Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழல் நிலவு - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 11

மாஃபியா என்னும் நிழல் உலகில் வேலை செய்யும் அனைவருமே பயில்வான்களாகவும், கொலைகாரர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பினால் அது முற்றிலும் அறியாமையே. தலைவர், துணைத்தலைவர், ஆலோசகர், தளபதிகள், வீரர்கள், அசோசியேட்ஸ் என்று பல அடுக்குகள் மாஃபியாவில் உள்ளது. இங்கே வீரர்கள் பல குழுக்களாகப் பிரிந்திருப்பார்கள். அவற்றில், செய்தி சேகரிப்பு குழு, தொழில்நுட்ப குழு, இரசாயன குழு, சட்ட வல்லுநர்கள் குழு, பாதுகாப்பு குழு, கில்லிங் ஸ்குவார்ட் எனப்படும் கொலைகார குழு ஆகியவை முக்கியமான குழுக்கள். இதில் டிஃபன்ஸ் மற்றும் கில்லிங் ஸ்குவார்ட் தவிர மற்ற குழுக்களை சார்ந்தவர்களெல்லாம் அந்தந்த துறையில் மட்டுமே வல்லுனர்களாக இருப்பார்கள்.

மாஃபியாவில் பல குழுக்கள் இருந்தாலும், செய்தி சேகரிப்பு குழுதான் அடிப்படையானது. மாஃபியாவின் குற்றங்களெல்லாம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் அதாவது ஆர்கனைஸ்ட் க்ரைமாக இருப்பதற்கு காரணம் இவர்கள் கொண்டுவரும் தரமான இன்ஃபர்மேஷன்தான்.

சம்மந்தப்பட்டவர்களுக்கு அருகில் இருந்துக் கொண்டே, அவர்களுக்கு நூல் நுனியளவும் சந்தேகம் வராமல் அவர்களிடமிருந்து தகவல்களை உருவியெடுத்துக் கொண்டு வருவதுதான் இவர்களுடைய சாமர்த்தியம். இவர்களை உளவாளிகள் என்றும் சொல்லலாம்.

அடிப்படை பயிற்சியை மட்டும் எடுத்து கொண்டு மக்களோடு மக்களாக கலந்துவிடும் இந்த உளவாளிகளை, தனக்குத் தேவைப்படும் இடத்தில் சொருகி விடுவது மாஃபியா தலைமையின் பொறுப்பு. அங்கிருந்து செய்திகளை களவாடிக் கொடுப்பது உளவாளிகள் பொறுப்பு. இந்த உளவாளிகள் தங்களுடைய தேவைக்கேற்ப அசோசியேட்ஸை அவர்கள் இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக்கொள்வார்கள்.

அதாவது அவர்கள் எந்த இடத்திற்கு அனுப்பப்படுகிறார்களோ அங்கே நட்புறவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்வார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் தகவல்களை களவாடுவார்கள். சில சமயங்களில் குற்றப்பின்னணி உள்ள அசோசியேட்ஸ் தெரிந்தே தகவல் கொடுத்து உதவிவிட்டு அதற்கான பிரதிபலனை மாஃபியாவிடமிருந்து பெற்றுக்கொள்வதும் நடக்கும்.

இப்படி திரட்டப்படும் தகவல்கள் அந்தந்த தளபதிகளுக்கு வந்து சேரும். அவர்கள் அதை தலைமையிடம் கொண்டு செல்வார்கள். தலைமை பொறுப்பிலிருப்பவர் ஆலோசகரை அழைத்து விவாதிப்பார். தலைவர், ஆலோசகர், தளபதி மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டுவார்கள். அதை செயல்படுத்தும் பொறுப்பு தளபதியிடம் வந்து சேரும். வீரர்களை கொண்டு அதை பிசிறு தட்டாமல் செய்து முடிப்பது தளபதியின் கடமை.

அப்படி ஒரு கடமை தான் இப்போது அர்ஜுன் ஹோத்ராவின் மேஜையில் அமர்ந்திருந்தது. டெல்லிக்கு செல்லும் ராகேஷ் சுக்லா பாதுகாப்பாக ஒடிசா வந்து சேர வேண்டும். அதை எப்படி நிறைவேற்றுவது என்பதற்கான திட்டம்தான் அது - அந்த கோப்பு. நேற்று இரவு மிருதுளாவின் அறையிலிருந்து வந்த பிறகு இரவெல்லாம் உறங்காமல் கண்விழித்து தயார் செய்த கோப்பு.

கத்தி மேல் நடப்பது போன்றதொரு திட்டம்தான் என்றாலும் பிளான்-எ, பிளான்-பி, பிளான்-சி என்று மூன்று மாற்று முறைகளுடன் முறையாக தீட்டப்பட்டிருக்கும் திட்டம். இதில் பிசகு நடக்க வழியே இல்லை என்று திட்டவட்டமாக முடிவான பிறகு, அலைபேசியை எடுத்து அஞ்சானி லாலுக்கு அழைத்தான். அவரிடம் பேசியபடியே தன்னுடைய அலுவலக அறையிலிருந்து வெளியேறி சமையலறை பக்கம் வந்தவன், “இங்க நா கெஸ்டும் இல்ல சர்வெண்டும் இல்ல” என்று கூறிவிட்டு கூந்தல் காற்றில் பறக்க, வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்ட மிருதுளாவை கண்டான்.

அவளுடைய முதல் கோபம்.. ஐஸ் கிரீம் கேட்டு அடம் செய்யும் குழந்தை போல் கியூட்டாக இருந்தது. பசை போட்டது போல் பார்வை அவளிடமே ஒட்டிக் கொண்டது. அதை பிரித்தெடுக்க முடியாமல் தடுமாறியவன், அவள் தன்னிடம் நெருங்கும் போது பார்வையை இயல்பாக வேறு பக்கம் திருப்பிவிட்டான். உள்ளே ஏதோ தடக் தடக் என்றது.. இதயமா! - அவன் நம்பவில்லை. அவளுடைய பார்வை அவன் முகத்தில் படிந்தது, அவன் அவளை திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் உணர்ந்தான்! அவள் தன்னைத்தான் பார்க்கிறாள், பார்த்துக் கொண்டே கடந்து செல்கிறாள் என்பதை நன்றாக உணர்ந்தான். உள்ளே இனித்தது.. ஆனால் அந்த இனிமையை முழுமையாக அனுபவிக்கும் உரிமை அவனுக்கு இருக்கிறதா? - விடை தெரியாத இந்த கேள்வியை நேற்று இரவிலிருந்து எத்தனை முறை தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் என்பதை அவன் மனம் மட்டுமே அறியும்.

********************

அர்ஜுன் ஹோத்ராவின் புறக்கணிப்பை அலட்சியப்படுத்த எண்ணிய மிருதுளா அதை செயல்படுத்த முடியாத இயலாமையுடன் கையில் இருந்த காபி கப்பை டீபாயில் வைத்துவிட்டு ‘பட்பட்’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

‘அவன் உண்மையிலேயே நம்மை பார்க்காமல்தான் போனானா? அல்லது பார்த்துவிட்டு பார்க்காதது போல் போனானா?’ என்கிற கேள்வி அவளை குடைந்தது.

ஏதேதோ யோசனையுடன் அவள் அமர்ந்திருந்த போது, பட்டென்று கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சுஜித் சிங்.

அவன் உள்ளே நுழைந்த வேகத்திலேயே திடுக்கிட்டு எழுந்து நின்ற மிருதுளா அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.

டீப்பாயில் இருந்த ஆறிப்போன காபியையும் காய்ந்து போன பிரட் துண்டுகளையும் பார்த்துவிட்டு, அவள் முகத்தை பார்த்தவன் இகழ்ச்சிப் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

அவனுடைய பார்வையும் சிரிப்பும் மிருதுளாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

“உன்கிட்ட ஒரு விஷயத்தை கிளியர் பண்ணனும்.. அதுக்காகத்தான் வந்தேன்” என்று விழியை உருட்டியவன், மறுநொடியே சற்று குனிந்து கைகளை பவ்யமாக கட்டிக்கொண்டு, “மேடம் இப்போ ஃபிரீ தானே?” என்றான் போலி மரியாதையுடன். அவனுடைய பார்வை, பேச்சு, செயல் ஒவ்வொன்றும் அவளை அவமதித்தது.

எந்த உணர்வுகளையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இறுகிப்போய் நின்றாள் மிருதுளா.

“மிரு..து..ளா! உன் பேருதானே? இல்ல அதுவும் பொய்யா?” - அவனுடைய பார்வை அவளை துளைத்தது.

“உன்ன பத்தி மு..ழு..சா.. தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி அவ்வளவு ஈஸியா உன்ன இங்கிருந்து அனுப்பிடுவோம்னு நெனச்சியா? எப்படி எப்படி? நீ இங்க கெஸ்ட்டும் இல்ல.. ஸர்வெண்டும் இல்லையா? ரைட்.. நீ இங்க கெஸ்ட்டும் இல்ல, ஸர்வண்டும் இல்லதான்.. யு ஆர் எ பிரிஸனர்.. கைதி..” - இதை சொல்லும் பொழுது அவன் முகத்தில் ஒரு வெறி தெரிந்தது. வேட்டையாடும் வெறி!

மிருதுளாவின் கண்கள் பெரிதாக விரிந்தன. இதயத்துடிப்பு அதிகரித்தது. ‘இவன் இருந்ததை கவனிக்காமல் பேசிவிட்டோம்!’ - எச்சிலை கூட்டி விழுங்கினாள்.

“இப்போ.. இப்போ.. உனக்கு ஒரு வாய்ப்பு தரேன். நீயா.. உன் வாயாலையே எல்லா உண்மையையும் சொல்லிடு. உயிரோட இருக்கலாம்.. இல்ல..” என்று சற்று இடைவெளி விட்டவன், “வருத்தப்படுவ..” என்றான் ஒற்றை வார்த்தையில். அந்த வார்த்தையில் நிறைந்திருந்த ஆபத்து மிருதுளாவை எச்சரித்தது.

அன்று முழுவதும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. சந்தர்ப்பத்திற்காக காத்திருக்காமல் உடனடியாக செய்ய வேண்டியதை செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

************************

“வெள்ளை திமிங்கலம் டெல்லிக்கு வருதாம்” - ஐம்பது வயது மதிக்கத்தக்க பகவான் தீவிர முகபாவத்துடன் கூறினார்.

“தகவல் உண்மையானதுதானா?” - ஜெனார்த் நாயக்கின் குரலில் சந்தேகமிருந்தது.

“உண்மைதான்..”

“இந்த முறை சிந்தாம சிதறாம செய்யனும்.”

“நம்ம ஆளுங்க வேண்டாம். எக்ஸ்பர்ட்ஸை ஹையர் பண்ணிக்கலாம்.”

“எங்கிருந்து?”

“மும்பையிலிருந்து”

“அங்கேயெல்லாம் நம்மளவிட அவனுங்களுக்கு தொடர்பு அதிகம். ஒரு சின்ன க்ளூ கூட நா கொடுக்க விரும்பல. அதோட ப்ரோஃபஷனல்ஸை இறக்கினோம்னா ஆளுங்களை பார்த்ததுமே கண்டுப்பிடிச்சிடுவானுங்க. நமக்கு ரிஸ்க்காயிடும்.”

“வேற என்ன பண்ணறது? ஜம்பர்ஸ் அண்ட் கிடான்ஸ்கு அரேன்ஞ் பண்ணுவோமா? பார்க்க ஃபேமிலி மாதிரி இருக்கும். யாருக்கும் சந்தேகம் வராது..” - ஜம்பர்ஸ் என்பவர்கள் வெவ்வேறு ஊர்களில் அந்தந்த ஊர் மக்கள் போலவே பொருந்தக் கூடிய கொலையாளிகள். கிடான்ஸ் என்பவர்கள் பெண் கொலையாளிகள்.

சிந்தனையுடன் அமர்ந்திருந்த ஜெனார்த் ‘இல்லை’ என்பது போல் தலையாட்டினான். பிறகு, “இதை நாமதான் செய்யனும்” என்றான் உறுதியாக.

அவனுடைய முடிவில் பகவானுக்கு உடன்பாடில்லை. இவ்வளவு பெரிய ஆபரேஷனை தானாக செய்வது பாதுகாப்பில்லை என்று நினைத்தார். ஆனால் விஷயம் அணு அளவு கூட வெளியேறுவதை ஜெனார்த் விரும்பவில்லை. இருவரும் வெகு நேரம் விவாதித்தார்கள். பிறகு தங்களுடைய ஆட்களை வைத்தே முடிப்பது என்கிற முடிவிற்கு வந்தார்கள். திட்டமும் தயாரானது.

**********************

அர்ஜுன் ஹோத்ராவின் உறக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் அலைபேசி வைப்ரேட் ஆனது. இரவு வெகு நேரம் விழித்திருந்து வேலை செய்தவன் சற்று முன்தான் படுத்தான். மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் ஆயிருக்கலாம்.. அதற்குள் அழைப்பு.. யாரென்று எடுத்துப் பார்த்தான், சுஜித்.. அழைப்பை ஏற்று, “டெல் மீ” என்றவன் விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.

“வாட்! வாட் த ஹெல் ஆர் யு சேயிங் மேன்?” - பரபரப்புடன் அறையிலிருந்து வெளியேறியவன், “ஐம் கம்மிங்” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு தடதடவென்று படிக்கட்டில் இறங்கினான். கீழே டேவிட் நின்றுக் கொண்டிருந்தான்.

“யார் முதல்ல பார்த்தது?” - உள்ளடங்கிய குரலில் கேட்டான்.

“கார்ட்ஸ்.. டென் மினிட்ஸ் முன்னாடி..” - இறுகிய குரலில் பதிலளித்தான் டேவிட்.

“வேர் இஸ் சலீம்?”

“கீழ” - பேஸ்மெண்ட் படிக்கட்டில் இறங்கிய இருவரும், அடுத்த சில நிமிடங்களில் சுஜித் சிங்கையும், மாலிக் சர்புதீனையும் சந்தித்தார்கள்.

“எப்படி நடந்திருக்கு?” - அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை அவர்களுக்குப் பின்னால் சென்றது.

கண்கள் விழித்திருக்க, வாய் திறந்தபடியே இருக்க உயிர் பிரிந்த நிலையில் கட்டையாய் கிடந்தான் பட்டேல்.

“ப்ரோஃபஷனல் டச்.. ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படல” - மாலிக்கின் குரல் இறுகியிருந்தது.

அவர்களை கடந்துச் சென்று பிணத்தை ஆராய்ச்சிப் பார்வை பார்த்த அர்ஜுன் ஹோத்ரா நண்பனின் கூற்றில் இருந்த உண்மையை உறுதி செய்துக்கொண்டான். ஆனாலும், “கொலைதானா?” என்றான் சிறு சந்தேகத்துடன்.

“இன்னைக்கு காலையிலேயே சமீரை வர சொல்லிட்டோம். ஹி வாஸ் அண்டர் ட்ரீட்மெண்ட். தானா செத்திருக்க வாய்ப்பில்லை” - சமீர், அதே மாளிகையில் வசிக்கும் கோர்த்தாவின் தனி மருத்துவர். காலையில் அவன் கொடுத்த ரிப்போர்ட்டின் படி பட்டேலின் உயிர் ஒன்றும் ஊசலாடி கொண்டிருக்கவில்லை. அப்படியென்றால் இது கொலைதான்.

அர்ஜுன் ஹோத்ராவின் இரத்தம் கொதித்தது. “ஹூ இஸ் தட் ப்ளடி _” - கொடூரமாக கத்தினான். அது மிகவும் ஆபத்தான குரல்! வேட்டையாடும் மிருகத்தின் உறுமல்!

“வி சஸ்பெக்ட் மிருதுளா” (மிருதுளாவை சந்தேகப்படறோம்) - தயக்கமில்லாமல் கூறினான் மாலிக் சர்புதீன்.

“வாட்!” - அதிர்ச்சியுடன் அவன் பக்கம் திரும்பினான் அர்ஜுன்.

“எஸ்! வி ஸ்ட்ராங்லி சஸ்பெக்ட் ஹர். அவதான் பண்ணியிருக்கனும். அவளோட ஐடென்டிட்டி எதுவும் உண்மை இல்ல. அனந்த்பூரிலிருந்து ரிப்போர்ட் வந்துடுச்சு” என்ற டேவிட் அவளைப் பற்றி கிடைத்த விபரங்களை சுருக்கமாகக் கூறினான்.

அர்ஜுன் ஹோத்ரா எதுவும் பேசவில்லை. அவனால் பேச முடியவில்லை. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு சிலை போல் நின்றான்.

அப்போது பரபரப்புடன் உள்ளே வந்த பாதுகாவலன் ஒருவன், “ஷி எஸ்கேப்ட்” என்றான் கலவரத்துடன்.

“வாட்! ஹூ இஸ் ஹி டாக்கிங் அபௌட்?” (என்ன சொல்றான் இவன்? யார் எஸ்கேப் ஆனது) - மிருதுளாவாக இருக்கக் கூடாது என்று உள்ளூர எழுந்த ஆவலை மறைத்துக் கொண்டு அழுத்தமாகக் கேட்டான்.

“மிருதுளா! டவுட் வந்ததும் அவ ரூம்ல இருக்காளான்னு செக் பண்ண சொன்னேன். என்னோட சந்தேகம் உண்மையாயிடிச்சு. ஷி இஸ் த ஒன்.. த ப்ளடி இன்ட்ரூடர்” - வெகுண்டான் சுஜித் சிங்.

மிருதுளாவின் மீது அவனுக்கிருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போய்விட, ஆழிப்பேரலைக்கு முன் உள்வாங்கும் கடல் போல உள்ளடங்கிய உணர்வுகளுடன், “அவ எனக்கு உயிரோட வேணும்.. சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடி” என்றான் அர்ஜுன் ஹோத்ரா அமைதியாக.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 12

சுஜித் சிங்கின் மிரட்டலில் பயந்து போன மிருதுளா கண்மூடித்தனமாக ஒரு முடிவை எடுத்தாள். ‘இனி இங்கு தாமதிக்கக் கூடாது. தினமும் நமக்கு வரும் கனவே நம்மை காட்டி கொடுத்துவிடும். அவர்கள் செய்த கொலைக்கு நாம் சாட்சி என்று தெரிந்தால், நம்முடைய பிணம் கூட அம்மாவுக்கு கிடைக்காது. நம்மை காணாமல் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ!’ - தாயின் நினைவும் தன்னுடைய சூழ்நிலையும் மிருதுளாவை கலங்கச் செய்தது.

கதவை மூடி தாழிட்டுக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அழுது ஓய்ந்தவள், குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள். ஆறிப்போன காபியும் காய்ந்துப் போன ப்ரட்டும் வைத்த இடத்திலேயே இருந்தது. பட்டினிக் கிடப்பது அவளுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. எனவே அதை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு வெளியே வந்தவள், ஆட்களின் நடமாட்டத்தை கவனித்தபடி தோட்டத்திற்கு வந்தாள்.

“ஹேய்.. மிருதூ.. இங்க என்ன பண்ணற?” - குரல் வந்த திசையில் பார்வையை செலுத்தினாள். விரிந்த புன்னகையுடன் கையை உயர்த்தி ‘ஹாய்’ சொல்லிக் கொண்டே அவளிடம் ஓடி வந்தாள் சுமன். அவளுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த சுஜித்தின் கண்கள் மிருதுளாவை தான் வெறித்துக் கொண்டிருந்தன.

அவனை பார்த்ததுமே மிருதுளாவின் உடலில் நடுக்கம் பரவியது. இறுகிப் போய் அசையாமல் நின்றாள். அதற்குள் அவளை நெருங்கிவிட்ட சுமன், “என்ன? ஏன் ஒருமாதிரி இருக்க?” என்று தோழியின் தோள்களைப் பிடித்து உலுக்கினாள்.

“ம்ஹும்.. நத்திங்..” - சுதாரித்துக் கொண்டு கவனத்தை தோழியின் பக்கம் திருப்பினாள் மிருதுளா.

ஆனால் அவளைவிட ஸ்மார்ட்டான சுமன், மிருதுளா சுதாரிப்பதற்கு முன்பே அவளுடைய பார்வையை கவனித்துவிட்டு, “ஏன் சுஜித்தை அப்படி பார்க்குற? அவன் ஒன்னும் அவ்வளவு கெட்டவன் இல்ல” என்று சிரித்தாள்.

ஒரு கணம் அதிர்ந்த மிருதுளா, “நான் எதுவுமே சொல்லல” என்றாள்.

“நீ சொல்லல.. ஆனா உன்னோட பார்வை சொல்லுது” - புருவம் உயர்த்தினாள்.

“யு ஆர் மேட்” - திரும்பி நடந்தாள் மிருதுளா. அவளோடு சேர்ந்து நடந்த சுமன், “இரண்டு பேரும் சமாதானம் ஆயிடுங்கப்பா. ஒருத்தரை ஒருத்தர் இப்படி முறைச்சுகிட்டே இருக்காதீங்க” என்றாள். மிருதுளா பதில் சொல்லவில்லை. அவளுடைய பார்வை மாளிகைக்குள் சென்றுக் கொண்டிருந்த சுஜித்தின் முதுகில் படிந்தது.

சற்று நேரம் அமைதியாக இருந்த சுமன் பிறகு மெல்லிய குரலில் பேசினாள்.

“சுஜித் முரடன்தான்.. ஆனா ஒரு அப்பாவி பொண்ணுக்கிட்ட பலத்தை காட்டற அளவுக்கு மோசமானவன் இல்ல. அன்னைக்கு உன்னை தள்ளிவிட்டது கூட தெரியாம நடந்த தப்புதான் மிருதூ. என்கிட்ட எத்தனை தரம் சாரி சொன்னான் தெரியுமா? அது மட்டும் இல்ல.. அர்ஜுன் பாய் கூட உனக்காக அவனை நல்லா திட்டிட்டாரு” என்றாள்.

சட்டென்று மிருதுளா சுமனை பார்த்தாள். அவள் கண்களில் இருந்த ஆர்வத்தை கவனித்துவிட்டு புன்சிரிப்பை உதிர்த்த சுமன், “எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு” என்றாள்.

“என்ன சந்தேகம்?” - மிருதுளா.

“அவருக்கு உன் மேல ஏதோ ஒரு ஃபீலிங்.”

“வாட்!” - மிருதுளாவின் குரல் வழக்கத்திற்கு மாறாக உயந்தது.

“ஐ நோ டியர். நோபடி கேன் ஹைட் எனிதிங் ஃபிரம் மீ” - குறும்புடன் சிரித்தாள். மிருதுளா அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“லூசாயிட்டியா நீ?” - தோழியை கண்டிக்க முயன்றாள். ஆனால் அவளுடைய முயற்சியை அலட்சியமாக தட்டிவிட்ட சுமன், “நீ எங்க போனாலும் அர்ஜுன் பாய் பார்வை உன்..னையே.. ஃபாலோ பண்ணுதே! அதுக்கு என்ன அர்த்தம்?” என்றாள் சீண்டலாக.

“என் மேல சந்தேகம் இருக்குன்னு அர்த்தம்” - பட்டென்று தோழிக்கு பதில் சொல்லி அவளுடைய வாயை அடைக்க முயன்றாலும் மிருதுளாவிற்குள்ளும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்தது. அவனுடைய பார்வை சந்தேகப் பார்வை அல்ல.. அதை அவளுடைய உள்மனம் அறிந்திருந்தது. ஆனால் அதைப் பற்றிய ஆராய்ந்து பிரச்சனையில் சிக்கிக்கொள்ள அவள் தயாராக இல்லை. இங்கிருந்து தப்பிக்கும் வழியைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

தோழியின் மனதிற்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாத சுமன், “நோ மை டியர்.. சந்தேகப் பார்வைக்கும், ரொமான்டிக் பார்வைக்கும் எனக்கு நல்லா வித்தியாசம் தெரியும். அதை கூட தெரிஞ்சுக்க முடியாத மக்கா நான்?” என்று அவளை மடக்கினாள்.

“காட்! என்னை காப்பாத்துங்க” – வாய் விட்டு கடவுளை அழைத்தாள் மிருதுளா.

“சரி அதைவிடு.. நேத்து நைட் அர்ஜுன் பாய் உன்னோட ரூமுக்கு வந்ததை நா பார்த்தேன். உள்ள என்ன நடந்தது.. ம்ம்ம்?” - கண்ணடித்து சிரித்தாள்.

மிருதுளாவின் முகம் மாறியது. உள்ளே பொங்கும் அதீத கோபம் அவள் முகத்தில் பிரதிபலித்தது. அவள் சொல்வது உண்மையா பொய்யா என்பது அடுத்தது.. முதலில் அவள் எப்படி இது போல் பேசலாம்? இவளைப் பற்றி இப்படி அசிங்கமாக நினைப்பதற்கு அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? - முகம் கடுகடுக்க பட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டு விறுவிறுவென்று வேகமாக தோட்டத்திற்குள் நடந்தாள்.

“ஹேய்.. மிருதூ.. நில்லு.. நில்லுன்னு சொல்றேன்ல்ல. ஐயோ! நி..ல்..லு நா சொல்றதை கேளு” - அவளை பின் தொடர்ந்து ஓடினாள் சுமன்.

மிருதுளா நிற்கவில்லை. வேகமாக நடந்தாள்.. இன்னும் இன்னும் வேகமாக நடந்தாள்.. மரங்களின் அடர்த்தி அதிகமானது.. தோட்டம் காடாக மாறியது.. நிற்காமல் நடந்துக் கொண்டே இருந்தாள்.

மேல்மூச்சு வாங்க தோழியை பின்தொடர்ந்துக் கொண்டிருந்த சுமன் வெகுவாய் பின்தங்கிவிட்டாள்.

“ஐம் சாரி.. நா அப்படி சொல்லியிருக்கக் கூடாது.. நீ நல்லவதான்.. ரொம்ப நல்லவ.. மன்னிச்சுக்கோ தாயே.. தயவு செஞ்சு நில்லு” - சுமனின் குரல் எங்கோ தூரத்தில் கேட்டது. எதைப் பற்றியும் அவளுக்கு கவலை இல்லை. ‘அவள் எப்படி இப்படி பேசலாம்? எப்படி பேசலாம்?’ - ஆத்திரம் அடங்கவில்லை. ஆவேசத்துடன் வேகவேகமாக நடந்துக்கொண்டிருந்தவள் சட்டென்று நின்றாள். தூரத்தில் கார் ஒன்று சொல்வது தெரிந்தது. ‘சாலையா!’ - விழி விரிய ஆவலுடன் பார்த்தாள்.

‘ஆம்! சாலையேதான்.. அதோ.. ஒரு பேருந்து கூட செல்கிறது. இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்!’ - அவசர அவசரமாக மனக்கணக்குப் போட்டாள். ‘ஐந்து... இல்லை பத்து நிமிடம் நடந்தால் போதும். ஓடினால்? நமது வேகத்திற்கு இரண்டு நிமிடம் போதாது? இல்லை.. மரங்களை கடந்து ஓட வேண்டும்.. மூன்று அல்லது நான்கு நிமிடம்?’ – “உ..ஃப்.. ஓ.. மை.. காட்! யு ஆர் இம்பாஸிபிள்” - மூச்சுவாங்க மிருதுளாவின் மீது வந்து விழுந்தாள் சுமன்.

சட்டென்று திரும்பி தோழியை தாங்கினாள் மிருதுளா. அவள் மீது தொங்கியபடியே, “திருப்தியா இப்போ?” என்றாள். அவளுடைய களைப்பை பார்த்து புருவம் உயர்த்தினாள் மிருதுளா.

“என்ன அப்படி பார்க்கற? இவ்வளவுதானா நான். இதுவே அதிகம்.. உனக்காகத்தான் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்தேன். ஹையோ! இப்போ திரும்பி வேற போகணுமே.. கடவுளே!” - புலம்பியவள், அங்கே சுற்றிக் கொண்டிருந்த காவலாளி ஒருவனை அழைத்து, “பாய்.. தண்ணி இருந்தா கொஞ்சம் கொடுங்க” என்றாள்.

அவன் இடுப்பு பெல்ட்டில் சொருகியிருந்த சிறு பாட்டில் ஒன்றை அவளிடம் எடுத்து நீட்டினான். அதை வாங்கி மடமடவென்று குடித்து முடித்துவிட்டு, “இங்கதான் இன்னைக்கு ட்யூட்டியா? எவ்வளவு நேரம்? எல்லா தண்ணியையும் குடிச்சு முடிச்சுட்டேன்.. மேன்சனுக்கு போன பிறகு யார்கிட்டேயாவது கொடுத்தனுப்பறேன்” என்றாள்.

“தேவையில்லை பாபி.. நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? சுஜித் பாய்க்கு தெரிஞ்சா திட்டுவாரு.. கிளம்புங்க.. கிளம்புங்க..” - விரட்டினான்.

“கரெக்ட்.. சுஜித்துக்கு தெரிஞ்சா திட்டுவாரு.. தெரியாம பார்த்துக்கோங்க. நாங்க சும்மா ஓடிப்பிடிச்சு விளையாண்டோம். இதோ கிளம்பிட்டோம்.. லெட்ஸ் கோ” என்று தோழியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஹௌ டேர் யு ஆஸ்க் மீ ஸச் நான்சென்ஸ்?” - வெடுவெடுத்தாள் மிருதுளா.

“ஐ காண்ட் பிலீவ் யு..”

“ஏன்?”

“நா சொன்னா நீ மறுபடியும் ஓட ஆரம்பிச்சுடுவ. உன்ன துரத்த என்கிட்ட தெம்பு இல்லம்மா. பேசாம வா.”

“ஒழுங்கா சொல்ல வந்ததை சொல்லு.”

“நேத்து நைட் அர்ஜுன் பாய் உன்னோட ரூம்க்கு வரலைன்னு சொல்றியா?” - தோழியின் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக நடந்த மிருதுளா பிறகு, “நான் பார்க்கல” என்றாள்.

“எஸ்.. தட்ஸ் பாஸிபிள். அது லேட் நைட் தான்.. நீ தூங்கியிருப்ப. பட் ஹி என்டர்ட் யுவர் ரூம்” என்றாள் உறுதியாக. மிருதுளாவின் புருவம் சிந்தனையில் சுருங்கியது.

*******************

‘சுமன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். அவன் வந்திருப்பான்.. இன்றும் கூட வருவான். நாம் அவசரப்படக் கூடாது. பொறுமையாக காத்திருந்து அவன் வந்துவிட்டு சென்ற பிறகுதான் இங்கிருந்து கிளம்ப வேண்டும். அதிகாலை நேரம் தான் சரியாக இருக்கும். காவல் காப்பவர்கள் கூட கண் அசரக் கூடிய நேரம் அதுதான்’ - மனதிற்குள் பக்காவாக திட்டம் போட்டுவிட்டு வெளியே இயல்பாக இருந்தாள் மிருதுளா.

இரவு உணவிற்குப் பிறகு அனைவரும் அவரவர் அறைக்குச் சென்ற போது மிருதுளாவும் தன்னுடைய அறைக்குச் சென்றாள். மனம் பரபரவென்றிருந்தது. நிலைகொள்ள முடியாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள். இன்று இரவு முடிவு தெரிந்துவிடும். - ‘கடவுளே! ஹெல்ப் மீ’ - நேரம் செல்ல செல்ல டென்சன் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதற்கு மேல் எந்த நேரத்திலும் அர்ஜுன் அவளை பார்வையிட வரலாம் என்று நினைத்தவள், அமைதியாக கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டால் உறங்குவது போல் கண்களை மூடிக்கொள்ளலாம் என்று எண்ணினாள்.

வெகு நேரம் காத்திருந்தும் அவள் எதிர்பார்த்தது போல் அன்று அர்ஜுன் அவளுடைய அறைக்கு வரவில்லை. இன்னும் சற்று நேரம் காத்திருக்கலாம் என்று யோசித்தாள். ஆனால் விடிவதற்குள் தப்பித்தாக வேண்டும். விடிந்துவிட்டால் மாட்டிக்கொள்ள நேரிடும். அவன் உறங்கச் சென்றுவிட்டானா? அல்லது இனிமேல் தான் வருவானா? ஒன்றும் புரியவில்லை. மெல்ல எழுந்தாள்.. நேரம் என்ன என்று தெரியவில்லை. மணி பார்க்க வேண்டும் என்றால் சமையலறையை எட்டிப்பார்க்க வேண்டும். அங்கே சென்றால் யார் கண்ணிலும் பட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. பயமாக இருந்தது. என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் நகத்தைக் கடித்தாள்.

பிறகு ஜன்னல் பக்கம் போடப்பட்டிருந்த திரையை விலக்கிவிட்டு வெளியே நோட்டமிட்டாள். காவலாளிகள் யாரும் கண்ணில்படவில்லை.

அந்த மாளிகை முழுக்க, கம்பியோ மரச்சட்டமோ இல்லாத உயர உயரமான கண்ணாடி ஜன்னல்கள் தான்.. அது அவளுக்கு வசதியாகிவிட்டது.

‘இது என்ன ஆர்கிடெக்சரோ! கொஞ்சம் கூட சேப்டி இல்லாத ஆர்கிடெக்சர். எப்படியோ.. நமக்கு ஹெல்ப்பா ஆயிடிச்சு’ - மனதிற்குள் பேசிக்கொண்டே கண்ணாடியை திறந்துக் கொண்டு வெளியே நழுவி விழுந்தாள்.

‘பொத்’ - என்று சத்தம் கேட்டது. அவசரமாக எழுந்து இருளில் மறைந்துக் கொண்டு யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்தாள்.

‘இல்லை.. ஒருவரும் அந்தப் பக்கம் இல்லவே இல்லை. உஃப்..’ - இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை நிம்மதியாக வெளியேற்றினாள். எச்சரிக்கையுடன் இருளில் தன்னை கரைத்துக் கொண்டு மெல்ல தோட்டத்திற்குள் புகுந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போல் காவலாளிகள் உறக்கக் கலக்கத்தில் அசரவில்லை. நல்ல விழிப்புடன்தான் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவள் சாமர்த்தியமாக செயல்பட்டாள். இது எப்படி சாதித்தியமானது என்று அவளுக்கு தெரியாது. இயல்பாக அவளுடைய புலன்கள் கூர்மையாகி அவளுக்கு கைகொடுத்தது. ஒளிந்து மறைந்தபடியே கல்லையும் முள்ளையும் கடந்து மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்தாள்.

நிலவின் ஒளி முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருந்த அந்த காட்டுக்குள் இருளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது பிளாஷ் லைட்டின் வெளிச்சம் ஆங்காங்கே பாய்ந்தது. காவலாளிகள் இங்கும் இருக்கிறார்கள் என்பதை புரிந்த்துக்கொண்ட மிருதுளாவிற்கு, எதிரில் இருப்பது மரமா மனிதனா என்று அனுமானிக்க முடியாமல் திணறினாள். எங்கு பார்த்தாலும் யாரோ நிற்பது போன்ற மாயை அவளை மிரட்டியது. அவளுடைய தைரியமும் வேகமும் குறைந்தது.. மெல்ல நிதானித்து நடந்தாள்.

‘இந்த காட்டிற்குள் புகுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தோமே!’ - தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள். ஆனால் இதை விட்டாலும் வேறு வழி என்ன இருக்கிறது! - தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு முன்னேறி நடந்தாள்.

‘சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா!’ - சந்தேகம் எழுந்தது. பயத்தில் இதயம் தாறுமாறாகத் துடித்தது. மூச்சில் சீரற்ற நிலை உண்டானது. கடவுளின் நாமத்தை முணுமுணுத்தாள். தாயின் நம்பிக்கை நிறைந்த முகம் அவள் மனக்கண்ணில் தோன்றி அவளை உற்சாகப்படுத்தியது. புது உத்வேகத்துடன் பயத்தை உதறிவிட்டு எச்சரிக்கையுடன் வேகத்தை கூட்டி நடந்தாள். தூரத்தில் ஏதோ ஒரு வண்டி செல்லும் வெளிச்சம் கண்ணில் பட்டது. சாலையின் திசையை உறுதிப்படுத்திக் கொண்டாள். மனதில் நம்பிக்கை மலை போல் உயர்ந்து எழுந்தது. இன்னும் வேகமாக நடந்தாள்.

பத்து பதினைந்து நிமிட வேக நடைக்குப் பிறகு ஒருவழியாக சாலையை அடைந்தாள். சாலையோர இருளில் மறைந்தபடியே, மாளிகை இருக்கும் திசைக்கு எதிர் திசையில் வேகமாக நடந்தாள். அவளது அதிஷ்டம்.. சற்று நேரத்திலேயே தூரத்தில் ஹெட் லைட் வெளிச்சம் தெரிந்தது. ஓரமாக நின்று என்ன வாகனம் என்று பார்த்தாள். பயணிகள் பஸ்ஸாக இருக்க வேண்டுமே என்று வேண்டி கொண்டாள். ஆனால் வந்தது ஒரு கார். கோர்த்தாவின் வாகனமாக இருக்குமோ என்கிற எச்சரிக்கையுடன் அந்த கார் கடந்து செல்லும் வரை மறைந்திருந்துவிட்டு ஓட துவங்கினாள். இது போல் இரண்டு மூன்று கார்களை தவறவிட்டவள், இதற்கு மேல் ஓடவோ நடக்கவோ முடியாது என்கிற சூழ்நிலையில் கடவுளின் மீது பாரத்தை போட்டுவிட்டு, அடுத்து வந்த காருக்கு எதிரில் வந்து கை நீட்டி லிப்ட் கேட்டாள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 13

காற்றில் கலந்திருந்த இரத்தவாடையை நுகர்ந்த அவள் நாசி, தொடர்ந்து மூளைக்கு சிக்னல் அனுப்பிக் கொண்டிருந்தது. செயலற்று மயங்கிக்கிடந்த மூளை நாசியின் வெகுநேர முயற்சிக்குப் பிறகு தனக்கு வந்த சிக்னலை ஏற்று ரெஸ்பாண்ட் செய்தது. அதன் பலனாக, ஒருமுறை உள்ளிழுத்த சுவாசம் வெளியேறுவதற்கு முன் அடிவயிற்றில் இருந்ததெல்லாம் புரட்டிக் கொண்டு “உவ்வே” என்கிற குமட்டலுடன் மேலே எழுந்தது. விலக மறுத்து ஒட்டிக் கிடந்த இமைகளை வெகுவாய் முயன்று பிரித்தாள் மிருதுளா. பார்வையில் எதுவும் புலப்படவில்லை.. எங்கும் ஒரே இருள்.. கண்களை மூடி மூடி திறந்து இருளுக்குள் துழாவினாள். பலனேதும் இல்லை.

‘எங்கிருக்கிறோம்!’ - அவள் மனம் கலங்கியது.

எழ முயன்றாள். கால்கள் எதிலோ பிணைக்கப்பட்டிருந்தன. அப்போதுதான், தான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் தன்னுடைய கைகள் மடக்கி பின்னால் கட்டப்பட்டிருப்பதையும் உணர்ந்தாள்.

“ஓ.. நோ!” - கத்தினாள். அவளுடைய அலறல் ஒலி அகோரமாய் எதிரொலித்தது. அந்த இடத்திலிருந்து நகர முயன்றாள். கைகளையும் கால்களையும் பலம் கொண்ட மட்டும் அசைத்து விடுவித்துக்கொள்ள போராடினாள். ஆனால் இம்மி கூட அசைய முடியவில்லை. அவளுடைய கடுமையான போராட்டத்தின் பலனாக கயிறு அழுந்தி தோலில் சிராய்ப்பு ஏற்பட்டு எரிந்தது. அப்போதும் முயற்சியை கைவிட வேண்டும் என்றுஅவளுக்கு தோன்றவில்லை.

“ஹெல்ப்.. சம்படி ப்ளீஸ் ஹெல்ப் மீ.. ஹெல்ப்” - அடிவயிற்றிலிருந்து கத்தினாள். பிடிபட்ட பறவையின் சிறகு போல் அவள் இதயம் படபடத்தது.

இருள் மறைத்த நிழல் போல் நினைவடுக்கில் மறைந்திருந்த காட்சிகளெல்லாம் அலையலையாய் மேலெழுந்தன.

மாளிகையிலிருந்து தப்பித்து காடு மேடெல்லாம் கடந்து ஓடி வந்தாள்.. சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வாகனைத்தை உதவி கேட்க மறித்தாள். அப்போதுதான் அந்த அரக்கனிடம் மாட்டிக் கொண்டாள் - சுஜித் சிங்.

அந்த காரில் ட்ரைவர் சீட்டில் அவனைப் பார்த்ததுமே அவளுக்கு சர்வமும் ஒடுங்கிவிட்டது. கோரமான அவன் முகத்தை பார்த்த போது, அவன் தன்னை கொலை செய்யப் போகிறான் என்றுதான் நினைத்தாள் மிருதுளா.

ஒரு கணம் கூட தாமதிக்காமல் மீண்டும் தப்பித்து காட்டுக்குள் ஓட பார்த்தாள். ஆனால் நொடியில் பாய்ந்து வந்து அவள் முடியை கொத்தாகப் பிடித்துவிட்டான் அந்த ராட்சசன். பிடியென்றால் உடும்புப் பிடி. அவளுடைய துள்ளல் திமிறல் கத்தல் கதறல் எதுவும் அவனை எட்டவில்லை. உணர்வுகளற்ற இயந்திரம் அவன்.

முரட்டுத்தனமாக அவள் முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து காருக்குள் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் கார் கதவில் மடாரென்று மோதி கீழே விழுந்த மிருதுளாவிற்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அதன் பிறகு நடந்தது எதுவும் அவளுக்கு நினைவில்லை.

அவன் தன்னை இன்னும் கொலை செய்யவில்லை என்பதை நம்புவதற்கே அவளுக்கு சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் ஏன் விட்டு வைத்திருக்கிறான்! நினைவு திரும்பிய பிறகு கொலை செய்வதற்காகவா! அல்லது திரில்லர் சினிமாவில் வருவது போல்.. நம்மை ஏதாவது பெரிய பெட்டிக்குள் கட்டிவைத்து அப்படியே மண்ணுக்குள் புதைத்துவிட்டானா! இவ்வளவு இருட்டாக இருக்கிறதே! சத்தம் கூட எதுவும் கேட்கவில்லையே! கடவுளே! - கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

‘ஆனால் இந்த துர்நாற்றம்! இது எங்கிருந்து வருகிறது?’ “யாராவது இருக்கீங்களா? ப்ளீஸ்..” - மீண்டும் சத்தமாகக் கத்தினாள்.

குறுகிய இடத்திற்குள் இருந்து கொண்டு கத்துவது போல் அவள் குரல் எதிரொலிக்கவில்லை. ஏதோ ஒரு பெரிய அறையில்தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்துக் கொண்டாள். தான் உயிரோடு புதைக்கப்படவில்லை என்பது சற்று ஆறுதலை கொடுத்தாலும், அடுத்து என்ன நடக்குமோ என்கிற பீதியில் நெஞ்சம் உலர்ந்தது. சட்டென்று அந்த இடம் பிரகாசமாய் ஒளிர்ந்தது. மின்விளக்கின் வெளிச்சம் கண்களைக் கூச செய்ய இமைகளை சுருக்கியவள் மெல்ல கண் திறந்தாள்.

அவளுடைய பார்வை அந்த இடத்தை வட்டமிட்டது. ஜன்னல் வெண்டிலேட்டர் எதுவுமே இல்லாத ஒரு பெரிய அறை. சுவரெல்லாம் தெறித்திருந்த இரத்தக்கறையும், தரையில் படிந்திருந்த அழுக்கும் மனித கழிவும் அந்த இடத்தின் கொடூரத்தை அவளுக்கு உணர்த்தியது. மிருதுளாவின் முதுகுத்தண்டு சில்லிட்டது. பயந்து போய் ‘ஆ..’ என்று வீறிட்டு கொண்டு அங்கிருந்து எழுந்து ஓட முயன்றாள். கயிறு உரசி தோல் பிய்ந்து இரத்தம் கசிந்ததே ஒழிய அவளுடைய முயற்சிக்கு வேறெந்த பலனும் கிடைக்கவில்லை.

அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அங்கே இருந்த கதவுக்கு பின்னால் ஏதோ அரவரத்தை உணர்ந்தாள். அடுத்த நொடியே அதிவேகமாக திறக்கப்பட்ட கதவு சுவற்றில் மோதி அதிர்ந்தது. அந்த சத்தத்தில் மிரண்டு உடல் தூக்கிப் போட, அவள் தலை தானாக சென்று நாற்காலியில் மோதியது. பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

அர்ஜுன் ஹோத்ரா உள்ளே வந்தான். அவனை தொடர்ந்து வந்த மூவரில் ஒருவன் கதவை மூடி பூட்டினான். மிருதுளாவின் வயிறு தடதடத்தது. அழுத்தமான காலடிகளுடன் அவளிடம் நெருங்கிய அர்ஜுன் ஹோத்ரா, வழக்கத்திற்கு மாறாக ஒரு லாங் கோட் அணிந்திருந்தான். அவன் கைகள் கருப்பு நிற லெதர் கையுறைகளுக்குள் புதைந்திருந்தன. பயப்பந்து அவள் நெஞ்சை அடைத்தது.

பார்வையை மெல்ல உயர்த்தி அவன் முகத்தை ஏறிட்டாள். இதுவரை அவள் பார்த்த அர்ஜுன் அல்ல இவன். இவன் யாரோ.. கொலைகாரன்.. அசுரன்.. அரக்கன். அவளுக்கு மூச்சடைத்தது, உடம்பிலுள்ள ரோமங்களெல்லாம் குத்திட்டு நிமிர்ந்தன.

********************

“வீ காட் ஹர். பேஸ்மெண்ட்டுக்கு கொண்டுவந்துட்டோம்” - சுஜித்தின் முரட்டுக்குரல் அலைபேசியில் எதிரொலித்தது.

அர்ஜுன் ஹோத்ராவின் உதடுகள் அலட்சியமாக வளைந்தன. “ஐம் கம்மிங்” - அவனை கத்தரித்து பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான். இரவு உடைக்கு மேல் ஒரு லாங் கோட்டை அணிந்துக் கொண்டான். டிராயரை திறந்து அவனுடைய கருப்பு லெதர் கிளவுஸை எடுத்தான்.

பேஸ்மெண்டில் ஏதாவது வேலை என்றால் கிளவுஸ் இல்லாமல் செல்லமாட்டான். ஒரு வேளை அவனுடைய கைகள் அழுக்காகலாம்.

டிராயரை அடித்து மூடிவிட்டு அறையிலிருந்து வெளியேறி படிக்கட்டில் இறங்கினான். பேஸ்மெண்டை நோக்கி செல்ல செல்ல அவனுக்குள் இருந்த கோபம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே சென்று அவனை முழுவதுமாக ஆக்கிரமித்தது. அந்த ஆக்கிரமிப்பு அவன் ரத்தத்தை கொதிக்கச் செய்தது. அந்த கொதிப்பு உடம்பிலுள்ள ஒவ்வொரு நரம்பிலும் வெறியாகப் பாய்ந்தது.

;தட்.. தட்..’ என்று ஓசையெழுப்பும் அழுத்தமான காலடிகளுடன் பேஸ்மெண்ட் படிக்கட்டில் இறங்கினான். மரணத்தின் வாசம் அவனை சூழ்ந்திருந்தது. வெறும் கையால்.. விரல்களை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு நெஞ்சைப் பிளக்க வேண்டும். அவனை ஏமாற்ற துணிந்தவர்களின் உயிர் பிரிவதை கண்ணிமைக்காமல் பார்க்க வேண்டும். உள்ளே ஒரு மிருகம் உறுமியது.. கட்டவிழ்த்துக்கொள்ள துடித்தது.

பேஸ்மெண்ட் படிக்கட்டின் இறுதியில், அந்த கனமான கதவுக்கு அருகே அவனுடைய சகாக்கள் மூவரும் நின்றுக் கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும், கதவை படாரென்று திறந்தான் சுஜித். அது சுவற்றில் சென்று மோதி பெரும் சத்தத்தை எழுப்பியது. அந்த சத்தத்தால் அதிர்ந்து பின்வாங்கி, அமர்ந்திருந்த சேரிலேயே பலமாக இடித்துக் கொண்டாள் மிருதுளா.

அவளுடைய கைகளும் கால்களும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தன. முகம் வீங்கியிருந்தது. இமைகள் தடித்திருந்தன.. விழிகள் சிவந்திருந்தன.. பயந்த முயல்குட்டி போல் நடுங்கியபடி அமர்ந்திருந்தாள்.

அவனுக்குள் இருந்த அசுரன் சத்தமாக சிரித்தான். அவனுக்கு இது போதாது.. இன்னும் அதிகமாக வேண்டும்.

அவள் முகத்தை வெறித்துப் பார்த்தபடியே அவளிடம் நெருங்கினான். ஒரு இன்ச் இடைவெளிதான் இருக்கும்.. அவ்வளவு நெருக்கத்தில் அவனுடைய சீற்றம் நிறைந்த கண்களைக் கண்டு மிருதுளா திணறினாள்.. அழுதாள். ‘பர்ஃபெக்ட்’ - இதுதான் அவனுக்கு வேண்டும். அவள் இப்படித்தான் அவனைப் பார்த்து நடுங்க வேண்டும்.

அவள் நாற்காலியில் நன்றாக சாய்ந்து பின்னால் நகர முயன்றாள். அவனுடைய கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க முயன்றாள். முடியவில்லை.. மூச்சுக்காற்றுக்கு திணறி மீன் குஞ்சு போல வாய் திறந்து திறந்து மூடியது.. கண்களில் கண்ணீர் மௌனமாய் வடிந்தது.. அவளுடைய அந்த பரிதாபமான காட்சி அவன் இதயத்தை சுண்டியது.. லேசாகத்தான்.. ஆனால் அதுவே அவனை பலவீனமாக்க போதுமானதாக இருந்தது.

உடனே அவனுக்குள் இருந்த மிருகம் பயங்கரமாக உறுமியது. தன் கோரப்பற்களைக் கொண்டு அவனுடைய பலவீனத்தை குதறிவிட்டு அவனை மீண்டும் முழுவதுமாக ஆக்கிரமித்தது.

அவனுடைய இதயம் பாறை போல் இறுகியது. உயிரற்று, உணர்வுகளற்று மரத்துப் போனது. அவனுடைய வலிய கரம் அவள் கன்னங்களில் மென்மையாய் படிந்தது. பிறகு அவன் பிடித்த பிடியில் மெல்ல மெல்ல அழுத்தம் கூடியது. மிருதுளாவின் முகம் சிவந்தது, வலியில் முனகினாள். கண்களில் கலவரம் கூடியது, தாடை எலும்பு உடைந்துவிடும் போலிருந்தது. துடித்தாள்.. அவன் பிடியிலிருந்து விலகிட முயன்று தலையை அசைத்தாள். அவன் பிடி மேலும் இறுகி அவளை அசையவிடாமல் செய்தது.

“ப்..ளீ..ஸ்..” - கண்ணீருடன் கெஞ்சினாள். கிணறுக்குள் இருந்து ஒலிப்பது போல் அவள் தொண்டையிலிருந்து சிரமத்துடன் வெளிப்பட்டது அந்த வார்த்தை.

“வொய் த ஹெல் ஆர் யு ஸ்பையிங் மீ? யாருக்காக இங்க வந்த?” - அடி குரலில் கர்ஜித்தான்.

சட்டென்று மிருதுளாவின் எதிர்ப்பு அடங்கியது.. அவள் முகத்தில் வியப்பு.. ஒன்றும் புரியாத குழப்பம்.. பிறகு ஓரிரு நிமிடம் கழித்து தலையை குறுக்காக ஆட்டினாள்.

“நோ.. நோ.. ப்ளீஸ்.. நோ.. ஐம் நாட் ஸ்பையிங் யு.. நோ..” - அவசரமாக மறுத்துவிட்டு தலையை இடமும் வலமுமாக வேக வேகமாக ஆட்டினாள்.

இதுதான்.. இந்த ரியாக்ஷன் தான் அவன் எதிர்பார்த்தது. மாட்டிக்கொண்ட பிறகு யார்தான் உண்மையை உடனே ஒப்புக்கொள்வார்கள். முடிந்த அளவுக்கு சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, இனி கடைசி மூச்சு மட்டும்தான் மிச்சம் என்னும் நிலையில் தானே அனைத்தையும் கக்குவார்கள். இவள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன! - சட்டென்று பொங்கிய ஆத்திரத்துடன் ஓங்கி ஓர் அறை கொடுத்தான். நாற்காலியோடு பின்னல் சென்று விழுந்தாள் மிருதுளா.

வலியிலும் பயத்திலும் அவள் குரல் வெடித்துக் கொண்டு வெளியேறியது. ‘ஆ..’ - சத்தமாய் அழுதாள்.

சேரோடு அவளையும் சேர்த்து தூக்கி நிறுத்தினான் சுஜித். அவள் பழைய நிலைக்கு வந்ததும், மீண்டும் அவளிடம் குனிந்தான் அர்ஜின்.

அவள் முகமெல்லாம் இரத்தப் பசையற்று வெளிறிப் போயிருந்தது.. உதடுகள் காய்ந்து வறண்டுப் போயிருந்தன. “நோ.. நோ.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” - அஞ்சி நடுங்கினாள்.

“டெல் மீ நௌ. யார் கொடுத்த ஆடர்ல பட்டேலை கொலை செஞ்ச?” - இந்த குற்றச்சாட்டை கேட்டதும் மிருதுளா அலறிவிட்டாள்.

“க்..க்..கொலையா! நோ.. நா.. நா எதுவும் பண்ணல.. பண்ணல.. ஐ டோன்ட் நோ.. ப்ளீஸ்.. எனக்கு எ..து..வு..ம்..” - அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அர்ஜுன் ஹோத்ராவின் இரும்பு கரம் அவள் கழுத்தை அழுத்திப் பிடித்திருந்தது. தொண்டை அடைத்தது, மூச்சு திணறியது, உடல் துடித்தது, கண்கள் மிரண்டு மேல் நோக்கி சொருகின.. அவ்வளவுதான்.. மயங்கப் போகிறாள்.. கடைசி நொடியில் பின்னுக்கு பிடித்துத் தள்ளி விடுவித்தான்.

‘ஹாங்.. ஹாங்..’ என்று ஏங்கியேங்கி வேகமாக மூச்செடுத்துக் கொண்டே இருமினாள். இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்தாள். கண்கள் எங்கோ சுழன்றுக் கொண்டிருந்தன. தலை தட்டாமாலை சுற்றியது. சீரற்ற சுவாசம் அவளை நிலைகுலைய செய்தது.

“ப்..ஹாங்.. ப்ளீ..ஹாங்.. ளீ..ஸ்..” - அவள் உயிரும் உடலும் ஒட்டியிருக்க போராடியது. அவள் படும் துன்பத்தை விழியகற்றாமல் பார்த்துக் கொண்டு சிலை போல் நின்றான் அர்ஜுன் ஹோத்ரா.

நிமிடங்கள் பல கழிந்தபிறகு அவள் நிலை மெல்ல மெல்ல சமன்பட்டது. மூச்சு சீரானது. ஆனால் உடலில் வலு இல்லை. மனதில் சக்தி இல்லை. தொய்ந்து கிடந்தாள்.

அப்போதும் அவன் விடவில்லை. அவள் தலையை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி, “டெல் மீ நௌ. ஹூ இஸ் யுவர் பாஸ் அண்ட் வேர் இஸ் ஹி நௌ?” என்றான்.

சோர்ந்துக் கிடந்த மிருதுளா பதில் சொல்லவில்லை. பார்வையை உயர்த்தி அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. “பிலீ..வ் மீ.. ப்..ளீ..ஸ்.. அர்..ஜு..ன்..” - சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் உடல் தளர்ந்து, கண்கள் சொருகி, தலை தொங்கிவிட்டது.

அர்ஜுன் ஹோத்ராவின் முகம் மாறியது. சட்டென்று அவள் கழுத்தில் கை வைத்து துடிப்பிருக்கிறதா என்று சோதித்தான். நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது அவனிடமிருந்து. உடல் இறுக்கம் தளர்ந்தது.

“வாட்டர்” - உணர்ச்சிகளற்று வறண்டிருந்தது அவன் குரல்.

சற்று நேரத்தில் ஒரு பாட்டிலை கொண்டு வந்த டேவிட் அர்ஜுனை ஏறிட்டான். அசைவற்று சிலை போல் நின்றான் அவன். அவனுடைய கட்டளைக்காக காத்துக் கொண்டிருந்தான் டேவிட்.

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு மிருதுளாவை தலையை அசைத்தான். அந்த சமிங்கையின் பொருளை புரிந்துக்கொண்டு அவளுக்கு தண்ணீரை புகட்டினான் டேவிட். அவசரமாய் அதை அருந்தியவளுக்கு புரையேறியது.

“ரிலாக்ஸ்.. ஸ்லோலி..” - எச்சரிக்கையுடன் அவளுக்கு மெல்ல புகட்டினான் டேவிட்.

‘நடிக்கிறாள்.. ஏமாற்றுகிறாள்.. கொன்றுவிடு.. அவளை கொலை செய்துவிடு.. இரத்தம் வேண்டும்.. உயிர் வேண்டும்.. மரணம் வேண்டும்’ - அசுரன் ஆர்ப்பரித்தான்.

அர்ஜுன் ஹோத்ரா தலையை அண்ணார்ந்து கண்களை இறுக்கமாக மூடினான். வெறுப்புடன் முடியை அழுந்த கோதினான்.

‘அவளுடைய கண்ணீர்.. அழுகை.. துன்பம்.. தவிப்பு..’ அவனுக்குள் ஏதோ கூர்மையாய் பாய்ந்தது. உணர்வற்று மரத்துப் போயிருந்த அவன் இதயம் வலியை உணர்ந்தது.

“ஏ..ஆ..ய்ய்ய்ய்..” - கையிலிருந்த கிளவுஸை கழட்டி எறிந்துவிட்டு அறையே அதிரும்படி ஆவேசமாக கத்தினான்.

அங்கிருந்த மற்ற மூவரும் அவனை விசித்திரமாக பார்த்தார்கள். அவர்களுடைய பார்வை அவனை கேள்வி கேட்டது. நாசி விடைக்க பற்களை நறநறவென்று கடித்தான். சட்டென்று அவர்களுடைய முகம் உணர்ச்சியற்ற நிலைக்குச் சென்றது.

எதிரில் நிற்பவர்களை ஒற்றை பார்வையில் கட்டுப்படுத்திவிட்டான். ஆனால் உள்ளே இருந்துக்கொண்டு ஆர்ப்பரிப்பவனை அடக்குவது எப்படி? - சிவந்த விழிகளுடன் வெறி பிடித்தவன் போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். பிறகு நின்று கண்களை மூடி ஆழமூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கதவை நோக்கி நடந்தான். மற்ற மூவரும் அவனை பின்தொடர்ந்து வந்தார்கள். கதவு மூடி பூட்டப்பட்டது.

“தொடர்ந்து கேள்வி கேட்டுகிட்டே இருங்க. ஒரு கட்டத்துல பிரேக் ஆகித்தான் ஆகனும்” என்று சொல்லிக் கொண்டே நடந்தவன் சட்டென்று நின்று திரும்பினான். அவனுடைய பார்வை சுஜித்தின் முகத்தில் அழுத்தமாய் படிந்தது.

“யாரும் கை வைக்கக் கூடாது” - உறுதியான குரலில் கட்டளையிட்டான்.

மூவருமே ஒரு கணம் அதிர்ந்தார்கள். பிறகு, ‘சரி’ என்று ஆமோதிப்பாக தலையசைத்தார்கள்.

அவனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. பேஸ்மெண்ட்டிற்கு கொண்டு வந்த பிறகு, கை வைக்கக்கூடாதென்றால் எப்படி என்கிற கேள்வி அவனுக்குள்ளும் எழத்தான் செய்தது. அதற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. அவள் மீது இன்னொருவரின் கைப்படுவதை அவனால் அனுமதிக்க முடியாது. இது பலவீனம் தான்.. இந்த பலவீனம் அவனுடைய சாம்ராஜியத்தையே அழித்துவிடக்கூடும் - யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காமல் திரும்பி நடந்தான்.

எப்படி இந்த பலவீனம் நமக்குள் உருவாக அனுமதித்தோம் என்று எண்ணியவனுக்கு தன் மீதே ஆத்திரம் பொங்கியது. பிறகு அந்த கோபம், ‘அவள் தான் அனைத்திற்கும் காரணம்’ என்று மிருதுளாவின் பக்கம் திரும்பியது.

‘அவள் என்னை ஆக்கிரமிக்க முடியாது.. விடமாட்டேன்.. நிச்சயம் விடமாட்டேன்’ - அவன் உள்ளம் உருப்போட்டது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 14

அவள் அந்த அறையில் அடைபட்டு எவ்வளவு நேரம் ஆகிறது என்று தெரியவில்லை. இப்பொழுது இரவா பகலா என்பது கூட தெரியவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இந்த துன்பம் நீங்க வேண்டும்.. இந்த வலி தீர வேண்டும். மணிக்கட்டெல்லாம் தெறிக்கிறது, கயிறு அழுந்தி கன்றி போன இடமெல்லாம் எரிகிறது, கால்கள் வீங்கிவிட்டன, தலை வெடித்துவிடுவது போல் வலிக்கிறது, உடம்பில் எஞ்சியிருந்த சக்தியெல்லாம் மொத்தமாய் வடிந்துவிட்டது. இதற்கு மேல் அவளால் முடியாது.. முடியவே முடியாது! அரை மயக்கத்தில் சோர்ந்து போய் கிடந்தாள் மிருதுளா.

“பேஸ்மெண்ட் டோரை எப்படி அன்லாக் பண்ணின? யார் உனக்கு உதவி செஞ்சது?” - எண்ணிலடங்காத கேள்விகளில் இதுவும் ஒன்று. இந்த கேள்வியை எத்தனையாவது முறை கேட்கிறான்?

“ஐ டோன்ட் நோ..” - எந்த கேள்வியை எப்படி கேட்டாலும், எத்தனை முறை கேட்டாலும் அவளிடமிருந்து வரும் பதில் இது ஒன்று மட்டும் தான்.

“மிருதுளா! உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காத.. நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் ட்ரை பண்ணறோம். பிடிவாதம் பிடிக்காத.. கரெக்டா ஆன்சர் பண்ணினா சீக்கிரமே இங்கிருந்து போயிடலாம்” - கரிசனமாகக் கூறினான் டேவிட்.

ஆரம்பத்திலிருந்தே அவன் மட்டும் அவளிடம் சற்று இணக்கமாகத்தான் நடந்து கொண்டான். ஆனால் அவன் கேட்கும் கேள்விகளுக்கு அவளிடம் எங்கே பதில் இருக்கிறது? யார் என்றே தெரியாத எவனோ ஒரு பட்டேலை, ஏன் கொன்றாய் என்று கேட்டால் என்னவென்று பதில் சொல்வது!

“நிஜமாவே எனக்கு எதுவும் தெரியல.. ப்ளீஸ்.. லீவ் மீ” - சோர்வுடன் முணுமுணுத்தாள்.

“யு ப்ளடி டாஷ்.. என்னடி திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்க. யாருடீ நீ? எதுக்காக இங்க வந்த? யார் உன்ன அனுப்பினது.. சொல்லப் போறியா இல்ல, உன்ன கொல்லவா?” - அறையே அதிரும்படி கத்தினான் சுஜித்.

மிருதுளாவின் உடல் குலுங்கியது. அவன் அருகில் வந்தாலே ஒடுங்கிவிடுவாள். இப்படி அடிப்பது போல் சீறிக் கொண்டு வந்தால் சொல்லவா வேண்டும். கண்களை இறுக்கமாக மூடியபடி முகத்தை தோள்பட்டைக்குள் புதைத்துக் கொண்டாள். அவளிடமிருந்து மெல்லிய தேம்பல் வெளிப்பட்டது.

டேவிட் அவனை அமைதியாக இருக்கும்படி சமிங்கை செய்தான். ஆனால் அவனால் முடியவில்லை. எவ்வளவு நேரமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாயையே திறக்காமல் இருக்கிறாள் என்றால் எவ்வளவு அழுத்தக்காரியாக இருப்பாள்! - கொதித்தான்.

மாலிக் சர்புதீனும் மிருதுளாவின் மீது கடுமையான கோபத்தில்தான் இருந்தான். கொலை நடந்த நேரமும் இவள் தப்பிச் சென்ற நேரமும் சரியாக இருக்கும் போது இவளுக்கு எதுவும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சாமர்த்தியமாக சமாளிக்கிறாள் என்றே அவனும் நினைத்தான். அந்த கடுப்பில், “உன்னோட நடிப்பு எந்த விதத்துலேயும் உன்ன இங்கிருந்து வெளியே கொண்டு போகாது மிருதுளா. உண்மையை சொல்றது ஒன்னு மட்டும் தான் உனக்கு இருக்க ஒரே வழி” என்றான் கடுமையாக.

“ஐயோ! எனக்கு எதுவும் தெரியாது. ப்ளீஸ்.. நா யாருக்கும் ஒர்க் பண்ணல. யாரையும் கொலை செய்யல. தவறி தான் இங்க வந்துட்டேன். ப்ளீஸ்.. பிலீவ் மீ.. ப்ளீஸ்” - அழுதாள். டேவிட் அவளை இரக்கத்துடன் பார்த்தான். அவன் மனம் அவளை நம்ப விழைந்தது. ஆனால் சூழ்நிலை அவளுக்கு எதிராக இருக்கிறதே! சந்தேகம் என்னும் மூன்றாம் கண், கோர்த்தா ஆட்களின் பிரத்தியேக அணிகலன்களில் ஒன்றாயிற்றே! அதை அணிந்திருக்கும் போது அவனாலும் எப்படி அவளை முழுமையாக நம்ப முடியும்? இறுகிப்போய் நின்றான்.

இன்னும் எவ்வளவு நேரம் அவளால் இதையெல்லாம் தாக்குப் பிடிக்க முடியும்! இவர்கள் எந்த அளவுக்கு கொடுமை செய்வார்கள் என்பதை ஒருமுறை நேரிலேயே பார்த்திருக்கிறாளே! அன்று சவுக்கடி வாங்கிய மனிதனும் அவனுடைய கதறலும் நினைவில் வந்த போது அடக்க முடியாமல் வெடித்து அழுதாள். இதெல்லாம் ஒரு கெட்ட கனவாக இருக்கக் கூடாதா என்று ஏங்கியது அவள் உள்ளம்.

கதவு திறக்கப்படும் ஓசை அவள் கவனத்தை ஈர்த்தது. நிமிர்ந்து பார்த்தாள். போர்க்களத்தில் நுழையும் வீரனின் வேகத்தோடு உள்ளே வந்த அர்ஜுன் ஹோத்ராவை கண்டதும் அவளுக்குள் பீதி படர்ந்தது.

அவனை நிமிர்ந்து பார்க்கும் திராணியில்லாமல் குறுகி அமர்ந்திருந்தாள். அவன் கண்கள் அவள் முகத்தில் தான் நிலைத்திருந்தது. அந்த பார்வையில் எந்த உணர்வும் இல்லை.. வெறுமையான வெற்றுப் பார்வை.

ஓரிரு நிமிடங்கள் கழித்து அவனுடைய ஆட்களுக்கு கண்களால் ஏதோ குறிப்புக் காட்டினான். உடனே டேவிட் அவளிடம் நெருங்கினான். ‘என்ன செய்யப் போகிறான்!’ - மிரண்டு போய் மிருதுளா சேரோடு ஒட்டிக்கொள்ள, அவன் கயிற்றை அவிழ்த்தான். ஆச்சரியத்துடன் மலர்ந்த அவள் முகம் மறுகணமே வலியில் சுருங்கியது. கைகள் விடுவிக்கப்பட்டுவிட்டன. காயம்பட்ட இடத்தை மென்மையாக வருடிவிட்டுக் கொண்டாள். அடுத்து கால்களும் விடுவிக்கப்பட்டன.

அவள் மீது நம்பிக்கை வந்துவிட்டதா! அவளை விடுதலை செய்கிறார்களா! அல்லது வேறெங்காவது கொண்டு போய் இன்னும் சித்ரவதை செய்யப் போகிறார்களா! - அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

“கெட் அப்” என்று கடுமையான குரலில் கட்டளையிட்டான் அர்ஜுன் ஹோத்ரா.

உடனடியாக அவன் சொன்னதை செய்தாள் மிருதுளா. மறுகணமே காலில் சுரீரென்ற வலியை உணர்ந்து தடுமாறினாள். அவள் கீழே விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்தான் டேவிட்.

“ஆர் யு ஓகே?” - அவன் குரலில் அக்கறை இருந்தது. தொண்டையை அடைக்கும் ஆத்திரத்தை விழுங்கிக் கொண்டு தலையை மேலும் கீழும் அசைத்தபடி நிதானித்து காலை ஊன்றினாள்.

“கோ டு யுவர் ரூம். யு ஆர் ஃபிரீ” என்றான் அர்ஜுன். அவன் குரலில் கோபமும் இல்லை கனிவும் இல்லை.. அது வறண்ட குரல்.. உணர்வற்ற குரல்.

ஆனால் மிருதுளா உணர்வுப்பிழம்பாக இருந்தாள். ‘ஃபிரீ’ - அந்த ஒற்றை வார்த்தை அவளை என்னவோ செய்தது. கதறி அழ வேண்டும் போல் உள்ளே உணர்வுகள் பொங்கின. இனி இந்த அறை இல்லை, வலி இல்லை, துன்பம் இல்லை, நிம்மதியாக அவளுடைய அறையில்.. அவளுடைய கட்டிலில் படுத்து உறங்கலாம். - கண்களில் வடிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு மெல்ல அடியெடுத்து வைத்தாள்.

“நடக்க முடியுமா? நா வேணா ஹெல்ப் பண்ணறேன்” - அவளை தாங்கிப் பிடித்தபடியே உடன் நடந்தான் டேவிட்.

அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை அவளை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அவள் அவனை கடக்கும் போது, “இனி எஸ்கேப் ஆகனும்ங்கற எண்ணமே வர கூடாது” என்றான் எச்சரிக்கும் தொனியில்.

உதட்டை மடித்துக் கடித்தபடி, அவனை நிமிர்ந்து பார்க்காமல் ஆமோதிப்பாக தலையை அசைத்தாள் மிருதுளா.

தப்பிக்க முடியாது என்பதுதான் தெரிந்துவிட்டதே! இனியும் அதைப் பற்றி யோசிக்க என்ன இருக்கிறது.. மீறி யோசித்தால் மீண்டும் இந்த அறையில் அடைபட்டுக்கிடக்க வேண்டியதுதான். அவளுடைய நம்பிக்கை செத்துப் போய்விட்டது.

“போகலாமா?” - டேவிட்டின் குரல் அவள் சிந்தனையில் இடையிட்டது.

“ம்ம்ம்”' - அவனுடைய உதவியோடு படிக்கட்டில் ஏறினாள்.

சுஜித்தின் முகத்தில் ஈயாடவில்லை. அவனால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் அர்ஜுன் ஹோத்ராவின் முகத்தில் இருந்த கடுமையை மீறி அவனிடம் கேள்வி கேட்கவும் முடியவில்லை. பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றான்.

டேவிட்டின் துணையோடு மெல்ல மெல்ல படியேறி மேலே வந்தாள் மிருதுளா. ஆட்கள் நடமாட்டமற்று அமைதியாக இருந்தது மாளிகை.

“மணி என்ன?” - மெல்ல கேட்டாள்.

“விடியற்காலை இரண்டு”

சட்டென்று நின்றாள். ‘விடியற்காலை இரண்டா! கிட்டத்தட்ட இருபது மணிநேரம்! இருபது மணிநேரமாக பேஸ்மெண்டில் இருந்திருக்கிறோம்!’ - தன்னிரக்கத்தில் மனம் வாடியது.

“இட்ஸ் ஓகே. யு ஆர் ஆல்ரைட்.. கம்.” - அவளுடைய மனநிலை புரிந்து, இணக்கமாக பேசி அவளை அறைக்கு அழைத்து வந்தான் டேவிட்.

“தேங்க்ஸ்” என்று அவனிடம் முணுமுணுத்துவிட்டு கதவை மூடி தாழிட்டாள். அறை இருண்டு போயிருந்தது. சுவற்றை தடவி ஸ்விட்சை தேடி மின்விளக்கை எரிய விட்டாள்.

உடம்பெல்லாம் வலி.. சோர்வு.. பசி.. தூக்கம்.. எல்லாவற்றையும் மீறிய ஒரு விரக்தி.. நேராக குளியலறைக்குள் நுழைந்தாள். ஷவரை திறந்துவிட்டு குளிர்ந்த நீருக்கடியில் வெகு நேரம் நின்றாள். காயம்பட்ட இடமெல்லாம் திகுதிகுவென்று எரிந்தது, நீரோடு சேர்ந்து அவள் கண்ணீரும் கரைந்தது.

மனநிலை ஓரளவுக்கு சமன்பட்ட பிறகு ஷவரை அணைத்துவிட்டு, துண்டை எடுத்து உடம்பில் போர்த்திக் கொண்டாள். கால்கள் வலுவிழந்து நடுங்கின. ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆடையை எடுத்து அணிந்து கொள்வது கூட மலையை புரட்டுவது போல் தோன்றியது. எப்படியோ வெகு சிரமப்பட்டு அந்த ஆடைக்குள் தன்னை புதைத்துக் கொண்டு வெளியே வந்தவள் அதிர்ந்து பின்வாங்கினாள்.

அவளுக்கு முதுகு காட்டி கட்டிலில் அமர்ந்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவனை பார்த்ததுமே அவளுக்குள் பதட்டம் வந்தது. உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது. குளியலறை கதவுக்கு பின்னால் பதுங்கினாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிய அர்ஜுன், மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் கண்களில் கலவரத்துடன் கதவுக்கு பின்னால் பதுங்கும் மிருதுளாவை கண்டு ஒரு கணம் திகைத்தான். பிறகு சிறு தயக்கத்துடன் எழுந்து, “ஷ்ஷ்ஷ்.. இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே.. ஐம் நாட் ஹியர் டு ஹர்ட் யு. பயப்படாத.. ஓகே..” என்றபடி அவளிடம் நெருங்கினான்.

மிருதுளாவின் விழிகள் விரிந்தன. எத்தனை மென்மை.. எத்தனை கனிவு அந்த குரலில்! – ‘இது நிச்சயம் கனவுதான்’ - கண்களை இறுக்கமாக மூடி, தலையை உலுக்கிவிட்டு மெல்ல கண் திறந்தாள். இப்போதும் அந்த உருவம் அவள் கண்ணெதிரில் நின்று கொண்டுதான் இருந்தது.

‘நிஜம்தானா!’ - சிந்தனையில் அவள் புருவம் சுருங்கியது. அவன் முகத்தில் சின்ன புன்னகை தோன்றியது, வசீகரமான புன்னகை.. மிருதுளாவின் உடல் இன்னும் அதிகமாக நடுங்கியது.. கால்கள் வெலவெலத்தன. ஒரு அடி எடுத்து வைத்தாலும் விழுந்துடுவோம் என்று தோன்றியது.

“கம்” - அவள் தோள்களை பிடித்து கைத்தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் அமரச் செய்தான். அப்போதுதான் கவனித்தாள். அங்கே ஒரு முதலுதவிப் பெட்டி இருந்தது.

அதை திறந்து உள்ளேயிருந்து பஞ்சையும் ஆன்டிசெப்டிக் மருந்தையும் எடுத்துவிட்டு மிருதுளாவை நிமிர்ந்து பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இவருடைய கண்களும் ஒன்றையென்று சந்தித்தன. அவன் கண்களில் தெரிந்த நெருக்கம் மிருதுளாவை உறைய செய்தது.

அவளுக்கு அருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து காயம் பட்டிருந்த இடத்தில் மிருதுவாக மருந்தை பூசினான். அவள் வலியில் ,”ஸ்ஸ்ஸ்..” என்று லேசாக முனகிய போது சட்டென்று கையை எடுத்துவிட்டு, “டிட் ஐ ஹர்ட் யு?” என்றான் மென்மையாக.

உதட்டை கடித்துக் கொண்டு மெளனமாக குனிந்து கொண்டாள் மிருதுளா. இந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்ல முடியும்?

அவளுடைய மௌனத்தில் எதை கண்டானோ. சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் பிறகு, “சாரி” என்றான்.

மிருதுளாவின் விழிகள் விரிந்தன. அவன்! அர்ஜுன் ஹோத்ரா! கோர்த்தாவின் தளபதி.. அசுர குணம் படைத்தவன்.. கொலைக்கு அஞ்சாதவன்.. அவளிடம் மன்னிப்புக் கேட்கிறானா! வருத்தப்படுகிறானா! அவளால் நம்ப முடியவில்லை!

அவள் வியப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் குனிந்து மெல்ல அவள் கைகளில் இருந்த காயங்களை ஊதிவிட்டபடி மெல்ல சுத்தம் செய்து மருந்து பூசி, கட்டுப்போட்டு முடித்துவிட்டு, “தட்ஸ் ஆல்” என்று நிமிர்ந்தான்.

மிருதுளாவின் இமைகள் அவன் பார்வையை தவிர்த்து தாழ்ந்தன. அவள் கண்களிலிருந்து உருண்ட கண்ணீர் மணிகள் அவன் கைகளில் பட்டு தெறித்தன.

சட்டென்று அவன் உடல் இறுகியது. ஓரிரு நிமிடங்கள் அசையாமல் அமர்ந்திருந்தான். பிறகு அவனுடைய விரல்கள் அவள் கைகளில் போடப்பட்டிருந்த பேண்டேஜை மெல்ல வருடின. நொடிகள் கழிந்து கொண்டிருந்தன. கவிழ்ந்திருக்கும் அவள் முகத்தை பார்த்தபடியே மெல்ல அவள் கைகளை உயர்த்தி அதில் மென்மையாய் இதழ் பதித்தவன், “நான் உன்ன நம்பறேன்” என்றான்.

மிருதுளாவின் இதயம் நின்று பின் துடித்தது. அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். மூளை மரத்துப் போய்விட்டது. என்ன நடக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளவே சிரமமாக இருந்தது.

“தட் வாஸ் எ மிஸ்டேக்.. உன்ன அங்க கொண்டு போயிருக்கக் கூடாது. அப்படி ட்ரீட் பணியிருக்கக் கூடாது” என்று சற்று இடைவெளிவிட்டவன், “திஸ் வோண்ட் ஹாப்பன் அகைன். இனி உன்ன யாரும் இங்க மிஸ்ட்ரீட் பண்ண முடியாது. யு ஆர் சேஃப்” என்றான்.

அவள் திகைப்புடன் அவனை பார்த்தாள். அவன் கனத்த மனதுடன் பேசுகிறான் என்பதை அவளால் உணர முடிந்தது. ஆனால் ஏன்? அவன் ஏன் அவளுக்காக வருந்துகிறான்! அவளுக்கு ஏன் சலுகை காட்டுகிறான்! - குழம்பினாள்.

முதலுதவி பெட்டியை மூடிவைத்துவிட்டு எழுந்த அர்ஜுன், அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேராக டீபாயை இழுத்துப் போட்டான். மேஜையில் இருந்த உணவு ட்ரேயை எடுத்து அதில் வைத்து, உணவருந்த வசதியாக அவளுக்கு டேபிளை செட் செய்துவிட்டு, “ரொம்ப வீக்கா இருக்க. சாப்பிடு, குட் நைட்” என்று கூறிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

அவன் அங்கிருந்து சென்ற பிறகுதான் அவளால் சிந்திக்க முடிந்தது. ‘இதெல்லாம் உண்மைதானா? அல்லது ஏதாவது கபட நாடகம் ஆடுகிறானா?’ - அவளுக்கு சந்தேகம் வந்தது.

சற்று நேரத்திற்கு முன் குரல்வளையை பிடித்து நெரித்து கொல்லப் பார்த்தவன் இப்போது வெகு இணக்கமாக நடந்துக்கொள்கிறான் என்றால் சந்தேகம் வருவது நியாயம் தானே.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 15

பேஸ்மெண்டில் அரை மயக்கத்தில் இருந்த மிருதுளாவிடம் தொடர்ந்து விசாரிக்கும்படி சகாக்களிடம் கூறிவிட்டு தன்னுடைய அலுவலக அறைக்கு வந்த அர்ஜுன் ஹோத்ரா, அனந்த்பூரிலிருந்து அவளைப் பற்றி வந்திருந்த ரிப்போர்டை பிரித்துப் பார்த்தான்.

தன்னை பற்றி மிருதுளா கூறிய அனைத்து விபரங்களும் பொய் என்கிற கூற்றுடன் அதற்கான ஆதாரங்களும் அதில் இணைக்கப்பட்டிருந்தன. அவள் வேலை செய்வதாக கூறிய மருத்துவனை ஊழியர்கள் மற்றும் அவள் தங்கியிருப்பதாக கூறிய விடுதியில் வசிக்கும் பெண்கள் ஆகிய அனைவருடைய ஜாதகமும் அடி முதல் நுனி வரை ஆராயப்பட்டு ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்தன. அதில் மிருதுளா என்னும் கேரக்டர் எந்த இடத்திலும் வரவில்லை.

ஒரு முறைக்கு இரண்டு முறை தன் கையிலிருந்த கோப்பை புரட்டியவன், அனந்த்பூரில் இருந்து கொண்டு இந்த ரிப்போர்ட்டை தயார் செய்து அனுப்பியவனை, ஒட்டு கேட்க முடியாத ஹாட் லைன் போனில் தொடர்பு கொண்டு பல கேள்விகள் கேட்டான்.

அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக பதில் சொன்னவன் இறுதியாக, “அந்த பொண்ணு சொன்ன ஹாஸ்ப்பிட்டல் அண்ட் ஹாஸ்டல் எங்கேயும் யாரும் மிஸ் ஆகல. ஐ திங்க் ஷி ஜஸ்ட் கேவ் சம் ராண்டம் இன்ஃபோ” என்றான்.

அர்ஜுன் ஹோத்ராவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. பிறகு, “எனி அதர் இன்ஃபோ?” என்றான்.

“எஸ் சார். ஐ ஹேவ்.”

“என்ன?”

“அனந்த்பூர் ஆபரேஷன்ல கடைசில இண்ட்ரூட் ஆனது ஒரு ஆண் இல்ல" என்றான்.

“வாட்!” - சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

“எஸ்.. அது ஒரு பொண்ணு. அவளோட செல்போன் போலீஸ் கையில சிக்கியிருக்கு. ஆனா எவிடென்ஸ் லிஸ்ட் ரெக்கார்டல இல்ல.”

“வாட் யு மீன்? வீ நீட் தட் டாம் போன்” - துரிதமாகக் கூறினான்.

“சாரி சார். நமக்கு முன்னாடி அதை வேற யாரோ கலெக்ட் பண்ணிட்டாங்க.”

“யாரு?”

“ஐ சஸ்பெக்ட்.. தட் மஸ்ட் பி பகவான்” - அந்த பெயரை கேட்டவுடன் அர்ஜுன் ஹோத்ரா நிமிர்ந்து அமர்ந்தான். அவன் முகம் இறுகியது.

அதற்கு மேல் அவனிடம் கேட்பதற்கு ஒன்றும் இல்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நாள் முழுவதும், அந்த பெண் யார்? அவளுடைய அலைபேசியை பகவான் ஏன் கைப்பற்றினான் என்கிற கேள்விகளுக்கான விடையை தேடி ஓடிக் கொண்டிருந்தான்.

அனந்த்பூர் ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குழுவை நேரில் அழைத்துப் பேசினான். அவர்களிடம் அந்த மர்ம நபரை பற்றி விசாரித்தான். இப்போதும் அவர்கள் அது ஒரு ஆண் என்கிற ரீதியில் தான் பேசினார்கள். உருவ அமைப்பைப் பற்றி கேட்டபோது, “ஒல்லியா.. உயரமா இருந்தான். வாய்ஸ் மட்டும் கொஞ்சம் ஷார்ப்பா.. கேர்லியா இருந்தது” என்றார்கள்.

‘காட்! எவ்வளவு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டிருக்கிறார்கள்!’ - பற்களை நறநறத்தான்.

“டிரஸ் எப்படி பண்ணியிருந்தான்? ஏதாவது நியாபகப்படுத்த முடியுதா?” - தனக்கு தெரிந்த விபரத்தை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவர்களுடைய போக்கிலேயே அடுத்த கேள்வியை கேட்டான்.

“எஸ்.. என்னால நியாபகப்படுத்த முடியுது. இட்ஸ் எ கைன்ட் ஆஃப் ஜாக்கெட் வித் ஹூட்.”

‘ஓ.. ஷி..ட்’ - தலையை அழுத்த கோதியபடி சேரில் தளர்ந்து சாய்ந்தான்.

சந்தேகமே இல்லை.. அது அவளே தான்! முதல் நாள், கட்டிலுக்கு கீழேயிருந்து அவளை வெளியே இழுத்த போது அவள் அணிந்திருந்தது ஜீன்ஸ் வித் ஹூடி ஜாக்கெட் தான்.

அவனுக்கு தெரியாமல்.. அவனுடைய காரில்.. அனந்த்பூரிலிருந்து மகல்பாட்னா வரை பயணம் செய்தவள் நிச்சயம் சாதாரணமானவளாக இருக்க முடியாது. இது தெரிந்தும் எப்படி அவளை நம்பினான்! எது அவன் கண்ணை மறைத்தது! எவ்வளவு பெரிய பொறுப்பு அவன் தலையில் இருக்கிறது. இப்படி ஒரு கேவலமான பலவீனத்திற்கு இடம் கொடுத்துவிட்டானே! வெளியே தெரிந்தால் அசிங்கம். - தன் மீதே அவனுக்கு கோபம் வந்தது.

“லீவ்” - ஒற்றை வார்த்தையில் எதிரில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு வெகு நேரம் தனிமையில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். அவளுடைய அலைபேசியில் பகவானுக்கு ஏன் அத்தனை ஆர்வம் என்கிற கேள்வி அவனை குடைந்தது. அதற்கான விடையை தேடிய போது அவனுக்கு இன்னும் சில விபரங்கள் கிடைத்தன.

அதன் பிறகு தன்னுடைய இடத்தில் நடந்த கொலையைப் பற்றி ஆராய துவங்கினான். வீடு முழுக்க பொருத்தப்பட்டிருக்கும் சர்வைலென்ஸ் கேமிராக்களில் பதிவான வீடியோ காட்சியை திரும்ப திரும்பப் பார்த்தான். பட்டேலின் மரணம் குறித்து வந்திருந்த ஆய்வறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தான். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து பேஸ்மெண்ட்டிற்குச் சென்று மிருதுளாவை விடுதலை செய்தான்.

*********************

மிருதுளாவை விடுவித்த பிறகு பேஸ்மெண்ட்டிலிருந்து வெளியே வந்த சுஜித் நேராக சுமனுடைய அறைக்குச் சென்றான். நேரம் அதிகாலை இரண்டு அல்லது இரண்டரை இருக்கும். கதவு தட்டப்பட்டவுடன் உடனே எழுந்து வந்து கதவைத் திறந்தாள் சுமன்.

“தூங்கலையா?” - அவள் முகத்திலிருந்த கலவரத்தை கண்டு சுஜித்தின் புருவம் சுருங்கியது.

“என்ன நடக்குது இங்க? மிருதுளாவுக்கு என்ன ஆச்சு?” - பரபரத்தாள்.

பதில் சொல்லாமல் அவளை ஒதுக்கிவிட்டு உள்ளே வந்தான் சுஜித். சட்டென்று அவன் கையைப்பிடித்து இழுத்து, “கேட்கறேன்ல.. பதில் சொல்லு” என்றாள்.

“அவ தப்பிக்க முயற்சி பண்ணினா.. பிடிபட்டுட்டா.. அவ்வளவுதான்” - எரிச்சலுடன் சிடுசிடுத்தான்.

“அதுக்காகத்தான் அவளை பேஸ்மெண்ட்டுக்கு கொன்டு போனீங்களா?” - ஓரிரு நொடிகள் அவளை வெறித்துப் பார்த்த சுஜித், “அது அர்ஜுன் எடுத்த முடிவு” என்றான்.

“அர்ஜுன் பாய்க்கு தெரியாது.. பட்டேலோட சாவுக்கும் மிருதுளாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு அவருக்கு தெரியாது” - குரலை உயர்த்தினாள்.

சட்டென்று அவள் கழுத்தை பிடித்தவன், அவளை சுவற்றோடு தள்ளி நெறித்தான். கோபம் கனன்ற விழிகளுடன், “ஹௌ டேர் யு.. கொன்னுடுவேன்” என்று உறுமினான்.

அவனுடைய அதிரடி தாக்குதலில் ஒரு கணம் திகைத்த சுமன் பிறகு சுதாரித்துக்கொண்டு, தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவன் நெஞ்சில் கை வைத்து அவனை பின்னுக்கு தள்ளிவிட்டு, “கொல்லு.. கொன்னுடு.. ஒரேடியா செத்து தொலஞ்சுடறேன்” என்று ஆத்திரத்துடன் கத்தினாள்.

அவனுடைய பதட்டம் அதிகமானது. சட்டென்று வாசல் பக்கம் திரும்பி யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்தபடி, “ஷ்! கத்தாதடி” என்று தாழ்ந்த குரலில் கூறிவிட்டு, பாய்ந்துச் சென்று கதவை மூடி தாழிட்டான்.

“இட்ஸ் அவர் மிஸ்டேக் சுஜித். நீ அவளை சேவ் பண்ண ட்ரை பண்ணியிருக்கனும்” - வருத்தத்துடன் கூறினாள். மனசாட்சி அவளை கொத்திப் பிடுங்கியது.

அவளுடைய வருத்தம் சுஜித்திற்கு கோபத்தை தான் வரவழைத்தது. “என்னோட வேலையை எப்படி செய்யனும்னு நீ எனக்கு சொல்லி தராத” என்றான் கடுப்படித்தான்.

உடனே ரௌத்திரமான சுமன், “எக்ஸ்கியூஸ் மீ.. உன்னோட வேலையில நானும் பங்கெடுத்திருக்கேன். நீ திருட்டுத்தனமா பேஸ்மெண்ட்டுக்குள்ள நுழைய நா ஹெல்ப் பண்ணியிருக்கேன். சர்வைலென்ஸ் கேமிராவை உனக்காக ஒன்றரை மணி நேரம் நான் ஹேக் பண்ணியிருக்கேன். டோன்ட் யு ரிமெம்பர் தட்?” என்று கொதித்தாள்.

“கா..ட்..! சும..ன்..!” - வெறுப்பும் இயலாமையுமாக தலையை கோதினான் சுஜித்.

“விசாரிக்கத்தானே போன? ஏன் அவனை கொன்ன?”

“அது என்னோட இன்டென்ஷன் இல்ல.. லேஸாதான் தட்டினேன்.. அவன் இவ்வளவு ஈஸியா செத்துடுவான்னு நா என்ன கனவா கண்டேன்? தட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட்.”

“ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட்..?”

“எஸ்.. ஜஸ்ட்.. ஆன்.. ஆக்ஸிடென்ட்” - அழுத்தமாகக் கூறினான். அவனை எரித்துவிடுவது போல் முறைத்தாள் சுமன். அவன் அதை கண்டுகொள்ளாமல் துப்பாக்கி, அலைபேசி ஆகியவற்றை எடுத்து அதற்கான இடத்தில் வைத்துவிட்டு குளியலறைக்குள் செல்ல எத்தனித்தான்.

அவனை இழுத்துப் பிடித்து வைத்து, “எது எப்படியோ.. அவன் உன் கையாலதான் செத்தான்” என்று அவனை குற்றம் சாட்டினாள் சுமன்.

“ஆமாம்.. அதுக்கு என்ன இப்போ? அர்ஜூன்கிட்ட போய் நான்தான் பட்டேலை கொலை செஞ்சேன். எனக்கு தண்டனை குடுன்னு கேட்க சொல்றியா?” - வெகுண்டான்.

அவனுடைய ஆக்ரோஷம் சுமனை வாயடைக்கச் செய்தது. சற்று நேரம் அவனை வெறித்துப் பார்த்தவள், “அவ பாவம்..” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

கண்களை மூடி, ஆழ மூச்ச்செடுத்து கோபத்தை கட்டுப்படுத்தியவன், “அவளை ரிலீஸ் பண்ணியாச்சு.. ஷி இஸ் ஃப்ரீ நௌ” என்றான் வறண்ட குரலில்.

“வாட்!” - வியப்பும் ஆனந்தமுமாக அவனைப் பார்த்தாள் சுமன்.

“ட்ரு” - என்று முணுமுணுத்துவிட்டு தளர்ந்து கட்டிலில் அமர்ந்தான். அவளால் ஏதோ பெரிய ஆபத்து வர போகிறது என்கிற எண்ணம் அவனுக்குள் இருந்துக் கொண்டே இருந்தது.

சுஜித்தின் முகவாட்டத்தைக் கண்டு, “நீ.. நீ பிரச்சனையில இருக்கியா?” என்றாள் பயத்துடன்.

அவ்வளவு நேரம் குற்ற உணர்ச்சியுடன் மிருதுளாவிற்காக கவலை பட்டுக் கொண்டிருந்தவளை, இப்போது சுஜித்தின் மீதுள்ள அக்கறை அச்சுறுத்தியது.

“இல்ல” - மறுப்பாக தலையசைத்தான்.

“பின்ன என்ன? ஏன் டல்லா இருக்க?”

சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன், “அவ மேல தப்பு இல்லைன்னு இன்னும் ப்ரூவ் ஆகல..” என்று இறுகிய குரலில் கூறினான்.

அதுவரை கவலையும் கலவரமுமாக இருந்த சுமனின் முகம் சட்டென்று மலர்ந்தது.

“என்ன சொன்ன?” - குடுகுடுவென்று ஓடிவந்து அவனுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவன் பதில் சொல்லாமல் அவளை முறைத்தான். அவளுடைய மகிழ்ச்சி அவனை எரிச்சல் படுத்தியது. ஆனால் அதை பற்றியெல்லாம் அவள் எப்போது கவலைப்பட்டிருக்கிறாள்.

“மிருது இன்னசென்ட்னு ப்ரூவ் ஆகறதுக்கு முன்னாடியே அர்ஜுன் பாய் அவளை ரிலீஸ் பண்ணிட்டாரா! வா..வா..வாவ்!” என்று மலர்ந்த புன்னகையுடன்.. அண்ணார்ந்து.. கண்களை மூடி.. கைகளை விரித்து.. காதல் மோடிற்கு சென்றாள்.

அவளை கடுப்புடன் பார்த்த சுஜித், “ஷி இஸ் நாட் எ கோர்த்தா கேர்ள்..” என்றான் எச்சரிக்கும் விதமாக.

“சோ வாட்? அர்ஜுன் பாய்க்கு பிடிச்சிருக்கு.. வேற என்ன வேணும்?” என்றாள் துள்ளலாக.

“அதுதான் பிரச்சனையே.. இந்த கண்மூடித்தனமான கருமம் நம்ம எல்லாரையும் காலி பண்ணப் போகுது” என்றான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அறை கதவு தட்டப்பட்டது.

‘யார் இந்த நேரத்துல!’ - இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“நா பார்க்கறேன்” - சுஜித் எழுந்துச் சென்று கதவைத் திறந்தான்.

வெளியே இரண்டு பாதுகாவலர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

“சுமன் எங்க?” - வந்திருந்த இருவரில் ஒருவன் கேட்டான்.

“என்ன விஷயம்?” - அதட்டினான் சுஜித்.

“பாஸ் கூட்டிட்டு வர சொன்னார்.”

‘இந்த நேரத்துலேயா!’ - சுஜித்தின் புருவம் சுருங்கியது.

“என்ன விஷயம்னு தெரியுமா?” என்றான். அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் அந்தக் கேள்வியை கேட்டான். தனக்கென்று வரும் பொழுது அனைத்தும் மறந்துவிடும் என்பதற்கு அவனும் விதிவிலக்கல்ல.

சுஜித் சற்று முன் கேட்ட கேள்விக்கு, “தெரியல..” என்று இழுத்தான் பாதுகாவலன். அவன் இழுத்த விதமே அவளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்திவிட சுஜித் பதட்டமானான்.

சட்டென்று திரும்பி அவளை பார்த்தான். அவன் முகத்திலிருந்த கலவரத்தைக் கண்டு அவனிடம் நெருங்கிய சுமன், “எனிதிங் ராங்?” என்றாள்.

“நோ.. நோ.. நத்திங்.. நத்திங் ராங்..” - அவனுடைய வாய்தான் அப்படி சொன்னதே ஒழிய முகம் பேயறைந்தது போல் இருந்தது.

“கம் வித் அஸ்” - சுமனிடம் கூறினான் பாதுகாவலர்களில் ஒருவன்.

“எங்க?” - விழித்தாள். சட்டென்று அவள் கையைப் பிடித்தான் சுஜித்.. அவன் பிடித்த பிடியின் இறுக்கத்தில் அவள் கை வலித்தது. உள்ளே இருக்கும் பதட்டம் அவன் முகத்தில் தெரிந்தது.

“நத்திங் வில் ஹாப்பன் டு யு.. ஐ வோண்ட் லெட் இட்” (உனக்கு எதுவும் ஆகாது.. ஆக விடமாட்டேன்) என்றான் உறுதியாக. உணர்ச்சி மிகுதியில் அவன் குரல் கரகரத்தது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 16

பாறையில் செதுக்கிய சிற்பம் போல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவனை சூழ்ந்திருந்த காற்றில் வெப்பம் சற்று கூடியிருந்தது. அந்த அறையில் கவிழ்ந்திருந்த கனத்த மௌனத்தை உடைத்துக் கொண்டு ‘தட்..தட்.. தட்..தட்..’ என்று ஓசை எழுப்பியது சுமனின் இதயம். அவள் கண்களில் கலவரம் தெரிந்தது.

“சொல்லு.. என்ன விஷயம்?” - அர்ஜுனின் பார்வை சுஜித் சிங்கை துளைத்தது.

“சுமனை கூப்பிட்டிருந்தியே..”

“ஆனா நீ சுமன் இல்ல.. தென் வொய் ஆர் யு ஹியர்?”

“ம்ம்ம்.. வந்து.. கார்ட்ஸ் வந்தப்போ நா.. சுமன் கூட பேசிட்டிருந்தேன்.. என்ன.. அர்ஜுன்? எனிதிங் ராங்?” - அவன் பேச்சில் தடுமாற்றம் இருந்தது.

அர்ஜுன் ஹோத்ராவின் புருவம் உயர்த்து. “ஹும்ம்ம்.. எஸ்..” என்று ராகம் போட்டபடி எழுந்தவன், மேஜையை சுற்றிக் கொண்டு சுமனிடம் மிக நெருக்கமாக வந்து, “இன்னொரு ஓநாய் சிக்கிக்கிச்சுன்னு நினைக்கறேன்” என்றான். அவன் பார்வை அவள் கண்களை ஊடுருவியது. முதுகெலும்புக்குள் சிலீரென்று உணர்ந்தாள் சுமன். கால்கள் வலுவிழந்து நடுங்கியது. ‘என்ன பார்வை இது!’ – அது வரை சகோதரன் ஸ்தானத்தில் இருந்த அர்ஜுன் ஹோத்ரா இப்போது முற்றிலும் வேறு பரிமாணம் எடுத்திருந்தான்.

“வ்வ்..வ்வாட்! வாட் ஆர் யு..”

“ட்ரு..” - அவள் கண்களிலிருந்து பார்வையை விலக்காமல் சுஜித்தை இடைவெட்டியவன், நிதானமாக அவனைத் திரும்பிப் பார்த்தான்.

அவனுடைய பார்வை, பேச்சு, உடல்மொழி எதுவுமே சாதாரணமாக இல்லை. இந்த அர்ஜுன் எப்போது வெளிப்படுவான் என்பதை நன்கு அறிந்திருந்த சுஜித், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தான்.

“இல்ல.. இல்ல அர்ஜுன்.. நீ ஏதோ தப்பா..” என்று ஏதோ சமாதானம் கூற வாயெடுத்தான். ஒற்றை விரலை உயர்த்தி அவனை தடுத்தவன், “ஐ வில் டேக் யுவர் அட்வைஸ் லேட்டர்.. கிளம்பு.. எனக்கு சுமன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. ஜஸ்ட்.. ஒன் சிம்பிள் கொஸ்டின். ஆன்ஸர் கிடைச்சதும் அனுப்பி வைக்கிறேன்” என்றான்.

சுமனின் கை தன்னிச்சையாக சுஜித்தின் கையைப் பற்றியது. அவள் பார்வை பீதியுடன் அர்ஜுனின் முகத்தில் படிந்திருந்தது. அவன் சிரித்தான். அந்த சிரிப்பில் அழகில்லை.. குரோதமிருந்தது.

“அர்ஜுன்.. ப்ளீஸ்..” - சுஜித்.

“கெட்..அவுட்..” - அர்ஜுன்.

“நா உனக்காக எவ்வளவோ செஞ்சிருக்கேன். இந்த ஒரு விஷயத்துல என்னைய கொஞ்சம் கன்சிடர் பண்ணு அர்ஜுன். சுமன் கண்டிப்பா உனக்கு எதிரா எதையும் செஞ்சிருக்கமாட்டா. என்ன பிரச்சனைன்னு சொல்லு.. ஐ வில் மேக் எவ்ரித்திங் க்ளியர்.. ப்ளீஸ்” - தன் இயல்பை மீறி வெளிப்படையாக கெஞ்சினான்.

அர்ஜுன் ஹோத்ராவின் புருவம் உயர்ந்தது. சிந்தனையுடன் தலையை மேலும் கீழும் அசைத்தவன் பிறகு ஒரு முடிவுடன் சுமனிடம் திரும்பி, “நேத்து நைட் பன்னிரண்டரையிலிருந்து இரண்டு மணி வரைக்கும் கண்ட்ரோல் ரூம்ல என்ன பண்ணின?” என்றான்.

சுமனின் முகம் வெளிறியது. பதில் சொல்ல திணறினாள். சுஜித் பேஸ்மெண்ட்டிற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் மறைப்பதில் இருந்த கவனம், தான் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைவதை மறைப்பதில் இல்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் சுஜித் அதை அவளிடம் குறிப்பிட்டு கூறியிருந்தான். அப்படி இருந்தும் பதட்டத்தில் தவறவிட்டுவிட்டாள்.

அதன் பிறகும் கூட அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. காரணம் அதற்குள் குற்றம் மிருதுளாவின் பக்கம் திரும்பிவிட்டது. தாங்கள் செய்த தவறில் அவள் மாட்டிக் கொண்டுவிட்டாளே என்கிற கவலையில் இருந்தவளுக்கு, தான் விட்டுவிட்டு வந்திருந்த தடயத்தைப் பற்றிய நினைவே இல்லை. அர்ஜுன் அதைப் பற்றி கேட்கும் வரை..

‘ஓ.. காட்..’ - நீண்ட மூச்சுக்காற்றை வெளியேற்றியபடி தளர்வுடன் கண்களை மூடினான் சுஜித். முடிந்தது.. திடமான ஆதாரம் சிக்கிவிட்டது. இதற்கு மேல் மறைப்பதற்கு எதுவும் இல்லை. மறைக்க முயன்றால் சுமனை பலிகொடுக்க வேண்டும். ‘நோ.. நோ..’ - தலையை உலுக்கிவிட்டு அர்ஜுனின் பார்வையை சந்தித்தவன், “ஷி ஹெல்ப்ட் மீ” என்றான் இறங்கிய குரலில்.

அர்ஜுன் ஹோத்ராவின் இதழ்கடையோரம் மேல் நோக்கி வளைந்தது. – ‘இதைத்தான்டா எதிர்பார்த்தேன்’ என்றது அவன் பார்வை.

“வெல்.. ஐம் லிசனிங்” என்றபடி தன் இருக்கையில் சென்று அமர்ந்து, “கன்ஃபெஸ்..” என்றான்.

“கொஞ்ச நாளா.. ஆபத்து நம்ம பக்கத்துலேயே இருக்க மாதிரி எனக்கு ஒரு ஃபீல் இருந்துகிட்டே இருக்கு. மிருதுளாகிட்ட தப்பு இருக்குன்னு தோணறதை என்னால தவிர்க்க முடியல. பட்டேலை விசாரிச்சா ஏதாவது தெரியும்னு தான் பேஸ்மெண்ட்டுக்கு போனேன். பட் ஹி வாஸ் சோ அடமென்ட். ஐ லாஸ்ட் மை கண்ட்ரோல்.. ஆனா அவன் இப்படி டக்குன்னு செத்துப்போவான்னு நா எதிர்பார்க்கல. இட்ஸ் ஆன் ஆக்சிடென்ட் அர்ஜுன். நீ நினைக்கற மாதிரி இல்ல..” என்றான்.

“நா என்ன நினைக்கறேங்கறது செகண்டரி.. என்னை கேட்காம இந்த கேம்பஸ்க்குள்ள யாரும் மூச்சு கூட விடக்கூடாது. நீ பேஸ்மெண்ட்டுக்கு எப்படி போன? கன்வின்ஸிங்கா ஏதாவது சொல்லு” என்றான்.

“உண்மையை கண்டுபிடிச்சிடலாம்னு நெனச்சேன்..”

“பட் யு ஃபெயில்ட்.. உன்னால உண்மையையும் கண்டுபிடிக்க முடியல.. என்னையும் கன்வின்ஸ் பண்ண முடியல.”

“ஐம் சாரி.”

“அண்ட் யு..” என்று சீற்றத்துடன் சுமனிடம் திரும்பியவன், “யு ஆர் நாட் எ கோர்த்தா கேர்ள் எனிமோர். இனி உனக்கு இங்க எந்த வேலையும் இல்ல” என்றான் திட்டவட்டமாக.

"நோ.. அர்ஜுன் நோ.. அவ அப்பா கோர்த்தாவுக்காக உயிரை விட்டவர்.. ப்ளீஸ் கன்ஸிடர்..” - சுஜித் பதறினான். அவளுடைய உயிருக்கு வெளியே பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம் அவனை வசமிழக்கச் செய்தது. “ஷி ஹேஸ் லைஃப் திரெட் அர்ஜுன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..”

“இன் தட் கேஸ், ஷி கேன் ஸ்டே ஹியர்.. ஆனா டொமஸ்டிக் ஏரியாவை தாண்டி ஒர்க் பிளேஸ் எங்கேயும் அவளை பார்க்கக் கூடாது.”

‘சரி’ என்பது போல் தலையை மேலும் கீழும் அசைத்துவிட்டு சுமனை திரும்பிப் பார்த்தான். கலங்கிய விழிகளுடன் இறுகி நின்றாள்.

“உன்னோட பொசிஷன்லேருந்து உன்னை டிகிரேட் பண்ணறேன்.. இனி நீ கமாண்டோ கிடையாது, சாதாரண சோல்ஜர். உனக்கு கீழ வேலை பார்த்தவனை கமாண்டோவா ப்ரோமோட் பண்ணறேன். நீ அவனோட ஆர்டர்ஸுக்கு ஒபே பண்ணனும். ஆம் ஐ கிளியர்?” - அவனுடைய ஆணவத்தை தட்டி தகர்ப்பது போன்றதொரு தண்டனை.

சுஜித் சிங் விறைத்து நிமிர்ந்தான். “இதுக்கு நீ என்னை ஷூட் பண்ணியிருக்கலாம்” - வார்த்தைகள் கரடுமுரடாய் வெளியே வந்து விழுந்தன.

“நீ அதுக்கு தகுதியானவன்தான். ஆனா இவ்வளவு நாள் நீ கோர்த்தாவுக்கு பண்ணின சர்வீஸை மைண்ட்ல வச்சு ஒரு சான்ஸ் கொடுத்திருக்கேன். யூஸ் இட் அண்ட் லேர்ன் டு ஒபே ஆர்டர்ஸ்” - கடித்த பற்களுக்கிடையில் வார்த்தையை துப்பினான் அர்ஜுன்.

“கண்டிப்பா ஒபே பண்ணறேன். ஆனா எனக்கு ஆர்டர் பண்ணறவன் என்னைவிட பெட்டரானவனா இருக்கனும். நீ யாரை வேணா சூஸ் பண்ணு. அவனோட நா ரிங்ல இறங்கறேன். அவன் என்னை ஜெயிச்சுட்டான்னா காலம் முழுக்க அவன் காலடியில நாயா கிடக்கறேன்” என்றான் கோபத்துடன்.

கலவரத்துடன் அவன் பக்கம் திரும்பினாள் சுமன். காட்டு மிருகம் போல் வெறித்தனமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் போட்டி.. ரத்தமும் சதையும் சிதற சிதற யாராவது ஒருவர் சாகும்வரை தொடரும் போட்டி.

“வேண்டாம்.. வேண்டாம் சுஜித்.. சொல்றதை கேளு ப்ளீஸ்..” - ஒரு கையால் அவன் கையையும் மறு கையால் அவன் சட்டையையும் பிடித்து உலுக்கினாள்.

இதற்கு முன்பும் சில முறை அவன் அந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கிறான். அவன் உயிரோடு வெளியே வருவதற்குள் அவள் செத்துப் பிழைப்பாள். அதன் பிறகும் கூட பல நாட்களுக்கு அவனை மனிதனாக பார்க்க முடியாது. அந்த அனுபவம் இன்னொரு முறை வேண்டாம்.. கடவுளே! - கலங்கி தவித்தாள்.

அவளை இலகுவாக விலக்கித் தள்ளியவன், “ஐ நோ மை பவர். எனக்கு எதிரா ரிங்ல இறங்கறவனை கிழிச்சு எறிஞ்சுட்டு வெளியே வருவேன்” என்று வெறியுடன் உறுமினான் சுஜித்.

அவனை வெறித்துப் பார்த்த அர்ஜுன் ஹோத்ரா, “குட் லக்” என்றான்.

******************

அன்று இரவெல்லாம் அவள் உறங்கவில்லை. அர்ஜுன் ஹோத்ராவின் அறையிலிருந்து வெளியேறியதும் அவளிடம் எதுவும் சொல்லாமல் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான் சுஜித் சிங். அந்த நேரத்தில் அவன் எங்கு சென்றான் என்று புரியாமல் கலங்கித் தவித்த சுமன் இமையோடு இமை சேர்க்காமல் இரவை கழித்தாள். விடிந்தும் அவன் வரவில்லை. கவலையுடன் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. பெருமூச்சுடன் அவனுடைய எண்ணை டயல் செய்தாள். அணைத்து வைக்கப்பட்டிருந்தது. “ச்சே..” - வெறுப்புடன் அலைபேசியை மெத்தையில் விட்டெறிந்தாள்.

மிருதுளா எப்படி இருக்கிறாளோ என்கிற நினைவு வந்தது. எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு அவளுடைய அறைக்குச் சென்றாள். ஜன்னல் பக்கம் நின்று ஏதோ சிந்தனையுடன் தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த மிருதுளா அறைக்குள் யாரோ நுழையும் அரவரம் கேட்டுத் திரும்பினாள். தோழியைக் கண்டதும் அவள் உணர்வுகள் தளும்பின. ஓடிவந்து கட்டி கொண்டு தேம்பினாள். நேற்றைய நினைவில் மிருதுளாவின் உடல் இப்போதும் நடுங்கியது. அவளை அணைத்துப் பிடித்து, “சாரி.. சாரி..” என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்த சுமனின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.

அவள் ஏன் தன்னிடம் மன்னிப்புக் கேட்கிறாள் என்கிற கேள்வியே மிருதுளாவிற்கு எழவில்லை. பட்ட துன்பத்தையெல்லாம் கொட்டித் தீர்க்க ஓர் உறவு கிடைத்துவிட்டது போல், “ஐம் நாட் எ ஸ்பை.. ஐம் நாட்.. என்னைய பிடிச்சு.. அந்த ரூம்ல.. கட்டி.. சுமன்.. அது.. அங்க.. செத்..துட்டே..ன்..” என்று கோர்வையற்று புலம்பியபடி அவளோடு ஒட்டிக் கொண்டு கண்ணீரில் கரைந்தாள்.

“ஷ்ஷ்ஷ்.. அவ்வளவுதான்.. அவ்வளவுதான்.. எல்லாம் முடிஞ்சிடிச்சு. இனி உன்னை யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. பயப்படாத மிருது. யு ஆர் ஆல்டரைட்” - அவளை அமைதிப்படுத்த முயன்றாள்.

“நோ.. தே ஆர் ப்ளேயிங் ஸம் கேம் வித் மீ. எனக்கு தெரியும்.. நல்லா தெரியும். இன்னைக்கோ, நாளைக்கோ.. என்னை கொல்ல போறாங்க. ஐம் கோயிங் டு பீ டெட்.”

“நோ மிருது.. நோ.. யு ஆர் சேஃப்.. ஓகே?” - அவள் தோள்களை பிடித்து தன்னிடமிருந்து விலக்கி, அவள் கண்களைப் பார்த்து.. வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து அவள் மனதில் பதியும்படி கூறினாள்.

மிருதுளாவின் நம்பகமின்மை அவள் பார்வையிலேயே தெரிந்தது.

“உனக்கும் நேத்து இங்க நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு நிரூபணம் ஆயிடிச்சு.”

அவள் புருவம் சுருங்கியது. “நிஜமாவா! எப்படி?” என்றாள் குழப்பத்துடன்.

“உண்மையான குற்றவாளி யாருன்னு தெரிஞ்சிடிச்சு.”

“ரியலி!” - விடுதலை உணர்வுடன் விழி விரித்தாள்.

“எஸ்”

“யாரு?” - ஆர்வத்துடன் கேட்டாள். சுமன் சற்று நேரம் பதில் சொல்ல தயங்கினாள். பிறகு அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு, அடைத்த தொண்டையை செருமி சரி செய்துக் கொண்டு, “அது.. நாங்கதான்..” என்றாள்.

“என்னது!” - அதிர்ந்தாள் மிருதுளா.

“எஸ்.. நானும் சுஜித்தும்”

“நோ..” - சட்டென்று அவளிடமிருந்து கையை உருவிக் கொண்டாள்.

“ஐம் சாரி”

“நீ.. நீ கொலை! ரியலி?” - அவள் சொன்ன விஷயத்தை கிரகிக்க முடியாமல் தடுமாறினாள்.

“இல்ல.. நா.. நா ஜஸ்ட் ஹெல்ப் பண்ணினேன்..”

“ஹெல்ப்? கொலை பண்ண! எப்படி.. நீ எப்படி!” - வெறுப்புடன் அவளிடமிருந்து விலகி நின்றாள்.

“ஹேய் மிருது.. எனக்கு என்ன நடக்க போகுதுன்னே தெரியாது. சர்வைலென்ஸ் கேமிராவை கொஞ்ச நேரத்துக்கு முடக்கினேன்.. அவ்வளவுதான். சுஜித் கூட கொலை செய்யனும்னு நினைக்கல.”

“பட் ஹி டிட்” - கோபத்தில் முகம் சிவந்தது.

“எஸ்..” - சுமன் சங்கடத்துடன் முணுமுணுத்தாள்.

“ஹா..” - விரக்தியுடன் சிரித்த மிருதுளா, “ஹி டார்ச்சர்ட் மீ எ லாட்.. ஹௌ குட் ஹி!” என்று வியந்தாள். தான் குற்றம் செய்துவிட்டு அதை இன்னொரு பெண் மீது சுமத்தியது மட்டுமல்லாமல், அவளை ஒரு நாள் முழுக்க அடைத்துவைத்து சித்திரவதை செய்திருக்கிறான். மனிதனா அவன்! - அவளால் நம்பவே முடியவில்லை.

“சாரி மிருது.. சாரி..” - தவிப்புடன் யாசித்த சுமனை விசித்திரமாகப் பார்த்தாள் மிருதுளா. ‘இவளுக்கு என்ன பைத்தியமா!’ என்று தோன்றியது. எவ்வளவு பெரிய தப்பை செய்துவிட்டு சாதாரணமாக சாரி என்கிறாளே!

“சூழ்நிலை அப்படி ஆயிடிச்சு மிருது.. அந்த சம்பவம் நடந்த நேரத்துல நீ தப்பிக்க ட்ரை பண்ணலேன்னா உனக்கு இந்த பிரச்சனையே வந்திருக்காது.”

“சோ.. சுஜித் கொலை பண்ணினது தப்பு இல்ல.. அந்த பழியை என் மேல திருப்பினது தப்பு இல்ல.. நான் தப்பிக்க முயற்சி செஞ்சதுதான் தப்பு, இல்ல?”

“நோ.. நா அப்படி சொல்லல..”

“வேற எப்படி?”

“ப்ச்.. நா உனக்கு எப்படி சொல்லுவேன்” என்று தடுமாறி தோழியின் முகத்தை ஓரிரு நொடிகள் மெளனமாக பார்த்தவள், “சுஜித்துக்கு ஏற்கனவே உன் மேல சந்தேகம். அதனாலதான் நீ தப்பிக்க ட்ரை பண்ணின சந்தர்ப்பத்தை, உன்ன விசாரிக்கிறதுக்கு பயன்படுத்திக்கிட்டான். சந்தேகங்கறது இங்க சாதாரண விஷயம் மிருதுளா. எல்லாரும் எல்லாரையும் சந்தேகப்படுவாங்க..”

“லீவ் மீ அலோன்” - வெடுக்கென்று கூறினாள்.

“மிருது ப்ளீஸ்..”

“உன்ன கெஞ்சி கேட்கறேன்.. தயவு செஞ்சு கொஞ்ச நேரம் என்னை தனியா விடு.. விட்..டு..டு..” - கூச்சலிட்டாள். அவள் உள்ளம் கொதித்தது. சுஜித்தின் அட்டூழியத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு வக்காலத்து வாங்கும் இவளுடைய குணத்தையும் சகிக்க முடியவில்லை. பெருங்குரலெடுத்து கத்திவிட்டாள். அதற்கு மேல் அங்கு தாமதிக்க முடியாமல் வெளியேறினாள் சுமன்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 17

மிருதுளாவின் கோபம் நியாயமானதுதான். சுஜித்தின் மூர்க்கத்தனத்தை எப்படித்தான் நியாயப்படுத்த முடியும்? அவள் உடலில் உள்ள காயங்களை பார்த்த பிறகும் கூட அவனுக்கு சார்பாக பேச எப்படி நமக்கு வாய் வந்தது! பொறுத்துக்கொள்ள முடியாமல்தானே அப்படி கத்தினாள். இனி எப்படி அவள் முகத்தில் விழிப்பது! – கண்ணில் விழுந்த துரும்பு போல் மனசாட்சி அவளை உறுத்தியது. அறைக்குள் அடைந்து கிடக்க முடியாமல் எழுந்து தோட்டத்திற்கு வந்தாள்.

சுஜித்தின் கார் உள்ளே வருவது தெரிந்தது. கையிலிருந்த அலைபேசியில் நேரம் பார்த்தாள். மதியம் இரண்டு மணி. நேற்று இரவு.. அப்படிக் கூட சொல்ல முடியாது.. இன்று அதிகாலை அர்ஜுன் ஹோத்ராவிடம் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே சென்றவன், இப்போதுதான் வருகிறான். இவ்வளவு நேரம் எங்கு சென்று என்ன செய்துக் கொண்டிருந்தான்? - இடையிலிருந்த குரோட்டன்ஸ் செடிகளை கடந்து அவனுடைய கார் சென்ற கராஜை நோக்கி விரைந்தாள்.

“எங்க போயிட்ட இவ்வளவு நேரமா?” - சத்தமிட்டபடி அவனிடம் நெருங்கினாள்.

“என்ன விஷயம்?” - நடந்துக் கொண்டே கேட்டான் சுஜித். அவன் முகம் வீங்கியிருந்தது. கண் இமைகள் தடித்திருந்தன. நன்றாக குடித்துவிட்டு எங்கோ கவிழ்ந்து கிடந்திருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.

“நில்லு.. எத்தனை தடவ போன் பண்ணினேன். எடுத்து எங்க இருக்கேன்னு சொல்லியிருக்கலாம்ல?” - அவனை தடுத்து நிறுத்திக் கேட்டாள்.

“ப்ச்.. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டுதான் செய்யனுமா? வீட்டுக்கு போயிருந்தேன். என்ன இப்போ?” - எரிந்து விழுந்தான்.

சுருக்கென்றிருந்தது அவளுக்கு. “சரி விடு.. சாப்பிட்டியா?” - பொறுத்துக் கொண்டாள்.

“ம்ம்ம்.. ம்ம்ம்” - முணுமுணுத்தபடி அவள் பிடியிலிருந்து கையை உருவிக்கொண்டு நடந்தான்.

அவனோடு சேர்ந்து நடந்தபடி, “நீ பாட்டுக்கு ரிங்ல இறங்குறேன்னு சவால் விட்டுட்டு போயிட்டே. எனக்கு தூக்கமே வரல. சுஜித். தேவையில்லாம எதுக்கு இந்த அடிதடி.. இரத்தமெல்லாம்? அர்ஜுன் பாய்கிட்ட பேசி பாரேன்..” என்றாள் கெஞ்சுதலாக. சட்டென்று நின்று அவள் பக்கம் திரும்பினான் சுஜித். கண்களில் கோபம் தெறித்தது.

“என்ன நினைக்கிற என்னை பத்தி? நா என்ன கோழையா? ம்ம்ம்? ஆம் ஐ எ கவர்ட்?” - எகிறினான்.

சுமன் நிதானித்தாள். சற்று நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தவள் பிறகு மெல்ல அவன் கையைப் பிடித்தாள்.

“ஏன் இப்படியெல்லாம் பேசுற?” - அவனுடைய முரட்டு கையில் மென்மையாய் முத்தமிட்டபடி கேட்டாள்.

சட்டென்று அவள் பிடியிலிருந்து கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டவன், “ஐம் நாட் எ ஃபூல். டோன்ட் ட்ரை டு பீ ஸ்மார்ட்” என்றான்.

“சுஜித்.. ப்ளீஸ்.. சுஜித்.. நா சொல்றத கேளு.. ப்ளீஸ்..” - சமாதானம் செய்ய முயன்றாள்.

அவனோ, அவளை அலட்சியம் செய்துவிட்டு நடையைக்கட்டினான். அவனை வலுக்கட்டாயமாக பிடித்து நிறுத்த முயன்றாள் சுமன்.

“டோன்ட் டச் மீ” என்று எரிச்சலுடன் அவளை கீழே பிடித்து தள்ளிவிட்டு, “நீ.. நீதான் இது எல்லாத்துக்கும் காரணம் டாமிட்..” என்று கடுங்கோபத்துடன் அவளை கை நீட்டி குற்றம் சாட்டினான்.

அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் சுமன். “ஒரு சின்ன வேலை.. அதை கரெக்டா செய்ய முடியல உனக்கு. எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்ட. நீ செஞ்ச தப்புக்கு நா பே பண்ண போறேன். காண்ட் யு அண்டர்ஸ்டாண்ட் தட்? கெட் லாஸ்ட்.. ஜஸ்ட்.. கெட் லாஸ்ட்..” - வெறுப்புடன் கத்திவிட்டு விலகிச் சென்றான். கலங்கிய விழிகளுடன் அவன் முதுகை வெறித்தாள் சுமன்.

*******************

ஒரு வழக்கு தொடர்பாக மகல்பாட்னா நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் அஞ்சானி லால். அதே சமயம் இங்கே ஊருக்குள் நடந்த ஒரு பிரச்சனையில் கோர்த்தாவின் ஆட்கள் சிலர் சிக்கியிருந்தார்கள். அவர்களுடைய வழக்கும் அன்று விசாரணைக்கு வந்தது. அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த அர்ஜுன் ஹோத்ரா, எதேர்ச்சையாக அஞ்சானி லாலை சந்தித்தான். அது ஒரு திட்டமிட்ட சந்திப்பு என்பது அர்ஜுனை நிழல் போல் தொடரும் அவனுடைய மெய்காவலன் கூட அறியாத ரகசியம்.

கோர்த்தாவின் தலைவர் ராகேஷ் சுக்லா, டெல்லி சென்று வருவதற்கான பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அஞ்சானி லால் மூலம் அவருடைய பார்வைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த திட்டத்தின் குறை நிறைகளை அலசி ஆராய்ந்த அவருடைய பாதுகாப்புக்கு குழு, அதற்கான பதிலை இன்று அஞ்சானி லால் மூலம் அனுப்பியிருந்தது. கோர்த்தாவின் வழக்கறிஞர் என்கிற முறையில் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிய அர்ஜுன் ஹோத்ரா, கண்ணிமைக்கும் நேரத்தில் கோப்பை கைமாற்றிக் கொண்டு காரில் ஏறி பறந்தான்.

அன்று மாலை அவன் மாளிகைக்கு திரும்பிய போது, தோட்டத்தில் ஒரு கல் பெஞ்சில் மிருதுளா அமர்ந்திருப்பதை கவனித்தான். அந்திசாயும் வானத்தை நிலைத்துப் பார்த்தபடி எதையோ பறிகொடுத்தது போல் அவள் அமர்ந்திருப்பதைக் கண்டவனின் முகம் ஒரு கணம் கன்றி இயல்பு நிலைக்கு மீண்டது.

ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கிவந்து தலைவனுக்கு கதவை திறந்துவிட்டான் மெய்காவலன். மிருதுளாவிடமிருந்து பார்வையை விளக்கி, அவனை தலையசைத்து அங்கீகரித்துவிட்டு மாளிகைக்குள் நுழைந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அதற்கு பிறகு தொடர்ந்து சில மணி நேரங்கள் அவனுக்கு கடுமையான வேலையில் கழிந்தது. சமையலறையிலிருந்து இரவு உணவு தயாராகிவிட்ட செய்தி இன்டெர்க்காம் மூலம் வந்து சேர்ந்தது. அதன் பிறகு அலுவலறையிலிருந்து வெளியேறி மாடிக்குச் சென்று ரெஃப்ரெஷ் செய்துவிட்டு உணவு கூடத்திற்கு வந்தான்.

டைனிங் டேபிளில் மாலிக் மட்டும்தான் இருந்தான். டேவிட் வெளியூர் சென்றிருக்கிறான். ஆனால் சுஜித்?

“வேர் இஸ் ஹி?” - அலட்சிய தொனியில் கேட்டபடி தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தான்.

“ரூம்ல இருக்கான்”

“குட்..” - பரிமாறப்பட்ட உணவில் கவனமானான். அதற்கு மேல் மாலிக்கும் எதுவும் பேசவில்லை. இரவு உணவு அமைதியாகவே கழிந்தது.

அன்று நாள் முழுவதும் கடுமையான அலுவல்கள் இருந்ததால் இப்போது சற்று ஆசுவாசமாக காற்று வாங்கலாம் என்று மாளிகைக்கு வெளியே வந்தவன் திகைத்து நின்றான்.

மாலை அவன் பார்த்த போது அமர்ந்திருந்த இடத்திலேயே இப்போதும் அமர்ந்திருந்தாள் மிருதுளா. கால்கள் அனிச்சையாய் அவளை நோக்கி செல்வதை உணரவே அவனுக்கு சற்று நேரம் பிடித்தது. அதற்குள் அவளுடைய பார்வை அவன் பக்கம் திரும்பிவிட்டது.

அன்று முழுவதுமே மனமும் உடலும் வெகுவாய் சோர்ந்து போயிருந்தது மிருதுளாவிற்கு. தோழி என்று எண்ணியிருந்தவளின் இன்னொரு முகம் அவளை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

‘நம் வயதை ஒத்த பெண்.. இனிமையான குணம் கொண்டவள் என்று நாம் எண்ணியிருந்த பெண்.. ஒரு கொலைக்கு துணை போயிருக்கிறாள். அதைப் பற்றி எந்த கலக்கமும் அவளிடம் இல்லை. எவ்வளவு இயல்பாக பேசுகிறாள்!’ - ஜீரணிக்க முடியவில்லை.

மனிதர்களற்ற காட்டில் சிக்கிக் கொண்டிருப்பது போல் உணர்ந்தாள். தாயின் மடிக்காக உள்ளம் ஏங்கியது. அறையிலேயே அடைந்து கிடைக்க முடியாமல் தோட்டத்தில் வந்து அமர்ந்தாள்.

திடீரென்று அனந்த்பூரிலிருந்து மறைந்துவிட்டோம். தேடியிருப்பார்களா.. போலீஸில் புகார் கொடுத்திருப்பார்களா? அம்மா அழுது கொண்டிருப்பார்களா! யார் ஆறுதல் சொல்வார்கள்கள்! - கண்ணீர் திரண்ட விழிகளுடன் கீழ்வானில் மறையும் சூரியனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளுக்கு, சூரியன் முற்றிலும் மறைந்து இருள் கவிந்த பிறகும் எழத்தோன்றவில்லை. அதிரும் பூமி அவளிடம் யாரோ வருவதை அறிவுறுத்தியது. திரும்பிப் பார்த்தாள். ‘அர்ஜுன் ஹோத்ரா!’ - சட்டென்று முகம் இறுக மௌனமாய் எழுந்து நின்றாள்.

“இங்க என்ன பண்ற?” - அதிகாரம்! கொலைகாரனின் குரலில் அதிகாரத்திற்கு என்ன குறைச்சல்.

“நத்திங்” - முணுமுணுத்தாள்.

அவள் கண்களில் பளபளத்த கண்ணீர், கூரிய அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.

வீங்கியிருந்த அவள் நெற்றியையும், கையில் போடப்பட்டிருந்த கட்டையும் பார்வையால் அளந்தவன், “ஏதாவது வலி இருக்கா? டூ நீட் எ டாக்டர்?” என்றான்.

அவனை ஏறிட்டாள் மிருதுளா. ஓரிரு நிமிடங்கள் அவள் விழிகள் அவன் முகத்திலேயே நிலைத்திருந்தன. அந்தப் பார்வையில் கோபமிருக்கிறதோ என்று அவன் யோசிப்பதற்குள், மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டு தலையை குறுக்காக அசைத்தாள்.

அர்ஜுன் ஹோத்ராவின் தடித்த கீழுதடு பற்களுக்கிடையில் சிக்கி மீண்டது.

“மிருதுளா” - மென்மையாக அழைத்தான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ஆனா அதுக்கு நீ என்னை நம்பனும். உன்னோட பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லனும்” - உண்மையாக கேட்டான்.

“எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல. ஐம் ஓகே..” - பொய்யுரைத்துவிட்டு அவனிடமிருந்து விலகினாள் மிருதுளா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 18

“என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ஆனா அதுக்கு நீ என்னை நம்பனும். உன்னோட பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லனும்” - அர்ஜுன் ஹோத்ராவின் குரல் அவள் செவிகளில் எதிரொலித்தது. உறக்கம் வராமல் புரண்டு படுத்தாள். அனந்த்பூரின் நினைவு நெஞ்சை அரித்தது. தாயின் முகம் கண்களை மூடவிடாமல் துரத்தியது. யாரோ கதவை தட்டினார்கள்.

‘இந்த நேரத்துல யாரு!’ - அர்ஜூனாக இருக்குமோ என்கிற சந்தேகம் அனிச்சையாய் எழுந்தது. அவனாக இருந்தால் கதவை தட்டியிருக்கவே மாட்டான். நேரடியாக திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்திருப்பான். அறிவு வேறு கோணத்தில் சிந்தித்தது. ‘ப்ச்’ - அலுப்புடன் எழுந்துச் சென்று திறந்து பார்த்தாள்.

“ஹாய்! ஐம் டாக்டர் மோகன் ராவ்” - ஐம்பது வயது மதிக்கத்தக்க தடித்த உருவம் கொண்ட மனிதர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

“எஸ்..”

“உள்ள வரலாமா?”

“என்ன விஷயம்?”

“உங்களோட காயங்களை செக் பண்ண வந்திருக்கேன். மே ஐ?” - அவளுடைய அனுமதியை கோரினார்.

“ப்ளீஸ்..” - அர்ஜுன் ஹோத்ரா அனுப்பியிருக்கிறான் என்று புரிந்தது. தயக்கத்தை மறைத்துக் கொண்டு அவரை உள்ளே அனுமதித்தாள். அவனுடைய கரிசனமும் அக்கறையும் அவளை மேலும் துன்புறுத்தியதே ஒழிய ஆறுதலாக இல்லை. சிறகை உடைத்து கூண்டுக்குள் அடைத்துவிட்டு காயத்திற்கு மருந்து போட ஆள் அனுப்பியிருக்கிறான். வெறுப்பை மென்று விழுங்கிக் கொண்டு மெளனமாக நின்றாள்.

“ரொம்ப நேரம் எடுக்க மாட்டேன், ஜஸ்ட் டென் மினிட்ஸ்” - அவளுக்கு சமாதானம் கூறியபடி கை கட்டை பிரித்து காயத்தை பரிசோதித்து மருந்திட்டார்.

“லேசான காயம்தான்.. கட்டு தேவையில்லை.. மருந்து போட்டா போதும். தானா சரியாயிடும்” என்று கூறிவிட்டு நெற்றி வீக்கத்தை கவனித்தார்.

தலையில் சில இடங்களில் அழுத்தி, வலி எங்கெல்லாம் இருக்கிறது என்பதை பரிசோதித்துவிட்டு சில மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தார். வாயிலில் அரவரம் கேட்டது. இருவருமே திரும்பிப் பார்த்தார்கள். அர்ஜுன் ஹோத்ராதான்.

“இஸ் ஷி ஓகே?” - மருத்துவரிடம் கேட்டான். ஆனால் பார்வை அவள் முகத்தில் பதிந்திருந்தது.

“கைல காயம் ஒன்னும் பெருசா இல்ல. ஆனா தலையில கொஞ்சம் சென்சிட்டிவான இடத்துல அடி பட்டிருக்கு. எதுக்கும் ஒரு எம்ஆர்ஐ எடுத்து பார்த்துடலாம்.”

அர்ஜுன் சட்டென்று அவர் பக்கம் திரும்பினான்.

அவன் பார்வையில் எதை கண்டாரோ.. “ஒர்ரி பண்ணிக்க எதுவும் இல்ல. தலையில அடி பட்டிருக்கதுனால ஒரு சேஃப்டிக்கு ஸ்கேன் பண்ணிக்கறது நல்லது” என்றார் ஏதோ உறவினருக்கு ஆறுதல் கூறுவது போல.

“நாளைக்கு காலையில பத்து மணிக்கு அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணிடுங்க” - அவன் குரலும் கூட இறங்கித்தான் இருந்தது.

‘ஆஹா! எவ்வளவு வருத்தம்!’ - எள்ளலாக நினைத்தாள் மிருதுளா.

‘தத்ரூபமான நடிப்பு தான். ஆனால் குறிதான் தவறானது. இந்த ஜாலத்திலெல்லாம் மயங்குவதற்கு நான் என்ன முட்டாளா?’ - உள்ளுக்குள் பொருமினாள். அவனுடைய ஒவ்வொரு அசைவும் அவளை இரு மடங்கு எச்சரிக்கை செய்தது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள்.

மருத்துவர் விடைபெற்று கொண்டிருக்கும் போதே சமையலறை ஊழியர் ஒருவர் கையில் ட்ரேயுடன் உள்ளே வந்தார்.

“இங்க வை” - டீப்பாவை சுட்டிக்காட்டினான் அர்ஜுன். அவன் சொன்னபடியே செய்துவிட்டு அவரும் வெளியேறினார்.

இப்போது அறையில் அவளும் அவனும் மட்டும் தான்.. தலை கவிழ்ந்து நிலம் நோக்கி நிற்கும் அவள் முகத்தை துளைத்தது அவன் பார்வை.

“சாப்பிடு” - மிருதுவாய் கூறினான். அவள் அசையாமல் அப்படியே நின்றாள். அவன் பாத்திரங்களை திறந்து பதார்த்தங்களை பரிமாறினான்.

நேற்று கட்டி வைத்து சித்திரவதை செய்தவன் இன்று ஒரேடியாக உருகுகிறான்.. பணிவிடை செய்கிறான்! மனதில் என்ன திட்டத்தை வைத்திருக்கிறானோ! - அவளிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. “என்ன ஆச்சு?” என்றபடி உடனே நிமிர்ந்து அவளை பார்த்தான் அர்ஜுன்.

சட்டென்று அவள் விழிகள் விரிந்தன. மூச்சுக்காற்றைக் கூட கவனிக்கிறான்! - உடல் இறுகியது.

“ரிலாக்ஸ்.. டோன்ட் திங்க் டூ மச், ஓகே? சூப் ஆறிட போகுது கம்” - வற்புறுத்துவதைக் கூட வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் செய்கிறான் என்பதை கவனித்தாள் மிருதுளா.

மறுத்துப் பேசி நேரத்தை கடத்தாமல், இறங்க மறுத்த உணவை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளினாள். அவன் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது அவளுக்கு.

அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக ஒரு சேரில் அமர்ந்து அலைபேசியை ஆராய்ந்துக் கொண்டிருந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

மிருதுளா காலி பாத்திரங்களை மூடி ட்ரேயில் அடுக்கும் போது, “லீவ் இட்.. லீவ் இட்.. சர்வெண்ட் யாராவது வந்து எடுத்துப்பாங்க” என்றபடி அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு எழுந்தவன், மருத்துவர் கொடுத்திருந்த மாத்திரைகளை எடுத்து பார்த்தான்.

மருத்துவம் படிக்கவில்லை என்றாலும் மருந்துகள் பற்றிய அடிப்படை அறிவு அவனுக்கு இருந்தது. எந்த மாத்திரை எதற்காக கொடுத்திருக்கிறார் என்பதை ஒரு முறை சரிபார்த்துவிட்டு இரவு வேளைக்கு உள்ளதை பிரித்து அவளிடம் நீட்டினான்.

மிருதுளாவின் முகம் மாறியது. “இல்ல.. நா அப்புறம் சாப்பிட்டுக்கறேன்” என்றாள்.

உண்மையில் அவளுக்கு மாத்திரை விழுங்குவது, பாறையை விழுங்குவது போல் கடினமான காரியம். அதனால் தான் அவள் முகத்தில் அந்த மாற்றம் தோன்றியது. ஆனால் அர்ஜுன் வேறு விதமாக புரிந்துக்கொண்டான்.

தான் தவறான ட்ரக்ஸ் எதையோ கொடுப்பதாக நினைத்து அஞ்சுகிறாள் என்று எண்ணி அவளை வெறித்துப் பார்த்தான். பிறகு எடுத்த மாத்திரையை அதன் கவரிலேயே வைத்துவிட்டு, “உனக்கு பிடிக்காத எதையும் இங்க நீ செய்ய வேண்டிய அவசியம் இல்ல” என்றான்.

‘பிடிக்காத எதையும் செய்ய வேண்டாமா!’ - இப்போது வெறித்துப் பார்ப்பது அவள் முறை. ‘இங்கு இருப்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை. சொன்னால் அனுப்பிவிடுவானா!’ - உள்ளுக்குள் பொங்கினாள்.

“இது வெறும் பெயின் கில்லரும் ஆன்டிபயாட்டிக்கும் தான். வலி இருந்தா எடுத்துக்கோ.. இல்லன்னா தேவையில்லை. இந்த காயமெல்லாம் தானா சரியாயிடும்” - மெல்லத் தீண்டும் தென்றல் போல் மென்மையாகப் பேசினான்.

பதில் சொல்லவும் தோன்றாமல் அவன் முகத்திலிருந்து பார்வையை விளக்கவும் தோன்றாமல் சிலை போல் நின்றாள் மிருதுளா. கண்ணீர் ஒரு மெல்லிய திரையாக திரண்டது அவள் கண்களில்.

சாதாரண பார்வைக்கு புலப்படாத கண்ணீர் தான். ஆனால் அவன் கழுகுப் பார்வையில் தப்பவில்லை போலும். மெல்ல அவளிடம் நெருங்கினான். நெற்றியில் சரிந்த கூந்தலை ஒற்றை விரலால் அவள் காதோரம் ஒதுக்கிவிட்டபடி, “நாளைக்கு காலையில பத்து மணிக்கு டாக்டர் அப்பாயின்மென்ட். எட்டு மணிக்கு ரெடியா இரு. குட் நைட்..” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான். திகைப்பிலிருந்து மீள முடியாமல் சமைந்து நின்றாள் மிருதுளா.

**************

இரண்டு மணி நேர பயணம் மௌனமாகவே கழிந்தது. மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து மிருதுளாவிற்கு கதவை திறந்துவிட்டான் அர்ஜுன் ஹோத்ரா. வழக்கமாக அணிந்திருக்கும் சூட்டை தவிர்த்து அன்று சாதாரண டீ-ஷர்ட் தான் அணிந்திருந்தான். அதில் கூட அவனுடைய கம்பீரம் குறையவில்லை என்பதை கவனித்தபடி கீழே இறங்கினாள் மிருதுளா.

அந்த மாளிகையிலிருந்து.. இல்லையில்லை.. இராட்சச மண்டபத்திலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்பதை இன்னமும் கூட அவளால் நம்ப முடியவில்லை. மருத்துவமனையில் ஆள் நடமாட்டம் அதிகம் தெரிந்தது. தப்பிக்க முடியுமா? - மரித்துப்போன ஆசை மீண்டும் அவளுக்குள் துளிர்விட்டது. சுற்றும் முற்றும் பார்த்தாள். இந்த முறை பிசகினால் மரணம்தான். பயத்துடன் எச்சரிக்கையும் இருந்தது. அதே சமயம், கிடைக்கும் சந்தர்ப்பத்தை விட்டுவிடாதே என்று ஆசையும் உந்தியது.

“உள்ள போகலாமா?” - இடைபுகுந்து அவள் சிந்தனையை தகர்த்தது அர்ஜுன் ஹோத்ராவின் குரல்.

“ஆ..ங்.. ப்..போ.. போகலாம்” - தடுமாற்றத்துடன் பதிலளித்தாள் மிருதுளா.

இருவரும் உள்ளே சென்றார்கள். ரிஸப்ஷனிஸ்ட் அவர்களை வரவேற்று கெஸ்ட் ரூமில் அமரச் செய்தாள். சற்று நேரத்திலேயே அங்கு வந்த மருத்துவர் மோகன் ராவ், அர்ஜுன் ஹோத்ராவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மிருதுளாவை தனியாக ஸ்கேன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அவரிடம் தன்னுடைய நிலைமையை கூறி உதவி கேட்கலாமா என்று எண்ணியவள் மறுகணமே அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். ரிஸப்ஷன் முதல் மேனேஜ்மென்ட் வரை இங்கு அவனுக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்த பிறகும் அப்படி யோசிப்பது முட்டாள்தனம். அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.

ஸ்கேன் செய்து முடித்த பிறகு மருத்துவர் அவளை கையோடு அழைத்து வந்து அர்ஜுனிடம் ஒப்படைத்துவிட்டார். ‘அவ்வளவுதானா.. மீண்டும் சிறைவாசமா..’ - மிருதுளாவின் மனம் வாடியது.

“ரிப்போர்ட் ரெடியாக கொஞ்ச நேரம் ஆகும் சார்” - மோகன் ராவ்.

“எவ்வளவு நேரம்?”

“ரேடியாலஜிஸ்ட் ரெவ்யூ பண்ணிக்கிட்டு இருக்காங்க.”

“ம்ம்ம்.. ஒன்னும் அவசரம் இல்ல.. வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்” என்று கூறி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு மிருதுளாவோடு வெளியே வந்தான்.

ரிஸப்ஷனை நெருங்கிய போது மிருதுளா நடையின் வேகம் குறைந்தது. “என்ன ஆச்சு?” - அர்ஜுன் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்.

பதில் சொல்ல சற்று தயங்கிய மிருதுளா பிறகு “ரெஸ்ட் ரூம்..” என்று மெல்ல முணுமுணுத்தாள்.

“ஓ..” என்று இழுத்தவன், “அந்தப் பக்கம்” என்று ஒரு திசையில் கை காட்டினான்.

“தேங்க் யூ” - கீழே குனிந்தபடியே மெல்லிய குரலில் கூறிவிட்டு அவன் கை காட்டிய திசையில் நடந்தாள். சற்று தூரத்தில் பெண்களுக்கான கழிவறை இருந்தது. அதன் வாயிலில் நின்றபடி மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள். அலைபேசியில் கவனமாக இருந்தவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. சட்டென்று உள்ளே நுழைந்தாள். பெண்கள் சிலர் முகம் கழுவிக் கொண்டும், கண்ணாடியில் சிகையை சரி செய்து கொண்டும் இருந்தார்கள்.

அவர்களில் ஒரு மூத்த பெண்மணியிடம், “எக்ஸ்கியூஸ் மீ.. எமெர்ஜென்சி.. போன் இருக்கா.. ப்ளீஸ்” என்று அவசரமாக கேட்டாள்.

ஒரு நொடி தயங்கிய அந்த பெண், “ப்ளீஸ்..” என்று அவள் மீண்டும் கெஞ்சியதும் கைப்பையிலிருந்து அலைபேசியை எடுத்து அன்லாக் செய்து கொடுத்தாள்.

“தேங்க்ஸ்.. தேங்க்ஸ் எ லாட்..” - அவசரமாக நன்றி கூறியவள், வேகமாக தாயின் எண்ணை அழுத்திவிட்டு எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். இணைப்பில் எந்த ஒலியும் இல்லாமல் சில நொடிகள் கடந்தது. மிருதுளாவின் இதயத்துடிப்பு எகிறியது.. படபடப்புடன் காத்திருந்தாள். இறுதியாக, ‘அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது’ என்றது பதிவு செய்யப்பட்ட குரல்.

“நோ! ம்மா.. ப்ளீஸ்..” - ஏமாற்றத்துடன் வாய்விட்டு புலம்பியவள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தாள். மீண்டும் இன்னொரு முறை.. இன்னொரு முறை.. எத்தனை முறை முயன்றாலும் அணைத்து வைக்கப்பட்டிருக்கும் அலைபேசி தொடர்பில் வர வாய்ப்பே இல்லையே! “கடவுளே!” - கலங்கினாள். கண்களில் கண்ணீர் வடிந்தது.

“வருத்தப்படாதம்மா.. வேற யாருக்காவது ட்ரை பண்ணி பாரு” - நல்ல மனம் கொண்ட அந்தப் பெண், அவளுடைய கண்ணீரை பார்த்துவிட்டு கருணையுடன் கூறினாள்.

எவ்வளவு யோசித்தும் மிருதுளாவிற்கு வேறு யாருடைய எண்ணும் நினைவிற்கு வரவில்லை. அனைத்து தொடர்புகளையும் அலைபேசியில் சேமித்து வைக்கும் பழக்கத்தில் டயல் செய்யும் பழக்கமே இல்லாமல் போனதன் விளைவு. செயலற்று தவித்தாள் மிருதுளா. யாருக்காவது தொடர்புகொள்ள வேண்டும்.. அலைபேசி கையில் இருக்கிறது.. ஆனால் முடியவில்லை.. பொங்கி அழுதாள்.

“என்னம்மா ஆச்சு? யாருக்கும்மா முடியல.. ரொம்ப சீரியஸா?” - ஆதரவுடன் அவள் தோளைப் பற்றினாள் அந்த பெண்.

மிருதுளாவிற்கு பதில் சொல்ல முடியவில்லை. இப்படியே தப்பித்து போக ஏதேனும் வழி இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். சினிமாவில் ஜன்னலை உடைத்துக்கொண்டு எகிறி குதித்து தப்பிப்பார்களே.. அப்படியெல்லாம் தப்பிக்க இங்கு எந்த வாய்ப்பும் இல்லை. தளர்ந்து போனாள்.

“கவலைப்படாதம்மா.. எல்லாம் சரியாயிடும். இப்படி வா.. மூஞ்சிய கழுவு. ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான் ஆண்டவன். தைரியத்தை விடாத” - பொதுப்படையாக அவள் கூறி ஆறுதல், கடவுள் கொடுக்கும் குறிப்பு போல் மிருதுளாவிற்கு பட்டது.

சட்டென்று தெளிந்த மனதுடன், “தேங்க்ஸ்” என்று அந்தப் பெண்ணிடம் முணுமுணுத்துவிட்டு முகத்தை கழுவிக் கொண்டு, மற்ற பெண்களோடு கலந்து வெளியே வந்தாள்.

அவன் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கவே அச்சமாக இருந்தது. ஆனால் நிலவரத்தை தெரிந்துக்கொண்டாக வேண்டுமே! - மெல்ல திரும்பினாள். அவனை காணவில்லை. எங்கு போய்விட்டான்! கண்களால் அலசினாள். இல்லை.. அந்த பகுதியில் அவன் இல்லவே இல்லை. ஒழியட்டும்.. - வெறுப்புடன் நினைத்தபடி மறுபக்க வாயிலை நோக்கி ஓடினாள்.

அது ஊழியர்களுக்கான பகுதி.. நோயாளிகளுக்கோ பார்வையாளர்களுக்கோ அங்கு அனுமதியில்லை. எப்படியோ ஒளிந்து மறைந்து யார் கண்ணிலும் படாமல் பின்பக்கம் வந்துவிட்டாள். ஆனால் மதில் சுவர் மிகவும் பெரிதாக இருந்தது. தாண்டி குதிக்க வழியே இல்லை. சுற்றிக் கொண்டு போனால் முன்பக்கம் தான் செல்ல வேண்டும். அவனிடம் மாட்டிக்கொள்ள நேரிடும். ‘கடவுளே! ஆண்டவா! ப்ளீஸ் எப்படியாவது ஹெல்ப் பண்ணுப்பா!’ - ஏதாவது வழி கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“யாரும்மா நீ? இங்க என்ன பண்ற?” - அதட்டியபடி அவளிடம் நெருங்கினான் ஒரு வாட்ச்மேன். அவனை தொடர்ந்து இன்னொருவனும் வந்தான். “என்ன பிரச்சனை?” - அந்தக் குரலை கேட்டதும் சர்வமும் ஒடுங்கிவிட்டது மிருதுளாவிற்கு, ‘அர்ஜுன்!’

அவனைப் பார்த்ததுமே வணக்கம் வைத்த வாட்ச்மேன், “எம்ப்ளாயீஸுக்கு மட்டும் தான் சார் இந்த பக்கம் பர்மிஷன். அதான் யாருன்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்” என்று விளக்கமும் கொடுத்தான்.

இறுகிய முகத்துடன் அவளை வெறித்துப் பார்த்தான் அர்ஜுன் ஹோத்ரா. அந்த பார்வையை எதிர்கொள்ளும் திராணியில்லாமல் உதட்டை கடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள் மிருதுளா. வியர்த்துக் கொட்டியது.. உள்ளங்கையெல்லாம் கூசியது.

“வா என்கூட..” - கட்டைளையிடும் தொனியில் கூறிவிட்டு முன்னோக்கி நடந்தான். விசையால் ஈர்க்கப்பட்டது போல் அவன் பின்னால் ஓடினாள் மிருதுளா.

காரில் வந்து அமர்ந்து வெகுநேரமாகியும் அவன் இஞ்சினை ஸ்டார்ட் செய்யவில்லை. ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி சிலை போல் அமர்ந்திருந்தான். உஸ்-புஸ்ஸென்று வேகமாக வெளியேறும் மூச்சுக்காற்றை தவிர அவனிடம் வேறு எந்த அசைவும் இல்லை.

மிருதுளாவி இதயம் எகிறி குதித்தது.. வயிறு கலங்கியது.. டேஷ்போர்டில் கிடந்த எம்ஆர்ஐ ரிப்போர்டை பார்த்தாள். இதை வாங்கத்தான் சென்றிருந்தானா! - எச்சிலை கூட்டி விழுங்கினாள்.

‘இனி எஸ்கேப் ஆகனும்ங்கற எண்ணமே வர கூடாது’ - பேஸ்மெண்டில் அர்ஜுன் எச்சரித்தது இப்போது அவள் செவிகளில் எதிரொலித்தது. கண்களில் கண்ணீர் கோர்த்தது.

“அவ்வளவு தைரியம்.. ம்ம்ம்?” - உள்ளடங்கிய குரலில் உறுமினான். மிருதுளாவின் உடல் நடுங்கியது.

“சாரி.. ப்ளீஸ்.. ஐம்.. சா.. சாரி..” - பிசிறுதட்டிய குரலில்

“தப்பிச்சு எங்க போகப்போற நீ? அனந்த்பூருக்கா?” - அதட்டினான். பதில் பேசும் அளவுக்கெல்லாம் அவளிடம் துணிவில்லை. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரை அவனிடமிருந்து மறைக்க முயன்று தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

“நிமிரு.. நிமிர்ந்து பாருன்னு சொல்றேன்ல..” - குரலை உயர்த்தினான். உடல் தூக்கிப்போட சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“அனந்த்பூர்ல யார் இருக்கா உனக்கு? ஃபேமிலி தான் இல்லைன்னு சொல்லிட்ட. பாய் ஃபிரண்ட் எவனாவது இருக்கானா?” - அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

மிருதுளா பதில் சொல்லவில்லை. எதை சொன்னால் அவனுடைய கோபம் குறையும் என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் தெரிந்த கள்ளத்தனம் தப்பாமல் அவன் கருத்தில் பதிந்தது.

ஓரிரு நொடிகள் அவளை வெறித்துப் பார்த்தவன், முழுமையாக அவள் பக்கம் திரும்பி, அவள் முகத்தை கைகளில் ஏந்தி இதழோடு இதழ் சேர்த்தான். ஆழமாக.. அழுத்தமாக.. முதலில் மிரட்சியில் விரிந்த அவள் விழிகள் பின் மெல்ல இமை மூடின. நொடிகள் நிமிடங்களாக மாறிய போது மெல்ல விலகினான் அர்ஜுன். அவனுடைய இழுப்பிற்கு இசைந்து, எதிர்ப்பற்ற நிலைக்கு சென்றுவிட்ட தன் பலவீனத்தை எண்ணி வெட்கி தலைகுனிந்தாள் மிருதுளா.

அவளுடைய கன்றி சிவந்த முகத்தை விழியகற்றாமல் பார்த்தவன், முகவாயில் கைக்கொடுத்து நிமிர்த்தி அவள் கண்களை சந்தித்து, “அப்படியே யாராவது இருந்தாலும் இந்த நிமிஷத்தோட மறந்துடு..” என்றான் அழுத்தமாக.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 19

மிருதுளாவின் பதட்டம் சற்றும் குறையவில்லை. என்ன காரியம் செய்துவிட்டான். அவளும் தன்னை மறந்து இசைந்துவிட்டாளே! ஒரு கொடியவனின் தீண்டலில் எப்படி மதி மயங்கினாள்! பதறி துடித்துக்கொண்டு அவனிடமிருந்து விலகியிருக்க வேண்டாமா? அந்த அளவுக்கா கட்டுப்பாடற்று போய்விட்டாள்! - அவமானத்தில் மனம் குன்றியது. அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க முடியாமல், வேடிக்கை பார்ப்பது போல் ஜன்னல் பக்கம் பார்வையை பதித்திருந்தாள்.

சாலையில் ஒரு கண்ணும் அவள் மீது மறு கண்ணும் வைத்தபடி காரை ஒட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன். மதிய உணவு வேளை நெருங்கிய போது, “பசிக்குதா? ஏதாவது சாப்பிடறியா?” என்றான்.

மிருதுளா பதில் சொல்லவில்லை.

அவன் வெறுக்கும் உதாசீனம் அவளிடம் நிறையவே இருக்கிறது என்பதை உணர்ந்து, “உன்கிட்டதான் பேசிட்டிருக்கேன்” என்று பல்லைக் கடித்தான்.

அப்போதும் அவள் வாய் திறக்கவில்லை. உண்மையில் அவள் அவனிடம் பேச சங்கடப்பட்டுத்தான் மெளனமாக இருந்தாள். அதை அலட்சியம் என்று புரிந்துக்கொண்ட அர்ஜுன் எரிச்சலுடன் காரை ஓரம்கட்டி நிறுத்தி, முரட்டுத்தனமாக அவள் கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பி, “டோன்ட் டெஸ்ட் மை பேஷண்ட்ஸ்” என்றான் கடுமையாக.

அவன் பிடியில் நசுங்கிய மிருதுளாவின் மென்கரத்தில், வலி எலும்பு வரை ஊடுருவியது. கண்களில் நீர் திரண்டது. “லீவ் மீ” - அவன் கையை எடுத்துவிட முயன்றாள்.

அப்போதும் அவள் தன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை என்பதை கவனித்தவன், “லுக் அட் மீ” என்றான் பிடியில் அழுத்தத்தைக் கூட்டி.

உடனடியாக அவன் பார்வையை சந்தித்தாள் மிருதுளா. வேறு வழி?

“பசிக்குதா?” - மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

“நோ” - உதட்டை கடித்துக் கொண்டு தலையை குறுக்காக ஆட்டினாள். அவளிடமிருந்து பதில் வந்த பிறகே பிடித்த பிடியை விட்டான் அர்ஜுன்.

அவன் இறுக்கிப் பிடித்த இடத்தை தேய்த்துவிட்டுக் கொண்ட மிருதுளா, சீட்டின் மறுபக்கத்தில் ஓரமாக ஒடுங்கினாள். அவனிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் விலகிவிட துடித்தது அவள் உள்ளம். தொண்டையில் அடைத்து நின்ற ஆத்திரத்தை உள்ளேயே விழுங்கிக் கொண்டாள்.

அவளுடைய விலகளையும், அவள் மறைக்க முயலும் கண்ணீரையும் சில நொடிகள் வெறுப்புடன் பார்த்த அர்ஜுன் வேறெதுவும் சொல்லாமல் காரை கிளப்பினான். அடுத்த சில நிமிடங்களில் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நல்ல உணவு விடுதியில் காரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு, “இறங்கு” என்றான்.

மறு பேச்சில்லாமல் கீழே இறங்கினாள் மிருதுளா. காலியாக இருந்த ஒரு மேஜையில் இருவரும் வந்து அமர்ந்தார்கள்.

“என்ன வேணும்?” - அர்ஜுன்.

“காபி” - அவளை வெறித்துப் பார்த்தவன், வெயிட்டரிடம் மதிய உணவை கொண்டுவர சொன்னான். அவளுக்கு மட்டும் தான் ஆர்டர் செய்தான். அவன் நீர் கூட அருந்தவில்லை. அவளுக்கு தேவையானதை எடுத்து தட்டில் பரிமாறி சாப்பிடச் சொன்னான். அவனை எதிரில் வைத்துக்கொண்டு அவளுக்கு ஒரு வாய் கூட இறங்கவில்லை. வெகுவாய் சிரமப்பட்டாள்.

“என்ன ஆச்சு? பிடிக்கலையா?”

“இல்ல.. போதும்..” - முணுமுணுத்தாள். அதற்கு மேல் அவன் அவளை கட்டாயப்படுத்தவில்லை. தட்டில் இருப்பதை மட்டும் உண்டு முடிக்கும் படி கூறிவிட்டு மீதமிருந்ததை பேக் செய்ய சொன்னான்.

மிருதுளா தட்டில் இருந்த உணவை முடித்ததும், காபி ஆர்டர் செய்தான். அதுதான் அவளுக்கு தேவையாக இருந்தது. சந்தோஷமாக எடுத்துப் பருகினாள். உணவிற்காக கட்டணத்தை செலுத்தும் போது, பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்து அதிலிருந்து சில நோட்டுக்களை உருவி பில்லோடு வைத்தான்.

மிருதுளாவின் புருவம் சுருங்கியது. ‘கார்ட்ல பே பண்ண மாட்டானா!’ - ஆச்சரியமாக பார்த்தாள். ‘இவ்வளவு பணத்தை பாக்கெட்ல வச்சுக்கிட்டு சுத்துறான்! மிஸ் ஆயிட்டா என்ன செய்வான்! அதுசரி.. இவனே ஒரு கேடி.. இவன்கிட்டேருந்து பணத்தை அடிக்க இந்த ஊர்ல எவன் இருக்கான்!’ - நக்கலாக நினைத்தபடி காபியை குடித்து முடித்தாள்.

பேக் செய்ய சொல்லியிருந்த உணவு கவரை வெயிட்டர் கொண்டு வந்து கொடுத்தான். அதை கையில் எடுத்துக் கொண்டு, “கிளம்பலாம்” என்றான். இருவரும் வெளியே வந்தார்கள். சாலையோரம் மர நிழலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரிடம் அந்த கவரை கொடுத்துவிட்டு காரில் வந்து ஏறினான். வியந்த பார்வையுடன் அவனை பின் தொடர்ந்தாள் மிருதுளா.

அவனை சந்தித்த நாளிலிருந்து இன்று தான் அவனிடம் ஒரு நல்ல பண்பை பார்க்கிறாள் மிருதுளா. ஆனால் அதுவும் நடிப்புதான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் ஏன் இந்த நடிப்பு என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. அவளிடம் தன்னை நல்லவனாக காட்டிக்கொண்டு எதை சாதிக்கப் பார்க்கிறான்! அவளிடமிருந்து எதை வேண்டுமானாலும் வலுக்கட்டாயமாக பறித்துக்கொள்ளும் சக்தி அவனிடம் இருக்கிறது. இருந்தும் அவளை கவர வேண்டும் என்று ஏன் நினைக்கிறான்! இயல்புக்கு மாறான அவனுடைய செயல்கள் அவளை குழப்பின. மெளனமாக அமர்ந்திருந்தாள். சற்று நேர பயணத்திற்குப் பிறகு அவளிடம் பேச்சு கொடுத்தான் அர்ஜுன் ஹோத்ரா.

அவளுடைய பெற்றோரைப் பற்றி விசாரித்தான். விபரம் தெரிந்ததிலிருந்து பார்த்ததே இல்லை என்று பச்சை பொய் சொன்னாள். யாரிடம் வளர்ந்தாள் என்று கேட்டான். பாட்டியிடம் வளர்ந்ததாகவும், அந்தப் பாட்டியும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதாகவும் அவிழ்த்துவிட்டாள். எதிர்கால பாதுகாப்புக்கு வீடு சொத்து என்று ஏதேனும் இருக்கிறதா என்றான். அடுத்த மாத ஹாஸ்ட்டல் வாடகையே ஹாஸ்ப்பிட்டல் கொடுக்கும் சம்பள பணத்தில் தான் கொடுக்க வேண்டும் என்றாள். படித்த பள்ளி, கல்லூரி, நட்பு வட்டம் என்று எதையும் விடாமல் விசாரித்தான். அசராமல் அனைத்திற்கும் பொய்யை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

பேசிக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாளிகை வளாகத்திற்குள் கார் நுழைந்தது. கையில் துப்பாக்கியுடன் நின்றுக் கொண்டிருந்தார்கள் செக்யூரிட்டி கார்ட்ஸ்.

‘இத்தனை துப்பாக்கிக்கு லைசன்ஸ் வாங்கியிருக்கானா! இல்லன்னா எல்லாம் கள்ள துப்பாக்கியா!’ - மிருதுளாவின் கண்கள் பாதுகாவலர்களை அளந்தது.

கார் மாளிகை வாயிலில் வந்து நின்ற போது, எம்ஆர்ஐ ரிப்போர்ட்டை எடுத்து அவளிடம் கொடுத்து, “உனக்கு எந்த பிரச்சனையையும் இல்ல.. யு ஆர் ஆல்ரைட்” என்றான்.

அப்போதுதான் தான் ஒரு மெடிக்கல் செக்கப்பிற்கு சென்றோம் என்பதே அவளுக்கு உரைத்தது. எப்படியோ.. எந்தப் பிரச்சனையும் இல்லை என்று ரிப்போர்ட் வந்துவிட்டது.

இவனிடம் மாட்டிக் கொண்டிருப்பதே பெரிய ஆபத்து.. இதில் இன்னொரு ஆபத்தும் சேர்ந்துகொள்ளாமல் போனதே.. தேங்க் காட்.. - கடவுளுக்கு நன்றி கூறியபடி கீழே இறங்கினாள்.

பாதுகாப்பு பணியில் இருந்த கார்ட் ஒருவன் அர்ஜுனிடம் நெருங்கி ஏதோ காதில் முணுமுணுத்தான். சட்டென்று அவன் முகத்தில் ஓர் இறுக்கம் தோன்றி மறைந்ததை கவனித்தாள் மிருதுளா. ‘என்னவா இருக்கும்!’ - தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் தலை தூக்கியது. அப்போதுதான் மாளிகைக்குள்ளேயிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார்.

பெரிய மீசை வைத்திருந்தார். தாடி பாதி நிறைத்திருந்தது. முகத்தில் அதீத இறுக்கம். அவர் சிரித்தே ஆண்டு கணக்கில் ஆகியிருக்கும் போல் தோன்றியது. சிவந்திருந்த கண்களில் ஏதிர்மறை உணர்வு விரவியிருத்தது. அவரை தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே மிருதுளாவின் உடலில் குளிர் பரவியது.

அதற்கு தகுந்தாற்போல் அவரும் அவளை தலை முதல் கால் வரை பார்த்தபடியே தான் அர்ஜுனிடம் நெருங்கினார்.

இனம் புரியாத பயம் அவளுக்குள் பரவியது. ஈவில் லுக் என்பார்களே.. அப்படி ஒரு துஷ்ட பார்வையைத்தான் அவர் மிருதுளாவின் மீது வீசினார். அவள் உடல் நடுங்கியது.

அவருடைய உருட்டல் மிரட்டலெல்லாம் அர்ஜுனை பாதிக்கவில்லை போலும். அவன் சாதாரணமாகத்தான் இருந்தான்.

“யார் இது?” - மிருதுளாவை பார்த்தபடி அர்ஜுனிடம் அவர் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

அவருடைய கேள்விக்கு பதில் சொல்வதை தாமதித்து அவளிடம் திரும்பினான் அர்ஜுன். அவளுடைய அச்சத்தை உணர்ந்து, “ஒன்னும் இல்ல.. உள்ள போ” என்றான் அவள் கை மீது கை வைத்து. அவனுடைய பார்வையும் அவன் பேசிய விதமும், மிருதுளாவின் மீது அவனுக்கு இருக்கும் அக்கறையை உரக்கக் கூறியது.

ஆமோதிப்பாக தலையை அசைத்துவிட்டு, அந்த புது மனிதரின் கோரப் பார்வையை மீண்டும் ஒரு முறை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றாள் மிருதுளா.

“உள்ள போய் பேசலாம் அங்கிள்” - அர்ஜுனின் தேய்ந்த குரல் தூரத்தில் கேட்டது.

மிருதுளா தன்னுடைய அறைக்கு வந்த போது அங்கே வேலைக்கார பெண் ஒருத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தாள். இவளை பார்த்ததும், “உங்க ரூமை மாடிக்கு மாத்தியாச்சு மேம்” என்றாள்.

‘மேம்!’ - திடீர் மரியாதையில் புருவம் உயர்த்திய மிருதுளா, “மாடிக்கா! என்ன திடீர்ன்னு?” என்றாள் குழப்பத்துடன்.

“தெரியல மேம். அர்ஜுன் சார் போன்ல சொன்னதா பானு தீதீ சொன்னாங்க. அதான் உங்க சாமானையெல்லாம் மேல கொண்டு போய் வச்சிட்டு இந்த ரூமை சுத்தம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.”

மிருதுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘எப்போது ரூமை மாற்றும்படி போனில் சொன்னான்! காரில் அத்துமீறினானே.. அதற்கு முன்பா அல்லது பின்பா? இன்னும் அதிகமாக நம்மிடம் நெருங்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறானா! - கடவுளே! இங்கு ஒரு நாள்... ஒரு பொழுது கூட நிம்மதியாக இருக்க முடியாது போலிருக்கிறதே!’ - தளர்ந்து கட்டிலில் அமர்ந்தாள்.

“மடியில எந்த ரூம்?”

“வலது பக்கம் இரண்டாவது ரூம் மேம்.”

‘அவனோட ரூமுக்கு பக்கத்து ரூம்!’ - அவளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அவனுடைய இச்சைக்கு அவளை பலியாக்க பார்க்கிறான். பாவி! - குமுறினாள். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம்! இந்த சூழலிலிருந்து எப்படி மீளப் போகிறோம். அவள் உள்ளம் கலங்கியது.

“மேம்.. சுத்தம் செய்யனும். பானு தீதீ வந்தாங்கன்னா என்னைய சத்தம் போடுவாங்க” - அவளை அந்த அறையிலிருந்து வெளியேறும்படி நாசுக்காகக் கூறினாள்.

அதற்கு மேலும் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் வெளியே வந்தாள் மிருதுளா. அன்று வழக்கத்தைவிட அதிகமாக வீடு முழுக்க ஆட்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அதில் பலர் புது முகமாக இருந்தார்கள். அவள் தன்னந்தனியாக நட்டநடு ஹாலில் சிலை போல் நிற்கும் போது அவர்களுடைய பார்வை அவள் மீது விழத்தானே செய்யும். மிகவும் சங்கடமாக உணர்ந்தாள். வேறு வழியே இல்லாமல் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளை மாடிக்கு தள்ளியது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
அத்தியாயம் 20

ராகேஷ் சுக்லா - கோர்த்தாவின் இன்றைய தலைவர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அர்ஜுன் ஹோத்ராவை சந்திக்க அவனுடைய வீட்டிற்கே வந்திருந்தார். அவருடைய இந்த திடீர் வரவை அர்ஜுன் விரும்பவில்லை. ஆனால் அதை அவரிடம் அவன் காட்டிக்கொள்ளவும் இல்லை.

“எப்ப வந்தீங்க? சொல்லியிருந்தா வெளியே போகாம வெயிட் பண்ணியிருந்திருப்பேனே?” - உபச்சாரமாக கூறினான்.

“இடியும் மின்னலும் சொல்லிட்டா வரும். வரனும்னு தோணிச்சுன்னா வர வேண்டியதுதான்” - அவருடைய அடர்ந்த மீசைக்குள் ஒளிந்திருந்த உதடுகள் மேல் நோக்கி வளைந்தன.

அவருடைய அதிகாரத்தை புறந்தள்ளி, “ஆல்ரைட்.. ஹாட் ஆர் கோல்டு? என்ன கொண்டு வர சொல்லட்டும்?" என்றான் இன்டர்காமை கையிலெடுத்தபடி.

“நா வந்து இரண்டு மணி நேரம் ஆச்சுப்பா.. வரவேற்பையெல்லாம் உன்னோட செக்ரெட்டரி முடிச்சுட்டான்” என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.

“நாட் மை மிஸ்டேக். ஸ்டில்.. ஐம் சாரி ஃபார் மை ஆப்சென்ஸ். சொல்லுங்க அங்கிள்.. எனிதிங் சீரியஸ்?”

“அந்தப் பொண்ணு மேல உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்க மாதிரி தெரியுதே! சீரியஸ் ரிலேஷன்ஷிப்பா இல்ல ஜஸ்ட் டெம்ப்ரவரிதானா?” - இறுகிய குரலில் கேட்டார்.

“ரிலேஷன்ஷிப்பா! ஹா..” - நக்கலாக சிரித்தான் அர்ஜுன் ஹோத்ரா.

சட்டென்று அவர் முகம் பிரகாசமானது. மனதில் பொங்கும் மகிழ்ச்சியை அவர் முகத்தில் காண முடிந்தது. ஓரிரு நொடிகள் தான்.. அதற்குள் மீண்டும் புருவம் சுருங்கி முகம் இறுகியது.

“வேற மாதிரி கேள்விப்பட்டேனே!” என்றார் அவனை சந்தேகமாகப் பார்த்து.

அவன் சிரித்தான் “என்னை ஸ்பை பண்ண இன்னும் கொஞ்சம் பெட்டரான ஆளை ரெடி பண்ணுங்க” என்றான்.

“நோ நோ.. அப்படியெல்லாம் யாரும் இல்லப்பா” என்று மறுத்தார்.

அவன் அதற்கும் சிரித்தான். அவருடைய இடத்தில் இவனே ஆள் வைத்திருக்கும் போது, அவருடைய ஆள் இங்கு இல்லை என்கிற கூற்றை நம்பிவிடுவானா என்ன!

“ஏன் இப்படி சிரிக்கிற? என்னோட ஆள் உன்கிட்ட இல்ல. எனக்கு அடுத்து நீதான் கோர்த்தாவோட தலைவன். உன்னை ஏன் நா வேவு பார்க்க போறேன். நீ கோர்த்தாவுக்கு எதிரா என்ன செஞ்சாலும் அது உனக்கே செய்றமாதிரி தானே?” - நம்பிக்கைக்குரிய வகையில் அவர் பேசினாலும் அவரை நூல் நுனியளவும் அவன் நம்பவில்லை. இது நிழல் உலகம்! நிழலைக் கூட சந்தேகிக்கும் உலகம்!

“ஐ நோ..” - அவருடைய கூற்றை ஆமோதிப்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

“சரி சொல்லு. அந்தப் பொண்ண ரொம்ப ப்ரொட்டெக்ட்டிவா பார்த்துக்கற போலிருக்கே! இன்ட்ரெஸ்ட் இல்லாம எப்படி?”

“நாம பிசினஸ் பண்ணறோம்.. உலகத்துக்கு காமிக்கற பிசினஸ் வேற.. உண்மையிலேயே நாம பண்ணற பிசினஸ் வேற..” - கபடமாக புன்னகைத்தான்.

“யு மீன்..?” - ராகேஷ் சுக்லாவின் புருவம் சுருங்கியது.

“எக்ஸாக்ட்லி..” - அவருடைய கணிப்பை உறுதி செய்தான்.

“இது வெறும் பிசினஸ் தானா? அவகிட்ட உனக்கு எந்த எமோஷன்ஸும் இல்லையா?” - அவனுடைய கூற்றை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் தெளிவாகவே கேட்டார்.

“எமோஷன்ஸுன்னா வீக்னஸ். அது என்கிட்ட நெருங்க முடியாது” - உறுதியாகக் கூறினான்.

மெச்சுதலுடன் அவனைப் பார்த்து மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார். பிறகு அவன் தோளை தட்டிக்கொடுத்து, “கெட் மீ சம்திங் ஹாட்” என்றார்.

சின்ன புன்னகையுடன் இன்டர்காமை எடுத்தான் அர்ஜுன் ஹோத்ரா. அடுத்த சில நிமிடங்களில் அவனுடைய அலுவலறைக்கு அவருக்குப் பிடித்தமான மதுபானங்கள் வந்து சேர்ந்தன.

“உன்ன பத்தி நல்லா தெரிஞ்சும் மிஸ்ஜட்ஜ் பண்ணிட்டேன்” என்றார் வருத்தத்துடன்.

“நோ ப்ராப்லம்” - அதை பொருட்படுத்தாமல், கிளாஸை உயர்த்தினான். இருவரும், “சியேர்ஸ்..” செய்து கொண்டு மது அருந்தினார்கள்.

“பட்டேல் மேட்டருக்கும் இந்த பொண்ணுக்கும் ஏதாவது சம்மந்தம்?”

“நோ..” - அவர் முடிப்பதற்குள் உறுதியாக மறுத்தான்.

“ம்ம்ம்.. ஓகே..” - சிந்தனையுடன் தலையை மேலும் கீழும் அசைத்தவர், “டெல்லி ட்ரிப் பத்தி உன்னோட பிளான் ரொம்ப க்ளீனா இருந்தது. டீம் ரெடி பண்ணிட்டியா?” என்று அடுத்த விஷயத்திற்கு தாவினார்.

“எஸ்.. ஆல் செட்”

“நைட்ல நிம்மதியா கண்ணை மூட முடியல. ஐ ஜஸ்ட் நீட் தட் ப்ளடி நாயக்ஸ் ப்ளட்” - வெறியில் பளபளக்கும் கண்களுடன், பாட்டிலில் இருந்த சிகப்பு வொயினை கிளாசில் ஊற்றி அதையே நாயக் குடும்பத்தின் ரத்தமாக பாவித்து தொண்டையில் சரித்தார். அவருடைய கொதிப்பு அடங்கவில்லை.

“சீக்கிரமே அந்த சூடான திரவத்தை உங்க கிளாசுக்கு கொண்டு வருவேன்” - பெரும் சூறாவளியை உள்ளடக்கிக் கொண்டு, அமைதியாக அவர் கிளாசில் இன்னொரு பெக் ரெட் வொயினை ஊற்றினான் அர்ஜுன் ஹோத்ரா.

**********************

அதே நேரத்தில் உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஸ்ரீ ரிஷிமகான் ஆசிரமத்திற்குள் பிரவேசித்த பகவான், ஒரு துண்டு சீட்டை அங்கிருக்கும் பணியாள் ஒருவன் கையில் திணித்தார். அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவன் சற்று நேரத்தில் திரும்பி வந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

“எனிதிங் சீரியஸ்?” - காவி உடையில் அவர் எதிரில் தோன்றினான் ஜெனார்த் நாயக். ஆம்.. அடிக்கடி இடமாறிக்கொண்டே இருக்கும் ஜெனார்த்தின் தற்போதை இருப்பிடம் இந்த ஆசிரமம் தான்.

“ஆபரேஷன் கன்ஃபார்ம். இந்த மாசம் இருபத்தியஞ்சாம் தேதி.. ஹோட்டல் அன்தாஸ்.. ரூம் நம்பர் 302..” - குறிப்பாக கூறினார் பகவான்.

ஜெனார்த் அவரை இமைக்காமல் பார்த்தான். ஜெகன் நாயக் காலத்திலிருந்தே கோர்த்தா ப்ளாக்கை முற்றிலும் வழி நடத்தும் மூத்த தளபதி. தலைமை பொறுப்பில் ஜெகன் இருந்தாலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை முற்றிலும் பெற்றிருந்தவர்.. ஜெகன் நாயக்கின் நட்பை சம்பாதித்தவர்.. நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.

நியாயமான நம்பிக்கை தான். அனைத்தையும் இழந்தப் பிறகும், சிறிதும் மனம் தளராமல், சர்வபலம் பொருந்திய கோர்த்தா ஒயிடின் ஆணிவேரை பிடுங்க ஆயத்தமாகி நிற்கிறாரே இந்த மூத்த மனிதர்! - அவனுடைய பார்வையில் வியப்பு கூடியது.

“கூட பாதுகாப்புக்கு எத்தனை பேர் வர்றாங்க?” என்றான் ஜெனார்த் நாயக்.

“சுக்லா வர்ற பிளைட்ல கார்ட்ஸ் யாரும் வரல.. மூணு மணி நேரம் கழிச்சு அடுத்த பிளைட்ல தான் வர்றாங்க.”

“விசித்திரமா இருக்கு! நமக்கான ட்ராப்பா இருக்கப் போகுது” - எச்சரித்தான் ஜெனார்த்.

“இல்ல.. டிக்கெட் ப்ராப்லம்”

“இன்பர்மேஷன் உண்மையா?”

“நூறு சதம்”

“அப்போ அந்த மூணு மணி நேரம் தான் நமக்கு கிடைக்கிற கோல்டன் டைம்.”

“கரெக்ட்.. ஏர்போர்ட்லிருந்து ஹோட்டல் வரைக்கும் லோக்கல் செக்யூரிட்டி கார்ட்ஸ் கூட இருப்பாங்க.”

“அப்போ ரூம்ல வச்சு முடிப்போம்.”

“பால்கனி இல்லாத ரூம். மெயின் டோர் வழியா மட்டும்தான் உள்ள போக முடியும்.”

“செக்யூரிட்டி கேமிராவை ஹேக் பண்ணிட்டு உள்ள உள்ள நுழைஞ்சிடலாம்.”

“டோர்ல இருக்கறது டிஜிட்டல் லாக்.. ரீப்ரோக்ராம் பண்ணினாதான் கதவை திறக்க முடியும்.”

“அதுக்கான ஸ்பெஷலிஸ்டை ஹயர் பண்ணுங்க.”

“பண்ணியாச்சு” - பகவானின் கூற்றை கேட்டு அவரை பெருமிதத்துடன் பார்த்தான் ஜெனார்த்.

“அப்போ டீம் ரெடியாயிடிச்சு ரைட்?”

“ரைட்” - ஆமோதிப்பாக தலையை அசைத்தார்.

“தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. இந்த ஆபரேஷனோட வெற்றி தான் என்னோட தூக்கம்” - ஜெனார்த் நாயக்கின் குரலில் துக்கமும் கோபமும் விரவியிருந்தது.

அவன் தோளை தட்டிக் கொடுத்தார் பகவான். “ராகேஷ் சுக்லா செத்துட்டாங்கற செய்தியோட வந்து உன்ன தாலாட்டுறேன்.. அதுவரைக்கும் அமைதியா இரு” - ஜெனார்த் நாயக்கின் பாரத்தை தன் தோள் மீது சுமந்துக் கொண்டு மலை போல் நிமிர்ந்து நின்றார்.
 
Top Bottom