Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பீட்ரூட் அல்வா

Rilesh

New member
Messages
5
Reaction score
5
Points
3
தேவையான பொருட்கள்:

துருவிய பீட்ரூட் - 2 கப்

கொதிக்க வைத்த பால் - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

பாதாம், முந்திரி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் பால் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் மென்மையாகும் வரை வேக வைக்கவும். பின் பால் வற்றும் வரை அடுப்பில் வைத்து, பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறி விடும் போது, கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்.

பின் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்து பிரட்டினால், சுவையான பீட்ரூட் அல்வா ரெடி!!!
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
அவல் பொட்டுக் கடலை உருண்டை

பொட்டு கடலை ஒரு கப்
மெல்லிசு அவல். அரை கப்

வாணலியில் எண்ணெய் விடாமல் முதலில் பொட்டு கடலை லேசான சூடு செய்து ஆற விடவும்

அவலையும் இதை போல் லேசாக சூடு செய்து இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்

வெல்லம் இரண்டாம் கம்பி வரும் முன் இந்த கலவை போட்டு மிதமான தீயில் கிளறவும்.

தேவை பட்டால் ஏலம் பொடி சேர்க்கலாம்.

பதம் பார்த்து இறக்கி ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சிறு உருண்டைகளை பிடிக்கவும்.

செய்வது எளிது.
 
Top Bottom