நேசம் – 5
இருவரும் நீதிமன்றம் என்றும் பாராமல், முட்டி மோத ஆரம்பிக்க... ஹலோ பாஸ், மேடம்.. என்று இவர்கள் இருவருக்கும் இடையில் சமாதானாப் புறாவாய், வேந்தன் களமிறங்க...
பாஸ், இங்க இருக்கிற எல்லாப் பத்திரைக்காரங்களும், நம்மளத்தான் போகஸ் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம இப்ப சின்னதா? ஏதாச்சும் பண்ணாக்கூட, அவங்க பெருசா எழுதிருவாங்க பாஸ் என ஏறக்குறைய அவன் முகிலனிடம் கெஞ்ச...
அதற்கெல்லாம் அசறுபவனா? அவன்? நீ அங்கிட்டு போ.. இன்னிக்கு இவளை என முகிலன் ஆரம்பிக்க.. வேகமாக மித்ராவின் பக்கம் திரும்பியவன், மேடம்.. பிளீஸ் நீங்களாச்சும் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க... இது கோர்ட் மேடம்.. இங்க இப்படி பிகேவ் பண்ணா? இவருக்கு மட்டும் இல்ல மேடம், உங்களுக்கும் பிரச்சனைத்தான்.. சாரி மேடம்.. அவருக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்கிறேன் என வேந்தன் மன்னிப்பு வேண்ட...
இந்த மரியாதைய கொஞ்சம் உங்க பாஸ்-க்கு சொல்லி கொடுங்க.. அவருக்காக இல்ல, உங்களுக்காக என மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே... இவர்கள் கேஸ் ஆரம்பிக்க போவதாக சொல்ல, மித்ரா அங்கிருந்து செல்ல, வேறு வழியின்றி, வேந்தனை முறைத்துக் கொண்டு மித்ராவின் பின்னால் சென்றான் முகிலன்...
ஏய்? என்னாச்சி? ஏன் இப்படி காலையில இருந்து மெளன விரதம் இருக்கிற? என நூறாவது முறை, இஷாந்த் மதியிடம் கேட்டு விட்டான்... ஆனால் அவள் தான் எந்த பதிலும் சொல்லவில்லை.. அதில் கடுப்பானவன்,
மதி.. இப்ப என்னதான் பிரச்சனை உனக்கு? என இஷாந்த் கேட்க..
அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்.. என சோகமாக அவள் பதில் சொல்ல..
இப்ப சொல்லப் போறீயா? இல்லையா? என இஷாந்த் கேட்க..
சொல்லுவேன்.. ஆனா நீங்க திட்டக்கூடாது என மதி சொல்ல..
ஓ. மேடம் எனக்கு பயப்படலாம் செய்வீங்களா? இல்ல? நான் திட்டுறதுக்குலாம் அசருற ஆளா நீங்க? என இஷாந்த் நக்கலாக சொல்ல.
அப்படில்லாம் சொல்லிட முடியாது.. இருந்தாலும், நீங்க என் சீனியர் வக்கிலாச்சே..அதான்.. கொஞ்சம் மரியாதை என மதி சொல்ல..
பரவாயில்லையே.. என் மேல உனக்கு மரியாதையெல்லாம் இருக்கா? சரி சொல்லு என்ன விசயம்? என இஷாந்த் கேட்க..
இல்ல சார்.. அந்த சிகப்பு சட்டைக்கு ஒன்னும் ஆயிருக்காதுல? என ஆயிராவது முறை, இஷாந்திடம் கேட்டாள் மதி...
ஏய் நீ இன்னும் விடலயா? அவனே நீ கீழ விழுந்ததை கூட கண்டுக்காம போயிட்டான்.. அதுக்கும் மேல.. நீ அவன் உயிரையே காப்பாத்தியிருக்க.. ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல... அப்படி என்ன! அவன் மேல உனக்கு அக்கறை? என இஷாந்த் கேட்க
அவன் மேல ஒன்னும் அக்கறையில்ல... அந்த சிகப்பு சட்டை மேலத்தான் என மதி சொல்ல..
என்ன சட்டை மேலையா? என புரியாமல் இஷாந்த் கேட்க?
அந்த வீணாப்போனவன காப்பாத்த போறேன்-னு அநியாயமா? என் கம்மலை அவன் சட்டையில விட்டுட்டேன்.. வீட்ல அம்மா எப்படி திட்டுனாங்க தெரியுமா? அது மட்டுமில்ல.. அந்த கம்மல் எனக்கு எங்கப்பா, நான் டுவல்த் ல நல்ல மார்க் எடுத்ததுக்கு வாங்கி கொடுத்தது என மதி சொல்ல...
அதுக்கப்புறம் உனக்கு உங்கப்பா, கம்மலே வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்களே? என இஷாந்த் கேட்க
ஆமா.. சார்... எப்படி கண்டுபிடிச்சீங்க என மதி ஆர்வமாக கேட்க..
ம்.. உன்னோட... ஈபி.கோ செக்க்ஷன் லட்சனத்த தான், தினமும் பார்க்கிறேனே.. அப்புறம் எங்குட்டு நீ காலேஜ் ல நல்ல மார்க் வாங்கிருக்க போற.. சரி.. சரி.. நீ சந்தோசப்படுற மாதிரி ஒரு விசயம் சொல்லவா? என இஷாந்த் கேட்க?
என்ன சார்? என மதி ஆவலாய் கேட்க...
ம்.. உங்க மேடம்.. கோர்ட் ல வாதாட போறாங்க.. நீ என்ன இங்க உட்கார்ந்துகிட்டு இருக்க? என இஷாந்த் கேட்க..
இல்லையே அந்த பெரியவர் கேஸ், நாளைக்கு தான் ஹியரிங்.. புல் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன் என மதி சொல்ல..
ஆமா.. நம்மளோட கேஸ் எப்ப ஹியரிங் வருது என இஷாந்த் கேட்க...
ம்.. நமக்கு கேஸ் இருக்கா? என்ன?எ ன அவள் கேட்க..
விளங்கும்.. உன்னைப்போயி அசிஸ்டன்டா வச்சிருக்கேன் பாரு... அப்புறம் எப்படி எனக்கு கேஸ் வரும்.. என இஷாந்த் சொல்ல..
ஆமா இல்லன்னா? மட்டும், பில்கேட்ஸ் டைவர்ஸ் கேஸை எடுத்து நடத்திருப்பாரு.. என மதி மனதிற்குள் சொல்ல..
உன்னை..சரி.. இல்ல உங்க மேடம் புது கேஸ் ஒன்னு எடுத்துருக்காங்களாம். வேனும்னா நீயே போயி பாரு என இஷாந்த் சொல்லிவிட்டு அவளைப்பார்க்க... அவளோ.. அவன் புது கேஸ் என்று சொன்ன உடனேயே, நீதி மன்றத்தை நோக்கி ஓடியிருந்தாள்...
ஏற்கனவே கூறியது தான் யுவர் ஆனர்... நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுக்காமல், சொன்ன நேரத்திற்கு கூட வர முடியாத ஒருவருக்காக, நீதிமன்ற நேரத்தை நான் வீணடிக்கவில்லை. என மூர்த்தி பேசிக்கொண்டிருக்கும் போதே...
புயலென உள்ளே நுழைந்த மித்ராவை, அந்த வக்கில் மூர்த்தி சற்றும் எதிர்பார்க்கவில்லை... என்பது அவர் முகத்திலேயே தெள்ளத்தெளிவாய் தெரிந்தது... அவர் மட்டுமல்ல, அங்கே இருந்த யாருக்குமே முதலில் புரியவில்லை...
தாமதத்திற்கு மன்னிக்கவும் யுவர் ஆனர்.. மிஸ்டர் முகிலன் சார்பா வாதாட போற வக்கில் நான் தான்.. என மித்ரா ஆரம்பிக்கும் முன்னே...
யுவர் ஆனர்... இப்படி ஒரு கேஸ்-ல வாதாடனும்னா? லீகல்லா? எல்லா பார்மாளிட்டீஸ்-ம் கிளீயர் பண்ணிருக்கனும், இப்படி யார் வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் வந்து வாதாட முடியாது என்ற சட்டம் கூட தெரியாமலா வந்தார், என மூர்த்தி சொல்ல..
யுவர் ஆனர்.. நான் இப்ப லீகல் பார்மாலிட்டீஸ் கிளியர் பண்ணலன்னு, எதிர்கட்சி வக்கிலுக்கு யார் சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது? ஆனா ஈ.பி.கோ சட்டம் 22 வது பிரிவின்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு, விசாரனையில், போதுமான வாய்ப்பளிக்கவும், தனக்கு விரும்பிய வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவும் முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது.. அதற்கும் மேல், சில முக்கிய வழக்குகளில், வழக்கறிஞர்கள் இல்லாமலே,, வென்ற வழக்குகளைக்கூட நாம் சந்தித்திருக்கிறோம்... அப்படி இருக்கும் போது... ஒரு குற்றவாளியே தனக்காக வாதாட சட்டம் சொல்லும் போது, ஒரு வழக்கறிஞரான நான் அவருக்காக வாதாட முடியாதா? என்ன? இந்த சாதாரண விசயம் கூட தெரியாத அளவுக்கு, சட்டம் தெரியாதவரா? இந்த தலை சிறந்த வழக்கறிஞர்? என அவர் போட்ட பந்தை அவருக்கே திருப்பி அடித்துவிட்டு, யுவர் ஆனர்.. அதுக்கும் மேல. நான் காலையிலேயே.. இந்த வழக்குக்கான அத்தனை தகவல்களையும், நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டேன்.. இதோ அதற்கான நகல் என மித்ரா சொல்ல.
ஒகே யூவார் ப்ரோசீட் என நீதிபதி சொல்ல..
தாங்கியூ யுவர் ஆனர்.. என நீதிபதியை பார்த்து சொல்லிவிட்டு, திரும்பி முகிலனை பார்க்க, அவனோ பேயறைந்தார் போல், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்... அவன் நிற்பதை சிறு புன்னகையோடு ரசித்தவளின் முகம் சட்டென்று தீவிரமாக மாறி, அவனை முறைக்க.. அதில் தெளிந்தவன், அவளை முறைத்துக்கொண்டே அவன் சீட்டில் அமர்ந்தான்...
யுவர் ஆனர்... முகிலன் குரூப் ஆப் கம்பெனிஸ் பத்தி நான் சொல்லி எல்லாருக்கும் தெரியனும்-னு எந்த அவசியமும் கிடையாது? ஏன்னா? இப்ப இங்க நிக்கிற நம்ம கிரேட் மூர்த்தி பிரசாத் சார்-ரே பல தடவை அந்த கம்பெனிக்காக வாதாடி நாம கேட்டிருப்போம்.. அப்படியிருக்கிறப்ப என மித்ரா பேச போகும் போதே..
அப்ஜக்சன் யுவர் ஆனர்.. எதிர்கட்சி வக்கில், என்னுடைய முந்தைய வழக்குகளை பத்தி, இந்த வழக்குகளோட சம்பந்த படுத்துறத, நான் வன்மையா கண்டிக்கிறேன்.. இப்படி தேவையில்லாதத பேசி கோர்ட் நேரத்தை வீணாக்குறாங்க.. இந்த வழக்க பத்தி மட்டும் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மூர்த்தி சொல்ல..
யுவர் ஆனர்.. எனக்கு எப்பவுமே நீதிமன்றத்தோட நேரத்தை மட்டுமில்ல, என் நேரத்தையும் வீணடிக்கிறது பிடிக்காது.. அப்புறம் ஒரு வழக்கை இன்னொரு வழக்கோட? காரணம் இல்லாம நான் இணைக்க மாட்டேன்.. இப்ப நான் என்னோட காரணத்தை கூட சொல்லவிடாம இப்படி தடுக்கிறது என்ன நியாயம் யுவர் ஆனர் என மித்ரா கேட்க..
இப்ப பாறேன்.. அந்த வக்கில் அப்ஜக்சன் ஓவர்ரூல்டு னு சொல்லுவாரு என முகிலனின் அருகில் அமர்ந்திருந்த வக்கில் மற்றுமொரு வக்கிலிடம் சொல்லிக்கொண்டிருக்க.. இது வழக்கமா நடக்கிறது தான? நம்ம மித்ரா மேடம், என்னிக்கு ஆப்போஸிட் வக்கிலை ஜெயிக்க விட்டுருக்காங்க? அதுக்கும் மேல, ஆப்போசிட் ல நிக்கிறவரை. பேச வச்சே அவங்க காரியத்தை சாதிச்சிருவாங்க என முகிலனின் அருகிலிருந்து அவர்கள் மித்ராவின் புகழ் பாட பாட.. கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் பிரமிப்பு, கொஞ்சம் ஆச்சர்யம், நிறைய கோவத்தோடு மித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்..
யுவர் ஆனர்... இவர் சொல்ற மாதிரி.. ஒரு லீகல் அட்வைஸர, காரணம் இல்லாமலோ? இல்ல அவரை அவமானப்படுத்தியோ? அந்த வேலையில இருந்து அனுப்புனா சட்டப்படி, அந்த லீகல் அட்வைஸர் அந்த கம்பெனி மேல கம்பிளைன்ட் கொடுக்கலாம்.. அது சரி தான்... ஆனா... இங்க அப்படி எதுவுமே நடக்கலையே?
எங்க? இவரை அவமானப்படுத்திட்டாங்கன்னு சொல்லுறதுக்கு ஏதாச்சும் சாட்சி இருக்கா? என மித்ரா கேட்க
நாலு பேருக்கு முன்னாடி அவமானப்படுத்துனாத்தான் அவமானமா? என்ன? இதுக்கு எப்படி சாட்சி சொல்ல முடியும்? இதுல என்ன நியாயம் இருக்கு? என மூர்த்தி பாய..
நியாயம் இருக்கு? இல்லன்னு நான் சொல்ல வரல.. ஆனா சட்டத்துக்கு சாட்சியங்கள் தேவையே... உங்ககிட்ட ஏதாச்சும் இருக்கா? இல்ல.. அங்க வேலை பார்க்கிறவுங்க யாராச்சும் பார்த்தாங்களா? அதுக்கும் மேல... அவ்வளவு பெரிய கம்பெனியில ஒரு சிசிடிவி புட்டேஜ் கூடையா இல்ல? என மித்ரா நக்கலாக கேட்க
யுவர் ஆனர்.. அவமானப்படுத்திட்டாங்கன்னு நான் சொல்லிருக்கிறது என்னைய சட்டையப்பிடுச்சி இழுத்து வெளிய விட்டாங்கன்னு நான் சொல்லல.. ஒரு பொறுப்பான பதவியில இருக்கிற என்னை இப்படி சட்டுன்னு வேலையை விட்டு போக சொல்றதே என் தொழிலுக்கு உண்டான அவமானம் தான? என மூர்த்தி பாய...
யுவர் ஆனர்.. பொறுப்பான பதவியில இருந்து ஒருத்தவுங்களை தூக்குறாங்கன்னா? அவங்கா பொறுப்பா நடந்துக்கிடலன்னு அர்த்தம்... அதுக்கும் மேல.. அது அவரு தொழிலுக்கு உண்டான அவமானம் தான்... ஆனா அது என் கட்சிக்காரரால இல்ல, அவர்... அவருக்கே ஏற்படுத்திக்கொண்ட இழுக்கு.. இந்த கோர்ட் ல வேணும்னா அவர் வக்கிலா இருக்கலாம்? அவர் கம்பெனியில இவரும் ஒரு சாதாரண எம்பிளாயி தான்... இவருக்கு எப்படி? வேலைய விட்டு அனுப்புனதுக்கு, எம்.டி மேல வழக்கு பதிவு பண்ண உரிமை இருக்கோ? அதே மாதிரி, சரியா வேலை செய்யாத ஒரு எம்பிளாயை வேலை விட்டு அனுப்புறதுக்கும் உரிமை இருக்கு என மித்ரா சொல்ல..
அப்ஜக்சன் யுவர் ஆனர்.. இவங்க இப்படி ஆதாரமே இல்லாம.. ஒரு பொறுப்பான வழக்கறிஞர் மேல அபாண்டமா நான் வேலையே பார்க்கிறது இல்லன்னு சொல்றதை என்னால நிச்சயம் ஏத்துக்கொள்ள முடியாது என மூர்த்தி பாய...
நான் ஆதாரம் இல்லாம? எதுவும் பேச மாட்டேன் யுவர் ஆனர்.. என ஒரு பைலை எடுத்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தவள்!!.. யுவர் ஆனர்... இவர் அங்க லீகல் அட்வைஸரா? சேர்ந்த நாள்-ல இருந்து இப்பவரைக்கும் முழுசா 502கோடி கம்பெனிக்கு லாஸ்... ஆனா.. நம்ம வக்கில் மட்டும் புதுசா 2 கோடிக்கு கார், 22 கோடிக்கு புது வீடு, 15கோடிக்கு ஈசிஆர் ல ஒரு ரெஸ்டாரண்ட், அப்புறம் அவங்க மூத்த பொண்ணுக்கு அறுபது பவுன் நகை லலிதா ஜீவல்லர்ஸ் ல ஆர்டர் பண்ணிருக்காங்க... இது போக இன்னிக்கு காலையிலக்கூட, 10 ஏக்கர் இடத்தை ரிஜிஸ்டர் பண்ணிட்டு தான் வந்திருக்காங்க... என மித்ரா சொல்ல சொல்ல.. இங்கே மூர்த்தியின் முகம் மாறிக்கொண்டே போக...
அப்ஜக்சன் யுவர் ஆனர்.. இதெல்லாம்... நான் என்னோட சம்பளத்துல நான் வாங்கினது, அதுமட்டுமில்ல, இதுக்கான இன்கம் டேக்ஸ் டீடைல்ஸ் எல்லாம் நான் சப்மிட் பண்ணிருக்கேன்.. இதெல்லாம் அர்த்தமில்லாம என்னை வம்புல மாட்டிவிட முயற்சி பண்றாங்க என மூர்த்தி அரக்கப்பறக்க எந்திரிச்சி சொல்ல....
யுவர் ஆனர்.. இதெல்லாம் நம்ம வக்கீல், நியாயமான முறையில சம்பாதிச்சது தான்... நான் இல்லன்னு சொல்லலையே? எதிர்கட்சி வக்கில், நீதிமன்றத்துல சப்மிட் பண்ணிருக்கிற டாக்குமென்ட்ஸ்ல பாதி, அவர் வருமானம் முழுக்க முழுக்க, முகிலன் குரூப் ஆப் கம்பெணிஸ் ல இருந்து தான் போயிருக்கு.. அது இல்லன்னு என் கட்சிக்காரர் முகிலன் சொன்னாலோ? இல்ல எதிர்கட்சிக்கார வக்கில் சொன்னாலோ? அவர் சப்மிட் பண்ணிருக்க டாக்குமெண்ட்ஸ் பொய்யின்னு ஆகிடும்... ஒருவேளை வக்கில் ஆமா-ன்னு சொன்னா? இவரை அந்த கம்பெனியில? எந்த அளவுக்கு மரியாதை கொடுத்து வச்சிருந்தா? கம்பெனி லாஸ் ல போறப்பக்கூட இவருக்கு தேவைக்கு அதிகமா கொடுத்திருப்பாங்க? நீங்களே சொல்லுங்க யுவர் ஆனர்.. என்று அவள் கேட்ட கேள்வியில், மூர்த்திக்கு மட்டுமில்லை, முகிலனுக்கு கூட வார்த்தை வரவில்லை.. மனமோ? வாவ் பிரில்லியண்ட் கேர்ள் என அவளுக்கு பாராட்டுக்கடிதம் எழுதிக்கொண்டிருந்தது...
அதுக்கும் மேல, இவங்களை உடனே வேலையவிட்டு போக சொன்னது தப்புன்னு, இவர் சொன்னா? அப்போ தப்பு முகிலன் மேல கிடையாது, இவர் மேல? ஏன்னா? கம்பெனி ரூல்ஸ் படி, அவங்களா, அந்த வேலையை விட்டுப் போனா? மூனு மாசத்துக்கு முன்னாடி லெட்டர் போட்டுருக்கனும், அதுவே, கம்பெனிக்கு உங்களால நஷ்டம்னோ? இல்ல சரியா வேலை பார்க்கல அப்படினாலோ? எந்த ஒரு அவகாசமும் கொடுக்காம, அவங்களை வேலைய விட்டு தூக்கிடுவோம் அப்டின்றது, நம்ம முகிலன் க்ரூப் ஆப் கம்பெனிஸ், டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் ல யே தெளிவா இருக்கே... அப்படியிருக்கிறப்ப, இந்த சிட்டியிலேயே நம்பர் ஒன் வக்கில் சார், அதை படிச்சு பார்க்காமலா? சைன் பண்ணி கொடுத்தாரு, என மூர்த்தி சப்மிட் செய்த அதே நகலை, காமித்து கேட்க.. அவ்வளவுத்தான் கேஸ் பினிஷ்...
நான் தான் சொன்னேன்-ல... இந்த கேஸ் மித்ரா மேடம் ம தவிர வேற யார் எடுத்திருந்தாலும், இன்னும் நாலு ஹியரிங் ஆச்சு போயிருக்கும்… அப்படியே போயிருந்தாலும், மூர்த்தி சார்-க்கு எதிரா யாராலையும் நிக்கக்கூட முடியாது என முகிலன் காதுபட, இரு வக்கில்கள் பேச, முகிலனோ சற்று கடுப்போடு அமர்ந்திருந்தான்...
ஓய்... என்ன? வாசல் ல நின்னு கனா கண்டுகிட்டு இருக்க? என்ற இஷாந்தின் குரலில் நினைவு கலைந்த மதி, திரும்பி பார்க்க.. நீதிபதி தீர்ப்பை சொல்லிக் கொண்டிருந்தார்,,,
இப்படி தவறான வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து நீதிமன்றத்தை வீணடித்தற்கும், இந்தியாவில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் ஒருவரின் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் இப்படி ஒரு குற்றத்தை சுமத்தியதற்காகவும், மிஸ்டர்.முகிலன் தரப்பு வக்கில் கேட்டுக் கொண்டதற்கினங்க.. ஐம்பது கோடி மான நஷ்டேடு கொடுக்கவேண்டும் இல்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டும் என தீர்ப்பு சொல்ல..
ஐ சூப்பர் என்று வாசலில் நின்ற மதி விசிலடிக்க போக, அதைத்தடுத்து , ஏய். மதி... இந்த கோர்ட்ல நீயும் ஒரு வக்கில்-னு மறந்துராத, என இஷாந்த் கண்டிப்பாக சொல்ல...
அட போங்க சார்... நீங்களும் உங்க சட்டமும், மனுசன முழுசா சந்தோசம் கூட படவிடமாட்றீங்க? ஐயோ என மதி சலித்துக்கொள்ள..
ஏய் உண்மைய சொல்லு.. அவ ஜெயிச்சா? உனக்கு எதுவும் கமிஷன் தருவாளா என்ன? இந்த குதி குதிக்கிற? ஏதோ நீயே ஜெயிச்ச மாதிரி...
ஆமா. உங்ககிட்ட லாம் ஜூனியரா இருந்தா? நான் எப்படி கேஸ் எடுத்து வின் பண்றது என மதி சொல்ல, இஷாந்த் முறைத்துக்கொண்டே.. சரி சரி.. அதான் உங்க மேடம் கேஸ்-ல ஜெயிச்சிட்டாங்களே? அப்புறமும் என்ன யோசிக்கிற என இஷாந்த் கேட்க
இல்ல சார்... மேடம், ஒரு கேஸ் எடுத்து முடிக்கிற வரைக்கும் அடுத்த கேஸ் எடுக்கவே மாட்டாங்க.. அப்படி இருக்கிறப்ப இந்த கேஸ்-ஸ மட்டும் எப்படி எடுத்தாங்க? என மதி கேட்க...
இதே கேள்வியைத்தான், வேந்தனும் யோசித்துக்கொண்டிருந்தான்... நம்ம அவ்வளோ தூரம் அந்த மேடம்கிட்ட பேசுனப்பக்கூட அவங்க ஒத்துக்கவே இல்லையே? அப்புறம் எப்படி? இப்ப மட்டும் ஒத்துகிட்டாங்க என அவன் யோசிக்க...
இங்கே மித்ராவும், முகிலனும், ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தனர்...
https://www.sahaptham.com/community/threads/நேசத்தின்-சுவாசம்-நீ-comments.611/
-நேசிப்பு தொடரும்..