Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமையான பதிவு ரொம்ப அழகா செல்கிறது.சேனா,தியா விழி மோதல் மிகவும் அருமை,அதிலும் இந்தப் மகி பண்ணியது எல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.இப்போ தியா அம்மா யாருனு தெரிந்து விட்டது.இவங்க எல்லாம் உறவுகள் ஆ ரொம்ப அருமை. ரொம்ப ரொம்ப சூப்பர் ஆகாக செல்கிறது கதை😍😍😍😍
 

Anitha Sundar

Active member
Messages
116
Reaction score
64
Points
28
அத்தியாயம் - 7


இங்கு மருத்துவமனையில் படுத்திருந்த சிவராஜின் செல்ஃபோன் விடாது ஒலிக்க, எடுத்து காதில் வைக்கவும், தனது அக்கா விதுபாரதி.

“என்னாச்சுடா? ரெண்டு நாளாய் உனக்குக் கூப்பிடுறேன். நீ ஃபோன் எடுக்கவே இல்லை.”

“அக்கா, நான் பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டேன். சின்ன ஆக்சிடன்ட். நீ சொன்னால் பயந்திடுவ. அதான் உனக்குப் பேசலை. இப்ப நான் நல்லா இருக்கேன்.”

‘விபத்தா...?’ தன் தம்பிக்கு என்றதும் பயந்தவர், சிறிது நேரம் திட்டிவிட்டு, இன்னும் ரெண்டு நாளில் நான் இந்தியா வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு, அழைப்பைத் துண்டித்தார்.

மீண்டும் தன் அக்காவிற்கு அழைத்து, “நீ ஏன் அவ்வளவு தூரம் வரணும்? நான் நல்லா இருக்கேன்.”

“நீ என்ன சமாதானப் படுத்தினாலும், உன்னை பார்க்காமல், என்னால் இங்கு ஒரு வேலையிலும் ஈடுபட முடியாது. நான் வந்து பார்த்துட்டு வர்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

……..

மிதுனா மும்பை வந்ததும் ரிஷிகேஷ், “மேடம் நம்ம டேட் கொடுத்த படத்தின் இயக்குனருக்கு உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கு.”

“ஹோ! அப்போ இந்தவாரம் முழுதும் ஃப்ரி தானா?”

“அது நம்ம வீரேந்தர்ஜீ எடுக்கும் புதுப்படத்தில், கேரளாவில் காட்டுக்குள் வில்லனோடு ஒரு நடனம் கேட்டாங்களே…”

“ஓகே! அப்ப புக் பண்ணிடு.”

“மேடம்…” என்று இழுக்க...

“என்ன ஆச்சு ரிஷி? ஏதும் ப்ராப்ளமா?”

“பாடலுக்கான சூட்டிங் கேரளாவிலும், கொஞ்சம் தமிழ் நாட்டிலும் நடக்குமாம்.”

“தமிழ்நாடா…!” என்று யோசித்தவள்,

“ஓகே! பரவாயில்லை. கால்சீட் கொடுத்து விடு.” என்று சொல்லி விட்டு,

“எப்போ கிளம்பனும்?”

“நாளைக்கு மாலை ஃப்ளைட்டில், மேடம்?”

…………………

இங்கே சென்னையில், கல்லூரிக்குத் தயாராகி வந்த தியாழினியின் முகம் எல்லாம் பளிச்சென்று இருந்தது.

அவளின் முகத்தில் இருந்த பூரிப்பைக் கண்ட சேனா,

“என்ன மேடம், ரொம்ப குஷியா இருக்கீங்க...?”

“நாளைக்கு என் அம்மா வர்றாங்க.”

“வாவ் சூப்பர்.”

“அம்மா பார்த்து ரெண்டு வருஷமாச்சு. நாளைக்கு தான் பார்க்கப் போறேன். அதான் ஹேப்பி.”

அன்றும் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி இறக்கி விடவும், நடந்து சென்றவள் போகும் வழியில் ஐஸ்வர்யாவைப் பார்த்ததும், அவளுடன் ஏறிக் கொண்டாள்.

இரண்டு பேரும் போகும் போது இடைவெளியில் கைநீட்டி மறித்து நின்ற ஆத்விக்கைக் கண்ட தியாழினி, கோபத்துடன் இறங்கி நின்றாள்.

அவனோ தனது செல்போனை அவள் முன் நீட்டி, நடனமாடிய புகைப்படத்தைக் காட்டி, “யாரைக் கேட்டு நீ டான்ஸ் ஆடுன?”

அவன் கேள்வியில் புரியாதவளாய், “யாரைக் கேட்கணும்?”

“என்னைக் கேட்கணும்!”

“நீங்க யாரு? நான் ஏன் உங்களைக் கேட்கணும்?” என்றதும்,

அவனோ கோபமாய், “தியா...! ஸ்கூலில் எல்லாம் நான் சொல்றது தானே நீ கேட்ப…”

“நான் எப்பவுமே, என் வீட்டில் சொல்றதை மட்டும் தான் கேட்பேன். பள்ளியில், என்னிடம் மோசமாய் வம்பிழுக்கும் பசங்களை, என் பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக்கிட்டதால், உங்களின் மேல எனக்கு ஒரு மரியாதை உண்டு. அவ்வளவுதான்! உங்களுக்கும் எனக்கும் இருக்கும் ரிலேஷன்.”

“தியா, நான் உன்னை லவ் பண்றேன்.”

“இந்த உலகத்தில், ஒரு பையனுக்கு ஒரு பொண்ணு கிட்ட லவ்வ தவிர்த்து பேசுறதுக்கு, வேற ஒண்ணுமே இல்லையா...? ஏற்கனவே, நீங்க என் மாமாவை அடித்து ஆக்சிடெண்ட் பண்ணியதால் கோபம் இருந்தது. இப்போ…”

“அதற்குத்தான், என் டாடி பணத்தை மொத்தமாய் செட்டில் பண்ணிட்டாரே...!”

“அப்போ, எங்க மாமா ஒரு மாசம் அனுபவிக்கும் வலியை நீங்க வாங்கிப்பீங்களா...? விபத்தை நடத்தி விட்டு, ஒரு சாரி கூட கேட்காமல், பணம் கொடுத்தேன் என்று அசால்ட்டாய் சொல்றீங்க...?

இப்போ, உங்களைப் பார்க்கும் போது, வெறுப்பே வந்து விட்டது. இனிமேல் சீனியர் என்று சொல்லிக் கொண்டு என்னிடம் பேச வேண்டாம்.” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

இரண்டு பேரும் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர் சேனா, தன் முன்னே பட்டாசு போல் பொறிந்து செல்லும் பெண்ணான தியாழினியைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றான்.

மிகவும் கோபமாய் வந்த தியாழினியை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அவளுடன் வந்த ஐஸ்வர்யா, ‘இவளை எப்படி சமாதானப்படுத்துவது’ என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.

அந்த நேரம், சேனா யாரோ ஒரு பெண்ணிடம் பேசவும், இருவரும் அப்படியே நின்று விட்டனர்.

சேனா தன் வகுப்பின் முன் நின்று கொண்டு இருக்கும் போது, இரண்டாம் வருடம் படிக்கும் மாணவி தனக்கு பிறந்தநாளென்று வந்து, அவன் முன் விலை உயர்ந்த சாக்லேட்டை நீட்டினாள்.

“எனக்கு எதுக்கு இவ்ளோ பெருசு? சின்னது கொடும்மா” என்றதும்,

அவளும் “சார், நீங்க எனக்கு ஸ்பெஷல். கூடப் பிறக்காத அண்ணன் மாதிரி. இது உங்களுக்காக” என்று சொல்லிக் கொடுக்க, ஆடவன் வாழ்த்தவும், நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அந்த சாக்லேட்டைப் பார்த்ததும், ஐஸ்வர்யாவின் நாக்கில் எச்சில் ஊறியது.

“தியாகுட்டி, என் செல்லமே...! நீ போய் சார்கிட்ட அந்த சாக்லேட்டைக் கேளு, உடனே தந்திடுவார்.”

அவள் முறைக்கவும், ஐஸ்வர்யா, அப்போதுதான் கவனித்தாள். சேனாவும் தியாவும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருப்பதை. வேகமாய், “சேனா சார்” என்றதும் திரும்பியவன்,

இருவரையும் பார்த்து “என்ன?”

குட் மார்னிங்.

“ஹ்ம். குட்மார்னிங் ஐஸ்வர்யா!”

“சார், தியா உங்ககிட்ட ஏதோ கேட்கணுமாம்.” என்றதும்,

“என்னது நானா?” தலையை மறுத்து ஆட்டியவள் அவளை ஒரு இடி இடித்து விட்டு, “சார், நான் எதுவும் கேட்கலை.”

அவனோ சுவாரஸ்யமாய், “ஏன் தியாவுக்கு வாய் இல்லையா...?”

“அது இருக்கு ஒன்ற முழத்திற்கு…” என்று ஐஸ்வர்யா கையை நீட்டிச் சொல்லவும், சேனா சத்தமாய்ச் சிரித்தான்.

அவன் சிரிக்கும் போது, பெண்ணவள் அப்படியே நின்றாள். அவன் சிரிப்பு அவளை அவன் பக்கம் ஈர்க்க, அவள் விழிகள் நகர மறுத்து, அவனைப் பருக ஆரம்பித்தது.

அலை அலையாய் கேசம், அடிக்கும் காற்றில் அலைபாய, ஆடவன் இடக்கையால் அதை சரிசெய்யும் போது, தன் மனமோ அவன் புறம் சாயத் தொடங்கியதை உணர்ந்தாள். அப்போது தான், அவனை உற்றுப் பார்த்தாள்.

இடது கையில் கருப்பு வார் அணிந்த கைக்கடிகாரம். அகண்ட பெரிய கண்கள். அடர்ந்த புருவங்கள், அழகான நெற்றி, அதில் திருநீறு, கூர் மூக்கு, அடர்ந்த மீசை. அழுத்தமான உதடு. அப்பப்பா..! ஆளை மயக்கும் சிரிப்பு. வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட். கொஞ்சம் கொஞ்சமாய் அவனை தலை முதல் கால்வரைப் பார்த்தாள்.

அவளின் பார்வை ஆடவனை அசைக்க, சற்று நேரம் நின்றாலும் மனம் தடுமாறி விடும் என்று பயந்தவன், அவள் முன் விரல் நீட்டி சொடக்குப் போடும் போதுதான், தன் நிலைக்கு வந்தாள்.

அவனோ புருவம் உயர்த்தி, “தியா மேடம், என்னாச்சு?” என்றதும்,

பெண்ணவளின் முகமெல்லாம் குப்பென வியர்த்துவிட்டது. மனதில் மறைத்தாலும், தன் கண் பார்க்காததைப் பார்ப்பது போல் பார்த்து காட்டிகொடுத்து விட்டதே... தன்னைத்தானே திட்டிக்கொண்டு, “நோ சார்!”

ஐஸ்வர்யா “ஹேய்! இதுக்கு முன்னாடி நீ சாரைப் பார்த்ததே இல்லையா...? இப்படிப் பார்க்கிற?”

“ஐயோ! இவ வேற நேரங்கெட்ட நேரத்தில் மானத்தை வாங்குகிறாளே!” என்று அவளின் காலில் மிதிக்க,

“ஆ ஆ, ஏண்டி மிதிச்ச?”

“ஒண்னுமில்லை. வாடி போலாம்!”

இருவரும் திரும்பவும்,

சேனா, “எதுக்கு என்னை கூப்பிட்டீங்க...?”

ஐஸ்வர்யா, “சாரி சார். இவளால் நான் வந்த விஷயத்தையே மறந்து விட்டேனே! நீங்க ரெண்டு பேரும் ஒரே நிறத்தில் ஆடை உடுத்தி இருக்கிறீர்கள். சேம் சேம் ஸ்வீட். அதுக்கு நீங்க ஸ்வீட் கொடுக்கனும்.”

“அதை சம்பந்தப்பட்டவள் தானே கேட்கணும். நீ கேட்கிற?”

‘ஐயோ ஐஸ், ஒத்த சாக்லேட்டுக்கு எவ்வளவு பொய் எல்லாம் சொல்ல வேண்டியது இருக்கு.’ என்று நினைத்தவள், “சார், அவள் தான் என்னை கேட்கச் சொன்னாள்?”

பெண்ணவளோ “நான் இல்லை சார்.” என்று விழியால் மறுக்க, சேனா தன் கையிலிருக்கும் சாக்லெட்டை எடுத்து தியாவின் முன்னால் நீட்டினான்.

தியா தயங்க, “வாங்குடி!” என்று ஐஸ்வர்யா இரண்டு இடி இடிக்கவும், பெண்ணவள் தயங்கி தயங்கி, கையை நீட்டி வாங்கிவிட்டு, “தேங்க்ஸ் சார்!” என்று சொல்லி இருவரும் நகர்ந்தனர்.

இங்கு நடக்கும் கூத்தை பின்னாலிருந்து பார்த்த மகிமாவிற்கு, ஏதோ போலாகி விட்டது.

திரும்பிய சேனா, அங்கே கனல் பார்வை பார்க்கும் மகிமாவைப் பார்த்து, எதுவும் நடக்காதது போல உள்ளே செல்ல,

அவளோ அவனை இடைமறித்து, “இங்க என்ன நடக்குது? ஒரு ஸ்டாப் ஸ்டுடென்ட் கிட்ட இப்படித்தான் பிகேவ் பண்ணுவாங்களா...?”

“அதையே தான் மேடம், நானும் உங்களிடம் கேட்கிறேன்? ஒரு ஸ்டாப் எப்படி பிஹேவ் பண்ணனுமென்று உங்களுக்குத் தெரியாதா...?” என்று சொல்லி விட்டு அவன் சென்று விட்டான்!

தியாழினி மற்றும் ஐஸ்வர்யாவின் மேல் கொலை வெறி வந்தது. ‘தனது முதல் வகுப்பு இன்று அவர்களுக்குத் தானே. வச்சுக்கிறேன்.’ என்று தனது புக்ஸை எடுத்துக்கொண்டு வேகவேகமாய் வந்தாள்.

உள்ளே வந்ததும் அனைவரும், “குட் மார்னிங் மேடம்.” என்றதும், குட்மார்னிங் என்று சொல்லும்போது அவளின் கோபமான முகம் அனைவரையும் பய முறுத்தியது.

மதுராவோ ‘என்னாச்சு அக்காவுக்கு?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஐஸ்வர்யா தியாவின் காதில், “மேடம், ரொம்ப சூடா இருக்காங்கடி. சிக்குறவங்களை அப்பளம் மாதிரி பொரித்தெடுக்கப் போறாங்க!” என்றாள்!

வழக்கம் போல வருகைப் பதிவை எடுத்துவிட்டு வகுப்பு எடுக்கும் போது, அடிக்கொரு முறை ஐஸ்வர்யா மற்றும் தியாழினியை கவனித்துக் கொண்டே வந்தாள்.

மகிமா போர்டில் எதையோ எழுதிக் கொண்டு இருக்கும் போது, ஐஸ்வரியா,

“நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு ரொம்ப அழகா வந்திருக்குமோ...?”

“ஏண்டி அப்படி கேட்கிற...?”

“இல்லை, இந்தம்மா வந்தப்போ இருந்து நம்ம ரெண்டு பேரையுமே மாற்றி மாற்றிப் பார்க்குது! அதான்...!”

அதைக் கவனித்த மகிமா, தன் கையிலிருக்கும் சாக்பீஸில் துண்டை ஐஸ்வர்யாவின் முகத்தில் விட்டு எரிந்து, “ஸ்டுபிட், உனக்கு கிளாஸ் கவனிக்க விருப்பம் இல்லைனா, நீ எல்லாம் எதுக்கு காலேஜுக்கு வர்ற? ரெண்டு பேரும் கோ அவுட்?”

ஏனோ அந்தச் செயலில், ஐஸ்வர்யாவிற்கு மனமெல்லாம் ஒரு மாதிரி ஆனது. அத்தனை பேர் முன்னாடி, முகத்தில் சாக்பீஸ் போட்டுத் திட்டவும், கண்கலங்கியவள் எழுந்து நிற்கும் போது, அருகே வந்த மகிமா, அப்போதுதான் கவனித்தாள் ஐஸ்வர்யாவின் மேஜை மீது இருந்த சாக்லேட்.

அது தனக்கானது. தன்னிடமிருந்து பறித்துக் கொண்டது போல், வேகமாய் அதை எடுக்கப் போனாள்.

தியா பட்டென்று அதை எடுத்து கையில் வைக்க, மகிமா அவளிடம், “இந்த சாக்லேட், உங்களுக்கு அவ்ளோ முக்கியமானதோ...? கொடுத்தவங்க அதை விட முக்கியமானவங்களோ?” என்று நக்கலாய் கேட்டு முறைத்துப் பார்த்தாள். பின் வெடுக்கென்று தியாழினியின் கையிலிருந்து அதைப் பிடுங்கினாள்.

ஏனோ அதுவரை திட்டியது கூட மனதில் இல்லை. அதை பிடுங்கும் போது தியாவிற்கு மனதில் ஒரு வலி உண்டானது. முதல் முறையாக அவன் கொடுத்த இனிப்பு அது.

அவளின் முகம் சுருங்குவதை ரசித்த மகிமா, “ரெண்டு பேரும் வெளியே போங்க!” என்று சொல்லவும், அவர்கள் முன்னே நடக்க பின்னால் வந்தவள், தன் கையில் இருக்கும் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு போய், வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள்.

மீண்டும் வந்த மகிமா இருவரையும் பார்த்து, “இங்கே பாருங்க! காலேஜுக்குப் வந்தோமா...! படிச்சோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு, புரபசர் கிட்ட போயி சேம் பின்ச் அடிச்சு விளையாடக் கூடாது!” என்று திட்டிவிட்டு உள்ளே சென்றபின் தான், இருவருக்கும் இந்த மேடம் எதற்காக கோபப்படுகிறார்கள் என்று புரிந்தது.

தியாழினி கோபமாய் ஐஸ்வர்யாவை முறைத்து, “தேவையாடி நமக்கு? எதுக்கு இந்த சாக்லேட் வாங்கணும்...?”

அவளோ “அந்த மேடத்துக்கு பொறாமைடி! சார் கிட்ட நம்ம பேசுறது...! நீ மட்டும் சாரின் பக்கத்து வீட்டுப் பொண்ணு. அப்பப்ப பேசிப்பீங்க. ஒண்ணாய்த் தான் கார்ல வருவீங்க என்ற விஷயம் மட்டும் இந்த அம்மாவுக்கு தெரிஞ்சுச்சு, உன்னை பஸ்பமாக்கிடும்.”

தியாழினி பாவமாய், “ஆத்தி, நமக்கு எதுக்கு வம்பு? இனிமேல் சேனா சாரிடம் பேச வேண்டாம்டி. மார்க் குறைச்சுட்டா...?”

“ஏய் லூசு! இன்டர்னல்ல தான், இவங்க குறைக்க முடியும். செமெஸ்டர்ல இவங்க ஒண்ணும் பண்ண முடியாது.”

“ப்ராக்டிக்கலில் கை வச்சுட்டா என்ன பண்றது...?” என்று கேட்கும் போது, தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்கவும், திரும்பிப் பார்க்க அங்கே சேனா...!

அது மகிமாவின் வகுப்பு, அதில் நாம் தலையிட முடியாது என்பதால் அவன் சென்று விட்டான். அந்த வகுப்பு முடிந்து மகிமா வெளியே கிளம்பியதும், ஐஸ்வர்யா சோகமாய் உள்ளே சென்றாள். தியாழினி அக்கம் பக்கம் நோட்டம் விட்டுவிட்டு, யாரும் இல்லை என்றபின் வேகமாய் போய் குப்பைத் தொட்டிக்குள் கை விட்டு எட்டி அந்த சாக்லேட்டை எடுக்கும் போது,

“குப்பைத் தொட்டியில் என்ன பண்ற?” என்ற சேனாவின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், சட்டென்று தன் கையிலிருக்கும் சாக்லெட்டை மறைத்து, தன் பின்னால் வைத்துக் கொண்டாள்.

“என்னத்தை மறைக்கிற, தியா.” என்ற போது கூட, அவள் வாய் திறவாமல் இருக்க, அவன் எட்டிப் பார்க்க, அங்கு அவள் கைகளில் தான் கொடுத்த சாக்லேட்.

ஒரு நிமிடம், அவன் மனதிற்குள் சாரல் அடித்தது. பின், “இதற்காகத்தான் நீங்க ரெண்டு பேரும் வெளியே நின்று இருந்தீங்களா?”

அவளோ மௌனம் காக்கவும், தன் கூட நின்றவளைக் காணோமே என்று வெளியே வந்த ஐஸ்வர்யா, அங்கு சேனா சார் நிற்கவும் வேகமாய் வந்தாள்.

வந்தவள் அவளிடம், “இனிமேல் நம்ம சேனா சாரிடம் பேசக்கூடாது. பேசினால் அந்த மேடம் மார்க் குறைச்சிடுவாங்கன்னு சொன்ன. இப்ப நீ மட்டும் பேசற. இது போங்கு!” என்றாள்.

தியா, “உன்னை வச்சுக்கிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாதுடி. லூசாடி நீ...! கொஞ்சம் அமைதியா இரு.”

அவன் தியாவை முறைத்து, “இனி நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட பேச மாட்டீங்க. ஆல்ரைட். ஓகே. அவங்க உங்க கிட்ட அப்படி நடந்ததற்கு, நான் மன்னிப்பு கேட்கிறேன்.”

“சார், நீங்க எதுக்கு?” என்ற தியாவைப் பார்த்து,

“என்னால் தானே, நீங்க ரெண்டு பேரும் ஒன்னவர் வெளியே நின்னீங்க. அதுக்கு தான்.” என்று சொல்லி விட்டு அவன் சென்றுவிட்டான்.

அவன் கோபமாய் போவதாய் பெண்ணவள் உணர்ந்தாள். அவன் கோபம் தன்னைத் தாக்க, ஐஸ்வர்யா வேகமாய் அவளின் கையில் இருக்கும் சாக்லேட்டை பிடுங்கி, கவரைப் பிய்த்து சாக்லேட்டைப் பாதியைப் பிய்த்து சாப்பிட்டு விட்டு, மீதியை அவள் வாயில் வைத்துவிட, அவன் கொடுத்ததால் துப்பவும் மனமில்லாமல் விழுங்கவும் மனமில்லாமல் சுவைத்தாள். அவள் கவரை குப்பையில் போடப் போக, அவள் கையிலிருந்து பிடுங்கி, அதைப் பத்திரப்படுத்தி தனது புத்தகத்தில் வைத்தாள்.

இருவரும் உள்ளே சென்று அவர்கள் இருப்பிடத்தில் அமரும் போதுதான், தியாவின் இதழின் ஓரத்திலிருந்த சாக்லேட்டைப் பார்த்தான்.

‘ஏன் இப்படி பார்க்கிறார்?’ என்று நினைத்தவள், பாடத்தில் கவனம் செலுத்தினாள்.

வகுப்பு முடிந்து போகும் போது, “சாக்லேட் வாயின் ஓரமாக ஒட்டி இருக்கு. துடைச்சுக்கோ!” என்று சொல்லி விட்டுப் போனான்.

அதில், ஒரு கோபம் மறைந்து இருந்ததை பெண்ணவள் உணர்ந்தாள்.

மாலையில் வழக்கம் போல ஐஸ்வர்யாவை வீட்டில் விடச் சொல்லி, வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

………………..

விது பாரதி, அமெரிக்காவிலிருந்து மும்பை வந்து விட்டாள். மும்பை விமான நிலையம் மிகவும் பரபரப்பாய் இருந்தது. தன் தாய்மொழி தவிர, பல மொழிகள் அங்கே காதில் விழுந்தது. ஏனோ, அந்தத் தாய் மொழியை காதில் கேட்க, மனம் எல்லாம் பரபரத்தது. தான் வந்த நேரத்திற்கு, மாலை 5 மணியளவில், மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்குத்தான் பிளைட் இருந்தது என்பதால், டிக்கெட் வாங்கியவர் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குப் போய்க் கொள்ளலாமென்று நினைத்தவர், விமானதிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

…………

அந்த நேரம், மிதுனா மும்பை விமான நிலையத்திற்குள் வந்து ரிஷியிடம், “அனைத்தும் செக் பண்ணியாச்சா?” என்று கேட்டதும்,

“ஆச்சு மேடம்.”

“ஓகே.”

“மேடம், ஃப்ளைட் வர ஒரு டென் மினிட்ஸ் ஆகும்.” என்றதும், தலையாட்டி விட்டு தனது செல்ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

சரியாய் 10 நிமிடம் கழித்து, தங்களுக்கான ஃப்ளைட் வரவும் உள்ளே சென்று, மிதுனா ரிஷியுடன் தனக்கான இருக்கையில் அமரும் போது, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சத்தம் கேட்டு நிமிர்ந்தபோது,

விமான பணிப்பெண் “மேடம், ஒரு லேடிக்கு அவங்க பக்கத்தில் ஜென்ஸ் இருப்பதால், வேற சீட் மாறனுமென்று சொல்றாங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், இங்கே மாற்றிக் கொள்ளலாமா...?”

அவள் ரிஷியைப் பார்க்க, அவன் “தாரளமாய்” என்றான்.

மிதுனா தலையாட்டி விட்டு, ஜன்னல் பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.

பணிப்பெண் “மேடம் நீங்க அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.” என்றதும், நன்றியை தெரிவித்து விட்டு, அவள் கைகாட்டிய இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

விது பாரதி தனது இருக்கையில் அமர்ந்து பெல்ட் எல்லாம் மாட்டிவிட்டு, பின் ஜன்னல் பக்கம் திரும்பி இருந்தவளிடம் நன்றி சொல்வதற்காக, “எக்ஸ்கியூஸ் மீ, ரொம்ப தேங்க்ஸ்.” என்ற போது திரும்பினாள்.

இருவரின் கண்களும் ஒரு சேரக் கலங்கியது. 17 வருடம் கழித்துப் பார்க்கும் உடன்பிறப்புகள். இருவருக்கும் பேச்சு வரவில்லை. அழுகை தான் வந்தது.

“மிதுனா” என்ற வித்யா பாரதி,

தனது தங்கையைப் பார்த்து “நல்லா இருக்கியா...?”

கண் கலங்கியவள், "நம்ம 17 வருஷத்துக்கு முன்னாடி, என்ன சத்தியம் பண்ணினோம்?"

வழியும் கண்ணீரை அடக்கிக் கொண்டு, "இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று!"

“அப்படி சொல்லித்தானே விட்டுட்டு போன அக்கா. அப்புறம் ஏன் இப்ப பேசுற? அதேபோல் இரு.” என்று சொல்லியவள், தலையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

தான் சொன்ன வார்த்தைதான். அன்று தனக்கு வலிக்காத வார்த்தை. இன்று அவள் வாயில், அதேமாதிரி திருப்பிக் கேட்கும் போது, மனம் அப்படி வலித்தது.

“நான் அப்படி சொன்னா, நீ என்னை விட்டுட்டு போயிடுவியாடி...?”

“உங்களை மாதிரி தனியாய் இருந்தால் எதையும் யோசிக்க வேண்டாம், அக்கா.

குடும்பம்னு வரும் போது எல்லாம் யோசிக்கணும் இல்லையா...? என் பொண்ணுக்கு 17 வயசு. அவள் படிச்சு முடிச்சதும், அவளுக்கு நாளைக்கு கல்யாணம் எல்லாம் பண்ணனும்...?”

“பொண்ணா...?”

“நீ தான் அந்தக் கொடுமைக்கார புருஷன் வேணாமுன்னு சொல்லிட்டயே...!”

முகம் சுருங்கியவர், “புருஷன் வேண்டாமுன்னு சொன்னேன். வயிற்றில் வளரும் குழந்தையை வேண்டாமுன்னு சொல்ல முடியல.”

“போதும் அக்கா. வேற எதுவும் பேசவேண்டாம்.”

“சரி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு. அப்புறம் பேச மாட்டேன். அம்மா, விசித்ரா, வினோ, சிவா எல்லாம் எப்படி இருக்காங்க...? வினோ குட்டிக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்புறம் நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ. அன்று நீ போனதும், அம்மா ரொம்ப அழுதாங்க. நீ செத்துப் போயிட்டதா சொல்லச் சொன்ன. நானும் சொல்லிட்டேன். ஆனாலும் அம்மாவிற்கு நீ உயிரோடு இருக்கிறது தெரியும். உன்னால நம் வீட்டில் யாரும் டீவியே பார்ப்பதில்லை.”

“அக்கா, நம்ம வாழ்க்கை தான் சீரழிஞ்சு போச்சு. என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும். நீ எடுத்த தொழிலால், என் வாழ்க்கை நாசமாய் போச்சு. இன்னொருத்தி சொல்லாமல் கூட, எங்கேயோ ஓடி போய் விட்டாள். அதுவும் உன்னால் தான். தங்கச்சி வாழ்க்கையும் கிட்டத்தட்ட மோசம்தான். கடைசியில் எங்களுக்காக என் தம்பி கல்யாணமே பண்ணவில்லை. எங்களின் ஒட்டு மொத்த சந்தோஷமும் என் பொண்ணு நல்லா வாழ்வதில் தான் இருக்கு. தயவு செய்து சொந்தம் கொண்டாடிக் கொண்டு எங்களைத் தேடி சென்னைக்கு வராதே! ப்ளீஸ்...! அது நீ எங்களுக்கு செய்யும் பெரும் உதவி.” என்று சொல்லி விட்டு, வேறு பக்கம் சாய்ந்து கொண்டாள்.

‘வித்யா அக்கா! வித்யா அக்கா! என்று ஆயிரம் முறை சொல்பவள், உறங்கும் போதும் கூட, தன் பக்கத்தில் படுத்துத் தான் உறங்குவேன் என்று அடம் பிடிப்பவள். எனக்கு ஒரு சின்ன அடிபட்டாலும், கண் கலங்கி நிற்பவள். இன்று, நீ வேண்டாம் இன்று ஒரு நொடிப் பொழுதில் சொல்லி விட்டாளே...!’

தன்னையும் மீறி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வாழ்க்கையில் தன் தலையெழுத்தை எழுதும்போது மட்டும், கடவுள் மிகவும் கோபமாய் இருந்திருப்பார் போலும்...!


சுடும்...!

கீழே இருக்கும் லிங்கில் உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள் .

.
Both sisters ha nice interesting
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Paavam evanga 🙄😞😞 everyone has feelings la indha thiya amma ipdi solliruka kudathu avanga akka paavam dhana 😞 enna venumam sir ku andha pacha pullaiga kovam padraru adhuku enna terium 😜neenga dha gunama aduthu sollanum sir 😬😬 oru chocky kaga embuttu kastam pada vendi iruku 😂🥰🥰🥰🥰💙 super ka . Apro na indha reeva pei comments a miss panran
ஒவ்வொருத்தருக்கும் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி. ஒரு சாக்லேட்டுக்கு பெரிய அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது .
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Paavam evanga 🙄😞😞 everyone has feelings la indha thiya amma ipdi solliruka kudathu avanga akka paavam dhana 😞 enna venumam sir ku andha pacha pullaiga kovam padraru adhuku enna terium 😜neenga dha gunama aduthu sollanum sir 😬😬 oru chocky kaga embuttu kastam pada vendi iruku 😂🥰🥰🥰🥰💙 super ka . Apro na indha reeva pei comments a miss panran
தியாவின் அம்மா பட்ட கஷ்டம் அப்படி. அதனால் அப்படி சொல்லியிருப்பார்கள்.சேனா
கண்டிப்பாக புரியும்படி சொல்லித் தருவான். அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றிசகியே
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
மிகவும் அருமையான பதிவு ரொம்ப அழகா செல்கிறது.சேனா,தியா விழி மோதல் மிகவும் அருமை,அதிலும் இந்தப் மகி பண்ணியது எல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.இப்போ தியா அம்மா யாருனு தெரிந்து விட்டது.இவங்க எல்லாம் உறவுகள் ஆ ரொம்ப அருமை. ரொம்ப ரொம்ப சூப்பர் ஆகாக செல்கிறது கதை😍😍😍😍
மிக்க மிக்க நன்றி உங்களின் விமர்சனத்திற்கு தொடர்ந்து வாசித்து விமர்சனம் தருவதற்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
ஒவ்வொருத்தருக்கும் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி. ஒரு சாக்லேட்டுக்கு பெரிய அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது .
Oru chocolate nu satharanama sollatheenga ka
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
அத்தியாயம் - 8.1

சென்னைக்கு வந்த விதுபாரதி வீட்டிற்குக் கூடச் செல்லாமல், நேராய் மருத்துவமனைக்குச் சென்று தனது தம்பியைக் காண வந்தார். அங்கே உள்ளே நுழைந்ததும், ஒருவன் தனது தம்பியை தூக்கி நிறுத்தி, அவனுக்கு உதவி செய்து கொண்டிருப்பதைக் கண்டதும்,

"ஹலோ! உள்ளே வரலாமா...?" என்றதும், இரு ஆண்களும் திரும்பினர்.

சேனாவோ, 'யார் இவர்?’ என்று பார்த்தான்.

சிவராஜ் “அக்கா…!” என்று உற்சாகத்தோடு அழைத்தான்.

வந்தவர், கட்டுடன் இருந்தவனின் கைகால்களைப் பார்த்து, "என்னடா, சின்ன அடின்னு சொன்ன? கை கால் எல்லாம் இத்தனை கட்டுப் போட்டிருக்கு. இவ்வளவு பலமா காயம் பட்டிருக்கு.” என்று கண்ணீர் விடவும்,

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் நல்லா இருக்கேன்.”

இருவருக்கும் தனிமை தர விரும்பிய சேனா, "ஓகே சார், நான் கிளம்பறேன்!" என்றதும்,

அவனின் நினைவு வந்த சிவராஜ், “சேனா சார்...! ப்ளீஸ், ஒரு நிமிஷம் இருங்க! அக்கா, இவர் தான் என்னை கூட்டிட்டு வந்து இங்க அட்மிட் பண்ணியவர். இப்ப வரைக்கும், இவர்தான் என்னைப் பார்த்துக்கிறார். நம்ம பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார். நம்ம தியாழினி படிக்கும் கல்லூரியில் வேலை பார்க்கிறார். அவளின் வகுப்பு ஆசிரியரும் கூட."

விது பாரதி தன் கை இரண்டையும் எடுத்துக் கும்பிட்டு, "மிக்க நன்றிங்க!"

'குடும்பத்தில் அனைவருக்கும் நன்றிக்குப் பஞ்சம் இல்லை போல்.' என்று நினைத்தவன்,

"ஓகே நீங்க பாருங்க! நான் கிளம்புறேன்."

சிவராஜ் மீண்டும் "சேனா சார், ஒருநிமிடம்!" என்றதும் திரும்பினான்.

"தொந்தரவுக்கு மன்னிக்கணும்! எனக்காக நீங்கள் இன்னொரு உதவியும் செய்யனும்!"

அவனோ திரும்பி என்ன என்பது போல் பார்க்க, "என் அக்காவை, எங்கள் வீட்டில் விடமுடியுமா...?"

"இதில் எனக்கு என்ன தொந்தரவு இருக்கு? நான் என்ன உங்க அக்காவிற்கென்று ஒரு முறை வந்தா கூட்டிட்டு போகப் போறேன்? போகும் வழியில் தானே இறக்கி விடப் போறேன்! எனக்கும் அவங்க அக்கா மாதிரி தான்! நான் வெளியில் வெயிட் பண்றேன். நீங்க பேசிவிட்டு வாருங்கள், சிஸ்டர்!" என்று சொல்லிவிட்டு, அவன் முன்னே சென்று விட்டான்.

"யாருடா இந்தப் பையன்?" என்றதும், நடந்த அனைத்தையும் சொல்லவும், விதுபாரதியின் முகம் சுருங்கியது. ‘ஒரு பக்கத்து வீட்டுக்காரனால் தான் தங்களின் வாழ்க்கையே சின்னாப்பின்னம் ஆனது.' என்று நினைத்தவரின் முகம் கன்றவும், அதைப் புரிந்துகொண்ட சிவராஜ்,

"அக்கா பயப்படாதீங்க! அவரின் வீட்டில் அம்மாவும் அவரும் மட்டும் தான்! அவர்களால் நமக்கு எந்த தொந்தரவும் வராது. காரணம், அவர்களும் நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் தான்."

"பார்க்க நல்ல பையன் போல தான் தோணுகின்றான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உனக்கு உதவி செய்திருக்கிறான். ஆனாலும் மனிதர்களை நம்பவே மனம் பயப்படுதுடா...!"

"அக்கா...! பயந்து பயந்து தான், இத்தனை நாள் யாரோடும் பழகாமலும் பேசாமலும் நம்ம வாழ்க்கையே போயிடுச்சு. இவர் நல்லவர் தான் அக்கா! கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். பயப்படாதே...!" என்றதும் தலையாட்டிவிட்டு வெளியே வந்தாள்.

இங்கே, தன் மகள் வரப்போகிறாள் என்ற சுமித்திரை நொடிக்கொருமுறை வாயிலை எட்டி எட்டிப் பார்க்கவும், அவரின் அருகே வந்த தியாழினி, "பாட்டி கண்வலியும் கழுத்துவலியும் ஓருசேர வந்துடப் போகுது."

"ஏண்டி இப்படிச் சொல்ற?"

"காலையிலிருந்து கழுத்தையும் கண்ணையும் வாசல் பக்கமே வச்சிட்டு இருக்கீங்க? அமெரிக்காவில் இருந்து வந்தவங்களுக்கு வீட்டுக்கு வரத் தெரியாதா...? ஏதோ குழந்தையைத் தேடுவது போல், இப்படித் தேடுறீங்க...?"

"என் மகள் எனக்கு குழந்தை தாண்டி!" என்று சொல்லிவிட்டு, வாசல் பக்கமே பார்த்துக் கொண்டு இருந்தார்.

யாழினி தனது சித்தியிடம், “உங்க அம்மா உங்களுக்கும் மாமாவுக்கு ஓர வஞ்சகம் பண்றார். எங்கம்மாவின் மேல் மட்டும் தான், இவ்வளவு பாசமாக இருக்காங்க பாருங்க?”

வினோதினி சிரித்துக்கொண்டே, "அக்கா, ரெண்டு வருஷம் கழித்து, இப்பதான் வீட்டுக்கு வர்றாங்க. என் அம்மா காலையிலிருந்துதான் வெயிட் பண்றாங்க. நான் நைட்ல இருந்து தூங்காமல் அக்காவைப் பார்ப்பதற்காக காத்துகிட்டு இருக்கேன்." சொல்லியவர், ஆரத்தி கலந்து கொண்டு வந்து மேசையில் வைத்தார்.

தியா “அப்பப்பா, எவ்வளவு பாசம்? தாங்க முடியலடா சாமி!”

ஸ்ரீதர் சேனா காரை ஓட்டிக் கொண்டே வரும் போது, இரண்டு மூன்று முறை விது பாரதியை உற்று உற்றுப் பார்த்தான்.

விது அவனிடம், "ஏன் தம்பி, இப்படி பார்க்கிறீங்க? என்னிடம் ஏதாவது கேட்கணுமா...?"

“உங்களைப் பார்த்தால், எனக்கு புதிதாக பார்க்கிறது போல இல்லை. ஏற்கனவே பார்த்துப் பழகிய முகம் போல இருக்கு.”

அவனின் கேள்வியில் அவருக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டது. “இல்ல தம்பி. நீங்க என்னைப் பார்த்து இருக்க வாய்ப்பே இல்லை. நான் வெளிநாட்டில் தானே கடந்த 16 வருடமாக வேலை பார்க்கிறேன். ரெண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை தான் வருவேன்...!”

“ஹோ!” என்றான். ஆனால் சேனாவின் மனம் நம்ப மறுத்தது. 'இவரை இதற்கு முன்னாடி எங்கோ பார்த்திருக்கிறோமே என்று!'

'விதுபாரதியின் மனமெல்லாம் படபடவென்று அடித்தது. ஒரு வேளை தன்னை பார்த்திருப்பானோ இதற்கு முன்னாடி என்று!'

“வீடு வந்திருச்சு மேடம்.” என்ற அவன் குரல் கேட்டு நினைவுக்குத் திரும்பியவர்,

"கூட்டிட்டு வந்ததுக்கும், என் தம்பியைப் பார்ப்பதற்கும் நன்றி தம்பி!" தலையாட்டினான்.

வீடு வந்ததும், வாயிற்கதவைத் திறந்ததும், அங்கே புன்னகையோடு நின்றிருந்தவர்களைக் கண்டதும், அவளின் மனதில் இருந்த சங்கடம் எல்லாம் காணாமல் போனது. தியா ஓடி வந்து தன் அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு, கண்ணம் மூக்கு நெற்றி எல்லாம் முத்தம் வைத்து, தன் அன்பை வெளிக்காட்டினாள்.

அடுத்து தங்கை அம்மா என்று பாசமழை பொழிந்து விட்டு, ஆரத்தி எடுத்து அவரை அழைத்துச்சென்றனர்.

காருக்குள் இருந்த பொருட்களை எல்லாம், சேனா எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தான்.

தியா அவனின் அருகில் வந்து குனிந்து, "குட் மார்னிங் சார்!" என்றாள்.

அவனும் நிமிர்ந்து பாராமல் குனிந்து கொண்டே "மார்னிங்" என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல, பெண்ணவளின் முகம் வாடிவிட்டது.

மீண்டும் அவனின் அருகே வந்தவள் "என்ன ஆச்சு சார்? ஏன் கோபமாய் இருக்கீங்க...?"

"நான் உன்னிடம் கோபப்படுவதற்கு என்ன இருக்கு? என்று அவன் கேட்க...

அவன் பதில் தன்னை சமாதானப்படுத்த வில்லை. தன் மனம் எதையோ ஒன்றை அவனிடம் எதிர்பார்த்தது. அது சிரிப்பா...? அன்பான பார்வையா...? நகைச்சுவையான பேச்சா...? விடைதான் தெரியவில்லை.!

காருக்குள் ஏறி அமர்ந்தவன், "தியா, நீ ஐஸ்வர்யாவை வரச் சொல்லி காலேஜுக்குப் போய் விடு." என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

ஏனோ, மனம் வாடிப் போன பூ போல ஆகிவிட்டது. 'தன் அம்மா வந்த சந்தோசம் கூட, அவன் பேசாமல் போனதில் கரைந்து போனது.’

வீட்டிற்குள் பெட்டிகளை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, கல்லூரிக்குக் கிளம்பி வந்த தியா, அங்கே குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வந்து, உணவு மேஜையில் அமர்ந்த தன் அம்மாவைப் பார்த்து, “அம்மா” என்றதும் விது நிமிர்ந்தாள்.

“அம்மா, என் பக்கத்தில் நீங்க இருந்தால், யாருமே உன்னை அம்மான்னு சொல்ல மாட்டாங்க. எல்லாரும் அக்கான்னுதான் சொல்வாங்க...!”

சிரித்தவர், “தியா குட்டி, இன்னைக்கு லீவ் போடுறயா?”

சுமித்திரை “அவள் எதுக்கு வெட்டியா லீவ் போட்டுகிட்டு. நீ ஊருக்கு கிளம்புறப்போ போடட்டும்."

“சரிம்மா. தியாகுட்டி இங்கே வா!
.
பெண்ணவள் பக்கத்தில் வரவும், விது தன் தட்டில் இட்லி வைத்து, அதைப் பிய்த்து எடுத்து ஊட்ட ஆரம்பித்தார்.

சுமித்திரை அருகில் வந்து, “என் மகளை சாப்பிட விடுடி. நீ என்ன குழந்தையா? உன் கையில் எடுத்து சாப்பிடத் தெரியாதா...?”

பாட்டி உனக்குப் பொறாமை...! நீ வேணும்னா இட்லி எடுத்து உன் மகளுக்கு ஊட்டு.”

விது கண்விழித்து, “என் பொண்ணா இப்படி எல்லாம் பேசுறது...!”

“உன் பொண்ணே தான். ஊரில் இருக்கிற அத்தனை வாயும் இவளுக்குத் தான் இருக்கு.”

அவளோ தன் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு, தன் பாட்டியைப் பார்த்து, "ஆமாம் ஆமாம்! ஊரில் இருக்கிற அத்தனை வாயும் எனக்குத்தான். ஆனால், பாட்டியைவிட கொஞ்சம் கம்மிதான்.!"

குழந்தை குமரியாய் மாறி, பெற்றவரை சந்தோசப் படுத்தியது.

அந்த நேரம் பக்கத்து வீட்டில் சேனாவின் கார் கிளம்பும் சத்தம் கேட்டதும், சுமித்ரை, "உங்க சார் கிளம்பிட்டாரு! நீ எப்படி காலேஜுக்குப் போவ?"

"என் ஃப்ரண்டு ஐஸ்வர்யா வர்றா, பாட்டி!"

விதுபாரதி தன் மகளிடம், “தியாகுட்டி, நீ தினமும் அவனோடு தான் காலேஜுக்குப் போறியா...?”

“அம்மா இந்த வாரம் தான்மா! அதிலும் அவர் காலேஜிற்கு போகும் வழியில் முன்னமே நிறுத்தி விடுவார். யாரும் என்னை தப்பாப் பேசக் கூடாதுன்னு. நான் வரும் போது ஐஸ்வர்யா கூடத்தான் வருவேன். இன்னைக்கும் அவளுடன் தான்மா போறேன்.”

அதற்குள் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், "அவள் வந்துட்டாம்மா! நான் கிளம்புறேன்!" என்று சொல்லி வெளியே சென்றுவிட்டாள்.

“வீட்டுக்குள் பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி விட்டதால், நமக்கு நடந்த பிரச்சனை எல்லாம் நினைவில் இருக்காம்மா...?”

“இருக்குடா…!” என்ற சுமித்ரையிடம்,

“அப்புறம் எப்படி ஒரு வயது பெண்ணை ஒரு வயது வந்த ஆளுடன் அனுப்புறீங்க...?”

"என் வயது அனுபவத்தில் தான் விது! யார் நல்லவர் யார் கெட்டவர் என்று இப்போ என்னால் கணித்து விடத் தெரியும்!"

எழுந்து வந்தவர் தன் அம்மாவை கட்டிக் கொண்டு அவர் தோளில் சாயவும், தன் மகளின் முதுகை வருடிய சுமித்திரை,"நீ இன்னும் பழசை மறக்கலையாடா!"

"அதெல்லாம் மறக்கணும்னு தான், நானும் முயற்சி பண்றேன். ஆனால் முடியலம்மா!"

சுமித்திரை தன் மகளை உள்ளே படுக்கை அறைக்கு அழைத்து வந்து, அவர் கட்டிலில் அமர்ந்து, “விது வா!” என்றதும் வந்தவள், மடியில் படுத்தாள்.

34 வயது பெண்மணி, மூன்று வயதுக் குழந்தையாய் தெரிவது தாய்க்கு மட்டுமே...! அவர் தலையைத் தடவிக் கொடுக்க, வெகு நாள் கழித்து அப்படியே உறங்கிப் போனாள். உறங்கும் தன் மகளையே கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
........

இங்கே ஐஸ்வர்யாவுடன் கல்லூரிக்குச் சென்ற தியாழினியை மறைத்த ஆத்விக், "நான் உன்னிடம் தனியா பேசணும்...!"

"சீனியர் நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும். எனக்கு உங்களிடத்தில் பேசுறதுக்கு ஒன்றுமே இல்லை!" என்று சொல்லிவிட்டு அவள் கிளம்ப,

அவளின் கையைப் பிடித்து இழுத்தவன், "எனக்கு உன்கிட்ட பேசணும். பேசியே ஆகணும்!"

"சீனியர் மரியாதையா கையை விடுங்க. இப்படி கட்டாயப் படுத்தினால், நான் மேனேஜ்மென்ட்டிடம் புகார் பண்ண வேண்டி வரும்."

"நீ யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ...! பட் ஐ லவ் யூ!"

அவனின் கையிலிருந்த தன் கையைப் உருவிவிட்டு, "அடுத்த முறை காதல் கீதல்னு வந்து பேசினால் கன்னம் பழுத்திடும் ஜாக்கிரதை!" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

செல்லும் அவளின் முன்னே நின்று, "எனக்கு ஒரு பொருள் கிடைக்காவிட்டால், அது யாருக்கும் கிடைக்க விடாதவன் நான்."

“அதையும் பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு அவள் முன்னே செல்ல,

அவனின் பேச்சில் பயந்த ஐஸ்வர்யா, “எனக்கு என்னவோ பயமா இருக்குடி! இப்படிப் பட்டவர்களைப் பகைத்தால், கொலை அல்லது ஆசிடுன்னு எதையாவது கொண்டுவந்து மூஞ்சியில் ஊற்றி விட்டால்...? பேசாமல் போய் உன் வீட்டில் சொல்லிவிடு!”

“அவ்வளவுதான், என் படிப்புக்கு முழுக்குப் போட்டு, வீட்டில் உட்கார வைத்து விடுவார்கள். இவன் ஒரு பயந்தாங்கோலிடி. என் மாமாவை வண்டியில் இடிச்சிட்டு, பயந்து போய் ரெண்டு நாள் லீவு போட்டு வீட்டில் உட்கார்ந்தவன்டி. இவனுக்கெல்லாம் பயந்தால் படிக்க முடியுமா...? வர்றதைப் பார்த்துக்கலாம்...!” என்று அழைத்துச் சென்றாள்.

ஆத்விக் தியாழினியிடம் ப்ரபோஸ் செய்வதை மகிமாவும் மதுராவும் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். அந்த நேரம் அவ்வழியே சென்ற பாண்டித்துரை ஆத்விக் என்றதும், திரும்பியவன்

“ஹாய் அங்கிள்!”

இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து, "இவனை நம்ம டாடிக்குத் தெரியுமா...?" என்று அருகே வந்தனர்.

அவரோ “ஹாய் ஆத்வி! டாடி நலமா?”

“அவருக்கென்ன சூப்பர்?”

“அன்னிக்கு என்ன, ஒரு ஆக்ஸிடெண்ட் பண்ணிட்ட? காரை பார்த்து கவனத்துடன் ஓட்டி வர வேண்டாமா...? கொஞ்சம் மிஸ்சாகி இருந்தாலும், உன் பெயர், அப்பா பெயர் ஊரெல்லாம் வந்திடும். ஒரு வேளை உனக்கு ஏதும் ஆகியிருந்தால் என்ன பண்றது? நினைச்சுப் பாரு!”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, “ஹாய் டாடி!” என்று வந்த தன் மகள்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தவர், “இவன் ஆத்விக். என் பிரண்டு இளவரசனின் பையன்.”

அவன் இருவரையும் பார்த்து “ஹாய்!” என்றதும், மதுரா, “ஹேய்! நீங்க இளவரசன் மாமாவின் பையனா...?”

“ஆமாம்.!”

பெண்ணவள் இதழ் விரித்து “செம ஹேப்பி” என்று கைநீட்டி “ஐம் மதுரா!” அவனும் கைகுலுக்கினான்.

“நான் மகிமா” என்று கை கொடுக்க, மூவர் கூட்டணி அங்கே அரங்கேறியது.

அந்த நேரம் காலேஜ் பெல் அடிக்கவும் பாண்டித் துரை “சரி சரி வகுப்பிற்கு நேரம் ஆச்சு. நீங்க போங்க.” என்றதும், மூவரும் கிளம்பி அவரவர் வகுப்பிற்குச் சென்றனர்.

அன்று வகுப்பிற்கு வந்த சேனா பாடத்தை நடத்தியவன், ஒருமுறை கூட தியாவின் புறம் திரும்ப வில்லை.

'அவர் ஏன் தன்னைப் பார்க்கவேயில்லை’ என்ற கேள்வி, பெண்ணவளின் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.

பாடம் முடித்துவிட்டு அனைவரையும் நோட்ஸ் எழுதச் சொல்லியவன், வகுப்பை சுற்றி சுற்றி வந்தான். அனைவரும் பொறுப்பாய் எழுத, பாடத்தை கவனிக்காதவளோ என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருக்கும் போது, அவளின் அருகே வந்தவன், அவளின் நோட் புக்கையே பார்த்தவன், திட்டாமல் அப்படியே நகர்ந்து விட்டான்.

அவன் வகுப்பு முடிந்து போன பின், ஐஸ்வர்யா தியாவிடம், "சார், நம்ம மேல கோவமா இருப்பாரோ...! இன்னைக்கு ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை!"

சேனாவின் மனமும் அதுதான் கேட்டது, ‘ஏன் அவளை தவிர்க்கிறாய் என்று...? அவள் தன்னிடம் மார்க்கிற்காகப் பேசமாட்டேன் என்று சொன்னதால் வந்த கோபமா...? ஒரு ஆசிரியர் மாணவியிடம் சினேகம் வளர்ப்பது தவறு என்று தோன்றியதால் தவிர்க்கிறேனா...? இல்லை, அவளை நெருங்கினால் மனம் அவளிடம் விழுந்து விடுமோ என்ற பயத்தால் தவிர்க்கிறேனா?’ ஏதோ ஒன்று தடுத்தது.

மதியம் ஐஸ்வர்யாவும் தியாவும் சாப்பிட வந்தனர். ஐஸ்வர்யா சாப்பிட, தியாவோ டிபன் பாக்ஸை திறக்காமலே “பசிக்கலடி.”

“ஏன்?”

“தலை வலிக்குது!” என்று சொல்லிவிட்டு, தோழி சாப்பிடும் வரை காத்திருந்தாள். அவள் சாப்பிட்டதும் இருவரும் தங்களின் வகுப்பிற்கு வந்து கொண்டிருக்கும் போது,

ஐஸ்வர்யா, "உனக்கு தலை வலிக்குதுன்னு சொன்னடி. கேண்டீன் போய், ஒரு காஃபி சாப்பிட்டு வரலாமா...?"

"வேணாம் டி? மூடு இல்லை!"

அந்த நேரம் எதிரே வந்த ஹெச்.ஓ.டி. அருணா மேடத்தைப் பார்த்து, இருவரும் “குட் ஆப்டர் நூன்" என்றதும், அவரும் தலையை அசைத்தவர், “ஹாய் டியர்ஸ்! இருவரில் யாராவது ஒருவர் போய், ஸ்ரீதர் சேனாவை ஆடிட்டோரியத்திற்கு வரச் சொல்லுங்க…?”

தியாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல மலர்ந்து. “ஐஸு, நீ வகுப்பிற்குப் போ...! நான் போய் சொல்லிட்டு வர்றேன்.” என்றதும்.

ஐஸ்வர்யா தலையை ஆட்டிவிட்டு நக்கலாய், "நீ நடத்துடி! இப்ப தான் உனக்கு ஏன் சாப்பாடு இறங்கல என்பதற்கான விஷயம் புரியுது...!"

"போடி லூசு!" என்று சொன்னவளின் கால்கள் சேனாவை தேடிச் சென்றது.

ஸ்டாஃப் ரூமில் அங்கே யாருமில்லை. அவன் மட்டும் தனது இருக்கையில் கால் மேல் கால் போட்டு, அமர்ந்து கண்களை மூடிச் சாய்ந்திருந்தான்.

அவனை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டே நின்றவள், பின் "சார்...!" என்றதும் நிமிர்ந்தான்.

விழித்தவன் "இங்க என்ன பண்ற?" எடுத்ததும் கடுமையான வார்த்தைகள்.

"சார்! உங்களுக்கு என் மேல என்ன கோபம்? ஏன் மூஞ்சியை உம்முன்னு வச்சிருக்கிங்க...?"

"நீ இங்க படிக்க வந்து இருக்கியா...? இல்லை, என் மூஞ்சியைப் பார்க்க வந்திருக்கியா...?"

அவனின் வார்த்தையில் விழிநீர் வெளியே எட்டிப் பார்க்க, “உங்களை அருணா மேடம் ஆடிட்டோரியத்திற்கு வரச் சொன்னாங்க” என்று சொல்லி விட்டு திரும்பும் போது, அங்கே மார்பின் குறுக்கே கைகளை கட்டி மகிமா நின்று இருந்தாள்.

கலங்கிய கண்களுடன் தியாவும், மிகவும் கோபத்துடன் சேனாவும் இருப்பதைக் கண்டவளுக்கு, அப்படியே குளுகுளுன்னு இருந்தது.

மகிமாவின் மனமோ 'இவள் இங்கே என்ன பண்றா?' பின் கோபமாய் "யாரும் இல்லாதப்போ ஸ்டாஃப் ரூமில் உனக்கு என்ன வேலை...?"

“அருணா மேடம் சாரை வரச் சொன்னாங்க.” என்றதும்,

"ஹோ...! அப்ப ஏன், ஏன் உன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு?"

“கண்ணில் தூசி விழுந்திடுச்சு, மேம்.” என்று சொல்லிவிட்டு அவள் நிற்க,

இதில் எதோ சரியில்லை என்பதை உணர்ந்த மகிமா, "பொய் சொல்றயா...? படிக்கிற வயதில் கவனம் படிப்பில் இருக்கட்டும். அடிக்கடி ஸ்டாஃப் ரூம் பக்கம் வரக் கூடாது!” என்று மிரட்டினாள். அதில் கடுப்பான சேனா இருக்கையை விட்டு எழுந்தவன், அவளை முறைத்து விட்டு அவளைக் கடந்து சென்றான்.

அங்கே யாரும் இல்லை என்றதும், தியாவின் மனம் சேனாவின் பக்கம் விழுந்திடக் கூடாது என்று நினைத்த மகிமா, தன்னைக் கடந்தவனின் கையைப் பிடித்து, "சேனா ஐ லவ் யூ...!"

ஏனோ ஒரு கோபம் அவனுக்குள் சுழன்று கொண்டிருந்தது. அதையும் தாண்டி அவள் அத்து மீறவும், ருத்ரனாய் மாறினான்.

"ஒரு ஸ்டூடண்ட் முன்னாடி எவ்வளவு கேவலமா நடந்துக்கிற? இடியட்!” என்று திட்டிக் கொண்டே, அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.

“இதுவே முதலும் கடைசியுமா இருக்கனும். ஜாக்கிரதை!” என்று சொன்னவன், திரும்பி அங்கே நிற்கும் தியாவை முறைக்க, பயந்தவள் ஓடியே விட்டாள்.

தன் கன்னத்தில் கை வைத்துத் தடவிய மகிமா, “சேனா, இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.”

“யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ. நான் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, அவன் சென்று விட்டான்.

மகிமாவின் மனதிலோ அறைந்த சேனாவை விட, தியாவின் மேல்தான் கோபம் வந்தது.

வகுப்பிற்குள் பேயறைந்தது போல் வந்து அமர்ந்த தியாவைப் பார்த்த ஐஸ்வர்யா, “என்னடி சேனா சாரைப் பார்க்கப் போயிட்டு, கன்னத்தில் கை வைத்துவிட்டு வந்து உட்கார்ற? ஏதாவது சம்திங் சம்திங்கா...?”

“சம்திங்தான். ஆனால் எனக்கு இல்லை. ஈவினிங் வீட்டுக்கு போறப்ப சொல்றேன்.”

“ஐயோ, அதுவரைக்கும் எனக்கு மண்டைக்குள் என்னவா இருக்கும்னு நினைத்து யோசிச்சுக்கிட்டே இருப்பேன்டி. வேற வேலையே ஓடாது.”

“அமைதியாய் இருடி! வீட்டுக்கு போறப்ப சொல்றேன்.” என்றதும் அமைதியாகிவிட்டாள்.

கதை கொஞ்சம் பெரிதாக இருந்ததால் இதன் கீழேயே இன்னொரு அத்தியாயம்
பதித்திருக்கிறேன் .



Engaluku happy dha 💛😁
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமையான பதிவு.இவர்கள் வாழ்வில் என்ன நடந்தது யார் இவர்கள் வாழ்வை இந்த நிலைமைக்கு தள்ளியது பெரிய டுவிஸ்ட் இருக்கும் போல🤔🤔🤔 சேனா உனக்கு தியா மேல் காதல் வந்து விட்டது.அதை மறைக்க இந்தப் பொய் கோவம். ஆனால் இரு ஆசிரியராக நீ பேசியது மிகவும் அருமை ஒரு சிறு பெண்ணுக்கு விலக்கி கூறியது மிகவும் அருமை😍😍மகிமா அடி வாங்கியது ஐஸ்வர்யா போல எனக்கும் அடானும் தா தோணியது.சேனா எப்படி விது பாரதியை தெரியும் என்று சொல்கிறான் இதிலும் ஏதோ twist இருக்கு 😍😍😍
 
Top Bottom