Epi-2
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
"என கோவிலில் கிருஷ்ணா காணம் பாடிக்கொண்டு இருக்க இங்க மன பெண் அலங்காரத்து உடன் தன் தோழிக்காக இந்தஅக்னி பரிட்சையில் இறங்க முன் வந்து விட்டாள், அந்த கிளி பச்சை நிறத்தில் பட்டுபுடவை உடுத்தி , சிம்பிள் ஆனா மேக் அப்பில் மதிகேன்று அவளது பெற்றோர் சேர்த்து வச்ச நகைகள் மட்டும் தான் போட்டு இருந்தாள் , சூர்யாவிடம் இருந்து வாங்கி வந்த எந்த ஒரு நகையும் அவள் தொட்டு கூட பார்க்கவில்லை அவளுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை , அதை சந்தியாவிடம் முடிவாக சொல்லிவிட்டாள் இங்க பாரு சந்தியா எனக்கு அவங்க குடுக்குற நகை ஏதும் வேண்டாம், அம்மா குடுத்து போனதே இருக்கு , இதை அவர் கிட்டயே திருப்பி குடுத்துரு சொல்லிவிட்டாள் ஆனால் சந்தியா அதை தன்னிடம் எடுத்து வைத்துகொண்டாள் சந்தியா சொன்னாள் என்பதற்காக கிளம்பி வந்த மதிக்கு மனசு கேட்கவில்லை ஆனால் இதோடு முடிவு அந்த இறைவன் தான் கூற வேண்டும் என்று அந்த கண்ணை மூடி மனம் உருகி வேண்டி கொண்டாள்....ஒரு வேலை அம்மா-அப்பா இருந்து இருந்தா... இப்பிடி எல்லாம் நடந்து இருக்குமா என்னவோ , மனத்துக்குள் அம்மா – அப்பா எனக்கு ஏதோ நான் பெரியே தப்பு பண்ண போற மாதிரியே இருக்கு ஆனா அது என்னன்னு தான் புரியலை நீங்க தான் எனக்கு துணை இருக்கணும் என வேண்டினாள் , அவளால் சத்தம் போட்டு அழ கூட முடியவில்லை .
சூர்யாவோ, இறுகி போனா பாறையாய் ஹோமம் முன்னாள் அமர்ந்து இருந்தான் அதை கவனித்த இவளின் முதுகு தண்டில் மின்னல் வெட்டியது பயத்தில் அவள் உடம்பு அப்படியே சில்லேனே ஆகிவிட்டது மதி பயத்தில் சந்தியாவின் கையே பற்றிக்கொள்ள ஆனால் அவளை தேற்ற வேண்டியவளோ , மதி கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் வாயேண்டி , என்னமோ உன்ன கடத்திட்டு வந்த மாதிரி முகத்த வச்சு இருக்க என சந்தியா குறை பாட ,
அதற்க்கு பயந்தே மதி , சிரிச்ச முகமாய் இருக்க முயற்ச்சித்தாள் , இல்லை நடித்தாள் என சொல்லலாம்.
மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்து மதி அவன் அருகில் சென்று அமர , அவனோ பெயர்க்கு கூட நிமிர்ந்து பார்க்கவில்லை , அவனை ஓரகண்ணால் பார்த்த மதிக்கு மேலும் குழப்பம்
ஏன் இப்பிடி இருக்கான், அப்போ அப்பிடி பேசிவிட்டு இப்போ இப்படி இருந்தா என்ன அர்த்தம் , பின்ன ஏதோ யோசித்தவளாய் இவனுக்கும் கஷ்டமா தானே இருக்கும், நாம நேசிச்ச பொன்னே நம்மளுக்கு வேற பொண்ண கட்டி வச்சா உச்சி குளிர்வா முடியும் என அவளும் அவனை பற்றி தப்பு தப்பாக நினைத்து படி உட்காந்து இருந்தாள் அவன் அருகில் .
மறந்தும் திருமணம் செய்யே போகும் இருவர் முகத்தில் சிரிப்பு ஒன்றே இல்லை கடும் கோபத்தில் அவன் இருக்க, கவலையில் இவள் இருந்தாள் ,
தாலி எடுத்து கட்டுங்கோ ....அதே முக பாவத்துடன் மாங்கலியம் எடுத்து அந்த மங்கையின் கழுத்தில் கட்டி விட்டான்.
மதி தன் கண்ணீரை மறைத்து படி தலை நிமிரவே இல்லை
சூர்யா அருகில் நின்று இருந்த ஜோர்ஜ் , வாழ்த்துக்கள் பாஸ் '.சொல்ல
அதை கேட்டு மறந்தும் கூட சூர்யா ஏற்றுக்கொள்ளவில்லை என அவன் முகம் காட்டி கொடுத்தது .
இந்த நேரத்தில் அதிக சந்தோஷத்தில் ஒருவர் இருக்கிறாள் என்றால் அது சந்தியா தான் , அதே சந்தோஷத்தில் மதியே அவள் மெல்ல அனைத்து , ஹே தேங்க்ஸ் டி மதி , சரி நான் வீட்டுக்கு முன்னாடி போறேன் நீ சூர்யா கூட அங்க என்ன வந்துரு அப்பா அம்மாவை சமாதனம் படுத்தனும்ல சமாதனம்ஆகா மாட்டாங்க தான் இருந்தாலும்.." என்னவோ பெரியே தியாகி போல் சந்தியா வார்த்தையே அள்ளி வீச கொண்டு இருந்தாள்
அப்பா அம்மா என்று சந்தியா சொன்ன உடன் வெண்மதிக்கு குளிர் காய்ச்சலே வந்து விடும் போல் இருந்தது... இதை தானே நானும் சொன்னேன் அப்போ எல்லாம் பார்த்துக்கலாம் சொல்லிவிட்டு இப்போ இவள் இப்படி சொல்லுகிறாளே என பயம் அவளை தோற்றி கொள்ள ( இன்னும் காய்ச்சல் இல்லையா ...ஹி ஹிஹி, உன் நால இப்போ என்னக்கு காய்ச்சல் வந்துவிடும் போல் இருகிறதே அம்மா என்ன செய்வது " ).
சந்தியா சொல்லி முடிபதற்குள் ..சூர்யா முந்தி கொண்டான்
" வேண்டாம் சந்தியா, நான் நேரா என் வீட்டுக்கே கிளம்புறேன் ,யாரும் எங்கையும் வர போறது இல்லை நீ உன் வீட்டுக்குகிளம்பி போ... உன் அம்மாவை சமாதனம் பண்ணிக்கோ .. வெண்மதி என் கூட தான் வர போறா நீ கிளம்பு
" ஜார்ஜ் , நீ இவள அழைச்சுட்டு போய் அவங்கள விட்டுட்டு வந்துரு நான் கிளம்புறேன்... என்று சந்தியாவின் பதில் எதிர்பாரமல் நகர்ந்து விட மதி அவன் போகிறானே, இப்போ நான் அவன் கூட போறதா இல்லை யோசித்த படி நிற்க கொஞ்சம் தூரம் வரை போனவன் மதிஅவனுடன் வராமல் அதே இடத்தில நிற்பதை திரும்பி பார்த்தவனின் ரத்த அழுத்தம்உச்சிக்கு ஏறியது , வாய் திறந்து ஏதும் சொல்லாமல் மதியே அவன் முறைத்து பார்க்க , அதுலயே மதி நான் வரேன் சந்தியா என சந்தியாவிடம் சொல்லிவிட்டு.. அவன் பின்னால் சென்றால்.. இல்லை இல்லை ஓடினாள்
இங்க சந்தியா சற்று குழம்பித்தான் போய் விட்டால் , என்ன தான் ஆச்சு இவனுக்கு இவ்வளோ நாள் நல்ல தானே இருந்தான் இந்த ரெண்டு நாள தான் இப்படி இவன் பேசுறான், நாம நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு போய் மதியே வசவு வாங்க வைக்கலாம் என்று பார்த்தால் இவன் அவள வீட்டுக்கே அழச்சுட்டு வர மாட்டான் போல் இருக்கே ஒரு வேலை நம்ம திட்டம் ஏதும் தெரிஞ்சு போய் இருக்குமோ என அவள் யோசித்த படி சிறிது நேரம் நின்றாள் பிறகு வேகமாய் அவன் அருகில் சென்று , என்ன சூர்யா இப்பிடி பேசுறிங்க , மதிக்கு என்ன விட்டா யாரு இருக்கா , நீங்க இப்படி சொல்லுரிங்க
என்ன விட்டா யாரு இருக்கிறா என்கிற வார்த்தையே சூர்யா கவனித்து இருந்தால் பின்னால் வர போகும் பிரச்சனையே தவிர்த்து இருக்கலாம் ஆனால் . ??
ஆமா சந்தியா, இப்போ இது எதுக்கு வரணும் வந்தா வீண்பிரச்சனை... அதுக்கு நீயே சமாளி அப்பிடியே உன் அம்மா மதி பற்றி கேட்டா வேலை விஷயமா பெங்களூர் வரைக்கும் இவ போய் இருக்கான்னு சொல்லிட்டு " பிறகு மதியே பார்த்து
மதி சீக்கிரம் வந்து கார்ல ஏறு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் போகணும் .
அவன் பேச்சு மறு பேச்சு இன்றி அவள் காரில் ஏறி கொள்ள, ஜார்ஜ் நீ இவங்கள வீட்டுல விட்டுட்டு வந்துரு ஓகே
ஜார்ஜ், " ஓகே பாஸ் , நான் வந்துறேன் நீங்க கிளம்புங்க ...
ஜார்ஜ், சூர்யாவின் நல்ல தோழன்.........!!!
சூர்யா மதுவை அழைத்து கொண்டு சென்று விட.
ஜார்ஜ் ," சந்தியா இடம் என்ன போலாமா.. சந்தியா , எனக்கும்லேட் ஆகுது, பாஸ் ஆபீஸ் போறதுக்குள்ள நான் அங்கே இருக்கணும் '
" ஹ்ம்ம் போலாம் ஜோர்ஜ் , என அவள் காரில் ஏற , ஜோர்ஜ் காரை கிளப்பின்னான் ,"
காரில் அமர்ந்து இருந்த சந்தியாவுக்கு எண்ணம் எல்லாம் சூர்யாவை சுற்றி தான் இருந்தது, மனதுக்குள் " என்ன ஆச்சுஇவனுக்கு இப்பிடி பேசிட்டு போறான்.. மதியே வீட்டுக்குஅழைச்சுட்டு போகலாம் பார்த்தா இப்பிடி பண்ணிட்டானேஇந்த சூர்யா... என போகும் வழியில் யோசித்த படி வந்தாள் அவளுக்கு மதியிடம் சில விஷையங்கள் சொல்ல வேண்டி இருந்தது அதை ஏதும் செய்யே விடாமல் சூர்யா தடுத்து விட்டான் என்கிற ஆதங்கம் "
ஜார்ஜ் , சார் ஓட்டிக்கொண்டே அவளை ஒரு முறை திரும்பிபார்த்து மனதுக்குள் சூரியாவை நினைத்து பெருமை பட்டான் "இப்போ தான் டா சரியா முடிவு எடுத்துக்கிற.. இவளுக்கு இதுமட்டும்..... பத்தாது இன்னும் இன்னும் இருக்கு என நண்பனைபாராட்டினான் , கொஞ்சம் நேரத்தில் அவள் வீடு வந்துவிட அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினான்..
" என்றைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்று பார்த்து சந்தியாவீட்டில் அவள் பெற்றோர் இருக்க.. இப்போது என்ன செய்வது என யோசித்த படி.. வீட்டில்.. உள்ளே சென்றாள் ."
அவளது அம்மா...சாந்தி..... " என்னடி.. சந்தியா நீ மட்டும் வர எங்கே.. வெண்மதி ரெண்டு பெரும் சேர்ந்து தானே கோவில் போனிங்க இப்போ நீ மட்டும் வர எங்கே அவளை "
' அம்மா அது... வந்து... "சந்தியா எப்படி விஷயத்தை சொல்லாலாம் என்று யோசித்தாள்
" என்ன வந்து போயின்னு. சொல்லிக்கிட்டு நிக்கறவ எங்க அவ "என அவர் சற்று குரல் உயர்த்தி கேட்க
அதில் சந்தியா கடுப்பு ஆனவள் , அதே தோரணையில் தன் தாய் இடம்
அவ இனி வர மாட்டா அம்மா, போதுமா சும்மா சும்மா என்ன கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே என சொல்லிவிட்டு நகர போக
அவளை போகவிடாமல் அவர்,
ஏன் என்ன அச்சு அவளுக்கு [ எங்கே அவள் வராமல் போய் விட்டாள் இங்க இருக்கும் அனைத்து வேலையும் செய்யே வேற ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே அதற்கும் காசு செலவு ஆகுமே என்கிற கவலை ]
அவ இனி வர மாட்டா அம்மா, நீ போய் உன் வேலையே பாரு , என சந்தியா பாடின பாட்டையே பாட..
இப்போது
ஏன் என்ன ஆச்சு அவளுக்கு ஏன் வர மாட்டா என அவர் பதற
அவரை ஒரு நிமிடம் பார்த்த சந்தியா சும்மா பதறாத ம்மா நீ எதுக்கு கேட்குற எனக்கு தெரியும் , இப்போ என்ன அவ எங்கே உனக்கு தெரியனும் , அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு போதுமா என கடுப்பில் உண்மையே உளறிவிட
என்னது கல்யானம என்ன டி சொல்லுற என சாந்தி அலற..
தான் என்ன சொன்னோம்... என்று அப்போது உரைத்தது , 'ஹான் இல்லை அம்மா.. அது அவ என்ன கல்யானம பண்ணிட்டு போய்டா...வேலை விஷையமா பங்களூர்.. வரைக்கும் தான் ம்மா போயிர்க்கா....
இப்போ தான் அவளை பஸ் ஏத்தி விட்டுட்டு... வரேன்..
எங்க கிட்ட கூட சொல்லாம போயிர்கிங்க அவளோ துரத்துக்கு போயாச்ச இது வீடா.. இல்ல சத்திரமா நேரம் காலம் தெரியாமவந்து போறதுக்கு..
சந்தியா அங்கே சூர்யா மதி என்ன செய்து , கொண்டுஇருப்பார்கள்.., சூர்யாவிடம் மதி ஏதும் சொல்லி இருப்பாளோ , இல்லை சூர்யா தான் மதி இடம் ஏதும் சொல்லி இருந்தால் என்றுநினைக்க அத்தோடு அவள் அம்மாவின் பேச்சு அவளை மேலும் எரிச்சல் அடையே செய்தது
இப்போ என்ன தான் ம்மா.. உனக்கு.. பிரச்சனைஅவளுக்கு...திடிர்ன்னு.. ... வர சொல்லிடாங்க...அதான்கிளம்பிட்டா.... உன் கிட்ட சொல்லிட்டு தான் போகணும் இருந்தா நான் தான் நேரம் ஆகிடும்ன்னு.. கிளம்பசொல்லிட்டேன்......போதுமா.. சும்மா தொண தொணன்னு கிட்டு, இப்போ எனக்கு.. வழி விடு....நான் உள்ளே போகணும் என அம்மாவிடம்...கத்திவிட்டு.. நகர்ந்து விட்டாள்..
சாந்தி.. என்ன இவ இப்பிடி கத்திவிட்டு போறா இப்போ என்னகேட்டேன்... . சொல்லாம ஏன் போனான்னு கேடத்து.. ஒரு தப்பா... இந்த காலத்து பிள்ளைங்கள.. ஏதும் சொல்லிட கூடாது என்னசொல்ல இப்போ வேலைக்கு வேற ஆள் தேடன்னுமே எனபொலம்பிவிட்டு..அவரும் அவர் வேலை பார்க்க சென்றார்..
இங்கே சூர்யா மதியே அழைத்து கொண்டு... தனது வீட்டுக்கு வந்து சேர .. அப்போவும் அவன் முகம் இறுகி போய் தான்..இருந்தது...
மதி வரும் வழியில்... ஒர கண்ணால் அவன் முகத்தில் ஏதும் மாற்றம் தெரியுதா என்று பார்த்து கொண்டே வந்தாள் , அவளுக்கு அவனிடம் பேச கேட்க நிறையா விசையங்கள் இருந்தது , அனால் அவனோ ' ஹ்ஹ்ம்ஹும்...ஒன்றும்...தெரியவில்லை .. மதி தான் கதி . கலங்கி போய்அமர்ந்து இருந்தால் .. விட்டால் காரில் இருந்து குதித்துவிடுபவள் போல் .. அவள் நிலை இருந்தது
ஆள் ஆவாராம் இல்லாத காட்டில்... கார் போக.. மதி.. " என்னஏரியா இது புதுசா இப்பிடி காடு மாதிரி இருக்கே... .. ஒரு வேலைசினிமா ல வர மாதிரி... என்னமோ தெரிஞ்சு.. என்ன கொலை பண்ண போறனோ ஐயையோ கடவுளே இப்போ எப்பிடிதப்பிக்கிறது தப்பிகிறது எல்லாம் இந்த சந்தியாவால வந்தது...நான் அப்போவே சொன்னேன் இது சரி பட்டு வாராதுன்னுகேட்டாளா என் பேச்சை... கடவுளே.. இன்னை ஓட என் ஆயுசுக்கு ஒரு முடிவு வர போகுது. என சம்பந்தமே இல்லாம மனதுக்குள்புழம்பி கொண்டு வந்தாள் எதையுமே வாய் விட்டு சொல்லும்நிலையில் அவள் இல்லை..
நீண்ட நேரம் பயணத்துக்கு பின் கார் அந்த பெரியே வீட்டின்முன் நின்றது
சூர்யா வேகமாய் காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டான் , மதி அவன் பின்னால் இறங்கி நிற்க..
இவள் ஒருத்தி நிற்பத்தை கூட கவனிக்காமல் அவன் போய்விட
இப்போது மதிக்கு குழப்பம்... உள்ளே போவாதா இல்லைஇப்பிடியே... நிற்பதா , இல்ல இங்கயே நிற்ப்போம் உள்ள போய் அதுக்கும் அவன் கிட்ட யாரு வாங்கி கட்டிக்கிறது என அங்கயேநின்று.. கொண்டு அங்கே இருந்த தோட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்
சூர்யா வீட்டினுள் வந்தவன் நேராக தனது அறைக்கு சென்று உடை மாற்றி கொண்டு வந்து தனது பாட்டி அறைக்கு..சென்றான்...
அங்கே மரகதம் அம்மா.. மகாபாரதம் புத்தகம் படித்து கொண்டு இருந்தார்...
அவன் வந்ததை கவனித்து அவர் படித்து கொண்டு இருந்த..பக்கத்தை.. புக் மார்க்.. செய்துவிட்டு.. அவன் இடம்.." என்ன பாசூர்யா இந்த நேரத்துல... வந்து இருக்க.. ஏதும் மறந்து வச்சத எடுக்க வந்தியா என்ன... .
" ஹ்ம்ம் பாட்டி அது இல்ல [ தன் நெற்றியே தேய்த்து விட்டபடி ]உங்களுக்கு.. ஹான்.. உங்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...
" என்ன. பா.... "
" அது நான் கல்யாணம் பண்ணிகிட்டேன் பாட்டி .."
" ஹ்ம்ம் சரி ப்பா. "
" என்ன சரி. பாட்டிம்மா.. இதுவே வேற யாராவுது இருந்தா...பொண்ணு யாரு.. ஏன் இப்பிடி யாருக்கும் சொல்லாம.. கல்யாணம் பண்ணிகிட்ட என் கிட்ட சண்டை போட்டு இருப்பாங்க நீங்க ஒரு வார்த்தை கூட .. பொண்ணு யாரு என்ன எதுன்னு கேட்க மாடிங்களா..'
" அப்பிடி இல்லடா கண்ணா.. என் பேர புள்ள.. எது செய்தலும்அது சரியா தான் இருக்கும் ஆமா எங்க டா என் மருமக.. "
" அப்போது தான்.. அவளை உள்ள வர சொல்லாமல் விட்டதுநினைவுக்கு வந்தது.....[ ஏன் நான் சொன்னா தான் உள்ளேவருவாளா .. இல்லைனா உள்ள வர மாட்டாளோ மகாராணி..என நினைத்த படி.. தன் பாட்டி.. இடம்... வெளியே நிக்கிறா.. போல பாட்டி..."
நல்ல பிள்ளை.. டா நீ இப்பிடி தான் வெளியே நிக்க வைப்பியா கையோடு. அழைச்சுட்டு வர கூடாதா வா போய் பாப்போம்... என்று மரகதம் அம்மா மெல்ல சூரியாவின் கையே பிடித்து எழுந்து அவனுடன் மதியே பார்க்க சென்றார்....
வெளியே... மதி.. சூரியாவின்.. வருக்காக.. விரல்களை..எண்ணியே படி.. நின்று கொண்டு இருந்தாள் அவளுக்கு அந்த இடமே பயத்தை கிளப்பியது ,மேலும் அவன் வீட்டில் இருபர்வகள் அவளை என்ன சொல்லுவாங்களோ என்கிற கவலை வேறு அவளை ஆட்டிப் படைத்தைதது
வேலையே வந்த
மரகதம் பாட்டி... .. இந்த தேவதை தானா டா நம்ம வீடு மருமக என சொல்ல
அவர் குரல் கேட்டு மதி திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பார்த்தாள்