Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மயிலரசி

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
9.

அவளுக்கு தான் மயில்வீரா உயிர் மூச்சு ஆனால் அவனுக்கு யாரோ தானே... யார் என்று புருவம் சுருக்கி பார்க்க, அவன் பார்வை எதற்கென்று பார்க்க சுதாரித்தவள், "பாட்டி இல்லையா?" என்றாள்.

அவளின் தேன்குரலில் ஒரு நொடி மயங்கி நின்றவன் தமிழ் பேசும் பெண்ணை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தான்.

"நீங்க?"

"நான் அன்பிற்கரசி உங்க எதிர் பிளாட்ல தான் இருக்கேன். உங்க வீட்டில இருக்க பாட்டி எனக்கும் சமைச்சு கொடுப்பாங்க இன்னைக்கு இன்னும் அவங்க சமைக்க வரல.. போன் பண்ணாலும் எடுக்கல.. அதான் என்னன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன். இருக்காங்களா?" என்றாள்.

பாட்டி எதிர் வீட்டு பெண்ணுக்கும் சமைத்துக் கொடுக்கிறார் என்பதே புதுமையான விஷயமாக இருந்தது அவனுக்கு. தனக்கு இதுவரை இது தெரியாமல் இருந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டவன், "பாட்டி இல்லை கிளம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்." என்றான்.

தன் கை கடிகாரத்தை பார்த்தவள், "ஓ அப்படியா சரிங்க நான் வெளிய போய் சாப்டுக்கிறேன்." என்று செல்ல திரும்பினாள்.

"ஒரு நிமிஷம்." என்றான் அவசரமாய்.

"உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா எங்க வீட்டிலேயே சாப்பிடலாம். பாட்டி எனக்கு நிறைய தான் சமைச்சு வச்சுட்டு போய் இருக்காங்க." என்றான் தயங்கியபடி.

"இல்ல இருக்கட்டும் பரவாயில்லை எதுக்கு உங்களுக்கு சிரமம்.. நான் வெளியே போய் சாப்பிட்டுக்குறேனே.. " என்றாள் அவளும் தயங்கியபடி.

"அதெல்லாம் ஒரு சிரமும் இல்லைங்க எனக்கு எதிர் பிளாக்ல இருக்கேன்னு சொல்றீங்க ஆனா எனக்கு இதுவரைக்கும் தெரியாது. எனக்கு எந்த தொந்தரவும் இல்ல வந்து சாப்பிடுங்க வாங்க. " என்றான் வீரா.

அவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.. அவன் அனுமதியோடு அவன் வீட்டிற்குள் முதல் முதலாக வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்.

சோர்ந்தபடி மீண்டும் சமையலறைக்குள் செல்ல போக, "என்ன ஆச்சு உங்களுக்கு உடம்பு சரியில்லையா?" என்றாள்.

அவன் திரும்பி அவளை பார்க்க, "இல்ல பார்க்க ரொம்ப சோர்வா தெரியுறீங்க அதான் கேட்டேன்." என்றாள்.

"ஆமாங்க காலையிலிருந்து என்னவோ உடம்பு ஒரு மாதிரி இருக்கு ஃபீவர் வரப்போகுதுன்னு நினைக்கிறேன்." என்றான்.

"ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்." என்று வேகமாய் எதிரில் இருந்த தன் வீட்டுக்கு சென்றாள். சில நொடிகள் கழித்து கையில் ஸ்டெதஸ்கோப்புடன் மருத்துவ கிட்டுடனும் வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவளை ஆச்சரியமாய் பார்த்தவன், "நீங்க மெடிக்கல் ஸ்டூடண்டா?" என்றான்.

"ஆமாங்க பீடியா இன்னும் 6 மாதத்தில் முடியுது." என்று உள்ளுக்குள் அவனுடன் பேசும் ஒவ்வொரு நொடியையும் அவள் இதயத்தில் தங்க எழுத்துகளில் பொறித்துக் கொண்டிருந்தாள்.

"அது சரி நான் என்ன குழந்தையா? பிடியா டாக்டர் நீங்க எனக்கு பார்க்க.." என்றான் கிண்டலாய்.

"நான் முதலில் ஒரு ஜெனரல் டாக்டர், அப்புறம் தான் பிடியா டாக்டர். இருந்தாலும் நான் வைத்தியம் பார்க்கிற எல்லோரும் என் கண்ணுக்கு குழந்தைங்க தான்." என்று புன்னகைத்து ஸ்டேதஸ்கோப்பை மாட்டிக் கொண்டு அவனை பரிசோதிக்கத் நெருங்கினாள்.

"எ... என்ன பண்றிங்க?" என்றான் மயில் வீரா.

"உங்களை டெஸ்ட் பண்ண போறேன்." என்று அவனுக்கு வைத்தியம் பார்த்தாள்.

"பிவர் ஹையா இருக்கு. மழைல நனைஞ்சிங்களா?" என்று கேட்டாள்.

"ஆமாங்க நேத்து மழைல கொஞ்சம் நனைஞ்சுட்டேன்." என்றான்.

"அதான் பீவர் வந்திருக்கு. என்ன சாப்டிங்க?"

"இப்போ இன்னும் சாப்பிடல. இனி தான் சாப்பிடணும்." என்று தன் முன்னால் இருந்த தட்டை காட்டினான்.

'அடடா இவருக்கு பீவர் னு தெரியாம இவருக்கு பிடிச்ச மீன் குழம்பு செஞ்சு வச்சுட்டேனே. சாப்டாம விட மாட்டாரே.' என்று உள்ளுக்குள் வருந்தியவள்.

"ஜுரம் அடிக்கும் போது இந்த மாதிரி புட் சாப்பிட கூடாது." என்றவளை பாவமாய் பார்த்தவன், "ஏங்க எனக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். அதை போய் சாப்பிட கூடாதுன்னு சொல்றிங்க... அதுவும் பாட்டி எனக்காக பார்த்து பார்த்து செய்ற மீன் குழம்பு எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா? ஒன்னு செய்யலாம். இந்த சாப்பாட்டை நான் சாப்பிடுடறேன். அப்புறம் நீங்க மாத்திரை கொடுங்க போட்டுக்குறேன்." என்றவனை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.

'நம்ம சமைச்ச சாப்பாடு இவருக்கு இவ்ளோ பிடிக்கிது பரவால்ல நாம சமைக்க கத்துக்கிட்டது வேஸ்ட்டா போகல.' என்று நினைத்தவள், "சொன்னா கேட்கணும். நான் இந்த குழம்பை பிரிட்ஜ்ல வச்சுடறேன் உடம்பு சரியான பிறகு நீங்க சாப்பிடுங்க. இருங்க வரேன்." என்று சென்றவள் வெந்நீர் எடுத்து வந்து அவன் நெற்றியில் பத்து போட்டாள்.

“அப்படியே ரெண்டு நிமிஷம் படுத்திருங்க இதோ வரேன்." என்று சமையலறைக்குள் நுழைந்தவள் வேகமாக அவன் சாப்பிட அரிசி, சீரகம் வறுத்து பொடித்து கஞ்சி செய்தாள். புதினா துவையல் அரைத்து எடுத்து வந்து அவனை எழுப்பினாள்.

"என்னங்க இந்தாங்க எழுந்திருங்க சாப்பிட்டு டேப்லெட் போட்டு படுத்துக்கோங்க. ஜுரம் குறையும்." என்று கூறி கஞ்சியை கொடுத்தாள்.

கஞ்சியை குடிக்கக் கூட முடியாமல் அவன் கரம் நடுங்க தட்டை வாங்கி தானே ஊட்ட போக அவளை விழிகள் விரித்து அதிர்ச்சியாய் பார்த்தான்.

"என்ன பார்க்கிறிங்க? இப்போ நீங்க சாப்பிடலைன்னா ஹாஸ்பிட்டல் பெட்ல தான் நம்மளோட அடுத்த மீட் இருக்கும் எதையும் யோசிக்காம சாப்பிடுங்க." என்று அதட்டி கஞ்சி புகட்டி மாத்திரை கொடுத்து தூங்க சொன்னாள்.

"நீங்க முதல்ல சாப்பிடுங்க அப்போ தான் தூங்குவேன்." என்று அடமாய் கூறிவிட வேறு வழியில்லாமல் அவனுக்கு போட்டு வைத்திருந்த தட்டை எடுத்து சாப்பிட போக, "ஐயோ அது வேணாம்ங்க அது ஆறி போயிருக்கும் அதுவும் இல்லாம அதுல ஒரு வாய் நான் சாப்பிட்டேன்." என்றதும் புன்னகைத்தவள், "பிரெண்ட்ஸ்குள்ள இதெல்லாம் சகஜம்ங்க. அதுவும் இல்லாம இவ்ளோ சாப்பாட்டை வேஸ்ட் பண்ண முடியாது. அதனால நானே சாப்பிடறேன்." என்று சாப்பிட்டாள்.

மன்னவனின் கரம் பட்ட உணவை உண்ண கசக்குமா என்ன? அமிர்தம் போல் இனித்தது. உள்ளுக்குள் தான் பிறந்ததற்கான பலன் அடைந்துவிட்டது போல் அப்படி ஒரு பேரானந்தம்.

அவன் உறங்கவும் தனியே விட மனம் வராமல் அவளும் அங்கேயே அமர்ந்து படிக்கத் தொடங்கினாள்.

இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவன் கண்டது எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி புத்தகத்தை மார்பில் வைத்தபடி உறங்கும் அபியை தான்.

வீரா எழுந்து முகம் கழுவி வரவும் எழுந்து அமர்ந்திருந்தாள்.

"சாரி. உடம்பு சரி இல்லாதவரை தனியா விட்டுட்டு போக மனசு வரல அதான் இங்கயே உட்கார்ந்து படிச்சுட்டு இருந்தேன். எப்படி தூங்கனேன்னு தெரியல. இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?" என்று கேட்டாள்.

"ஹ்ம் இப்போ பரவால்லங்க." என்று கூறியவன், "இங்க எவ்ளோ நாளா இருக்கீங்க?" என்றான்.

"கொஞ்ச நாளா தான். படிப்பு முடிஞ்சதும் இந்தியா போய்டுவேன்." என்றாள்.

"ஓஹ் சரிங்க."

"சரிங்க பால் காய்ச்சு வச்சுருக்கேன். நயிட் பால் பிரெட் மட்டும் சாப்பிட்டு மாத்திரை போடுங்க. நாளைக்கு எனக்கு ப்ராக்டிகல் இருக்கு. சோ, காலைலயே போய்டுவேன். உடம்பை பார்த்துக்கோங்க நாளைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க அப்போ தான் நல்லா இருக்கும். நான் வரேன்." என்று கூறிவிட்டு வெளியேறினாள்.

அதில் இருந்து ஒரு மெல்லிய நட்பு இருவருக்கும் உருவாகி இருந்தது.

மறுநாள் காலை எழுந்து கண் விழித்து கதவை திறந்தவனின் முன் கீழே ஒரு கூடை இருந்தது.

உள்ளே எடுத்து சென்று பார்த்தால் மூன்று டிபன் பாக்ஸ் இருந்தது.

"இன்றும் பாட்டிக்கு உடல்நிலை முடியாததால் வர மாட்டாராம். அதனால காலை சாப்பிட கஞ்சி, மதயம் ரசம் சாதம் இருக்கின்றது. இரவு பால் பிரெட் சாப்பிடுங்கள். கட்டாயம் வெளி உணவை தவிர்க்கவும்." என்று இருந்தது ஒரு துண்டு காகிதத்தில். பார்த்ததும் புன்னகை மலர உள்ளே எடுத்து சென்று சாப்பிட்டான்.

அதோடு அடுத்த மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடியது. அவ்வப்பொழுது இருவரும் பார்ப்பதும் புன்னகைப்பதும் ஒரு சில விசாரிப்புகளும் வாடிக்கையானது. அவனை பொறுத்தவரை அப்படி தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அபி எப்பொழுதும் போல் தன் பணிவிடைகளால் அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

ஒரு நாள், "பாட்டி நேத்து வச்சுக் கொடுத்த நண்டு ரசம் வேற லெவல். எங்க இருந்து தான் இவ்ளோ அருமையா சமைக்க கத்துக்கிட்டிங்களோ... தாத்தா உங்க சமையலுக்கு அடிமையா இருந்திருப்பாரே.. கொடுத்து வச்ச மனுஷன். சமைக்கும் உங்க கைக்கு ஒருநாள் தங்க காப்பு செஞ்சு போடறேன்."

இன்னொரு நாள், "இன்னைக்கு வச்சிருந்த புதினா மிளகு ரசம் அட்டகாசம். எனக்கு இருந்த ஜலதோஷம் எங்க போச்சுன்னே தெரியலை பாட்டி. ஐ லவ் யூ பாட்டிம்மா." என்று அவர் கன்னத்தில் முத்தமிடுவான்.

இன்னொரு நாள், "பாட்டி ஆனாலும் உங்க கைல மேஜிக் தான் இருக்கு. எப்படி என்னோட ரூமை இவ்ளோ அழகா மாத்தினீங்க? ஆனாலும் கலக்குறீங்க." என்று புகழுவான்.

"பாட்டி என் ரூம்ல மாட்டிருக்க பெயின்டிங்ஸ் எல்லாம் எங்க வாங்குனீங்க? இது எல்லாம் பார்க்கும் போது வெறும் ஓவியம் மாதிரி தெரியலை. ஒவ்வொரு படத்துலயும் உயிர் இருக்கு. அவ்ளோ அழகா இருக்கே.. அதுவும் இந்த பொண்ணோட கண்ணில இருக்க ஏக்கம் எனக்குள்ள ஏதோ சொல்ற மாதிரி இருக்கு." என்று கேட்டான்.

"நான் எங்க பா இதெல்லாம் வாங்குனேன். எதிரில் இருக்கா பாரு அன்பு அவ கிட்ட கேட்டேன். அவ தான் போன்ல வாங்கி கொடுத்தா." என்று சமாளித்தார்.

"ஓஹ் அவ செலக்ட் பண்ணதா ரொம்ப அருமையா இருக்கு." என்று பாராட்டி ஒவ்வொன்றையும் தினமும் தூங்கும் முன் ரசிப்பான். ஆனால் அதில் இருந்த பெயரை கவனிக்க தவறி விட்டிருந்தான் என்பது அவன் துரதிஷ்டம்.

இவனின் ஒவ்வொரு சேட்டையையும் அவன் அறியாமல் இவள் ரசிப்பாள். மொத்தத்தில் அவளின் முழு உலகமும் அவன் மட்டுமே... அதுவும் அவன் அறியா உயிர் காதல். எப்பொழுது இவனுக்கு தெரியப்படுத்த போகின்றாளோ?...

இன்னும் மூன்று மாதங்களில் அவளின் படிப்பு முடிய போகின்றது என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்று மாதங்கள் முடிந்த பின் அவன் இல்லாமல் அவனை காணாமல் அவனுக்கென்று எதுவும் செய்யாமல் எப்படி இருக்க போகின்றேன் என்று எண்ணியே தினமும் மருகினாள்.

அதன்விளைவு அவனிடம் தன் நேசத்தை கூற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
10.

தினமும் அவனிடம் பேசும் சந்தர்ப்பங்களை உருவாக்கி சில நேரங்களில் தன்னை பற்றி மேலோட்டமாக கூறினாள்.

"அவ்ளோ வசதியா இருக்க பொண்ணு எதுக்கு இங்க யாருமே இல்லாத மாதிரி வந்து தனியா இருக்க." என்று கேட்டான் மயில்வீரா.

"இல்லப்பா உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்ல... சொந்தங்கள் இருந்தும் நான் இரு அனாதை தான்னு. எங்கம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அவங்களுக்கு பிறகு தாத்தா தான் எனக்கு எல்லாம். அவரும் போன பிறகு பதினெட்டு வயசு ஆகாததால அப்பாகூட தான் அந்த வீட்ல இருக்கனும்னு கட்டாய சிட்டிவேஷன். அதனால நேரம் அமைஞ்சுதும் அங்க இருந்து இங்க வந்துட்டேன். எனக்கு நல்லா தெரியும் எல்லோரும் என்னோட சொத்தை தான் யூஸ் பண்றாங்க. ஏன்னா எல்லாமே என்னோட அம்மாவுக்கு சேர வேண்டியது. அவங்களுக்கு பிறகு அது எனக்கு மட்டும் தான்னு அம்மாவும் தாத்தாவும் உயில் எழுதிட்டாங்க. இன்னொரு விஷயம் என்னன்னா நானே நினைச்சாலும் என் சொத்துக்களை விற்க முடியாது. உபயோக படுத்த மட்டும் தான் முடியும். இந்த சொத்தினால வர எல்லா வரவும் எனக்கு தான் சேரும். எப்படியும் எங்க அப்பா என்னை விட மாட்டாருன்னு தெரிஞ்சு தான் எனக்கு பதினெட்டு வயசாகிற வரைக்கும் இவ்ளோ சம்பளம்னு மாசம் மாசம் அவங்களுக்கு குறிப்பிட்ட தொகை போகணும்னு எழுதிருக்காங்க. நான் இறந்திட்டா நேரடியாக அனாதை இல்லத்துக்கு சேர்ந்துடும்னு உயில்ல எழுதி இருக்கு. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அதனால தான் இந்த நொடி வரை உயிரோட இருக்கேன். இல்லைன்னா இந்நேரம் மண்ணுக்குள்ளே இருந்திருப்பேன். சின்ன வயசுல இருந்தே உண்மையான பாசத்துக்கு ஏங்கி ஏங்கி இப்போ எதுக்குமே எதிர்பார்ப்பு இல்லாம போய்டுச்சு. பாப்போம் எதிர்காலத்துலயாவது என் தலையெழுத்துல நல்ல வாழ்க்கை எழுதி இருக்கான்னு.. நான் இவ்ளோ மனம் திறந்து பேசுறதே உங்ககிட்ட தான்..." என்றாள் அபி சோகமான முகத்தை மறைத்து லேசாக புன்னகைத்து.

இவ்வளவு சின்ன வயதில் இவள் பட்ட துயரங்களை நினைத்து மிகவும் வருத்தமுற்றவன், "ஏன் இப்படி பேசுற... உனக்கு நான் இருக்கேன். உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேட்கலாம் சரியா?" என்று அவள் தலையை மென்மையாய் கோதினான்.

விழிகள் மூடி அவன் வருடலை தனக்குள் தேக்கி வைத்து கொண்டாள். அவன் கரம் பட்டதும் தன் அன்னையின் அரவணைப்பு கிடைத்தது போல் ஒரு அமைதி கிடைத்ததும் வாழ்க்கை முழுவதும் இந்த அரவணைப்பு வேண்டும் என்று சிறு குழந்தை போல் அவளின் மனம் ஏங்கியது.

அது தான் அவர்கள் மனம் திறந்து பேசிய கடைசி உரையாடல். அன்றே மயில்வீராவின் வீட்டிற்கு வந்திறங்கினாள் ஒரு இளம் பெண். அவள் சுபாஷினி மேகவர்மனின் தங்கை. வீராவுடன் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்து இங்கே சேர்ந்திருக்கிறாள். நன்கு படிப்பவள் தான் என்ன... புத்தி தான் குறுக்கு புத்தி. அதனால் ஸ்காலர்ஷிப்பில் படிக்க வருகிறேன் என்று இங்கு வந்திருக்கிறாள். அவள் வந்திருக்கும் காரணத்தை அவள் மட்டுமே அறிவாள்.

அவள் வந்ததும் மயில்வீரா அவளுடன் அதிக நேரம் செலவழித்தான். என்றாவது அபியை நேருக்கு நேர் காணும் பொழுது சின்ன சிரிப்புடன் கடந்து விடுவான். அவன் வேண்டுமென்று அபியை ஒதுக்கி வைக்கவில்லை என்பது நன்றாக புரிந்தது. அவனின் நேரத்தை வந்திருக்கும் பெண்ணோடு கழிக்க அவனே விரும்புகின்றான் என்பதை நன்கு புரிந்து கொண்டாள். அதுவே அவளின் மனதை மிகவும் காயப்படுத்தியது. இறுதி வரை தனக்கு உண்மையான அன்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.

அந்த பெண் வந்ததும் முதல் வேலையாக பாட்டியையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டு இருந்தாள். அவனை முழுவதுமாக நெருங்க முடியாமல் உள்ளுக்குள் துடிக்க தொடங்கி விட்டாள். அவனுக்கு செய்யும் சேவைகளில் தான் அவளுக்கு பூரண திருப்தியடைவாள். ஆனால் இன்றோ உடல் மட்டுமே அவளிடம் இருந்தது. உயிர் அவனிடம் மட்டுமே இருக்கின்றது என்று உணர்ந்து கொண்டாள்.

இன்னும் ஒரு வாரமே இருந்தது அவள் கல்லூரி முடிந்து இந்தியா திரும்ப... அன்று வெள்ளிக்கிழமை முதல் முறையாக அவனுக்காகவென்று பட்டுப்புடவை உடுத்தி அவன் வழக்கமாக வரும் சிவன் கோவிலுக்கு சென்றிருந்தாள்.

சிவனின் முன் மனமுருகி பாட தொடங்கினாள்.

"என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே
ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா..."

கண்ணீர் ஆராய் ஓட அவளின் தோள் மீது ஒரு கரம் பட, பட்டென்று திரும்பியவளின் முன் நின்றிருந்தான் அவளின் மனம் கவர்ந்தவன் ஆனால் வேறு ஒருவளுடன்...

"ஹே அன்பு நீயா இங்க எப்பவும் பாடுவ? ஒவ்வொரு முறையும் உன் பாட்டை கேட்டுட்டு உன்னை தேடுவேன் ஆனா உன்னை பார்க்க முடியாது. இன்னைக்கு தான் தெரியுது அது நீ தான்னு... என்னாச்சு ஏன் ரொம்ப இளைச்சு போயிட்ட... நீ பாடுவேன்னு என்கிட்டே ஒருமுறை கூட இதுவரைக்கும் சொன்னதில்லையே..." அவனின் வார்த்தைகள் அவளுக்குள் உயிர் கொடுக்கும் அமிர்தமாய் இறங்க, "நீங்க கேட்டதே இல்லையே.." என்றாள் அவளும் கண்களை துடைத்து கொண்டே.

"உன்னை பார்க்கவே முடியல..." என்றவனை மனதிற்குள் வறுத்தவள், "நான் அங்கேயே தான் இருக்கேன்... உனக்கு தான் இந்த மேனா மினுக்கி வந்ததுல இருந்து நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே இல்ல. இதுல என்னை கேட்கிறான் பாரு கேள்வி முட்டா பய..."

"ஹே என்னாச்சு ஏதோ யோசிச்சுட்டு இருக்க... ஏதாவது பிராப்ளமா?" என்று கேட்கவும், "உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் கொஞ்சம் பேசணும்... தனியா.." என்றதும் பக்கத்தில் இருந்தவளை காண, "இட்ஸ் ஓகே. நீங்க பேசிட்டு இருங்க. நான் சாமி கும்பிட்டு வரேன்." என்று அவள் உடனே நகர்ந்து விட, இருவரும் ஓரிடத்தில் தனித்து சென்ற பின், "சொல்லு அன்பு என்னாச்சு? ஏன் தனியா பேசணும்னு சொன்ன?" என்று கேட்டான்.

அவனை ஒரு நொடி ஆழ்ந்து நோக்கி விட்டு, "நான் உங்களை நேசிக்கிறேன். உங்ககூட காலம் முழுக்க சந்தோசமா வாழணும்னு நினைக்கிறன். உங்களுக்கும் என்னை பிடிக்கும் தானே... என்னை கல்யாணம் செய்துக்குறிங்களா?" என்று துணிந்து கேட்டதும் கோபம் கொண்டு அவளை அறைய போனவன் சுற்றம் உணர்ந்து கரத்தை கீழே இறக்கி அழுத்தமாய் முறைத்தான்.

"அறிவிருக்கா உனக்கு... எங்க வச்சு என்ன பேசிட்டு இருக்க? என்னைக்காவது உனக்கு அந்த மாதிரி எண்ணம் வர அளவுக்கு நான் உன்கிட்ட நடந்திருக்கேனா? எதை வச்சு என்கிட்டே இப்படி பேசிட்டு இருக்க...

என்கூட இருக்காளே அவ யாருன்னு நினைச்ச மூணு வருஷமா விரும்புறோம்.. அடுத்த மாசம் எங்களுக்கு கல்யாணம். எல்லாமே பிக்ஸ் பண்ணியாச்சு. என் திருமணத்தை நினைச்சு அவ்ளோ கனவு கண்டுட்டு இருக்கேன். ஆனா இங்க நீ என்னென்னவோ பேசிட்டு இருக்க... இல்லை என்னை பார்த்தா இளிச்சவாயன் மாதிரி இருக்கா? உனக்கு பாசம் காட்ட யாருமில்லைன்னா பாசம் காட்டற எல்லோர் கிட்டயும் இப்படி கேட்டுட்டு போய் நிப்பியா? அசிங்கமா இல்ல உனக்கு...

ஏதோ யாரும் இல்லைன்னு சொன்னியேன்னு உன்கிட்ட கொஞ்சம் அன்பா பேசினா அதுக்குள்ள இப்படி ஒரு எண்ணம் வந்துருமா உனக்கு? என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு. பாசம் கிடைக்காம இருக்கியே சின்ன பொண்ணுன்னு ஒரு ரெண்டு வார்த்தை பேசினவுடனே எப்படி வெட்கமே இல்லாம என்கிட்டே வந்து இப்படி கேட்கிற? நீ எவ்ளோ பெரிய கோடிஸ்வரியா வேணா இருந்துட்டு போ.. அதுக்காக என்னை உன்னால விலைக்கு வாங்க முடியாது. நான் ஏற்கனவே இன்னொரு பொண்ணோட சொத்து. அது முதல்ல ஞாபகம் இருக்கட்டும். இது தான் நான் உன்னை பார்க்கிறது கடைசியா இருக்கனும். உன்னையெல்லாம் பார்த்தா பத்திக்கிட்டு வருது. உன்னை மாதிரி பெண்களால் தான் பசங்க பொண்ணுங்க கிட்ட பேச கூட பயப்படறாங்க. இனி என் மூஞ்சிலயே முழிக்காத." என்று திட்டிவிட்டு வெளியேறினான்.

அவன் சென்ற சில நொடிகள் சொடுக்கு போடும் சத்தம் கேட்கவும் விழி திறந்து பார்க்க அங்கே அவனுடன் வந்த பெண் நின்றிருந்தாள்.

"ஹாய் நான் சுபாஷினி. நீ நேசிச்சவரை கல்யாணம் செய்துக்க போறவ... இந்த மாதிரி நீ வருத்தப்படக் கூடாதுன்னு தான் முதல் முதல்ல நீ விரும்புனதை சொல்ல போகும் போதே உன்னோட ஓவியத்தை எடுத்துட்டு போனேன். ஆனா நீ தான் கேட்கல. அப்புறம் நீ அந்த சமையல்கார கிழவி கூட சேர்ந்தந்துட்டு என்னவெல்லாம் செஞ்சன்னு அவனுக்கு வேணா தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு எல்லாம் தெரியும். இருந்தும் ஏன் இவ்ளோ நாள் அமைதியா இருந்துட்டு இப்போது வந்தேன்னு பார்க்கறியா... சரி அவனுக்கும் நல்ல சாப்பாடு கிடைக்குது காசு வாங்காமலே வேலை செய்ற ஒரு வேலைக்காரி இருக்கான்னு தான். இப்போ உனக்கு படிப்பு முடிய போற நேரத்துல உன்னோட விருப்பத்தை எப்படியும் அவன்கிட்ட சொல்லுவன்னு தெரியும். அதான் எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஏற்பாடு செஞ்சுட்டு இங்க வந்ததே அவன் உனக்கு கிடைக்க மாட்டான்னு உனக்கு புரிய வைக்க தான். இனி எங்க வழில வராத. ரெண்டு பேர் விரும்பினால் தான் அங்க காதலுக்கு மதிப்பு. ஒருத்தரோட விருப்பம் இருந்தா என்ன நடக்கும்னு உனக்கு இப்போ புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறன். உன்னோட துக்கத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்." என்று கூறும் போதே அவளுடைய அலைபேசி ஒலிக்க எடுத்து காட்டினாள்.

"என்னோட வருங்கால புருஷன் தான் கூப்பிடறான் வரேன்." என்று திமிராக வெளியேறினாள்.

பொங்கும் கண்ணீரை அடக்கியவள் உயிரற்ற உடலாய் போக பேராவல் கொண்டாலும் இறைவன் கொடுத்த உயிரை மாய்த்து கொள்ள நமக்கேது உரிமை என்ற நினைவு வர உயிர் இருந்தும் ஜடமாய் வெளியேறினாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
மயிலரசி 11


11.

எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நெரிஞ்சி முள்ளாய் உள்ளுக்குள் குத்த தொடங்கியது. கண்ணீர் வர மறுத்து மறியல் செய்தது. துக்கம் மலையளவு இருக்க அழாமல் இருக்க தொண்டையை மட்டுமல்ல இதயத்தையும் வலிக்கச் செய்தது. இந்த நொடி அவள் ஒரு அனாதை என்பதை நன்கு புரிந்து கொண்டாள். தன் வாழ்க்கை முழுவதுமே உண்மையான அன்பு கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கும் போதே வாழ்க்கை வெறுத்து விட்டது. அவனை தவிர்த்து வேறு ஒரு வாழ்க்கை என்பதை யோசிக்க கூட முடியவில்லை தேகம் தீயாய் பற்றி எறிவது போல் தோன்றியது.

அவன் கூறுவதும் சரி தானே அவன் மனதில் என்ன இருக்கின்றது என்று தெரியாமல் தான் மட்டுமே தன் நேசத்தை வளர்த்துக் கொண்டிருப்பது எவ்வகையில் நியாயமாகும்.. அவன் மனதில் வேறொரு பெண் இருக்கின்றாள் என்று தெரிந்த பின்னர் மனதால் மரித்து விட்டாள். நீ எப்பொழுதுமே அவனுக்கு தொந்தரவாகவோ அவன் பார்வையிலும் படக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். அவன் கூறாமலே அவனுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பவள் என் முன்னே வராதே என்று கூறிய பின் எப்படி செல்வாள். அந்த ஒரு வாரமும் அவனுக்கு தெரியாமல் அவனை விழிகளிலும் இதயத்திலும் நிரப்பிக் கொண்டவள் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் யாருக்குமே தெரியாமல் உடைந்த மனதுடன் தாயகம் திரும்பினாள். அங்கே உடைந்த இதயத்தை மேலும் உடைக்க அவள் குடும்பத்தினர் செய்திருக்கும் ஏற்பாடு பற்றி அறியாமல்.

கடந்த காலத்தை அவன் அறிந்த வரை நினைத்து பார்த்தவன், "அன்னைக்கு உன்னோட காதலை மதிக்காம உதாசின படுத்திட்டு வந்ததுக்கு தான் இன்னைக்கு நான் நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கேன் அரசி. எனக்கு கிடைச்ச பொக்கிஷத்தை தொலைச்சுட்டு இப்போ நிம்மதியை தேடி அலைஞ்சுட்டு இருக்கேன். நான் நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சுன்னு தெரியலடி. எனக்கு மருந்தா நீ இருந்தா நல்லா இருக்கும் வாழ்க்கை முழுக்க நடக்குமான்னு தெரியல..." என்று புலம்பியபடி தூங்கி போனான்.

*******

(இங்கே அவளின் கடந்தகால நினைவுகள் முடியவில்லை...)

படிப்பு முடிந்தவுடன் அவளின் மருத்துவமனையில் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவளின் தாத்தா எழுதிய உயிலின் விதி. இதோ மருத்துவமனையில் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்தது. அவளை சுற்றி பின்னப்பட்டு கொண்டிருக்கும் சிலந்தி வலை பற்றி ஏதும் அறியாமல் தன் சோகத்தில் மூழ்கி இருந்தாள். அவள் தனக்கென்று தனி வீடேடுத்து தங்கி கொண்டாள். யாருக்கும் தொந்தரவு தராமல் யாரும் தனக்கு தொந்தரவு தராமல் இருக்கும் வகையில் அவள் வாழ்க்கை ஒரு சூன்யமாய் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. உடல் மெலிந்து பொழிவிழந்து வலம் வந்து கொண்டிருந்தாள். குழந்தைகளை காணும் பொழுது தான் அவளின் வலிக்கு சிறு மருந்திட்டது போல் இருக்கும். அதற்காக நாள் முழுவதும் மருத்துவமனையே கதி என்று கிடந்தாள்.

அவளின் சிறு நிம்மதியையும் கெடுக்க வந்து இறங்கியது மாற்றான் தாய் மகள் வடிவில். இதழரசி அவள் தந்தையின் இரண்டாம் தாரத்திற்கு பிறந்த மகள். அவளின் சித்தி ஒரு நடமாடும் விஷச்செடி. எப்படி அன்பிற்கரசியிடம் இருந்து இந்த சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றுவது என்று யோசிப்பதிலேயே அவளின் முழு நேரமும் செலவாகிக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் அவளின் சித்தி கஸ்தூரி வீட்டிற்கு வரவும் உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள்.

"வீட்டுக்கு வந்தா பெரியவங்கள வரவேற்க வேண்டும் என்ற மரியாதை கூட தெரியாதா? உங்க அம்மா இருந்தா உனக்கு நல்ல ஒழுக்கத்தை சொல்லிக் கொடுத்திருப்பா. அம்மா இல்லாம அனாதையா வளரவங்களுக்கெல்லாம் எப்படி ஒழுக்கத்தை பற்றி தெரியும்." என்று வார்த்தைகளில் குத்திக் குதற, சிறுவயதில் இருந்து படும் துன்பம் என்பதால் அதை எல்லாம் தூசு போல் தட்டி விட்டு அமைதியாக நின்று இருந்தாள். இந்த மாத்ரி வார்த்தைகளை அவள் கேட்பது இது தான் முதல் முறை என்றால் கண் கலங்குவதில் ஓர் அர்த்தம் உண்டு. சிறு வயதில் இருந்து கேட்டு கேட்டு அவளுக்கு மனம் மறுத்து விட்டிருந்தது.

"இப்ப நான் எதுக்கு வந்து இருக்கேன்னு கேக்க மாட்டியா?" சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி.

"என் வீடு தேடி வந்த உங்களுக்கு எதுக்காக வந்தேன் சொல்லவா தெரியாது." என்றாள் எள்ளலாக.

"அது சரி என்ன நடந்தாலும் இந்த திமிரு மட்டும் குறைய மாட்டேங்குது உன்கிட்ட." என்று முறைத்தார்.

"அது என் அம்மா மாதிரி நேர்மையா இருக்கவங்க கிட்ட இருந்து எனக்கு வந்தது. கூடவே பிறந்தது குறையும் குறையாது." பதில் சூடாக கொடுத்துக் கொண்டிருந்தாள்.

"ஏய் என்ன வாய் நீளுது? சின்ன வயசுல வாங்குனதெல்லாம் மறந்துட்டியா?" என்றார் கேலியாக.

"அவ்வளவு ஞாபக சக்தி குறைவு கிடையாது எனக்கு. எல்லாத்தையும் சேர்த்து வச்சிருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா திருப்பி தருவேன். அந்த லிஸ்ட்ல முதல் இடம் உன் புருஷனுக்கு தான் போய் சொல்லி வை." என்றாள் திமிராக.

"தாராளமா சொல்லிடலாமே.. ஆனா நான் எதுக்கு இங்க வந்து இருக்கேன் முதல்ல சொல்லிட்டு போயிட்றேன்." என்றவர், "உனக்கு கல்யாண வயசு வந்துருச்சுன்னு உன்ன பெத்தவருக்கு ஒரே கவலையா இருக்கு. அதான் உனக்காக ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் நானு. இன்னும் ரெண்டு வாரத்துல உனக்கு கல்யாணம்." என்றார் கேலியாக சிரித்து.

"ஏதோ வயசுக்கு மரியாதை கொடுத்து இவ்வளோ நேரம் எதுவும் பேசாம அமைதியா இருக்கேன். உன் மரியாதை நீ காப்பாத்திக்கணும்னா தயவு செஞ்சு வீட்டை விட்டு வெளியே போறியா.. என் கோபத்தை அதிகப்படுத்தாமல் இங்கிருந்து கிளம்பலாம்." என்றாள் உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்து சிதறிக் கொண்டு.

"இரு இரு நான் சொல்ல வந்ததை இன்னும் முழுசா சொல்லவே இல்லையே அதையும் கொஞ்சம் கேட்டுட்டு அப்புறம் உன் பதிலை பொறுமையா யோசிச்சு சொல்லு. ஆயிரம் தான் இருந்தாலும் நீ உங்க அப்பாவ வெறுத்த மாதிரி இருந்தாலும் அவர் மேல ஒரு சின்ன அன்பு இருக்கத்தான் செய்யுது இல்லையா?

அப்புறம் இந்த ஹாஸ்பிட்டல், இருக்கிற எல்லா சொத்துமே உன் பேருல தான் இருக்குன்னு எங்களுக்கு தெரியும். அது உன்னால வேற யாருக்கும் எழுதி கொடுக்க முடியாதுன்றதும் தெரியும். அதனால தான் நானும் என் பொண்ணும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து இருக்கோம்.

நீ நான் சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் ஹாஸ்பிட்டல்ல நீ வைத்தியம் பார்க்கிற குழந்தைங்க உயிர் பிழைப்பாங்க." என்று நிறுத்தவும் அவளுள் பதற்றம் தொற்றி கொண்டது.

"என்ன சொல்ற அவங்க எல்லாம் சின்ன குழந்தைங்க அவங்க உயிர வச்சி விளையாடுவியா?" என்று பதற,

"ஆஹா இந்த காட்சியைக் காண எவ்வளவு நல்லா இருக்கு. இதுக்காக உன் சின்ன வயசுல இருந்து நானும் எவ்வளவு முயற்சி பண்றேன் ஆனா ஒரு நாளும் உன் முகத்தில் இவ்வளவு பதட்டத்தை நான் பார்த்ததே இல்லையே எல்லாத்தையும் அசால்ட்டா தூக்கி நிறுத்திட்டு போறே அன்பிற்கரசியா இது... எனக்கே ஆச்சரியமா இருக்கு ஆனாலும் உன் பேஷன்ட்ஸ் மேல உனக்கு ரொம்ப அக்கறை தான் இல்ல.." என்றார்.

"உன் ஹாஸ்பிட்டல்ல உன்னையும் நீ கொடுத்திருக்க பாதுகாப்பையும் மீறி எதுவும் செய்ய முடியாதுன்றது எங்களுக்கு தெரியும். இது இப்ப வந்த திட்டம் இல்லை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி போட்ட திட்டம். உன் வாழ்க்கையை மொத்தமா அழிச்சு உன் சொத்தையும் உன்கிட்ட இருந்து பிடுங்கி கடைசில ஒண்ணுமே இல்லாம செய்றது தான் எங்களோட திட்டம். அதுக்காக தான் என் பொண்ணையும் டாக்டருக்கு படிக்க வச்சேன். அவளும் நீ தேர்ந்தெடுத்து படிச்சதையே தேர்ந்தெடுத்து படிச்சா. சும்மா சொல்லக்கூடாது அவளும் நல்லா படிக்கிறவ தான் இருந்தாலும் உன் அளவுக்கு கெட்டிக்காரி கிடையாது. அதனால தான் பணத்தை தண்ணியா செலவழிச்சு அவளை படிக்க வச்சிருக்கேன். அவ படிச்சது கூட உன்னோட காசுல தான். எப்படின்னு யோசிக்கிறியா? எல்லாம் நீ வெளிநாடு போன பிறகு உன் ஹாஸ்பிட்டல்ல ஒருத்தனை விலைக்கு வாங்கி அவன் மூலமா உன் காசை எடுத்து கணக்கு மாத்தி எழுத வச்சுட்டேன். ஆனா உன் ஹாஸ்பிட்டல்ல வேலை செய்ற அக்கௌன்டன்ட் இதை கண்டு பிடிச்சு உங்க அப்பன்கிட்ட போட்டு கொடுத்துட்டான். உங்க அப்பா சும்மாவே தைய தக்கான்னு குதிப்பாரு. இதை தெரிஞ்சதும் ஓவரா குதிச்சாரு தான்.. அப்புறம் ஒரு விஷயத்தை சொல்லி மிரட்டுனேன் மனுஷன் பெட்டி பாம்பா அடங்கிட்டாரு... என்ன தெரியுமா.. நீ தான்... என்ன அப்படி பார்க்கிற... உன் உயிரை வச்சு தான் சும்மா ஒரு பேச்சுக்கு மிரட்டினேன் மனுஷன் அரண்டுட்டாரு. நல்லா இருக்குல்ல உங்க காசிலே படிச்சிட்டு உன்னை நாங்க அழிக்கிறதுக்கு போடுற திட்டம். இப்ப என் பொண்ணு உள்ள இருக்கா? யாருக்கும் சந்தேகம் வராதபடி குழந்தைகளை போட்டு தள்ளிட்டு ஹாஸ்பிட்டலுக்கு கெட்ட பேரு வர வச்சுருவா. அதனால மாட்டிக்காம செய்யறது எப்படின்னு அவளுக்கு தெரியும். இப்போ உன்னோட முடிவு தான் ரொம்ப முக்கியமானது. போனா போகுது பத்து நிமிஷம் டைம் தரேன் நல்லா யோசிச்சு நாங்க கேட்கிற முடிவு தான் நீ சொல்லணும்...." என்று இன்னும் சில விஷயங்களையும் சேர்த்து கூறிவிட்டு தன் மொபைலை எடுத்து பார்க்கத் தொடங்கி விட்டார்.

இப்படி ஒரு நிலை வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. தன் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கு இனிமேல் இடம் இல்லை என்று முடிவுடன் இருந்தவளை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி விட்டிருந்த இவர்களை கொல்லும் அளவுக்கு கோபம் வந்தது.

அதுமட்டுமல்ல அவளின் உயிரே வீர் மட்டும் தானே. அவனை மறந்து அவனை நினைக்காமல் ஒரு நொடியும் வாழ முடியாது. அவனுக்கு வேண்டுமென்றால் அவள் தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் அவள் சுவாசிப்பதற்குக் கூட அவன் நினைவு மட்டுமே போதுமானதாக இருக்கிறதே. வேறொருவரை திருமணம் செய்து கொண்டு அவனை நினைப்பது என்பது திருமணம் செய்து கொண்டவருக்கு அவள் செய்யும் துரோகம் அல்லவா? யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழம்பி தவித்தாள்.

அவள் மனதால் ஏற்கனவே மரிக்கப்பட்டு இருந்தாள் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. உடல் மட்டுமே உலாவிக் கொண்டிருந்தது. ஆனால் யாரோ பெற்ற சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். இவளால் அவர்கள் உயிருக்கு எப்பொழுதும் தீங்கு நேரிட அனுமதிக்க மாட்டாள். மனதை கல்லாக்கிக் கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
மயிலரசி 12

12.

"பரவாயில்லை நல்ல முடிவு எடுத்துட்ட... ஆனா இதோட எங்க கண்டிஷன் முடியலையே. கல்யாணம் ஆன நிமிஷத்துல இருந்து ஹாஸ்பிட்டல் பார்த்துக்கிற பொறுப்பை என் கணவருக்கு கொடுக்கணும். நீ வர வரைக்கும் அவரு தான் பாத்துட்டு இருந்தாரு. இனியும் அவரே பார்த்துக்கணும். அப்படியே அவரு பார்த்துக்கிட்டாலும் அவரால பண விஷயத்துல எதுவும் செய்ய முடியாதுன்னு எனக்கு தெரியும். போகுதுன்னு நினைக்கிற சரியா... நீ இன்னும் சின்ன பெண்ணாவே இருக்க. நான் இந்த சொத்தை அடையக் கூடாதுன்னு தானே உங்க அம்மாவும் அந்த வயசான கிழவனும் இப்படி ஒரு உயில் எழுதி வச்சாங்க. இப்போ நீயும் இந்த பதவில இல்லாம ஒரு சாதாரண வேலைய செய்யணும். அதுல எனக்கு ஒரு பரம திருப்தி. வெளிய இருக்கவங்களுக்கு எல்லாம் என் புருஷன் தான் இந்த ஹாஸ்பிட்டலை பார்த்துக்கிறார்னு தெரியும். உடனே தப்பா நினைச்சுறாத அவரு நல்லா இருக்கணும்னு நான் நினைக்கிறதெல்லாம் நடக்காத காரியம். நான் இப்ப சொல்ல வந்ததே வேற... அவருக்கு கீழே உள்ள பதவில என் பொண்ணு இருக்கனும்.

அதோட நீ அந்த ஹாஸ்பிடல்ல டாக்டரா இருக்கக் கூடாது. சாதாரண ஒரு நர்சா தான் வேலை செய்யணும். கல்யாணம் முடிஞ்சிருச்சு இனிமேல் எதுவும் செய்ய மாட்டாங்க அதனால நம்ம ஏதாவது திட்டம் போட்டு பழையபடி மாறலாம் நினைக்காதே. ஏன்னா எப்பவுமே என் பொண்ணு அந்த ஆஸ்பிட்டல்ல தான் இருப்பா எப்பவும் குழந்தைகளும் வந்துட்டு தான் இருப்பாங்க. அதை ஞாபகத்துல வச்சுக்கோ. இந்த ஹாஸ்பிட்டல் உங்க அம்மாவோட உழைப்பு. அது வீணா போக விட மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும். இப்ப நான் சொன்ன கண்டிஷனுக்கு எல்லாம் உனக்கு சம்மதமான்னு கேக்க மாட்டேன் சம்மதித்து தான் ஆகணும். சீக்கிரம் கல்யாணத்துக்கு ரெடியா இரு." என்று திமிராய் வெளியே நடந்தார்.

இன்னும் அவள் வாழ்க்கை அவளுக்காக என்னவெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறது என்று காண அவளும் தயாராகி கொண்டு தான் இருக்கிறாள்.

எல்லா சொத்தும் மருத்துவமனை உட்பட அவள் பெயருக்கு வந்துவிட்டது சொத்தை விற்க முடியாது, யாருக்கும் மாற்றிக் கொடுக்க முடியாது, ஆனால் உள்ளுக்குள் நிர்வாக பொறுப்பை மட்டும் மாற்றி கொடுக்க முடியும் அதுவும் பேப்பரில் இருக்காது. சட்டத்திற்கு புறம்பாக, பெயரளவில் இவள் பெயரில் இருக்கும் மருத்துவமனையை அவர் நிர்வகிப்பார். அது தான் கஸ்தூரியின் திட்டம். எல்லாம் தெரிந்து கொண்டு நன்கு திட்டம் தீட்டி இருக்கிறார் என்று புரிந்து கொண்டாள். இப்பொழுது தான் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அனாவசியமாக சிறு குழந்தைகளுக்கு எதாவது நேர்ந்திடுமோ என்ற பயம் வேறு முளைத்தது. அதுமட்டுமில்லாமல் அவர் வேறு ஒரு விஷயத்தையும் அல்லவா காட்டி மிரட்டுகிறார். அதை பற்றி இப்பொழுது வெளியே கூற கூட முடியாத நிலையில் இருந்தாள். அவர் கூறுவதை அசட்டை செய்யலாம் தான் ஆனால் அவள் கண்ட காணொளி அவள் நெஞ்சை பதற வைத்திருக்கின்றதே என்ன செய்வாள்... ஆனால் இதில் இருந்து அவளுக்கு ஒரு சிறு சந்தேகம் முளைத்திருக்கிறது அதை தீர விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள். தன் முழு வாழ்க்கையையும் அழிக்க இப்படி திட்டம் போடுவார் என்று அவள் எதிர் பார்க்கவில்லை,

முழுதாக நான்கு வருட காதல் அவனை மறப்பது என்பது அவள் இறப்பதற்கு சமம். ஆனால் இனி அவனை நினைப்பது என்பது முடியாத காரியம். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஒரு நரகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

இதோ அவள் மனம் கவர்ந்தவன் அல்லாமல் வேறு ஒருவனின் கரத்தால் தாலியை வாங்கிக் கொண்டு முழுவதுமாகவே மரித்து நின்றாள்.

*****

"அம்மாடி பாப்பா உன்னை தேடுறா டா. கதவை திற." என்று கதவு தட்டும் சத்தத்தில் நிகழ் காலத்திற்கு வந்தவள் முகத்தை நன்கு கழுவி விட்டு வந்து கதவை திறந்தாள்.
"என்னாச்சு பா. எழுந்துட்டாளா?" என்று குழந்தையை வாங்கி கொண்டு வீட்டின் ஹாலிற்கு வந்து விளையாடியபடி இருந்தாள்.

அவளின் முகம் சோகத்தை காட்டிட மெதுவாய் அவள் அருகில் அமர்ந்து தலை கோதியவர், "என்னை உன் அப்பாவா நினைக்கலையாம்மா. மாமனாரா தான் பார்க்கிறியா?" என்று கேட்கவும் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள்.

"என்னாச்சுப்பா ஏன் அப்படி கேக்குறீங்க?" என்றாள் பதட்டமாக.

"இல்லடா நான் ஒரு வேலை உன்ன பெத்த அப்பாவா இருந்தா என்கிட்ட உன் சோகத்தை என்னன்னு சொல்லி இருப்ப இல்ல. என்னன்னு தெரிஞ்சுக்காம உனக்காக ஆறுதலா கூட என்னால பேச முடியல." என்றார் கணேசன் வருத்தமாய்.

"அப்படியெல்லாம் இல்லப்பா என்னை பெத்தவர விட நான் உங்களை தான் என்னோட சொந்த அப்பாவா நினைக்கிறேன்." என்றாள்.

"அப்போ உன் மனசுல இருக்குற பாரத்தை இந்த அப்பாகிட்ட இறக்கி வைக்கலாமே ம்மா? உன்னோட பாரத்தை நானும் கொஞ்சம் சுமக்கிறேன்." என்று கேட்கவும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மீண்டும் வெளிப்பட்டது.

"உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லவே வேண்டாம். நீ இப்படி அழுது உன் உடம்பை கெடுத்துக்கிறத பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு." என்றார்.

"ஏம்பா உங்கள மாதிரி ஒரு நல்லவர் எனக்கு அப்பாவாக கிடைக்கல." என்று கதறி அழுக ஆரம்பித்தாள்.

"ஏம்மா அப்படி சொல்ற உங்க அப்பா உன் மேல உயிரையே வச்சிருக்காரு."

"எங்க அம்மாவோட உயிரை எடுத்த அவர் என் மேல உயிரை வச்சு என்ன பிரயோஜனம் பா." என்று கசந்த புன்னகையை உதிர்த்தாள்.

"என்னம்மா சொல்ற?" என்றார் கணேசன் அதிர்ச்சியாய் ஒன்றும் புரியாமல்.

தன் சிறுவயது கடந்த காலத்தை பற்றி கூற தொடங்கினாள்.

//****//
"அம்மாவும் ஒரு டாக்டர். தாத்தா பேமிலி தலைமுறை தலைமுறையா வசதி படைச்சவங்க. ஏழேழு தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து இருந்தது. இருந்தாலும் தாத்தா அம்மாவை உழைச்சு சாப்பிட்டா தான் உடம்புல ஓட்டும்னு சொல்லி வளர்பாராம். அதனாலே அம்மாவும் அவங்களுக்கு பிடிச்ச படிப்பை படிச்சாங்க. அதான் டாக்டர் ஆகி பல உயிர்களை காப்பாத்தணும்னு அவங்க கனவு.

அம்மாக்காக தாத்தா இந்த ஹாஸ்பிட்டல் கட்டினார். அம்மாவும் அவங்க பிரெண்ட்ஸ் இன்னும் நல்ல டாக்டர்கள் பல பேரை வச்சு ஹாஸ்பிட்டலை நல்லா ரன் பண்ணாங்க. அவங்க கைனாக்காலாஜி படிச்சிருந்ததால முடிஞ்ச வரை சுகப்பிரசவம் தான் பார்ப்பாங்க. அவங்களை கைராசி டாக்டரா பார்த்தாங்க பேசண்ட்ஸ். என்னோட அப்பா அப்போ தான் எங்க அம்மாவோட ஹாஸ்பிட்டல்ல வேலைக்கு சேர்ந்தாரு.

ரொம்ப எளிமையான பழக்க வழக்கங்களை கொண்ட எங்க அப்பாவோட நடவடிக்கைகளை பார்த்து அம்மாக்கு பிடிச்சுட்டு. கொஞ்ச நாள் அவரை அப்சர்வ் பண்ணிருக்காங்க. அப்புறம் அவங்க விருப்பத்தை அவர்கிட்ட சொல்லிருக்காங்க. வசதியை காட்டி அப்பா அவங்க காதலை ஏற்க மறுத்துட்டார். அம்மாவும் கொஞ்ச நாள் அவரை தொந்தரவு செய்யாம தன் வேலைய பார்த்தாங்க.

ஆனா அவங்க மனசை மட்டும் மாத்திக்கல. திரும்பி ஒரு வருஷம் கழிச்சு அப்பா முன்னாடி போய் தன் காதலை ஏத்துக்க சொல்லி நின்னாங்க. எங்க அம்மா வாழ்க்கைல பண்ண பெரிய தப்பு அது தான். இல்லன்னா இந்நேரம் அவங்க கண்டிப்பா உயிரோட இருந்திருப்பாங்க.

அப்பா யோசிச்சு சொல்றேன்னு இன்னும் கொஞ்சம் நாள் கடத்தினாரு. அம்மா எதுவும் சொல்லல. கொஞ்ச நாள் கழிச்சு ஏத்துக்கிட்டு தாத்தாவிடம் வந்து பேசிருக்காரு. ஆனா தாத்தாவுக்கு பார்த்தவுடனே அப்பாவை பிடிக்கல. அது வசதிக்காக இல்ல. என்னன்னு தெரியலை அப்பாவை பார்த்ததும் தன் பொண்ணுக்கு இவன் சரியாய் இருக்க மாட்டார்னு தோணிருக்கு. அப்போ எங்கம்மா அமைதியா இருந்திருந்தா கூட அவங்க வாழ்க்கை நல்லா இருந்திருக்கும். ஆனா அம்மா அவரை தான் கட்டிப்பேன்னு அடம் பிடிச்சுருக்காங்க. ஒரே பொண்ணு ரொம்ப அடம் பிடிக்கவும் வேற வழி இல்லாம தாத்தா சம்மதிச்சுட்டாரு.
அப்பவும் ‘உனக்காக கட்டின ஹாஸ்பிட்டல் மட்டும் தான் நான் உனக்கு கொடுக்குற சொத்து. என் பொண்ணா உனக்கு என்ன செய்யனமோ செய்து அனுப்புவேன். மத்தபடி வேற எந்த சொத்தும் உனக்கு கிடையாது’ன்னு சொல்லிருக்காரு.

அம்மாவோ அப்பா மேல இருந்த நம்பிக்கைலையும் காதலாலையும் சரின்னு அங்கிருந்து கல்யாணம் ஆகி வந்துட்டாங்க. அப்பா அம்மாவை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு.

நான் பிறந்த பிறகு கொஞ்ச நாள்ல அவரோட நடவடிக்கைகள்ல கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சுருக்கு. அம்மா அவர் மேல இருந்த அதித அன்புல அவரை நம்பி எதுவும் விசாரிக்காம விட்டுருக்காங்க. அவங்களுக்கு என்னை கவனிக்கவே நேரம் சரியா இருந்துருக்கு. அதுக்குள்ள அடுத்து இன்னொரு குழந்தையும் அம்மா வயத்துல வளர்ந்து இறந்தே பிறந்தது. அம்மா பிரசவத்துக்கு தாத்தா வீட்டுக்கு வந்திருந்தது வேற அவருக்கு வசதியா போச்சு. நான் வளர வளர அப்பாவோட புது பழக்க வழக்கம் அம்மாவை யோசிக்க வச்சுது.

அதன்பிறகு, அப்பாவை கண்காணிக்க ஆரம்பிச்சாங்க. அதுல நிறைய அதிர்ச்சியான விஷயம் எல்லாம் தெரிஞ்சுது. அப்பா நிறைய குடிக்க ஆரம்பிச்சுருந்தாரு. அது மட்டுமில்ல வெளில யாரோ ஒரு பொண்ணுகூட புதுசா பழக்கம் ஏற்பட்டிருக்குன்னு தெரிஞ்சுது. அப்பா மேல அம்மா உயிரையே வச்சுருந்தாங்க. அவரோட இந்த துரோகத்தை அவங்களால தாங்க முடியலை.

அப்போ எனக்கு வயசு எட்டு இருக்கும் அப்போ தான் அம்மாக்கு ஓரளவு அப்பாவை பத்தி எல்லாம் தெரிஞ்சுது. எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது. இந்த விஷயத்தை வச்சு வீட்ல சண்டை நடந்தா சின்ன பிள்ளை மனசு பாதிக்கும்னு எனக்கு தெரியாம பார்த்துக்கிட்டாங்க.

அப்பாகிட்ட கேட்டதுக்கு ஆமா அவளும் நானும் விரும்புறோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறோம்னு திமிரா சொல்லிருக்காரு, அந்த லேடி கூட சேர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தையும் ஏற்கனவே இருக்குன்னு அம்மா அப்போ தான் தெரிஞ்சுக்கிட்டாங்க. அவருக்கு பிறந்த பொண்ணோட வயசை கேட்டு அம்மா அதிர்ச்சியாகிட்டாங்க அந்த டைம்ல அம்மாவுக்கும் குட்டி பாப்பா பிறந்து இறந்துடுச்சு. அதுக்கு கூட அப்பா ஆறுதலா அம்மா கூட இல்ல. அப்போ அவகூட வாழ்ந்துட்டே என்கூடவும் இருந்துருக்காருன்னு ரொம்ப நொடிஞ்சு போய்ட்டாங்க.

அவரோட இந்த பதிலை தாங்க முடியாம அதை பத்தி யோசிச்சு யோசிச்சு பாரம் தாங்க முடியாம ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. அப்போ எனக்கு எதுவும் தெரியல. அப்பாவை பத்தி தெரிஞ்சதும் அம்மா அவங்க பேர்ல இருக்க எல்லா சொத்துக்கும் நான் மட்டும் தான் வாரிசு வேற யாருக்கும் உரிமை இல்லைன்னு எழுதிட்டாங்க அவங்க கணவர் உட்பட. அம்மா அப்பாவுக்காக ஆசையா வாங்கின வீட்டை கூட அவருக்கு சொந்தம் இல்லைன்னு எழுதிட்டாங்க. ஹாஸ்பிட்டல் எனக்கு பதினெட்டு வயசு வரைக்கும் தாத்தா பார்த்துக்கணும். அவருக்கு பிறகு அப்பா வெறும் கார்டியனா மட்டும் தான் இருக்கனும் வேற எந்த உரிமையும் கிடையாதுன்னு எழுதிட்டாங்க. அவர் வெறும் சம்பளம் வாங்குற ஒரு டாக்டரா வேலை செய்ய மட்டும் தான் முடியும்னு சொல்லிட்டாங்க. அதுகூட எனக்காக மட்டும் தான் எனக்கு அப்பா வேணும்னு நான் நினைச்சா என்ன பண்றது அதுக்கு தான்.

ஒரு வருஷம் அவரை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நான் தாத்தா கூட தான் இருந்தேன். அப்பா கூட வாரத்துல ரெண்டு நாள் இருப்பேன். அப்பான்னா அவ்ளோ உயிர் எனக்கு. அம்மாவுக்கு உடம்பு முடியாம இறந்துட்டாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஒரு நாள் அம்மா ஞாபகம் அதிகமா இருக்குன்னு அம்மா ரூம்ல போயிட்டு படுத்துட்டேன். அப்போ தான் அம்மா புடவைய போதிக்க அவங்க கப்போர்ட்ல இருந்து எடுத்தப்ப அங்க இருந்து ஒரு டைரி விழுந்துருச்சு. எடுத்து பார்த்தப்போ அது அம்மாவோடதுன்னு தெரிஞ்சுது. எடுத்து படிச்சேன். படிக்க படிக்க என்னால அழுகைய அடக்க முடியலை. அவங்களோட வலி வேதனை எல்லாம் அதுல கொட்டிருந்தாங்க. அப்போ தான் அவங்க எவ்ளோ வேதனை பட்டு இறந்துருக்காங்கன்னு தெரிஞ்சுது. ஒரே நாள்ல என்னோட ஹீரோவா இருந்த அப்பா எனக்கு பிடிக்காம போயிட்டாரு. அந்த நிமிஷத்துலர்ந்து என் அப்பாவை பார்க்க முடியாதுன்னு பிடிவாதமா தாத்தா வீட்லயே இருந்துட்டேன். அவர்கிட்ட பேசுறதையும் நிறுத்திட்டேன். எங்க அம்மாவோட இழப்பை ஈசியா ஏத்துக்க முடிஞ்ச அவரால என்னோட ஒதுக்கத்தை ஏத்துக்க முடியல. தினமும் என்னை பார்க்க வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணாரு. இப்படியே விட்டா சரி இல்லைன்னு தாத்தா கிட்ட சொல்லி ஹாஸ்டல்ல சேர்ந்தேன்.

எந்த காரணத்துக்காகவும் நான் இருக்க இடம் அவருக்கு தெரிய கூடாதுன்னு தாத்தாகிட்ட சத்தியம் வாங்கிட்டேன். அதுக்கப்புறம் எவ்ளோ கேட்டும் நான் எங்க இருக்கேன்னு தாத்தா சொல்ல மறுத்துட்டதால கோவமா அங்கிருந்து போயிட்டாரு.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
மயிலரசி 13:

13.

அடுத்த ஆறு வருஷம் எந்த ஒரு பிரச்னையும் என்னை நெருங்காம தாத்தா பார்த்துக்கிட்டாங்க. லீவ் விட்டா தாத்தா அங்க வந்துருவாரு. அங்க நாங்க ரெண்டு பேரும் அடிக்காத லூட்டி இல்லை. இப்படி நல்லா போயிட்டு இருந்த என் வாழ்க்கைல நான் விரும்பாத திருப்பமா என் தாத்தாவோட மரணம் இருந்தது.

சரியா பத்தாவது பரீட்சை ரிசல்ட் வந்து எனக்கு பிடிச்ச க்ரூப் செலக்ட் செஞ்சு ஸ்கூல் போக ரெண்டு நாள் இருந்தப்ப நல்லா நைட்டு பேசிட்டு போன தாத்தா காலைல முழிக்கலை. மறுபடியும் என் வாழ்க்கையே சூன்யமான மாதிரி இருந்தது. எனக்கு பதினெட்டு வயசு ஆகாததால எனக்கு விருப்பமே இல்லைன்னாலும் அப்பாகூட இருக்க வேண்டிய கட்டாயத்துல போனேன். என் வாழ்க்கையோட ரொம்ப கொடுமையான நாட்கள்னா அது தான். அங்க போன பின்னும் பேச அப்பா எவ்வளவோ முயற்சி பண்ணார். ஆனா அவரை பார்க்கும் போதெல்லாம் எங்க அம்மா இறந்து போனது தான் ஞாபகம் வரும். என்னால அவரை மன்னிக்க முடியலை. தன்னை நம்பி வந்த ஒரு பொண்ணுக்கு துரோகம் செஞ்சு அவங்களை தற்கொலைக்கு தூண்டினவர் என்ன வேணாலும் செய்ய துணிய மாட்டாருன்னு என்ன நிச்சயம். அதனால அவர் என்னை நெருங்கும் போதெல்லாம் ரூமே கதின்னு கிடப்பேன். நான் அவர்கூட இருக்கணும்னு வீட்டு பக்கத்துலையே ஸ்கூல் சேர்த்து விட்டார். எனக்கு அங்க படிக்க பிடிக்கலை. வேற வழி இல்லைன்னு படிக்கணும்னு போனேன். அவர் இருக்கும் போது பாச மழை பொழியற அவங்க மனைவி அவர் இல்லாத நேரம் ரூம் கதவை உடைக்காத குறையா பிடிச்சு தரதரவென இழுத்துட்டு வந்து அடிப்பாங்க வாங்கிப்பேன். அவர்கிட்ட சொல்ல மாட்டேன்னு தெரியும். அதனால அவங்க பண்ற கொடுமைக்கு அளவே இருக்காது. ஒரு முறை அவங்க பொண்ணு என்னை அடிக்க வேண்டாம்னு சொன்னதால அவளையும் மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சாங்க. அந்த பொண்ணு என்னவோ என்கிட்டே எப்பவாவது பேச வரும் நான் தான் பேச மாட்டேன். என்னால அவ அடி வாங்குறது பிடிக்கலை. ரெண்டு வருஷம் பல்லை கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிட்டேன். ப்ளஸ் டூ முடிச்ச உடனே அங்க இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணேன்.

அம்மாவோட பிரெண்ட்ஸ் நம்ம ஹாஸ்பிட்டல்ல வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்க உதவியோட பாரி்ன்ல டாக்டர்க்கு படிக்க அப்பளை பண்ணேன் அதுவரைக்கும் கஸ்தூரிக்கு எதுவும் தெரியாம பார்த்துக்கிட்டேன்.

அப்போ தான் அவங்களோட தம்பின்னு ஒருத்தன் அங்க வந்து தங்கிருந்தான். அவன் இருக்க நேரம் வெளிய கூட வர மாட்டேன். அவனோட பார்வை, பேச்சு, நடத்தை எதுவும் சரி இல்ல. ஒரு நாள் நைட் வீட்ல எல்லோரும் கல்யாணத்துக்கு போயிருந்தாங்க. என்னை கூப்பிட்டாரு நான் போகலை. நைட் நான் டோர் லாக் பண்ணிட்டு வந்து படுத்துட்டேன். திடிர்னு தூக்கத்துல என் மேல ஏதோ ஊற்ர மாதிரி இருந்தது. பதறி அடிச்சு எந்திரிச்சு பார்த்தா அவன் தான் முழு குடி போதைல இருந்தான். வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அசிங்கமா பேசி என்னை நெருங்கினான். எவ்வளவோ போராடி பார்த்து முடியாம மயங்கி போற வேளைல எங்க இருந்து தான் அவ்ளோ வெறி வந்துதுன்னு தெரியாது. கைல கிடைச்ச கண்ணாடி பிளாஸ்கை அவன் தலைல உடைச்சி தள்ளி விட்டுட்டு வெளிய ஓடி வந்துட்டேன். என் அம்மா ரூம்ல போய் கதவை லாக் பண்ணிட்டேன். அவனும் என் பின்னாடியே வந்து கதவை தட்டிட்டே இருந்தான். என்ன பண்றதுன்னு தெரியலை. அப்போ தான் நான் ஒரு அனாதைன்னு நெத்தி பொட்டுல அறைஞ்ச மாதிரி புரிஞ்சுது. அம்மாவோட பிரெண்ட்ஸ் பசங்க ஹரியும் விக்ரமும் என்கிட்டே பிரென்ட்சாக எவ்ளோ முயற்சி பண்ணாங்க. எனக்கு யார் மேலையும் நம்பிக்கை இல்லாம பேசாம இருப்பேன். சின்ன வயசுல அம்மா இருக்கும் போது அவங்க கூட நல்லா விளையாடிருக்கேன். நல்ல பசங்க. அவசரத்துக்கு அவங்களை கூப்பிட்டேன்.

கதவை உடைக்க டிரை பண்ணான் அந்த நாய். “அங்கயே இருடா போலிஸ் வருது”ன்னு அவனை மிரட்டினேன். குடில இருந்ததால பயந்து எங்கையோ ஓடி போய்ட்டான். அடிச்சு பிடிச்சு ரெண்டு பேரும் ஓடி வந்தானுங்க.

நடந்ததை சொன்னேன் எனக்கு ஆறுதல் சொல்லி விக்ரம் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான். அங்க ஆன்ட்டி தான் என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. அப்போ இருந்து விக்ரம், ஹரி ரெண்டு என் பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.

ரெண்டு நாள் கழிச்சு எல்லோரும் ஊர்லர்ந்து வந்தாங்க. நானும் அந்த வீட்டுக்கு போயிட்டேன். அன்னைக்கு சாயந்தரம் கீழ வரும் போது கஸ்தூரி ரூம்லர்ந்து பேச்சு குரல் கேட்டுச்சு. அதுல என் பேர் அடிபடவும் என்னன்னு கேட்டேன். அதிர்ச்சியில மயங்கி விழாத குறை தான்.

அந்த பொம்பளை தான் என் சொத்தை அடைய அந்த கேடு கெட்டவன்கிட்ட என்னை நாசமாக்க சொல்லிருக்கா. என்னை கெடுத்துட்டா இதை வெச்சு என்னை அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு என் சொத்தை அவங்க முழுசா ஆளலாம்னு பிளான் போட்ருக்காங்க. நல்ல வாய்ப்பை கெடுத்துட்டியேன்னு அவனை போட்டு அடிச்சு திட்டிட்டு இருந்துச்சு. இதுக்கு மேல அங்க இருந்தா என் மானத்துக்கும் உயிருக்கும் உத்திரவாதம் இல்லன்னு கிளம்பினேன். அந்த ரெண்டு நாளும் விக்ரம் என் வீட்ல எனக்கு பாதுகாப்பா இருந்தான். பாரின் போற பரோசிஜர் எல்லாம் முடிஞ்சதும் அங்க இருந்து கிளம்பினா போதும்னு கிளம்பினேன்.

அப்போ, பெட்டியுடன் ஹாலுக்கு வந்து நின்றவளை கேள்வியாக பார்த்தனர் மூவரும்.

“எதுக்கு இப்போ பெட்டியெல்லாம் எடுத்துட்டு வந்துருக்க?” என்று கேட்டார் அவளின் தந்தை.

அவருக்கு பதில் கூறாமல் தன் கைக் கடிகாரத்தை பார்க்க, “ஏய் அதான் உங்க அப்பா கேட்கிறார்ல பதில் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று அதட்டினார் அவளின் சித்தி.

“நீ இப்போ எதுக்கு புள்ளைய மிரட்டுற? அமைதியா இரு.” என்று அதட்டியவர்.

“நீ சொல்லுடாம்மா என்ன இது பெட்டியெல்லாம் எடுத்துட்டு வந்துருக்க.” என்றார். அவரை பார்க்கவே எனக்கு பிடிக்கலை. பெத்த பொண்ணுக்கு அந்த வீட்ல நடக்கிற கொடுமையை பத்தி எதுவுமே தெரியாம இருக்காறேன்னு வெறுப்பு.

அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தனர் விக்ரம், ஹரி, ஷங்கர் அபியின் அன்னையுடைய வக்கீல் அதோட விக்கியோட அப்பா.

“ஹலோ சார்!” என்று அவர் முன் நிற்க, “நீங்க என்ன சார் இங்க?” என்றார் சத்யமூர்த்தி கேள்வியாய்.

“நான் தான் வர சொன்னேன்.” என்றாள் எங்கோ பார்த்து.

“எதுக்குடா?” என்றார் மென்மையாய்.

“எனக்கு இன்னையோட பதினெட்டு வயசு ஆகுது. இப்போ நான் மேஜர். இனி நான் இங்க இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. அதான் இங்க இருந்து போக போறேன். அதுக்காக தான் வக்கீல் வந்துருக்கார்.” என்றாள்.

“அதெல்லாம் எங்கயும் போக வேண்டாம்.” என்றார் கோபமாய்.

“அதை சொல்ல யாருக்கும் உரிமை இல்ல. எனக்கு இங்க இருக்க பிடிக்கல. லாயர் அங்கிள், நான் எங்க தாத்தா வீட்ல தான் தங்க போறேன். வீணா என்னை பத்தி பொய்யா கவலை படர மாதிரி நடிக்கிறதை விட்டுட்டு அவரை சுத்தி என்ன நடக்குதுன்னு முழிச்சி பார்க்க சொல்லுங்க. இன்னொரு பொண்ணு இருக்கு அதை பாதுகாக்க சொல்லுங்க. டேய் என்னடா பார்த்துட்டு இருக்கீங்க? படமா பார்க்க வந்திங்க.. விக்கி எருமை இந்த லக்கேஜை எடுத்து வா போகலாம்.” என்று தன் உடைமைகளை எடுத்து கொண்டு வெளியேறினாள்.

“சார் அல்ரெடி பெரிய மேடமே சொல்லிருக்காங்க பாப்பாவோட விருப்பத்தின் படி தான் நடக்கணும்னு. சோ, அவங்களை நீங்க தடுக்க முடியாது. அதோட அவங்க இன்னும் ஒரு வாரம் தான் இங்க இருக்க போறாங்க.” என்றார்.

“ஏன்?” என்றார் பதட்டமாய்.

“அவங்க டாக்டர்க்கு படிக்க லண்டன்ல அப்பளை பண்ணிருந்தாங்க. அங்க சீட் கிடைச்சுருக்கு. அதனால அங்க போறாங்க. ஒகே நான் வரேன் சார்.” என்று வெளியேறினார்.

‘என் பொண்ணு என்னை மன்னிக்கவே மாட்டாளா?’ என்று உள்ளுக்குள் வருந்தினார். வருந்தி என்ன பயன் அவர் செய்த பாவம் அப்படி அல்லவா?

ஒரு வாரம் கடந்து மருத்துவ படிப்புக்காகன்னு சொல்லிக்கிட்டு இங்க இருக்க பிடிக்காம நான் பிறந்த நாட்டை விட்டு வளர்ந்த ஊரை விட்டு வெளிநாட்டுக்கு போயிட்டேன்.

அங்க தான் எனக்கு வாழ்க்கையோட அர்த்தம் புரிஞ்சுது.” என்று வெளிநாடு சென்றது, மயில்வீராவை பார்த்தது மையல் கொண்டது என்று நான்கு வருடங்கள் நடந்தவற்றை சுருக்கமாக கூறினாள். அதோடு இங்கு வந்த பின் அவள் சித்தி செய்த சதி செயல்கள் என்று அனைத்தையும் கூறி முடித்தாள்.

“ஹரி கூட இந்த கல்யாணம் வேணாம்னு எவ்வளவோ சொன்னான். குழந்தைங்க உயிரை பணயம் வைக்க பிடிக்கலை. எல்லாத்துக்கும் மேல வாழ்க்கை மீது இருந்த வெறுப்பு ஹரியோட பேச்சை கேட்கலை அதுக்கு கோச்சுக்கிட்டு ஆஸ்திரேலியா போயிருச்சு அந்த நாய். விக்கி மட்டும் என்கூட இருக்கான். என்னை பத்தி முழுசா தெரிஞ்சவன் அவன் மட்டும் தான் அவனுக்கும் எல்லாம் தெரியும். அவ்ளோ தான் பா. எல்லாத்தையும் சொல்லிட்டேன். இப்போ என் மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கு.” என்று புன்னகைத்தாள்.

மயில்வீராவை பற்றி பேசும்போது அவள் முகத்தில் தெரியும் அளவிற்கு அதிகமான மகிழ்ச்சியை குறித்து கொண்டார்.

“அது சரி இன்னைக்கு ஏன்டா உன் முகம் ரொம்ப சோகமா இருந்தது?” என்று கூர்ந்து கவனித்தபடி கேட்டார்.

“அது அது ...” என்று திணறினாள்.

“உண்மைய சொல்லுடா.” என்றார்.

“அது இத்தனை வருஷம் கழிச்சி யாரை நான் பார்க்க கூடாதுன்னு நினைச்சிருந்தேனோ அவரை பார்க்க வேண்டியதா போய்டுச்சு. அந்த பாரம் மனசு தாங்கலை அதான்.. ஆனா இப்போ நல்லா இருக்கேன்.” என்று சிரித்தாள்.

“யாரும்மா வீரா தம்பியா?” என்றார் ஆர்வமாய்.

“ஆமாப்பா. அவர் பொண்ணோட வந்திருந்தார்.” என்றாள் முகத்தில் எதையும் காட்டாது.

“அவருக்கு கல்யாணமாகிடுச்சோ?”

“அப்பா அதான் சொன்னேனே அவர் லவ் மேரேஜ்னு. ஆனா இப்போ அவர் மனைவி கூட இல்ல என்னனு தெரியல. தெரிஞ்சிக்கவும் விரும்பலை. அப்புறம் என்ன எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறிங்க.” என்றாள்.

“அப்படியா சரி சரி.” என்றார்.

“அப்பா அவர் என் லைப்ல பாஸ்ட் பா. முடிஞ்சு போன அத்தியாயம். இனி அவருக்கு என் வாழ்க்கைல இடம் இல்ல. இனி இத பத்தி பேச வேண்டாம்ப்பா. இனி நம்மை பத்தி மட்டும் யோசிப்போம்.” என்றாள் கறாராக.

இப்பொழுது புரிந்தது மகள் எதற்காக கொஞ்ச நாள் வெளியூருக்கு போக வேண்டும் என்று கேட்கிறாள் என்று.

“அதுசரி உனக்கு கல்யாணம் ஆனதிலர்ந்து உங்க சித்திக்கிட்ட ஏன் இவ்ளோ அமைதியா போற... பயபட்றியா?” என்றார்.
 
Top Bottom