Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL மண்வாசம் - Tamil novels

Status
Not open for further replies.

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
அத்தியாயம் -10

தடுமாற்றத்தில் இருக்கும் சித்தப்பாவை கைப்பிடித்து அமரவைத்த கயல் உடனே ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்கவும் சற்று ஆறுதல் அடைந்தவறாய் தண்ணீரை பருகிவிட்டு அழத்துவங்கினார்....

"எனக்கு... வேலை போயிடுச்சு. பெட்டிகேஷ் நான் திருடிட்டன்னு சொல்லி என்னை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க" என்றதும் எல்லோரும் அதிர்ந்து போயினர்.

"சித்தப்பா என்ன சொல்றீங்க"...

"ஆமா கயல்..எனக்கு இப்ப என்ன பண்றதுன்னு தெரியல"

"சித்தப்பா எதுக்கும் கவலை படாதிங்க நீங்க வாங்க முதல்ல சாப்பிடுங்கள் பிறவு பேசிப்போம்' என்று அவருக்கு தட்டு எடுத்து வைக்குமாறு சித்தியிடம் சொல்லிவிட்டு...

"டேய் அழகர் என்கூட கொஞ்சம் வரியா வெளியே போயிட்டு வருவோம்" என்று அழைத்துக்கொண்டு வெளியே வந்தவள்..

"அழகர் உனக்கு அப்பா வேலை செய்யுற ஆபிஸ் எங்கேன்னு தெரியுமா" என்று வினவியதும்.

"ம்ம்ம் தெரியும் ஆனால் எதுக்கு கா கேக்குற"

"பேசாமல் என்கூட வாடா" என்று அழைத்துக்கொண்டு அந்த ஆபிஸை நெருங்கினாள்.

யாரிடமும் எதுவும் கேட்கவுமில்லை தயங்கவும் இல்லை உள்ளே கிளை மேலாளரின் கேபினுள் நுழைந்தாள்.

"ஹலோ யார் நீங்க" என்றார் மேலாளர் புருவத்தை உயர்த்தியபடி.

அதற்கு சற்றும் அசராதவளாய் அவருக்கு எதிரே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி

"கொஞ்சம் நேரம் முன்னாடி ஒருத்தர வேலையை விட்டு தூக்குனிங்களே அவரோட பொண்ணு தான் நான். ஆமா என்ன செஞ்சாறுனு அவரை வேலையை விட்டு அனுப்புனீங்க"

"ஏன் உங்கள் கிட்ட எதுவும் சொல்லலையோ" ?

"சொன்னாரு ஆனால் உங்கள் வாயால அதை கேட்டு தெரிஞ்சிட்டு போலாமேனு வந்தேன்"

"பெட்டிகேஷ்ல இருந்த இரண்டாயிரம் ரூபாய் காணோம். கேட்டால் அதுக்கு சரியாக கணக்கு காட்டல அதான் இப்படி திருடிபிழைக்குறவங்க என் ஆபிஸ்க்கு தேவையில்லை அப்டினு அனுப்பிட்டேன்"

"ஸோ நீங்க அனுப்புனதுக்கு அந்த இரண்டாயிரம் தான் காரணம். மாசம் உங்கள் கையால பத்தாயிரம் சம்பளம் வாங்குற மனிஷன் அதே இரண்டாயிரம் ரூபாயை சேலரி அட்வான்ஸ் வாங்கியிருந்த என்ன பண்ணிருப்பிங்க"

"அடுத்த மாசம் சம்பளம் பிடிச்சிக்கிட்டு கொடுத்துருப்பேன்"

"அப்படினா இப்பையும் அதுவே பண்ணிருக்கலாம்.ஏன் பண்ணல"

"அதுக்கு பேரு திருட்டு இல்லை ஆனால் இப்ப பண்ணது திருட்டு தானே. " என்றதும்

"சரி எதை வச்சு அவரு திருடினாரு சொல்றீங்க"

"ப்ரூ பண்ணவேண்டிய அவசியம் இல்லை"

"எனக்கு ப்ரூவ் பண்ணியாகனும்"

"சரி அந்த இரண்டாயிரம் என் கண் முன்னாடி இருக்கனும் இருந்துச்சுனா நான் இப்பவே வேலைக்கு சேர்த்துக்குறேன்"

"இரண்டாயிரம் இல்லை வட்டியுமா சேர்த்து நீ நாலாயிரம் கூட அடுத்த மாசம் சம்பளத்துல பிடிச்சுக்க ஆனால் வேலைக்கு சேர்த்தே ஆகணும். ப்ரூ பண்ண முடியலைனா அப்ப என் சித்தப்பா மேல விழுந்தது வீண் பழி. சரி அந்த பழியை நாங்க சுமக்குறோம் ஆனால் வேலைல சேர்த்தே ஆகணும்'

"நாளைல இருந்து வேலைக்கு வரட்டும்"

"அப்படி வாங்க வழிக்கு" என்று சொல்லிவிட்டு அழகருடன் திரும்பி வந்தாள்.

"அக்கா நீ பெரிய ஆளுதான் கா...எவ்வளவு சூப்பரா பேசிட்டு வந்துருக்க"

"பின்ன என்னடா ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒருத்தர வேலையை விட்டு நிறுத்துறது ரொம்ப ஓவர் டா. சொல்லப்போனால் அவனுங்க சித்தப்பா மேல சுமத்துனது வீண்பழி. சரி எப்படியோ வேலைக்கு வரச்சொல்லிட்டான் அது போதும்"

"ஆனால் அடுத்த மாசம் சமாபளத்துல நாலாயிரம் பிடிப்பு போயிடுமேக்கா" என்றவனை எதிர்நோக்கியவள்.

"விடு டா வேலை கிடைச்சிது பெரிய விஷயம். இரண்டாயிரம் கண்ணு முன்பு வரணும் அவன் சொல்றான். எதை வச்சு அவரு திருடினாரு நீ ப்ரூவ் பண்ணுனு நான் சொன்னேன். மொத்தத்தில் இரண்டு பேருமே ப்ரூவ் பண்ணமுடியல. வேற வழியில்லாமல் வேலைக்கு சேத்துக்குறேன் என்று அவன் சொல்லிட்டான் அது போதாதா...."

"உண்மை தான் அவனுக்கு அவன் துட்டு போச்சேன்னு வேற கவலை"சரி வாக்கா வீட்டுக்கு போய் அப்பா கிட்ட நடந்ததை சொல்லுவோம் என்று இருவரும் வீட்டுக்குள் சென்று நடந்ததை கூறவும்...

"எப்படியோ வேலையை மீட்டு கொடுத்துட்ட அதுவரை சந்தோஷம்' என்று அவளுடைய சித்தப்பா நீண்ட பெருமூச்சு விட்டார்.

ஆடிமாதம் முழுவதும் மதுரையில் கழித்துவிட்டு கணவன் இருக்கும் இடத்தில் வந்து சேர்ந்தவள்

"ஹலோ மிஸ்டர் ரத்தினவேல் பாண்டியன் என்னை ரொம்ப மிஸ் பண்ணிங்களா" என்க..

"ச்ச ச்ச நான் ஏன் மிஸ் பண்றேன் எனக்கு தான் நிறைய க்ரள் ப்ரண்ட்ஸ் இருக்காங்களே அவங்கக்கூட பேசிபேசி காலத்தை ஓட்டிட்டேன். ஆமாம் இப்ப ஏன் நீ இங்கே வந்த அங்கேயே இருக்க வேண்டியது தானே"

"அடப்பாவி மனிஷா அதுக்குள்ள இப்படியெல்லாமா சொல்லுவீங்க. இனி உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்"

"சரி சரி அதுபோகட்டும் உனக்கு ஒரு இனிப்பான செய்தி வச்சுருக்கேன்"

"என்னதுங்க"...

"நீயே கெஸ் பண்ணு"

சற்று கண்மூடி யோசித்துவிட்டு "எனக்கு தெரியலையே நீங்களே சொல்லுங்கள்" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு. அவளுடைய பார்வையில் அவன் என்ன சொல்லப்போகிறான் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. சரி இதற்கு மேல் அவளை காக்க வைக்க வேண்டாம் என்று அவனே சொல்லிவிட முற்பட்டான்.

"ஒன்னுமில்லை கயல் நம்ப ஊர் காரங்க எல்லாம் சேர்ந்து நம்மள மன்னிச்சு ஏத்துக்கிட்டாங்க" என்க...ஆச்சரியத்தில் அவளது கண்கள் மிளிர்ந்தது.

"எப்படி ஏத்துக்கிட்டாங்க. பஞ்சாயத்துல ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேனு தானே நம்மள அங்கே இருக்க அனுமதிக்காம இருந்தாங்க"

"ஆமாம், ஆனால் நான் போய் பேசி சரி பண்ணிட்டேன். இனி நம்ம அந்த ஊருக்கு தாராளமாக போலாம்" என்று ரத்தினவேல் பாண்டியன் கூறியதும் அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..

இருவரும் தங்களது துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டு அவர்களது வீட்டை காலி செய்து சாவியை உரிமையாளரிடம் ஒப்படிவித்துவிட்டு திருவலங்காடனூர் நோக்கி பயணித்தனர்.

"ஊரோட மண்வாசம்....ஸ்ஸ் பா செம்ம ஃபீல் " என்றாள் கயல்

"ஆமாம் கயல் எனக்கும் இதே ஃபீல் தான்"

இருவரும் தங்களது உடைமைகளுடன் ஊர் வந்து சேர்ந்ததும் நேரே கயல்விழியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்
"அம்மாடி கயலு வந்துட்டியா. எம்புட்டு நாள் ஆச்சு உன்னை எல்லாம் பார்த்து" என்று மனம் நெகிழ்ந்தாள் தாய் லட்சுமி.

தாயும் மகளும் கட்டியணைத்துக்கொண்டனர். பாண்டியனும் கயலும் லட்சுமி வீட்டிலேயே தங்கினர். ரொம்ப நாள் கழித்து வந்ததால் ஊர்மக்களும் உறவினர்களும் இவர்களை பார்க்க திரண்டனர். இவ்வூரில் மருத்துவம் பார்க்க தனக்கென ஒரு க்ளீனிக் கட்டிட முடிவு செய்தான் ரத்தினவேல் பாண்டியன்.

வழக்கம் போல் தன் படிப்பினை தொடர்ந்தாள் நம் கதாநாயகி கயல்விழி . ரசாயனம் அற்ற உரம் தயாரிக்கும் நுனுக்கத்தை கல்லூரி கற்று கொடுத்ததனால் தன் கிராமத்தில் இதை நடைமுறை படுத்த வேண்டும் என்று எண்ணினாள்.

அன்று ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தாள்.
"ஏண்டி ரொம்ப நாள் பிறகு இங்கே வந்துருக்க ,இவங்க கிட்ட உன் விரோதத்தை சம்பாதிச்சிக்க போற " என்று தாய் லட்சுமி சொன்னதும்..

"மா, நான் நல்லது தானே சொல்லி தரப்போறேன். இதுல என்ன இருக்கு என்கிட்ட சண்டை போட " என்று சொல்லி வெளியே நகர்ந்தாள்.

அங்கு மரத்தடியில் மக்கள் கூடியிருந்தனர். அதைக்கண்டு வியந்தவளாய்
"அடேங்கப்பா நான் சொன்னதை கேட்டு இம்புட்டு பேரு வந்துருக்கீங்க. என்மேல அவ்ளோ மரியாதை யா"

"மரியாதை அப்டிங்கிறதை விட நீ சொல்லப்போற விஷயம் ரொம்ப பெருசு அதான் அப்படி என்னதான் சொல்றனு கேக்கலாம்னு வந்தேன்"என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னதும் நமட்டு சிரிப்புடன் தன் பேச்சினை துவங்கினாள்.

அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

தொடரும்
 
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom