Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


"விண்ணில் விளையாட ஆசை" - கனி

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
விண்ணில் விளையாட ஆசை!



கந்த சஷ்டி கவசம் ரேடியோவில் இசைத்து கொண்டு இருக்க,பத்மா பூஜை அறையை சுத்தம் செய்து இறைவனை வணங்கி கொண்டிருந்தாள், இறைவனை தொழுது முடித்தவுடன் கவிதா….கவிதா… என்று கூறிக்கொண்டே அறையில் உறங்கும் தன் மகளை எழுப்புகிறாள்.



கவிதாவோ அப்பொழுது தான் எழுந்து பள்ளிக்கு செல்ல தயாராகிறாள். பள்ளியில் கவிதா தான் கடைசி மதிப்பெண் எப்போதும் வாங்குவாள். அவள் ஒரே பெண் என்பதால் அவளது பெற்றோர் அவளை செல்லமாக வளர்கிறார்கள், கவிதாவின் தந்தை கிருஷ்ணன் அவளை பள்ளியில் இறக்கிவிட்டு அலுவலகம் சென்றார். பள்ளியில் கவிதாவின் ஆசிரியர் ரேகா அனைவரிடமும் உங்களுக்கு என்ன ஆகணும்னு ஆசை இருக்கு?என்றார். அனைவரும் டாக்டர்,இஞ்சினியர், லாயர் அப்படினு ஏதேனும் ஒன்றை கூறினர்.கவிதா மட்டும் எதுவும் கூறவில்லை.



ஆசிரியரோ கவிதா உனக்கு ஆசை இல்லயா?என்றார். அவளோ எனக்கு நிறைய ஆசை இருக்கு மிஸ், அதையெல்லாம் சொன்னா இந்த ஒரு நாள் பத்தாது என்றாள்



நிறைய ஆசையா! எங்க சொல்லு என்றார் ஆசிரியர்.கவிதாவோ மழையில் நனைய பிடிக்கும்,ரொம்ப தூரம் ட்ராவல் பண்ண பிடிக்கும்,சளி பிடிச்சாலும் ஐஸ்க்கிரீம் சாப்பிட பிடிக்கும்,அப்படினு ஒரு பெரிய லிஸ்ட் சொல்ல,ஆசிரியரோ இது எல்லாம் ஒரு ஆசையா உன் வாழ்க்கை இலட்சிய ஆசை என்ன?என்றார்.



கவிதாவோ ஆசையில் என்ன மிஸ் இலட்சிய ஆசை, சின்ன ஆசை,பெரிய ஆசைனு எல்லாமே ஆசை தான். அதாவது மிஸ் இருக்குறது ஒரு வாழ்க்கை அதுல நா ஒரு ஆசை மட்டும் வச்சுக்க விரும்பல.இப்ப கூட விண்வெளி போயி என் நண்பர்களோட விளையாடனும்னு ஆசை,கண்டிப்பாக என் ஆசை எல்லாம் நிறைவேறும்,



நம்ம வாழ்க்கைக்கு ஒரு ஆசை மட்டும் போதும் என்று ஆசிரியர் கூற,கவிதாவோ மிஸ் ஆசை இல்லா வாழ்வு சுவையறியாத நாக்கு மாதிரி, இப்ப நாக்கே நம்ம எடுத்துக்குவோம் அது ஒரே ஒரு சுவை மட்டுமா உணருது ஆறு சுவையை உணருது, நாக்கே தனக்கு ஆறு ஆசை வச்சிருக்கு, நமக்கு ஒரு அறுபது கூட இல்லனா எப்பிடி மிஸ், அப்ப தான் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும். வாழ்க்கை ஒரு தடவ தான் அதை வாழ்ந்து பாக்க வேண்டாமா?என்றாள்.



ஆசிரியரோ இதலாம் உனக்கு யார் சொல்லி தரா?என்றார். கவிதவோ என் அப்பா தான் மிஸ், மேலும் அவர் "ஆசை கொள் கருவில் இருந்து கல்லறை செல்லும் வரை" அப்படின்னு சொன்னாங்க.உடனே பாக்கலாம் உன் விண்வெளி ஆசை நிறைவேறுதானு? என்றார் ஆசிரியர்.அப்புறம் இப்ப தான் நீ 12ஆவது படிக்கிற,இனிமேல் தான் உன் வாழ்க்கையில் நிறைய திருப்பம் வரும் அது எல்லாத்தையும் கவனமா கையாளனும் என்றார்.காலங்கள் கடந்தன………..



பத்மாவோ, கவிதா நீ இன்னும் ரெடி ஆகாலய,உன் பொண்ணு தியாவே ரெடி ஆயிட்டா, வேகமா கிளம்பு என்றாள்ள.கவிதாவும் கிளம்பி தயாரானாள். பத்திரிக்கையாளர்கள் கவிதாவை பேட்டி எடுக்க தயாரானர்கள், அவர்கள் கவிதாவிடம் இவ்ளோ சின்ன வயசுல எவ்ளோ பெரிய சாதனை எப்படி மேடம் என்றனர், கவிதாவோ எனக்கு ரெம்ப சந்தோசமா இருக்கு,ஸ்பேஸ் ரிசெர்ச்காக செலக்ட் பண்ண ஆளுங்கள்ல நானும் ஒருத்தினு நினைக்கிறப்ப, மேலும் அதை நாங்க வெற்றிகரமா முடிச்சுட்டோம். இதுக்கெல்லாம் காரணம் என் குடும்பம் தான் என்னால முடியும்னு அவங்க தான் எப்பவும் சொல்லுவாங்க என்றாள் கவிதா.



இதை தொலைக்காட்சி மூலம் பார்த்த ஆசிரியர் ரேகா உதட்டோரம் மெல்லிய புன்னகை செய்தார்.
 

Latest Episodes

New Threads

Top Bottom