Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நீ அறியாயோ முகிலினமே! - Tamil Novel

Status
Not open for further replies.

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
“ஹாய் செந்தில்” என்று வெகு இயல்பாக அவன் அருகில் வந்து கைகுலுக்கினான். வழக்கமான நலம் விசாரிப்புகளுடன் அழகாய் சிரித்துக் கொண்டே திரும்பியவன் அடுத்த நொடி பார்த்திருந்தான் அவளை.

அவனுக்குள் சில்லென்ற வியப்பு சாரலா? படபட சந்தோஷ பட்டாசா? இரண்டுமே சேர்ந்த ஆனந்த மழையா? இது எதுவுமே அவளுக்கு புரியவில்லை.

முகத்தில் ஒற்றை துளி மாற்றம் கூட இல்லாமல் மறுபடியும் செந்திலுடன் பேசலானான்.

“ஒரு வேளை இந்த உடையில் என்னை அடையாளம் தெரியவில்லையோ?” அவளுக்குள்தான் படபட பட்டாசு.

“யாருக்கு? கெளதம் சித்தார்த்துக்கா? அவனுக்கு என்னை அடையாளம் தெரியாமல் போகுமா? வாய்ப்பே இல்லை” இதுவும் அவளே சொல்லிக் கொண்டாள். இப்போதும் அத்தையின் வார்த்தைகள் மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன.

“இவங்க என் ஃப்ரெண்ட் சஞ்சனா சார்” அறிமுகப் படுத்தி வைத்தான் இவர்கள் கதை எதுவும் தெரியாத செந்தில்.

இவள் முகம் கொஞ்சமாவது மலர வேண்டும் என்று எதிர்பார்த்தானோ? அதற்கு ஒத்துழைக்கவில்லை இவள். ஒரு சிறு முறைப்பையே அவனுக்கு பரிசாக தந்திருந்தாள் பெண்.

“ஷி இஸ் அ டாக்டர் சார்” இதுவும் செந்தில்தான்.

“ஸோ?” படு அலட்சியமாக சொன்னானே பார்க்க வேண்டும்.

என்னதான் சமாளித்துக் கொள்ளப் பார்த்தாலும் எப்போதும் அவள் ரசிக்கும் அந்த ஸோ இப்போது சற்றே கசந்து நின்றது அவளுக்கு. அது அவளுக்கு அத்தனை ருசிக்கவில்லை என்று அவனுக்கும் புரியாமல் இல்லை.

அவளது முகம் இன்னுமாக கடுகடுக்க உதடுகளுக்கு இடையில் மறைத்துக் கொண்ட சிரிப்புடன்

“ஹாய் அங்கிள்” என்று அவளது தந்தையை நோக்கி நடந்தான் கெளதம் சித்தார்த். அவர் அருகில் சென்றவுடன் அவர் நந்தாவை பற்றித்தான் கேட்பார் என்றும் தெரியும். அதற்கும் பதிலை தயாராக வைத்துக் கொண்டே அவரை நோக்கி நடந்தான் நமது சதுரங்க வீரன்.

“என்ன சஞ்சனா. உங்கப்பாவை நல்லாத் தெரியுமா அவருக்கு?” புரியாமல் கேட்டான் சஞ்சனா.

“அதை விட என்னை நல்லாத் தெரியும்” சொல்லிக் கொள்ளவில்லை அவள்.

என்னதான் தனக்கு எந்த உணர்வும் இல்லை என்று காட்டிக்கொண்டாலும் அவனது அந்த “ஸோ” வும் பாராமுகமும் கையில் இருந்த ஏதோ ஒன்று கீழே விழுந்து உடைந்து போன உணர்வை கொடுத்தது அவளுக்கு.

அவளைப் பார்த்ததும் காலையில் மனதில் இருந்த குழப்பம் எல்லாம் மறந்தே, மறைந்தே போன உணர்வுதான் அவனுக்கு. அந்த பண்ணை வீடு மறந்து போனது. நந்தா மனதை விட்டு அகன்று போனான். சந்தோஷ காற்று நூரையீரல் முழுவதும் நிரம்பி நின்றது.

இருந்தாலும் அவளை சிறிது நேரம் சீண்டிப் பார்க்கும் எண்ணம் எழுந்தது அவனுக்கு. அதற்கான அடையாளம்தான் இந்த ‘ஸோ’!

“வாப்பா.. வா..ப்பா..” என்றார் ஹரிஹரன். “நானே நந்தா விஷயமா உன்னை மீட் பண்ணனும்னு நினைச்சேன். நீயே வந்து நிக்கறே’

“அப்படியா?” மெலிதாக புன்னகைத்தான். “எஸ் அங்கிள். இங்கே கமிஷனர்கிட்டே பேசினேன். ஆக்சிடென்ட் ஊட்டிலே நடந்திருக்கறதுனாலே நீலகிரி டிஸ்ட்ரிக்ட் கமிஷனர்கிட்டே பேசிட்டு சொல்றேன்ன்னு சொன்னார் அங்கிள்” இப்போது வாய் கூசாமல் பொய் சொன்னான் அவரிடம்.

ஆனால் மறந்தும் சற்றே தூரத்தில் இருந்த சஞ்சனாவின் பக்கம் திரும்பி விடவில்லை. அவள் முகம் பார்த்தால் அவனது பொய்கள் வற்றிப் போகும் என்றுத் தெரியும் அவனுக்கு.

“சரி நீ ஷூட்டிங் முடிச்சிட்டு வா. பேசுவோம்” அவர் சொல்லிவிட

அதன் பிறகு அங்கிருந்த வேறே யாருடனோ பேச ஆரம்பித்தான் கெளதம்.

கைப்பேசியை உருட்டிக் கொண்டிருந்தாலும் நமது மருத்துவரின் பார்வை மட்டும் அவன் செல்லும் திசையெல்லாம் சென்று கொண்டிருந்தது.

தனது ஒற்றை ‘ஸோ’ அவளை சுழற்றுகிறது என்பது நன்றாக புரிந்தது நமது சதுரங்க வீரனுக்கு. அவனுக்கு அவளது தவிப்பை ரசிக்கும் ஏக்கம்.

சுரேந்தர் இப்போது இங்கே இருந்திருந்தால் ‘இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால்தான் பார்த்த கெளதம் இவன் தானா? என்ற குழப்பத்தில் மயங்கியே விடுவான்’ எனும் அளவுக்கு அப்பட்டமாக வேறு முகம் காட்டி எல்லாருடனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் நந்தாவின் ஜென்ம விரோதியான கெளதம் சித்தார்த்.

சில நிமிடங்கள் கழித்து தான் எடுக்கப் போகும் விளம்பரக் காட்சியை விளக்கலனான் செந்தில்.

“நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் சார்” அவன் சொல்ல அனிச்சை செயலாய் அவன் பக்கம் திரும்பி வைத்தாள் இவள். அப்போதும் சலனமே இல்லாமல் அமர்ந்திருந்தான் அவன். பெயருக்குக் கூட புன்னகைக்கவில்லை.

“ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன சண்டை. காபி உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குது” என பேச வேண்டிய வசனங்களையும் விளக்கி இருந்தான் செந்தில்.

“உங்க ரெண்டு பேர் கண்ணிலேயும் கோபமும் காதலும் மாத்தி மாத்தி போட்டிப் போடணும் சார்.”

“ஓகே செந்தில்” என்றான் இவன்.

“உனக்கும் புரியுதா சஞ்சனா?”

“ம்”தலை மட்டுமே அசைக்க முடிந்தது அவளால்.

சில நிமிடங்களில் “டன் நான் ரெடி” என எழுந்தான் கெளதம்.

அடுத்த சில நிமிடங்களில் கேமராக்கள் பல கோணங்களில் இயங்க ஆரம்பிக்க இப்போதுதான் அவளை நேருக்கு நேராக பார்த்தான் கெளதம்.

அவளுக்குள் ஒரு சிலீர் மாற்றம். அது ஏனோ பல ஆண்டு காலம் அவளோடு வாழ்ந்து விட்ட கணவன் அவள் முன்னால் நிற்கும் உணர்வு.

அவனது முகத்தில் மெல்ல மெல்ல கூடி நின்றது ஒரு கடுமை “இனிமே இந்த ஜென்மத்துக்கு உன் கூட நான் பேச மாட்டேன்”

செந்தில் சொல்லிக் கொடுத்ததைதான் அவன் செய்து கொண்டிருந்தான் என்றாலும் அவன் அவளைப் பார்த்து நேரடியாக சொல்வதைப் போலவே இருந்தது அவளுக்கு.

உள்ளிருந்து நிஜமான காதலும் கோபமும் ஆற்றாமையும் ஒன்றாக எழுந்தது போலவே உதடுகள் துடிக்க அவனை ஒரு நெருப்பு பார்வை பார்த்துவிட்டு அந்த சமையல் அறைக்குள் நுழைந்தாள் சஞ்சனா.

“என்ன நடக்கிறது எனக்குள்ளே?” அவளுக்கே புரியவில்லை.

ஆனால் அவளது அந்த நேரத்து முக பாவங்களை அப்படியே தனக்குள் பதித்து கொண்டவர்கள் பட்டியலில் இருந்தது காமெராக்கள் மட்டும் அல்ல அவளை மனதிற்குள் பொத்தி வைத்திருக்கும் கௌதமும்தான்.

அடுத்தக் காட்சியில் அவள் கரங்கள் அந்த இன்ஸ்டன்ட் காபியை தயாரித்துக் கொண்டிருக்க கேமராக்கள் பல கோணங்களில் அவளை விழுங்கிக் கொண்டிருந்தன.

கையில் காபி கோப்பையுடன் அவள் அந்த காபியை சுவைக்க ஆரம்பிக்க அந்த காபியின் நறுமணத்தை ரசிக்கும் பாவத்துடன் அவள் முன்னால் வந்து நின்ற கௌதமையும் சேர்த்து பதித்துக் கொள்ள ஆரம்பித்தன கேமராக்கள்.

அவன் அவள் கண்களுக்குள் பார்க்க அவளை அதற்கு மேல் எதையுமே யோசிக்க விடாமல் கட்டி இழுத்து வைத்தது அவனது விழி ஈர்ப்பு விசை.

காபி கோப்பையுடன் ஒவ்வொரு அடியாய் அவள் பின்னால் நடக்க, பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக் கொண்டு அவளை கண்களால் பருகிக் கொண்டே அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கி அவன் முன்னேறிக் கொண்டே வந்தான் அவன்.

அவளும் அறியாமல் உடல் முழுவதும் பரவச மேகங்கள் நீந்திக் கொண்டிருக்க பின்னால் நகர்ந்து கொண்டே சென்றவள் அங்கிருந்த சுவற்றோடு முட்டி நிற்க தனது கரங்களை கொண்டு சுவற்றோடு அவளுக்கு அணையிட்டு அவளை நெருங்கி நின்றான் கெளதம்.

அவனது மூச்சக் காற்று அவளை உரசி நிற்க இமைக்க மறந்து அவன் முகம் பார்த்திருந்தாள் பெண். சுற்றி நிற்கும் எல்லாருமே அந்த இடத்தை விட்டு மறைந்து போய் அவர்கள் இருவர் மட்டுமே அங்கே இருப்பதைப் போலவே தோன்றியது அவளுக்கு.

செந்தில் சொன்னதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள் எனும் போதிலும் தாங்களே அறியாத ஒரு பரவச லோகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்தனர் சஞ்சனாவும் கௌதமும்.

ஆனால் இன்னும் சற்று நேரத்தில் அங்கே அந்த ஸ்டுடியோ மொத்தமும் வெடிக்கப் போவதை இருவருமே அறிந்திருக்கவில்லை.

தொடரும்

உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ அறியாயோ முகிலனமே கருத்துக்கள்
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93

நீ அறியாயோ முகிலினமே! 09



விருப்பங்களுக்கு விலங்கிட்டு, விழி மூடி, விடைப் பெற்று விலகிச் செல்கிறாய்.

விழுந்து விடாமல் விளையாடும் விழி நீரில் விஸ்வரூபமாய் உன் முத்த நினைவுகள்.



அதே நேரத்தில் அங்கே தனது வீட்டில் அமர்ந்து தனது மூளையை கசக்கிக் கொண்டிருந்தான் நமது உதவி ஆணையர். மூன்று நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.

கடந்த ஒரு மாத இடைவெளியில் கெளதம் எந்த ஒரு காரையும் வாங்கியதற்கான ஆதாரமும் இல்லை. அவன் பெயரில் எந்தக் காரும் பதியப் படவும் இல்லை.

அன்று அந்த பெட்ரோல் நிரப்பும் இடத்தில் கெளதம் தன்னை பார்த்திருக்கக் கூடும் என்று தோன்றியது. அதனால் இந்த ஹோண்டா அமேஸ் விளையாட்டை கெளதம் முடித்து வைத்து விட்டான் என்றே தோன்றியது சுரேந்தருக்கு.

அதே போல் நந்தா காணாமல் போன தினத்திற்கு முன்னாலும் பின்னாலும் அவனது பெயரில், அல்லது அவனது வீடுகள் இருக்கும் முகவரிகளில் பதியப் பட்டிருக்கும் எந்தக் காரும் கோவை உதகமண்டலம் பகுதியில் உள்ள எந்த சுங்கச் சாவடியையும் கடந்ததாக பதிவு செய்யப் படவில்லை.

இதை ஆதாரமாகக் கொண்டால் நந்தாவை அவன் உதகமண்டலத்தில் எங்கேயாவது அடைத்து வைத்திருக்கிறான் என்று பொருளா?

இவன் யோசித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்

“என்னடா இன்னமும் அந்த கார் விளையாட்டை விடலையா நீ?” என்றபடியே அவன் அருகில் வந்து அமர்ந்தான் அவனது நண்பன்.

“எந்தப் பக்கம் போனாலும் செக் வைக்கிறான்டா. கடந்த ஒரு வாரத்திலே அவன் பேசின கால்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டேன். எதுவுமே வித்தியாசமா இல்லை” என்றான் யோசனையுடன். “கொலைக்காரன். ராட்ஷசன் கிராதகன். நந்தா அவன் கையாலே என்ன பாடு படறானோ? இந்த கெளதம் ரெண்டு நாள் நினைவில்லாம விழுந்திட்டா போதும்டா நான் ஜெய்ச்சிடுவேன்” கௌதமை சபித்தான் சுரேந்திரன் .

அதே நேரத்தில் இங்கே ஸ்டூடியோவில்

கேமராக்கள் அவர்களை ரசித்து ரசித்து படம் பிடித்துக் கொண்டிருக்க, அவளை நெருங்கி நின்றிருந்தான் கெளதம்.

அன்றொரு நாள் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனமாடிய போது கூட அவனை இத்தனை நெருக்கமாக பார்த்தாக நினைவு இல்லை சஞ்சனாவுக்கு .

அவனது உதட்டோரத்தில் மெல்ல மெல்ல ஒரு புன்னகை எழ அவனது விழிகள் இரண்டும் அப்படி ஒரு காதலை நிரப்பிக் கொண்டன.

அவன் கண்களுக்குள் இருந்த மொத்த காதலும் அவளுக்குள் இறங்க, அவளது கண்கள், மூக்கு கன்னங்கள் இதழ்கள் என அத்தனையையும் தொட்டுத் தொட்டு ருசித்தன அவன் கண்கள்.

அந்த நிமிடம் எங்கோ யாருமில்லாத, எந்த அழுத்தமும் இல்லாத ஒரு ஆனந்த தீவுக்கு சென்றுவிட்டதைப் போல் இருந்தது அவனுக்கு. அவனது பார்வையில் மெதுமெதுவாக தன் வசத்தை இழந்து கொண்டிருந்தாள் சஞ்சனா.

அவளது நெருக்கத்தில் உதடு குவித்து காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டான் கெளதம் சித்ததாரத். அவள் உடல் மொத்தமும் சிலிர்த்து நின்றது.

எப்படிப் பூத்தது என்றே தெரியாமல், தன்னாலே அவள் முகமெங்கும் பூத்து நின்றன வெட்கப் பூக்கள். அவள் இதழ்களில் அத்தனை அழகானதொரு புன்னகை.

அதை ரசித்தபடியே

“உன்கிட்டேயும் உன் காபி கிட்டேயும் நான் எப்பவும் செக் அண்ட் மேட்” என்று சொல்லி விட்டு அவள் நெற்றி முட்டி, அவள் கையில் இருந்த காபியை எடுத்து அவன் சுவைக்க ஆரம்பிக்க, வேறேதோ ஒரு உலகத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள் சஞ்சனா

“டேக் ஓகே” என செந்திலின் குரல் அவளை பகீரென தரை இறக்க

“செம செம செம” ஓடி வந்து இருவர் கையையும் பற்றிக் குலுக்கினான் அவன் ‘ரெண்டு பேர் குள்ளேயும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி”

‘இத்தனை நேரம் நான் நடித்துக் கொண்டா இருந்தேன்? அவனும் அதைத் தான் செய்தானா?’ திரு திரு விழிப்பே அவளது பதிலானது.

அப்போதும் செந்திலை பார்த்து அழகாய் ஒரு சிரிப்பை சிந்தி விட்டு, கையிலருந்த காபியை முடிந்துவிட்டு அவள் முகம் கூட பார்க்காமல் நகர்ந்திருந்தான் கெளதம்.

இத்தனை நாள் அவன் அவளைத் தேடித் தேடி வந்த போது இல்லாத ஏதோ ஒரு உணர்வு இப்போது அவளை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.

“கெளதம் ஒரு முறை என்னைப் பார்த்து புன்னகைத்து விடேன்” உள்ளுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது.

சொல்லுங்க அங்கிள். வேறே என்ன விசேஷம்?”

நேரம் மாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருக்க கையிலிருந்த காபியை பருகியபடியே அவளது தந்தை ஹரிஹரனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் கெளதம்.

இன்னும் ஒன்றிரண்டு க்ளோஸ் அப் காட்சிகள் மீதம் இருப்பதால் அவர்களை கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லி இருந்தான் செந்தில்.

சஞ்சனா அவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் அமர்ந்து கைப்பேசியை உருட்டிய படியே காபியை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

பேசிக் கொண்டே இருந்தவருக்கு என்னத் தோன்றியதோ “நீ சென்னையில் இருக்கிற எங்க வீட்டுக்கு ஒரு தடவை வாயேன்பா” என திடீரென அழைத்து விட்டார்.

அவர் கேட்டு முடித்தவுடன் ஒரு முறை திரும்பி கைப்பேசியில் மூழ்கி இருந்த சஞ்சனாவை பார்த்துவிட்டு ஹரிஹரனைப் பார்த்து புன்னகைத்தான் கெளதம்.

“உங்க வீட்டுக்கு வர கசக்குமா என்ன? வந்திட்டா போச்சு. நான் இந்த வாரம் என் ஷெடியூல் பார்த்திட்டு உங்களுக்கு சொல்றேன் ”

சட்டென நிமிர்ந்தாள் சஞ்சனா.

“என் தங்கையை நீ கண்டிப்பா பார்த்தே ஆகணும்” எது செலுத்தியதோ இதையும் சொல்லியே விட்டார் அவர். “பாவம்பா அவ. மகாராணி மாதிரி வாழந்தவ எப்படி ஆகிட்டா தெரியுமா?”

‘தங்கை என்றால் அவர்தான் நந்தாவின் அம்மாவா? இவர்கள் எல்லாம் ஒரே வீட்டிலா இருக்கிறார்கள்?’ அவரது வார்த்தைகள் ஒரு சுருக் நெருஞ்சி முள்ளை அவனுக்குள்ளே ஏற்றியது.

“தங்கைன்னா?” மெதுமெதுவாக கருக்க ஆரம்பித்த முகத்துடன் கேட்டான் கெளதம்.

“நம்ம நந்தாவோட அம்மாப்பா” ஹரிஹரன் சொல்ல அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் சஞ்சனா.

“ஓ” என்றான் நந்தா என்ற ஒற்றை வார்த்தையில் உள்ளுக்குள் சரசரவென பொங்கிய எல்லா உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டு .

அதற்குள் எழுந்து, அவர்கள் அருகில் வந்தாள் சஞ்சனா.

“வரலக்ஷ்மி அத்தை எப்படி இருக்காங்களாம் இப்போ? மாமாகிட்டே பேசினீங்களாபா?” கெளதம் முகத்தை பார்த்துக் கொண்டே வேண்டுமென்றேதான் கேட்டாள்.

அந்த வரலக்ஷ்மி என்ற வார்த்தையில் அவன் சற்று உறைந்து மீண்டதைப் போலவே தோன்றியது சஞ்சனாவுக்கு.

“உங்க சிஸ்டர் சென்னைதானா அங்கிள்?” இப்போது அவன் மெதுவாக அவரைக் கிளறுவது புரிந்தது சஞ்சனாவுக்கு.

“சென்னைதான் பா. அவளும் டாக்டர்தான்” இப்போது மிக மெலிதான பகீர் கோடுகள் வந்து போயின அவன் முகத்தில். அதற்குள் அவனது கைப்பேசி ஒலித்து அவனைக் கொஞ்சம் நிதானப் படுத்தியது.

அதை சாக்கிட்டு “எக்ஸ்கியூஸ் மீ அங்கிள்” என எழுந்து விலகினான்தான் என்றாலும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு ரகசிய சூறாவளி மனக் கிடங்கில் வீசிக் கொண்டிருந்தது.

வந்த அழைப்பை ஏற்று பேசிக் கொண்டே அரங்கத்தை விட்டு வெளியே தோட்டத்துக்கு வந்திருந்தான் கெளதம். உதடுகள் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த அவனது காரியதரிசி தாரிணிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், எண்ண அலைகள் மட்டும் ஓயவில்லை.

அவனது இடக்கை விரல்கள் அங்கிருந்த ஏதோ ஒரு மரத்தில் விளையாட அதில் இருந்த முள் ஒன்று அவனது விரலை சுருக்கென பதம் பார்த்தது.

‘அது யாராம் நந்தாவின் அம்மா? அவர் பெயர் வரலக்ஷ்மியா என்ன? அன்று விமான நிலையத்தில் அவள் தந்தை வரலக்ஷ்மி அத்தை என்றாரே அப்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே. இப்போது ஏன் இப்படி ஒரு எண்ணம் உதிக்கிறது?’ உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுழன்றது.

அன்று அந்த காரை பள்ளத்தில் தள்ளிய போதே இவன் எடுத்து வைத்துக் கொண்ட அந்த சஞ்சனாவின் புகைப்படத்தின் அருகே வரலக்ஷ்மியின் ஒரு புகைப்படமும் இருந்தது. இவன்தான் அதை அப்போது கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அன்றே இவர்தான் நந்தாவின் அம்மா என்பதை புரிந்து கொண்டிருப்பான்.

முள் குத்தியதில் விரல் முனையில் மெல்ல எட்டிப் பார்த்தது ஒரு துளி ரத்தம்.

‘சஞ்சனா வரலக்ஷ்மி அத்தை என்ற வார்த்தையை வேண்டுமென்றே சொன்னாளா என்ன? ‘

‘ஆம்’ என்று கணக்குப் போட்டது அவனது கணிதம் பயின்ற மூளை.

அப்போது அவளது விழிகளில் ஏதோ ஒரு செய்தி ஒளிந்திருந்தது போலே கூடத் தோன்றியது. அது என்னவென்றுதான் புரியவில்லை.

அவன் முகத்தில் அவள் இருந்து எதையோ படித்துக் கொள்ள அவள் முயன்றதுவும் புரிந்தது அவனுக்கு.

இவை எல்லாம் மனதின் ஒரு பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்க, அதே நேரத்தில் மறுமுனையில் தாரிணி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான் கெளதம் சித்தார்த்.

பளார்!

அவனது இருபதாவது பிறந்தநாளில், தன்னையும் தாண்டி உயரமாக வளர்ந்து நின்ற கௌதமை கை நீட்டி அறையக் கூடிய தைரியம் அவனது வரலக்ஷ்மி டாக்டருக்கு மட்டுமே இருந்திருக்கிறது.

அந்தத் துணிவு அவனது அன்னைக்கு கூட இருந்தது இல்லை.

அந்த மரத்தின் முள்ளின் மீது இன்னொரு விரலையும் வைத்து அழுத்த சுருக்கென்ற வலியுடன் ரத்தம் வெளியேறியது. அந்த வலி அலைப்பாய்ந்து கிடந்த அவனது மனதை கொஞ்சம் ஆற்றுவதைப் போலவே இருந்தது.

அவனது அன்னை சரஸ்வதி. சாதாரண இல்லத்தரசியாக, காவல் துறை அதிகாரியான அவனது தந்தையின் அன்பு மனைவியாக வாழ்ந்தவர். அவனது தந்தையின் மறைவுக்கு பிறகு, அவனது தாத்தாவின் மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரியை நிர்வகிக்கும் நிர்வாகியாக விஸ்வரூபம் எடுத்தவர்.

“உன்னை பத்து மாசம் வயத்திலே சுமந்த எனக்குக் கூட உன்னை அடிக்குற தைரியம் கிடையாதுடா சாமி. நல்லா வாங்கினியா? இனி விஸ்கி பாட்டிலை தொடுவியாடா நீ?”

இருபதாவது பிறந்தநாளன்று வரலக்ஷ்மியிடம் அடி வாங்கிய அன்று இரவு அவனது அன்னை இவனிடம் கேட்டது நினைவில் இருக்கிறதுதான். அதன் பிறகு கெளதம் குடித்ததுவும் இல்லை.

சிறு வயதில் இருந்தே அப்படித்தான் வரலக்ஷ்மி. அவருடைய அன்பு, கண்டிப்பு இரண்டுமே அவனை கட்டிப் போட்டு வைக்கும் என்பதை அவனால் இன்று வரை மறுக்க முடியாது.

“ஸ்கூலுக்கே சரியா போக மாட்டேங்கிறான் லக்ஷ்மி. நீ கொஞ்சம் சொல்லேன்”

“ஏன்டா அப்படியா?” ஒரு பார்வைதான் பார்ப்பார் “நான் சொல்றேன் இனிமே நீ ஸ்கூல் ஒழுங்கா போறே!”

அடுத்த நாள் முதல் எப்படி என்றே தெரியாமல் ஒழுங்காக பள்ளிக்கு போக ஆரம்பித்து இருப்பான் கெளதம். வரலக்ஷ்மி டாக்டரை அவனுக்கு நிரம்பவே பிடிக்கும்.

“அம்மா வரலக்ஷ்மி டாக்டர் வந்தாச்சு. கேக் வெட்டலாம்” சிறு வயதில் அவர் வருகைக்காக காத்திருந்து பிறந்தநாள் கொண்டாடிய நாட்களும் இன்னமும் புது வாசனை மாறாமல் நெஞ்சில் நிற்கிறது.

எது நடந்தாலும், எது தப்பிப் போனாலும் வருடம் தவறாமல் தனது கணவர் நீலகண்டனுடன் அவனது பிறந்தநாளுக்கு வந்து விடுவார் வரலக்ஷ்மி டாக்டர்.

அன்றைய ஒரு தினம் மட்டுமே வருவார். அவனுடன் பேசுவார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்தே அவரை மீண்டும் பார்க்க முடியும். அந்த ஒரு வருடமும் அவனுக்கான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி வைப்பாரோ என்னவோ? அத்தனை பொருட்களை அள்ளி வரலக்ஷ்மி டாக்டர்.

“நீங்க என் கூடவே இருந்திடுங்க வரலக்ஷ்மி டாக்டர்”

சிறு வயதில் அவனது பிறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்து விட்டு கிளம்பியவரின் கால்களை கட்டிக் கொண்டு இவன் கதறி அழுத நாளும் வந்தது உண்டு.

“நீங்க போயிட்டா அடுத்த வருஷம்தான் உங்களோட பேச முடியும்”

இப்போது போல் கைப்பேசிகள் பிரபலமாகாத காலம் அது.

“பேசலாமே. நீ நினைச்சா பேசலாமே” என்றார் அவர் “மேலே வானத்தை பாரேன். இங்கே இருக்கிற மேகம்தான் அங்கே சென்னைக்கு வரும். நீ இந்த மேகத்துகிட்டே ஏதாவது சொல்லி விட்டேனா அது நேரா என்கிட்டே வந்து சொல்லிடும்”

அவர் சொன்னதை அப்படியே நம்பிக் கொண்டான் அன்றைய கெளதம். அப்போதெல்லாம் முகிலனங்கள் அவரிடத்தில் இருந்து இவனுக்கு ஏதாவது செய்தியை கொண்டு வருவதாகவே நம்புவான்.

அவன் இன்று வரை முகிலனங்களுடன் பேசுவதற்குக் காரணம் அவனது வரலக்ஷ்மி டாக்டர் மட்டுமே.

‘ஒரு வேளை அவர்தான் நந்தாவின் அம்மாவா என்ன?’ இப்போது அவனது தலைக்குள் தட்டமாலை சுற்றியது இந்த ஒற்றைக் கேள்வி.

“ஆம்! ஆம்!ஆம்! சந்தேகமே வேண்டாம்” அறுதியிட்டு சொன்னது அவனது உள்ளுணர்வு.

‘இத்தனை நாட்கள் அவரது மகனைப் பற்றி எப்படி அறியாமல் போனேன் நான். ஒரு வேளை அதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இதுவரை வரவில்லையோ?’

இப்போது அவனது அடுத்த விரலை அந்த மரத்தின் முள்ளுக்குக் கொடுத்தான் கெளதம். அது மகிழ்ச்சியாய் அவனுக்கு வலியை பரிசளித்தது.

‘அப்படி என்றால் தனது அண்ணன் மகள் சஞ்சனா எனது மருத்துவமனையில் வேலைப் பார்ப்பதையாவது முன்பே அவர் என்னிடம் சொல்லி இருக்க வேண்டுமே. ஏன் சொல்லவில்லை?’ கணக்குப் போட்டது இந்த சதுரங்க வீரனின் அறிவு.

‘தனது குடும்பத்தை பற்றி, அதில் இருப்பவர்களை பற்றி எதுவுமே எப்போதுமே அவர் அவனிடம் சொன்னது இல்லையே.’ சட்டென உரைத்தது அவனுக்கு.

‘ஏனாம் அப்படி?’ பதில் கிடைக்கவில்லை கௌதமுக்கு.

வரலஷ்மிக்கும் அவனது அன்னை சரஸ்வதிக்கும் என்ன பந்தம் என்று அவனது அன்னை அவனிடம் அடிக்கடி சொன்னது உண்டு.

வரலக்ஷ்மி அவனது அன்னை சரஸ்வதியின் தோழி.

“நீ என் வயித்திலே இருந்த பத்து மாசம் ஒரு டாக்டரா என்னை அப்படி பார்த்துக்கிட்டாடா வரலக்ஷ்மி. சிசேரியன்தான் பண்ணணும்னு முடிவு பண்ணி தேதி எல்லாம் குறிச்சு வெச்சிருந்த நேரம். நீதான் அவசரக்காரனச்சே நட்ட நடு ராத்திரியிலே பனிக்குடத்தை உடைச்சிட்டு கிளம்பிட்டே. அதுக்கு அப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியலை. வரலக்ஷ்மி அப்படிங்கிற தெய்வம் இல்லேன்னா இன்னைக்கு நீயும் இல்லை நானும் இல்லை”

“இவங்க வரலக்ஷ்மி டாக்டர். சாமிதான் நம்மை எல்லாம் வாழ வைக்கும். அதனாலே நம்மை வாழ வெச்ச இவங்கதான் உனக்கு சாமி மாதிரி”

வரலக்ஷ்மியின் புகைப்படத்தை அவனிடம் காட்டி அவனது அன்னை சரஸ்வதி அடிக்கடி சொல்வதும் உண்டுதான்.

அவன் வரலக்ஷ்மியிடம் ஒட்டிக் கொள்ள இதுதான் காரணமா என்ன? சொல்லத் தெரியவில்லை கௌதமுக்கு.

ஆனால் அவர் வார்த்தைகளை எப்போதும் மீற முடிந்தது இல்லை கௌதமால்! அந்த பழைய கௌதமால்! அந்த கெளதம் சில வருடங்கள் முன்னால் இருந்த கெளதம்.

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இவன் அரக்கன். யாருக்கும் அடங்காத அரக்கன்.

வரலக்ஷ்மி நந்தாவின் அம்மாவாக இல்லாமல் இருந்து விட்டால் நன்றாக இருக்குமோ என்று ஒரு எண்ணம் சிறு புள்ளியாய் வந்து போக அதை ஆழமான சுவாசம் கொண்டு முறியடித்தான்.

வாழ்கை ஒரு கேள்வித்தாள். இத்தனை கேள்விகளுக்கு விடையளித்தால் போதும், விரும்பாத கேள்விகளை தவிர்த்து விடலாம் என்பதை போன்ற சலுகைகள் எதுவும் இல்லாத கேள்வித்தாள். பிடித்த, பிடிக்காத என கேள்விகளுக்கும் நாம் விடையளித்துதான் ஆக வேண்டும்.

“அவர்தான் நந்தாவின் அம்மா இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று உள்ளுக்குள் எழுந்த கசப்பான கேள்விக்கான பதிலாக ,

‘யார் யாருக்கு அன்னையாக இருந்தாலும் இந்த அரக்கன் என்றும் அரக்கனாகவே இருப்பான்’ என தனக்குள்ளே உறுதியாக சொல்லிக் கொண்டான் கெளதம் சித்தார்த்.

இப்போது அவனது ஐந்து விரல் நுனிகளிலும் ரத்தத் துளிகள் எட்டிப் பார்த்தன. அதனால் ஏற்பட்ட எரிச்சலையும் வலியையும் அவன் ரசித்திருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

அடுத்த சில நிமிடங்களில் தாரிணியின் அழைப்பை முடிந்துவிட்டு, தனது கைப்பேசியை சில நொடிகள் உருட்டியவனின் திரையில் வந்து நின்றது அந்த பண்ணை வீட்டின் அறையின் சுவற்றில் சாய்ந்து கொண்டு கால் நீட்டி அமர்ந்திருந்த நந்தாவின் உருவம்.

தூசி படிந்து கிடந்த அந்த அறையின் தரையிலேயே கிடப்பதாலோ என்னவோ உடை முழுவதும் அழுக்கு மட்டுமே இருத்தது.

மனதின் சோர்வு மொத்தமும் முகத்தில் படிந்திருந்த கலைந்த கேசமும் கன்னத்தின் சில பகுதிகளை மறைந்திருந்த தாடியும் என பல நாளாக காய்ச்சலில் விழுந்து கிடப்பவனை போன்றதொரு உருவத்தில் கிடந்தவனை மனதார ரசித்து முடித்தான் அந்த அரக்கன்.

மாலை ஏழு மணி வரை இவர்கள் இருவருக்கும் சில க்ளோஸ் அப் பதிவுகள், அந்த விளம்பரத்தின் சில இடங்களில் இவர்களது குரலை இணைக்கும் வேலைகள் என தொடர்ந்து வந்தன.

அவ்வபோது கௌதமின் முகம் பார்த்தவளுக்கு மதியம் இருந்த உற்சாகம் அவனிடம் இப்போது இல்லையோ என்று தோன்றியது. அப்படி இருந்த போதும் கூட ரகசியமாய் அவளது எண்ண ஓட்டங்களை படித்துக் கொண்டுதான் இருந்தான் கெளதம்.”

கடைசியில் கிளம்பும் நேரத்தில் “நான் உன்னையும் அப்பாவையும் டிராப் பண்ணிட்டு போறேன் சஞ்சனா. கிளம்பு” சொல்லிக் கொண்டே செந்தில் அவர்கள் அருகில் வந்தான்.

“நீ கிளம்புப்பா. புதுசா கல்யாணம் ஆனவன்” என்றார் அவளது தந்தை ஹரிஹரன். “கெளதம் எங்களை டிராப் பண்ணுவான். என்ன கெளதம்?”

“ஷுர் அங்கிள்” என்றான் மகிழ்வுடன். சஞ்சனா அவனுடன் வருகிறாள் எனும் ஒரு எண்ணம் போதாதா அவன் மகிழ்ந்து போக.

இவர்கள் இருவருக்கும் அத்தனை நன்றிகளை சொல்லிவிட்டு செந்திலும் அவனது குழுவும் விடைப் பெற்றிருக்க கௌதமும் அவள் தந்தையும் பேசிக் கொண்டே கார் நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

“அப்பா நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடறேன் நீங்க கீழே வெயிட் பண்ணுங்க” என நகரப்போனாள் சஞ்சனா.

அந்த நொடியில், காலின் கீழே இருந்த ஏதோ ஒன்று தடுக்கி விட, வழக்கம் போல் தடுமாறி விழப் போனவளின் பிடிமானமாகிப் போனது சட்டென நீண்ட அவனது வலது கரம்.

அவள் அவனை பிடிமானாத்துக்காக பற்றிக் கொண்டாள் என்றால் அவன் அதீத பிடித்ததுடன் அவள் கரம் பிடித்துக் கொண்டான்.

மெல்ல மெல்ல விழி நிமிர்த்தி அவள் முகம் பார்த்தான் கெளதம். இத்தனை நேரம் உடன் இருந்தும் ஏதோ ஒரு வீம்பில் அவளிடம் பேசாமல் இருந்தது தவறோ என்று இப்போது தோன்றியது.

அவள் அவனை விட்டு எங்கோ, வெகு தூரமாகப் போகப் போகிறாள் என்று காரணமே இல்லாமல் பயமுறுத்தியது அவனது உள்ளுணர்வு.

கையை பிடித்துக் கொள்ளும் விதத்தில் கூட ஆழ் மன உணர்வுகளை சொல்ல முடியுமா என்ன?

சொன்னான் அவன்! என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே என கெஞ்சினான் அவன். அது நன்றாகவே புரிந்த போதிலும் முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் மெதுவாக தனது கையை விட்டு அவனது விரல்களை பிரித்து விட்டு

“தேங்க்ஸ் கௌதம்” என்றாள் அவன் முகம் பார்த்து. பின்னர் அவர்களை பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு தலை அசைத்து விட்டுத் திரும்பி நடந்தாள்.

‘எதற்கு நன்றி சொன்னாள் அவனுக்கு. இத்தனை நாட்கள் அவளை காதலித்ததற்கா?’ அவளுக்கே புரியவில்லை.

அவள் எந்த ஆபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவள் உணரவில்லை. உள் நோக்கி நடந்தாள். எல்லோரையும் போக விட்டு அவள் மட்டுமே பின் தங்கினாள்.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
‘என் மேலே கோபமா சஞ்சனா? சரி என் கார்லேதானே வரப் போறே? ஏர்போர்ட் போறதுக்குள்ளே இன்னைக்கு முழு நாளுக்கும் சேர்த்து வெச்சு பேசிடறேன் விடு’

அவளிடம் மானசீகமாக பேசிக் கொண்டேதான் நடந்தான் கெளதம். ஆனாலும் அவனது மனம் ஏனோ ஆறவில்லை. அப்போது அவளைத் தவிர அந்த கட்டிடத்தினுள் வேறே யாருமே இல்லை. கௌதமும் அவளது தந்தையும் கார் நிறுத்தும் இடத்தில் நின்றிருந்தனர்.

அப்போது அந்த கட்டிடத்தினுள் திடீரென ஏற்பட்டது அந்த மின் கசிவு. அதை அறியாமல் பாத்ரூமினுள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள் பெண்.

ஒரு நிமிடம் கடந்திருக்க, பெரிதாக ஏதோ ஒன்று வெடித்தது போன்ற சத்தம் கேட்க மின் விளக்குகள் எல்லாம் அணைந்து போயின. உயிரே துடித்துப் போன பகீர் அதிர்வுடன் திரும்பினான் ஹரிஹரனுடன் பேசிக் கொண்டிருந்த கெளதம்.

இருளில் எப்படியோ தட்டுத் தடுமாறி கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தவளை வரவேற்றது அந்த முதல் தளத்தின் எல்லா பக்கங்களிலும் பரவ ஆரம்பித்திருந்த தீ வெளிச்சம்.

அந்த கட்டிடத்தின் முக்கால் வாசிப் பகுதிகள் மரத்தினாலே வடிவமைக்கப் பட்டிருக்க மேல் தளத்தில் இருந்த மூடிய நிலையில் இருந்த, அவள் நின்றிருந்த அந்தப் பெரிய அறையின் கதவும் அதன் நிலையும் பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.

சமையல் அறை போல் அமைக்கப் பட்டிருந்த அந்த மர மேடையில் தீ பரவ ஆரம்பித்து இருந்தது.

‘அடுத்து என்ன செய்ய வேண்டும் நான்? எந்தப்பக்கம் ஓட வேண்டும்’ அவள் இங்கே யோசிப்பதற்குள்.

“ச....ஞ்...ச...னா” என்ற அலறலுடன், தனது கைப்பேசியை ஹரிஹரனிடம் தூக்கிப் போட்டு விட்டு, உயிர் தெறிக்கும் வேகத்தில் எரிந்து கொண்டிருக்கும் அந்த கட்டிடத்தை நோக்கி ஓடலானான் கெளதம் சித்தார்த்.

ஓடும் வேகத்திலும் “அங்கிள் ஆம்புலன்ஸ் போன் பண்ணுங்க” என்ற அவனது அலறல் உச்சகட்ட பயத்தில் ஆடிப்போன ஹரிஹரனை தொட்டிருந்தது.

அவரும் கட்டிடத்தை நோக்கி ஓடி வர “நீங்க உள்ளே வராதீங்க அங்கிள் நான் பார்த்துக்கறேன்” என கூவியவன் கார் நிறுத்தும் இடத்திற்கும் அந்த கட்டிடத்திற்கும் இருந்த தூரத்தை அசுர வேகத்தில் கடந்தான்.

அதே நேரத்தில் இங்கே

எரிந்து கொண்டிருந்த அந்தக் கதவைத் தாண்டி வெளியில் வர முயன்றவளை தீ ஜுவாலைகள் தடுத்து நிறுத்தின.

எங்கேயாது தண்ணீர் கண்ணில் படுகிறதா என்று தேடியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மறுபடியும் பாத்ரூமுக்குள் சென்று நீரை எடுக்க இயலாத வண்ணம் சூழ ஆரம்பித்தது தீ.

‘முடிந்ததா? இதோடு எல்லாம் முடிந்ததா?’ வெலவெலத்து நின்றது அவளது உடல்.

‘கைப்பேசியை எடுத்து அவனை அழைக்கலாமா?’ என யோசித்தவளுக்கு இப்போது கைப்பேசியை வெளியே எடுப்பதை விட பெரிய முட்டாள்தனம் ஏதும் இல்லை என்றும் புரிந்தது.

அதற்கு மேலாக அவனை உள்ளே அழைத்து அவனையும் ஆபத்தில் தள்ளுவது எந்த வகையிலும் உகந்தது இல்லை என்றும் புரிந்தது.

அதே நேரத்தில் ‘இந்தக் கட்டிடம் தீ பிடித்திருப்பதை அவன் கவனித்தானா? இல்லையா?’ எனும் ஆதங்கமும் கூடவே எழுந்து நின்றது அவளுக்கு.

அவனது “லவ் யூ சஞ்சனா” இப்போது நினைவுக்கு வந்து நின்றது. அதே நேரத்தில்

“ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!” என்று சில மாதங்களுக்கு முன்னால் இவள் அலறிய அந்த இரவும்.

‘அன்றைய அந்த இரவிலேயே அவன் எனக்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டான்தானே! ஆம் அதுதான் சத்தியம். ஆனால் ஒப்புக் கொள்ளத்தான் இயலவில்லை என்னால்’ பற்றி எரியும் தீயின் முன்னால் அவளைத் குடைந்து வைத்தது அவளது மனசாட்சி.

சுற்றி இருத்த ஜன்னல்கள், திரைச்சீலைகள் என எல்லாமே தீக்கிரையாகி இருக்க உச்சக்கட்ட அனலில் தேகம் கொதிக்க வியர்வை அவளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. அந்த அறை முழுவதும் புகை மண்டலம். மூச்சு முட்ட ஆரம்பித்தது.

ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்கவும் இயலாத வகையில் அமைந்திருந்தன கம்பிகள்.

தீ ஒவ்வொரு இடமாக பரவிக் கொண்டே வர பின் நோக்கி நகர்ந்து கொண்டே “லவ் யூ கெளதம்” வாய்விட்டு சொல்லிக் கொண்டாள் அவள். “கடைசியாக உன்னை ஒரு முறை பார்க்க வேண்டும் கெளதம்”

கண்கள் எரிந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, அவளை சூழ்ந்த புகை அவளுக்கு தொடர் இருமைலையும் கொடுத்திருந்தது.

“எனக்கும் நந்தாக்கும்தான் கல்யாணம்” அன்று அவனது மனதை நொறுக்கிப் போட்ட நிமிடம் கூட நினைவுக்கு வந்தது.

‘உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் கெளதம்’ நான் அதை உன்னிடம் சொல்லி இருக்க வேண்டும். கண்டிப்பாக சொல்லி இருக்க வேண்டும்”

“யூ ஹாவ் வொன் மீ” என்று முன்பொரு நாள் அவன் கையெழுத்திட்ட அவளது டைரியும், அன்றொரு நாள் அவன் அவளுக்கு பரிசளித்த ஸ்டேதொஸ்கோப்பும் அவளது கைப்பைக்குள் இருப்பது நினைவுக்கு வர இருமிக் கொண்டே அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நின்றாள்.

“லவ் யூ கெளதம்”

இன்று அவர்கள் நடித்த காட்சியும், அப்போது அவன் காற்றில் பறக்க விட்ட முத்தமும் கண் முன்னே ஆடியது. இன்றைக்கு ஒரு நாளாவது அவனைப் பார்த்து புன்னகைத்திருக்க வேண்டும் நான். அவனுடனான முழு நாளையும் ரசித்திருக்க வேண்டும் நான். தவற விட்டு விட்டேனே!

அதே நேரத்தில்

‘வாழ்வோ முடிவோ எதுவுமே இனி உன்னோடுதான். மரணம் கூட என்னைத் தாண்டித்தான் உன்னைத் தொடும்’

எனும் எண்ணத்துடன் எரிந்து கொண்டிருந்த அந்த கட்டிடத்துக்குள் கண் மண் தெரியாத வேகத்துடன் பாய்ந்த கௌதமின் கண்களில் அங்கே ஓரத்தில் கிடந்த ஒரு பெரிய கம்பளி அதிர்ஷ்ட வசமாக பட அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடியவனின் மனதிற்குள் சஞ்சனாவைத் தவிர வேறெதுவும் இல்லை.

கட்டிடத்தின் கீழ் தளத்தில் தீ இன்னும் பாவியிருக்க வில்லை. அதனால் அவனது வேகம் தடை படவில்லை. புகை மண்டலம் மட்டுமே அவனைச் சூழ்ந்து அவனது பார்வையை மறைத்து மூச்சை அடைத்தது.

இருமலும் கண் எரிச்சலும் அவனைத் துரத்தினாலும் எப்படியோ புகைக்குள் புதைந்து முதல் தளத்தை நோக்கி பாய்ந்தான்.

“சஞ்..ச...னா எங்கே இருக்கே?” கூவிய அவனது குரல் அவளது குரல் அவள் செவிகளை அடைய

“கெள...த..ம்” அவனது செவிகளை தொட்டது அவளது குரல் “நீங்க உள்ளே வராதீங்க. வேண்டாம்”

மரத்தினாலான படிகள் என்றாலும் அவற்றை தீ இன்னும் தொட்டிருக்கவில்லை. அடுத்த மூன்றாம் நொடியில் படிகளில் பாய்ந்து ஏறி அவளது இருமல் சத்தம் கேட்ட அந்த அறை வாசலுக்கு வந்து நின்றிருந்தான்.

வாயிலில் தீ அவனை வரவேற்க, அதே நேரத்தில் சஞ்சனா எனும் வார்த்தை மட்டுமே அவனை செலுத்த கண் இமைக்கும் நேரத்தில் அந்த கம்பளியை தன் மீது போர்த்திக் கொண்டு எரிந்து கொண்டிருந்த அந்த கதவுக்கும் நிலைக்கும் நடுவில் எப்படியோ நுழைந்து அவளது முன்னால் வந்து நின்றான்.

புகை மண்டலத்தின் நடுவே மூச்சுத் திணற இருமிக் கொண்டே அவசரமாகத் அவள் முகத்தை தேடினான் கெளதம். அவளைப் பார்த்த மாத்திரத்தில். அவள் நலமுடன் இருக்கிறாள் என்பதில் அத்தனை நிம்மதி அவன் முகத்தில்.

அந்த வேகத்திலும் தாண்டி வந்த அனலின் தாக்கத்தில் கைகளிலும் பாதத்திலும் ஏற்பட்ட காயங்களை அவன் கவனிக்கக் கூட விரும்பவில்லை அவன்.

அவனைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியும் கவலையும் கலந்த பாவத்தில் அவன் அருகில் ஓடி வந்தாள் அவள்.

“கெளதம் நீங்க எதுக்கு வந்தீங்க? அய்யோ கையிலே எல்லாம் காயம். கண்ணிலே முகத்திலே எதுவும் படலைதானே?”

அவளது அக்கறையான வார்த்தைகள் கொதிக்கும் அனலிலும், எரியும் காயங்களையும் தாண்டி ஒரு குளிர் அருவியாய் அவன் மீது பொழிய ஒரு மகிழ்ச்சி சிரிப்புடன் அவள் முகம் பார்த்தான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றபடியே திரும்பியவன் முகத்தில் அங்கே பரவிக் கொண்டிருந்த தீயின் வேகத்தினால் பகீர் மாற்றம் .

அடுத்த நொடி அவள் தலையோடு காலாக அந்த கம்பளியை சுற்றி அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.

“கெளதம்.. நான் ” அவள் ஏதோ சொல்ல வர

“நீ பேசாம என் கையிலே அப்படியே இரு “ என்றவன் திரும்ப அந்த நேரத்தில் முழுவதுமாக எரிந்து முடிந்த கதவும் நிலையும் கீழே விழ, அங்கே நடுவில் கிடைத்த ஒரு சிறு இடைவெளியில் புகுந்து அறையை விட்டு வெளியேறினான்.

அந்தச் செயலில் அவனுக்கு இன்னுமாக சில காயங்கள் ஏற்பட்ட போதும் அதைப் பற்றிய சிந்தனைகள் கூட அவனுக்கு இல்லை. அவளுக்கு எந்த காயமும் இல்லை என்பது அவனுக்கு நிம்மதியை தர, அவளை சுமந்து கொண்டு முழு வேகத்தில் படிகளில் இறங்க ஆரம்பித்தான் கெளதம்.

மாடிப்படியின் கைப்பிடிகளில் தீ பரவ ஆரம்பித்து இருக்க இன்னும் அந்தப் பெரிய மரப் படிகளின் ஒரு பகுதி மட்டும் சற்று பாதுகாப்பாகவே இருக்க அதன் வழியே மடமடவென இறங்கினான் கெளதம்.

அவ்வப்போது அவளுக்கு எதுவும் ஆபத்து இல்லையே என்பதை கண்காணித்துக் கொள்ளவும் தவறவில்லை கெளதம்.

ஆங்காங்கே அவர்களை துரத்திக் கொண்டிருந்த தீயை எப்படி கடந்தான் என்பதெல்லாம் அந்த கம்பளிக்குள் இருந்தவளுக்கு கண்டிப்பாகத் தெரியவில்லை.

கட்டிடத்தின் வாயிலுக்கு வந்து அவளை இறக்கி விட்டவன் எதைப் பார்த்தானோ எது வெடிக்கப் போகிறது என்று அவனுக்குப் புரிந்ததோ தெரியவில்லை.

“தள்ளிப் போ சஞ்சனா” எனும் அலறலுடன் அவளைத் வேகமாக தள்ளி விட அந்த வேகத்தில் தள்ளிச்சென்று சற்றே பாதுக்காப்பான தூரத்தில் விழுந்திருந்தாள் சஞ்சனா.

அடுத்து தான் நின்றிருந்த இடத்தில் இருந்து எதிரே இருந்த புல் வெளியின் மீது அவன் பாய்ந்த நேரத்தில் உள்ளே எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு பொருளின் தாக்கத்தினால் வெடித்து சிதறியது மொத்த கட்டிடமும்.

அந்த நேரத்தில் கீழே விழுந்திருந்தவனை நோக்கி வந்தது ஒரு தீப்பிழம்பு. இவன் சுதாரித்துக் கொள்ள முயல்வதற்குள் அவனது நெஞ்சின் மீது வந்து விழுந்திருந்தது அது.

இதுவரை யாரும் தீண்டி விட அஞ்சும் கெளதம் சித்தார்த்தை தீ தைரியமாகத் தீண்டியிருந்தது.

“லவ் யூ சஞ்சனா” “லவ் யூ சஞ்சனா” என இத்தனை நாட்கள் அவன் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகளுக்கான முழு அர்த்தத்தை தீக்குள் புகுந்து அவளைக் காப்பாற்றி நிரூபித்து இருந்தான் கெளதம் சித்தார்த்.

“கொலைக்காரன். ராட்ஷசன் கிராதகன். நந்தா அவன் கையாலே என்ன பாடு படறானோ? இந்த கெளதம் ரெண்டு நாள் விழுந்திட்டா போதும்டா நான் ஜெயிச்சிடுவேன்”

இன்று காலையில் அந்த உண்மையான நண்பன் கொடுத்த சாபம் மொத்தமாக பலித்து விட்டதைப் போலவே தரையில் விழுந்து கிடந்தான் கெளதம் சித்தார்த்.

அவன் அணிந்திருந்த வெள்ளை நிற டி ஷர்ட் கருகி தீ அவன் நெஞ்சை சுட ஆரம்பித்த அந்த நிலையிலும் அசுர வேகத்தில் அவனது மூளை கட்டளை பிறப்பிக்க, அப்படியே தரையில் உருளலானான் கெளதம்.

“கௌ..த..ம்..” சஞ்சனாவின் குரல் அவன் செவிகளை தீண்ட இந்த வலியிலும் அவனது இதழ்களில் புன்னகை.

அவன் அருகில் ஓடி வந்தாள் அவள். அதே நேரத்தில் ஹரிஹரனும் அவன் அருகில் ஓடி வர, தீக்காயங்கள் தந்த உச்சக்கட்ட எரிச்சலும், வலியும், அவனுடைய இரும்புக்கு ஒப்பான மனோதிடத்தைக் கூட கொஞ்சமாக அசைத்துப் பார்க்க,

“அ..ம்.....மா.....” அலறலாக தனது அன்னையை வாய் விட்டு அழைத்தான் கெளதம் சித்தார்த்.

தொடரும்

உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ-அறியாயோ-முகிலனமே - கருத்துக்கள்
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே! 10



நீ ஆடும் முத்த சதுரங்கத்தில் ஆட்டம் துவங்காமலே சரணடைகிறேன் நான்.

கீழே விழுந்து உருண்டோடுகிறது நான் பெற்ற சதுரங்க மகுடம்!




“ச...ரே...ல்” அந்த தோட்டத்தின் ஓரத்தில் இருந்த ஒரு வாளி தண்ணீரை அவன் மீது ஊற்றி இருந்தாள் சஞ்சனா. பின்னர் வந்து மண்டியிட்டாள் அவனருகில்.

“கெளதம். ஒண்ணுமில்லை கெளதம்” உச்சக்கட்ட படபடப்பில் சொன்னவளின் பார்வை ஒரு மருத்துவராக அவனை ஆராய அவனது இடது தோள்கள் துவங்கி , இடது புஜம் , நெஞ்சு பகுதி வரை தீ பதம் பார்த்திருந்தது. முகத்தைத் தவிர உடலின் மற்ற இடங்களில் ஆங்கங்கே தீ காயங்கள்.

“அய்யோ..” அலறியது அவளது மருத்துவ முளை. “இதயத்துக்கு ஒன்றும் பாதிப்பு இல்லைதானே?”

அவசரமாக தனது கைப்பையில் இருந்த அந்த ஸ்டெதோஸ்கோப்பை எடுத்து ஆராய்ந்தாள் அவள். இதயம் சற்றே வேகம் கொண்டு துடித்துக் கொண்டிருந்தது. இரண்டாவது முறையாக உபயோகப் பட்டிருக்கிறது அந்த ஸ்டெதோஸ்கோப்.

அந்த நேரத்திலும் அந்த ஸ்டெதோஸ்கோப்பை அடையாளம் கண்டு கொண்ட விதத்தில் அவனது இதழ்களில் சிறு புன்னகை.

“அப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா” அவள் சொல்ல அதற்குள் கேட்டது அம்புலன்ஸின் சைரன் ஒலி. அவனது மருத்துவமனை அருகிலேயே இந்த ஸ்டூடியோ இருந்தது ஒரு வகையில் அதிர்ஷ்டம்.

அதே நேரத்தில் அந்த ஸ்டுடியோவின் காவலாளி இன்னும் இருவரை அழைத்துக் கொண்டு வந்து பரவிக் கொண்டிருந்த தீயை நீர் கொண்டு அணைக்க முயன்று கொண்டிருந்தார்.

“நான் த..ள்ளி விட்டது உன..க்கு. ஒ..ண்ணு..ம்” அரை மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்த கெளதம் கேட்க வருவது புரிந்த போது அவளுக்கு அடி மனதில் இருந்து புறப்பட்டது ஒரு அதிர்வு.

“உனது உச்சக் கட்ட வலியிலும் என் கவலைதானா கெளதம் உனக்கு?”

“நீங்க இருக்கிற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாது கெளதம்” அவள் அவன் கரம் பற்றி சொல்லிக்கொண்டிருந்த போது அந்த காம்பவுண்டுக்குள் வந்து நின்றது அந்த ஆம்புலன்ஸ்.

அவனை ஆம்புலன்ஸில் ஏற்றிய மறு நிமிடம் அதனுள்ளே பரபரப்பாக இயங்க ஆரம்பித்து இருந்தாள் சஞ்சனா. அதற்குள் இருந்த ஒரு மருத்துவருடன் சேர்ந்து அவள் முதலுதவிகளை ஆரம்பித்து இருக்க அவளது தந்தை அவனது காரை ஒட்டிக் கொண்டு அந்த ஆம்புலன்சை பின் தொடர்ந்தார்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவனுக்குள் ட்ரிப்ஸ் இறங்க ஆரம்பித்து இருந்தது. பூதாகர வலியுடனும் எரிச்சலுடனும் அவன் போராடிக் கொண்டிருந்த போதும் அவளது அருகாமையை ரசித்திருந்தான் அவன்.

அவனது நெஞ்சின் மீது பதிந்த அந்த ஸ்டெதோஸ்கோப்பை வலது கையால் தொட்டவன் “இது நான் கொடுத்த..” என சொல்ல முயல புன்னகையுடன் தலை அசைத்தாள் சஞ்சனா.

இத்தனை நேரம் தாக்குப் பிடித்து விட்ட போதிலும், இப்போது உடலும் மனமும் மொத்தமாக செயலிழப்பதை உணர்ந்தான் அவன்.

‘என் கைப்பேசியை அவள் தந்தையிடம் தூக்கிப் போட்டேனே. அதை சுரேந்தர்...’ இதுவே அவனது கடைசி எண்ணமாக இருக்க, அதை நினைத்து முடிப்பதற்குள் ஆழ்ந்த மயக்கத்துக்குள் விழுந்திருந்தான் கெளதம் சித்தார்த்.

அடுத்த சில நிமிடங்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அவனுக்கென அமைக்கப் பட்டிருந்த தனிப் பகுதியில் அனுமதிக்கப் பட்டான் கெளதம்.

சில மாதங்களுக்கு முன்பு வரை இதே மருத்துவமனையில்தான் அவள் வேலைப் பார்த்தாள் என்பதினால் அங்கே பலரையும், அந்த மருத்துவமனையின் நடைமுறைகளும் நன்றாகவே தெரியும் சஞ்சனாவிற்கு. வெகு இயல்பாக, பாதுகாப்பு நடை முறைகளுடன் அவளும் உள்ளே நுழைந்து கொண்டாள்.

அந்த மருத்துவமனையின் நிர்வாகி அவன் எனும் படியால் அங்கே கூடுதல் பரபரப்பு. அங்கே இருக்கும் பல மருத்துவர்கள் அவனை சூழ்ந்து நிற்க அவர்களுடன் இவளும் இணைந்து கொண்டாள்.

அவனது காயங்களின் ஆழத்தையும் அதன் தீவிரத் தன்மையும் ஆராய ஆரம்பித்து இருந்தனர் மருத்துவர்கள்.

தீயின் தாக்கத்தில் கருகிக் கிடந்த அவனது தோளையும் நெஞ்சுப் பகுதியையும் பார்க்கப் பார்க்க உயிர் கருகியது இவளுக்கு. வேகம் குறைய ஆரம்பித்திருந்த அவனது இதயத் துடிப்பின் வேகத்தை சீராக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இறங்க ஆரம்பித்து இருந்தனர்.

அப்படி எல்லாம் எளிதில் கண்ணீர் வந்து விடுவதில்லை அவளுக்கு. இந்த விஷயத்தில் தனது தந்தையை கொண்டிருக்கிறாள் சஞ்சனா. ஆனால் ஏனென்றே தெரியாமல் இந்த கெளதம் விஷயத்தில் மட்டும் பல நேரங்களில் அந்த கட்டுப்பாடுகள் தளர்ந்து போகின்றன.

“எழுந்து வாங்க கெளதம்” என்றாள் மெதுவாக.

“ஸோ? என்னை அவங்க முகத்தையே பார்க்கக் கூடாதுன்னு சொன்ன தி கிரேட் சஞ்சனா என் முன்னாடி வந்து நிக்கறாங்க. ம்?” முன்பொரு நாள் அவள் முன்னால் வந்து நின்று உறுமிய சிங்கம் இன்று விழுந்து கிடப்பதை ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை அவளால்.

அந்த நாளோடு சேர்த்து அவன் இந்த ஸ்டெதோஸ்கோப்பை அவளுக்கு பரிசளித்த நாளின் நினைவுகள்.

அவளது முதுநிலை படிப்பு முடிந்ததுமே இங்கேயே பணி புரிவதற்கான ஆணையை அவள் கேளாமலேயே அவளுக்கு அனுப்பி இருந்தான் அந்த மருத்துவமனையின் நிர்வாகியான கெளதம் சித்தார்த்.

‘அது ஏனாம் அப்படி?’ என்னதான் அவள் அவனது அபிமான விளையட்டு வீரனாக இருந்தாலும் அவனது இந்த செயலை அவளால் சரி என்று எடுத்துக் கொள்ளவே இயலவில்லை.

என்னதான் அன்றைய வெண்ணிலவே வெண்ணிலவே நடனத்திற்கு பிறகு நந்தாவுடன்தான் அவளது திருமணம் என்று தெரிந்ததும் அவன் சட்டென விலகி நின்றதை அவள் புரிந்து கொண்டாலும்

“என்னை அருகிலேயே வைத்துக் கொண்டு பார்க்க நினைக்கிறானோ?” என்று அவளது உள்ளுணர்வில் ஏதோ ஒரு உறுத்தல்.

தனக்குத் தானே அதை அவள் மறுத்துப் பார்த்தும் அவன் மனதில் தனக்கு ஒரு இடம் கொடுத்து வைத்திருக்கிறான் என்றே தோன்றியது அவளுக்கு.

அவனிடம் பேசி இந்த வேலையை வேண்டாம் என்று மறுத்து விடவே அன்று அவனை அவனது அலுவலக அறையில் சந்தித்தாள் சஞ்சனா.

“வெல்கம் சஞ்சனா. வெல்கம்” முகம் மலர அவளை வரவேற்றான் கெளதம் சித்தார்த்.

அவனது கல்லூரியில் அவள் தனது முதுநிலை படிப்பை முடிந்திருந்த போதிலும், அவ்வப்போது நேருக்கு நேராக சந்திக்கும் போது புன்னகையை பரிமாறிக் கொண்ட போதிலும், அந்த வெண்ணிலவே நடனத்திற்கு பிறகு இருவரும் தனியாக சந்திப்பது இதுவே முதல் முறை.

அவளது தவிப்பான முக பாவம் அவனுக்கு எதையோ உணர்த்தி இருக்க வேண்டும்.

“சர்..ச..ர்..நான் உங்ககிட்டே.”

“அட ..உட்காருங்க சஞ்சனா. முதலிலே நாம காபி குடிச்சிட்டு, அப்புறம் பேசுவோம்.” அவனது குரலிலும் பார்வையிலும் அன்பைத் தவிர வேறெதுவுமே இல்லை.

அப்போது அவளது கையில் இருந்த அந்த புத்தகத்தில் இருந்து அவளும் நந்தாவும் இருந்த அந்த புகைப்படம் அவனது மேஜையின் கீழே சென்று விழுந்ததை அவள் அறியவில்லை.

அறையின் ஓரத்தில் இருந்த கெட்டிலில் அவனே இருவருக்கும் காபி தயாரித்து எடுத்து வந்தான். அதில் கொஞ்சம் வியப்புத் தான் அவளுக்கு.

“நீங்களே காபி எல்லாம் போட்டு குடுக்கறீங்களே சர்” எழுந்து நின்று வாங்கிக் கொண்டாள்.

“எங்க அம்மாவுக்கு அடிக்கடி போட்டுக் குடுப்பேன். அதுக்கு அப்புறம் ஃபார் யூ ....” அவன் விரல் அவளைச் சுட்ட அந்த ஒற்றை வரியில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்ததைப் போலவே தோன்றியது அவளுக்கு.

அவள் அவன் எதிரில் அமர்ந்து தனது கையில் இருந்த கோப்பையில் இருந்த காபியை சுவைக்க ஆரம்பிக்க

“ஸோ? நீங்க இங்கே ஜாயின் பண்ணப் போறதில்லை ரைட்?” கையிலிருந்த காபியை ருசித்தபடியே தனது சுழல் நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தான் கெளதம் சித்தார்த். முகத்தில் அழகாய் ஒரு மென்னகை.

அவள் முகம் பார்த்தே அவளது மனதை அவன் துல்லியமாக படித்து வைக்க விக்கித்துப் போனாள் சஞ்சனா. அவனை அவள் பார்க்க

“நான் என்ன செஞ்சா நீங்க இங்கே ஜாயின் பண்ணுவீங்க சஞ்சனா? ஐ ஆம் ரெடி ஃபார் எனிதிங் அண்ட் எவ்ரிதிங்” சுழல் நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தவனின் விழிகள் அவளது விழிகளை பருகின.

‘உடல் முழுக்க எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி பேரம் பேசும் தொனியில் கேட்பான்?’ அடுத்த நொடி சுறுசுறுவென கோபம் ஏற, ஏசி காற்றையும் மீறிய வியர்வைத் துளிகள் நெற்றியில் பூத்தன.

“அப்படி நான் இங்கே ஜாயின் பண்ணிட்டா அதுக்கு அப்புறம் நீங்களா வந்து எந்த சூழ்நிலையிலும், என்னைக்கும் என் முகத்தை கூட பார்க்க மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணா நான் இங்கே ஜாயின் பண்றேன். முடியுமா உங்களாலே?”

இத்தனை வருட வாழ்கையில் இப்படி ஒரு உயிர் தாக்கும் ஆயுதத்தை அவன் எதிர் கொண்டது இல்லை. சரேலென மாறிப் போன அவனது முகம் அவளுக்கு அதை அறுதியிட்டுச் சொன்னது.

“முடியாது இல்லையா? ஸோ உங்க ஆஃபரை நீங்களே வெச்சுக்கோங்க. உங்க மேலே நான் நிறைய மரியாதை வெச்சிருக்கேன். அதை கெடுத்துக்காதீங்க குட் பை” காபி கோப்பையை வைத்து விட்டு அவள் எழுந்தே விட

“உட்காருங்க சஞ்சனா” படு நிதானமாக சொன்னான் கெளதம் சித்தார்த். இன்னமும் நாற்காலியில் ஆடிக் கொண்டுதான் இருந்தான் அவன்.

“நான் எடுத்த முடிவு எடுத்ததுதான் சர்” அவள் நகரப் போனாள்.

“ஸோ?” எழுந்து நின்றான் கெளதம். “நீங்க இங்கே ஜாயின் பண்ணா நான் அடிக்கடி உங்க முன்னாடி வந்து பல்லைக் காட்டிட்டு நிப்பேன்னு நினைக்கறீங்க இல்லையா சஞ்சனா? நாம ரெண்டு பேரும் சந்திச்சதுக்கு பிறகும் நீங்க இங்கேதான் படிச்சீங்க. அப்படி நீங்க படிச்ச காலத்திலே எத்தனை நாள் நான் அப்படி வந்து உங்க முன்னாடி நின்னிருக்கேன் ஆங்?” அழுத்தம் திருத்தமாகத்தான் கேட்டான் அவன்.

“இது மாதிரியெல்லாம் என்கிட்டே வேறே யாரவது பேசியிருந்தா கெளதம் சித்தார்த் யாருன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.” அவள் முன்னால் நீண்ட விரலுடனும், குரலில் ஏறிய வெப்பத்துடனும் சொன்னவன் சற்றே கலவரம் கொண்ட அவள் முகம் பார்த்து மெல்லத் தணிந்தான்.

கோபத்தை விட நீ எப்படி என்னை அப்படி நினைக்கலாம் என்ற ஆதங்கம் தான் இருந்ததா என்ன அவனிடத்தில்? அப்போது அப்படித்தான் தோன்றியது அவளுக்கு.

சில நொடிகள் மௌனமாக கடந்தன. அதன் பிறகு அவனுக்கு என்ன தோன்றியதோ

“சரி சஞ்சனா. நீங்களா என்னைத் தேடி, என் முன்னாடி வராம, நானா இனிமே உங்க முகம் கூட பார்க்க மாட்டேன். போதுமா?” என சொல்லி விட்டவன் அவளது விழிகளுக்குள் மாற்றி மாற்றி பார்த்தான்.

“சர்..நான்...”

அவள் என்ன சொல்வது என்றே தெரியாமல் தடுமாறித்தான் போனாள். சற்று அதிகப் படியாக நடந்து கொண்டோம் என்று தோன்றியது அவளுக்கு.

“கெளதம் சித்தார்த் சொன்னா சொன்னதுதான். இனிமே அதிலே மாற்றம் இல்லை. நீங்க எப்போ ஜாயின் பண்ணப் போறீங்க. அதுக்கு பதில் சொல்லுங்க” இப்போ தெளிவடைந்து இருந்தது அவன் குரல்.

“நெக்ஸ்ட் வீக் சர்” அதற்கு மேல் மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

“குட். ஆல் தி வெரி பெஸ்ட்” தன் முன்னே நீண்ட அவன் கரத்தை பற்றி குலுக்கினாள் அவள். பின்னர் அவனிடம் விடைபெற்று திரும்பி நடந்தாள்.

“சஞ்சனா” அவள் கதவை நெருங்கி விட்ட நேரத்தில் இதமாக அழைத்தான். திரும்பினாள்.

இனி பார்க்க முடியாது என்பதினால் அவள் முகத்தை ஆசைத் தீர ஒரு முறை பார்த்துக் கொண்டான் என்றே தோன்றியது அவளுக்கு.

“நத்திங்.. கிளம்புங்க..” சொல்லி விட்டு அடுத்த நொடி தனது எதிரே இருந்த மடிக்கணினியில் முகம் புதைத்துக் கொண்டான் கெளதம் சித்தார்த்.

அதன் பிறகு தான் கொடுத்த வார்த்தையை ஒரு தவம் என காப்பாற்றினான் அவன். எந்த சந்தர்ப்பத்திலும் மறந்தும் கூட அவள் முன்னால் வந்து விடவில்லை. அந்த வகையில் அவனைப் பற்றி நினைக்கும் போது சற்றே பெருமையாக கூட இருக்கும் அவளுக்கு.

இப்படியே கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்திருக்க, தனக்குள்ளாகவே அவன் உருகிக் கொண்டிருப்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

அப்போது நெருங்கிக் கொண்டிருந்தது தேசிய அளவிலான அந்தச் சதுரங்கப் போட்டி.

தவிர்க்க முடியாத நேரங்களில் என்றாவது ஒரு நாள் இருவரும் ஒருவரை ஒருவர் கடக்கும் சூழ்நிலை வந்தாலும் நிமிர்ந்து அவள் முகம் பார்ப்பதை தவிர்த்து விட்டு நகர்ந்து விடுவான் கெளதம் சித்தார்த்

அப்படித்தான் நடந்தது அவன் அந்த சதுரங்கப் போட்டிக்காக மும்பை கிளம்புவதற்கு முன் தினம்.

இவள் யாரோ ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையை படித்துக் கொண்டே அந்த மருத்துவமனையின் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, அவன் அவளைக் கடந்து விறுவிறுவென படிகளில் ஏறினான் இவன்.

உள்ளுணர்வின் சிறு அசைவில் அவள் சட்டென திரும்பிப் பார்க்க, சிறிது கூட அவள் பக்கம் திரும்பாமல் விறுவிறுவென படிகளில் ஏறிக் கொண்டிருந்தான் கெளதம் சித்தார்த் .ஏனோ அன்று அவன் அப்படி கடந்து சென்றது எதையோ இழந்த உணர்வை அவளுக்கு பரிசளித்தது.

அவனைப் பார்த்தே நெடு நாட்கள் ஆகியிருக்க, நடையின் கம்பீரம் சற்றும் குறையாமல் இருந்த போதும், இறுகிக் போன இரும்பின் தன்மையுடன் நடந்தவனைப் பார்த்துக் கொண்டே இறங்கியவள், படிகளில் மாற்றி கால் வைத்துத் தடுமாறி பல படிகள் கீழே உருண்டிருந்தாள்.

“சஞ்சனா” சிறு கூவலுடன் அவளை நோக்கி ஓடி வந்து, கிட்டதட்ட நெருங்கிவிட்டவனுக்கு அப்போதுதான் தான் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அதே இடத்தில் நின்றும் விட்டான்.

இரண்டு மருத்துவர்கள் அவள் அருகே வந்துவிட, அதற்குள்ளாக எழுந்தும் விட்டாள் சஞ்சனா. தனது முழங்கையில் வழியும் ரத்தத்தை பார்த்து விட்டு மெல்ல மெல்ல அவனை நோக்கி நிமிர்ந்தவளை பார்த்துக் கொண்டே பின் பக்கமாக, ஒவ்வொரு படியாக மேலே ஏறிக் கொண்டிருந்தான் அவன்.

தான் பார்த்த அந்த காட்சியையும், அப்போது அவள் அருகில் உதவ முடியாததையும் அவனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை என்றது அவன் பார்வை. பற்றி எரியும் ஒரு தீப்பிழம்பு மாடிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் உணர்வு தோன்றியது அவளுக்கு.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
மறுநாள் அவன் மும்பைக்கு செல்லவில்லை. அவனுக்கு அதீத காய்ச்சல் என்ற செய்தி மட்டும் மருத்துவமனைக்கு வந்தது. மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டான் என்றும் சொன்னார்கள். அவன் வீடு நோக்கி விரைந்தது ஒரு மருத்துவ குழு.

அவனுக்கு உடலளவில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொன்னது மருத்துவ அறிக்கை. அதீத மன அழுத்தம் அந்தத் தீவிர காய்ச்சலுக்கு காரணம் என்று புரிந்தது அவளுக்கு.

“என்னால்தானா? எல்லாவற்றுக்கும் நான்தான் காரணமா?” இதுவரை இல்லாத அளவுக்கு மனத்தளர்ச்சி ஒன்று அவளை ஆட்க் கொண்டது

தட்டில் இருக்கும் உணவு உள்ளே செல்ல மறுத்தது. காபியை குடித்தே வயிற்றை நிரப்பிக் கொண்டாள்.

“கௌதம் சர்க்கு எப்படி இருக்கு?” எதிர்படும் பலரையும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

அதே நேரத்தில் அவன் வீட்டுக்கு செல்லவும் தைரியம் வரவில்லை சஞ்சனாவுக்கு. தனது முகத்தை பார்க்கவே கூடாது என்று அவனுக்கு கட்டளையிட்டவளுக்கு, அவன் எப்படியேனும் முன்னால் வந்து நின்று விட மாட்டானா எனும் எண்ணம் மேலோங்கிக் கிடந்தது.

“என்னாச்சு மேம் கெளதம் சார்க்கு?” பத்து நாட்கள் கழித்து அவனது அன்னை மருத்துவமனைக்கு வர, அவரது அறைக்கு சென்று, அவர் முன்னால் அமர்ந்தாள் சஞ்சனா.

இதற்கு முன்னால் ஓரிரு முறை அவரை சந்தித்தது உண்டு அவள்.

மொத்தமாக வாடித் தான் போயிருந்தார் அவனது அன்னை சரஸ்வதி. சிறுவயதில் இருந்து அவனது சதுரங்க ஆர்வத்தை சரியான விதத்தில் கையாண்டு, அவனுக்கு எப்போதும் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறார் சரஸ்வதி.

“என்ன சொல்றதுன்னு தெரியலைமா. அடிப்பட்ட புலின்னு கேள்வி பட்டிருக்கியா? அப்படி இருக்கான்மா அவன்” வேதனையின் முழு வடிவத்தில் வந்தன அவர் வார்த்தைகள். “அவன்தான்மா எனக்கு எல்லாம். என்னாலே தாங்கிக்கவே முடியலை”

பேசாமல் அமர்ந்திருந்தாள் சஞ்சனா

“ராத்திரியும் தூங்கறது இல்லை. பகலிலேயும் தூங்கறது இல்லை. சரியா சாப்பிடறது இல்லை. உடம்பு முழுக்க ஸ்ட்ரெஸ். என்ன காரணம்ன்னு தெரியலை. அப்படி எல்லாம் அவன் மனசிலே இருக்கறதை ஈஸியா கண்டு பிடிச்சிடவும் முடியாது. நெருப்பை முழுங்கினவன் மாதிரி இருக்கான். இப்போ பத்து நாளா மெடிசின்ஸ் குடுத்து, கொஞ்சம் தூங்கி ஒரு நிலைக்கு வந்திருக்கான் மா”

அந்த அழுத்தத்திற்கான காரணம் தெரிந்தவளின் முகத்தில் நிறையவே வருத்த ரேகைகள்.

“இதெல்லாம் விட எனக்கு பெரிய பயம், அவன் இத்தனை வருஷமா காதலிச்ச செஸ் கூட இப்போ அவனுக்கு வெறுப்பா இருக்குமா. கருப்பு வெள்ளை கட்டம் அவனோட சுவாசம் மாதிரிமா. அதையே வெறுத்து ஒதுக்கறானே!”

இந்த வார்த்தைகள் அவளை பகீர் நிலைக்குத் தள்ளின.

“நீ அவனோட பெரிய ஃபேன் அப்படின்னு முன்னாடி ஒரு தடவை சொல்லி இருக்கான். நீ வந்து ஒரு தடவை அவன் கிட்டே பேசிப் பார்க்கறியாமா? அவன் பழைய படி விளையாடினா போதும். சரியாகிடுவான். இப்படியே விட்டா அவன் ஒண்ணு தன்னை அழிச்சுக்குவான். இல்லன்னா யாரையாவது அழிச்சிடுவான். வெறி பிடிச்ச ராட்ஷசன் மாதிரி இருக்கான் மா அவன். அவனை எனக்கு மீட்டுக் குடுக்க முடியுமாமா?” அவர் கண்களில் கண்ணீர்.

ஏன் கேட்டார், எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது அவருக்கு என்பதெல்லாம் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் ஒரு அன்னையாக கெஞ்சினார் அவளிடம்.

“சரி மேம் நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன்” சொல்லி இருந்தாள் அவள். அதுதான் சரி என்றது அவளது மனசாட்சி. கோவையில் இருக்கும் அவனது பங்களாவிற்கு அவள் செல்வது அதுவே முதல் முறை.

அந்த பிரம்மாண்ட கூடத்தின் ஒரு ஓரத்தில் அலங்காரமாக வீற்றிருந்த அவன் சதுரங்கத்தில் வாங்கிய பரிசுகளை பார்த்துக் கொண்டே அவள் நின்றிருந்த நேரத்தில், அவளது உள்ளுணர்வு அவனது வருகையை உணர்த்த மாடிப் படிகளை நோக்கித் திரும்பினாள் சஞ்சனா.

அந்த பெரியக் கூடத்தின் நடுவில் இருந்த, அந்தப் பெரிய படிகளில் மேல் படியில் இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தான் கெளதம் சித்தார்த்.

அவளைப் பார்த்த மாத்திரத்தில் பெரிதாக மலர்ந்து நின்றது அவனது உள்ளம் என்று அவளால் சத்தியம் செய்ய முடியும். ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு, அவளை விட்டு பார்வையை விலக்காமல் ஒவ்வொரு படியாக கீழே இறங்கிக் கொண்டிருந்தவனின் கண்களில் அத்தனை தீவிரம்.

“ஸோ? என்னை அவங்க முகத்தையே பார்க்கக் கூடாதுன்னு சொன்ன தி கிரேட் சஞ்சனா என் முன்னாடி வந்து நிக்கறாங்க. ம்?” அவள் அருகில் வந்து நின்று அவளை ஏற இறங்கப் பார்த்து சிங்கம் போல உறுமினான் அவன். அல்லது உறுமுவது போல் நடித்தானா என்றும் தோன்றுகிறது இன்று.

அவனால் இவளிடம் கோபப் படவெல்லாம் முடிவதில்லை என்பது இப்போதெல்லாம் நன்றாக புரிகிறது சஞ்சனாவுக்கு.

“என்னமோ இனிமே டோர்னமென்ட் எல்லாம் போக மாட்டேன்ன்னு மேம்கிட்டே சொன்னீங்களாமே. அது என்னன்னு கேட்டுட்டு போகலாம்ன்னு தான் வந்தேன். ஒழுங்கா விளையாடப் போங்க”

அவளது தொனியில் மிரட்டல் போல ஒன்று இருந்தாலும் அவன் உடலளவில் நலமுடன் இருக்கிறானா என்பதை அவசரமாகப் படித்தன அவளது மருத்துவ விழிகள்.

அவள் முன்னால் சற்றே குனிந்து அவள் கண்களுக்குள் பார்த்தவன்

“உன் வேலையை பார்த்துட்டு போ..டி..” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவனது செய்கையில் உள்ளுக்குள் ஒரு திடுக் எழுந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்

“நான் என்ன செஞ்சா நீங்க மறுபடியும் விளையாடுவீங்க சர்? சொல்லுங்க ஐ ஆம் ரெடி ஃபார் எனிதிங் அண்ட் எவ்ரிதிங்” கேட்டபடியே அங்கிருந்த சோபாவில் சென்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் சஞ்சனா.

மெல்ல நடந்து வந்து அவளுக்கு எதிரில் இருந்த சோபாவின் மீது கைகளை ஊன்றிக் கொண்டு நின்றவனின் இதழோரம் ரசிப்பாய் ஒரு புன்னகை.

“இப்போ நான் ஏதாவது ஏடாகூடமா கேட்டு வெச்சா என்ன செய்வீங்க டாக்டர்?”

“நீங்க கேட்க மாட்டீங்க. உங்க அம்மா உங்களை அப்படி வளர்க்கலை. சொல்லுங்க நான் என்ன செஞ்சா விளையாடுவீங்க சர்?”

அம்மாவின் பெயரை எடுத்ததுமே அவனது உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது நிச்சயம். அவர்தான் அவனது உயிர் நாடி. அவர்தான் அவனது பெரிய பலகீனம் என்று தெரியுமே அவளுக்கு.

சில நொடிகள் யோசித்தவன் “ரெண்டு கண்டிஷன்ஸ்.” என்றான் “முதலிலே நீ என்னை சார்ன்னு கூப்பிடறதை விட்டுட்டு கௌதம்ன்னு கூப்பிடனும். ரெண்டாவது கண்டிஷன். அடுத்த மாசம் சென்னையிலே பத்து நாள் நடக்கப்போற இண்டர்நேஷனல் செஸ் டோர்னமென்ட்க்கு நீயும் என் கூட வரணும். எல்லா கேமும் உன் முகம் பார்த்திட்டுதான் நான் விளையாட ஆரம்பிப்பேன் சம்மதமா? அந்த பத்து நாளும் நான் உன் முகத்தை பார்த்திட்டே இருப்பேன் சம்மதமா?”

அவள் அவனுக்கு போட்ட கட்டளையை தூளாக்கும் அழுத்தம் கண்டிப்பாக இருந்தது அவனது வார்த்தைகளில்.

கெளதம் கேட்டதும் மறுக்கத் தோன்றவில்லை சஞ்சனாவுக்கு . ஒப்புக் கொண்டாள் உடனே.

“டன் சர்”

“டன் கெளதம் சொல்லு” உறுமினான் அவன்.

“சரி டன் கெளதம்”

முதல் நாள் ஆட்டத்துக்கு கோவையிலிருந்து இவள் கிளம்பும் நேரத்தில் மருத்துவமனையிலிருந்து ஒரு அவசர அழைப்பு. விமானத்தைத் தவற விட்டுவிட்டு வேறொரு விமானத்தை பிடித்து இவள் சென்னையை அடைந்து அந்தப் போட்டி நடக்கும் அந்த பெரிய ஹோடேலை அடைவதற்குள் பரிதவித்துப் போனாள் சஞ்சனா.

“மேம் கௌதமை உள்ளே போகச் சொல்லுங்க, நான் வந்திட்டே இருக்கேன். டோர்னமென்ட் ஸ்டார்ட் ஆகிட்டா உள்ளே விட மாட்டாங்க. டிஸ்குவாலிஃபை பண்ணிடுவாங்க” அவனது அன்னையை அழைத்து இவள் பதறிய வேளையில் கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் காரிலேயே அமர்ந்திருந்தான் அவன்.

“அவனுக்கு இதெல்லாம் தெரியாதாமா? நீ வந்தாதான் உள்ளே போவேன்னு சொல்றான். அவனை மாத்த முடியாது. நீ சீக்கிரம் வா” சொன்னார் அவன் அன்னை.

கடைசி நிமிடத்தில் இவள் விழுந்தடித்துக் கொண்டு அவன் முன்னால் போய் நிற்க, அவள் முகம் பார்த்து புன்னகைத்தான் கெளதம் சித்தார்த்.

“பெஸ்ட் விஷஸ் சொல்லு சஞ்சனா”

அதன் பின்னர் களைக் கட்டியது ஆட்டம். அவன் விளையாடுவதை அவள் நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை. தவம் செய்யும் முனிவர்களையும் ரிஷிகளையும் பார்த்ததில்லை சஞ்சனா.

ஆனால் ஆட்டம் துவங்கியவுடன் கெளதம் இருக்கும் நிலையை பார்க்கும் போது அவர்கள் எல்லாரும் இப்படித்தான் தவம் செய்திருப்பார்கள் என்று தோன்றும் அவளுக்கு.

கண் மூடி கண் திறப்பதற்குள்ளாகவே எதிராளியின் பக்கம் பல காயங்கள் கட்டங்களை விட்டு வெளியே இருக்கும். ஒரு ஆட்டத்தில் ஒற்றை யானையை கொண்டே எதிராளியை தோற்கடித்தான் என்றால் இன்னொரு சமயம் அவனது குதிரைகளின் ராஜ்ஜியம்.

“செக் மேட்” செய்துவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து எதிர் ஆட்டக்காரரை இவன் பார்க்கும் பார்வையை ரசிக்காமல் இருக்கவே இயலவில்லை அவளால்.

ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்திலும் இவளது முகம் பார்த்துவிட்டு இவளது வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டே உள்ளே சென்றான்.

எது காரணம்? அவளது அருகாமை தந்த வேகமா? அது கொடுத்த மகிழ்ச்சியா? சதுரங்கத்தின் மீது அவனுக்கிருக்கும் காதலா அல்லது இந்த மூன்றுமேவா தெரியவில்லை.

அந்த போட்டிகள் நடக்கும் போதுதான் ஒரு நாள் அவளது தந்தை ஹரிஹரனும் இவனது விளையாட்டை ரசிக்க வந்திருந்தார். அப்போதுதான் அவருக்கும் கௌதமுக்கும் முதல் அறிமுகம். அவனது ஆட்டத்தை ரசித்து மகிழ்ந்து சிலாகித்துப் போனார் அவர்.

முதல் அறிமுகத்திலேயே அவனது குணமுமே பிடித்துப் போனது அவருக்கு.

பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட அந்தப் போட்டியில், ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் சதுரங்கத்தின் முடி சூடா மன்னன் என நிரூபித்தான் கெளதம் சித்தார்த். இவள் அவன் ஆடிய ஆட்டத்தை ரசித்து ரசித்து திளைத்துப் போனாள்.

போட்டிகள் முடிந்த பிறகு விமானத்தில் மூவரும் ஒன்றாக கோவை திரும்ப முடிவு செய்திருந்தனர். சென்னை விமான நிலையத்தில் வைத்துதான்

“மேம் உங்க பையனை பத்திரமா உங்க கிட்டே மீட்டுக் கொடுத்திட்டேன்”

என அவனது அன்னை சரஸ்வதியிடம் கௌதமின் கரத்தை பிடித்துக் கொடுத்தாள் சஞ்சனா.

“தேங்க் யூ மா’ என அன்னை அவனது தோள்களை அணைத்துக் கொள்ள அன்னையின் செல்ல மகனாய் நெகிழ்ந்து நின்ற கௌதமை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் நடப்பது எல்லாவற்றையும் பார்த்து அவனது அன்னை மனதிற்குள் என்ன முடிவு செய்திருப்பார் என அப்போது நினைக்கவில்லையே அவள்.

விமானம் கிளம்பி இருக்க, அவனது அன்னை முன் பக்க இருக்கையில் அமர்ந்திருக்க இவர்கள் இருவரும் அருகருகே. நேரம் இரவு எட்டு மணியை கடந்து கொண்டிருக்க விமானத்தின் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தன.

போட்டிகளை பற்றி, அவனது ஆட்டத்தை பற்றி ரசித்து ரசித்து சிலாகித்து அவள் பேசிக் கொண்டே வர மௌனத்தின் முழு உருவமாக ஜன்னலின் வழியே தெரிந்த முகலினங்களை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் கெளதம்.

அவள் பேசி முடிக்க “உனக்கும் நந்தாக்கும் எப்போ கல்யாணம் சஞ்சனா?” என்றானே பார்க்க வேண்டும். இன்னமும் அவன் விழிகள் முகிலனங்களை விட்டு அகலவே இல்லை.

ஒரு சதவிகிதம் கூட இப்படி ஒரு கேள்வியை எதிர்ப்பார்க்காதவள் போல் அவனை விக்கித்து பார்த்தாள்.

“இன்னும் ஆ..ஆறு மாசத்திலே இருக்கலாம். ஏன் கெளதம்?”

மெல்லத் திரும்பினான் அவளை நோக்கி.

“சும்மா ஜஸ்ட் லைக் தட் கேட்டேன்” என்றான் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு. பின்னர் தனது கையிலருந்த ஒரு பரிசுப் பொருளை அவளிடம் நீட்டினான்.

“என்னது கௌதம்?” அவள் அவசரமாக பிரிக்க அதில் இருந்தது ஒரு ஸ்டெதோஸ்கோப்.

“திடீர்னு ஒரு பெரிய பள்ளத்திலே விழுந்திட்ட என்னை மீட்டெடுத்த டாக்டருக்கு நான் கொடுக்குற சின்ன பரிசு” குரலில் இதம் மட்டுமே தடவி அவள் கண்களுக்குள் பார்த்து அவன் சொன்ன விதத்தில் கரைந்தாள் அவள்.

“பள்ளத்திலே தள்ளி விட்டதே நான்தானே கெளதம்” மனம் தாங்காமல் சொல்லியும் விட்டாள்.

“அப்படியெல்லாம் இல்லை.” மெல்லச் சிரித்தான் “ நான் ஒரு பைத்தியக்காரன் தடுமாறிட்டேன். விடு ”

“இந்த ஸ்டெத் நீ யூஸ் பண்ணி மத்தவங்க இதயத்தை பரிசோதிக்கும் போதெல்லாம் உனக்காக ஒரு இதயம் இந்த பூமியிலே எங்கோ ஒரு ஓரத்திலே துடிச்சிட்டு இருக்கும்னு மட்டும் நினைச்சுக்கோ” என்று சொன்னபோது எப்போதும் தென்படும் கம்பீரமான கெளதம் சித்தார்த் அங்கே இல்லை.

“இல்லை கெளதம்.. இது..”

“திருப்பிக் கொடுக்காதே ப்ளீஸ்.” அவன் வாழ்க்கையில் ப்ளீஸ் என்ற வார்த்தையை உபயோகிப்பது இதுதான் முதல் தடவை என்று தோன்றியது அவளுக்கு

“எனக்காக இது உன்கிட்டேயே இருக்கட்டுமே”

மறுக்கவில்லை வாங்கிக் கொண்டாள். அந்த முகிலனங்கள் சாட்சியாக அவன் தனது காதலையும் சொல்லி இருந்தான். அதை அவள் மறுக்கவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதன் பிறகு அவள் எதுவுமே பேசவும் இல்லை.

அதன் பிறகு அந்த ஸ்டெதோஸ்கோப். அவளது கைப்பையினுள்ளேயே கிடந்தது. அதை உபயோகிக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை அவளுக்கு.

அவன் தனது காதலை சொல்லிவிட்ட பிறகு, அவனை விட்டு தூரமாக விலகிச் சென்று விட விரும்பியே அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்கும் வழிகளை தேடலானாள்.

ஆனால் அதற்குள் அந்த ஸ்டெதோஸ்கோபை உபயோகிக்கும் ஒரு நாளும் வந்து சேர்ந்ததே. அந்த நேரத்து ஓம் நம சிவாய இன்னும் ஞாபகம் இருக்கிறதே! என்ன செய்வாள் இவள்?

பழைய நினைவுகளுடனேயே அன்றைய இரவுப் பொழுது கழிந்திருந்தது. அவளது தந்தை அந்த மருத்துவமனையின் ஒரு அறையில் உறங்கி விட்டிருந்தார்.

மறுநாள் காலையில்

கௌதமின் மருத்துவ அறிக்கை வந்திருக்க தீப்புண்களின் பாதிப்பு முதல் நிலைதான் எனும் செய்தி அவளுக்கு நிம்மதியை தந்தது.

அவன் அன்னை தந்த புண்ணியம்தானோ என்னவோ உள்பக்க திசுக்களின் பாதிப்பும் பெரிய அளவில் இல்லை. ரத்த அழுத்தம் கூட சீராகி இருந்தது.

இன்னும் சில மணி நேரங்களில் கண் திறந்து விடுவான், ஓரிரு நாட்களில் எழுந்து விடுவான் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது அவளுக்கு. இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் தாக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கெளதம் சித்தார்த்.

அதே நேரத்தில்

“சதுரங்க வீரர் கெளதம் சித்தார்த்துக்கு தீ விபத்து!” தனது நண்பனை கைப்பேசியில் அழைத்து மகிழ்ச்சியாகவே சொன்னான் சுரேந்தர் “விழுந்துட்டான்டா நான் சொன்னபடி கெளதம் விழுந்துட்டான். இனி காத்து நம்ம பக்கம்தான். அவன் இதிலிருந்து எழும்பறதுக்குள்ளே நந்தா வெளியே வந்தாகணும். நான் இப்பவே ஹாஸ்பிடல் கிளம்பறேன்”

அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் அவன் மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருக்க, அவனுக்காக கௌதமின் காரில் காத்திருந்தது அவன் சஞ்சனாவின் தந்தையிடம் தூக்கிப் போட்ட அந்தக் கைப்பேசி! அதை அவனது காரிலேயே மறந்திருந்தாரே அவர்!

தொடரும்
உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ-அறியாயோ-முகிலனமே - கருத்துக்கள்
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே! 11



எத்தனை முறை சொல்லி இருப்பேன் தோட்டத்துக்கு போகாதே என?

இப்போது பார்! உன் முத்த வாசத்தை திருடிக் கொண்டன மல்லிகை மொட்டுக்கள்.




இங்கே சென்னையில்,

இரவு முழுவதும் துளிக்கூட உறங்கவில்லை நந்தாவின் அன்னையான வரலக்ஷ்மி. யாருக்குமே புரியாத ஏதேதோ புலம்பல்கள் அவரிடத்தில். பல உயிர்களை இந்த பூமிக்கு கொண்டு வரும் ஒரு கம்பீரமான மருத்துவரான தனது மனைவியை இப்படி ஒரு நிலையில் பார்க்க கண்டிப்பாக மனம் ஆறவில்லை நீலகண்டனுக்கு.

இதனிடையே நீலகண்டனை அழைத்து அங்கே நடந்த விபத்து பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு தாங்கள் இருவரும் திரும்பி வர ஒரு வாரமாவது ஆகும் என்று சொல்லி இருந்தார் ஹரிஹரன்.

இதையெல்லாம் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர் ரங்கநாதன்.

அதே நேரத்தில் இங்கே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்

கௌதமின் காயங்களுக்கு மருந்திடுவதும், தேவையான மருந்துகளை அவனுக்கு செலுத்துவதும் என, நேற்று இரவு முதல் அவனை விட்டு அகலவே இல்லை சஞ்சனா.

அவன் முகம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு சொல்லி வைத்தார் போல் வரலக்ஷ்மி அத்தையின் வார்த்தைகள் நினைவில் வந்து நின்றன. அது உண்மைதானா? அதைக் கண்டு பிடித்துவிட முடியுமா?

அப்போது ஒலித்தது அவளது கைப்பேசி. அழைத்தவர் அவளது மாமா நீலகண்டன்.

“சொல்லுங்க மாமா” இவள் அழைப்பை ஏற்ற மறுநொடி

“உங்கப்பா நேத்து பேசினதும் எனக்கு மனசே கேட்கலை மா” என அந்த தீ விபத்துக்கு பிறகான இவளது நலம் பற்றி விசாரித்தவர் “கெளதம் எப்படிம்மா இருக்கான்?” என்றார் அடுத்தக் கேள்வியாக. அவர் பேசும் தொனியிலும் கேட்கும் கேள்விகளையும் வைத்தே எதுவோ உறுத்தியது இவளுக்கு.

அவனது நிலையை பற்றி சில தகவல்களை சொல்லி விளக்கியவள் “உங்ககிட்டே ஒரு விஷயம் கேட்கலாமா மாமா?” என்றாள் மெதுவாக.

அவருடன் பேசி முடித்த பிறகுதான் தனது வேலையை செய்து விட இதுதான் சரியான நேரம் என்று அவளை கைத்தட்டி எழுப்பியது அவளது அறிவு.

வரலக்ஷ்மி அத்தை சொன்ன வார்த்தைகள் உண்மை என நீலகண்டன் வார்த்தைகளில் புரிந்து விட்டாலும் அதை உறுதி செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என எழுந்து விட்டாள் சஞ்சனா.

‘யார் உதவுவார்கள் இதற்கு? இந்த மருத்துவமனையில் யார் எனக்கு நம்பிக்கையானவர்கள்? யாரை நான் நாடலாம்?’ யோசிக்கலானாள் அவள்.

அதற்குள்ளாக மருத்துவமனையை அடைந்திருந்தான் சுரேந்தர். முழு காவல்துறை சீருடையில் இருந்தான் அவன். மருத்துவமனையின் கார் நிறுத்தத்தை கடக்கும் நேரத்திலேயே அவனது விழிகளில் விழுந்து வைத்தது கௌதமின் கார்.

இன்று மருத்துவமனையில் இருக்கும் கௌதமின் அறைக்குள் நுழைந்து அதை ஒரு புரட்டு புரட்டி விடுவது சுரேந்தரின் முதல் திட்டமாக இருந்தது.

நேரே வரவேற்புக்கு சென்றான் சுரேந்தர் “அசிஸ்டன்ட் கமிஷனர் சுரேந்தர்” என்றான் தனது அடையாள அட்டையை காட்டியபடியே “நேத்து நடந்த தீ விபத்து சம்மந்தமா மிஸ்டர் கெளதம் சித்தார்த் கிட்டே நான் கொஞ்சம் பேசணும். அவரை இப்போ மீட் பண்ண முடியுமா?”

அவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை சற்றே கணித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது இவனுக்கு.

“சாரி சார். இப்போ அவரை டாக்டர்ஸ் மட்டும்தான் பார்க்க முடியும். நீங்க அவர் பி.ஏ கிட்டே பேசலாம். இல்லேன்னா டாக்டர் சஞ்சனா கிட்டே”

சஞ்சனா என்ற பெயர் அவனை குத்தியது. ‘அவள் இங்கேதான் இருக்கிறாளா? அவளை வைத்து எதையும் சாதித்து கொள்ள முடியுமா?’ உருள ஆரம்பித்தது அவனது போலிஸ் மூளை.

“ஓகே தேங்க்ஸ்” சொல்லிவிட்டு வரவேற்பை விட்டு அகன்றான்.

அவனது சீருடையும் அவனது அடையாள அட்டையும் அவனது பாதையில் வந்து விழுந்த சிறு சிறு கேள்விகளை தள்ளி நிறுத்த, வெகு இயல்பாக கெளதமுடைய பிரத்தியேக அலுவலக அறை இருக்கும் தளத்தை அடைந்து அவனது அறையை தொட்டிருந்தான் சுரேந்தர்.

அறையின் கதவு மூடப்பட்டிருக்க, ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான் சுரேந்திரன். திடீரென பின்னால் வந்து நிற்பானோ அந்த ராக்ஷசன் எனும் எண்ணத்தை தள்ளி வைக்கவே இயலவில்லை சுரேந்திரனால்.

அதற்குள்ளாக இங்கே தீவிர சிகிச்சை பிரிவில் மருந்துகளின் தாக்கத்தில் கெளதம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தான் செய்ய வேண்டிய வேலைகளை துவங்கி இருந்தாள் சஞ்சனா.

வன் மட்டும் படுக்கையில் இல்லாமல் இருந்திருந்தால் இத்தனை நேரம் தனது வரவை சி.சி.டிவியின் மூலம் கவனித்திருப்பான் என்று தோன்றியது அங்கே கௌதமின் அறையின் வாசலில் நின்றிருந்த சுரேந்தருக்கு.

தனக்கு வந்த சந்தேகத்துக்கு எந்த ஒரு வலுவான ஆதாரமும் இல்லாத நிலையில், வருமான வரியை கூட படு துல்லியமாக செலுத்தி விடும் கௌதமை அவனால் சட்ட ரீதியாக அணுகவே முடியாது.

காவல்துறை ஆணையரிடம் இதைப் பற்றி மேலோட்டமாக பேசிப் பார்த்தும் எந்த பெரிய பயனும் இல்லை.

“இது ஊட்டி போலிஸ் ஹான்டில் பண்ற கேஸ். இதிலே நாம எப்படி மூக்கை நுழைக்க முடியும் சுரேந்தர். அதுவும் உங்க நந்தா குடிச்சிட்டு வண்டி ஒட்டி இருக்கான் அப்படிங்கிறதுக்கு உங்ககிட்டேயே ஆதாரம் இருக்கு. எந்த வகையிலே இதிலே கெளதமை சம்மந்தப் படுத்தறீங்க? எனக்கு அவரை பெர்சனலாவே தெரியும். ஹீ இஸ் அ பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன். ஒரு பிரபலமான கிரான்ட் மாஸ்டர். பெரிய பிசினஸ்மேன். அவருக்கு சி.எம். வரைக்கும் செல்வாக்கு உண்டு. தேவை இல்லாம பெரிய இடத்திலே கை வைக்காதீங்க” முடிந்துவிட்டார் ஆணையர்.

இவனது உள்ளுணர்வு சொல்லும் செய்திகளை எல்லாம் அவர் புரிந்து கொள்ள நியாயம் இல்லைதான். அதனால் இந்த மறைமுக வழிகளே சிறந்தது எனும் முடிவுக்கு வந்திருந்தான் சுரேந்தர்.

கதவைத் திறந்து விட அவன் செய்த முதல் முயற்சி தோல்வி. அந்தக் கதவின் பூட்டு கௌதமின் கை ரேகையை கிரஹித்துக் கொண்டே திறக்கும் என்பதை அவன் உணர்வதற்குள் அவனது காரில் இருந்த கைப்பேசிக்கு இதைப் பற்றிய ஒரு குறுஞ்செய்தி போயிருந்தது.

அடுத்த இரண்டாவது நிமிடந்தில் அவன் அருகில் நின்றிருந்தாள் கௌதமின் காரியதரிசி தாரிணி. அவன் இங்கே செய்த வேலைக்கான அறிவிப்பு அவளையும் எட்டி இருக்க வேண்டும்.

“எஸ் சார்” என்றாள் தாரிணி அவனை அடையாளம் கண்டு கொண்டவளாக “நீங்க அசிஸ்டன்ட் கமிஷனர் சுரேந்தர் இல்லையா?”

“எஸ் மேடம். நான் ஒரு கேஸ் விஷயமா உங்க பாஸ் ரூமை கொஞ்சம் பார்க்கணும்” என்றான் குரலில் சேர்த்துக் கொண்ட ஒரு வகை போலிஸ் விரைப்புடன்.

“சாரி சர். அவர் அனுமதி இல்லாம யாருமே ரூம்குள்ளே போக முடியாது. அதுவும் எங்க பாஸ்க்கு உடம்பு சரியில்லாத இந்த நேரத்திலே கண்டிப்பா முடியாது சர் “

“ஐ ஆம் ஃப்ரம் போலிஸ் டிபார்ட்மென்ட் மேடம்” இவன் உறும

“உங்ககிட்டே சேர்ச் வாரென்ட் இருக்கா சார்?” பதில் அம்பு வந்தது தாரிணியிடமிருந்து. “இதுக்கு மேலே நீங்க எதாவது பேசணும்ன்னா எங்க லாயர் கிட்டே முதலிலே பேசணும் சார்”

தான் அவற்றை கவனிக்கும் நிலையில் இல்லாவிட்டாலும் எல்லாம் சரியாக இயங்கும் நிலையில் எல்லாவற்றையும் எல்லோரையும் தயார்ப் படுத்தித்தான் வைத்திருக்கிறான் கெளதம் எனப் புரிந்தது சுரேந்தருக்கு.

“ஃபைன் நான் உங்களை எல்லாம் சந்திக்க வேண்டிய முறையில் சந்திக்கிறேன்” அவளிடம் சீறிவிட்டு அங்கிருந்து அகன்றான் சுரேந்தர்.

அதே நேரத்தில் இங்கே தீவிர சிகிச்சை பிரிவில் கௌதமின் உடல் ஒரு முறை தூக்கிப் போட்டு ஓய்ந்தது. பதறிப் போய் அவனை பரிசோதிக்க ஆரம்பித்தாள் சஞ்சனா.

அதே நேரத்தில் அங்கே

அடுத்த திட்டங்களை அவன் மனதிற்குள் புரட்டிக் கொண்டே கார் நிறுத்தத்தை அடைந்திருந்தான் சுரேந்தர். கௌதமின் காரை அடையாளம் கண்டு கொண்டு அதை ஒரு சுற்று சுற்றி வந்தவனின் பார்வையில் பட்டது அந்த காரின் டேஷ் போர்டில் இருந்த கைப்பேசி.

‘யாருடையது? கௌதமுடைய கைப்பேசி தானோ?’

அது ஒன்று கிடைத்துவிட்டால் கௌதமுக்கு எதிரான சில ஆதரங்களையாவது அதிலிருந்து திரட்டி விடலாம் என்று தோன்றியது. இத்தனை நாட்களில் கௌதமின் தனிப்பட்ட எண் இவனுக்கு மனப்பாடமே ஆகியிருக்க அதை ஒரு முறை அழைத்தும் பார்த்தான்.

காருக்குள் இருந்த அந்தக் கைப்பேசி ஒளிர உள்ளே இருப்பது கௌதமுடையதுதான் என்பது உறுதியானது அவனுக்கு. நேர்மையான முறையில் அவனால் அதைக் கைப்பற்றவே முடியாது.

இதே யோசனையுடனே அவன் நின்று கொண்டிருந்த வேளையில் அவனது அதிர்ஷ்டமா அல்லது வேறெதுவுமா என்பது தெரியவில்லை. ஒரு பணியாள் அங்கே வந்து அவனது காரைத் துடைக்கலானான்.

சற்றே தள்ளி நின்று கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தான் சுரேந்தர். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அந்த கைப்பேசியை கைப்பற்ற வேறே சரியான நேரம் அமையாது என்று தோன்றியது.

சில நிமிடங்கள் கழித்து காரின் கதவுகளைத் திறந்து அதன் உள் பகுதியை துடைக்க ஆரம்பித்தான் அந்த பணியாள். வழக்கமாக கௌதமின் காரை துடைப்பவன் இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது சுரேந்தருக்கு.

இதுதான் சரியான தருணம் என்பதை புரிந்து கொண்டதைப் போலவே அவனை நெருங்கினான் நமது உதவி ஆணையர்.

“எத்தனை வருஷமா இங்கே நீங்க வேலை செய்யறீங்க?”

இங்கே தீவிர சிகிச்சை பிரிவில் மிகுந்த சிரமத்துடன் கண்களை திறந்த கெளதம் தலையை குலுக்கிக் கொண்டு நன்றாக விழித்து விட முயன்றான். அதற்குள் தான் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்திருந்தாள் சஞ்சனா

அங்கே

திடீரென ஒரு கம்பீரமான குரல் அருகில் ஒலிக்க கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது அந்த பணியாளுக்கு. சுரேந்தரனின் போலிஸ் உடையுமே அவனுக்கு கொஞ்சம் பயத்தை கொடுத்திருக்க வேண்டும்.

“பத்து வருஷமா வேலை செய்யறேன் சார்” சுரேந்திரன் கேட்ட கேள்விக்கு குரலில் கூடியிருந்த பவ்யத்துடன் பதில் சொன்னான் அந்த பணியாள்.

அந்த பயத்தையும் பவ்யத்தையும் தனக்கு சதாகமாக்கிக் கொண்டு வெகு இயல்பாக காரின் ஓட்டுனர் பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு அவனிடம் பேச்சு கொடுக்கலானான் சுரேந்தர்.

அதே நேரத்தில் இங்கே

“மை மொபைல்” என்றான் கண் திறந்து விழித்து பார்த்த கெளதம். அரை குறை மயக்கத்திலும் அவனது உள்ளுணர்வு விழித்துக் கொண்டேதான் இருந்ததோ?

“உடம்பு என்ன செய்யுது கெளதம்?” சஞ்சனா அவன் அருகில் குனிய அதற்குள் இரண்டு நர்சகள் அவன் அருகில் ஓடி வர

“சஞ்சனா ஐ நீட் மை மொபைல் ரைட் நவ்” என்றான் அத்தனை மேலே எழும்பிவிடாத குரலில் “உங்க அப்பா கிட்டே கொடுத்தேன்”

நிமிடங்கள் கடக்க அந்த பணியாளின் பார்வை வேறு திசையில் திரும்பிய நேரத்தில் நமது உதவி ஆணையரின் கரம் தனது வேலையை கச்சிதமாக முடித்தது.

அவன் கை சேர்த்திருந்தது கெளதம் சித்த்தார்தின் கைப்பேசி. சரியாக சொல்ல வேண்டுமென்றால் அவன் கெளதம் சித்தார்த்தின் உயிர் நாடியை கைப் பற்றியிருந்தான்.

அதனோடு சேர்த்து அவனது கைகளுக்கு பரிசாக கிடைத்தது அந்த ஓட்டுனர் இருக்கையின் கீழே கிடந்த ஒரு காகிதம். அது என்னவென இவன் பார்த்த நேரத்தில் சுரேந்தரின் முகத்தில் பலவித மாற்றங்கள். அந்த காகிதத்தில் இருந்த விவரங்கள் அவனது போலிஸ் மூளைக்கு எதையோ கோடிட்டு காட்டின.

அந்த காகிதத்தை தனது பேன்ட் பேக்கட்டுக்குள் சொருகிக் கொண்டு துள்ளி எழுந்தான் சுரேந்தர்.

“சரிங்க சார். அப்புறம் பார்க்கலாம்” அந்த பணியாளிடம் இவன் சொல்ல அவனுக்கோ இவன் சார் என்று அழைத்ததில் மிகப் பெரிய சந்தோஷம்.

“சரிங்க சார் வணக்கம்” அவன் கையெடுத்து வணங்க, அவனுக்கு தலையசைத்து விட்டு, கைப்பேசி கைக்கு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் நடந்தான் சுரேந்தர்

“நீங்க கதறிக் கதறி அழுதிருக்கீங்களா மிஸ்டர் சுரேந்தர்?” அன்று இவனை மிரட்டிய கௌதமின் முகம் இப்போது நினைவுக்கு வந்தது.

நடந்து கொண்டே “அழ வைக்கிறேன்டா. இன்னும் ரெண்டே நாளிலே உன்னை அழ வைக்கிறேன்டா” என உள்ளுக்குளே உறுமிக் கொண்டு கௌதமின் கைப்பேசியை இயக்கப் பார்த்தான் சுரேந்தர்.

கைப்பேசியும் கௌதமின் கைரேகையின் மூலமே திறக்கும் வகையில் பூட்டப் பட்டிருந்தது. இதைத் திறந்து உள்ளிருக்கும் விவரங்களை எடுத்துவிடும் வழிகள் தெரிந்த ஆட்களும் அவனிடம் இருக்கிறார்களே!

அந்த எண்ணம் தந்த உற்சாகத்தில் அந்தக் கைப்பேசியை ஒரு முறை தூக்கிப் போட்டு பிடித்து விட்டு. இரண்டடிகள் நடந்த நமது உதவி ஆணையர் முன்னால் வந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நின்ற அந்த உருவத்தை பார்த்த மாத்திரத்தில் சற்றே திடுக்கிட்டு திகைத்து நின்றான். அந்த விழிகளில் கோபத் தாண்டவம்.

“என்ன தைரியம்யா உனக்கு? போலிஸ் யூனிஃபார்ம்லே வந்து திருட்டு வேலை பாக்குறே?’ அவன் எதிரே நின்று அவனை நேருக்கு நேராக பார்த்து கேட்டது வேறு யாருமல்ல நமது சஞ்சனாதான்.

கெளதமின் கைப்பேசியை தான் காரிலேயே மறந்து விட்டதை அவளது தந்தை சொல்ல நேராக அங்கே வந்திருந்தாள் அவள்.

எப்போதோ ஒரே ஒரு முறை நந்தாவுடன் இருந்த போது நேரில் பார்த்திருந்த அவனது நண்பன் சுரேந்திரனை கண்டிப்பாக அடையாளம் தெரியவில்லை அவளுக்கு.

‘இவள் சஞ்சனாதானே?’ சட்டென பளிச்சிட்டது சுரேந்தரனுக்கு.

“நீங்க சஞ்சனாதானே?” கேட்டும் விட்டான் அவன்.

“மை காட். என் பெயர் உனக்கு எப்படி மேன் தெரியும்?” கொஞ்சம் திகைத்தாள் அவள். “முதலிலே அந்த மொபைலை என்கிட்டே குடு”

“டாக்டர் சஞ்சனா நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும். ஐ. ஆம். அசிஸ்டன்ட் கமிஷனர் சுரேந்திரன். நந்தாவோட ஃப்ரெண்ட் “ என தனது அடையாள அட்டையைக் காட்டினான் சுரேந்திரன்.

“நந்தா ஃப்ரெண்டா?” என சற்றே தணிந்தவள் அவனது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்தாள். அப்போது அவளது மாமா நீலகண்டன் சொன்ன சுரேந்தர் எனும் பெயர் அவளது நினைவுக்கு வந்தது.

“நாம முன்னாடியே ஒரு தடவை மீட் பண்ணி இருக்கோம் சஞ்சனா. உங்களுக்கு நினைவு இல்லை.” மெல்லச் சொன்னான் அவன்.

“இருக்கலாம்” என்றவள் அந்த கைப்பேசிக்காக அவனை நோக்கி கை நீட்டினாள். “அசிஸ்டன்ட் கமிஷனரா இருந்திட்டு ஒரு மொபைலை திருடறீங்க. அசிங்கமா இல்லையா உங்களுக்கு?”

“சஞ்சனா நான் திருடலை..” அவன் ஏதோ சொல்ல வர

“நீங்க அதை திருட்டுத்தனமா எடுக்கறதை நான் என் கண்ணாலே பார்த்தேன் மிஸ்டர் சுரேந்தர். அதுக்கும் மேலே எடுக்கலைன்னு பொய் வேறே சொல்றீங்க” என்றாள் அவனை இடை மறித்து “நல்ல வேளை கெளதம் கரெக்டா கண் முழிச்சு மொபைல் வேணும்னு கேட்டார். இல்லைனா என்னவாகியிருக்கும்?”

‘மயக்கத்தில் இருந்தாலும் மூளை மட்டும் வேலை செய்து கொண்டே இருக்குமோ என்ன அந்த எமகாதகனுக்கு?’ உள்ளுக்குள் அவனை வியக்காமல் இருக்கவே முடியவில்லை சுரேந்தரால்.

“இல்ல சஞ்சனா.. எனக்கு நந்தா காணாமல் போன விஷயத்தில் கெளதம் மேலே சந்தேகம் இருக்கு. அதனாலே...”

“வாட்.. நான்சென்ஸ்..” அவன் முடிப்பதற்குள்ளாகவே வெடித்து விட்டாள் அவள். “யார்கிட்டே யாரைப் பத்தி பேசறீங்க? ஹி இஸ் அன் எக்ஸ்டிராடினரி ஜென்டில்மேன். அவரோட ஸ்டேடஸ் என்னன்னு தெரியுமா உங்களுக்கு? அவர் கிராண்ட் மாஸ்டர் அது தெரியுமா உங்களுக்கு? போலிஸ்ன்னா யாரை வேணும்னாலும் என்ன எப்படி வேணும்னாலும் சந்தேகப்பட்டுட முடியுமா?”

சுரேந்திரனின் வார்த்தைகளைக் கூட தாங்கிக் கொள்ளவே இயலவில்லை சஞ்சனாவால். அவனை முதன்முதலாக சந்தித்த நிமிடம் துவங்கி இந்த நொடி வரை கௌதமை எப்போதும் எந்த விஷயத்திலும் சந்தேகப்பட்டு விட முடிந்தது இல்லை அவளால்.

“மிஸ்டர் சுரேந்திரன், மொபைலை திருட முயற்சி பண்ணிட்டு அதை மறைக்க ஏதேதோ கதை சொல்ல பார்க்கறீங்களா?” என்றவள் அவனது கையிலருந்து அந்தக் கைப்பேசியை பிடுங்கிக் கொண்டு உள் நோக்கி நடந்தாள்.

“டாக்டர் சஞ்சனா எனக்கு பத்து நிமிஷம் உங்களோட பேசணும்” நடந்தவளின் செவிகளை அவனது குரல் அடைய திரும்பி வந்து அவன் எதிரில் நின்றாள்.

“நீங்க நியாயமான போலிஸ் ஆஃபீசரா இருந்திருந்தா உங்களோட சந்தேகங்களை சட்டப்படி அணுகி இருக்கணும். இப்படி திருட்டுத்தனமா இல்லை. இனிமே என்கிட்டே பேசணும்ன்னு முயற்சி பண்ணாதீங்க. எனக்கு உங்க மேலேயும் உங்க பேச்சிலேயும் சுத்தமா நம்பிக்கை இல்லை.” என சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள் அங்கிருந்து.

அடுத்த முயற்சியிலும் தோல்வியை தழுவியவனாகவே நின்றிருந்தான் சுரேந்திரன்.

தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தாள் சஞ்சனா. பாதி உறக்கமும் பாதி விழிப்புமாக அவளது வரவை எதிர்ப்பார்த்து வாயிலையே பார்த்தபடி படுத்திருந்தான் கெளதம் சித்தார்த்.

கைப்பேசியை வாங்கிக் கொண்டவனின் முகத்தில் ஒரு நிம்மதிப் பிரவாகம்.

சட்டென தனது கைரேகையை கொண்டு அதை இயக்கிவனை அடைந்த பல தவறவிட்ட அழைப்புகள் மற்றும் பல குறுஞ்செய்திகளினூடே எட்டிப் பார்த்தது யாரோ அவனது அறையை திறக்க முயற்சி செய்ததற்கான குறியீடும்.

அது யாராக இருக்கும் என்பதை அவன் ஊகித்து விட்ட நொடியில், அது பார்வையாளர்கள் நேரம் என்பதலா? அல்லது அவன் தான் ஒரு உதவி ஆணையாளர் எனும் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டானா? என்பதெல்லாம் தெரியவில்லை.

தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைய தேவைப் படும் கையுறை மற்றும் காலுறைகளை அணிந்து கொண்டு கௌதமின் கட்டிலருகே நின்றிருந்தான் சுரேந்திரன்.

அவனுக்கு ஒரு முறை கௌதமை பார்த்தே ஆக வேண்டும் என்ற அவசரம்.

கௌதமுக்கு அந்த நேரத்தில் செலுத்த வேண்டிய ஏதோ ஒரு மருந்தை தேடிக் கொண்டிருந்த சஞ்சனா உள்ளே வந்த அந்த காவல்காரனை கவனிக்கவில்லை என்றாலும், அவனை கவனித்தே விட்டிருந்தான் கெளதம் சித்தார்த்.

என்னதான் உடலோடு பல குழாய்கள் இணைக்கப் பட்டு அவன் படுத்துக் கிடந்தாலும் அன்று அவனது மருத்துவமனை பிரத்தியேக அறையில் தன்னோடு மோதிய கௌதமிடம் இருந்த தன்னம்பிக்கையிலும் கம்பீரத்திலும் ஒரு துளி கூட குறைந்து விடவில்லை என்று புரிந்தது சுரேந்தருக்கு.

அவன் முகம் பார்த்த கௌதமால் சும்மா இருந்து விட முடியுமா என்ன? தனது கையிலிருந்த கைப்பேசியை பார்த்து விட்டு சுரேந்தரின் முகத்தை பார்த்தான் அவன். அவனது புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்கின. உதடுகள் மெல்ல அசைந்தன

“கெளதம் சித்தார்த்!”

“ஜெயித்து விட்ட்னாமா?” எரிச்சல் மண்டியது சுரேந்தரின் முகத்தில். அதற்குள் திரும்பி விட்டாள் சஞ்சனா.

“மிஸ்டர் சுரேந்தர். நீங்க எப்படி உள்ளே வந்தீங்க? இங்கே டாக்டர்ஸ் தவிர வேறே யாருக்கும் அனுமதி இல்லை”

“இல்லை சஞ்சனா...”

“கெட் அவட் மிஸ்டர் சுரேந்தர். நான் நீங்க சொல்றது எதையுமே கேட்க விரும்பலை” அவன் சொல்ல வருவதை கேட்காமல் அவள் வெடிக்க பதில் பேசாமல் அறையை விட்டு வெளியேறினான் சுரேந்தர்.

“இதோ இவர்தான் கார்லேர்ந்து உங்க மொபைல் எடுத்திட்டு போக பார்த்தார் கெளதம். நான் சண்டை போட்டு வாங்கிட்டு வந்திட்டேன்” சஞ்சனா அவனிடம் சொல்ல யோசனையில் கூடி விலகின கௌதமின் புருவங்கள்.

“இப்போ இங்கே ஐ.சி.யூ விலே மொபைல் வேண்டாம் கெளதம் ப்ளீஸ். ஈவினிங் கொஞ்சம் பெட்டர் ஆகிடுவீங்க. அப்போ இங்கே இருந்து வெளியிலே போயிட்டு யூஸ் பண்ணுவீங்களாம். அதுவரைக்கும் என்கிட்டேயே இருக்கட்டும்.”

கையில் எடுத்த மருந்தை அவனது ட்ரிப்சுடன் சேர்த்துக் கொண்டே சொன்னாள் சஞ்சனா

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அவன் அவள் முகம் பார்த்திருக்க

“உங்க சஞ்சனாவை நம்ப மாட்டீங்களா? ஆங்?” அவன் அருகில் குனிந்து மெலிதான குரலில் அவள் கேட்க அவளது வார்த்தைகள் அவனுக்குள் உருவாக்கிய பூரிப்பை அவனது முகம் மிக அழகாக பிரதிபலித்தது.

இத்தனை வருட வாழ்கையில் இந்த விதமான மகிழ்ச்சியை உணர்ந்தது இல்லைதான் அவன். அதன் பிறகு அவனிடம் ஒற்றைத் துளி யோசனை கூட எழவில்லை. அடுத்த நொடி அவளது கரத்தை சேர்ந்திருந்தது அவனது கைப்பேசி.

அவளைத் தவிர வேறே யாரை அவனால் முழுவதுமாக நம்பி விட முடியுமாம்?

மருந்து அவனுக்குள் இறங்க உறக்கம் அவனை மறுபடியும் தனக்குள் இழுத்துக் கொள்ள

“இதோ இவர்தான் கார்லேர்ந்து உங்க மொபைல் எடுத்திட்டு போக பார்த்தார் நான் சண்டைப் போட்டு வாங்கிட்டு வந்திட்டேன்”

அவளின் வார்த்தைகள் அவனது செவிகளுக்குள் ஒலிக்க, சுரேந்தர் அடுத்ததாக அவள் மூலமாக விளையாட நினைப்பான் என்ற எண்ணம் அவனுக்குள் உதயமாக, அப்படியே கண் மூடி உறங்கிப் போனான் நமது சதுரங்க வீரன்.

கைப்பேசி கடைசி நிமிடத்தில் கை விட்டுப் போனதிலும், சஞ்சனா பேசியதிலும் அத்தனை ஏமாற்றம் சூழ்ந்து கொண்டது நமது உதவி ஆணையரை.

தோற்றுப் போன உணர்வுடனேயே மருத்துவமனையிலிருந்து திரும்பி மற்ற வேலைகளை கவனித்து விட்டு மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்த கைப்பேசியுடனே கிடைத்த அந்த காகிதத்தின் நினைவு வந்தது சுரேந்தருக்கு.

அவசரமாக வெளியே எடுத்தான் அதை. அது கௌதமின் விமானி உரிமத்தின் நகல். அதாவது ஒரு ஹெலிகாப்டரை செலுத்துவதற்காக அவன் பயிற்சி எடுத்துப் பெற்ற உரிமத்தின் நகல் அது.

அது எப்படியோ அவனது காருக்குள் கிடந்திருக்க அது சுரேந்தரனின் கைக்கு கிடைத்து விட்டிருந்தது.

அவனுக்கு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் இருக்கும் என்ற கோணத்தில் அவன் இதுவரை யோசிக்கவே இல்லையே சுரேந்தர். அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டான் அவன்.

நந்தாவை அவன் ஹெலிகாப்டர் மூலமாக எங்காவது கொண்டு சென்று அடைத்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு பொறி அவனை தட்டியது.

எப்படியும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இலாகாவின் அனுமதி இல்லாமல் அவனால் பறந்திருக்கவே முடியாது. மறுபடியும் சுறுசுறுப்பானது அவனது மூளை.

நேரம் இரவு ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அவனை அடைந்த செய்தி அவன் ஊகங்கள் சரியே என சத்தியம் செய்தன.

நந்தன் காணாமல் போன அந்த நாளின் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு உதகையில் இருந்து அதன் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு பகுதிக்கு கௌதமின் ஹெலிகாப்டர் வந்து இறங்கியாதாக விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த அறிக்கையில் தெள்ளத் தெளிவாக இருக்க திக்கு முக்காடிப் போனான் சுரேந்தர்.

அதற்கு மேல் கொஞ்சம் கூட தாமதிக்க விரும்பவில்லை சுரேந்தர். தனது காவல்துறை நண்பர்ளில் ஒருவனை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டான் அவன்.

நாளை காலைக்குள் யார் மூலமாகவாவது கெளதம் காதுக்கு, விஷயம் சென்று விட்டால் அவன் நந்தாவை இடம் மாற்றுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

அவன் முழுவதுமாக சுய நினைவுக்கு வருவதற்குள் இந்த வேலையை முடிப்பதுதான் உத்தமம் என முடிவு செய்து கொண்டான் சுரேந்தர்.

தன்னிடம் இருக்கும் துப்பாக்கிகளையும் தனது மனதில் இருந்த தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் துணையாகக் கொண்டு நண்பனைத் தேடிக் கிளம்பியிருந்தான் சுரேந்தர்.

நண்பன் அவர்களது காரை செலுத்த கௌதமின் ஹெலிகாப்டர் அன்று தரை இறங்கியதாக சொல்லப் பட்ட அந்தப் பகுதியை அவர்கள் அடைய நேரம் இரவு பதினொன்றை தாண்டி இருந்தது.

அடர் மரங்கள் சூழ ஒரு வனப்பகுதி போல கும்மிருட்டுடன் காட்சி அளித்த அந்தப் பகுதியில் காரை விட்டு இறங்கி நின்றார்கள் நண்பர்கள் இருவரும்.

தொடரும்

உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!

நீ-அறியாயோ-முகிலனமே - கருத்துக்கள்
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே! 12



நம் தோட்டத்து ரோஜாக்களுக்கு உன் இதழ் முத்தம் மட்டுமே வேண்டுமாம்!

அவற்றோடு கடும் கோபத்தில் நானும் வண்ணத்து பூச்சிகளும்!




அந்தப் பகுதியில் தெரு விளக்குகள் இருக்கும் அடையாளங்கள் கூட தென்படவில்லை. கையிலிருக்கும் டார்ச்சுகளும் கைப்பேசிகளும் தந்த வெளிச்சத்தை வைத்துக் கொண்டே அந்தப் பகுதியை அலச ஆரம்பித்தனர் இருவரும்.

சில நிமிட தேடலில் மரங்கள் சூழ்ந்து கிடந்த ஒரு பகுதியின் நடுவில் இருந்து வெளிவந்த வெளிச்சக் கீற்று அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை பாய்ச்சியது. அதை நோக்கி முன்னேற ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் அந்த வீட்டையும் நெருங்கி இருந்தனர்.

அது கெளதம் சித்தார்த்தின் வீடாகத் தான் இருக்கும் என்று உறுதியாக தோன்றியது சுரேந்தருக்கு. வெற்றி மிதப்பு அவன் முகத்தில். அவனது இடை விடாத போரட்டம் கடைசியில் பலன் கொடுத்து விட்டது எனும் மகிழ்ச்சி.

கெளதம் மருத்துவமனையில் படுத்துக் கிடந்த காட்சியே அவனது மனதில் வந்து வந்து போனது. அவன் மட்டும் நலமுடன் இருந்திருந்தால் இவன் அந்த விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மாத்திரத்தில் செய்தியை கிரஹித்து விட்டிருப்பான் கிராதகன்.

“உலகத்திலே இன்னும் நியாயம் எல்லாம் சாகலைடா. ஒரு பாதையை அந்த கெளதம் அடைச்சாலும் இன்னொரு பாதை அழகா திறக்குது. எனக்கு அந்த கெளதம் தலை குனிஞ்சு நிக்குறதை இப்போவே பார்க்கணும் போலே இருக்கு” சொல்லிக் கொண்டான் நண்பனிடம்.

மூன்றடுக்கு கட்டிடமாக நின்றிருந்த அந்த வீட்டின் வெளிப்புற சுவருமே உயரமாகத்தான் இருந்தது. வீட்டு கேட்டின் அருகிலேயே அழைப்பு மணி இருக்க அதை அழுத்துவதை தவிர்த்தான் சுரேந்திரன்

உள்ளே இருக்கும் யாருக்கும் சுதாரித்துக் கொள்ளும் அவகாசம் கூட கொடுக்காமல் அதிரடியாக உள்ளே நுழைந்து விட வேண்டும் என்பது அவனது திட்டம்

யாரும் உள்ளே நுழைந்து விடாமல் இருக்க கேட்டில் மின்சாரம் கூட பாய்ந்து கொண்டிருக்கலாம் என்று தோன்றியது சுரேந்தருக்கு.

அப்படி எதுவும் இல்லை என்று தன்னிடம் இருந்த உபகரணங்களை வைத்து உறுதி செய்து கொண்டவன் ஒரு சிறு சத்தம் கூட எழாமல் அந்த கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை தான் கொண்டு வந்திருந்த கருவியை கொண்டு திறந்திருந்தான்.

உடன் இருந்த நண்பனே இதைப் பார்த்து வியந்து போனான்.

“போலிஸ்காரனும் கூட ஒரு நல்ல திருடனா இருக்கணும்டா. அப்போதான் அவனாலே அவன் வேலையிலே ஜெயிக்க முடியும்” மெலிதாக சிரித்தான் சுரேந்தர் அதீத கவனத்துடன் பார்வையை சுழற்றிக் கொண்டே நடந்தனர் நண்பர்கள் இருவரும்.

அதே நேரத்தில் அந்தப் பண்ணை வீட்டின் உள்ளே கூடத்தில் இருந்த சோபாவில் படுத்துக் கிடந்தான் அவன். ஆதித்யா. அன்று நந்தாவின் கார் பள்ளத்தில் உருண்ட தினத்தில் கெளதமிடன் கைப்பேசியில் பேசினானே அதே ஆதித்யா. ஒரு வகையில் இவன் கௌதமின் நண்பனும் கூட

அந்த வீட்டில் அடைந்து கிடக்கும் நந்தாவை பாதுக்காக்கும் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டவன் ஆதித்யா. அவன் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

சுரேந்தர் பற்றிய விவரங்களை ஆதித்யாவிடம் முன்பே சொல்லி இருக்கிறான்தான் கெளதம். இப்போது கெளதமுக்கு தீ விபத்து என்ற செய்தியும் கெளதம் வீட்டு வேலையாட்கள் மூலம் ஆதித்யாவை எட்டி இருக்கிறதுதான்.

இப்போதுதான் லேசான பயம் பிடித்துக் கொள்ள ஆரம்பித்து இருந்தது ஆதித்யாவை. இதுவரை எல்லாவற்றையும் கௌதமின் ஆணைகளின் படியே செய்து முடித்தவனுக்கு அடுத்து என்ன நடக்கும், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் ஏதோ ஒன்று தவறாக நடக்கப் போகிறது என்பது மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.

திடீரென வாசல் கதவு பலமாக தட்டப்பட உடல் குலுங்கியது அவனுக்கு.

“யாரது? கேட்டில் இருக்கும் பூட்டை எப்படித் திறந்தார்கள்?”

“போலிஸ் வந்திருக்கோம். இப்போ கதவை திறக்கலன்னா துப்பாக்கியை பயன்படுத்த வேண்டி இருக்கும்” சத்தமாக சொன்னான் சுரேந்தர்.

தலை முதல் கால் வரை நடுக்கம் மட்டுமே இருக்க அதற்கு மேல் தாமதிக்காமல் உடனே வந்து கதவைத் திறந்து விட்டான் அவன். தான் மாட்டிக் கொண்டால் கௌதமை எந்த வகையிலும் காட்டிக் கொடுத்து விடக் கூடாது எனும் உறுதி மட்டும் இருந்தது அவனுக்கு.

“சொல்லுங்க யார் வேணும்?” என்றான் முகத்தில் தைரியத்தை பூசிக் கொண்டு.

“இது கெளதம் சித்தார்த்தோட ஃபார்ம் ஹவுஸ்தானே?” மிரட்டும் தொனியில் கேட்டான் சுரேந்தர்.

“நீங்க யார் சார்? எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க?” அதே மிரட்டல் தொனி எதிரொலித்தது ஆதித்யாவின் குரலில். சூழ்நிலை எல்லாருக்கும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும் ஆசான் போலும்.

“வி ஆர் ஃப்ரம் போலிஸ் டிபார்ட்மென்ட் . இந்த வீட்டை நாங்க சோதனை போடணும்” சீறினான் சுரேந்தர்.

“காரணம்? வாரென்ட் இருக்கா?” ஆதித்யா கேட்க அவனுக்கு பதில் சொல்லக் கூட விரும்பாமல் அடுத்த ஐந்தாம் நொடியில் ஆதித்யாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்திருந்தான் சுரேந்தரின் நண்பன்.

“இது கெளதம் வீடுதானே? உண்மையை சொல்லுடா” மிரட்டினான் சுரேந்தர்.

“ஆ.. ஆமாம்.. கௌ..தம் வீடுதான்” ஆதித்யா தடுமாற, அங்கே இருந்த சுவற்றின் ஓரத்தில் இருந்த சி.சி.டி வி காமெராவில் நடப்பவை எல்லாம் பதிவாகிக் கொண்டிருக்க, வீட்டின் பின் பகுதியில் இருந்த இருட்டறையில் தரையில் அன்றைய நாள் முழுவதும் சாப்பிடாத காரணத்தால் கண்மூடி அரை குறை மயக்கத்தில் கிடந்தான் நந்தா.

ஆதித்யாவை துப்பாக்கி முனையில் நகர்த்திக் கொண்டே உள் நோக்கி நகர்ந்தனர் நண்பர்கள் இருவரும்.

“உள்ளே எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியலை. ஜாக்கிரதையா போ சுரேந்தர்” என்றான் அவனது நண்பன்.

இவர்கள் நினைத்ததைப் போல் உள்ளே வேறே யாரும் இருப்பதாக தெரியவில்லை. நகராமல் முரண்டு பிடித்த ஆதித்யாவை துப்பாக்கி முனையில் நிறுத்திக் கொண்டே வீட்டின் முன் பகுதியில் நின்றான் அவனது நண்பன்.

வேறே எந்த சத்தமும் இல்லாத அந்த நிசப்தத்தில் சுரேந்தரின் ஷூக்களின் ஒலி மட்டுமே எதிரொலித்தது. அதுவே ஒரு வித கலக்கத்தை கொடுத்தது ஆதித்யாவுக்கு. அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்கும் சக்தியை இழந்திருந்தான் அவன்.

“நீ இங்கேயே இருடா. நான் உள்ளே போயிட்டு வரேன்” என நகர்ந்த சுரேந்தர் வீடு முழுவதையும் அலசி எடுத்தான். எங்கேயும் நந்தா இருக்கும் சுவடே இல்லை.

இங்கேதான் எங்கேயோ இருக்கிறான் நந்தா எனும் உணர்வில் அவ்வப்போது “ந..ந்..தா” என வாய்விட்டு கூவிக்கொண்டே நடந்த சுரேந்தர், வீட்டின் பின் பகுதியை அடைந்தான்.

ஆனாலும் அவனது குரல் அவனது கைகெட்டும் தூரத்தில் இருந்த நந்தாவுக்கு கேட்காதது யாருடைய துரதிர்ஷ்டம் என்பது தெரியவில்லை.

முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல் ஆதித்யா நின்றிருந்தாலும் சுரேந்தர் நந்தாவை நெருங்குகிறான் என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு. மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றான் அவன்.

‘கௌதமின் இத்தனை நாள் போராட்டம் இப்படியா முடிய வேண்டும்” ஆதங்கத்தின் உச்சியில் இருந்தான் அவன். ‘எதையாவது எடுத்து அவர்கள் இருவரையும் அடித்துப் போட்டு விட முடியாதா என பரபரத்தன அவன் கரங்கள். ஆனால் அதை செயல் படுத்தத்தான் இயலவில்லை.

‘கெளதம் ஏதாவது செய்து விடு’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

சுரேந்தர் நின்றிருந்த இடத்திற்கும் நந்தா அடைத்து வைக்கப் பட்டிருக்கும் அறைக்கும் கைக்கெட்டும் தூரமே இருந்தது.

நிலை என்ற ஒன்று இல்லாமல் சுவரோடு சுவராக இருந்த நந்தா இருந்த அந்த அறை வாயிலின் இரும்பு கதவின் நிறத்திற்கும் அதனோடு ஒட்டியிருந்த சுவற்றின் நிறத்திற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாததால் சுரேந்தரால் அந்த அறையை சட்டென கவனித்து விட முடியாத நிலையில்,

அங்கே உரத்து ஒலித்தது அந்தக் குரல்

“கெளதம் சித்தார்த் பேசறேன் ஏ.சி ஸ்ர்”

ஓரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஒப்பாக உறுமிய அந்தக் குரல் திடீரென சுரேந்தரின் அடி வயிற்றில் கத்தியைப் பாய்ச்சிய உணர்வை கொடுத்தது.

அதே சத்தம் ஆதித்யா நின்றிருந்த இடத்திலும் ஒலிக்க நிம்மதியின் புள்ளியை தொட்டிருந்தான் அவன். ‘இனி கெளதம் பார்த்துக் கொள்வான்!’ இது எதையுமே உணராமல் அந்த அறையிலேயே முடங்கிக் கிடந்தான் நந்தா.

அந்த குரல் எங்கிருந்து வருகிறது என்பது புரியாமல் தீயை மிதித்தவன் போல் சுரேந்தர் திரும்ப அவனது கவனம் இன்னுமாக சிதற அதை அறையை கவனிக்காமல் சற்றே தள்ளி நகர்ந்தான் அவன்.

அதுதான் வேண்டும் அவனது ஒவ்வொரு அசைவையும் தனது மடிக்கணினி வழியே பார்த்துக் கொண்டிருந்த கௌதமுக்கு.

அவன் அந்த அறையை நெருங்குகிறான் என்பதை திரை வழியே பார்த்துக் கொண்டே இருந்தவன் அவனது கவனத்தை திசைத் திருப்பவே சரியாக அந்த நேரத்தில் கர்ஜித்திருந்தான்.

இன்று மாலையில் அவனது உடல் நிலை சற்றே தேறி விட, மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அந்தத் தீவிர சிகிச்சை பிரிவை விட்டு வெளியேறியிருந்தான் கெளதம் சித்தார்த்..

இருபத்து நான்கு மணி நேரத்துக்கு மேலெல்லாம் அதற்குள் அடைந்து கிடக்கக் கூடியவன் இல்லை கெளதம்.

“காயங்கள் அவ்வளவு டீப்பா இல்லைனாலும் இன்ஃபெக்ஷன் ஆக நிறைய சான்செஸ் இருக்கு சார்” இது மருத்துவர்களின் கவலையாக இருக்க

இன்னும் சில நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை என்று அவன் உறுதி அளித்த பிறகு, அவனது உத்தரவின் பெயரில் அடுத்த சில மணி நேரத்தில் அவனது வீட்டில் இருக்கும் அவனது அறையே ஒரு மினி மருத்துவமனையாக மாறியிருந்தது.

இன்னும் சில நாட்கள் அவனுடனே இருந்து கவனித்து கொள்வதாக சஞ்சனாவும் ஒப்புக் கொண்டிருந்தாள்.

இந்த கர்ஜனைக்கு சற்று நேரம் முன்னால், அவனது அறையின் ஒரு பக்கத்தில் சஞ்சனா படுத்து உறங்கிக் கொண்டிருக்க, ஏனோ உறக்கம் படிக்காமல் படுத்துக் கிடந்தவனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்க மடிக்கணினியை உயிர்ப்பித்தான். அப்போதுதான் பூட்டை திறந்துக் கொண்டு பண்ணை வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான் சுரேந்தர்.

அதன் பிறகு அவனது விழிகள் இங்கே நடப்பவற்றை எல்லாம் மடிக்கணினி வழியே விழுங்கிக் கொண்டிருக்க உறங்கிக் கொண்டிருந்த சஞ்சனாவை துளியும் கலைத்து விடாமல் அறையை ஒட்டியிருந்த பால்கனியை அடைந்திருந்தான் கெளதம்.

இப்போது அவனது குரல் அந்தப் பண்ணை வீட்டுக்குள் ஒலித்தது.

“ஸோ? அசிஸ்டன்ட் கமிஷனர் சார் என் மொபைல் எல்லாம் திருடப் பார்த்தார் போலிருக்கே?”

மிகுந்து போன ஆத்திரத்தில் சுரேந்தரனின் விழிகள் அந்தக் குரல் வரும் திசையைத் தேடி அலைபாய

“டின்னர் எல்லாம் ஆச்சா ஏ.சி சார்? என் வீட்டுக்குள்ளே வாக்கிங் வந்தீங்களா? அப்படி ஒரு வேளை சாப்பிடாம வந்திருந்தா அங்கே டைனிங் டேபிள் மேலே சூடா சப்பாத்தி குருமா இருக்கு. சாப்பிடுங்க. விஷமெல்லாம் வைக்க மாட்டேன் தைரியமா சாப்பிடுங்க”

அவன் சொல்லி முடிக்க அங்கே ஒரு ஓரத்தில் இருக்கும் ஸ்பீக்கரின் வழியே அவனது குரல் ஒலிக்கிறது என்பது புரிந்தது சுரேந்தருக்கு.

“டேய்..” கோபத்தின் உச்சியில் கத்தினான் சுரேந்தர்.

“ஷ்.. கத்தாதீங்க சார். நடு ராத்திரியிலே என் வீட்டுக்குள்ளே அத்து மீறி புகுந்து சுத்தி சுத்தி வரீங்க. அங்கே இருக்கறதை எல்லாம் உங்க மொபைல்லே விடியோ எடுக்கறீங்க. அங்கே தங்கி இருக்கிற என் ஃப்ரெண்டை துப்பாக்கி முனையிலே நிக்க வெச்சிருக்கீங்க. என்ன இருக்கு உங்க மனசிலே? நான் யாருன்னு தெரியுமா? சமூகத்திலே என் அந்தஸ்து என்னனு தெரியுமா? ஆங்?”

எந்த குற்றமும் செய்யாதவன் போன்றதொரு தொனியில் படு தைரியமாக வெடித்தான் கெளதம்.

“இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இதுவரைக்கும் நான் இந்த விஷயத்திலே ரொம்ப பொறுமையா இருக்கேன். அதை இழந்துட்டேன் அப்படின்னா அதுக்கு அப்புறம் எ..ல்லா..ருக்..கு..ம் ரொ...ம்..ப.. கஷ்டம்” அவன் அழுத்தி சொல்ல அவன் நந்தாவைத்தான் குறிப்பிடுகிறான் என்பது நன்றாகவே புரிந்தது சுரேந்திரனுக்கு.

“நீங்க எனக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டாம் அசிஸ்டன்ட் கமிஷனர் சார். நான் ஐ ஜி கிட்டே பேசி இருக்கேன். உங்க கமிஷனர் இப்போ கால் பண்ணுவார் அவருக்கு பதில் சொல்லுங்க” முடித்தான் கெளதம்.

அடுத்த நிமிடம் அழைத்திருந்தார் ஆணையர்.

“என்னயா முட்டாள்தனம் பண்ணி வெச்சிருக்கே நீ?” சீறினார் அவர்.

“நான் அன்னைக்கே உங்ககிட்டே இது பத்தி பேசினேனே சார். என் ஃப்ரெண்ட். நந்தா இங்கேதான் இருப்பான்னு என் மனசு சொல்லுது“ கெஞ்சலும் தவிப்புமாகத்தான் இருந்தது சுரேந்தரனின் குரல்.

“மனசு மண்ணாங்கட்டின்னு உளறாதே. சட்டத்துக்கு ஆதாரம்தான் முக்கியம். கௌதம்தான் இதை செஞ்சான்னு உன்கிட்டே சரியான ஆதாரம் இருக்கா?”

“இல்லை சார்”

“அப்போ வாயை மூடிட்டு அங்கிருந்து கிளம்பு. நான்தான் அன்னைக்கே உன்கிட்டே சொன்னேனே அவன் சொசைடியிலே பெரிய ஆளு அவன்கிட்டே மோதாதேன்னு. நீ அவனை ஒரு தடவை அவன் ஹாஸ்பிடல்லே பார்த்து மிரட்டினியாமே? நீ அவனை வேணும்னே கார்னர் பண்ணறேன்னு ஐ.ஜி கிட்டே கம்பளையன்ட் பண்ணி இருக்கான்.”

பதில் பேசவில்லை சுரேந்திரன்

“நீ அவன் வீட்டுக்குள்ளே வந்ததில் இருந்து அவன் உன்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கான்யா. இப்போ நீ அவன் வீட்டுக்குள்ளே சுத்தின விடியோ எல்லாத்தையும் அவன் இருக்கிற இடத்தில் இருந்தே எடுத்து ஐ.ஜிக்கு அனுப்பி இருக்கான். நாளைக்கு உனக்கும் உன் கூட வந்த உன் அருமை நண்பனுக்கும் சேர்த்து சஸ்பென்ஷன் ஆர்டர் வரும் வாங்கிக்கோங்க. இப்போ அடுத்த ரெண்டாவது நிமிஷம் அந்த இடத்தை கிளம்பறீங்க ரெண்டு பேரும்.”

அவரிடம் பேசிவிட்டு தளர்ந்து போய் தரையில் அமர்ந்தான் சுரேந்தர்.

ஒரு காவல்துறை அதிகாரியாக பணமும் அந்தஸ்தும் விளையாடும் விளையாட்டுக்களை இதற்கு முன் பல முறை சந்தித்து இருந்தாலும் இந்த முறை அதிகமாக வலித்தது சுரேந்திரனுக்கு .

சுரேந்தர் தரையில் அமர்ந்து இருந்ததையும், உள்ளே அறைக்குள் நந்தா சுருண்டு படுத்துக் கிடந்ததையும் மாற்றி மாற்றி பார்த்து ரசித்திருந்தான் கெளதம்.

“டேய்.. நந்தா உன் அருமை நண்பன் உன்னைத் தேடி வெளியிலே காத்திருக்கான்டா” தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் கெளதம் “ஆனா அவனாலே உன்கிட்டே கூட நெருங்க முடியாது”

நந்தா எங்கேயாவது தென்பட்டு விட மாட்டனா என இன்னொரு முறை பார்வையை சுழல விட்டுவிட்டு

“ந..ந்..தா. எங்கேடா இருக்கே? குரல் கொடேன்” ஆற்றாமையுடன் வாய்விட்டு கத்தினான் அவனது அருமை நண்பன் சுரேந்தர்.

அது அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லையே. அவன்தான் பிடிவாதமாக சாப்பிடாமல் அரை மயக்கத்தில் இருக்கிறானே.!

“நந்தா அன்று சிரித்த சிரிப்புக்கு இது மட்டும் போதுமா அவனுக்கு.?” என சொல்லிக் கொண்டு இங்கே வாய்விட்டு சிரித்தான் கெளதம்.

வீட்டை முழுவதுமாக அலசிவிட்டு எங்கவாது பாதாள அறைகள் இருக்குமா எனும் ரீதியில் எல்லாம் தேடிவிட்டு, கவனிக்க வேண்டிய அறையை மட்டும் கவனிக்காமல் ஆதித்யாவை விடுவித்து விட்டு, அங்கிருந்து தோற்றுப் போய் கிளம்பும் இருவரையும் பார்க்க சற்றுப் பரிதாபமாகக் கூட இருந்தது கௌதமுக்கு.

மறுநாள் காலை.

பதவி இடை நீக்க ஆணை வந்து சேர்ந்திருந்தது சுரேந்தருக்கும் அவனது நண்பனுக்கும். இருந்தாலும் தோல்வியை ஒப்புக் கொள்வதாக இல்லை நமது உதவி ஆணையர்.

ஒரு வேளை அந்த வீட்டிலேயே நந்தா இருந்திருந்தாலும், இத்தனை நடந்த பிறகு நந்தாவை கெளதம் இடம் மாற்றியிருப்பான் என்றும் தோன்றியது அவனுக்கு.

தனது செல்வாக்கை வைத்து அவன் போட்டு வைத்திருக்கும் பாதுகாப்பு வளையங்கள் எல்லாவற்றையும் தாண்டி காவல்துறை மூலமாக அவனை ஒரு வேளை கைது செய்தாலும் அவனிடமிருந்து எந்த விவரத்தையும் அத்தனை எளிதில் வாங்கி விட முடியாது என்றும் புரிந்திருந்தது அவனுக்கு.

அதற்கு மேல் அவன் மாட்டிக் கொள்ளப் போவது உறுதியானால் தன்னை அழித்துக் கொள்ளவும் தயங்க மாட்டான் என்பதும் உண்மை . அதற்கு முன்னால் நந்தாவை அழித்து விடுவான் என்பதும் மிகப் பெரிய உண்மை.

இன்றே சொல்லி விட்டானே என் பொறுமை போனால் நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் என்பதைப் போல! இதற்கு மேலாக நந்தாவின் உயிரை பணயத்தில் வைக்கவும் தைரியம் இல்லை சுரேந்திரனுக்கு.

இப்போது கடைசிக் கட்ட முயற்சியாக அவனது குறி சஞ்சனாவை நோக்கித் திரும்பியது.

அறிவை வைத்து ஆடும் ஆட்டத்தில் எல்லாம் அவனை ஜெயிக்க முடியாது என்பது கண்கூடாக தெரிந்து விட அவனது மனதை கலங்கச் செய்யும் விளையாட்டை விளையாடித்தான் அவனை தோற்கடிக்க முடியும் என்று தோன்றியது சுரேந்தரனுக்கு. அந்த விளையாட்டை அவனிடம் நிகழ்த்தக் கூடிய ஒரே ஆள் சஞ்சனா மட்டுமே.

‘இப்போது அவள் அவன் அருகில் தானே இருக்கிறாள். அவளை வைத்து இந்தக் காரியத்தை சாதித்து விட முடியாதா? அதற்கு அவள் நான் சொல்வதை நம்ப வேண்டுமே. நேற்றைய சந்திப்புக்கு பிறகு அவள் என்னை நம்புவாளா?’

பல்வேறு யோசனைகளுக்கு பிறகு அவனது மனதில் வந்து நின்றார் நந்தனின் தாத்தா. அவர்களது வீட்டில் நந்தாவைத் தவிர மற்ற அனைவருமே தாத்தாவின் வார்த்தைகளைத் தட்ட மாட்டார்கள் என நந்தன் சொல்லியது உண்டு.

அவரை ஓரிரு முறை சந்தித்தும் இருக்கிறான் சுரேந்தர். உண்மைகளை, நியாயங்களை என எல்லாவற்றையும் தன்னாலே உணர்ந்து கொள்ளும் ஞானி அவர் என்பதுமே புரிந்துதான் இருந்தது சுரேந்தரனுக்கு.

மனதில் இருப்பதை எல்லாம் அவரிடம் கொட்டி விட்டால் அவர் உதவ மாட்டாரா? நான் சொல்வது உண்மை என்று அவர் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் சஞ்சனா நம்ப மாட்டாளா?

ஒரு வழியாக சென்னைக்கு கிளம்பிச் சென்று தாத்தாவை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான் சுரேந்தரன்.
 
Last edited:

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நேரம் மதியம் இரண்டை தாண்டிக் கொண்டிருந்தது.

அவர்கள் இருவருக்கும் பணி இடை நீக்க ஆணை வந்ததை அறிந்து கொண்ட பிறகுதான் சாப்பிட்டு முடித்தான் கெளதம்.

‘இதன் பிறகாவது இந்த விளையாட்டில் இருந்து சற்றே ஒதுங்கிக் கொள்வானா சுரேந்திரன்?’ அவனுக்குள் கேள்வி எழ இல்லை என்ற பதிலைச் சொன்னது அவன் சுரேந்திரனை பற்றிப் போட்டு வைத்திருக்கும் கணக்கு.

அவனது அடுத்த வழி சஞ்சனவாக இருக்கலாம், என்ற எண்ணமும் வந்து போகாமல் இல்லை கௌதமுக்கு.

அவனது சிந்தனையை கலைத்தது தட்டப்பட்ட அறைக்கதவு. புன்னகையுடன் உள்ளே வந்தாள் சஞ்சனா.

“ஊசி போடப் போறியா?” என்றான் அவன் “இன்னும் எத்தனை நாளைக்கு சஞ்சனா இது? இம்சையா இருக்கு. போட்ட உடனே தூக்கம் வருது”

“இன்னைக்கு ஒண்ணு. நாளைக்கு ஒண்ணு அவ்வளவுதான்” சொல்லிக் கொண்டே அவள் அவனது கையில் அந்த ஊசியை செலுத்த அடுத்த சில நிமிடங்களில் தன்னையும் மறந்து உறங்கலானான் கெளதம்.

இரவு எட்டு மணி.

அவளது தந்தை இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர் அருகில் அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

“மதுரையிலே என்னோட பிசினஸ் பார்ட்னர் ஒருத்தனுக்கு ஹார்ட் அட்டாக்ம்மா. நல்ல வேளை பிழைச்சிட்டான். நாளைக்கு போயிட்டு அவனை பார்த்திட்டு வந்திடவா? நீ ரெண்டு மூணு நாள் இங்கே மேனேஜ் பண்ணிப்பியா?”

ஹரிஹரன் ஒரே இடத்தில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தால்தான் ஆச்சரியம்.

“சரிப்பா நான் பார்த்துக்கறேன்” சொல்லியும் விட்டாள் மகள்.

அவர் சாப்பிட்டு முடித்து விட்டு தனது அறைக்கு சென்ற பிறகு சில நிமிடங்கள் கடந்திருக்க

அவனுக்கான இரவு உணவை எடுத்துக் கொண்டு மாடியில் இருக்கும் அவனது அறைக் கதவை தட்டினாள் சஞ்சனா.

“உள்ளே வா சஞ்சனா” அவனது குரல் இதமாக சொல்ல உள்ளே நுழைந்தாள் பெண்.

இயல்பாய் நிமிர்ந்த கௌதமின் பார்வையும் முகமும் ரசிப்பாய் மலர்ந்த விதத்தில்தான் தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டாள் சஞ்சனா.

அன்றொரு நாள் அவனுடன் வெண்ணிலவே பாடலுக்கு நடனமாடிய போது அணிந்திருந்த அதே மயில் கழுத்து நிற சல்வாரை இப்போதும் அணிந்திருப்பதை இப்போதுதான் உணர்ந்தாள் அவள்.

சிறிதான வெட்க புன்னகையுடன் கையில் கொண்டு வந்த உணவுகளை அங்கிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு அவனெதிரில் வந்து நின்றாள் சஞ்சனா. அவளது இதழ்களும் கண்களும் ஒரு சேர புன்னகைத்தன.

சில நாட்களாகவே அழுத்ததின் தாக்கத்தில் எரிந்து கொண்டிருக்கும் கௌதமின் மனதிற்கு அவளது இந்த புன்னகை குளிர் சாமரம் வீசியது.

நேற்று மாலை தொடங்கியே அவனை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். எப்போதும் அவளிடம் அவன் சொல்லும் ‘லவ் யூ சஞ்சனா’ அவனிடமிருந்து வரவே இல்லை.

ஏனென்றே தெரியாமல் அதை எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தது பெண் மனது. அதே நேரத்தில் அதை வாய் விட்டு கேட்டு விடவும் தைரியமும் வந்து விடவில்லை அவளுக்கு.

“ஸோ?” என்று கண் சிமிட்டினான் அவள் மனதை சரளமாக படித்து விட்ட நமது சதுரங்க வீரன். “சஞ்சனா தி கிரேட் கைனகாலிஜிஸ்ட். ரைட்?”

“என்ன ஸோ? என்ன கிரேட்? அதெல்லாம் ஒண்ணுமில்லை. முதலிலே சாப்பிட வாங்க” அவள் சொல்ல அவளை ரசித்துக் கொண்டே எழுந்து சென்று மேஜையில் அமர்ந்தான்.

உணவுகளை அவனது தட்டில் பரிமாறியவள் நிமிடத்துக்கு ஒரு முறை சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் முகத்தையே பார்த்திருந்தாள்.

‘லவ் யூ சஞ்சனா’ வந்து விடாதா என்ற தவிப்பு மட்டுமே அதில் இருக்க அதை கவனிக்கவே செய்யாதவன் போல வெகு இயல்பாக சாப்பிட்டுக் கொண்டே இருந்தான் கெளதம் சித்தார்த்.

சில நிமடங்கள் கழித்து சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டவன், இருக்கையில் சாய்ந்து கொண்டு மெல்ல நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன்

“அப்படி எல்லாம், நீ நினைச்சவுடனே எல்லாம் “லவ் யூ” சொல்லிட முடியாது.” என்றான்.

அவன் தனது மனதை அட்சரம் பிசகாமல் படித்து விட்டான் என்பதில் எழுந்த பகீர் வியப்பும் , அதனோடு கூடவே எழுந்த வெட்க பரவசமும் அவள் முகத்தில் ஒன்றாக கூடி நிற்க அதை ரசித்தபடியே, அந்தக் காட்சியை தனது மனத்திரையில் பதித்துக் கொண்டான் கெளதம் சித்தார்த்.

“ஏன்?ஏன்?ஏன்?” அவள் தன்னை சமாளித்துக் கொண்டு கேட்டும் விட இருக்கையை விட்டு எழுந்து விட்டான் அவன்.

“நெருப்பு பட்டு என் நெஞ்சுப் பகுதி எல்லாம் கருத்துப் போச்சு. இனிமே உனக்கு என்னை பார்க்கவே பிடிக்காது போ” வேண்டுமென்றே கொக்கிப் போட்டான் அவன்.

“கெளதம் ப்ளீஸ்...” அவன் அருகில் வந்து அவனது முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டாள் “நான் அப்படி எல்லாம் நினைக்கிறவளா? யூ ஆர் மை கெளதம். எனக்கு கௌதமை எப்டி இருந்தாலும் பிடிக்கும். எப்பவும் பிடிக்கும். இத்தனை நாள் சொல்ல தைரியம் இல்லை. அவ்வளவுதான்”

‘யூ ஆர் மை கெளதம்.’ இந்த வார்த்தைகளுக்காக எத்தனை நாட்கள் தவம் கிடந்திருப்பானாம் அவன்?

“என்ன? என்ன சொன்னே? எனக்கு சரியா கேட்கலை”

“யூ ஆர் மை கெளதம். எனக்கு கௌதமை எப்பவும் பிடிக்கும்.” அழுத்தம் திருத்தமாக சொன்னாள் சஞ்சனா.

“அப்படியா?” அவள் கண்களுக்குள் மாற்றி மாற்றி பார்த்தான்.

“இப்படி நம்பாம கேட்டா நான் என்ன செய்ய?” சின்ன சிணுங்கல் அவளிடத்தில்.

“டான்ஸ் வித் மீ. அப்புறம் நம்ப முடியுதா பார்க்கலாம்”

“டான்ஸா? உங்களுக்கு உடம்பு சரியில்லை” அவள் சொல்வதை கொஞ்ச கூட கண்டு கொள்ளாமல் அறையின் விளக்கை அணைத்து விட்டு, அவர்களின் பாடலை ஒலிக்க விட்டான்.

“வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?

விளையாட ஜோடி தேவை”

கெளதம் நீங்க..” அவள் ஏதோ சொல்வதற்குள் அவளை சுழற்றி விட்டு இவனும் ஆட ஆரம்பித்திருந்தான்.

மெலிதான இரவு விளக்கின் ஒளியிலும், ஏசி காற்றின் இதமான தாலாட்டிலும் அவர்கள் இருவரின் நினைவுகளுமே பழைய புள்ளியை தொட்டு விட அவளும் அவனுக்கு ஏற்றார் போல் அசைய ஆரம்பித்தாள்.

பல நாட்களாக வான் மழைக்கு ஏங்கி நின்ற பூமியின் பாவமும், எதிரே பாராமல் திடீரென்று பொழியும் மழையை ஏந்திக் கொள்ளும் பரவசமும் அவனிடத்தில்.

ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்க பாடல் நகர்ந்து கொண்டிருக்க அவனது காதலும், மகிழ்ச்சியும் அவனது நெருக்கத்தில் தெரிய,

“கெளதம்..ப்..ப்ளீஸ்..” ஏதோ சொல்ல முயன்றாள் சஞ்சனா. அதற்குள்

“லவ் யூ சஞ்சனா” என்றான் அவளை இடையோடு இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டு.

அவனது விழிகள் அவளை மெல்ல மெல்ல பருக ஆரம்பிக்க,

“கௌதம்.. நான் அப்புறம்..’ என்று எதோ சொல்லிக் கொண்டே விலக முயன்றாள் அவள்.

“கல்யாணம் பண்ணிக்கலாம் சஞ்சனா..” அவளது காதருகில் கிசுகிசுத்த அவனது குரலில் ஏக்கமும் காதலும் சரி விகிதத்தில் கலந்து நின்றன.

“பண்ணிக்கலாம்...கெளதம். ஆனா....”

“இப்போவே ..” என்றவன் “வான்ட் டு கிஸ் யூ சஞ்சனா” என மென் குரலில் கெஞ்சியவன் அவள் முகத்தை இன்னுமாக நெருங்கி இருந்தான்.

“கெளதம் ப்ளீஸ்..” அவள் அவனை விட்டு விலக முயல, அவளது முயற்சி, அவனது இதழ்கள் அவளது இதழ்களை தவறவிட்டு, கன்னத்தில் வந்து பதிந்த பிறகே வெற்றி பெற்றது.

“நான் இன்னைக்கு ஹாஸ்பிடல் போன் பண்ணி, யாரவது நர்சை வந்து உங்க கூட நைட் இருக்க சொல்றேன். என்னாலே முடியாது” சொல்லிவிட்டு அவள் ஓட எத்தனிக்க

“அடிப்பாவி அது இன்னும் ரிஸ்க் இல்லையா?” அவன் சிரித்தபடியே கேட்க

“அதெல்லாம் ரிஸ்க் இல்லை. கெளதமுக்கு நான் மட்டும்தான் எப்பவும் வேணும்” சொல்லிவிட்டு அறையை விட்டு ஓடியே இருந்தாள் அவன் நந்தாவை வைத்திருக்கும் நிலையை பற்றி எதுவுமே அறியாத சஞ்சனா.

அவனது அறையை விட்டு வெளியே வந்த பிறகுதான் வரலக்ஷ்மி அத்தையும் நந்தாவும் மறுபடியும் மனதிற்குள் வந்து எட்டிப் பார்த்தார்கள்.

“நந்தா எங்கே இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்? என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா? நீ வந்ததும் எனது மனதில் பூத்து விட்ட இந்தக் காதலை சரியாக புரிந்து கொள்வாயா? தெரிந்தோ தெரியாமலோ உன் மனதிலும் ஆசையை விதைத்து இருக்கிறேனே நான் !’

“கல்யாணம் பண்ணிக்கலாம் சஞ்சனா” கௌதமின் வார்த்தைகள் மறுபடியும் மனதில் வந்து போனது. நந்தா திரும்ப வந்து அத்தையும் குணமான பிறகு இருவருக்கும் தனது மனதை சரியாக புரிய வைத்து விட்டே இந்தத் திருமணப் பேச்சு என்பதை மனதிற்குள் உறுதி செய்து கொண்டு நடந்தாள் சஞ்சனா.

ஆனால் நாம் நினைப்பது எல்லாம் நினைப்பது போலவே நடந்து விட்டால் அதன் பிறகு தெய்வம் என்ற ஒன்று இல்லவே இல்லையே!

அதே நேரத்தில் அவளை முத்தமிட்டவன் மனதும் ஒரு நிலையில் இல்லை. காரணமே இல்லாமல் சுரேந்தரின் ஞாபகம் அலைக்கழித்தது. அவன் எப்பாடு பட்டாவது தனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் எல்லாவற்றையும் சஞ்சனாவுக்கு புரிய வைக்க முயல்வான் என்று தோன்றியது.

‘அப்படி ஒன்று நடந்தால் என்ன செய்வாள் என் சஞ்சனா?’

‘என்னை நேருக்கு நேராக நிறுத்தி வைத்து கேள்வி கேட்பாளா?’ வாழ்கையில் முதல் முறையாக பயம் போன்றதொரு ஒரு உணர்வு உடல் முழுவதும் பரவுவதைப் போல் இருந்தது கௌதமுக்கு.

‘அப்படி ஒரு சூழ்நிலையில் என்னால் அவளுக்கு நேர்மையான பதிலை கொடுக்க முடியுமா?. அல்லது என் காதல் என்னை தோற்கடித்து விடுமா?’

‘பயமா இருக்கா கெளதம்?’ கேட்டு வைத்தது அவனது மனசாட்சி.

‘இல்லை இல்லவே இல்லை’ மூர்க்கத்தனமாக மறுத்துக் கொண்டான் தனக்குள்ளே.

மறுநாள் காலை பத்து மணி.

தனது பூஜையை முடித்து விட்டு எழுந்திருந்தார் சஞ்சனாவின் தாத்தா ரங்கநாதன். சரியாக அந்த நேரத்தில் அவர் முன்னால் வந்து நின்றான் சுரேந்திரன்.

அந்த மனிதரின் முகத்தில் ஒளிர்ந்த அமைதியையும், தெய்வீக களையையும் பார்த்த மாத்திரத்தில் அப்படியே அவர் பாதத்தில் விழுந்திருந்தான் நமது உதவி ஆணையர்.

அவனது மனதில் இருந்த அழுத்தங்கள் எல்லாம் கண்ணீரின் ரூபம் எடுத்துக் கொள்ள, அவரது பாதத்தில் விழுந்தது அவனது இரண்டு சொட்டு கண்ணீர்.

“சுரேந்திரா எழுந்திருப்பா” அவனை எழுப்பி அணைத்துக் கொண்டார் ரங்கநாதன்.

எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராத சுரேந்தரனின் அன்பும் நட்பும் அவரை நெகிழ்த்தி இருந்தது என்பதே உண்மை. அவரது தோள்களில் குலுங்கி குலுங்கி அழுது தீர்த்தான் கம்பீரமான அந்த காவல்துறை அதிகாரி.

“சுரேந்திரா என்னைப் பாரேன்” வாஞ்சையுடன் அழைத்தார் அந்த மனிதர், நிமிர்ந்தான் அவன்.

“நந்தா உயிருக்கு எந்த ஆபத்தும் தீர்காயுசு அவனுக்கு. நீ கவலைப் படாதே”

அவரது மகள் தவித்த போது கூட சொல்லாத அந்த வார்த்தையை இந்த நண்பனின் அன்புக்கு தலை வணங்கி சொல்லி இருந்தார் அந்த ஞானி.

“நிஜமாவா? நிஜமாவா தாத்தா?” மகிழ்ந்து குதூகலித்து போனான் அந்த நண்பன்.

“நிஜமாதான்பா” அவனது கண்ணீர் துடைத்தார் அவர் “நீ உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை நேர்மையா செய். ஆண்டவன் போடற கணக்கு எப்போவும் சரியா இருக்கும் . எல்லாம் சரியா நடக்கும்”

“செய்யறேன் தாத்தா. என் மனச்சாட்சி படி சரியா நடந்துக்கறேன் .. நீங்க எனக்காக ஒரே ஒரு உதவி பண்ண முடியுமா? நான் சொல்றது எல்லாம் உண்மைதான்ன்னு மட்டும் உங்க பேத்திக்கு சொல்ல முடியுமா?”

சில நிமிடங்களில் ஒலித்தது சஞ்சனாவின் கைப்பேசி. அவள் அறியாத ஏதோ ஒரு எண் திரையில் ஒளிர யோசனையுடனே அழைப்பை ஏற்றாள் அவள்.

“சஞ்சனா.. நான் சுரேந்தர் பேசறேன்” அவன் சொல்லி முடிப்பதற்குள் சுள்ளென்று ஏறியது சஞ்சனாவின் கோபம்.

“மிஸ்டர் சுரேந்தர் நான் உங்க கிட்டே அன்னைக்கே..’

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சஞ்சனா.. ஒரே நிமிஷம்.. உங்க தாத்தா உங்ககிட்டே பேசணுமாம்”

“தாத்தாவா?” வியந்தாள் சஞ்சனா. பொதுவாக தாத்தா கைப்பேசியை கூட உபயோகிக்க மாட்டார். இவன் கைப்பேசியின் வழியே பேசுகிறாறா?

“சஞ்சனா” மறுமுனையில் தாத்தாவின் தீர்கமான குரல் கேட்டு இளகிப் போனாள் பேத்தி.

“சொல்லுங்க தாத்தா”

“நம்ம சுரேந்தர் சொல்றது உண்மைதான்மா. அவன் நந்தா சம்மந்தமா சொல்ற விஷயமெல்லாம் உண்மைன்னு நீ தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். அதான் சொன்னேன். வெச்சிடறேன்”

அடைப்பட்டிருந்த கதவுகள் கொஞ்சமேனும் திறந்து நன்மை எனும் காற்று உள்ளே வர உதவியிருந்தார் தாத்தா என்று சொன்னால் மிகையாகுமா?

 
Last edited:

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே! 13



சண்டைகளின் சமாதான பொழுதுகளில் மட்டுமே முத்தமழை பொழியும் கருமியாய் நீ!

நிமிடதிற்கு ஒரு சண்டை வளர்த்து உடனே அதை முடித்துவிடும் வள்ளலாய் நான்!




அவளது தந்தை ஹரிஹரன் மதுரைக்கு கிளம்பியிருந்தார். வீட்டில் அவளும் அவனும் மட்டுமே இருக்க அவர்களோடு சில வேலையாட்கள் இருந்தனர்.

தாத்தாவிடம் பேசிய பிறகு, அவர் சொன்ன வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் சக்தியை கூட இழந்திருந்தாள் பேத்தி

இரண்டு வரிகளில் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து இருந்தார் தாத்தா. தாத்தாவின் வார்த்தைகள் சத்தியம் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை அவளுக்கு .

அன்று ‘எனக்கு நந்தா காணாமல் போன விஷயத்தில் கெளதம் மேலே சந்தேகம் இருக்கு.’ என்றானே அந்த சுரேந்தர், அவன் சொல்வது உண்மை என்றால் இந்த விஷயத்தில் கெளதம் குற்றவாளியா?

அவளது உள்ளமெங்கும் பகீர் அலைகள் ஓயாமல் அடித்தன. இப்போது அவனை நேருக்கு நேராக பார்த்தால் கோபம் மேலோங்கி விடுமா? அவன் சட்டையை பிடித்து உலுக்கி விடுவேனா? ஏன் கெளதம் இப்படி பண்றே என்று அழுது விடுவேனா? அவளுக்கே புரியவில்லை.

இந்த யோசனைகளுடன் கௌதமின் முகம் பார்க்கும் தைரியமும் இல்லை அவளுக்கு.

ஆனாலும் இது எதுவும் செய்யாமல் சிக்கல் மிகுந்த ஒரு அறுவை சிகிச்சையை கையாளும் விதத்திலேயே இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும் என்பது சிறிது நேரத்தில் தெளிவானது.

காலை உணவை அவனது அறைக்கு இவள் எடுத்துச் செல்லவும் இல்லை. சமையல் செய்யும் பெண்ணிடமே கொடுத்து அனுப்பி இருந்தாள்.

அவள் அறைக்கு வராததே கௌதமுக்கு ஒரு சிறு உறுத்தலை கொடுத்திருந்தது. பெயருக்கு எதையோ கொறித்து முடித்தவள் இதே யோசனையில் உழன்று கொண்டிருந்தாள்.

எப்படியும் சுரேந்தர் இன்று மாலைக்குள் அவளுடன் பேச முயல்வான் அதில் சந்தேகம் இல்லை.

நேரம் மதியம் இரண்டை தொட்டிருக்க அவனுக்கு ஊசி போடும் நேரம் நெருங்க அதற்கு மேல் தாமதிக்க இயலாமல் அவனது அறைக்கதவை தட்டிவிட்டு அவள் உள்ளே நுழைந்தவளுக்குள் இனம் புரியாத பயமும் படபடப்பும்.

அதே நேரத்தில் முகத்தைப் பார்த்து மனம் படிக்கும் இவனிடம் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும் சொல்லிக் கொண்டாள் அவள்.. எதுவுமே நடவாதது போல் கட்டிலில் அமர்ந்து மடிக் கணினியில் புதைந்து இருந்தான் கெளதம்.

விதம் விதமான உணர்வுகள் அவளுக்குள் மேலோங்க மெதுவாக அவனை நெருங்கினாள் அவள்.

“ஹாய் ஸ்வீட் ஹார்ட்” பளீர் என புன்னகைத்து விட்டான்.

இதற்கு மேல் என்னதான் செய்ய? தளர்ந்து புன்னகைத்தாள் அவளும்.

ஆரம்பம் முதலே அவனை அவளால் வெறுக்கவே முடிந்தது இல்லை என்பது இப்போது மிகத் தெளிவாகி இருந்தது சஞ்சனாவுக்கு, இனிமேலும் அது முடியப் போவதில்லை.

“ஊசியா மேடம்? போச்சு!” என்றான் சலித்துக் கொண்ட குரலில்.

“இன்னைக்கு ஒரு நாள் கெளதம் ப்ளீஸ்”

“இன்னைக்கு ஒரு நாள் நான் கண்டிப்பா தூங்கியே ஆகணும்னு சொல்றியா சஞ்சனா?”

எதை நினைத்து அப்படி கேட்டான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் கண்களை சந்திக்கவே முடியவில்லை அவளால். அதுவே அவனுக்கு எதையோ புரிய வைத்ததை போலவே இருந்தது.

சுரேந்திரன் அவளிடம் எதையும் சொல்லி விட்டானா என்ன?

“பதில் சொல்லு சஞ்சனா. என்னை ஊசிப் போட்டு வேணும்னே தூங்க வைக்கப் போறியா?” கேட்டவனின் வினாவில் பல நூறு அர்த்தங்கள்.

“இன்னைக்கு ஒரு நாள் எனக்காக தூங்குங்க கெளதம். அதோட முடிஞ்சது” அவள் சொல்ல அவளை ஊடிருவிப் பார்த்தான் கெளதம்.

“நோ.. எனக்கு ஊசி வேண்டாம் சஞ்சனா” அவன் சொல்ல அவனது நெற்றியில் சட்டென முத்தமிட்டாள் அவள்.

“இப்போ நீங்க ஊசி போட்டுட்டு என் மடியிலே தலை வெச்சு படுத்து அப்படியே தூங்குவீங்களாம்”

அந்த முத்தமும் அவளது வார்த்தைகளும் அவனுக்கு தனது அன்னையின் அருகாமையை நினைவுப் படுத்தின.

எதிரில் நிற்பது நந்தாவாகவோ சுரேந்தரகவோ இருந்திருந்தால் அவர்களை அவர்கள் வழியிலேயே சென்று சுருட்டி விட சொடக்கு போடும் நேரம் போதும் கௌதமுக்கு. ஆனால் அங்கே நிற்பது சஞ்சனாவாயிற்றே.

அவளை எந்த வகையிலும் தோற்கடிக்கவோ முடக்கவோ இயலவில்லை அவனால்.

“ம்.. சீக்கிரம்” என அவள் அவனுக்கு இடப்பக்கம் வர எதை எதையோ சொல்லி எச்சரித்துக் கொண்டிருந்த உள்ளுணர்வையும் தாண்டி அவளுக்கு உடன்பட்டான் கௌதம்.

ஊசி அவனது கைக்குள்ளே இறங்க அவள் முகம் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் கெளதம் சித்தார்த்.

எப்போதும் அவன் போடும் கணக்குகள் மிகச் சரியாகவே இருக்கும். இந்த ஒரு முறை தான் போட்ட கணக்கு தவறாகப் போய் விட வேண்டும் என்ற பேராசை மட்டும் எழுந்து நின்றது அவனுக்கு.

ஊசியை முடித்து விட்டு சொன்ன வண்ணம் அவனை மடியில் சாய்த்துக் கொண்டு அவனது தலை வருடிக் கொடுக்கலானாள் அவள்.

பல நாட்கள் கழித்து கிடைத்த அந்த பேரன்பை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே உறக்கத்தை வென்று விட வேண்டும் என்று முயன்று தோற்று உறங்கிப் போனான் கெளதம்.

நேரம் மாலை நான்கை தொட்டிருக்க கோவை வந்து இறங்கியிருந்தான் சுரேந்திரன். அடுத்த நிமிடம் சஞ்சனாவுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினான்.

‘உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும். எப்போது சந்திக்கலாம்?’

எப்படியும் இது இன்று நடந்து விடும் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள்தானே.

தவிர்த்து விடலாமா? என்று பல முறை யோசித்து முடித்தாள் சஞ்சனா. உண்மைகளில் இருந்து தப்பித்து விலகி எத்தனை நாட்கள் ஒதுங்கி ஒளிய முடியும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

கெளதம் உறங்கிக் கொண்டிருக்க, கடைசியில் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் சஞ்சனா.

மருத்துவமனையிலிருந்து வந்திருந்த ஒரு நர்சிடம் தான் வரும் வரை கௌதமுக்கு வேண்டியதை கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சுரேந்திரனை சந்திக்கக் கிளம்பியிருந்தாள் அவள்..

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஹோடேலில் சுரேந்திரனின் முன்னால் அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

“இதை நீங்க எங்கேயாவது பார்த்திருக்கீங்களா சஞ்சனா?” அவள் கண் முன்னே நீண்ட அந்த உலக உருண்டையை வெறித்துப் பார்த்தாள் நமது மருத்துவர்.

“எஸ்.. நந்தா காரிலே பார்த்திருக்கேன்”

“அவன் கார் முழுசும் எரிஞ்சு போயிருக்கும் நிலையிலே இது மட்டும் எப்படி வெளியிலே வந்திருக்க முடியும் சஞ்சனா?” அவனது கேள்வி சஞ்சனாவை நிமிர்த்தியது.

நந்தா காணாமல் போன தினத்தில் துவங்கி தான் செய்தவைகள், நடந்தவைகள், இன்று காலையில் அவனுக்கும் தாத்தாவுக்கும் நடந்த உரையாடல்கள் என அனைத்தையும் அவளிடம் கொட்டித் தீர்த்தான் சுரேந்தர்.

எல்லாவற்றையும் கேட்டு முடித்து விட்டு, தனது உடலில் இருந்த சக்தி அனைத்தையும் யாரோ பிடுங்கிக் கொண்டு விட்ட உணர்வுடன் அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

அவன் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது நந்தாவை கெளதம்தான் கடத்தி வைத்திருக்கிறான் என்பதற்கான சரியான ஆதாரம் எதுவுமே இல்லை. அதே நேரத்தில் தாத்தாவின் வார்த்தைள் பொய்யாகப் போய் விடும் சாத்தியக் கூறுகளும் துளியிலும் துளிக் கூட இல்லை.

“கெளதம் இப்படி செஞ்சதுக்கு என்ன காரணம்ன்னு எனக்கு சரியாத் தெரியலை சஞ்சனா. ஆனா நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா என் மனசிலே இருக்குற ஒரு சந்தேகத்தை நான் சொல்லிடறேன்..’ சற்று நிறுத்தினான் சுரேந்திரன்.

“சொல்லுங்க” என்றாள் ஒரு பெருமூச்சுடன்.

“இப்படி சொல்றதுக்கு..ஐ..ஆம்.. ரியலி... சாரி.. சஞ்சனா .. அவர் செஞ்ச செயலுக்குக் காரணம் அவர் உங்க மேலே வெச்சிருக்கிற கண் மூடித்தனமான லவ் தானோன்னு தோணுது” உள்ளுக்குள் திகில் அலைகள் எழுந்து அடங்கின சஞ்சனாவுக்கு.

அதே நேரத்தில் அன்று அவளுக்கும் நந்தாவுக்கும் திருமணம் என்று தெரிந்த பிறகு சட்டென அவளை விட்டு சற்றே விலகி நின்று அவளை கரம் கூப்பி வாழ்த்திய கெளதம் சித்தார்த் கண் முன்னே வந்து போனான்.

கெளதம் இப்படி செய்ததற்கு வேறே காரணமும் இருக்கக் கூடாதா என்ன?’ ஏதேதோ யோசனைகள் மனதிற்குள் ஓட அவர்கள் மேஜைக்கு வந்திருந்த பழச்சாற்றை அருந்தியபடியே மௌனமாக அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

சில நிமிடங்களில் மனம் ஒரு நிலைக்கு வர

“நான் இப்போ என்ன செய்யணும்னு எதிர்ப்பார்க்கறீங்க சுரேந்திரன்?” அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டாள் சஞ்சனா.

“நந்தா பத்திரமா வெளியிலே வர நீங்க ஹெல்ப் பண்ணனும். அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு தாத்தா சொன்ன பிறகு மனசு கொஞ்சம் நிம்மதியாகி இருக்கு. இருந்தாலும் எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் அவன் பத்திரமா என்கிட்டே வரணும்.”

“ம்” அமோதிப்பாக தலை அசைத்தாள் சஞ்சனா.

“கெளதம் ரொம்ப ரொம்ப புத்திசாலி சஞ்சனா. அவன் அறிவோட மோதி அவனை தோற்கடிக்கறது ரொம்ப கஷ்டம். நாம எவ்வளவு முயற்சி பண்ணாலும் அவன் கண்டிப்பா சட்டத்துக்கிட்டே மாட்ட மாட்டான். அதனாலே அவன் மனசோட மோதி அவனை மொத்தமா பணிய வைக்கணும். அது உங்களாலே மட்டும்தான் முடியும்”

“அவரை ஏமாத்த சொல்றீங்க இல்லையா?”

“நாட் நெஸசரி சஞ்சனா. நீங்க தேர்ந்தெடுக்குற வழி எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எனக்கு முக்கியம் நந்தா மட்டும்தான்” முடிந்திருந்தான் சுரேந்திரன்.

“சரி சுரேந்திரன். நந்தாவை காப்பாத்த நான் கண்டிப்பா முயற்சி பண்றேன். அந்தக் கடமையும் எனக்கு கண்டிப்பா இருக்கு” அவனிடம் உறுதி கொடுத்தவள் “இந்த விஷயம் நந்தா அப்பா, அம்மா அப்புறம் எங்க அப்பா, இந்த மூணு பேருக்கும் தெரியாம நீங்க பார்த்துக்க முடியுமா ப்ளீஸ்?” என்றாள் சற்றே கெஞ்சலாக.

“ஷூர் சஞ்சனா. நான் சொல்ல மாட்டேன். டோன்ட் வொர்ரி” வாக்களித்தான் சுரேந்திரன்.

அடுத்த சில நிமிடங்களில் சுரேந்திரனிடம் விடைபெற்றுக் கிளம்பி, கண்களில் தென்பட்ட ஏதோ ஒரு கோவிலுக்குள் சென்று அமர்ந்தாள் சஞ்சனா .

“இந்த ஸ்டெத் நீ யூஸ் பண்ணி மத்தவங்க இதயத்தை பரிசோதிக்கும் போதெல்லாம் உனக்காக ஒரு இதயம் இந்த பூமியிலே எங்கோ ஒரு ஓரத்திலே துடிச்சிட்டு இருக்கும்னு மட்டும் நினைச்சுக்கோ” அன்றொரு நாள் தனது காதலை சொன்ன கெளதம்.

அன்றொரு நாள் கண்ணீர் பொங்கப் பொங்க இவள் முத்தமிட்ட இவளது கெளதம்.

“நீ பேசாம என் கையிலே அப்படியே இரு “ அன்று தீக்குள்ளிருந்து அவளை அள்ளிக் கொண்டு வெளியே வந்த கெளதம்.

“கல்யாணம் பண்ணிக்கலாம் சஞ்சனா” என அவளிடம் நேற்று கரைந்த கெளதம் என்று ஒவ்வொரு கௌதமாக அவளது நினைவுக்கு வர, அவனை சந்தேகம் மட்டும் பட்டு விடாதே என கூவிக் கரைந்தது அவளது உள்ளம். அதன் பலனாக அவளது விழிகளின் ஓரம் கண்ணீர்த் துளி.

அதே நேரத்தில் காலையில் தாத்தா சொன்ன வார்த்தைகள் அவளது மனதில் ஆட, அவை அவளது நம்பிக்கையில் பிளவுகளை உண்டாக்கின.

“சரி எது எப்படி என்றாலும் அவனை விட்டு ஒதுங்கி செல்வது என்ற பேச்சுக்கு மட்டும் இடமில்லை. அவன் மீது நான் வைத்த அன்பு வைத்ததுதான்”

தீர்மானமாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு, கண் முன்னே அமர்ந்திருந்த அம்பிகையை கையெடுத்து வணங்கி விட்டு, அவள் வீடு வந்து சேரும் போது நேரம் இரவு ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.

“நான் இல்லாமல் கெளதம் சாப்பிட்டிருப்பானா இல்லையா. என்னைத் தேடி இருப்பான்தானே. ஏன் அழைக்கவே இல்லை?”

என பல்வேறு யோசனைகளுடன், கூடத்துக்குள் நுழைந்தவள் பார்வை நேரே மாடிக்கு செல்ல, அவனது மாடி அறைக்கு வெளியே இருந்த உள்புற பால்கனியின் கைப்பிடி சுவற்றில் கைகளை ஊன்றியபடி நின்று கொண்டு இவளையே பார்த்திருந்தான் நமது சதுரங்க வீரன்.

அவனைப் பார்த்த நிமிடத்தில் அவளது முகத்தில் பல நூறு உணர்வுகள் வந்து மறைந்தன. எல்லா குழப்பங்களையும் தூர நிறுத்திவிட்டு இதழ்களை புன்னைகைக்கு கொடுத்து விட்டு, அவனைப் பார்த்து கீழிருந்து கையசைத்தாள்.

“ஹாய் கெளதம்? சாப்பிட்டீங்களா?”

அசைவின்றி அவன் அப்படியே நின்றிருக்க, அவசரமாக மாடிப் படிகளில் ஏறி அவன் முன்னால் வந்து நின்றாள் அவள்.

“என்ன சர் சாப்பிட்டீங்களா இல்லையா? நான் சாப்பாடு எடுத்திட்டு வரவா?” கூடுமான வரையில் இயல்பாகவே இருக்க முயன்றாள் இவள்.

ஆனால் அப்படி எல்லாம் இயல்பாக இருந்து விட முடியவில்லை அவளது காதலனால். நடந்த எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி விட்டான் சுரேந்திரன் என மேடையேறி கூவியது அவனது உள்ளுணர்வு.

“தெரிந்து விட்டதுதான். அவளுக்கு எல்லாம் தெரிந்து விட்டதுதான்.” அலறியது அவனது மனசாட்சி.

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு “எங்கே போயிட்டு வரே சஞ்சனா?” என்றான் நேருக்கு நேராக அவள் முகம் பார்த்து.

“அது வந்து.. கோவிலுக்கு கௌதம்”

“பொய் சொல்லாதே” அவனுடைய அடுத்த நொடி சீறல் இது.

“இல்லை கெளதம். இப்போ கோவிலிலேர்ந்துதான் வரேன். சத்தியமா” அவள் குரல் இறக்கி சொல்ல,

“சரி அப்படியே இருக்கட்டும். அதுக்கு முன்னாடி நீ சுரேந்தரை மீட் பண்ணியா?” என்றான் நறுக்குத் தெரித்தார் போலே.

மொத்த உடலும் குலுங்கி ஓய்ந்தது சஞ்சனாவுக்கு. இத்தனை துல்லியமாக அடுத்தவர் மனதை படித்து வைக்கிறானே இந்த சதுரங்க வீரன்.

“கெளதம்.. இல்ல கெளதம்.. அது வந்து..” அவனுக்கு என்ன பதில் சொல்வது என்பதைக் கூட அவளால் யோசிக்க முடியவில்லை.

“சுரேந்தர் இன்னைக்கு உன்கிட்டே பேசினானா இல்லையா? நான் கேட்ட கேள்விக்கு நேரிடையா பதில் சொல்லு” கோடைக்கால மேகங்களுக்கு ஒப்பாக இடித்தது அவன் குரல்.

அதற்கு மேல் அவளால் மறுக்க முடியுமென்று அவளுக்கே தோன்றவில்லை.

“எஸ் கெளதம். பேசினார்” சொல்லியும் விட்டாள் அவள்.

அவ்வளவுதான். அவ்வளவேதான். என்ன நடக்கிறது அங்கே என்பதை அவள் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான் கெளதம்.

அவனது அந்த செய்கையில் பயந்து போனாள் சஞ்சனா.

எப்போதும் போல் அவள் முகத்தை பார்த்து அவளது மனதில் என்ன இருக்கிறது, அவள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்றெல்லாம் படித்துக் கொள்ளக் கூட தோன்றவில்லை அவனுக்கு.

“கெளதம். கெளதம் ப்ளீஸ் கதவைத் திறங்களேன். எதுவா இருந்தாலும் நாம பேசி ஒரு முடிவுக்கு வருவோம் கெளதம்.”

உச்சக்கட்ட படபடப்புடன் அவள் அவனது அறைக் கதவைத் படபடவென தட்டிக் கொண்டே அவனை வெளியே அழைக்க, கீழே இருந்த சில வேலையாட்களின் கவனத்தை அவளது உயர்ந்த குரல் அவள் பக்கம் திருப்ப, சூழ்நிலை உணர்ந்து தன்னை சற்றே நிலைப் படுத்திக் கொள்ள முயன்றாள் பெண்.

ஒரு நிமிட யோசனைக்கு பிறகு அவனை கைப்பேசியில் அவள் அழைக்க அவன் அவளது அழைப்பை ஏற்கவேயில்லை.

ஒரு முறை இரண்டு முறை மூன்று முறை என அவள் அழைத்துக் கொண்டே இருக்க, அடிப்பட்ட மிருகத்தின் பாவனையில் அறையில் இங்கமங்கும் நடக்கலானான் கெளதம் சித்தார்த்.

“காலையில் நான் போட்ட கணக்கு சரியாக போய் விட்டதே! தோற்றுவிட்டேன். நான் மொத்தமாக தோற்று விட்டேன். இனி என்னவளின் முகத்தை என்னால் பார்க்கவே முடியாதே. எது அவளுக்கு தெரிந்து விடக் கூடாது என நான் பயந்தேனோ அது அவளுக்கு தெரிந்து விட்டதே. அவள் என்னை மொத்தமாக வெறுத்து விடுவாளே. என் சஞ்சனா என்னை வெறுத்து விடுவாளே.”

நிமிடத்துக்கு நிமிடம் அவனது மனதின் கொதிநிலை இரு மடங்காகிக் கொண்டே இருந்தது.

“சுரேந்தர் சொன்னதை நம்பி இருப்பாளா அவள்?” அவனுக்குள் அடுத்தக் கேள்வி எழ

“கண்டிப்பாக நம்பி இருக்கிறாள். அப்படித்தான் இருந்தது அவளது முகபாவம். என்னதான் நேரிடையாக காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் என் மீதான வெறுப்பின் விதை அவளது மனதில் விழுந்தே விட்டது. என் மீது அவளுக்கு இருந்த நேசம் மொத்தமாக முடிந்தே போனது.”

ஜன்னலின் அருகே சென்று நின்று எல்லாவற்றக்கும் சாட்சியாக நிற்கும் தனது முகலினத் தோழிகளை அவசரமாகத் தேடினான் அவன்.

“சொல்லுங்களேன். ஏதாவது சொல்லுங்களேன். இப்போது என்ன செய்யட்டும் நான்?”

மேகங்களுக்கு இடையில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது.

“உனக்கு நாங்கள் எத்தனை முறை சொன்னோம். நீதான் எங்கள் பேச்சை கேட்கவில்லை” என கேலி செய்தனவோ அவை?

அதற்குள் இருபதாவது முறையாக அழைத்திருந்தாள் அவனது காதலி. கைப்பேசி ஒலித்துக் கொண்டே இருந்தது.

அங்கிருந்த குளிர்பதன பெட்டியின் அருகில் சென்று அதில் இருந்த ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து முகத்தில் அப்படியே ஊற்றிக் கொண்டான் கெளதம் சித்தார்த்.

உள்ளத்தின் நெருப்பு அணையவில்லை. கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணங்கள் தணியவில்லை. ஒலிக்கும் கைப்பேசியின் சத்தமும் நிற்கவில்லை.

கட்டிலில் வந்து அமர்ந்து தன்னை நிதானப் படுத்திக் கொள்ள முயன்றான் அவன். கைப்பேசி இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனது மனது பலவாறாக அலைபாய்ந்து கொண்டிருந்த நேரத்திலும், அவளைத் தவிக்க விடவும் தோன்றவில்லை அவனுக்கு. கடைசி முறையாக அவளிடம் ஒரு முறை பேசி எல்லாவற்றையும் முடித்துக் கொள்வதே நல்லது என்று தோன்றியது அவனுக்கு.

ஒரு ஆழ் மூச்சு எடுத்துக் கொண்டு அழைப்பை ஏற்றான் கெளதம். அவன் பேசுவதற்குள் பாய்ந்து வந்தது அவள் குரல்

“கெளதம் ப்ளீஸ் கதவைத் திறங்க. எதுனாலும் நாம பேசிக்கலாம் கெளதம்”

“சஞ்சனா” இரும்புக்கு ஒப்பாக இருந்தது அவனது தொனி “நீ ஊருக்கு கிளம்பு. யார் முகத்தையும் பார்க்குற மனநிலையில் நான் இல்லை. நீ ஊருக்கு போறதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது. டிரைவர் சச்சிதானந்தம் கிட்டே சொல்லு. அவர் உன்னை பத்திரமா உங்க வீட்டிலே டிராப் பண்ணிடுவார். இதுவரை நீ செஞ்ச எல்லாத்துக்கும் தேங்க்ஸ். தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் மை லவ். குட் பை” சொல்லிவிட்டு கைப்பேசியை அணைத்து கட்டிலின் மீது எறிந்தான் கெளதம் சித்தார்த்.

அவனது மனது மறுபடியும் உறும ஆரம்பித்தது.

‘முடிந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது. இனி என் சஞ்சனாவுக்கு கூட என்னைப் பிடிக்கப் போவதில்லை. அடுத்து நான் என்ன செய்ய வேண்டும். நான் அழிந்து போக வேண்டும் அது ஒன்றே வழி. ஆனால் அதற்கு முன்னால் இது எல்லாவற்றுக்கும் காரணமான நந்தா அழிந்து போக வேண்டும். எப்படி அழிப்பது அவனை?’

இங்கே அவனது அறைக்கு வெளியே இருந்த ஒரு சோபாவில் வந்து அமர்ந்தாள் சஞ்சனா. இவள் அவனது கைப்பேசிக்கு மறுபடி, மறுபடி முயல அது அணைக்கப் பட்டிருந்தது.

கெளதம் அளவிற்கு அடுத்தவர்களின் மனதை படிக்கத் தெரியாவிட்டாலும், சுரேந்தர் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது கெளதம் இப்போது எப்படி சிந்திப்பான் என்பதை நன்றாக உணர முடிந்தது அவளால்.

‘எப்படியும் தன்னை அழித்துக் கொள்ள விழைவான் அவன். அதற்கு முன்னால் நந்தாவையும் அடையாளம் இல்லாமல் அழித்து விடுவான்.’ என்று அறுதியிட்டு கூறியது அவளது மனது.

இருவரில் ஒருவருக்கு ஏதாவது ஆகிவிட்டாலும் கூட அதை தாங்கிக் கொள்ளும் சக்தி அவளுக்கு கண்டிப்பாக இல்லை.

‘நான் இப்போது என்ன செய்ய வேண்டும். இப்படி எல்லாம் நடப்பதை தடுப்பதற்கு என்னால் என்ன செய்ய முடியும்?” யோசித்தவளுக்கு பதில் எதுவும் புலப்படாமல் போனது.

நா வரண்டு போன உணர்வில் கைப்பையை துழாவி அதில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவள் வெளியே எடுத்த நேரத்தில் அதனுடனே வெளியே வந்து அவள் மடியில் விழுந்தது அந்தப் பொருள். தண்ணீரை வாயில் கவிழ்த்துக் கொண்டபடியே அதை விழிகள் விரியப் பார்த்தாள் சஞ்சனா.

கைப்பையிலிருந்து அவளது மடியில் வந்து விழுந்த அந்தப் பொருள் அவளது தாத்தா அவளிடம் கொடுத்தனுப்பிய தாலி.

‘இது சரியாக வருமா? நான் இதை செய்துவிட்டால் எல்லாம் ஓரளவுக்கு கட்டுக்குள் வருமா?’ யோசித்தபடியே அவள் அந்தத் தாலியை பார்த்துக் கொண்டிருக்க அவனது அறையினுள் சிலீரென ஒரு கண்ணாடி உடையும் சத்தம் அவளுக்கு கேட்டது.

‘உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறான் இந்த ராக்ஷசன்.’ உடல் நடுங்கியது இவளுக்கு. அவனது கைப்பேசிக்கு மறுபடியும் முயன்றவளுக்கு ஏமாற்றம். அணைக்கப்பட்டு கிடந்தது அது.

‘ஒரே ஒரு அழைப்பில் நந்தாவின் கதையை முடித்து விடுவான் ஆதித்யா. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அவன் அழிவது என்றால் என் கையால் அழிய வேண்டும். அதைப் பார்த்து நான் சிரிக்க வேண்டும். அவனை அழிப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. பத்து நிமிட வேலையில் மொத்த பண்ணை வீடும் தீக்கிரையாகிப் போகும். அதோடு சாம்பலாகிப் போவான் நந்தா’ வெறி பிடித்த பாவம் தெரிந்தது கண்ணெதிரே இருந்த அந்த நிலைக் கண்ணாடியை உடைத்தவனின் சிவந்த கண்களில்.

அதற்குள் அந்தத் தாலியை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனது ஒரு அவசர தீர்மானத்துக்கு வந்திருந்தது.

அங்கே அவள் அமர்ந்திருந்த சோபாவின் அருகே இருந்த இண்டர்காம் தொலைப்பேசி கண்ணில் பட்டது. அதிலிருந்து அவனது அறையை அவசரமாகத் தொடர்பு கொண்டாள் அவள்.

அது தன் பாட்டுக்கு ஒலித்துக் கொண்டே இருக்க அவன் அழைப்பை ஏற்கவே இல்லை.

ஒரு முறை, இரண்டு முறை, பத்து முறை என அது ஒலித்துக் கொண்டே இருக்க, அவள்தான் மறுபடி மறுபடி அழைக்கிறாள் என்பது புரிந்தாலும், இருக்கும் வெறியில் அதை எடுத்து உடைத்து விடும் வேகத்தில் அதன் ரிசிவரை எடுத்தவனின் செவிகளை நேராக சேர்ந்தன அவள் வார்த்தைகள்.

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கெளதம்! இப்போவே! இன்னைக்கே!”

தொடரும்
உங்கள் மேலான கருத்துக்களை இந்தத் திரியில் பதிவிடுங்கள் தோழமைகளே

நீ அறியாயோ முகிலனமே கருத்துக்கள்
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நீ அறியாயோ முகிலினமே! 14



அடைமழைக் கால சாரல் ஆனந்தம் என்றால் மரத்தடி தூறல்கள் பேரானந்தம்.

மரத்தடி தூறல்களின் உடன் பிறந்த சகோதரிகளாய் உன் சின்ன சின்ன முத்தங்கள்.




அவன் இருந்த மன நிலையில் தனது செவிகள் கேட்ட வார்த்தைகள் என்ன என்பதை உள்வாங்கிக் கொள்ளவே நான்கு நொடிகள் பிடித்தன கௌதமுக்கு.

“நிஜமா கெளதம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கெளதம். ஒரு நிமிஷம் கதவைத் திறங்களேன்” மறுபடியும் சொன்னாள் சஞ்சனா.

“உன்னை நான் ஊருக்கு போகச் சொன்னேன்.” என்று அவன் தெளிந்து மீண்டு சீறினான்.

“ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஞாபகம் இருக்கா கெளதம்? எப்படிப் பார்த்தாலும் நீங்க எனக்கு கடமைப் பட்டிருக்கீங்க கெளதம்.”

எப்போதும் அவன் உபயோகிக்கும் ஆயுதத்தை இன்று அவள் உபயோகித்தாள். “நான் சொல்ற வார்த்தையை கேட்குற கடமை உங்களுக்கு இருக்கு. நீங்க முதலிலே கதவைத் திறங்க”

பேச்சிழந்து நின்றான் அவன்.

“லவ் யூ கெளதம். இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் கெளதம். கதவைத் திறங்க கெளதம்.“ அவளது இதத்திலும் இதமான வார்த்தைகள் அவனது செவிகளை சேர பதில் பேசாமல் ரிசிவரை கீழே வைத்தான் அவன்.

தனது வார்த்தைகளில் அவன் கொஞ்சமேனும் தணிந்திருப்பான் எனும் நம்பிக்கை ஒன்று எழுந்தது அவளுக்கு. இந்த உலகத்தில் அவனால் உதாசீனப் படுத்த முடியாத உயிர் என்று ஒன்று இருந்தால் அது சஞ்சனா மட்டும்தானே! அது சஞ்சனாவுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

அவள் நினைத்தபடியே அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவன் கதவைத் திறக்க, சட்டென அறைக்குள் நுழைந்து கொண்டு தனக்கு பின்னால் கதவை சாத்திக் கொண்டாள் சஞ்சனா. ஒரு நிம்மதி மூச்சு எழுந்தது அவளிடம்.

இனி தன்னை மீறி எதுவும் நடந்து விடாது எனும் தைரியம் அவளுக்கு வந்து சேர்ந்தது.

அறையில் இருந்த பல பொருட்கள் அங்கங்கே சிதறிக் கிடக்க, அங்கே இருந்த நிலைக் கண்ணாடி ஒரு பக்கத்தில் நொறுங்கிக் கிடக்க அதன் நடுவில் இரையைத் தேடித் திரியும் காட்டு மிருகத்தின் பாவத்துடன் நின்றிருந்தான் கெளதம் சித்தார்த்.

“ஸோ?” என்றவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

“நான் செத்து போயிடுவேன்னு பயந்து கல்யாணம் அது இதுன்னு பேசி உள்ளே வந்தியா?”

சிரித்தான் கெளதம். அவனது சிரிப்பில் வெறுமையின் சாயல்.

“அவ்வளவு சீக்கிரம் செத்தெல்லாம் போக மாட்டேன். அதுக்கு முன்னாடி ஒரு சில பேரை அழிக்க வேண்டி இருக்கு. அதை முடிச்சிட்டுத்தான் போவேன். ஒரு கொலையை பண்ணிட்டு அதுக்கு மேலே உயிரோட இருந்து தண்டனை அனுபவிக்கறவன் எல்லாம் இல்லை இந்த கெளதம் சித்தார்த். இதெல்லாம் உன் கண் முன்னாடி நடக்கறதுக்கு முன்னாடி நீ பத்திரமா ஊர் போய் சேரு” உறுமியவனின் குரலில் அப்படி ஒரு வெறி.

அவளுக்கு எல்லா விவரங்களும் தெரிந்து விட்டன என்ற விஷயம் அறிவை எட்டிய போது இருந்த தவிப்பு இப்போது இல்லை. நிறையவே தெளிந்து விட்டவன் போல் அவள் முகத்தை நேருக்கு நேராக பார்த்தான் கெளதம் சித்தார்த்.

“அவர் செஞ்ச செயலுக்குக் காரணம் அவர் உங்க மேலே வெச்சிருக்கிற கண் மூடித்தனமான லவ் தானோன்னு தோணுது” சுரேந்தர் சற்று முன் சொன்னது மட்டும் இல்லவே இல்லை என்று தெளிவானது சஞ்சனாவுக்கு.

“எல்லாரும் ஒரு நாள் போகத்தானே போறோம். அதனாலே செத்து போறதுனாலும் சரி, யாரையாவது அழிக்கப் போறதுனாலும் சரி நானும் உங்க கூடவே வரேன் கெளதம்” என்றாள் வெகு சாதரணமாக. “நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கெளதம்”

“ஸோ? அந்த சுரேந்தர் நான் உன்னை கண் மூடித்தனமா லவ் பண்றேன். அதனாலே நந்தாவை கடத்தி வெச்சிருக்கேன் அப்படி இப்படின்னு சொல்லி இருக்கான். அதனாலே நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டா எல்லாம் சரியாகிடும்னு யோசிக்கறே ரைட்? அப்படி எல்லாம் நினைச்சா அது தப்பு. அப்பவும் எதுவும் சரியாகாது. நீ ஊருக்கு கிளம்பு” திரும்பிக் கொண்டான் வேறு பக்கம்.

அன்று மருத்துவமனையில் சுரேந்தர் பேசிய வார்த்தைகளை வைத்து அவன் இவளிடம் அப்படித்தான் சொல்லி இருப்பான் என கணக்குப் போட்டு முடிந்திருந்தான் கெளதம். அவன் பேசிய விதத்தில் ஒரு பெருமூச்சு வந்தது அவளுக்கு.

“லவ் யூ கெளதம்” என்றவளின் கண்களில் அவனது வலது கையில் இருந்த காயம் விழுந்தது. அவன் சற்று முன் உடைத்தக் கண்ணாடி அவனது உள்ளங்கையை பதம் பார்த்திருக்க அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

பதில் பேசாமல் அங்கிருந்த முதலுதவி பெட்டியுடன் அவன் அருகில் வந்து அவன் கரம் பிடித்து காயத்தை, அவள் பஞ்சால் துடைக்க ஆரம்பிக்க சட்டென கையை விலக்கிக் கொண்டான் கெளதம்.

“ஊருக்கு போ சஞ்சனா”

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கெளதம்” மறுபடியும் கையை பற்றிக் கொண்டு காயத்துக்கு மருந்து போடும் வேலையைத் தொடர்ந்தாள் அவள்.

“ஹேய்.. என்னடி என்னை கல்யாணம் பண்ணி என் கூடவே இருந்து என்னை வேவு பார்க்கலாம்ன்னு பார்க்கறியா? அப்படியே நீ என் கூடவே இருந்தாலும் உன்னாலே என்னை எதுவுமே பண்ண முடியாது. நான் கெளதம் சித்தார்த் “ அவள் கண்களுக்குள் பார்த்து சீறினான் அவன்.

“அப்போ தைரியமா என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே கெளதம்?” அவன் முகம் பார்த்து கண் சிமிட்டியவள் அவனது கரம் பிடித்து அதில் கட்டுப் போடலானாள். “எனக்கென்னமோ கௌதமுக்கு என்னைப் பார்த்தா பயமா இருக்கோன்னு தோணுது”

“பயமா? எனக்கா?” சிரித்தான் கெளதம்.”எனக்குப் பிரச்சனைன்னு வந்திட்டா உன்னைக் கூட அழிக்கத் தயங்க மாட்டேன்.”

“லவ் யூ கெளதம்.” என்றாள் அவள் முகம் பார்த்து “நான் எல்லாத்துக்கும் ரெடி. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அன்னைக்கு தீக்குள்ளே வெச்சு எனக்கு நீங்கதான்னு நான் மனசார முடிவு பண்ணேன். இப்போவும் அதிலே எந்த மாற்றமும் இல்லை. நீங்கதான் நேத்து வரைக்கும் கல்யாணம்ன்னு பேசிட்டு இப்போ மாத்தறீங்க.”

இவ்வளவு உறுதியாக அவள் பேசுவாள் என்று அவன் கண்டிப்பாக நினைக்கவில்லை. அவள் முகம் பார்த்தால் எங்கே தோற்று விடுவோமா என்ற பயம் மெல்ல எட்டிப் பார்க்க அவன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

அவளுக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றியதோ அவனை சட்டென தனது பக்கம் திருப்பி அவனது இதழோடு இதழ் பதித்து இருந்தாள். முழுதாக ஒரு நிமிடம் அவனை தனது முழுக் கட்டுப்பாட்டில் நிறுத்திவிட்டு விடுவித்தாள்.

முத்தம்! அவளுடைய மனநிலையை அவனுக்குள் மொத்தமாக கடத்தி இருந்தது அந்த ஒற்றை முத்தம்.

கொதித்து கொதித்துப் பொங்கிக் கொண்டிருந்த எரிமலையை ஒரே நிமிடத்தில் குளிர்வித்து நிறுத்தியிருந்தது அந்த ஒற்றை முத்தம்.

“நான் உன்னை எந்த நிலையிலும் வெறுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறதா அவள் முத்தம்?”

வெளிக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் பொங்கிய மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் நின்றிருந்தான் கெளதம்.

இந்த வரம் தனக்குக் கிடைக்காதா என அவன் தவம் செய்த நாட்கள் எத்தனையாம்? அவன் பல வருடங்களாக வேண்டிய காதல் இன்று அவன் முன்னே கெஞ்சிக் கொண்டு நின்றிருந்தது.

“இதுக்கு மேலே நான் உங்களுக்கு உண்மையா இருப்பேன்னு எப்படி சத்தியம் பண்றதுன்னு தெரியலை கெளதம்” என்றாள் கண்களில் நீர் சேர “அதுக்கு மேலே நீங்க சொர்கத்துக்கு போனாலும் நரகத்துக்கு போனாலும்” என சற்றே நிறுத்தியவள் “வேறே.. வேறே எங்கே போனாலும் கூட வரேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் கெளதம்” என முடித்தாள்.

அந்த “வேறே எங்கே” என்ற வார்த்தையில் அவள் கொடுத்த அழுத்தம் எதைக் குறிக்கிறது என்பதெல்லாம் அவனுக்கு புரியாமல் இல்லை.

“ஆனா நான் இனிமே உனக்கு உண்மையா இருக்க மாட்டேன் சஞ்சனா. கல்யாணமே ஆனாலும் இப்போ என்னவெல்லாம் செஞ்சிட்டு இருக்கேனோ அதைத் தொடர்ந்து செய்வேன் சம்மதமா?” இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவளது கண்களுக்குள் நேராகப் பார்த்து கேட்டான் கெளதம்.

“ஸீ.. கெளதம்.. சுரேந்தர் என்கிட்டே பேசின விஷயத்தை பத்தி நானா உங்ககிட்டே எதுவும் கேட்க மாட்டேன். போதுமா?” என்றாள் உறுதியாக. “அதுதானே உங்களுக்கு வேணும்?”

அவள் பேசும் வார்த்தைகளிலும், அவள் தந்த அந்த முத்தத்திலும், ஏன் அவனை நேருக்கு நேராக பார்க்கும் அந்த விழிகளிலும் கூட ஒரு துளி பொய் இல்லை என்று நன்றாக புரிந்து இருந்தது கௌதமுக்கு.

ஆனாலும், பொய் சொல்லி அவனை ஏமாற்றா விட்டாலும், அவனை மறைந்திருந்து வேவு பார்க்கா விட்டாலும், ஏதாவது ஒரு விதத்தில் நந்தாவை வெளியில் கொண்டு வந்து விட அவள் முயற்சி செய்வாள் என்பது மட்டும் தீர்மானமாக புரிந்தது கௌதமுக்கு.

கட்டை விரல்கள் இரண்டையும் தனது பேன்ட் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு “ஸோ?” என்றான் இதழோரம் சேர்ந்திருந்த புன்னகையுடன் “என் அறிவோட விளையாடி என்னை ஜெயிக்க முடியலை அப்படிங்கறதுனாலே டாக்டர் மேடம் என் மனசோட விளையாடி என்னை ஜெயிச்சிடலாம்னு பிளான் போடறீங்க ரைட்? ”

சத்தியமாக விக்கித்து போனாள் சஞ்சனா. எப்படி இப்படி சுரேந்தர் சொன்னதை அட்சரம் பிசகாமல் சொல்கிறான் இந்த ராக்ஷசன்.

“இ..இல்லை.. இதிலே எந்தத் திருட்டுத்தனமும் இல்லை கெளதம்” கொஞ்சம் தடுமாறத் தான் செய்தது அவள் குரல்.

மெல்லச் சிரித்தான் கெளதம். அதனோடு சேர்ந்து ஒரு ஆழ் மூச்சும் எழுந்தது.

‘என்னடி செய்யப் போகிறாய் என்னை? தோற்கடிக்கப் போகிறாயா? நான் தோற்றுப் போனால் அதோடு என் மூச்சும் நின்று போகும். அது மட்டும் உறுதி. சரி. நின்று போகும் மூச்சு உன் மடியோடு நின்று போகட்டும். அப்படியே தோற்றாலும் உன் மடியோடு என் ஜீவனை முடித்துக் கொள்கிறேன் போ’ மனதிற்குள் சொல்லிக் கொண்டான் கெளதம்.

“அப்படியே கல்யாணம் பண்ணிக்கணும்னாலும் எதுக்கு இவ்வளவு அவசரம் சஞ்சனா?” என்றான் இதமாக. மனம் ஒரு நிதானத்துக்கு வந்து நின்றிருந்தது இப்போது.

“உண்மையை சொல்றேன் கெளதம். இன்னைக்கு சுரேந்தர்கிட்டே பேசிட்டு வந்த பிறகு உங்களுக்கு எப்போ என்னவாகுமோன்னு கூட எனக்கு பயமா இருக்கு” என்றாள் மெதுவாக.

அழகாய் மலர்ந்து சிரித்தான் அவன்

“இந்த ஒரு முத்தத்திலேயே உன்னோட வாழ்ந்து முடிச்சிட்டேன். போனா போயிட்டு போறேன் போடி” சொல்லிவிட்டு அவன் நகர்ந்து போக எத்தனிக்க அவன் கரம் பிடித்துக் கொண்டாள்.

அந்த நாளை விட்டுவிட்டால் அதன் பிறகு எல்லாம் திசை மாறிப் போய்விடுமோ என்ற பயமே அவளுக்குள் இத்தனை வேகத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

“எனக்குப் போதாது. உங்க கூட ஒரு நாளாச்சும் முழுசா வாழ்ந்துக்கறேன். ப்ளீஸ் கெளதம், நாம இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் கெளதம்.” அவள் குரலில் கெஞ்சல் மட்டுமே இருக்க

“உங்க அப்பாகிட்டே கேட்க வேண்டாமா சஞ்சனா?” என்றான் சற்றே தளர்ந்து விட்டவனாக.

“நான் அவர்கிட்டே சொல்லிட்டு வந்திடறேன். அவர் புரிஞ்சுப்பார்” என்றாள் ஏதோ ஒரு நம்பிக்கையுடன்.

என்ன சொல்லப் போகிறாளாம் அவரிடம்? யோசனையுடன் அவனது புருவங்கள் சுருங்க

“சுரேந்தர்கிட்டே பேசினது அவர்கிட்டே கண்டிப்பா சொல்ல மாட்டேன் கெளதம்” அவன் மனம் படித்தவளாக சொன்னாள் அவள்..

‘என்னை இப்போது விட்டுவிட்டால் எப்போதும் பிடிக்க முடியாது என்று நினைக்கிறாயா என் உயிரே’ உள்ளுக்குள் கணக்கிட்டுக் கொண்டவன் புன்னகைத்தான்.

“தாலி ஏதாவது இருக்கா உன்கிட்டே?” அதற்கு மேல் இதைத் தவிர்க்க விரும்பாதவனாக கேட்டும் விட்டான் அவன்.

“இதோ” தாத்தா கொடுத்த தாலியை அவசரமாக வெளியில் எடுத்தாள் பெண்.

“இது ஏது?” உயர்ந்து எழுந்தன அவன் புருவங்கள்.

“எங்க தாத்தா கொடுத்தார்” என்றாள் சிறு புன்னகையுடன்.

“தாத்தாவா? உனக்குத் தாத்தா இருக்காரா? அவர் எதுக்கு தாலி எல்லாம்.....” அவனுக்குள் பல கேள்விகள் எழுந்தன.

சில நாட்களுக்கு முன்னால் அவரை அவன் சந்தித்து இருக்கிறான். அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு அதிசயித்தும் இருக்கிறான். ஆனால் அவர்தான் சஞ்சனாவின் தாத்தா என்பதை அவன் அறிந்திருக்க நியாயம் இல்லையே.

“அவர் ஒரு ஞானி கெளதம்” என்றாள் மெதுவாக. “அவரை பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம்”

“சரி” என்றான் ஒரு புன்னகையுடன். “மொட்டை மாடிக்கு வா. அங்கே எங்க அம்மா சாட்சியா, அந்த முகிலினங்கள் சாட்சியா கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவன் மாடிப் படி ஏற

“ஒரு நிமிஷம் கெளதம். அப்பாகிட்டே பேசிட்டு வந்திடறேன்” என்றாள் பெண்.

“சரி வா” என மாடியேறி சென்று விட்டிருந்தான் நமது சதுரங்க வீரன்.

சில நொடிகள் நடந்தவற்றை மனதிற்குள் ஓட விட்டபடியே நின்றிருந்தாள் சஞ்சனா.

அவள் சொன்ன எந்த வார்த்தையிலும் பொய் இல்லை என்றாலும் நந்தாவை எப்படியாவது வெளியில் கொண்டு வந்து விடலாம் என்ற ஒற்றைத் துளி நம்பிக்கை மட்டும் இன்னமும் அவளது அடி மனதின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டுதான் இருந்தது.

கைப்பேசியை எடுத்து அப்பாவின் எண்ணை அழைத்தாள் அவள்.

“சொல்லுமா” என்றார் தந்தை.

அவரிடம் எப்படி துவங்குவது என்பதுதான் புரியவில்லை மகளுக்கு. கெளதம் செய்ததை அவரிடம் கண்டிப்பாக சொல்ல முடியாது. அதை விடுத்து வேறு எந்த காரணத்தை சொல்வது என்பது புரியவே இல்லை.

“அப்பா.. அது வந்து பா..நான் பா.. எனக்குப்.. பா..”

அவர் குரலை கேட்ட மாத்திரத்தில், அவரிடம் விஷயத்தை சொல்ல முயன்று தோற்றுப் போய் அழுகை மட்டுமே முட்டிக் கொண்டு வர, அவள் குரலை வைத்தே அவளது மனதில் ஏதோ ஒரு கலவரம் என்பதை புரிந்து கொண்டார் தந்தை.

“சொல்லுடா அங்கே எதாவது பிரச்சனையா? காலையிலே தாத்தா பேசினார் மா” என்றார் மெதுவாக.

வியந்து போனாள் அவள். யாருடனும் போனில் எல்லாம் பேச மாட்டார் தாத்தா. இன்று அவளுக்காக மட்டுமே அதை செய்திருக்கிறார் என்று தோன்றியது.

“என்னப்பா சொன்னார்?” சற்றே பரபரத்து கேட்டாள் மகள்.

“காலையிலே சுரேந்தர் எதுக்கோ தாத்தாவை பார்க்க வந்தான் போலிருக்கு. அவன் போன்லேர்ந்தே என்கிட்டே பேசினார் மா. அவர் போன்லே எல்லாம் எப்பவும் பேச மாட்டார் பாரு. இன்னைக்கு அவர் பேசினது எனக்கே ஆச்சரியம்தான். சஞ்சனா எதாவது பெரிய முடிவு எடுத்தா அவளுக்கு துணையா நில்லு. அவ புத்திசாலி பொண்ணுன்னு சொல்லிட்டு வெச்சிட்டார் மா” என்றார் தந்தை.

அவர் சொல்லச் சொல்ல கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது சஞ்சனாவின் கண்களில்.

“அப்பா நான் கௌதமை இப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறேன் பா” ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லி விட்டாள் மகள்.

சட்டென மௌனமானார் தந்தை. என்னதான் மகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கவில்லை என்றாலும், மகளின் வாழ்கை எப்படியும் போகட்டும் என்று அலட்சியமாக விட்டுவிடும் தந்தையெல்லாம் இல்லை ஹரிஹரன்.

அந்த ஒரு நிமிடத்துக்குள் பல நூறு யோசனைகள் அவரது மனதிற்குள் ஓடி மறைந்தன. அதே நேரத்தில் தனது தந்தையின் வார்த்தைகளும் அவருக்குள் சுழன்றன.

அவர்கள் குடும்பத்தின் தெய்வம் அவர். தங்களுக்கு நன்மை பயக்காத எதையும் அவர் முன்னெடுக்க மாட்டார் என்பது நன்றாகவே தெரியும். இந்த வழிதான் எல்லாருக்கும் நன்மை பயக்கும் விதியாக இருக்குமோ?

அதற்கு மேலாக அவர் தனது காதல் மனைவியை திருமணம் செய்து கொண்ட விதமும் அவர் மனத்திரையில் வந்து போனது.

மெலிதாக ஒரு சிரிப்பு கூட எழுந்தது அவருக்கு. இந்த வாழ்கை ஒரு வட்டமோ? நான் இந்த பிரபஞ்சத்துக்கு எதை கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வருமோ?

ஒரு நிமிடம் முழுவதுமாக கரைய

“சரிம்மா செய். தைரியமா செய். எல்லாம் நல்லபடியா நடக்கும். தாத்தா சொல்றது எல்லாமே நல்லதுக்குதான். எப்பவும் சந்தோஷமா இரும்மா. அப்பா நாளைக்கு வந்திடறேன். நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கோடா கண்ணா”

எந்தத் தந்தையும் அவ்வளவு எளிதாக செய்து விடாத ஒரு விஷயத்தை செய்திருந்தார் ஹரிஹரன். எந்தத் தந்தையும் கொடுத்து விடாத ஒரு அனுமதியை தனது தந்தையின் மீதும் மகளின் மீதும் இருக்கும் நம்பிக்கையில் மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் கொடுத்திருந்தார் அவர்.

அடுத்து அவளது மனதில் வந்து நின்றார்கள் வரலக்ஷ்மி அத்தையும் நந்தாவும்.

அவளை தோளிலும் மார்பிலும் போட்டு சீராட்டி வளர்த்தவர் வரலக்ஷ்மி அத்தை. நியாயமாக அவர்தான் அவளை திருமணதிற்கு அலங்கரித்து இருக்க வேண்டும்.

சுய நினைவுடன் இருந்திருந்தால் இந்தத் திருமணம் அவரை கண்டிப்பாக புரட்டிப் போட்டிருக்கும். எல்லாம் சரியாகி அவர் நலம் பெரும் நாளில் அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்பதும் பெரிய கேள்விக் குறியே.

“என்னை மன்னிச்சிடுங்க அத்தை, இந்த நிமிஷம் என் மனசும் மனசாட்சியும் இதுதான் சரியான வழின்னு சொல்லுது” மானசீகமாக மனதார அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் அவர் வளர்த்த மருமகள்.

“நந்தா எங்கே இருக்கே நந்தா?” என்றாள் வாய்விட்டு “எப்படி நடந்ததுன்னு தெரியலை. ஆனா என் மனசுக்குள்ளே கெளதம் வந்து உட்கார்ந்திட்டார். இப்போ நான் அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன். ஆனா ஏதாவது செய்து உன்னை இந்த பூமியிலே நல்ல படியா வாழ வெச்சிடுவேன் நந்தா” மானசீகமாக வாக்குக் கொடுத்தாள் அவனுக்கு.

அடுத்த சில நிமிடங்களில் வேலையாட்களை அழைத்து அந்த அறையை சுத்தம் செய்ய சொல்லிவிட்டு மொட்டை மாடி படிகளில் ஏறினாள் சஞ்சனா.

அடுத்த பக்கம் .>>>​
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom