- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
மந்திரம் 41:
தீரேந்திரன் இறந்ததும் அருகில் சென்று அவன் கையில் இருந்த ஓலைச்சுவடியை எடுக்க கடோத்கஜன் முயல அது பறந்து சென்றது.
கடோத்கஜன் அதை பிடிக்க பின்னால் செல்ல அது ஒரு இடத்தில் சென்று நின்றது. கடோத்கஜன் அந்த இடத்திற்குச் சென்றதும் பெரும் சத்ததுடன் சிவலிங்கம் தோன்றியது. சிவலிங்கத்தை கண்டு கடோத்கஜன் பின்னடைய அதில் இருந்து வந்த ஒளி கடோத்கஜனை தூக்கி வீசியது.
“ ஈசனே ! மந்திரவியூகத்தை அடையாமல் நான் விட மாட்டேன் “ என்று கூறிய கடோத்கஜன் காற்றோடு மாயமாகிப் போனான்.
கடோத்கஜனின் மந்திரகட்டுக்களில் இருந்து விடுபட்ட அடியார் தீரேந்திரன் அருகில் சென்று
“ தீரா ! உன் கருமபயன் இன்னும் முடியவில்லை. “ மந்திரவியூகத்தை" ஈசனின் வசம் ஒப்படைக்க மறுபடியும் பிறந்து வருவாயாக !" என்று கூறியவர்
இனியன் மற்றும் லிங்கா அருகில் சென்று தன் கைகளை வைக்க அவர்கள் எழுந்து நின்றனர்.
அவர்களிடம் “ நீங்களும் உங்கள் கடமைகளை முடித்துவிட்டு அவனோடு வந்து சேர்வீர்களாக!” என்று அவர்களையும் ஆசிர்வதித்துவிட்டு அடியார் சென்றுவிட்டார்.
****************
தீரன் இறந்த செய்தியைக் கேட்டு கலிங்காவிடம் விரைந்தாள் காந்தாயினி.
கலிங்கா தன் கையை இழந்த நிலையில் காற்றோடு பேசிக் கொண்டிருந்தான்.
"குருவே ! எங்கு இருக்கிறீர்கள் ? நான் இங்கு கையை இழந்த நிலையில் துடித்துக் கொண்டிருக்கின்றேன். விரைந்து வாருங்கள் !" என்று கலிங்கா கடோத்கஜனை தேடியபடியே பேசிக் கொண்டிருக்க
அவன் முன் வந்து நின்றாள் காந்தாயினி.
“ என்ன கலிங்கா? இதெல்லாம் ! என்னவரிடம் நான் கரம் சேர்க்க எண்ணி நீ கொடுத்த காப்பை மூவர்க்கும் நான் கொடுத்தேன். ஆனால் நடந்தது என்னவோ வேறாக இருக்கிறதே ? என்னவர் என்னிடம் வந்து சேரவும் இல்லை. தீரேந்திரரும் இறந்துவிட்டார். என்ன நடக்கிறது இங்கே ? என்னை வைத்து நீ என்ன செய்து வைத்திருக்கிறாய் ? உன்னை நான் விட மாட்டேன்" என்று காந்தாயினி கலிங்காவை நோக்கி கத்தினாள் ,
"உன் தேவை முடிந்தது காந்தாயினி ! இனி நீ இவ்வுலகிற்கு தேவையில்லை. உன்னவனை நினைத்துக் கொண்டே மடிந்து போ! உன் உயிர் பிரிந்தாலும், உன் ஆன்மா என்றும் எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கட்டும் !" என்று கலிங்கா கூறி மந்திரங்களை உச்சரித்தான்.
அதனை அடுத்து காந்தாயினி மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல் கிணற்றில் விழுந்து இறந்தாள் . அவள் இறந்தாலும் அவளது ஆன்மா கிணற்றில் தஞ்சம் புகுந்தது.
“ யாராவது என்னை காப்பாற்றுங்கள் ! எனக்கு விமோட்சனம் கொடுங்கள் ! ‘’ என்று அது கதற அடியார் கண்மூடியபடியே பேசினார்
“ நீ செய்த பாவத்தின் பலன்களை அடைந்து தான் ஆக வேண்டும் காந்தாயினி! . உன் பாவ பலன்கள் முடிந்ததும் உன்னவனால் நீ முக்தி அடைவாயாக “ என்று அவர் கூறியதும் காந்தாயினி நீரோடு நீராக கரைந்தாள்.
***********
இனியனும், லிங்காவும் மகேந்திரர் மற்றும் தீரேந்திரனின் பூதவுடலை தாங்கியபடி அரண்மனை நோக்கிச் சென்றனர்.
கனிகா தீரேந்திரனின்செய்தியை கேட்டு மயங்கிச் சரிந்தாள். அக்கணமே அவள் உயிர் பிரிந்தது.
“ போர்களத்தில் வென்று வந்த மன்னவனுக்கு வெற்றி வாகை சூட காத்திருந்த காரிகை மரணமாலை சூடிக் கொண்டாளோ ?
மணக்கோலத்தில் கை கோர்க்க நினைத்த காரிகை மரண கோலத்தில் கை கோர்த்துக் கொண்டாளோ ? “
******
மகேந்திரரும் , தீரேந்திரனும் இறந்ததும், லிங்கா வதனியுடன் தன் நாட்டிற்கு புறப்பட்டான். தன் நண்பனின் சொல் காக்க...
இனியனும் தன் நண்பனின் சொற்படி நாட்டையும் , நாட்டு மக்களையும் பேணினான்.
ராஜ்ஜியத்தை திறம்பட ஆண்டனர் லிங்காவும் , இனியனும். மதுராந்தகத்தை அடைய பல அரசர்கள் முற்றுகையிட , அவர்களை சமாளித்து திறம்பட ஆட்சி செய்தான் இனியன். வளர்ச்சிகள் பல அடைந்து வளமுடைய நாடாக பல மாற்றம் பெற்றது மதுராந்தகம்.
நண்பனுக்கு ஈந்த வாக்கை காப்பாற்றிய வேந்தர்கள் தங்கள் காலம் முடிந்தவுடன் தன் நண்பனிடம் சென்று சேர்ந்தார்கள்.
மீண்டும் பிறப்பெடுக்க.
*************
காலங்கள் உருண்டோட கண்விழித்தான் தீரன்.
கண்விழித்த எழுந்த தீரன் தான் படுக்கையில் படுத்திருப்பதை கண்டு திகைத்தான்.
'தான் கண்ட காட்சிகள் கனவா ? நனவா ?' என்று புரியாமல் குழப்பம் மேலிட விடியல் வரை விழித்துக் கொண்டிருந்தான் தீரன்.
தீரன் அன்று முழுவதும் குழப்பத்திலேயே இருக்க அதை கண்ட மீனாட்சி , தீரனின் அன்னை காந்தர்வரிடம் பதறினார்.
“ என்னங்க இங்க பாருங்க ! என் பிள்ளை முகமே சரியில்லை ! ஏதோ பேய்யை கண்டது போல் அரண்டு போய் உட்கார்ந்திருக்கான் “– மீனாட்சி
"ஆமாம் ! உன் பையனை பேய் அடிச்சிட்டாலும்! இவன் யாரையும் அடிச்சா பத்தாதா! போய் வேளைய பாருடி" என்று காந்தர்வன் கூற
இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் லிங் .
"அப்பா ! அம்மா! சொல்றது சரிதான் ! அவன் இன்னைக்கு சரியில்லை ! ஒரு மாதிரி தான் இருக்கான். அம்மா சொல்ற மாதிரி பேய் தான் அடிச்சிருச்சு போல !" என்று லிங் அங்கு வந்த கனிஷ்காவை பார்த்துக் கொண்டே கூறினான்.
லிங் கூறியதை கேட்டு முறைத்தபடியே அங்கு வந்த கனி
"இப்ப என்ன மேன் சொன்ன நீ ?" – கனி
"அது ஒன்றுமில்லை மேடம் சும்மா ! அம்மாக்கு ஒரு சப்போர்ட்" என்று லிங் இழுத்ததும்
"ம்ம்ம்... உன்னை.." என்று கனி ஆரம்பிப்பதற்குள் தீரன் அங்கு வந்தான். தீரன் வருவதைப் பார்த்த கனி லிங்கை முறைத்துவிட்டு அமர்ந்துவிட்டாள்
வந்தவன் மீனாட்சி அருகில் சென்று அவர் கைகளை பிடித்துக் கொண்டே
“ அம்மா ! எனக்கு ஒன்றுமில்லை ! ஏதோ ஞாபகம் ! அதுவா சரியாகிடும்மா ! ரொம்ப தலைவலிக்குது. எனக்கு ஒரு கப் காபி போட்டு குடும்மா!“ - தீரன்
“ அதான் துரையே! சொல்லிட்டாரே ஒன்னும் இல்லைனு! அப்புறம் என்ன ? கண்டதையும் யோசிக்காம போய் வேலையை பாரு “ என்று காந்தர்வன் கூற அவரை முறைத்த மீனாட்சி காபி போட செல்ல கனி அவரை தடுத்தாள்.
“ அத்தை எனக்கும் ஒரு கப் காபி ! “என்று கனிஷ்கா கூற ,
மீனாட்சி அவளை முறைத்துக் கொண்டே அவள் எதிரில் வந்து நின்றார்.
“ ஏண்டியம்மா ! இப்படி அடுத்தவங்க வீட்டுக்கு வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கியே ! நல்லாவா இருக்கு ! வேறவங்க வீட்டுக்கு போனா அங்க வேலை எல்லாம் செய்யனும்னு உனக்கு தெரியுமா ? தெரியாதா ? அதை விடு உங்க வீட்டில் இருக்கும் கிட்சன் பக்கம் எல்லாம் எட்டியாவது பார்ப்பியா ? இல்லையா ?" - மீனாட்சி
“ நோ அத்தை கிட்சன் பக்கம்லாம் நான் போனதே இல்லை. கிட்சனுக்குள்ள எல்லாம் போய் வெந்து சாக என்னால் முடியாது ! அதனால நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் ‘’– கனி
"அது என்னடியம்மா ! முடிவு ! வெளியவே வாங்கி திங்கலாம்னா ?" – மீனாட்சி
"அதில்லை அத்தை ! சமைக்க தெரிந்த பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்" – கனி
அதை கேட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த தீரனுக்கு புரையேறியது.
லிங் அவன் தலையை தட்டும் சாக்கில் குனிந்து, “ அப்புறம் மச்சான் ! எப்ப நீ சமைக்க , காபி போடலாம் கத்துக்கப் போற? ‘’ – லிங்
"நீ அடிவாங்கப் போறடா நாயே !" என்று தீரன் முணுமுணுக்க லிங் அமைதியாகிவிட்டான்.
சட்டென்று கனி தீரனை பார்த்து " என்ன தீரா ? என் புருஷன் எனக்கு எல்லாம் செய்வான் தானே ! நான் சொல்வதும் சரிதானே !" –என்று தீரனைப் பார்த்து கனி கண்சிமிட்டியபடியே கூற காந்தர்வன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார் அதற்கு நேர்மாறாக மீனாட்சி கோபத்தில் நின்றார்.
“ ஏய் ! என்னடி வாய் ரொம்ப நீளுது ! வீட்டிற்கு விருந்தாட வந்து இருக்கேன்னு பார்த்தா ! என் பையனை பேர் சொல்லிலாம் கூப்பிடுற “ – மீனாட்சி
“ பேர் சொல்லிக் கூப்பிடத்தானே பேர் வைப்பாங்க ஓல்டு லேடி ! வேறு எப்படி கூப்பிடனும் உங்க பிள்ளைய ? சார் ! துரை ? இல்லை தீரேந்திரரே ? னு கூப்பிடனுமா ?" என்று கூறிவிட்டு சிரித்தபடியே கனி நகர முற்பட மீனாட்சி கொதித்து விட்டார்.
“ ஏய் நில்லுடி “ என்று மீனாட்சி எதோ கூற வர குழல் இடைபுகுந்தாள்
"அம்மா விடுங்க மா! போய் வேலைய பாருங்க ! அவங்க நம்ம கெஸ்ட் தேவையில்லாம அவங்ககிட்ட எதுக்கு கத்திக்கிட்டு இருக்கீங்க?" என்று கூறிய குழல் கனியை முறைத்துக் கொண்டே மீனாட்சியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் .
கனியும் சிரித்தபடியே சென்றுவிட அவள் அழைத்த தீரேந்திரரே என்ற வார்த்தையில் திகைத்து அமர்ந்து இருந்தான் தீரன்.
*************
குகையில் கடோத்கஜன் கலிங்காவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“ கலிங்கா ! வரைபடத்தை எப்படியாவது கைப்பற்றி வா ! அதை வைத்து தான் நாம் மந்திரவியூகத்தை அடையமுடியும்” - கடோத்கஜன்
அப்படியே செய்கிறேன் குருவே என்று கலிங்கா செல்ல முற்பட கடோத்கஜன் மறுபடியும் அழைத்தான்.
"கலிங்கா ஒன்றை நினைவில் வைத்துக் கொள்! அந்த வீட்டின் உள்ளே நாம் செல்ல இயலாது . வேறு விதமாகத்தான் அதை நாம் கைப்பற்ற முடியும் “ என்று கலிங்காவை எச்சரிக்கை செய்து அனுப்பினான் கடோத்கஜன்.
மந்திரம் 42:
லிங் தீரனின் காதை கடித்தான்
“ மச்சி உனக்கு பொழுது போகலேனா இவங்க இரண்டு பேரையும் பேச விட்டா போதும்டா ! அவங்க சண்டை போட்ட மாதிரியும் இருக்கும் உனக்கும் பொழுது போன மாதிரியும் இருக்கும் - “ என்று கூறிவிட்டு லிங் ஓட
" நில்லுடா நாயே ! உனக்கு வர வர நக்கல் அதிகமா போச்சு ! உன்ன இன்னைக்கு நான் விட மாட்டேன்" என்று லிங்கை அடிக்கத் துரத்தினான் தீரன்.
தீரனிடம் இருந்து தப்பித்து லிங் வெளியே வர எதிரில் வந்தாள் ரூபா. ரூபாவை பார்த்ததும் லிங் நின்றுவிட்டான்.
ரூபாவை பார்த்த தீரனும் நின்றுவிட , அவர்களை கடந்து ரூபா சென்றதும் அவளை பின்பற்றி லிங்கும் செல்ல முயன்றான்.
அப்போது வேகமாக அவனை தடுத்து நிறுத்தினான் தீரன்
“ மச்சி என் தங்கச்சி கிட்ட வம்பு பண்ண அவ்ளோ தான் “ – தீரன்
“ என்னது ரூபா தங்கச்சியா ? இது எப்ப இருந்து ? ஆனா எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்குடா ! அவகூட பல ஜென்மம் வாழ்ந்த மாதிரி இருக்கு . கொஞ்சம் சேர்த்து வைடா ! “ – லிங்
“ அப்படியா ? என்ன அவள லவ் பண்றியா நீ ? நம்ப முடியலயே ! நீ தான் எவ்வள பார்த்தாலும் ஜொள்ளுவிட்டுட்டு அலையுற ஆள் ஆச்சே ? ரூபாவும் அந்த வரிசையில் தான் வச்சிருக்கியா ? “ –தீரன்
"இல்லை மச்சான் ! உண்மையிலேயே ரொம்ப லவ் பண்றேன்டா!" – லிங்
"சரி ! சரி ! போனா போகுது உன்னைவிட நல்ல இளிச்சவாயன் அவளுக்கு கிடைக்க மாட்டான்! நான் சேர்த்து வைக்கிறேன்" - தீரன்
அதை கேட்டு லிங் முறைத்து அவனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தான் இனியன்
இனியனைப் பார்த்ததும் அவன் அருகில் சென்று அவனை அணைத்துக் கொண்டான் தீரன்.
பல ஜென்மங்கள் தாண்டி கண்ட தன் நண்பனை தீரன் அணைத்துக் கொள்ள இனியன் குழம்பினான்.
"என்னாச்சு தீரன் ! ?" – இனியன்
இனியன் அப்படி கேட்டதும் வேகமாக சுதாரித்த தீரன் ஒன்றுமில்லை சும்மா தான் என்று சட்டென்று விலகினான்.
“ என்னாச்சு இனியன் காலையிலேயே வந்துட்டீங்க ? ஏதாவது பிரச்சனையா ? “ - தீரன்
தீரன் அப்படி கேட்டதும் அவன் கைகளில் அந்த பெட்டியை கொடுத்தான் இனியன். அதை தீரன் திறந்து பார்க்க அதில் ஓலைசுவடி இருந்தது. அதை கண்ட தீரன் திகைத்தான்.
தீரனின் நிலை புரியாமல் பேசினான் இனியன்
“ இதை உன்னிடம் கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன்’’ என்று கூறிய இனியனின் கண்கள் குழலை தேடியது.
அப்போது அங்கு வந்த காந்தவர்வன் இனியனை பார்த்ததும் வரவேற்றார் .
“அடடே இனியன் தம்பியா ! வாப்பா வா ! ‘’ - காந்தர்வன்
அவரது வரவேற்பை அடுத்து அருகில் சென்றவன், "சார் ! உங்க கூட கொஞ்சம் தனியா பேசனும்" – இனியன்
அதை கேட்ட காந்தர்வன் யோசனையோடு அவனை அழைத்துக் கொண்டு பின்பக்கம் சென்றார்
"என்னப்பா ? என்ன விசயம் ? யாருக்கும் தெரியாமல் தனியா பேசுற அளவுக்கு " – காந்தர்வன்
"எனக்கு ரூத்ரமூர்த்தி சார் பத்தி தெரியணும் ?" – இனியன்
"அதான் அன்னைக்கே அவனைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேனேப்பா ! இன்னும் வேற என்ன இருக்கு அவனைபற்றி சொல்ல ? எனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லிட்டேனே தம்பி" என்று காந்தர்வன் குழப்பமாக கேட்டார்
இனியன் அதற்கு மறுப்பாக தலையசைத்தபடி "இல்லை சார்! நீங்க இன்னும் சில விசயம் சொல்லல" – இனியன்
"என்ன சொல்றீங்க ?" – காந்தர்வன்
“ நீங்க ஏன் உங்க தம்பி காதல் மணம் பண்ணிக்கிட்டத மறைச்சீங்க ? “ – இனியன்
அதற்கு காந்தர்வன் தயங்க,
"அப்ப ரூத்ரமூர்த்தி காணாமல் போனதுக்கு நீங்க தான் காரணமா ?" – இனியன்
"அய்யோ ! அப்படியெல்லாம் இல்லை தம்பி ! நான் அவனை பற்றி எனக்குத் தெரிந்த எல்லாத்தையும் சொல்லிடுறேன். நீங்க தான் அவனை கண்டுபிடிச்சு தரனும்" என்று கூறிய காந்தர்வன் பேசத் தொடங்கினார்.
என் கல்யாணத்திற்கு மூன்று மாதத்திற்கு அப்பறம் திடீர்ன்னு ஒரு நாள் ருத்ரன் என்கிட்ட வந்து தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் , அந்த பெண்ணை உடனே மணம் புரிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் என்கிட்ட வந்து சொன்னான், தம்பி ! அதை கேட்டு நானும் அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன்" – காந்தர்வன்
இனியன் அதை கேட்டு புரியாமல் அவரைப் பார்க்க காந்தர்வன் தொடர்ந்தார்
“ தான் தவறு செய்துவிட்டதாகவும் செல்வி அதான் அவன் காதலித்த பெண்ணின் பெயர் உண்டாகியிருப்பதாகவும் சொன்னான். அவன் செய்த தவறு வெளியே தெரியக் கூடாதுனு.. அவர்கள் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணமா, நான் செஞ்சு வைச்சேன். ஆனா திடீர்னு ஒரு நாள் அவங்கள காணோம்.. எங்க போனான்? ஏன் போனான்? என்ன ஆச்சுனு தெரியல ? அவன் மகன் தான் லிங்கேஷ் ன்னு அவன பாத்ததும் கண்டுபிடிச்சிட்டேன். அவன் சொல்றத பார்த்தா அவனையும் விட்டுட்டு ருத்ரன் போயிருக்கான் ! ஏன் இப்படி ருத்ரன் செஞ்சான்னு எனக்கு தெரியல தம்பி " – காந்தர்வன்
"அப்ப லிங்கேஷ் அம்மா ?" – இனியன்
"தெரியல தம்பி ! செல்வியையும் காணாம நான் தேடி அலைஞ்சேன் ! செல்விக்கும் என்ன ஆச்சுனு தெரியல ? அவளும் கிடைக்கல.. – காந்தர்வன்
இப்படி பேசிக் கொண்டே போனவர் ஏதோ ஞாபகம் வந்தவராய் இனியனிடம் திரும்பினார்
“ ஆமாம் இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் - ? “ – காந்தர்வன்
“ செல்வின்னு நீங்க கூப்பிடுறவங்க என் அத்தை . “ – இனியன்
அதை கேட்டு காந்தர்வன் திகைத்து பேச்சிழந்து நின்றார். இனியன் தொடர்ந்து பேசினான்.
"அதுமட்டுமல்ல சார் ! அவங்க இரண்டு பேரும் இப்ப உயிரோடு இல்லை." – இனியன்
"என்ன செல்வியும் உயிரோடு இல்லையா ? என்று அதிர்ந்தவர் “ அன்னைக்கு என் தம்பிய நான் அனுப்பாம இருந்திருந்தா அவன் உயிரோடு இருந்திருப்பான். அவன அனுப்பி நான் தப்பு பண்ணிட்டேன் “ என்று காந்தர்வன் அழுக
“ அப்பா ! “ என்ற அழைப்பை தொடர்ந்து திரும்பிப் பார்த்தனர் இருவரும் அங்கு தீரன் லிங்குடன் நின்று இருந்தான்
லிங்கை பார்த்ததும் அவனை கட்டிக் கொண்டார் காந்தர்வன்
"இப்படி உன் அப்பன் எல்லாரையும் விட்டுட்டு போயிட்டானேடா ! இனி நீ அனாதை இல்லைடா ! உனக்கு நாங்களா இருக்கோம்" என்று அவர் கூற அனைத்தையும் கேட்ட லிங் சந்தோசத்துடன் 'பெரியப்பா' என்றுஅவரை அணைத்துக் கொண்டான்.
அவர்களின் மகிழ்ச்சியில் தலையிடாமல் இனியன் கிளம்பி வெளியே வர அவனை தொடர்ந்து தீரனும் வந்தான்
"தேங்க்ஸ் இனியா !" என்று தீரன் சொல்ல,
அதற்கு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுச் சென்றான் இனியன்
இனியன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த தீரன் காதில் எதோ சத்தம் கேட்க அந்த சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான் தீரன். அந்த சத்தம் தீரனை வெளியில் இழுத்துச் சென்றது. அங்கு யாரும் இருக்கும் அறிகுறி தென்படவில்லை. அப்போது தான் தன் கையில் ஓலைசுவடி இருப்பதை கவனித்தான் தீரன் .
இனியன் கொடுத்ததை தான் பத்திரப்படுத்தவில்லை என்பதை அவன் உணர்ந்து சுதாரிப்பதற்குள் பருந்து வந்து அவன் கையில் இருந்த ஓலைச்சுவடியை பறித்துவிட்டுச் சென்றது. ஓலைச்சுவடியை பருந்து எடுத்துக் கொண்டு செல்ல தீரன் என்ன செய்வதென்று புரியாமல் அது சென்ற திசையை பார்த்தபடி நின்றான்.
******************
பருந்து சென்று கடோத்கஜன் முன்னால் நின்றது.
"சபாஷ் ! கலிங்கா ! காரியத்தை சாதித்துவிட்டாய் ! இனி நாம் தான் உலகை ஆளப் போகிறோம் ! வேகமாக சென்று கன்னியவளை அழைத்து கொண்டு வா !" என்று கடோத்கஜன் கூறிச் சிரிக்க ,
இதை தன் ஞான திருஷ்டி மூலம் பார்த்து கொண்டிருந்த அடியார் “ இறைவா ! இது என்ன சோதனை ? “ என்று கூறியவர் வேகமாக தீரனை நோக்கி விரைந்தார்.