Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல்

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைத்தல் சட்டம் 2013 (sexual harassment at the workplace prevention, prohibition and redressal act 2013)



பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், பாலியல் புகார்கள் தொடர்பான விசாரிக்கவும், புகார்களை நிவர்த்தி செய்யவும், பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கவும் உருவாக்க பட்டது தான் இந்த சட்டம்.




பாலியல் துன்புறுத்தல் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 14 மற்றும் 15 கீழ் சமத்துவதற்கான ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை ஆகும். இதில் அவளின் வாழ்க்கைக்கான உரிமையும் அடங்கி உள்ளது.



பாலியல் துன்புறுத்தல் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 21 கீழ் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை அல்லது எந்த ஓரு தொழிலையும் செய்யும் அடிப்படை உரிமை மீறுவது ஆகும்



சட்டத்தில் பின்னணி:



1992 ஆம் ஆண்டு பவனரிய தேவி எனும் பெண் ராஜஹஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில் கடை நிலை ஊழியராக பணி புரிந்து வந்தார், ஒரு நாள் மாலை வேளையில் அவளின் மேல் அதிகாரி மற்றும் இன்னும் சில கயவர்கள் இணைத்து காமவெறியில் அவளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர், இந்த வழக்கு நீதி மன்றத்திக்கு விசாரணை செல்லும் பொழுது ராஜஹஸ்தான் உயர் நீதி மன்றம் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டத்தினை உருவாக்கும் படி அரசுக்கு பரிந்துறை செய்தது அதனை ஓட்டி உருவானது தான் இந்த சட்டம்.



பிரிவு 1:



இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருத்தும், இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம் பணிபுரியும் ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பான மற்றும் பயம் இல்லாத பணிபுரியும் சூழல் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும், மேலும் பாலியல் வன்புணர்ச்சி தடுத்தல், தடை செய்தல் மற்றும் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.



பிரிவு 2:



பணி புரியும் பெண்கள் விளக்கம்:



ஓவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பாக மற்றும் பயம் இல்லாத பணிபுரியும் சூழல் கிடைக்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம்.



ஒப்பந்த அடிப்படையில் அல்லது நிரந்த அடிப்படையில் வேலை செய்யும் பெண்கள், முதலாளியின் அறிவிற்கு உட்பட்டு அல்லது அப்பாற்பட்டு தினக்கூலி அல்லது மாத சம்பளம் என்ற நிலையில் பணி புரியும் பெண்கள், பயிற்சி நிலையில் பணி புரியும் பெண்கள், விட்டு வேலை செய்யும் பெண்கள், உதவியாளர் என்ற நிலையில் பணி புரியும் பெண்கள் என அனைத்து பெண்களும் இதில் அடக்கம்.



பிரிவு 2(அ):



வேலை செய்யும் இடம் விளக்கம்:



1.பணியாளர்கள் வருகை புரிகின்ற எந்த ஒரு இடம்



2. இதில் இந்திய நிறுவனம் மற்றும் அயல் நாட்டில் உள்ள நிறுவனங்களின் இந்திய கிளை,



3. அரசு நிறுவனம்



4. அரசு சாரா நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சேவை வழங்கும் எந்த ஒரு நிறுவனம் இதில் அடங்கும், அதாவது வணிக, தொழில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, பொழுது போக்கு இடங்கள் வேலை செய்யும் பெண்கள், சுகாதாரம் தொடர்பான நிறுவனங்கள் முதலியவை இதில் அடங்கும்



எ.கா. மருத்துவமனை, நர்சிங் ஹோம், விளையாட்டு தொடர்பான நிறுவனங்கள் இதில் அடக்கம்.




5.ஒரு குடியிருப்பு இடம் அல்லது வீடு, உற்பத்தி ஈடுபட்டுள்ள தனிநபர் அல்லது சுய தொழில் புரிபவர்கள், 10 மேற்பட்ட நபர்கள் வேலை செய்யும் இடமும் இதில் அடங்கும்.



பிரிவு 3:



பணிபுரியும் இடத்தில் பாலியல் வற்புறுத்தல் என்றால் என்ன....



1. நேரடியாவோ அல்லது மறைமுமாகவோ உடல் ரீதியாக துன்புறுத்தல்



2. பாலியல் உறவுக்கு அழைப்பு விடுதல் அல்லது கோரிக்கை வைத்தல்



3. பாலியல் வன்புணர்ச்சி தொடர்பான படங்கள் அல்லது சைகைகள் செய்வது



4. ஆபாச படங்கள் காண்பித்தல்



5. பாலியல் இயல்புடைய விரும்ப தகாத சொல்களை வாய் மொழியாகவோ அல்லது உடல் மொழி மூலமாக வெளியிடுதல்....



பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படும் பொழுது வேலைத்திறன் குறைதல், மன அழுத்தம், தூக்கம் இன்மை, பாதுகாப்பு இன்மை, பயம், பதற்றம், தலைவலி, தன்னம்பிக்கை இன்மை, பிரச்சனைகள் எதிர்கொள்ள தயங்குதல், முதலிய உணர்வுகள் உட்பட்டு உயிர் துறக்கும் முடிவை நோக்கி தள்ளப்படுகின்றனர்...




பாலியல் துன்புறுத்தல் வேலை செய்யும் இடங்களில் வெளிப்படையவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தி, மிரட்டி, பணியவைத்தல் மூலமாவோ, வேலையில் முன் உரிமை அளிக்க படும் என்ற கோரிக்கை அடிப்படையாக கொண்டோ, தனிமையை காரண கரியத்துடன் உருவாக்கி நெருக்கடி அளிப்பதால் மூலம் ஏற்படுகிறது.



எ.கா



அ என்னும் பெண் ஒரு தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறாள் என்னும் நிலையில், ஒரு நாள் அவளின் உயர் அதிகாரி அலுவலகத்தில் அனைவரும் சென்ற பின்பும் வேலை தொடர்பான விளக்கம் கேட்க அவளை தனது அறைக்கு அழைத்து அவளை பாலியல் ரீதியாக உடல் மொழியால் தன்

விருப்பத்தை வெளிப்படுத்துகிறார் எனில் அவர் இந்த சட்டத்தின் மூலம் தீர்வு பெற முடியும்.



பிரிவு 3(அ):



ஆங்கீகரிக்கப்பட்ட அரசு...



1. தொழில் சாலை அடங்கி உள்ள மாநில அரசு



2. தொழில் சாலை அல்லது பணிபுரியும் இடத்தின் எல்லைக்கு உட்பட்ட மாநில அரசு அல்லது மத்திய அரசு



3. தொழில் சாலை அல்லது பணிபுரியும் இடம் அடங்கியுள்ள மாவட்டம்



பிரிவு 3(ஆ):



அதிகாரம் பெற்ற அதிகாரி விளக்கம்:



1.மாநில அரசினால் பெண்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட அலுவலர்



2. மத்திய அரசினால் பெண்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட அலுவலர்



3. மாநில நீதிபதி



4. மாவட்ட நீதிபதி



5. மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர்



மாவட்டத்தின் அதிகாரம் பெற்ற நபர் இந்த சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் மற்றும் புகார்கள் தொடர்பான செயல்பாட்டினை நிறைவேறுவார், பாலியல் ரீதியாக பாதிக்க பட்ட பெண்கள் இவர்களிடம் தங்களுக்கு இழைக்க துன்பம் மற்றும் அநீதி குறித்து புகார் அளிக்கலாம்.



இந்த சட்டத்தின் மீதி உள்ள பிரிவுகள் வரும் வாரம் காணலாம்....



இதில் சந்தேகம் உள்ளவர்கள் தங்களது கேள்விகளை கேட்கலாம்.....
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
பிரிவு 3(3)



நியமிக்கப்பட்ட அதிகாரி அல்லது அங்கரிக்கப்பட்ட அதிகாரிகளின் கடமைகள்/ பொறுப்புகள்...



1. சட்டத்தின் படி பாதுகாப்பான பாலியல் துன்புறுத்தல் இல்லாத பணியிடங்களை உருவாக்குதல்.



2. பாலியல் வன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல் மற்றும் அது தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல்



3. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்பு மற்றும் நோக்கு நிலையை உருவாக்குதல்.



4. பெண்கள் பணிபுரியும் இடத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் புகார் குழுக்களை உருவாக்குதல்.



5. பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கப்பட்ட புகார்களை சரியாக விசாரிப்பது.



6. புகார்களை பெறும் அதிகாரி திறன் மற்றும் பயிற்சி பெற்ற நபராக இருக்க வேண்டும்.



7. அதிகாரம் பெற்ற அரசாங்க அதிகாரி வருடாந்திர ஆறிக்கையை தயார் செய்து அந்த அந்த மாநில அரசுக்கு அளித்தல் வேண்டும்.



8. மாவட்ட அளவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில அளவில் அதிகாரம் பெற்ற அதிகாரி ஒரு நபரை நியமிப்பார், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர் புகார்களை பெற்றுவிசாரிப்பார்.



புகார்கள் தொடர்பான குழு:-



இந்த சட்டம் இரண்டு வகையான புகார்களை அளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது.



உள் புகார் குழு: (local complaints committee) :



உள் புகார் குழுவில் பெண்களுக்கு 50% இட ஓதுக்கிடு அளிக்கப்பட வேண்டும், இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்( அவர்களை நியமித்த நாளில் இருந்து அல்லது பதவி ஏற்ற நாளில் இருந்து கணக்கில் கொள்ளப்படும்)



1. தலைவர்(chairperson): மூத்த பணியாளராக பணிபுரியும் பெண்கள்/ அவ்வாறு இல்லையெனில் அதே அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர்.



2. கமிட்டி உறுப்பினர்: 2 நபர்கள்

பெண்களின் நலனுக்காக பாடுபடும் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பெண்கள் அல்லது சட்ட அறிவு பெற்ற நபர்.



3. உறுப்பினர்கள்:



NGO/ பெண் உரிமை சங்கங்களில் இருந்து பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நபர்/ பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகள் தொடர்பாக விளக்கம் தெரிந்த நபர்.



உள் புகார் குழு, பெண்கள் வேலை செய்யும் ஒவ்வொரு நிர்வாக பிரிவு மற்றும் அலுவலகத்தில் அமைக்கப்பட வேண்டும்.
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
வீழ்ந்து விடாதே பெண்ணே....



மீண்டும் மீண்டும்



உன்னை காயப்படுத்தும்



ஆண் இனத்தை



மறந்துவிடு.....



காயத்தினால் உண்டாகும்



கண்ணீரை துடைத்து எரிந்து



வீறு கொண்டு



எழுந்து....



அவர்களின் முன்பு



முன்பு தலைநிமிர்ந்து.....



காயம் உண்டாக்கும்



ஆண் இனத்திற்கு.



தலைகுனிவை பரிசாக



அளித்திடு.....



உரிமை என்பது மற்றவர்கள் நமக்கு அளிப்பது அன்று... அது யாரும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாதது -அம்பேத்கார்



பெண்கள் பல்வேறு பரிமாணங்களையும், முகங்களையும் கொண்ட அழகான இறைவனின் படைப்பு.....



இன்றைய நிலையில் பெண்கள் வரதட்சணை கொடுமை, ஆண் பெண் பாகுபாடு, பணிபுரியும் இடத்தில் பிரிவினை, பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல், என் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு தான் இருக்கின்றனர், தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள தேவையான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் சரத்துகளை காணலாம்.





இந்திய அரசியலமைப்பு சட்டம் பெண்களின் நிலையினை உயர்த்தவும் சமூக வேறுப்பாட்டில் இருந்து பாதுகாக்கவும் நிறைய சட்ட பிரிவுகளை உருவாக்கி உள்ளது.



1. சட்டத்தின் முன் அனைவரும் சமம்(சரத்து 14)





2. எந்தவொரு பெண்ணுக்கும் மதம், மொழி, இனம், பிறப்பிடம், பாலினம் முதலியவற்றால் பாகுபாடு காட்டப்பட கூடாது(சரத்து 15(1))



3.அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க எந்த ஒரு சட்டம் இயற்றலாம்(சரத்து 15(3))



4. வேலை வாய்ப்பில் ஆண் மற்றும் பெண் பாகுபாடு இன்றி திறமை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்



5. வேலை வாய்ப்பில் ஆண் மற்றும் பெண் பாகுபாடு இன்றி வேலைக்கு ஏற்ப சம ஊதியம் அளிக்கப்பட வேண்டும்(சரத்து 39(d))



6. எந்த ஒரு பெண்ணும் பொருளாதார மற்றும் பிற காரணிகள் மற்றும் காரணங்களுக்காக நீதியை பெறுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது, சம வாய்ப்பின் அடிப்படையில் இலவச சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் -சரத்து 39(a)



7. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பிரசவ விடுமுறை மற்றும் சுகாதாரமான சூழ்நிலை பெற உரிமை உண்டு -சரத்து 42



8. பெண்களுக்கு சுகாதாரம், வாழும் நிலை, உணவு முறை இவற்றின் தரத்தை உயர்த்தவும் அரசின் கடமையாகும் - சரத்து 47



9. கிராம பஞ்சாயத்து தேர்தலில் மொத்த எண்ணிகையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்- சரத்து 243 ட



10. ஒவ்வொரு நகராட்சியிலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் சுழற்சி முறையில் நேரடி தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் - சரத்து 243 D



கல்வி கற்பதற்கான உரிமை:-



வறுமை ஒழிக்கவும், வேலையின்மை, சமூக ஏற்ற தாழ்வு முதலிய சமூக அவலங்களை களைய கல்வி ஒரு கருவியாக செயல்படுகிறது, மேற்குரிய சமுக பிரச்னைகளை களைய அரசாங்கம் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வி திட்டத்தை 2010 ஆம் ஆண்டு கொண்டு வந்தது.



பெண்களின் மனித உரிமைகளை பாதுகாக்க ஊக்குவிப்பதற்கும், தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள இந்திய தண்டனை சட்டம் குறிப்பிட்டப்படுள்ள சட்ட பிரிவுகள்:-



1. ஒரு பெண்ணுடைய மண்புக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகவும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். -பிரிவு 354



2. பதினாறு வயதுக்கு குறைந்த ஓர் ஆணை அல்லது பதினெட்டு வயதுக்கு குறைந்த பெண்ணை அல்லது சித்தசுவாதீனம் இல்லாத ஒரு நபரை அவர்களை காக்க கடமைப்பட்ட பாதுகாவலரின் சம்மதம்பெறாமல், ஆசை காட்டி இழுத்துக்கொண்டு அல்லது தூக்கிக் கொண்டு போவதைச் சட்டப்பூர்வமான பாதுகாப்பில் இருந்து கவர்ந்துசெல்லுதல் என்று கூறப்படும். விளக்கம்: -பாதுகாவலர்- என்ற சொல் அத்தகைய நபரைப் பராமரிக்கும் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள எவரையும் குறிக்கலாம். விதிவிலக்கு: முறைகேடாகப் பிறந்த குழந்தைக்குத் தான்தகப்பன் என்ற நல்ல எண்ணத்துடன் அந்தக் குழந்தையை எடுத்துச் செல்வது, இந்த பிரிவின்பால் படாது. ஒரு நபரைப் பராமரித்துப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்ற நல்லெண்ணத்துடன் அப்படி செய்வது குற்றமாகாது. பிரிவு 354 -A



3. ஒரு பெண்ணைப் பலாத்காரமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படி அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகத் திருமணம் செய்துவைக்கப்படும் என்று தெரிந்திருந்தும் கவர்ந்து செல்வது அல்லது கடத்தி செல்வது குற்றமாகும். அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகப் பலாத்காரப்படுத்தி உடல் புணர்ச்சி கொள்வதற்காக அல்லது அத்தகைய உடல் புணர்ச்சிக்கு அவள் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணைக் கவர்தல் அல்லது கடத்திச் செல்லுதல் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்குப் 10 ஆண்டுகள்வரை சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்தி அல்லது குற்றத் தலையீட்டால் அல்லது வேறு எவ்விதமான கட்டாயத்தாலும் ஒரு பெண்ணை அவளுடைய சம்மதமின்றிப் பிறருடைய புணர்ச்சிக்கு ஆட்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் ஓர் இடத்தை விட்டு நீங்கும்படி தூண்டுகின்றவர்களும் இந்தப் பிரிவின்படி தண்டனைக்கு உரியவர்களாவர் -பிரிவு 366



4. ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட சொல், சைகை அல்லது செயல். கேட்கப்பட வேண்டும், அல்லது அத்தகைய சைகை அல்லது பொருள் அத்தகைய பெண்ணால் காணப்பட வேண்டும், அல்லது அத்தகைய பெண்ணின் அந்தரங்கத்தின் மீது ஊடுருவினால், ஒரு வருடம் அல்லது அபராதம் அல்லது இரண்டையும் நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கு எளிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்.பிரிவு 509



5. ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். விளக்கம்: இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்; 1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலைக் குறிக்கும் (அது உடலுக்கு அல்லது உள்ளத்துக்கு கேடுபயக்கக் கூடியதாகக் கூட இருக்கலாம்) 2. சட்ட விரோதமாக ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அந்தப் பெண் மூலம் அல்லது அவளுடைய உறவினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது அப்படி அவளால் அல்லது அவளுடைய உறவினரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத சங்கடங்களை உண்டாக்குவதைக் குறிக்கும். பிரிவு 498A
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. வரதட்சணை அரபியில் டஹேஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் தொலைதூர பகுதிகளில், வரதட்சணை அவுன்பாட் என்று அழைக்கப்படுகிறது.



வெப்ஸ்டரின் புதிய சர்வதேச அகராதியின் வரதட்சணை என்பது ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்ளும்போது அவனது மனைவியிடமிருந்தோ அல்லது குடும்பத்தினரிடமிருந்தோ பெறும் சொத்து.





இந்தியாவில் வரதட்சணை முறை மணமகனின் குடும்பம் மணமகன், அவரது பெற்றோர் அல்லது அவரது உறவினர்களுக்கு திருமணத்தின் நிபந்தனையாக கொடுக்கும் நீடித்த பொருட்கள், பணம் மற்றும் உண்மையான அல்லது அசையும் சொத்து ஆகியவற்றைக் குறிக்கிறது.



வரதட்சணை இந்தியாவின் வளைந்த பரம்பரைச் சட்டங்களிலிருந்து உருவானது, மேலும் இந்து வாரிசுச் சட்டம் திருத்தப்பட வேண்டியது அவசியம். வரதட்சணை அடிப்படையில் மணமகனின் குடும்பத்திற்கு மணமகனுடன் பணம் அல்லது ஒருவித பரிசுகளை வழங்குவதன் இயல்பு மற்றும் பணம், நகைகள், மின்சார உபகரணங்கள், படுக்கை, வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள், ஒரு தனி குடும்பத்தை அமைக்க தேவையான பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும்,இதனை கொண்டு புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டை அமைத்தனர்.



வரதட்சணை பெறுவதற்குகான காரணங்கள்:



1. மணமக்கள் தங்களது குடும்பத்தை புதியதாக அமைத்து கொள்ள,



2. வரதட்சணை என்பது பெற்றோரின் சொத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு பங்கை வழங்கும் ஒரு வழி என பெண்ணின் பெற்றோர் கருதுவது,



3. பெற்றோர்கள் தங்கள் மகள்களை பாரமாக எண்ணி முடித்த வரை திருமண பந்தத்தில் சிக்க வைக்க எண்ணுதல்,



4. பணக்கார குடும்பங்களின் மணமகனுக்கும், அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும், மதிப்புமிக்க சமூக அந்தஸ்துடனும் தங்கள் மகள்களை திருமணத்தில் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், அவள் மகிழ்ச்சியாகவும் ஆடம்பரமாகவும் வாழ வைக்கும் எண்ணத்துடன்



5. பெண்களை போக பொருளாக எண்ணி அவளுக்கு கல்வி மற்றும் பொருளாதார உரிமை அள்ளிக்காமல் இருப்பதால்



6. பெற்றோர்களின் பேராசை, உறவினர்கள் முன்னிலையிலும், சமூகத்திலும் தங்களை மதிப்பு மிக்கவர்கள் காட்டி கொள்ள என பல்வேறு காரணங்களால் வரதட்சணை வழங்க படுகிறது.



வரதட்சணை விளைவுகள்:-



1. வசதி உள்ளவர்களால் தங்களின் பெண்களின் நல்வாழ்வுக்காக அளிக்கப்படும் பணம், இறுதியில் வசதி அற்ற பெண்களின் உயிரை குடித்து விடுகிறது,



2. மணமகளின் பெற்றோர் வரதட்சணை அளிக்க வேண்டும் என்று சில சூழ்நிலைகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், திருமணத்திற்கு பிறகு உங்கள் பெண்களின் வாழ்வுக்கான விலையாக இதை செய்து தான் ஆகவேண்டும் ஏன கட்டாயப்படுத்தபடுகின்றனர்,



3. திருமணத்தின் போது என்னிடம் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை முழுமையாக வழங்கத் தவறினால், மணமகள் கஷ்டப்பட வேண்டும் என மிரட்டுவது, அவர்கள் தங்கள் மாமியார் குடும்பத்தில் மரியாதை இன்மையாக நடத்தப்படுவது.



4. வரதட்சணை பெறுவதால் சில பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர், எதிர் தரப்பினர் கேட்கும் வரதட்சணை அளிக்க முடியாமல் இளம் கன்னிப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளவது, பெண்களின் தாமதமான திருமணம், மனநல குறைபாடுகள் முதலியவை ஏற்படுகிறது.



5. சமூகத்தில் குடும்பம் என்னும் அமைப்பு சிதைந்து போகுதல்,



6. மணமகளை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தால், அல்லது அதிக வரதட்சணை கொண்டு வர மறுத்ததால் அவளை தற்கொலை செய்ய தூண்டுதல் முதலிய கொடுமைகளும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.



அசோக் குமார் vs ஸ்டேட் ஆப் ராஜஸ்தான் என்னும் வழக்கில் உயர்நிதிமன்ற நீதிபதி திரு. R.M.சஹாய் வரதட்சணை குறித்து இவ்வாறு கூறுகிறார்: "இளம் அப்பாவி மணப்பெண்களின் துன்புறுத்தல், சித்திரவதை, தற்கொலை மற்றும் வரதட்சணை இறப்பு தொடர்பான வழக்குகளின் ஆபத்தான அதிகரிப்பு எப்போதும் நாகரிக சமுதாயத்திற்கு அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக தீமை தடையின்றி தொடர்கிறது.



வரதட்சணைக் கொடுமை.



வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.





2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர்.

குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள், 1965 குடும்ப வன் முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



வரதட்சணை கொடுப்பதை அல்லது வாங்குவதை தடைசெய்யும் சட்டம்:-





இந்திய குடியரசின் பன்னிரண்டாம் ஆண்டில் பாராளுமன்றம் பின்வருமாறு இயற்றப்பட்டது:





குறுகிய தலைப்பு, அளவு மற்றும் ஆரம்பம்:



(1) இந்தச் சட்டம் வரதட்சணை தடைச் சட்டம், 1961 என்று அழைக்கப்படலாம். இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தவிர முழு இந்தியாவிலும் பரவியுள்ளது. உத்தியோகபூர்வ வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் மத்திய அரசு நியமிக்கக்கூடிய தேதியில் இது நடைமுறைக்கு வரும்.





`வரதட்சணை ' என்ற பதத்தின் வரையறை:



1. இந்தச் செயலில், வரதட்சணை என்பது எந்தவொரு சொத்து அல்லது மதிப்புமிக்க பாதுகாப்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்க ஒப்புக் கொண்டது:





2. ஒரு தரப்பினரால் ஒரு திருமணத்திற்கு மற்ற தரப்பினருக்கு திருமணத்திற்கு; அல்லது

ஒரு தரப்பினரின் பெற்றோரால் ஒரு திருமணத்திற்கு அல்லது வேறு எந்த நபரிடமிருந்தும், திருமணத்திற்கு அல்லது வேறு எந்தவொரு நபருடனும்; திருமணத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பின்னரோ எந்த நேரத்திலும் திருமணத்தின் பின்னர் அல்லது மணமக்களின் திருமணம் தொடர்பாக ஆனால் டவர் அல்லது முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியாத்) பொருந்தும் நபர்களின் விஷயத்தில் வரதட்சணை என்பது மஹ்ர் என கொள்ளப்படும்.





3. வரதட்சணை கொடுப்பதற்கும் எடுத்துக்கொள்வதற்கும் அபராதம்.-

(1) எந்தவொரு நபரும், இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, வரதட்சணை கொண்டுக்கவவோ அல்லது பெறவோ நேர்ந்தால் , அவர் ஐந்து வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு ஒரு கால சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். அபராதம் என்பது பதினைந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவோ அல்லது அத்தகைய வரதட்சணையின் மதிப்பின் அளவு எதுவாகவோ இருக்கக்கூடாது:



தீர்ப்பில் போதுமான மற்றும் சிறப்பு காரணங்களை நீதிமன்றம் பதிவு செய்யலாம், ஐந்து ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கலாம்.



அக்டோபர் 2, 1985 ஏற்பட்ட மாற்றத்தின் மூலம்

மணப்பெண்ணுக்கு திருமணத்தின் போது வழங்கப்படும் பரிசுகள் (வரதட்சணை சார்பாக எந்தவொரு கோரிக்கையும் இல்லாமல்)

இந்த சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி பராமரிக்கப்படும் பட்டியலில் அத்தகைய பரிசுகள் உள்ளிடப்பட்டுள்ளன;



4. வரதட்சணை கோரியதற்காக அபராதம்.-

இரண்டு ஆண்டுகள் மற்றும் அபராதத்துடன் பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாம்:

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதுமான மற்றும் சிறப்பு காரணங்களுக்காக, நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கலாம்.

இந்த சட்டத்தில் மீதி உள்ள பிரிவுகளை வரும் வாரத்தில் காணலாம்.



இதில் சந்தேகம் உள்ளவர்கள் தங்களது கேள்விகளை கேட்கலாம்
 
Top Bottom