Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

Status
Not open for further replies.

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
10.


வயசு பொண்ணு ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்தா யாருக்கு நஷ்டம் எங்களுக்கு தானே என்று கோபப்பட்டவர்... ...என் பிள்ளை வாழ்க்கை தப்பிச்சது ராஜாத்தி நீ புண்ணியம் பண்ணிருக்க இல்லனா இவனை கட்டிட்டு தினம் தினம் கஷ்டப் பட்டுருப்ப இப்படி பட்டவனை கட்டிகிட்டா கல்யாணத்துக்கு அப்புறம் கூட எங்கேயுமே அவனோட தனியா போக முடியாது போல பாதிலேயே விட்டுட்டு வந்திடுவான் அப்புறமா தனியா தான் என் பொண்ணு வீடு வரனும் நல்லா வளத்திருக்கீங்க பையனை என்று
அவரின் முன்பே கௌசிக்கை கரித்துக் கொட்டினார்.

மேகலா பேசியதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கௌசிக்கின் பெற்றோர்கள் எதுவும் பேசாமல்
அனைவரையும் பார்த்து கைகூப்பி விட்டு மௌனமாக வெளியேறினர்.


அவர்கள் சென்றதும் மேகலாவும் நாராயணனும் பவித்ராவிடம் வந்தவர்கள் பவித்ரா எங்கள மன்னிச்சிடுங்க நாங்கதான் அவசரப்பட்டு கல்யாணம் அது இதுன்னு உன் மனசுல தேவையில்லாமல் ஆசையை வளர்த்தி விட்டுட்டோம்

அவன் உன்னை பார்-க்கு கூட்டிட்டு போன உடனே நீ எங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்லன்னா ஏதாவது ஒரு கால் டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்து இருக்கலாம் இல்ல

ஏன்மா அங்க பொறுமையாக உட்கார்ந்துட்டு இருந்த என்று அவளிடம் கேட்க


அவள் தயங்கியபடி அம்மா நீங்க தப்பா பேசுற அளவுக்கு கௌசிக் கெட்டவன்லாம் இல்லமா ...ஆக்சுலி அவர் ரொம்ப நல்லவர்


நான் தான் அவருக்கு ஏத்த பொண்ணு இல்லம்மா… எனக்கு என்னவோ பழியை அவர் ஏத்துகிட்டு என்னை காப்பாத்தி விடற மாதிரி தோணுது இதுக்கப்புறமும் நான் மௌனமா இருந்தேன்னா நான் பொண்ணே இல்லமா என்று கூற


என்ன பவித்ரா என்ன என்னமோ சொல்லிட்டு இருக்கற அப்போ நீ ஏதாவது தப்பு செஞ்சியா கவலையாக கேட்க


ம்ம்... தப்பா என்னன்னு தெரியலம்மா ஆனா கௌசிக்கை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ம்மா…

அவங்க அப்பாகிட்ட பார்-க்கு கூட்டிட்டு போனேனு பொய் சொல்லி இருக்கறாரு அம்மா

அவருக்கு குடிக்கிற பழக்கம் இல்லை
என்னை ஒரு ஸ்டார் ஹோட்டல்லுக்கு தான் கூட்டிட்டு போனாரு அங்க ஒரு ஹால்ல அவர் பிரண்ட்ஸ்க்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காரு


இவரு டிரிங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கல...ஆனா அவங்களோட நல்லா ஆடிப்பாடி என்ஜாய் பண்ணினாரு என்னையும் கூட சேர்த்து கிட்டாரு எனக்கு இது பிடிக்கல

என்னோட செல்பி எடுக்கும்போது மேல கைபட்டதுன்னு நான்தான் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன்..


அவர் கோபத்தில் கத்த பதிலுக்கு நான் கத்த பேச்சுவார்த்தை வாக்குவாதமா மாறி கடைசியில கோவத்துல என்னை விட்டுட்டு வந்துட்டாரு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து தேடி இருக்காரு ஆனா...என்று தயங்கியவள் பிறகு


உண்மையை சொல்லப்போனா கௌசிக்கை கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு பிடிக்கல தனிப்பட்ட மனுஷனா ரொம்ப நல்லவரு ஆனா கல்யாணம்னு வரும்போது

என்னால அவரை ஏத்துக்க முடியல அதுக்கு காரணம் என் மனசுல வேற ஒருத்தர் இருக்காருமா என்று அவள் மனதில் இருப்பதை பட்டென்று போட்டு உடைத்தாள்.

என்னடி பவித்ரா என்னென்னமோ உளர்ற... அப்படின்னா இன்னிக்கு கௌசிக் உன்னை கூட்டிட்டு போகாம இருந்தாலும் இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்ப அப்படித்தானே என்று கண்களை உருட்டியபடி மேகலா பவித்ராவை பார்த்து கேட்க

மௌனமாக தலைகுனிந்த பவித்ரா ஆமாம் என்று தலை அசைத்தாள்

உடனே அவளை அடிக்க பாய்ந்தவரை இடையில் புகுந்த தடுத்த நாராயணன் மேகலா பொறுமையாய் இரு பொண்ணு அவ மனசுல இருக்கறதை நம்ம கிட்ட பேசுறதுக்கு நாம அவளுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம நாமளா எல்லாத்தையும் முடிவு பண்ணினோம் இப்போ அவளை குற்றம் சொல்லியோ அடிச்சோ என்ன பிரயோஜனம் சொல்லு பொறுமையா விசாரிக்கலாம் என்றவர் பவித்ராவின் அருகில் வந்து


சரி சொல்லுமா உன் மனசுல இருக்கற அந்த பையன் யாரு...கூட படிச்ச பையனா எப்படி பழக்கம் காதலுக்கு நாங்க எதிரிகள் கிடையாது எங்களுக்கு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம் அதுக்கு முன்னாடி எங்களுக்கு வேற ஒன்னும் தேவையில்ல... யாருன்னு சொல்லு
விசாரிப்போம் எங்களுக்கு திருப்தின்னா உடனே பேசி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்..
ஒருவேளை எங்களுக்கு பிடிக்காமல் இருந்தாலோ இல்ல விசாரிக்கற இடத்தில திருப்தியான பதில் வரலனாலோ இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சிட்டு மறுபேச்சு பேசாமல் நாங்க பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கணும்...
என்ற கண்டிப்புடன் பச்சைக்கொடி காட்டினர்.

மேகலா இடையில் புகுந்து அதான் அப்பா கேட்கறாங்கல்ல வாயைத் திறந்து பதில் சொல்லு பவித்ரா வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே என்று கேட்டார்

அவருக்குப் பின்புறமாக இருந்த வெங்கட்டோ அன்று கோவிலில் பார்த்தோமே அவரா என்று பவித்ராவிடம் ஜாடையாக கேட்டுக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து முறைத்த பவித்ராவை எதுக்குடி அவனைப் பார்த்து முறைக்கிற என்று அடிக்க பாய்ந்த மேகலாவை தடுத்த நாராயணன் மேகலா கொஞ்சம் உள்ள போ அவகிட்ட நான் பேசிகிட்டு இருக்கேன்ல இப்படி பக்கத்துல இருந்து அவளை திட்டிகிட்டு இருந்தா பொண்ணு எப்படி மனசு விட்டு பேசுவா நீ இப்படி கடுமையாக நடந்துக்கறதால தான் அவ பயந்து எதையும் நம்ம கிட்ட சொல்லல... நீ சொல்லு பவி அப்பா நான் இருக்கறேன் என்று கூறவும்

கோபமாக அங்கிருந்து நகர்ந்த மேனகாவின் கையைப் பிடித்து தடுத்த பவித்ரா...ம்மா...சாரி ம்மா...நா வேணும்னு எதையும் செய்யல… அதுவா நடக்குது என் கூட இருங்கம்மா ப்ளீஸ் ... என்று மகள் கூறவும்


அதுவரை மகள் மீது இருந்த அத்தனை கோபத்தையும் மறந்த மேகலா பவியின் அருகில் அமர்ந்து அவளை தனது நெஞ்சினில் சாய்த்துக்கொண்டவள் ஆதுரமாக அவளின் தலையை தடவிக் கொடுக்க ஆரம்பித்தார் பவித்ராவும் மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.


நாம் முதன் முதலில கௌசிக் என்னை பார்க்க வந்தாரு இல்லையா அன்னைக்குதான் கௌசிக்கை பாக்குறது ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் ரிஷியை பார்த்தேன் ப்பா...


அப்போ எனக்கு அவர் பேர் கூட தெரியாது நீங்க எனக்காக பார்த்த மாப்பிள்ளைனு நினைச்சு தான் அவரை பார்த்தேன்.

வெங்கட்டும் அவர்தான் மாப்பிள்ளைனு உறுதியா சொன்னாதால எனக்கு சந்தேகமே வரல…


அவரு பக்கத்துல உங்கள மாதிரி மிடில் ஏஜ்ல ஒரு கப்பிள் நின்னுகிட்டு இருந்தாங்க அது அவரோட அம்மா அப்பான்னு தப்பா நினைச்சு அவரு முன்னாடி போய் நின்னு அவர்கிட்ட எனக்கு உங்கள பிடிச்சிருக்கு ன்னு சொல்லிட்டோம்... என்று கூற பெற்றோர் இப்பொழுது வெங்கட்டை முறைக்க தொடங்கினர்.

மேகலா வெங்கட்டை திட்ட ஆரம்பித்தார் அவதான் மாப்பிள்ளை போட்டோ பாக்கல நீ பார்த்த இல்லடா ஆள் மாறி பாக்கற அளவுக்கா கண்ணு மங்கி போச்சு வேற யாரோ ஒருத்தனை போய் மாப்பிள்ளைனு இவளுக்கு காமிச்சி இருக்க என்று திட்டித் தீர்த்தவர் பிறகு நாராயணனை பார்த்து


எல்லாம் உங்களால வந்ததுங்க ஒன்னு பொண்ணு இருந்த கூட்டிட்டு போய் இருக்கணும் அப்படி இல்லையாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கணும் ரெண்டும் இல்லாம நல்லா பண்ணி வெச்சிருக்கீங்க வேலை என்று கூற நாராயணனும் அவளை கண்களாலே அடக்கினார் பிறகு பவித்ராவை சொல் என்பது போல் ஜாடை செய்ய அவளோ மீண்டும் தொடர்ந்தாள்.


பாத்ததுமே அந்த முகம் என் மனசுல அப்படியே பதிஞ்சிருச்சி அப்பா... நீங்க அதுக்கப்புறம் வந்து என்னை கூட்டிட்டு போய் கௌசிக்கை காமிச்சிங்க ஆனா கௌசிக் முகம் என் மனசில பதியவே இல்லை ஆனா அவங்க எல்லாருக்கும் என்னை பிடிச்சு போய் அன்னைக்கே ஒரு இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்தை பண்ணிட்டு போய்ட்டாங்க இதுதான் விதினு நினைச்சி மனசை சமாதானப் படுத்திக்கிட்டேன்.


ஆனா முடியலப்பா
கண்ணை முடினாலே ரிஷியோட முகம் தான் ஞாபகத்துக்கு வந்தது அவரை மறக்க முடியாமல் நான் கஷ்டப்பட்டு இருக்கும் போது தான் ஒரு நாள் கோவில்ல வந்து அவரோட விசிட்டிங் கார்டை எனக்கு கொடுத்துட்டு போனாரு

அவருக்கு என்னை பிடிச்சிருக்கறதாவும்...எனக்கும் பிடிச்சிருந்தா கூப்பிட்டு சொல்லு உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு சொல்லிட்டு போயிட்டாரு அன்னைக்கு தான் எனக்கு அவர் பேரு கூட தெரியும் அவர் முழுபேரு ரிஷிகேஷ்பா...



எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஆனா உங்க கிட்ட சொல்ல பயம் அவர் யாரு என்ன எதுவுமே தெரியாது எப்படி திடுதிப்புனு வந்து உங்ககிட்ட சொல்றது அதனால கௌசிக் கிட்ட இத பத்தி சொல்லி அவர் வாயாலேயே என்ன வேணாம்னு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்


அதுக்கப்புறமா ரிஷி பத்தி உங்ககிட்ட சொல்லலாம்னு நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... அப்பகூட நான் ரிஷி கிட்ட என் மனசுல இருந்தது சொல்லல அப்பா உங்க சம்மதம் கேட்டு அதுக்கப்புறம்தான் ரிஷிக்கு என் சம்மதத்தை சொல்லனும்னு நினைச்சேன் என்ன தப்பா நினைக்காதீங்க ப்பா... என்று தாயின் தோளில் படுத்துக் கிடந்து அழ ஆரம்பித்தாள் தாய்க்கோ தனது மகளின் நிலையை புரிந்தவர் அழாதே என்பது போல் அவளின் கண்ணீரை துடைத்துக் விட்டார்...

கௌசிக் கிட்ட எப்படி பேச்சை ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதுதான் அவர் பிரண்ட்ஸ் இன்வெட் பண்ணனும்னு என்ன கூட்டிட்டு போனாரு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அவர் கிட்ட தனியா எல்லாத்தையும் சொல்லலாம்னு


ஆனா அங்க பிரெண்ட்ஸ்க்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி முடிஞ்சதும் கௌசிக் என்னோட க்ருப் போட்டோ எடுத்தது செல்ஃபி எடுத்தது எனக்கு புடிக்காம அவரோட சண்டை போட கோவத்துல அவர் என்னை அங்கேயே விட்டுட்டு போயிட்டாரு


என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கும் போது எதேச்சையாக அங்கு வந்து ரிஷியை பார்த்தது எதையும் யோசிக்காமல் அவர் பின்னாடி போயிட்டேன்... அவர் ஏதோ ஆபீஸ் மீட்டிங்காக வந்திருக்காரு... அவரை நான் தனியா சந்திச்சு பேசதான் அவர் வர்ற இடத்தை தெரிஞ்சுக்கிட்டு நான் முன்னாடியே போய் வெயிட் பண்றதா தப்பா புரிஞ்சுகிட்டு என்னை அந்த ஹால் வாசலில் நிற்க வெச்சிட்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணு போயிட்டாரு

அந்த கேப்ல கௌசிக் என்னை தேடிவந்திருக்காரு... என்னை காணலனதும் என்னை தேடிகிட்டே வீட்டுக்கு திரும்பி வந்துட்டார் போல…


ரிஷி மீட்டிங் முடிஞ்சி வெளிய வந்ததும் அவர் கிட்ட ஹெல்ப் கேட்டேன்…

அப்போ தான் அவருக்கே தெரிஞ்சது நான் அவரைத் தேடிப் போகலை வேற ஒருத்தரோட வந்த விஷயம்...என்னனு என்கிட்ட கேட்கவும்

நான் எல்லா விஷயத்தையும் சொன்னேன் உடனே புரிஞ்சுகிட்டு என்னை நம்ம வீட்டுகிட்ட கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனாரு அப்பா என்று எல்லாவற்றையும் கூறி முடிக்கவும்


மேகலா நாராயணன் தம்பதியினர் ஆச்சரியமாக என்ன …?அந்த பையனா உன்னை கொண்டு வந்து விட்டது...நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்ல


என் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்காரு அதுவுமில்லாம என் பொண்ணு மனசுல இடம் பிடிச்சவற நாங்களும் பார்த்திருப்போம்...அப்படியே ஒரு நன்றியும் சொல்லிருப்போம்ல.
என்று மேகலா சொல்ல


முகத்தை சுளித்துக் கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்த பவித்ரா அதுல தான் ஒரு பிரச்சினை அவரு வேற யாரும்மில்ல அன்னைக்கி நம்ம வீட்டுக்கு வந்தாங்கல்ல ஒரு பணக்கார குடும்பம் அவரோட பையன் தான் …


அவர் சொல்லி தான் அவங்க இங்க சம்மதம் பேச வந்து இருக்காங்க ஆனா அது தெரியாம நாம எல்லாருமே அவங்க திமிர்தனத்தை பார்த்து அவர்களை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிட்டோம்...இந்த விஷயம் ஹோட்டல்ல வச்சி அவர் சொல்லிதான் எனக்கே தெரியும்...ஆனா எதையும் மறைக்காம அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் ஒப்பனா அவர் கிட்ட சொல்லிட்டேன்

அது வரை என்னோட நல்லா பேசிட்டு இருந்தவரு நான் சொன்னதை கேட்ட பிறகு எதுவுமே பேசாமல் என்னை வீட்டுகிட்ட இறக்கி விட்டுட்டு போயிட்டாரு

இனி நீங்களே போய் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டா கூட அவங்க குடும்பத்தை அவமானப் படுத்தினதுக்காக என்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு என்று கதறி கதறி அழ ஆரம்பித்த மகளை சமாதானப்படுத்த வழிதெரியாமல் பெற்றோர் இருவரும் முழிக்க ஆரம்பித்தனர்.


பவித்ராவை இருக்கிறது ரிஷி நேராக அவன் வீடு வந்தவன் வீட்டிற்குள் நுழையும் பொழுதே தாய் எங்கே என்றுதான் விசாரித்தான் அவர் ருமில் இருப்பதை அறிந்து கொண்டவன் நேராக மேனகாவை தேடிச் சென்றான்.

அவர் தங்கையுடன் சேர்ந்து
மொபைலில் குரூப் சாட்டிங்கில் இருக்க இவனைப் பார்த்ததும் மொபைலை அணைத்துவிட்டு என்ன ரிஷி இன்னைக்கு சீக்கிரமாகவே வந்துட்ட ஆபீஸ் மீட்டிங் எல்லாம் நல்லபடியா போச்சா என்று பொதுவாக விசாரித்தார்…

பதில் ஏதும் கூறாத ரிஷி கண்கலங்க தாயின் முன்பு மண்டியிட்டு அமர்ந்த படி ம்மா... என்ன மன்னிச்சிடுங்க என்றான்


சகோதரிகள் இருவருக்கும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பண்ணின எதுக்காக மன்னிக்கணும் என்று ஆச்சரியத்துடன் ஒரு சேர கேட்டனர்

உடனே ரிஷி நான் சொன்னேனு தான பவித்ரா வீட்டுக்கு போனீங்க எனக்காகத் தானே நீங்க ரெண்டு பேரும் அவமானப்பட்டுட்டு திரும்பி வந்தீங்க என்று நேரடியாக கேட்க இருவருமே அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

சுதாரித்துக்கொண்ட மேனகா தான் அது எப்பவோ முடிந்து போன விஷயம்...நாங்க அதை மறந்துட்டோம்...ஆமா.. இதை யாரு உனக்கு சொன்னது என்று கேட்டவரிடம்


பவித்ரா தான் சொன்னா...ம்மா
என்றான்.


என்ன…? அந்த பொண்ணு சொல்லுச்சா என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மேனகா.


பவித்ராவை ஏதேர்ச்சையாக சந்திக்க நேர்ந்தது என்று கூறியவன் அவர்களின் உரையாடலை ரத்தின சுருக்கமாகக் கூறி முடித்தான்.


பிறகு நான் முடிவு பண்ணிட்டேன் அம்மா... உங்கள அவமானப் படுத்தியவங்களை நான் சும்மா விடப்போவதில்லை உங்ககிட்ட வந்து அவங்க மன்னிப்பு கேட்கணும் கண்டிப்பா கேட்க வைப்பேன்..

நான் தப்பு பண்ணிட்டேன் மா அன்னைக்கு உங்களோட நானும் வந்திருக்கணும் நான் வராதது தான் இத்தனை பிரச்சினைக்கு காரணம் ஆனாலும் அவங்க பண்ணது சரின்னு என்னால ஒத்துக்கவே முடியாது கண்டிப்பா உங்களுக்கு பதில் சொல்லியே தீரணும் என்று பற்களை கடித்துக் கொண்டு கோபமாகப் பேசியவனை பார்த்து சிரித்த மேனகா...

நானே சும்மா இருக்கேன் நீ எதுக்காக டென்ஷன் ஆகுற என்ற தாயை ஆச்சரியத்துடன் பார்த்த ரிஷி


எப்படிமா சாதாரணமாக ஒருத்தர் உங்களை எதாவது சொன்னாலே அவங்களை நீங்க சும்மா விட மாட்டிங்க பவித்ரா குடும்பம் உங்களை அவமானப்படுத்தியும் நீங்க எப்படி இவ்ளோ நாள் சும்மா இருக்கீங்க…


அது ஒண்ணும் இல்ல ரிஷி யாரோவா இருந்தா கண்டிப்பா பதிலுக்கு பதில் குடுக்கலாம் ஆனா இவங்க எனக்கு சம்மந்தி ஆக போறவங்க அவங்க பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்க போற அப்படி இருக்கும்போது
அவங்களை எப்படி நான் எதிரியாக பார்க்க முடியும் என் பையன் ஒரு பொண்ண ஆசைப்படும் போது அவங்ககிட்ட எல்லாவகையிலும் இறங்கி போறது ஒரு அம்மாவா எனக்கு சரினு தோணுச்சு அதான் விட்டுட்டேன்...அதான் இந்த விஷயத்துல நான் பெருசா எந்த ரியாக்ட்- டும் பண்ணல என்று கூறியவர்…


சரி இப்போ தான் அந்த பொண்ணு அவ மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்லிட்டா உனக்கும் அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு அப்புறம் என்ன மறுபடியும் நானும் உன் சித்தியும் போய் முறைப்படிப் பொண்ணு கேட்கட்டுமா என்று ரிஷியின் மனதை ஆளும் பார்த்தார் மேனகா.

இல்லம்மா இனி நீங்க அவங்கள தேடிப்போக வேண்டாம்... உண்மையிலேயே பவித்ரா என்னை காதலிக்கிறதா இருந்தா அவங்களே நம்மளை தேடி வரட்டும்


அதுக்கு முன்னாடி அன்னைக்கு நடந்ததற்காக அவங்க உங்ககிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்கணும் மத்ததெல்லாம் அதுக்கப்புறம் தான் யோசிக்கணும்…

என்ன ரிஷி ஒண்ணுமே இல்லாத காரணத்துக்காக அந்த பொண்ண வேணான்னு சொல்லறது தப்பில்லையா அவங்க மன்னிப்பு கேட்கிறது எல்லாம் சாதாரணமா நடக்கிற விஷயம் இல்லை அப்படியே அவங்க மன்னிப்பு கேட்டு நம்ம வீட்டுக்கு வந்து அவங்க பொண்ணுக்காக பேசி அப்புறம் கல்யாணம் பண்ணனும்னா
கண்டிப்பா இந்த ஜென்மத்துல எதுவுமே நடக்காது...


எதுக்குடா தேவையில்லாத பிரச்சனை எனக்கும் சித்திக்கும் எந்த பிரச்சினையும் இல்லை நாங்கள் மறுபடியும் போறோம் பொண்ணு வீட்ல பேசுறேன்...கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாளா பாத்து குறிச்சிட்டு வர்றோம்...சிம்பிள் விஷயம் அதை ஏன் காம்ளிகேட் ஆக்கும் சொல்லு….


மொதல்ல நாங்க யாருன்னு தெரியாது அதனால அவங்க அப்படி நடந்து இருக்கலாம் ஆனா இப்போ தான் நாங்க யாருன்னு தெரியும்ல... அதனால இனி அந்த மாதிரி நடக்க மாட்டாங்க …
அதனால நாளைக்கே நாங்க போய் பேசி கல்யாணத்த முடிவு பண்ணறோம்…

இல்லம்மா கண்டிப்பாக அது சரிவராது என் சார்பா நீங்க ஒரு முறை போய் பேசி அவமானப்பட்டு திரும்பி வந்துட்டிங்க


இனி அவங்க பொண்ணு சார்பா அவங்க தான் நம்மள தேடி வரணும் அதுக்கு அப்புறமா கல்யாணம் பண்றது பத்தி யோசிக்கலாம்

ஆனா அம்மா ஒருவேளை நான் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டா பழசெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அவளை கார்னர் பண்ண மாட்டீங்களே எனக்கு அது கொஞ்சம் பயமா இருக்கு அதனாலதான் இப்பவே எல்லாத்தையும் பேசி சரி பண்ணனும்னு நினைக்கிறேன் எதுவா இருந்தாலும் அன்னைக்கு நடந்ததுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணமா நீங்க என்னை மன்னிக்கணும் என்ற ரிஷியிடம்


ரிஷி நீ அம்மாவ புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா நான் அன்னைக்கு நடந்ததையே மனசுல வச்சிக்கலனு சொல்றேன் அப்படி இருக்கும்போது நான் எப்படி பவித்ராவை கார்னர் பண்ணுவேன்


அதை மனசுல வெச்சு இருந்தா மறுபடியும் அவங்க வீட்டிற்கு போய் பேசறேன்னு நான் சொல்லுவேனா சொல்லு உனக்கு பயமே வேண்டாம் நீ சொன்னது போலவே இருக்கட்டும் அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட பேசட்டும் அதுக்கப்புறமா நாம கல்யாணத்தை பத்தி யோசிப்போம்


உனக்கும் அதிகமா வயசு ஆகல அந்த பொண்ணுக்கும் அப்படிதான் அதனால பொறுமையாவே காத்திருப்போம் அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட பேசினா உனக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் பண்ணலாம் இல்லையா அவங்க வசதிக்கு ஏத்த மாதிரி அவங்க வேற மாப்பிள்ளை பார்த்துட்டு போகட்டும் இப்போ ஒகேவா … என்று மகனைப் பார்த்து கேட்க அவனும் சந்தோஷமாக


டபுள் ஒகே... ஆனா அவங்க கண்டிப்பா தேடி வருவாங்க அம்மா...எனக்கு தெரியும் ஏன்னா பவி என்னை அவ்ளோ லவ் பண்ணறா...ஆனாலும் அவங்க உங்க கிட்ட சாரி கேக்கறவரை நோ பவித்ரா...நோ கல்யாணம்...
என்று தாயை கட்டிப் பிடித்து விட்டு சென்றான்.

அவன் சென்ற பிறகு அதுவரை இருந்து சிரிப்பைத் தொலைத்தார் மேனகா கோபத்தோடு முகத்தை வைத்து கொண்டு கையிலிருந்த மொபைல் போனை தூக்கி வீசினார்


அவளின் கோபத்தை அறிந்த ராதாவும் அக்கா அது தான் எல்லாமே நாம நினைக்கிற படி நடக்குதே அப்புறம் ஏன் இவ்ளோ கோபம் உனக்கு என்று கேட்க


நீ சொல்லறதும் சரி தான் ராதா அன்னைக்கு நடந்த அவமானத்தை வந்து அவன் கிட்ட சொல்லி இருந்தா உடனே போய் அங்க தாம் தூம் குதிச்சிட்டு அப்படியே விட்டு இருப்பான்


ஆனா இப்போ அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட மன்னிப்பு கேட்கணும்ங்கற அளவுக்கு யோசிச்சு வைச்சிருக்கான்... அது போதும் எனக்கு ஆனாலும் என்னதான் யோசிச்சு பார்த்தாலும் அந்த பவித்ரா இந்த வீட்டுக்கு மருமகளாக வர்றதை என்னால ஏத்துக்கவே முடியல…


அவ நம்ம பிள்ளைய பிச்சைக்காரனோட சேர்த்து வச்சி பேசியிருக்கா அந்த மாதிரி ஒருத்திய எப்படி நான் என் வீட்டுக்குள்ள விடறது…


அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவ சொன்ன வார்த்தை தான் என் காதுல விழுந்துகிட்டே இருக்கும் என்று கோபமாக கூற


அக்கா ப்ளீஸ் கோபப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துடாத
அவ முதல்ல இந்த வீட்டுக்கு வரட்டும் அப்புறமா அவ பேசினதுக்கு வட்டியும் முதலுமா நாம திருப்பி குடுத்துட்டு அவ வீட்டுக்கே தொறத்தி விடலாம் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு அக்கா என்று ராதா மேனகாவை சமாதானப்படுத்தினார்


இவர்களின் சூது எதுவும் அறியாத பவித்ரா ரிஷியை மறக்க முடியாமல் தினம்தினம் தவிக்க ஆரம்பித்தாள் உணவை பாதியாக குறைத்துக் கொண்டவள் தூக்கமின்றி இரவு முழுவதும் அழுது தலையணையை ஈரமாக்கினாள்


ரிஷியை ஒவ்வொரு முறையும் சந்திக்க சென்றாலோ இல்லை பேச முயன்றாலோ அவன் இவளை முற்றிலுமாக புறக்கணிக்க அந்த புறக்கணிப்பு அவளை மேலும் மேலும் அவன் பால் ஈர்த்தது.

இங்கு பவித்ராவின் நிலையறிந்த பெற்றோர்கள் இருவருமே அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எடுபடவில்லை. அவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் அவர்களுக்கும் நமக்கும் என்றுமே ஒத்துவராது அவனை மறந்து விடு என்று என்ன கூறினாலும் பவித்ராவின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.


அவன் பணக்காரன் என்று தெரிவதற்கு முன்பே தன் மனதை பறிகொடுத்து விட்டேன் அவனும் தன்னுடைய நிலையை அறிந்து தானே அவர்களின் பெற்றோரை தங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு அனுப்பி வைத்தான் என்று அவளின் ஒரு மனம் அவளிடம் கூறுவதை அவளும் ஏற்றுக்கொள்கிறாள்..



கடைசியில் பெற்றோர்கள் இருவரும் ஒருசேர முடிவு ஒன்றை எடுத்தனர் அது ரிஷியை நேரில் சந்தித்து பவித்ராவை பற்றி பேசுவது என அதன் பிறகு இருவருமே ரிஷியின் அலுவலகம் சென்று அவனை சந்திப்பதற்காக காத்திருக்க அவன் இவர்களிடம் சம்பிரதாயமாக பேசி விட்டு சென்று விட்டான்.
அது இவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்

அதன் பிறகு மீண்டும் மீண்டும் ரிஷியை சந்திக்க முயற்சி செய்து தோற்றுப் போயினர்…

இங்கு பவித்ராவை ஒவ்வொரு முறையும் ரிஷியின் அலைபேசிக்கு
முயற்சி செய்ய ஒருமுறை கூட அவளின் அழைப்பே ரிஷிகேஷ் ஏற்றுக்கொள்ளவே இல்லை


இதனால் அவளை நேரில் சந்திக்கலாம் என்று தனது தந்தையிடம் பர்மிஷன் கேட்க தந்தையும் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு அவனின் அலுவலகம் சென்றார்


அங்கு இவர்களை கண்ட ரிஷி நாராயணன் மட்டும் வந்திருந்தால் கண்டும் காணாமல் சென்று இருப்பான் அழுது கலங்கிய விழிகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்த பவித்ராவை பார்த்ததும் அவனால் அப்படி கடந்து செல்ல முடியவில்லை


சற்று மனமிரங்கி அவர்களுடன் பேச முன்வந்தான் பவியோ அவனைக் கண்டதும் மௌனமாக அழ ஆரம்பித்துவிட்டாள்


அவளின் நிலையை அறிந்தவனுக்கு மனது மிகுந்த வேதனையை கொடுத்தது ஆனாலும் தாய்க்கு நியாயம் வேண்டுமே என்று நினைத்துக்கொண்டு பொறுமை காத்தான்.

பவித்ராவின் தந்தையோ ரிஷியின் கைகளைப்பிடித்து இதை உங்க காலா நினைச்சு கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு என்னோட மகளுக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்க உங்க வாயால அவளுக்கு சொன்னா தான் புரியும்.


நீங்க மிகப் பெரிய பணக்கார குடும்பம் நாங்க நடுத்தர வர்க்கமா எங்களுக்கும் உங்களுக்கும் என்னைக்குமே ஒத்து வராது அது எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நல்லா புரியுது


ஆனா பவித்ராவுக்கு புரியல நீங்க பணக்காரன்னு தெரியறதுக்கு முன்னாடியே உங்க மேல ஆசை வச்சுட்டாளாம் எங்களோட அந்தஸ்து தெரிஞ்சுதான் நீங்க உங்க குடும்பத்தாரை எங்க வீட்டுக்குப் பொண்ணு கேட்டு அனுப்பி வைச்சிங்கனு எங்ககிட்ட பதிலுக்கு பதில் வாதாடறா


அதனால உங்க வாயால அவன் முகத்தை பார்த்து சொல்லிருங்க உனக்கும் எங்களுக்கும் ஒத்துவராது பவித்ரா இதோட விட்டுடுனு அதுவும் இல்லாம நாங்க அன்னைக்கு உங்க அம்மாகிட்ட அந்தளவு நடந்தது அப்புறமா எங்க பொண்ணை அங்க அனுப்பி வைக்கிறது எங்களுக்கும் கொஞ்சம் பயமா இருக்கு அதனால இதோடு விட்டுவிடலாம் என்று ரிஷியிடம் கெஞ்ச அவனும் அவரிடமிருந்து கைகளை உதவி கொண்டவன்…

பவித்ரா ரொம்ப சரியா என்னை புரிஞ்சு வச்சிருக்கறா ஆனா அதுல ஒரு பர்சன்டேஜ் கூட நீங்க எங்களை புரிஞ்சுக்கலனு நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அங்கிள்

உங்களுக்காக இல்லனாலும் பவித்ராவோட இந்த புரிதலுக்காகவாவது நான் அவளைத் திருமணம் செஞ்சிக்கனும்னு நினைக்கிறேன்

உண்மையிலேயே உங்க பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு நீங்க நினைச்சா நீங்களும் ஆண்டியும் என் அம்மா கிட்ட வந்து உங்க பொண்ணுக்காக பேசுங்க

கண்டிப்பா எங்க அம்மா கல்யாணத்துக்கு அப்புறம் பவித்ராவை எதுவுமே செய்ய மாட்டாங்க அதுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்

என் மேல நம்பிக்கை இருந்தா உங்க பொண்ணு மேல அக்கறை இருந்தா நீங்க தாராளமா என் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட கல்யாண விஷயத்தை பத்தி பேசுங்க இதுக்கு அப்புறம் இதை பத்தி உங்ககிட்ட நான் பேச விரும்பல உங்க பொண்ணோட சந்தோஷம் இப்போ உங்க கையில இருக்கு என்று கூறியவன். அங்கிருந்து சென்றுவிட்டான்.


தொடரும்
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
11

இவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாத பவித்ரா தந்தையை நச்சரிக்கத் தொடங்கினாள் அப்பா அவர் என்ன சொன்னார் என்று அதற்கு அவளின் தந்தை அவர் என்னையும் உங்க அம்மாவையும் கல்யாணத்துக்கு பத்தி பேசறதுக்காக அவங்க வீட்டுக்கு வரச் சொன்னாரு என்று குரலில் சுரத்தையே இல்லாமல் கூறினார்.

தந்தையின் பதிலைக் கேட்ட பவித்ரா சந்தோஷத்தில் அங்கேயே தந்தையைக் கட்டிப்பிடித்து தேங்ஸ் ப்பா... தேங்க்யூ சோ மச்...என்று கூறினாள்.

மகளின் சந்தோஷத்திற்காக இனி தங்கள் குடும்பம் எந்த மாதிரியான கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்க போகிறதோ என்று மனதிற்குள் கவலைப்படத் தொடங்கினார் நாராயணன்.

பவித்ராவும் நாராயணனும் வீடு வந்து சேர மேனகா வாசலிலேயே எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தார் இவர்களைப் பார்த்ததும் கணவர் உள்ளே நுழையும் முன்னே என்னங்க ஆச்சு எல்லாம் நல்லபடியா பேசியாச்சா என்று தனது கணவருக்கு மட்டும் புரியும் வண்ணம் கேட்க


எல்லாத்தையுமே உனக்கு வாசல்லையே சொல்லிடனுமா மேனகா படிச்சவ தானே கொஞ்சம் கூட நாகரிகம் வேண்டாம் எத்தனை முறை சொல்லியாச்சி வெளிய போயிட்டு வரும்போது வாசல்ல வச்சே கேக்காதனு
என்று கத்தினார் அவரின் கோபத்தைக் கண்டு பயந்த மேனகா எதுவும் பேசாமல் உள்ளே சென்று பவித்ராவிடம் விசாரித்தார்.

பவித்ராவை சந்தோஷமாக அம்மா அவர் என்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாரு அதுமட்டுமில்ல உங்களையும் அப்பாவையும் அவங்க வீட்டுக்கு வந்து பேச சொல்லிட்டாங்க என்று குதூகலத்துடன் கூற அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மேனகா தனக்கு தானாகவே கேட்டுக்கொண்டார்

என்னது கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களா...அதும் எங்களை நேர்ல வந்து பார்த்து பேச சொல்லி இருக்காங்களா எப்படி இது சாத்தியம் என்று யோசித்தவர் கணவரை தேடி சென்றார்


நாராயணரும் கோபத்தில் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க அவரின் அருகில் வந்தமர்ந்த மேனகா என்னங்க பவி என்னனவோ சொல்லிட்டு இருக்கா எல்லாமே உண்மைதானா


நீங்க அவரை சந்திச்சு நம்ம நிலைமையை சொல்லி பவிக்கு புத்தி சொல்லுங்கன்னு சொன்னிங்க தானே என்று கவலையாக கேட்க


ம்ம்... அப்படித்தான் சொன்னேன் நான் ஒன்னை நெனச்சு சொன்னா அவரு வேற ஒன்ன சொல்லிட்டுப் போறாரு இப்போ நம்ம பொண்ணுக்காக நாம அவங்க வீட்டுக்கு இறங்கி போயிதான் ஆகணும்

ஏற்கனவே வீட்டுக்கு வந்தவங்களை அவமானப்படுத்தி இருக்கோம் அதனால நமக்கு அவங்க வீட்ல பெருசா மரியாதையும் கிடைக்காது.
நம்ம பொண்ணுக்காக இனி என்ன நடந்தாலும் நாம சகிச்சிகிட்டு தான் போயாகணும்

நம்ம பவித்ராவால அவரை மறக்க முடியல... அவரும் பவித்ராவுக்கு புத்தி சொல்ல தயாராக இல்லை அதுக்கு பதிலா நம்மள வந்து அவங்க வீட்ல பேச சொல்லிட்டு போயிட்டாரு


இனி நாம போய் பேசலனா கூட பவித்ரா கிட்ட அவரே நேரடியா பேசி அவ மனசை மாத்தி அவங்களே கல்யாணம் பண்ணி பாருங்க


அந்த அவமானம் நமக்கு தேவையா சொல்லு அதனால நாமலே அவங்களுக்கு கல்யாணத்தை பண்ணி வெச்சா மரியாதையாவது மிஞ்சும் என்ன சொல்றே என்று கேட்க


அந்த அம்மா அடுத்த வீட்ல வந்து உட்கார்ந்து கிட்டே அப்படி பேசினாங்க


இப்போ அவங்க வீட்டுக்கு நாம தேடி போனா என்ன எல்லாம் பேசுவாங்க நினைச்சாலே பயமா இருக்குங்க என்று சற்று பயத்துடன் மேகலா கூறினார்.


இப்போ அவங்க நம்மகிட்ட எப்படி நடந்துக்கறாங்க என்பதா முக்கியம்... நம்ம பவித்ராவை எப்படிப் பாத்துக்க போறாங்க அது தானே முக்கியம்...அந்த பையன் அவ்ளோ உறுதியா சொல்லறான் அங்கிருக்கிறவங்களால பவித்ராவுக்கு என்னைக்குமே பிரச்சினை வராது அவளை எல்லாருமே சந்தோஷமாக பாத்துப்போனு கேரண்டி தர்றான்...

நமக்கு நம்ம பொண்ணு சந்தோஷமா வெச்சுக்கிட்டா போதும் அதுக்காக நாம எந்த கஷ்டத்தை வேணாலும் தங்கிக்கலாம்...

நாளைக்கு நீ ஸ்கூலுக்கு லீவ் சொல்லிடு ஒரு எட்டு அங்க போய் பார்த்து பேசிட்டு வந்துடலாம் என்று வார்த்தையில் உற்சாகம் இல்லாமல் கூறினார்.

சரி என்று தலையாட்டிய மேகலாவிற்கு அன்றைய இரவு தூங்க இரவானது பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் வேறு...பெண்ணிற்காக சம்பந்தம் பேச செல்லும் இடத்தில் தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற கவலை வேறு...எப்படியோ எது நடந்தாலும் தங்கள் குடும்பத்திற்கு நல்லதாக இருக்கட்டும் என்று கடவுளை வேண்டி கொண்டார்.

இது பவித்ராவும் ரிஷியும் மாற்றி மாற்றி சாட்டிங்கில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். பவித்ரா அவனிடம் நாளை தன்னுடைய தாயும் தந்தையும் அங்கே வருவதாக சந்தோஷத்துடன் கூட ரிஷியோ அப்படியா என்று மட்டும் கேட்டுக் கொண்டான்.

பவித்ரா சொன்ன விஷயத்தை மேனகாவிடம் சென்று ரிஷி கூற அவருக்கோ உள்ளுக்குள் அப்படி ஒரு ஆனந்தம்


தான் எதை நினைத்து காய் நகர்த்தினாரோ‌ அந்த காரியம் நடக்கப் போகிறது... தனது மகன் முன்பு எதையும் பெரியதாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர் நாளைக்கு சம்மந்தி வீட்டிலிருந்து வராங்களா ரொம்ப சந்தோஷம் நான் உடனே ஜோசியருக்கு போன் பண்ணி நாளைக்கு வர சொல்லறேன் அவங்க வந்தாங்கன்னா ஒரு நல்ல நாள் குறிக்க வசதியா இருக்கும் என்று சந்தோஷமாக கூறினார

உடனே ரிஷி தயங்கியபடியே தாயிடம் அம்மா அன்னைக்கு நான் தான் மாப்பிள்ளைனு தெரியாம அவங்க உங்ககிட்ட ஏதாவது வித்தியாசமா பேசி இருக்கலாம் அதை மனசுல வெச்சி கிட்டு ஹர்ட் பண்ணிடாதீங்க மா

அவங்கள கஷ்டப்படுத்தினால் அது பவித்ராவை கஷ்டப் படுத்துற மாதிரி அதை என்னால தாங்கிக்க முடியாது கொஞ்சம் நல்லவிதமா நடந்துக்கோங்க


பதிலுக்கு பதில் ரெண்டுபேரும் இழுத்து கிட்டே போனா யாருக்கும் சந்தோஷம் இருக்காது அம்மா என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் பவித்ராவோட ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழனும்னு ஆசைப்படறேன் புரிஞ்சிப்பீங்க நினைக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட் மகன் கூறியவற்றை நிதானமாக அசைபோட்ட மேனகா


என்ன இருந்தாலும் தன்னிடம் அன்று நடந்ததற்கு அந்த குடும்பம் பதில் சொல்லவேண்டும் அதன் பிறகு அவர்களை விட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டார் மறுநாள் விடியலுக்காக காத்திருக்கவும் ஆரம்பித்தார்.

மனதிற்குள் பவித்ராவின் பெற்றோர்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மேனகா ராதா இருவருமே வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவர்களின் பிள்ளைகள் கல்லூரிக்குச் சென்று விட


ரிஷியின் சகோதரி மாமியாருக்கு உடல்நலம் சரியில்லை என கடந்த இரண்டு மாதங்களாக மாமியாரின் வீட்டில்தான் இருக்கிறாள்.

அவளிடம் ரிஷியின் திருமணத்தைப் பற்றி கூறி விட்டார்கள் விஜியை பொருத்தவரை எதிலும் பெரியதாக தலையிட மாட்டாள் என்னதான் பணக்கார குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அவள் கணவன் சொல்வதற்கு தான் முதல் முன்னுரிமை கொடுப்பாள். அதனாலோ என்னவோ மேனகா விஜியை அதிக அளவில் கண்டுகொள்ளவும் மாட்டார் பெரியதாக அவளிடம் எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளவும் மாட்டார்.


அதற்கு நேர்மாறாக ராகவி அப்படியே ராதா ,மேனகா இருவரின் குணத்தை ஒத்து இருப்பவள்.


விஜி,பழனி,ராகவ் இவர்களெல்லாம் ஒரு வகை என்றால்

ராதா,மேனகா,ராகவி இவர்கள் மூவரும் ஒரு வகை...


ராதாவின் கணவர் இரண்டு பேருக்கும் பொதுவானவர் எந்த பக்கம் மெஜாரிட்டி இருக்கிறதோ சமயம் பார்த்து அந்த பக்கம் சேர்ந்து கொள்வார்.

உண்மையாகவே நடுநிலைவாதி யார் என்றால் அந்த வீட்டில் ரிஷி தான் யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வான்...ஆனால் நம்பமாட்டான்... அதன் உண்மைத்தன்மை என்ன என்று ஆராய்ந்த பிறகே முடிவு எடுப்பான். அதனால் ரிஷியிடம் அனைவருமே கொஞ்சம் ஒதுக்கம் காண்பிப்பார்கள்.

ரிஷியின் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை என்பதால் விஜியை தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே பவித்ராவின் குடும்பத்தினர் வரும்பொழுது அவர்களுக்காக முன்னறையிலேயே காத்திருந்தனர் வீடு முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது


நாராயணனும் மேகலாவும் அவர்களின் வீட்டின் அருகே வர ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் ஆடம்பரத்தை கண்டு பயப்பட ஆரம்பித்தனர். ரொடு முழுவதுமே அவர்களுக்காக பிரத்தியேகமாக போடப்பட்டிருந்தது... அந்த சாலைக்குள் பிரவேசிக்கும் பொழுதே விளம்பர பதாகை ஒன்று ஆள் உயரத்தில் இருந்தது அதில் இது பொது வழி அல்ல தனியாருக்கு சொந்தமானது என்று எழுதி இருந்தது அதன் அருகிலேயே இரண்டு காவலாளிகள் இருந்தனர்.


இவர்கள் வருவார்கள் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு இருந்ததால் காவலாளிகள் இவர்களிடம் எதுவுமே கேட்காமல் மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்...
மேகலா கணவரின் காதை கடித்தாள்.காப்பவுண்ட் சுவரே ஒரு தெருவுக்கு இருக்குதுனா அப்போ உள்ள வீடு எவ்வளவு பெருசா இருக்கும் என்று சற்று பிரமிப்புடன் கேட்டார்.

நாராயணன் சற்று சலித்தபடியே அதுதான் உள்ள போய் பார்க்க போறோமே அப்போ தெரிஞ்சுக்கோ என்று கூறி உள்ளே செல்ல ஆடம்பரமாய் மூன்று பங்களாக்களும் அருகினில் அவுட் ஹவுஸ் ஒன்றும் இருந்தது


உள்ள மூன்று பங்களா வீடு இருக்குங்க என்று கூறிய மேனகா ஏங்க இந்த வீட்டு கார் பார்க்கிங் அளவுக்கு கூட நம்ம வீடு கிடையாது
என்று கண்களை விரித்தபடி மேகலா கூற…

ஆனா நாம இருக்கிறது கார் செட் கிடையாது மேகலா..அதை வீடுனு சொல்லுவோம் இதை எவ்வளவு காஸ்ட்லியா பண்ணி வச்சாலும் வீடுனு சொல்ல மாட்டோம் கார்செட்னு தான் சொல்லுவோம் என்று கூற


மேகலா எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டார் கணவருக்கு இங்கே வருவது பிடிக்கவில்லை அப்படி இருக்கும் பொழுது அவரிடம் என்ன சொன்னாலும் இப்படித்தான் முகத்தில் அடிப்பது போல் பேசுவார் என புரிந்து கொண்ட மேகலா மௌனம் காத்தார்


ஆனால் அவர் மனதிற்குள் மிகப்பெரிய சந்தோஷம் தனது மகள் இவ்வளவு பெரிய வீட்டில் வந்து வாழ போகிறாள் எது எப்படியோ இந்த ஆடம்பர வாழ்க்கைக்காக பெற்றோர்களான தாங்கள் எவ்வளவு அவமானப்பட்டாலும் பரவாயில்லை அதை சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்.


ஆனால் நாராயணனுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை ஆடம்பரமாக வீடு இருந்து என்ன பிரயோஜனம் இங்கு இருக்கும் மக்களுக்கு துளிகூட அந்தப் பெருந்தன்மை இல்லையே அன்று நடந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு இன்று அவர்கள் வீட்டுக்கு வரவழைத்து தங்களை அவமானப்படுத்த போகிறார்கள் இந்த மாதிரி ஒரு வீட்டிற்கு தன் மகளை வாழ அனுப்புவதா என்று எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தார்.


இவர்கள் இருவரும் வாசல் அருகே வரும் பொழுது வீட்டில் இருந்த அனைவரும் ஒன்று போல் எழுந்து நின்றனர் இது இவர்களுக்கான மரியாதை அல்ல ரிஷிக்கான மரியாதை…ரிஷி ஒடிவந்து அவர்களை வரவேற்றான்.

ரிஷிக்கு தற்சமயம் பவித்ராவின் மீதோ அவளின் பெற்றோர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது அவனுக்கு இருந்த ஒரே ஒரு கோபம் தங்கள் வீட்டில் இருந்த அவர்கள் வீட்டிற்குச் செல்லும் பொழுது அவர்கள் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டார்கள்

அதற்கு பிராயச்சித்தமாக இப்பொழுது அவர்களே இவர்களை தேடி வந்திருக்கிறார்கள் அதனால் இனி நடந்து முடிந்தவற்றை நினைத்து தற்போதைய சந்தோஷத்தை இழக்கக்கூடாது என்பது அவனின் எண்ணம்.


அதனால் பவித்ராவின் பெற்றோரை சந்தோஷமாக எதிர்கொண்டான்.
இருவரும் தர்மசங்கடத்துடன் வாசலில் செருப்பை கழட்டி விட ரிஷியோ பரவால்ல செருப்பு போட்டுகிட்டே உள்ள வாங்க என்று கூறினான்


அதற்குள் ராதா எப்படி இருந்தாலும் நீங்க வந்துட்டு போனதுக்கப்புரம் வீடு புல்லா சானிடைசிங் பண்ண தான் போறோன் அதனால செருப்பை போட்டுட்டே வாங்க என்று கூற நாராயணனுக்கும் மேகலா விற்கும் அந்தப் பேச்சு முகத்தில் அடிப்பது போல் தோன்ற அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ரிஷி சித்தியை பார்த்து முறைப்பதற்க்குள் ராகவ் தனது தாயை கண்டித்தான்.


என்ன அம்மா இப்படி பேசறீங்க என்று அதற்கு ராதா சாதாரணமாக எப்பவுமே நம்ம வீட்டுக்கு யாராவது வந்துட்டு போன உடனே வீட்டை சுத்தம் பண்ணுவோம்ல அதை சொன்னேன் இதில என்ன தப்பு என்றபடி தனது அக்காவை பார்த்து புன்னகைத்தபடியே கூற

மேனகா விற்கும் தங்கையின் உள்குத்து புரிய போலி கண்டிப்புடன் பேசாம இருக்க மாட்டியா நீ என்றார் ஆனால் அதை சொல்லும் பொழுது அவர் இதழ்களிலும் அப்படி ஒரு புன்னகை

ரிஷியோ பவித்ராவின் பெற்றோரை பார்த்து சித்தி கொஞ்சம் வெகுளி எதையும் மனசுல வச்சுக்க மாட்டாங்க பட்டுனு பேசிடு வாங்க தப்பா எடுத்துக்காதீங்க என்று கூற

இல்லை என்பது போல் உள்ளே வந்து அமர அனைவருமே திருமணப் பேச்சு வார்த்தையை தொடர ஆரம்பித்தனர்.


எல்லாம் சுமூகமாக நடக்க ஆரம்பிக்கவுமே பழனி, ராஜன்,ரிஷி மூவருமே அலுவலகத்துக்குச் செல்ல தயாராகினர் ராகவி தோழியை பார்க்க சென்று விட இப்போது பவித்ராவின் பெற்றோரும் சகோதரிகள் இருவரும் மட்டுமே அங்கிருக்க பொறுப்பான ஆண்மகனாய் ராகவ் இவர்களுக்கு சாப்பிட என்ன கொடுக்கலாம் என்று சமையலறையை தேடிச் சென்றிருந்தான்.

ராகவிற்கு ரிஷியை மிகமிகப் பிடிக்கும் இந்த உலகத்திலேயே உனக்கு பிடித்த மனிதர் யார் என்று கேட்டால் யோசிக்காமல் ரிஷியை தான் கூறுவான் அது மட்டுமல்ல ரிஷியைதான் தனது ரோல்மாடலாக வைத்திருக்கிறான் அண்ணனின் அழகு,கம்பீரம்...இந்த வயதிலேயே அவரின் முதிர்ச்சியான பேச்சி, வியாபார யூக்தி... எல்லாவற்றையுமே அண்ணன் உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன்.

தம்பதியினரிடம் அன்பாக ஒரு பதார்த்தத்தை கொண்டு வந்து கொடுத்து அங்கிள் ஆன்ட்டி எடுத்துக்கோங்க இது எங்க வீட்டோட ஸ்பெஷல் இதை என்னோட அம்மாவும் சித்தியும் எப்பவுமே அவங்க கையாலேயே செய்வாங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் என்று பாலால் ஆன ஒரு பதார்த்தத்தை ஆளுக்கு ஒரு கண்ணாடி பௌலில் அவர்களிடம் நீட்ட

தர்மசங்கடத்துடன் வேண்டாம் என மறுத்தனர் அவர்களுக்கு இங்கே அமர்ந்து இருப்பது ஏதோ கத்திமேல் இருப்பது போன்ற ஒரு எண்ணம் எப்போதடா இந்த திருமண பேச்சு முடியும் வீடு செல்லலாம் என்று தவித்துக் கொண்டிருக்கின்றன மேனகாவும் அவர்களின் அந்த அவஸ்தையை ரசித்தவர்


எடுத்து சாப்பிடுங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் இது சுத்தமான பசும்பாலில் செய்கிற ஸ்வீட் பால்கோவா மாதிரி னு வைச்சுக்கோங்க ஆனா கடைகள்ல வாங்கற மாதிரி டேஸ்ட் இருக்காது இது வேற மாதிரி டேஸ்ட்டா இருக்கும் நாங்க வீட்டுக்கு வந்தவர்களுக்கு எப்பவும் இப்படித்தான் இந்த குடும்பத்தோட ஸ்பெஷல் என்னவோ அதை குடுத்து தான் அவங்கள வரவேற்போம் ஒரு சிலர் மாதிரி தரம் கெட்டு போய் நடந்துக்க மாட்டோம் என்று அவர் அடிமனதில் இருந்த வன்மத்தை வார்த்தைகளாக துப்பினார்.

ராகவ் அதிர்ச்சியாகி
பெரியம்மா... என்று கத்த


ஷ்….கத்தாத அங்கிள் ஆன்ட்டிக்கு ஸ்வீட் வேணாம் போல காஸ்ட்லி பௌவுல் கீழே போட்டு உடைச்சிட்டா அதுக்கப்புறம் அதோட செட் -ஐயே தூக்கி குப்பையில் தான் போடனும்

அப்புறமா சைனாவோ இல்லனா பெல்ஜியமோ போய் அழைந்து அதே மாதிரி புதுசு வாங்கனும்னா நிறைய செலவாகும் அதனால அதை எடுத்துட்டு போயி உள்ளவை என்று கூற பெரியம்மாவை எதிர்த்துப் பேசாது மௌனமாக அவர்களின் கையில் இருப்பதை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான்.



அவனுக்கோ அவ்வளவு கோபம் இவர்கள் அண்ணனை கண்டிப்பாக சந்தோஷமாக இருக்க விட போவதே கிடையாது திருமணத்திற்கு முன்பே அண்ணியின் குடும்பத்தினரை இப்படி நடத்தினால் திருமணத்திற்குப் பின்பு அவரையும் அவரின் குடும்பத்தையும் எப்படி எல்லாம் நடத்துவார்கள் என்று நினைத்தவன் இதை இப்படியே விடக்கூடாது கண்டிப்பாக அண்ணனிடம் பேசியே தீரவேண்டும் என்று முடிவெடுத்தான்.

மேனகாவின் பேச்சைக் கேட்ட மேகலா மெதுவாக அவரைப் பார்த்து கை கூப்பியபடி எங்கள மன்னிச்சிடுங்க அன்னைக்கு நீங்க யாருன்னு தெரியாம உங்க கிட்ட கொஞ்சம் கோபமா பேசிட்டோம்


அன்னைக்கு நடந்ததுல ரெண்டு பக்கமுமே தப்பு இருக்கு இல்லையா எங்க பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நாங்களும் பேசிட்டோம்

உங்க பையன் சொன்ன தகவலை வெச்சு முழுசா எதையும் சொல்லாம நீங்களும் தப்பு பண்ணி இருக்கீங்க அதனாலதான் அன்னைக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்திடுச்சி...

அதை எதையும் மனசுல வெச்சுக்காதீங்க எங்க பொண்ணு இங்க வந்து வாழனும் நீங்க எங்க மேல இவ்வளவு கோபமா இருந்தா அது அவளை கண்டிப்பா பாதிக்கும் தயவு செஞ்சு உங்க கால்ல விழுந்து வேணாலும் நான் கெஞ்சி கேட்டுக்கறேன் அதை மறந்துடுங்க என்று கூற மேனகாவின் மனம் சற்று சாந்தி பட


சரியா கேக்கல...மன்னிப்பா கேட்டிங்க அதும் என்கிட்ட ...என்றவர்

நாராயணனை பார்த்தபடி குடும்பமே சேர்ந்து பேசிட்டு ஒருத்தர் மட்டும் மன்னிப்பு கேட்டா எப்படி?... அவங்கவங்களுக்கு பசிச்சா தனித்தனியா சாப்பிடறமாதிரி தனித்தனியா மன்னிப்பு கேப்பீங்களோ என்று கேள்வி எழுப்ப

மேகலா நாராயணனைப் பார்த்து தயவு செய்து மன்னிப்பு கேளுங்கள் என்று பாவமாக கண்களிலே கெஞ்சினார்.

கண்களை மூடித் திறந்த நாராயணன் அவரும் எழுந்து அவர்கள் இருவரையும் பார்த்து எங்கள மன்னிச்சிடுங்க சம்மந்தி அம்மா பவித்ராவும் அன்னைக்கு ஏதோ துடுக்குதனமா பேசிட்டா அதையும் மனசில வெச்சுகாதீங்க இன்னைக்கு நாங்கள் இவ்வளவு தூரம் வந்ததே பவித்ராவோட சந்தோஷத்துக்காக தான் அவளோடு சந்தோஷம் எங்களுக்கு ரொம்ப முக்கியம்


அதனால உங்களோட எந்த கோபமா இருந்தாலும் எங்க கிட்ட காட்டுங்க அவ சின்ன பொண்ணு பாவம் அவ தாங்கமாட்டா பெரிய மனசு பண்ணி எல்லாத்தையும் மறந்துட்டு எங்களை மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்க


மேனகா விற்கும் ராதா விற்கும் மனம் அமைதி அடைந்தது இருவருமே எழுந்தவர்கள் சரி விடுங்க..
நான்கு உங்களை மன்னிச்சுட்டோம் எல்லாரும் ஒரே குடும்பமாக போறோம் ஒன்னுக்குள்ள ஒன்னுனு ஆனதுக்கு அப்புறம் எதுக்காக மனசுல கண்டத்தை போட்டு நெனச்சுட்டு இருக்கனும்


நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் பாவித்ரா மேல எங்களுக்கு என்னைக்குமே எந்த கோபமும் கிடையாது ரிஷிக்கு மனைவியா வரப்போகிறவ அவ சந்தோஷமா இருந்தா தானே எங்க பிள்ளையும் சந்தோஷமா இருப்பான்.
அதனால என்னைக்குமே அவளை கஷ்டப்படுத்த மாட்டோம்…

ஆனாலும் உங்க பொண்ணுக்கு நீங்க கொஞ்சம் புத்தி சொல்லி அனுப்பனும் பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்ங்கற முறையை அன்னைக்கு பேசினதை மறந்துட்டோம் ஒருவேளை அதே மாதிரி இங்க வந்து வாய் பேசினா பிரச்சனை உங்களுக்கு தான் புரியும்னு நினைக்கிறேன் டீச்சர் இல்ல எல்லா பிள்ளைகளுக்கும் புத்தி சொல்றவங்க உங்க பிள்ளைகா பத்தி சொல்லாம இருப்பீங்க கூறிக்கொண்டிருக்கும் போதே ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.


திருமணத்திற்கான நாட்கள் குறிக்கப்பட்டது …மேனகா ராதா இருவருமே அதன்பின் நாராயணனையும் மேகலாவையும் பார்த்து எந்த ஒரு கடுஞ்சொல்லையும் சொல்லவில்லை மிக அன்பாகவே நடத்தினர் எல்லா பேச்சுவார்த்தைகளும் முடியும் பொழுது தம்பதியினருக்கு மன நிறைவாய் இருந்தது.


அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை மட்டும்தான் மேனகாவும் ராதாவும் கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது போல் தெரிந்தது அதன் பிறகும் மிக அன்பாக நடத்தப்பட்டனர் அவர்களுடன் ஒன்றாக அமர வைத்து சாப்பிடவும் வைத்தனர்


இப்பொழுது தான் ராகவிற்கு சற்று நிம்மதி ஆனால் தனது பெரியம்மாவை நம்பவே முடியாது பெரியம்மாவின் நாக்கு ஒரு தேள் கொடுக்கு எப்போது வேண்டுமானால் அந்த கொடுக்கை பயன் படுத்துவார் அதனால் மிக ஜாக்கிரதையாக தம்பதியினரின் பக்கமாகவே நின்றுகொண்டிருந்தான்.

தம்பதியினர் அனைவரிடத்திலும் விடைபெற்றுக் கிளம்பும் பொழுது மேனகா அவர்களை தடுத்து நிறுத்தினார் பிறகு ராதாவை பார்க்க ராதா வேகமாக உள்ளே சென்று மிகப்பெரிய வெள்ளி தாம்பாளத் தட்டை தூக்கி வந்தார்

தட்டுக்கள் நிறைய புடவை நகைகள் பரிசு பொருட்கள் என குமிக்க பட்டிருந்தது அதை பார்த்ததும் தயங்கியபடி மேகலா நாராயணனை பார்க்க


மேனகா சிரித்தபடி இது நீங்க வாங்கினா நான் உங்கள பிச்சைக்காரங்கனு நினைச்சிக்க மாட்டேன் யோசிக்காம வாங்கிக்கோங்க என்று கூற தம்பதியினருக்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது... மேகலா நாராயணனை பார்க்க வாங்கிக் கொள் என்பது போல் ஜாடை செய்தார்.


இவ்வளவு பெரிய வெள்ளித் தாம்பாளை எப்படி பெற்றுக்கொள்வது பரிசுப்பொருட்கள் வேண்டுமானால் பவித்ராவிற்கு அவர்கள் கொடுக்கலாம் ஆனால் தாம்பாளத்தை எப்படி எடுத்துச் செல்வது என்று யோசித்தவர் தனது ஹேண்ட் பேக்கில் இருந்த ஒரு துணிப் பையை வெளியே எடுக்க சிரித்த ராதாவும் மேனகாவும்


சம்பந்தி அம்மா அந்த தட்டும் உங்களுக்கு தான்….

இல்ல இதெல்லாம் பொண்ணுக்கு கொடுத்திருக்கீங்க அதனால வாங்கிக்கறேன் தாம்பாளம் வெள்ளி போல இருக்கு அதான்…
என்று மேகலா தயங்கியபடி கூற


அதனால என்ன எடுத்துட்டு போங்க எங்க வீட்டுக்கு வர்றவங்க எல்லாருமே பெரிய பெரிய கார்ல வருவாங்க இந்த மாதிரி நாங்க எதாவது கொடுத்தா அவங்க டிரைவர் வாங்கி காரில் வெச்சுப்பாங்க எடுத்துட்டு போக சுலபமா இருக்கும் ஆனா நீங்க டூவீலர்ல வந்திருக்கீங்க அப்படியே எடுத்துட்டு போறதுன்னா கஷ்டம் இல்லையா அதான் யோசிக்கிறீங்க போல நான் வேணா ஒரு பெரிய பை கொடுக்கட்டுமா தாம்பாளம் வைக்கிற மாதிரி என்று நக்கலாக கேட்க கண்களில் நீர் கட்ட மேகலாவும் இல்ல வேணாம் என்று கூறியபடி தாம்பாளத்தை வாங்கிக்கொண்டார்.


எல்லாவற்றையும் பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராகவ் வாய் திறந்தான்

கார் இல்லன்னா என்ன பெரியம்மா அதான் நம்ம வீட்டுல இத்தனை கார் இருக்கே அதை இப்படி நான் வாங்கிட்டு போயி அந்தக் காரில் வைப்பேனோம் அங்கிளையும் ஆண்ட்டியையும் கூட்டிட்டு போயி நான் வீட்டில விடுவேனாம்

நம்ம டிரைவர் பின்னாடி அங்கிளோட வண்டியை கொண்டு வந்து வீட்டில் விடுவாராம் அப்புறம் திரும்பி வரும்போது நானும் டிரைவரும் கார்ல வருவோமாம் ரொம்ப சிம்பிளான விஷயம் அதுக்கு எதுக்கு பெரியம்மா இவ்வளவு பேசுறீங்க நீங்க வாங்க ஆண்ட்டி என்று கையில் இருந்த தாம்பாளத் தட்டை வாங்கிக்கொண்டு அங்கிருந்த ஒரு சொகுசு காரின் பின்புறம் வைத்தவன் நீங்க வந்து உக்காருங்க என்று காரின் கதவை திறந்துவிட


மேகலா தயங்கியபடியே அங்கிருந்த அனைவரையும் பார்க்க ராதா சிரித்த முகத்துடன் அதான் பையனே சொல்லிட்டானே ஏறிக்கோங்க சம்மந்திம்மா... இந்த மாதிரி சமயத்துல போனா தானே நீங்களும் இது போல சொகுசு கார்லெல்லாம் போக முடியும் என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட

நாராயணனுக்கும் மேகலாவிற்கும் தெள்ளத் தெளிவாக புரிந்தது இவர்களை திருத்தவே முடியாது என்று

ஆனால் ராகவ் தங்களின் வீட்டு பெண்களுக்காக தம்பதியினர் இருவரிடத்திலும் மாறி மாறி மன்னிப்பு கேட்டான்.

நாராயணனோ தங்களின் இருசக்கர வாகனத்தில் இவ்வளவு பெரிய தாம்பாளத் தட்டை வைத்துக் கொண்டு மனைவி அமர்வது சிரமம் என்று உணர்ந்து கொண்டவர் உடனடியாக ஒரு ஃகால் டாக்ஸிக்கு ஏற்பாடு செய்தார் ஆனால் அதற்கு மறுத்த ராகவ் நீங்க ஃகால் டாக்ஸியில் சென்றால் என்னை மட்டுமல்ல உங்கள் மருமகனான ரிஷியையும் சேர்த்து அவமானப்படுத்துகிறீர்கள் இது ரிஷி அண்ணாவிற்கு தெரிந்தால் மிகப் பெரிய பிரச்சினையாகும் தயவுசெய்து என்னுடன் காரில் வாருங்கள் என்று காலில் விழாத குறையாக கெஞ்ச தொடங்கினான் அவனின் முகத்திற்காக நாராயணனின் மனம் சற்று அசைந்தது.


மேகலா அந்த தம்பிக்காக நீ கார்ல வா நான் நம்ம வண்டில வர்றேன் என்று கூறியவர் வாகனத்தை இயக்கினார்.

மேகலா காரில் ஏற சந்தோஷத்துடன் காரை இயக்கிய ராகவ் மேகலாவிடம் அவரகள் வீட்டில் உள்ள அனைவரை பற்றியும்,குடும்ப விவரங்களையும் தெரிவித்தான்...தனது தாயும் பெரியம்மாவும் இயல்பிலேயே மிகவும் நல்லவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இதுபோல் அடுத்தவரை காயப்படுத்துவது அதை பெரிது படுத்த வேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொண்டான்.

பவி அண்ணி தங்கள் வீட்டிற்கு வந்த பிறகு முடிந்த அளவு இருவரையும் சேர விடாமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று வாக்கும் கொடுத்தான்.

இங்கு நடந்த விஷயங்களை அண்ணியிடம் தெரியப்படுத்த வேண்டாம் அவர்கள் மனம் புண்படும் என்று பொறுப்பாக பேசிய ராகவை மேகலாவிற்கு மிகவும் பிடித்தது…

ஏனோ இளையவனின் பேச்சி அதுவரை அவரின் மனதில் இருந்த குழப்பத்திற்கு விடையாக இருந்தது.

தன் பெண்ணை பாதுகாக்க கணவன், கொழுந்தன் என இரு ஆண்கள் இருக்கும் பொழுது நான் ஏன் தேவையில்லாமல் கவலை படவேண்டும் அவளை இந்த இரு ஆண்களுமே பாதுகாத்து கொள்வார்கள்.தனது பெண் மிகவும் அதிஷ்டசாலி இல்லையென்றால் இதுபோல ஒரு ராஜ வாழ்க்கை பெண்ணுக்கு அமையுமா?

சற்று நேரம் பிரயாணம் செய்யவே இந்த கார் இவ்வளவு சொகுசாக உள்ளது..தனது மகள் காலம் முழுவதும் இதில் அல்லவா உலா வருவாள் நினைக்கவே இனித்தது மேகலாவிற்கு

வீடுவரை பேசிக்கொண்டு வந்த ராகவ் காரை நிறுத்தி மேகலா விற்காக காரின் கதவைத் திறந்து விட்டான்.

தொடரும்...
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
12

அதன் பிறகு உள்ளே இருந்த தாம்பாளத் தட்டை கையில் எடுத்தவன் பவித்ராவிற்கு கொடுப்பதற்காக அவர்களின் வீட்டிற்கு உள்ளே சென்றான்.

இங்கு நாராயணனும் வந்து சேர பவித்ரா ராகவை பார்த்ததும் ஆச்சரியமாக தாய் தந்தையரை பார்த்தாள் உடனே அவர்கள் ரிஷியின் தம்பி என்று கூறவும் நொடியில் முகத்தை மாற்றி கொண்டு சந்தோஷமாக அவனை வரவேற்றாள்


அவனும் கையிலிருந்த தாம்பாளத் தட்டை அவளிடம் கொடுத்து இது எங்க வீட்டுக்கு வர போற அண்ணிக்காக எங்களோட சின்ன அன்பளிப்பு


இந்த அன்பளிப்பில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு அது என்னன்னா இதில இருக்கற ஒரே ஒரு பொருள் அண்ணா உங்களுக்காக தேர்ந்தெடுத்தது அது என்னன்னு நீங்க கண்டுபிடிச்சு இன்னும் பத்து நிமிஷத்துல அண்ணாக்கு சொல்லணும் என்று கூறி விட்டு அவன் சென்றுவிட பவித்ராவும் சந்தோஷத்துடன் தாம்பாளத் தட்டை வாங்கியபடி அவளின் அறைக்கு ஓடினாள் .




மேகலா பவியின் சந்தோஷத்தை பார்த்து இவளோட சிரிப்பிற்க்காக நாம எத்தனை பேர்கிட்ட வேணும்னாலும் அவமானப்படலாம்ங்க


எந்த அளவு வேணாலும் இறங்கிப் போகலாம் அதுல தப்பே கிடையாது பாருங்க நம்ம பவி எவ்ளோ சந்தோஷமாக இருக்கிறானு என்று கூற


அதை ஆமோதித்த நாராயணனும் எனக்கு ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமா இருக்கு மேகலா அது எப்படி இந்த பெண் பிள்ளைகள் மட்டும் கல்யாணம்னு வந்த அடுத்த நிமிடமே அவங்களோட குடும்பத்தை மறந்து கணவரோட குடும்பத்து பக்கம் சாய ஆரம்பிக்கறாங்க?

பாரு நீயும் நானும் அங்க போயிட்டு வந்திருக்கோம் என்ன ஏதுன்னு கூட விசாரிக்கல ஆனா அவங்க கொடுத்த பரிசுப் பொருளை தூக்கிட்டு உள்ள ஓடறா என்று கூறிவிட்டு உள்ளே செல்ல

பின்னால் சென்ற மேகலா நமக்கு அவ சந்தோஷம்தான் முக்கியம் அந்த குடும்பத்தோட இப்படி ஒத்துப் போனா தானே அவளுக்கும் அங்க பிரச்சினை இல்லாம இருக்கும் ….சந்தோஷப்படுங்க நாராயணன் நம்ம பொண்ணு புத்திசாலினு என்று கூற


எது எப்படியோ நமக்கு இனி போதாத காலம் ஆரம்பிக்கிது மேகலா அது உறுதி என்றார்.


பவித்ரா பரிசுப் பொருட்களை எல்லாம் ஆசையாக எடுத்துப் பார்த்தவள் இதில் எது தனக்காக ரிஷி தேர்ந்தெடுப்பான் என்று யோசித்தாள் அழகிய புடவையா, இல்லை வைர நகைகளா... இல்லை என்றால் இந்த தங்க அட்டிகையா என்று ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தவள் கடைசியாக கண்டிப்பாக புடவைதான் தனக்காக அவர் தேர்ந்தெடுப்பான் என்று யோசித்தவள் உடனடியாக ரிஷிக்கு அழைத்தாள்.

அவளின் அழைப்புக்காக காத்திருந்த ரிஷி முதல் ரிங்கிலேயே அவளின் ஃகாலை அட்டென்ட் செய்தான்.

சொல்லு பவி... என்றவனிடம்

உங்க தம்பி எனக்காக ஒரு கிப்ட் தட்டு கொடுத்தாங்க அதுல நீங்க ஒன்னு எனக்காக வாங்கி வச்சதா சொன்னாங்க அதை என்னன்னு கண்டுபிடிச்சி உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க நான் ரெண்டு நிமிஷத்திலேயே கண்டுபிடிச்சிட்டேன்

இந்த மாம்பழ கலர் பட்டு புடவை சரியா என்று பவித்ரா கேட்க


பரவால்லயே ஈஸியா கண்டுபிடிச்சிட்ட... அய்யா செலக்சன் எப்படி...கிப்ட் புடிச்சுதா….எப்படி என்று கேட்க

ம்ம்...ரொம்ப…என்கிட்ட இல்லாத கலர்...என்றவளிடம்

எப்படி டக்குனு புடவைனு கண்டுபிடிச்ச…


ரொம்ப சிம்பிள் அன்னைக்கு பேச்சு வாக்குல புடவை கட்டுன பொண்ணுங்கன்னா ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா நானே திரும்பிப் பார்ப்பேனு சொன்னிங்க ஞாபகம் இல்லையா…

ஒஒஓ...ஆமா
உண்மைதான் பவி எனக்கு பொண்ணுங்க புடவை கட்டினா ரொம்ப பிடிக்கும் வீட்டுல மூணுபேர் இருந்தாலும் அவங்க புடவை கட்டுவது ரொம்ப ரேர்... எப்பவுமே மார்டன் டிரஸ் தான் பண்ணி பாருங்க

அது மட்டும் இல்ல என்னோட பிசினஸ் லைன்லயும் எல்லாருமே அல்ட்ரா மாடர்னா இருப்பாங்க... நான் அப்புறம் சில சமயம் யோசித்துப் பார்ப்பேன்
எனக்கு வரப்போற பொண்ணு எந்த மாதிரி டிரெஸ் பண்ணவானு... ஆனா நீ எனக்கு பிடிச்ச மாதிரி புடவை மட்டும் தான் கட்டற... அதுவே உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிதுக்கு ஒரு காரணம்


நீ ரெண்டு மாஸ்டர் டிகிரி முடிச்சிருக்க அப்புறம் எப்படி புடவையே கட்டற... காலேஜ்ல மார்டன் டிரஸ் எல்லாம் போட்டதில்லையா... என்று கேட்டகவும்…

நான் பேரூர் காலேஜ்ல படிச்சேன் மாடர்ன் ட்ரெஸ் அங்க அலோவ்ட் கிடையாது ஒன்லி ஆஃப் சாரி இல்லனா புடவை ... தான்

நானும் ஆரம்பத்துல ஆஃப்சாரி தான் போட்டுட்டு காலேஜ் போனேன் அப்புறமா ஒரு தரம் புடவை கட்டவும் அது எனக்கு கொஞ்சம் கம்பர்டெபிளா தெரிஞ்சது அதுக்கு அப்புறம் நான் புடவை கட்டறதையே பழக்கமாக்கிக்கிட்டேன். இப்போ வரைக்கும் புடவை தான் எனக்கு வேற எந்த டிரஸூம் பிடிக்கல.. இந்த புடவைதான் எனக்கு ரொம்ப கம்பர்டெபிளான பீல் கொடுக்குது என்று கூறியளிடம்

ரிஷியோ அதனால் தானோ என்னவோ இந்த செல்லக்குட்டி பவித்ராவை இந்த ரிஷிகேஷிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பவித்ரா பொண்ணு யாருக்காகவும் எதுக்காகவும் எப்போவும் அவளை மாத்திக்க கூடாது அவளுக்கு பிடித்த டிரஸ் மட்டும் தான் கடைசி வரைக்கும் போட்டுக்கணும் அதை ரிஷி ஆசையா ரசிக்கனும் என்று உல்லாசமாக கூற.

ம்ம்... உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது என்று கூறி சிரித்த பவித்ரா உடனே குரலை சாதாரணமாக வைத்துக்கொண்டு ஆனா எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கு ரிஷி என்று கூற


என்ன அது என்று அவன் ஆச்சரியமாக கேட்டான்.

அதற்கு பவித்ரா இந்த கிஃப்டை நீங்க கொண்டு வந்து கொடுத்து இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன் உங்க தம்பி கிட்ட கொடுத்து விட்டுட்டீங்க என்றும் போலி கோபத்தை குரல் வழியாக அவனுக்கு கடத்த


அவன் சிரித்தபடி இவ்ளோ தானா பவித்ரா என் தம்பி இன்னைக்கு அங்க வந்தது ஒரு ஆக்சிடெண்ட்

உன் அம்மா கிட்ட தான் கிஃப்ட் கொடுத்து அனுப்பறதா இருந்தது ஏதோ காரணம் என் தம்பி உங்க அம்மாவை கூட்டிட்டு வந்திருக்கான்

அதை பாதி வழியிலே எனக்கு ஃபோன் பண்ணி சொன்னான் அப்போ தான் நான் அவன் கிட்ட எதார்த்தமா சொன்னேன் கிஃப்ட் பத்திரம் அதுல பவித்ராக்காக நான் ஆசையா வாங்கி வைச்ச பொருள் ஒன்னு இருக்குனு…


அதை அப்படியே உனக்கு ஏத்தது போல மாத்தி சொல்லி இருக்கான்

மொதல்ல என்ன ப்ளான்னா உன் அம்மா கிஃப்டை கொண்டுவந்து கொடுத்ததும் எல்லாத்தையும் பாத்துட்டு நீயா எனக்கு கூப்பிட்டு சொல்லுவ அப்போ நானும் உனக்கு ஒரு கிஃப்ட் அனுப்பி வைச்சிருக்கேன்னு சொல்லி அதை கண்டுபிடிக்க வைக்கனும்னு நினைச்சேன் ஆனா எல்லாத்தையும் என்னோட தம்பி கெடுத்துட்டான்
என்றவன்...

உன் கிட்டயும் சொல்லிட்டு இங்க அண்ணி ஐந்து நிமிஷத்துல கூப்பிடுவாங்க உடனே ஃபோன் எடுனு ஆர்டர் வேற போடறான்…சரி
பவி ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு ப்ளீஸ் நான் உனக்கு அப்புறமா ஃகால் செய்யவா என்று கொஞ்சியபடி கேட்க சிரித்த பவித்ரா


இதை பஸ்ட்டே சொல்லி இருக்கலாம் இல்ல நான் இவ்வளவு நேரம் உங்க வேலையை கெடுத்துட்டேன் போல சாரி என்று சொன்னவள் சந்தோஷமான மனநிலையில் அலைபேசியை அணைத்தாள்.

பிறகு அறையை விட்டு மெல்ல தலையை மட்டும் எட்டிப் பார்த்தாள் தாய்தந்தை என்ன செய்கிறார்கள் என்று

அவரின் தம்பி வந்ததும் கையிலிருந்து கிஃப்டை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடி வந்துவிட்டோம் தாய் தந்தையரிடம் ஒரு வார்த்தை சம்பிரதாயமாக கூட கேட்கவில்லை அங்கு என்ன நடந்தது என்று தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று குற்ற உணர்ச்சியில் அவர்களின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க சற்று அஞ்சினாள்

ஆனால் அவள் தாய் மேகலா இயல்பாக என்ன பவித்ரா கிஃப்ட் எல்லாம் உனக்கு ரொம்ப பிடிச்சதா அப்படி என்ன எல்லாம் குடுத்து விட்டு இருக்காங்க எனக்கெல்லாம் காமிக்க மாட்டியா என்று விளையாட்டாக கேட்டார்


ஐயோ அம்மா வந்து பாருங்க என்று கூறியவள் ஒவ்வொன்றாக எடுத்து அவளுக்கு போட்டு தாயிடம் காண்பிக்க தாய்க்கு அவ்வளவு நிறைவாக இருந்தது


பிறகு மாப்பிள்ளை ஏதோ கிஃப்ட் கொடுத்ததா சொன்னாங்க என்ன அது கண்டுபிடிச்சிட்டியா என்று கேட்க


வந்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் இந்த புடவைதான் பாருங்க அழகா இருக்குல்ல என்று காமிக்க அதைப் பிரித்துப் பார்த்தார் மேகலா அன்று அவனின் தாயும், சித்தியும் கட்டி வந்தது போலவே நிறைய கற்கள் பதித்து மிக அதிக விலை கொண்ட பட்டுப் புடவை அது இப்பொழுதே தங்களின் மகளை அவர்கள் வீட்டிற்கு ஏற்றது போல் மாற்றுகிறார்கள் என்பது புரிய தொடங்கியது சிரித்தவர் சரி எல்லாத்தையும் எடுத்து பத்திரமா வச்சுக்கோ என்று கூறிவிட்டு வெளியே வந்தார் .

வந்தவர் நாராயணனிடம் என்னங்க இன்னும் அங்க நடந்ததையே நினைச்சு மனசை போட்டு குழப்பிட்டு இருக்கீங்களா ஒரு நிமிஷம் நம்ம பொண்ணோட சந்தோஷத்தை போய் பாருங்க அங்க நாம பட்ட அவமானம் எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆயிடும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு கல்யாணத்துக்கு என்ன செய்யணும்ங்கறதுல கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என்றபடி உள்ளே சென்றாள்


நாராயணனும் அதுதான் சரி என்று பட்டது பெண்ணின் சந்தோஷத்திற்கு முன்பாக தங்களுக்கு நடந்த அவமானங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைத்துக் கொண்டு திருமணத்திற்கான அடுத்தகட்ட வேலையில் இறங்கினார் அதன் பிறகுதான் அவர்களுக்கு மேனகாவின் மூலமாக பல பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கியது.

கல்யாணம் முதலில் பவித்ரா விற்கும் கௌசிக்கிற்கும் எந்த தேதியில் முடிவு செய்யப்பட்டிருந்ததோ அதே தேதியையே குறித்து இருந்தனர் இவர்களின் பத்திரிக்கையை பார்த்த மேனகா முகத்தை சுளித்தாள் இவ்வளவு மட்டமான பத்திரிக்கையை எங்கள் உறவினர்களிடம் எல்லாம் கொடுக்க முடியாது என்று கூறியவர் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டார்கள்


பிறகு அவர் அனுப்பு வைத்த பத்திரிக்கையை அனைவருக்கும் கொடுங்கள் என்று கூறினார் சமையலில் இருந்து கல்யாண ஜவுளி இப்படி எல்லாவற்றிலுமே இவர்களுக்கு செலவை இழுத்து வைத்துவிட்டு கடைசியில் அது எதுவுமே சரியில்லை என்று கூறியவர் எல்லாவற்றையும் அவரின் விருப்பமாக பார்த்துக் கொண்டார்

திருமணத்திற்கு செலவு செய்தால் கூட நாராயணன் தம்பதியினருக்கு அவ்வளவு செலவு ஆகி இருக்காது ஆனால் முதலில் உங்கள் பங்கிற்கு நீங்கள் செய்யுங்கள் உங்கள் பங்கிற்கு நீங்கள் ஆர்டர் கொடுங்கள் உங்கள் சொந்தங்களுக்கு நீங்கள் செலவு செய்யுங்கள் என்று கூறிவிட்டு எல்லாவற்றையும் கடைசியில் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விட்டு பொறுப்புகளை அவர் எடுத்துக்கொள்ள இவர்களுக்கு கணிசமான ஒரு தொகை விரையம் ஆகி இருந்தது.


இதை ராகவ் மூலம் அறிந்துகொண்ட ரிஷி நேரடியாக அவனே திருமணத்திற்கு தேவையானவற்றை முன்நின்று செய்ய ஆரம்பித்தான்.


இதனால் விரயமானதாக எண்ணிக்கொண்டிருந்த பணம் எல்லாமே தேவையானதாக மாறி இருந்தது தம்பதியினர் எதற்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தார்களோ அதற்கெல்லாம் மீதி அதிக படியான பணத்தை கொடுத்த ரிஷி புக்கிங் செய்ததை விட கொஞ்சம் சிறப்பாக செய்யும்படி கேட்டுக்கொண்டான்.

திருமண ஏற்பாட்டாளர்களோ முதலில் ஏதோ மிடில்கிளாஸ் திருமணம் என்று சாதாரணமாக எண்ணிக் கொண்டு மெதுவாக வேலையை ஆரம்பிக்க இப்பொழுதோ அது மிகப் பெரிய குடும்பத்தின் ஆடம்பர திருமணம் என்று அவர்களுக்கு தெரிய வர மிகப்பெரிய சந்தோஷம்….


வழமையாக கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக கிடைக்கப்போகிறது என்று சுறுசுறுப்பாக எல்லாவற்றையுமே சிறப்பாக செய்து முடித்து இருந்தனர்.

குறிக்கப்பட்ட தேதியில் குறிக்கப்பட்ட நேரத்தில் மங்கல நாணை பவித்ராவின் வெண்சங்கு கழுத்தில் பூட்டி தனது மனைவியாக ஆக்கிக் கொண்டான் ரிஷிகேஷ் இதுவரை பவித்ரா நாராயணன் என்று எல்லோராலும் அறியப்பட்ட பவித்ராவை ஒரு பொன்தாலி மூலம் பவித்ரா ரிஷிகேஷ் என எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான்.


ஆடம்பரமாக நடந்த திருமணம் அதன் பிறகு நடந்த வைபவங்களையும் இரு குடும்பத்திற்கும் பொதுவாக வைக்கப்பட்ட வரவேற்பு என மூன்று நாட்கள் கோலாகலமாக நடந்து முடிந்தது பவித்ரா ரிஷிகேஷில் திருமண வைபவங்கள்.

பெண்ணின் திருமணம் எந்த ஒரு தடங்கலும் இன்றி நல்லபடியாக நடந்து முடிக்க பவித்ராவின் குடும்பத்திலிருந்து மூவருமே நிம்மதியுடன் மண்டபத்தின் ஓரத்திலேயே அமர்ந்திருந்தனர் அங்கு நடந்த அனைத்து வைபவங்களிலும் தனது மகளின் பூரிப்பையும் சந்தோஷத்தையும் கண்டு ஆனந்தக் கண்ணீரால் அவர்கள் ஆசீர்வதித்துக் கொண்டிருக்க மேனகா ராதா இருவரும் தம்பதியினரை தேடி வந்தனர்.

அவர்களைப் பார்த்து இருவருமே எழுந்து நின்று கை எடுத்து கும்பிட்டு நன்றி தெரிவிக்க மேனகாவும் பதிலுக்கு கை எடுத்து கும்பிட்டு விட்டு மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.

இங்க பாருங்க அண்ணா உங்க பிள்ளைகளோட திருமணம் நல்லபடியா நடத்தி முடித்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் பவித்ரா நாங்கள் எதிர்பார்த்தது போல இல்லை அதைவிட ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு அவ எங்க குடும்பத்தோட ஈஸியா பிளெட்ஞ் ஆயிட்டா…

சந்தோஷம்ங்க உங்க வாயால எங்க மகளைப் பற்றி இப்படி ஒரு வார்த்தையை கேட்க நாங்க புண்ணியம் செஞ்சிருக்கணும் நன்றிங்க என்று இருவரும் மீண்டும் சந்தோஷத்தில் அவர்களை பார்த்து கை கூப்பி நன்றி தெரிவிக்க

விடுங்க அண்ணா எத்தனை முறை நன்றி தெரிவிப்பீங்க நீங்க உண்மையிலேயே பவித்ரா ரொம்ப நல்லா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து பவித்ராவை பாக்குறது கொஞ்சம் தவிர்க்கனும்.


அதுகிட்ட பேசுவதையும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கனும் இது எங்களுக்காக சொல்லல அப்பா பொண்ணை பிரிக்கறதுக்காகமும் நாங்க சொல்ல எல்லாத்துக்குமே காரணம் இருக்கு


பவித்ரா இங்க எங்க குடும்பத்தோட ஓட்டனும் எங்களோட குடும்ப பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளனும் எங்கள மாதிரி ஹைகிளாஸ் பீப்பில்ஸ்ஸோட அவ பழகனும் அதுக்கு அவ அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்தாலும் இல்ல நீங்க அவள அடிக்கடி வந்து சந்தித்தாலும் இதெல்லாம் பாதிக்கப்படும்


ஒரே இடத்தில் ஒருத்தர் இருக்கும் பொழுது அந்த இடத்தோட ஒத்துப் போவது சகஜம் அதே அவ உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்குள் மாறி மாறி வந்துடும் போய்ட்டும் இருந்தா அவளால இரண்டையுமே எடுத்துக்க முடியாது எல்லாமே அரைகுறை ஆயிடும்


ரிஷி போற பார்ட்டிஸ் அவன் சந்திக்கிற மக்கள் எல்லாருமே ஹை கிளாஸ் ஆனால் பவித்ரா ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு அவளை எங்க குடும்பத்துக்குள்ள கொண்டு வர கொஞ்ச நாள் ஆகும் அது வரைக்கும் நீங்க அவள வந்து சந்திக்கிறதை அவாய்ட் பண்ணுங்க... அதிகமா எல்லாம் வேணாம் ஒரு வருஷம்... இல்லனா ஒரு ஆறு மாசம் மாதிரி போதும்...


உங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்கும் எனக்கு புரியுது ஆனா வேற வழி தெரியல...நீங்க வேணா இப்படி நினைச்சுக்கோங்க பொண்ணை வெளிநாட்டுக்கு கட்டி கொடுத்திருக்கறோம்னு...அப்போ உங்களால இதை ஏத்துக்க முடியும்...ப்ளீஸ்... எங்களுக்கு இது மட்டும் பண்ணி கொடுங்க என்று தன்மையாக மேனகா கேட்க தம்பதியினர் இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு யோசித்துப் பார்த்தனர்.

அவர்கள் சொல்வது உண்மைதானே திருமணம் செய்து அங்கு போன பிறகு தங்களைப் போல கீழ்தட்டு மக்களுடன் பழகினால் பவித்ராவால் இயல்பாக மேல்தட்டு மக்களுடன் பழக கஷ்டம் இருக்கும் அதனால் சம்மந்தி சொல்வது சரிதான் என்று புரிந்தவர்கள் ஆகட்டும் நாங்க பார்த்துக்குறோம் என்று கூறி விட்டு அங்கிருந்து விடை பெற்றுச்சென்றனர்‌

மேனகாவின் சூழ்ச்சி அவர்களுக்கு தெரியாமல் இல்லை ஆனாலும் மகள் ஒரு ராஜ வாழ்க்கை வாழும் பொழுது தாங்கள் இந்த கஷ்டத்தை தெரிந்து அனுபவிக்கலாம் என்று நினைத்தனர்…


மேனகாவின் பெண் விஜியை பிரிந்து இருக்க முடியாது என்று பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது போல் கொடுத்து விட்டு மெதுவாக பெண்ணையும் மாப்பிள்ளையையும் தங்களுடனே அழைத்துக்கொண்டார் மேனகா இந்த விஷயம் தம்பதியினருக்கு நன்றாகவே தெரியும் மேல்தட்டு மக்களின் பாசம் மட்டும் உசத்தி தங்களைப்போல் கீழ்த்தட்டு வர்க்கத்தின் பாசம் மட்டும் கீழ்மையா
என்று கூட தோன்றியது….

ஆனால் வெளிப்படையாக அவர்களால் மேனகாவை பார்த்து கூற முடியவில்லை பெண்ணைப் பெற்றவர்கள் ஆயிற்றே…அதனால் இருவரும் மௌனமாகவே ஒத்துக் கொண்டனர்.

மேனகா சொல்வது போல் தங்களின் பெண்ணை வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தால் தங்களால் கண்டிப்பாக ஒர் ஆண்டுவரை மகளை நேரில் பார்க்க முடியாது அப்படி நினைத்துக் கொள்ளலாம்
கிட்டத்தட்ட அதே போல தானே இவர்களும் தங்களிடம் கோரிக்கை வைக்கின்றனர் என்று கணவனும் மனைவியும் மௌனமாக வீடு வந்து சேர்ந்தனர்.வீட்டிலோ பவித்ரா இல்லாதது அவர்களுக்கு மிகப்பெரிய வெறுமையை கொடுத்தது.


ஆனால் ரிஷியின் வீட்டிலோ பவித்ரா ஒரு நிறைவை கொடுத்தாள். அவர்கள் வீட்டில் யாருக்குமே கொலுசு அணிந்து பழக்கம் கிடையாது ஆனால் பவித்ராவோ நிறையச் சலங்கைகள் வைத்த ஒரு கொலுசை அணிந்து கொண்டு வீடு முழுவதும் வலம் வர அந்த வீடு முழுவதுமே பவித்ராவின் சலங்கை ஒலியில் நிறைந்திருந்தது.

அந்த சலங்கை சத்தம் சங்கீதமாக ஆண்களின் காதுகளில் ஒலிக்க மூத்தவர்கள் இருவருக்குமே தங்கள் மனைவிமார்கள் இது போல் அணிந்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு ஏக்கம் பிறந்தது இளையவரான ராஜன் ஒரு படி மேலே போய் கட்டினவளுக்குத் தான் இது போன்ற விஷயத்தில் நாட்டம் இல்லை என்றால் பெற்ற பெண்ணான ராகவிக்கும் இதெல்லாம் தோன்றவில்லையே என்ற கவலையும் வந்தது ஆனால் பவித்ராவின் வரவு தனது மகளின் வாழ்க்கையை சற்று மாற்றும் என்று நம்பினார்.

நிஜமாகவே அந்த வீட்டின் பவித்ராவின் வரவிற்குப் பிறகு நிறைய மாற்றங்கள் வரத்தான் செய்தது ரிஷியின் வாழ்க்கையிலும் தான் ராகவி பவித்ராவின் புடவைகட்டும் அழகையும் அவள் அணியும் நகைகளை தனியாக ரசிக்க ஆரம்பித்தாள் .


ஆரம்பத்தில் பவித்ராவை ஏதாவது ஒன்று சொல்லி மட்டம் தட்டினால் கூட எதையுமே கண்டு கொள்ளாத அவளின் பாங்கு அனைவரையுமே ஈர்த்தது.


ரிஷி திருமணமான அன்றே முதலிரவின் போது அவளிடம் ஒரு வாக்குறுதியை வாங்கிவிட்டான் தனது வீட்டில் என்ன நடந்தாலும் பெண்களுக்குள் ஏதாவது ஒரு வாக்குவாதம் ஏற்பட்டாலும் அதை கண்டிப்பாக தன்னிடம் கொண்டு வரக்கூடாது அதுமட்டுமின்றி அவர்கள் ஏதாவது ஒன்று கூறினாலும் நீ அதை பெரியதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று


பொதுவாகவே பவித்ரா எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளும் ரகம் கிடையாது அவளுக்கு வேண்டியது கிடைத்தால் போதும் மற்ற விஷயங்களில் அவள் தலையிட மாட்டாள்.

தாய் வீட்டிலும் அவள் அப்படித்தான் அதனால் ரிஷி கேட்டவுடன் உடனடியாக சரி என்று சம்மதத்தை கூறிவிட்டாள் அந்த வீட்டில் தனக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது ரிஷியின் அன்பு மட்டுமே என்று கூறினாள்…

தனது காதல் மனைவியின் மீது அன்பு செலுத்துவதில் ரிஷிக்கு என்ன கஷ்டம் அவன் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்
ரிஷியின் அன்புபில் அவள் திக்குமுக்காடி கொண்டிருக்கிறாள்.

எந்த அளவிற்கு என்றால் திருமணம் முடிந்து ரிஷப்ஷனில் போது தனது தாய் தந்தையை பார்த்தது அதன்பிறகு மறுநாள் தங்களை கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக தங்களின் வீட்டிற்கு வந்தனர்.


அதன்பிறகு இரண்டு நாள் கழித்து மறுவீடு சடங்கு என்று அவளையும் ரிஷியையும் அழைத்துச் சென்றனர். பெரியதாக அவர்கள் தங்களிடம் பேசிக் கொள்ளாவிட்டாலும் விருந்தை அமர்க்களப் படுத்திருந்தனர் அதன்பிறகு இன்றுவரை தாய் தந்தை அவளை ஃபோனில் கூட அழைத்ததாக ஞாபகமில்லை …


வீட்டுக்கு வரவில்லை இவளும் தாய் தந்தையை தேடிச் செல்லவில்லை திருமண மயக்கத்தில் ரிஷியின் அன்பில் கட்டுண்டு கிடக்கிறாள் பவித்ரா.

பவித்ராவிற்கு தாய் வீட்டு ஞாபகம் வந்து விடக்கூடாது என்று மேனகாவும் ராதாவும் மிகவும் மெனக்கெடுகின்றனர்.

தினமும் ரிஷி அலுவலகம் சென்ற பிறகு அவர்கள் செல்லும் ஏதாவது ஒரு இடத்திற்கு பவியை அழைத்துச் செல்வது அவர்கள் சந்திக்கும் மேல்தட்டு மக்களிடம் அவளை அறிமுகப்படுத்தி இவர்களைப் போல் அவர்களிடம் பேச வைப்பது என்று அவர்கள் வீட்டு மருமகளே அவர்கள் குடும்பத்திற்கு ஏற்றபடி தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.


தினம்,தினம் புத்தாடைகள் விதவிதமான நகை நட்டுகள்... ரிஷியின் அன்பு... இரவில் அவன் நடத்தும் மாயாஜாலங்கள் இப்படி பவித்ராவின் உலகமே மாறி இருந்தது.

தாய் தந்தையை பற்றி அவ்வப்போது நினைத்தால் கூட அதைப்பற்றி மாமியாரிடமோ இல்லையென்றால் கணவரிடமோ கூறும் பொழுது இந்த வாரக் கடைசியில் செல்லலாம் என்று மட்டும் கூறுகின்றனர்.
ஆனால் அது எந்த வாரம்தான் என்று தெரியவில்லை.


பவித்ரா தனது வாட்ஸ் அப்பில் வைக்கும் ஸ்டேட்டஸ் பார்த்தே பவித்ராவின் தாயும்,தந்தையும் மனநிறைவு பெறுகின்றனர்.

இதோ திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இவள்தான் தாயிடம் சில சமயம் ஃபோனில் அழைத்து பேசுகிறாள் தாயோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உடனடியாக கட் செய்து விடுகிறார்...


வெங்கட் தான் இவளிடம் தேவை இல்லாததைப் பற்றி பேசி வம்பு இழுப்பான்.உனக்கு என்ன பவி அங்க போனதும் எங்களையெல்லாம் மறந்திட்ட...நான் உன்னோட தம்பி நியாபகம் இருக்கா...இல்ல மறந்துட்டியா?


உனக்கு பொறந்த வீடுனு ஒன்னு இருக்கு..
அங்க தான் இருபது வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ந்த…அது உங்க வீட்டு கார் செட் அளவுக்கு கூட இருக்காது... அதுக்காக இங்க வராமலேயே இருந்துருவியா…


சும்மா வம்பு இழுக்காத வெங்கட் அவர் எப்ப பார்த்தாலும் ஆபீஸ் வேலைல பிஸியா இருக்காரு... இங்க ஆன்ட்டி டெய்லி என்னை எங்காவது ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போயிட்டாங்க... அப்படி இருக்கும் போது நான் எப்படி அங்க வர முடியும் நீ வெட்டியா தான வீட்ல இருக்க நீ வந்து என்னை பார்த்துட்டு போலாம் இல்ல இல்லன்னா அம்மா அப்பாவை ஆவது இங்கே வர சொல்லு என்று அவனிடம் சண்டையிடுவாள்…


ம்ம்...நா வெட்டியா இருக்கேன் நீ பாத்த இல்லையா பவி...என் படிப்பு என் கழுத்தை நெரிக்கிது... நானாவது உனக்கு கூப்பிட்டு பேசுறேன் நீ என்னைக்காவது எனக்கு கூப்பிட்டு பேசுறியா... அம்மா, அப்பா ,என்னை, மறக்கற அளவுக்கு உன் கல்யாண வாழ்க்கை உன்னை மாத்திடுச்சு இல்லையா பவித்ரா... நல்லா கேட்டுக்கோ நீயா என்னைக்கு எங்களை தேடி வரியோ அதுக்கப்புறம் தான் நான் உன் வீட்டுக்கு வருவேன் அதுவரைக்கும் உன் வீட்டுக்கு வரமாட்டேன்... முதல்ல ஃபோன் வை என்று கோபமாக ஃபோனை வைத்தான்.

இப்பொழுது வெங்கட் எம்இ முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான் இன்னும் ஓராண்டு படித்து முடிந்தால் போதும் அவனுக்கான வேலை அவனது கையில் அதனால் அக்காவை சென்று பார்க்க கூட அவனுக்கு நேரம் அமைவதில்லை


அவளை இங்கு வா என்று அவ்வப்போது கூப்பிடுவான்... பதிலுக்கு பவித்ரா காரணம் சொல்ல இப்பொழுது அதிகமாக அவளை அழைப்பது இல்லை…

தம்பி வெங்கட் பேசி முடித்த பிறகு பவித்ராவிற்கு முதல்முறையாக ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது ஆம் திருமணமாகி இரண்டு மாதங்கள் முடிவடையப் போகிறது தான் இதுவரை தாய் வீட்டிற்குச் செல்லவில்லை மறுவீடு விருந்திற்கு மட்டும்தான் சென்று வந்திருக்கிறாள்.


தனது தாய், தந்தை தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்...கண்டிப்பாக இந்த வார இறுதியில் தாய் வீட்டிற்கு சென்று வந்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு ரிஷியிடம் அனுமதி கேட்க அவனும் இந்த வாரக் கடைசியில் உன்னை அழைத்துச் செல்கிறேன்... இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வா என்று கூறி விட்டான்.

ரிஷிக்கும் பவித்ராவை நினைத்து ஆச்சரியம் கலந்த சந்தோஷம் உண்டு சந்தோஷத்திற்கு காரணம் திருமணமாகி இரண்டு மாதங்கள் முடியப்போகிறது இதுவரை அவள் தன் தாய் வீட்டிற்கு கூட்டிச் செல் என்று தொந்தரவு செய்ததே கிடையாது அது சந்தோஷம்... எத்தனை ஆண்களுக்கு இதுபோல் ஒரு மனைவி கிடைப்பாள்.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு பெண்ணால் திருமணமாகி இங்கு வந்தவுடன் தனது தாய் வீட்டினரை ஒரேடியாக தலை முழுக முடியும்.

தனது அக்கா எல்லாம் தாயை மறக்க முடியாமல் இங்கு வந்து அழுது கணவரையும் அல்லவா இங்கே கூப்பிட்டு வைத்துக் கொண்டாளா ஆனால் பவித்ராவும் தாய் வீட்டையே மறந்து விட்டாளே என்று ஆச்சரியம்.


கணவனின் சம்மதத்தில் பவிக்கு தலைகால் புரியவில்லை.அவ்வளவு சந்தோஷம்...தாய்க்கும் அழைத்து கூறிவிட்டாள்...தான் வரப்போகிறேன் என்று…

அவள் எதிர்பார்த்த வார இறுதி நாளை தான் அதனால் தாய் வீட்டிற்குச் செல்லும் பொழுது தாய் தந்தை தம்பி என அனைவருக்கும் பரிசு பொருட்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறாள்.

அனைவருக்கும் நேரடியாக இதை கொடுத்து அவர்களின் முக மாற்றத்தைக் கண்டு தான் சந்தோஷப்பட வேண்டும் என்று ஆனால் விதி வலியது அல்லவா அவள் நினைத்ததை எப்படி நடக்க விடும்...

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
13

மறுநாள் காலையிலேயே கிளம்பி தாய் வீட்டிற்கு செல்ல பவித்ரா காத்திருக்க ரிஷி வெளியில் சிறு வேலை ஒன்று இருப்பதாகவும் அரை மணி நேரத்தில் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூற பவித்ரா அவனுக்காக காத்திருந்த நேரத்தில் சிறு அயர்ச்சி வந்தது…


அப்படியே படுக்கையில் சாய்ந்தவளுக்கு அரை மணி நேரம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை யாரோ தனது கன்னத்தை பலமாகத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள் பவித்ரா... பவித்ரா...என்னாச்சி கண்ணைத்திற என்று.

கஷ்டப்பட்டு விழிகள் திறக்க விழிகள் அவளுக்கு கட்டுப்பட மறுக்கிறது.

கண்ணைத் திறக்காமலே எனக்கு என்னவோ மாதிரி இருக்கு என்று உதடுகளை அசைக்க யாரோ அவளின் உதடு மீது காதுகளை வைத்துக் கேட்கிறார்கள் சொல்லு என்ன பண்ணுது உனக்கு என்று அதற்குள்ளாக மருத்துவர் வந்து விட மருத்துவரிடம் மேனகா கூறுவது தெளிவாக கேட்கிறது ...


என்னன்னு தெரியல டாக்டர் ரொம்ப நேரமா இப்படித்தான் எந்த அசைவும் இல்லாமல் படுத்து கிடக்கறா என்று பதட்டத்துடன் மாமியாரின் குரல் கேட்கிறது


கவலை தொய்ந்த குரலில் ரிஷி வெளிய போயிட்டு வந்தேன் டாக்டர்... பார்த்தா இப்படி படுத்திருக்கா ஜஸ்ட் தூங்குறானு நினைச்சுட்டு எழுப்பினா எந்த அசைவும் இல்லை பயம் வந்து உங்களை கூப்பிட்டேன் தண்ணி தெளிச்சி கூட அசைவில்ல கொஞ்சம் என்னன்னு பாருங்க டாக்டர் .

அந்தப் பெண் மருத்துவரோ சரி நான் என்னன்னு பாக்குறேன் எல்லாரும் கொஞ்சம் வெளிய இருங்க எனக்கு ஹெல்ப்க்கு மட்டும் மேனகா நீங்க என்னோடு இருங்க என்று கூறினார்.

பிறகு பவித்ராவை பரிசோதித்த டாக்டர் மேனகாவை பார்த்து என்ன மேனகா மருமகளுக்கு நீ சரியா சாப்பாடு போடறது இல்லையா என்று உரிமையாக கேட்டார் பெண் மருத்துவரும் மேனகாவும் பள்ளி தோழிகள்…

விளையாடாத காயத்ரி என்ன ஆச்சு அவளுக்கு முதல்ல அதை சொல்லு என்று மேனகா தனது தோழியிடம் உரிமையாக கடிந்துகொண்டார்.


எல்லாம் நல்ல விஷயம்தான் உன் மருமக மாசமா இருக்கான்னு நினைக்கிறேன் என் அனுபவத்தில் சொல்கிறேன் ஆனாலும் சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணும் அது இங்க வச்சு முடியாது ரொம்ப அனிமிக்கா இருக்கா அவ எழறதுற்காக இன்ஜக்ஷன் போட்டிருக்கேன் அவ ரெடி ஆனதுக்கு அப்புறம் ஹாஸ்பிடல் வந்து பாக்க சொல்லு சரியா...


உடனே இந்த வயசிலேயே பாட்டி ஆயிட்டேனேனு இப்பவே மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சுடாத... இன்னும் ரெண்டு நாள் கழிச்சுதான் கன்ஃபார்மா சொல்ல முடியும் என்று சந்தடி சாக்கில் மேனகாவை வாரி விட்டு வெளியே வந்தார்.


கவலையாக எதிர்கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை கன்சிவா இருக்கா... எதுக்கும் ஒரு டெஸ்ட் எடுத்து பாத்திடலாம்..என்றவர்

ரிஷியை பார்த்து ஆல் தி பெஸ்ட் மை சன் ஹனிமூன் போகாமலே வேலைய கரெக்டா பார்த்திருக்க வாழ்த்துக்கள் என்று கிண்டல் செய்தவர் முகத்தை சிரியஸாக வைத்தபடி அப்புறம் ரிஷி உன் வைஃப் ரொம்ப வீக்கா இருக்கா... நல்லா பாத்துக்கோ அவ எழுந்ததும் நல்லா சாப்ட வச்சி ஹாஸ்பிடல் கூட்டிட்டு வா என்று கூறிவிட்டு சென்றார்...

ரிஷிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்ன மாதிரியான உணர்வு இது மனைவி கர்ப்பமாக இருப்பதை நினைத்து சந்தோசப் படுவதா இல்லை அவள் உடம்பு மிகவும் வீக்காக இருக்கிறது என்று டாக்டர் சொன்னதற்காக கவலைப்படுவதா என்று தெரியவில்லை.

அதற்குள்ளாக ராதா,மேனகா,ராகவி என அனைவரும் பவித்ராவை பார்ப்பதற்காக உள்ளே சென்றனர். சித்தப்பா ராஜனும் ரிஷியின் தந்தையும் அவனைக் கட்டியணைத்து வாழ்த்துச் சொல்லி விட்டு செல்ல ராகவ் சந்தோஷத்தில் அண்ணா நான் சித்தப்பா ஆயிட்டேன் என்னை சித்தப்பானு கூப்பிட இந்த வீட்டுக்கு ஒரு குட்டிப்பையன் வரான் என்றவன் அண்ணனை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.

டே போதும்டா இறக்கி விடு என்று தமையனை அன்பாக கண்டித்த ரிஷி இந்த விஷயத்தை உடனடியாக அத்தை, மாமாவிற்கு சொல்லவேண்டும் என்று அவர்களை அழைத்துக் கூறினான்.


ஹலோ அத்தை நான் ரிஷி பேசுறேன்….

சொல்லுங்க மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க ?பவித்ரா எப்படி இருக்கா? எப்ப வரீங்க ?எல்லாம் தயாரா இருக்கு... உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கோம் என்று கூறியவரிடம்

அத்தை மன்னிச்சிடுங்க இன்னைக்கு வர முடியாது இன்னிக்கு மட்டுமில்ல இன்னும் கொஞ்ச நாளைக்கு வர முடியாது நீங்க வேணா வந்து பவியை பார்த்துவிட்டு போங்களேன் என்று சொல்ல..

ஏன் மாப்பிள்ளை... இன்னிக்கு வர முடியாது...இங்க நாங்க எல்லாருமே பவித்ராவையும் உங்களையும் பாக்குறதுக்காக ஆசையோட காத்துகிட்டிருக்கோம்…

அதனாலதான் அத்தை போன் பண்ணி சொன்னேன் எங்களுக்காக காத்திருக்காதீங்கனு...முடிஞ்சா நீங்க எல்லாரும் இங்க கிளம்பி வாங்களேன்…நான் கார் அனுப்பி வைக்கிறேன்….

அது முடியாது மாப்பிள்ளை வெங்கட்டுக்கு நாளைக்கு முக்கியமான பரிட்சையாம் அவனுக்கு பக்கத்தில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருக்கா ஏதாவது சூடா வெச்சு குடுத்தா தான் படிப்பான் இல்லன்னா தலைவலின்னு படுத்துப்பான்…

சரி மாப்பிள்ளை ஏதோ பேச்சுவாக்கில் சொன்னீங்க இன்னைக்கு மட்டும் இல்ல இன்னும் கொஞ்ச நாளைக்கு வர முடியாதுன்னு ஏன் மாப்பிள்ளை அப்படி... உங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா?


அய்யோ அத்தை எங்க அம்மா ஒன்னும் சொல்லலை உங்க பொண்ணு தான் அம்மாவாக போறாளாம் கொஞ்சம் வீக்கா இருக்காளாம் நல்லா பார்த்துக்கோங்கனு டாக்டர் சொல்லிட்டு போறாங்க என்று கூறிவிட்டு சரி அத்தை நான் ஃபோனை வைக்கிறேன் என்று ஃகாலை கட் செய்தான் அவன் சொன்னதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட மேகலாவுக்கு

சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை தனது கணவரிடம் சொன்னவர் வாங்க ஒரு எட்டு போய் மகளை பார்த்துட்டு வரலாம் என்று கூப்பிட அவரோ என்ன மேகலா மறந்துட்டியா கல்யாணம் முடிஞ்சு சம்மந்தி அம்மா நம்மகிட்ட என்ன சொல்லி அனுப்பினாங்க….


அவங்க வீட்டுக்கு நாம போகனும்னா அவங்களே வந்து நேரடியா கூப்பிடற வரைக்கும் நாம அவங்க வீட்டுக்கு போகக்கூடாது புரியுதா…

அதுதான் பவித்ராவை சுத்தி அத்தனை பேர் இருக்காங்களே அவங்க பாத்துப்பாங்க என்று கூறிவிட்டு உள்ளே செல்ல தாய் மேகலா விற்கு மனது கேட்கவில்லை...


மகள் பாவம் மசக்கையால் எவ்வளவு கஷ்டப்படுகிறாளா... அவளுக்கு முடியவில்லை என்று மாப்பிள்ளை சொன்னாரே...வாந்தி அதிகமாக இருக்குமோ?... இல்லை என்றால் தலைசுற்று அதிகமாக இருக்குமா ?எத்தனை நாள் என்று தெரியவில்லையே... அவளுக்கு யாராவது ஆரம்பகால கர்ப்பத்தை கையாள்வது எப்படி என்று சொல்லித்தருவார்களா?இல்லை அவர்கள் வீட்டின் வழக்கம் என்று யாருமே அவளுக்கு தைரியம் சொல்லாமல் அவளை அம்போ என்று விட்டு விடுவார்களோ என பலவிதமாக நினைத்து மனம் கவலைப்பட தொடங்கியது.

கணவருக்குத் தெரியாமலாவது மகனை அழைத்துக் கொண்டு அவளைப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று வெங்கட்டிடம் வாடா அக்கா இன்னைக்கு வரலையாம் நாம போய் பாத்துட்டு வரலாம் என்று கேட்க


அவனோ சந்தோஷம்... மகாராணிக்கு நம்ம வீட்டுக்கு வர நேரமில்லையா அப்படியே அவ வீட்டிலேயே உட்கார்ந்துகிட்டும்..
நாளைக்கு எனக்கு முக்கியமான எக்ஸாம் இருக்கு ரெண்டு நாளா அவ வர்றானு என்னை ஃபுல்லா வேலை வாங்கி படிக்க விடாம பண்ணிட்டீங்க

இப்பதான் வரலைனு சொல்லிட்டாங்கல்ல ...போங்க போய் சமைச்சு வைச்சதை யாருக்காவது கொடுக்க முடியுமானு பார்த்து காலி பண்ணுங்க ஃபுட் வேஸ்ட் பண்ணாதீங்க…என்று கோபமாக கூறும் வெங்கட்டிடம் மேனகா தன்மையாக இல்லடா அவ ஏன் வரலங்கற விஷயம் தெரிஞ்சா நீ இப்படி எல்லாம் பேச மாட்ட….

தெரியவே வேணாம்... ம்மா...ப்ளீஸ்மா என்னை படிக்க விடுங்க முக்கியமான எக்ஸாம் என்று கூறுபவனிடம் மேற்கொண்டு என்ன சொல்லி அவனை கிளப்ப என்று வெளியேறினார்...

அவர் நினைத்தால் தனியாக ஒரு வாடகை வாகனத்தில் சென்று பார்த்து விட்டு வரலாம் அப்படி இல்லை என்றால் மகனிடம் முதலிலேயே உனது அக்கா தாய்மை அடைந்து இருக்கிறாள் வா என்று கூப்பிட்டு இருந்தால் அவனே முதல் ஆளாக கிளம்பி இருப்பான் இவர் மகனின் தான்எப்படி இந்த விஷயத்தை கூறுவது என்று தயங்கிக் கொண்டு அவனிடம் பவித்ரா மாசமாக இருப்பதை கூறவில்லை தனியாக சென்றால் கணவரின் பேச்சை மீறியது போல் ஆகிவிடும் என்று மகனிடம் வந்தால் அவன் எரிந்து விழுகிறான்.

தனது மகள் தாய்மை அடைந்து இருக்கும் இந்த நேரத்தில் கூட தன்னால் பெற்று மகளைப் பார்க்க முடியவில்லையே என்று கவலையில் சூடான கண்ணீர் கண்களை விட்டு வெளியே வந்தது அதை யாருக்கும் தெரியாமல் நாசுக்காக துடைத்துக் கொண்டவர் பூஜை அறைக்குச் சென்று கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளக்கு போட்டு மகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று வேண்டிக் கொண்டார்.

பவித்ரா சற்று நேரத்தில் விழி திறக்க குடும்பமே அவளை கையில் வைத்துத் தாங்க ஆரம்பித்தது கட்டிலை விட்டு கூட கீழே இறங்க வேண்டாம் என அவளை கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்


ஆனால் மருத்துவமனை செல்ல வேண்டும் அல்லவா அவள் நடந்தாள் அவள் உடம்பிற்கு ஏதாவது ஆகிவிடும் என்று ரிஷி மாடியில் அவர்களது அறையில் இருந்து கீழே கார் வரை பவியை இருகையிலும் குழந்தையை தாங்குவது போல தூக்கி வந்து அவளை அமர வைத்தான்.

அவளுக்குதான் அவ்வளவு சங்கோஜம் ஆனால் ரிஷியின் வீட்டில் யாருமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...பதிலாக ரிஷியிடம் ஆயிரம் அறிவுரைகள் அவளை பத்திரமாக அழைத்துச் செல் அசைய விடாதே என்று…



ரிஷி அவனது காரில் பவித்ரா அவனின் தாய், சித்தி என மூவரையும் அழைத்துக் கொண்டு செல்ல பின்னால் மற்றொரு காரிலோ மீதி இருந்த அத்தனை உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு அவர்களின் காரின் பின் செல்ல ஆரம்பித்தனர்.

பவித்ராவின் மீது அவ்வளவு அன்பா என்று கேட்டால் யாருக்கும் பதில் தெரியாது ஆனால் அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் மீது அவர்களுக்கு எல்லாம் அவ்வளவு அன்பு அது அந்த வீட்டின் முதல் வாரிசு அல்லவா?

மருத்துவமனையில் சில சோதனைகளுக்கு பிறகு அவள் தாய்மை அடைந்திருப்பதை உறுதி படுத்திய மருத்துவர் ரிஷியிடம் தனிமையில் பவித்ரா மிகவும் வீக்காக இருப்பதாகவும் முதல் ஐந்து மாதம் முடியும் வரை அவள் படி ஏறி இறங்குவது கார் பயணம் மேற்கொள்வது எல்லாமே ஆபத்தானது அதனால் அவளை முடிந்த அளவு நன்றாக ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

அவளைத் தேவையில்லாமல் டென்ஷன் ஆக்குவது கோபப்படுவது எல்லாம் தவிர்க்கச் சொன்னார் எந்த அளவு அவள் ஓய்வு எடுக்கிறாளோ அந்த அளவு தாய் சேய் இருவருக்குமே நல்லது அவள் வயிற்றில் இருக்கும் கருவிற்கு இப்பொழுதுதான் நாற்பதுநாள் ஆகிறது இது ஆபத்தான காலகட்டம் அவளை கவனமாக பார்த்துக் கொள்வது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பு என்று கூறியவர் அவளுக்கு தேவையான சத்து மாத்திரைகளையும் கரு தங்குவதற்கான சில மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.


குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே பவித்ரா கருவுற்றிருப்பது சந்தோஷம் என்றால் டாக்டர் கூறிய சில விஷயங்கள் அவர்களுக்கு கவலையைக் கொடுத்தது அதனால் பவித்ராவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களுமே அவர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பவித்ராவிற்கு சேவகம் செய்ய காத்திருந்தனர்.


ஆனால் பவித்ராவின் அடி மனதில் தாயை காண வேண்டும் என்று ஏக்கம் நிறையவே இருந்தது தாய் வீட்டிற்குச் செல்ல முடியவில்லையே என்ற கவலையில் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது

மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வந்த ரிஷி அவளிடம் என்ன ஏது என்று விசாரிக்க பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருந்து விட்டால்.

அவளுக்கு தான் மனதில் இருப்பவற்றை வெளிப்படையாக கூறும் பழக்கம் கிடையாதே.

எல்லாமே தனக்கு சாதகமாக அதுவாகவே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள் திருமணத்திற்கு முன்பு கூட கவுசிக் விஷயத்தில் அப்படித்தான் அவள் நடந்து கொண்டாள்…

அந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல எப்போதுமே அவளின் குணம் அதுதான் அவளுக்கு வேண்டியவை அதுவாகத்தான் தானாக வந்து அவளிடம் சேரவேண்டும் இவளாக எதையுமே கேட்டோ, போராடியோ பெற மாட்டாள்.


அவளுக்கு தனது மனதை கணவனே புரிந்து கொண்டு தனது தாயை சென்று அழைத்து வர வேண்டும் இல்லை என்றால் தாய் அவளை வந்து பார்க்கவேண்டும் என்று நினைத்தாளே தவிர தாய்க்கு ஒரு ஃபோன் செய்து அம்மா உன்னை பார்க்க வேண்டும் வா என்று கூற தோன்றவில்லை.


அப்படி கூறியிருந்தாள் மேகலா அவரை சுற்றி இருக்கும் அனைத்து வேலிகளையும் தாண்டி நேராக மகளிடம் ஓடி வந்து இருப்பார்...

இல்லை ரிஷியிடம் ஜாடையாக கேட்டிருந்தால் கூட ரிஷி உடனே சென்று அவளின் தாய், தந்தை, தம்பி என அனைவரையும் அழைத்து வந்து இருப்பான் ஆனால் அவளோ மனதில் இருப்பதை வெளிக்காட்டாமல் மௌனமாக மனதிற்குள் வைத்துக் கொண்டே இருக்க மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த நாள் முதல் கருவுற்ற தாய்மார்களுக்கு வரும் மார்னிங் சிக் அதாவது காலை வேலை தலைச்சுற்றல், வாந்தி,அதிக உடல்சோர்வு என சற்று அதிகமாகவே பவித்ராவிற்கு இருந்தது .


எப்பொழுதுமே படுத்துக்கொண்டே அரை உறக்கத்தில் இருக்கிறாள் சாப்பிட எதுவுமே பிடிக்கவில்லை என்ன கொடுத்தாலும் உடனடியாக வாந்தி எடுத்து கலைத்து விட இதில் தாயை எங்கிருந்து நினைக்க…?


இங்கு மேகலாவிற்கோ மகள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடியாத பதட்டம் எப்பொழுது மகளுக்கு அழைத்தாலும் அவள் ஃபோனில் ஃகால் அட்டென்ட் செய்யப்படுவதே இல்லை.


ரிஷிக்கு அழைத்தாலோ ஒன்று ஆபீஸில் இருப்பான் அப்படி இல்லை என்றால் பவித்ரா உறங்கிக் கொண்டிருக்கிறாள் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடுங்கள் என்று வைத்துவிடுகிறான்.

மேனகா வேறு அவர்கள் வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறியதால் எப்படி செல்வது அவர்கள் அழைத்தாள் கூட பரவாயிலாலையே என்று மேனகாவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் வெங்கட்டுக்கு மேனகா கூறியது தெரியாததால் அவன் எதேச்சையாக ஒரு நாள் பவித்ராவை காண சென்றான் வெங்கட்டை பார்த்ததும் ரிஷியின் குடும்பத்தினர் எதையும் காட்டிக்கொள்ளவில்லை நன்றாகவே உபசரித்தனர்…

பவித்ராவை நேராக சென்று பார்க்க அவள் மிகவும் சோர்வாக கண்மூடி சாய்ந்து இருந்தால் அவனை பார்த்ததும் சந்தோஷத்தில் எழுந்து அமர்ந்தவள் எதுவுமே பேசாமல் அவனை கட்டி பிடித்து ஆட தொடங்கினாள்.

ஏன்டா கல்யாணம் பண்ணி கொடுத்ததும் அக்காவை அப்படியே தலைமுழுகிட்டல்ல ஒன்னாவே வளர்ந்தோம்... ஒன்னா சாப்பிட்டோம்..அதையெல்லாம் மறந்துட்டல்ல


ஸ்கூல் கூட்டிட்டு போக,நீ ஆசைப்பட்டதை சமைத்து தர
உனக்கு நான் தேவைப்பட்டேன்.
கல்யாணமானதும் உனக்கு தான் தேவை இல்லாதவளா ஆகிட்டேன் இல்ல நான் அங்க வந்தா தான் என்னை தேடி வருவியா நீயா என்னை தேடி வர மாட்டியா என்று தம்பியிடம் சண்டையிடத் தொடங்கினாள்.

ஐயோ அப்படி இல்ல பவி…
எனக்கு படிக்க நிறைய தராங்க அரியர்ஸ் இல்லாமல் வெளியே வந்தா தான் நல்ல வேலை கிடைக்கக்கும் அப்போத்தானே என் மருமகனுக்கு நான் நிறைய தாய்மாமன் சீர் செய்ய முடியும் சொல்லு அதனாலதான் உன்னை வந்து பாக்க முடியல உன்ன சுத்தி இத்தனை பேர் இருக்காங்க எங்களை விட நல்லா பாத்துக்கும் போது நான் வந்து பார்த்து தான் என்ன ஆகப்போகுது உன் மேல இருக்கற பாசம் அப்படியேதான் இருக்கு பவி என்று அவளை சமாதானப்படுத்தி விட்டு

உடம்பு எப்படி இருக்கு என்று கேட்டான்.

ம்ம்...ஏதோ இருக்கு... எனக்கு கல்யாணமாகி முழுசா மூணு மாசம் முடிய போகுது… இன்னும் அம்மா அப்பா வந்து பாக்கல அப்பாவை கூட விடு எப்பவும் எங்கேயும் போக மாட்டாங்க ஆனா இந்த அம்மா... அவங்களுக்கு கூட என்ன வந்து பாக்கணும்னு தோனல...
ஏன் அம்மா வந்து என்னை பாக்கல..
உன்கிட்ட ஏதாவது சொன்னாங்களா..


இல்லையே பவி...ஆனா அம்மாவுக்கு லீவும் இல்ல பவித்ரா அதனாலதான் வராமலிருக்கலாம் அன்னைக்கு ஒரு நாள் உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க நான் தான் படிக்க நிறையா இருக்கு வர மாட்டேனு சொல்லிட்டேன்...


ஏன் ஞாயிற்றுக்கிழமை கூடவா அவங்களுக்கு வேலை ஒருநாள் வீட்டு வேலை எல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு என்ன வந்து பார்க்கலாம் இல்ல... இந்த ஊர்ல கால்டாக்சியே இல்லையா என்ன…?
அப்படி இல்லன்னா கூட எனக்கு ஃபோன் பண்ணி சொன்னா நான் கார் அனுப்புவேன்ல…

ம்ம்...நல்லா பேசற... உன்ன பாக்கறதுக்காக நீ கார் அனுப்பி தான் வந்து பார்க்கணும்னு அவசியம் எங்களுக்கு வரல பவித்ரா அதனால வார்த்தையை கொஞ்சம் யோசிச்சி பேசு... இப்படித்தான் அம்மா கிட்ட ஏதாவது உன் வீட்டு பந்தாவ காமிச்சு இருப்பனு நினைக்கிறேன் அதான் அம்மாவும் அப்பாவும் உன் வீட்டு பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேங்குறாங்க என்று கூறும்பொழுது பவியின் அறைக்கு எதற்கோ வந்த மேனகா கடைசி வரியை கேட்க நேர்ந்தது…
இப்பொழுதுதான் அவருக்கு சட்டென்று ஞாபகமும் வந்தது.

மேனகா ஏதோ ஒரு கோபத்தில் திருமண சமயத்தில் அவர்களிடம் அப்படி கூறிவிட்டார் அவர் கூறிய விஷயத்தை மறந்தும் விட்டார்.

அவர் இருக்கும் சொசைட்டியில் தினமும் காலையில் அவர் வழமையாக செல்லும் கிளப் இல்லை என்றால் ஏதாவது ஒரு மீட்டிங்... கடைதிறப்புக்கு சிறப்பு விருந்தினர் என்று தினமும் செல்வதால் இங்கு பவித்ராவின் தாய் தந்தை ஏன் வருவதில்லை என்ற ஆராய்ச்சியில் அவர் இறங்கவில்லை ஒருவேளை அவர் சற்று யோசித்து இருந்தால்கூட சற்று புரிந்திருக்கும் அன்று தான் சொன்ன சொல்லை மனதில் வைத்துக்கொண்டு தான் பவியின் குடும்ப உறுப்பினர்கள் இன்னும் வராமல் இருக்கிறார்கள் என்று அவர் அதை பற்றி யோசிக்க என்ன நினைக்க கூட நேரமில்லை…


இப்பொழுது தம்பிகாரன் அக்காவிடம் கூறியவற்றை கேட்ட உடனேயே புரிந்து விட்டது... பவியின் தாயும் தந்தையும் ஏன் இன்று வரை தங்களின் வீட்டுக்கு வரவில்லை என்பதை…

மனதிற்குள் அவர்களை மெச்சியும் கொண்டார்.பரவாயில்லை ரோஷத்தில் கெட்டிக்காரர்கள் தான் பவித்ராவின் பெற்றோர்கள் என்று நினைத்தவர் இதை இனி தெரிந்தது போல் காட்டிக் கொண்டால் தேவை இல்லாமல் ரிஷியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் அதனால் இந்த விஷயத்தை மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும் என்று சத்தமில்லாமல் அந்த இடத்தைக் காலி செய்தார்.

உள்ளே பவி தம்பியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் டேய் நான் பந்தாவுக்காக சொல்லல அம்மா வரலையே என்கிற ஆதங்கத்தில சொன்னேன் உடனே நீ இப்படி பேசுற ப்ளீஸ்டா அம்மாகிட்ட இதை சொல்லிடாத...என்றவள்
தனது மொபைலை எடுத்து தம்பிக்கு தந்தாள்.

இந்தா வெங்கட் இந்த மொபைலை நீ வச்சுக்கோ மாமா எனக்காக வாங்கி கொடுத்தாங்க நான் வீட்லதான இருக்கேன் எனக்கு எதுக்கு இவ்ளோ காஸ்ட்லி மொபைல் நீதான் காலேஜ் போற உனக்கு தேவைப்படும் என்று கொடுக்க

அவன் மொபைலை வாங்கி சுற்றியும் பார்த்துவிட்டு அவளிடமே திருப்பி கொடுத்தவன்... இல்ல...பவி என்னோடது சாதாரண பட்டன் ஃபோன் தான் ஆனா அது அம்மா அப்பாவோட உழைப்பில வாங்குனது இது எவ்வளவு காஸ்ட்லியா இருந்தாலும் மாமாவோட உழைப்பில் வாங்கினது…கிட்டத்தட்ட உன் குடும்ப சொத்தில் வாங்கியதை
நீ எனக்கு ஃபீரி கொடுக்கற... எனக்கு வேண்டாம்...நீஜமாவே எனக்கு ஏதாவது வாங்கி தரனும்னு பிரியப்பட்டா நீ வேலைக்கு போய் அது மூலமா வர்ற பணத்துல வாங்கித்தா நான் வாங்கிக்கிறேன்

அப்புறம் இந்த ஃபோனை இப்படி சைலன்ட்ல போட்டு வெச்சுக்க கூடாது...அப்பப்போ யாரெல்லாம் ஃபோன் பண்ணி இருக்காங்கன்னு எடுத்து பார்க்கணும் என்று ஃகால்லாக்கை ஒபன் செய்து காண்பிக்க தாயிடமிருந்து பல அழைப்புகள்

அதைப் பார்த்த அதிர்ச்சியில் பவித்ரா தம்பியைப் பார்க்க இப்போ புரியுதா அம்மா தினமும் உனக்கு
ஃகால் பண்ணிருக்காங்க...நீ கேம் விளையாட மட்டும் ஃபோனை யூஸ் பண்ணற…

உனக்கு உடம்பு முடியல தான் ஒத்துக்கிறேன் அதுக்காக நீ அவங்க ஃபோனை இக்நோர் பண்றதும் தப்பில்லையா... சைலன்ட்ல போட்டு நீ தூங்கிட்டு இருக்க... அது அம்மாக்கு தெரியுமா.. எவ்ளோ வருத்தப்பட்டிருப்பாங்க உன் சைடு மட்டுமே பாக்குறியே பவித்ரா அம்மாவை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு…


எப்படி உனக்கு முடியாம இருக்கிறதால அம்மாவோட ஃகாலை அட்டென்ட் பண்ண முடியலன்னு ஒரு காரணம் இருக்கோ அதுபோல அவங்கள கேட்டா தான் தெரியும் அவங்க கிட்டயும் ஏதாவது ஸ்ட்ராங்கான காரணம் இருக்கும்…

ஏன் வெங்கட் வந்ததிலிருந்து என்னையே குறை சொல்றே நானே முடியாம இருக்கேன் என்று அவள் கண்ணீருடன் பேச

மீண்டும் சகோதரியை அணைத்து ஆறுதல் கூறியவன் உன்னை குறை சொல்லல பவித்ரா உனக்கு உடம்பு சரி இல்லாம இப்போ ஒரு மாசத்துக்குள்ள தான் இருக்கும்

ஆனா அதுக்கு முன்னாடி ரெண்டு மாசம் நீ நல்லா தானே இருந்த யோசிச்சு பாரு அப்போ ஒரு தடவையாவது நீ அம்மா அப்பாவை பத்தி நினைச்சு பார்த்தியா இன்னைக்கு வந்து பாக்கலனு கவலைப்படற

உன் கல்யாணத்துக்கு அவங்க எவ்வளவு கடன் வாங்கி இருக்காங்க ரெண்டு பேருக்கு எல்லா லீவும் போயிடுச்சி தெரியுமா

இதுவரைக்கும் அம்மா வீடல டியூஷன் எடுத்து பார்த்து இருக்கியா?
இப்போ அம்மா வீட்ல டியூஷன் எடுக்குறாங்க அந்த அளவு பணப்பிரச்சனை நீ புரிஞ்சுக்காம அம்மாவைக் குறை சொல்லும்போது கூட இருந்து பாக்கற என்னால தாங்கிக்க முடியல பவித்ரா...என்ற வெங்கட்டிடம்.


ஏன்டா அம்மாக்கு பணப் பிரச்சினை இருந்தா என்கிட்ட சொல்ல மாட்டாங்களா நான் ரிஷி கிட்ட கேட்டு வாங்கி அந்த கடனை அடைக்க மாட்டேனா...என்று பவித்ராவின் பதிலில் கோபமடைந்த வெங்கட்


மறுபடியும் மறுபடியும் இந்த வீட்டு திமிரை நீ என்கிட்ட காமிச்சிட்டு இருந்தா… வாயில ஒன்னு போடுவேன் பவி


உன்கிட்ட பணம் வாங்கறதா இருந்தா அம்மா ஏன் டியூஷன் எடுக்க போறாங்க... உன்னை இந்த வீட்டுக்கு கல்யாணம் தான் பண்ணி குடுத்து இருக்கோம்...
உன் மூலமா இங்க பணம் வாங்க இல்ல...புரியுதா அதனால கார் அனுப்பி வைக்கிறேன்...கடனை அடைக்கறேனு ஏதாவது பேசிட்டு இருந்தா இனிமே உன் வீட்டுக்கு நான் வரமாட்டேன் என்று கூறியவன்

எழுந்து நின்றபடி தனது தலையை கோதி கோபத்தை சமன் செய்து கொண்டான்.. சகோதரியிடம் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று கூட தோன்றியது


பிறகு அமைதியாக அவளின் முன் அமர்ந்தவன் பவித்ராவின் கைகளை பிடித்தபடி பேசறதுக்கு முன்னாடி ஒரு தடவை யோசிச்சுப் பேசு எனக்கு நீ அக்கா ஆனா ஒரு தடவை கூட அக்கா மாதிரி நடந்துகிட்டதே இல்லை ரொம்ப சின்ன புள்ள தனமா நடந்துக்கிற உடம்ப பாத்துக்கோ இந்த வாரமாவது அம்மாவை வந்து பார்க்க சொல்றேன் நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மனசில் வெச்சுகாதே உன் தம்பி தானே உன்ன மாதிரி தான் பேசுவேன்...என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்ற பிறகும் கூட பவிக்கு அவள் பேசியது தவறு புரியவில்லை... தாய்வீட்டு பண பிரச்சினையை தான் அடைப்பது அவ்வளவு பெரிய குற்றமா?
தன்னை தவறாக தம்பி பேசுகிறானே என்று…

அவளின் தம்பி கூறியது நிஜமாகவே அவளுக்கு புரியவில்லை தம்பி உன்னுடைய வருமானத்தில் உன்னுடைய உழைப்பில் எது வேண்டுமானாலும் எங்களுக்கு செய் என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறான்... அதேசமயம் ரிஷிகள் குடும்ப சொத்தில் இருந்தோ ரிஷியின் உழைப்பிலிருந்தோ எங்களுக்கு எதுவுமே வேண்டாம் என்றது அவளுக்கு உரைக்கவில்லை.

ரிஷி வந்ததும் கண்டிப்பாக இந்த மாத செக்கப்புக்கு செல்லும்போது தாய் வீட்டிற்கும் செல்ல வேண்டும் அப்படியே தாய் வீட்டு கடன் எவ்வளவு என்று கேட்டு அதை அனைத்தையும் அடைக்க வேண்டும் தன்னிடம் மொபைல் ஃபோனை வாங்கமாட்டேன் என்ற தம்பிக்கு தனது கணவன் மூலமாக இதே ஃபோனை கையில் கொடுக்க வேண்டும் என்று பலவாறாக யோசித்து மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்.

ரிஷி வீட்டுக்கு வந்ததும் தம்பி வந்து சென்றதை கூறியவள் தன்னுடைய மொபைல் ஃபோனை வாங்கவில்லை என்று குறை கூறினாள்.

நிஜமாகவே அதை வெங்கட் வாங்கி சென்றிருந்தால் ரிஷி மிகவும் மனம் வருந்தி இருப்பான் அது பவித்ராவிற்க்காக ஆசை ஆசையாக காத்திருந்து வாங்கிய லேட்டஸ்ட் மொபைல் அது…அதனால் வெங்கட்டின் மீது அவனுக்கு ஒரு நல்ல மரியாதை வந்திருந்தது

பரவாயில்லை வெங்கட் நல்ல பையன் தான் போல... சுலபமாக கிடைக்கிறது அதுவும் மார்க்கெட்டிற்கு புதிதாக வந்த மொபைல் ஃபோனை கொடுத்தும் கூட தம்பி வாங்க மறுத்து சென்றிருக்கிறான்.. அதனாலேயே அவனுக்கு இதேபோல் வேறு ஒரு ஃபோனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்..

பவித்ராவோ அடுத்தபடியாக தங்களின் திருமணத்திற்காக தாய் வீட்டில் நிறைய கடன் பட்டிருக்கிறார்கள் அதை எல்லாம் கணக்குப் பார்த்து அடைக்க வேண்டும் என்று சிறுபிள்ளையாய் அவனிடம் கூற அவனுக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை ஆனால் மனைவியின் வாயிலாக கேட்பது அவனுக்கு சற்று விருப்பமின்மையை முகத்தில் காட்டியது.

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
14


என்ன இவள் வேலை முடித்து ஆசையாக மனைவியிடம் பேசலாம் என்று வந்தால் தம்பிக்கு புது மொபைல் ஃபோன் வேண்டும் தாயாரின் வீட்டுக் கடனை அடைக்க வேண்டும் என்று பணத்தைப் பற்றிய இவளின் பேச்சு இருக்கிறதே என்று சலித்தவன்...


பவித்ரா ஆபீஸ் போயிட்டு வந்தது ரொம்ப டயர்டா இருக்கு நான் அப்புறம் வந்து உன்னை பாக்கவா என்று கூறியபடி அறையை விட்டு வெளியே சென்றான்

செல்லும் பொழுது அவன் கையை மடித்துக்கொண்டு கதவில் ஒரு குத்து விட அதிலேயே அவனின் கோபம் வெளிப்பட்டது இதை புரியாத பவித்ரா அமைதியாக அவளின் மொபைல் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

அந்த வார இறுதியில் பவித்ராவை செக்கப் அழைத்துச் சென்றவன் அவள் உடல்நிலையைப் பற்றி நன்கு கேட்டறிந்தான்.

கடந்தமுறை என்ன சொன்னாரோ அதைத்தான் இந்த முறையும் மருத்துவர் ரிஷிக்கு கூறினார்

மருந்துக்களை வாங்கியபடி பவித்ராவை வெளியே அழைத்துவர தனது தாய் வீடு கண்டிப்பா செல்ல வேண்டும் என்று அவனிடம் கூறினாள்.

அவனுக்குமே அவளை ஒரு இரண்டு நாட்கள் அங்கேயே விட்டு வந்தால் என்ன என்றுதான் தோன்றுகிறது ஆனால் அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சரி போய்ட்டு ஒரு அரை மணிநேரத்தில் திரும்பிடனும் என்று கூறியபடி அவளை அழைத்துச் சென்றான்.

பவித்ராவிற்கு ரிஷி அழைத்துச் செல்ல மாட்டான் என்று சாதாரணமாகத்தான் கேட்டாள் ஆனால் ரிஷி உடனடியாக அனுமதி கொடுக்க அவளுக்கு சற்று வருத்தம்தான் கடந்த முறை தனது வீட்டிற்கு வருவதற்காக பலவிதமான பரிசுப் பொருட்களை வாங்கி எல்லாவற்றையும் அவர்களின் வீட்டிலேயே கிடக்கிறது இன்று அழைத்து செல்வான் என்று தெரிந்திருந்தால் எல்லாவற்றையும் எடுத்து வந்து இருக்கலாம் இப்படி ஆகிவிட்டதே என்று சற்று வருந்தினாள்.

தாயும் தந்தையும் வேலைக்கு சென்றிருந்தனர் வெங்கட் தான் முன்னறையில் அமர்ந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான். பவிக்கு பெருத்த ஏமாற்றம்... அவள் வருவதைப் பற்றி முன்கூட்டியே தாய் தந்தையருக்கு தெரியப்படுத்தவில்லை வார நாட்களில் அவர்கள் இருவருமே பணிக்குச் சென்று இருப்பார்கள் என்று கூட தோன்றவில்லை ரிஷிக்கும் தர்மசங்கடமான நிலை ஃபோன் செய்து கேட்டு விட்டு வந்திருக்கலாமோ என்று...

ஆனால் வெங்கட் இவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக வரவேற்று இருவருக்கும் வீட்டில் இருந்த மிச்ச பாலில் காபி கலந்து கொடுத்தான்.

பிறகு ரெண்டு பேரும் இதை குடிங்க இருங்க இப்ப வந்த என்று சட்டையை மாட்டிக் கொண்டு வேகமாக வெளியே கிளம்பினார்

ரிஷி எங்கே என்று கேட்பதற்குள்ளாகவே அவன் தெருவை கடந்து இருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் தாய் மேகலாவை அழைத்துவர தாயோ உள்ளே வரும்பொழுது மகள் முன்னறையில் ஹாலில் ரிஷியுடன் அமர்ந்தபடி சிரித்த முகமாய் பேசிக்கொண்டிருக்க அந்தக் காட்சியைக் கண்டதும் தோளில் இருந்த அவளின் ஹேன்ட் பேக் நழுவி விழ அப்படியே தலை வாசலில் நின்றபடி மகளைப் பார்த்து கண்ணீர் விட ஆரம்பித்தார்.

அந்த கண்ணீருக்கான காரணம் முழுக்க முழுக்க சந்தோஷம் மட்டுமே

அம்மா என்று பவித்ரா தாயைப் பார்த்து கட்டியணைக்க ஏனோ பவித்ராவிற்கு அழ வேண்டும் போல் தோன்ற கேவி,கேவி அழ ஆரம்பித்தாள்.

என்ன கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு அப்படியே விட்டுடிங்கல்ல ஒரு எட்டு வந்து பாக்கணும்னு கூட உங்களுக்கு தோனல…

எப்படா இவ வீட்டை விட்டு போவானு நினைச்சிட்டு இருந்திங்களா என்று கேட்டுக்கொண்டே அழுக

தாய் மகள் பாசப் போராட்டத்தை கண்டு ரிஷி அவர்களை ஏன் தொல்லை செய்ய வேண்டும் என சத்தமில்லாமல் வெளியேறினான்.

வெளியே வெங்கட் அக்காவும் தாயும் கட்டி அணைத்தபடி அவர்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டு இருப்பதைக் கண்ட பிறகு சற்று நெகிழ்வாக உணர்ந்தான்.விட்டால் அவனும் அழுது விடுவான் அதுபோலோரு நிலமை…
வெளியில் இருந்தபடியே அவர்களின் பாசப் பிணைப்பை அவனும் அனுபவித்துக் கொண்டிருக்க...

வெங்கட்டின் நிலை அறிந்த ரிஷியோ அவனின் தோள் மீது கை வைத்து …

அப்புறம் சொல்லு மாப்பிள்ளை என்ன படிச்சிருக்க எப்படி போய்கிட்டு இருக்கு என்று அவனை இயல்புக்கு மாற்றுவதற்காக சற்று நேரம் பேச்சி கொடுத்தான்.

வெங்கட் இதுவரை ரிஷியிடம் அதிகமாகப் பேசிக்கொள்வதில்லை அது அக்காவின் கணவர் என்ற மரியாதை மட்டுமல்ல அவர்கள் பணக்காரர்கள் …


பணக்காரர்களிடம் எப்பொழுதுமே சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவ்வப்போது அவன் தந்தை அவனுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால் ரிஷியோ எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் வெங்கட்டிடம் சகஜமாக பேச வெங்கட்டுக்கு ஆச்சரியம் அதுமட்டுமல்ல இவனின் கல்லூரி வாழ்க்கையைப்பற்றி கேட்டவன் அவன் கல்லூரி படிக்கும் பொழுது செய்த அட்டகாசங்கள் எல்லாம் சிரித்தபடி கூறினான்.

சற்று நேரத்திலேயே ரிஷியும் வெங்கட்டும் நெருங்கிய நண்பர்கள் போல ஆகிவிட்டனர் ரிஷிக்கு வெங்கட்டை மிகவும் பிடித்தது...வெங்கட்டிற்கு ரிஷியை மிக மிகப் பிடித்தது.

அவர்களுக்குள் ஒரு அழகான நட்பும் இருக்கிறது உறவு முறையும் இருக்கிறது அதை கடைசி வரை கெடாமல் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று இருவருமே ஒரு போல நினைத்துக் கொண்டனர்.


இங்கு உள்ளே மகளுக்கு தாய் காலையில் சமைத்து வைத்த தக்காளி சாப்பாட்டை அவளுக்குக் கொடுக்க அவளோ சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு இன்றுதான் திருப்தியாக சாப்பிடுகிறாள்.

அவள் சாப்பிடுவதைப் பார்த்த ரிஷிக்கு மனம் நெகிழ ஆரம்பித்தது எதற்காக இவர்கள் பவித்ராவை பார்க்க வராமல் இருந்தார்கள் என்று முதல் முறையாக அவனுக்குத் தோன்றியது ஏதோ ஒன்று நடந்திருக்கிறது அது என்ன என்று தெரியவில்லை என்ன என்று கண்டுபிடித்து அந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

மதியம் இருவரையும் வலுக்கட்டாயமாக அங்கேயே இருக்க வைத்த மேனகா தனி ஒருவராக ஒரு விருந்தே சமைத்து முடித்து விட்டார்.

ஏதாவது ஒரு பலகாரம் மகளுக்கு செய்து கொடுத்து அனுப்பலாம் என உதவிக்கு வெங்கட்டை அழைத்துக் கொள்ள சற்று நேரத்தில் ரிஷியும் மேகலா உடன் இணைந்து கொண்டான்.

மூவரும் சேர்ந்து பவிக்கா கை முறுக்கு செய்தனர். அன்றைய நாள் ரிஷிக்கு தொழில்ரீதியாக நஷ்டத்தை கொடுத்தாலும் மனரீதியாக மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது .

பவித்ரா இருவேளையும் திருப்தியாக உண்டாள்...அவள் தாயின் அன்பால் அயர்ச்சியில் விழி மூடவே இல்லை அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாள்.

இங்கே ரிஷிக்கு வெங்கட்டிடம் பழகுவது மேகலாவின் அன்பு என புது அனுபவமாக இருந்தது


வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாமியாரின் வீட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் மாமியார் சில்வர் டப்பாவில் போட்டுக் கொடுத்த முறுக்கினை எடுத்துக்கொண்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்…

ஏனோ இளம் தம்பதியினர் இருவருக்குமே அவ்வளவு மனநிறைவு…

வீடு வரும்பொழுது பவித்ரா உற்சாகமாக உள்ளே வர ரிஷி கையில் ஒரு சில்வர் டப்பாவை தூக்கிப் பிடித்தபடி வர ஆச்சிரியத்தில் மேனகா என்ன என்று விசாரித்தார்.

பவித்ராவின் தாய் வீட்டிற்குச் சென்று வருகிறோம் என்று கூறவும் ஒரு நிமிடம் கண்களில் திகைப்பை காட்டியவர் இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டார்.

இப்பொழுது அவருக்கு ஒரு விஷயம் தெரிந்தாக வேண்டும் அது என்னவென்றால் பவித்ராவின் தாயார் தனது மகனிடம் தங்களைப் பற்றி ஏதாவது சொல்லி இருப்பாரோ என்று... அப்படி சொல்லியிருந்தால் ரிஷி கண்டிப்பாக எதிர்வினையாற்றுவான் அதை சமாளிக்கும் வித்தையை உடனடியாக அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புரிந்தவர் சிரித்தபடியே இது என்ன கையில டப்பா என்று கேட்க அவளோ கைமுறுக்கு செஞ்சு கொடுத்தாங்க சாப்பிட்டு பாருங்க செம டேஸ்டா இருக்கு இது போலெல்லாம் நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை என்று அனைவருக்கும் எடுத்துக் கொடுக்க அனைவருமே அந்த ருசியில் லயித்திருந்தனர்.

எப்பொழுதும் சோம்பேறியாக இருக்கும் பவித்ரா இன்று உற்சாகமாகவே அவளின் அறைக்குள் சென்று விட்டாள்.

அவள் சென்றதை அறிந்து கொண்ட ரிஷி தாயிடம் பேச்சை ஆரம்பித்தாள் அம்மா... நீங்க எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கீங்க தெரியுமா ஒரு அம்மாவையும் பெண்ணையும் பிரிச்சி இருக்கீங்க .


கண்டிப்பா குடும்பத்தோட நல்லதுக்காகத்தான் இதை பண்ணியிருக்கீங்க எனக்குத் தெரியும் ஆனா அது பவித்ராவுக்கு நல்லது இல்ல கிட்டத்தட்ட ஒருவாரமா சுத்தமா சாப்பிடாம மருந்து மாத்திரையில் இருந்தவ இன்னைக்கு திருப்தியா ரெண்டு வேளை அவங்க அம்மா கையால சாப்பிட்டு இருக்கா…

இதிலிருந்து என்ன தெரியுது அவ தாயை பார்க்கணும்ங்கற ஏக்கத்தில தான் ஒரு மாசமாகவே படுத்த படுக்கையாய் இருந்திருக்கா.. இன்னைக்கு அவங்க அம்மாவை பார்த்ததும் அவ சரியாயிட்டா...

அவளோட அந்த ஒரு மாத கஷ்டத்துக்கு மறைமுகமா நீங்க ஒரு காரணம் என்கிற விஷயம் எனக்குத் தெரியுது தயவு செஞ்சு அதை சரி படுத்திக்கோங்க என்று நாசுக்காக கூறினான்.

உடனே மேனகா என்ன ரிஷி இப்படி எல்லாம் பேசுற நான் என்ன செஞ்சேன் இப்படி பேசிக்கிட்டு இருக்க எது செஞ்சாலும் இந்த குடும்பத்தோட நல்லதுக்கு தான் செய்வேன் உனக்கு தெரியாதா பவித்ராவோட அம்மா உன்கிட்ட ஏதோ தப்பா சொல்லி இருக்காங்க என்று பவித்ராவின் தாயின் மீது பழி போட


கோபமடைந்த ரிஷி அவங்க ஒரு வார்த்தை கூட சொல்லல ஆனா நான் அங்க போயிட்டு வந்தேனு சொன்னதும் உங்க முகத்துல ஒரு செகண்ட் வந்து போச்சே அந்த அதிர்ச்சி அதுவேதான் சொல்லிச்சு பவித்ராவும் அவங்க அம்மாவும் பிரிந்து இருக்கறதுக்கு நீங்க கண்டிப்பா ஒரு காரணமா இருப்பீங்கனு தயவு செஞ்சு உங்களை மாத்திக்கோங்க இந்த விஷயம் பவித்ராவுக்கு தெரியும் போது அவளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது…

ஆனா அது கண்டிப்பா நல்லதா இருக்காது...எல்லாரையுமே காயப்படுத்தும்...அவளுக்கு தெரியறதுக்கு முனாடியே அதை சரிசெய்யப் பாருங்க...என்று சென்றுவிட…

மேனகாவிற்கு சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது அன்று தான் பேசியது கொஞ்சம் அதிகப்படியோ என்று ஆனால் ரிஷி கூறவும் அது பல மடங்கானது இப்பொழுது மருமகள் தன்னிடத்தில் மிக நன்றாக நடந்து கொள்கிறாள் அப்படி இருக்கும் பொழுது தான் ஏன் என்றோ நடந்த ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர்களிடம் பகைமை பாராட்ட வேண்டும்…

முதலில் கூட மேகலாவிடம் பேசுவதற்கு ஒன்றுமே கிடையாது என்ன பேசி இருந்தாலும் இவர் தான் இறங்கி சென்று பேசியதாக இருக்கும் ஆனால் இப்பொழுது மருமகள் கருவுற்று இருக்கிறாள் அவளை வைத்தே மேகலாவிடம் ஈசியாக நட்பு பாராட்டி விடலாம் என்று நினைத்த மேனகா உடனடியாக ராதாவை அழைத்துப் பேசினார்…

ராதா எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு அக்கா உடனே நம்ம போய் பேசினாலோ இல்ல அவங்கள இங்க வரச் சொன்னாலோ பவித்ராவிற்கு இந்த விஷயம் தெரிந்துவிடும் அதனால நல்ல நேரம் பார்த்து காத்திருப்போம் எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு மாசம் தான் அது முடியும்போது பவித்ராவிற்கு அஞ்சு மாசம் கணக்கு வரும் அப்போ ஈசியா வளைகாப்பு வையுங்கன்னு சொல்லி ஒரு விழாவை ஏற்பாடு செஞ்சு அவங்களையும் வரவச்சி நாம அன்னைக்கு அவங்க கிட்ட சொன்ன விஷயத்தை... நாமளே திருப்பி வாங்கிக்கலாம் என்று ஐடியா கொடுக்க ராதா கூறுவது சரி என்று தோன்றியது மேனகாவும் உடனே ஒத்துக் கொண்டார்.

அவருக்கு இப்படி எல்லாம் யாரிடமும் இறங்கிப் போய் பழக்கமே கிடையாது யாரிடமாவது ஒன்று சொன்னால் சொன்னதுதான் கடைசிவரை அதை மாற்றிக் கொள்ளவும் மாட்டார்

ஆனால் அது மற்றவர்களிடம் இது குடும்பம்... பரம்பரை பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும்பம்... இன்று அக்கா தங்கைகள் மட்டுமல்ல சகலைகள் கூட இந்த வீட்டில் ஒற்றுமையாக இருக்கின்றன

ஏன் வந்த மருமகன் கூட இவர்களிடம் நட்பு பாராட்டுகிறான் அப்படி இருக்கும் பொழுது பவித்ராவும் அப்படித்தான் இருக்க வேண்டும் அவள் அப்படி இருக்க வேண்டுமானால் இவர்கள் சற்று வளைந்து கொடுத்து தான் ஆக வேண்டும் என்று புரிய மேனகா பொறுமையாக காத்திருக்க ஆரம்பித்தார் அவர் ஆரம்பித்துவைத்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக.

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது பவித்ராவும் ஐந்து மாதம் முடியுமே மற்றொரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டாள்.கால் வீங்குவது, உடல் பருமன், அதனால் ஏற்பட்ட முதுகுவலி எனப் பல பிரச்சனைகளுக்கு ஆளாக ஐந்தாம் மாதம் வளைகாப்பு வைக்கலாம் என்று முடிவு செய்த நிகழ்ச்சி இரண்டு மாதங்கள் தள்ளிப் போயிற்று…

ஆனால் அதுவரை கூட மேகலாவும் நாராயணனும் இவர்கள் வீட்டிற்கு வரவில்லை பவித்ரா தான் இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று விட்டு வரும் பொழுது ரிஷியை அழைத்துக்கொண்டு சென்று வந்தாள்.

இப்பொழுது அவர்கள் பெற்றோர்கள் அவளின் அடுத்த செக்கப் தேதிக்காக காத்திருக்கின்றனர் அவள் செக்கப் செய்யும் நாளன்று இருவருமே விடுப்பு எடுத்து அவளுக்கு பிடித்தவற்றை எல்லாம் செய்து கொடுக்கின்றனர்


ரிஷி வெங்கட்டுடன் நேரம் உருப்படியாக செலவு செய்கிறான் மகளுக்கு தாயுடன் நேரம் போகிறது மொத்தத்தில் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பவித்ரா நாசுக்காக தாயிடம் விஷயத்தைப் போட்டு வாங்க ஆரம்பித்தாள்.

ஏன் எனது வீட்டிற்கு வருவதில்லை... வேலை மட்டும் தான் காரணமா என்று.. தாயும் தந்தையும் சொல்லிவைத்தது போல் அழகாக மழுப்புகின்றனர்.

இவர்களிடம் கேட்டால் வேலைக்காகாது தம்பி என்றாவது தனிமையில் கிடைத்தால் விஷயத்தை அவனிடம் வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டவள் தம்பி தனிமையில் மாட்டும் நாளுக்காக பவித்ரா காத்துக்கொண்டிருந்தாள்.

பவித்ராவிற்கு ஏழு மாத முடிவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது மேனகா முறையாக மேகலாவை அழைத்து தங்கள் மகளுக்கு நீங்கள் செய்யும் சீமந்தம் நிகழ்ச்சியை வந்து செய்யுங்கள் என்று கூற மகிழ்ச்சியில் நாராயணரும் மேகலாவும் திருப்தியாக வந்து செய்தனர் ஆனால் வளைகாப்பு நிகழ்ச்சி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்று ஒரு நாள் மட்டுமே பவித்ரா பெற்றோர்கள் வீட்டில் இருக்க மறுநாள் காலையிலேயே ரிஷி வந்து அழைத்துச் சென்று விட்டான்.

அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மேகலாவும் விருப்பமின்றி அனுப்பிவைத்தார் ரிஷியின் குடும்பத்தாரின் எண்ணமும் மேகலாவின் வீட்டில் அதிக வசதி கிடையாது திடீரென அவருக்கு இடுப்பு வலி வரும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க முடியாது தங்கள் வீடாக இருந்தால் சுலபமாக பார்க்கலாம் என்ற எண்ணம்…

ஆனால் பவித்ராவின் பெற்றோருக்கோ தங்களிடம் பணம் இல்லை என்பதை இவர்கள் மறைமுகமாக குத்தி காட்டுகிறார்கள் ஏழை வீடு என்று தெரிந்துதானே பெண் எடுத்தார்கள் இப்பொழுது என்ன என்று சற்று வருத்தம் வந்தது முதல் முறையாக வீட்டு மாப்பிள்ளையின் மீது.

ரிஷியோ பவித்ராவிடம் ஒரு பார்மில் கையெழுத்து வாங்க அவளோ என்ன இது என்று கேட்டாள் அதற்கு ரிஷி இது உனக்கும் எனக்குமான ஜாயிண்ட் பேங்க அக்கவுண்ட்…

எப்பொழுதுமே எனக்கு மாதம் மாதம் கம்பெனியின் மூலம் வரும் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளமாக இந்த அக்கவுண்டில் தான் போடுவார்கள் எனது செலவு போக மீதி பணம் அப்படியே அதில் இருப்புத் தொகையாக இருக்கும்

உன்னுடைய பெயரும் இதில் சேர்த்து விட்டால் உனக்கு எப்பொழுதாவது பணம் தேவைப்படும் பொழுது நீ இதில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியவன் அவனின் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுடன் சில ரூபாய் நோட்டுகளையும் அவளிடம் கொடுத்தான்.

அவள் உங்களுக்கு என்று கேட்க நான் ஃமொபைலில் நெட்பேங்கிங் வைத்திருப்பதால் எனக்கு தேவைப்படும் பணத்தை அப்படி எடுத்துக் கொள்வேன் என்று பதில் கூறியவன் செலவை கொஞ்சம் பார்த்து செய்யவேண்டும் பவித்ரா எனக்கு சம்பளமாக ஒரு குறிப்பிட்ட தொகையை தான் கொடுக்கிறார்கள் லாபம் மொத்தமும் என்னுடைய தாய் கணக்கிற்கு தான் செல்லும் என்னுடைய பணம் முழுவதும் செலவாகி விட்டால் தாயிடம் சென்று கை நீட்டும்படி ஆகிவிடும் அப்படி என்னை ஒருபோதும் ஆக்கி விடாதே என்று விளையாட்டாக கூறினான். சிரித்தபடியே பவியும் சரி என்று தலையை ஆட்டினாள்.

ரிஷியின் மனதில் ஒரு சிறு நெருடல் மனைவி அன்றொருநாள் பணத்தை பற்றி பேசியது அவனுக்கு அவ்வளவு விருப்பமானதாக இல்லை... அவனுக்கு பணத்தை பற்றி பேசினால் பிடிக்காது ஏனென்றால் அவனை சுற்றி இருக்கும் அத்தனை பேரும் பணத்தைப் பற்றி மட்டுமே யோசிப்பவர்கள் பணத்தை பற்றி மட்டுமே பேசுபவர்கள் தனது மனைவி அப்படி இருக்க கூடாது என்று நினைத்தான் அதனால் அவளாக கேட்பதற்கு முன் அவளுக்கு வேண்டியவற்றை எல்லாம் அவளிடம் கொடுத்து விட்டால் அவனின் காதல் மனைவி அவனுடன் பேசும்போது காதல் கதைகளில் மட்டும் தான் பேச வேண்டும் என்பது அவனின் விருப்பம்…


இனி அவளின் தாய் வீட்டிற்கும் தம்பிக்கும் அவளுக்கும் வேண்டிய எல்லாவற்றையும் இந்த பணத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் அவள் இவனிடம் அனுமதி கேட்கவும் வேண்டாம்...இவனும் மனைவியிடம் காதல் கதைகளை பற்றி மட்டுமே பேசலாம்...

ஆனால் பவித்ராவோ அவன் கொடுத்த பணத்தில் இருந்து தேவையில்லாமல் எதற்குமே செலவு செய்யவில்லை அவன் கொடுத்த கிரெடிட் கார்டும் டெபிட் கார்டும் பத்திரமாக அவள் புடவைக்கு அடியில் தூங்கிக் கொண்டிருக்கிறது அவனாக அவளுக்கு என்ன வாங்கி கொடுக்கிறான் அது மட்டும் தான் உபயோகிக்கிறாள்.


இடையில் ஒருமுறை தனது தாயிடம் ஜாடையாக கேட்டு மட்டும் பார்த்தாள். எவ்வளவு கடன் இருக்கிறது என்று தெரிந்தால் தான் கொஞ்சம் உதவலாமே என்று ஆனால் தாயோ அதை கூற மறுத்ததுடன் அது எங்களுடைய கவலை அதை தூக்கி உன் தலையில் நீ வைத்துக் கொள்ளக்கூடாது என்று புத்தி கூறினார் இப்பொழுது அவ்வப்போது மொபைலில் மட்டுமே தாயிடம் பேசுகிறாள்.

எட்டாம் மாதம் தொடங்கிவிட இப்பொழுது பவித்ராவிற்கு சுத்தமாக முடிவதில்லை அவளுக்கு எப்போதடா இந்த குழந்தையை பெற்று எடுப்போம் அதன் பிறகு தாய் வீட்டிற்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தால் அந்த அளவிற்கு உடல் உபாதைகள்…

மருத்துவரோ ரிஷியிடம் தெளிவாக கூறியிருக்கிறார் பவித்ராவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் பிரசவம் சிக்கலில் முடிந்து விடும் என்று அவள் உடல்நிலையை கருத்தில் கொண்டு இப்பொழுது ரிஷி வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இப்படியிருக்க வீட்டில் ராகவ்விற்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரக இருசக்கர வாகனம் ஒன்று வாங்கப்பட்டது அதில் அனைவரையும் வைத்து வீட்டிற்குள்ளேயே ரவுண்ட் அடித்தவன் பவித்ராவையும் வைத்து ரவுண்ட் அடிக்க ஆசைப்பட்டான். முதலில் குடும்ப உறுப்பினர்கள் மறுத்தாலும் பவித்ராவிற்குமே செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை ஏனென்றால் வாகனத்தின் அமைப்பு அப்படி…

அவள் ஆசைக்கு ஏன் குறுக்கே நிற்க வேண்டும் என்று அனைவருமே வாசலில் நின்றபடி அவளை ராகவ்வின் பைக்கில் ஏற்றி விட ராகவ்விற்கு மற்றவர்களைப்போல் இவளை வைத்து ஓட்டுவதற்கு சுலபமாக இல்லை ஏனென்றால் எட்டு மாதம் முடிந்து ஒன்பதாவது மாதத்தில் இருக்கிறாள் பவி…

கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணி வேறு அலுங்காமல் குலுங்காமல் ஓட்ட வேண்டும் என்று மிகவும் மெதுவாக பார்த்து பார்த்து ஓட்ட கவனம் முழுவதும் பவித்ராவின் மீதே இருக்க வாகனத்தின் கட்டுப்பாட்டை விட்டுவிட்டான்.

வாகனம் சற்று நிலை தடுமாறி அவனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குள் பயந்த பவித்ரா வாகனத்தின் பிடிமானத்தை விட அதிர்ச்சியில் அனைவரும் அவர்களிடத்தில் ஓடி வருவதற்குள் பவித்ரா வாகனத்திலிருந்து கீழே விழுந்தாள்...விழுந்த உடனேயே அவள் வலியில் துடிக்க ஆரம்பித்தாள்.

அனைவரும் பயந்து கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் பவித்ராவின் நிலைமை மிக மோசமாக ஆகியிருந்தது பனிக்குடம் உடைந்து நீர் முழுவதும் வெளியேற்றி இருக்க பயத்தினாலும் வலியினாலும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்க ஆரம்பித்தாள்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மருத்துவருக்கு அறைக்கு நிலைமையைக் கூறி விட்டதால் அங்கு எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது…

இவர்கள் அழைத்துச் செல்லவும் வாசலில் தயாராக இருந்த ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்த பவித்ராவை உள்ளே அழைத்துச் செல்ல ரிஷி முதற்கொண்டு வீட்டிலிருந்த அனைவரும் பயத்தில் வெளியில் நின்று கொண்டிருந்தார்கள் ஏனென்றால் பவித்ராவின் நிலைமை அப்படி இருந்தது…

டாக்டர் அவளை நன்றாக பரிசோதித்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தே ஆக வேண்டும் அப்படி இல்லை என்றால் பவித்ராவிற்கும் அவளின் குழந்தைக்கும் ஆபத்து என்று கூறியவர் இப்பொழுதும் குழந்தையை உயிருடன் காப்பாற்றுவது சிரமம் தான் என்றும் கூறினார்…

வீட்டின் மொத்த உறுப்பினர்களின் கோரிக்கை குழந்தைக்கு ஏதாவது ஒன்று ஆனால் கூட பரவாயில்லை பவித்ரா உயிருடன் மீட்டுக் கொடுங்கள் என்றுதான் இருந்தது அவள் உயிருடன் மீண்டு வந்து விட்டால் அதன் பிறகு அவளால் கண்டிப்பாக மற்றொரு குழந்தையை பெற்றெடுக்க முடியும் ஆனால் பவித்ரா சென்று விட்டாள் என்றுதான் அவர்கள் யோசித்தார்கள் ஆனால் பேராசைக்காரன் ரிஷியின் மனமுமோ இருவருமே தன்னிடம் மீண்டு வர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்.

ஒரு வழியாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது தாய் சேய் இருவரும் நலம் என்று அறிவித்த பின் தான் ரிஷிக்கு பவித்ராவின் குடும்பத்தாருக்கு இதை சொல்ல வேண்டுமே என்ற நினைப்பே வந்தது

அவன் ராகவ்வை அழைத்து பவித்ராவின் வீடுவரை சென்று பவித்ராவிற்கு குழந்தை பிறந்திருப்பதை நேரடியாகவே கூறிவிடு மொபைல் போனில் கூறினால் சரியாக இருக்காது என்று கூறிவிட்டு மருத்துவரை சந்திக்க சென்றான்


ஆனால் ராகவ்விற்கு நேரில் சென்று சொல்ல பயம் தன்னால் தானே அவனின் அண்ணிக்கு இந்த அளவு பிரச்சினை ... இதை அவர்கள் வீட்டில் கூறினால் அவர்கள் தன்னை ஏதாவது சொல்வார்கள் என்று பயந்தவன் மொபைல் போனில் தகவல் சொல்ல ஏற்கனவே ரிஷியின் மீது சிறு மனசு சுணக்கத்தில் இருந்த பெற்றோர்களுக்கு இந்த விஷயம் மேலும் அவனின் மீது ஒரு தவறான எண்ணத்தைக் கொண்டு வந்து சேர்த்தது.

மகளின் நிலைமை இந்த அளவு மோசமாகி மருத்துவமனையில் சேர்த்து... குழந்தை பிறக்கும் வரை தங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை... அவளை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது தங்களிடம் கூறியிருக்க வேண்டும் சரி பதட்டத்தில் விட்டுவிட்டார்கள் அதன்பிறகு தங்களுக்குப் பேரன் பிறந்திருப்பதை மாப்பிள்ளை அல்லவா அழைத்து சொல்ல வேண்டும்...


அப்படி இல்லாமல் இது என்ன அவரின் தம்பி தங்களை அழைத்து கூறுவது... அவர்கள் குடும்பத்தில் என்ன பெரியவர்களே இல்லையா இல்லை என்றால் தங்களிடம் கூறுமளவிற்கு அந்த வீட்டு பெரியவர்களுக்கு மனமில்லையா?... என்ற கேள்வியும் அவர்களிடத்தில் தோன்றாமல் இல்லை


எது எப்படியோ இப்பொழுது மகளை சென்று பார்க்கவேண்டும் மகளின் நிலைமை சரியான பிறகு மகளை வைத்தே எல்லாவற்றையும் பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவர்கள் பதறி அடித்தபடி மருத்துவமனைக்கு ஓடினார்கள்.

இங்கு மருத்துவமனையிலேயே குழந்தை குறித்த தேதிக்கு முன்பே பிறந்ததால் எடையும் சற்று குறைவு சுவாசிப்பதிலும் பிரச்சனை இருந்ததால் இன்டிபென்டரில் வைக்க குழந்தையை பார்க்க யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை…

பவித்ராவின் நிலைமையும் மோசமாக தான் இருந்தது அதனால் அவளை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க ரிஷியின் பாடு படு திண்டாட்டம் ஆகிப்போனது இப்பொழுது மனைவிக்காக வேண்டுவதா இல்லை பிள்ளைக்காக நினைத்து வருந்துவதாக இல்லை தங்களின் நிலைமையை நினைத்து
கவலைப்படுவதா என மருத்துவமனையில் காத்துக்கிடந்தான்.

இங்கிருக்கும் நிலமை தெரியாமல் பதறியடித்துக்கொண்டு மேகலா நாராயணன் தம்பதியினரும் மருத்துவமனை வர பின்னாலே வெங்கட்டும் வந்து சேர்ந்தான்.

மருத்துவமனை வந்த பவியின் குடும்பத்தினர் முறையாக எதுவுமே ரிஷியிடமோ அவனின் குடும்பத்தாரிடமோ எதையுமே விசாரிக்கவில்லை …


அதேசமயம் ரிஷியின் குடும்பத்தினரும் இவர்களை அழைத்து என்ன நடந்தது என்று கூறவில்லை .

பவியின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரும் பொழுது பவித்ரா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறாள்…


குழந்தையோ இன்டிபெட்டரில் இருக்கிறது இருவரையுமே பார்க்க முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க அவர்களின் ஒட்டு மொத்த கோபமும் ரிஷியின் மீது திரும்பியது…


தங்களின் மகளை இவர்கள் தான் வேண்டும் என்றே ஏதோ செய்துவிட்டார்கள் அதனால்தான் தங்கள் மகளை பார்க்க கூட இவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தவறாக கற்பனை செய்தவர்கள்

ரிஷியையும் அவரின் குடும்பத்தாரையும் முறைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிர்ப்புறமாக சென்று அமர்ந்தார்கள் .

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
15


வெங்கட் வந்து ரிஷியிடம் கேட்டிருக்கலாம் இல்லையென்றால் ரிஷியாவது வெங்கட்டிடம் கூறி இருக்கலாம் ஆனால் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
இவர்களுக்குப் பெண்ணை பற்றிய கவலை…


அவர்களுக்கு பவித்ராவும் குழந்தையும் படும் கஷ்டத்தை நேரில் பார்த்து இருவருமே மீண்டு வரவேண்டும் என்ற கவலை.

இரண்டு நாட்கள் இப்படியே இரு குடும்பத்தினரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்களே தவிர எதையுமே பேசிக்கொள்ளவில்லை இரண்டாம் நாள் முடிவில் தான் பவித்ராவை பார்ப்பதற்கு அனுமதித்தார்கள் முதலில் பார்ப்பதற்கு ஓடிய மேகலா பவித்ராவை பார்த்ததுமே அவரின் பெற்ற வயிறு பற்றி எரிய ஆரம்பித்தது.

கிழிந்த கந்தல் துணி போல படுத்துக் கிடந்தால் பவித்ரா... கண் விழித்துப் பார்க்கும் பொழுது அவளால் யாரிடமும் எதுவுமே பேசமுடியவில்லை அனைவரையும் பார்த்து சற்று புன்னகை பூக்க முயற்சித்து தோற்றுப் போனவன் அயர்ச்சியில் மீண்டும் விழிகளை மூடிக் கொள்ள அதற்குள் மருத்துவமனை செவிலியர் டைமிங் முடிஞ்சு போச்சு எல்லாரும் வெளிய போங்க என்று வெளியே அனுப்பி வைத்தார்.

வெளியே வர வரவே மேகலா ரிஷியை பார்த்து இப்ப உங்களுக்குத் திருப்திதானே இந்த மாதிரி ஒரு நிலைமைலையா நாங்க எங்க பொண்ணை பாக்கனும்…இதுக்காகவா எங்களோட அத்தனை சந்தோஷத்தையும் அடகுவைத்து எங்க பொண்ணை நாங்க உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தோம்…

அன்னைக்கே நாங்க உங்க கிட்ட கெஞ்சினோமே ... உங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் ஒத்துவராது எங்க பொண்ணை விட்டிடுங்கனு…. ஆனால் என் கணவரை மறைமுகமா மிரட்டி என் பொண்ணு மனசுல ஆசையை வளர்த்துவிட்டு கல்யாணத்தையும் பண்ணி முழுசா ஒரு வருஷம் முடியறதுக்குள்ள என் பொண்ண அந்த கோலத்துல பார்க்க வச்சிட்டீங்களே என்று அழுதபடியே அவனிடம் கேட்க…

என்ன ஆன்ட்டி….இப்படி பேசறீங்க பவித்ரா இப்படி இருக்கிறதுக்கு நாங்க தான் காரணமுன்னு சொல்ல வரீங்களா ?...

ஆன்ட்டி இது ஒரு விபத்து...ஏதிர்பார்க்காம நடந்தது…
இப்ப பவித்ராவும் நல்லா இருக்கா குழந்தையும்... நல்லா இருக்கு வேற என்ன பிரச்சினை என்று கேட்க


பவித்ரா இப்ப நல்லாருக்கா ஆனால் இந்த ரெண்டு நாள்ல எப்படி இருந்தா அத சொல்லுங்க வளைகாப்பு முடிஞ்சதும் என் பொண்ணு என் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தா நான் கண்ணுக்குள்ள வெச்சு பாத்திருப்பேன் இப்படி ஒரு ஆக்சிடெண்ட் நடந்திருக்காது... என் பொண்ணும் நல்லா இருந்திருப்பா…


ஆன்ட்டி வளைகாப்பை விடுங்க அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப்போகுது எத்தனை முறை நீங்க வந்து அவளை பார்த்தீங்க சொல்லுங்க…

உங்க பாக்காம அந்த ஏக்கத்துல அவ உடம்பு தான் வீக்காச்சி...அதை பார்த்து பொறுக்கமுடியாம நான்தான் ஒவ்வொரு முறையும் என்னோட வேலைகளை விட்டுட்டு உங்க வீட்டுக்கு அவள கூட்டிட்டு வந்தேன் நீங்க ஒரு முறை கூட வந்து பாக்கல .

வளைகாப்பு சமயத்துல கூட என் அம்மா தான் உங்ககிட்ட இறங்கி வந்து பேசினாங்க…

ஆனா நீங்க அத பத்தி வாயேதிறக்கல...அப்படி இருக்கும்போது எப்படி அவளை வளைகாப்பு முடிஞ்சுதும் உங்க வீட்டுக்கு அனுப்ப முடியும் …

ரொம்ப அழகா பேசுறீங்க மாப்பிள்ளை நீங்க இந்தளவு பேசுவீங்கனு எனக்கு தெரியாது அந்தப்பக்கம் உங்க அம்மா வந்து சொல்லுவாங்க நீங்க அடிக்கடி என் வீட்டுக்கு வராதீங்க உங்க பொண்ணையும் வீட்டுக்கு கூப்பிடாதீங்க இதனால எங்களோட கௌரவம் பாதிக்கப்படும் எங்க வீட்டு நடைமுறையை உங்க வீட்டு பொண்ணால கத்துக்க முடியாதுனு…

ஆனா இந்த பக்கம் நீங்க ரொம்ப பெருந்தன்மையா உங்க பொண்ணை நானே கூட்டிட்டு வரேன் நீங்க என் வீட்டுக்கு வராதீங்கனு என்று சொல்லாமல் சொல்லுவீங்க... என்ன இருந்தாலும் பணக்கார வர்க்கம்ல மனசுல ஒன்றை வெச்சுகிட்டு தானே வெளிய ஒன்னு பேசுவீங்க….

ஏன் ஆன்ட்டி ஏதேதோ பேசறீங்க என்னோட அம்மா உங்க கிட்ட வந்து பேசினா நான் எப்படி அதுக்கு பொறுப்பாக முடியும் …

சரி உங்க அம்மா தானே பேசினாங்க...அதனால உங்களுக்கு தெரியாது... நீங்க எத்தனை முறை என் மகளைக் கூட்டிகிட்டு வீட்டுக்கு வந்திருக்கீங்க ஒருமுறையாவது வீட்டுக்கு வாங்கனு கூப்பிட்டீங்களா அப்போ உங்க மனசுல அந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கு தானே என்று ரிஷியை பார்த்து நேரடியாக கேட்க

சபாஷ் ஆன்ட்டி எங்களை மனசுல ஒன்னு வச்சுக்கிட்டு வெளியே வெளிய ஒன்னு பேசறோம்னு சொல்லிட்டு இத்தனை நாள் நீங்க தான் அதை பண்ணிக்கிட்டு இருக்கீங்க


நல்லா கேட்டுக்கோங்க என்னோட அம்மா தெரிஞ்சிஅப்படி சொன்னாங்களா
இல்ல தெரியாம உங்க கிட்ட பேசினாங்களானு எனக்கு தெரியாது ஆனா இந்த நிமிஷம் நான் சொல்றேன் உங்களோட புத்தி தெரிஞ்சுதான் அண்ணைக்கு எங்க அம்மா உங்க தலைல தட்டி உங்க இடம் எதுனு புரிய வச்சிருக்காங்க….
இந்த நிமிஷத்தில் இருந்து பவித்ராவும், குழந்தையும் எங்க குடும்ப உறுப்பினர்கள்…எங்களுக்கு மட்டுமே சொந்தமான சொத்து…

உங்க பொண்ணு மேல இருக்கிற இந்த போலி பாசத்தையும்….பேரன்னு என் குழந்தை மேல உரிமை கொண்டாடிகிட்டு இனிமே ஜென்மத்துக்கும் எங்க வீட்டு வாசப்படிக்கு வந்துடாதீங்க அதுக்கப்புறம் மனுஷனா இருக்க மாட்டேன் கூற

இதை ஏதும் அறியாத வெங்கட் அப்பொழுது தான் அங்கே வர

ரிஷியிடம் என்ன ஆச்சு மாமா ஏதாவது பிரச்சினையா ரெண்டு பேரும் இவ்வளவு சத்தமா பேசிக்கிட்டு இருக்கீங்க ஹாஸ்பிடல எல்லாருமே உங்களை தான் பார்க்கறாங்க என்று தன்மையாக கூற

வெங்கட்டை முறைத்த ரிஷி இந்த கேள்வியை என்ன கேட்கறதை விட்டுட்டு உன் அம்மாவையும்,அப்பாவையும் கேளு…அதுக்கு அவங்க பதில் சொல்லுவாங்க…என்றவன்…

நாராயணனை பார்த்து என்னவோனு நினைத்திருந்தேன் ஆனா சரியான ஆளு தான் நீங்க புள்ள பூச்சி மாதிரி முகத்தை வைத்துக்கிட்டு எவ்வளவு அழகா பொய் சொல்லி வச்சிருக்கீங்க…

நான் உங்களை மறைமுகமாக மிரட்டினேனா…. என்னோட முகத்தை பார்த்து சொல்லுங்க அங்கிள்….


இல்ல மாப்ள அது வந்து...என்று நாராயண் இழுக்க


என்ன அங்கிள் இழுக்கறீங்க….அப்படித்தான் எல்லார்கிட்டயும் சொல்லி வச்சு இருக்கீங்க உங்க பொண்ணோட சந்தோஷம் உங்க கையிலனு தான சொன்னேன்...


பவித்ராவை எனக்கு பிடிச்சது அதனால கல்யாணம் பண்ணி கொடுங்கங்கனு உரிமையாதான கேட்டேன் அதுக்கு இப்படி ஒரு அர்த்தம் கண்டு பிடிச்சு இருப்பீங்கனு கண்டிப்பா எனக்கு தெரியாது

ஒருவகையில் ஆன்ட்டியை கூட மன்னிப்பேன் ஆனால் என்னைக்குமே உங்களை மட்டும் மன்னிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்று விட்டான்.


அவமானத்தில் முகம் கருக்க பவித்ராவின் பெற்றோர்கள் அங்கேயே அமர்ந்து இருந்தனர்


வெங்கட்டுக்கு எதுவுமே புரியவில்லை ஆனால் பெற்றோரின் முகத்தைப் பார்க்கும் பொழுது ஏதோ ஒன்று விரும்பதகாத பேச்சி நடந்திருக்கிறது என்று புரிந்தது...திருமண சமயத்தில் இருந்தே இவர்களுக்குள் ஒரு பனிப்போர் இருக்கிறது அவனுக்கு இலைமறை காயாக தெரியும் அது இன்று வெடித்து விட்டது என்று யூகித்துக் கொண்டான்.

பெற்றோர்களோ பேரனின் எப்படியாவது முகத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து செல்லலாம் என்று மாலை வரை காத்திருந்தார்கள் …


இங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ரிஷி மூலம் அறிந்து கொண்ட பிற குடும்ப உறுப்பினர்கள் இப்பொழுது இவர்களை எதிரியை பார்ப்பதுபோல் பார்க்கின்றனர்.

ஏதோ அந்த மருத்துவமனையை அவர்களுக்கு சொந்தம் போலவும் பவித்ராவின் பெற்றோர்கள் அங்கு விரும்பத்தகாத இடத்தில் அமர்ந்து இருப்பதாக எண்ணிக்கொண்டு மிகவும் கேவலமான பார்வை அவர்கள் மீது திணிக்கின்றனர் .

பெரியவர்கள் அனைவருக்குமே தங்களை பார்த்து அகமொன்றும் புறமொன்றும் பேசுவதாக எப்படி அவர்கள் கூறலாம் என்ற கோபம்...

இளையவர்களுக்கு தன் அண்ணனை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் அதிகாரத்தை யார் இவர்கள் கொடுத்தது என்பது போல் முறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடைசிவரை பவித்ராவின் பிள்ளையை இவர்களுக்கு காட்டவே இல்லை காத்திருந்து காத்திருந்து அவர்களுக்கு சலிப்பு தட்ட ஒரு கட்டத்திற்கு மேல் வெங்கட்டிற்கு கோபம் வந்துவிட்டது.

ரிஷிகளிடம் நேராக சென்று அம்மாவும் அப்பாவும் குழந்தையை பார்க்கனும்னு ஆசைப்படறாங்க...ஒருமுறை மட்டும் அவங்க ஆசையை பூர்த்தி செய்யுங்க...என்றவனிடம்

குழந்தையை இன்டிபெட்டரில் இருக்கிற விஷயம் உனக்கு தெரியாதா வெங்கட் நாங்களே இன்னும் சரியா பாக்கல...அதனால நீ என்னை கேட்கிறதை விட டாக்டர்கிட்ட போய் கேளு என்று ரிஷி அலட்டிக்கொள்ளாமல் கூறினான்.

இல்ல மாமா உங்களுக்கெல்லாம் எடுத்துட்டு வந்து காட்டுகிறாங்க.. உள்ளயும் அழைச்சிட்டு போறாங்க அதே மாதிரி எங்களுக்கும் காட்டச் சொல்லுங்க என்று அவன் சண்டையிட...

ரிஷியோ வெங்கட் இதுல நீ தலையிடாதே உனக்கு உன்னோட மருமகன் பாக்கணும்னு ஆசை இருந்தால் சொல்லு உன்ன கூட்டிட்டு போய் காட்ட சொல்லறேன்
ஆனா உன்னோட பெத்தவங்களுக்கு காமிக்க முடியாது என்று முகத்தில் அடித்தது போல் கூற

மாமா இது தப்பு உங்களுக்கு ஆயிரம் கோபம் அவங்க மேல இருக்கலாம் ஆனால் அந்த குழந்தை எங்க வீட்டுக்கும் பேரன் தான் அதனால தயவு செஞ்சு நீங்க அவங்களுக்காக இது செய்துதான் ஆகணும் என்று கூற ரிஷி எதுவும் பேசாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள சில வினாடிகள் நின்று பார்த்த வெங்கட்

ம்ம்... ஓகே மாமா என்னோட அம்மா,அப்பாக்கு கிடைக்காத மரியாதை எனக்கு தேவையில்லை உங்க வீட்டு வாரிசை நீங்களே பாத்துக்கோங்க இனிமே நீங்களே வந்து குடுத்தா கூட எங்களுக்கு வேணாம் என்று கூறியபடி அங்கிருந்து வந்தவன் தாய் தந்தையரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தான்.

பவித்ராவும் குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக மட்டுமே எழுந்து அமர்வது அதன்பிறகு அப்படியே சாய்ந்து கொள்வாள் நான்கு நாட்கள் கழிந்த பிறகுதான் பவித்ரா யார் யார் தன்னை வந்து பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க ஆரம்பித்தால் முதல் நாள் கண்விழிக்கும் போது தாய் தந்தை பார்த்தது போல் ஒரு ஞாபகம்

அதன் பிறகு அவர்களைப் பற்றிய பேச்சோ அவர்களையோ காணவில்லை என்னவாயிற்று அவர்களுக்கு தனக்கு குழந்தை பிறந்து விஷயம் அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று யோசித்தவள் ரிஷியை அழைத்து மெதுவாக கேட்டாள்.

நீ தூங்கிட்டு இருக்கும்போது வராங்க அப்படியே அவங்க பேரனையும் பார்த்துட்டு கிளம்பிப் போயடறாங்க...



ஓஓஓ…. இப்போதுதான் நான் முழிச்சிருக்கேன்ல ஒரு ஃபோன் பண்ணி சொல்லுங்க அவங்கள பாக்கணும் போல இருக்கு…


விளையாடறியா பவித்ரா அவங்க ரெண்டு பேருமே வேலைக்கு போய் இருப்பாங்க தம்பி காலேஜ் போய் இருப்பான் இப்ப கூப்பிட்டா எப்படி உடனே வருவாங்க ஈவினிங் மாதிரி நீ முழிச்சி இருந்தா நான் அவங்களுக்கு கூப்பிட்டு சொல்றேன்


ம்ம்...என்று தலையசைத்தவள் மகனுக்கு தாய்ப்பால் புகட்டினாள். மனதிற்க்குள் தாய் தந்தையின் மீது சற்று கோபம் தான் மகள் இந்த நிலைமையில் மருத்துவமனையில் கிடக்கும் போது கூட இவர்களுக்கு வேலை தான் முக்கியம்…
பெண்ணை விட அவர்களுக்கு வேலையும் அதன் மூலம் வரும் வருமானம் தான் முக்கியம் வெங்கட்டிற்கு கூட அக்காவின் மீது பாசம் இல்லை…

தான் ஏதாவது அவர்களிடம் கேட்டால் உடனே பதில் இப்படித்தான் வரும் உன்னுடைய திருமணத்திற்கு வாங்கிய கடனை இன்னும் அடைக்க வில்லை என்று ….

பெரியதாக கடன் வாங்கி திருமணம் செய்து வைத்து விட்டார்கள்...அப்படி என்ன தனக்கு சீர் செய்தார்கள்..
விஜி அண்ணி அன்று அவருக்கு செய்த சீரினை பட்டியலிட்ட போது இவளால் வாயை கூட திறக்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பங்கு எங்கே சுத்தமாகவே தனது வீட்டில் அவளுக்கு சீர்செய்து அனுப்பவில்லையே…அப்படி இருந்தும் கடன் வாங்கியதாக கதைவேறு...ச்சே...


நான் கடனை அடைக்கக்கிறேன் என்றாலும் ஒத்துக்கொள்வதில்லை நல்லவேளை ரிஷியின் குடும்பம் தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறது இல்லை என்றால் அவ்வளவுதான்…. வளைகாப்பில் இருந்து பிரசவம் வரை ஆகும் செலவினை புகுந்த வீட்டினரே பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பெற்றோரை நம்பி இருந்தால் தன்னுடைய கதி அதோகதிதான்
என்று மனதுக்குள் திட்டி தீர்க்க


பவித்ராவின் வீட்டிலோ நேர்மாறு முழுதாக மூவருமே சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிறது ஏதோ உயிர் வாழ வேண்டுமே என்பதற்காக வெங்கட் பிடிவாதமாக அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்கிறான் தாய் அழுது கொண்டே இருக்கின்றார் தந்தையோ மௌனமாக மனதிற்க்குள் அழுது கொண்டிருக்கிறார்…


இருவருமே பணிக்கு சென்று ஐந்து நாட்கள் ஆயிற்று.வெங்கட்டும் அப்படியே அவனுக்கு இன்னும் இரு செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே பாக்கி அத்துடன் அவனின் கல்லூரி வாழ்க்கைக்கு டாட்டா சொல்லிவிடலாம்…

இப்பொழுது அவன் கேம்பஸ் இன்டர்வியூ தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்…

அதுமட்டுமின்றி பல பிரபல தனியார் நிறுவனத்திடம் வேலைக்கு அப்ளை செய்து கொண்டிருக்கிறான்.

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வரை எப்படியோ இப்போது அவன் உறுதியாக இருக்கிறான்...தங்களின் குடும்பம் கண்டிப்பாக ரிஷியின் குடும்பத்தோடு ஏணி வைத்தாலும் எட்டாது ஆனால் அவர்கள் இவர்களை பார்த்து வியக்கும் அளவிற்காவது தன்னுடைய வேலையும் அதன் மூலம் வரும் வருமானமும் இருக்கவேண்டும்...


தங்களின் இப்போதைய நிலைமையை பார்த்து தானே மருத்துவமனையில் இருந்து துரத்தி விட்டார்கள்…


இதே தங்களிடம் பணபலம் இருந்திருந்தால் தாங்கள் அல்லவா அந்த இடத்தில் முன்நின்று இருப்போம் என்ற நிதர்சனம் வெங்கட்டுக்கு புரிந்திருந்தது அவன் ஒன்றும் சிறுபையன் இல்லையே….

போராடி தாயே அழைத்துச் சென்று அருகில் இருந்த கிளினிக்கில் குளுக்கோஸ் கூட ஏற்று வந்தாகிவிட்டது ஆனாலும் தாய் உணவருந்த மறுக்கிறார்.

ஏன்மா இப்படி சாப்பிடாம எல்லாரையும் கஷ்டப்படுறீங்க

நான் சாப்பிட்டு என்ன ஆகப்போகுது ஒரே வார்த்தையில நம்மளை தள்ளி வச்சுட்டாங்களே... அம்மாவுக்கு பையனுக்கு என்ன வித்தியாசம்.


தெரியாம பவித்ராவை அவங்க வீட்டுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்து அவ வாழ்க்கையே நாம கெடுத்துட்டோம் வெங்கட்…

இல்லம்மா பவித்ரா அங்க ரொம்ப சௌகரியமா இருக்கிறா நீங்க தான் அவ வாழ்க்கை கெட்டுப் போனதா நினைச்சு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கீங்க

நான் பலமுறை பார்த்திருக்கேன் அந்த வீட்ல எல்லாருமே அவளை ரொம்ப நல்ல விதமா நடத்துறாங்க கல்யாணம்
ஆகி இவ்வளவு நாள் ஆகியும்
கூட அவளை பத்தி மட்டுமே கவலை பண்றீங்க…

கொஞ்சம் என்னைப் பற்றியும் கவலை படுங்க அவளை தாங்க அங்க ஒரு கூட்டமே இருக்கு... எனக்கு இங்க நீங்க மட்டும் தான் இருக்கீங்க...இதோ குழந்தை பிறந்து ஒருவாரம் ஆகப்போகுது இதுவரை அவ நம்மளை தேடல... உங்க நம்பர் என் நம்பர் அப்பா நம்பர் எல்லா நம்பருமே அவ கையில இருக்கு ... தினமும் ஸ்டேட்டஸ் வைக்கிறா அந்த ஸ்டேட்டஸை நாம பாக்குறோம்..அதை அவளும் பாக்குறா அப்படி இருந்து கூட ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கலனு அவ கேட்கல அப்பவே தெரிஞ்சுக்க வேண்டாமா அவளுக்கு நம்மளை விட முக்கியமானது நிறையா இருக்குன்னு... அதனால அவளை மறந்துட்டு நீங்க உங்க உடம்பை கவனிங்கம்மா... எனக்காக….ப்ளீஸ் என்று சாப்பிட வைத்தான்.

மறுநாளில் இருந்தே தாயையும் தந்தையையும் போராடி வேலைக்கு அனுப்பி வைத்தவன் அவனும் கல்லூரிக்கு செல்ல தொடங்கினான்.

ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து பவித்ராவை டிஸ்சார்ஜ் செய்தனர் டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு அவளுக்குப் பல அறிவுரைகள் மருத்துவரால் வழங்கப்பட்டது…

ரிஷியையும் பவித்ராவையையும் அமரவைத்த மருத்துவர் குழந்தை எடை குறைவாக பிறந்ததாலும் குறித்த தேதிக்கு முன்னதாகவே பிறந்ததாலும் மிகவும் சத்து குறைபாடாக உள்ளது அதனால் ஆறு மாதம் முடியும் வரை கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் வேறு எந்த இணை உணவும் கொடுக்கக் கூடாது...அவ்வளவு ஏன் தண்ணீர் கூட கொடுக்க கூடாது குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்... தடுப்பூசி அட்டவணையை ரிஷியின் கையில் திணித்த மருத்துவர் ரிஷி சில சமயங்கள்ல அவ கூட மறக்கலாம் ஆனால் கூட இருக்கற நீங்க மறக்கக்கூடாது குழந்தையுன் கவனம் பவித்ராவும் கவனம் அவளுக்கும் ஆப்ரேஷன் செய்த உடம்பு ஆறு மாதம் வரைக்கும் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை என்று கூறி அனுப்பி வைத்தார்.

பவித்ரா அவளின் டிஸ்சார்ஜ் அன்று மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் தாயும் தந்தையும் கண்டிப்பாக வருவார்கள் என்று ஆனால் அவர்களும் வரவே இல்லை…

தினமும் இவள் வைக்கும் ஸ்டேட்டஸை பார்க்கிறார்கள் ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை குழந்தையின் முகத்தைப் பார்த்தாலாவது வருவார்கள் என்று யாருக்கும் தெரியாமல் குழந்தையுடன் ஒரு செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் வைக்க சில நிமிடத்திலேயே ரிஷியிடமிருந்து ஆட்சேபனை வர உடனே அதை எடுத்து விட்டாள்.

ஆனால் அதை எடுப்பதற்கு முன்னதாகவே வெங்கட் பார்த்தவன் எதற்க்கும் இருகட்டும் என ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது தாயிடமும் தந்தையிடமும் காண்பித்தான் அவர்களுக்கு பேரனைப் பார்த்ததும் அளவு கடந்த மகிழ்ச்சி தங்களால் அவனை கையில் ஏந்தி கொஞ்ச முடியவில்லையே என்ற கவலையும் உடனே வந்தது…

இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருக்க பவித்ரா ரிஷியின் இடம் அவ்வப் போது தனது பெற்றோரை பற்றி நச்சரிக்க ஆரம்பித்தாள்.

உங்களுக்குள் ஏதாவது பிரச்சினையா குழந்தை பிறந்தவுடன் எனது தாய் தந்தையை பார்த்ததாக ஞாபகம் என்றெல்லாம்... அவன் தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்லி சமாளித்து வைத்துக் கொண்டிருந்தான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் இவனிடம் கேட்டால் வேலைக்கு ஆகாது என்று அறிந்து மெதுவாக ராகவ்விடம் பேச்சுக் கொடுத்து விஷயங்களை வாங்க ஆரம்பித்தாள்…

ராகவ்விற்கு முழுதாக எதுவுமே தெரியவில்லை...ஆனால் மருத்துவமனையில் நடந்தது ஒரளவுக்கு தெரியும்...முக்கியமாக பவியின் தாயார் ரிஷியைப்பார்த்து கூறிய வார்த்தைகள்…


அதை கேட்டுத்தான் இங்கு மேனகாவிடம் ரிஷி வந்து சண்டையிட்டான்.

ஏன்ம்மா பவியோட அம்மாகிட்ட அப்படி பேசனீங்க…
அவங்க பாருங்க இப்போ எங்கிட்ட கோப படுறாங்க..

அவங்க நம்ம வீட்டுக்கு வரதாலயோ இல்ல பவித்ரா அவங்க வீட்டுக்கு போறதாலையோ எப்படிமா பவித்ரா நம்ம குடும்பத்தோட ஓட்டாமபோவானு நீங்க முடிவெடுத்தீங்க


நான் பலதடவை அவளை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு தான் இருக்கேன் அவ மாறாம போயிட்டாளா என்ன?

நாம நடந்துக்கறதுல தான்ம்மா இருக்கு அவளோட மாற்றம்... அவ வந்த நாளிலிருந்து நம்ம வீட்டுல இருக்கும்போது நமக்கு ஏத்த மாதிரி நடந்துக்கறா... அவங்க வீட்டுக்குப் போகும்போது அங்கே எப்படி இருக்கோ அதுக்கு ஏத்த மாதிரி இருப்பா…

அவ குணம் தெரிஞ்ச பிறகும் கூட நீங்க உங்க தப்பை உணர்ந்து காண அவங்க கிட்ட பேசாம இருந்திருக்கிறீர்கள் ஏம்மா இது எவ்வளவு பெரிய தப்பு நீங்க போயி அவங்க கிட்ட சகஜமா பேசி அவளை நம்ம வீட்டுக்கு வரவழைத்து இருக்க வேண்டாமா நீங்களே பவித்ராவை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருக்க வேண்டாமா இதெல்லாம் பண்ணி இருந்தா இன்னைக்கு இந்த மாதிரி ஒரு சங்கடம் எனக்கும் பவித்ரா கூட அம்மாவுக்கும் வந்திருக்காது இல்லை….


என்ன ரிஷி எந்த மாதிரி நேரத்துல என்ன பேசிட்டு இருக்க அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன் மறந்ததால தான வளைகாப்பு பத்தியே நான் அவங்ககிட்ட பேசினேன்... நீயே பாத்தல்ல...அவங்க இறங்கி வரல நான் தான் பேசினேன்…

ஒதுங்கி ஒதுங்கி போறவங்க இழுத்தா பிடித்து வைக்க முடியும் என்னோடதப்பை உணர்ந்து பல தடவை நான் அவங்க கிட்ட பேசியாச்சி... ஆனா அவங்க பழசை மனசுல வெச்சுக்கிட்டு என்ன அவாய்ட் பண்ணிக்கிட்டே இருக்காங்க...


அம்மாவோட குணத்துக்கு ஒரு விஷயத்தை மறுக்கிறதே பெரிய விஷயம் ஆனால் நானே மறந்து அவங்க கிட்ட இறங்கிப் போய் பேசிக்கிட்டு இருக்கேன் ஆனா நீ அம்மாவை குறை சொல்ற இது தப்பு ரிஷி என்று மேனகா ரிஷியிடம் வாதாட


இவர்களின் பேச்சுவார்த்தையை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுற்றி வந்து நிற்க ஆரம்பித்தனர் கடைசியாக ரிஷி தாயிடம் அவங்க என்ன சொல்றாங்க தெரியுமா மனசுல ஒன்னை வச்சிகிட்டு வெளியே ஒன்னு பேசறமாம்…


என்னை எதும் தெரியாத மாதிரி நடிக்கறேங்கறது போல பேசிட்டாங்க….எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு நானும் கொஞ்சம் வார்த்தைகளை விட்டுட்டேன்
பிரச்சினை எல்லாம் சரியான அதுக்கப்புறம் ஒரு நாள் பவித்ராவை அழைச்சிட்டு போய் பேசலாம்னு இருக்கிறேன் என்று கடைசியாக கூறியதை மட்டுமே ராகவ் கேட்டதால்


அதையே இப்பொழுது பவித்ராவிடம் சொல்ல பவித்ராவிற்கு வந்ததே கோபம் எப்படி தனது கணவனை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதாக தனது தாய் கூறுவார்…


அதும் கணவனை நடிகன் போல சித்தரித்து இருக்கிறார்... அவர் இந்த அளவு இறங்கி சென்றும் கூட தாய் தந்தையின் அருகே ஏன் இந்தளவு ஏறிச் செல்ல வேண்டும் என்று கோபப்பட்டவள் அவர்களாக தேடி வந்து கணவனை பேசியதற்க்காக மன்னிப்பு கேட்கும் வரை அவர்கள் வீட்டில் வாசப்படி மிதிக்க போவதில்லை என்று மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டாள்.

அந்த உறுதி எந்த அளவிற்கு என்றால் தாய் தந்தை தம்பி என மூவரின் நண்பரையும் ஒருசேர பிளாக் லிஸ்டில் போட்டுவைத்தாள்.. அப்படியும் அவளுக்கு பிறந்த வீட்டின் மீது இருந்த கோபம் தீரவில்லை போல அவர்களைப் பற்றி ரிஷியிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை ரிஷிக்கே ஆச்சரியம்தான் எப்படி பவித்ரா ஒரே நாளில் இப்படி மாறிவிட்டாள் என்று…

அதுமட்டுமின்றி ரிஷியிடம் சம்பந்தமே இல்லாமல் என் குடும்பத்தின் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று வேறு கூறினார்

சுத்தமாக ரிஷிக்கு புரியவில்லை ஏன் என்று கேட்கவில்லை அவனுக்கு பவித்ராவின் உடல் நிலை ரொம்ப முக்கியம் அவள் குடும்பத்தை பற்றி ஏதாவது பேசி வாக்குவாதம் வளர்ந்து அது அவளை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அவளின் சந்தோஷத்தில் தான் குழந்தையின் ஆரோக்கியம் இருக்கிறது... அவள் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தைக்கு தாய்ப்பால் உணவாகக் கிடைக்கும் குழந்தைக்கு குறைந்தது ஒரு வருடமாவது தாய்ப்பால் புகட்ட சொல்லி வீட்டின் பெரியவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்… தாய்ப்பாலை தவிர முதல் ஆறு மாதம் வேறு எதையுமே கொடுக்கக் கூடாது என்று மருத்துவர் கூறுகிறார் இரண்டையுமே அவன் கருத்தில் கொண்டு ஏன் அவளிடம் தாய்வீட்டு கதைகளை பேசி இருவருமே வார்த்தைகளே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மௌனமாக இருந்து விட்டான்…

குழந்தைக்கு இப்பொழுது நன்றாக தலை நிற்க ஆரம்பித்துவிட்டது குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் செல்லவும் செய்கிறது ஓரளவுக்கு எடையும் கூடிவிட்டது ….ஆதிகேஷ் என்று பெயர் சூட்டு விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது...

ஆறு மாதம் முடியும் தருவாயில் ஒருநாள் காலை வேலையில் அன்நௌன் நம்பரில் இருந்து பவித்ராவிற்கு ஒரு அழைப்பு வந்தது யோசனையுடன் எடுத்துப் பேச தாயின் குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் இருந்தது இவளிடம் எப்படி இருக்கிறாய் என்ன ஏது என்று எதுவுமே கேட்கவில்லை ஃகாலை பவி அட்டன் செய்த உடனே பேச தொடங்கிவிட்டார்…நாம் பேசி முடிக்கிற வரைக்கும் தயவுசெஞ்சு ஃபோனை வைச்சிடாத பவித்ரா ...என்றவர் பேச தொடங்கினார்



நீ அங்கு ரொம்ப நல்லா வாழறது எனக்கு தெரியும் அந்த வாழ்க்கைல குறுக்கிட நான் தயாரால்ல ஆனாலும்... சில விஷயங்களை உன்கிட்ட தெரியப்படுத்த வேண்டியது என் கடமை

அதனால தான் உனக்கு இப்போ கூப்பிட்டேன்... எங்களை நீ சுதாதமாவே வெறுத்துட்டங்கறது தெரியும்…

காரணம் என்னனு தான் எங்களுக்கு தெரியல அதைக் கேட்கவும் நான் விரும்பல…

நீ எங்க எல்லாரோட நம்பரையும் பிளாக் லிஸ்டில் போட்டது எனக்கு இப்போதான் தெரிஞ்சது... அப்பா நம்பர் என் நம்பர்னு மாறி மாறி போன் செஞ்சேன்…


நம்பர் பிஸினு வந்தது பக்கத்துல இருந்த ஒருவர் தான் உங்கள் நம்பரை ப்ளாக் லிஸ்டில் போட்டிருந்தாலும் இப்படித்தான் நம்பர் பிஸியாக இருக்குனு சொல்லும் எதுக்கும் என்னோட நம்பர்ல இருந்து கூப்பிட்டு பாருங்கனு கொடுத்தாரு...


அவரோட நம்பரிலிருந்து தான் இப்போ கூப்பிட்டிருக்கேன்…

பவித்ரா உன்டோட அப்பாக்கு தீடிர்னு முடியாம போயிடுச்சி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கு பெரிய ஹாஸ்பிடல் எல்லாம் இல்ல நம்ம வீட்டல இருந்து பக்கம்தான் என்று மருத்துவமனையின் பெயரை கூறியவர் …

விருப்பமிருந்தா ஒரு எட்டு வந்து உன்னோட அப்பாவோட முகத்தை மட்டுமாவது பார்த்துட்டு போ அவரோட அடிமனசுல உன்னைப் பார்க்கனுங்கற ஆசை இருக்கு...ஒரு தடவை உன் முகத்தை அவருக்கு காட்டறதால பெருசா எதும் நஷ்டம் வராது உனக்கு...

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
16

ஒரு மகளாக நீ எங்களுக்கு எதுவுமே செய்ய வேண்டாம் ஒரே ஒரு முறை பெற்ற கடனுக்காகவது அவரை வந்து பார்த்துவிட்டு போ என்று ஃபோனை வைத்துவிட்டார்.

பவித்ராவிற்கு பெரிய அதிர்ச்சி என்ன…?தந்தைக்கு உடல்நலம் சரியில்லையா என்று அதிர்ச்சி அடைந்தவள் முதல் வேலையாக பிளாக் லிஸ்டில் போட்டிருந்த நம்பரை எல்லாம் எடுத்து விட்டாள். பிறகு தம்பிக்கு அழைக்க அவனின் எண் நெட்வொர்க் இல்லாத ஏரியாவில் இருப்பதாகக் கூறியது குழப்பத்துடன் என்ன செய்வது என்று ரிஷிக்கு அழைக்க ரிஷியோ மீட்டிங்கில் இருக்கிறேன் தொந்தரவு செய்யாதே என்று மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்தான்…

ஆதியை காலையில் நன்றாகக் குளிக்க வைத்து பால் புகட்டி விட அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் எப்படியும் அவன் எழ குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் அதற்குள் தான் சென்று தந்தையை பார்த்துவிட்டு வரலாமா வெங்கட்டை தொடர்பு கொள்ள முடியவில்லை தாயோ ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டுப் போ என்று மன்றாடுகிறார் இந்த நேரத்தில் தன்னுடைய பிடிவாதத்தை ஏன் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

வீட்டில் பெரியவர்கள் யாரும் இருந்தது போல் தெரியவில்லை ராகவ் ராகவியை கூட காணவில்லை என்ன செய்வது என்று யோசித்தவள் நாத்தனார் விஜியை தேடிச் சென்றாள்.

நேராக விஜியின் அறைக்குள்ளே செல்ல மகளை பள்ளியில் விட்டுவிட்டு வந்தவர் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுத்து இருந்தார்.


அண்ணி பிஸியா இருக்கீங்களா?...


இல்ல பவி என்னாச்சி என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்க ஏதாவது முக்கியமான விஷயமா?...

இல்ல அண்ணி கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்குது ஆனா ஆதி நல்லா தூங்கிட்டு இருக்கான் அவனை கூட்டிட்டு போயிட்டு வர்றதுனா கஷ்டம் அது தான் யோசிக்கறேன்...

நான் போயிட்டு வர்ற வரைக்கும் ஆதியை பாத்துக்கறீங்களானு கேட்டுட்டு போக வந்தேன்…

அப்படி எங்க போற…? தூங்குற பையன் விட்டுட்டு போற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயமா பவி…

அதுவந்து…அண்ணி... அம்மா கிட்ட இருந்து இப்போ தான் போன் வந்தது அப்பாக்கு உடம்பு சரி இல்லையாம் பக்கத்துல ஒரு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கிறதா சொன்னாங்க என்னன்னு தெரியல அவங்க வாய்ஸ் கேட்டதுக்கு அப்புறம் மனசு பதறுது ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துட்டான்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும் வீட்ல யாரும் இல்ல போல ரிஷியும் போன் எடுக்கல ஒரே குழப்பமா இருக்கு அண்ணி…

அச்சச்சோ அப்பாக்கு உடம்பு சரி இல்லையா என்னன்னு விசாரிச்சியா…? என்ன ஆச்சு திடீர்னு உடம்புக்கு…?

அப்பாக்கு வயசு இருந்த ஒரு அம்பது இருக்குமா…?


ம்ம்... ஆமா அவ்ளோ தான் இருக்கும் ஆனால் அம்மா எதுவுமே சொல்லல அவங்க பாட்டுக்கு கடகடன்னு பேசிட்டு ஃபோனை வச்சுட்டாங்க .

சரி பவித்ரா நான் ஆதியை பாத்துக்குறேன் ஆனா ஒரு மணி நேரத்துல நீ வந்துருவனா பாத்துக்கறேன்... வர்ஷினியை வேற ஸ்கூல்ல இருந்து கூப்பிட போகணும் லேட் பண்ணிடாத... என்று பேசிய படியே வெளியே வர ஆரம்பித்தனர்.


அண்ணி அவன் தாய் பால் மட்டும் தான் குடிச்சிட்டு இருக்கான் அவன விட்டுட்டு நான் எப்படி அங்க இருக்க முடியும் சொல்லுங்க அதனால என்ன ஏதுன்னு பார்த்துட்டு உடனே வந்துடறேன் என்று நேராக அவளின் அறைக்குச் சென்றவள் எதற்கும் இருக்கட்டும் என்று ரிஷி அவளின் செலவுக்காக கொடுத்து வைத்த பணத்தை எடுத்து வைத்துக்கொண்டாள்.

அப்படியே கிளம்பும் தருவாயில் கிரெடிட் கார்டு டெபிட் கார்டுகள் எடுத்தவள் மகனுக்கு ஒரு முத்தத்தை வைத்து விட்டு விஜியை பார்த்து தலையசைத்து விட்டு வேகமாக வெளியே வந்தாள்... ராகவி எப்பவாவது ஒரு முறை எடுத்துச் செல்லும் இருசக்கர வாகனம் இருக்க அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தாள்…

மருத்துவமனைக்குச் சென்றால் தாயோ வாசலில் போடப்பட்டிருந்த ஒரு சேரில் கண்களில் கண்ணீருடன் வாய்க்குள் எதையோ புலம்பியபடி அமர்ந்திருந்தார்.

அவரைப் பார்த்ததுமே பவித்ராவிடம் இருந்த அத்தனை வாராக்கியங்களும் பொடிப்பொடியாக நொறுங்கிப் போயிற்று வேகமாக தாயிடம் ஓடி வந்தவள் என்னாச்சும்மா அப்பாக்கு என்று படபடப்புடன் கேட்க அவரும் இரு கைகளையும் விரித்து தெரியலையே என்பதுபோல் காண்பித்தவர் பவித்ராவை கட்டிப்பிடித்து அழத்தொடங்கினாள்.

நல்லா தான் நேத்து நைட்டு சாப்பிட்டுட்டு படுத்தாங்க விடியகாலைல நாலுமணி மாதிரி உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டிடாடு...வாந்தி எடுத்துட்டு இருந்தாங்க…

என்ன ஆச்சுன்னு நான் கேட்டதுக்கு தெரியல நைட் சாப்பிட்டது ஒத்துக்கலை போலனு சொன்னாங்க…

சரினு நானும் கண்டுக்காம விட்டுட்டேன் ஒரு ரெண்டு முறை வாந்தி எடுத்தவங்க..
படுத்து எழுந்தா நல்லாருக்கும்னு சொல்லி படுத்துட்டாங்க...காலைல நான் ஸ்கூல் கிளம்பும் போது சொல்லறதுக்காக எழுப்பினா மூச்சி பேச்சி இல்லாம கிடக்கறாங்க...


யாரை கூப்பிடனு தெரியாம உனக்கு தான் போன் பண்ணினேன்... ஆனா உன் நம்பர் பிஸி பிஸினு வரவும் கால் டாக்சி புடிச்சி அப்பாவை அட்மிட் பண்ணிட்டேன்

மறுபடியும் உனக்கு கூப்பிட்டேன் அதேபோல வரவும் பக்கத்துல இருக்குற ஒருத்தரோட நம்பர் வாங்கி உனக்கு கூப்பிட்டு சொன்னேன் இப்ப தான் டெஸ்ட் எல்லாம் முடிச்சு அட்டாக் போல இருக்குன்னு சொல்றாங்க என்று அழுபவரை பார்த்தவளுக்கு அழுகை வர ஆரம்பித்தது…

வெங்கட் எங்கம்மா போனான் உங்களை தனியா இப்படி கஷ்டப்பட விட்டுட்டு…

அவன் காலேஜ் ஐவி-க்காக போயிருக்கான் ஏதோ டவர் இல்லாத ஏரியா போல... அவன் கூட போன யாரையுமே காண்டாக்ட் செய்ய முடியல...இனி அவனா கூப்பிட்டா தான் உண்டு பவித்ரா…

சரிம்மா நீங்க இங்கேயே உட்கார்ந்து இருங்க நான் போய் டாக்டரை பார்த்து பேசிட்டு வரேன் என்று மருத்துவரைக் காணச் சென்றாள் பவித்ரா.

மருத்துவரும் உங்க அப்பாக்கு வந்திருக்கிறது நூறு சதவீதம் அட்டாக் தான் ஆனால் அது எந்த அளவுக்கு பார்க்கிற அளவுக்கான ஃபேஸிலிடீஸ் இந்த ஹாஸ்பிடல்ல கிடையாது

நான் உங்களுக்கு அரசு மருத்துவமனைக்கு இல்லன்னா வேறு மருத்துவமனைக்கு எழுதித்தர்றேன் உடனே கொஞ்சம் பெரிய ஹாஸ்பிட்டலா பார்த்து அட்மிட் பண்ணுங்க பயப்பட ஒன்னும் இல்லை‌...ஆனா அவருக்கு அதுக்குள்ள அடுத்த அட்டாக் வராம இருக்கனும் என்று கூற சரி என்று தலையசைத்தவள் டாக்டர் உங்க ஹாஸ்பிடல்ல இருந்து ஏதாவது ஒரு ஆம்புலன்ஸை ரெடி பண்ணி தர முடியுமா என்று கேட்டாள்.

கண்டிப்பாக பில் எவ்ளோனு பார்த்து ரிசப்ஷன்ல கட்டுங்க நாங்க டிஸ்சார்ஜ்கான நடைமுறையை பார்க்கிறோம் என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட கையில் இருந்த பணத்தைக் கொண்டு தந்தைக்கான பில் தொகையை கட்டினாள்.

பிறகு தாயிடம் வந்து அப்பாவை வேறு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்மா என்று கூற ஏன் பவித்ரா இங்கேயே பார்க்கலாமே என்று தாய்க்கு

இல்லம்மா இங்க கொஞ்சம் ஃபேஸிலிடீஸ் இல்லன்னு சொல்றாங்க பெரிய ஹாஸ்பிடல்லனா எல்லாமே இருக்கும்னு டாக்டர் சொல்லறாங்க...


அப்படினா அப்பாக்கு எந்த ஹாஸ்பிடல் கிளைம் ஆகும்னு பார்த்து அங்க அட்மிட் பண்ணலாம் என்று அவர் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளை பார்வையிட பவித்ரா அவரின் கையில் இருந்த பேப்பரை வாங்கி அவளின் ஹேண்ட் பேக்கில் வைத்தபடி அம்மா ப்ளீஸ் இந்த மாதிரி நேரத்துல கணக்கு பார்த்துட்டு இருக்காதீங்க என்று கூறிவிட்டு சிட்டியிலேயே உயர் தரமாக கருதப்படும் இருதய மருத்துவமனைக்கு தனது தந்தையை அழைத்துச் செல்ல ஆயத்தமானாள்.

நேரம் மெதுவாக செல்லச் செல்ல பவித்ராவிற்கு தந்தையைப் பற்றிய கவலையும் இருக்க வீட்டில் அவளுக்காக அவளின் செல்ல மகன் தாய்ப்பாலுக்கு ஏங்கிக் கொண்டிருப்பதை மெல்ல மறக்க ஆரம்பித்திருந்தாள்.

மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னுடைய வண்டியை யாரையாவது அனுப்பி எடுத்துக்கொள்ளச் சொல்கிறேன் அதுவரை இங்கேயே இருக்கட்டும் என்று சொல்ல அவர்களும் சரி என்று தலையாட்ட தாய்க்குத் துணையாக ஆம்புலன்சில் ஏறி அமர தந்தையுடன் அவர்களையும் சுமந்தபடி ஆம்புலன்ஸ் வேகமாக வேறொரு மருத்துவமனையை நோக்கி பயணித்தது.

மருத்துவமனை வளாகத்திலேயே நாராயணனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உள்ளே அழைத்துச் செல்ல பவித்ராவை மருத்துவத்திற்கு தேவைப்பட்ட பணத்தை கட்டிவிட்டு வந்தாள் அவள் முகத்தையே பார்த்த மேகலா அப்பாவுக்கு இன்சூரன்ஸ் இருக்குமா க்ளைம் பண்ணிக்கலாம் என்று கூற


அவளோ அம்மா முதல்ல ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கட்டும் அதுக்கப்புறம் கூட கிளைம் பண்ணி பணத்தை வாங்கிக்கலாம் அதனால ப்ளீஸ் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க என்று தாயிடம் கோபத்தை காண்பித்தாள்.

அடுத்து அடுத்து அவருக்கு டெஸ்ட் எடுக்க பணம் கட்டுங்கள் என்று கூற பவித்ராவின் கையிருப்பு குறைந்தது உடனே தன்னிடம் இருந்த இன்சுரன்ஸ் காப்பியை வைத்துக்கொண்டு அப்பா கவர்மெண்ட் எம்ப்ளாயி கவர்மெண்ட் இன்சுரன்ஸ் இருக்கு க்ளைம் பண்ணிக்கலாமா என்று கேட்க …

சாரி மேம் உங்க அப்பாவோட இன்சுரன்ஸ் கிளைம் பண்ணினா கூட சார்ஜ் ட்ரீட்மென்ட் செலவு டாக்டர் பீஸ் இதெல்லாம் தவறாகும் இந்த மாதிரி எக்ஸ்ட்ரா டெஸ்டுக்கு எல்லாமே உங்கள் கையில் இருந்துதான் பணம் கொடுக்கிற மாதிரி இருக்கும் என்று கூற சரி என்று தலையசைத்தவள்..

அப்போ கார்ட் ஸ்வைப் பணாணலாமா…?


ஸ்யூர் மேம்...கார்ட் குடுங்க என்ற பணியாளரிடம் முதல் முறையாக கை நடுங்க ரிஷியின் கார்டை எடுத்து கொடுக்க அவரோ தேவை படும் தொகையை டைப் செய்து பின் நம்பர் போடுவதற்காக நீட்ட
இவர் நம்பரை டைப் செய்தாள்.

என்றோ சொன்னதுதான் பின்நம்பர் ஆனால் இன்றும் ஞாபகம் வைத்திருக்கிறாள்... அவள் பிறந்த தேதியின் பிற்பாதியில் வருவது இரண்டு கார்ட்களுக்கும் ஒரே நம்பர் அதனால் சுலபமாக ஞாபகம் வைக்க முடிந்தது இதுபோல் சுலபமான ஒரு நம்பரை வைத்த கணவருக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தாள்.

அடுத்தடுத்து ஒவ்வொரு டெஸ்ட் காய் பாலம் கட்ட சொல்ல பவித்ராவும் ஒவ்வொரு இடத்திலும் கார்டை தேய்க்கத்தேய்க்க ரிஷிக்கு மெசேஜ் பறந்த வண்ணம் இருந்தது முதலில் பவித்ரா ஏதாவது வாங்கி இருப்பாள் என்று சாதாரணமா விட்டவன் அடுத்தடுத்து கார்ட் தேய்க்கபட என்ன என்று மெசேஜை ஆராய அது பிரபல மருத்துவமனையில் கார்ட் தேய்க்கபடுவதை உறுதிசெய்தது பதறிவன் யாருக்கு என்னவாயிற்றோ என்று உடனடியாக வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தான்.


அதற்குள்ளாகவே மதியத்திற்கு மேல் ஆகியிருந்தது தந்தைக்கோ இரண்டாவது அட்டாக் வர தாய் கேட்டவுடனேயே மயங்கிச் சரிந்தார் தாயை பக்கத்து அறையில் அட்மிட் செய்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…

தனது மொபைல் போனில் இருந்து கணவனுக்கு அழைக்கலாம் என்று எடுத்தால் சுத்தமாக சார்ஜ் போயிருந்தது …

யாரிடமாவது போன் வாங்கியாவது சொல்லி இருக்கலாம் அந்த நேரத்தில் அவளுக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றவே இல்லை


வீட்டுக்கு வந்த ரிஷி காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழையும் பொழுதே குடும்ப உறுப்பினர் மொத்தமாக முன்னறையில் குழுமியிருந்தனர்... அழும் ஆதியை சமாளிக்க முடியாமல் விஜி திண்டாடிக் கொண்டிருக்க சுற்றியிருந்த அனைவரும் அவனுக்கு விளையாட்டு காட்டியபடி கூடியிருந்தனர்.
ஓரமாக விஜியின் மகள் வர்ஷினி அழுது கொண்டிருக்க நேராக வந்தவன் வர்ஷினியை தூக்கி சமாதானம் செய்ய ஆரம்பித்த படி என்னாச்சு ஏன் வர்ஷினி அழறா...

பவித்ரா எங்க போனா ஏன் ஆதி இப்படி அழறான்... என்று கேள்வி மேல் கேள்வியாய் கேட்க

பொறுமை ரிஷி ஒவ்வொன்னா கேளு பதில் சொல்றேன் வர்ஷினி ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர லேட் ஆயிடுச்சு அதனால அவ அப்போ இருந்து அழுதுட்டு இருக்கா

ஆதி அவங்க அம்மாவுக்காக அழறான்…

தெளிவா சொல்லு விஜி குழப்பாதே…

ரிஷி பவித்ராவோட அப்பாக்கு காலையில உடம்பு சரியில்லன்னு அவங்க அம்மாகிட்ட இருந்து ஃபோனா வந்தது அதனால போயிட்டு ஒரு மணிநேரத்துல திரும்பி வந்திட்டேன் ஆதி தூங்கிட்டு இருக்கான் பார்த்துக்கோங்க ன்னு சொல்லிட்டு போனா போனவ மணி ரெண்டு ஆச்சு இன்னும் வரல அவகிட்ட படிச்சு படிச்சு சொல்லி அனுப்பினேன் மதியம் பாப்பாவை ஸ்கூல்ல இருந்து கூப்பிடனுமா நான் தான் போகணும் கொஞ்சம் சீக்கிரம் வானு…


சரின்னு தலையாட்டிட்டு போனவ தான் அப்படியே மறந்துட்டா குழந்தை ரெண்டு மணி நேரத்துல முழிச்சிட்டான்...அப்போ இருந்து பசியில கத்திக்கிட்டு இருக்கான்... அப்புறம் அம்மா ஃபோன் பண்ணி வர சொல்லி அவங்க வந்ததுக்கப்புறம்


ஆதியை அவங்க கிட்ட கொடுத்துட்டு நான் போய் வர்ஷினியை இப்போ தான் ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்தேன்...அதான் அவ விடாம அழுகை…

இங்கே வந்து பாத்தா ஆதி அழுதழுது கண்ணெல்லாம் மேலே போய் எல்லோரையும் பயமுறுத்திட்டான் தாய்ப்பால் குடிக்கிற பையன் என்கிறதால வேற ஏதும் கொடுக்கவும் பயமா இருக்குது

இப்போ தண்ணி மட்டும் சூடு பண்ணி ஆறவைத்து கொடுத்திருக்கோம் பவித்ரா வந்துட்டா பரவாயில்லை என்று கூற

தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றதுமே ஆதியின் கோபம் மட்டுபட தொடங்கியிருந்தது.

சரி வந்துடுவா யாருக்காவது போன் பண்ணி சொன்னாளா இல்ல நீங்க யாராவது போன் பண்ணி கேட்டீங்களா…. என்று கேட்கும் பொழுதே ரிஷிக்கு கார்ட் தேய்காகப் பட்டதற்கான மெசேஜ் வர கோபத்தில் ச்சே...இது வேற என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்தபடி மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து பாக்கெட்டில் வைத்தான்.


அவனின் கோபத்தை கண்டு பயந்த விஜி அவ யாருக்கும் போன் பண்ணி சொல்லல நாங்க தான் கூப்பிட்டோம் மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது சரி அவ வர்ற வரைக்கும் ஏன் வெயிட் பண்ணனும்னு இப்பதான் ஆதிக்கு பால் கலக்க அம்மா கிச்சன் போயிருக்காங்க என்று விஜி கூற…

சமாதானம் அடைந்த வர்ஷினியை விஜியிடம் கொடுத்து விட்டு விஜியிடம் இருந்த தனது மகனை கையில் வாங்கி சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

தந்தையிடம் வந்த உடனேயே ஆதி அழுகையை மறந்து சற்று சிரிக்கத் தொடங்கி இருந்தான் அதற்குள்ளாக மேனகா புத்தம் புதிய பால் புட்டியில் பால் ஊற்றிக் கொண்டு வர

ரிஷியோ அம்மா ஒன்னும் பண்ணாதே என்று கேட்டபடி பால் புட்டியை வாங்கி மகனுக்கு கொடுக்கத் தெரியாமல் முழிக்க தொடங்கினான்.

ராதா அவனது கையில் இருந்த ஆதியை வாங்கி அவர் பால் புகட்ட ஆரம்பித்தவர் அதெல்லாம் ஒன்னும் பண்ணாது உங்களுக்கு எல்லாம் இப்படித்தான் கொடுத்து நாங்க வளத்தினோம்….என்ன நீங்களாம் ஆரோக்கியமாக நிறைமாசமா பொறந்தீங்க

இவன் கொஞ்ச நாள் கம்மி...அதுமில்லாம வெயிட் குறைவு அதனால தாய்பால் மட்டும் கொடுத்து வளர்த்திட்டு இருக்கோம் அவ்வளவுதான் ஒன்னும் பண்ணாது என்று தைரியம் கூறியபடி அவனுக்கு முழு பாலையும் புகட்டி முடித்தார்.

வயிறு நிறைந்ததாலும் அழுத கலைப்பினாலும் ஆதி ராதாவின் கையிலேயே தூங்க அவனை அறைக்குள் சென்று தொட்டிலில் போட்டுவிட்டு வந்தார்…

ரிஷிக்கு பவித்ராவை நினைத்து கவலை கொண்டான் பாவம் அவள் சாப்பிட்டாலோ இல்லையோ ஏன் இன்னும் வராமல் இருக்கிறாள்...பணம் செலவாவதை பார்த்தால் தந்தைக்கு மிகவும் முடியவில்லை போல...மேசேஜ்-இல் கார்ட் தேய்க்க பட்ட இடம் இருக்கிறது...அங்கே சென்று அவளுக்கு துணையாக இருக்கலாம்
என்று யோசித்தவன்...

சரிம்மா கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று பொதுவாகக் கூற


ராதாவும் விஜியும் பதறியபடி என்னது வெளியே போறியா…? அதெல்லாம் ஒன்னும் வேணாம் பவித்ரா வர்ற வரைக்கும் நீ வீட்லயே இரு …

இப்போ பார்த்த இல்ல ஆதி உன் கிட்ட வந்து தான் சமாதானம் ஆனான்...இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திடுவான்... மறுபடியும் பயங்கரமா அழ ஆரம்பிப்பான்…

எங்களால் சமாளிக்க முடியாது ஏற்கனவே ஒரு தடவை எங்களை பயமுறுத்திட்டான் அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சினா நீ எங்களை உண்டு இல்லனு பண்ணிடுவ வம்பே வேணாம் ப்ளீஸ் நீ போகாதே என்று தடுத்து நிறுத்த

ரிஷி இப்பொழுது மகனுக்காக இங்கே இருக்க வேண்டுமா இல்லை என்றால் மனைவிக்கு ஆதரவாக அங்கு செல்லவேண்டுமா என்று யோசித்து விட்டு மனைவி வாய்யுள்ள பிள்ளை கண்டிப்பாக திரும்பி வருவாள் ஆனால் மகனோ அப்படியல்ல ஏற்கனவே பிறக்கும் முன்னரே தன்னை பயமுறுத்திவன் அதன் பிறகு பல சோதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்தவன் அதனால் மனைவி வரும் வரை குழந்தையை கூட இருந்து கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் மகன் உறங்கும் அறைக்குள் சென்று தானும் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான்.

நேரம் செல்லச்செல்ல பவித்ராவிற்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள் ஆரம்பித்தது இரண்டு மார்பகங்களும் வீங்க ஆரம்பித்து பயங்கரமாக வலியை கொடுக்க அவளால் இயல்பாக எந்த ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை


தந்தை ஒரு பக்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் அவருக்கு நாற்பத்தியெட்டு மணி நேரம் கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது

தாயும் மயங்கிய நிலைக்கு சென்றவர் இதுவரை கண் விழிக்கவே இல்லை வீட்டில் அவளின் கைக்குழந்தை வேறு இருக்கிறது …

தாயின் அழைப்பேசி தந்தையின் அழைப்பேசி இரண்டையும் கையில் பிடித்தபடி வெங்கட்டின் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்…


இவர்கள் இருவரையும் எப்படி இந்த நிலைமையில் விட்டு விட்டு தன்னுடைய வீட்டிற்குச் செல்ல முடியும் …

அப்படி அங்கு சென்றாலும் மறுபடியும் இவர்களை வந்து பார்க்கும் வாய்ப்பு அமையுமா என்று தெரியாது ஏனென்றால் வீட்டில் கைக்குழந்தை ஒன்று இருக்கிறது

வீட்டில் குழந்தையை அழைத்துகொண்டு எல்லாம் மருத்துவமனை செல்லாதே என்று கண்டிஷன் வைப்பார்கள்... கண்டிப்பாக வீட்டில் இருக்கும் யாரும் தாய் தந்தைக்கு துணையாக இங்கு வந்து இருக்கப்போவதில்லை பதிலுக்கு வீட்டில் வேலை செய்யும் பணியாளர் ஒருவரை அனுப்பி வைப்பார்கள்

அந்த அளவிற்கா தனது தாயும் தந்தையும் அனாதையாகி போனார்கள் மகள் ஒருத்தி முழுதாக நிற்கும்பொழுது என்று எண்ணியவள்...அப்படியே அமர்ந்தும் விட்டாள்...

சிறுவயது முதலே உறவினர்கள் யாரும் வீட்டுக்கு வந்து சென்றதாக ஞாபகம் இல்லை இவர்களும் யார் வீட்டுக்கும் சென்றதாகவும் நினைவில்லை அப்படி இருந்தாலாவது அவர்களை யாரையாவது அழைத்து இங்கே விட்டு விட்டுச் செல்லலாம்...என்று பலவாறான யோசனை...

விட்டிலிருந்தாவது யாராவது ஒருவர் குழந்தையை இங்கு அழைத்து வந்து கொடுத்தால் கூட போதும்...மகனும் பசியாருவான் தனக்கும் பிரச்சினை இல்லை என நினைத்தவள் தாயின் மொபைல் போனிலிருந்து ரிஷிக்கு அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது ராகவ், ராகவி என அவளுக்குத் தெரிந்த நம்பருக்கெல்லாம் அழைக்க புது எண் என யாருமே அதை ஏற்கவில்லை…

பொதுவாக மேல்தட்டு மக்களுக்கு இதுபோல் அன்நௌன் கால்ஸ் ஒரு நாளைக்கு பல வரும்... எல்லாமே டோனேஷன் பற்றியும் இல்லையென்றால் வேலைக்கான சிபாரிசும்மாக இருக்கும் அதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு நேரம் விரயம் என்று நினைப்பார்கள் அதைத்தான் இன்றும் நினைத்து ஒருவரும் பவித்ரா செய்த காலை அட்டென்ட் செய்யவில்லை…

நேரம் செல்லச் செல்ல பவித்ராவிற்கு வலி அதிகமாகியது தவிர குறையவில்லை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை வலிப்பது போல் இருக்க மருத்துவர்கள் சொல்லும் விஷயங்களை பணிப்பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கூறமுடியவில்லை நன்கு யோசித்து முடிவெடுத்தவள் நேரடியாக ரிசப்சனில் நோக்கி நடந்தாள்


அங்கிருந்த பணிப்பெண்ணிடம் இங்கே லேடி டாக்டர் இருக்காங்களா நான் கொஞ்சம் பார்க்கணும் என்று கேட்க உடனடியாக அவளுக்கு அப்பாயின்மென்ட் தரப்பட்டது

நேரே பெண் மருத்துவரை பார்த்தவள் அவள் உடல் உபாதைகளையும் கூற

குழந்தைக்கு எத்தனை மாதம் என குழந்தையின் விவரங்களை எல்லாம் கேட்டுக் கொண்டவர் …

இங்க பாருங்க பவித்ரா இப்போ நான் பாலா கட்டினதை கரைப்பதற்காக ஊசி போட்டா அது கரையும் பொழுது பால் சுரக்கிறது நிற்க ஆரம்பித்து விடும் இந்த ஊசியைப் போட்டா இனி உங்களால
தாய்ப்பால் கொடுக்க முடியாது

ஆனா இவ்ளோ வலியில நீங்க இருக்கும்பொழுது கண்டிப்பா கரைய நான் ஊசி போட்டு தான் ஆகனும்….

இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்குப் போயிடுவேன்... கண்டிப்பா குழந்தைக்கு பால் கொடுக்கனும்னு சொல்ற மாதிரி இருந்தா

நான் பம்ப் பண்ணி எடுத்துவிடறேன்... அதுக்கப்புறம் ஒரு மணி நேரத்துக்குள்ள நீங்க தாய்பால் கொடுக்க ஆரம்பிச்சிடனும்... இல்லனா பம்ப் பண்ணினதும் வேகமா பால் சுரக்கும் மறுபடியும் இதே பிரச்சினை வரும் யோசித்து சோல்லுங்க என்றார்.

தாயையும் தந்தையையும் இந்த நிலைமையில் விட்டுவிட்டு கண்டிப்பாக ஒரு மணி நேரத்தில் தன்னால் வீட்டிற்குச் செல்லு முடியாது என்று புரிந்து கொண்டவள் ஒரு நிமிடம் கண் மூடி யோசித்தால் இப்பொழுது ஆதி ஆரோக்கியமாக தான் இருக்கிறான்...எடையும் கூடிவிட்டது... இனி தாய்ப்பால் இல்லாமல் வேறு இணை உணவையும் சேர்த்து அவனுக்கு கொடுக்க வேண்டியதுதான்
அதுதான் ஆறு மாதம் முடிய போகுதே என்று நினைத்து பவித்ரா மருத்துவரிடம்...


டாக்டர் நீங்க இன்ஜக்சனை போட்டு விடுங்க என்னால் இந்த வலியை தாங்க முடில என் குழந்தைக்கு இப்போ ஆறு மாசம் ஆயிடுச்சு தாய்ப்பால் தவிர்த்து வேற என்னென்ன கொடுக்கலாம் என்கிற மாதிரி ஓரலா ஒரு அட்வைஸ் கொடுங்க போதும் என்று கூறியபடி அங்கிருந்த படுக்கையில் சென்று படுத்தாள்.


மருத்துவர் தற்சமயம் கட்டியிருந்த தாய்ப்பாலை கரைக்கவும் இனி தாய்ப்பால் சுரக்காதவாறு இருக்கவும் சீரஞ்சியில் மருந்தை நிரப்பி அவளுக்கு குத்திவிட்டார்.

அதேநேரம் ரிஷியின் வீட்டில் ஆதி பயங்கரமாக வாந்தி எடுக்கத் தொடங்கினான்... அதே சமயம் அவனுக்கு லூஸ் மோஷனும் போக ஆரம்பித்தது... வீட்டினர் கொடுத்த மாட்டுப்பால் அவன் உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை …

சில குழந்தைகளுக்கு மறுநாள் வரைக்கும் தாக்குப்பிடிக்கும் ஆனால் ஆதி பிறப்பிலே ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தை அதனால் உடனடியாகவே அவனுடைய உடம்பில் அது வெளிக்கொண்டு வந்தது…

ரிஷி முதற்கொண்டு அனைவருமே பயப்பட ஆரம்பிக்க ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஆறு டயப்பர் வரை மாற்றி இருந்தனர் ஆதிக்கு...

எல்லோருமே ஒன்று போல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம் என்று பயப்பட ஆரம்பிக்க நெஞ்சில் படபடப்புடன் குழந்தையை தூக்கிக்கொண்டு ரிஷி ஒட…பின்னாலே ராதாவும் ஏறிக் கொண்டார்.

ராகவ் காரை இயக்க்கினான்..வாகனத்தில் போகப்போகவே ரிஷியின் மேல் முழுதாக வாந்தி எடுத்து வைத்திருந்தான் ஆதி…

மகனின் நிலைகண்டு ரிஷிக்கு கண் கலங்க ஆரம்பித்தது இதுவரை அவன் அழுததே கிடையாது ஆனால் இந்த ஆறுமாத சிறுவன் தகப்பனை கதற விட்டுக் கொண்டிருக்கிறான்.

மருத்துவமனை கொண்டு சென்றவுடனேயே அவர்களின் குடும்ப மருத்துவர் உடனடியாக குழந்தையை பரிசோதித்துவிட்டு மதியம் என்ன கொடுத்தீங்க என்று கேட்டார் அதற்கு உடன் வந்த ராதா
பசு மாட்டு பால் என்று கூற

குழந்தைக்கு அதெல்லாம் ஏன் கொடுத்தீங்க தாய்ப்பால் என்ன ஆச்சு என்று ரிஷியை பார்த்து கேட்டவர் அவனின் கோலத்தைகண்டு... அதன் பிறகு அதைப் பற்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை..

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியலனா எனக்கு ஒரு ஃபோன் பண்ணி கேட்டு இருக்கலாம்ல்ல

நான் உங்களுக்கு குழந்தைக்கு ஏத்தது போல ஏதாவது எழுதிக் கொடுத்து இருப்பேன் என்று கூறியவர் உடனடியாக குழந்தையின் கையில் இரு பக்கமும் சிறு அளவிலான பேடை வைத்து வெள்ளைத் துணியில் சுற்றி அந்தப் பிஞ்சுக் கைகளில் குளுக்கோஸ் ஏற்றுவதற்க்காண நீடிலை சொருக சென்றார்... பதறிய ரிஷி எதுக்காக இப்போ இதெல்லாம் என்று கேட்க

குழந்தை தொடர்ச்சியா வாந்தி எடுக்குது லூஸ் மோஷன் வேற போய்க்கிட்டு இருக்கு இப்படியே விட்டா உடம்புல நீர் சத்து இல்லாம வேற மாதிரி ஆயிடும் அதனால கண்டிப்பா மெடிசன் ஏத்த இதெல்லாம் பண்ணிதான் ஆகனும் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க என்றவர் யோசிக்காமல் குழந்தையின் பின் கையில் நீடிலை சொருகியவர் அதன் மீது பேண்ட்டேஜ்- ஜை ஒட்டினார்.


குழந்தை வலியில் கத்த அது படும்பாட்டை பார்த்த ரிஷி வாய் விட்டு அழ ஆரம்பித்தான்

யாரும் தன்னைப் பார்த்து விடக்கூடாது என்றபடி வாயைப்பொத்திக் கொண்டு வெளியே வந்தவன் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்.

உள்ளே குழந்தை கதறிய கதறலில் வெளியே ரிஷியின் கதறல் காற்றுடன் கலந்தது அவனை சமாளிக்கும் விதமாக ராகவ் வந்து ரிஷியை சமாதானப்படுத்த தொடங்கினான்‌.

இரண்டு மணி நேரத்திலேயே குழந்தை இயல்பு நிலைக்கு வர நன்கு உறங்க ஆரம்பித்தது அதன்பிறகு வாந்தியும் இல்லை லூஸ் மோஷனும் இல்லை...

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
17

குழந்தையை பெரியவர்களிடம் எடுத்துக் கொடுத்தவர் ரிஷியை பார்த்து ஆதி யோட ஹெல்த் கண்டிஷன் பற்றி உங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும் ரிஷி அப்படி இருந்தும் இன்னைக்கு என்னை கேட்காமலே இது மாதிரி எல்லாம் கொடுத்து ரிஸ்க் எடுத்து இருக்கீங்க பரவால்ல இப்ப சரியாயிடுச்சு இனிமேலும் மேற்கொண்டு நடக்காமல் இருப்பது போல பார்த்துக்கோங்க…

வீட்டுக்கு போனதும் மறுபடியும் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிங்க...அம்மாவோட அரைவணைப்பில இருந்தாலே அவன் உடம்புக்கு ஒன்னும் ஆகாது ஒருவேளை தாய்ப்பால் பற்றாமல் போனால் நான் எழுதி இருக்கிற பால் பவுடர் சுடு தண்ணீரில் கலக்கி கொடுங்க எப்படி கொடுக்கிறதுனு அந்தப் பாட்டிலேயே இன்ஸ்டிரக்ஷன் இருக்கும் அதை ஃபாலோ பண்ணுங்க ஏதாவது டவுட்னா உடனே எனக்கு ஃபோன் பண்ணி கேளுங்க என்று அறிவுறுத்திய படி அனுப்பி வைத்தார்…


எல்லோரும் கிளம்பும் நேரம் மருத்துவரிடம் எதனால் இப்படி என்று விசாரிக்க பவித்ராவின் நிலைமையை கூற... புரிந்துகொண்ட மருத்துவர்தான் குழந்தைக்கு பால் பவுடரை புகட்ட வைத்தார்…


குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு வர இரவை நெருங்கிக் கொண்டிருக்க ஆரம்பித்தது குழந்தைக்கு மருத்துவமனைகளிலும் தற்காலியமாக பால் பவுடரைதான் கலக்கி கொடுத்தார்கள் அது கொஞ்சம் ஏற்றுக்கொள்வது போல் இருந்தது‌…

மருத்துவமனையில் மாலை ஆகும் பொழுது தான் மேகலா கண் திறந்தார் உடனே கணவரை நினைத்து அழ ஆரம்பித்தார்... மகள் அருகில் இருக்கவும் அசட்டு தைரியம் பெற்றவர் மகளிடம் கணவரைப் பற்றி நல்ல விஷயங்களை கூறிக் கூறி அழ ஆரம்பித்தாள்...மகளையும் மனமார பாராட்டினார்..
நீ இல்லனா இப்போ நானும் அப்பாவும் என்ன ஆயிருப்போமே தெரியலையே என்று மகளின் பெருமைகளையும் பேசினார்.


தாயின் வாயால் கேட்கும் அவளைப்பற்றிய புகழுரையை ஏற்றுக்கொள்ள முடியாத பவித்திரா ஒரு கட்டத்தில் கோபமாக பேச ஆரம்பித்தாள்…

இப்போ மட்டும் உங்களுக்கு நான் நல்ல பொண்ணா ஆயிட்டேன் ஆனா இவ்வளவு நாள் உங்களுக்கு இந்த பொண்ணை கண்ணு தெரியல இல்லையாம்மா …. கல்யாணம் பண்ணின நாளிலிருந்து ஒரு நாள் கூட என்னை வந்து பார்க்கணும் உங்களுக்கு தோணல…

மாசமா இருக்கும்போது உங்கள நினைச்சு எந்தளவு ஏங்கினேன் தெரியுமா உங்க கையால சாப்பிடணும் உங்க மடியில் தலை வைத்துப் படுக்கனும் பிரசவத்தை பத்தின என்னோட பயத்தை சந்தேகத்தை எல்லாம் உங்க மூலமா கேட்டு தெரிஞ்சுக்கணும்னு எவ்வளவு ஆசை இருந்தது தெரியுமா

ஆனா எதுவுமே நடக்கல ஏதோ நானே ஒருத்தர் மேல ஆசைப்பட்டு அவர் பின்னாடி ஓடி போன மாதிரி தான் இருந்தது….என் வாழ்க்கை யாருமே இல்லாத அனாதை போல

அது மட்டும் இல்ல பிரசவத்துக்கு வந்த நீங்க குழந்தையை கூட பார்க்காம என் புருஷன் கிட்ட சண்டை போட்டுட்டு வந்து இருக்கீங்க

ஆனா இன்னைக்கு அப்பாவோட உயிரை காப்பாத்த நீங்க இந்த லக்சூரி ரூம்ல இருக்க காரணமும் என் புருஷனோட காசு தான் அதை மறந்துடாதீங்க…


பவித்ரா தயவு செஞ்சு உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன் பணத்தை பத்தி பேசாத போதும்மா...உன் வீட்டு ஆளுக எல்லார் வாயிலிருந்தும் கேட்டாச்சி...நீ மட்டும் தான் பாக்கி இப்போ நீயும் பேசிட்டு... நீ எவ்வளவு செலவு செய்யறியோ கணக்கு வைச்சிக்கோ அப்பா குணமாகி வந்ததும் தலையை அடமானம் வைத்தாவது உனக்கு நாங்க கொடுத்திடறோம் அதுவரைக்கும் எதுவுமே பேசாதே…

பேசாதேனா என்னமா அர்த்தம் சொல்லுங்க நீங்க எனக்கு செஞ்ச அநியாயத்தை கேட்டா தப்பு எல்லாத்தையும் அப்படியே என் வீட்டு ஆளுக மேலே திருப்பி விடறீங்க இல்லையா பரவால்லம்மா…

அப்புறம் எவ்வளவு செலவு செஞ்சேனு கணக்கு வச்சிக்க சொன்னீங்கல்ல...எனக்கு கணக்கு வச்சுக்க தெரியாதுமா நா செலவு கணக்கு பார்க்க ஆரம்பிச்சா எத்தனையோ நாள் நீங்க என்ன வந்து பாக்கலையேனு உங்க பாசத்துக்காக ஏங்கி நான் விட்ட கண்ணீர் கூட செலவு கணக்கில் தான் வந்து சேரும் அந்த வேதனையெல்லாம் உங்களால திருப்பி கொடுக்க முடியாது.

ஏன் பவித்ரா இப்படி பேசி அம்மாவை கொல்லாம கொல்லற அம்மாவ பார்த்தா பொய் சொல்ற மாதிரியா இருக்கு ...ஊர்ல இருக்கிற பிள்ளைங்களுக்கு எல்லாம் நல்ல புத்தி சொல்லி ,பொய் சொல்ல கூடாதுன்னு சொல்றவ என்ன பார்த்து சொல்றியே…

இருபத்திரண்டு வருஷம் என்னோட தானே இருந்த இந்த அம்மாவை தெரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா…

போதும் பவி நீ இங்கிருந்து போய்டு நான் அப்பாவ பார்த்துக்கறேன்.. இவ்வளவு நேரம் எங்களுக்காக இருந்ததற்கு ரொம்ப நன்றி வெங்கட் வந்ததும் நீ செலவு செஞ்ச பணம் உன் வீடு தேடி வரும் இனி எனக்கு பொண்ணே வேணாம்...என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார்.

அம்மா அழாதீங்க... ப்ளீஸ்மா... அப்படின்னா நீங்க ஏன்மா என்னை வந்து பாக்கல வளைகாப்புக்கு கூட ஒரு பத்து நாள் என் பொண்ணை என் கூட வச்சி பாத்துக்கறேனு ஏன் நீங்க அவங்ககிட்ட கேட்கலைம்மா...அதை விடுங்க...

குழந்தை பிறந்ததும் உங்களோட இருக்கணும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன் ...அதுவும் நடக்கலை...அந்தளவு உங்களை நான் என்ன செஞ்சேன்... என்னை ஏன் உங்க கிட்ட இருந்து ஒதிக்கிவச்சீங்க.. என்று அவளும் அழுதபடி கேட்க

ரிஷியிடம் திருமணம் வேண்டாம் என்று கூறுங்கள் என்று கேட்பதற்க்காக பவியை நாராயணனுடன் அனுப்பி வைத்தது முதல் குழந்தை பிறந்த அன்று மருத்துவமனையில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் மேகலா கூறி முடித்தார் அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த பவித்ரா அப்படியே தாயின் அருகிலேயே அமர்ந்து விட்டாள்.

அவ்வளவு அதிர்ச்சி அவளுக்கு மேனகா இப்படியெல்லாம் பேசுவாரா என்று இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒருநாள் கூட அவளிடம் வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை அப்படி என்றால் அவர் தன்னிடம் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த ரிஷி தாயின் மீது தவறு என்று தெரிந்தும் கூட மருத்துவமனைகள் தாய்க்காக வக்காலத்து வாங்கியிருக்கிறான்…

தனது தாயின் பக்க நியாயங்களை கேட்க கூட யாருமில்லையே...அன்றைய நாளில் தாயின் மனம் எந்த அளவு புண்பட்டிருக்கும் என்று மனம் வருந்தினாள்.

தான் மிடில்க்ளாஸ் பெண் என்று தெரிந்து தானே திருமணம் செய்தார்கள் அப்புறம் எப்படி தாயின் வீட்டிற்கு செல்லக்கூடாது என்று தன்னை மறைமுகமாக கட்டிப் போடுவது இது எந்த மாதிரியான மனநிலை..

ரிஷியும் அவன் தாய்க்காக பரிந்து பேசி இருக்கிறான் என்றால் அவன் மனதிலும் அதுதான் இருந்திருக்கிறது என்று மாமியார் மீதும் கணவன் மீதும் கோபம் வந்தது எல்லாம் சரி ஆகட்டும் ஒருநாள் நேருக்கு நேராக நிற்க வைத்து அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டவள் தாயிடம் பலமுறை மன்னிப்பு கேட்டாள்.

தாயோ மகளிடம் மனம் விட்டு பேசவும் நன்றாக தெளிந்துவிட்டார் அப்பொழுதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது பேரன் அங்கே தனியாக இருப்பானே பவி காலையிலிருந்து இங்கதான இருக்கற…நீ வீட்டுக்கு போ எப்படியும் நைட் வெங்கட் கூப்பிடுவான் அவன்ட்ட விஷயத்தை சொன்னா உடனே வந்திடுவான் இனி நான் பார்த்திருக்கிறேன்…

எப்படி இந்த நிலைமையில உங்கள விட்டுட்டு நான் போறது... என்று தயங்க


எப்படியும் அப்பாவ பாக்க விட மாட்டாங்க... நான் பார்த்துக்கறேன் பவி நீ வீட்டுக்கு போ பச்ச புள்ள பசில வாடும்... என்னும் பொழுதுதான் ஆதியின் நியாபகம் வந்தது…

தானாகவே கை தனது நெஞ்சின் மீது தொட்டு பார்த்தது வலி அதிகமில்லை...வற்ற தொடங்கிவிட்டது…
விழிகள் தானாக வேதனையில் முடியது…


எத்தனையோ தாய்மார்களுக்கு பால் சுரக்காத காரணத்தினால் அவர்களின் பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள் ஆனால் தனக்கு ஆண்டவன் அப்படி எந்த குறையையும் கொடுக்கவில்லை


பிள்ளை குடுத்தால் போதும் அந்த அளவிற்கு பால் சுரக்கும் அப்படி இருந்தும் கூட தனது பிள்ளைகளுக்காக தன்னால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே சூழ்நிலை அவனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை பறித்து விட்டதே என்று மனம் வருந்தினாள்.

பிறகு தாயிடம் கையில் இருந்த மிச்ச பணத்தை எல்லாம் வலுக்கட்டாயமாகத் திணிக்க காலையில ரிஷி கிட்ட கேட்டுட்டு கண்டிப்பா வரேன்மா…பயப்படாதீங்க அப்பாக்கு ஒன்னும் ஆகாது கண்டிப்பா நாளைக்கு காலைல எந்திருச்சு நம்மள எல்லாம் பார்த்து சிரிக்க தான் போறாங்க…

எப்படியோ பவித்ரா அப்பாவ காரணம் வெச்சாவது நீ அம்மாவை பார்க்க வந்தியே அதுவே போதும்….

இன்னும் ஏன்மா பலசையே நினைச்சுட்டு இருக்கீங்க விடுங்கம்மா அதான் இப்போ நமக்குள்ளே இருந்த எல்லாப் பிரச்சினையும் சரியாயிடுச்சே இனி அடிக்கடி நான் வந்து உங்களையும் அப்பாவையும் வந்து பாத்துக்கறேன் சரியா ….ம்மா நா புக் பண்ணின கால் டாக்ஸி வந்துருச்சு நான் போயிட்டு வரேன் ஏதாவது ஒன்னுனா எனக்கு உடனே கூப்பிடுங்க என்று வெளியில் அவளுக்காக காத்திருந்த கால் டாக்ஸியில் ஏறி அமர்ந்த அதே நேரம்

வீட்டில் ரிஷி ராகவ்விடம் ஆதிக்கு துணையா நான் வீட்ல இருக்கேன் நீ என்ன பண்ற கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் போய் பவித்ராவை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா... அவகிட்ட இங்க நடந்த எந்த விஷயத்தையும் சொல்ல வேண்டாம் அவ பயந்துடுவா

அங்க எப்படியும் அவளோட தம்பி இருப்பான் தம்பி கிட்ட என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அவங்க கையில பணம் இல்லனா செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு வா... காலையில கண்டிப்பா பவித்ரா போற மாதிரி இருந்தா அங்கேயே அவளுக்கு ஒரு நல்ல ரூம் புக் பண்ணி வைக்க சொல்லு
நாளைக்கு காலையில நானே குழந்தையும் பவியையும் கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல் விடுறேன்னு அவங்க அம்மாகிட்ட சொல்லிடு புரியுதா என்றவன் தனது மொபைல் போனை எடுத்து பவித்ரா கார்ட் தேய்த்ததுக்காக வந்த மெசேஜ்ஜில் இருந்த மருத்துவமனையில் பெயரை தம்பிக்கு கூறி அனுப்பி வைத்தான்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கவலையில் அவரவர் ரூமிற்கு செல்ல கார் சாவியை எடுத்துக் கொண்டு ராகவ் வாசலுக்கு வரவும் வீட்டிற்குள் வாடகை வாகனம் ஒன்று நிற்க அதிலிருந்து சற்று பயத்துடன் பவித்ரா இறங்கி வந்தாள்.

ஏற்கனவே குடும்பத்தாரிடம் மருத்துவமனையில் இருந்து வரும் பொழுது தெளிவாக கூறிவிட்டான் பவித்ரா வந்தவுடன் அவளிடம் யாரும் எதுவும் கேட்கக்கூடாது அவளிடம் சண்டையிடவும் கூடாது குழந்தைக்கு நடந்தது ஒரு விபத்து அவள் வேண்டும் என்று இதை செய்யவில்லை அவளின் சூழ்நிலை என்னவென்று தெரியாமல் அவளை குறை கூறுவது தவறு...அதனால் இதைப் பற்றிய பேச்சை யாரும் பேசக்கூடாது என்று கூறியதால் யாருமே எதுவும் பேசாமல் இருந்தனர்…

ராதா மட்டும் ரிஷியை பார்த்து ரிஷி காலையில் இருந்து குழந்தையை அவ பால் கொடுக்கல…வந்த உடனேவும் குழந்தைக்கு பால் கொடுக்க கூடாது...
அவளுக்கு தெரியலன்னா நாங்க வேணா ஹெல்ப் பண்ணவா

ம்ம்...அப்படியா...சரி அக்கா நீ மட்டும் இரு சித்தி நீங்க ஆதியை தூக்கிட்டு வாங்க... நான் பவி அழைச்சிட்டு மேல வர்றேன்…

வா..உள்ள வா பவி…

ரிஷி அது வந்து….

நீ எதுவும் சொல்ல வேணாம் முதல்ல போய் குளிச்சிட்டு வா அதுக்கப்புறமா பேசிக்கலாம்…

ஆதி எங்கே அவனுக்கு பசிக்கு என்ன குடுத்தீங்க…


ஷ்ஷ்... டென்ஷனாக வேண்டாம் ஆதி தூங்கிட்டு இருக்கான் சித்தி தூக்கிட்டு வர போயிருக்காங்க நான் அவனை மேல ரூமுக்கு தூக்கிட்டு வரேன் நீ அதுக்குள்ள போய் குளிச்சிட்டு ரெடியா இரு…

ம்ம்... என்றவள் வேகமாக குளியலறைக்குச் சென்று அவசரக் குளியல் ஒன்றைப் போட்டு விட்டு இலகுவான ஒரு புடவையை சுற்றிக்கொண்டு வெளியே வர படுக்கையில் கைகளில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக போட்டிருந்த நீடில் பேண்டேஜ் மட்டும் பேடால் சுற்றப்பட்ட கட்டுடனும் உட்கார்ந்து ஆதி விளையாடிக்கொண்டிருக்க அருகினில் ரிஷி அமர்ந்திருந்தான்.

ஆதியை பார்த்ததும் அதிர்ச்சியில் கத்தியபடி ஓடிவந்தாள் என்னாச்சு...ஆதிக்குட்டிக்கு... கையில ஏன் இவ்ளோ பெரிய கட்டு... அய்யோ என் புள்ள கைல நீடில் இருக்கு...ஏன்ங்க...விஜி அண்ணி எங்க அவங்களை நம்பித்தானே புள்ளைய விட்டுட்டு போனேன் இப்படி பண்ணி வச்சிருக்காங்க ஒரு எட்டு மணி நேரம் தானே என் பிள்ளையை நான் பார்க்காமல் இருந்தேன் அதுக்குள்ள இந்த பாடு படுத்தி வச்சிருக்கீங்க கடவுளே என் புள்ள வலியில எப்படி துடித்து இருப்பான் என்று பையனை நெஞ்சோடு அணைத்தபடி அழ ஆரம்பித்தாள்…

பவி... நீ போனவ திரும்பி வரவே இல்ல பசிக்கு குழந்தைக்கு என்ன கொடுப்பாங்க சொல்லு யோசிச்சு பார்த்தியா...நீ எதுவுமே குடுக்கல ஆதி பசில அழ ஆரம்பிச்சான் பால் குடுக்க நீ இல்ல... அதனால வீட்டில இருந்து பாலை அவனுக்கு கொடுத்து அது ஒத்துக்காம போயி அவன் விடாம வாமிட் பண்ணி என்னனமோ ஆயிடுச்சு அதனால ஹாஸ்பிடல் போனதால ட்ரிப் போடறதுக்காக சப்போர்ட்டுக்கு போட்ட கட்டு பயபட ஒனுமில்ல


சரி இன்னும் ஏன் நீடிலோட கையிலேயே இருக்கு…

ஒருவேளை அவனுக்கு மறுபடியும் உடம்பு சரி இல்லாம போயிடுச்சுன்னா அப்போ மறுபடியும் குத்தனுமில்லையா அதுக்காக ஒருநாள் இருக்கட்டும்னு விட்டுருக்காங்க


நீ ஆதிக்கு தாய்ப்பால் கொடுத்து அவன் ரெடி ஆயிட்டான்னா இதை நாமளே கூட மெதுவா எடுத்துவிடலாம் அதனால மொதல்ல அவனுக்கு பால் கொடு …

ம்ம்...அப்புறம் சித்தி ஏதோ சொன்னாங்க காலையில் இருந்து பால் குடுக்காம இருந்துட்டு லேட்டா குடுத்தா ஆதி உடம்புக்கு ஒத்துக்காதுனு…

இரு நான் அக்காவ கூட்டிட்டு வரேன் நீ அவங்க கிட்ட என்ன விவரம்னு கேட்டுக்கோ... என்று விஜியை அழைக்க வெளியே சென்றவனை

ரிஷி என்ற அவளின் குரல் தடுத்து நிறுத்தியது.

என்ன பவித்ரா…

இல்ல அண்ணி எல்லாம் கூப்பிட வேண்டாம்…

ஓஓஓ...நீயே மேனேஜ் பண்ணிப்பியா … ஒகே நோ ப்ராப்ளம் ...முதல்ல பால் கொடு...

இல்ல ரிஷி... அது வந்து…

என்ன தயக்கம் பவி...ஆதி அழறதுக்கு முன்னாடி அவனுக்கு பால் கொடுக்கறதை பாரு ...ஏற்கனவே இன்னைக்கு ரொம்ப அழுதுட்டான்...பாரு உன் கிட்ட பால் குடிக்கிறதுக்காக விழறான்...புடவை மேலயே தேடறான் புரியலையா உனக்கு….

ரிஷி ஆதிக்கு இப்போ என்னால பால் கொடுக்க முடியாது….


முடியாதுன்னா புரியல….

அது வந்து சாயங்காலம் எனக்கு பால் கட்டிக்கிச்சு வலி தாங்க முடியல...

சரி ….

அதனால டாக்டர் கிட்ட போயி கன்சல் பண்ணினேன்….

சரி நல்ல விஷயம்தானே அதுக்கு என்ன இப்போ ….

அவங்க என்ன சொன்னாங்கன்னா இன்னும் ஒருமணி நேரத்துல பால் கொடுக்கிற மாதிரி இருந்தா பம்ப் பண்ணி விடறேன் அப்படி இல்லன்னா பால் வத்தறதுக்காக ஊசி போட்டு விடுறேன் சொன்னாங்க…

ம்ம்...நீ என்ன சொன்ன...குரலில் சற்று கோபம் எட்டிப்பார்த்தது..

ஒரு மணி நேரத்தில கண்டிப்பா என்னால தால் கொடுக்கமுடியாது அதுவுமில்லாம அப்பாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்கும்போது நான் தினமும் ஹாஸ்பிடல் போக வேண்டிய சூழ்நிலை வரும் அதனால பால் வத்ததற்காக ஊசி போட சொல்லி ஊசி போட்டு கிட்டேன் இனி நான் அவனுக்கு பால் கொடுத்தா ஆதி உடம்புக்கு ஏதாவது வந்துடும் தயங்கி தயங்கி சற்று பயத்துடன் கூறி முடிக்கும் முன்னே கையில் குழந்தையுடன் இருக்கும் அவளை யோசிக்காமல் கன்னத்தில் ஓங்கி அறைய குழந்தையுடன் அப்படியே மெத்தையில் சாய்ந்தாள்...


குழந்தை கையில் நீடில் இருப்பதால் அவள் விழுந்த பொசிசனில் அது குழந்தையை பதம் பார்க்க வலியில் கதற ஆரம்பித்தது... சட்டென்று அவளை நகர்த்தி விட்டு குழந்தையை கையில் தூக்கி சமாதானப்படுத்த ஆரம்பித்தான்.



குழந்தை அழுகை சத்தத்தை கேட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரிஷியின் அறையை நோக்கி ஒடிவர ஆரம்பித்தனர்..,


முகம் முழுவதும் கோபத்தில் ரத்த சிவப்பாக சிவந்திருந்தது பெரிய பெரிய மூச்சினை வெளியே விட்டவன் அவளின் கைகளை பிடித்து தூக்கி நிறுத்தியவன் எவ்வளவு தைரியம் இருந்தா இவ்வளவு பெரிய காரியத்தை செய்யறதுக்கு முன்னாடி என் கிட்ட ஒரு வார்த்தை கேக்கனும்னு தோணாம நீயா முடிவெடுப்ப….

ஆதி கிட்ட தட்ட குறைமாதத்தில பிறந்த குழந்தை... எடை குறைவா பிறந்தவன்... ஊட்டச்சத்தும் கிடையாது நோயெதிர்ப்பு சக்தியும் கிடையாது அப்படி இருக்கும் பொழுது நீ அவனுக்கு கொடுக்கிற தாய்ப்பால் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுனு தெரிந்தும் கூட உன்னால எப்படி இதுபோல ஒரு காரியத்தை செய்ய முடிஞ்சது...

நியாயமா என் பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய உரிமையை அவன்கிட்ட இருந்து நீ தட்டி படிச்சிருக்க பவித்ரா யார் உனக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது…. நானா...சொல்லு...

எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு போறதால தான் உனக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்தது பவித்ரா சொல்லு….

இல்ல ரிஷி அது வந்து... அங்க அப்பாவுக்கு…ரொம்ப முடியாம...

இருக்கட்டுமே…. அதுக்காக நீ இவ்வளவு பெரிய முடிவை தன்னிச்சையாக எடுப்பியா அதுக்கு முன்னாடி என்னைக் கேக்கனும்ல….

உங்க மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ரிஷி எல்லாருக்குமே கூப்பிட்டு பார்த்தேன் யாருமே ரெஸ்பான்ஸ் பண்ணல…

செஞ்சு நியாயப்படுத்த சப்பைக்கட்டு கட்டாத பவித்ரா... இப்போ ஒரு கால் டாக்சி பிடித்து வீட்டுக்கு வர தெரிஞ்சு உனக்கு ஏன் சாயங்காலமா வர தெரியல…


ஐயோ ரிஷி என்னோட அம்மாவுக்கும் முடியல அம்மாவையும் அப்பாவையும் அந்த நிலையைல விட்டுட்டு எப்படி நான் இங்கே வர முடியும்…


அப்போ உன்னோட சுயநலத்துக்காக என் குழந்தையோட ஆரோக்கியத்தோட விளையாடுவியா…


என்ன ரிஷி... கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம பேசுறீங்க உன் குழந்தை என் குழந்தை பிரிச்சு பேசுறீங்க உங்களை விட ஆதி மேல அதிகப்படியான அக்கறை எனக்கு இருக்கு அவனுக்கு ஆறு மாசம் முடிய போகுது இனி அவனுக்கு வேற ஆகாரம் கொடுக்கலாம்னு டாக்டர் சொன்னதால தான் நான் தைரியமா ஊசி போட ஒத்துகிட்டேன்... புரிஞ்சுக்கோங்க…
அங்க அம்மா அப்பா அப்படி இருக்கும்போது என்னால எப்படி வீட்டிலிருந்து ஆதியை கவனிச்சுக்க முடியும்….

எப்படி வீட்டிலிருந்தே கவனிச்சுக்க முடியும்னா உன்னோட யோசனை என்னவா இருந்தது…

தினமும் என் குழந்தைக்கு இதே மாதிரி வீட்ல விட்டுட்டு நீ ஹாஸ்பிடல் போறதா இருந்தியா…

அதுக்கு என்னோட அனுமதி வேண்டாமா எங்க வீட்டில் இருக்கிறவங்களோட அனுமதி வேண்டாமா சொல்லு பவித்ரா…?

இதெல்லாம் யாரு உனக்கு சொல்லிக் கொடுத்தது உன் அம்மாவா ரொம்ப நாள் கழிச்சு பொண்ண பார்த்ததும் இப்படி பண்ண உனக்கு சொல்லிக் கொடுத்தாங்களா சொல்லு என்று அவள் கைகளை பிடித்து தூக்கியபடி கோபமாக கேட்க

வீட்டிலிருந்த அனைவருமே ரிஷி...என்ன இது …? எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் குழந்தை பாரு அழுதுகிட்டே இருக்கான் என்றுகூற


விஜியை பார்த்த ரிஷி அக்கா டாக்டர் கொடுத்த பால்பவுடர் இருக்குல்ல அதை கலக்கி ஆதிக்கு குடு என்று குழந்தையை அவளிடம் கொடுத்ததான்.


உடனே பவித்ரா அண்ணி நான் அவனுக்கு கொடுக்கிறேன் நீங்க பால் மட்டும் கலக்கிட்டு வாங்க ஆதியை என்கிட்ட கொடுங்க என்று கூற விஜியோ தயங்கியபடி ஆதியை பார்க்க

நான் உன்கிட்ட தான் அக்கா சொன்னேன் குழந்தை எடுத்துட்டு நீ கீழ போ என்று கூறவும் …

அவர் தயங்கியபடியே குழந்தையை வாங்கி செல்ல பின்புறமே ராதாவும் மேனகாவும் கிளம்பினார்கள்... கணவன் மனைவி சண்டையில் தாங்கள் கூறிக்கிட்டு பிரச்சினை வேறு விதமாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணியபடி நகர ஆண்கள் என்ன செய்வது என்று புரியாமல் வாசலிலேயே நின்று கொண்டிருக்க மேனகா அனைவருமே கீழே செல்லலாம் என்று ஜாடை செய்தபடி சென்றார்.

அதுவரை குடும்பத்தினர் எல்லோரும் சுற்றி இருந்ததால் சற்று அமைதிகாத்த பவித்ரா திருப்பி பேசத்தொடங்கினாள் தன் கணவன் மட்டும் தானே இருக்கிறான் என்ற எண்ணத்தில் அவள் பக்க நியாயத்தை அவனிடம் கூற தொடங்கினாள்.

என்ன ரிஷி விட்டா பேசிக்கிட்டே போறீங்க... ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாமா வேண்டாமானு முடிவெடுக்க வேண்டியது அந்த தாயோட உரிமை...அதுக்கு யார்கிட்டயும் பர்மிஷன் வாங்க அவசியம் கிடையாது


ஒரு மகளா பெத்தவங்களுக்கு முடியாதபோது கூட இருக்கறது என்னோட கடமை...அதுக்கும் யாரோட அனுமதியும் எனக்கு தேவையில்லை...


என்ன சொன்னீங்க என்னோட அம்மா எனக்கு சொல்லி கொடுத்தாங்களே அவங்களே பாவம்...வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசல... அப்பாவுக்கு ரெண்டாவது தடவையா அட்டாக் வந்திடுச்சினு சொன்ன உடனேயே மயக்கம் போட்டு விழுந்தவங்க தான் சாயங்காலம் தான் கண்ணு முழிச்சாங்க…

அவங்க தான் எழுந்ததும் முத வேலையா வீட்டுக்கு போனு என்னை துரத்திவிட்டாங்க… இத்தனைக்கும் என் அம்மாவுக்கும் டிரிப் ஏறிக்கிட்டு இருக்கிது... இன்னும் அம்மாவ டாக்டர் டிஸ்ஜார்ச் பண்ணல அங்கேயேதான் அட்மிட் பண்ணிருக்காங்க…அப்படியிருந்தும் கூட என்னை நான் பார்த்துக்கிறேன் அப்பாவையும் பார்த்துகிறேன் நீ வீட்டுக்கு போனு துரத்திவிட்டாங்க அவங்களை போய் வாய் கூசாம பேசுறீங்க…


ம்கூம்... ஏன் பேச மாட்டீங்க ரிஷி ஏன்னா என் முன்னாடி ரொம்ப நல்லவங்க மாதிரி நடிச்சிகிட்டு அந்தப் பக்கம் என் அம்மா கிட்ட போய் உங்களை மாதிரி மிடில்கிளாஸ்லாம் எங்க வீட்டுக்கு வரக்கூடாது...அதே போல உங்க பொண்ணையும் கூப்பிட கூடாதுனு பேசின அம்மாவுக்கு பிறந்தவர் தான் நீங்க... உங்ககிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும் ….

குழந்தையை பார்க்க வந்த அன்னைக்கு கூட என் குழந்தை அவங்க கண்ணுல காட்டாம துரத்திவிட்டு இருக்கீங்க உங்களுக்கு இருக்கிற அதே உரிமை அவங்களுக்கும் குழந்தை மேல இருக்கு….

அவங்க கிட்டயும் உங்க அளவுக்கு பணம் இருந்திருந்தா அந்த இடத்துல நின்னு குழந்தையை பாத்து இருப்பாங்க…

உங்க அம்மா மேல தப்பு இருக்குன்னு தெரிஞ்சு கூட அதை ஓத்துக்காம நீங்க அவங்களை வெளியே விரட்டி விட்டு இருக்கீங்க உங்க கிட்ட எல்லாம் நான் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா

இப்போ கூட ஏதோ பையன் மேல அக்கறை இருக்கிற மாதிரி பேசுறீங்கல்ல... அதுகூட நடிப்புதான் உங்களோட உண்மையான கோபம் என்ன தெரியுமா நான் இன்னைக்கு என் அம்மா அப்பாவ போய் பார்த்துட்டு வந்ததுதான் அந்த கோபத்துக்கு தான் இப்படி பால் கொடுக்கல... அனுமதி கேட்கலனு... பொய்யா ஒரு காரணத்தை சொல்லி சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க….

சபாஷ் பவித்ரா நீ இவ்வளவெல்லாம் பேசுவியா நீ இந்தளவு பேசுவங்கற விஷயம் ஒன்றரை வருஷம் ஆகி கூட எனக்கு தெரியல பாத்தியா…

பையன் மேல பாசம் இருக்கிற மாதிரி நான் நடிக்கிறேனா என்னை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா பவித்ரா... அன்னைக்கு பிரசவ சமயத்தில் ஆதியை காப்பாத்த டாக்டர் எவ்வளவு போறாடினாங்க தெரியுமா... உனக்கு தெரியாது நீ மயக்கத்துல இருந்த...அவன் பொறந்ததும் உடம்பெல்லாம் ப்ளு கலர்ல இருந்தது அந்த பிஞ்சு குழந்தை பத்து நாள் கரண்ட் பெட்டில படுத்துட்டு இருந்தான்... எதுக்காக…
இந்த அம்மா அப்பாவோட சந்தோஷமா வாழ்வதற்காக…

ஆதியும் நீயும் பொழச்சி வரணும்னு எத்தனை கடவுளுக்கும் வேண்டினோம் தெரியுமா பொதுவா எங்க குடும்பத்தில் யாருமே கோயிலுக்கு போக மாட்டோம் ஆனா உனக்காகவும் ஆதிக்காகவும் அத்தனை பேரும் நீங்க டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் தினமும் கோயிலுக்கு போனாங்க அந்த விஷயம் உனக்கு தெரியுமா... அவ்வளவு ஏன்
இன்னைக்கு என்னோட ஆதி எவ்ளோ கஷ்டப்பட்டான் தெரியுமா அத நேர்ல பாத்து இருந்தா நீ இந்த மாதிரி எல்லாம் பேசி இருக்க மாட்ட அப்புறம் என்ன சொன்ன…

இப்ப கூட நீ வரதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ராகவ் கிட்ட என்ன சொல்லிட்டு இருந்தேன்னு தெரியுமா…. என்னை நீ புரிஞ்சுக்கவே இல்ல பவித்ரா என்ன நீ உண்மையா காதலிக்கல அப்படி காதலித்து இருந்தால் என்ன பத்தி உனக்கு இந்த அளவு தப்பான எண்ணம் வந்திருக்காது….

என் அம்மா உன் அம்மா கிட்ட பேசினது தப்புதான் இல்லன்னு சொல்லல அதுக்காக என்னோட அம்மாவை எல்லார்கிட்டயும் விட்டுக் கொடுக்க முடியுமா இன்னைக்கு உன்னோட அம்மாவுக்காக நீ போனியே அதே பாசம் தானே என் அம்மா மேல எனக்கும் இருக்கும்…


வேற என்னவோ சொன்னியே...என்று யோசித்தவன் ஹான்….என்னோட அம்மா நடிக்கிறாங்க... இல்லையா என் அம்மாவுக்கு நடிக்கத் தெரியாது நடிக்கனும்ங்கற அவசியம் அவங்களுக்கு கிடையாது உன் அம்மாதான் அப்பாவி மாதிரி மூஞ்சிய வெச்சுக்கிட்டு எல்லா வேலையும் ரொம்ப அழகா பண்ணிக்கிட்டு இருக்காங்க…
பொண்ணை சீக்கிரமா வீட்டுக்கு போனு அனுப்பி வைச்சிட்டு கூடவே பழசை எல்லாம் சொல்லி பொண்ணை மறைமுகமாக தூண்டிவிட்டு இருக்காங்களே உங்க அம்மாவை நான் என்னன்னு சொல்றது ஆஸ்கர் அவார்டு வாங்குற அளவுக்கு நடிக்கிறாங்கனு சொல்லலாமா…?

மறுபடியும் மறுபடியும் அம்மாவ பத்தி தப்பா பேசாதீங்க ரிஷி அவங்க ஒரு வாயில்லாப் பூச்சி உங்களுக்கு என் மேலதான கோபம் என்கிட்ட பேசுங்க... என்னை பத்தி மட்டும் பேசுங்க….

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
18

நிஜமாவே இவ்வளவு நாள் நான் உங்களை நான் சரியா புரிஞ்சுக்கல ரிஷி இன்னைக்கு தான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன் உங்கள பொறுத்த வரைக்கும் பொம்பளைகன்னாலே உங்களோட ராத்திரி தேவைக்கும் அதுமூலமா பொறக்கற குழந்தைக்கு அம்மாவா இருக்கறதும் தான் இல்லையா…


அப்கோர்ஸ் பவித்ரா என்னோட நினைப்பை இப்பவாது புரிஞ்சுக்கிட்டியே அதுவே போதும்…


அப்போ நீங்க என்னை உண்மையா காதலிக்கலையா ரிஷி உங்கள மாதிரி ஒரு சுயநலவாதியையா உருகி உருகி காதலிச்சேன்... பெத்தவங்களை கஷ்டப்படுத்தி அவர்கள கடன்ல விழவச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...ச்சே…
ஆதி மட்டும் இல்லனா என்னை ஒரு பொம்பளையா கூட மதிச்சி இருக்க மாட்டீங்க இல்ல…

ம்ம்... பேசு பவித்ரா நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என் காதில் தேன் வந்து பாயற மாதிரி இருக்கு இன்னும் உன்னால எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசு…

உன் மிடில்கிளாஸ் புத்தி ரொம்ப அழகாவே உன் பேச்சில தெரியுது... என்ன சொல்லனும்... உன்னை மாதிரி ஒரு லோக்கலான பொண்ணை கல்யாணம் பண்ணி கோபுரத்து மேல உட்கார வைச்சி இருக்கேன்ல்ல அதுதான் பேசுற

உன்ன பத்தி முதல்ல என் அம்மாகிட்ட சொல்லும் போது என்னை பாத்து அம்மா கேட்டாங்க எப்படி நம்ம குடும்பத்தோட இந்த மாதிரி ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு ஒத்துப்போவானு அப்பவே யோசிச்சிருக்கனும்... அதான் இன்னைக்கு உன்னோட லோக்கல் பாஷை எல்லாம் என்கிட்ட பேசி பாராட்டு வாங்கிட்டு இருக்க…

எனக்கு இருக்கிற வசதிக்கு எனக்கு ஒரு குழந்தை வேணும்னு நினைச்சா ஒரு வாடகைத்தாய் மூலமா ஒரு குழந்தையை பெத்துருப்பேன்... உன்ன மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து குழந்தை பெத்துக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை பவித்ரா...

என்னோட குழந்தைக்கு அப்பாவும் வேணும் அம்மாவும் வேணும்னு நினைச்சேன் அதனாலதான் உன்ன மாதிரி ஒரு பொண்ணை மிடில்கிளாஸா இருந்தாலும் பரவால்லனு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் கடைசி வரைக்கும் எனக்கு ஒரு நல்ல மனைவியாவும் குழந்தைக்கு ஒரு நல்ல அம்மாவா இருப்பேன்னு நம்பினேன்...

நான் எந்த அளவு பொம்பளைகளை மதிக்கிறேனு எனக்கு தெரிஞ்சா போதும்...உன்னை எந்த அளவு நேசிச்சேனு உனக்கு தெரியனுங்கற அவசியம் எனக்கு இல்லை... உன்னை காதலிச்சதோட அடையாளம்தான் காலையிலிருந்து இத்தனை லட்ச ரூபாய் எடுத்தும் கூட இந்த நிமிஷம் வரைக்கும் ஏன்னு ஒரு வார்த்தை கேட்காம இருக்கறேன் காரணம் உன் மேல நான் வெச்சிருக்கிற பாசம் நம்பிக்கை…. நானோ என் குடும்பமோ உன் வீட்டுக்கு ஆகாது ஆனா எங்க குடும்பதோட பணம் மட்டும் உங்களுக்கு வேணுமா…

உன்னோட சுயநலத்துக்காக எப்போ என் குழந்தைக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமையை பறிச்சியோ... எப்போ என் காதலை சந்தேகப்பட்டியோ எப்போ வெறும் உடல்தேவைக்காகவும் குழந்தைக்காகவும் தான் உன்னை கூட வைத்திருக்கிறேனு வாய் கூசாம சொன்னியோ அதுக்கப்புறமா இந்த வீட்ல உனக்கு இடமில்லை …வெளிய போ பவித்ரா...இனி எப்பவுமே என் முகத்துல முழிக்காத என் வாழ்க்கையில் இருந்தும் ஆதி வாழ்க்கைல இருந்தும் வெளிய போ…என்று கையை பிடித்து இழுத்து அறைக்கு வெளியே கொண்டு வந்து விட அவனை தட்டி விட்டவள்

புரியாம பேசாதீங்க எதுக்கு எதோட முடிச்சு போறீங்க நீங்க பேசுனீங்க அதுக்காக நான் பதில் சொன்னேன் அதற்காக என்னை வெளியே போகச் சொல்லுவீங்களா நான் இல்லாம ஆதி எப்படி இருப்பான்…

காலையிலிருந்து எப்படி இருந்தானோ இனிமே அப்படித்தான் இருப்பான் எப்போ உன்னால என் பையனுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதுன்னு ஆயிடுச்சோ அதுக்கப்புறம் என் பையனுக்கு நீ தேவையில்லை

நீ செய்யுற வேலையை ஒரு பால் டப்பா செய்யும் போது அவனுக்கு அம்மா தேவை இல்ல... உன்னை விட ஆயிரம் மடங்கு பாசத்தை காமிக்க என் குடும்பத்துல ஆளுக இருக்காங்க அவங்க பாத்துப்பாங்க இப்போ நீ கிளம்பு இவ்வளவு நாள் எனக்கு பொண்டாட்டியா நடிச்சதுக்கான கூலியா காலையிலிருந்து மாத்தி மாத்தி கார்ட்டை தேய்ச்சல்ல அந்த பணத்தை எடுக்கோ... இனி உனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது வெளியே போ பவித்ரா என்றவன் அவள் கைகளைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்து வீட்டின் வெளியே விட்டான்…

அதிர்ச்சியில் பவித்ரா ரிஷி அவசரப்படாதீங்க என்று உள்ளே வர


வீட்டுக்குள்ள வந்த அப்புறம் நடக்கிறதே வேற பவித்ரா என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவளை விரல் நீட்டி எச்சரித்தான்.

அவள் அங்கேயே உறைந்து நிற்க வீட்டில் உள்ள அனைவருமே ஓடிவந்தனர்.

பழனி ரிஷியிடம் என்னடா இது எதுவா இருந்தாலும் முதல்ல அவளை உள்ள கூப்பிடு நாம அப்புறம் பேசிக்கலாம் என்று அவனுக்கு புத்தி கூற

தந்தையை பார்த்து முறைத்தவன் ப்பா... அவ சரியான விஷம் அவ உடம்பெல்லாம் விஷம் அவ மேல என்கிட்ட என்னெல்லாம் பேசினானு தெரியுமா அதெல்லாம் கேட்டா நீங்களே அவளை துரத்தி விடுவீங்க அதனால தயவு செஞ்சு அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க..

யாராவது அவளை உள்ள கூட்டிட்டு போனீங்கன்னா நடக்குறதே வேற என்று சித்தியையும் விஜியையும் பார்த்தவன் உங்களுக்கும் சேர்த்து தான் என்று கூற அனைவருமே ரிஷியின் கோபத்திற்கு பயந்து மௌனமாக நின்றனர்.

பவித்ரா அனைவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள் ஒருத்தர் கூடவா தன்னை உள்ளே அழைக்க மாட்டார்கள் என்று ஆனால் யாருமே கூப்பிடவில்லை அப்படி என்றால் இவர்கள் இத்தனை நாளும் ரிஷியின் கோபத்திற்கு பயந்து தான் தன்னிடம் பாசமாக இருப்பது போல் நடித்தார்களா என்ற சந்தேகம் அவளுக்கு பிறந்தது அவள் நிற்க நிற்கவே அனைவரையும் கலைந்து செல்ல….மாமியார் கூட தனக்காக பேசவில்லையே...அவரின் மகளுக்கு இது போல் ஒரு அநியாயம் நடந்தாலும் இப்படிதான் பார்த்து கொண்டிப்பாரா...மகள் வேறு மருமகள் வேறு தான் போல...

என்ன செய்வது என்று விழிக்க தொடங்கினாள் திரும்பிப் பார்த்தால் வாட்ச்மேனை கேட்டை நன்றாக திறந்து விட்டபடி தலைகுனிந்து மௌனமாக நின்று கொண்டிருந்தார்…
முகத்தில் அடித்தது போல் இருந்தது பவித்ராவிற்கு.

இன்னும் சற்று நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றால் வாட்ச்மேன் வந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளப் போகிறான் இப்பொழுது இவர்களிடம் என்னை உள்ளே அழைத்துச் செல்லுங்கள் என்று கெஞ்ச வேண்டுமா இல்லை தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் காப்பாற்றிக் கொண்டு வெளியே செல்ல வேண்டுமா என்று சில வினாடிகள் யோசித்தவள்... திரும்பி விடுவிடுவென வெளியே நடக்க தொடங்கினாள்…

பவித்ரா காம்பௌண்ட் கேட்டை விட்டு வெளியே செல்லவும்
விஜி ரிஷியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்....
இந்த நேரத்தில் அவளை வெளியே அனுப்பினா‌ அவ எங்க போவா அவ கையில பணமும் இல்லை ராத்திரி நேரம் வேற…போடா போய் அவளை கூட்டிட்டு வா….என்றாள்.


பழனியும் மகனின் அருகில் வந்தவர் இங்க பாருடா ஏதோ அதிகமா பேசிட்டானு பவியை வெளியே அனுப்பிட்ட...ஆனா உன் அம்மா அதைவிட மோசமா எத்தனை நாள் என்னை பேசி இருப்பா தெரியுமா?...
நான் அவளை எப்படியேல்லாம் பேசிருக்கேனு தெரியுமா….ஆனாலும் ஒரு நாளும் அவள் என்னையோ இல்ல நான் அவளையோ பிரிஞ்சி இருக்கனும்னு... நாங்க நெனைச்சது கிடையாது…வேணாண்டா அம்மாவையும் பிள்ளையையும் பிரிக்கறது பாவம் அந்தப் பாவத்தை நீ செய்ய வேண்டாம் ஒன்னு அவளை இப்போ இங்க கூட்டிட்டு வா அப்படி இல்லனா உன் கோபம் தீரும் வரைக்கும் ஆதியை கொண்டு போய் அவ கிட்ட கொடுத்துட்டுவா போ என்றார்…

மேனகாவும் ராதாவும் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள் கூடவே ராகவியும் சேர்ந்து கொண்டாள்.


அவர்களின் கோபத்திற்கு காரணமும் இருக்கிறது மேலே வாக்குவாதம் முற்ற தொடங்கிய நேரத்தில் அவர்களை சமாதானப் படுத்துவதற்காக ராதாவிடம் குழந்தையை கையில் கொடுத்து அனுப்பிவைத்தார் மேனகா ஆனால் அங்கே சரியாக மேனகாவின் விஷயத்தைப் பற்றி பவித்ரா பேசிக்கொண்டிருந்தாள். மேலே சென்றவர் அதன் பின் நடந்த அத்தனை உரையாடலையும் முழுமையாக கேட்டவர் கோபத்தோடு வந்து தனது அக்காவிடம் கூறிவிட்டார்…

மேனகா விற்கு அப்பொழுதே பவித்ராவின் மீது பயங்கரமான கோபம் ஒருவேளை இன்று ரிஷி மன்னித்து அவளை ஒன்றும் செய்யாமல் இருந்திருந்தால் கூட கண்டிப்பாக வேறொரு சமயத்தில் வீணாக பவித்ராவிடம் வம்பு வளர்த்து அவளை வெளியே அனுப்பி இருப்பார் மேனகா…

தனது தங்கையிடம் அப்பொழுதே கூறிவிட்டார் அவளை முத தடவை நாம போய் பார்த்தப்போ நம்ம பையனை பிச்சைக்காரனோட சேர்த்து வைத்து பேசும்போதே அவ பல்லை உடைச்சு கைல கொடுத்துட்டு வந்திருக்குனும்... நாம தப்பு பண்ணிட்டோம் அதனால தான் இன்னைக்கு நம்ம வீட்டுக்குள்ள வந்து நம்மள பத்தி அசிங்கமா பேசிக்கிட்டு இருக்கா... நாம அவளுக்கு வேணாம் ஆனா நம்மளோட பணம் மட்டும் அவளுக்கு வேணுமா…. பணத்துக்காக தான் நம்ம ரிஷியை மயக்கி அவ வலைல விழவச்சிட்டா…நல்லவேளை இன்னைக்காவது நம்மளோட ரிஷிக்கு புத்தி வந்ததேனு நாம சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான் …. சரியான சமயத்துல நீ மட்டும் குழந்தையை தூக்கிட்டு மேல போகாமல் இருந்திருந்தா அவ புத்தி என்னன்னு கடைசி வரைக்கும் நமக்கு தெரியாமலேயே போயிருக்கும் கண்டிப்பா இந்த ரிஷி அவளபத்தி கடைசிவரை ஒரு வார்த்தை கூட நம்ம கிட்ட மூச்சுவிட்டிருக்க மாட்டான்…என்று பெண்கள் மூவருமே கிசுகிசுத்துக் கொண்டிருக்க….

பழனி மேனகாவை பார்த்து அதட்டினார் மேனகா நீயாவது புள்ளைக்கு புத்தி சொல்லு அத விட்டுட்டு யாரு வீட்டிலேயோ நடந்தது மாதிரி ஏன் இப்படி நின்னுகிட்டு இருக்க…

அவனுக்கு நான் புத்தி சொல்ல ரிஷி ஓன்னும் குழந்தை கிடையாது அவன் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதைத்தான் அவன் இப்போ பண்ணி இருக்கான் அவங்க ரெண்டு பேரோட பிரச்சனைக்குள்ள என்ன தேவை இல்லாமல் இழுத்து விடாதீங்க என்று கணவரிடம் கூறிவிட்டு அவர் உள்ளே சென்று விட்டார்...பின்னே ராதாவும் ராகவியுன் செல்ல இனி ரிஷியிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்த விஜி சத்தமில்லாமல் அவளின் வீட்டிற்குச் சென்றாள்…

ராஜன் ராதாவிற்கு அலைபேசியில் அழைத்தவர் வீட்டுக்கு வா என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார் சற்று நேரத்திற்கெல்லாம் ராதாவும் ராகவி அவர்கள் வீட்டிற்குச் செல்ல உள்ளே ஹோம் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ராகவ்…

என்னாச்சு இன்னைக்கு சீக்கிரமாவே மகளிரணி வீட்டுக்குள்ள வருது சீரியல் எல்லாம் பாக்கலையா உங்களோட பேவ்ரேட் சீரியல் போய்க்கிட்டிருக்கு என்று கேலி பேச இருவருமே அவனை முறைத்தபடி உள்ளே சென்றனர்.

தோள்களைக் குலுக்கியவாறு தந்தையிடம் வந்து என்ன ஆச்சுப்பா சம்பந்தமே இல்லாம என்ன பார்த்து முறைத்துக் கிட்டு போறாங்க என்று விசாரித்தான்.. அவரோ அங்க ரிஷிக்கும் பவித்ராவுக்கும் ஏதோ சண்டை…

சண்டை முற்றிப்போய் ரிஷி பவித்ராவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டான்... நம்ம வீட்டு விஷயமே பெரிய சீரியல் போல இருக்கு இதுல எங்க போய் சீரியல் பார்க்கறது... அதுதான் திட்டிவிட்டேன் சத்தமில்லாம கிளம்பி வந்துட்டாங்க...அந்த கோபத்தை உன்கிட்ட காமிச்சிட்டு போகுதுக...என்று கூற அதிர்ச்சி அடைந்தவன்
எனது அண்ணி விட்டு விட்டு போய்ட்டாங்களா…? என்று பதறியபடி அண்ணனைக் காண ஓடினான்.

யாரிடமும் அலைபேசியில் சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்த ரிஷி ராகவை பார்த்ததும் அவசரமாக மொபைலை அனைத்து பாக்கெட்டில் வைத்தான்.


என்ன அண்ணா அண்ணி வீட்டுக்கு போய்ட்டாங்களானு விசாரிச்சிட்டு இருக்கீங்களா ஏன் அண்ணா இப்படி பண்ணுனீங்க அண்ணியை இந்த நேரத்துல வீட்டைவிட்டு வெளியே அனுப்பி இருக்கீங்க…

ஊருல உலகத்துல எண்ணமோ நடக்குது அதை தினமும் நாம பேப்பரிலும் டிவிலயும் பார்த்துகிட்டு தான் இருக்கோம்... ஏன் கண்ணு முன்னாடியே கூட சில விஷயங்களை பார்க்கறோம் அப்படி இருக்கும்போது இந்த நேரத்தில் அண்ணிய தனியா அனுப்பலாமா

உங்களுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் காலைல அனுப்பி இருக்கலாம்... இல்லன்னா நீங்களே கூட கொண்டு போய் விட்டுட்டு வந்து இருக்கலாம்…. அவங்க அம்மா அப்பா உடம்பு முடியாம இருக்கிற நேரத்தில தனியா அனுப்பி இருக்கீங்களே மனசு வேதனைப்பட்டு ஏதாவது பண்ணிக்கிட்டா யாரு அண்ணா பொறுப்பு…

அப்படியெல்லாம் அவளுக்கு எதுவும் ஆகாது அப்படி ஆகவும் நான் விடமாட்டேன் அவ வீட்டை விட்டு வெளியே போகும்போதே நம்மளோட வாட்ச்மேனை அவ பின்னாடி ஃபாலோ பண்ணி போகசொன்னேன்... இப்போ அவா தெருமுனையில் இருக்கிற கோவில்ல தான் உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கறா...

இவ்வளவு அக்கறை இருக்கு இல்லையா அப்புறம் எதுக்கு தேவையில்லாம சண்டை போட்டு அவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்க போய் கூட்டிட்டு வாங்க அண்ணா...நீங்க வர்ற வரைக்கும் ஆதியை நான் பாத்துக்கறேன்…

இல்லடா நான் போனா கண்டிப்பா என் கூட வர மாட்டா இல்லனா கோபத்துல இன்னும் அதிகமா பேசுவா... தேவையில்லாம பொது இடத்தில அசிங்கமாயிடும் …

எதோ கோபத்தில அவளை வெளியே அனுப்பிட்டேன் மறுபடியும் அவ முகத்தை பார்க்க ஒரு மாதிரி இருக்கு…

அடிக்க வேற செஞ்சுட்டேன் அதான் ஒரு மாதிரி கில்டி ஃபீல் ஆகுது... என்று தம்பிகாரனை பார்த்து கூற

இது வேறயா என்னண்ணா... இது புது பழக்கம் அம்மா அப்பாவை எப்படி பேசுவாங்க தெரியுமா ஒரு நாள் கூட அப்பா கை ஓங்கியதே கிடையாது…. பெரியம்மா நம்ம முன்னாடியே பெரியப்பாவை இன்செல்ட் பண்ணுவாங்க என்னைக்காவது பெரியப்பா கை ஓங்கி இருக்காங்களா எங்கிருந்த வந்தது இந்த புதுப்பழக்கம் …

பொண்ணுகளை அவ்வளவு மரியாதையா பார்ப்பீங்க நீங்களே கை ஓங்கினது ஆச்சரியமா இருக்கு சரி இப்போ என்ன பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கீங்க எதுவா இருந்தாலும் நீங்க செஞ்ச தப்பை நீங்கதான சரி செஞ்சாகனும்...கிளம்புங்க
துணைக்கு நான் வர்றேன்…
அண்ணி ஏதும் பேசாத மாதிரி நான் பாத்துக்குறேன் அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டிய பொறுப்பு உங்களது வாங்க போகலாம்…

ம்கூம்... இல்லடா ராகவ் நான் வரல எனக்காக ஒரு உதவி பண்றியா பவித்ராவை போய் நீ வீட்டுக்கு கூட்டிட்டு வரியா ஏன்னா இந்த வீட்டிலேயே உன் கிட்டயும் விஜி அக்காகிட்டயும் தான் கொஞ்சம் நல்ல மாதிரி பேசி பழகுவா...மத்தவங்க கிட்ட எல்லாம் ஒரு ஒதுக்கும் காட்டுவா அதனால நீ போனா கண்டிப்பா உன் பின்னாடி வருவா …

எல்லாம் சரி அண்ணா... அண்ணியை அடிச்சி வெளியே அனுப்பினது நீங்க அப்போ நீங்க அண்ணிகிட்ட மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூப்பிடறது தானே நியாயம் நான் போய் கூப்பிட்டா அது எப்படி சரியா வரும்…

டேய் ப்ளீஸ் ராகவ் அவ கிட்ட சாரி கேட்க ஒரு மாதிரி இருக்கு எந்த மூஞ்சிய வச்சுகிட்டு அவகிட்ட சாரி கேட்கிறது கொஞ்சம் யோசிச்சு பாரு தேவை இல்லாம அவகிட்ட பேசி அவளை வெளியே அனுப்பிட்டேன் இப்போ எல்லாத்தையும் மறந்திடுனு சொல்லனுமா இல்ல நான் அப்படி பேசுனதே தப்புன்னு சொல்லலாமா எனக்கு சத்தியமா தெரியல டா….
அவளும் அந்தளவு பேசினாடா அவ அப்படிப் பேசும்போது நான் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும் அதான் நானும் பேசிட்டேன்….

எனக்காக நீ ஒன்னு பண்ணு ராகவ் அங்க போய் அவர்கிட்ட பேசிட்டு எனக்கு ஃகால் பண்ணு நான் ஃமொபைல்ல அவ கிட்ட பேசுறேன் ப்ளீஸ்டா புரிஞ்சுகடா... என்று கெஞ்சினான்…

சரி அண்ணா உங்களுக்காக போறேன் அனேகமா இன்னைக்கு உங்களுக்கு விழ வேண்டிய அர்ச்சனை எல்லாமே அண்ணிகிட்ட இருந்து எனக்கு விழ போகுது அது மட்டும் கன்பார்ம் எப்படியோ அண்ணி வீட்டுக்கு வந்தா போதும் என்று கூறியவன் தனது இருசக்கர வாகனத்தை இயக்கியபடி அண்ணன் சொன்ன கோவிலுக்கு பவியை தேடிச் சென்றான்.

கோவிலில் இரவு நேர பூஜை நடந்து கொண்டிருக்க பக்தர்கள் அனைவரும் தீவிரமாக தங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருக்க கோவிலில் ஒரு மூலையில் தலைகுனிந்து மௌனமாகக் கண்ணீர் விட்டபடி பவித்ரா அமர்ந்திருந்தாள் .

அவள் கையில் இப்பொழுது ஒரு ரூபாய் கூட கிடையாது…
தனது தாயும் தந்தையும் வீட்டிலும் இல்லை அவர்களை தேடி இப்பொழுது மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்... அது இங்கிருந்து மிகவும் தூரம்...ஏதாவது ஒரு வாடகை வாகனத்தை பிடிக்கலாம் என்றால் இப்பொழுது அதுபோல் வாகனங்கள் மிகவும் குறைவு மொபைல் போனில் தான் புக் செய்ய வேண்டும் கையில் மொபைல் போன் கிடையாது…
இன்னும் சற்று நேரத்தில் கோவிலில் நடை சாத்திவிடுவார்கள் அதன்பிறகு தான் என்ன செய்வது…


காலையில் இருந்து பெற்ற மகனை பார்க்க முடியவில்லை அவன் கைகளில் வேறு நீடில் குத்தியிருந்தது கணவன் தன்னை தள்ளி விடும் பொழுது குழந்தையின் கையை அது நன்றாக பதம் பார்த்துவிட்டது அவன் அழுதது இன்னும் காதுக்குள்ளே ஒலித்துக்கொண்டிருக்கிறது இந்நேரம் மகன் தன்னை தேடி அழுவானா…


இல்லையென்றால் தகப்பனைப் போல் தனக்கும் தாய் தேவையில்லை என்று ஒதுக்கி வைத்து விடுவானா‌..குடும்பமே சுயநலம் பிடித்த குடும்பம் அன்று தனது தந்தை தாய் தனக்குப் படித்துப் படித்து கூறினார்கள் கேட்டேனா காதலுக்கு கண் மட்டும் அல்ல புத்தியும் இல்லை இருந்திருந்தால் இது போல குணம் கொண்ட ஒருவனை திருமணம் செய்து இன்று இந்த நேரத்தில் இப்படி அனாதை போல் இங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேனா…
கடவுளே என்னை இந்த இக்கட்டிலிருந்து எப்படியாவது காப்பாற்றி எனது தாய் தகப்பனிடம் சென்று சேர்த்து விடு ….


இந்த சுயநலம் பிடித்த மனிதர்களின் நிழல் கூட இனி என் மேல் பட வேண்டாம் முதலில் தனக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்த பிறகு தனது மகனை தன்னிடம் வாங்கிக் கொள்ளலாம் நல்லவேளை குழந்தையை வாங்கி வராமல் இருந்தேன் வந்திருந்தால் இந்த இரவு நேரத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு நான் எப்படி சமாளிப்பது…என்று மனமுருக தெய்வத்திடமும் தனது மனதுடனும் மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்தாள்


அப்பொழுது அருகில் வந்து ஒரு உருவம் அமரவும் ஒரு வினாடி தன் கணவன் தான் தேடி வந்து விட்டானோ என்று எண்ணியவள் விழி திறக்க மறு வினாடியே ஏமாற்றம் அடைந்தாள் வந்திருந்தது ராகவ் கவலையுடன் அண்ணியின் முகத்தையே பார்த்துக்கொண்டு அவளருகில் அமர்ந்திருந்தான்.


அவனைப் பார்த்ததும் முட்டிக்கொண்டு வந்த அழுகையை உதட்டை கடித்து அடக்கினாள்…

அண்ணி இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க வாங்க வீட்டுக்கு போகலாம்….


வீட்டுக்கா…?எந்த வீட்டுக்கு ராகவ்…? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன அடிச்சு வீட்டை விட்டு துரத்தும் போது எல்லாரும் யாருக்கோ அநியாயம் நடக்குது நமக்கென்னனு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாங்களே அந்த வீட்டுக்கா…?

அண்ணி ப்ளீஸ்‌... நடந்த விஷயத்தை மறுபடியும் பேசுறதால எதுவும் மாறப்போறது இல்லை அதை பத்தி நினைக்க நினைக்க உங்களுக்கு தான் வேதனை அதை மறந்துடுங்க நீ இப்போ என் கூட வாங்க உங்களுக்காக ஆதியும் அண்ணனும் காத்துகிட்டு இருக்காங்க….


பொய் சொல்லாத ராகவ்…
ஆதி வேணும்னா அம்மாக்காக காத்திருக்கலாம்... ஆனா உங்க அண்ணன் காத்திருக்க மாட்டாரு... அவருக்கு என்னை பத்தின பார்வையே வேற எப்போ அவங்களுக்கு நான் உபயோகப்படாத பொருளா ஆயிட்டேனோ... அப்பவே தேவையில்லாதவளா ஆயிட்டேன்...

அதனாலதான் ஒண்ணுமே இல்லாத காரணத்தை பிடிச்சி தொங்கிட்டு என்னை அடித்து வெளியே துரத்தினாங்க... மனைவினா எல்லாத்துக்கும் கட்டுப்படனுமா...


எனக்கும் உரிமைகள் இல்லையா எங்களுக்கான கடமை இல்லையா... கல்யாணம் ஆனவுடனே மகளான எங்களோட கடமைகள் எல்லாத்தையுமே மூட்டைகட்டி தூக்கி பரணில் போடணுமா…

பெத்தவங்களுக்கு ஒரு கஷ்டம் பிரச்சினைனு வந்தா நாங்க முன்னாடி போய் உதவக்கூடாது இல்லையா... அப்பவும் கணவன் வர்ற வரைக்கும் காத்திருந்து அவங்ககிட்ட கெஞ்சி அனுமதி வாங்கிட்டு தான் போய் பாக்கணும்…

அதே பணம் இருக்கிறவங்க கல்யாணம் பண்ணனும் மாப்பிள்ளைய வரவச்சி பொண்ணை வீட்டோட வச்சிக்கலாம்
அது பாசம்…

என்னை மாதிரி சாதாரண குடும்பத்து பொண்ணு அப்பா சாகவே கிடந்தாலும் போய் பார்த்துட்டா அது அடங்காபிடாரித்தனம்...அதானே உங்களை மாதிரி பணக்கார வர்க்கத்தோட நினைப்பு…
போதும் ராகவ் இனிமே எனக்கு அந்த வீட்டுக்கு வர துளிகூட விருப்பம் இல்லை என்னை கட்டாயப்படுத்தாத….

அண்ணி ப்ளீஸ் உங்களுக்கும் அண்ணனுக்கும் என்ன நடந்ததுன்னு எனக்கு சத்தியமா தெரியாது... ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு என்னோட அண்ணன் கெட்டவர் கிடையாது அவர் ரொம்ப நல்லவர் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு நீங்க பேசிக்கிட்டு இருங்க இருங்க நான் அண்ணனை கூப்பிட்டு பேசுறேன்... அவர் உங்ககிட்ட பேசினா தான் புரியும்…

உங்கள அனுப்பிட்டு அவர் எந்த அளவு வேதனைப்பட்டுகிட்டு இருக்காரு தெரியுமா இவ்வளவு நேரம் கோவிலுக்கு வெளியே உங்க பாதுகாப்புக்காக நம்ம வீட்டு வாட்ச்மேனை அனுப்பி வைச்சிருந்தாரு அதாவது உங்களுக்கு தெரியுமா எதுவுமே தெரியாம நீங்களா கற்பனை பண்ணிக்கறீங்க…

உங்க மேல அக்கறை இல்லாமலா இதெல்லாம் செய்யறாரு... முதல்ல இங்கிருந்து கிளம்புங்க அண்ணி…

எனக்காக வேணாம்...அண்ணனுக்காக வேணாம்…
ஆனா ஆதிக்காக நீங்க வந்து தான் ஆகணும் அவன் பாவம் நீங்க இல்லைன்னா அவன் ஏங்கி போயிடுவான்...எந்திரிங்க அண்ணி என்று அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி அவனின் இரு சக்கர வாகனம் வரை கொண்டு வந்து நிறுத்தினான் ஆனால் பவித்ரா பிடிவாதமாக அவனுடன் செல்ல மறுத்தாள்.

இல்ல ராகவ் நான் இனிமே அங்க வரமாட்டேன் எனக்கு அங்க வர பயமா இருக்கு எனக்கு அந்த வீட்டில் ஆதியை தவிர வேறு யார் இருக்கறா…

உங்க அண்ணன் அந்தளவு என்னோடு சண்டை போட்டு என்ன கொண்டு வந்து வெளியே விட்டுபோ எனக்காக ஒருத்தர் கூட பேசல…

எந்த நம்பிக்கையில் நான் அங்க வர்றது...இது மாதிரி இன்னொரு தடவ நடக்காதுனு என்ன நிச்சயம் ஒவ்வொரு முறையும் இதேபோல வீட்டை விட்டு துரத்தும் பொழுதெல்லாம் நீ வந்து சமாதானம் பண்ணி கூட்டிட்டு போவியா...


நாளைக்கே இதேபோல் வெறொரு வாக்குவாதத்துல உங்க அண்ணன் கோபத்தில என்ன கொலை பண்ணினா கூட குடும்பமே சேர்ந்து அதை மறைத்து தான் பார்ப்பார்களே தவிர எனக்காக யாருமே ஒரு சொட்டு கண்ணீர் கூட விடமாட்டீங்க


இதே நான் என் அம்மா கூட இருந்தா இந்த உடம்புல இந்த உயிராவது மிச்சமிருக்கும் அதனால உண்மையிலேயே இந்த நிமிஷம் எனக்கு ஏதாவது பண்ணனும்னு உனக்கு தோணினா கொண்டுபோய் என் அம்மாகிட்ட விட்டிடு அப்படி இல்லையா பிடிவாதமா உங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு போகணும்னு நீ நினைச்சா... கண்டிப்பா நாளைக்கு காலையில இந்த உடம்பில உயிர் இருக்காது...


உங்க அண்ணன் கையால அடிபட்டு சாகறதுக்கு பதிலா என்னோட உயிர் என் கையாலேயே போகட்டும் என்று கூற …

அதிர்ச்சி அடைந்த ராகவ்...அண்ணனை அழைத்து அண்ணி கூறியவற்றை கூற


அவன் இதயமோ சுக்குநூறாக உடைந்தது... என்ன கோபத்தில் நான் அவளை கொலை செஞ்சிடுவேனு பயப்படறாளா...இங்க வந்தா தற்கொலை பண்ணிப்பாளா... ச்சே...என்ன பெண் இவள் இத்தனை நாள் தன்னுடன் குடும்பம் நடத்திக் கூட தன்னை இந்த அளவு கேவலமாக கற்பனை செய்து வைத்திருக்கிறாளே இவளுடன் இனி நாம் வாழ்ந்து தான் என்ன ஆகப்போகிறது...அவ இஷ்டம் போல போகட்டும்... தனியாக இருந்து கஷ்டப்பட்டா தான் அவளுக்கு என்னோட பாசம் புரியும்…

என்னோட காதலோட அளவு தெரிஞ்சுக்காமலே என்ன விட்டுப் போகனும்னு முடிவு பண்ணிட்டியா பவித்ரா சரி போ விலகியிருந்தா தான் காதல் இன்னும் வலுப்பெறும். என்னால கண்டிப்பா என் காதலை உனக்கு புரிய வச்சு என் மேல உனக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி மறுபடியும் ஒரு சிறந்த கணவன் மனைவியா நான் ஒரு புது வாழ்க்கையை தொடங்கலாம் அது வரைக்கும் உன்னை விட்டு கொஞ்ச நாள் நான் விலகி இருக்கிறேன்…

நீ விலகி இருக்கிறது தான் உனக்கு சந்தோஷம் கொடுக்கும்னு இப்போதைக்கு உன் மனசு நம்புது இல்லையா…அதையே செய் நீ திரும்பி வர்ற வரைக்கும் நானும் ஆதியும் உனக்காக காத்துகிட்டு இருப்போம் அது எத்தனை நாள் ஆனாலும் சரி வருஷம் ஆனாலும் சரி நாங்க காத்திருப்போம்….

ஆனா என்னைக்கும் நீ என் கண் பார்வையில் தான் இருப்ப பவித்ரா அதை மட்டும் மனசுல வச்சிக்கோ... என்று மனதிற்குள்ளாக கூறிக்கொண்ட ரிஷி ராகவ்விடம் அவ விருப்பம் எதுவோ அதையே செய் ராகவ் என்று கூறிவிட்டு மொபைல் போனை அணைத்தான்.

அண்ணனின் பதிலைக் கேட்ட ராகவ்விற்க்கும் அதிர்ச்சிதான் ஆனால் என்ன செய்வது வீட்டிற்கு அழைத்துச்சென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டும் அண்ணியை துணிந்து அழைத்துச் செல்லவும் பயந்தான்…

பதில் பேசாமல் வாகனத்தை இயக்க ஏறி அமர்ந்த பவித்ரா என்னை எங்க கூட்டிட்டு போகப் போற என்று கேட்டாள்…

பதில் கூறப் பிடிக்காமல் ஹாஸ்பிடலுக்கு வழி சொல்லுங்க அண்ணி... என்றவனிடம் கண்களில் கண்ணீர் பளபளக்க மருத்துவமனைக்கு செல்லும் வழியைக் கூறினாள் பவித்ரா.

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
19

வாகனத்தை பொறுமையாக ஓட்டியவனை ராகவ் என்று அழைத்தாள்...

என்ன அண்ணி வீட்டுக்கு போகலாமா என்று ஆர்வமுடன் கேட்டான்...


இல்ல நான் அதுக்கு கூப்பிடல…

ம்ம்.. என்ன விஷயம் குரலில் சுருதி குறைந்தது…

வீட்டுக்கு போனதும் உங்க அண்ணன் கிட்ட சொல்லிட்டு ஆதியை நாளைக்கு இங்க கொண்டு வந்து விடறியா…


ம்ம்...சரி
ஆனா அண்ணன் ஆதியை குடுக்கணும்ல…

அதெல்லாம் கொடுப்பாரு ஆதி அழ ஆரம்பிச்சா யாராலும் சமாளிக்க முடியாது நான் பக்கத்துல இல்லனா நைட் நேரத்துல ஆதி தூங்கவே மாட்டான் இன்னைக்கு நைட் ஃபுல்லா ஆதி அவரை வெச்சு செய்ய போறான்... ஒருவேளை நைட்ல குழந்தை விடாம அழுதுகிட்டே இருந்தா உடனே கொண்டுவந்து ஹாஸ்பிடலுக்கு கொடுத்திடு

நான் உனக்காகவும் ஆதிக்காகவும் காத்துகிட்டு இருப்பேன்

சரி அண்ணி என்று சலித்தபடியே கூறினான்... எங்கே அழும் பிள்ளையை கணவன் எடுத்து வந்து விடுவானோ என்று பயப்படுகிறாள்…

பிள்ளையை சாக்கு வைத்து கூட கணவனின் முகத்தை பார்க்க விருப்ப வில்லை அதனால்தான் தன்னிடம் இதைக் கூறுகிறாள் என்று புரியாமல் இல்லை.
ராகவ்விற்கு...

அப்புறம் ராகவ் நம்ம ராகவியோட டூவீலர் என் அம்மா வீடு இருக்குல்ல அந்த ரோட்டோட கடைசியில இருக்குதே ஹாஸ்பிடல் அந்த ஹாஸ்பிடல் பார்க்கிங்ல நிறுத்திருக்கேன். சாவியை ரிசப்சன்ல கொடுத்து இருக்கேன் கொஞ்சம் யாரையாவது விட்டு எடுத்துக்கோ…

அப்புறம் இன்னைக்கு ராகவி பர்மிஷன் இல்லாம வண்டி எடுத்ததற்காக அவகிட்ட நான் சாரி கேட்டேன்னு சொல்லிவிடு…

சரி அண்ணி…. வேற ஏதாவது இருக்குதா என்று கேட்ட தொனியிலேயே தெரிந்தது நீ தயவுசெய்து வாயைத் திறக்காதே என்பது…

அதன்பிறகு பவித்ரா எதையுமே பேசிக்கொள்ளவில்லை ஆனால் அவளையும் மீறி கண்களில் இருந்து அவ்வப்போது கண்ணீர் வந்து கொண்டே இருந்தது அது யாருக்காகவும் இல்லை அவளின் மகனை நினைத்து மகன் இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் என்று தன்னைக் காணாமல் தவிப்பானே...பாவம் பிஞ்சி...அது என்ன செய்தது... அதற்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை... தாயில்லாமல் இன்றைய இரவை மட்டும் கழித்து விடு மகனே நாளை எப்படியாவது உன்னை நான் என்னிடத்தில் வைத்துக் கொள்வேன்…மனதிற்குள் சொல்லி கொண்டாள்.

யோசிக்காமலும் ஒருவேளை தான் பால் வற்றுவதற்க்காக ஊசி போடாமல் வேறு ஏதாவது மாற்று வழி செய்திருக்கலாமோ என்று ஆனால் அதைப் பற்றி இப்பொழுது யோசித்து என்ன பயன் எல்லாம் தான் முடிந்து விட்டதே என்று அமைதி காத்தாள்.

திடீரென வண்டி நிற்கவும் என்ன என்று நிஜ உலகிற்கு வந்தாள் மருத்துவமனையில் பார்க்கிங்கில் நிறுத்தி இருந்தான் ராகவ் அப்பொழுதுதான் பவித்ராவின் முகத்தில் நன்கு பார்த்தான் பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது.

பவித்ராவின் கன்னத்தில் ரிஷியின் கைத்தடம் அழகாக பதிந்து வீங்கியிருந்தது.. இந்த அளவுக்கு கைத்தடம் பதிந்துள்ளது என்றால் எந்தளவு வீறுகொண்டு அண்ணன் அடித்து இருப்பான் என்பதும் புரிந்தது ...வலியை எப்படி தாங்கிக் கொண்டாள் என்று பவித்ராவின் மீது பரிதாபமும் வந்தது…

தேங்க்ஸ் ராகவ் நான் சொன்னதை மறந்திடாத ஆதி அழுதா உடனே என் கிட்ட கொண்டு வந்து விடு…
நான் உனக்கு ஏன் அம்மா நம்பர்ல இருந்து மெசேஜ் பண்றேன் ஏதாவது சொல்லனும்னா அந்த நம்பருக்கு கூப்பிட்டு சரியா என்று கூற

சரி என்று தலையை ஆட்டியவன் தனது பாக்கெட்டில் இருந்த சில ரூபாய் நோட்டுகளை எடுத்து பவித்ராவின் கைகளில் திணித்தான்.

வேண்டாம் என்ற பவி கைகளை பின்னால் இழுத்தாள்..

ப்ளீஸ் அண்ணி இதை வாங்கிக்கோங்க ஹாஸ்பிட்டல் இருக்கீங்க செலவு முன்ன பின்ன ஆகும்…

உங்க அம்மா நல்லா இருந்தா கூட அவங்க பணத்தை ரெடி பண்ணுவாங்க உங்க தம்பியும் படிச்சிட்டு இருக்காங்க அதனால மறுக்காம வாங்கிக்கோங்க...தேவைப்படும்…

வேணாம் ராகவ் ‌.. ஏற்கனவே வாங்கிய பணத்துக்கு உன் அண்ணா கிட்ட இருந்து நிறைய வாங்கிட்டேன் அதனால இனி உங்க குடும்பத்து பணம் ஒரு ரூபாய் கூட வேணாம்...

சரி டைம் ஆகுது நீ பாத்து போ நான் உள்ள போறேன்….என்றவள் உள்ளே நடக்க...

அண்ணி...

என்ன என்று அவள் திரும்பிப் பார்க்க…

கன்னத்தை காண்பித்து அண்ணாவோட ஃபிங்கர் பிரிண்ட்ஸ் முகத்தில தெரியுது...இப்போ இதை உங்க அம்மா பார்த்தா... என்று இழுக்க

தேங்க்ஸ் ...நான் பாத்துக்கறேன் என்று கூறிவிட்டு விடுவிடுவென உள்ளே சென்றாள் .


செல்லும் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் ரிசப்ஷன் சென்று பவித்ராவின் தந்தையைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தான்...பணம் ஏதாவது கட்ட வேண்டுமா என்று கேட்க காலையிலேயே பவித்ரா எல்லாவற்றிற்குமே சற்று அதிகமாக கட்டி வைத்திருந்தது தெரிந்தது…


பரவாயில்லை இதையும் அவர்களுடைய பில் தொகையோடு சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கையில் இருந்த மொத்த பணத்தையும் ரிஷப்ஷனில் கட்டிவிட்டு பில்லினை தற்சமயம் பவித்ராவிற்கு தெரியாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஒரு காபியை அவன்
வாங்கிக் கொண்டான்.

எப்படியோ அவரின் தந்தை விரைவில் குணமாகி வீடு வந்து சேரட்டும் அதன் பிறகு பிரச்சினைகளை அண்ணனும் அண்ணியும் அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் இடையில் நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தான்.


மருத்துவமனையின் உள்ளே சென்ற பவித்ரா தாயின் அறையை எட்டிப் பார்க்க மேகலா அங்கில்லை சத்திமில்லாமல் உள்ளே சென்றவள் தாயின் மொபைல் போனை மட்டும் எடுத்துக்கொண்டு மருத்துவரைக் காணச் சென்றாள்...தனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா என்று அறிந்துகொள்ள அதன் பிறகு ஐசியூ வாசலில் காத்திருந்த தனது தாயிடம் முகத்தை காட்டாமல் அவர் அருகில் இருந்த ஸ்டுலில் சென்று அமர

ஆச்சரியத்துடன் என்ன பவித்ரா திரும்பி வந்திருக்க ஏதாவது பிரச்சினையா என்று கேட்டவரிடம் அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா அப்பா இப்படி இருக்கும்போது என்னால எப்படி அங்க நிம்மதியா இருக்க முடியும் அதனாலதான் கேட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்…

ஏன்மா... அங்கேயே இருக்க வேண்டியதுதானே ….குழந்தை எப்படி நீயில்லாம இருக்கான்…
அழ மாட்டானா….

அவனுக்கு அவன் அப்பா இருந்தா போதும்மா...வீட்ல நிறையா பேரு இருக்கறதால எப்பவுமே என்னை கண்டுக்க மாட்டான்...அடிக்கடி மாமியார் தூக்கிட்டு போய் வெச்சுப்பாங்க அதனால அவன் அவங்களோட நல்ல செட் ஆயிட்டா அதும் இப்போ ஆறு மாசம் ஆனதால
வயத்துக்கு ஏதாவது தந்தா என்னை தேடலே மாட்டான் என்று தாயிடம் பொய் உரைத்தாள்…

பரவால்ல பவித்ரா இந்த வகையில் நீ கொடுத்து வச்சவ தான் நீங்க எல்லாம் குழந்தைகளா இருக்கும்போது உங்களை பாக்குறதுக்கெல்லாம் யாருமே இல்ல நானே தான் தனியா இருந்து கஷ்டப்பட்டேன்


அதுவும் நீயும் வெங்கட்டும் வருஷ குழந்தைங்க வேறயா படாதபாடு பட்டேன்..

ஹான் வெங்கட்னதும் ஞாபகம் வருது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வெங்கட் கூப்பிட்டு இருந்தான் அவன் கிட்ட நிலவரத்தை சொல்லிட்டேன் அவன் கிளம்பி வந்துகிட்டே இருக்கானாம்…

ஏன்மா அவனை தேவையில்லாம பயமுறுத்துறீங்க…

இல்ல பவி அவனை பயமுறுத்துற மாதிரிலாம் சொல்லல அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல ஹாஸ்பிடல் சேர்த்து இருக்குன்னு மட்டும் தான் சொன்னேன் ..எந்த ஹாஸ்பிட்டல்ன்னு கேட்டான் நான் இதைச் சொல்லவும் இது ஹார்ட்க்கு பார்க்கிற ஹாஸ்பிடல் ஆச்சே அங்க எப்படி அப்பான்னு கேட்டான்...


இல்ல மத்ததுக்கும் பாக்கறாங்க...பிபி கொஞ்சம் அதிகமாயிருக்குனு பொய் தான் சொன்னேன் பவி...அதுக்கே அவன் பயந்துட்டான் போல நான் தான் பயப்பட எல்லாம் ஒன்னும் இல்ல பவித்ரா கூட இருந்து பாத்துக்கறா நீ பொறுமையா வந்தா கூட போதும் என்று தான் சொல்லி இருக்கேன் அவன் தான் இல்ல இல்ல நான் உடனே கிளம்பி வரேன்ன்னு சொன்னான்...எப்படியும் அவன் வந்து தான ஆகனும் பவித்ரா...
ஆமா உன்னை யார் கொண்டு வந்து விட்டது….மாப்பிளையா...இல்ல நீ தனியாவே வந்துயா…

உன் மாப்பிள்ளை தான் ராகவ்வோட அனுப்பி வச்சாரும்மா… அவர் ஆதியை பாத்துக்கறேனு சொன்னாரு…

சாப்பிட்டியா பவி...குரலே சரியில்லையே….

ம்ம் ஆச்சி மா….

நீங்க….

ம்ம்...கொஞ்ச நேரம் முன்னதான் கேன்டீன்ல ரெண்டு இட்லி சாப்ட்வேர்...காலைல இருந்து எதுமே சாப்பிடலையா...பசி தாக்கல…என்ற தாயிடம் நானும் காலைல இருந்து சாப்பிடலம்மா…எனக்கும் பசிக்கிது என்று சொல்லவேண்டும் போல் இருந்தது ஆனால் அதை சொன்னால் தாய் தாங்கிக் கொள்ள மாட்டார் என்று கூறவில்லை.

சற்று நேரம் அமைதி நிலவ….பவித்ரா மெல்ல தாயை அழைத்தாள்…

அம்மா…

ம்ம்...என்ன பவி….

உன் தோள்ல சாஞ்சிக்கவா ப்ளீஸ்….

அதுக்கென்னடா...உனக்கில்லாததா..சாஞ்சிக்கோ... தூக்கம் வந்தா அம்மாவோட ரூம்ல போய் படுத்து தூங்கு…

உங்களுக்கு தூக்கம் வரலையா அம்மா….

அதான் மதியம் ஃபுல்லா தூங்கினேனே அப்புறம் எங்கிருந்து தூக்கம் வர ஏதோ இப்பதான் டியூட்டி டாக்டர் உங்க அப்பாவோட உடம்புல கொஞ்சம் முன்னேற்றம்னு சொன்னாரு அதுக்கு அப்புறம் தான் நிம்மதி வந்தது…

ஆமாம்மா நானும் டாக்டர் பார்த்து பேசிட்டு தான் வந்தேன் இனி பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லன்னு தான் சொன்னாங்க…

தேங்க்ஸ் பவித்ரா நீ மட்டும் இல்லேன்னா இன்னைக்கு என்ன ஆயிருக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல நீ அப்பாவோட உயிரை எமன் கிட்ட இருந்து போராடி கூட்டிட்டு வந்துட்ட என்றவர் மகளை தோளில் சாய்த்தபடி தட்ட ஆரம்பித்தார் பவித்ராவின் கண்களில் இருந்து சூடான கண்ணீர் வெளி வரத் தொடங்கியது தாய்க்கு சந்தேகம் வராதவாறு துடைத்துக் கொண்டவன் ராகவ்வின் நம்பருக்கு போன் நம்பரை மெசேஜ் செய்தாள்.


இங்கு வீட்டிலோ ஆதி அவனின் தாயை தேடவே இல்லை நன்றாக தந்தையின் கைவளைவில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.

ரிஷியின் படுக்கை அறை இப்பொழுது மினி கிச்சன் போல் ஆகி இருந்தது ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் ஒரு கெட்டில் பால் பவுடர் வெள்ளியிலான சில டம்ளர் மற்றும் கப் என குழந்தைக்கு தேவைப்படும் பொருள் தேவைப்படாத பொருள் என அனைத்தையும் ஒரு மணி நேரத்திலேயே அவன் அறை முழுக்க குமித்து வைத்திருந்தான்…

ராகவ் அறைக்கு வெளியே இருந்து எட்டிப் பார்க்க உதட்டில் கை வைத்து சத்தமிடாதே என்று எச்சரித்த ரிஷி குழந்தையை கை வளைவிலிருந்து கீழே இறங்கி படுத்து விட்டு இருபக்கமும் தலையணையை முட்டுக் கொடுத்து கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

என்ன ராகவ் அவளை பத்திரமா கொண்டு போயி ஹாஸ்பிடல்ல விட்டுட்டியா…

ஹாஸ்பிடல்ல என்ன விவரம்னு விசாரிச்சியா…

ஆமாண்ணா... முதல்ல எதுவுமே சொல்ல மாட்டேன்னு பந்தா பண்ணினாங்க அப்புறமா நம்ம கம்பெனியோட விசிட்டிங் கார்டு எடுத்து காமிக்கவும் ரிசப்ஷன் பொண்ணு எல்லாத்தையும் சொன்னாங்க...

அவங்க அப்பாக்கு காலையில மூச்சுத் திணறல் தான் வந்திருக்கு அப்புறம்தான் அட்டாக் வந்திருக்கு அதைக்கேட்டு தான் அவங்க அம்மா மயக்கம் போட்டு இருக்காங்க அண்ணி மட்டும் தான் கூட இருந்திருக்காங்க…

அவங்க தம்பி ஊர்ல இல்ல போல... தனியாளா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க ஹெல்ப்புக்கு யாருமே இல்ல அதான் அவங்களால உடனே கிளம்பி வீட்டுக்கு வர முடியல…நீங்க தான் அவங்க நிலைமையை சரியா புரிஞ்சுக்காம அவசரப்பட்டுடிங்களோனு தோணுது…

விடு ராகவ் முடிச்சு போனதைப் பத்தி பேசி ஏன் மறுபடியும் சங்கடபடனும்...இப்போ அவ பேச்சில திரும்பி வர்ற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா…

சுத்தமா இல்லன்னா அவங்க ஆதி தான் கேட்டாங்க அவ்வாறுதான் உடனே கொண்டு போய் கொடுக்க சொன்னாங்க இதோ அவங்க அம்மா நம்பர் கூட எனக்கு மெசேஜ் பண்ணிட்டாங்க அப்பவே …

காலையில ஆதியை காலைல எடுத்துட்டு போய் கொடுத்துட்டு வந்திடவா அண்ணா…

இது பத்தி நாம காலைல பேசிக்கலாம் ராகவ்...லேட் ஆச்சி நீ போய் படுத்து தூங்கு என்று பேச்சை அத்துடன் முடித்துக்கொண்ட ரிஷி அவனை அனுப்பி வைத்தான்.

தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது ராகவ்விற்கு அண்ணன் கண்டிப்பாக மகனை அண்ணியிடம் கொடுக்கப் போவதில்லை அண்ணி இனி என்ன செய்யப் போகிறாரோ…


மறுநாள் காலை வெங்கட் நேராகவே மருத்துவமனை வந்து சேர்ந்தான் ரிசப்ஷனில் தனது தந்தையை பற்றி விசாரிக்க ஐசியூவில் இருப்பதை அவர்கள் கூற நேராக ஐசியூவின் வாசலுக்கு சென்றான் அங்கு வாசலில் தாய் அமர்ந்திருக்க அவரின் அருகே சென்று அமர்ந்தான்.

ம்மா... அப்பாவுக்கு என்ன ஆச்சு நான் டூர் போகும் போது அப்பா நல்லா தான் இருந்தாங்க என்று பதற்றத்துடன் கேட்டான் அவரோ நடந்தவற்றை சுருக்கமாக கூற…

என்னம்மா சொல்லறீங்க அப்பாவுக்கு இந்த வயசுலயே அட்டாக்கா எதனாலனு கேட்டிங்களா?

நேத்தே ஆஞ்சியோ பண்ணி பார்த்தாங்க ஏதோ ஒரு வால்வ்ல கொஞ்சம் அடைப்பு இருக்கறதா சொல்லி இருக்காங்க... ஊசி போட்டு இருக்காங்க ஒரு சின்ன சர்ஜரி பண்ணனுமாம்... ஆனா ரெண்டு நாள் பாத்துட்டு தான் பண்ண முடியும் சொல்லி இருக்காங்க... ஒருசிலருக்கு ஊசிலேயே அடைப்பு சரி ஆயிடுமாம் அப்படி இருந்துட்டா ரொம்ப நிம்மதியா இருக்கும்…என்றவர்

டேய் வெங்கட் உன் அக்கா பன்னிரெண்டாம் நம்பர் ரூம்ல தூங்கிட்டு இருக்கா... அவளை கூப்பிட்டுக்கிட்டு வீடு வரைக்கும் போயிட்டு வாடா அப்படியே அவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடு …

அவ வீட்டில ஏதோ பிரச்சினை போல நேத்து நைட்டே இங்க வந்துட்டா என்னன்னு நானும் கேட்கல அவளும் சொல்லல ஆனா ஏதோ ஒரு பிரச்சினை அது மட்டும் உறுதி…

அவ்வளவு பொய் பேசறா…
நான் கேட்ட கேள்வி எதுக்குமே என் முகத்தை பார்த்து பதில் சொல்லவே இல்ல அவ முகத்தை கூட என்கிட்ட காட்ட மாட்டேங்கறா அப்பவே புரிஞ்சு போச்சு ஏதோ ஒரு வில்லங்கம் இருக்குனு…

பத்து மணிக்கு டியூட்டி டாக்டர் வருவாரு அதுக்குள்ள நீயும் பவியும் குளிச்சிட்டு ஏதாவது சாப்பிட்டிட்டு வாங்க நீங்க இருந்தா டாக்டர் கிட்ட பேச எனக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும்…என்று வலுக்கட்டாயமாக மகனை அனுப்பி வைத்தார்.

தாய் சொன்ன அறையை தேடி வர அங்கு பவித்ரா எழுந்து முகம் கழுவிவிட்டு தலைமுடியை ஒரு கொண்டையாகப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வெங்கட்டை பார்த்ததும் சந்தோஷத்தில் முகம் புன்னகையில் விரிந்தது அடுத்த நிமிடமே சோகமும் வந்தது... இந்த மாதிரியான ஒரு சமயத்திலா தனது தம்பியை சந்திக்க வேண்டும் என்று…

பவி நான் வீட்டுக்கு போறேன் நீயும் கூடவா போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வரலாம் அப்படியே அம்மாவுக்கும் தேவையானதை எடுத்துட்டு வரணும் நீ கூடவந்தாதான் சரியா இருக்கும் என்று அவளின் முகத்தை பார்த்த படியே கூறினான்.

சரி இரு நான் போய் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன் …

அதெல்லாம் ஒன்னும் வேணாம் இப்போதான் அம்மாவ பாத்து பேசிட்டு வரேன் அம்மா தான் உன்னை கூட்டிட்டு போக சொன்னாங்க சீக்கிரம் வா...டியூட்டி டாக்டர் வர்றதுக்குள்ள‌ திரும்பி வரணும்... என்று அவளை வெளியே அழைத்து வந்தவன் அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ பிடித்து அழைத்துச் சென்றான்…

பவித்ரா ஆட்டோவில் ஒரு மூலையில் அமர்ந்து அங்கிருந்த கம்பியில் தலை வைத்தபடி விழி மூடிக் கொள்ள வெங்கட் அக்காவை தான் பார்த்துக்கொண்டு வந்தான்.

அவள் முகத்தில் ரிஷியின் கைத்தடம் நன்றாகவே தெரிந்தது அதை பார்க்கப்பார்க்க வெங்கட்டிற்கு கண்கள் தானாக கலங்க ஆரம்பித்தது .

இங்கு இருந்தவரை ராணி போல அவளைப் பார்த்து இருக்கிறார்கள் ஆனால் இன்று அக்காவின் கன்னத்தில் அடி வாங்கியதற்கான விரல்தடம்.

ஏதோ பிரச்சினை என்றுதான் தாயார் கூறினார் அதனால் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அறைக்குள் வந்தவுடன் அக்காவின் முகத்தைப் பார்த்ததுமே வித்தியாசம் தெரிந்தது …

என்ன என்று உற்று நோக்கும் பொழுது தான் புரிகிறது... அவள் யாரிடமோ கன்னத்தில் அரை வாங்கிய விஷயம் கண்டிப்பாக ரிஷி இருக்கும் வரை அவள் மீது கைவைக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது அப்படி என்றால் ரிஷி தான் அவளை அடித்து இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டவன் மருத்துவமனையில் வைத்து அவளிடம் எதுவுமே கேட்கக்கூடாது என்று பொறுமை காத்தவன் வீடு வரைக்குமே அதை கடைபிடித்தான்.

வீடு வரவும் பவித்ரா நேராக அவளின் அறைக்குச் சென்று அடைந்துகொள்ள வெங்கட் முதலில்
ஃப்ரிட்ஜில் பால் இருக்கிறதா என்று ஆராய்ந்தான் இல்லை எனத் தெரிந்ததும் நேராக கடைக்குச் சென்று இலகுவாக சமைப்பதற்கு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தவன் பாலை அடுப்பில் மிதமான தீயில் வைத்து விட்டு குளியலறைக்குச் சென்று அவசர குளியலை முடித்து வந்தான்…

காய்ச்சிய பாலில் வேகமாக காஃபியை ஆற்றியவன் ஒரு டம்ளரில் ஊற்றி பவித்ராவிடம் கொடுக்க அவளின் அறைப் பக்கம் வர அதற்குள் குளித்துவிட்டு அவளின் பழைய புடவை ஒன்றை உடுத்தியிருந்தவள் வெளியே வந்தாள்…

முகத்தில் அடித்த தடம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை பல தடவை தேய்த்திருப்பாள் போல முகமெங்கும் அங்கங்கே ரத்த சிவப்பாக வித்தியாசம் தெரிந்தது வாய்க்குள்ளாகவே சிரித்துக் கொண்டவன் ஒரு டம்ளரை அவளிடம் கொடுத்து விட்டு சமையலறை சென்று வேகமாக உப்புமா செய்ய ஆரம்பித்தான்…

பின்னால் வந்த பவித்ரா தள்ளிப்போடா நான் சமைக்கிறேன் என்று கூற


இல்ல நான் இத பார்த்துகிறேன் நீ போய் அம்மாவுக்கு மாத்திகட்ட புடவையும் வேற ஏதாவது தேவைபடும்னு தோனினா கொஞ்சம் எடுத்து வைக்கறியா ப்ளீஸ் என்று கூற


சரி என்று தாயின் அறைக்குள் சென்று தாய்க்கும் தந்தைக்கும் தேவைப்படுவதை எல்லாம் எடுத்து வைத்தாள்.

அதற்குள் இங்கே இரு தட்டுகளில் சூடாக தேங்காய் சட்னியுடன் உப்புமா பரிமாற பட முந்தின நாளில் இருந்து ஒன்றுமே சாப்பிடாமல் இருந்த வயிறு அதைப்பார்த்ததும் இடம் பொருள் ஏவல் எதுவும் பார்க்காமல் தட்டினை வேகமாக எடுத்து சூடாக இருந்த உப்புமாவை வயிற்றுக்குள் தள்ள ஆரம்பித்தாள் அவளின் வேகத்தைப் பார்த்த வெங்கட் சாப்பிடாமல் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் பாதி வயிறு நிரம்ப தொடங்கும் போது தான் அவளுக்கு தம்பி தன்னை பார்த்துக்கொண்டிருப்பது புரிய பிறகு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.

என்ன பவி சாப்பாட்டையே பார்க்காதது போல இப்படி சாப்பிடற என்ன உன் மாமியார் வீட்ல உனக்கு சாப்பாடு போடலையா என்று கேலி செய்தான்.

அவனு க்கு பதில் கூறாமல் தட்டிலிருந்த பச்சைமிளகாயை பொறுமையாக ஒரம் எடுத்து வைத்தவள்…

சீக்கிரமா சாப்பிடு ஹாஸ்பிட்டல் போகணும் நீதான சொன்ன டியூட்டி டாக்டர் வந்துட்டு போறதுக்குள்ள நாம அங்க இருக்கணும்னு …

எதை மறைக்க இப்படி கோபப்படுற பவித்ரா…

என்ன மறைச்சேன்...கேள்வி கேக்காம முதல்ல தட்டை பார்த்து சாப்பிடு அப்படியே இருக்கு பாரு…

முகத்தில என்ன பவித்ரா ஒரு பக்க கன்னம் மட்டும் வித்தியாசமா இருக்கு…

பட்டென்று கன்னத்தின் மீது கை வைத்தவள் வேகமாக கன்னத்தை தேய்க்க…

எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்கு அந்தத் தடம் மறையாது பவித்ரா அந்த அளவுக்கு பலமாக அடிபட்டு இருக்கு தேய்ச்சா எரிச்சல் தான் மிஞ்சும்…

போதும் வெங்கட் எதுவா இருந்தாலும் நேரடியா கேளு இப்படி சுத்தி வளைக்காத... ஏற்கனவே நொந்து போய் தான் வந்து இருக்கேன் உன் பங்குக்கு நீயும் நோகடிக்காத... என்று சமையல் கட்டுக்கு சென்று தட்டை வைத்துவிட்டு கைகளை கழுவ பின்னால் வந்த வெங்கட் அவளின் கைகளை பிடித்து கன்னத்தை நன்றாக திருப்பி பார்த்து


யாருப்பா பவி சுத்தி வளைக்கறது நேரடியாக தான் கேட்டுட்டு இருக்கேன் உன் மேல கை வைக்கிற தைரியம் யாருக்கு வந்தது

இந்த அளவுக்கு உன்னை போட்டு அடிச்சிருக்காங்க அதை பார்த்துகிட்டு நான் பேசாமல் போகணுமா…

நான் வந்து எவ்வளவு நேரமாச்சு என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும் உனக்கு தோணல அந்த அளவுக்கு அழுத்தம் உனக்கு...

அம்மா கிட்ட கூட நீ ஒரு வார்த்தை சொல்லல ஆனா நீ ரொம்ப புத்திசாலினு நினைச்சுக்காத அம்மா ஏற்கனவே கெஸ் பண்ணிட்டாங்க அதுமட்டுமில்லாம என்கிட்டயும் சொல்லி அனுப்பினாங்க…

உன் வீட்ல ஏதோ பிரச்சனை என்ன பிரச்சனைனு தெரில...ஆனா வாயை திறந்தாலே பொய் தான் பேசறா உன் அக்கானு…இந்த அளவுக்கு உன்னை அடிச்சும் கூட நீ உன் புகுந்த வீட்டை விட்டு குடுக்க மாட்டேங்கற அதுதான் பவி எனக்கு ஆச்சரியமா இருக்கு…


உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன் வெங்கட் எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா என்றவள் நேற்று நடந்த முக்கியமான விவாதத்தை மட்டும் தம்பியிடம் கூற

அவனோ கோபத்தில் கத்த ஆரம்பித்தான்... அந்த அளவிற்கு தைரியம் வந்துருச்சா அவருக்கு...நட்ட நடு ராத்திரியில் ஒரு பொண்ணு கூட பார்க்காம கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் அடித்து வெளியே துரத்தி இருக்காங்க... இப்போ வரைக்கும் அத பத்தி நீ வாய் திறக்காம இருக்க…

கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சு இதெல்லாம் பண்றாங்களா...
நீ ஹாஸ்பிடல் போ நான் உன் புருஷனை போய் பாத்துட்டு வரேன்…


வேணாம் வெங்கட் இன்னைக்கு போக வேண்டாம் முதல்ல நம்ம அப்பா நல்லவிதமா குணமாகி வரட்டும் அதுக்கப்புறம் அவர்கிட்ட இருந்து வாங்கின பணத்தை அவர் முஞ்சில விட்டெருஞ்சிட்டு பேசிக்கலாம்...இப்போ நீ போய் கேட்டாலும் அவரு அதுதான் சொல்லுவாரு நாங்க ஆகாது ஆனா என்னோட பணம் வேணுமானு...அந்த அவமானம் தேவையா சொல்லு …

அப்படி எவ்வளவு அக்கா அவர்கிட்ட பணம் வாங்கின அப்பாவோட மெடிசன் செலவுக்கு தானே…

ம்ம்... கணக்கு கரெக்டா தெரியல ஆனா எப்படியும் லட்ச கணக்குல இருக்கும்…

ஏன் அப்பாவோட இன்சுரன்ஸ் கிளைம் என்னாச்சு…

ட்ரீட்மென்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் பில் வெச்சு வாங்கிக்கலாம்னு நினைச்சேன் என்வீட்டு பணம் தானேனு உரிமையா எடுத்துக் கொடுத்தேன் ஆனா அவங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது அது அவங்க வீட்டு பணம் அதுல ஒரு ரூபாய் கூட எடுக்க அனுமதி இல்லைங்கற விஷயம்...


இப்போ அப்பா குணமாகி வந்தா போதும் வெங்கட் பணத்தை மெதுவா கூட ஏற்பாடு பண்ணிக்கலாம் ஆனா என் கவலையே வேற...


ஆதி...என் பையன்…
பச்சப்புள்ள அவனை நேத்து என்கிட்ட குடுக்கவே இல்ல...பாவம் அவனுக்கு நேத்து உடம்புவேற சரியில்லை...அதும் யாரால என்னால... என் முட்டாள் தனத்தால என்னோட அவசரக்குடுக்கை தனத்தால...இப்போ பாதிக்கபடறது ஆதி மட்டும் தான்..

அவனை பாக்காம என்னால இருக்கவே முடியலடா...
நேத்து நைட்டே என் கிட்ட கொண்டு வந்து விடுவாங்கனு ரொம்ப நேரம் முழிச்சிருந்தேன் வரவேயில்லை இன்னைக்காவது கொண்டு வந்து விட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்
ஆனா அவனை குடுப்பாங்கனு நம்பிக்கையே எனக்கு இல்லை...எப்படி அவங்களோட போராடி என் புள்ளையை என்னோட வச்சிக்க போறேனோ தெரியல...அவங்க பணபலத்துக்கு முன்னாடி நான் எல்லாம் தூசு... இப்போ என்ன பண்றதுன்னு தெரியல…

என்றவள் கண்களைத் துடைத்துக்கொண்டு சரி நாம அத பத்தி எல்லாம் இப்ப பேச வேண்டாம் முதல்ல நமக்கு இப்போ நம்ம அப்பாவோட ஹெல்த் தான் முக்கியம் ஹாஸ்பிடல் போகலாம் என்று எடுத்து வைத்த பொருட்களை எல்லாம் சேர்த்து ஒரு பையில் வைத்தபடி வெளியே வந்தாள்.


இப்பொழுது பவியின் புகுந்த வீட்டிற்குச் சென்று சண்டையிட நேரமில்லை தந்தையின் உயிர் முக்கியம் அவரை மீட்டு கொண்டு வந்த பின்பு பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன் தனது இரு சக்கர வாகனத்தில் பவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி பயணித்தான்.

பவிக்குப் மனதில் சிறிய எதிர்பார்ப்பு தான் மருத்துவமனைக்குச் செல்லும் பொழுது யாராவது ஆதியை கையில் வைத்துக் கொண்டு நிற்க மாட்டார்களா உன் பையனை எங்களால வைத்து சமாளிக்கவே முடியல இந்தா உன் பையனை நீயே வச்சுக்கோ என்று கூறிவிட்டு செல்ல மாட்டார்களா என்று

வீட்டிலோ ஆதி இரவில் இருமுறை மட்டுமே பாலுக்காக எழுந்து அழுதான் இருமுறையும் பவுடர் பால் கலக்கிக் கொடுக்க அதன்பிறகு தொல்லை செய்யவேயில்லை நன்றாக உறங்கி விட்டான்..அவனுக்கு பால் பவுடர் ஒத்துக் கொண்டது போல் தோன்ற மருத்துவருக்கு அழைத்த ரிஷி அவரிடம் ஆலோசனை கேட்டான்.

அவரோ பால் பவுடர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் இணை உணவாக சிலவற்றை எல்லாம் கொடுக்கலாம் என பரிந்துரைத்தார் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டவன் ஒரு பேப்பரில் எழுதி வைத்து தனது தாய் சித்தி விஜி மூவரிடம் ஒப்படைத்தான்.

பவித்ரா திரும்பி வர்ற வரைக்கும் ஆதியை பொறுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் மூவரின் கடமை என்றும் கூறினான்... ராதாவும் மேனகாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர் குழந்தையை காரணம்காட்டி என்றுமே அவள் இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கக் கூடாது என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டனர்.

சித்தி தாய் அக்கா மூவரும் குழந்தையை நன்கு பராமரித்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அலுவலகம் சென்றான்.

தொடரும்
 
Status
Not open for further replies.
Top Bottom