Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நெருங்க சொல்லுதடி உன்னிடம்

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
நெருங்க சொல்லுதடி உன்னிடம் 11:

11. என்னை காதலிப்பவரை!​


குறும்பு பார்வையுடன், "நிஜமா உனக்கு என் பெயர் தெரியாது ?" என்று அவளையே பார்த்தான்.

"ஹம்ம் தெரியும். ஆனா வேற எதுவும் தெரியாதே?" என்றால் வெகுளியாக.

"அதற்கென்ன நான் சொல்கிறேன்." என்று தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் கூறிவிட்டு அவளை பார்த்து கொண்டே, "சரி. நீ நல்லா பாட்டு பாடற பாரத நாட்யம் டான்ஸ் ஆட்றியே உங்க சித்திக்கு தெரியுமா?"

"தெரியாது! பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் எல்லாம் எனக்கு ரொம்ப இன்டெரெஸ்ட். அதனால எல்லாத்தையும் சித்திக்கு தெரியாம காலேஜ் உள்ளயே கத்துக்கிட்டேன். எனக்கு இதெல்லாம் தெரியும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அது நீ தான் கோவிலை ஒரு குட்டீஸ் பட்டாளத்தையே பிரெண்ட்ஸா வச்சுருக்கியே? நீ அவங்களுக்கு பாடி காட்டும் போது பார்த்துருக்கேன். அப்ப இந்த கிளாஸுக்கெல்லாம் எப்படி பீஸ் கட்டுவ?" என்றான்.

"நா கம்ப்யூட்டர் படிச்சதால எனக்கு கண்டிப்பா சிஸ்டம் வேணும்னு லாயர் அங்கிள் கிட்ட சொல்லி லேப்டாப் வாங்கிடேன். படிக்கும் போதே ஆன்லைன் ப்ரொஜெக்ட் மூலமா எர்ன் பண்ணிட்டு இருந்தேன். இந்த கிளாஸ்சுக்கு போக மீதியை என் அக்கவுண்ட்ல போட்ருவேன்."

"பரவால்லையே கொஞ்சம் கெட்டிக்கார பொண்ணு தான்ம் ஆனா, மேரேஜ் விஷயத்துல தான்..."

"அதுலயும் ஒரு நன்மை இருந்துருக்குல்ல, நான் அப்டி இருக்க போய் தான் என்னை விரும்பின ஒருத்தர் என்னை கல்யாணம் பண்ணிகிட்டார்ல?" என்று அவனை பார்க்காமலே எங்கோ பார்த்தபடி கூறவும் சட்டென அவள் புறம் திரும்பி, " இப்ப என சொன்ன ?" என்றான்.

"இல்ல நான் ஒன்னும் சொல்லலையே?"

"இல்ல சொன்ன. ஒழுஙகா என்னை பார்த்து திரும்பி சொல்லு."

"முடியாது" என்று மணலை உதறி கொண்டு எழுந்தவளின் கை பற்றி இழுக்க மறுபடியும் மணலில் விழுந்தாள்.

கையை விடாமல், " சொல்லலைனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது." என்று அவள் கண்களையே பார்த்து கொண்டிருந்தான்.

அவள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருக்க, அவளிடம் மிகவும் நெருக்கத்தில், " இப்ப சொல்ல போறியா இல்ல..." என்று அவளின் உதட்டை தன் விரலால் தடவினான்.

அவனின் நெருக்கத்தில் இருந்தவள் கண்களை மூடி கொண்டு, "அதனால தான நீங்க எனக்கு கிடைச்சிங்க." என்று தன் இதழை கடித்தாள்.

தன்னையும் மறந்து தன் இதழை அவள் இதழோடு சேர்க்கும் நேரத்தில மொபைல் அடித்தது இருவரும் வேகமாக எழுந்து அமர்ந்தனர்.

"யாருடா இந்த நேரத்துல கரடி?" என்று மனதில் திட்டி கொண்டே "ஹலோ!" என்றான் கோவமாக.

"ஹலோ ப்ரோ! எங்க இருக்கீங்க? மணி ஒன்பது ஆகுது. அம்மா ரொம்ப கவலையா இருக்காங்க." என்றான் சுரேஷ்.

"சரி. நான் வரேன்." என்று போனை வைத்து விட்டு மஹாவிடம், "நாம கிளம்பலாம் மணி ஆகிடுச்சு ஆன்ட்டி காணாமேன்னு பீல் பண்றாங்களாம்."

"ஹ்ம் போலாம்" என்று எழுந்தாள்.

அவள் முன்னே நடக்க வேகமாக சென்று அவள் தோளில் கை போட்டு நடந்தான்.

அவனின் கை தன் மேல் பட்டதுமே மிகவும் பதட்டம் அடைந்து உடலில் ஒரு நடுக்கம் பரவியதை உணர்ந்தாள்.

மெதுவாக அவன் பிடியில் இருந்து விடு பட முயன்றாள்.

அவள் சங்கடப்படுவதை உணர்ந்து தன் கைகளை எடுத்துக்கொண்டான்.

மௌனமே மொழியாக இருவரும் காரில் பயணித்தனர்.

"என்னால டெய்லியும் இப்டி வெளில கூட்டிட்டு போக முடியாது. ஆனா, டைம் கிடைக்கும் போது கண்டிப்பா கூட்டிட்டு போறேன். ஆனா டெய்லியும் உன்ன வந்து பார்ப்பேன்." என்று அவளை பார்த்தான். வெட்கத்தில் அவளின் முகம் சிவப்பதை ஒரே கண்ணால் பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

சுரேஷ் வீடு வந்து விட்டது. இருவரும் இறங்கி உள்ளே போக, "என்னம்மா சாப்பிட்டீங்களா?" என்று குரல் கேட்கவே,

"இல்லம்மா இன்னும் சாப்பிடல நீங்க சாப்பிட்டீங்களா?"

"எல்லாரும் சாப்ட்டாங்க. நான் நீ வந்துருவேன் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்."

"இல்ல ஆண்ட்டி. நா கிளம்பறேன் அம்மா எனக்காக காத்துட்டு இருப்பாங்க." எர்ரான் ஷக்தி.

"மணி இப்ப பத்தரை ஆகுது. இதுக்கு மேல நீ ஒன்னும் வீட்டுக்கு போக வேணாம் இங்கயே தங்கிரு."

"இல்ல ஆன்ட்டி..." என்று இழுத்தவனிடம் கண்டிப்புடன்,

"இல்ல நான் சொன்னா சொன்னது தான். யு ஆர் கோயிங் டு ஸ்டே ஹியர் ஒன்லி." என்றபடி ஷக்தி அம்மாவிற்கு போன் செய்து ஷக்தி சுரேஷுடன் இங்கயே தங்கட்டும் என்று அனுமதி வாங்கினார்.

'கடவுளே! இவன் கொஞ்ச நேரம் என் பக்கத்துல இருந்தாலே எனக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியல. இப்ப ராத்திரி முழுக்க என்கூட.. கடவுளே ப்ளீஸ் நீ தான் காப்பாத்தணும்.' என்று மனதினுள் வேண்டிக் கொண்டாள் மஹா.

இருவரும் சாப்பிட்டார்கள்.

"சரி ஆன்ட்டி. நா சுரேஷ் கூட படுத்துகிறேன்." என்றவனை முறைத்து, "டே அவன்கூடயா தூங்கப்போற? உனக்கு கல்யாண ஆகிடுச்சு மறந்துட்டியா? மஹா சக்திய உன் ரூம்க்கு கூட்டிட்டு போம்மா. எனக்கு தூக்கம் வருது குட் நைட்." என்று தன் அறைக்குள் புகுந்து கொண்டார்.

தயங்கி தயங்கி நின்றவனை "வாங்க" என்று தன் அறைக்கு அழைத்து சென்றாள்.

_ ------------------
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43

12. சுரேஷின் கோவம்​


வாங்க என்று வாய் அழைத்தாலும் மனம் முழுதும் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது.

தன் அறையின் கதவை திறந்தவள் அவன் வருவதற்கு வழி விட்டு உள்ளே சென்றாள். தன் கஃபோர்டு திறந்து அவனுக்கான நைட் ட்ரெஸ்ஸை எடுத்து குடுத்தாள்.

அவளின் செயலில் அவன் விழிகள் ஆச்சர்யத்தில விரிந்தது.

தன் வீட்டில் எப்பொழுதும் அவனின் சிறு வேலைகளை கூட அவனே செய்வான். வேறு யாரையும் செய்ய அனுமதிக்க மாட்டான்.

தன்னை கவனித்து நெருக்கத்தில் அன்பு செலுத்த தனக்கென ஒருவள் வந்து விட்டாள் என்பதை இப்பொழுது உணர்ந்தான்.

"தேங்க்ஸ்" என்றுவளை பார்வையில் துளைத்து கொண்டிருந்தான்.

வழக்கம் போல் அவளோ அவன் விழி அம்பில் இருந்து தப்பிக்க தரையை பார்த்து கொண்டிருந்தாள்.

'கடவுளே இவள் என் மனதைம் உடலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிக்கிறாள். இதுல ஆன்ட்டி வேற இங்கயே தங்க சொல்லிட்டாங்க இன்னைக்கு நைட் எனக்கு ரொம்ப கஷ்டமானதா இருக்க போகுது.'

அவன் உடை மாற்றாமல் அங்கேயே நிற்க, "போய் டிரஸ் மாத்திக்கோங்க உங்க டிரஸ் லயிட்டா ஈரமா இருக்கு இப்படி நின்னா கண்டிப்பா சளி பிடிக்கம்." என்றாள் மிக மெல்லிய குரலில்.

"தோ மாத்திகிறேன்." என்று வாஷ் ரூம் சென்று மாற்றிக்கொண்டு வந்தவன் அவள் உடை மாற்றாமல் நிற்பதை பார்த்து, "நீயும் போய் மாத்திக்க போ." என்றான் மெதுவாக.

"இல்ல என்கிட்டே எல்லாமே புடவை தான் இருக்கு. நா அங்க இருந்து டிரஸ் எதுவும் கொண்டு வரல. பரவா இல்ல நான் இந்த ட்ரேஸ்லேயே இருக்கேன்."

"சாரி. இருந்த டென்ஷன்ல நான் உனக்கு எந்த டிரஸ்ஸும் வாங்கி தரவே இல்ல." ஷக்தி.

"பரவா இல்லங்க. இங்க அம்மா மத்த எல்லாரும் என்னை அவங்க வீட்டு பொண்ணு மாதிரி நல்லா பார்த்துக்குறாங்க. இங்க இருக்குற எல்லாமே புது புடவைகள் தான், எனக்கு அதுவே போதும், நீங்க என்னை இங்க விட்டுட்டு போனாலும் எனக்கு நல்ல குடும்பத்தை குடுத்துருக்கீங்க அதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்." என்றவளை தலை முதல் பாதம் வரை ஒருமுறை நோட்டமிட்டான்.

அவள் செவ்விதழ்களின் நடனத்தில் தன்னை மறந்தவன் அவள் கைகளை பிடித்து தன்னிடம் இழுத்த வேகத்தில், அவனின் திடீர் எதிர்பாராத தாக்குதலால் நிலை இழந்து அவனோடு மோதி இருவரும் கட்டிலில் விழ சக்தியின் கரங்கள் அவள் இடையினை தாங்கி பிடித்தன.

அவன் முதுகுத்தண்டில் மின்சாரம் பாய்வது போல் ஓர் உணர்வு. அவளின் பட்டு மேனி தன் மேல் இருப்பதும அங்கேயும் இங்கேயும் அசைத்தாடும் அந்த துரு துரு விழிகளும் இதய துடிப்பு போல் விரிந்து சுருங்கி குவியும் அந்த இதழ்களும் 'ஓஹ் நோ ஷி ட்ரைவ்ஸ் மீ க்ரேஸிலி' என்று அவள் இதழ்களோடு தன் இதழ்களை சேர்க்க முனைந்தான்.

அலாரம் வைத்து போல் அடித்தது அவனின் போன், "ப்ச்சு இப்ப எந்த கரடின்னு தெரியலையே?" என்று வாய் விட்டே திட்டினான்.

இது தான் சமயம் தப்பித்தேன் என்று வேகமாக அவன் பிடியில் இருந்து விலகினாள். அவளை கண்களால் அளந்தபடியே போனில், "ஹெலோ!" என்றான் கோவமாக.

"என்ன ப்ரோ தூங்கிட்டியா?" என்கிற குரலில் எரிச்சல் அடைந்தவன் "இல்ல முடி வெட்டிட்டு இருக்கேன். என்னடா வேணும் உனக்கு ?"

"நீ தான் ப்ரோ. ப்ளீஸ் மொட்டை மாடிக்கு வா." என்றான் சுரேஷ்.

"டே எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் இப்ப ஒழுங்கா தூங்கு." என்றான்.

"இல்ல நீ இப்பவே வர நா வெயிட் பண்றேன்." என்று போனை கட் செய்தான்.

"இவன் வேற நேரம் காலம் தெரியாம என் உயிரை வாங்கறான்." என்று நினைத்தபடி மஹாவிடம் திரும்ப, "நீ படுத்து தூங்கு நான் இப்ப வரேன்." என்று மாடிக்கு வந்தான்.

"என்னடா இந்த நேரத்துல ஏன் கூப்பிட்ட?" என்றான் ஷக்தி

"டே அந்த ராட்சஷிய என் தலைலகட்ட முடிவு பண்ணிட்டாங்கடா."

"யாரு?"

"யாருன்னு உனக்கு தெரியாது?" என்று அவனை முறைக்க, "நீ சொன்னா தானடா தெரியும்?"

"ஹ்ம் அதான் அந்த பிசாசு ஜனனியை." என்றான் கோவமாக.

"ஹே காங்கிராட்ஸ் டா."

"எரிய நெருப்புல நீ வேற என்னைய ஊத்தாத." சுரேஷ்.

"டே! அவ உங்க அத்தை பொண்ணு தான? ரொம்ப நல்ல பொண்ணுடா. பேசாம கல்யாணம் பண்ணிக்கோ."

"டே எனக்கும் அவளுக்கும் சுத்தமா செட் ஆகாது."

"சரி. அப்ப நிறுத்திடலாமா °?"

"அது முடியாது அவங்க ஜெர்மனிலர்ந்து வந்துடாங்க, நாளைக்கு எனக்கு எங்கேஜ்மென்ட் இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்." என்றான்.

"என்னடா தீடிர்னு இவ்ளோ சீக்கிரமா நீ உங்க அப்பாகிட்ட முடியாதுக்கு சொல்றது தான?" என்று கேட்க, "அப்பா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். அவளை வேணாம்னு சொன்ன இந்த குடும்பம் மொத்தமும் என்கிட்டேர்ந்து விலகிடுவாங்களாம்." என்று கண் கலங்கினான்.

"என்ன சொல்றதுன்னு தெரியல யு ஹவ் டு அக்ஸ்ப்ட் ஹேர்."

"நோ வே! நான் கட்ற தாலி வேணா அவ கழுத்துல தொங்கும். ஆனா, என்னைக்கும் நா அவளுக்கு சொந்தமாக மாட்டேன்." என்றான் பிடிவாதமாக.

பின் பெரு மூச்செறிந்தவன், "எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. உங்கிட்ட பேசினா கொஞ்சம நல்லாருக்கும்னு பீல் பண்ணேன். அதான் உன்ன கூப்பிட்டேன். சாரி டா. நீ போ அண்ணி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க." என்றான்.

"சரி டா. நீ போய் படு. எதுவா இருந்தாலும் காலைல பார்த்துக்கலாம்." என்று கீழே இறங்கி தங்கள் ரூமிற்கு வந்தான்.

அங்கே மஹா!

****

சியு இந்த நெக்ஸ்ட் எபிசொட் இ ட்ரை டு அப்டேட் ரெகுலர்லி ஷேர் யுவர் ஓட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43

13. தனிமை​


மஹா அங்கே தரையில் பாய் விரித்து படுத்து உறங்கி இருந்தாள். அப்படியல்ல உறங்குவது போல் கண் மூடி படுத்திருந்தாள்.

'அடிப்பாவி ஒரு பத்து நிமிஷம் போயிட்டு வரதுக்குள்ள இந்த வேல பார்த்து வெச்சுருக்காளே இவளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது?"' என்று நினைத்தவன் மஹாவின் அருகில் தரையில் அமர்ந்து கொண்டு, "மஹா" என்று அழைத்தான். எந்த அசைவும் இல்லாததால், "தூங்கி இருப்பாளோ?" என்றவன்.

கண்கள் மூடி இருந்தாலும் கருவிழிகள் அசைந்தாடுவதை பார்த்து, 'முழிச்சு கிட்டு தான் இருக்கியா? என்கிட்டயேவா இரு வரேன்.' ன்று மெல்ல எழுந்தவன். தன் இரு கைகளால் அவளை ஏந்தி கட்டிலில் படுக்க வைத்தான்.

அவன் கரங்கள் அவள் உடலை தீண்டியவுடன் அவளின் இதயத்துடிப்பு அவனுக்கே கேட்கும் அளவு துடித்தது. அவளின் பட்டு போன்ற உடல் நடுங்குவதையும் எந்த நொடியும் கண்களை திறந்து விடுவேன் என்பது போல் கண்களின் கருவிழி அசைவதையும் ரசித்தபடியே கிடத்தினான்.

தானும் அவளின் மறுபுறம் மிக நெருக்கத்தில் படுத்துக்கொண்டு அவளின் காதருகே மிகவும் நெருக்கத்தில், "நீ தூங்கற மாதிரி நடிக்கறப்பக்கூட ரொம்ப அழகா இருக்க." என்றான்.

அவனின் சொற்களால் திகைத்து கண்களை பட்டென்று திறந்தவள் மாட்டிக் கொண்டோம் என்பதால் கீழ் உதட்டை கடித்தபடி அவனை நோக்கினாள்.

"இன்னும் நீ என்னை நம்பலையா? என்னை பார்த்து ஏன் அப்டி பயப்படற? நிசசயமா உன் அனுமதி இல்லாம நா கணவனா நடக்கனும்னு நினைக்க மாட்டேன். அதனால நீ என்னை பார்த்து பயப்படாத."

"அப்டி எல்லாம் ஒன்றும் இல்லை." என்றாள் அவனை நோக்காமலே.

"நா தான் உன்ன முதல்ல பார்த்து லவ் பண்ணேன். உன் அனுமதி இல்லாமலே உன் கழுத்தில் தாலி கட்டிட்டேன். உனக்கு என்னை பிடிச்சிருந்தா நாம முதல இருந்து லவ் பண்லாம் "

சரி என்று தலை ஆட்டினாள்.

"உன்னுடைய விருப்பங்கள் என்னண்னு நானும் என்னுடையதை நீயும முதல்ல தெரிஞ்க்கலாம். இந்த இரவு மாதிரி திரும்பி வர பல நாள் ஆகும். அதனால அடுத்த இரவு வரும் வரை இந்த இரவை நினைவாக இருக்கும்படி செய்யலாம்." என்று கண்ணடித்தான்.

"இங்க பாரு அதுக்காக என்னால சாமியார் மாதிரில்லாம் இருக்க முடியாது. அதனால அப்பப்போ ஒரு சின்ன முத்தம் சில சின்ன தீண்டல் சீண்டல்னு இருப்பேன் சொல்லிட்டேன்." என்றவன் ஒரு நொடி ஏறேடுத்து பார்த்தவள் மறுநொடி தலை தாழ்த்தினாள்.

"பின்ன உன்ன மாதிரி அழகா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு அமைதியா இருக்கறது ரொம்ப கஷ்டம் மஹா." என்றபடி ஒரு நொடியும் தாமதிக்காமல் அவள் கண்களில் முத்தங்களை கொடுத்தபடி அணைத்துக் கொண்டான்.

தன் கணவனின் முதல் முத்தத்திலும் தீண்டலிலும் ஒரு பெண் நடுங்கினாலும் தனக்கான அன்பு அதில் தெரிவதால் அவனிடம் தஞ்சம் அடைவாள்.

அதற்கு மஹாவும் விதிவிலக்கல்ல. அவளும் சக்தியின் அணைப்பில் கட்டுண்டு இருவரும் வெகு நேரம் மனம் விட்டு பேசிய பின் உறங்கினர்.

விடிந்ததும் எழுந்து காலை கடன்களை முடித்து சமையல் செய்வதற்கு உதவ வந்தவளை மேலிருந்து கிழ் வரை பார்த்த சுரேஷின் அம்மா சிரித்தபடி, "என்னமா சக்தி இன்னும் எந்திரிகலையா?" என்றார்.

"இல்லம்மா தூங்கிட்டு தான் இருக்கார்."

"சரி. நீங்க இன்னும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலையா?"

"இல்லம்மா அது வந்து..." என்று இழுத்தவளை தன் அருகே அழைத்து நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டார்.

"சரி. பரவால்லமா முதல்ல உங்கள ஒருத்தர ஒரத்தர் புரிஞ்சிகிட்டப்புறம் வாழ்க்கையை ஆரம்பிக்கறதுல தப்பில்லேடா. சரி இந்தா ஷக்தி டி காபி குடிக்க மாட்டான். அவனுக்கு பாதாம் பால் ரொம்ப பிடிக்கும் போய் குடு." என்றார்.

"சரிம்மா" என்று தங்களின் அறைக்கு எடுத்து சென்றவள். தான் என்று நினைத்து தலையணை கட்டிக்கொண்டு உறங்குவதை நினைத்து சிரித்தாள்.

"என்னங்க" என்று மெதுவாய் அழைத்தாள்.

"ஹ்ம்" என்றபடி புரண்டு படுத்தான்.

"குட் மோர்னிங்" என்றவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டு மெல்ல கண்களை திறந்து மஹாவை பார்த்து "குட் மோர்னிங் மை டியர்." என்று நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்.

"உன் புகுந்த வீட்டினர் இன்னைக்கு வருவாங்க."

"என்ன?"

"ஆமா டா இன்னைக்கு சுரேஷ்க்கு நிச்சயதார்த்தம்."

"சரி"

எழுந்து ரெடி ஆகி ஷக்தி மஹாவிடம்

"சரி டைம் ஆகுது. நா கிளம்பறேன்." என்று கதவிடம சென்றவன் திரும்பி, "நா வர ஈவினிங் ஆகிடும் அதனால?" என்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க தன் இதழை கடித்தபடியே ஒரு அடி பின் எடுத்து வைத்தாள்.

"ஹே என்ன பார்த்து ஓடாத " என்று அவள் கை பற்றி தன்னிடம் இழுத்தான்.

கதவு தட்டும் ஓசை கேட்க திரும்பி அவனை பார்த்தாள்.

"அண்ணி அம்மா கூப்பிட்றாங்க."

"இதோ வரேன்." என்றவள் அவன் யோசிக்கும் முன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு சிட்டாய் பறந்தாள்.

ஒரு நொடி நடந்தது புரிய தலையை கோதியபடி மெல்லிய புன்னகை அரும்பியது சக்தியிடம்....

கனவுகள் தொடரும் .....

பிடிச்சிருந்தா ஷேர் யுவர் ஓட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43

14. சுரேஷின் நிச்சயம்​


"இங்க பாருங்க நீங்க சொல்றிங்கன்னு அந்த லூசு பயல என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுக்கு நான் இப்டியே காலம் முழுக்க உங்க பொண்ணா இங்கயே இருப்பேன். என்னை விட்ருங்க." என்றாள் ஜனனி.

"இந்தா பாருடி, உங்கிட்ட யாரும் அனுமதி கேக்கல. உன் புருஷன் சுரேஷ் தான். நாளைக்கு உனக்கும் சுரேஷுக்கும் நிச்சயதார்த்தம். வாய மூடிட்டு அமைதியா கல்யாண பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா வந்து சபைல நில்லு. அவ்ளோதான் சொல்லிட்டேன்." என்றார் ஜனனியின் அம்மா ஜானகி.

"முடியவே முடியாது. நான் அவனை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்."

"அப்ப சரி. நீ உன் விருப்பப்படி இரு. நாங்க யாரும் இனி இங்க இருக்க மாட்டோம். உன்ன தொந்தரவும் பண்ண மாட்டோம். என்னங்க கிளம்புங்க நாம எங்கயாவது போலாம். அவ மட்டும் தனியா இருந்துகட்டும். இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்ல." என்றார் கோவமாக.

"சும்மா இந்த பூச்சாண்டி காட்ற வேலெல்லாம் என்கிட்டே வேணாம். நான் நீங்க சொல்றதெல்லாம் கேட்டு பயப்பட மாட்டேன்." என்றாள் பதிலுக்கு.

ஜானகிக்கு கோவம் தலைக்கேற ஒரு பெட்டியில் துணிகளை மளமளவென எடுத்து வைத்தவர். கணவரிடம் திரும்பி, "வாங்கன்னு சொல்றன்ல?" என்று அவர் கை பிடித்து வேகமாக வாசலுக்கு கூட்டி சென்றார்.

"நான் ஏதோ சும்மா சொல்றாங்கன்னு நினைச்சா உண்மையாவே போயிருவாங்களா?" என்று நினைத்தவள் வேகமாக அவர்களின் முன் போய் நின்றாள்.

"எங்க போறீங்க?" என்றாள்.

"எங்கேயோ போறோம். நீ யாரு எங்களை கேக்கறதுக்கு?" என்று அவளை தள்ளி விட்டு முன்னேறினார்.

"அம்மா சும்மா சொன்னேன். நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்?" என்றாள் பாவமாய்.

"நீ என்ன வேணா பண்ணு. எங்க பேச்சுக்கு மரியாதை தாராதவக்கூட எங்களால இருக்க முடியாது." என்று வாசல் தாண்டி காலை வைத்தார்.

"நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று கத்தினாள்.

எதுவும்பேசாமல் உள்ளே செல்ல, " அம்மா நான் தான் சரினு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன் பேசமாற்றிங்க?" என்றாள் ஜனனி.

"இப்ப சரின்னு சொல்லிட்டு நாளைக்கு எதுவும் பிரச்சனை பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்?"

தன் அம்மா தலை மேல் கை வைத்து, "உங்க மேல சத்தியமா நான் அவனை (அந்த டாக) கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று தன்னறைக்கு ஓடிவிட்டாள்.

'நீ என் வாழ்க்கைல இருக்க கூடாதுனு நினைச்சா எதுக்கு திரும்பி வரணும்னு பார்க்கற? நீ மட்டும் என் கழுத்துல தாலி கட்டின உனக்கு அன்னைலருந்து ஏழரை ஸ்டார்ட்டுடி.' என்று ஜனனியும் சுரேஷும் சிரித்த மாதிரி இருக்கும் அந்த போட்டோவை எடுத்து பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்.

"பாவம்மா ஜனனி. ரொம்ப போர்ஸ் பண்ண வேணாம். அவளுக்கு பிடிக்கலைன்னா விட்ருலாம்." என்றார் ஜனனியின் அப்பா குமார்.

"நீஙக வேற அவளுக்கு பிடிக்கறதால தான் இவ்ளோ போர்ஸ் பண்றேன். அவன் இல்லாம இவ சந்தோஷமா இருக்க மாட்டா. நீங்க நடுவுல புகுந்து எதுவும் கெடுக்காதிங்க." என்று முறைத்தார்.

நிச்சயதார்த்தம் சுரேஷின் வீட்டில் நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

சுரேஷ் தான் மிகவும் கோவமாக இருந்தான்.

யார் பேசியும் சமாதானம் ஆகவில்லை.

"டே! எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி் வச்சுக்காத. கொஞ்சம் கல்யாண மாப்ள மாதிரி சிரி." என்றார் சுரேஷின் அம்மா.

"ஆமா.. இவங்க என்னை பாழும் கிணத்துல புடிச்சி தள்ளறாங்க. அதுக்கு வேற நான் சிரிக்கணும்." என்று தனக்குள் முனக,

"என்னது?" என்றார் அவனின் அம்மா கோவமாக.

"ஒண்ணுமில்ல சரின்னு சொன்னேன்." என்று அங்கிருந்து நகர்ந்தான்.

மஹாவும் சுபாவும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். சற்று முன் நம்மாளு சக்தியும் வந்துட்டாரு. ஆனா பாரு. வேலை எதுவுமே செய்யாம பொண்டாட்டிய சைட் அடிச்சிட்டு இருக்கான்.

சக்தியின் கழுகு பார்வையில் இருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தாள் மஹா.

"என்னடா பண்ற நீ? என் நிச்சயத்துக்கு வந்தியா? இல்ல எங்க அண்ணியை சைட் அடிக்க வந்தியா?" என்று முதுகில் பட்டென்று ஒரு அடி போட்டான் சுரேஷ்.

"உண்மையை சொல்லவா? உனக்கு நிச்சயம் நடந்தா என்ன? நடக்கலைன்னா என்ன? நான் என் பொண்டாட்டிய பார்க்க தான் வந்தேன்" என்று கண்ணடித்தான்.

"அடப்பாவி நீயெல்லாம் ஒரு பிரெண்டா?"

"ரொம்ப ஓவரா தான் பண்ணாத. அதான் எல்லா வேலையும் எனக்கு பதில் என் டார்லிங் முடிச்சிட்டாளே... அப்புறம் என்ன உனக்கு? போய் முதல்ல ரெடி ஆகு. டைம் ஆகிடுச்சு போ." என்று சுரேஷை அவன் ரூமிற்குள் துரத்திவிட்டு வந்து மஹாவை தேடினான். எங்கும் காணவில்லை.

"எங்கடா போனா அதுக்குள்ள? என் கண்ல மண்ணை தூவிட்டு போறதுனா அல்வா சாப்பிடற மாதிரி இருக்கு அவளுக்கு. இரு எப்படியும் என்கிட்டே தான வரணும். அப்ப வச்சுகிறேன்." என்று திட்டியபடி காரினில் இருந்த இரு கவர் எடுத்துக்கொண்டு சுரேஷின் அம்மாவிடம் சென்றான்." ஆண்ட்டி இதை மஹாக்கு கொடுத்துடுங்க." என்றவனை முறைத்தார்.

"இன்னும் எத்தனை நாள் என்ன கொடுக்க சொல்லுவ? அவ உன் பொண்டாட்டி. நீயே போய் கொடுடா. எனக்கு நிறைய வேலை இருக்கு. அப்டியே நீயும் ரெடி ஆகி ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க." என்று அங்கிருந்து சென்றார்.

சிரித்துக்கொண்டே மஹாவின் அறைக்கு சென்றான்.

அவன் எதிர் பார்க்காமல் மஹா அங்கு தான், தான் ரெடி ஆவதற்கு டிரஸ் எடுத்து கொண்டிருந்தாள்.

திடிரென்று கதவு திறக்கவும், "சுபா, இங்க பாரு. இந்த சாரீ நல்லாருக்கானு இத கட்டிக்கவா?" என்று திரும்பியவள் ஷக்தி கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொணடு அவளையே பார்த்துக் கொண்டிருக்க தடுமாறி போனாள்.

"எப்ப வந்திங்க?" என்று அவனை பார்க்காமலே கேட்டாள்.

"ஹ்ம் நீ சுபான்னு நினைச்சு புடவை கேக்கும் போதே வந்துட்டேன்." என்று அவளை நெருங்கவும் மஹா மெதுவாக பின் வாங்கினாள்.

"என்ன பண்ணிட்டு இருக்க?" ஷக்தி

"ஒன்னும்... இல்ல... எந்த... சாரீ... கட்டறதுன்னு... பார்த்துட்டு... இருக்கேன்." என்றாள் இழுவையாக.

"இந்தா இந்த டிரஸ் போட்டுக்கோ. உனக்கு பிடிச்சிருக்கா பாரு?" என்றான் கையில் இருந்த கவரை நீட்டி.

தயங்கியபடி பார்க்க அதில் குங்கும நிறத்தில் ஜொலிப்புடன் ஒரு பட்டு புடவை மின்னியது. அவளின் கண்கள் விரிவதை பார்த்து புன்சிரிப்புடன், "உனக்கு பிடிச்சிருக்கா?"

"ரொம்ப நல்லாருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தேங்க்ஸ்." என்றாள் மெதுவாக.

"தேக்ங்ஸ் கூட கிழ பார்த்து தான் சொல்லுவியா? என்னை பாரு?" என்றான் கோவமாக.

நிமிர்ந்து அவனை நோக்க, "உனக்கு நான் யார்?" என்று அவள் கையை பற்றினான்.

அமைதியாக இருந்தாள் மஹா.

"சொல்லு நான் யாரு?"

"என் கணவர்." என்றாள் மெதுவாக.

"முதல்லஎன் கண்களை நேருக்கு நேர் பார்." என்றான் கட்டளையாக.

அவள் விழிகளில் உள்ளே ஊடுருவி, "நான் எப்போ உனக்கு தாலி கட்டினேனோ அந்த நொடிலர்ந்து என் உயிர் உடல் என்னை சார்ந்த அத்தனையும் உனக்கும் சொந்தம். அப்படியிருக்க நான வேறு நீ வேறு இல்ல அப்பறம் ஏன் எனக்கு தேங்க்ஸ் சொல்ற?" என்றான் அதட்டலாக

Thanks For your support and share your valuable votes and comments and keep supporting bye
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43

15. ஷக்தியின் விலகல்​


"இல்ல நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல...

இதுவரைக்கும என் பாட்டி மட்டுமதான் எனக்கு டிரஸ் எடுத்து கொடுத்துருக்காங்க...

வேற யாரும் எடுத்து கொடுத்ததில்லை அதனால தான் அப்டி சொல்லிட்டேன்.

சாரி இல்லல்ல... இனிமே தேங்க்ஸ் சாரி ரெண்டுமே சொல்லமாட்டேன்." என்றாள் திக்கி திணறி.

அவளின் பேச்சில் நகைத்தவன், "ஏஹ் மண்டு இதுக்கு முன்னாடி ஒரு தடவ நான் உனக்கு டிரஸ் எடுத்து குடுத்துருக்கேன்." என்றான் கூலாக.

"நீங்களா? இல்லையே எப்போ எடுத்து கொடுத்தீங்க? கண்டிப்பா இல்ல." என்றாள் அவன் முகத்தை பார்த்து.

"பரவாலை என் டார்லிங் என் முகத்தை பார்த்து பேசறியே? இதுக்கு தான் இத்தனை நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்." என்று கண்ணடித்தான்.

அவனின் செய்கையில் தலை தாழ்த்தியவள். "நீங்க சும்மா தான சொன்னீங்க?" என்று கேட்டாள்.

"இல்லடி. நான் சீரியசா சொல்லிட்டு இருக்கேன். நீ எப்போ என் முகத்த பார்த்து பேசுவேன்னு எவ்ளோ ஆசையா இருந்தேன். நீ என்னடான்னா இப்டி கேக்கற?" என்றான் சோகமாக.

"ஐயோ! நான் அதை கேக்கல. நீங்க எனக்கு டிரஸ் கொடுத்தேன்னு சொன்னிங்களே.. அதை தான் சொல்றேன்." என்றாள்.

"நிஜமா நான் உனக்கு கொடுத்தேன். நானா உன் கைல தரல அவ்ளோ தான்." என்றான்.

அவனை மஹா குழப்பமாக பார்க்க, "எதுக்கு அப்டி பாக்கிற? கோவில்ல ஒரு வயசான பாட்டி தாத்தா அவங்க பேத்திக்கு பிறந்த நாள்னு பாவாடை தாவணி கொடுத்தாங்கள்ல அதை கொடுத்து உன்கிட்ட கொடுக்க சொன்னது நான் தான்." என்றான் சிரித்துக்கொண்டே.

"அப்டியா நிஜமா?" என்றாள் அப்பாவியாக.

"உன் மேல ப்ரோமிஸ். எனக்கு மெரூன் தான் ரொம்ப பிடிக்கும். அதனால தாவணியும் அந்த கலர் தான்."

"சரி. டைம் ஆகுது. ரெடி ஆகணும் போய் பிரெஷ் ஆகிட்டு வா. நானும் இங்க தான் ரெடி ஆகணும்." என்றான்.

"என்ன இங்கேயா ஏன்?" என்றாள் பதற்றமாக.

"நான் இங்க ரெடி ஆனா என்ன இப்ப நீயும் இங்கேயே ரெடி ஆகு."

"இல்ல நான் புடவை கட்டணும். ப்ளீஸ் நீங்க முதல்ல ரெடி ஆகி போய்டுங்க நான் வரேன்." என்றாள் பயந்தபடி.

"நோ வே. முடியவே முடியாது ஆன்ட்டி நீங்க ரெண்டு பேரும் ரெடி ஆகி ஒண்ணா தான் வெளிய வரணும்னு சொல்லிட்டாங்க. நான் வேணா ஆன்ட்டிகிட்ட போய் நீ இங்க ரெடி ஆகா வேணாம்னு சொல்றேன்னு சொல்லிடறேன்." என்று வேகமாக கதவிடம் போக திரும்பியவனை, சக்தியின் கை பிடித்து தடுத்து நிறுத்தினாள்.

"இல்ல இல்ல இங்கயே ரெடி ஆகுங்க." என்று வாஷ் ரூம் சென்று சிறு குளியல் ஒன்றை குளிர்ந்த நீரில் எடுத்தவள் தன்னவன் வெளியே காத்திருக்கிறானே... அவன் முன் எப்படி உடை மாற்றுவது என்று யோசித்தவள் மடமடவென்று புடவையை தவிர்த்து உடை அணிந்து அதன் மேல் நைஹ்டியை அணிந்தபடி வெளியல் வந்தாள்.

அருகே இருந்த சால்வை எடுத்து தன் மேல் போர்த்திக்கொண்டு, "நீங்க போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க." என்று தலை வார ஆரம்பித்தவள்.

மஹாவை ஏற இறங்க பார்த்தவன், "ரொம்ப தெளிவாத்தான்டி இருக்க?" என்று கூறியபடி குளிக்க சென்றான்.

ஷக்தி உள்ளே செல்லும் வரை காத்திருந்தவள் சென்றவுடன் பூனை நடை போட்டு மெல்ல சத்தம் வராமல் தாழ்ப்பாள் போட்டு பின் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டபடி நைட்டியை கழட்டி வேகமாக புடவை கட்டினாள்.

புடவை கட்டி முடிக்கவும் ஷக்தி கதவை தட்டவும் சரியாக இருந்தது.

கதவை திறந்தவளிடம், "கதவை தாழ்ப்பாள் போட்டியா?" என்றான்.

'ஆமாம் இல்லை' என்று மாற்றி மாற்றி தலை அசைத்தாள்.

"போட்டியா இல்லையா?" என்றான் கோவமாக.

"ஆமாம்" என்று மஹா வேகமாக தலை ஆட்டவும்.

வேகமாக அவளிடம் இருந்து விலகி மஹாவை கண்டுகொள்ளாமல் ரெடி ஆகினான்.

சக்தியின் முகம் மிகவும் கோவமாக இருக்கிறான் என்று காட்டிக் கொடுத்ததால் பேச பயந்து கொண்டு அமைதியாக நின்றாள்.

மஹா என்று ஒருத்தி அந்த ரூமில் இல்லாதது போல் கிளம்பி வேகமாக வெளியே போய் விட்டான்.

சக்தியின் மனம் நோகும்படி செய்ததற்கு தன்னையே திட்டி கொண்டிருந்தாள் மஹா.

அவளும் ரெடி ஆகி வெளியே வந்தாள்.

எதிரில் வந்த சுபா, "வாவ் அண்ணி யு ஆர் லூக்கிங் வெரி கார்ஜியஸ். அண்ணன் பார்த்தா அவ்ளோதான் உங்களை விடமாட்டார்." என்று கண்ணடித்தாள்.

சுபாவின் சீண்டலில் மஹாவின் முகம் குங்குமமாய் மலர தாமரை ஒன்று இதழ் விரித்து சிரிப்பது போல் இருந்தது அவளை தூரத்தில் ஒருந்து கவனித்து கொண்டிருந்த சக்திக்கு

"ஏய் வாய மூடு. நீ அடி தான் வாங்க போற." என்று காதை பிடித்து திருகினாள்.

"ஆஹ் வலிக்குது விடுங்க அண்ணி. அங்க பாருங்க அண்ணன் வரார்." என்றாள்.

பதறிப்போய் அவளின் காதை விட்டபடி திரும்ப அங்கே யாரும் இல்லை.

"ஹலோ அண்ணி அண்ணன்ன்னு சொன்ன உடனே விட்டுட்டீங்க?"

ஷக்தி கோவமாக இருந்தது நினைவில் வர அவர் கோவம் குறையுமா?... என்று யோசிக்கலானாள்.

Share your comments and votes frends bye
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
16.சண்டை கோழிகள்
விருந்தாளிகள் எல்லோரும் வர ஆரம்பித்தனர். பெண் வீட்டாரும் வந்து தயாராகி கொண்டிருந்தனர். நம்ம பாப்பா அதாங்க ஜனனி மட்டும் மிஸ்ஸிங்.

"ஜனனி ரெடி ஆகிட்டாளா? ஆளையே காணோம்?" என்று கேட்டார் குமார்.

"அவ அப்பயே ரெடி ஆகிட்டா. எங்க போயிருப்பா இங்க தான் எங்கயாவது இருப்பா?" என்ற ஜானகி "போய் நீங்க ரெடி ஆகுங்க. இப்ப கூப்பிட போறாங்க. அப்ப ரெடி ஆகறேன்னு தைய தான்னு குதிக்காதிங்க." என்று சத்தம் போட்டார்.

"சரி. இதோ பைவ் மினிட்ஸ் ரெடி ஆகிடுவேன்." என்று கிளம்ப சென்றார்.

"இந்த நேரத்துல எங்க போனா? பாரு பொண்ணா லட்சணமா உட்காராளான்னு? எப்படியோ இந்த கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா சரி." என்று தனக்குள் பேசி கொண்டவர் சுரேஷின் அம்மாவை தேடி சென்றார்.

"அண்ணி இங்க இருக்கீங்களா நான் உங்கள எல்லா எடத்துலையும் தேடிட்டு வரேன்." ஜானகி.

"அவ்ளோ தான் ஜானகி முடிஞ்சிடுச்சு. இதோ ஆரம்பிச்சிடலாம்." இறைவனை வேண்டியபடி கூறினார்.

"என்ன அண்ணி என் பொண்ணு சண்டை கோழியாட்டம் சிலுப்பிட்டு போறா, அங்க எப்படி என் மாப்பிளையாவது என்ன சொல்றான்?"

"இங்க மட்டும் என்ன தாட்டு பூட்டு தஞ்சாவூருன்னான் அவங்க அப்பா தான் கோவமா பேசி அடக்கினார்."

"எனக்ரு சந்தேகம் அண்ணி அங்க அங்க லவ் பண்றவங்க பெதவங்கள சமாதானபடுத்த போராடுவாங்க... இங்க அப்டியே தல கிழா இருக்கு. அண்ணி இந்த பக்கிங்க லவ் பண்ணி பிரிஞ்சிடுச்சுங்க. இதுங்கள சேர்த்து வைக்க நாம போராட வேண்டி இருக்குலாம் நம்ம தல எழுத்து." என்று புலம்பினாள் ஜானகி.

"ஜானு எதுக்கு இப்ப புலம்பற? நம்ம பிள்ளைங்க தான நம்மளுக்கு கண்டிப்பா தெரியும் ரெண்டு பேரும் வேற யாரையும் கல்யாணம் பணிக்க மாட்டாங்கன்னு. நாம சேர்த்து வச்சிட்டா கொஞ்ச நாளைக்கு பிரிஞ்சிருந்த கோவத்துல அடிச்சிப்பாங்க. அப்பறம் சேர்ந்துருங்க. இப்ப நாம இவங்கள சேர்த்து வெக்காம விட்டுட்டோம்னா காலத்துக்கும் இவங்க தனி தனியா அழுவாங்க. அதுக்கு இது எவ்ளோ தேவலாம் ஜானு. சரி நீ போய் ஜனனியை கூட்டிட்டு வந்துடு. நா சுரேஷ கூட்டிட்டு வரேன். எல்லோரும் வெளிய வெயிட் பண்றாங்க." என்றார்.

"சரி அண்ணி நான் போய் கூட்டிட்டு வரேன்." என்றார் ஜானு.

"ஹ்ம் ஜானு மறக்காம சாமி கும்பிட வச்சு கூட்டிட்டு வா" என்று சுரேஷை தேடி போய் விட்டார்.

இந்த கேப்ல நம்ம சுரேஷும் ஜனனியும் எப்படி ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிறாங்க பாருங்க.

துப்பாக்கி மட்டும் தான் இல்ல வாயிலேயே தோட்டாவை யூஸ் பண்ணி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் சூட் பண்ணிக்கிறாங்க.

வாங்க வாங்க நாம போய் பார்க்கலாம் ஒரே ஜாலி.

"அதான் அப்பயே சண்டை போட்டுட்டு போன இல்ல இப்ப எதுக்குடி வந்த? எவனையோ லவ் பண்றேன்னு சொன்னல்ல அவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான எதுக்குடி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட?" என்று முறைத்தான் சுரேஷ்.

"ஆமா. இவர் பெரிய மைசூர் மஹாராஜா இவரை கல்யாணம் பண்ண பொண்ணுங்க லைன்ல நிக்கறாங்க பாரு. எந்த பொண்ணும் கிடைக்கலைன்னு தான பக்கி என் உயிர்ககிறாங்க ?"

"இங்க பாரு எனக்கு உன்ன பிடிக்கல அதனால கல்யாணத்த எப்படியாவது நிறுத்திடு."

"அட பார்ரா உன் மொகரைய மட்டும் எனக்கு பிடிச்சிருக்கா?"

"சும்மா கத பேசாத. என்னால இந்த கல்யாணத்த நிறுத்த முடியாது. சோ, நீ தான் நிறுத்தணும். ஒரு வேல இந்த கல்யாணம் நடந்தது தென் ஐ வில் ஷோ தட் ஹொவ் தி ஹெல் வாஸ் புரியுதா?" என்றான் அழுத்தம் திருத்தமாக.

"இங்க பாரு என்னால கண்டிப்பா நிறுத்தமுடியாது. ஆனா, இந்த கல்யாணம் நடக்க கூடாது. அப்டி நீ என் கழுத்துல தாலி கட்டண அப்புறம் உனக்கு கையே இருக்காது. அதுமட்டும் இல்லாம நீ இப்ப சொன்னியே அத தான் சொல்றேன் உனக்கு நரகம்னா எப்படி இருக்கும்னு காட்டுவேன்." என்று தன் அறை நோக்கி சென்றாள்.

"எங்கடி போன? போலாம் வா. கிழ கூப்பிட்றாங்க எல்லோரும் வந்துட்டாங்க." என்று ஜனனியை கீழே அழைத்து சென்றார் ஜானகி.

"வரேன்." என்று ஜனனி கீழே சென்றாள்.

"டே என்னடா பண்ற? உன்ன எல்லாம் கீழே கூப்பிட்றாங்க வா போலாம் " என்று கூட்டி போக வந்தான் ஷக்தி.

"வரேன்டா."

"ஏன்டா கோவமா இருக்க?"ஷக்தி.

"அந்த குட்டி பிசாசு வந்து என்ன பேச்சு பேசிட்டு போறா பொண்ணா அவ பிசாசு." என்று திட்டும் சுரேஷை தலை சாய்த்து விஷமமாக பார்த்து சிரித்தான் .

"எதுக்குடா இப்ப சிரிக்கிற?"

"டே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எப்படி இருந்தீங்கன்னு எனக்கு தெரியாதா வாடா?" என்று சுரேஷின் கை பிடித்து கூட்டி சென்றான்.

பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் எதிர் எதிர் அமர்ந்து பேசத்தொடங்கினர்.

சுரேஷும் ஜனனியும் எதிர் எதிர் இருந்ததால் கண்களாலேயே போர் நடத்திக் கொண்டிருந்தனர்.

நிச்சயம் நடக்குமா?

வழக்கம் போல கதையை படிச்சிட்டு வோட்டை போட மறந்துடறீங்க பிரெண்ட்ஸ் சோ ஷேர் யுவர் வொட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பை !
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
17. ஷக்தியின் ஊடல்


மஹா மிகவும் வாடிய முகத்துடன் வலம் வந்து கொண்டிருந்தாள்.

சுரேஷின் அம்மா, "மஹா என்னடா உடம்பு ஏதாவது சரி இல்லையா முகம் ரொம்ப டல்லா இருக்கு?"

மஹாவிற்கு கண்ணீர் விழிகளின் விளிம்பில் முட்டிக்கொண்டு நிற்க, சுற்றி இருக்கும் சூழல் தன்னால் கெட கூடாது என்று எண்ணி, "அம்மா எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு."

"சரி டா. நீ போய் கொஞ்சம் டேப்லெட் போட்டுட்டு ரெஸ்ட் எடு சரியாகிடும்." என்றார் அக்கறையாக தலையை கோதியபடி.

"இல்லம்மா. அண்ணா நிச்சயம் நடக்கும் போது நா இல்லனா வருத்தப்படுவாங்க. தட்டு மாத்திற வரைக்கும் இருந்துட்டு அப்புறம் போய் ரெஸ்ட் எடுக்கறேன்." என்றாள்.

"சரி மா. சுபாகிட்ட டேப்லெட் வாங்கி போட்டுட்டு அமைதியா இப்டி என் பக்கத்துல வந்து உக்காரு சரியா?" என்றார்.

தன் மேல யாரும் இதுவரை காட்டாத அக்கறை புதிதாக இருக்க எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முடியாமல கண்ணீர் வர அதை வெளிக்காட்டாமல், " சரிம்மா இதோ வரேன்." என்று வேகமாக கண்களை துடைத்தபடி தன் அறைக்கு ஓடினாள்.

அவளின் ஒவ்வொரு சின்ன அசைவையும் ஷக்தி அவளுக்கு தெரியாமல் கவனித்து கொண்டு தான் இருந்தான்.

மஹாவின் மனது திடீர அன்பால் பலவீனமாகிறது என்பதை அறிந்ததால் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல அவன் மனம் எண்ணினாலும், "அவள் என்னை அவளுடைய கணவன் என்று உரிமையாய் எப்பொழுது நினைக்கிறாளோ அது வரை நான் அமைதியாய் தான் இருக்கனும்." என்று முடிவோடு இருந்தான்.

ஆனாலும் தன்னவள் விழி நீர் கசிய தானும் ஒரு காரணம் என்று நினைக்கும் பொழுது மனம் தவித்தாலும், "சுபா "என்று தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த சுபாவை கூப்பிட்டான்.

"என்ன அண்ணா?"

"சுபா மஹா தலை வலிக்குதுன்னு உள்ளே போயிருக்கா கொஞ்சம் போய் பாருடா." என்றான்.

அவன் முகத்தை சிறிது நேரம் உற்று பார்த்தவள். "அண்ணா அண்ணியை ஏதாவது திட்டினீங்களா?"

"அது சுபா..." என்று தயங்கியவன் பின், "எனக்கு மஹா மேல ஒரு சின்ன வருத்தம். எல்லாம் சரி ஆகிடும். இப்போ நான் போனா சரியா இருக்காது. நீ போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்து உன்கூட வச்சுக்கோடா." என்று கெஞ்சும் குரலில் கேட்கும் அண்ணனை பார்த்து, "இந்த ஆம்பள பசங்க எல்லாம் ரொம்ப மோசம் யோசிக்காம எல்லாம் செஞ்சிட்டு பின்னாடி கைய பெசஞ்சிட்டு நிக்க வேண்டியது." என்று பொய் கோபத்தோடு திட்டினாள்.

"ஏய்! எல்லாம் எனக்கு தெரியும். உனக்கு சொன்ன வேலையை மட்டும் போய் பார்." என்று சிரித்து கொண்டே சுபாவின் காதை திருகினான்.

"ஆஹ் வலிக்குது அண்ணா. நான் போறேன் விடுங்க." என்று மஹாவின் அரை நோக்கி ஓடினாள்.

கதவை திறந்து உள்ளே சென்ற சுபா மகா கட்டில மேல் முழங்கால்களுக்குள் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருக்க அருகில் சென்று, "அண்ணி" என்று மஹாவின் தலையை வருடினாள்.

"சுபா" என்று அழுதபடி அவளை கட்டி அணைத்துக் கொண்டாள்.

"அண்ணி அழாதீங்க. அண்ணன் கோவமெல்லாம் கொஞ்ச நேரம் தான். அவர் அவ்ளோ சீக்ரம் யார் மேலயும் கோவப்படமாட்டார். நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நீங்க இங்க தனியா இருக்கறத சொல்லி என்ன உங்ககிட்ட அனுப்பனதே அண்ணன் தான்."

சுபாவிடம் இருந்து விலகி, "நிஜமாவா சுபா?" என்று விழிகள் விரிய கேட்டவளை பார்த்து சிரித்தவள்.

"சரி வாங்க. உங்கள என் கூடயே வச்சுக்கணும்னு அண்ணனோட ஆர்டர். முகத்தை துடைச்சிட்டு வாங்க போலாம்." என்றாள் சுபா.

"சரி" முகத்தை துடைத்து சரி செய்த பின் வெளியே வந்தார்கள்.

சுபா உள்ளே போய் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் ஷக்தி தவித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் வெளியே வருவதை பார்த்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

வேகமாக சுபாவின் பின்னே நடந்தாலும் ஒரு நொடி ஷக்தியை தேடி துறுதுறுவென அலைந்த கருவிழிகள் தன்னவனை படம்பிடித்து தலை தாழ்த்தி நடந்து சென்றது.

அவளை வெகு தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஷக்தி அவளின் மான்விழிகள் தன்னை தான் தேடுகின்றன என்பதை அறிந்து வேறு எங்கோ பார்வையை திருப்பினான்.

இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த சுரேஷ் ஷக்தியடம், "டே , அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவர். அண்ணி இப்ப தான கிராமத்துலேர்ந்து வந்துருக்காங்க. உன்ன விட்டா அவங்களுக்கு யார் இருக்கா? உன்ன பத்தி முழுசா புரிஞ்சிக்க கொஞ்ச நாள் ஆகும். கோவிச்சிக்காதடா பாவம் போய் பேசு." என்றவன் ஜனனியை பார்த்து,

"ரொம்ப வருஷம் கூட இருந்தவர்களே உண்மையான அன்ப புரிஞ்சிக்கிறதில்ல. போடா போய் சமாதான படுத்து." என்றான்.

ஷக்தி ஏதோ சொல்ல வாய் எடுக்க, "வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா? நிலா குட்டி எப்படி டா இருக்க?" என்று குரல் கேட்ட திசையை திரும்பி பார்த்தான். சக்தியின் அம்மா அப்பா தங்கை எல்லோரும் வந்து கொண்டிருந்தனர்.

'போச்சுடா இப்ப நா எப்படி அவளை சமாதான படுத்துறது. ரொம்ப கஷ்டம் இவங்க எல்லாரும் வந்துட்டாங்க.' என்று மனதிற்குள் நினைத்தான்.

தன் தங்கை நிலாவிற்கு மட்டும் எதையும் மறைக்காமல் ஏற்கனவே கூறிவிட்டான் ஷக்தி.

தன் அண்ணியை பார்க்கும் ஆர்வத்தில் அண்ணனிடம் ஓடி வந்து கொண்டிருந்தாள்.

"அண்ணா அண்ணி எங்க? நான் பார்க்கணும் ப்ளீஸ். எனக்கு காட்டுடா. ஆசையா இருக்கு." என்று சக்தியின் காதில் ஓதி கொண்டிருந்தாள்.

சுற்றி முற்றி பார்த்தவன், "அவளுக்கு நீ என் தங்கச்சின்னு சொல்லாம சுபாவோட பிரெண்டுனு அறிமுகப்படுத்திகிட்டு பேசு. அங்க சுபா கூட இருக்கா பாரு." என்று மெதுவாக கூறினான்.

"சரி அண்ணா. நான் பார்த்துகிறேன்." என்று சுபாவிடம் சென்றாள்.

"ஹாய் சுபா! எப்படிடி இருக்க?" நிலா.

"ஹாய் நிலா! நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?" சுபா.

"நான் நல்லா இருக்கேன்." என்று மஹாவை பார்த்து, "யாரடி இது?" என்று கேட்டாள்.

"ஐயையோ சுபா மஹாகிட்ட சொல்லுவாளோ?" என்று ஒரு நொடி பதட்டமானான் ஷக்தி.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
18. ஷக்தியின் திட்டம்

"இவங்க மஹா என் பிரென்ட்." என்று நிலாவிடமும், "இவ நிலா என் பிரென்ட்." என்று மஹாவிடம் கூறிக்கொண்டு சக்தியை நோக்கினாள்.

டென்சனில் இருந்தவன் சுபாவின் பதிலை கேட்டு கண்களாலேயே நன்றி உரைத்தான்.

"ஹாய்! ஐ ஆம் நிலா." என்று கை கொடுக்க மஹாவும் தயங்கியபடி, "நான் மஹாலக்ஷ்மி" என்றாள் புன்னகையுடன்.

மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

"நிலா இங்க வாம்மா." சக்தியின் அம்மா குரல் கொடுக்க,

"மஹா வாங்க எங்க அம்மாகிட்ட உங்கள இண்ட்ரோடியுஸ் பண்றேன்." என்று மஹாவின் கரம் பற்றி இழுத்து சென்றாள்.

"இவ ஏன் மஹாவை கூட்டிட்டு போறா? வாலு அடங்கவே மாட்டா, ஏதாவது சொதப்பிடுவாளோ? நம்மள டென்ஷனாவே வெச்சுருக்குங்க இந்த பக்கிங்க." என்று மனதிற்குள் திட்டியபடி மனதில் ஒருவித பயத்தோடு பார்த்து கொண்டிருந்தான்.

"அம்மா! இவங்க என் புது பிரென்ட் மஹா." என்று அறிமுகம் செய்தாள்.

"வணக்கம் அம்மா." என்ற மஹாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்

"உன் பேர் மாதிரி நீயும் மகாலக்ஷ்மி மாதிரி தான்மா இருக்க?" என்றார்.

"நன்றி அம்மா" என்று வெட்கத்தில் தலைகுனித்தாள்.

"படிக்கிறியம்மா?" என்றவரை பார்த்து.

"இல்லம்மா பி.இ முடிச்சிட்டேன்."

"நான் உன்ன பார்த்ததே இல்லையே யார் வீட்டுக்கு வந்துருக்க?" என்றார்.

மஹா பதில் சொல்வதற்குள்,

"ஆண்ட்டி ப்ளீஸ் காப்பாத்துங்க." என்று ஷக்தி பார்வையால் கெஞ்ச.

"என் தூரத்து உறவுக்கார பொண்ணு அவங்க அப்பா அம்மா ரெண்டு பெரும் தவறிட்டாங்க அதான் எங்க கூடயே இருக்கட்டுமனு கூட்டிட்டு வந்துட்டேன் அக்கா." என்றபடி வந்து அமர்ந்தார் சுரேஷின் அம்மா.

"அப்பா உயிர் போய் உயிர் வருது இந்த வாலு என் கிட்ட மாட்டட்டும்." என்று திட்டிக்கொண்டிருந்தான்.

"அப்டியா பொண்ணு ரொம்ப அழகா அடக்கமா இருக்கா அதான் கேட்டேன்." என்றார்.

"மாப்ள ஏதாவது பாக்கறீங்களா இல்ல வேலைக்கு போறாளா?" என்றார்.

"இல்ல அக்கா புது இடம். அதான் வேலைக்கு இப்ப வேணாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிருக்கேன்.

நல்ல வரனா வந்தா முடிக்கலாம்ன்னு பார்க்கிறேன்" என்றவரை ஒன்றும் புரியாமல் முழித்தாள் மஹா.

'அய்யய்யோ இந்த பொண்ணு ஏதாவது உளரிட போறா.' என்று நினைத்த சுரேஷின அம்மா,

"மஹா! சுபா உன்னை தேடிட்டு இருக்கா பாரு போம்மா." என்று அனுப்பி வைத்தவர்.

சக்தியின் அம்மாவிடம் திரும்பி "அக்கா உங்களுக்கு ஏதாவது நல்ல வரனா இருந்தா சொல்லுங்க. சொத்து பத்துக்கெல்லாம் எந்த கொறச்சலும் இல்ல. நம்ம அளவுக்கு சமமா அவங்களும் பணக்காரங்க தான். இவ பேர்ல தான் எல்லா சொத்தும் இருக்கு. வீட்டுக்கு ஒரே பொண்ணு. என்ன அம்மா அப்பா இல்ல. அதான் ஊர்ல இருந்தா யார் வேணா ஏமாத்திடுவாங்கன்னு தான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்." என்றாள் சக்தியை ஓரக்கண்ணால் பார்த்தபடி

தன் கட்டை விரலை உயர்த்தி உதட்டை பிதுக்கி சக்சஸ் என்று சைகை காட்டினான் ஷக்தி.

ஏதோ யோசனையில் மஹாவின் செய்கைகளை பார்த்து கொண்டிருந்தார். அவளின் அழகு அமைதி அடக்கம் எல்லாமே அவரை வெகுவாய் கவர்ந்தது.

"சரிக்கா! தட்டு மாத்தப்போறாங்க வாங்க கூப்பிட்றாங்க." என்று எழுந்து போனார்.

"நீ போ நான் அப்புறம் வரேன்." என்றவர் யோசனையில் ஆழ்ந்தார்.

"நிலா இங்க வா டா" என்றவரிடம்.

"என்னம்மா?"

"இங்க வாயேன் உன் பிரென்ட்ன்னு கூட்டிட்டு வந்தல்ல எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம சக்திக்கு பொருத்தமா இருப்பா இல்ல?" என்றார்.

"என்னது?" என்றாள் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும்.

"நிச்சயமா வாலு இந்த தடவை சொதப்ப போறா நாமளே விசிட் அடிச்சிடலாம்." என்று யோசித்தவன் வேகமாக அவர்களை நெருங்கி, "என்னம்மா சிரியஸ் டிஸ்கசன்?" என்றான் ஒன்றும் தெரியாதவனாய் .

"வாடா நல்லவனே. கரெக்ட்டா டைம்க்கு வந்துட்ட?" என்று நினைத்தபடி அண்ணனை பார்த்து சிரித்தாள்.

"அது ஒண்ணுமில்ல ஷக்தி. எனக்கு ஒரு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. நான் காட்றேன் உனக்கு பிடிச்சிருக்கான்னு பாரேன்." என்று மஹாவை காட்டினார்.

"நல்லா தான் இருக்கா. ஆனா, பார்க்க வில்லேஜ் மாதிரி தெரியுதே?" என்றான்.

"வில்லேஜ்னா என்னடா? பொண்ணு பி.இ புடிச்சிருக்கா பார்க்க ரொம்ப அழகா இருக்கா ரொம்ப அமைதியா பேசறா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."

"அம்மா உனக்கு பிடிச்சா எனக்கு ஓகே தான் மா. ஆனா, உன் புருஷன் அதான் எங்கப்பா ஹிட்லர் ஓகே சொல்லணுமே? அவர் நிச்சயம் வேணாம்னு தான் சொல்ல போறார். எதுக்கு இதெல்லாம் வேணாம் விட்ரும்மா." என்றான்.

"டே ! அத நா பார்த்துக்கறேன். நம்ம வீட்டுக்கு மருமகள தேடறேன். நான் அவர் ஆபீஸ்க்கு வேல செய்ய இல்ல. நான் முடிவு பண்ணிட்டேன் இவ தான் என் மருமக." என்று எழுந்து முன்னே சென்றார்.

ஷக்தியையே பார்த்து கொண்டிருந்த நிலா, "டே அண்ணா! நீ அவ்ளோ நல்லவனாடா உன்ன போய் நல்லவன்னு நம்புது இந்த உலகம் கேடி." என்று சிரித்தாள்.

"அட நீ வேற? உங்க அண்ணியை ரெடி பண்றதுக்குள்ள நான் இல்ல படாத பாடு பட்டேன்." என்றான்.

"என்னடா சொல்ற?" நிலா.

"ஆமா. ஆன்ட்டிகிட்ட சொல்லி நெத்தில குங்குமம் வெக்க வேணாம்னும் அப்புறம் தாலி மெட்டி எதுவும் வெளியே தெரியாம பார்த்துக்க சொல்லுங்கன்னு சொன்னேன். நான் பிளான் பண்ண படி எல்லாம் கரெக்ட்டா போகுது பார்க்கலாம்." என்று கண்ணடித்தான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
19. மஹாவின் மனது

"அடப்பாவி நீ தான் இவ்வளவும் செஞ்சதா?" என்றாள் நிலா ஆச்சர்யமாக!

"நானே!" என்றான் காலரை தூக்கிவிட்டபடி.

ஷக்தி தன் அம்மாவிடமும் தங்கையிடமும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்ட மஹா, "அய்யய்யோ! இது அவருடைய அம்மாவா? ஏற்கனவே என்கிட்டே கோச்சிக்கிட்டு இருக்காரு. இதுக்கு வேற இப்ப வந்து என்ன சத்தம் போடுவாரோ?" என்று எணணி பயந்தவள் நேராக தன் அறை நோக்கி வேகமாக நடந்தாள்.

தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மஹாவை பார்வையால் கவனித்து கொண்டிருந்தவன் மஹா எங்கோ செலவதை பார்த்து பார்வையாலே நிலாவிடம், 'நீ அம்மாவை பார்த்துக்க நான் மஹாவிடம் சென்று வருகிறேன்.' என்று சைகை காட்டினான்.

'சரி' என்று தலை ஆட்டிய நிலா அவன் காதருகில், "நடத்து ராஜா நடத்து." என்று கண்ணடித்தாள்.

அவளை போலியாய் முறைத்துக் கொண்டு மஹாவின் அறை நோக்கி நடந்தான்.

அறையினுள் சென்ற மஹா பதட்டத்தோடு முழங்காலில் முகத்தை புதைத்தபடி அமர்ந்திருந்தாள்.

சத்தம் இல்லாமல் உள்ளே வந்த ஷக்தி மெதுவாக கதவை தாழிட்டான்.

அவளருகில் சென்று அமர்ந்தவன், " மஹா." என்று அழைக்க,

திடிரென்று சக்தியின் அழைப்பில் திடுக்கிட்டு பயத்தில் இறங்க முற்பட்டவளின் கரத்தை பற்றி நிறுத்தினான்.

"இங்க என்ன பாரு." என்றான் அவனை நிமிர்ந்து பார்த்தவள் "சாரி எனக்கு அவங்க தான் உங்க அம்மானு தெரியாது." என்றாள்.

"அதனால என்ன? உங்க அத்தைய பார்த்துட்டே இல்ல நீ யாருன்னு தெரியாத அப்பவே உன்ட்ட எவ்ளோ அன்பா பேசறாங்க."

"அப்போ உங்களுக்கு என் மேல கோவம் இல்லையா?" என்றாள் பாவமாய்.

"அடி பைத்தியம். நீ என் பொண்டாட்டி. உன் மேல இருக்க உரிமைல ஒரு ரெண்டு நிமிஷம கோச்சுப்பேன். அதுக்கு உன் கூட இருக்க மாட்டேன்னு அர்த்தமா? எனக்கு கோவமெல்லாம் போச்சு." என்றவனை ஒரு நொடி கூட தாமதியாமல் கட்டிக் கொண்டாள்.

"அப்புறம் இன்னொன்னும் சொல்லணும் நிச்சயமா இன்னொரு தடவ சீக்கிரமா உன் கழுத்துல தாலி கட்டுவேன். அப்போ நீ என்கூட நம்ம வீட்டுக்கு வந்துடுவ. அதுக்கப்புறம் இப்ப இருக்க மாதிரி எல்லாம் நான் சும்மா இருக்க மாட்டேன் உன்னோட பெர்மிஸ்ஷனும் தேவ இல்லை எனக்கு. அப்புறம் என்கிட்டேர்ந்து தப்பிக்கவும் முடியாது. அதனால எல்லாத்துக்கும் தயாரா இரு." என்று அவளின் காதருகில் கிசுகிசுத்தான்.

தன் முதுகின்புறம் சட்டையை இன்னும் அழுத்தமாக இறுக்கி கொள்ளும் மஹாவை நினைத்து சிரித்தான்.

"சாரி இனிமே அப்படி பண்ணமாட்டேன்."

"எப்டி பண்ண மாட்ட?"

"அது... அது..."

"சரி. யோசிச்சு சொல்லு. நான் வெளிய போயிட்டு வரேன்." என்று அவளை விலக்க முற்பட்டவனை விடாமல் இன்னும் இறுக்கினாள்.

"அது இனிமே நீங்க என்னை நெருங்கும் போது விலக மாட்டேன்." என்று மெதுவாக அவளுக்கே கேட்காத குரலில் கூறினாள்.

"இப்படி சொன்னா எனக்கு எப்படி புரியும்?"

"என்ன பண்ணனும்?"

"ஹ்ம் நல்லா படுத்து தூங்கு உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண போறேனோ?"

"அப்படியா?" என்றவளை பார்க்கும் கணவன் கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்து,

"நான் போறேன்." என்று திரும்பினாள்.

"ஹ்ஹ்ம் எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டு போ." என்று அவள் கை பிடித்து இழுக்க மஹாவின் கைகைளில் இருந்த வளையல்கள் உடைந்து கையில் இருந்து ரத்தம் வழிந்தது.

"ஆ..." அவள் என்று கூச்சலிட,

"சாரி சாரி டா தெரியாம பண்ணிட்டேன்." என்று கையில் கட்டு போட,

"ஆ... ரொம்ப வலிக்குது."

" கத்தாதடி. எல்லாம் இங்க வர போறாங்க." என்றாலும் அவள் கேட்காததால் அவளின் செவ்விதழை தன் பூ இதழால் மூடினான்.

செல்ல சிணுங்கலுடன் ஷக்தியிடம் இருந்து பிரிந்தவள், "நீங்க ரொம்ப மோசம் போங்க!" என்று தன் இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். அவளை அணைத்தபடி மெதுவாய் கிறங்கும் குரலில் தன்னையும் மறந்து, "ஐ லவ் யூ " என்றான்.

"ஹ்ம்" என்ற முனகல் மட்டும் அவளிடம் இருந்து வெளிப்பட, "ஹேய்! மஹா."

"ஹம்!"

"நான் கேக்கறதுக்கு உண்மையான பதில் சொல்லணும்?"

"ஹம்!"

"நான் உன்ன லவ் பண்றேன். உனக்கு தெரியும் பட் உனக்கு என்ன பிடிச்சிருக்கா?" என்றான் ஏக்கத்தோடு.

"எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு." என்றாள்.

"அப்டின்னா ஐ லவ் யூ ன்னு சொல்லு?"

"ஹ்ஹ்ம் முடியாது. ஆனா உங்கள எனக்கு பிடிக்கும்."

"எவ்ளோ பிடிக்கும் எப்படி?"

"ஆமா! முதல்ல என்ன அவங்ககிட்டேர்ந்து காப்பாத்தனிங்க அதனால பிடிக்கும். பத்து நாளா என்னை கவனிச்சிட்டே இருந்தாலும் எனக்கு கல்யாணம்னு தெரிஞ்சி என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்திங்க இல்ல. அப்போ பிடிச்சது, அப்புறம் எனக்கு கல்யாணம் பிடிக்கலன்னு தெரிஞ்சதுக்கப்புறம் எப்டியோ ஒரு முடிவெடுத்து என் கழுத்துல தாலி கட்டினீங்கள்ல அப்போ பிடிச்சது, இன்னும் நிறைய எல்லாத்துக்கும் மேல என் விருப்பத்தோடு தான் நாம ஒன்னு சேரணும்னும் அப்பா அம்மாவை சம்மதிக்க வெக்கணும்னு எவ்ளோ பண்றிங்க அதனால ரொம்ப பிடிக்கும், ஐ லவ் யூ." என்றாள்.

எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தவன் கடைசியாக அவள் தன்னை காதலிப்பதாக
கூறவும் திக்கு முக்காடி போனான.

"ஹேய் இப்ப கடைசியா என்ன சொன்ன?" என்று நம்பாமல் கேட்டான்.

"ஹ்ஹ்ம் நான் ஒன்னும் சொல்லல. எல்லாரும் தேடுவாங்க போலாம் "

"முடியாது. நீ இப்ப சொல்ற வரைக்கும் நான் உன்ன விடமாட்டேன். அப்புறம் எது நடந்தாலும் நான் பொறுப்பு இல்ல." என்று சிரித்தான்.

"இவன் சிரிக்கிற தோரணையே சரி இல்லையே? எதுக்கு நம்மளே சொல்லிடுவோம்." என்று அவனை பார்க்காமல் " ஐ லவ் யூ" என்று கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

அவளை பார்க்க குனிந்தவன். கதவு தட்டு ஓசை கேட்கவே அவளிடம் இருந்து பிரிந்து நின்றான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
20. இனிதே முடிந்தது

அவளை விட்டு பிரிந்து தனியாக நின்றவன், "போய் பார்." என்றான்.

அவன் கண்களில் சிறிது ஏமாற்றம் தெரியவே அதை தாங்க முடியாமல், "இதோ வரேன்!" என்று கதவிருக்கும் திசைநோக்கி குரல் கொடுத்தாலும் அவன் கன்னத்தில் அவனே எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு சின்னத்தை பதித்து விட்டு ஓடிவிட்டாள்.

"அடிப்பாவி இவ்ளோ நேரமா நான் கெஞ்சிட்டு இருக்கேன். அப்போல்லாம் தராம... ஹம் இவ என்னை விட பாஸ்ட் போல இருக்கே?" என்று தலை ஆட்டியபடி தன் முன் நெற்றியில் இருந்த முடியை சிலுப்பிவிட்டுக் கொண்டு சிரித்தான்.

"அண்ணி! அம்மா உங்கள கூப்பிட்றாங்க. அங்க மோதிரம் மாத்த போறாங்க வாங்க." என்ற சுபா ஷக்தி உள்ளே இருப்பதை பார்த்ததும், "ஓ! அண்ணா இங்க தான் இருக்கீங்களா? நீங்களும் வந்துருங்க. உங்களை அங்க காணம்னு ரொம்ப நேரமா தேடிட்டு இருக்காங்க." என்றவள் மஹாவின் காதருகில், "பரவால்ல அண்ணி. நீங்க பொறுமையா வாங்க. நான் சமாளிச்சிக்குறேன்." என்று கண்ணடித்தாள்.

"சுபா! உனக்கு வாலுத்தனம் அதிகமாகிடுச்சு. நான் வரேன் போ." என்று கன்னத்தை மெதுவாக கிள்ள.

"ஐயோ மேக்கப் கலஞ்சிடும் அண்ணி. விடுங்க அண்ணி." என்று திரும்பி போனாள்.

சுபா சென்ற பின் கதவை சாத்திய மஹா, "நாம வெளிய போலாமா? நம்மள கூப்பிட்றாங்க" என்றாள் சக்தியிடம்.

"போலாம். ஆனால் நிச்சயம் முடிந்தவுடன் என்னுடன் கண்டிப்பாக வெளியே வர வேண்டும்." என்றான் கேள்வியாய்.

"அது எப்படி முடியும் எல்லோரும் இருக்கிறார்கள்?" என்றாள்.

"அதெல்லாம் உனக்கு ஏன்? நான் பார்த்துகிறேன் டார்லி." என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரச.

"உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன்." என்று அவளுக்காக தான் பார்த்து பார்த்து வாங்கிய மொபைலை கொடுத்தான்.

"இந்தா இது உனக்காக நான் வாங்கிய மொபைல். சிம் எல்லாம் போட்டு பக்காவாக ரெடி. இனி நீ நினைக்கும் பொழுது என் கூட பேசலாம்." என்று குறும்பாக சிரித்தான்.

அங்கே வெளியே சக்தியின் அம்மா,

"நிலா அண்ணன் எங்கே காணோம் ?"

"ஹ்ம் அவன் பிரென்ட் வந்தான்னு சொல்லிட்டு போனான்." என்றாள்.

"சுபா எங்க மஹாவ காணாம?" என்றார் சுரேஷின் அம்மா.

"மா நீங்க தானே போய் ரெஸ்ட் எடுக்க சொன்னிங்க."

உள்ளே ஷக்தி மஹாவிடம்,

"அன்னைக்கு நீ கட்டி இருந்த புடவை உன் நகைகள் எல்லாம் மிகவும் அழகாக இருந்தது."

"அம்மா தான் கொடுத்தார்கள்." என்ற மஹாவிடம்.

"ஹ்ம் அப்படியா? அதெல்லாம் நான் உனக்காக பார்த்து பார்த்து ஆசையாக வாங்கி கொடுத்தது." என்று குறும்பாக சிரித்தான்.

"நிஜமாவா?" என்றாள் அப்பாவியாய்.

'ஐயோ இவ்ளோ க்யூட்டா பேசி கொல்றியேடி. ஷக்தி இதுக்கு மேல இங்க நின்ன, நீ அவ்ளோ தான் உஷாராயிடு!' என்று மனதிற்குள் பேசினான்.

"உன்
கள்ளங்கபடம் அற்ற
செயல்களால்
உன்னையும் அறியாமல்
என்னை கவர்ந்து சென்ற
கள்ளியடி நீ!

இன்னும்
போக போக
குழந்தையின் மனம்
கொண்டு துறுதுறுவென்று
என்னை சுற்றிவர
உனக்கே தெரியாமல்
அதுவே என்னை
நெருங்க சொல்லுதடி உன்னிடம்!"

"ஆமாம்! சரி வா போகலாம் இதற்கு மேல் இங்கு இருந்தால் என்னால் அமைதியாக இருக்க முடியாது." ஷக்தி

"ஏன்?" என்றவளை ஷக்தி பார்த்த பார்வையில் எல்லாம் புரிந்து விட,

"ஆமாம் டைம் ஆகுது போலாம்." என்று நழுவி சென்றாள்.

ஷக்தி முதலில் வெளியே செல்ல சிறிது நேரம் கழித்து மகா வெளியே வந்தாள்.

சுரேஷுக்கும் ஜனனிக்கும் வாய் போர் நடந்து கொண்டிருந்தது.

"ஏ வேணாம் என் கைல மோதிரம் போட்ட உன் விரல் எல்லாத்தைம் வெட்டிருவேன்." என்று முறைக்கும் ஜனனியை பார்க்காமல் மோதிரம் போட்டான்.

"ஹேய் மோதிரம் போடக் கூடாதுன்னா எதுக்குடி இங்க வந்த? உங்க வீட்லயே இருக்க வேண்டியது தானே. நீ மட்டும் அமைதியா நல்ல பொண்ணா நிப்ப, நான் மோதிரம் போடாம திட்டு வாங்கணுமா? போடி வேற வேல இல்ல." என்று கிசுகிசுத்தான் சுரேஷ்.

"இருடா உனக்கு இருக்கு?" நறுக்கென்று அவன் இடுப்பில் கிள்ளிவிட்டாள் ஜனனி.

"ஆ பிசாசு அறிவுக்கெட்ட முண்டம் எதுக்குடி கிள்ளிவிட்ட ?" என்று கோவத்தில் கத்துபவனை பார்த்து பதில் இல்லாமல் சிரித்தாள்.

"பத்திரிக்கை வாசிக்கிறேன். எல்லோரும் அமைதியா இருங்க உங்க ரெண்டு பேர் சண்டையை அப்புறம் வச்சுக்கோங்க." என்ற ஐயர் பத்திரிக்கையை படித்து காட்டினார்.

இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நிச்சயிக்கப்ப்பட்டு இருந்தது.

ஷக்தி மஹாவை நோக்கியவாறே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

சுரேஷின் அன்னை தன்னை நோக்கி வருவதை கண்டவன் சற்று முகத்தை திருப்பினான்.

"ஷக்தி எல்லோரும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். தாம்பூல பை இரண்டு மூட்டை தான் வந்திருக்கிறது .இன்னும் ஒரு மூட்டை வரணும் கொஞ்சம் போய் வாங்கி கொண்டு வந்து விடு." என்றார்.

"சரி ஆன்ட்டி"

"மஹாவையும் கூட கூட்டிட்டு போ." என்று மஹாவை அழைத்து சக்தியுடன் சென்று வருமாறு கூறிவிட்டு போனார்.

"வா போலாம்." என்று காரை நோக்கி நடந்தான்.

போகும் வழி முழுதும் இருவரும் பேசாமலே நிமிடங்கள் கழிந்தது.

தாம்பூல பை வாங்கி வந்து விட்டார்கள்.

இருவருக்குள்ளும் மௌன போர் நடந்து கொண்டிருந்தது.

எல்லோரும் கிளம்பி விட்டனர்.

சக்தியின் குடும்பமும் கிளம்பினார்கள். "அம்மா நீங்கள் கிளம்புங்கள். எனக்கு இங்கே வேலை இருக்கிறது." என்றான்.

சக்தியின் அம்மா, "சரி டா இங்கே வா." என்று தனியாக அழைத்தவர்.

"உனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கிறது அல்லவா நான் அப்பாவிடம் பேச போகிறேன்." என்றார்.

"அம்மா நான் தான் உன் இஷ்டம் சொல்லிட்டேன்ல எதுக்கு திரும்பி கேக்கற கிளம்புங்கள்." என்று அனுப்பி வைத்தான்.

"ஆண்ட்டி நான் மஹாவை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போயிட்டு வரேன்." என்றான் ஷக்தி.

"சரிப்பா சீக்கிரம் வந்துடுங்க. மழை வர மாதிரி இருக்கு." என்றாள்.

"சரிங்க ஆண்ட்டி." என்று மஹாவின் அறையினுள் நுழைந்து "போலாமா?" என்றான்.

சற்று தயங்கி "யாரவது பார்த்துட்டாங்கன்னா? "

"அம்மா கிளம்பிட்டாங்க. வேற யார் பார்த்தாலும் எனக்கும கவலை இல்ல. என் பொண்டாட்டிகூட நான் வெளிய போறேன் வா." என்று கூட்டி சென்றான்.

காரில் வெகு தூரம் சென்றார்கள்...
 
Top Bottom