அத்தியாயம் – 1
காலை கதிரவன் உதயத்துடன் பறவைகள் ஓசையுடன் அன்றைய தினம் விடிந்தது. சென்னையின் வழக்கமான பரபரப்பு மிகுந்த காலை. ஆறு மணிக்கே பரபரப்பு. அங்கங்கே வாகனங்களின் சத்தம். அதிகாலை நேரத்திலும் நெருக்கடியை கடந்து காரை பார்க்கிங் லாட்டில் விட்டு விட்டு மீனம்பாக்கம் ஏர்போட்டிற்குள் நுழைந்தான் நவீன். (உடனே கற்பனை குதிரையை பறக்க விடாதீங்க. ஹீரோ இல்லைனா ஹீரோயின் தான் முதல எண்ட்ரி குடுக்கணும்மா?)
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தில்(எக்ஸிட்) அருகே நண்பனின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தான். ஆறு மாதம் கழித்து தனது ஆருயிர் நண்பனை காணப் போகும் மகிழ்ச்சி துளி கூட இல்லாமல் முகம் முழுவதும் பதட்டத்துடன் காத்திருந்தான்.
எப்படியும் இந்த விஷயத்தை அவன் கிட்ட சொல்லி தான் ஆகணும். இதுக்கு மேல மறைக்க முடியாது. ஆனால் நண்பன் இதை எப்படி எடுத்து கொள்வான் என தெரியாமல் முகத்தில் கலவரத்துடன் இருந்தான்.
என்ன பண்ண முடியும்? யானை தன் தலையில் தானே மண் அள்ளி போடற மாதிரி இவனே இவன் வாழ்க்கைய சிக்கல் ஆக்கிட்டான்.
பண்ண தப்புக்கு அவன் கஷ்டத்தை சந்திச்சி தான் ஆகணும். ஆனா அவநோட அவசர புத்தியால ஒரு அப்பாவி பொண்னு வாழ்க்கை போச்சே என யோசித்து கொண்டிருந்தான் நவீன்.
ஏர்போட் உள்ளே தனது கேபின் மற்றும் செக் இன் லக்கேஜ் சரி பார்த்து எடுத்தவன் தனது அமெரிக்கன் டுரிஸ்டர் பெட்டியை தள்ளி க்கொண்டு வந்தான் சூர்ய பிரகாஷ். ( ஆமாங்க இவன் தான் நம்ம ஹீரோ)
சூர்ய பிரகாஷ் ஆறடி உயரம் பார்ப்பதற்கு நல்ல நிறம், முகத்தில் ஒரு கம்பீரம் கூடவே குறும்புடன் சிரிக்கும் கண்கள். பார்த்தவுடன் பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் நாயகன்.
சுருங்க சொன்னால் அவன் ஒரு ஹண்ட்சம் ஹீரோ.
தனது ரேபன் கண்ணாடியை தனது சட்டையில் சொருகியவன் நண்பனை தேட தனக்காக காத்துகிக்கொண்டிருந்த நவீனை கண்டு கொண்டான்.
வேகமாக அவன் அருகில் சென்று நவீனை அணைத்து எப்படி டா இருக்க? ரொம்ப நேரமா வெயிட் பண்றியா? பிளைட் லேண்ட் ஆக டைம் ஆகிடுச்சு என்ற பிரகாஷின்( இனி சூர்ய பிரகாஷ் மத்த எல்லாருக்கும் பிரகாஷ்) குரலில் பயணம் செய்த சோர்வு கொஞ்சம் கூட இல்லை. மாறாக நண்பனை ஆறு மாதம் கழித்து சந்தித்த உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.
ம்ம்ம் நல்லா இருக்கேன். இப்ப தான் வந்து கொஞ்ச நேரம் ஆகுது என்ற நவீனின் வழக்கமான துள்ளல் இல்லை என உணர்ந்து யோசனையுடன்நடந்தான் பிரகாஷ்.
என்ன ஆச்சு நவீன்? ஏன் டல்லா இருக்க? ஏதாவது பிரச்சனையா? வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? என பதட்டத்துடன் வினவிய பிரக்ஷிடம் அதெல்லாம் ஒன்னுமில்லைடா. கொஞ்சம் டையர்டா இருக்கு என்றபடி கார் பார்க்கிங் நோக்கி சென்ற நவீனை பின் தொடர்ந்தான் பிரகாஷ்.
காரை நவீன் ஓட்டிக்கொண்டிருக்க அருகில் பிரகாஷ் அமெரிக்க அனுபவம் மற்றும் தொழில் சம்பந்தமாக பேசி கொண்டிருந்தான்.
நவீனிடம் எந்த எதிரொலியும் இல்லை என யோசனையுடன் அவனை கூர்ந்தான். கேட்டா ஏதாவது சமாளிக்க பார்ப்பான். பொறுமையா பேசிக்கலாம் என்ற எண்ணத்துடன் அமைதியானான்.
மகிழ் வீட்டுக்கு போயேன். அவளை பார்க்கணும் போல இருக்கு? அவ என்னை பார்த்தது சந்தோஷடதுல அவ முகம் ஜொலிக்கும் பாரு அதை பார்க்கணும் என்ற ப்ரகாஷுன் கூற்றில் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் நவீன்.
மகிழ்க்கு கல்யாணம் முடிஞ்சுட்டு என்ற நவீனின் குரலில் முற்றிலும் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.
வேண்டாம் ப்லீஸ் சூர்யா என்னை விட்டுட்டு போகாதீங்க. எனக்கு பயமா இருக்கு. என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க. நீங்க இல்லாத வாழ்க்கைய என்னால நினைத்து கூட பார்க்க முடியாது என மகிழ் கடைசியாக தன்னிடம் பேசியது நெஞ்சில் வந்து மோதியது.
தன்னை சுதாரித்த பிரகாஷ் அவளுக்கு என்னடா? அவளோட நல்ல மனசுக்கு அவ கட்டாயம் நல்லாருப்பா என்ற படி கண்களை மூடினான்.
சந்தோஷமாவா? எப்படி டா சந்தோஷமா இருப்பா? அவ வாழ்க்கை போச்சு. அவ சுத்தமா நல்லா இல்லை என்ற நவீனின் கர்ஜனையில் அதிர்ச்சியுடன் ஏறிட்ட பிரகாஷின் மனம் அவனை நார் நாராக கிழித்தது.