Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
நந்தா உன்னை அப்பாவிநு நினசா நீ ஏதோ கோவத்தில் ஏடா கூடமா செய்து இருக்க போலவே.... உன்னோட இன்ஸெகூரிட்டி தான் நடந்த நடக்குற எல்லாம் நிகல்வுகளுக்கும் காரணம்..... இத்தனை வருஷம் பையந உரிமை கொண்டாதவுங்க இப்படி எப்படி உரிமை கொண்டாடுவாங்க.... அதை யோசிக்கவே இல்ல தானே நீ... சஞ்சனா மேல உனக்கு காதலை விட உரிமை தான் அதிகமாக இருந்து இருக்கு....
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
....நந்தா அப்போ செய்தது தான் முட்டாள் தனம் ஆனா இப்போ செயுற பாத்தியா அது இன்னும் அதிகம்.... உன்னை வளர்த்த உன்னோட அப்பா அம்மா க்கு நீ செயுறது சரியா
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
திக்கு திக்குனு இருக்கு.... அச்சோ ஏன் பொண்ணுக்கு நான் முத்தம் கொடுதுட்டு தான் போவேன் சொல்லும் பொது கடவுளே ஏன் இப்படினு இருந்துச்சு
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
ரொம்ப ரொம்ப அருமையா இருந்துச்சு..... நிறைய சொல்லணும் இப்போ லேட் நைட் ஆகிடுச்சு அதோட கதையை முடிச்சா அந்த பீல் அதோட தூங்க போறேன்


ஒரே ஒரு சந்தேகம் ஹரிஹரன் அவரோட லவ் ஸ்டோரி பாதியிலே நிறுதிட்டார் அதோட அவர் செய்த எந்த செயலுக்கு எதிர் விளைவு என்ன நடந்துச்சு.....
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
குட் மோர்னிங் வத்சலா மேம் ..... என்ன சொல்ல எப்படி சொல்ல கௌதம் பத்தி...
பொதுவா இப்போ நெகட்டிவ் ஹீரோ கிரேஸ் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு அவனை ரசிக்கிற மனப்பான்மை வந்துடுச்சு பொண்ணை கொடுமை பண்ணி சித்திரவதை செய்து கடைசியில் அதுக்கு ஒரு காரணம் சொல்லி இது எல்லாம் செய்தது உன் மேல உள்ள காதலா தான் அப்படினு விளக்கம் சொல்லுற ஆளை பிடிக்க ஆரம்பிச்சிடுசே நம்ம ஏன் இப்படி ஆகிடோம்நு சில நேரம் கவலையா கூட நினைச்சி இருக்கேன்.... நாவல் அதிகம் படிச்சி மண்டை தேவையில்லாத விஷயத்தை கூட ரசிக்க தோனுதேனு கவலை பட்டு இருக்கேன்....

அதுக்கு எல்லாம் விளக்கமாக கௌதம் வந்துட்டார்.... யெஸ் இப்படி ஒரு ஆள ரசிக்கலாம் தப்பே இல்ல... what a man you are?....

கௌதம் சித்தார்த் தன்னோட பேரையே சொல்லுற விதம்

ஸோ

செக் அண்ட் மேட்

உள்ள எரிமலையே எரிந்தாலும் வெளியே புன்னகை

பேன்ட் பாக்கெட்ல கட்டை விரலை விட்டு நடக்குற ஸ்டைல்

ஒருத்தர் கிட்ட பேசும் போதே அவுங்களோட அடுத்த மூவ் பத்தி யோசிக்கிற சதுரங்க புத்தி

ஏ‌சி சர் னு சுரேந்தர் கிட்ட பேசுற விதம்

லவ் யு சஞ்சனா

என் மகளுக்கு முத்தம் கொடுத்தே ஆகும்னு நிக்கிற பிடிவாதம்

எல்லதுக்கும் மேல மெஸ்மரைஸ் பண்ணுற வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா பாட்டு

இப்படி ஒரு சம்பவம் நடந்தா என்ன ஒரு மனுசனும் ஆண்டி ஹீரோ அவதாரம் எடுக்க தான் செய்வான் அப்போ நம்ம கௌதம் எடுததிலும் தப்பு இல்லையே.....

கங்க்ராட்ஸ் மேம் .....
 

Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
#நீ_அறியாயோ_முகிலினmae

இது தான் நான் படிக்கும் இவங்களின் முதல் கதை...

எனக்கு ரொம்ப பிடிச்சது கதை.. கௌதம் சித்தார்த், அதை அவன் சொல்றதே👌👌👌 எனக்கு இவனை மென்மையான ஒருத்தனா தான் தோணுச்சு.. அவனையும் வன்மையாக மாத்துது விதி!!!

ஒருவனின் சிரிப்பை பார்த்து கடுப்பாகி அவனை கொலை பண்ணுறான்.. என்னாது😳😳😳 சிரிப்புக்கு கொலையா? இது கடைசிவரை என்னோடு பயணித்த கேள்வி...

நந்தன், அவனின் போலீஸ் நண்பன் சுரேந்திரன், அவனின் இறப்பில் நம்பிக்கை இல்லாது தேட, கௌதம் சித்தார்த்தை கண்டும் பிடிக்கிறான்.. ஆனாலும் ஒண்ணுமே பண்ண முடியலை...

சுரேன் உண்மையான நண்பன்... அவனின் ஒவ்வொரு முயற்சியும், அதில் அவன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை என்ற நிலையும், கௌதம் சித்தார்த் அண்ட் சுரேன் இருவரின் ஆட்டம் சூப்பர்.. சுரேன் அவனை அவ்வளவு பிடிச்சது... அவன் நட்புக்கான, நல்ல மனதுக்கான மரியாதை👌👌👌செம்ம. கௌதம் சித்தார்த்தின் ஒவ்வொரு மூவும், wow very smart🥰🥰

கௌதம் சித்தார்த் சதுரங்க வீரன், நல்லாவே கணிக்கிறான்... அவனின் தேவதை பெண் சஞ்சனா, அவளுக்காக தான் கொலைக்கடத்தலா? என சுரேன் நம்மளை நினைக்கவும் வச்சுடறான்😊😊😊

சஞ்சனா, நந்தா connected ஆக இருக்க, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத நந்தாக்கு ஏன் இந்த நிலை? உண்மை தெரிந்தால் சஞ்சு என்ன செய்வாள்? சஞ்சுவின் மனதில் இடம் யாருக்கு? சுரேனுக்கு வெற்றி கிட்டுமா? எல்லாம் கதையில் படிச்சுக்கோங்க dears....

சரஸ்வதி, மகனை வளர்த்த விதம் வெகு அருமை.. அவரை கொண்டு அவர் மகனை எடைபோடும் அளவு அவனின் செயல்கள்👏👏👏 முகில்களுக்கும், கௌதம் சித்தார்த்துக்குமான அந்த பந்தம் சூப்பர்🥰🥰🥰 கடைசி வரை அவன் எதையும் மாற்றவே இல்லை, அது எனக்கு ரொம்ப பிடிச்சது🥰🥰🥰

ரங்கராஜன் இவரின் திறமை, சக்தி😱😱😱 எல்லாம் தெரிந்தும் கூட, நடந்ததின் பலன் கண்டிப்பா எவரொருவரும் அனுபவித்தே ஆகனும் என்ற நிலையில் அமைதி காப்பது👌👌👌

ஹரிஹரன் அப்பா பேச்சுக்கு என்ன ஒரு மரியாதை.. எப்படிபட்ட நிலையிலும் அதை ஏத்துக்கிறார்.. that's great...

சஞ்சு🥰🥰🥰 இவளை கதையில் படிச்சு ரசிக்கிறது தான் நல்லா இருக்கும்... இவளோட காதலும், சரஸ்வதி மீதான பாசமும் சூப்பர்ப்... அத்தை மீதான பாசத்தில் தான் மனதை வெளி சொல்லாது இருப்பது, கௌதமை லவ் யூ கௌதம் சொல்லியே அவன் மனநிலை மாற்றுவது, தன் நிலையையும் சொல்லுவது எல்லாம் வெகு அருமை... ஜஸ்ட் loved her character... தாத்தாவின் பேச்சுக்கு குடுக்கும் மரியாதையும், இருவரையும் சேதாரம் இல்லாமல் மீட்டெடுக்க நினைப்பதும்.அருமை...

அவனுக்கு கிடைத்த தண்டனை பாவமா இருந்தது, அதுவும் இருட்டுக்கு பழகலை, பழகிடும் இனி சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.. அன்று அவன் உதவி இருந்தால் இன்று அவனுக்கு இந்த நிலை இல்லை... தனது சந்தேகங்களை தாயிடம் பேசி இருந்தாலும இந்த நிலை இல்லை.. தான் இடம் பறி போய் விடுமோ என்ற நிலையில் பயத்தில் அவன் செய்த தவறு, தெரியாது நடந்ததை இவன் ஒரு உதவி கூட செய்யாது தப்பாக்கிட்டான்...

வெண்ணிலவே வெண்ணிலவே பாடல், நடனம், கெஸ்ட் ஹவுஸ் உரையாடல்கள் எல்லாம் எனக்கு பிடிச்ச விசயங்கள்...

Congratulations 💐💐💐 வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
என்ன சொல்லனு தெரில கௌதமோட மகள் மேலான அன்பை..கண்ணீரோட ரசித்துப் படிச்சேன் இந்த நிறைவுப்பகுதியை..சிஸ் கௌதம் சித்தார்த்,அவன் மகள் அன்பை இன்னும் நிறைய பார்ட் 2வில் எதிர்பார்க்கலமா??பூக்கடைக்காரரையும்,அப்பா இல்லனு சொன்ன குழந்தையையும் எந்த இடத்துல கொண்டுவந்து லிங்க் பண்ணுவீங்கனு பார்த்துட்டே இருந்தேன்..அந்த சீன்ம் வந்துருச்சு..சஞ்சனா சதுரங்க வீரனோட தேவதை தான்..சுரேந்தர்ட நண்பனா இருக்கக் கேட்டது அவ்ளோ புடிச்சது..சுரேந்தர் தகுதியுடையவனே கௌதம் சித்தார்த்தின் நட்பிற்கு..நந்தாவிற்கு சித்துவின் முகிலினத்தோழிகளே தண்டனையை அளித்துவிட்டனவோ..நந்தா நீலகண்டன்,வரலட்சுமியின் அன்பை இப்பொழுதாவது புரிந்து கொண்டான்..தாத்தா செம..சிறந்த நட்பிற்கு சுரேந்தர் என்றால் சிறந்த மகன்,காதலன்,கணவன்,தகப்பனுக்கு நமது சதுரங்க வீரன் கௌதம் சித்தார்த்:cool::cool::cool: :love: :love: :love:..வெற்றி பெற வாழ்த்துக்கள் மா💐💐💐💐💐
ஹப்பா.. கதை முழுவதும் கூடவே வந்து கருத்து சொல்லி ஊக்கப் படுத்தி இப்போ முதல் கருத்தையும் போட்டுடீங்க தர்ஷினி. உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்ல ன்னு தெரியலை. இந்த கமெண்ட் டும் அவ்வளவு அழகு. பூக்கடைக்காரர் தான் மெயின் கேம் சேன்ஜர். அவரை விட முடியுமா? கடைசியிலே கொண்டு வந்து சேர்த்துட்டோம் இல்ல? அதே போல சுரேந்தர் நட்புக்கும் ஒரு அங்கீகாரம் கொடுக்கணும் ன்னு தோணிச்சு. அதையும் ரசிச்சு இருக்கீங்க. அத்தனை நிறைவான உணர்வு கொடுக்குது மா உங்க கமென்ட். இரண்டாவது பாகம் எழுதினா இதோட அழகு போயிடும் அப்படின்னு ஒரு பயம் உண்டு எனக்கு. அதனாலே இப்போதைக்கு அப்படி ஒரு ஐடியா இல்லை. பார்க்கலாம். மனம் நிறைந்த நன்றிகள் மா. God bless u 😍😍😍😍😍😍
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அருமையான முடிவு வத்சலா.. மகள் என்னும் தேவதையின் வரவு, கௌதம் மனதில் இருந்த பழி உணர்ச்சியைக் குறைத்து , நந்தாவின் தப்பிற்கு தண்டனை தராமல் விட விட்டது. ஆழமான நட்பின் இலக்கணம் சுரேந்தர். கௌதம் அப்படி ஒரு நட்பைக் கேட்டுப் பெற்றதில் தவறே இல்லை. சஞ்சனாவின் காதலும், கௌதம் தாய் சரஸ்வதியின் ஆசிகளும், தாத்தாவின் எண்ணங்களும் கௌதமை மாற்றி , அவனின் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே கிடைக்க நிலைக்க வைத்து இருக்கிறது. வத்சலா வின் மேஜிக் வரிகளில் கதையின் சுப முடிவு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் வத்சலா 😍 😍 💐💐💐
தேவி உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு புரியலை. இந்த போட்டியை பற்றி முதலில் எனக்கு சொன்னதே நீங்கதான். கண்டிப்பா எழுதுங்க ன்னு சொல்லி தலைப்பு லே ஆரம்பிச்சு எல்லாத்திலேயும் கூடவே நின்னு ஊக்கப் படுத்தி இருக்கீங்க..ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நான் போடும் மீம் முதற்கொண்டு ரசிச்சு ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. நான் இந்த கதையை இவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு உங்க சப்போர்ட் ஒரு மிகப் பெரிய காரணம். Thank you so much 😍😍😍😍😍😍 God bless u
 
Last edited:

Marlimalkhan

Member
Messages
37
Reaction score
35
Points
18
Semma ma... Anti hero sonnenga bt endha idathulam gowtham a apadi ninIka mudiyala kandipa avan seyalkaluku pinna di oru niyayam irukumnu thonuchu... Wow great ma enna feel semmaya irundhadhu ma.... So, gowtham siddharth ,,the great gynecologist apdi solrathelam vera level semma ma... 😍😍😍😍😍
 
Top Bottom