அவன் என்னோட மச்சான் நாலு வார்த்தை பேசினா அதுல மூணு வார்த்தை பாசமா மாமாங்கற வார்த்தை தான் இருக்கும் அந்த வெங்கட்டா இருந்தா இப்ப கூட நீ என்னோட ஆபீஸ்க்கு வரலாம் நான் இப்போ ஆபீஸ்ல தான் இருக்கேன்


என்ன மாமானு கூப்பிடவே விரும்பாத வெங்கட்டா இருந்தா என்னோட ஆபீஸ் ப்ரண்ட் கேட்ல இருக்கற செக்யூரிட்டி கிட்ட என்னோட பர்சனல் செக்கரட்ரி நம்பர் இருக்கும் அதை வாங்கி அவர்ட்ட பேசி நான் எப்போ ஃப்ரீனு கேட்டு அப்பாயிண்ட்மெண்ட் அவர் தந்தா வாங்கிட்டு சொல்ற டைம்க்கு வந்து பாருங்க…


சா..சாரி மாமா... நான் எப்போ வர்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க கூட அக்காவும் வர்றா….


ஆதியை பத்தின பேச்சா இருந்தா உன் அக்கா இங்க வர்றது வேஸ்ட் கண்டிப்பாக குழந்தையை நான் அவளுக்குக் கொடுக்க மாட்டேன் வேற எதைப் பத்தியாவது பேசுறதா இருந்தாலோ இல்லை என்கிட்ட மன்னிப்பு கேட்கறதா இருந்தா, தாராளமா அவள கூட்டிட்டு இப்பவே கூட வரலாம் இன்னும் ஒரு மணி நேரம் நான் ஃப்ரீ தான் என்று கூறியபடி ஃமொபைல் போனை வைத்து விட்டான்.

என்னடா சொன்னாரு என்ற பவித்ரா தம்பியின் அருகில் நின்றபடியே அவனின் முகத்தை பார்க்க

அக்கா ஆதியை பத்தி பேசறதுன்னா நீ வர வேண்டாமாம்.. அவர் கிட்ட மன்னிப்பு கேட்கிற மாதிரி இருந்தா மட்டும் உன்னை வரச் சொல்றாரு…

எதுக்குடா நான் அவர் கிட்ட மன்னிப்பு கேட்கனும்... பண்ணின தப்பு எல்லாமே அவர்தான்... ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போன உடனே என்ன ஆச்சு பவி உன் அப்பா எப்படி இருக்கிறாரு அவருக்கு திடீர்னு உடம்புக்கு என்ன வந்ததுனு...ஒரு வார்த்தை கூட கேட்காம என்கிட்ட பிரச்சனை பண்ணினது அவர்...அவரா ஆரம்பிப்பாரு….
அவரா என்னை அடிப்பாரு அவரா என்னை வெளியே துரத்துவாரு... ஆனா மன்னிப்பு மட்டும் நான் போய் கேட்கணுமா நல்லா இருக்கு கதை எப்படி அவர் ஆதியை எனக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாரு

முதல்ல என்னை அவர் கிட்ட கூட்டிட்டு போ யார் யார் கிட்ட மன்னிப்பு கேட்கிறாங்கனு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்...


ப்ளீஸ் பவி அங்க போய் இந்த மாதிரி எதுவும் உளறி வைக்காதே நமக்கு முதல்ல குழந்தை முக்கியம் அதுக்கு அப்புறம் சமாதானமாகி அவரோடு சேர்ந்து வாழற வழியை பாரு ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கும்போது ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குறை சொல்லறது சரி கிடையாது முடிஞ்ச அளவுக்கு காம்ளிகேட் பண்ணாத...ஈஸி கோ அவே வா பண்ணு….
சரி வண்டியில உட்காரு அவரை போய் பார்த்துட்டு வந்திடலாம்…

ஒரு நிமிஷம் இரு அவருக்குத் தர வேண்டிய பொருள் எல்லாத்தையும் பூஜை ரூம்ல வைத்திருக்கேன் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்றாள்... திரும்பி வரும்பொழுது தாயின் ஹேன்ட் பேக்கை கையில் வைத்திருந்தாள்…

பவி இப்போ இதெல்லாம் குடுக்குறதுக்கு என்ன அவசியம் வந்தது இப்போ இதை குடுத்தா அவருக்கு இன்னும் கோபம் வரும் என்ற தம்பியிடம்

கண்டிப்பா வராது இதை கொடுக்கலைன்னா தான் அவங்க வீட்டு நகையெல்லாம் நான் திருடிட்டு ஓடி வந்துட்டேன்னு கூட வாய் கூசாம பேசுவாங்க அதான் எல்லாத்தையும் அவர் கையிலேயே குடுத்துட்டு அவருக்கும் எனக்கும் ஒத்துவராதுனு முகத்துக்கு நேரா சொல்லிட்டு என் பையனையும் கையோட கூட்டிட்டு வரலாம் என்று பட்டென பேசி முடித்தாள் .

என்னவோ போ பிரச்சினையை தேவையே இல்லாம பெருசு பண்ணறியோனு தோணுது சரி நல்லா பிடிச்சுக்கோ என்று ரிஷியின் அலுவலகம் வந்து அடைந்தனர் இவர்கள் வருவதை ஏற்கனவே சொல்லியிருந்ததால் நேராக ரிஷியிடமே அனுப்பி வைத்தார்கள்.

ரிஷியும் இவர்களை எதிர்பார்த்து தான் காத்து இருந்தான் இவர்களை பார்த்ததுமே எதிர்ப்புறமாக அமர வைத்தவன் சொல்லு வெங்கட் திடீர்னு ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கறீங்க... அப்பாவோட உடம்பு இப்போ சரியாயிடுச்சா உன்னோட காலேஜ் கூட இது ஃபைனல் இயர்ல அரியர்ஸ் ஏதாவது இருக்குதா என்று ஜெனரலாக பேசினான்.

வெங்கட்டும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருக்க பவித்ராவும் கோபத்தில் ரெண்டு பேரும் மாறி மாறி முறைத்தாள்

அவள் கோபத்தை புரிந்துகொண்ட வெங்கட் மாமா நாங்க வந்து விஷயம் என்னனு சொல்லிடுறேன் என்று அவன் பேச்சை ஆரம்பிக்கும் பொழுது ரிஷி இடைமறித்து தடுத்தவன்

ஆதி,பவி சம்மந்தப்பட்ட விஷயம்னா சாரி வெங்கட் இது எனக்கும் பவிக்கும் நடுவுல இருக்கிற பிரச்சினை மூன்றாவதா ஒருத்தர் உள்ள வர்றதை நான் விரும்பல சோ நீ கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணு நான் பவித்ரா கூட கொஞ்சம் பர்சனலா பேசனும் என்று சொல்ல…

அப்பாடா விட்டால் போதும் என்று நினைத்த வெங்கட் உடனடியாக வெளியே சென்றான்.

அவன் வெளியே செல்லும் வரை பொறுமை காத்துக்கொண்டிருந்த ரிஷி இப்போ சொல்லு பவித்ரா என்ன விஷயமா என்னை பார்க்க வந்த என்று நேரடியாகக் கேட்டான்.


அதற்கு கோபத்தோடு இப்போ எதுக்கு வெங்கட்டை வெளியே அனுப்புனீங்க உள்ள இருந்தா உங்களோட லட்சணமெல்லாம் என் தம்பிக்கு தெரிஞ்சிடும்னு பயப்படுறீங்களா…? என்று சாடினாள்.

பவி ப்ளீஸ் கத்தாத இது ஆபீஸ் ரூம் கொஞ்சம் சத்தமாகப் பேசினாலும் அப்படியே வெளிய கேட்கும் எதுவாயிருந்தாலும் மெதுவா பேசு நான் உன்னோட கொஞ்சம் தனியா பேசணும்னு நினைச்சேன் எனக்கு பிரைவசி தேவைப்பட்டிச்சி அதனால உன் தம்பியும் வெளிய அனுப்பினேன் யாரையும் பார்த்து பயந்து இல்லை…

தெளிவா எனக்கு புரிஞ்சு போச்சு நீ என்கிட்ட இப்போ சண்டை போடுறதுக்கு மட்டும் தான் வந்திருக்கற இப்போ நான் என்ன சொன்னாலும் உன் மண்டையில ஏற போறது இல்ல அதனால என்ன விஷயமா வந்தியோ அதை மட்டும் சொல்லிட்டு உடனே கிளம்பி போ இப்போ ரெண்டு பேருக்குமே வேவ்ஸ் சரி இல்ல என்ன பேசினாலும் அது சண்டையில் தான் போய் முடியும் என்று ரிஷி சமாதான கொடியை வீசினான் .

எனக்கு ஆதியை பாக்கணும் போல இருக்கு அவனை பாக்காம இருக்க முடியல...அவனை என்கிட்ட குடுத்திடுங்க…

எதுக்காக உன்கிட்ட கொடுக்கனும்...ஆதியை பாக்கணும் போல இருந்தா அவன் நம்ம வீட்டுல தான் இருக்கான் போய் பாரு... அவன் இல்லாம உன்னால இருக்க முடியலனா உன்னை யாரு தடுக்கப் போறா நீ அங்கேயே இரு அதுக்கு எதுக்கு ஆபீஸ்க்கு வந்த... வீட்டுக்கு தானே போய் இருக்கணும் என்று நெற்றியை சுருக்கியபடி கூற


என்ன விளையாடுறீங்களா வீட்டை விட்டு வெளியே போனு அடிச்சி தொறத்துவீங்க...எல்லாத்தையும் துடைச்சி போட்டுட்டு நான் அங்க என் பையனை பாக்க வரனுமா... என்னால இனிமே அந்த வீட்டு வாசற்படியை மிதிக்கவே முடியாது

அங்க வந்தா ஒவ்வொரு நிமிஷமும் நீங்க என்ன வெளியே தள்ளிவிட்டதும் உங்க வீட்டு ஆளுக சுத்தி நின்னு வேடிக்கை பார்த்ததும் தான் ஞாபகத்துக்கு வரும் நா இனி அங்க வர மாட்டேன் என்று
சத்தமாகப் பேசியபடி இருக்கையை விட்டு எழுந்தாள்.

பவி மறுபடியும் நான் சொல்லறேன் கத்தி பேசாதே எனக்கு காது நல்லாவே கேட்கும் அன்னைக்கு நடந்த விஷயத்துக்காக நான் உன்கிட்ட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்குறேன்.

தயவு செஞ்சு வீட்டுக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்காத உன் பிரச்சனை என்ன…? நான் உன்னை வெளியே தள்ளி விடும் போது எல்லாரும் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தாங்க அது உனக்கு அவமானமா போச்சு அதுதானே

அதே மாதிரி எல்லாரையும் நிக்க வெச்சு கூட உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன் அதுக்கப்புறம் உன் அவமானம் காணாம போயிடும்ல...

எனக்காக இல்லனாலும் நம்மளோட குழந்தைக்காகவாவது நீ கண்டிப்பா அங்க வந்து தான் ஆகணும்...நீ இல்லாம அவன் ரொம்பவே ஏங்கறான்...அடிக்கடி உன்னைத்தேடி அழறான்...அவனை விட உன் ஈகோ உனக்கு பெருசா போச்சா…

இங்க பாரு பவி அங்கிருக்கிற யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க நான் அதுக்கு கேரண்டி தரேன் தயவு செஞ்சு வா...ஆதி பாவம்
என்று கூற கோபத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

மகனைப் பற்றிக் கூறும் போது மட்டும் மனதிற்குள் பதறியபடி கேட்டவள் அவன் வீட்டு ஆளுகளை பற்றிப் பேசியதும் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டாள் நீ எவ்வளவு வேணாலும் பேசிக்கோ உன்னோட பேச்சை நான் காதுகொடுத்துக் கேட்க மாட்டேன் என்பது போல...


பொறுமையை இழுத்து கையில் பிடித்துக் கொண்டு அவள் அருகில் வந்து அவள் எதிர்ப்புறம் ஒரு ஸ்டூலை எடுத்து போட்டவன் அவள் கைகளைப் பிடித்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான் அவளோ பட்டென்று உருகிக் கொள்ள தலையை கலைத்து விட்டு மீண்டும் தன் பொறுமையை இழுத்து கட்டுக்குள் கொண்டு வந்தான்.

பவி தப்பு யாரோடதுனு மறுபடியும் அந்த விஷயத்துக்கு உள்ளே நாம போகவே வேண்டாம் நீயும் நானும் மாறி மாறி பேசி பிரச்சினை பெருசாக்கிடுவோம்... அதனால என்ன மன்னிச்சிடு...அன்னைக்கு நடந்ததை மறந்துட்டு வீட்டுக்கு வா…

முடியாதுங்க உங்களுக்கு வேணாம்னா அடிச்சி விரட்டுவீங்க வேணும்னு நினைச்சா யோசிக்காம நாலு சுவத்துக்குள்ள யாருக்கும் தெரியாம மன்னிப்பு கேட்டுட்டு கூப்பிடுவீங்க என்னால அப்படி தன்மானம் இல்லாமல் வாழ முடியாது.

அன்னைக்கு பணத்தைப் பற்றி அவ்வளவு பேசனீங்களே இன்னிக்கு உங்க பணத்துக்கு வட்டி போட்டு கொடுத்துட்டேன் ..
ஆனா அன்னைக்கு பேசின அந்த வார்த்தை எல்லாம் உங்களால திருப்பி வாங்க முடியுமா…

முடியாதுல்ல அதே மாதிரி தான் நான் திரும்பி வர்ற விஷயமும்... நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் மாத்தணும் நினைச்சா அது முடியாது…கொஞ்ச நேரம் முன்னாடி நீங்கதான் சொன்னீங்க ஆதி என்னை தேடறான், ஏங்கறானு...உன்மையிலேயே அவன் மேல அக்கறை இருந்தா என்கிட்டயே கொடுத்துடுங்க…

நீங்க சொன்னீங்க இல்ல உங்க வாழ்க்கை விட்டு வெளியே போக சொல்லி …
இப்போ நான் சொல்றேன் என் பிள்ளையை என் கைல கொடுத்துட்டு என் வாழ்க்கைல இருந்து நீங்க முதல்ல வெளிய போங்க..என்றவள் கைப்பையில் இருந்த கவரை அவன் கையில் திணித்தவள்...

இந்தாங்க நீங்க எனக்கு கல்யாணத்துக்காக போட்ட உங்கள் குடும்பத்து நகை... இது எல்லாத்தையும் கட்டிப்புடிச்சு குடும்பம் நடத்துங்க என்னையும் என் பிள்ளையையும் விட்டுடுங்க என்று மிக நீளமாக பேசி முடித்தாள்.

என்ன பவித்ரா இது என்று கவரைப் பிரித்துப் பார்க்காமல் டேபிளின் மீது வைத்தவன் யோசிக்காமல் பேங்க் அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுற இன்னிக்கு போட்டிருந்த நகைகளை எல்லாம் கழட்டி கொடுக்கிற இது எல்லாமே என்னோட அம்மா உனக்காக பாசமா கொடுத்தது இப்போ இதை அவங்க பார்த்த எவ்வளவு வருத்தப்படுவாங்க யோசிச்சு பார்த்தியா…

உங்க அம்மா தானே நல்லாவே வருத்தப்படுவாங்க எப்படி தெரியுமா வீட்டை விட்டே துரத்தியாச்சு அப்புறம் என்ன நாம போட்ட நகைகளையும் போட்டுட்டு சுத்தறா…
இங்கிதம் இல்லாதவ... அவளோட நகைகளும் போயிடுச்சேனு வருத்தப்படுவாங்க…

பவி ப்ளீஸ் நீ என்னோட அம்மாவை பத்தி ஒவ்வொரு முறையும் தப்பாவே என் கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற பேசுறது நீ என்கிறதால நான் பொறுமையாய் இருக்கிறன் இல்லன்னா பாத்துக்கோ…

என்ன பண்ணுவீங்க அன்னைக்கு அடித்து வீட்டை விட்டு துரத்தின மாதிரி... இன்னைக்கி இங்கிருந்து துரத்த போறீங்க அவ்வளவுதானே நான் உங்ககிட்ட நாகரீகமான நடத்தையை எதிர்பார்த்து வரல எனக்கு என் பையன் வேணும் எப்போ வந்து கொடுக்குறீங்கன்னு சொல்லுங்க இல்ல நான் எங்க வரணும்னு சொல்லுங்க வந்து வாங்கிக்கிறேன்…

ஆதி என் பையன் அவனை என்னைக்கும் நான் உனக்கு கொடுக்க மாட்டேன் அவன் உனக்கு வேணும்னா தாராளமா வீட்டுக்கு வரலாம் இவ்வளவு நேரம் நீ பேசினதை கூட நான் காதில போட்டுக்கல எப்போ வர்றனு சொல்லு நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்…

நானும் அதை தான் சொல்றேன் இனிமே நான் அந்த வீட்டுக்குள்ள வரதா இல்ல உங்க வாழ்க்கைகுள்ளயும் சேர்த்துதான் எனக்கு என் பையன் மட்டும் போதும் என் பையனை குடுத்துடுங்க நானும் என் பையனும் உங்க கண்ணுல படாத ஏதாவது ஒரு தேசமா போய் வாழ்ந்துக்கறோம்…

நடக்காத விஷயத்தைப் பற்றிப் பேசி எனர்ஜி வேஸ்ட் பண்ணாத பவித்ரா இந்த உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும் என் கண்ணிலிருந்து நீயோ என் பையனோ என் கண்ணை விட்டு தப்பி போக முடியாது ஒழுங்கா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு என்னோட வந்து குடும்பம் நடத்துற வழியை பாரு இல்லன்னா தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க வேண்டியதிருக்கும்…

அதையே தான் சொல்றேன் மிஸ்டர் ரிஷிகேஷ் அவர்களே ஒழுங்கா என் பையன என்கிட்ட கொடுத்துடுங்க தேவையில்லாம பிரச்சினையில மாட்டிக்காதீங்க அப்புறம் கோர்ட் கேஸ்னு அலைய வேண்டியதிருக்கும்..

ஹேஹேஹே...நிஜமாவே பயந்துட்டேன் மிஸஸ் பவித்ரா அவர்களே... நிஜமாவே
எங்க பரம்பரையில யாருமே இதுவரைக்கும் கோர்ட் கேஸ் எல்லாம் பார்த்ததே கிடையாது முதல் முறையா உங்க புண்ணியத்துல தான் நாங்க அத பாக்க போறேன் அதனால தயவு செஞ்சு சீக்கிரமா என்ன பண்ணணுமோ அதை பண்றீங்க ப்ளீஸ் என்று அவளை நக்கல் செய்ய

டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி அவளின் மீது தூக்கி வீச மேலே படாதவாறு பிடித்துக் கொண்டவனைப் பார்த்து இன்னொரு தடவை நக்கல் செஞ்சிங்க பல்லை உடைச்சிடுவேன் என்றாள்.

இந்த மாதிரி ரொமாண்டிக் டயலாக்லாம் லவ் பண்ணும் போதுதான் காதலி காதலனை பார்த்து சொல்லுவா... ஆனா நாம காதலிக்கும் போது நீ சொல்லலையேனு நிறையா தடவை கவலை பட்டிருக்கேன்...பரவால்ல கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்த பிறகாவது பல்லை உடைப்பேன்னு சொல்றியே என்று மீண்டும் கேலி செய்ய…

ச்சே... உங்ககிட்ட வந்து சமாதானம் பேச வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் நியாயமா கேட்டா நீங்க எனக்கு புள்ளைய கொடுக்க மாட்டீங்கன்னா கண்டிப்பா நான் கோர்ட் படி ஏறுவேன்…

அம்மாவும் அப்பாவும் சேர்ந்திருக்கும் பொழுது எந்த கோர்ட்டும் ஒரே குழந்தையை அம்மாவுக்கு தனியாகவும் அப்பாக்கு தனியாகவும் பிரிச்சி கொடுக்க மாட்டாங்க பவித்ரா மொதல்ல சட்டத்தை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்க சட்டப்படி நீயும் நானும் கணவன் மனைவி புரிஞ்சிக்கோ அதனால ஒழுங்கா இந்த நகைகளை எல்லாம் எடுத்து போட்டுக்கோ நானே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…

அப்போ உங்களை நான் சட்டப்படி டிவோர்ஸ் பண்ணிட்டா அந்த குழந்தையை எனக்கு கொடுத்துடுவாங்கல்ல என்று தரையைப் பார்த்தபடியே கேட்க

அதிர்ச்சியில் எழுந்து நின்றான் ரிஷி பவித்ரா என்ன பேச்சு பேசுற நான் உன்ன சமாதானப்படுத்துவதற்காக அந்த வார்த்தை சொன்னேன் நீ அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு பேசற…


இப்போ நீங்க தானே சொன்னீங்க...
சரியா தான சொல்லுறீங்க…. நீங்களும் நானும் சட்டபடி பிரியலனா
எல்லாருமே உங்களையும் என்னையும் புருஷன் பொண்டாட்டின்னு தானே சொல்லுவாங்க எப்படி இருந்தாலும் எப்பவுமே நான் உங்ககிட்ட வரப்போவதில்லை நான் வரலைன்னா ஆதியை நீங்க என்கிட்ட கொடுக்க போறதில்லை அப்போ சட்டப்படி பிரிஞ்சா தானே கைக்குழந்தையான ஆதியை என்கிட்ட தருவாங்க... நான் உங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டே என் பையன் வாங்கிக்கிறேன்…


நான் உனக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னா….


அப்போ உங்களுக்கு என்ன பார்த்து பயமா இருக்கு இல்லையா….


உளறாத…


உளறல் இல்ல நீஜம்... நான் உன்கிட்ட டிவோஸ் கேட்டு நீங்க எனக்கு கொடுக்க மாட்டீங்கன்னா என்ன அர்த்தம் உங்களுக்கு பயம் அப்படி டிவோஸ் வாங்கிட்டா குழந்தை என்கிட்ட கொடுத்துடுவாங்கனு பயம் அதானே…

கடவுளே...பைத்தியம் மாதிரி உளறாத…. நான் உனக்கு
டிவோர்ஸ் கொடுத்தா கூட எந்த ஜென்மத்திலேயும் ஆதியை என்கிட்ட இருந்து வாங்கவே முடியாது அது முதலில் புரிஞ்சுக்கோ பவித்ரா... தேவையே இல்லாமல் என்னை சீண்டி விட்டு டிவோஸ் வாங்கிட்டு தனியா இருந்து கஷ்டப்பட போற உனக்கு இது தேவையா….


அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் மிஸ்டர் ரிஷிகேஷ் உண்மையிலேயே உங்களுக்கு என்ன பார்த்து பயம் இல்லனா ஆதியை உங்ககிட்டயே வச்சிக்க முடியும்ங்கற தைரியம் இருந்தா எனக்கு டிவோர்ஸ் கொடுங்க அதுக்கப்புறமா ஆதியை எப்படி உங்ககிட்ட இருந்து வாங்கனுங்கறது எனக்கு தெரியும் நீங்களா நானா நானே பாத்துக்கலாம்…

பவித்ரா என்கிட்ட சேலஞ்ச் வைக்காத அசிங்கமா தோத்திடுவ... உன்னோட வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் போராடினா கூட ஆதியை கண்ணுல கூட பாக்க விட மாட்டேன் இப்ப கூட சொல்றேன் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு என்னோட வா நீ நான் ஆதி மூணு பேரும் சந்தோஷமான வாழ்க்கை வாழலாம் அதை விட்டுட்டு விவாகரத்து, கோர்ட், சவால்னு உன் நேரத்தையும் நிம்மதியையும் வேஸ்ட் பண்ணாத….

சவால்னு வந்ததுக்கப்புறம் இங்கே யார் தோற்க்கறா யார் ஜெயிக்கிறாங்கறது மட்டும்தான் விஷயம்... விவாகரத்து கொடுத்ததற்கு அப்புறம் ஆதியை உங்களோடவே வச்சுக்க முடியும்ங்கற தைரியம் இருந்தா இந்த சவாலை ஏத்துக்கோங்க…

இல்லையா
உங்க தோல்வியை ஓத்துக்கிட்டு ஆதியை என்கிட்ட கொண்டுவந்து கொடுங்க அதுக்கப்புறம் உங்க கூட வரலாமா வேணாமான்னு நான் கொஞ்ச நாள் கழிச்சு முடிவெடுத்து சொல்றேன்…

சரி பவித்ரா உன் சேலஞ்ச் எடுத்துக்கிறேன் டிவோர்ஸ் நோட்டிஸ் நீ அனுப்பறியா இல்ல நான் அனுப்பவா...

எதுக்காக மாத்தி மாத்தி டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ஒரு நல்ல லாயரா பாருங்க…ஒரு நல்ல நாள்ல ரெண்டு பேருமே மியூச்சுவலா அப்ளை பண்ணலாம் எப்படியும் மூணு மாசத்துல வாங்கிடலாம் இல்ல…


சில சமயம் ஒரு வருஷம் வரைக்கும் ஆகும்….


அது ஒண்ணும் இல்லாத மக்களுக்கு உங்கள மாதிரி ஆளுங்களுக்கு இல்ல என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது மூணு மாசத்துல எனக்கு டிவோர்ஸ் கொடுக்கனும்... அதுக்கப்புறமா குழந்தையை உங்ககிட்ட இருந்து எப்படி வாங்கனும்னு எனக்கு தெரிகிறது முக்கியமான விஷயம் டிவோர்ஸ் அப்பிளிகேஷன் பார்ம் குழந்தை எனக்கு சாதகமா வரணும்னு மென்ஷன் பண்ணனும்…

அப்படி மென்ஷன் பண்ணினா குழந்தையை உன் கிட்ட குடுக்க மாட்டேன்னு எதிரா நானும் ஃபைட் பண்ணுவேன்…
தொடரும்...
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
21

தாராளமா...ஆனா சட்டம் எப்பவுமே பெண்களுக்கு ஆதரவா தான் இருக்கு இதுவரைக்கும் நீங்க யார்கிட்டயும் தோத்தது இல்லல... அதனாலதான் ரொம்ப தைரியமா என்கிட்ட சேலஞ்ச் பண்ணறீங்க

கோர்ட்ல வந்து உங்க மூக்கு உடைபட்டு அசிங்கமாக தோத்து போய் என் கிட்ட கெஞ்சுவீங்க வாரம் ஒரு முறையாவது என் பையனை என் கண்ணுல காட்டு பவினு…
அந்த சமயத்துல நான் நல்ல மூட்ல இருக்கனும்னு வேண்டிக்கோங்க..

சரி பவி... இப்போ கிளம்பறியா...எனக்கு வேலையிருக்கு….லாயரை பாத்துட்டு உன்னை கூப்பிடறேன்.
ஆல் த பெஸ்ட் என்றவனை…
பார்த்து கோபமாக முறைத்தபடி வெளியே வந்தாள்.

அவள் சென்றவுடன் தலையில் கைவைத்து அமர்ந்த ரிஷி கடவுளே இவ நிஜமாவே லூஸா இல்ல லூசு மாதிரி உளறிட்டு போறாளா... தேவையில்லாம டிவோஸ் வேணும்கறா….என்னமோ பொட்டிக் கடையில் கிடைக்கற கம்மர்கட் மாதிரி நினைச்சிகிட்டா போல…
இவளுக்கு டிவோர்ஸ் கொடுக்கறத பத்தியே நான் இன்னும் யோசிக்கல... இதுல குழந்தையை இவகிட்ட குடுத்துட்டு வாரம் ஒருமுறையாவது காட்டுனு கெஞ்சிவேணாம் பைத்தியக்காரி….
என்று வாய்விட்டு கூறியவன்


டேபிள் மீது அவள் வைத்துச் சென்ற நகை பையை தன் பக்கம் இழுத்து நகைகளை வெளியே கொட்டி சிறு பயத்துடன் ஆராய்ந்தான்.

அவன் மனதில் சிறு பயம் இருந்தது எங்கே பவித்ரா தாலியைக் கழற்றிக் கொடுத்து இருப்பாளோ என்று..

ஆனால் தாலியை தவிர மற்ற அனைத்து நகைகளும் இருந்தது பார்த்த உடனே அவனுக்கு பெருத்த நிம்மதி நெஞ்சில் கைவைத்து சந்தோஷமாக சிரித்தவன்…

நீ என்னை வெறுக்கல பவித்ரா அது போதும் எனக்கு …கோபத்தில தான் இருக்க ...கூடிய சீக்கிரம் உன் கோபத்தை மறக்க வச்சு உன்னை என்கிட்ட கூப்பிட்டுக்கறேன் அதுவரைக்கும் கொஞ்சநாள் தனியா கஷ்டப்படு…என்று கூறியவன் நகைகளை மீண்டும் பைக்குள்ளேயே போட்டு வைத்தான்.

வேகமாக வெளியே வந்த பவித்ராவை பார்த்த வெங்கட் பவி என்ன ஆச்சு மாமா கிட்ட எல்லாம் தெளிவா பேசிட்டியா எவ்ரி திங் இஸ் ஓகே…

ம்ம்…


எப்போ வந்து உன்னை கூட்டிட்டு போறாரு….


ஹான்..கூட்டிட்டு போகனுமா எதுக்கு….

ஓஓ...சாரி நாங்க எப்போ உன்னை கொண்டு போய் விடனுமாம்...இல்லனா கார் அனுப்புவாரா…

ச்சோ…. வெங்கட் உன் அக்காவ தொறத்திவிடறதுல நீ ஆர்வமா இருக்க புரியுது
..ஆனா நா போகல….

புரியல பவி ...நீ தானே ஆதியை பாக்காம இருக்க முடியலனு சொன்ன?

ம்ம்...சொன்னேன்.
. இனி ஒன்னு கூட சொன்னேன் ஆதியை கூட்டிட்டு வரேன்னும் சொன்னேன் மறந்துட்டியா….

புரியலை…

அவர்கிட்ட டிவோர்ஸ் கேட்டேன்...தர்றதா சொல்லிட்டாரு….


என்ன பவி சொல்ற அவங்க அன்னைக்கு நடந்துகிட்டது கண்டிப்பா மிகப் பெரிய தப்பு தான் அதுக்காக உடனே டிவோர்ஸ்சா...நான் கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கோ யோசி அதுக்கப்புறமா டிவோர்ஸ் பத்தி முடிவெடு அவசரப்பட்டு முடிவு எடுத்து பின்னாடி கஷ்டப்படாத...உங்க வாழ்க்கையில நீங்க மட்டும் இல்ல... ஆதியும் இருக்கான் அவனோட லைஃப் இதனால பாதிக்கப்படும்...அவசரப்படாத…


இந்த டிவோர்ஸ் முடிவே ஆதிக்காக தான்... நான் லேட் பண்ணற ஒவ்வொரு நிமிஷமும் இழப்பு எனக்குதான்...உனக்கு உன் மாமா பத்தி தெரில...அவருக்கு ஒன்னு வேணும்னா வேணும்தான்….இத்தனை நாள்ல என் பையன் என்னை தேடியிருக்கான், எனக்காக ஏங்கியிருக்கான்.
அது தெரிஞ்சும் கூட கல்லுமனசா இருந்துகிட்டு அவனை என்கிட்ட காமிக்கல...அப்படினா என்ன அர்த்தம்...அவருக்கு என் பையனை என்கிட்ட குடுக்க மனசில்லனு அர்த்தம்...இனியும் நா லேட் பண்ணினா வோல்ட் மேப்ல இல்லாத தீவா பாத்து என்புள்ளையை தூக்கிட்டு போயிடுவாரு...இங்க என் புள்ளை வருவான்னு பைத்தியம் மாதிரி நான் காத்திட்டு இருக்கனும்…


அதுக்காக டிவோர்ஸ்ஸா...இனி தரம் பேசிப்பாக்கலாமே பவி…

எத்தனை முறை பேசினாலும் முடிவு இதான் வேணும்னா நீ போய் பேசு...முதல்ல ஆதியை என்கையில தர சொல்லு அப்புறமா மத்ததை பேசிக்கலாம்...இல்லனா இதான் என் முடிவு...

மாமா கிட்ட பேசி குழந்தையை வாங்கி குடுத்துட்டா டிவோர்ஸ் கேக்கமாட்டியே…

ம்ம்...அப்படி செஞ்சா இப்போதைக்கு டிவோர்ஸ் கேக்க மாட்டேன்…

சரி கீழ வெயிட் பண்ணு நான் இப்பவே போய் பேசிப்பாக்கறேன் என்று மீண்டும் ரிஷியின் அறைக்குள் ஓடினான்…


ரிஷி தெளிவாகக் கூறி விட்டான் விவாகரத்து கொடுக்கறதை பத்தியே நான் இன்னும் யோசிக்கல அப்புறம் எப்படி நான் பிள்ளையை அவகிட்ட குடுப்பேன்…

ஒழுங்காக வீட்டிற்குப் போனதும் உன்னோட அக்காக்கு புத்தி சொல்லி என் வீட்டுக்கு அனுப்பி வைக்கற வழியே பாரு… அவ சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு என்னால தலையாட்ட முடியாது…

நான் நாராயணன் இல்ல ரிஷிகேஷ் அதை கொஞ்சம் அவ புத்தியில உரைக்கற மாதிரி சொல்லு என்று அனுப்பி வைத்துவிட்டான்.

வெங்கட்டின் பாடுதான் இப்பொழுது திண்டாட்டம் ஆகிவிட்டது அக்காவோ அடங்க மறுக்கிறாள் மாமாவும் பிடிவாதமாக இருக்கிறார் இதில் தலையிட்டு தேவையில்லாமல் நம் பங்குக்கு பிரச்சினையை இழுத்து விடக்கூடாது இவர்கள் பிரச்சினையை இனி இவர்களை பார்த்து கொள்ளட்டும் என்று நினைத்துக்கொண்டான்.

வீட்டிலோ நாராயணனும் மேகலாவும் பவித்ராவிற்கு எவ்வளவோ புத்தி கூறினார்கள் சாதாரண ஒரு குடும்ப பிரச்சினைக்காக விவாகரத்து வேண்டாம் விவாகரத்து யோசனையை சற்று காலம் தள்ளிவை…

குழந்தையை வேண்டுமானால் நானும் உனது தந்தையும் சென்று அவர்களின் காலில் விழுந்தாவது வாங்கிக் கொண்டு வருகிறோம் இல்லையென்றால் இங்கேயும் அங்கேயும் மாறி மாறி இருப்பது போல் பேசிக் கொள்ளலாம் என்றார்

ஆனால் பவித்ரா ஒத்துக்கொள்ளவே இல்லை ஏற்கனவே உங்களை பலமுறை அவமானப்படுத்தி இருக்கிறார்கள் அதனால் மீண்டும் சென்று அவர்களிடம் அவமானப்பட வேண்டாம் என்று அவர்களை அனுப்ப மறுத்து விட்டாள்.

இப்படியாக சரியாக ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் மீண்டும் கோபமாக ரிஷியில் அலுவலகத்திற்கு பவித்ரா வந்தாள்.

நேராக ரிஷியின் முன்பு வந்து நின்று நீங்க மியூட்சுவலா டிவோர்ஸ் கொடுக்கறதா சொல்லி ஒரு வாரம் ஆச்சு இந்த நிமிஷம் வரைக்கும் அதற்கான எந்த ஸ்டெப்ஸ்- ம் எடுக்கல…

பரவால்ல என்கிட்ட என்பையனை குடுங்க... உங்களுக்கு எப்போ டிவோர்ஸ் கொடுக்கணும்னு தோணுதோ அப்போ குடுங்க இல்ல குடுக்காம கூட போங்க…


இங்க பாரு பவித்ரா நீ எத்தனை முறை கேட்டாலும் சரி எந்தெந்த ஆங்கிள்ல கேட்டாலும் சரி ஆதியை நான் உன்கிட்ட கொடுக்க மாட்டேன் டிவார்ஸ் பத்தி எந்த முடிவும் எடுக்கல அதுமில்லாம இப்போ நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் கொஞ்சம் ஃபிரி ஆனதும் வக்கீல் கிட்டே பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன் அப்போ வந்து கையெழுத்து போட வா…


யூ...யூ...நீ சரியான ப்ராடு... அன்னைக்கு ரொம்ப நல்லவன் மாதிரி பேசி சமாதானப்படுத்தி என்னை வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்ட... ஆனா இப்போ பையனையும் குடுக்க மாட்டேங்கற விவாகரத்துக்கும் ஓத்துக்க மாட்டேங்குற…


நீ பிசியா இரு...இல்ல ஃப்ரீயா இரு.. பொறுமையா உன் வக்கில் கிட்ட பேசு... அதுக்கப்புறம் விவாகரத்தை பத்தி யோசிச்சு குடு இல்லனா குடுக்காம போ... ஆனா அதுக்கு முன்னாடி என் பையனை எனகிட்ட குடு... எனக்கு உடனே அவனைப் பாக்கனும் என்றவள் திடீரென அவன் சட்டையை கொத்தாகப் பிடித்து…

உண்மைய சொல்லு நிஜமாவே பையன் உன் வீட்ல தான் இருக்கானா... இல்ல என்கிட்ட கொடுக்கக் கூடாதுன்னு கண்காணாத தேசம் பார்த்து அனுப்பி வைச்சிட்டியா...இல்ல உன் ஈகோவால என்கிட்ட தோத்திடுவேனோனு பயந்து அவனை கொண்ணு உன் வீட்டு தோட்டத்தில புதைச்சிட்டியா…

கோபத்தில் அவளின் கைகளைத் தட்டிவிட்டவன்... முகத்தை அருவருப்பாக வைத்துக்கொண்டு ச்சீ...நீ பொண்ணா இல்ல வேற ஏதுமா...இது நாக்கா இல்லனா தேள் கொடுக்கா…



பெத்த பையனை எந்த அப்பனாவது புள்ளை பூச்சிக்கு பயந்து கொல்லுவானா... அதும் ஆதியை...அவன் என் உயிர்...உன்னைவிட எனக்கு அவன் முக்கியம்….இப்போ என்ன ஆதி வீட்ல இருக்கானா இல்லையானு உனக்கு தெரிஞ்சுக்கணும் அவ்வளவுதானே அதுக்கு தானே இவ்வளவு டிராமா...வெயிட் என்றவன் தனது தாயாருக்கு வீடியோ காலில் அழைத்தவன் தாயிடம் அம்மா ஆதி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் கொஞ்சம் காமிங்க பாக்கணும் போல இருக்கு என்று கூற


அவரும் ஒரு நாளைக்கு எத்தனை முறை அவனை வீடியோ கால்ல பார்ப்ப என்று சலித்தபடி ஆதியில் ரூமிற்கு சென்று அவனை காண்பித்தார்.. அங்கு ராகவி விஜி இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்க கீழே ஆதி அமர்ந்திருக்க வர்ஷினி அருகில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான்
அவனைச் சுற்றிலும் விதவிதமான பொம்மைகள் இருக்க தவழ்ந்து சென்றபடி ஒவ்வொன்றையும் தன் மீது இழுத்து போட்டுக் கொண்டிருந்தான்...அவனின் சிரிப்பை பார்த்ததுமே பவித்ரா முகத்தில் அடித்துக் கொண்டு ஓஓ... அழ ஆரம்பித்தாள்.


போச்சு எல்லாம் போச்சு என் பையனை முழுசா என்கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்க... அவனுக்கு என் நினைத்து வராத மாதிரி பண்ணிட்டீங்க இப்போ உங்களுக்குத் திருப்திதானே இனியும் நான் பொறுமையா இருந்தா என்ன உலகத்தில் இருக்கிற எந்த தாயுமே மதிக்க மாட்டாங்க எனக்கு என் பையன் வேணும்... அவனை எங்கிட்ட கொடுத்துடுங்க...

அப்படி இல்லன்னா நான் என்ன வேணாலும் செய்வேன் இப்பவே போலிஸ் ஸ்டேஷன் போவேன் என்னை அடிச்சி கொடுமை பண்ணி என் பையனை புடிங்கி வச்சிகிட்டு தொரத்தி விட்டதா உங்க மேல கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்…

உங்களுக்கு பயந்து கம்ப்ளைன்ட் எடுத்துக்கலனா... கமிஷ்னர் ஆஃபிஸ் போவேன்...அங்கயும் எடுத்துக்கலனா உங்க வீட்டு வாசல்ல வந்து தர்ணா பண்ணுவேன்... நல்லா கேட்டுக்கோங்க பவித்ரா நாராயணன் என்ன செஞ்சாலும் கேள்வி கிடையாது... ஆனா பவித்ரா ரிஷிகேஷ் வீட்டு வாசப்படி தாண்டினாலே எல்லாருக்குமே நியூஸ் எல்லாருக்குமே அது பேசுபொருள் அந்த அளவுக்கு என்னைக் கொண்டுபோய் விட்டுடாதீங்க


இத்தனை வருஷமா பரம்பரை பரம்பரையாக கட்டிக் காப்பாற்றிய கௌரவம் உங்களுக்கு நிலைச்சு இருக்கணும்னு நினைச்சீங்கன்னா தயவு செஞ்சு என் பையனை என்கிட்ட கொடுங்க…

நான் மீடியா போனா இதுவரைக்கும் நீங்க கட்டிவச்ச சாம்ராஜ கோட்டை ஒரே நிமிஷத்துல காணாம போயிடும் அதுக்கப்புறம் மறுபடியும் கட்ட உங்களால இந்த ஜென்மத்துக்கு முடியாது என்று கூற அவள் கூறியவற்றை எல்லாம் கிரகித்துக் கொண்டவன்….

இவள் இப்பொழுது பயங்கர கோபத்தில் இருக்கிறாள் இவள் கூறியதுபோல ஏதாவது ஒன்றை செய்து வைத்தாலும் நாளை பவித்ராவுடன் சேருவது எட்டாக்கனியாக ஆகிவிடும் அதனால் இப்பொழுது அவளின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தவன்

சரி பவித்ரா அன்னைக்கு நீ சொன்னதுக்கு நான் ஒத்துக்குறேன் டிவோர்ஸ் கொடுக்கிறேன் அதுக்கப்புறம் நீ பையனை கோர்ட் மூலமா வாங்கிக்கோ என்று சுவற்றை பார்த்தபடி கூற


நான் நம்ப மாட்டேன் இன்னைக்கு என்னை சமாதானபடுத்தி அனுப்ப முயற்சி பண்றீங்க எனக்கு முதல்ல பையனை கொடுங்க அதுக்கப்புறமா டிவோர்ஸ் வந்ததுக்கப்புறம் கோர்ட்ல ஆதி யார்கிட்ட இருக்கட்டும்னு சொல்லறாங்களோ அவங்ககிட்ட பையன் இருக்கட்டும் என்று விடாப்பிடியாக பேசினாள்.

சரி உள்ள போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு கொஞ்சம் உன்ன பிரஷ் ஆகிட்டு வெயிட் பண்ணு பத்து நிமிஷத்துல நான் உன்னை கூப்பிடுறேன்…

ஏமாத்த முயற்சி பண்ணலையே இன்னைக்கு ஏமாற்றினா நான் என் வீட்டுக்கு போக மாட்டேன் போலீஸ் ஸ்டேஷன் தான் போவேன்…

இல்ல பவித்ரா...நம்பு உள்ள போ..
என்று அவனின் தனிப்பட்ட அறைக்குள் அனுப்பி வைத்தவன் உடனடியாக வக்கீலுக்கு அழைத்தான்…

சரியாக அரைமணி நேரத்தில் வழக்கறிஞர் வர பவியை வெளியே அழைத்தவன்
அவங்க கையெழுத்து போட சொல்ற இடத்துல சைன் பண்ணு என்றுகூறி பேனாவை அவளிடத்தில் கொடுத்தவன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வேண்டும் எனக்கேட்ட வக்கீலிடம் தனது பர்ஸில் இருந்து எடுத்துக்கொடுத்தான்...


எல்லாவற்றையும் சரிபார்த்தவர் நாளைக்கே தாக்கல் பண்ணிடறேன் ரெண்டு தடவை மட்டும் வர்றது போல இருக்கும்...எப்போனு சொல்லறேன் என்று கூறியவரிடம்

எத்தனை லட்சம் ஆனாலும் பரவால்ல சார் இன்னும் மூனுமாசத்துல எங்களுக்கு விவாகரத்து வேணும் என்று அனுப்பி வைத்தான்…

ஏனோ விவாகரத்திற்கு பயந்து பையனை தன்னிடம் கொடுப்பான் என்று பார்த்தால் இவன் பையனைக் கொடுக்கு மறுத்துவிட்டு விவாகரத்தை அல்லவா கொடுக்கிறேன் என்கிறான்
என்று சற்று ஏமாற்றமாக ஆனது.

பத்திரத்தில் கையெழுத்திடும் போது அது என்ன நெஞ்சில் ஒரு சுள்ளென்று வலி ஏன் எனக்கு கண் கலங்கியது நான் அதைத்தானே அவன்னிடம் கேட்டேன்...அதை அவன் கொடுக்கும் போது ஏன் ஒரு வெறுமை...என்றெல்லாம் மனதிற்குள் அவளுக்கு தோன்ற தொடங்கியது…

இப்போ என்னை நம்பறியா... திருப்தியா கிளம்பு என்றவன் கண்களில் நீருடன் நின்று கொண்டிருந்தவளை பார்த்து எதுல வந்த ஆட்டோலயா...இல்ல கால் டாக்ஸியா... கீழ என்னோட கார் இருக்கு அதுல போ…

அப்படி எல்லாம் பாக்காத பவித்ரா சத்தியமா இனிமே உன் மேல எனக்கு எந்தவிதமான இரக்கமும் கரிசனையும் வரப்போறதே இல்லை.. இப்போ உன்னை கார்ல அனுப்பி வைக்கிறது கூட என்னோட சின்ன பயத்தால தான் வீட்டுக்கு போகாம நீ போலீஸ் ஸ்டேஷன் போயிட்டேனா பாவம் என் அம்மா அப்பா பாட்டி தாத்தா கட்டிவச்ச இந்த கோட்டை இடிந்து விழுந்திடும்ல அதுக்காக தான் தயவு செஞ்சு கிளம்பு உன் முஞ்சை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு…
என்றவன் லேப்டாப்பை ஓபன் செய்ய…

உள்ளே வரும்பொழுது இருந்த கோபமும் வேகமும் பவித்ராவிடம் இப்பொழுது இல்லை மிக அமைதியாக பொறுமையாக ஆபீசை விட்டு வெளியே வந்தாள்.

இவளைப் பார்த்ததும் கார் டிரைவர் காரின் கதவினை ஓபன் செய்ய உள்ளே வராமல் நடக்கும்பொழுது கதவை மூடி விட்டு மெதுவாக நடந்தே வீடு போய் சேர்ந்தாள். மனதில் அவ்வளவு வலி சத்தியமாக கோபத்தோடு தான் விவாகரத்து கேட்டாள்…

இன்னும் அவனை சற்று கெஞ்ச விட வேண்டும் என்று ஆனால் இப்படி ஒற்றை கையெழுத்தை வாங்கி உறவை முறித்துக் கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை..

வீட்டுக்கு வரவும் தாய் எதிர்ப்புறமாக நின்றவர் எங்கடி போயிட்டு வர்ற என்று கோபமாகக் கேட்டார் உடனே தாயை கட்டி அணைத்தவள் கதறி கதறி அழ ஆரம்பித்தாள்

அம்மா அவர் விவாகரத்துக்கு ஒத்துக்கிட்டாரு ரெண்டு பேரும் சேர்ந்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டோம் என்று குலுங்கி குலுங்கி அழ

அதுதான பவி நீயும் விரும்பின அப்புறம் ஏன் அழற என்று கேட்க…

டிவோர்ஸ்க்கு பயந்து பையனை கொடுப்பாருனு நினைச்சேன் நம்ம வீட்டுக்கு வந்து என்கிட்ட கெஞ்சி... உங்க கிட்ட மன்னிப்பு கேட்டு என்னை கூட்டிட்டு போவார்னு நினைச்சேன் ஆனா நான் நினைச்சது எதுமே நடக்கல...என்று அழுதவளை ஆறுதல் படுத்தினார்.

நானும் அப்பாவும் வேணும்னா மாப்பிள்ளை கிட்ட போய் பேசட்டுமா... நீயா அங்க போறதுக்கு தானே கஷ்டமா இருக்கு அவர் வந்து கூட்டிட்டு போனா உனக்கு சரிதானே என்றவரிடம்

இல்ல வேணாம்மா... போக நினைச்சிருந்தா போன முறை ஆபீஸ் போயிருந்தேனே அப்பவே போயிருப்பேன் ஆபீஸ்ல இருந்து அப்படியே என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னாரு ஆனா அதை நான் எதிர்பார்க்கல

நம்ம வீட்டுக்கு வந்து என் முகத்தைப் பார்த்து என் கண்ணை பார்த்து பவித்ரா அன்னைக்கு நான் தெரியாம பண்ணிட்டேன் அந்த பிரச்சினை என்னை மீறி நடந்திடுச்சி... குழந்தைக்கு பால் குடுக்கறது உன்னோட தனிப்பட்ட விருப்பம் நான் அதுல தலையிட்டிருக்க கூடாது... என்னை மன்னிச்சிடு அப்படின்னு சொல்லி கூட்டிட்டு போவாருன்னு எதிர்பார்த்தேன்…

அட்லீஸ்ட் மன்னிப்பு கேக்கலைன்னா கூட பரவால்ல அவரா நம்ம வீட்டுக்கு வந்து எதுமே பேசாம வீட்டுக்கு வா பவி அங்க போய் மீதி பேசிக்கலாம்னு கூட்டிட்டு போகணும்...அதான் எனக்கான மரியாதை... நான் அங்க போறதால எனக்கு எந்த மரியாதையும் கிடைக்காது... அப்படி அங்க போய் நடைபிணமா வாழறதுக்கு இப்படி விவாகரத்து வாங்கி தனியாவே வாழ்ந்திடலாம் என்றவள் அதன் பிறகு அதைப்பற்றி எதையுமே பேசவில்லை.

எதிர்பார்த்த நாளுக்கு முன்னதாகவே இருவருக்கும் பொதுவான விவாகரத்து கிடைத்தது... குழந்தை ஒரு வயதிற்கு குறைவாக இருப்பதால் அது தாயின் பராமரிப்பிலேயே இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது இன்னும் இரண்டு நாட்கள் முடிவுக்குள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் குழந்தையை ரிஷியின் குடும்பத்தார் ஒப்படைக்க வேண்டும் இவர்கள் அங்கே சென்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வாசிக்கப்பட ரிஷியின் ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் அமர்ந்தது


மேனகா விற்கும் ராதாவிற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி குழந்தை அவர்களுடன் நன்றாக ஒன்றி விட்டது இனி அவனை பிரிவென்றால் முடியாத காரியம்…
பவித்ரா அன்று பேசியதற்காக அவளின் மீது கோபம் இருந்தது என்னவோ உண்மைதான் ஆனால் எப்பொழுது ஆதியுடன் பழக ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்களுக்கு பவித்ராவின் மீது இருந்த கோபம் சற்று மட்டுப்பட்டு விட்டது .

குழந்தையின் ஜாடை பவித்ராவை போல் இருக்கும் கலர் மட்டுமே ரிஷியை போல் இருக்கும் குழந்தையின் சில நடவடிக்கைகள் கூட பவித்ராவை அவ்வப்போது ஞாபகப்படுத்தும் அதனால் அவர்களுக்கு பவித்ராவின் மீது பெரியதாக கோபமில்லை .

ரிஷி விவாகரத்து என்று கூறும்போது கூட இவர்கள் அவனுக்கு புத்தி தான் கூறினர் அவசரப்படாதே விவாகரத்திற்கு என்ன அவசியம் வந்தது ஏதோ ஒரு கோபம் அன்று நடந்துவிட்டது அதற்காக விவாகரத்து வரை எல்லாம் செல்ல வேண்டாம் ஒருமுறை சென்று அவளைப் பார்த்து விட்டு வா என்று தான் மூத்த பெண்கள் அறிவுறுத்தினர்.

இல்லம்மா விவாகரத்து என்பது வெறும் கண்துடைப்பு தான் தற்காலிகப் பிரிவு அதனால என்னை நம்புங்க உங்க பேரன் உங்கள விட்டுப் போகாமலே பவித்ராவை உங்க கிட்ட கூட்டிட்டு வரேன் என்று தாயாரிடம் வாக்கு கொடுத்த பிறகே விவாகரத்திற்கு ஒத்துக்கொண்டார் இன்று அடிமடியில் கை வைப்பது போல பேரனை பவியிடம் கொடுக்கச் சொல்கிறார்கள் என்று நினைக்க முதல்முறையாக அந்த பெண்மணி பேரனுக்காக அழுதார்.

நீதிமன்ற வளாகத்தை வீட்டு வெளியே வர வரவே பவித்ரா ரிஷியைதான் பார்த்தாள். தீர்ப்பு என அவள் மனம் ஏற்கவில்லை அவள் ஆசைப்பட்டது போல் இன்னும் இரண்டு நாட்களில் குழந்தை அவள் கைகளுக்கு வரப்போகிறது ஆனால் சந்தோஷம் துளிகூட இல்லை‌ ரிஷியின் வாடிய முகத்தை பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை சில நேரம் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

அவளைப் பார்த்த ரிஷி தன்னை ஏதாவது கேலி செய்வாள் இல்லையென்றால் குத்திக் காட்டுவாள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவளின் அந்த அமைதி கலங்கிய கண்களுடன் ரிஷியை பார்த்த பார்வை அவனுக்கு சொல்லாமல் சொல்லியது இன்னும் ரிஷிக்கான அவளின் காதல் பத்திரமாக இருக்கிறது என்று அதனால் அவனுக்கு இந்த தீர்ப்பு பெரியதாக தெரியவில்லை ஆனால் குழந்தையை சற்று காலம் வரை பிரிய வேண்டுமே என்ற கவலை மட்டும் இருந்தது….

பொதுவாக இருவருக்குமே வழக்காடிய வழக்கறிஞர் அங்கே வரவும் அவரை நேர் பார்வை பார்த்தவன் என்ன சார் குழந்தையை இப்படி விட்டுட்டீங்களே என்று கூறினான்.

அதற்கு அவரும் சார் குழந்தைக்கும் ஒரு வயது கூட ஆகல சார் இது நார்மலான தீர்ப்பு தான்…
குழந்தையை நம்ம கஸ்டடில வெச்சுக்கணும்னா நம்மகிட்ட ஸ்ட்ராங்கான ஏதாவது ஒரு ரீசன் கோர்ட்க்கு கொடுக்கனும் சார்... நம்ம கிட்ட அதுமாதிரி எந்த எவிடன்ஸ்மே இல்ல சார் இது தெரிஞ்சததால தான் பவித்ரா மேடம் அவ்ளோ ஸ்ட்ராங்கா பேசியிருக்காங்க…

ஏன் உங்களுக்கு இது ஏற்கனவே தெரியும்ல இதை முதல்லேயே நீங்க என்கிட்ட சொல்லி இருக்கணும் இல்ல ... என்று கோபப்பட்டான்.

சார் நீங்களும் மேடமும் பர்சனலா பேசினது எனக்கு எப்படி சார் தெரியும் இப்போ தான் உங்க அம்மா என்கிட்ட சொன்னாங்க அதை வச்சு தான் எனக்கே தெரிஞ்சுது பவித்ரா மேடம் கோர்ட் மூலமா குழந்தையை வாங்கிக்கிறேனு சொன்ன விஷயம்...சாரி சார்..
என்று கிளம்பிவிட

எல்லோருமே சோகமாக வீடு வர உள்ளே செல்லும் பொழுது விஜி தீர்ப்பை எதிர்பார்த்து ஆதியை தூக்கியபடி வாசலிலேயே காத்திருந்தார்.ஆதிக்கு இப்பொழுது ஒரு வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறது

ரிஷி பார்த்ததும் குழந்தை ஆதி கையெழுத்துப் போட்டு அப்பா என்று சிரித்தபடியே அவனிடம் வர ரிஷிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மகன் தன் வசம் இருக்கப் போகிறான்.

விழிகள் கலங்க குழந்தையை மேனகாவிடம் கொடுத்து விட்டு நேராக அவனின் அறைக்குச் சென்றான். இதுவரை அவன் அழுததில்லை ஆனால் முதல்முறை மகனுக்காக அழவேண்டும் போலிருந்தது...

எதுவுமே பேசாமல் மெத்தையில் அமர்ந்தவனுக்கு எதிர்புறமாக பவித்ராவுடன் மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்ட திருமண புகைப்படம் கண்ணில் பட்டது.

திரும்பிப் பார்க்க அவள் கடைசியாக உபயோகப்படுத்தி விட்டுச்சென்ற அழகு சாதன பொருட்கள் அழகாக டிரஸ்ஸிங் டேபிள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது .

இதுவரை அதையெல்லாம் பொக்கிஷமாக பாதுகாத்து கொண்டு வந்திருக்கிறான் அவள் என்றேனும் வீட்டுக்கு வந்தால் தான் எப்படி அறையை வைத்துவிட்டுச் சென்றேனோ அதே போல் இருக்கிறதே என்று ஆச்சரியத்துடன் ரிஷியை கட்டிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி இருந்தான் .

ஆனால் இப்பொழுது அவனின் மன நிலை அப்படி இல்லை திருமண புகைப்படத்தை எடுத்து கீழே போட்டு உடைத்தவன் அங்கிருந்த அழகு சாதன பொருட்களை எல்லாம் அள்ளி வீசினான்..

அப்படியும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை முதல் முறை தோத்திருக்கிறான்... அதுவும் பவித்ராவின் முன்பு... பவித்ரா சொன்னதுபோல் அசிங்கமாக மூக்கை உடைத்துக் கொண்டு நாளை அவளிடத்தில் தனது மகனைக் கொண்டு சேர்க்கப் போகிறான்.

அவனுக்கு இதுவெல்லாம் அவமானமாக தெரியவில்லை எப்படி கோட்டை விட்டான்...மகனை வைத்து அல்லவா அவளை தன் வசம் வர வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்...

இப்பொழுது மொத்தமாக எல்லாமே போய்விட்டதே அவள் மகனை அழைத்துக் கொண்டு எங்காவது சென்று விட்டாள் இனி எப்படி அவளையும் தனது குழந்தையும் தன்னிடம் வரவைப்பது தன்னுடைய காதலுக்கான வயது இரண்டு ஆண்டுகள் தானா என்று அவ்வளவு கோபம்…

அவளின் காதலை இன்று கண்களில் பார்த்தேனே அந்தக் கண்ணீரில் பார்த்தேனே ஏன் அவளுக்கு எனது காதல் புரியவில்லை எனது காதலை புரிய வைக்க நான் தவறிவிட்டேனே என்றெல்லாம் அவனின் மீது அவனுக்கே கோபம் கப்போர்டில் இருந்த அவளுடைய புடவைகளை எல்லாம் எடுத்து வெளியே வீச தொடங்கினான்…

கபோர்டில் இருந்த அவளுடைய பொருட்கள் எல்லாவற்றையும் வெளியே வீச கடைசியாக அவள் பயன்படுத்திய ஹேண்ட் பேக்கில் இருந்து சில மாத்திரைகள் வெளியே தெரித்து விழுந்தது...மூன்று வகையான மாத்திரைகள் ஐந்து நாட்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது…


பவித்ரா தனக்குத் தெரியாமல் மாத்திரை எதையோ உட்கொண்டிருக்கிறாள் எதற்காக என்ற யோசனையுடன் அதன் அருகில் சென்றவன் மாத்திரை அட்டையை எடுத்து பார்க்க அதில் ஒருவேளை மாத்திரை மட்டுமே உபயோகப்படுத்தி இருந்தது.


என்ன மாத்திரை என்று பார்த்தவனுக்கு புரியவில்லை உடனே தனது மொபைல் போனில் மாத்திரைகளின் பெயரை போட்டு சர்ஜ் செய்ய கட்டி போல் இருப்பவற்றை கரைப்பதற்கும் இந்த இரண்டு மாத்திரைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஆகாமல் இருக்க ஒரு மாத்திரை என மூன்று விதமான மாத்திரைகள் அது

கையில் மாத்திரைகளை எடுத்தபடியே அவளின் பேக்கை ஆராய அதில் அவளின் தந்தைக்காக கட்டிய பில் காப்பிகள் பலவும்... இவன் அவளுக்காக கொடுத்த கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சில சில்லரை காசுகள் மருத்துவர்கள் அவள் தந்தைக்காக எடுக்க சொல்லிய டெஸ்ட்களுக்கான ஒப்புகைச் சீட்டு அவள் தாயிடம் கையிலிருந்து வாங்கி வைத்த இன்சூரன்ஸ் காபி இப்படி பல இருந்தது ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க கீழே கடைசியாக ஒரு சிறு அட்டை போல் இருக்க அதை எடுத்து பார்த்ததும் ரிஷியின் முகம் பிரகாசமானது…

ஓ மை காட் இந்த விஷயத்தை நான் எப்படி மறந்தேன் பவித்ரா நீ என்கிட்ட மாட்டிக்கிட்ட இனிமே தப்பிச்சு போக முடியாத அளவுக்கு மாட்டிக்கிட்ட…
பையன் மட்டும் இல்ல நீயும் எங்கிட்டதான் இருக்கப்போற….
என்றவன் உடனடியாக தனது வக்கீலை அழைத்தான்…

சார் ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் கோர்ட்ல ப்ரோடியூஸ் பண்ணினா குழந்தையை நாமளே வெச்சுக்கலாம்னு சொன்னீங்களே அது இப்போ கூட பாஸிபிளா என்று கேட்டான்.

உடனே அவரும் எப்போ வேணாலும் பாசிபிள்தான்... நீங்க உடனே எவிடன்ஸ் என்னோட வாட்ஸ்அப்க்கு சென்ட் பண்ணுங்க நான் அத வெச்சு உடனே பழைய தீர்ப்புக்கு ஸ்டே ஆர்டர் வாங்கிட்டு ரிட்டன் பைல் பண்ணுறேன் என்று கூறினார்…

சந்தோஷமாக மாத்திரை களுக்கான பிரிஸ்கிரிப்ஷனை தேட அதைக் காணவில்லை பரவாயில்லை என்று யோசித்தவன் மருத்துவமனையில் அட்டையை எடுத்தான்.
தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
22

பவித்ரா சிகிச்சை எடுத்தது பெரிய மருத்துவமனை அதனால் ஒரு சிறு ஃபைல் போட்டுக் கொடுத்திருந்தனர்…
அவளது பெயர் ,உடல் எடை ,வயது, எதற்கான சிகிச்சை...அதற்கான மருந்துக்கள்,ஓரலாகவும்,உள்செலுத்தும் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை ஆராய்ந்தவனுக்கு சந்தோஷமே நிலை கொள்ளவில்லை..

மருத்துவமனையில் இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டவள் வலிக்காக ஒரு நேரம் மாத்திரையை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறாள்..அப்படியே இங்கு வர இங்கு நடந்த பிரச்சினையில் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுச் சென்றிருக்கிறாள்..

பவித்ரா இந்த சிகிச்சை எடுத்துக்கொண்ட அன்றுதான் இங்கு ஆதிக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டான்…
அப்படி என்றால் பொறுப்பில்லாமல் நடந்ததாக கூறி ஈசியாக அவர்களால் குழந்தையை தங்கள் வசம் வாங்கிக் கொள்ள முடியும்…

நேராக சித்தியை தேடி சென்றவன் அவரிடம் ஆதியின் மருத்துவமனை கோப்பினை பெற்றுக் கொண்டவன் எல்லாவற்றையும் வழக்கறிஞருக்கு அனுப்பி வைத்தான்…

சித்தியோ குழப்பத்துடன் ரிஷியைப் பார்த்து எதுக்காக ஆதியோட ஹாஸ்பிடல் ஃபைல் இதை வச்சி எப்படி நம்மோட ஆதியை வச்சுக்க முடியும்... ரிஸ்க் எடுக்க வேண்டாம் ரிஷி பேசாம சுலபமான ஐடியா தரேன் கேட்டுக்கோ ஆதியை தூக்கிட்டு ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போயிடு நடக்கிற பிரச்சினை நாங்க பாத்துக்குறோம்…

ஐயோ சித்தி யாருமே பயந்து எங்கயுமே போக வேண்டாம்... ஆதி நம்மளோட தான் இனிமே இருப்பான் இருக்கவும் போறான்…

எப்படி ரிஷி அதான் ரெண்டு நாள்ல பவித்ரா கிட்ட குடுக்க சொல்லி கோர்ட் ஆர்டர் போட்டுடிச்சே நம்மளால எப்படி மீறமுடியும்…

ஸ்டே ஆர்டர் வாங்கினா கூட எத்தனை நாளைக்கு வாங்க முடியும் வெறும் பதினைந்து நாள் வேணா வாங்கலாம் எப்படியும் பதினைந்து நாள் கழிச்சு அனுப்பி வைக்க போறது பேசாம இப்பவே அனுப்பி வைக்கறதே நல்லது மனசை திடப்படுத்திக…

நாம ஸ்டே ஆர்டர் வாங்க போறதில்லை ரிட்டன் பைல் டைரக்ட்டா அப்ளை பண்ணறோம்…

எப்படிடா என்று கேட்கும்போதே ஆர்வமாக விஜி , மேனகா இருவருமே சேர்ந்து கொண்டனர்.


ரொம்ப சிம்பிள் நம்ம ஆதி பீரீமெச்சூர் குழந்தை அதுமட்டுமில்ல அன்டர்வெயிட்-டோட பிறந்தவன்…
அதனால இயற்கையாகவே .. ...
மால்நியூட்ரிஷன் பிரச்சினை உண்டு... அவனுக்கு டாக்டர் பரிந்துரைத்த ஒரே மெடிசன் தாய்ப்பால் மட்டுமே இயற்கையாவே பவித்ராவுக்கு தாய்ப்பால் குடுக்கறதுல குறை இருந்திருந்தா பிரச்சினை கிடையாது…

ஆனால் இங்கே பவித்ரா ஆரோக்கியமான தாயா இருந்தா அதனால ஆதிக்கு தேவையான உணவு அவ மூலமாகவே கிடைச்சுட்டு இருந்தது அவளோட சுயநலத்துக்காக அதை குழந்தைக்கு கொடுக்க மறுத்துட்டா…

நாம் அதை சொல்லிதான் கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணப்போறோம் அவ கொடுக்காம இருந்ததால நாம ஆதிக்கு செயற்கையா உணவு கொடுக்க வேண்டியதா இருந்தது அது அவனுக்கு ஒத்துவராததால நாம அவனை கொஞ்ச நேரம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி அவனுக்கு ட்ரீட்மென்ட் குடுத்தோம்... ரெண்டும் ஒரே நாள்ல நடந்தது...இந்த ரெண்டு பாயிண்ட் போதுமே ஆதியை நம்மளோட வச்சிக்க... என்று ரிஷி கூற அனைவருக்குமே பரம திருப்தி... எப்படியோ ஆதி அங்கு போகாம இங்க இருந்தா போதும் என்று கூற


புன்னகைத்தவன் மறுநாளே வழக்கறிஞர் மூலம் ரிட்டன் பெட்டிஷன் அப்ளை செய்ய அதற்கு அடுத்த நாள் பவித்ரா கோபமாக ரிஷியை அழைத்திருந்தாள்.

நீங்க மறுபடியும் மறுபடியும் என்னை கோபப்படுத்தி கிட்டே இருக்கீங்க இன்னைக்கு ஆறு மணிக்குள்ள குழந்தையைக் கொண்டு வந்து என்கிட்ட கொடுக்க சொல்லி இருக்காங்க ஆனா மணி ஆறாக போகுது இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க அதுக்கான ஸ்டெப்ஸ் எடுத்ததாக தெரியல நான் மதியத்திலிருந்து இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..

எதுக்காக அங்க வெயிட் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க நேரா வீட்டுக்கு போ உங்க வீட்டு போஸ்ட் பாக்ஸ்ல ஒரு கொரியர் கவர் இருக்கும் அதை எடுத்து பாரு எல்லாம் புரியும்...என்றவன் ஃகாலை கட் செய்தான்.. அதன்பின் வாய்க்குள்ளேயே நிமிடத்தை கணக்கு செய்ய ஆரம்பித்தான்.

சரியாக ஐந்து நிமிடத்தில் பவித்ரா அழைப்பாள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க பவித்ராவும் கோபமாக மீண்டும் அழைத்து இருந்தாள் என்ன இது விளையாட்டு மறுபடியும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்க அதும் குழந்தைய என்கிட்ட அனுப்ப முடியாதுன்னு என்று மூச்சு வாங்கியபடி பேச

அதுல அப்படியா போட்டுருக்கு...அப்போ என்னால குழந்தையை குடுக்கமுடியாது...வார்த்தைகளில் கேலி இருந்தது…

பல்லைக்கடித்தவள்...அதான் ஏன்...என்ன காரணம்...

அதை என் வக்கீல் கிட்ட கேளு அவர் தெளிவா உனக்கு விளக்குவார் நம்பர் அந்த நோட்டீஸ் கீழே இருக்கும் ஒரு வேளை அவர் கிட்ட கேட்கறதுக்கு ஒரு மாதிரி இருந்தா அதுல போட்டுருக்கற டேட் அன்னைக்கு கோர்ட்டுக்கு வா அங்க தெளிவா ஜட்ஜ் முன்னாடி சொல்லுவாங்க கேட்டுக்கோ என்றவன் போனை சுவிட்ச் ஆப் செய்தான்.

பவித்ராவிற்கு நொடியில் கண்கலங்க ஆரம்பித்தது ரிஷியின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது அவள் எதிர்பார்த்தது தான் ரிஷி அவ்வளவு சீக்கிரம் குழந்தையை தன்னிடம் தரமாட்டான் என்று அதனால் தான் விவாகரத்து வரை சென்று குழந்தையை வாங்கி விட்டோம் என்று சந்தோஷப்பட்டாள்


முழுதாக இரண்டு நாள் கூட அவளால் அந்த சந்தோஷத்தை கொண்டாட முடியவில்லை அதற்குள் அதில் தீ வைத்து எரித்து விட்டான் எந்த மாதிரியான பூகம்பத்தை தனக்கு அவன் வைத்திருக்கிறானோ அதை தாங்கும் இதயம் தனக்கு இருக்குமா... என்று அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…

இந்த நேரத்தில் அவளின் தம்பிக்கு மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து வேலைக்கான கன்பார்ம் லெட்டர் வந்ததால் அவன் பணிக்கு செல்கிறான்... ட்ரெய்னிங்கில் மிகச் சிறப்பாக பணியாற்றியதால் இவனுக்கு பணியிடத்தில் நல்ல பெயர் அதுமட்டுமின்றி இவனை முதல்கிரேடாக தேர்வு செய்தும் இருந்தார்கள்…

வெங்கட்டிற்கு அங்கு பொறுப்பும் அதிகம் முதல் ஆறு மாதங்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம் அவன் வேலை செய்யும் அலுவலகத்தில் அதனால் ஆரம்ப கால கட்டத்தில் பவித்ராவின் கஷ்டத்தில் தம்பியான வெங்கட்டால் கலந்து கொள்ள முடியவில்லை...


நீதிமன்றம் வரச் சொன்ன அந்த நாளும் வந்தது... படபடப்புடன் இவர்கள் பக்க வழக்கறிஞருடன் தனியாகவே அமர அங்கு அழகாக வாதம் நீதியரசரின் முன்பு எடுத்து வைக்கப்பட்டது…


பவித்ராவிற்கு ஒரு விபத்து மூலமாக எதிர்பார்த்த நாளுக்கு முன்பாகவே குழந்தை பிறந்தது..
அந்த குழந்தை எடை குறைவாக இருந்த காரணத்தினால் இயற்கையாகவே ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறந்தது.


அந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே பிரதானம் ஆனால் எதிர் வாதியான பவித்ரா தாய்ப்பால் கொடுத்தால் தனது அழகு போய் விடும் என்ற சுயநலத்திற்காக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்துவிட்டார்…

அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார்... அதனால் குழந்தைக்கு இணை ஆகாரம் கொடுக்க அது குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாமல் குழந்தை உயிருக்குப் போராடி மருத்துவமனை வரை சென்று மீண்டு இருக்கிறது

இதுபோல் அழகிற்காகவும் தன்னுடைய சுயநலத்திற்காகவும் குழந்தை பராமரிப்பை ஒரு பாரமாக நினைக்கும் பெண்ணிற்கு குழந்தையை கொடுக்கப் போகிறீர்களா குழந்தை பிறந்தது முதல் உள்ளங்கையில் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் அவரது தகப்பனாரிடம் கொடுக்கப் போகிறீர்களா என்று வாதத்தை வைக்க…


அய்யோ...பொய் சொல்லறாங்க... நம்பாதீங்க நான் என்னோட அழகை பராமரிப்பதற்காக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மாட்டேனு சொல்லல... அன்னைக்கு என் அப்பா
உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தாங்க அதனால தான் என்னால அன்னைக்கு குழந்தையை கவனிச்சிக்க முடியல அந்த விஷயம் அவங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே தெரியும்

ஆனாலும் ரொம்ப மூர்க்கத்தனமாக அடிச்சி வீட்டை விட்டு தொறத்திட்டாங்க... இப்போ என் குழந்தையும் என்கிட்ட இருந்து நிரந்தரமாக பிரிக்கறதுக்காக நாடகமாடறாங்க... நம்பாதிங்க ப்ளீஸ் என்று அங்கேயே கத்தி அலற தொடங்கினாள்….

இங்க பாருமா இப்படி கத்த கூடாது எதுவா இருந்தாலும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரோன்...அதுக்கான காரணத்தை நீங்களும் குடுங்க அதுல நம்பகத்தன்மை இருந்தா இந்த கோர்ட் ஏத்துக்கும் என்று நீதியரசரின் அருகில் இருப்பவர் கூற...

இவர்கள் பக்க நியாயத்தைக் கேட்க அவகாசம் கொடுக்கப்பட்டது...அதுவரை வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் நடந்தது வேறு…தந்தையின் மெடிக்கல் ரிப்போர்ட்டும் தாயின் ரிப்போர்ட்டையும் அவர்கள் தரப்பாக ஏற்கனவே கொடுத்தும் கூட இவர்களுக்காக வாதாடிய வக்கீல் விலை போய்விட வாய்தாமேல் வாய்தா... பவித்ராவை வீட்டிற்கும் கோர்ட்டிற்கும் மாறிமாறி நன்றாகவே அலைய வைத்தார்கள்...
இரண்டு ஆண்டுகள் முடிவான நிலையில் கூட தீர்ப்பு வாசிக்கப்பட்ட அன்றும் பவித்ராவின் தரப்பு வழக்கறிஞர் நோ அப்ஜக்ஷன் தெரிவிக்க வழக்கு ரிஷிக்கு சாதகமாக முடிந்தது...


தனது அழகிற்காகவும் சுயநலத்திற்காகவும் பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் பெண்கள் தாய்மை என்னும் சொல்லுக்கு தகுதியற்றவர்கள் என்று இந்த நீதிமன்றம்
பவித்ராவிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன் குழந்தையை ரிஷியின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டது...அதை கேட்டு நீதிமன்ற வளாகத்தில் மட்டுமல்ல வீட்டிற்கு வந்து இப்பொழுதும் அதற்காகத்தான் அழுது கொண்டிருக்கிறாள்…அன்றைய இரவு பவித்ராவிற்கு தூங்கா இரவானது .

வெளியே சென்ற வெங்கட் இரவு தான் வீடு வந்து சேர்ந்தான் நண்பன் கொடுத்த அட்ரஸில் லாயரை சந்திக்க முயற்சித்தபோது அவர் மறுநாள் மாலை ஒரு நட்சத்திர விடுதியின் டேபிள் நம்பர் சொல்லி அங்கே சந்திக்கலாம் என்று கூறிவிட்டார்.

இங்கு ரிஷியின் வீட்டில் கீழே தீர்ப்பு வந்த சந்தோஷத்தில் ஆட்டம் பாட்டம் என தூள் பறக்க.. ரிஷி பவிக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான் பாவம் அவள் எப்படித்தான் இந்த தீர்ப்பை தாங்கிக் கொண்டாளோ அவளை நன்றாகப் பார்த்துக்கொள் ஆண்டவா என்று நினைத்தவன் விழி முடி தூங்க முயற்ச்சித்தான்.

மேகலாவும் நாராயணனும் பவித்ராவின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் விவாகரத்தும் ஆகிவிட்டது பிள்ளையும் இனிமே இவளிடம் வரப்போவதில்லை மேற்கொண்டு என்ன செய்யலாம் அவளின் மனதை மாற்றி மற்றொரு திருமணம் செய்யலாமா என்று... சில நாள் கழித்து இதைப் பற்றிய பேச்சை பவித்ராவிடம் ஆரம்பிக்கலாம் என்று இருவருமே ஒரு சேர முடிவெடுத்து உறங்கச் சென்றார்கள்.

மறுநாள் மாலை வெங்கட் லாயர் சந்திக்கச் சென்று இடம் ஒரு நட்சத்திர விடுதி... அங்கு அவருடன் அமர்ந்தபடி தனது அக்காவின் நிலைபற்றி லாயரிடம் பொறுமையாக எடுத்துரைக்க எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர்...

மிஸ்டர் வெங்கட் உங்களுக்கு பர்சனலா நான் ஒரு அட்வைஸ் கொடுத்தா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்று கேட்டார்.

சொல்லுங்க சார் உங்களோட அட்வைஸ் கேட்க தானே இப்ப நான் உங்களை சந்திக்க வந்திருக்கேன்.

அதாவது மிஸ்டர் வெங்கட் இந்த பிரச்சனை ஆரம்பத்திலேயே முடிந்திருக்க வேண்டியது ரெண்டு வருஷமா உங்களை தேவையில்லாம இழுத்தடிச்சு இருக்காங்க…

அவருக்குப் குழந்தையை கொடுக்க கண்டிப்பா விருப்பம் இல்லை இப்போ நாம மறுபடியும் ரிட்டன் கேஸ் பைல் பண்ணினா மறுபடியும் ரெண்டு வருஷம் இல்ல அஞ்சு வருஷம் கூட இழுத்தடிப்பாங்க..

கேஸை ஃபர்ஸ்ட்ல இருந்து ஸ்டடி பண்ணனும் டைம் ஆகும் உங்களோட வருமானம் எல்லாமே வக்கீல் பீஸா தான் போகுமே தவிர உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது

ஒவ்வொரு முறையும் ரெண்டு பக்கத்தில் இருக்கிறவங்களும் ஆஜராகனு ம் அப்படி இல்லாத பட்சத்தில் அந்த ஹியரிர் வாய்தால போய் முடியும்…

அதனால நீங்க அவர்கிட்ட சமரசமா போறது நல்லதுன்னு தோணுது எந்த மாதிரினா வாரத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ குழந்தையை பாக்குறது போலவும் இல்லை அவர் வேற என்ன எதிர்பார்க்கிறாருனு அதுக்கு அசைந்து கொடுக்கிற மாதிரி போங்க இது நடைமுறை …

நீங்க என் மேல கோவப்படறது தப்பு ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்லையா... சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்..
நான் என்னோடு பீஸ்-க்காக ஆசைப்பட்டு வேணா இந்த கேஸை எடுக்கலாம் கண்டிப்பா ரொம்ப நல்லாவே உங்க மாமா இந்த கேஸை இழுத்தடிப்பாரு எனக்கு நம்பிக்கை இருக்கு...


ஆனா பணத்தையும் தாண்டி மனிதாபிமானமும்னு ஓரு விஷயம் இருக்கு அந்த மனிதாபிமானத்தோட தான் இப்போ உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் .

நீங்க எப்படி என்னை சந்திச்சி பேசுறதுக்கு பொதுவான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தீங்களோ அதே போல அவரையும் ஒரு பொதுவான இடத்துல சந்தித்துப் பேசி சீக்கிரமா ஒரு நல்ல முடிவுக்கு வாங்க... அப்படி இல்லையா கண்டிப்பாக இந்த கேஸை நான் எடுத்துக்கறேன்…

இது என்னோட விசிட்டிங் கார்ட் இதில் என்னோட போன் நம்பர் இருக்கு கண்டிப்பா பழைய வக்கீல் விலைபோனது போல நான் போகமாட்டேன் நம்பிக்கையோட எனக்கு கூப்பிடலாம் ஆல் தி பெஸ்ட் என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.

யோசனையுடன் தலையில் கைவைத்தபடி சிலநேரம் வெங்கட் அமர்ந்து இருக்க தனது டேபிளில் மோதியபடி யாரோ ஒருவர் அவன் மீது மொத்தமாக விழுந்தார். தாங்கிப் பிடிப்பதற்குள் அந்த உருவத்தோடு இவனும் சேர்ந்து கீழே விழுந்தான்.

யார் என்று கண்ணை திறந்து பார்க்க அது ரிஷியின் தங்கை ராகவி முழு போதையில் இருந்தாள் அவள் அணிந்திருந்த பார்ட்டிவேரில் பின்புறம் இரண்டு இன்ச் அளவிற்கு ஜிப் ஓபன் செய்யப்பட்டிருக்க கையில் கூரான ஆயுதம் எதையோ வைத்துக்கொண்டு உளறிக் கொண்டிருந்தாள்…

கிட்ட யாராவது வந்தீங்க குத்திடுவேன்... நான் யாருன்னு தெரியுமா... ப்ளீஸ் என்ன விடுங்கடா என்று மாறி மாறி உளற

வெங்கட்டிற்கு ஏதோ புரிவது போல் தோன்ற அதற்குள்ளாக இரண்டு இளைஞர்கள் ராகவியை மட்டும் தூக்கி நிறுத்தியவர்கள் அவளை இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர் அவளோ அவர்களிடம் தள்ளாடியபடி போராடினாள்... அவள் உதடுகள் ஹேய் லிவ் மீ மேன்… லிவ்…

சம்பெடி ப்ளீஸ் ஹெல்ப் மீ என்று அரைபோதையில் ஆங்கிலத்தில் கதறிக் கொண்டிருந்தாள்…

யோசிக்காமல் பின்சென்ற வெங்கட் இரு இளைஞர்களிடம் அவளை விடும்படி கேட்க அவர்களோ யார் நீ இவ எங்க கூட வந்தவ அதிகமா போதை ஆனதால அவளை இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கோம் என்று கூற…

வெங்கட் யோசிக்காமல் இருவர் முகத்திலும் ஓங்கி ஒரு குத்து விட்டான் ராகவியை தனக்கு பின்பக்கமாக நிறுத்திக் கொண்டான்.

அடி வாங்கியவர்கள் திருப்பித் தாக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க அவர்களை அங்கிருந்து வேகமாக ஓடினர் வெங்கட்டிற்கு புரிந்துவிட்டது ஆட்களைக் கூட்டி வர செல்கிறார்கள் என்று அவர்கள் வருவதற்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் ராகவியின் பாடும் அவனின் பாடும் அவ்வளவுதான் என்று யோசித்தவன் ராகவின் ஆடைகளை ஒழுங்குபடுத்தி விட்டு அவளை தூக்கியபடி வெளிப்பக்கமாக ஓடிவந்தான்


அங்கிருந்த அனைவருமே வெங்கட்டை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் யாரும் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை மேல்தட்டு வர்க்கம் யாருக்கு பிரச்சினை வந்தால் அவர்களுக்கு என்ன அவர்கள் நலமாக இருந்தால் போதும்…

வெளியே வந்து ஏதாவது கால் டாக்ஸியோ ஆட்டோவோ கிடைக்கிறதா என்று பார்க்க ஒருவரும் வரவில்லை அதற்குள்ளாக அந்த இடத்தைச் சுற்றிலும் காலடிச்சத்தம் கேட்பது போல் அவனுக்கு தோன்றியது

யோசிக்காமல் கார் பார்க்கிங்கில் பழைய அட்டை பேட்டிகள் போட்டு இருக்கும் இடத்திற்கு பின்பு ராகவியை அணைத்தபடி ஒதுங்கினான்...அவளோ போதையிலேயே தான் இப்போதும் உளறிக் கொண்டிருக்கிறான்


ஷ்ஷ்...ஹேய் பேசாத என்று வாயில் கைவைத்து முட அவளோ அவன் கையை கடித்து வைத்தவள் என்ன தொடாத லிவ் மேன் என்று முனகிக் கொண்டிருந்தாள் யோசிக்காமல் அவனின் சட்டையை கழட்டி அவள் வாயைக் கட்டியவன் நன்றாக அவளோடு ஒன்றியபடி
பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை எடுத்து ரிஷியை அழைத்தான்…

ரிஷிக்கு ஆச்சரியம்... தனது அக்காவிற்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்து குழந்தையை அவளிடம் இருந்து பறித்துள்ளது கோபத்தை மறந்து இவன் எப்படி தன்னை அழைக்கிறான்... ஆச்சரியத்துடன் காலை அட்டென்ட் செய்ய மிக மெதுவாக ஆனால் தெளிவான குரலில் மாமா அவசரமா உதவி தேவைப்படுது என்றவன் விடுதியின் பெயரைக் குறிப்பிட்டு கார்பார்க்கிங் சீக்கிரமா வா என்று கூற…அவன் குரலில் பின்புறமிருந்து வந்த காலடி சத்தத்தின் ஒசைகளும்...சிலரது டேய் வெளிய வாடா என்ற சத்தமும் தெளிவாக கேட்க
ரிஷிக்கு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

அவன் சொன்ன ஹோட்டல் அவர்கள் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் ஆனாலும் தான் செல்வதற்குள் வெங்கட்டிற்கு ஏதாவது விபரீதம் நடந்து விடக்கூடாது என்று எண்ணி அவன் உடனடியாக ராகவ்விற்கு அழைத்தான்.

ராகவ் நீ இப்போ எங்க இருக்க என்று தம்பியை அழைத்து கேட்க அவன் இருக்கும் இடத்தை கூற உடனடியாக விடுதியின் பெயரை கூறியவன் அங்கிருக்கிற கார் பார்க்கிங் சீக்கிரம் போ நான் வந்து கொண்டே இருக்கிறேன் பவித்ரா தம்பிக்கு ஏதோ பிரச்சனை என்று கூற ராகவ் அவனது இரு சக்கர வாகனத்தில் விடுதியை நோக்கிப் பயணித்தான்.

இங்கு ரிஷியும் அம்பில் இருந்த வில் போல பாய்ந்து சென்றான் அதற்குள்ளாகவே அங்கிருப்பவர்கள் வெங்கட்டையும் ராகவியையும் பார்த்துவிட்டு அவர்கள் அருகில் வர வெங்கட் ராகவியை மட்டும் அங்கே படுக்க வைத்துவிட்டு துணிந்து அவர்கள் முன் வந்தான்.

முடிந்த அளவு அவர்களுடன் போராடி யாரையுமே ராகவியின் பக்கம் விடவில்லை...ஒரு கட்டத்தில் அவன் அடிவாங்கி கீழே விழும் நேரத்தில் அவனுடைய மாமா அங்கு வந்து சேர்ந்தான்...சற்று நேரத்திலேயே ராகவ்வும் வர இருந்தவர்கள் அனைவரையுமே மடக்கிப்பிடித்தனர் பிறகு ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறி காவல் நிலையத்தில் தகவல் தரப்பட்டது.

வெங்கட்டை அமர வைத்து தன்னுடைய கைக்குட்டையால் அவனின் உதடு மூக்கு நெற்றி என வழிந்த ரத்தத்தை எல்லாம் பொறுமையாக துடைத்து ரிஷி ஆமா சட்டைய கழட்டிட்டு ஜிம் பாய் மாதிரி நீ ஏன் இந்த இடத்திலிருந்து சண்டை போட்டுட்டு இருக்க என்று கேட்க பதில் கூறாமல் அட்டைபெட்டி குவியலை பார்த்தான்.

ராகவ்விற்கும் வெங்கட் ஏதோ தேவையில்லாமல் குடித்துவிட்டு சண்டை இழுத்து இருப்பான் என்று தான் தோன்றியது அதனால் பெரியதாக ஆர்வம் காட்டாமல் தனது அண்ணனுக்காக அந்த இடத்தில் சற்று சலிப்புடன் நின்று கொண்டிருந்தான்.

சொல்லுடா மாப்பிள்ளை இல்லன்னா இப்போ மாமியார் வீட்டிலிருந்து வந்து உன்னையும் சேர்த்து தூக்கிட்டுப் போயிடுவாங்க என்று நக்கல் அடித்தான்.

என்ன மாமா சொல்றீங்க போலீஸ் இந்த இடத்துக்கு வருமா…

அதெல்லாம்... இங்க வந்து அவனுகள சாத்தும்போதே ராகவ் அந்த பக்கம் ஹோட்டல் ரிசப்ஷன்ல பொய் கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு இன்னும் அஞ்சு நிமிஷத்துல வருவாங்க என்று கூற அதிர்ச்சியில் ரிஷியை பார்த்தவன்

மாமா அந்த பெட்டிக்கு பின்னாடி ராகவி இருக்கா என்று கூற ராகவ்வும் ரிஷியும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்க்க

ராகவ் உணர்ச்சிவசப்பட்டு வெங்கட்டின் பணியினை தூக்கி பிடித்து தூக்கி டேய் என்னடா பண்ணின என் தங்கச்சியை என்று கேட்க

ரிஷியோ அவன் பண்ற மாதிரி இருந்தா அவன் எதுக்கு நமக்கு போன் பண்ணி சொல்றான் மொதல்ல என்னனு போய் அங்க பாருடா என்று ராகவ்வை விலக்கி விட்டான்.

பின்னாலே ரிஷியும் ஓட இப்பொழுது வெங்கட் அமர்ந்தபடி கைக்குட்டையால் அவனின் ரத்தங்களை அவனாகவே சுத்தம் செய்ய ஆரம்பித்திருந்தான்.

பெட்டியை நகர்த்திவிட்டு பார்க்க வாய் கட்டப்பட்ட நிலையில் ஆடைகள் நெகிழ்ந்திருக்க அலங்கோலமாய் கிடந்தாள் ராகவி யோசிக்காமல் தனது சட்டையை கழட்டி மாற்றிய ரிஷி தங்கையை தூக்கி சென்று காருக்குள் திணித்தான்..வாய் கட்டை அவிழ்த்து சட்டையை வெங்கட்டிடம் தர


வாங்கிய வெங்கட் சட்டையை வேகமாக போட்டுக்கொண்டவன் அந்த இடத்தில் ஏதாவது சிசிடிவி கேமரா இருக்கிறதா என்று பார்க்க நல்லவேளையாக ஒன்றுமில்லை.

மாமா நீங்க ராகவியை அழைச்சிட்டு வீட்டுக்கு போங்க போலீஸ் வந்தா நான் பாத்துக்குறேன் என்று கூற ராகவ்விற்கு இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை தங்கையின் முகத்தையும் அவளின் கைகளில் ஆன காயங்களையும் பார்த்து மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான்.

என்ன நடந்துச்சு வெங்கட் என்று ரிஷி கேட்க சற்று தயங்கியபடி மாமா நான் ஒருத்தரை மீட் பண்றதுக்காக இங்க வந்தப்போ ராகவி என் மேல வந்து விழுந்தா…
ராகவின் தெரியாது அதுக்குள்ளவே ரெண்டு தடியனுக வந்து அவளை இழுத்துட்டு போயிட்டாங்க


நான் அவங்க கிட்ட இருந்து காப்பாற்றி இங்க கூட்டிட்டு வந்து வெச்சிருந்தேன் அதுக்கு அப்புறம் தான் உங்களை கூப்பிட்டேன் .

அடிவாங்கினவனுக கூட்டிட்டு வந்த ஆள் தான் இவனுக எல்லாருமே என்ன நடந்ததுன்னு ராகவிக்கு தான் தெரியும் என்று சொல்ல


பொட்டிக்கு பின்னாடி ஒளிச்சி வைக்க எதுக்குடா அவ வாய கட்டி வைச்சிருந்த அதும் உன் சட்டையை கழட்டி... என்று கோபத்தில் கத்திய ராகவ்வை பார்த்து


ராகவி கடித்த தடத்தை இருவரிடத்திலும் காட்டிய படி பொண்ணா இது பேசாதனா கத்துது வாயை பொத்தினா கைய புடிச்சி கடிக்குது அப்புறம் எப்படி வாயை முடறதாம்...எனக்கு இப்படிதான் மூட தெரியும்... வேற மாதிரி மூடி இருக்கணுமோ என்று இவனும் கத்தினான்.

அதற்குள்ளாகவே காவல் நிலையத்திலிருந்து வர அவர்களை தேடி ராகவும் ரிஷியும் சென்றார்கள் தங்கள் வீட்டுப் பெண் சம்பந்தப்பட்டிருப்பதால் பிடித்து வைத்திருக்கும் இவர்களை மட்டும் விசாரியுங்கள் பெண்ணின் பெயர் வெளியே வரவேண்டாம் என்று தன்மையாக கூறியவர்கள் ராகவி விழித்ததும் தகவல் தருகிறோம் வீட்டிற்கு வந்து விசாரியுங்கள் இல்லை என்றால் நீங்கள் சொல்லும் இடத்திற்கு அழைத்து வருகிறோம் என்று கூற ஓரளவுக்கு ரிஷியையும் அவனின் குடும்பத்தைப் பற்றியும் அதிகாரி அறிந்திருந்ததால் அவர்களை மூவரையும் அனுப்பி வைத்தார்.

ராகுல் வெங்கட்டை பார்த்து பொதுவாக ஒரு நன்றி தெரிவித்தவன் எப்படி வீட்டுக்கு போவீங்க இப்படியே போனா வீட்ல பயப்பட மாட்டாங்களா வாங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் என்று கூறினான்.

அதற்கு வெங்கட் இல்ல நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் பெருசா ஒன்னும் இல்லை என்று கூறியபடி ரிஷியை பார்த்து தலையசைத்து விட்டு சென்றுவிட

ராகவ்வும் ரிஷியும் கவலையுடன் ராகவியை அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாத வண்ணம் அவுட் ஹவுசுக்கு சென்றார்கள் …அவள் விழிக்கும் வரை காத்திருக்க ஆரம்பித்தார்கள்…


ராகவ்வும் ரிஷியும் ஷிப்ட் போட்டு அவளுக்கு காவல் இருந்து இருக்கிறார்கள் இங்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு ராகவ் முதலில் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல அவன் தாயிடம் அம்மா ராகவி ஏதோ பிரண்ட்ஸோட பார்ட்டிக்கு போய் இருக்கிறாளாம் வர ரொம்ப லேட் ஆகுமாம் என்னை வந்து பிக்கப் பண்ணிக்க சொன்னா நீங்க தேடாதீங்க நான் போய் அவளை கூட்டிட்டு வரேன் என்று கூற தாயோ கண்டுகொள்ளவே இல்லை


பிறகு இங்கு வர ரிஷி யாருக்கும் தெரியாமல் பின்பக்க வழியாக அவனின் அறைக்குச் சென்று குளித்து விட்டு வேறு உடை மாற்றிக் கொண்டு மீண்டும் அவுட் ஹவுஸ் வர ராகவ் வெளியே சென்றுவிட்டான்.


கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வரை நன்றாக உறங்கியவள் மெதுவாக கண் விழித்து பார்க்க அவள் அருகில் இப்பொழுது ரிஷி தான் அமர்ந்திருந்தான்.


அவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்தவள் தலை பாரமாக இருக்க கைகளை எடுத்து தலையை பிடித்துக்கொண்டாள்.

ரிஷியோ மௌனமாக அவளுக்கு தயாராக கலக்கி வைத்திருந்த எலுமிச்சை சாற்றினை கொடுக்க தயங்கியபடி அவள் பார்க்க நீ குடிக்கற அளவுக்கு ஹாட் எல்லாம் கிடையாது சாப்ட் டிரிங் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று குத்தலாக கூறியபடி அவளிடம் கொடுத்தான்…

அவளோ கண்கள் கலங்க ஒரே மிடரில் குடித்தவளைப் பார்த்து
எத்தனை நாளா இந்தப் பழக்கம் ராகவி இந்த வீட்டில உன் அண்ணனான எனக்கும் ராகவ்விற்குமே இன்னும் குடிப்பழக்கம் கிடையாது ஆனா வீட்டோட கடைக்குட்டி பொண்ணு ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணுன்னு பார்த்தா நீ பார் தேடிப் போற அளவுக்கு மொடாக்குடிகாரியா இருந்திருக்க எங்களுக்குதான் தெரியாம போச்சு என்று கண் கலங்க கூறியவனைப் பார்த்து

அண்ணா நான் குடிக்கலாம் மாட்டேன்னா சத்தியமா இதுவரைக்கும் நான் குடிச்சதே இல்லை இன்னைக்கு தான் முதல் முறையா அந்த ஹோட்டலுக்கே போனேன் என்னை நம்புங்க தயவு செஞ்சு வீட்ல பெரியம்மாகிட்டயோ அம்மாகிட்டயோ தயவுசெய்து சொல்லிடாதீங்க அவங்க என்னை கொன்னே போட்டிடுவாங்க என்று கதறி அழுதாள்..

தொடரும்
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
23

சரி வீட்ல யார்கிட்டயும் சொல்லலை ஆனா எதுக்காக அங்க போன யார் அவங்க என்ன நடந்தது அதை தெளிவா சொல்லு…

என் பிரண்ட்ஸோட இன்னைக்கு ஒரு கெட் டுகெதர் பார்ட்டிக்காக அங்க போனேன் அங்கு என்னவோ கொடுத்தாங்க குடிச்சேன் அவ்ளோதான் எனக்குதெரியும் அப்புறம் யாரோ என்கிட்ட மிஸ் பிகேவ் பண்ற மாதிரி தெரிஞ்சது..

எதுக்கு அந்த மாதிரி இடத்துல இருக்கணும்னு அங்கிருந்து கிளம்பினேன்…

திடீர்னு துரத்த ஆரம்பிச்சுட்டாங்க
சத்தியமா அவங்களாம் யாருன்னு எனக்கு தெரியாது...ஏன் என்னை தொறத்தினாங்கனும் தெரில ‌..யாரோ என்னை காப்பாத்தினாங்க அதும் தெரில இப்போ இங்க இருக்கேன் அதும் எப்படினு புரியல…


ம்ம்...ராகவ் அதுக்காகத்தான் போயிருக்கான் கொஞ்ச நேரத்துல வந்திடுவான் வந்ததுக்கப்புறம் யார்ங்கற விஷயம் தெரிஞ்சிடும்...


என்னை யாரு அண்ணா காப்பாத்தினது... யார் உங்களை அந்த இடத்துக்கு வர வைச்சது என்று ஆர்வமாக கேட்டாள் ராகவி...


எல்லாம் நமக்கு வேண்டப்பட்டவன் தான் உன் அண்ணியோட தம்பி வெங்கட்…

யாரு...வெங்கட்டா என்ன பார்த்தா எப்பவுமே முறைச்சிகிட்டே இருப்பானே அவனா... என்று கண்களை விரித்தபடி ஆச்சரியமாக கேட்க

அவன் தான் என்னாலேயே நம்ப முடியல அவனை ஏதோ சாதாரண பையன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன் போல …

நேத்துதான் அவன் அக்காக்கு அவ்ளோ பெரிய வலியை கொடுத்தும் கூட மறந்து உனக்கு இவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கான் நிஜமாகவே ஹீ இஸ் ஜெம்... என்று வெங்கட்டை மனதார பாராட்டினான்…

அதற்குள் ராகவ் அங்கு வர என்ன என்று விசாரித்தான்…

அண்ணா அவங்க ஒரு இன்டர்நேஷனல் கிரிமினல்ஸ் அவங்களோட டார்கெட் எப்பவுமே ராகவி மாதிரி பெரிய இடத்து பொண்ணுங்க தான் அவங்கள டீப்பா பாலோ பண்ணி அவங்க தனியா சிக்கினா அவங்களுக்கே தெரியாம டிரக்ஸ் எடுக்கவச்சி அவங்களை ஆபாசமா வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டுவது இல்லனா அவங்க சொல்றபடியெல்லாம் நடந்துக்க வைக்கிறது…. நடந்துக்க மறுக்கிற பெண்களை கொலை செஞ்சு அதை ஆக்சிடென்ட் மாதிரி சித்தரிக்கிறது ரொம்ப பக்காவா ப்ளான் பண்ணி இதுவரைக்கும் பலபேரை இதுமாதிரி பண்ணியிருக்காங்க

சமீபமா அவங்களுக்கு எந்த பொண்ணுமே கிடைக்கல அதனால எதிர்பார்க்காம சிக்கின ராகவி கிட்ட இத ட்ரை பண்ணி இருக்காங்க ஆனா அதிகமா ட்ரக்ஸ் எடுத்துக்காத ராகவியோட எதிர்ப்பால அவங்க பிளான் சொதப்பிடுச்சி…

சரியா அந்த இடத்துல வெங்கட் இருக்கவும் ராகவி மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சிட்டா அவளோட விலைமதிக்க முடியாத உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாம முழுசா நமக்கு கிடைச்சிட்டா... குரூப்ஸ் எல்லாரையுமே பிடிச்சிட்டாங்க ஒருசிலரை தேடி தனிப்படை போயிருக்கறதா போலீஸ் ஆபீஸர் சொன்னாங்க

இது எல்லாத்துக்கும் அண்ணியோட தம்பி வெங்கட்டுக்கு தான் மிகப்பெரிய தேங்க்ஸ் சொல்லணும் அவனோட அந்த புத்திசாலித்தனம் ...தனியா தன்னால போராட முடியாதுனு தெரிந்த உடனேயே உங்களை அந்ந இடத்துக்கு கூப்பிட்டது அதனால்தான் அத்தனை பேரையும் மடக்கிப்பிடிச்சோம் அதுமில்லாம ராகவியையும் நாம முழுசா காப்பாத்தினோம் என்று சொல்லி முடித்தான்.

பிறகு சற்று தயங்கிய படியே ரிஷியிடம் அண்ணா நம் குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணின வெங்கட்டுக்கு நாம ஏதாவது பண்ணனும்னு தோணுது அண்ணா என்ன செய்யலாம் என்று கேட்டான்.

ஆர்வமாக ராகவியும் ரிஷியை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நன்கு யோசித்த ரிஷி அவளோட அக்காவுக்கு நேத்துதான் தீர்ப்பு அவங்க மன கஷ்டத்தில் இருக்கும்போது கூட நம்ம வீட்டுப் பெண்ணுக்கு உதவுனதை பெரிய விஷயம்

அதனால கண்டிப்பா மறக்க முடியாத அளவுக்கு ஒரு கிப்ட் கொடுக்கனும்னு நினைக்கிறேன் என்று திரும்பி நின்றவன்

ஆதியை அவனோட அக்கா கிட்டயே கொடுக்க போறேன் அதுதான் அவனுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் என்று கூறியவும் மற்ற இருவருமே அதிர்ச்சியுடன் எழுந்து நின்றனர் .

அண்ணா ஆதி உங்க உயிர் அண்ணிகிட்ட கொடுத்துட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்று கேட்டனர்.

ஆதி என்னோட உயிர் தான் ஆனால் நீ எங்களுக்கு அதுக்கும் மேல உன்னை அவன் முழுசா காப்பாத்தி கைல கொடுத்திருக்கான்... அவனுக்கும் அதே மாதிரி விலைமதிப்பில்லாத பொருளை தானே கொடுக்கணும் என்று கூறியவன்…


சரி ராகவ் ராகவியை அழைச்சிட்டு வீட்டுக்குள்ள போ... ராகவி...நீ பார்ட்டிக்கு போயிருந்த லேட் ஆனதால ராகவ் வந்து உன்னை பிக்கப் பண்ணியிருக்கறான்னு வீட்டில் சொல்லி இருக்கு அதை அப்படியே மெயின்டன் பண்ணு முடிஞ்ச அளவு உன் அம்மா கண்ணுல மாட்டாம உன் ரூம்க்குள்ள ஓடு என்று புத்தி கூறியவன்
அவன் அறைக்கு வந்தான்.


ஏனோ இப்பொழுது அவனுக்கு ஆதியை பவித்ராவிடம் கொடுத்துவிடலாம் என்று தோன்றிவிட்டது பாசம் என்பது எல்லோருக்கும் பொது தானே அதை ஒருவர் மட்டும் வைத்து அனுபவிக்க வேண்டும் என்று என்ன இருக்கிறது உண்மையாகவே அவள் எனது காதலை புரிந்து கொண்டால் கண்டிப்பாக என்னைத் தேடி வருவாள் இல்லையா அவளின் வாழ்க்கையே அவள் வாழ்ந்து விட்டுச் செல்லட்டும் இடையில் மகனைப் பிரித்து வைத்து நான் என்ன சாதித்தி விடப் போகிறேன் என்ற எண்ணம் வந்து இருந்தது.


ராகவிக்கு நடந்த அந்த நிகழ்விற்கு பிறகு நிறையவே மாற்றம் அவனுள் வெங்கட்டின் பெருந்தன்மையான நடத்தை ரிஷியின் மனதை மாற்றிவிட்டது…வெங்கட் நினைத்திருந்தால் இவர்களுக்கு ஃபோனை மட்டும் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருக்கலாம் ஆனால் உயிரை பணயம் வைத்து ராகவியை காப்பாற்றியதுடன் தங்களையும் அழைத்து அவளை பத்திரமாக ஒப்படைத்திருக்கிறான்.
இவர்கள் போகும்வரை அவன் அத்தனை அடிகள் வாங்கி இருந்தான் ஆனால் ஒருவரையும் ராகவியிடம் செல்ல விடவில்லை.

ஒருவேளை பவித்ரா இடத்தில் தனது அக்கா விஜி இருந்து அவரின் கணவர் தான் நடந்து கொண்டதைப் போல் எல்லாம் நடந்திருந்தால் ரிஷி வெங்கட்டை போல் பெருந்தன்மையாக நடந்து கொண்டிருப்பானா என்று ஒருமுறை தனக்குத் தானாகவே கேட்டுக்கொண்டான்‌.

கண்டிப்பாக மாட்டான் தனது அக்காவிற்கு ஒரு அநியாயம் செய்த குடும்பத்திற்கு இம்மியளவு கூட இவன் உதவி செய்திருக்க மாட்டான் ஆனால் வெங்கட் எதைப்பற்றியும் யோசிக்காமல் இன்னும் அதே அன்புடன் மாமா என்று அழைத்துக் கொண்டு தனது தங்கையையும் காப்பாற்றி இருக்கிறான்

அவனின் செயலால் ரிஷியின் இத்தனை ஆண்டுகால ஈகோவை ஒதுக்கிவைத்துவிட்டு மகனை அவர்களிடத்தில் ஒப்படைக்கலாம் என்று யோசித்தவன் உடனடியாக தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து பவித்ராவை மகன் இடத்தில் ஒப்படைக்கப் போவதாக கூறினான்.


ஏற்கனவே இது பற்றி தெரியும் என்பதால் ராகவி,ராகவ் இருவரும் பெரியதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை ஆனால் மூத்த பெண்கள் இருவருமே மிகவுமே எதிர்த்தார்கள் .


இனிமேல் ஆதி இல்லாமல் எங்களால் இருக்க முடியாது அதனால் ஆதியை கொடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் வேண்ம்னா பவித்ராவை கூட இங்கே அழைச்சிக்கோ ஆதியை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று தாய் சொன்ன பிறகுதான்
தாயை அர்த்தத்துடன் பார்த்தவன்
சற்று யோசிக்க தொடங்கியிருந்தான். அதற்குள்ளாக ராகவ்வும்,ராகவியும் ரிஷியிடம் வந்து அண்ணா எதுக்காக ஆதியை அங்க அனுப்புனும்…

அதுக்கு பதிலா பவித்ரா அண்ணிய இங்க நாம கூட்டிட்டு வரலாமே…

இனி எப்படி முடியும் ராகவ் அவளுக்கு விவாகரத்து கொடுத்தாச்சு இப்போ பவித்ரா ரிஷிகேஷ் கிடையாது பவித்ரா நாராயணன் புரியுதா…

இரண்டாவது ஆதியை நாம விருப்பப்பட்டு வெங்கட்டுக்காக விட்டுக் கொடுக்கிறோம் பவித்ராவுக்காக இல்ல முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க…என்றவன் மறுநாளே வெங்கட் சந்திக்க நினைத்தான்.


இங்கு பவித்ரா வீட்டிலோ வெங்கட்டின் உடல் காயங்களைப் பார்த்து அனைவருமே பயந்தனர் என்ன என்று விசாரிக்க சிறு அளவிலான விபத்து என்று கூறிவிட்டு தப்பித்து விட்டான்.


ஏனோ ராகவியின் முகம் கண்ணுக்குள்ளே இருந்தது அந்த போதையில் கூட ஒருவன் அவளை தொடுவதை விரும்பாமல் போராடியதும் நினைவுக்கு வர அச்செயல் மிகவும் பிடித்தது... ஆனால் மதுப்பழக்கம் இருக்கும் பெண் எப்படி தன் குடும்பத்திற்கு ஒத்துவருவாள் அதுவும் அவர்களின் வசதிக்கு முன்பு தாங்கள் ஒன்றுமே கிடையாது…

அக்கா ஒருத்தி அங்கு சென்று பட்டபாடு போதும் இவளை மனதிற்குள் விட்டுவிட்டு நாமும் அந்த பாட்டை பட வேண்டாம் என்று நினைத்தவன் அவளை மறக்க வேண்டும் என்று நினைத்தான் ஆனால் அவளோ அவனின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறாள் அவனுக்கே தெரியாமல்….

ரிஷி ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் குழந்தையை கொடுக்கிறேன் என்று கூறிவிட்டான் ஆனால் உடனடியாக அவனால் அதை செயல்படுத்த முடியவில்லை எதை நினைத்து காய் நகர்த்தினானோ அது எல்லாமே ஒன்றுமில்லாமல் ஆயிற்று…

உடனடியாக குழந்தையை தனது தாயிடம் இருந்து பிரிக்க முடியாது அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது அதனால் மெதுவாகத்தான் அவரிடமிருந்து ஆதியின் பிரித்து பவித்ராவிடம் ஒப்படைக்கவேண்டும்

பவியின் வீட்டுக்குச் சென்று பவித்ராவிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டுவிட்டு ஆதியே விட்டு வர வேண்டும் என்று நினைத்தான்.

முதலில் தாய் மற்றும் சித்தியிடமிருந்து தனது மகனை எப்படி பிரிப்பது என்று யோசித்தான். அப்பொழுது ஒரு யோசனை பிறந்தது மிக நீண்ட நாட்களாக உலக சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்பது தாயின் விருப்பம்... அதைக் காரணம் காட்டி அவர்களை இங்கிருந்து சில நாட்கள் அனுப்பி வைக்கவேண்டும்


அந்த இடைப்பட்ட நாளில் ஒருநாள் பவியின் வீட்டிற்குச் சென்று ஆதியை ஒப்படைத்து விட்டு வர வேண்டும் அதன் பிறகு தான் இந்த ஊரிலோ ஏன் இந்த நாட்டிலே இருக்க வேண்டாம் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்க்கு சென்று அங்கிருந்தே தொழில்களை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.

பவித்ரா தினம் தினம் மகனையும் கணவனையும் நினைத்து ஏங்கி கவலையில் உண்ணாமல் உறங்காமல் அவளின் உடலை கெடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

இது ஒரு வகையான அஹிம்சை தற்கொலை என்று வைத்துக்கொள்ளலாம் அவளுக்கு இந்த உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை தனது காதல் கணவனிடம் இருந்து விருப்பமே இல்லாமல் விவாகரத்து வாங்கி இருக்கிறாள்...காதலின் சின்னமாக பெற்ற குழந்தை தனக்கு வரும் அதை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என நினைத்து சந்தோஷமாக இருந்தாள்.

இப்பொழுது காதல் கணவனும் இல்லை பெற்று பிள்ளையும் இல்லை அதன் பிறகு தான் ஏன் இந்த உலகத்தில் வாழ வேண்டும் நேரடியாக தற்கொலை செய்து கொள்ள பயம் அதனால் சிறுக சிறுக தனது உடலை உருக்குலைத்து நாளடைவில் தன்னை மாய்த்துக் கொள்ள என்று முடிவெடுத்தாள்…

அவளின் உடல் நிலையில் கவலை கொண்ட தாயும்.. தந்தையும் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தனர். இருவருக்குமே ஒரே விதமான யோசனை தான் தோன்றியது அது பவித்ராவின் மறுமணம்…

அதுவும் இந்த ஊரில் இல்லாமல் வெளியூர் ஆக இருந்தால் கூட பரவாயில்லை மகளுக்கு இடமாற்றுமும் மறுமணமும் புதியதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என்று நம்பியவர்கள் தெரிந்த வட்டத்தில் எல்லோரிடத்திலும கூறி தீவிரமாக பையன் பார்க்கத் தொடங்கினர்.

இங்கு வெங்கட் பவித்ராவிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டான் பவித்ரா கேட்க மறுத்துவிட்டாள். அப்படியே படுக்கையில் கிடக்கிறாள் உணவை மறுக்கிறாள் உறக்கம் தொலைக்கிறாள்…


மறுபடியும் குழந்தைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் மறுத்துவிட்டாள் வேலைக்குச் செல் என்று அறிவுறுத்தினால் வேலைக்கும் செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டாள். தான் இப்படியே இருந்து கொள்கிறேன் யாரும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் உங்களுக்கு பாரமாக இருந்தால் கூறி விடுங்கள் நான் எங்கேனும் சென்று விடுகிறேன் என்று நேரடியாகவே மிரட்டுகிறாள்.

கோபத்தில் எங்காவது சென்று விட்டால் என்ன செய்வது என்று மூவருமே பயந்தபடி மாறி மாறி அவளுக்கே தெரியாமல் காவல் காக்கின்றனர்.

வெங்கட்டிடம் மட்டும் ஒரே ஒரு தடவை கதறி அழுதாள் தனது மகன் ஒரு பத்து நாள் மட்டுமாவது தன்னுடன் இருந்தால் போதும் அந்தப் பத்துநாள் வாழ்க்கையை நினைத்தாவது நான் ஆயுளுக்கும் வாழ்ந்து விடுவேன் அதற்காகவாவது ஒரு வழி பண்ணி என்று...

அவளின் கதறலை காணசகிக்காத வெங்கட் இனி நேரடியாக ரிஷியிடம் சென்று பேசி குழந்தையை ஒரு பத்து நாள் மட்டுமாவது வாங்கியே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அங்கு ரிஷியோ வெங்கட்டிடம் ஒருமுறை பேசிவிட்டு குழந்தையை நிரந்தரமாக இவர்களிடத்திலேயே கொடுப்பதற்கான நாளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இருவருமே சந்திப்பதற்கான நேரத்தை கடவுள் தள்ளிவைக்க இடைப்பட்ட நேரத்தில் கௌஷிக்கின் குடும்பம் மீண்டும் பவித்ராவின் வீட்டு வாசலில் வந்து இறங்கியது .

கௌசிக் இப்பொழுது மிக ஸ்டைலிஷாக இருக்கிறான் அவர்களின் குடும்பமே அடுத்த கட்டத்திற்கு பொருளாதாரரீதியாக முன்னேறி விட்டது என்பதை அவர்கள் வந்து இறங்கிய வாகனமும் அவர்களின் ஆடை ஆபரணங்களும் அவர்களின் தோரணமே சொல்லாமல் சொல்லியது.

குழப்பத்துடன் நாராயணனும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்க்க கௌசிக்கின் தந்தையோ நேரடியாக நாராயணன் இடத்தில் பவித்ராவை பெண் கேட்டு வந்திருப்பதாக கூறினார்.

புருவச்சுளிப்புடன் கேட்டுக்கொண்ட நாராயணன் கௌசிக்கிடம் நீங்க நினைக்கிற மாதிரி பவி இப்போ தனியாள் இல்லை என்றார்

அவர் கூறியதன் அர்த்தம் புரிந்து கொண்ட கௌஷிக் எல்லாம் தெரியும் ஆங்கிள் பவித்ராவுக்கு திருமணமானது விவாகரத்தானது, இப்போ குழந்தைக்காக கேஸ் நடந்தது குழந்தையை கணவர் வீட்டிலேயே வச்சிகிட்டது எல்லாமே தெரிஞ்சி தான் பவித்ராவை திருமணம் செய்ய முன் வந்திருக்கேன்.

ஒருவேளை நான் அன்னைக்கு பவியை பாதியில விட்டுட்டுப் போகாம இருந்தா பவித்ராவுக்கு இந்த பிரச்சினை எதுவுமே வந்து இருக்காது இல்லையா... அவ பிரச்சினைக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம்னு எனக்கு ரொம்பவே குற்ற உணர்ச்சி அதனாலதான் பவித்ராவை நானே திருமணம் செஞ்சு கிட்டு அவள ரொம்ப நல்லா பார்த்துக்கிடனும்னு ஆசைப்படுறேன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட நாலு வருஷமா வேலை செஞ்சாச்சி நிறையாவே பணமும் இருக்கு... ஆனா என் மனசுக்கு புடிச்ச பொண்ணு இதுவரைக்கும் கிடைக்கவே இல்லை அது ஏன் யோசிச்சப்போ தான் புரிஞ்சுது பவித்ரா என் அடிமனசில் இன்னும் அப்படியேதான் இருக்கா அவளுக்கான என் காதல் என் மனசுல அப்படியே இருக்கு தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க பவித்ரா கிட்ட நான் பேசுறேன் பவித்ராவுக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான் இந்தத் திருமணம் அவளை கட்டாயப்படுத்தி நான் பண்ணப் போறதில்ல…

அதுக்கு இல்லப்பா பவித்ராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு அவளுக்கு இது மறுமணம் ஆனா உனக்கு இப்ப தானே முதல் திருமணம் உன்னோட பேரண்ட்ஸ் சம்மதம் இதுல வேணும்

பின்னாளில் ஏதாவது ஒரு பிரச்சினை வரும்போது அவளோட கடந்தகால வாழ்க்கையை பத்தியோ இல்ல குழந்தையை பத்தியோ பேசக்கூடாது...அதனால மறுமணத்திற்கு தயாராக இருக்கிற மாப்பிள்ளைனா பின்னாடி அவளுக்கு வரும் பிரச்சினைகள் கொஞ்சம் குறையும்னு நாங்க நினைக்கிறோம்... ஏற்கனவே நீ முன்கோபக்காரன் அதனால் தான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று நாராயணன் நேரடியாகவே கௌசிக்கை பார்த்துக் கூறினார்.

அங்கிள் நல்லா கேட்டுக்கோங்க நான் பவித்ராவை நாலு வருஷமா மனசுக்குள்ள காதலிச்சுட்டு இருந்து இன்னைக்கு நேரடியா உங்க கிட்ட சொல்லி அவளை திருமணம் செய்ய அனுமதி கேட்கிறேன் பவித்ரா எப்படி வந்தாலும் எனக்கு பரிபூரண சம்மதம் அவ மட்டும் வந்தாலும் சரி இல்ல அவ குழந்தையை அழைச்சிட்டு வந்தாலும் சரி எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது நான் வேலை செஞ்ச நாட்டுல மறுமணம் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது…

என்னோட அம்மா அப்பாவிற்கு பவித்ரா மருமகளா வர்றதுல பரிபூரண சம்மதம் போதுமா அப்புறம் என்னை முன்கோபக்காரன்னு சொன்னீங்க உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லிட்டு போனேன் ஞாபகம் இருக்கா பவித்ராவை தவிர எந்த பொண்ணையுமே திருமணம் செய்வதற்கான தகுதி எனக்கு இன்னும் வரல அப்படி வரும் பொழுதுதான் நான் திருமணம் செய்வேன்னு…

இன்னைக்கு நான் உறுதியா சொல்றேன் எனக்கு அந்த தகுதி வந்துடுச்சி அதுக்கு காரணம் பவித்ரா தான் அதனால தைரியமா எனக்கு பவித்ராவை திருமணம் செஞ்சு கொடுங்க என்று கூற

அவரோ இதில் பவி சம்மதம் மிக முக்கியம் என்று கூற

அவகிட்ட சம்மதம் வாங்க வேண்டிய பொறுப்பு என்னோடு நீங்க அவளை என்கிட்ட விடுங்க என்று பவியை தேடிச் சென்றான்.

அறைக்குள் கொத்தவரங்காய் வத்தல் போல வாடிக் கிடந்த பவித்ராவை கண்டதும் அதிர்ச்சியாகி அவளிடத்தில் வந்தவன் என்ன பவித்ரா இப்படி இருக்க என்ன ஆச்சு முதல்ல எழுந்திரு என்று அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி உட்கார வைத்தான்.

பவித்ராவிற்கு அவனைப் பார்த்ததும் அடையாளமே தெரியவில்லை யார் இவன் என்பது போல் பார்க்க என்ன தெரியலையா நல்லா பாரு என்று ஸ்டைலாக கைகளை விரித்துக் காண்பித்தவன் கண்களில் அணிந்திருந்த கூலர்ஸை கழட்டி காட்ட
நெற்றிப்பொட்டில் வழக்கை ஆட்காட்டி விரலால் வைத்து தேய்த்தபடி யோசிக்க


கௌஷிக் பவித்ரா கௌஷிக் உன்னை மொத மொதல்ல கோவிலில்ல பொண்ணு பார்க்க வந்த அதே கௌஷிக் என்று கூறினான்.

சட்டென்று வாய்க்குள் புன்னகை வர இது என்ன கோலம் என்று கேட்டாள்.

பதிலுக்கு அவன் திருப்பி இவளைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டான்

எனக்கென்ன என்று பவித்ரா கேட்க…


ம்ம்...நல்லா வாடின கொத்தவரங்காய் வத்தல் மாதிரி நல்லாத்தான் இருக்க என்று அவளை சிரிக்க வைக்க முயற்சித்தான்.

உரிமையாக தனது அறையில் வந்து நின்று பேசிக்கொண்டு இருப்பவனை பார்க்கும்போது சற்று வித்தியாசமாக தோன்றியது பவித்ராவிற்கு

சாதாரணமாக எழுந்து முன்னறைக்கு வர அங்கே கௌசிக்கின் பெற்றோர்களும் இருக்க குழப்பத்துடன் அனைவரையும் பார்த்தவள் இங்க என்ன நடக்குது என்று கேட்டாள்.

அதற்கு நாராயணன் பதில் கூற முயற்சிக்கும் முன் அங்கிள் நான் சொல்கிறேன் என்ற கௌசிக் உன்னோடு ஒரு செல்பி எடுக்கணும் பவித்ரா…

உளறாத…

நீஜம்...நாலு வருஷமா காத்திருக்கேன்...ப்ளீஸ் என்னை மறுபடியும் ஏமாத்தாத...என்றான்.

ம்ச்...ம்மா என்ன இது... கொஞ்சம் உள்ள வாங்க என்று தாயை அழைத்தாள்.

உள்ளே வந்த தாயிடம் கோபமாக ஏன்மா உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லிடுங்க நான் எங்காவது போறேன் அதுக்காக இப்படி மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்தி என்னை படுத்தாதீங்க...எதுக்காக அதனை ரூமுக்குள்ள அனுப்பி வைச்சீங்க
என்று கோபப்பட்டாள்.


இல்லம்மா அவனே சொல்லாம கொள்ளாம உள்ள வந்துட்டான்...அவன் உள்ள வந்ததால தானே இத்தனை நாள் கழிச்சி நீ வெளிய வந்த...என்று கண்கலங்கினார்.

சரி அதை விடு பவி இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தனியாக இருக்க போற... அப்பாவுக்கு ஏற்கனவே அட்டாக் வந்துடுச்சு உன்ன நினைச்சு நினைச்சு கவலைல எனக்கும் இப்போ முடியறதில்லை உனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கொடுத்தா தான வெங்கட் பத்தி யோசிக்க முடியும்...

உன்னைக் பெற்றதற்காக எல்லா கஷ்டத்தையும் கவலைகளும் நாங்க படலாம் ஆனா கூட பிறந்த பாவத்திற்காக வெங்கட்டும் படனுமா சொல்லு …

உண்மையிலேயே உன் தம்பி மேல உனக்கு அக்கறையே இருந்தா கண்டிப்பா நீ ரெண்டாவது கல்யாணம் பண்ணி தான் ஆகனும்…

நீ சந்தோஷமா இருந்தா மட்டும் தான் வெங்கட் அவனை பத்தி யோசிப்பான்... நீ இப்படியே காலம் பூரா பெட்லயே படுத்துக்கோ... அவனும் இப்படியே சுத்தட்டும் ரெண்டு பிள்ளைகளோட
வாழ்க்கையின் கண்ணு முன்னாடி அழிந்து போவதைப் பார்த்து நானும் அப்பாவும் அந்தக் கவலையிலேயே ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் சீக்கிரமா போய் சேர்ந்தடறோம்…

இதெல்லாம் நடக்க வேணாம்னா சீக்கிரமா நல்லா யோசிச்சு முடிவெடு பவித்ரா நான் வெளிய இருக்கிறவங்களை அனுப்பிட்டு வர்றேன் என்று வெளியேறினார்...பவித்ராவும் முதன்முறையாக வெங்கட்டிற்காக யோசிக்கத் தொடங்கினாள்... தன்னுடைய வாழ்க்கையில் இனி கணவனுக்கு பிள்ளைக்கும் இடம் இல்லை என்று ஆன பிறகு தன்னால் ஏன் மற்றவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட வேண்டும்…

ஆனாலும் பெற்ற பிள்ளையை கண்ணில் காட்டாமல் இருக்கிறார்களே ஒரு முறையாவது அவனைப் பார்த்து விட்டால் கூட மனம் சாந்தி பட்டு அந்த கௌஷிக்கை திருமணம் செய்து கொண்டு போய்விடலாம் அந்தப் பிள்ளையை பாராமல் எப்படி தனது திருமணத்தைப் பற்றி யோசிக்க முடியும் என்று மனதிற்குள் கலங்க தொடங்கினாள்…

மாலை வீட்டிற்கு வந்து தனது சகோதரிக்கு திருமணம் என்று கேள்விப்பட்ட வெங்கட் பவியின் அறைக்குள் வந்தான்.

பவி யோசனையாக அவளின் துணிகளை எல்லாம் மடித்துக் கொண்டிருக்க எதிரிலே அமர்ந்தவன்,என்ன பவி முடிவு எடுத்திருக்க அம்மா ஏதேதோ சொல்லிட்டு இருக்காங்க

தெரியல வெங்கட் முதல்ல நான் தேர்ந்தெடுத்தது தான் சரியில்லாம போயிடுச்சு அதானால இப்போ வீட்ல என்ன முடிவு எடுக்கறாங்களோ அதை செய்யட்டும்…

அப்போ இந்த கல்யாணத்துக்கு நீ
சம்மதிக்கிறியா…

ம்ம்…

வாய்தான் சொல்லுது முகம் சொல்லல சொல்லு பவி உனக்கு விருப்பம் இல்லாதது எதுவுமே இங்க நடக்காது எதற்காக இந்த திடீர் முடிவு...திடீர் மனமாற்றம்…. என்னாச்சு…. யாருக்காக...ஒருவேளை எனக்காகவா..

*****

நினைச்சேன்... இப்படிதான் இருக்கும்னு... நல்லா கேட்டுக்கோ பவி எப்போ எனக்காக நீ இவ்வளவு பெரிய தியாகத்தை பண்றதுக்காக முன் வந்துட்டியா அதுக்கப்புறம் உன் தம்பியும் சளைத்தவன் கிடையாது என்றவன் யோசிக்காமல் அப்பொழுதே ரிஷிக்கு ஃகால் செய்யத் தொடங்கினான்.

மாமா நான் உங்களோட உடனடியா பேசிய ஆகனும் இப்பவே எங்க வரணும்னு சொல்லுங்க இல்லனா நீங்க வருவீங்களா என்றவனை குழப்பத்துடன் பார்த்த பவித்ரா


இப்போ எதற்காக அவரை கூப்பிடற…

குழந்தையின் பாக்கணும்னு உடம்பை இந்த அளவுக்கு கெடுத்து வைச்சிருக்க
அப்போ கூட உனக்காக நான் எதுவுமே பண்ணல... அப்படிப்பட்ட எனக்காக... இந்த சுயநலம் பிடிச்ச தம்பிக்காக
அவனோட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைச்சி

விருப்பமே இல்லாம நீ இந்த கல்யாணத்தை பண்ணிக்க தயாராகிட்ட...இப்போ கூட உனக்கு விருப்பம்னு தெரிஞ்சும் அந்தக் குழந்தையை உன்கிட்ட சேர்க்கறதுக்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கலைன்னா நான் என்ன தம்பி என் தலையை அடமானம் வைத்தாவது உன் பையனை நீ ஆசைப்பட்டது போல ஒரு பத்து நாளாவது உன் திருமணத்துக்கு முன்னாடி உன் கிட்ட கொண்டு வந்து சேர்க்கறேன் ஆசைதீர அந்த குழந்தையோட வாழு அதுக்கப்புறமா அந்த நினைவுகளோட கல்யாணம் பண்ணிட்டுப் போ…. என்றவன் நேரடியாக ரிஷியை சந்திக்கச் சென்றான் .

ஒரு நடுத்தர ஹோட்டலில் இருவரும் எதிரெதிரே அமர்ந்து இருக்க ரிஷியோ அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசிக்கிறான்... பவித்ராவிடம் கடைசியாக சில நேரங்கள் பேச வேண்டும்... குழந்தை மற்றும் அவளுடன் ஒரு பகல் முழுவதும் எங்காவது சுற்றித் திரிய வேண்டும் அதன் பிறகு அவர்களை வீட்டில் விட்டுவிட்டு தான் வெளிநாடு செல்ல வேண்டும் இதுதான் தற்போதைய எண்ணம்…

அதன்பிறகு பவித்ரா ஆசைப்பட்டது போல அவள் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கட்டும் ஒருவேளை பின்னாளில் வேறு யாரையாவது மறுமணம் செய்தாலும் தனக்குப் பிரச்சினை இல்லை இப்பொழுது அவளின் வாழ்க்கை மட்டுமே தனக்கு முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்


ஏற்கனவே வெங்கட் கூறிவிட்டான் பவித்ரா தீர்ப்பு வந்த நாளிலிருந்து இன்றுவரை சரியாக உண்ணாமல் உறங்காமல் அவளுக்கு அவளே தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என அதைக் கேட்ட பிறகு இனியும் தாமதிக்காமல் குழந்தையை அவளிடம் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டான். ஆனால் பவித்ராவை ஒருநாள் தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கப் போகிறான் அதை இவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் அவன் தவறான எந்த ஒரு எண்ணத்திலும் அழைக்கவில்லை ஒரு பகல் முழுவதும் அவளுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் மூன்று வேளையும் தவறாமல் உணவு வாங்கிக் கொடுத்து அவளைத் திருப்தியாக சாப்பிட வைக்க வேண்டும்..

அந்தக் குழந்தையுடன் அவள் சந்தோஷமாக இருக்கும்போது சில புகைப்படங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் இது மட்டுமே அவன் ஆசை..
பேச்சை ஆரம்பிக்கலாம் என்று ரிஷி வாய் திறக்கும் பொழுது வெங்கட்டும் முதலில் முந்திக் கொண்டான்.

தயவு செஞ்சு உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் மாமா... ஒரே ஒரு பத்து நாள் மட்டும் ஆதியை என்னோட அனுப்பி வைங்க அவனுக்கு எதுவும் ஆகாம மீண்டும் உங்ககிட்ட சேர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு…


ஹான்….

தொடரும்
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
24

ப்ளீஸ் மாமா தயவு செஞ்சி எனக்காக இதை பண்ணி குடுங்க ஆதியை பார்க்காம பவி ரொம்பவே தவிச்சிப் போறா அதை என்னால பார்க்கவே முடியல…

வெயிட் வெங்கட் அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் உன்கிட்ட கேட்கணும் அதுக்கப்புறம் நீ இந்த அளவுக்கு எங்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசியமே இருக்காது….

இல்ல மாமா இதுவரைக்கும் நான் மௌனமா இருந்தது போதும் இனியும் மௌனமாக இருந்தேன்னா மனுசனே இல்ல அங்க பவி எனக்காக விருப்பமே இல்லாம அடுத்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க அவளோட கடைசி விருப்பம் பத்து நாள் ஆதி கூட செலவு பண்ணனும்ங்கறது அதை மட்டுமாவது செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க…

என்ன பவித்ராவுக்கு செகண்ட் மேரேஜ்ஜா அதும் அவ ஒத்துகிட்டாளா யாரோட…

ஏற்கனவே ஒருமுறை வந்து பார்த்துட்டு போனாங்களே கௌஷிக் அவங்கதான்…

ஓஓஓ….

இப்போ நான் குழந்தையை கொடுத்துட்டா பவி பத்துநாள் குழந்தையோட சந்தோஷமா இருந்துட்டு அந்த கௌசிக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவா அதுக்காக நீ என்கிட்ட எக்ஸ்க்யூஸ் கேட்க வந்திருக்க‌…. ரைட்…
நான் ஆதி கொடுக்க முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ….


ப்ளீஸ் மாமா நீங்க அப்படி சொல்ல கூடாது நீங்க எனக்காகவாவது ஆதியை கொடுத்துதான் ஆகணும்…


என்ன வெங்கட் குழந்தை மாதிரி பேசிட்டு இருக்க என் வீட்டை சுத்தி இருக்கிற ரோட்ல கூட மத்தவங்கள நாங்க நடக்க அனுமதிக்க மாட்டோம் ஆனால் நீ பெத்த புள்ளையை உன் அக்கா கிட்ட கொடுக்க சொல்ற... எந்த உரிமையில் அவகிட்ட நான் கொடுக்க முடியும் சொல்லு சட்டமே சொல்லிடுச்சு அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை …

குழந்தையும் என்கிட்ட தான் வளரனும்னு அப்படி இருக்கும்போது நீ இப்படி வந்து கேட்கிறது கொஞ்சம் கூட நியாயம் இல்லை...என்றவனின் மனதில் பவி மறுதிருமணம் செய்யப்போகிறாள் என்ற கோபம் இருந்தது அதனால் தான் குழந்தையை அவனாகவே கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது வெங்கட் இடையில் புகுந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டான்.


ரிஷி குழந்தையை பவியிடம் கொடுத்துவிட்டு சற்றுக் காலம் கழித்து பவித்ரா விருப்பப்பட்டால் மறு திருமணம் செய்து கொள்ளட்டும் என்று தான் நினைத்தான் ஆனால் இப்படி மற்றவர்களுக்காக தியாகம் செய்து விருப்பம் இல்லாமல் மற்றொருவனை திருமணம் செய்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை...அதுவும் அவனின் முன்னால் மனைவி இந்த நிமிடம் வரை அவனை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது எப்படி இதை ஏற்றுக் கொள்வான்.

மாமா...ப்ளீஸ் பவிக்காக வேணாம் எனக்காக….


ம்ம்... உனக்காக வேணும்னா ஒரு ஆப்பர் தர்றேன் உன் அக்காவோட ஆசை என்ன? பத்து நாள் குழந்தை அவளோடு இருக்கணும் அது கூட ஸ்வீட் மெமரிஸ் நிறைய சேர்ந்ததும் அந்த இன்ஸ்டன்ட் அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்கால போய் செட்டிலாகனும் அதானே….

பத்து நாள் இல்ல ஒரு மாசம் முழுசா முப்பது நாள் அவகிட்ட ஆதியை தர்றேன் அவளுக்கு மட்டும்தான் ஆதி ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன்….

என்ன மாமா அது….

அதைக் உன்கிட்ட சொல்ல மாட்டேன் உங்க அக்கா கிட்ட தான் சொல்லுவேன் அவளை கூட்டிட்டு வா...அவ கிட்ட நான் பேசுகிறேன்….

மாமா...ப்ளீஸ்….

என் மனசு மாறதுக்குள்ள கிளம்பிடு இல்லனா ஆப்பர் கேன்ஸல் ஆயிடும் என்றதும் அங்கிருந்து கிளம்பியவன் நேராக பவித்ராவிடம் வந்து அவர் ஆதியை ஒரு மாசம் வரை உன்னோட தர்றேனு சொல்லறாரு... ஆனா அதுக்கு அவரு ஒரு கண்டிஷன் வைக்கிறாரு என்னனு தெரியல உனக்கு விருப்பம்னா உன்ன வந்து பார்க்க சொல்றாரு பவி…


வெங்கட் சொன்ன எதுவுமே பவித்ராவின் காதில் விழவில்லை ஆதியை ஒரு மாதம் வரை உன்னுடன் வைத்துக்கொள்ள அனுமதி தருகிறார் அந்த ஒரு வார்த்தை மட்டும் தான் அவளுக்கு கேட்டது சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்தவள் தம்பியின் முகத்தை பார்த்து என்ன நிஜமாவா ஆதியை எனக்கு கொடுக்கறாரா என்று கண்களில் சந்தோஷத்துடன் கேட்க


ம்ம்... ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கு


என்ன வேணா இருந்துட்டு போகட்டும் ஆதிக்காக எல்லாத்தையும் தாங்கிக்க நான் தயாராக இருக்கேன் ப்ளீஸ் டா என்னை உடனே கூட்டிட்டு போடா லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அவரோட மனசு மாறிட போகுது ப்ளீஸ் டா என்று கெஞ்ச ஆரம்பித்தாள் பவித்ரா…


சரி வா என்று ரிஷியிடம் அனுமதிபெற்று அவனின் அழுவலகத்திற்கு அழைத்துச்சென்றான்.
தனியாகப் பேசவேண்டும் என்று கூறியதால் இப்பொழுது வெங்கட் வெளியில் அமர்ந்து கொண்டிருக்கிறான்.

இந்த முறை பவித்ரா கோபம் கொள்ளவில்லை அவனிடம் சண்டையிடவில்லை ரிஷியின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்காக அவனின் முகத்தையே ஆர்வமுடன் பார்த்துக் கொண்டு எதிரில் அமர்ந்து இருந்திருந்தாள்.

மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டிருந்த ரிஷி அவளை ஒரு பக்கம் திட்டவும் தொடங்கியிருந்தான்... எவ்வளவு கொழுப்பு இருந்தா இன்னும் என்னை மனசுல நினைச்சுகிட்டு நான் கட்டின தாலியை சுமந்துகிட்டு இன்னொருதனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்ப...இருபடி உனக்கு செக் வைக்கிறேன் என்று மனதுக்குள் கருவிக் கொண்டான்…


ஆதி பத்தி பேசணும்னு வர சொல்லிட்டு நீங்க ஒண்ணுமே பேசல என்ற பவியின் குரலில்தான் எத்தனை இனிமை

ம்ம்..ஆமால்ல... அதென்ன பத்து நாள் கணக்கு பவித்ரா…அதான் முழுசா உனக்கு முப்பது நாள் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...


நீஜமாவா…ஏமாத்த மாட்டீங்களே…


ச்சே..ச்சே...இல்ல பவி... டிவோர்ஸ் ஆகி ரெண்டு வருஷம் முடிஞ்சி கூட இன்னும் காதலோட என்னை பாக்குற பாத்தியா அந்த பார்வைக்காவது ஒரு மரியாதை கொடுக்கணும் இல்ல ஏமாத்த மாட்டேன் ஆனா ஒரு கண்டிஷன்….

என்ன அது...என்று சற்று பயத்துடனே கேட்டாள்...

சொல்றேன் பவி...அவசரப்படாத... இப்போ ஒரு டவுட் கிளியர் பண்ணிடு அப்புறமா கண்டிஷன் பத்தி சொல்லறேன்….

இப்போ கேஸ் உனக்கு சாதகமா வந்து ஆதி உன்னோடு இருந்திருந்தா என்ன பண்ணி இருப்ப... ஏன்னா இப்போ உனக்கு வேற கல்யாணம் பண்ணப் போறாங்க ஆதி உன்கூட இருக்கும் போது பிரச்சனை இல்லையா...வரப்போறவனால அவன் லைஃப் கெட்டிடும்ல….

ஆதி என்னோட இருந்திருந்தா நான் ஏன் கல்யாணம் பண்ணிக்க போறேன்...உங்களோட இருந்த நாளையெல்லாம் நினைச்சிகிட்டே ஆதியோட வாழ்ந்திருப்பேன்... கண்டிப்பா ஒரு வேலைக்கு போயிருப்பேன்...அவனை நல்லா படிக்க வச்சி உங்களை மாதிரி கம்பீரமா வளர்ந்துவேன் என்று தன்னை மறந்து கண்களில் கனவுகளுடன் கூறினாள்…
கேட்ட ரிஷியின் காதுகள் மட்டும்மல்ல மனமும் சேர்ந்து குளிர்ந்தது…


சரி...இப்போ நான் ஆதியை உன்கிட்டயே கொடுத்துட்டா என்ன பண்ணுவ... கல்யாணம் வேற பிக்ஸ் ஆயிடுச்சு ஆதி உன்னோட இருந்தா கட்டிக்கப் போறவன் ஒத்துப்பானா…

கௌஷிக் நான் தனியாக வந்தாலும் பிரச்சினையில்லை குழந்தை என்னோட வந்தாலும் பிரச்சினையில்லைனு சொல்லி தான் இந்த கல்யாண பேச்சையே ஆரம்பிச்சாரு..
ஒருவேளை நீங்க குழந்தையை என்கிட்ட கொடுத்தாலும் அது என்னோட கல்யாண வாழ்க்கைய பாதிக்காதுனு தான் நினைக்கிறேன்…

ஆனால் ஆதி என்னோட இருக்கும்போது நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்….

நீ கல்யாணம் பண்ணினா தானே உன் தம்பியோட லைஃப் செட்டில் ஆகும் அப்படி சொல்லி தானே உன்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்காங்க என்று அவள் கண்களைப் பார்த்து கேட்டு ரிஷியிடம்

ம்ம்...இருக்கலாம்…
ஆனா நான் சந்தோஷமா இருந்தாலே வெங்கட் அவன் லைஃப்ல செட்டில் ஆயிடுவான் ஏன்னா அவனுக்கு என்னோட சந்தோஷம் தான் முக்கியம் எனக்கு ஆதி கூட இருந்தா தான் சந்தோஷம் அப்படி இருக்கும்போது இந்த கல்யாணமே தேவையில்லாத ஒரு விஷயம் ஆயிடும்….

குட்...பவி...இனி உன்னை நம்பி தைரியமா என் பையனை தரலாம்…

சரி எப்போ தர்றீங்க... நாளைக்கு…
அடுத்த வாரம்... அடுத்தமாதம்... என அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே ஸ்ருதி குறைந்தது…

அது உன் கையில தான் இருக்கு அடுத்த நிமிஷத்தில் இருந்து கூட நீ சம்மதிச்சா ஆதி உன் கையில இருப்பான்…

புரியல... கொஞ்சம் தெளிவா சொல்லுங்க….

அதாவது என்னனா பவியை தேடி ஆதி வரமாட்டான் ஆதி வேணும்னு நினைச்சா பவி வந்து ஆதியோட இருக்கலாம்... முப்பதாவது நாள் முடிவில ஆதிக்கு அம்மா வேணும்னு தேவைப்பட்டாலோ இல்ல ஆதியே உன்னை அம்மானு கூப்பிட்டாலோ முப்பதாவது நாள் முடிவில ஆதியை தூக்கிகிட்டு நீ கிளம்பிட்டலாம் அப்படி இல்லன்னா அதுக்கப்புறம் என்னைக்குமே எங்க வாழ்க்கையில நீ தொல்லை பண்ணவே கூடாது நாங்களும் அதே மாதிரி உன் விஷயத்துக்கே வராம வெளிநாடு போய் செட்டில் ஆயிடுவோம்... அதுக்கப்புறம் நீ எவனை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஐ ஜஸ்ட் டோன்ட் கேர் பவி இந்த டீலுக்கு நீ ஓகே வா...

இது என்ன முட்டாள் தனமான டீலா இருக்கு அதான் அந்த வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டீங்களே மறுபடி என்னால எப்படி அங்க வந்திருக்க முடியும் அப்படி வந்து இருக்கிற மாதிரி இருந்தா நான் ஏன் இப்படி ரெண்டரை வருஷமா என் பிள்ளையை பிரிஞ்சு கஷ்டப்படணும் அன்னைக்கே வந்திருப்பேனே…


கூல்...பவி... டீலுக்கு ஓகேனா மட்டும் சரின்னு சொல்லு உன்ன கௌரவமா அந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு போக வேண்டிய பொறுப்பு என்னோடு இப்போ என்ன சொல்றேன் டைம் எடுத்துக்கோ நல்லா யோசிச்சி சொல்லு...அவ்வளவு தான் நீ கிளம்பலாம்... என்றவனை பார்த்து முறைத்துக் கொண்டே வேகமாக வெளியே வந்தாள்.

வெளியே நின்ற வெங்கட் என்ன ஆச்சு பவி என்ன சொன்னாரு என்று கேட்க


அந்த ஆளுக்கு புத்தி மழுங்கி போச்சு மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில தொங்க ஆரம்பிச்சாச்சு இதெல்லாம் எனக்கு சுத்தமா செட் ஆகாது என்று கூறியபடி வேகமாக வெளியே சென்றாள்...அவள் பின்னால் ஒடியவன் இரு பவி நானும் அவரை நாக்கை பிடிங்கறது போல நாலு கேள்வி கேட்டுட்டு வரேன்... ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு என்றபடி ரிஷியின் கேபினுக்குள் நுழைந்தான்.

என்ன மாமா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க அவளை கூட்டிட்டு வந்தா குழந்தையை கொடுக்கிறேன்னு சொல்லிட்டு இப்போ அவ வந்ததும் ஏதேதோ பேசி அவளை டென்ஷனாகி இருக்கிறீங்க என்று உள்ளே வர வர கத்த தொடங்கியிருந்தான்..


டேய் மாப்ள கொஞ்சம் அடங்குடா என்று அவன் அருகில் வந்து தோளின் மீது கைவைத்து அமர வைத்தான்.


இப்ப எதுக்காக வெங்கட் இப்படி கத்திக்கிட்டு இருக்க…

பின்னே நின்று செஞ்சது சரியா குழந்தையை கொடுக்கிறேன்னு ஒவ்வொரு முறையும் அவளை கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்திய ஏமாத்தி அனுப்பறீங்க... இட்ஸ் நாட் குட் மாமா…

வெங்கட் முதல்ல பொறுமையா இரு நான் சொல்றத ஒரு ரெண்டு நிமிஷம் காது கொடுத்துக் கேளு அப்புறமா நான் செய்யுறது சரியா தப்பானு நீயே சொல்லு நான் கேட்டுக்குறேன் சரியா என்றவன் முதல் முதலாக அவன் மனதில் இருப்பவற்றை வெளிப்படையாகக் கூறத் தொடங்கினான்…

வெங்கட் நான் உன்னோட அக்காவை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்... எந்த அளவுனு சொன்னா புரியாது…

இந்த ஜென்மம் மட்டுமல்ல நான் எத்தனை ஜென்மம் பிறவி எடுத்து வந்தாலும் பவி மட்டும் தான் என் மனைவியாக வரணும்னு அந்த ஆண்டவன் கிட்ட கேட்பேன் அந்த அளவுக்கு அவளை காதலிக்கிறேன் அன்னைக்கு… ஏதோ ஒரு கோபத்தில அவளை வெளியே அனுப்பிட்டேன்...ஆனா கொஞ்ச நேரத்திலேயே ராகவ்வை அனுப்பி வச்சேன்…


அங்க தான் நான் தப்பு செஞ்சிருக்கேன் நான் போய் இருந்திருக்கணும் பவித்ரா என்ன திட்டி அவமானப்படுத்தி இருந்தா கூட நான் அவளை வீட்டுக்கு கூட்டி வந்துருக்கனும்…விட்டுட்டேன்..
என்னோட சின்ன குற்ற உணர்ச்சியால


அதுக்கப்புறம் குழந்தையை கேட்டா நா குடுக்கல எனக்கு மனசுல ஒரு சின்ன நப்பாசை குழந்தை இருந்தா குழந்தைக்காக என்கிட்ட வந்துடுவானு.. ஆனா தேவையில்லாம என்னை சீண்டிவிட்டு என் மூலமாகவே விவாகரத்தை குடுக்கவச்சா…

அப்போவும் எனக்கு தோணுச்சு ஒரு காகிதம் எனக்கும் அவளுக்கு இருக்கற உறவை முறிச்சிடுமானு... பையன் தான் நம்ம கிட்ட இருக்கானே பையனுக்காக எங்கிருந்தாலும் தேடி வருவானு பாத்தா வரல…

அப்புறம்தான் ஏன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்... பவித்ராவோட இயற்க்கையான குணம்…

நீ ஆரம்பத்துல இருந்தே பவித்ராவை கவனித்திருந்தா உனக்குத் தெரிந்திருக்கும் வெங்கட்
அவளுக்கு எதையுமே போராடி வாங்குற பழக்கம் கிடையாது யோசிச்சு பாரு முதமுதலா என்னை காதலிக்கும் போது கூட என்கிட்டயோ,உன் அப்பாகிட்டயோ சொல்லல்ல...நானா ஸ்டெப்ஸ் எடுத்தேன்...கௌசிக் அன்னைக்கு விட்டுட்டு போகாமல் இருந்திருந்தால் என் கிட்ட காதலை சொல்லாமலே அவனை கல்யாணம் பண்ணிட்டு போய் இருப்பா... உன் அப்பாக்கு முடியாமல் இருக்கும் போதும் அவளா தன்னிச்சையாக தான் ஒரு முடிவு எடுத்தாளே தவிர கொஞ்சம் கூட யோசிக்கல..

குழந்தை விஷயத்திலும் அப்படித்தான் நானா தான் கொண்டு போய் குழந்தையை கொடுக்கணும்னு அவ எதிர்பார்த்தாளே தவிர குழந்தை அவகிட்ட இருக்கனும்னு ஒரு ஸ்டெப்ஸ் கூட எடுக்கல

உண்மையிலேயே அவளுக்கு குழந்தை மேல அக்கறை இருந்தா நான் விவாகரத்து கொடுக்க முன்னாடியே அவளை வீட்டுக்கு கூப்பிட்டேன் வந்திருப்பா என்று கூறி முடிக்க யோசனையுடன் ரிஷியை பார்த்துக்கொண்டிருந்த வெங்கட்

எப்படி மாமா உங்களோட ஈகோவால அவ வாழ்க்கையையே சின்னாபின்னமாக்கிட்டு எல்லாத்தையும் தூக்கி பவித்ரா மேலே பலியை போடறீங்க…

நீங்க அவளை அடித்து விரட்டுவீங்க ஆனால் அவ எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உங்க வீட்டுக்கு வரணும் அப்படித்தானே….சபாஷ் மாமா இதை நான் உங்ககிட்ட இருந்து சத்தியமா எதிர்பார்க்கல…

எப்படி எப்படி நீங்க அடிச்சு விரட்டுவீங்க ஆனா அவள நேரில் போய் கூப்பிடறதுக்கு உங்க ஈகோ தடுக்கும் உடனே உங்க தம்பிய அனுப்புவீங்க அவ எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உடனே உங்க வீட்டுக்கு வந்துடனும்... பிரமாதமான நியாயம்…

ஒவ்வொரு முறையும் அவ உங்ககிட்ட குழந்தையைக் கேட்டு வந்தா ஆனா அப்போலாம் ஒவ்வொரு சாக்கு சொல்லி அவளைக் ஏமாத்துனீங்க…

குழந்தையை வைச்சியிருந்தா பவித்ரா தேடி வருவானு கரெக்டா ஹெஸ் பண்ணுனீங்க….

சரிதானே அதான் குழந்தைனு சொன்னதும் தேடி வந்துட்டாளே…

நல்ல மனுஷன்னா என்ன பண்ணி இருக்கணும் நேரா எங்க வீட்டுக்கு வந்திருக்கும் பவித்ரா முகத்தை பார்த்து அவன் கண்ணை பார்த்து நீங்க பண்ணினது தப்புன்னு அவ கிட்ட மன்னிப்பு கேட்டு இருக்கணும் அப்படி கேட்டீங்கன்னா கண்டிப்பா அவளும் நானும் பண்ணினது தப்புதான் என்ன மன்னிச்சிடுங்கன்னு சொல்லி இருப்பா

அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தா தலைநிமிர்ந்து உங்க வீட்டுக்கு வந்திருப்பா நீங்க எதுவுமே பண்ணல குழந்தையை காரணம் காட்டி கிட்டத்தட்ட மூணு வருஷம் அவளோட சந்தோஷத்தை பறிச்சீட்டிங்க….


நீங்க சரியான சைக்கோ உங்க கூட பவி மட்டும் இல்ல வேற எந்த பொண்ணுமே சந்தோஷமான வாழ்க்கையை வாழவே முடியாது தயவு செஞ்சு வேறு ஒரு கல்யாணம் பண்ணி மட்டும் தப்பு பண்ணிடாதீங்க அந்த பொண்ணு ரொம்ப பாவம்….

இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சதும் மறுபடியும் உங்களோட குரூர புத்தி வெளியே வருது எங்கே அவ கல்யாணம் பண்ணிட்டு போய் சந்தோஷமா வாழ்ந்திடுவாளோங்கற கெட்ட புத்தில மறுபடியும் குழந்தையை தரேன்னு அவளுக்கு ஆசை வார்த்தை சொல்லி இங்க வர வச்சு மறுபடியும் உங்களோட சைக்கோ தனதை அவகிட்ட காமிச்சிட்டு இருக்கீங்க நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காது பவித்ரா ரிஷி கைவிடலாம்... வெங்கட் விடமாட்டான்…


பேசிட்டியா…இப்போ நான் பேசலாமா...நீ சொன்னது போல நான் ஈகோவாதி தான் ஒத்துக்கறேன்...ஆனா சைக்கோ இல்ல….ஒருவேளை நான் ஆரம்பத்திலேயே உன் வீட்டுக்கு வந்து பவித்ரா கிட்ட மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு வந்திருக்கனும்... தப்புதான்...ஆனா அவளுக்கு ஈகோ இல்லையா எத்தனை முறை ஆஃபிஸ் வந்து கத்திருக்கா ஒருமுறை இப்படி செய்னு புத்தி சொல்லிருக்கலாம்ல…

நான் வர தயாரா இருந்தேன்... அவகிட்ட மன்னிப்பு கேட்டு ஆதியை அவகிட்டயே தர தயாரா இருந்தேன் அதை சொல்லத்தான் அன்னைக்கு உன்னை வர சொன்னேன்…


பவித்ரா எதிர்பார்த்த மாதிரி உன் வீட்டுக்கு வந்து அவ முகத்தை பார்த்து கண்ணை பார்த்து மன்னிப்பு கேட்க தயாரா இருந்தேன் ஒரு நாள் முழுக்க அவளுக்கு புடிச்ச இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போகனும் எங்க குழந்தையோட சந்தோஷமா இருக்கிற போட்டோவை எடுத்துட்டு அவ கண்ணுக்கு தெரியாத ஒரு தேசமா பறந்து போகணும்னு நினைச்சேன் அவளா மனசு மாறி என்னைத் தேடும்போது மறுபடி அவ கிட்ட வந்து இருக்கணும்னு ஆசைப்பட்டேன் இது தப்பா‌...
ஆனா நீ பவிக்கு கல்யாணம்னு சொன்னதும் முடிவ மாத்திகிட்டேன்…

அதனால தான் இன்னைக்கு அவளை வரச் சொன்னேன் அவளை சத்தியமா ஏமாத்தல அவகிட்ட ஆதியைத்தேடி நீ வானு கூப்பிட்டு இருக்கேன்...குழந்தை அவளுக்கு வேணும்னா அவதான் தேடி வரனும்... அவ எனக்கு வேணும் அதனால நான் போராடறேன்... அவ ஒத்துகிட்டான்னா கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து அவளை அழைச்சிட்டு போவேன் இது சத்தியம்...

அவ எனக்கு வேணும்….இந்த ஈகோவாதியை அவளாலதான் சகிச்சிக்க முடியும்…

கண்ணுல பாக்கறது கைக்கு வரனும்னு நினைக்கற பவியோட பார்வையை புரிஞ்சி என்னால தான் நடந்துக்க முடியும்...அவ வளர்ந்த குழந்தை...அவளை என்னால மட்டும் தான் சமாளிக்க முடியும்... அதான் முப்பது நாள் நாடகம்…

எனக்கொரு வாய்ப்பு தாடா நான் உன் அக்காக்கு என் லவ்வை ப்ரூஃப் பண்ண ‌..அவ இன்னுமே என் காதலை உணரல…

உணர்ந்திருந்தா என் நினைப்பு புரிஞ்சி எப்பவோ என் கிட்ட வந்திருப்பா….ஹெல்ப் பண்ணிடா மாப்ளை...அவ வாழ்க்கை நல்லாயிருக்கும்…

சரி நீங்க சொல்றது போல செய்றேன் ஆனா நீங்க தான் என் வீட்டுக்கு வந்து அவளை அழைச்சிட்டு போகணும் அதுக்கு அப்புறம் முப்பது நாள் தான் உங்களுக்கு டைம் அதுக்குள்ள நீங்க அவளுக்கு உங்க லவ்வை ப்ரூஃப் பண்ணனும் அதுக்குள்ள உங்களால முடியலன்னா அப்பறம் நீங்க அவளை தொல்லை பண்ண கூடாது அவ விருப்பப்பட்ட மாதிரி அவ எத்தனை நாள் ஆதியை வைக்கணும்னு ஆசை படறாளோ அது வரை கொடுத்திடனும்…. ஒருவேளை கௌசிக் இல்ல வேற யாரையாவது திருமணம் செஞ்சிக்க ஆசைப்பட்டா நீங்க இடையில் வரக்கூடாது இதுக்கெல்லாம் ஒத்துகிட்டு ஏமாத்த மாட்டேன்னு வாக்கு கொடுத்தீங்கன்னா நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்…

முப்பது நாள் மட்டும் போதும் மாப்பிள உனக்கு நம்பிக்கை இல்லைன்னா நீயும் கூடவே வந்திடு அவ வர்றதுக்காக எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டு நானே உன்ன காண்டாக்ட் பண்றேன் ஆனா அதுக்குள்ள நீ பவியை இந்த விஷயத்துக்கு ஒத்துக்க வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு என்று கூற சரி என்று ஒத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்த தம்பியிடம் பவி என்னடா நல்லா கொடுத்து விட்டாயா இல்ல உள்ள போய் கால்ல விழுந்துட்டியா...என்று நக்கல் செய்ய

ஏன் பேச மாட்ட உனக்காக தொண்டைத் தண்ணி வத்தி போற அளவுக்கு பேசிட்டு வந்து இருக்கேன் ஆனா நீ ரொம்ப கூலா என்னை நக்கல் அடிச்சுட்டு இருக்க... ஆனா பவி யோசிச்சு பார்த்தா அவர் குடுக்குற ஆஃபர் ஓகேன்னு தான் தோணுது ….

என்ன ஓகே முப்பது நாள் அந்த வீட்ல இருக்க சொல்றாரு எப்படிடா முடியும்...


உன்னை மட்டும்மில்ல என்னையும் கூப்பிட்டிருக்காரு…

என்னடா உளர்றே…


ஆமா அவரே வீட்டுக்கு வந்து உன் முகத்தை பார்த்து உன்கிட்ட மன்னிப்பு கேட்டு அம்மா அப்பாட்ட பர்மிஷன் வாங்கி உன்னையும் என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொல்றாரு நானும் உன்கூட வர முடிவு பண்ணிட்டேன்…

ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையா அவர் எல்லாம் ஒரு ஆளுன்னு அவர் சொல்கிறபடி நீயும் தலையாட்டிட்டு இருக்க…


கொஞ்சம் யோசிச்சு பாரு பவி இப்போ இந்த முப்பது நாள்ல என் மருமகனை கரெக்ட் பண்ணிட்டேன் வெச்சுக்கோ... அவன் நம்ம பின்னாடி வந்திடுவான் யோசிச்சு பாரு எவ்வளவு சொத்து ஏழு தலைமுறை என் மருமகன் புண்ணியத்துல நாம செட்டில் ஆகலாம் அதுக்காக தான் என்று கூற…

அடங்கவே மாட்டியா டா நீ என்று கையில் இருந்த பேகை எடுத்து அவன் முதுகில் அடித்தபடியே வீடு வந்து சேர்ந்தனர்.

மறுநாளே வெங்கட் பவியிடம் வந்து என்ன முடிவு எடுத்திருக்க என்று கேட்க...

நிஜமாவே இந்த முறை அவரு கண்டிப்பா குடுக்கற மாதிரி தான் பேசுறாரு ஆனா அங்க முப்பது நாள் இருக்கணும் சொல்லறது ஒரு மாதிரி இருக்கு…

அன்னைக்கு என்னை வெளிய தள்ளி விடும் போது அவங்க வீட்டுல இருக்கறவங்க எல்லாரும் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க அப்படி இருக்கும்போது மறுபடியும் அவங்க முகத்துல முழிக்க ஒரு மாதிரி இருக்கு அதான்…

இதுதான் விசயமா இந்த ஒரு பிரச்சினை சரியான நீ அங்க வருவல்ல…

ஏன் இங்கே அவங்க வர மாட்டாங்களா ஆதியை கூட்டிட்டு அவர் இங்கு வரலாம்ல..

சரிதான் பவித்ரா ஆனா ஆதி உன்கிட்ட கொஞ்சம் கூட பழகல அப்படி இருக்கும் போது அவன் இங்க வந்து அடம் பண்ண ஆரம்பிச்சா அவனை சமாளிக்க முடியாதுனு பீல் பண்றாரு மாமா நான் அன்னைக்கே இதுபற்றி அவர் கிட்ட பேசிட்டேன்…

ம்ம்…

என்ன பவி...அவரை வரசொல்லவா….

****

ஆதி உனக்கு வேணும்னா நீ உடனே முடிவெடு லேட் பண்ணாத…
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ஆதிக்கு லண்டன் போர்ட் ஸ்கூல்ல சீட் கிடைச்சிருக்கு…
மாமா கூட அவனும் லண்டன் போய் செட்டில் ஆகப் போறேன் நீ லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் ஆதி உன்கிட்ட இருந்து ரொம்ப தூரமா போய்கிட்டு இருக்கான் சீக்கிரம் முடிவு பண்ணு என்றவன் ரிஷியிடம் பவியின் சங்கடங்களை தெரியப்படுத்த


உடனடியாகவே தாய் தந்தை சித்தி சித்தப்பா நால்வரையும் உலக சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்தான் இனி ஒரு வருடங்களுக்கு அவர்கள் இந்த பக்கம் வர போவதே கிடையாது.

விஜியிடம் சென்றவன் சில நாட்கள் உன் மாமியாரிடம் சென்று இரு என்று அவளையும் அவள் கணவன் குழந்தையையும் அனுப்பி வைத்தான்.

ராகவ்,ராகவி,ரிஷி என மூவர் மட்டுமே இப்பொழுது வீட்டில் இதை எல்லாவற்றையும் ஒரு மாதத்தில் முடித்திருந்தான்.

இங்கு கௌசிக்கின் குடும்பத்தினர் திருமணத் தேதியை நாராயணன் தம்பதியிடம் கேட்க அவர்களும் பவித்ராவிடம் கேட்டுவிட்டு கூறுகிறோம் ஒரு மூன்று மாதம் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்கள்

மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டுமா என்று யோசித்த கௌசிக்
அடுத்த ஆறு மாதம் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு வருகிறேன்
அதற்குள் பவித்ராவின் மனதை மாற்றி வையுங்கள் வந்து திருமணம் செய்து அவளையும் கூட்டிக்கொண்டு செல்கிறேன் என்று கிளம்பிப் போய் விட்டான் பவித்ராவிற்கு தற்சமயம் கௌசிக் பற்றிய தலைவலி இல்லை…

அதன் பிறகு எல்லாத் தடைகளும் அவர்களுக்கு விலகி விட ஒரு நாள் அதிகாலையிலேயே ரிஷி பவித்ராவின் வீட்டு வாசலில் வந்து இறங்கினான் அதுவரை மேகலாவை பார்த்தால் ஒருவித கசப்பு இருக்கும்.

ஆனால் இன்று அவனுக்கு இல்லை
அவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் அதற்கு பெரியவர்களின் ஆசிர்வாதம் வேண்டும் அதனால் யோசிக்காமல் இருவர் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன் மேகலாவை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பையும் கேட்டான்


என்ன மன்னிச்சிடுங்க ஆன்ட்டி அன்னைக்கு ஹாஸ்பிடல்ல உங்க கிட்ட கொஞ்சம் அதிகமாவே நடந்துகிட்டேன் அதையெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க மறந்துடுங்க என்று கூற மேகலா விற்கும் நாராயணனுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை…


அது மட்டும் இல்ல என்னோட அம்மா சார்பாவும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் அவங்க அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்தில் உங்ககிட்ட அதுபோல பேசியிருக்காங்க அதற்காகப் பலமுறை அவங்க வருந்தியும் இருக்காங்க…நமக்குள்ள ஒரு அழகான உறவு முறை இருந்தது அது எங்களால கெட்டுப் போச்சு... எல்லாத்துக்கும் சேர்த்து என்ன மன்னிச்சிடுங்க…


சரி...அது எதுக்கு இப்போ...


எதுக்காக வந்தனு கேட்கிறீங்க...புரியுது ஆன்ட்டி... அது தா ன் நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு இந்த ஆயுசுக்கும் நினைத்துப் பார்க்கிற அளவுக்கு வலிக்க வலிக்க பல வலிகளை உங்களுக்கு நான் கொடுத்துட்டேன்

இப்போ என்னன்னா பவித்ரா பேரில் சில ப்ராப்பர்ட்டீஸ் இருக்கு ஆபிஸ்ல நிறைய ஷேர்ஸ் இருக்கு அவ வந்து கொஞ்சம் ஷைன் பண்ணிக் கொடுத்தா எனக்கு பெரிய ஹெல்ப்பா இருக்கும் பெரிய மனசு பண்ணி பவித்ராவை என்னோட அனுப்பி வைக்கணும்


எல்லாம் சரி பவித்ராவுக்கு வேறொரு இடத்தில் கல்யாணத்துக்கு பேசி வச்சிருக்கோம் இந்த சமயத்துல உங்களோட அனுப்பினா... என்று தயங்கியபடி கேட்க…

தனியா எல்லாம் வரவேணாம் வெங்கட்டை கூட அனுப்பி வைங்க அவன் கூட வரும் போது யாரும் தப்பா பேச மாட்டாங்கல்ல…

சரி சாயங்காலம் கொண்டு வந்து விட்டுடுவீங்கல்ல அப்படின்னா கூட்டிட்டு போங்க…

இல்ல ஆன்ட்டி ஒரு பத்து நாள் எங்க வீட்டிலேயே தங்கி இருக்கிற மாதிரி இருக்கும் நிறைய பேப்பர்ஸ் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு அது அவளுக்கு தான் தெரியும் என்று கேட்க முன்னாள் மருமகனுக்கு என்ன பதில் கூறுவது என்று இருவருமே முழிக்க தொடங்கியிருந்தனர்.

தொடரும்
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
25

என்ன ஆன்ட்டி யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்னோட அனுப்பறதால பவித்ராவோட எதிர்காலத்திற்கோ இல்லை அவளோடு கல்யாண வாழ்க்கைக்கோ எந்த பிரச்சினையும் வரப்போறதில்லை நம்பி அனுப்புங்க…

எதுக்கும் பவித்ராகிட்டயும் வெங்கட் கிட்டயும் ஒரு வார்த்தை பேசிட்டு அதுக்கப்புறம் முடிவை சொல்றேன் நீங்க இப்படி வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டு பவித்ராவின் அறைக்குள் செல்ல பவித்ரா திக் திக் என அமர்ந்திருந்தாள்.

என்னமா ரிஷி அவர் வீட்டுக்கு உன்னை கூப்பிடுறாங்க... பேச்சு எல்லாமே மாறி இருக்கு மன்னிப்பெல்லாம் கேட்கறாங்கமா கேட்கவே சந்தோஷமா இருக்கு

நீ விருப்பப்பட்டா அங்க போய் ஹெல்ப் பண்ணு இல்லனா கையெழுத்து போட வேண்டிய பேப்பரை எல்லாம் இங்க கொண்டு விர சொல்லவா…

இல்ல மா நான் நேர்ல போறேன் அங்க இருந்தப்போ நிறைய பேப்பர்ஸ் கொடுத்தாரு அதெல்லாம் நான் தான் ஒவ்வொரு இடத்திலேயும் எடுத்து வச்சிருக்கேன் நான் போனா தான் எல்லாத்தையும் தேடி எடுத்துக் கொடுக்க முடியும் என்று தலைகுனிந்தபடி கூற

சரி என்று விட்டு கலக்கத்துடன் வெங்கட்டை தேடிச் சென்றார்.. என்னடா அவர் எதேதோ சொல்றாரு உன் அக்காவும் போற மாதிரி பேசறா ஒன்னும் புரியலடா உன்ன நம்பி தான் அவளை அனுப்பி வைக்கிறேன் பத்திரமா உன் அக்காவை திருப்பி கூட்டிட்டு வந்துருடா….

அம்மா நீங்க பயமே படவேண்டாம் நான் கூட போறேன் அதனால அக்காவுக்கு எந்த ஒரு கெடுதலா இருந்தாலும் என்னை தாண்டித்தான் போகும் அதை முதல்ல மனசுல வெச்சுக்கோங்க... சரி நானும் அக்காவும் கிளம்புறோம் நீங்களும் அப்பாவும் பத்திரமா இருங்க ஏதாவது ஒண்ணுன்னா எனக்கு இல்லனா அக்காக்கு உடனே கூப்பிடுங்க நான் தினமும் உங்களை வந்து பார்க்கிறேன் சரியாம்மா என்று கூறியவன் வெளியே வர…

ரிஷி பவித்ராவை தேடி அவளின் அறைக்குள் சென்றான் அவனை பார்த்ததும் எழுந்து நின்றவளது கண்களில் கண்ணீர் கரைகட்ட தொடங்கியது உடல் முழுக்க நடுங்க அவனை ஒரு நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதே நிலைமைதான் ரிஷிக்கும்…
உரிமையாக அவளின் கைகளைப் பிடித்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டவன்

என்னை மன்னிச்சிடு பவித்ரா எல்லாத்துக்கும் சேர்த்துதான் நான் ரொம்ப சுயநலமா இருந்துட்டேன் மூணு வருஷத்துக்கு முன்னாடி இதை போல உன் முன்னாடி இந்த மன்னிப்பைக் கேட்டிருந்தா நமக்குள்ளே இந்த பிரச்சினையே வந்திருக்காது…

ஆனா அது எல்லாமே முடிஞ்சு போன விஷயம் இந்த மூன்று வருஷம் உனக்கு நிறைய வலிகளை நான் குடுத்துட்டேன் அதுக்கெல்லாம் கண்டிப்பா என்னால நியாயம் சொல்லவே முடியாது...

ஆனால் இப்போ நான் கூப்பிட்டேன்ங்கற ஒரே காரணத்துக்காக என்னை நம்பி அங்க வர்ற...நீ தங்கப்போற இந்த ஒரு மாசம் உன் நம்பிக்கையை என்னைக்குமே நான் உடைக்க மாட்டேன்… கண்டிப்பா உனக்கோ உன்னோட தன்மானத்துக்கோ எந்த ஒருகலங்கமும் வராது நம்பி என்னோட வா பவித்ரா…

அங்க நீ யார் மனசையும் உடைக்க வரல உன் பையனோட மனசுல இடம் பிடிக்க வர்ற இன்னையிலிருந்து முப்பதாவது நாள் முடியும் போது உன் பையன் உன் பின்னாடி வர்றேனு சொல்லணும் அப்படி இல்லன்னா ஆதியை அங்கேயே விட்டுட்டு நீ மட்டும் தனியா வீட்டுக்கு வந்திடனும் அதுக்கப்புறம் ஆதியை என்னைக்குமே நீ பாக்கணும்னு கேட்கக்கூடாது…

கொடுத்துடுங்கனும் தொல்லை செய்ய கூடாது அதை மனசுல வச்சிக்கோ இது நம்ம ரெண்டு பேருக்குள்ளே ஒரு வாய்மொழி ஒப்பந்தம் இந்த ஒப்பந்தத்தை நானும் மீற மாட்டேன் நீயும் மீறக்கூடாது என்று கூறியவன் அவளையும் வெங்கட்டையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான்.

அங்கே வீட்டில் இவர்களை வரவேற்க யாருமே இல்லை... ராகவ் வாசலில் காத்திருக்க குழந்தை ராகவியிடம் இருக்க இவள் சென்றதுமே ராகவியிடம் இருந்த குழந்தையை வா என்றபடி தூக்கசெல்ல ஆதியோ இவளைப் பார்த்து பயந்து ராகவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டது அதைப் பார்த்ததும் பவியின் முகம் வாட ரிஷிதான் இன்னைக்கு தான வந்திருக்க அவன் குழந்தையா இருக்கும்போது விட்டுட்டு போனது அதான் வர பயப்படறான்…

திருத்திக்கோங்க நான் அவளை விட்டுட்டு போகல நீங்க அவனை பிடுங்கி வெச்சுக்கிட்டு என்னை துரத்தி விட்டுடிங்க…

ம்ம் அப்படியும் சொல்லலாம்…

வாழ்க்கையில எப்பவுமே இந்த வாசல்படி மிதிக்கவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா இன்னைக்கு பக்காவா பிளான் பண்ணி என்னை மிதிக்க வச்சிட்டீங்களே என்று அவனை திட்டியபடியே உள்ளே சென்றாள்..

அதன்பிறகு பவித்ராவிற்கு குழந்தையின் அறை ஒதுக்கப்பட்டது ஏற்கனவே ராகவி,ராகவ் இருவருமே ரிஷியின் வீட்டில் தான் தங்கி இருப்பதால் வெங்கட்டிற்கும் அவர்களின் பக்கத்து அறை ஒதுக்கப்பட்டது.

ஒரு மாதம் மட்டுமே குழந்தை அவளுடன் இருப்பான் அதற்குள் குழந்தையின் மனசை அவள் மாற்றவேண்டும் அவளைப் பற்றி குழந்தைக்கு எதுவுமே தெரியாது அருகில் சென்றாலோ அல்லது தொடங்குகிறார் பக்கத்தில் கூட வருவதில்லை சமையல் செய்யும் பெண்மணியிடம் கூட உணவை வாங்கி உண்கிறான் இவளின் கையால் ஒரு கவளம் கூட வாங்குவதில்லை.

அன்னைற பொழுது சென்றதும் இரவு நேரத்திலோ ஆதி அவனின் தந்தையுடன் உறங்குவதற்காக சென்றுவிட பவித்ராவிற்கு தான் ஏன் இங்கு வந்தோம் என்று எண்ணத் தோன்றியது மகனை கண்டிப்பாக தன்வசம் படுத்த முடியாது என்றும் தோன்றியது.

அந்த வீட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் அவளும் ரிஷியும் வாழ்ந்த அந்த அழகான தருணங்கள் அவளின் கண்முன் வந்து சென்றது

மகன் அனைவரிடத்திலும் நன்றாக பேசுகிறான் விளையாடுகிறான் இவளைப் பார்த்தால் மட்டுமே யார்பின்னாவது சென்று ஒளிந்து கொள்கிறான்.

மூன்று வயது முழுதாக முடிந்து விட்டது இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை ஆனால் வீட்டில் அவனுக்கு தனியாக ஒரு டியூஷன் டீச்சர் இருப்பதால் அவரிடத்தில் நன்றாகவே ஒரு சில வார்த்தைகள் கற்றுவிட்டான்….சிறிய வார்த்தைகளை எழுதுவான்.

மகனை எப்படி தன் பக்கம் திரும்ப வைப்பது என்று யோசித்தவள்
டியூஷன் டீச்சருக்கு சற்று காலம் விட்டுக் கொடுங்கள் அவர்கள் இடத்திலிருந்து நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறேன் என்று ரிஷியிடம் கூறினாள்.

வாய்க்குள்ளாகவே சிரித்த ரிஷி நீங்க என்ன வேஷம் போட்டாலும் ஆதி அது உன் பக்கம் திரும்பி பார்க்கிறது ரொம்ப கஷ்டம் இருந்தாலும் நீ வந்து ரெண்டு நாள் முடியுது இன்னும் இருபத்தியெட்டு நாள் தான் பாக்கி இருக்கு அதுக்குள்ள ஏதாவது செய்... நாளைல இருந்து டியூஷன் டீச்சருக்கு லீவ் கொடுக்கிறேன் அந்த இடத்துக்கு நீ வா….உன்னோட நாள் ரொம்ப குறையுது பவி…

ஆனால் ஆதி விடாக்கண்டன் ஆக இருந்தான் பவி என்ன கற்றுக் கொடுத்தாலும் கற்றுக் கொள்ள மறுத்தான் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை அவளிடம் இல்லாத ஒரு பொருளை கேட்டு தொல்லை செய்தான்.

ஒவ்வொரு முறையும் ரிஷிக்கு அழைத்து ஆதிக்கு வேண்டியவற்றை கூற அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சரியாக எடுத்து வைத்தது போல் வேலையால் கொண்டு வந்து கொடுத்தார்.

பத்து நிமிடம் அமைதியாக இருப்பான் மீண்டும் மற்றொரு பொருளை ஆதி கேட்பான்... மீண்டும் அவள் ரிஷிக்கு அழைத்து எங்கே இருக்கிறது என்று கேட்பாள்…. இருக்கும் இடத்தைச் சொல்லுவான் இல்லை என்றால் மறுபடியும் ஒரு பத்து நிமிடம் கழித்து அங்கு வேலை செய்யும் பணியாளரிடம் கொடுத்து அனுப்புவான்…அந்த இடைப்பட்ட நேரத்தில் ஆதி ராகவியுடன் விளையாடச் சென்று விடுவான்.

அவள் கேட்டவற்றை தயார் செய்துவிட்டு மீண்டும் ஆதியை பிடித்து இழுத்து வந்து அமர வைத்தால் சரியாக பத்து நிமிடம் கழித்து மற்றுமோர் வேலையை கொடுத்துவிட்டு ராகவியிடம் விளையாட ஓடி விடுவான்.

ரிஷியை ஒவ்வொரு முறை அழைக்கும் போது அவன் மிக ஜாக்கிரதையாக பவியிடம் பேசுவது போல் தெரிந்தது இதை நன்றாகவே பவியால் உணர முடிந்தது.

ஒரு முறை கேட்டும் விட்டாள்...என்னிடம் நீங்கள் மிகவும் பார்மலாக பேசுகிறீர்களே என்று

மறுக்காமல் ஆமாம் என ஒத்துக்கொண்டான்….ஏன் என்று கேட்ட பவிக்கு ..

ஏற்கனவே உன்னை ஒருமுறை காயப்படுத்தி விட்டேன் அதனால் மீண்டும் ஒருமுறை என்னுடைய வார்த்தைகளோ,செயலோ காயப்படுத்தி விடக்கூடாதல்லவா அதனால் பார்த்து பார்த்து பேசுகிறேன் என்று கூறினான்…

அவன் கூறியது என்னோவோ சாதாரணமாக தான் ஆனால் அவன் கூறிய தோரணை அவளை மிகவும் வருந்த செய்தது மகனோ அவளை மூச்சுக்கு முன்னூறு முறை மிஸ்... என்று அழைக்கிறான்... இவனோ பார்மலாக பேசுகிறான்...இங்கு வந்ததோ தவறோ…
இருவருமே தன்னை மறந்துவிட்டனர்…

தன்னை அம்மா என்று அழைக்காத பிள்ளைக்கு எப்படி முதலில் நான் தான் உனது அம்மா என்று புரிய வைப்பது…
இப்படியா பிள்ளையைக் கெடுத்து வைத்திருப்பது... தாய் கூட யார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை அப்படி சொல்லிக் கொடுத்திருந்தாள் இப்பொழுது அந்த குழந்தை என்னிடம் எத்தனை அம்மா போட்டிருக்கும் என்னை விட்டு நகர்ந்து இருக்குமா என்று ரிஷியின் மீது தான் கோபம் வந்தது அந்த கோபத்தை அன்று இரவே சென்று அவனிடம் காண்பிக்கவும் செய்தாள்.

ஆதி என்னை ஒரு முறை கூட அம்மானு கூப்பிடவே மாட்டேங்குறான்...மிஸ்-ன்னு கூப்பிட்டான்... நான் தான் அம்மான்னு அவனுக்கு நீங்க சொல்லி கூட கொடுக்கல …

ஆறு மாசம் நான் தானே தாய்ப்பால் ஊட்டி வளர்த்தேன் அது கூட அவனுக்கு தெரில...அவனை தூக்க போனாலே என் கிட்ட வர மாட்டேங்குறான் எப்போ பார்த்தாலும் ராகவியோட தான் இருக்கிறான் நீங்க போய் ராகவி கிட்ட சொல்லுங்க ஆதி கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லுங்க…

ராகவி அவனோட அத்தை... நீ விட்டுட்டு போன நாளிலிருந்து அவதான் அதிகமா அவனை பாத்துக்கறா... அதனால அவ கிட்ட அதிகமா ஆதி இருக்கிறான் நான் எப்படி போய் சொல்லமுடியும்…

நீங்க சொல்லலனா அவன் கண்டிப்பா என்கிட்ட வரப்போறதே இல்லை இன்னும் இருபது நாள் தான் இருக்கு... இதுவரைக்கும் என்னால ஒரு இன்ச் கூட அவன் கிட்ட நெருங்கவே முடியல... நீங்க சொன்னது போல அவன் உங்களோட பையன் தான் அதனாலதான் அவன் பிடிவாதமா என்னை திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்குறான்…

ஆறு மாசம் அவனுக்கு பால் கொடுத்து இருக்கேன் அந்த ஒரு உணர்வு கூட இல்லன்னா எப்படி…

வயசு மூணு முடிஞ்சுது ஆனா பத்து வயசு பையன் மாதிரி ரொம்ப தெளிவா புத்திசாலித்தனமா பேசுறான்... நான் தான் உன் அம்மானு சொன்னா இல்ல நீ டியூசன் மிஸ் அப்படிங்கறான்... எப்படி இவனை என் பக்கம் திருப்ப முடியும்…அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சு வைச்சதால தான் நீங்க இதுமாதிரி ஒரு ஆஃபர் எனக்கு கொடுத்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன் எப்படி இருந்தாலும் அவன் என்கிட்ட வரப் போறதில்லைனு
தெரிஞ்சும் ஏன் முப்பது நாள் இங்க இருக்கணும்னு என்னை கேட்டுட்டீங்க ரிஷி…

உண்மைய சொல்லுங்க உங்க மனசுல வேறு ஏதாவது எண்ணங்கள் இருக்கா எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லிடுங்க இன்னும் இருபது நாள் கழிச்சு ஒட்டுமொத்தமா நீங்க கொடுக்கப் போற அதிர்ச்சியை என்னால தாங்கிக்க முடியாது…

பவி ரொம்ப அதிகமா கற்பனை பண்ற தயவு செஞ்சு சொல்றேன் இது மாதிரியான கற்பனைகளை எல்லாம் தூக்கி மூட்டை கட்டு …

நீ சொன்னது சரிதான் ஆதி ரொம்ப அழுத்தகாரன் அவன்கிட்ட சாதாரணமா யாருமே நெருங்கிட முடியாது ஆனா அவன் வேணும்னு நெனச்சு உன்னை நெருங்கிட்டா அதுக்கு அப்புறம் என்னை கூட திரும்பி பார்க்க மாட்டான்... அவனுக்கு புரியவை நீ தான் அம்மான்னு...உன் அன்பால அவனை அம்மானு கூப்பிட வை... இன்னும் இருபது நாள் இருக்கு இல்லையா முயற்சி பண்ணு உனக்கு உன் பையன் வேணும்னா போராடு என்று புத்தி கூறி அனுப்பி வைத்தான்.

மறுநாள் விடியற்காலை வெங்கட் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க தன்னை யாரோ உற்று நோக்குவது போல் உணர்ந்தான் திரும்பிப் பார்க்க யாரையும் காணவில்லை மீண்டும் அவன் உடற்பயிற்சி செய்ய தன்னை யாரோ புகைப்படம் எடுப்பது புரிந்தது.

திரும்பி சுற்றிப்பார்க்க சுவற்றின் அருகே ஒரு நிழல் தெரியவும் ஒன்றும் தெரியாதவன் போல் அங்கு சென்று அந்த உருவத்தை பிடித்து இழுக்க முன்பு வந்து நின்றது ராகவி கையில் உயர்தர கேமரா ஒன்றை வைத்திருந்தாள் அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அவளின் கைகளை விட்டவன்...வினாடியில் முகத்தை மாற்றிக் கொண்டு கோபமாக அவளைப் பார்த்து

எதுக்காக என்னை போட்டோ எடுத்த என்று கேட்டான்.

உடனே அவள் சமாளிக்கும் விதமாக நான் எப்போ உன்னை போட்டோ எடுத்தேன் நான் நேச்சரை போட்டோ எடுத்துட்டு இருக்கேன் …

எது இந்த மொட்டைமாடி தான் உனக்கு நேச்சரா…முதல்ல கேமராவை குடு நான் செக் பண்றேன் என்று அவள் கையில் இருந்த கேமராவை பிடுங்கி போட்டோக்களை பார்க்க இன்று மட்டுமில்லை கடந்த பத்து நாட்களாக அவனை விதவிதமாக போட்டோ எடுத்து தள்ளி இருந்தாள். இதில் அவனுக்கே தெரியாமல் அவள் செல்ஃபி எல்லாம் ட்ரை பண்ணி இருந்தாள்…


பல்லைக் கடித்தவன் புகைப்படங்களை டெலிட் செய்வதற்காக பட்டனை அழுத்த அவன் கைகளை பிடித்து தடுத்தவள் கண்கலங்க ப்ளீஸ் எப்படியும் நீ எனக்கு கிடைக்கப் போறதில்லை உன்னோட இந்த போட்டோஸாவது என்கிட்ட இருக்கட்டுமே என்றாள்

அவளின் முகத்தை யோசனையாக பார்த்தவன் என் போட்டோவ வச்சு நீ என்ன பண்ண போற…

என்னவோ பண்ணறேன்…இதெல்லாம் ஏன் பண்ணறேனு உனக்கு புரியலையா வெங்கட்….

புரியல...ஏன் பண்ணற அதையும் உன்வாயாலயே சொல்லேன்...

சொன்னாலும் புரியாது... உனக்கு மட்டும் இல்ல உன் குடும்பத்துக்கே புரியாது என்று இவள் கோபமாக பதில் கொடுத்தாள்.

பல்ல கழட்டிடுவேன் பாத்துக்க குடும்பத்தை பற்றி பேசினா... இப்போ எதுக்கு என் குடும்பத்தை இழுங்கள்...

பின்ன என்ன...உன் குடும்பத்திற்கு லவ்வுன்னா முதல்ல என்னான்னு தெரியுமா என் அண்ணா உன் அக்கா மேல அவ்வளவு லவ் வைச்சிருக்கறாரு... இந்த நிமிஷம் வரைக்கும் அவங்களுக்கு அது புரியவே இல்ல பையனுக்கு டியூசன் மிஸ் வேலை பார்த்துட்டு இருக்காங்க


இந்த நான் பத்து நாளா உன்னை மட்டும் தான் பாத்துட்டு இருக்கேன் அது தெரியாமல் இந்த மொட்டை மாடியில் எக்சர்சைஸ் பண்ணறது... குருவிக்கு அரிசி போடுறது... கார்டனுக்கு தண்ணீர் விடறதுனு நீ சுத்திட்டு இருக்க...உன் முன்னாடி எத்தனை முறை வந்து நிற்கிறேன் ஒரு முறையாவது உன் கண்ணுக்கு நான் தெரிஞ்சேனா சொல்லு…

இப்பக்கூட இந்த போட்டோஸ் எல்லாம் ஏன்னு கேக்கற... ஒரு பொண்ணு எதுக்காக ஒரு ஆம்பளையோட போட்டோவ வெச்சுக்கணும் ஆசைப்படுவா…. அது கூட உனக்கு புரியல இல்ல... என் கண்ணுல உனக்கான காதல் தெரியலையா... இல்ல தெரிஞ்சு என்ன அவாய்ட் பண்றியா... நீ என்னை காதலிக்கனா கூட பரவால்ல….ஆனா என்னோட காதலை உன்னால புரிஞ்சுக்க முடியலனு மட்டும் பொய் சொல்லாத என்று கண்கலங்க அவனிடம் கூறினாள்.

எதுவுமே பேசாமல் அருகில் இருந்த துண்டை எடுத்து தன்னை துடைத்துக்கொண்டே சென்றவனை முன்வந்து தடுத்தவள் நான் இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன் நீ எதுவுமே பதில் பேசாம போனா என்ன அர்த்தம் நான் என்ன பண்ணினா நீ என்னை திரும்பி பார்ப்ப... நான் உன் கண்ணுக்கு அழகா தெரியலையா... அழகா தெரியனும்னா நான் என்ன பண்ணனும்…

அன்னைக்கு ஏன் என்னை காப்பாத்தின சொல்லு ...அப்படியே விட்டுட்டு போயிருக்கலாம் இல்ல... இப்படி காப்பாத்தி உன் மேல காதல் வர வச்சு என்ன பைத்தியமா உன் முன்னாடி கெஞ்ச வெச்சுட்டு இருக்கல்ல மறுபடியும் சொல்றேன் நீ என்ன அடிச்சாலும் பரவாயில்லை நீயும் உன் அக்காவும் காதல்னா என்னன்னு தெரியாத ஒரு மரக்கட்டைக... காதலோட வலி உங்களுக்கு புரியல... ஏன்டா என் கண்ணு முன்னாடி வந்து என்னை பைத்தியமாக்கற...போயிடு...இங்க இருந்து போயிடு…

அப்பவாவது என்னால உன்ன மறக்க முடியுமானு பாக்கறேன் இப்படி தினம் தினம் என் முன்னாடி வந்து என்னை அழ வைக்காத என்று கால்களை மடித்து அவன் முன்பு முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். சற்று நேரம் அவளையே வேடிக்கை பார்த்தவன் மனம் கேளாமல் தோளில் கைவைத்து தூக்கி நிறுத்தி அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.


யார் சொன்னது ராகவி உன்னை எனக்கு பிடிக்காதுனு... முத முதல்ல என்னோட அக்கா கல்யாணம் அன்னைக்கு தான் உன்னை பார்த்தேன்.. அப்பவே உன்கிட்ட நான் விழுந்துட்டேன் அதுக்கப்புறம் அதை மறைக்க தான் ஒவ்வொரு முறையும் உன்னை பார்த்து முறைக்கிற மாதிரி நடிப்பேன்….

அப்புறம் அன்னைக்கு கூட ஹோட்டல்ல உன்னை பார்தேனே அப்போ கூட பெருசா எந்த பாதிப்பும் இல்லை ஆனால் எப்போ உன்னை தொட்டு தூக்கினேனோ அப்பவே நீ என் மனசுக்குள்ளேயே வந்துட்ட…

அது மட்டும் இல்ல அந்த நிலைமைல கூட நான் தூக்கினதை நீ விரும்பாம எங்கிட்ட சண்டை போட்ட பாரு அது இன்னும் ரொம்ப பிடிச்சது... மாமா இந்த வீட்டுக்கு வானு கூப்பிட்ட உடனே ஏன் என் வேலைக்கு ஒரு மாசம் லீவு சொல்லிவிட்டு என் பெட்டி படுக்கை எல்லாம் கட்டிட்டு வந்தேன் தெரியுமா இங்க நீ இருக்கிறங்கற ஒரே ஒரு காரணத்திற்காக தான்…

இந்த பத்து நாளா நீ என் முன்னாடி வர்றதும் தெரியும் என பாக்குறதும் தெரியும் ஏன் போட்டோ எடுக்குறது கூட தெரியும் எல்லாத்தையும் மனசுக்குள்ள ரசிச்சிகிட்டு தான் இருந்தேன் ஆனா
என்ன செய்ய என்னோட சூழ்நிலை உன்னை சைட் அடிக்க மட்டும் தான் அனுமதிக்கும் காதல் எல்லாம் நமக்கு செட்டாகாது…

ஏன் செட்டாகாது காரணம் சொல்லுங்க…

ரொம்ப சிம்பிள் நீ பெரிய பணக்காரி நான் சாதாரண மிடில்க்ளாஸ் பையன் என்னோட அக்காவை நீங்க எல்லாம் என்ன பண்ணுனிங்களோ அதை தான் எனக்கும் பண்ணுவீங்க ….

என்ன என் அக்காவை மிடில் கிளாஸ்னு சொல்லி வீட்டை விட்டு துரத்தி விட்டிங்க…

என்னை அங்கிருந்து கூப்பிட்டு வந்து உங்க வீட்ல வீட்டோட மாப்பிளையா வச்சுக்குவீங்க... இது ரெண்டுமே எனக்கு செட்டாகாது…

இன்னொன்னும் இருக்கு அது...என்று தயங்கியவன் உனக்கு சரக்கு வாங்கிக் கொடுக்கிற அளவுக்கு எனக்கு வருமானம் போதாது என்று கூற

அவனை இரு கையாலும் போட்டு சாத்த தொடங்கினாள் ராகவி யாரை பார்த்து குடிகாரினு சொல்லற...என்னை பாத்தா அப்படியா தெரியுது என்று…

பின்ன அன்னைக்கு ஃபுல்லா சரக்கடிச்சதால தானே அப்படி இருந்த... அதனாலதான் அவனுக உன்கிட்ட மிஸ்பிகேவ் பண்ண பாத்தானுக…

அன்னைக்கு நான் ஒன்னும் குடிக்கல...எப்பவுமே நா குடிச்சதுமில்ல... எனக்கே தெரியாம அவனுக எதையோ உத்தி கொடுத்துட்டானுக... நீதான சொன்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த மாதிரி நேரத்துல கூட நான் அடுத்தவங்களை தொட விடலனு அந்த மாதிரி இருக்குற என்ன போய் இப்படி பேசற உன்னை காதலிச்சேன் பாரு என்று கோபத்துடன் திரும்பிக்கொண்டாள்.


அவள் கூறியதைக் கேட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டவன் இது ஓகே ஆனாலும் உன்னோட ஸ்டேட்டஸ்கும் என்னோட ஸ்டேட்டஸ்கும் என்று இழுக்க…

என்ன பண்ணினா நீ என்னோட காதலை ஏத்துக்குவ என்று கெஞ்சுவது போல் அவன் முகத்தை பார்த்து கேட்டாள்…

சரி வராது ராகவி தேவையில்லாம ஆசையை வளர்த்திக்காத…என்று நகர்ந்தவனை பார்த்து

ஹேய் பேசிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம் ஏன்னு சொல்லீட்டு போ….

நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கற இந்த ரேஞ்ச் தான்…
உன்னால கண்டிப்பா என்னோட வருமானத்திற்குள்ள வாழ முடியாது... என்னோட வீட்டில வந்து இருக்க முடியாது…

நீ செய்யற செலவுகளுக்கு எல்லாம் என்னால கண்டிப்பா சம்பாதிக்க முடியாது இவ்வளவு பெரிய ஆடம்பரமா வாழ்ந்த உன்னால ஒரு மிடில்கிளாஸ் வாழ்க்கை வாழ முடியுமா அப்படி உன்னை அங்க கூட்டிட்டு போனா அது எவ்வளவு பெரிய அராஜகம் உன்னோட வசதிக்கு தகுந்த மாதிரி ஒருத்தனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ அதுதான் உனக்கு நல்லது என்று கூறி விட்டுச் செல்லும் அவனை பிடித்து இழுத்தவள்…

எப்படி நீ அப்படி சொல்லலாம்...என்னால ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ முடியாதுன்னு...உன் கண்ணு முன்னாடியே நான் வாழ்ந்து காட்டறேன்...அப்போ நம்புவல்ல...நீ இங்கிருந்து போறதுக்குள்ள உனக்கு ப்ரூஃப் பண்ணறேன்…அப்புறமா நீயே வந்து என்கிட்ட கெஞ்சுவ என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி... அதுவரைக்கும் இனி உன்னை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்...என்று அவனை கடந்து சென்றாள்.

அதன் பிறகு ராகவியிடம் பல மாற்றங்கள் வந்தது எப்போதும் அவள் ஆரம்பர ஆடைகளை முற்றிலும் மாற்றி எளிய முறையில் உடை உடுத்த ஆரம்பித்தாள் .

அவ்வப்போது சமையலறை சென்று சில உணவுகளை தயாரித்து பழக ஆரம்பித்தாள் .

வெங்கட் எதிரே வந்தால் பார்க்காததுபோல் வேறு பக்கம் திரும்பிக் கொள்வாள்.

சில வீட்டு வேலைகளையும் அவள் செய்ய ஆரம்பித்திருந்தாள்... எப்பொழுதும் எதாவது ஓரு வேலையில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாள்... அவளின் மாற்றத்தை வெங்கட் கவனித்தானோ இல்லையோ இரு அண்ணன்களும் நன்றாகவே கவனித்தனர்…

அவளின் பார்வை எங்கு செல்கிறது என்றும் தான்…

ராகவ் ரிஷியிடம் கோபமாக கூற அவன் கூலாக வெங்கட்டை விட ஒரு நல்ல பையனை ராகவிக்கு நம்மாள பார்க்க முடியுமா சொல்லு என்னுடைய மாப்பிள்ளைனு நான் அவனுக்கு சப்போர்ட் பண்ணல அடிப்படையிலேயே அவன் மிக நல்லவன்... அவனை கல்யாணம் பண்ணனும்னா நம்ம ராகவி புண்ணியம் பண்ணியிருக்கனும்…

அவனுக்காகத்தான் ராகவி அவளை மாத்திக்கறா...நல்ல விஷயம் தான...பொருமையா வேடிக்கை பார்க்கலாம் எவ்வளவு நாள் இவங்க கண்ணாமூச்சி விளையாடறாங்கனு…

அப்போ இதுபத்தி அம்மாகிட்ட சொல்லலாமா அண்ணா…

இல்ல இப்போ வேணாம் முதல்ல பவி பிரச்சனை முடியட்டும்... அதுக்கப்புறம் அம்மாகள் வந்ததும்
நாமளே நல்ல நாளா பாத்து ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்…. கல்யாணம்தான் பண்ணிக்கப் போறாங்களேனு ரெண்டு பேரையும் கவனிக்காம விட்டுடாதே...ஒரு கண்ணை ரெண்டுக மேலயும் வச்சிக்கோ... என்று கூறவும் ராகவ் சந்தோஷமாக தலையசைத்தான்.

ராகவியின் மாற்றத்தைக் கண்ட வெங்கட்டிற்கு சந்தோஷம் அளவு கொள்ளவே இல்லை இன்னும் அவள் தனக்காக எந்தளவு மாற்றிக் கொள்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள காத்திருந்தான்…

அவனுக்கு இப்பொழுது ராகவின் மீது பரிபூரண நம்பிக்கை வந்துவிட்டது கண்டிப்பாக தன்னுடைய வருமானத்திற்கு ஏற்றது போல் அவளால் வாழவும் முடியும் தன்னுடைய வீட்டில் வந்து இருக்க முடியும்...

முதலில் தனது அக்காவின் பிரச்சினையை முடியட்டும் அதன் பிறகு முறையாக ராகவியிடம் தனது காதலை கூறி பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வெங்கட் காத்திருக்க ஆரம்பித்தான்.


இங்கு பவித்ரா மறுநாளில் இருந்து குழந்தையை தன்வசப்படுத்த என்னவெல்லாம் முயற்சி எடுக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்…

பகல் முழுவதிலுமே ஆதி அவளுடன் தான் இருப்பான் இரவு ஆனதும் ஆதி தந்தையுடன் உறங்கச் சென்று விடுவான். மறுநாள் அவன் அலுவலகம் செல்லும் பொழுது தான் பவித்ராவிடம் விட்டுச் செல்வது.

ஒருவேளை குழந்தை இரவில் தன்னுடன் இருந்தால் குழந்தையின் மனதை கவர முடியும் என்று நினைத்த பவித்ரா ரிஷியிடம் அதுபற்றி கேட்பதற்காக சென்றாள் ஆனால் அங்கே குழந்தை கடும் ஜூரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது ரிஷி கவலையுடன் மருத்துவருக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.

குழந்தையின் நிலையை கண்டு பதறிய பவித்ரா குழந்தையை அள்ளி அணைத்து நெஞ்சோடு வைத்துக்கொண்டாள்... அதன் பிறகுதான் சுற்றிப்பார்க்க அது ரிஷிகள் அறை…

ஒரு காலத்தில் அவளும் ரிஷியும் சந்தோஷமாக கூடிக் களித்த அவர்களின் இன் பிரத்யேக படுக்கையறை... அவனின் அனுமதி இல்லாமலே இன்று உள்ளே வந்துவிட்டாள்…

அவனிடம் ஆதியைப்பற்றி பேச வாசல் வரை வந்தவள் தன் குழந்தையின் அணத்தல் சத்தம் கேட்கவும் உள்ளே ஓடி வந்துவிட்டாள்.. இப்பொழுதுதான் கவனிக்கிறாள் ரிஷி என்ன சொல்வானோ என்று பயந்தபடி பார்க்க ரிஷியும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பார்வையில் அப்படி ஒரு அழுத்தம்... எப்பொழுது நிரந்தரமாக இந்த அறையில் நீ என்னுடன் தங்கப் போகிறாய் என்ற கேள்வி அப்பட்டமாகத் தெரிந்தது அவன் பார்வையிலேயே அவனின் மனதில் உள்ளதை அறிந்து கொண்டவளுக்கு பகீரென்று இருந்தது. அறையை சுற்றி பார்க்க அவளுக்கு பல நினைவுகள் கரைபுரண்டு ஓடியது...


அவர்களின் கடந்த காலத்தின் காதல் மட்டுமே இருவராலும் உணர முடிந்தது அந்த அறைக்குள்... அத்தனை காதல் நாடகத்தை அந்த அறையில் இருவருமே நடத்தியுள்ளனர்...அதன் அடையாளம் தானே தனது நெஞ்சில் அனத்தி கொண்டிருக்கும் ஆதி...குழந்தையின் உடல் மட்டும் சூட்டில் கொதிக்கவில்லை...காதல் கொண்ட அவளின் மனமும் தான்...இது தவறு என நெருப்பு சூட்டார்போல அவளுக்கு ஒரு மனம் எடுத்துரைக்க குழந்தையை அங்கேயே போட்டு விட்டு அழுதபடி அவளின் அறைக்கு ஓடினாள்.

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
26

பவி அவளின் அறைக்கு வந்து போதும் போதும் என்னும் அளவிற்கு அழுது முடித்தவள்... அறை கதவு தட்டும் சத்தம் கேட்கவும் அவசரமாக முகத்தை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

ரிஷி கோபமாக அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் எதுக்காக பவி குழந்தையை அப்படியே போட்டுட்டு ஓடிவந்துட்ட... உன் கிட்டே இருக்கும் போது தான் அவனோட அனத்தும் சத்தம் கொஞ்சம் குறைஞ்சது டாக்டர் வர வரைக்கும் அவனை வச்சிக்குவனு பார்த்தா இப்படி பாதியில விட்டுட்டு ஒடி வந்துட்டியே உன்னை நம்பி எப்படி நான் குழந்தையை கொடுக்கிறது என்று கேட்டான்.

என்னை மன்னிச்சிடுங்க...நான் போறேன்... எனக்கு இனிமே ஆதி வேணாம்...எப்பவுமே அவன் வேணாம்….நான் தோத்துட்டேன்...என்னால ஆதியோட மனசை மாத்த முடியாது... அதேசமயம் இந்த வீட்டில் இனிமே என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்று கூறினாள்…

சரி...போய்க்கோ...இனி உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் ஆனா போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணி கொடுத்துட்டு போ…

ஆதிக்கு கடுமையான ஜுரம் இருக்கு... டாக்டர் வந்து வைரல் ஃபீவர் மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்கார் எப்படியும் முனுலிருந்து அஞ்சு நாள் வரைக்கும் இந்த ஜுரம் இருக்குன்னு சொன்னாரு அந்த அஞ்சு நாள் மட்டும் என் பையனோட கூட இருந்து கவனிச்சுக்கோ எனக்கு ஆஃபீஸ்ல சில முக்கியமான வேலைகள் இருக்கு இவனையும் கவனிச்சிட்டு அதையும் என்னால பாத்துக்க முடியாது…

உங்க குழந்தையை விட முக்கியமான வேலையா….


ஆமா...இன்னும் பத்து நாள்ல நானும் ஆதியும் லண்டன் போகப் போறோம்... இனிமே இங்க வர்றதா இல்ல...அதுக்குள்ளே முடிக்க வேண்டிய வேலை எல்லாத்தையுமே நான் முடிக்கனும்... என்று எங்கோ பார்த்தபடி கூறினான்.

அவனும் பையனும் லண்டன் செல்கிறார்கள் என்று கேட்ட உடனேயே பவியின் நெஞ்சில் பூகம்பம் வெடித்தது மீண்டும் கண்கள் கலங்க ஆரம்பித்தது…

விழிநீர் விழவா என அவளின் அனுமதி கேட்டு கண்களிலே தேங்கி நிற்க….ஐந்து நாள் மட்டும் தான் இருப்பேன்...அதுக்கப்புறமா நான் போயிடுவேன்..

தேங்க்ஸ்... கண்டிப்பாக ஆதி அதுக்கு முன்னாடியே குணமாகிடுவான்னு நினைக்கறேன்...ஒருவேளை அப்படி ஆயிட்டா நீ முன்னாடியே கூட போயிடலாம்….

சாரி... குழந்தை காய்ச்சல் அனத்திட்டு இருந்தப்போ கூட நான் ரொம்ப அரக்கி மாதிரி பெட்லேயே போட்டுட்டு வந்துட்டேன் இப்போ எப்படி இருக்கான்..

டாக்டர் இப்போ தான் வந்து மருந்து கொடுத்துவிட்டு போய் இருக்காங்க நல்லா தூங்கிட்டு இருக்கான் எப்படியும் ஒரு நாலு மணி நேரம் தூங்குவானு சொன்னாங்க அதுக்குள்ள நான் ஆபீஸ் போய் முக்கியமான வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன்... ஏதாவது எமர்ஜென்சினா மட்டும் எனக்கு கூப்பிடு...


ஆதிக்கு கொடுக்க வேண்டிய மருந்தும் டாக்டரோட நம்பரும் டேபிள் மேல இருக்கு... அவனை பத்திரமா பாத்துக்கோ அப்புறம் ரெண்டு நாளா உங்க அம்மா நீ எப்போ வருவனு கேட்டுகிட்டே இருக்காங்க… இன்னைக்கு. சொல்லிடறேன்…அப்புறம் என்று இழுத்தவன்…தேங்க்ஸ்...என் குழந்தையை பாத்துக்க ஒத்துக்கிட்டதுக்கு என்று கூறிவிட்டு சென்று விட அழுது கொண்டே மகனைக் காண ஓடினாள்.

நன்கு உறங்கிக் கொண்டிருந்த மகனிடம் வந்தவள் அவனுக்கு நோகா வண்ணம் தொட்டுப் பார்க்க ஆரம்பித்தாள்.

காய்ச்சல் சற்று மட்டுப் பட்டிருந்தது... அருகில் அமர்ந்தவள் ஆதியின் தலையைக் கோதியபடியே புலம்ப ஆரம்பித்தாள்.

ஏன் ஆதி இந்த அம்மாவ உன்னால புரிஞ்சுக்க முடியல இந்த ரெண்டு வாரத்துல ஒரு நாள் கூடவா நான் தான் உன்னோட அம்மான்னு உனக்கு தோணல... நான் என்ன செஞ்சா என்னை அம்மான்னு கூப்பிடுவ சொல்லு ஒவ்வொரு முறையும் அம்மான்னு கூப்பிடு, கூப்பிடுனு சொல்லி நான் ஓய்ந்து போயிட்டேன்…

ஆனா நீ டியூஷன் மிஸ்... டியூஷன் மிஸ்னு சொல்லி என்னை தினம்,தினம் கொன்னு கட்டு இருக்க... இன்னும் ஒரு வாரத்துல உன்னோட அம்மா உன்னை விட்டு நிரந்தரமாக போக போறா‌..அதுக்குள்ளவாவது என்னை ஒரே ஒரு முறை ஆசைக்காக அம்மானு கூப்பிடு ஆதி...அந்த ஒரு சந்தோஷத்தோடவே நான் ஆயுசுக்கும் வாழ்ந்திடுவேன் என்று அழுதபடியே மகனின் அருகில் படுத்தவள் அழுத களைப்பில் அவளும் உறங்கிப் போனாள்.

சரியாக இரண்டு மணி நேரம் கழித்து குழந்தையை காண ஓடி வந்த ரிஷி அங்கு தாயும், சேயும் அழகாக கட்டிப்பிடித்து உறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்களுக்குள் படம் பிடித்துக் கொண்டான் .

இருவருக்கும் எதிர்ப்புறமாக வந்தமர்ந்தவன்,மகனுக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறதா என்று ஆராய்ந்தான்...பிறகு பவித்ராவின் தலையை மென்மையாக தடவி விட்டான் அவளோ மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்குவது போல் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.

எவ்வளவு நாட்கள் ஆயிற்று அவள் இந்த அறையில் உறங்கி…

எத்தனை நாள் எதிர்பார்த்தது இதுபோல் மீண்டும் அவள் இந்த அறையில் உறங்க வேண்டுமென்று…

இன்று தனது மகனுடன் எவ்வளவு அழகாக உறங்குகிறாள் என்று நினைத்தவன் மெதுவாக அவளின் நெற்றியில் மென்முத்தம் ஒன்றை பதித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

நன்கு உறக்கத்திலிருந்த பவித்ரா விற்கும் அந்நிகழ்வு கனவு போல் வந்தது வீட்டிற்குள் வந்த ரிஷி அவளின் தலையை கோதி நெற்றியில் முத்தமிடுவது போல் தோன்ற சட்டென்று எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க யாருமே இல்லை…அவளுக்கு மிகவும் சங்கோஜமாக போய்விட்டது இப்படி அடுத்தவர் அறையில் படுத்து உறங்கிவிட்டோமே…

நல்லவேளை ரிஷி இன்னும் வரவில்லை வந்திருந்தால் அவ்வளவுதான் என்று நினைத்தபடி முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தாள்... மகன் விழித்தால் அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துக்கள் டேபிள் மேலே இருந்தது சரி பார்த்து எடுத்துக்கொடுக்க வேண்டும் அதற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் உள்ளே வந்த ரிஷி எதையுமே காட்டிக்கொள்ளவில்லை அவன் வந்த நேரத்தில் அவள் உறங்கி உறங்கி கொண்டிருந்ததைப் பற்றி மூச்சி விடவில்லை அப்பொழுதுதான் வருவது போல எதார்த்தமாக மகனின் நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்துப் பார்த்தவன் நேரத்தை பார்த்துவிட்டு மருந்துகளை சரியாக எடுத்து வைத்தான்…

பவித்ராவிற்கு சிறு நெருடல் ஒருவேளை ரிஷி அப்பொழுதே வந்திருப்பாளோ தனது தலையை நீவிவிட்டு நெற்றியில் முத்தம் கொடுத்தது இவனாக இருக்குமோ... இல்லையென்றால் அது கனவா...என்று தெரிந்து கொள்ளவும் ஒரு ஆவல் இருந்தது.

மெதுவாக இப்போதான் வரீங்களா என்று கேட்டாள்.

அவனும் ஆமா ஏன் கேட்கிற பவி நீ கேக்கறதை பாத்தா ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறது போல இருக்கு என்று கேட்டான்…

இவளோ கனவில் கண்டதையா இவனிடம் கூறமுடியும் என்றென்னி வெட்கப்பட்டுக்கொண்டே இல்ல சும்மாதான் கேட்டேன்...என்றாள்.

முதல் முதலாக கோவிலில் பார்த்த பொழுது இதே போல் ஒரு வெட்கத்தை தான் அவன் கண்டான் இன்று மீண்டும் மறுமுறை அவளிடத்தில் காண்கிறான் நம்பிக்கை பிறந்தது அவனுக்கு...

பவி..
அவளின் செல்லப்பவி அவனிடம் கூடிய விரைவில் வரப் போகிறாள் இன்னும் நான்கு நாட்கள் எப்படியாவது அவளை இந்த அறையில் தங்க வைத்து விட்டால் போதும் அவளுடைய பழைய நினைவுகளை எல்லாம் கிண்டிக் கிளறி வெளியே கொண்டு வந்து தன்னை விட்டு அவள் இனி எப்பொழுதும் பிரிந்து செல்லாதவாறு பார்த்துக் கொள்வான் ஆனால் அந்த நான்கு நாட்களும் தனது மகனும் ஒத்துழைக்க வேண்டுமே…

ஆதியும் நன்றாகவே அவனின் தந்தைக்கு ஒத்துழைப்பை அளித்தான்…

தெரிந்து செய்தானோ தெரியாமல் செய்தானோ இரவு நேரத்தில் பவியுடன் தான் உறங்குவேன் என்று அடம் செய்ய தொடங்கினான்.. என்னடா செய்வது என்று பவி முழித்துக் கொண்டிருக்க


நீங்கள் இருவரும் எனது அறையில் படுத்துக் கொள்ளுங்கள் நான் வெளியே படுத்துக் கொள்கிறேன் என்று ரிஷி வெளியேற...

இடையில் விழித்த ஆதி தந்தையை தேடி விடாமல் அழ ஆரம்பித்தான்... காய்ச்சலும் அதிகரிக்க தொடங்கியது…


பதறிய பவி மகனை தோள்மீது கிடத்தியபடி ரிஷியை தேடி சென்றாள்...அவளை பார்த்ததும் ஒடிவந்து மகனை வாங்கிய ரிஷி என்னாச்சு என்று கேட்டான்…

என்ன ஆச்சுன்னு தெரியலை திடீர்னு தூக்கத்திலேயே அப்பா அப்பா கத்தி அழ ஆரம்பிச்சிட்டான் அது மட்டும் இல்ல அவனுக்குப் ஃபீவர் வேற அதிகம் ஆறது போல இருக்கு... எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று பவித்ரா பயப்பட...

ரிஷியோ கூலாக பயப்பட ஒன்னும் இல்ல பவித்ரா அவனுக்கு எப்பவுமே இப்படித்தான் ஆகும் .

கொஞ்சம் அழுதால் கூட அவனுக்கு உடனே காய்ச்சல் வந்துடும்…அதனால அவனை யாருமே அழ விட்டதில்லை…

அப்போ நேத்து அழுதானா என்ன...எதுக்காக அழுதான்...ஏன் இது போல அடிக்கடி ஆகுது...டாக்டர்ட கேட்டிங்களா... என்ன சொன்னாங்க... என்று கேள்வி மேல் கேள்வியாக ரிஷியிடம் கேட்டாள்.

ஒவ்வொன்னா கேளு பவி ஒட்டுமொத்தமா கேட்டா எப்படி பதில் சொல்ல…

ஆதிக்கு இது மாதிரி அடிக்கடி ஆகும் நீ எப்போ இந்த வீட்டை விட்டு போனியோ அப்போ இருந்தே இதுமாதிரி தான் அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது…அவனுக்கு இம்யூனிட்டி பவர் ரொம்ப கம்மி...உனக்கே தெரியும்ல என்றவன் சாதரணமாக...

சில சமயம் உன்னை நினைச்சி அழுதாலும் இப்படி ஆகும்...

வெளியே எங்காவது கூட்டிட்டு போனாலோ இல்ல ஹோட்டல் சாப்பாடு ,ஐஸ்கிரீம் இப்படி எடுத்துக் கிட்டாலும் உடனே அவனுக்கு ஜலதோஷம் பிடித்து ஃபீவர் வந்துடும்…

அதனாலதான் வெளிய கூட்டிட்டு போறது இல்ல உன்னோட ஹெல்த் கண்டிஷன் பார்த்து தான் டாக்டர் கொஞ்ச நாளைக்கு ஸ்கூலுக்கு இப்போ அனுப்ப வேண்டாம்னு சொன்னாங்க அதனால்தான் பிரைவேட்டே ஒரு டீச்சர் போட்டு அவனுக்கு வீட்டிலேயே கிளாஸ் எடுத்துட்டு இருக்கோம்…

அப்போ இன்னைக்கு ஆதி இதுமாதிரி கஷ்டப்படுறதுக்கு நான்தான் காரணமா ரிஷி சொல்லுங்க‌…

அன்னைக்கு என்னோட சுயநலத்துக்காக நான் பண்ணின அந்தக் காரியம் தான் என் பையனை இன்னிக்கு வரைக்கும் பாடா படுத்துதுதா... பாவி நான்... பெத்த பிள்ளைக்கு காலம்பூரா கஷ்டத்தைக் கொடுத்துட்டேன் நான் மட்டும் இன்னும் ஒரு ஆறு மாதம் தாய்ப்பால் கொடுத்து இருந்தா குழந்தைக்கு இன்னும் கொஞ்சம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைச்சிருக்கும் ஏதோ நினைச்சு முட்டாள்தனம் பண்ணிட்டேன் என்று அழத் தொடங்கினாள்…

ம்ம்...அழாத பவி…. முடிஞ்சு போனதை நினைத்து அழுது இப்போ என்ன ஆகப்போகுது... ப்ளீஸ் பாரு ஆதி உன்ன பார்த்து
மறுபடியும் அழுகையை ஸ்டார்ட் பண்ண போறான்..

ரிஷி ஆதி அழுதா காய்ச்சல் வரும்னு சொன்னீங்க...அப்போ அவன் நேத்து அழுதானா...எப்போ..?அவனின்
முகத்தைப் பார்த்து கேட்க

அவளுக்கு பதில் கூற முடியாத ரிஷி மழுப்பும் விதமாக ச்சே ச்சே நேத்தெல்லாம் அழல...ராகவியோட சேர்ந்து தண்ணில விளையாடிருப்பான் போல என்று அவனை தூக்கியபடி படுக்கை அறைக்குள் சென்றான்...இவளும் பின்தொடர்ந்து சென்றவள் வாசலிலேயே நின்று கொண்டிருக்க

கொஞ்சம் வெயிட் பண்ணு பவி ஆதிய நான் தூங்க வைச்சிட்டு வெளியே போயிடறேன் அப்புறம் வந்து நீ படுத்துக்கோ என்றபடி தனது மகனின் அருகில் படுத்தபடி அவனைத் தட்டிக் கொடுக்க ஆதி பவித்ராவும் தன் அருகில் வந்து படுக்க வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

ரிஷியோ பல்லைக் கடித்தபடி ஆதியை அடக்க இவனின் கோபத்தைக் கண்ட ஆதி கத்தி அழ ஆரம்பித்தான்...

அவன் மீண்டும் அழ ஆரம்பித்ததுமே பயந்த பவித்ரா பரவால்ல நீங்க அந்தப்பக்கம் படுத்துக்கோங்க நான் இந்த பக்கம் படுத்துக்கிறேன் என்று அவளாக இறங்கி வந்தாள்.

ரிஷி தயங்கியபடி இல்ல அது சரிவராது பவி... கொஞ்சம் வெயிட் பண்ணு மிரட்டினா சமாதானமாயிடுவான் என்று
மிரட்ட …

ஆதியின் அழுகை அதிகமானது...


ரிஷியிடம்...அவனை மிரட்டாதீங்க...அப்புறம் காய்ச்சல் அதிகமாயிட போகுது...நீங்க அந்த பக்கம் படுங்க...நான் இந்த பக்கம் படுத்துக்கறேன்...ஆதி தூங்குனதுக்கப்பறம் நீங்க எந்திரிச்சு போய்க்கோங்க என்று கூறியபடி அவள் அந்தப் பக்கம் படுத்தபடி மகனின் தலையை கோதிக் கொண்டிருக்க இந்த பக்கம் மகனை தட்டி கொடுத்தபடியே இருந்த ரிஷி அசதியில் உறங்கிவிட மகனும் உறங்கிவிட பவித்ராவும் உறங்கிவிட எது நடக்கக்கூடாது என்று இருவருமே தள்ளி இருந்தார்களோ அது மறுநாள் காலையில் நடந்தேறி இருந்தது .

ஆம் ரிஷி எழும் பொழுது ஆதி பவித்ராவிற்கு அந்தப் பக்கம் சென்று விட பவித்ரா ரிஷியின் கைவளைவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் முதலில் விழித்தது ரிஷி தான்... ஆதி என நினைத்து தலையை வருடிவிட வித்யாசத்தை உணர்ந்தவன் விழித்து பார்க்க மூர்ச்சையானான்.


எப்பொழுது அவன் அருகில் வந்து படுத்தாள்... எப்படி வந்தாள் தூங்கும் பொழுது ஆதி ஒருவேளை எழுந்து அந்தப் பக்கம் சென்று விட்டானா…? இல்லையென்றால்...ஒருவேளை பவியே..
இருக்காது பவி கண்டிப்பாக தன்னிடம் வந்திருக்க மாட்டாள்...ஒன்று தூக்க கலக்கத்தில் நான் அவளிடத்தில் சென்றிருக்க வேண்டும் இல்லை என்றால் ஆதி தூக்கத்தில் பவியின் மேலே ஏறிக் கொண்டு அந்தப் பக்கம் சென்றிருக்க வேண்டும் என்று நினைத்தான்…

ஆனாலும் இந்நிலையை மிகவுமே ரசித்தான்...அவனின் செல்ல காதலி ஆசை மனைவி...நேற்றுவரை முகத்தை திருப்பிச் சென்றவள் இன்னு அவனின் கைவளைவில்…

காலம்தான் எத்தனை அழகானது...நடக்காது என்று நினைப்பதை நிமிடத்தில் மாற்றியமைக்கும் வல்லமை காலத்திற்கு மட்டுமே உண்டு என்று எண்ணிக் கொண்டான்.

இதுபோல் உறங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகப்போகிறது ஆனால் அப்பொழுது ஒரு உரிமை இருந்தது இப்பொழுது அது இல்லையே…

என்ன தான் மனைவியாக இருந்தாலும் சட்டப்படி பிரிந்தவர்கள்... அவளின் மனம் முழுவதும் ரிஷி இருந்தாலும் இந்த நிமிடம் வரை அவள் மனதில் இருக்கும் காதலை அவள் வெளிபடுத்திக் கொள்ளவே இல்லை அப்படி இருக்கும் பொழுது இப்படி ஒரு நிலை தவறு என்று தோன்றியது... பவி முழித்து விட்டால் கண்டிப்பாக இதை ஏற்றுக் கொள்ளவே மாட்டாள்...


அதனால் சப்தமில்லாமல் மிக மெதுவாக கைகளை எடுத்தவன் அவளைச் சுற்றிலும் இரண்டு மிருதுவான பொம்மைகளை தூக்கி வைத்தான்...பிறகு சத்தமில்லாமல் வெளியே ஓடிவிட்டான்…

ஒருவேளை அவளே எழுந்து எதையோ கட்டிப்பிடித்து தூங்கினோமோ என்று நினைத்தால் கூட பொம்மையை தான் கட்டிபிடித்ததாக நினைத்துக் கொள்வாள் தேவையில்லாத சங்கடம் அவள் மனதிற்குள் வராது
என்று நினைத்துக் கொண்டான்.

ரிஷி எழுந்து சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் பவித்ரா மெதுவாக எழுந்தாள் அவளைச் சுற்றிலும் பொம்மைகளை கண்டதும் இரவு உறங்கும் பொழுது இது போல் பொம்மைகள் இல்லையே எப்படி தன்னிடத்தில் வந்தது என்று எண்ணி குழம்பியவள் மகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளதா என்று அவனை தொட்டுப் பார்த்தாள்…


சுத்தமாகவே காய்ச்சல் குறைந்து இருந்தது ஆதி அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் மகனை சுற்றிலும் தலையணைகளையும் பொம்மைகளையும் எடுத்து வைத்தவள் ரிஷி எங்கே என அறையை சுற்றிப்பார்க்க பால்கனியில் கையில்லாத ஒரு பனியனையும் சிறிய அளவிலான ஒரு ஷார்ட்ஸ்-ஐ போட்டுக் கொண்டு ரிஷி எக்சர்சைஸ் செய்துகொண்டிருக்க முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு

இன்னும் நீங்க இந்த பழக்கத்தை விடலையா... உங்களுக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன் இந்த மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு பால்கனியில் நின்று எக்சர்ஸைஸ் பண்ணாதீங்கனு என்று உரிமையாக அவனை திட்டினாள்.

அவனுக்கோ மனதிற்குள் அப்படி ஒரு குதூகலம் அவளின் இந்தக் கோபத்திற்கு தானே இப்பொழுது வேண்டுமென்றே இது போல் செய்து கொண்டிருக்கிறான் திருமணமான புதிதில் காலையில் அவளைக் கோபப் படுத்துவதற்க்காகவேண்டுமென்றேஅவன் இந்த வேலையை தான் செய்வான்...அவள் வந்து சண்டையிட்டு அவனை பிடித்து இழுத்து குளியலறைக்குள் தள்ளினால் இவளையும் சேர்த்தல்லவா இழுத்துக் கொண்டு உள்ளே செல்வார் அந்த காலை வேளையில் அழகானதொரு ஊடலும் கூடலும் இனிதே நடந்தேறும் அல்லவா பழைய நினைவுகளை நினைத்து ரிஷி அசைபோட


பவிக்கு அப்பொழுதான் புரிந்தது அவனிடம் அதிகப்படியான உரிமை எடுத்துக் கொண்டதை…

சாரி என்று கூறிவிட்டு எழுந்து அவளின் அறைக்கு ஓடிவிட்டாள் அவளுக்கும் அதே நினைவு தான் இதுபோல் எத்தனை நாள் அவன் வேண்டுமென்றே செய்திருக்கிறான் அந்த நாட்களை எல்லாம் மறந்து விட முடியுமா நெஞ்சம் முழுவதும் படபடப்புடன் ஆதிக்கு உடல்நலம் சரியான பின்பு உடனடியாகவே இங்கிருந்து செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

பவித்ரா காலையிலேயே ரிஷிக்கு பழைய நினைவுகளை தூண்டிவிட பவியை ரிஷி ஏக்கமாக பார்க்க தொடங்கியிருந்தான் …

ஒரு வார்த்தை முகத்தைப் பார்த்து சொல்லேன் பவி எல்லாவற்றையும் நிமிடத்தில் சரி செய்கிறேன் என்பது போலிருந்தது பவிக்கோ கத்தி மேல் நிற்பது போல் ஒரு நிலமை... ஆதியும் புரிந்துகொள்ளாமல் மீண்டும் அவன் அட்டகாசத்தை தொடங்கிவிட்டான் காலை எழுந்தது முதல் குளிப்பது முதல் உணவூட்டும் வரை ரிஷியும் பவித்ராவும் அருகிலேயே இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொண்டே இருக்கிறான் பவித்ராவிற்கு முதல்முறை சிறு சந்தேகம் வர ஆரம்பித்தது தனது மகனுக்கு யாராவது இதுபோல் செய் என்று சொல்லிக் கொடுக்கிறார்களோ என்று…

அம்மா என்று ஒரு வார்த்தை வராது ஆனால் எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டும் குளிப்பாட்ட வேண்டும் உணவு ஊட்டவேண்டும் அவனை தோளில் போட்டு தூங்க வைக்க வேண்டும் நிமிடத்திற்கு நிமிடம் மிஸ் என்று மட்டும் அழைப்பாள் அம்மா என்று அழைக்க மாட்டான்... இது எப்படி சாத்தியம்
ஒருவேளை கிருஷ்வின் நாடகத்தில் ஆதியும் அவனின் பங்குக்கு நடித்துக் கொண்டிருக்கிறானோ என்று சந்தேகம் வர ஆரம்பித்தது அதன் பிறகுதான் ஆதியை உற்றுக் கவனிக்கத் தொடங்கினான்…

இரண்டு நாள் கடந்துவிட்ட நிலையில் ஆதியிடம் இருந்து பெரிதாக எதையுமே கண்டுகொள்ள முடியவில்லை... இல்லையில்லை அவனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவும் இல்லை அவன் நடிக்கவும் இல்லை இயல்பாக குழந்தை நடந்து கொள்கிறது.

மூன்று வயது முடிந்து நான்கு வயது தொடங்கும் அந்த குழந்தைக்கு அப்படி என்ன பெரிதாகத் தெரிந்து விடப் போகிறது தாயன்பு இல்லாமல் வளர்ந்த குழந்தை தன்னிடம் அது கிடைக்கவும் அதை குழந்தை பயன்படுத்தி கொள்கிறது..அது மிஸ் என்றால் என்ன அம்மா என்றால் என்ன இன்னும் இரண்டு நாட்கள் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டு அவன் முழுமையாக குணமான பின்பு தனது வீட்டுக்குச் செல்லலாம் அது வரை மிஸ்ஸாக இருந்து அவனுக்கு தாயன்பை அள்ளித்தரலாமென எண்ணிக் கொண்டாள்.

நாளை கிளம்பலாம் என்று வெங்கட்டிடம் கூற அவனுக்கோ அதிர்ச்சி...காதலியை பிரிய வேண்டுமே …

ஏன் பவி மாமா குடுத்த டைம் இன்னும் இருக்கே…

இல்லடா நான் என்ன பண்ணினாலும் ஆதி என்கிட்ட வரபோறதில்ல... அம்மா அப்படினு ஒரு உறவு இருக்கறதே அவனுக்கு தெரில...ஏன் போராடனும்...அவன் இயல்போட அவன் வளரட்டும்...இடையில நான் வந்து குழப்பறது போல இருக்கு…

அது மட்டும் தான் காரணமா பவி…

அதுவும் ஒரு காரணம் வெங்கி…
இந்த வீடு முழுக்க என்னோட சந்தோஷங்களும் அவமானங்களும் மாறிமாறி ஞாயபகத்திற்கு வந்துகிட்டே இருக்கு…

சந்தோஷத்தை நினைச்சாலும் கண் கலங்குது அவமானத்தை நினைச்சாலும் கண் கலங்குது

அதுமட்டுமல்ல அவரும் சில விஷயங்களை நினைக்கிறாரு போல..அவர் பார்வையில் இருந்து என்னால உணர முடிஞ்சுது.

தேவையில்லாம அவரோட மனசை சலனபடுத்தறேன்னு தோணுது

அவரோட தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ள போற மாதிரி சில விஷயங்கள் நடக்குது இதை வளர விடறது சரியில்ல நாம இங்கிருந்து கிளம்பிறது தான் சரி என்று சொன்னவள்

உன் திங்ஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணிவை என்று கூறிவிட்டு அவளின் உடைமைகளை பேக் செய்ய ஆரம்பித்தாள்…

பவி வந்து சொல்லிவிட்டு சென்ற நேரத்திலிருந்து வெங்கட் ராகவியை தேடி அலைந்தான்.

பவித்ரா கிளம்ப போகிறாள் என்று தெரிந்ததால் வேண்டுமென்றே வெங்கடட்டை அலைய வைக்க வேண்டும் என்று ஆதியின் அறையில் அவனுடன் பதுங்கிக் கொண்டாள் ராகவி…

எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து சலித்த வெங்கட் அவனின் உடைகள்களை கோபமாக பேக் செய்து கொண்டிருந்தான்…

வாசலில் கார் சத்தம் கேட்கவும் வேகமாக வெளியே வந்து எட்டிப் பார்க்க ரிஷியின் தாயார், அவனின் தந்தை மற்றும் அவரின் தங்கை தங்கை கணவர் என நான்கு பேருமே உலகத் சுற்றுலாவை பாதியிலேயே முடித்து விட்டு திரும்பி இருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் எப்படி அவர்களிடம் நடந்து கொள்வது என்று தெரியாத வெங்கட் வாசலில் நின்றபடி இருக்க

ரிஷி,ராகவி,ராகவ் என அனைவருமே ஆச்சர்யத்தோடு வெளியே ஒடிவந்தனர்.மேலிருந்து பார்த்த பவியோ அவர்களை எதிர்கொள்ள தயங்கியபடி அவளின் அறையிலேயே முடங்கிக் கொண்டாள்...கடவுளே இதென்ன சோதனை இவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள்... விவாகரத்து வேண்டும் என்று சண்டையிட்டு வாங்கிக்கொண்டு வெட்கமே இல்லாமல் எந்த முகத்தை வைத்து திருப்பி வந்திருக்கிறாய் என்று கேட்டாள் என்ன கூறுவது என்று பயந்தபடியே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள்…

இல்லை நாளை வரை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது இப்பொழுதே கிளம்பி விடலாம் ஆதி நன்றாக தானே இருக்கிறான் ஆதியின் உடல்நலம் தேறி விட்டது இனி அவனை ரிஷி பார்த்துக்கொள்வான் என்று முடிவெடுத்தவள் அவளின் பெட்டியை எடுத்து தயாராக வைத்தாள்.

காரை விட்டு இறங்கிய பெற்றோரை எல்லாருமே சந்தோஷத்தோடும் ஆச்சரியத்தோடும் அவர்களை வரவேற்க ரிஷியோ ஆச்சரியத்தில் என்னமா பாதியிலேயே திரும்பி வந்துட்டீங்க எப்படியும் ஒரு வருஷம் ஆகும்னு நினைச்சோம் சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறீங்க என்று கேட்டான்.

வாயெல்லாம் பல்லாக சந்தோஷத்தில் மேனகா என்னோட சந்தோஷம் முழுக்க இந்த வீட்ல இருக்கும்போது வெறும் காடு மலையை பார்த்து நான் எப்படிடா சந்தோஷப்படுவேன் சொல்லு என் மருமக திரும்பி வந்துட்டானு வேலைகாரி சொன்னா அதான் டூரை கேன்சல் பண்ணிட்டு உடனே கிளம்பிட்டோம்...எல்லாருமே...

என் மகனோட முகத்திலையும் என் பேரனோட முகத்திலும் இருக்கிற சந்தோஷத்தை பார்க்கிற திருப்பதியை விடவா இந்த உலகத்தை சுற்றிப் பாக்கும் போது எங்களுக்கு கிடைச்சிடும் சொல்லு என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே பவித்ரா தலைகுனிந்தபடி அவளின் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

எல்லோருமே அதிர்ச்சியுடன் பவித்ராவை பார்க்க பவித்ரா வெங்கட்டை பார்த்து கிளம்பலாம் என்பது போல் ஜாடை செய்ய வெங்கட் உடனடியாக அவனின் அறைக்குள் சென்று அவனினா பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வந்தான்…

வெங்கட் கிளம்புகிறாள் என்றதுமே ராகவின் கண்கள் கண்ணீர் பெருகியது யாருக்கும் அறியாவண்ணம் கண்களைத் துடைத்துக் கொண்டவள் வெங்கட்டை பார்த்துக்கொண்டே பவித்ராவிடம் அண்ணி எங்க கிளம்பிட்டீங்க என்று அதிர்ச்சியாக கேட்டாள் .

பவித்ராவோ வந்த வேலை முடிஞ்சிருச்சு இனி நாங்க கிளம்புவது தான் மரியாதை என்று பதில் கூறினாள்.

மேனகா பவித்ராவிடம் வந்து என்னம்மா நீ வந்து இருக்கறேனு
நாங்க எல்லாரும் எவ்வளவு தூரத்தில் இருந்து ஓடி வந்திருக்கோம் நீ என்னன்னா நாங்க வீட்டுக்குள்ள வர்றதுக்குள்ள நீ வெளியே போறேன்னு சொன்னா எப்படி...முதல்ல பெட்டியை உள்ளவை மீதியை அப்புறமா பேசிக்கலாம்…இந்தாப்பா வெங்கட் உனக்கும் தான் பெரியவ சொல்லறேன்ல கொஞ்சம் காது குடுத்து கேளுப்பா என்று வெங்கட்டையும் உள்ளே செல்ல பணிந்தார்…

வெங்கட்டுக்கு தர்மசங்கடமான நிலைமை இப்பொழுது அக்காவின் பேச்சைக் கேட்க வேண்டுமா இல்லை என்றால் வருங்கால மாமியாரின் பேச்சைக் கேட்க வேண்டுமா இப்பொழுதே அவரின் பேச்சை கேட்காமல் இருந்தால் பின்னாளில் தன் வாழ்க்கையில் பிரச்சனை வருமே தற்சமயம் பவியின் பேச்சை கேட்கவில்லை என்றால் அது அவளுக்கு தான் தேடிதரும் பெரிய அவமானம்... என்று யோசித்தவன் மாமியாரின் பேச்சை காதில் போட்டுக் கொள்ளாதவாரு பவியின் அருகில் வந்து நின்றான்.


வெங்கட்டின் செயல் ராகவிக்கு பெருத்த அதிர்ச்சி தனது பெரியம்மா எவ்வளவு பெரிய பணக்காரி எவ்வளவு ஈகோ பார்ப்பவர் அவரே எல்லாவற்றையும் விட்டுவிட்டு சிறு பையனாக வெங்கட்டிடம் எதையும் வெளிக்காட்டாத வாறு பேசுகிறார் ஆனால் இவனோ அவரை சற்றும் பொருட்படுத்தாமல் அதற்கு நேர்மாறாக செய்கிறானே எப்படி தன்னுடைய காதலை பெரியவர்களிடம் சொல்லி அனுமதி பெறுவது என்ற கவலையும் கூடவே வந்தது

வெங்கட்டின் மனமோ நேற்று வந்த ராகவிக்காக இருபத்தியாரு ஆண்டுகள் தன்னுடன் இருக்கும் தனது சகோதரியை இத்தனை பேர் முன்பும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

நாளை ராகவிக்கு சிறந்த கணவனாக இருப்பானா என்று கேட்டால் சொல்லத் தெரியாது ஆனால் ஆயுள் வரை சிறந்த சகோதரனாக பவித்ராவிற்கு இருப்பான் அதை எங்கு வேண்டுமானாலும் கூறுவான்.

தொடரும்
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
27

பவித்ரா பிடிவாதமாக வாசலை விட்டு இறங்கவுமே அனைவருமே அவளிடம் வந்து கெஞ்சத் தொடங்கினர் .

இங்க பாருமா பவித்ரா உன்ன பொண்ணு பாக்க வந்தபோ உன்னை என் பையனுக்கு கல்யாணம் பண்ணபோ நிஜமாவே உன்னை எனக்கு பிடிக்கல அது உண்மைதான்…

ஆனா நீங்க வந்ததுமே உன்னை எனக்கு அவ்ளோ பிடிச்சுப் போச்சு... நான் ஒரு பணக்கார பெண்ணை கூட்டிட்டு வந்து இருந்தா கூட எனக்கு அவ்ளோ சந்தோஷம் கிடைத்திருக்காது ஒரு குடும்பத்துக்கு உண்மையான சந்தோஷம் பணத்தால இல்ல மனுஷங்களால தான்னு புரிய வைத்தவ நீ...

இந்த குடும்பத்தை அனுசரிச்சு போகவும் என் மகனோட ஒரு நிறைவான வாழ்க்கையை வாழவும் கண்டிப்பா உன்னைத் தவிர வேற யாராலும் முடியாது…

உன் மேல எனக்கு நிறைய கோபம் இருந்தது பவித்ரா அதனாலதான் என் பையன் விவாகரத்து வாங்கறேனு சொன்னதும் மேலோட்டமா வேணாம்னு சொன்னேனே தவிர என் உள்மனசு அது ரொம்பவே எதிர்பார்த்தது.

அது மட்டும் இல்ல ஆதியை உனக்கு கொடுக்கவே கூடாதுன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் அந்த தீர்ப்பு வந்த அன்னைக்கு எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா...ஏதோ இந்த உலகத்தையே என் கைக்குள்ள கொண்டு வந்தது போல…

அப்போ எனக்கு என்ன தோணுச்சுன்னா எங்க அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ண பாத்து உன்ன விட ஒரு அழகிய கூட்டிட்டு வந்து என் பையனோட வாழவைக்கனுமு கற்பனை பண்ணினேன்...

ஆனா அதெல்லாம் வெறும் பத்து நாள் கூட என் மனசுக்குள்ள இல்ல...


காரணம் ரிஷியோட மாற்றம்... குழந்தை அவன் கிட்ட இருந்தா நீ வந்துடுவேனு நினைச்சு அவன் நாடகமாடினான் ஆனால் கடவுள் வேற மாதிரி ஆடி உன்னையும் அவனையும் நிரந்தரமாக பிடிச்சிருச்சு…

என் பையனை நடைப்பிணமாக்கி எங்க சந்தோஷத்தை அந்த கடவுள் பறிச்சிகிட்டாரு….

அவன் குழந்தையை உன்கிட்ட கொடுக்கிறேன்னு சொன்னப்போ தான் புரிஞ்சுது அவனோட உயிர் இந்த வீட்டுல இல்லைனு..

எந்த வீட்டை மிடில்கிளாஸ் வீடுன்னு நாங்க கேலி செஞ்சோமோ... எந்த பொண்ணை மிடில் கிளாஸ்னு மட்டம் தட்டினோமோ அவளுக்குள்ள தான் அவனோட உயிரை பத்திரமா வைச்சிருக்கானு புரிஞ்சது…

குழந்தையை உன் கிட்ட குடுத்துட்டு நிரந்தரமா எங்களை விட்டு பிரிந்து போகத் தயாராக இருந்த நேரத்தில்தான் நீ எங்களுக்கு விடிவெள்ளியா வந்திருக்க பவி...


நீ எப்போ இந்த வீட்டை விட்டு போனியோ அப்பவே என் பையனோட ஒட்டுமொத்த சந்தோஷமும் போயிருச்சு பவித்ரா

ஆதி மட்டும் கூட இல்லனா என்னைக்கோ என் பையனை நான் தொலைச்சிருப்பேன்… ரிஷியோட மனசு எப்பவுமே உன் கிட்ட தான் இருக்கு .

அவங்க உயிர் நீயா இருக்கும் போது அவனால எப்படி இங்க சந்தோஷமா இருக்க முடியும்…

அவன் சந்தோஷமா இருந்தா தானே நான் சந்தோஷமா இருக்க முடியும்...அவனே வாழ்க்கையை தொலைச்சிட்டு நிம்மதியை இழந்து தவிக்கும் போது நான் எப்படி சந்தோஷமா இருப்பேன் சொல்லு...

அப்போவே முடிவு பண்ணிட்டேன் என் பையனோட சந்தோசம்தான் எனக்கு முக்கியம் அதனால நானே உன்னை தேடி வந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்டு உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்

ஆனா ரிஷி தான் இல்லம்மா இது எங்க ரெண்டு பேரோட பிரச்சனை நான் பார்த்துக்குறேன் நீங்க தலையிட வேணாம்னு என்னை அமைதியாகக்கிட்டான்.



இப்போ நான் மனசார கேட்கறேன் என்ன மன்னிச்சிடு மா என் பையனோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை குடு...ரிஷி வேற கல்யாணம் பண்ணி இந்த குடும்பத்துக்கு நான் எத்தனை பொண்ணுங்களை கூட்டிட்டு வந்து விட்டாலும் கண்டிப்பா எந்த பொண்ணாலயும் உன் இடத்தை பூர்த்தி செய்ய முடியாது.

அவன் உன்னை அந்த அளவுக்கு நேசிக்கிறான் அவன் மனசை உடைச்சிடாத... அவனை காலம்பூரா நடை பிணமா வாழ வச்சிடாத... ஒரு அம்மாவா நான் உன் கிட்ட கெஞ்சி கேட்டுக்கறேன் என்று மேனகா கண்ணீர் விட்டபடி பவித்ராவிடம் கெஞ்சினார்.

பவித்ராவுக்கு அதிர்ச்சி தான் தனது மாமியாரா தன்னிடம் இந்தளவுக்கு கெஞ்சுகிறார் என்று...

அதன் பிறகு ராதா ராஜன் பழனி என அனைவருமே அவளிடத்தில் மன்னிப்பு கேட்கின்றனர் …

அன்று உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்பும் பொழுது பார்த்துக்கொண்டிருந்தது தவறு தான் அதற்காக இன்று எங்களை பலி வாங்கி விடாதே...உன்னை கண்டிப்பாக இந்த வீட்டை விட்டு போக விட மாட்டோம்... நீ வீட்டுக்குள்ள வா என்று பவித்ராவின் கைகளை பிடித்து ராதா கூப்பிட... என்ன பதில் கூறுவது என்று தெரியாது விழித்தாள்.

கண்களை முடி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள் எந்த இடத்தில் அவளுக்கு அவமானம் நடந்ததோ அதே இடத்தில் வைத்து அனைவருமே அவளிடம் கெஞ்சி உள்ளே அழைக்கிறார்கள் ஆனால் சம்பந்தப்பட்டவன் மௌனமாக நின்று கொண்டிருக்கிறானே என்ற சிறு வருத்தம் மேலிட மெதுவாக அங்கிருந்து கிளம்ப


ரிஷி அவளிடத்தில் வேகமாக வந்து என்ன பவித்ரா இத்தனை பேரு சொல்றாங்க இருந்தாலும் நீ இப்படிப் பிடிவாதம் பிடிக்கறது சரி இல்ல உள்ள வா என்று கூற அவனை நேருக்கு நேராக பார்த்தவள்…
கண்களில் நீருடன் இல்லை நான் வரலை என்று தலையை ஆட்டியபடி அங்கிருந்து நடந்து சென்றாள்…


அம்மா….

ஹான்...ஆதியின் குரல்... சட்டென்று நின்றவள் திரும்பி என்னையா கூப்பிட்ட….ஆதி
என்று அவனருகில் முட்டியிட்டு அமர்ந்தாள்.

ஆமா…..


நான் உன் அம்மா இல்ல டியூசன் மிஸ்…என்று அவனின் முகத்தை இரு கைகளாலும் பிடித்த படி கூறினாள்.


இல்ல….நீங்க தான் என் அம்மா எனக்கு தெரியும்….என்னை விட்டுட்டு எங்க போறீங்க….

இல்ல உன் அம்மாவா இருக்கற தகுதி எனக்கில்ல…. டியூஷன் மிஸ் மட்டும் தான் என் வேலை முடிஞ்சது….நான் போறோன்…

அப்போ என்னையும் கூட்டிட்டு போங்க...டாடி,ராகவி,ராகவ் சித்தப்பா எல்லாருக்குமே மம்மி இருக்காங்க எனக்கு மட்டும் தான் இல்ல….

அப்படி சொல்ல கூடாது ஆதி...உன் டாடி பாவம்ல...நீ என்னோட வந்துட்டா அவரை யார் பாத்துப்பா நீ அவரோட இரு நான் போறேன் என்றவள் மகனின் நெற்றியில் மிருதுவாக ஒரு முத்தம் வைத்தவள் எழுத்து நடக்க அவளின் புடவைமுந்தியை பிடித்து இழுத்த ஆதி
அம்மா என்னை விட்டுட்டு போகாதீங்க…
நீங்கதான் என் அம்மா...எனக்கு தெரியும் டாடி டெய்லி உங்க போட்டோவை காமிச்சு தான் என்னை தூங்க வைப்பாரு


ஃபோர் டேஸ் முன்னாடி கூட எனக்கு ஃபீவர் வந்ததில்லை நான் உங்களோட தூங்கனும்னு அழுததால தான் எனக்கு பீவர் வந்தது ப்ளீஸ் ம்மா என்னனை உங்களோட கூட்டிட்டு போய்டுங்க
டாடியை பாட்டி பாத்துப்பாங்க...என்னை நீங்க பாத்துக்கோங்க…

நான் உனக்கு அம்மானு தெரியும்ல அப்புறம் ஏன் இத்தனை நாள் என்னை மிஸ்னு கூப்பிட... ஃபோர்டேஸ் முன்னாடியே உங்க அப்பாகிட்ட அழுதல்ல... நீ என்னைத் தேடி வந்து இருக்கலாம்ல…

நான் வந்தப்பவே உங்களை அம்மான்னு கூப்பிட கூடாதுன்னு ராகவி தான் சொன்னா உடனே நீங்க இங்கிருந்து போயிடுவீங்கனு சொன்னா….


அவதான் உனக்கு அப்பாவும் அம்மாவும் சேர்ந்து இருக்கனும்னா நான் சொல்லற படி செய்னு ஐடியா தந்தா என்று மழலை குரலில் கூறியவனை சந்தோஷத்தில் தூக்கிய பவி ஆவேஷமாக அழுதபடியே முத்தமிட்டாள்...

அம்மாவுக்காக ரொம்ப ஏங்குனியா என் செல்லம் என்று அழுதபடியே குழந்தையைப் பார்த்துக் கேட்க


ஆமாம்மா நீங்க இந்த வீட்டுக்கு வராத வரைக்கும் எனக்கு தெரியல ஆனா நீங்க இங்க வந்ததுக்கு அப்புறம் என்னால இருக்கவே முடியல... ராகவி வேற உங்கள அம்மான்னு கூப்பிடக்கூடாதுனு சொல்லிட்டாளா…

டாடி வேற இப்போலாம் நீ அம்மாட்ட போகக்கூடாது கொஞ்ச நாள் அப்பாட்ட இருந்துட்டு அப்புறம் அம்மா கூடவே இருந்துக்கோனு சொல்லிட்டாங்களா அதுதான் அப்பப்போ நைட் ஆனா நான் அழுவேன் உங்க பக்கத்துல படுக்கனும்னு என்று அவளை நெஞ்சோடு முகத்தை தேய்த்து கண்ணீர்விட்டு அழுதது அந்த குழந்தை…

குழந்தையின் கண்ணீரை காண சகிக்காத பவித்ரா அவனை மேலும் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ரிஷி பவித்ராவிடம் வந்து பவி நிஜமாவே சொல்றேன் உனக்கு விவாகரத்துக் கொடுக்கணும்ங்கறதோ ஆதியை உன்கிட்ட இருந்து பிரிக்கணும்ங்கறதோ என்னோட நினைப்பே கிடையாது அத முதல்ல புரிஞ்சுக்கோ…

அன்னைக்கு நடந்தது என்னையும் அறியாம நடந்தது அன்னைக்கு உன்னை அடித்து வெளியே அனுப்பினதுக்கு அப்புறம்தான் என்ன நானே சுயபரிசோதனை செஞ்சுக்கிட்டேன்.

அதன் பிறகு குழந்தை என்கிட்ட இருந்தா நீ என்னை தேடி வருவனு தப்பு கணக்கு போட்டுட்டேன்... ஆனா நீ என்னை தேடிவந்த...வந்ததுக்கான காரணம் விவகாரத்து கேட்டு


சரி ஒரு பேப்பரா நம்முடைய வாழ்க்கையையும் அன்பை பிடிக்க போகுதுனு நினைச்சி உனக்கு விவாகாரத்தை கொடுத்தேன்...

அப்புவும் நம்பிக்கை ஆதி தான் கூட இருக்கானே அவனுக்காக நீ வருவனு... ஆனா நீ ஆதியை உன்னோடவே வெச்சிக்க போராடின...தோத்ததும் போன... அப்படிதான் ஆரம்பத்தில நான் நினைச்சு சந்தோசப்பட்டேன் ஆனா தோத்தது நீ இல்ல ரொம்ப அசிங்கமா தோத்தது நான்தான் பவித்ரா…

முதல்லயாவது கோபமா தான் பாப்ப... ஆனா ஆதியை உன்கிட்ட இருந்து பறிச்சதுக்கு அப்புறம் என்ன வெறுப்பா பார்க்க ஆரம்பிச்ச... அந்தப் பார்வை என்னை உயிரோடு சாகடிச்சது…

குழந்தைக்காக நீ மட்டும் ஏங்கல பவித்ரா உனக்காக நானும் குழந்தையும் தான் ஏங்கினோம் நீ மட்டும் உண்ணாமல் உறங்காமல் இருக்கல…

அதே வேதனையை இங்க நானும் அனுபவிச்சிட்டு இருந்தேன் உன்னை எப்படியாவது என்கிட்ட கொண்டு வர வைக்க ஏதேதோ பண்ணினேன் எல்லாத்துலயும் தோல்வியை மட்டும் தான் சந்திச்சேன்...


அந்த சமயத்துல தான் வெங்கட் எதிர்பார்க்காம எனக்கு செய்த உதவி ஈகோ வாதியான என்னை ஒரு மனுசனா மாத்திச்சு…

அப்பவே அவனுக்கு விலைமதிக்க முடியாத ஒரு பரிசு கொடுக்கணும்னு நினைச்சேன் அந்த விலை மதிக்க முடியாத பரிசு உன் சந்தோஷம்னு புரிஞ்சது...உன் சந்தோஷம் நம்ம பையனா தான் இருப்பான்...அவனை உனக்கே தர்றதா முடிவு செஞ்சி அவனை அழைச்சா…உனக்கு கல்யாணம்னு ஒரு பெரிய குண்டை தூக்கி என் தலையில போட்டான்...
அதுக்கு நம்ம பையனை பத்து நாள் கடனா கேட்டான்...


அதுவரைக்கும் உன் வாழ்க்கையில் இருந்து விலகி போயிடலாம்னு இருந்த நினைப்பு உனக்கு கல்யாணம்னு சொன்னதும் ஒரே நிமிஷத்துல மாறிடுச்சு…

ஏன் இதை என்னோட கடைசி வாய்ப்பா பயன்படுத்திக் கூடாதுன்னு தான் இந்த முப்பது நாள் நாடகத்தை போட ஆரம்பிச்சேன்…அது தடயா குடும்பம் இருக்ககூடாதுனு எல்லாரையும் பேக் பண்ணி அனுப்பினேன்...நீயும் அதை தான் விரும்பின...

ஆதிக்கு உன்னை பத்தி முதலிலேயே தெரியும் இருந்தாலும் அவன் கிட்ட அம்மா வந்த கொஞ்ச நாளைக்கு அவனை நீ அம்மான்னு கூப்பிடக்கூடாதுனு மட்டும் சொன்னேன்...

ஆனா என் தங்கை ராகவி ஒரு படி மேலேயே போய் அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் உன்னையும் என்னையும் பேச வைக்கிறது போல ஆதியை ட்ரெயின் செஞ்சிருகா..

அதுமட்டுமில்லை ராத்திரியானா நீயும் நானும் ஒரே அறையில தங்கனும்ங்கறதுக்காக பையன் கிட்ட அம்மா அப்பாவோட தான் தூங்குவேன்னு அடம்பண்ணுனு தூண்டியும் விட்டிருக்கா…

ஆதி முதல் இரண்டு நாள் பெருசா எடுத்துக்கல... அதுக்கப்புறம் கேட்டு அழ ஆரம்பிச்சான்...


காய்ச்சல் வந்த முதல் நாள் அவன் அழவும் ஏற்கனவே ஒரே வீட்ல இருந்தும் தனித்தனயா இருக்கோமேனு கோபத்தில இருந்தேன் அப்போ ஆதி அழவும்
கோபத்துல கை ஒங்கிட்டேன்...

அவன் பயந்து விடியவிடிய அழுது மறுநாள் அவனுக்கு காய்ச்சல் வந்தது ஆனாலும் என் பையன் கெட்டிக்காரன் அவன் நினைத்ததை சாதித்திச்சிட்டான் பவித்ரா…அந்த ஒரு நாளே போதும் என் வாழ்க்கையோட மீதி நாட்களுக்கு...அழகான விடியல் என்று...அந்த காலை வேளையை அசை போட்டான்...

பிறகு பவியின் முகத்தை ஆழமாக பார்த்தபடி இப்போ உன் முகத்தை பார்த்து உன் கண்ணை பார்த்து நான் சொல்றேன்…

நம்மளோட கடந்தகால நாலு வருஷத்தை மூட்டை கட்டி வைச்சிடு…

புதுசா நான் உன்னை சந்திக்கிறேன் புதுசா உன்னை நான் காதலிக்கிறேன்... மறுபடியும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்... நமக்கான வாழ்க்கையை புதுசா வாழலாம்…

இந்த இடத்தில இத்தனை பேர் முன்னாடி தான் நான் அவமானப்படுத்தி உன்னை வெளியே அனுப்பினேன் இப்போ இத்தனை பேரும் முன்னாடியும்,இதே இடத்தில மண்டியிட்டு கெஞ்சி கேட்டுக்கறேன் என்னோட காதலை ஏத்துக்கிட்டு என்னை மன்னித்து இந்த வீட்டுக்குள்ள வந்து எனக்கு ஒரு வாழ்க்கை கொடு பவி... என்னோட வாழ்க்கையை வசந்தமாக்கு...என்னையும் என் மகனையும் தவிக்கவிடாத...என்று அவளின் முன்பு மண்டியிட்டு கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பை கேட்டான்.

அதன் பிறகு எப்படி பவித்ராவால் மன்னிக்காமல் இருக்க முடியும் எந்த இடத்தில் அவளுக்கு அவமானம் நேர்ந்ததோ எதற்காக இத்தனை நேரம் தயங்கி தயங்கி நின்றாலோ அதை எல்லாவற்றையும் ரிஷியின் மன்னித்துவிடு என்ற ஒரு வார்த்தை சரி செய்தது சந்தோஷ கண்ணீருடன் அவனின் முன்பு அவளும் மண்டியிட்டு அமர்ந்து அவன் கைகளின் மீது தனது கைகளையும் வைத்து தலையை அதன் மீது வைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க அவளின் தலை மீது அவனின் தலையை வைத்து அவனும் கண்ணீர் சிந்த


அவர்களின் மகனோ அழுதபடியே தனது பிஞ்சி கைகளால் இருவரின் முதுகையும் ஆதரவாகத் தடவிக் கொடுக்க இருவரும் அவனை கட்டிக்கொண்டனர் ஆதியை அவர்கள் கட்டிக்கொள்ளவும் வெங்கட் வந்து அவர்கள் மூவரையும் கட்டிக்கொள்ள அந்த குடும்பமே சந்தோஷத்தில் அவர்களை சுற்றிவந்து கட்டிக்கொண்டு அவர்களை தூக்கி நிறுத்தியது‌…
சிறிது நேரம் அனைவருமே அந்தப் பாச போராட்டத்திற்கு சிக்குண்டு தவித்தனர்.

அதன்பிறகு அனைவருமே பாவியை உள்ளே வா என்று மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டபடி அழைக்க வாசலிலேயே வேலைக்கார பெண்மணி குடும்பத்திற்கே திருஷ்டி சுற்றி போட
பவித்ரா இப்பொழுது தலைநிமிர்ந்து அந்த வீட்டிற்குள் கம்பீரமாக உள்ளே நுழைந்தாள்…

அதன் பிறகு மேகலா நாராயணன் தம்பதியினருக்கு வெங்கட் இங்கு நடந்தவற்றை கூற அவர்களுக்கு பெருத்த நிம்மதி எப்படியோ தனது மகளின் வாழ்க்கை சுகப் பட்டுவிட்டது அதுவே போதும் என்று


இங்கு ராகவியின் காதை வந்து திருகிய ராகவ் ஏய் உண்மைய சொல்லு ஆதி கிட்ட எதுக்காக அண்ணியை அம்மானு கூப்பிட வேண்டாம்னு சொன்னே உண்மையை சொல்லு‌‌…


அண்ணன் சொன்னதுல ஒரு காரணம் இருக்கு அது எனக்கு தெரியும் நீ எதுக்காக சொன்னே என்று கேட்க

அவளோ ஆமா... ஆதி அண்ணியை அம்மான்னு கூப்பிட்டா அண்ணி அப்பவே கிளம்பிடுவாங்க அப்புறம் நான் எப்படி வெங்கட் பார்க்கறதாம் என்று எல்லோர் முன்பும் எதார்த்தமாக கூற

தாய் ராதா முறைத்தபடி ஏய் என்ன நடக்குது இங்க என்று கேட்டார்.


உடனே ராகவி பயந்து ரிஷியின் பின்னே வந்து ஒளிந்து கொள்ள ராகவ் தாயாரை சமாதானப்படுத்தி சற்று தள்ளி அழைத்துச் சென்று நடந்தவற்றை எல்லாம் கூற


அவருக்கு வாயெல்லாம் புன்னகையாக வந்து இந்த மாதிரி ஒரு பையன் கிடைக்க நாம புண்ணியம் பண்ணிருக்கணும் இதுக்காகவா நீ பயப்படற...என்று ராகவிக்கு தைரியம் சொன்னவர் பவித்ராவிடம் உன்னோட அம்மா அப்பாவை சீக்கிரமா வந்து நாங்க பார்த்து மேற்கொண்டு ஆகவேண்டியதை பற்றி பேசறோம்
என்று கூற


பவி சரியென்று தலையாட்டும் முன் வெங்கட் இடைமறித்து ஆன்ட்டி ஒரு நிமிஷம் ராகவி என்னோட வீட்டுல என்னோட வருமானத்துக்குள்ள குடும்பம் நடந்துவானு எனக்கு நம்பிக்கை இருக்கு…

ஆனா எங்க வீட்டுக்கு அவளை அனுப்ப விருப்பம் இருந்தா மட்டும் வந்து பேசுங்க இல்லனா இதை எல்லாத்தையும் இங்கேயே முடிச்சிக்கலாம் என்று அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க...

அங்கிருந்தவர்களுக்கு ஒரு நிமிடம் திக் என்று தான் இருந்தது இவ்வளவு பெரிய வீட்டில் ஆடம்பரமாக வளர்ந்த பெண் எப்படி அங்கே செல்வாள் என்று ஆனால் ராகவி யோசிக்காமல் வெங்கட்டின் அருகில் வந்து அவனின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள அனைவருக்குமே சொல்லாமல் சொல்லியாயிற்று…

வெங்கட்டுக்காக அவள் எல்லாவற்றையுமே மாற்றிக் கொள்வாள் என்று…

அப்புறம் என்ன அடுத்து வந்த ஒரு நல்ல நாளிலேயே இருவருக்கும் திருமணம் பேசி முடித்து திருமணத்திற்கான நாள் குறிக்க ராகவி அடிக்கடி வெங்கட்டை குத்தி காட்டியபடி பேசுவாள்.

நானா உன்கிட்ட வந்து லவ் சொன்னப்போ நீ அதை அக்சப்ட் பண்ணிக்கலை அதுக்கப்புறம் நீயா வந்து என்கிட்ட லவ்வை சொல்லவே இல்ல அதுக்குள்ள நீ பாட்டுக்கு எங்க அம்மாகிட்ட பெரிய இவன் மாதிரி ராகவி அங்க வந்து இருந்தா தான் கல்யாணம்னு பேசுற என்று அவனைப் போலவே பேசிக் காட்டுவாள்…

அதற்கு வெங்கட் சிரித்தபடியே அவளை பார்த்து காதலை ஒருத்தருக்கு ஒருத்தர் வாய்விட்டு சொன்னால்தான் காதலா... என்னோட வருமானத்திற்கு உள்ள என் வீட்டுக்கு வந்து ராகவி குடும்பம் நடத்துவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்குன்னு சொன்னேனே இதைவிட வெளிப்படையாய் என்னோட காதலை நான் உனக்கு சொல்லனுமா…. நான் சொன்னதும் எல்லார் முன்னாடியும் ஓடிவந்து என்னை விட்டுக் கொடுக்காமல் என் கைய பிடிச்சியே அதுல இருக்குடி என் முட்டாள் பெண்ணே ஆயிரம் விதமான காதல் அது போதுமே காலத்துக்கும் வாழ இதுல நான் வேற தனியா உனக்கு காதல சொல்லனுமா...என்று பதில் கொடுப்பான்.


ஒரு நல்ல நாளில் இருவருக்கும் திருமணம் செய்து அவர்களின் இல்வாழ்க்கை நல் வாழ்க்கையாக வெங்கட்டின் வீட்டில் துவங்கப்பட்டது ராகவி அந்த வீட்டிற்கு ஏற்றபடி முற்றிலும் அவளை மாற்றிக்கொண்டாள்.

அவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணா இங்கே இப்படி குடும்பம் நடத்துவது என்று சில நேரம் வெங்கட் மட்டுமல்ல அவனின் பெற்றோரே ஆச்சரியம் கொள்வர்... அவ்வளவு மாற்றம்..அவளிடத்தில் எல்லாம் வெங்கட்டின் காதல் படுத்தும் பாடு….


இங்கு ரிஷியும் பவித்ராவும் சட்டப்படி மீண்டும் திருமணம் செய்தவர்கள் அவர்களுக்கான புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கி இருந்தனர்.


எந்த வீட்டை கார்செட் என்று கேலி பேசினார்களோ அங்கு மேனகாவும் ராதாவும் இப்பொழுது வாரம் ஒரு முறை அவர்களின் பெண்ணைக் காண பவியின் வீட்டுக்குச் செல்கிறார்கள் .

அவர்கள் கையாலேயே சமையலும் செய்கிறார்கள்...அதை குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுத்து பயமுறுத்தவும் செய்கிறார்கள்.

இப்பொழுது பவித்ரா ஐந்து மாத கர்ப்பிணி எந்த வீட்டிற்கு தாய் தந்தையை வரவேண்டாம் என்று சொன்னார்களோ அதே வீட்டிற்கு இப்பொழுது மேகலா தினமும் வருகிறார்.எல்லாம் ரிஷியின் கைவண்ணம்...பெரியவர்களை தவிர இளையவர்கள் அனைவருமே குடும்பத்தோடு சென்று அவர்களின் காலில் விழுந்து விட்டனர்... வீட்டிற்கு வந்தால் தான் எழுவோம் என்றபடி...


பவியின் முதல் கர்ப்பத்தின் போது தாய் வீட்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டாலோ அதை எல்லாமே அவள் கருவுற்ற நாளிலிருந்து அவளின் தாய் அவளுக்காக செய்து கொண்டிருக்கிறாள் முதல் ஐந்து மாதம் வரை அங்கே வந்து பார்த்துக் கொண்டவர் ஐந்தாவது மாத முடிவில் பவித்ராவிற்கு அவர்களின் குடும்ப வழக்கப்படி அழகாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது அன்றே ஆதியைத் தூக்கிக்கொண்டு அவளின் தாய் வீடு வந்து விட்டாள் அதன் பிறகு ரிஷியின் வீட்டிற்குச் செல்லவே இல்லை ரிஷி தான் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வது... அவள் ஆசைப்பட்டது எல்லாமே இந்த கர்ப்ப காலத்தில் மிக சந்தோஷமாக அவளுக்கு நடந்தது….ஒருநல்ல நாளில் மருத்துவர் குறித்துக் கொடுத்த சரியான நேரத்தில் பவிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று
அறுவைசிகிச்சையின் மூலம் பிறந்தது…

அக்குழந்தைக்கு ஆதிரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்...

எந்தக் குழந்தையை காண விடாமல் துரத்தப்பட்டார்களோ இப்பொழுது ஆதியை அவர்கள் திகட்ட திகட்ட அன்பு காட்டி வளர்க்கிறார்கள்.

ஆதிராவோ முழுக்க முழுக்க பவியின் பெற்றோரிடமே ஆனால் இவர்களோ பார்க்க வந்த ரிஷியின் குடும்பத்தாரை ஒரு கடுஞ்சொல் வார்த்தை கூட செல்லவில்லை...ஏன் அப்படி ஒரு சம்பவமே நடந்ததாகவே காட்டிக்கொள்ள வில்லை...

அவ்வளவு ஒற்றுமையாக இருவருமே பேத்தியை தூக்கி கொஞ்சினார்கள் பவியோ ஐந்தாம் மாதத்தில் இங்கு வந்தவள்தான் ஆசை தீர அம்மா வீட்டில் உர்கார்ந்து ராகவியை அதிகாரம் செய்தபடி இருக்கிறாள்.


முதல் பேரனை வளர்க்க முடியவில்லையே என்று கவலைக் கொண்டீர்களே அம்மா இப்பொழுது முதல் பேரனை மட்டுமல்ல இரண்டாவது பேத்தியையும் ஆசைதீர வளருங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை டேரா போட்டு கொண்டாள்.

ரிஷி தான் கெஞ்சிக்கொண்டே இருக்கிறான் இப்பொழுது குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகிறது... அவளின் முதல் பிறந்தநாளையாவது நம் வீட்டில் கொண்டாடலாமே நம் வீட்டில் சொந்தபந்தங்கள் நண்பர்கள் எல்லோருமே குழந்தையை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் என்று

பவித்ராவும் பார்க்கலாம் பார்க்கலாம் என்று அவனிடம் கூறிக்கொண்டே இருக்கிறாள்.

இப்படியாக அவர்களின் குடும்பம் மிக அழகாகவும் ஒற்றுமையாகவும் வாழத் தொடங்கியது...

வாழ்க்கையில் வாழ்வதற்கு பணம் மட்டுமே ஒரு பொருட்டு அல்ல அங்கு அன்பான மனிதர்களும் அவர்களின் அழகான சிந்தனையுமே போதும் என்பதற்கு இவர்களின் குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு ஆதிராவின் முதல் பிறந்தநாளை முடித்துவிட்டு தான் பவித்ரா அவளின் வீட்டிற்கே சென்றாள்…


அங்கு ரிஷியோ கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு மேல் என்னை நீ பட்டினி போட்டு இருக்க இன்னைக்கு நான் உன்னை படுத்தற பாட்டுல அடுத்த முப்பதாவது நாள் நீ மறுபடியும் வாந்தி எடுக்கப் போற பாரு என்று சவால் விட்டபடி அவளின் அருகில் செல்ல அவளோ கூலாக ரொம்ப நல்லதா போச்சு இந்த முறை கன்பார்ம் ஆனதுமே அம்மா வீட்டுக்கு கிளம்பி போயிடறேன் குழந்தைக்கு ரெண்டாவது பர்த்டே முடிச்சு தான் இங்க வருவேன் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை உங்களுக்கும் பிரச்சினை இல்லையே என்று கேலியாக கேட்க

ஐயோ சாமி நீ செஞ்சாலும் செஞ்வ... என்றவன் அவனை பார்த்து ஒற்றை விரலை நீட்டியபடி எதுக்கு ரிஷி உனக்கு தேவையில்லாத சவால்லாம்
பொண்டாட்டி கால புடிச்சோமா காரியத்தை சாதிச்சோமானு இருக்கணும் அத விட்டுட்டு வெட்டியா சவால் பேசி ஏன் நீயா இழுத்து விட்டுக்கற என்று கூறியவன் மனைவியின் அருகில் வந்து காதலுடன் அவளை அணைத்துக்கொள்ள கனவனின் செய்கையை கண்ட பவித்ரா அந்த நள்ளிரவில் குலுங்கி சிரிக்க அந்த வீடு முழுவதும் அவளின் சிரிப்பொலி சத்தம் ஓங்கி ஒலித்தது…

நட்சத்திரங்கள் அனைத்துமே அவர்களை ஆசீர்வதிப்பது போல் ஒன்று போல மறைந்து தோன்ற நிலவோ இன்னும் அவர்களுக்கு குளுமையை நான் பரிசளிக்கிறேன் என்பது போல் ஒரு மந்தமான வண்ணத்தில் காட்சி அளிக்க தென்றலோ அவளின் சிரிப்பிற்க்கேற்றவாறு தாலாட்ட ஆரம்பித்தது அவர்களின் சந்தோஷமான வாழ்வு சிறக்கட்டும்... நாம் அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.

முற்றும்…


படித்து ஊக்கப்படுத்திய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் பல…

வாய்ப்பளித்த தளநிர்வாகிக்கும் நன்றிகள் ….
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom