Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யாரோ இவள் - Tamil Novel all episodes

NITHYA MARIAPPAN

Saha Writer
Team
Messages
15
Reaction score
1
Points
1
அத்தியாயம் 11



கீதா செல்வதையே பார்த்து கொண்டு கனவுலகில் டூயட் பாடிக் கொண்டிருந்த வருணை " இங்க வருண்னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவன யாராச்சும் பாத்திங்களா?" என்ற நேத்ராவின் குரல் பூவுலகிற்கு இழுத்து வந்தது.

" அதான! கோவக்கார பொண்ணுலாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாதுனு வேற ஒரு சமாளிப்பு" என்று அவளுடன் இணைந்து கொண்டாள் பிரியா.

" அய்யய்யோ! இதுல அப்பப்பா வேற அம்மம்மா வேற! இப்போ மூஞ்சிய பாருங்க ! நல்லா 1000 வாட்ஸ் பல்ப் எரியுது. அப்புறம் எதுக்கு நமக்கு இந்த வெட்டி பந்தா?" என்றாள் அனு.

" ஓகே! நீங்க எல்லாரும் என்ன தான் கலாய்க்கிறிங்கன்னு எனக்கு தெளிவா புரியுது. நான் என்ன தான் பண்ணுறது?? நான் அவள மறக்க தான் டிரை பண்ணிட்டு இருந்தேன். அவள என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து என்னோட தவத்தை கலைச்சது நீங்க தான்" என்று சொல்லி விட்டு ஒன்றும் அறியாதவனை போல் இருந்தவனை ஆச்சரியமாக பார்த்தனர் நால்வரும்.

உண்மையும் அது தான். கீதாவை நேரில் பார்க்கும் வரை வருணுக்கு தன் பிடிவாதத்தின் மீது இருந்த நம்பிக்கை அவளை கண்ட மறுநிமிடமே சுக்குநூறாக உடைந்தது. அவளது கோபம் பிடிவாதம் எதுவுமே பெரிதாக தோன்றவில்லை அந்நிமிடம். இவள் தான் உன் வாழ்க்கை என்று இதயம் கூவும் ஒலி மட்டுமே அவன் காதில் ஒலிக்க அவளை கண்ட அந்நொடியே விழுந்தவன் தான் ( அடேய் நீ தான் ஆல்ரெடி அந்த பிள்ளை கிட்ட விழுந்து கிடக்கிறியே டா! அடிக்கடி விழுறதே உனக்கு பொழைப்பா போச்சு!!)

------------------------------------------------------

நாட்கள் கடந்தது.................

கீதாவை பொறுத்தவரை வருணோடு சகஜமாக உரையாடும் அளவிற்கு வந்திருந்தாள். இதற்கிடையே கண்ணனும் அபிராமியும் இந்தியா வரும் செய்தி கிடைக்கவே அவள் ரெக்கையில்லாமல் பறந்தாள். அவர்கள் வந்து சேரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தாள்.

வருணுக்கோ கீதாவை தன் குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்த எப்போது தான் நேரம் வருமோ என்ற கவலை. அவன் அந்த வாய்ப்புக்காக காத்திருந்தான்.

அன்று ஞாயிறு . வார விடுமுறை என்பதால் வீட்டில் யோகாவும் ரியாவும் நான் வெஜ் சமையலுக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். வருணும் அவனது கஸின்ஸும் வருவதாக கூறியதால் தான் இந்த தடபுடல் விருந்து.

கீதா அவினாஷ், விக்னேஷ், ஜேசி, ஸ்ரீதேவி என்று அனைவரையும் அன்று அழைத்திருந்ததால் வீடே ஜகஜோதியாக கலகலப்பாக இருந்தது. வருணுக்கு நன்றாக சமைக்க தெரியுமென்பதால் வந்த உடனே கிச்சனுக்குள் புகுந்தவன் யோகாவையும் ரியாவையும் ஒரு வேலையும் செய்ய விடவில்லை. சிக்கன் பிரியாணி, ஃபிஷ் ஃப்ரை, சிக்கன் லாலிபாப், கிரேவி என்று அவன் வகைவகையாக செய்ய ரியாவுக்கும் , யோகாவிற்கும் ஆச்சரியம். கீதா கொடுத்து வைத்தவள் என்று வேறு பெருமை.

எல்லாவற்றையும் முடித்தவன் வெஜ் புலாவ் செய்யவும் தான் கீதா சுத்த சைவம் என்பதே அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. சமையல் முடிந்து பாத்திரங்கள் கழுவவும் அவன் முற்பட இருவரும் " தெய்வமே! இதையாச்சும் செய்ய விடு" என்று கும்பிட அவன் சிரித்து கொண்டே வெளியே வரவும் விக்னேஷ் அவினாஷ் மற்றும் ஜேஸியுடன் நுழையவும் சரியாக இருந்தது. விக்னேஷ் நீண்ட நாளுக்கும் பின் வந்ததால் கீதா " விக்கி!' என்று ஆனந்த கூச்சலுடன் அவனை அணைத்து கொள்ளவும் வருணுக்கு உள்ளே புகைய ஆரம்பித்தது.

" ஃபைன் டியர்! நீ என்னடா இவ்ளோ மெலிஞ்சிட்ட, உனக்கு சரியா சாப்பாடு போடாம இந்த யோகா என்ன தான் வெட்டி முறிக்கிறா?" என்று பொய்க்கோவத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த யோகா " யோகா ஒரு இடியட்ட நினைச்சு தினம் தினம் செத்துட்டு இருக்கா" என்று கோபத்துடன் கூறினாள்.

அவள் அவள் அவ்வாறு கூறவும் பொறுக்க முடியாத விக்கி அவளை அணைத்து கொள்ள அவளது கோபம் அழுகையில் முடிந்தது.

" ஏண்டா இவ்ளோ நாள் வரல?? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?? அஜி பிராப்ளத்தால தான் நீ வரலனு புரியுது. பட்" என்று சொல்லிக் கொண்டே அவனது மார்பில் சாய்ந்து கண்ணீர் விடவும் ரியா அவினாஷை பார்த்து ஏதாச்சும் பண்ணு என்று சைகை காண்பிக்க அவன் " அட! பையனே இன்னிக்கு தான் வந்திருக்கான். நீ வேற உன்னோட வாட்டர் டேம திறந்து விட்டு அவன மூழ்கடிக்காத மா" என்று கேலி செய்தான்.

" போடா அவி" என்று சிணுங்கிக் கொண்டு விக்னேஷ் கையை பிடித்து கொண்டாள் யோகா.

அவர்களது உரையாடலுக்கு பின்னே தான் வருண் இயல்பு நிலைக்கு திரும்பினான் எனலாம்.

பின் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டே பேச ஆரம்பித்தனர்.

" ஹாய் எவ்ரிபடி!" என்று அழையா விருந்தாளியாக வந்தவளை யாருக்குமே பிடிக்கவில்லை. ஆனால் அவளை அழைத்து வந்தவனுக்காக அவளை நோக்கி பொய்யாக புன்னகைத்தனர்.

" ஹாய் சரா!" என்று சொல்லி கொண்டே கிச்சனுக்குள் சென்றாள் ரியா. பின் தொடர்ந்த அவினாஷிடம் " அவி! இவள யாரு இன்வைட் பண்ணாங்க?? ஷீ இஸ் கோயிங் டு ஸ்பாயில் எவ்ரிதிங்" என்று சொல்லவும் அவினாஷ் அவளை பொறுமையாக இருக்குமாறு சொல்லிவிட்டு கூடவே அழைத்து சென்றான்.

அங்கே அஜித் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கும் போதே கால் வர அவன் சென்று விட்டான். தனித்து விடப்பட்ட சரண்யாவின் கவனம் அங்கே அமர்ந்து கீதாவை கண்ணில் காதலுடன் பார்த்து கொண்டிருந்த வருணின் பக்கம் சென்றது. அவனை நோட்டமிட்டவள் கண்டு கொண்டது இது தான். வருண் தான் அவளை ஆர்வமாக பார்த்தானே தவிர, கீதா அவனை பார்த்து புன்னகைத்ததோடு சரி.

சரண்யாவை பொறுத்தவரை யோகாவிற்கும் அவளது தோழிகளுக்கும் ஆண்களிடம் பழக தெரியாது என்ற எண்ணம். பார்க்க நாகரிகமாக உடையணிந்தாலும் மனதளவில் இதுகள் எல்லாம் பட்டிகாடுகள் என்று அடிக்கடி நினைத்து கொள்வாள். இப்போது வருண் மாதிரி ஒரு ஹாண்ட்சமானவனை தவிர்க்கும் கீதா அவளுக்கு முட்டாளாக தெரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அவர்கள் பேசியதை வைத்து அவன் வளமான குடும்ப பின்புலம் கொண்டவன் என தெரிந்து கொண்டவள் அவன் அருகில் சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தாள். வருணுக்கு அவளுடன் பேச ஆர்வமில்லை என்றாலும் கீதாவின் தோழி என்று நினைத்து பொறுமையாக பேசிக் கொண்டிருந்தான்.

சரண்யாவை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் ரியாவிற்கு அவளை கொல்லுமளவிற்கு கோபம் வந்தது. அவினாஷ் " ஸ்ஸ்...கொஞ்சம் சும்மா இரு! இது கீத்துவோட பிராப்ளம். அவ தான் இத சால்வ் பண்ணனும்" என்று சொல்ல அவனை புரியாத பார்வை பார்த்துவைத்தாள்.

யோகாவின் நிலையோ அதற்கு மேலிருந்தது. அருகில் அமர்ந்திருந்த நேத்ராவிடம் " அண்ணி ஒரு நிமிஷம்., என் கூட வாங்க" என்று அவளை கார்டன் பக்கமாக அழைத்து செல்லவும் அவ்வளவு நேரம் அவர்களுடன் வம்பளந்து கொண்டிருந்த கீதா வருண் அருகில் சரண்யாவை கண்டதும் கொலை வெறியானாள்.

விறுவிறுவென்று அவனருகில் சென்றவள் அவனை பார்த்து " வருண் கொஞ்சம் வர்ரியா?? எனக்கு டேபிள்ல லஞ்ச் அரேன்ஜ் பண்ண ஹெல்ப் பண்ணு" என்று கூறவும் உடனே எழுந்து கொண்டான் வருண்.

" ஓகே மிஸ்.சரண்யா, ஐ'ல் பி பேக்" என்று சொல்லிவிட்டு கீதாவை தொடர்ந்தான். கீதா மனதிற்குள் " ஐ'ல் பி பேக்கா?? வாடா இன்னிக்கு நீ செத்த" என்று மனதில் கருவிக் கொண்டே கிச்சனுள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்த வருணின் ஷர்ட்டை பிடித்து " அந்த சரண்யா கூட உனக்கு என்ன பேச்சு மிஸ்டர் . ஜெர்மன்?" என்று ஆத்திரமாக கேட்டாள்.

ஆனால் வருணோ அவளது கோபத்தை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. இவ்வளவு அருகில் அவளது அந்த கண்களை கண்டவன் வாய் பேச இயலாதவன் புன்னகையுடன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு " உனக்கு பிடிக்கலனா இனிமே நான் அவ இருக்கிற திசை பக்க மே போகல...ஓகே வா டியர்" என்று தலையை சரித்து கண்ணில் காதலுடன் கேட்கவும் அந்த கணமே அந்த விழிகளில் தன்னை தொலைத்தாள் கீதா.

" நெஜமா?" என்று சிறுகுழந்தை போல் அவள் கேட்க குனிந்து தன் தலையை அவளது தலையில் முட்டி " நெஜமா" என்று அழுத்தமாக கூறினான். அவன் கூறியதும் அவனை கட்டி கொண்டாள் கீதா. கண்ணை மூடி அவனது இதயத்துடிப்பை கேட்டுக் கொண்டிருந்தவளின் தலையில் தன் தாடையை வைத்து அழுத்தியவன் அந்நிமிடம் கடவுளிடம் வேண்டியது எல்லாம் "இந்த நெருக்கம் வாழ்நாளெல்லாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே.............
 

NITHYA MARIAPPAN

Saha Writer
Team
Messages
15
Reaction score
1
Points
1
அத்தியாயம் 12



ஒரு நிமிடம் அசையாது அவனது இதயத்துடிப்பை கேட்டவள் தான் நின்று கொண்டிருக்கும் நிலையை அப்போது தான் உணர்ந்தாள். அவனை அணைத்து இருந்த கரங்களை விலக்கியவள் மானசீகமாக தன் தலையில் கொட்டிக் கொண்டாள்.

'என்ன பண்ணி வச்சிருக்க கீத்து! இப்போ இவன் முகத்த நீ எப்பிடி பாப்ப?? சும்மாவே இந்த லொடலொடா ஓவரா பேசுவான். இன்னிகு நீ ஹக் வேற பண்ணிட்ட. கேக்கவே வேணாம் போ!' என்று அவள் மனசாட்சி அவளை கேலி செய்ய சிவந்த முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


அவனும் அவளையே பார்த்து கொண்டிருக்கவும் அவள் கன்னம் வெட்கத்தில் சிவந்ததை அவளால் உணர முடிந்தது. பின் தன்னை சமனப்படுத்தி கொண்டவள் அவனை நேராக பார்த்து "ஹலோ! இது ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்லி ஹக் தான். டோண்ட் டேக் இட் ராங்...ஓகே" என்று வரவழைத்து கொண்ட தைரியத்துடன் கூறினாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவன் " ஓகே மேம்!! அப்போ நான் அந்த சரண்யா கூட பேசுனா உங்களுக்கு எந்த பிராப்ளமும் இல்ல! அப்பிடி தான" என்று கண்ணில் குறும்புடன் கேட்க இரு கைகளையும் அவன் கழுத்தை நெறிப்பது போல் கொண்டு சென்றவள் " நீ அவ கூட பேசிடுவ?? நீ பேசி தான் பாரேன்!" என்று அவனை முறைத்தாள்.

" சரண்யா!' என்று அவளை நோக்கி கை காட்ட கடுப்பானவள் அவன் ஷேர்ட் காலரை பிடித்தாள்.

" அந்த ஆண்ட்டி கூட நீ பேசுனனு வை! அப்றம் அவ்ளோ தான்!" என்று கண்ணை உருட்டியவளை பார்த்து அவன் சிரித்து கொண்டே அவள் முகத்தில் விழுந்த முடிகற்றையை மெதுவாக அவள் காதின் பின்புறம் ஒதுக்கியவன் " சரி பேசல! பட் அதுக்கு பதிலா இன்னிக்கு ஃபுல் டே நீ என் கூட ஸ்பெண்ட் பண்ணனும்! ஓகேவா??" என்று கண்ணில் காதலுடன் கேட்டவனை பார்த்து சிரித்தபடியே தலையாட்டினாள் கீதா.

அவள் கையை தன் கையுடன் கோர்த்து கொண்டவன் புன்னகையுடன் ஹாலுக்கு வந்து அவனும் அமர்ந்து அவளையும் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டான். பிடித்த கையை அவனும் விடவில்லை., அவளும் விலக்கவில்லை!

அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தபடியே மற்றவர்களும் அமர அரட்டை கச்சேரி ஆரம்பமானது.


" தாய்க்கிழவி! என்ன லவ்வா?" என்று கேட்டுக் கொண்டே கண் அடித்தான் ஜேஸி.

" வெறும் லவ் இல்ல போல.. இது ஒரு வித்தியாசமான காதல் கதை" என்ற அனுவை பொய்க்கோபத்துடன் பார்த்தான் வருண்.

" ஐய்யய்யோ! ஃபர்ஸ்ட் டைம் அண்ணிய சாரில பாத்ததும் அதை பத்தி பேசியே எங்க காதை புண்ணாக்குனதுலாம் அவன் கண் முன்னாடி வந்து போகுமா இல்லையா?" என்று பிரியா வருணின் காலை வாற கீதா அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

அவள் பார்வையிலேயே அவள் கேட்க வந்ததை புரிந்து கொண்டவன் " எனக்கு நீ எப்போவுமே ஷ்பெஷல் தான் கீத்து!" என்று அவளை தோளுடன் அணைத்தவனை பார்த்து அனைவரும் "ஓஹோ" என்று கூச்சலிட கீதா அவன் கையை விலக்கி விட்டாள்.

ஸ்ரீதேவி கீதாவை அணைத்து "சும்மா இருங்கப்பா! என்னோட அக்காவ ஓவரா கலாய்க்காதிங்க" என்று சொல்ல எல்லாரும் சிரித்தனர். இதை பார்த்து சரண்யாவுக்கு பற்றி கொண்டு வந்தது.

இந்த வருணுக்கு கண்ணே இல்ல போல! போயும் போயும் இந்த கீதா கிட்ட அப்பிடி என்ன இருக்குனு இப்பிடி விழுந்து கெடக்கிறான்! என்று மனதிலேயே பொருமியபடியே கீதாவை பார்த்தவள் "கீத்துக்கு ஃபைனலி லவ் செட் ஆயிடுச்சு போல! பட் எனக்கு ஒரு டவுட்! வருண் நீங்க அப்ராட்ல இருந்திருக்கிங்க! அங்க ரொம்ப அழகான கேர்ள்ஸ பாத்துருப்பிங்க! அப்றம் எப்பிடி கீதாவ லவ் பண்ணிங்க?" என்று வாய் விட்டே கேட்டுவிட்டாள்.

ரியாவுக்கும் யோகாவுக்கும் இவளை என்ன தான் பண்றதுனு கடுப்பில் கையை கட்டி கொண்டு வருணின் பதிலுக்கு காத்திருந்தனர். அவர்கள் மட்டுமின்றி நண்பர் குழு முழுவதும் அவனது பதிலுக்கு காத்திருக்க அவனோ கீதாவை பார்த்து சிரித்தவன் அவளை காதலுடன் பார்த்து " என்னோட கீத்து மாதிரி அங்க யாரயும் நான் பாக்கலயே!" என்று சொல்ல சரண்யா புரியாமல் பார்க்க அவன் தொடர்ந்து கீதாவை பார்த்த படியே அந்த தருணத்தை விளக்க ஆரம்பித்தான்.


" என் கீத்து அழகுக்கு ஈக்வலா இந்த உலகத்துலயே யாரும் கெடயாது. அவளோட சிம்ப்ளிசிட்டி தான் அவளோட அழகு. ஒன் மோர் திங் ஒரு லைஃப் பார்ட்னர் அழகா மட்டும் இருந்தா போதும்னு நெனைக்கிறவன் இல்ல நான். எனக்கு நெறையா மைனஸ் பாயிண்ட்ஸ் இருக்கு. அதயும் தாண்டி என்ன எனக்காகவே ஏத்துக்கிட்ட ஒருத்தி கீத்து மட்டும் தான். என் ஃபேமிலிய காரணம் காட்டி தான் என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பையே அவ ஏத்துகிட்டா. அதே ஃபேமிலியால தான் என் மேல இருந்த கோவத்த கூட விட்டுட்டு எனக்கு இன்னொரு சான்ஸ் குடுத்தா. இப்பிடி ஒருத்திய மிஸ் பண்ண நான் என்ன பைத்தியமா?"

வருண் பேசி முடித்ததும் ஜேசி " ஓ மை காட்! ப்ரோ வாட் அ டிவைன் லவ்" என்று சிலாகித்தபடியே அவனை கட்டி அணைத்து கொண்டான்.

அவினாஷும் விக்னேஷும் சரண்யாவை பார்த்து கேலியாக சிரிக்க அவளும் சிரித்து சமாளித்து வைத்தாள்.

இவ்வாறு பேசியபடியே லஞ்ச் சாப்பிட அமர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

வருணை பார்த்த படியே சாப்பிட்டு முடித்த கீதா பாத்திரங்களை சுத்தம் செய்ய தொடங்கினாள். அவளுடன் இணைந்து வேலையை பகிர்ந்து செய்ய தொடங்கினான்.

வேலை செய்தபடியே கீதா வருணிடம் பேச்சு கொடுக்க தொடங்கினாள்.

" வருண்! உனக்கு என்ன இவ்ளோ பிடிக்கும்னு ஏன் முதல்லயே என் கிட்ட சொல்லல?"

" பிகாஸ் எங்க நீ தப்பா நெனச்சு என் கூட பேசாமயே போய்டுவியோனு நான் கொஞ்சம் பயந்துட்டேன்"

" அஹான்! பட் இந்த விஷயத்தை எப்போவோ அவி கேட்ச் பண்ணிட்டான். எனக்கு தான் புரியாமலே போய்ட்டு போ"

" நீ சரியான டியூப் லைட்!"

" ஹலோ போதும் பா! கொஞ்சம் அப்பாவியா இருந்துட்டேன்"

" ஓகே! ஜோக்ஸ் அப்பார்ட்., உனக்கு என் மேல இருந்த கோவம் போயிடுச்சா இல்லயா??"

" போய்டுச்சு! பட் இன்னும் என்னோட குழப்பம் தீரல."

" என்னடி குழப்பம் உனக்கு? டோண்ட் வொர்ரி., உன் குழப்பத்த நீ வளத்து பேர் வச்சு பெரிய பையனாக்கிக்கோ!" என்று சலித்தபடி சொல்லிவிட்டு பாத்திரத்தை அடுக்க தொடங்கினான்.

அவன் கூறியதை கேட்டு சிரித்தாள் கீதா.

" கீத்து! உங்க யாருக்கும் அந்த சரண்யாவ பிடிக்கல. தென் ஒய் டிட் யூ இன்வைட் ஹெர்??"

" எல்லாம் அஜிக்காக தான். அஜிக்கு இவள ரொம்ப பிடிக்கும். ரொம்ப லவ் பண்றான். பட் ஷீ டஸிண்ட் டிஸர்வ் ஹிஸ் லவ்"

" எனிதிங் ராங் அபவுட் ஹெர்??"

" அவளுக்கு ஸ்டெடி மைண்ட் கெடயாது. நீ கூட பாத்த தான, அஜி கூட தான் அவ இங்க வந்தா! பட் அவன் போனதும் அவ கண் உன் மேல விழ ஆரம்பிச்சது. அப்புறமா அஸ் யுஸ்வல் அவ உன் கூட கடலை போட ஆரம்பிச்சிட்டா. இது தான் அவ. ஷீ வாஸ் டிரையிங் டு செப்பரேட் அவி அண்ட் ரியா டூ. ஏதோ அவி கொஞ்சம் லவ்ல ஸ்ட்ராங்கா இருந்தான். இல்லனா அவங்களுக்கு இவளால பிரேக் அப் ஆயிருக்கும்" என்று அவள் கூறியதை கேட்டவன் அந்த சரண்யாவிடம் இனி கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டுமென்று மனதில் நினைத்து கொண்டான்.

இருவரும் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தனர்.


" தாய்க்கிழவி! எனக்கு ஒரு டவுட்" என்று கீதாவிடம் கேட்டான் ஜேசி.

" என்னடா டவுட்??"

" உன்னயும் ஒரு பொண்ணா மதிச்சி வருண் ப்ரோ லவ் பண்றாரு. நீ என்ன அவர கண்டுக்கவே மாட்ற மாம்?"

" டேய்! அவனே சும்மா இருக்கான். உனக்கு என்னடா?"

" அதுலாம் தெரியாது. நீ இன்னிக்கு அவருக்கு தெளிவா ஒரு பதில சொல்லு"

" இது என்ன விளையாட்டா உனக்கு ஜேசி?? எனக்கு யோசிக்க டைம் வேணும்னு நான் வருண் கிட்ட கேட்டிருக்கேன்."

" நீ யோசிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடி பாட்டியம்மா ஆய்டுவ தாய்க்கிழவி"

"என்ன ஒலறிட்டு இருக்க ஸன்??"

" மாம் ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்" என்று கண்ணை மூடி ரசித்து கூறினான் ஜேசி.

" வாட்?" என்று அதிர்ந்தாள் கீதா. "யாருடா அது??? என் கிட்ட ஏன் சொல்லல எரும?? இனிமே என் கூட பேசாத போ!" என்று அவள் படபடக்கவும் அவளை முறைத்தான் ஜேஸி.

" உன்னோட தொங்கச்சி தான் அது" என்று அவன் சாதாரணமாக கூறியதை கேட்டு அனைவருமே அதிர்ச்சியுடன் ஸ்ரீதேவியை பார்க்க அவள் வெட்கத்துடன் தலையை குனிந்தாள்.

" என்னது? ஸ்ரீகுட்டியா? நீயுமா என் கிட்ட மறச்சிட்ட??" என்று கீதா கேட்கவும் பேச வந்த ஸ்ரீயை அமைதிபடுத்திய ஜேஸி "மாம்! உன் கிட்ட மறைக்கணும்னு நாங்க நெனைக்கல. பட் சொல்லுறதுக்கு இப்போ தான் டைம் வந்துச்சு" என்றான்.

" சரி பொலச்சு போங்க. பட் ஒன் கண்டிஷன்" என்று கீதா கூறவும் என்னவென்று பார்த்தான் ஜேஸி.

" உன்னோட மேரேஜுக்கு எனக்கு 50000க்கு சாரி எடுத்து குடுக்கணும். அப்போ தான் நான் அட்டெண்ட் பண்ணுவேன்" என்று கெத்தாக கூற அவளை தோளுடன் அணைத்து கொண்டவன் "உனக்கு இல்லாததா மாம்?? பிராமிஸ்" என்று சொல்லி மற்றொரு கையால் ஸ்ரீதேவியை அணைத்து கொண்டான்.

" ஐயோ இந்த ஃபேமிலி டிராமா தாங்க முடியலபா" என்று யோகாவும் ரியாவும் கிண்டலடிக்க அனைவரும் அதை கேட்டு நகைத்தனர்.

அன்றைய நாள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அழகான நாளாக ஆரம்பித்து இனிமையான நினைவுகளோடு முடிந்தது.
 

NITHYA MARIAPPAN

Saha Writer
Team
Messages
15
Reaction score
1
Points
1
அத்தியாயம் 13

காலையிலேயே போன் ஒலிக்கப் போர்வையை விலக்கிய வருண் டிஸ்ப்ளேயில் கீதாவின் போட்டோவை பார்த்ததும் புன்னகைத்தான்.

" கீத்து! என்ன காலங்காத்தால கால் பண்ணிருக்க?"

" வருண் இன்னிக்கு மார்னிங் நீ ஃப்ரீயா?"

" இன்னிக்கு அனு ஏதோ புக்ஸ் வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தா. நான் வரேனு அவளுக்கு பிராமிஸ் பண்ணிட்டேனே"

" இட்ஸ் ஓகே! இன்னிக்கு கண்ணன் அங்கிளும் அபிம்மாவும் வினுவ கூட்டிட்டு இந்தியா வர்ராங்க. சோ ஏர்போர்ட் போய் அவங்க ரிசீவ் பண்ணனும்னு தான் உன்ன கூப்டேன். பரவால்ல! நான் ஜேஸிய கூட்டிக்கு போய்க்கிறேன்"

அவளுடைய கார்டியன் வருவதாக கூறியதும் வருண் அவசர அவசரமாக "ஏய்! கீத்து வெயிட்., அனு கிட்ட டுமாரோ புக்ஸ் வாங்கிக்கலானு சொல்லிடுறேன். நானே வந்து உன்ன ஏர்போர்ட்டுக்கு பிக் அப் பண்ணிட்டு போறேன். ஓகே"என்று கூறி காலை கட் செய்து விட்டு "ஓ மை காட்! என்னோட மாமனார் யூ.எஸ் ல இருந்து வர்ரார். லுக் வருண்! எப்பிடியாச்சும் அவர் கிட்ட நல்ல பேர் வாங்கியே ஆகணும்" என்று மனதிற்குள்ளேயே சூளுரைத்து விட்டு கீதாவை அழைத்து செல்ல தயாரானான்.

அவன் அவசரமாக வருவதாக கூறவும் கீதா ' இந்த வருணுக்கு என்னாச்சு?? புக்ஸ் வாங்க போறேனு சொன்னவன் திடீர்னு ஏர்ப்போர்ட் வர ஒத்துகிட்டான். அவன என்னிக்கு தான் நான் புரிஞ்சிக்க போறேனோ?" என்று அவளும் தயாரானாள்.

சென்னை இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்...

இருவரும் காத்து கொண்டிருக்கும் போது "டேய் வருண்" என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தனர். அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தவனை பார்த்த கீதாவிற்கு இவனை எங்கோ பார்த்த நியாபகம் வந்தது.

அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே அருகில் வந்தவனை அணைத்த வருண் " டேய் அரவிந்த்! யாருக்குடா வெயிட் பண்ணிட்டு இருக்க?? நீ மும்பைல ஜாப்ல ஜாயிண்ட் பண்ணிட்டனு நெனைச்சா திடீர்னு கண்ணு முன்னாடி வந்து நின்னு சர்ப்ரைஸ் குடுக்கிறியேடா? எப்போ சென்னை வந்த?" என்று கேள்விகளை அடுக்கினான்.

" எப்பா டேய்! ஒரு ஒரு கேள்வியா கேளுடா தெய்வமே!" என்றவனின் குரலை வைத்து இவன் தானே அன்று வருணின் போனில் பேசியவன் என்ற நினைவு வந்தது.

அவள் தொண்டையை செருமவும் அவள் புறம் திரும்பிய வருண் அவளை அரவிந்துக்கு அறிமுகப்படுத்தினான்.

" பை தி வே திஸ் இஸ் கீதா. நான் ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல, எங்க ஊரு பொண்ணுனு. அவ தான்" என்று சொல்லவும் அரவிந்துக்கு கை கொடுத்த கீதா "ஐயாம் கீதா. வருணுக்கு கால் பண்ணுற 25 பொண்ணுங்கள்ல நானும் ஒருத்தி" என்று சொல்லிவிட்டு அரவிந்தை முறைக்கவும் வருண் புரியாமல் விழித்தான்.

அரவிந்த் மனதிற்குள்ளேயே "ஆத்தாடி! இவ தானா அது!" என்று மனதிற்குள்ளேயே சொல்லிவிட்டு வருணின் காதில் "டேய்! எங்க வந்து யார் கிட்ட மாட்டி விட்டுருக்க?" என்று கூற கீதா " அங்க என்ன ரெண்டு பேரும் சீக்ரெட் பேசுறிங்க?" என்று முறைத்தபடியே கேட்டாள்.

வருண் அவளை அமைதிபடுத்திவிட்டு அரவிந்தை கேட்க அவன் கீதா கால் செய்த விஷயத்தை கூறிவிட்டு தான் கூறிய பதிலையும் சொன்னான். அவன் கூறியதும் தலையில் கை வைத்த வருணை பார்த்த கீதாவிற்கு சிரிப்பு வந்தாலும் அவள் அதை முகத்தில் காட்டாது சீரியஸாக நின்று கொண்டிருந்தாள்.

அப்போது " கீத்து!" என்று கூவிக் கொண்டு அவளை கட்டி கொண்டான் ஒரு 13 வயது சிறுவன். அவளும் "வினு" என்று அவனை அணைக்க ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் அவனை தொடர்ந்து வந்து சேர்ந்தனர்.

" அங்கிள்" என்று அவரை அணைத்த கீத்துவை பார்த்து " எப்பிடிடா இருக்கா?" என்று கேட்டார்.

அந்த பெண்மணியை அணைத்தவள் வருணையும் அரவிந்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.

வருணுக்கு திருநெல்வேலி தான் என்றதும் அந்த பெண்மணி " எங்க பூர்விகம் திருநெல்வேலி தான். இவங்க அப்பா வொர்க் பண்றதுக்காக நாங்க யூ.எஸ் போய்ட்டோம் தம்பி" என்று சகஜமாக பேச வருணும் அவர்களூடன் உரையாட ஆரம்பித்தான்.

அவர்கள் தான் கீதாவின் கார்டியன்ஸ் கண்ணன் அவரது மனைவி அபிராமி. அவர்களின் மகன் தான் வினோத்.

" சரி மீதியை வீட்டில போய் பேசிக்கலாம். அங்க உங்களூக்காக ரியாவும், யோகாவும் வெயிட்டிங்" என்று அவர்களை அழைத்து வந்து கால் டாக்ஸியில் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வருணுடன் பைக்கில் வந்து சேர்ந்தாள்.

வீடு வரும் வரை அவள் ஏதும் பேசாததால் அவள் தன் மீது கோபமாக இருக்கிறாளென்று நினைத்து அவனும் அமைதி காத்தான் வருண். அவளை வீட்டில் விட்டுவிட்டு கிளம்ப போனவனை "வருண்" என்ற கீதாவின் குரல் தடுத்து நிறுத்தியது.

என்னவென்று ஆவலுடன் திரும்பியவனை பார்த்து புன்னகைத்தவள் "என்னோட ஃபேமிலிய பாக்கணும்னு இவ்ளோ நாளா சொல்லிட்டு இருந்த. இப்போ அவங்க வந்ததுக்கு அப்புறமா அவங்க கூட பேசாம போனா என்ன அர்த்தம்?" என்று கேட்கவும் வருணுக்கு போன உற்சாகம் திரும்பி வந்தது.

அவளுடன் உள்ளே சென்றவன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த ரியாவுடனும் யோகாவுடனும் சேர்ந்து சுலபமாக கலந்து விட்டான். பின் கிளம்பியவனை வாசல் வரை வந்து அனுப்பியவள் அவன் பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு நிற்கவும் அவனை என்னவென்று பார்த்தாள்.,

" உனக்கு என் மேல கோவம் எதும் இல்லையே கீத்து?"

" நான் ஏன் உன் மேல கோவப்பட போறேன் வருண்?? உன் ஃப்ரெண்ட் விளையாட்டுக்கு சொன்னத சீரியஸா எடுத்துட்டு நான் தான் ஆல்ரெடி தேவையில்லாம உன் மேல கோவப்பட்டுட்டேனே?? இன்ஃபேக்ட் நான் உன் கிட்ட சாரி தான் கேக்கனும்" என்று சொன்னவளை சிரிப்புடன் பார்த்தவன் "என் மேல கோவப்பட உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு கீத்து. பட் கோவம் மட்டுமே பட்டுட்டு இருந்தா நான் பாவம் இல்லயா??? சோ......" என்று இழுத்தவனை புருவம் உயர்த்தி என்னவென்று வினவினாள் கீதா.

" ஒன்னும் இல்ல தாயே., நான் கெளம்புறேன்" என்று பைக்கை விரட்டினான்.

அவனை பார்த்து சிரித்தவாறு நிற்கும் கீதாவை யோசனையுடன் பார்த்தார் அபிராமி...
 

NITHYA MARIAPPAN

Saha Writer
Team
Messages
15
Reaction score
1
Points
1
அத்தியாயம் 14



கண்ணன் தன் வளர்ப்பு மகளை பார்க்க இந்தியா வந்து அன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரத்தில் ரியாவும் யோகாவும் கீதாவிற்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பதை பார்த்த அபிராமிக்கு தன் மகள் இங்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள் என்ற நிம்மதி ஏற்பட்டது.

அவளின் நட்பு வட்டத்தில் இருந்த மற்றவர்களும் அபிராமியிடம் பிரியமாக நடந்து கொண்டதை பார்த்தவர் கண்ணனிடம் கீதா நிறைய உயிர்நண்பர்களை சம்பாத்தித்துவிட்டாள் என்று மனநிறைவுடன் கூறிக் கொண்டார். ஆண் பெண் என்று இருபாலரும் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பழகியதை பார்த்த கண்ணனும் மனைவியின் கருத்தை ஆமோதித்தார். இடையில் ஒருநாள் பாக்கியநாதன் குடும்பத்தை சந்திக்க கீதா அவள் குடும்பத்தையும் தோழிகளையும் அழைத்து சென்றாள். பாக்கியநாதனின் மருமகளுக்கு ஏற்கெனவே கீதா தங்கள் வீட்டில் அன்று சாப்பிடாமல் சென்றது குறையாகவே இருக்க இன்று குடும்பத்தோடு வரவும் விருந்தே தயார் செய்து அசத்திவிட்டார்.

மொத்தத்தில் தங்கள் குடும்பம் இழந்த அந்த சந்தோசத்தை கடவுள் கீதாவின் நண்பர்கள் ரூபத்தில் திருப்பியளிப்பதாகவே நினைத்தனர் கண்ணனும் அபிராமியும்.

ஆனால் வருண் பற்றிய குழப்பம் மட்டும் இருவர் மனதிலிருந்தும் நீங்கவில்லை. அவனை பற்றி கேட்டால் கீதா அவனும் தன் நண்பன் என்று கூறினாலும் அபிராமி அதை நம்ப தயாரக இல்லை. அவளின் மற்ற நண்பர்களான விக்கி, அவினாஷ், ஜேசியிடம் பேசுவதையும் வருணுடன் பேசுவதையும் ஒப்பிட்டு பார்த்தவர் மகளிடம் இதை பற்றி தக்க சமயத்தில் கேட்க வேண்டுமென்று மனதில் எண்ணி கொண்டார்.

இவ்வாறு நாட்கள் கடக்க அன்று காலையே திருநெல்வேலியிலிருந்து அபிராமிக்கு கால் வந்தது.

" ஹலோ! அபிராமியா பேசறது?"

" ஆமா! நீங்க யாரு?"

" நான் வேணுகோபாலன் பேசறேன் மா., செங்கோட்டையிலிருந்து..."

" வேணு மாமாவா?? மாமா எப்பிடி இருக்கிங்க?? உங்களலாம் பாத்து எவ்ளோ நாளாச்சு?? மாமி சுகன்யா எல்லாரும் எப்பிடி இருக்காங்க"

" எல்லாரும் இங்க நல்லா இருக்காங்க மா. நீ எப்பிடி இருக்க? மாப்பிள்ளை அப்புறம் கொழந்தைகள் எல்லாம் நல்லா இருக்காங்களா?"

" எல்லாரும் நல்லா இருக்கோம் மாமா. நாங்க யூ.எஸ்ல இருந்து வந்து ஒரு வாரம் தான் ஆச்சு. எப்பிடி இருக்கு நம்ம ஊரு??"

" ஊருக்கு என்னம்மா ரொம்ப நல்லா இருக்கு., இங்க திருமலைகோயில்ல கும்பாபிஷேகம் நடக்க போறதும்மா. நீங்க குடும்பத்தோட வந்தா முருகனோட அருள் கொழந்தைகளுக்கும் கெடைக்கும்னு மாமி தான் உன்னண்ட கால் பண்ணி சொல்ல சொன்னா. இந்த முருகன் உங்களுக்கு குலதெய்வம் மா. அருணாச்சலம் இருந்திருந்தா இந்நேரம் அந்த வீடே ஜெகஜோதியா இருந்திருக்கும். அதுக்கு தான் நமக்கு கொடுப்பினை இல்லயே. ஆனா நீ அந்த குடும்ப வாரிசோட வந்து கட்டாயம் கலந்துக்கணும். இது இந்த மாமாவோட கட்டளை"

" கண்டிப்பா மாமா. அருணாச்சலம் மாமா எங்களுக்கு பண்ண உதவியால தான் நாங்க இன்னிக்கு வாழ்க்கைல நல்ல நெலைமைல இருக்கோம். அவர் அளவுக்கு இல்லனாலும் எங்களால் முடிஞ்ச அளவுக்கு அவர் பேத்தியை நல்லபடியா படிக்க வச்சு இன்னிக்கு அவளும் ஒரு நல்ல ஜாப்ல இருக்கா. கண்டிப்பா நாங்க எல்லாரும் குடும்பத்தோட கலந்துக்கிறோம் மாமா"

" சரிம்மா. நான் போய் உங்களுக்காக வீட்டை ஒழுங்குபடுத்துறேன். மாமிக்கு கீத்து வரப்போறத கேட்டா சந்தோசத்துல டேன்ஸ் ஆடுவா. சீக்கிரமா வந்துடுங்க. நான் போனை வைக்கிறேன்."

" சரி மாமா" என்று போனை வைத்தவர் கண்ணனிடமும் கீதாவிடமும் மறுநாள் செங்கோட்டை கிளம்ப தயாராகும்படி கூறிவிட்டு அவரும் லக்கேஜ் பேக் பண்ண தொடங்கினார்.

கீதா ரியாவையும் யோகாவையும் அழைக்க மூவரும் ஸ்ரீதேவியையும் கூடவே அழைத்து செல்வதாக முடிவு செய்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

வாக்கிங் போய்விட்டு வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்த வருண் போனை எடுத்து பார்த்த போது அவனது ஆச்சியிடம் இருந்து ஏகப்பட்ட மிஸ்டுகால்ஸ். உடனே கால் செய்தான்.

" ஆச்சி! சாரி., நான் வாக்கிங் போயிருந்தேன். அதான் கால்ஸ் அட்டெண்ட் பண்ண முடியல"

" ஒரு பிரச்சனையும் இல்லடா கண்ணா. அது ஒன்னும் இல்ல. நம்ம திருமலைகோயில்ல கும்பாபிஷேகம் வருதுப்பா. உங்க தாத்தா காலத்திலிருந்தே அந்த கோயில் முருகன் தான் நம்ம குலதெய்வம். இது ரொம்ப வருசத்துக்கு அப்புறம் வர்ர கும்பாபிஷேகம்கிறதால நம்ம மொத்த குடும்பமும் இதுக்கு வந்தா நல்லா இருக்கும்டா. உங்க அப்பா கிட்ட நேத்து நைட் போன் பண்ணி சொல்லிட்டேன். மத்தவங்க எல்லாருக்கும் லீவுக்கு சொல்லிட்டாங்க. நீயும் சொல்லிட்டு வருவியாடா?" என்று வாஞ்சையுடன் கேட்ட ஆச்சியின் ஆசையை விட அவனுக்கு வேறு எதுவும் பெரிதாக தோன்றவில்லை.

" வருவியானு கேக்காதிங்க ஆச்சி. வாடானு உரிமையா எனக்கு ஆர்டர் போடுங்க" என்று சொல்லவும் சிரித்தவர் அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைக்கவும் அவினாஷின் மிஸ்டு கால் இருந்தது ஸ்கிரீனில் தெரியவும் அவனை அழைத்தான்.

" வாட் மச்சி?? எதுக்கு இத்தன மிஸ்டு கால்ஸ்டா?"

" மச்சி., இந்த கீதா உனக்கு விஷயம் என்னனு சொல்லலையாடா வருண்?"

" இல்லடா., எனி பிராப்ளம்?"

" ஆமா.," என்று அவன் சொல்லவும் வருணுக்கு பதட்டமாக இருக்கவே " என்னடா ?? என்னாச்சு கீத்துக்கு?? நேத்து நைட் எல்லாரும் ரெஸ்ட்ராண்ட்ல அரட்டை அடிச்சப்போ கூட நல்லா தான இருந்தா?" என்று கேள்விகளை அடுக்கவும் கடுப்பான அவினாஷ் அவனை சமாதானப்படுத்தினான்.

" அடேய்! நிறுத்துடா., கொஞ்சம் மூச்சு விடுடா. முதல்ல பிராப்ளம் அவளுக்கு இல்ல., எனக்கு. நீ உன்னோட உணர்ச்சிவசத்த கொஞ்சம் அடக்கிட்டு நான் சொல்றத கேளுடா" என்று கூற வருண் " ஓகே டா மச்சி., சொல்லு" என்றான்.

அவினாஷ் கீதா தன் சொந்த ஊருக்கு தன் தோழிகள் அனைவரையும் அழைத்து கொண்டு செல்வதை கூறியதும் வருணுக்கு புரிந்து விட்டது அவளும் இதே திருவிழாக்காக தான் செல்ல போகிறாள் என்று.

ஆனால் அவினாஷ் தன்னால் ரியாவை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று புலம்ப விக்னேஷின் நிலையை கேட்டான். அவன் யோகாவை பார்க்காமல் இருந்தால் பைத்தியமாகி விடுவான் என்று அவினாஷ் கூற வருண் ஒரு ஐடியாவை கூறினான்.

அதாவது வருண் தன்னுடன் அவினாஷ், விக்னேஷ், ஜேசியை அழைத்து செல்வதாக கூற அவினாஷுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

ஆனால் கீத்துவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் ., சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்றான் அவினாஷ். அதை ஒப்புக் கொண்டவன் ஆனால் அவர்களை ட்ரெயினில் திருநெல்வேலி போகச் சொல்லுமாறு கூறினான். அவர்கள் செல்லும் ட்ரெயினிலேயே தங்களுக்கும் டிக்கெட் ரிசர்வ் செய்ய சொல்லிவிட்டு லக்கேஜை பேக் பண்ண ஆரம்பித்தான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

இங்கே கீதா வினுவிடமும் ஸ்ரீதேவியிடமும் அவர்கள் ஊரின் அருமை பெருமைகளை கூறிக் கொண்டிருந்தாள். ரியாவுக்கும் யோகாவுக்கும் எப்போது அங்கு செல்வோம் என்று இருந்தது.

" உனக்கு தெரியுமா வினு?? அப்போ அந்த ஆத்துல வெள்ளம் வேற. அந்த வுட் பிரிட்ஜ் மேல நடக்கவே எனக்கு பயமா இருந்துச்சு. அப்போ மாமா என்னோட கண்ண மூடிக்க சொல்லிட்டு என்ன தோள்ல உக்கார வச்சிட்டு அடுத்த கரைக்கு கொண்டு போய்ட்டார். அப்றமா தான் நான் கண்ணையே தொறந்தேன்" என்று அவள் கூறிய கதைகளை அபிராமியும் கண்ணனும் கேட்டு அந்த நாட்களுக்கே சென்றுவிட்டனர். அவள் கூறிய ஒவ்வொரு நிகழ்வையும் கூடவே இருந்து பார்த்தவர்கள் அல்லவா!!

" இன்னும் அங்க என்னலாம் இருக்கு கீத்து" என்று ஆர்வமிகுதியில் கேட்டாள் ரியா.

" வெயிட்! நாம தான் நாளை மறுநாள் அங்க தா இருக்க போறோம்., உங்க நாலு பேருக்கும் நான் எல்லா ப்ளேசஸும் சுத்தி காட்டுறேன்" என்று சிரித்தவாறே கூறினாள்.

அபிராமி " சரி சரி! லேட் ஆகுது. நாலு பேரும் தூங்குங்க. யோகா நீ தான் நாளைக்கு மார்னிங் எனக்கு ஃபுட் ப்ரிபரேஷனுக்கு ஹெல்ப் பண்ணனும். சீக்கிரம் தூங்கு போ" என்று அவர்களை தூங்க செல்லுமாறு கூற நால்வரும் பேசிக் கொண்டே உறங்கியும் விட்டனர்.

அவர்கள் தூங்குவதை பார்த்தவர் கண்ணனிடம் " இவ்ளோ நாள் அவங்க கண்ணுல காட்டாம இவள நம்ம பொண்ணா வளத்துட்டோம். நம்ம செங்கோட்டைக்கு போனா அவங்க கட்டாயம் அங்க வருவாங்க. கீத்துவ அவங்க கூட வச்சிக்க போறோம்னு சொன்னா என்ன பண்றதுங்க?" என்று தவிப்புடன் கேட்டார்.

கண்ணன் யோசனையுடன் " எக்காரணத்தை கொண்டும் அந்த பேராசை பிடிச்சவங்க கிட்ட என்னோட பொண்ண நான் விட்டு குடுக்க மாட்டேன் அபி. நான் அருணாச்சலம் சித்தப்பாக்கு வாக்கு குடுத்திருக்கேன் அவர் பேத்திய அந்த பேராசைக்கார குடும்பத்து கிட்ட இருந்து காப்பாத்துவேனு. இத்தன வருசம் அத காப்பாத்திட்டேன். இனியும் காப்பாத்துவேன்" என்று அவரிடன் உறுதியுடன் கூறினார்.

இருவரும் நம்பிக்கையுடன் செங்கோட்டை செல்லும் நாளுக்காக காத்திருந்தனர்...
 
Top Bottom